கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தெரிவு செய்யப்பட்ட நாடுகள்

Page 1


Page 2

POLITICAL SCIENCE SUPPLIMENTARY SERIES - O3
G. C. E. A/L (láluJUTL5álüLLb) G. A. 9
தெரிவு செய்யப்பட்ட நாடுகள்
(மாதிரி வினாக்களையும், சுருக்க விடைகளையும் உள்ளடக்கியது)
மீ.எம்.புண்ணுரியாமீன் B.A.(Cey) Dip in Journ (Ind) SLTS
வெளியீடு: சிந்தனைவட்டம், 14, உடத்தலவின்னை மடிகே, உடத்தலவின்னை 20802
O1

Page 3
தெரிவு செய்யப்பட்ட நாடுகள்
(வினா- விடைத்
தொகுதி'
தொ டர்பு - 340, SE크
அகில இலங்கை விநியோக உரிமை
Poolbulosinguin Boot. Depic. Jaffirma 3. ColomitO
Te 422321
Se-1
ஆசிரியர் பீ.எம்.புன்னியாமீன்
EA m
முதலாம் பதிப்பு: இரண்டாம் பதிப்பு: மூன்றாம் பதிப்பு: நான்காம் பதிப்பு: ஐந்தாம் பதிப்பு: ஆறாம் பதிப்பு:
பதிப்புரிமை:
5506): 80)=
அச்சுப்பதிப்பு:
1993. C. S.
1994. D5. 그 1995. 06, 23 1996, tới 23 1996.
1997. O. O.
Mrs Mazeeda Puniyameen
14. Udatalawis Tia DBO2
Digital PRINT 6C1/61, K Ciri|| C. Perera Ma Watha Colobo 13.
02

மாதிரி வினாக்கள் தொகுக்கப்பட்டுள்ள பாட அலகுகள்
LījTīI *、“
飞己
இந்தியா முiனய சோவியத்ரஷ்யா
ஆசிரியருடா தொடர்புக்கு PN. PUAYAMEEN
LATALW. T.I.A.A. LED2 ERA L-ITALPA,

Page 4
g)|601|L60T எண் பிரியத்திற்குரிய மாணவ நெஞ்சாங்களே.
எமது இலங்கைத் திருநாட்டில் அரசறிவியலானது பாடசாலை, மற்றும் பல்கலைக்கழக மட்டங்களில் கலை, வர்த்தகபாடமாக பிரபல்யம் அடைந்து வருவதை அறிவீர்கள். இருப்பினும் தமிழ் மொழி மூலமாக இப் பாடத்தைக் கற்பதற்குப் போதியளவு நூல்கள் இன்மை துரதிர்ஷ்டமான விடயமாகும். இதனால் அரசறிவியல் கற்கும் மாணவர்கள் பல விதமான பிரச்சினைகளுக்கும், சிக்கல்களுக்கும் முகங் கொடுக்கின்றனர்.
இத்தகைய பிரச்சினைகளுக்கும் ஒரளவேனும் தீர்வினைப் பெற்றுக்கொடுக்கவேண்டுமென்ற நோக்கிலும் பரீட்சைக்கு ஆயத்தமாகும் மாணவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக மாதிரி வினா விடைகளை வழங்க வேண்டும் என்ற நோக்கிலும் EPI கல்வி நிலையம் ஒழுங்கு செய்துள்ள கருத்தரங்குத் தொடரில் (4 கருத்தரங்குகள்) என்னால் கலந்துரையாடப்படும் , உத்தேச வினாக்களையும், விடைகளையும் புத்தகமாகத் தொகுத்துத் தருவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
இப் புத்தகத் தொடரில் மொத்தம் 4 புத்தகங்கள் இடம் பெறும். இந்த 4 புத்தகங்களும் உயர் தர முழுப் பாடப்பரப்பையும் உள்ளடக்கியதாக இருக்கும். எனவே க.பொ.த. (உத) பரீட்சை எழுதும் மாணவர்களுக்கும் பல்கலைக்கழக வெளிவாரி முதற்கலைத் தேர்வு மாணவர்களுக்கும், பல்கலைக்கழக மாணவர்களுக்கும் ஏற்புடையதாக இருக்கும் என்பது என் நம்பிக்கையாகும்.
குறுகிய காலத்தில் இப்புத்தகத்தினை வெளியிட முன் வந்த EP கல்வி நிலையப் பணிப்பாளரும் EPI புத்தகாலய உரிமையாளரும். இலங்கையின் பிரபல கணித விஞ்ஞான விரிவுரையாளருமான திரு. WL. ராஜரட்ணம் அவர்களுக்கும், மிகவும் குறுகிய காலத்தில் இப்புத்தகத்தினை அச்சிட்டுத்தந்த விஜயா பதிப்பகத்தினருக்கும், கணனிப் பதிப்பினை மேற்கொண்ட நண்பர் அமுதாஸ், ஜீவா இருவருக்கும், அகில இலங்கை ரீதியில் என் புத்தகங்களை விநியோகித்து வரும் பூபால சிங்கம் புத்தக நிலையத்தினருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இப்புத்தகம் குறித்து உங்கள் அபிப்பிராயங்களைத் தெரிவிப்பீர்களாயின் நன்றியுடையவனாக இருப்பேன்.
மிக்கநன்றி அன்புடன் புன்னியாமீன்
97.10.15 04

தெரிவு செய்யப்பட்ட நாடுகள்
○ 2.
-
/ー。 巧 تسکی۔ سمبر سمسمسسلج <ア へ。 シつー。 / كريجية - "
པ་། ༩ / - !, 《།། 姥 ༽། رستم. っ">ート、° / 3. <- r } "།དུག་། ༼འོ།། N
།། །། s །།།། سسمبس
Irish Sea 5 ܢܔ K يسمح سيلا" རྗེས་ ۲- - - - - : 's حیا
. 5 United Kingdom كأس که سراسری - کس-سم . . . London لتصحر يحس كية " أقسا
ノー フ / ーぞーー一丁 イ منابع ;ހ ...............-----ތ / - - - English Channel
エー 。 " سميت s Nطنت عبستہ س <لاً حسبہ س< سمس سیسس سے
-Ifflags 6 full
05

Page 5
பிரித்தானியாவின் அரசியல் முறையின் வளர்ச்சியைப்
பின்வரும் தலைப்புகளின் கீழ் ஆராய்க
அ) பாராளுமன்ற அரசாங்க முறை ஆ) கெபினட் அரசாங்க முறை
விடைக் குறிப்புகள் அ) பாராளுமன்ற அரசாங்க முறை r
பிரித்தானியப் பாராளுமன்ற வரலாற்றினை நோக்குமிடத்து
அது 13ம் நுாற்றாண்டிலிருந்து படிப்படியாக வியாபித்து வளர்வதை அவதானிக்கலாம். 13ம் நுாற்றாண்டிலிருந்து கடந்த சுமார் 7 நுாற் றாணி டு காலத்தில் ஏற்பட்டு வந்த அபிவிருத்திகளின் விளைவே தற்போதைய பாராளுமன்ற
நிலையாகும்.
5-11ம் நுாற்றாணர்டுகளுக்கிடைப்பட்ட அங்கிலோசக்ஷன்யுகத்தில் பிரித்தானியாவில் முக்கியத்துவம் வாய்ந்த சில அரசியல் மாதிரிகள் தோற்றம் பெற்றிருந்தன. ஆரம்பத்தில் 7 இராச்சியங்களாகக் காணப்பட்ட பிரித்தானியா பின்பு 3 இராச்சியங்களாகக் குறைக்கப்பட்டு 11ம் நுாற்றாண்டிலே ஒரு தனியரசாகியது. இக் கட்டத்தில் மன்னராட்சி முறையே பிரித்தானியாவில் காணப்பட்டது.
மன்னன் அதிகாரமிக்கவன். மன்னனுக்கு ஆலோசனை
வழங்குவதற்காக பிரபுக்கள் காணப்பட்டனர். இப் பிரபுக்கள்
சபையானது “அறிவாளிகள் சபை” என அழைக்கப்பட்டது. O6
 

இதுவே பாராளுமன்ற முறையின் ஆரம்ப கட்டம் எனப்படுகிறது.
1199ல் பதவியேற்ற முதலாம் ஜோன் மன்னன் இந்த ஆலோசனைச் சபையை (பாராளுமன்றம்) புறக்கணித்தான். இதனால் பிரச்சினைகள் உருவாகின. இந் நிலையில் , C5uLLuLib Megna Carta) ஏற்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து மன்னனால் தன்னிச்சையாகத் தொழிற்பட முடியாது என்ற நிலை தோன்றியது.
13b நூற்றாண்டில் அடிப்படை அரசியல் அமைப்புக்கள் வளர்ச்சியடைந்துவரும் நிலையிலிருந்தன. பாராளுமன்றத்தில் பல அமைப்புக் கள் இணைந்திருந்ததினால் இச் சபையில் நிலச்சுவாந்தர்களும், பிரபுக்களும் இடம்பெற்றனர். காலகதியில் சாதாரண பிரபுக்களும் இடம்பெறலாயினர். -
13ம் நுாற்றாண்டின் மத்திய பகுதியில் மன்னனுக்கும், பிரபுக்களுக்குமிடையில் ஏற்பட்ட கருத்துமோதல் ஒரு சிவில் யுத்தமாகப் பரிணமித்தது. இறுதியில மண் னணி தோல் வியடைந்தான். அதைத் தொடர்ந்து பிரபுக்கள் தலைவனான சய்மன்- டி- மொண்டிபர்ட் நாட்டின் நிர்வாக அதிகார தி தைப் பெற்றுக் கொணி டானி , அவன் 21 நகரங்களிலிருந்தும் பிரதிநிதிகளை இணைத்துக்கொண்டான். இவ்வமைப்பு நவீன பாராளுமன்ற அமைப்பு முறையின் ஆரம்பம் எனக் கருதப்படுகின்றது.
1295ல் நாட்டின் சகல அமைப்புக்களிலிருந்தும் பிரதிநிதிகள் இடம்பெறத்தக்க வகையில் பாராளுமன்றம் விஸ்தீரணமடைந்தது. அது மானிய முறையை இல் லா தொழிக் கும் ஒரு நடவடிக்கையாகவும் கருதப்பட்டது.
14ம் நூற்றாண்டின் இறுதியரைப்பகுதியில் நிலச்சுவாந்தர்கள்,
O7

Page 6
மதகுருமார் ஆகியோர் மந்திரி . மன்றமாகவும் ஏனையோர் சாதாரண அங்கத்தவர்களாகவும் கருதப்பட்டனர். இது பாராளுமன்ற வளர்ச்சிக்கட்டத்தின் ஒரு முக்கிய அம்சமாகும். தொடர்ந்து பாராளுமன்ற முடிவுகளை உடனுக் குடண் மன்னனுக்கு அறிவிக்க ஒரு சபாநாயகர் தெரிவு செய்யப்பட்டார். பாராளுமன்ற வளர்ச்சியில் சட்டவாக்க அதிகாரமும் பாராளுமன்றத்தைச் சாரலாயிற்று.
1640ல் ஜேம்ஸ் மன்னன் பாராளுமன்றத்தை மதிக்கவில்லை. இதனால் பிரச்சினைகள் ஏற்பட்டன. இதன் விளைவாக மன்னன் ஜேம்ஸ் துரத்தப்பட்டான். இதன் பின் பாராளுமன்றம் (1688ல்) மன்னனின் மகள் மேரியையும், மருமகன் விலியமையும் மன்னன், மகாராணியாக ஏற்றுக்கொண்டது. சம்பவங்களால் முன்னைய படிப்பினை பெற்றுக்கொண்ட பாராளுமன்றம் உரிமை முறியை (1689) முன் வைத்து முடியின் அனுமதியைப் பெற்றுக்கொண்டது.
இந்த உரிமை முறியைத் தொடர்ந்து படிப் படியாகப் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஒழுங்கமைக்கப்பட்டு தற்போதைய நிலையை அடையலாயிற் று. மணி னணி பெயரளவு நிர்வாகமாக்கப்பட்டு பாராளுமன்றம் சட்டவாக்க, நிர்வாக அதிகாரங்களைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஆ) கெபினட் அரசாங்க முறை.
பாராளுமனி றத் தினுள் கெபினட் முறை ஏறி பட்டு நிர்வாகத்துறையில் முக்கிய அம்சமாக மாற்றமுற்றது, சுமார் 2 நுாற் றாணி டுகளுக்கு முனி பாகும் . பிரிதி தானியப் பாராளுமன்றத்தினுள் ஏற்படுத்தப் பட்ட இந்த கெபினட் அமைப்பானது இன்று அனேக நாடுகளில் நாட்டை நிர்வகிக்கும் பிரதான நிர்வாக அமைப்பாக மாறியுள்ளது. V
08

1689ம் ஆணி டின் முன்பு பிரித்தானியாவில் பூரண நிறைவேற்று அதிகாரமிக் கதாகவே முடி காணப்பட்டது. இருப்பினும் இங்கு மன்னன் தனது நிர்வாகத்தைக் கொண்டு நடத்துகையில் "கியுரியா ரெஜிஸ்” எனும் சபையின் உதவியைப் பெற்றுக் கொண்டான். காலகதியில் இச்சபை பிளவுற் றது. இங்கு மண் னனுக்கு ஆலோசனை வழங்குவதற்காக பிரதான நிர்வாக சபையொன்று அமைக் கப் பட்டது. இந்த நிர்வாக சபையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சபை மன்னனின் நிர்வாக விடயத்தில் நேரடியாக ஒத்துழைப்பு வழங்கியது. இச்சபையே பிரிவுக் கவுன்சில் ஆகும். ' ~
இச்சபையின் அங்கத்தவர் தொகை அதிகரிப்பு ஏற்பட்டதும் நிர்வாகத்துக்காகப் பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது. மன்னனுக்கு ஆலோசனை வழங்கிய இச்சபை “ஜூன்டோ” என்றும் பின்னர் “காபூல்” என்றும் வழங்கப்பட்டது. 17ம் நூற்றாண்டின் இறுதியரைப் பகுதியில் இச்சபை அமைச்சரவை என அழைக்கப்படலாயிற்று.
17ம் நுாற்றாண்டின் இறுதிப் பகுதியில் அமைச்சரவை முறையின் தோற்றம் இடம்பெற்றாலும் கூட, தற்கால நவீன அமைச்சரவையின் தோற்றம் 18ம் நூற்றாண்டின் முன்னரைப் பகுதியிலேயே இடம்பெற்றதெனக் கூற வேண்டும். (1689ம் ஆண்டு உரிமைச்சாசனத்தின் பாதிப்பினைப் பின்னர் வந்த அமைச்சரவைகளில் காணலாம்.)
1689ம் ஆணி டின் பின்னரும் பாராளுமன்றத்தினுள் அமைச்சர்களைத் தேர்ந்தெடுத்தது முடியே. 18ம் நுாற்றாண்டில் இந் நிலை மாற்றமுறலாயிற்று. 1717ல் 1ம் ஜோர்ஜ் மன்னன் அமைச்சரவைக் கூட்டங்களில் கலந்துகொள்ளவில்லை. எனவே அமைச்சரவை முடிவுகளை மணி னனுக்கு அறிவிக்க அமைச்சரவைத் தலைவர் ஒருவர் நியமிக்கப்பட்டார். அந்த அமைச்சரவைத் தலைவர் பதவி காலகதியில் “பிரதமர்” (சான்ஸ்லர்) ஆக மாற்றமுற்றது.
18ம் நுாற்றாண்டில் பிரதமர் இன்றுபோல் அதிகாரங்களைப்
09

Page 7
பெற்றவராகப் காணப்படவில்லை. எவ்வாறாயினும் கெபினட் நிர்வாக (p 60) ) இனி நுள் ள நிலைப் பாட்டினையும் அதிகாரத்தையும் பெற்றுக்கொண்டது, 18ம் நுாற்றாண்டின் முதலரைப்பகுதியிலாகும். (பிரித்தானியாவில் வாக்குரிமை செயற்படுத்தப்பட்டமையும், மன்னனின் அதிகாரங்கள் நாம நிர்வாகமாக மாற்றமுற்றமையுமே இம் மாற்றத்துக்கான காரணங்களாகும்.)
கட்சி முறையின் வளர்ச்சியுடன் பிரதம மந்திரி, கெபினட் என்பன கட்சியினடிப் படையில் (வெற்றிபெற்ற கட்சி) தெரிவாகினர். தொடர்ந்து பிரதமர் கெபினட்டின் தலைவராகவும், கட்சிய்யின் தலைவராகவும் , நாட்டின் தலைவராகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டார். கெபினட் செயலாளர் ஒருவர் 1916ல் தெரிவுசெய்யப் பட்டார். பிரபுக் கள் சபையே 19 f நுாற்றாண்டுகளில் பிரதமரைத் தெரிவு செய்தது. 20ம் நுாற்றாண்டின் ஆரம்பத்தில் பிரபுக்கள் சபையின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டதுடன் வெற்றிபெற்ற கட்சியின் தலைவர் பிரதமராகத் தெரிவுசெய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
sa Gaál 2 .
அ) பிரித்தானிய அரசியல் அமைப்பு ஆ) பிரித்தானியாவின் பொதுமக்கள் சபை குறித்துக்கருத்துக்களை வழங்குக.
அ) பிரித்தானியாவின் அரசியல் அமைப்பு.
பிரித்தானிய அரசியலமைப்பின் தனிச்சிறப்பு என்னவெனில
அது ஒரு வரையப்படாத யாப்பாக இருந்து வருவதாகும்.
ஏனைய நாடுகளின் அரசாங்க முறையினை நிர்ணயிக்கும் சட்ட
விதிகள் அனைத்தும் எழுதித் தொகுக்கப்பட்டு நுாலுருவம்
பெற்றிருப்பதைப் போன்று பிரித்தானிய அரசியல் முறை 10

எழுதப்பட்ட நூல் வடிவினைப் பெற்றிருக்கவில்லை. எனவே இங்கிலாந்து நாடு அரசியலமைப்புப் பெற்றிருக்கவில்லை என்று டி டாக்குவில் கூறியுள்ளார்.
இன்று உலகில் எழுதப்படாத யாப்புக் குச் சிறந்த உதாரணமாகப் பேசக் கூடிய நாடு பிரித்தானியாவாகும். இருப்பினும் சில அறிஞர்கள் இக்கூற்றினை முழுமையாக ஏற்றுக்கொள்வதில்லை. ஏனெனில் பிரித்தானியா அரசியலமைப்பு தொகுத்து நுாலுருப்படுத்தப்படாத போதிலும்கூட எழுதப்பட்ட பல கூறுகளைக் கொண்டிருப்பதைக் காணலாம். அவையாவன.
| | | | II hidb 6i, மனுக் களர் , சட்டகம் களர் , உடன்படிக்கைகள்
சிதறிக்கிடக்கின்ற அரசியலமைப்பின் பகுதிகளாவன:-
மகாபட்டயம் (1216), உரிமை மனு (1628), உரிமைகள் மசோதா (1689) நிர்ணயச் சட்டம் (1701) ஸ்கொட்லாந்து இணைப்புச் சட்டம் (1707) அயர்லாந்து இணைப்புச் சட்டம் (1802) வெஸ்ட்மினிஸ்டர் சட்டம் (1931) போன்றவற்றில்
காணப்படுகின்றன.
| சட்டங்கள்
பாராளுமன்றம் காலத்திற்குக்காலம் இயற்றும் சட்டங்கள். உதாரணமாக சீர்திருத்தச்சட்டங்கள். Reform Acts) வாக்களிக்கும் உரிமையைப் பலருக்கு வழங்கியது. 1911, 1948 ஆண்டு பாராளுமன்றச் சட்டங்கள் பிரபுக்கள் சபையின் அதிகாரங்களைக்
குறைத்தன.
| நீதிமன்றத் திர்ப்புக்கள்
பட்டயங்கள், சட்டங்கள், நாட்டின் பொதுச் சட்டங்கள் ஆகியவற்றிற்கு நீதிபதிகள் கொடுக்கும் தீர்ப்புக்களினின்று
11

Page 8
பிரித்தானியா அரசியலமைப்பு வளர்ந்துள்ளது. இது பற்றிப்
பேராசிரியர் “டைசி” பின்வருமாறு கருத்துப்பகன்றுள்ளார்.
*ஆங்கில அரசியலமைப்பு நீதிபதிகள்
உருவாக்கிய அரசியலமைப்பாகும்” IV பொதுச்சட்டம்,
நாட்டின் பொதுச் சட்டம் அரசியலமைப்பிற்கு மற்றொரு ஆதாரமாக அமைந்துள்ளது. அது நீதிபதிகள் உருவாக்கிய விதிகளின் தொகுப்பாகும். பாராளுமன்றத்தின் செயல் எல்லை, அரசனின் தனிச் சிறப்புரிமைகள், பொதுமக்களின் பேச்சுரிமை,
கூட்டம் கூடும் உரிமை போன்ற அடிப்படை உரிமைகள்
அனைத் துமி நாட்டினி பொதுச் சட்டத் திணினி றும் தோன்றியவையாகும்.
V மரபுகள்
எழுத்துருப் பெறாத சட்டங்களாக விளங்கும் மரபுகள் அரசியலமைப்பின் இன்றியமையாத பகுதிகளாக விளங்குகின்றன. வழக்காறுகள், வழக்கங்கள், முன்சான்றுகள் போன்ற பரந்த அளவுக் கருத்துக் களை மரபுகள் தம் எல்லைக் குள் கொண்டுள்ளன. பிரித்தானிய அரசியலமைப்பினின்றும் மரபுகளை எடுத்துவிட்டால் செயலளவில் வலுக்குன்றி நிற்காவிட்டாலும் தோற்றத்தில் வலுக் குன்றிவிடும்.
V அரசியலமைப்பு பற்றி எழுதப்பட்டுள்ள நுால்கள் "3,365” 676tuoufloit Law and Custum of the Constitutics “Gud” 6T6ðu6.Jf6ði - Parlimentary Practice, (3 JIJ Taffluuii “60pLaf” யின் Law of the Constitution ஆகிய நூல்கள் அரசியலமைப்பின் கூறுகள் பற்றிய விளக்கத்தினைத் தருகின்றன.
12

ஆ) பிரித்தானியாவின் பொதுமக்கள் சபை.
பிரித்தானிய அரசியல் முறையில சட்டவாக்க நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக்கப்பட்ட சபையாக சட்டத்துறை (பாராளுமன்றம்) இருந்து வருகின்றது. பிரித்தானியர் ஒற்றையாட்சி நிலவும் நாடாகக் காணப்பட்ட போதிலும்கூட சட்டத்துறை இரு சபைகளைக் கொண்டதாகவே அமைந்துள்ளது. -
சட்டத்துறை
- பொதுமக்கள்சபை பிரபுக்கள் சபை
இதரில் பொதுமகக் களர் சபையைம் பற்றி நோக்குவோம்
பிரிதி தானியா வினி மக் கள் ஆட்சி அரசுக் கு உறைவிடமாகவும் முக்கிய துறையாகவும் பிரித்தானியாவின் பொதுமக்கள் சபை அமைந்துள்ளதினால் மக்களின் பெரு மதிப்புப் பெற்ற ஒரு சபையாகத் திகழ்கின்றது. இச் சபையானது பொதுமக்கள் சபை எனவும், 1ம் மன்றம் எனவும், கீழ் சபை எனவும் அழைக்கப்பட்டு வருகின்றது. இச் சபை ஐந்து வருடங்களுக்கொருமுறை நடாத்தப்படும் பொதுத்தேர்தலில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. இவர்கள் அனைவரும் வாக்களிக்கத் தகுதிபெற்ற (சர்வசன வாக்குரிமை மூலம்) வாக்காளர்களால் தேர்தல் தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுவர்.
பதவிக்காலம்
இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட அங்கத்தவர்களைக்கொண்ட பொதுமக்கள் சபை (இடைநடுவில் கலைக்கப்பட்டால் தவிர) தேர்ந்தெடுக்கப்பட்ட நாளிலிருந்து ஐந்தாண்டு காலத்திற்குப் பதவி வகிக்கும்.
13

Page 9
பொதுமக்கள் சபை தனது முதலாவது கூட்டத்தொடரை சிம்மாசனப் பிரசங்க உரையுடனே ஆரம்பிக்கும். இவ்வுரை முடியினால் நிகழ்த்தப்படும். (இவ்வுரை ஆளும் கட்சியின் கொள்கைப் பிரகடன உரையாகும்)
சிம்மாசனப் பிரசங்க உரையினைத் தொடர்ந்து வாக்கெடுப்பு இடம்பெறும். இவ் வாக்கெடுப்பில் தோல்வியடைய நேரிட்டால் சபை கலைக்கப்பட்டு மீண்டும் பொதுத்தேர்தல் நடாத்தப்படும். உரை ஏற்றுக்கொள்ளப்பட்டால் தொடர்ந்து சபையின் சபாநாயகர், உதவி சபாநாயகர், குழுக்களின் தவிசாளர் என்போர் தேர்ந்தெடுக்கப்படுவர். இச்சபை தனது சாதாரண மசோதாக்களை பெரும்பான்மை வாக்குக்களின் அடிப்படையிலும் விஷேட மசோ தாக்களை சிறப்புப் பெரும்பான்மை (மூன்றிலிரண்டு) அடிப்படையிலும் நிறைவேற்றும். இச்சபையினைக் கூட்டல், கலைத்தல், கூட்டத்தொடர்களை ஒத்திவைத்தல் என்பன பிரதமரின் ஆலோசனைப்படி முடியால் நிறைவேற்றப்படும்.
பொதுமக்கள் சபையின் அதிகாரங்கள்.
பொதுமக்கள் சபையின் அதிகாரங்களை வசதிக்காகப் பின்வரும் தலைப்புக்களின் கீழ் நோக்குவோம்.
| சட்டவாக்க அதிகாரங்கள். i நிதிக் கட்டுப்பாட்டு அதிகாரங்கள். i நிர்வாகக் கட்டுப்பாட்டு அதிகாரங்கள்.
சட்டவாக்க அதிகாரங்கள்.
நாட்டுக்குத் தேவையான சட்டங்களை இயற்றுவதல் பொதுமக்கள் சபை, சட்டத்துறையின் மிக முக்கிய பகுதியாகத் திகழ்கின்றது. நாட்டுக்குத் தேவையான சட்டங்களை இயற்றிக் கொள்ளக்கூடிய வகையில் மசோதாக்களைப் பிறப்பித்து, விவாதித்து, முடிவெடுக்கக்கூடிய அதிகாரத்தை இது
14

பெற்றுள்ளது. (நடைமுறையில் சட்டமியற்றுவதில் பொதுமக்கள் சபையினர் மேலானி  ைமயை g960) ud af g f குழு வரிடம் இழந்துவிட்டதென்பது உண்மை) மேலும் நிதி மசோதாக்களை ஆரம்பித்து விவாதித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை இச்சபை மட்டுமே பெற்றுள்ளது.
| நிதிக்கட்டுப்பாட்டு அதிகாரம்
நாட்டுத் திறைசேரியின் காவலன் என்ற முறையில் நிதி நிலைமை தொடர்பான கட்டுப்பாடுகளைப் பிரயோகிக்கக் கூடிய அதிகாரத்தினை இச்சபை கொண்டுள்ளது. நாட்டின் நிதி விடயங்கள் மந்திரிசபைக்கு (நிதியமைச்சுக்கு) பொறுப்பாக்கப்பட்ட போதிலும்கூட அவற்றின் மீதான கட்டுப்பாடுகளை பிரயோகிக்கும் அதிகாரம் பொதுமக்கள் சபைக்கே உண்டு.
விசேடமாக வரவு செலவுத் திட்டத்தைக் குறிப்பிடலாம். நாட்டின் வரவு செலவுத் திட்டத்தினை அங்கீகரிக்கும் பொறுப்பு இச் சபையையே சார்ந்தது. வரவு செலவுத் திட்டம் அங்கீகரிக்கப்படாவிட்டால் வரி அறவிடல், வரிவிதிப்பு, நிதியினைச் செலவிடல் போன்ற விடயங்களை மேற்கொள்ள முடியாது. எனவே நாட்டின் அடிநாடியே இஸ்தம்பித்துவிடும். எனவே புது வரிகளை விதிக்கவும், பணத்தைச் செலவு செய்யவும் பொதுமக்கள் சபையின் இசைவின்றி முடியாதென்பது புலனாகின்றது. அரசின் வருவாய் மூலங்களை வசூலிக்கவும், செலவினங்களை ஒதுக் கரீடு செய்யவும் . இச் சபையின் வெளிப்படையான அனுமதி மூலம்தான் நிறைவேற்றப்படல் வேண்டும்.
| நிர்வாகத் துறையைக் கட்டும் படுத்தும் அதிகாரங்கள்
15

Page 10
நாட்டின் நிர்வாகம் பொதுமக்கள் சபையின் ஆளும் கட்சியைச் சேர்ந்த அமைச்சரவைக்குப் பொறுப்பாக்கப்பட்ட போதிலும்கூட அமைச்சரவையைக் கட்டுப்படுத்தக்கூடிய அதிகாரத்தையும் பொதுமக்கள் F 60) L கொணர் டுள்ளது. இவப் வாறாக அமைச்சரவையைப் (நிர்வாகத்துறையை) பொதுமக்கள் சபை
பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றிக் கட்டுப்படுத்தும்.
அ. மந்திரிமாரின் வரவு செலவுத் திட்டத்தை ஏற்றல் (அல்லது
நிராகரித்தல்) ஆ அமைச்சர்களுக்கெதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை
ஒன்றினை நிறைவேற்றல். இ. மந்திரிமாரின் கொள்கைத் திட்டங்கள் மீது பாதிப்பினை
ஏற்படுத்தல். எனவே பொதுமக்கள் சபையின் நம்பிக்கையைப் பெற்றிருக்கும் வரைதான் அமைச்சரவையால் செயற்பட முடியும் என்பது புலனாகின்றது.
வினாடி இலக்கம்ஆ3
பிரித்தானிய அரசாங்க முறையில் உண்மை நிர்வாகம்
என்ற வகையில் பின்வருவனவற்றை ஆராய்க.
(அ) மந்திரி சபை (ஆ) பிரதம மந்திரி
அ) மந்திரிசபை
நவீன உலகில் ஜனநாயக ஆட்சியைப் பேணி வரும்
16
 
 
 

நாடுகள் இன்று நிர்வாகத்தினை மேற்கொள்ள பிரதான இரண்டு முறைகளை கையாள்கின்றன. - அ) மந்திரிசபை ஆட்சி முறை.
ම%) ஜனாதிபதி ஆட்சி முறை.
உலகில் மந்திரிசபை ஆட்சிக்குப் பெயர்போனதும், புகழ் பெற்றதுமான நாட்டிற்கு உதாரணமாக எடுத்துக்கூறக்கூடிய நாடாகவே பிரித்தானியா திகழ்கின்றது. ஏனைய நாடுகளைவிட பிரித்தானிய மந்திரிசபையில், மந்திரிசபை ஒன்றிற்குத் தேவையான அடிப்படைப் பண்புகள் அனைத்தும் ஒருங்கே
பெறப்பட்டு இருப்பதே இதற்கான மூல காரணமாகும்.
நாட்டின் நிர்வாகத்துறையானது பிரதமரது தலைமையிலான மந்திரி மார் பல ரை உள்ளடக் கிய ஒரு குழு விடம் பொறுப்பாக்கப்பட்டு இருப்பது இவ்வாட்சி முறையின் முக்கிய பண்பாகும். இக் குழு சட்ட சபையின் உறுப்பினர்களுடன் இணைந்திருப்பதும், சட்டசபையோடு தோன்றி, சட்டசபையோடு கலைந்து செல்வதும், நிர்வாகம் சட்ட சபைக் குள்ளே அடங்கியதொன்றாக இருப்பதும், நிர்வாக அதிகாரங்கள் பெயரளவு நிர்வாகி, பொறுப்புவாய்ந்த நிர்வாகி என இரு பகுதியினரிடமும் பகிர்ந்தளிக்கப்பட்டிருப்பது பிரித்தானிய மந்திரிசபை ஆட்சி முறையின் முக்கிய விடயங்களாகக் குறிப்பிடலாம். மேலும் மந்திரிசபை ஆட்சி முறையொன்று சிறப்பாகத் தொழிற்படுவதற்குச் சாதகமான சூழல், தேவையான நிபந்தனைகள் எனர் பன பிரித்தானிய அரசியலில் நிலைபெற்றுள்ளன.
பிரித்தானிய மந்திரிசபை வளர்ச்சிக்கான காரணிகள்.
கட்சிமுறை வளர்ச்சி.
17

Page 11
மந்திரிசபை ஆட்சிமுறை சிறப்பாகச் Gа шsli utவளர்ச்சியடைந்த கட் சிமுறையொன்று அவசியமாகும். பிரித்தானியாவில் காணப்படும் இரு கட்சிமுறைப் போக்கு பிரித்தானிய மந்திரிசபையின் வெற்றிக்கு அடிப்படைக் காரணியாகும்.
கூட்டும் பொறுப்பு.
மந்திரிசபை ஆட்சி முறை சிறப்பாகச் செயல்படக் கூட்டுப்பொறுப்பும் முக்கியமானதொரு நிபந்தனையாகும். ஒரே கட்சியினைச் சார்ந்த உறுப் பினர்களில இருந்து மந்திரிமார்களைத் தேர்ந்தெடுத்து மந்திரி சபை அமைக் கப்படுகின்றது. மேலும் பிரிதி தானியா வைப் பொறுத்தமட்டில் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களாலேயே மந்திரிசபை அமைக்கப்படுகிறது. இதனால் கூட்டுப்பொறுப்பைப்
பேணிக்கொள்ள வாய்ப்பாக அமைகிறது.
மேலும் பிரதமரது தலைமைத்துவத்தை ஏற்று வழிகாட்டலைப் பின்பற்றி இதர மந்திரிகள் நடந்துகொள்ள முன்வருவதும், சிறப்பாக வளர்ச்சியடைந்த ஸ்திரமான பொருளாதார நிலையும், ஆறுதலாக சிந்தித்து முடிவெடுக்கத்தக்க அரசியல் ஞானம் படைத்தவர்கள் காணப்படுவதும் பிரித்தானிய மந்திரிசபையின் வெற்றிக்கான" காரணிகளாகும். .. هـ ... - م , . . . . . . ,
மந்திரிசபையை அமைத்தல். 1. பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் அதிகப் பீடியான ஆசனங்களை வென்றெடுக்கும் கட்சியின் தலைவரே, முடிக்குப் பொறுப்பான இராணியால் அல்லது மன்னரால் பிரதமராக * క్ష జో, శశి కే_ శీ • j్కt ** - مراز . تی. زبانها : - : اهری: ) . به நியமிக்கப்படுவர்.-(பிரதம ந்திரி சபையின் ஏனைய அங்கத்தவர்கள்ை முடி நியமிக்கும்)
18
ரின். ஆலோசனைப்படியே
 
 
 
 
 

2) அமைச்சரவை எண்ணிக்கை பிரதமராலேயே தீர்மானிக்கப்படும். 3) மந்திரி சபைக் கு யாரைத் தெரிவுசெய்து, எநீ தப்
பொறுப்புக்களை வழங்குவது போன்ற விடயங்களைத்
தீர்மானிப்பதும் பிரதமரே, (பொதுவாக தனது ட்சியைத் சார்ந்த சிரேஷ்ட உறுப் பினர்களையும், அறிவியல சார்ந்த உறுப் பினர்களையும் , மந் திரிசபை உறுப் பினராகத் தேர்ந்தெடுக்கவே பிரதமர் முயற்சிப்பார்) 4) மந்திரிசபையின் நிதி விடயத்திற்குப் பொறுபபான அமைச்சா பொதுமக்கள் சபையில் ; : இருந்தும், நீதி விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர், பிரபுக்கள் சபையிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென்பது மரபாக வந்துள்ளது. மேலும் நீதி அமைச்சர் உட்பட இரண்டுபேரைப் பிரபுகள் சபையின் உறுப்பினர்களிலிருந்து தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற மரபும் வலுப்பெற்றுள்ளது. எனவே மந்திரிசபை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதில் பிரதமர் சுயாதீனமான தை κι - காணப்பட்டபோதிலும் இந்த இரு நிபந்தனை பொருத்தமட்டில அவரது சுயாதீனத் - கட்டுப்படுத்தப்படுவதை காணலாம்.
மந்திரிசபையின் கடமைகள் 1 கொள்கைகளை வகுத்தல்
மந்திரிசபையானது உள்நாட்டு, வெளிநாட்டுக் கொள்கையாக்கத்தை வகுக்கும். பிரித்தானிய மந்திரி சபையால் உருவாக்கப்படும் கொள்கைகள் சட்டத்துறையின் அனுமதியுடன் செயற்படுத்தப்படும். 2. பாராளுமன்ற செயற்பாடுகளை வகுத்தல்.
பாராளுமன்றம் எந்த அலுவல்களை நிறைவேற்ற வேண்டும். என்பதைத் தீர்மானிப்பது அமைச்சர் குழுவே. ஒவ்வொரு அலுவல்களுக்கும் நேர மொதுக் கி எதைத்
19

Page 12
தீர்மானிப்பது, எவ்வாறு தீர்மானிப்பது என்பவற்றைத் தீர்மானிப்பதுவும் அமைச்சரவையின் பணிகளில் ஒன்றே.
3. நாட்டின் நிர்வாகத்திற்கும் பொறுப்பாயிருத்தல்.
4 மந்ததிரிசபையானது ஆட்சியினர் ஒவம் வொரு செயலுக்கும் பொதுமக்கள் சபைக்குக் கூட்டாகம் (பதில்) பொறுப்புச் சொல்ல வேண்டும்.
5. Sesiaslangorgsgassi (Co-Ordination)
அமைச்சரவையின் நிர்வாகப் பொறுப்புக் களையும்
உள்ளூராட்சி நிறுவன செயற்பாடுகளையும் ஒருங்கிணைத்தல்.
6. பொதுமக்கள் சபையின் வேலைப்பளுக்களைக் குறைத்தல்,
ஒப்படைக் கப்பட்டுள்ள சட்டமியற்றும் அதிகாரம் , நவீனகாலத்தில் பொதுமக்கள் சபையின் வேலைப் U(6,535856i அதிகரித்துள்ளமையினால் சகல மசோதாக்களையும் விரிவான முறையில் விவாதம் செய்வதற்கு நேர அவகாசம் இருக்காது. இச் சிக்கலைத் தவிர்ப்பதற்கு எழும்பமைப்புச் சட்டங்கள் (Sieton bils) இயற்றும் தன்மையை பொதுமக்கள் சபை பெற்றுள்ளது. ஒரு மசோதாவின் முக்கிய விதிகளை மட்டுமே பொதுமக்கள் சபை இயற்றும். அதற்கிணங்க துணைவிதிகளை அமைச்சரவை இயற்றிக் கொள்ளும். ஆயிரதம மந்திரி
மந்திரிசபை அமைப்பில் பிரதம மந்திரியே மிக முக்கியமான பங்குதாரராக காணப் படுகிறார். இவர் மந்திரிசபையின் தலைவர் மட்டுமன்றி பொதுத் தேர்தலில் பெரும்பான்மை ஆசனங்களை வென்ற கட்சியின் பரதமர் 20

தலைவராகவும் விளங்குகின்றார். மந்திரி சபையின் சக உறுப் பினர்களும், கட்சியின் உறுப்பினர்களும் இவரது வழிகாட்டலைப் பின்பற்றுவது போன்று முழுத் தேசமும் பிரதமரது வழிகாட்டலையே எதிர்பார்த்து நிற்கிறது.
இதனால் அவர் நாட்டின் உண்மையான தலைவர் என்ற அளவுக்கு முக்கியத்துவம் அடைந்து விடுகிறார். எனவே பிரதமரைப் பற்றி பல அரசியலி அறிஞர்கள் பல கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.
1. நட்சத்திரங்கள் சூழ உள்ள சந்திரனைப் போன்று அமைந்தவரே பிரதமராவார்.
- வில்லியம் ஹேபர்ட் - 2. கோள்களைச் சுற்றிச்செல்லும் சந்திரனுக்கு ஒப்பானவர் பிரதமர் - பேராசிரியர் ஐவர் ஜெனிங்ஸ் - மந்திரிசபை அமைப்பில் பிரதம மந்திரியே மிக முக்கிய பங்குதாரராக க் காணப் படுகிறார். மந்திரிசபையினி எண்ணிக்கையைத் தீர்மானிப்பவரும், மந்திரிசபையின் உறுப்பினரைத் தேர்ந்தெடுப்பதும் இவரே. இவ்விதமாக மந்திரிசபையினை அமைப்பதோடு மட்டுமல்லாது அதன் கொள் கையாக்கத்தினையும் வகுப்பவராகவும் பிரதமர் காணப்படுகிறார். இவரது கொள்கையினை வழிநடாத்தும் அமைப்புக்களாகவே மந்திரிசபையும், பாராளுமன்றமும் காணப்படும். பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்ற கட்சியின் தலைவராக இவர் அமைந்திருப்பதினால் சட்டத்துறையும் இவரது கொள்கையினை வழிநடாத்தும் அமைப்பாகவே காணப்படும். மேலும் காலத்திற்குக்காலம் மந்திரிசபையினை மாற்றியமைக்கக்கூடிய தலைவராகவும்
பிரதமரே இருப்பார்.
21

Page 13
பிரதமர் தன்னோடு ஒத்துழைக்க முன் வராதவர்களையும், நம்பிக்கையில் லாதவர்களையும் நீக்கி அவ்விடத்தில புதியவர்களை மந்திரிமாராக நியமித்துக்கொள்ளும் வகையிலும், மந்திரிசபை உறுப்பினர்களிடையே அமைச்சுக்களை மாற்றிக் கொடுக்கும் வகையிலும் இவர் மந்திரிசபையினைக் காலத்திற்குக் காலம் மாற்றி அமைப்பவராகவும் இருந்து வருகிறார். எனவே “லஸ்கி” எனும் பேராசிரியர் பிரித்தானியப் பிரதமரைப்பற்றி பின்வரும் கருத்தை முன்வைத்துள்ளார்.
"மந்திரிசபையின் அமைப்புக்கும், அதன் வாழ்வுக்கும், அதன் முடிவிற்கும் பிரதமரே நாதமாக விளங்குகின்றார்"
நாட்டின் நிர்வாகத்துறையின் நிறைவேற்று அதிகாரியாக பரிரதமர் விளங்குவதோடு அந் நாட்டின் பெயரளவு நிர்வாகத்திற்குப் பொறுப்பான முடியின் சகல விதமான நடவடிக்கைகளையும் தீர்மானிப்பவராகவும், முடிவுக்கு வேண்டுகோள், விண்ணப்பங்கள், சிபாரிசுகள் என்பவற்றைச்
செய்பவராகவும் பிரதமரே இருக்கிறார்.
மேலும் பாராளுமன்றத்தைக் கூட்டல், கலைத்தல, ஒத்திவைத்தல் ஆகியன பெயரளவு நிர்வாகியினால் பிரகடனப் படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற போதிலும்கூட, உண்மையிலி இவை பிரதமரது விருப் ப்ப் படியே நடைமுறைப்படுத்தப்படுகின்றன். பிரதமர் விரும்பாது பெயரளவு நிர்வாகியால் எதனையும் சாதிக்க முடியாது. எனவே நாம் நிர்வாகியரின் சகலவிதமான நடவடிக் கைகளுகுேம் , கடிமைகளுக்கும் பிரதமரே அடிநாடியாகத் திகழ்வார். எனக் குறிப்பிட்டால் அது:மிகையாகாது. இதனால் பிரித்தானியா6 “பிரதமர்: ஆட்சி செய்கிறார், முடி:ஆள்கிறது” என்ற கருத்து நிலைபுெற்றுள்ளது.
மேலும் மந்திரிசபை மட்டுமல்லாது சடடத்துறையின்
22

அமைப்பிலும் அதன் வாழ் விலும், பிரதம மந்திரியே முக்கியத்துவம் பெறுவதை நாம் காண்கின்றோம்.
| 6lom Galoidibs 04.
பிரித்தானியாவினர் கட்சி முறைபற்றி நுணுக்கக் குறிப்புரை எழுதுக.
விடைக்குறிப்புகள்
உலக அரசியல் வரலாற்றிலே கட்சி முறை என்னும் ஒரு புதிய அத்தியாயத்தை ஆரம்பித்துவைத்த நாடு
பிரித்தானியா வாகும். இன்று வளர்ச்சியடைந்த்' கட்சி முறையொன்றினைக் கொண்ட ஒரு நாட்டிற் * 0 , ة تبسہ بسم
. . . . . ! ඊඩිෆ් ','h4'
உதாரணமாகப் பேசப்படுவது பிரித்தானியாவே. பழைமைபேணும் கட்சி, தொழிற்கட்சி, லிபரல்:கட்சிஇ போன்ற R பேணும் இருந்து
சுமார் 90% ஆன வாக்குகளையும், 1ங்களில் 90% ஆன ஆசனங்களையும் பெற்றுக்கொள்ளும் கட்சிகளாகக்
காணப்படுகின்றன. இதன் காரணமாக இரு5:கர்கி:முறை நிலவும் நாட்டிற்குச் சிறந்த உதாரணமாக எடுத்துக்காட்டப்படும் நாடாகவும் பிரித்தானியா திகழ்ந்து "வருகின்றது.
பிரித்தானிய அரசியல் கட்சியினர் தோற்றம்
உலகிலே முதன் முதலாகக் கட்சிகள்:தோன்றி வளர்ந்த
நாடான பிரித்தானியாவினது ' ட்ேசிகளின் தோற்றத்திற்கான
ஆரம்பம் 17ம் நூற்றாண்டிலிருந்தே உருவாகி "இருந்தது. இங்கு
23

Page 14
அரசியற் கட்சிகள ஒரே நாளில் தோன்றியவையல்ல.
குறிப்பாக 17ம் நுாற்றாண்டின் இறுதிப் பகுதியில் இடம்பெற்ற மதச் சீர்திருத்த இயக்கங்களுடன் கட்சிகளின் தோற்றத்திற்கான சூழ்நிலை உதயமாயிற்று எனலாம். மதச் சீர் திருத்த காலத்தில் மதத்தையும் , மணி னனையும் , பழைமையையும் ஆதரிக்கும் ஒரு பகுதியினரும், மன்னனையும் மதத்தையும் எதிர்த்துப் பழைமையினைத் திருத்திப் புதுமைகளை ஏற்படுத்த வேணி டுமென்று இனி னொரு குழுவினரும் காணப்பட்டனர். இவ்விரு நோக்கங்கள் காரணமாக சமூகத்தில் இரு பிரிவுகள் உருவாகி இருந்தன.
சமூகத்தில் ஏற்பட்ட இந்த முரண்பாடு மன்னனது அவைக் களத்தையும் பாதித்தது. இதனால் மன்னனுக்கு ஆலோசனை வழங்கவென ஏற்படுத்தப்படடடிருந்த அவைக்களப் பிரதானிகளும் இரு குழுவினராக பிரிந்து செயல்படலாயினர்.
இவ்வாறாக மன்னனையும், மதத்தையும் ஆதரிப்பவர்களும், பழைமையை விரும்புபவர்களும் “டொரிக்’ குழுவினராகவும் மன்னனையும் மதத்தையும் எதிர்த்து புதுமையை விரும்பியவர்கள் **விக்’ குழுவினராகவும் பிரிந்து நின்றனர். இவ்வாறு குழுக் களாகப் பிரிந்து காணப் பட்ட போதிலும் கட்சிமுறையொன்றாக இது அமைந்திருக்கவில்லை. காரணம் கட்சி முறையாக மாறக் கூடிய சூழி நிலை அப் போது இருக்கவில்லை.
A காலகதியில் பிரித்தானிய அரசியல் அரங்கில் ஏற்பட்ட மாற்றங்கள், குறிப்பாக வாக்குரிமையின் விஸ் தீரணம் , அதன்மூலம் தேர்தல்கள், பாராளுமன்ற நடைமுறைகள் விரிவாக்கம் போன்றனவும் இக் குழுக்களை கட்சிகளt b மாற்றின. வேறு வார்த்தையில் கூறுவதாயின் தேர்தல் காலங்களில் மக்களுக்குத் தம்மை அறிமுகப்படுத்திப் பிரச்சாரங்களை மேற்கொள்ளவேண்டி இருந்ததினால் இக் குழுக்கள் தம்மை கட்சிகளாக ஒழுங்கமைத்துக்கொண்டன.
24

இங்கு “டொரிக்’ எனும் குழு பழைமைபேணும் கட்சியாகவும், “விக்’ குழு லிபரல் கட்சியாகவும் தங்கள் பெயர்களை மாற்றிக்கொண்டன. இவ்வாறு தோன்றிய கட்சிகள் 1ம் உலக மகா யுத்தத்தை அண்மித்த காலம்வரையிலும் தொடர்ச்சியாக மாறிமாறி அரசியல் அதிகாரத்தினைப் பெற்றுவந்தன. எனவே பிரித்தானியாவின் கட்சிமுறை வரலாற்றின் ஆரம்பகால கட்டங்களில் பழைமை பேணும் கட்சியும், லிபரல் கட்சியுமே இரு கட்சிமுறைப் போக்கினைப் பிரதிபலிக்கும் கட்சிகளாகக் காணப்பட்டன.
20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் லிபரல் கட்சியில் கொள்கை தொடர்பான கருத்து முரண்பாடுகள் ஏற்படலாயிற்று. இதன் விளைவாக 1906ம் ஆணி டில் லிபரல் கட்சியிலிருந்து பிரிவடைந்த ஒருசாரார் தொழிற்கட்சி எனும் புதிய கட்சியினை ஆரம் பரிதி தனர். தொழிலாளர்களையும் , கூட்டுறவு அமைப்புக்களையும் அடிப்படையாகக்கொண்டு தோன்றிய இப் புதுக் கட்சியானது 1ம் உலக மகாயுத்த காலம் முதல் இதுவரை காலமும் லிபரலி கட்சி பெற்றிருந்த முக்கியத்துவத்தைப் பெற்றுக்கொண்டது. இன்று தொழிற் கட்சியும் பழைமைபேணும் கட்சியும் மாறி மாறி அரசாங்க அதிகாரத்தைக் கைப்பற்றி வருவதை அவதானிக்கின்றோம். தொழிலாளர்களைக் கவரக்கூடிய வகையில் பல திட்டங்கள் முன்வைக்கப்பட்டதினால் தொழிலாளர் மத்தியிலும், மத்தியதர வகுப்பார் மத்தியிலும், இக் கட்சி செல்வாக்குப் பெறலாயிற்று.
1975ம் ஆண்டுகளின் பின்னர் பிரித்தானியாவின் ஆட்சி முறையில் சில மாற்றங்கள் ஏற்பட்டன. ஏனெனில் 1992ல் ஏப்பிரலில் நடைபெற்ற பிரித்தானிய பொதுத் தேர்தலிலும், தொடர்ந்து 4 வது தடவையாகவும் பழைமை பேணும் கட்சியே அரசாங்க அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டது. எதிர்காலங்களில் பிரித்தானியாவின் கட்சிமுறைப் போக்கு எத்தகையதாகக் காணப்படும் என்பதை பொறுத்திருந்தே அவதானிக்க உலகமகா
25

Page 15
வேண்டியிருக்கும். இருப்பினும் தற்போதைய நிலைமைகளை அவதானிக்கையில் 1997 மே மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் தொழிற்கட்சி அமோக வெற்றியீட்டியது. டொனி (பிளேயர் பிரதமராகத் தெரிவாக்கப்பட்டதைத் தொடர்ந்து பிரித்தானியாவில் இருகட்சிமுறை மீண்டும் பேணப்படலாம் என எதிர்பார்க்க இடமுண்டு.
பிரித்தானியக் கட்சி முறையின் முக்கிய பண்புகள் 1. நீண்டகால வரலாற்றைக் கொண்டவை.
உலகில் முதன்முதலாகக் கட்சி முறை தோன்றி வளர்ச்சி பெற்ற நாட்டிற்கு உதாரணமாகப் பேசப்படுவதன் அடிப்படையில் பிரித்தானிய அரசியல் கட்சிகள் சுமார் 350 ஆணி டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றினைக் கொணர் டு விளங்குகின்றன: உலகில் காணப்படும் அனைத்து அரசியல் கட்சிகளை விடவும் நீண்ட வரலாற்றுப் ;பின்னணியைக் கொண்ட கட்சிகளாக விளங்குவதே பிரித்தானியக் கட்சிகளின் முக்கிய பண்பாகும். 2. குழுக்களாகப் பிரிந்து கட்சிகளாக மாற்றமுற்றவை.
பிரித்தானியக் கட்சிகள் ஒரு:நாளில் தோன்றியவையல்ல. ஆரம்பத்தில் குழுக்களாகப்பிரிந்து கட்சிகளாக மாறியவையே. இதன்ை? மேலும் தெளிவுபடுத்தும்போது பிரித்தானியாவின் அரசியல் கட்சிகள் பாராளுமன்ற அமைப்பினுள் தோன்றி (மன்னர் அவைக்களம்) மக்கள் மத்தியில் எடுத்துச்செல்லப்பட்டு வளர்ச்சிபெற்றவையாக இருப்பதை இதன் மற்றுமொரு பண்பாக எடுத்துக்காட்டலாம். ஆனால் உலகில் ஏனைய அரசியல் கட்சிகள்: மக்கள் மத்தியில் தோன்றி பாராளுமன்றத்திற்கு எடுத்துச் செல லப் பட்டவையாக அமைந்திருப்பதை அவதானிக்கலாம்: 3. இரு கட்சிமுறைப் போக்கினைக் கொண்டுள்ளமை.
பிரித்தானியாவில் பல கட்சிகள் அரசியல் நடவடிக்கைகளில் பங்கெடுத்துக்கொள்ள முன்வருகின்றபோதிலும் கூட பழைமைபேணும் கட்சியும் , தொழிற். கட்சியுமே அரசியல் அதிகாரத் தைக் கைப்பற்றிக்கொள்ளும் கட்சிகளாகக் காணப்படுகின்றன. அதேநேரம் 1ம்
26

யுத்தத்திற்கு முன்னர் பழைமைபேணும் கட்சியும், லிபரல் கட்சியுமே இவ்வாறான இரு கட்சிமுறைப் போக்கினைப் பிரதிபலித்து நின்றன எனவுே இரு கட்சிமுறைப் போக்கிற்குச் சிறந்த உதாரணமாகப் பேசப்படும் நாடாகவும் பிரித்தானியா திகழ்ந்து வருவது, மற்றுமொரு பண்பாகும் 4. வர்க்க அடிப்படையில் பிளவுபட்டுள்ளமை.
பிரித்தானிய அரசியல் கட்சிகள் வர்க்க அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளமையும் கட்சிமுறையின் மற்றுமொருபண்பாக, இனங்காட்டலாம். உதாரணமாக:-
நிலப் பிரபுக்களையும், செல்வந்தர்களையும், தொழில் அதிபர்களையும் அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள கட்சியே பழைமைபேணும் கட்சியாகும். 61 60 (36) செல்வந்தர்களின் நல உரிமைகளைப் பேணும் இக் கட்சியானது கிராமப்புறங்களில் அதிக செல்வாக்கைப் பெற்றுள்ளது.
அதேநேரம் தொழிற் கட்சியானது தொழிலாளர்களை மையமாக வைத்துக் கட்டியெழுப்பப்பட்ட கட்சியாகும். இதனால் தொழிற் கட்சி தொழிலாளர் நலனுக்காக உழைக கும் ஒன்றாகவும், நகர் பகுதிகளில் அதிக செல் வாக்குப் பெற்றதொன்றாகவும் விளங்கி வருகின்றது.
5. முன்றாம் கட்சியொன்று முதன்மைபெற முடியாதுள்ளமை பிரித்தானிய அரசியலில் மூன்றாவது கட்சியாக மற்றொரு
அரசியல் கட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்ளும் நிலை
இல்லாது இருந்து வருகின்றமையும் கட்சி முறையின் மற்றொரு
பண்பாகும். இவ்வாறாக மூன்றாம் கட்சியொன்று முதன்மைபெற
முடியாதுள்ளமைக்கான காரணங்களாகப் பின்வருவனவற்றைத்
தொகுத்துக் கூறலாம்.
அ) சமூக அமைப்பு:ம்
அதாவது பிரித்தானிய மக்களின் 90% இற்கு
மேற் பிட!ட்வர்கள் ஒரே இன; மத கலாசாரத்தைப் பரிணி பற்றுபவர்களாவர். எனவே இன முரணர் புர்ட் டை
27

Page 16
அடிப்படையாகக்கொண்டு மூன்றாவது கட்சியொன்று எழுச்சிபெற முடியாதுள்ளது.
ஆ) அரசியல் நடவடிக்கைகளில் முக்கியத்துவம் பெறும் அமுக்கக் குழுக்கள் கட்சிக்கு வெளியில் தோன்றாது கட்சி அமைப்பினுள் தோன்றியிருத்தல். இதனால் அமுக்கக் குழுக்கள் வெளியில் தோன்றி காலப் போக்கில் கட்சிகளாக மாறக்கூடிய வாய்ப்பு இல்லாதிருந்து வருகின்றது.
இ) மக்களின் அறிவு வளர்ச்சி:-
தமது வாக்குகளை மூன்றாவது கட்சிக்கு வழங்கும்போது அது பயனற்றுப்போய்விடும் என்ற மக்களின் மனோநிலை.
6. தேசிய நெருக்கடிகளின் போது ஒத்துச் செல்கின்ற
ğ5606Q)LD.
பிரித்தானிய அரசியல் கட்சிகளில் நாம் அவதானிக்கும் மற்றுமொரு பண்பு தேசிய முக்கியத்துவம். தேசிய நெருக்கடி தேசிய முன்னேற்றம் தொடர்பான விடயங்களில் ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்ற பேதம் காட்டாது ஒத்துச் செல்கின்ற, ஒத்துழைப்பு வழங்குகின்ற தன்மையாகும். ஆனால் மூன்றாம் உலக நாடுகளின் அரசியல் கட்சிகளில் இத் தன்மையைக் காண்பது அரிது.
7 சூழலுக் குப் பொருத்தமான கொள் கைகளைக் கடைப்பிடித்தல்.
பிரிதி தானியா விண் அரசியல் கட்சிகளிடையே அவதானிக்கக்கூடிய பிறிதொரு பண்பு அக் கட்சிகள் தத்த: நாட்டுச் சூழலுக்கேற்ற வகையில் கொள்கைகளைக் கடைப்பிடித்து அதனடிப்படையில் ஒழுங்கமைந்து இருப்பதனைக் குறிப்பிடலாம். ஏனைய நாடுகளின் கட்சி முறையில் காணப்படாத அளவுக்குப் பிரித்தானியாவின் அரசியல்
28

கட்சிகளுக் கிடையே இப் பணி பரினை நாம் கூடியளவு காணமுடியும்.
குறிப்பாகப் பழமைபேணும் கட்சியானது அந் நாட்டின் பழைமையின் சின்னங்களாக மதிக்கப்படும் முடி, பிரபுக்கள் சபை என்பவற்றைப் பேணிப் பாதுகாப்பதையும் மரபு, வழக்காறு என்பவற்றைப் பாதுகாப்பதையும் முக்கிய நோக்கமாகக் கொண்டு தொழிற்படுவதன் மூலம் உலகிலேயே பழைமைகளைப் பேணுவதில் முதன்மைவாய்ந்த கட்சியாக விளங்குகிறது.
இதேபோன்று தொழிற் கட்சியும் அந் நாட்டின் சூழலுக்குப் பொருத்தமான ஒரு வகை சோஷலிசக் கொள்கையினைப் பின்பற்றி வருகின்றது. மாக்ஸிஸ, லெனினிஸ் சிந்தனையிலிருந்து வேறுபட்ட ஒரு சோஸலிசக் கொள்கையாக இது இருந்து வருகின்றது. வேவியன் சோசலிசம் என்று அழைக் கப்படும் இக் கொள் கையானது பாராளுமன்ற ஜனநாயகத்தினுாடாக சோஸலிசத்தை ஏற்படுத்துவதாகும்.
இவ்விதமான பிரதான கட்சிகள் தம் நாட்டுக்கும் சூழலுக்கும் பொருத்தமான கொள்கையினைக் கடைப்பிடித்து வருவதையும், பிரித்தானிய கட்சி முறையின் மற்றுமொரு பண்பாக இனம்காட்டலாம். V
பிரித்தானியாவின் இரு கட்சி முறையினைப் பிரதிபலித்து
நிற்கும் தொழிற் கட்சியினதும், பழைமை பேணும் கட்சியினதும் கட்சிக் கொள்கைகளையும், கட்சி ஒழுங்கமைப்பினையும் பின்வருமாறு சுருக்கமாகத் தொகுத்து நோக்கலாம். தொழிற் கட்சியின் கொள்கைகள்.
1. மிதவாத சோசலிசம் (புரட்சி மூலமாகவன்றி பாராளுமன்ற ஜனநாயக மூலமாக சோசலிசத்தைப் பரப்பல்)
தேசியமயக் கொள்கை. தொழிலாளர் நல உரிமைகளைப் பாதுகாத்தல். பழைமையில் மாற்றங்களைக் கொண்டுவரல். குடியேற்றவாதத்தில் நெகிழ்வான போக்கு.
29

Page 17
தொழிற்கட்சியின் ஒழுங்கமைப்பு
1. வட்டாரக் குழுக்கள்.
2. தொகுதிப் பரிபாலனக் குழுக்கள்.
3. தேசிய நிர்வாகக் குழு.
4. மேற்பார்வைக் குழு.
5. மத்திய செயலகம்.
6. தேசிய மகாநாடு. பழைமை பேனும் கட்சியின் கொள்கைகள்,
முதலாளித்துவக் கொள்கை. தனியார்மயப்படுத்தல். செல்வந்தர்களின் நல உரிமைகளைப் பாதுகாத்தல். பழைமையைப் பேணுதல். குடியேற்றவாதத்தில் இறுக்கமான போக்கு. பழைமைபேணும் கட்சியின் ஒழுங்கமைப்பு.
கிளைச் சங்கங்கள்.
தொகுதிப் பரிபாலனக் குழுக்கள். தேசிய நிர்வாகக் குழு. மத்திய செயலகம்.
தேசிய மகாநாடு.
பின்வருவனவற்றுள் எவையேனும் இரண்டைப்பற்றி சிறுகுறிப்பு எழுதுக.
அ. பிரித்தானியாவின் நாம நிர்வாகம் முடி இராணி 월). பிரித்தானியாவின் அரசியலமைப்பில் மரபுகளினது: வழக்காறுகளினதும் பங்களிப்புக்கள்.
விடைக்குறிப்புகள்
அ, பிரித்தானியாவின் நாம நிர்வாகம்
30
 
 

பிரித்தானிய ༈ (༠) ாகத்துறை
பெயரளவு நிர்வாகம் (முடி) உண்மை நிர்வாகம்(மந்திரி சபை)
பெயரளவு நிர்வாகம்
பிரித்தானிய அரசியல் முறையின் முக்கிய வடிவ மாதிரிகளில் ஒன்றாகவே முடி இருந்து வருகிறது. அங்கிலோ-சக்சனிய காலம் முதல் இங்கிலாந்தில் முடியாட்சி முறை காணப்பட்டது. ஆரம்பத்தில் பூரண நிறைவேற்று அதிகாரம் மிக்கதாக விளங்கிய முடியானது 1688ல் நடைபெற்ற மாண்புறு புரட்சியின் பின்னர் அதிகாரத்தை இழந்து இன்று நாட்டில் அலங்காரத் தலைமையாக விளங்குகிறது.
இப் பெயரளவு நிர்வாகத்திற்குப் பொறுப்பாக இராணி அல்லது மன்னர் மூத்த தலைமுறையின் அடிப்படையிலிருந்து வருகிறார். இன்று முடி பெயரளவு நிர்வாகமாக மட்டுமே இருந்து வருகின்ற போதிலும் அதனை நீக்க முயலாததற்கும் முடி பழைமையின் சின்னங்களில் ஒன்றாக அமைந்திருப்பதும், மக்களிடத்தில் காணப்படுகின்ற பழைமை பேணும் பண்புமே காரணமெனக் கூற முடியும்.
ஆரம்பத்தில் மன்னனிடம் காணப்பட்ட அதிகாரங்கள் மக்கள் கைக்கு மாறியதால் இன்று மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் பாராளுமன்றமும், மந்திரிசபையுமே அதிகாரம் கொண்டவையாக விளங்குகின்றன. இதனால் பிரதமரின் விருப்பத்திற்கும், சிபாரிசுகளுக்கும் கட்டுப்பட்டுத் தொழிற்படும் ஒன்றாகவே முடி இருந்து வருகின்றது. இந்த வகையில் முடிக்குள்ள பெயரளவு அதிகாரங்களைப் பின் வருமாறு வகைப்படுத்தி ஆராயலாம்.
அ) சட்டத்துறை சார்ந்த அதிகாரங்கள்.
1. பாராளுமன்ற முதலாவது கூட்டத்தொடரின் ஆரம்பத்தில்
அரசகொள்கை விளக்க உரையினை (சிம்மாசனப் பிரசங்கம்)
நிகழ்த்துதல், (இவ்வுரையைப் பிரதமரே தயாரிப்பார். எனவே
31

Page 18
ट्||Jér கொள்கையுரை அரசரினி கொள் கைகளை எதிரொலிக்காது.)
2. பாராளுமன்றத்தின் சடங்கு ரீதியான இருக்கைகளுக்குத் தலைமை தாங்குதல்.
3. பாராளுமன்றத்தின் இரு சபைகளினாலும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்பமிட்டு சட்டமாக்குதல். (பாராளுமன்றம் இறைமை பெற்றுள்ளதால் முடி ஒப்பமிட மறுக்கமாட்டாது)
4. பிரதமரின் விருப்பத்தின்படி பொதுமக்கள் சபை, பிரபுக்கள் சபை என்பவற்றைக் கூட்டுதல், பொதுமக்கள் சபையைக் கலைத்தல்.
ஆ) நிர்வாகத்துறை சார்ந்த அதிகாரங்கள் 1. பிரதம மந்திரியை நியமித்தல். (பொதுத் தேர்தலில் வெற்றிபெற்ற கட்சியின் தலைவரையே பிரதமராக முடி நியமிக்கும்)
2. பிரதமரின் சிபாரிசின் படி மந்திரிசபையின் ஏனைய உறுப்பினர்கனை நியமித்தல். W
3. உயர் நிர்வாக உத்தியோகத்தர்களை நியமித்தல். 4. வெளிநாட்டுத் துாதுவர்களையும், அரச பிரதிநிதிகளையும்
நியமித்தல். 5. தரைப்படை, கடற்படை, விமானப்படை முதலியவை மீது முழுமையான கட்டுப்பாட்டைப் பெற்றுள்ளது. பாராளுமன்றத்தின் இசைவின்றியே யுத்தப் பிரகடனம், சமாதானம் போன்றவற்றை முடியால் பிரகடனம் செய்ய முடியும். ஆனால் யுத்த செலவினங்களுக்கு பாராளுமன்றத்தின் ஒப்புதல் மிகம் அவசியமாகும்.
6. காலனிகள், டொமினியன்கள், பொதுநலவாய நாடுகள் ஆகியவற்றின் உறவு முறை முடியாலே நடாத்தப்படுகின்றது.
7. விருதுகள், பட்டங்கள் வழங்குதல்.
32

இ) நீதித்துறை சார்ந்த அதிகாரங்கள்.
1. அரசன் நியாயத்தின் ஊற்றாக விளங்குவதால் பிரதம நீதியரசரை நியமித்தல்.
2. உயர் நீதிமன்றத்தின் நீதியரசர்களாகத் தொழிற்படும் சட்டப் பிரபுக்களை நியமித்தல்.
3. குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்குதல், தண்டனை வழங்குவதைத் தாமதப்படுத்துதல். (இருப்பினும் உடமைகள் பற்றிய வழக்குகளிலோ, இராஜதுரோக குற்ற விசாரணை வழக்குகளிலோ அரசரால் மன்னிப்பு வழங்க முடியாது.)
நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரத்தை இவர்
பெற்றிருந்தாலும் கூட நீதிபதிகளை நீக்கும் அதிகாரத்தை இவர் பெற்றிருக்கவில்லை.
4. பொது
பாதுகாப்புத் தொடர்பாக ஆயுதம் தாங்கிய படைகளின்
தலைவர்களை பிரதமரின் சிபாரிசின்படி நியமித்தல், அவசரகால நிலையினைப் பிரகடனம் செய்தல், போர், சமாதானம், போன்றவற்றைப் பிரகடனம் செய்தல். பிரதமரின் சார்பில் வெளிநாடுகளுடன் பாதுகாப்பு உடன் படிக் கைகளையும் , ஒப்பந்தங்களையும் செய்தல். −
முடி நிலைப்பதற்கான காரணங்கள்
முடிக்குள்ள பணிகளைத் தொகுத்து நோக்குமிடத்து அவர் தானாகவே முடிவெடுத்துச் செயற்படும் நிறைவேற்று அதிகாரம் ஏதும் இல்லாத வெறும் நாம நிர்வாகியாகவே தொழிற்படுகிறார். இவர் மூலம் எவ வரித ஆட்சி அதிகாரங்களும் செயற்படுத்தப்படாததால் இவ்வாறான முடி இருப்பதில் எவ்வித பயனும் இல்லை என்பது அரசியல் அவதானிகளின் வாதமாகும். இருப்பினும் முடி தொடர்ந்திருக்க வேண்டுமென்பது மக்களின் அபிலாசையாகும். எனவே முடி நிலைபெற்றிருப்பதற்கு என்ன காரணம் என்பதனை ஆராயப் த ல் பொருத்தமானதாகும்.
g60) 6660.
33

Page 19
1. முடி பழைமையின் சின்னமாக விளங்கிவரும் அதேநேரம் மக்களின் மரபுகளை நேசிக்கும் மனோநிலையையும் பிரதிபலித்து நிற்கின்றது.
2. முடி அரசியலில் பக்க சார்பற்றது. 3. முடி ஆட்சி செய்வதில்லை. 4.முடிக்குக் கிடைக்கும் கெளரவத்தை தமது கெளரவமாக நினைக்கும் மக்களின் மனோநிலை.
5. முடியின் முன்மாதிரிகளை மக்கள் ஏற்றுக்கொள்கின்ற நிலை தொகுத்து நோக்குமிடத்து மேற்படி காரணிகள் நாமநிர்வாகமான முடியினை நிலைத் திருக்க வைத்துள்ளன. எண் பதனை அவதானிக்கலாம். அண்மைக் காலமாக (குறிப்பாக 1991-1992) பிரித்தானிய மகாராணி எலிசபெத் அம்மையாரின் குடும்பத்தில் ஏற்பட்ட சில நிகழ்ச்சிகள் பிரித்தானியாவுக்கு முடி அவசியமா? என்ற வினாவை மீண்டும் கிளப்பி வருகின்றது. விஷேடமாக முடிக் குரிய இளவரசர் சார்ல் ஸின் மனைவி டயானாவின் அணி மைக் காலப் போக்குகளும், முடியின் குடும்பத்தைச் சார்ந்தவர்களின் அரை நிர்வாண கோல புகைப் படங்களும் முடியரினைப் பற்றிய பகைப் புலத் தினை வழங்குகின்றது. அடுத்தடுத்து இடம்பெறும் இச் சம்பவங்களின் விளைவுகள் என்னவாகும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். (குறிப்பு-1997 ஆகஸ்டில் டயானாவின் அகால மறைவை அடுத்து பிரித்தானிய முடியின் நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் அதிருப்தியை உருவாக்கியிருப்பது அவதானிக்கத்தக்கதே).
ஆ) பிரித்தானிய அரசியலமைப்பில் மரபுகளினதும் , வழக்காறுகளினதும் பங்களிப்புகள்
மரபுகளும் வழக்காறுகளும் பிரித்தானிய அரசியல்முறையில் செல்வாக்குப் பெற்றிருப்பதைப் போன்று உலகில் வேறு எந்நாட்டு அரசியல் முறையிலும் செல்வாக்குப் பெற்றிருக்கவில்லை.
-பேராசிரியர் .ை பூர்வீக காலம் தொடக்கம் சமுதாயத்தில் வளர்ந்து வந்த கலாசாரப் பண்பாட்டு மாதிரிகள் காலப்போக்கில் வலுவடைந்து சமுதாயத்தின் ஒழுங்கு நிலையினை நிர்ணயிக்கும் சட்ட அந்த ஸ் துடைய மரபுகளாகவும் , வழக் காறுகளாகவும நிலைபெற்றுள்ளன.
34

பிரிதி தானிய மரபுகள் , வழகி காறுகள் எண் பன பிரித்தானியாவின் சமூக மாதிரிகளை மட்டுமல்லாது ஆட்சி முறையினை நிர்ணயிக்கும் அளவுக்கு உயர்ந்த சட்ட விதிகளாகவும் வலுப்பெற்றிருப்பதை விஷேடமாகக் குறித்துக் காட்டலாம். பிரித்தானிய அரசியல் முறை எழுதப்படாத யாப்பாக இருந்து வருவதற்கு இம் மரபுகள் வகிக்கின்ற முக்கியத்துவமே காரணமாகும். இன்று அரசாங்க முறையினை நிர்ணயிக் கும் சட்ட விதிகளாகவும் அரசாங் கதி தினை ஆட்சிப்படுத்தும் சாசனங்களாகவும் இவையே இருந்து வருகின்றன. இதனாலேயே பிரித்தானிய அரசியலில் மரபுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
பிரித்தானியா உலகில் தலையாய ஜனநாயகப் பண்புகள் மிக்க ஒரு நாடாக மிளிர மரபுகள் பெற்றுள்ள முக்கியத்துவமும் ஒரு காரணியாகும். எழுதப்பட்ட சட்ட விதிகளால அலி லது எழுதப் படாத மரபுகளாலும் , வழக்காறுகளாலும், ஆட்சியாளர்களும், மக்களும் கட்டுப்பட்டு செயற்பட்டு வரும் நிலை ஜனநாயக அம்சங்களின் மிகப்பரந்த தன்மையினையே வெளிப்படுத்துகின்றது.
பிரித்தானிய அரசியல் முறையில் செல் வாக்குப் பெற்றுள்ள மரபுகளைப் பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்.
1. பாராளுமன்ற முறை சார்ந்த வழக்காறுகள். 2. அமைச்சரவை சார்ந்த வழக்காறுகள். 1. பாராளுமன்ற முறை சார்ந்த வழக்காறுகள்
1. குறித்த காலத்திற்குக் காலம் பொதுத் தேர்தல்களை
நடத்துவது.
2. பொதுத்தேர்தலில் அதிக ஆசனங்களைப் பெற்ற கட்சியே
அரசாங்கத்தை அமைத்தல்.
3. சிம்மாசனப் பிரசங்க உரை தோல்வியடைந்தால்
பாராளுமன்றத்தைக் கல்ைத்தல்.
35

Page 20
4. மந்திரிசபை கலையும்போதெல்லாம் சட்டத்துறையும்
பதவியிலிருந்து விலக வேண்டிய நிலை.
இவைகள் எழுத்து மூலமாக சட்ட விதிகளாக்கப் பட்டவையல்ல. மாறாக பிரித்தானியாவில் மரபுகளாகவே பேணப்பட்டு வருகின்றன.
2. அமைச்சரவை சார்ந்த வழக்காறுகள்,
பிரித்தானிய அரசியல் முறையில் மந்திரிசபை ஆட்சி முறையும், பாராளுமன்ற நடைமுறைகளின் வளர்ச்சிக்கேற்ப வளர்ந்ததொன்றாகவே அமைந்துள்ளது. அங்கு அரசியல் முறையில் ஏற்பட்ட மாற்றத்துக் கேற்ப பாராளுமன்ற நடவடிக்கைகளும், மந்திரிசபை ஆட்சி முறை பற்றிய நடவடிக்கைகளும் இயல்பாகவே வளர்ந்து வந்துள்ளன.
பாராளுமனி றச் செயற்பாடுகளைப் போலவே அமைச்சரவையின் செயற்பாடுகளும் நிர்ணயிக்கப்பட்ட சட்ட விதிகளால் அன்றி மரபுகளாகவே காணப் படுகின்றன. வால்போல் என்பவரது ஆட்சிக் காலத்தில் அமைச்சரவையின் செயற் பாடுகளை நிர்ணயிக் கும் வரிதகள் LJ 6\D இயற்றப்பட்டாலுங்கூட அவைகளும் எழுதித் தொகுக்கப்பட்ட விதிகளாக அமைந்திருக்கவில்லை. 18ம் நுாற்றாண்டில் அமைச்சரவை தொடர்பாக நிலைப்படுத்தப்பட்ட பின்வரும் விதிகள் எழுதப்படாத மரபுகளாகவே கருதப்படுகின்றன. உதாரணமாக
1. பொதுத் தேர்தலில் அதிக ஆசனங்களைப் பெற்ற கட்சியின் தலைவரைப் பிரதமராக முடி நியமித்தல். 2. மந்திரிசபையின் தலைவராக பிரதமர் விளங்குதல் 3. பிரதமரின் சிபாரிசின்படி மந்திரிசபை அமைச்சர்களை
நியமித்தல்.
4. நாட்டின் நிர்வாகத்திற்கு (ply கூட்டாகப் பொறுப்பு வகித்தல்.

5. வரவு செலவுத்திட்டத்தை மந்திரிசபையே தயாரித்தல்
(நிதி மந்திரி)
6. வரவு செலவுத் திட்டம் தோல் வியடையும் போது
மந்திரிசபையைக் கலைத்தல்
7. மந்திரிமார்களுக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சட்டசபையில் நிறைவேற்றப்பட்டால் மந்திரிசபையைக் கலைத்தல்.
இவ்வாறாகப் பாராளுமன்ற முறை சார்ந்த, அமைச்சரவை முறை சார்ந்த மரபுகள் பிரித்தானியாவில் பேணப்படுவதைப் போன்று உலகில் ஏனைய நாடுகளில் காண்பது அரிதாகும். ஏனைய நாடுகளில் இன்று இவ்விதிகள் அரசியலமைப்பின் ஊடாக எழுதப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
வினா இலக்கம் 6
பிரித்தானியாவின் பிரபுக்கள் சபை குறித்து பின்வரும் தலைப்புக்களின் கீழ் விரிவாக ஆராய்க.
அ) அமைப்பு ஆ) அதிகாரங்கள் இ) சாதக, பாதக கருத்துக்கள்
Gissoldà குறிப்புகள்
இந்தியாவில் இராஜ்யசபா எனவும், அமரிக்காவில் சிெனட்சபை எனவும் அழைக்கப்படும் இரண்டாம் மன்றமானது பிரித்தானியாவில் பிரபுக் கள் சபை எனும் பெயரால் அழைக்கப்படுகின்றது.
இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் சமஷ்டி ஆட்சி முறை நிலவுவதினால் இரண்டாம் மன்றமொன்று அத்தியவசிய
37

Page 21
பண்பாகும். ஆனால் ஒற்றை ஆட்சி நிலவும் பிரித்தானியாவில் அமைக்கப்பட்டுள்ள பிரபுக்கள் சபையானது அந் நாட்டின் சின்னமாக அமைக்கப்பட்டமை அவதானிக்கத்தக்க விடயமே.
ஆரம்ப காலத்தில் மணி னனது அவைக் களம் பிரதிநிதிகளைப் பிரதிபலிக்கும் ஒன்றாகவே பிரபுக்கள் சபை இருந்து வந்தது. காலத்திற்குக்காலம் சமூகத்தில் ஏற்பட்ட மாற்றங்களுக்கேற்ப மாறி வந்துள்ள இச் சபையானது இன்று இரணி டாம் மண் றம் எனவும் மேற் சபை எனவும் அழைக்கப்படுகிறது.
பிரபுக்கள் சபையானது பழைமையினைப் பேணிக் கட்டிக் காக்கும் ஒரு அமைப்பாகையால் பழைமை பேணும் கட்சியின் ஆட்சிக் காலத் தரில் இதன் செல் வாக்கு மிகைத் தும் , தொழிற்கட்சியின் ஆட்சிக்காலத்தில் இதன் செல்வாக்குக் குறைந்தும் இருந்து வந்துள்ளது. தொழிற் கட்சியின் ஆட்சிக்காலத்தில் பிரபுக்கள் சபையின் அதிகாரமானது பல சந்தர்ப்பங்களில் குறைக்கப்பட்டுள்ளது.
அ) பிரபுக்கள் சபை அமைப்பு
பிரித்தானிய பிரபுக்கள் சபையில் இண்று 1073 உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். இப் பிரபுக்கள் சபையின் அங்கத்துவம் 5 வகைப்படும்.
1. பரம்பரை பிரபுக்கள்
ஏறத்தாழ பத்தில் ஒன்பது பங்கு பிரபுக்கள் பரம்பரைப் பிரபுக்கள் ஆவர்
2. அரச குடும்பத்தைச் சார்ந்த பிரபுக்கள்
3. ஸ் கொட்லாந்துப் பிரபுக் களர்
1707ம் ஆண்டு பிரித்தானிய இஸ்கொட்லாந்து உடன் படிக்ககையின்படி 6 இஸ்கொட்லாந்து பிரபுக்களுக்கு இடம்
38

வழங்கப்பட்டுள்ளது. 4. ஆத்மீகப் பிரபுக்கள்
பிரபுக்கள் சபையில் 26 பேர் ஆத்மீகப் பிரபுக்களாக இடம் பெறுவர். இவர்கள் காணி டர் பரி, uu (Ti di ஆகிய நகரங்களைச் சேர்ந்த தலைமைப் பிஷப்புக்களும் மற்றும் 24 முதிர்ந்த ஆங்கில பிஷப்புக்களும் அடங்குவர். மதரீதியான உரிமைகளைப் பேணிப் பாதுகாக்கும் முகமாக ஆத்மீகப் பிரபுக்கள் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கதாகும்.
5. சட்டப் பிரபுக்கள்
பிரபுக்கள் சபையில் சட்டப் பிரபுக்களும் ஆயுட்கால பிரபுக்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது இவர்களின் எண்ணிக்கை 9 ஆகும். இச்சட்டப் பிரபுக்கள் இங்கிலாந்தின் நீதித்துறையில் முதிர்ந்த அனுபவம் பெற்றவர்களாக இருப்பது அவதானிக்கத் தக்கதாகும்.
ஆரம்பத்தில் அயர்லாந்துப் பிரபுக் கள் இடம் பெற்ற போதிலும்கூட 1922 முதல் அயர்லாந்துப் பிரதிநிதித்துவம் இடம்பெறுவதில்லை
பிரபுக்கள் சபையின் பரம்பரைப் பிரபுக்கள் தவிர்ந்த ஏனையோர் பிரதமரினி சிபா ரிசிற் கமைய முடியா ல நியமிக்கப்படுவர். இவர்கள் கல்வி, விஞ்ஞானம், மருத்துவம் போன்ற துறைகளில் பாண்டித்தியம் பெற்றவர்களாக இருக்க வேணி டும் என்ற மரபு இருந்து வருகிறது. எனவே பழைமையினைப் பிரதி நிதித்துவப்படுத்துவதற்காக இச் சபையில் பரம்பரைப் பிரபுக்களே இருந்து வருகின்றனர்.
1958ம் ஆண்டு வரை பிரபுக்கள் சபையில் பெண்கள் உறுப்புரிமை பெறக்கூடிய சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருக்கவில்லை. 1958ம் ஆண்டு பாராளுமன்ற சட்டப்படி பிரபுக்கள் சபையில் பெண்களுக்கும் உறுப்புரிமை பெற்றுக்கொள்ளும் வாய்ப்புத் தோன்றியது.
39

Page 22
ஆ) அதிகாரங்கள்
1. சட்டத்தடுப்பு அதிகாரம்
சட்டத்துறையின் ஒரு பகுதியாக பிரபுக்கள் சபை அமைந்துள்ளதால் சட்டங்களை ஆக்குவதற்கான அதிகாரத்தை இது கொண்டுள்ளது. சட்டத்திற்கான மசோதாக்களைக் கொண்டுவந்து பிரேரித்து சட்டமாக முடிவெடுப்பதில் இச்சபை பொதுமக்கள் சபைக்கும் பொதுவான சமமான அதிகாரத்தைப் பெற்றுள் ளது. ஆயினும் நிதி மசோ தாக் களைப் பொறுத்தவரையில் அத்தகைய மசோதாக்களை ஆரம்பித்து வைக் கக் கூடிய அதிகாரம் இதற்கு இல் லை. நிதி மசோதாக்களை ஆரம்பித்து வைப்பது பொதுமக்கள் சபையின் அதிகாரமாகவே இருந்து வருகின்றது.
சாதாரண சட்டங்களைப் பொறுத்தவரையில் 1911ம் ஆண்டு வரையிலும் பிரபுக்கள் சபை பொது மக்கள் சபையினை போன்று அதிகாரம் கொண்ட அமைப்பாகவே காணப்பட்டது. 1909ம் ஆண்டில் லிபரல் ஆட்சிக் காலத்தில் நிதி மந்திரி “லுயிட் ஜார்ஜ்" என்பவரால் கொண்டுவரப்பட்ட வரவுசெலவுத் திட்டத்தினை பிரபுக்கள் சபை நிராகரித்ததினால், 1910ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெற்றிபெற்ற அரசாங்கம் சபையின் அதிகாரங்களைக் குறைக்கும் மசோதாவைக் கொண்டுவந்தது. இது 1911ம் ஆண்டு பாராளுமன்றச் சட்டம் என அழைக்கப்படுகிறது.
1911ம் ஆண்டுப் பாராளுமன்றச் சட்டப்படி பொதுமக்கள் சபையில் இயற்றப்படும் சாதாரண மசோதாக்களை இரண்டு ஆண்டுகளுக்கும, நிதி மசோதாக்களை ஒரு மாதத்திற்கும் தடுத் துவைக் கும் அதிகாரத் தைப் பிரபுக் கள் ச ை! பெற்றுக்கொண்டது.
2ம் உலக மகா யுத்தத்தின் பின்னர் பதவிக்கு வந்த
தொழிற் கட்சி அரசாங்கம் சாதாரண மசோதாக்கள் மீது
தடுத்து நிறுத்தும் கால எல்லையை இரண்டு வருடத்திலிருந்து ஒரு வருடமாகக் குறைத்தது.
40

எனவே இனி நு பிரபுக்கள் d 60). U சாதார ன மசோதாக்களை ஒருவருட காலத்திற்கும், நிதி மசோதாக்களை ஒரு மாதகாலத்திற்கும் தடுத்து நிறுத்தும் அதிகாரம் கொண்ட சபையாகவே இருந்து வருகின்றது.
2. நீதித்துறை சார்ந்த அதிகாரங்கள்
பிரபுக்கள் சபை சட்டத்துறையின் ஓர் அம்சமாகக் காணப்பட்ட போதிலுங்கூட பிரித்தானியாவின் நீதித்துறையில் மிக உயர்ந்த நீதி நிறுவனமாக இருந்து வருகின்றது. உலக நாடுகளில் காணப்படும் அனைத்து இரண்டாம் மன்றங்களையும் ஒப்பு நோக்குமிடத்து ஏனைய நாடுகளின் இரண்டாம் மன்றங்களுக்கு இல் லாத ஒரு விசேட அதிகாரமாக் இவ்வதிகாரத்தினைக் குறிப்பிடலாம்.
பிரபுக்கள் சபையில் இடமி பெறும் சட்டப் பிரபுக்களை வைத்து அமைந்த ஒரு நீதி மன்றமே இந் நாட்டில் மிக உயர்ந்த நீதி அமைப்பாகும். இராஜப் பிரதிநிதிகளின் இராஜதுரோக குற்றச்செயல்களை விசாரிக்கும் 6ջ (5 நிறுவனமாகவும் , பொதுநலவாய நாடுகளினி மேனி முறையீட்டு வழக்குகளைப் பரிசீலிக் கும் ஒரு நிறுவனமாகவும், பொதுமக்கள் சபையால் கொண்டுவருகின்ற துரோகக் குற்றச் சாட் டுக் களை விசாரணை செய்யும் நிறுவனமாகவும், இராஜதுரோகம், கொடுங்குற்றம் தொடர்பாக முதலில் விசாரணை செய்கின்ற அதிகார எல்லையைக் கொண்ட நிறுவனமாகவும் இருந்து வருகிறது. எனவே நீதித்துறை தொடர்பாக பிரபுக்கள் சபை பெற்றுள்ள அதிகாரம் குறிப்பிட் டுக் கூறக் கூடிய அளவிற்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது எனலாம்.
இ) பிரபுக்கள் சபை தொடர்பான சாதக, பாதக கருத்துக்கள்
பிரபுக்கள் சபையின் செயற்பாடுகள் பற்றி பல அரசியல்
அறிஞர்கள் பல சாதக, பாதக கருத்துக்களை பேராசிரியர்
41

Page 23
முன்வைத்துள்ளனர். முதலில் சாதக கருத்துக்களை எடுத்து நோக்குவோம்.
1. சிறந்த விவாதங்களை நடாத்துதல்,
பிரபுக்கள் சபை மசோதாக்களை விவாதித்து சட்டமாக முடிவெடுப்பதோடு சிறந்த விவாதங்களை நடாத்துவதன் மூலம் அறிவுை வளர்க்கக்கூடிய ஒன்றாகவும் இருந்து வருகின்றது. பொதுவாக இச் சபையில் நடாத்தப்படும் விவாதங்கள் தரமானவையும் பயனுறுதி வாய் நீ தவையாகவும் காணப்படுகின்றன.
r பிரபுக்கள் சபையில் அங்கத்துவம் பெற்று இருப்பவர்களில் புத்திஜீவிகளாகவும் அரசியல் அனுபவம் பெற்றுள்ளவர்களாகவும் ஏறி கனவே துாது வர்களாக, மகா தேசதபதிகளாக, பிரதமர்களாக (முன்னர் பிரித்தானியப் பிரதமர் மாகிரட் தச்சர் அம்மையாரும் தற்போது ஒரு பிரபுக்கள் சபை உறுப்பினரே) அமைச்சர்களாக இருந்தவர்களாகவும் காணப்படுகின்றனர். எனவே அரசியல் அனுபவம் பெற்றவர்களின் விவாதங்கள் தரமானவையாக அமைந்து விடுகின்றன.
மேலும் பிரபுக்கள் சபை அங்கத்தவர்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படாது நியமன உறுப்பினர்களாக இருப்பதினால் தமது வெற்றிக்காக நேரத்தையும், சிந்தனையையும் தேர்தலில் ஈடுபடுத் துவதை விடுத் து தரமான விவாதங்களை நடத்துவதிலே கவனம் செலுத்தி வருகின்றனர்.
2. பொதுமக் களர் அபிப் பிராயங்களை அரசியல் கொள்கைகளாக்குதல். M
பொதுமக்கள் அபிப்பிராயங்களை அரசியல் உலகி*த வெளிப்படுத்தக்கூடிய அமைப்பாகவும் இது காணப்படுகிறது. மக்களது அபிப்பிராயங்களை அரசியல் அபிப்பிராயங்களாக ஒன்று திரட் டி அவி அபிப் பிராயங்களை அரசியல் கொள்கையாக மாற்றுவதற்கு உதவும் ஒன்றாக பிரபுக்கள இருந்து வருகின்றனர். இதுபற்றிக் கருத்துத் தெரிவிக்கும் 42

“லஸ்கி” பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
“பொதுமக்களின் கருத்துக்களை அறிய உதவும் பயனுள்ள அரசியல் மேடையாகப் பிரபுக்கள் சபை இருந்து வருகின்றது.”
3. பொதுமக்கள் சபையினர் வேலைப்பளுக்களைக் குறைத்தல்,
பிரபுக்கள் சபையானது உள்ளுராட்சி தொடர்பான மசோதாக்கள், தனிநபர் மசோதாக்கள் என்பவற்றை ஆரம்பித்து விவாதித்து வருவதால் குறித்த இந்த விடயங்களில் பொதுமக்கள் சபையானது தனது நேரத்தையும், கவனத்தையும் செலுத்தவேண்டிய அவசியம் இல்லாமற் போகின்றது. எனவே, பிரபுக்கள் சபை சட்ட நுணுக்க விடயங்களில் பொதுமக்கள் சபைக்கு உதவும் ஒன்றாகவும் அதன் வேலைப்பளுவைக் குறைக்கும் ஒன்றாகவும் இருந்து வருகின்றது.
4. கீர்த்தியான சட்டங்கள் உருவாதல்
1 மீ மணி றமான பொதுமக்கள் சபையினரால அவசரபுத்தியுடன் ஆக்கப்படும் மசோதாக்களைத் தடுத்துநிறுத்தி ஆலோசனைகளைக் கூறுவதன் மூலம் மசோதாக்களில் உள்ள வழுக்கள் நீக்கப்பட்டு கீர்த்தியான சட்டங்கள் உருவாவதற்கு உதவுகிறது.
பாதகமான கருத்துக்கள்
Lரிர புக் களர் சபையானது சில நனி மைகளைக் கொண்டுள்ளபோதிலும்கூட சில குறைபாடுகளையும் (தீமைகள்) கொண்டுள்ளதென்பதனைக் காணலாம். எனவே பிரபுக்கள்சபை குறித்து முன்வைக்கப்பட்டுள்ள பாதகமான கருத்துக்களைப் பின்வருமாறு தொகுத்து நோக்கலாம்.
1 ஜனநாயகத் தன்மையற்ற நிறுவனம்,
நவீன அரசுகளில் சனநாயக உரிமை என்று கூறும் போது மக்கள் தமது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து ஆட்சிக்கு
43

Page 24
உட்படுத்துவதையே எடுத்துக்காட்டலாம். சட்டவாக்கத்துறையின் ஒரே அங்கமாக விளங் கும் பிரபுக் கள் சபையரினி அங்கத்தவர்களை மக்கள் தேர்ந்தெடுப்பதில்லை. மாறாக 100% நியமனமாகவே காணப்படுகின்றது. எனவே ஏனைய நாடுகளில் காணப்படும் மன்றுகளைப்போல இது பிரதிநிதித்துவ அமைப்பாகக் காணப்படவில் லையென்றும் , பிரதிநிதிகள் சபையால் முனி வைக் கப் படும் சட்ட மசோதாக்களை பிரதிநிதித்துவ அமைப்பாக இல்லாதிருக்கும் பிரபுக்கள் சபை தடுத்து நிறுத்துவது ஜனநாயகத் தன்மை அற்ற ஒரு ஏற்பாடாகும் என்றும் குறை கூறப்பட்டு வருகிறது.
2. பிரதமரின் செல்வாக்கை
அதிகரித்துக் கொள்ளும் வாய்ப்பு. பிரபுக்கள் சபையில் (பரம்பரை பிரபுக்கள் தவிர) நியமனம்பெறும் பிரபுக்கள் பிரதமரின் ஆலோசனைப்படியே நியமிக்கப்படுவதனால் பிரதமரின் ஆதரவாளர்களை பிரபுக்கள் சபையில் அதிகரித்துள்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் உண்டு. பொதுநலன் புறக்கணிக்கப்பட்டு கட்சி சார்பான நலன்களே மேலோங்கி நின்றது எனவும் கூறப்படுகிறது.
3. பழைமை பேணும் அமைப்பு
பழைமைபேணும் அமைப்பாக இச் சபை இருந்து வருவதால் முற்போக் கான எணர் ணக் கருக்களுக்கும் , சிந்தனைகளுக்கும் தடையாக அமைந்துவிடுகிறது என்று சில அரசியல் அறிஞர்கள் குறை கூறுவர். "ராம்சேர் மூர்” எனும் அறிஞர் பிரபுக்கள் சபை பற்றிப் பின்வருமாறு கூறுகின்றார்.
பிரபுக்கள் சபையானது செல்வந்தர்களினதும் பிற்போக்கக் சக்திகளினதும் உறைவிடமாகும்.
4. காலதாமதத்தை ஏற்படுத்தல்
காலதாமதத்தை ஏற்படுத்துவது பிரபுக்கள் சபையின் மற்றுமொரு முக்கிய குறைபாடாகும். பிரபுக்கள் சபைக்கு
44

வழங்கப்பட்டுள்ள தடுத்து நிறுத்தும் அதிகாரம் சட்டவாக்க, நிர்வாக விடயங்களைக் காலதாமதப்படுத்துகின்றது. சில வேளைகளில் இக் காலதாமதமானது மகோ தாக்களைச் சீரழித்துவிடவும் கூடும். மேலும் இத் தடுத்து நிறுத்தும் அதிகாரம் சில மசோ தாக்களை கால சூழ்நிலைக்குப் பொருத்தமற்ற சட்டங்களாக ஆக்கப்படவும் ஏதுவாகிறது.
பிரபுக்கள் சபைக் கு எதிராக பல கண்டனங்கள் தெரிவிக்கப்பட்ட போதிலும் அச்சபை இன்னும் பிரித்தானிய அரசியலில் குறிப்பிடத்தக்க செல்வாக்கைச் செலுத்துவதைக் காணலாம். சட்டவாக்க விடயங்களில் குறிப்பிடத்தக்க அளவு பங் கினை வகித் தே வருகிறது. பழைமைபேணுமி கட்சிக் காலத்தில் இதன் செல்வாக்குகள் அதிகரித்தும், தொழிற்கட்சிக் காலத்தில் இதன் செல்வாக்குகள் குறைந்தும் காணப்பட்டபோதிலும்கூட இச் சபையினை முழுமையாக நீக்க எவரும் முன்வராமை பிரித்தானிய மக்களது பழைமைபேணும் பண்பினையும், இச்சபையின் அமைப்பில் இருந்து விடுபட்டுவிடும் எண்ணம் இல்லாதிருப்பதையும் எடுத்துக்காட்டுகின்றது.
45

Page 25
தெரிவு செய்யப்பட்ட நாடுகள்
ஐக்கிய அமெரிக்கா
46
 

66A. இலக்கம்
பின்வரும் தலைப்புக்களின் கீழ் ஐக்கிய அமெரிக்காவின் அரசாங்க முறையை ஆராய்க. VK.
அ) ஜனாதிபதியைத் தேர்ந்தெடுத்தல்.
ஆ) ஜனாதிபதியின் கடமைகளும், அதிகாரங்களும்.
ஜிடைக் குறிப்புகள்
அ) ஜனாதிபதியைத் தேர்ந்தெடுத்தல்
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதியைத் தேர்ந்தெடுத்தல் ஒரு ஜனாதிபதித் தேர்தலினாலாகும். இருப்பினும் இத்தேர்தல் இலங்கையின் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கு நடாத்தப்படும் தேர்தலைப் போன்றதல்ல. அங்கு ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பது ஒரு தேர்தல் கல்லுாரியினாலாகும். பதவியிலிருக்கும் ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடையும் ஆண்டின் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் இத்தேர்தல் நடைபெறும். (அடுத்த அமெரிக்க ஜனாதிபதித்தேர்தல் 2000 நவம்பரில் நடைபெறும்)
y s.
யாப்பைத் தயாரித்தவர்கள் ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் நேரடியாக வாக்களிப்பதை விரும்பவில்லை. எனவேதான் ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் கல்லுாரியொன்றை அமைத்தனர். நாட்டின் சட்டத்துறையான காங்கிரசினது இரு சபைகளினதும் அங்கத்தவர்களின்
எணர் னிக் கைக் குச் சமனாக (435+100+ W. D.C.O3=538) அங்கத்தவர்களைக் கொண்டதாக இக் கழகம் காணப்படும். தற்பேf : இக் கழகத்தில 538 உறுப் பினர்கள்
காணப்படுகின்றனர். இக் கல்லுாரி அங்கத்தவர்களை வாக்காளர்கள் தெரிவு செய்வர். 04 ஆண்டுகளைக் கொண்ட பதவிக் காலத்திற்காக ஜனாதிபதி இக்கல் லுாரியால் தேர்ந்தெடுக்கப்படுவார். '
ஆனால் நடைமுறையில் இவ் ஒழுங்குமுறை சேர்ந்த
47

Page 26
பயனற்றதாகிவிட்டது. ஏனெனில் அங்கு ஜனநாயகக் கட்சி, குடியரசு கி கட்சி ஆகிய இரு கட்சிகளுமே செலவாக் குப் பெற்றுள் ளன. எனவே எதி தனை பேர் போட்டியிட்டாலும் இவ்விரு கட்சிகளிலிருந்தே ஜனாதிபதி தெரிவாவார். கட்சிகளின் சார்பில் தேர்தல் கல்லுாரிக்குப் போட்டியிடுபவர்கள் நியமிக்கப்படுவதால் தேர்தல் கல்லுாரி கூடுமு னி பே ஜனாதிபதி யார் எண் பதை மக்களால தெரிந்துகொள்ள முடிகின்றது. மேலும் ஜனாதிபதித்தேர்தலுக்கு முன்பாக நடாத்தப்படும் அபிப்பிராய வாக்கெடுப்புக்களினாலும் அபேட்சகர்களின் நிலைப்பாடு குறித்து தெரிந்துகொள்ள முடியும்.
ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக் கப்படுபவர் இக் கல்லுாரியின் 538 உறுப்பினர்களுள் குறைந்தபட்சம் 270 உறுப்பினர்களின் ஆதரவையாவது பெற்றுக்கொள்ள வேண்டும். ஏதும் காரணிகளால் தேர்தல் கல்லூரியில் 270 வாக்குகளைப் பெற்றுக் கொள்ள முடியாது விடின் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு பொதுமக்கள் பிரதிநிதிகள் சபைக்கு வழங்கப்படும். தேர்தல் கல்லுாரியில் அதிகப்படியான வாக்குகளைப் பெற்ற மூவரில் ஒருவரை பெரும்பான் :)ம வாக்குகளின் மூலம் காங்கிரஸ் தேர்ந்தெடுக்கும். (ஜனவரி மாதம் 20ம் திகதிக்கு முன்பு ஜனாதிபதி தெரிவுசெய்யப்படாமல் இருப்பின் உபஜனாதிபதி ஜனாதிபதியின் பணிகளை ஆற்றுவார்) பிரதிநிதிகள் சபையால் 1810 ஜெபர்சனும் 1822ல் அடம்ஸ் என்பவரும் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதர்கும்.
அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படக் கூடியவர் 35 வயதைப் பூர்த்திசெய்தவராகவும் ஐக்கிய அமெரிக்காவில் 14 வருடத்திற்குக் குறையாமல் வசித்த அமெரிக்கப் பிரஜையாகவும் இருத்தல் வேண்டும். மேலும் இவருக்கு ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான இரு தடவைகளே வாய்ப்புண்டு.
1992ம் ஆண்டு நவம்பரில் ஐக்கிய அமெரிக்காவில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச்
48

கிளிங்டன் தேர்தல் கழகத்தில் 376 வாக்குகளைப் பெற்றுத் தெரிவு செய்யப்பட்டு அமெரிக்காவின் 42வது ஜனாதிபதியாகப் பதவியேற்றுக்கொண்டார்.
ஆ) அமெரிக்க ஜனாதிபதியினர் கடமைகளும், அதிகாரங்களும்,
ஜனாதிபதியின் கடமைகளையும், அதிகாரங்களையும் பின்வரும் தலைப்புக்களின் கீழ் ஆயத்தப்படுத்திக்கொள்ளலாம்.
1. நிர்வாகத்துறை சார்ந்த கடமைகளும், அதிகாரங்களும். 2. சட்டத்துறை சார்ந்த கடமைகளும், அதிகாரங்களும். 3. நீதித்துறை சார்ந்த கடமைகளும், அதிகாரங்களும், ஐக்கிய அமெரிக்க யாப்பில் 2ம் அத்தியாயத்தின்படி ஐக்கிய அமெரிக் காவின் நிர்வாகப் பொறுப் புக் கள் ஜனாதிபதியையே சாாந்துள்ளது.
1. நிர்வாகத் துறை சார்ந்த அதிகாரங்களும், கடமைகளும்,
அ) உள்நாட்டு நிர்வாக அதிகாரங்கள் ஆ) வெளிநாட்டு நிர்வாக அதிகாரங்கள்.
இ) போர் அதிகாரங்கள்.
அ) உள்நாட்டு நிர்வாக அதிகாரங்கள்.
அரசின் பல துறைகளையும் , அவற்றினி ஊழியர்களையும் இயக்கிக் கட்டுப்படுத்துதல்.
உயர் அதிகாரிகள், துாதுவர்கள், இராஜதந்திரிகள், பிரதம நீதிபதி, உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆகியோரை நியமித்தல். (செனட்டின் ஆலோசனைப்படி)
புமைச்சரவை உறுப் பினர்கள் , நிரந்தரக் காரியதரிசிகள் ஆகியோரை நியமித்தல்.
ஆ) வெளிநாட்டு நிர்வாக விடயங்கள்
இதில் காங்கிரஸ் சில பொறுப்புக்களைக் II
49

Page 27
கொண்டுள்ளதாயினும் நாட்டின் தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதியே கடமையாற்றுவார். | வெளிநாட்டு உடன்படிக்கைகள் (செனட்டின் அனுமதியுடன்) l நிர்வாக உடன்படிக்கைகள் (சுயமாக)
இ) போர்க்கால நிர்வாக விடயங்கள்.
இவர் முப்படைத் தலைவர். எனவே (செனட் டின் அனுமதியுடன்) முப்படைகளினதும் தலைவர்களை நியமிப்பார்.
யுத்தப் பிரகடனம் (காங்கிரசின் அனுமதியுடன்) யுத்தமொன்றினைத் தொடங்கவும், யுத்த நிதிகளை ஒதுக்கீடு செய்யவும் காங்கிரசின் அனுமதியைப் பெற்றாக வேண்டும்.
l யுத்தகாலத்தில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் உச்சமானவையாகும்.
2. சட்டத் துறை சார்ந்த கடமைகளும் , அதிகாரங்களும்,
அ) யாப்பின் முதலாம் அத்தியாயம் சட்டவ" க்க அதிகாரத்தை இரு சபைகளுக்கும் (காங்கிரஸ், செ6 ட்) வழங்கியுள்ளது.
ஆ) நடைமுறையில் சட்டமியற்றும் துறையையும், நிர்வாகத்துறையையும் பிரிப்பது கடினம்.
இ) எனவே ஜனாதிபதி சட்டவாக்கத்துறையில் பின்வரும் அதிகாரங்களைச் செலுத்துகின்றார். 1.சட்டமியற்ற வேண்டுகோள் விடுத்தல். 2.இயற்றப்படும் சட்டங்களைக் கையொப்பமிட்டு, சட்டமாக்குதல். 3.தடுப்பு அதிகாரத்தைப் பயன்படுத்துதல் (1.தற்காலிக வீட்டோ 2. பொக்கட் வீட்டோ)
3. நீதித்துறை சார்ந்த அதகொராஷ்களும், கடமைகளும்,
யாப்பின் மூன்றாம் அத்தியாயம் நீதித்துறையானது சுயேட்சையாக இயங்கும் உயர்நீதிமன்றத்திடமும் காங்கிரசால் தாபிக்கப்படும் ஏனைய நீதிமன்றங்களிடமும் வழங்கப்பட்டுள்ளன.
50

நீதித்துறையில் ஜனாதிபதியின் பங்களிப்பு.
a) உயர் நீதியரசர்களையும், பிரதம நீதியரசர்களையும்
செனட்டின் அனுமதியுடன் நியமித்தல். b) மன்னிப்பு வழங்குதல். C) தண்டனையைத் தாமதித்தல். d) பொது மன்னிப்பு (இராஜ துரோக செயல் தவிர).
ஐக்கிய அமெரிக்காவின் அரசாங்க முறையுடன் தொடர்புபடுத்தி பின்வருவனவற்றை ஆராய்க.
அ) சட்டவாக்கத்துறை
ஆ) நீதித்துறை
அ) சட்டவாக்கத்துறை
ஐக்கிய அமெரிக்காவின் சட்டவாக்கத்துறையான காங்கிரஸ் இரண்டு பிரதான பிரிவுகளைக் கொண்டுள்ளது. 1. பொதுச்சபை (கீழ்சபை) 2. செனட்சபை (மேல்சபை). ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பின் 1ஆம் உறுப்புரை யானது சட்டவாக்க அதிகாரத்தை காங்கிரசின் இரு சபைகளுக்கும் வழங்கியுள்ளது. (எளிய நடைமுறையை நோக்குமிடத்து கீழ் சபையே காங்கிரஸ் எனும் பெயரால் அதிகமாக உச்சரிக்கப்படுவதைக் காணலாம்.)
1. கழ்ேசபை
ஐக்கிய அமெரிக்காவின் கீழ்சபையானது மொத்தம் 435 அஈள் கத்தவர்களைக் கொணர் டுள்ளது. இவர்கள் மாநிலங். எரின் சனத்தொகைக்கேற்ப சர்வஜனவாக்குரிமை மூலம் தெரிவுசெய்யப்படுவர். எம் மாநிலத்தின் சார்பில் போட்டியிடுகின்றாரோ அம்மானிலத்தில் குறைந்து 7 ஆண்டுகளாவது வசித்தவராகவும், 25 வயதைப் பூர்த்தி செய்தவராகவும் இருத்தல் வேண்டியது அபேட்சகருக்குரிய தகைமையாகும். கீழ்சபையின் பதவிக்காலம் 2 ஆண்டுகளாகும். 51

Page 28
கீழ்சபையின் கடமைகள்,
சட்டமியற்றுவதில் கீழ் சபையானது செனட்டுடன் சம உரிமை கொண்டதாகக் காணப்படும்.
நிதி மசோதா கி களர் இச் சபையினாலேயே தொடங்கப்படும். (ஆனால் நிதி மசோதாக்களை எற்க, மறுக்க, திருத்தக்கூடிய அதிகாரம் செனட்டுக்குண்டு)
l ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, அமைச்சர்கள், அரச ஊழியர்கள் ஆகியோருக் கெதிராக இராஜதுரோ கக் குற்றங்களைத் தொடுப்பது.
IV தேர்தல் கழகத்தினால் அறுதிப் பெரும்பான்மை பெறாத விடத்து ஜனாதிபதி அபேட்சகர் மூவருள் ஒருவரை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்தல்.
V யாப்புத் திருத்தம். புதிய மாநிலங்களைச் சேர்த்தல் ஆகியவற்றைச் செனட்டுடன் சேர்ந்து செயலாற்றல்.
VI யுத்தப் பிரகடனங்களை மேற்கொள்ள ஜனாதிபதிக்கு அனுமதி வழங்கல் போன்றன.
2.செனட் சபை (மேல்சபை அல்லது இரண்டாம் மறுைம்) சமஷ்டி அரசொன்றிற்கு அத்தியவசியமான கூறுகளுள் ஒன்றாக இரண்டாம் மன்றமும் காணப்படுகின்றது. விசேடமாக மாநில உரிமைகளைப் பேணிக் கொள்வதில் இரண்டாம் மன்றத்தின் பங்களிப்பு இன்றியமையாததாகும்.
உலகில காணப்படும் அனைத்து இரண டாம் மன்றங்களை விடவும் ஐக்கிய அமெரிக்காவின் இரண்டாம் மன்றமான செனட்சபை (அதிக) வலிமை மிக்க சபையாகக் காணப்படுகின்றது. பிரதானமாக செனட்டின் இத்தகைய வலிமைக்கு மூல காரணமாகக் குறிப்பிடப்படுவது செனட் உறுப் பினர்கள் மக் களால நேரடியா கதி தேர்ந்தெடுக்கப்படுவதாலாகும்.
அமெரிக்க செனட் சபையின் மொத்த உறுப்பினர்
எணர்னிக் கை 100 ஆகும். ஐக்கிய அமெரிக் காவில்
அங்கீகரிக்கப்பட்ட 50 மாநில அரசுகளிலிருந்தும் இரண்டு 52

அங்கத்தவர் என்ற விகிதத்தில் இத் தெரிவு இடம்பெறும். செனட்டராகப் போட்டியிடக்கூடிய அடிப்படைத் தகைமைகளைப் பின்வருமாறு குறிப்பிடலாம். எந்த மாநிலத்தின் சார்பில் இவர் போட்டியிடுகின்றாரோ அம்மாநிலத்தில் குறைந்தபட்சம் 9 ஆண்டுகளாவது வசித்திருத்தல் வேண்டும். அத்துடன் 30 வயதைப் பூர்த்தி செய்தவராகவும் இருத்தல் வேண்டும்.
செனட்டர்களின் பதிவிக் காலம் 6 ஆண்டுகளாகும். இதில் மூன்றிலொரு பங்கினரான செனட்டர்கள் ஒவ்வொரு இரண்டாண்டுக்கொருமுறை மாற்றியமைக்கப்படுவர். (எனவே செனட் கலையாத சபையாகும்.)
செனட்டின் அதகொராங்கள்
செனட்டினர் அதிகாரங்களைப் பினர் வருமாறு தொகுத்து நோக்கலாம்.
சட்டவாக்கத்தில் இது கீழ் சபையுடன் சம அதிகாரத்தினைக் கொண்டுள்ளது.
நிதி மசோ தாக்களை ஏற்றல், நிராகரித்தல் , திருத்துதல் (உலகில் காணப்படும் ஏனைய இரண்டாம் மன்றங்கள் பெற்றிராத விஷேட அதிகாரமாக இதனைக் குறிப்பிடலாம்)
l ஜனாதிபதியின் வெளிநாட்டு ஒப்பந்தங்களுக்கு அனுமதியை வழங்குதல். (ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி வுற்றோ வில்சன் சர்வதேச சங்கத்தில் இணைவதற்கான அனுமதியை செனட்டிடம் கோரிய போது செனட் அதை நிராகரித்தது. எனவே சர்வதேச சங்கத்தில ஐக்கிய அமெரிக்காவால் இணைய முடியவில்லை.)
V அகிமைச்சரவை உறுப்பினர்கள், பிரதம நீதியரசர், முப்படை :னதும் தளபதிகள் துாதுவர்கள் ஆகியோரை நியமிப்பதறகான அனுமதியினை ஜனாதிபதிக்கு வழங்குதல்
V கீழ் சபையுடன் இணைந்து யாப்பைத் திருத்துதல். புதிய மாநிலங்களைச் சேர்த்தல்.
VI துணை ஜனாதிபதித் தேர்தலில் அறுதிப் 3.
53

Page 29
பெரும்பான்மை பெறாத நிலையில் துணை ஜனாதிபதியைத் தேர்ந்தெடுத்தல். (துணை ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு அபேட்சகரும் அறுதிப் பெரும்பான்மை வாக்குகளைப் பெறாத நேரத்தில் ஆகக் கூடுதலான வாக்குகளைப் பெற்ற இருவரில் ஒருவரைத் தேர்ந்தெடுப்பது செனட்டின் கடமையாகும் செனட்டின் தலைவர் துணை ஜனாதிபதியே)
VII ஜனாதிபதி, துணை ஜனாதிபதி ஆகியோருக்கெதிராக காங்கிரசால்" தொடுக்கப்படும் விசாரணைகளை மேற்கொள்ளல்.
அமெரிக்காவினர் செனட் சபை வலிமை பொருந்தியதாக இருப்பதற்கான காரணங்கள். አ உலகில் காணப்படும் இரண்டாம் மன்றங்களில் ஐக்கிய அமெரிக்காவின் இரண்டாம் மன்றமான செனட்சபை வலிமை பொருந்தியதாகக் காணப்படுகின்றது. இதற்கான நியாயங்களைப் பின்வருமாறு தொகுத்து நோக்கலாம்.
1. அமெரிக்காவின் செனட் சபையானது குறைந்த அங்கத்தவர்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளமை. இங்கு 100 அங்கத்தவர்களே காணப்படுவர். எனவே சிறப்பான
விவாதங்களைப் பயனுறுதிவாய் நீத முறையில் நடாத்தக்கூடியதாக இருக்கும். (ஆனால் பிரித்தானியாவின் இரணி டாமி மண் றமான பிரபுக் கள் BF 60) L அதிக
அங்கத்தவர்களைக் கொண்டதாக இருக்கின்றது. இதன் மொத்த அங்கத்தவர் எண்ணிக்கை 1073க்கு மேலாகும்)
2. ஐக்கிய அமெரிக்க செனட்டின் வலிமைக் கான மற்றுமொரு காரணி இதன் அங்கத்தவர்கள் அனைவரும் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுவதாகும். (ஆனால் பிரித்தானியாவின் பிரபுக்கள் சபையானது 5 விதமான பிரபுக்களை கொண்டதாக இருக்கும். அதாவது பரம்பரைப் பிரபுக்கள், முடியின் சார்பான பிரபுக்கள், ஸ்கொட்லாந்துப் பிரபுகள், சட்டப் பிரபுகள், மதப் பிரபுக்கள் இவர்கள் தெரிவாக அன்றி பரம்பரை அலகாக அல்லது நியமனமாகவே
இடம்பெறுவர்)
54

செனட்டர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகளாக இருக்கின்றமை. (அமெரிக்காவின் கீழ் சபையின் பதவிக்காலம் 2 ஆண்டுகளே. எனவே திட்டமிட்டு செயற்பாடுகளைப் புரியக்கூடிய கால அவகாசம் குறைவாகவே காணப்படும்)
4. அமெரிக்க செனட்டானது ஜனாதிபதியின் நிர்வாக அதிகாரங்களைப் பகிர்ந்து கொண்டிருப்பதும், செனட்டின் வலிமைக்கான மற்றுமொரு காரணியாக சுட்டிக்காட்டப்படுகின்றது. (உதாரணமாக ஜனாதிபதியின் வெளிநாட்டு ஒப்பந்தங்களுக்கு அனுமதியை வழங்குதல், ஜனாதிபதியின் சிலவகையான நியமனங்களுக்கு அனுமதியை வழங்குதல் போன்றவற்றைக் கூறலாம்.)
5. செனட்டின் ஆய்வுக்குழுக்கள். ஐக்கிய அமெரிக்காவின் 2ம் மன்றமான செனட்சபையின் ஆய்வுக் குழுக்கள் உலகில் ஏனைய 2ம் மன்றங்களில் காணப்படும் உப குழுக்களை விட வலிமை மிக்க வை. பொதுவாக ஆட்சியரில முறைகேடுகளைத் தவிர்க்குமுகமாக இது அமைச்சர் முதல் சாதாரண பிரஜைவரை விசாரிக் கும் அதிகாரத்தைக் கொண்டுள்ளது. இதேபோல கலந்தாலோசனைக் குழுக்களும் அதிகாரமிக்கவை. செனட்டின் வெற்றிக்கு இக்குழுக்களும் ஒரு காரணமெனக் கூறப்படுகின்றது.
6. மாநிலங்களின் நலவுரிமைகளைப் பேணுதல்
ஐக்கிய அமெரிக்கா ஒரு சமஷ்டி நாடாகும். எனவே மாநில அரசுகளின் சார்பாக இது அமைக்கப்பட்டிருப்பதனால் மாநிலங்களின் நல உரிமைகளைப் பேணுவதில் கரிசனை காட்டி வருகின்றது. இத் தன்மையானது செனட்டின் மேன்மைக்கான மற்றுமொரு காரணியாகக் குறிப்பிடலாம்.
7. துவாக ஐக்கிய அமெரிக்காவின் செனட்சபையை எடுத்து நோக்குமிடத்து இதன் அங்கத்தவர்கள் முதிர்ந்த அரசியல் அனுபவமிக்கவர்களாகவும், புத்திஜீவிகளாகவும் இருப்பதைக் காணலாம். எனவே செனட்டின் உறுப்புரிமை
55

Page 30
மேம்பட்டிருப்பதனால் சிறந்த விவாதங்களை நடத்தக்கூடிய சூழ்நிலை உள்ளதெனலாம்.
8. நிதி மசோ தாக் களைத் திருத்தம் செய்யும் அதிகாரமானது ஏனைய இரண்டாம் மன்றங்கள் பெறாத மிக முக்கியத்துவம்வாய்ந்த ஓர் அதிகாரமாகும். எனவே ஐக்கிய அமெரிக்காவின் செனட் சபை வலிமை பொருந்தியதாக இருப்பதற்கு இதுவுமி ஒரு காரணியாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆ) நீதித்துறை
1. யாப்பின் மூன்றாம் உறுப்புரையின் 1ம் உப பிரிவு பின்வருமாறு குறிப்பிடுகின்றது. நீதி வழங்கும் அதிகாரமானது உயர் நீதிமன்றத்திட்டமும் அவ்வப்போது காங்கிரசால ஸ்தாபிக்கப்படும் கீழ் நீதிமன்றங்களிடமும் வழங்கப்பட்டுள்ளன.
2. எனவே யாப்பின் மூலமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள உயர் நீதிமன்றத்தின் கடமைகளும், பொறுப்புக் களும் அமெரிக்காவைப் பொறுத்தமட்டில் மிக முக்கியமானதாகும்.
1. அமைப்பு: இது 09 நீதியரசர்களைக் கொண்டது. (தலைவர்-பிரதம நீதியரசர்) இந்த நீதியரசர்களை ஜனாதிபதி (செனட்டின் அனுமதியுடன்) நியமிப்பார்.
2. அ) உயர் நீதிமன் றம் சில விசாரணைகளை நேரடியாக விசாரணைசெய்யும். உதாரணமாக: ஜனாதிபதி, அமைச்சர்கள், துாதுவர்கள், அயல்நாட்டுத் துாதுவர்கள், மாநில அரசுகளுக்கிடையே ஏற்படும் பிணக்குகள் போன்றவை.
ஆ) சில விசாரணைகளை மேன் முறையீடாக
மேற்கொள்ளும். உதாரணமாக சிவில் நீதிமன்றங்கள், கிரிமினல் நீதிமன்றங்கள் போன்றவற்றின் மேன்முறையீடுகள்.
56

உயர் நீதிமன்றத்தினர் சில முக்கியத்துவமான பணிகள்,
1. ஐக்கிய அமெரிக்காவின் அரசியல் திட்டத்திற்கு இறுதிவிளக்கம் அளித்தல். “(நாம் அரசியல் அமைப்புக்கு உட்பட்டே வாழ்கிறோம். ஆனால் நீதிபதிகள் அது எனினவெனிறு கூறு கறார்களோ அதுவே அரசியல் அமைப் பாகும்.” என்ற கருத்தினை நீதிபதி ஹக் ஸ் கூறியதிலிருந்து இதனை உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.)
2. மத்திய, மாநில பிணக்குகளை விசாரித்துத் தீர்த்தல்.
3. காங்கிரஸ், செனட் போன்றவற்றில் இயற்றும் சட்ட மூலங்கள் தொடர்பான பினக்குகள் ஏற்படின் அதுபற்றி ஆலோசனை வழங்குதல்.
4. ஐக்கிய அமெரிக்காவின் அரசியல் நிர்வாகம், நிரந்தர நிர்வாகம் சார்ந்த பிணக்குகளின்போது விசாரணைகளை மேற்கொள்ளல்.
பின்வருவன பற்றிச் சிறுகுறிப்புகள் எழுதுக. அ) அமெரிக்காவின் அரசியல் கட்சிகள்
ஆ) அமெரிக்காவின் அமைச்சரவை.
சுருக்க விடைக்குறிப்பு அ) அமெரிக்காவின் அரசியல் கட்சிகள்,
: ) நாட்டின் அரசியல் நடவடிக்கையை அந்நாட்டின் அரசியல் ஈட்சிப் போக்கிலிருந்து நாம் அறிந்துகொள்ளலாம். 2. அரசியல் திட்டத்தில் அரசியல் கட்சிகள் பற்றிக் கூறப்படவில்லை. இருப்பினும் கட்சிகள் விரும்பப்படுவது பற்றிக் dnyDůLI (b6í6 gol.
57

Page 31
3. அமெரிக்காவின் அரசியல் கட்சிகளை கட்சிகள் என்று அழைப்பதைவிட குழுக்கள் என்று அழைப்பதே பொருந்தும்.
4. இன்று ஐக்கிய அமெரிக்காவில் இரண்டு பிரதான கட்சிகள் காணப்படுகின்றன.
அ) ஜனநாயகக் கட்சி
ஆ) குடியரசுக் கட்சி
5. குடியரசுக் கட்சி ஒற்றுமைக்கும், மனித தர்மத்திற்கும் போராடும் கட்சி என்று அழைக்கப் படுகின்றது. இது செல்வந்தர்கள் சார்புடைய கட்சியாகும்.
6. ஜனநாயகக் கட்சி தாழ்த் தப்பட்டவர்களுக்காக உரிமைக் குரல்கொடுக்கும் கட்சி என்று அழைக்கப்படுகின்றது. பொதுவாகத் தெற்குப் பிரதேசத்தில் இதன் ஆதரவு அதிகம்.
ஆ) அமெரிக்காவின் அமைச்சரவை,
1. அமெரிக்காவின் ஆட்சித்துறை, நிர்வாகப் பொறுப்பு ஜனாதிபதியையே சார்ந்துள்ளது.
2. ஜனாதிபதியின் சொந்த் விருப்பில் நியமிக்கப்பட்டு அவரின் கீழ் பணிபுரியும் அதிகாரிகளை அமைச்சராக்கிக் கொள்ளும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு.
3. அமைச்சரவை முறை தொடர்பாக எவ்வித சட்ட ஏற்பாடுகளும் யாப்பில் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. அதாவது ஜனாதிபதி எச்சந்தர்ப்பத்திலும் அமைச்சரவையின் பலத்தில்
நம்பிக்கை கொண்டிருக்கத் தேவையில்லை. (எனவே பலவீனமான அமைப்பு)
4. அமைச்சரவையரில வாக் கெடுப் பு இல் லை .
விவாதங்களில் குறிப்புக்கள் எடுக்கப்படமாட்டாது, முடிவுகள்
உத்தியோக பூர்வமான பதிவுகளாக இருக்கமாட்டாது.
5. கூட்டுப் பொறுப்பு முக்கியமில்லை. (அமைச்சர்கள்
ஜனாதிபதியுடன் மிகவும் நெருங்கியவர்களாகவே இருப்பர்)
58

தெரிவு செய்யப்பட்ட நாடுகள்
முன்னைய சோவியத் ரஷ்யா
59

Page 32
முன்னைய சோவியத் யூனியனது அரசாங்கத்தின் பிரதான | அம்சங்களைப் பின்வரும் தலைப்புக்களின் கீழ் ஆராய்க.
S9) asigurfüD GEFT6îului Supreme Sovieti
Sb) îJaffluuio Presidium
இ) அமைச்சரவை
ஈ) கட்சி முறை
விடைக்குறிப்புகள்
1. சோவியத் பாராளுமன்றம் இரண்டு சபைகளைக் கொண்டது.
சுப்ரீம் சோவியத்
I கூட்டாட்சிச் சோவியத் தேசிய இன சோவியத்
2. கூட்டாட்சிச் சோவியத்தின் அங்கத்தவர்களை சோவியத் வாக்காளர்கள் தெரிவு செய்வர். இதன் அங்கத்தவர்கள்.
குடியரசுகளிலிருந்து 15 x 32 விதம் = 480 I தன்னுரிமையிலிருந்து 20 x 11 வீதம் = 220 I தன்னுரிமை ஆட்சிப் பகுதியிலிருந்து 8 X 5 வீதம் = 40 IV தன்னுரிமை தேசிய பகுதிகளிலிருந்து 10 x 1 வீதம் = 10
மொத்த அங்கத்தவர் தொகை = 750
3. தேசிய இன சோவியத்தும் 750 உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் (இத் தெரிவு தேசிய ரீதியில் இடம் பெறும்)
4.அதிகாரங்கள்
அ) சட்டமியற்றலில் இரண்டிற்கும் சம அதிகாரமுண்டு. ஆ) சாதாரண மசோதா, நிதி மசோதா என
வேறுபாடுகள் கிடையாது. -
60
 

இ) ஒரு மசோதாவை எந்த சபையிலும் தொடங்கலாம். (ஒவ்வொரு மசோதாவும் தனித்தனியே இரு சபைகளிலும் பெரும்பான்மையால் சட்டமாகிவிடும்) w
ஈ) இரு சபைகளும் ஆண்டுக்கு இரு தடவைகள் கூடும். உ) இரு சபைகளிடையேயும் கருத்து வேறுபாடுகள் ஏற்படுமாயின் இரு சபைகளினதும் சம எண்ணிக்கையான “சமரசக் குழு" கருத்து முரண்பாடுகளைத் தீர்க்கும்.
ஊ) புதிய குடியரசை ஏற்றல். எ) குடியரசின் அதிகார எல்லைக்குள் அனைத்துப் பிரச்சினைகளையும் பரிசீலித்தல்.
ஏ) அமைச்சரவை உறுப்பினர்கள், பிரசீடிய உறுப்பினர்கள் பிரதம நீதிமன்ற நீதிபதிகள் ஆகியோரைத் தேர்ந்தெடுத்தல்.
ஆமிரசீடியம்
1. மொத்த அங்கத்தவர் எண்ணிக்கை 39 ஆகும். ஒரு தலைவர், 69 (5 முதல் துணைத் தலைவர், 15
துணைத்தலைவர்கள், உறுப்பினர்கள் 22
2. சகல அங்கத்தவர்களும் பாராளுமனி றத் திணி இணைப்புக்கூட்டத்திற் தெரிவு செய்யப்படுவர்.
3. பிரசீடியத்தின் தலைவரே ஜனாதிபதியாவார். 4. பாராளுமன்றக் கூட்டத் தொடர்களுக்கு இடைப்பட்ட காலத்தில் பாராளுமன்றத்தின் அலுவல்களைக் கவனிக்கும் பணி இதற்குண்டு. 5.அதிகாரங்கள்
பாராளுமன் ற தேர்தல் தகதியைக் குறித் தல . l பாராளுமன்றக் கூட்டத் தொடரைக் கூட்டல். l பாராளுமன்றக் குழுக்களின் பணியை ஒருங்கிணைத்தல். IV சட்டங்களுக்கு விளக்கவுரை வழங்குதல். V வெளிநாட்டுக் கொள்கைகளை உருவாக்குதல். V மண்" | வழங்கல். VI இராணுவ விருது, தூதரகத் தகுதிகளை அளித்தல். VIII துாதுவர்களை நியமித்தல்.
முப்படைத் தளபதிகளை நியமித்தல். அமைதியைப் பேணல்,
61

Page 33
X போர்ப்பிரகடனம் செய்தல். X நடைமுறையிலுள்ள சட்டங்களைத் திருத்துதல், மாற்றுதல்.
(பாராளுமன்ற அங்கீகாரம் பெறப்படல் வேண்டும்) XI சட்டங்களைப் பிறப்பித்தல், முடிவுகளை மேற்கொள்ளல். (பொதுவாக நோக்குமிடத்து பிரசீடியம்- சட்டம், நீதி நிர்வாக அதிகாரங்களைப் பெற்றுள்ளது)
இ) சோவியத் யூனியனின் அமைச்சரவை
1. இது சோவியத் குடியரசின் மிக உயர்ந்த நிர்வாக ஆட்சித்துறை உறுப்பாகும்.
2. அமைச்சர்கள் சோவியத் பாராளுமன்றத்தின் இரு பிரிவுகளினது இணைப்புக் கூட்டத்தில் தெரிவுசெய்யப்படுவர்.
3. பதவிக்காலம் 05 ஆண்டுகள்
4. பாராளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெறும்போது பாராளுமன்றத்திற்கும், கூட்டத்தொடர் நடைபெறாத நேரத்தில் பிரசீடியத்திற்கும் கூட்டாகப் பொறுப்புச் சொல்லல் வேண்டும்.
5. அமைப்பு சோவியத் குடியரசின் அமைச்சரவைத் தலைவர், முதல் துணைத்தலைவர், துணைத்தலைவர்கள், யூனியனின் அமைச்சர்கள், அரச கமிட்டித் தலைவர்கள் ஆகியோரைக் கொண்டதே அமைச்சரவையாகும். (15ழனியன் குடியரசுகளினதும் முதல்வர்கள் அமைச்சரவையில் அங்கம் வகிப்பர்)
6. அதிகாரங்கள்
சோவியத் குடியரசின் அதிகார வரம்பிற்குள் வருவதும், சுப்ரீம் சோவியத் அல்லது பிரசீடியத்தின் சட்டஅதிகாரத்திற்குள் வராதவையுமாகிய எல்லா நடவடிக்கைகள் குறித்தும் நடவடிக்கை எடுக்க அமைச்சரவைக்கு அதிகாரமுண்டு. (அமைச்சரவையின் அதிகாரங்கள் 113ம் உறுப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.)
அ) பொருளாதார, சமூக, கலாசார வளர்ச்சிக்கு வழிகாட்டலை உத்தரவாதம் செய்தல்:
62

ஆ) இதற்கான திட்டங்களை வகுத்தல். இ) பொது ஒழுங்கினைப் பராமரித்தல். (குடிமக்களின் உரிமைகளையும், சுதந்திரத்தினையும் உத்தரவாதம் செய்து
பாதுகாத்தல்.) ,
ஈ) தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்தல். ഉ_) {}] |T തു് ഖ சேவைக்கு வருடம் தோறும்
அழைக்கப்படவேண்டிய எண்ணிக்கையைத் தீர்மானித்தல்.
ஊ) யூனியனின் அமைச்சரவைத் தீர்மானங்களை (தேவைப்படின்) தடுத்து நிறுத்தல்.
ஈ) சோவியத் கட்சி முறை.
சோவியத் யூனியனின் அரசியலமைப்பானது ஒரு கட்சியரினி செயற்பாட்டிற்கு மாத்திரம் அனுமதி அளித்திருக்கின்றமையினால் ஒரு கட்சியையுடைய நாட்டிற்குச் சிறந்த உதாரணமாக எடுத்துக்காட்டப்படுகின்றது. சோவியத் யூனியனில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மாத்திரமே இடம் வழங்கப்பட்டுள்ளது. (அதேநேரம் அரசியல் செயற்பாடற்ற கூட்டுறவுச் சங்கங்களுக்கும், விஞ்ஞானக் கழகங்களுக்கும், பணி பாட்டுத் தொழில் நுட்பக் கழகங்களுக்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இவை பொதுநல சேவைகளில் மாத்திரமே ஈடுபடும்.)
சோவியத் யூனியனின் இக்கட்சியை அரசாங்கத்திலிருந்து வேறுபடுத்த முடியாது என்ற நிலை தோன்றியுள்ளது. கட்சியே அரசாங்கமாகவும், அரசாங்கமே கட்சியாகவும் ஒன்றரக் கலந்துள்ளது. அரசிற்குள் இன்னொரு அரசாக கட்சியுள்ளது. நாட்டிற்குத் தேவையான முக்கியமான முடிவுகள் அனைத்தும் பாராளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகளால் எடுக்கப்படாமல் கட்சிப் பிரசீடியத்தால் எடுக்கப்படும். உள்நாட்டு, வெளிநாட்டு உறவுகளின் போது கடைப் பிடிக்க வேணி டிய பொதுக் கொள்.ை ளை வகுப்பதும் இக்கட்சியே.
கட்சியமைப்பு
இது ஒரு பிரமிட் அமைப்பினை ஒத்தது. கட்சியின் கீழ் மட்டம்- நாடு முழுவதிலுமுள்ள கட்சி
63

Page 34
நுண்ணியங்கள் (Cels) ஆகும். இது நாடு முழுவதிலுமுள்ள தொழிற்சாலைகளிலும், ஆலைகளிலும், அரசப் பண்ணைகளிலும், கடற்படை, தரைப்படை போன்றவற்றிலும் அமைக்கப்பட்டுள்ளன. அடுத்த கட்டம்- நகர அல்லது மாவட்டக் கட்சிக் குழுக் களாகும் . இவை கட்சி நுணி னியங்களை மேற்பார்வைசெய்யும்.
அடுத்த கட்டம்- வட்டாரக் கட்சிக் குழுக்களாகும். இவை கட்சிக் குழுக்களின் செயற்பாடுகளை வட்டார மத்தியில் ஒருங்கிணைக்கின்றன.
அடுத்த கட்டம் - பகுதிகள், நிலப் பரப்புக்கள், குடியரசுகள் ஆகியவற்றின் கட்சிக் குழுக்களாகும்.
இக் கட்சியமைப்பின் உச்சி கூட்டரசு ஒன்றியப்பேராயக் கட்சிக் குழு, (இந்தப் பேராயமே கட்சியின் மையக் குழுவினைத் தேர்ந்தெடுக்கின்றது. மையக் குழு கட்சியின் பிரசீடியம், செயலகம், கட்சிக் கட்டுப்பாட்டுக்குழு என்பவற்றைத் தெரிவு செய்கின்றது.)
2
வினா"இலக்கம்,
சோவியத் ரஷ்யாவின் புதிய சீர்திருத்தங்கள் பற்றி துனனுக்கக் கட்டுரை ஒன்று எழுதுக
விடைக்குறிப்புகள்
20ம் நூற்றாண்டின் ஆரம்ப காலப்பகுதிகளிலும் மானிய முறைப்பண்புகளை தன்னகத்தே கொண்டிருந்த ரஷ்யாவானது 1917ம் ஆண்டு அக்டோபர் புரட்சியின் பின்பு சோசலிசக் கொள்கைகளை ஏற்றுக் கொணர் டது. கால மாக்ஸ் ஸின் "டாஸ்கெப்பிடல்” (மூலதனம்) எனும் நுாலை மறைநூலாகக் கருதி லெனின், கார்ல்மாக்ஸின் சமவுடமைக்கொள்கைகளை சோவியத் ரஷ்யாவிற்குப் பொருத்தமான கொள்கைகளாக மாற்றியமைத்து, முதலில் லெனினும், தொடர்ந்து ஸ்ராலினும் பல 5 ஆண்டுத்திட்டங்கள் மூலமாக சோவியத் ரஷ்யாவின் சொத் துரிமை, உறவு, பொருளாதாரக் கட்டமைப்பு, 64
 
 

பொருளாதார, 6nfl6ugFITu, தொழில்நுட்ப, ஆயுதபலத்தினை அதிகரிக்கச்செய்தனர்.
1945ம் ஆண்டில் 2ம் உலக மகா யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின் னர் உலகின் மிகப் பலம் பொருந்திய வல்லரசுகளில் ஒன்றாக சோவியத் ரஷ்யா மிளிர்ந்தது. இருப்பினும் 1980 களினி ஆரம்பப் பகுதியில சோவியத் ரஷ்யாவிலேற்பட்ட பொருளாதார நெருக்கடியும், வேலையின்மைப்பிரச்சினையும், பொருட்களின் விலையேற்றம் போனர் ற அம்சங் களும் சோவியத் மக் களினி வாழ்க்கைத்தரத்தைக் கணிசமான அளவிற்குப் பாதித்தது.
ஜனாதிபதி பிரஸ் நேவரினி மறைவின் பிண் பு ஜனாதிபதியாகப் பதவியேற்ற மிகாயில் கொர்ப்பச்சோவ் புதுமை விரும்பியாகவும், தீவிரவாதக் கருத்துக்களையுடையவராகவும் காணப்பட்டார். சோவியத் ரஷ்யாவின் அரசியல், சமூக, பொருளாதார முறையில் புதிய சீர்திருத்தங்களை மேற்கொண்டு, ரஷ்யாவின் பொருளாதார நெருக்கடிக்கான தீர்வினைக் காணத் தலைப்பட்ட இவர், தனது புனரமைப்பு நடவடிக்கைகளை இரண்டு கட்டமாக வகுத்துத் தெளிவுபடுத்தினார்.
1. பெரஸ்றோரிக்கா (மீளமைப்பு)
2. கிளாஸ்நோஸ்ட் (திறந்த தன்மை)
இந்தப்புனரமைப்பு நடவடிக்கைகளானது “சோஷலிசத்தின் முடிவு அல்ல மாறாகத் தொடர்ச்சியான வளர்ச்சியே ஆகும்”. என்பது கொர்ப்பச்சோவின் ஆரம்பவாதமாகக் காணப்பட்டது.
பெரஸ்றோரிக்கா,
1985 ம் ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தப்பட்ட பெரஸ்றோரிக்கா திட்டம் பற்றி கொர்ப்பச்சோவின் பின்வருமாறு குறிப்பிடு 'ன்றார். “பெரஸ்றோரிக்கா அதாவது மீளமைப்பு என்பது ஓரிடத்தில் அடக்கி ஒடுக்கப்படும் நிலையிலிருந்து விமோசனம் பெறும் நடவடிக் கையே ஆகும் . சமூக, பொருளாதார வளர்ச்சிப் பாதையே இது. நெறிப்பிறழ்வல்ல. அத்திவாரம் தளராமல் வளப்படுத்துவதே இதன் நோக்கம்.”
65

Page 35
அரசியலமைப்பு, சமுதாயதார்மீகம், ஆத்மீகச்சூழல் என்பவற்றின் மீது மேற் கொள்ளப்படும் மாற்றங்களேயாகும். இதை வேறுவகையில் கூறினால் சோசலிசம் பற்றிய கருத்துக்கள் மீளாய்வு செய்யப்படுகின்றன என்றால் மிகையாகாது.
களொஸ்நோஸ்ட் (திறந்ததன்மை)
இதன் மூலமாக இரும்புத்திரை என வர்ணிக்கப்பட்ட சோவியத் குடியரசின் அடிப்படைத்தன்மைகளில் சில மாற்றங்கள் ஏற்பட வழி கிடைக்கின்றது. கிளாஸ்நோஸ்ட் இன் கீழ் சில அடிப்படை விட்யங்களுக்கு, சுதந்திரம் வழங்கப்பட்டன. உதாரணமாக:-
அ) தொடர்பு சாதனங்களுக்குப் பூரண சுதந்திரம் வழங்கப்பட்டமை.
ஆ) கருத்து வெளியீட்டுச் சுதந்திரம் வழங்கப்பட்டமை. இ) விமர்சன உரிமை வழங்கப்பட்டமை (இதன் மூலம் இறந்த காலவிடயங்களையும் மீட்டும் நிலை உருவாயிற்று.)
ஈ) சுப்ரீம் சோவியத் உறுப்பினர்களுக்கும், மனம் திறந்து தமது கருத்துக்களை முன்வைக்கக்கூடிய உரிமை. (முன்பு தலைமைத்துவத்தின் போக்கினை மீறக்கூடிய நிலையில் உறுப்பினர்கள் இருக்கவில்லை)
உ) பொதுமக் களுக்கு தத் தமது கருத்துக் களை வெளியிடக்கூடிய சந்தர்ப்பம்.
இத்திட்டங்களின் விளைவுகள் -
கொர்ப்பச் சோ வினால் : அறிமுகப்படுதி தப் பட்ட இத் திட்டங்களை முதலில நாடிபிடித் துப் பார்த் தவர் பிரித்தானியாவின் (முன்னாள்) பிரதமர் மாக்கிரட் தட்சர் அம்மையாராவார். இவரின் நிலைப்பாடு வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்காவின் (முன்னைநாள்) : ஜனாதிபதி ரொனால்ட் றேகண் கொர்ப்பச் சோவுடனான உறவுகளை அதிகரித்துக்கொண்டார். மேலைத்தேய உதவிகள் ரஸ்யாவுக்கு இண் றியமையாதவை. எனவே தாம் வழங்கப் போகும் உதவிகளைக் காட்டியே ஸ்ரஸ்யாவில் முதலாளித்துவம் சார்ந்த மாற்றங்களை மேலத்தேய நாடுகள் (குறிப்பாக அமெரிக்கா) செய்துகொண்டன.

1987, 1988, 1989,1990,ம் ஆண்டுகளில் சிறுகச் சிறுக ஏற்பட்டுவந்த மாற்றங்கள் மேலைத்தேய் முதலாளித்துவச் சக்திகளுக்கு சாதகமாகவ்ே" அமைந்திருந்தன. (1990ம் ஆண்டின் ஆரம்பத்தில் யூனியன் உடைவுறத் தொடங்கியது) 1992ம் ஆண்டின் ஆரம்பப் பகுதியில் தீவிர கம்யூனிஸ வாதிகளினால் கொர்ப்பச் சோவி பதவிகவிழ்க்கப்பட்டார். இருப்பினும் சோவியத்தில் காணப்பட்ட உள்நாட்டு நிலைகளும், மேலைத்தேய சக்திகளின் நடவடிக்கைகளும் மீண்டும் கொர்ப்பச்சோவைப் பதவியில் அமர்த்தியது.
தொடர்ந்து கொர்ப்பச் சோவின் நடவடிக்கைகளும், உள்நாட்டுப் பொருளாதார நெருக்கடிகளும் சோவியத்யூனியனை உடைவுறச்செய்யலாயிற்று. சோவியத்யாப்பின் படி குடியரசுகள் பிரிந்து செல்லக் கூடிய இடம் வழங்கப்பட்டுள்ளது. முதலில் லித்துவேனியா குடியரசும் தொடர்ந்து லத்வியா:எசுத்தோனியா (பொல்கன் குடியரசுகள்) ஆகிய குடியரசுகள்:பிரிந்துசென்றன) (லித்துவேனியா குடியரசு பிரிந்து சென்ற சமயத்தில், கொர்ப்பச்சோவினால் இராணுவப்பலம் பிரயோகிக்கப்பட்டபோது மேற்குநாடுகளின் அச்சுறுத்தலினால் அது இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்)
தற்போது 15 குடியரசுகளும் பிரிந்து தனித்தனி இராச்சியங்களாக மாறிவிட்டன. இநீததி தனிதி தனி இராச்சியங்களுக்கும் ஐ.நா.வில் அங்கத் துவம் வழங்கப்பட்டுள்ளது. அண்மையில் ரஸ்யா,உக்ரேன்,பைலோ ரஸ்யா ஆகிய நாடுகள் மத்தியில் ஒரு கூட்டிணைப்பை ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இக்கூட்டு C I S ( சுதந்திர நாடுகளின் பொதுநலவாயம்) என அழைக்கப் பட்டது. இதில் சிறிய குடியரசுகள் சேர்க்கப்பட்டபோதிலும், மேற்குறித் 7, 3 நாடுகளுமே பிரதான பங்கேற்றன. (1991 டிசம்பர் "ப்களில் இக் கூட்டு அமைக்கப்பட்டது. 1992 ஆரம்பத்தி கொர்ப்பச்சோவ் வெளியேற்றப்பட இதுவும் ஒரு காரணியாகும்.)
தறி போது ரஷ யா ஒரு பல மற்ற நாடு என்று
67."

Page 36
அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஐ.நா. வின் பாதுகாப்புச் சபையில் ரஸ்யா “வீட்டோ” அதிகாரத்தைப் பயன்படுத்த முடியுமா? என்ற சர்ச்சை இப் போது தோன்றியுள்ளது. ஏனெனில் ரஷ்யாவைவிடவும் ஜப்பான், ஜேர்மனி போன்ற நாடுகள் பலமுடனிருப்பதே காரணமாகும்.
ரஷ்யாவுகி கு இன்று தேவைப் படுவது கணிசமான பொருளாதார உதவிகள். எனவே இந்த உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்காக ரஷ்யா மேலும் பல விடயங்களை விட்டுக் கொடுத்து வருவதைக் காணலாம். (உதாரணமாக ஜப்பானின் 3 தீவுகளையும் விட்டுக்கொடுக்க யெல் சின் தற்போதைய ஜனாதிபதி இணங்கிக்காணப்பட்டார்.)
“பொதுவாக 1985 ம் ஆணி டில் மிக் கெயில் கொர்ப்பச்சோவினால் முன்வைக்கப்பட்ட புதிய சீர்திருத்தங்களை மேலைத்தேய அரசியல் அறிஞர்கள் ரஸ்யாவின் இரண்டாவது
புரட்சி என வர்ணிப்பதைக்காணலாம்.
68

நாடுகள்
*<-~
»Sriragar مـ
s
لام ح- با
حملہX"} شمسیہ
Ney Dahl * ܝܠ ܐ
حي متحمستدلات ፳ * Karapur 下一
X ș - ν 参 سددة 888S متمرار V. s لأم لا تسبب حد سلسر
༄། ། INDA
● ልከrዥገadabäç} W ー ;"F Calcutao : ذ لمسة كرسي y NagpLur S سمصصحسینی۔“
ހ Bombay ދ
عمير Wishakhapatnam * *
Hyderabad جس سے ”مہ~~سر Panaji ܘV
Madras A Bangaloree
* s Caicut
لر
معیسس ހ.........
இந்தியா
69

Page 37
இந்தியாவின் அரசாங்க முறையுடன் தொடர்புபட்ட பின்வரும் இரண்டு விடயங்கள் பற்றி குறிப்புரை எழுதுக.
அ) ஜனாதிபதி (நாமநிர்வாகி)
ஆ) சட்டவாக்கத்துறை
இ) உயர் நீதிமன்றம்
விட்ைசிகுறிகள். அ) ஜனாபதிபதி ராஷ்டிரபதி (நாம நிர்வாகி)
1. இந்தியாவின் ஜனாதிபதி பெயரளவு நிர்வாகத் தலைவர் ஆவார். இவரின் அனேக கடமைகள் பிரதமர், அமைச்சரவைக் குழு ஆகியோரின் ஆலோசனைப்படியே நடத்தப்படும்)
2. ஜனாதிபதியின் பதவிக்காலம் 05:'ஆண்டுகள் ஆகும்.
3. இவர் தேர்தல் கல லுாரி ஒணி றினால தெரிவுசெய்யப்படுவார். இக் கல்லுாரியில் (36) Tai FL. T., இராஜ்யசபா, மானில சட்ட மன்றங்கள் ஆகியவற்றின் உறுப்பினர்கள் இடம் பெறுவர். (நியமன உறுப்பினர்கள் இடம்பெறமாட்டார்கள்) தெரிவானது. தனிமாற்று வாக்குமுறை மூலம் இடம்பெறும்.)
4. ஜனாதிபதியின் அதிகாரங்களைப் பின் வருமாறு தொகுத்து நோக்கலாம்.
A) நிர்வாகத்துறை சார்ந்த அதிகாரங்கள் B) சட்டத்துறை. சார்ந்த அதிகாரங்கள் C) நீதித்துறை சார்ந்த அதிகாரங்கள் D) நெருக்கடி நிலையில் ஜனாதிபதியின் அதிகாரங்கள்
A) நிர்வாகத்துறை சார்ந்த அதிகாரங்கள்.
70:
 
 
 

i நிர்வாக அதிகாரங்கள் ஜனாதிபதியரின் பொறுப் பாக்கப்பட்டுள்ளன. அவர் நேரடியாக அல்லது அவருக்குட்பட்ட அதிகாரியினால் நிறைவேற்றுவார்.
-யாப்பு 53ம் உறுப்புரைi தனது நிர்வாக அதிகாரங்களை யாப்புக்கு உட்பட்ட ரீதியில் இவர் செயலாற்றுதல் வேண்டும். *
i ஆனாலும் இவர் அமைச்சரவையின் அனுமதியுடனேயே செயலாற்றுதல் வேண்டும்.
அமைச்சரவையின் ஆலோசனையை Lc 6i ஆலோசனைக் காக ஜனாதிபதி அனுப் பலா மீ மீள் ஆலோசனையை ஜனாதிபதி ஏற்றே ஆக வேண்டும்.
-யாப்பின் 44வது திருத்தம்அமைச்சரவையின் ஆலோசனையை ஜனாதிபதி கட்டாயம் ஏற்றுநடக்க வேண்டும்.
• -யாப்பின் 42வது திருத்தம்W உயர் அதிகாரிகளை நியமித்தல். V ஆலோசனை கூறும் உரிமை, எச்சரிக்கை விடும் உரிமை கலந்தாலோசிக்கப்படவேண்டிய உரிமை.
v தலைமை அமைச்சரை (பிரதமர்) நியமித்தல். தலைமை அமைச்சரின் ஆலோசனைப்படி அமைச்சரவை உறுப்பினர்களை நியமித்தல். む
vர் பொதுச் சேவை ஆணைக் குழு உறுப்பினர்களை நியமித்தல், ஆளுனர்களை நியமித்தல், (மற்றும் துாதுவர்கள், இராஜதந்திரிகளை நியமித்தல்.)
viii (UP Lj L160) Lg5 தளபதிகளையும் ' நியமித்தல். ப்ோர்ப்பிரகடனம், சமாதானம் போன்றவற்றைப் பிரகடனப்படுத்தல்.
B) சட்டத்துறை சார்ந்த அதிகாரங்கள்:
'பாராளுமன்றத்தைக் கூட்டல் , கலைத் த ல் ,
ஒத்திவைத்தல். (இராஜ்யசபாவைக் கலைக்க முடியாது)
i பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் உரையாற்றுதல்,
புதிய பாராளுமன்றக் கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்தல். S71

Page 38
இரு மன்றக்கூட்டங்களை (இணைப்பு) அழைத்தல், செய்திகளை அனுப்புதல்.
i பாராளுமன்றம் இயற்றும் மசோதாக்களை இறுதி ஒப்பமிட்டு அங்கீகரித்தல். (சாதாரண மசோதாக்களை மீள் பரிசோதனைக்கு அனுப்புதல். இவ்வாறு அனுப்பப்படும்போது அம் மசோதா இரு மன்றங்களிலும் ஏற்கப்படின் அதை ஜனாதிபதி ஏற்றேயாகவேண்டும்.)
V நிதி மசோதாக்களை நிராகரிப்பதற்கான உரிமைகள் இவருக்கில்லை. இருப்பினும் நிதி மசோதாக்களை இவரின் ஒப்புதலுடனேயே பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்தல் வேண்டும்.
ʼ v பாராளுமன் றக் கூட்டத் தொடர்களுக் கிடையில் அவசரகாலச் சட்டத்தைப் பிரகடனப்படுத்துதல். (பாராளுமன்றம் கூட்டப்பட்டு 6 வாரங்கள் மட்டும் இது செல்லுபடியாகும்).
C) நீதித்துறை சார்ந்த அதிகாரங்கள்.
i பிரதம நீதியரசர்,உயர்நீதிபதிகள், ஏனைய நீதிபதிகள்,
மாநில உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமித்தல்.
i மன்னிப்பு வழங்கல், தண்டனையை நிறைவேற்றுவதில்
காலதாமதத்தை ஏற்படுத்தல், தண்டனைகளைக் குறைத்தல்.
D) நெருக்கடி நிலைகளில் ஜனாதிபதி.
இந்தியாவின் பாதுகாப்பு அல்லது ஒரு மானிலத்தின் பாதுகாப்பு அல்லது உள்நாட்டுக் குழப்பம் ஏற்படுமென அச்சம் இருந்தால் ஜனாதிபதியினால் அவசரகால நிலையினைப் பிரகடனப்படுத்தலாம்.
-யாப்பு 352ம் உறுப்புரைi இப் பிரகடனம் (Մdքմ பாரதத்திற்கும் அல்லது மாநிலமொன்றிற்குப் பிரகடனப்படுத்தலாம்.
-யாப்பு 42வது திருத்தம்i இப் பிரகடனமானது நாடாளுமனி றத் தரில் நிறைவேற்றப்படாவிட்டால் 2 மாத காலத்திற்குள் செயலிழந்து விடும்.
72

ஆ) இந்தியாவின் சட்டவாக்கத்துறை
இந்தியா ஒரு சமஷ்டி அரசாகும். எனவே இந்தியப் பாராளுமன்றம் இரண்டு சபைகளைக் கொண்டது. i லோக்சபை (கீழ் சபை) இது நாட்டின் சார்பாக செயற்படும். i இராஜ்ய சபை (மேற் சபை) இது மாநில அரசாங்கங்களின் சார்பாக இயங்கும்.
பிரித்தானியப் பாராளுமன்றத்தைப் போல் இந்தியப் பாராளுமன்றம் பூரண இறைமையுடையது எனக் கூற முடியாது. இந்தியப் பாராளுமன்றத்தின் சட்டவாக்க அதிகாரமானது சில வரம்புகளுக்குட்பட்டது என்பது கவனத்திற் கொள்ளப்படல் வேண்டும். .
லோக் சபை
ஐந்து ஆண்டுகளுக்கொரு முறை சர்வசன வாக்குரிமை ரீதியாகத் தேர்ந்தெடுக் கப் படும் . இச் சபைக் குதி தேர்ந்தெடுக்கப்படும் அங்கத்தவர் எண்ணிக்கை 542ஆகும்.
i இச்சபை சட்டமியற்றுவதில் ராஜ்ய சபையோடு சம அதிகாரம் கொண்டது. நிதி மசோதாக்கள் இங்குதான் ஆரம்பிக்கப்படுகின்றன.
i ஏனைய மசோ தாக் களை எச்சபையிலும் ஆரம்பிக்கலாம். ஒரு சபையில் தொடக்கப்பட்ட மசோதாவுக்கு கட்டாயம் மறு சபையின் அனுமதி தேவை.
i மசோதாக்கள் குறித்து இரு சபைகளிலும் கருத்து முரண்பாடு ஏற்படின் ஜனாதிபதியினால் கூட்டப்படும் இணைவுக் கூட்டத்தொடரில் பெரும்பான்மை மூலம் தீர்மானிக்கப்படும். (இணைவுக் கூட்டத்தில் லோக்சபைக்கே அதிக வாய்ப்புண்டு.) v குறித்த மசோதா, நிதி மசோதாவா? அன்றேல் சாதாரண மசோதாவா என்று தீர்மானிக்கும் உரிமை லோக்சபை சபாநாயகருக்கே உரியது.
V ட்டமூலம் ஜனாதிபதியின் கையொப்பத்துடனேயே அமுல்படுத்தப்படும்.
73

Page 39
ju F6
i இச்சபையின் மொத்த எண்ணிக்கை - 250ஆகும். மானிலங்களினி பரப்பு. சனதி தொகை க் கேற்ப மாநிலப்பிரதிநிதிகள் 238பேர் இடம்பெறுவர். (இவர்கள் மாநில சட்ட மன்றங்களினால் தெரிவுசெய்யப்படுவர்)
கலை, இலக்கியம், சமூக சேவை போன்றவற்றில் பிரபல்யம் மிக்கவர்களுள் 12 பேரை ஜனாதிபதி நியமிப்பார். i இச் சபை கலைக்கப்படமாட்டாது. ஓர் உறுப்பினரின் பதவிக் காலமி ஆறு ஆணி டுகளாகும் . மூன்றிலொரு உறுப் பினர்கள் இரணி டாணி டுக் கொரு முறை மாற்றி அமைக்கப்படுவர்.
i இராஜ்ய சபையின் தலைவர் "துணை ஜனாதிபதி” யாவார்.
v தகைமை - 30 வயதைப் பூர்த்திசெய்திருத்தல் வேணர் டும் . எம் மானிலத் திணி சார்பரில் தெரிவு செய்யப்படுகின்றாரோ அம்மானிலவாக்காளராகப் பதிவு செய்யப்பட்டிருத்தல் வேண்டும்.
v அதிகாரம் அ) சட்டவாக்கத்தில் கீழ் சபையோடு சம அதிகாரம். ஆ) நிதி மசோதாக்களை 14தினங்களுக்குத் தடுத்து நிறுத்தும் அதிகாரம்.
இ) மாநில அரசுகளின் உரிமையினைப் பேணும் அதிகாரம்.
இ) உயர் நீதிமன்றம். - -
1. இந்தியா ஒரு சமஷ டி நாடாகும் . எனவே இந்தியாவின் உயர் நீதி மன்றம் ஒரு முக்கிய அங்கமாகக் கருதப்படுகிறது. இந்தியாவின் நீதித்துறையின் முதன்மை அதிகாரம் கொண்ட உயர் நீதிமன்றமானது மத்திய, மானில அரசுகளுக்கிடையே ஏற்படும் சட்டப் பூசல்களைத் தீர்ப்பது. அரசியல் யாப்புக்கு இறுதி விளக்கவுரை வழங்குவது போன்ற பணிகளை ஆற்றுகின்றது.
2. இதன் தலைவர் பிரதம நீதியரசராவார். 1977 டிசம்பர்
74

மாதம் நிறைவேற்றப்பட்ட சட்டமூலப்படி தற்போது இதில் 18 . நீதியரசர்கள் உள்ளனர். இவர்களை ஜனாதிபதி நியமிப்பார். ஓய்வுபெறும் வயதெல்லை 65 ஆகும்.
3. நீதித் துறையினர் சுதநீ தரம் uu T j f6JOT (T 6ð உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உயர்நீதிபதிகளை பதவி நீக்கம் செய்ய வேண்டுமாயின் இரு சபைகளிலும் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பெற்று ராஷ்டிரபதியினால் பதவிநீக்கம் செய்ய (tpւգսվւb.
4. நீதிபதிகளின் சம்பளக் கொடுப்பனவுகளைப் பாராளுமன்றம் தீர்மானிக்கும். நிதிநெருக்கடி நிலைமைகளில் நீதிபதிகளின் சம்பளக் கொடுப்பனவுகள் குறைக்கப்படலாம் என்பது அவதானத்திற் கொள்ளவேண்டிய விடயமாகும்.
5) உயர் நீதிமன்ற அதிகாரங்கள்
1 முதலில விசாரணை செய்யும் அதிகாரம் . உதாரணமாக மதி திய, மாநில (ஒன்று அலி லது ஒன்றிற்குமேல்) அதிகாரங்களுக்கிடையிலான பூசல்கள், மத்திய, மாநில அரசுக்கிடையிலான பூசல்கள்.
i மேல்முறையீட்டு விசாரணை அதிகாரம்.
உதாரணம் :- அனைத்து நீதிமன்றங்களினதும் மேல்முறையீட்டு (இறுதித்தீர்ப்பு) நீதிமன்றம் இதுவே. ஏனைய நீதிமன்றங்களில் மேன் முறையீடாக முன்வைக்கப்பட்ட அரசியலமைப்பு வழக்குகள், சிவில் வழக்குகள், கிரிமினல் வழக்குகள் என்பவற்றையும் விசாரிக்கும்.
i ஆலோசனை அதிகாரங்கள்:
அ} சட்டம் அல்லது நிகழ்ச்சித்திட்டம் (பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்) தொடர்பாக ராஷ்டிரபதிக்கு ஆ லாசனை வழங்கல் (ஆலோசனையே தவிர இது கட்டளையல்ல)
ஆ) சட்டங்கள் யாப்புக்கு முரணா, இல்லையா என ஆலோசனை வழங்கல்.
75

Page 40
06) இந்தியாவின் அடிப்படை உரிமைகளின் காவலனாக விளங்குவது இந்த உயர் நீதிமன்றமே.
1.இந்திய உயர் "H-ाली गा
நீதிமன்றம் நீதிமன்றம் 1.பதவிக்காலம் 65 வயதுவரை. 1. ஆயுள் பூரா. 2.பதவி நீக்கத்திற்கு இரண்டு 2. (அரச துரோகக் குற்றம்
மன்றங்களினதும் மூன்றிலிரண்டு தவிர) முடியாது. பெரும்பான்மை தேவை. 3. சம்பளம்குறைக்கப்படலாம். 3. முடியாது. 4. முதலில் விசாரிக்கும் அதிகாரம் 4. அதிகமாகும்.
குறைவு. 5.சிவில் கிரிமினல் வழங்குகளையும் 5. இது உலகின்
விசாரிக்கும் வலிமையான நீதிமன்றமாகும்.
“இந்தியாவில் சமவடிடி ஆட்சி முறை பூரணமாக நிலவவில்லை” இக் கூற்றினை ஆராய்க.
விட்ைக்குறிப்புகிள்
உலகிலுள்ள ஏனைய சமஷ்டி நாடுகளைப் போலவே இந்தியா ஒரு எழுதப்பட்ட அரசியல் திட்டத்தையும், நெகிழாத் தன்மையையும், அதிகாரப் பங்கீட்டினையும் (மத்திய மானில அரசுகளுக் கிடையே) உயர்நீதிமன்றத்தினையும் தனது அரசியலமைப் பரில் உள்ளடக் கியுள் ளது. பொதுவாக நோக்குமிடத்து சமஷ்டியின் முக்கிய கூறுகள் இங்கு இடம்பெற்றுள்ளதால் இந்தியாவில் சமஷ் டியாட்சிமுறை
நடைபெறுகின்றது என்று கூறுவதில் தவறில்லை.
இருப்பினும் இந்திய சமஷ்டி முறையை ஒரு பூரண
சமஷ்டி முறையாக அறிஞர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. இது
தொடர்பாக சில அரசியலறிஞர்களின் கருத்துக்களைத் 76
 
 
 

தொகுத்து நோக்குவோம்.
01. “இந்தியாவின் சமஷ்டியாட்சி முறை ஒரு அரைகுறை சமஷ்டியாட்சி ஆகும். கே.வி. வியர்
2. அரசியலமைப் பரிணி கீழ் இநீதியா அதிகாரம் பன்முகப்படுத்தப்பட்ட ஒரு ஒற்றையாட்சியாக விளங்குகின்றதே தவிர சமஷ்டியாட்சியாக அது இருக்கவில்லை.
பேராசிரியர் பீ.எம். குப்தாபாரதத்தின் சமஷ்டி முறையை ஒப்பு நோக்குமிடத்து ஏனைய நாடுகளில் காணப்படும் சமஷ்டிமுறையை விட மாறுபட்ட தொனி றாகவே அமைந்துள்ளது. LJ IT J 35 சுதந்திரமடைவதற்கு முனி பு இருந்த இங்கிலாநிதினி ஆட்சிக்குட்பட்டிருந்த மாநிலங்கள் சட்டமியற்றல், நீதி, நிர்வாகம் போன்றவற்றைப் பொறுதி த வரை அதிகாரம் பெற்றிருநீதபோதிலும் இறை மை யை ஒருபோதும் பெற்றிருக்கவில் லை. இறைமையைப் பெற்ற அரசுகள் ஒன்றுசேர்ந்து சமஷ்டியை அமைக்கும் விதம் இங்கு இடம்பெற வழி இருக்கவில்லை.
பாரதத்தில் பல இன,மத, மொழி மக்கள் வாழ்வதனால் இந்த வேறுபாட்டை அடிப்படையாகக்கொண்டு, பாரதத்தில் நிலவிய சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு பிரிவினைச் சக்திகளுக்கெதிராக பாரதத்தின் ஒற்றுமையைக் காக்க வேணி டியதன் அவசியத்தையுணர்ந்தும், அதே நேரத்தில் பாரதத்தை ஒரே மத்திய அரசாங்கத்தால் திறமையாக ஆள (LjD Lç? UII fT ğB5 அளவிற்கு நிலவிய சூழி நிலைகளைக் கருத்திற்கொண்டும் பாரதத்திற்கு ஒரு சமஷ்டி அரசாங்க முறைமை தோற்றுவித்து வழ்கப்பட்டது. V
பாரத தின் சமஷ்டி முறையை, சமஷ்டி முறை நிலவும் ஏனைய தேசங்களுடன் ஒப்பிடும்போது பின்வரும் விடயங்கள் தெரிய வருகின்றன.
01. அதிகாரப் பங்கீடு மூன்று பட்டியல்களில் தொகுத்துக்
77

Page 41
கூறப்பட்டுள்ளதெனினும் இது மத்திய அரசாங்கத்திற்குச் சார்பாகவே உள்ளது. மத்திய அரசுப் பட்டியலில் 97விடயங்கள் கூறப்பட்டுள்ள போதிலும். மாநிலப் பட்டியலில் 66 விடயங்களே ஒதுக்கப்பட்டுள்ளன. (இணைப்புப் பட்டியல் 47 விடயங்களை உள்ளடக் கியது) இதரில் மத்திய மாநில அரசுகள் சட்டமியற்றலாம். இத்துறைகளில் மத்திய, மாநில அரசுகள் இயற்றும் சட்டங்களில் முரண்பாடுகள் இருக்குமானால் மதி திய அரசின் சட்டங்கள் மாநில அரசுகளைக் கட்டுப்படுத்தும். ஒரு சிறந்த சமஷ்டியில் எஞ்சிய அதிகாரங்கள் மாநில அரசுகளுக்கு அளிக்கப்படல் வேண்டும். ஆனால் பாரதத்திலே எஞ்சிய அதிகாரங்கள் மத்திய அரசுக்கே கொடுக்கப்பட்டுள்ளன.
02.இந்தியாவின் மேற்சபையான இராஜ்ய சபையின் அமைப்பு ஒற்றையாட்சி அமைப்பையே எடுத்துக் காட்டுகின்றது. ஏனெனில் மாநில அரசுகளின் சம எண்ணிக் கையான பிரதிநிதிகள் இதில் இடம்பெறுவதில்லை. (அமெரிக்காவின் செனட்டில் மாநில அரசுகளில் இரண்டு பிரதிநிதிகள் வீதம் இடம்பெறுவர்)
03.இராஜ்ய சபை தேசிய முக்கியத்துவம் என்று ஒரு விடயத்தைத் தீர்மானித்தால் (மூன்றிலிரண்டு பெரும்பான்மை) மாநிலப் பட்டியலிலுள்ள குறித்த விடயம் தொடர்பாக மத்திய அரசாங்கம் சட்டமியற்றல்.
04.மத்திய அரசின் ஆணைகளுக்கு மாநில அரசு கட்டுப்படுதல்.
05.மாநில சட்ட மன்றங்கள் இயற்றும் மசோதாக்களை ஜனாதிபதியின் இசைவிற்காக ஆளுனர்களால் ஒதுக்கிவைக்க முடியும். (ஆரம்பத்தில் கனடாவிலும் இம் முறை காணப்பட்டது. இப்போது கனடாவில் இது செயலிழந்துவிட்டது)
06. இந்திய ஜனாதிபதி மாநில ஆளுனர்களை நியமிப்பார். (அமெரிக்காவில் ஆளுனர்கள் மாநிலங்களால் நேரடியாகத்
தேர்ந்தெடுக்கப்படுவர்)
07. மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குட்பட்ட நிதி நிலவரங்களை மட்டுமே மாநில அரசுகள் பெற்றுள்ளமை.
78

08. அரசியலமைப்பைத் திருத்த மேற்கொள்ளும் வழிமுறை. (24 LĎ தருத்தப் படி அடிப் படை உரிமை உட்பட அரசியலமைப்பில் எந்தப் பகுதியை வேண்டுமானாலும் மத்திய பாராளுமன்றத்தினால் திருத்தியமைக்கலாம்.
09. நாடு முழுவதற்கும் ஒரே முறை கொண்ட நீதியமைப்பு.
10. அவசரகால நிலைமைகளில் ஜனாதிபதி செலுத்தும் அதிகாரங்கள் இது சமஷ்டிக்கு முற்றிலும் முரணானதாகும்.
எனவே தொகுத்து நோக்குமிடத்து இந்தியாவில் காணப்படுவது ஒரு முழுமையான சமஷ்டி முறையல்லவென்று கூறலாம். எனவே பேராசிரியர் அம்பேத்கார் பின்வருமாறு
குறிப்பிடுகின்றார்.
இந்தியாவின் அரசியலமைப்பு காலத்திற்கும் சூழ் நிலைகளுக்கு மேற் ற விதத்தில் ஒற்றையாட்சி
அரசியலமைப்பாகவும் சமஷ்டி அரசியலமைப்பாகவும் இருக்க முடியும். r
A. ஒவினா இலுக்கம் 08
பின்வரும் தலைப்புக்களின் கீழ் இந்தியாவினதும்,
பிரித்தானியாவினதும் அரசாங்க முறையைத் தொடர்புபடுத்தி ஆராய்க.
1. பிரதமர்
2. கட்சிமுறை
விடைக்குறிப்புகள்
1 rரதமர்
அ) இந்திய அரசியலமைப்பின் 75(11) உறுப்புரைப்படி பொதுத் தேர்தலில பெரும் பாண் மை ஆசனங் களை வென்றெடுத்த கட்சியின் தலைவரை பிரதமராக ஜனாதிபதி தெரிவு செய்வார். (1991ல் தேர்தல் பிரசார வேலைகளில்
79

Page 42
ஈடுபட்டிருந்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு. ராஜிவ் காந்தி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து கட்சியில் தலைவராக பி.வி.நரசிம்மராவ் தெரிவு செய்யப்பட்டதன் பின்னரே அவரைப் பிரதமராக ஜனாதிபதி தெரிவு செய்தார்) 1996ம் ஆண்டில் பெரும்பான்மைப் பலத்தைப் பெறாத நிலையிலும் அதிக ஆசனங்களை வென்றெடுத்த பாரதீய ஜனதாக் கட்சித்தலைவர் வாஜ்பாயை பிரதமராகத் தேர்ந்தெடுத்தமை, இவரால் அறுதிப்பெரும்பான்மைப் பலத்தை நிரூபிக்க முடியாததினால் தேவ்கவ்டா பிரமதராக நியமிக்கப்பட்டமை.
ஆ) பிரித்தானியாவின் பிரதமரும் இதே முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார். ஆனால் இவரின் நியமனத்தை வழங்குபவர் மகாராணியாவார். (தற்போதைய பிரித்தானியவின் பிரதம அமைச்சர் டொனி பிளேயர் தொழிற் கட்சியின் தலைவராவார்.) ጎ
இ) கடமை: பாரதம், பிரித்தானியா ஆகிய நாடுகளின் உணி மையான நிர்வாகத் துறையின் தலைவர்களாக விளங்குபவர்கள் பிரதமர்களே. இரண்டு நாடுகளிலும் நிர்வாகத்துறையின் உறுப்பினர்களான அமைச்சர்களை பிரதமரின் ஆலோசனைப்படி நாம நிர்வாகமே நியமிக்கும். இதேபோன்று படைத்தளபதிகள்,. நிர்வாக அதிகாரிகள், துாதுவர்கள், இராஜதந்திரிகள், உப அமைச்சர்கள் ஆகியோரையும் பிரதமரின் ஆலோசனைப்படி நாம நிர்வாகமே நியமிக்கும்.
ஈ) மதவிக்காலம்: இரண்டு நாடுகளிலும் (5)ஐந்து ஆண்டுகள். - உ) பதவிக்காலம் முடியுமுன் பிரதமரின் பதவி வறிதானால்.
கட்சியின் ஆதரவுடன் கட்சியில் செல்வாக்கு மிக்க ஒருவரை பிரதமராக இந்தியாவின் ஜனாதிபதி நியமிப்பார். பிரிதி தானியாவில் முடி நியமிக் கும் . உதாரணமாக: பாரதப்பிரதமர் அன்னை இந்திராகாந்தி கொலைசெய்யப்பட்டதை தொடர்ந்து ராஜீவ்காந்தி காங்கிரஸின் தலைவராகத் கட்சியுடன்
80

தெரிவுசெய்யப்பட்டு அவர் பிரதமராகநியமிக்கப்பட்டமை. பிரித்தானியாவில் மாகிரட் தட்சர் இராஜினாமாச் செய்தபோது கண் சவேட்டிவ் கட்சியின் தலைவரான ஜோன் மேஜர் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டமையைத் தொடர்ந்து அவர் பிரதமராகத் தெரிவு செய்யப் பட்டமை. (கட்சியின தலைமைத்துவம் கட்சியின் ஆதரவைப் பெற்றவருக்ே கிடைக்கும். என்பது அவதானிக்கத்தக்கதாகும்.)
பிரித்தானியப் பிரதமரின் கடமைகளும், அதிகாரங்களும் மரபு ரீதியாகப் பேணிப் பாதுகாக்கப்பட்டுவரும் அதேவேளை பாரத பிரதமரின் அதிகாரங்களும், கடமைகளும் யாப்பின் மூலம் உறுதிப்படுத்தப் பட்டுள்ளமை" குறிப்பிடத்தக்கதாகும்.
02 கட்சி முறை .
உலகல அரசியல் கட்சிகளின் தோற்றம் பிரித்தானியாவிலேயே முதலில் இடிம் பெற்றமையினால் பிரித்தானிய அரசியற் கட்சிக்கு நீண்ட வரலாறு உண்டு. ஆரம்பத்தில் மேல்மட்டத்தில் ஏற்பட்ட டொரிக்குழு, விக் குழு என்பவற்றிலிருந்தே முறையே பழைமை பேணும் கட்சியும் லிபரல் கட்சியும் உதயமாயிற்று. 1906ம் ஆண்டில் லிபரல் கட்சியில் ஏற்பட்ட பிளவு காரணமாக தொழிற் கட்சி தோற்றம் பெற்றது.
பிரித்தானிய கட்சி முறையை நோக்குமிடத்து இரு கட்சிமுறைப் போக் கினை அவதானிக் கலாம் . அங்கு தொழிற்கட்சியும், பழைமை பேணும் கட்சியுமே மாறிமாறி அரசாங் கங்களை அமைத்து வருகின்றன. மொத்த வாக்காளர்களில் சுமார் 90% ஆன வாக்காளர்கள் இவ் இரு கட்சிகளுக்குமே வாக்களித்து வருகின்றனர். பிரித்தானியாவில் கம்யூனிசக் கட்சி, லிபரல்கட்சி போன்ற கட்சிகள் இருந்த பேதிலும் கூட இக் கட்சிகளுக்கு மூன்றாவது சக்தியாகவேனும் வரக்கூடிய வாய்ப்பு ஏற்படவில்லை.
1991ம் ஆண்டு பிரித்தானியப் பொதுத்தேர்தலின்போது லிபரல் கட்சி ஒரளவு செல்வாக்கைப் பெற்று தொழிற்
81

Page 43
இணைந்து கூட்டு அரசாங்கமொன்றினை அமைக்கலாம் என்ற எதிர்பார்க் கை அரசியல அவதானிகளிண் மத்தியில் காணப்பட்டது. இருப்பினும் தேர்தல் முடிவானது எதிர்பாராத முறையில் அமைந்திருந்தது.
− 1991ம் ஆண்டு பொதுத் தேர்தலில் பழைமை பேணும் கட்சியே (கண் சவேர் டிவி கட்சி) 4வது தடவையாகத் தொடர்ந்தும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொண்டது. பழைன்மபேணும் கட்சியின் முன்னைநாள் தலைவி திருமதி மார்கிரட் தட்சர் காலத்தில் இவரால் கடைப்பிடிக்கப்பட்டுவந்த சில கொள்கைகள் கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் சில அபிப்பிராய பேதங்களை ஏற்படுத்தியிருந்தது. இருப்பினும் தற்போதைய தலைவர் திரு ஜோன் மேஜர் கடைப்பிடித்து வரும் கொள்கைகளை மக்கள் ஏற்றுள்ளார்கள் என்பதையே 1991ம் ஆண்டு தேர்தல் முடிவுகள் எமக்கு எடுத்துக் காட்டுகின்றன. முதலாளித்துவ ஆதரவுக் கொள்கைகளை முற்று முழுதாக ஏற்றிருந்த பழைமை பேணும் கட்சியானது தற்போது தொழிலாளர்களின் நலன்களிலும் அக்கறை காட்ட எடுத்துள்ள புதிய நடவடிக்கைகளே 1991 ன் தேர்தல் வெற்றிக்கான காரணங்களுள் ஒன்றாகும். என B.B.C.யின் ரீலங்கா நிருபர் மேவின் டீ சில்வா தொலைக்காட்சிப் பேட்டியொன்றின்போது குறிப்பிட்டிருந்தார்.
இந்தியாவின் கட்சி முறை.
ஜனநாயக ஆட்சி முறையில் அமைக்கப்பெற்ற தற்கால அரசுகளுக்குக் கட்சிகள் உயிரோட்டமாக அமைகின்றன. ஜனநாயகம் வெற்றிபெற வேண்டுமாயின் கட்சியின் எண்ணிக்கை குறைவாக இருப்பது சிறப்பானதாகும் எனக் கருதப்படுகின்றது. பாரதத்தை எடுத்து நோக்குமிடத்து காளான்கள் போல் அடிக்கடி பல கட்சிகள் தோன்றுவதும் , மறைவதும் , பரிளவடைவதும் ፴9 ([b விநோதமான நிலையையே எடுத்துக்காட்டுகின்றது. பாரதச் சுதந்திரத்தின் பின்னர் காங்கிரஸ் கட்சியே நீண்டகாலம் ஆட்சி செய்துள்ளது. 1977,1989, 198:ம் ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி தோல்வி யடைந்தது. ஜனதாக் கட்சி ஆட்சிக்கு வந்தபோதிலும் கூட 1977, 1089ம்
82

ஆண்டுகளில் இரணடு மூன்று ஆண்டுகளுக்கு மேல அரசாங்கத் தைக் கொண் டு நடத்த முடியாமற் போனன்) ம குறிப்பிடத்தக்கதாகும். 1996ம் ஆண்டு பிரதமராகப் பதவியேற்ற தேவ் கவிடாவுக்கும் இதே நிலை ஏற்படலாம் என்பது அவதானிகளின் கருத்தாகும். எனவே பாரதத்தின் கட்சி முறை யை எடத் துநோ கி குமிடத் து பொதுவாக நாம் அவதானிக்கும் விடயங்களாவன.
1. பாரத்த்தின் காங்கிரஸ் கட்சி தேசிய ரீதியில் செல்வாக்குப் பெற்றிருத்தல்.
2. காங் கிரசுடனி தனித்துநின்று போட்டியிட்டு அரசாங்கமமைக்கக் கூடிய வகையில் பலமானதோர் எதிர்க்கட்சி இன்மை.
3. இதற்கான மூலகாரணம்; ஏனைய கட்சிகள் தேசிய ரீதியில் திட்டமிட்டு அமைக்கப்படவில்லை.
4. காங்கிரஸ் தவிர்ந்த ஏனைய கட்சிகள் மாநில ரீதியில் மாநில அரசாங்கங்களையே அமைப்பதைப் பிரதான இலக்காக கொண்டுள்ளன.
5. கட்சிகள் அடிக்கடி தோன்றுவதும் பிளவுபடுவதும். (பாரதத்தில் இது சர்வசாதாரண நிகழ்வாகும்.)
இந் நிலைகளைக் கவனத்திற் கொள்ளும் பாரத அரசியலவதானிகள் பாரதத்திற்குப் பிரதமராட்சி முறையைவிட ஜனாதிபதி ஆட்சி முறையே சிறந்தது என்ற கருத்தினை முன்வைத்து வருகின்றனர்.
83

Page 44
விரை இலக்கம் 04
பின்வருவன பற்றி ஆராய்க. அ) இந்தியாவின் மாநில ஆளுனர்கள் ஆ) இந்தியாவின் மாநில சட்ட மன்றங்கள்.
விடைக்குறிப்புகள்
அ) இந்தியாவின் மாநில ஆளுனர்கள்
1. பாரதத்தின் ஒவ்வொரு மாநில அரசுகளினதும் தலைவர் மாநில ஆளுனர் ஆவார்.
2. ஒவ்வொரு மாநிலங்களுக்கும் ஒவ்வொரு ஆளுனர் இருப்பார். யாப்பில் மேற்கொள்ளப்பட்ட 7வது திருத்தத்தின்படி இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட மாநிலங்களுக்குப் பொறுப்பாக ஒரு ஆளுநரை நியமிக்கலாம். (உதாரணமாக சில ஆண்டுகளுக்கு முன்பு அஸாம், நாகலாந்து ஆகிய மாநிலங்களுக்கு ஒரு ஆளுனர் மாத்திரம் நியமிக்கப்பட்டமை.) 3. மத்திய மாநில அரசாங்கங்களின் உறுப்பினரல்லாத 35 வயது நிரம்பிய பாரதக் குடிமகனொருவனை ராஷ்டிரபதி ஆளுனராக நியமிப்பார். - .
4. ஆளுனரின் பதவிக்காலம் 05 ஆண்டுகளாகும்.
ஆளுநரின் அதிகாரங்கள்.
1 சட்ட மியற்றல், நிர்வாகம், நீதி ஆகிய துறைகளில் இவர் அதிகாரத்தைக் கொண்டுள்ளார்.
i இவர் மாநில சட்ட மன்றத்தின் நிறைவேற்று அதிகாரியாவார். - i இவர் புதிய சட்ட மன்றத்தில் தொடக்கவு:7) நிகழ்த்தலாம்.
v மாநில சட்ட மன்றத்தின் இரு சபைகளையும் (சிறிய மாநிலங்கள் ஒரு சபையை மட்டுமே கொண்டிருக்கும்) கூட்டல், ஒத் தி வைத் தல (கழி சபையை) கலைத் தல் , இவை முதலமைச்சரின் ஆலோசனைப்படியே நடைபெறும்.
 
 
 
 

v சட்ட மன்றத்தில் உரையாற்றவும், செய்திகளை அனுப்பவும் கூடிய அதிகாரம்:
wi சட்ட மன்றத்தினால் இயற்றப்படும் சட்டங்களைக் கையொப்பமிட்டு சட்ட அங்கீகாரத் தன்மையை வழங்குதல்.
vi சட்ட மன்றம் கூட்டப்பெறாத நிலையில் அவசர கட்டளைகளைப் பிறப்பித்து சட்ட மன்றத்தைக் கூட்டும் அதிகாரம்.
x சட்ட சபையில் ஆங்கிலோ- இந்திய குடிமகனின் பிரதி நிதி இல்லையெனின் நியமனம் செய்தல்.
X (தேவைப்படுமிடத்து) நிதிமசோதாக்களையும் சாதாரண மசோதாக்களையும் ஜனாதிபதியின் பரிசீலனைக்கு விடுதல்
xi முதலமைச் சரை நியமித்தல், முதலமைச்சரின் ஆலோசனைப்படி மாநில அமைச்சர்களை நியமித்தல்.
xi மாநில அட்வ கெட் ஜெனரல் , பொதுச் சேவை ஆணைக்குழு உறுப்பினர்களை நியமித்தல்.
xi மன்னிப்பு வழங்குதவ், தண்டனையைக் குறைத்தல், தண்டனையைத் தாமதித்தல். (மாநில உச்ச நீதிமன்ற நீதிபதி ராஸ்டிரபதியால் நியமிக்கப்படுவார்.) -
ஆ) இந்தியாவின் மாநில சட்ட மன்றங்கள்
1. இது ஆளுனரையும், சில மாநிலங்கள் ஒரு மன்றத்தையும், சில மாநிலங்கள் இரு மன்றங்களைக் கொண்டுள்ளன.
(உ-ம் கர்நாடகம், மகாராஸ்டிரம், பீகார், உத்தரப்பிரதேசம் ஜம்மு காஸ்மீர், ஆகிய மாநிலங்கள் இரு மன்றங்களையும் கொண்டுள்ளன.) இவற்றின் மேல்சபை "மாநிலக் கவுன்சில்” எனவும் கீழ்சபை "சட்ட மன்றம்" எனவும் அழைக்கப்படும். 2.உறும் ர் எண்ணிக்கை,
சட்டமன்றம் - குறைந்து 60 கூடியது 500
மாநிலக் கவுன்சில் - குறைந்தது 40 (ஆனால் சட்மன்ற எண்ணிக்கையில் மூன்றில் ஒன்றுக்கு மேல் இருக்கக் கூடாது.)
85

Page 45