கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பிரித்தானியாவின் அரசியல் முறை

Page 1
சிந்தனை
விநியோக உரிமை பூபாலசிங்கம் புத்த
H
 

... O 10/A) -܀
) Lú
III ITILÉGö

Page 2

G.C.E. (A/L) & G.A.G.
பிரித்தானியாவின் அரசியல் முறை
பேராதனைப் பல்கலைக்கழக வெளிவாரி முதற்கலைத் தேர்வு மாணவர்களினதும், கபொதஉத மாணவர்களினதும்(uதில் பாடத்திட்டத்தைத் தழுவி எழுதப்பட்டது.
பீ.எம். புன்னியாமீன்
B.A(S.L.) Dip in Journ, SLTS
இணைவெளியீடு
EPபுத்தகாலயம் சிந்தனைவட்டம் 64 2/2Hinni Appuhamy Mw, 14, Udatalawinna, Madige,
Kotahena, Colombo-13. (via) Katugastota,
Tel:344518. Sri Lanka.
வினியோகதுரிமை Poobalasingham Book Depot, Jaffna & Colombo
Gli il
340, SeaStreet, Colombo- 11 Te:422321

Page 3
பிரித்தானியாவின் அரசியல் முறை
Te: 422321
ஆசிரியர்:
பீ.எம் புன்னியாமீன்
முதலாம்பதிப்பு இரண்டாம்பதிப்பு மூன்றாம்பதிப்பு நான்காம்பதிப்பு ஐந்தாம் பதிப்பு ஆறாம்பதிப்பு இ9ாவது பதிப்பு Luis DD
DTPByThas, Jeeva
புத்தக அமைப்பு
B.A(S.L.) Dip in Journ, SLTS,
1987. (May)
1989. (Feb)
1989. (Dec)
1991 (March)
1992(Nov)
1995 (July)
1997(Rees)
Mrs. Mazeeda Puniyameen. 14, Udatalawinna, Madige, (Via) Katugastota.
V கிருஷ்ணமூர்த்தி 316, Galle Rd. Bambalapitiya
-02
 

பிரித்தானிய அரசாங்க முறை
சுருக்க அறிமுகம்.
பிரித்தானிய அரசியல் முறையானது ஒரு திட்டவட்டமான வரலாற்றுச் சம்பவத்துடன் தோன்றி வளர்ந்த்தொன்றாகக் கூறமுடியாது. பலநூற்றாண்டுகளாக அந்நாட்டின் சமூக, பொருளாதார, பண்பாட்டுத் தன்மைகளுக்கிணங்க உதயமாகி படிப்படியாக கால மாற்றங்களை அனுசரித்து அதற்கேற்ற முறையில் வளர்ச்சியடைந்து வந்த தொன்றாகவே பிரித்தானிய அரசியல் முறையினை நாம் வரையறை செய்யலாம்.
ஆரம்ப காலத்தில் பூரண முடியாட்சியாகத் திகழ்ந்த பிரித்தானிய ஆட்சிமுறையானது மதச் சீர்திருத்த இயக்கங்களின் தாக்கத்தினால் பூரண முடியாட்சி நிலையிலிருந்து மாறி வரையறுக்கப்பட்ட முடியிட்சி என்ற நிலையை அடைந்துள்ளது.
ஜேம்ஸ் மன்னனுக்கு எதிராக 1688 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட புரட்சியின் போதுமக்களுக்குக் கிடைத்த வெற்றியினைத் தொடர்ந்து மன்னனது அதிகாரங்களில் சில மக்கள் கைக்கு மாறியதால் அது ஒரு வரையறுக்கப்பட்ட முடியாட்சி என்ற நிலையைப் பெற்றுக் கொண்டது. தொடர்ந்து வந்த பல தசாப்தங்களில் அங்கு இடம்பெற்ற ஜனநாயக நடைமுறைகளின் விரிவாக்கமானது படிப்படியாக மன்னனது அதிகாரங்களை மக்களது கைக்கு மாற்றி வரலாயிற்று. வாக்குரிமை, தேர்தல், கட்சிகளின் வளர்ச்சி என்பவையே இந்த மாற்றங்களுக்கு மூலகாரணமாகும்.
இதனால் இன்று மக்களே முழுமையான அதிகாரங்களைக்
கொண்டவர்களாக இருந்து வருகின்றனர். இவ்விதம் மக்களிடத்தில்
அதிகாரங்கள் அனைத்தும் மாற்றப்பட்டதினால் மன்னன் தனிநிலையினை
இழந்து ஒரு பெயரளவு நிருவாகியாக மட்டுமே தொழிற்பட்டு
வருகின்றதைக் காண்கிறோம். இன்று பிரித்தானியாவின் முடி ஒரு
-O3

Page 4
பெயரளவு நிருவாகமாகவும், மக்களை அடிப்படையாக வைத்து அமைந்த பாராளுமன்றம், மந்திரிசபை என்பன ஆட்சி அதிகாரங்களைப் பெற்றுக்கொண்ட அமைப்பாகவும் இருந்து வருகின்றது.
பிரித்தானிய அரசியலமைப்பு
பிரித்தானிய அரசியலமைப்பின் தனிச்சிறப்பு என்னவெனில் அது ஒரு வரையப்படாத யாப்பாக இருந்து வருவதாகும். ஏனைய நாடுகளில் அரசாங்கமுறையினை நிருவகிக்கும் சட்ட விதிகள் அனைத்தும் எழுதித் தொகுக்கப்பட்டு நூலுருவம் பெற்றிருப்பதைப் போன்று பிரித்தானிய அரசியல்முறை எழுதப்பட்ட நூல்வடிவினைப்பெற்றிருக்கவில்லை. எனவே "இங்கிலாந்து நாடு அரசியலமைப்புப் பெற்றிருக்கவில்லை" என்று டி டாக்குவில் (DeTocquovie) என்னும் அறிஞர் கூறியுள்ளார்.
இன்று உலகில் எழுதப்படாத யாப்புக்கு சிறந்த உதாரணமாகப் பேதுக்கூடிய நாடு பிரித்தானியாவாகும். இருப்பினும் சில அறிஞர்கள் இக்கூற்றினை முழுமையாக ஏற்றுக்கொள்வதில்லை. ஏனெனில் பிரித்தானிய அரசியலமைப்பு தொகுத்து நூலுருப்படுத்தப்படாத போதிலும்கூட எழுதப்பெற்ற பல கூறுகளைக் கொண்டிருப்பதைக் காணலாம்.
அவையாவன
அ) பட்டயங்கள், மனுக்கள் உடன்படிக்கைகள் r
சிதறிக்கிடக்கின்ற அரசியலமைப்பின் பகுதிகள் மகாபட்டயம் (1216) உரிமைமனு (1628), உரிமைகள் மசோதா (1689), நிருணயச் சட்டம் (1701), ஸ்கொட்லாந்து இணைப்புச்சட்டம் (1707), அயர்லாந்து இணைப்புச்சட்டம்(1802), வெஸ்ட்மினிஸ்டர் சட்டம்(1931) போன்றவற்றில் காணப்படுகின்றன.
Se) aFarrasci (statutes)
பாராளுமன்றம் காலத்துக்குக்காலம் இயற்றும் சட்டங்கள். உதாரணமாக சீர்திருத்தச் சட்டங்கள் (Reform Acts) வாக்களிக்கும் உரிமையைப் பலருக்கு வழங்கியது. 1911, 1948 ஆம் ஆண்டுப் பாராளுமன்றச் சட்டங்கள் பிரபுக்கள் சபையின் அதிகாரங்களைக் குறைத்தன.
-04
 
 

&) éSDcios afirülqasci (Judicial Decisions)
பட்டயங்கள், சட்டங்கள். நாட்டின் பொதுச்சட்டங்கள் ஆகியவற்றுக்கு நீதிபதிகள்கொடுக்கும் தீர்ப்புக்களினின்று பிரித்தானிய அரசியலமைப்பு வளர்ந்துள்ளது. இதுபற்றி பேராசிரியர் டைசி பின்வருமாறு கருத்துப் பகன்றுள்ளார். "ஆங்கில அரசியலமைப்பு நீதிபதிகள் உருவாக்கிய அரசியலமைப்பாகும்."
F) 6lureglású. Lüb (Common Law)
நாட்டின் டொதுச்சட்டம் அரசியலமைப்பிற்கு மற்றொரு ஆதாரமாக அமைந்துள்ளது. அது நீதிபதிகள் உருவாக்கிய விதிகளின் தொகுப்பாகும். பாாரளுமன்றத்தின் செயல் எல்லை, அரசனின் தனிச்சிறப்புரிமைகள், பொதுமக்களின் பேச்சுரிமை, கூட்டம் கூடும். உரிமை போன்ற அடிப்படையுரிமைகள் அனைத்தும் நாட்டின் பொதுச்சட்டத்தினின்றும் தோன்றியவையாகும்.
2) Doraah (Conventions)
எழுத்துருப் பொது, சட்டங்களாக விளங்கும் மரபுகள் அரசியலமைப்பின் இன்றியமையாத பகு.களாக விளங்குகின்றன. வழக்காறுகள் (Customs) 6)ypi«yya, sh. (Usages) (païs Tsignysoï (Prececents) போன்ற பரந்த அளவுக் கருத்துக்களை மரபுகள் தம் எல்லைக்குள் கொண்டுள்ளன. பிரித்தானிய அரசியலமைப்பினின்றும் மரபுகளை எடுத்துவிட்டால் செயலளவில் வலுகுன்றி நிற்காவிட்டாலும் தோற்றத்தில் வலு குன்றிவிடும்.
2ள) அரசியலமைப்புப்பற்றி எழுதப்பட்டுள்ள நூல்கள்.
gigs"Taiun salt Lawand Custom of the Constitution, t Tsáurfiai Parlimentary Practice, GugTiffusi 60L6ái Law of the Constitution ஆகிய நூல்கள் அரசியலமைப்பின் கூறுகள் பற்றிய விளக்கத்தினைத் தருகின்றன.
பிரித்தானிய அரசியல்முறையில் மரபுகளினதும் வழக்காறுகளினதும் பங்களிப்பு
மரபுகளும் வழக்காறுகளும் பிரித்தானிய அரசியல்முறையில் செல்வாக்குப்
-05-ه

Page 5
பெற்றிருப்பதைப் போண்று உலகில் வேறு எந்தநாட்டு அரசியல்முறையிலும் செல்வாக்குப் பெற்றிருக்கவில்லை. -பேராசிரியர் டைசி
பூர்வீக காலம் தொடக்கம் சமுதாயத்தில் வளர்ந்து வந்த கலாசாரப் பண்பாட்டு மாதிரிகள் காலப்போக்கில் வலுவடைந்து சமுதாயத்தின் ஒழுங்கு நிலையினை நிருணயிக்கும் சட்ட அந்தஸ்துடைய மரபுகளகவும் வழக்காறுகளாகவும் நிலைபெற்றுள்ளன.
பிரித்தானிய மரபுகள், வழக்காறுகள், என்பன பிரித்தானியகவில் சமூகமாதிரிகளை மட்டுமல்லாது ஆட்சிமுறையினை நிருணயிக்கும் அளவுக்கு உயர்ந்த சட்ட விதிகளாக வலுப்பெற்றிருப்பதை விசேடமாகக் குறித்துக் காட்டலாம். பிரித்தானிய அரசியல்முறை எழுதப்படாத யாப்பாக இருந்து வருவதற்கு, இம்மரபுகள் வகிக்கின்ற முக்கியத்துவமே காரணமாகும். இன்று அரசாங்க முறையினை நிர்ணயிக்கும் சட்டவிதிகளாகவும் அரசாங்கத்தினை ஆட்சிப்படுத்தும் சாசனங்களாகவும் இவையே இருந்து வருகின்றன. இதனாலேபிரித்தானிய அரசியலில் மரபுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
பிரித்தானிய உலகில் தலையாய ஜனநாயகப் பண்புகள் மிக்க ஒரு நாடாகமிளிர, மரபுகள் பெற்றுள்ள முக்கியத்துவமும் ஒரு காரணியாகும். எழுதப்பட்ட சட்டவிதிகளால் அல்லாது எழுதப்படாத மரபுகளாலும் வழக்காறுகளாலும் ஆட்சியாளர்களும் , மக்களும் கட்டுப்பட்டு செயற்பட்டுவரும் நிலை பிரித்தானிய ஜனநாயக அம்சங்களின் மிகப்பரந்த தன்மையினையே வெளிப்படுத்துகின்றது.
பிரித்தானிய அரசியல்முறையில் செல்வாக்குப் பெற்றுள்ள வழக்காறுகளைப் பின்வருமாறு தொகுத்துக்கூறலாம். அ) பாராளுமன்ற முறை சார்ந்த வழக்காறுகள் ஆ) அமைச்சரவை சார்ந்த வழக்காறுகள்.
பாராளுமன்றமுறை சார்ந்த வழக்காறுகள். 1. குறித்த காலத்துக்குக் காலம் பொதுத்தேர்தல்களை நடத்துவது.
O6

2. பொதுத்தேர்தலில் அதிக ஆசனங்களைப்பெற்ற கட்சியே அரசாங்கத்தை
அமைத்தல்.
3. சிம்மாசனப் பிரசங்க உரை தோல்வியடைந்தால் பாராளுமன்றத்தைக்
கலைத்தல்.
4. மந்திரிசபை கலையும் போதெல்லாம் சட்டத்துறையும் பதவியிலிருந்து
விலக வேண்டியநிலை.
இவைகள் எழுத்து மூலமாக சட்டவிதிகளாக்கப்பட்டவையல்ல. மாறாக பிரித்தானியாவில் மரபுகளாகவே பேணப்பட்டு வருகின்றன.
அமைச்சரவை சார்ந்த வழக்காறுகள்.
பிரித்தானிய அரசியல்முறையில் மந்திரிசபை ஆட்சிமுறையும் பாராளுமன்ற நடைமுறைகளின் வளர்ச்சிற்கேற்ப வளர்ந்த தொன்றாகவே அமைந்துள்ளது. அங்கு அரசியல்முறையில் ஏற்பட்ட மாற்றங்களிற்கேற்ப பாராளுமன்ற நடவடிக்கைகளும், மந்திரிசபை ஆட்சிமுறைபற்றிய நடவடிக்கைகளும் இயல்பாகவே வந்துள்ளன.
பாராளுமன்ற செயற்பாடுகளைப் போலவே அமைச்சரவையின் செயற்பாடுகளும் நிருணயிக்கப்பட்ட சட்ட விதிகளால் அன்றி மரபுகளாகவே காணப்படுகின்றன. "வால்போல்" என்பவரது ஆட்சிக்காலத்தில் அமைச்சரவையின் செயற்பாடுகளை நிருணயிக்கும் விதிகள் பல இயற்றப்பட்டாலும்கூட அவைகளும் எழுதித் தொகுக்கப்பட்ட விதிகளாக அமைந்திருக்கவில்லை. 18ம் நூற்றாண்டில் அமைச்சரவை தொடர்பாக நிலை நிறுத்தப்பட்ட பின்வரும் விதிகள் எழுதப்படாத மரபுகளாகவே கருதப்படுகின்றன.
2 - Bwrger TLDITas 1. பொதுத் தேர்தலில் அதிக ஆசனங்களைப்பெற்ற கட்சியின் தலைவரை
பிரதமராக முடி நியமித்தல். 2. மந்திரிசபையின் தலைவராக பிரதமர் விளங்குதல். 3. பிரதமரின் சிபாரிகப்படி மந்திரிசபையின் அமைச்சர்களை முடி
நியமித்தல்.
O7

Page 6
4. நாட்டின் நிருவாகத்திற்கு முடி கூட்டாகப் பொறுப்பு வகித்தல்.
வரவு-செலவுத் திட்டத்தை மந்திரிசபையே தயாரித்தல். (நிதிமந்திரி) 6. வரவு.செலவுத் திட்டம் தோல்வியடையும்போது மந்திரிசபையைக்
கலைத்தல். 7. மந்திரிமாருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சட்டசபையில்
நிறைவேற்றப்பட்டால் மந்திரிசபை கலைதல்.
5.
இவ்வாறாக பாராளுமன்றமுறை சார்ந்த, அமைச்சரவைமுறை சார்ந்த மரபுகள் பிரித்தானியாவில் பேணப்படுவதைப் போன்று உலகில் ஏனைய நாடுகளில் காண்பது அரிதாகும். ஏனைய நாடுகளில் இன்று இவி விதிகள் அரசியலமைப்பிணி ஊடாக எழுதப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
பிரித்தானிய அரசியல்முறையில் முக்கியமாக ஆராயப்படவேண்டிய விடயங்கள்.
1. சட்டவாக்கத் துறை
(இது இரண்டு மன்றங்களை உடையது) அ) பிரதிநிதிகள் சபை, ஆ) பிரபுக்கள் சபை
2. நிர்வாகத்துறை
அ) உண்மை நிர்வாகம்
(பாராளுமன்ற முறை சார்ந்த மந்திரிசபை ஆட்சிமுறை)
ஆ) பெயரளவு நிர்வாகம். )هادی(
3. நீதித்துறை
4. அரசியல் கட்சிகளும், அமுக்கக் குழுக்களும்.
சட்டவாக்கத்துறை பிரித்தானிய அரசியல் முறையில் சட்டவாக்க நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக்கப்பட்ட சபையாக சட்டத்துறை(பாராளுமன்றம்) இருந்து
O8

வருகிறது. பிரித்தானியா ஒற்றையாட்சி நிலவும் நாடாகக் காணப்பட்ட போதிலும்கூட சட்டத்துறை இரு சபைகளைக் கொண்டதாகவே அமைந்துள்ளது.
சட்டத்துறை
- பொதுமக்கள்சபை பீபுக்கள்சபை (House of Gommons) (House of Lords)
QurguDá56h 360L (House of Commons)
பிரித்தானியாவின் மக்கள் ஆட்சி அரசுக்கு உறைவிடமாகவும், முக்கிய துறை ஆகவும் பிரித்தானியாவின் பொதுமக்கள் சபை அமைந்துள்ளதினால் மக்களின்பெருமதிப்புப் பெற்ற ஒரு சபையாகவே இது திகழ்கிறது. இச்சபையானது பொதுமக்கள் சபை எனவும், 1ம் மன்றம் எனவும் கீழ்சபை எனவும் அழைக்கப்பட்டு வருகிறது.
osnodi இச்சபை5 வருடத்துக்கு ஒரு தடவை நடத்தப்படும் பொதுத்தேர்தல்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 661 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. இவர்கள் அனைவரும் வாக்களிக்கத்தகுதி பெற்ற (சர்வசன வாக்குரிமை மூலம்) வாக்கானர்களால், தேர்தல் தொகதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுவர்.
பதவிக்காலம்.
இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட அங்கத்தவர்களைக்கொண்ட பொது மக்கள் சபை (இடைநடுவில் கலைக்கப்பட்டால் தவிர) தேர்ந்தெடுக்கப்பட்ட நாளில் இருந்து 5 ஆண்டு காலத்துக்கும் பதவிவகிக்கும்.
பொதுமக்கள் சபை தனது முதலாவது கூட்டத்தொடரை சிம்மாசனப் பிரசங்க உரையுடனே ஆரம்பிக்கும். இவ்வுரை, முடியினால் நிகழ்த்தப்படும் (இவ்வுரை ஆளுங்கட்சியின் கொள்கைப்பிரகடன உரை ஆகும்)
சிம்மாசனப் பிரசங்க உரையினைத் தொடர்ந்து வாக்கெடுப்பு
-09

Page 7
இடம்பெறும் இவ்வாக்கெடுப்பில் தோல்வியடைய நேரிட்டால் பை கலைக்கப்பட்டு மீண்டும் பொதுத் தேர்தல் நடாத்தப்படும். உரை ஏற்றுக் கொள்ளப்பட்டால் தொடர்ந்து சபையின் சபாநாயகர், உதவிச்சபாநாயகர் குழுக்களின் தவிசாளர் என்போர் தேர்ந்தெடுக்கப்படுவர். இச்சபை தனது சாதாண மசோதாக்களை பெரும்பான்மை வாக்குகளின் அடிப்படையிலும் விசேட மசோதாக்களைச் சிறப்பு பெரும்பான்மை(2/3) அடிப்படையிலும் நிறைவேற்றும்.
இச்சபையினைக்கூட்டல் கலைத்தல்கூட்டத்தொடர்களை ஒத்திவைத்தல் என்பன பிரதமரின் ஆலோசனைப்படி முடியால் நிறைவேற்றப்படும்.
பொதுமக்கள் சபையின் அதிகாரங்கள்.
பொதுமக்கள் சபையின் அதிகாரங்களை வசதிக்காகப் பின்வரும்
தலைப்புக்களின்கீழ் எடுத்து நோக்குவோம். அ. சட்டவாக்க அதிகாரங்கள் ஆ.நிதிக்கட்டுப்பாட்டு அதிகார கள் இ. நிர்வாகக்கட்டுப்பாட்டு அதிகாரங்கள்.
அ. சட்டவாக்க அதிகாரங்கள்.
நாட்டுக்குத் தேவையான சட்டங்களை இயற்றுவதில் பொதுமக்கள் சபை சட்டத்துறையின் மிக முக்கிய பகுதியாக திகழ்கிறது. நாட்டுக்குத் தேவையான சட்டங்களை இயற்றிக் கொள்ளக்கூடிய வகையில் மசோதாக்களைப் பிறப்பித்து முடிவெடுக்கக் கூடிய அதிகாரத்தை இச்சபை பெற்றுள்ளது. (நடைமுறையில் சட்டமியற்றுவதில் பொதுமக்கள் சபையின் மேலாணமையை அமைச்சர் குழுவிடம் இழந்து விட்டது என்பது உண்மை) மேலும் நிதி மசோதாக்களை ஆரம்பித்து விவாதித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை இச்சபை மட்டும் பெற்றுள்ளது.
ஆ. நிதிக்கட்டுப்பாட்டு அதிகாரம்.
நாட்டினி திறைசேரியின் காவலன் என்ற முறையில் நிதிநிலைமைதொடர்பான கட்டுப்பாடுகளைப் பிரயோகிக்கக் கூடிய அதிகாரத்தினை இச்சபை கொண்டுள்ளது. நாட்டின் நிதி விடயங்கள் மந்திரி சபைக்கு (நிதி அமைச்சுக்கு) பொறுப்பாக்கப்பட்ட போதிலும் கூட
-10

அவற்றின் மீதான கட்டுப்பாடுகளைப் பிரயோகிக்கும் அதிகாரம் பொதுமக்கள் சபைக்கே உண்டு.
விஷேடமாக வரவு செலவுத்திட்டத்தைக் குறிப்பிடலாம். நாட்டின் வரவு செலவுத் திட்டத்தினை அங்கீகரிக்கும் பொறுப்பு இச்சபையை சார்ந்துள்ளது. வரவு செலவுத்திட்டம் அங்கீகரிக்கப்படாவிட்டால் வரியறவிடல், வரிவிதிப்பு:நிதியினை செலவிடல் போன்ற விடயங்களை மேற்கொள்ள முடியாது. எனவே நாட்டின் அடிநாடியே ஸ்தம்பித்துவிடும். எனவே புது வரிகளை விதிக்கவும் பணத்தைச் செலவு செய்யவும் பொதுமக்கள் சபையின் இசைவின்றி முடியாது என்பது புலனாகிறது. அரசின் வருவாய் மூலங்களை வசூலிப்பதும் செலவினங்களை ஒதுக்கீடு செய்வதும் இச்சபையின் வெளிப்படை அனுமதி மூலம் தான் நடைபெறும்.
இ. நிர்வாகத்துறையைக் கட்டுப்படுத்தும் அதகாரங்கள்.
நாட்டின் நிர்வாகம் பொதுமக்கள் சபையின் ஆகும் கட்சியைச் சேர்ந்த அமைச்சரவைக்குப் பெறுப்பாக்கப்பட்ட போதிலும் கூட அமைச்சரவையைக் கட்டுப்படுத்தக்கூடிய அதிகாரத்தையும் பொதுமக்கள் சபை கொணடுள்ளது. இவ்வாறாக அமைச்சரவையை (நிர்வாகத்துறையை) பொதுமக்களின் சபை பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றி கட்டுப்படுத்தும். 1. மந்திரிமாரின் வரவு செலவுத்திட்டத்தை நிராகரித்தல். 2. அமைச்சர்களுக்கெதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றினை
நிறைவேற்றல். 3. மந்திரிமாரின் கொள்கைத்திட்டங்கள் என்பவற்றின் மீது மாற்றல்கள் திருத்தங்கள் என்பவற்றைக் கொண்டுவந்து மந்திரி சபையின் நோக்கத்தினை மாற்றி அமைத்து விடல்.
எனவே பொதுமக்கள் சபையின் நம்பிக்கையைப் பெற்றிருக்கும் வரைதான் அமைச்சரவையால் செயல்பட முடியும். என்பது புலப்படுகிறது.
பிரபுக்கள் சபை (House of Lords)
இந்தியாவில் இராஜ்ய சபா எனவும், அமெரிக்காவில் செனட் சபை
-11

Page 8
எனவும் அழைக்கப்படும் 2ம் மன்றமானது பிரித்தானியாவில் பிரபுக்கள் சபை (House of Lords) என்னும் பெயரால் அழைக்கப்படுகிறது.
இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் சமஷ்டி ஆட்சி முறை நிலவுவதினால் இரண்டாம் மன்றமொன்று அத்தியவசியப் பண்பாகும். ஆனால் ஒற்றை ஆட்சி நிலவும் பிரித்தானியாவில் அமைக்கப்பட்டுள்ள பிரபுக்கள் சபையானது அந் நாட்டின் பழைமையின் சின்னமாக அமைக்கப்பட்டுள்ளமை அவதானிக்கத்தக்க விடயமே.
ஆரம்ப காலத்தில் மன்னனது அவைக்களப் பிரதிநிதிகளைப் பிரதிபலிக்கும் ஒன்றாகவே பிரபுக்கள் சபை இருந்து வந்தது. காலத்துக்குக்காலம் சமூகத்தில் ஏற்பட்ட மாற்றலுகளுக்கேற்ப மாறி வந்துள்ள இச் சபையானது இன்று 2ம் மன்றம் எனவும் மேற்சபை எனவும் அழைக்கப்படுகிறது.
பிரபுக்கள் சபையானது பழைமையினைப் பேணிக்கட்டிக் காக்கும் ஒரு அமைப்பாகையால், பழமைபேணும் கட்சியின் ஆட்சிக்காலத்தில் இதன் செல்வாக்கு மிகைத்தும், தொழிற் கட்சியின் ஆட்சிக்காலத்தில் இதன் செல்வாக்கு குறைந்தும் இருந்து வந்துள்ளது. தொழிற்கட்சியின் ஆட்சிக்காலத்தில் பிரபுக்கள் சபையின் அதிகாரமானது பல சந்தர்ப்பங்களில் குறைக்கப்பட்டுள்ளது.
பிரபுக்கள் சபை அமைப்பு.
பிரித்தானிய பிரபுக்கள் சபையில் இன்று சுமார் 1,073 உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர். இப்பிரபுக்கள் சபைகளின் அங்கத்துவம் 5 வகைப்படும். 1. பரம்பரைப் பிரபுக்கள்( ஏறத்தாழ பத்தில் ஒன்பது பங்கு பிரபுக்கள்
பரம்பரைப் பிரபுக்கள் ஆவர்) 2. அரச குடும்பத்தைச்சார்ந்த பிரபுக்கள். 3. ஸ்கொட்லாந்துப் பிரபுக்கள்(1707ம் ஆண்டு பிரித்தானியா
ஸ்கொட்லாந்து உடன்படிக்கையின் படி 6 இஸ்கொட்லாந்து பிரபுக்களுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது.)
- 12

4. ஆத்மீகப் பிரபுக்கள்.
பிரபுக்கள் சபையில் 26 பேர் ஆத்மீகப் பிரபுக்களாக இடம் பெறுவர். இவர்கள் காண்டர்பரி, யார்க் ஆகிய நகரங்களைச் சேர்ந்த தலைமை மதகுருகளும், மற்றும் 24 முதிர்ந்த ஆங்கில மதகுருகளும் அடங்குவர். மத ரீதியான உரிமைகளைப் பேணிப்பாதுகாக்கும் முகமாகவ்ே ஆத்மீக பிரபுக்கள் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கதாகும்.
5. சட்டப் பிரபுக்கள்.
பிரபுக்கள் சபையில் சட்டப் பிரபுக்களும் ஆயுட்காலத்துக்கு நியமிக்கப்படுகின்றனர். தற்போது இவர்களின் எண்ணிக்கை ஒன்பது ஆகும்.இச்சட்டப்பிரபுக்கள் இங்கிலாந்தின் நீதித்துறையின் முதிர்ந்த அனுபவம் பெற்றவர்களாக இருப்பது அவதானிக்கத்தக்கதாகும்.
பிரித்தானிய பிரபுக்கள் சபையில் ஆரம்பத்தில் அயர்லாந்துப் பிரபுகள் 8 பேர் இடம்பெற்றனர் 1921 இல் அயர்லாந்து பிதித்தானியாவில்இருந்து பிரிந்து சென்றதைத்தொடர்ந்து 1922 முதல் அயர்லாந்து பிரபுக்கள்கிடம் பெறுவதில்லை.
பிரபுக்கள் சபையில் பரம்பரைப் பிரபுக்கள் தவிர்ந்த ஏனையோர் பிரதமரின் சிபார்சின்படி முடியால் நியமிக்கப்படுவார். இவர்கள் கல்வி, விஞ்ஞானம் மருத்துவம், சட்டம், கலை, விவசாயம், போன்ற துறைகளில் பாண்டித்தியம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். என்ற மரபு இருந்து வருகிறது. எனவே இன்று பழைமையினைப் பிரதித்துவப் படுத்துவதற்காக இச்சபையில் பரம்பரைப் பிரபுக்களே இருந்து வருகின்றனர்.
1958 ம் ஆண்டுவரை பிரபுக்கள் சபையில் பெண்கள் உறுப்புரிமை பெறக்கூடிய சந்தர்ப்பம் வழங்கப்பட்டு இருக்கவில்லை. 1958ம் ஆண்டு பாராளுமன்ற சட்டப்படி பிரபுக்கள் சபையில் பெண்களுக்கும் உறுப்புரிமை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு தோன்றியது.

Page 9
அதிகாரங்கள்
அ. சட்டத்தடுப்பு அதிகாரம்.
சட்டத்துறையின் ஒரு பகுதியாக பிரபுக்கள் சபை அமைந்துள்ளதினால் சட்டங்களை ஆக்குவதற்கான அதிகாரத்தை இது கொண்டுள்ளது. சட்டத்துக்கான சாதாக்களைக் கொண்டுவந்தது பிரேரித்து சட்டமாக முடிவெடுப்பதில் இச்சபை பொதுமக்கள் சபைக்கு சமமான அதிகாரத்தை பெற்றிருந்தது. ஆயினும் நிதி மசோதாக்களைப் பொறுத்தவரையில் அத்தகைய மசோதாக்களை ஆரம்பித்து வைக்கக்கூடிய அதிகாரம் இதற்கு இல்லை. நிதி மசோதாக்களை ஆரம்பித்து வைப்பது பொதுமக்கள் சபையின் அதிகாரமாகவே இருந்து வருகின்றது.
சாதாரண சட்டங்களைப் பொறுத்தவரையில் 1911ம் ஆண்டு வரையிலும் பிரபுக்கள் சபை பொதுமக்கள் சபையினைப் போன்று அதிகாரம் கொண்ட அமைப்பாகவே காணப்பட்டது. 1909ம் ஆண்டில் லிபரல் ஆட்சி காலத்தில் நிதி மந்திரி லுயிட்ஜார்ஜ் என்பவரால் கொண்டுவரப்பட்ட வரவு செலவுத் திட்டத்தினை பிரபுக்கள் சபை நிராகரித்ததினால் 1910ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெற்றி பெற்ற அரசாங்கம் * அதிகாரங்களைக் குறைக்கும் மசோதாவைக் கொண்டு வந்தது. இது 1911ம் ஆண்டு பாராளுமன்றச் சட்டம் என அழைக்கப்படுகிறது.
1911ம் ஆண்டு பாராளுமன்றச்சட்டப்படி பொதுமக்கள் சபையால் இயற்றப்படும் சாதாரண மசோதாக்களை இரண்டு ஆண்டுகளுக்கும், நிதி மசோதாக்களை ஒரு மாதத்துக்கும் தடுத்துவைக்கும் அதிகாரத்தை பிரபுக்கள் சபை பெற்றுக் கொண்டது. அச்சட்டத்தின் முக்கிய அம்சங்களாவன. 1. ஒரு மசோதா நிதி மசோதாவா அன்றேல் சாதாரண மசோதாவா எனத் தீர்மானிப்பது பொதுமக்கள் சபையின் சபாநாயகர் ஆவார். 2. பொதுமக்கள் சபையில் ஒருநிதி மசோதா இயற்றப்பட்ட பின்பு பிரபுக்கள் சபையால் நிராகரிக்கப்பட்டால் ஒரு மாதம் கழித்த பின் தானாகவே சட்டமாகிவிடும். 3. நிதி மசோதா தவிர்ந்த ஏனைய சாதாரண மசோதாவொன்று
பொதுமக்கள் சபையால் இயற்றப்பட்ட பின்னர் பிரபுக்கள் சபையால் நிராகரிக்கப்பட்டால் அடுத்த கூட்டத்தொடரில் பழையபடி
-4-

நிறைவேற்றப்பட்டு இரண்டாம் முறையும் பிரபுக்கள் சபைக்கு அனுப்பப்படும். இரண்டாம் தடவையும் நிராகரிக்கப்பட்டால் இரண்டு" ஆண்டுகள் கழிந்த பின்னரே மூன்றாம் வாசிப்புக்குவிடப்படும் மூன்றாம் வாசிப்பு பொதுமக்கள் சபையில் நிறைவேற்றப்பட்டால் பிரபுக்கள் சபையின் அனுமதியின்றியே அது சட்டமாகிவிடும். (இரண்டாம் வாசிப்புக்கும் மூன்றாம் வாசிப்புக்கும் இடைவெளி முக்கியமாக இரணிவேருட இடைவெளியாகும்)
எனவே 1911ம் ஆண்டு முதல் பிரபுக்கள் சபையின் சட்டத்தடுப்பு அதிகாரம் வரையறுக்கப்பட்டு இருப்பதைக் காணலாம்.
1949ம் ஆண்டு திருத்தச்சட்டம்.
இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்னர் பதவிக்கு வந்த தொழிற் கட்சி அரசாங்கம் சாதாரண மசோதாக்கள் மீது தடுத்து நிறுத்தும் கால எல்லையை இரணிம் வருடத்தில் இருந்து ஒரு வருடமாகக் குறைந்தது.
எனவே பிரபுக்கள் சபை சாதாரண மசோதாக்களை ஒரு வருட காலத்திற்கும் நிதி மசோதாக்களை ஒரு மாத
காலத்துக்கும் தடுத்து நிறுத்தும் அதிகாரம் கொண்ட
சபையாகவே இருந்து வருகிறது.
2. நீதித்துறை சார்ந்த அதிகாரங்கள்.
பிரபுக்கள் சபை சட்டத்துறையின் ஓர் அங்கமாகக் காணப்பட்ட போதிலும் கூட பிரித்தானியாவின் நீதித்துறையில் மிக உயர்ந்த நிறுவனமாக இருந்து வருகின்றது. உலக நாடுகளில் காணப்படும் அனைத்து இரண்டாம் மன்றங்களையும் ஒப்பு நோக்குமிடத்து, ஏனைய நாடுகளின் இரண்டாம் மன்றங்களுக்கு இல்லாத ஒரு விசேட அதிகாரமாக இவ் அதிகாரத்தினைக் குறிப்பிடலாம்.
பிரபுக்கள் சபையில் இடம்பெறும் சட்டப் பிரபுக்களை வைத்து அமைந்த ஒரு நீதி மன்றமே இந் நாட்டில் மிக உயர்ந்த நீதி அமைப்பாகும். இராசப் பிரதிநிதிகளின் இராஜதுரோக குற்றச் செயல்களை விசாரணை செய்யும் ஒரு நிறுவனமாகவும் பொதுநலவாய நாடுகளின் மேன்முறையீட்டு வழக்குகளைப் பரிசீலிக்கும் ஒரு நிறுவனமாகவும்
15- -

Page 10
பொது மக்கள் சபையால் கொண்டு வருகின்ற துரோகக் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் நிறுவனமாகவும், இராஜாதுரோகம், கொடுங்குற்றம் தொடர்பான முதலில் விசாரணை செய்கின்ற அதிகார எல்லையைக் கொண்ட நிறுவனமாகவும் இது இருந்துவருகிறது. எனவே நீதித்துறை தொடர்பாக பிரபுக்கள் சபை பெற்றுள்ள அதிகாரம் குறிப்பிட்டுக் கூறக்க்டிய அளவிற்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது எனலாம்.
பிரபுக்கள் சபையின் நன்மைகள்.
பிரபுக்கள் சபையின் செயற்பாடுகள் குறித்துப் பல அரசியல்
அறிஞர்கள் பல சாதக, பாதக கருத்துக்களை முன் வைத்துள்ளனர்.
முதலில் சாதக கருத்துக்களை (நன்மைகள்) எடுத்து நோக்குவோம்.
1. சிறந்த விவாதங்களை நடத்துதல்.
பிரபுக்கள் சபை மசோதாக்களை விவாதித்து சட்டமாக முடிவெடுப்பதோடு சிறந்த விவாதங்களை நடாத்துவதன் மூலம் அரசியல் அறிவை வளர்க்கக் கூடிய ஒன்றாகவும் இருந்து வருகின்றது. பொதுவாக இச்சபையில் நடாத்தப்படும் விவாதங்கள் தரமானவையும், பயனுறுதி வாய்ந்தவையாகவும் அமைந்து காணப்படுகிறன.
பிரபுக்கள் சபையில் அங்கத்ததுவம்பெற்று இருப்பவர்களில் புத்திஜீவிகளாகவும் அரசியல் அனுபவம் பெற்றவர்களாகவும், ஏற்கனவே தூதுவர்களாக, மகாதேசாதிபதிகளாக, பிரதமர்களாக (முன்னால் பிரித்தானியப் பிரதமர் மகிரட் தட்சர் அம்மையாரும் தற்போது ஒரு பிரபுக்க்ள் சபை உறுப்பினராவார்) அமைச்சர்களாக இருந்தவர்களாகவும் காணப்படுகின்றனர். எனவே அரசியல் அனுபவம் பெற்றவர்களின் விவாதங்கள் தரமானவையாக அமைந்து விடுகின்றன.
மேலும் பிரபுக்கள் சபை அங்கத்தவர்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படாது நியமன உறுப்பினர்களாக இருப்பதினால் தமது வெற்றிக்காக நேரத்தையும், சிந்தனையையும் தேர்தலில் ஈடுபடுத்துவதை விடுத்துத் தரமான விவாதங்களை நடத்துவதிலே கவனம் செலுத்தி வருகின்றனர்.
16

2. பொதுமக்களின் அபிப்பிராயங்களை அரசியல் கொள்கைகள் ஆக்குதல்.
பொதுமக்களின் அபிப்பிராயங்களை அரசியல் உலகிற்கு வெளிப்படுத்தக் கூடிய அமைப்பாகவும் அது காணப்படுகிறது. மக்களது அபிப்பிராயங்களை அரசியல் அபிப்பிராயங்களாக ஒன்று திரட்டி அவ் அபிப்பிராயங்களை அரசியல் கொள்கையாக மாற்றுவதற்கு உதவும் ஒன்றாக பிரபுக்கள் இருந்து வருகின்றனர். இதுபற்றி கருத்துத் தெரிவிக்கும் பேராசிரியர் "லஸ்கி" பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
பொதுமக்கள் கருத்தினை அறிய உதவும் பயனுள்ள அரசியல் மேடையாக பிரபுக்கள் சபை இருந்துவருகிறது.
3 பொதுமக்கள் சபையின் வேலைப்பளுக்களைக் குறைத்தல். பிரபுக்கள் சபையானது உள்ளுராட்சி தொடர்பான மசோதாக்கள் தனிநபர் மசோதாக்கள், என்பவற்றை ஆரம்பித்து விவாதித்து வருவதால் குறித்த இந்த விடயங்களில் பொதுமக்கள் சபையானது தனது நேரத்தையும், கவனத்தையும் செலுத்தவேண்டிய அவசியம் இல்லாது போகிறது. எனவே பிரபுக்கள் சபை சட்ட வாக்க விடயங்களில் பொது மக்கள் சபைக்கு உதவும் ஒன்றாகவும், அதன் வேலைப்பளுவை குறைக்கும் ஒன்றாகவும் இருந்து வருகிறது.
4. கிர்த்தியான சட்டங்கள் உருவாதல்.
1ம் மன்றமான பொதுமக்கள் சபையினால் அவசரப்புத்தியுடன் ஆக்கப்படும் மசோதாக்களைத் தடுத்து நிறுத்தி ஆலோசனைகளைக் கூறுவதன் மூலம் மசோதாக்களில் உள்ள வழுக்கள் நீக்கப்பட்டு கீர்த்தியான சட்டங்கள் உருவாவதற்கு உதவுகிறது.
குறைபாடுகள்
பிரபுக்கள் சபையானது சில நன்மைகளைக் கொண்டுள்ள போதிலும்
கூட சில தீமைகளையும் கொண்டுள்ளது(குறைபாடுகள்) என்பதைக்
காணலாம். அதனைப்பின்வருமாறு தொகுத்து நோக்குவோம்.
17

Page 11
1. ஜனநாயகத் தன்மையற்ற நிறுவனம்.
நவீன அரசுகளில் ஜனநாயக உரிமை என்று கூறும் போது மக்கள் தமது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து ஆட்சிக்கு உட்படுவதையே எடுத்துக் காட்டலாம். சட்டவாக்கத்துறையின் ஓர் அங்கமாக விளங்கும் பிரபுக்கள் சபையின் அங்கத்தவர்களை மக்கள் தேர்ந்தெடுப்பதில்லை. மாறாக 100% ம் நியமனமாகவே காணப்படுகிறது. எனவே ஏனைய நாடுகளில் காணப்டும் இரண்டாம் மன்றுகளைப் போல இது பிரதிநிதித்துவ அமைப்பாக காணப்படவில்லை. எனவே பிரதிநிதிகள் சபையால் முன்வைக்கப்படும் சட்ட மசோதாக்களை பிரதிநிதித்துவ அமைப்பாக இல்லாதிருக்கும் பிரபுக்கள் சபை தடுத்து நிறுத்துவது ஜனநாயகத்தன்மை அற்ற ஒரு ஏற்பாடாகும் என்றும் குறை கூறப்பட்டு வருகிறது.
2. பிரதமரின் செல்வாக்கை அதிகரித்துக்கொள்ளும் வாய்ப்பு.
பிரபுக்கள் சபையில் (பரம்பரை பிரபுக்கள் தவிர) நியமனம் பெறும் பிரபுக்கள் பிரதமரின் ஆலோசனைப்படியே நியமிக்கப்படுவதினால் பிரதமரின் ஆதரவாளர்களை பிரபுக்கள் சபையில் அதிகரித்துக் கொள்ளக்கூடிய வாய்ப்பு உண்டு. பொதுநலன் புறக்கணிக்கப்பட்டு கட்சிசார்பான நலன்களே மேலோங்கி நிற்கிறது எனவும் கூறப்படுகிறது.
3. பழைமை பேனும் அமைப்பு.
பழைமை பேணும் அமைப்பாக இச்சபை இருந்துவருவதினால் முற்போக்கான எண்ணக்கருக்களுக்கும், சிந்தனைகளுக்கும் தடையாக அமைந்து விடுகிறது. என சில அரசியல் அறிஞர்கள் (இறை கூறுவர். ராமிசேர் மூர்' எனும்அறிஞர் பிரபுக்கள் சபை பற்றி பின்வருமாறு கூறுகின்றார். "பிரபுக்கள் சபையானது செல்வந்தர்களினதும் பிற்போக்கு சக்திகளினதும் உறைவிடமாகும்.
4. கால தாமதத்தை ஏற்படுத்தல்.
கால தாமதத்தை ஏற்படுத்துவது பிரபுக்கள் சபையின் மற்றுமொரு
முக்கிய குறைபாடாகும். பிரபுக்கள் சபைக்கும் தடுத்து நிறுத்தும்
அதிகாரம், சட்டவாக்கநிர்வாக விடயங்களை காலதாமதப்படுத்துகிறது.
- 18

சில வேளைகளில் இக்காலதாமதமானது மசோதாக்களைச் சீரழித்து விடலாம். மேலும் இந்தத்தடுத்து நிறுத்தும் அதிகாரம் ஆனது. சில மசோதாக்களை காலத்துக்குப் பொருத்தமற்ற சட்டங்களாக ஆக்கப்படவும் ஏதுவாகிறது. என்றும் கூறப்படுகிறது.
பிரபுக்கள் சபையில் காணப்படும் குறைபாடுகளைக்களையுமுகமாக 1922அல்தாபிக்கப்பட்ட ரோயல் கமிட்டி பின்வரும் அறிக்கையினைச் சமர்பித்தது.
1922 ரோயல் கமிட்டி அறிக்கை. 1. பிரபுக்கள் சபையின் ஒரு பகுதியினர் தொகுதி மூலமாக பொது
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். 2. மற்றொரு பகுதியினர் பொது மக்கள் சபை மூலம்
தேர்ந்தெடுக்கப்படவேண்டும். 3. மற்றொஇ பகுதியினர் எதிர்க்கட்சியால் நியமிக்கப்பட வேண்டும் 4. மற்றொரு பகுதியினர் கூட்டுத்தாபனங்கள், அரச திணைக்களங்களில்
இருந்து தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
மேற்படி ரோயல் கமிட்டியின் அறிக்கை நடைமுறைப்படுத்தப் படவில்லை. இன்றும் இக் குறைபாடுகள் தொடர்ந்து கொண்டு வருகிறது.
(plq66OJ:-
பிரபுக்கள் சபைக்கு எதிராக பல கண்டனங்கள் தெரிவிக்கப்பட்ட போதிலும் அச்சபை இன்றும் பிரித்தானிய அரசியலில் குறிப்பிடத்தக்க செல்வாக்குச் செலுத்துவதைக் காணலாம்.இன்னும் சட்டஆக்க விடயங்களில் குறிப்பிடத்தக்க அளவு பங்கினை வகித்துக் கொண்டே வருகிறது. பழைமை பேணும் கட்சிக்காலத்தில் இதன் செல்வாக்குகள் அதிகரித்தும் தொழிற்கட்சி காலத்தில் இதன் செல்வாக்குகள் குறைந்தும் காணப்பட்டபோதிலும் கூட இச்சபையினை முழுமையாக நீக்க எவரும் முன்வராமை பிரித்தானிய மக்களது பழமை பேணும் பண்பினையும், இச்சபையின் அமைப்பில் இருந்து விடுபட்டுவரும் எண்ணம் இல்லாமையையுமே எடுத்துக்காட்டுகிறது.
-19

Page 12
நிர்வாகத்துறை பிரித்தானிய நிர்வாகத்துறையை பின்வருமாறு பிரித்து நோக்கலாம்.
நிர்வாகத்துறை
பெயரளவு நிர்வாகம்(முடி) உண்மை நிர்வாகம்(மந்திரிசபை)
பெயரளவு நிர்வாகம் (முடி)
பிரித்தானிய அரசியல் முறையின் முக்கிய வடிவ மாதிரிகளில் ஒன்றாகவே முடி இருந்து வருகிறது. ஆங்கிலோ-சக்சனிய காலம் முதலு இங்கிலாந்தில் முடியாட்சி முறை காணப்பட்டது. ஆரம்பத்தில் பூரணநிறைவேற்று அதிகாரம் மிக்கதாக விளங்கிய முடியானது, 1688இல் நடைபெற்ற மாண்புறு புரட்சியின் பின்னர் அதிகாரத்தை இழந்து இன்று நாட்டில் அலங்காரத்த லைமையாக விளகுகிறது.
இப்பெயரளவு நிர்வாகத்துக்கு பொறுப்பாக இராணி அல்லது மன்னர் மூத்த தலைமுறையின் அடிப்படையில் இருந்து வருகிறார். இன்று முடி ஒரு பெயரளவு நிர்வாகமாக மட்டுமே இருந்துவருகின்ற போதிலும், அதனை நீக்க முயலாததற்கு முடி பழைமையின் சின்னங்களில் ஒன்றாக அமைந்திருப்பதும் மக்களிடத்தில் காணப்படுகின்ற பழைமைபேணும் பண்புமே காரணம் எனக் கூறமுடியும்.
ஆரம்பத்தில் மன்னனிடம் காணப்பட்ட அதிகாரங்கள் மக்கள் கைக்கு மாறியதால் இன்று மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்றமும், மந்திரி சபையுமே அதிகாரம் கொண்டவையூ விளங்குகிறன. இதனால் பிரதமரது விருப்பத்திற்கும் சிபாரிசுகளும் கட்டுப்பட்டு தொழிற்படும் ஒன்றாகவே முடி இருந்து வருகிறது. இந்த வகையில் முடிக்குள்ள பெயரளவு அதிகாரங்களைப் பின்வருமாறு வகைப்படுத்தி ஆராயலாம்.
அ. சட்டத்துறை சார்ந்த அதிகாரங்கள்.
1. பாராளுமன்ற முதலாவது கூட்டத்தொடரின் ஆரம்பத்தில் அரச கொள்கை விளக்க உரையினை (சிம்மாசனப் பிரசங்கம்) நிகழ்த்தல்.
-20

(இவ்வுரையை பிரதமரே தயாரிப்பார். எனவே அரச கொள்கையுரை அரசரின் கொள்கைகளை எதிரொலிக்காது). பாராளுமன்றத்தின் சட்டரீதியான இருக்கைகளுக்குத் தலைமை தாங்குதல். பாராளுமன்றத்தின் இருசபைகளினாலும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்பமிட்டு சட்டமாக்குதல். (பாராளுமன்றம் இறைமை பெற்றுள்ளதால் முடி ஒப்பமிட மறுக்கமாட்டாது). பிரதமரின் விருப்பத்தின் படி பொதுமக்கள் சபை, பிரபுக்கள் சபை என்பவற்றைக் கூட்டுதல். கூட்டத்தொடர்களை ஒத்திவைத்தல், பொதுமக்கள் சபைய்ை கலைத்தல்.
ஆ. நிர்வாகத்துறை சார்ந்த அதிகாரங்கள்.
1.
2.
பிரதமமந்திரியினை நியமித்தல் (பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற கட்சியின் தல்ைவரையே பிரதமராக நியமிக்கும்). பிரதமரின் சிபாரிசின் படி மந்திரிசபையின் ஏனைய உறுப்பினர்களை நியமித்தல்,
உயர் நிர்வாக உத்தியோகஸ்தர்களை நியமித்தல். வெளிநாட்டுத்தூதுவர்களையும் அரச பிரதிநிதிகளையும் நியமித்தல். தரைப்படை, கடற்படை, விமானப்படை முதலியவை மீது முழுமையான கட்டுப்பாட்டைப் பெற்றுள்ளது. பாராளுமன்றத்தின் இசைவின்ரியே யுத்தப் பிரகடனம், சமாதானம் போன்றவற்றை முடியால் பிரகடனம் செய்ய முடியும். ஆனால் யுத்த செலவினங்களுக்கு பாராளுமன்றத்தின் ஒப்புதல் அவசியமாகும். காலனிகள், டொமினியன்கள், பொதுநலவாய நாடுகள் ஆகியவற்றின் உறவு முறை முடியாலே நடாத்தப்படுகிறது. விருதுகள், பட்டங்கள் வழங்குதல்.
இ. நீதித்துறைசார்ந்த அதிகாரங்கள்.
1.
2.
அரசன் நியாயத்தின் ஊற்றாக விளங்குவதால் பிரதம நீதி அரசரை நியமித்தல். உயர் நீதி மன்றத்தின் நீதியரசர்களாகத் தொழிற்படும் சட்டப் பிரபுக்களை நியமித்தல். VK. குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்கல், தணடனை
-21

Page 13
வழங்குவதைத் தாமதப்படுத்துதல்(இருப்பினும் உடமைகள் பற்றிய வழக்குகளிலோ, இராஜதுரோக குற்ற விசாரணை வழக்குகளிலோ அரசரால் மன்னிப்பு வழங்க முடியாது).
குறிப்பு-நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரத்தை இவர்பெற்றிருந்தாலும் கூட நீதிபதிகளை நீக்கும் அதிகாரத்தை இவர் பெற்றிருக்கவில்லை.
பொது
பாதுகாப்பு தொடர்பான ஆயுதம் தாங்கிய படைகளின் தலைவர்களை பிரதமரினிாரிசின் படி நியமித்தல். அவசரகால நிலையினை பிரகடனம் செய்தல், போர், சமாதானம், போன்றவற்றைப் பிரகடனம் செய்தல், பிரதமரின் சார்பில் வெளிநாடுகளுடன் பாதுகாப்பு உடன்படிக்கைகளையும், ஒப்பந்தங்களையும் செய்தல்.
முடி நிலைப்பதற்கான காரணங்கள்.
முடிக்குள்ள பணிகளைத் தொகுத்து நோக்குமிடத்து அவர் தானாகவே முடிவெடுத்துச் செயல்படும் நிறைவேற்று அதிகாரம் ஏதும் இல்லாத வெறும் நாமநிர்வாகியாகவே தொழிற்படுகிறார். இவர் மூலம் எவ்வித ஆட்சி அதிகாரங்களும் செயற்படுத்தப்படாததால் இவ்வாறான முடி இருப்பதில் எவ்வித பயனும் இல்லை என்பது அரசியல் அவதானிகளின் வாதமாகும். இருப்பினும் முடி தொடர்ந்திருக்க வேண்டுமென்பது மக்களின் அபிலாஷையாகும். எனவே முடி நிலை பெற்றிருப்பதற்கு என்ன காரணம் என்பதனை ஆராய்தல் பொருத்தமானதாகும்.
1. முடி பழைமையின் சின்னமாக விளங்குவதும் மக்களின் மரபுகளை நேசிப்பதும்.
பிரித்தானிய மக்கள் பழைமையைப் போற்றும் பாதுகாக்கும் பண்பு கொண்டவர்களாக இருந்து வருகின்றனர். எனவே பழைமையின் சின்னமாக இருக்கும் முடியுடன் தொடர்போடு வாழவே விரும்புகின்றனர். முடி இல்லாது போனால் தமது கெளரவத்தையும், நலன்களையும் இழந்து விடுவோம் என்ற எண்ணம் பிரித்தானிய மக்கள் மனங்களில்
-22

இழையோடியுள்ளது. எனவே கிளாஸ்டன் என்பவர் இதுபற்றி பின்வருமாறு குறிப்பிடுகின்றார். " முடி அதிகாரத்தினை இழந்தாலும் மக்கள் மத்தியில் செல்வாக்கு உள்ள ஒன்றாகவே இருந்து வருகிறது மேலும் சிலர் இதுபற்றி பின்வருமாறு கூறுவர் பங்கிஹாம் அரண்மனையில் அரசர் இருக்கும் போது குடிமக்கள் மிக மன அமைதியோடு தங்கள் படுக்கையில் துயில் கொள்கின்றனர்.
2. முடி அரசியல் பக்கச்சார்பு அற்றது.
பிரித்தானிய முடியானது ஒருபோதும் கட்சிசார்பான விவாதங்களிலோ, கூட்டங்களிலோ கலந்துகொள்வதில்லை. எதிர்க்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அதுபற்றி முடி எவ்வித கவலையும் அடைவதில்லை. ஆட்சிக்கு வந்த கட்சியின் பிரதமர் எதனைக் கூறுகின்றாரோ அதனையே செய்துகொண்டிருப்பார்.
முடி நடுநிலையாக அரசியலில் தொழிற்பட்டு வருவதால் அரசியல் கட்சிகளும் இவரைப்பற்றிக் கவலை அடைவதில்லை. இதனால் எந்தவொரு அரசியல் கட்சியும் முடியினை நீக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாதவையாகவே இருந்து வருகின்றன.
3. முடி ஆட்சி செய்வதில்லை.
"மன்னர் ஆள்கிறார். ஆனால் ஆட்சி செய்வதில்லை. இதன் கருத்து பிரதமரின் சிபாரிசுக்கு அமையவே முடி செயல்பட்டு வருவதினால் எவ்வித ஆட்சி அதிகாரங்களையும் பெறாத ஆள்பவராக மட்டுமே இருந்து வருகின்றார். ஆட்சி விடயங்களில் முடி பங்கெடுக்காததினால் முடியின் பதவியில் ஏற்படும் மாற்றங்கள் அன்றேல் முடிக்குப் பொறுப்பானவர்களின் மரணம் ஆட்சி அலுவல்களில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. எனவே தான் முடி ஒருபோதும் இறப்பதில்லை" என்று கூறப்படுகிறது. முடியின் இறப்பு ஆட்சி விடயங்களில் பாதிப்புக்களை ஏற்படுத்தியிருக்குமெனில் சிலநேரங்களில் முடியினை மாற்ற முயற்சிக்கப் பட்டு இருக்கலாம். ஆனால் அவ்வாறான நிலை இல்லாததினால் இன்று வரையும் முடியினை நீக்க எவரும் முன்வரவில்லை.
-23

Page 14
4. முடிக்குக்கிடைக்கும் கெளரவத்தை தமது கெளரவமாக நினைக்கும் மக்களின் மனோ நிலை.
பிரித்தானிய பொது நலவாய நாடுகளின் தலைமைத்துவத்தை வகிப்பது பிரித்தானிய முடியாகும். எனவே பொதுநலவாய நாடுகளை இணைக்கும் ஒரு பொற் சங்கிலி என பிரித்தானிய மக்கள் கருதுகின்றனர். இத்தலைமைத்துவத்தின் காரணமாக அரசன் அல்லது அரசி ஏனைய நாடுகளுக்குச் செல்லும் போது அந்நாடுகளின் முடிக்குக் கிடைக்கும் வரவேற்பையும் கெளரவத்தையும், அந்தஸ்தையும் தங்கள் ஒவ்வொரு வருக்கும் கிடைக்கும் வரவேற்பாகவும் கெளரவமாகவும் அந்தஸ்தாகவும் மக்கள் நினைக்ககின்றனர். முடி நிலைக்க இதுவும் ஒரு காரணியாகும்.
5. முடியரின் முனி மாதரிகளை மகி களி ஏற்றுக்கொள்கின்ற நிலை.
பிரித்தானியாவில் சமய சமூக விழாக்களிலும்,தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விழாக்களிலும் கலந்துகொண்டு மக்களுக்கு ஒரு முன்மாதிரியாக முடி விளங்குகிறது. இவ் விழாக்களுக்குத் தலைமை தாங்கி மக்களை கெளரவிப்பதோடு பயனுள்ள சொற்பொழிவுகளையும் இது நிகழ்த்துகிறது. இதனால் மக்கள் முடியைப் பின்பற்றி நடக்கின்றனர். முடி நிலைப்பதற்கான காரணங்களில் இத்தன்மையும் ஒன்றாகும்.
முடிவுரை:-
தொகுத்து நோக்குமிடத்து மேற்படி காரணிகள் நாம நிர்வாகமான முடியினை நிலைத்திருக்க வைத்துள்ளதென்பதனை அவதானிக்கலாம். அண்மைக்காலமாக (குறிப்பாக 1991-1992களில்) பிரித்தானிய மகாராணி எலிசபெத் அம்மையாரின் குடும்பத்தில் ஏற்படும் சில நிகழ்ச்சிகள் பிரித்தானியாவுக்கு முடியானது அவசியமா என்ற வினாவினை மீண்டும் கிளப்பி வருகிறது. விஷேடமாக முடிக்குரிய இளவரசர் சாள்ஸ்ஸின் மனைவி டயானாவின் அண்மைக்கால போக்குகளும் முடியின் குடும்பத்தை சார்ந்தவர்களின் அரை நிர்வான கோலபுகைப்படங்களும் முடியினைப்பற்றிய கசப்புணர்வைப் படிப்படியாக மக்கள் மனங்களில் ஏற்படுத்தக்கூடிய சந்தர்ப்பத்தினை வழங்கி வருகிறது. அடுத்தடுத்து இடம் பெறும் இச்சம்பவங்களின் விளைவுகள் என்னவாகும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
-24

osofton diejmsi
Diaf af6Du(The Cabinet)
நவீன உலகில் ஜனநாயக ஆட்சியைப் பேணி வரும் நாடுகள் இன்று நிர்வாகத்தினை மேற்கொள்ள பிரதான இரண்டு முறைகளை கையாள்கின்றன.
அ. மந்திரி சபை ஆட்சி முறை ஆ. ஜனாதிபதி ஆட்சி முறை.
உலகத்தில் மந்திரி ஆட்சி முறைக்குப் பெயர் போனதும், புகழ்பெற்றதுமான நாட்டிற்கு உதாரணமாக எடுத்துக்கூறக்கூடிய நாடாகவே பிரித்தானியா திகழ்கிறது. ஏனைய நாடுகளை விட பிரித்தானிய மந்திரி சபையில் மந்திரிசபை ஒன்றிற்குத் தேவைப்படும் அடிப்படைப் பண்புகள் அனைத்தும் ஒருங்கே பெறப்பட்டு இருப்பதே இதற்கு மூல காரணமாகும்.
நாட்டின் நிர்வாகத்துறையானது பிரதமரது தலைமையிலான மந்திரிமார்கள் பலரை உள்ளடக்கிய ஒரு குழுவிடம் பொறுப்பாக்கப்பட்டு இருப்பது இவ் ஆட்சி முறையின் முக்கிய பண்பாகும். இக்குழு சட்டசபையின் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு சட்ட சபையின் உறுப்பினர்களுடன் இணைந்திருப்பதும், சட்டசபையோடு தோன்றி சட்டசபையோடு கலைந்து செல்வதும், நிர்வாகம் சட்ட சபைகளுக்குள்ளே அடங்கியதொன்றாக இருப்பதும் நிர்வாக அதிகாரங்கள் பெயரளவு நிர்வாகி, பொறுப்புவாய்ந்த நிர்வாகி என இரு பகுதியினரிடமும் பகிர்ந்தளிக்கப்பட்டிருப்பதும், பிரித்தானிய மந்திரி சபை ஆட்சி முறையின் முக்கிய விடயங்களாகக் குறிப்பிடலாம். மேலும் மந்திரி சபை ஆட்சிமுறையொன்று சிறப்பாகத் தொழிற்படுவதற்குச் சாதகமான சூழல், தேவையான நிபந்தனைகளும் பிரித்தானிய அரசியலில் நிலைபெற்று உள்ளன.
LLLLTLMM TTLTLLLLLT TTLLMLLTTTTTTLLLLLLL LLLLLLLLM TTS 1 கட்சி முறையின் வளர்ச்சி.
மந்திரி சபையின் ஆட்சி முறை சிறப்பாகச் செயல்பட வளர்ச்சியடைந்த கட்சிமுறையொன்று அவசியமாகும். பிரித்தானியாவில் காணப்படும் இருகட்சிமுறைப்போக்கு பிரித்தானிய மந்திரி சபையின் வெற்றிக்கு அடிப்படைக்காரணியாகும்.
-25

Page 15
2. கூட்டுப்பொறுப்பு.
மந்திரிசபை ஆட்சி முறை சிறப்பாக செயல்பட கூட்டுப்பொறுப்பு முக்கியமானதொரு நிபந்தனையாகும். ஒரேகட்சியினைச் சார்ந்த உறுப்பினர்களில் இருந்து மந்திரிமார்களைத் தேர்ந்தெடுத்து மந்திரிசபை அமைக்கப்படுகின்றது. (மேலும் பிரித்தானியாவைப்பொறுத்தமட்டில் ஒரே இனத்தைச்சேர்ந்தவர்களாகவே மந்திரிசபை அமைக்கப்படுகிறது). இதனால் கூட்டுப்பொறுப்பை பேணிக்கொள்ள வாய்ப்பாக அமைகிறது.
3 மேலும் பிரதமரது தலைமைத்துவத்தை ஏற்று வழிகாட்டலைப் பின்பற்றி இதர மந்திரிகள் நடந்துகொள்ள முன் வருவதும், சிறப்பாக வளர்ச்சியடைந்த இஸ்தீரமான பொருளாதார நிலையும், ஆறுதலாகச் சிந்தித்து முடிவெடுக்கத்தக்க அரசியல் ஞானம் படைத்தவர்கள் காணப்படுவதும் பிரித்தானிய மந்திரி சபையின் வெற்றிக்கான காரணிகளாகும்.
மந்திரி சபையை அமைத்தல். 1. பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் அதிகப்படியான ஆசனங்களை வென்றெடுக்கும் கட்சியின் தலைவரை முடிக்குப் பொறுப்பான இராணி அல்லது மன்னரால் பிரதமராக நியமிக்கப்படுவார். பிரதமரின் ஆலோசனைப்படியே ஏனைய அங்கத்தவர்களை முடி நியமிக்கும். 2. அமைச்சரவை எண்ணிக்கை பிரதமராலே தீர்மானிக்கப்படும். 3. மந்திரி சபைக்கு யாரைத்தெரிவு செய்து எந்தப் பொறுப்புக்களை
வழங்குவது போன்ற விடயங்களைத் தீர்மானிப்பது பிரதமரே. (பொதுவாக தனது கட்சியை சார்ந்த சிரேஷ்டஉறுப்பினர்களையும் புத்திஜீவிகளையுமேமந்திரி சபை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கவே பிரதமர் முய்ற்சிப்பார். 4. மந்திரிசபையின் நிதி எனும் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர்
பொதுமக்கள் சபையிலிருந்தும் நீதி விடயத்துக்குப் பொறுப்பான அசிம்ச்சர்கள் பிரபுக்கள் சபையில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பது மரபாக வந்துள்ளது. மேலும் நீதி அமைச்சர் உட்பட இரண்டு பேரை பிரபுக்கள் சபையின் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற மரபும் அங்கு வலுப்பெற்று உள்ளது. எனவே மந்திரி சபை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதில் பிரதமர் சுயாதீனமான தலைவராகக் காணப்பட்ட போதிலும் இந்த இரு நிபந்தனைகளையும் பொறுத்தமட்டில் அவரது சுயாதீனத்தன்மை கட்டுப்படுத்தப்படுதுவதைக் காணலாம்.
-26

மந்திரிசபையின் கடமைகள்.
1.
கொள்கைகளை வகுத்தல்.
மந்திரிசபையானது உள்நாட்டு வெளிநாட்டுக் கொள்கையாக்கத்தை வகுக்கும். பிரித்தானிய மந்திரி சபையில் உருவாக்கப்படும் கொள்கைகள் சட்டத்துறையின் அனுமதியுடன் செயல்படுத்தப்படும்.
. பாராளுமன்ற செயல்பாடுகளை வகுத்தல்.
பாராளுமன்றம் எந்த அலுவல்களை நிறைவேற்ற வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது. அமைச்சர் குழுவே, ஒவ்வொரு அலுவல்களுக்கும் நேரமொதுக்கி எதைத் தீர்மானிப்பது, எவ்வாறு தீர்மானிப்பது என்பவற்றைத் தீர்மானிப்பதும் அமைச்சரவையின் பணிகளில் ஒன்றே. - நாட்டின் நிர்வாகத்துக்குப் பொறுப்பாயிருத்தல்.
4. மந்திரிசபையானது ஆட்சியின் ஒவ்வொரு செயலுக்கும் பொதுமக்கள்
சபைக்கு கூட்டாகப் பொறுப்புக் கூற வேண்டும். scibidoosooris is (Co-ordination) அமைச்சரவையின் நிர்வாகப் பொறுப்புக்களையும் உள்ளுராட்சி நிறுவனச் செயற்பாடுகளையும் ஒருங்கிணைத்தல். ஒப்படைக்கப்பட்டுள்ள சட்டமியற்றும் அதிகாரம், நவீன காலத்தில் பொது மக்கள் சபையின் வேலைப் பளுக்கள் அதிகரித்துள்ளமையினால் சகலமசோதாக்களையும் விரிவான முறையில் விவாதம் செய்வதற்கு நேர அவகாசம் இருக்காது. இச் சிக்கலைத் தவிர்ப்பதற்கு எலும்பமைப்புச் சட்டங்கள்(Skeletonbills) இயற்றும் தன்மையை பொது மக்கள் சபை பெற்றுள்ளது. ஒரு மசோதாவின் முக்கிய விதிகளை மட்டுமே பொது மக்கள் சபை இயற்றும். அதற்கிணங்க துணை விதிகளை அமைச்சரவை இயற்றிக்கொள்ளும்.
முடிவுரை:-
பிரித்தானிய அமைச்சரவை அதிகமான அதிகாரங்களைப் பெற்றுள்ளது.
இவ்வதிகாரங்களைப் பிரயோகிப்பதில் ஒரு சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டாலும் கூட வரம்பில்லாத அதிகாரத்தையே அது செலுத்துகிறது. சில சந்தர்ப்பங்களில் சட்டமன்ற உறுப்பினர்களின் மீது சிறிதளவு
-27

Page 16
நெருக்கத்தையும் அதிகாரத்தையும் செலுத்திய பின்னரே சில நடவடிக்கைகளை சட்டமாக்க முடிகிறது. ஆனால் எந்த அமைச்சரவையும் முற்றுப்பெறாத பொது மக்களின் கருத்துக்களை எதிர்த்தோ அன்றேல் புறக்கணித்தோ செயல்படும் எனக் கொள்ள (ԼՔւգաilՖ].
Lygldf (Prime Minister)
மந்திரி சபை அமைப்பில் பிரதம மந்திரியே மிக முக்கியமான பங்குதாரராகக் காணப்படுகின்றார். இவர் மந்திரி சபையின் தலைவர் மட்டுமன்றி பொதுத் தேர்தலில் பெரும்பான்மை ஆசனங்களை வென்ற கட்சியின் தலைவராகவும் விளங்குகிறார். மந்திரி சபையின் சக உறுப்பினர்களும், கட்சியின் உறுப்பினர்களும் இவரது வழிகாட்டலைப் பின்பற்றுவது போன்று முதித் தேசமும் பிரதமரது வழிகாட்டலையே எதிர்பார்த்து நிற்கிறது.
இதனால் இவர் நாட்டின் உண்மையான தலைவர் என்ற அளவுக்கு முக்கியத்துவம் அடைந்து விடுகிறார். எனவே பிரதமரைப் பற்றி பல அரசியல் அறிஞர்கள் பல கருத்துக்களை முன் வைத்துள்ளனர்.
1. நட்சத்திரங்கள் சூழ உள்ள சந்திரனைப் போன்று அமைந்தவரே
பிரதமராவார்.(வில்லியம் றொபட்) 2. " கோள்கள் சுற்றிச் செல்லும் சந்திரனுக்கு ஒப்பானவர் பிரதமர்
(பேராசிரியர் ஐவர் ஜெனிங்ஸ்) மந்திரி சபை அமைப்பில் பிரதம மந்திரியே மிக முக்கிய பங்குதாரராகக் காணப்படுகின்றார். மந்திரி சபையின் எண்ணிக்கையைத் தீர்மானிப்பவரும், மந்திரி சபையின் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பவரும் இவரே. இவ்விதமாக மந்திரி சபையினை அமைப்பதோடு மட்டுமல்லாது, அதன் கொள்கையாக்கத்தினை வகுப்பவராகவும் பிரதமர் காணப்படுகிறார். இவரது கொள்கையினை வழி நடத்தும் அமைப்புக்களாகவே மந்திரி சபையும் பாராளுமன்றமும் காணப்படும். பாராளுமன்றத்தின் பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்ற கட்சியின் தலைவராக இவர் அமைந்திருப்பதினால் சட்டத்துறையும் இவரது கொள்கையினை வழிநடாத்தும் அமைப்பாகவே காணப்படும். மேலும் காலத்துக்குக்காலம் மந்திரி சபையினை மாற்றியமைக்கக் கூடிய தலைவராகவும் பிரதமரே காணப்படுகின்றார்.
-28

பிரதமர் தன்னோடு ஒத்துழைக்க முன் வராதவ்ர்களையும், நம்பிக்கை இல்லாதவர்களையும் நீக்கி அவ்விடத்தில் புதியவர்களை மந்திரிகளாக நியமித்துக் கொள்ளும் வகையிலும், மந்திரிசபை உறுப்பினர்களிடையே அமைச்சுக்களை மாற்றிக் கொடுக்கும் வகையிலும் இவர் மந்திரி சபையினை காலத்துக்குக்காலம் மாற்றி அமைப்பவராகவும் இருந்து வருகிறார். எனவே 'லஸ்கி எனும் பேராசிரியர் பிரித்தானியப் பிரதமரைப் பற்றி பின்வருமாறு கருத்து முன்வைத்துள்ளார்.
"மந்திரி சபையின் அமைப்புக்கும் அதன் வாழ்வுக்கும் அதன் முடிவிற்கும் பிரதமரே நாதமாக விளங்குகிறார்"
நாட்டின் நிர்வாகத்துறையின் நிறைவேற்று அதிகாரியாக பிரதமர் விளங்குவதோடு, அந் நாட்டின் பெயரளவு நிர்வ்ாகத்துக்குப் பொறுப்பான முடியின் சகல விதமான நடவடிக்கைகளையும் தீர்மானிப்பவராகவும். முடிக்கு வேண்டுகோள்கள் விண்ணப்பங்கள். சிபார்சுகள் என்பவற்றைச் செய்பவராகவும் பிரதமரே இருக்கிறார்.
மேலும் பாராளுமன்றத்தைக் கூட்டல், கலைத்தல், ஒத்திவைத்தல் ஆகியன பெயரளவு நிர்வாகியினால் பிரகடனப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற போதிலும் கூட உண்மையில் இவை பிரதமரது விருப்பப்படி யே நடைமுறைப்படுத்தப்படுகின்றன. பிரதமர் விரும்பாது பெயரளவு நிர்வாகியால் எதனையும் சாதிக்க முடியாது. எனவே நாமறிவாகியின் சகல விதமான நடவடிக்கைகளுக்கும் கடமைகளுக்கும் பிரதமரே அடிநாடியாகத் திகழ்வார் என்று குறிப்பிட்டால் அது மிகையாகாது. இதனால் தான் பிரித்தானியாவில் ” பிரதமர் ஆட்சி செய்கிறார். முடி ஆள்கிறது என்ற கருத்து நிலைபெற்றுள்ளது.
மேலும் மந்திரிசபை மட்டுமல்லாது, சட்டத்துறையின் அமைப்பிலும்
அதன் வாழ்விலும் பிரதம மந்திரியே முக்கியத்துவம் பெறுவதை நாம் காண்கின்றோம்.
-29

Page 17
பிரித்தானியாவின் கட்சிமுறை.
உலக அரசியல் வரலாற்றிலே ‘கட்சி முறை எனும் ஒரு புதிய அத்தியாயத்தை ஆரம்பித்து வைத்த நாடு பிரித்தானியாவாகும். இன்று வளர்ச்சியடைந்த கட்சி முறையொன்றினைக் கொண்ட ஒரு நாட்டிற்கு சிறந்த உதாரணமாகப் பேசப்படுவது பிரித்தானியாவே. இங்கு பழைமை பேணும் கட்சி,தொழிற்கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, லிபரல் கட்சி போன்ற பல கட்சிகள் காணப்பட்ட போதிலும் கூட பழைமை பேணும் கட்சியும் தொழிற்கட்சியுமே முக்கியமான கட்சிகளாக இருந்து வருகின்றன. இவ்விரு கட்சிகளுமே மொத்த வாக்காளர்களில் 90% ஆன வாக்குகளையும் மொத்த ஆசனங்களில் 90% ஆசனங்களையும் பெற்றுக் கொள்ளும் கட்சிகளாகக் காணப்படுகின்றன. இதன் காரணமாக இரு கட்சிமுறை நிலவும் நாட்டிற்குச் சிறந்த உதாரணமாக எடுத்துக் காட்டப்படும் நாடாகவும் பிரித்தானியா திகழ்ந்து வருகின்றது.
பிரித்தானிய அரசியல் கட்சிகளின் தோற்றம்.
உலகிலே முதன் முதலாக கட்சிகள் தோன்றி வளர்ந்த நாடான பிரித்தானியாவில் கட்சிகளின் தோற்றத்துக்கான ஆரம்பம் 17ம் நூற்றாண்டிலிருந்தே உருவாகி இருந்தது. இங்கு அரசியற் கட்சிகள் ஒரே நாளில் தோன்றியவை அல்ல.
குறிப்பாக 17ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் இடம்பெற்ற மதச் சீர்திருத்த இலக்கங்களுடன் கட்சிகளின் தோற்றத்திற்கான சூழ்நிலை உதயமாயிற்று எனலாம். மதச் சீர்திருத்த காலத்தில் மதத்தையும் மன்னனையும், பழைமையையும் ஆதரிக்கும் ஒரு பகுதியினரும் மன்னனையும் மதத்தையும் எதிர்த்து பழைமையினைத் திருத்தி புதுமைகளை ஏற்படுத்த வேண்டுமென்று இன்னொரு குழுவினரும் காணப்பட்டனர். இந்த இரு வேறுபட்ட நோக்கம் காரணமாக சமூகத்தில் இரு பிரிவுகள் உருவாகி இருந்தன.
w சமூகத்தில் ஏற்பட்ட இந்த முரண்பாடு மன்னனது அவைக்களத்தையும்
பாதித்தது. இதனால் மண்னனுக்கு ஆலோசனை வழங்கவென ஏற்படுத்தப்பட்டிருந்த அவைக்களப் பிரதானிகளும் இரண்டு குழுவினராகப் பிரிந்து செயற்படலாயினர்.

இவ்வாறாக மன்னனையும் , மதத்தையும் ஆதரிப்பவர்களும் பழைமையை விரும்பியவர்களும் டெரிக் குழுவினராகவும் மன்னனையும் மதத்தையும் எதிர்த்து புதுமையை விரும்பியவர்கள் விக் குழுவினராகவும் பிரிந்து நின்றனர். இவ்வாறு குழுக்களாகப் பிரிந்து காணப்பட்ட போதிலும் கட்சிமுறை ஒன்றாக இது அமைந்திருக்கவில்லை. காரணம் கட்சிமுறையாக மாறக்கூடிய சூழ்நிலை அப்போது இருக்கவில்லை.
காலகதியில் பிரித்தானிய அரசியல் அரங்கில் ஏற்பட்ட மாற்றங்கள் குறிப்பாக வாக்குரிமையின் விஸ்தீரணம், அதன் மூலம் தேர்தல்கள், பாராளுமன்ற நடைமுறைகளின் விரிவாக்கம் போன்றனவும் இக் குழுக்களைக் கட்சிகளாக மாற்றின. வேறு வார்த்தையில் கூறுவதாயின் தேர்தல் காலங்களில் மக்களுக்குத் தம்மை அறிமுகப்படுத்திப் பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டி இருந்ததனால் இக் குழுக்கள் தம்மை கட்சிகளாக ஒழுங்கமைத்துக் கொண்டன.
இங்கு டொரிக் எனும் குழு பழைமை பேணும் கட்சியாகவும், விக் குழு லிபரல் கட்சியாகவும் தங்கள் பெயர்களை மாற்றிக்கொண்டன. இவ்வாறு தோன்றிய கட்சிகள் 1ம் உலக மகா யுத்தத்தை அண்மித்த காலம்வரையிலும் தொடர்ச்சியாக மாறி மாறி அரசியல் அதிகாரத்தினைப் பெற்று வந்தன. எனவே பிரித்தானியாவின் கட்சி முறை வரலாற்றில் ஆரம்ப காலகட்டங்களில் பழைமை பேலும் கட்சியும், லிபரல் கட்சியுமே இரு கட்சி முறைப் போக்கினைப் பிரதிபலிக்கும் கட்சிகளாகக் காணப்பட்டன.
20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் லிபரல் கட்சியில் கொள்கை தொடர்பான கருத்து முரண்பாடுகள் ஏற்படலாயிற்று இதன் விளைவாக 1906ம் ஆண்டில் லிபரல் கட்சியிலிருந்து பிரிவடைந்த ஒரு சாரார் தொழிற்கட்சி எனும் புதிய கட்சியினை இஸ்தாபித்தனர். தொழிலாளர்களையும், கூட்டுறவு அமைப்புக்களையும் அடிப்படையாகக் கொண்டு தோன்றிய இப் புதுக் கட்சியானது 1ம் உலக மகா யுத்தக் காலம் முதல் இதுவரை காலமும் லிபரல் கட்சி பெற்றிருந்த முக்கியத்துவத்தைப் பெற்றுக்கொண்டது. தொழிற்கட்சியும், பழைமை பேணும் கட்சியும் மாறிமாறி அரசாங்க அதிகாரத்தைக் கைப்பற்றி வருவதை அவதானிக்கின்றோம். தொழிலாளர்களைக் கவரக்கூடிய வகையில் பல திட்டங்கள்
-31

Page 18
முன்வைக்கப்பட்டதினால் தொழிலாளர்கள் மத்தியிலும் மத்தியதர வகுப்பார் மத்தியிலும் இக்கட்சி செல்வாக்குப் பெறலாயிற்று.
1975ம் ஆண்டுகளின் பின்னர் பிரித்தானியாவின் கட்சி முறையில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஏனெனில் 1992 ஏப்பிரலில் நடைபெற்ற பிரித்தானிய பொதுத் தேர்தலிலும் தொடர்ந்து 4வது தடவையாகவும் பழமைபேணும் கட்சியே அரசாங்க அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டது. எதிர்காலங்களில் பிரித்தானியாவின் கட்சிமுறைப் போக்கு எத்தகையதாகக் காணப்படும் என்பதை பொறுத்திருந்தே அவதானிக்க வேண்டியிருக்கும்.
பிரித்தானியக் கட்சி முறையின் முக்கிய பண்புகள். 1. நீண்டகால வரலாற்றினைக் கொண்டவை.
உலகில் முதன்முதலாகத் தோன்றி வளர்ச்சிபெற்ற நாட்டிற்கு உதாரணமாகப் பேசப்படுவதன் அடிப்படையில் பிரித்தானிய அரசியல் கட்சிகள் சுமார் 350 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றினைக் கொண்டு விளங்குகின்றன. உலகில் காணப்படும் அனைத்து அரசியல் கட்சிகளை விடவும் நீண்ட வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட கட்சிகளே
பிரித்தானியக் கட்சிகளின் முக்கிய பண்பாகும்.
2. குழுக்களாகப் பிரிந்து கட்சிகளாக மாற்றமுற்றவை. பிரித்தானியக் கட்சிகள் ஒரு நாளில் தோன்றியவை அல்ல. ஆரம்பத்தில் குழுக்களாகப் பிரிந்து கட்சிகளாக மாறியவையே. இதனை மேலும் தெளிவு படுத்தும்போது பிரித்தானியாவின் அரசியல் கட்சிகள் பாராளுமன்ற அமைப்பினுள் தோன்றி (மன்னர் அவைக்களம்) மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லப்பட்டு வளர்ச்சி பெற்றவையாக இருப்பதை இதன் மற்றுமொரு பண்பாக எடுத்துக்காட்டலாம். ஆனால் உலகில் ஏனைய அரசியல் கட்சிகள் மக்கள் மத்தியில் தோன்றி பாராளுமன்றத்துக்கு எடுத்துச் செல்லப் பட்டவையாக அமைந்திருப்பதைக் காணலாம்.
3. இரு கட்சிமுறைப் போக்கினைக் கொண்டுள்ளமை. பிரித்தானியாவில் பல கட்சிகள் அரசியல் நடவடிக்கைகளில் பங்கெடுத்துக்
-32

கொள்ள முன்வருகின்ற போதிலுங்கூட பழமைபேணும் கட்சியும், தொழிற்கட்சியுமே அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொள்ளும் கட்சிகளாகக் காணப்படுகின்றன. அதேநேரம் 1ம் உலக மகா யுத்தத்திற்கு முன்னர் பழைமைபேணும் கட்சியும் லிபரல் கட்சியுமே இவ்வாறான இரு கட்சி முறைப் போக்கினைப் பிரதிபலித்து நிற்கிறன. எனவே இரு கட்சி முறைப் போக்கிற்கு சிறந்த உதாரணமாகப் பேசப்படும் நாடாகவும் பிரித்தானியா திகழ்ந்து வருவது மற்றுமொரு பண்பாகும்.
4. வர்க்க அடிப்படையில் பிளவு பட்டுள்ளமை
பிரித்தானிய அரசியல் கட்சிகள் வர்க்க அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளமையையும் கட்சிமுறையின் மற்றுமொரு பண்பாக இனங் காட்டலாம்.
உதாரனமாக நிலப் பிரபுக்களையும் செல்வந்தர்களையும் தொழில் அதிபர்களையும் அடிப்படையாகக்கொண்டு அமைக்கப்பட்டுள்ள கட்சியே பழமை பேணும் கட்சியாகும். எனவே செல்வந்தர்களின் நல உரிமைகளைப் பேணும் இக் கட்சியானது கிராமப்புறங்களில் அதிக செல்வாக்கைப் பெற்றுள்ளது. -
அதே நேரம் தொழிற்கட்சியானது தொழிலாளர்களை மையமாக வைத்துக் கட்டியெழுப்பப்பட்ட கட்சியாகும். இதனால் தொழிற்கட்சி தொழிலாளர் நலனுக்காக உழைக்கும் ஒன்றாகவும் நகர்புறங்களில் செல்வாக்குப் பெற்ற ஒன்றாகவும் விளங்கி வருகின்றது.
5. முன்றாம் கட்சிஒன்று முதன்மைபெற முடியாதுள்ளமை.
பிரித்தானிய அரசியலில் 3 வது கட்சியாக மற்றொரு அரசியல் கட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொள்ளும் நிலை இல்லாது இருந்து வருகின்றமையும் கட்சி முறையின் மற்றுமொரு பண்பாகும். இவ்வாறாக மூன்றாம் கட்சிஒன்று முதன்மைபெற முடியாதுள்ளமைக்கான காரணங்களைப் பின்வருமRg தொகுத்துக் கூறலாம்.
அ. சமூக அமைப்பு: அதாவது பிரித்தானிய மக்களின் 90% க்கு
மேற்பட்டவர்கள் ஒரே இன, மத, கலாசாரத்தைப் பின்பற்றுபவர்களாவர். எனவே இன முரண்பாட்டை அடிப்படையாகக்கொண்டு 3 வது கட்சி ஒன்று எழுச்சி பெற முடியாதுள்ளது.
-33

Page 19
ஆ. அரசியல் நடவடிக்கைகளில் முக்கியம் பெறும் அமுக்கக்
குழுக்கள் கட்சிக்கு வெளியில் தோன்றாது கட்சி அமைப்பினுள் தோன்றியிருத்தல்இதனால் அமுக்கக்குழுக்கள் வெளியில் தோன்றி காலப்போக்கில் கட்சிகளாக மாறக்கூடிய நிலைமை இல்லாது இருந்து வருகிறது.
இ. மக்களின் அறிவு வளர்ச்சி:- தமது வாக்குகளை மூன்றாவது கட்சிக்கு வழங்கும்போது அது பயனற்றுப் போய்விடுமென்ற மக்களின் மனோநிலை.
6. தேசிய நெருக்கடிகளின்போது ஒத்துச் செல்கின்றதன்மை, பிரித்தானிய அரசியல் கட்சிகளில் நாம் அவதானிக்கும் மற்றுமொரு பண்பு தேசிய முக்கியத்துவம், தேசிய நெருக்கடி, தேசிய முன்னேற்றம் தொடர்பான விடயங்களில் ஆளும் கட்சி, எதிர்கட்சி என்ற பேதம் காட்டாது ஒத்துச் செல்கின்ற, ஒத்துகழைப்பு வழங்குகின்ற தன்மையாகும்.ஆனால் மூன்றாம் உலக நாடுகளின் அரசியல் கட்சிகளில் இத் தன்மையைக் காண்பது அரிது.
7. சூழலுக்குப் பொருத்தமான கொள்கைகளைக்
கடைப்பிடித்தல். பிரித்தானியாவின் அரசியல் கட்சிகளிடையே அவதானிக்கக்கூடிய பிறிதொரு பண்பு அக் கட்சிகள் தத்தம் நாட்டுச் சூழலுக்கேற்ற வகையில் கொள்கைகளைக் கடைப்பிடித்து அதனடிப்படையில் ஒழுங்கமைந்து இருப்பதனைக் குறிப்பிடலாம். ஏனைய நாடுகளின் கட்சிகளிடையே இப் பண்பினை நாம் கூடியளவு காண முடியாது.
குறிப்பாக பழமை பேணும் கட்சியானது அந் நாட்டின் பழமையின் சின்னங்களாக மதிக்கப்படும். முடி, பிரபுக்கள் சபை என்பவற்றைப் பேணிப் பாதுகாப்பதையும் மரபுவழிக்காறு என்பவற்றைப் பாதுகாப்பதையும் முக்கிய நோக்கமாகக் கொண்டு தொழிற்படுவதன் மூலம் உலகிலேயே பழைமைகளைப் பேணுவதில் முதன்மை வாய்ந்த கட்சியாக விளங்குகின்றது.
இதேபோன்று தொழிற்கட்சியும் அந்நாட்டின் சூழலுக்குப் பொருத்தமான ஒருவகைச் சோசலிசக் கொள்கையினைப் பின்பற்றி வருகின்றது.
-34

மாக்ஸிய லெனினிஸ் சிந்தனைகளிலிருந்து வேறுபட்ட ஒரு சோசலிசக் கொள்கையாக இருந்து வருகின்றது. "விேயர் சோஷலிசம்" என்று அழைக்கப்படும் இக் கொள்கையானது பாராளுமன்ற ஜனநாயகத்தினூடாக சோஷலிசத்தை ஏற்படுத்துவதாகும்.
இவ்விதமாக பிரதான கட்சிகள் தம் நாட்டுக்கும் சூழலுக்கும் பொருத்தமான கொள்கையினைக் கடைப்பிடித்து வருவதையும்பித்தானிய கட்சி முறையின் மற்றுமொரு பண்பாக இனம் காட்டலாம்.
தொழிற்கட்சி அறிமுகம். - - - -
இக்கட்சி 1906ம் ஆண்டு தோற்றம் பெற்றது. பழைமை உணர்வு கொண்டுள்ள லிபரல்களுக்கும் லிபரல் உணர்வு கொண்டுள்ள கன்ஸர்வேட்டிவ்களுக்கும் இடையே அதிக வேறுபாடு கிடையாது எனலாம். இவ்விரண்டு நோக்கங்களும் ஒரே அளவில் இயைந்து நிற்க (ՄԱԳաւհ
லிபரல் கட்சியில் காணப்பட்ட தீவிரவாதிகளுக்கும். மிதவாதிகளுக்குமிடையே 1900 ஆண்டுகளில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக லிபரல் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற சிலர் தொழிற்கட்சி எனும் புதிய கட்சியினைத் தோற்றுவித்தனர். தொழிலாளர்களின் நல உரிமைகளையும் மக்களாட்சி சோஷலிச முறையையும் பாதுகாக்க திட சங்கட்டம் பூண்டு செயற்படும் இக் கட்சியானது 1ம் உலக மகா யுத்தம் அணிமித்த காலங்களில் ஆட்சி அதிகாரங்களைப் பெற்றுக்கொள்ளலாயிற்று. இதிலிருந்து இது காலவரை லிபரல் கட்சி பெற்றிருந்த முக்கியத்துவத்தைத் தொழிற்கட்சி பெற்றுக்கொண்டதுடன் இரு கட்சிமுறைப்போக்கில் பழைமை பேணும் கட்சியுடன் இணைநத புதுக்கட்சியாகவும் பரிணமிக்கலாயிற்று 1974ம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் 319 ஆசனங்களைப் பெற்று இறுதியாக இக் கட்சி வெற்றி பெற்றது. இருப்பினும் 1989.1983, 1987, 1992 ம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களின்போது இக் கட்சியால் வெற்றிபெற்றுக்கொள்ள முடியவில்லை. 1995 ஆைேல முதலாம்ஹம் மித்தகிைலாநில் மேத் கொள்கைகள். ” uUAa یح همدصاوق که خوحهودمoویسند
வெளிநாட்டு விவகாரம், குடியேற்ற ஆட்சிக் கொள்கை, சாம்ராஜ்ய உறவுகள் முதலான விடயங்களில் பழைமைபேணும் கட்சியினைப்
-35

Page 20
போன்று ஒத்த கொள்கையினைக் கடைப்பிடித்து வருகின்ற போதிலும் பெருமளவுக்கு உள்நாட்டு விவகாரம் தொடர்பான கொள்கைகளில் பழைமை பேணும் கட்சியில் இருந்து தெளிவாக வேறுபட்ட கொள்கையினைத் தொழிற்கட்சியானது பின்பற்றி வருவதைக் காணலாம்.
1. மிதவாத சோசலிசக் கொள்கை,
தொழிற்கட்சி, பிரித்தானிய சூழலுக்குப் பொருத்தமான ஒருவகைச் சோசலிசக் கொள்கையினையே தனது மூலதத்துவமாகக் கொண்டுள்ளது. மாக்சிச, லெனினிச சோசலிசக் கொள்கைகளைவிட இது முற்றிலும் வித்தியாசமான சோசலிசக் கொள்கையாகும்.
பிரித்தானிய சிந்தனையாளர்களான வேவியண், சிட்னிவெப் பெர்னாட்ஷோ, ஆகியவர்கள்ன் சிந்தனையில் இருந்து பிறந்த வேவியன் சோசலிசமே தொழிற்கட்சியின் பிரதான கொள்கை ஆகும். இவர்கள் முதலாளித்துவத்தின் சீர்கேடான அம்சங்களை நீக்கி சமத்துவமும் சமநீதியும் கொண்ட் சமுதாயத்தை உருவாக்குவதையே நோக்காகக் கொண்டுள்ளனர். இதனைப் புரட்சியின் மூலமாகவன்றி பாராளுமன்ற சட்டங்களின் வாயிலாக படிப்படியான முறையில் அடைந்துகொள்ளலாம் என்ற எண்ணம் உடையவர்களாகக் காணப்படுகின்றனர். மிதவாதமான இத்தகைய சோசலிசக் கொள்கையினைப் பின்பற்றி வருவதனால் தான் தொழிற்கட்சி பிரித்தானியாவுக்கே உரிய சோசலிசத்தைக் கடைப்பிடித்து வருகின்றது. எனக் கூறப்படுகிறது. இருப்பினும் மாக்ஸ், லெனின் ஆகியோரால் முன்வைக்கப்பட்ட கம்யூனிசம் பரவுவதை இவர்கள் விரும்பவில்லை. கம்யூனிச சித்தாந்தங்கள் நாட்டில் பரவுவதை இவர்கள் முற்றாக எதிர்த்து வாதாடுகின்றனர்.
2. தேசியமயக்கொள்கை
தனியார் உடமைகளைத் தேசியமயமாக்கி பொருளாதார ரீதியான முன்னுரிமையையும், சலுகைகளையும் அகற்றி சமத்துவமான வாழ்க்கைத்தரம் கொண்ட சமூகத்தினைக் கட்டியெழுப்புவதே தொழிற்கட்சியின் மற்றுமொரு கொள்கை ஆகும். தொழிற்கட்சிகாலத்தில் சுரங்கத்தொழில்கள். போக்குவரத்துக்கள், கூட்டுத்தாபனங்கள். என்பன பெருமளவில் தேசியமயப்படத்தப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
-36

3. தொழிலாளர்களின் நல உரிமைகனைப் பேணல்,
தொழிலாளர் வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்டே தொழிற்கட்சி அமைக்கப்பட்டுள்ளதினால் தொழிலாளர்களின் நலனுக்காக பாடுபடுவதையும் கட்சி தனது கொள்கையாக வகுத்துள்ளது. தொழிலாளர்களுக்கு அதிகவேலைவாய்ப்புகளை வழங்கி, தொழிலாளரின் நலன் சம்பந்தப்பட்ட சட்டங்களை உருவாக்கி தொழிலாளரின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த இது முனைந்துள்ளது. உதாரணமாக வேலைநேரம், தொழில் பாதுகாப்பு, தொழில் தொட்ர்பான காப்புறுதி, மற்றும் நட்டஈடு தொழிற்சாலைகளில் சுகாதார பராமரிப்புச்சட்டம், போன்றன இக்கட்சியின் ஆதிக். இலத்திலேஷே. அமுல்படுத்தப்பட்டன.
4. புதுமைகளை ஏற்படுத்த முயற்சி.
பிரித்தானிய அரசியலில் மழைமையின் அமைப்புக்களாக மதிக்கப்படும் முடி பிரபுக்கள் சபை, என்பவற்றில் மாற்றங்களைக் கொண்டுவந்து அவற்றை காலத்துககுப்பொருந்தக் கூடிய வகையில் நவீனத்துவம் உடையவையாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற கொள்கையினையும் இக் கட்சி கொண்டுள்ளது. ஆயினும் அவற்றை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் இக்கட்சிக்கு இல்லை. உதாரணமாக பிரபுக்கள் சபையின் அதிகாரங்கள் காலத்துக்குக்காலம் இக் கட்சியின் ஆட்சிக்காலத்திலே குறைக்கப்பட்டது என்பதனை அவதானிக்கலாம்.
5. குடியேற்ற வாதத்தின் நெகிழ்வான கொள்கை.
தொழிற்கட்சி பிரித்தானிய சாம்ராஜ்யத்தைப் பேண வேண்டும் என்ற
எண்ணத்தைக் கொண்டிருந்த போதிலும் பழைமை பேணும் கட்சியைவிட
சற்று நெகிழ்வான போக்கினையே இது கடைப்பிடித்து வருகின்றது.
பழைமை பேணும் கட்சியைப் போன்று குடியேற்ற நாடுகளின் தேசிய இனங்களை முழுமையாகக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இல்லாது அந் நாடுகளின் தேசியத் தலைவர்களோடு சமரசமாகப் பேசி அவர்களுக்கு உரிமைகளைப் பெற்றுக் கொடுக்க இக் கட்சி தலைப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியா, பர்மா, இலங்கை போன்ற நாடுகளுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டமையும் இக் கட்சிக் காலத்தில் என்பது அவதானிக்கத்தக்கதே.
-37.

Page 21
பழைமைபேணும் கட்சி.
பிரித்தானியஅரசியல் முறையில் மிகப் பழைமைவாய்ந்த கட்சியாகவும், பிரித்தானியாவின் தேசியரீதியாக பலம் வாய்ந்த கட்சிகளில் ஒன்றாகவும் அந்நாட்டின் இரு கட்சி முறையினைப் பிரதிநிதித்துவப் படுத்தும் ஒன்றாகவும் பழைமை பேணும் கட்சி அமைந்துள்ளது. வெளிநாட்டுக் கொள்கை, குடியேற்ற ஆட்சிக் கொள்கை, சாம்ராச்சிய விவகாரங்கள் என்பவற்றில் பழைமை பேணும் கட்சி தொழிற்கட்சியைப் போன்று ஒத்த கொள்கையினைக் கடைப்பிடிக்கின்ற போதிலும்,உள்நாட்டு விவகாரங்கள் சம்பந்தமாக வேறுபடக்கூடிய கொள்கையினைக் கொண்டிருப்பதை நாம்
காணலாம்.
1. முதலாளித்துவப் போக்கு
நாட்டில் முதலாளித்துவப் போக்கு முறையினை நிலைப்படுத்து வதையும், அதற்கேற்றவகையிலான வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பதையும் இக்கட்சி முக்கிய 'காள்கையாகக் கொண்டுள்ளது. இதனால் தனியார் உடமைகளுக்கு ஆதரவளிப்பதை நோக்கமாகக் கொண்டிருப்பதை நாம் காணலாம்.விவசாய கைத்தொழில் முயற்சிகளில் தனி உடமைகளுக்கு ஆதரவளிப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தினை விரைவாக அபிவிருத்தி செய்யலாம்.என்பதை இக் கட்சி தனது எண்ணங்களில் ஒன்றாகக் கொண்டுள்ளது. தன்னைச் சூழ உள்ளவர்களுக்கும், தன்னை அண்டி வாழ்பவர்களுக்கும் கெடுதியை உண்டுபண்ணாத வகையில் ஒருவன் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் சொத்துக்களையும் பணத்தினையும் தேடிக்கொள்ளலாம். அதற்கு எவருமே தடையாக இருக்கக் கூடாது என இக் கட்சி கூறி வருகின்றது.
2. தனியார் மயப்படுத்தலும், பாதுகாத்தலும்.
மேலும் முதலாளித்துவப் பொருளாதார முறையினை முக்கியத்துவப்படுத்தும் பொருட்டு தேசியமய எதிர்ப்புக் கொள்கையினையும் இக் கட்சி கடைப்பிடித்து வருவதை நாம் காணலாம். கைத்தொழில் நிறுவனங்கள், சுங்கத் தொழில்கள், போக்குவரத்து என்பவை தொழிற்கட்சி ஆட்சிக் காலத்தில் தேசியமயமாக்கப்பட்டபோதெல்லாம் அவற்றை இக் கட்சி எதிர்ப்பதை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம். இக்
-38

கொள்கையினை வலுப்படுத்தும் பொருட்டு தொழிற்கட்சி ஆட்சிக் காலத்தில் தேசியமயமாக்கப்பட்ட தனியார் உடமைகளை மீண்டும் தனது ஆட்சிக் காலத்தில் அவற்றைத் தனியாரிடம் ஒப்படைத்தும் வந்துள்ளது.
3. செல் வந்தர்களினதும் முதலாளித் துவ வாதிகளினதும் நலனைப் பேணல்
மேலும் பழைமைக் கட்சி நாட்டிலுள்ள. செல்வந்த நிலப் பிரபுத்துவ வர்க்கத்தினை அடிப்டையாக வைத்து தோன்றி அவர்களின் நலனுக்காக உழைப்பதையும் தனது நோக்கங்களில் ஒன்றாக கொண்டிருக்கின்றது. இதற்கு இக் கட்சி தனியார் உடைமைக்கு ஊக்குவிப்பதை உதாரணமாகக் குறிப்பிடலாம். மேலும் தொழிற் கட்சி ஆட்சிக் காலத்தில் தேசியமயமாக்கப்பட்ட கைத்தொழிற்சாலைகளையும் சுரங்கத் தொழில்களையும் மீண்டும் தனியுடமை ஆக்கியமை இதலையே ஆதாரப்படுத்துகிறது. இவ்விதம் கட்சி முதலாளித்துவ வர்க்க நலனை நோக்கமாகக் கொண்டிருப்பதை நாம் காண முடிகிறது.
4. பழைமைவையும் மரபுகளையும் பேனல்,
கட்சியினது முக்கியமான கொள்கைகளில் ஒன்றாகப் ப%ழமைகளை பேணிப் பாதுகாப்பதை முக்கியமாகக் குறிப்பிடலாம். பழைமையின் சின்னங்களாக மதிக்கப்படும் முடி, பிரபுக்கள்சபை என்பன தொடர்ந்து இருந்துவர வேண்டும். இவற்றில் எந்தவித மாற்றங்களையும் ஏற்படுத்தக் கூடாது என இக் கட்சி கருதுகிறது. தொழிற்கட்சி தனது ஆட்சிக் காலத்தில் பிரபுக்கள் சபையில் அதிகாரத்தினைக் குறைத்தபோதெல்லாம் இக் கட்சி அதனை எதிர்த்து லந்துள்ளது. இது கட்சி பழைமைகளைப் பேணுவதில் கூடிய ஆர்வம் உள்ளதாக இருந்து வருகின்றது என்பதையே காட்டுகின்றது.
5. குடியேற்ற வாதத்தின் நெகிழாப்போக்கு.
குடியேற்ற ஆட்சிக் கொள்கையினைப் பொறுத்தவரை தொழிற்கட்சியினை விட இறுக்கமான கொள்கையின்ையே பழைமை பேணும் கட்சி கொண்டுள்ளது. பித்தானிய சாம்ராச்சியம் வீழ்சியடைவதையோ அல்லது சீரழிந்து போவதையோ இக் கட்சி விரும்பவில்லை. உலக
خه 39- :

Page 22
அரசியலில் பிரித்தானியாவின் முதன்மைத் தன்மை பேணப்படவேண்டுமென இது கூடுதலாக விரும்புகின்றது. குடியேற்ற நாடுகளான ஆசிய, ஆபிரிக்க லத்தீன் அமரிக்க நாடுகளுக்கு சுதந்திரம் வழங்குவதை இதுகாலம் தாழ்த்தியே வந்துள்ளது. குடியேற்ற நாடுகளுக்குச் சுதந்திரம் வழங்கக் கூடாது என்பதையே இது வலியுறுத்தி வந்துள்ளது. இக் கட்சியின் பிரதமர்களுக்குள் ஒருவராக இருந்த " விக்கன்சேர்ச்சில்" என்பவர் "தான் ஒருபோதும் பிரித்தானிய சாம்ராச்சியத்தினைக் கலைக்கும் மன்னரின் முதலமைச்சராக இருக்கப் போவதில்லை" எனக் குறிப்பிட்டிருந்தார். இது கட்சி எந்தளவுக்கு குடியேற்றநாடுகளுக்கு சுதந்திரம் வழங்குவதை மறுத்து இறுக்கமான கொள்கையினைக் கடைப்பிடிக்கின்றது. என்பதைக் காட்டுகிறது. எனவே இறுக்கமான குடியேற்ற ஆட்சிக் கொள்கையினையும் கட்சியினது கொள்கைகளில் ஒன்றாக நாம் கூறிக் கொள்ளலாம்.
ஒழுங்கமைப்பு
தொழிற்கட்சி ஒழுங்கமைப்பு.
தொழிற்கட்சி ஆரம்பத்தில் தனது அங்கத்தவர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான வழிமுறையாக மறைமுக அங்கத்துவ முறையினையே கடைப்பிடித்து வந்துள்ளது. கட்சியில் அங்கத்துவத்தைப்பெறுவதானால், தொழிற்சங்கங்கள், கூட்டுறவுச்சங்கங்கள் என்பவற்றில் அங்கத்துவத்தினை பெற்றுக் கொள்வதன் மூலமாகவே இக் கட்சியில் அங்கத்துவத்தினைப் பெற முடிந்தது. ஆனால் 1918ம் ஆண்டின் பின்னர் நேரடி அங்கத்துவ முறையும் இதில் இணைக்கப்பட்டது. இதன்படி சங்கங்களின் மூலமாக இல்லாது நேரடியாகவே ஒருவர் கட்சியில் அங்கத்துவத்தினைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாய் இருந்தது.
1. வட்டாரக்குழுக்கள்.
கட்சியின் ஒழுங்கமைப்பின் அடிமட்ட அமைப்புக்களாகக் கருதப்படும் வட்டாரக் குழுக்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. நாடு பூராவும் கிராம ரீதியில் அமைந்திருக்கும் இவ் வட்டாரக் குழுக்கள் கிராம மட்டத்தில் கட்சியினைப் பிரதிநிதித்துவப்படுத்துவதிலும், கட்சியின் வெற்றிக்காக உழைப்பதையும் தனது கடமையாகக் கொண்டிருக்கும்.
-40ے

2. தொகுதிப் பரிபாலனக் குழுக்கள்
கட்சியின் ஒழுங்கமைப்பில் வட்டாரக் குழுவிற்கு அடுத்தபடியாக தொகுதிக்கட்சியமைப்பு முக்கியத்துவம் பெறுகின்றது. இங்கு தொகுதி ரீதியாக அமைந்திருக்கும் தொகுதிப் பரிபாலனக் குழுக்களே ஒவ்வொரு தேர்தல் தொகுதியின் நிர்வாகத்திற்கும் பொறுப்பாக்கப்பட்டிருக்கும். இக் குழுவில் வட்டாரக் குழுக்களின் முக்கிய பிரமுகர்களும் கூட்டுறவுச் சங்கப் பிரதிநிதிகளும், தொழிற்சங்கப் பிரதிநிதிகளும் அங்கம் வகிப்பர். வருடத்திற்கு நான்கு தடவைகள் கூடி தேர்தல் தொகுதியின் நிர்வாக விடயங்களைப் பரிசீலிக்கும் இக்குழு முக்கிய மாக தொகுதியின் வேட்பாளரை நியமித்துக்கொள்வதையே தனது முக்கிய கடமையாகக் கொண்டிருக்கும். இக்குழு தொகுதி மேற்பாளரை தேர்ந்தெடுக்கும்போது முழுமையான தேர்வுக்குழுவாகத் தன்னை மாற்றிக் கொள்ளும். இது தேர்வுக் குழுவாக அமையும் போது கட்சியின் மத்திய பீடத்தின் உறுப்பினர் ஒருவரும் பங்குகொள்வதோடு அவரே தேர்வுக்குழுவிற்கும் தலைமை தாங்குவார். வட்டாரக் குழுக்களினால் சிபார்சு செய்யப்பட்ட ஆட்களும், தொகுதி பரிபாலன குழுவினால் சிபார்சு செய்யப்பட்ட ஆட்களும், இங்கு பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு அவர்களிலிருந்தே தேர்வுக் குழு வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும். இவ்வாறாகத் தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளர் தேசிய நிர்வாகக் குழுவினர்ல்
அங்கீகரிக்கப்படுபவராக இருத்தல் வேண்டும்.
3. தேசிய நிர்வாகக் குழு
கட்சியின் ஒழுங்கமைப்பி' தேசிய மட்டத்தில் அமைந்துள்ள தேசிய நிர்வாகக் குழு அடுத்து முக்கியத்துவம் பெறுகின்றது. கட்சியின் நிர்வாக விடயங்களுக்கும், நிதி விடயங்களுக்கும் இக் குழுவே பொறுப்பாக்கப்பட்டிருக்கும். கட்சித் தலைவர், உப தலைவர் தொகுதி பரிபாலனக் குழுவின் முக்கிய உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் என்போர் இந் நிர்வாகக் குழுவில் இடம் பெறுவர். கட்சியின் நிர்வாகத்தைக் கொண்டுநடத்தும் இக்குழு நிதி விடயங்களைப் பரிபாலிப்பதையும் கட்சியின் நிகழ்ச்சிநிரலைத் தயாரிப்பதையும் முக்கிய கடமையாகக் கொண்டிருக்கும்.
4. மேற்பார்வைக்குழு
கட்சியினது சகல அமைப்புக்களையும் மேற்பார்வை செய்கிற 52(5 அமைப்பாக மேற்பார்வை குழு அமைந்திருக்கும். இக் குழு கட்சியின்
-41

Page 23
உறுப்பினர்களதும் கட்சியினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல அமைப்புக்களது நடவடிக்கைகளையும் மேற்பார்வை செய்து கட்சியின் நோக்கோடு அவற்றை ஒன்று படுத்துவதைத் தமது கடமையாகக் கொண்டிருக்கும்.
5. மத்திய செயலகம்.
கட்சி ஒழுங்கமைப்பில் மத்திய செயலகம் என்பது மற்றொரு பகுதியாக அமைந்துள்ளது. இச் செயலகத்திலேயே கட்சியினது சகல விடயங்களும் பேணிப் பாதுகாக்கப்பட்டிருக்கும். இங்கு கட்சியினால் வேதனத்துக்கு நியமிக்கப்பட்ட ஊழியர்கள் கடமையாற்றுவார்கள். கட்சியானது கொள்கை விளக்க அறிக்கைகளையும், தேர்தல்பிரசார அறிக்கைகளையும் அச்சிட்டு வெளிப்படுத்துவதையும் அவற்றையெல்லாம் பாதுகாப்பதையும் இம் மத்திய் காரியாலயம் தனது கடமையாகக் கொண்டிருக்கும்.
6. வருடாந்தப்பொதுக்கூட்டம்.
கட்சியின் ஒழுங்கமைப்பில் வருடாவருடம் நடாத்தப்படும் தேசிய மகாநாடு முக்கியத்துவம் பெறுகிறது. கட்சித் தலைவரின் கீழ்க் கூடும் இம் மாநாடே கட்சியினது கொள்கையாக்க விடயங்களைக் கலந்துரையாடி முடிவெடுக்கும் இறுதி அமைப்பாகக் காணப்படும்.நிர்வாக குழுக்களுக்கான ஆட்களைத் தேர்ந்தெடுப்பதையும் கட்சியினது கொள்கைகளை ஆக்குவதையும் தேர்தல் விஞ்ஞாபன அறிக்கையினைத் தயாரிப்பதையும் இம் மகாநாடு தனது முக்கிய கடமையாகக் கொண்டிருக்கும்.
பழைமை பேணும் கட்சியின் ஒழுங்கமைப்பு
1. பழைமை பேணும் கட்சி ஆரம்பம் முதல் பெருமளவுக்கு செல்வந்த நிலப் பிரபுத்துவ வர்க்கத்தினரையே அங்கத்தவர்களாகக் கொண்டிருந்தது. இந்த அங்கத்துவம் நேரடி அங்கத்துவ முறையினைக் கொண்டதாகவே காணப்படும். கட்சி தனக்கு வேண்டிய நிதியினைத் தேடிக்கொள்வதென்பது எந்த அளவுக்குக் கூடுதலான அங்கத்தவர்களைக் கட்சியில் சேர்த்துக் கொள்கிறது என்பதிலேயே தங்கியிருந்தது. கிளைச் சங்கங்கள் இவ்விதம் அங்கத்துவத்தினைப் அடிப்படையாக வைத்துக் கட்டப்பட்ட இக்கட்சி கூடிய அளவு அங்கத்துவத்தைப் பெருக்கிக்
--42ے

கொள்வதற்காக கிராம மட்டத்தில் கிளைச் சங்கங்கள் என்ற அமைப்பினைத் தனது ஒழுங்கமைப்பில் அடிமட்ட அமைப்பாகக் கொண்டிருந்தது. கிராமங்களில் வாழ்ந்த செல்வந்தர்களே இக்கிளைச் சங்கங்களில் முக்கியத்துவம் பெற்றிருந்தனர். நாடு பூராவும் கிராம மட்டத்தில் அமைந்திருந்த இக் கிளைச் சங்கங்கள் கட்சியினைப் பிரதிநிதித்துவப்படுத்துவதோடு கட்சியின் வெற்றிக்காக உழைப்பதையும் தனது கடமையாக கொண்டிருந்தது.
2. தொகுதிக் கட்சியமைப்பு.
கிளைச் சங்கங்களின் மேம்பட்ட அமைப்பாக தொகுதிக் கட்சி அமைப்பு முக்கியத்துவம் பெறுகின்றது. இங்கு தொகுதிச் சங்கம் என்பது தேர்தல் தொகுதிகளை பரிபாலிப்பதற்குப் பொறுப்பான ஒழுங்கமைப்பாய்க் காணப்பட்டது. தேர்தல் தொகுதிகளில் கட்சியின் நிர்வாகத்தைக் கணிப்பதோடு தொகுதி வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பது இத் தொகுதிச் சங்கத்தின் முக்கிய கடமையாகக் காணப்பட்டது. இச் சங்கத்தினால் சிபார்சு செய்யப்படும் தொகுதி வேட்பாளர் தேசிய நிர்வாகக் குழுவினால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
3. தேசிய நிர்வாகக் குழு.
கட்சியின் ஒழுங்கமைப்பினி தேசிய நிலையினைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக நிர்வாகக் குழு அமைந்திருந்தது. கட்சியின் முக்கிய பிரமுகர்கள், கட்சியின் தலைவர் தொகுதிச் சங்கங்களின் தலைவர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்களில் சிலர் இந் நிர்வாகக் குழுவில் இடம்பெற்றிருப்பர். கட்சியின் நிர்வாகத்துக்குப் பொறுப்பாக இருப்பதோடு கட்சியினது நிகழ்ச்சிநிரல்களைத் தயார் செய்வதும் ஒழுங்குபடுத்துவதும்
இதன் முக்கிய கடமைகளாகக் காணப்பட்டது.
4. மத்திய செயலகம்.
அடுத்து மத்திய செயலகம் என்பது கட்சியின் ஒழுங்கமைப்பில் முக்கியத்துவம் பெறுகிறது. லண்டனில் அமைந்துள்ள இச் செயலகத்தில் ஊதியத்திற்கு நியமிக்கப்பட்ட வேலையாட்களும் பாராளுமன்றத்தின் கட்சி உறுப்பினர்களால் தேர்தெடுக்கப்பட்ட சிலரும் கடமையாற்றுவர். கட்சியின் கொள்கைத் திட்டங்களும் தேர்தல் பிரசாரப் பத்திரங்களும் அறிக்கைகளும்
-43

Page 24
இக் காரியாலயத்திலேயே அச்சிடப்பட்டு வழங்கப்படும். ஆயின் இக் காரியாலயம் கட்சியின் ஒழுங்கமைப்பில் பெருமளவு முக்கியத்துவத்தினைப் பெற்றுவிடுகின்றது என நாம் கூறலாம்.
6. வருடாந்தப்பொதுக்கூட்டம்.
மேலும் வருடாவருடம் நடாத்தப்படும் கட்சியின் தேசிய மகாநாடு கட்சிக் கொள்கையை முடிவெடுப்பதில் முக்கியமான ஒழுங்கமைப்பாகக் காணப்படுகிறது. கட்சியின் தலைவரின் கீழ் கூடும் இம் மாநாட்டில் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பழைய பாராளுமன்ற உறுப்பினர்கள், தற்போதுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள், தொகுதிச் சங்கங்களின் பிரதிநிதிகள் என்போர் கலந்துகொள்வர். இத் தேசிய மகாநாடு கட்சியின் கொள்கைகளை வகுக்கும் இடமாகவும், கட்சியின் தேர்தல் விஞ்ஞாபன அறிக்கையின்னத் தயார்படுத்தும் இட்மாகவும் காணப்படுவதோடு நிர்வாகக் குழு விற்கான ஆட்களைத் தேர்ந்டுெக்கும் ஒன்றாகவும் இருந்து வருகின்றது.
பாராளுமன்ற அரசாங்கமுறை.
பிரித்தானியப் பாராளுமன்ற முறையினை நோக்குமிடத்து அது 13 ம் நூற்றாண்டு வரை வியாபித்துச் செல்வதனை அவதானிக்கலாம். 13ம் நூற்றாண்டிலிருந்து கடந்த சுமார் 7 நூற்றாண்டு காலத்தில் ஏற்பட்டுவந்த அபிவிருத்திகளின் விளைவே தற்போதைய பாராளுமன்ற நிலையாகும்.
5-11ஆம் நூற்றாண்டுகளுக்கிடைப்பட்ட ஆங்கிலோ-சக்சன் யுகத்தில் பிரித்தானியாவில் முக்கியத்துவம் வாய்ந்த சில அரசியல் முறைகள் தோற்றம் பெற்றன. ஆரம்பத்தில்7 இராட்சியங்களாகக் காணப்பட்ட பிரித்தானியா பின்பு 3 இராட்சியங்களாகக் குறைக்கப்பட்டு 11ஆம் நூற்றாண்டிலே ஒரு தனியரசாகியது இக்கட்டத்தில் மன்னராட்சி முறையே பிரித்தானியாவில் காணப்பட்டிருந்தது.
e44
 

மன்னர் அதிகாரமிக்கவன் . மன்னனுக்கு ஆலோசனை வழங்குதவற்காக பிரபுகளிருந்தனர். இப்பிரபுகள் சபையானது அறிவாளிகள் சபையென வழங்கப்பட்டது. இதுவே பாராளுமன்றமுறையின் ஆரம்ப கட்டம் எனப்படுகின்றது.
199இல் பதவியேற்ற 2ஆம் ஜோன் மன்னன் இந்த ஆலோசனைச் சபையை(பாராளுமன்றம்) புறக்கணித்தான். இதனால் பிரச்சினைகள் உருவாகின இந்நிலையில் மகா பட்டயம்(மக்னாகார்ட்டா) ஏற்படுத்தப்பட்டது இதைத தொடர்ந்து மன்னரால் தன்னிச்சையாக செயற்பட முடியாது எனற நிலை தோன்றியது
13ஆம் நூற்றாண்டில் அடிப்படை அரசியலமைப்புக்கள் வளர்ச்சியடைந்து வரும் நிலையிலிருந்தன. பாராளுமன்றத்தில் பல அமைப்புகள் இணைந்திருந்ததனால் இச்சபையில் நிலச்சுவாந்தர்களும் பிரபுக்களும் இடம் பெற்றனர். காலகதியில் சாதாரண பிரபுக்களும் இடம் பெற்றனர்
13ஆம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் மன்னனுக்கும் பிரபுக்களுக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து மோதல் ஒரு சிவில் யுத்தமாகப் பரிணமித்து இறுதியில் மன்னன் தோல்வியடைந்தான். அதைத் தொடர்ந்து பிரபுக்கள் தலைவனான சைமன் மொண்டிபர்ட் நாட்டின் நிருவாக அதிகாரத்தைப் பெற்றுக் கொண்டன். அவன் 21 நகரங்களிலிருந்தும் பிரதிநிதிகளை இணைத்துக்கொண்டான்.இந்தவமைப்பு நவீன பாராளுமன்ற முறையின் ஆரம்பம் எனக் கருதப்படுகின்றது.
1295இல் நாட்டின் சகலவமைப்புகளிலிருந்தும் பிரதிநிதிகளாக இடம்பெறத் தக்கவகையில் பாராளுமன்றம் விஸ்தீரணமடைந்தது/அது மானியமுறையை இல்லாதொழிக்கும் நடவடிக்கையாகவும் கருதப்பட்டது.
14ஆம் நூற்றாண்டில் இறுதியரைப்பகுதியில் நிலச்சுவாந்தர்கள், மதகுருமார்கள் ஆகியோர் மந்திரி மன்றமாகவும் ஏனையோர் சாதாரண அங்கத்தவர்களாகவும் கருதப்பட்டனர். இதுபாராளுமன்ற வளர்ச்சிக் கட்டத்தில் ஒரு முக்கிய அம்சமாகும். தொடர்ந்து பாராளுமன்ற
-45ص

Page 25
முடிவுகளை மன்னனுக்கு உடனுக்குடன் அறிவிக்க ஒரு சபாநாயகர் தெரிவு செய்யப்பட்டார். பாராளுமன்ற வளர்ச்சியில் சட்டவாக்க அதிகாரங்களும் பாராளுமன்றத்தைச் சாரலாயிற்று.
1840இல் ஜேம்ஸ் மன்னனி பாராளுமன்றத்தை மதிக்கவில்லை. இதனால் பிரச்சினைகள் ஏற்பட்டன. இத்ன் விளைவாக மன்னன் ஜேம்ஸ் துரத்தப்பட்டான். இதன்பின் பாராளுமன்றம்(1888இல்) மன்னனின் மகள்மேரியையும். மருமகன் விலியமையும் மன்னன்- மகாராணியாக ஏற்றுக்கொண்டது. இச்சம்பவத்தால் படிப்பினை பெற்றுக்கொண்ட பாராளுமன்றம் உரிமை முறியை முன்வைத்து முடியின் அனுமதியினைப் பெற்றுக் கொண்டது. இந்த உரிமை முறியைத் தொடர்ந்து படிப்படியாக பாராளுமன்ற நடவடிக்கைகள் ஒழுங்கமைக்கப்பட்டு தற்போதைய நிலையை அடையலாயிற்று. மன்னன் பெயரளவு நிருவாகமாக்கப்பட்டு, சட்டவாக்க நிருவாக அதிகாரங்களைப் பெற்றுக்கெணிடமை குறிப்பிடத்தக்கதாகும்.
கெபினட் அரசாங்கமுறை
பாராளுமன்றத்தினுள் கெபினட்முறை ஏற்பட்டு, நிருவாகத்துறையில் முக்கிய அழ்சமாக மாற்றமுற்றது. சுமார் 2 நூற்றாண்டுகளுக்கு முன்பாகும். பிரித்தானியப் பாராளுமன்றத்தினுள் ஏற்படுத்தப்பட்ட இந்தக் கெபினட் அமைப்பானது இன்று அநேக நாடுகளில் நாட்டை நிருவகிக்கும் பிரதான திருவாக அமைப்பாக மாறியுள்ளது.
189இன் முன்பு பிரித்தானியாவில் பூரண நிறைவேற்று அதிகாரமிக்கதாக முடியே காணப்பட்டது. இருப்பினும் இங்கு மன்னன் தனது நிருவாகத்தைக் கொண்டு நடத்துகையில் கியுரியா ரெஜிஸ் எனும் சபையின் உதவியைப் பெற்றுக் கொண்டான். காலகதியில் இச்சபை பிளவுற்றது. இங்கு மன்னனுக்கு ஆலோசனை வழங்குவதற்காக பிரதான நிருவாக சபையொன்று அமைக்கப்பட்டது. இந்த நிருவாக சபையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சபை மன்னனின் நிருவாக விடயத்தில் நேரடியாக ஒத்துழைப்பு வழங்கியது. இச்சபையே பிரிவு கவுன்சில்' என அழைக்கப்பட்டது.
இச்சபையின் அங்கத்தவர்தொகை அதிகரிப்பு ஏற்பCடதும்
༤465

நிருவாகத்திற்காக பல பிரிவுகளாகப்பிக்கப்பட்டது.மன்னனுக்கு ஆலோசனை வழங்கிய இச்சபை ஜுன்டோ என்றும் பின்னர் காபூல் என்றும் வழங்கப்பட்டது.17ஆம் நூற்றாண்டின் இறுதியரைப் பகுதியில் இச்சபை அமைச்சரவை என அழைக்கப்படலாயிற்று.
17ஆம் நூற்றாண்டில் இறுதிப்பகுதியில் அமைச்சரவை முறையின் தோற்றம் இடம் பெற்றாலுங்கூட தற்கால நவீன அமைச்சரவையின் தோற்றம் 18ஆம் நூற்றாண்டின் முன் அரைப் பகுதியிலேயே இடம் பெற்றதெனக் கூற வேண்டும். (1889ஆம் ஆண்டு உரிமைச்சாசனத்தின் பாதிப்பினை பின்னர் வந்த அமைச்சரவைகளில் காணலாம்)
1889இன் பின்னரும் பாராளுமன்றத்தினுள் அமைச்சர்களைத் தேர்ந்தெடுத்தது முடியே 18ஆம் நூற்றாண்டில் இந்நிலை மாற்றமுறலாயிற்று 1714இல் 1ஆம் ஜோர்ஜ் மன்னன் அமைச்சரவைக்கூட்டங்களில் கலந்துகொள்ளவில்லை. எனவே அமைச்சரவை முடிவுகளை மன்னனுக்கு அறிவிக்க அமைச்சர் அவைத் தலைவர் ஒருவர் நியமிக்கப்பட்டார். அந்த அமைச்சரவைத் தலைவர் பதவி காலகதியில் பிரதமர் (ஸான்ஸ்லர்) ஆக
மாற்றமுற்றது.
18ஆம் நூற்றாண்டின் பிரதமர் இன்றுபோல அதிகாரங்களைப் பெற்றவராகக் காணப்படவில்லை. எவ்வாறாயினும் கெபினட் நிருவாகமுறை இன்றுள்ள நிலைப்பாட்டினையும் அதிகாரத்தையும் பெற்றுக் கொண்டது, 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலாகும். பிரித்தானியாவில் வாக்குரிமை செயற்படுத்தப்பட்டமையும் மன்னனின் அதிகாரங்கள் நாமநிருவாகமாக மாற்றமுற்றமையுமே இம்மாற்றத்திற்குக் காரணங்களாகும். கட்சிமுறையின் வளர்ச்சியுடன் பிரதமர், கெபினட் என்பன வெற்றிபெற்ற கட்சியினடிப் படையில் தெரிவாகின. தொடர்ந்து பிரதமர் கெபினட், கட்சி நாடு என்பவற்றின் தலைவராக ஏற்றுக் கொள்ளப்பட்டார். கெபினட் செயலாளர். ஒருவர் 1918இல் தெரிவு செய்யப்பட்டார். பிரபுக்கள் சபையே 19ஆம் நூற்றாண்டில் பிரதமரைத் தெரிவு செய்தது. 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பிரபுக்கள் சபையின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டவுடன் வெற்றிபெற்ற கட்சியின் தலைவர் பிரதமராகதத் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
-47

Page 26
с.с. (Ал) GAGA
a 纥
“, ኃሥ, /// razauxury 23 ീ. -് "ീ
வகுப்புக்கள் நடைபெறும் இடங்கள்
258, D.S Senanayake Street, Kandy.
642/2, Hinni Appuhamy Mw,
.13-Kotahena Colombo לב. Te: 344518
,Galle Road ,316 לב.
Bambalapitiya Colombo-04.
 
 
 
 


Page 27
G A C. C. E.
■ s
புன்னிய
விநியோக உரிமை பூபாலசிங்கம் புத்தக
| ու Print - ի եւ