கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மறைந்தும் மறையாத'நவமணி' அஸ்ஹர்

Page 1

மறைந்தும் மறையாகு
*[56)IID6ül’
அஸ்ஹர்

Page 2

மறைந்தும் மறையாகு
நவமணி அஸ்ஹர்.
28.03.08 இல் காலஞ்சென்ற அல்ஹாஜ் எம்.பி.எம். அஸ்ஹர் அவர்களினர் 40ம் நாள் *கத்தமுல் குர்ஆனி’ தமாம் நிகழ்வை முன்னிட்டு வெளிவரும் நினைவு ஏடு
தொகுப்பு : கலாபூஷணம் பீ.எம். புனினியாமீனி
சிந்தனை வட்டம் 14, உடத்தலவின்னை மடிகே, உடத்தலவின்னை - 20802
பூரீலங்கா தொலைபேசி - 0812493746 / 2493892

Page 3
மறைந்தும் மறையாத 'நவமணி அஸ்ஹர்.
280808இல் காலஞ்சென்ற அல்ஹாஜ் எம்.பி.எம். அஸ்ஹர் அவர்களின் 40 நாள் கத்தமுல் குர்ஆன் தமாம் நிகழ்வை முன்னிட்டு வெளிவரும் நினைவு ஏடு
தொகுப்பாசிரியர் : கலாபூஷணம் புன்னியாமீன் பதிப்பு : . ʼ 1tib LIgé)CIL4 : ஒக்டோபர் 2008 வெளியீடு : சிந்தனை வட்டம்.
14, உடத்தலவின்னை மடிகே, உடத்தலவின்னை அச்சுப்பதிப்பு: சிந்தனை வட்டம் அச்சீட்டுப் பிரிவு
த.பெ. இல: 01, பொல்கொல்லை 20250, ரீலங்கா. ... ISBN 978-955-1779-19-1
OPM.PUNYAMEEN 2008

பதிப்புரையினூடாக சில மனப்பதிவுகள்
சிந்தனைவட்டத்தின் 295வது வெளியீடாக "மறைந்தும் மறையாத நவமணி அஸ்ஹர்' எனும் புத்தகத்தினை மிகவும் , துயரம் தோய்ந்த மனோநிலையில் ஒரு நினைவு ஆவணப் பதிவுப் புத்தகமாக வெளியிடுகின்றேன்.
ஆம்! . என் இனிய நண்பரும், ஊடகம் சார்ந்த பல்வேறுபட்ட பிரச்சினைகளின் போது கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதிலும், ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வதிலும் ஒரு வழிகாட்டியாக இருந்தவருமான நவமணி அஸ்ஹர் ஹாஜியாருக்கு இவ்வளவு விரைவாக ஒரு நினைவுக் குறிப்புப்பேட்டை எழுத வேண்டி வருமென நான் கனவிலும் எதிர்பார்த்திருக்கவில்லை. அவருடைய நவமணியில் வெளிவந்த "மெல்லக் கசிந்த கதைகள் தொட ரினை நூலுருப்படுத்த வேண்டும் எனும் நோக்கில் புத்தகவடிவ மாக்கி, கணனிப்படுத்தி, பிழை திருத்தலுக்காக (புரூப் ரீடிங்) அவருக்கு அனுப்பி வைத்துவிட்டு; அந்தப் பிழை திருத்தத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில்தான் அன்னாரின் திடீர் இயற்கை மரணம் என்னை அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டது.
ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தைப் புசித்தே தீர வேண்டும்' என்ற குர்ஆன் வார்த்தைக்கமைய அல்லாஹற்வின் ஏற்பாட்டினை எம்மால் மாற்றியமைக்க முடியாது. முதற்கண் அன்னாருக்கு ஜன்னதுல் பிர்தெளஸ் சுவனபதியை அல்லாஹற் அருள வேண்டும் என மனதாரப் பிரார்த்தித்துக் கொண்டு என்னுடைய சில மனப் பதிவுகளை இவ்விடத்தில் குறிப்பிட விரும்புகின்றேன்.
03

Page 4
அஸ்ஹர் ஹாஜியுடன் சுமார் இரு தசாப்தங்களுக்கு மேற்பட்ட நட்பு எனக்கிருந்தது. ஆனால், நவமணியில் பிரதம ஆசிரியராகப் பொறுப்பேற்றதன் பின்பு அந்த நட்பு மிகவும் நெருக்கமடைந்தது. தனிப்பட்ட குடும்பப் பிரச்சினைகளைக் கூட கருத்துப் பரிமாற்றங்கள் செய்து கொள்ளக்கூடிய அளவுக்கு வளர்ச்சி கண்டது.
இங்கு தனிப்பட்ட எமது உறவுகளைவிடுத்து பத்திரிகைத் துறை சம்பந்தப்பட்ட அடிப்படையில் சில மனப்பதிவுகளை மீட்டுப் பார்க்கின்றேன்.
இலங்கையில் முஸ்லிம்களுக்கென தனித் தேசியப் பத்திரிகையொன்றினை ஆரம்பிக்க வேண்டும் என்று பலகாலங் களாக மேடைகளில் முழக்கமிடப்பட்டாலும் கூட அதை செயலுரு வில் காட்ட எவரும் முன்வரவில்லை. இப்படிப்பட்ட ஒரு நிலையில் தான் "பிரி லங்கா நியுஸ்பேப்பர் பிரைவட் லிமிட்டட் 1996 நடுப்பகுதியில் உருவாக்கப்பட்டது. இக்கம்பனியில் ஆரம்பப் பணிப்பாளர்களாக இருந்தவர்கள் MTM. ரிஸ்வி, தாஹா முஸம் மில், எம்.பி.எம். அஸ்ஹர் ஆகியோராவர். 'பிரி லங்கா நியுஸ் பேப்பர் பிரைவட் லிமிட்டட், நவமணி எனும் வாரப்பத்திரிகையின் முதலாவது இதழை 1996.10.19ம் திகதி வெளியிட்டது.
நவமணி பத்திரிகை ஆரம்பிக்கப்பட்ட நேரத்தில் அதன் முதல் ஆசிரியராக இலங்கையில் பிரபல எழுத்தாளரும், ஆய்வா ளரும், பன்னூலாசிரியருமான கே.எஸ். சிவகுமாரன் சில மாதங்கள் (1996.08.15 - 1996 டிசம்பர் இறுதிவரை) பணியாற்றினார்.
கே.எஸ். சிவகுமாரனையடுத்து 1997 ஜனவரி முதல் 1998.03.11ம் திகதி வரை டீமுத்தையா சிவலிங்கம் அவர்கள் பிரதம ஆசிரியராகப் பணியாற்றினார். பின்பு 1998.03.11ம் திகதி முதல் எம்.பி.எம். அஸ்ஹர் பிரதம ஆசிரியர் பொறுப்பையேற்று தனது இறுதிமூச்சு தன்னைவிட்டும் பிரியும்வரை நவமணியுடனே இணைந்திருந்தார்.
04

நவமணியின் பிரதம ஆசிரியர் பதவியை அஸ்ஹர், ஹாஜியார் ஏற்றுக்கொண்ட பிறகு நவமணியை வளர்ப்பது தொடர் பாகவும், முஸ்லிம்களின் சமூகப் பிரச்சினைகளை முன்னெடுப்பது தொடர்பாகவும் என்னுடன் அடிக்கடி தொடர்பு கொள்வார். எழுத்துத்துறையிலும், கல்வித்துறையிலும் அதிக ஈடுபாடு கொண் டிருந்த நான் ஊடகத்துறையில் சமூகம் சார்ந்த பல செய்தி களையும், கட்டுரைகளையும் எழுத அஸ்ஹர் ஹாஜியாரின் ஊக்கம் எனக்கு உந்துதலை அளித்தது. இந்த அடிப்படையில் என்னுடைய பெயரைக் குறிப்பிடாமல் நூற்றுக்கணக்கான செய்தி களையும், விமர்சனங்களையும் நான் நவமணிக்கு எழுதி வந்தேன். இச்சந்தர்ப்பங்களில் அவர் இரண்டு விடயங்களுக்கு அழுத்தம் தந்துவருவார். - : '
01. இலங்கை வாழும் முஸ்லிம் சமூகத்தாரின் பிரச்சினைகள், முஸ்லிம்கள் நாட்டுக்கு வழங்கிய சேவையின் பரிமாணங் கள் எழுத்துருவாக்கப்படாமையினால் அவை எவ்விதமான தாக்கங்களையும் எற்படுத்தாமலேயே மறைந்துவிடுகின்றன. எனவே, முஸ்லிம்களின் பிரச்சினைகளை செய்திகளாக வும், முஸ்லிம்களின் சாதனைகளை ஆவணங்களாகவும் ஆக்க வேண்டும். . . . .
02. இந்த காலகட்டத்தில் இலங்கையில் வாழக்கூடிய சிறு பான்மை இனங்களான முஸ்லிம் - தமிழ் சமூகங்களுக் கிடையில் வீணான கசப்பணர்வுகளும், குரோதங்களும்
வளர்ந்து வருகின்றன. இவற்றை நீக்குவதற்கு எழுத்தி னைப் பயன்படுத்த வேண்டும், . . . . .
அஸ்ஹர் ஹாஜியாரின் மேற்படி அடிப்படைகளுக்கமைய, நவமணியில் நான் எழுத ஆரம்பித்தேன். இக்காலகட்டங்களில் முஸ்லிம்களுக்கெதிரான சில இனமோதல்கள் 1999இல் பதுளை ஹிஜாப் பிரச்சினை, 2000ஆம் ஆண்டில் பல்லேகம மோதல், 1998இல் திக்வல்லைப் பிரச்சினை, வடதெனிய கலவரம், மாவனல்லை கலவரம், கொட்டாரமுல்லை சம்பவம், மாளிகா
05

Page 5
வத்தைக் கலவரம், கலகெதர கலவரம் போன்ற கலவரங்கள் ஏற்பட்ட நேரத்தில் உரிய பகுதிகளுக்கு நேரடியாகச் சென்றும் தகவல்களைத் தொகுத்தும் பல முக்கியத்துவமிக்க ஆவணங்க ளைப் பெற்றும் அவற்றை செய்திகளாகவும், கட்டுரைகளாகவும் நவமணியில் எழுதினேன். 2003 மே மாதத்தில் இலங்கையின் இனக்கலவரங்கள் குறித்து பேராதனைப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.எஸ்.எம். அனஸ் அவர்களினால் எழுதப்பட்ட இலங்கையில் இனக்கலவரங்களும், முஸ்லிம்களும் புத்தகத்திலும் அந்த செய்திகளும், அறிக்கைகளும் உசாத்து ணைப்படுத்தப்பட்டிருக்கின்றன.
இதனை ஏன் குறிப்பிடுகின்றேன் என்றால் முஸ்லிம் சமூகத் துக்கு ஏற்படக்கூடிய ஒரு பிரச்சினையின்போது அது பற்றிய தகவல்களைத் திரட்டி எழுதுகையில் அவற்றிற்கு பிரசுரவடிவம் கொடுக்கக்கூடிய ஒரு களம் இருக்குமென உறுதிப்படுத்திக் கொள்ளும்போதே அம்முயற்சியில் ஆர்வத்துடன் ஈடுபடக்கூடிய மனோநிலை உருவாகும். இதனை எந்தவொரு எழுத்தாளனும், ஊடகவியலாள்னும் ஏற்றுக் கொள்வான்.
இந்த அடிப்படையில் என்னால் தொகுக்கப்படக்கூடிய, எழுதப்படக்கூடிய எழுத்துக்களை நவமணியில் பிரசுரிக்க முடியும் என்ற உறுதி நிலையிலேயே அம்முயற்சிகளில் நான் அதிகமாக ஈடுபடலானேன். எனவே அஸ்ஹர் ஹாஜியார் தான் சார்ந்த சமூகப் பிரச்சினைகள் குறித்த கருத்துக்களை முன்வைக் கும்போது அவர் காட்டிய ஆர்வத்தையும், அவர் ஊட்டிய உத்வேகத்தையும் என்னால் மறக்க முடியாது.
மறுபுறமாக இலங்கையில் முஸ்லிம்கள் பல்வேறு துறை களிலும் சாதனைகளைப் படைத்துள்ளார்கள். உதாரணமாக கட்டடக் கலை, பொருளாதாரம், அரசியல், வைத்தியம், கலை இலக்கியம் இவ்வாறாக பலதுறைகளைக் குறிப்பிட்டலாம். ஆனால், இலங்கையில் முஸ்லிம்களின் பங்களிப்புகளும், சாதனைகளும் எவ்விதமான பதிவுகளுக்கும் உட்படாமையினால்

அவர்கள் யார்?, அவர்கள் எத்தகைய சாதனைகளைப் புரிந்துள் ளார்கள்? அவர்களால் தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் கிடைத்த இலாபம் என்ன? போன்ற விடயங்கள் எதிர்கால சந்ததியினருக்குத் தெரியாமல் மழுங்கிப்போன சந்தர்ப்பங்கள்
அதிகமுள.
எனவே, இலங்கை முஸ்லிம்களின் துறை சார்ந்த சமூக, தேசிய பங்களிப்புகள் ஆவணப்படுத்தப்பட வேண்டும் என்பதில் அதிகம் ஆர்வம்காட்டி வந்தார். இது குறித்து நான் அவருடன் பல சந்தர்ப்பங்களில் மணித்தியால கணக்கில் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டுள்ளேன். இங்கு வெளிப்படையாகக் கூறக் கூடிய ஒரு விடயம் ஒரு தனிப்பட்ட நபரினால் சுமார் ஒன்றரை நூற்றாண்டு காலகட்ட இடைவெளிக்குள் முஸ்லிம்களால் ஆற்றப்பட்ட பங்களிப்புகளைப் பதிவு செய்வதென்பது இயலாத காரியம். இத்தகைய பணியினை நிறுவன ரீதியாக சுயேச்சை அமைப்புக்கள் அன்றேல் அரச ரீதியாக முஸ்லிம் சமய கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களம் போன்றன மேற்கொள்ளல் வேண்டும். ஆனாலும், அவைகள் இது பற்றி சிந்திக்காமல் இருப்பது வேதனைக்குரிய ஒரு விடயமே. அது மட்டுமல்ல ஆண்டுதோறும் முஸ்லிம் சமய கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் முஸ்லிம் எழுத்தாளர்களால் எழுதப்பட்ட நூல்களில் ஒரு குறிப்பிட்ட தொகையை கொள்வனவு செய்து, ஓரளவுக்கு ஊக்குவிப்பினை நடத்தியபோதிலும்கூட இது போன்ற ஆவணப்பதிவு நூல்களை கொள்வனவு செய்ய முன்வரு வதில்லை. ஏனெனில், இந்நூல்களை கொள்வனவு செய்யும் போது அரசியல்வாதிகளின் சிபாரிகளும், பிரதேசவாத செல்வாக் குகளையும் கவனத்தில் கொள்ளப்படுவதினால் எந்தவித ஆதரவும் கிடைப்பதில்லை. . .
இதுபோன்ற நிலைகளைக் கருத்திற்கொண்டே நான் சார்ந்த துறையினூடாக இலங்கையில் முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரங்களைத் திரட்டி ஆவணப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடலானேன். 2002ஆம்
07

Page 6
ஆண்டு நடுப்பகுதியில் மேற்குறித்த விடயம் தொடர்பாக நவமணியில் அறிவித்தல் பிரசுரமானது. இருப்பினும் முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரங் களைத் திரட்டிக் கொள்வது அவ்வறிவித்தலால் சாத்தியப் பட வில்லை. எனவே, தனிப்பட்ட ரீதியாக தொடர்புகளை ஏற்படுத்தி விபரங்களைத் திரட்டுவதில் மிகச் சிரமப்பட்டேன். அக்கட்டுரைத் தொடரில் முதலாவது அத்தியாயத்தை 2003.08.10 ஆந் திகதி என்னால் எழுத முடிந்தது. அச்சந்தர்ப்பத்தில் மனம் சோர்ந்து போன எனக்கு மனதைரியத்தையும், விடாமுயற்சி உணர்வையும் ஏற்படுத்தியவர் அஸ்ஹர் ஹாஜியார் அவர்களே. அவர் தந்த ஆர்வத்தினால் எனக்கு இன்றுவரை சுமார் 255 முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரங்க ளைத் தொகுத்து நூலுருப்படுத்தவும் தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் ஆவணப்படுத்தவும் சுமார் 13 நாடுகளைச் சேர்ந்த ஆவணவாக்கல் நூலகங்களில் பதிவாக்கவும், இரண்டு இணையத் தளங்களில் நிரந்தரமாகப் பதிவாக்கவும் முடியுமாக இருந்தது. இத்தொடரில் இன்றுவரை 12 தொகுதிகள் வெளிவந்து விட்டன.
இப்படியிருக்கும்போது 08வது தொகுதியில் இடம்பெற விருந்த 25 முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரங்களை நவமணியின் பிரசுரத்துக்காக 2007ஆம் பெப்ரவரி மாதத்தில் அனுப்பியபோது அந்தக் கட்டுரைத் தொடரைப் பிரசுரிப்பதில் அவருக்கு நிர்வாக ரீதியான சிக்கல் ஏற்பட்டது. தன்னுடைய சக பணிப்பாளர் ஒருவர் சில புறத்தூண்டு தல்களின் பேரில் என்னுடைய கட்டுரைத் தொடரைப் பிரசுரிக்க வேண்டாம் என கட்டளையிட்டதும் அஸ்ஹர் ஹாஜியார் மிகவும் நொந்துபோனார். இந்தப் பாதிப்பினால் நவமணி பிரதம ஆசிரியர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்ய வேண்டும் என்ற முடிவுக் கும் வந்தார். உண்மையிலேயே இந்த துர்ப்பாக்கியமான நிலை பற்றி என்னிடம் பல தடவைகள் ஆதங்கப்பட்டுள்ளார். நவமணி யால் அக்கட்டுரைத் தொடர் நிறுத்தப்பட்ட பின்பே நான் தினக்குர லில் அக்கட்டுரைத் தொடரை எழுத ஆரம்பித்தேன்.
08

அங்கு அவர் தனது ஆதங்கத்தினை வெளிப்படுத்தியது புன்னியாமீன்' எனும் தனி நபருக்காக அல்ல. முஸ்லிம்களின் விபரங்கள் ஆவணப்படுத்தப்படும் ஒரு முயற்சி இடைநடுவே நிறுத்தப்படப் போகின்றதே என்பதற்காகவே அன்றைய அவரின் ஆதங்கங்கள் அமைந்திருந்தன. இவ்விடத்தில் ஒன்றை மட்டும் உறுதியாகக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். நவமணி நிர்வாகம் மறுத்த பணியை அஸ்ஹர் ஹாஜியாரின் விருப்பப்படி அவர் உயிருடன் இருந்த காலம் வரை வேறு ஊடகமொன்றில் நான் தொடர்ந்தேன். இனியும் நான் என் தேகாரோக்கியம் சீராகவுள்ள வரை தொடர்வேன். :
இவ்விடத்தில் ஒரு விடயத்தை மனசாட்சிக்கு விரோத மில்லாமல் நான் தெரிவிக்க வேண்டும். முஸ்லிம்களின் சகல சாதனைகளையும் என்னால் பதிவாக்க முடியாவிட்டாலும்கூட் முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரங்களைப் பதிவாக்குவதில் நான் பெற்றுள்ள வெற்றியின் அத்திவாரம் அஸ்ஹர் ஹாஜியார் அவர்களால் இடப்பட்டதே.
மறுபுறமாக இலங்கையில் தமிழ் - முஸ்லிம் இன உறவு பழுதுபட்டிருந்த நிலையில் அதனை சீர் செய்ய எழுத்துத் துறையை களமாக்க வேண்டுமென்பதில் அஸ்ஹர் ஹாஜியார் மிகவும் ஆர்வம் கொண்டிருந்தார். இதனடிப்படையில் 1998ஆம் ஆண்டு முதல் அவருடன் இணைந்து நான் பல நடவடிக்கைகளில் ஈடுபட்டேன். தமிழ் - முஸ்லிம் இன உறவு தொடர்பாக பல்வேறு பட்ட ஆக்கங்களையும், செய்திகளையும் தொகுத்து நவமணிக்கு வழங்கி வந்தேன். அது மட்டுமல்ல, இலங்கையில் தமிழ் முஸ்லிம் இன உறவினை வளர்க்க வேண்டுமென்பதில் பல. தமிழ் எழுத்தாளர்களும், குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழ் எழுத் தாளர்களும் ஆர்வத்துடன் இருந்தனர். எனவே, இத்தகையோரை சந்தித்து அவர்களின் ஆக்கங்களைப் பெற்று நவமணியில், பிரசுரிக்கவும் அதேபோல புலம்பெயர்ந்த ஊடகங்களில் இன உறவு ஐக்கியம் தொடர்பாக வெளிவரக் கூடிய ஆக்கங்களை பிரசுரிக்கவும் நாமிருவரும் இணைந்து செயலாற்றினோம்.
09

Page 7
உதாரணமாக லண்டனிலிருந்து வெளிவரும் தேசம்’ சஞ்சிகையில் மாத்திரம் பிரசுரமான 17 ஆக்கங்களை நவமணி யில் மறு பிரசுரமாக்கி 'தமிழ் - முஸ்லிம் இன உறவு’ எனும் நூலினைத் தொகுத்து "தேசம்' - சிந்தனைவட்ட இணை வெளி யீடாக கடந்த வருடம் மார்ச் மாதம் லண்டனில் வெளியீடு செய்தேன். இப்புத்தகத்துக்கு புலம்பெயர்ந்த லண்டன் புத்தி ஜீவிகள் மத்தியில் பெரும் வரவேற்புக் கிடைத்தது. இது மட்டுமல்ல, ஜெர்மனி, மலேசியா, கனடா, பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து வெளிவரும் சஞ்சிகைகளிலிருந்தும் தமிழ் - முஸ்லிம் இன உறவு தொடர்பான பல்வேறு ஆக்கங்களை நவமணியில் மறு பிரசுரம் செய்தோம். அதேபோல நவமணியில் வெளிவந்த முஸ்லிம் எழுத்தாளர்களால் எழுதப்பட்ட பல ஆக்கங்களும், பல செய்திகளும் புலம்பெயர் இணையத்தளங்க ளிலும், சஞ்சிகைகளிலும், பத்திரிகைகளிலும் மறுபிரசுரம் செய்யப் பட்டு வருகின்றன. இந்தப் பணியினை ஆர்பாட்டமின்றி நாமிருவரும் அமைதியாகத் தொடர்ந்து வந்தோம். இச்சந்தர்ப்பங்களில் அஸ்ஹர் 'ஹாஜியார் தன்னுடைய எத்தகைய வேலைப் பளுவுக்கும் மத்தியில் இதற்கென நேரமொதுக்கி ஏற்பாடுகளை செய்து தருவார்.
எப்படியோ ஒரு படைப்பிலக்கியவாதியாக மாத்திரம் இருந்த என்னுடைய சிந்தனைகளை நேரடியாக இத்துறையிலும் தீவிரமாக ஈடுபடுத்த பூரண ஒத்துழைப்பினையும், ஆலோசனையை யும் வழங்கிய அஸ்ஹர் ஹாஜியார் அவர்களை இவ்விடத்தில் மீண்டும் கெளரவபூர்வமாக நினைவுகூரும் அதேநேரத்தில் இப் பணியை நான் இனியும் தொடர்வேன் என்பதை அடக்கமாகக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள அனுதாபச் செய்திகள், கவிதைகள், கட்டுரைகள் இலங்கையிலிருந்து வெளிவரக்கூடிய தேசிய இதழ்களான தினக்குரல், வீரகேசரி, சுடரொளி, தினகரன் LDsbœub 56).ILD60î ogíu6usbâgyub, www.thesamnet.co.uk, www. thence.com ஆகிய இணையத்தளங்களிலிருந்தும் தொகுக்கப்பட்
O.

டவையாகும். நவமணி ஆக்கங்களை தொகுத்துத் தருவதில் எனக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்கிய நவமணியின் புதிய பிரதம ஆசிரியர் என்.எம். அமீன் அவர்களுக்கும், உதவி ஆசிரி யர் ஏ.எல்.எம். சத்தார் அவர்களுக்கும், செய்தியாளர் நஜிமிலாஹி அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித் துக் கொள்கின்றேன்.
ஒரு சமயம் அஸ்ஹர் ஹாஜி அவர்கள் என்னுடைய வீட்டுக்கு வந்து தங்கியிருந்த நேரத்தில் ஆங்கிலப் புத்தக மொன்றைப் பார்த்து என்னிடம் கூறினார். “புன்னியாமீன். இந்தப் புத்தக முகப்பட்டை அழகாக இருக்கின்றது. வெள்ளை மட்டை யில் கறுப்பு எழுத்தில் இப்புத்தகம் வடிவமைக்கப்பட்டிருப்பது மிகவும் அழகாக இருக்கின்றது. ஏனோ தெரியவில்லை. என்னு. டைய புத்தகக் கவரொன்று வெள்ளை கறுப்பு நிறத்தில் அச்சாக வேண்டுமென்று எனக்கு ஆசையாக உள்ளது.” என்றார். இப்புத்த கத்தை நான்கு வர்ண முகப்பில் அச்சிட ஆயத்தமான நேரத்தில் அன்று அஸ்ஹர் ஹாஜியார் கூறியது திடீரென என் ஞாபகத்துக்கு வந்தது. எனவே நான்கு வர்ண முகப்பட்டை எண்ணத்தைக் கைவிட்டுவிட்டு இப்புத்தகத்தின் மட்டையை கறுப்பு வெள்ளை நிறத்தில் அச்சிட முடிவெடுத்தேன். இன்ஷா அல்லாஹற் மிக விரைவில் அவருடைய "மெல்லக் கசிந்த கதைகள் புத்தகத்தையும் அச்சாக்கும்போது முகப்பட்டையை கறுப்பு வெள்ளை நிறத்தி லேயே அச்சிடவுள்ளேன்.
அஸ்ஹர் ஹாஜியார் அவர்களுடன் நான் இறுதியாக தொலைபேசியில் கதைத்தது ஆகஸ்ட் மாதம் 26ஆம் திகதி இரவாகும். அச்சந்தர்ப்பத்தில் அவர் பல விடயங்களை மணந் திறந்து என்னிடம் கதைத்தார். அத்துடன், ஆகஸ்ட் 29ஆம் திகதியிலிருந்து தான் நவமணி’ பத்திரிகையிலிருந்து இராஜினா மாச் செய்யவுள்ளதாகவும் குறிப்பிட்டார். ஆனால், ஆகஸ்ட் 28ஆம் திகதி சுபஹற் தொழுதுவிட்டு திடீரென இறையடி எய்திவிட்டார்.
11

Page 8
தன் இறுதிமூச்சு தன்னைவிட்டும் பிரியும்வரை பத்திரிகைத் துறையிலேயே பணியாற்ற வேண்டும்' என்று என்னிடம் அவர் பல தடவைகள் கூறியிருக்கின்றார். இறைவனின் நாட்டமோ என்னமோ அவர் ஆசைப்பட்டதைப் போல் நவமணி பத்திரிகையி லிருந்து இராஜினாமாச் செய்ய கடிதம் கொடுத்தாலும் கூட அக்கடிதத்தில் குறிப்பிட்ட இராஜினாமா திகதிக்கு முன்பே இறையடி சேர்ந்துவிட்டார். x
19ஆம் நூற்றாண்டின் இறுதிக் கட்டத்தில் பத்திரிகைத் துறையினூடாக சமூக எழுச்சிக்கு வித்திட்டவர் சித்திலெவ்வை. 20ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் பத்திரிகைத்துறையி னுடாக சமூக எழுச்சிக்கு வித்திட்டவர் நவமணி அஸ்ஹர் ஹாஜியார். இக்கருத்தினை ஏற்கனவே அஸ்ஹர் ஹாஜியார் பற்றி நான் எழுதிய கட்டுரையொன்றில் குறிப்பிட்டபோது அறிஞர் சித்திலெவ்வையுடன் நவமணி அஸ்ஹரை எவ்வாறு ஒப்பிட முடியும் என்ற அடிப்படையில் ஒரு சில முஸ்லிம் எழுத்தாளர் கள் என்னோடு தொடர்புகொண்டு விமர்சனம் செய்தார்கள். அவ்வாறு எழுதுவது தவறென வாதிட்டார்கள். அந்த வாதங்க
ளுக்கு விடை கொடுக்கக் கூடிய களம் இதுவல்ல. மீண்டும்
நான் வலியுறுத்திக் கூறுகின்றேன். 19ஆம் நூற்றாண்டின் இறுதிக் கட்டத்தில் பத்திரிகைத் துறையினூடாக சமுக எழுச்சிக்கு வித்திட்டவர் சித்திலெவ்வை. 20ஆம் நூற் றாண்டின் இறுதிப் பகுதியில் பத்திரிகைத்துறையினூடாக சமுக எழுச்சிக்கு வித்திட்டவர் நவமணி அஸ்ஹர் ஹாஜியார்'
நிச்சயமாக காலம் பதில் சொல்லும். கலாபூஷணம் புன்னியாமீன் முகாமைத்துவப் பணிப்பாளர் சிந்தனைவட்டம் . . . .
12

மறைந்தும் மறையாகு
நவமணி அஸ்ஹர்
தோற்றம் :- 06-07-1947 மறைவு - 28-08-2008
uselaisassas இவரின் சகல பாவங்களை மண்ணித்து, நாயகம் (ஸல்) அவர்களின் 2யாஅத்தையும் பெற்று ஜண்னதுல் பிர்சிதளRல் உயர்ந்த அந்தஸ்தைக் சிகாருப்பாயாக!” ஆமீனி
13

Page 9
அல்ஹாஜ்எம்பிஎம்.அஸ்ஹரின் அவர்களின்
மறைவால் துயருறும் ܫ
அன்னாரின் குடும்பத்தினர், உறவினர்கள்,
நண்பர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த சோகத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
-கலாபூஷணம் புன்னியாமீன்.
சிந்தனை வட்டம் 14, உடத்தலவின்னை மடிகே, உடத்தலவின்னை - 20802 ரீலங்கா தொலைபேசி - 0812 493746 / 2493892
14
 

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி மேதகு மஹிந்த ராஜபக்ஸ் அவர்கள்
விடுத்துள்ள
அனுதாபச் செய்தி
நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியரும், பரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஸ்தாபகர்களில் ஒருவருமான அல்ஹாஜ் எம்.பி.எம். அஸ்ஹர் அவர்களினி மறைவு குறித் அறிந்ததும் நான் ஆழ்ந்த சோகத்துக்குள்ளானேனி. .
அல்ஹாஜ் எம்.பி.எம். அஸ்ஹர் இன நல்லுறவுக்காகவும், அரசியல் விழிப்புணர்வுக்காகவும் தனது பேனாவைப் பயனர் படுத்தியவர். -
முன்பு மாளிகாவத்தைப் பிரதேசத்தில் உருவாக்கப்பட்ட *மஜ்லிஸே இஸ்லாம்’ அமைப்பினர் மூலமாக சமூக சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட அணினார், தொடர்ந்தும் முஸ்லிம் ஐக்கிய முன்னணி, பரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் போன்ற வற்றினூடாக தனது சமூக சேவைகளை முனினெடுத்து பிரதேசத்திற்கும், நாட்டு மக்களுக்கும் பாரிய சேவையாற்றி யுள்ளார்.
15

Page 10
இலங்கையின் தமிழ்ப் பத்திரிகை உலகில் தனியிடம் பிடித்த தினபதி பத்திரிகையின் செய்தியாளராக தனது பத்திரி கைத்துறைப் பணியை ஆரம்பித்த இவர், அதன் பின் வீரகேசரி பத்திரிகையின் பாராளுமன்ற பலகணி” வாயிலாக நாடறிந்த பத்திரிகையாளராகப் புகழ்பெற்றார். அதற்கு மேலதிகமாக புதுமைக்குரல் பத்திரிகை மற்றும் எழுச்சிக்குரல் பத்திரிகை என்பவற்றின் ஆசிரியராகவிருந்து அவர் சமூகத்திற்கும், சமயத் திற்கும் அற்றிய பணிகள் அளப்பரியவை.
அத்தோடு பரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உருவாக்கம், 1994ஆம் ஆண்டு பொதுசன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தில் பரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை இணைப்பதில் மறை முகமாக பாரிய பங்காற்றியமை போன்ற செயற்பாடுகளில் அவரது அரசியல் ஞானம் வெளிப்பட்டது.
அதன் பின் அவரது சிந்தனையில் உருவான நவமணிப் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் பொறுப்பையேற்று, இன நல்லுறவுக்காகவும், அரசியல் விழிப்புணர்வுக்காகவும் தனது பேனாவைப் பயன்படுத்தி வந்தவர். 2005ஆம் ஆணிடினி ஜனாதிபதித் தேர்தலின்போது என் வெற்றிக்காக அவர் ஆற்றிய பத்திரிகைத்துறைப் பங்களிப்பு குறித்து இந்தச் சோகமயமான சந்தர்ப்பத்திலும் நான் நன்றியுடன் நினைவு கூர்கின்றேனர். இலங்கை முஸ்லிம் சமூகத்தின் மத்தியிலிருந்த ஒரு பத்திரிகை யாளனர், கொள்கைக்காக போராடிய ஒரு பேனாமுனைப் போராளி என்பவற்றுக்கப்பால் எனது நெருங்கிய நண்பர்களி லொருவர் என்ற வகையில் அல்ஹாஜ் எம்.பி.எம். அளப்ஹரின் மறைவு பத்திரிகைத்துறைக்கு மட்டுமன்றி எக்கும் ஒரு பேரிழப் U0G(0.
அல்ஹாஜ் எம்.பி.எம். அஸ்ஹர் அவர்களின் மறைவால் துயருறும் அன்னாரின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எமது அரசாங்கத்தினதும், எனதும் ஆழ்ந்த சோகத்தைத் தெரிவித்தக் கொள்கின்றேனர்.
-மஹிந்த ராஜபக்ஸ்
ஜனாதிபதி செயலகம்
கொழும்பு
16

Ll
"J9f9f9QL99ĝi 9P11gn9şIG qilggpg ஏழே919 .gipg இphரரி(Stலி புer 6 paiஐடிeepuகுைpேg п8)шmg)зрс9f9f9fП прoршГ94) (s qшФ Фшgospogom poeg 1ழபகுை டியர் "முதிற990ாகு ர(ே9திereஞ தீர்வி,
suggdicosig sco991G GrC94D6ò sgr9QU9CC9g 1g9g%F1o9r 9sŪgi PCD99FFin 109 LIGJIONGrút qult9pg (GDıg919 . . qıL{ijgoşe90)9ğ Ig91Jrng)°.° .)Ip09Q9g q19ßô)gP90.g9 . ʻig9nhnlyfPrg) (9Q9IG9 gigg Ingo qIagging) ger9 109EII9 qurg).JLQffs чесоуффп Фшпоооошпу89; 109Фор09Фqo9qt9di) ц9999Dшпо *qr9.g9gig- G5 qılmQ9c9ğlıge) göq59Dg9gg|P1cC99p qıl19ıq-e işgilan பாடு ரe)(eஞ் (8 ஐயஐஐழிோழி (eஞ் டியEகு ழபதி
Ig ng9q999 princ09ginag) ggfin G aig919 9).ug qi19 - qingfie q19 gęfia -rge reவி qவிேயாகு ரபெல் டி நிழில் (C9gPprTU9C09 đñur 9 GO99ĝPđfide qQ9Q9đfi) “rogPLJ9pr4pBỆrnFIQU9EGS rig)é3. quigeringf8fi)19 “qn1959égidiwr.9 Gregi6 'Gro9 llgo9uringFco9 q99F Uਡਫ g(09gung) 19Igrofogupoé gê 'rofgo (91.ção ம910மகழ98 D69 - (UTšQ9łG “q9'Irq 9 88||JUTšqgłG
முரணமே SUtdoocoS L109,969 SUSu(9q999L09gS,
l''' sug9 Igsg q9).g9 OICO9q19 g990 (9cogg g9gnaicosiggg.TISGs gcoor (9S
gustegłG pucets 9. Isa "198IQ9gfs 19I9y9 aipangis) Gun gegngingino8sir'9Q19IG qII9'p1919 &BuDSQ9IGqayğq9FG "qı9"qırq9 g9q?qnqueco995 g9ynascoiggs IIISG q99q9d)

Page 11
சட்டத்தரணி கெளஸால் அமீன் போன்ற அன்றைய வாலிபர்கள் பலரும் இஸ்லாமிய இலட்சியத்தோடு வாழக்கூடிய வழிமுறையை, முக்தார். ஏ. முஹம்மத்திடம் கற்றுத் தேர்ந்தனர்.
“புதுமைக்குரல்” பின்னர் "எழுச்சிக்குரலாக” சமுதாயத் தின் குரலாக ஒலிக்கத் தொடங்கியதும் தம் எழுத்தாற்றலாலும், தெளிந்த சிந்தனையாலும் சமுதாய எழுச்சிக்கு உரமேற்றினார் அஸ்ஹர். அவருடைய செயலாற்றல், செயலூக்கம், சிந்தனைத் தெளிவு, நேர்மைக்குணம்.
இவற்றைவிடக் கிட்ட நின்று அவதானித்த மர்ஹும் அஷ்ரப் அடிக்கடி மாளிகாவத்தை அஸ்ஹர் வீட்டுக்குச் செல்ப வராக இருந்தார். அங்குதான் ‘பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்' எனும் கட்சியின் கரு உருவாகியது. அஸ்ஹர் ஹாஜியாரின் தாய் நூர் ஸபாயா அம்மையார் வீட்டுக்கு வரும் பிள்ளைகள் போல் அரவணைத்து, வேளைக்கு வேளை சமைத்துப்போட்டு உபசரிப்பார். -
அவர் ஓர் இலட்சியத் தாய்!
அஸ்ஹர் ஹாஜியார் முஸ்லிம்களின் எழுச்சிக்கு மாத்திரம் பேனாவைப் பாவித்தவரல்ல. இலங்கைத் தமிழ்ப் பத்திரிகை உலகின் ஜாம்பவான் எஸ்.டி. சிவநாயகத்தின் கீழ் தினபதியில் இணைந்து தினத்தாளில் செய்தி படைக்கும் பயிற்சியைப் பெற்றார். தனது பத்திரிகைத்துறை ஆசான் சிவநாயகம் என்பதை எவ்விடத்திலும், எச்சந்தர்ப்பத்திலும் பெருமையோடு கூறிக் கொள்வார். . . . . .
- நன்றியுள்ள மனிதர் அஸ்ஹர்.1
பாராளுமன்றம் சென்றார் அஸ்ஹர் ஹாஜியார். அங்கே 'கலரியில் இருந்து எழுதினார். 25 ஆண்டுகள் தொடர்ச்சியாக, எழுதிக் கொண்டிருந்தார். வீரகேசரியில் இவர் எழுதிய 'பாராளுமன்றப் பலகணி” வாசகர்களைக் கவர்ந்தது. அவர் பாராளுமன்றப் பலகணியில் எழுதிய செய்திகள் உள்ளது. உள்ளதாகவே இருந்தன. பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் கூறிய சொல் மாறாது அப்படியே தொகுத்துத்தருவார். அதில்

கண்ணில் நீர் மல்கும்வேளை ஒன்றைச் சொல்லித்தான் ஆக வேண்டும்.
- மனமுடைந்து மெளத்தானார் அஸ்ஹர் ஹாஜியார். சமுதாயம். சமுதாயம். என்றே எழுதிய அவரை சமுதாயமல்ல - ஊடக வட்டத்தில் அவரைச் சார்ந்தோர் - ஊடக வட்டத்தில் சேர்ந்தோர் இறுதியில் அவரை மனச்சோர் வடையச் செய்து - பல வழிகளிலும் மன அழுத்தத்தைக் கொடுத்து அவரை ஓரங்கட்ட முனைந்த ஒரு சமகால முஸ்லிம் ஊடகத்துறையில் ஒரு சோகக் கதையையே சிருஷ்டித்து விட்டது. . . . .
கொண்ட இலட்சியத்துக்கும், நேர்மைக் குணத்துக்கும் இதுதான் என் சமுதாயம் அவருக்களித்த பிரதியுபகாரமா?
பேனா தூக்கிய ஊடகவியலாளர்கள் - குறிப்பாக இளம் முஸ்லிம் எழுத்தாளர்கள் - இவ்வுண்மையை ஊன்றி உணர வேண்டும். கொழும்பு, மாளிகாவத்தை - சிங்கள மன்னர்கள் காலத்தில் ஒரு மாளிகையைக் கொண்டிருந்த பெருமைமிக்க ஊர். முஸ்லிம் சமுதாயத்தின் வளர்ச்சிக்குத் துணை போகக்கூடிய பல இளைஞர்களை உருவாக்கிய பாசறையாகவும் அவ்வூர் திகழ்கிறது.
வெலிகமையைச் சேர்ந்த ஆசிரியத் தந்தை மர்ஹாம் அல்ஹாஜ் முக்தார் ஏ.முஹம்மத் மாளிகாவத்தையில் வந்து குடியேறிய பிறகு, அங்கே ஒரு மறுமலர்ச்சி யுகம் பிறந்தது. ‘மஜ்லிஸே இஸ்லாம் அன்று உருவாக்கியது அதில் நிருபராகக் குழு உறுப்பினர்களில் ஒருவராக ஹாஜி அஸ்ஹர் செயற்பட்டார். இவ்வமைப்பு பின்னர் ‘முஸ்லிம் ஐக்கிய முன்னணி’யாக எழுச்சி பெற்றது. இம்முன்னணியில் அஸ்ஹர் ஹாஜியாரின் சகோதரர் எம்.பி.எம். நிஸாம், தற்போது ஈரானில் இலங்கைத் தூதுவராக உள்ள சட்டத்தரணி எம்.எம். சுஹைர், சட்டத்தரணி பாரூக் தாஹிர், முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹாம் எம்.எச்.எம். அஷ்ரப், ஓய்வுபெற்ற அதிபர் என்.எம்.எம். ரஸின்,

Page 12
Oz
− groggdico9 G qpII-6şdñ) ôfi)dfi) qı9DIJr mğ3LIGUğ qaJöq19hG` Ig91qi)LIgiig)Ig9Lrig) . Grt9rg9109dñ) gangél6 "QuegoqII9 “g9RD) Ig9oc9.Jó q9grqII9 “gogligo qu9ig919. “Ig9F.MUĞLIQUO P Q99@889 q„GUCésan “qJIĠLIQL9Q9IFIG Fa QoS irq 9 “QofG , “q 19 (Guge “QA9gj q 9"(9. “Ig9gỂUĞLIGJT9 qgUĞLIQU9ơn “gé9 "q19'g|9 GJ109,990. “IOSU(9.1909 seasilicoee g9.99qq9q9d). 'groalgese grg9)1099.99d) q9JL1999 IEgöh) 9 1991)rnancestep 1991.g. மதிபற மே98 (ே9$ம்பetர ழ9ரnழ99ழ9ரி rggயா9 q9ழnற9ழத்திரி | alig919 qIIng. G, (Iggy09mn 3IInII9C09e ș9IIggigr.9Q999 ș13 $9.99999(fi) L19099-ypo9 199ny09.099d) nq919 q99.9Ligi
டியாயோடு டியqேelவி (rgதேசிற9 6 டிேey
qFJQ99? — PLINIO09CC9IT GRÀFIG STUgnşPFLrCD9GD-G gĜc09ğ09
19qiggle penupo909.g9d) gouro 99 qS9q9d) pco91; (9S (9916 qugPLC igurí9'q9 no IIJAgg) (emigiulfo 911099cf)
(rடுழிேழமுதி ஒன்ற9ர்glவி ஏந்ேதிடுபகுை ஒத்தினூn qj6 qıLIgi II9cQ99PISIrn8ö8yg9 90.1.LIqiy19rt99 ° Q9n III ng)109c09ʻégé19 - Q91IIQ9 (ndopplவி தீேவிண்டிeபஜகு ரே ரoன் (9T 6 டிரயதிேனழுவிை மே9தி ர91ழ91குை ரeயா கிபதி ரே டிeரயன் p5
 ேேரக்கு ஒப99யஐகுர தி பேர9ர்ேடிப9தி ஒயிறIGiலி qLisa nycopoggi in IcoggDr916 "Q9IIIosits guilpool.99 ாேேயமிதி sort9Égó15 mc9g9109C919 ghug9iG 1g9g Q9gnu9C9r9991G sort9ggro ப9ர ஒஒழ q9திழிார9 ம99யா9 8ை டியாபே06 (Uqேelடு
. . . . “血Gg@ bழபறகுழநிதிம9ருஞ் இப9ஜழ98 $கிருதிப9UTா இப9ருஞ (8 "q9JIC9gS 109sLIrog) (s qu91ńs9 149Pr, IrCO (PAPLITO ц009алг9qí – (coefе Фgang) (GgiqDq99Рфđge oficero இழசிற Q9gd) gig irs - ரரெகுபர் ஐயரம9fப9 pகிலி (909qஅதிாழஒ9 ghnaicosits g)Ir99ggis giggP9)IgP0 gigganc9alu9g (r916 Q9gnyganrog ΩμιΦφσιω9.ς Γης)Φω909ΙΦφάi)19 (ίβ φία 9dio μ09σιπ94
"IF ISPITFCC9g qlКЗшФg919 199பேசி იrig9[Gნgèqpდ9ყgégén GDu[[9ტPGნტG) - ”დ9დ9დ9gé–lig09ფი dicogy . qı9Drt919

தக்வா எனும் இறையச்சத்துடனும், நேர்மையான உள்ளத்துடனும் தமது வாழ்நாளை கடத்திவிட்ட அல்ஹாஜ் அஸ்ஹர், இறுதி வேளையில் திருக்கலிமாவை மொழிந்தவராக எம்மிடமிருந்து 280808 அன்று விடைபெற்று அல்லாஹற் அளவில் சென்றுவிட்டார்.
(3L60IT மை கொண்டு சமுதாயத்தின் குரலோசையை எழுப்பிய அஸ்ஹர் ஹாஜியார்.
இனி எழுத மாட்டார்.
எழுதவே மாட்டார்.
அஸ்ஹர் ஹாஜியார் தூக்கிய பேனையை பிடிக்க இை முன்வருபவர் யாரோ? ஒரு யுகம் சென்றாலும் இதற்கு விடை கிட்டுமோ?
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் பிழைகளைப் பொறுத்து ஜன்னதுல் பிர்தெளஸை வழங்கவும் அன்னாரின் குடும்பத்தினருக்கும் அவர் பாசமுள்ள தாய், அன்புப் பிள்ளை கள், உற்றார் உறவினர் அனைவருக்கும் ஸப்ரன் ஜமீல்' என்ற அழகிய பொறுமையை கொடுத்தருளுமாறும் உளமுருகி: துஆ செய்கின்றேன்.
************************
21

Page 13
முஸ்லிம் காங்கிரஸினை வளர்ப்பதற்கு பங்களிப்பு செய்தவர் - ரவூப் ஹக்கீம்
ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும், y - பாராளுமன்ற உறுப்பினரும்.
நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியரும், பிரபல ஊடகவியலாளருமான எம்.பி.எம். அஸ்ஹர் காலஞ்சென்ற செய்தி கேட்டு நான் அதிர்ச்சியும், கவலையும் அடைந்தேன். பொதுவாக அவருடைய மறைவு இலங்கை முஸ்லிம்களுக்கும், குறிப்பாக முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கும் பாரிய இழப்பாகும்.
எனது தனிப்பட்ட குடும்ப நண்பராக, மிக நீண்டகாலம் எனது இன்ப, துன்பங்களில் பங்கேற்ற நண்பர் அஸ்ஹர் பத்திரிகா தர்மத்தை அநுசரித்து சமூகப் பிரக்ஞையுடன் முஸ்லிம் சமூக அவலங்களையும், அரசியல், பொருளாதார ரீதியாக முஸ்லிம் சமூகம் அனுபவிக்கும் இன்னல்களையும் உடனுக்குடன் தனது எழுதுகோலின் வல்லமையால் நாடறியவும், உலகறியவும் செய்த இவரின் மறைவு இலகுவில் ஈடுசெய்யத் தக்கதல்ல.
காலஞ்சென்ற ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ஷஹீத் அஷ்ரபின் நெருங்கிய நண்பராக காணப்பட்ட மர்ஹம் அஸ்ஹர், தலைவரோடு தோளோடு தோள் நின்று மக்கள் மத்தியில் கட்சியைக் கொண்டு செல்வதிலும், கட்சியை வளர்ப்பதிலும் ஆற்றிய பங்களிப்பை கட்சி தொண்டர் கள், போராளிகள், ஆதரவாளர்கள், கட்சியின் மக்கள் பிரதி நிதிகள் எவரும் இலகுவில் மறந்துவிட முடியாது. கட்சியின் வரலாற்றில் இவர் ஆற்றிய பங்களிப்பு என்றும் நினைவு கூறத் தக்கது. ... ' ' -
தான் ஆரம்பத்தில் வாழ்ந்து வந்த மாளிகாவத்தை சூழலை
22

மையமாக வைத்து சமூகப் பணியிலும், எழுத்துப் பணியிலும் சுடர்விட்டு பிரகாசிக்கத் தொடங்கிய இவர், தனது இளமைப். பருவம் தொட்டு சமூகப் பற்றுள்ளவராகவும், முஸ்லிம் சமூக விடயங்களில் மிகுந்த அக்கறை கொண்டவராகவும் காணப் ப்ட்டார். . . .
“புதுமைக்குரல்’ பத்திரிகை மூலம் முஸ்லிம் சமூகப் பிரச்சினைகளை வெளிக்கொணர முனைந்த இவர், பின்னர் “எழுச்சிக்குரல்" பத்திரிகை மூலமாக முஸ்லிம் சமூகப் பிரச்சினை களை காட்டமாகவும், தெளிவாகவும், அச்சொட்டாகவும் வெளிக் கொணர்வதில் உறுதியோடு உழைத்ததோடு, பலவித அச்சுறுத் தல்களுக்கு மத்தியிலும் தான் முன்னெடுத்த பணியை இறுதிவரை செய்து வந்தார்.
விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சில முஸ்லிம் ஊடகவிய லாளர்கள் மாத்திரம் ஊடகங்களில் கடமையாற்றிய ஒரு காலகட் டத்தில் தினபதி பத்திரிகையில் நுழைந்த மர்ஹம் அஸ்ஹர் பின்னர் வீரகேசரியின் சிரேஷ்ட பத்திரிகையாளராக பணியாற்றி, இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக பாராளுமன்ற செய்தியா ளராக திகழ்ந்து பாராளுமன்றத்திற்கு உள்ளும் வெளியிலும் அனைவராலும் புகழப்பட்டவரான இவர், பாராளுமன்றம் தொடர் பாக எழுதிய நூல் சிறந்த வரலாற்று ஆவணமாகும். .
நவமணிப் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியராக, அதன் பிரதம ஆசிரியராக இருந்து தனது இறுதி மூச்சுவரையிலும் முஸ்லிம் ஊடகத்துறைக்கு உச்சக்கட்ட பங்களிப்பை செய்து வந்த எம்.பி.எம். அஸ்ஹரின் மறைவு முஸ்லிம் ஊடகவியலாளர்க ளுக்கும், சமூகத்திற்கும் இன்றைய காலகட்டத்தில் நாட்டிற்கும், ஈடுசெய்ய முடியாத பாரிய இழப்பாகும்.
அன்னாரின் மறைவினால் துன்புறும் குடும்ப அங்கத்தவர் களின் துன்பத்தில் நானும் பங்கேற்பதோடு, அன்னாருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹத்தஅபூலா ஜென்னதுல் பிர்தெளஸ் எனும் மேலான சுவனபதியை வழங்க வேண்டுமென பிரார்த்திப் போமாக! . . . .
റ്

Page 14
உதயன் (லண்டனி), லணடன் குரல், தேசம், தேசம்நெற்
த.ஜெயபாலன் (லண்டன்) விடுத்துள்ள அனுதாபச் செய்தி
எம்.பி.எம். அஸ்ஹரின் திடீர் மறைவு மிகுந்த வேதனையை அளிக்கிறது. இலங்கையில் முஸ்லிம்களுக்கான ஒரே தேசிய இதழான நவமணியின் ஆசிரியராவிருந்தது மட்டுமதல்ல, தமிழ் - முஸ்லிம் உறவுகளை வலுப்படுத்தவும் அவர் உழைத்திருந்தார். அவரது இழப்பு சமாதானத்தையும், சக வாழ்வையும் விரும்பும் இலங்கையர்கள் அனைவருக்கும். ஏற்பட்ட ஒர் இழப்பாகும்.
தமிழ் - முஸ்லிம் மக்களிடையே நல்லுறவை ஏற்படுத்த வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தின் அடிப்படையில் தேசம் சஞ்சிகையுடனும், தேசம்நெற் இணையத்துடனும் அவர் புரிந்துணர் வுடன் செயற்பட்டார். கடந்த சில ஆண்டுகளாகவே தேசம்நெற் நவமணி தமிழ் - முஸ்லிம் இன உறவுகளை வலுப்படுத்த வேண்டும் என்றடிப்படையில் செயற்பட்டு இருந்தன. அதில் அஸ்ஹர் அவர்களுடைய பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.
அஸ்ஹர் அவர்களது குடும்பத்தினருக்கும், நண்பர்கள், உறவினர்களுக்கும் குறிப்பாக நவமணி பத்திரிகையின் நிரவாகத் தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். . . . .
www.thesamnet.co.uk -Jeyabalan Ton August 29, 2008 1 1:09 3. லண்டன் குரல் 2008 செப்டெம்பர் . ܫ
24.

மறைவு
efTJ600TT 605ub
எழுபதுகளில் இருந்து எனக்குப் பரீட்சயமான இனிய நண்பா எழுத்தாளர், பத்திரிகையாளர் எம்.பீ.எம். அஸ்ஹர் ஆற்றிய பணியை நினைவு கூர்வது பெருமித மாகும்
முஸ்லிம் களுக்கோர் முழுமை பெற்ற தினசரி ஒன்று தொடங்கும் ஆர்வம் தன்னுள் கொண்ட் தகைசேர் முயற்சி பலித்திடு முன்னே பரமனின் அழைப்பு முன்திய தெண்ணி சிந்தை கலங்கி நொந்தே போனேன்!
புதுமைக் குரல் எழுச்சிக் குரலாகி மாதமொன்று வாரமொன்றாகி இன்னல் பலகண்டு இடையில் நின்றது. நவமணி என்ற நாமம் பூண்டு, எம்மவர் கைகளில் நடமாடச் செய்து
வேதனையுடனே சாதனை படைத்த பத்திரிகையாளர் மறைந்து போனது மாபெரும் நட்டம்!
செய்தியாளர் பட்டியலில் சிறப்பாய் ஓரிடம் அஸ்ஹருக் குண்டு அன்னார் கண்ட ஆளுமை மன்ற அனுபவமெல்லாம் ‘உறுமும் கடலும் உலவும் நதியும் மாய் நூலுரு வாகி படிப்போர்க் கின்பம் பயக்கச் செய்தது.
"புனை பெயர்' என்பது புதுமை அல்ல எம் அஸ்ஹ ரும் கூட
அஜான், அஸ்காப்
அபூ அப்ஸர், அபூ ஸியானா அபூ மிப்ராஜ் ஆகிய - . புனைபெயர் பூண்டு எழுதிக் குவித்தது அறிந்தவர் சிலரே!
அன்பும் பண்பும் ஆளுமையும் கொண்ட எல்லார்க்கும் இனிய
25

Page 15
‘நல்ல மனிதர்
கடந்த ரமழானில் கருத்துக்கினிய
சிந்தனைத் துளிகளை
தினசரிகளிலே தினமும் தந்து நன்னெறி காட்டி நின்ற பெருமகன் இந்த ரமழான் புனித நாளில்
எம்மை விட்டும்
இறையடி யாகி, அவனருள் பெற்றார் இறைவா, எம் அஸ்ஹரின் பிழைகள் பொறுத்து
‘பிர்தெளஸ்” என்னும்
சுகந்தம் நிறை சுவர்க்கத்தில் சேர்த்து சுகமளிப்பாயே!
சாந்தி பெறுவீர் ஜென்னத்திலே
பாணந்துறை எம்.பீ.எம். நிஸ்வான்
ஊடக நெறிகளை உவந்தளித்தவரே - அதில்
பத்திரிகா தர்மத்தை பகிர்ந்தளித்தவரே
நாடகமே உலகம் நாடறிந்த வாசகத்தை
நயம்பட உரைத்து நானிலம் விட்டேறிநீரே
களம் கண்ட சரிதைக்கு ஆளானி - புனித
களங்கத்தை அணைத்திடும் நிய்தியானி
வளம் கண்ட வாழ்வியல் உமது நாமமே
வளர்ந்த மதிதான் நீ மருவின்றி மறைந்தீரே
ஏந்திழையாளின் மறைவை மனதில் மறவாது
. . ஏற்றமில்லா துன்பம் தினம் துகர்ந்தவரே சாந்தி வாழ்வு பெற சென்று விட்டீர்
. . . சாந்தம் பெறுவாய் ஜென்னத் மீதினிலே,

6L LDITST600T முஸ்லிம்களின் விடிவுக்கு உழைத்தவர்1 - அமைச்சர் ரிசாத் பதியுதீன்
அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளரும்
மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சரும்
புலம்பெயர்ந்த வடமாகாண முஸ்லிம்களின் விடிவு விமோசனத்திற்காக தான் சார்ந்திருந்த ஊடகத்துறையை, எப்பொழுதும் பயன்படுத்தி வந்த சிறந்த சமூகப்பற்றாளரை முஸ்லிம் சமுதாயம் இன்று இழந்துவிட்டது. அன்னாரது மறைவு
கேட்டு நான் அதிர்ச்சியும் கவலையும் அடைந்தேன். அவர் முஸ்லிம் சமூகத்தின் விடிவு முன்னேற்றத்திற்கான நீண்ட பயணத் தில் தடங்கல் ஏற்பட்டிருப்பதாகவும் கருதுகிறேன்.
அஸ்ஹர் ஹாஜியார் நீதி, நேர்மையான முறையில் மட்டு மல்லாது, நடுநிலைமையாகவும் தனது ஊடகப்பணியை ஆற்றி வந்தவராவார். தனிப்பட்ட ரீதியில் நன்கு அவரை தெரியும் என்றாலும் இடம்பெயர்ந்த வடமாகாண முஸ்லிம்கள் விடயங்க ளில் அவர் என்னுடன் கொண்டிருந்த நெருக்கத்தையும் நான் நினைவு கூர்கின்றேன். , .
முஸ்லிம் சமூகத்திற்கென்று ஒரு ஊடகம் தேவையென எப்பொழுதும் குரல் கொடுத்து வந்ததுடன், அதற்கான போராட் டத்தில் எப்பொழுதும் தன்னை அர்ப்பணித்தவர். அவரது மறைவு இன்றைய காலகட்டத்தில் முஸ்லிம் சமூகத்திற்கு பெரிய இடைவெளியை ஏற்படுத்தியிருக்கிறது. இன, மத, அரசியல், பேதங்களுக்கப்பாற்றபட்ட அவர் அனைத்து இன மக்களாலும் மிகவும் போற்றப்பட்டவராவார்.
27

Page 16
பேரிழப்பு
- அல் அஸ்லம்
சமூகத்தின் உரிமைக் குரலொன்று
. சடுதியாக ஓய்ந்து போனதம்மா - அது எம்பியெம் அஸ்ஹர் எனும்
எம் ஊடகத் தளபதியின் குரலம்மா! நவமணியின் முதுமணியாக ஒளிர்ந்தவர்
எமக்கவர் கண்மணியம்மா!
புதுமைக்குரலால் புத்துயிர் தந்தார்:
எழுச்சிக்குரலால் எழும்ப வைத்தார்! நவமணியால் நானிலம் எங்கும்
நம் குரல் ஓங்கச் செய்தார்! நாளிதழாக கனவும் கண்டார்! . . .
நனவாகு முன்னே கண்ணயர்ந்தாரே!
சத்தியக் குரல்கொடுத்த “சத்தியன்”
சமூகத்தை தலைநிமிர வைத்தவர் உள்ளிடத்து ஊடாட்டங்களை
ஊடுருவித் தந்த "கூர்ச்செவியன்" உரைப்புடன் உறைக்கவும் செய்தார்
சுழியோடித் தந்த அந்தரங்கமெலாம் சலிப்பின்றிச் சுவைக்கும் சாகசவரிகள்
சரித்திரம் படைத்து விட்டாரம்மா!
மெல்லக் கசிந்த கதைகளோ
மெல்லக் கிடைத்த குறுந்தீனி! சொல்லி லடங்குமா அவர் பணிகள்
சொல்லி மாளுமா அவர் இழப்பு
28

அல்ஹாஜ் எம்.பீ.எம். அஸ்ஹர் தமிழ் - முஸ்லிம் இன உறவுக்காக ஊடகத்துறையை களமாகப்
பயன்படுத்தியவர்.
- கலாபூசணம் புன்னியாமீன் -
இலங்கையிலிருந்து வெளிவரும் முஸ்லிம்களுக்கான ஒரே தேசிய இதழான நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் அல்ஹாஜ் எம்.பீ.எம். அஸ்ஹர் அவர்கள் 2008.08.28ஆந் திகதி அதிகாலை 4.45 மணியளவில் திடீரெனக் காலமானார். அன்னாரின் பூதவுடல், (28) மாலை 5.30 மணியளவில் மாளிகாவத்தை முஸ்லிம் மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அன்னாரின் இறுதி மரணச் சடங்குகளில் பெருந்திரளான ஊடகவியலாளர்கள் இன, மத வேறுபாடின்றி கலந்து கொண்டனர். ".
சமுதாய நோக்குடன் சமுதாய நலன்கருதி உயிரோட்டமாக எழுத்துப்பணி புரிந்த அல்ஹாஜ் எம்.பீ.எம். அஸ்ஹர் ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஸ்தாபகரும், பொருளாளருமாவார். '
இலங்கையில் முஸ்லிம் தமிழ் இன உறவுக்காக வேண்டி: பாரிய தொண்டாற்றிய இவர், இன உறவு தொடர்பாக தேசம்' சஞ்சிகை, தேசம் நெற் போன்றவற்றில் பிரசுரமான பல கட்டுரைகளை நவமணியில் மீள் பிரசுரம் செய்தார். இத்தகைய மீள் பிரசுரமான கட்டுரைகளின் தொகுப்பு தேசம்' சஞ்சிகை - சிந்தனைவட்ட இணை. வெளியீடாக 2007ஆம் ஆண்டு மார்ச் மாதம் 'முஸ்லிம் - தமிழ் இன உறவு' எனும் பெயரில் வெளியிடப்பட்டது. அதே போல: நவமணியில் பிரசுரமான பல கட்டுரைகள் தேசம் நெற்டில் மீள் பிரசுரமாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. . . . .
இலங்கையில் முஸ்லிம் - தமிழ் இன உறவு தொடர்பாக பல்வேறுபட்ட் கருத்தரங்குகளில் பல்வேறுபட்ட கருத்துக்களை இவர் முன்வைத்துள்ளார். அதுமாத்திரமன்றி முஸ்லிம்களை தமிழர்களும்,
தமிழர்களை முஸ்லிம்களும் ஒருவருக்கொருவர் எதிரிகளாகப் பார்த்து
29 . . . . . . :۰۰۰

Page 17
வந்த காலகட்டத்தில் அத்தகைய நிலையினை மாற்றியமைப்பதற்காக வேண்டி ஊடகத்துறையினூடாக அரும்பாடுபட்டார். இரு சமூகங்களு க்குமிட்ையும் நல்லுறவை ஏற்படுத்த ஊடகத்துறையைக் கருவியாகப் பயன்படுத்திய அதேநேரத்தில், பிரச்சினைமிகு காலகட்டங்களில் கூட நவமணியை வன்னிப் பிரதேசத்துக்கு அனுப்பி வைப்பதில் வெற்றிகண்டார். . . . . . . . .
இலங்கையில் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலை ஞர்களின் விபரங்கள் திரட்டப்பட்டு அவை ஆவணப்படுத்தப்பட வேண்டு மென்பதில் அல்ஹாஜ் எம்.பீ.எம். அஸ்ஹர் அவர்கள் அதிக ஆர்வம் காட்டி வந்தார். அவரின் இத்தகைய ஆர்வத்தின் காரணமாகவே 2004ஆம் ஆண்டில் இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலா ளர்கள், கலைஞர்களின் விபரங்களைத் திரட்டி நவமணியில் தொடராக எழுதி வந்தேன். . . . .
அன்று அல்ஹாஜ் எம்.பீ.எம். அஸ்ஹர் அவர்கள் தந்த உந்துதலின் காரணமாக என்னால் சுமார் 300 இலங்கை எழுத்தாளர் கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரங்களை சேர்க்க முடிந்தது. -
இலங்கையில் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் பல்வேறு துறை களில் சாதனைகளைப் படைத்து வருகின்றார்கள். புலம்பெயர்ந்த ஈழத்து தமிழர் எழுத்தாளர்களின் ஆற்றல்களை இலங்கை மக்களின் அவதானத்துக்குக் கொண்டு வர வேண்டும் என்றும், அவற்றை ஆவணப்படுத்த வேண்டும் என்றும் இவர் காட்டிய ஆர்வத்தினாலேயே என்னால் ‘புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு' எனும் கட்டுரைத் தொடரினை 25 வாரங்கள் நவமணியில் எழுத முடிந்தது. இத்தொடரினூடாக ஐக்கிய இராச்சியம், ஜெர்மனி, பிரான்ஸ், டென்மார்க் போன்ற நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்கள், ஊடகவிய லாளர்கள், கலைஞர்களின் விபரங்களை பதிவாக்க முடிந்தது.
இம்முயற்சியில் நான் தொடர்ந்தும் ஈடுபட வேண்டுமென அஸ்ஹர் அவர்கள் விரும்பிய போதிலும்கூட நவமணி நிர்வாகத்தால் ஏற்பட்ட சில தலையீடுகளினால் 'இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டுத் தொடரினை நவமணியில் எழுதுவதை நிறுத்தினேன். அச்சந்தர்ப்பத்தில் அல்ஹாஜ் எம்.பீ.எம். அஸ்ஹர் அவர்கள் மிகமிக மன வேதனைப்பட்டார்.
30

நவமணி ஆசிரியர் அல்ஹாஜ் எம்.பீ.எம். அஸ்ஹர் அவர்கள் தந்த அந்த ஒத்துழைப்பினதும், ஆர்வத்தினதும் ஒரு வெளிப்பாடாகவே அப்பணியின் தொடராக இவர்கள் நம்மவர்கள்’ எனும் தொடரினை
ஞாயிறு தினக்குரலில் இன்றும் நான் மேற்கொண்டு வருகின்றேன்.
எனவே, அன்னாரின் மறைவையிட்டு இக்கட்டுரை விசேடமா வெளியிடப்படுகின்றது.
மேல்மாகாணத்தில் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த முகைதீன் பிச்சை முஹம்மது அஸ்ஹர் அவர்கள்; எம்.பீ.எம். அஸ்ஹர்' எனும் பெயரில் பிரபலமான மூத்த முஸ்லிம் ஊடகவியலாளராவார். இவர் அஜான், அஸ்கல்ப், அபூஅப்ஸர், அபூஸியானா, ஸஹிதா மணாளன், அபூமிப்ராஹ், சத்யன், குலாப், கூழியோடி, கூர்ச்செவியன் ஆகிய புனைப் பெயர்களிலும் எழுதி வந்தார். 2008.08.28 ஆந் திகதி இவர் காலமாகும் போது இவருக்கு வயது 61.
1947-07-06ம் திகதி முகைதீன் பிச்சை நூர்சபாயா தம்பதி களின் புதல்வராகப் பிறந்த "அஸ்ஹர் அவர்கள் மாளிகாவத்தை' டென்ஹாம் ஆங்கிலப் பாடசாலை, கொட்டாஞ்சேனை மத்திய மகா வித்தியாலயம் ஆகியவற்றின் பழைய மாணவராவார். இவர் காலமாகும் போது இலங்கை முஸ்லிம்களின் ஒரே தேசிய பத்திரி கையான நவமணியின் பிரதம ஆசிரியராகப் பணியாற்றி வந்தார்.
ஒரு சமூகத்தின் எழுச்சிக்கு ஊடகத்துறையின் பங்களிப்பு மிக மிக அத்தியவசியமானது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக் கால கட்டங்களில் இலங்கை முஸ்லிம்களின் மறுமலர்ச்சித் தந்தை யான அறிஞர் சித்திலெப்பை அவர்களின் 'முஸ்லிம் நேசன்' எதோ ஒரு வகையில் முஸ்லிம்களின் சமூக, கல்வி, சமய அபிவிருத்திக் கான அடிப்படையை வழங்கியது. ஆனால் துரதிஸ்டவசமாக 'முஸ் லிம் நேசன்' தோன்றி ஒரு நூற்றாண்டு கடந்துவிட்ட நிலையில் கூட இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கென ஒரு தனியான தேசிய பத்திரி கையோ அன்றேல் தேசிய ரீதியான இலக்றோனிக் மீடியாக்களோ தோன்றவில்லை. யார் எத்தகைய கருத்துக்களை முன்வைத்தாலும். ஏனைய சமூகங்களுடன் ஒப்பு நோக்கும் போது முஸ்லிம் சமூகம் இன்னும் பின்னடைவாக இருப்பதற்கு இதையும் ஒரு காரணமாகக் கொள்ள முடியும். . . . .
அண்மையில் ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் மற்றும் .
மீள்பார்வையின் ஏற்பாட்டில் கொழும்பில் நடைபெற்ற கருத்தரங் 31 . .

Page 18
கொன்றில் உரையாற்றும்போது 'ஓமான் டைம்ஸ்’ பத்திரிகையின் ஆசிரியரும், சர்வதேச ஊடக பயிற்றுவிப்பாளருமான கலாநிதி அஹற்மட் லபிப் ஜபார் தெரிவித்த கருத்தொன்று இவ்விடத்தில் என் நினைவுக்கு வருகின்றது. "கொலைகள், பசிப்பிணி மற்றும் துயரங் களுக்கு மத்தியில் வாழும் பலஸ்தீனர்களிடையே 67க்கும் மேற்பட்ட வானொலி நிலையங்கள் இயங்குகின்றன. ஆனால், இலங்கையிலோ முஸ்லிம்களது கட்டுப்பாட்டில் ஓர் ஊடகமும் இல்லாமை வேத னையை அளிக்கின்றது. இலங்கையில் உள்ள முஸ்லிம்களுக்கு பல்வேறுபட்ட பிரச்சினைகள் உள்ளன. அவை ஒன்றுமே வெளியுல கிற்கு வருவதில்லை. வெளிநாட்டு ஊடகங்களிலும் இவை வெளிவரு வதில்லை. இதனால் இலங்கை முஸ்லிம்களுக்கு இவ்வாறான பல்வேறுபட்ட பிரச்சினைகள் இருக்கின்றது என்பது தெரியவரு வதில்லை” . . . "
இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் தான் எம்.பீ.எம். அஸ்ஹர் அவர்களைப் பணிப்பாளராகக் கொண்டு 1996.10.19ல் நவமணி எனும் பெயரில் முஸ்லிம்களின் தனித்துவத்தைப் பேண ஒரு தேசிய பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டது. இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் நவமணி' யைப் போல எந்தவொரு முஸ்லிம் பத்திரிகையும் தேசிய பரிமாணத்தை அடையவில்லை. ஜனரஞ்சகத் தன்மையை அடைய
இப்பத்திரிகை வெளிவரத் தொடங்கியதையடுத்து ஒவ்வொரு மூலை முடுக்குகளிலும் முஸ்லிம்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் அம்பலத்துக்கு வந்தன. முன்னெப்போதுமில்லாத அளவில் முஸ்லிம் சமூகத்தவர் மத்தியில் அரசியல் வழிப்புணர்வுகள் உணர்ச்சிபூர்வமாக வெளிப்படத்தொடங்கின. அன்று சித்திலெப்பை மூலம் பத்திரிகைத் துறையினூடாக முன்வைக்கப்பட்ட சமூக எழுச்சித் சிந்தனைகளை எம்.பீ.எம். அஸ்ஹர் அவர்கள் முன்னெடுத்துச் சென்றார் என்றால் இதை மிகைப்படுத்தப்பட்ட கருத்தாக கருதமுடியாது.
எம்.பீ.எம். அஸ்ஹர் அவர்கள் தான் கற்கும் காலத்தி லிருந்தே இலக்கியத்துறையில் ஈடுபாடு கொண்டிருந்தார். தனது பள்ளிப் பருவத்தில் தனது இலக்கிய ஈடுபாட்டுக்குக் காரண கர்த்தாவான தனது ஆசான் முக்தார். ஏ. முஹம்மது அவர்களை அன்புட்ன் நினைவு கூர்ந்து வரும் இவர் 1963ஆம் ஆண்டிலிருந்து பத்திரிகைகளுக்கும், வானொலிக்கும் சிறு சிறு ஆக்கங்களை எழுதிவந்தார். 1965-ம் ஆண்டில் மஜ்லிஸே இஸ்லாமி வெளியிட்ட புதுமைக்குரல் முஸ்லிம் இதழின் ஆசிரியர் குழுவில் இணைந்து

பத்திரிகையாளரானார். பின்பு 'புதுமைக்குரல்' ஆசிரியரானார். 1968ம் ஆண்டில் சுயாதீன பத்திரிகை சமாஜம் வெளியிட்ட தினபதி தின. சரியில் இணைந்து முழுநேர உழைக்கும் பத்திரிகையாளராக மாறினார். ..
பாராளுமன்ற செய்தியாளராக பணிபுரியும் பொறுப்பு:1969-ம்: ஆண்டிலே கிடைத்தது. 1974ம் ஆண்டில் தினபதி நிறுவனத்துக்கு. அப்போதைய அரசு சீல் வைத்தது. உடனே 'வீரகேசரி’ தினசரியில் இணைந்து தொடர்ந்தும் பாராளுமன்ற செய்தியாளராகப் பணிபுரிந்தார். தினபதியில் 'உள்ளும் புறமும்' என்ற தலைப்பில் பாராளுமன்ற "லொபி எழுதிவந்த அஸ்ஹர் வீரகேசரியில் பாராளுமன்ற பலகணி: என்ற தலைப்பில் 'லொபி எழுதிவந்தார். 1969 முதல் 1994வரை தொடர்ச்சியாக 25 ஆண்டுகள் பாராளுமன்றச் செய்தியாளராகப் பணிபுரிந்த ஒரே பத்திரிகையாளர் இவரே. · · · , ~
1985 முதல் 1998வரை எழுச்சிக்குரல் பத்திரிகையின் ஆசிரி யராகவும், முஸ்லிம்களால் வெளியிடப்பட்ட அல் இல்ம், ஷஸிக்வா, உதயம் ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியர் குழுவிலும் அவ்வப்போது கடமையாற்றியுள்ளார். ஒரு எழுத்தாளன் என்ற அடிப்படையில் இவரின் இரண்டு புத்தகங்கள் இதுவரை வெளிவந்துள்ளன. அவை
1. மாண்புறு ரமழானில் மனதுக்கினிய சிந்தனைகள் 2. உறுமும் கடலும், உலவும் நதியும்.
இவரது மூன்றாவது புத்தகமான "மெல்லக் கசிந்த கதைகள்' எனும் நூலினை சிந்தனைவட்டம் வெகுவிரைவில் வெளியிடவுள்ளது. தேசிய வாரப்பத்திரிகையொன்றின் முதலாவது முஸ்லிம் பணிப்பா ளரும், முதலாவது முஸ்லிம் பிரதம ஆசிரியருமான இவரின் சேவை களை மதித்து பின்வரும் அமைப்புக்கள் இவரை கெளரவித் துள்ளன.
1. 25வருட பத்திரிகையாளர் பணிக்காக 1992இல் முஸ்லிம் t சமய கலாசார விவகார ராஜாங்க அமைச்சு செளத்துல்
ஹக்" (சத்தியத்தின் குரல்) என்ற பட்டமளித்து கெளரவித்தது. 2. 25வருடகால பாராளுமன்ற செய்தியாளர் பணிக்காக
முஸ்லிம் சமய கலாசார ராஜாங்க அமைச்சு 1994இல் : விருது வழங்கி கெளரவித்தது. .
33

Page 19
10.
11.
12.
. 8 மே 2005இல் நடைபெற்றபோது ஊடகத்துறையில் ஆற்றிய
13.
அகில இன நல்லுறவு ஒன்றியம் 29-08-1999இல் இரத்தினபுரி
நகர மண்டபத்தில் நடந்த சமாறி பாராட்டு விழாவில் ‘சாமழரீ
சத்தியஜோதி" என்ற பட்டத்தை வழங்கி கெளரவித்தது.
மலையக கலை கலாசார ஒன்றியம் 23-12-2000ஆண்டு
ரத்னதிப' விருது வழங்கி கெளரவித்தது.
அகில இலங்கை அஷ்ரப் நினைவு அமைப்பு 15.02.2001இல்
அஷ்ரப் நினைவு விருதை கல்முனையில் வழங்கியது.
அகில இலங்கை முஸ்லிம் வாலிப முன்னணியின் அம்பாரை
மாவட்ட சம்மேளனம் அதன் 23வது வருட பூர்த்தியின் போது அதாவது 19-01-2003இல் "ஊடக ஜோதி” விருது
வழங்கி கெளரவித்தது.
இஸ்லாமிய ஆராய்ச்சி நிலைய தென்கிழக்கு ஆராய்ச்சி
போரம் 2003இல் விருது வழங்கி கெளரவித்தது.
ஹொலிபீல்ட் விளையாட்டுக்கழகம் இரு வைபவங்களில் விருது வழங்கி கெளரவித்துள்ளது. V−
வித்துவான் எம்.ஏ. ரஹ்மான் எழுத்துலக வேந்தர் என
பட்டம் ஆட்டி கெளரவித்துள்ளார். 2004இல் கற்பிட்டிய வாலிபர் சங்கம் இவரை கெளரவித்தது.
பூரீலங்கா முஸ்லிம் கலைஞர் முன்னணி 12 மார்ச் 2005இல்
‘ஊடகத் தளபதி என விருது வழங்கியது.
ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கொழும்பு மாவட்ட மாநாடு
பணிகளுக்காக 2005ஆம் ஆண்டின் சிறந்த பிரஜை" விருது வழங்கப்பட்டது.
2005 செப்டெம்பர் 11ஆம் ஆண்டில் சிந்தனைவட்டம் இவரின்
நான்கு தசாப்தங்களுக்கு மேற்பட்ட பத்திரிகைத்துறை சேவை யைக் கருத்திற் கொண்டு இதழியல் வித்தகர்' எனும் பட்டம் வழங்கி கெளரவித்தது. இந்த கெளரவ நிகழ்வு
சர்வதேச ரீதியில் தமிழ் தொலைக்காட்சிகள், இணையங்கள் என்பன ஒளிபரப்பின. -
-

14.
15.
16.
புத்தளத்தில் 2006 ஜூன் 4ம் திகதி அமைச்சர் ரிசாட் பதியு .
தினால் நடத்தப்பட்ட வடபுல முஸ்லிம் சான்றோரை வாழ்த்
திய விழாவிலும் விசேட கெளரவம் வழங்கப்பட்டு தங்க
நாணயம் பரிசளிக்கப்பட்டது.
ஊடகத்துறை சேவையை அங்கீகரித்து ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் முதலாம் திகதி ஜூலை 2006இல் விசேட விருது வழங்கியது.
ஹீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகர் மர்ஹாம் எம்.எச்.எம்.
அஷ்ரபின் பாராளுமன்ற உரைகள் வெளியீட்டு வைபவம் 16 செப்டெம்பர் 2006இல் நடைபெற்றபோது முஸ்லிம் காங்கிரஸை பிரபல்யப்படுத்த உதவியதற்காக விசேட விருது வழங்கப்பட்டது.
1976-01-17ւb திகதி ஸஹிதா உம்மாவைத் தனது வாழ்க்
கைத் துணைவியாக ஏற்றுக்கொண்டார். இத்தம்பதியினருக்கு முஹம் மது அப்ஸல், ஐனுல் சியானா, ஐனுல் மிப்ரா, பாத்திமா மிபாதா, பாத்திமா ஸஹற்ரா ஆகிய ஐந்து அன்புச் செல்வங்களும், இரண்டு பேரக் குழந்தைகளும் உளர். இவரின் அன்புப் பாரியார் ஸஹிதா 'உம்மா அவர்கள் 2004 டிசம்பர் இறுதியில் சுனாமி நடைபெற்று
சில தினங்களில் விபத்தொன்றில் சிக்குண்டு காலமானார்.
அல்ஹாஜ் எம்.பீ.எம். அஸ்ஹர் அவர்கள் மரணித்தாலும்
ஊடகத்துறையினூடாக அவர் ஆற்றி வந்த பணிகள் நிச்சயமாக நிலைத்திருக்கும்.
www.thesamnet.co.uk -29.08.2008
35

Page 20
அனுதாபச் செய்தி
மெளலவி முபாறக் அப்துல் மஜீத்
தலைவர். முஸ்லிம் உலமாக்கட்சி
நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் , அதன் பணிப்பாளருமான எம்.பி.எம். அஸ்ஹர் அவர்கள் முஸ்லிம் சமூகத்தின் மிகப்பெரிய தியாகி என்றே நாம் கருதுகின்றோம். அதிகாரத்துக்கோ, பணத் துக்கோ அடிமையாகாத தன்மானமுள்ள உண்மையின் பக்கம் சார்ந்து நிற்கும் பத்திரிகையாளராக அவர் இறுதிவரை வாழ்ந்தார்.
அவர் மரணித்த அன்று இரவு எம்மோடு பேசும்போது, முஸ்லிம் சமூகத்தின் சுதந்திர ஊடகம் பற்றிய தனது கவலையையே குறிப்பிட் டார். உலமா கட்சியின் வளர்ச்சியில் அவருக்கும், நவமணிக்கும் நிறைய பங்குண்டு. அவருக்கு பொற்கிழி வழங்கி இறுதியாக கெளரவித்தது உலமா கட்சியே என்பது எமக்கு திருப்தியை தந்தா லும் அவரது மறைவு கண்ணீரை தருகின்றது. உள்ளம் அழுகின்றது. கண்கள் கண்ணிரை சொரிகின்றன. ஆனாலும் இறைநாட்டத்தை நாம் ஏற்றுக்கொண்டு அவருக்காக நாம் பிராத்திக்கின்றோம்.
அனுதாபச் செய்தி
கவிஞர் அன்புடீன் தவிசாளர்-ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியம்
இலங்கையின் ஊடக வளர்ச்சியில் முஸ்லிம்களின் பங்கு என்று ஆராயும்போது அறிஞர் சித்திலெப்பைக்கு பிறகு உரத்துப் பேசப்படக்கூடியவர் எம்.பி.எம். அஸ்ஹர் ஆவார். அவர் முஸ்லிம் சமூக நலனை முன்னெடுப்பாகக்கொண்ட தேசிய தினப்பத்திரிகை ஒன்றை வெளியிடவேண்டும் என்னும் தணியாத தாகத்தோடு செயற்பட்டவர். அதற்கான முதற்கட்ட நகள்வாகவே அவர் நவமணியை வெளிக்கொணர்ந்தார்.அவருடைய கனவுகளை அவர் சார்ந்திருந்த சமூகம் முற்றுமுழுதாக செயற்படுத்த முனையவில்லை என்ற குறை அவருக்குள் இருந்ததை அவரை நன்கு புரிந்து கொண்டவர்கள் அறிவார்கள். ஒரு சமூகத்தின் எழுச்சிக்கு பத்திரிகைகளின் பங்களிப்பு எவ்வளவு முக்கியமானது என்பதை அவள் புரிந்துகொண்டதால்தான் கைநிறைய் வருமானம் தந்த பத்திரிகை பணிகளையெல்லாம் விட்டு விட்டு சுயமாக சமூக நலன் சார்ந்த பத்திரிகை வெளியீட்டில் 'பங்காற்றினார். · · · · .
36

பேனா மன்னர் பற்றி பேசும் பேனாக்கள் மர்ஹம் எம்.பி.எம். அஸ்ஹர்
எனது நினைவுப் பேழையிலிருந்து.
என்.எம். அமீன், தலைவர், முஸ்லிம் மீடியா போரம்
நான் களனி பல்கலைக்கழகத்தின் மாணவராக இருக்கும் போது வீரகேசரியில் பணி புரிந்த சகோதரர் எம்.பி.எம். அஸ்ஹரை முதன் முறையாக சந்தித்த நினைவு: என் நினைவுக்கு வருகின்றது.
1975ம் ஆண்டு நான் அனைத்துப் பல்கலைக்கழக முஸ் லிம் மஜ்லிஸின் தலைவராக இருந்தேன். அக்காலத்தில் பல் கலைக்கழகங்களில் தமிழ் மூலம் போதனை மட்டுப்படுத்தப் பட்டிருந்தது. களனி பல்கலைக்கழகத்துக்கு நாம் அனுமதிக் கப்பட்டிருந்தபோதும் போதிய வசதிகள் இல்லாமை காரணமாக நாம் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தோம். இது தொடர்பான செய்தி ஒன்றை சகோதரர் அஸ்ஹரிடம் கொடுத்து விட்டு வந் தேன். அடுத்த தினம் சகோதரர் அஸ்ஹரின் பெயரில் அது வீரகேசரியில் முதற்பக்கத் தலைப்புச் செய்தியாக இருந்தது. “அனைத்து வளாகங்களிலும் தமிழில் போதனை வேண்டும். ஆங்கிலத்தையும் நீடிக்கவும்- சர்வவளாக மஜ்லிஸ் கோரிக்கை” என்ற தலைப்பிலே அது வெளிவந்திருந்தது. -
சகோதரர் எம்.பி.எம். அஸ்ஹருடனான தொடர்பு இது முதல் மலரத் தொடங்கியது. 1977ம் ஆண்டு நான் எனது பட்டப்படிப்பினை முடித்து ஆகஸ்டில் தினகரனில் பயிற்சிப் பத்திரிகையாளராக இணைந்தேன். 1977 டிசம்பர் 12ம் திகதி, அப்போதைய தினகரன் ஆசிரியர் ஆர். சிவகுருநாதன் என்னை பாராளுமன்றத்திற்கு செய்தி திரட்டுவதற்கு அனுப்பி வைத்தார். பத்திரிகைத்துறைக்கு புதியவனான எனக்கு பாராளுமன்றப் பணி ஒரு சவாலாகவே இருந்தது. அங்கு தான் மீண்டும் சகோதரர் அஸ்ஹரைச் சந்திக்கின்றேன். இவருடன் வீரகேசரி சார்பில் காலஞ் சென்ற தியாகராஜாவும் இருந்தார். அனுபவமிகு இந்த இரு பத்திரிகையாளர்களும் பயிலுனரான எனக்கு பல வகையில்
37

Page 21
வழிகாட்டினார்கள். அன்றுடன் அஸ்ஹர் அவர்களுக்கும் எனக்கு மான தொடர்பு வளரத் தொடங்கியது. காலிமுகத்திடலின் பழைய பாராளுமன்றத்தில் ஆரம்பமான இத்தொடர்பு 31 வருடங்களாக நீடித்தது. பாராளுமன்றச் செய்தியாளர்களாக இருந்த இரு முஸ் லிம்கள். நானும் அஸ்ஹரும். இதனால் எமக்கிடையிலான உறவு நாளுக்கு நாள் வளரத்தொடங்கியது. இக்காலகட்டத்தில் பாராளு மன்றத்தின் சபாநாயகராக அல்ஹாஜ் எம்.ஏ. பாக்கிள் மாக்கார் தெரிவு செய்யப்பட்டார்.
அவரது அந்தரங்கச் செயலாளராக அல்ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வர் பதவியேற்றார். எமது செய்தி திரட்டும் பணிக்கு இடை வேளை கிடைக்கும்போது நாம் சபாநாயகரது பணிமன்ைக்குச் சென்று பல விடயங்கள் பற்றி உரையாடுவோம். அங்கிருந்து பல தகவல்கள் எங்களுக்கு கிடைக்கும். அவற்றை நானும் சகோதரர் அஸ்ஹரும் எமது பத்திரிகைகளுக்கு எழுதுவோம். இக்காலத்திலே சபாநாயகர் பாக்கிர் மாக்கார் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனத்தை நாட ளாவிய ரீதியில் அமைக்கும் பணியினை ஆரம்பித்தார். அதன் நிர்வாகச் செயலாளராக நான் பணி புரிந்தேன்.
பாராளுமன்றத்தில் எம்மிருவருக்குமிடையில் ஏற்பட்ட உறவின் காரணமாக அஸ்ஹர் அவர்கள் முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளை அமைக்கும் பணிக்கு உதவினார். சபாநாயகள் பாக்கிர் மாக்கார் ஒவ்வொரு வார இறுதியிலும் முஸ்லிம் கிராமங் களுக்கு விஜயம் செய்வார். அவருடன் நாமும் இணைந்து கொள்வோம். அடுத்தநாள் அந்தக் கிராமங்களது நிலைபற்றி பத்திரிகைகளுக்கு எழுதுவோம். நாட்டின் கூடுதலான முஸ்லிம் கிராமங்களுக்கு சென்ற ஒரு முஸ்லிம் தலைவராக மர்ஹம் பாக்கிர் மாக்கார் திகழ்கிறார். இந்தக் கிராமங்களின் நிலை பற்றி அஸ்ஹர் அவர்கள் வீரகேசரியில் நிறைய எழுதியுள்ளார்.
1980களில் மும்முரமாக இருந்த வடக்கு, கிழக்கு பிரச்சினையின்போது முஸ்லிம்களது நிலைப்பாட்டினைச் சொல்வ தற்கு முஸ்லிம்களது கட்டுப்பாட்டில் ஊடகங்கள் இருக்க வேண்டு மென்ற தேவை மும்முரமாக உணரப்பட்டது. 1983ல் அப்போது அல்ஹாஜ் அஸ்ஹரை ஆசிரியராகக்கொண்டு "எழுச்சிக்குரல் பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டது. முன்னாள் ஜமாத்தே இஸ்லாமி யின் தலைவர் மர்ஹம் யூஸ்"ப் ஹாஜியார் மற்றும் இக்பால் ஹோட்டல் உரிமையாளர் அபூபக்கர் ஸாஹிப் அவர்களும் இந்த முயற்சிக்கு துணையாய் இருந்தனர்.
38 .

முஸ்லிம்களது கட்டுப்பாட்டில் ஊடகம் இருக்க வேண்டு மென்ற தேவையை வலியுறுத்தி எழுச்சிக்குரல் முதல் இதழில் நான் கட்டுரை ஒன்றை எழுதினேன். அஸ்ஹர் அவர்கள் இப் பத்திரிகை மூலம் முஸ்லிம்களது பிரச்சினைகளை வெளிக் கொணர்ந்தார். இக்காலகட்டத்தில் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனத்தினால் 'உதயம்' என்ற பத்திரிகை வெளியிடப்பட்டது. சுமார் எட்டு வருட காலமாக நீடித்த இப்பத்திரிகையின் ஆசிரியர் பீடத்திலும் அல்ஹாஜ் அஸ் ஹர் பங்களிப்புச் செய்தார்.
முஸ்லிம் ஊடகவியலாளர்களது அமைப்பு ஒன்றினை, உருவாக்கும் முயற்சியில் அல்ஹாஜ் அஸ்ஹரின் பங்களிப்பு முக்கியமானது. இவ்வாறான ஓர் அமைப்பினை உருவாக்க வேண்டுமென்ற யோசனையை இவருடன் நான் முதலில் பகிர்ந்து கொண்டபோது அதற்கு எனக்கு உந்துசக்தியாக இருந்தார். 1985ல் முதன் முறையாக முஸ்லிம் மீடியா அலயன்சினை உருவாக்கியபோது அதன் செயற்குழுவில் இடம்பெற்றார். அப்போ தைய நாட்டின் சூழல் காரணமாக சிறிது காலத்தின் பின் இந்த அமைப்பு இயங்கவில்லை. மீண்டும் 1995ம் ஆண்டு முஸ்லிம் மீடியா போரம் உருவாக்கப்பட்டபோது அதன் ஸ்தாபகப் பொருளா ளராக நியமிக்கப்பட்டார். பதவிகளை நாடிச் செல்லாத அஸ்ஹர் அவர்கள், முஸ்லிம் மீடியா போரத்தின் 13 வருடகால வளர்ச்சி யில் முக்கிய பங்களிப்புச் செய்தார். இளைய தலைமுறையின ருக்கு ஊடகத்தை அறிமுகப்படுத்த வேண்டும். சமூகத்தில் கூடுத லான ஊடகவியலாளர்களை உருவாக்க வேண்டும் என்ற உணர் வுடன் உழைத்தார். முஸ்லிம் மீடியா போரம் நடத்திய முப்பதுக்கு மேற்பட்ட பாடசாலைக் கருத்தரங்குகளில், 20க்கும் மேற்பட்ட ஊடகக் கருத்தரங்குகளில் அநேகமானவற்றில் பிரதான பேச்சாள ராக இருந்தார். ... ."
ஊடகத்துறைக்கு வரும் புதியவர்களை துறையிலுள்ள சிரேஷ்டமானவர்கள் சிலர் சவாலாகப் பார்ப்பதுண்டு. வழிகாட்டு வதற்கு தயங்குவார்கள். அஸ்ஹரைப் பொறுத்தவரை இதில் முற்றும் மாற்றமானவர். சில தினங்களுக்கு முன் கனடாவிலிருந்து என்னுடன் பேசிய பிரபல பத்திரிகையாளர் டி.பி.எஸ். ஜெயராஜ் இதனை நினைவுபடுத்தி வீரகேசரிக்கு தான் இணைந்தபோது தனக்கு சகோதரர் அஸ்ஹர் உதவிய முறைகளை நன்றியுடன் நினைவு கூறினார்.
39

Page 22
சகோதரர் அஸ்ஹர் தீவிர சமயப்பற்று மிக்கவர். பூரீ ஜயவர்தனபுர புதிய பாராளுமன்றத்தின் ஆரம்ப காலத்தில் ஜும்ஆ கடமையை நிறைவேற்றச் செல்வதற்கு நாம் பெரும் சிரமப்பட்டோம். பாராளுமன்றத்தில் ஒரு சில முஸ்லிம்களே அப்போது வேலை செய்தார்கள். பாராளுமன்றத்தின் முன்னாள் வந்து காத்திருப்போம். நாவலைப் பள்ளிக்குச் செல்ல வேண்டும். கைக்கடிகாரத்தைப் பார்த்த வண்ணம் நான் இருக்கும்போது சகோதரர் அஸ்ஹர் அவர்கள் எங்கள் நோக்கம் புனிதமானது. யாராவது வருவார்கள் என்று ஆறுதல் கூறுவார். அநேகமான சந்தர்ப்பங்களில் மாற்றினச் சகோதரர்கள் வந்து வாகனத்தை நிறுத்தி எம்மை பள்ளிவாசலுக்கருகே விட்டுச் செல்வார்கள்.
தினபதி மூலம் பத்திரிகை உலகுக்குப் பிரவேசித்த இவர் தினபதி, வீரகேசரி பத்திரிகைகளின் பாராளுமன்றச் செய்தி யாளராக 25 வருடங்களுக்கு மேல் பணிபுரிந்துள்ளார். தொடர்ச் சியாக 25 வருடங்கள் பாராளுமன்ற செய்தியாளராக யாரும் பணி புரிந்ததாக நான் அறியவில்லை. நான் தினகரனின் பாராளு மன்றச் செய்தியாளராக சுமார் 23 வருடங்கள் பணி புரிந்துள்ளேன். அக்காலத்தில் தொடர்ச்சியாக வந்த ஒருவராக அல்ஹாஜ் அஸ்ஹர் மட்டுமே இருந்தார். இதற்காக முஸ்லிம் சமய, கலாசார அமைச்சர் அல்ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வரின் ஏற்பாட்டில் 1994ல் இவருக்கு விசேட அரச கெளரவம் வழங்கப்பட்டது. இந்த அரச கெளரவத்தைப் பெற்றதோடு நின்று விடாது, பல அமைப்புக்கள் குறிப்பாக தமிழ் அமைப்புக்கள் இவரை கெளரவித்துள்ளன. இவருக்கு தமிழ் - முஸ்லிம் மக்கள் மத்தியிலுள்ள மதிப்புக்கு இது சிறந்த உதாரணமாகும். 1992ம் ஆண்டு முஸ்லிம் சமய, கலாசார அமைச்சு நடாத்திய முதலாவது ‘வாழ்வோரை வாழ்த்துவோம்’ விழாவில் இவர் "செளதுல் ஹக் (சத்தியக் குரல்) என்று பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டார். இவள் ஊடக ஜோதி, எழுத்துலக வேந்தர், சிறந்த பிரஜை, இதழியல் வித்தகள், சாமறி சத்யஜோதி, ரத்னதீபம் போன்ற பட்டங்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
முஸ்லிம்களது கட்டுப்பாட்டில் தேசிய ஊடகங்கள் இருக்க வேண்டுமென்ற இலட்சியத்துக்காக தன்னை அர்ப்பணித்தார். பல தடைகள், சவால்களுக்கு மத்தியில் நவமணியை ஒருவாரப் பத்திரிகையாக மட்டுமன்றி, வாரநடுப் பத்திரிகையாகவும் நடாத்தினார். . . . . .
40

அவரது கையெழுத்து மிக அழகானது. அதேபோன்று அவர் சொல்ல முற்படும் கருத்துக்களை அழகாகப் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் சொல்லும் ஆற்றல் அவருக்கிருந்தது.
கடைசியாக நான் அவரை நவமணி அலுவலகத்தில் சந்தித்தபோது, எஸ்.எம். கமால்தீனின் மறைவு பற்றிப் பேசினோம்.
கமால்தீன் மற்றும் அஸ்ஹர் ஹாஜியார் போன்றவர்கள் முதலாவது வாழ்வோரை வாழ்த்துவோம் விழாவில் கெளரவிக் கப்பட்டவர்கள். கமால்தீன் பற்றி வானொலி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொள்வதற்காக வாழ்வோரை வாழ்த்துவோம் முதலாவது நினைவு மலர் உங்களிடம் இருக்கின்றதா? என்று வினவ முதல், உங்கள் விபரங்கள் அடங்கிய மலர் இருக்கின்றதா என்றுதான் கேட்டேன்.
'பாருங்களேன் புத்தகத்தைக் காணவில்லையே. இது போன்ற ஆவணங்கள் பேணிப் பாதுகாக்கப்படுவது அவசியமி' என்றார். அஸ்ஹர் ஹாஜியார் பற்றிய குறிப்புக்களை தேடுவதற்கு, அந்த மலரைப் படிப்பதற்கு எம்மை தள்ளிவிட்டு அடுத்தநாளே இவர் எம்மைவிட்டுப் பிரிந்து விட்டாரே என்பதனை நினைக்கும் போது கவலையையே தருகின்றது. . . . .
அறுபத்தியொரு வயதில் அவர் எம்மை விட்டுப் பிரிந்தார்.
நாடும் சமூகமும் அவரால் நிறைந்த சேவையைப் பெறவிருக்கும், நேரத்தில் அவரது மறைவு பேரிழப்பு "ஜென்னத் துல் பிர்தெளஸ்' எனும் சுவர்க்கம் கிடைப்பதற்கு இப்புனித ரமழானில் பிரார்த்திப்போமாக!
41

Page 23
அனுதாபச் செய்தி மக்கள் காதர் தலைவர். மன்னார் புலம்பெயர்ந்தோர் நலன்புரிச்சங்கம்
நவமணி பிரதம ஆசிரியர் அல்ஹாஜ் அஸ்ஹர் அவர்கள். காலமான செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். பத்திரிகையுலகின் ஜாம்ப வான் அஸ்ஹர் எம்மை விட்டும் மறைந்தது பத்திரிகை உலகிற்கு பேரிழப்பாகும். ஆளுமையும் துணிவும் தன்னம்பிக்கையும், சளைக்காத எழுத் தாற்றலும் நிறைந்த அஸ்ஹரின் எழுத்துக்கள் காலத்தால் அழியாத பொக்கிஷங்களாகும். 1990ல் வடக்கு முஸ்லிம்களின் இடம் பெயர்வுக்குப் பின்னர் சோம்பியிருந்த என்னை மீண்டும் எழுதத் துாண்டி நவமணியில் களம் அமைத்துக் கொடுத்தவர் அவர். அவரது பிரிவுத்துயரால் வாடும் குடும்பத் தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
அனுதாபச் செய்தி
ஆர்.எம். இமாம் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்.
இலங்கை வாழ் இஸ்லாமிய சமூகத்தின் எழுச்சிக் குரலாக விளங்கிய முஸ்லிம் ஊடகத் துறையின் முன்னோடி எம்.பி.எம். அஸ்ஹர் ஹாஜி யாரின் இழப்பு எங்கள் இதயங்களில் பேரிடியாக விழுந்தது. நவமணி பத்திரிகையை தொடர்ந்து 12 வருடங்களாக வெற்றிகரமாக நடத்தி ஊடகத் துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்திய அஸ்ஹர் ஹாஜியார் அவர்கள் எழுச்சிக்குரல், புதுமைக் குரல் போன்ற பத்திரிகைகள் மூலமும் சமுதாய நலனுக்காகத் தன்னை அர்ப்பணித்தவராவர்.
அவர் வட மாகாண முஸ்லிம்களின் அரசியல் அபிலாஷைகள், கிழக்கு மாகாண முஸ்லிம்களின் அரசியல் அபிலாஷைகளிலிருந்தும் வேறுபட்டதாகும். வட மாகாண முஸ்லிம்கள் எப்போதும் வடபகுதியிலுள்ள பெரும்பான்மை தமிழ் மக்களுடன் நெருக்க மான உறவுகளையும், புரிந்துணர்வையும் வளர்த்துக்கொள்வதன் மூலமே அவர்களது உரிமைகளை வென்றெடுக்க முடியும் எனக் குறிப்பிடுவார். மேலும், யாழ்ப்பாண முஸ்லிம்களின் பிரச்சினைகள், செய்திகள் என்பவற்றுக்கு அவர் முக்கியத்துவம் கொடுத்து பிரசுரிக்கும் அவரது பண்பு என்றும் என்னால் மறக்க முடியாதது.
42

அனுதாபச் செய்தி
காத்தான்குடி மீடியா போரம்
மூத்த ஊடகவியலாளர் மர்ஹம் அல்ஹாஜ் அஸ்ஹர் நாடறிந்த எழுத்தாளர், பத்திரிகையாளர் அன்னார் சமூக, சமய சிந்தனைவாதி. தான் சார்ந்த சமூகத்துக் கும், சமயத்துக்கும் பங்கம் ஏற்படும்போது உலகுக்கு உரத்துக் குரல் கொடுத்தவர். தைரியமாக எதையும் சொல்லக் கூடியவர். எமது காத்தான்குடி மீடியா போர அங்கத்தவர்கள் அவரின் ஊடக பயிற்சிப் பாசறையில் வளர்ந்தவர்கள். அமைதியான சுபாவம், தனக்கென ஒரு அமைதிவழி, சமூகம், சமூகம் என்றே தன்னுடைய பணியை மேற்கொண்ட ஒரு மாமனிதர். ,
அவருடைய ஊடகப் பணியில் சமூகத்துக்கு ஒரு தனியான ஊடகம், தனியான ஓர் அரசியல் கட்சி தேவை என்று உரத்த குரலில் சொன்ன மாமேதைதான் சிரேஷ்ட ஊடக வியலாளர் மாஹ"ம் அல்ஹாஜ் எம்.பி.எம். அஸ்ஹர். அவரின் அந்தக் கனவுகள் நனவாகிக் கொண்டு வருகின்ற வேளையில் மரணம் அவரைத் தழுவிக் கொண்டது.
அனுதாபச் செய்தி
கலாநிதி யூசுப் கே. மரைக்கார் தலைவர்-"உம்மா' கட்சி
நவமணி உருவான நாள் முதல் தனது உயிர் பிரியும் வரை, நவமணி தான் தனது பேச்சு, மூச்சு, எண்ணம், எழுத்து என்று வாழ்ந்தவர்தான் மர்ஹம் , அஸ்ஹர். நவமணி யில் கடைசியாக அவர், ஆசிரியத் தலையங்கம் முதல் கொண்டு, அரங்கத்துக்குள் அந்தரங்கம் ஈறாக அனைத்து வேலைகளையும் கச்சிதமாக முடித்துவிட்டுக் கண்ணயர்ந்த வேளையில்தான் அன்னாரது ஆவியும் பிரிந்திருக்கிறது. எனவே, மர்ஹம் அஸ்ஹர் தனது உடல் பொருள், ஆவி இவை மூன்றையும் பத்திரிகைத்துறைக்காகவே அர்ப்பணித்தவர் என்று துணிந்து கூறலாம்:
பழக இனியவர், பண்பாளர், எதனையும் திட்டமிட்டுச் செயல்படுத்துவதில் சமர்த்தர், தீர்க்க தரிசனப்பார்வை கொண்டவர். அரசியல் எதிர்வு கூறல்களில் வல்லவர். சமூக நலம் - விஷேடமாக முஸ்லிம் சமூக நலன் பேணுவதில் மிகுந்த அக்கறை செலுத்தி வந்தவர். முஸ்லிம்களது எதிர்காலம், அவர்களது எழுச்சி ஏற்றம், இறக்கம் ஆகியவற்றில் அதீத அக்கறை செலுத்தி வந்தவர். முஸ்லிம்களது ஆதிக்கத்தில் ஒரு தேசிய தமிழ் தினசரி வெளிவர வேண்டும் என்ற விடயத்தில் விடாப்பிடியான கொள்கை உடையவராக அஸ்ஹர் திகழ்ந்தார். அதன் பொருட்டு, தனது முழு உழைப்பையும் வழங்கச் சித்தமாயிருந்தார். அதற்கு முன்னர் . அந்தக் கனவு நனவாக முன்னர் அவரது ஆவி பிரிந்தது துரதிஷ்டவசமானது. அத் தோடு பத்திரிகையுலகுக்கும், முஸ்லிம் சமுதாயத் திற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். மர்ஹம் அஸ்ஹர் ஜேர்னலிஸ்ட் மாமேதை எனில், அதில் இரண்டாம் பேச்சுக்கே இடமில்லை. அவரது இடத்தை
நிரப்புவது கடினம் என்பதே என் கருத்து.
43

Page 24
அனுதாபச் செய்தி
புத்தளம் நவமணி வாசகள் வட்டம்
2001ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 9ம் திகதி புத்தளம் நவமணி வாசகர் வட்டம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டாலும் நவமணி வெளிவரும் காலம்தொட்டே நவமணி வாசகர்கள் புத்தளத்தில் ஆயிர மாயிரம் காணப்பட்டனர். .
புத்தளம் நவமணி செய்தியாளர்கள் மற்றும் நவமணி எழுத்தாளர் களின் குடும்ப நண்பராக மர்ஹும் அஸ்ஹர் ஹாஜியார் செயற்பட்டார். கட்டுரை, கவிதை, செய்தி என்று பேனா பிடிப்பவர்களுக்கு நல்ல பல வழிகாட்டல்களை வழங்கி, அனைவரையும் மீடியாவுடன் இணைத துக்கொண்டார். ஏன் புத்தளம் படப்பிடிப்பாளர்களைக்கூட அஸ்ஹர் ஹாஜியார் கைவிடவில்லை. புத்தளம் மாவட்டத்தில் வயது, மதம்" என்று பாகுபாடின்றி தனக்கென்று ஒரு வாசகள் வட்டத்தை ஏற்படுத் தியிருந்தார். நவமணி வாசகர் வட்ட விழா புத்தளம் அரசியல் பிர முகர்கள் கட்சி, புத்தளம் பிரதேச மக்களின் குரலை நாட்டுக்கு தெரியப்படுத்திய முதன்மை பத்திரிகை என்றால் அது நவமணியே. அதில் மிகப் பெரிய பங்களிப்பு மர் ஹம் அஸ் ஹர் ஹாஜியாருடையதே. கல்வி, கட்டுரை, பொருளாதார, அரசியல் விடிவுக்காக காத்திருக்கும் புத்தளம் மக்களின் தேவைகளை நவமணியூடாக உலகறியச் செய்த நவமணி ஆசிரியர் அஸ்ஹர் ஹாஜியாரை புத்தளம் மக்கள் என்றும் மறக்க மாட்டார்கள்.
அனுதாபச் செய்தி
ஊவா முஸ்லிம் மீடியா போரம்
நிறைந்த அனுபவமும், சிறந்த திறனும், நடுநிலைவாதியும், பேனா துாக்கிய சீரிய போராளியுமான அஸ்ஹர் ஹாஜியாரின் எதிர்பாராத திடீர்பிரிவுச் சோகச்சேதியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், பெரும் கவலையும் அடைந்தோம். ஊடகவியலாளருக்கு தனிப்பெரும் முன்மாதிரியாகத் திகழ்ந்தவர். இளையவர்கள் முதல் பலரையும் பல்துறைகளில் ஊக்கம், உற்சாகம் அளித்து விற்பன்னர்களாகத் திகழச் செய்தவர். ஊடகத்துறையில் அவரது திருநாமம் என்றென்றும் பொன்னெழுத்துக்களால் பொறிக் கப்பட்டு நின்று நிலைத்திருக்கும் என்றால் அது மிகையாகாது. அவர்தம் பிரிவு எல்லோருக்குமே குறிப்பாக முஸ்லிம்களுக்கும், முஸ்லிம் ஊடகத்துறைக்கும் நிரப்ப முடியாத மாபெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியிருக்கும் ஒரு (SLIfLDLILITöli. . . ... 1

அறங்காத்த பண்பாளர் அஸ்ஹர் - மஸிதா புன்னியாமீன்
அஸ்ஹர் ஹாஜியார் ஒரு முத்தானார் நவமணிக்கோ அரும்பெரும் சொத்தானார்
இதழியலில் அவர் கடும் பித்தானார்
நினைவுகளில் அழியாத வித்தானார்.
சமுதாயம் அவலமென தினமும் கத்தும் சுயம் கலந்த ஜீவிகளின் மாறும் சித்தம் சுமுகமாய்த் தெளிந்து எழுச்சிபெற நித்தம் குரல் கொடுத்தார் அதில் அவர் வாக்கு சுத்தம்
சோனகர் தம் மனநிலையை மெல்வதற்கு ஊடகமொன்றில்லை உலகை வெல்வதற்கு ஆதங்கம் இவர் நெஞ்சில் அகல்வதற்கு வழியமைத்தார் ‘நவமணி’ பேர் சொல்வதற்கு
தலையிலே எக்கனமும் எக்கணமும் இல்லை தயவினிலே எக்குறையும் எவர் கண்டதுமில்லை தரணியிலே அவர் பணிக்கு ஈடென்பதில்லை தனித்துவமாய் இயங்கிய அவரின்று இல்லை
அரங்கத்துள் அந்தரங்கமாகி - உலக அரங்கத்தை விட்டே சுவனமேகி அறங்காத்த பண்பு நிரந்தரமாகி - அவர் பிழை பொறுக்க யாசிப்போம் மறையை ஒதி
45

Page 25
நானிலந்தனிலே நாமம் வாழும்! நவமணி நாயகனே! கிண்ணியா ஏ.ஏ. அப்துல் ஸலாம் "ஊடக ஜோதி”இன்று உலகினில் அணைந்ததம்மா! “எழுத்துலக வேந்தர்!" ஹாஜி எம்.பி.எம். அஸ்ஹர் மெளத்தாம் ! நம்பவே முடியவில்லை ! நமக்கெல்லாம் சோகமம்மா
*ஊடகத் தளபதி” என்று உலகினில் வாழந்து மறைந்தார்! “சிறந்ததோர் பிரஜை" யாக சீரான விருதைப் பெற்றார்! இதழியல் - வித்தகர் அஸ்ஹர் இழந்திட்டோம்! இனிய மனிதர்!
சாமழரீ சத்ய ஜோதி என்று சூடிய பட்டங்கள் பலவுமுண்டு தினபதி, வீரகேசரி யினது தனித்துவப் பத்திரிகையாளர்
எழுச்சிக் குரல் பத்திரிகையினதும் ஏற்றம் மிகு பத்திரிகையாளர்
புதுமைக் குரல்’ ஆசிரியராகி
புதுமைகள் படைத்து நின்றார்!
அமைதியே உருவாய்க் கொண்ட, அருமையான மனிதர்! அஸ்ஹர்!
ஆண்டுகள் நாற்பத்தாறாய்,
அச்சு ஊடகப் பணிகள் செய்தார்!
“பத்திரிகைப் பணிப்பாளர் பதவி பிரதம ஆசிரியர்” என்றிரண்டிலும், “முதலாவது முஸ்லிம்” எனுமோர், முத்திரை பதித்து நின்றார் பாராளுமன்றந் தனிலே இரு . . . . பத்தைந்தாண்டு கால செய்தியாளர்
46

பூரீ லங்கா மீடியா போரத்தின் சிறந்ததோர் ஸ்தாபக பொருளாளரானார்! ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணுத்தெட்டிலே ஆசிரியராய் நவமணிக்கு அணி செய்தார்! பிரதம ஆசிரியர் பத்திரிகையாளராகி பாங்குடனே சமுதாயப் பணி செய்தார்
உறுமும் கடலும், உலவும் நதியும் இவரின் எழுத்தைப் பறையும் சாற்றும்!
மாண்புறு ரமழான் மாதந்தனிலே,
மனதுக்கினிய சிந்தனைகள் செய்தார்!
இவ்விரு நூலிலும், இவரின் எழுத்து
இணையிலா இலக்கிய அணிகலனாமோ!
கவிஞராய், எழுத்தாளராய் மாறிட, களமொன்றை பலருக்கு அளித்திட்ட பண்பாளர் எத்தனையோ பேருக்கு “அஞ்சலிக் கவிகளை” ஏற்றமிகு நவமணியிலே பிரசுரித்தார்!
இத்தனைக்கும் மத்தியிலே, இன்றவனோ, இதழான நவமணியில் நினைவுக் கவியால் நிறைந்திட்டார்!
எத்தனையோ மானிடரின் நினைவலைகளில்,
எம்.பீ.எம். அஸ்ஹர் ஹாஜி நிறைந்து வாழ்வார் ! இத்தரையில் பிறந்தோர்கள் இறப்பதுண்மை! இதனாலே, இழந்திட்ட இவருக்காய் துஆச் செய்வோம்! “இறையோனே அன்னாரின் பிழைகளை பொறுத்தருள்வாய்!
இனிய சுவர்க்கம் ஜன்னத்துல் பிர்தெளஸ் சேர்த்திடுவாய்! ஆமீன்
47

Page 26
அமெரிக்கா தூதுவர் அனுதாபம்
- ரொபர்ட் பிளேக்
இலங்கையில் தமிழ்மொழியில் ஊடகத்து றைக்கு அளப்பரிய சேவைகளைச் செய்த நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எம்.பீ.எம். அஸ்ஹரின் மரணம் தனக்கு ஆழ்ந்த துயரை அளித்துள்ளதாக இலங் கைக்கான அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் பிளேக் தெரிவித்துள்ளார்.
நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியரின் மரணம் குறித்து வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியிலே அமெரிக்கத் தூதுவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அச்செய்தியில் மேலும் குறிப்பிட்டப்பட்டுள்ள தாவது:- .
துணிச்சல் மிக்க நவமணி வார இதழ் மூல மாக அல்ஹாஜ் எம்.பி.எம். அஸ்ஹர் தமிழ் பேசும் மக்களுக்கு மகத்தான சேவைகளை செய்துள்ளார். அதேநேரம், சகவாழ்வு மற்றும் ஏனைய சமூகங்களுடன் ஒன்றிணைந்து வாழ் தல் தொடர்பாக முஸ்லிம்களின் நிலைப்பாடு களுக்கு அவர் தனது பத்திரிகை மூலம் முன்னுரிமையளித்தார். அமெரிக்க தூதரகத் தில் உள்ள எனது சகாக்கள் சார்பாகவும் ஆழ்ந்த அனுதாபத்தை அல்ஹாஜ் எம்.பி.எம். அஸ்ஹரின் குடும்பத்தினருக்கும். நண்பர் களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.
48

முன்மாதிரி மிகு பத்திரிகையாளர்
- நஜீப் அப்துல் மஜீத
கூட்டுறவுத்துறை அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினரும்.
“நவமணி” ஆசிரியர் அல்ஹாஜ் எம்.பி.எம். அஸ்ஹரின் திடீர் மறைவு என்னை அதிர்ச்சிக்குள்ளாக் கியுள்ளது.
“தோன்றிற் புகழோடு தோன்றுக” என்ற வாக்குக்கு ஒப்ப புகழ் பூத்த பெருமனிதராக, சிறந்த ஊடகவியலாளராக பரிணமித்தார். மூத்த முஸ்லிம் பத்திரிகையாளரான மர்ஹம் அஸ்ஹர் ஹாஜியார் ஊடகத்துறையில் தனது சிறப்பாற்றலை வெளிக் காட்டி அனைவரையும் கவர்ந்தார்.
சொல்ல வேண்டிய விடயங்களை அச்சொட் டாகச் சொல்லி, எழுத்துத்துறையில் முன்மாதிரியாக விளங்கினார். கட்சி பேதங்களுக்கு அப்பால் நடுநிலை நின்று விடயங்களை பாரபட்சமின்றி வெளிக்கொ ணர்ந்து உண்மையை மறைக்காத துணிச்சல் மிக்க பத்திரிகையாளராக செயற்பட்டவர் மர்ஹ"ம் அஸ்ஹர்,
சமூகம் நலம்பெற அவர் தனது ஆற்றலையும், அறிவையும் பயன்படுத்தினார். இவரின் ஊடக பாசறை
யில் வளர்ந்தவர்கள் இன்று பல்வேறு ஊடகங்களிலும்
சிறப்பாக திகழ்கிறார்கள். நவமணி பத்திரிகையை
மிளிரச் செய்வதற்கு இவரது உழைப்பு பெரிதும் Lju6irLJIL-gil.
49

Page 27
முஸ்லிம் கலைஞர் முன்னணி
சிரேஸ்ட ஊடகவியலாளரும், நவமணி வார இதழின் பிரதம ஆசிரியருமான அல்ஹாஜ் எம்.பி.எம். அஸ்ஹரின் மறைவுச் செய்தி கேட்டு ஆழ்ந்த கவலை கொண்டேன். நீண்டகாலம் பத்திரிகைத்துறை அனுபவத்தின் முதிர்ச்சி காரணமாக அவர் பத்திரிகையுலக ஜாம்பவானாக திகழ்ந்தார்.
எமது கலைஞர் முன்னணியால் நடாத்தப்பட்ட விருது விழா (2005) வின் செய்திகள் மற்றும் வர்ண படங்களை பல பக்கங்களில் விலாவாரியாக வெளியிட்டு பிரபலப்படுத்தினார். இவ்வாறு பல்வேறு கலை, கலாசார நிகழ்ச்சிகளுக்கும் முக்கியத் துவம் கொடுத்தார். புதியவர்களையும், இளம் எழுத்தாளர்களை யும் வளர்த்துவிடும் பண்பு அவருக்குரியது. அன்னாரின் மறைவு ஊடகத்துறைக்குப் பேரிழப்பாகும்.
தேசிய முன்னணி அனுதாபம் சட்டத்தரணி இஸ்மாயில் பி. மஆரிஃப்
தேசியத் தலைவர் சு.தே.மு. (ஐநா) ரீலங்கா இஸ்லாமிய சமூக சேவைகள் அமைப்பு (ஸல்லைசோ),
• ஸ்லைசோ நம்பிக்கை நிதியம் (எஸ்.எரி.எப்.) சுமார் அரைநூற்றாண்டு காலமாக ஊடகத்துறையில் தேசியப் பத்திரிகைகள், முஸ்லிம் பத்திரிகைகள் பலவற்றில் பாராமன்ற செய்தியாளர், செய்தி ஆசிரியர் பிரதம ஆசிரியர் எனப் பல பாத்திரங்களை ஏற்றுப் பங்காற்றிய நவமணியின் ஸ்தாபகர் அல்ஹாஜ் எம்.பி.எம். அஸ்ஹரின் திடீர் மறைவுச், செய்தி கேட்டு பேரதிர்ச்சியடைந்தேன்.
w சிரேஸ்ட ஊடகஸ்தரான அஸ்ஹர் பல சிரேஸ்ட தமிழ், சிங்கள, முஸ்லிம் அரசியல் தலைவர்களுடன் சிநேகயூர்வ உறவு கொண்டு தேசிய மற்றும் முஸ்லிம் அரசியலில் அக்கறை காண்பித்து வந்தவர் மாத்திரமன்றி பொது வைபவங்களில் கலந்துகொண்டு சமுதாயஞ்சார் பல்வேறு கருத்துக்கள்ையும் முன்வைத்து பாராட்டையும் பெற்றுவந்தார். மும்மொழிகளிலும் சரளமாக ஊடகப் பணியாற்றக்கூடிய அஸ்ஹர், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள், கட்சிகள், அரசியல் தலைவர்கள் போன்றோரின் பிரபல்யத்துக்கு பத்திரிகை சார் களமமைத்துக் கொடுத்தமை குறிப்பிடத்தக்கது. அச்சு ஊடகத்துறையில் அவரது திடீர் மறைவு ஏற்படுத்தியுள்ள வெற்றிடம் நிரப்ப முடியாதது. . . .
50

சமுதாயத்திற்கே பேரிழப்பு
சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா
நவமணியின் பிரதம ஆசிரியரும், சிரேஸ்ட ஊடகவிய லாளருமான அல்ஹாஜ் எம்.பி.எம். அஸ்ஹர் காலமான செய்தி கேட்டு பெருந்துயரில் ஆழ்ந்தேன். . . . .
அவரது மறைவு நவமணிக்கு மட்டுமல்ல, முழு சமுதாயத்துக்கும். ஒரு பேரிழப்பாகும்.
நீண்ட காலப் பத்திரிகைத்துறை அனுபவம் மிக்க மர்ஹம்" அஸ்ஹர், நவமணியின் ஆசிரிய பீடத்தை அலங்கரித்த நாள் முதலாய் தன் பணியைச் செவ்வனே செய்து வந்தார். அவரது எழுத்தாற்றலும், பத்திரிகைத்துறை ஆளுமையும் நவமணி சமூகத்தின் மத்தியில் நிலைத்து நிற்பதற்கு வழிவகுத்தது.
இந்நிறுவனத்தை மேலும் வளர்த்தெடுக்கும் நோக்குடன் எமது கையிலும் ஒரு தனித்துவமான நாளேடு ஒன்றின் அவசியம் கருதியும் மிகுந்த சிரமத்தின் மத்தியில், தினசரிப் பத்திரிகை யொன்றுக்கான முயற்சிகளில் இறங்கினோம். அது பெரும்பாலும் வெற்றி கண்டு வெகுவிரைவில் தினசரியொன்று வெளிவருவதற் கான சுமுக நிலையும் உருவாகியிருந்தது.
ஆயினும் அன்னாரது நீண்டகால கனவு நிலைபெற, வெகுவிரைவில் ஒரு தினசரிப் பத்திரிகையை வெளியிடத் திடசங்கற்பம் பூண்டிருக்கின்றோம் என்பதைக் கூறிக் கொள்கின் றோம்.
இது மர்ஹும் அஸ்ஹருக்கு நாம் செய்யும் கைமாறாகும்.
எல்லாம் வல்ல அல்லாஹம் அஸ்ஹரின் சுவனபதிக்கு அருள்பாலிப்பானாக! .
51

Page 28
"அஸ்ஹர் முஸ்லிம் பத்திரிகைத் துறை . . . வரலாற்றில் ஒரு அத்தியாயம். -அல்ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வர்.
"அஸ்ஹர் ஹாஜியாரின் சிந்தனையில் உருவாகியது தான் நவமணி வார இதழ். அதன் பிரதம ஆசிரியராகப் பணியாற்றி ஒரு புது வரலாற்றையே தோற்றுவித்தவர் அவர் கடந்த 50 ஆண்டு காலமாக சமுதாயத்திக்கென ஒரு தனிப் பத்திரிகை ஆரம்பிப்பதற்குப் பலர் முயற்சித்தனர். அன்று கொழும்பு கோட்டையிலிருந்து வெளிவந்த மோர்னிங் டைம்ஸ் (Morning Times) பத்திரிகையை வாங்குவதற்கு முஸ்லிம்களின் தனிப்பெரும் தலைவர் ரிபி ஜாயா பெரிதும் முயற்சித்தார். ஆனால், அது கைக்கூடவில்லை.
பின்னர், கொடை வள்ளல் நளிம் ஹாஜியார் இதற்காகப் பல பிரயத்தனங்களை மேற்கொண்டார். சமுதாயப் பற்றுக் கொண்டுழைத்த அஹதியா தலைவர் மர்ஹம் அல்ஹாஜ் ஏ.எச்.எல்.ஏ. சலீம் முயற்சித்தார். அவையும் கானல் நிராகிப் போய் விட்டது. இந்த வரலாற்றுப் பின்னிணிகளை நாம் அடிக்கடி மேடைகளிலும், ஏனைய இடங்களிலும் சொல்லி வருவதை செவியுற்ற அஸ்ஹர் ஹாஜியார் ‘சரி நாம் முயற்சிப்போமே என்றார்.
அவர் ஒருவரே இம்முயற்சியில் வெற்றி கண்டவர். சமுதாயத்துக்காக வெளியிடப்பட்ட ஒரு பத்திரிகை தொடர்ச்சி யாக 12 வருடங்கள் பிரசுரமாகி வருகிறது. அது இலங்கை முஸ்லிம் சமுதாயத்தில் மரத்திரமன்றி ஊடகத்துறையில் இந் நாட்டில் ஏற்பட்ட ஒரு வரலாற்று அதிசயம் என்றுதான் கூற வேண்டும் அவர் சிந்தனையில் எழுந்ததை செயலுருப்படுத் துவதற்கு றிஸ்வி தஹற்லான் பிரசுர உரிமையாளராக கைகொ டுத்து உதவினார்.
செய்திப் பத்திரிகையொன்றை உருவாக்கி தொடர்ச்சி யாக நடத்துவதைப் போன்ற ஒரு சவால் வேறு இருக்க முடியாது. பால்ய நண்பர்களாக சமுதாய சேவையில் இறங்கிய இவ்விருவரும் மனத்திண்மையோடு இயங்கினர். வெற்றியும் கண்டனர். s .
52

. எனது ஊடக தந்தை அல்ஹாஜ் எம்.பி.எம். அஸ்ஹர் ஹாஜியாரின் இழப்பு எனக்குள் இனம் புரியாத அதிர்வை . ஏற்படுத்தியது. நஜிமிலாஹி
தெற்கில் உதிர்த்து கிழக்கு வாழ் முஸ்லிம்களுக்காக தனது வாழ்வை அர்ப்பணித்த எனது. ஊடக தந்தையை இழந்தமையானது என்னுள் இனம் புரியாத ஒரு அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
அரசியலில் மர்ஹ"ம் அஷ்ரஃபின் இழப்பைப் போல் உள்டகத்
துறையில் எனது ஊடக தந்தையின் இழப்பு அமைந்து விடுமோ
என்ற ஏக்கம் மர்ஹம் எம்.பி.எம். அஸ்ஹர் ஹாஜியாரின் இழப்பின் எதிரொலி எனது காதுகளில் பலமாக எதிரொலித்துக் கொண்டே
இருக்கிறது.
இன்னும் மீண்டுமொரு முறை சொல்ல வேண்டும் போல் இருக்கிறது. இனம் புரியாத அதிர்வு உனது உள்ளத்தில் விழுந்து எனது செவிகளில் எதிரொலித்துக்கொண்டே இருக்கிறது. எனது ஊடக தந்தையின் இனம் புரியாத இழப்பு
வழமையான எதிர்பார்ப்புக்களுடனே நான் அன்றும் 28ம் திகதி வியாழக்கிழமை காலை 9.00 மணியளவில் அலுவலகம் சென்றேன். ஆனால், இறைவன் எனது வழமையான எதிர்பார்ப்பில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தமை காலை 9.20 மணியளவில்தான் எனக்கு தெரிந்தது. அதுதான் எனது ஊடக தந்தையின் மூச்சையும்,
பேனாவையும் பறித்திருந்தது.
நான் படித்த ஊடகக் கல்லுாரியில் படிக்காத பல விடயங் களை எனது ஊடக தந்தையிடம் கற்றேன். எனக்கு தெரியாத எமது அரசியல் அந்தரங்கங்களை 'அரங்கத்துக்குள் அந்தரங்கம்" பகுதியில் தெரிந்து கொள்வதில் எனக்கு பள்ளிப் பருவத்தில் ஒவ் வொரு சனிக்கிழமையும் ஒரு சுவையான நாளாகவே நூலகங்களில் கழியும்
அவ்வாறு சுழியோடிய அந்த சுழியோடி எனது ಐSLಹ தந்தையாக அமைந்தமையானது எனது ஊடக வெறிக்கு கிடைத்த பாக்கியமாகவே நான் கருதுகிறேன். . . . . . .
53

Page 29
எட்டு மாதத்துக்குள் வேலிகள் அற்ற கடலை, எல்லைகள் அற்ற வானை முழுமையாக தெரிந்து கொள்வது முடியாத காரியம் தானே. அதுதான் எனக்கு நடந்திருக்கிறது. ஊடகத்துறையில் ஒரு ஜாம்பவானாக ஒரு சுப்பர் மேனாக எல்லாவற்றுக்கும் மேலாக எனக்கு ஒரு ஊடகத் தந்தையாக மர்ஹம் எம்.பி.எம். அஸ்ஹர் ஹாஜியார் திகழ்ந்தார்.
அவர் என்னை வியாழக்கிழமைகளில் அழைத்து தலைப்பு செய்தி என்ன இருக்கு? என்ன 'ஐடியா' இருக்கு? என்று என்னை கூப்பிட்டு அவரது மேசைக்கு முன் அமர்த்தி அவரது தொலைபேசி யிலே மூலங்களை அணுகி செய்திகளை சேகரிக்க செய்யும் பாங்கு என்னை சரியான முறையில் புடம் போட்டார் என்பதற்கான ஆதரமா கும். இதன்போது அவர் எனது ஊடக தந்தையாக அவ்விடத்தில் மாறுவார். ‘. . .
இந்த எதிர்பார்ப்போடுதான் கடந்த (28) வியாழக்கிழமையும் நான் அலுவலகத்துக்கு சென்றேன். ஆனால், அந்த நாள் எனது வாழ்வில் மறக்க முடியாத ஒரு அதிர்வை ஏற்படுத்தும் நாளாக 'அமையும் என்பதை ஒரு துளி கூட நான் நினைக்கவில்லை.
சமூகத்துக்காக தனது மூச்சை அவர் இரையாக்கியுள்ளார். வட-கிழக்கில் புலிகள் மேற்கொள்ளும் இனச்சுத்திகரிப்புகளை அச்சமின்றி தனது பேனாவின் மூலம் அரங்கேற்றினார்.
சுமார் 40 வருடங்களுக்கு மேலாக முஸ்லிம் சமூகத்துக்காக போராடிய ஊடக தந்தையுடன் உரையாட இறைவன் எட்டு மாதங் களை வரையரை செய்தது எனக்கு ஏனென்று புரியவில்லை.
தாம் சார்ந்த சமூகத்துக் காக அழுத்தமாக தனது பேனாவை பயன்படுத்தினார். தாம் சார்ந்துள்ள இனத்துக்காக குரல் கொடுப்பது, பாடுபடுவது இனவாதமில்லை. அது இனப்பற்று. இப்படி சகல இனத் தவர்களும் அவர்களின் இனங்களின் மீது கரிசனை காட்ட வேண்டும் மாறாக ஒரு இனத்தின் உரிமையை தட்டிப்பறிப்பது இன்னொரு இனம் அதனை புசிக்க நினைத்தால் அதுதான் இனவாதம் என வரைவிலக்கணங்களை என்னிடம் அவர் அடிக்கடி சொல்வார்.
அதேபோன்று மலையக தமிழ் மக்கள் மற்றும் வட-கிழக்கு தமிழ் மக்களின் அவலங்களை பற்றியும் அவர்களின் அரசியல்வாதி களின் அலட்சியப்போக்கு பற்றியும் அந்த மக்களின் அவலங்களை எழுத வேண்டும் என்று என்னிடம் அவர் பலமுறை கூறியதுண்டு.
54

எமது அரசியல்வாதிகளின் மறு பக்கங்களையும் என்னிடம் கதைப்பார்.
சில நேரங்களில் அரசியல்வாதிகளை ஒரு செல்லாக் காசாக மக்கள் முன் மாற்ற வேண்டும் என்றும் என்னிடம் கதைத்த தினங் களுமுண்டு. மர்ஹம் அஷ்ரஃபின் அரசியல் பாதைகளை முழுமையாக தெரிந்தவராக காணப்பட்டார். சுருக்கமாக சொல்வதென்றால் 'முஸ்லிம் , காங்கிரஸின் அரசியல் ஏடு மர்ஹம் எம்.பி.எம். அஸ்ஹர் ஹாஜியார் என குறிப்பிட முடியும்.
ஆனால், சமூகம் இந்த ஏட்டை புரட்டிப்பார்க்க தவறிவிட்டது, பயன்படுத்தத் தவறிவிட்டது என்ற ஆதங்கம் எனக்குள்ளிருக்கிறது. ஓரிரு நாட்களுக்கு முன் முஸ்லிம் சமூகத்துக்காக குரல் கொடுத்த ஒருவருடைய மரண வீட்டுக்கு சென்றதையும் அதில் சொற்பமானவள் களே கலந்து கொண்டதையும். என்னிடம் சொன்னார்.அவரோடு இணைந்து சமூகப் பணிகள் செய்ததையும், நினைவுகூர்ந்தார். .
அதேபோன்று சமூகத்துக்காக தங்களது வாழ்வை அர்ப்பணித் தவர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் பழைய அரசியல்வாதிகளின் பண்பையும் தற்போதைய அரசியல்வாதிகளின் போக்கையும் பல முறை சுட்டிக் காட்டுவார்.
மு.கா. ஸ்தாபகள் மர்ஹம் எம்.எச்.எம். அஷ்ரஃப் - மாஹம் எம்.பி.எம். அஸ்ஹர் அவருடனான தொடர்பு பற்றி குறிப்பிடும்போது "நாமிருவரும் நடந்து வந்த பாதை ஒன்றுதான். எனினும் கூட காலம் எங்கள் இருவரையும் வெவ்வேறு இடங்களில் வைத்துப் பார்க்க தீர்மானித்திருந்தது. இருவர் தலையிலும் பாராளுமன்றம் செல்ல வேண்டும் என இறைவன் எழுதிவைத்துள்ளான். அவள் 1969ம் ஆண்டு பாராளுமன்ற படிகளில் காலடி எடுத்து வைத்தார். நான் 1989ம் ஆண்டு ஒரு மக்கள் பிரதிநிதியாக காலடி எடுத்து வைத்தேன். அவரை இறைவன் பாராளுமன்ற பத்திரிகையாளராக உயர்த்தி. வைத்திருந்தான். என்னை கீழேயுள்ள மக்கள் சபையின் பிரதிநிதியாக வைத்திருந்தான். நான் பேசியவைகளை சமூகத்துக்கு எடுத்துக்காட்டும் கண்ணாடியாக அவரை மாற்றியிருந்தான்"
தமது மனைவியுடன் அலாதியான பாசத்தை வைத்திருந்தார் என்பதையும் அவரின் உம்மா மற்றும் பிள்ளைகளின் நிலை பற்றி அடிக்கடி சிந்தித்தவராகவும் அது தொடர்பாக கதைத்தவராகவும் இருந்தார். தனது மனைவியின் இழப்பு அவரால் ஈடு செய்ய முடியாத இழப்பாகவே இருந்திருக்கிறது.நமது அரசியல்வாதிகள், புத்திஜீவிகள்,
55

Page 30
விரோதிகளுக்கும், எதிரிகளுக்கும் விலை போயுள்ளதை தனது அனுபவத்தின் மூலம் நிரூபிப்பார்.
எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு தைரியமான மனிதராக நான் அவரை இனம் கண்டேன். அதேபோல ஊடகத்துறையில் பலமான திறமையானவர் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஊடகத்துறை யில் பலமானவர், காத்திரமானவர், பழக்கப்பட்டவர் என்பதை மாளிகா வத்தை மையவாடியில் கலந்து கொண்ட சனததிரலை பார்த்தவர்கள் புரிந்துகொண்டிருப்பார்கள். . .
தனது திறமைக்கும், ஆற்றலுக்கும் அவரது எதிரிகள் எவ்வாறு சவாலாக இருந்தார்கள் என்பதை என்னிடம் ஒவ்வொரு சம்பவத்தின் போதும் கூறுவார். அண்மைக் காலங்களில் தனது சுதந்திரத்துக்கு தடைகளும், தடங்கல்களும் ஏற்பட்டுள்ளதையும் அதனால் பாரிய மனவுளைச்சலுக்கு ஆளாகியுள்ளதையும் கூறினார்.
தனது வாழ்நாளில் பலநாட்களை வைத்தியசாலையில் கழித்த பொழுதுகளையும் தனது தொழில் ரீதியாக தானும் குடும்பமும் பட்ட அவதிகளையும் கதைப்பார். அதேபோன்று சர்க்கரை நோய் தன்னை வேகமாக துரத்திவருவதாக கூறிக்கொண்டிருந்தார்.
இவ்வாறு எட்டு மாதங்களில் அவரின் வாழ்வினை ஏதோ ஒரு வகையில் நான் தெரிந்து கொண்டேன். ஆனால், ஏற்கனவே கூறியது போன்று கடலுக்கு வேலிகள் இல்லை என்பதுபோல் வானுக்கு எல்லைகள் இல்லை என்பதைப் போல் அவரது 40 வருட கால அனுபவங்களை தெரிந்து கொள்ள வெறும் எட்டு மாதங்கள் வரையறுக்கப்பட்டது எனக்கு ஏனென்று புரியவில்லை.
எனது ஊடக தந்தையின் இழப்பு என்னால் நம்பமுடியாமல் இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் ஒரு தந்தை அமைவது போல எனக்கு அவர் ஊடக தந்தையாக அமைந்தார்.
'சமூகத்தின் வாடையை அறியாதவன் சுவர்க்கம் நுழையமாட்டான்' என்பது நபிவாக்கு ஆனால், எனது ஊடக தந்தை தனது ஒவ்வொரு நாளையும் சமூகத்தின் மீதே அர்ப்பணித்தார்.
எல்லாவற்றுக்கும் மேலாக அவருக்கு 'ஜன்னதுல் பிர்தெளஸ்' சுவனவாழ்வு கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்.
56

மர்ஹும் எம்.பி.எம். அஸ்ஹர் - சில நினைவுகள் அப்துல் ஜப்பார்.
நவமணி இலங்கைத் தமிழ் மக்களின் குறிப்பாக முஸ்லிம் மக்களின் நாடித் துடிப்பு. அதன் நாளங்களில் இரத்தமாக ஓடோ ஓடென்று ஓடி அதற்கு உயிர்த் துடிப்பைத் தந்தவர். இன்று தானே அதை இழந்து அமரராகிவிட்டார்.
சாதாரண நிருபராக இருந்து பத்திரிகையாசிரியராக உயர்வதற்குள் அவர் பட்ட கஸ்டங்கள், பெற்ற அனுபவங்கள் வரும் தலைமுறைக்கு வழிகாட்டக் கூடியவை. ஆனால், அது முறையாகப் பதியப்படவில்லை என்பது சோகம். . . . . .
ஒரு ஒலிபதிவுக் கருவியுடன் என்னோடு ஒன்றிரண்டு மணிநேரம் உட்காருங்கள். உங்கள் அனுபவங்களை அசை போடுங்கள். அதை ஒரு நூலாக வாழ்க்கைச் சரிதமாக வடிக்கும் பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன்” என்றேன். .
ஆனால், வேலைப்பழு காரணமாக நேரத்தோடு நித்தம்நிமித்தம் யுத்தம் நடத்திக் கொண்டிருந்த அவருக்கு நேரமே கிடைக்கவில்லை. காலமும் காலனும் கூடக் காத்திருக்கத் தயாரில்லை. அரசியலில் ஆழ்ந்த புலமை, சமூகப் பிரச்சினை களில் பிரக்ஞையுடன் கூடிய அக்கறை, அதை எழுத்தில் வடிக்கும் வல்லமை, முகம் நோக்காது விளைவுகளை எண்ணாது அதே சமயம் முகத்தில் அடித்தாற் போல் சொல்லாமல் நளினமாகவும், நாகரிகமாகவும் உண்மைகளை பிட்டுப் பிட்டு வைத்த பாங்கு அவரை "பெரிய மனிதர்' என்று முத்திரை குத்தப்பட அருகதை உள்ளவராக்கியது.
உயர் மட்டத்திலுள்ள அத்தனை சமூக பொருளாதார - அரசியல் பிரமுகர்களையும் தோழமையுடன் கைலாகு கொடுத்துப் பழகும் அளவுக்கு பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன? அது 57 . . . . . .

Page 31
வேறொன்றுமில்லை இலங்கையில் அதுவும், தமிழில் அதுவும் கட்சி சாராது நடுநிலை நின்று பத்திரிகை நடத்துவதுதான் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அது மலையைப் புரட்டி கடலில் உருட்டும் பணி. அதை எவ்வித நெம்புகோலும் இல்லாமல் நெஞ்சுரத்துடன் செய்தார் என்பதுதான் அவருடைய தனிச்சிறப்பு.
பத்திரிகை வெளிவராமல் இருக்க 99 காரணம் இருக்கும். அதற்காக அச்சமோ, கவலையோ படமாட்டார். வெளிவர உதவும் அந்த ஒரு காரணம் போதும் பத்திரிகையை வெளிக்கொணர்ந்து விடுவார். பத்திரிகை அச்சிட மசிதான் தேவை. ஆனால், அவர் உபயோகித்த மசி இவரது உதிரமும், வியர்வையும். சரக்கு குவிந்து கிடந்தது. பக்கங்கள் இல்லை. எதை எடுப்பது. எதை விடுவது. எப்போதும் அவரை வாட்டிய சவால், சளைத்தாரில்லை. பொருளாதாரம் புறுமுதுகில் ஓங்கி அடித்தது. தினசரியாக நடத்துவது நஸ்டத்தால் இடித்தது. அதனால் என்ன? மாற்று வழி கண்டு பிடி. வாரம் ஒருமுறை அல்லது இருமுறையாக்கு. காலம் கனியாமல் போகாது. அன்று பார்த்துக் கொள்ளலாம் என்கிற வைராக்கியமும், விடாமுயற்சியும் எல்லோருக்கும் வந்து விடாது.
லண்டன் 'தீபம் தொலைக்காட்சியில் நான் வாரம் தோறும் நடத்தும் அரசியல் விமர்சன நிகழ்சிக்கு அரங்கம் - அந்தரங்கம் என்று பெயர் வைத்தேன். என்ன ஆச்சரியம். நான் அடுத்தமுறை இலங்கை வந்தபோது பார்க்கிறேன் நவமணியின் இரண்டாம் பக்கத்தில் அவர் எழுதி வந்த பிரசித்தி பெற்ற, எல்லோரும் படிக்கும், சக்தி வாய்ந்த அந்தப் பகுதிக்கும் அதுதான் பெயர். உங்களைப் பார்த்து நான் வைக்கவும் இல்லை. என்னைப் பார்த்து நீங்கள் வைக்கவும் இல்லை. இயல்பாகவே அப்படி அமைந்துவிட்டது. அதன் பொருள் நீங்களும் நானும் ஒரே அலை வரிசையில் (WaveLength) சிந்திக்கிறோம் என்பதுதான் அதையிட்டு நான் பெருமைப்படுகிறேன் என்றார்
தொடர்ந்தும் எங்களுக்கு எழுதுங்கள் என்றார். செலவைப் பொருட்படுத்தாது தவறாமல் நவமணி அனுப்பித் தந்தார். இங்கே 58

இலங்கை பற்றிய செய்திகளை நான் விஷய ஞானத்துடன் அணுக அது எனக்குப் பெரிதும் உதவியது.
V− அல்ஹாஜ் எம்.பி.எம். அஸ்ஹர் என் பள்ளித் தோழர். பால்ய நண்பர். அவர் மீது அதீதமான அன்பும், நட்பும், மதிப்பும், மரியாதையும் வைத்திருந்தேன். அவருடைய வளர்ச்சி தன்னுடைய வளர்ச்சி போல் எண்ணி மகிழ்வார். எங்கள் இருவரையும் சேர்ந்தே சந்திக்கப் பிரியப்படுவார். சுவாரஸ்யமான எங்கள் இளமைக்கால அனுபவங்களை கரிசனையுடன் கேட்பார். ஒருநாள் ஸாஹிராக் கல்லூரியைப் பற்றிப் பேசும் போது, ஒரே உறையில் எப்படி இரண்டு வாள்கள் இழுத்தீர்கள்’ என்றார். நான் சொன்னேன். இரண்டு வாள்கள் அல்ல வால்கள். அதுதான் நான் இந்தியாவுக்கு ஓடி விட்டேன் என்றேன். வாய்விட்டுச் சிரித்தார். நகைச்சுவையை ரசித்துச் சிரிப்பார்.
ஆனால், இவரும் துணைவியரும் விபத்தில் சிக்கி, தான்
தப்பி துணைவியார் போய்விட “அவளோடு நானும் போயிருக்க வேண்டும்” என்றவர் துக்கம் தாளாமல், ஓசைப்படாமல், கண்ணீர் விட்டு அழுதார். ஆறுதல் சொன்னோம்.
இன்று அவர் போய்விட்டார். நண்பர்களாகிய நாங்கள் அவரது பிரிவுத் துயர் தாங்காது கண்ணிர் வடிக்கிறோம். எங்கள் கண்ணிரைத் துடைத்து ஆறுதல் சொல்ல அவர் இல்லை. நெஞ்சில் உரமும், நேர்மைத் திறனும் கொண்ட “நவமணி"யின் ஆசிரியர் திலகம் அல்ஹாஜ் எம்.பி.எம். அஸ்ஹருடைய இழப்பு இலங்கைக்கு மட்டுமல்ல, எழுத்துலகுக்கும், ஊடகத்துறைக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு. அவரது பயிற்சிப் பட்டறையில் அனுபவப் பாடம் கற்றுக்கொண்ட எத்தனையோ மாணவமணிகள் தாங்கள் சாதனைகள் மூலம் பெயரெடுத்து அவரது பெயரை பிரகாசிக்கச் செய்வார்களாக, அதுவே அவருக்குச் செலுத்தும் இதயமார்ந்த அஞ்சலியாக இருக்கும். அன்னாருக்கு எல்லாம் வல்ல இறைவனின் பரிசு சுவர்க்கமாக இருக்கட்டும்.
59

Page 32
அனுதாபச் செய்தி
அமீர் அலி அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் .
"தமது வாழ்க்கை முழுவதையும் பத்திரிகைத்துறைக்கு
அர்ப்பணித்த ஒரு மாமனிதனை இழந்துவிட்டோம்"
நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எம்.பி.எம். அஸ்ஹரை எழுச்சிக்குரல் பத்திரிகை வெளிவந்த காலந்தொட்டு நான் அறிவேன். ஆழ்ந்த சமூகப்பற்றும், சிறுபான்மை சமூகங்கள் குறித்த தெளிவான பார்வையும் கொண்டவராக அவர் விளங் கினார். மிகவும் கண்ணியமான மனிதராக அவர் சமூகத்துள் பல்வேறு தரத்தினராலும் மதிக்கப்பட்டார். .
அவரை எனது சொந்த ஊருக்கு அழைத்து பாராட்டி கெளரவித்தமையை நான் பெரும் பேறாகக் கருதுகின்றேன்.
கடந்த 27ஆம் திகதி இரவு நடைபெற்ற புத்தவெளியீட்டு விழாவொன்றில் என்னை சந்தித்து சுகநலம் விசாரித்துவிட்டுச் சென்ற அவர் மறுநாள் காலை மறைந்துவிட்டார் என்ற செய்தி
கேட்டபோது அதிர்ச்சியடைந்தேன். -
அன்னாரின் மறைவு பத்திரிகையுலகுக்கு மாத்திரமன்றி
இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்துக்கும் ஈடு செய்யமுடியாத பேரிழப்பாகும்.
அன்னாரை இழந்து தவிக்கும் அன்னாரின் குடும்பத்தி
னருக்கும் ஊடகத்துறையினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத் தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இன ஒற்றுமைக்காக பாடுபட்டவர்.
என். செல்வராஜா
நூல்தேட்டம்: நூலாசிரியர், லண்டன்
இலங்கையில் முஸ்லிம் சமூகத்திற்கென வெளிவந்து கொண்டிருக்கும் தேசிய வாரப் பத்திரிகையான நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் அல்ஹாஜ் எம்.பி.எம். அஸ்ஹர் அவர்களின் மரண செய்தி கேட்டு மிகவும் கவலையடைந்தேன்.
2004ஆம் ஆண்டு கண்டியில் இயங்கும் சிந்தனைவட்டம் என்ற அறிவியல் அமைப்பு எழுத்துத்துறையில் எனக்கும் ஊடகத் துறையில் அல்ஹாஜ் எம்.பி.எம்.அஸ்ஹருக்கும் விருதுகளை வழங்கிக் கெளரவிக்கும் நிகழ்வொன்றினை ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வில் கலந்துகொள்வதற்காக சென்ற நேரத்திலே அஸ்ஹர் அவர்களுடன் நேரடியாக பழகும் முதல் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
இலங்கையில் சிறுபான்மை இனத்தவர்களான தமிழர், முஸ்லிம்களுக்கிடையில் அண்மைக்காலங்களாக ஏற்பட்டிருந்த மனக் கசப்புணர்வுகளை நீக்கி இரு இனங்களுக்கிடையேயும் ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும் என்றும் இதற்காக எழுத்தா ளர்களும் ஊடகவியலாளர்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் அவர் மனம் திறந்து தன்னுடைய கருத்தை என்னிடம் அன்றையதினம் வெளிப்படுத்தினார். தொடர்ந்து பல மணித்தியாலங்கள் அவருடன் மனம் திறந்து உரையாடிக் கொண்டிருந்தபோது இன ஒற்றுமைக்கான ஆழமான அவருடைய
61

Page 33
மனப்பதிவுகளை என்னால் உணர்ந்துகொள்ளக் கூடியதாக இருந்தது.
அவரது அமைதியான சுபாவம் எடுத்த எடுப்பில் அவரது உள்மன ஆழங்களை வெளிப்படுத்தாத போதிலும், தொடர்ந்த எமது உரையாடலின் போது, அவரது நேரிய கருத்துக்களையும், சிறுபான்மை சமூகத்தவரின் பிரச்சினைகள் தொடர்பாகவும், அவற் றின் எதிர்காலப்போக்குகள் தொடர்பாகவும் அவர் கொண்டிருந்த தூரப்பார்வை என்னை அதிசயிக்க வைத்தது.
சொல்லால் மாத்திரமன்றி, செயலாலும் இன ஒற்றுமைக் காக வேண்டி அவர் பாடுபட்டதை பின்னாளில் நான் நன்கு அறிவேன்.
நான் அறிந்த வரை அவரின் உணர்வுகள் உள்ளார்த் தமானவையாகும். உணர்வுபூர்வமானவையாகும். காலத்தின் தேவையை உணர்த்துவதாகும். நிச்சயமாக தமிழ், முஸ்லிம் இன ஒருமைப்பாடு தொடர்பான அவரது உணர்வுகள் கெளரவிக் கப்பட வேண்டியதும், மதிக்கப்பட வேண்டியதுமாகும்.
அன்னாரின் பிரிவால் துயருரும் அன்னாரின் குடும்பத் துக்கும், உறவினர்களுக்கும், ஊடகத்துறை நண்பர்களுக்கும்
என்னுடைய ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன். . . .
அன்னாரின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கின்றேன்.
சர்வதேச ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் - தமிழ் (ஐபிஸி) வானொலி உரையிலிருந்து . . . . . .
62

அவரது கனவை நனவாக்குவதற்கு அவர் இன்றில்லையே..!
எம்.டி.எம். ரிஸ்வி நவமணி முகாமைத்துவப் பணிப்பாளர்
நவமணியின் பிரதம ஆசிரியர் அல்ஹாஜ் எம்.பி.எம். அஸ்ஹர் காலமானது எமக்குத் தாளமுடியாத சோகத்தை அளிக்கிறது. நவமணியின் உதயம் முதற்கொண்டு அவரது இறுதி மூச்சுவரை அதன் பிரதம ஆசிரியராகப் பணியாற்றி நவமணியின் வளர்ச்சிக்கும், சமூக முன்னேற்றத்துக்கும் பெரும் பங்காற்றியவர் மர்ஹம் அஸ்ஹர் என்பதை எவராலும் இலகுவில் மறந்துவிட முடியாது.
கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாகப் பத்திரிகைத் துறையில் அழுத்தமாக தடத்தைப் பதித்து, நிலைத்திருக்கும் முதுபெரும் பத்திரிகையாளரான அஸ்ஹர், பத்திரிகையொன்றின் நெளிவு சுளிவுகளை நன்கறிந்து வைத்திருந்தார் எனில் அது மிகைப்பட்ட கூற்றல்ல. ஒரு நிருபராக 'தினபதி’ நாளேட்டில் கால்பதித்த அஸ்ஹர், பத்திரிகையுலக ஜாம்பவானான எஸ்.டீ.சிவ நாயகத்தின் பாசறையில் வளர்ந்தவர். வீரகேசரியில் இணைந்து அப்பத்திரிகையின் பாராளுமன்ற செய்தி நிருபராகக் கால்நூற் றாண்டுகளுக்கும் மேல் பணியாற்றியவர் எனின், இப்பெருமை அஸ்ஹரைத் தவிர வேறு எந்தப் பத்திரிகையாளருக்கும் கிடைக்க வில்லை எனலாம்.
ஆரம்ப காலத்தில் சமூக அக்கறை மிக்க சிலருடன் இணைந்து புதுமைக்குரல்’ எனும் பத்திரிகையை நடாத்தினார். இப்பத்திரிகையோடு தொடர்புடைய பலர் பிற்காலத்தில் அரசியல் வானில் நன்கு பிரகாசித்து, கட்சித் தலைவர்களாகவும் பரிண மித்தனர். ஹாஜி அபூபக்கர் ஜாஹிப், யூசுப் ஹாஜியார் போன்ற சமூக நலன்விரும்பிளினால் உருவாக்கப்பட்ட 'எழுச்சிக்குரல்" எனும் முஸ்லிம் சமுதாய, மறுமலர்ச்சி ஏட்டின் ஆசிரியர் பீடத்தில் அமர்ந்து எம்மோடு கைகோர்த்தார். இக்கைகோர்ப்புதான் முஸ்லிம்
63

Page 34
சமுதாயத்தின் மத்தியில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியது. "எழுச்சிக்குரல் ஏற்படுத்திய சமூக மாற்றங்கள் காலத்தால் கரைந்து போகாதவை எனில் அது மிகையாகாது. முஸ்லிம்களின் ஒற்றுமை, ஒன்றுகூடல் என்பவற்றோடு முஸ்லிம்களுக்கென்று தனித்துவமான அரசியல் கட்சி தேவையென்று பல்வேறு மேடைகளிலும் வலியுறுத்தி வந்தவர் தான் மர்ஹம் அஸ்ஹர், மர்ஹம் எம்.எச்.எம். அஷ்ரப் நிறுவிய முஸ்லிம் காங்கிரஸ"க்கு கால்கோளிட்டவரும் அஸ்ஹர்தான் எனத் துணிந்து கூறலாம். இதனை தலைவர் அஷ்ரப் அவர்களே பல மேடைகளில் கூறியுள் ளார். தலைவர் அஷ்ரபுடன் இணைந்து புரிந்த அவரது சகபாடிக ளில் ஒருவர்தான் அஸ்ஹர்.
நவமணி உதயமான 1996ம் ஆண்டு நாள் முதற்கொண்டு ' அதன் ஒவ்வொரு சிறு அசைவிலும் பங்கு வகித்தார். அதன் நன்மை தீமைகளுக்கு முகம்கொடுத்தார். 'நவமணி’ என்றாலே அது எம்.பி.எம். அஸ்ஹர்தான் என்ற அளவுக்கு அவரது
பங்களிப்பும், உழைப்பும் நவமணியில் வியாபித்துக் கிடந்தது.
எமது நிறுவனம், 'முஸ்லிம்களின் கையில் ஒரு நாளேடு தேவை’ என்ற குறிக்கோளை மையமாகக் கொண்டு நீண்டகால ப்கீரதப்பிரயதனங்களின் பின்னர் ஒரு தினசரிப் பத்திரிகையை வெளிக்கொணரும் முயற்சியில் ஈடுபட்டு, வெற்றியும் காண இருந்த வேளையில், அஸ்ஹரின் மரணம் எம்மீது ஒரு பேரிடியாக விழுந்தது. புதிதாய் மலரவிருந்த நவமணி நிறுவன நாளேட்டின் ஆசிரியர் பீடத்தை அலங்கரிக்க அன்னார் ஆவல்கொண்டிருந்தார். அது நிராசையாகவே போய்விட்டது.
தீர்க்க தரிசனம் மிக்க கட்டுரைகள் வடிப்பதிலும், அரசி யல் மாற்றங்களுக்கு முஸ்லிம் மக்கள் எவ்வாறு முகங்கொடுக்க வேண்டுமென்பதையும் தனது பேனாவின் ஓர்மையால் தெளிவு படுத்துவதிலும் சமர்த்தராகத் திகழ்ந்தார்.
அன்னாரின் பிரிவால் நவமணிக் குடும்பம் தாளமுடியாத துயரில் ஆழ்ந்துள்ளது. உண்மையில், அஸ்ஹரின் மறைவு நவமணிக்கு மட்டுமல்ல, முழு பத்திரிகை உலகுக்கு மட்டுல்ல, முழுச் சமுதாயத்துக்குமே பேரிழப்பாகும்.
அன்னாருக்கு ஜன்னதுல் பிர்தெளஸ் எனும் சுவனபதி கிடைக்க எல்லாம் வல்ல அல்லாஹற்வைப் பிரார்த்திப்போமாக!
64
--

அனுதாபச் செய்திகள்
- எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹற் - கிழக்கு மாகாணசபையின் சுகாதார, சுதேச மருத்துவ, தொழில்நுட்பக் கல்வி அமைச்சர்
மர்ஹம் எம்.பி.எம். அஸ்ஹர் தமிழ் பத்திரிகையுலகில் தமிழ் பேசும் சமூகத்திற்கு பயனுள்ள ஆழமான கருத்துக்கள் பலவற்றை வழங்கியுள்ளதுடன் இறுதிக் காலகட்டத்தில் முஸ்லிம் சமூகத்தின் குரலாக வெளியிடப்பட்ட பத்திரிகைகளில் ஆசிரியராகவிருந்து பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் அர்ப் பணிப்புடனும், தியாக சிந்தனையுடனும் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை வெளிக்கொணர பாடுபட்டதை நாம் இலகுவில் மறந்துவிட முடியாது.
அன்னாரின் குடும்பத்தாருக்கு நாம் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரின் சமூக பற்றுதலுக்கு அமைய முஸ்லிம் சமூகத்தின்" பிரச்சினைகளை வெளிக் கொணரு வதற்கு முஸ்லிம் ஊடகவியலாளர்கள் முன்வர வேண்டும் என இச்சந்தர்ப்பத்தில் கேட்டுக் கொள்கின்றேன்.
- எஸ். ஜவாஹிர் effie -
கிழக்கு மாகாணசபை உறுப்பினர்
ஒடுக்கப்படும் மக்கள் சார்பாக தனது பேனாவை பயன் படுத்தினார். குறிப்பாக முஸ்லிம் சமூகம் கல்வியில் விழிப்படைய வேண்டும் என்பதில் அக்கறையுடன் செயற்பட்டார். அதேபோன்று தமிழ் மக்களின் அவலங்கள் பற்றியும் பிரஸ்தாபித்தவராக இருந்தார்.
தனது சிறுபிராயத்தில் சமூகத்தின் மீது மிகுந்த கவனம் செலுத்திவந்த எம்.பி.எம். அஸ்ஹர் ஹாஜியார் முஸ்லிம்களுக்கான ஊடக பாதையை சரியான முறையில் விளக்கி அதனை பயன்படுத்தி வந்தார். முஸ்லிம்கள் தனியான நாளிதழை வைத்திருக்க வேண்டும் என்பதில் அயராது உழைத்து வந்தார். அவரது இலக்கு அதுவாகத்தான் இருந்தது.
முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் மரஹம் எம்.எச்.எம். அஷரப்
அவர்களுடன் வலுவான தொடர்பை கொண்டிருந்தார். அதேபோன்று மு.காங்கிரஸின் வளர்ச்சிக்கு தனது எழுத்துக்களால் பெரும்பங்கு வகித்தார். அன்னாரது இழப்பு முஸ்லிம் சமூகத்துக்கு ஏற்பட்டுள்ள பாரிய இழப்பாகும்.
65

Page 35
அனுதாபச் செய்தி
கே.ஏ. பாயிஸ் கால்நடைவள பிரதி அமைச்சர்
முஸ்லிம் சமூகத்தின் சிரேஷ்ட பத்திரிகையாளரும், நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான எம்.பி.எம். அஸ்ஹரின் மறைவுச் செய்தி என்னுள்ளத்தில் ஒரு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இலங்கை முஸ்லிம் சமூகத்தின் பத்திரிகைத் துறையை நிரப்புவதற்கு நெடிய காலம் தேவைப்படும் வெற்றிடம் ஒன்றை ஏற்படுத்திவிட்டு அவர் இவ்வுலகை விட்டுப் பிரிந்துள்ளார்.
இந்நாட்டு முஸ்லிம் சமூகம் தனக்கென தனியானவொரு தினசரி பத்திரிகையை கொண்டிருக்க வேண்டும் என்று தணியாத் தாகத்துடன் 13 ஆண்டுகள் அதற்காக இடைவிடாத போராட்டம் நடாத்திக் கொண்டிருந்த சிரேஷ்ட பத்திரிகையாளர் அந்தத் தாகம் தணிய முன்னர் தமது வாழ்வை முடித்துக் கொண்டதை நினைக்கும்போது வேதனை தாளாது உள்ளம் இரும்பாய்க் கனக்கிறது.
முஸ்லிம் மீடியா போரம்' என்ற ஊடகத்துறை அமைப்பை நிறுவுவதற்குத் தனது பங்களிப்பை முழுமையாக தந்து அதன் ஸ்தாபக அமைப்பாளர்களில் ஒருவராக இருந்தும், அதன் பொருளாளராக 13 ஆண்டுகள் சேவை செய்தும் ஊடகத்துறைக் கான தமது பங்களிப்பை நல்கி வந்தவர் இவர்.
அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் கூறிநிற்கும் வேளையில் அவரை ஜன்னதுல் பிர்தவுஸில் ஏற்றுக் கொள்ளுமாறு எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் இருகரம் ஏந்தி நிற்கின்றேன்.
- -

நினைவுப்பூக்கள்
ஏறாவூர் அனலக்தர்
ஊடகத் துறையில் ஓர் இமயம் சரிந்ததாய் ஊடகமே தகவல் தர உறைபனியானது
இரத்தமெல்லாம்
உணர்வற்றவராய் ஆனோர் .
நாம்
அல்ஹாஜ் அஸ்ஹர் எனும் அழகிய நாமத்துள் அடக்கமாய்ப் பணிபுரிந்த
ஆளுமை மிக்க எழுத்தாளனே
உன் பிரிவும், சரிவும் ஊருக்கல்ல ஊடகத்துறைக்கே பேரிழப்பு.
எழுத்தியல், இதழியல் என்று ஊடகத்துறையில் பழுத்தவராய்ப் பயணித்து, அழுத்தம் பெற்ற நீ, கொழுத்த முதலைக் கொண்ட கோபுர வாழ்வைக் கனவிலும் கண்டாய் அல்லை, குருவிக் கூட்டிலேயே வாழ்ந்து குடும்ப சேமத்தைக் கொண்டாய் இன்று
வீறு கொண்ட தேசத்தின் விடியலுக்காய்த் தினமும் வீர முரசார்த்து வருகின்ற வீரகேசரியாம் தினசரியில் அன்று நீ
-
67
தினகதியாய் உழைத்துத் திறமையைத் தீட்டிக் கொண்டாய் தினபதியிலும், ஆற்றலைக் காட்டிக் கொண்டாய்
e6) bl (36) 96)6Os அரசியல் அளப்பும், சிலும்பலே தோன்றாச் சிந்தனை வார்ப்பும் ஆளுமை மிக்க உன் ஆற்றல்களின் விளைச்சல்களே உண்மையில்
உன் படையல்களில்
அமர்ந்து தான் தமிழே நடை பயின்றது
மும்மொழித் தேர்ச்சியில் முளைக்கும் பருவத்தே முதிர்ச்சி கண்ட நீ
சமுதாய நோக்கோடும்,
சளைக்காத போக்கோடும் சதாவும் உழைத்தே சரித்திரம் படைத்தாய் நவமணிப் பத்திரிகையின் நளினமான நடைக்கும் நவமான பிரகாசத்திற்கும் நாடி நரம்பாய்த் திகழ்ந்து நாளாந்தம் உதிரம் பாய்ச்சியவனும் நீயே.
காய்ச்சல் கடுப்புகளோடு,
கை கால் பிடிப்புகளோ கடுகளவும் உன்னைக்

Page 36
அந்திம காலத்தில் -
கட்டிப் போட்டதில்லை மாறாக - காலத்தையே. நீ கட்டி மேய்த்தவன் கடிகார முள் கூட களைப்புடன் சோருமாம். சின்னாளில். ஆனால், துடிப்போடு தொண்டாற்றும் நீ துவண்டு சோர்ந்ததில்லை
ஒருபோதும் கட்டொழுங்கையும் கடமையுணர்வையும் கட்டாயம், உன்னிடமே கற்றாக வேண்டும் நாம்! "
சமுதாய நலனுக்காய் சலியா துழைத்த சற்குண சீலனே அறுபத்தொரு வயதைக் கடந்து ஆயுளை முடித்துக் கொண்டநீ |6|' ' அழுத்தங் காரணமாய் அவதி யுற்றதாய் அறிந்து அதிர்ச்சி யடைந்தோம் நாம். உன் அறிவாற்றலை அரங்கேற விடாமல் அடுத்தவர் ஆப்பு வைக்க முன் அதி புத்திசாலித்தனமாய் அகன்று விட்டாய் நீ
கள்ளிப் பாலைக் காராம் பசுப் பாலாய்க் கருதியே.உன் கடைசி
அத்தியாயத்தில் கசப்பான அனுபவம் நன்றி கொன்ற மாந்தரே நல்லவராய் இருக்கும் போது
எல்லா
பாவம் - மிலேச்சத் தனமான
மிருகங்களும் நல்லவை தாம்
எம்மவர் நெஞ்சமெல்லாம்
என்றும் நிழலாடும் எம்.பி.எம். அஸ்ஹரே
எல்லாம் வல்ல அல்லாஹற்
சௌபாக்கியங்களையும் என்றும் உனக்களித்து
ஏற்றமான.
எழுப்பமான சுவனப் பூங்கா
சுகங்களைச் சுகித்துய்ய
அருள்பாலிப்பானாக! ஆம் ஊடகத் துறையில் உரியதாம் முறையில் உன்னோடு உறவாடி
ஊரெல்லாம் மேய்ந்தவர்கள்
பின்னாளில் ஏனய்யா உன்னைப் பேய்த்தனமாய் ஏய்த்தார்கள்.
கசப்பான அனுபவம் அதனால்தான்
நொள்ளைத் தனமிக்கோரின்
சள்ளைத் தனமெல்லாம்
வெள்ளை மனத்தோடு
சகித்துக் கொண்டாய். சாந்தமாய்

நவமணி தந்த புவிமணி மெளலவி. எம்.எச்.எம். புஹாரி (பலாஹி) - காத்தான்குடி,
என்னரும் நண்பா எம்.பி.எம். அஸ்ஹர் எங்களைப் பிரிந்து போய் விட்டாய் உன்னரும் பணியால் ஊடகத் துறையோ ஒளிர்ந்தது இத்திரு நாட்டில் பொன்னெனும் நூல்கள் புனைந்தளித்தாய் நீ புகழ்பெறும் தமிழிதழ்களிலே கண்ணியமாகக் கடமையே செய்தாய் கணிதமிழ் மொழியினைக் காத்தாய்
நவமணி இதழை நாடெல்லாம் போற்ற நாளெல்லாம் நற்பணி செய்தாய் அவச்செயல் செய்தோர் அச்சுறுத்தியவர் அத்தனை பேரும் வியக்க நவமணி யிதழை நடத்தியே வந்தாய் நாளித ழாயதைக் கொணர கவனமே யெடுத்துக் கருமமாற்றுகையில் கடிதினிற் பிரிந்து போய்விட்டாய்
மனைவியை விபத்தில் இழந்தனை நண்பா மட்டில்லா சோகத் துழன்றாய் துணைவியின் பிரிவால் துவண்டிடா நின்று தொடர்ந்து நீ நவமணி தந்தாய் இணையிலாத் துன்பம் எத்தனை வந்தும் இதயமோ சோர்ந்திடா வண்ணம் துணிவுடன் நின்று துடிப்புடன் எமக்குத் தொடராக ‘நவமணி தந்தாய்
தினபதிக் குழுவில் நாமிணைந்திருந்தோம் தினந்தினம் இலக்கியம் செய்தோம் மனத்தினாற் பிணைந்து பணிபல செய்தோம் மணித்தமிழ் செழித்த கோதறு பண்பா, கொள்கையிற் பற்றுள நண்பா, மனமெலாம் துடிக்க மறைந்து போய்விட்டாய் pறுமையிற் பேறு நீ காண்க
pe
69

Page 37
அரசாங்க அனுதாபச் செய்தி
“நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் அல்ஹாஜ் எம்.பி.எம். அஸ்ஹரின் மறைவு குறித்து ஊடக மற்றும் தகவல் அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா தனது ஆழ்ந்த அனுதாபத் தைத் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் தனது அனுதாபச் செய்தியில் தானும் தனது அலுவலகப் பணியாளர்களும் அல்ஹாஜ் அஸ்ஹரின் மறைவு குறித்து ஆழ்ந்த அனுதாபம் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதேநேரம், வாராந்த அமைச்சரவைச் செய்தியாளர் மகாநாட் டிலும் அமைச்சர் நவமணி ஆசிரியரின் மறைவுக்கு அரசாங்கத்தின் அனுதாபத்தையும் தெரிவித்துள்ளார்.
www.thenee.com 29.08.2008
நவமணிதந்த நாயகன் அஸ்ஹர்
கோவை அன்சார், கொழும்பு 12.
இவர் விரித்த இதழ்களில்
இனம் காணப்பட்ட இளைய தலைமுறை
இலைமறை காய்கள் இவர் முயல்வின் வெளியானது!
இவர் இதழ், ஒரு சாராரின் இதழென பரவிய வதந்தி.
அதைப் பொய்யாக்கி ஒளிக்கு கொணர்ந்த உண்மை! இவர் ஆற்றிய கடமை நான்கு பத்து ஆண்டுகள் ஊடகத்துறை இவர் தொகுத்த பாராளுமன்ற செய்திகள் பல இதழ்களில்! இவர் தொண்டாற்றிய வீரகேசரி, தினபதி இவர் செய்தி பல சொல்லும் இவர் அமைப்பில் வெற்றி நடை கண்ட புதுமைக்குரல், எழுச்சிக் குரல் இறுதி மூச்சு வரை இவர் தொண்டு நவமணியில் பாராளுமன்ற விவகாரத் தொடர்பில் இவர் கை வண்ணத்தில்
‘உறுமும் கடலும்- உலவும் நதியும்' றமழான் பெருமை கூற ܖ 'மாண்புறும் ரமழான் மனதுக்கினிய பொக்கிஷங்கள் காலம் பல கடந்தாலும்.இவர் புகழ் என்றென்றும் எம் இதயங்களில். பசுமரத்தாணி போல் .
இறை அவன் இவருக்கு சொர்க்கத்தில் ஒரு இடம் தர எங்கள் பிரார்த்தனை
70

பத்திரிகைத்துறை தோய்ந்த பல்கலைக்கழகம்
- புரட்சி கமால் எம்.எஸ். அப்துல் ஹை (எம்.ஏ.)
சமுதாய தாகம் கொண்ட
சரித்திர புருஷர் எங்கள் - எம்.பி.எம். அஸ்ஹர்!
முஸ்லிம் சமூகத்தின் முதுசமாயிருந்தவர்
நம் நாட்டின் முஸ்லிம் பரப்புகளில்.
பத்திரிகா தர்மம் சமநோக்குச் சால்பியல் உடைப்பில் - சல்லாபிக்கும் இன்றுகளில். அதன் - வக்கிர யுகத்தை நார் கிழித்து
பேர் போனவர்!
கால் நூற்றாண்டு காலப் பெரு நகர்வாய். பாராளுமன்றப் படிகளில்
தன் பாதங்கள் நசுங்க. பத்திரிகைத் துறை தோய்ந்தது - இப்
பல்கலைக் கழகம்!
ஊடக தர்மத்தை சங்கோ ஓர் உச்சத்தில் அமர்த்தி விட்டு. எழுந்தமான எடுப்புகளில் எகத்தாள நினைக்கும்
வேடதாரிகளுக்கும். சமூக அபாண்டங்களையே ஸ்வரங்களாக்கி. குறுந்தேசிய விழிகளில் கொள்கை வகுக்கும் நம் அறிவாளிகளுக்கும் பாடம் புகட்டிய - அஸ்ஹரின்
ஊடகப் பார்வை
பக்குவம் ஆய்ந்தது மட்டுமல்ல. பரவசம் தோய்ந்தது மாகும்
அரை நூற்றாண்டுகால
பத்திரிகைப் பணியில். ஓர் ஈரம் தோய்ந்த
எடுப்பியலாக;- ஒரு விடயத்தை நாம்
சாரப் படுத்தினால்.
பத்திரிகைப் பலவான் அஸ்ஹருக்கு அத்துறையில் எவ்வாறு ஒரு முத்திரை இருக்கிறதோ..!
சமூகப் பரப்பில் அவருக்கு ஓர் அந்தஸ்தும்
ஆஸ்த்தானமு மிருக்கிறது!
ஆங்கில மொழிப்பலம் அவர்க்கு அத்துப்படி எனில் சிங்களம் - தமிழ் சிறப்பு
அவர்தம் இஷடப்படி..!

Page 38
‘உறுமும் கடலும் உலவும் நதியும்” - அவர் பெருமை.கூறும் ஊடகப் பணிகள்!
தன் இளமையை இனிமையை அதற்கென அர்ப்பணித்த
ஓகே முஹைதீன் எச்.எம்.பி. முஹைதீன் சஹாப்தீன் நானா.
இவர்கள் வரிசையில். எம்.பி.எம். அஸ்ஹர்
எங்கள் சகாப்தத்தின்
ஓர் இமயம்!
புதுமைக் குரலாய் t d 8 எழுச்சிக் குரலாய். நவமணியாய்.
நம் உணர்வுகளை உரசிப் பார்த்த
அந்த மாமனிதர் மறைந்து விட்டார்!
மெளனித்துப் போயிருக்கிறது அவர்தம் - மணி மகுடம்
இதழியலின் இலக்கணம்
- விடத்தல் தீவு, முனாஸ்கனி,
வரலாறு படைத்த மனிதருடன் மனிதர் படைத்த வரலாறுகளுள்
இரண்டையும் ஓர்மையாய்
பெற்ற
பேனாவால் படைத்த அறிவு
பத்திரிகை கண்ட பால் நிலவு என் ஆசிரியத் தந்தை
எம்.பி.எம். அஸ்ஹர் 'எடிட்டர் நற்குணம் பெற்ற சற்குண சீலர் வாக்கியங்கள் பல படைக்கும். ஆற்றல் மிகு தகைமையாளர் பிறரது துயர் துடைக்கும் சாந்தமிகு சிறப்பாளர்.
தனக்கு வந்த பிணி வடுவை.
தன்னுள்ளே புகுத்து வைத்தார்
பத்திரிகையே மரு)கத்துவம் . . . . 66
இன்னலோடு இயங்கி வந்தார்
சத்தியத்தை கொள்கையாய்
ஏற்றிட்டு பாடுபட்டார் சமூக விடியலுக்கு. இதழியலுக்குரிய இலக்கணத்தை சீர்மையுடன் பெற்றவரே.!
குற்றுயிராய் போன சமூகத்தை
புத்துயிர் ஊட்டி மீளெழுப்ப பேனாவுடன் புகட்டிய எழுச்சி
உரம் தந்தது புது
மறுமலர்ச்சிக்கு. தங்கள் மூச்சு நின்றதால் ஜென்னத்துக்குப் பயணித்துவிட்டீர் உம் வழிகாட்டல்கள். உயிர் பெற்று மிளிர்வதனால் உங்கள் சுவட்டு வழி தொடரும் எங்கள் பாதங்கள் - அது எம் இறுதி மூச்சு வரை..!
72

நெஞ்சில் நிறைந்த ஊடகத்தந்தை!
இக்ராம் ஆப்தீன்
என் அறிவுக்கு நீரிறைத்த ஊடகத் தந்தையே உம் பிரிவால் பீறிட்டு அழுகின்றேன் புகழினை பெற்றோர் பலர் இம் மண்ணில் உம்போல் சான்றோர் மறைவுதான் மழையில்லா நிலம் போல் வரட்சியைக் கொடுக்கின்றது. மறைவிலிருந்து மாணிக்கமாகவே மரணித்துவிட்டீர்.
மனம்போல் வாழாமல் மக்களுக்காய் இலட்சிய வெறியுடன் வல்லவன் பெயர் கொண்டு வரலாற்றில் நீராற்றிய பணிகள் ஜொலிக்கின்றன!
ஊடகத்தில் உலகறிய நீர் உயிர்விட்ட பின்பும் நீர் விட்ட விதைகள் நாம் வியாபித்து நிற்கின்றோம் இலட்சியம் எனும் அகராதியாய் உமைக்கண்டு உம் நினைவுகள் மரணிக்கவில்லை மலர்கின்றன மகத்துவமாய் எம் உள்ளங்களில்!
நான்கு சுவருக்குள் நீர் பதித்த முத்துக்கள் நாலாபுறமும் பேசப்படுகிறது பேரிழப்பு உம் உயிரிழப்பென்று. . . தலை நகரான் நீரென்றாலும் உம் தலைப்பார்வை கிழக்கையே நோக்கியது. கிழக்கின் மகிந்தனாய் உரத்துக் கூறுகின்றேன் உம் இழப்பு உண்மை பேசும் உதட்டுக்கும், நீதி தேடும் உள்ளத்துக்கும் ஈடற்ற இடைவெளிதான் என்று.
யா. இறைவா என் அருமை ஊடகத் தந்தையின் மறுமை வாழ்வை வறுமை, வெறுமையற்ற கவனத்துச் சோலையில் நிரந்தரமாக்கியருள்வாய் எனும் பிரார்த்தனையுடன் என் கண்ணிர் துளிகளை துடைத்துக் கொள்கிறேன் மீண்டும் உரத்துக் கூறுகின்றேன் - உம் நினைவுகள் மரணிக்கவில்லை w மலர்கின்றது. மகத்துவமாய் எம் உள்ளங்களில்
73

Page 39
அவர் பிரிந்து போனாரே! - மெளலவி காத்தான்குடி பெளஸ்
அஸ்ஹர் என்ற பெயருடனே ஆயிரம் பேர் உளர் அஸ்ஹர் இவர் - நம்சமூக அகராதியில் முதல் உள்ளார் முஸ்லிம்களை சிந்தித்த மூத்தவரில் இவர் ஒருவர்! முஸ்லிம்களுக்கு நவமணியை . முன்னின்று தொடங்கியவர்!
பத்திரிகை தொழில் மூலம் பலரினையும் மிகக் கவர்ந்தார், உத்தமர்கள் செய்திகளை ஒவ்வொன்றாய் பிரசுரித்தார், சத்தியமாய் அரசியலில்
சுழியோடி நிரூபததார். சுத்தமாய், பிழைசெய்தோர் சித்திரத்தை நிரூபித்தார்
அன்பார்ந்த சமூகத்தின் அரவணைப்பை அவர் பெற்றார் கண்முன்னால் எழுத்தாளர் கடுகடுப்பை தினம் சுமந்தார் புண்ணாகி மணமெல்லாம் பூ காய்ந்த நிலையானார், அன்பார்ந்த மனைவியையும் அவர் இழந்து கவலையுற்றார்
தினம் தினம் அவர் சிரிப்பு தேய்ந்தே போயிற்று மனம் வருந்தும் செயல் கூடி மலர்ச்சியெல்லாம் ஓய்ந்திற்று குணக் குன்றை, இறைவனவ.ை கூப்பிட்டு எடுத்துவிட்டான். மனம் நொந்தோம், மஹற்ஸரிலே மாளிகையில் சந்திப்போம்.
--

இலட்சத்திற்காக அல்லாமல் இலட்சியத்திற்காக பேனா ஆயுதம் தூக்கிய போராளியே!
as கோட்ட்ைமுனை முத்துமணி வாஹிட் ஏ. குத்துாஸ், பதுளை.
விடியும் வியாழன்தினம் இடியாய் சேதிசொல்லுமென சிறிதும் எதிர்பார்க்கவில்லை பிரிந்திரே அஸ்ஹர் ஹாஜியோ!
கணநேரம் ஸ்தம்பித்தேன் கனவாவென்றும் யோசித்தேன்! நவமணியின் பிரதம ஆசிரியரே உம்மைப்போல் இனி யார் வருவார்?
புதுமைககுரலில் புகுந்தவரே எழுச்சிக் குரலில் எழுந்தவரே தினபதி, வீரகேசரியோடு நவமணியிலும் நிமிர்ந்தவரே!
மலையது சரிந்தாலும் நிலையது குலையாதவரே! விலை எவர் பேசினாலும் அசையாது நிற்பவரே!
பழுத்த பத்திரிகையாளரே பெருத்த குணத்தோனே! விழுத்த யாருமிலை உம்சீர் உயர்பணியை
இளையோரையும் பலரையும் ஊக்குவித்தீர் உயர்த்தினிர் ஊடக உலகம் உமை மறக்காது உத்தமரே உம் சேவைகளை
நவமணியின் நாயகரே இலட்சியத்தோடு வாழ்ந்தவரே! துாயகலிமாவோடு பிரிந்தீராமே நாயகன் தருவான் நிச்சயம் சொர்க்கம்!
75

Page 40
அருமை அஸஹரே! வி.எம். அன்ஸார் கிண்ணியா-02.
"நவமணி" எனக்குக் காட்டிய “நல்மணி" "அஸ்ஹர்” என்னும் தவமணி மறைந்த செய்தி தன்னைக் கேட்ட திர்ந்தேன்! அவனியில் உங்கள் வாழ்வு அஸ்த மனம் ஆகியதே கவலையே மனதிற் கொண்டு கவிதைகள் ஆக்க லானேன்!
பத்திரி கையாளன்’ நீங்கள் பணிகள் புரிந்தது ஏராளம்! " அத்தனை பணிக்கும் ப்ட்டம் அதிகம் பெற்றீர்' சாமறி
சத்திய ஜோதி: மு.க." தந்த சிறந்த பிரஜை"இதழியல் வித்தகர்.” ஊடகத் தளபதியாய் வியக்க வைத்தீர் அஸ்ஹரே!
வாரம் தோறும் "நவமணி"யை வளமாய்த் தந்தீர் நல்ல காரண காரியம் செய்து கடமை முடித்தீர்' "இனியும் நேரம் இல்லை” என்றா நெடுந்துாரம் போனிர்? பாரம்ாய் நெஞ்சம் ஆனதே! . பத்திரிகைப் பொக்கிசம் போனதே!
அறுபத்து ஒன்றைத் தொட்டு அரும்பணி புரியும் போதில் மறுமை வாழ்வுக் கென்று
மரணம் அடைந்து விட்டீர்! இறுதிப் பயணம் செய்து இம்மை வாழ்வைத் துறந்தீர்! அருமை அஸ்ஹரே! உமக்கு “அல்லாஹற்” சுவர்க்கம் தரட்டும்
76

பிரார்த்திக்கிறோம்! கலாபூஷணம் மூதூர் கலைமேகம்
பத்திரிகா உலகின் JD(35(5 . பத்திபத்தியாய் எழுதிய அறிவின் தரு மூத்த எழுத்தாளர் எம்.பி.எம். அஸ்ஹர் மறைவையிட்டு அஞ்சலிப்போம்!
பல பத்து வருடமாய் இதழ்ப்பணியில் பல்லோரையும் கவர்ந்த பசும்பொன்னே வல்லோன் இறைவனிடம் ஏகினிரே வாழும் காலம் புகழ் கோடி பெறும்! முஸ்லிம் இனத்தின் முதுகெலும்பாம் முன்னோடி இதழ் நவமணியை கஷ்டத்திலும் வென்று வெளியிட்டீர்
கண்மணி ஆசான், உமை மறவோம்!
உங்கள் உளவாத்மா சுவன முறும் உத்தமர் அஸ்ஹர் உயர் மேதையே! எங்கள் கண்ணீர் உமக்காய் கசிந்தோடும்
எமது இளவலே உமக்காய் பிரார்த்தித்தோம்!
。米米米米来来水米米水水米米水米米来水水米水
77.

Page 41
இனி என்று 'காண்பேன்!
வெலிப்பன்னை அத்தாஸ்
அஸ்ஹர் மறைந்திட்டார் செய்தியால் அதிர்ந்து போனேன்!
ஆஸ்தானம் காலியாகி விட்டதா? பத்திரிகை உலக ஜாம்பவான் . . . . . . சமுதாய உயிர்த்துடிப்பாய் - நவமணியை நிலை நிறுத்திய பெருமகன் இத்தனை அவசரம் ஏன்? .
என்ன நடந்தது? மனத்தில் பல்வேறு வினாக்கள் நம்பவே முடியவில்லை!
நவமணி மட்டுமா? வீரகேசரி தினபதி பத்திரிகை அவர் துணிவில் எவ்வாறெல்லாம் மிளிர்ந்தன?' பத்திரிகைக்கென இருபத்தைந்து வருடங்கள பாராளுமன்ற கலரியை அலங்கரித்தவர்.
பணத்திற்கு விலை போகாத பதவிக்கென வால் பிடிக்காத ஓர்மை மனம் கொண்ட உத்தமர்!
உயர்வுகள் தேடியே வந்தும் உதறித்தள்ளி உன்னத இலட்சியத்தில் திளைத்தவர் எழுச்சிக்குரலில் எழுந்து அழுத்தமாய்த் தனித்துவம் பேணியவர் அறிமுகமின்றியும் அவரிடம் சென்றவர் ஆதரவு பெற்று எழுத்தில் உயர்ந்தே நின்றனர் எவர்க்கும் இன்முகம்காட்டி எழுத்தினில் உயர்வை ஊட்டி
பலமிக்க சமுதாயத் துாணாய்த் திகழ்ந்தவர்
பிரிந்தே போனார்!
இனி என்று காண்பேன்? தியாகங்கள் புரிந்த மகான் அஸ்ஹர் இஸ்லாமிய உத்தமன் இனிய சுவர்க்கம் இவர்க்கென நீ இறைவா! இனிதே வழங்க என் பிரார்த்தனை!
78

சுவர்க்கம் சேர்த்திடுவாய் - நாளிலிருல் ஹக் . லியாஉத்தீன் உஸ்மானி பேருவளை
நாற்பது வருடங்கள் நாட்டு மக்களுக்கு சேவை செய்த நல் உள்ளம் படைத்த . நவமணி ஆசிரியரே
உள்டகத்துறையில் உண்மையாக செயல்பட்ட உங்களின் மறைவு கேட்டு உள்ளங்கள் உருகியதே
அறிவு ஆற்றல் நிறைந்த அல்ஹாஜ் அஸ்ஹர் அவர்களே! அல்லாஹற்வின் அழைப்பேற்று அடைக்கலம் புகுந்து விட்டீரே
புதும்ைக் குரல் பத்திரிகையை புதுமையுடன் வெளியிட்ட புகழோங்கச் செய்த நீங்கள் புகுந்துவிட்டீர் தாருல் பகா
நவமணிப் பத்திரிகையை நாடு முழுதும் பரப்பச் செய்து நாட்டு மக்கள் அனைவரினதும் நன்மதிப்பைப் பெற்று விட்டீர்
இணையற்ற யாஅல்லாஹற் இறைநேசன் அஸ்ஹரை வள்ளல் நபி ஷபா அத்துடன் வீர சுவர்க்கம் சேர்த்திடுவாய்
• 7Ο

Page 42
இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் . . . . . . விபரத்திரட்டு
பாகம் - 01 முதல் பாகம் - 12 வரை
இணையத்தளத்தில் படித்திட.
www.noolaham.net
இப்புத்தகத்தையும் இணையளத்தளத்தில் படிக்க விரும்புவோர்.
www.noolaham.net
சிந்தனை வட்டத்தின் வெளியீடுகளை இணையத்தளத்தில் படித்திட
www.noolaham.net
80


Page 43

5-1779-19-1