கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தோழர் நவம்

Page 1

, GUIT GJILGİDİLDİ
三 ÖUIGiuli TIGDGJIGJö 6

Page 2

தோழர்
(B62/LP
பொதுவுடமைப் GumTofiນ) நினைவுகள்
O7. I 1.2 OO4
நினைவுக் குழுவும் குடும்பத்தினரும்.
པའི་ தோழர் நவம்.

Page 3
*
தோழர் D 62/L5
அமரர் சின்னத்துரை நவரத்தினம்
தோற்றம்
28 - 02 -- 1945
மறைவு
08 - 10 - 2004
*
தோழர் நவமி. ☆
 
 
 
 
 
 
 
 
 
 

தோழர்களின்.
தோழர் நவம்
வாழ்க்கை வரலாறு நினைவுக் குழுவினர்
எழுதிய கவிதை
சோ.தேவராசா பொதுவுடைமைப் போராளி கொழும்பு மாவட்டக்குழு ஒரு சமூகமாற்றச் செயற்பாட்டாளர் வடபிரதேசக்குழு நல்லதொரு தோழர் பேராசிரியர் சிவசேகரம் எனது ஆயிருர் நண்பா. . த. குணரட்ணம் கட்சியின் உந்து சக்தி ஞா.சிறிமனோகரன் கம்யூனிஸ்டாக வாழ்தல் சிவ. இராஜேந்திரன் ஓய்வறியாது இயங்கிய செயல்வீரர் ந. இரவீந்திரன்
உணர்வுமிக்க தோழர் இ.கா.கணபதிப்பிள்ளை ஈடுசெய்ய முடியாத இழப்பு பு ஜ க - மலையகக் கமிட்டி அன்புக்கும் மதிப்பிற்குமுரிய அக்கா வ. சுப்பிரமணியம்.
C அமரர் சின்னத்துரை நவரத்தினம்
X தோழர் நவமி.
3 )

Page 4
உறுதிமிக்க உத்தமனின் மறைவு கா. கதிர்காமநாதன் தொழிற்சங்கப் போராட்டங்களில் கா.பஞ்சலிங்கம் ஒரு பூரண மனிதன் செல்வி.க.கண்ணா ஒர் நல்ல தொண்டன் ஆ.கந்தசாமி கற்றுக் கொள்ள வேண்டியவை ஜெ.சற்குருநாதன் சமூகப் பார்வையை தூண்டியவர்
கு.மோகன் தோழர் நவத்துக்கு அஞ்சலி க.தணிகாசலம் பொய்யற்றிருந்த போராளி புதுவை இரத்தினதுரை இங்கு ஆற்றுபவர் யாருமிலர். க.கமலசேகரம் எழுந்து வாரிரோ?
அழ.பகீரதன் மறைந்த தோழர் மணியம் திருமதி.வ. சுப்பிரமணியம். செயலி விரன் திருமதி.ஈஸ்வரி.தர்மலிங்கம் தோழமையின் நினைவாக இ.செல்வநாயகம். புரட்சிகர வெகுஜனப் போராளி வை.வன்னியசிங்கம் மறைவுக்குப்பின் வாழ்தல் க.ஜெயபாலசிங்கம்
தோழர் நவம். X

வாழ்க்கைக் குறிப்புக்கள்
எங்கள் அனைவரினதும் அன்புக்கும் மதிப்பிற்கும் தோழமைக்கும் பாத்திரமாகி வாழ்ந்து வந்தவர் தோழர் சிநவரத்தினம். கடந்த 8.10.2004 அன்று ஏற்பட்ட மாரடைப்பு நோயினால் இயற்கை எய்தினார். அவரது திடீர் மறைவு பேரதிர்வு கொண்ட துயரமாகி ஈடுசெய்ய முடியாத இழப்பாகிக் கொண்டது. குடும்பத்தவர்களுக்கும் அவர் இணைந்து நின்று இறுதி மூச்சு வரை செயலாற்றி வந்த புதிய ஜனநாயகக் கட்சிக்கும், பொதுவாழ்வின் ஊடாக ஐக்கியப்பட்டு பணியாற்றி வந்த ஆத்திசூடி வாழ் மக்களுக்கும் மட்டுமன்றி அடக்கியொடுக்கப்பட்டு சமூக நீதி வேண்டி நிற்கும் அனைத்து உழைக்கும் மக்களுக்கும் தோழர் நவத்தின் இழப்பு பேரிழப்பாகும். •
தோழர் நவம் யாழ்ப்பாண மாநகர எல்லைக்குட்பட்ட கந்தர்மடம் ஆத்திசூடி வீதியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். சின்னத்துரை கண்மணி ஆகியோர் இவரது பெற்றோராவார். இவருடன் காலஞ் சென்ற நாகம்மா, இராசாத்தி ஆகிய இரு சகோதரிகளும், யோகரத்தினம் எனும் சகோதரரும் உடன்பிறந்தவர்களாவர். சாதாரண தொழிலாளர் குடும்பத்தின் மூத்த பிள்ளையாகப் பிறந்து 1ளர்ந்த நவம் தனது ஆரம்பக்கல்வியுடன் பாடசாலைக் கல்வியைக் கைவிடவேண்டியதாயிற்று. அன்றைய பொருளாதார நிர்ப்பந்தங்களே அதற்கு அடிப்படைக் காரணமாகியது. அதனால் சிறு வயதிலேயே உடல் உழைப்பில் ஈடுபட்டு கட்டிடத் தொழிலாளியாகி தனக்குரிய தொழிலை நிலைப்படுத்திக் கொண்டார். தமது சொந்த மைத்துனியாகிய சந்திராவை திருமணம் புரிந்து வாழ்க்கைத் துணைவியாக்கிக் கொண்டார். நவம் சந்திரா குடும்ப வாழ்க்கைப் பயணத்தில் நளினி, நவாஸ்சங்கர், நர்மதன், நவநீதன் ஆகிய பிள்ளைகளை பெற்றெடுத்து வளர்த்தெடுத்தனர். ஒரு தொழிலாளி குடும்பம் இன்றைய ஏற்றத்தாழ்வான சமூக அமைப்பின் கீழ் எதிர்கொள்ளக்கூடிய அத்தனை சமூக பொருளாதார அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கும் சவால்களுக்கும் முகம் கொடுத்து தனது குடும்பத்தை முன்னெடுத்துச் செல்வதில் உறுதியாக இருந்து வந்தவர் தோழர் நவம். அவர் மதுப் பழக்கமோ புகைக்கும் வழக்கமோ அற்றவர். நேர்மையான உடல் உழைப்பும் மற்றையோருக்கு உதவும் பரந்த மனப்பாங்கும் கொண்டவர். எளிமையான வாழ்வும் கடினமான போராட்டமும் என்பதற்கு அமைய தன்னையும் தனது குடும்ப வாழ்வையும் அமைத்துக் கொண்டவர்.
தோழர் நவம் பாடசாலைக்கல்வியை ஆரம்ப நிலைக்கு மேல் முன்னெடுக்க முடியாத சூழலிலும் சமூக நிலைமைகளை உற்று நோக்குவதிலும் அவற்றின் மீது கேள்வி எழுப்புவதிலும் மிகக் குறைந்த வயதிலேயே ஆர்வமும் அக்கறையும் கொண்டவராகக் காணப்பட்டார். சமூக ஏற்றத்தாழ்வுகள் ஏன் கடைப
X தோழர் நவமி. 5)

Page 5
பிடிக்கப்படுகின்றன? சாதியும் தீண்டாமையும் எவ்வாறு சமூக நடைமுறையாகின? மனிதர்கள் வகுத்தும் பிரித்தும் பார்க்கப்பட்டு ஒருசாரார் ஒரு விதமாகவும் மறுசாரார் வேறொரு விதமாகவும் நடாத்தப்படுவதற்குரிய காரணங்கள் யாவை? போன்ற கேள்விகள் அவரது பதினாறு பதினேழு வயது காலகட்டத்திலேயே முளைவிட ஆரம்பித்து விட்டன. இதன் விளைவாக தன்னிடம் எழுந்த கேள்விகளுக்கு விடைதேடும் வகையில் பத்திரிகைகள் சஞ்சிகைகளைத் தேடி வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். அக்காலத்தில் தமிழகத்திலிருந்து இங்கு தாராளமாக வந்து கொண்டிருந்த திராவிட இயக்க பத்திரிகைகள் சஞ்சிகைகள் அவரது தேடலுக்கும் வாசிப்பிற்கும் தகுந்த தீனியாகிக் கொண்டன. வேலை முடிந்து வந்ததும் தனது பகுதியிலிருந்து கால் நடையாகவே வந்து குறிப்பிட்ட புத்தகசாலைகளில் மேற்படி திராவிட இயக்க பத்திரிகைகள் சஞ்சிகைகளை வாங்கிச் சென்று படிப்பார். அவர் வெறும் வாசகராக அன்றி விடயங்களை ஊன்றிப் படித்து அவற்றின் சாராம்சங்களைச் சிந்தனைக்கும் விவாதத்திற்கும் எடுத்துக் கொள்ளும் பழக்கத்தை ஆரம்பம் முதலே கடைப்பிடித்து வந்தார்.
இவ்வாறான நிலையிலே அறுபதுகளின் முற்கூறிலே பொதுவுடைமைக் கருத்துக்கள் அவர் வாழ்ந்து வந்த சூழலிலே பரப்பப்பட்டு வருவதை நவம் அவதானித்தார். அப்பகுதியில் ஜெயசீலன், குணரட்ணம் ஆகிய இருவரும் மிக விரிவாகவும், விளக்கமாகவும் ஆழமான சமூகப் பார்வையுடனும் கூறி வந்த பொதுவுடைமைக் கருத்துக்கள் நவத்தாரை மிக விரைவாகவே ஈர்த்துக் கொண்டன. 1963-64 காலப்பகுதியில் பொதுவுடைமை இயக்கம் தேசிய - சர்வதேசியரீதியாக பெரும் விவாதங்களைக் கண்டது. சமாதான பாராளுமன்றப் பாதையா அல்லது புரட்சிகர மக்கள் போராட்டப் பாதையா என்பதை அவ்விவாதங்களின் பிரதான தொனிப் பொருளாக அமைந்திருந்தது. மேற்படி விவாதமானது வெறுமனே அரசியல் தத்துவார்த்த விவாதமாக மட்டுமன்றி நமது சமூகச் சூழலின் பிரச்சினைகளுடனும் தொடர்பு பட்டு நின்ற யதார்த்த நிலைமைகளை நடைமுறைகளின் ஊடே பார்க்க வைத்தது.
இவ்விவாதம் மூலம் இலங்கையின் மூத்த பொதுவுடைமைக் கட்சி முன்பு எப்பொழுதும் கண்டிராத பெரும் பிளவைச் சந்தித்துக் கொண்டது. வடபுலம் இப்பிளவின் போது புரட்சிகர போராட்டப் பாதையை வற்புறுத்தி நின்ற தோழர் சண்முகதாசன் தலைமைத்துவத்தை பெரும்பான்மையாக ஏற்றுக் கொண்ட நிலைக்கு உள்ளானது. வடபுலத்தில் இப்புரட்சிகர நிலைப்பாட்டை தோழர்கள் மு.கார்த்திகேசன், டாக்டர். சு.வே.சீனிவாசகம், வீ.ஏ.கந்தசாமி, கே.ஏ.சுப்பிரமணியம், கே.டானியல், நீர்வைப் பொன்னையன், எம்.குமாரசுவாமி போன்றவர்கள் முன்னெடுப்பவர்களாக இருந்தனர். வடபுலத்து புரட்சிகரத் தலைமைத்துவத்தின் கீழ் இளைஞர் அணி மிகவேகமாக வளரப் பெற்று அணிதிரண்டு வந்தது.
இக்காலத்தில் தோழர் நவரத்தினம் பொதுவுடைமை இயக்க வாலிபர் இயக்கத்தில் 1964 ல் இணைந்து கொண்டார். ஏனைய தோழர்களுடன் சேர்ந்து
(X தோழர் நவமி. 6

புரட்சிகர நிலைப்பாட்டில் செயல்படுபவராகிக் கொண்டார். இக்காலப்பகுதியில் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மு.கார்த்திகேசன் வண்ணார்பண்ணை' கலட்டிப் பகுதியில் வாடகை வீடு எடுத்து குடி இருந்து வந்தார். இதனால் தோழர் நவம் உட்பட இப்பகுதி ஏனைய தோழர்களுக்கம் கார்த்திகேசனுக்கும் நெருக்கமான தொடர்புகள் ஏற்பட்டன. அக்காலத்தில் வண்ணார்பண்ணைப் பகுதியின் கட்சிக் கிளை மிகவும் பலமுடையதாகவும் அதன் கீழ் பல வாலிபர் சங்கங்களும் இயங்கி வந்தன. ஞா.சிறிமனோகரன், எஸ். மகேந்திரராசா, செல்வ்பத்மநாதன், சிப்பித்தறை குணரத்தினம் போன்றோர் அதில் அங்கம் பெற்றிருந்தனர். அக்காலகட்டத்தில் கொட்டடி குணரத்தினம் கட்சியில் முன்னணியில் இருந்து இயங்கி வந்தவர். அவர் ஆத்திசூடிப் பகுதியில் தொடர்பு கொண்டு கட்சி வேலைகளை விரிவுபடுத்தி வந்தார். அத்தகைய கிளையில் தோழர் நவத்திற்கு அங்கத்துவம் கிடைத்தது. பொதுவுடைமைக் கட்சி அங்கத்துவம் பெறுவது என்பது எப்பொழுதும் இலகுவானதொன்றல்ல. ஆனால் தோழர் நவத்தின் செயற்பாடுகள், விடயங்களை அணுகும் முறைமை, புரட்சிகர நிலைப்பாடு காரணமாக 1965 ல் அவருக்கு கட்சி அங்கத்துவம் வழங்கப்பட்டது. தோழர் கார்த்திகேசன் நவம் மீது மிகுந்த அன்பும் அக்கறையும் வைத்திருந்தார். ஒரு தொழிலாளியாக வாழ்ந்து மிகுந்த அக்கறையுடன் கட்சிப் பணிகளை முன்னெடுத்து வந்தமை நவம் மீதான அதிக அக்கறையை கார்த்திகேசனுக்கு ஏற்படுத்தியது. ஒரு முறை எல்லோரும் கதைத்துக் கொண்டிருந்த வேளை ஏதோ ஒரு வேலையை முன்னெடுப்பது பற்றிப் பேசும்போது கார்த்திகேசன் நவத்தைப் பார்த்து தனது வழமையான நகைச்சுவையுடன் ‘காத்தாரும் நவத்தாரும் சேர்ந்து அதனை முன்னெடுப்போம்’ என்று கூறினார்.
தோழர் நவம் 1965ம் ஆண்டிலிருந்து புரட்சிகர பொதுவுடைமைக் கட்சி அமைப்பு ரீதியிலும் வெகுஜன செயற்பாட்டுவழிகளிலும் முன்னெடுத்து வந்த சகல நடவடிக்கைகளிலும் போராட்டங்களிலும் முன்னணியில் நின்ற ஒரு பொதுவுடைமைப் போராளியாகத் திகழ்ந்து வந்தார் என்பதே அவருக்குரிய சிறப்பு அடையாளமாகும். 1966ம் ஆண்டு ஒக்ரோபர் 21 இல் எழுந்த சாதிய தீண்டாமைக்கு எதிரான புரட்சிகர எழுச்சியில் கலந்து கொண்ட அவர் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற போராட்டங்களில் முன்னணியில் இருந்து வந்தார். தமது பகுதியில் அமைந்திருந்த நாச்சிமார் கோவிலில் “ஆலயப் பிரவேசப் போராட்டத்தை’ முன்னெடுத்து வெற்றி பெறச் செய்வதில் அவரது பங்கும் பணியும் முன்னிலை வகித்தது. 1966-71 காலகட்டத்தின் பிரசித்தி பெற்ற ஆலயப் பிரவேசப் போராட்டங்களான மாவிட்டபுரம், மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன், தொண்டமானாறு செல்வச்சந்நிதி, வல்லிபுரக்கோவில் போன்றவற்றுக்கான வெகுஜனப் போராட்டங்களில் முன்னின்று வந்தவர் தோழர் நவம். சங்கானை மந்துவில் - கொடிகாமம், கரவெட்டி - கன்பொல்லை - நெல்லியடி, அச்சுவேலி போன்ற பிரதேசங்களில் இடம்பெற்ற தேனிர்க்கடைச் சமத்துவப் போராட்டங்களில் பல்வேறு நிலையங்களில், பங்கு கொண்டு செயல்பட்டவர். தோழர்கள் கே.ஏ.சுப்பிரமணியம், வி.ஏ.கந்தசாமி, எஸ்.ரி.என்.நாகரத்தினம், கே.டானியல் ஆகியோரின் அன்புக்கும் மதிப்புக்கும் உரிய தோழராக தோழர் நவம் திகழ்ந்தார்.
X தோழர் நவமி. 7)

Page 6
வெகுஜனப் போராட்டங்களில் சாதிய தீண்டாமைக்கு எதிராகப் போராடி வந்த அனுபவம் பட்டறிவின் மூலமாக அவர் வர்க்க உணர்வும் சமூக மாற்றத்தின் உறுதியான பற்றும் கொண்டு மாக்சிசம் லெனினிசம் மாஒ சேதுங் சிந்தனை மீதான தளராத நம்பிக்கையுடன் செயல்பட்டும் வந்தார். முன்பு மாக்சிசம் லெனினிசம் பற்றிப் பேசியவர்கள் பலர் இன்றைய சூழலில் அதனின்று தூர விலகிச் சென்று தமது இயலாமையை வெளிப்படுத்திய போதும் தனது இறுதி மூச்சு வரை மாக்சிச லெனிசவாதியாகவே தோழர் நவ்ம் வாழ்ந்து அதற்காகப் பணிபுரிந்து வந்தார் என்பதே அவரது பலத்தின் அடிப்படையாகும்.
தோழர் நவம் வெறுமனே செயற்பாட்டாளராக மட்டுமன்றி நடைமுறை சார்ந்த தத்துவார்ந்த விடயங்களைப் படித்து முன்னெடுப்பவராகவும் இருந்தார். மாக்சிச லெனினிசம் மாஒசேதுங் சிந்தனை அடிப்படையில் சிந்தித்து விடயங்களை அணுகுபவராக இருந்து வந்தார். மாக்சிச உலகக் கண்ணோட்டத்தின் ஊடாக சமகால பொருளாதார அரசியல் சமூகப் பண்பாட்டுப் பிரச்சினை அணுகி ஆராய்ந்து கொள்வதில் தனக்குரிய பாணியில் கருத்துக்களை முன்வைத்து வந்தார். அவரது வாழ்விலும் கருத்துக்களிலும் செயற்பாடுகளிலும் சுயநலத்தை காண இயலாது. பரந்துபட்ட மக்கள் நலன் கட்சி நலன் என்பதையே முதன்மைப்படுத்துபவராக தோழர் நவம் செயற்பட்டு வந்தார்.
அந்த வகையில் தான் வாழ்ந்து வந்த ஆத்திசூடி வீதிப் பகுதியில் கலைமகள் சனசமூக நிலையத்தைச் சமூக அக்கறையுள்ளவர்களுடன் இணைந்து கட்டியெழுப்பி அதன் ஊடே அப்பகுதி மக்களின் பன்முக முன்னேற்றங்கள் முயற்சிகளுக்கு முன்னின்று உழைத்தார். சனசமூக நிலைய நிர்வாகத்தில் தொடர்ந்து செயலாற்றி இறுதி ஆண்டுகளில் அதன் தலைவராக இருந்தும் செயல்பட்டார். அவரது பதவிக் காலத்திலேயே சனசமூக நிலையத்தின் மேல்மாடி பூர்த்தி செய்யப்பட்டு ஐம்பதாவது ஆண்டு விழாவும் கொண்டாடப்பட்டது. இவ்வாறான பொது வேலைகளில் தனது அரசியல் கருத்துக்களுடன் முரண்பாடு கொண்டவர்களுடனும் குறிப்பிடப்பட்ட தளத்தில் ஐக்கியப்பட்டு வேலைகளை முன்னெடுத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். சமூக அக்கறையுடனும் மக்களின் தேவைகளின் அடிப்படையிலும் கலைமகள் சனசமூக நிலையத்தின் ஊடாகப் பதவி பட்டங்களுக்கு அப்பால் நின்று பரந்த மனப்பாங்குடன் இளைஞர்கள் வளர்ந்தோர் ஆகிய இருதரப்பினருக்கும் பாலமாக நின்று உற்சாகமாகச் செயற்பட்டு வந்தவர். அவரது அன்றாட வாழ்விலும் செயலிலும் இருந்து இளைஞர்கள் நிறையவே கற்கவும் செயற்படவும் வேண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
தோழர் நவம் தனது அரசியல் வாழ்வு வேறு குடும்ப வாழ்வு வேறு என வாழ்ந்தவரல்லர். இரண்டையும் இணைத்து குடும்பத்தை அரசியல் மயப்படுத்தி வாழ்ந்து வந்தவர். அதனால் அரசியலிலும் பொது வாழ்விலும் குடும்பத்தினர் பங்காளிகளாக இருந்து செயற்பட்டு வந்துள்ளனர். எத்தகைய கருத்தையும்
(X தோழர் நவம். 8

முன்வைத்து விவாதித்து சரி பிழை என்பனவற்றை அடையாளம் கண்டு சரியானவற்றின் பக்கம் நின்று வரும் பண்பை அவர் வளர்த்துக்கொண்டார்.
அரசியல் பொது வாழ்வில் மட்டுமன்றி கலை இலக்கியத்தளத்திலும் அவர் ஆர்வம் மிக்க ஒருவராக இருந்து வந்தார். வாசிப்புத் திறன் கொண்ட அவர் மக்கள் கலை இலக்கியத்தின் அடிப்படை நன்கு விளங்கி அதன் ஊடாகக் கலை இலக்கியப் ப்டைப்புக்களை விமர்சனப் பார்வையுடன் அணுகி வந்தமை குறிப்பிடத்தக்கதாகும். தேசியக் கலை இலக்கியப் பேரவை ஆரம்பித்த வேளை அதன் ஆரம்ப செயற்பாட்டாளர்களில் ஒருவராக முன்னின்று செயற்பட்டார். தாயகம் சஞ்சிகையின் முதல் வெளியீட்டு முகவரி அவரது ஆத்திசூடி வீதி இல்லத்தையே சுட்டி நிற்பது காணக்கூடியதாகும்.
இன்றைய சமூகம் வர்க்க சமூகமாகும். இந்தச் சமூகத்தில் வர்க்க முரண்பாடுகளால் மேலும் பல முரண்பாடுகளும் பிரச்சனைகளும் தோற்றுவிக்கப்பட்டு வளர்க்கப்பட்டுள்ளன. இதனை முடிவுக்கு கொண்டு வருவதற்கு வர்க்க உணர்வு பெற்ற தொழிலாளி வர்க்கம் தனக்குரிய கட்சியாக கம்யூனிஸ்ட் கட்சியை கட்டியெழுப்பி புரட்சிகரப் போராட்டங்கள் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதையே மாக்சிசம் லெனினிசம் உலகிற்கு கற்றுத் தந்துள்ளது.
தோழர் நவம் ஒரு தொழிலாளியாகத் தனது வாழ்வை ஆரம்பித்து தனது இறுதி மூச்சை தொழிலாளியாகவே விட்டுக்கொண்டவர் ஆனால் வெறுமனே சராசரித் தொழிலாளியாக அன்றி மிகவும் முன்னேறிய ஆக அரசியல் உணர்வு மிக்க தொழிலாளியாகவும் கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தால் உறுதி பெற்ற ஒரு தலைமைத்துவம் மிக்க ஒரு தோழராகவும் வளர்ச்சி பெற்றிருந்தமையே குறிப்பானதாகும். சாதாரண ஒரு உறுப்பினராக கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இணைந்த தோழர் நவம் அந்த இயக்கத்தின் சகல போராட்டங்கள், உட்கட்சி வளர்ச்சி முரண்பாடுகள் என்பனவற்றின் ஊடே அவ்வியக்கத்தை முழு இலங்கையிலும் அதே போன்று வடபுலத்திலும் கட்டிக்காத்து முன்னெடுப்பதில் படிப்படியான வளர்ச்சிப் பாத்திரத்தை வகித்து வந்தார். அவர் கட்சியினதும் வெகுஜன அமைப்புகளினதும் சகல குழுக்களிலும் அங்கம் பெற்றதுடன் எழுபதுகளில் வடபிரதேச தலைமைக்குழு உறுப்பினர்களில் ஒருவராகி நின்றார். 1978 ம் ஆண்டின் பின் புதிய ஜனநாயகக் கட்சியின் (இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (இடது) ) மத்திய குழுவிலும் அதன் உயர்பீடமான அரசியல் குழுவிலும் மறைவு வரை அங்கம் பெற்றிருந்தார். அவரிடம் பெரு அளவிலான பேச்சாற்றல் இருக்கவில்லை. ஆனால் அண்மைய ஆண்டுகளில் பெரும் கூட்டங்களுக்குத் தலைமை தாங்கிப் பேசும் அளவிற்கு தனது ஆளுமையை உணர்வு பூர்வமாகவே வளர்த்துக்கொண்டார். அவரது தலைமையிலேயே 2003ம் ஆண்டு மேதினக் கூட்டம் யாழ் நகரில் இடம் பெற்றதும் அதில் ஆற்றிய தலைமையுரை மிக முக்கியமானதாக அமைந்திருந்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.
X தோழர் நவம். 9)

Page 7
தோழர் நவம் இறக்கும் போது ஐம்பத்தியொன்பது (59) வயது முடிவுறும் தருவாயில் இருந்தார். அவரது வாழ்வின் நாற்பது (40) ஆண்டுகள் அரசியல் பொது வாழ்வில் தன்னை ஈடுபடுத்தி வந்தார். அவர் பொதுவுடைமை இயக்கத்தில் இணைந்த இளமைக்காலத்தில் எத்தகைய உணர்வும் துடிப்பும் நம்பிக்கையும் கொண்டவராக தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்தாரோ அதே அளவிலான உணர்வுடனும் செயல்பாட்டுடனும் தனது இறுதி மூச்சு வரை தனது அரசியல் பொது வாழ்வுப் பணியை முன்னெடுப்பவராக இருந்தார். தோழர் நவம் கட்சியினதும் வெகுஜன அமைப்புகளினதும் சகல இயக்கங்கள் போராட்டங்களிலும் பங்கு கொண்டிருந்தார். இதனால் பொலீஸ் தாக்குதல்களாலும் பிற்போக்கு சக்திகளாலும் பல தடவைகள் கடும் தாக்குதல்களைப் பெற்றவர். பல மாதங்கள் விளக்கமறியலில் சிறையில் இருந்தவர்.
வடபுலத்தில் மட்டுமன்றி கொழும்பில் வாழ்ந்த சில வருடங்களில் தென்னிலங்கையில் இடம்பெற்ற பல வெகுஜனப் போராட்டங்களில் முன்னின்றவர். மலையகத்தில் கட்சி முன்னெடுத்த பல்வேறு இயக்கங்களில் மலையகத் தோழர்களுடன் இணைந்து செயல்பட்டவர். தேசிய இன ஒடுக்கு முறைச் சூழலில் பேரினவாதத்தை எதிர்த்த போராட்டத்தில் கட்சியின் முடிவுகளுக்கு அமைய சகல வெகுஜனப் போராட்டங்களிலும் தோழர் நவம் ஏனைய தோழர்களுடன் இணைந்து நின்று கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி நின்றார். அன்றிலிருந்து இன்று வரை இடம் பெற்ற சகல அடக்குமுறைகளுக்கும் எதிரான பல்வேறு போராட்டங்களில் பல்வேறு தளங்களில் இருந்த பங்குகொண்டு தனது உணர்வையும் உத்வேகத்தையும் வெளிப்படுத்தி வந்தார். தேசிய இன,ஒடுக்கு முறைச் சூழலில் பேரினவாதத்தை எதிர்த்து நிற்பது இன்றைய பிரதான கடமை என்ற கட்சியின் முடிவை முன்னெடுத்துச் செல்வதில் தோழர் நவம் இது வரை உறுதியுடன் நின்று செயல்பட்டு வந்தார். அத்துடன் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் முற்றிலும் நியாயமானது என்பதையும் அதனை மாக்சிச லெனினிச அடிப்படையில் முன்னெடுக்கப்படல் வேண்டும் என்ற முடிவில் மிகுந்த நம்பிக்கை உடையவராகவும் இருந்து வந்தார்.
தொழிலாளர்கள் விவசாயிகள் தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் சகல உழைக்கும் மக்களின் நலன்களுக்கும் எதிராகவோ அவ்வாறே கட்சிக்கு எதிராகவோ எவர் கருத்து வைத்தாலும் அதனை தயவு தாட்சண்யம் இன்றி நேரடியாகவே எதிர்த்து நிற்கும் சுபாவமுடையவர் தோழர் நவம். அவரிடம் இவ்விடயத்தில் விரைவாகவே எழும் அந்த உணர்ச்சி ஆழ்ந்த கொள்கைப் பற்றும் இலட்சியதாகமும் பரந்த மனித நேயத்தின் மீதான உணர்வின் காரணமாகவே எழுந்து கொள்வதாகவே காணமுடியும்.
இன்றைய சமூகத்தில் இடம்பெறும் ஒடுக்குமுறைகள் சமூக அநீதிகளைக் கண்டும் காணாது இருப்பது ஒரு நேர்மையான கம்யூனிஸ்டுக்கு இயலாத ஒன்றாகும். அல்லது அவற்றுடன் சமரசமாகி நிற்கும் எவரையும் கம்யூனிஸ்ட் என்று ஒரு
10 .... . .IL6همgmuof TRق گC

போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. உண்மைக்காக வாதாடுவதும் போராடுவதும் தான் ஒரு கம்யூனிஸ்ட்டின் அடிப்படைக் குணாம்சம். அதேவேளை தவறுகள் இழைக்கப்படின் அது மக்களுக்கும் கட்சிக்கும் பாதகமானதெனில் அதனைத் திருத்திக் கொள்வது கம்யூனிஸ்டுக்களின் நிலைப்பாடாகும். தோழர் நவம் மேற்கூறியவாறான ஒரு நேர்மையான கம்யூனிஸ்டாக மக்களுக்கும் கட்சிக்கும் பயன்தரும் வகையிலான வாழ்வு வாழ்ந்து மறைந்தவர்.
அவர் தனது வாழ்நாளில் அடிமை குடிமை முறைகளையும் சாதிய ஒடுக்கு முறைகளையும் எதிர்த்து நின்றவர். அவ்வாறே மூடநம்பிக்கைகளையும் விஞ்ஞான அறிவு சார்ந்த விடயங்களுக்கு அப்பாலான மதக் கிரிகைகள் சடங்குகளை நிராகரித்து வந்தவர். தனது இறப்புக்குப் பின் ஒரு கம்யூனிஸ்டுக்கு உரிய இறுதி அஞ்சலி நிகழ்வு நிகழ்த்தப் படுவதையே தனது மனைவி பிள்ளைகளிடம் எடுத்துக் கூறிக் கொண்டவர். அவ்வாறே அவரது இறுதி அஞ்சலி நிகழ்வுகள் எவ்வித மதக் கிரிகைகளும் இன்றி புதிய ஜனநாயகக் கட்சியினால் நடாத்தப்பட்டது.
நவத்தார் எனத் தோழமையுடனும் அன்பு பாசம் மதிப்புடனும் சகலராலும் அழைக்கப்பட்ட தோழர் சிநவரத்தினத்தின் இழப்பு அனைவருக்குமே பேரிழப்பாகும். அவரது வாழ்வையும் பணியையும் விரிவாக எடுத்தியம்ப இந்நினைவு மலரின் பக்கங்கள் போதுமானவை அல்ல. அது ஒரு தனி நூலாகும் தேவை கொண்டதாகும். அவ்வாறான ஒரு நூல் காலத்தின் கட்டாயமும் வரலாற்றுப் பதிவிற்கான அவசியமுமாகும். அது புதிய தலைமுறையினர் கற்பதற்கும் செயல்படுவதற்கும் வழிகாட்டியாகவும் அமையக் கூடியதொன்றாகும். எதிர்காலத்தில் அதனைச் சாத்தியமாக்க முயல்வோம்.
தோழர் நவரட்ணத்திற்கு எமது புரட்சிகர இறுதி அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்! -
யாழ்ப்பாணம் நினைவுக் குழுவினர் 07.11.2004
女 62ngi bould.......... 110

Page 8
தோழர் நவத்தின் புரட்சிகர நாமம் என்றும் நிலைத்திருக்கும் சிகா.செந்திவேல்
(பொதுச் செயலாளர், புதிய ஜனநாயகக் கட்சி) தோழர் நவரட்ணம் இறந்து விட்டார் என்ற அதிர்ச்சி தரும் அந்த நடு இரவுச் செய்தி நம் அனைவரையும் ஒரு கணம் நிலை குலைய வைத்து விட்டது. அவருக்கு இரத்த அழுத்த நோய் இருந்து வந்தமை பற்றி நாம் அறிந்திருந்தும் இவ்வளவு விரைவில் அவரது உயிருக்கு முடிவு வந்து விடும் என எவருமே எதிர்பார்த்திருக்க வில்லை. அவர் இறப்பதற்கு ஒரு மாதம் முன்னதாக செப்படம்பர் 11ம் 12ம் திகதிகளில் கொழும்பில் இடம் பெற்ற கட்சியின் மத்திய குழுக் கூட்டத்திற்கு ஏனைய தோழர்களோடு சேர்ந்து வந்திருந்தார். இரண்டு நாட்கள் நடைபெற்ற முழு நாள் கூட்டத்திலும் தெகிவளை நகரசபை மண்டபத்தில் இடம் பெற்ற அரசியல் கருத்தரங்கிலும் அவர் கலந்து கொண்டார். அதுவே அவருடனான இறுதிநேரடிச் சந்திப்பாகவும் அமைந்திருந்தது. அப்போது அவரிடம் நோயின் அறிகுறியோ அல்லது சோர்வோ களைப்போ இன்றி விவாதங்களிலும் கருத்துப்பரிமாற்றங்களிலும் கலந்து கொண்டார். ஒரு சந்தர்ப்பத்தில் அடுத்து வரும் ஐந்து மாதங்களில் தனது அறுபது வயது வர இருப்பதாகவும் அச் சந்தர்ப்பத்தில் தனது அரசியல் அனுபவங்களை எடுத்துக் கூறும் ஒரு நூல் ஒன்றை வெளியிட விரும்புவதாகவும் அதற்கு மத்திய குழு அனுமதி தர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். இதனை அவர் கூறிய போது ஒரு வகை உணர்ச்சி வசப்பட்டவராகவும் கண்கள் கலங்கியிருந்தமையையும் காணமுடிந்தது.
இதனை அவதானித்த நான் ஏன் அவசரப்படுகிறீர். இன்னும் வரக் கூடிய அனுபவங்களையும் தொகுத்துக் வெளியிடலாம் அல்லவா? என்று கூறினேன். நான் அவ்வாறு கூறியதற்கு காரணம் ஒரு வேளை இறப்பை எதிர்பார்த்து தான் இதனைக் கூறுகிறாரா? என்றும் அதனை உள்வாங்க முடியாத நிலையிலுமே ஏன் அவசரப்படுகிறீர் எனக் கூறிக் கொண்டேன் . ஆனால் முடிவில் எல்லோரும் தோழர் நவத்தார் தனது அரசியல் அனுபவங்களை எடுத்துக் கூறும் நூல் ஒன்றை வெளியிடும் முடிவை ஏற்றுக் கொண்டனர். VA ஆனால் தோழர் நவம் தனது அரசியல் அனுபவங்களை இளம் தலைமுறையினருக்கும் எதிர் காலத்திற்கும் எடுத்துக் கூறாது சென்றமை கனத்த சோகத்தையே தருகின்றது. அவரது சொந்த அரசியல் அனுபவங்கள் அவரது மொழியில் அவரது உணர்வில் அவரது பாணியில் வெளி வந்திருக்குமாயின் அது மிகப் பெரும் பெறுமதியுடையதாகவே அமைந்திருக்கும். தோழர் கே.ஏ. சுப்பிரமணியம் அடிக்கடி கூறி வந்த ஒரு விடயம் தனது அரசியல் அனுபவங்களை ஒரு கம்யூனிஸ்டின் சுய விமர்சனம்' என்ற தலைப்பில் எழுத வேண்டும் என்பதாகும். ஆனால் அவர் எதிர் நோக்கிய அரசியல் நெருக்கடிகளும் உயிருக்கு விடுவிக்கப்பட்ட அச்சுறுத்தலும் கடுமையடைந்து வந்த நோய்களும் அத்தகைய ஒரு அனுபவப் பகிர்வை நூல் வடிவில் அவரால் தர முடியாது போய்விட்டது. இதனை அடிக்கடி தோழர் நவத்தார் நினைவு படுத்திக் கொள்வார் .அதன் காரணமாகவே தான் உட்பட தலைமைத் தோழர்கள் தத்தம்
(X தோழர் நவமி. 12
 

அரசியல் அனுபவங்களை இளைய தலை முறையினருக்கும் எதிர் காலத்திற்கும் எடுத்துக் கூற வேண்டும் என்பதை அடிக்கடி சுட்டிக்காட்டி வந்தார். தோழர் நவம் மனம் விரும்பி தனது அரசியல் அனுபவங்களை எடுத்துக் கூறுவதற்கு தயாராகி வந்த ஒரு சூழலில் கொடுமை மிகு அந் நோய் சடுதியாகவே அவரது உயிரைக் குடித்து விட்டமை பெரும் இழப்பு என்றே கூற வேண்டும். இது ஏனைய தோழர்களுக்கு ஒரு சுய விமர்சனமாக எடுத்துக் கொள்ளுமாறு தோழர் நவம் விட்டுச் சென்றுள்ளார் என்பதையே உணர முடிகிறது.
தோழர் நவத்தின் அரசியல் வாழ்வு நாற்பது வருடங்களைக் கொண்டதாகும். ஆரம்ப நாட்களில் இருந்தே அவருடனான தொடர்பு எனக்கு இருந்து வந்தது. மாக்சிச லெனினிசக் கட்சியாகி புரட்சிகரப் போராட்டங்களின் வெகுஜன மார்க்கத்தில் தோழர் சண் தலைமையில் முன் சென்ற சூழலில் அணி திரண்ட பல நூற்றுக்கணக்கான இளைஞர்களில் ஒருவராக தோழர் நவம் அன்றைய வாலிபர் இயக்கத்தில் இணைந்து கொண்டார். அவர் ஏனோ தானோ என்றோ அல்லது பின் வரிசையில் நிற்பவராகவோ ஒரு போதும் இருந்ததில்லை. எதிலும் எப்போதும் முன் வரிசையில் நிற்பவர்களில் ஒருவாராக இருப்பதிலேயே ஆர்வம் கொண்டிருந்தார். இவ்வாறு நின்றமை பெயர் புகழுக்காக அல்ல. புரட்சிகர இயக்கத்தில் யாரும் அவ்வாறு இருப்பதும் இல்லை. அவரது வர்க்க உணர்வும் அரசியல் போர்க் குணமும் அவ்வாறு நிற்க வைத்தது. அவர் மாக்சிசத் தத்துவத்தை அறிவு பூர்வமாகவும் நடைமுறைகள் மூலமாகவும் ஏற்றுக்கொண்டிருந்தார். எதிலும் மாக்சிச உலகக் கண்ணோட்டத்தைச் செலுத்தி பிரச்சினைகளைப் பார்க்கும் முறைமையைச் செழுமைப்படுத்தி வந்தார். மாக்சிச லெனினிச நூல்களை படிப்பதில் குறிப்பாக மாஓசேஆங் சிந்தனை நூல்களைப் படித்து அவற்றில் ஆழ்ந்த தனது கண்ணோட்டத்தைச் செலுத்தயதன் மூலம் தனது தத்துவார்த்த அறிவை வளர்த்தும் கொண்டார். அறுபதாம் ஆண்டுகளின் நடுக் கூறுகளிலே உலகிலும் உள் நாட்டிலும் பெரும் புரட்சிகர அலைகள் எழுந்தன. அக் காலத்தில் தோழர் மாஒசேதுங்கின் ஏராளமான கட்டுரைகள் இலகு தமிழிலே பெருமளவில் நூல்களாக வெளிவந்தன. முரண்பாடுகள் பற்றி மனிதனின் சரியான கருத்துக்கள் எங்கிருந்து வருகின்றன. மக்கள் மத்தியிலான முரண்பாடுகளைக் கையாள்வது பற்றி “புதிய ஜனநாயகம் போன்ற அதி முக்கிய நூல்கள் கட்சியில் வளர்ந்து வந்த தோழர்களுக்கு தத்துவார்த்த அடிப்படை ஆதாரமாக அமைந்திருந்தன. மாஒசேதுங் மேற் கோள்கள் என்ற சிறிய வடிவிலான சிகப்பு நூல் அக் காலத்திய புரட்சிகரப் போராளிகளின் கைகளில் இருந்த ஒரு மாக்சிச லெனினிச அறிவு ஆயுதமாகவே காணப்பட்டது.
மாஒசேதுங் மேற்கோள்களிலே ஒருவரது அரசியல் வாழ்வுக்கான பாதைக்கு மட்டுமன்றி அன்றாட குடும்ப வாழ்வுக்கும் வழி காட்டக் கூடிய உன்னதமான கருத்துக்கள் அடங்கியிருந்தன இவற்றைப் படித்ததன் மூலமும் நடைமுறையில் அவற்றைப் பிரயோகித்துக் கொண்டதன் மூலமும் தோழர் நவத்தராலும் அவரோடு இணைந்து நின்ற தோழர்களாலும் இறுதி வரை உறுதியான மாக்சிச லெனினிசப் பாதையில் வழி நடந்து வர முடிந்தது.
மாக்சிச லெனினிச இயக்கம் இலங்கையில் முன்னெழுந்து புரட்சிகர மார்க்கத்தில் வழி நடந்து வந்ததில் பல்வேறு சாதனைகளையும் அதேவேளை
X தோழர் நவமி. 13)

Page 9
தவறுகளையும் அனுபவங்களையும் கொண்டுள்ளது. இதில் பல தோழர்கள் பங்கு கொண்டு தமது வாழ்வையும் ஆற்றல்களையும் பங்களிப்புகளாக வழங்கிச் சென்றுள்ளார்கள். சில தோழர்கள் கடுமையான கஷ்டங்களையும் சவால்களையும் எதிர் கொண்டு அவற்றை முறியடித்து முன்னேறி வந்துள்ளனர். அத்தகையவர்களில் தோழர் நவத்தார் முக்கியமானவர்களில் ஒருவராக இருந்து வந்துள்ளார்.
இந் நாட்டில் ஒரு நேர்மையான மாக்சிச லெனினிசக் கட்சி பலம் வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியான நம்பிக்கையும் அதற்கான செயல்பாடு மிக்கவராகவும் இருந்தார்.இந் நாட்டின் அடக்கி ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் விடுதலை வேண்டி நிற்கும் வர்க்கப் போராட்ட மார்க்கத்தில் மிக உறுதியாகக் கால் ஊன்றி நின்றார். சாதி ஒடுக்கு முறைக்கும் தீண்டமைக்கும் எதிரான போராட்டச் சூழலில் மாக்சிச லெனினிச வாதியாகிக் கொண்ட தோழர் நவம் ஒரு போதும் குறுகிய சாதியவாதியாக நின்று விடயங்களைப் பார்த்ததோ அணுகியதோ இல்லை. அவர் வர்க்கப் போராட்டப் பார்வையின் ஊடாகவே சாதியத்தைக் கண்டு கொண்டார். அத்தகைய நிலைப்பாட்டை மாக்சிசலெனினிசக் கட்சி கொண்டதன் மூலமே சாதிய தீண்டாமைக்கு எதிரான வெகுஜனப் போராட்டங்களில் வெற்றிகளின் ஊடாக ஒரு வரலாற்றைத் திருப்பு முனையைப் பெற முடிந்தது.
இத்தகைய ஒரு வர்க்கப் போராட்ட நிலையினைப் பிரயோகித்த செழுமையான அனுபவத்தைக் கொண்டே பின்னால் எழுந்த தேசிய இனப் பிரச்சினைக்கான போராட்டத்தின் போது புதிய ஜனநாயக கட்சி தனது புரட்சிகர பாரம்பரியத்தின் அடிப்படையில் மாக்சிச லெனினிச நிலைப்பாட்டை எடுக்க முடிந்தது. பேரினவாதத்தை எதிர்ப்பதிலும் குறுந்தேசிய வாதத்தின் பக்கம் சென்று விடாமலும் நிதானித்து வழி நடக்க முடிந்தது. அத்துடன் தமிழ்த் தேசிய இனத்தினதும் ஏனைய தேசிய இனங்களினதும் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்திற்கு தூர நோக்கிலான கொள்கையையும் வரையறுக்க முடிந்தது. இத்தகைய நிதானத்த கொள்கை வகுப்பில் தோழர் நவத்தார் மாக்சிச லெனினிச நிலைப் பாட்டை கடைப்பிடித்து நின்றார்.
தோழர் மாஓசேதுங் கம்யூனிஸ்டுகள் பற்றிக் கூறுகையில் “கம்யூனிஸ்டுகள் எப்பொழுதும் உண்மைக்காக வாதாடத்தயாராக இருக்க வேண்டும் காரணம் உண்மை என்பது மக்களின் நலன்களுக்குச் சாதகமானது. கம்யூனிஸ்டுகள் எப்பொழுதும் தமது தவறுகளைத் திருத்திக் கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். காரணம் தவறுகள் மக்களின் நலன்களுக்கு பாதகமானவையாகும்"
இவ்வாறு எடுத்துரைத்த தோழர் மாஓசேதுங் மேலும் கூறுகையில் “கம்யூனிஸ்டுகள் எப்பொழுதும் விஷயம் ஒவ்வொன்றையும் ஏன்? எப்படி? என்று ஆராய வேண்டும். தமது தலைகளைப் பாவித்து அது யதார்த்தத்திற்குப் பொருந்துகிறதா, இல்லையா, உண்மையில் அது நல்ல ஆதாரமுடையதா. இல்லையா, என்று கவனமாகச் சிந்திக்க வேண்டும் எவ்விதத்திலும் ஒன்றைக் குருட்டுத் தனமாகப் பின்பற்றி அடிமைத்தனத்தைப் பின்பற்றக் கூடாது."
தோழர் நவத்தார் மாஓசேதுங் சிந்தனை மீது வற்றாத பற்ருறுதி கொண்டிருந்தார். விவாதங்களின் போது அவற்றை எடுத்துக் காட்டுவார். அவர் அடிக்கடி மாஒவின் மேற் கூறிய கம்யூனிஸ்டுகளுக்குரிய பண்பையும் நிலைப்பாட்டையும் சுட்டிக் காட்டுவதுடன் அன்றிலிருந்து இறுதி வரை மாஓ கூறிய "உறுதியாய் இருங்கள்
(X தோழர் நவமி. 14

தியாகத்திற்கு அஞ்சாதிர்கள். வெற்றியை வென்றெடுக்க சகல கஷ்டங்களையும் கடவுங்கள்" என்ற வாசகங்களில் முழு நம்பிக்கையுடையவராகவும் அதற்கான" நடைமுறை வாழ்வையும் கொண்டிருந்தார்.
தோழர் நவம் கடந்த நாற்பது வருடங்களில் தன் சொல்லாலும் செயலாலும் புரட்சிகரப் பொதுவுடமை வாதியாக இரட்டை வாழ்வு வாழாது வாழ்ந்து வந்தவர். அவரிடம் சுய நலம் தற்புகழ் இருந்ததில்லை. எளிமையான வாழ்வு கடுமையான போராட்டம் என்பதற்கு இணங்க கட்சிக்கும் மக்களுக்கும் பதிலும் பொறுப்பும் கூறும் ஒரு நேர்மையான பொதுவுடமைவாதியாக வாழ்ந்து வந்தவர். அவர் சாதாரண நிலையில் இருந்து ஒவ்வொரு கட்டத்திலும் கட்சியின் உரிய பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டும் வந்தார்.1972ல் கட்சியின் வட பிரதேசக் குழுவிற்கும் 1978ம் ஆண்டில் புதிய ஜனநாயக கட்சியின் (இலங்கை கம்யூனிஸ் கட்சியின்(இடது)) தோற்றத்திற்கு தோள் கொடுத்த ஆரம்பத் தோழர்களில் ஒருவராகினார். அதன் பின்பு இடம் பெற்ற கட்சியின் நான்கு தேசியக் காங்கிரசுகளிலும் மத்திய குழுவிற்கும் அதன் உயர் பீடமான அரசியல் குழுவிலும் அங்கம் பெற்று தலைமைத் தோழர்களில் ஒருவராக விளங்கி வந்தார்.
எமது கட்சியின் கடந்த 2 வருட கால வரலாற்றில் அதன் ஆரம்ப பொதுச் செயலாளர் தோழர் கே.ஏ. சுப்பிரமணியம் அவர்களது இறப்பிற்குப் (1989) பின் இப்பொழுது அரசியல் குழு உறுப்பினரான தோழர் நவத்தை கட்சி இழந்திருப்பது இடைவெளி நிரப்ப முடியாத ஒரு இழப்பாகும்.
மாக்சிசம் லெனினிசம் மாஓசேதுங் சிந்தனை அடிப்படையிலான ஒரு புரட்சிகர சமூக மாற்றத்தின் ஊடாகவே அடக்கி ஒடுக்கப்படும் தெ: 1ளர்கள் விவசாயிகள் தாழ்த்தப்பட்ட மக்கள், பெண்கள், தேசிய இனங்களுக்கு வடிவும் விடுதலையும் கிடைக்கும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கையுடன் அதனை வென்றெடுக்கும் மார்க்கத்தில் சளைக்காது சொல்லாலும் செயலாலும் செயலாற்றி வந்தவர் தோழர் நவம். நமது கொள்கைகளும் நடைமுறைகளும் மனித குல விடுதலை என்ற மகத்தான இலட்சியத்தின் ஒரு பகுதி என்பதில் பெருமைப்படும் ஒரு சர்வதேசிய வாதியாகவே தோழர் நவம் இருந்து வந்தார். மனிதர்கள் ஒரே ஒரு முறை தான் பிறக்கிறார்கள் இறக்கும் போது தன் வாழ்வு முழுவதும் விழலுக்கு இறைத்த நீராகி விட்டதே என்ற மனத்துயருடன் இறக்கக் கூடாது. தனது ஆற்றல் முழுவதையும் மனிதகுல விடுதலை என்ற உயர்ந்த இலட்சியத்திற்காகப் செலவிட்டேன் அதற்காகம் போராடினேன் என்ற மனநிம்மதியுடன் இறக்க வேண்டும் அத்தகைய இறப்பில் தான் வாழ்வின் அர்த்தம் அடங்கியிருக்கிறது) என்பதற்கிணங்க தோழர் நவம் வாழ்ந்து மறைந்துள்ளார் என்பதில் ஆறுதலும் உறுதியும் கொள்கின்றோம்
தோழர் நவத்திற்கு எமது புதிய ஜனநாயக கட்சி தனது செங்கொடியைத் தாழ்த்தி இறுகிய கரங்களை உயர்த்தி இறுதிவிடைகூறி புரட்சிகர அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறது. அவரை இழந்து நிற்கும் அவரது குடும்பத்தினருக்கு கட்சியின் மத்திய குழு தனது ஆழ்ந் அனுதாபத்தையும் ஆறுதலையும் கூறுகின்றது. தோழர் நவத்தாரின் புரட்சிகர நாமம் என்றும் நிலைத்து நிற்கும்
r
* தோழர் நவம். 15)

Page 10
சுயநிர்ணய உரிமைப் போராட்டத்திலிருந்து சோஷலிசத்தை நோக்கி. இ. தம்பையா, சட்டத்தரணி (தேசிய அமைப்பாளர், புதிய ஜனநாயகக் கட்சி)
“ எங்கே போராட்டம் இருக்கிறதோ அங்கே தியாகமும் உண்டு. மரணம் என்பது அடிக்கடி நிகழ்வது. ஆனால் நாம் மக்களின் நலன்களையும் ஏகப் பெரும்பான்மையினரின் துன்பதுயரங்களையும் மனதில் கொண்டு மக்களுக்காக உயிர்விட்டால் அது தகுதியான சாவாகும். இருந்தாலும் அனாவசியமான தியாகங்களை தவிர்க்க நாம் இயன்றதனைத்தையும் செய்ய வேண்டும். எல்லோரும் இறக்க வேண்டியவர்கள் தான். ஆனால் இறப்பு என்பது அதன் முக்கியத்துவத்தில் வேறுபட்டது. “ஒரே மாதிரி எல்லோருக்கும் மரணம் ஏற்பட்டாலும், அது தை மலையை விட கனமானதாக இருக்கலாம் அல்லது இறகைவிட இலேசானதாக இருக்கலாம்.” என்று ஸ"மா சியென் என்ற புராதன சீன எழுத்தாளர் கூறினார். மக்களின் நலன்களுக்காக மரணமடைவது தை மலையைவிட கனமானது. ஆனாலி பாசிஸ் டுகளுக்காக உழைத்து, சுரண், டுவோருக்கும் ஒடுக்குமுறையாளருக்குமாக இறப்பது இறகைவிட இலேசானதாகும்”. தோழர் மாஓ சேதுங் .
தோழர் சிநவரட்ணத்திற்கு கடந்த ஒக்டோபர் 10ஆம் திகதி பெளதிகரீதியாக பிரியாவிடை கொடுத்தாயிற்று. இலங்கையின் தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமை போராட்டத்தை இடதுசாரிகள் முன்னெடுக்க தவறிவிட்டதாக கூறி தமிழ்தேசியவாதிகள் தொடர்ச்சியாக இடதுசாரிகள் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இது இடதுசாரிகளை தாக்குவதற்காக அவர்களுக்கு கிடைத்த வசதியான ஆயுதமாகும். தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டம் பன்முகப்பட்டதாக இருப்பதையும் இருக்க வேண்டும் என்பதையும் தமிழ் தேசியவாதிகள் காணத்தவறுகின்றனர், அல்லது காண மறுக்கின்றனர்.
எமது புதிய-ஜனநாயக கட்சி பாட்டாளி வர்க்க கட்சி என்பதால் எல்லாப் போராட்டங்களையும், வர்க்க ஆய்விற்குட்படுத்த தவறுவதில்லை. தமிழ் மக்கள் சார்பில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் கூட தமிழ் மேட்டுக்குடியினரின் நலன்களை அடிப்படையாக கொண்டிருந்த சூழ்நிலையில் எமது கட்சி அப்போராட்டத்தில் நேரடியாக பங்கெடுத்திருக்க முடியாது என்பது விளங்கிக் கொள்ளப்பட வேண்டும்.
அதேவேளை தமிழ்மக்களின் போராட்டத்தின் பக்கமே தன்னை எமது கட்சி இருத்திக் கொண்டதுடன் தமிழ்மக்கள் மீதான சிங்கள பேரினவாத யுத்தத்திற்கு எதிராகவும், சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தேசிய இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் நாடெங்கும் வெகுஜன இயக்கங்களை எமது கட்சி தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.
இப்போராட்டங்களில் தோழர் நவரட்ணம் நேரடியாக பங்கெடுத்துள்ளார். கொழும்பு நகரில் நடத்தப்பட்ட யுத்தத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள், கூட்டங்கள்
(X தோழர் நவம். 16

கலந்துரையாடல்களிலும் கலந்து கொண்டுள்ளார். பேரினவாதத்திற்கும் யுத்தத்திற்கும் எதிராகவும் தேசிய இனங்களின் சமத்துவம், சுயாட்சி சுயநிர்ணய உரிமை என்பவற்றுக்காகவும், ஏகாதிபத்திய உலகமயமாக்கலுக்கு எதிராகவும் கட்டப்பட்ட வெகுஜன அமைப்பான தேசிய ஜனநாயக இயக்கத்தை கட்டுவதிலும், இடதுசாரி அமைப்புகளின் கூட்டணியான புதிய இடதுசாரி முன்னணியை அமைப்பதிலும் முக்கிய பங்களிப்பினை செய்தார். குருநாகல், காலி ஆகிய இடங்களில் இடம் பெற்ற சத்தியாக்கிரக இயக்கங்களிலும் பங்கெடுத்தவர். مسی .
இரட்னபுர பகுதிகளில் குறிப்பாக வேல்வத்தையில் தோட்டத் தொழிலாளர்கள் மீதும் அவர்களது குடியிருப்புகள் மீதும் நடத்தப்பட்ட இனரீதியான தாக்குதல்களுக்கு எதிராக எமது கட்சி முன்னெடுத்த எதிர்ப்பியக்கங்களிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகளிலும் முன்நின்று செயற்பட்டார்.
அதேவேளை அவர் பேரினவாதிகளையும் சாதாரண சிங்களமக்களையும் பிரித்துப்பார்க்கத் தவறவில்லை. எழுபதுகளின் பிற்கூற்றில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கு எதிராக செயற்பட்டு சிங்கள மாணவர்களுக்கு பாதிப்பேற்படாது தடுத்து நிறுத்தியவர்களில் தோழர்-நவரட்ணம் முக்கியமானவராவார். அதேபோன்று யாழ்ப்பாண பல்கலை கழகத்தில் மலையகத்தமிழ் மாணவர்களுக்கு எதிராக கிளறப்பட்டு பிரதேசவாதத்திற்கு எதிராகவும் செயற்பட்டார் என்பதை இன்னும் மலையகப்பட்டதாரிகள் நினைவு கூருகின்றனர்.
1960 களின் பிற்பகுதியில் வடபுலத்தில் முன்னெடுக்கப்பட்ட சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய போராளியாகப் போராடினார். யுத்தத்திற்கு எதிராகவும், பேரினவாதத்திற்கு எதிராகவும் போராடுவதை அரசியல் நிகழ்ச்சி நிரலில் முதலாவது விடயமாக கொண்டு கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக போராடிவரும் புதிய ஜனநாயக கட்சியின் கொள்கை வகுக்கும் மத்திய குழு - அரசியல் குழுவின் ஒரு உறுப்பினராகவும் அதேவேளை ஒரு உறுதியான மக்கள் நடவடிக்கையாளனாகவும் பன்முகப்பட்ட நடவடிக்கைகளில் தோழர் நவரட்ணம் ஈடுபட்டிருந்தார்.
இரண்டாம் உலக மகாயுத்தத்தின் போது சில நாடுகளில் யுத்தத்திற்கு எதிரான சமாதானத்திற்கான போராட்டங்கள் சோஷலிசத்திற்கான போராட்டமாக வளர்ச்சியடையும் என்று தோழர் ஸ்டாலின் கூறியது நிஜமானதை நாமறிவோம். இன்று பல நாடுகளில் தேசிய இனங்கள் அவற்றின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தேசிய அபிலாஷைகளை வென்றெடுக்கும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளன. இதற்கு தென்னாசிய நாடுகளும் விதிவிலக்கல்ல. இப்போராட்டங்கள் ஏகாதிபத்தியம், பிராந்திய மேலாதிக்கம், ஏகாதிபத்திய உலகமயமாதல் என்பவற்றுக்கு எதிரான மூலோபாயம், தந்திரோபாயம் என்பவற்றை வகுத்து செயற்படாவிட்டால் முன்னேறமுடியாது என்பதை நடைமுறை நமக்கு உணர்த்தி காட்டுகிறது. தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டங்களில் பங்கெடுக்காது, அவற்றை ஆதரிக்காது வர்க்கப்போராட்டம் முன்னோக்கி அசைய முடியாதிருப்பதையும் உணரத்தவறக்கூடாது.
X தோழர் நவம். 17)

Page 11
இந்தவகையில் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டங்களினூடாக சோஷலிசத்திற்கான போராட்டத்தை முன்னெடுப்பது சுயநிர்ணய உரிமைப் போராட்டங்களின் வளர்ச்சியாக சோஷலிசப் போராட்டத்தை முன்னெடுப்பது போன்ற வழிமுறைகள் பற்றிய சிந்தனையுடன் செயற்பட்ட தோழர் நவரட்ணத்தின் இறப்பு இலங்கையின் தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமைப்போராட்டத்தின் அடுத்த வளர்ச்சிக் கட்டம் பற்றி தீர்க்கமான முடிவெடுத்து செயற்படவேண்டிய வேளையில் மிகவும் துக்கமானதாகும். சமூக மாற்றத்திற்கான, சமத்துவமான சமநீதியுடைய சமூகத்தை படைப்பதற்கான போராட்டம் எப்போதும் ஒரே மாதிரியாக ஒரே சீராக நடைபெறுவதில்லை. மனிதவரலாறு எப்போதும் முன்னோக்கியே அசையுமேயன்றி திரும்பத் திரும்ப சூனியத்திலிருந்து தொடங்குவதில்லை.
அவ்வாறு மக்களுடைய நாளாந்த போராட்டங்களும், ஜனநாயகப் போராட்டங்களும் தன்னளவில் பூரணமானவை அல்ல. அவை தொடர்ந்து நடைபெறுபவையாகும். அவை முற்போக்கான வளர்ச்சிப்போக்கில் செல்லவேண்டுமானால் சோசலிஸத்திற்கான திசையிலேயே முன்னேற வேண்டியது தவிர்க்க முடியாததாகும்.
இலங்கையில் தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமை போராட்டம் மட்டும் விதிவிலக்கானதாக இருக்க முடியாது. காலனித்துவத்திற்கு எதிரான பல தேசிய விடுதலைப் போராட்டங்கள் சோசலிஸப் போராட்டங்களாக வளர்ச்சியடைந்தன. யுத்தத்திற்கு எதிரான, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான பல போராட்டங்களும் சோசலிஸ போராட்டங்களாக வளர்ச்சியடைந்தன. அவை கடந்தகால வரலாறு. தற்போது தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்கான சில விடுதலைப் போராட்டங்கள் சோசலிஸப் போராட்டமாக வளாச்சியடைவதையும் அவதானிக்கின்றோம். இவை பற்றி ஆழ்ந்த படிப்பையும் கரிசனையும் கொண்டவராக தோழர் நவரட்ணம் இருந்தார்.
அத்துடன் எமது புதிய-ஜனநாயக கட்சியின் அடுத்தகட்ட வளர்ச்சி பற்றிய முடிவுகளும் எடுக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் தோழர் நவரட்ணத்தின் பங்களிப்பு இனிமேல் கிடைக்காது என்பது பற்றி கவலைப்படாமல் இருக்க முடியாது.
எனினும் இலங்கை பொதுவுடைமை இயக்கத்தின் எழுச்சியான காலகட்டத்திலும் பின்னடைவான காலகட்டத்திலும் பொதுவுடைமை அரசியலில் நின்று பிடித்த அவரது பொதுவுடைமை அரசியல் பல பக்கங்களை கொண்டது. அவர் வியட்நாம் மீது அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆக்கிரமிப்பு யுத்தம் நடாத்திய காலத்தில் மட்டுமன்றி அண்மையில் ஆப்கான் மீதும் ஈராக் மீதும் ஆக்கிரமிப்பு யுத்தங்கள் நடாத்தப்பட்ட போதும் ஏகாதிபத்திய எதிர்ப்பை உயர்த்திப் பிடித்து அவருடைய சர்வதேச கடமையை அவர் நிறைவேற்றினார். அமைதி காக்கும் படை என்று இந்திய இராணுவம் இலங்கைக்குள் பிரவேசித்ததை எதிர்த்தும் அதனது அடாவடி நடவடிக்கைகளை எதிர்த்தும் வெகுஜனப் போராட்டங்களில் ஈடுபட்டார். தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமைப்போராட்டத்திற்கு எதிராக இந்தியா மேலாதிக்கக்
(X தோழர் நவம். 18

கரங்களை இங்கு இறுக்கி வருகின்றது. அதனால் இந்திய மேலாதிக்கத்திலிருந்து விடுபடுவது அவசியம் என்பதுடன் சமாதான நடவடிக்கைகள் என்ற பேரில் இங்கு பலவிதமான ஊருடுவல்களை செய்யும் அமெரிக்க, ஜப்பானிய, ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களின் பிடியில் சிக்காமல் இருப்பதும் அவசியம் என்பது குறித்து எச்சரிக்கையுடன் செயற்பட்டார்.
மாக்சியத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்ட பின்நவீனத்துவம், நவ தாராளவாதம், உலகமயமாதல் போன்ற நச்சுக் கருத்துகளுக்கு எதிரான விவாதங்களிலும் அவர் ஈடுபட்டிருந்தார் என்பதை மறக்க முடியாது.
அப்படிப்பட்ட ஒரு தோழரின் மறைவு எம்மை வேதனைப்படுத்தினாலும் ‘ஒருவரின் மரணத்துக்குப் பிறகு அவருடைய பணிகளை தொடர்ந்து செய்வதற்கு யாரும் இல்லையென்றால் அவருடைய பணி முழுமையடைந்ததாக கருதமுடியாது’ என்று கினியா-பிஸோவின் விடுதலை இயக்கத்தலைவர் தோழர் சுமில்கர் கப்ராவின் கருத்தை மீட்டுப் பார்க்கும்போது திருப்தியடைய முடியும். ஏனெனில் தோழர் நவரட்ணம் முன்னெடுத்த பணியை தொடர்ந்து செய்வதற்கு எமது கட்சி தொடர்ந்து இயங்கும். ஆயிரம் ஆயிரம் தோழர்கள் மாக்சிச லெனினிஸ புரட்சிகர அரசியலை முன்னெடுத்து செல்ல தயாராகவே இருக்கின்றனர். அதனால் அவரின் பணி அர்த்தமற்றதாகவோ முழுமையற்றதாகவோ போகாது. மாறாக, தொடர்ந்து முன்னெடுக்கப்படும். அதனால் அவரின் பணி முழுமை பெறும் என்ற நம்பிக்கையில் தோழர் நவத்திற்கு எமது புரட்சிகர வணக்கத்தைத் தெரிவிக்கின்றோம்.
X தோழர் நவம். 19

Page 12
உணர்வுமிக்க தோழரை இழந்துவிட்டோம்
தோழர் நவம் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார் என்ற செய்தி தாங்கமுடியாத சோகமானதாகும்.
அவருடன் தொடர்பு கொண்டிருந்த ஒவ்வொரு கணத்தையும் மீட்டுப் பார்க்கிறோம். அவர் வர்க்க உணர்வோடு கட்சி ஸ்தாபனத்தையும் தோழர்கள் ஒவ்வொருவரையும் தோழமையுடன் நேசித்தவர். حمت
எந்தப் பிரதேசத்தில் நின்றாலும் அப்பிரதேசத்தில் கட்சியை எவ்வாறு கட்டி எழுப்பலாம் என்ற உணர்வு அவரிடம் மேலோங்கி நின்றது. அப்பிரதேசத்தில் தன்னோடு தொடர்புடையவர்களை பிரதேச தோழர்களுடன் தொடர்புபடுத்தி வைப்பதில் முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர். வவுனியாப் பிரதேசத்தில் அவர் இடம் பெயர்ந்து வந்து சிலகாலம் இருந்த போது அங்கு கட்சி ஸ்தாபனங்களை உருவாக்கி வளர்ப்பதில் ஊக்கமுடன் செயற்பட்டவர்.
கட்சியின் கொள்கையினை மாக்ஸிய-லெனினிஸ-மாஓசேதுங் சிந்தனையை பிரச்சாரப் படுத்துவதில் முன்னின்றார். அவரது பணி மேடையில் ஏறிப் பேசுவதல்ல, கலந்துரையாடலே அவரது பிரச்சாரப்பணி. அவர் சகல விசயங்களையும் ஆர்வத்துடன் கற்று மற்றவர்களுக்கும் அதனை வழங்கி வந்தார். அவர் முறைசார் கல்வியில் அதிகம் கற்றிராவிட்டாலும் விளையாட்டுத் தொடக்கம் அரசியல் ஈறாக பல்வேறு துறைகளிலும் ஈடுபாடு கொண்டவராக திகழ்ந்தார். அவரிடம் எத்துறை சார்ந்த தகவல்களையும் பெற்றுக் கொள்ள முடியும். கல்வியும் பட்டங்களும் தான் ஒருவரது அறிவுக்கு சான்றல்ல என்பதற்கு தோழர் நவம் ஒரு சான்று.
அரசியல் வேலை முறையில் பொது எதிரிக்கெதிராக அடக்கப்படும் சக்திகளுடனும் இணைந்து ஐக்கியமாக வேலை செய்வதில் முன்னின்றவர். வவுனியாவில் நடைபெற்ற பல்வேறுபட்ட இடதுசாரிக் கட்சிகளது கூட்டத்தினை நடத்திய தோழர்களில் ஒருவராக அவர் திகழ்ந்தார்.
அவர் கட்சியின் தலைமைத் தோழராக இருந்த போதிலும் கட்சிப் பத்திரிகையைப் பிரச்சாரப்படுத்தி விநியோகம் செய்வதில் வீதிவீதியாக இறங்கி வேலை செய்தார். இது இளந்தோழர்களுக்கு உற்சாகமூட்டும் செயற்பாடாக இருந்தது. அரசியல் வேலையில் மாத்திரமல்ல இலக்கிய வேலைகளிலும் ஈடுபட்டவர். இலக்கியத் துறையிலும் ஐக்கிய முன்னணி வேலை முறையை ஆதரித்து நின்றார். வவுனியாவிலும் தோழர்கள் கலை இலக்கியப் பணியை ஆற்றுவதற்கு ஏனைய இலக்கிய கவர்களுடன் இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி நின்றவர்.
தோழர் நவத்தின் பணிக்கு நாம் நன்றி செலுத்த வேண்டுமென்றால் விவசாயிகள் தொழிலாளர்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக மாக்ஸியம் லெனினிஸம் மாசேதுங் சிந்தனை காட்டும் வழியில் தொடர்ந்து உறுதியுடன் செயற்படுவதேயாகும்.
வவுனியா பிரதேசம் இ.கா.கணபதிப்பிள்ளை (சூடாமணி) 23-10-004 எஸ். டொன் பொஸ்கோ
(Y தோழர் நவம். 20

ஈடுசெய்ய முடியாத பெரும் இழப்பு புதிய ஜனநாயக கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் தோழர் சி.நவரட்ணம் அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு மலையக கமிட்டியும் கட்சி உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் நண்பர்களும் பேரதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். எங்களை சோகம் ஆட்கொண்டுள்ளது. எல்லாரின் கண்களிலும் கண்ணிர் பனித்து நிற்கின்றது. ஒருவருக்கொருவர் பேசமுடியாது நிற்கின்றோம். தோழர் நவத்தின் முகமும் பேச்சும் நெஞ்சில் நிழலாடுகின்றது. தான் கம்யூனிஸ்ட் என்பதை தன் வாழ் நாட்களில் காட்டிக் கொண்டிருந்த நவம் தோழரின் மறைவு எங்களால் இலகுவில் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை. இவர் கட்சியின் மலையக வேலைகளில் நேரடியாகப் பங்கெடுத்தும் சில நிகழ்வுகளில் நிழலாக நின்று வழிகாட்டியும் வந்திருக்கின்றார். எந்த நேரத்திலும் அவரிடம் சோர்வை நாங்கள் கண்டதில்லை பண ஆசை, சுயநலம் அவரிடம் இருந்ததே இல்லை.
தோழர் நவத்தார் ஒரு வரலாறு, கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வற்றாத நதி. யுத்த காலங்களிலும் சரி, இன்றைய சமாதான சூழலிலும் சரி தனது குடும்பம் பட்டதுயரங்களையும் தனக்குரிய சோகங்களையும் முனைப்பாக்கி காட்டியதில்லை. அண்மையில் நாங்கள் கட்சியின் தேசிய மகாநாட்டுக்காகவும் ஆண்டு விழாவுக்காகவும் யாழ் வந்த போது எங்களை மிக உயர்வாக உபசரித்த தோழர் நவத்தாருடன் யாழ் நகரெங்கும் சுவரொட்டிகளை ஒட்டித்திரிந்தோம். எந்த நேரத்திலும் அச்சமுறாத மனம் கொண்டவராக தோழர் நவத்தார் வாழ்ந்து வந்திருக்கின்றார். இலங்கை இனப்பிரச்சினை பற்றிய தெளிந்த ஞானம் கொண்டிருந்த இவர் நாட்டின் பல நகரங்களிலும் நடந்த யுத்தத்திற்கு எதிரான போராட்டங்களில் பங்கெடுத்து இருக்கின்றார். அமெரிக்கா, இந்தியா மற்றும் பிற ஏகாதிபத்தியங்கள் இலங்கையில் ஊடுருவி நிற்கும் வழிவகைகளை மிக நுணுக்கமாக அடையாளம் கண்டு விவாதத்திற்கு உட்படுத்தியவர். மிக அமைதியாகவே பேசக் கூடிய நவத்தார் ஒரு பிரபல்யமான பேச்சாளர் அல்லர். ஆனால் கட்சியின் ஆணி வேர் போன்றவர். மக்கள் புரட்சியே மாற்றத்தை கொண்டு வரும் என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தார்.
இனி, யாழ் வரும் போது காணவே முடியாத தோழர் நவத்தாரின் முகமும் சிரிப்பும் பேச்சும் எத்தனையோ துயரங்களை தரப்போகின்றன. இந்நிலையில் நாங்கள் நேரடியாக கலந்து புரட்சிகர அஞ்சலியை செலுத்த முடியாது நிற்கின்றோம். இத்தோழரின் குடும்பத்தினருக்கு எவ்வகையிலும் இவ்விழப்பு ஈடுசெய்ய முடியாதது என்றாலும் இத்தகைய இழப்புகள் ஏற்பட்டே தீரும் என்பதால் நாமும் ஏற்றே ஆக வேண்டி இருக்கின்றது. தோழரின் மனைவி மற்றும் பிள்ளைகள் குறிப்பாக மகன் நவாஸ் கட்சி உறுப்பினர்கள் பிரதேச மக்கள் ஆத்திசூடி வீதி, கலைமகள் சனசமூக நிலையத்தவர்கள் என துயருற்றிருக்கும் அனைவரோடும் நாங்களும் துயரத்தில் பங்கெடுத்து நிற்கின்றோம். இலங்கை கம்யூனிஸ்ட்ட இயக்கத்தின் வேராகவும் வேரடி ஒடும் மண்ணாகவும் வாழ்வினைக் கழித்த தோழர் நவத்தார் மிகச் சிறந்த வழிகாட்டி. இவரின் இழப்பு மக்கள் இயக்கங்களுக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.
புதிய ஜனநாயக கட்சி - மலையகக் கமிட்டி
* தோழர் நவம். . - 21)

Page 13
பொதுவுடைமைப் போராளி என்பதை நிரூபித்தவர்
ஒரு பொதுவுடைமைப் போராளிக்கு எத்தகைய குணாம்சங்கள் பொருந்தியிருக்க வேண்டுமோ அவற்றையெல்லாம் தோழர் நவரத்தினத்திடம் காணமுடிந்தது. அவர் தனியாகவும் குடும்பத்துடனும் கொழும்பில் வாழ்ந்தபோது அதனை நாம் நேரில் காணவும் அவருடன் இணைந்து வேலை செய்யவும் முடிந்தது. 1997-2001 காலப்பகுதியில் தோழர் நவரட்ணம் கொழும்பில் வேலை செய்து வந்தார். அவ்வேளை புதிய ஜனநாயகக் கட்சி முன்னெடுத்த வேலைகளில் கொழும்பு பிரதேசம் முக்கியத்துவம் கொண்ட இடத்தை வகித்தது. தேசிய இனப் பிரச்சினையின் தீர்வுக்கு யுத்தத்தை நிறுத்த வேண்டும், பேச்சு வார்த்தை மூலம் அரசியல் தீர்வு காணப்படவேண்டும், சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான சுயாட்சித் தீர்வு வென்றெடுக்கப்பட வேண்டும் என்ற வெகுஜன இயக்கப் போக்குகள் பரவலாக முன்னெடுக்கப்பட்டன. இவற்றில் ஏனைய இடதுசாரி ஜனநாயக சக்திகளுடன் இணைந்தும் தனியாகவும் எமது புதிய ஜனநாயக கட்சி பரந்த இயக்கத்தை முன்னெடுத்தது. குறிப்பாக ஆறு இடதுசாரிக் கட்சிகள் - அமைப்புகள் இணைந்து உருவாக்கிய புதிய இடதுசாரி முன்னணி தொழிலாளர்கள் மக்கள் மத்தியில் வளர்ச்சி பெற்ற காலப் பகுதியில் தோழர் நவரட்ணம் கட்சியைப் பிரதிநிதித்துவப் படுத்தி நின்று எந்த நேரத்திலும் எத்தகைய போராட்டத்திலும் முன்னின்று வந்தார். புதிய இடதுசாரி முன்னணியை உள் இழுத்தும் வெளியில் இருந்தும் சில சுயநல சக்திகள் உடைத்துக் கொண்டமை வேறான விடயமாகும்.
தோழர் நவரட்ணம் கொழும்பில் கருத்தரங்குகள், கூட்டங்கள், மறியல் போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் என்பனவற்றை ஒழுங்கு செய்வதிலும் அவற்றை முன்னின்று நடாத்துவதிலும் எப்பொழுதும் முன்னணியில் இருப்பார். மேதினங்களில் செஞ்சட்டையுடன் அவர் எழுப்பிய முழக்கங்கள் இப்பொழுதும் நம்மில் எதிரொலித்த வண்ணம் இருக்கின்றன. கொழும்பில் மட்டுமன்றி ஏனைய தென்னிலங்கைப் பிரதேசங்களிலும் அவர் எந்தவொரு நிகழ்வுகளிலும் கொழும்புத் தோழர்களுடன் இணைந்து உறுதியாகவும் உற்சாகமாகவும் வேலை செய்து வந்தமை ஒரு முன்னுதாரணமாகும். அவரை நாம் மிக நெருக்கமாக நின்று நிதானித்துப் பார்த்து வந்துள்ளதன் மூலம் ஒரு பொதுவுடைமைப் போராளிக்குரிய அனைத்து அம்சங்களையும் அவரிடம் காணமுடிந்தது.
தோழர் நவரட்ணத்திடமிருந்து புதிய தலைமுறைப் பொதுவுடைமைவாதிகள் நிறையவே கற்றுக் கொள்ள வேண்டும். கொள்கையில் தெளிவும் பிடிப்பும் நம்பிக்கையும் மட்டுமன்றி இன்றைய மாக்சிச சோசலிசப் பின்னடைவுச் சூழலை மாற்றியமைக்கவேண்டும் என்ற விடாமுயற்சியும் அவரிடம் சோர்வின்றி நிறைந்திருந்தமை நமக்கெல்லாம் பெரு நம்பிக்கை தருவதாகும். அவர் இன்னும் பதினைந்தாண்டுகளாயினும் வாழ்ந்திருக்க வேண்டும். கொடுநோய் அவரது உயிரைக் குடித்தமை துக்கமானதாகும். இருப்பினும் துக்கத்தைப் பலமாக மாற்றி அவர் மிகவும் தெளிவாகச் சொல்லாலும் செயலாலும் விட்டுச் சென்ற புரட்சிகரப்
( Yē (ompf |56uổ.... 22

பொதுவுடைமைப் பணிகளை தயக்கமோ அச்சமோ சோர்வோ இன்றி முன்னெடுப்பதே அவரது நினைவுக்கு நாம் செய்யும் நேர்மையான கைமாறாகும்.
கொழும்பு மாவட்டக்குழு புதிய ஜனநாயகக் கட்சி
女 女女
ஒரு சமூகமாற்றச் செயற்பாட்டாளர்
தோழர் நவத்தின் எதிர்பாராத மரணச் செய்தி 8.10.2004 அன்றிரவு அவர் மறைந்த உடனேயே அனைத்து தோழர்களுக்கும் அறிவிக்கப்பட்டது. எல்லோரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். சமூகவிடுதலைக்கான நீண்ட பிரயத்தனங்கள் மூலம் தன்னைப் புடம்போட்டுக் கொண்டு கட்சியின் வளர்ச்சியிலும், தான் வாழும் சமூகத்தினதும், இனத்தினதும் நாட்டினதும் விடுதலையில் தளராத பற்றுறுதி கொண்டிருந்த தோழர் நவத்தின் இழப்பு இடைவெளி எல்லோராலும் துயரத்தின் ஊடே உணரப்பட்டது.
தோழர் நவம் பொதுவுடைமைக் கட்சியின் வாலிபர் இயக்கத்தில் 1964 இல் இணைந்தார். 1965ல் கட்சியில் உறுப்புரிமை பெற்றார். 1972இலிருந்து கட்சியின் வடபிரதேசக் குழுவில் உறுப்பினரானார். 1978இல் இருந்து கட்சியின் மத்தியகுழு, அரசியல் குழு உறுப்பினராகவும் இருந்து வந்தார்.
மக்களை பிளவுபடுத்தி, பல்வேறு ஒடுக்குமுறைகளுக்குள்ளாக்கும் இம்முதலாளித்துவ சமூக அமைப்பை மாற்றி அமைக்காமல் அறிவியல் அடிப்படையில் அமைந்த ஒரு பண்பட்ட சமூகத்தை உருவாக்க முடியாது என்பதில் தெளிவாக இருந்தார். அத்தகைய சமூகச் செயற்பாடுகளில் தளராத நம்பிக்கையுடன் ஈடுபாடு கொண்டிருந்தார். இறப்பதற்கு ஒரு மணிநேரத்துக்கு முன்னரும் இத்தகைய செயற்பாடுகளில் அவர் ஈடுபட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
இத்தகைய தத்துவார்த்த அறிவும், விடுதலை உணர்வும், செயற்பாட்டுறுதியும் மிக்க தோழர் நவத்தின் மறைவு புதிய ஜனநாயகக் கட்சிக்கு மட்டுமல்ல சகல வழிகளிலும் அடக்கி ஒடுக்கப்படும் மக்கள் அனைவருக்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும்.
அவரது இழப்பின் துயரை பலமாக மாற்றுவதும் தொடர்ந்து அவர் விட்டுச் சென்ற பணியை முன்னெடுப்பதுமே அவருக்கு நாம் செய்யும் புரட்சிகர அஞ்சலியாகும்.
வடபிரதேசக்குழு புதிய ஜனநாயகக் கட்சி
ugum ☆ தோழர் நவம். 23)

Page 14
தோழர் நவம் எழுதிய கவிதை
சோ. தேவராஜா, சட்டத்தரணி (அரசியல்குழு உறுப்பினர், புதிய ஜனநாயகக் கட்சி)
கொக்குவில் மஞ்சவனப் பதியிலிருந்து ஊர்வலம் ஆரம்பமாகிறது. ‘தமிழ் மாணவர்கள் மீது தரப்படுத்தலைத் திணிக்காதே’ என்ற கோசத்துடன் 1972இல் தமிழ் மாணவர்கள் அணி திரண்டு யாழ் முற்றவெளி மைதானத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றனர். அவ்வூர்வலம் முஸ்லிம் மக்களின் வீதிகளையும் ஊடறுத்துச் செல்கிறது. அப்போதைய கல்வி அமைச்சராக ‘அல்ஹாஜ் பதியுதீன் மாஹற்மூத் பதவியிலிருந்தமையால் அவ்வூர்வலத்தில் கலந்து சென்ற மாணவர்களில் சிலர் முஸ்லீம் மக்களின் மதத்தை ஊறு செய்யும் விதமாக தம்பாட்டில் சுலோகங்களைக் கோசிக்கின்றனர். அதனால் கோபமுற்ற சில தமிழ் இளைஞர்கள் கொம்யூனிஸ்ட்டுகளாய் இருந்த காரணத்தால் அத்தகைய இனவாத சுலோகங்களை உச்சரித்தமையை விமர்சித்து விவாதிக்கின்றனர்.
ஊர்வலம் பெருந்திரளான மாணவர்களை அன்று அணிதிரட்டியிருந்தமை தமிழ்ப் பாராளுமன்ற அரசியல்வாதிகளுக்கு அச்சத்தை ஊட்டியிருந்தது. பல கேள்விகளை தமிழ் தேசிய அரசியலை நோக்கி எழுப்பியது.
தமிழ்த் தேசியம் எந்த வர்க்கத் தலைமையில் கட்டமைக்கப்பட வேண்டும் என்பதில் சலனத்தை உண்டுபண்ணிவிடுமென்ற தவிப்பால் மேட்டுக்குடியினர் மிகக் கவனமாகவே தமிழ் மாணவர்களை இனவாதத்தின் பக்கம் உசுப்பிவிடுவதற்கு தயாராகவே காத்திருந்தனர்.
இக்காலத்தில் தமிழ் மாணவர்களை இலக்காகக் கொண்டு வடக்கிலே கொம்யூனிஸ்ட் இளைஞர்களால் ‘தீ’ எனும் பெயரில் பத்திரிகையொன்று வெளியிடப்பட்டுக் கொண்டிருந்தது. இப்பத்திரிகையில், தமிழ் மாணவர்களுக்கெதிராக, அரசினால் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வந்த கொடுமைகள் தோலுரித்துக் காட்டப்பட்டன.
தமிழ் மாணவப் பேரவையின் கூட்டம் ஆரம்பமாகிவிட்டது. ஊர்வலம் இன்னும் வந்து முடியவில்லை. பேச்சுக்கள் ஆரம்பமாகின்றன. மாணவர்கள் மேடையில் ஏறி வீரமுழக்கம் செய்கின்றனர்.
தமிழ் மாணவர்கள் செல்லவேண்டிய திசைமார்க்கத்தை சுட்டிக்காட்டி வெளியிடப்பட்ட துண்டுப் பிரசுரத்தை வர்க்க வழிகாட்டியாக கைகளில் ஏந்தி ஓர் சுறுசுறுப்பான இளைஞனும் கூட்டாளிகளான அவனது சில தோழர்களும் இவ்வூர்வலத்தின் இறுதியில் கூட்டமைதானமான முற்றவெளியில் விநியோகிக்கின்றனர்.
(Y தோழர் நவம். • H 24

கூட்டத் தரின் இடையிலே ஒரு சலசலப் பு. மாணவர்கள் ஓடிக்கொண்டிருக்கின்றனர். ஓர் இளைஞனைப் பிடித்துச் சில மாணவர்கள் தாக்குகின்றனர். அந்த இளைஞன் துணிவாக நின்று பதில் சொல்கின்றான். அவனது பிரசுரங்கள் மாணவர்களின் கைகளுக்குச் செல்கிறது.
யாரவன்? எதற்காகத் தாக்கப்பட்டான்? "துரோகி என்றவாறு சில மாணவர்கள் சொல்லிச் ச்ெல்வது கேட்கிறது. ‘எங்கடை கூட்டத்திற்குள் வந்து கொம்யூனிஸ்ட்டுக்கள் நோட்டீஸ் குடுக்கிறாங்கள்’ என்று புறுபுறுத்துச் செல்வது கேட்கிறது. இதேபோல், 1971இல் யாழ் மாநகரசபை மண்டபத்தில் நடந்த கூட்டத்திலும் அன்றைய ஆஸ்தான கவிஞர் ஒருவர் "துரோகி என பேராசிரியர் கைலாசபதியை அடையாளப்படுத்தினார். பேராசிரியர் கைலாசபதி பற்றி இவ்வாறாகத்தான் முதன்முதலாக அறிகிறேன். அதுபோன்றே கூட்டத்தில் பிரசுரம் விநியோகித்ததால் "துரோகி எனப் பெயர் சூட்டப்பட்ட பெயர் தெரியாத அந்த கொம்யூனிஸ்ட் இளைஞன் "தோழர் நவம்' என்பதை நான் பின்னாளில் தெரிந்து கொண்டேன். அந்த முதன் முதல் அறிமுகம் இப்போது நினைக்கவும் அதிசயமாகத்தான் இருக்கிறது. -
1975இல் யாழ்ப்பாணம், கந்தர்மடத்தில் 'ஆத்திசூடி வீதி என்ற முகவரியை முதன்முதலில் 'தாயகம்' சஞ்சிகையில் பார்த்தேன். அதுவே 'தாயகம் வெளியீட்டு முகவரியாக இருந்தது. எனவே, அந்த முகவரிக்குரியவரைத் தேடி அறிய வேண்டுமென்று விரும்பினேன். அது அன்று கைகூடவில்லை. அவரது அறிமுகம் கட்சி மூலமே பின்னர் கிடைத்தது.
1978இல் யாழ்ப்பாணம் நீதிமன்றத்துக் கருகில் காலையில்
சென்றுகொண்டிருக்கின்றேன். மக்கள் கூட்டம் திரண்டு பரபரப்புடன் காணப்படுகின்றது. எல்லோரும் முகங்களில் ஆச்சரியத்துடன் கேள்வியெழுப்பியபடி இரகசியமாகப் பேசிக்கொண்டிருக்கின்றனர். ஜி.சி.ஈ. (ஓ.எல்) பரீட்சையைக் குழப்புவதற்காக இயக்கப் பொடியள் இரண்டு பேர், அதிபர் ஒருவர் வினாத்தாள்கள் கொண்டுவரும்போது அதைப்பறித்துக்கொண்டு ஓடியதாகவும் அப்போது பொலிஸ் அவர்களைப் பிடித்துக்கொண்டது என்றும் அனுதாபத்துடன் பொதுமக்கள் பேசிக்கொள்கின்றனர். மற்றப் பொடியன்கள் தப்பிவிட்டான்கள் என்றும் குசுகுசுக்கிறார்கள். அந்த இருவரில் ஒருவர்தான் தோழர் நவம் என்று அறிகிறேன்.
உண்மையில் நடந்தது வேறு சம்பவம். மக்கள் பேசியது இன்னொன்றைப் பற்றி என்பதை அன்று மாலை தெரிந்து கொள்கிறேன்.
ஒடுக்கப்பட்ட தமிழ்ச் சமூகத்தை சேர்ந்த கொம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளரான ஓர் ஆசிரியரை உயர்த்தப்பட்ட தமிழ் அதிபர் ஒருவர் சாதி ரீதியிலே பாரபட்சம், புறக்கணிப்பு செய்து அவமானமாக நடத்தினர். அது பற்றிக் கிடைத்த முறைப்பாட்டினாலேயே அவ்வதிபரை வழிமறித்து விவாதிக்க முயற்சித்தபோது, தற்செயலாக அவரது கையில் ஜி.சி.ஈ. சாதாரண பரீட்சை வினாத்தாள்கள்
X தோழர் நவமி. 25)

Page 15
இருந்தமையால் கதையே மாறிவிட்டது.
யாழ்ப்பாணச் சமூகத்தில் தமிழ் மக்களை இன்றுவரை வெவ்வேறாக அடையாளப்படுத்தும் 'சாதியம்’ என்னும் வடுவானது பாரபட்சம், புறக்கணிப்பு என்பவற்றுக்குமப்பால் ஒடுக்குதலாக மாறும்போதெல்லாம் அந்தந்தக் களங்களில் நின்று போராளியாக குரல் கொடுக்க தோழர் நவம் என்றும் தவறியதில்லை. கோடாலிக்காடு முதல் முதலிகோவிலடி, திடற்புலம், புன்னாலைக்கட்டுவன் வரை பல கிராமங்களில் அவர் துடிப்போடு பணி புரிந்ததைப் பார்த்திருக்கிறேன்.
இலங்கை இராணுவமும் அன்றைய தேசிய பாதுகாப்பு அமைச்சருமான அத்துலத்முதலி அவர்கள் சிங்கள தேசத்தைப் பாதுகாக்கும் அவாவில் சுன்னாகம் சந்தையில் பொதுமக்கள் மீது ஹெலித்தாக்குதலுக்கு உத்தரவிட்டு இனவெறிப் போரை வட்க்கு-கிழக்குக்கு நகர்த்தும் தமது வெள்ளோட்டத்தை நடத்திவிடுகின்றனர்.
அன்று தொடக்கம் தோழர் நவம், யாழ்ப்பாணத்த்தில், கொழும்பில், மலையகத்தில், கிழக்கில் நடைபெறும் பேரினவாதச் செயல்களுக்கெதிராக உடனுக்குடன் செய்திகளை கேட்பதும் தகவல்களை அறிவதும், பத்திரிகைகளைப் படிப்பதும், பிரச்சினைகள் நடந்த இடங்களுக்கு விரைவதும், உண்மையைத் தெரிந்து கொள்வதிலும் அவைபற்றி கட்சித் தோழர்களுடனும் நண்பர்களுடனும் ஊரவர்களுடனும் குடும்பத்தினருடனும் உடனுக்குடன் பரிமாறிக் கொள்வதும், பேரினவாதக் கொடுமைகளுக்கெதிராக அனைவரையும் அதன்பால் அனுதாபத்தை தூண்டி ஆதரவோடு அணி திரட்டும் ஆர்வமும் மக்களை வெறும் பார்வையாளர் என்ற தளத்திலிருந்து செயற்பாட்டாளராக உருமாற்றும் கொம்யூனிஸ்ட் ஊழியனாகவே ஒவ்வொரு கணப் பொழுதிலும் தன்னைத் தகவமைத்துக் கொண்டார்.
அவரைக் காணும் போது ஒரு புதிய தகவல் இருக்கும். உற்சாகம் பிறக்கும். அடுத்துச் செய்ய வேண்டியது என்ன என்ற ஓர் செயற்திட்டம் உருவாகும்.
1984ல் மனித உரிமைகளுக்கான வெகுஜன இயக்கம் உருவாகியது. அதில் மிகத் தீவிரமான செயற்பாட்டாளராக நவம் மாறிவிடுகிறார். இவ்வியக்கம் 1987 ஒக்ரோபர் இந்திய இராணுவம் யாழ் மண்ணில் கால்பதிக்கும்வரை செயற்பட்டது. இவ்வியக்கம் சில இந்திய ஆதரவு இயக்கங்களினால் எச்சரிக்கப்பட்டது. அதிபர் இராஜசுந்தரம் கொல்லப்பட்டார். எனினும் கொம்யூனிஸ்ட்டுகளுக்கு விரோதமான குறுந்தேசியவாத இயக்கங்களின் முகமூடிகளைக் கிழிப்பதிலும் அவை பற்றிய எச்சரிக்கையுடனும் செயற்பட்டார்.
அன்றைய தேசிய பாதுகாப்பு அமைச்சர் அத்துலத்முதலி வடபகுதிக்கெதிராக எரிபொருள் தடையை அறிமுகப்படுத்தி ஒரு பிரதேச மக்களை இலங்கையிலிருந்து அப்புறப்படுத்தி மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயற்பட்டார். அந்நேரத்தில் யாழ்ப்பாணத்தில் நடந்த ஒவ்வொரு உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளிலும்
(X தோழர் நவம். 26

ஒழுங்குபடுத்தப்பட்டு நடத்தப்பட்ட மறியல் போராட்டங்களிலும் ஊர்வலங்களிலும் இறுதியாக யாழ் கச்சேரி முன்றலில் நடைபெற்ற சர்வமதப் பிராத்தனையிலும் முன்னின்று செயற்பட்ட போராளித் தோழர் நவமாவார்.
வட்டுக்கோட்டை, கோடாலிக்காடு, புன்னாலைக்கட்டுவன், இருபாலை, அரியாலை, நெல்லியடி, பொலிகண்டி, வல்வெட்டித்துறை, அல்வாய், நல்லூர், கரவெட்டி, கன்பொல்லை, கிளிநொச்சி, வன்னி, வட்டக்கச்சி, அக்கராயன்குளம் என் யாழ் குடாநாடு முதல் கிளிநொச்சி, முல்லைத்தீவு ஈறாக தோழர் நவம் பறந்து திரிந்து, பரந்த இயக்கத்தை முன்னெடுத்த அவரது துணிவும் நம்பிக்கையும் இன்னும் நெஞ்சில் பசுமையாக உள்ளது.
தாயகம் சஞ்சிகையை யாழ்ப்பாணத்தில் கடைத் தெருவில் விநியோகிப்பதும், புதியயூமி மற்றும் பிற எமது நிதி சேகரிப்புகளுக்கு வருவதும் முன்னின்று வழிநடத்துவதும் சகலருடனும் உற்சாகத்துடன் இணைந்து செயற்படுவதும் கண்ணில் இன்னும் தெரிகிறது. நம்பிக்கை இல்லாத நவம் என்பது நாம் காணமுடியாதது. நம்பிக்கை = நவம் என்றுதான் எண்ணத்தில் படுகிறது. எம்மால் எதுவும் இயலும் என்பதன் அடையாளம் தோழர் நவம்.
ஓடும் புகையிரதத்தில் பத்திரிகை விற்பது, யாழ்ப்பாணம் முதல் கிளிநொச்சிவரை சென்று கட்சி, கலை இலக்கியப் பேரவை நூல்களை விற்பதும் விவாதிப்பதும் அவருக்கு இன்பமான செயற்பாடாகும். எப்:ேதும் இயக்கம் இயங்க வேண்டுமென்பது அவரது இதயத் துடிப்பாகும். இயக்கமற்ற இதயத்துடிப்பென்பது அவருக்குத் தெரியாததாகும்.
இந்திய இராணுவத்தை தமிழ்த் தேசிய இயக்கங்கள் வரவேற்று, வழி முழுவதும் மாலைசூட்டி, ஆராத்தியெடுத்து வரவேற்றுத் தமிழீழம் காணும் புளுகத்தில் திளைத்தபோது யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த கொம்யூனிஸ்ட்டுகளும் தோழர் நவமும் வரப்போகும் இந்திய பிராந்திய மேலாதிக்கத்தை எதிர்த்து முதன்முதலில் குரலெழுப்பியதோடு 16-10-1987ல் ஓர் பிரசுரத்தை வெளியிட்டு பல்ல்ாயிரக்கணக்கான இந்திய இராணுவத்தின் கண்களில் புலப்படாமல் விநியோகித்ததில் தோழர் நவம் முன்னின்ற செயற்பாட்டாளராகிறார்.
யாழ் பிரதேசச் சுவர்களில், இந்திய இராணுவத்தை வெளியேறும்படி போஸ்ரர் இயக்கத்தை நடத்துவதில் தோழர் நவம் முன்னின்று செயற்பட்ட முன்னணித் தலைமைப் போராளியாவார்.
அந்நியப் படையினரால் அளந்து தரப்படும் ‘விடுதலை"யைத் தமிழ் மக்கள் ஏற்கத் தயாரில்லை என்பது பின்னாளில் தமிழ் மக்களால் புரிந்துகொள்ளப்பட்டபோதும் இன்றுவரை இந்தியப் பிரமையும் இந்துத்துவ மாயையும் அகன்றதாகத் தெரியவில்லை.
X தோழர் நவம். 27)

Page 16
இலங்கை, இந்திய இராணுவங்களின் கெடுபிடிகளின்போது பொதுமக்கள் மத்தியில் தற்பாதுகாப்பு நடவடிக்கையில் பங்கர்கள் அமைப்பது பற்றியும், துவக்குச் சூட்டிலும் ஷெல் தாக்குதலிலிருந்தும் ஹெலி விமானத் தாக்குதலிலிருந்தும் எவ்வாறு தப்புவது என்பவற்றைப் பற்றியும் செயன்முறையில் கிராமம் கிராமமாக, வீடு வீடாகச் சென்று நண்பர்கள், தோழர்கள், ஊரவர்களுக்கு உதவுவதில் முன்னின்று செயற்பட்ட தோழர் நவம் எங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
அறைக்குள் புரட்சி செய்யும் சாய்மனைக் கதிரைப்படிப்பு அவருக்குரியதல்ல. கட்சியின் முடிவு என்பதில் முதன்மையாக விவாதிப்பார். விவாதத்தில் பெரியவர், சிறியவர் என்பதற்கு முதன்மை கொடுக்காமல் தனது கருத்தை எவ்வித தயக்கமுமின்றி முன்வைத்து வாதிப்பார். அவர் பற்றி தோழர் கே.ஏ. சுப்பிரமணியம் சொன்னது ஞாபகத்திற்கு வருகிறது. எந்த விவாதத்திலும் "தோழர் நவம் என்ன சொல்கின்றார் என்பதை அவதானிக்க வேண்டும் என்பார். ஏனெனில் வர்க்க முத்திரை அவருக்குரியது. தொழிலாளி வர்க்க உணர்வு அவருடையது. கட்சியின் முடிவு அவரது விருப்புக்கும் கருத்துக்கும் மாறுபாடாயிருப்பினும் அம்முடிவுக்கமைய முன்னின்று செயற்படுவதில் முதல் நிலைப் போராளியாக அவர் விளங்குவார். தேர்தல்களில் கட்சி பங்கு பற்றிய போதெல்லாம் தனது உடலாலும் உள்ளத்தாலும் ஊரெல்லாம் உற்சாகத்தோடு செயற்பட்டார் தோழர் நவம்.
எந்த நிகழ்வுகளிலும் மேடையில் ஏறுவதையோ, முன்வரிசையில் அமர்வதையோ பிரமுகர்களைச் சந்தித்துத் தன்னை அறிமுகப்படுத்துவதிலோ தன்னை முன்னிலைப்படுத்தாமல் எங்கோ ஒருவருடனோ பலருடனோ சமூகச் செயற்பாட்டைத் தூண்டும் முயற்சியிலும் விடயங்களை கற்றுக்கொள்வதிலும் புதிய தகவல்களைத் தெரிந்து கொள்வதிலும் தனது நேரத்தைப் பயன்படுத்திக்கொள்வது அவரது நடைமுறையாகும்.
ஏதேனும் நிகழ்விலோ, கருத்தரங்கிலோ, கருத்து மோதலிலோ ஏதேனும் கருத்துக்கள், தகவல்கள் தவறாக தெரியப்படுத்தப்படுமெனில் அதனைத் தெரிவிப்பவர் எந்த கலாநிதியோ பேராசிரியராகவோ இருந்தாலும் அவரது சமூக அங்கீகாரத்துக்கப்பால் தனது கருத்தை துணிந்து முன்வைப்பார். தயக்கம், கூச்சம் தோழர் நவத்துக்குத் தெரியாதது.
தோழர் நவம் என்ற மூன்றெழுத்துப் பெயர் என்றும் சர்வதேசத் தொழிலாளர் வர்க்கத்தின் உள்ளங்களில் புத்துணர்வை ஊட்டும் மந்திரமாகும்.
கொம்யூனிஸ்ட் வாழ்வென்பது கடினமானது. ஆனால் இனிமையானது. அத்தகைய இன்பம் எவராலும் ஊறுவிளைவிக்கப்படமுடியாதது. எத்தகைய அவதூறும், அவமானமும், துயரும், வேதனையும் கொம்யூனிஸ்டைத் தீண்டமுடியாது தோற்றுப்போய்விடுவனவாகும்.
அரசியல் என்பது அசிங்கமானது என்ற தற்கால மக்கள் அனுபவம் என்பது
(X தோழர் நவம். 28

முதலாளித்துவ தேசியவாத குறுந்தேசியவாதிகளுக்குரிய நியதி. அரசியல் என்பது உண்மை, நன்மை, அழகு, நம்பிக்கை மிக்கது, மாற்றத்தை வேண்டுவது, மக்களை மதிப்பது, மக்களின் இன்பமே தம் இன்பமாகக் காணும் பொதுமைமிக்கது. தன்னலம் அற்றது. தோழர் நவம், சீனப் புரட்சியில் பண்பாட்டுப் புரட்சியில் ஆகர்சிக்கப்பட்டவர். புதிய ஜனநாயகப் புரட்சியில் நம்பிக்கை மீதுரப் பெற்றவர். தொழிலாளி வர்க்கத் தலைமையில் தன்னை முன்னிலைப்படுத்தியவர்.
ஆங்கிலத்தில் ‘ஈகோ’ என்றும் சமயத்தில்"ஆணவம்' என்றும் பேசப்படும் தன்முனைப்பற்றவராக, தோழமை உணர்வையே ‘தானாக அடையாளப்படுத்தியவர்.
தனிப்பட்ட வாழ்வில் தந்திரங்கள் அற்றவர். சகலரையும் தானாகவே மதித்துப் போற்றும் சால்பு மிக்கவர். போராட்டம் என்பதே அவருக்கு இன்பம் ஊட்டும் செயற்பாடாகும்.
கட்சிக்குள்ளும் கட்சிக்கப்பாலும் கொம்யூனிஸ்டுகளுடன் பழகுவதும் வாழ்வதும் போராடுவதும் ஐக்கியப்படுவதும் அவரது நடத்தைக் கோலமாகும்.
சர்வதேச கொம்யூனிஸ்ட் இயக்கங்களின் தோல்வியும், மூன்றாமுலக நாடுகளில் கொம்யூனிஸ கட்சிகளின் நெருக்கடியும், தேசியவாதிகளின் தோற்றமும் வளர்ச்சியும் ஏற்படுத்திய தாக்கங்களின் பாதிப்பிலிருந்து விடுபட்டு முன்னேறுவதும் விடுதலையை நிதர்சனமாக்குவதும் வர்க்க ஒளியில் அணிவகுப்பதுமே நாம் அவரது நினைவுகளை சுமப்பதாக அமையும்.
‘ஓடும் செம்பொன்னும் ஒப்ப நோக்கும் தமிழர் சால்பு சமூக பக்தியுடைய தோழர் நவத்துக்கு உரியதென்பேன். அதன் விரிவு மட்டு:ே தமிழர் விடுதலையை மட்டுமன்றி சமூக விடுதலையையும் சாதிக்கும் என நாம் துணிந்து கூறலாம். நவம் ஓர் அரசியல் ஞானியென்பது என் மிகைக்கூற்றல்ல.
கவிஞர்கள் மறையலாம். அவர்கள் எழுதிய கவிதைகள் மறையுமா? அவை எம் நினைவில் என்றும் நிலைக்கும். அதேபோல் எம் தோழர் நவம் தன் ஐம்புலன்களால் உடலால் உணர்வால் வாழ்வால் எம் தாயகத்தில் எழுதிய "கொம்யூனிஸ்ட் எனும் கவிதை எம் உள்ளத்தில் என்றும் இன்பம் பயக்கும்.
கவிஞர் சுபத்திரனின் கவி அடிகளினை எடுத்துத் தொடுத்து இறுதி வணக்கத்துடன் நிறைவு செய்கிறேன்.
“குச்சுக் குடிசைக்குள் கொலுவிருக்கும்” கோவே தோழர் நவமே எச்சாமம் வந்தாலும் எதிரிகளை வெல்வோம் செங்கொடி பறக்கும்
அப்போது சந்திப்போம் இப்போது விடைதஞகிறோம்
தலைசாய்க்கிறோம்.
ÅK, Gøstpli [b6allið............ 29)

Page 17
கட்சியின் உந்து சக்தியாகத் திகழ்ந்தவர்.
ஞா.சிறிமனோகரன்.
பழைய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து தோழர் சண்முகதாசன் தலைமையில் புதிய மாக்சிச லெனினிசக் கட்சி உருவாகி இரண்டு வருடங்களாகி இருந்தது. 1965ம் ஆணி டின் பிற்பகுதி என நினைக்கின்றேன். அப்பொழுது கட்சிக் கிளைகளும் வாலிபர் சங்கங்களும் வேகமாகச் செயல்பட்டுவந்தன. எப்பொழுதும் கட்சி உறுப்புரிமை தகுந்த செயல்பாடும் கொள்கை மீதான இறுக்கமும் கொண்டவர்களுக்கே வழங்கப்படுவது நடைமுறை. அப்பொழுது வண்ணார் பண்ணைக் கட்சி கிளை மிகவும் உற்சாகமாக இயங்கி வந்தது. அதன் கூட்டங்கள் தோழர் மு.கார்த்திகேசன் இருந்து வந்த கலட்டி வீட்டிலேயே நடைபெறும். நான் அப்பொழுது அந்தக் கிளையின் செயலாளராக செயல் பட்டு வந்தேன்.
அந்நேரத்தில் ஒரு கட்சிக் கிளைக் கூட்டத்திற்கு தோழர் நவரட்ணம் வந்திருந்தார். தோழர் கார்த்திகேசன் தான் நவத்தாரை உறுப்புரிமைக்குப் பிரேரித்திருந்தார். தோழர் மகேந்திரராசா ஏற்கனவே நவத்தாருடன் தொடர்பு கொண்டிருந்தார். நவத்தார் அதிகம் பேசவில்லை. விடயங்களை மிக உன்னிப்பாக அவதானித்துக் கொண்டதைக் காண முடிந்தது. ஆனால் அடுத்தடுத்த கூட்டங்களில் தோழர் நவத்தார் மிகவும் காத்திரமான கருத்துக்களை முன்வைத்து வந்தார். வெறுமனே கருத்துக்களுடன் மட்டுமன்றி நடைமுறையில் செயல் படுவதற்கான வழிமுறைகளையே நவத்தார் பேசுவார். அந்நேரம் எமது கிளை நூறு தொழிலாளிப் பத்திரிகையை நேரடியாகக் கொழும்பிலிருந்து எடுத்து விநியோகிப்போம். தோழர் நவம் பத்திரிகை விற்பனையில் அக்கறை காட்டி வந்தார். அத்துடன் கட்சியின் சகல வேலைகளிலும் மும்முரமாக ஈடுபட்டும் வந்தார். தனது கருத்துக்களை எதுவித தயக்கமுமின்றி முன்வைப்பார். அதே வேளை மற்றைய தோழர்களிடமிருந்து கற்க வேண்டியவற்றைக் கற்றுக் கொள்வதில் ஆர்வமாய் இருந்தார். அவர் வாசிப்பதிலும் வாசித்தவற்றை ஏனைய தோழர்களுடன் பரிமாறிக் கொள்வதிலும் சளைக்காதவராக இருந்தார்.
தோழர் நவத்தார் கட்சிக் கட்டுப்பாட்டை மதித்து முடிவுகளை செயற்படுத்துவதில் முன்னிப்பார். ஒரு முறை கட்சி ஊழியர்கள்
○英ー தோழர் நவம் a • æ s ø o • æ s ø 30

பற்றாக்குறை பற்றி விவாதித்த போது தான் முழு நேர ஊழியராக வரத்தயாரக இருப்பதாகக் கூறினார். ஆனால் அவரது குடும்ப நிலையைக் கவனத்தில் கொண்ட கட்சிக் கிளை அதனை ஏற்கவில்லை.
தோழர் நவம் தான் வசித்து வந்த ஆத்திசூடி விதிப் பகுதியில் பொது ,வேலைகளில் குறிப்பாக கலைமகள் சனசமூகநியைத்தில் ஏனையோருடன் வேலை செய்தார். 1970 ல் கலைமகள் சனசமூக நிலைய நிகழ்வில் பாராளுமன்றம் என்ற தலைப்பில் ஒரு கவியரங்கு இடம் பெற்றது. அதில் கட்சிக் கிளையில் இருந்த சக தோழரான எஸ்.ஜி.கணேசவேல் கலந்து கொண்டு கவிபாட ஏற்பாடு செய்திருந்தார். அதன் பிரதி இப் போதும் என்னிடம் இருக்கிறது. எத்தனையோ நெருக்கடியின் மத்தியிலும் அவர் கட்சிக் கொள்கைகளை இறுகப்பற்றியபடி இருந்தார். எச்சந்தர்பத்திலும் விரக்தியடையவில்லை. அவரின் வேலை முறையாலும் தத்துவார்த்த தெளிவினாலும் கட்சியின் மத்திய குழுவிலும் அதிஉயர் பீடமான அரசியற் குழுவில் நீண்டகாலம் செயற்பட்டு கட்சிக்குப் பலவழிகளிலும் பெரும் உந்து சக்தியாக விளங்கினார்.
அவர்தனது உடல் நலத்தில் சற்று அலட்சியப் போக்கையே கடைப்பீடித்து வந்தார் என்றே கூறவேண்டும். ஆவரின் திடீர் மறைவு கட்சிக்குப் பெரும் இழப்பாகும். கட்சியின் கொள்கையில் முழுநம்பிக்கை வைத்து கடந்த 40 வருட காலமும் ஒரு கம்யூனிஸ்ட்டாக வாழ்ந்து வந்தார் என்பதையிட்டு நாம் பெருமைப்படுகின்றோம். தோழர் நவத்திற்கு எமது தோழமை மிக்க அஞ்சலியைத் தெரிவிக்கின்றோம்.
கொழும்பு
X தோழர் நவம். 31)

Page 18
எனது ஆயிருர் நண்பா.
த. குணரட்ணம்
நவரத்தினம் காலமாகி விட்டார் செய்தியை அறிந்ததும் அதிர்ச்சி நம்ப முடியாத நிலை செய்தி உண்மையாக இருக்கக்கூடாது என்ற ஒரு எண்ணம் என் மனதில் உடன் புறப்பட்டு தோழர் நவம் அவர்கள் வீட்டுக்குச் சென்றேன். தோழர் நவம் அவர்கள் எம்மைவிட்டுப் போய் விட்டார். நவம் அவர்களுடன் நான் பழகிய நாட்கள் முதல் எண்ணிப் பார்க்கின்றேன். எனது குடும்ப நண்பனாக தோழராக கம்யூனிஸ்ச நோக்கை கைக்கொண்ட காலம் முதல் தனிப்பட்ட முறையிலும் சரி தத்துவார்த்த ரீதியாகவும், உறுதியும் துTயப் மையும் வெளிப்படையான அணுகுமுறையிலும் வலிமைகுறையாத செயல்பாடு கொண்டவராக வாழ்நாள் முழுவதும். வாழ்ந்தார். தனது குடும்ப வாழ்க்கையிலும் வறுமை துன்பம் இடப்பெயர்வுகள் ஏற்பட்ட காலங்களிலும் மனம் குன்றாது கொண்ட கொள்கைக்காக வாழ்ந்தவர் தோழர் நவரத்தினத்துடன் நான் பழகிய காலம் நாட்கள் ஆரம்பம் முதல் இறுதிவரை நினைவு கூர்ந்து பார்த்தால் தோழர் நவத்திடம் நாம் கற்க பல உண்டு. எனது நினைவுக்கெட்டிய காலம் முதல் தோழர் நவத்துடன் எனது தொடர்பு பசுமையாக உள்ளது.
1959 ம் ஆண்டு ஆத்திசூடி வீதியில் குடியிருக்க எனது குடும்பத்துடன் வருகிறேன். அப்போது இவ்வீதியின் பெயர் ஆத்திப்புலம் மேசன் வேலையாட்கள் நிறைந்த பகுதி இளம் வயதினரான நாமும் வேலைக்குச் செல்லும் காலப்பகுதி.
கலைமகள் சனசமூக நிலையம் தனது 4வது ஆண்டு நிறைவுதினத்தை கொண்டாட விளையாட்டுப் போட்டிகள் பேச்சுப் போட்டிகள் நாடகங்கள் நடாத்திய காலப்பகுதி வாசிகசாலையின் தலைமைத்துவத்தில் வாலிப வயதினரான திரு.சி.தர்மலிங்கம், திரு.க.சிவஞானம் போன்றோர் வழிகாட்டிகளாக இருந்தனர். அவர்கள் திராவிட இயக்க கருத்துக் கொண்டவராகவும் அண்ணாத்துரை போன்றோருக்கு விழா எடுப்பவராகவும் இருந்தனர். (இவர்கள் இருவரும் பின்நாளில் ஆசிரியர்கள்) தொழிலாளர் நிறைந்த பகுதி மாலை நேரத்தில் தான் படிப்பதற்கு செல்வோம். இரவு 9 மணி வரை வாசிகசாலை திறந்து இருக்கும். இங்கு குறிப்பு புத்தகம் ஒன்று இருந்தது. படிப்பவர்கள் தங்கள் கருத்துக்களை எழுதிச் செல்லலாம். தோழர் நவமும் நானும் நிலையம் பூட்டும் வரை படிப்போம். பின் கருத்துப் புத்தகத்தில் ஏதாவது கருத்துக்களை எழுதிச்செல்வோம். கலைமகள் ச.ச.நிலைய விளையாட்டு அணியில் தோழர் நவம் சிறந்த கால் பந்து வீரர் கிரிக்கெட் ஆட்டக்காரரும் ஆவார். வேறு அணிகளில் இவர்கள் விளையாடும் போது நான் ஒரு பார்வையாளனாக செல்வேன்.
1960 ஆண்டு நிலையத்தின் பிரதிச் செயலாளராக தெரிவு செய்யப்பட்ட பின் இவர், ஏற்கனவே திராவிட இயக்கக் கருத்துக்கள் கொண்டவர் அவர்களின்
(X தோழர் நவமி. 32

செய்தித்தாள்கள் முரசொலி, மாலைமணி போன்ற பத்திரிகைகள் இவர் செலவில் போடுவார். என் வருகைக்குப் பின் இவ்வாசிகசாலையில் தேசாபிமானி பத்திரிகைகளைப் போடுவேன். நான் இவரின் நண்பனாக இருந்தும் கருத்து வேறு உள்ளவர்களாகவே இருந்தோம். இலங்கை இந்திய செய்தித்தாள்கள் சஞ்சிகைகள் அரசியல் பகுத்தறிவு சார்ந்த பல நூல்கள் உள்ளதாக இருந்தது. தோழர் நவம் இரவில் படிப்பதற்காகவும் வாசிகசாலையை பூட்டிச் செல்லவும் வருவார். அநேகமாக பூட்டும் வரை இருந்து படித்ததில் இருந்து விவாதிப்பதில் கருத்து பகிர்வு செய்வோம்.
1962 ஆண்டு காலப்பகுதியில் உலக கம்யூனிஸ்ட் கட்சிகளில் ஏற்பட்ட பிரச்சினைகள் ஸ்டாலின் அவர்களின் சரி பிழை பற்றிய விவாதங்கள் எல்லாவற்றையும் எமது வாசிகசாலைக்கு வரும் சோவியத் நாடு இன்றைய சீனா சஞ்சிகையில் இருந்து படித்து தெரிந்து கொண்டோம். இக்காலப் பகுதியில் தோழர் நவரத்தினம் எனது இடதுசாரி கொள்கைக்கு அண்மித்து விட்டார். 1963 ஆண்டு எமது பகுதியில் வசித்து வந்த கம்யூனிஸ்ட் மகேந்திரராசாவின் தொடர்பால் அதே ஆண்டில் யாழ் மாநகரசபை மண்டபத்தில் நடைபெற்ற வாலிப மகாநாடும் அன்றைய ஊர்வலத்தில் ஸ்டாலின் அவர்களின் உருவப் படங்கள் பல தாங்கி நடைபெற்ற ஊர்வலத்திலும் தோழர் நவமும் நானும் கலந்து கொண்டோம். வாலிப சங்க மகாநாட்டுக்குப் பின் 1969 ஆண்டு மொம்சாக் கட்டிடத்தில் இருந்த கட்சி காரியாலயத்தில் கூடிய நாங்கள் எம்மை வாலிப சங்க திருநெல்வேலிக் கிளையை அங்குரார்ப்பணம் செய்து கொண்டோம். இக்கிளையில் தோழர்கள் நவரத்தினம் சகிந்தராசா குணரத்தினம் விஜயகாந்தன், செல்வநாயகம், புவனேந்திரராசா மகேந்திரராசா ஆகியோர் கலந்து கொண்டோம். இதில் சகிந்தராசா செல்வநாயகம் மில்க்வைட் சவுக்கார தொழிற்சாலையில் வேலை செய்தவர்கள் பின்னர் மில்க்வைட் தொழிற்சங்க நடவடிக்கைகளில் பங்காற்றியவர்கள். 1964 ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற வாலிப இயக்க மகாநாட்டைத் தொடர்ந்து நாம் எம்மை விரிவு படுத்திக் கொண்டு இரத்தினம் யோகநாதன், சின்னராசா குமார் புவனேஸ்வரன் தெய்வேந்திரன் கிங்சிலி செல்வகுமார் நாதன் திருநாவுக்கரசு பொன்னையா என பலரை இணைத்துக் கொண்டோம். அப்போது நாம் பொன்னையா அவர்களின் பேபி சிகை அலங்கரிப்பு நிலையத்தில் தான் கூடி எமது செயற்பாடுகள் பற்றி கலந்துரையாடுவோம் மற்றும் கிளைக்கூட்டமும் அங்கு நடைபெறுவதும் உண்டு.
எனது நினைவு சரியானால், தோழர் நவத்துக்கும் சந்திரா அவர்களுக்கும் 1965 ஆண்டு திருமணம் நடைபெற்றது. இத்திருமணத்தில் எம்மால் கிளாரா ஜெட்சின எழுதிய பெண்விடுதலை என்னும் நூல் அளிக்கப்பட்டது. பெண் ஒடுக்குமுறைக்கு எதிரானதும் ஆணாதிக்க ஆண்கர்வத்துக்கும் எதிராகவும் பெண் எப்படி விடுதலை பெற வேண்டும். அதில் கம்யூனிஸ்டுக்களின் பங்கு பற்றி எல்லாம் அந்த நூல் விரிவாக உழைக்கும் பெண் விடுதலைக்கான சிறந்த அறிவை தருவதால் எம்மால் கொடுக்கப்பட்டது. கம்யூனிஸ்ட் வாலிப சங்க அங்கத்தவரான எமது கிளையில் முதலாவது கட்சி அங்கத்துவம் தோழர் நவரத்தினத்துக்கு 1965 கடைசியில் கிடைத்தது.
X தோழர் நவமி. W 33)

Page 19
இக்கால கட்டத்தில் தோழர் நவத்தின் விடாமுயற்சியினால் கலை இலக்கிய நாடக செயற்பாட்டுக்கான ஒரு கலா மன்றத்தின் செயற்பாடு உணரப்பட்டு “செஞ்சுடர் கலாமன்றம்” உருவாக்கப்பட்டது. இக்கலாமன்றத்தின் செயற்பாட்டினால் நாடக எழுத்தாளர் நடிக இயக்குனர் பலர் உருவானார்கள். இவர்களில் கிங்சிலி செல்வகுமார் வண்ணை தெய்வேந்திரம் நாடக எழுத்தாளராகவும் இரத்தினம் தேவன் போன்ற பலர் இயக்குனராகவும் செய்ற்பட்டார்கள். அதே வேளை செஞ்சுடர் கலாமன்றம் "சாட்டை” என்னும் பத்திரிகைகளையும் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
தோழர் நவத்தின் கட்சி அங்கத்துவம் கிடைக்கப்பெற்றதன் செயற்பாடானது கட்சிக்கும் எமது வாலிப சங்கக் கிளைக்குமான தொடர்பு இறுக்கம் பெற்றது. இதனால் கட்சியின் போராட்டங்களில் குறிப்பாக திடீர் அதிரடி நடவடிக்கைகளின் பங்கு பெறும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றது. இதில் வியட்நாம் மக்களுக்கு ஆதரவாக அமெரிக்க தூதுவருக்கு எதிரான கூல் முட்டை எதிர்ப்பு நடவடிக்கை வியட்நாம் மக்களின் போராட்டத்தை சித்தரிக்கும் திரைபடங்கள் காண்பிக்கப்பட்டது. அதில் பங்காற்றிய கட்சியின் சட்டரீதியற்ற போராட்டங்களில் தோழர் நவம் அவர்கள் கூடுதல் பங்கேற்று செயற்பட்டார்:
1966 ஆண்டு சாதி அமைப்புக்கு எதிராகவும் தீண்டாமைக்கு எதிரான கம்யூனிஸ்ட் கட்சியின் நடவடிக்கைகளில் தேனீர் கடை பிரவேசம் தீண்டாமைக்கு எதிரான ஊர்வலங்கள் கூட்டங்கள் அனைத்திலும் தோழர் நவம் முதன்மை கொண்ட ஆளாக செயல்பட்டார்.
“தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கம்” உருவான காலகட்டத்தில் தோழர் நவம் அவர்கள் தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கத் தலைமைத் தோழர்களுடன் செயல்பட்டு எம்மையும் இப்போராட்டங்களில் இணைத்துக் கொண்டார். இதில் மாவிட்டபுரம் கந்தசாமி கோவில் பன்றித் தலைச்சி அம்மன் கோவில் போராட்டங்கள் முதன்மையானது. தோழர் நவத்தின் நேரடித் தலைமையின் கீழ் நாச்சிமார் கோவில் சிவன் கோவில் ஆலயப் பிரவேசத்தில் பல எதிர்ப்புக்கும் மத்தியில் வென்று கொண்டோம். யாழ் வீதியில் கட்சி காரியாலயம் இயங்கி வந்தது. தோழர் நவத்தை இக்காலப் பகுதியில் சந்திப்பதென்றால் அங்கு போய் தான் பார்க்கவேண்டும். அவர் கட்சியில் உணர்வுபூர்வமான ஒருவராக இருந்தார். தலைமைத் தோழர்களின் நட்பு அவரை சிறந்த கம்யூனிஸ்டாக அவரை உருவாக்கியது. இக்காலப் பகுதியில் இவர் கட்சித் தொடர்பால் இவருடன் நெருங்கிப் பழகிய இக்பால் அருளானந்தம் போன்ற பல தோழர்கள் நெருக்கமாக இவருடன் பழகி வந்தனர். நல்ல தோழராகவும் நவம் அவர்கள் நடந்து வந்தார். அவர்கள் கட்சி விரோத நடவடிக்கையின் பின் கருத்து பிரிவு மோதலின் பின் அவர்களின் தொடர்பை அறுத்துக்கொண்டார். நவம் சொல்லுவார் கட்சியால் வந்த தோழமை அவர்கள் கட்சி தொடர்பு உள்ள வரை பின் தோழமைக்கு இடம் இல்லை. ஆனால்
(X தோழர் நவமி. 34

சாதாரணமான மக்களிடம் அல்லது அயலவருடன் அவர் கடுமையாக நடந்து கொள்வதில்லை. ஒரு அமைதியான மனிதனாக காட்சி தருவார்.
1977 ஆண்டு நான் இடம் மாறிவிட்டேன் என் தொடர்புகளும் சுருங்கிக் கொண்டது. இருந்தும் தோழர் நவம் அவர்கள் விடாது தொடர்ந்து என்னிடம் தொடர்பு வைத்துக் கொண்டிருந்தார். இத்தொடர்பானது என்னை மீண்டும் மீண்டும் கட்சி தொடர்பு இல்லா நிலையிலும் ம்ார்க்சிச லெனினிய சித்தாந்தத்தில் இறுக்கமடைய வைத்தது. செயல்பாடு இல்லாத போதும் படிப்பது சிந்திப்பது போன்ற விடயங்களிலும் சரி பிழைகளை நேர் செய்வதிலும் தோழர் நவத்தின் தொடர்பு உதவியது. தோழர் நவரத்தினம் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த காலத்தில் கட்சியில் முரண்பட்ட சில நபர்கள் என்னை அணுகி கட்சி தோழர்கள் சிலருக்கு எதிராக கருத்துக்களை கூறி தாங்கள் புதிய கட்சி ஒன்றை அமைப்பதாகவும் அக்கட்சி சாதிய அடிப்படையில் செயற்படவேண்டும் என்ற கருத்தை முன் வைத்தனர். நான் அவர்கள் கருத்துக்களை ஏற்க மறுத்து கம்யூனிஸ்ட் என்பவனுக்கு சாதி இனம் மதம் சார்ந்து நிற்பது சரிப்பட்டு வராது. ஆனால் எங்கு ஒடுக்கு முறையிருந்தாலும் எதிர்ப்பதும் சாதி இனம் மதம் பார்த்து செயல் பட முடியாது என அவர்களிடம் கூறினேன். அவர்கள் தோழர் நவத்தை தாங்கள் சிறையில் சந்தித்ததாகவும் தங்களின் கருத்தில் தான் நவம் இருப்பதாகவும் கூறினார்கள். நான் இதனால் தோழர் நவத்துக்கும் எனக்கும் இருக்கும் தொடர்புகள் அற்றுப் போய் விடுமோ என நான் அஞ்சிக் கொண்டேன். இவ்வேளை சிறையால் வந்த தோழர் நவம் என்னை சந்தித்து தான் அவர்களின் கருத்தை வன்மையாக கண்டித்து நிராகரித்ததையும் கூறினார். தோழர் நவம் அவர்கள் புதுப் பலத்துடன் செயற்பட்டார்.
ஜே.ஆரின் ஆட்சியும் பேரினவாத பயங்கரவாத தடைச்சட்டம் அரசு பயங்கரவாதம் ஆட்சி செய்த காலப்பகுதியில் எனது மனைவியின் இழப்பும் யாழ்ப்பாண நகருக்கான தொடர்புகள் சுருங்கிக்கொண்டதால் தோழர் நவத்தின் தொடர்பு அரிதாகி விட்டது. நான் தோழர் நவத்தை பின் இடப்பெயர்வுகள் நடைபெற்ற காலப்பகுதியில் சந்திப்பதும் செயல் அற்ற போய்விட்டது. 1996 ஆண்டு காலப்பகுதியில் தோழர் நவம் அவர்களை நான் மீண்டும் வவுனியா நகரில் சந்தித்தேன். எனது மகளின் திருமண விடயமாக நான் வவுனியா சென்றபோது இச்சந்திப்பு நிகழ்ந்தது. எத்தனையோ இடர்பாடுகளின் மத்தியில் தோழர் நவம் அங்கு வாழ்ந்து வந்தார். இருந்தும் எனது மகளின் திருமண விடயங்களில் கூடுதல் கவனம் எடுத்து எனக்கு உதவினார். பின் அவர் கொழும்பு சென்று குடியேறினார். தோழர் நவம் அவர்கள் அங்கும் கட்சி வேலையில் கடுமையாக உழைத்தார். பேரினவாதிகளுக்கு எதிரான போராட்டங்களில் அங்குள்ள முற்போக்கு சக்திகளுடன் கட்சியும் அவரும் செயல்பட்டு பல போராட்டங்களில் பங்காற்றினார். கொழும்பு முதல் மலையகம் வரை தோழர் நவம் அவர்கள் கட்சி வேலைகளிலும் பல்வேறுபட்ட போராட்டங்களிலும் ஈடுபாடு காட்டினார். தோழர் நவம் அவர்கள் இடப்பெயர்வு காலப் பகுதியில் இருந்து தனது மகனை சந்திக்கமுடியாது துன்பப்பட்டார். அமைதிப் பேச்சுவார்த்தையின் பின் A9 பாதை திறந்தபின் தான் அவர் தனது மகனை சந்தித்தார். அப்போது
Á ősIpi 56ló.......... 35)

Page 20
அவர் பெரும் மகிழ்ச்சியில் இருந்தார். அவரின் மனைவியும் பின்னர் மகனைச் சந்தித்தார். நவம் அவர்கள் மீண்டும் யாழ்ப்பாணம் சென்று தன் செயல்பாடுகளில் தீவிர கவனம் கொண்டார். இதில் கலைமகள் சனசமூக நிலையத் தலைவராக செயல்பட்டு அதன் வளர்ச்சியில் பூரண பங்கு எடுத்து நிலையத்தின் 50வது பொன்விழா மண்டபத்தை கட்டி முடித்து பொன் விழா மலரையும் தன் விடாமுயற்சியால் இப்பகுதி முதியோர் வாலிபர் இளைஞர் துணையுடன் நிறைவேற்றினார். தோழர் நவம் கட்சி செயல்பாடுகளில் முனைப்புடன் செயல்பட்ட போதும் அவரது 60 வயதை அண்மித்துக் கொண்டிருக்கும் போது 8.10.2004 அவர் எம்மை விட்டு மறைந்து விட்டார். தோழர் நவத்தின் விருப்பத்தின் பேரிலும் அவரின் குடும்பம் அவர் வழிகாட்டலில் கணவனாய் தந்தையாய் சிறந்த நண்பனாக செயல் பட்ட தோழர் நவம் அவர்களுக்கு கைமாறாய் அவர் விருப்பப்படி அவ்வித சடங்கு சம்பிரதாயமும் இல்லாமல் மக்களால் நேசிக்கப்பட்டார். மலர் அஞ்சலி செய்யப்பட்டு கலைமகள் ச.ச.நிலையத்தில் இறுதி அஞ்சலி பெற்று தோழர் நவம் அவர்கள் விடைபெற்றார்.
வட்டக்கச்சி
(X தோழர் நவம். 36
 

தோழர் சி.நவரட்ணம் ஒரு பூரண மனிதன்
செல்வி. க.கண்ணா
சமுதாய விழிப்புணர்விலும் தனிமனித சுதந்திரங்களை நிலைநாட்டிக் கொள்வதிலும் நிகரின்றி போராடுவது பொதுவுடைமைக் கட்சியின் நிலையாகும். இலங்கையின் வரலாற்றுக் காலங்களில் குறிப்பாக கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக இனவாதப் பிரச்சினைகள், தொழிலாளர் பிரச்சினைகள் உட்பட சமூக அடக்குமுறைகள் பேரினவாத ஒடுக்குமுறைகள் யாவற்றிலும் அச்சமின்றி கருத்துரீதியிலும் செயற்பாட்டு ரீதியிலும் எதிர்த்தும், உண்மைகளை நிலைநாட்டவும், நியாயத்தின் பக்கம் வாதிட்டும் வந்தவர்களில் பொதுவுடைமை வாதிகளே முன்னணியில் திகழ்ந்துள்ளனர். இத்தகைய முன்னணிச் செயற்பாடுகளுக்கு கட்சித் தோழர்களின் ஒத்துழைப்பும் நிதானமான செயற்பாடுகளுமே காரணம் எனலாம். அத்தகைய தோழர்கள் வரிசையில் மறைந்த தோழர் சி.நவரட்ணம் அவர்களின் செயற்பாடுகள் போற்றப்படவேண்டியவை.
புதிய ஜனநாயகக் கட்சியின் கூட்டங்கள் கருத்தரங்குகளில் நான் கலந்து கொண்ட மிகக் குறுகிய காலத்தில் தோழர் சி.நவரட்ணத்திடம் இருந்து கண்டு கொண்ட விடயங்கள் பலவுண்டு. பொதுவுடைமை அரசியல் வாழ்விலும் பொதுவாழ்விலும் சொல்லாலும் செயலாலும் தனக்குரிய தடங்களைப் பதித்ததோடு ஒரு மாக்சிசவாதி, பொதுவுடைமைவாதி, வெகுஜனவாதி தன்னையும் சமூகத்தையும் எவ்வாறு வழி நடாத்த வேண்டும் என்பதை வாழ்க்கையூடு வாழ்ந்து காட்டிச் சென்றுள்ளார். -
தோழர் நவரட்ணம் தன்னை ஒரு தனிமனிதனாகக் கருதி வாழாது சமூகத்துள் ஒருவனாக நின்று தன்னலமற்ற சேவைகளை நிகழ்த்தி வந்துள்ளார். தன் குடும்பம் தனது சுற்றம் என்ற எல்லையைக் கடந்த செயற்பாடுகளையே நாம் அவரிடம் காணமுடிந்தது. குறிப்பாக தான் வாழ்ந்த பகுதியில் நடைபெற்ற சகல முற்போக்கான செயற்பாடுகளிலும் தனக்குரிய தடத்தைப் பதித்துள்ளார். தோழரின் இத்தகைய சமூகப் பார்வையின் விளைவாக தன் குடும்பத்தையும் பொதுவாழ்வுக்காக செயலாற்றி வழிகாட்டி வந்துள்ளார். தன் அரசியல் கொள்கைகள் செயற்பாடுகள் யாவற்றிலும் தெளிவோடு செயலாற்றியதோடு மாக்சிச லெனினிசக் கொள்கையின் வழி தன் குடும்பத்தை நிலைநிறுத்துவதிலும் தவறியவர் அல்ல.
சமூக விடுதலை என்ற வகையில் பெண்களின் அந்தஸ்துப் பற்றி அடிக்கடி கூறிக்கொள்வது அவர் இயல்பு. பெண்கள் எப்போதும் சமூகத்தில் உயர்ந்த நிலையில் மதிக்கப்பட வேண்டியவர்கள் என்பதோடு பெண்களை பல்துறை சார்ந்த வளர்ச்சியில் ஈடுபடுத்துவதிலும் செயலாற்றுபவராக காணப்பட்டார். இளம் சமூகங்களுடன் பழகும் சந்தர்ப்பங்களில் பெண்கள் கலை, இலக்கியம் உட்பட
X தோழர் நவம். 37)

Page 21
பலதுறைகளிலும் துணிச்சலுடன் செயற்பட வேண்டும் என்ற வகையில் அறிவுரைகளை வழங்குவார்.
கட்சி சார்ந்த கூட்டங்களிலும் கருத்தரங்குகளிலும் கலந்து கொள்ளும்போது கருத்துரீதியிலும் செயற்பாட்டு ரீதியிலுமான பல பண்புகளை அவரிடம் காணமுடிந்தது. குறிப்பாக அரசியல் கூட்டங்களுக்கு தலைமை தாங்கும் சந்தர்ப்பங்களில் மிக நிதானமாக கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வார். கூட்டங்களில் கருத்துக்கள், விமர்சனங்கள், வாதப் பிரதிவாதங்கள் இடம் பெறும் போது ஆவேசம் கலந்த உணர்வுகளை, வார்த்தைகளை மிக நிதானமாக, எளிமையான கவர்ச்சிகரமான வார்த்தைகளால் தனது கருத்தை நிலைநாட்டி விடுவார்.
கட்சியுடன் ஈடுபாடற்ற சாதாரண மக்களுடன் உரையாடும் காலங்களில் கூட தன்னை ஒரு நிதானமான அரசியல்வாதியாகவே பேணிக் கொண்டார். கட்சிக் கொள்கைகள், கருத்துக்களை எடுத்தவுடனே கூறி கருத்து முரண்பாடுகளையோ வாதங்களையோ உருவாக்காத வகையில் மிகச் சுலபமாக நட்புவார்த்தைகளை முதலில் பேசிவிடுவார். பின்னர் சில வினாக்களைத் தொடுத்து அவர்களை தன் கொள்கைக்கு இழுத்துக் கொண்ட பின்னர் தன் கருத்தையும், விமர்சனங்களையும் ஆழமாக கூறமுற்படுவார். இத்தகைய பேச்சுமுறை புத்தி, நுட்பம் காரணமாக இலகுவாகப் பலருடன் கருத்துக்களை பரிமாறிவிடுவார்.
கடந்த காலங்களில் எதிர்ப்புக்கள், அச்சுறுத்தல்கள் என்பவற்றுக்கு மத்தியில் கூட்டங்களை நடாத்த வேண்டிய பல சந்தர்ப்பங்கள் உருவாகின. அத்தகைய சந்தர்ப்பங்களில் மிகவும் துணிவுடன் செயற்பட்டவர்களில் தோழர் நவரட்ணம் குறிப்பிடத்தக்கவர்.
அண்மைக் காலங்களில் இனவாத ஒடுக்கு முறைகளுக்கு எதிரான பல வெகுசனப் போராட்டங்கள் யாழ்ப்பாணம், கொழும்பு உட்பட மலையகப் பகுதிகளிலும் கட்சியால் முன்னெடுக்கப்பட்டும் நடாத்தப்பட்டும் வந்த வேளையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொண்டவர் தோழர் நவரட்ணம். இவை தவிர ஏனைய பொது அமைப்புக்களுடனும் இணைந்து பல போராட்டங்களை எதிர் கொண்டுள்ளார் 6686) TLD.
தோழரை ஒரு அரசியல்வாதியாக மட்டுமன்றி இலக்கிய ஆர்வலராகவும் பல சமயங்களில் காணமுடிந்தது. இலக்கிய ரீதியான ஆய்வுகள் கருத்தரங்குகள் நடாத்தப்பட்ட சந்தர்ப்பங்களில் தனது கருத்தை முனடவைக்கும் விமர்சகராகவும் செயற்பட்டுள்ளார். இத்தகைய பண்புகளை தன்னிடத்தே பதித்துக்கொண்ட தோழர் சி.நவரட்ணம் சராசரி மனிதனாக வாழாது மனிதகுல விடுதலைக்கான உணர்வும் தாகமும் நிறைந்த ஒரு பூரண மனிதனாகவே வாழ்ந்து சென்றுள்ளார் என்பதில் ஐயமில்லை.
சிறுப்பிட்டி 20.10.2004
(38 625tgolf B6ild..........

உறுதிமிக்க உத்தமனின் மறைவு
கா. கதிர்காமநாதன்
தோழர் நவரட்ணம் எமது கட்சியின் ஆரம்பகால உறுப்பினர் நான் கட்சியில் இணைய முன்னர் இணைந்து செயல்பட்டவர். அதனால் அவரிடம் அரசியல் அறிவு மக்கள் மத்தியில் வேலைகள் செய்வது வழி நடத்துவது அவருக்கு நிறைய அனுபவங்கள் இருந்தது. இதனால் தான் அவரால் இறுதிக்காலம் வரை பொதுவாழ்க்கையில் தன்னை அர்ப்பணித்து சேவை செய்ய முடிந்தது.
உண்மையில் தோழர் நவத்தார் கட்சித் தோழர்களுடன் நல்ல உறவுகளை வைத்திருந்தார். எல்லோருடனும் அன்பாகப் பேசி பழகுவதில் நல்ல பண்பு அவரிடம் இருந்தது. பொது மக்களுடன் அன்பாக பழகி தான் சார்ந்த கருத்துக்களைக் கூறி விவாதிப்பது அவரிடம் உள்ள நல்ல அம்சமாகும். கட்சி எடுக்கின்ற முடிவுகளை சரிவர செயல்படுத்தும் துணிவும் ஆற்றலும் உள்ளவர். சாதியப் போராட்ட காலத்திலும் சரி அதன் பின்னர் நடைபெற்ற ஏனைய மக்கள் எழிச்சிப்போராட்டங்கள் தேசிய இனப் பிரச்சினை போன்ற பல போராட்ட காலங்களில் உறுதியாக நின்று செயல் பட்டவர் பிரதேச வாதம் இல்லாமல் முழுநாட்டையும் விடுதலை அடைய வைக்க வேண்டும். உழைக்கும் மக்களின் உன்னதமான அதிகாரம் வரவேண்டும் என்பதில் முனைப்புடன் செயல்பட்டு வந்தவர் தோழர் நவரட்ணம்.
நான் அவருடன் சந்திக்கும் நேரத்தில் எல்லாம் அரசியல் பொது விடயங்கள் பற்றிக் கதைப்பது தான் வழக்கும். தனிப்பட்ட சொந்த விவகாரங்களை பெரிதுபடுத்திக் கொள்வது அவரிடம் இருக்கவில்லை. இப்படி பல விடயங்கள் அவரைப் பற்றிக் கூறிக் கொள்ளலாம். -
உண்மையில் இவருடைய அறிவு ஆற்றல்கள் அவர் செய்த செயல்பாடுகள் செய்ய எண்ணிய விடயங்கள் எல்லாம் அவருடன் செல்லவில்லை. அவை செய்யவேண்டியவைகளும் செயற்பாட்டிற்குரிய ஆலோசனையாகவும் எம்மிடையே ஆழமாகப் பதிந்துள்ளன. அவர் விட்டுச் சென்ற இடத்தில் இருந்து தொடர்வது மிகவும் பொருத்தமானது எனக் கூறலாம்.
அவரின் இறப்பு என்றும் ஈடுசெய்ய முடியாதது. எந்த விதமான சுயநலமும் இல்லாமல் சந்தர்ப்பவாதம் இல்லாமல் இறுதிவரை பொதுவுடைமைவாதியாக வாழ்ந்து தோழர் நவரட்ணம் அவர்களுக்கு புரட்சிகர வணக்கங்கள். அவர் எம்மை விட்டுப் பிரிந்தாலும் அவரின் நினைவுகள் என்றும் எம்மிடையே நிலைத்து நின்று நமது அரசியல் வேலைகளுக்கு வழிகாட்டும்.
புதிய ஜனநாயக கட்சி (வட பிரதேச செயலாளர்)
X தோழர் நவமி. 39)

Page 22
சிவ. இராஜேந்திரன் - ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரி (B.A. Hons, Dip in Ed, Dip in Ed mgt, mz.d) பத்தனை விரிவுரையாளர்
கம்யூனிஸ்டாக வாழ்தல்
கம்யூனிஸ்டுகள் தமது கருத்துக்களையும் நோக்கங்களையும் மூடிமறைக்க மனம் ஒப்பாதவர்கள். இன்றுள்ள சமுதாயத்தின் நிலைமைகள் யாவற்றையும் பலவந்தமாய் வீழ்த்த வேண்டும். அப்போது தான் தமது இலட்சியங்கள் நிறைவேறும் என்று கம்யூனிஸ்டுகள் ஒளிவுமறைவின்றி பறைசாற்றுகின்றார்கள். கம்யூனிசப் புரட்சி வருகிறதென்று அஞ்சி நடுங்கட்டும் ஆளும் வர்க்கங்கள் பாட்டாளிகள் தமது அடிமைச் சங்கிலியைத் தவிர இழப்பதற்கு எதுவும் இல்லாதவர்கள். அவர்கள் வென்று பெறுவதற்க அனைத்து உலகும் இருக்கின்றது.
கம்யூனிஸ்டு கட்சி அறிக்கை
கம்யூனிஸ்டுகள் பொதுவுடைமைக் கருத்தினை ஏற்று வாழ்வதன் மூலம் வெற்றியை நோக்கிப் பயணிக்கின்றனர். இதன் காரணமாக அரசியல் வாழ்வுக்கும் பொதுவாழ்வுக்குமிடையே முரண்பாட்டை ஏற்படுத்திக் கொள்ளாத வகையில் மாமனிதராக வாழக்கூடிய ஆளுமையைப் பெற்றுக் கொள்கின்றனர். உலகினை நேசிக்கும் கம்யூனிஸ்டுகள் பல துறைசார்ந்த ஆற்றல்களை விருத்தி செய்து கொள்வதன் மூலமாக சமூகத்தில் உழைக்கும் மக்களின் முன்னணிப்படையாக செயற்பட முடிகின்றது. இவர்கள் உலக இயக்கத்தோடும். மாற்றங்களோடும் போராட்டங்களோடும் ஒன்றித்து வாழ்வதால் இறப்பிலும் வாழும் ஆற்றல்களைப் பெறுகின்றனர்.
கம்யூனிஸ்டுகள், பொதுவுடைமைப் போராட்ட தாபனத்தில் இணைந்து இயங்குவதன் மூலம் அர்த்தமுள்ள வாழ்வை முன்னெடுத்து மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக வாழ்வில் பிரகாசிக்கும் அதே வேளையில் பொதுவாழ்விலும் அர்த்தமுள்ள பதிவுகளை மேற்கொள்ள முடிகின்றது. தோழமை உணர்வு மூலம் உலகத்திலுள்ள அனைத்து தொழிலாளர்களையும் அரவணைத்துக் கொள்ள முடிகின்றது.
ஏகாதிபத்தியத்திற்கும், முதலாளித்துவத்திற்கும் அதன் அடிவருடிகளுக்கும் எதிராகக் கடுமையான போராட்டங்களை முன்னெடுப்பதற்குரிய அறிவு, ஆற்றல் கம்யூனிஸ்டுகளிடையே விருத்தியடைவது அவசியமாகின்றது. வரலாற்றையும், நடைமுறையையும் விளங்கிக் கொள்வதற்கு பல்வேறுபட்ட ஆய்வுகளைச் செய்பவராக கம்யூனிஸ்டுக்கள் இருப்பதால் ‘சதி மிகுந்த விஞ்ஞான வழிப்படாத கோட்பாடுகளை
(40 தோழர் நவம்.

எளிதில் தூக்கி எறிந்துவிட முடிகின்றது. கம்யூனிஸ்டு மாக்சிய அறிவியலை ஆழ்ந்து கற்பவராவர். அவ்வறிவினை ஸ்தூல நிலைமைகளுக்கேற்ப பிரயோகித்து, புதியன ஆக்கும் ஆற்றல் அவரிடம் விருத்தியாகின்றது.
கம்யூனிஸ்டு உலகத் தொழிலாளர்களை ஒன்றிணைப்பதிலும் அவர்களுக்காகப் போராடுவதிலும் முன்னணியில் நிற்பவர் என்பதால் ஜனநாயகத்தை அவரால் புரிந்துகொள்ள முடிகின்றது. எந்தவித பிரச்சினைக்கும் இயங்கியல் பொருள் முதல் வாத சிந்தனையினடிப்படையில் தீர்வுகாண முடிகின்றது. அடக்குமுறையின் வடிவத்தை நன்கு புரிந்துகொள்ள இவர்களால் உறுதியுடன் போராட முடிகின்றது.
கம்யூனிஸ்டு கட்சி சட்டவிதிகளுக்கேற்ப நிதியை உறுப்பினர்களிடமும் மக்களிடமும் பெற்று அதனை ஒரு சக்திமிக்க தாபனமாக வளர்க்க முனைவதை இனங்காண முடிகின்றது. முரண்பாடுகளைச் சரியாகக் கையாளும் திறன் விருத்தியடைகிறது. இதன் மூலம் எதிரியை விட பன்மடங்கு ஆற்றல் கொண்ட போராளியாகி வாழ்வதற்குரிய பணி பாடு கம்யூனிஸ் டுகளினால உறுதியாக்கப்படுகின்றது.
பாட்டாளிகளின் சர்வாதிகாரத்தை உறுதி செய்வதன் மூலம் சகல அடக்குமுறைகளையும் உடைத்தெறிவதற்கான வாய்ப்பு கிட்டும் என்பதில் அசையாத நம்பிக்கைக் கொண்ட கம்யூனிஸ்டு, பெண் அடக்குமுறை, சாதியம், சமயவெறி உள்ளிட்ட பல்வேறு நிலமானியம் சார்ந்த கேடான பண்பாட்டம்சங்களை அழித்தொழிப்பதற்கான பாதையினைத் தெளிவாகப் புரிந்துக் கொள்பவராதலால் பின் நவீனத்துவ சாக்கடையில் வீழ்வதற்கு அவசியமில்லாமல் போகிறது.
போராட்ட வாழ்வை முன்னிறுத்தி இயங்குவதும் சமூகவளர்ச்சியை பொருள் முதல்வாத கண்டோட்டத்தில் அணுகுவோர் கம்யூனிஸ்டுகளின் வாழ்வை உயர்த்துகின்றன. வேடிக்கை மனிதனைப் போல வீழ்ந்து விடாது நெஞ்சை நிமிர்த்தி, நேரே செல்லும் கம்யூனிஸ்டின் வீரம் நெருப்பெறியும்.
மனிதனின் தோற்றம் ஆதிகால வாழ்வு, மானியமுறை சமூக மாற்றங்கள் முதலாளித்துவ சமூகத்தில் ஏற்பட்ட முரண்பாடுகள் அடக்குமுறை, சுரண்டல் ஏகாதிபத்திய செயற்பாடுகள் போன்றன குறித்து விஞ்ஞான வழிபட்ட சிந்தனையை அறிவின் அடிப்படையில் தெளிவாக்கி விரிவடையச் செய்யக்கூடிய ஆற்றல் கம்யூனிஸ்டுகளுக்கு இழுக்கவேண்டும். அதற்காகவே கம்யூனிஸ்டுகள் தொடர்ந்து கற்பவராக இருப்பர். கற்றலில் மாக்சிய லெனினிஸ் அணுகுமுறையைப் பின்பற்றுவதால் கல்வியை அர்த்தமுடன் பெற முடிகின்றது. இவ்வகைக் கற்றல் சிந்தனைக்கும் செயலுக்கும் முரண்பாடாத நிலையைத் தோற்றுவிக்கின்றது. அத்துடன் தத்துவார்த்தப் போராட்டங்களில் உறுதியுடன் கால்பதிக்க முடியுமாகின்றது. இம்முயற்சியானது கம்யூனிஸ்டுகள் ஒருமுகமாக நின்று செயற்பட வழிகோலுகின்றது.
தோழர் நவம். 41)

Page 23
பொது உடைமைக் கோட்பாடுகள் விஞ்ஞான அடிப்படைகளைக் கொண்டதாகும். இவற்றை இயந்திர முறையில் கற்காமல் விளக்கத்துடன் ஆழ்ந்து கற்பதன் மூலம் கம்யூனிஸ்டு ஒருவர் உயர்ந்த ஞானத்தையும் அவற்றைப் பயன்படுத்தும் ஆற்றலையும் விருத்தி செய்து கொள்ள முடிகின்றது.
அறிவு கருத்து நிலைகளிலுள்ளதல்ல அது உற்பத்தியுடனும் வர்க்கப் போராட்டத்துடனும் தொடர்புடையது இதற்கு அப்பாற்பட்டவை அறிவாக இருக்கமுடியாது. வாழ்க்கைக்குப் பொருத்தமற்றவற்றை கம்யூனிஸ்டுக்கள் ஏற்றுக் கொள்வதில்லை. புத்தகத்தை மென்று விழுங்கி, மனநோயாளியாக பிதற்றும் அரைவேக்காட்டு மனிதனாக கம்யூனிஸ்டு இருக்கமுடியாது.
கட்சியின் வெளியீடுகளைத் தொடர்ந்து வாசிப்பது விநியோகம் செய்வது மக்கள் சக்தி மீது நம்பிக்கை வைத்து மக்களுக்கான அரசியலை முன்னெடுப்பதில் எப்பொழுதும் சோர்வற்று உழைத்தவர் தோழர் நவரத்தினம்.
கம்யூனிஸ்டாக வாழ்வதில் பல்வேறு பதிவுகளை இட்டுச் சென்றவர். கடந்த இருபத்துநான்கு வருடங்களாக அவரை அறிவேன் முதலில் சந்தித்தது மேதின ஊர்வலத்தில் இறுதியாக சந்தித்தது. உயர்மட்ட கலந்துரையாடலில் யாழ், கொழும்பு, மலையகம், கண்டி என ஆயிராமாயிரம் நவரத்தினங்கள் ஏற்கனவே பட்டைத் திட்டப்பட்டாகி விட்டன. கம்யூனிஸ்டு நவரத்தினத்தின் பணி, இன்னும் பல மடங்கு உறுதியுடன் முன்னெடுக்கப்படும். துக்கம் பலமாக மாற்றப்படும். கம்யூனிஸ்டுகள் வாழ்க.
நாங்கள் மகிழ்ச்சிக்காக வாழ்கின்றோம்
அதற்காகவே போராட்டத்தில் ஈடுபட்டோம்
அதற்காகவே சாகின்றோம்
எங்கள் பெயர்களில் துக்கத்தின் சாயலி
ஒரு போதும் அணுகாதிருக்கட்டும்
-ஜ"லியஸ் பூசிக்--
(42 தோழர் நவமி.
 

ஓய்வறியாது இயங்கிய செயல்வீரர்
ந. இரவீந்திரன்
தோழர் நவரத்தினம் அவர்களின் மறைவுச் செய்தி கொஞ்சங்கூட எதிர்பாராத நேரத்தில் பேரிடியாக வந்து சேர்ந்தது. சாவே உனக்கொரு சாவு வராதோ என்ற இரங்கல் வாசகம் என்னால் இந்தச் செய்தியில் உணரப்பட்ட அளவுக்கு முன்னர் புரிந்து கொள்ளப்பட்டதில்லை. எந்தளவுக்கு இது பேரதிர்ச்சியாக இருந்தது.
அவர் ஓய்வறியாது இயங்கிய ஒரு செயல்வீரர். அவரை மறந்த உறக்க நிலையிலுங் கூட அவரது கனவில் ஏதோவொரு மக்கள் மத்தியிலான வேலை ஓடிக்கொண்டிருக்கிருக்கும். அத்தகைய ஒரு இதயம் எப்படி அகாலத்தில் தனது பணியை நிறுத்தியிருக்க முடியும்?
"கொள்கையுற்ற நடைமுறை குருட்டுத்தனம்; நடைமுறையற்ற கொள்கை மலட்டுத்தனம்" என்பதற்கு முழு உதாரணமாக விளங்கியவர் தோழர் நவரத்தினம் ஓய்வறியாமல் இயங்கிய இடை நேரங்களில் சலிப்பின்றிக் கற்பதில் ஈடுபட்டவர் ஆவர்.
யாழ்ப்பாணம், சுன்னாகம், சாவகச்சேரி, கிளிநொச்சி ஆகிய நகரங்களின் கடை வீதிகளில் காலை முதல் பொழுது சாயும் வரை தொடர்ச்சியாக நடந்து நடந்து கட்சிப்பத்திரிகை, தாயகம், சஞ்சிகை ஆகியன விற்றிருக்கிறேன் அவருடன், அவரைவிட மெல்லிய உடல்வாகுடைய எனக்கே களைப்பு வாட்டும், நல்ல தடித்த அவரது உடலில் களைப்பே தெரியாமல் இருக்கும். அவரை ஒரு போதும் இது பற்றிக் கேட்டதில்லை, உண்மையில் உள்ளுர் ஆச்சரியப்பட்டிருக்கிறேன். இவருக்குக் களைப்பேயிருக்காதா? அது தான் ஒரேயடியாக ஓய்வுக்குப் போய்விட்டார் போலும்!.
அவர் குறித்து எனக்கு இன்னுமொரு விடயத்திலும் பொறாமை இருந்தது. எனது சில தயக்கங்களில் வேலைகள் தாமதப்பட்ட சந்தர்ப்பங்கள் ஏற்பட்டதுண்டு. அவற்றை ஒப்படைத்திருந்த தோழர் கே. ஏ. சுப்பிரமணியம் அதற்காகக் கண்டிப்பதுண்டு. அதன் போது எப்போதும் அவர் சொல்கிற விடயம், தோழர் நவரத்தினம் மட்டுமே எந்தவொரு வேலையையும், எங்கு மேற்கொள்ளப்பட வேண்டுமோ அங்கு சென்று உரிய நேரத்தில் முடித்து வைப்பார் என்பது.
எல்லாம் சேர்ந்து எனக்கு அவரிடம் பயங்கலந்த ஒரு மரியாதை இருந்தது. அவருடன் நான் விவாதிக்க முனைந்ததில்லை. அவருடைய கருத்தை அறிவதற்கே முதலிடம் கொடுப்பேன். மாற்றுக் கருத்து இருந்தால் மிகுந்த பயத்துடன் தான் சொல்வேன். அவர் அதற்குக் கொடுக்கும் மரியாதை, ஐதயை பயம் அவசியமற்றது என்பதை X தோழர் நவம். 43)

Page 24
உணர்த்தும் என் கருத்துச் சரியென்றால் தயக்கமின்றி ஏற்பதும், இல்லையென்றாலுங் கூட கவனத்திலெடுக்கும் அக்கறையுடன் செவிமடுப்பதும் அவரது பண்பு.
அவருடைய தீவிர அக்கறை அரசியல் சார்ந்ததாக இருந்த போதிலும், தேசிய கலை இலக்கியப் பேரவையிலும் அதேயளவு ஆர்வத்துடன் அவர் இயங்கியிருக்கிறார். எந்தவொரு கூட்டத்துக்காவது அவர் சொல்லாமல் இருந்ததில்லை. அனைத்திலும் அவரைக் காணலாம். பேச்சாளர்களது உரை மீதான அவரது விமர்சம், அவற்றை எவ்வளவு கவனத்துடன் அவர் கேட்டிருக்கிறார் என்பதைக் காட்டுவதாக இருக்கும்.
யாழ்ப்பாண நகரில் மிக இளைஞர்களுக்கான வகுப்பொன்றைத் தொடர்ச்சியாக நான் எடுக்க வேண்டியிருந்தது. அது அவருக்கு அவசியமற்றது தத்துவத்திலும் நடைமுறையிலும் மார்க்சியத்தின் பல படிகளை அவர் கடந்துவிட்டவர். ஆரம்ப அறிமுக நிலை வகுப்பை நான் எடுத்த போதும், முழு நேரமும் இருந்து கேட்பார்.
என்னுடைய இயல்புக்கு நான் தமிழர் வரலாற்றை முன்னிறுத்திய வர்க்கத் தோற்றத்தையும், வரலாற்றுச் செய்நெறியையும் விளக்குவேன். அதனுடன் இணைத்துத்தான் ஐரோப்பிய அனுபவத்தைக் குறைந்த அளவில் சொல்வேன். இதனைத் தோழர் நவரத்தினம் எப்படி எடுப்பாரோ என்கிற பயம் எனக்கிருந்தது. முதலிரு வகுப்புகளில் எதுவும் சொல்லவில்லை, நானும் கேட்கவில்லை. மூன்றோ, நான்கோ சரியாக நினைவில்லை, பின்னர் தான் எனது வகுப்பு நன்றாக இருப்பதாய்ச் சொன்னார். மார்க்சியத்தை எமது அனுபவங்களினூடாகச் சொல்வதே சிறந்ததென உற்சாக மூட்டினார்.
ஒருவகையில் என் எழுத்துக்களில் அசட்டுத் துணிச்சல் உண்டு, அதற்கான உத்வேகத்தைத் தந்ததில் தோழர் நவரத்தினத்துக்கும் பங்குண்டு. அவர் எந்த வகுப்பு முறைமையை நிராகரித்திருந்தால் பலவற்றை நான் எழுத முடியாமல் இருந்திருக்கும். ஏதோ துணிச்சலில் எழுதிவிட்டதால், இனி விவாதிக்கலாம், தவறிருந்தால் திருத்திக் கொள்ளலாம். செயற்பட உத்வேக மூட்டிய அவரது பங்கு என்றென்றும் நினைவு கூரத்தக்கது. இப்போது எழுதியன பற்றி அவரிடம் கருத்துக் கேட்கலாம் என்ற நம்பிக்கையில் இருந்தேன், இப்படிச் சந்திக்க முடியாமல் ஆகும் எனத் கனவிலும் கருதியிருந்ததில்லை.
அவரையும் எம்முடன் சேர்த்து இனி எமது வேலை இரட்டிப்பாக வேண்டும். அவர் அதற்கான பலத்தைத் தருவார்- துக்கத்தைப் பலமாக மாற்றுவோம்!
(44 தோழர் நவம்.

ஜெ.சற்குருநாதன் அரசினர் ஆசிரிய கலாசாலை விரிவுரையாளர் கொட்டகலை,
தோழர் நவரத்தினரிடமிருந்து
கற்றுக் கொள்ள வேண்டியவை
தோழர் நவரத்தினம் காலமாகி விட்டார். மரணத்தை யாரும் வெல்ல முடியாது. இயற்கையின் நியதி. ஆனால் அவர் வாழ்ந்த வாழ்க்கையின் ஊடாக நாம் பெற்றுக் கொள்ள வேண்டியவை நிறையவே உள்ளன. தோழர் நவரத்தினம் மாக்சிய லெனிய மாஒ சேதுங் சிந்தனையில் வழி நின்று போராடியவர்.
மேடையில் பேசும் ஆற்றல் குறைவு எனினும் அவர் மாக்சிய தலைவர்களுடன் நடந்த விவாதத்தில் விட்டுக் கொடுக்காத சமரசம் இல்லாத நிலையில் தத்துவார்த்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார். சர்வதேச கம்யூனிச இயக்க தலைமைகள் அதன் போக்குகள் என்பன பற்றி அடிக்கடி கலந்துரையாடுவார். இனப்பிரச்சனை தொடர்பான கருத்துக்களை தனக்கே உரித்தான தொனியில் குறுகிய தீவிர கண்ணோட்டத்துடன் அணுகாமல் பரந்துபட்ட மக்கள் நலனிலிருந்து வர்க்க வர்க்க அடிப்படையில் அஓகும் நிலைப்பாட்டை கொண்டிருந்தார். ஐக்கிய முன்னணி தந்திரோபாயத்தை விட்டுக் கொடுப்பு இல்லாத வகையில் எதிரி யார், நண்பன் யார் என்ற மக்கள் நிலைப்பாட்டுடன் நடந்து கொண்டதை மறுக்க முடியாது. இதிலிருந்து அவரிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை நிறையவே உள்ளன.
அவரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய மற்றொரு விடயம் அவரது நேர்மையான அரசியல் நடைமுறை போராட்டம். 1960களில் தீண்டாமை இயக்கத்தின் முன்னின்ற தோழர் சாதிய அடக்கு முறைகட்கு எதிராக கடுமையாக போராடினார். பொலிஸ் அடக்குமுறையை தாண்டி 1969ல் வடபகுதி மேதினத்தை முன்னின்று நடத்திய உறுதிமிக்க தோழர்களில் ஒருவராக இருந்தார். பொலிசாரின் கண்மூடித்தனமான தாக்குதலுக்கு முகம் கொடுத்து அதற்கெதிராக போராடி வந்த இந்த தோழரிடமிருந்து இளைய சமூகம் கற்றுக்கொள்ள வேண்டியவை நிறையவேயுள்ளன.
சாதாரண கட்டிட தொழிலாளியான இவரிடமிருந்து நேர்மையும், உறுதியும், போர்க்குணமும் தோழர்களுக்கு வழிகாட்டக் கூடிய முன்னுதாரணங்களாகும். கட்சி வேலைகளிலும் சரி கட்சி தோழர்களின் வாழ்க்கையிலும் சரி அவரது ஆலோசனை முக்கியமானவை. சீதனம், பெண்ணடிமை, போலி நம்பிக்கைகள், மூடநம்பிக்கைகள் என்பவற்றுக்கு எதிராக தொடர்ந்தும் போராட வேண்டும், வெகுசன தளத்தில் சரியான கருத்துக்களை கட்டி எழுப்ப வேண்டும் என வலியுறுத்தி நின்றார். இவ்வாறான தோழரிடம் நாம் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்.
கற்றுக் கொண்ட விடயத்தை தொடர்ந்து முன்னெடுத்து செல்வது அவர்கட்கு செலுத்தும் அஞ்சலியாகும். உலகமயமாக்கலுக்கெதிராகவும், ஏகாதிபத்திய முதலாளித்துவத்திற்கெதிராகவும் ஈவிரக்கமற்ற போராட்டத்தை நடத்த வேண்டும். இதனைப் போல் இலங்கையின் தேசிய இனப் பிரச்சனை தொடர்பான கண்ணோட்டத்தை வர்க்க அடிப்படையில் அணுகி நடைமுறைப் படுத்த வேண்டும். சகல ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராட வேண்டும்.
立
X தோழர் நவமி. 45)

Page 25
சமூகப் பார்வையை தூண்டியவர்
கு.மோகன்
தோழர் நவமென அன்பாக அழைக்கப்படும் மறைந்த நவரத்தினத்தை நினைத்துப் பார்க்கின்றபோது உமக்கும், எனக்கும் உள்ள உறவைவிட உமக்கும் இந்த மண்ணுக்குமுள்ள உறவு மிகப்பெரியது. இந்த மண்மாதா உம் நினைவுகளை என்றும் தன்னுடன் வைத்திருப்பார். சோதனைகள் நிறைந்த காலத்தில் வாழ்ந்தாலும் மனம் தளராது கொண்ட கொள்கையில் இறுதிவரையும் இருந்த உமது மன உறுதியையும், ஒடுக்குமுறைக்கெதிரான ஆவேசம் மிக்க உமது போராட்டமும் தேசிய விடுதலைப் போராட்டத்துக்கும், சமூக மாற்றத்துக்குமான உமது எண்ணம் என்றும் எனது நினைவில் நிலைத்திருக்கும்.
எமது மக்களின் சுதந்திர எல்லைக்கோடுகள் படிப்படியாக சுருக்கப்பட்டு வந்த வேளையில் அதற்கெதிராக உமது சக்திக்கேற்ற எதிர்ப்புகளைக் காட்டியது மட்டுமன்றி, சர்வதேச மட்டத்தில் ஏற்படுகின்ற அரசியல் நிலையால் அங்கு மக்கள் அடக்கப்பட்டு, அதற்கெதிரான சுதந்திரப் போராட்டத்தையும் நீர் ஆதரித்தும், அதே நேரத்தில் அடக்குமுறை அழிக்கப்படுவது எவ்வளவு முக்கியமோ, அந்த இடத்தில் சமூகமாற்றமும் முக்கியமானதென்ற உமது நிலைப்பாட்டை ஏற்று உம்முடன் என்னையும் இணைத்துக் கொண்டது மிகவும் மகிழ்ச்சிக்குரியதாகும்.
1970ம் ஆண்டளவில் உம்முடன் ஏற்பட்ட உறவு எனது வாழ்க்கைப் பாதையை மாற்றிவிட்டது. வெறும் பிழை(X) போடுகின்ற பாராளுமன்ற பாதைக்குப் பின்னால் எடுபட்டு திரிந்த என்னை வேறுபாதைக்கு திருப்பிவிட்டது மட்டுமன்றி எனது அறிவு விருத்திக்குத் தேவையான புத்தகங்கள், பத்திரிகைகள் தந்து எனது சிந்தனையை சமூகத்திலுள்ள ஏற்றத் தாழ்வுகளையும், முதலாளித்துவ பொருளாதார நோக்கத்தைக் கொண்ட சமூக சிந்தனைகளையும் ஏற்றுக் கொள்ள முடியாத நிலைக்கு என்னைத் தள்ளிவிட்டது உமது தொடர்பே ஆகும். அடிக்கடி இருவரும் சந்திக்கும் பொழுது நாட்டு நிலைமைகளையும் பின்தங்கிய மக்களின் அவலங்களையும் எடுத்துச்சொல்லி அந்த ஈடுபாட்டை உறுதியாக வைத்திருப்பதற்கு காரணகர்த்தா நீர் என்பதை உறுதிபட கூறிவைக்க முடியும்.
இன்று நீர் விட்டுச் சென்ற இடம் வெறுமையாக இருப்பது போல் எனக்குத் தெரிகிறது. உமது மக்களுக்கான போராட்ட வாழ்க்கை வரலாற்றில் பதிய வைக்கப்படும் என்பது நிசசயம். நவம்.
“இதற்கு மேல் என்ன எழுதுவது? வார்த்தைகள் வரமறுக்கின்றதே என் சோகத்தைச் சொல்ல சொற்களுக்கு வலிமை இல்லை நீ இல்லாத இடைவெளி நிரப்பமுடியாது"
என்ற புதுவை இரத்தினதுரையின் கவிதை நினைவில் வருகின்றது.
என்றும் உண்மை மறவாத
கு.மோகன்
உபதலைவா
(46 தோழர் நவமி.
 
 

தோழர் நவத்துக்கு அந்சலி
க.தணிகாசலம்
மீளாத் தயிலில் ஆழ்ந்தவிட்ட தோழா உமக்கெம் அஞ்சலிகள் நாளும் மறவாதும் பணியை நாமும் தொடர்வோம் உறுதியுடன்.
நான்கு தசாப்தம் முன்பாக நாய்வாலைப் போல் நிமிராமல் ஊறிப் பழமைச் சேற்றினிலே நாறிக் கிடந்த நம் சமூகம்.
தீண்டாமைப் பேய் போய் அகல திரண்டெம் மக்கள் எழும்வரை சாதிகள் நாற பெயர் சொல்லி பலகஉறாய் கிடந்தத தமிழரினம்.
அறியாமைப் போரிருளுக்குள் அடக்குமுறைச் சிறைகளுக்குள் ஒடுங்கி அடங்கி உணர்விழந்த உறங்கிக் கிடந்தது நம் சமூகம்.
உறங்கி கிடந்த சமூகத்தை உருட்டி எழுப்பும் பெரும் புயலாய் எழுந்த பொதுமைப் புரட்சியிலே இணைந்த ஒன்றாய்க் கலந்தவன் நீ.
குனிந்து வளைந்த வாழ்ந்தவரின் கடனை நிமிர்த்தும் போரினிலே X தோழர் நவமி. 47)

Page 26
உயர்ந்த கரத்தில் ஒன்றாக எழுந்த கரம் இன்றோய்ந்ததுவே
தோழர் நணர்பர் உறவுகளை தென்றலாக அணைக்கும் நீ ஒடுக்குமுறைகள் அநீதி கண்டால் பொங்கிப் புயலாய் எழுவாயே.
உருக்குப் போன்ற உண்கரத்தால் உருவாகியவை பல மனைகள் நீ இருக்கும் வீடோ சிறு குடிலாய் இருக்கும் அமைப்பின் வெளிப்பாடாய்.
பிளைக்க வழிகள் பல இருந்தம் பிழைக்கா வழியில் சென்றாய் நீ உழைக்கும் வர்க்க உணர்வினிலே சளைக்கா தென்றும் முன்நின்றாய்.
பணத்தால் உன்னை அளப்பவர்கள் பகுத்தறி வில்லாப் படு மூடர் பண்பால் குணத்தால் அளப்பவரோ வியப்பர் உந்தன் உயர் நிலையை.
உனது பிரிவின் தயர் நெஞ்சில் நெருப்பாய் எழுந்த தகித்தாலும் மனிதம் மணர்னில் உயரும் வரை உணத பணியை நாம் தொடர்வோம்.
(48 தோழர் நவமி. 安

பொய்யற்றிருந்த போராளி
புதுவை இரத்தினதுரை
ஆத்திகடி நவம் காலமானார்
செய்தி கிடைத்ததம்
திடுக்குற்றுப்போனேன்.
நம்ப மறுத்தேன் முதலில்
நம்பித்தான் ஆகவேணர்டுமென்றத மீண்டும் கிடைத்த தகவல்
நணர்பனைக் கடைசியாகத் தரிசித்த வழியனுப்ப வந்த வழியெங்கும்
கஉடவே ஓடிவந்தன ш6ogш
நினைவுகள்
ஒன்றா இரண்டா உதறிவிட்டுப்போவதற்கு
முப்பத வருட முதிர்காலம் விழுதிறக்கிய உறவு எப்படி அழித்தெழுதிவிட்டு நகரமுடியும் தார்வாரும் நினைவுக் கிணற்றில் தோணர்டத் தோணர்ட வெளியே வந்தன
தோழமை நினைவுகள்.
பொய்யின்றி,
X தோழர் நவம். 49)

Page 27
எந்தப் புனைவுமின்றி உணர்மை மனிதனாய் உலவினான் நவம். என் நெஞ்சுக்குள் உறவு இழைபின்னி காணுமிடங்களில் தோள்தழுவியும் கதைக்கும் பொழுதகளில் கரிசனை மெழுகியம்
இருந்தான் என்னுடன். பத்தத் தினங்களுக்கு முன்னர்தானே பார்த்தப்பேசினேன்.
அத்தனை அவசரமா அவனுக்கு? நாவலர் மண்டபத்தில் விழாவொன்று தொடங்குவதற்கு
முன்னானவேளை கூட்டம் அதிகமில்லை.
உடம்பு வழமையிலும் அதிகமாக வலித்தத. தலை சுற்றுவதுபோலவும் இருந்தது. மணர்டபத்தின் வெள்ளிக்குந்தில் அமர்ந்திருந்தேன். ஆத்திகடி நவமும், தாயகம் தணிகாசலமும் வந்தனர். என்னை நடுவிருத்தி அருகருகாயினர். “கவனம் புதவை உடம்பைக்
கவனித்துக்கொள”
(50 தோழர் நவம்.

முதக்ல் கைகொண்டு வருடி எண்னை
உருக்க அன்று நவம் இருந்தான் அருகில். இன்று தனித்தவிட்டேனே
அருந்தலான நட்புகளில் ஒன்றை இழந்து. ஸ்ரான்லி வீதியில் எழுத்தாளர் டானியலின் “ஸ்ரார் கராஜ்’
ஒரு காலத்தில் என் ஞானசாலை. “வானம் சிவக்கிறத” வெளிவந்த
மறுவாரம்
டானியலின் சிறு அறிமுகத்தடண் ஒருவருக்குள் ஒருவரெனப் புகுந்தோம். சின்னச் சிரிப்புடன் முதற்சந்திப்பு முடிந்தது.
பின்னர் அடிக்கசெந்தித்தோம்,
பேசினோம்.
ஒரு நேர்கோட்டிலேயே நின்றோம். நவத்தை என்னால் அடையாளம்
காணமுடிந்தத.
நவம் விடிகாலைச் சேவல் மற்றவரைத் தயிலெழுப்புவதில். நவம் அடிவற்றாத ஆழக்கிணறு
மற்றவரின் தாகம் தனிப்பதில்.
-sm
X தோழர் நவமி. 510

Page 28
அநீதிக்கு எதிராகத் தினசரி போராடிய அற்புதமான போராளி. தன் சக்திக்கு மீறியே சமூகத்தைத் தாங்கியவன்.
பாதை தெளிவுடைய பயணி. வளைவுகளிற்ககூடட வளைந்தபோகாமல் முள்நிறைந்த வெளியில் முன்னேறியவன். செங்கொடியைத் தன் குருதியில்
தோய்த்த ー・
உயிரில் உலர்த்தி
ஊரெங்கும் பறக்கவிட்டவன். தமிழ்த் தேசிய விடுதலைப்போராட்டம் பற்றி
நவத்தக்குத் தெளிவிருந்தத. கூடவே விமர்சனமும் இருந்தது. அதன் செல்வழி பற்றிய அச்சமிருந்த ஆரம்பத்தில்
அதில் நியாயமும் காணப்பட்டத. எனினும்
நவம் வெறுவெளியில் நின்ற தனியண் அல்லன்
மக்களுடன் நிற்கும் மனோபாவம்
கொண்டவன்.
அதனாலென்னவோ
(52 தோழர் நவமி. 玄ー

அவனுக்குச் சரியானதை இனங்காணும்
சக்தியிருந்ததது.
சின்னப் புள்ளியெனச் சூல்கொண்டு
பெருவட்டமாய் விரிந்த பெருமகன் நவம்.
முற்றுப்பெறாத அவனின் பயண
இலக்கை
தொட்டுவிடுவதே தோழனுக்கான
காணிக்கை.
எல்லோரும் முன்னேறுவோம் அவரவர்
வழியில். இலக்கு ஒன்றாகவே இருக்கட்டும். பயணம் முற்றுப்பெறும் இடத்தில்
நவம் காத்திரப்பான் எம்மை வரவேற்க.
போய்வருக நணர்பா.
பிரிந்தோம் மீண்டும் சந்திப்போம்.
X தோழர் நவமி. 53)

Page 29
எழுந்து வாரிரோ?
அழ.பகிரதன்
பெரியீர், நீர் வானில ஒளியாய் துலங்கிவில்லை
மனிதர் புனைந்திருக்கும் தெய்வத்துள் சேர்ந்திலீர் எம் அகத்துள் நிறைந்துளிர்.
உலகம்யமாகலுக்குள் அமுங்கிப்போகும் இந்த தசாப்தத்திலும் ஒடுக்குமறைக் கெதிராய் குரல் கொடுக்கும் அற்புதம் நீ.
அடக்கப்பட்டவர் இன்றும் சுரண்டிக்கொழுத்தவர்தம் அமைப்புக்கள்
FUL1
சமுர்த்தி திட்டத்தில் தெரிவாகும்
வறியராய்
ஊர் தோறும்
மேல் எழுந்து எழில் காட்டும் கோபுரங்கள்! அருகே
தெரு நீள குண்டும் குழியுமாய்
(54 தோழர் நவம்.

பள்ளத்தில் நீர்நிலைகள்! வீதிகளின் மருங்கில் விரைவாய் எழும் அங்காடிகளில் அடுக்கி வைக்கப்பட்ட அலங்காரப் பொருட்கள் எலக்றோனிக் வகையறாக்கள்! ஏறும் விலைவாசியில் ஏழ்மைநிலையிலோ மாற்றம் ஏதுமின்றி பிழைக்கும் வழியுமின்றி மக்கட் கூட்டம்!
தேறா நிலையில் தேயத்து மக்கள் புள்ளடி இட்ட அர்த்தமற்ற தேர்தல் மீளமிள வரும்! ஆளுவோர் மேல்நிலையில் ஆளப்படுவோர் ஏந்திடும் கைகளுடன்!
இளையோர் மனங்களில் நிறைந்துள நீர் மாறா நிலையிலுள மக்கள் எழுச்சியுறவாழ் நிலையில் மாற்றம் ஏற்படபொதுவுடைமைச் சிந்தனை விதைத்திட எழுந்து வாரீரோ மீண்டும்!
A GøSITypii JB6JLÓ.......... 55)

Page 30
இங்கு ஆற்றுபவர் யாருமிலர்.
க.கமலசேகரம்
நாற்ற மெடுக்கும் இந்த (அ)நாகரிக லோகத்தில் ஆற்ற நற் செயல் நாடி நண்ப நீர் தோன்றியதேன் மாற்றும் செயல் புரிய துடித்திட்டீர் சின்னத்தனம் செய்யும் தினர்கள் செயல் கண்டு சினங்கொண்டு சிறிட்பீர் திர வழி தேடிட்பீர் சின்னத் தன மொழித்து சீரியராய் வாழ வழி காட்ட ஆன வழி கேட்டிடுவீர் பணம் தேட வழிகேட்கும் இவ்வுலகில் பிறர் தீக்குணம் தீர்க்க வழி பார்த்திர் இந்த வழி சீரடைய வழி தேடுமுன்மே உந்தன் வழியை தேடியதேன் பட்டம் பதவிபெற்றோர் பாரினிலே தம்வழியே பத்திரமாய் கிடக்கையிலே பார்புகழப் பாடுபட்டர் பாட்டாளி மக்களுக்காய் ஊர்சிறக்க வாழ்ந்தும் நீர் உம்குறையை தீர்க்குமுன்னே நும்வழியைத் தேடியதேன் ஆறமுடியவில்லை இங்கு ஆற்றுபவர் யாருமிலர்.
(56 தோழர் நவம். 玄マ

நல்லதொரு தோழர்.
பேராசிரியர் சிவசேகரம்
தேசிய கலை இலக்கியப் பேரவை ஒழுங்குசெய்த கைலாசபதி நினைவுக்கூட்டமொன்றுக்காக யாழ்ப்பாணம் சென்ற போது நண்பர் நவரத்தினத்தை 1984 முற்பகுதியில் தான் முதலில் சந்தித்தேன். 1983ம் ஆண்டு வேலை அலுவலாகச் சீனா சென்றிருந்ததை அறிந்த புதிய ஜனநாயகக் கட்சி நண்பர்கள் சீனா பற்றி என்னிடம் பேச விரும்பினர். அதற்காக நடந்த கலந்துரையாடலில் நண்பர் நவரத்தினத்துடன் சிறிது உரையாடினேன். அதற்கு மேலாகக் கட்சிப் பத்திரிகையில் வெளியீட்டாளர் என்று அவரது பேரைக் காண்பதற்கும் மேலாக அவர் பற்றி அதிகம் தெரிந்திருக்கவில்லை. 1984க்கும் 1997க்கும் இடையே வெளிநாட்டில் இருந்ததால் அவருடன் தொடர்பு ஏற்பட வாய்ப்பும் இருக்கவில்லை.
1997ம் ஆண்டு இலங்கை திரும்பிய பிறகுதான் அவரை இடையிடை கொழும்பிற் சந்திக்க முடிந்தது. யாழ்ப்பாணச் சூழ்நிலை காரணமாக அவர் குடும்பத்துடன் கொழும்பிற் தங்கியிருக்க நேர்ந்ததால் சில மாதங்கட்கு ஒரு முறையாவது அவரைக் காணும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு ஆண்டுகட்கு முன் அவர் மீண்டும் யாழ்ப்பாணத்தில் குடியேறிய பின்பு அவரைச் சந்திப்பது மிகக் குறைந்து விட்டது. எனினும் கட்சி அலுவலாகக் கொழும்பு வந்தபோது அனேகமாகச் சந்தித்திருக்கிறேன் என்று தான் நினைக்கிறேன்.
அவர் அதிகம் பேசுகிறவரல்ல. எதையும் சுருக்கமாகவும் தெளிவாகவும் மறுகேள்விக்கு இடமில்லாமலும் சொல்லுகிற திறமை அவரிடம் இருந்தது. எல்லாரிடமும் ஒரே விதமாகப் பழகும் அளவுக்கு அவரிடம் ஒரு நல்ல கம்யூனிஸ்ற்றுக்குரிய தன்னம்பிக்கையும் சகமனிதர் மீதான மரியாதையும் இருந்தது. எதையும் மழுப்பவோ மறைக்கவோ அவருக்குத் தேவை இருந்ததில்லை. எனினும் தன்னுடைய தனிப்பட்ட பிரச்சனைகள் பற்றியோ கவலைகள் பற்றியோ எதையும் எவரிடமும் பேசியதாக நான் அறியமாட்டேன். தன்னுடைய தனிப்பட்ட பிரச்சினை எதுவும் தனது அரசியல் வாழ்விலோ மற்றவர்களுடனான சமூக உறவிலோ குறுக்கிடுவதை அவர் மிகவும் கவனமாகத் தவிர்த்தார் என்றே நினைக்கிறேன்.
தனிப்பட்ட வாழ்க்கைப் பிரச்சினைகள் அரசியற் பணிகளிற் குறுக்கிடாமல் தவிர்த்தபோதும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் தனது அரசியலுக்கும் முரணில்லாமலே நண்பர் நவரத்தினம் வாழ்ந்தார். சொல்லுக்கும் செயலுக்கும் யாரும் முரண்பாடு காட்ட இயலாத ஒரு வாழ்க்கை அவருடையது. தன்னுடைய வர்க்க அடையாளம் பற்றிய பெருமிதம் அவரிடம் இருந்தது. அதுவே அவருடைய அரசியலின் அடையாளமாகியது. அந்தத் தென்பு தான் அவரது மனித உறவுகளின் அத்திவாரம்.
☆ தோழர் நவமி. 57)

Page 31
என்னுடைய சில கவிதைகள் பற்றியும் கட்டுரைகள் பற்றியும் நேரடியாகவே தனது எண்ணங்களை எனக்குக் கூறியிருக்கிறார். என்னுடைய விளக்கங்களை ஏற்றும் இருக்கிறார், ஏற்க மறுத்தும் இருக்கிறார். எப்படியிருப்பினும், ஒரு விடயம் பற்றிய கருத்து வேறுபாடுகள் மனத்தாங்கலாக மாறி இன்னொரு விடயம் பற்றிய கருத்துக்களைப் பாதிக்க நேர்ந்ததில்லை. அவரது கண்டனங்கள் போலவே பாராட்டுக்களும் நிதானமாக இருக்கும்.
பின் நவீனத்துவம் பற்றி எல்லோரும் விளங்கும்படி எழுதுமாறு என்னை மிகவும் வற்புறுத்தியவரும் அவரே. பின் நவீனத்துவம் பற்றி அவருக்கு ஒரு மயக்கமும் இருக்கவில்லையென்றாலும் அது எவ்வாறு இளைய தலைமுறையினரைக் குழப்பப் பயன்பட்டது என்று அவர் அறிந்த காரணத்தாலேயே என்னை வற்புறுத்தினார். அதன் பின்னர் வெளியான வேறு சிலரது கட்டுரைகளும் பின்நவீனத்துவம் பற்றிய மாயைகளைக் கலைக்க உதவின. அதிகம் தெரிந்ததாகக் காட்டுகிற சில அறிஞர்கள் குழம்பிப்போன விடயங்களில் எல்லாம் தெளிவான எளிமையான சிந்தனை மூலம் சரியான முடிவுகளை அடையலாம் என்பதற்கு நண்பர் நவரத்தினம் ஒரு நல்ல எடுத்துக்காட்டாவர்.
இடதுசாரி இயக்கத்தின் சரிவுக்குப் பாராளுமன்ற இடதுசாரிகளின் சீரழிவு ஒரு முக்கிய காரணி. பாராளுமன்றப் பாதையை நிராகரித்த ஒரு போக்குடன் இணைந்து அரசியலுட்புகுந்த காரணத்தால், நண்பர் நவரத்தினம் அவ்விடயத்தில் தெளிவுடனேயே இருக்க முடிந்தது. தேசியவாதமும் சனநாயகமறுப்பும் மாக்ஸிய லெனினிச இயக்கத்தின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை இட்ட நீண்ட கால இடைவெளியிலும் கொள்கையிலும் கட்சியிலும் உறுதியான நம்பிக்கை கொண்டு தன்னையும் பிறரையும் வழிநடத்திய நண்பர் நவரத்தினம் மீளவும் யாழ்ப்பாணம் சென்றது கட்சிப் பணிகளை முன்னெடுக்க மிகவும் பயனுள்ளதாயிருந்தது. கடந்த சில ஆண்டுகளில் புதிய ஜனநாயகக் கட்சி மக்களின் மதிப்பில் மிகவும் உயர்ந்துள்ளது.
அதை ஒரு அமைப்புச் சார்ந்த வளர்ச்சியாக்குகின்ற பணியில் தன்னை மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுக் கொண்டிருந்த வேளையில் நண்பர் நவரத்தினத்தின் இழப்பு இடதுசாரி இயக்கத்துக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் ஒரு பெரிய இழப்பென்றே நினைக்கிறேன்.
தனிப்பட்ட முறையில் ஒரு நேர்மையான நல்ல நண்பரை இழந்துள்ளேன்.
அவரது குடும்பத்துக்கு அவருடைய இழப்பு மிகப் பெரியது எனினும் சமூகத்துக்கு அவரது சிறப்பு எவ்வளவோ பெரியது.
மனித இனத்தின் உய்வுக்காக அவர் செலவிட்ட காலமும் முயற்சியும் என்றும் வீண் போவதில்லை. அவரது இழப்பு மலையளவு கனமானது எனினும் அவரது பங்களிப்பு அதிலுங் கனமானது என்று நாம் ஆறுதல் கொள்வோமாக.
(58 தோழர் நவம்.

திருமதி.வ. சுப்பிரமணியம். சிங்கப்பூர்
25-10-2004
மறைந்த தோழர் மணியம் குடும்பத்தின் சார்பாக.
அன்புக்கும் மதிப்பிற்குமுரிய செந்தில் அவர்கட்கு.
தோழர் சி நவரத்தினம் அவர்களது திடீர்மறைவுபற்றிய கடிதமும், இதய அஞ்சலிப் பிரசுரங்களும் தபாலில் வந்ததாக கீர்த்தி என்னிடம் தந்தார்.
தோழர் சி. நவரத்தினம் அவர்கள் திடீரென மறைந்துவிட்டார் என்ற செய்தி மனம் நிரம்பிய துக்கமாக இருக்கிறது. அவர் தனது பொது வாழ்விலும், தன் குடும்ப வாழ்விலும் சமநிலையாகக் கடமையாற்றி எவர் மனமும் புண்படாத வகையில் வாழ்ந்த ஒரு சிறந்த செயல் வீரர் ஆவார். பொது வாழ்வில் ஈடுபடுபவர்கள் முகம் கொடுக்கும் பலவித இன்னல்களுக்கும் துன்ப துயரங்களுக்கும் அவர் வாழ்வு சவாலாகத் திகழ்ந்தது.
நான் 1998 மார்ச் மாதத்தில் உங்கள் வீட்டிற்கும் - (குழந்தை மணியதாஸின் இழப்பின் நிமித்தம்) வந்து விட்டு தோழர் - நவரத்தினம் வீட்டிற்கும் சென்றிருந்தேன். அவர் தனது வேலை காரணமாக வெளியே போயிருந்தார், சகோதரி சந்திராவும் குழந்தைகளும் தான் அந்தக் குறுகிய இடத்தில் இருந்தார்கள். தோழரைக் கண்டு பேச முடியவில்லை.
பொதுச் சேவை செய்யும் குடும்பத் தலைவனுக்கு மனைவியாக வாய்க்கும் பெண்களில் சகோதரி சந்திரா பற்பல இன்னல்களுக்கு ஆளானவர். எமது நாட்டைப் பொறுத்தவரை பொதுச் சேவையில் ஈடுபட்டுப் பணியாற்ற வேண்டுமென்ற துடிப்புள்ள பெண்வர்க்கத்திற்கு வீட்டுக்கடமைகள், பிள்ளைவளர்ப்பு, கணவரின் பணிவிடைகள் என்ற பலபொறுப்புகள் குறுக்கிட்டு அவர்களின் வேகத்தை - மன உந்துதல்களை முடக்கி வைத்து அவர்களை நாலு சுவருக்குள்ளே சுற்றிச் சுற்றி சுழன்று சுழன்று நாளாந்தம் 18 மணித்தியாலங்கள் அடக்கி வைத்து விடுகின்றன.
ஏதோ என் மன உழைச்சலை எழுதி உங்களையும் கவலைப்பட வைக்க வேண்டாமென. தோழர் சி.நவரத்தினம் அவர்களுக்கு மறைந்த தோழர் மணியம் குடும்பத்தின் சார்பாக அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறான்.
இங்ங்ணம் தங்கள் அன்புள்ள அக்கா வ. சுப்பிரமணியம்.
X தோழர் நவமி. 59)

Page 32
தொழிற்சங்கப் போராட்டங்களில் தோழர் நவம்.
கா.பஞ்சலிங்கம் நவ-லங்கா தொழிலாளர் சங்கம்
மனிதர்கள் இறந்து கொள்வர். ஆனால் மனிதகுலம் இறக்காது. இறப்புகள் பல தன்மைகளைக் கொண்டவை. சிலரது இறப்புகள் இறகு போன்றன. சிலரது இறப்புகள் மலை போன்றன. உண்மையிலே தோழர் நவரத்தினம் அவர்களின் இறப்பு இறகு போன்றதல்ல. அது மலை போன்றது. அவரது இறப்பு எமது கட்சிக்கும் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் பேரிழப்பாகும்.
நவரத்தினம் அவர்கள் 1965 களில் மார்க்சிஸம் லெனினிஸம் மாவோவின் சிந்தனையால் கவரப்பட்டு அன்றில் இருந்து, இறக்கும்.வரை, நடைமுறை சார்ந்த பொதுவுடைமைவாதியாகவே வாழ்ந்து வந்தவராவர்.
அவர் தன்னலமற்ற சேவையும், தளம்பாத மன உறுதியும் கொண்டவர். பண்பும் பழக்க வழக்கமும் நிறைந்தவர். மனித நேயமும் மக்கள் சார்புக் கொள்கையும் கொண்டவர். மக்கள் சார்பாக முன்னெடுக்கப்பட்ட பல போராட்டங்களில் முன் நின்று போராடிய ஒரு போராளியுமாவர். அவரது குடும்பம் பொருளாதாரப் பிரச்சனைக்குட்பட்ட போதும், தளராத மனஉறுதியுடனும் உற்சாகத்துடனும் அரசியல் வேலைகளை முன்னெடுத்து வந்துள்ளதை நான் அறிவேன்.
அவர் பழைமை வாதம் மடமைவாதம் பிற்போக்கு வாதம் மூடநம்பிக்கைகள், மேட்டுக்குடி அரசியல் ஆகியவற்றுக்கு எதிராகக் குரல் கொடுத்தது மட்டுமல்ல, அவ்வப்போது போராடியும் வந்துள்ளார்.
யாழ் மாநகராட்சி மன்ற தொழிலாளர்களாகிய நாம் நீண்ட வருடங்களாக மாதச் சம்பளம் இன்றியும், பல அடக்குமுறைக்கும் உட்பட்டும், வருடக்கணக்காக பல துன்பதுயரங்கள் மத்தியில் வேலை செய்து வந்தோம். இந்த நெருக்கடிகளின் மத்தியில், அதாவது 1970களில் தொழிலாளர்களாகிய எங்களின் சம்பளத்தில் 1ரூபா 10/- சதம் மாநகராட்சி மன்ற நிர்வாகத்தால் குறைக்கப்பட்டது. இதற்கு எதிராக தொழிலாளர்களாகிய நாம், மாநகராட்சி மன்றத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை மிகவும் துணிவுடன் நடாத்தியிருந்தோம். வெட்டிய சம்பளத்தை திருப்பித் தர நிர்வாகம் மறுத்தே வந்தது. தொழிலாளர்களின் போராட்டமும் நாளுக்கு நாள் உச்சக்கட்டத்தை அடைந்தே வந்தது. இறுதியில் வெட்டிய சம்பளத்தை திரும்பத் தருவதாக நிர்வாகம் ஏற்றுக்கொண்டது. இப் பகுதியில் தான் தொழிலாளர் சங்கம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை தொழிலாளர் மத்தியில் இருந்து எழுந்தது. இழந்த உரிமைகளை மீளப் பெறவும், மறுக்கப்பட்ட உரிமைகளை
(60 தோழர் நவம்.

வென்றெடுக்கவும் தொழிற்சங்கப் போராட்டங்களே பயன்தரும் என்ற எண்ணம் தொழிலாளர் மத்தியில் வலுப்பெற்றது.
தொழிலாளர் சங்கம் ஒன்றை அமைப்பதற்கு, பொ.தருமகுலராசா, ஆ.செல்வராசா, வி.புஸ்பரத்தினம், கா.பஞ்சலிங்கம் ஆகிய நால்வரைக் கொண்ட குழு உருவாக்கப்பட்டது. நாங்கள் நால்வரும், ஒரு நண்பனுடன் இதைப் பற்றிக் கதைத்த போது, அவர் தோழர்.இ.செல்வநாயகம் அவர்களை அவரது இல்லத்தில் அறிமுகம் செய்து வைத்தார். அன்றிலிருந்து நாம் தொழிற்சங்கத்தை உருவாக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வந்தோம். இக்காலப் பகுதியில் எமக்கு பல தோழர்கள் அறிமுகமானார்கள். அவர்களுள் தோழர் நவரத்தினமும் ஒருவராவர். அவரை நான் முதன்முதல் எமது கட்சி அலுவலகத்தில் சந்தித்தேன். அவரை எனக்கு தோழர் செந்திவேல் அவர்கள் அறிமுகம் செய்து வைத்தார். அன்றிலிருந்து நாம் இருவரும் மிகவும் நெருக்கமாகப் பழகி வந்தோம்.
எமது தொழிலாளர் சங்கம் நாளுக்கு நாள் வளர்ச்சி பெற்று வந்தது. தொழிலாளர்கள் பல எண்ணிக்கைகளில் நாளாந்தம் இணைந்து கொண்டே வந்தனர். தொழிலாளர் மத்தியில் உணர்வும் உற்சாகமும் ஏற்பட்ட நிலையில், 1977ம் வருடம், தற்காலிகத் தொழிலாளர்களை “நிரந்தர நாள் சம்பளத் தொழிலாளியாக நியமனம் செய்”, “நிரந்தர நாள் சம்பளத்தொழிலாளர்களை மாதச் சம்பளத் தொழிலாளியாக நியமனம் செய்” இந்த இரண்டு கோரிக்கைகளை முன்வைத்து பொது வேலைநிறுத்தம் ஒன்றைச் செய்திருந்தோம். இந்த வேலை நிறுத்தத்தி பயனாக ஒரே நாளில் 200க்கு அதிகமான தொழிலாளர்கள் மாதச் சம்பள நியமனம் பெற்றனர். இது யாழ் மாநகரசபையின் ஒரு வரலாற்று நிகழ்வாகும். இவ்வேலை நிறுத்தப் போராட்டத்தில் தோழர் நவரத்தினம் அவர்களும் கலந்து கொண்டு எமக்கு உற்சாகத்தை ஊட்டி வந்தார்.
அவர் தொடர்ந்தும் எம்முடன் இணைந்து தொழற்சங்க வேலைகளை எதுவித சலிப்புமின்றி முன்னெடுத்து வந்தார். இறுதியில் அவர் நவலங்கா தொழிலாளர் சங்கத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்று, சங்கத்தை வழி நடாத்தி வந்தவராவர்.
அன்பும் அடக்கமும், துணிவும் தூரநோக்கும் கொண்ட அவர் இறந்த செய்தி கேட்டு மிகவும் துயரமடைந்தேன். அவருடைய இழப்பு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். எனவே அவர் விட்டுச்சென்ற பணிகளை முன்னெடுப்பதே நாம் அவருக்கு செலுத்தும் அஞ்சலியாகும்.
X தோழர் p56ld.......... 61)

Page 33
தோழமையின் நினைவாக
தோழமையுடன் இ.செல்வநாயகம்.
பிறப்பும் இறப்பும் இயற்கையின் நியதி. ஆனால் உமது மறைவு சாதாரணமானது அல்ல. இது ஈடுசெய்ய முடியாத ஒரு பெரும் இழப்பு. ஏற்கனவே உடலில் பாதிப்புகள் இருந்தாலும் அதன் சுவுடுகளை உமது முகத்தில் நான் ஒரு போதும் கண்டதில்லை. உமது நடையும் எப்போதும் முகத்தில் காணப்படும் புனிசிரிப்பும் நெஞ்சுக்குள் நிறைந்துகிடக்கின்றன.
இரவு 12 மணியளவில் உமது மரணச் செய்தி கிடைத்தது. இன்னும் அதிர்ச்சியான அவலச் செய்தியாகவே உணர்கின்றேன்.
1966 ஆண்டுகளின் பிற்பகுதியில் இருந்து நமது தோழமை வளரத்தொடங்கியது. தன்னலமற்ற உமது பொதுநலச்சிந்தை நம்மை தோழர்களாய் இணைய வைத்தது. அன்றிலிருந்து இன்றுவரை நல்ல தோழமையுடனே இருந்து வந்தோம். அந்த தோழமையின் நினைகளை அன்று பின்னோக்கி நகர்த்திப் பார்க்கின்றேன்.
தொழிலாள வர்க்கத்தின் அடக்கு முறைகளுக்கு எதிராய் குரல் கொடுத்தும், சாதி சமயம் காட்டி பேதம் செய்தவர்களின் மூடநம்பிக்கைகளையும் சடங்காசாரங்களையும் எதிர்த்து நின்ற உமது புரட்சிகரச் சிந்தனைகள் விலைமதிக்கமுடியாதவை.
தெளிவான அரசியலின் ஆழமான கருத்துக்களை பரிமாறுவதிலும் நண்பர்களுக்கு உதவுவதிலும் ஒடுக்கப்பட்ட மக்களோடு ஒன்றிணைந்து செயல்படுவதிலும் அதற்கு ஏற்ப அமைத்துக் கொண்ட உமது வாழ்க்கையையும் மிகவும் பாராட்டுதலுக்கு உரியதாகவே இருந்தன.
மாக்கிசம், லெனினிசம், மாலோவின் சிந்தனைகளை அரசியற் சித்தாந்தமாக ஏற்றுக் கொண்டு பொதுவுடமை இயக்கத்தினை வளர்ச்சிக்காய் முழு இதயத்துடனும் சொல்லாலும் செயலாலும் பங்களிப்புச் செய்தது ஒரு முன் உதாரணமாகவே எமக்கு அமைகிறது.
சகல அரசியற் கூட்டங்களிலும் போராட்டங்களிலும் முன்னின்றதும் ஒரு கம்யூனிஸ்டிடம் இருக்கவேண்டிய தோழமையும், நிதானமான துணிச்சலும் தியாக உணர்வும் அமையப் பெற்றவராக விளங்கினமையும் குறிப்பிடத்தக்கது.
பெரிய படிப்பு இல்லையெனினும் மனித குலம் முழுமையினதும் விடுதலையை வேண்டி நிற்கும் பொதுவுடமைத் தத்துவத்தின் மேன்மையில் உம்மையும் உமது
(62 தோழர் நவம்.

குடும்ப வாழ்வையும் அமைத்துக் கொண்டதன் மூலம் எல்லோரிடமும் சுகமாய்ப் பேசிப் பழகி முன்னின்று செயற்பட்டு எல்லோரின் நற்சான்றுகளையும் பெற்றுக் கொண்டமை சிந்தனைக்குரிய ஓர் அம்சமாகும்.
காலப் பதிவுகளால் ஏற்பட்ட நாட்டின் யுத்தநிலை காரணமாக நாம் சில காலம் பிரிந்திருக்க நேர்ந்தது. மறுபடியும் தாய் நாடு திரும்ப வேண்டும் எம் தோழர்களைக் காணவேண்டும் என்ற பேராவலுடன் தாயகத்தில் காலடி எடுத்து வைத்தேன். என் உள்ளத்து வாஞ்கைள் திரும்பவும் கிடைக்கப் பெற்றேன். இழந்து போன காலங்களும் நினைவுகளும் மீட்கப்பட்டன. ஸ்ரான்லி வீதி மறுபடியும் களைகட்டியது. தோழர்களின் கூடுகைகளும், அரசியற் பேச்சுக்களும் நகைச் சுவைகளும் தேனிருமாக நாங்கள் பழமையும் புதுமையுமாக கலந்து இன்பமாக நகர்ந்த இவ்வேளையில் உமது மரணம் என் உள்ளத்தில் ஒரு பெருங்கீறலை ஏற்படுத்திவிட்டது. என் இதயத்தில் ஏற்பட்ட வெற்றிடம் என் மரணம் வரை திரும்பப்போவது இல்லை.
L60)GF வாளியும் கையுமாக நாம் யாழ்ப்பாண நகரை இரவிரவாக சுற்றித்திருந்த அந்தப் பசுமையான நினைவுகள் எனதுஉள்ளத்தை விட்டு அகலப்போவதுமில்லை.
தோழர் நவரட்டினத்தின் இழப்பை கனத்த இதயத்துடன் தியானிக்கிறேன். அரசியல் முறைகளின் படியே தன் இறுதிக் கிரியைகள் அமையவேண்டும் என்ற உறுதிகுலையாத அந்த உள்ளத்திறகு என் சிவப்பு அஞ்சலிகளை செலுத்துகிறேன்.
கணவனை இழந்த மனைவிக்கும் தந்தையை இழந்த பிள்ளைகளுக்கும் அவருடைய இழப்பு ஈடுகட்டமுடியாத ஒன்றாக இருப்பினும் அவரின் சரியான சிந்தனைகளும் காலம் கடந்தாலும் வெற்றியடையும். அவர் கொள்கைகளும் நமக்கு பக்க பலமாக என்றும் நிலைத்து உதவி செய்யும்.
X தோழர் நவமி. 63)

Page 34
திருமதி.ஈஸ்வரி,தர்மலிங்கம் தையிட்டி
காங்கேசன்துறை
சமூக விழிப்புணர்வை ஏற்படுத்திய செயலி விரன்
மனிதகுல வரலாற்றிலே மனிதர் சமூகவர்க்கத்தின் “விளைபொருள்” ஆக இருப்பதனால் அவர்களது கருத்துக்களும், பழக்கவழக்கங்களும் வர்க்க அடிப்படையில் இருந்து கிளந்தெழுவனவாக இருக்கும். சமூகம் என்பது முரண்பாடு கொண்ட இருவர்க்கங்களினால் ஆக்கம் பெற்றுள்ளது என்றும் அவற்றுக்கிடையே போராட்டம் தொடர்ச்சியாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்ட மாஓசேதுங் அவர்கள் பின்புலத்திலே தனது கல்விக் கருத்துக்களை முன் வைத்தார். முரணியற்சடவாதம் அவரது அறிவுக் கோட்பாடாக அமைந்துள்ளது.
அறிவு என்பது எப்பொழுதும் நிறைவு அடையாதது. நடைமுறையிலே தொடங்கி மனிதர் அறிவைப் பெற்றுக் கொள்கின்றனர். மீண்டும் நடைமுறைக்குச் சென்று அறிவைத் திருத்தி அமைத்துக் கொள்கின்றனர். இது முடிவில்லாத தொடர்கதையாகவே சென்று கொண்டிருக்கும்.
கல்வி என்பது வகுப்பறையினுள்ளே அடங்கியது அல்ல. ஒருவரது வாழ்க்கையில் வரையறுக்கப்பட்ட காலப்பகுதியை உள்ளடக்கியதும் அல்ல. அது மனிதர்களின் அறவொழுக்கத்தை, நுண்மதியாற்றல்களை உடலியக்கத் திறன்களைத் தொடர்ந்து வளர்ப்பதாக இருத்தல் வேண்டும். அதுதான் தொழிலாளர்களை சோசலிச உணர்வுமிக்கவர்களாக உருவாக்கும். இந்த வகையிலே செயல்முறையிலே சோசலிச உள்ளுணர்வு கொண்டவராக வாழ்ந்து காட்டிய பெருமைக்குரியவர் நவம் அண்ணா அவர்கள். உண்மையிலேயே மாஒசேதுங்கின் சுலோகத்திற்கு அமைவாக நின்று, உறுதியாக இருந்து, தியாகத்துக்கு அஞ்சாமல் வெற்றியை வென்றெடுப்பதற்கு சகல கஸ்ரங்களையும் கடந்தவர் என்று கூறலாம். கருத்தை எவரும் கூறலாம், களத்தில் இறங்கிப் போராடுபவன் தான் ஒரு சிறந்த போராளியாவான். அதற்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்.
இவர் தனது வாழ்வில் ஒரு செயல் வீரனாக பல கோணங்களில், இலங்கையின் பல பகுதிகளிலும் தன்னை பொது வாழ்வுக்காகவும் போராட்டங்களுக்காகவும் அர்ப்பணித்தவர். இவர் சமூகத்தையும், மக்களையும், உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தினரையும் ஒன்று கூட்டி உரிமைக்குரல் கொடுத்து போராடிய ஒருவர். இவர் சமூகத்திலே விழிப்புணர்வை ஏற்படுத்தியதோடு சமூகத்தைத் தட்டியெழுப்பிச் சிந்திக்க வைத்தவர் என்றால் மிகையாகாது.
(64 625tgolf Bould..........

இவர் ஒரு குறுகிய வட்டத்துக்குள் வாழ்ந்தவரல்லர். “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற உயரிய இலட்சியம் கொண்டவராக நின்று 1995 களில் இடம்பெயர்ந்து சென்ற காலப்பகுதியில் வேலை இழந்து நின்ற தொழிலாளிகளை ஒன்று கூட்டி, வன்னி, வவுனியா, கொழும்பு ஆகிய பகுதிகளில் வேலைவாய்ப்பைப் பெற்று, தானும் முன்னின்று தொழில்முயற்சியை மேற்கொண்டு தனது குடும்பமும், தொழிலாளர் குடும்பமும் வாழ வழிகாட்டியவர். இவர் ஒரு பொதுவுடைமைத் தென்றலாகத் திகழ்ந்து பூங்காற்றாய் தவழ்ந்தவர். ஒருவருடைய வாழ்வில், நல்ல பண்பு, நல் நடத்தை, சொல் செயல், நேர்மை, அன்பு, மனித நேயப் பண்பு, சமூகத்துடன் பொருத்தப்பாடு உடையவராக வாழும் வாழ்க்கைமுறை என்பன என்றும் அவர்களை உயர்ந்த ஸ்தானத்திலே வைத்து எண்ணப்படுவார்கள். இந்த வகையில் மேற்கூறப்பட்ட அம்சங்கள் அத்தனையும் கொண்டு விளங்கியவர் நவம் அண்ணா அவர்கள்.
இவர் குடும்ப வாழ்விலும், சமூகவாழ்விலும் ஆற்றிய சேவைகள் மக்கள்
மனதை கவர்ந்த ஒரு மாமனிதனாகத் திகழ்ந்தார் என்பதை அவரது இறுதி அஞ்சலி நிகழ்வின் போது மதிப்பிட முடிந்தது. இவர் ஒரு மார்க்சிய லெனினிய கோட்பாட்டை முன்னெடுத்துச் சென்ற போராளியாகவும், நல்ல சமூக சேவையாளனாகவும், நல்ல குடும்பஸ்தனாகவும், நல்ல தந்தையாக, சமூக விழிப்புணர்வை ஏற்படுத்திய ஒரு வழிகாட்டியாக எல்லோராலும் நேசிக்கத்தக்கவராக நின்றதோடு அவரது அன்பான மனைவி, பிள்ளைகளும் அவரது கொள்கைக்கு உறுதுணையாக நின்று பொதுவுடைமைக் கருத்துக்களை உள்வாங்கி அவருடன் தாமும் நின்று சேவை புரிந்தனர். இத்தோடு அவருடைய குடும்பம் அன்பு, கருணை, ஒற்றுமை, கல்வியறிவு, நல்ல மனப்பாங்கு கொண்ட மனிதநேயப் பண்புகள் அனைத்தும் பெற்ற நல்லதொரு குடும்பமாகத் திகழ்ந்தவர்கள். இவரது குடும்பத்தினர் என்றும் அவரது கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வார்கள். அவர் காட்டிய வழியில் அனைவரும் தொடர்ந்தால் நல்லதொரு பொதுவுடைமைச் சமுதாயத்தை உருவாக்கலாம்.
X தோழர் நவமி. 65)

Page 35
மறைவுக்குப்பின் வாழ்தல்
க.ஜெயபாலசிங்கம்
தோழர் நவத்தாரின் மறைவுச் செய்து நெஞ்சை உருக்கியது. அவரது நினைவுகள் மனதில் நிழலாடின. ஒரு மனிதன் தன்னுடைய பிறப்பின் பின்பு வாழுகின்ற வாழ்வியலே மண்ணில் வாழ்தலை பிரதிபலிக்கின்றது. வாழுகின்ற வாழ்க்கை முறைகளும் நடவடிக்கைகளும் வாழ்க்ககையின் புரணத்துவத்தை மண்ணில் நினைக்கவைக்கின்றது. தோழர் நவத்தாரின் வாழ்வியலை நோக்குகின்ற போது தனது நடைமுறை சிந்தனையாக பாட்டாளிவர்க நடைமுறையை தன்னோடு வரிந்து கொண்டார். தன்னை அச்சிந்தனையோடு இணைந்து கொண்டார். அதுவே இறக்கும் வரையில் அவரது வாழ்வியலில் அவர்களினுடைய வெற்றி என்று கூறமுடியும். இதற்கு பல வடிவங்களில் சமூக செயற்பாடுகள் தேவைப்படுகின்றன. சமூக சூழல், கட்சி, குடும்பம், உழைப்பு, கொள்,ை நடைமுறை. தோழர் நலம் அவர்கள் தன்னொடு ஒன்றிணைத்து தனது அன்றாட நடைமுறை செயற்பாடை ஆக்கிக் கொண்டார். ஆகவே அவருக்கு கானம் ஆயிற்று. இதில் அவர் வெற்றி கண்டார்.
அவருடைய பன்முக செயற்பாட்டு உதாரணமாக இருபாலை கிராமத்தின் பாரதிசன் சமுகநிலையத்தின் வரலாற்றில் தோழர் நவத்தாரின் செயற்பாடுகளும் நினைவில் கொள்ளத்தக்கது. சொந்த நிலம் இல்லாததால் பல தடவைககள் பாரதி சனசமூக நிலையம் இடமாற வேண்டிய நிலையில் இருந்தது. அந்தக்காலங்களில் எல்லாம் தோழர் நலம் அவர்கள் அந்த ஊர் மக்கள் போல தோழமைக்கு உதாரணமாக திகழ்ந்துள்ளார். தனது பணிகளை பகலில் முடித்துவிட்ட இரவு வேளைகளில் கட்டிடப் பணிகளை முடித்துக் கொடுத்ததை நான் கண்ட இருக்கின்றேன். இது வெறுமனிதனாக வாழும் வாழ்வு உடையவர்களால் நினைத்து பார்க்க முடியாத ஓர் விடயமாகும். இலட்சியமும் வர்க்க உணர்வு கொண்ட தோழர்களால் தான்
முடியும். இது நவத்தாரிடத்திலும் நிறையவே குடிகொண்டு இருந்தது.
இவரிடத்தில் சிறப்பு அம்சம் என்னவென்றால் சுயவிமர்சனத்தையும் பிறர் விமர்சனங்களை உள்வாங்குகின்ற மனப்பக்குவத்தையம் தன்னகத்தே கொண்டது ஆகும். இதனுாடாகவே தன்னை நெறிப்படுத்தி வாழ்ந்தார் என்றே கூறவேண்டமு. இதுவே சமூதாயத்தோடு தான் சேர்த்துக் கொள்ளவும் சமூதாயம் எம்மை புரிந்து
(66 512 bold.

கொள்ளவும் வழி சமைக்கும் நேர்மையம் அயராது ஊழ்பும் சமுதாயம் அவரை ஏற்றுக் கொள்ள வைத்தது. கொள்கையும் நடைமுறையும் அவரை மெருகூட்டியது. எழிமையும் நேர்மையும் அவரை புடம் போட்டது.
பட்டாளி மக்கள் சிந்தைதனைய பேசிக் கொண்டு அந்த எதிர் மறை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நடைமுறையாளர்கள் இன்றும் உள்ளார்கள். தோழர் நவம் அவர்கள் தான் வரிந்து கொண்ட கொள்கையோடு வாழ்ந்து மறைந்துள்ளார். இது சிந்தனைக்கும் சிந்திக்கவும் உரியதாகும். தோழர் நவத்தாரின் சமூதாய பார்வை மிகவும் கண்ணியமானது. பேச்சைவிட செயற்பாடே மேலோங்கி நின்றது. மானிடவாழ்வின் சிலர் மட்டுமே சாவின் பின்பும் மண்ணில் வாழ்கின்றார்கள். அவ்வதழ்க்கைைய தோழர் நவத்தார் பெற்றுள்ளமை என்பது மறநக்கவே மறைக்கவே
(LPLQUIT35g.
தோழர் நவத்தார் சாவின் பின்பு வாழவேலண்டும் மென்ரால் நாம் அதற்காக உழைக்கவேண்டும். விட்ட பணி தொடர வவேண்டும். அவர் எந்த சமூத உணர்வோடு வாழ்நதாரோ அவர்கள் உழைக்க வேண்டும்ம். குடும்ப செயற்பாடுகளும், அவர் வாழ்த காலத்தில் எப்படி அவர்களில் செயற்பாட்டுக்க செயல வடிவமாக இருந்தார்கள். அதற்க இன்னும் ஒரு படிமேல் சென்று செயற்பாட்டளராக மாற்றம் பெறவேண்டும். கட்சியும் தோழர்களும் உறுதிப்பாட்டில் இன்றும் இறுக்கம் கொள்ளவேண்டும். அதுவே தோழர்நலத்துக்கு நாம் செய்யும் இறுதி அஞ்சலியும் கடமையுமாகும்.
நவத்தாரின் குடும்பத்துக்கு ஆறுதல்கூறி தோழமையுடன் பாலு
X தோழர் நவமி. 67)

Page 36
புரட்சிகர வெகுஜனப் போராளி
வை.வன்னியசிங்கம்
1972இல் எங்களது அரசில் உறவுகள் ஆரம்பமாகின. இக் காலகட்டம் தமிழ்த் தேசியத்தின் ஆரம்ப எழுச்சிக் கால கட்டம், இக்காலகட்டத்தில் நான் தோழர்கள் தணிகாசலம், நவம் ஆகியோர் யாழ் பொதுநூலகத்திலேயே கூடுதலாக சந்திப்போம். அவ் வேளைகளில் நான் தமிழ்த்தேசிய வாதியாகவும் நவம் சமூக விஞ்ஞான கருத்துக்களை கொண்டவராகவும் அரசில் விவகாரங்களை விவாதிப்போம். அவ்வேளைகளில் உணர்ச்சிவசப்படாது நிதானமாகவே தனது அரசியல் நிலைப்பாட்டை உணர்த்துவார்.
என்ன மானிட விடுதலை நோக்கிய சமூக விஞ்ஞான தத்துவத்தின் பால் கொண்டு வந்ததில் தோழர் நவத்திற்கும் பெரும் பங்குண்டு
1974ம் ஆண்டு முதல் கட்சியோடும் அதன் வெகுஜன ஸ்தாபனங்களோடும் நாம் இருவரும் பத்தாண்டுகள் வேலை செய்திருக்கின்றோம்.
70ம் ஆண்டு காலகட்டம் பொருளாதார நெருக்கடி பஞ்சம், பசி, பட்டினி மிகுந்த காலம் பாணிற்குக் கூட வரிசையில் நின்ற காலம். இக்காலகட்டங்களில் அவரும் அவரது குடும்பமும் எவ்வளவோ இடங்கள் கஸ்ரங்களுக்கு ஆட்பட்டன. இவ் இடர்களுக்கு மத்தியிலும் கட்சியின் அரசியல் ஸ்தாபன வேலைகளும் முன்னோடியாகவே திகழ்ந்தார். எத்தனையோ நாட்கள் ஊண், உறக்கமின்றி கிராமம் கிராமமாக சென்று வேலைகளில் செய்ததை எண்ணி எண்ணிப் பார்க்கின்றேன். மற்றவர்களுக்கு பெரும் மாடி வீடுகள் அமைந்திடும். அவர் தன் குடும்பத்திற்கென ஓர் நல்ல மனையை அமைக்கவோ முற்படவில்லை. தனக்கென சொத்துச் சேர்க்காது மக்களின் சொத்தாகவே வாழ்ந்தார்.
நாற்பதிற்கு மேற்பட்ட ஆண்டு அரசியல் வாழ்வில் அவரை புடம் போட்டு
எடுக்கப்பட்ட சமூக விஞ்ஞான சிந்தனையானது புரட்சிகர வெகுஜன இயக்கப் போராளியாகவும் காண்கின்றேன்.
எல்லோரும் இறக்க வேண்டியவர்கள் தான் ஆனால் புரட்சிகர வெகுஜன போராளிகளின் மறைவு மலையை விட தாக்கமானது.
துக்கத்தை பலமாக மாற்றி அவரின் வெகுஜன மார்க்கப் பதாகையை முன்னெடுத்துச் செல்வோம்.
ஐரோப்பிய கிளை சார்பில்
(68 தோமர் நவம்.

குடும்பத்தில்.
தோழர் நவம்
என் அன்பின் அணையா விளக்கே
சந்திரா நவரெட்ணம் எங்கள் அப்பா.
நவரெட்ணம்.நவாஸ்சங்கர் உள்ளத்தில் இருந்து நவரெட்ணம். சங்கர் அப்பாவின் பாதையைப் பின்தொடர்கின்றேன். நவரெட்ணம்.நவநீதன் என் அன்பின் அப்பா!
நவரெட்ணம்.நளினி என்றும் வாழ்வாய் எம்மனதில் மா.சிவராசா பாசமுள்ள பெரியப்பாவுக்கு. யோ.சோபிகா எங்கள் அப்பப்பா.
மோ.கஸ்ரோ பாசமுள்ள கொழும்பு அப்பப்பா. ந.பிரவீணா(மீனு) நேசமுள்ள சித்தப்பா. பா.உஷாநந்தினி அன்புச் சித்தப்பா.
ந.செல்வி பிரியமுள்ள மாமாவுக்கு. சு. விஷனுப்ரியா
சு. கபில்ராஜ் நவரத்தினமே எங்கள் உறவே! வ. பரராஜசிங்கம் அன்றிலிருந்து இன்றுவரை.
க.பரமானநதம. இடியோசை என உன் மரணச்செய்தி மாரிமுத்து கனகசபை
* தோழர் நவமி. 69

Page 37
என் அன்பின் அணையா விளக்கே!
நானும் என் கணவரும் சொந்த அத்தைமாமா பிள்ளைகள். சிறு வயதிலிருந்தே ஓடி ஓடி விளையாடி திரிவோம். பிறகு பருவம் வந்ததும் பெரியோர்கள் ஆசீர்வாதத்துடன் முறையாக அம்மி மிதித்து அருந்ததி பார்த்து மணமேடை அமைத்து நாளுக்கு பொன் உருக்கி தாலி கட்டி 1964 ஆம் ஆண்டு என்னை தன் மனைவியாக்கிக் கொண்டார். அன்றிலிருந்து நாங்கள் தம்பதிகள் ஆனாலும் ஒரு நண்பர்களாகத் தான் வாழ்க்கை நடத்தினோம். எங்களுக்கு பல ஆண்டுகள் ஆகியும் குழந்தைப் பாக்கியம் இல்லாமல் இருந்தது. அதையிட்டு நாங்கள் மிகவும் கவலையடைந்தோம். பிறகு மருத்துவப் பரிசோதனைகளின் பின் அடுத்தடுத்து ஒரு பெண்குழந்தையையும் 3 ஆண்குழ்ந்தைகளையும் பெற்றெடுத்தோம். எனது கணவன் பணம் பொருள் சொத்துக்கள் சேர்க்காவிட்டாலும் எல்லா சொத்துக்களுக்கும் மேலாக நற்பண்புகள் நிறைந்த பிள்ளைகளை எனக்கு கொடுத்து, நல்ல மக்களை பெற்ற மகராசி என்ற சந்தோசத்துடன் வாழவைத்துள்ளார்.
அவர் சிறுவயதில் இருந்தே பொதுநோக்கு பொதுசேவைகள் செய்வதில் பெரும் ஆர்வம் உடையவர். அவரின் வாலிப வயதில் எம்.ஜி.ஆர் படம் என்றால் போதும் அத்தோடு திராவிட முன்னேற்றக் கழகக் கொள்கைகளான கடமை, கண்ணியம், கட்டுப்பாடு போன்றவற்றை கடைப்பிடித்தார். அண்ணா, பெரியார், மா.பொ.சிவஞானம், கருணாநிதி போன்றவர்களின் புத்தகங்களை கூடுதலாகப் படிப்பார். அத்தோடு இந்திய வெளியீடான இந்தியாருடே, குமுதம், விகடன் போன்ற சஞ்சிகைகளையும், இலங்கையில் வெளியாகும் பத்திரிகை, புத்தகங்கள் அனைத்தையும் தவறாது படிப்பார். என்னையும் படிக்கச் சொல்வார். அதன்படி நானும் படித்தேன். உலக அறிவையும் வளர்த்துக் கொண்டார். எங்கள் திருமணத்துக்குக் கூட தாலி கட்டவேண்டாம், மாலை மாற்றினால் போதும் என்று கூறியவர். அப்படியான முற்போக்குத் தன்மை அவரிடம் ஆரம்பத்தில் இருந்தே அவரிடம் இருந்து வந்தது. சுப்பிரமணியம் தோழர் போல் மிகவும் எளிமையாக
வாழ்ந்தவர். திருமணமாகிய பல ஆண்டுகளின் பின்னர்தான் அவர் பொதுவுடைமைக் கொள்கையை ஏற்று கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்தார். கம்யூனிசம் சார்ந்த பல புத்தகங்களை படிப்பார். என்னையும் படிக்க
வைத்தார். கூட்டங்கள் கருத்தடங்கு ஊர்வலங்கள் பலவற்றுக்கு என்னையும் கூட்டிக் கொண்டு செல்வார். அதனுாடாக நானும் அரசியலை விளங்கிக் கொள்ளக் கூடியதாக இருந்தது. பலதரப்பட்ட மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அதில் அன்று தொடக்கம் இன்று வரை சுப்பிரமணியம் மாமா குடும்பம், செந்தில் மாமா குடும்பம், செல்வநாயகம் குடும்பம்,
(70 தோழர் நவம். `

தணிகாசல மாமா குடும்பம், தேவர்மாமா குடும்பம், தம்பையா மாமா குடும்பம், செல்வம் மாமா குடும்பம், மோகன் மாமா குடும்பம் மற்றும் புத்துார் தோழர்கள் சங்கானை தோழர்கள், நெல்லியடி தோழர்கள் என்றும் மறக்க முடியாதவர்கள். எனது கணவர் கூடுதலாக தன் அயல் மக்களை மிகவும் நேசித்தார். அதன் அடிப்படையின்படி சனசமூகநிலையத்தில் 15 வயதில் இருந்தே ஒரு நிர்வாகியாகி சேவை செய்து அதன் காரணத்தால் தலைவர், செயலாளர், போசகர் போன்ற பதவிகளை வகித்து நிலையத்துக்கும் மக்களுக்கும் சேவைகள் பல புரிந்தார். அது மட்டுமன்றி சமூகமாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய நாடகங்களும் நடித்தார். சங்கிலியன் நாடகத்தில் அருள்மொழித் தேவராகவும் நம்பிக்கை என்னும் நாடகத்தில் டொக்ரர் குமாராகவும் நடித்து பாராட்டு பெற்றவர். அப்பாவின் சமூகப்பற்றையும் தொண்டுகளையும் நான் குறிப்பிடத்தேவையில்லை. இருந்தாலும் ஒரு விடயத்தை குறிப்பிடுகிறேன். 1967, 1968 ஆம் ஆண்டுகளில் சாதிய போராட்டங்கள் தலைதூக்கி நின்ற நேரத்தில் எஸ்.ரி.என்.நாகரத்தினம் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. அதன் ஊடாக ஆலய பிரவேசம், தேனீர் கடை பிரவேசங்கள் பல நடத்தி வெற்றி கண்ட நேரத்தில் மாவட்டபுரம் கந்தசாமி ஆலயத்தில் மட்டும் பல போராட்டங்கள் நடந்து கொண்டிருந்தது. கடைசிப் போராட்ட நேரத்தில் சாதி வெறியர்களால் தேர் எரிக்கப்பட்டு சண்டை நடந்து கொண்டிருக்கையில் தலைவர் எஸ்.ரி.என்.நாகரத்தினத்தை சாதிவெறியர்கள் தாக்குவதற்கு சுற்றி வளைத்த நேரத்தில் எனது கணவரும் எமது சனசமூகநிலைய அங்கத்துவ தோழர்களும், கட்சித் தோழர்களும் சேர்ந்து அவரை சாதி வெறியர்களிடம் இருந்து போராடி உயிருடன் மீட்டனர். அதனை நினைத்து நான் இன்றும் பெருமை அடைகிறேன்.
எந்தவொரு காரியத்தையும் தன்னம்பிக்கையுடனும் துணிச்சலுடனும் செய்யும் ஆற்றல் உடையவர். 1979 ஆம் ஆண்டு பள்ளிக்கூடம் ஒன்றில் சாதி சொல்லி பேசிய ஆசிரியர் ஒருவரை இரும்புக்கம்பி கொண்டு தாக்கியதால் எனது கணவரும் தோழர் சிவமும் புலிசட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர். அந்த சம்பவம் நடந்தபோது நான் முத்த மகனை பெற்றெடுத்து 14 நாள். அதையும் பொருட்படுத்தாமல் தனது கடமையை செவ்வனே செய்தார்.
1987 ஆண்டு காலப்பகுதியில் எங்கள் நிலையத்தில் பெண்களும் நிர்வாகத்தில் பெண்களும் நிர்வாகத்தில் சேவை செல்ல வேண்டுமென்ற நோக்கத்துடன் எமது நிலையத்தில் முதல் முதல் பெண்கள் நிர்வாகத்தை ஏற்படுத்தினார்.
* தோழர் நவமி. 71)

Page 38
அத்தோடு மாதர் சங்கத்தை உருவாக்கி அதன் ஊடாக அநேகமான பெண்கள் யுவதிகளை பங்கேற்க வைத்து நிலையத்தினூடாக மக்களுக்கு பல சேவைகள் செய்தும் இன்றும் செய்து கொண்டிருக்கவும் செய்தவர் என் கணவர் ஆணுக்குப் பெண் சமநிகர் என்பதை வெளிப்படுத்தி அதை நடைமுறையிலும் செய்து காண்பித்தவர்.
எல்லாப் பெண்களும் பாரதியின் புதுமைப் பெண்களாக விளங்க வேண்டுமென்று நினைத்து செயலாற்றியவர் என்பதை நினைத்து பெருமைப் படுகிறோம்.
அவர் ஒரு நாஸ்திகனாக இருந்தாலும் தனது தாய் தந்தைகளுக்காக ஆடி அமாவாசை, சித்திரை பெளர்ணமி போன்ற விரதங்களை ஒரு நேரம் மட்டும் உணவருந்தி நினைவு கூருவார். இதை வைத்து இவர் தாய் தந்தை போன்றவர்களில் எவ்வளவு பாசம், மதிப்பு வைத்துள்ளார் என்பது புலப்படுகின்றது. இரவில் உறங்கும்போது தனது தாயை, தந்தையை உச்சரித்தவண்ணமே உறங்குவார். அவரை போன்றே அவரின் மைந்தர்களும் தாய்தந்தையுடன் அன்பாக இருப்பார்கள். அவர் பிள்ளைகளுடன் தகப்பன் என்ற ஸ்தானத்தில் மட்டும் இருக்காமல் நண்பர்கள் மாதிரி பிள்ளைகளுடன் பழகுவார். அப்படியான உயர்ந்த உள்ளம் படைத்தவர். நீண்டகாலம் வாழ்ந்து மக்களுக்கு சேவை செய்யாமல் இடையில் இவ்வாறு நிகழ்ந்ததையிட்டு மனம் வருந்துகிறேன். இவரின் பாதையை நாமும் பிள்ளைகளும் பின்பற்றுவோம்.
நான் இறக்கும்வரை என்றும் எனது இதயத்தில் அணையாவிளக்காய் ஒளி வீசிக் கொண்டிருக்கும்.
மக்கள் சக்தி மாபெரும் சக்தி -
இங்ங்னம், 、災 * அவரின் அன்பு மனைவியும், A ஆருயிர்த் தோழியுமான s 3. திருமதி. சந்திரா நவரெட்ணம்
(72 தோழர் நவம். ★
 

என் உள்ளத்தில் இருந்து.
எந்தவொரு தகப்பனும் பிள்ளைகள் படித்து பெரும் புகழுடனும் நிறைய சொத்துக்களைச் சம்பாதிக்க வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். ஆனால் எனது அப்பா பிள்ளைகள் சமூகமாற்றத்துக்காகவும் மக்களுக்காகவும் வாழ வேண்டும் என்றும் நினைப்பர். சிறு வயதில் நான் இருக்கும்போது சொல்வார் “மது நீர் படித்து நல்ல ஆசானாக வந்து நிறைய சேவை செய்யவேண்டும் என்று’ ஆனால் காலத்தின் தேவை என்னை விடுதலை போராளி ஆக்கியது.
ஏழு வருடங்களின் பின்னர் முதல் தடவை அப்பாவை முகாமில் குப்பி விளக்கு வெளிச்சத்தில் சந்தித்தபோது.எப்பவும் போலவே கலகலப்பாகவும் நட்பாக என்னுடன் கதைத்தார். ஒருவருக்கொருவர் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டோம். அனேகமான பெற்றோர் பிள்ளைகளை சந்தித்ததுமே அழுது தங்களது பாசத்தைக்
காட்டி எப்படியாவது அமைப்பில் இருந்து விலத்தி வீட்டிற்கு கூட்டிக் கொண்டு போய் விடுவோம் என்று தான் நினைப்பார்கள். ஆனால் ஒரு போதும் அப்பா மேற்கூறியவாறு கதைப்பதில்லை. எப்பொழுதும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் சமூகமாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்று தான் கூறுவார்.
* தோழர் நவமி. 73)

Page 39
நான் ஒவ்வொரு தடவையும் வீட்டிற்குச் செல்லும் போது நிறைய கதைக்க வேண்டும் என்று நினைத்துச் செல்வேன். எவ்வளவு களைப்பாக இருந்தாலும், இரவு முழுதும் என்னுடன் நண்பன் என்ற ஸ்தானத்தில் இருந்து கதைப்பார். ஆனாலும் கண்டிப்பானவர். நான் வித்தியாசமான சூழலில் வளர்ந்ததால் அப்பாவின் சில நடவடிக்கைகள் எனக்கு தேவையற்றது என்ற மாயையைத் தோற்றுவிக்கும். அப்போது நீங்கள் இரவுபகலாக கஸ்டப்பட்டு என்னத்தை பெற்றிர்கள் என்று ஒரு தடைவ கேட்டபோது “மது பட்டம் பதவிக்காக நான் பாடுபடவில்லை நான் இறக்கும் வரையும் என்னாலான சேவைகளை மக்களுக்கு செய்யவேண்டும் என்பதே எனது எண்ணம்” என அழகாகக் கூறினார்.
நான் சிறுவயதில் இருக்கும்போது கம்யூனிசத் தோழர்களுடன் சேர்ந்து நிறைய வர்க்கப் போராட்டங்களில் ஈடுபட்டார். பருமனான உடலுடனும் பயிற்சிகளிலும் ஈடுபடுவார். . . .
ஒருதடவை அம்மாள் வருத்தம் வந்ததால் அப்பம்மா பனம்பால் கொடுத்தபோது குடித்துவிட்டு சத்தி எடுத்தது இப்பவும் ஞாபகம் உள்ளது. மது, புகைத்தல், வெற்றிலை உண்ணுதல் போன்ற தீய பழக்கங்கள் அற்றவர். ஒரு போதுமே பாவித்தது இல்லை. ஆனால் உணவுப் பொருட்களை நன்றாகச் சாப்பிடுவார். அந்த உணவுப் பண்டங்களே அவருக்கு.
அண்ணா சிறுவயதில் குண்டு, தட்டு எறிதல் விளையாட்டில் யாழ்மட்ட பாடசாலைகள் அனைத்துடனும் விளையாடி சான்றிதழ் நிறையப் பெற்றுள்ளார். முதன்முதலில் ஒரு தடைவ ஈட்டி எறிதலுக்கு பெயர் கொடுத்துவிட்டார். ஆனால் ஈட்டி எறிந்து பார்க்கவில்லை. அப்பாவிடம் சொன்னார். நாளை ஈட்டி எறிதல் போட்டி, எனக்கு எறியத் தெரியாது, என்ன செய்வது என்று உடனேயே ஒரு விளையாட்டு தொடர்பான புத்தகம் ஒன்றினை கொண்டுவந்து சொல்லிக் கொடுத்தார். மறுநாள் காலை வீட்டிலே மரவெள்ளித் தடியை எடுத்து ஈட்டி எறிவதைப் போல் எறிந்து காட்டி அணி னாவையும் எறியப் பழக்கினார் . அன்று பாடசாலைகளுக்கிடையிலான கொத்தணி மட்டப் போட்டியில் ஈட்டி எறிதலில் அண்ணா முதலாவது இடமாக வந்தது என்னால் இப்பவும் மறக்கமுடியவில்லை. இப்படி எல்லா விடயத்துக்கும் எங்களுக்கு ஊக்கம் தருவார். அவருக்கும் விளையாட்டு, கலை ஆர்வம், தேடல் என்பன நிறையவே உண்டு.
பதினைந்து வயதில் கூட அப்பாவின் மடியில் இருந்து மழலை கதை கதைத்து வயிற்றில் குத்துவது இப்ப நடந்தவைகள் போல உள்ளது. எனக்கு நான்காம் ஆண்டு படிக்க தொடங்கியும் க, கா போன்ற உச்சரிப்புக்கு வித்தியாசம் தெரியாது. அத்துடன் எழுத்துக் கூட்டாமல் வாசிக்கத் தெரியாது. பகல் முழுக்க
C74 தோழர் நவம். 灭

வேலை செய்து களைத்து போய் இரவு வீட்டிற்கு வருவார், இருந்தாலும் எனக்கு பாடம் சொல்லி தருவார். திருப்பி திருப்பி சலிப்படையாமல் சொல்லித்தருவார். நான்கு பிள்ளைகளுடனும் மிகவும் அன்பாகப் பழகுவார்.
அம்மாவையும் அப்பாவையும் கணவன் மனைவி என சொல்வதைவிட நல்ல நண்பர்கள் என்று சொல்லலாம். சமத்துவமாக ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து நண்பர்கள் மாதிரி பழகுவார்கள். நான் ஒருதடவை அடம்பிடித்ததன் விளைவாக அப்பா அம்மாவை பேசிவிட்டார் என்று அம்மாவின் கண்கலங்கிவிட்டது. அப்பா சென்றதும் அழுதார். அப்போது என்னிடம் சொன்னார். திருமணமாகிய புதுசில் இருவருக்கும் இடையில் ஒரு தடைவ முரண்பாடு ஏற்பட்டதற்கு பிறகு கிட்டத்தட்ட 25 வருடங்களுக்குப் பிறகு இன்றுதான் பேசியுள்ளார். அதுவும் மது உன்னால் தான் என்று சொல்லி விம்மி விம்மி அழுதது இப்பவும் ஞாபகம் உள்ளது. எத்தனையோ பேர் பெண்ணுரிமைகளைப் பற்றி மேடைகளில் முழங்குவார்கள். ஆனால் அவர்களின் மனைவிகளின் நிலை? அப்பாவை பிடிக்காதவர்கள் என்று சொல்லக்கூடிய அளவிற்கு எனக்குத் தெரிந்த வகையில் ஒருவரும் இல்லை. அப்பாவின் மரண செய்தி கேட்டு எமது இடமே சோக வெள்ளத்தில் மூழ்கியிருந்தது சனசமூகநிலையத்தில் சோககிதம் இசைத்துக் கொண்டிருந்தது. அவ்வேளை நான் வன்னியில் இருந்து வீட்டிற்கு வந்திறங்கினேன். அன்றைய பொழுதை இப்பவும் நினைக்கும்போது.
எனக்கு சமயசாஸ்திரங்களில் நம்பிக்கை இல்லை இருந்தாலும் அடுத்த பிறவி என்று ஒன்றிருந்தால் அப்பாவின் மகனாகவே பிறக்க வேண்டும் என்பது எனது நப்பாசை. அப்பா! என்றுமே உங்கள் வழி தொடர முயற்சிப்பேன்.
இப்படிக்கு நவரெட்ணம் நர்மதன்(மது)
(ந.சங்கர் போராளி மருத்துவர் தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழீழம்)
X தோழர் நவம். 75)

Page 40
எங்கள் அப்பா. சமூக மாற்றத்திற்கான பாதையில்
தடம் பதித்த எங்கள் அப்பா இறக்கும் வரை அதனை
கடைப்பிடித்தே வந்துள்ளார்
சுயநலம் பாராது பொதுநலத்திற்காக
பொதுவுடைமைதனை ஏற்ற எங்கள் அப்பா
அதன் வழி நாங்களும் செல்ல வேண்டுமென
வழிகாட்டி நின்றார்
பிள்ளைகளென எம்மை நோக்காது
தோழமையுடன் பழகும் எங்கள் அப்பா
தோளோடு தோள் கொடுக்க நாம் முனைந்த வேளை
அவரோ இன்று இங்கில்லை
அடுத்த வருடம் அகவை அறுபதை
எதிர்பார்த்திருந்த எங்கள் அப்பா
இந்த வருடத்துடன் இவ்வுலகிற்கு
விடைகொடுத்துச் சென்று விட்டார்
மனவுறுதியும் துணிவும் அஞ்சாநெஞ்சமுங்
கொண்ட எங்கள் அப்பா
இவையனைத்தையும் எங்களுக்கும்
விதைத்தே சென்றுள்ளார்
சமூகத்திற்காகவும் வாழ்ந்து வழிகாட்டிச்
சென்ற எங்கள் அப்பா
எங்கள் வாழ்க்கைக்கும் ஓர் வழிகாட்டியே!
18.10.2004 நவரட்ணம் நவாஸ்சங்கர்
மகன்
(76 தோழர் நவம். 女

அப்பாவின் பாதையைப்
பின்தொடர்கின்றேன்.
எங்கள் பாசமிகு அப்பா ஒரு பொதுவுடைமைப் போராளி. தனது இளமைக் காலம் தொடக்கம் முதுமைக் காலம் வரையும் பல போராட்டங்களையும் சவால்களையும் கண்டு கலங்காத ஓர் உன்னதமான தோழர். 1982இல் அப்பா அம்மா மூலம் இந்த பூமியில் நான் பிறந்தேன். பிறந்ததில் இருந்து என்னைத் தாலாட்டி, சீராட்டி நன்கு பேணி வளர்த்தனர். நான் கடைசிப் பிள்ளையாக இருந்ததால் அம்மாவின் செல்லமாகத்தான் இருந்தேன். ஆனால் நான் வளர வளர அப்பாவின் செல்லமாக மாறத் தொடங்கினேன். அப்பா, அம்மா என்னை பெரிய வைத்தியராக வரவேண்டும் என்று சொல்லி வளர்த்து வந்தனர். ஆனால் நான் அப் பாவின் வழியைப் பின்தொடர்ந்து அப்பாவுக்கு மிகவும் பிடித்தமான சமூக விஞ ஞான த துறை யரி ல படித்துக் கொண்டிருக்கிறேன். அப்பாவுக்கு மிகவும் பிடித்துக் கொண்டது. சின்னவயதில் என னையும் அணி னணி களையும் பாடசாலைக்குக் கொண்டு சென்று படிப்பதில் அக்கறை காட்டச் செய்தார். நாங்கள் நால்வரும் படிப்பிலும் விளையாட்டிலும் நல்ல கெட்டிக்காரர்கள். அப்பாவின் ஆசையை மெல்ல மெல்ல நிறைவேற்றிக் கொண்டு வந்தோம். ஆனால் அப்பா திடீரென எம்மை விட்டுப் பிரிந்தது எனக்கு மிகவும் வேதனையைத் தந்தது. அப்பாவின் இறுதிநேரம் என்னுடனும் அம்மாவுடனும் கழிந்தது. நன்றாக சமகால அரசியல் நிலைப்பாடுகள்,
* தோழர் நவம். 77 )

Page 41
போராட்டங்கள் பற்றித்தான் கதைத்தார். நெஞ்சு வலிக்கிறது, ஆஸ்பத்திரிக்கு விரைவாகப் போகவேண்டும் என்று கூறினார். நானும் அம்மாவும் ஆட்டோவில் அப்பாவைக் கொண்டு போகும்போது இடைவழியில் இரவில் அப்பாவின் இறுதி மூச்சு நின்றது. நானும் அம்மாவும் கதறிக் கதறி அழுதோம். வாழ்நாளில் அப்பாவுக்காகத் தான் இப்படி அழுதிருப்போம், ஏன் என்றால் அப்பா எங்களுக்கு தனியாக அப்பா என்ற நிலையில் இல்லாமல் பெற்ற அன்னையாக, நண்பனாக, பொதுத்தொண்டனாக, பொதுவுடைமைப் போராளியாக, சிறந்ததொரு வழிகாட்டியாக இருந்தார். எந்த ஒரு விடயமும் நான் அப்பாவுடன் தான் கதைப்பேன். அப்பா ஏன்ராப்பா என்று அன்புடன் கேட்பார், அரசியல், வரலாறு, சமூகவிஞ்ஞானம், ஆளுமைத்திறன், நற்பண்புகள் இப்படிப் பலவகையான திறன்களை அப்பாவிடம் இருந்து நான் கற்றுக்கொண்டேன். அப்பாவின் சாதனைகள் எல்லாம் அம்மா எனக்கு சொல்லும்போது வியப்பாக இருக்கும்.
இவ்வளவு அப்பா செய்தவரா என்று. 1966இல் இருந்து நண்பர் குணரட்ணம் வழிகாட்டலுடன் தலைமைத்தோழர் கே.ஏ.சுப்பிரமணியம், இன்னும் பல தோழர்களுடன் ஆத்திசூடி வீதி நண்பர்களுடனும், சித்தப்பா யோகரட்ணம் ஏனைய உறவினர்களுடனும், மக்களுடனும், ஆகியோருடன் இணைந்து தீண்டாமைக்கு எதிரான போராட்டங்களான ஆலயப்பிரவேசம், தேனீர்க்கடைப் பிரவேசம் போன்ற பல போராட்டங்களில் பங்குபற்றி 1979 இல் முதன்முதலில் புலித்தடைச் சட்டத்தில் கைதாகி யாழ் சிறைச் சாலையில் ஒரு மாதம் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார். இந்த வழக்கு சென்ற வருடம் தான் நிறைவுற்றது.
1969 முதல் எமது கலைமகள் சனசமூக நிலையத்தில் பொறுப்புக்களை ஏற்று திறம்பட செயற்பட ஆரம்பித்தார். இக்காலப்பகுதியில் அப்பாவுடன் மோகன் அண்ணை, திருநாவுக்கரசு அண்ணை, நாதன் அண்ணை, ஜெனதாஸ் அண்ணை ஆகியோர் அப்பாவுடன் நெருங்கி பல செயற்பாடுகளில் ஒன்றாகச் செயற்பட்டனர். 1978 இல் வெள்ளிவிழா மண்டபம் கட்டத் தொடங்கி 1983 இல் முடித்து வெள்ளி விழாவை சிறப்பாக ஏனையோருடன் இணைந்து கொண்டாடினார். இக் காலப்பகுதியில் தமிழ்த்தேசிய இனப் போராட்டங்களில் அப்பா விருப்புடன் பங்குபற்றினார். 1987 இல் இந்தியப் படை அமைதிப்படை இல்லை என்பதை முதலிலேயே அப்பாவும், கட்சியும் தூர நோக்குடன் சொன்னார்கள். 1990 இல் சிங்களப் பேரினவாதிகளின் ஒடுக்கு முறைகளையும் இராணுவ நடவடிக்கைகளையும் கண்டித்தார். யாழில் வேலை இல்லாத போது கொழும்பு சென்று வேலை செய்து எம்மை
(78 62 golf belid..........

நன்றாகப் படிக்க வைத்தார். கடிதத்தில் நன்றாகப் படிக்கவும் என்றுதான் எழுதுவார். வெளிநாட்டுக்கு வரும்படி நண்பர்கள் அழைத்ததை மறுத்து இங்கு ஒடுக்கப்படும் மக்களுக்காகவும் அவர்களின் நல்வாழ்வுக்காகவும்
தனது பங்களிப்பை முழுமையாக வழங்கினார். 1995 g}6ü uTg மக்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக இடம்பெயர்ந்தபோதும் நாம் படிப்புக் காகத்தான் கொழும்பு சென்றோம். அங்கே பலவித
இன்னல்களையும், கஷரங்களையும் தாங்கி பலவற்றைக் கற்றோம். கொழும்பிலும் பல செயற்பாடுகளில் கூட இருந்து செயற்பட்டோம். சிறுவயதில் இருந்தே பொதுவுடைமைக் கருத்தாலும், பொதுவுடைமைத் தோழர்களாலும் நாங்கள் நன்றாக வளர்க்கப்பட்டோம். இதனால் நாம் பொதுப்பணிகளில் ஈடுபாட்டுடன் செயற்படுகிறோம். எமது அயலில் அப்பாவை பெரியவர் என்று மிகவும் அன்போடு அழைப்பார்கள்.
எங்களையும் அன்புடன் உபசரிப்பார்கள். 2002 ஆம் ஆண்டு சமாதான உடன்படிக்கையின் பின் நாம் கொழும்பில் இருந்து வந்து இங்கு எமது மக்களுக்கு பல சேவைகளை வாசிகசாலையூடாக செய்தோம். போன
* தோழர் நவமி. 79)

Page 42
வருடம் 2003ம் ஆண்டு எமது கலைமகள் சனசமூக நிலையத்தின் 50 வது பொன்விழா ஆண்டாகும். பொன்விழா ஆண்டில் பொன்விழா நினைவு நூலகம் ஒவ்வோர் உதவியுடனும் அமைத்து மலர் வெளியீடு செய்து பொன்விழாக் கதாநாயகனாக அப்பா விளங்கி சிறப்பாக கொண்டாடினோம். இவ்வருடம் 2004ம் ஆண்டு அப்பா எம்மை விட்டுப் பிரிந்தார். அப்பாவின் இறுதி அஞ்சலி நிகழ்வில் அனைவரும் நேரில் கலந்து சிறப்பித்து பூரணமரியாதையை செலுத்தினார்கள். வரமுடியாதோர், வெளியில் உள்ள நண்பர்கள், தோழர்கள், உறவினர்கள், உற்றார்கள் தந்தி, தொலைபேசி, கடிதம், தொலைநகல், கண்ணிர் அஞ்சலிப் பிரசுரம் போன்றவற்றின் மூலம் எமக்கு ஆறுதல் கூறினர். இவை எல்லாம் அப்பாவின் பாசத்திற்கு கிடைத்த மரியாதைகள். இவர்கள் விட்ட கண்ணீர் என்னையும் கலங்கடித்தது. அப்பாவின் நினைவுகள் என்னை விட்டு எப்போதும் அகல்வதில்லை. அவரின் இலட்சியக்கனவு, செயற்பாடுகள் எப்போதும் என்னை ஞாபகப்படுத்தும், ஊக்கப்படுத்தும், செயற்படுத்தும். அப்பாவின் ஆத்மா சாந்தியடையட்டும் என இறைவனிடம் வேணி டி அப் பாவின் பாதையைப் பின்தொடர்கின்றேன்.
நன்றி இளைய மகன் ந.நவநீதன்
சமூக விஞ்ஞானத்துறை திறந்த பல்கலைக்கழகம் இலங்கை
17.10.2004
(80 62ngi bold......... সুৰৰ

என் அன்பின் அப்பா
அப்பா நீங்களும் அம்மாவும் சொன்னீர்கள், ஒன்பது வருடமாக தவம் இருந்து என்னைப் பெற்றிர்கள் என்று. என்னை அன்பாகவும் ஆசையாகவும் வளர்த்தீர்கள். நான் கேட்கும் பொருட்களை வாங்கி தருவீர்கள். கோபத்தில் உங்களை ஏசினால் கூட அதைப் பொருட்படுத்தாமல் புத்திமதிகள் நிறைய சொல்வீர்கள். நான் கேட்காது சிலவேளைகளில் அடம்பிடிப்பதுண்டு. இப்போது நினைத்துக் கவலைப்படுகின்றேன்.
அப்பா நீங்கள் திடீர் என இப்படி எங்களை விட்டு போவீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. என்றும் உங்கள் நினைவுடனேயே வாழ்வேன்.
அன்புடன்
உங்கள் அன்பான மகள் ந.நளினி
X தோழர் நவம். 81

Page 43
என்றும் வாழ்வாய் எம்மனதில்.
LDIT.afshuJIToFIT
மறைந்த எம் மன்றத்தலைவர் நவம் எம் குடும்பத்தில் ஒருவராய் வாழ்ந்தவர். “அண்ணை’ என்று அன்போடு கூப்பிட்டால் அதில் பாசம் வெளிக்காட்டும். எம்மன்ற வளர்ச்சிக்காக அவர் எடுத்த ஒவ்வொரு முயற்சியும் நாமறிவோம்.
அரசியல் ஈடுபாடும் அனைத்துப் பிரச்சினைகளிலும் பங்கேற்கும் பாணியிலும் அவர் எம்மை விட வளர்ந்து நின்றதால் அவர் எம்மைவிட இளையவரானாலும் நாம் எதையும் உதாசீனப்படுத்துவது இல்லை, ஏற்காமல் இருப்பதும் இல்லை. எத்தனை எதிர்ப்பு வந்தாலும் எதையும் பெரிதுபடுத்தாமல், சிரித்து, சமாளித்து, தன் நல்ல கருத்தைப் புகுத்துவதில் ஈடு இணையற்ற வீரனாகத் திகழ்ந்ததை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.
தம்பி - நீ எம்மை விட்டுப் பிரிந்தாலும் என்றும் எம்மோடு வாழ்வாய்!
அண்ணன் மா.சிவராசா ஆத்திசூடி வீதி. uJTupuUT600TLD. 18.10.2004
(82 தோழர் நவமி. 灭

பாசமுள்ள பெரியப்பாவுக்கு.
எங்கள் பாசமுள்ள பெரியப்பா உங்களின் மறைவுச் செய்தி கேட்டு நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். போனமாதம் நீங்கள் கொழும்புக்கு வந்தீர்கள். என்னுடன் பிரியமாக எவ்வளவு கதைத்தீர்கள். நல்லூர் திருவிழாவுக்கு வரும்படி கேட்டீர்கள். நான் அத்தையின் திவசத்திற்கு வருவதாக சொன்னேனே. ஆனால் நீங்கள் திடீரென சூரியன் மறைவதுபோல் மறைந்து விட்டீர்களே. பெரியப்பா நீங்கள் எங்களை எவ்வளவு பாசத்துடன் வளர்த்தீர்கள். எங்களின் நல்வாழ்வுக்காக நல்ல பல ஆலோசனைகள், அறிவுரைகள் எல்லாம் சொல்வீர்களே. எங்களை விரும்பிய இடங்கள் எல்லாம் கூட்டிக்கொண்டு போவீர்களே. உங்கள் கட்சிக் கூட்டமாக இருந்தாலும் சரி, கோவில் திருவிழாவாக இருந்தாலும் சரி, உல்லாசமாக இடங்கள் பார்ப்பதாக இருந்தாலும் சரி, கூட்டிக்கொண்டு போவீர்களே. உங்களைப் போல் இப்படி நல்லாக செய்வார்களா?
எனக்கு சரியாக சொல்ல முடியவில்லை. இந்தக் கள்ளமுள்ள காலன் உங்களைக் கூட்டிக் கொண்டு போய்விட்டானே. உங்களின் இலட்சியக் கனவுகள் மெய்ப்படவேண்டும். பெரியப்பா உங்களின் நினைவுகள் என்னை ஞாபகப்படுத்தும். உங்களின் நல் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றேன்.
நன்றி இப்படிக்கு, பெறாமகள், யோ.சோபிகா கொழும்பு -14 21.10.2004
* தோழர் நவமி. 83)

Page 44
எங்கள் அப்பப்பா.
அன்பு அப்பப்பா உங்களின் மறைவுச் செய்தி கேட்டு நாங்கள் மிகவும் அழுதோம்.
போன மாதம் நல்லூர் திருவிழாவுக்கு வந்து எவ்வளவு நன்றாக விளையாடி, கதைத்து மகிழ்ந்தோம் எவ்வளவு இனிமையாக இருந்தது.
நாங்கள் அடுத்த திருவிழாவுக்கு வருகிறோம் என்று கூறி கொழும்பு வந்தோமே. ஆனால் இவ்வளவு கெதியாக நாங்கள் யாழ் வருவோம் என நினைக்கவில்லை.
அடுத்த திருவிழாவில் நாங்கள் யாருடன் அப்பப்பா விளையாடுவது. நன்றாகப் படிக்க வேண்டும், படித்து பெரிய ஆளாக வரவேண்டும் என்று கூறுவீர்களே நாங்களும் நன்றாகப் படிக்கின்றோம். நீங்கள் எங்களுக்கு கைதந்து வாழ்த்தினிர்களே.
அப்பப்பா உங்களைப்போல் நாங்களும் நல்ல மனிதர்களாக வருவோம். உங்களின் நினைவுகள் எம்மை விட்டுப் பிரியமாட்டாது.
நன்றி இப்படிக்கு, பாசமுள்ள பேரப்பிள்ளைகள் மோ.கஸ்ரோ மோ.இந்து கஸ்கிசை
21.10.2004
(84 தோழர் நவம். 灭

பாசமுள்ள கொழும்பு அப்பப்பா.
எங்கள் செல்லமான கொழும்பு அப்பப்பாவே உங்களின் பிரிவு எங்களை கவலையடையச் செய்துள்ளது. நீங்கள் இல்லாதது எங்களுக்கு மிகவும் இருண்ட பொழுதாகப் போகிறது. உங்களுடன் நாங்கள் இனிமையாகக் கதைத்து சிரித்து சிறுகதைகள் பல கூறி மகிழ்வோமே. இனி யாருடன் அப்பப்பா இப்படி நடப்போம். எங்களை தாலாட்டி, சீராட்டி மகிழ்விப்பீர்களே. எங்களை செல்லப்பிள்ளைகளாக வளர்த்தீர்களே. எங்களுக்குப் படிப்பெல்லாம் சொல்லித் தந்தீர்களே. எங்களை நன்றாகப் படியுங்கோ என்று சொல்வீர்களே. நாங்கள் உங்களை கொழும்பில் இருந்தபடியால் செல்லமாக கொழும்பு அப்பப்பா என்று கூப்பிடுவோமே. உங்களின் ஞாபகம் எம்மை எப்பொழுதும் நினைவூட்டிக் கொண்டிருக்கும்.
பேரப்பிள்ளைகள் ந.பிரவீணா(மீனு) ம. மிதுசனா
* தோழர் நவம். 85)

Page 45
நேசமுள்ள சித்தப்பா.
நான் உயிராய் நினைத்துப் பழகிய எங்கள் அருமைச் சித்தப்பா உங்களின் திடீர் மறைவு என்னை மிகவும் கவலைப்பட வைத்தது. எங்களுக்கு அப்பா இல்லாத குறையை நீங்கள் தான் எங்களுக்கு அப்பா மாதிரி இருந்து வழிகாட்டினீர்கள். இப்பொழுது எங்களுக்கு யார் சித்தப்பா நல்வழி காட்டுவார்கள்? நல்ல பல அறிவுரைகளும் ஆலோசனைகளும் கூறுவீர்களே. எங்களுடன் இனிமையாகப் பழகுவீர்களே. உங்கள் எளிமையும் . பொதுவுடைமைப் பண்பும் என்னை மிகவும் கவர்ந்தது. நீங்கள் செய்த சாதனைகள் எல்லாம் நினைக்கும் போது வியப்பாக இருக்கும் சித்தப்பா. போன வருடம் எமது கலைமகள் சனசமூக நிலையப் பொன்விழாவை வெகுசிறப்பாக கொண்டாடினீர்களே. நாங்கள் எல்லாம் சந்தோஷமாக நிகழ்ச்சிகளைப் பார்த்து ரசித்தோமே. இனி இவ்வளவு சிறப்பாக நடைபெறும் என்று நான் நினைக்கவில்லை. உங்கள் ஞாபகங்கள் என்றும் அழியமாட்டாது. உங்களின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றேன்.
பெறாமகள்
பா. உஷாநந்தினி 23.10.2004
(86 தோழர் நவம். 天飞

அன்புச் சித்தப்பா.
அன்பே ஆருயிரே சித்தப்பா நீங்கள் எங்கே எங்களை மறந்து போனிர்கள். நான் எனது தாய் தந்தையரை விட உங்களையும் அன்ரியையும் தானே மிகவும் நேசித்தேன். நான் எனது தாயின் மடியை விட அன்ரியின் மடியில் தானே வளர்ந்தேன். என் வீட்டைவிட உங்கள் வீட்டையும் உங்கள் பிள்ளைகளையும் தான் மிக நேசித்தேன். நான் வளர்ந்த காலத்தில் என்றும் தீபாவளி வருடப்பிறப்பு என்றால் உங்கள் உடைகள் தான் நான் போடுவேன். எங்கள் குடும்பத்துடன் நீங்கள் வைத்திருந்த பற்று தான் மறக்க முடியாது. எங்களுக்கு ஒரு சிறந்த ஆசானாக எங்களை வழி நடத்தினிர்கள். இனிமேல் எங்களை வழி நடத்துவது யார்? நீங்கள் இடம்பெயர்ந்து கொழும்பில் இருந்த காலத்தில் உங்களை நினைத்து ஏங்கினோம். திரும்ப நீங்கள் ஊர் வந்ததும் சந்தோசப்பட்டோம். எனது தந்தை இறந்து விட்டார். ஆனால் நான் மனம் தளரவில்லை. எங்களுக்கு சித்தப்பா இருக்கிறார் என்று பெருமையும் சந்தோசமும் கொண்டோம். எங்கள் வீட்டில் எது நடந்தாலும் சித்தப்பாவும் அன்ரியும் தான் முன் நின்று நடாத்துவார்கள். ஆனால் இனிமேல் எங்களை யார் காப்பாற்றுவார்கள் சித்தப்பா நீங்கள் இறந்தது எங்களுக்கு பேரிழப்பு. நீங்கள் இறந்தாலும் என்றும் எங்கள் மனதில் அணையாத தீபமாக ஒளிர்விட்டுக் கொண்டுதான் இருப்பீர்கள். எனது மகள் கொழும்பு அப்பப்பா எங்கே என்று கேட்கிறாள். நான் எங்கே உங்களை போய் தேடுவேன். அவளுக்கு என்ன கூறுவேன். மறுபடியும் என் வயிற்றில் எனக்கு மகனாகப் பிறக்கவேண்டுகிறேன். உனது பொதுவுடைமைக் கொள்கையும் பண்பும் பாசமும் என்றும் மறக்கமுடியாது தவிக்கிறோம். என்றும் உங்களை நினைத்து ஏங்கும் உங்கள் வளர்ப்பு மகள்.
ந.செல்வி
* தோழர் நவம். 87)

Page 46
பிரியமுள்ள மாமாவுக்கு.
என்றும் ப்ரியமுள்ள மாமா உங்களின் திடீர் மறைவுச் செய்தி கேட்டு நாங்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தோம். போனமாதம் தான் நல்லூர் திருவிழாவுக்கு வந்து எவ்வளவு சந்தோஷமாக பழகினோம். திருவிழா முடிந்து கொஞ்ச நாட்களுக்குள் நீங்கள் மறைந்து விட்டீர்களே. எமக்கெல்லாம் ஓர் வழிகாட்டியாக இருந்தீர்களே. அடிக்கடி எங்களுக்கு நல்ல அறிவுரைகள் எல்லாம் கூறுவீர்களே. படிப்பைப் பற்றித்தான் கூடுதலாக கதைப்பீர்களே. நல்லாகப் படிக்கவேண்டும் என்று கூறுவீர்களே. போனமாதம் கொழும்பு வந்து எவ்வளவு சந்தோஷமாக பழகினிர்கள். யாழில் இருந்து முந்திரிகைப்பழம் கொண்டு வந்து தந்தீர்களே. நாங்கள் மிகவும் விருப்புடன் சாப்பிட்டோமே. மாமா உங்களைப் போல் பண்பானவரை நாங்கள் இழந்து தவிக்கின்றோம். உங்கள் நினைவுகள் எம்மைவிட்டு பிரியமாட்டாது. உங்களின் நல் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம்.
நன்றி
இப்படிக்கு, மருமகள் சு. விஷ்ணுப்ரியா மருமகன் சு. கபில்ராஜ் கொழும்பு -14 21-10-2004
62 Typii bold.......... ★

இடியோசை என உன் மரணச்செய்தி
மாரிமுத்து கனகசபை
எங்களில் ஒருவனே எங்கள் குடும்ப உறவே பாசம் நிறைந்தவனே பண்பு நிறைந்தவனே அயலவர் போற்ற வாழ்ந்தவனே! துல்லிய பார்வையும் கள்ளமில்லா சிரிப்பும் அடுத்தவரை நோகாத செயலும் கொண்டவனே சிறுவர் முதல் முதியோர் வரை பெரியவர் என்றும் நவம் நவத்தார் என்றும் அன்புடனே அழைப்பவரே உன் கொள்கையில் மாற்றம் கொள்ளாமல் உன் சனசமூகத்திற்கும் உழைக்கும் மக்களின் உயர்வுக்காகவும் உழைத்தவனே! வெள்ளி இரவினில் வெள்ளிப் பனிமலையில் வாழும் கயிலை நாதனுக்கு உன்சேவை தேவை என உன் உயிரை எடுத்த வேளை ஊர் ஒலமிட உறவுகள் துடித்திட நண்பர்கள் கதறிட எம் காதினிலோ ஐயோ இடியோசை என் உன் மரணச் செய்தி
உன் ஆத்மசாந்திக்காக சிவன் களவல் அடியை பிரார்த்திக்கும்
மைத்துனன் மாரிமுத்து கனகசபை (சின்னத்தம்பி) 154/21 ஆத்திசூடி வீதி யாழ்ப்பாணம்
X தோழர் நவம். 89)

Page 47
அன்றிலிருந்து இன்றுவரை. O
நான் பாடசாலையில் கல்விகற்கும் மாணவனாக இருந்த காலத்தில் அதாவது 15வயதில் எமது கலைமகள் சனசமூக நிலையத்தின் அங்கத்தவர்களாக இருந்த திரு.க.சிவஞானமும், காலஞ்சென்ற திரு.சி.தர்மலிங்கமும் 1959ம் ஆண்டு நிலையத்தின் பொதுக்கூட்டத்திற்கு வரும்படி அழைத்தனர். அதற்கிணங்க நானும் வாசிகசாலைக் கூட்டத்தில் கலந்து கொண்டேன். அன்றைய பொதுச்சபைக் கூட்டத்தில் எங்களையும் 1959 ஆண்டு நிர்வாகிகளில் ஒருவராக உபசெயலாளராக ஏகமனதாக தெரிவு செய்தார்கள்.
இதனால் நான் ஆண்டு தோறும் மன்றத்தில் நிர்வாகசபை கூட்டத்தில் ஒவ்வோர் ஆண்டும் நிர்வாகசபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டேன். −
முக்கியமாக 61ம் ஆண்டில் இருந்து 68 ஆண்டுவரை நிலையத்தின் செயலாளராக ஆண்டு தோறும் தெரிவு செய்யப்பட்டேன். இக்காலத்தில் நான் எனது பொறுப்பை திறமையாக நிர்வகித்து வந்த நேரத்தில் நவம் 65ம் ஆண்டிலிருந்து அங்கத்தவராகவும் விளையாட்டுத் தலைவராகவும் இருந்த நேரத்தில் அவரையும் இணைத்து செயற்பட்டேன். இக்காலத்தில் நவம் கம்யூனிஸ் கட்சியில் சேர்ந்து மாவோவின் சிந்தனைகள் பற்றிய புத்தகங்களைப் படித்துக் கொண்டிருந்ததை கண்டேன். -
இக்காலத்தில் மன்றத்தில் நடைபெற்ற வருடாந்த ஆண்டு விளையாட்டுப் போட்டியிலும் பங்கு கொண்டு சிறப்பித்தார். அந்த நேரத்தில் அவர் மஞ்சள் இல்லத்தில் அங்கத்தவராக இருந்தார். அத்துடன் தன் தளராத முயற்சியினால் தனது இல் லத்தை சிறப்புடையதாக்கினார். இதே நேரத்தில் நவம் கட்சி அலுவல்களையும் மறக்காமல் தனது புத்தி சாதுரியத்தால் நடாத்தி வந்தார். என்னையும் கட்சி அலுவராக அழைத்து சென்று செயற்பட்டார்.
இப்படி இருந்த காலத்தில் மாவட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் சாதிப் பாகுபாட்டை எதிர்த்தும், கரவெட்டியில் சிறுபான்மைத் தமிழருக்கு சிரட்டையில் தேநீர் கொடுப்பதை எதிர்த்தும் நவம் அவர்கள் எங்களைவிட முன்னுக்கு சென்று போராட்டத்தில் கவனம் செலுத்தினார். இப்படி இருந்து வரும் வேளையில் 95ம் ஆண்டு இடம்பெயர்வு ஏற்பட்டது. இதனால் நவமும் குடும்பத்தவர்களும் வன்னியிலும், வவுனியாவிலும் இறுதியாக
(90 62ngpi b6ID.......... 5

கொழும்பிலும் இருந்து வந்த போதும் தனது சொந்த தொழிலைப் பார்த்துக் கொண்டு கட்சி வேலைகளையும் செய்து வந்தார்.
இக்காலத்தில் 2002ம் ஆண்டில் இடம்பெயர்ந்து யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தார். ஆண் பிள்ளைகள் இருவரையும் கொழும்பில் படிப்பிற்காக நிற்க வைத்து விட்டு தானும் மணைவியுடன் மகளையும் கூட்டி வந்தார் சொந்த இடம்.
இவர் வந்த காலத்தில் மன்ற நிகழ்வுகள் நடைபெற்று வந்ததுடன் பொன்விழாவுக்கான ஆரம்பவைபவங்களையும் செய்யாமல் மன்றம் நடாத்தப்பட்டு வந்த வேளையில் திரு.சின்னத்துரை நவரட்ணம் அவர்களும் 2003ம் ஆண்டிற்கான நிர்வாகத்தில் தலைவராக தெரிவு செய்யப்பட்டார். இதனால் முன்னைய நிர்வாகக் கழகம் பொன்விழா நிகழ்ச்சிகள் பிற்போடப்பட்டதை அறிந்தும் கவலைப்பட்டதுடன் இதற்கான முன் முயற்சிகளை எடுத்தார். .
இதன் பின் தன்னுடைய நிர்வாகத்தில் உள்ளவர்களாக திருமதி.சந்திரா நவரட்ணம், திரு.வி.மகாலிங்கம், திரு.ந.நவநீதன், திரு.க.பரமானந்தம் அங்கத்தவர்களிடமும் இடம்பெயர்ந்து 5ம் ஒழுங்கையில் வந்திருந்த சிறீ என்ற அறுவரது முயற்சியிலும் பொன்விழாவிற்காக பொது அங்கத்தவர்களிடமும் வீடு வீடாகச் சென்று தானும் சேர்ந்து கடை கடையாகவும் செல்வன்.செ.சாயிதரனுடன் நிதிகளை வசூலித்து பொன்விழாவிற்கான கட்டிடங்களை கட்டி முடித்து 2003ம் ஆண்டு மார்கழி மாதம் 28ம் திகதி பொன்விழாவையும் சிறந்த பேச் சாளர்களையும் வரவழைத்து கலை நிகழ்ச்சியாக இசைக்கலாமன்றத்தவர்களின் இன்னிசை கானத்துடன் நிகழ்ச்சியை நடாத்தி முடித்து வைத்த பெருமையும் நவத்தை சேரும்.
இதன் பின்பும் சின்னத்துரை நவரட்ணம் தலைமையிலான குழுவே 2004 நிர்வாகி கழக கடமையாற்றி வந்த நேரத்தில் சுகவீனமுற்று காலதேவனின் கைக்கு 08-10-2004 ஆண்டு இரவு 9.30 மணிக்கு ஆட்டோவில் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் அவரின் உயிர் இவ்வுலகத்தை விட்டுப் பிரிந்தது.
ஆத்மா சாந்திக்காகப்பிரார்த்திக்கும்
திரு.திருமதி க.பரமானந்தம். குடும்பத்தினர். 156/20 ஆத்திசூடி வீதி கந்தர்மடம் வடமேற்கு
யாழ்ப்பாணம்.
* தோழர் நவமி. 91)

Page 48
நவரத்தினமே எங்கள் உறவே!
பண்பாளனே பார் புகழ வாழ்ந்தவனே! சொத்து என்றால் அது உன் ஊரின் உறவுகள் என வாழ்ந்தவனே
அத்தான் என அழைத்து அன்பாக பழகி உன் துயரத்தை விட பிறர் துயரம் பெரிதென நினைந்து அவர் துயர் போக்க உழைத்தவனே!
திட்டமிட்ட செயல் திறன் கொண்டவனே! துணிந்து வரும் பகை முகங்களை உன் அறிவாற்றல் கொண்ட தூரநோக்கு பார்வையால் வந்த பகை வென்றவனே!
காலையிலே உந்தன் சக தொழிலாளருடன் வேலைத்தளம் நோக்கி செல்லுமுன் - உன் தொழில் தொடர்பாக பல கதை புனைந்தவனே
மாலையில் என் வீட்டின் வாசலில் நான் நின்ற வேளை உன் சகதொழிலாளி உன்னை ஏற்றி வரக்கண்டேன் இரவு வேளை உன் மரணச் செய்தி இடியோசை
என கேட்டு அதிர்ந்தோம் ஐயா! - இப்பூவுலகில் உன் முகத்தையும் உன் குரலையும் இனி எப்போ கேட்போம், நவரத்தினமே எங்கள் உறவே!
உன் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திக்கும்
மைத்துனன் வல்லி. பரராஜசிங்கம் குடும்பம் 54/8 ஆத்திசூடி வீதி யாழ்ப்பாணம்
(92 (5:251ff B6hild..........下灭

தோழர்
[562/LD
கவிதாஞ்சலி
எனது விழிகரக்கும் நீரினாலே கலாபூஷணம் நவாலியூர் நா.செல்லத்துாை உறுதியாய் வழிநடப்போம்! மணி நந்தன ஒரு சாட்சி வேண்டுமென்றாளர்
-செ. ரகு
பெருமைக்குள் நீ
பா. ஜனதா நவம் மாமா எனும் தோழருக்கு பூமகன் -
ஒ நவத்தார்!
ԱլՕ5601
கொள்கைகளை அல்ல .
நாயகம்- v. நினைவில் நிலைத்த ஓர் மனிதர்! தனுறாச் வள்ளலலை நினைவு கூருவோம். கே.எஸ். இரத்தினம் விடிய முன் பேச்சு முடிந்தது. க. ஜெயசீலன் (சீலன்/ஜெகண்) பெரு விருட்சம் சாய்ந்ததுவோ..? கந்தையா-திருநாவுக்கரசு பக்கத் துணையிழந்து பதறுகிறோம். நாகமணி லீலாவதி அவர் இலட்சியப்பாதை அழியாதது! திருமதி பரமேஸ்வரி சிவபாலன் ஆணிற் பெருந்தக்கவன் தே. மோகனராஜா
X தோழர் p56ild.......... 93)

Page 49
அற்புதமான போராளி.
நவம் விடிகாலைச் சேவல் மற்றவரைத்
தயிலெழுப்புவதில். நவம் அடிவற்றாத ஆழக்கிணறு மற்றவரின் தாகம்
தனிப்பதில். அநீதிக்கு எதிராகத் தினசரி போராடிய
அற்புதமான போராளி.
(94 தோழர் நவம். A.
 

எனது விழிகரக்கும் நீரினாலே நான் செலுத்தும் அத்சலிகள்
கலாபூஷணம் நவாலியூர் நா.செல்லத்துரை
சிந்தையில் நல்லவனே சிந்தனை சிறந்தவனே கொள்கையில் இடதுசாரிக் கொள்கையில் ஊறியோனே வெள்ளையின் வேஷம் போட்டு வெடிப்பேச்சுப் பேசுவோர்க்கு உண்மையின் கொள்கைகளை உத்தம சிறப்புக்களை
தெளிவாக எடுத்துரைத்து தீனாக ஊட்டுவாயே துணிவாக நல்லதுணித் தரமாக ஆய்வு செய்து பதிப்பாயே எம்மனதில் பதித்தபின் எம்மைப்பார்த்து சிரிப்பாயே புண்சிரிப்பு அதிலுன்னைப் புரிந்து நிற்போம்
கண்ணுக்குள் கண்மணிபோல் விண்ணுக்குள் கதிரொளிபோல் உண்ணுக்குள் நீதிநேர்மை நற்பண்பு நிறையஉண்டு நெழ்சுக்குள் நிவளர்க்கும் உத்தம குணங்களாலே மண்ணுக்குள் நிபுமொரு மனிதனாய் ஆனாயுண்மை
கண்ணெணத் தானேநிபுண் கடமையை ஆற்றிநிற்பாய் பொன்னெனத் தானேயதைப் பக்குவப் படுத்திவைப்பாப் எடுத்தஓர் காரியத்தை எத்தடை வந்திட்டாலும் முடித்துச்சீர் ஆக்கிவைக்கும் மனப்பாங்கு உடையவன்நீ
ஊருக்கு ஒன்றுசொல்லி உள்ளத்தில் வேறுஎண்ணும் பேருக்கு நாங்களுன்னை ஒப்பிடல் செய்யமாட்டோம் காருக்குள் இருந்துஇங்கு பெய்திடும் நல்மழைபோல்
தேனுக்குள் மனிதநோய்க்கு உள்ளநல் மருந்துபோல
எமக்காக வாய்த்தாயென்று எத்தனை பெருமைகண்ைடோம் வருங்காலம் நம்கிராமம் வளர்ந்திட வழிகள்சொன்னாப்
கோமர் நவமி. 95)

Page 50
இப்படித் தொண்டுநீயும் இயற்றிடல் கூடாதென்றா துண்மதி ஆனஅந்த விதியுண்ணைத் தறித்திட்டது
எங்களின் உள்ளத்தையும் சுக்குநூ றாக்கியெங்கள் கண்களில் நீர்சுரந்து கதறவும் வைத்திட்டது எங்களைக் கதறியழ வைத்ததுண் பிரிவுஎன்றால் உந்தனை நம்பியவுண் குடும்பத்தை என்னசொல்வோம்
கதறியே அழுகிறஉன் காதலின் மனையாளைப்பார் புலம்பியே குளறுமுந்தன் பிள்ளைகள் பரிதாபம்பார் உண்ரத்த பாசங்கலுநம் உண்ணுடை ஊருமேங்கி
விண்முட்டக் குரலெழுப்பி வீறிட்டு அழுவதைப்பார்
விதியேயுண் சதியாசொல்லு வாழ்ந்திட வேண்டியோனை மதியே தண் அணிகலமாய் அணிந்துமே வாழ்ந்தவனை அனைவர்க்கும் ஆசையான அண்பனாய் இருந்தவனை வினைவைத்து விதியேஒனோ வீணாகக் கொன்றுவிட்டாப்
ஐம்பத்து ஒன்பதான நடுத்தர வயதில்வாழ்ந்த நம்முத்துச் செல்வம் நவ ரத்தினம் ஆணஎங்கள் செம்மலை நீயெடுத்தாய் சோதனை நமக்குத்தந்தாய் விம்மலை அடக்கிடாது வெம்பி நாம் புலம்புகிறோம்
பழுத்திங்கு வீழுமிலை போன்றுபல் உயிரிருக்க புழுக்குத்தி அரித்தகாயை ஒத்திட்ட பலரிருக்க அவைகளைத் தவிர்த்துநீயும் அமுதான நவத்தினுயிர் தரைதனை விட்டுநீங்க ஏனிந்தக் கொடுமைசெய்தாய்
(96 தோழர் நவம். 女

உறுதியாய் வழிநடப்போம்!
- மணி நந்தண்
இரவின் அமைதியை கலைத்தது தோலைபேசி மணி . செய்தியைக் கேட்டதும் இதயம் கனத்தது கணிகளை மறைத்தது கண்ணிர் நினைவலைகளை பின்னோக்கி நகர்த்துகின்றேன். நித்தமும் புன்முறவல் பூத்த முகமும் கம்பீர நடையும் கலகலத்த பேச்சுமாய் நான் அறிந்த நவம் மாமா நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார் கட்சியின் தொணர்டனாய் புரட்சியின் அரிவாளாய் பாட்டாளியின் சம்மட்டியாய் சிவப்பில் உறுதியாய் போராட்டத்தின் முழக்கமாய் தர்க்கத்தின் வீரனாய் கொள்கையில் விடாப்பிடியாய் கொண்ட இலட்சியத்தில் நேர்மையாய் மக்களின் நணர்பனாய் மானிடத்தின் வழி காட்டியாய் மாற்றத்தின் நம்பிக்கையாய் மாக்சிச லெனினிச வழி நடந்த எமக்கு எல்லாம் வழிகாட்டி மூத்த தோழராய் முன் சென்றீர்கள் நீங்கள் பதித்த சிகப்புத் தடங்களிலே நாமும் உறுதியாய் வழி நடப்போம்
女 தோழர் நவம். 97)

Page 51
ஒரு சாட்சி வேண்டுமென்றான்
எண்பத்தியேழாம் ஆண்டுதனில் இந்தியப்படை வந்த போது அமைதிப்படை இதுவ்ல்ல ஆக்கிரமிப்புப்படை என இனங்காட்டி புதிய ஜனநாயகக் கட்சியின் வழி நின்று முரசு முழங்கிய தோழரும் நீர் உம் அரசியல் பக்கத்தை சற்று விட்டுவிட்டு வேறொரு பக்கத்தைப் புரட்டுகிறேன்.
எத்தனை கோணத்தில் பார்த்தாலும் சமூகப்பற்றும் அக்கறையும் விரிந்து கிடக்கும் உம் முன்னே நான் கூறியதற்கு சாட்சியாக இன்னும் உடையாமல் எஞ்சியுள்ள யாழ் மதில்களும் சுவர்களும் போதுமென்பேன் கூட ஒரு சாட்சி வேண்டுமென்றால் யாழ் முற்றவெளியையும் சேர்த்திடுவேன்.
-செ. ரகு
(98 தோழர் நவம். 安
 

பெருமைக்குள் நீ
மண்ணுக்குப் பெருமை நீயே. மனதுக்குப் பெருமை உன் நினைவே. கண்ணுக்குப் பெருமை உன் கனிவே கடமைக்குப் பெருமை உன் கண்ணியமே
சொல்லுக்குப் பெருமை உன் பெயரே சொத்துக்குப் பெருமை உன் சேவையே கல்விக்குப் பெருமை உன் தெளிவே கட்சிக்குப் பெருமை உன் உழைப்பே
ஊருக்குப் பெருமை உன் பொதுநலமே உண்மைக்குப் பெருமை உன் பண்பே உறவுக்குப் பெருமை உன் அன்பே உத்தமனுக்குப் பெருமை உன் உண்மையே
அறிவுக்குப் பெருமை உன் ஆளுமையே அழகிற்குப் பெருமை உன் பணிவே ஆத்ம திருப்திக்குப் பெருமை நின்செயலே அமரத்துவம் என்ற சொல்லுக்குப்
பெருமை உன் மறைவே!
பா. ஜனதா
* தோழர் நவம். 99)

Page 52
நவம் மாமா எனும் தோழருக்கு
மாமாவின் மறைவுச் செய்தி கேட்டு கலங்கி நின்ற வேளைதனில் என் கரங்கள் மெல்லுயர்ந்து கண்ணிரைத் துடைத்ததும் ஏன்? விடை காண எண்ணி நானும் உங்கள் கடந்தகால வாழ்க்கை தனை வகை வகையாய் தரம் பிரித்தேன் விடைகள் ஒன்றா இரண்டா.
வரிசை வரிசையாக விடைகள் குவிந்தன உங்கள் அரசியல் பக்கத்தை மெல்ல படிக்கிறேன் மனதில் வேகம் கலந்த அமைதி வீரமான பேச்சும் மிடுக்கும் மாறுபட்ட கருத்துக்களும் பார்வைகளும் தீரமுடன் செயற்படும் திறனும் மதி இழக்கா உறுதியும் வல்லமையும் அது உங்களுக்கு உங்களுக்கே உரியது
எத்தனை மேதினம் கண்டிருப்பீர் எத்தனை இன்னல்கள் பட்டிருப்பீர் புதிய ஜனநாயகக் கட்சியின் வழி நின்று வெற்றிகள் பலவும் பெற்றிருப்பீர் முழங்கிடும் கோஷங்கள் நீர் போட்டு எத்தனை தடைகளை உடைத்திருப்பீர் மேதின ஊர்வல ஏற்பாட்டில் முன்னணித் தோழராய் நீர் இருப்பீர்
பப்பா கடையில் மா வாங்கி செல்வா வீட்டில் பசை காய்ச்சி காய்ச்சிய பசையுடன் பவனி வந்து நோட்டீஸ் ஒட்டிய காலமது உறங்கிடும் மக்களை ஒன்றுசேர்க்க நீர் உறங்காமல் சுவர்களை ஈரமாக்கி நல்ல கருத்துக்கள் பல கொண்ட நோட்டீஸை வரிசை வரிசையாக ஒட்டிடுவீர்
அதிகாலையிலே மக்கள் கண்விழித்து கூட்டம் போட்டு நோட்டீஸ் படிக்கையிலே கூடி நின்று நீர் மகிழ்ந்திடுவீர் கூட கருத்துக்களும் நீர் கூறிடுவீர் பாட்டாளி மக்களை ஒன்று சேர்க்க நீர்பட்ட கஷ்டங்கள் கொஞ்சமல்ல ஆத்திசூடி வீதியிலே உமை அறியாத மக்கள் யாருமுண்டோ?
(100
தோழர் நவம். 女

ஓ நவத்தார்!
மணித்துளி ஒன்று விழுந்தது மண்மேல் மறைந்தாயோ- இல்லையே! மனத்துயர் பொங்கி வந்தது என்மேல்! மரணித்தாயா- இல்லையே! மணித்துளி கண்ணிராயினும் மனத்துயர் பொங்கினாலும் மரணம் இல்லை உனக்கு மனது துடித்தோம் நாங்கள் மரணம் வந்தது எமக்கே! என்னுமாய் போலே ஏங்கினோம் எதுவும் அறியோம் எதுவும் செய்கிலோம் எனினும் . . . எண்ணி நீராற்றிய கருமமும் எடுத்து நிரோச்சிய கனதியும் எடுத்து நீர் நோக்கிய கொள்கையும் எடுத்துச் சொல்லும் ஆற்றலும் எங்கள் சொத்தென விட்டுச் சென்றீர் எனவே உங்கள் மரணமென்பது ஏற்பதற்கில்லை எம்மிடையே நீர் எதிலும் உள்ளிர்
பூமகன் -
A. STPif D56uud..........
10)

Page 53
கொள்கைகளை அல்ல .
நாயகம்
இதயத்துடிப்பை இழந்து விட்ட ஆத்திசூடி வீதி தாங்கி நின்ற தலைவனை இழந்து விட்ட குடும்பம் புரட்சிகர சிந்தனைகளுக்கு தோள் கொடுத்த தோழனை இழந்து விட்ட பாட்டாளி வர்க்கம்.
சமூக சேவகனை இழந்து விட்ட சனசமூக நிலையம். மனித நேயத்தை தேடியவர் இன்று காற்றோடு கலந்து கனவாகிப் போன நிஜம்.
காலன் தன் கால் தவறி உம் நெஞ்சில் பதித்து விட்டானோ? கதறுகின்றோம் கலங்குகின்றோம் கவலைப்பட்டு கண்ணிர் வடிக்கின்றோம். பதறுகின்றோம் புலம்புகின்றோம் மீட்க வழியில்லை திகைக்கின்றோம் இன்று
கார்ல்மாக்ஸின் விழுதாய் அவர் சித்தாந்தத்தில் வழியமைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காய் குரல் கொடுத்து போராட்டங்களில் முன்னின்ற உம் தியாகம் அப்பா சொல்லக் கேட்டபோது
ஏனோ சிறுவயதில் புரியாத பல புதிர்கள் கூட இன்று புரிவது போன்ற உணர்வுகள்
உம் சிரித்த வதனமும் சரிந்த நடையும் குதுாகலப் பேச்சும் காலத்தோடு போய் விடாமல் எம் நெஞ்சங்களில் சங்கமித்து விட்டன இன்று 56 Lb LDT LDT ! உம்மை உறங்க விடுகிறோம் உம் கொள்கைகளை அல்ல. நீர் பதித்த கால் தடங்களில் எம் கால்களை நம்பிக்கையுடன் பதித்து எம் சிவப்பு அஞ்சலியை உமக்கு சமர்ப்பிக்கின்றோம் கனத்த இதயத்துடன்.
(102 தோழர் நவம். | A.

நினைவில் நிலைத்த ஓர் மனிதர்!
அன்பு, எளிமை, பண்பு மூன்றும் வாழும் - ஓரிடம் கண்டோம் நாம் . இவரிடம் பொருள், பெயர், பதவி, பட்டம் வேண்டாது மண்ணோடு வேராக மறைந்திருந்து தம் இலட்சிய விழுதுகளை - நமக்காக சுமந்து வந்து தம் வேரோட்டத்தை நிறுத்தி - இன்று நம் உயிரோட்டத்தில் நிறைந்து விட்டார் - ஓர் மனிதர்!
இவர்களின் பிரிவு கண்டு.
விழுதுகள் தலைசாய்த்து - வேரிற்கு நன்றியை சொல்கின்றன மண்ணுள்ளே மண்டியிட்ட விதைகள் இவர் கொள்கை சொல்ல விருட்சமாகி எழுகின்றன தம் சோகம் சொல்வதற்கா மழை நின்ற பின்பும் இலைகள் இன்னும் பணித்து நிற்கின்றன?
இவர்களின் பெருமை கண்டு...!
அறுபது வரை மண்வெளிக்கு நவரத்தினம் - நீ அறுபதிலே எம்வெளிக்கு நட்சத்திரம் - நீ என - விண்வெளி இராஜ்ஜியங்கள் பிரகடனம் செய்தனவா? ஆயின் - இனிவிழும் ஒவ்வொரு வித்தும் தம் விண்மீனை காண்பதற்கு7 விருட்சமாகி எழும் இவர் இலட்சியப் பயணம் இன்னும் தொடரும்.
நன்றியுடன்.
தனுறாச்
18-10-2004
Á Gaupi Þ6I6. 103)

Page 54
பொதுநலப் பணிக்கென்று தனையிந்த வள்ளலலை நினைவு கூருவோம்.
கே.எஸ். இரத்தினம்
பொதுச் சேவைக் கென்றிங்கே பிறந்த செம்மல் எது சேவை என்றறிந்து செய்த வள்ளல் புது யுகம் படைத்திடவே புகுந்த அன்பன்
சின்னத்துரை நவரத்தினத்தை நினைவு கூர்வோம்.
நேரான அரசியலில் நின்ற மைந்தன் சீரான கொள்கையோடு கடந்த அன்பன் ஏராட ஊராடும் என்ற செம்மல்
சின்னத்துன்ர நவரத்தினத்தை நினைவு கூர்வோம்.
அடக்கிடும் முறையினை உடைத்திட்ட தோழன் தடக்கி நாம் வீழாமல் தாங்கிய செம்மல் தொடத் தொட துலங்கிடும் திருக்கர வள்ளல்
சின்னத்துரை நவரத்தினத்தை நினைவு கூர்வோம்.
கலையோடு இலக்கிமும் காத்த மைந்தன் நிலையான இலக்கியத்தை நெறியாண்ட அன்பன் விலைபோகா பண்போடு வாழ்ந்திட்ட வீரன் சின்னத்துரை நவரத்தினத்தை நினைவு கூர்வோம்
கட்டிடக் கலையினில் நிலை நின்ற வித்துவான் மட்பிட முடியாத மகோன்னத சிற்பி விட்டுக் கொடுக்கின்ற வியூகத்தின் தலைவன்
சின்னத்துரை நவரத்தினத்தை நினைவு கூர்வோம்.
ஆத்திசூடிவீதிக் கலைமகளின் கண்கள் நேர்த்தியான சனசமூக நிலையமதின் தலைவன் பாத்திருகப் பணி செய்து பூந்திருந்த முகத்தான்
சின்னத்துரை நவரத்தினத்தை நினைவு கூர்வோம்.
எனக்கு நல்லரசியலை ஊட்டிய ஆசான் தனக்குவமை இல்லாத நிலைதந்த கலைஞன் மனக்கவலை போக்கிடும் இலக்கியத்தின் மேதை சின்னத்துரை நவரத்தினத்தை நினைவு கூர்வோம்
அமரர் அவர்களை நினைவுகூரும் நவரச நாடகலாயம் மூளாயூர்
(104
(27127 B6ILD.........

பக்கத் துணையிழந்து பதறுகிறோம்.
நாகமணி லீலாவதி கொள்கையே பெரிதென்று குவலயத்தி லெமக்கும் பிள்ளை போல் பணி செய்த பெரியவனே - துள்ளி ஓடி வந்தெங்களின் இடர் தீர்த்த வுன்னை நாடு மறக்காதென நம்பு!
சத்தியாயிருந்த உன் மனைவி சந்திராவும் பக்கத் துணையிழந்து பதறுகிறாள் - மக்களி னைப் பிரிந்து எங்கும் செல்லாத பெருந்தகை யே மண்ணில் இருந்தெங்கு சென்றாய் இயம்பு
அன்பான பிள்ளைகளை ஆசையாய் வளர்ந்தவரை இன்னலுறச் செய்ததும் இனிதோ? துன்பம் தெரியாதிருந்தோரைத் துடிதுடிக்க வைத்துப் பிரிந்து நீ சென்றதேன் புகல்!
உத்தமராய் பிள்ளைகள் உருவாக வேண்டுமென இத்தரையில் நீ தினமும் எண்ணினாய் - சித்தத்தில் நிறைவேறா ஆசைகளை நிலையாக்கி விட்டுப் பறந்தெங்கு சென்றாய் பகிர்
நவமண்ணா என்றுன்னை நாடி வருவோரின் கவலைகள் தீர்த்தவரைக் கவர்வாய் - தவங்கள் பலவற்றைச் செய்தாலும் பாரினிலே உன் போல் நலமுளோன் காணோம் நாம்
மண்ணிலே பிறந்தோர்கள் மறைவாது திடமென்று அண்ணலே நாங்களும் அறிவோம் - விண்ணுக்குப் போனாலும் உன்னையொரு பொழுதிலும் மறவோம் வானிலும் உன்புகழ் வாழும்
சாந்தி
நாகமணி லீலாவதி பிள்ளைகள். டென்மார்க்
X தோழர் நவமி. 105)

Page 55
விடிய முன் பேச்சு முடிந்தது.
க. ஜெயசீலன் (சீலன்/ஜெகன்)
ஏனோ தெரியவில்லை எனது பேனா எழுத முன் கண்ணிருடன் உறவாடி எழுத முனைகின்றது. எங்கள் ஊரில் பெரியாரில் ஒருவர் திரு. நவரட்ணம் அண்ணர் அவர்கள் அன்போடு மக்களை அணுகியும், பழகியும் உறவாடியும் தனது குடும்பத்துடன் தனது சேவையை மட்டற்ற சேவையாக்கி அவரின் புகழ் பரந்து ஆள உறவோடு கலந்து நின்றது. தற்போது அவரின் இழப்பானது உண்மையில் அவரின் குடும்பத்துக்கும் பெரும் இழப்பு அதைவிட எமது ஊருக்கு இழப்புத் தான் எனது பள்ளி வாழ்க்கையில் அவரின் தொடர்பது நல்லதொரு ஆலோசனைக் கூடமாக வே திகழ்ந்து நல்லொரு வழிகாட்டி வாழக்கையின் விடிவெள்ளி அமைதியான பேச்சு சாந்தமான பார்வை ஒவ்வொரு உள்ளத்தையும் அவர் தொட்டுவிடும் ஆழமான உணர்வுகள் விருந்தினர் உபசரிப்பு போன்ற நல்மனிதரை இழந்தமையால் எனது உள்ளம் இப் பேனா வுடன் உறவாடி எழுத முனைந்தது உண்மையில் நாம் நம்பவில்லை தனது வாழ்க்கைப் பயணத்தை அன்று இரவுடன் இடை நிறுத்தி இறைவனடி சேர்ந்தமை மிகவும் பரிதாபகர மானதும் இருப்பினும் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்.
தலைமை இளைப்பாளர் REER DO கிளிநொச்சி
54/12 ஆத்திசூடி வீதி கந்தர்மடம் யாழ்ப்பாணம்
(106 தோழர் நவம். 安

பெரியவர் எனர்றொரு பெரு விருட்சம் சாய்ந்ததுவோ..?
கந்தையா-திருநாவுக்கரசு டென்மார்க்
எங்களில் ஒருவனாக எங்களுரில் பிறந்தவனே நற்பல காரியங்கள் வலிந்து சென்று செய்தவரே எங்கள் சமூகம் தளைத்தோங்க வேண்டும் என்ற பேரவா கொண்டவரே. ஊக்கமுடன் உழைத்த உத்தமர். பலர்.அவர்கள் விட்டுச்சென்ற பணிதனை நிறைவு செய்ய யார் வருவார் என நாம் அங்கலாய்த்த போது அவர்கள் வழியில் நாம் உழைப்போம் என எமக்கு உறுதி மொழி தந்து எம்மை அரவணைத்து செயலாற்றல் தந்தவரே பகுத்தறிவுத் தந்தை பெரியாரின் வழிதனில் நின்றவரே. பொதுவுடைமை வாதியாகி - மாக்சிச கொள்கையை பின்பற்றி தொழிலாளர் ஒடுக்குமுறை சமூக ஒடுக்கு முறை போன்ற ஒடுக்கு முறைகளுக்கு எதிராக கிளர்ந்து எழுந்தவரே. நாம் எம் மண்ணில் இல்லாத போதும் எம் மக்களின் தேவைகளை அறிந்து அதை செயல் பெற வைத்தவரே - உங்கள் உழைப்பின் உயர்வை எமது ஐம்பதாவது பொன்விழா ஆண்டு நூலகம் உயர்வாக காட்டுதையா. . . . . . . மாற்றமில்லா கொள்கையின் மகத்தான சேகவரே பெரியவர் என்றொரு பெரு விருட்சம் தளர்ந்ததுவோ? ஐயா உங்களுடன் உறுதுணையாக உழைத்த இன்னும் சிலர் எம் நிலையத்தில் இருக்கிறார்கள் அவர் உம் பணியை தொடர அதை அவர்கள் நிறைவுசெய்ய என் இனிய இளைய தலை முறை இளைஞர்களுக்கு நிமிர்ந்த புருவமும்
女 தோழர் நவம். 107)

Page 56
நேரிய பார்வையும் சிறந்த தயாள குணமும் சேவையாளன் நீங்கள் என ஊர் போற்ற வருங்கால மழலைகளின் கல்வி வளமும். கலைவளமும் சிறக்க - நீங்கள் தீய எண்ணங்களை மறந்து ஒற்றுமையே பலம் ஒன்றுபட்ட சமூக உணர்வே எங்கள் கொள்கை மக்களின் மகத்தான தேவை யே எங்கள் சேவை என நினைந்து செயலாற்று வதான் மறைந்த எம் பெரியவருக்கு நாம் செய்யும் அஞ்சலியாகும்.
அன்னாரின் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திக்கும்
நவம் என்ற வார்த்தை அழிந்தது அவர் இலட்சியப்பாதை அழியாதது!
திருமதி பரமேஸ்வரி சிவபாலன் குடும்பத்தினர்
அதிகாலை ஆறு மணிக்கு ஒலித்தது
தொலைபேசி 0லோ! யார் பேசுகிறது அந்தக்குரல் வேறு யாருமில்லை எனது மருமகன்
நந்தமோகன் என்ன தம்பி இந்த நேரத்தில் ஒரு பாட் நியூஸ் அத்தை என்னடா யாருக்கு என்ன! நவரட்ணம் மாமா கை நழுவிட்டார்! இரவு ஒன்பது மணிக்கு நடந்தது!
சந்திரா அன்ரியும் அவசர சிகிச்சையில் செவிகள் அதிர்ந்தது! கண்கள் நீர் சொரிந்தன!
ஐயோ அந்தப் பாவிக்கு என்னடா நடந்தது இதயம் இயங்க மறுத்தது மெளன ஆட்கொல்லி
நோய் அவர் உயிரைப் பிரித்தது எத்தனை மனைகளை முழுமை பெறச் செய்த
அந்த நவரட்ணம் தனது வாழ்க்கை முழுமை பெற முன் முந்திவிட்டாரே! முந்தி விட்டாரே!
(108 தோழர் நவம். 女

எத்தனை மனைகள் அமைத்தீர்கள், அமைத்துக் கொண்டிருந்தீர்கள் அமைக்க இருந்தீர்கள் நவரட்ணத்திற்கோர் மனை
அமைக்கத் தொடங்கினிர்களே! அதன் முன் இயமன் முந்தி விட்டானா?
எத்தனை போராட்டம் எத்தனை போராட்டம் தீண்டாமை ஒழிப்பு போராட்டம்
சாதிய ஒழிப்பு போராட்டம் தேசிய இன ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டம்
அத்தனை போராட்டங்களிலும் ஓங்கிய கையுடன் குரல் கொடுத்து இறுதி மூச்சுவரை உங்கள்
இலட்சியப் பாதைக்காக ஓடோடி கொழும்பு நகர் சென்றீர்களே! வைத்திய நாளை தவறவிட்டீர்களே!
சென்ற வருடம் மேதினக் கூட்டத்தில் சிவப்பு உடை அணிந்து தலைமை தாங்கிய அந்தக்காட்சி இனி ஒரு முறை காண முடியுமா? கடைசியாகக் கண்ட காட்சி புத்தூரில் சின்னண்ணா
விருந்தளித்த போது விருந்துண்டு பயணம் சொல்லி பஸ்சிற்கு நின்றபோது நான் ஓடி வந்து நவம் அண்ணா
எங்கள் வீட்டில் ஒரு சிறு வேலை எப்போது வாறிர்கள் என்றவுடன் உங்கள் சுற்றுலாவை முடித்துவாருங்கள்
இருபதாம் தேதிக்குப் பின்பு ஆனைக்கோட்டை வருகிறேன் அப்போது உங்கள் வேலையை முடித்து விடுகிறேன்
என்ற அந்த வார்த்தை தான் இறுதி வார்த்தை என்காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறதே!
கலைமகள் சனசமூகம் கேட்கிறது எங்கே எம் தலைவர் புதிய - ஜனநாயகக் கட்சி கேட்கிறது எங்கே எம் பொதுவுடைமைப் போராளி
சகதொழிலாளர் கேட்கிறார்கள் எங்கே எம் தொழில் தலைவன் கட்டிட உரிமையாளர் கேட்கிறார்கள் எங்கே எம் கட்டிடம் அமைத்தவர்
இத்தனைக்கும் எப்படி என்ன வார்த்தை பேசுவது என்று தவிக்கிறது நவம் அண்ணா குடும்பத்தார்
நவம் என்ற வார்த்தை அழிந்ததுவே நாம் ஓர் அஞ்சலி செலுத்துகிறோம்!
ஆனைக்கோட்டை
X தோழர் நவமி. 109)

Page 57
ஆணிற் பெருந்தக்கவன்
தே. மோகனராஜா
தோற்றமும் மறைவும் பெயரா, எனினும் ஒரு சிலர் மறைவு ஆற்றவும் மறக்கவும் அரிதிலும் அரிதாகும். ஈட்டலும் வகுத்தலும் அளித்தலும் இனிது செய்த செயல் வீரன் அமரர் நவரத்தினம் ஐயாவின் அறம் சார்ந்த செயற்பாட்டுக்கெல்லாம் உறுதுணையாக இறுதிவரை நின்றவர் இவர்.
பல பொதுவிடயங்களை ஆழமாக கற்று புறந் தந்து உரிய நிறைவாழ்வுக்கு வழிகாட்டி, இவர் வளமான தமிழ் வாழ்வு கண்டு இறும்பூதெய்தி இறையடி சேர்ந்தாய் ஐயா. பழகியது சில மாதங்கள் எனினும் தங்களிடம் நான் அறிந்தவை பல. உங்கள் ஆழ்ந்த அரசியல் கருத்துக்கள், இன அடக்குமுறை, சாதி, சமயம் என்பவற்றை மிகவும் துல்லியமாக புரியவைத்தாய் ஐயா.
படகு தண்ணிரில் இருக்கலாம். ஆனால் தண்ணிர் படகுக்குள் நுழையக்கூடாது, மனிதன் உலகத்திலே வாழலாம். ஆனால் உலக ஆசை மனிதனிடத்தே இருக்கக்கூடாது என இப்படியான பல
யதார்த்த பூர்வமான கருத்துக்களை எடுத்துரைத்தீர். இதனை எப்படி மறப்பது இனி யாரிடம் கேட்பது ஐயா!
“அன்பு என்ற மூன்றெழுத்தால் அசர வைத்தாய் பண்பு என்ற மூன்றெழுத்தால் பணிய வைத்தாய் பரிவு என்ற மூன்றெழுத்தால் அரவணைத்தாய் -ஏன் பிரிவு என்ற மூன்றெழுத்தால் மட்டும் எம்மை கதற வைக்கிறீர்?”
யாழ். பல்கலைக்கழகம்
○ தோழர் நவம். _女(

சிந்தையில் நல்லவனே
சிந்தையில் நல்லவனே சிந்தனையில் சிறந்தவனே
கொள்கையில் இடதுசாரிக் கொள்கையில் ஊறியோனே!
X தோழர் நவமி. 111

Page 58
மானிடத்தின் வறி காட்டியாய்
கட்சியின் தொண்டனாய் புரட்சியின் அரிவாளாய் பாட்டாளியின் சம்மட்டியாய் சிவப்பில் உறுதியாய் போராட்டத்தின் முழக்கமாய்
தர்க்கத்தின் வீரனாய் கொள்கையில் விடாப்பிடியாய் கொண்ட இலட்சியத்தில் நேர்மையாய் மக்களின் நண்பனாய் மானிடத்தின் வழி காட்டியாய்
C 112 தோழர் நவம்.
 

DuM /bauté
நட்புக்கள் விடைதந்தோம்.
O O O O O
/வெள்ளிவிழ 莓盖盖 ဗမွှားမှူs :
X தோழர் நவமி. 113)

Page 59
நட்புக்கள் விடைதந்தோம்.
கலைமகளின் மைந்தன்
கலைமகள் நிர்வாகம் சேவையாளன் நவத்துக்கு எனது இதய அஞ்சலிகள் விஸ்ணு, மகாலிங்கம்
இதய அஞ்சலி ஆக்கம்
அ.நகுலேஸ்வரன் சேவைக்கு இலக்கணமானவனர்! என்.எஸ். தாசன் நவம் நல்லதொரு தோழரும் நண்பருமாவார். ரீ.சிவம் எண்ணமதில் செயல் திறன் கொண்ட. வைரமுத்து சந்திரசேகரம் எங்கள் சேவையாளன் நவத்திற்கு பரராஜசிங்கம் முரளிதரன் நவரத்தினம் ஓர் நல்ல தொண்டன் ஆ.கந்தசாமி இதயத்திலிருந்து எழுந்த அஞ்சலி, சமூகஜோதி இ.மாசிலாமணி, J.P. பெரியவர் நவத்தார் ஒரு மிகச்சிறந்த மனிதன் இ. மோகன், ஜேர்மனி கடந்து வந்த பாதைகளில் நவத்தாருடன் திருமதி. செல்வநாயகம். சமுக விழிப்புணர்வை ஏற்படுத்திய செயலி விரன் திருமதி.ஈஸ்வரி தர்மலிங்கம் அன்பு உள்ளம் படைத்த கலைமகளின் P.N. றமணதாசன் “இன்சொல் பேசுவதும் இன்முகம் காட்டுவதும் பொ. செல்வநாயகம் செ. தனம் - சுவிஸ் ஆருயிர் நவம் ஐயாவே! அன்பான தொழிலாளர்கள் ஒரு ஞாபகார்த்தக் குறிப்பு.
சி.நாகராசா (தேவு). சிறந்த ஒரு சேவகன் நவம் அண்ணா. இ.பிரதீஸ்
எங்கள் நவத்தாரே...!
க. அருளானந்தம்
தியாகி நவம்! என் தம்பி
க. சிவஞானம் என் நினைவினிலே நிலைத்து நிற்பவரே சின்னையா விக்கினேஸ்வரன்
(114 தோழர் நவம். *

கலைமகளின் மைந்தன்
1960ம் ஆண்டு எங்கள் நிலையத்தின் செயற்குழு உறுப்பினராக இணைந்து காலம் சென்றவர்களான திரு.வ.தம்பிராசா, செ. தியாகராசா, பொ. நல்லதம்பி, சிதர்மலிங்கம் சிதங்கவேலு தியாகராசாவுடனும் க.சிவஞானம் ஆசிரியர் க.பேரம்பலம் பரமானந்தம் கு.குணசிங்கம், சி. இரத்தினம்.வ. பரராஜசிங்கம் ச.பாலசிங்கம் மா.சிவராசா சி.தியாகராச ஆகியோருடன் இணைந்து எமது கிராம மக்களின் முன்னேற்றகரமர்ன செயற்பாடுகளுக்கு உழைத்த உயர்வான உள்ளம் கொண்ட நவம் தன் துடிப்பான செயல் திறனால் மக்கள் உள்ளங்களில் ஒளி விட்டு பிரகாசித்தார். பின்பு 1964ம் வருடம் நவரத்தினம் அவர்களின் வழிகாட்டலில் சு.திருநாவுக்கரசு காலம் சென்றவர்களான நா.இராசதுரை நா.யோகராசா ஆகியோருடன் கி.சிவசுப்பிரமணியம் மோ.கி.செல்வக்குமார் சி.நாகராசா இ.மனோகரன் க.மனோகரன் சி.கணரத்தினம் வி.மகாலிங்கம் மா.பரமநாதன் க.யோகநாதன் பன்னிர்செல்வம் ஆகியோர்களுடன் இணைந்து கிராம மக்களின் தேவைகளை இனம்கண்டு. அதனை அவர்கள் இலகுவாக பெறுவதற்கு வழிசமைத்தவர். இவர் ஆரம்பகாலத்தில் தமிழகத்தின் பேரறிஞர்
器器 சமூகநிலையம்
聽聽證 furniği centre
அணி னாத் துரை அவர் களின் கொள் கையில் பற்றுக் கொணி ட திராவிடக்கழகசெயற்பாடுகளை ஆதரித்து கருத்தரங்குகள் தமிழக திராவிட கழக தலைவர்களின் பிறந்தநாள் விழா போன்றவற்றை எம்மக்கள் மத்தியில் கொண்டாடி மக்களையும் மகிழ்வித்து தானும் மகிழ்ந்து மக்களை அரவணைத்து வாழ்ந்தவர். இவர் 1960இன் ஆரம்பத்தில் இடது சாரி கொள்கையில் ஈடுபாடு கொண்டு மாக்சியலெனினிஸ மா சேதுங் சிந்தனைகளை ஏற்று தோழர் சண்முகதாஸன் தொடர்பை ஏற்படுத்தி எமது பகுதியில் உள்ள பலரை இணைத்து சமூக ஒடுக்கு முறைக்கான போராட்டங்கள் பலவற்றில் கலந்து முதன்மையாக திகழ்ந்தவர் இளைஞர் யுவதிகள் மத்தியில் சமூக ஒடுக்குமுறை சாதிப்பிரிவினை போன்ற ஒடுக்குமுறைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். இக்கலந்துரையாடலுக்கு பலபிரமுகர்கள் எம்மத்தியில் அழைத்துவரப்பட்டார்கள். இவரின் இந்நடவடிக்கையை பொறுக்க முடியாத எம்உஊர் பெரியவர்கள் எதிர்ப்புக் குரல் கொடுத்தனர். அந்த எதிர்ப்புக்குரலுக்கு
* தோழர் நவமி. 115)

Page 60
அஞ்சாது துனிச்சலுடன் மக்களை அணுகி பிரச்சனையை தெளிவு படவிளக்கி வெற்றி கண்டவர் நவம். அக்காலத்தில் இவருடன் இணைந்து செயல்பட்டவர்களின் பெயர்களை முழுமையாக என்னால் தரமுடியாமல் விட்டாலும் அவரடன் இணைந்து செயற்பட்டவர்கள் அவருடைய அனுபவமிக்க செயல்திறனை அறிவர்.
நேற்றைய இளைய தலைமுறையினரை கூட அவர் அரவனைத்து செயலாற்ற வைத்த அனுபவம் சத்தியதாஸன் நா. யோகராசா த.புவனேந்திரன், செ.சுந்தரேஸ், இமோகன், அ.நகுலேஸ்வரன், செ.தங்கராசா, செ.குலேந்திரன் ச.புவீந்திரன், இ.புதுமைலோலன், சி.விஜயகுமார் மற்றும் பலரை இணைத்து சமூக சேவை உணர்வை வித்திட்டு விருட்சமான வளர மிக உறுதுணை புரிந்தவர். ஆண்களை மட்டமல்லாது பெண்களும் நிர்வாகத்தில் பங்குகொள்ள வேண்டும் அப்போது தான் பெண்கள் மத்தியில் உள்ள அச்ச உணர்வு நீங்கும் பயம் போகும் காலப்போக்கில் எந்த நிர்வாகத்திலும் இணைந்து செயலாற்ற முடியம் என்ற துணிச்சலை வளர்த்து பின்வருவோரை தா.துரைமணி க.ஜெசிந்தா, ந.சந்திரா, ப.சற்குணம், நா.சத்தியவதனா, ந.புஸ்பரஞ்சினி, செ.நாகராணி இவர்களை சமூக சேவை என்றால் என்ன என்று அறிய வைத்து சேவையாற்றயவர் நவம்.
இன்றைய தலைமுறையினரையும் அரவணைத்து செயற்பட தூண்டியவர் அவர்களின் பெயரை முழுமையாக இந்நினைவுரையிட முடியாது. இருந்தும் அவர் சேவையின் தேவை எது என அறிந்து அதனுடன் தன்னை இணைந்துக் கொண்ட சிலரின் பெயரை இங்க தருகிறேன். நா.தனேந்திரன், ம.பிரபாகரன், ப.பத்மலோலன், ந.றமணதாஸன், ப.முரளிதரன், கு.குகனேஸ்வரன், கு.சுதாகரன், த.உமாகாந்தன், இ.பிரதீஸ், த.சயந்தன், தி.குமணதரன், சி.குணசேகரம், ம.பிரதீபன், ந.நவநீதன், நா.மோகனதாஸன். இவர்களுடன் இன்னும் பலர் இணைந்து செயற்பட்ட தம் அளப்பரியது. அவரின் இறுதி அவாவும் எண்ணக்கனவும் வரும் காலச்சந்ததியின் கல்வி வளம் பேணப்படவேண்டும். எமது நூல்நிலையம் மக்களின் கல்வி மேம்பாட்டுக்காக சிறந்து சேவைபுரிய வேண்டும் என எண்ணியவனின் எண்ணக்கனவு நனவாக வேண்டும். மழலைகளின் கல்வி நிலை உயர வேண்டும் என எண்ணியகவ் நவம் அவர்கள். அவர் இன்று எம்மத்தியில் இல்லை. ஆனாலும் அவர் ஆற்றிய சேவைகள் கோபுரமாக உயர்ந்து நிற்கிறது. அச்சேவையாளனின் சேவைகளை அவர்விட்ட இடத்தில் இருந்து தொடர்வோம் என உறுதி பூண்டு கலைமகளின் கண்ணீர்பூக்களை காணிக்கையாக்குகிறோம்.
நன்றி
ஆத்மாசாந்திக்காக பிரார்த்திக்கும்
நிர்வாகம் கலைமகள் ச.ச.நிலையம்
ஆத்திசூடி வீதி, கந்தர்மடம்.
(116 v தோழர் நவமி.

சேவையாளன் நவத்துக்கு எனது இதய அஞ்சலிகள்
விஸ்ணு, மகாலிங்கம்
தோழர் நவம் என்று எல்லோராலும் அழைக்கப்படும் எமது அன்புக்குரிய பெரியவர் அவர்களுடன் 16 வயதிலிருந்து அதாவது 1964 - ஆண்டு பழகும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது. அது எமது கலைமகள் சனசமூக நிலைய வருடாந்த பொதுக்கூட்ட நிகழ்வின் ஊடாக நெருங்கிப் பழகும் சந்தர்ப்பம் உருவானது. அவர் ஒரு முற்போக்கு சிந்தனையாளன் சமூக அநீதிக்கு எதிராக பல போராட்டங்களில் முன்நின்று செயல்பட்டவர் - இவர் ஒரு மாக்சிஷவாதி இவருடன் நானும் எனது அயல் நண்பர்களும் சேர்ந்து இவர்கள் ஒழுங்குபடுத்தி நடாத்தும் கூட்டங்கள் ஊர்வலங்கள் தோழர் சுப்பிரமணியம் தலைமையில் நடைபெறும் இக்கூட்டங்களில் இவர்களால் வெளியிடப்படும் பிரசுரங்கள் பத்திரிகையான செம்பதாகை போன்றவற்றை மக்கள் மத்தியில் விற்பனை செய்வதிலும் பிரசுரங்கள் விநியோகிப்பதிலும் இவருடன் இணைந்து செயல்பட்டவன். சாதி ஒடுக்கு முறைகளுக்கு எதிரான போராட்டங்கள் ஆலயத்துள் தாழ்த்தப்பட்ட மக்கள் உட் சென்று தரிசிக்க முடியாமல் உயர் சாதியினரால் தடுத்து நிறுத்தப்பட்ட போதும் தேனீர் கடைகளில் தாழ்ந்த சாதி மகன் சரிசமமாக இருந்து தேனிர் அருந்த முடியாத காலம் இருந்தது. அந்தக் காலத்தில் தோழர் நவம் எம் மத்தியில் அதற்கு எதிரான போராட்ட வழி முறைகளை விளக்கி அப்போராட்டத்தை நடாத்தி ஒடுக்கு முறையாளர்களுக்கு எதிராக கிளர்ந்து எழுந்து போராடி வெற்றி கண்டவர். அதை விட மேலாக அவரின் சமூக சேவை அளப்பரியது. திட்டமிடல் அதை நடத்தி முடிக்கும் திறன் மக்களை அணுகும் முறைமை பெரியவர்கள் இளைஞர்களை அரவணைத்து திட்டமிட்டதை செயல்திறனால் முடிக்கும் சுபாவம் மிக்கவர். அரசியலிலும் சிறந்த ஆளுமை நிறைந்தவர் எழுத்தாற்றல் குறைந்தவர். எளிமையான செயலாற்றல் நிறைந்தவர் யாரையும் நீ என்று உரையாதவர் அத்தகைய பெருமை நிறைந்த ஒருவரை நாம் இழந்து விட்டோம். எமது சமூகம் இழந்து விட்டது எமது கலைமகள் சனசமூக நிலையம் இழந்து விட்டது. எமது கிராம மக்கள் இழந்து விட்டார்கள். இப்படியானதொரு சேவையாளன் எமக்கு கிடைப்பானா? சேவையாளனே உன் சொல்லும் செயலும் ஒன்றென எமக்கு உணர்த்தி உன் பூதவுடலை இவ்வுலகை விட்டு மறைந்து விட்டாய் என்றும் உன் புகழுடல் உழைக்கும் மக்கள் இருக்கும் வரை இம்மாநிலத்தில் மறையாது நிலைத்து வாழும் அதுவரை சேவையாளன் நவத்துக்கு எனது இதய அஞ்சலிகள்.
செயலாளர் கலைமகள் சனசமூக நிலையம்
ஆத்திசூடி வீதி
* தோழர் நவமி. 117)

Page 61
இதய அஞ்சலி ஆக்கம்
அ.நகுலேஸ்வரன் - (என்ராசா)
எனது அன்புக்கும் மதிப்புக்கும் உரியவரும் எங்கள் அயலில் ஒன்றாக வாழ்ந்து எமது இன்ப துன்பங்களில் பங்கெடுத்தவரும் என்னுடன் மிகவும் நெருக்கமாக பழகியவருமான கலைமகள் சனசமூக நிலையத் தலைவருமாகிய நவரத்தினம் அண்ணா 8.10.2004 அன்று எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி எங்களை விட்டு பிரிந்த எங்கள் அண்ணா நவரத்தினம் அவர்கட்கு எனது குடும்ப சார்பாக எனது கண்ணீர் அஞ்சலியை அவர் குடும்பத்துக்கு தெரிவித்துக் கொள்கிறேன். ܆.
எனது பிரதியுபகாரமாக அவர் எமது அயலவர்களுடன் வாழ்ந்த காலத்தில் மக்களுக்கு ஆற்றிய சேவையூடாக நானும் அவரை இனம் கணி டு கொணி டவன் அவர் வாழி நீத பொதுநலவாழ்க்கையூடாக இந்நிகழ்வு நாளில் எனக்கு தெரிந்த கடந்து சென்ற விடயங்களை சிலவற்றை நினைவுபடுத்துவது எனது கடமை என எண்ணுகிறேன்.
மனிதன் பிறக்கின்றான், இறக்கின்றான், இது
தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கின்ற விடயம். ஆனால் ஒருவன் தனக்காக வாழாமல் பிறரின் வாழக்கைக்காக தன்னை அர்ப்பணித்து வாழ்பவன்தான். அவன் சமூகத்தில் போற்றப்படும் மனிதன். அவன் இந்த உலகத்தை விட்டு சென்றாலும் அவன் விட்டு சென்ற நல்ல விடயங்கள் அவனை நினைவுபடுத்திக் கொண்டேயிருக்கும். இது உலக உண்மை. அந்த உண்மை மனிதன் தான் நவரத்தினம் அண்ணா. அவரை எனக்கு ஒரு 30 வருடமாக நான் அறிவேன். அவர் ஒரு கட்சித் தொண்டராக அறிந்து கொண்ட காலம்
எமது சிறுபான்மை இனம் மிகவும் அடக்குமுறைக்குள் இருந்த காலத்தில் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பல செயல் போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்தி கொண்டவர். அதில் வெற்றியும் கண்டவர்கள். 1970ம் ஆண்டுகளில் எமது தமிழினம் ஒரு கல்லைக்கூட எடுத்து எறிய பலமில்லாமல் இருந்த காலத்தில் அவர் பல துணிகரமான போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக்
al
(118 தோழர் நவமி. *

கொண்டு பல பொதுச்சேவைகளிலும் தன்னை ஈடுபடுத்தியதை நாங்கள் அறிந்து கொண்டோம். ஏன் இப்படி தேவையில்லாத வேலை பார்க்கிறார். தன்ரை குடும்ப வேலையை பார்க்கலாம் தானே என்று மக்கள் கதைத்துக் கொள்வார்கள். ஆனால் அவர் தன்னுடைய விடயத்தில் குறியாயிருந்தார். அவரைச் சுற்றி எந்த நேரமும் இள்ைஞர்கள் சூழ்ந்து உலக அரசியல் விடயங்களை விவாதித்து கொள்ளுவார். இது அவரின் அன்றாட விடயங்கள் அவரிடம் தொடர்ச்சியாக பழகியவர்கள் ஏதோ ஒரு அரசியல் அவா வெளிப்படுவதை அவரிடம் தெரிந்து கொள்ளலாம். தொழிலாளிக்கு உழைப்புக்கேற்ற ஊதியம் - கிடைக்க வேண்டும் சமூகத்தில் ஏற்றத்தர்ழ்வு இல்லாமல் எல்லோரும் சமமாக வாழ வேண்டும். இதற்கு பெரிய சிந்தனைமாற்றம் மக்களிடம் ஏற்படவேண்டும் என்ற ஆசை அவரிடம் நிரம்பியிருந்தது. அவரின் போராட்ட குறியீடாக சிறுபான்மை இனத்தின் அடக்குமுறைக்கு எதிரான வசனங்கள், காலில் செருப்பிடல் குற்றமோ போத்தலும் பேணியும் 67 ம் ஆண்டு எழுதிய வசனங்கள் மக்கள் விழப்புணர்ச்சி ஏற்படவேண்டும் என்று இன்றும் பொதுக் கூட்டங்களில் அவரின் செயல் விடயங்களை நினைவுபடுத்துகின்றன. பணம் என்ற நிலையில் அவரை யாரும் விலைக்கு வாங்க முடியாதவராவர். மிகவும் கண்ணியமான பொது சேவகனாக நான் அவரை கண்டேன். எந்த அரசியல் பொதுக் கூட்டங்களிலும் சளைக்காமல் அலுக்காமல் அங்கு சமூகமளித்து இருப்பார். நான் அவரிடம் கண்ட சிறப்பான குணங்கள் பொய் பேசத் தெரியாது. சுயநலம் இல்லை. எந்த நேரமும் கோபம் என்ற நிலையில் அவர் மாறியதை யாரும் கண்டதில்லை. கடமை செய் பலனை எதிர்பாராதே. இந்த வசனத்தின் பொருளை அவரிடம் தான் கண்டேன். இப்படியான ஒரு பொது சேவகனை கடவுள் எங்களிடமிருந்து பறித்து விட்டார். ஆனாலும் மனதை தேற்றி அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தித்துக் கொண்டு அவர் கண்ட கனவுகள் வெகு சீக்கிரம் நிறைவேறும். இது உண்மை!
கலைமகள் உறுப்பினர் .
* தோழர் நவம். 119)

Page 62
சேவைக்கு இலக்கணமானவர்ை!
என்.எஸ். தாசன்
எமது ஆத்திசூடிக் கலைமகள் சனசமூக நிலையத்தின் முன்னைநாள் தலைவர் அமரர் சின்னத்துரை நவரத்தினம் அவர்கள், அன்பு - பண்பு - சேவை ஆகிய குணாதிசயங்களின் வடிவமென்றால் அது முகஸ்துதி அல்ல. சனசமூக சேவை மூலம் எமது குறிச்சிக்கு அரிய-பெரிய தொண்டு செய்தார் என்பது மறக்க முடியாத மறுக்கமுடியாத ஒன்று. இந்தச் சேவை அவருக்கு நன்மதிப்பையே தேடிக் கொடுத்தது.
பெருமிதமான வாழ்வு வாழாமல் எளிமையான - தூய்மையான நட்புறவான வாழ்வுக்கு இலக்கணம் வகுத்து மறைந்த தோழர் அவர். ஒரு காலகட்டத்தில் ஆத்திசூடிக் கலைமகள் சனசமூகத்தின் தலைவனாக நான் தேர்ந்தெடுக்கப்பட்ட போது, எனது தலைமையின் கீழ், செயலர் பதவியை வகித்தார். என்னைவிட வயதில் மூத்தவராய் அவர் இருந்தபோதும் ஒன்றுபட்டுச் செயல்புரியும் நட்புறவுக் கொள்கைக் கோட்டுக்குள் நின்று செயலாற்றிய கொள்கையாளன் அவர். அவர் ஆற்றிய சேவை போல், எம்மால் ஆற்றுவதென்பது ஒரு கேள்விக்குறி தான். அவரது சேவை நிகரற்ற சேவை.
அன்று, ஆத்திசூடிக் கலைமகள் சனசமூக நிலையத்தோடு தன்னை இணைத்தார். அந்த நிலையத்துக்கும் அதனைச் சூழ்ந்துள்ள மக்களுக்கும் நன்மை தந்தார் - சேவையின் மூலம் நன்மை செய்வதையே தனது குறிக்கோளாகக் கொண்டு செயலாற்றினார்.
இன்று - தன் நினைவையும் உணர்வையும் எமக்குத் தந்து எமது சனசமூக நிலையத்துக்கும் அதனைச் சூழ்ந்துள்ள மக்களுக்கும் நன்மை தரும் சேவையும் தொண்டும் ஆற்றுங்கள் என்று எமக்கு அறிவுறுத்தி, தன் உயிரை வானேக வைத்துவிட்டார். v
“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்”
உலக மகாகவி வள்ளுவர்
அவரின் பிரிவால், சொல்லொணா வேதனைகளையும் துயரங்களையும் சுமந்து கொண்டிருக்கும் அன்னாரின் குடும்பத்தவர்களுக்கு எனது அடிமனதிலிருந்து ஊறும் அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தோழர் நவத்தின் ஆன்மா சாந்தியடைவதாகட்டும் என்று பிரார்த்திக்கும்,
முன்னாள் தலைவர் ஆத்திசூடிக் கலைமகள் ச.ச.நிலையம்)
(120 தோழர் நவமி. 女

நவம் நல்லதொரு தோழரும் நண்பருமாவார்.
f. fab நவரத்தினம் தோழர் இறந்து விட்டார் என்றதும் மிகுந்த வேதனையும் கவலையும் கொண்டேன். ஏனெனில் மிகவும் நெருக்கமான தோழராயும் நண்பனாயும் அவர் என்னுடன் பழகி வந்தார். 1975ம் ஆண்டில் அவவருடனான தொடர்பும் பழக்கமும் ஏற்பட்டது. அவ்வாண்டு மேதின ஊர்வலம் கூட்டத்திற்கான தயாரிப்பில் அவருடனும் ஏனையவர்களுடனும் இணைந்து அதில் பங்கு கொண்டேன். அன்று ஏற்பட்ட நட்பு அரசியல் ரீதியான தோழமை உறவாக அவருடனும் ஏனையோரிடமும் உருவாகி வளர்ந்தது.
அதன் பின்பு கூட்டங்கள் ஊர்வலங்கள் எனப் பல்வேறு அரசியல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும் எனது அறிவை வளர்த்துக் கொள்ளவும் நவத்தார் உதவினார். அடிக்கடி நாங்கள் சந்தித்து வெலிங்டன் சந்தியில் தேனிர் குடித்து அரசியல் விடயங்கள் நாட்டு நிலமைகள் எமது குடும்ப வாழ்க்கைப் போக்குகள் பற்றியெல்லாம் கலந்து பேசுவோம். அவ்வேளைகளில் நிதானமான சரியான அணுகுமுறைகளையே அவர் ஆலோசனைகளாக கூறுவர். நான் வழமையாகவே சற்று அவசரம் ஆத்திரமடையும் தன்மை உடையவன். ஆனால் அச் சந்தர்ப்பங்களில் தோழர் நவத்தார் ஏனைய தோழர்கள் நல்ல ஆலோசனைகளைக் கூறி நிதானப்படுத்தும் போக்கு அவரிடம் இருந்தது.
ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு சிறு தாக்குதல் சம்பவத்தில் நாங்கள் ஈடுபடவேண்டி வந்தது. அது தனிப்பட்ட விவகாரமல்ல அதில் அரசியல் தேவை இருந்தது அதனால் நாங்கள் இருவரும் மொத்தம் 5 மாதங்கள் விளக்க மறியலில் இருக்க நேரிட்டது. அக் காலத்தில் நன்றாக இருந்தது. பல்வேறு அரசியல் சமூக விடயங்களை கலந்து பேசவும் விவாதிக்கவும் முடிந்தது. நான் சில வேளைகளில் அவசரப்படுவேன். ஆனால் நவரத்தார் நிதானப்படுத்துவார். எங்கள் இருவர் மீதான வழக்கு இத்தனை வருடங்களுக்குப் பின்பு அண்மையில் தான் முடிவுற்றது.
தோழர் நவத்தார் எந்தவேளையிலும் அரசியலையும் பொது நன்மைகளையும் முதன்மைப்படுத்தியே கலந்து பேசுவார். கொள்கையில் நம்பிக்கையும் இறுதிவரை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற அவாவும் அவரிடம் நிறைந்திருந்தது. ஒருவர் இருக்கும்போது சொன்னவற்றையும் செய்தவற்றையும் அவர் இறந்த பின்பு நினைத்துப் பார்க்கும் போதுதான் அதன் பெறுமதி நமக்கு மேன்மேலும் விளங்குவதாக உள்ளது. நவத்தார் என்றும் மறக்கமுடியாத தோழர் நண்பர் என்பதை இவ்வேளை கூறுகின்றேன். அவரது சொற்களும், செயல்களும், ஆலோசனைகளும் என்றும் நினைவில் வைத்திருக்கத் தக்கனவாகும்.
அவரது மறைவுக்கு எனதும் குடும்பத்தினரதும் ஆழ்ந்த அஞ்சலிகள் உரித்தாகுக.
வெலிங்டன் சந்தி, uJITp(UT600Tib.
* தோழர் நவமி. 121 D

Page 63
எண்ணமதில் செயல் திறன் கொண்ட் திரு-சின்னத்துரை நவரட்ணம் அவர்களுக்கு என் இதய அஞ்சலி
வைரமுத்து சந்திரசேகரம்
நவரட்ணம் என்ற பெயரை கேள்விப் பட்டிருக்கிறேன். நெருங்கிப் பழகும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஆனால் நான் இப்பகுதிக்கு கிராம அலுவலராக வந்தபோது அவரைப் பற்றி தெரிந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது. சிலருடைய சொற்கள் சிவப்பாக இருக்கும் செயல் பச்சையாக இருக்கும். ஆனால் நவம் அண்ணனின் செயல்கள் யாவும் சிவப்பாகவே இருந்தது. நான் இங்கு கடமைக்கு வந்த காலப்பகுதியில் இக்கிராம தேவைகளை இனம் காணவேண்டும். அதன் தேவைகள் மக்களை சென்றடைய வேண்டும். நான் வந்த காலத்தில் தலைவராகவும் தற்போது செயலாளராகவும் இருக்கும் திரு.வி.மகாலிங்கம் அவர்களிடம் எடுத்துக்கூறி அதை எப்படி நிறைவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தி உருவாக்கியது. கிராம அபிவிருத்திச் சங்கம் இக்கட்டடம் ஆசிரியர். க.சிவராமலிங்கம் ஐயாவின் முயற்சியால் இங்கு உருவாக்கப்பட்டது. அதேபோல் 1998ம் ஆண்டு இந்நிலையத்தில் நூல் நிலையம் அமைக்கவேண்டும். அதற்கு நிதி தேவை இதைபெறுவதற்கு ஆவன செய்து தருமாறு என்னிடம் மகாலிங்கம் அவர்கள் கேட்டார். பிரதேச செயலருக்கு கடிதம் தரும்படி கேட்டேன், தந்தார். அதையும் ஒப்படைத்தேன். பின்பு 2000 ஆண்டு புனர்வாழ்வு புனரமைப்பு அமைச்சின் மூலம் நிதி வழங்கப்படுகிறது. இதன் மூலம் நிதியைப் பெற்று நூல் நிலையம் அமைப்பதை பூர்த்தி செய்யலாம் என அறிவுறுத்தி அதற்கும் கடிதத்தை எழுத வைத்து நிதி கிடைக்க வழி செய்தேன். நிதி கிடைத்தது. வேலை தொடங்குவதற்கு அடுத்து வந்த நிர்வாகத்திற்கு பல தடைகள் தோன்றியது. அதன் காரணத்தால் கட்டிட வேலைகள் தாமதம் அடைந்தது. அப்போது தான் நவம் அண்ணர் யாழ்ப்பாணத்திற்கு மீண்டும் குடியமர வந்திருந்தார். மீண்டும் சனசமூக நிலையத்தில் அவருக்கு தலைமைப் பொறுப்பை மக்கள் வழங்கினர். அவரின் ஆளுமை அரசியல் அறிவு எல்லாம் பத்திரிகை சஞ்சிகை நூல்கள் வாசித்து தன்னை வளர்த்துக் கொண்டவர். பிரச்சினை எங்கிருந்து உருவானது. அதை எப்படி அணுகினால் தீர்க்க முடியும் என தன் அறிவுத்திறனால் அறிந்து செயல்படும் ஒரு தீரமிக்க சேவையாளன். அப்படிப்பட்ட சேவையாளன்
(122 தோழர் நவமி. Şत्

இந்நூல் நிலையம் அமைப்பதற்குரிய தடைகள் விடயமாக என்னிடமும் ஆலோசனை பெற்று கணவன் மனைவி பிள்ளைகள் போல் நவம் அண்ணர் பரமானந்தம் ஐயா மகாலிங்கம் அவர்களும் நிலைய இளைஞர்கள் சிலரும் அன்னாரது மனைவியும் மகனும் இணைந்து செயலாற்றிய விதம் அளப்பரியது. அவரின் ஆளுமை அதில் புலப்பட்டது. நூல் நிலையம் அமைக்கப்பட்டது. திறப்பு விழாவும் நடைபெற்றது. மக்கள் பாவனைக்கு இன்னமும் விடப்படவில்லை. நவம் அண்ணரின் எண்ணக்கனவு முழுமை பெறவில்லை. அவரின் அடுத்த கனவு இடையில் நிறுத்தப் பட்ட பாலர் பாடசாலை திரும்ப இயங்க வைக்கவேண்டும். பாலர் பாடசாலை திரும்ப இயங்க வைக்கவேண்டும். பாலர் கல்வி மேம்படவேண்டும் என பேராவா கொண்டிருந்தார். அமரர் நவம் அண்ணர் அவரின் எண்ணக்கனவை நனவாக்க இங்கிருக்கும் இளைஞர் சமூகம் தமது வேலை நேரங்களை தவிர்த்து சமுதாய முன்னேற்றத்திற்காக உழைக்க முன்வரவேண்டும் அதுவே அமரர் நவம் அண்ணருக்கு நாம் செய்யும் அஞ்சலியாகும். அவரின் பாத கமலத்தில் காணிக்கையாக என் எண்ணமதில் செயல் திறன் கொண்ட
திரு.சின்னத்துரை நவரட்ணம் அவர்களுக்கு என் இதய அஞ்சலி!
3/102 கிராம அலுவலர் தமிழகம் கோண்டாவில் வடக்கு

Page 64
தியாகி நவம்! என் தம்பி
க. சிவஞானம்
தனக்கென வாழாது பிறர்க்கென வாழ்ந்த தானைத் தலைவனே! தம்பி நவரத்தினா i
நவம் என்றால் ஒன்பது - ஆனால் உன்னில் நான் கண்ட இரத்தினக். குணங்களோ பலகோடி உன் மனைவி மக்களை நேசித்தாயோ - நானறியேன் ஆனால், உன் பிறந்த பொன் நாட்டை நேசித்தாய். உன் கிராமத்தை நேசித்தாய். உன் கிராமமக்களை நேசித்தாய். அவர்தம் பிரச்சினைகளில் பங்கு கொண்டாய். தீண்டாமை ஒழிப்பு, பொதுவுடைமைவாதம் மக்கள் சேவை என்பவற்றை உன் உயிர்மூச்சாக ஏற்று உழைத்ததை நானறிவேன். எமது கிராமம் உனது பிறப்பிடமாகக் கொண்டது எமக்கெல்லாம் பெருமை. நாம் தலை நிமிர்ந்து நம் தம்பி நவம் பிறந்த இடம் என உரத்துக் கூறி பெருமையடைய எமக்கு நீ உதாரணபுருஷனாக என்றும் எம்மக்கள் மனதில் பெருமையோடு வாழ்வாய் - இது உண்மை.
தம்பி என்னோடு சேர்ந்து எம் கலைமகள் சனசமூக நிலைய வளர்ச்சிக்காக
பாடுபட்ட ஒவ்வொரு நினைவலைகளும் என் நெஞ்சிலே தோன்றி என் கண்களை நனைக்கின்றன. பொன்விழா மண்டபம் உன் புகழுக்கோர் எடுத்துக்காட்டு. நிமிர்ந்த நன்நடையும் நேர்கொண்ட பார்வையுமாய் வாழ்ந்த என் தம்பியே எம் உறவு இன்று நேற்று ஏற்பட்டதல்ல திரு. சின்னத்துரை தம்பதிகளின் மகனாக என்று நீ உதித்தாயோ அன்று ஏற்பட்ட உறவு உன் அக்கா என் அன்புச்சகோதரி நாகம்மா என் அன்பு மாணவி அவளின் கல்வி வளர்ச்சியில் நான் பங்கேற்ற காலகட்டமும் அவள் எம்மை விட்டுப் பிரிந்த சோக வரலாறும் எம் உறவோடு இணைந்தவை. இடையில் வந்தவர்க்கு எப்படியப்பா தெரியும் எம் அன்பின் ஆழம். நீ இன்று எம்மோடு இல்லை என்பது உண்மையாகலாம் உன் எண்ணங்கள் - சிந்தனைகள் செயல்கள் என்றும் எம்மோடுதான். உன் நினைவலைகள் என்றும் மறையாது வாழ்க நின் புகழ்!
அன்பு அண்ணன் க. சிவஞானம் ஓய்வு பெற்ற அதிபர்
οιήεgμμ6)Ιπ5-π' உடுவில்
சுன்னாகம்
18.10.2004
(124 தோழர் நவமி. 女

நவரத்தினம் ஓர் நல்ல தொண்டன்
இவ்வுலகில் தமது சிந்தனை தமது நம்பிக்கை தமது நிருபணங்கள் மிகவும் சரியானவைதான் என திடமாகக் கூறி ஒரு சிலரே வாழ்ந்திருக்கிறார்கள். காலத்துக்குக் காலம் கொள்கைகளை மாற்றும் அரசியல்வாதிகள் மலிந்துள்ள இந்நாட்டில் கொள்கையே பெரிதும் மதித்து வாழ்ந்தவர்களும் சிலரே அவர்களை எதிர்க்கவும் பலர் இருக்கிறார்கள். சமூகத்தில் பெரும்பகுதியினர் சரியானவற்றை புரிந்து கொள்ளும் பக்குவம் இல்லாதவர்கள் “ஊரோடு ஒத்துவாழ்’ கஷடமின்றி வாழமுடியும் பயத்தினால் ஏற்றுக்கொள்ளக்கூடிய நல்ல சிந்தனைகளையும் கைவிட்டு விட்டு “இராமர் ஆண்டாலென்ன, இராவணன் ஆண்டாலென்ன” சிந்தனையில் வாழ்கின்றார்கள். இவர்களுக்கு எதிலும் அக்கறையில்லை. மற்றவர்களை ஏற்றி போற்றி துதித்து வாழ பழகி போலி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இப்படியான காலத்தில் வாழ்ந்தவர் தான் அமரர் நவரத்தினம். தமது சிந்தை, நம்பிக்கை தமது சொந்த நலனுக்கு பயன்படாதுவிட்டாலும் தமிழ் மக்களுக்கு பயன்படும் என்ற உறுதியான நம்பிக்கை கொண்டவர் பல எதிர்ப்புக்களை சந்தித்தபோதும் அவற்றிற்கு அஞ்சாது கொள்கையிலிருந்து வழுவாது தமது இலட்சியத்தில் இருந்து விலகாது இருந்தவர். தம்மை சார்ந்த மக்களுக்கு விமோசனப் பாதையை கட்டியெழுப்ப அல்லும்பகலும் அயராது உழைத்தவர். தமிழ் பேசும் மக்கள் மத்தியில் இக்கட்டான நிலையில் தோளோடு தோள் கொடுத்து உதவினார். ஒரு சமத்துவ சமுதாயத்தை உருவாக்க போராடி அச்சமூகத்திற்கு தம்மை அர்ப்பணித்த பெருந்தகை.
அவர் நினைவால் துயருறும் குடும்பத்தினர், தோழர்கள் அனைவருக்கும் எமது அனுதாபங்கள்.
ஆ.கந்தசாமி சமூகஜோதி ஆழ்வார்ப்பிள்ளை கந்தசாமி பொதுச்செயலாளர் கொழும்புத் தமிழ்ச் சங்கம் இல.7, 57 வது ஒழுங்கை, கொழும்பு -06
* தோழர் நவமி. 125)

Page 65
சர்வம் சிவமயம்
சமூகஜோதி இ.மாசிலாமணி, J.P. முன்னாள் அதிகாரமளிக்கப்பட்ட நிர்வாக உத்தியோகத்தர், வடமராட்சி தெற்கு மேற்கு + வலிகிழக்கு பிரதேச சபைகள், நிர்வாக அதிகாரி, சுகாதாரம் + நீர்வேலை (G.TZ) பிரிவு, உளவளத் துணையாளர், சமாதான நீதவான்,
Sysis Gau6)5uir, cancer & AIDS., Society, 6LLDITsII600TLib.
இதயத்திலிருந்து எழுந்த அஞ்சலி,
8-10-2004 ல் இறைபதமடைந்த ஆத்திகுடி கலைமகள் சனசமூக நிலையத் தலைவர் அமரர் சி. நவரட்னம் அவர்களின் ஆத்மசாந்தி வேண்டி, சமாதான நீதவானும், உளவளத்துணையாளரும் வடமாகாண புற்றுநோய் - எயிட்ஸ் நோய் தடுப்புச் சங்க பிரதிச் செயலதிபருமாகிய சமுகஜோதி இமாசிலாமணி, J.P அவர்களின் இதயத்திலிருந்து எழுந்த அஞ்சலி
“ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும், தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்’ அமரர் நவரட்ணம் அவர்கள் தனது இளம்பராயந் தொட்டு இறுதிமூச்சு வரை மக்களின் ஒரு சாராரை அடக்கி ஒடுக்கி உண்ண உடுக்க கற்க சுதந்திரமாக முன்னேறவிடாது இம்சித்த கொடுமைகளுக்கு சமவுடைமை (communism) மூலமே விடிவு காணமுடியும் என நம்பி கம்யூனிச சித்தாந்தத்தை ஏற்று, பிறள்வு இல்லாமல், அதன் வளர்ச்சிக்கும் இலட்சியத்திற்குமாக அயராது உழைத்து, தனது 59வது வயதில் இக் குவலயத்திலிருந்து விடைபெற்றுக் கொண்டவர்.
உயிர்பிரியும் அன்றைய தினத்திலும் தனது நாளாந்த கடமைகளைச் சரிவர முடித்துவிட்டு, வீடு திரும்பியவர், திடீரென ஏற்பட்ட மாரடைப்பினால் சிவசாயுச்சியம் எய்தினார். நோய்வாய்ப்பட்டு அழுந்தாமலும் எவருக்கும் இடைஞ்சலில்லாமலும், நல்மரணம் அவரைத் தழுவியதிலிருந்து, அவர் எத்துணை நல்லவர் என்பதை ஊகித்துக் கொள்ளமுடியும்.
Qas'L605 unts disast (35 - See no evil Gas L605 (SuSITGig5 - Speak no evil கெட்டதைக் கேட்காதே - Hear no evil
(126 தோழர் நவம். *

என்னும் கொள்கையைப் பின்பற்றி, மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று தனது வாழ்க்கைப் படகை ஒட்டி, சமய, சமூக சமுதாய மறுமலர்ச்சித் தொண்டுகள் பல புரிந்து, யாழ் ஆத்திசூடி வீதி கலைமகள் சனசமூக நிலையத்தின் பொறுப்புவாய்ந்த தலைவர் பதவியை அலங்கரித்துள்ளார். அவரின் மரணத்தின்போது சனசமூக நிலையநிர்வாகம் நிலையத்தில் சோக கீதம் இசைத்து, மக்கள் அஞ்சலிக்கு ஏற்பாடு செய்து பிரமுகர்களின் இரங்கலுரைகளுடன், உயர்ந்த கெளரவம் கொடுத்துள்ளமை, மக்கள் அவர்மேல் வைத்திருந்த நல்லெண்ணம் நன்மதிப்பினையே எடுத்துக் காட்டியுள்ளது.
ஊரில் ஏற்படும் சிறிய முரண்பாடுகள் பிரச்சினைகளுக்கெல்லாம் வாசிகசாலைத் தலைவர் என்ற வகையில், இவ்வூர் கிராமசேவை உத்தியோகத்தர் உயர்சைவத் திரு.வ.சந்திரசேகரம் (J.P.Whole Island) அவர்களுடன் இணைந்து, விசாரணை நடத்தி, சமரசம் செய்து வைப்பதில் வெற்றிகள் பல கண்டுள்ளார். இதனால் சம்பந்தப்பட்ட தரப்பினர் நீதிமன்றம் சென்று அலைந்துலைந்து வீண் செலவுகள் செய்யவிடாது, சுமுகத் தீர்வுகளை ஏற்படுத்திய இவ்விருவரையும் இவ்வூர் மக்கள் நன்றியுணர்வுடன் போற்றி மதிக்கின்றனர் என்பது போற்றுதற்குரிய விடயமாகின்றது.
நவரட்ணம் அவர்களுக்கு கோபம் ஒருபோதும் வருவதில்லை. "சீற்றம் ஏற்றம் தராது” என்ற நம்பிக்கை உடையவர். உழைப்பவரே உயர்ந்தவர், உழைப்பு உயர்ச்சி தரும், அறம் வெல்லும், தருமம் எங்குள்ளது - அங்குள்ளது ஜெயம் என்று வாழ்ந்து காட்டியவர்.
பணிபுரிவோர் ஒரு வகை, அந்தப் பெருமையைத் தட்டிக் கொள்வோர் ஒரு வகை. இவர் முதல் வகையினைச் சேர்ந்த பெரியார்.
அன்பு தான் உலகின் ஒளிவிளக்கு
அன்பு தான் இன்ப ஊற்று
அன்பு தான் உலக மகாசக்தி - இதனையே தனது தராக மந்திரமாக மதித்து வாழ்ந்து காட்டியவர். சிறந்த பண்பாளர்.
இவரது வளர்ச்சிக்குப் பின்னால் நிச்சயமாக அவரது உத்தமியாகிய சகதர்மினி சந்திரா அவர்களும், பிள்ளைச் செல்வங்களும் பெரும் பங்கு ஆற்றியுள்ளனர் என்பது வெள்ளிடை மலையாகும். அவரைப் போல் அவரது மனைவி சந்திரா பல்வேறு மகளிர் அமைப்புகளிலும், ஆத்திசூடி கலைமகள் மாதர்
* தோழர் நவமி. 127)

Page 66
சங்கத் தலைவியாகவும், கடந்தகால பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் ஜனநாயக இடதுசாரிக் கட்சி அபேட்சகராகவும் இருந்துள்ளார். எனவே, அமரர் நவரட்ணமும் மனைவியும் தம்மைக் குடும்பமாக சமூகப்பணியில் அர்ப்பணித்து ஊருக்கும் நாட்டுக்கும் மக்களுக்கும் அளப்பரிய தொண்டுகளைப் புரிந்துள்ளதன் மூலம், மக்கள் மனதில் அழியா இடம் பிடித்துள்ளனர்.
அமரர் சி. நவரட்ணம் அவர்கள் சீனப்பெருந் தலைவர் “மாசேத்துங்’ அவர்களின் சமவுடைமைச் சித்தாந்தத்தில் ஊறித் திழைத்தவர். இறுதி மூச்சு வரை அதன் வளர்ச்சிக்காகவே பாடுபட்டவர். இவரின் தன்நலமற்ற தொண்டும் கட்சிப் பற்றும், உண்மை விசுவாசமும் கட்சி மத்தியிலும், ஊர்வாசிகள் மத்தியிலும் நற்பெயரையும் நன்மதிப்பையும் தேடிக் கொடுத்துள்ளது, என்பதில் புளகாங்கிதம் கொள்ள முடிகின்றது. நல்லவர் வல்லவர் - மக்கள் மனதில் என்றென்றும் நிலைத்திருப்பார். இவரின் திடீர் மறைவு பேரிழப்பாகின்றது.
“மணிமுடி கொண்ட மன்னரும், இறுதியில் ஒரு பிடி சாம்பலாவர்,” என்பது மறுக்க முடியாத யதார்த்தமும் உண்மையுமாகும். குன்றின் மேல் வைத்த தீபமாக விளங்கிய உத்தமர் நவரட்ணம், சகலர்க்கும் அவரது மேம்பட்ட செயல்களினால் வெளிச்சம் பரப்பி, நாட்டிற்கும் சமூகத்திற்கும் நற்பணியாற்றியதில் அவர் பெயர் என்றென்றும் நிலைத்து வரலாற்றில் இடம்பெறும். அவரது பிரிவால் துயருறும் குடும்ப உறுப்பினர்களின் சோகத்தில் இணைந்து, ஆத்ம சாந்திக்கு இறைவனை இறைஞ்சி வணங்குகின்றேன்.
ஓம்! சாந்தி, சாந்தி, சாந்தி.
இல: 21,(68/2), பிறவுண் றோட்,
5ம் ஒழுங்கை, யாழ்ப்பாணம்.
2004-10-19
(128 தோழர் நவழி:2004. X

பெரியவர் நவத்தார் ஒரு மிகச்சிறந்த மனிதனி
நான் இங்கு அவரை மிகச் சிறந்த மனிதர் என்று குறிப்பிட்டதற்குப் பல காரணங்களைக் குறிப்பிடலாம். அவற்றில் சில. அவரது சமூகப் பணிகள், எவருக்கும் உதவும் குணம், சமூக இன ஒடுக்குமுறைகளுக்கு எதிரான அவரது ஆழ்ந்த கொள்கை செயற்பாடு, நெகிழ்ந்த மனம் இப்படிப்பல காரணங்களைக் குறிப்பிடலாம்.
நான் மிக இளம் வயதில் தாயகத்தில் வாழ்ந்த காலத்தில் எமது கலைமகள் சனசமூக நிலையப் பணிகளில் அவருடன் ஆரம்பகாலத்தில் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. அக்காலத்தில் எம்மை அழைத்து, எமக்கிருக்கும் சமூகப் பணிகள், கடமைகள் என்பவற்றை உணர்த்துவார். இவர் சார்ந்த கட்சியின் ஊர்வலங்கள், கூட்டங்களுக்கு எம்மை அழைத்துச் சென்று அரசியல் விளக்கங்களையும் ஊட்டியவர்.
பின்பு நான் தாயகத்தைப் பிரிந்து ஜேர்மனியில் இருபது ஆண்டுகள் வாழ்ந்து இருபது ஆண்டுகளின் பின்பு தாயகம் வந்தபோதும் அதே சுறுசுறுப்புடன் தனது சமூகப் பணிகளில் ஈடுபட்டதைப் பார்த்தேன்.
நான் அண்மையில் தாயகம் வந்தபோது எமது கலைமகள் சனசமூக நிலையத்தின் பொன்விழா நிகழ்வில் கலந்து கொண்டு அவருடன் பணியாற்றும் அரும்வாய்ப்புக் கிடைத்தது. விழா அவருடைய தலைமையில் நடந்தபோதும் சகல பணிகளையும் ஏற்று சுறுசுறுப்புடன் நடத்தி முடித்தார்.
இ. மோகன் (3ggiĩ LD6öfì
* தோழர் நவமி. p 129)

Page 67
கடந்து வந்த பாதைகளில் நவத்தாருடன்
திருமதி. செல்வநாயகம்.
முன்னொரு நாள் வெள்ளிக்கிழமை நடுச்சாமம் தொலைபேசி அடித்தது. யார் இந்த நேரத்தில் என நினைத்து தொடர்பு கொண்டோம். கொழும்பிலிருந்து வந்த அந்தச் செய்தி எங்களை நிலைகுலைய வைத்தது. நவத்தார் காலமானார். நாங்கள் இருவரும் பேசவே இல்லை பதினைந்து நிமிடங்கள். அந்த செய்தியில் மனைவியும் அவசர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாக அறிந்தோம். அவவும் இருதயநோயாளி. நாங்கள் இருவரும் ஒன்றையும் நிதானிக்க முடியாதவர்களாக கவலையில் ஆழ்ந்து விட்டோம்.
கட்சி ரீதியாக 32 வருடங்கட்கு மேலாக எங்கள் தொடர்பு இருந்தது. எங்களை அயலில் எங்கள் தோழர் குடும்பம் இருந்தமையால் குடும்பரீதியான உறவும் வலுவடைந்தது. எங்கள் குடும்பத்தில் ஏற்பட்ட பலவிதமான நெருக்கடியான காலகட்டங்களில் தோழர் எங்களுடன் இருந்தார். தொழில் முயற்சி சம்பந்தமான நெருக்கடி வேலைகளிலும் தன்னுடைய குடும்பத்தை மறந்த எங்களுடன் இணைந்து கொாள்வார். எங்கள் தோழர் நவம் கட்சி சம்பந்தமான எந்த நடவடிக்கையிலும் முன்னணியில் நிற்பார். சில தீவிரமான முடிவுகளை முன்வைப்பார். அந்த நேரங்களில் அவரது பேருக்கு ஒத்தாற் போல நவ சுபாவங்களையும் முகத்தில்காணலாம். பின்வு நிதானமாக அவகைளின் நன்மை தீமைகளைப் புரியவைத்தால் எங்கள் மத்தியில் அவர்தான் முன்னணியில் செயல்படுவார்.
தீண்டாமை ஒழிப்பு சம்பந்தமான போராட்டகாலங்களில் அவரது பங்களிப்பு மிகவும் பாராட்டக்கூடியதாக இருந்தது. எங்கள் கட்சி வளர்க்சியின் நெருக்கடியான காலங்கள் நினைத்துப் பார்க்க முடியாதவை. இரவு பத்து மணிக்கும் மேலாக வீட்டில் பசை தயாரிதக்கப்படும். விடிய நான்கு மணிவரை சுவரொட்டிகள் ஒட்டப்படும். சகதோழர்களையும் பகுதிபகுதியாக பிரித்து விட்டு உற்சாகப்படுத்திக் கொண்டு ஓடித்திரிவார். ஒரு பகுதிக்கு அனுப்பியவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் வரவில்லையென்றால் அங்கு சென்று அவர்கள் பார்த்து வருவார். பின்வு விடியற்காலையில் சென்று சுவரொட்டிகள் எந்தப் பகுதிகளில் கிழித்து விட்டார்கள் என்று தகவலுடன் வருவார். திரும்ப திரும்ப அந்த இடங்களில் கடைசி நாள் வரை ஒட்டியே முடிப்பார்.
தொழிலாளர் தினமாகிய மேதின தயாரிப்புக்களிலும் முதலாம் திகதி நடக்கும் ஊர்வலங்களிலும் எங்கள் தோழரின் உற்சாகத்தை வர்ணிக்கமுடியாது செங்கொடிகளுடனும், செம்பதாகைகளுடனும் சிகப்பு சட்டையுடனும் மக்களை வீதிகளில் ஓடிஓடி வழி நடத்துவார். ஆரவாரித்து ஆரம்பித்து கோஷங்களுடன் திகழ்வார். செல்லும் அழகு கண்ணில் அசைவாடுகிறது. எங்கள் வீடு எங்கள்
(130 தோழர் நவம். 灭

அலுவலகத்தின் பக்கம் இருப்பதால் தோழர்கள் பலரும் மறுநாள் கூடிகுதூகலத்தில் அகமகிழ்வோம்.
எங்கள் பிள்ளைகளின் ஒழுங்கான வாழ்க்கை முறைக்கு எங்கள் தோழர் வழிகாட்டியாக இருந்தார். எந்த இடத்தில் அவரை பார்த்தாலும் வீட்டிற்கு ஓடிவந்திடுவார்கள். நவம்மாமா வந்து சொல்லிவிடுவார் என்று. அதே போல சொல்லி விட்டு வீட்டில் இருப்பார். அவரது செய்தி கேட்ட வெளியூரில் இருக்கும் எங்கள் மூத்தமகன் இவைகளை சொல்லி நினைவு கூர்ந்தார். நாங்கள் எங்கள் தோழர்களை பிரிந்து கடந்த ஒன்பது வருடங்களாக வெளிநாட்டில் வாழ நேர்ந்தது. சில குறிப்பிட்ட தோழர்களின் உறவு இருந்தாலும் நவம் குடும்பத்தாருடன் எங்கள் தொடர்பு நெருக்கமானதாகவே இருந்தது. கடந்த இரண்டு மாதாங்களாக நாங்கள் இங்கு வந்து விட்டோம். ஒன்பது வருடங்களும் விட்டுப்பிரிந்த உறவு இந்த நாட்களில் நெருக்கமாக இருந்தது. எங்களை விட்டு நிரந்தரமாக பிரிந்து செல்வதற்கு தானா இப்படி பழகினோம் என நினைக்கிறோம்.
கடமை கண்ணியம், கட்டுபாடு என்பவைகட்கு எம் தோழர் இலக்கணமாவர். தன் குடும்பவாழ்க்கையில் எளிமையாகவே காணப்பட்டார். கம்யூனிசப் பாதைகளின் வழிகாட்டியாக இருந்து சகதோழனாகவே வாழ்ந்தார். தன்னுடைய கிராமத்திலும் நல்லதொரு சமூக சேவையாளனாக குடும்பமாக இன்று நல்லதொரு வழிகாட்டியை இழந்து நிற்கிறது.
இவ்வளவு சீக்கிரமாக எங்கள் தோழரை காலன் கவர்ந்து செல்வான் என நினைக்கவில்லை. அவரது ஆத்மா எங்களை விட்டு சென்றாலும் அவர் விட்டு சென்ற கொள்கைகளை நாம் முன் எடுத்த செல்வது தான் நலம். அவருக்கு செய்யும் பெரிதான ஆத்மா ஆறுதலாக இருக்கும். நவம் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
す。Y
Y தோழர் நவமி. 131)

Page 68
சமூக விழிப்புணர்வை ஏற்படுத்திய செயல் வீரனர்
திருமதி.ஈ.தர்மலிங்கம்
மனிதகுல வரலாற்றிலே மனிதர் சமூகவர்க்கத்தின் “விளைபொருள்” ஆக இருப்பதனால் அவர்களது கருத்துக்களும், பழக்கவழக்கங்களும் வர்க்க அடிப்படையில் இருந்து கிளர்ந்தெழுவனவாக இருக்கும். சமூகம் என்பது முரண்பாடு கொண்ட இருவர்க்கங்களினால் ஆக்கம் பெற்றுள்ளது என்றும் அவற்றுக்கிடையே போராட்டம் தொடர்ச்சியாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்ட மாஒசேதுங் அவர்கள் பின்புலத்திலே தனது கல்விக் கருத்துக்களை முன் வைத்தார். முரணியற்சடவாதம் அவரது அறிவுக் கோட்பாடாக அமைந்துள்ளது.
அறிவு என்பது எப்பொழுதும் நிறைவு அடையாதது. நடைமுறையிலே தொடங்கி மனிதர் அறிவைப் பெற்றுக் கொள்கின்றனர். மீண்டும் நடைமுறைக்குச் சென்று அறிவைத் திருத்தி அமைத்துக் கொள்கின்றனர். இது முடிவில்லாத தொடர்கதையாகவே சென்று கொண்டிருக்கும்.
கல்வி என்பது வகுப்பறையினுள்ளே அடங்கியது அல்ல. ஒருவரது வாழ்க்கையில் வரையறுக்கப்பட்ட காலப்பகுதியை உள்ளடக்கியதும் அல்ல. அது மனிதர்களின் அறவொழுக்கத்தை, நுண்மதியாற்றல்களை உடலியக்கத் திறன்களைத் தொடர்ந்து வளர்ப்பதாக இருத்தல் வேண்டும். அதுதான் தொழிலாளர்களை சோசலிச உணர்வுமிக்கவர்களாக உருவாக்கும். இந்த வகையிலே செயல்முறையிலே சோசலிச உள்ளுணர்வு கொண்டவராக வாழ்ந்து காட்டிய பெருமைக்குரியவர் நவம் அண்ணா அவர்கள். உண்மையிலேயே மாஓசேதுங்கின் சுலோகத்திற்கு அமைவாக நின்று, உறுதியாக இருந்து, தியாகத்துக்கு அஞ்சாமல் வெற்றியை வென்றெடுப்பதற்கு சகல கஸ்ரங்களையும் கடந்தவர் என்று கூறலாம். கருத்தை எவரும் கூறலாம், களத்தில் இறங்கிப் போராடுபவன் தான் ஒரு சிறந்த போராளியாவான். அதற்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்.
இவர் தனது வாழ்வில் ஒரு செயல் வீரனாக பல கோணங்களில், இலங்கையின் பல பகுதிகளிலும் தன்னை பொது வாழ்வுக்காகவும் போராட்டங்களுக்காகவும் அர்ப்பணித்தவர். இவர் சமூகத்தையும், மக்களையும், உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தினரையும் ஒன்று கூட்டி உரிமைக்குரல் கொடுத்து போராடிய ஒருவர். இவர் சமூகத்திலே விழிப்புணர்வை ஏற்படுத்தியதோடு சமூகத்தைத் தட்டியெழுப்பிச் சிந்திக்க வைத்தவர் என்றால் மிகையாகாது.
இவர் ஒரு குறுகிய வட்டத்துக்குள் வாழ்ந்தவரல்லர். “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற உயரிய இலட்சியம் கொண்டவராக நின்று 1995 களில் இடம்பெயர்ந்து சென்ற காலப்பகுதியில் வேலை இழந்து நின்ற தொழிலாளிகளை ஒன்று கூட்டி, வன்னி, வவுனியா, கொழும்பு ஆகிய பகுதிகளில் வேலைவாய்ப்பைப் பெற்று, தானும் முன்னின்று தொழில்முயற்சியை மேற்கொண்டு தனது குடும்பமும்,
(132 தோழர் நவமி. *

தொழிலாளர் குடும்பமும் வாழ வழிகாட்டியவர். இவர் ஒரு பொதுவுடைமைத் தென்றலாகத் திகழ்ந்து பூங்காற்றாய் தவழ்ந்தவர். ஒருவருடைய வாழ்வில், நல்ல பண்பு, நல் நடத்தை, சொல் செயல், நேர்மை, அன்பு, மனித நேயப் பண்பு, சமூகத்துடன் பொருத்தப்பாடு உடையவராக வாழும் வாழ்க்கைமுறை என்பன என்றும் அவர்களை உயர்ந்த ஸ்தானத்திலே வைத்து எண்ணப்படுவார்கள். இந்த வகையில் மேற்கூறப்பட்ட அம்சங்கள் அத்தனையும் கொண்டு விளங்கியவர் நவம் அண்ணா அவர்கள். ܝ
இவர் குடும்ப வாழ்விலும், சமூகவாழ்விலும் ஆற்றிய சேவைகள் மக்கள் மனதை கவர்ந்த ஒரு மாமனிதனாகத் திகழ்ந்தார் என்பதை அவரது இறுதி அஞ்சலி நிகழ்வின் போது மதிப்பிட முடிந்தது. இவர் ஒரு மார்க்சிய லெனினிய கோட்பாட்டை முன்னெடுத்துச் சென்ற போராளியாகவும், நல்ல சமூக சேவையாளனாகவும், நல்ல குடும்பஸ்தனாகவும், நல்ல தந்தையாக, சமூக விழிப்புணர்வை ஏற்படுத்திய ஒரு வழிகாட்டியாக எல்லோராலும் நேசிக்கத்தக்கவராக நின்றதோடு அவரது அன்பான மனைவி, பிள்ளைகளும் அவரது கொள்கைக்கு உறுதுணையாக நின்று பொதுவுடைமைக் கருத்துக்களை உள்வாங்கி அவருடன் தாமும் நின்று சேவை புரிந்தனர். இத்தோடு அவருடைய குடும்பம் அன்பு, கருணை, ஒற்றுமை, கல்வியறிவு, நல்ல மனப்பாங்கு கொண்ட மனிதநேயப் பண்புகள் அனைத்தும் பெற்ற நல்லதொரு குடும்பமாகத் திகழ்ந்தவர்கள். இவரது குடும்பத்தினர் என்றும் அவரது கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வார்கள். அவர் காட்டிய வழியில் அனைவரும் தொடர்ந்தால் நல்லதொரு பொதுவுடைமைச் சமுதாயத்தை உருவாக்கலாம்.
நன்றி -
தையிட்டி காங்கேசன்துறை
* தோழர் நவமி. 133)

Page 69
அன்பு உள்ளம் படைத்த கலைமகளின் .
கலைச்செயலர் P.N. (DLD600Tg5 Tafar
கலைமகள் சனசமூக நிலையத்தின் ஒரு மாதகாலத்திற்கு முன் என்னை என் சமூகத்தையும் விட்டுச் சென்று மறைந்த நிலையத்தின் தலைவர் அன்பு உள்ளம் படைத்த நவரட்ணம் அவாகள். அவரை பற்றி சில விடயத்தை கூறிக் கொள்ளுவது என்றால், அரசியல் தலைவர்களையும் அறிஞர்களையும் கலைஞர்களையும் உள்ளடக்கிய நிலையத்தின் தலைவர் தான் நவரட்ணம் அவருடைய சேவைகளை பற்றி கூறமுடியாது ஏன் என்றால் எங்கள் தமிழ் இனத்துக்காக அரசியலிலும் ஈடுபட்டார். எமது கலைமகள் சனசமூகநிலையத்துக்கு நீண்ட காலமாக பாடுபட்ட நல்ல மனிதர். நான் மூன்று ஆண்டாக கலைச் செயலராக சேவையாற்றி வருகிறேன். அவர் தலைவராக இருந்தார். எமது நிலையத்தின் மேலே நூலக கட்டடம் கட்டவேண்டும் என்று கூறியதும் உடனே தானாகவே நின்று தானும் சேர்ந்து கட்டடத்தை கட்டி முடித்தார். அவருடைய தலைமைத்துவத்தில் தான் அனைத்து நிலையத்தின் நிர்வாகிகளும் இந்த நூலகத்துக்காக பாடுபட்டவர்கள். அது மட்டுமல்ல. இந்த நூலகத்துக்கு திறப்பு விழா செய்யவேண்டும் என எண்ணி இருந்தோம். அப்போது எமது நிலையத்தின் பொன்விழா செய்யவேண்டிய நிர்ப்பந்தத்திலே இருந்தது. ஆனால் இந்த இரண்டு விழாவும் செய்வதற்கு எங்களுடைய நிலையத்தில் பணவசதி இல்லை. உடனே நிர்வாகச் சபைக் கூட்டம் கூட்டித் தான் முடிவெடுத்தோம். பணத்தையும் நூல்களையும் ஒவ்வொரு கடைகளிலும் சேர்ப்போம் என்று. ஆனால் ஒரு மாத காலம் தான் இருந்தது இருந்தும் தலைவர் நவரட்ணம் அவர்களின் ஊக்கத்திலே அவரும் அவருடைய மனைவி சந்திரா அவர்களும் மற்றும் நிலையத்தின் நிர்வாகிகளும் இளைஞர்களும் இணைத்து ஓரளவு பணத்தையும் நூல்களையும் சேர்த்தும் எமது நிலையத்தின் பொன்விழா ஆண்டும் நூலகத் திறப்புவிழாவும் மிக மிகச் சிறப்பாக நடைபெற்றது உண்மையில் இந்த விழாவுக்கு கூடுதலாக கஸ்ரப்பட்டு நடத்தி முடித்தவர் என்றால் நிலையத் தலைவர் நவரட்ணம் அவர் தான். அது மட்டுமல்ல அவர் நிலையத்தின் விடயமாக இருக்கும் எந்தவொரு விடயத்தையும் என்னையும் எங்கள் இளைஞர்களுடன் கலந்து ஆலோசித்து தான் எந்த முடிவும் எடுப்பார். அவர் என்னைக் காண வேண்டும் என்றால் காலை 6 மணிக்கே வீட்டிற்கு வருவார். ஆனால் நான் நித்திரையால் எழும்பியிருக்க மாட்டேன் இருந்தும் நவரட்ணம் அவர்கள் நான் நித்திரையால் எழும்பும் வரை எனது அண்ணா அம்மாவுடன் அன்பாகவே கதைத்து கொண்டு நிற்பார். நான் சிறியவனாக இருந்து பொறுமையாக இருந்து கதைத்துப் போவார். சொல்லப்போனால் அவர் பெரும் தன்மையில்லாதவர் என்றுதான் சொல்வேன். அவரைப் போல் நல்ல அன்பான தலைவர் எங்களுடைய அயலவருக்கு கிடைப்பது என்றால் இனி வரும் காலத்தில் கடினம் என்று கூறி அவர் என்றென்றும் அவரை என்னால் மறக்க முடியாது.
அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.
(134 தோழர் நவமி. 安

*இன்சொல் பேசுவதும் இன்முகம் காட்டுவதும்”
“இன்சொல் பேசுவதும் இன்முகம் காட்டுவதும் புன்முறுவல் ஊட்டுவதும் புதுமைகளை நாடுவதும் எம்வாழ்வில் எங்கும் நாம் எவரையும் கண்டதில்லை மாற்றம் மறுமலர்ச்சி மகத்தான சேவை செய்தல் கூற்றணுக்கும் பிடிக்காது கூட்டியுனைச் சென்றனனே”
அமரர் சி. நவரத்தினம் அண்ணன் அவர்கள் இறந்த செய்தி தொலைபேசி மூலம் எமக்குக் கிடைத்ததும் அதிர்ச்சியானோம். எங்களால் நம்பவே முடியவில்லை. அதுதான் உண்மை என்று தெரிந்ததும் கலங்கினோம், அழுதோம். உடனே நாங்கள் எமது உறவினர்கள், நண்பர்கள் யாவருக்கும் அவர் இறந்த செய்தியைத் தெரிவிக்க அவர்களும் தங்கள் துக்கங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டார்கள்.
எங்கள் நவமண்ணன் அவர்கள் ஆத்திசூடிக் கலைமகள் சனசமூக நிலையத்தின் பெருவளர்ச்சிக்கு அரும்பாடுபட்டவர். பல வருடங்களாக இந்நிலையத்தின் தலைவராக, செயலாளராக இருந்து ஊர்மக்களுக்குப் பல நன்மைகள் செய்தவர். சமூக சேவைகளில் ஈடுபட்டவர். ஆற்றல் மிகுந்த பேச்சின் மூலம் மக்களுக்கு அறிவைப் புெருக்கியவர். தன்னலம் மட்டும் கருதாது பிறர் நலமும் காணும் பண்பாளர்.
அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.
எம்மனதில் “நவரத்தினம்’ எனும் பெயர் நீங்காத இடம் பெற்றுள்ளது.
பொ. செல்வநாயகம்
செ. தனம் சுவிஸ்
* தோழர் நவமி. 135)

Page 70
ஆருயிர் நவம் ஐயாவே!
நாங்கள் அன்புடன் அத்தான் என்று அழைக்கும் நவம் ஐயாவே! உங்களின் திடீர் மறைவு எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நீங்கள் எங்களுடன் பழகியவை என்றும் பசுமையாக உள்ளது. உங்களுடன் பழகியது சில காலம்தான் ஆனாலும் பல வருடங்கள் பழகிய மாதிரி இருக்கிறது. எங்களுக்கு வேலை நுணுக்கங்களையும், நுட்பங்களையும் அழகாகச் சொல்லித் தந்தீர்களே! எங்களை மிகவும் அன்புடன் அழைப்பீர்களே நல்ல மாதிரி உபசரிப்பீர்களே. வேலைத் தளத்தில் பணிவுடன் எங்களைக் கொண்டு நடத்துவீர்களே. எங்களை உங்கள் பிள்ளைகள் போல் நினைத்து பழகுவீர்க்ளே. உங்களைப் போல் ஒரு பண்பானவரை நாங்கள் இனிக் காண்போமா? நீங்கள் இறக்கும் அன்றும் எங்களுடன் எவ்வளவு இனிமையாக பழகினிர்கள். வேலை நேரத்தில் பகிடிகளும், பம்பல்களும் விடுவீர்களே. நேரம் போவதே தெரியாது. உங்களின் நினைவகள் எங்களை விட்டு அகழ்வதில்லை. உங்கள் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம்.
உங்களின் அன்பான தொழிலாளர்கள் த.செல்வக்குமார் இ.நடேசன் நா.பரமலிங்கம் து.மதி
சி.சிறிதரன் க.அருளாநந்தம் சி.விக்னேஸ்வரன்
(136 தோழர் நவம். *

அமரர்.சி.நவரட்ணம்
அவர்களைப் பற்றிய ஒரு ஞாபகார்த்தக் குறிப்பு.
நண்பன், சி. நாகராசா (தேவு).
08.10.2004 அன்று சி.நவரட்ணம் எம்மை விட்டுப் பிரிந்த செய்தி கேட்டு அடைந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் நான் மீளவில்லை.
அன்பான பேச்சு, நல்ல இதயம், சாந்தமான முகம், கூறியவற்றை செய்யும் நிதானம் என்பவற்றைக் கொண்ட நவரட்ணம் இன்று எம்மிடையே இல்லை நம்ப முடியவில்லை!.
யார் யாருக்கு உயர்ந்த மரியாதையும் வணக்கமும் செலுத்த வேண்டுமோ அதைக் கட்டாயமாகக் கடைப்பிடிப்பவன் நான் என்ற வகையில் எனது மரியாதையும் வணக்கமும் அமரர்.சி.நவரட்ணம் அவர்களுக்குச் செலுத்துகிறேன்.
அவரின் சிறு வயது தொடக்கம் அவரது இறுதிக் காலம் வரையும் அவரது நண்பனாகத் திகழ்ந்தேன். அவரது வாழ்க்கை வரலாற்றின் பசுமையான நினைவுகள் சிலவற்றை குறிப்பிடுகிறேன்.
அவரின் ஆரம்ப காலத்திலிருந்து முற்போக்குக் கொள்கை உடையவராக மக்களுக்கு சேவை செய்யும் கொள்கை உடையவராகவும் இருந்தார். இந்தக் காலகட்டத்தில் அவரின் முற்போக்கு எண்ணத்தை நிறைவு செய்யக்கூடிய ஒரு நண்பனின் உறவு கிடைத்தது. அவர் மூலம் முற்போக்குக் கொள்கையுடைய வெகுஜன இயக்கத்துடன் தொடர்பு ஏற்பட்டு அன்றைய காலகட்டத்தில் சாதி வெறிபிடித்தவர்களுக்கு எதிரான ஆலயப் பிரவேசம், :ே சீர்க்கடைப் பிரவேசம் போன்றவற்றிற்கு போராடி முன்னின்றுழைத்தவர். அத்துடன் இடதுசாரி கம்மியூனிஸ் கட்சியுடனும் இணைந்து பல போராட்டங்களுக்கு முன்னோடியாக நின்று அதை வழிநடத்தியவர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். அதோடு மட்டுமல்ல எமது அயலிலே உள்ள பொதுப் பணிகளிற்கும், பொது நிகழ்வுகளுக்கும் முன்னின்று இளைஞர்களோடும், முதியவர்களோடும் தோளோடு தோள் நின்று மனச்சோர்வு இல்லாது செய்து முடிக்கக்கூடிய ஓர் செயல் வீரனாகத் திகழ்ந்தார்.
அவரது சேவை எமது ஞாபகத்திலிருந்து மறையாத, மறக்கமுடியாத ஒன்று.
“வையகத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்” என்ற வாக்கிற்கு இணங்க அனைவருடனும் அன்பாகவும் மகிழ்வாகவும் பழகிக் கொள்கின்ற அமரர் சி.நவரட்ணம் எதிர்பாராத விதமாக இறைவனடி சேர்ந்து விட்டார். இவரது இழப்பு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாக அமைவதுடன் இவரது பிரிவால் துயறுரும் மனைவி, பிள்ளைகள் மற்றும் உறவினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதோடு அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
ஓம் சாந்தி சாந்தி!! சாந்தி!!!
26.10.2004. * தோழர் நவமி. 137)

Page 71
என் நினைவினிலே நிலைத்து நிற்பவரே
élst 606ölum விக்கினேஸ்வரன்
எங்களில் ஒருவனாக வாழ்ந்தவரே - நவமே! எளிமையான செயலால் எமை கவர்ந்தவரே. உழைப்பினிலே உயர்வைக் கண்டவரே. தொழிலாளர் மேன்மைக்காக உழைத்தவரே.
எங்கள் குடும்ப உறவை உயர்வாக மதித்தவரே. உம் உள்ளத்தில் எழும் எண்ணச் சிதறல்களை எமக்கு தெளிவாக உரைப்பவரே. வேலை நேரங்களில் நாம் களைத்து சோர்வு கண்டால் அச் சோர்வை அகற்றி எம்மை சுறுசுறுப்பாய் தொழில் புரிய பகிடிகள் பல புரிபரே.
எதிலும் சளைக்காமல் சமூக முன்னேற்றத்திற்காய் உழைத்தவரே. ஊரில் நடக்கும் சுகதுக்க நிகழ்வுகளில் முன் நின்று நடத்தியவரே. இன்று உன் திடீர் பிரிவுச்செய்தி இதய நாளத்தை அடைத்ததையா. காலை முதல் மாலை வரை கண்ட உன் வதன முகம் இராப்பொழுதினில் மறையும் என்று நாம் நினைக்கவில்லை. பொல்லாத காலன் வெள்ளி இரவே உன் சேவை இப் பூவுலகில் காணும் என நினைந்து தன் திருவடிக்கு உன் சேவை தேவையென உன் கதை முடித்தானோ. அண்ணலே நவரத்தினம் அண்ணலே, உம்மைப் போன்ற உயர் குணம் கொண்ட ஒருவரை இனி எம்மத்தியில் காண்போமா.
நவமே. நவமே. நவமே என் நினைவினிலே நிலைத்து நிற்பவரே! உங்கள் ஆத்மா சாந்திக்காகப் பிரார்த்திக்கும்.
சின்னையா விக்கினேஸ்வரன்
54/12 ஆத்திசூடி வீதி, யாழ்ப்பாணம்.
(138 தோழர் நவம். 5安

சிறந்த ஒரு சேவகன் நவம் அண்ணா.
இ.பிரதிஸ் அகர முதல எழுத்து எல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு
என்னும் வள்ளுவன் வாக்கு போல எமது கலைமகள் சனசமூக நிலையத்துக்கு கிடைத்த அரும் பெரும் பொக்கிசமாக சிநவரெட்ணம் ஐயா அவர்கள் திகழ்கின்றார். அவர் எமது கலைமகள் சனசமூக நிலையத்துக்கு ஆற்றிய சேவைகள் எண்ணிலடங்காதவை. அத்தோடு அவர் ஓயவில்லை. அயல் வாழ் மக்களின் நலனுக்காக அயராது உழைத்துள்ள பெரியோர்கள் வரிசையில் அவரும் ஒருவராகத் திகழ்கிறார். அவர் கட்சிகளிலும் தன்னை இணைத்து அதன் மூலமாகவும் மக்களுக்கு சேவையாற்றினார்.
இன்று கலைமகள் சனசமூக நிலையத்தில் ஒரு பொன்விழா மண்டபம் உள்ளது. அதனை கட்டுவதற்காக அவரும் நிலைய உறுப்பினர்களுமாக சேர்ந்து பெரும் முயற்சி எடுத்தோம். அந்த முயற்சியின் பலன் தான் இன்று பொன்விழா மண்டபம். அதிலும் கூடிய பங்கு வகித்தவர் எமது நிலையத் தலைவர் சிநவரெட்ணம் ஐயா தான். ஏன் என்றால் எமது கட்டடத்துக்க போதிய நிதி வசதி இல்லாத போது அவரும் நிலைய உறுப்பினர்களிலும் சிலரும் சேர்ந்து ஒவ்வொரு வீடு வீடாகவும் ஒவ்வொரு கடைகளாகவும் சென்று பணம் திரட்டித் தான் இந்த கட்டடம் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டது.
நிலைய கூட்டங்களின் போது ஏதேனும் பிரச்சினைகள் வரும் போதும் அவற்றினை பொறுமையாக கையாண்டு கூட்டப் பிரச்சினைகளை சுமூகமான முறையில் தீர்த்து வைக்கும் மனப்பாங்கினை உடையவர்.
இவ்வாறு அவரை பற்றி கூறிக்கொண்டே போகலாம். இவ்வாறான ஒரு
தலைவரை இழந்தது கலைமகள் சனசமூக நிலையத்திற்கு பேரிழப்பே ஆகும்.
பொருளாளர் கலைமகள் சனசமூக நிலையம்
* தோழர் நவமி. 139)

Page 72
எங்கள் நவத்தாரே...!
க. அருளானந்தம் சேறிடை கலந்து வாழ்வில் செப்பிய கமலம் போல - நவத்தாரே!
நாறிடை ஒருத்தனாக நாநிலம் போற்ற வாழ்ந்த - நவத்தாரே
வேரென நின்று எமக்கொரு தலைவனாக (ஒளியாக) வேலைகள்
வாங்கினாயே
- நவத்தாரே! உங்களை காலனும் கவர்ந்தானோ, நவத்தாரே! எம் கண்களும் கரையத் தானோ! புல்லையும் மிதித்தால் சாகா பொலிவுடன் தழைத்தோங்கும்! நவத்தாரே...! ஆ1. தாங்க முடியவில்லை - நவத்தாரே.
உங்கள் நினைவுகள் என்னை புண்படுத்துகின்றதே! நவத்தாரே...!
வில்லை விட்ட அம்பாய் எங்கே போனிர்கள்? கண்ணது பட்டுத்தானோ கரைந்தது உந்தன் வாழ்வு? விண்ணிடை நின்று வாழ மனமது மறுத்தேனோ? நவத்தாரே! என் குடும்பம் உங்களை நினைத்து ஊமையாய் அழுகின்றது! நவத்தாரே
உங்கள் கண்மணிகளும் கண்ணிரில் நீராயிறைத்து நிற்கின்றார்கள்
எங்கே சென்றீர்கள் எம்மை தேற்றிட
யார் தான் வருவார்கள்...!
உங்கள் நினைவுகள் எங்கே
சங்கமிக்கும்! நவத்தாரே.
க. அருளானந்தம் குடும்பத்தினர் 54/14, ஆத்திசூடி வீதி, கந்தர்மடம்,
யாழ்ப்பாணம்.
(140 தோழர் நவம். 女

எங்கள் சேவையாளன் நவத்திற்கு கணிணிர் துளிகளை காணிக்கை ஆக்கி.
எங்களில் ஒருவனாக உற்ற நண்பனாக உயர்வான எண்ணக்கருத்தை முன்வைத்து சமுக சேவை என்றால் என்ன அதன் பிரச்சினைகளை எமக்கு தெளிவுபட விளக்கி எம்மையும் அதனுள் ஈடபடவைத்தவர் என்போன்ற இளைஞர் மத்தியில் எழும் கருத்து மோதல் வாய்த்தர்க்கம் போன்றவற்றை தன் அன்பான அணுகுமுறையால் எம்மை அரவணைத்து சமரசம் செய்து வைப்பார்.
ஊர் பிணக்கு என்று கடிதம் எவர்கொடுத்தாலும் நிர்வாகத்துடன் ஆலோசனை நடத்தியே அதனை இருபகுதியினரையும் அழைத்து பிணக்கினனைத் தீர்த்து வைப்பார்.
எம் சனசமுக இளைஞர் யுவதிகள் விளையாட்டுத்துறையில் முன்னேற்றம்பெறுவதற்காக அயராது உழைத்தவர். வரும் கால சந்ததியின் வளமான கல்வி வளம் தழைத்தோங்க வேண்டும் என எமது நிலையத்தில் ஜம்தாவது ஆண்டினிலே நூல் நிலையம் அமைவதற்கு அரும்பாடுபட்டவர். அவரின் இவ் எண்ணக்கனவு நனவாக நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைப்போம் உயர்வான எண்ணத்துடன் எங்கள் சேவையைாளன் நவத்திற்கு கணிணர்த் துளிகளை காணிக்கையாக்கி
பரராஜசிங்கம் முரளிதரன் விளையாட்டுச் செயலர் கலைமகள் சனசமூக நிலையம்.
* தோழர் நவம். 141)

Page 73
கலைமதி சனசமூக நிலையம்
புத்தூர் மேற்கு, புத்தூர்.
மறைந்தும் மறையாத நினைவுகள்
இறப்பென்பது இயற்கையாகவே ஏற்படுகின்ற ஓர் நிகழ்வாகும். இந்த வகையிலே பல்வேறுபட்ட மனிதர்கள் தோன்றி மறைகின்றனர். ஆனால் சிலருடைய மறைவுகளை எம்மால் மறக்க முடிவதில்லை. அது மட்டுமன்றி அத்தனையோரின் மறைவுகள் எம் மத்தியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் நவரத்தினம் அண்ணாவின் மறைவு எமது கிராம மக்களுக்கும் எம்மைப் போன்ற சாதாரண உழைக்கும் மக்களுக்கும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இத்தகைய தாக்கத்திற்குக் காரணம் தோழர் நவரத்தினத்தின் வாழ்ந்து வந்த அரசியல் பொது வாழ்வும் அதன் அடிப்படையிலான குடும்ப வாழ்வும் ஆகும். தன்னுடைய இளம் வயதிலிருந்தே தன்னை கம்யூனிஸ்ட் கட்சியோடு இணைத்துக் கொண்டு கட்சியால் நடாத்தப்பட்ட பல்வேறு பட்ட இயக்கங்கள், போராட்டங்களில் எல்லாம் முன்னின்று செயற்பட்டு வந்துள்ளார். சமூக விடுதலைக் கருத்துக்களைப் பரப்புவதிலும் அதன் அடிப்படையில் சாதிய தீண்டாமை அடக்கும் முறைகளை எதிர்த்துப் போராடுவதிலும் புரட்சிகரமான பாத்திரத்தை வகித்து நின்று போராடி வந்துள்ளார். அவ்வாறான ஒரு தோழருடைய மறைவு கட்சிக்கும் சாதாரண மக்களுக்கும் பாரிய இழப்பாகவே அமைந்துள்ளது.
தோழர் நவரத்தினம் எமது கிராம மக்களோடு குறிப்பாக இளைஞர்களோடு நெருக்கமாக இருந்து வந்தவர். எமது புத்தூர் கலைமதிக் கிராமம் 25 ஆண்டுகளுக்கு முன்பு நிலம், பணம், சாதி ஆதிக்கம் கொண்டவர்களால் அடக்கி ஒடுக்கப்பட்டு வந்ததிற்கு ஆட்பட்டு நின்ற கிராமம் ஆகும். இந் நிலையிலே தான் கம்யூனிஸ்ட் கட்சி நமது கிராமத்திற்குள் காலடி எடுத்து வைத்தது. புதிய புரட்சி கரமான கருத்துக்களை முன் வைத்தது. மக்கள் சக்தியை எமது இளந்தலைமுறையினருக்கு எடுத்துக் கூறி புதிய திசையைக் காட்டி வழி நடக்க வைத்தது. அதற்காக கட்சியின் பல தோழர்கள் நமது கிராமத்திற்கு வந்து கூட்டங்கள், கருத்தரங்குகள் நடாத்தி நமது இளைஞர்கள் யுவதிகளை சிந்திக்கவும் செயற்படவும் வைத்தனர். அத்தகையவர்களில் தோழர் நவரத்தினமும் ஒருவராக இருந்தார்.
நமது கிராமத்தின் மாற்றத்திற்காக முன்னெடுக்கப்பட்ட சகல இயக்கங்கள் போராட்டங்களில் தோழர் நவரத்தினம் ஒருவராக இருந்தார். எமது சனசமூக நிலையத்தின் செயற்பாட்டிற்கும் வளர்ச்சிக்கும் துணையாக நின்றவர்களில் அவரும் ஒருவர் ஆவர். நாம் எத்தகைய பொது நிகழ்சிகள் கூட்டங்கள் வைத்தாலும் யாழ்ப்பாணத்தில்
(142 தோழர் நவம். 安 arr

இருந்து சைக்கிளிலில் வந்து நின்று அவற்றில் பங்கு பற்றிச் செல்வது அவரது வழக்கம். அதனால் நமது மக்களுக்கும் இளைஞர்களுக்கும் நன்கு அறிந்த ஒரு தோழராக இருந்து வந்தார். கடந்த யுத்தத்தால் அழிக்கப்பட்ட எமது சனசமூக நிலையம் புதிய கட்டிடம் ஆரம்பிக்கப்பட்டு முடிவுறாத நிலையில் இருந்து வருவதைப் பார்த்து எப்படியும் அதைக் கட்டிமுடிக்க வேண்டும் என்றும் அதற்குத் தனது முழுஉதவி ஒத்துழைப்பைத் தருவதாகவும் கூறி இருந்தார். அத்தகைய ஒரு பொது அக்கறையும் மக்கள் மீதான கொள்கை வழி அன்பையும் காட்டி நின்ற ஒரு முக்கிய தோழரை நாம் இழந்து விட்டமை துயரமானதாகும்.
கம்யூனிஸ்ட் (புதிய ஜனநாயகக் கட்சி) கட்சிக்கும் சாதாரண உழைக்கும் மக்களுக்கும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வந்த தோழர் நவரத்தினத்தின் இறப்பை அறிந்தவுடன் நாம் எல்லாம் ஒரு கணம் அதிர்ந்து விட்டோம். கவலையும் துக்கமும் நம்மை ஆட்கொண்டன. அவரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் கட்சித் தோழர்கள் மக்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கின்றோம். அவரது பெயரும், அவரது மக்கள் சேவைகளும் என்றும் நிலைத்து நிற்கும். அவர் முன்னெடுத்த கொள்கைகள் தொடர்ந்து முன்சென்ற வெற்றி பெறும் அதற்கு நாமும் தொடர்ந்து பணி புரிவோம்.
நிர்வாகிகள் கலைமதி சனசமூக நிலையம் புத்தூர் மேற்கு, புத்தூர்.
X தோழர் நவமி. 143)

Page 74
எமது நன்றிகள்
தோழர் நவம் அவர்களின் மறைவுச்செய்தி அறிந்து 10.10.2004 அன்று நடந்த இறுதி நிகழ்வில் கலந்து கொண்டும் கடிதம், தொலைபேசி, தந்தி, தொலை நகல் மூலம் அனுதாபம் தெரிவித்தோருக்கும், பத்திரிகை வாயிலாகவும், அஞ்சலிப்பிரசுரங்கள் மூலமும் அனுதாபங்களை வெளியிட்டோருக்கும் எமது நன்றியைத் தெரிவிப்பதுடன் முதல்மாத அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தோருக்கும் இம்மலருக்கு அஞ்சலிக்கட்டுரைகள், கவிதைகள் தந்தோருக்கும், அச்சிட்டுதவிய பூரீராம் பிறின்ரேஸ் நிறுவனத்தாருக்கும், கணனி அச்சு வடிவமைப்பிலும், உருவாக்கலிலும் உதவிய “görasið” ஆசிரியர்குழு, நண்பர்களுக்கும்
எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
நினைவுக்குழுவும் குடும்பத்தினரும்
(144
தோழர் நவமி. F安


Page 75
பலகாய்க்கிடந்த