கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பதிவுகள்

Page 1


Page 2

அ யேசுராசா: (1
இவர் 1 ஒளட்க்கரை விதி குருநகர் யாழ்ப்பாணம்

Page 3
02 பதிவுகள்
அலை வெளியீடு -9
பதிவுகள் (கலை, இலக்கியப் பத்திகள்)
91. Guldi.JPT&T முதற்பதிப்பு: மார்கழி, 2003 அலை வெளியீடு இல, ஓடைக்கரை விதி, குருநகர், யாழ்ப்பாணம். அச்சுப்பதிப்பு : அந்திவானம் பதிப்பகம், புதுக்குடியிருப்பு. விலை: ரூபா 130/=
PATHIVUKAL (Art and Literary Columns) A.Jesurasa First Edition : December,2003.
Alai Veliyeedu No:1, Odaikkarai Road, Gurunagar, Jaffna. Printers: Anthyvanam Pathippakan Puthukkudiyiruppu Price: Rs 130fc.

அமைதியாய்.
கிழக்கில் ஒளிரும் மதிப்புநிறை படைப்பாளுமை, சண்முகம் சிவலிங்கம் அவர்களுக்கு.
<9 Guggासा :C 03

Page 4

01.
02.
03.
04.
05.
06,
07.
08.
09.
0.
11.
உள்ளே.
என்னுரை
பதிவுகள் 1 அலை - வ.அ-பல்கலைக்கழகக் கருத்தரங்கு. பதிவுகள் - 2 நா. சுந்தரலிங்கம், தார்சீசியஸ் - கிருஷ்ணன் நம்பிஇலக்கியக் கூட்டங்கள்.
பதிவுகள் - உருவமும் உள்ளடக்கமும் - உலகத் திரைப்பட மேதைகளின் தொடர்.
பதிவுகள் - 4 அலையின் செயற்பாடும். நிறுத்தமும் - தேசியத் தாழ்வுச்சிக்கல்.
பதிவுகள் - 5 பலங்ஹற்றியோ - தார்சீசியசிற்கு விருது. பதிவுகள் = 8
05 Bu}8;JIT8IT X) .9کی
07
09
12
15
9
22
25
வேர்னர் ஹேர்ஸொக் - சொல்தாது உன்னஹே கருத்தரங்கு.
பதிவுகள் - 7 நுஃமானின் கருத்துக்கள் - ஒரு மதிப்பீடுபற்றி. பதிவுகள் - 8 மோறோ பொலோக்நினியின் திரைப்படங்கள் - அன்பன் எஸ்தியின் அறுவடை
பதிவுகள் - 9 புதிய சாதிவாதம் - சாஹித்திய மண்டலப்பரிசுப் பஹிஸ்கரிப்பு - விமலதாசன் - க. அருமைநாயகம்.
பதிவுகள் - 10
31
35
44
St.
கத்தரீன் ஆன்போர்ட்டர் - சி.வி.வேலுப்பிள்ளை -சார்லி சப்ளின்
திரைப்படவிழா.

Page 5
06 *பதிவுகள்
12.
13.
14.
15,
6.
17.
18,
19,
20.
21.
பதிவுகள் - 11 மருதூர்க்கொத்தன்-ஒவியர் மாற்கு-இலங்கை இலக்கியப் பேரவையின் சான்றோர் @@...
பதிவுகள் - 12
ஃவாஸ்பின்டரின் திரைப்படவிழா - சக்தி பிறக்குது நாடகம்
- கவிதா நிகழ்வு-ஈழமுரசில் அம்பலத்தரசன் -சில மதிப்பீடுகள் பதிவுகள் - 13 சத்யஜித் ரேயின் செவ்வி-ஒவிய அரங்கேற்றம்-குரியனோடு பேசுதல் - தமிழ்ப் படகு மக்கள்-பீரிசிற்கு அஞ்சலி. பதிவுகள் - 14 மாற்குவின் ஓவியங்கள்-"ரீமாவின் ஓவியங்கள்-வோல் ஸொயிங்கா - தமயந்தியின் புகைப்படக் கண்காட்சி.
பதிவுகள் ம 15 சோஷலிச யதார்த்தவாதம்-சதீஸ் குஜ்ரால் "த லாஸ்ற்
ரெம்ப்ரேஷன் ஒஃவ் கிறைஸ்ற்-போராசிரியர் சிவத்தம்பியின் பேச்சு.
பதிவுகள் - 16
அறியப்படாதவர்கள் நினைவாக." நூலின் விமர்சன அரங்கு. பதிவுகள் - 17 எம்.பி.சீனிவாசன்-நிகராகுவா அசலான புரட்சி முன்னுரைஇலங்கைத் தமிழ்ப்படைப்புக்கள் ஆங்கிலத்தில்-சிறுகதை நாள். பதிவுகள் - 18 கநா.சு-நியூட்டன் குணசிங்க-மாவத்த" வின் தமிழிலக்கியச் சிறப்பிதழ்-கே.எஸ்.சிவகுமாரனின் செவ்வி.
பதிவுகள் - 19 புதியதொரு 'வாய்பாட்டில்' நாடகங்கள்-பூதராயனின் இலக்கிய Μπρου,
பதிவுகள் - 20
வீடியோத்துறை-கொச்சையான குரல்கள்.
61.
7.
84
101
09
114
117

.9 GuóUIgI.Q 07
என்னுரை
1975இன் இறுதிப்பகுதியில் “அலை’ இதழை வெளியிடுவதற்குரிய ஆயத்த வேலைகளில் ஈடுபட்டவேளை, “பதிவுகள்’ என்ற பெயரில், கலை - இலக்கியம் சார்ந்த ‘பத்தி யினை அவ்விதழில் தொடர்ந்து எழுதவேண்டுமென எண்ணினேன்; ஆயினும், ஆசிரியர் குழுவில் இணைந்திருந்த ஏனைய மூன்று நண்பர்களும், ஒவ்வொரு இதழிலும் ஒவ்வொருவராக மாறிமாறி எழுதலாமென அபிப்பிராயப்பட்டனர். அதனை ஏற்றுக்கொண்டு முதலாவது இதழில் ‘பதிவுகள்’ பத்தியினை எழுதினேன்; தொடர்ந்து ஏனையோர் எழுதினர். காலஞ்செல்ல ஆசிரியர் குழு மூவராகி, இருவராகி, இருபத்தைந்தாவது இதழிலிருந்து நான்மட்டும் தனியாகச் செயற்பட நேர்ந்தது; எனவே அதனிலிருந்து - கடைசியான முப்பத்தைந்தாவது இதழ்வரை, ஒவ்வொரு இதழிலும் எழுதினேன்.
மனதைக் கவர்ந்தவை, மாறுபாடானவை, எதிர்வினைக்குரியவை எனப் பலவற்றை எழுதினேன். அன்று இலங்கையிலும் தமிழகத்திலும் நிலவிய சிறுபத்திரிகைச் சூழலின் தாக்கம் - தவிர்க்கவியலாதவாறு - இப்பத்தியிலும் படிந்திருக்கிறது. சரி - தவறு என்ற ரீதியில் தார்மீக நிலைப்பாட்டில் செயற்பட்டிருக்கிறேனே தவிர, யார்மீதும் வலிந்து குற்றஞ்சாட்டும் நோக்கு எனக்கு இருந்ததில்லை ஆயினும், சுமார் பதினைந்து ஆண்டுகளிற்கு முன்னர் எழுதப்பட்ட இப்பத்திகளில் - சில

Page 6
08 பதிவுகள்
இடங்களை (அடிப்படைக் கருத்தை மாற்றாமல்) தற்போது மென்மைப்படுத்தியுள்ளேன். சில விடயங்களுடன் தொடர்புபட்டவர்கள் மீது இன்றும் மதிப்புவைத்துள்ளேன்; எனவே, அவர்கள் சம்பந்தப்பட்ட மாற்றுக் கருத்துக்களை ‘குறித்த விடயங்கள் மீதான எனது பார்வை’ என மட்டுமே கொள்ளவேண்டும்.
முன்னர் ஆங்கிலத்தில் மட்டும் குறிப்பிடப்பட்டுள்ள சொற்கள் - சொற்றொடர்களை ஒலிபெயர்ப்புச் செய்திருப்பதுடன், பலவற்றிற்குத் தமிழ் மொழிபெயர்ப்பினையும் தற்போது தந்துள்ளேன்.
“பதிவுகள்’ என்ற தலைப்பு பின்னாளில் கவர்ச்சிக் குரியதொன்றாகவும் மாறிவிட்டது அதனால்தான் போலும், தொண்ணுறுகளின் நடுப்பகுதியிலிருந்து - தமிழகச் சிறுசஞ்சிகை களான சலனம், காலச்சுவடு, பன்முகம், தாமரை, நிழல், சொல்புதிது முதலியவற்றில் இதே தலைப்புக்கொண்ட பகுதி வெளிவந்தது வருகின்றது!
தனது படைப்பாளுமையினாலும் விமர்சனச் செயற்பாட்டினாலும், அறுபதுகளின் பிற்பகுதியிலிருந்து இன்றுவல்ரை என்னை ஆகர்ஷித்துக்கொண்டிருப்பவரான ‘சண்முகம் சிவலிங்கம்’ அவர்களிற்கு இந்நூலைச் சமர்ப்பணம் செய்வதில், பெருமிதம் அடைகிறேன்!
‘பிரதி” யினைக் கையேற்று நூலின் வடிவமைப்பையும், பதிப்புத்துறைசார் ஏனைய வேலைகளையும் சிரமம் பாராது நட்புடன் செய்த கருணாகரனிற்கும் - “அந்திவானம் பதிப்பக’ பணியாளர் களுக்கும் எனது நன்றிகள்!
é91. Gultilīllsil இல, ஓடைக்கரை வீதி, 19-12-2003, குருநகர், யாழ்ப்பாணம்.

9. Cuius JTsir : 09
பதிவுகள் - 1
G
அலைக்குரிய ஆயத்தங்கள் நடந்துகொண்டிருந்த வேளை "இது, குறித்த சிலரின்மேற் கொண்ட காழ்ப்பினை வெளிப்படுத்தும் களமாகவே அமையும்” என்ற ஒரு கருத்து, சிலரிடையிற் பேசப்பட்டது. உண்மைக் கலை - இலக்கிய நேசிப்பையும், சத்திய நாட்டத்தையுமே அலை வட்டத்தினர்' கொண்டிருக்கின்றனரேயல்லாமல் தனிமனிதக் காழ்ப்புக்களையல்ல. எனினும், சத்தியத்தின் வெளிச்சத்தில் கலையும் வாழ்க்கையும் பரிசீலிக்கப்படும்போது போலிகளின் வேஷங்களுக்குத் துணையாக அலை வட்டம் இருக்காது. இதேபோல் றேடியோ சான்சுகளுக்கும்' இலக்கிய ஸ்தானங்களுக்குமாக, நடைமுறையில் பலம் பெற்ற 'குழுக்களுடனும்’ ‘கோஷங்களுடனும் ‘ வெறுமனே ஒத்தோடுவதாகவும் இருக்கப்போவதில்லை; சத்தியமே அதனுடைய g56nLD.
Ο Ο
“கலை அனுபவ வெளிப்பாடாய்த்தான் இருக்கமுடியும்;

Page 7
10 Cuglassi
வெறுமனே கருத்துக்கள் மட்டும் கலையைச் சிருஷ்டிக்கப் போதுமானதாக இருப் பதில்லை.”
வ.அ. இராசரத்தினம் என்ற ஆற்றல் வாய்ந்த இலக்கியக்காரனில் மனைவியின் மரணம் ஏற்படுத்திய தாக்கம், 'ஒரு காவியம் நிறைவு பெறுகிறது' என்ற சிறுகதையில் சமீபத்தில், கலா வெளிப்பாடடைந்துள்ளது; வாழ்க்கைப் பரப்பில் நிகழ்ந்த பல வேறு அனுபவங்களின் கோவையான அது, உண்மையில் ஒரு "மெய்யுள்தான்.
வ.அ.இராசரத்தினம்
புதுவீடு குடிபுகுகையில் நவதானியங்கள் ஏந்திச் செல்லும் மனைவியைத் தொடர்ந்து, இராசரத்தினம் என்ற கலைஞன் நடக்கிறான். அவனது கைகளில் விலையேறப்பெற்ற அவனது பொக்கிஷங்களில் இரண்டு. ஆம் ! சிலப்பதிகாரமும், முதளையசிங்கத்தின் புதுயுகம் பிறக்கிறது சிறுகதைத் தொகுப்பும் சுற்றத்தினர் ஆச்சரியமாயும் ஆத்திரமாயும் நோக்குகின்றனர். அவனைப் புரிந்தவளாய் மனைவி லில்லி மட்டும் திரும்பி மெல்லச் சிரித்தபடி சொல்கிறாள்:
“உங்கள் பேனையை எடுத்தீர்களா?” “விடுவேனா பையில் இருக்கிறது.” "எடுத்துக் கையில் வைத்துக்கொள்ளுங்கள்.”
இந்தப் புரிந்துகொள்ளலும்', 'ஒத்துழைப்பும் நிறைந்த மனைவியைப் பெற்ற கலைஞன், எவ்வளவு பாக்கியசாலி இந்தப் பாக்கியத்தை இழந்துபோவதென்பது சகிக்க முடியாததுதான். நுண்ணுணர்வு மிக்க அக்கலைஞனின் பெருந்துயரில் அலையும் பங்குகொள்கிறது.
Ο Ο
01-11-75 இல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நாடகக்
 

அ. யேசுராசா (; 11
கருத்தரங்கொன்று நடைபெற்றது. கொழும்பிலிருந்து வந்த இரண்டு பேச்சாளர்கள் முறையே, தாம் வானொலியிலும் சஞ்சிகையிலும் அவ்வப்போது ஏதோ சொல்லியதையும் எழுதியதையும் கொண்டு, ஏதோ ஆற்றலுள்ளவர்களெனக் கருதியே தம் மை அழைத்துள்ளார்கள் போலுமென்றும், உண்மையில் தாங்கள் அவ்வாறு ஆற்றலுடையவர்களல்ல என்றும் மேடையில் சொன்னார்கள் (அவர்களது பேச்சிலும், ஆழ்ந்த கருத்துக்கள் வெளியிடப்படவில்லைத் தான் !). இந்தக் கூறி றில் அவையடக்கத்தைவிட அவர்களின் தயக்கமே தெரிந்தது. தங்களிலேயே நம்பிக்கையில்லாதவர்கள் இவ்வாறான கூட்டங்களில் ஏன் பேச வரவேண்டும்? - வந்து, இவர்களையும் தகுதி யானவர்களெனக் கருதி அழைத்திருந்த அமைப்பாளர்களினதும், வேலை மினைக்கெட்டுக் கேட்க வந்தவர்களதும் முகங்களில் ஏன், கரியைப் பூசவேண்டும்? O
96.06) - O (கார்த்திகை 1975)

Page 8
12 பதிவுகள்
பதிவுகள் - 2
ம் இலக்கியக்காரரில் பலர் நாடகம், திரைப்படம் போன்ற ஏனைய க்லை வடிவங்களில் அக்கறையற்ற வெறும் இலக்கியக் குறிக்காரராக இருப்பதோடு, அவைபற்றிய அபத்தமான கருத்துக்களையும் இரசனையையும் கொண்டுள்ளனர். சராசரித் தமிழ், ஹிந்தி, ஹொலிவூட் திரைப்படங்களில் ஒருவித தவிர்க்க இயலாமையோடு அவர்களடையும் திருப்தி, இதனை உறுதிப்படுத்துகிறது. இவற்றின் நிழலாயமையும் நாடகங்களின் பாதிப்பும் இவர்களிடமும், ஏனைய பொதுக் கலைஞர்களிடமும் காணப்படுகிறது.
இந்நிலை மாறத் தக்க, சூழலை உருவாக்கும் கலைஞர்களின் இயக்கம் சில ஆண்டுகளாக நாடகத்துறையில் நிகழ்ந்து வருகிறது. அதில் நா. சுந்தரலிங்கமும், தார்சீசியசும் முக்கிய இடத்தை வகிக்கின்றனர். இருவருமே ஆற்றல் வாய்ந்த நெறியாளர்களாக உள்ளதோடு, சிறந்த நடிகர்களாகவும் உள்ளனர். சுந்தரலிங்கம் சிறந்த நாடகப் பிரதி ஆக்குநராகவும் "அபஸ்வரம், 'விழிப்பு போன்றவற்றால் தன்னை நிலைநிறுத்துகிறார். இருவருமே நாடகத்தின் கருப்பொருளைப் பரிமாற்றுகையில் 'உக்கிரஹிப்பு' நிகழக்கூடியதாய் ஒலி, ஒளி, பிற நவீன உத்திகளைக் கையா

9. Cusiness 13
ளும்போது - சூசனை உணர்த்தலாக சிறந்த கலா அனுபவத்தைப் பெறமுடிகிறது. சுந்தர லிங்கத்தின் விழிப்பு, அபஸ்வரம், இரு துயரங் கள் ஆகியனவற்றையும் - தார் சீசியசின் பிச்சை து வேணர் டாம் , கோடை ஆகய ன வ றி றை யு மி இதுவரை பார்க்கமுடிந்தது : கடுழியம், கந்தன் கருணை, * புதியதொரு வீடு என்பவற் -- றைப் பார்க்கச் சந்தர்ப்பம் A கிடைக்கவில்லை. இரு வருமே உயர் இரசிகர் டி. களைத் திருப்திப்படுத்த " " கோை முயல்வதாகச் சிலர் குறைப்படுகின்றனர். சகலரும் 'சுவைக்கக்கூடிய ரொட்டிகளைச் சுடும் விவகாரமாக கலைகளைக் கருதியதனால் வந்த கோளாறாக, இதனைக் கொள்ளலாமா?
OO
’கிருஷ்ணன் நம்பியின் அகால மரணம், அதிர்ச்சியையும் இழப்பையும் ஏற்படுத்துகிறது - எவ்வளவு ஆற்றல் வாய்ந்த கலைஞன் எழுதிக் குவிக்க வேண்டுமென்ற அவசத்திற்காளாகி அலட்டிக்கொள்ளாதவராக" 'மெளனி'யைப் போல், சுந்தர ராமசாமி யைப்போல் மிகக் குறைவாகவே அவர் டி. எழுதினார். இயந்திரங்கள் இல்லாத"கைக ' ளினால் பொம்மை செய்யும் கலைஞனாகத் தன்னைச் சமப்படுத்தி ஓர் முறை அவர் எழுதியதும், இதனைப் புரியவைக்கிறது 'காலைமுதல், நீலக்கடல்' ஆகிய சிறுகதைத் ః தொகுப்புகளே அவரது இலக்கிய வாழ்வில் * எமக்குக் கிட்டின. ఖజిగ
கிருஷ்ணன் நம்பி கோஷங்கள், குழுக்களினால் இலக்கிய ஸ்தானங்களைப்

Page 9
14 பதிவுகள்
பெற முந்தும் நம்மவர்களின் அவதிகள் ஏதும் இல்லாதவராக அவர் இருந்தபோதும், கலைத்துவம் பொருந்திய படைப்புகளினால், நவீனத் தமிழ் இலக்கிய உலகில் அவரது “இருப்பு' ஸ்திரமாக்கப்பட்டுள்ளதென, நிச்சயம் நாம் நம்பலாம். ஆற்றல் வாய்ந்தவர்கள் பரவலாக அறியப்படாமலே - உரிய மதிப்பைப் பெறாமலே - விரைவில் இறந்துபோவதும் தமிழனாய்ப் பிறப்பதன் துரதிர்ஷ்டம் போலும்!
OO
LTழிப்பாணத்தில் இப் பொழுதெல்லாம் இலக்கியக்கூட்டங்கள் பல அடிக்கடி நடைபெறுகின்றன. மறுபடியும் மறுபடியும் காண முடிகிற 25, 30 பேர்களே வருகைதருவார்கள். மேடையில் ஏறியதும் தமக்குத் தெரிந்த எல்லாவற்றையும் சொல்ல முயல்கிற அவசரத்தில் பேச்சாளர் பலர் பேசும்போது, பேசவேண்டிய பொருள்மட்டும் குறைவாகவே வெளிப்படும். இவர்களிற்கு ஏன் இந்த ஞாபகமறதி என்பது எமக்கு விளங்குகிறதில்லை. இலக்கிய அக்கறையால் வேலை மினைக்கெட்டு மூன்று மணித்தியாலங்கள் வரை சிரமத்துடன் இருந்து அவதானித்தும் பெறப்படுவது என்ன என்பதில், ஏமாற்றமே மிஞ்சுகிறது. நேரவிரயமும் எரிச்சலும்தான் பயன் என்றால், வருபவர்கள் தொடர்ந்தும் வருவார்களா? அமைப்பாளர்களும் பேச்சாளர்களும் இனிமேலாவது அக்கறை கொள்வது நல்லது O
96.OG) - 05 (ஆடி " ஆவணி1976)

9. GusGJITGT i 15
பதிவுகள் - 3
6
கிடந்த காலங்களில் உள்ளடக்கத்திற்கு அழுத்தங் கொடுக்கப்பட்டதால் உருவம் புறக்கணிக்கப்பட்டு, வரட்சியான படைப்புகள் பெருகிவிட்டன; இனிமேல் உருவம் போன்ற அழகியல் அம்சங்களுக்கு நாம் அழுத்தங் கொடுக்கவேண்டும்’ என்ற கருத்துப்பட ஈழத்து இலக்கிய உலகின் தலைமைக்காரர்’ சிலரும், வேறு பலரும் சமீப காலங்களில் சொல்லத் தொடங்கியுள்ளனர். காலங்கடந்ததாயினும் இந்த ஒப்புதல் வாக்குமூலம் வரவேற்கத் தக்கது. என்றாலும் இதில் பாதியளவுதான் உண்மை. கடந்தகால வரட்சிகளுக்கு உருவம் புறக்கணிக்கப்பட்டமை மட்டுமல்ல, 'உள்ளடக்கத்தின் வரையறுப்புகளும், காரணமேயாகும். கலை, இலக்கியம் என்பன எல்லாமே அனுபவ வெளிப்பாடு' என்ற அடிப்படை மறக்கப்பட்டு, அவையெல்லாம் 'வெறும் பிரசாரக் கருவிகள்’ என்ற கருத்து ஒப்புக்கொள்ளப்பட்டதால் "எரிகிற பிரச்சினைகள்', 'சமூகப் பெறுமானம்', 'செயலுக்குத் தூண்டுதல் என்ற சுலோகங்களுக்கு மட்டும் பொருந்துவதாகப் பொருள் வரையறை பெற்றது; இதற்கு அப்பால் இலக்கியத்தின் பொருள்கள் இருக்கமுடியாதெனச் சொல்லப்பட்டது. முற்போக்கில்லாதவை

Page 10
16 பதிவுகள்
யெல்லாம் பிற்போக்கானவை என்ற பிழையான கருத்தும் முன்வைக்கப்பட்டது. நட்பு, காதல், அழகியல் உணர்வு என்பன இலக்கியத்தில் தீண்டாமை’க்குரியவையாயின. சொந்த வாழ்வில் காதலித்துக்கொண்டே, அதனால் தவிப்புற்றுக்கொண்டே இலக்கியத்தில் மட்டும் தத்துவத்தாலும் போர்க்குணத்தாலுமாய மனிதர்களைப் போன்ற பாவனை காட்டுதல்கள் எல்லாம் நிகழ்ந்தன; வாழ்வில் உள்ளது கலை, இலக்கியத்தில் மட்டும் ஏன் வெளிப்பாடடைய முடியாது? குறித்த தனிமனித உணர்வுகளுக்கு உட்படுவதையோ, வெளிப்படுத்துவதனையோ ஒப்புக்கொள்ள வெட்கமுறுபவர்களுக்கு, ரஷ்யத் திரைப்பட இயக்குநரும் கவிஞருமான
அலெக்சாந்தர் தொவ்ஷெங்கோ’ சோவியத் ,ی தொல்ஷெங்கோ எழுத்தாளர்களின் இரண்டாவது கொங்கிரசில் பேசிய சில வாசகங்களைச் சமர்ப்பிக்கலாம்: "உங்களைப் போலவே நானும் மக்களை நேசிக்கிறேன், மக்களுக்குப் பணியாற்றுவதில்தான் என் சொந்த வாழ்க்கைக்கு அர்த்தம் இருக்கிறது என்பதை உணர்கிறேன். நான் அனைத்து தேசங்களுக்கிடையே சகோதரத்துவத்தின் வெற்றியை நம்புகிறேன்; கம்யூனிசத்தை நம்புகிறேன்; ஆனால், செவ்வாய்க் கிரகத்தை வெற்றிகொள்ளும் முதற் பயணத்தில் எனது அன்புக்குரிய சகோதரனோ, மகனோ பிரபஞ்ச வெளியில் எங்கோ ஓரிடத்தில் மரணத்தைத் தழுவ நேர்ந்தால், அந்த இழப்பின் கஷ்டங்களை வெற்றிகொண்டுவிட்டேன் என்று சொல்ல மாட்டேன். என் துயரத்தை நான் அவர்களுக்குச் சொல்லுவேன். அந்தப் பிரபஞ்ச வெளிகளை நான் சபிப்பேன். இரவு முழுவதும் எனது தோட்டத்தில் அமர்ந்து, பூத்துக் குலுங்கும் செர்ரியின்மேல் உள்ள வானம்பாடிகள் அஞ்சிவிடாமலிருப்பதற்காக, அதன்கீழ் முத்தமிட்டுக்கொள்கிற காதலர்களுக்கு இடையூறு இல்லாமலிருப்பதற்காக, எனது விம்மல்களைத் தொப்பியினால் மறைத்துக்கொண்டு நான் அழுது கொண்டிருப்பேன்."
OO
திரைப்படக் கூட்டுத்தாபனம் கடந்த ஒரு வருடமாக
 

-el Guðusn G. 17
'உலகத் திரைப்பட மேதைகளின் தொடர்’ என்ற தலைப்பின்கீழ், உன்னதத் திரைப் படைப்புகள் பலவற்றை வழங்கிவருகிறது. இலங்கை முழுவதிலுமுள்ள தியேட்டர்களில் இவை திரையிடப்படுவதில், குறிப்பாக கொழும்புக்கு வெளியிலுள்ள நல்ல இரசிகர்கள் கூடிய மகிழ்ச்சி அடைகிறார்கள். ஏனெனில், பிற நாடுகளின் இத்தகைய சிறந்த படைப்புகளுடன் சம்பந்தங்கொள்ளும் வாய்ப்பு முன் ன ரெப் போதும் இவர்களுக்கு இருக்கவில்லை. திரைப்படக் கூட்டுத்தாபனத்தினாற்றான் இப்பொழுது இது சாத்தியமாகி யுள்ளது. "பேர்ச் வுட் (பேர்ச் மரம்), "செவன் சமுராய்'(ஏழு சமுராய் வீரர்), ‘ஓவர் லோர் ட் (மேலானி ), அட்றி.வ்ற் (மிதந்து செல்லல்) உட்பட வேறு பலவற்றையும் இதுவரை பார்க்க முடிந்தது. இதற்கு நிஹால் சிங்ஹ, பியசிறி குணரட்ண போன்றவர்களுக்குத்தான் நாம் நன்றி செலுத்தவேண்டும். ஆயினும் யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை, வெளியிடங்களிற் காட்டப்பட்ட சில படைப்புகள் குறிப்பாக யொஜிம்போ', 'சாருலதா', 'புவர் கெள'(அப்பாவிப் பசு), கிறேன்ஸ் ஆர் ட்வ்ளையிங் (நாரைகள் பறக்கின்றன) என்பன நான்கு மாதங்களுக்கு மேற்சென்றும் இதுவரை திரையிடப்படாததன் காரணம் விளங்கவில்லை; சிலவேளை எமது யாழ்ப்பாணத் தியேட்டர் காரர்களின் அசிரத்தையாகவும் இருக்கலாம். செவன் சமுராய் இங்கு திரையிடப்பட்டபோது, முதல்நாள் தவிர்ந்த இரு தினங்களிலும் மூன்று ரீல்கள் வரை நீக்கப்பட்டே, காட்டப்பட்டது. இதுபற்றி விசாரித்தவர்களுக்கு,"சலிப்படைந்த பார்வையாளர் களினால் எழுப்பப்பட்ட எதிர்ப்புக்கூச்சல்களே காரணம்' என்ற பொறுப்பற்ற பதில் தரப்பட்டபோது, இத்தகைய கலைப் படங்களைத் திரையிடுவதில் அவர்களின் அக்கறையின்மையை (வசூல் குறைவதனால்), உணர முடிந்தது.
செவன் சமுராய்

Page 11
18 Lugagasi
இந்நிலைமைகளை மாற்றுவதற்குத் திரைப்படக் கூட்டுத்தாபனத்தைத் தூண்டுவது, யாழ்ப்பாணத்திலுள்ள கலை, இலக்கியக்காரர்களின் கடமை; ஆனால், அவர்கள் என்ன செய்கிறார்கள்? உள்ள ஒரு வாய்ப்பையும் இழந்துகொண்டே மெளனம் சாதிக்கிறார்கள்!
கொழும்பிலும் கண்டியிலும் உள்ளது போன்ற திரைப்படக் கழகங்களை அமைத்தாலாவது, சிறந்த படங்களைப் பார்க்கும் வாய்ப்பினைப் பெற்றுக்கொள்ளலாம்; சமீபகால உலக வளர்ச்சிகளுடனெல்லாம் நாமும் சம்பந்தமுறலாம். அத்தகைய அமைப்பைத் தோற்றுவிப்பதிலும் இங்கு அக்கறையேதுமில்லை. ஒரு தடவை யாழ் வளாகத்தில் இதுபற்றிய, சிறு சலனமெழுந்தது; பின்னர் அதுவும் அடங்கிவிட்டது.
நாம் என்ன செய்யலாம்? 'கோமாளிகள்', 'காத்திருப்பேன் உனக்காக’ என்ற ஏழாந்தர " எட்டாந்தரத் திரைப்படங்களையெல்லாம் புளுகி எழுதிக்கொண்டே “கலை இலக்கிய வேள்வி செய்யும்” கும்பலில் சேர்ந்துகொள்ளலாம்! O
960G) - 09 (வைகாசி - ஆனி 1977)

19 أن 15H ربيع) وق
பதிவுகள் - 4
1975இன் பிற்பகுதி ஸ்தாபித பலம்பெற்றிருந்த வறட்டிலக்கியவாதிகள், கும்பல்களோடு வெறுமனே ஒத் தோடியவர்கள், தேசிய இன ஒடுக்குமுறைகளைக் கண்டும் மெளனம் சாதித்த "போலி முற்போக்குகள’ போன்றோருக்கெதிரான கலகக்குரலாக' - அதிருப்தியாளர்களின் வெளிப்பாடாகவே - அலை வெளிவரத் தொடங்கியது.
மூன்று வருடங்கள் - 12 இதழ்களின் பின்னால் மீள்பார்வை செலுத்துகையில், நியாயமாகவே நாங்கள் பெருமைப்படலாமென நம்பிக்கை ஏற்படுகிறது. ஆரம்ப நோக்கங்களிலிருந்து இதுவரை நாங்கள் வழுவிச் சென்றிருக்கவில்லை; எச்சந்தர்ப்பத்திலாவது சுய இலாபங்களுக்காக ஒத்தோடுபவர்களாகவும் இருந் திருக்கவில்லை.
இங்கும் தமிழகத்திலுமாக உண்மைக் கலை, இலக்கிய நேசிப்பைக் கொண்டவர்கள் அளித்த பாராட்டுக்கள் அதனை

Page 12
20 பதிவுகள்
உறுதிப் படுத்துகின்றன. சிலர் குழு மனோபாவத்தினால் இதை வெளிப்படையாகக் கூறுவதைத் தவிர்த்துக்கொண்ட போதிலும், தனிப் பட்ட கதைப் புகளிலும் குழு உரையாடல்களிலும் அவர்கள்கூட ஒத்துக் கொள்வதாகவும் நாம் அறிந்துள்ளோம். உண்மையில் இதுவும் நமது ‘இலக்கிய சமூகத்தில் காணப்படும் போலித்தனங்களில் ஒன்றின் வெளிப்பாடே. தொடர்ந்த இயக்கம் மேலும் வலிமையான தாக்கத்தினை ஏற்படுத்தக் கூடுமாயினும் சக்தியை மீறிச்செல்லும் புற நிலைமைகளினால், அலை இலக்கிய வட்டத்தினரின்' சஞ்சிகை Z MYRKIIKMIXM8 வெளிப்பாடு தற்காலிகமாய் ஸ்தம்பித மடைகிறது. எனினும், அலை இயக்கமி வேறு வடிவங்களில் தொடர்ந்தும் செயற்படும். 纵%)一至 இச்சந்தர்ப்பத்தில், எம்மோடு இதுவரை
ஒத்துழைத்த அனைவருக்கும் ஆசிரியர் குழுவின் சார்பில், நன்றிகளைத் தெரி | چیعہ ”تمہیج
re விக்கின்றேன். எந்தவிதக் கட்டுப்பாடுகளும் **** எதிர்பார்ப்புகளுமின்றி பெறுமதிமிக்க தனது - அச்சுச்சாதனங்களை - மூன்றாண்டுகளாக ~് ܠܵ
எமக்குதவிய நண்பர் என்.கே.மகாலிங்கத்துக்கு
wir & w ஃr E விசேடமாக நன்றிசெலுத்தக் கடமைப்
பட்டுள்ளோம்.
Ο Ο
தேசிய உணர்வுடன் நடந்துகொள்வதாக எண்ணி நமது கலை, இலக்கியக்காரர் சிலர் கருத்து வெளியிடுகையில், தேசியத் தாழ்வுச் சிக்கல் ஒன்றினால் இவர்கள் பீடிக்கப்பட்டுள்ளார்களோ என்ற சந்தேகம் பல சந்தர்ப்பங்களில் எமக்கு ஏற்படுகின்றது. "தென்னிந்தியக் குப்பைகள்” என்று ஒரேயடியாய் விளாசுகையில் (வடஇந்தியக் குப்பைகள், ஹொலிவுட் குப்பைகள் பற்றி இவர்கள் வாய்திறக்க விரும்புவதில்லை!), ஏதோ தமிழ்நாடு முழுவதுமே பெரிய குப்பை போலவும் இங்குதான் எல்லாம் 'பெரிய குப்பை
 

e9l GuóJIgm Q 21
போலவும் இங்குதான் எல்லாம் சுத்தமாயிருப்பதைப் போலவும் - தரமான கலை, இலக்கியங்கள் செழித்து வளர்ந்து நிறைந்துள்ளதைப் போலவும் - ஒரு தோற்றத்தை அழுத்திக் காட்டுகிறார்கள்! தமிழ்நாட்டை நக்கலடிப்பதில் இவர்களுக்குக் குரூரமான சந்தோஷம்! இப் போலித் திருப்திக்காக உண்மை நிலைமைகள் அடிக்கடி திரிபுபடுத்தப்படுகின்றன. தகவல் தொடர்பு சாதனங்களின் சமமற்ற வளர்ச்சியினால் - தமிழகத்திலுள்ள நல்லெண்ணங்கொண்ட பலர், இதை அப்படியே நம்பியும் விடுகின்றனர். சமீபத்தில் வந்த ஒரு விடயத்தை நாம் எடுத்துப் பார்க்கலாம். சிகரம்’ (செப்ரெம்பர் - 1978) என்ற தமிழக இதழின் பேட்டியில், "டொமினிக் ஜீவா பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார் : "...உங்கள் நாட்டில் புஷ்பா தங்கதுரை, குமாரி பிரேமலதா, சாண்டில்யன், மணியன் போன்ற எழுத்தாளர்கள் இருப்பது போல் எங்கள் நாட்டில் அந்த ரக எழுத்தாளர்கள் கிடையாது.” இது உண்மைதானா? எவ்விதக் கலை நோக்கமுமற்ற - வாசகரின் பொழுதுபோக்கு இரசனைக்குத் தீனிபோடுகிற - பாலுணர்வைத் தூண்டுகிற படைப்புகளைப் படைக்கிறவர்கள் இந்த எழுத்தாளர்கள் ஹலோ..!", "லீலை என்ற ஆபாசத் தொடர்களை எழுதிய ராமேஷ்; பட்லி, ஜமீலா புகழ் ஜிநேசன், மொழிவாணன், ரஜனி, கே. எஸ்.ஆனந்தன், ந. பாலேஸ்வரி போன்றோர் இங்கிருப்பதை 'ஜீவா ஏன் மறைக்கிறார்? வீரகேசரிப் பிரசுரங்களில் பெரும்பாலானவை வெறும் பொழுதுபோக்குக்கு மட்டும் உரியனவல்லவா? ஜனமித்திரன் வெளியீடுகளை எழுதியவர்கள் எல்லாம் உன்னத இலக்கியக்காரர்களாகிவிட்டனரா? “குமுதம், குங்குமம், இதயம் போன்ற கவர்ச்சிப் பத்திரிகைகள் எதுவும் ஈழத்துத் தமிழர்களால் நடத்தப்படவில்லை” என, ஜீவா மேலும் சொல்கிறார். “கீதா', கதம்பம்', 'மித்திரன் வாரமலர்' போன்றவை இன்னும் இங்கு வந்துகொண்டுதானே உள்ளன! ராதா', 'ரோஜாப்பூ'மாணிக்கம்’ என முன்பும் வந்தனவே! இவையெல்லாம் ஈழத்தமிழர்களால் நடத்தப் படவில்லையா? அல்லது இவையெல்லாம் தரமானவையென்று அவர் கருதிவிட்டாரா? O
960)60 - 12 (கார்த்திகை - மார்கழி 1978)

Page 13
22 பதிவுகள்
பதிவுகள் - 5
சென்ற ஆண்டின் சிறந்த திரைப்பட நெறியாளருக்கான ஜனாதிபதி விருது வசந்த ஒபயசேகரவிற்கு பலங்ஹற்றியோ (தத்துக்கிளிகள்) திரைப்படத்திற்காக வழங்கப்பட்டுள்ளமை மகிழ்ச்சியைத் தருகிறது.
ஜனரஞ்சக நாவல்களால் - கற்பனை உலக மனோரதிய நினைவுகளோடு காதலிக்கும் வசதியான குடும்பத்தைச்சேர்ந்த இளம் பெண்; இளமையின் பலவீனத்தில் விருப்பக் குறைவோடேயே அவளுடன் ஒடிச்செல்லும் சாதாரண இளைஞன்; அவனையே வாழ்வுக்காய் எதிர்பார்த்திருக்கும் இரண்டு சகோதரிகள், தாய்; நகர்ப்புறச் சேரியின் மனிதர்கள் ஆகியோரைச் சுற்றிக் கதை நிகழ்கிறது. வறுமையின் தாக்குதலின் முன்னால் மனிதர்கள் பலவீனமடைகின்றனர். பகட்டு மயக்கில் மனைவி சோரம் போகிறாள்; வேலையற்ற நிலையிலும் அவளுக்காய்த் தன்னை வருத்தியவன் - நேசித்தவன், மனமுடைந்துபோகிறான்; இறுதியில் அவளைக் கொலையும் செய்கிறான். காதலி, பாசம் எல்லாம் பெறுமதியற்றதாகிவிடுகின்றன. 'விடுதலைக்காக ஒன்றிலிருந்து

94. GulčGJITFT Ċ 23
இன்னொன்றிற்குத் தத்திச் சென்றபோதும் தப்ப முடியவில்லை. தற்காலிகமான போலிமயக்கம் அல்லது மரணம் அல்லது தொடரும் மரணம் போன்றதேயான துன்பம், துரோகம் என்பனதான் அவர்களிற்குக் " கிடைக்கின்றன. 'வாழ்விற்காகத்தான் : அவர்கள் ஏங்குகின்றபோதும் அது : அவர்களிற்கு வழங்கப்படுவதில்லை. புறநிலை நிர்ப்பந்தங்கள் மனித ! நிலைகளை நசுக்குவது திரைப்பட ! ஊடகத்தில் சித்திரிக்கப்பட்டிருக்கும் ! முறை, எம்மை உலுக்கித் துயர்ப் படுத்துகின்றது; நிலவிவரும் சமூக அமைப்பின் குரூரம்பற்றி ஏற்படும் புரிதல், அதன்மேல் வெறுப்பையும் .مغنينغكينغ . 鬱。 எழுப்புகிறது. இந்த அனுபவத்தில்தான் " ." நெறியாளரின் மேதைமை வியப்பினைத் தருகிறது. இத்திரைப்படம் ஒன்றிற்காகவே 'வசந்த ஒபயசேகர'வின் பெயர் பூரீலங்காவின் திரைப்பட வரலாற்றில் நிலைத்திருக்கும்!
'வசந்த'வின் முதலாவது படமாகிய வலி மத் வுவோ (வழிதவறியவர்கள்) வேலையற்ற நான்கு பட்டதாரி இளைஞர்களின் வாழ்வு சிதைந்துபோவதையே நன்கு சித்திரிக்கிறது. மனிதனைத் தளைப்படுத்தும், உறவுகளைச் சிதைக்கும், வெறுப்பிற்குரிய சமூக நிலைமைகள்தான் இதில் அவர் கையாளும் பொருளாகிறது.
'வசந்த' பிரான்சில் திரைப்படத்துறையில் பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. டெய்லி நியூஸ்' இல் வந்த பேட்டியொன்றில், திரைப்படம் ஒரு கட்புல ஊடகம் என்பதைத் தான் முழுமையாக ஏற்கவில்லையென்றும் செவிப்புலனுக்கு முதன்மை வழங்கியே நல்ல
வசந்த ஒபயசேகர

Page 14
24 *பதிவுகள்
திரைப்படத்தை உருவாக்கலாம்’ என்றும் அதிர்ச்சிதரும் கருத்துக்களைக் கூறியுள்ள இவர், அத்தகைய தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளார்; ஆவலோடு அதை எதிர்பார்க்கிறேன்.
Ο Ο
சென்ற ஆண்டில் நடைபெற்ற தேசியத் தமிழ் நாடக விழாவின் பரிசு முடிவுகள் மிகக் காலம் தாழ்ந்து, ஒருவாறு வெளிவந்துவிட்டன! பொறுத்தது போதும் சிறந்த நாடகத்திற்குரிய ஜனாதிபதிப் பரிசுக்குரியதாகியுள்ளது; அதன் நெறியாளர் அதார்சீசியஸ் சிறந்த நெறியாளருக்குரிய விருதினைப் பெற்றுள்ளார். பல தடைகளை மீறி இது வழங்கப்பட்டதாக அறிகிறோம்; தார்சீசியசிற்கு எமது பாராட்டுக்கள்!
க.பாலேந்திராவைப் போலவே தொகையில் கூடிய நல்ல நாடகங்களை நெறிப்படுத்தியுள்ள இன்னொருவர் அதார்சீசியஸ், கோடை, புதியதொரு வீடு, பிச்சை வேண்டாம், கூடிவிளையாடு பாப்பா, பொறுத்தது போதும் போன்றன பாராட்டுப் பெற்ற அவரது நாடகங்களாகும். இன்று குழுதிரண்டு சிலர் செய்வது போல, தனது துறையில் ஆற்றல் காட்டுபவர்களை மட்டம் தட்டுவதிலேயோ, "கொள்கை ரீதியாக இதயபூர்வமாக ஈடுபடாமல் நாடகம் போடுபவர்கள்” (போலியாக?) என்று வலிந்து குறைகூறுவதிலேயோ அவர் ஈடுபட்டதில்லை. ஆனால், இக் குழுவைச் சேர்ந்தவர்கள் சிலரால், ஆரம்பத்தில் தார்சீசியசின் நல்ல நாடகங்கள் சிலவும் தாக்கப்பட்டன; அவ்வாறு தாக்கப்பட்ட நாடகங்கள் இக்குழுவைச் சார்ந்த ஒரு விமர்சகரின் நீண்ட முன்னுரையில் இப்போது, வேறு
நோக்கங்களுக்காகப் பாராட்டப்படுவது வேடிக்கையும் சுவையும்
நிறைந்ததுதான்! O
960G) - 5 (புரட்டாதி - மார்கழி 1980)

S! GuðsynsI (; 25
பதிவுகள் - 6
ஜேர்மன் திரைப்பட விழாவில் நான் எதுவோ, அதுதான் எனது படங்கள் ("ஐ ஆம் வட் மை ட்வில்ம்ஸ் ஆர்) என்ற விவரணப்படமே, எனக்கு மிக்க சுவாரஸ்யத்தை ஊட்டியது. ஏனைய ஏழு படங்களும் கதைப்படங்களாயமைய ஒரு கலைஞனின் - உலகப் பிரசித்திபெற்ற, உடன்நிகழ்கால ஜேர்மன் நெறியாளரான வேர்னர் ஹேர்ஸொக் இன் - அனுபவ உலகினை வெளிப்படுத்தும் உரையாடலைக் கொண்டதாயும், அவரது படங்கள் பலவற்றின் காட்சிகளைக் கொண்டதாயும் இது அமைந்தது. கலைஞனின் அனுபவம் பின்னொதுக்கப்பட்டு, கருத்தியலான சூத்திரங்களே அடிப்படையானதாகக் கொள்ளப்படும் எமது கலை, இலக்கியச் சூழலிற் கொண்ட சலிப்பும், இச் சுவாரஸ் யத்தைத் தூண்டியிருக்கலாம்! ஹேர்ஸொக்கின் ஈடுபாடுகள், அவரைப் பாதித்தவை, கடந்தகாலம் என்பவற்றையே அங்கு தரிசிக்க முடிகிறது. இதுவரை அவரது ஐந்து திரைப்படங்களைப் பார்த்திருப்பதில், அவரது அனுபவங்களிற்கும் படைப்புகளிற்கு மிடையிலுள்ள உறவினைப் புரிந்துகொள்வதற்கும் இது உதவுகி றது. இளமையிலிருந்தே விசித்திரமானவராயும், அசாதாரணங்களில்

Page 15
26 பதிவுகள்
வேர்னர் ஹேர்ஸொக்
ஈடுபாடுடையவராயும், ஒதுக்கங்கொள்ப வராயும் அவர் இருந்தார். இதன் தாக்கத்தினால் அவரது படக் கதா பாத்திரங்களிற் பல இவ்வாறுதான் அமைகின்றன. இயற்கையின் மீது அதீத ஈடுபாடு அவருக்கு இருக்கிறது. மலைகளும், காடுகளும், மேகங்களும், ஆறுகளும், எரிமலைகளும் , பாலைவன மணலி வெளிகளும், பாறைகளும் பல படங்களில் முக்கிய இடத்தினை எடுக்கின்றன. தனது அறைச் சுவர்களில் தரைத் தோற்றப் படங்களை (allas) தொங்க விடுவதிலும் ஈடுபாடு காட்டி வருகின்றார்; இயற்கையின் வலிமை, சீற்றம் என்பவற்றிற்கு அழுத்தம் கொடுக்கிறார்; அகிரே த றொத் ஒஃவ் கோட் (அகிரே, கடவுளின் சீற்றம்) போன்றவற்றில் இதைக் காணலாம். மரணம் அவருக்கு முக்கியமானதாயிருக்கிறது; இயற்கையின்
வலிமையினையும் அதன்மூலம் உணர்த்த முயல்கிறார். "மனித வாழ்வே மரணத்தைநோக்கிய நகர்தல்தான்” என்றும், "குருட்டுத் தலைவனைப் பின்தொடர்ந்து செல்லும் சேரிடம் அறியாத பயணம்தான்" என்றும் சொல்லவருகின்றார். ஈச் மான் .'வ்போர்
அகிரே த றொத் ஒஃவ் கோட்
ஹிம்செல்.வ் கோட் எகெயின்ஸ்ற் ஒல்’
(ஒவ்வொரு மனிதனும் தனக்காக - கடவுள் அனைவருக்கும் எதிராக) என்ற படத்தில், வலிமையான இரணர் டு காட்சிப் படிமங்களின் மூலம் இதை வெளிப் படுத்துகிறார். இது அடிப்படையான எளிமையான - உண்மைதானென்றாலும் அந்த நகர்தலின் போதுள்ள பரி மாணங்களை இவர் பார்க்க மறுப்பதனுடன், நாம் உடன்பட முடியாது. மரணம் தவிர்க்கமுடியாத நித்தியம் என்பதால், அதற்கு முன்னுள்ள வாழ் வையும் அர்த்தங்கெட்டது - அபத்தமானதென்று - நாம் கொள்ள முடியாது. கடவுளை, மத
 
 

அ. யேசுராசா : 27
அமைப்பினை அவர் நிராகரிக்கின்றார்; அவரது முக்கிய கதாபாத்திரமான கஸ்பார்மூலம் இதை வெளிப்படுத்துகிறார். அவன் சகிக்க முடியாமல் கோவிலிலிருந்து ஓடிவந்தபடி சொல்கிறான் : "குருவானவர் ஒலமிடுகின்றார்; நிறுத்துகின்றார். மற்றவர்களும் ஒலமிடத் தொடங்குகின்றனர்.” கல்வி அமைப்பும், பரீட்சை முறைகளும் அவருக்கு எரிச்சலைத் தருகின்றன; அவை மாணவர்களின் சுயத்தைக் கொல்லுவதாகச் சொல்லி வெறுக்கிறார். பரீட்சைக்கு விதிக்கப்பட்டிருந்ததால் எழுந்த வெறுப்பினால் 'கதேயின் 'வ்வோஸ்ற் (Faust) ஐ இன்றும் படிக்கவில்லையென்கிறார். நிர்ப்பந்தங்களுடன் எப்போதும் முரண்படும் படைப்பு மனத்தை இங்கு காண்கிறோம். முறையான படிப்பில்லாத கஸ்பார்’, ‘நீர் ஒரு பச்சைத் தவளையா?” என்ற கேள்வியின்மூலம் தர்க்கவியற் பேராசிரியர் எழுப்பிய பிரச்சினையை எளிமையாக - முற்றிலும் வேறான வழியில் - விடுவிப்பதாகக் காட்டுவது, உண்மையில் கல்வி அமைப்பிற்கு "ஹேர்ஸொக்காட்டும் எதிர்ப்புத்தான். அசாதாரணங்களில் ஈடுபாடு கொண்டிருந்த அவர், வெடிக்கப்போகும் எரிமலை ஒன்றை நேரடியாகப் படமாக்க முயன்றபோது, அவரது ஈடுபாட்டிற்கும் செயலிற்குமுள்ள ஒன்றிணைவினை - நேர்மையினை - உயர் தளத்தில் காணமுடிவது, அவர்மீது மிக்க மதிப்பினை ஏற்படுத்துகிறது. எரிமலையின் வெடிப்பை எதிர்பார்த்து 35கிமீற்றருக்கு அப்பால் மக்களெல்லாம் அப்புறப்படுத்தப்பட்ட பின்னுள்ள சூன்ய அமைதியில், தனது கமராக்காரருடன் அதைப் படமாக்க அவர் சென்றிருந்தார். ஒரு கட்டத்தில் கமராக்காரர் கேட்கிறார், "இப்பொழுது எரிமலை வெடித்தால் என்ன நடக்கும்?” சிரித்தபடி அமைதியாகவே அவர் சொல்கிறார் ! நடக்கிறது நடக்கும் என்ற சாரப்பட தனது ஈடுபாட்டில் திடமாகக் கால் ஊன்றிய நேர்மையான ஒரு கலைஞனை இங்கு காண்கிறோம்.
தனது நம்பிக்கைகளிற்கும் அனுபவங்களிற்கும் உண்மையானவராய் இருப்பதனால், கலையாக்க முயற்சிக்குத் தேவையான தீவிரத் தன்மையை, இயல்பாகவே கொண்டவராயுள்ளார். தனது படங்கள் தயாரிக்கப்படுமுன்பே, எந்நேரமும் தன் முன்னால் நிகழ்ந்துகொண்டிருப்பதாக ஒரு கட்டத்தில் சொல்கிறார். இதனால் ஆறேழு நாட்களிலேயே திரைப்படச் சுவடியினை எழுதிவிடுகிறார்; எழுதியபின் சிறிய

Page 16
28 பதிவுகள்
திருத்தத்துக்கும் இடமிருப்பதில்லையாம் திரைப்படப் பயிற்சியினை முறைப்படி இவர் பெற்றிருக்கவில்லை என்பதும் முக்கியமானது.
93 நிமிடங்கள் கொண்ட இத்திரைப்படத்தில் ஹேர்ஸொக்குடன் உரையாடுபவர்: லோறன்ஸ் ஸ்றொப், நெறியாளர். கிறிஸ்ரியன் வெயிசென்போர்ன்.
இத்திரைப்பட விழாவில் இன்னும் ஏழு படங்கள் இலவசமாகவே காட்டப்பட்டன. ஆயினும் கே. எஸ். சிவகுமாரன், க. சட்டநாதன். நான் தவிர இன்னும் இரண்டொரு தமிழ் முகங்களையே திரும்பவும் திரும்பவும் அங்கு காணமுடிந்ததில் நம்மவர்கள் இவற்றிலேன் ஆர்வங் காட்டுவதில்லையென்ற, ஆதங்கம் ஏற்பட்டது. கொழும்பில் லயனல் வென்ற் திரைப்படக் கழகம்’, ‘ஓ.சி.ஐ.சி (O.C.I.C),"சோவியத் கலாசார நிலையம்’ என்பவற்றிலும் - யாழ்ப்பாணத்தில் யாழ் திரைப்பட வட்டத்திலும் கலைத்தரமான பிறமொழிப் படங்களை ஒழுங்காகப் பார்க்கும் வாய்ப்பு உண்டு. பலருக்கு இதுபற்றிய விபரங்கள் தெரியாமலிருக்கலாம்; ஆர்வமுள்ளவர்கள் அலையுடன் தொடர்பு கொண்டால் விபரங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
OO
கிலை ரீதியாகவும், வெகுஜன ஆதரவு ரீதியாகவும் தோல்வியுற்ற பாற திகே (பாதை நெடுக.) இற்குப் பிறகு தர்மசேன பத்திராஜ நெறியாள்கை செய்துள்ள சொல்தாது உன்னஹே (முன்னாள் போர்வீரன்) திரைப்படம் வெளிவந்துள்ளது. இதுபற்றிய கருத்தரங்கொன்றும் சித்திரைப் பிற்பகுதியில், கொழும்பு புதிய நகரமண்டபத்தில், கம்கறு மாவத்த’ (தொழிலாளர் பாதை) அரசியற் கட்சி சார்ந்த மன்றமொன்றினால் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது. ஏறக்குறைய மண்டபத்தின் பெரும்பகுதி பார்வையாளர்களினால் நிரம்பியிருந்தது. பதினைந்து இருபது பேர்களுடன் கஷ்டப்பட்டுக் கூட்டம் நடத்திக்கொண்டே “வளர்ச்சி” என்றும் "ஆரோக்கியமான சூழல்” என்றும் தம்பட்டமடிக்கும் தமிழ்க் கலை இலக்கிய உலகை அறிந்த எனக்கு, இத்தகு கூட்டம் பிரமிப்பைத்தான் தந்தது. கலை,அரசியல், பிரச்சாரம் தொடர்பான - முரண்பட்ட வையும், சுவாரஸ்யமானவையுமான பல கருத்துக்கள் இதில்

9. Gudiyiraft 29
வெளிப்படுத்தப்பட்டன. கலாநிதி சுனந்த மகேந்திர (இவரது 'ஹெவனல்ல அத மினிஸ்ஸா’ நாவல் சமீபத்தில் திரைப்படமாகவும் வந்துள்ளது), இத்திரைப்படம் சிறந்ததொன் றெனப் பல காரணங்கள் காட்டிப் பேசியபோதிலும், “அரசியல் இன்மைதான் இதன் சிறப்பு” எனக் கூறியமை அபத்தமானது ரீலங்காவின் பெருமைக்குரிய கலை, இலக்கிய விமர்சகரான றெஜி சிறிவர்த்தனா 'அனுபவத்தையும் உருவத் தையும் கோட்பாட்டையும் இணைத்த, முழுவதும் அரசியலமைந்த முதற் சிங்களத் திரைப்படம்” భభ్య :భ என இதைப்பற்றி எழுதியுள்ளமை இங்கு தர்மசேன பத்திராஜ நினைவுகூரத்தக்கது. எனினும், "பிடித்தமான அரசியல் உள்ளடக்கம் கொண்டுள்ளதைக் கொண்டு மட்டும் ஒரு கலைப்படைப்பைச் சிறந்ததெனப் பாராட்டமுடியாது’ என்ற மகேந்திரவின் கருத்து முக்கியமானது கொழும்புப் பல்கலைக்கழகச் சிங்கள விரிவுரையாளரான திருமதி 'பியசீலி விஜேகுணசிங்க’ இதைச் சிறந்த அரசியற் படமென ஏற்றுக் கொண்டு பாராட்டியபோதும், “அரசின் இறைமை பற்றிய கருத்துக்களை 'வில்லி மகத்தயா’ பாத்திரம் வெளியிடுவது இயல்பற்றதாய் - பாத்திரத் தன்மைக்குப் பொருத்தமற்றதாய் - இருப்பது நீக்கப்படவேண்டிய குறைபாடு” என்பதைக் குறிப்பிட்டார் (போர்வீரன் இறுதியில் இறைமையை உணர்வதை ‘பியசீலி குறையாகக் காணவில்லை). கருத்துக்கள் திரைப்படச் சட்டங்களினூடாக இயல்பாகத்தான் வெளிவரவேண்டுமென்றும், வெறும் கருத்துக்களை மட்டும் கலையில் எதிர்பார்க்க முடியாதென்றும், அவைதான் முக்கியமென்றால் இறைமை பற்றிய கருத்தை லெனினின் அரசும் புரட்சியும் நூலிலும், மார்க்சின் எழுத்துகளிலும் தெளிவாக நாம் அறியலாம் என்றும் பேசியமை பொறுப்பு நிறைந்ததாயும் ஏற்றுக்கொள்ளத்தக்கதாயும் இருந்தது. “பத்திராஜ இந்தத் திரைப்படத்துடன்தான் தனது பாதை’ எதுவென்பதைச் சரியாக, நிர்ணயம் செய்துகொண்டுள்ளார்” என்று கூறிய ஜே. உயங்கொட', 'அரசியல்தான் இப்படத்தின் அடிப்படையென்றும், அதுவும் கலா ரீதியாக வெளிப்படுத்தப் பட்டுள்ளதென்றும், உயர்தரமான

Page 17
30 பதிவுகள்
படமென்றும் பாராட்டினார். எனினும் சாதாரண இரசிகர்களினால் இரசிக்க முடியாமலுள்ளதைக் குறிப்பிட்ட அவர், அத்தகையவர்களின் இரசிகத்தன்மையைப் புரிந்து கொள்ளாமைதான் பத்திராஜவின் பலவீனமென்றும் , இனிமேல் சாதாரண இரசிகர்களும் இரசிக்கக்கூடிய படங்களைப் பத்திராஜ தயாரிக்க வேண்டுமென்றும் சொன்னார். உயர்ந்த கலைக் கும் , சாதாரண இரசிகத்தன்மைக்குமுள்ள முரண்பாடுகளை எவ்வாறு சீர்செய்வது என்பது பற்றிய சிந்தனைகளை அவர் முன்வைக்கவில்லை. என்றாலும், கலையும் பிரச்சாரமும்; உயர்தரத்துக்கும் சாதாரண இரசிகத் தன்மைக்கும் உள்ள இடைவெளி போன்ற பிரச்சினைகள், தமிழீழ மார்க்சியவாதிகளைப் போலவே றிலங்காவின் மார்க்சியவாதிகளிடமும் இருப்பதை இக்கருத்தரங்கு உணர்த்தியது. இருசாராராலுமே இப்பிரச்சினைகள் பற்றிய சிந்தனைகள் மேலும் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். விரிவுரையாளர் சுசரித கம்லத் பேசியதை அடுத்து, காரசாரமான கலந்துரையாடலும் நடைபெற்றது.
தாம் யாழ்ப்பாணத்தில் நின்றபோது, மக்கள் ஆர்வமாகக் குழுமி நின்றபடி திரைப்படக் கதைவசனத்தை ஒலிபெருக்கியில் கேட்டதைக் கண்டதாகவும், அவர்கள் திரைப்படத்தைக் கேட்டால் மட்டுமே போதுமென்றும், பார்ப்பது முக்கியமல்லவென்றும் கருதுகிறார்கள் போலும்' என்று 'சுனந்த மகேந்திர தனது பேச்சிடையில் கேலிததும்பக் குறிப்பிட்ட கருத்தொன்றும், மனதிற் பதிந்தவொன்றாகும். O
96) - 7 (சித்திரை - ஆனி 1981)

அ. யேசுராசா: 31
பதிவுகள் - 7
சிமீபத்தில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற லூசுன் நூற்றாண்டு விழாக் கூட்டத்தில் கலந்துகொண்ட எம். ஏ. நு. மானின் பேச்சிலிருந்து, இன்றைய இலக்கியச் சூழலிற்குப் பொருத்தமானதும் பயன்மிக்கதுமான கருத்துக்கள் பலவற்றைப் பெற்றுக்கொள்ள முடிந்தது.
அ) புரட்சிக்கு முந்திய காலகட்டங்களில் விமர்சன யதார்த்தவாதம் இருக்கும்; புரட்சிக்குப் பிறகே சோஷலிச யதார்த்தவாதம் முக்கியத்துவம் பெறும்.
இருக்கின்ற நிலைமைகளை, மக்களின் - தனிமனிதனின், நசுக்குண்ட - வெறுப்புக்குரிய அவல வாழ்வு அதன் சகல பரிமாணங்களுடனும் அப்படியே சித்திரிக்கப்படுவதன்மூலம், அந்நிலைகளிலிருந்து விடுபட மறைமுகமாக அவாவுறுவது விமர்சன யதார்த்தத்தில் நிகழும். கலைக்குரிய உள்ளடங்கிய, குறிப்பாலுணர்த்தும் ( நேரடிப் பிரச்சாரமற்ற ) தன்மை இதில்

Page 18
32 பதிவுகள்
இருக்கும், லூசுன்னின் எழுத்துக்களில் இது சிறப்பாக வெளிப்படுகிறது.
ஆ) லூசுன்னின் படைப்புகளில் நேரடிப் பிரச்சாரம் இல்லை. பிரச்சினைகளிலும் அவலங்களிலுமிருந்தும் விடுபடுவதற்குரிய தீர்வு (மார்க்கம்) நேரே சொல்லப்படுவதில்லை; ஆனால், அங்கதம் மிளிர வெளிப்படுத்தப்படும் இயல்பான சித்திரிப்புகள், அத்தகைய விடுபடலையே மறைமுகமாகக் கோருகின்றன. இதற்கு நல்ல உதாரணமாக நுட்மான் சுட்டிய கதைகள் சிலவற்றை நேரடித் தீர்வு சொல்ல வேணி டுமெனச் சட்டம் போட்டுக் கொண்டிருக்கும் எமது வரட்டு விமர்சகர்களின் நோக்கில் பார்த்தால், “பிற்போக்குக் கதைகளாகவும்” முத்திரை குத்த நேரும்; வழிப் போக்கன்’ என்ற நாடகத்தில் செய்தி பூடகமாக உணர்த்தப்படுவது, 'விளங்க முடியாமை" என்ற குற்றத்துக்கும் ஆளாகலாம்.
இ) லூசுன்னின் படைப்பு முயற்சிகளில் அரைவாசிக்கு மேற்பட்டவை மொழிபெயர்ப்புக்களாயிருந்தன. பல்வேறு ஐரோப்பிய மொழிகளின் இலக்கியப் படைப்புகளைச் சீன மொழிக்குக் கொண்டுவந்ததன்மூலம் தானும் பயன்பெற்றதோடு, நவீன சீன இலக்கியத்தைச் செழுமைப்படுத்தவும் முக்கிய பங்களிப்பினைச் செய்தமை.
ஈ) "இன்று சில எழுத்தாளர்கள் தொழிலாளர்களையும் விவசாயிகளையும் தங்களுடைய நாவல்களுக்கும், கவிதைகளுக்கும் உரிய மாந்தர்களாகப் படைக்கிறார்கள்; இவை மக்கள் இலக்கியமென்றும் அழைக்கப்படுகின்றன. உண்மையில் இவை அவ்வாறில்லை. மக்கள் தங்கள் வாயைத் திறந்து இன்னும் ஒன்றையும் வெளியிடவில்லை; இவ்வகைப் படைப்புகள் பார்வையாளர்களது உணர்வு நிலையையே சித்திரிக்கின்றன. எங்களுடைய எழுத்தாளர்களிற் சிலர் ஏழைகளாக இருந்தபோதிலும், அவர்கள் தொழிலாளர்களையும் விவசாயிகளையும் விட, வசதி
 

e9, CulőGJITFIT 33
படைத்தவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களுடைய படைப்புகள் மக்களிடமிருந்து வருவதுபோல் தோற்றினாலும் உண்மையில் அவை அவ்வாறில்லை; அவை சாமானியர்களது உண்மையான கன்தகளல்ல” என்ற லூசுன்னின் மேற்கோளை வாசித்து, எமது எழுத்தாளர்கள் பலருக்கும் இது பொருந்துமெனச் சொல்லியவை. முற்போக்கு’ என்ற பெயரில் சிலரால் வைக்கப்பட்டுவரும் வரட்டுக் கருத்துக்கள் பலவற்றை உலுக்குபவையாக நுட்மானின் மேற்படி கருத்துக்கள் அமைந்துள்ளன. நுட்மானின் இத்தகைய கருத்துக்களையே வற்புறுத்திவரும் வேறுசிலரை "நாடகத்தால் மெய்யடியார் போல் நடிப்பவர்கள்” என்றும், "சந்தேகமான மார்க்சிய நிலைபாட்டினைக் கொண்டவர்கள்” என்றும் சஞ்சிகை மலரொன்றில், எமது வரட்டு விமர்சகர்களிலொருவர் சமீபத்தில் எழுதியுள்ளார் என்பதும் இங்கு நினைவுகூரத்தக்கது!
OO
படைப்புக்களையும் படைப்பாளர்களையும் பற்றிய மதிப்பீடுகள் அவரவர் நோக்குக் கோணங்களுக்கேற்ப வேறுபடலாம்; முரண்பாடின்றியும், தக்க ஆதாரங்களினடியாகவும் ஒருவர் வருகின்ற முடிவினை நமக்கு உடன்பாடில்லாத போதிலும் மதிக்கலாம். இதனால், வேறுபட்ட எல்லா முடிவுகளையுமே அங்கீகரிக்க வேண்டுமென்பதில்லை. பல்வேறு உள் நோக்கங்களினால் தவறான முடிவுகளிற்குச் சிலர் வந்திருக்கலாம்; அத்தகையவை சுட்டப்படவே வேண்டும்.
சமூகத்தொண்டன் சஞ்சிகையில் (இலக் 03, 1981) கவிஞர் இ.முருகையனைப் பற்றிய கட்டுரையில், ". உணர்ச்சி வெள்ளத்தில் அடிபட்டுப் போகாமல் நிதானித்து விஷயங்களை ஆழமாக நோக்கிக் கவிபாடும் நோக்கும் போக்கும் அவரின் (முருகையனின்) சிறப்பியல்புகள் காலஞ்சென்ற அசீனிவாசராகவன், ரா.பூரீதேசிகன், வா.செ.குழந்தைசாமி (குலோத்துங்கன்), சிதம்பர ரகுநாதன், த.ஏகாம்பரம், சிவசேகரம், நுட்மான், ஆதவன், சேந்தன் முதலியோரின் கவிதைகளிலும் மேற்கூறிய ஆய்வறிவுப் பண்பினையும், தத்துவ வீச்சையும் காணலாம்.” என விமர்சகர் கைலாசபதி எழுதியுள்ளார். அகன்ற தமிழக இலங்கைக் கவிதைப் பரப்பில் "உணர்ச்சி வெள்ளத்தில் அடிபட் டுப் போகாமல் நிதானித்து விஷயங்களை ஆழமாக நோக்கிக்

Page 19
34 பதிவுகள்
கவிபாடும் நோக்கும், போக்கும் உள்ள கவிஞர்கள் இவர்கள்தானாம்! தமிழகத்தில் பலரும், ஈழத்தில் மஹாகவி, தா.இராமலிங்கம், சண்முகம் சிவலிங்கம், மு.பொன்னம்பலம் போன்ற முக்கிய கவிஞர்களும் விலக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது ஒருபுறம் இருக்க, இலக்கிய அக்கறைமிக்க வாசகர்களுக்கே அதிகம் தெரியவராத - விரல்விட்டெண்ணக்கூடிய கவிதைகளே வெளிவந்துள்ள - ஆதவன், சேந்தன் போன்றோரை சீனிவாசராகவன், சிதம்பர ரகுநாதன், நுட்மான் வரிசையில் புகுத்த (இதற்கு ஆதாரங்கள் ஏதும் தரப்படவில்லை) அந்தரப்பட்டுள்ளதன் நோக்கம் என்ன?
இது வெறுமனே நோக்குக்கோண வேறுபாடா? ஒடும்
செம்பொன்னும் ஒப்பவே நோக்கும் பான்மையா? அல்லது
நேர்மையீனமா என்பதைப் பகுத்தறிவுமிக்க வாசகர்களிற்கே
விட்டுவிடுகிறேன். O
96OG) - 9
(ஐப்பசி - கார்த்திகை 1981)

9. CusigTsIT 35
பதிவுகள் - 8
ப்பத்துநான்கு திரைப்படங்களை இயக்கியுள்ள போதிலும் வெளிநாடுகளில் இன்னும் நன்கு தெரியவராதவராகக் குறிப்பிடப்படும் இத்தாலிய நெறியாளரான மோறோ பொலோக்நினியின் ஐந்து திரைப்படங்கள் - மெற்றேல்லோ','ஏ கிறேசி டே(உன்மத்தமான நாள்), "பை த ஒல்ட் ஸ்ரெயாகேஸ்" (பழைய மாடிப்படி அருகில்) , 'ஏ ஸ்பிளென்டிட் நொவெம்பர்’ (அற்புதமான கார்த்திகை மாதம்), 'இன்ஹெறிற்றன்ஸ்'(முதுசம்) ஆகியன, இத்தாலியத் தூதரகத்தினரால், பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் திரையிடப்பட்டன.
“பொலோக் நினி’யின் படங்களின் பிரதான கருப்பொருள்களாகச் செல்வம், பூர்ஷவாக்களதும் குட்டி பூர்ஷவாக்களதும் வேஷதாரித்தனங்கள் நிறைந்த சமூகம், பெண்கள் என்பன சொல்லப்படுவதுண்டு. இந்த ஐந்து படங்களிலுங்கூட இந்த அம்சங்களைக் காணலாம். இத்துடன் வேறுசில பொது அம்சங்கள் இருப்பதையும் உணர முடிகிறது.
1) பணத்திற்கான நாட்டம், வெறித்தனமும் பேராசையும்

Page 20
36 )பதிவுகள்
நிறைந்ததாக, ஐரின் பாத்திரத்துக்கூடாக " இவள் பணத்திற்காக மூத்தவனை மணந்து, பின்னர் தம்பியுடனும், பணக்கார மாமனுடனும் உறவு கொள்கிறாள் - இன்ஹெறிற்றன்ஸ்’ இல் வெளிப்படுகிறது. ‘ஏ கிறேசி டே' இல் காதலிக்குப் பிறந்த குழந்தையின் ஞானஸ்நானச் செலவிற்காகவும், பொதுச் சந்தையில் வேலை பெற்றுக் கொள்ளத் தேவையான 50,000 லியர் களிற் காகவும் அலையும் வேலையற்ற இளைஞன் டேவிட்டின் தவிப்பின்மூலம் வேறொருவிதமாகவும் வெளிப் படுத்தப்படுகிறது. 2) துன்பம் நிறைந்த வாழ்க்கைச் சூழலைக்கொண்ட இத்தாலியச் சமூகமும், அது மாறவேண்டுமென்ற நோக்கமும், மெற்றெல்லோ','ஏ கிறேசி டே' ஆகிய இரண்டிலும் இந்த அம்சம் அழுத்தமாக வெளிப்படுகிறது. ஆற்றில் மண்தோண்டுபவனும், அதிலேயே பின்னர் மூழ்கி இறந்து போகின்றவனும், அராஜக வாதியுமான தகப்பன் சிறையிலிருந்து விடுதலையாகிவர, வெளிவாசலில் சிறு குழந்தையுடன் மனைவி வரவேற்கும் காட்சியோடு ஆரம்பமாகி - வேறுகாலச் சூழலில் சோஷலிஸ்ற்றும், கட்டடத் தொழிலாளியுமான மகன் (இவனது பெயரே மெற்றெல்லோ சலானி)சிறையில் நின்றும் வர, அவனது மனைவி குழந்தையுடன் அவனை வரவேற்பதோடு முடிவடையும் "மெற்றெல் லோ’ இத்தன்மைகளை அழுத்தமாகவும், உயிர்ப்புடனும் சித்திரிக்கும் முக்கிய படமாகும். பின்வரும் குறிப்பு இதைச் செப்பமாகவே சொல்லுகிறது. “ஒரு குறித்த காலப்பகுதியில், குறிப்பிட்ட சமூகச் சூழலில் வாழுகிற ஒரு மனிதனின் வாழ்க்கையினைத் தனது மென்மையான உணர்திறன்கள் எல்லாவற்றுடனும் “பொலோக்நினி இங்கே வரைந்து காட்டுகிறார்; சிறைச் சாலைகளும், வேலைத்தளங்களும், நாளாந்த வேலையும், அரசியற் கூட்டங்களும், வேலை நிறுத்தங்களும் உயர்ந்த முறையில் அனுதாபத்துடனும் எளிமையுடனும் அணுகப்பட்டுள்ளன. பொலோக் நினியின் காட்சிப்படுத்தும் திறன், அவரது கமராவின் நகர்வுகளினூடாக இங்கு அதன் உச்சத்தை அடைகிறது.”
’ஏ கிறேசி டே' இல் ஆரம்பத்திலும், பின்னரும்,
ஏ ஸ்பிளென்டிட் நொவெம்பர்
 

அ. யேசுராசா (; 37
முடிவிலும் வரும் துடைப்பான் (dustman) ஒரு குறியீடாகவே சித்திரிக்கப்பட்டுள்ளான் - அழுக்கடைந்த சமூகத்தைச் சுத்தப்படுத்த வேண்டிய தன்மையை வலியுறுத்துவதாக, இடையில் ஒரு காட்சியில் தெருக்கூட்டு வோனொருவன் சில வரிகளைச் சொல்கிறான் " "ஆயுதங்கள் கிடைத்தால் புரட்சிக்கு இட்டுச் இது செல்லுவேன்” என அடிமட்ட மக்களின் நெருக்கம் நிறைந்த குடியிருப்புக்களும் அழுக்கான அதன் சுற்றுப்புறங்களும், அந்த மக்களின் அல்லாடல்கள் என்பனவும் ஐரோப்பியத் திரைப்படங்களில், மிச 32 அரிதாகவே எமக்குக் காணக்கிடைக்கின்றன. இன்ற்ெறிற்றன்ஸ்" சிங்கள நெறியாளர் தர்மசேன பத்திராஜவின் அஹஸ் கவ்வ’ திரைப்படத்திற்கும் இப்படத்துக்குமுள்ள ஒத்த தன்மைகளும் ஆராயப்படத்தக்கன.
3) இயல்புபிறழ்ந்த ஆண் பெண் உறவுகள் 'இன்ஹெ றிற்றன்ஸ்' இன் ஐரின் தமையனை மணந்து, தம்பியுடனும் மாமனுடனும் உறவுகொள்கிறாள்; இருபது வயதினனான மெற்றெல்லோ தன்னைவிட வயதில் மூத்தவளும், விதவையும், சமூகத்தின் உயர்தட்டில் உள்ளவளுமான வயோலாவுடன் உறவு கொள்கிறான் “ அவனது முதற் காதல் அது; ' ஏ ஸ்பிளென்டிட் நொவெம்பர் இல் 17 வயதான நினோ' மணமானவளும், தன் மாமியுமான செற்றினாவைக் காதலிக்கிறான், உறவு கொள்கிறான், அலைக்கழிகிறான்.
4) பிரமை கலைதல்.
பொலோக்நினியின் முக்கிய பாத்திரங்கள் பல ஒரு குறித்த கட்டத்தில், தம் உழல்வு நிலைகளில் நின்றும் நீங்கக் கூடிய வெளிச்சத்தைப் பெற்றுக்கொள்கின்றன ; அந்த வெளிச்சம்' அவர்களின் பிற்கால வாழ்வின் திசையினை முற்றிலும் மாற்றியும் விடுகின்றது. பணமெல்லாம் இழந்த நிலையிலுள்ள மைத்துனன் தன் கணி முனி னாலேயே திடீரெனத் தறி கொலை செய்துகொள்கிறதல், பேராசைக் காரியான 'ஐரின்’ உலுக்கப்படுகிறாள்; ஒரு மனிதனின் மரணம், இதுவரையுமான அவளது ஆளுமையின் மீது ஓங்கி அறைந்துவிட்டதில் அவள் நிலைகுலைந்துபோகிறாள். 'வயோலா’ வின் மீதான முதற்

Page 21
38 பதிவுகள்
காதலினைத் தொடர்ந்து நிகழ்ந்த அவளது முந்திய காதலனுடனான கடுஞ்சண்டையின்பின், அவளிடமிருந்து விலகி இராணுவத்திற் சேர்ந்து வெளி இடங்களிற்குச் சென்ற மெற்றெல்லோ, மூன்று ஆண்டுகளின் பின் திரும்பி வயோலாவை ஆவலுடன் சந்திக்கச் சென்றபோது, அவள் மணம்புரிந்திருப்பதையும் முந்திய காதல் வாழ்வைச் சாதாரணமாக எடுக்கின்றதைக் காணநேர்கிறபோதுமே அவளைப்பற்றிய அந்தரமும், பிரமையும் அவனுக்குக் கலைகின்றன. சகல அதிகாரங்கொண்டவரும், தனது ஆளுமையினால் ஆச்சரியப்படவும், அச்சப்படவுமான சூழலில் ஏனையோரை இருக்கச் செய்துள்ளவருமான மனநோயாளர் ஆஸ்பத்திரியின் தலைவரான பேராசிரியர் பொனகோர்சி, தானே ஒரு மன நோயாளிதான் என இளையவளான அன்னா என்ற சக வைத்தியரால் கடைசியில் உணர்த்தப்பட்டபோது, குலைந்து போகிறார்; தான் கருதியிருந்ததுபோல் ஏதோ ‘கிருமி ஒன்றினாலல்ல சுற்றுச்சூழலினாலேயே மன நோயாளிகள் உருவாகின்றனர் என்ற அன்னா'வின் கருத்து தன்மூலமும் நிரூபிக்கப்பட்டுவிட்டதில், தன்னைப்பற்றித் தான் கொண்டிருந்த உயர் மதிப்பீடுகள் பொய்யானவை என்பதைக் கசப்புடன் உணரவேண்டி ஏற்படுகிறது. பாதுகாப்பான இடம்' என்பதே பாதுகாப்பற்றதாயுள்ளது' என்பது உணரப்பட்டதில், தன்னைக் காப்பாற்றிக்கொள்வதற்காக அங்கிருந்தும் ஓடிச் செல்கிறார்.
5) காட்சிப்படுத்தும் திறன்மிக்கவர் பொலோக்நினி" என்பது இந்த ஐந்து படங்களிலும் நிரூபிக்கப்படும் பொது உண்மை என்றபோதிலும், விரைவான வெட்டுக்காட்சி (quick cuts) உத்தியை வலுவுடனும் பெருமளவிலும் கையாள்வது இவரது முக்கிய தன்மையாகிறது; பாத்திரங்களின் மனநிலைகளை வெளிப்படுத்துவதற்கும், முற்றிலும் மாறிய மனநிலைகளிற்கு நகர்த்துவதற்கும் அதிர்ச்சியூட்டுவதற்கும் அவர் இந்த உத்தியைப் பாவிக்கிறார்; இது அவரது தனித்துவமாயிருக்கிறது. இந்த வெட்டுக்காட்சி உத்திமுறைக்கு நேர்த்துருவமான Panning (ஒன்றிலிருந்து இன்னொன்றிற்குப் படிப்படியாக நகர்த்திச் செல்லல்) உத்தியை குறிப்பாக "ஏ கிறேசி டே' இன் ஆரம்பத்திலும் இறுதியிலும் வரும் மாடிக் குடியிருப்புகளின் காட்சியிலும் : சிறையிலிருக்கும் மெற்றெல்லோ' விற்கும், வீட்டிலிருக்கும் அவனது இரண்டாவது காதலிக்குமிடையில் நடைபெறும் நீண்ட கடிதத் தொடர்புகளைச் சித்திரிக்கும் காட்சியிலும் அவர் கையாளும்போது

9 UēJTFT 39
வெளியிடும் ஒத்திசைவும் - லயமும்கூட, அவரது சிறப்பை உணர்த்துவனவே.
சமூகப் பொறுப்புணர்வும், கலை ஆளுமையும் திரண்ட முக்கியமான திரைக் கலைஞனொருவனுடன் எம்மைப் பரிச்சயப்படுத்திவைத்த இத்தாலியத் தூதரகத்தினருக்கு நன்றி தெரிவிக்கும் அதேவேளை, ".எல்லா இலக்கியப் படைப்புகளும் பிரச்சாரமே செய்கின்றன. பொருள் அர்த்தம் அற்ற சொற்கள் அல்லது வாக்கியங்கள் எப்பொழுது இலக்கியத்தில் சாத்தியமோ அன்றைக்கே பிரசாரம் செய்யாத (அதாவது எந்தக்கருத்தும் கூறாத) இலக்கியம் சாத்தியமாகும்” என்று - 'கலை வெறும் பிரச்சாரமே என்று இன்றும் சொல்லித்திரியும் எமது முற்போக்குகள் (தோழர்கள் / தோழர்கள் அல்லாத இருசாராருமே) மெற்றெல்லோ', 'ஏ கிறேசி டே’ போன்ற படங்களைக் கட்டாயம் பார்க்கவேண்டுமென வற்புறுத்தவும் தோன்றுகிறது. பிரச்சாரமாகும் கலை (எனப்படுவது) அல்ல கலையாகும் பிரச்சாரமே ஏற்புடைமை நிறைந்தது என்பதை இவற்றின்மூலம் அவர்கள் உணரக்கூடும்! ஆனால், இலக்கிய உலகில் முழங்கும் தீவிரக் கருத்துக்களைக்கூட - அதைத்தாண்டி இன்னுமொரு கலைவடிவமென்று வந்ததும் - கோட்டை விட்டுவிட்டு, நிறம் மாறாத பூக்கள் போன்றவற்றை இவர்களிற் பலர் இரசித்துப் புளுகித்திரிகிறதைக் காண்கையில், அதில் நம்பிக்கை கொள்வதற்கும் சங்கடமாயிருக்கிறதே!
OO
வியத்துறையில் நாட்டங்கொண்டவர்கள் உலகப்புகழ் பெற்ற கலைஞன் பிக்காசோவின் படைப்பு வாழ்க்கையில் நீலக் (SITalib’ (Blue Period) 361T65dai'ild, SITalib’ (Pink Period) 6T6ip முக்கிய காலகட்டங்கள் இருப்பதை அறிந்திருப்பர். இலங்கையின் எழுத்துலகைச் சேர்ந்தவர்கள் அல்லது சேர்ந்ததாகக் காட்டிக் கொள்கிறவர்கள் பலரின் வாழ்க் கையிலும் வேறுவகையினதான வர்ணக் காலங்கள்’ (அரசாங்கங்களின் நிறங்களிற்கேற்ப) இருந்திருப்பதை " இருப்பதைக் காணலாம். நீலத்திலிருந்து பச்சைக்கு மட்டுமல்ல, கடுஞ்சிவப்பு வெளிறிப்போக நீலம் - பச்சையென மாறிக்கொள்ளும் "யோகமும் சிலருக்கு நிகழ்கிறது!
சரி, தினகரன் வாரமஞ்சரியில் அறுவடை செய்யும்

Page 22
40 *பதிவுகள்
அன்பன் எஸ்திக்கு வருவோம். இவர் காட்டும் சலசலப்புகளினால் பலர் வாயிலும் இவரது பெயர் தற்போது அடிபடுகிறது. ஆனால் உண்மையில் 1977 இன் முன்பு - சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் அரசாங்கத்தில் வடக்கின் அரசியல் அதிகாரி (Political Autho rity) அருளம்பலம் என்பவர் செங்கோலோச்சியபோதே, இந்த எஸ்தி என்ற எஸ். திருச்செல்வம் பிரபலம் பெற்றிருந்தார்; அது இவரது நீலக்காலம்' இப்போது யூ.என்.பி அமைச்சரை வைத்துக் கூட்டம் நடத்துகிறார்; அரசினைப் புளுகி எழுதுகிறார், இது இவரது பச்சைக் காலம்’ ஆகலாம். இத்தகையவர்தான் சாஹித்திய மண்டலப் பரிசுகளைப் பகிஷ்கரிப்பது தொடர்பாக ஒன்பது கலை, இலக்கிய அமைப்புகள் முன்வைத்த கோரிக்கைகளிற்கு எதிராகக் கிறுக்குகையில், “சில தீய சக்திகள் தங்கள் வேலைகளை ஆரம்பித்துள்ளன” என்றும், "இப்போது இலக்கியத்துள் அரசியலைப் புகுத்திக் கலங்கிய குளத்தில் மீன்பிடிக்கப்பார்க்கிறார்கள்” என்றும் குறிப்பிடுகிறார்; யாழ்ப்பாணத்தில் கூடிய அமைப்புகள் இலங்கை முழுவதற்குமான பரிசு முடிவுகளை எப்படித் தீர்மானிக்க முடியும் என்று கேட்டு மலையகத்தமிழர்கள், கிழக்குமாகாணத் தமிழர்கள், யாழ்ப்பாணத் தமிழர்கள், முஸ்லிம்கள் போன்றவர்களிடையில் பேதத்தை உருவாக்கும் விஷக்கருத்துக்களையும் கக்குகிறார். இந்த அரசாங்கத்தின்போதே சாஹித்திய மண்டலப் பரிசுகள் அபிப்பிராய பேதத்திற்கு இடமில்லாதவாறு ஒழுங்காக வழங்கப்பட்டுள்ளன எனப் புளுகுவதன் மூலம் , தனது அரசு விசுவாசத்தையும் காட்டிக்கொள்கிறார். அத்துடன் நில்லாது, பகிஷ்கரிப்பு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்களைச் “சில்லறைகள்” என்று குறிப்பிட்டு "மன்னிக்கத் தெரிந்த தமிழினம் இவர்களையும் நிச்சயம் மன்னிக்கும் என்பதில் ஐயம் இல்லை” என்று எள்ளல் தொனியுடன் முதலைக்கண்ணிரும் வடிக்கிறார், "சில்லறைகள்', 'நோட்டுக்களில் இவர் ரொம்பவும் அக்கறைகொண்டவர் போலும்! இப்பொழுது முக்கியமானதொரு கேள்வி எழும்புகிறது - தமிழினத்தின் மன்னிப்பினைக் கேட்டு இரந்து நிற்கவேண்டியவர்கள் யார்?
முழுத் தமிழினத்தின் மீதுமான அநீதிகளை உணர்ந்துள்ளதோடு, அதற்கெதிராகக் கலை இலக்கியத் துறையைச் சேர்ந்தவர்களும் எதிர்ப்பினைக் காட்டவேண்டுமென முயல் பவர்களா? அல்லது சுய இலாபங் காரணமாக இத்தகைய சமூக

9, Guaymas T : 41
அக்கறைகொண்ட நடவடிக்கைகளுக்கெதிராக இயங்கித் தமது அரசு விசுவாசத்தைக் காட்டும் பச்சோந்திகளா?
நாம் வாழும் காலகட்டத்தில் இத்தகைய கேள்விகளுக்கான பதில் ஒன்றே ஒன்றுதான்!
Ο Ο
இ லக்கியக் கிசுகிசுப்புக்களை'யும் (சினிமாக் கிசுகிசுப்புக்களைப்போல) அவதூறுகளையும், குறித்த சிலரைப் பிரபலப்படுத்துவதற்காக அடிக்கடி புகழாரம் சூட்டுவதையும் நோக்கமாகக்கொண்டே அறுவடைப் பகுதி வந்துகொண்டிருக்கிறது. அன்பன் எஸ்தியே இதை எழுதுவதாகக் குறிப்பிட்டுள்ளபோதிலும் "முற்போக்கு” (!) எனச் சொல்லப்படும் செ. யோகநாதனும் இணைந்தே இதனைச் செய்துவருவதாக, இலக்கிய உலகில் பரவலாக நம்பிக்கை நிலவிவருகிறது. அலையைப்பற்றியும், என்னைப்பற்றியுமான குறிப்புகள் சில 21-11-82, 28-11-82 ஆம் திகதிகளிலான அறுவடையில் வந்துள்ளன. இரண்டாவதாகவுள்ள அறுவடையிலுள்ள குறிப்புகள் யோகநாதனுக்குத் தமிழகத்திலிருந்து கிடைத்தவை என, வெளிப்படையாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
1) நான் தமிழகம் சென்றிருந்தவேளை 'பஞ்சமர் வெளியீட்டாளரை (பிரகாஷ்) சந்தித்து, "இலங்கையில் சாதிப் பிரச்சனை கிடையவே கிடையாது” என்று கூறி, அந்நூல் அவரால் வெளியிடப்படுவதைத் தடுக்க முயன்றதாகவும்,
2) 'கணையாழி' சஞ்சிகை அலுவலகத்திற்குச் சென்று அதன் ஆசிரியர் தி.ஜானகிராமனைச் சந்தித்து, கணையாழி குறுநாவற் போட்டியில் செ. யோகநாதன் இரண்டாம் பரிசுபெற்றிருப்பதைத் தடுத்து நிற்பாட்டப்பார்த்ததாகவும், அதற்கு தி. ஜானகிராமன் ஒப்புக் கொள்ளவில்லை என்பதாகவும் இக் குறிப்புகள் கூறுகின்றன. இவை இரண்டுமே சிறுபிள்ளைத்தனமான அவதூறுகள் என்பதுடன், "எஸ்தி' யினதும் யோகநாதனினதும் "நேர்மை யினை வெளிச்சம் போட்டுக்காட்டவும் போதுமானவை.
இலங்கையில் சாதிப்பிரச்சினை இல்லையென்று ஒரு மடையன்கூடச் சொல்லமாட்டான். சாதிக்கொடுமைகளிற்கெதிரான எழுத்துக்களையும், பேச்சுக்களையும் பலதடவைகளிலும் நாங்கள் வெளிப்படுத்தியுள்ளோம்; வெளிப்படுத்தியும் வருகிறோம்.

Page 23
42 பதிவுகள்
இதைவிட முக்கியமானது பிரகாஷை நாங்கள் சந்திக்கவேயில்லை எனபது
இதேபோன்றே 'கணையாழி' அலுவலகத்திற்கும் நான் சென்றதேயில்லை. தி ஜானகிராமனின் எழுத்துக்களில் ஈடுபாடும், அவரில் மதிப்பும் கொண்டுள்ளவனாய் இருப்பதால் அவரைச் சந்திக்க ஆவல் கொண்டிருந்தபோதிலும், பொருத்தமற்ற சந்தர்ப்பங்களினால், அவரைச் சந்திக்கவே முடியவில்லை. இது ஒருபுறமிருக்க, நான் தமிழகத்தில் நின்றது 1982 மார்ச் 03-29 ஆம் திகதிகள் வரையிலாகும். மார்ச் மாதக் 'கணையாழியில் கணையாழியின் குறுநாவல் போட்டி முடிவுத் திகதி 31 - 03- 82 என்று தெளிவாகக் குறிக்கப்பட்டுள்ளது. ஆகவே, முடிவுற்றிராத போட்டியொன்றில் ஒருவர் இரண்டாம் பரிசினைப் பெற்றிருக்கவோ, வேறொருவர் அதனை நிற்பாட்ட முயற்சிக்கவோ, நிர்வாகத்தினர் அதனை ஏற்றுக்கொள்ள மறுக்கவோ எவ்வாறு சாத்தியமாகும்? ஆகவே, குறைந்தபட்ச விவேகமும் காட்டப்படாத அவதூறே இது என்பது புலனாகிறது. யோகநாதனினதும், எஸ்தியினதும் உண்மைபேசும் இலட்சணம்’ இதுதான் (இந்த இரட்டையரின் அறுவடையிலான அவதூறுகள் பற்றிய இபத்மநாபனின் விரிவான விளக்கமொன்றும், மேகம்' - 8ஆவது இதழில் வந்துள்ளது.
அடுத்தது, யோகநாதன் இரண்டாவது பரிசினைப் பெற்றுள்ளதாக எஸ்தி எழுதியிருப்பது இவர் இதனைப் பல்வேறு தடவைகளில் குறிப்பிட்டுள்ளார் (அலை - 21 ஆவது இதழில், அச்சுத்தவறு காரணமாக, யோகநாதன் இரண்டாவது பரிசு பெற்றுள்ளதாக ஒரு குறிப்பு வந்துள்ளபோதும் அது திருத்தப்பட்டே அலைப்பிரதிகள் பின்னர் விநியோகிக்கப்பட்டன). குறுநாவற் போட்டி முடிவுகள் 1982 ஜூன் மாதக் கணையாழி இதழில் வெளியிடப்பட்டுள்ளன. முதல் மூன்று பரிசுகளையும் பெற்றவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்; பிரசுரிப்பதற்குத் தெரியப்பட்ட பதினொரு குறுநாவல்களில் ஒன்றாகவே யோகநாதனின் "இரவல் தாய்நாடு' தெரியப்பட்டுள்ளது; யோகநாதனின் குறுநாவல் இரண்டாவது பரிசுக்குரியதாகத் தெரியப்படவேயில்லை. ஆனால் கடல்கடந்த போட்டியில் பரிசு பெற்ற பெருமைமிக்கவர், அதுவும் ஈழத்திலிருந்து பலர் கலந்துகொண்டபோதிலும் அவர் ஒருவரே பரிசு பெற்றார் என்றெல்லாம், வழமைபோலவே "எஸ்தி பொய்களை எழுதிவருகிறார்; இப்பொய்களை யோகநாதனும் இதுவரை மறுக்கவேயில்லை. புகழ்தேடும் முற்போக்கான வழிகளில் இதுவும்

9. Cussyris T : 43
ஒன்று போலும்!
தினகரனில் வந்த இந்தப் பொய்களைப் பற்றிய விளக்கங்களை நான் தினகரன் ஆசிரியர் இ.சிவகுருநாதனுடன் நேரில் கதைத்துவிட்டு, எழுத்தில் கொடுத்தேன். பல இடங்களிலும் வெட்டிச்சிதைக்கப்பட்ட நிலையில் அவை 05-12-82, 19-12-82ஆம் திகதிகளிலான இலக்கிய உலகம்' பகுதியில் (அறுவடையில் அல்ல) பிரசுரிக்கப்பட்டுள்ளன. அறுவடையில் பலரைப்பற்றி பல்வேறு சந்தர்ப்பங்களிலும் வந்த அவதூறுகள், கேவலமான பிரயோகங்கள் என்பவற்றை உதாரணப்படுத்தி, “சில இலக்கியச் சில்லறைகள், எமது இலக்கியப் பாதையை சாக்கடையை இலக்காக்கித் தள்ளிக்கொண்டு போகின்றார்கள் என்று சொன்னால் அது பொய்யல்ல" என்று எஸ்தி எழுதியிருப்பது (அறுவடை 1411-82) அவருக்கே மிகப்பொருத்தமாயுள்ளது என்றெல்லாம் நான் ஆதாரங்களுடன் எழுதியிருந்தவற்றை, ஆசிரியர் வெட்டியுள்ளார். இதைப்பற்றி தொலைபேசியில் கதைத்தபோது, “அம்பட்டன் கூடையைக் கிண்டாதீங்க தம்பி; இதையெல்லாம் விட்டிடுங்க; ignore பண்ணுங்க தம்பி” என்றே கூறினார். ஒரு பொறுப்பான பத்திரிகை ஆசிரியர் - உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத் தலைவர் சொல்லும் கூற்றாக இது தெரியவில்லை. யோகநாதனின் இரண்டாம் பரிசு விவகாரம் தொடர்பாக - என்றுமில்லாதவாறு - சிறு குறிப்பொன்றையும் ஆசிரியர் எழுதியுள்ளார் (எஸ்தியின் அவதூறுகள் பற்றி இவர் குறிப் பெதையும் இதுவரை எழுதவில்லை; மாறாக, அவதுTறுகளைத் தொடர்ந்தும் பிரசுரிக்கிறார்); அதில் அலையில் இப்பரிசுபற்றி வந்துள்ளதையே சுட்டிக்காட்டியுள்ளார். 'கணையாழி நடாத்திய போட்டி முடிவுகளின் உண்மை பொய்யினை அறிவதற்கு 'கணையாழி'யைப் பரிசீலித்து அல்லவா ஒரு பொறுப்பான பத்திரிகை ஆசிரியர் குறிப்பெழுத வேண்டும்? அடிப்படைப் பத்திரிகாதர்மத்தைக்கூடக் கடைப்பிடிக்கத் தயாரில்லாத இவர், உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத் தலைவராக இருப்பதும் வேடிக் கையாக இல்லையா? "லேக்ஹவுஸ்" பத்திரிகைகளிடமிருந்தா பத்திரிகாதர்மத்தை எதிர்பார்க்கிறீர்கள் என்ற குரலொன்றும், என்காதில் வீழ்கிறது; உண்மைதான் நண்பரே, அவ்வாறு எதிர்பார்ப்பது மடைமையானதுதான்! O
960)G) - 22
(பங்குனி - 1983)

Page 24
44 )பதிவுகள்
பதிவுகள் - 9
கிந்தையா நடேசன் என்ற தெணியான் 'மல்லிகையில் எழுதிய ‘இலங்கை முற்போக்கு இலக்கியமும் அதன் எதிரணியினர்களான மரபுப் பண்டிதர்களும், மார்க்ஸிஸப் பண்டிதர்களும்' என்ற கட்டுரையில், தாழ்வுச்சிக்கலினால் உருவாகிய அவரது நவீன சாதிஉணர்வே' வெளிப்பட்டது. அக்கட்டுரை தொடர்பான வேறுசிலரது கருத்துக்களிற்குப் பதிலளிக்குமுகமாக ஒருவருடத்தின் பின் அவர் எழுதிய, ஆனைபார்த்தவர்களுக்காக அனுதாபப்படுகிறேன்’ என்ற கட்டுரையிலும், மற்றவர்களையெல்லாம் மட்டந்தட்ட முயலும் அவரது அசட்டு அகம்பாவத்தைத் தவிர, உருப்படியான வேறொன்றையும் காணமுடியவில்லை. "தனது எழுத்துக்களுடனேயே முரண்பட்டுக் குழம்பிக்கொண்டிருக்கும் நடேசன்” என்று மிகச் சரியாகத்தான், தனது கட்டுரையில் என்.கே. ரகுநாதன் குறிப்பிடுகின்றார். ‘விளங்காத மேற்கோளும் விளங்கமறுத்த உண்மையும்' என்ற கட்டுரை (மல்லிகை, ஜனவரி - 1984), நடேசனினது வாதங்களின் நொய்மையினைச் சுருக்கமாயும் சிறப்பாயும் அம்பலப்படுத்துகிறது. அதை எழுதிய அ. விந்தன், "க. ந. வின் கற்பனாவாத அடித்தளத்தைப் புரிந்துகொண்டால்

9 Gilgii].firsil C; 45
அவருக்காக அனுதாபப்படுவதைத்தவிர வேறு வழியில்லை” என்றும், "இ. மு. எ. சங்கமும், கா. சிவத்தம்பியும் க. ந. வின் புதிய சாதிவாதத்திற்குப் பதிலிறுப்பார்களென விசுவாசிப்போமாக" என்றும் எழுதியிருப்பவை முக்கியமாய்க் கவனத்திற் கொள்ளத்தக்கவை. இந்தப் புதிய சாதிவாதம்' பற்றிய கருத்து, 1975 கார்த்திகையில் வெளிவந்த அலையின் முதலாவது இதழிலும் குறிப்பிடப்பட்டுள்ளமை முக்கியமானது. ஈழத்து இலக்கிய வரலாற்றின் ஒருகட்டத்தில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வைத் திரித்துக்காட்ட கந்தையா நடேசனை உந்தியது, இந்தச் சாதியுணர் வே. தன் னைக் "கொம் யூனிஸ் றி ' என்று சொல்லிக்கொள்ளும் இவர், 1977 பொதுத்தேர்தலின்போது, தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளரான த.இராஜலிங்கத்தை - அவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதற்காக" வெளிப்படையாகவே ஆதரித்து வேலைசெய்ததையும் இங்கு கவனிக்கவேண்டும்.
த. கலாமணி என்பவரும் “மரபுப் போராட்ட காலத்தில் முற்போக்கு இலக்கியங்கள் யாவும் இழிசனர் இலக்கியங்கள்' என்று ஒலித்த குரலின் மாற்றுக் குரலாக 'முற்போக்கு இலக்கியங்களில் கலைத்துவம் அல்லது கலைநயம் இல்லை' என்ற புதுக்குரல் அண்மைக்காலங்களில் ஒலிக்கத் தொடங்கியிருந்தது. ‘டானியலின் எழுத்துக்கள் பஞ்சப்பட்டவர்களின் வரலாற்று ஆவணங்கள்’ என்ற வகையில், பஞ்சப்பட்ட மக்களாலும் ஈழத்து இலக்கிய உலகாலும் மறக்கப்பட முடியாதவராகவே டானியல் விளங்கப்போகிறார். இதனாலேயே டானியலின் எழுத்துக்கள் மீது எதிர்க் குரல் கொடுப் போரையிட்டுச் சந்தேகம் கொள்ள வேண்டியுமுள்ளது” (மல்லிகை, நொவெம்பர் - 1983, பக் 13) என்று எழுதுகையில், மோசமானதொரு தர்க்கத்தடத்தில் நகர்ந்து செல்கிறார். இதன் மூலம் டானியலது படைப்புக்களின் பலவீனங்களைச் சுட்டிக்காட்டும் யாரும் சாதிவெறியர்களே என்பது மாதிரியாக, இந்தப் புதிய சாதிவாதம் மோசமானதொரு கட்டத்தை அடைகிறது. சிறிது காலத்தின் முன்னர் ‘எழுதுமட்டுவாளில் தாழ்த்தப்பட்ட சமூகச் சிறுவர்கள் சிலரின் பாடப்புத்தகங்கள் சாதி வெறியர்களினால் நெருப்பிலிடப்பட்டதைக் குறிப்பிட்டுவிட்டு, 1981 இல் அரசுப் பயங்கரவாதிகளினால் யாழ் நூலகம் எரிக்கப் பட்ட சம்பவத்தை அதனுடன் சமப்படுத்தி கேடானியல் அமைதி

Page 25
46 *பதிவுகள்
காண்பதும், (இலங்கையிலிருந்து ஓர் இலக்கியக்குரல் நூலில்) இந்த உணர்வினாலேயே ஆகும். மேலிருந்தோ, கீழிருந்தோ வரும் சாதி உணர்வு, சாதிவெறி, சாதி ஒடுக்குமுறைகள் எதுவுமே பிற்போக்கானவை; கண்டிக்கத்தக்கவை. குறைந்தபட்சம் ஒரு 'மனிதாயதவாதியாக இருந்தாற்கூட இச்சாதிச்சிக்கலிலிருந்து விடுபட்டுவிடலாம். ஆனால் தங்களை முற்போக்காளர், கொம்யூனிஸ்ற்றுகள் என்று சொல்லிக்கொண்டிருப்பவர்கள் இச்சிக்கலிலிருந்து விடுபடாதிருப்பதையும், பிறழ்வான கருத்துக்களைத் தெரிவித்துக் குழப்புவதையும் நாம் எவ்வாறு புரிந்து கொள்வது?
Ο Ο
சிTஹித்திய மண்டலப் பரிசளிப்பு மூடிய அறைக்குள், ‘கட்டுக் காவலுடன் நடைபெற்றது. தமிழ்க் கலைக்கும் கலாசாரத்திற்கும் அரசு பெரும் கெளரவம் அளித்துள்ளது என ஊதுகுழல் பத்திரிகைகளும், சில அடிவருடிகளும் புலம்பியுள்ளனர். தமிழ்த் தேசிய இனத்தின்மீது மேன்மேலும் ஒடுக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவரும் அரசு அந்த இனத்தின் கலை, கலாசாரத்தை மட்டும் கெளரவிக்கிறது என்பதை நாம் நம்பவேண்டுமாம்! இதை விட்டாற்கூட, 1977 - 1981 வரையிலான ஐந்தாண்டுகளிற்குரிய பரிசுகளை 1984இல் வழங்குவதிலிருந்தே கெளரவிக்கும் இலட்சணம் விளங்குகிறதே! இதைவிட முக்கியமானது, பரிசுக்குரியதெனத் தேர்ந்தெடுக்கப்பட்ட இரு நூல்களை வெளியிட்ட 'வைகறை வெளியீட்டாளர்கள்' இருவரையும், மனித உரிமைகளிற்கு விரோதமானதென உலகெங்கும் கண்டிக்கப்பட்ட சட்டமொன்றின்கீழ்க் குற்றஞ்சாட்டி - ஒன்றரை வருடத்திற்கு மேல் தடுத்து வைத்தபடியே, அவர்களது நூல்களிற்குப் பரிசு வழங்கும் வேடிக்கை! ஒரு வருடத்தின் முன்பு இப் பரிசு முடிவுகள் அறிவிக்கப்பட்டபோதே இக்கொடுமையைக் கண்டிக்குமுகமாக சாஹித்தியப் பரிசுகளைப் பகிஷ்கரிக்குமாறு எழுத்தாளர்களைக் கோரும் அறிக்கை ஒன்றினை, ஒன்பது கலை, இலக்கிய அமைப்புகள் சேர்ந்து வெளியிட்டன. (அதில் ஒன்றான 'தேசிய கலை, இலக்கியப் பேரவை தமக்கே உரித்தான "இடது குத்துக்கரணம் ஒன்றை அடித்துப் பின்னர் நழுவியது). பொதுமக்கள் மத்தியிலும், இலக்கிய ஆர்வலர்களிடையிலும் இதற்கு ஆதரவு வெளிப்பட்டபோதிலும், பரிசு எழுத்தாளர்களிற் பெரும்பாலோர் வெட்கங்கெட்டமுறையில்,

● GuóJIgI○ 47
மெளனமே சாதித்தனர். "எங்கடை எழுத்தாளர்கள்” என்று எப்போதும் ஆக்ரோஷிக்கும் டொமினிக்ஜீவா - மல்லிகைகூட மெளனமே சாதித்தனர். பரிசு பெற்ற 'வைகறை வெளியீடுகளில் ஒன்றான நாமிருக்கும் நாடே நூலின் ஆசிரியர், தான் எழுதிவரும் பத்தியில் (திரேசா - சியாமளா குறிப்புக்கள், தினகரன் வாரமஞ்சரி) பரிசுத்தொகை ஆயிரம் ரூபாய் போதாதென்று மட்டுமே கவலைப்பட்டிருந்தார்; இன்னொரு எழுத்தாளர் பரிசளிப்பு வைபவத்தில், “அடுத்தமுறை பரிசுத்தொகை ஐயாயிரம் ஆக்கப்படும” என்ற அமைச்சரின் குறிப்பைக் கேட்டதும், "ஐயோ! அப்பிடியெண்டால் அடுத்த வருசம் எங்களுக்குப் பரிசு தரலாமே” என்று ரொம்பவும் அங்கலாய்த்தாராம்! தமிழ்நாட்டு சுஜாதா, இந்துமதிகளையும்; புஷ்பா தங்கதுரைகளையும் வியாபார எழுத்தாளர்களெனக், கிண்டல்பண்ணத் தயங்காத இந்த “சமூகப் பிரக்ஞை கொண்ட” (!) எழுத்தாளக் கும்பல், பாரதியின் சொற்களில், "வாய்ச்சொல்லில் வீரராயும் சொந்தச் சகோதரர் துன்பத்திற் சாதல் கண்டும் சிந்தை இரங்காதோராயுமே தாம் உண்மையில் இருப்பதைக் காட்டிக்கொண்டுவிட்டனர். இவர்களைப்பற்றிப் பேசிக்கொண்டிருப்பதில் என்ன பயன்? வேண்டாம்! மலையாளக் கவிஞனும் கொம்யூனிஸ்ற்றுமான கடம்மனிட்ட ராமகிருஷ்ணனின் கவிதை வரிகள், எனக்கு ஞாபகத்திற்கு வருகின்றன.
*ஆகவே நாம் பூசணிக்காயைப்பற்றிப் பேசலாம். இந்த முறைகெட்ட பூமியைப் பற்றி நினைத்தும் பேசியும் சோர்ந்தேன் ஊதாரிப்பிள்ளைகள் திரும்பி வருவதைக்கானக் காத்திருந்த கண்களில் பிழை அடைந்து திரையிறங்கியது.
"இந்தப் பூமியின் அச்சு இற்றதென்றும் கறையான் அரித்ததென்றும்" யாரோ சொன்னார்கள் கழற்றிப் பரிசோதிக்க நேரமும் கிடைப்பதில்லை பழகித் துகளானதென்றால்
மாற்றிப்
புதியது போடனும்,

Page 26
48 பதிவுகள்
அப்போது தெரியலாம் சுயரூபம் வெடித்துச் சிதறிய கட்டிகளும் தலையோடுகளும் மெளனமாகின்றன.
எதற்கும் தயாரில்லையென்றால் அச்சொடிந்து போகட்டும் அழுகிய முட்டைபோல இந்தப் பூமி உடையட்டும். அல்லதோர் அசையா ஒவியம் போல் மரத்துப் போகட்டும். அதை அதன்பாட்டில் விட்டுவிடலாம்.
நாம் பூசணிக்காயைப்பற்றிப் பேசலாம்: பூசணிக்காய் பூமியைப்போல் உருண்டையானது."
விமலதாசன்
SONGSTGAų LDG (1984)
Ο Ο
Dனிதன் சஞ்சிகை இயக்கத்தில் முக்கிய பங்காற்றிய அ. விமலதாசனின் மரணம் , ஆழ்ந்த துக் கத்தினையும் இழப்பினையும் ஏற்படுத்துவதொன்று. அலையின் முதலிதழின் வெளியீட்டு விழா
முடிந்து யாழ்நகர்க் கடையொன்றில் நண்பர்களுடன் தேநீர் அருந்திக் கொண்டிருக்கையில், தானாக வந்து ஒரு
பிரதியை வாங்கிக் கதைத்ததில் அவருடன் அறிமுகம் ஏற்பட்டது. அப்போது அவர் யாழ்.
வளாக மாணவராயிருந்தார். பின்னர், விஞ்ஞானப் பட்டதாரியாகி வெளியேறிக் கொழும்பில் கடமையாற்றியதுவரை அடிக்கடி அவருடன் தொடர்பு இருந்ததில், அவரை நன்கு புரிய முடிந்தது தேசிய இனச் சிக்கல்,
சமூக விடுதலை, கலை - இலக்கியத் துறைகள் போன்றவற்றில் அவருக்கு நிரம்பிய ஈடுபாடு இருந்தது; பெரும்பாலும், இத்துறைகளிலான அலை" யின் கருத்துக்களுடன் அவருக்கு
 

é91. Gulgii]IsII (2; 49
உடன்பாடுமிருந்தது. பின்தங்கிய சமூகப் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு உதவுதல், சமூக ஆய்வுகள் என்பவற்றிலும் அமைப்பு ரீதியாக இயங்கினார். சிங் களப் புத்திஜீவிகளிடையில் தமிழர் பிரச்சினையை விளக்குவதில் பிற்காலத்தில் கூடிய அக்கறை காட்டினார். எங்கும் எவரிடமும் தனது கருத்துக்களைத் தயங்காது வெளிப்படுத்தும் பண்பு அவரிடம் இருந்தது.
தற்புகழ்ச்சி, சுயநலம் சிறிதளவும் இல்லாத - தியாகமும், அர்ப்பணிப்பும் நிறைந்த - வாழ்வு அவருடையது. தனது வாழ்வின்மூலம் கிறீஸ்துவின் செய்தியைக் கொண்டு செல்வதில் நம்பிக்கை கொண்டிருந்த அவர், நீதியின் நிமித்தம் உபத்திரவப்படுதலை’ எப்போதும் ஏற்றுக்கொண்டிருந்தார். அந்தவிதத்தில் 24-07-83இல் நிகழ்ந்த அவரது மரணமும், சிங்களப் பேரினவாதத்தினால் நிகழும் அவலங்களிற்குச் சாட்சியாகி அதை அம்பலப்படுத்துமொன்றாயே அமைந்தது.
அவிமலதாசன்
வாழ்நாளில் அறிந்தவர்களெல்லோராலும் மதிப்புடன் நேசிக்கப்பட்ட அவர், மரணத்திலும் நினைவுகூரத்தக்கவரே!
Ο Ο
திரு. க. அருமைநாயகத்தின் மரணம் இழப்பினை ஏற்படுத்துகிறது. வரலாற்றுச் சிறப்புப் பட்டதாரியான இவர், இலங்கைத் தமிழ்த் தேசியவாதத்தினைச் சரியாகப் புரிந்துகொண்ட ஒருவர்; 19 ஆம் நூற்றாண்டு இலங்கை வரலாற்றின் சில பகுதிகளை நேர்மையாக எழுதிய வரலாற்றாய்வாளர். அக்காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தில் கடமையாற்றிய அரசாங்க அதிபர்களின் சேவைக்குறிப்புகளையெல்லாம் அலசி ஆராய்ந்து, வரலாற்றுக் குறிப்புகளை அன்றைய சமூகப் பழக்கவழக்கங்களுடன் ஒன்றிணைத்துப் பல கட்டுரைகளைத் தந்துள்ளார். இலங்கை வரலாற்றில் தமிழர் பற்றிய பகுதிகள் பல வழிகளிலும் திரித்து

Page 27
50 ஃபதிவுகள்
எழுதப்பட்டிருப்பதைக் கண்டு - வரலாற்று மாணவனென்ற முறையில் வருந்தியது மட்டுமல்லாது, பல ஆசிரியர்களின் வரலாற்று நூல்களை விமர்சித்ததன்மூலம் உண்மைகளை நிறுவவும் பாடுபட்டார். "யாழ்ப்பாணத்தின் சாதி அமைப்பு' என்ற இவரது கட்டுரை முக்கியத்துவம் வாய்ந்தது; இதே தலைப்பிலான இவரது விரிவான ஆய்வு எம்.ஏ.பட்டத்திற்காக யாழ். பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது
1966இல் கொழும்பு வளாகத்தில் வரலாற்று விரிவுரையாளராக இருந்தபோது, வரலாற்றைத் தமிழில் கற்பிக்கச் செய்வதில் முக்கிய பணியாற்றினார்; இந்த விவகாரம் தொடர்பாகவே அங்கு நிரந்தரமாக்கப்படாமலும் விடப்பட்டார்.
1983 ஜூன் - ஜூலைக் காலங்களில் சேர் பொன். அருணாசலத்தின் அரசியற்றுறைக் கையெழுத்துப் பிரதிகளையும், வரலாற்று முக்கியம் நிறைந்த ஆவணங்கள் பலவற்றின் மூலப்பிரதிகளையும் ஆராய்ந்துகொண்டிருந்தார். 25-07-83 அன்று, 80,000ரூபாவிற்குமேல் பெறுமதிவாய்ந்த அவரது புத்தகங்களும், அரிய வரலாற்றுச் சுவடிகளும் சிங்களப் பேரினவாதிகளால் எரிக்கப்பட்டன. இந்த இழப்பினால் மனம் வெதும்பி விதிர்விதிர்த்த நிலையில் சரஸ்வதி மண்டப அகதிகள் முகாமில் இருந்தபோது, “இத்துடனாவது விட்டார்களே!; சந்தோஷம்’ என்று கூறிக்கொண்டிருந்தார்.
29-07-83இல், நண்பர்கள் சிலரின் வேண்டுதலிற்கிணங்கி அகதி முகாமிற்கு வெளியிற் சென்றிருந்தபோது, பேரினவாதிகளால் மரணமடைந்தார்.
அவரது பணிகள் அவரது நினைவை நிலைநிறுத்தும்!O
| 24۔۔ 6006}49 (பங்குனி 1984)

அ. யேசுராசா (; 51
பதிவுகள் - 10
மிழில் படிக்க நேர்ந்த நூல்களின் வாயிலாகத் தம்மேல் நேசத்தையும், மிக்க மதிப்புணர்வையும் பிறப்பித்திருக்கிற பிறமொழி எழுத்தாளர்களின் வரிசை - அந்த்வான்த் செந்த் எக்சுபெரி, காம்யு, செக்கோவ்,துர்கனேவ், சிங்கிஸ் ஐஸ்மத்தோவ் , மாப்ப சான்,ரோல்ஸ்ரோய்,புஷ்கின், நட்ஹம்சன்,ஹெமிங்வே, கிருஷன் சந்தர், எம். டி. வாசுதேவன்நாயர்,பவிர்தகழி.குர்அதுல் ஜன் ஹைதர் என்று நீண்டு செல்வது. ஒரே ஒரு நுாலே தமிழில் வந்துள்ளபோதிலும் கத்தரீன் ஆன் போர்ட்டர் இவ்வரிசையில் முக்கிய இடத்தைப் பிடித்துக்கொள்கிறாள். அவளுடைய 'வ்ளவரிங் யூடாஸ்’ என்னும் புகழ்பெற்ற சிறுகதைத் தொகுப்பு, குருதிப்பூ என்ற பெயரில் க.நா.சு.'வின் மொழிபெயர்ப்பில் (1959 இல்) வெளிவந்துள்ளது.
"காதரின் ஆன் போர்ட்டர் எழுதிய நூல்களின் பட்டியலை மட்டும் பார்த்தால் அவளுடைய மேதாவிலாசம் தெளிவாகத் தெரியாது. வாழ்நாள் முழுவதும் இலக்கியத்துக்கு அவள் அளித்துள்ளது மிகச் சில நூல்களே. பூரணமாகத் திற்னும்,

Page 28
52 பதிவுகள்
அசையாத 5606) உணர்ச்சியும் உடையவள். அமெரிக்க ஆசிரியர்களிலே பாஷை நடை, கருத்துநலம், இரண்டிலும் அவளே முதன்மையானவள் என்பர். ஏராளமாக எழுதப் பயிற்சி இருப்பினும், எழுதியதில் திருப்தி தருவதைத் தவிர வேறெதையும் பிரசுரிக்கமாட்டாள்.” என்ற க.நா.சு.'வின்குறிப்பும் அதில் காணப்படுகிறது. அவளின் சிறப்பான முன்னுரை அந்நூலிற்கு கத்தர்ன் ஆன்பேர்ட்டர் மேலும் மெரு கினையூட்டுகின்றது. - சிறியதான ஆனால் எளிமையும், ஆத்மார்த்தமும், கலைத்திறனும் கொண்ட அம்முன்னுரையை-அலை வாசகர்களுடன் பகிரவேண்டுமென்ற என்னுடைய வெகுநாளைய ஆவல், இன்று நிறைவேறுகிறது. இதைப் படிப்பதன்மூலம் யாராவது அவளின் எழுத்துக்களைப் படிக்கத் தூண்டப்படுவார்களானால், நான் மேலும் மகிழ்ச்சியுறுவேன்.
முன்னுரை
இந்தச் சிறுகதைத் தொகுப்பு முதன் முதலில் தோன்றி இப்போது பத்து வருஷங்கள் ஆகின்றன. இதனை முதற்கனிகள் என்று சொல்வது பொருந்தும். இந்தத் தொகுதியில் கொடுத்திருக்கிற வரிசையிலேயே இவை எழுதப்பட்டு வெளிவந்தன. நான் எழுதிய முதல் கதையும் இந்த நூலிலே இடம்பெற்றுள்ளது. திரும்பவும் படித்துப் பார்க்கும்போது இவற்றைப்பற்றி நான் வருந்தவில்லை என்றே சொல்லவேண்டும். முன்னமே எழுதியிராவிட்டால், இவற்றை இன்னமும் எழுதத்தான் வேண்டியிருக்கும். ஒரு தீர்மானத் துடனும்,அழுத்தமான நம்பிக்கையுடனும் எழுதப்பட்டவை இவை. இவற்றின் எதிர்காலம் பற்றி எனக்கு ஒரு திட்டமும் கிடையாது. வாசகர்கள் எப்படி அர்த்தப்படுத்திக் கொள்வார்கள் என்றும் நான் கவலைப்பட்டதில்லை. இதில் ஈடுபாடுள்ள சிலர் இது போல் இன்னும் அதிகமான கதைகள் இல்லையே என்று சிந்திக்கும்போதுதான் எளிமையுடனும், உண்மையுடனும் இந்த இருபது வருஷங்களில் இன்னும் முடிவுறாத ஒரு பெரிய திட்டத்திலே நான் ஈடுபட்டிருக்கிறேன். அந்தத்திட்டத்தின் துவக்குகளே இவை உருவம்,வரிசை, சொல் என்று என்னால் சாதிக்க முடிந்ததெல்லாம் இவைதான். சமூகமே - ஒரு பிரளய மாறுதலில் சிக்கிப் புரண்டு தவித்துக் கொண்டிருக்கும்போது நான் இதில் ஈடுபட்டேன். என் விஷயங்கள் விசித்திரமான சிக்கல்களாக
 

9. GuilyTaff 53
இருந்தன. இன்னும் எழுதாது அதிருஷ்டவசமாகத் தோன்றுகிற ஒரு சந்தர்ப்ப விசேஷத்தினால் இவை முதலில் பிரசுரமாயின. இந்தக் கும்பலான, குழப்பமான,மெதுவாக இருட்டிவரும் பத்து வருஷங்களில் எது என்னவாகும் என்று சொல்ல முடியாதபடி இருக்கிறது. நானே இவற்றின் எதிர்காலத்தை வகுத்துச் சொல்ல இயலாதநிலையில் இருக்கிறேன். நம்பிக்கையும் கிடையாது, முடிவாக எதுவும் சொல்லவும் தெரியாது எனக்கு.
கலைஞர்களோ அல்லவோ நாங்கள் எவரும் அந்தக் காலங்களில் சிறப்பாக வாழ்ந்தோம், வளமாக வாழ்ந்தோம் என்று சொல்ல முடியாது. கலை வாழ்க்கையின் மிகவும் உண்மையான குரல்; வாழ்வைப்போலவே கலையும் பகல் ஒளியிலே பசுமை வாய்ந்த உலகிலேதான் வளம்பெற முடியும் என்னைப் பற்றியவரையில் - நான் மட்டும் தனிப்பட்டவள் என்று சொல்லிக் கொள்ளவில்லை - சுயப்பிரக்ஞையுடன் உலகநெருக்கடி என்ற பயமுறுத்துகிற நிழலில்தான் வாழ்ந்திருக்கிறேன். இந்தப் பயமுறுத்தல்களின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள என் மனம், ஆன்மா இரண்டினுடைய சக்திகளும் பிரயோகப்பட்டு வந்துள்ளன. அவற்றின் ஆதார காரணங்களை அறிய நான் முயன்றேன். மேலை நாட்டிலே மனிதன் வாழ்வு தோல்வியுற்றுவிட்டது. இதன் அடிப்படைக் காரணத்தைக் காண விழைந்தேன். இந்த உருவமும் கனமும் பெற்ற துரதிருஷ்டத்தின் முன்னிலையில், ஒரு தனிக்கலைஞனின் மகத்தான குரலுக்கு வெட்டுக்கிளியின் குரலுக்கு இருப்பதைவிட அதிக முக்கியத்துவம் இல்லை என்று தோன்றலாம். ஆனால் கலைகள் இடைவிடாமல் வாழ்கின்றன. அவை நம்பிக்கையாய் வாழ்ந்து வளம் பெறுகின்றன. இவற்றின் பெயர்களும், உருவங்களும், உபயோகங்களும், அடிப்படையான தாத்பர்யங்களும் மாறாமல் நீடிக்கின்றன. முக்கியமான இச்சக்தியில் மாறுதலேயில்லை. காலத்தின் எந்தக் குறுக்கீடும், குறைபாடும் இவற்றைப் பாதிப்பதில்லை என்று தெரிகிறது. கலைகள் சர்க்கார்களையும், அதிகாரங்களையும், மதங்களையும், சமூகங்களையும் தாண்டி நிலைத்துள்ளன. அவற்றிற்குக் காரணமான நாகரிகங்களையும் மீறி உயிர்பெற்றிருக்கின்றன. இவற்றை அடியோடு அழித்துவிட முடியாது - ஏனென்றால் இதுவே நம்பகத்தின் அடிப்படை, உண்மையின் கருவூலம் பாழ்கள் சுத்தமாக்கப்படும்போது மீண்டும் காணப்படுவது இதுதான். இந்த நம்பிக்கையில் எந்த ஒரு சிறு துளியும் முக்கியமானது, மிகவும் சிறியதும் பூர்ணமானது, நம்பிக்கையைக் காப்பது என்று சொல்ல முடியும்,
- காதரின் ஆன் போர்ட்டர்
Ο Ο

Page 29
54 பதிவுகள்
1969 இல ே தயிலைத் தோட்டத்திலே கவிதை நூலைப் படித்தபோது மனதிற்குப் பிடித்துக் கொணர் டது. அப்போதுதான் முதன்முதலாய் சி.வி. வேலுப்பிள்ளையை அறிந்துகொண்டேன்; பிறகு 'வீடற்றவன்' நூலுருவில் படிக்கக் டைத்தது. இடைக்காலத்தில், மலையக மக்களிற்கான அவரது பங்களிப்புப்பற்றி அறிந்து மதிப்புக் கொண்டிருந்தபோதும், 'வீரகேசரியில் தொடராய் வந்துகொண்டிருந்த 'இனிப் படமாட்டேன்’ நாவலைப் படித்தபோது, இந்த மதிப்பு மேலும் உயர்ந்துகொண்டது. சுயசரிதைப் பாங்கிலான - சமீபகால அரசியல் நிகழ்வுகள், 1981 இனக் கலவரம் , உண்மைப்பாத்திரங்கள் சிலதைக் கொண்டதாக - தார்மீகத் துணிவினைக் காட்டுவதாக அது இருந்தது. அதன் பின் அவரைச் சந்திக்க ஆவலி கொண்டிருந்தபோதும், வாய்ப்புப் பொருந்திவரவில்லை.
1982 இன் பிற்பகுதியென்று நினைக்கிறேன். கொழும்பு 'விவேகானந்த வித்தியாலயத்தில் தகவம்' இலக்கிய அமைப்பு ஒழுங்குபடுத்தியிருந்த 'வீடற்றவன்’பற்றிய கருத்தரங்கிற்குச் சென்றிருந்தேன்; அங்கு சிவியும் வந்திருந்தார். செ.கணேசலிங்கன் தனக்கேயுரிய வரட்டுக் கருத்துக்களைக் கூறி நாவலைச் சாடினார். "கதாநாயகன் நாவலின் இறுதியில் பலாங்கொடைக் காட்டில் இருந்து போகுமிடந் தெரியலையே' என்று புலம்புவது பிற்போக்குத் தனமானது; இது சோர்வு வாதமாகும்" என்பது அவரது குற்றச் சாட்டுக்களில் ஒன்று. பார்வையாளர்களிற்குச் சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டபோது, கணேசலிங்கனுடன் மாறுபடும் எனது கருத்துகளைத் தெரிவித்தேன். இறுதியில் சி.வி. பேசுகையில், "நாவலின் கதாநாயகன் காட்டில் உட்கார்ந்து துக்கப்பட்டதைக் குறைபாடாக ஒருவர் சொன்னார். இருபத்தொரு வருஷங் களுக்குப் பிறகு(கதை நிகழ்வது 1960 இல்) - 1981 இல் இதே பலாங்கொடைக் காட்டுக்குள் ஆயிரக்கணக்கான தோட் டத்து ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் ஒளித்திருந்து
 

-9{. GuðJø ( 55
புலம்பினார்களே! இதைப்பற்றி நாம் என்ன சொல்லமுடியும்?” என்று குறிப்பிட்டபோது, எல்லோர் மனதிலும் தாக்கமாய் அது பதிந்தது. கற்பனையில் புரட்சிபண்ண விரும்பும் முற்போக்குப் போலிகளிற்கு, வரலாறும் வாழ்க்கை யதார்த்தமும் ஓங்கி முகத்திலறைந்து சென்ற எத்தனையோ உதாரணங்களில், இதுவுமொன்று என்பது என் மனதில் மின்னலாய் வெட்டியது. நிதானமாயும், தனக்கேயுரிய அமைதியுடனும், மிகத்தெளிவாக நாவல் தொடர்பான தனது கருத்துகளை, அவர் வெளியிட்டார். எனது கருத்துகள் அவருடன் உடன்படுவதாயிருந்தன. கூட்டம் முடிந்து ஒதுங்கி நின்றபோது தானாகவே வந்து கதைத்து, என்னைப்பற்றி விசாரித்தார். இனிப் படமாட்டேன்’ என்னை மிகக் கவர்ந்துள்ளதைச் சொன்னபோது, 'பெருமளவு பகுதி வெட்டப்பட்டே வீரகேசரியில் வருவதாகச்' சொல்லிக் கவலைப்பட்டார். நான் கொழும்பில் கடமை புரிவதாகக் கூறியதும் வசதிபோல் தன்னுடன் தொடர்பு கொள்ளும்படியும் சொன்னார். அதன்பின்னர் பல தடவைகள் கொள்ளுப்பிட்டியிலுள்ள அவரது தொழிற்சங்க அலுவலகத்திற்குச் சென்று இலக்கியம், அரசியல்பற்றி உரையாடியிருக்கிறேன். இடைக்கிடையில் தொலைபேசியிலும் தொடர்புகொள்வார். தலைமுறை இடைவெளியை உணர முடியாதவாறு அவருடனான பழக்கம் அமைந்திருந்தது.
சிTஹித்திய மண்டலப் பரிசுகளைப் பஹஷ்கரிக்கக்கோரி ஒன்பது கலை, இலக்கிய அமைப்புகள் வெளியிட்ட அறிக்கைப் பிரதியினை, ஒருமுறை நேரிற் சென்று கொடுத்தேன். ஆறுதலாக வாசித்துவிட்டு, “நல்ல விஷயம், கட்டாயம் செய்யப்பட வேண்டும்” என்று கூறிவிட்டு, “இரண்டு பந்திகளின் வரிசையை மாற்றி அமைத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். இப்போதுள்ள வரிசையில் அரசியல் தொனி மேலோங்கியிருக்கிறது. நாம் கலைஞர்கள்; கலைஞர்களின் பாஷையில் பேசவேண்டும் ” என்று சொன்னார். மலையக எழுத்தாளர்களிடையில் இதற்குச் சார்பான அபிப்பிராயத்தை உருவாக்கி உதவவேண்டுமென்று கேட்டுக் கொண்டபோது,அதைச் செய்வதாகக் கூறியதோடு, “எனது நூலிற்குப் பரிசு கொடுக்கப்பட்டிருந்தால் சுழற்றி வீசுவேன்” என்று சொன்னபோது, அவரது தார்மீக ஆவேசத்தை நான் முழுமையாய் உணர்ந்தேன். வயது முதிர்ந்த - நெடிய அந்த மனிதர்’ என் மனவெளியில்,மேலும் உயர்ந்தவரானார்!

Page 30
56 *பதிவுகள்
அவர் இறப்பதற்குச் சுமார் இரண்டு மாதங்களின் முன்னாக இருக்கலாம். கொள்ளுப்பிட்டியில் டேடன்ஸ்’ தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, ஒரு நாள் இரவு எட்டரை மணிபோல் நுட்மானும், நானும் அவரைப் பார்க்கச் சென்றிருந்தோம்.மெலிந்துபோய், மிகப் பலவீனமாகப் படுக்கையில் இருந்தார். மனைவியைக் கூப்பிட்டு அறிமுகப் படுத்தினார்(தமிழ்த் தோட்டத்தொழிலாளர்களுக்காக உழைப்பதற்கு வாழ்க்கையை அர்ப்பணித்துள்ள நீங்கள், வாழ்க்கைத் துணையாக ஒரு சிங்களப்பெண்ணை ஏன் தெரிந்தீர்கள்? என்று ஒருவர் கேட்டபோது, "அவள் ஒரு பெண்ணாக இருப்பதுதான் காரணம்” என்ற அவரது பதில், எனக்கு நினைவுக்கு வந்தது). இரு தலையணைகளைப் பக்கவாட்டில் வைத்துச் சிறிது சரிந்து படுத்தபடியே எம்முடன் கதைத்தார். கைலாசபதியின் மரணம் பற்றிக் கவலையுடன் நினைவுகூர்ந்தார்; யாழ்ப்பாண நிலைமைகள் பற்றியும் அக்கறையுடன் விசாரித்தார்.அவருக்குச் சிரமமாயிருப்பதால், ஒய்வாக விட்டுச்செல்ல விரும்புவதைத் தெரிவித்தபோதும் எம்முடன் அவர் உரையாட விரும்புவதை அறிந்தோம். அவரது 'வீடற்றவன்’ இரண்டாம் பதிப்பும், இனிப் படமாட்டேன்’ நூலும் வெளிவந்ததாகக் குறிப்பிட்டபோது தான் இன்னும் பார்க்கவில்லை’ என்று சொன்னார்(சிலநாள்களின் பின்னர் நண்பர் பத்மநாப ஐயர் கொடுத்துவிட்ட 'வீடற்றவன்' பிரதியை, நுட்மான் அவரிடம் சேர்ப்பித்தார். சில கிழமைகளின் பின்னர் யாழ்ப்பாணம் சென்றபோது பத்மநாபன் ‘இனிப் படமாட்டேன்’ நாவலை சி.வி.யிடம் சேர்ப்பிக்குமாறு தந்தார்; அதைத் தொழிற்சங்க அலுவலகத்தில் சேர்ப்பித்தேன். சி.வி.அந்த நாள்களில் வீட்டில் - தலங்கமையில் ஒயப் வெடுத்துக் கொண்டிருப்பதாக அறிந்தேன்). வெகு நேரமாகிக்கொண்டிருந்ததால் சென்று வருவதாக நாங்கள் சொன்னபோது, நுட்மானின் கையைப் பற்றியபடி சிறிது நேரம் கண்களை மூடினார். கண்களைத் திறந்தபோது "Bring hope from Outside' என்ற அவரது மெலிந்த குரலும், தோற்றமும் திரைப்படத்தின் உறைகாட்சிபோல் மனதில் பதிந்திருக்கிறது. தற்போது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தங்கியிருக்கும் நுட்மான், சமீபத்தில் எழுதிய கடிதமொன்றில் “.சென்ற மாதம் க்ரியாவுக்குப் போயிருந்தேன். அங்குதான் சிவிவேலுப்பிள்ளையின் மரணம் பற்றி அறிந்தேன். மிகவும் துக்கமாக இருந்தது கொழும்பில் அவரை நாம் கடைசியாகச் சந்தித்த ஞாபகம் இன்னும் அப்படியே

அ. யேசுராசா) 57
இருக்கின்றது. ‘இனிப் படமாட்டேன்’ நாவலை அச்சுருவில் பார்த்தாரோ தெரியவில்லை. அவர் நினைவாக அந்த நாவலை வாங்கிவந்து வாசித்தேன்” என்று, அச்சந்திப்பை நினைவுகூர்கிறார்.
1984 கார்த்திகை 19 இல் அவர் மறைந்தார். அந்த நாள்களில் கொழும்பில் நிலவிய பதற்ற நிலைமை காரணமாக, தலங்கமைக்கு எவ்வாறு செல்வது எனக் குழம்பினேன். 22 ஆம் திகதி 'கணத்தையில் (பொரளையில்) மரணச்சடங்கு நடைபெறும் என்பதை அறிந்து, அங்கு செல்லலாமென ஒருவாறு தேற்றிக்கொண்டேன்.ஆனால், எதிர்பாராமல் அன்றைய தினம் பிறப்பிக்கப்பட்ட முழுநாள் ஊரடங்குச் சட்டத்தினால், அந்த நம்பிக்கையும் சிதைந்தது. சரத் முத்தெட்டுவேகம நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டது போல, அவருக்கு இறுதி மரியாதை செய்யமுடியாது போன பல்லாயிரக் கணக்கானோரில் நானும் ஒருவனானேன். பதினைந்து வருட என் ‘இலக்கிய உலகப் பரிச்சயத்தில் - தமது ஆற்றல், பங்களிப்பு, நியாயத்திற்கான போராட்டப் பங்கேற்பு போன்றவற்றால் “ தம்மை மதிக்கத் தூண்டிய மிகச்சிலரேயான இலங்கைப் படைப்பாளர்களில் சி.வியும் ஒருவர்; அவருக்கு எனது இறுதி அஞ்சலிகள்!
Ο Ο
சிTர்லி சப்ளினின் திரைப்படங்களில் த கிறேற் டிக்ரேற்றர் (மாபெரும் சர்வாதிகாரி), "மொடேர்ன் ரைம்ஸ்’ (நவீன காலம்) ஆகிய இரண்டினை மட்டுமே இதுவரை பார்த்திருந்தேன்; அவரது படங்கள் நீண்ட காலமாக, இலங்கைக்கு வரவில்லை. சென்ற மார்கழி 10-14 ஆம் திகதிகள் வரை "சார்லி சப்ளின் திரைப்பட விழா’வொன்று கொழும்பு ‘அமெரிக்க நிலையத்தில் நடைபெற்றது. அதில் த கிட்(1921, சிறுவன்), த கோல்ட் றஷ’ (1925, தங்கவேட்டை), த சேர்க்கஸ்" (1928),"சிற்றி லைற்ஸ்(1931), லைம் லைற்’(1952, பிரபல்யம்) ஆகியன திரையிடப்பட்டன. இவையனைத்தும் அவராலேயே எழுதப்பட்டு, நெறிப்படுத்தப்பட்டவை ஆகும் முதல்

Page 31
58 பதிவுகள்
நான்கும் மெளனப் படங்கள் - இடையிடை ஆங்கில எழுத்துக் குறிப்புகளைக் கொண்டவை; கடைசிப்படம் பேசும் படமாகும். நிலையான இருப்பிடமற்று அலைந்து திரியும் - பழைய கிழிந்த உடுப்புடன் - உணவுக்கும் திண்டாடும் ஒரு வறிய | மனிதனாகவே முதல் நான்கு | படங்களிலும், சார்லி சப்ளின் வருகிறார். | அவர் தொடர்புகொள்ளும் சூழலிலும் இந்த அவல வாழ்வு துலக்கிக் காட்டப் படுகிறது. அவலத்தி | ணிடையிலும் உறவுகளின் அடியாக விரியும் மனித நேசம் இவற்றில் கவிந்திருப்பது, முக்கிய அம்சமா யிருக்கிறது. உதாரணமாக, பசித்திருக்கும் பெண்ணிற்கு தன்னிடமிருக்கும் ஒரேயொரு துண்டுப் பாணின் அரைவாசியைக் கொடுக்கிறார்; அடுத்து மீதித்துண்டையும் கொடுத்து விடுகிறார். அதன்பின், சிறிய பேணியில் அவிந்துகொண்டிருந்த ஒரேயொரு முட்டையையும் திருப்தியுடனேயே கொடுக்கிறார் (த சேர்க்கஸ்): குருட்டுப் பெண்ணின் மேல் காட்டும் ஆதரவு, அவளது வறுமைக்
சார்லி சப்ளின்
கஷ்டங்களில் உதவ முயலுதல் ("சிற்றி லைற்ஸ்). அநாதைச் சிறுவனுக்காய்ப்படும் கஷ்டங்களும், வேதனையும் (த கிட்"). நடைமுறையில் சமயக்கோட்பாடுகளின் பயனற்ற தன்மையைச் சில காட்சிகளில் வெளிப்படுத்துகிறார். உதாரணமாக, 'ஒரு கன்னத்திலறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு’ ("த கிட்'). பெரிதாகச் சொல்லப்படும் ஜனநாயக சுதந்திரத்தின் அர்த்தமற்ற தன்மை (த சேர்க்கஸ்) படத்தின் ஆரம்பக் காட்சியில், தாக்குவலுவுடன் வெளிக்கொணரப்படுகிறது. சுதந்திரத்தையும் வளத்தையும் குறிப்பிட்டு சிலை ஒன்று, ஒரு நகரத்திற்கு
வழங்கப்படுகின்றது.திறப்பு விழாவின் போது திரையை நீக்குகையில், ஏழை மனிதனொருவன் சிலை மீது படுத்தபடி
 
 

இருக்கிறான். அவனுக்கு வேறு இடமில்லை (இதுதான் அவனது சுதந்திரம்! - வளம்!). தராசும் , வாளும் ஏந்திய நெடிய சிலையிலிருந்து இறங்குமாறு பொலிஸ்காரரும் விழாப்பிர முகர்களும் கத்துகின்றனர். அவன் பதற்றத்துடன் இறங்குகையில் சிலையின் வாள்( சட்டத்தின் - நீதியின் வாள்?) அவனது உடையைக் கிழிக்கிறது; அந்தரத்தில் தொங்கு கிறான், ஒருவாறு விடுபட்டு ஒடித்தப்புகிறான். அவனுக்கு உண்மையில் சுதந்திரம் இல்லை. பிரான்சிய மக்கள் அமெரிக்காவிற்குப் பிரமாண்டமான"சுதந்திரச் சிலையை’ வழங்கியமை நினைவுக்கு வந்து, என்னுள் அதிர்வுகளை ஏற்படுத்துகிறது.
அ. யேசுராசா) 59
சிற்றி லைற்ஸ்
எனது அனுபவத்தில் த கிட்', 'சிற்றி லைற்ஸ்", "லைம் லைற் மூன்றும் மிக நன்றாய்ப் பிடித்துக்கொண்டன. த கிட்'இல் கைவிடப்பட்ட குழந்தையொன்றை விருப்பமின்றி - சூழ்நிலையின் நிர்ப்பந்தத்தால் - வளர்க்கும் ஒரு ஏழைக்கும் அக் குழந்தைக்குமிடையில் வளரும் பிணைப்பு, மனதைத்தொடுவது அநாதைகளைப் பேணும் நிறுவனங்களின் யாந்திரீகமான -
மனிதத்தன்மையற்ற - நடத்தைகளை அம்பலப்படுத்தும் சக்திமிக்க காட்சிகளும் மனதிற் பதிவன. மலர்கள் விற்று வாழ்க்கை நடத்தும் - வயதுபோன தாயைக் காப்பாற்றவேண்டிய - அழகிய ஏழைக் குருட்டுப் பெண்ணுக்கும், அலைந்து
திரியும் ஒரு ஏழைக்குமிடையில் மலரும் உறவை சிற்றி லைற்ஸ் சித்திரிக்கிறது. தற்செயலாய் ச்சந்தித்த குடிகாரப் பணக் காரனின் உதவியினால் , குருட்டுப்பெண்ணின் கஷ்டங்களை அந்த நாடோடி தீர்க்கிறான்; அவளைச் சந்தோஷப்படுத்த அவளின் முன் பணக்காரக் கனவானாகவும் நடிக்கி றான்; இறுதியில், சத்திரசிகிச்சைக்கும்

Page 32
60 பதிவுகள்
ஒழுங்குபடுத்துகிறான். பார்வை கிடைத்தபின் அவளிற்கு அவனது உண்மை நிலை தெரிகிறது; ஆனாலும் அவள் அவனை ஏற்றுக் கொள்கிறாள். சக மனிதனின் துயரில் பங்கேற்கும் - உண்மை அன்பை அங்கீகரிக்கும் - மானுட மேன்மையை அழுத்தும் ஒன்றாக, இப்படம் அமைகிறது. லெஸ்ரர் ஜேம்ஸ் பீரிசின் புகழ்பெற்ற தாச நிசா (கண்களின் காரணத்தால்) சிங்களத் திரைப்படத்திற்கும் (இது பெளத்த ஜாதகக் கதையொன்றை ஆதாரமாகக் கொண்டது) இதற்குமுள்ள அடிப்படை ஒற்றுமையும், ஆச்சரியகரமானது!
"லைம் லைற் முற்றிலும் வேறுபட்ட பாங்கிலான படம். பேசும் படமாயிருப்பதுடன், சீரியசான குணச்சித்திரப் பாத்திரமொன்றிலும் சப்ளினை அறிமுகப்படுத்துகிறது. குடிகாரனான - தன்னம்பிக்கை இழந்திருக்கும் - முன்னாள் பிரபல இசையரங்கக்கோமாளியான ஒருவனுக்கும், தற்கொலையில் தோல் வியுற் ற - நம்பிக் கையிழந்துள்ள - இளம் பலேநடனப்பெண்ணுக்கும் ஏற்படும் தொடர்பு, காதலாக உரு மாறுவதை இது சித்திரிக்கிறது. தன்னம்பிக்கை இழந்திருப்பவனே முரண்நிலையாக அப்பெண்ணை ஊக்கப்படுத்தி, பலே’ நடனமணியாக பிரபலமடையச் செய்கிறான், பக்கவிளைவாக தானும் சிறிதுசிறிதாக இழந்த நம்பிக்கையைப் பெற்று, 'கோமாளிக் காட்சியில் மீண்டும் முன்னரைப்போல் பாராட்டுகளைப் பெற்று அதன் உச்ச வேளையில் - புதிய பலே நாட்டியத்தில் அந்தப் பெண் பெரும் புகழினைப் பெறுவதையும் மேடையின் பின்புறத்தில் அமர்ந்தபடி பார்த்துக்கொண்டே - மாரடைப்பில் திடீரென இறக்கிறான்." முதுமை, இளமைக்கு வழிவிடும் நிறைவான முடிவு” என்றும், “சப்ளினின் இறுதிப் பிரகடனம்” என்றும் இதைப்பற்றிச் சில விமர்சகர்கள் சொல்கின்றனர்.
சப்ளின், தயாரிப்பிலிடுபட்ட காலத்தின் திரைத்தொழில்நுட்ப அறிவின் எல்லைப்பாடுகள் அவரைக் கட்டுப்படுத்தியுள்ளதால், இன்று நவீன திரைப்படங்களிற்காணும் பல்வேறுபட்ட வெளிப்பாட்டு முறைகளை, நாம் இவற்றில் காணமுடியாது; அது குறையுமல்ல. பெரும்பாலும் நேரடியானதாக - ஒரே பாங்கிலமைந்தவையாகவே அவை உள்ளன; ஆனால், காட்சிகள் தெளிவானவை.
எல்லாப் படங்களிலும் இழையோடும் மனித நேசம், அக்கலைஞனின்மேல் மிக்க மதிப்புணர்வை ஏற்படுத்துகிறது! O
96.06) -25 (பங்குனி 1985)

9. Guilliam 6
பதிவுகள் - 11
6
தமிழ்பேசும் மக்கள் என்ற கருத்தாக்கத்தினுள் முஸ்லிம் மக்களும் முக்கியமானவர்களாயுள்ளனர். மொழி இவர்களைத் தமிழ் மக்களுடன் பிணைக்கின்றது; வடக்குக் கிழக்கு மாகாணங்களின் முஸ்லிம்கள் வாழும் நிலத்தினாலும், பண்பாட்டம்சங்களாலும் மேலும் பிணைப்புற்றிருக்கின்றனர். இந்த அந்நியோன்னியம் மிக நீண்ட காலமாயே நிலவிவருகின்றது இடையில் இந்த ஆண்டு சித்திரையில் அம்பாறை, மட்டக்களப்புப் பிரதேசங்கள் சிலவற்றில் நிகழ்ந்த கலவரம் , துரதிர் ஷடவசமானது. பொறுப் புணர்வும் , துாரதிருஷ்டியுமற்ற சில தமிழ் இளைஞர் குழுக்களின் செயற்பாடுகளை, பிரித்து ஆளுதலில் கவனங்கொண்டுள்ள ஒடுக்கும் அரசினது கருவிகள் தந்திரத்துடனும், நுட்பத்துடனும் பயன்படுத்தியதாலேயே அவலமான அந்த நிகழ்வுகள் நடந்தேறின. தமக்கு முன்னாலுள்ள பொது ஆபத்தைக் கருத்திற் கொண்டு, புரிந்துணர்வுடன்கூடிய ஐக்கியத்தைத் தம் முள் வளர்த்துக் கொள்ளவேண்டியதே, இருசாரா ருக்கும் அத்தியாவசியமானது. பெரும்பான்மைச் சமூகமான தமிழ் மக்களுக்கு இதிற் கூடிய பொறுப்பு உண்டு தம்முள்

Page 33
62 Luglassir
சிறுபான்மையாய் வாழும் முஸ்லிம் மக்களின் மத, கலாசாரத் தனியுணர்வுகளுக்கு மதிப்பளித்து - ஐயுறவுகளை நீக்கும் வழிகளில், அவர்களே தீவிரமாய் முயல வேண்டும். கலை, இலக்கியங்கள் பரஸ்பர புரிந்துணர்வை வளர்க்கக்கூடிய சாதனங் களாகும். இலங்கை முஸ்லிம்கள் நீண்ட காலமாகவே தமிழ்க் கலை, இலக்கிய வளர்ச்சிக்குப் பெருந்தொண்டாற்றியிருக் கின்றனர். சமகாலத்திற் கூட முக்கிய இலக்கியப் பங்களிப்பை ஆற்றும் எம்.ஏ.நு. மான், மருதூர்க்கொத்தன், எம்எல்எம்மன்சூர், வேதாந்தி, பண்ணாமத்துக் கவிராயர் ஆகியோரையும் - கணிப்பிற் கொள்ளத்தக்க இளைஞர் பலரையும், அது தன்னுள் கொண்டுள்ளது.
நீண்டகாலமாக எழுதிவரும் மருதூர்க்கொத்தனின் சிறுகதைத் தொகுப்பு இந்த ஆண்டு வெளிவந்திருப்பது, முக்கிய நிகழ்வாய் அமைகிறது. ஈழத்தின் நவீனத் தமிழ் இலக்கியத்தை மகிமைப்படுத்துபவர்களுள், நிச்சயமாய் அவரும் ஒருவர். கல்முனைப்பிரதேச முஸ்லிம்களின் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களையும், பேச்சுமொழியினையும் உயிர்ப்புடன் தன் எழுத்துக்களில் இவர் சிறைப்பிடிக்கிறார், மறைந்து செல்லும் பண்பாட்டம்சங்களைக்கூட, நுட்பமாய்ப் பதிவுசெய்கிறார். மதத்துடன் பிணைந்த வாழ்வு - அதில் ஊடுருவியுள்ள போலித்தனங்கள் - சென்றகால அல்லது தொலைதூரத்திலுள்ள இஸ்லாமிய நாகரிகப் பெருமைகளை வெட்டுமுகத் தோற்றத்தில் பார்த்தலினூடாய்க் குவிமையப்படுத்தும் இன்றையச் சீரழிந்த யதார்த்த வாழ்நிலை - வாழ்முறையுள் விரவிப் பரவியுள்ள சுரண்டல் என்பனவெல்லாம், இவரது படைப்புகளில் கலைத்துவத்துடன் வெளிப்பாடு காண்கின்றன. மொழிப்பிரயோகங்களும், வாழ்க்கைச் சித்திரிப்பும் புத்தனுபவத்தை நிச்சயமாய் எமக்குத் தருகின்றன. மலையாள இலக்கிய மொழிபெயர்ப்புகளில் பெறும் ஒருவித 'புத்தனு பவத்தை" ஒத்ததென, இதனைச் சொல்லலாம். மொழியின் இணைவினால் இவற்றிற்குத் தாமும் சொந்தக்காரர்கள் என்பதில்,
 

94. CuðJITFIT C 63
தமிழர்களும் பெருமைப்படலாம். வியக்கத்தக்க மொழி ஆளுகையை மருதூர்க்கொத்தன் கொண்டுள்ளார். மனதை ஈர்த்த மொழிநடைக்கு உதாரணமாய் மூன்று பகுதிகளைத் தருகிறேன்:
சதங்கைச் சத்தம்கேட்டு சேமனின் மனைவி ஆசுறா உம்மா கடப்படிக்கு ஓடி வந்தாள். உழலைக் கடப்புக்குக் குறுக்கால் போடப்பட்டிருந்த மாங்குக் கம்புகளை வேகமாக உருவியெடுத்து வழியைத் திறந்தாள். கரத்தை, கரத்தைக் குடிலுக்குள் வேகமாகப் போகின்றது. கீழே இறங்கி காளையின் பூட்டான்கயிற்றை உருவிவிட்டுக் கரத்தையை முட்டிலே வைத்துவிட்டு வெளியே வந்தார். அவரது கோலத்தைக் கண்ட மனைவிக்கு வந்த சிரிப்பை அடக்க முடியவில்லை. "அவளுக்கிட்ட வகையாக மாட்டிக்கிட்டீங்க என்ன?” "அந்தச் சின்னத் தொழுப்புறி மஞ்சத் தண்ணியக் கொண்டாந்து சிலாவி உட்டுட்டாள்."
"காலத்தால நீங்க போனபொறகால மருமகள் வந்து விஷயத்தைச் சொல்லிற்றுப் போனா.”
"பொட்டி கொண்டுபோற அடுக்கப் பார்க்கல்லய?” "ஏன் அடுக்குப் பண்ணாம. பச்சரிசி குத்திப்போட்டன் கோழிமுட்டை இருவத்தஞ்சு கூட்டம் பண்ணிற்றன். நல்லெண்ணைப் போத்தலுக்கு சேகுக்கிட்ட காசுகுடுத்து அனுப்பியிருக்கிறன். நிலாக்காலந்தானே ராவுக்குப்போக எல்லா ஏற்பாடுகளையும் செஞ்சிற்றன். சோறு எலச்சிப்போகும் - கெதியா மேலக் கழுவிக்கிட்டு வாங்க." V
(Lié.29-30) ஆசுறா பெட்டகத்தை மூடிவிட்டு திண்ணைக்கு வந்து அமர்ந்து கடதாசியை விரித்தாள். தங்கத்தால் செய்த அந்த நகைகளின் பிரகாசம் அவள் வதனத்தில் கொடி விரித்தது. குசினியிலே தயிர் கடைந்துகொண்டிருந்த மூத்தவள் கலந்தர்நாச்சி அசுப்பறிஞ்சதும் மத்தை அப்படியே வைத்துவிட்டுத் தாயிடம் வந்தாள்.
"தங்கச்சி எங்க மனே! கூப்பிடுகா தங்கச்சிய”
"புள்ளே! மைமுநாச்சி! வாப்பா அரமுடி சலங்கைக் கோர்வை கொண்டாந்திருக்கா. ஒடியா கிளி ஓடியா போட்டுப்பாப்பம்"
(t. 16.29-30) "தம்பி, நீங்க சொன்னதெல்லாம் சரிதான் மனே. பெருநாள் கொத்வாக்குக்கூட நான் ஒழுங்காப் போனதில்லை. வாசல் கடந்து தெருவில்

Page 34
64 uglassir
போறது நம்மஞக்கு ஒழுக்கமுமில்லை, நம்மஞக்குப் பவுறுமில்ல எண்டு ஒங்கட மாமாவிய என்ன வெளியே போக உடுறதில்ல. இப்படிப்பட்ட நான் மக்கா ராச்சியம் போய் சமாளிக்கிற எப்படி?”
மாமி தன் ஆற்றாமையை அப்பட்டமாகவே சொல்லி வைத்தாள்.
"நீங்க தனியப் போறதில்ல. ஆனசுட்டார்ர ஆதங்கண்டும் பெண்டாட்டியும் போறாங்க. நெல்லுச்சப்பியர்ர பொண்டாட்டியும் போறா. ஹஜ்ஜு செய்யவேண்டிய முறைகளையும் ஒதவேண்டிய ஒதல்களையும் நான் சொல்லித்தாறன். காலையிலே சுபகுத் தொழுகையைத் தொழுங்க. இருக்கிற இவ்வளவு நாளுக்கும் ஒழுங்காகத் தொழவேணும். என்ன செய்யிற, செலவப்பார்த்தா ஆகுமா? கொஞ்சத் தான தருமமுஞ் செய்யத்தான் வேணும்."
“பிச்சைக்காரர் ஐயக்காரர் வந்திருவாங்க எண்டு பகலக்கெல்லாம் தலவாசல்கதவப் பூட்டிவைக்கிற ஒங்களுக்குத் தானதருமஞ் செய்யவும் மனம் வருகுதா?”
மனைவி ஆமினா தூக்கிப்போட்டாள் ஒருபோடு
(ué5.80-81)
முற்போக்கு எழுத்தாளராக அறியப்பட்டவரானாலும், அந்தக் கூட்டத்து எழுத்தாளர்களின் எழுத்துக்களில் பரவலாய்த் தெரியும் கலைவரட்சி இவரிடமில்லாதது, இவரைப் புறநடையான சிலருள் ஒருவராக்குகின்றது. முகவுரையாக அமையும் அவனது கதை' என்பதுகூட இவரது கலையாற்றலுக்குச் சிறந்த சாட்சியாய் அமைகிறது. இரண்டு கதைகளின் முடிவுகள் மட்டும் செயற்கைத்தன்மை கொண்டுள்ளன. இது, தீர்வு காட்டியே ஆகவேண்டும்’ (1) என்ற முற்போக்கு நோக்கின் தாக்கத்தால் விளைந்ததாகலாம். 1981 இன் பிற்பகுதி என்று நினைக்கிறேன் - கல்முனை பொது நூலகத்தில் நடந்த ஒரு கோடை விடுமுறை', மார்க்சியமும் இலக்கியமும் சிலநோக்குகள் நூல்களின் விமர்சனக் கூட்டத்தில் மருதூர்க்கொத்தனும் கலந்து உரையாற்றுகையில், தானும், பிழையான வரட்டு இலக்கிய நோக்குகள் சிலதைச் சிறிதுகாலம் கொண்டிருந்ததாகவும், மார்க்சியமும் இலக்கியமும் நூல் அத்தவறான போக்குகளை நீக்குவதில் இளைஞர்களுக்கு உதவக்கூடியதாய் உள்ளது என்பதில் மகிழ்ச்சியடைவதாகவும்

9. Cussy|TFIT ? 65
என்று, சொன்னதாக ஞாபகம். அப்போதே அவரது 'கலைத்துவ உள்ளத்தை ஓரளவு அறிந்தேன், ஆனால், இந்த மருதூர்க் கொத்தன் கதைகள்' அதை இன்று மேலும் தெளிவாக்கிவிட்டது. அவரது ஏனைய கதைகளும் நூல்வடிவம் பெறுவது, ஈழத் தமிழ் இலக்கியத்தை மேலும் மகிமைப்படுத்தும் நூலினை வெளியிட்ட இஸ்லாமிய நூல் வெளியீட்டுப் பணியகத்துக்கும், திரு மருதூர்க் கொத்தன் அவர்களுக்கும் மதிப்புக்கலந்த பாராட்டுக்கள்.
Ο Ο
வியப் பிரக்ஞை தமிழ்மக்களிடையில் ஏன் வளர்ச்சியடையவில்லையென்பது நாம் தீவிரமாய்க் கவனங்கொள்ள வேண்டியதொன்றுதான். ஆனால் சிங்களக் கலைஞர்களிற்கு உள்ளதுபோல் அரசினதும், தனியார் நிறுவனங்களினதும் , வெகுஜனத் தொடர்புசாதனங்களினதும் ஊக்குவிப்பு இல்லையென்ற நிலையிலும் - சிறிய எண் ணிக்கையிலாவது ஓவியர்கள் உருவாகாமலில்லை; ஆனால், அவர்கள் மக்களிற்கு நன்கு அறிமுகமாகாதவர்களாக உள்ளனர். இந்தப் பின்னணியில் எம் - மத்தியில் உள்ள முக்கிய ஓவியர்களுள் ஒருவரான திரு அ. மாற்கு அவர்களின் ஒவியக் கண்காட்சியொன்றை, யாழ்பல் கலைக்கழக நுண்கலைப் பீடத்தினர் | நடாத்த இருப்பதான செய்தி, மகிழ்ச்சியைத் தருகிறது. 1980 இல் : மாற்கினது ஒவியக்காட்சியொன்றை :::::: #### ஒழுங்குசெய்ய திரு மு.நித்தியானந்தன் அமாற்கு முயன்றார்; ஆனால் அவரது கைகளை மீறிய சில நிகழ்வுகளினால் அது கைகூடாமல் போய்விட்டது. 'சிரித்திரன்' சஞ்சிகை 1983 பெப்ரவரி இதழில், இவரது செவ்வியொன்றைப் பிரசுரித்துக் கெளரவித்துள்ளது. 1976 இன் பிற் பகுதியிலிருந்து இன்றுவரை மாற் குடனும் , அவரது படைப்புகளுடனும் எனக்கு நெருங்கிய பரிச்சயமுண்டு.

Page 35
66 uglasi
1933 இல் குருநகரில் பிறந்த மாற்கு சிற்பங்கள் செய்வதிலும், படங்கீறுவதிலும் அங்கு ஈடுபட்டுக்கொண்டிருந்த இராசேந்திரம் என்பவரின் வேலைகளைச் சிறுவயதில் அடிக்கடி பார்க்க நேர்ந்ததில், அவற்றால் ஈர்க்கப்பட்டார். சம்பத்திரிசியார் கல்லூரியில் எட்டாம் வகுப்பிற் படிக்கையில், வகுப்பாசிரியரான குருவானவர் மார்சலின் ஜெயக்கொடியின் (பின்னர் புகழ்பெற்ற கவிஞர்) உருவத்தை வரைந்தபோது, அவரால் பாராட்டப்பட்டதில் உற்சாகம் பெற்றார். ஒவியர் எஸ். பெனடிக்ற் சென், சாள்ஸ் பாடசாலையில் மாலை நேரங்களில் நடாத்திய இலவச ஒவிய வகுப்புக்கள் இவருக்கான அடிப்படையை அமைத்துக் கொடுத்தன.
1953 இல் கொழும்பு நுண்கலைக் கல்லூரியில் சேர்ந்து, ஐந்து வருடங்கள் பயின்று பட்டம் பெற்றார். புகழ்பெற்ற ஓவியரும் விரிவுரையாளருமான டேவிற் பெயின்ரரின் அபிமானத்தைப் பெற்றவராக அங்கு விளங்கினார். 1955இல் நுண்கலைக் கல்லூரியில் நடந்த கலைக்கண்காட்சிக்கு இவரது 21 ஒவியங்கள் தெரியப்பட்டன; வேறு எந்த மாணவனிடமிருந்தும் இரண்டு, மூன்றுக்கு மேல் தெரியப்படவில்லையாம்! அக்காலத்தில் இவரின் பெரும்பாலான ஒவியங்கள் சமய சம்பந்தமானவையாக" கிறீஸ்துவின் உருவங்களைச் சித்திரிப்பவையாய் - அமைந்தன. 1957இல் 'கலாபவனத்தின் வருடாந்த ஓவியக் கண்காட்சியில் இரண்டாவது பரிசினையும் பெற்றுள்ளார்.
"கோடுகளால், வடிவத்தால், வர்ணத்தால் செய்வதுதான் ஒவியம்” என்று எளிமையாக விளக்கும் மாற்கு, "சர்வதேசிய மொழியாக இருத்தலும், காலத்தைப் பிரதிபலித்தலும்தான் ஒவியத்தின் சமூகப் பயன்பாடு” என்றும் சொல்கிறார். தான் எந்த ஒவியர்களினாலும் கலைப்பாதிப்புக்குள்ளாகவில்லை என்றும், சொல்கிறார். எனினும், எல்.கிறேக்கோ (El Greco) என்ற ஸ்பானிய ஒவியரை மிகவும் விரும்புகிறார். கோஹின், றுாஒ (Rouai),செஸான், பிக்காசோ போன்றவர்களும் பிடித்தமானவர்கள், றுஒ'வைப் பற்றிக் கேள்விப்பட்டிராதபோதே இவர் வரைந்த ஓவியங்கள் சில, அவரது பாணியிலமைந்திருப்பதாய் விரிவுரையாளரொருவரால் பாராட்டப்பட்டமை, ஆச்சரியமான அனுபவமென்கிறார். ஒரு படைப்பு ஒவியம்’ எப்படி இருக்கவேண்டுமென்பதன் விளக்கமாக ஒவியர் போல் கோஹினின்', "இயற்கையிடம் செல்லுங்கள், அதனை

அ. யேசுராசா (; 67
அவதானியுங்கள்; அதன் சாரத்தை எடுத்துப் புதிதாய்ப் பின்னர் படையுங்கள்” என்ற கூற்றினை நினைவூட்டுகிறார். கல்லூரி வாழ்வு முடிந்து செல்கையில் 'டேவிற் பெயின்ரர் தனக்குக் கூறிய, "என்னத்தை எண்ணுகிறாயோ, உணருகிறாயோ அதனையே வரை” என்பதையும் இடையில் நினைவுகூர்கிறார்.
தனது ஒவிய வாழ்க்கைக் காலத்தை நான்கு கட்டங்களாகப் பிரிக்கிறார்
1) நுண்கலைக் கல்லூரியின் இறுதிக் காலம் வரையிலான,
LDrids6) 5pds 35(Talib (Dull period).
2) Golgiró067ds 35|T60lb (White period).
3) Sadds Toolb (Blue period).
4) கோடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தல் (concern
on lines).
படைப்புந்தல் நிகழ்கையில் அவற்றுக்கு வடிவம் கொடுப்பதோடு தன் பணி முடிகிறதாகவே, மாற்கு சொல்கிறார். அவை பிரசித்தப்படுகிறதா, அல்லது பணவருவாயை ஈட்டித்தருகிறதா என்றெல்லாம், அவர் அலட்டிக்கொள்வதில்லை; கலைஞன் அதைப் பொருட்படுத்தக்கூடாதென்றும் உறுதியாகக் கூறுகின்றார். லோகாயதப் பயன்களில் அந்தரப்படாத தன் படைப்புச் செயலினுாடாக இதுவரை, சுமார் ஆயிரம் படைப்புகளை (பெருமளவு ஓவியங்கள்; சிறிதளவு சிறி பங்கள்) உருவாக்கியிருக்கிறார்.அவற்றில் பல வெளிநாடுகளுக்கும் எடுத்துச்செல்லப்பட்டிருக்கின்றன.புதிது புதிதாய்ப் பரிசோதனைகளில் ஈடுபடுவதிலும், நிறைந்த ஆர்வம் கொண்டுள்ளார்.
1958 - 67 வரை 'விடுமுறைகால ஒவியர் கழகத்தை' யாழ்ப்பாணத்தில் அமைத்து, இளைஞர்களுக்குப் பயிற்சி கொடுத்துக் கண்காட்சிகளையும் நடத்தியுள்ளார். 'ரமணி போன்றவர்கள் இங்கு பயின்றவர்கள் என்பதில் அவருக்குப் பெருமிதமுண்டு. தற்போதும் வார இறுதி நாள்களில் ஒவிய வகுப்புகளை அக்கறையுடன் நடாத்தி வருகிறார். 'தொடர்ந்து செயற்படுதல்’ அவர் எப்போதும் வற்புறுத்துமொன்று
தமிழர்கள் மத்தியில் தோன்றிய குறிப்பிட்த்தக்க

Page 36
68 பதிவுகள்
ஒவியர்களைப்பற்றிக் கேட்டபோது, எஸ். ஆர். கனகசபை, சானா, சி. சிவஞானசுந்தரம், எஸ். பெனடிக்ற், எம்.எஸ். கந்தையா, கனகசபாபதி, ரமணி, ஆ.இராசையா, எஸ்.பொன்னம்பலம், சிவப்பிரகாசம் போன்றவர்களைக் குறிப்பிடுகிறார்.
புதியவர்களில் கோ.கைலாசநாதன், K.கிருஷ்ணராஜா, ஆகியவர்களைக் குறிப்பிடுகின்றார்.
அடிக்கடி நிகழக்கூடிய கண்காட்சிகளின்மூலமே ஒவிய இரசனையைப் பரவலாக்கலாம் என நம்பிக்கை கொண்டுள்ள அவர், தனது கண்காட்சியின் பின்னர் தனது மாணவர்கள் சிலரின் படைப்புக்களைக் கொண்ட கண்காட்சியொன்றை நடாத்தப் பெரிதும் ஆவல் கொண்டுள்ளார்.
மாற்கின் ஒவியங்கள் அலை 7,8,9,20 ஆம் இதழ்களின் அட்டைகளில் இடம்பெற்றுள்ளன; இந்த இதழினை அலங்கரிப்பதும் அவரது ஓவியமே.
Ο Ο
மண்சுமந்த மேனியர் நாடகம் பற்றி யாழ். பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற விமர்சனக் கலந்துரையாடலில், அந்த நாடகத்தில் அதிகமான பாத்திரங்கள் இடம்பெற்றமையால் மேடையில் அடைசல்தன்மை உணரப்பட்டதை குறைபாடாக ஒருவர் தெரிவித்தார். நாடகாசிரியர் தனது பதிலுரையில், "கூடியதொகை நடிகர்களைப் போட்டால் அதில் இரண்டொருவராவது தொடர்ந்தும் நாடகத்துறையில் ஈடுபடுவார்கள் என்பதாலேயே பாத்திரங்களை அள்ளிப்போடுவதாக’க் குறிப்பிட்டார். இந்தப்பதில் நமது கலை, இலக்கியத்துறைகளிற் காணப்படும் அடிப்படைக் குறைபாடுகளில் ஒன்றை நினைவுட் டுகிறது; அதாவது, படைப் புடன் சம்பந்தமில்லாதவற்றைக் கருத்திலெடுத்தல். இத்தோடு தொடர்பான
முக்கிய விடயமொன்றையும் பார்ப்போம்.
1984 வரை வெளிவந்த இலங்கை எழுத்தாளர் களின் இலக்கியப் படைப்புகளிற்குப் பரிசுகளை வழங்கப்போவதாக, யாழ். இலக்கிய வட்டத்தின் 'இலங்கை இலக்கியப் பேரவை’

-9. Gulðulös í 69
அறிவித்திருந்தது. பரிசளிப்பிற்கான வரையறுப்புகள் தெளிவாக இல்லையென்றபோதிலும் - ஆரியச் சக்கரவர்த்திகள் காலத்திலெழுந்த படைப்புகளும், ஆங்கில நூல்களுங்கூட பரிசுக்குரியனவா? எனத் திகைக்கத்தோன்றும் தெளிவீனங்கள் உள்ளபோதிலும் - இலக்கிய வளர்ச்சிக்கு உதவக்கூடிய இத்தகைய முயற்சிகள் தேவையானவை, மதிக்கத்தக்கவை என்பதில், கருத்து வேறுபாடில்லை. முதலில் அறிஞர் குழுவினர் சிபார்சு செய்யும் நூல்களிலிருந்து, பரிசுக்குரியவற்றை இறுதியாய்த் தீர்மானிக்கப் போவது, சான்றோர் குழு என்ற ஒன்று எனத் தெரியவருகிறது. இக்குழுவிலுள்ள சிலரின் தெரிவு எவ்வளவு தூரம் முக்கிய விமர்சன மதிப்பீட்டுத் திறனுடன் தொடர்புடையதென்பதே இங்குள்ள பிரச்சினை. பேராசிரியர் சு.வித்தியானந்தன், இ.சிவகுருநாதன், கே. டானியல் ஆகிய சான்றோர் இங்கு பிரச்சினைக்குள்ளாகின்றனர்.
பேராசிரியரின் நாட்டுக்கூத்துப் புனர்நிர்மாணப் பங்களிப்பு, ஒர் அரசையே எதிர்த்தபடி தமிழாராய்ச்சி மாநாட்டை 1974 இல் நடாத்தி முடித்த சாதனை எல்லாம், மதிக்கத்தக்கவைதான். ஆனால், அவருக்கு நவீனத் தமிழ் இலக்கியப் படைப்புக்களுடன் உள்ள பரிச்சயம் என்ன? அவைபற்றிய நவீன விமர்சனப் பார்வைதான் என்ன? என்பவை, இதுவரை அவரால் வெளிக்காட்டப்படவில்லை. பொதுவில், பழையனவற்றுடனேயே அவர் தன்னை இனங்காட்டியுள்ளார். அப்படியானால், 'பல்கலைக்கழகத் துணைவேந்தர்’ என்ற ஸ்தானம்தான், அவர் சேர்க்கப்பட்டதன் 5Tg6ooTLDIT?
இ. சிவகுருநாதன் ஒரு தினசரி’யின் ஆசிரியராய் இருக்கிறார் என்பதைவிட, அவரது தகுதி என்ன? சிலர் ஒழுங்கு செய்யும் நூல் வெளியீட்டுக் கூட்டங்களில் அவரும் பேச்சாளராகச் சேர்க்கப்படுகிறார் (பத்திரிகையாசிரியராச்சே, அவரால் பல பயன்கள் உண்டல்லவா?). சிரிப்பை எழுப்புவதற்காக "இரட்டை அர்த்தச் சொற்களைப் பிரயோகிப்பதை விட வேறு ஒன்றையும் அவர் சொல்வதில்லை (சொல்வதற்கு வேறு ஏதும் அவரிடம் இருந்தாற்தானே!)
கேடானியல் இடம்பெற்றதற்கு ஒரு வரலாற்று நிகழ்வு

Page 37
70 பதிவுகள்
காரணமெனத் தெரிகிறது. பரிசளிப்பு நோக்குடன்கூடிய இலக்கியப் பேரவை போன்ற அமைப்பொன்றை டானியலே முதலில் அமைத்திருந்ததாகவும், யாழ். இலக்கிய வட்டம் இப்பொழுது தன்னுடையதுபோல் இந்த முயற்சியில் ஈடுபடுவதாகவும், பத்திரிகை ஒன்றில் வெளியான கண்டனத்தைச் சமாளிப்பதற்காகவே டானியலும் சான்றோர் குழுவில் சேர்க்கப்பட்டிருக்கின்றாராம் இங்கும் 'விமர்சனத் தகைமையல்ல உறுப்புரிமையைத் தீர்மானித்தது. படைப்பாளர்' என்ற தளத்தில் அவரது தகுதிபற்றிப் பல சந்தேகங்கள், ஏற்கெனவே உண்டு. அதுதான் போகட்டும், விமர்சனத் தளத்தில் திறனை அவரிடம் யாரும் எதிர்பார்க்கலாமா? கவிஞர் சு.வில்வரத்தினத்தின் விமர்சக விகடங்கள்’ கவிதையை வாசிக்கும்படி, அவர்களிற்குச் சிபார்சு செய்ய விரும்புகிறேன்.
சரி, இத்தகைய ரீதியில் அமையும் குழு எவ்வாறு பொறுப்பான முடிவுகளை மேற்கொள்ளும்? அவை வழங்கும் பரிசுகளிற்கு என்ன கெளரவத்தினை 'தெளிவான இலக்கியப் பிரக்ஞை உள்ளவர்கள்' வழங்கமுடியும்? பிழையான அணுகுமுறைகளும், செயற்பாடுகளும், முடிவுகளும் மக்களிடையே எமது கலை - இலக்கிய வளர்ச்சி பற்றி 'திரிபுபட்ட கருத்துக்களையல்லவா வேரூன்றச் செய்யும்? யாழ் இலக்கிய வட்டம் போன்ற - எழுத்தாளர்கள் பலரை உறுப்பினராகக்கொண்டநீண்டகாலச் செயற்பாட்டினைக்கொண்ட அமைப்பொன்றே இவ்வாறு தடுமாறுகிறதென்றால் எமது கலை, இலக்கியச்சூழல் உண்மையில் ஆரோக்கியமானதுதானா? O
96.OG) -26 (ஐப்பசி 1985)

71 نة ITHT{{قناة) وهي
பதிவுகள் - 12
கொழும்பிலுள்ள ஜேர்மன் கலாசார நிலையம் மாதாந்தம் கலை நிகழ்ச்சிகள் பலவற்றை நடாத்திவருகிறது; அதில் குறிப்பாகத் திரைப்படங்கள் முக்கிய இடம் பெறுகின்றன. இதைத்தவிர, வருடத்தில் இரண்டுமூன்று திரைப்பட விழாக்களையும் ஒழுங்குசெய்கிறது. சென்ற மாசிமாதம் "வாஸ்பின்டர் - மீள்நோக்கு (Fassbinder - Retrospective) 676ðip g560d6NDLù î76D1T607 g6l6ODNŮu விழாவினையும், அத்திரைப்படங்கள் பற்றிய இரண்டுநாள் கலந்துரையாடலினையும் நடாத்தியது .'வாஸ்பின்டர், நவீன ஜேர்மன் சினிமாவின் மிக முக்கிய நெறியாளர்களில் ஒருவர்.1982 ஜூனில் 37 ஆவது வயதில் காலமாகிவிட்ட இவர், ஐம்பது படங்களை நெறியாள்கை செய்துள்ளார்; சிலவற்றில் நடித்தும் உள்ளார். மேற்குறித்த திரைப்பட விழாவில் பதினொரு முழு நீளப் படங்களையும், இரண்டு குறும்படங்களையும் பார்த்தேன். த மேச்சன்ற் ஒட்வ் ட்வ்போர் சீசன்ஸ்' (நான்கு பருவங்களின் வியாபாரி), 'வியர் ஈற்ஸ் த ஸோல் (அச்சம் ஆன்மாவைத் தின்கிறது), எ.வி ஃபிறீஸ்ற், ஐ ஒன்லி வான்ற் யூ ரூ லவ் மீ(நீ என்னை நேசிப்பதையே விரும்புகிறேன்), த கோட்ஸ் ஒ.வ் த

Page 38
72 பதிவுகள்
பிளேக் (தொல்லை களின் கடவுளர்)ஆகிய முழுநீளப்படங்களும், சிற்றி ட்ராம்ப் (நகரத்து நாடோடி) என்ற குறும்படமும் என்னை மிகவும் கவர்ந்தன. இவற்றைப்பற்றி, பிறிதொரு சமயம் எழுதும் எணர்ணம் உணர்டு நல்ல திரைப்படங்களைப் பார்க்கக் கொழும்பில் உள்ள வாய்ப்பு, யாழ்ப்பாணத்தில் இல்லை. ஓரளவேனும் இவ்வாய்ப்பினை 1979-80 ஆம் ஆண்டுகளில் ஏற்படுத்தித் தந்த யாழ். திரைப் பட வட்டம் , அக - புறக் காரணிகளினால் தற்போது இயங்கமுடியாமலிருப்பது, துரதிர்ஷ்ட மானதே.
Ο Ο சீர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு சக்தி பிறக்குது என்ற நாடகத்தையும், வாருங்கள் தோழியரே வையகத்தை வென்றெடுக்க என்ற கவிதா நிகழ்வினையும் யாழ். பெண்கள் ஆய்வு வட்டம் ஒழுங்கு செய்திருந்தது.
சி.மெளனகுரு எழுதி, நெறியாள்கை செய்த சக்தி பிறக்குது நாடகம் தமிழ்ச் சமூகச்சூழலில் பெண்களுக்குரிய பிரச்சினைகளையும், அவற்றிற்கெதிராகப் பெண்களே போராட முனைவதையும் சொல்ல முயல்கிறது. ஆனால் இந்நோக்கத்தினைச் செம்மையாக அது வெளிப்படுத்துகிறதா என்பது, ஐயத்திற்குரியது. பிரச்சினைகளை வெளிப்படுத்தக் கையாளப்பட்ட பாத்திரங்களும், காட்சிகளும், வலிமையான வகைமாதிரித் தன்மை கொண்டமையவில்லை. உதாரணமாய், குடிகாரக் கணவனால் பாதிக்கப்படும் பெண்ணின் நிலைமை புதியதொன்றல்ல.கணவன் மட்டுமல்ல மனைவியும் வேலைகளைச் செய்கிறாள் என உணர்த்தப்படுவது மட்டுந்தான், அதில் சாதகமான அம்சம் மின்தறி அதிபர் தொழிலாளிப் பெண் சித்திரிப்பு நம்பகத்தன்மையைக் கொண்டிருக்கவில்லை. மலையகப் பெண்களின் நிலைமைகளும் சரியாகச் சித்திரிக்கப்படவில்லை. தனிமையிற் செல்லும் பெண்களிற்குச் செய்யப்படும் சேஷ்டைகளும்கூட, இன்றைய நிலையில் மிகைப்படுத்தப்பட்டதாகவே தெரிகிறது. இவற்றைத்தவிர, இன்று முக்கியமாக அரசு வன்முறையாளர்களினால் பெண்கள்
 

9. Cuusys T : 73
மேல் நிகழ்த்தப்படும் கற்பழிப்புகள், துன்புறுத்தல்கள், குடும்பத் தலைவர்களைத் திடீரென இழந்துவிடுவதிற் சுமத்தப்படும் பாரிய குடும்பப் பொறுப்புகளின் சுமைகள், அவலங்கள் போன்றவை சித்திரிக்கப்பட்டிருக்க வேண்டும். இவை தொடப்படாததும் நாடகத்தின் அரைகுறைத் தன்மைக்குக் காரணமாகிறது.
எந்த விடயமும் இயல்பான முறையில் பார்வையாளர்களிடம் தொற்றக்கூடியதாக வெளிப்படுத்தப்பட வேண்டும்; உத்திகள் தனியாகப் பிதுங்கி நிற்குமானால் அதைப் பாதிக்கவே செய்யும். இங்கும் அதுதான் நிகழ்கிறது. குறிப்பாகக் கொட்டகைக் கூத்துப்பாணி கையாளப்படும் இடங்களில், அப்போது பேசப்படும் விடயங்களின் காத்திரத்தன்மை இழக்கப்பட்டு வெறும் கேலிக்கூத்தாகும் உணர்வே, ஏற்பட்டது. பெண்களிற்குச் சார்பாகவும் ஆண்களிற்குச் சார்பாகவும் சபையிலிருந்து இரண்டு குழுவினர், மாறி மாறிக் கையொலிகளையும் வாயொலிகளையும் எழுப்பியமையும், இதை உறுதிப்படுத்துகிறது. சில குறியீட்டுச் செய்கைகள் தெளிவீனமாய் இருப்பதோடு, பல கட்டங்கள் வெறும் பிரச்சாரமாகவும் இருக்கின்றன. உ+ம் பெண்கள் அமைப்புகளின் பட்டியல் வாசிக்கப்படுவது.
குடிகாரக் கணவனாக வரும் ஜெனம், பெண்ணைக் கேலி செய்யும் இளைஞனாக வரும் க.சிறீகணேசன் ஆகியோரின் நடிப்பும்,"சக்தியாக வந்த நிமலினியின் உத்வேகம் நிறைந்த ஆட்டமும் பாவனைகளும், என்னை மிகக் கவர்ந்தன.
இறுதியில் கொடுமைகளிற் கெதிராகக் கிளரும் உத்வேகத்தைப் பெண்கள், சக்தியென்ற தெய்வீக வடிவத்திலிருந்து பெற்றுக்கொள்வதாகக் காட்டுவது பிற்போக்கில்லையா என, வரட்டுவாதிகளில் யாராவது கேட்கலாம். ஆனால், மரபார்ந்ததொரு நம்பிக்கையுடன் தொடர்புறுத்திப் போராட்டக் குணாம்சத்தைப் பிறப்பித்து வலிமைப்படுத்த முயல்வது, இயல்பானதாயும் தாக்கத்தைத் தருவதாயுமே இருக்கிறது. இதற்கு மெளனகுருவைப் பாராட்ட வேண்டும்.
ஏராளமானோர் கலந்துகொண்ட சிரமம் நிறைந்த முயற்சி; ஆனால், செம்மையானதாக அமையவில்லை என்பதே எனது

Page 39
74 Quagasi
ஆதங்கம்.
Ο Ο
கவிதை வாசிப்பு, கவிதா நிகழ்வு என்பன கருத்துக்களை அழுத்தமாக வெளிப்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டவை. தொலைக்காட்சியில் காட்டப்படும் ஒலியும் ஒளியும் நிகழ்ச்சி போல்' அவற்றைக் காட்சிருபப்படுத்தும்போது, கருத்துக்களின் அழுத்தங்கள் இழக்கப்படும் சாத்தியப்பாடு உண்டு. சிதம்பரநாதனின் நெறியாள்கையில் காட்சிரூபப்படுத்தப்பட்ட ‘வாருங்கள் தோழியரே வையகத்தை வென்றெடுக்க'என்ற கவிதா நிகழ்விலும், இதைக் காண முடிந்தது. ஆண்கள் சுகமாகத் துயிலுகையில் பெண்கள் விழித்திருந்து பல்வேறு வேலைகளைச் செய்யவேண்டியிருக்கிறது என்பதும், பெரியபிள்ளையாகுமுன்னுள்ள பருவத்தில் சுதந்திரமாய் விளையாடித் திரிந்ததன் உல்லாச உணர்வும் மட்டுமே, மிக நன்றாகத் தொற்றவைக்கப்பட்டன.
Ο Ο
ஈழமுரசில் (09-02-86) சிறுகதைகளை விமர்சிக்க வந்த அம்பலத்தரசன்' 'ஈழத்து இலக்கிய விமர்சனத்தில் சமநிலை நோக்கு இல்லை என்ற கருத்தினை இன்று சிலர் முன்வைத்துப் பிரசாரப்படுத்த எத்தனிக்கிறார்கள்’ என்று சொல்லி அ) குறிப்பிட்ட விமர்சகர்களிடம் தமது படைப்புகளிற்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்திலேயே, இப்படிச் சொல்கிறார்கள். ஆ) விமர்சகர்கள் தாம் ஏற்றுக்கொண்ட இலக்கியக்கோட்பாட்டை ஒத்த படைப்புக்களைச் சிலாகித்தும், முரணான இலக்கியங்களைச் சிறந்தவையல்ல எனவும் சொல்வார்கள். இதைச் சமநிலை அற்ற நோக்கு என எவ்வாறு சொல்லலாம்? என்று எழுதுகிறார்.
அலை-26 இல் வந்துள்ள 'மூவர் பார்வைகள் பகுதியிலுள்ள பதில்களையொட்டியே, மேற்குறித்த கருத்துக்கள் எழுதப்பட்டிருக்கவேண்டும்.
1. அதில் பதில் கூறியுள்ள நந்தினி சேவியர், செ.யோகராசா, சு.வில்வரத்தினம் ஆகியோர் அல்லது அலையைச் சேர்ந்தவர்களிற்கு, அத்தகைய ஆதங்கம் ஏதும் இருந்ததில்லை.

அ. யேசுராசா (; 75
தவிர, நமது பிரபல விமர்சகர்களிடம் பாராட்டைப்பெறுவது அப்படியொன்றும் கஷ்டமான விடயமில்லையே! சுலபமான வழிகள் பல உண்டல்லவா?
2. ஒத்த இலக்கியக் கோட்பாடுகளைக் கொண்ட படைப்புக்கள், கட்டாயம் பாராட்டத்தக்கவையாய்த்தான் இருக்குமா? அதில் குறைகள் இருக்காதா? முரண்படும் இலக்கியப் படைப்புக்களில் பாராட்டத்தக்க அம்சங்கள் இருக்காவா? ஒத்த இலக்கிய நோக்கு உள்ளவர்களையே பாராட்டினார்கள் என்றால், தீர்வு சொல்லவில்லை’ என்பதற்காக ஒருகாலத்தில் புதுமைப்பித்தனையே 'கொலரில் பிடித்துத் தூக்கி வீசிய விமர்சகப் பெருந்தகைகள் காவலூர் ஜெகநாதன், சாந்தன் போன்றோரைப் பாராட்டியது எப்படி? இவர்கள் பாராட்டப்படலா மென்றால் எஸ்.பொ, வ. அ. இராசரத்தினம், முதளையசிங்கம் போன்றோரின் படைப் புக் கள் ஏன் உரிய முறையில் பாராட்டப்படவில்லை? பட்டியல் போடுகையில் பேச்சோசைப் பண்பைக் கையாண்டவர்களில் ஒருவராக மஹாகவி'யைக் குறிப்பிடவும் முன்பு தயங்கியதேன்? விதேசிய எதிர்ப்பை வெளிக்காட்டிய "கோடை போன்றனசுட முக்கியம் பெறாததேன்?
அரசியல், சமூக உள்ளடக்கங்கொண்ட பிறமொழி நாடகங்களைப் பாலேந்திரா மிகச் சிறப்பாகத் தயாரித்திருந்தபோதும், அவரிற்கு உரிய இடத்தை வழங்காததேன்? முரணி பாடுகள் நிறைந்த முன்னுரைகள் என, இப்படி இன்னும் பலவற்றைக் கேட்கலாம். இவையெல்லாம் நமது விமர்சகப் பெருந்தகைகளின்’ சமநிலை நோக்கைக் கேலிக்கூத்தாக்கவில்லையா?
Ο Ο
LD திப்பீடுகளோ பாராட்டுகளோ நிதானங் கொண்டனவாயும், அர்த்தம் நிறைந்தனவாயும் இருத்தல் வேண்டுமென எதிர்பார்ப்பதில் தவறில்லை. நமது கலை, இலக்கியச் சூழலில் இவை எவ்வாறிருக்கின்றன எனப் பரிசீலிப்பதற்கு, சமீபத்தில் படிக்கநேர்நத மூன்று உதாரணங்களைத் தருகிறேன்; அழுத்தம் மட்டும் என்னுடையது

Page 40
76 பதிவுகள்
"நமது தலைமுறையில் உலகின் அனைத்துக் கவிஞர்களுக்குள்ளும், தன் கவிதாவிச்சால் முன்நிற்கும் மகோன்னத கவிஞன் புதுவை இரத்தினதுரையின்.”
-(மாற்று-6, பக். 13) சமீபத்தில் மரணமான ஒரு தமிழ் எழுத்தாளரைப்பற்றி, இலக்கிய அமைப்பொன்று வெளியிட்ட அறிக்கையில் :
"இவரின் படைப்புக்கள் உலகுள்ளவரை இலக்கிய மதிப்பில் சுடர்விடக்கூடிய ஆற்றலுள்ளவை.”
-(ஈழமுரசு-25-03-86) பத்திரிகையொன்றின் ஆசிரியத் தலையங்கத்தில் :
".அவரது எழுத்துக்கள் சாகாவரம் பெற்றவை; கடைசித் தமிழன் உள்ளவரை அவை நிலைத்துநிற்கும்.”
-(ஈழமுரசு-26-03-86) முடிவினைப் பகுத்தறிவு மிக்க வாசகர்களுக்கே விட்டு விடுகிறேன். O
960s) - 27 (சித்திரை 1986)

-91 Guðullöll :) 77
பதிவுகள் - 13
6
யூஸ் வீக்' சஞ்சிகையில் (ஜூன்-16,1986) சத்யஜித் ரேயின் செவ்வியைப் படித்தேன்; அதில் முக்கியமாகப்பட்டதைக் கீழே தருகிறேன்.
‘வாழ்வு' பற்றிய உங்கள் தத்துவம் என்ன?
"வெளிப்படையாக இதுபற்றித் தத்துவார்த்த உரையாற்ற நான் விரும்பவில்லை. என்னுடைய திரைப்படங்களினூடாகவும், கதைகளினூடாகவும். இதனை நீங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் அறவொழுக்க நோக்கு (Moral Attitude) என்னிடம் உண்டு. அந்த நோக்கு எனது திரைப்படங்களில் பிரதிபலிக்கப்படுகின்றது. நேர்மைபோன்ற அடிப்படையான நல்லொழுக்கங்களில் எனக்கு நம்பிக்கையுண்டு. குறிப்பாக ஆசாடயூதித்தனம், மனிதரிடையே காணப்படக்கூடிய அவப்பேறான இயல்புகளில் ஒன்றென நான் கருதுகின்றேன். ஒடுக்கப்படுபவர் மீதான அனுதாபமும் எனக்கு உண்டு; இது எனது திரைப்படங்கள் சிலதில் வெளிக்கொணரப்படுகின்றது.”
உங்களது கருத்துப்படி, சமூக மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஊடகமாக எவ்வாறு சினிமா அமைகின்றது?

Page 41
78 uglasi
"திரைப்படம் சமூகத்தை மாற்றுமென நான் கருதவேயில்லை. எந்தவொரு திரைப்படமும் ஒரு புரட்சியினைத் தொடக்கி வைக்கவில்லை; ஏற்கெனவே நிகழ்ந்துவரும் மாற்றத்துக்கு உதவலாம் - சோவியத் திரைப்படத்தின் ஆரம்ப காலகட்டங்களிற் போன்று ஐசன்ஸ் ரைனும், புடோவ் கினும் ஏற்கெனவே ஏற்பட்டிருந்த புரட்சிக்கு உதவியாய் இருந்தனர்; புரட்சியின் விளைவுகளை வெறுமனே ஸ்திரப்படுத்து வதற்கே அவர்கள் உதவினர்.
பிரச்சினைகளைக் கையாளும் திரைப் படங்களில் எனக்கு அக்கறை உண்டு. ஆனால் பிரச்சினைகளிற்கான தீர்வை என்னால் எப்பொழுதாவது தரமுடியுமென, நான் கருதவில்லை. சமூகத்தைப் பற்றியும், மனித உறவுகளைப்பற்றியும், அவர்கள் அன்றாடம் முகங்கொடுக்கும் பிரச்சினைகளைப்பற்றியும், மனிதர்களிடையே விழிப்புணர்வை ஒரு திரைப்படம் ஏற்படுத்தவேண்டுமென நான் கருதுகிறேன்; அதனால்
மனிதகுலத்தைச் சேர்ந்தவர்கள் என்ற முறையில், அவர்கள் கூடிய விழிப்புணர்வைப் பெறுகின்றனர்."
Ο Ο
வியக் கண்காட்சி என்பது மிக அரிதான நிகழ்வாகவே, நமது பிரதேசங்களில் இருக்கிறது. நீண்டகாலமாக ஒவியத்துறை போதிய கவனத்தைப் பெற்றிருக்கவில்லை. சமீபநாட்களில் ஏனைய துறைகள் பலவற்றில் ஏற்பட்டுள்ளதுபோன்ற விழிப்பு, இதிலும் ஓரளவு ஏற்படத் தொடங்கியுள்ளது. யாழ் பல்கலைக்கழக கலாசாரக் குழுவின் ஆதரவில் நடைபெற்ற ஓவிய அரங்கேற்றம் இதற்கு உதாரணமாகும். ஒவியர் அ.மாற்கு, செ.சிவப்பிரகாசம் ஆகியோரின் மாணவிகளாகிய மூன்று இளம் ஒவியர்களின் (செல்விகள் நிர்மலா கோபாலசாமி, அருந்ததி சபாநாதன், சுகுணா தம்பித்துரை) 135 ஒவியங்கள் இதில் இடம்பெற்றன; மூன்று விதத் தனி ஆளுமைகள் ஒவியங்களில் வெளிப்பட்டிருந்தமை, முக்கியமான அம்சம் ஆற்றல் வாய்ந்த இத்தகையவர்கள் எம்மிடையிலும் இருக்கிறார்கள் என,
 

அ. யேசுராசா (; 79
இப்போதுதான் தெரிகிறது என்று, பார்வையாளர்களிற் பலர் தெரிவித்தனர். vm
சுமார் ஒருமணி நேரம்வரை வரிசையில் காத்திருந்தே பார்வையாளர் உள்நுழையக்கூடியதாக இருந்தது கண்காட்சி நடந்த இரண்டு நாட்களிலும், சுமார் நான்காயிரம் பேர் இதனைப் பார்வையிட்டுள்ளனர் (வழமையாக இலக்கியம், கலை என்று பீற்றித் திரிபவர்கள் ஏராளம்; ஆனால், இலக்கியக்காரரில் ஏழெட்டுப் பேரே இதற்கு வந்தனர்). 26 ஒவியங்கள் - சுமார் நாலாயிரம் ரூபாக்களுக்குப் பார்வையாளர்களினால் வாங்கப்பட்டன; இது முற்றிலும் புதியதோர் நிகழ்வுப்போக்காகும்.
ஒவியர்களின் ஆளுமைகள், நமது சமூகச் சூழலில் ஒவியத்திற்குரிய இடம், பயிற்சிகள் - கண்காட்சிகளின் அவசியம் என்பன வெளிப்படுவதான பேட்டிகள்; ஒவிய வகுப்பு; கண்காட்சிக்கான பிரச்சாரம், கண்காட்சியில் இடம்பெற்ற ஒவியங்கள் என்பன சீராக இணைக்கப்பெற்ற விவரணப் படமொன்றும் ஓவிய அரங்கேற்றம்' என்ற தலைப்பில், 'வீடியோ’வில் தயாரிக்கப்பட்டது; பிரதியாக்கம், நெறியாள்கை ஆகியவற்றை நான் கையாண்டேன். எண்பது நிமிடங்கள் கொண்ட இந்தப்படம், நான்கு உள்ளூர்த் தொலைக்காட்சிச் சேவைகளிலும் ஒளிபரப்பப்பட்டது; கண்காட்சிக்கு வராதவர்களிற் பலரிடையிலும் கண்காட்சி பற்றிய செய்திகளை இது கொண்டுசென்றது. கண்காட்சியின் மொத்த விளைவுகளினால் ஒவியர்கள் உற்சாகமடைந்துள்ளனர். எதிர்காலத்தில் இத்துறை பரவலாய் வளர்வதற்குரிய ஒரு நிலைமையை, இக்கண்காட்சி உருவாக்கிக் கொடுத்திருப்பது போலவே தெரிகிறது.
Ο Ο
ச.கந்தசாமி தரமான வாசகரின் கவனத்தை ஈர்க்கும் நவீனத் தமிழிலக்கியப் படைப்பாளிகளில் ஒருவர். விமர்சனக் கட்டுரைகள் பலவற்றையும் அவர் எழுதியுள்ளார். 'கசடதபற’ என்ற வல்லின மாத ஏட்டின் ஆசிரியர் குழுவிலும், இருந்துள்ளார். வ.ஐ.ச.ஜெயபாலனின் சூரியனோடு பேசுதல்’ கவிதைத் தொகுதி பற்றி, ஞானரதம்' இதழில் (ஜூன் - ஜூலை 1986) அவர் எழுதிய கட்டுரையின் சில பகுதிகள் :

Page 42
80 பதிவுகள்
“சூரியனோடு பேசுதல், புதுக்கவிதைகள். புதுக்கவிதைகள் என்பதைவிட கவிதைகள் என்று சொல்வதே பொருத்தம். ஆசிரியர் வ.ஐ.ச.ஜெயபாலன் இலங்கைத் தமிழர் போலிகள், துண்டுதுணுக்குகள், ஆவேசக் கூச்சல்கள், பிரகடனங்கள் மலிந்த புதுக்கவிதை உலகத்தில் ஜெயபாலன் கவிதைகள் முற்றாக வேறுபட்டு, அனுபவத்தின் வெளிப்பாடாக வெளிப்பட்டு படிப்பவரின் உணர்வுகளை அதிர்வுகொள்ள வைக்கிறது.
அநீதிக்கு எதிரான குரல் - பாதிக்கப்பட்ட மனிதனின் எதிர்ப்பு என்கிற அடிப்படையில், பாதிக்கப்பட்ட மனிதவர்க்கம் முழுவதற்குமான குரலாக ஒலிப்பது ஜெயபாலனுக்கு சாத்தியமாகிறது. தன்னை - தன்நாட்டின் நிகழ்வுகளை முன்நிறுத்தி, கேள்வியாய்க் கேட்கிறார்.
சமீப ஆண்டுகளில் தமிழில் வெளிவந்திருக்கும் கவிதைத் தொகுதிகளில் சிறப்பான ஒன்று வ.ஐ.ச.ஜெயபாலனின் சூரியனோடு பேசுதல்.”
OO
வீரகேசரி வாரவெளியீட்டில் சத்யன் எழுதும் தூண்டில்’ பகுதியை, ஆர்வத்துடன் ஒழுங்காக வாசித்து வருகிறேன். ஒரு சஞ்சிகை ஆசிரியர் இதே தலைப்பில் ஒரு பகுதியை, தானே முதலில் எழுதிவருவதாக ஆதங்கப்பட்டுள்ளார்; அந்த ஆதங்கத்தில் உண்மையில்லாமலில்லை. ஆனால், வீரகேசரியில் எழுதுபவர் குறித்த சஞ்சிகையை வாசிப்பாரா என்பது சந்தேகமே. தவிர, சஞ்சிகையின் பகுதியில் காணப்படும் 'கோமாளித்தனங்கள் எதுவும் வீரகேசரிப் பகுதியில் இல்லையென்பதோடு, இது விஷய ஞானமும் கூர்மையான நோக்கும் கலந்து சீரியஸானதாயும் இருக்கிறது.
கடந்தகாலங்களின் கசப்பான வரலாற்று அனுபவங்களைக் கிரகித்து, முந்தைய கருத்துக்களை மீள்பார்வை செய்து, தவறுகளைத் திருத்தி நேர்மையுடன் செயற்படும் ஓர் இடதுசாரியின் குரலை, அதில் அடையாளங்காண முடிகிறது. நேர்மையான இடதுசாரி என்கிறபோது அது நல்லெண்ணெய் மசால வடை என்று பேசுகிறவர்களையோ, சீனப்புத்தக யாவாரிகளையோ' குறிக்காது என்பதை, அறிந்தோர் அறிவர்.

-91 Guðull&II (! 81
தமிழ்ப் படகு மக்கள்’ என்ற தலைப்பில், சமீபத்தில் (07-09-86) அந்தப் பகுதியில் வெளிவந்தவற்றிலிருந்து சில பகுதிகளைக் கீழே தருகிறேன் :
“படகு மக்களின் சரித்திரத்தில் இன்று இலங்கைத் தமிழர்களும் தங்கள் சொந்தத்தில் அத்தியாயம் ஒன்றைப் படைத்திருக்கின்றார்கள். 1983ஜூலை இன வன்செயலின் பின்னரிலிருந்து, தமிழர்கள் பெருமளவில் இலங்கையைவிட்டு வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள். சுமார் ஒன்றரை இலட்சம் பேர் அயலில் உள்ள தமிழ்நாட்டிற்குச் சென்றுள்ளார்கள். இவர்களிற் பெரும்பாலானவர்கள், கடற் பயணத்திற்கு லாயக்கற்ற சிறிய படகுகள் மூலம்தான் இடையில் உள்ள கடலைக் கடந்தார்கள். 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் பல்வேறு வழிகள்மூலம் ஐரோப்பாவை அடைந்துள்ளார்கள். உண்மையில், புராதன ரோமர்களால் இஸ்ரேலில் இருந்து வெளியேற்றப்பட்ட போது உலகம் பூராவும் திக்கற்றவர்களாக அலைந்து திரிந்த பழைய யூதர்களை ஒத்தவர்களாக, இன்று தமிழர்கள் மாறிவிட்டார்கள்.
கனடாவை அடையும் முயற்சியாக இரண்டு படகுகளில் நெருக்கியடித்துக்கொண்டு, 5 நாட்களாக நடுக்கடலில் தத்தளித்த 155 இலங்கைத் தமிழர்கள் (கைக்குழந்தைகளுடனான பெண்கள் உட்பட) பற்றிய கதையை, நாம் இப்பொழுது கேள்விப்படுகிறோம்.
தமிழ்ப் படகு மக்கள் உலகம் பூராவும் சூடான, பரபரப்பான செய்தியாக மாறினார்கள். இவர்கள் தொடர்பாக சிலர் மத்தியில் அனுதாபமும், கருணை - பரிவிரக்கம் ஏற்பட்ட அதேவேளை, சிங்களப் பேரினவாதிகள் மற்றும் பிற் போக் குவாதிகளிடையே விரக்தியும் ஆவேசமும் உருவாகியிருக்கின்றது. புதிய புகலிடம் ஒன்றைத் தேடும் நோக்கில் இத்தகைய கொடுரமான அனுபவங்களையெல்லாம் தமிழர்கள் துச்சமென மதிக்கும் அளவுக்கு, இலங்கையின் நிலைமைகள் உள்ளன என்பது வெளி உலகுக்குப் புட்டுக்காட்டப்பட்டதனாலேயே, இந்த ஆவேசமும் விரக்தியும்!
தாங்கள் எங்கிருந்து கப்பலில் ஏறினர் என்பது தொடர்பாக, தமிழ் அகதிகள் ஆரம்பத்தில் பொய் ஒன்றைக் கூறினார்கள் என்பது குறித்து, பெருமளவிற்குப் பேசப்பட்டது. அனுதாபமற்ற அரசாங்கங்களினால் நாட்டுக்கு நாடு அலைக்கழிக்கப்படும் அகதிகள் (சிலவேளை சட்டவிரோத அகதிகள் என்றும் கூறப்படும்) உண்மையைப் பற்றியும், பண்பைப்பற்றியும் பெரிதுபடுத்தி மதித்து நடக்கமுடியாது. துரதிர்ஷ்டவசமான யூத அகதிகள் ஹிட்லரின்

Page 43
82 பதிவுகள்
ஜேர்மனியில் இருந்து ஐரோப்பாவுக்கும், அமெரிக்காவுக்கும் இரகசியமாகப் பறந்துசெல்வதற்கு எவ்வளவு தந்திரங்களைக் கையாள வேண்டியிருந்தது? எத்தனை தடவைகள் அவர்கள் அப்பட்டமான பொய்களைக் கூறினார்கள்? அதற்காக அவர்கள் மீது எவரும் தவறுகண்டிருக்கிறார்களா? அமெரிக்காவிற்குள் நுழைந்து அங்கே குடியுரிமையைப் பெறுவதற்காக, அமெரிக்காவின் எலிஸ் ஜலன்ட் நுழைவாயிலில் ஐரோப்பிய வந்தேறு குடிகள் கூறிய பொய்களின் எண்ணிக்கையை, எவராவது ஞாபகத்தில் வைத்திருக்கிறார்களா?
தமிழ்ப் படகு மக்கள் தொடர்பான முழு விவகாரத்திலும் நம்பிக்கையொளி, கனடாவிலிருந்தே வந்தது. கனடா வந்தேறு குடிகளினால்தான் கட்டியெழுப்பப்பட்ட நாடு என, அதன் பிரதமர் 'பிரையன் மல்ரோனி" வெளிப்படையாகவும் நேர்மையாகவும் கூறிவிட்டார். தமிழ் அகதிகள் விடயத்தில் தவறுவிட்டால் பரிவிரக்கம், கருணை ஆகியவற்றின் தரப்பில்தான் தவறிழைத்தாக வேண்டும் என அவர் மேலும் கூறினார். கனடாப் பிரதமர் புத்தபகவானின் போதனைகளைக் கற்றுக் கிரகித்துக்கொண்ட ஒரு மனிதரல்ல! ஆனால், புத்தர் போதித்த கருணையின் அதேவித உணர்வினால் அவர் ஆகர்சிக்கப்பட்டிருந்தார்.
ஆனால், ஒவ்வொரு போயா தினத்திலன்றும் கருணை தொடர்பான புத்தரின் போதனைகளை ஆராதனைகளில் கிரகிக்கும் சில உள்ளூர் பெளத்தர்கள், என்ன எண்ணுகிறார்கள்? 155 பேருமே கனடாக் கரையோரம் கடலில் படகுகளுடன் மூழ்கிப்போயிருந்தால், இவர்கள் சந்தோஷப் பட்டிருப்பார்கள்போலும்! ஆனால், அவ்வாறு நடைபெறவில்லை! தமிழ் அகதிகளுக்கு கனடா அரசாங்கம் விசா வழங்கி அனுமதிக்கக் கூடாது என இவர்கள் இப்போது விரும்புகிறார்கள்.
சம்பந்தப்பட்டவர்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதல்ல விவகாரம். தமிழ்ப் படகு மக்களின் விவகாரம் உண்மையில், ஒரு மனித துன்பியல் நிகழ்வு!
இந்த துரதிர்ஷ்டவசமான தமிழ் அகதிகளையும் மனிதப் பிறவிகள் எனக் கருதி, அவர்கள் மீதும் மனிதக் கருணை காட்டப்பட முடியாதா?
ஆனால், புதிய புகலிடம் ஒன்றைக் கண்டுபிடிக்கும் நோக்கில் எல்லாவித ஆபத்துக்களையும் துச்சமென மதித்துவிட்ட தமிழர்கட்கு அனுதாபந்தெரிவித்து, இலங்கையில் ஒரு குரலும் பகிரங்கமாகக்

9. CuðIJITST Č. 83
கேட்கவில்லை; அந்தளவுக்குப் பண்புச்சீரழிவு நிலைக்கு நாடு சென்றுவிட்டதே!"
Ο Ο
சிமீபத்தில், யாழ்ப்பாணத்தில் அரசுப் பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட "ஷெல் தாக்குதலில் மரணமடைந்த அப்பாவிப் பொதுமக்களில், சிறிய புத்தகக்கடையொன்றை நடத்திவந்த திரு. பீரிஸும் ஒருவர். சுமார் இருபத்தைந்து வருடங்களின் முன்னர், யாழ்ப்பாணத்தின் புகழ்பெற்ற வலதுகரை முன்னணி உதைபந்தாட்ட வீரராகவே, முதலில் இவரை எனக்குத் தெரியவந்தது. சம்பத்திரிசியார் கல்லூரியிலும், பின்னர் யாழ். தெரிவுக் கோஷ்டியிலும் இடம்பெற்றிருந்தார். மூன்று நான்கு வருடங்களாகப் புத்தகக் கடைக்காரராகவும் அவரைத் தெரியும். 'அலை’ சஞ்சிகையினையும், அலை' வெளியீடுகளையும் விற்பனை செய்வதில் எமக்கு ஒத்துழைப்புத் தந்துவந்தார். தரமான வெளியீட்டு முயற்சிகளின் பால், தனது அக் கறையை எப்போதும் வெளிக்காட்டியே வந்தார். தான் நம்பிய காந்திய, கிறீஸ்தவ விழுமியங்களுடன் வாழ்ந்த அந்த நல்ல மனிதரின் மறைவிற்கு அலை தனது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது. O
96.OG) - 28 (புரட்டாதி 1986)

Page 44
84 பதிவுகள்
பதிவுகள் - 14
வியம் பற்றிய அக்கறை ஓரளவு பெருகி வருவதைக் காணமுடிகிறது. மாணவர் முன்னணியினாலும் 'மறுமலர்ச்சிக் கழகத்தினாலும் கடந்த செப்ரெம்பரில், யாழ்.சென்.பற்றிக்ஸ் கல்லூரியில் நடாத்தப்பெற்ற 'எம் மக்களின் எதிர்காலம் நோக்கி’ என்ற கண்காட்சியில், ஒவியர் அ. மாற்குவின் சுமார் 80 வரையிலான ஒவியங்களும், தனியறையில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
அதில் அரைவாசித் தொகை ஒவியங்கள் இராகங்களைச் சித்திரிப்பவை. ஒவ்வொரு இராகத்துக்கும் அதனதன் மைய அம்சமாகச் சொல்லப்படுபவை, ஒவியரின் தனிக் கற்பனையில் ஒவ்வொரு ஓவியத்திலும் வெளிப்பாடு கொண்டுள்ளன. ‘விளக்கும் தன்மையே இதில் முக்கிய நோக்காக உள்ளபோதிலும், பலவற்றில் எமக்கு வித்தியாசமான அனுபவம் கிட்டாமலில்லை.
இராகங்களைத் தவிர்த்த ஏனைய ஓவியங்களே (சுமார் 40), ஓவியம் என்ற முறையில், கூடிய முக்கியத் துவம் கொண்டவையாய் எனக்குப்படுகின்றன. எல்லாமே நவீன

ஓவியங்கள்; ஆனால் இலகுவான பொருட்புலப்பாட்டினைக் கொண்டவை. அதனால் தான் போலும் சாதாரண பார்வையாளர்களிற் பலரும் அவற்றை இரசித்ததைக் காண முடிந்தது. அரூபமுறை (abstract) ஒவியங்கள் மிகச் சிலவே இருந்தன; அவை, என்னை மிகவும் கவர்ந்த நல்ல ஒவியங்கள். நிறுத்தி வைக் கப்பட்ட வயலினிலிருந்து கோடுகளின்மூலம் பெண் உருவத்தைச் சித்திரிக்கும் 'பெண்”; வெட்டப்பட்ட குழந்தையொன்றின் சடலத்தினிடை
அ CuiyilyFFT 85
வைக்கப்பட்ட நாய்த்தலை - அவற்றுடன் இணைந்தமைந்த பெண்ணின் புலம்பலைச் சொல்லும் ஜூலை - 83; நான்கைந்து முட்டைக்கரு போன்ற வளைந்த வடிவத்தில் - பார்வையினால் - மண்மாதா தன்னைப் பயன்படுத்துமாறு கோரிக்கைவிடும் (மனிதர்களிடம்) "மண்ணின் அழைப்பு; மனித உருவங்களும் பொருள்களும் ஒன்றுடனொன்று நெருங்கிய - அடைசலான தன்மை
வெளிப் படும் 'சந்தை' என்பவை, அவையாகும்.
பெரும்பாலான ஒவியங்களில் மனிதர்களே சித்திரிக்கப்படுகின்றனர். இயற்கைக் காட்சி ஒரு ஓவியத்தில் மட்டும்தான் சித்திரிக்கப்படுகிறது. மனிதர்களை அடுத்து மிருகங்கள் (மாடுகள், நாய்கள்), பறவைகள் (புறா) சில ஒவியங்களில் இடம்பெறுகின்றன.
எமது கலாசாரக் கூறுகளும் சிலவற்றில் வெளிப்படுகின்றன. நாதஸ்வரக் கலைஞர்கள் (சஞ்சாரம்', 'ஒத்திசைவு), காவடிக் கலைஞர்கள் ("காவடி),தனது சிறு மகனிற்கு வேல் கொடுத்துத் தாயே
ஜூலை -83
போருக்கனுப்பும் சங்கப் பாடலொன்றின் சித்திரிப்பு (வீரத்தாய்)
போன்றவை அவை,

Page 45
86 *பதிவுகள்
அரசியல் நிலைகளைச் சித்திரிக்கும் ஏழெட்டு ஓவியங்களும் குறிப்பிடத்தக்கவை. அதில் சூரியனை வரவேற்கும் - அவாவும் - மனிதனைச் சித்திரிக்கும் 'விடிவு மிக முக்கியமானது இருளிலிருந்து ஒளியை - சுதந்திரத்தை - உன்னதத்தை அவாவுறும் எண்ணங்களை, அது எம்மில் கிளர்த்துகின்றது. பிரதானமாய்ப் பின்னணியில் பரந்திருக்கும் கருஞ் சிவப்பு வர்ணம் , அவற்றை அடைவதற்குரிய போராட்டம் - இரத்தம் சிந்துதல் - தியாகம் போன்றவற்றின் தவிர்க்க இயலாத் தன்மையையும் எமக்குச் சுட்டுகிறது. ஏற்கெனவே குறிப்பிட்ட ஜுலை - 83'உம், பேரினவாதிகளினால் நிகழ்த்தப்பட்ட படுகொலைகளின் குரூரத்தை " அழுத்தி நசிக்கும் அதன் தன்மையை - இயல்பாக வெளிக்கொணரும் வடிவமைப்புடன், சிறப்பானதாக அமைகிறது. ‘வடக்கும் கிழக்கும்(இரண்டும் இணைவதைத் தடுப்பதான நிலைமை), 'எமக்காக(கிரனேட் வீசும் போராளி), காவல்'(போராளி விழிப்புடன் இருப்பது) போன்றவை ஏனைய அரசியல் ஒவியங்கள்
மென்மையாக வர்ணங்கள் பாவிக்கப்பட்டிருக்கும் மனிதம் மாற்குவின் ஆரம்பகால ஓவியங்களில் ஒன்று; நீர் வர்ணத்திலானது. காட்சியிலுள்ள பெரும்பாலான ஒவியங்கள் பிற்காலத்தில் வரையப்பட்டவை. அவை எல்லாவற்றிலும் அழுத்தமான வர்ணங்களே பாவிக்கப்பட்டுள்ளன. இது அவரது படைப்பு வாழ்க்கை மாறுதலுற்ற ஒரு காலத்தைக் காட்டுகிறதெனலாம். அதிலும், "வர்ணங்களைவிடக் கோடுகளிற்கு முக்கியத்துவம் கொடுக்கவே தற்போது விரும்புகிறேன்" என்று அவர் சொல்வதை நிரூபிப்பனவாய், பெரும்பாலான ஒவியங்கள் இருக்கின்றன. இதனைச் சிறப்பாக 'மூவர்','பெண்,காதல்'ஜுலை - 83, ஒத்திசைவு போன்றவற்றிலிருந்து உணரலாம்.
பெரும்பாலான ஒவியங்கள் வர்ணச் சோக்குகளினாற்றான் வரையப்பட்டுள்ளன; அதுவும் சாதாரணக் கடதாசிகளில்; கன்வஸ் பாவிக்கப்படவில்லை. எண்ணெய் வர்ண ஒவியம் (Oil Painting)
 

9. (Guusi JTFIT : 87
ஒன்று மட்டும்தான் இருந்தது. இவைபற்றி ஓவியருடன் உரையாடுகையில், 'வசதியற்ற பொருளாதார நிலைமை காரணமாக, படைப்புந்தலிற்கு உட்படும் போதெல்லாம் விலை மலிவான சாதனங்களையே பாவிக்கும் கட்டாயத்திற்குட்படுவதாகக் கூறினார். உரிய சாதனங்கள் தாராளமாக இருக்குமானால், அவரது படைப்பு முயற்சிகள் முற்றிலும் வேறு பரிமாணங்களைக் கொள்ளும்; அவற்றுக்குரிய ஆதங்கத்தினை அவருடன் கதைக்கையில் உணர முடிந்தது. இது அவலமானதொரு நிலைமைதான். கலை அக்கறையும் வசதியுமுள்ள தனிநபர்கள், ஸ்தாபனங்கள்தான் தகுந்த வசதிகளை எமது கலைஞர்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பதில், உரிய அக்கறையினைக் காட்டவேண்டும்.
மூன்று நான்கு நாட்கள் இக்காட்சியறையில் நின்றபோது, பார்வையாளர்களிற் பலரோடும் உரையாட முடிந்தது. பலருக்கும் ஒவியங்களைத் தொகையாகப் பார்ப்பதும், இரசிப்பதும் புதிய அனுபவமாய் இருந்தது. ஆற்றுப்படுத்தும், சிறிய சிறிய விளக்கக் குறிப்புகள் அவ்வப்போது சொல்லப்பட்டபோது, அக்கறையுடன் அவற்றை உள்வாங்கி நின்று இரசித்தார்கள்; குறிப்பாக இளைஞர்கள், இளம்பெண்கள் அதிலும் பல முகங்களை இரண்டாம் மூன்றாம் தடவைகளும் ஓவிய அறையில் காணமுடிந்தது; ரொம்பவும் ஆர்வத்துடன் இருந்தார்கள். பல்லாயிரக்கணக்கான மக்களின் பார்வையில் நவீன ஓவியங்கள் பட்டிருக்கின்றன என்பது, சாதாரண விடயமல்ல.
உரிய வாய்ப்புக்கள் கொடுக்கப்படுகிறபோது கலைஞர்கள் - பார்வையாளர்கள் இணைய, எமது கலைச்சூழல் மெல்ல மெல்ல வளர்ச்சிநிலைகளை நோக்கி நகரும் என்பதை, இக்கண்காட்சியும் உறுதிப்படுத்தியது.
Ο Ο
இதே கண்காட்சியின் பிறிதோர் பகுதியில் செல்வி ரீமாவின் ஒவியங்கள் சிலவும் வைக்கப்பட்டிருந்தன; முழுவதுமே இந்தியன் இங்க்கினால்(Indian Ink) வரையப்பட்ட கோட்டுருவங்கள் ஆகும். கருத்துகளைத் திணித்து வரையப்பட்ட தன்மை காரணமாய் பலவற்றில் ஒன்றிக்க முடியவில்லை. தவிர, "வரைதல்' என்ற

Page 46
88 *பதிவுகள்
வகையிலும் பலவீனங்கள் " வடிவ அமைதியின்மை - குறைபாடாகத் தெரிகிறது. ஆனால் , “மடமையைக் கொளுத்துவோம்', 'பிரிவு போன்றவை மனதில் நன்கு பதிந்தன; அவற்றில் ஓவியரது ஆற்றலைக் காணமுடிகிறது முறைப்படியான பயிற்சிகள் இருக்குமானால் இவரால் நிறையச் சாதிக்க முடியும் என்ற எண்ணம் தவிர்க்கவியலாமல் தோன்றுகிறது. பெண்ணிலை நோக்கில் தத்தம் அனுபவங்களை வெளிப்பாடுசெய்யும் கலைஞர்கள், எழுத்தாளர்கள் அதிகமாய்த் தோன்றவேண்டுமென்பது உணரப்படும் சூழலில், இந்த ஓவியர் நமது கவனத்தை ஈர்ப்பவராகவே இருக்கிறார்.
C
இலக் கியத்திற்கான நோபல் பரிசினை இம்முறை பெற்றிருப்பவர், 52 வயதுடைய நைஜீரியரான வோல் ஸொயிங்கா. இவரே இப்பரிசினைப் பெறும் முதலாவது ஆபிரிக்கருமாவார். "ஆபிரிக்க இலக்கிய நிறுவனத்தின் அத்திவாரக் கல்லாக இருப்பவர்’ என, விமர்சகரொருவரால் முன்னொருமுறை வர்ணிக்கப்பட்ட இவர், நாடகாசிரியராக- நாடக நெறியாளராக " புனைகதை எழுத்தாளராக கவிஞராக - சமூக விமர்சகராக - பேச்சாளராக - இருக்கிறார். இலக்கிய வடிவங்கள்பலவற்றில் ஈடுபட்டாலும் ‘முக்கியமாக நாடகத் துறையைச் சேர்ந்தவனாகவே என்னைக் கருதுகிறேன். ஆனால் ஏனைய வடிவங்களிலும் நிச்சயமாகத் தொடர்ந்து எழுதுவேன்” என்று சொல்கிறார்.
வோல் ஸொயிங்கா
ஆபிரிக்காவின் முழு இலக்கிய மரபினதும் ஒருபகுதியாகவே தான் இருப்பதாகச் சொல்லும் 'ஸொயிங்கா', “ஓர் எழுத்தாளன் எப்போதும் எழுதிக்கொண்டே இருக்கிறான், தனது தட்டச்சுக் கருவியின் அருகில் இருக்கையிலோ-வெளியில் உலாவுகையிலோ - தனதுஎழுத்துக்களைப்பற்றிச் சிந்திக்கையிலோ கூட” என்றும் சொல்கிறார். பெரும்பாலும்ஆங்கிலத்திலேயே எழுதும் இவர், கவிதையை மட்டும் தனது 'யொருபா(yoruba)இனக்குழு மொழியில்
 

9. Cussyns IT : 89
எழுதுகிறார்.
இவரது நூல்களில் காடுகளின் நடனம்(நாடகம்); இறந்துவிட்ட மனிதன்(நாவல்), தொல்கதை, இலக்கியம், ஆபிரிக்க உலகம்(விமர்சனம்) ஆகியன மிக முக்கியமானவையாய்க் குறிப்பிடப்படுகின்றன.
ஒர் இடதுசாரியாகவே அறியப் பட்டபோதும் இயந்திரப்பாங்கற்ற, விமர்சனரீதியிலான மார்க்சியப் பார்வையைக் கொண்டவர் இவர். அதனால், படைப்புகளை விளக்குவதற்கான வழிமுறையாக மார்க்சிய விமர்சனத்தைப் பயன்படுத்தத் திறனற்ற மார்க்சியவாதிகளைக் கண்டிக்கிறார். “இலக்கியம் எதைச் செய்யவில்லையோ அதைப் பற்றிப் பக்கம் பக்கமாக எழுதிக்குவிக்கும் இவர்கள், இலக்கியம் என்ன செய்கிறதோ அதைத் தொடுவதேயில்லை” என்பது, இவரது கருத்து.
இன்னமும் வரட் டுவாதிகளாக உள்ள நமது முற்போக்குகளிற்கு, இக்கூற்றுச் சமர்ப்பணம்!
Ο Ο
எமது வாழ்வின் விசேட காலங்களையும், மக்களையும் நினைவுகொள்வதற்கும்; உலகத்தின் முக்கிய நிகழ்வுகளை ஆவணப்படுத்துவதற்கும்; இவை பற்றிய கலைஞனின் தனிப்பார்வையை வெளியிடுவதற்கும் புகைப்படக்கலை கையாளப்படுகிறது' என்று சொல்லப்படுகிறது. கலைஞனின் தனிப்பார்வை அவன் தேர்ந்தெடுக்கும் பொருள்களிற்கூடாகவும், அமைக்கும் கோணங்களின்மூலமும், ஒளியைக் கையாள்வதன் மூலமும் வெளிப்படும். இவ்வாறான தனித்த ஆளுமையினை நிலைநிறுத்திய,எத்தனை புகைப்படக் கலைஞர்கள் எம்மிடையே உள்ளனர்?திருக்கோணமலையைச் சேர்ந்த ஒரு ஏரம்பு சரவணபவன் இலங்கையிலும், பிறநாட்டிலும் சில பரிசுகளைப் பெற்றிருப்பதாகத் தெரிகிறது; ஆனால் அவரது படங்கள் கூட பரவலாய்த் தெரியவரவில்லை. இதைவிடக் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கதாக யார் இருக்கிறார் எனச் சொல்லத்தெரியவில்லை.
இத்தகு வறுமைப்பட்ட சூழலில், கார்த்திகை மாதம் யாழ்

Page 47
90 Cபதிவுகள்
சுண்டிக்குளி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற புகைப்படக் கண்காட்சியின்மூலம் எமக்கு அறிமுகமாகிறார், தமயந்தி அவர் தனித்துவம் மிக்க ஒரு கலைஞரென்பதை, அவரது புகைப்படங்கள் வெளிப்படுத்துகின்றன. காட்சிகளுடனும், பொருள்களுடனும் ஒன்றியபடி அவர் வெளிப்படுத்திய படங்கள், எமது ஒர உணர்வுகளைத் திரளச் செய்கின்றன. எவற்றை, எந்தளவு, எப்படிக் காட்டுவது என்று படைப்பாக்க நிலையில் அவர் அமைக்குங் கோணங்கள், அருமையானவை. படத்தின் மையத்தில் தொலைவில் தெரியும் இயந்திர வள்ளத்தைச் சித்திரிக்கும் 'வீடு திரும்புதல்; விதானமாய்க் கவிந்த தென்னை வட்டினை நோக்கியேறும் கள்ளிறக்கும் தொழிலாளியைக் கீழிருந்து நோக்கும் பார்வையைக் காட்டும் 'வான்நோக்கி ஒரு பயணம்; முன் மண்டபத்தின் வளைந்த சுவரிற்கிடையில் கடலிலுள்ள வள்ளங்களையும், ஆகாயத்தையும் காட்டும் 'விண்ணை வளைத்து; திரளும் கறுத்த மேகங்களைச் சித்திரிக்கும் மனம்; வெளியில் தனித்த மரத்தினையும் நீரில் அதன் நிழலினையும் காட்டும், "அசலும் நகலும் போன்றவற்றில் இதனைச் சிறப்பாக உணரலாம்.
பொருள் அடிப்படையில் குறிப்பாக கடல், கடல் சார்ந்தவைகள் அதிகளவில் இடம்பெறுகின்றன. கடற்கரை, கடலில் வள்ளங்கள், கடற்கரையோர வீடுகள், கடலின்மேற் சூரியன், மீன்கள் (வெள்ளிக் காசுகள்), மீனவர்கள், கடற்பறவைகள் என்பன அவை,
குப்பை மேட்டில் கம்பீரமாக நிற்கும் சேவல்; குப்பைகளைக் கிளறியபடி நிற்கும் பன்றிகள்(குப்பையே சுகம்); மூன்று நான்கு நாய்களிற்குச் சிறிது தள்ளி நின்று பார்க்கும் காகம்(அந்நியன்), திண்ணையிலிருந்து தட்டிற் சோறுண்ணும் குழந்தைக்கு முன்னால் தருணத்தைப் பார்த்து நிற்கும் காகம்(எத்திப் பறிக்கும் அந்தக் காக்கை) போன்றவை மனதில் பதிகின்றன.
அரசியல் சார்ந்த நல்ல படங்களும் உள்ளன, பரந்த ஆகாயத்தில், வெண்பஞ்சு மேகங்களின் மத்தியில் தெரியும் சிறு கிளையிலுள்ள சிவத்தப் பூக்கள், போராளிகளின் புனித தியாகங்களை(சில கவிதை வரிகளுடன்) நினைவூட்டுகின்றன. யாழ் நகரின் மத்தியில் மணி மூடைகளினால் அமைக்கப்பட்ட பிரமாண்டமான காவல் அரண்(லெபனான் அல்ல - எமது பூமி):

அ. யேசுராசா (; 91
மண்மூடை இடைவெளியூடாய்க் கோட்டையைக் காட்டும் (காவலரணுாடு); எமது அவலங்களைக் குறியீடாகக் காட்டும் - முட்கள் நிறைந்த நாகதாளிகளைக் கறுப்பில் காட்டும் "எம்முடைய நாள்கள்; நீட்டும் இரு கரங்கள் ஏந்தியுள்ள ஷெல்லினைக் காட்டும் தார்மீகப் பரிசு', கண்ணொன்றைக் குளோசப்பில் காட்டும் 'விழித்திருப்போம்; சித்திரவதைகளைக் காட்டுவன போன்றவை அவை, இயக்க உள் மோதல்களை - ஜனநாயகம் மறுக்கப்பட்ட நிலைமைகளைச் சித்திரிப்பனவும் உள்ளன. உ+ம் கடற்கரையில் பதிந்த காலடிகள் தண்ணீரில் மறைகின்றன; மீண்டும் அவனைக் காணவில்லை’ எனச் சொல்லும் கவிதைவரிகள் பக்கத்தில் உள்ளன. இது, வெறுப்புக்குரிய ‘கடல் மரணங்களை’ நினைவூட்டுகின்றது.
இவ்வாறாக நாம் வாழும் சூழலின் பல்வேறு பரிமாணங்கள் கலைத்திறனுடன், புகைப்பட அழகியல்மூலமாய் வெளிப்பட்டிருக் கின்றன. படைப்புகள் பலவற்றிற்குப் பொருத்தமான கவிதை வரிகளும் இணைக்கப்பட்டுள்ளன; அவை ஆழ்ந்த உணர்வுப் பரிமாற்றங்களை ஏற்படுத்துகின்றன. இங்கு உருவாகும் ஒருவிதக் கூட்டுக் கலைத் தாக்கம் முற்றிலும் புதியதான அனுபவங்களை எமக்கு ஏற்படுத்துவதில், பரிசோதனை நிலை என்பதையும் தாண்டி வெற்றிகாண்கிறதெனச் சொல்லமுடியும், நுண்மையான கலை மனம் இதனூடு விகளிதம் கொள்கிறது. மகிழ்ச்சியும், பெருமிதமும் இணைய தமயந்தியைப் பாராட்டவேண்டிய நிலைக்கு, நாம் தவிர்க்கவியலாமல் தள்ளப்படுகிறோம்; அவருக்கு எமது மனம் நிறைந்த பாராட்டுக்கள்!
சில படங்கள் பிறின்ற் பண்ணப்பட்ட முறையில் தொழில்நுட்பக் குறைபாடுகளை அவதானிக்க முடிகிறது; இது கட்டாயம் தவிர்க்கப்படவேண்டியதுதான். ஆனால், வசதிக்குறைவுகள் நிறைந்த யாழ்ப்பாணச் சூழலை நாம் மறந்துவிட முடியாதென்பதும் உண்மைதான். O
960G) - 29 (மார்கழி 1986)

Page 48
92 பதிவுகள்
பதிவுகள் - 15
6
அலை சோஷலிச யதார்த்தவாதக் கலைக்கோட்பாட்டை ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால், முற்போக்கு எழுத்தாளர்களும் விமர்சகர்களும் தமது கலைக்கோட்பாடு அதுவே எனச் சொல்லி வந்துள்ளனர். 17-10-86 இல் நடந்த இ.மு.எ.ச. மாநாட்டின் அரசியல் தீர்மானத்தின் இறுதிப்பந்தியிலும் பின்வருமாறு காணப்படுகிறது:
“இன்றைய எமது போராட்ட நிலையில் சோஷலிச யதார்த்தவாதம் தனது அரசியற் கோட்பாட்டினாலும், கலை அழகியற் கோட்பாட்டினாலும் நம்மை வழிநடத்தும் தத்துவமாய் அமையவேண்டுமென இ.மு.எ.ச. வற்புறுத்துகிறது.’ நான் அறிந்தவரையில் சோஷலிச யதார்த்தவாதமானது பின்வரும் நான்கு அம்சங்களைக் கொண்டிருத்தல் வேண்டும்.
1. பிரதிபலிப்புக் கோட்பாடு 11 வகைமாதிரித் தன்மை, 11. வர்க்கப் பார்வை. IV. வரலாற்றுணர்வு - வெல்லும் திசை மார்க்கம் முற்போக்காளர்களெனத் தம்மைச் சொல்லிக்கொள்கிற

9. CuJöGJITFIT : 93
எழுத்தாளர் பலரின் நூல்கள் - ஆகுதி, வலை; சத்தியங்கள்; உயிர்ப்புகள் - சமீபத்தில் வெளிவந்துள்ளன. இவற்றிலுள்ள பெரும்பாலான ஆக்கங்களுக்கும் சோஷலிச யதார்த்தவாதத்திற்கும் சம்பந்த மேயில் லை. முற் போக்கு விமர்சகர் பலர் இப்படைப்புக்களைப்பற்றி கூட்டங்களில் பேசியும், கட்டுரைகளில் எழுதியும் வருகின்றனர்; ஆனால் அடிப்படையான இந்த விடயத்தை யாரும் தொடவேயில்லை. இவற்றுக்கு முற்பட்ட காலப் படைப்புக்களிலும் இக்குறைபாட்டைக் காணலாம். சூத்திரங்களைக் கிளிப்பிள்ளைகளாய்ப் பலரும் ஒப்புவிக்கின்றனர்; 'சொல்லின் பொருளுணர்ந்து ஒதுவதாய்த்தான் தெரியவில்லை. இருட்டினில் ஆடும் குருட்டாட்டம் இன்னும் எத்தனைகாலம் தொடரும்.
OO சிதீஸ் குஜ்ரால் ஒவியராகவும், சிற்பியாகவும், கட்டடக் கலைஞராகவும் தற்காலத்தில் புகழ்பெற்ற ஓர் இந்தியர். அவரது செவ்வியொன்று இந்தியா ருடே'(மார்கழி 31,1986) ஆங்கிலச் சஞ்சிகையில் வெளிவந்துள்ளது. அதில் எனக்குப் பிடித்த அவரது கருத்துக்கள் சிலவற்றைத் தருகிறேன்:
“கலைஞனின் முக்கிய அக்கறை அழகியல் ஒழுக்கமே தவிர, அரசியல் ஒழுக்கம் அல்ல.
உன்னதமான கருத்துக்கள் கலையைப் படைத்துவிட முடியாது; கலைஞர்களே உன்னதமான கலையைப் படைக்க (tքtԳԱյւb.
வெளிப்பாட்டிற்குரிய கண்டுபிடிப்பின் ஒரு பகுதிதான் பாணி, கண்டுபிடிப்பு எவ்வாறு திருப்பி நிகழ்த்தப்படக்கூடும்?
ஒவ்வொரு நிகழ்வும் உருப்படியானவற்றை அளிக்காது - "போஸ்ரர்களை வேண்டுமானால் செய்யலாம். கலை, நிகழ்வுகளிற் குப் பொருந்த வேண்டும் என்பதற்காகப் படைக்கப்படுவதல்ல.”
OO
கிரேக்க நாவலாசிரியரான கஸான் ஸாகீஸின் த லாஸ்ற் ரெம்ப்ரேஷன் ஒ.வ் கிறைஸ்ற் (கிறீஸ்துவின் இறுதிப் பாவச்

Page 49
94 பதிவுகள்
சோதனை) என்ற நாவலினைத் தழுவி, "கிறீஸ்துவின் ஆறாவது திருக்காயம்' என்ற நாடகமொன்று பி.எம்.அந்தோனியினால் மலையாளத்தில் எழுதப்பட்டு, நெறியாள் கையும் செய்யப்பட்டது. அது கிறீஸ்துவை அவமரியாதை செய்வதாக இருப்பதால் தடைசெய்யப்படவேண்டுமெனக் கோரி, ஊர்வலங்களையும் பொதுக் கூட்டங்க ளையும் மதவாதிகள் நடாத்தினர். நாடகத்தைத் தடைசெய்யக் கோருவதைக் கண்டித்த பிஷப் பெளலோஸ் மார் பெளலோஸின் கருத்துக்கள் முக்கியமா னவை: “மதச்சார்புள்ள ஒருநாட்டை அமைப்பதற்கான துவக்கம்தான் இது. பேச்சுரிமைக் கும் கலையை எடுத்துரைப்பதற்கும் வாய்ப்பில்லாவிட்டால் இங்கு ஒருவகை கலாசார ஃபாஸிஸம் வளருவதற்கு வாய்ப்புள்ளது. நான் நாடகம் பார்த்ததில்லை; ஆனால், கஸான் ஸாகீஸின் புத்தகத்தைப் படித்திருக்கிறேன். உலகப் புகழ் பெற்ற இலக்கியம் தான். அது பாதிரிமார்களும், மேற்றிராணிமார்களும் படித்திருக்க வேண்டிய ஒரு இலக்கியமும்கூட ஒரு கலையைப் படைப்பதற்கும் அபிப்பிராயம் சொல்வதற்கும் மதத்தின் சான்றிதழ் வேண்டுமென்பதா இவர்களின் வாதம்? இப்படியிருந்தால் மனிதன் எப்படி முன்னேறுவான்? 'விசுவாசிகளே! நீங்கள் இந்த நாடகத்தைப் பார்க்காதீர்கள். உங்கள் விசுவாசம் அழிந்துபோகும்’ என்று சொல்வது கேலிக்கூத்தல்லவா? "என்னைக் குறித்து அழாதீர்கள்’ என்று கிறீஸ்துவே சொல்லியிருக்கும்போது, இந்தக் கூத்தின் அர்த்தமென்ன? 'சமூகத்தின் மிகத் தாழ்ந்தவர்களுக்குச் செய்யாததெல்லாம் எனக்கே செய்யாததாகும்' என்று இயேசுவே சொல்லியிருக்கிறார். மனிதன் புழுக்களைப் போல போபாலில் இறந்துகிடந்தபோது இந்த மதத்தலைவர்கள் எங்கே போனார்கள்? இங்கு (கேரளாவில்) இடுக்கி மாவட்டத்தில் தங்கமணி என்ற இடத்தில், பொலிஸார் நமது தாய்மார்களையும் சகோதரிகளையும் பலாத்காரம் செய்தபோது இவர்கள் யாரும் ஒன்றுசேரவில்லையே! வரதட்சணை சம்பந்தப்பட்ட கொலைகள் நடக்கும்போதும், லஞ்சத்தாலும் கள்ளக் கடத்தலினாலும் சாதாரண மக்கள் பாதிக்கப்படும்போதும் மிக எளிமையானவர்கள்
 

el, Guðjiði í 95
புறக்கணிக்கப்படுகிறார்கள். சுதந்திரமாக ஒரு கலைப்படைப்பை வெளியிடுவதன்மூலம், அபிப்பிராயத்தைச் சொல்வதன்மூலம் இயேசு அவமானிக்கப்படுகிறார்’ என்று மானசீகக் கோபத்தோடு கத்துகிறவர்கள், உண்மையில் இந்த எளிமையானவர்களுக்காக அல்லவா குரலெழுப்பியிருக்க வேண்டும்?”
நாடகத்தின் மீதான குற்றச்சாட்டுகளுக்கு நாடகாசிரியரான பி.எம்.அந்தோனி பதிலளிக்கையில்: “மனித குமாரனாகப் பிறந்த இயேசு கடவுளாக மாறும் ஒரு நீண்ட வாழ்க்கைப் பயணத்தில், தன்வாழ்க்கையில் தியாகம் செய்யவேண்டிவந்த மனித இச்சைகளில் ஒன்றாகத்தான் மக்தலின் மேரியோடுள்ள உறவு இந்த நாடகத்தில் சித்திரிக்கப்பட்டுள்ளது. மனிதனாகப் பிறந்த இயேசுக்கிறீஸ்துவுக்கு மனிதத்தன்மையும் தெய்வத் தன்மையும் இருந்தே தீரும் மனதுக்கும் - உடலுக்கும், ஆத்மீகமும் - பெளதிகமுமான போராட்டங்களை அனுபவித்தே தீரவேண்டும். தன்னை (இயேசுவை) உலக வாழ்க்கைக்குள் இழுக்கும் காரணிகளுள் ஒன்றுதான் மேரி தான் வளர்ந்த நஸரேத்து, உயிருக்குயிராய் நேசிக்கும் அம்மா, உறவினர்கள் - போன்ற உலக பந்தங்களை அறுத்தெறிந்து முன்னோக்கிச் செல்லும் இயேசுவைத்தான் நாடகத்தில் காட்டுகிறேன். உலக பந்தங்களுக்கு முன் பணிந்துபோகாமல், தவறானாலும் சரியானாலும் தான் நம்புகிற ஒரு உண்மையை நோக்கி லட்சிய உணர்வோடு முன்னேறும் ஒரு மனிதனாக இயேசுவைக் காட்டினால், அது எப்படி கிறீஸ்துவ மதத்தை அவமதிப்பதாகுமென்று எனக்குப் புரியவில்லை" என்று சொல்கிறார்.
இதுபற்றிய விரிவான கட்டுரை " எம். ஆரோக்கியசாமி எழுதியது - 31-12-86 ஜூனியர் விகடன்’ இதழில் வெளி வந்திருக்கிறது.
Ο Ο
நெல்லியடியில் சில மாதங்களின் முன் நடந்த 'உயிர்ப்புகள் வெளியீட்டு விழாப் பேச்சுக்கள்கொண்ட இரண்டு கஸெற்றுகளை, இங்கு நண்பர்கள் சிலர் சேர்ந்து கேட்டோம். சுவாரஸ்யமான கருத்துக்கள் பல அதில் காணப்படுகின்றன. பேராசிரியர் கா.சிவத்தம்பியின் பேச்சிலிருந்து சில பகுதிகளைத் தருகிறேன் " எனது நினைவிலிருந்து
"நல்ல டொக்ரர் நல்ல எஞ்சினியர்தான் எங்களுக்கு வேணும்.

Page 50
96 uglassir
அதைப்போல நல்ல எழுத்தாளன்தான் வேணுமென்று சொல்லப்படாதா? டொக்ரர் என்று நினைக்கிறவன் எல்லாம் டொக்ரர் இல்ல; எஞ்சினியர் என்று நினைக்கிறவன் எல்லாம் எஞ்சினியர் இல்ல. அதைப்போல எழுத்தாளன் என்று நினைக்கிறவர்கள் எல்லாரும் எழுத்தாளரில்லை " அதற்கு ஆழமான பயிற்சி தேவை, பயிற்சி ஆழமுள்ள எழுத்தாளர்கள்தான், எங்களுக்குத் தேவை.
காட்ப்காதான் சொன்னான், I am not apostman என்று எழுத்தாளன் போய் ஒவ்வொருவருக்கும் கருத்துச் சொல்ல வேணுமென்று, எதிர்பார்க்க ஏலாது எழுத்தினுடைய தாக்கம்தான் முக்கியம். பார்வையில் சின்சியறிற்றி இருக்க வேணும்; திறமையை ஆழப்படுத்த வேணும்.
காட்ப்காவையும், கெமுவையும் விட்டிட்டு உலக நாவல் வளர்ச்சியைப் பற்றிக் கதைக்க முடியுமா? அவங்கள் என்ன கொம்யூனிஸ்ற்றா? கெமு - அன்ரி கொம்யூனிஸ்ற் என்ன? அதற்காக அவங்களை விட ஏலுமா?
இப்போது நிகழ்ந்துகொண்டிருக்கிற தேசிய விடுதலைப் போராட்டத்தில் சமூக மாற்றமும் சேர்ந்து நிகழ்கிறது. இதைச் சரியாக விளங்கிக்கொள்ள இலக்கிபப் பொறுப்பு வேணும். கவனிக்கவும், நான் சமூகப்பொறுப்பு என்ற சொல்லைக்கூடப் பாவிக்க இல்லை; இலக்கியத்தை ஆழப்படுத்த வேணும்.” O
96.OG) - 30 (பங்குனி 1987)

அ. யேசுராசா) 97
பதிவுகள் - 16
சில மாதங்களின் முன்னர் எனது அறியப்படாதவர்கள் நினைவாக..!" நூலின் 'விமர்சன அரங்கு' யாழ்ப்பாணத்தில் நடைபெற்றபோது, நேரில் சமுகமளிக்க முடியாமையினால் பேராசிரியர் கலாநிதி கா.சிவத்தம்பியினால் அனுப்பிவைக் கப்பட்டிருந்த விமர்சனக்கட்டுரை வாசிக்கப்பட்டது; அது ஒரு சுருக்கமான கட்டுரை. எனது கவிதைகள் என்னை 'ஒரு புனைவுநிலைவாதியாகவே (Romanticist) காட்டுவதாகவும், எனது 'கவிதையாக்கத்தின் மிகச் சிக் கற்பாடான அம்சம் எனது மொழியேயாகும்’ என்றும் அதில் தெரிவிக்கும் கருத்துக்கள், ஆச்சரியத்தையே தருகின்றன. இவற்றோடு வேறுசில கருத்துக்களையும் அவர் தெரிவித்தபோதும் அவற்றை உதாரணங்கள்மூலம் நிறுவவில்லை. ஆதலால் அவற்றை ஒருபுறம் வைத்துவிட்டு, ‘சங்கம் புழைக்கும் மாயா கோவ்ஸ்கிக்கும்’ என்ற கவிதைபற்றிய அவரது கருத்தை மட்டும் பரிசீலிக்க முனைகிறேன். “மயாகோவ்ஸ்கியின் மரணத்துக்கு முந்திய அவனது புரட்சிகரக் கருத்துநிலைகள், சாதனைகள் யாவற்றையும் மறந்து அவனை வெறும் உணர்ச்சிநிலைப்பட்டவனாகக் காட்டுவது வரலாற்று முரண்

Page 51
98 பதிவுகள்
என்றே கருதுகிறேன்.
மயாகோவ்ஸ்கியின் பணிகள் பற்றிய தெளிவிருந்திருப்பின் நீங்கள் நிச்சயமாக,
உமது வழி தொடரேன்
செய்வதற்கு இன்னும்
பணிகள் மிக உளதே!’ என்று கூறியிருக்க மாட்டீர்கள்” என்று, அவர் கூறுகிறார்; சித்திரலேகா மெளனகுருவும் இதையொத்த கருத்தினையே வெளியிட்டார்.
இந்தக் கவிதை ஒரு தனிநிலைக் கவிதை; மாயாகோவ்ஸ்கியின் முழுவாழ்வையும் பற்றிய விமர்சனக் கட்டுரை அல்ல. அவரதும் 'சங்கம் புழையினதும் காதல் தோல்வி - அத்துயரைத் தாங்கமுடியாது அவர்கள் தற்கொலை புரிந்தனர் என்பதில் அனுதாபங்கொண்டிருந்தபோதும் - அவர்களைப் போல் காதலில் தோல்வியுற்றபோதிலும், தற்கொலை செய்யமாட்டேன் (உமது வழிதொடரேன்) என்பதையே கவிதை சொல்கிறது. எனவே, 'மயாகோவ்ஸ்கியின் புரட்சிகரக் கருத்து நிலைகள், சாதனைகளை மறந்து' என்ற குற்றச்சாட்டு எழும்ப நியாயமே இல்லை. கவிதையில் தெளிவாகவே உள்ள இந்த அம்சத்தை விட்டுவிட்டு, அதுகூறாத ஏதோவொன்றைப் பற்றிச் சொல்லவரும் இவர்களின் செயல், சென்ற வருடம் நோபல் பரிசு பெற்ற நைஜீரியர்ான வோல் ஸொயிங்காவின் கருத்தொன்றையே எனக்கு ஞாபகப்படுத்துகின்றது: "இலக்கியம் எதைச்செய்யவில்லையோ அதைப்பற்றிப் பக்கம் பக்கமாக எழுதிக் குவிக்கும் இவர்கள் (அதாவது, யாந்திரிகப்பாங்கான மார்க்சிய விமர்சகர்கள்), இலக்கியம் என்ன செய்கிறதோ அதைத் தொடுவதேயில்லை"
"சில கவிதைகளை எழுதிவிடுவது சிரமமான ஒன்றல்ல; கவிஞனாக இருப்பதுதான் சிரமமானது” என்பதும் சிவத்தம்பியின் கட்டுரையில் காணப்படும் ஒரு கருத்தாகும். தி ஐலண்ட் ஆங்கிலப் பத்திரிகையில் (12-5-87) வெளியாகிய தனது பேட்டியில், ".இரண்டாவது பிரிவைச் சேர்ந்த எழுத்தாளர்களில் (இலங்கைத் தேசியவாதத்துடன் தொடர்புற்றிராத - தமிழ்த் தேசியவாத நிலைப்பட்ட எழுத்தாளரில்) சேரனும், இளவாலை விஜயேந்திரனும்

அ. யேசுராசா (; 99
9
இரண்டு முக்கிய கவிஞர்கள்’ என்று சிவத்தம்பி சொல்கிறார். விஜயேந்திரன் சில கவிதைகளைத்தான் இதுவரை எழுதியுள்ளார். அப்படியானால், 'சிலகவிதைகள் எழுதிய அவர் மட்டும் முக்கிய கவிஞராகியது' எவ்வாறு ? இத்தகைய முரண்பாடுகள் இவரிடம் ஏன் ஏற்படுகின்றன?
சபையோர் கருத்துரை நிகழ்ச்சி சுமார் ஒருமணி நேரமாக சுவாரஸ்யமானதாக நடைபெற்றது. செம்பியன் செல்வன், க.சட்டநாதன், டானியல் அன்ரனி, சோழன், ஈழத்துச் சிவானந் தனி ஆகியோர் கருத்துரைத்தனர். மாயாகோவ்ஸ்கியின் தற் கொலை பற்றி இரண்டுவிதமான கருத்துக் கள் நிலவுவதை, ரஷ ய இலக்கியத்தில் ஈடுபாடுள்ளோர் அறிந்திருப்பர். காதல் தோல்வியினால் தற்கொலை செய்தார் என்ற ஒரு கருத்தும், தமது காலத்தில் நிலவிய இலக்கிய சர்வாதிகாரப் போக்குகளில் அடைந்திருந்த கசப்பினாலேயே தற்கொலை செய்தார் என்ற பிறிதொரு கருத்துமே, அவையாகும். அவர் தற்கொலைசெய்தார் என்பதில், கருத்து வேறுபாடே இல்லை. ஆயினும், டானியல் அன்ரனி கருத்துரைக்கையில், "நான் அறிந்தவரையில் மாவ்கோஸ்கி தற்கொலை செய்யவில்லை; மாவ்கோஸ்கி இயற்கையாகவே மரணமடைந்தார்’ என்றார். அவருக்குப் பதிலளித்த "சோழன்' இவ்வாறு சொன்னார்: "நான் சோவியத் ரஷ்யாவில் ஆறு வருடங்கள் இருந்தவன். மாவ்கோஸ்கி தற்கொலை செய்யவில்லையென டானியல் அன்ரனி சொன்னார். சிலவேளை, அவர் சொன்னதுபோல மாவி கோஸ் கி என்று ஒருவர் இருந்து அவ்வாறு செய்யாதிருந்திருக்கலாம்; ஆனால், மயாகோவ்ஸ்கி தற்கொலைதான் செய்தார், ஏன், அவர் கொலைசெய்யப்பட்டார் என்ற கருத்துக்கூட அங்கு நிலவுகிறது!”
uDM. tij6öå
இன்னுமொரு வேடிக்கை என்னவென்றால், டானியல் அன்ரனியை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்து, பின்னர் நின்று போய்விட்ட 'சமர் இதழொன்றில் (இல. 04: ஜனவரி - 80),

Page 52
100 uglassir
வ.ஐ.ச. ஜெயபாலனின் கவிதை - மாயாகோஸ்கியும் நானும் வெளியாகியிருக்கிறது; அதிலிருந்து சில வரிகள் :
“ எனினும் அந்தக் கவிஞனைப்போல காதல் இழப்பைச் சகிக்க ஒண்ணாது வாழ்வை மாய்த்திட நினைப்பது மில்லோம்
சொந்த வாழ்வின் தோல்வியில் குறுகி சாவை அணைத்த மூடக் கவிஞா” O
31 سـ (6960063 (சித்திரை 1988)

9. Cuigley IT 101
பதிவுகள் - 17
புகழ்பெற்ற இசையமைப்பாளரான எம்.பி. சீனிவாசன் மாரடைப்பினால் 09-03-88 இல் காலமானார்.
வர்த்தகமயமான தமிழ் சினிமாத்துறை அவரிற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. பாதை தெரியுது பார், தாகம், புது வெள்ளம், புதுச்செருப்பு கடிக்கும் போன்ற"மிகக் குறைந்த எண்ணிக்கையிலான திரைப்படங்களே அவரது இசையமைப்பினைத் தாங்கி வெளிவந்தன; இசை ஆர்வலர்களின் கவனத்தையும் ஈர்த்தன. ஆனால், மலையாளத் திரைப்படத்துறை அவரிற்கு உரிய இடத்தினை அளித்ததாக அறிகிறோம். பாரதியார் பாடல்கள் சிலவற்றிற்கு அதுவரையுமில்லாதவாறு, அவ்வப்பாடல்களின் கருத்துக்களும் பாவங்களும் வெளிப்பாடு காணும்வண்ணம் பரிசோதனையாக இசையமைத்துள்ளார். சென்னை வானொலியில் ஒலிபரப்பான அப் பாடல் களிற் பெரும் பாலானவை வெற்றிபெற்றபோதிலும், சில தோல்வியையும் தழுவின. இந்தியத் தேசிய ஒருமைப்பாட்டினை வலியுறுத்தி, தமிழல்லாத வேற்று மொழிப் பாடல்களையும் இசையமைத்து ஒலிபரப்பியுள்ளார். இவரது

Page 53
102 uglasir
சாதனைகளிற்காக "இந்திய சங்கீத நாடக
அக்கடமி'யின் பரிசொன்றும், 1986இல் வழங்கப்பட்டது. "ஜோன் ஆபிரஹாம்’ இயக்கிய 'அக்கிரஹாரத்தில் கழுதை, கலைப்படத்தில் முக்கிய பாத்திரமான பேராசிரியராகவும் அவர் நடித்துள்ளார். ஓர் இடதுசாரியாகவே இருந்த இவர் திரைப்பட ஊழியர் சங்கத்தை அமைத்ததோடு, அதில் தீவிரமான தொழிற்சங்கப் பணியையும் ஆற்றியுள்ளார்.
பாரதி நூற்றாண்டுக் கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக கொழும்பிற்கு ஒருமுறை - 1982 இல் என்று . நினைக் கிறேன் - வந்திருந்தார்; எம்பிசீனிவாசன் இராசதுரையின் அமைச் சே அவரை அழைத்திருந்தது. பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் அவரும் பங்குகொண்ட மு.போ.எ. சங்க நிகழ்ச்சியின் முடிவில், நண்பர் பாலேந்திரா அவரைச் சந்திக்க விரும்பினார்; அவருடன் நானும் நின்றேன். மு.போ.எசங்கத்தைச் சேர்ந்த இரண்டு மூத்த எழுத்தாளர்களிடம் தனது விருப்பத்தைப் பாலேந்திரா தெரிவித்தபோது அவர்கள் நடந்துகொண்ட முறை, அச்சந்திப்பைத் தட்டிக்கழிக்க முயல்வது போலவே இருந்தது. தற்செயலாக அந்த இடத்திற்கு 'மனிதன்' சஞ்சிகைக் குழுவில் இருந்த - இப்போது அமரராகிவிட்ட - நண்பர் அ.விமலதாசன் வந்தார். நடந்ததை அறிந்ததும் அவர் எரிச்சலடைந்தார். "சீனிவாசனைச் சந்திக்கிறதைத் தடுக்க இவங்கள் ஆர்?" என்றபடி, பாலேந்திராவின் கைகளைப் பிடித்தபடியே முன்னுக்குச் சென்றார். எதிரே, சீனிவாசன் சிலருடன் நடந்து வந்துகொண்டிருந்தார். திடீரென அவருக்குக் கிட்டச்சென்று "இவர், பாலேந்திரா இலங்கையின் புகழ்பெற்ற நாடக நெறியாளர்” என்று, அவருக்கு அறிமுகப்படுத்தினார்; அவரும் கரங்குவித்து பதில் வணக்கம் தெரிவித்தபடியே நின்றுவிட்டார். "உங்களுடன் உரையாடுவதற்காக அப்பொயின்ற்மென்ற் தரவேண்டுமென விரும்புகிறார்" என்றும் தொடர்ந்து சொல்ல, சிறிது யோசித்த படியே, அடுத்த நாள் விமானப் பயணத்திற்காக முற்பகல் பதினொரு மணிக்கு கொழும்பை நீங்கவேண்டியிருப்பதால், காலை 8.00
 

-9. GuðsJllöll ( 103
மணிக்கு வரமுடியுமா எனக்கேட்டார். நாம், சந்தோஷத்தோடு “வரமுடியும்” என்று சொன்னோம்.
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை அவர் தங்கியிருந்த வெள்ளவத்தை பிறைற்றன் ஹொட்டேலுக்கு பாலேந்திரா, நான், முகமில்லாத மனிதர்கள்’ நாடகத்தில் கதாநாயகனாக நடித்தவர் (பெயர் ஞாபகமில்லை) ஆகிய மூவரும் சென்றோம். அறைக்குச் சென்றபோது மகிழ்ச்சியுடன் எம்மை வரவேற்றார். பாலேந்திராவின் நாடக முயற்சிகளை - முக்கிய பிறமொழி நாடகங்களைத் தமிழில் வெற்றிகரமாய் நிகழ்த்திக் காட்டியிருப்பதை - விபரமாய்த் தெரிவித்தேன். அவர் அவற்றை அறிந்து ஆச்சரியப்பட்டார். அவைக்காற்று கலை கழகம் நடாத்திய கானசாகரம் மெல்லிசை நிகழ்ச்சி போன்று, இன்னும் பலவற்றைத் தயாரிக்க விருப்பம் இருப்பதைத் தெரிவித்து, அத்தகைய நிகழ்ச்சிகளுக்கு இசையமைத்து உதவ முடியுமா எனப் பாலேந்திரா கேட்டார். தான் இசையமைப்பு வேலைகளை ஏற்றுள்ள சில மலையாளத் திரைப்படங்களின் வேலைகள் முடிவடைந்ததும் " ஐந்தாறு மாதங்களின் பின்னர் - கட்டாயம் ஒத்துழைப்பதாக அவர் சொன்னதோடு, தன்னுடன் தொடர்புகொள்வதற்குரிய சென்னை முகவரியையும் பாலேந்திராவிடம் கொடுத்தார். ஆனால், பின்னர் நாட்டின் பொருத்தமற்ற சூழ்நிலைகளால் அந்த முயற்சியினைப் பாலேந்திரா தொடரவில்லை.
அலையின் பழைய இதழ்களையும், அலை வெளி யீடுகள் சிலவற்றையும் நான் அவருக்கு வழங்கினேன். அவற்றை அவர் புரட்டிப் பார்த்தபோது அலையின் அமைப்பு, வெளியான விடயங்கள் என்பவற்றில் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டிருப்பதை உணரமுடிந்தது குறிப்பாக நவீன சினிமா,நாடகங்கள்,ஒவியம்பற்றிய கட்டுரைகள் அவரது கவனத்தை ஈர்த்தன. எழுபதுகளில் அவர் எழுதி கணையாழி இதழில் தொடராக வந்ததிரைப்பட இசையும் சமுதாய மாறுதலும்' என்ற கட்டுரைபற்றி நான் கதைத்தபோதும் ஆச்சரியம் தெரிவித்தார். இங்குள்ள கலை, இலக்கியச் சூழல்பற்றி மட்டுமல்லாது, இலங்கைத் தமிழரின் அரசியல் இன்னல்கள் பற்றியும், அரசியற் கட்சிகளின் உண்மையான நிலைப் பாடுகள் பற்றியும் , குறிப்பாக இடதுசாரிகள் பற்றி அறிவதிலும் ஆர்வம் காட்டினார்; எனவே அதுபற்றியும் விரிவாகக்

Page 54
104 பதிவுகள்
கதைத்தோம். ஒருமணி நேரத்தையே முதல்நாள் அவர் எமக்காக ஒதுக்கியபோதிலும், பரஸ்பர ஈடுபாட்டுடன் நிகழ்ந்த கதையாடலில் இரண்டு மணித்தியாலங்கள் கழிந்துவிட்டன. அவர் பயண ஆயத்தங்கள் செய்யவேண்டியிருக்கும் என்பதை உணர்ந்து, நாமே அவரிடம் விடைபெற்றோம். "லிவ்ற் இருக்குமிடம் வரை வந்து சில நிமிடங்கள் அங்கும் நின்று கதைத்தபடியே, மலர்ச்சியுடன் விடை தந்தார். தமிழின் மெல்லிசைத்துறையில் பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்ட ஒரு கலைஞன் - இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் தனது மேதைமைக்காக கலைத்துறையைச் சேர்ந்தவர்களினால் கெளரவிக்கப்பட்ட ஒர் உண்மையான கலைஞன் எந்தவிதப் பெருமிதங்களும் பாவனைகளும் இல்லாது,
ளைஞர்களான எம்முடன் எளிமையாகவும் வெளிப்படையாகவும் பழகிப் பிரிந்தது இன்றும் நினைவில் நிற்கிறது; கூடவே, மரணத்தினால் என்றும் மனிதனைத் தோற்கடிக்கும் கொடிய இயற்கை, அக்கலைஞனையும் திருடிச் சென்றுவிட்டதில் தமிழ்க் கலைத்துறைக்கு நேர்ந்துள்ள "இழப்பு' பற்றிய உணர்வும், துயரினை எழுப்புகிறது.
Ο Ο
நிகராகுவா-அசலான புரட்சி என்ற சிறு வெளியீடொன்று படிக்கக் கிடைத்தது. சிறியதொரு முன்னுரையும், அதில் காணப்படுகிறது. சிந்திக்கத்துண்டும் செய்திகள் பலவற்றை அது கொண்டிருப்பதால் பயன்பாடு கருதி, வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்; அழுத்தம் மட்டும் என்னால் இடப்பட்டது.
இச்சிறு வெளியீடு
பல்வேறு காரணங்களினால் பிளவுபட்டிருக்கும் இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தின் வெவ்வேறு கட்சிகளிலும் குழுக்களிலுமுள்ள உண்மையான கம்யூனிஸ்ட் தோழர்களின் உரத்த சிந்தனைக்காக
புரட்டல்வாதமும் வரட்டுவாதமும் நமது மண்ணில் ஒரு அசலான புரட்சியை சாதிக்க விடாமல் தடுத்துக்கொண்டிருக்கின்றன என்பதை நினைவுபடுத்துவதற்காக,
சீனப்புரட்சியும், வியத்நாம் புரட்சியும் மூன்றாம் அகிலத்தின்

அ. யேசுராசா (; 105
கட்டளைகளுக்கோ ஸ்டாலினின் வழிகாட்டுதல்களுக்கோ காத்திருக்கவில்லை என்பதை
கியூபா புரட்சிக்குத் தலைமை தாங்கி நடத்தியது அங்கிருந்த கம்யூனிஸ்ட கட்சி அல்ல என்பதை
கியூபா, நிகராகுவா புரட்சிகள் நடந்து முடிந்த பின்னரே அவை சோசலிச நாடுகளின் அங்கீகாரம் பெற்றன என்பதை -
நினைவூட்டுவதற்காக,
தத்தம் தேசிய நலன்களுக்காக, சர்வதேசியத்தை மறந்து, பிறநாட்டுப் புரட்சி இயக்கங்கள்பால் சோசலிச நாடுகள் பலமுறை மெத்தனமாக நடந்துகொண்டிருக்கின்றன என்பதும், ஒரு நாட்டில் உண்மையான மக்கள் புரட்சி வெற்றிபெறுமானால் அது இதே. சோசலிச நாடுகளின் அங்கீகாரத்தைப் பெற்றே தீரும் என்பதும் வரலாறு என்பதை
மறந்துவிடாமல் இருப்பதற்காக,
எந்தவொரு புரட்சியும் பாடப்புத்தகங்களில் காணப்படும் சூத்திரங்களைக்கொண்டு நடத்தப்படுவதில்லை; பல தவறுகள் தோல்விகளினூடே சொந்த அனுபவத்தை உரமாக்கிக்கொண்டு புரட்சிப் பயிரைத்தோற்றுவிக்கின்றன என்பதை
ஈழ மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கும் இது பொருந்தும் என்பதைநினைவுபடுத்துவதற்காக,
Ο Ο
அவ்வப்போது இலங்கையர்களின் ‘இலக்கியப் படைப்புக்கள் தொகுக்கப்பட்டு ஆங்கில மொழியில் - சில வெளியீடுகளில் - வெளியிடப்பட்டுள்ளன. வழமையான அலட்சிய மனோபாவத்தினால் இலங்கையரின் படைப்புக்கள் என்ற தலைப்பில் சிங்கள மொழியில் வந்த படைப் புக் கள் மட்டுமே இடம் பெற்றுமுள்ளன. முதற் றடவையாக இத்தகைய முயற்சியொன்றில் இலங்கைத் தமிழர்களின் படைப்புக்களும் இடம் பெற்றுள்ளன. அமெரிக் காவிலுள்ள மிச் சிக் கன் பல கலைக் கழகத்திலுள்ள "ஆசிய ஆய்வு நிலையம்’ வெளியிட்டுவரும், 'ஜேணல் ஒ.வி சவுத் ஏசியன் லிற் றேச்சர்' இன் தொகுதி இலக்.01 (1987) இல் மஹாகவி, நீலாவணன்,

Page 55
106 பதிவுகள்
இ.முருகையன், மு.பொன்னம்பலம், எம்.ஏ.நுட்மான், அயேசுராசா, வ.ஐ.ச.ஜெயபாலன், நந்தி, என்.எஸ்.எம்.ராமையா, க. சட்டநாதன், க.கைலாசபதி ஆகியோரின் ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. ஏ. ஜே.கனகரட்ணா, செ. கனகநாயகம், சோ.பத்மநாதன், எஸ்.ராஜசிங்கம் ஆகியோரே இப்படைப்புக்களைத் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தவர்கள்; இவர்களின் முயற்சி பாராட்டுதற்குரியது. இலங்கையில் தமிழில் வெளியாகும் முக்கிய இலக்கியப் படைப்புகளை அவ்வப்போது ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடுவது, கட்டாயம் செய்யப்படவேண்டிய பணியாகும். ஆங்கிலமொழி ஆற்றல் பெற்றவர்கள், எமது கலாசாரத்துறையின் தரமான தற்கால வெளியீடுகளை உலகின் முன் கொணர் டுசெல்வதைத் தமது தவிர்க்கவியலாக் கடமையாகக்கொண்டு உழைக்க முன்வரவேண்டும். ஆங்கிலப் புலமை மிக்க சிங்கள அறிஞர்களின் முன்முயற்சிகளைக் கருத்திற் கொண்டாவது இவர்கள் தமது பொறுப்பினை உணரவேண்டுமென்பதே, ஈழத்துத் தமிழ்க் கலை, இலக்கியத் துறைகளில் பல்வேறு சிரமங்களுடன் உழைத்து வருபவர்களின் ஆதங்கமாயிருக்கிறது.
Ο Ο
தெல்லிப்பழை கலை இலக்கியக் களம், சிறுகதை நாள்' என்ற தலைப்பில் முழுநாள் நிகழ்ச்சிகளை 17-07-88 இல் நடாத்தியது. பொதுவாகச் சிறுகதை பற்றியும் , குறிப்பாக ஈழத்துச் சிறுகதைகள் பற்றியும் பல்வேறு கோணங்களிலான கருத்துக்களை வெளிக்கொணர்வதே இதன் நோக்கம்; பாராட்டுதல்களிற்குரிய முயற்சி
கலாநிதி அ.சண்முகதாஸ் தலைமையிலான முதலாவது அரங்கில், தமிழ்ச் சிறுகதை வளர்ச்சிக் கட்டங்கள் என்ற தலைப்பில் கருணை யோகனும், 'ஈழத்தில் தமிழ்ச் சிறுகதையின் வரலாறும், வளர்ச்சியும்' என்ற தலைப்பில் அரவியும் கட்டுரைகள் வாசித்தனர். குறமகள் தலைமையிலான இரண்டாவது அரங்கில், 'ஈழத்து தமிழ்ச் சிறுகதைகளில் முற்போக்குச் சிந்தனை' என்ற சொக் கனின் கட்டுரையும்,'ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகளும் தேசிய இனப்

9. CuJJITFIT : 107
பிரச்சினையும்’ என்ற எனது கட்டுரையும் வாசிக்கப்பட்டன. மூன்றாவது அரங்கில், வரதர் தலைமையில் ‘யாம் சுவைத்த பிறமொழிச் சிறுகதைகள்’ என்ற தலைப்பில் சோ. பத்மநாதனும், க. உமாமகேஸ் வரனும் உரையாற்றினர்.
ஒவ்வொரு அரங்கின் முடிவிலும், பார்வையாளர் கலந்துகொள்ளக் கூடிய கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கும் போதிய நேரம் கொடுக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சிநிரல் துண்டிலும் படைப்பாளிகள், ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் அனைவரும் வருகைதந்து கலந்துரையாடல்களுக்குக் கனதியூட்டுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்’ என்ற வாசகம் காணப்படுகிறது. வாசிக்கப்பட்ட கட்டுரைகளில் சர்ச்சைக்கு உட்படக்கூடிய கருத்துக்களும் இருந்தன. ஆயினும், மிகச்சிலரைத் தவிர மற்றவர்கள் கலந்துரை யாடலில் பங்குபற்றவில்லை. இது, ஆரோக் கியமற்ற ஒரு சூழலையே வெளிக்காட்டுகிறதெனக் கொள்ளலாம் அல்லவா? அதிலும், முற்போக்கு எழுத்தாளர் தொடர்பான பாரதூரமான கருத்துக்கள் பல முன்வைக்கப்பட்டும் - டொமினிக் ஜீவா, சபா ஜெயராசா, முருகையன், சிவத்தம்பி, சாந்தன், சோமகாந்தன் போன்ற முற்போக்காளர்கள் இருந்தும் அதுபற்றி ஒன்றும் கதைக்காது மெளனம் சாதித்தது கேலிக்கிடமானதாகவே இருக்கிறது!
இறுதி நிகழ்ச்சியாக கலாநிதி கா. சிவத்தம்பியின் சிறப்புத் தொகுப்புரை' இடம்பெற்றது. அவரது நீண்டநேரப் பேச்சின் பெரும்பகுதி, கொடுக்கப்பட்ட தலைப்பிலிருந்து விலகியதாகவே இருந்தது; சம்பந்தமற்றவற்றையெல்லாம் சொல்லிக்கொண்டு போனார். ஆயினும், சுவாரஸ்யமான சில கருத்துக்களும் அதில் வெளிப்பட்டன; சிலவற்றை இங்கு தருகிறேன்; அடைப்புக்குள் வருபவை மட்டும் எனது கருத்துக்கள்.
1."முற்போக்கு எழுத்தாளர்கள் செய்ததற்காகவும், செய்யாததற்காகவும் தாக்கப்படுகின்றனர்” (செய்யாதவை என்பதில்

Page 56
108 பதிவுகள்
தேசிய இனப் பிரச்சினையைப் புறக்கணித்தமை அடங்குகிறது. உண்மையில் முற்போக்காளர்கள்’ அதனைக் கையாளாதது மட்டுமல்லாது, அதைக்கையாண்டவர்கள்மீது வகுப்புவாதிகள்” பிற்போக்குவாதிகள் - என முத்திரையும் குத்தினர்).
2. "விமர்சன யதார்த்தவாதத்திற்குப் பதிலாக 'சோஷலிச யதார்த்தவாதத்தைப்பேசினோம். இங்குதான் பிழைவிட்டோம்; சோஷலிசம் வந்த நாடுகளுக்கே 'சோஷலிச யதார்த்தவாதம்’ பொருந்தும்.” (இவ்வாறு பிழைவிட்டமைக்கான காரணம் என்ன? அறியாமையா அல்லது யாந்திரிகமாக 'தொலைதூர நாடுகளின் கருத்துக்களை வளர்க்க முனையுந்தன்மையா?).
3. "முற்போக்குவாதத்திலிருந்து மார்க்சிஸத்திற்குப் போகாததே நாம் விட்ட பிழை” (அப்படியென்றால் இதுவரை நீங்கள் பேசியது, எழுதியது மார்க்சிஸமே அல்லவா?).
4. "டானியலும், ஜீவாவும் கொம்யூனிஸ்ற் கட்சியில் சேர்ந்திருக்காவிட்டால் எழுத்தாளர் என்ற கெளரவம் கிடைத்திருக்காது.” (ஆகவே, ‘இலக்கியத் தகுதி அல்ல கட்சித் தகுதியே இவர்களை எழுத்தாளர் என்றாக்கியது?!). O
32 - 60(BH6Oگ (ஆவணி 1988)

அ. யேசுராசா (; 109
பதிவுகள் - 18
க்கியமான இருவரைச் சமீபத்தில் இழந்துவிட்டோம். ஒருவர், தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காக அயராது உழைத்த விமர்சகர் க.நா.சுப்ரமண்யம்; மற்றவர், மனிதாயத வாதியாயிருந்த சிங்கள ஆய்வறிவாளர் நியூட்டன் குணசிங்க.
இந்திய சாஹித்ய அக்கடமிப் பரிசினைக் க.நா.சு. பெற்றபோது, அவரது முக்கிய பங்களிப்புகளைப் பாராட்டும் குறிப்புகளை அலை' (இதழ்-30) வெளியிட்டுள்ளது. தனது வாழ்வின் பெரும்பகுதியினை - இறக்கும்வரை - தமிழ் இலக்கியத்துக்காகவே அர்ப்பணித்தவர் அவர் எவ்வித பயனையும் எதிர்பாராது, எதிர்ப்புக்களிற்கும் அஞ்சாது அயராது உழைத்த அவரது ஆளுமை, எப்போதும் அதிசயத்தைத் தருவது 'விமர்சனத் துறையைத் தமிழில் காலூன்றச் செய்ததில் அவருக்குப் பெரிய பங்கிருக்கிறது. ஆயினும் க.நா.சு என்றதுமே முதலில் எனக்கு நினைவிற்கு வருபவை, அவர் மொழிபெயர்த்துத் தந்திருக்கும் அற்புதப் படைப்புக்களான நில வளம்(நட் ஹம்சன்), விலங்குப் பண்ணை (ஜோர்ஜ் ஓர்வெல்), குருதிப்பூ (கத்தரீன் ஆன் போர்ட்டர்)

Page 57
110 பதிவுகள்
மூன்றும்தான்.
நியூட்டன் குணசிங்க தமிழர்கள் பலருடன் தொடர் புள்ளவர்; யாழ்ப்பாணத்திற்கும் பலதடவைகள் வந்திருக்கிறார். "புதிய இடதுசாரிச்' சிந்தனைகளால் பாதிக்கப்பட்ட அவரது கருத்துக் களிற் பலவும் ,'வைதீக மார்க்சியவாதிகளைச் சங்கடப்படுத்துபவை. தேசிய விடுதலைக்காகப் போராடும் தமிழ்த் தேசிய இனத்தின் மேல், அவர் மிகவும் அனுதாபம் கொண்டிருந்தார்; எமக்கு
இழைக் கப்படும் அநீதிகளைப் பகிரங்கமாகக் கண்டித்தும் வந்தார். அலி த் துTஸரின் "மேலாதிக்கக்
கோட்பாட்டினைத் தற்கால இலங்கைச் சூழலுக்குப் பிரயோகித்து, இன முரண்பாட்டின் முதன்மைநிலையினை வற்புறுத்தி அவர் எழுதிய கட்டுரைகள், மிக முக்கியத்துவம் வாய்ந்தவை; தமிழ்த் தேசிய இனத்தின் தேசிய விடுதலைப் போராட்டத்தை 'மார்க்சியக் கருத்துநிலையிலும் நியாயப்படுத்துபவை.
முக்கியத்துவம் நிறைந்த இவ்விரு அறிஞர்களினதும் மறைவிற்கு, அலை அஞ்சலி செலுத்துகிறது; மற்றவர்களினது துயரிலும் பங்குகொள்கிறது.
Ο Ο
சிங்கள மொழிக் கலைப்படைப்புக்களும், கலைஞர்களும் தமிழில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் அளவிற்கு தமிழ்ப் படைப்புக்களும், கலைஞர்களும் சிங்களத்தில் இடம்பெறவில்லை. இந்த நியாயமான அதிருப்தி நீண்டகாலமாக தமிழ்க் கலை, இலக்கிய உலகில் இருந்து வருகிறது. இந்த அதிருப்தியினை நீக்கக்கூடிய முயற்சிகள் உணர்வுபூர்வமாகச் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டிருப்பதைக் காணமுடிகிறது. 'மாவத்த', 'விவரண', ராவய போன்ற சிங்களச் சஞ்சிகைகள் இதில் ஈடுபட்டுள்ளன.
 

s Guó加gIQ111
மாவத்த" (பாதை)இன் 46 ஆவது இதழ் (ஏப்ரில் - ஜூன் 1988) இலங்கைத் தமிழ் இலக்கியச் சிறப்பிதழாகவே வெளிவந்துள்ளது. இலங்கைத் தமிழ் நாவல் (கே.எஸ்.சிவகுமாரன்), தமிழ்ச் சிறுகதை செல்லும் பாதை'(தெளிவத்தை ஜோசப்); தமிழ்க் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்(டி.பி.எஸ்.ஜெயராஜ்), இலங்கைத் தமிழ் சினிமா (காவலூர் இராசதுரை), கைலாசபதியின் விமர்சனப் பாதை' (என்.சண்முகரத்தினம்); தமிழ்ச் சஞ்சிகைகள் (இப்னு அஸ"மத்); தமிழ் இலக்கியத்தில் கருத்துப் போராட்டங்கள்’ (கே. வேலுசாமி) ஆகிய கட்டுரைகளும் பேராசிரியர் சுவித்தியானந்தனின் செவ்வியும்; ஆனந்தராகவன் எழுதிய சிறுகதையும், மு.பொன்னம்பலம், அ.சங்கரி, உ. சேரன், ஒளவை உருத்திரமூர்த்தி, ஈழகணேஷ் ஆகியோரின் எட்டுக் கவிதைகளும் இதில் இடம்பெற்றுள்ளன. குறைபாடுகள் சில இருந்தாலும் நன்றியுடன் பாராட்டவேண்டிய முயற்சி; அலையின் பாராட்டுக்கள்.
தீவிர இடதுசாரியாகக் காட்டும் வேலுசாமியின் கட்டுரையில், பல திரிபுகள் காணப்படுகின்றன - அலை’ பற்றிய பகுதியிலும், 'அரசியல் இடம் பெறக் கூடாது'; ‘உளவியல் பிரச்சினைகளே நவீன இலக் கியத்துக்கு ஏற்றவை; எத்தகைய நிறுவனத்திலும் எழுத்தாளன் சேரக்கூடாது; ‘வாழ்க்கையிலிருந்து கலை வேறுபட்டிருக்க முடியும்’ என்பன போன்றவையே அலையின் முக்கிய கருத்துக்களென, அவர் குறிப்பிடுகிறார். 1979இல் 'சமர் சஞ்சிகையில் க.கைலாசபதி எழுதிய முற்போக்கு இலக்கியமும் அழகியல் பிரச்சினைகளும்’ என்ற கட்டுரையில் இதே கருத்துக்கள், ஏழு(7) குறிப்புகளாகத் தரப்பட்டுள்ளன; அதற்கு விரிவாகப் பதிலளிக்கும் இரண்டு கட்டுரைகள் அலை - 13 இல் (1980) வெளியிடப்பட்டுமுள்ளன. எட்டு ஆண்டுகளிற்குப் பிறகு, கைலாசபதியின் கருத்துக்களைத் திருடி, இன்று எட்டுக்(8) குறிப்புகளாகத் தனது பெயரில் வெளியிட்டுள்ளார் வேலுசாமி, 'தோழரின் நேர்மை இவ்வாறாக இருக்கிறது! இத்தகைய அபத்தங்களிற்கு மறுபடியும் பதிலளிக்கவேண்டிய தேவையேதும் இல்லை; இதுவரை வெளிவந்துள்ள 'அலை'யின் 33 இதழ்களும் தாமாகவே இதுபோன்றவற்றிற்குப் பதிலளித்துக்கொண்டிருப்பதைக் காணலாம் " நேர்மைத்திறன் இருந்தால்!
Ο Ο

Page 58
112 பதிவுகள்
ண்டகாலமாக இலங்கைத் தமிழ் இலக்கியத் துறைகளைப்பற்றி எழுதிவரும் கே. எஸ் . சிவகுமாரனின் மிக நீண்ட(33பக்கங்கள்) ‘செவ்வியொன்று, யப்பானிலுள்ள நாகசாகி பல்கலைக்கழக வெளியீடொன்றில் - ஆங்கிலத்தில், வெளியாகி (ஜனவரி-88) இருக்கிறது; லெறோய் றொபின்சன் இச்செவ்வியினை நடாத்தியுள்ளார். பிறநாட்டு வெளியீடு ஒன்றில் எம்மவரைப்பற்றிக் குறிப்பிடப்பட்டிருப்பது, முக்கியத்துவம் பெறும் விடயம்தான்.
ஈழத்துக் கலாசாரச் சூழலைப்பற்றி சிவகுமாரன் தெரிவிக் கையில், சு.வித்தியானந்தன், கே. எஸ். சிவகுமாரன் க. கைலாசபதி, கா.சிவத் தம்பி, செ.கணேசலிங்கன், இளங்கீரன், டொமினிக் ஜீவா, பவானி, கோகிலா மகேந்திரன் ஆகியோரைப்பற்றி 'விரிவான விபரங்களைத் தருகிறார்: தெளிவத்தை ஜோசப், செ. யோகநாதன், இலங்கையர்கோன், அ.முத்துலிங்கம், செ.கதிர்காமநாதன், கே.கணேஷ், ஈழவாணன், ஈழகணேஷ் பற்றி ஓரளவு குறிப்புகள் தருகிறார்; வேறுசிலரின் பெயர்களை மட்டும் குறிப்பிடுகிறார்.
ஆனால், முக்கியமான பலரைப் பற்றி எதுவுமே குறிப்பிடாதும் விட்டுவிடுகிறார்! இயல்பாக,அவர்களது பங்களிப்பும் சரியாகச் சொல்லப்பட்டிருக்க வேண்டும். முக்கியமானவர்கள் விடப்பட்டிருப்பதால் இந்தச் செவ்வி அரைகுறையானதாக " திரிபுபட்ட தோற்றத்தைக் கொடுப்பதாகவே இருக்கிறது. முக்கியமாக விடுபட்டவர்கள் என்று பார்க்கையில்:
1) சிறுகதை: அ.செ.மு, சி.வைத்திலிங்கம், கதிசம்பந்தன், எஸ். பொன்னுத்துரை, மு.தளையசிங்கம், வரதர், மருதூர்க் கொத்தன், என்.கே. ரகுநாதன், நந்தி, கே.வி.நடராஜன், எம்.எல்.எம். மன்சூர், உமாவரதராஜன், ரஞ்சகுமார், நந்தினி சேவியர்.
2) கவிதை மஹாகவி, நீலாவணன், சண்முகம் சிவலிங்கம், மு.பொன்னம்பலம், தா. ராமலிங்கம், நுட்மான், இ.முருகையன், சு.வில்வரத்தினம், சேரன், சிவசேகரம், ஜெயபாலன். 3) பெண்எழுத்தாளர். ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்,
 

அ. யேசுராசாப் 113
குந்தவை, செளமினி, கவிதா ஆகியோர் விடப்பட்டுள்ளனர்.
சஞ்சிகைகளில் மல்லிகைக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்துள்ளார். அலை, புதுசு ஆகியன வெறும் பெயர்களாக வருகின்றன; ஆனால், இவ்விரண்டின் முக்கியத்துவம் - குறிப்பாக ஏனையவற்றிலிருந்து பெரிதும் மாறுபடும் - அழுத்தங்கொடுக்கும் - விடயங்கள் பற்றிக் குறிப்பிட்டிருக்க வேண்டும்.ஆனால் ஒடுக்கும் இனத்தின் வன்முறையையும், ஒடுக்கப்படும் இனத்தின் வன்முறையையும் தவறாகச் சமப்படுத்தி, இரண்டையும் "பயங்கரவாதம்” என்றே சிவகுமாரன் முத்திரையிடுகிறார்!
செ.யோகநாதனை நாவலாசிரியரென்று சொல்லுவதும், கா.சிவத்தம்பி மண்சுமந்த மேனியர்', 'மாதொரு பாகம் நாடகங்களின் தயாரிப்புக்களில் பங்குகொண்டு உழைத்தவர் என்பதும் தவறான தகவல்கள்.
பிறமொழியினருக்கு எமது சூழல்' பற்றித் தெரிவிக்க முயல்பவர்கள் யாரும், சமநிலை நோக்குக் கொண்டிருத்தல் வேண்டும். தமது ஈடுபாடு சார்ந்து சிலவற்றுக்கு அழுத்தம் கொடுப்பதில் தவறில்லை; ஆனால், பொதுவில் முக்கியமானவர்கள் பற்றியும் - அவர்களது ஆக்கங்களின் தன்மைகள் பற்றியும் தெளிவானதொரு படத்தினையும் காட்ட வேண்டும். எமது சூழலில் நிலவும் சீர்கேடுகளைக் களைவதற்கும், கலாசாரவாதிகளிடையில் பொறுப்புணர்வினை நிலைநிறுத்துவதற்கும், தொடர்ந்த முயற்சிகள் தேவைப்படுகின்றன. O
960)G) - 33 (மார்கழி 1988)

Page 59
114 Cபதிவுகள்
பதிவுகள் - 19
1968 - 69 என்று நினைக்கிறேன். கொழும்பு கலை, இலக்கிய நண்பர் கழகத்தினைத் தோற்றுவித்து நாங்கள் இயங்கிய காலம், மாவை நித்தியானந்தன், தில்லைக்கூத்தன், குப்பிழான் ஐ.சண்முகன், நெல்லை க.பேரன், சாந்தன், சி. வன்னியகுலம் ஆகியோரும் அதில் இருந்தனர். சிங்கள நாடகங்கள் - திரைப்படங்கள், ஓவியக் கண்காட்சிகளை நாங்கள் பார்க்கையில் இவைபோல் எம்மிடை இல்லையே என்ற ஆதங்கம் எழும், அது கழகச் சந்திப்புகளில் அடிக்கடி வெளிப்படும். தமிழ்த் திரைப்படங்களைப்போல் வெறும் வாய்பாட்டு ரீதியிலானதாக - கேலியையும் கிண்டலையும் முதன்மைப்படுத்துவனவாக - அக்காலத் தமிழ் நாடகங்கள் வெறுப்பூட்டின. அந்தப் பின்னணியில் "கடலின் அக்கரை போவோர்’ (தி.கந்தையா), ‘அவர்களுக்கு வேடிக்கை', 'இரு துயரங்கள் (நாடோடிகள்) போன்றவற்றைப் பார்க்க நேர்ந்தபோது அதிர்ச்சியுடன் கூடிய சந்தோஷமே மேலெழுந்தது. இன்று - இருபது வருடங்களுக்குப் பிறகு - மீள நோக்குகையில், நாடகத் துறையிலான வளர்ச்சி பெருமைப்படும்படியாகவே இருக்கிறது. நா.சுந்தரலிங்கம்,

9. Cuijster 115
தார்சீசியஸ், இ.முருகையன், தில்லைக் கூத்தன், மாவை நித் தியானந்தன், க.பாலேந்திரா, சி.மெளனகுரு, க.சிதம்பர நாதன், ம.சண்முகலிங்கம், றேமண்ட் என இவ்வளர்ச்சியைச் சாதித்த பலர் நினைவுக்கு வருகின்றனர். நாடக அரங்கக் கல்லூரியினால் புதியவர்கள் பலர் பயிற்றுவிக்கப்பட்டிருக் கிறார்கள்; பாடசாலை மட்டங்களிலும் நாடக ** இயக்கம் நடைமுறைரீதியாக எடுத்துச் செல்லப்படுகிறது. ஆனாலும்.
அண்மைக்காலங்களில் பார்க்க நேர்ந்த நாடகங்கள் அடிக்கடி எழுப்பிய சலிப்பினைச் சுட்டிக்காட்டவே வேண்டும். | ர -- வாய்பாடுகளுக்கு எதிராக முனைப்புப்பெற்ற .یمتصمیمی நவீன நாடக இயக்கம், 'புதியதொரு வாய்பாட்டுக்குள் சிக்கி மூச்சுத்திணறுகிறது. வெளிப்பாட்டு முறைகள் ஒன்றுபோலவே எல்லா நாடகங்களிலும் அமைந்துவிடுகின்றன. ஆரம்பத்தில் உறைநிலை - பின் மெல்ல அசைதல் - எடுத்துரைஞர் வருதல் - அவர்களே பெரும்பாலும் மாறிமாறிக் கருத்துரைத்தல் (பெரும்பாலும் கலைநயமற்ற பிரச்சாரம்) - எடுத்துரைஞருக்கும் நாடகமாந்தரின் இயக்கத்துக்குமிடையில் இசைவின்மை போன்றவற்றை இவ்வாறு சுட்டலாம். தற்புதுமையான அனுபவம் எமக்குக் கிடைப்பதில்லை. இது ஏன் நிகழ்கிறது? ஆக்கத் திறனை வளர்த்துக் கொண்டு, தமது சொந்த அடையாளங்களை வெளிக்காட்டுவதில், நெறியாளர்கள் அக்கறை காட்டுவதில்லையா? நவீன நாடக வளர்ச்சியில் அக்கறை கொணர் டவர்கள் எலி லாருமே கூட்டாகக் கருத்துப் பரிமாறி,வளர்ச்சிக்குரிய அம்சங்களை - வழிமுறைகளை - இனங்காணவேண்டியது மிக அவசியமானதென்றே படுகிறது.
*რჯჯ:Kყoზx: šej škį išsišak
சென்ற பங்குனி மாதத்தில் நான்' சஞ்சிகை எழுத்துப் பட்டறை ஒன்றை ஒழுங்கு செய்திருந்தது. வேறு பல எழுத்தாளர்களுடன் நானும் கலந்துகொண்டேன். மார்ச், 1989 மல்லிகையில் பூதராயன் எழுதிய ‘இலக்கியச் சங்கதி’ என்ற கட்டுரையில் இப்பட்டறையைப்பற்றிய குறிப்பும் வருகிறது. அதில்

Page 60
116 பதிவுகள்
ஓரிடத்தில், "ஒருவர் குறிப்பிட்டார்.நான் இப்போது சிறுகதைகள் எழுதுவதில்லை. 1977 இற்குப் பின்னர் எழுதுவதில்லை. அப்படியிருக்க என்னை ஏன் கூப்பிட்டார்கள் என்று தெரியவில்லை” என்று காணப்படுகிறது. அந்த ஒருவர் பட்டறை அமைப்பாளர்களை, பயிற்சியாளர்களை அவமதிக்கும் முறையில் நடந்துகொண்டார் என்று காட்டுவதே, பூதராயனின் நோக்கம்! உண்மையில் அந்த ஒருவராகிய நான் அவ்வாறு பேசவில்லை. பட்டறைப் பேச்சுக்கள் கொண்ட ஒலிப்பதிவு நாடாவைப் பரிசீலித்து, இதுபற்றிய குறிப்பை மல்லிகைக்கு எழுதவேண்டுமென, நான்' சஞ்சிகை ஆசிரியர் குழுவில் இயங்கும் யோசப் பாலாவிடம் இரண்டு மூன்று முறை தெரிவித்தும் நான்’ குழு செயற்படவில்லை. மல்லிகைக்கும் டொமினிக் ஜீவாவுக்கும்,(பூதராயனுக்கும்) ஏனோ அவர் பயப்படுவதையே உணர்ந்துகொண்டேன். சுமார் இரண்டு மாதங்களின் முன் அவரே, குறித்த பதிவு நாடாவை என்னிடம் தந்தார். அதில் இவ்வாறுதான் காணப்படுகிறது: "எனது சிறுகதைத் தொகுப்பு:1974 இல் வெளிவந்தது. அதன் பிறகு நான் சிறுகதை ஒன்றையும் எழுதவில்லை; எழுதமுடியவில்லை என்பதுதான் உண்மை. அதன்பின் சில கவிதைகளை எழுதினேன். அது ஒரு தொகுப்பாக வந்திருக்கிறது. நான் எழுதாததற்குக் காரணம் இலக்கியங்களில் - எழுதுவதில் - எனக்கு ஆர்வம் குறைந்து விட்டது; அறிவுபூர்வமான விடயங்களிலேயே ஆர்வம் இருக்கிறது. இது ஒரு முக்கியமான விடயமென்றுதான் நினைக்கின்றேன்.”
ஊழல்களுக்காக இரண்டுமுறை தண்டிக்கப்பட்ட அரசாங்க ஊழியரும்,ஜனரஞ்சக எழுத்தாளருமான இந்தப் 'பூதராயன்' இவ்வாறு இலக்கிய ஊழல் புரிவதற்கும் ஒரு பின்னணி இருக்கிறது; ஆனால், அதை இப்போதைக்குத் தவிர்க்கிறேன். O
960)G) - 34. (மார்கழி 1989)

9. CuðJITFIT : 117
பதிவுகள் - 20
இலக்கியம், நாடகம், ஒவியம் என்பன குறிப்பிடத்தக்க அளவிற்கு எம்மத்தியில் வளர்ச்சியடைந்திருக்கின்றன. ஆனால், இன்றைய உலகில் முக்கிய ஊடகமாகக் கொள்ளப்படும் திரைப்படம், ரி.வி - வீடியோத் தயாரிப்புகள் என்பன ஏமாற்றத்தை ஏற்படுத்தும் நிலைமையே உள்ளது. அதிக முதலீடு தேவைப்படும் திரைப்படத்துறையைத் தான் ஓரளவுக்குத் தவிர்த்தாலும், வீடியோத்துறையிலுமா வளர்ச்சியின்றி இருக்கவேண்டும்?
போராட்ட நிகழ்வுகள், மாற்றங்கள், பாதிப்புகள், மக்களின் வாழ்க்கை முறைகள், பிரச்சினைகள், சடங்குகள், மூலவளங்கள், இயற்கை நிலைகள், கலைகள், கலைஞர்களின் வாழ்க்கை - படைப்புலகச் செயற்பாடுகள் போன்றனவெல்லாம் வீடியோவில் கலாபூர்வமாகப் பதியப்படவேண்டும். விவரணச் சித்திரங்கள், குறும்படங்கள் என்பன உருவாக்கப்படவேண்டும். இரண்டொரு புறநடைகளைத் தவிர இத்துறை வெற்றிடமாயே இருக்கிறது. இதற்கு இத்துறையில் உரிய பயிற்சியைப் பெற்றவர்கள் .இன் மையே பிரதான காரணியாகும் குறித்த ஊடகம் பற்றிய முறையான

Page 61
118 பதிவுகள்
அறிவோ பயிற்சியோ இன்றி, அதனைச் செம்மையாகக் கையாள முடியாது; சாதனையும் நிகழ்த்த முடியாது. குறுகிய - நீண்டகாலப் பயிற்சித் திட்டங்களை நிறைவேற்ற கலை அக்கறை கொண்ட குழுக்களோ அமைப்புகளோ இனியாவது முன்வரவேண்டும்; சிங்களக் கலைஞர் களையோ தமிழகக் கலைஞர் களையோ இதற்குப் பயன்படுத்தலாம்.
சிங்கள மக்களிடையே ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்கள் இந்தப்பணியைச் செய்து வருகின்றன. அதனால் புதியவர்கள் பலர் உருவாகி இத்துறை மேலும் மேலும் வளர்ச்சியடைகிறது.
நாம் உறக்கம் கலைந்து எழுவது எப்போது?
OO
தேசிய இன ஒடுக்குமுறைகள் கலை இலக்கியங்களில் உரிய வகையில் இடம்பெற முடியாத நிலைமை, கலைத்துவத்தைப் புறமொதுக்கிய வரண்ட படைப்புகள், கருத்து செயற்பாடு என்ற தளங்களில் இலக்கியக்காரின் முரண்பாடுகள் - போலித்தனங்கள் என்பவற்றுக்கெதிராக, அலை தனது ஆரம்ப காலந்தொட்டே (1975) குரல்கொடுத்து வந்துள்ளது. பிரபலங்கள்' - தெரிந்தவர்களின் முகச்சுழிப்புக்களையோ, ஏற்படக்கூடிய இழப்புக்களையோ பொருட்படுத்தாது நேர்மையாகவும் வெளிப்படையாகவுமே அது செயற்பட்டது. 'அலை'யினதும் என்னுடையவும் தார்மீக நிலைப்பாட்டைக் கொச்சைப்படுத்தும் முயற்சிகளில், அண்மைக்காலமாகச் சிலர் தீவிரத்துடன் ஈடுபட்டுள்ளனர். எமது கடந்தகாலச் செயற்பாடுகளினால் சங்கடமும் ஆத்திரமும் அடைந்தவர்களே இவர்கள் என அடையாளம் காண்பதொன்றும் கடினமானதல்ல. சீனாவின் நலன்களையே முதன்மையாகக்கொண்டு எமது மண்ணில் இயங்கும் சீனதாஸர்' களிலிருந்து, வெளிநாட்டுப்
 

.9 GuóJIgT Q 119
பணத்தில் மிதக்கும் கத்தோலிக்கக் கலை நிறுவனங்களுடன் 'வசதி வாய்ப்புகளிற்காக ஒட்டிக்கொண்டிருப்போர் வரை, முரண்பட்ட போக்குடையோர் இதில் வசதியாக இணைந்துகொள்கின்றனர்! இந்த வரிசையில் கடைசியாக வந்திருப்பதே, 'சமர்’ இதழில் டானியல் அன்ரனி எழுதியிருக்கும் அவதூறுகள் குறைந்தபட்ச நேர்மையைக்கூடக் கடைப்பிடிக்கத் தயாராயில்லாத இவரைப் போன்றோருக்குப் பதிலளிப்பதே அபத்தம்தானென இப்போது உணர்கிறேன். O
35 - 60{60}{9گ (வைகாசி 1990)

Page 62
பேராசாவுக்கு நசி
LILITEl தந்திரம் செய்யத் ே இது இவ்வளவும் ே ஒரு தணியாகிவிட ஆனால் அவர் ச5 5:1յաi -Կյնը:
ஜியாத மரிதர் அ *iեlվիքiլ կl +:TE கவிதைக்காலம், ெ եiնելրե # iըլլել
ბუხ முரணியாகவே பொதுவாக, ஐரோப் முரணிகளும் எந்திர துக்கங்களுடன் LJEJEJTEë tij ஆனால் போடும்
ஆசிய ஆபிரிக்க ந
IJEM. பொது 要呜 நீதியின் பக்கம் நிந்ே தமது ஐரோப்பிய ந റ്റിIീ45|| |്) வெளிவிரியும் கக் புேராசாவும் இப்படி ஈழப்போரின் இக் அதிகம் சர்ச்சைக்கு ୩୩luLL), ମର୍ଯ୍ୟନ୩୬ fillas egiųEILDITZ էիմե
 

த்தெரியாது நழுவத்தெரியாது: சொல்லத் தெரியாது
ETJITE
தும் ஒரு முரணியாகிவிட
துத் தேங்கி நிற்கும் ஒரு
GEITavis, gaidd:AEITIGUIÓ ரிதல் காலம் என்று வரும் ம் வியாத சரண்டையாது தனியனாகவே அவர் நிற்கிறார் ய மரபில் தோன்றும் தனியன்களும் மாதலுக்கு எதிராக தனிமனித சுருங்கிவிடும் ஒரு போக்கே
迦弧 லங்களில், குறிப்பாக டுகளில் வரும் தனியன்களும்
த்தைப் பொறுத்தனே
தேசமயம், தமது சமூகத்தின் ான போட்டங்களின் போதல்லாம் விகளைப் பகிர்ந்து கொள்வோராகவும்
TITTERIñi amgymÜLJEGUJITJEET பர்களைப் போது உட்சுருங்கும்
மாறாக, சவியாது ார்களாய் இவர்கள் காணப்படுகிறார்கள் யொரு தனியே யப் பரப்பில் அதிகம் சாதித்த ாகிய, அதிகம் சவாலாகக் க்குமே சவித்தறியாத
தனியன் அவர்
- நிலாந்தன்