கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தமிழ் - முஸ்லிம் இன உறவுகள்

Page 1


Page 2

தமிழ் - முஸ்லிம் இன உறவுகள்
தொகுப்பாசிரியர்: கலாபூஷணம
qof GofluumuỚat
இனை வெளியீடு: தேசம் சஞ்சிகை தபால்பெட்டி 35806 லண்டன் - ஐக்கிய இராச்சியம் E 11 3 JX
வரையறுக்கப்பட்ட ‘சிந்தனை வட்டம்” வெளியீட்டாளர்கள்
(தனியார்) கம்பனி
இல 14 உடத்தலவின்னை மடிகே,
உடத்தலவின்னை 20802, ரீலங்கா.
தொலைபேசி 0.094-81-2493746
தொலைநகல் 0094-81-2497246
‘சிந்தனை வட்டத்தின 247* வெளியீடு'

Page 3
தமிழ் - முஸ்லிம் இன உறவுகள்
தொகுப்பாசிரியர் : பதிப்பு : இணை வெளியீடு :
அச்சுப்பதிப்பு :
ISBN : பக்கங்கள் : விலை :
பீ.எம். புன்னியாமீன்
1ம் பதிப்பு - 10 மார்ச் 2007
தேசம்
தபால்பெட்டி இல. 35806 லண்டன், ஐக்கிய இராச்சியம். E 113 JX சிந்தனை வட்டம். 14 உடத்தலவின்னை மடிகே, உடத்தலவின்னை, ரீலங்கா. ܫ சிந்தனை வட்டம் அச்சீட்டுப் பிரிவு 14 உடத்தலவின்னை மடிகே, உடத்தலவின்னை, Uரீலங்கா.
978-955-8913-71-0
96
120/- £5.00
Thamil Muslim na Urawukal
Subject : Collection of articles published in the THESAM Magazine about the Muslim
Socity.
Compiler: Printers & Publishers :
Co-Publishers:
Edition: Language : ISBN : Pages : Price:
P.M. Puniyameen.
Cinthanai Vattam CV Publishers (Pvt) Ltd, 14, Udatalawinna Madige,Udatalawinna 20802, Sri Lanka. THESAM Magazine, P. Box 35806, London, UK, E 113 JX 1" Edition March 2007
Tamili 978-955-8913-7-0 96 120/- E 5.OO
G) P.M. Puniyameen, 2007
All Rights Reserved. No part of this Documentation may be reproduced or utilised, stored in a retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording or otherwise, without the prior written permission
of the author.

என்னுரையும், பதிப்புரையும்.
ஐக்கிய இராச்சியத்திலிருந்து வெளிவரும் ‘தேசம்’ சஞ்சிகையுடன் இணைந்து சிந்தனைவட்டத்தின் 247வது வெளியீடாக ‘தமிழ்-முஸ்லிம் இன உறவு’ எனும் இந்த விசேட நூலினை வெளியிடுவது குறித்து மகிழ்ச்சியடைகின்றேன்.
இலங்கை வரலாற்றின் சுவடுகளைப் பின்னோக்கிப் பார்க்கும் போது 20-ம் நூற்றாண்டின் முதல் எட்டுத் தசாப்த காலகட்டங்கள் வரை சிறுபாணிமைச் சமூகங்களான தமிழ்-முளப்லிம் மக்களிடை யேயான உறவுகள் மிகவும் சுமுகமாகவே இருந்து வந்துள்ளன. மதத்தால், கலாசாரத்தால் வேறுபட்டாலும், மொழியால் ஒன்றுபட்ட இவ்விரு இனங்களிடையே பரஸ்பர நல்லுறவுகள், புரிந்துணர்வு, நல்லிணக்கம் போன்றன திறந்த மனநிலையில் பரிமாற்றம் பெற்றிருந்த காரணத்தினாலே இத்தகைய சமூக உறவுகள் நீண்ட காலமாகப் பேணப்பட்டன. ஆனால், கடந்த இரண்டு தசாப்த காலகட்டத்துக்குள் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகளும், அரசியல் சுயலாபமிக்க போக்கு களும் இவ்விரு சமூகத்தினரிடையேயும் விரிசல்களைத் தோற்றுவித்து இனிறு ஓரினம் மற்றைய இனத்தினை விரோதப் பார்வையில் பார்க்கும், பழகும் நிலைக்குத் தள்ளிவிட்டது.
தற்போதைய சூழ்நிலையில் இந்த நிலையினை மாற்றிய மைப்பது கடினமானதாகக் காணப்பட்டாலும்கூட இத்தகைய கறை களையும், சந்தேகப் பார்வைகளையும் மாற்றியமைக்க உணர்வு பூர்வமாக செயற்பட வேண்டியது காலத்தின் தேவையாகும். நாளைய சந்ததியினருக்கு குரூர வடுக்களை மாத்திரம் விட்டுச் செல்லாமல் சுகந்தமான உறவுகளை இனங்காட்ட வேணிடியது இத் தலை முறையினரின் கடமையாகும்.
O3

Page 4
இனிறைய காலகட்டத்தில் ‘தமிழ்-முஸ்லிம் இன உறவு’ என்ற எண்ணக்கரு புத்திஜீவிகள் மத்தியில் பரவலாக சிந்திக்கப்பட்ட போதிலும்கூட இந்த இன உறவினை எந்த அடிப்படையில் யதார்த்தப்படுத்துவது? எவ்வாறு ஏற்படுத்துவது? என்பதில் தான் மயக்கநிலை காணப்படுகின்றது.
கடந்த இரண்டு தசாப்த காலத்துக்குள் ஏற்பட்ட பாதிப்புக்
களை ஒப்பீட்டு ரீதியாக நோக்கும்போது தமிழ் இனத்தினை விட முஸ்லிம் இனத்தவர்களே உயிர், உடமை இழப்புக்களினால் வடக்கிலும், கிழக்கிலும் அதிகளவில் பாதிப்புக்களுக்கு உட்பட்டுள்ளனர். இன்றும் ஆயிரக்கணக்கானோர் அகதிகளாகவே வாழ்ந்து வருகின்றனர். இத்தகைய பாதிப்புக்கள் தமிழ் இனத்தவர் மீது நம்பிக்கையீனத்தை
ஏற்படுத்தியிருப்பதுடன், பகைமையுணர்வினையும் வலுவடையவே செய்துள்ளது. மாறாக அரசியல் இலாபநோக்கத்துக்காக முஸ்லிம்
இனத்தவர்களைப் பற்றிய தவறான கருத்துக்களைத் தமிழ்
இனத்தவர்கள் மத்தியில் விதைத்து முஸ்லிம்களை விரோதிகளாக நோக்கச் செய்துள்ளனர். தேசிய ரீதியிலும் சரி, சர்வதேச ரீதியிலும் சரி ‘முஸ்லிம் பயங்கரவாதம்’ என்ற வார்த்தைப் பிரயோகம் தேசிய பேரினவாத சக்திகளாலும், சர்வதேச மேற்குலக நவீன ஆக்கிரமிப்பு அரசியல் சக்திகளாலும் விதைக்கப்பட்டுவிட்டது. இதன் தாக்கங்கள் தமிழ் இனத்தவர்கள் மத்தியிலும் இழையோடி விட்டது.
ஆக, தமிழ்-முஸ்லிம் இன உறவுகள் இன்று மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தப் பாதிப்புப் பற்றி சந்தேகமே இல்லை. இத்தகைய பாதிப்புக்களுக்கு காரணகர்த்தாக்கள் முஸ்லிம்களா, தமிழர்களா என்று ஆராய்ந்து காலத்தை விரயமாக்குவதில் அர்த்த மில்லை. பாதிப்புக்களுக்கு நிவாரணம் காண முற்பட வேண்டியது அரசியல் தலைமைத்துவத்தின் தார்மீக, பொறுப்பு.
மறுபுறமாக- மானிட அடிப்படையில் புரிந்துணர்வினை ஏற்படுத்தி சமூக நல்லுறவினூடாக மேலும் மோதல்கள் உருவாகா மலும், பழுதுபட்ட உறவுகளை மேம்படுத்தவும் என்ன செய்ய முடியும் எனிறு சிந்திக்கையில் பினி வரும் விடயங்களைக் கருத்திற் கொள்ளலாம்:
04

1)
2)
மதத் தலைமைகள் இனங்களுக்கிடையே நல்லுறவினைக் கட்டிக் காக்க தமிழ்முஸ்லிம் மதத் தலைமைகள் முக்கிய பங்களிப்பினை வழங் கலாம். ஆனால், மதத் தலைமைகள் மத ரீதியான கோட்பாட்டு விளக்கங்களுக்கு மாத்திரம் தம்மை எல்லைப்படுத்திக் கொணி டிருப்பதைப் போல சமூக ரீதியில் இன நல்லுறவு பற்றி சிந் திக்கத் தவறி விடுகின்றன. இதன் மூலம் பாமரமக்கள் மத்தி யில் இன உறவுகளைப் பலப்படுத்தக் கூடிய சக்தி பயன்படுத் தப்படாமல் இருப்பது வேதனைக்குரிய ஒரு விடயமாகும்.
அரசியல் தலைமைத்துவங்கள் ஜனவரி மாத இறுதியில் மஹறிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை மாற்றத்தின் போது சிறுபான்மை தமிழ்-முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த 26 மக்கள் பிரதிநிதிகளுக்கு அமைச்சர் மற்றும் பிரதியமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இது இலங்கையின் மெகா அமைச்சர வையின் 107 மொத்த நியமனங்களில் 24 சதவீதமானதாகும். இதில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த 17 பேரும் தமிழ் சமூகத் தைச் சேர்ந்த 9 பேரும் அமைச்சர்களாகவும், பிரதி அமைச்சர் களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கைப் பாராளுமன்றத்தில் 50க்கு மேற்பட்ட தமிழ்-முஸ் லிம் சிறுபான்மைப் பிரதிநிதிகள் உள்ளனர். இவர்களுள் அனே கமானோர் (அனைவரும் என்று கூடக் குறிப்பிடலாம்) இலங் கையிலுள்ள விகிதாசாரத் தேர்தல் முறைக்கமைய தத்தமது இனத்தவர்களால் நியமிக்கப்பட்டவர்கள். எனவே, இலங்கை யில் தமிழ்-முஸ்லிம் உறவினைப் பேண வேண்டிய அவசியம் இவர்களுக்கு உண்டு. ஆனாலும், துரதிர்ஷ்டம்- தத்தமது பதவி களையும், அதிகாரங்களையும் மாத்திரம் தக்கவைத்துக்
கொள்ள விழையும் இவர்கள் அடிப்படையில் உள்ள விசால மான பொறுப்பினை கருத்திலெடுக்க மறுக்கின்றார்கள். பிரச்சி னைகளைப் பெரிதுபடுத்துவதிலே காலத்தைச் செலவிடுகினி
05

Page 5
4)
றார்கள். எவ்வளவு தான் யதார்த்தம் கதைத்தாலும், தேர்தல் காலங்களில் வாக்காளரின் மடமைத்தனத்தை இவர்கள் நன்கு அளவிட்டுக் கொண்டுள்ளமையினால் இவர்களுக்கு சமூக இன உறவு என்பது அவசியமற்ற ஒன்றாகவே இருக்கின்றது.
தேசிய கல்விக்கொள்கை மூலம் இனஉறவுகளை வலுவடையச் செய்தல். புதிய தலைமுறை மத்தியில் தேசிய கல்விக்கொள்கை மூல மாக பாடத்திட்டத்தினூட்ாக இன ஒற்றுமையை வலியுறுத்த லாம். இதற்கான பூர்வாங்கத்திட்டங்களை தேசிய கல்வி நிறுவகம் கொண்டிருக்கும் அதே நேரம் ஆரம்ப, இடை நிலைக் கல்வியில் இதனை அறிமுகஞ் செய்துள்ளது. குறிப்பாக பாடத்திட்டங்களினூடாக அனைத்து மதத்தவர்களும் அனைத்து மதங்களைப் பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் பாடத்திட்டத்தில் மதங்கள் பற்றியும், மதக் கலாசாரங்கள், வரலாறுகள் பற்றியும் அனைவருக்கும் பொதுவான பாடங்கள் தரப்பட்டுள்ளன. இதனை இன்னும் அர்த்தமுள்ளதாக மாற்றியமைக்கலாம்.
அதே நேரம் பல்கலைக கழக மட்டத்தில் இந்த எண்ணக்கரு அதிகளவில் சிந்திக்கப்படாமலே உள்ளது. மரபு ரீதியான தன் மைகளிலிருந்து விடுபடாமல் இன்னமும் மாணவர்களின் ஆய்வுப் பொருளாக கம்பராமாயணம் பற்றியும், சிலப்பதிகாரம் பற்றியும், ருபையாத் பற்றியும், பாரதி பற்றியும் ஆய்வுக்கு விடப்படுகின்றதே தவிர, சமகால பிரச்சினைகளும், சமகால நிலையும் ஆய்வுக்குட் படுத்தப்படுவதில்லை. நிச்சயமாக பல்க லைக்கழக பாடத்திட்டத்தில் இன ஐக்கியம், இனஉறவுகள் பற்றிய சேர்க்கைகளும், போதனைகளும், ஆய்வுகளும் நிகழ் கால அவசியப்பாடாகும்.
ஊடகத்துறை இனஉறவினை ஏற்படுத்துவதில் ஊடகங்களின் பங்களிப்பு கள் விசாலமானதாக இருத்தல் வேண்டும். இலங்கையில்
06

தமிழ்மொழி மூலமாக தேசிய நிலையில் பல பத்திரிகைகள், வானொலி ஒலிபரப்புகள், தொலைக்காட்சிச் சேவைகள் காணப்பட்ட போதிலும் கூட இத்தகைய ஊடகங்கள் ஏதோ ஒரு வகையில் ஒரு பக்கமாக மாத்திரம் கருத்துக்களை முன் வைப்பதானது இனஉறவுக்கு பாலமாக அமையும் எனக் கருத (949-ԱՍՊ3).
புலம்பெயர் சில தமிழ் ஊடகங்களில் இன்று - குறித்த சில தமிழ் எழுத்தாளர்கள் இலங்கை முஸ்லிங்களின் பிரச்சினைகளைத் துணிவுடன் எடுத்துக் கூறுவதைப் போல இலங்கையிலுள்ள ஊடகங் களாலும், எழுத்தாளர்களாலும் முடியவில்லை.
தேசம் விஷேட மலராக வெளிவரும் இந்நூலில் “தேசம்’ சஞ்சிகையில் இலங்கை முஸ்லிம்கள் பற்றி தமிழ் எழுத்தாளர்களாலும், முஸ்லிம் எழுத்தாளர்களாலும் எழுதப்பட்ட சில கட்டுரைகளைத் தொகுத்துள்ளேனர். இக்கட்டுரைகளில் பெரும்பாலனவை இலங்கை முஸ்லிம்களுக்கான தேசிய வார இதழான நவமணியில் மறுபிர சுரமானவை. இக்கட்டுரைகள் நவமணியில் மறுபிரசுரமான நேரத்தில் நவமணியின் பிரதம ஆசிரியர் அல்ஹாஜ் எம்.பீ. எம். அளப்ஹர் அவர்களுடனும், என்னுடனும் பலர் தொடர்பு கொண்டு இக்கட் டுரையை தமிழர்கள் தானி எழுதுகின்றர்களா? தேசம் முஸ்லிம்களின் சஞ்சிகையா? என்று வினவிய சந்தர்ப்பங்கள் பலவுண்டு.
எனவே இலங்கையில் தமிழ் முஸ்லிம் மக்களிடையே இன உறவினை ஏற்படுத்த புலம்பெயர்ந்த தமிழர்கள் மேற்கொள்ளும் நடவ டிக்கைகள் இலங்கையில் வாழும் தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும், தமிழ் ஊடகங்களுக்கும் ஒர் எடுத்துக்காட்டாகும்.
தேசம் - சிந்தனைவட்டம் இணைந்து வெளியிடும் முதல் நூல் இது. எதிர்காலத்தில் தேசம் சஞ்சிகையில் மாத்திரமல்லாமல் ஏனைய புலம்பெயர் சஞ்சிகைகளிலும், பத்திரிகைகளிலும், இணையத் தளங்களிலும் வெளிவரும் முளப்லிம் இனத்தவர்களைப் பற்றிய கட்டுரைகளும், ஆய்வுகளும்; அதேபோல தமிழ் இனத்தவர்களைப் பற்றி முஸ்லிம்களால் தாயகத்தில் எழுதப்படும் கட்டுரைகளும், ஆய்வுகளும் விமர்சனக் குறிப்புகளுடன் நூலுருவாக்கப்பட்டு வெளியி டப்படும். இந்த நூல்கள் இலங்கையிலும், புலம்பெயர் நாடுகளிலும் வாழும் மார்க்கத் தலைவர்கள், அரசியல்வாதிகள், கல்விமானிகள்,
07

Page 6
எழுத்தாளர்கள், புத்திஜீவிகள் ஆகியோருக்கும், நூலகங்கள், ஆவணக் காப்பகங்கள் போன்றவற்றிற்கும் வழங்க விசேட ஏற்பாடுகள் செய்யப்
படும்.
நிச்சயமாக ஒர் இனத்தினி துயர் பற்றி இனினொரு இனம் சிந்திக்கத் தொடங்குமிடத்து அங்கே தானி உணிமையான இன உறவு ஆரம்பமாசினிறது. கடந்த இரணிடு தசாப் த காலகட்டத்துக்குள் இத்தகைய அடிப்படை உணர்வுகளினி வெளிப்பாடு ஏற்பட்டிருப்பது ஆரோக்கியமான திருப்பம். இத்திருப்பம் வியாபகம்அடையுமிடத்து நிச்சயமாக எதிர்காலத்தினை விசுவா சத்துடன் எதிர் நோக்கலாம் என்பதில் ஐயமில்லை. இங்கே முழு இனங்களுக்கிடையிலான கருத்துத் தாக்கம் ஏற்படும் என்பதை விட ஒவ்வொரு இனங்களையும் சார்ந்த ஒவ்வொரு குடும்பங்கள் மத்தியில் உள்ளார்த்தமாக ஏற்படக்கூடிய இத்தகைய உணர்வு நிச்சயமாக நாளை விருட்சமாகும்.
எத்தகைய உணர்வுகளும் வெளிவாரியானதல்லாமல் உள்ளார்த் தமாக ஏற்படுமிடத்தே அதன் வியாபகமானது நாளைய சந்ததியினர் மத்தியில் நல்லிணக்கம், நல்லுறவு போன்றவற்றை இதய சுத்தியுடன் ஏற்படுத்தப்போகின்றது. இன நல்லுறவு தொடர்பான எதிர்கால அச்சங்களை ஈரினத்தவரும் களைவதற்கான நிகழ்கால மச்சமாக 'தமிழ்முஸ்லிம் இன உறவு'எனும் இந்நூல் திகழ வேண்டும் என்பதே எனது வேணவா.
மிக்கநன்றி.
அன்புடனர் உங்கள்
- கலாபூஷணம் புண் aflumufar -
முகாமைத்துவப் பணிப்பாளர்
வரையறுக்கப்பட்ட ‘சிந்தனை வட்டம’ வெளியீட்டாளர்கள் (தனியார்) கம்பனி 14-உடத்தலவின்னை மடிகே உடத்தலவின்னை.
2007-03-10
08

: முன்னுரை
தமிழ் - முஸ்லிம் மக்கள் புவியியல் ரீதியாக ஒருவரோடு ஒருவர் உறவாடி வாழ வேண்டிய கட்டாயத்தில் இருந்த போதும் புறச்சூழல் அவர்களை பகைமையுடனும், சந்தேகத்துடனும் நம்பிக்கையீனத்துடனும் வாழ நிர்ப்பந்தித்து உள்ளது. தமிழ் - முஸ்லிம் இன உறவுகள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வளர்ச்சியுடன் சிதைவடைய ஆரம்பித்துவிட்டது. காலத்திற்குக் காலம் முஸ்லிம் சமூகத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட ஒடுக்கு முறைகள் தனி மனித தாக்குதல்களில் ஆரம்பித்து திட்டமிட்ட இன அழிப்பு, இனச் சுத்திகரிப்பு என்ற பரிமாணத்தைப் பெற்றது. இன்று தமிழ் - முஸ்லிம் இன உறவுகள் அதன் அடி நிலையிலேயே உள்ளது. இந்த நிலையை மாற்றியமைப்பது மிகவும் கடினமானதாக இருந்தாலும் இரு இனங்களினதும் எதிர்காலத்திற்கு இந்நிலை மாற்றி அமைக்கப்படுவது தவிர்க்க முடியாதது.
இந்த கடினமான பாதையை செப்பனிடுவதில் ஒரு காத்திரமான பங்களிப்பை செய்ய வேணடும் எனிற எண்ணத்திலேயே ‘தமிழ் - முஸ்லிம் இன உறவுகள்" என்ற தலைப்பிலான சந்திப்பு மார்ச் 10ல் ஏற்பாடு செய்யப்பட்டது. அதையொட்டி ‘தமிழ் - முஸ்லிம் இன உறவுகள்" என்ற இந்த விஷேட நூல் வெளியிடப்படுகிறது. தமிழ் - முஸ்லிம் இன உறவுகளை வலுப்படுத்துவதற்கு, அதைப் பற்றிய விழிப்புணர்வை
O9

Page 7
ஏற்படுத்துவதற்கு, அதை நோக்கிய நம்பிக்கையை ஏற்படுத்து வதற்கு இச்சந்திப்போ, இந்த விஷேட நூலோ உதவுமாக இருந்தால் அது “தேசம்' சஞ்சிகைக்கும் அதன் வாசகர்களுக்கும் கிடைத்த வெற்றியாகவே அமையும்.
தமிழின ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடுபவர்கள் தங்களுள் ஒடுக்கு முறையாளர்களாகவும் இரட்டைவேடம் போடுவதும தமிழின விடுதலைப் போராட்டத்தின் நியாயத் தன்மையை கொச்சைப்படுத்தி உள்ளது. இதன் துரதிஷ்டம் என்ன வெனில் விடுதலைப் போராட்டத்தை முனினெடுத்தவர்கள், முன்னெடுப்பவர்கள் யாரும் உலக வரலாற்றில் இருந்து பாடங்க ளைக் கற்றுக்கொள்ளவில்லை என்பது மட்டுமல்ல தமது சொந்த வரலாற்றில் இருந்தும் அதனைக் கற்றுக்கொள்ளத் தவறி உள்ளனர். வரலாற்று படிப்பினைகளைக் கற்று தம் போக்கை மாற்றியமைக்காத வரை வரலாறு மீளவும் அதன் ஆரம்பப் புள்ளிக்கே வரும் என்பது இயக்கவியல் விதி. தமிழீழ விடுதலைப் போராட்டமும் கால் நூற்றாண்டுகளுக்குப் பின் மீண்டும் அதே இடத்தில் வந்து நிற்கிறது.
தமிழ் பேசும் மக்கள், தமிழர்கள் எனிற ஒற்றைப் பரிமாணத்திற்குள் முஸ்லிம் சமூகத்தை அடக்க, அடைக்க முற்பட்ட தமிழ் தேசியவாதம் பெரும்பாலும் தோல்வியையே சந்தித்து உள்ளது. அதன் ஆற்றாமை விஸ்வரூபம் எடுத்து தேசியவாதத்தின் உச்ச நிலைக்குச் சென்றது. தேசியவாதம் அதன் உச்ச நிலையில் பாசிச பரிமாணத்தை எடுக்கும் என்பதை தமிழ் தேசியவாதம் மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்தி உள்ளது. முஸ்லிம் சமூகத்தின் மீதான படுகொலைகளும், அவர்கள் தங்களது தாயகப் பகுதிகளில் இருந்து துரத்தப்பட்டமையும் முஸ்லிம்களது துயரமான வரலாறு மட்மல்ல தமிழின வரலாற்றினி கறை படிந்த பக்கங்கள் என்பதையும் தமிழ் சமூகம் மறந்து விடக்கூடாது.
O

இந்த வரலாற்றுக் கறையை நீக்க மறப்போம், மணினிப் போம் என்ற சம்பிரதாய வார்த்தை ஜாலங்கள் மட்டும் போதாது. உண்மையான, நேர்மையான, கடினமான உழைப்பின் மூலம் இரு சமூகங்களும் மற்றைய சமூகத்தினரினி இதயங்களை வெண்றெடுக்க வேண்டும். முளப்லிம் சமூகமே ஒடுக்கப்படும் சமூகமாக இருப்பதால் தமிழ் - முஸ்லிம் உறவுகளை மேம்படுத்துவதில் தமிழ் சமூகம் முனினிலைப் பாத்திரம் எடுக்க வேணடும். முஸ்லிம் மக்கள் மீதான சகல ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் தோளோடு தோள் நின்று தமிழ் சமூகம் போராட வேணடும். இதனி மூலமே வரலாற்றினி தவறுகளை சீர்செய்ய முடியும்.
த ஜெயபாலனி ஆசிரியர் - தேசம்
THESAM
P0 BOX35806,
London, UK,
E11 3JH.

Page 8
உள்ளே.
()
()
:
எனது அனுபவப் பார்வையில்: தமிழ் - முஸ்லிம்
உறவுகளும் எதிர் காலமும் 13 ஹிஜாப் (Hijab) தடையும் ஸ்லாமோபோபியாவும் (Islamophobia) 20
புலிகளின் நான்காம் ஈழப்போருக்கான முஸ்தீபும் முஸ்லிம்கள் மீதான இரண்டாம் இனச் சுத்திகரிப்
புக்கான ஒத்திகையும் 26 சிங்கள தமிழ் பேரினவாதம் 31 முஸ்லிம்களின் பிரச்சினை பார்க்கவில்லை கேட்கவில்லை பேசவில்லை. 36 முஸ்லிம்களின் அரசியல் நிலைப்பாடு எமது வழி இஸ்லாம். எமது மொழி தமிழ். 40 சமாதானப் பேச்சுவார்த்தையும், முஸ்லிம்களின் நிலையும் 44 சுயநிர்ணய உரிமை: தமிழர் - சோனகர் 48 இலங்கை முஸ்லிம்கள் சோனகர் 52 பொதுக் கட்டமைப்பும் முஸ்லிம்களும். எமது உரிமையும், பாதுகாப்பும் பறிக்கப்பட்டுள்ளன. 58 பொதுக்கட்டமைப்பும் முஸ்லிம்களும்: பாதிக்கப்பட்ட சமூகம் ஒரம் கட்டப்பட்டது. 65 முஸ்லிம்களது அரசியல் உரிமைகள் அங்கீகரிக் கப்பட வேண்டும். 68 மனிதன் அழிந்த நேரத்தில் மனிதம் தளைத்திருக்கிறது 71 இந்துமதத் திணிப்பு 73
தமிழ் மேசும் மக்கள் : அடையாள இருட்டடிப்பு 77 முஸ்லிம்களது நம்பிக்கை வென்றெடுக்கப்படாமல் ஒரு தீர்வு அமையாது. 81 இனச்சுத்திகரிபு இனப்படுகொலைகளை எதிர்கொள் வதற்கு மாற்று வழியாக முஸ்லிம் இளைஞர்கள் தீவிரவாத வழிகளை நாட வேண்டியது தவிர்க்க
இயலாதது. 85
炒

எனது அனுபவப் பார்வையில்: தமிழ் - முஸ்லிம் உறவுகளும் எதிர்காலமும்;
எஸ். பாலச்சந்திரனி (தமிழ் மக்கள் பாதுகாப்புப் பேரவை)
அண்மையில் லண்டனில் முஸ்லிம் மக்கள் தொடர்பாக நடைபெற்ற கருத்தரங்குகள் மற்றும் கூட்டங்கள் இதுபற்றி எழுதவேண்டும் என்னும் ஆர்வத்தை எனக்குள் தூண்டியது. எனவேதான் இக் கட்டுரையை எழுதுகிறேன். நான் எழுதும் இக் கருத்துக்கள் தமிழ் முஸ்லிம் ஜக்கியத்திற்கு ஏதோ ஒரு வகையில் உதவ வேண்டும் என விரும்புகிறேன். சிறிய அளவிலேனும் நிச்சயம் உதவும் என நம்புகிறேன்.
அண்மையில் லண்டனில் ஒரு கருத்தரங்கு நடைபெற்றது. இது இலங்கை முஸ்லிம்கள் பற்றியது என்பதாலும் இதனை நடத்தியவர்கள் ஜனநாயகம் மற்றும் மாற்றுக் கருத்துக்களுக்காக குரல் கொடுப்பவர்கள் என்பதாலும் அங்கு நன்கு ஆழமாகவும் தெளிவாகவும் மிகவும் பயன் உள்ள வகையில் கருத்துக்களை முன் வைப்பார்கள் என்று நம்பி மிகவும் ஆவலுடன் நானும் அக் கூட்டத்தில் ஒரு பார்வையாளனாகப் பங்குபற்றினேன். கூட்டத்தின் ஆரம்பத்தில் ஹொலண்ட் நாட்டில் இருந்து வந்தவர் பேச அழைக்கப்பட்டார். அவர் முன்பு மார்க்சிய-லெனிய இயக்கம் ஒன்றில் அங்கத்தவராக இருந்தவர். எனவே அவர் முஸ்லிம் பிரச்சினை குறித்து மார்க்சியப் பார்வையில் தனது கருத்துக்களை முன்வைப்பார் என எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்தனர். அவரும் தனது பேச்சின் ஆரம்பத்திலேயே "இலங்கையில் சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள், மலையகத்தமிழர்கள் என நான்கு தேசிய இனங்கள் உண்டு. எனவே
தமிழ் - முஸ்லிம் இன உறவுகள் 13

Page 9
மார்க்சிய விதிகளின்படி தமிழர்களுக்கு மட்டுமல்ல முஸ்லிம்கள் மற்றும் மலையகத்தமிழர்கள் அனைவருக்கும் பிரிந்து போகிற உரிமை உண்டு என்று ஒரு குண்டை துாக்கிப் போட்டார். இவரின் இப் பேச்சைக் கேட்டதும் உண்மையிலே பலரும் அதிர்ச்சியடைந்தனர். இவ் அதிர்ச்சி மற்றும் ஏமாற்றத்தில் இருந்து மீள்வதற்குள் அடுத்து பேச வந்தவரும் இதே பாணியில் இன்னொரு குண்டை துாக்கிப் போட்டார். அவர் தன் பேச்சில் ‘முஸ்லிம்களும் தமிழ்பேசும் மக்கள்தான். ஆனால் அவர்கள் விரும்பினால் பிரிந்து போகலாம்' என்றார். அப்போது ஒருவர் இடைமறித்து ‘அப்படியா னால் நெடுந்தீவு புங்குடுதீவு மக்களும் பிரிந்து போக கோரினால் நீங்கள் அனுமதிப்பீர்களா? என கிண்டலாக கேட்டார். அவர் நகைச்சுவை யாகக் கேட்கிறார் என்பது புரியாமல் ஆம் எந்த மக்கள் கேட்டாலும் நாம் பிரிந்து போக அனுமதிப்போம். உறுதியாக ஆதரிப்போம். ஏனெனில் நாங்கள் உண்மையான ஜனநாயகவாதிகள்’ என்று சீரியஸ்யாக பதில் கூறினார். இந்தக் கூத்துக்களைப் பார்த்த பலருக்கு உண்மையிலே மயக்கம் வராத குறைதான். நல்ல வேளை மாக்ஸ், லெனின் இறந்துவிட் டார்கள். இல்லையென்றால் இவர்களிடம் மார்க்சியம், ஜனநாயகம் படும் அவஸ்த்தைகளைப் பார்த்து அவர்கள் தற்கொலைதான் செய்திருப்பார் கள். சில முஸ்லிம்கிள் கூட தமது அதிகூடிய கோரிக்கையாக தென் கிழக்கு அலகையே முன்வைத்துள்ளனர். அவர்கள் இதுவரை முஸ்லிம் தனிநாடு எதையும் கேட்கவில்லை. இந் நிலையில் இவர்கள் அதுவும் மார்க்சிய அடிப்படையில் பிரிந்து போகலாம் என்று கூறுவது உண்மையில் வேடிக்கையானதும் பைத்தியக்காரத்தனமானதும் ஆகும்.
மாசே-துங் அடிக்கடி கூறுவார் ‘காலுக்கு அளவாக சப்பாத்து எடுக்கவேண்டுமேயொழிய சப்பாத்துக்கு அளவாக காலை வெட்டக் கூடாது. ஆம். உண்மைதான். மக்களுக்கான மார்க்சிய தத்துவங்களை ஆக்கபூர்வமாக யதார்த்தபூர்வமாகப் பயன்படுத்தவேண்டுமேயொழிய வெறும் ஏட்டுச்சுரக்காய்களாகப் பயன்படுத்த முனையக்கூடாது. இல்லை யேல் மேற்கூறிய நாசகார தத்துவ வியாக்கியானங்களையே நாம் கேட்க நேரிடும். இவர்களிடம் நாம் மிகவும் தாழ்மையுடன் வேண்டிக்கொள்வது என்னவெனில் ‘நீங்கள் என்ன வேண்டுமானாலும் கூறுங்கள். ஆனால் தயவுசெய்து மார்க்சியத்தை துணைக்கு அழைத்து அதனைக் கொச்சைப் படுத்தாதீர்கள்’ என்பதே.
1985ம் ஆண்டு நானும் மற்றும் இருபது தோழர்களும் மட்டக்களப்பில்
4. தமிழ் - முஸ்லிம் இன உறவுகள்

இருந்து யாழ்ப்பாணம் நோக்கி நடந்து வரும் வேளையில் சுண்டிக்குளம் என்னும் இடத்தில் அங்கிள் அல்லது மாமா என்று அழைக்கப்படும் புலிகளின் தளபதி எங்களைக் கைது செய்தார். அவர் எங்கள் ஆயுதங் களை பறித்தெடுத்ததுடன் எங்களை மருதங்கேணி என்னும் இடத்தில் அடைத்து வைத்தார். அவ்வேளையில் அங்கிள் அவர்கள் எங்களை தமது புலிகள் இயக்கத்தில் சேரும்படி கேட்டார். அதற்கு நான் தனியாக ஒரு இயக்கம் நடத்த வேண்டும் என்பதற்காக நாங்கள் எமது இயக்கத்தை நடத்தவில்லை. கொள்கை காரணமாகவே தனியாக இயங்குகிறோம். குறிப்பாக முஸ்லிம் மக்கள் மற்றும் மலையக மக்கள் தொடர்பாக உங்கள் இயக்கத்தின் கொள்கை என்ன?’ என்று கேட்டேன். இதற்குரிய பதிலை தமது தலைமையிடம் கேட்டு வந்து கூறுவதாக சொல்லிவிட்டுச் சென்ற அங்கிள் அவர்கள் அப்போது யாழ் மாவட்ட தளபதியாக இருந்த கிட்டு விடம் சென்று இதனைக் கேட்டுள்ளார். கிட்டு தனது வழக்கமான பாணியில் ‘பு.மவனே எங்களுக்கே தீர்வைக் காணவில்லை. அதற் குள்ளே உனக்கு முஸ்லிம் ‘பு.மக்களுக்கு தீர்வு வேணுமோ?’ என்று கூறியுள்ளார். இதனைக் கேட்டு ஏமாற்றம் அடைந்த அங்கிள் அதன் பின்னர் எங்களை தமது இயக்கத்தில் சேரும்படி ஒருபோதும் கேட்கவில்லை. உண்மையில் இதனை இப்போது நான் ஏன் கூறுகிறேன் என்றால் எமது இயக்கங்கள் ஆரம்பத்திலேயே முஸ்லிம் மற்றும் மலையக மக்கள் தொடர்பாக தெளிவான பார்வை கொண்டிருக்கவில்லை என்பதை யும் அவ்வாறு அவர்கள் கொண்டிருந்திருந்தால் இன்றைய இவ் அவல நிலையை தவிர்த்திருக்கலாம் என்பதையும் சுட்டிக்காட்டுவதற்கே.
புலிகள் இயக்கம் மட்டும்தான் முஸ்லிம் மக்களுக்கு எதிரானவர் கள்.மற்ற இயக்கங்கள் எல்லாம் முஸ்லிம் மக்களை மிகவும் அன்பாக நடத்தினார்கள் என சிலர் நினைக்கக்கூடும். ஆனால் உண்மை என்னவெ னில் முஸ்லிம் மக்கள் தொடர்பில் மற்ற இயக்கங்கள் புலிகளுக்கு எந்த விதத்திலும் குறைந்தவர்கள் இல்லை என்றே நிருபித்திருக்கிறார்கள். முதன் முதலில் கிழக்கு மாகாணத்தில் 1984ம் ஆண்டு உன்னிச்சைக் குளத்திற்கு அருகில் இருந்த பாவக்குடிச்சேனை என்னும் கிராமத்தில் இருந்த முஸ்லிம் மக்கள்ே வெளியேற்றப்பட்டார்கள். இதனைச் செய்தவர் கள் சிவா என்பவரின் தலைமையில் வந்த EPRLF இயக்கத்தினரே.
தமிழ் - முஸ்லிம் இன உறவுகள் 5

Page 10
புரட்சி பேசிய தோழர்களே முதல் தாக்குதலை முஸ்லிம் மக்கள் மீது தொடுத்தார்கள் என்பது கொடுமையென்றால் அதைவிடப் பெரிய கொடு மை என்னவெனில் தாங்கள் பாதுகாப்பு தருவோம் என்று கூறி அம் மக்களிடமிருந்து சாப்பாடு பார்சல் வாங்கிச் சாப்பிட்ட PLOTE இயக்கத் தினர் EPRLF இயக்கத்தினர் முஸ்லிம் மக்களை தாக்குகிறார்கள் என்பதை அறிந்தவுடன் அவர்களுக்குப் போட்டியாக அம் முஸ்லிம் மக்களைத் தாக்கி விரட்டினார்கள். காட்டில் பதுங்கியிருந்த அம் மக்களை சில தமிழ் கிராமவாசிகள் பாதுகாப்பாக மட்டக்களப்பு நகரத்தை நோக்கி அழைத்துச் சென்றவேளை தள்ளாடித் தள்ளாடி இறுதியாக நடந்து சென்ற ஒரு வயோதிப முஸ்லிம் கிழவனைக் கண்ட TELO இயக்கத்தினர் இரகசியமாக காட்டினுள் கடத்திச் சென்று கொலை செய்தனர். அக் கிழவன் தன் வேட்டித் தலைப்பில் முடிஞ்சு வைத்திருந்த சில்லறைப் பணத்தை அபகரிப்பதற்காகவே இக் கொலையைச் செய்தனர் என்பதை அறிந்த போது முஸ்லிம் உயிர் ஒன்றிற்கு எந்தளவு மதிப்பு இயக்கங்கள் வழங்கியிருந்தன என்பதை அறியக்கூடியதாய் இருந்தது. இதில் ஆச்சரி யப்பட எதுவும் இல்லை. ஏனெனில் படுவான்கரைக்கு வியாபாரத்திற்கு வந்த காத்தான்குடி முஸ்லிம்கள் பலர் TELO இயக்கத்தால் உளவாளி கள் என்று முத்திரை குத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டனர். அவர்கள் கொண்டுவந்த சயிக்கிளை எடுத்துக் கொள்வதற்காகவே அவர்கள் இவ்வாறு கொலை செய்யப்பட்டார்கள். இங்கு ஒரு முஸ்லிம் உயிரின் பெறுமதி பழைய சயிக்கிளின் பெறுமதியைவிட மலிவாகவே இருந்தது.
முஸ்லிம் மக்கள் எங்கள் போராட்டத்தை ஆதரிக்கவில்லை. அவர்கள் எங்களை அரசாங்கத்திற்கு காட்டிக் கொடுக்கிறார்கள் என்பதே இயக்கங்கள் பொதுவாக முஸ்லிம்கள் மீது சுமத்தும் குற்றச்சாட்டாகும். முஸ்லிம் மக்களுக்கு உரிய தீர்வை இயக்கங்கள் முன்வைக்கவில்லை. எனவே இந் நிலையில் அம் மக்கள் தமக்கு ஆதரவு தரவேண்டும் என எதிர்பார்க்க இவற்றுக்கு தகுதியில்லை. இருப்பினும் அம் மக்கள் அதரவு தந்தார்கள் என்பதே உண்மையாகும். உதாரணமாக 1984ம் ஆண்டு எமது இயக்கத்தினர் சென்ரல் காம்ப் பொலிஸ் நிலையத்தை தாக்கியபோது எமது தோழர் ஒருவரின் காலில் துப்பாக்கிக் குண்டு தாக்கி காயம் ஏற்பட்டது. அப்போது எம்மிடம் அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதற்குரிய வசதி இருக்கவில்லை. அவ்வேளை மண்முனை என்னும் பிரதேசத்தில் வசித்து வந்த கஸ்சியர் என்ற முஸ்லிம் பெரியவர் ፲6 தமிழ் - முஸ்லிம் இன உறவுகள்

காயம் பட்ட எமது தோழரை அழைத்துச் சென்று மருத்துவ சிகிச்சை, வழங்கினார். பொலிஸ் நடமாட்டம் அதிகம் இருந்த அந்தக் காலத்தில் எமது தோழரை தனது வீட்டில் 40 நாட்கள் வைத்திருந்து பூரண சுக மாக்கித் தந்தார். அவர் எங்களுக்கு மட்டுமல்ல அனைத்து இயக்கங்க ளுக்கும் நிறைய உதவிகள் செய்தார். இருந்தும் அவரும் குடும்பத்தி னரும் 1997ம் ஆண்டு விரட்டியடிக்கப்பட்டனர். தற்போது அவர்கள் பொலனறுவையில் அகதியாக வாழ்கின்றனர்.
அதேபோல் 1983ம் ஆண்டுக்கு முன்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியினரே போராளிகளை பகிரங்கமாக ஆதரிக்க முன்வராத நிலையில் சிறிமாவோ பண்டாரநாயக்கா உட்பட ஜந்து கட்சியினரின் கொழும்புக் கூட்டத்தில் ‘தமிழ் இளைஞர்கள் பயங்கரவாதிகள் அல்லர். அவர்கள் போராளிகள். அவர்களின் ஆயுதப் போராட்டத்தை நாம் ஆதரிக்கிறோம்’ என்று பேசியவர் இலங்கை கம்யுனிஸ்ட் கட்சியின் தலைவர் சண்முகதாசன் அவர்கள். அவ்வாறு ஆதரித்த அக் கட்சியின் யாழ்மாவட்ட பொறுப்பாளராக இருந்தவர் இக்பால் என்னும் முஸ்லிம் ஆவார். இவர் கம்யுனிஸ்ட் கட்சியில் செயற்பட்டு வந்தமையினால் முஸ்லிம் பள்ளிவாசல் நிர்வாகத்தால் ஒதுக்கிவைக்கப்பட்டார்.
அவர் இது குறித்து கவலை கொள்ளாமல் தனது புரட்சிப்பணி களை மேற்கொண்டார். அவ்வேளையில் அவர் இயக்கங்களுக்கு நிறைய உதவிகள் செய்தார். குறிப்பாக எமது தோழர்களுக்கு அவரும் டானியலும் நிறைய மார்க்சிய வகுப்புகள் எடுத்தனர். அதுமட்டுமன்றி சாத்தியப் போராட்டத்தின்போது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நிறைய உதவிகள் செய்தார். இருப்பினும் இவரும் புலிகளால் விரட்டியடிக்கப்பட்டார். அவ்வேளை ‘போராளிகள் என்று சொல்லி பாய்ந்து பாய்ந்து உதவி செய்தாயே. இப்போது உன்னையும் வெளியேற்றிப் போட்டாங்களே’ என சில முஸ்லிம் மக்கள் இவரைக் கேலி செய்துள்ளனர். அதற்கு அவர் ‘பிரபாகரன் பிறக்க முன்னர் நான் பிறந்து தவழ்ந்த மண் இது. என்னை வெளியேற்ற பிரபாகரனுக்கு எந்த உரிமையும் இல்லை. இன்று அவரிடம் ஆயுதம் உள்ளது. என்னிடம் இல்லை. அதனால் நான் வெளியேற்றப்பட்டேன். நாளை என்னிடம் ஆயுதம் வரும் போது நான் பிறந்த என் மண்ணுக்குச் செல்வேன்’ என்றார்.
இதேபோல் பல உதாரணங்கள் உண்டு. இடம் போதாமையி
தமிழ் - முஸ்லிம் இன உறவுகள் 17

Page 11
னால் மற்றவற்றை இக் கட்டுரையில் தவிர்த்துள்ளேன். ஆனால் நேர்மை
யுள்ளம் கொண்ட எவரும் முஸ்லிம் இளைஞர்கள் பலர் இயக்கங்களில் சேர்ந்து போராடியதையும் முஸ்லிம் மக்கள் பலர் போராட்டத்திற்கு உதவிகள் செய்து ஆதரவளித்ததையும் மறுக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்.
மட்டக்களப்பில் தமிழர்களும் முஸ்லிம்களும் புட்டும் அடையும் போல் வாழ்கிறார்கள் என்று கூறுவார்கள். அதேபோல் இந்தியாவில் தமிழ்நாட்டில் தமிழர்களும் முஸ்லிம்களும் மாமன் மச்சான் உறவுமுறை கூறி வாழ்கிறார்கள். தமிழ்நாட்டு முஸ்லிம்கள் தமிழ் இன உணர்வுடனே வாழ்கின்றனர். அதனால்தான் சந்திரிக்கா காலத்தில் யாழ் மக்கள் அகதியாக வெளியேறிய போது இதனை தாங்கமுடியாது வேதனையில் தனக்குத்தானே மண்ணெண்ணெய் ஊற்றித் தற்கொலை செய்து கொண்டான் ஒரு முஸ்லிம் இளைஞன். யாழ்பாணத்தில் இருந்து முஸ்லிம் கள் வெளியேற்றப்பட்டது அறிந்திருந்தும்கூட புலிகளால் பல முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர் என்பதைத் தெரிந்தும்கூட தமிழ்நாட்டில் துறையூரில் வசித்து வந்த அந்த ஏழை முஸ்லிம் இளைஞன் யாழ் தமிழ் மக்கள் அகதியாக வெளியேறியபோது துக்கம் தாங்காமல் தமிழ் இன உணர் வுடன் தற்கொலை செய்துகொண்டான். இவ்இளைஞனின் தியாகம் பெருந் தன்மையானது. உண்மையில் இவ் முஸ்லிம் இளைஞனே மாமனிதன் பட்டத்திற்கு மிகவும் பொருத்தமானவன்.
நான் இந்திய சிறையில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டிருந்த வேளையில் எனது அறைக்கு அருகில் இமாம்அலி வைக்கப்பட்டிருந்தார். (ஏழை அப்பாவியான அவ் இளைஞன் எப்படி தீவிரவாதியானான்? எப்படி பயங்கரவாதியாக சித்தரிக்கப்பட்டு பெங்களு ரில் படுகொலை செய்யப்பட்டான் என்பது ஒரு நீண்ட கதை. சுருக்கம் கருதி அதை நான் இங்கு சொல்லவிரும்பவில்லை.) இமாம்அலி மிகுந்த தமிழ் இன உணர்வு கொண்டிருந்தார். மதத்தால் தாம் இஸ்லாமியர் என்றாலும் இனத்தால் தாம் தமிழரே என அடிக்கடி கூறுவார். அது மட்டுமன்றி தான் யாழ்ப்பாணம் சென்று தமிழ்மக்களுக்காக சிங்கள இராணுவத்திற்கு எதிராக போராட விரும்புவதாகவும் அதற்குரிய ஏற்பாடு களை செய்து தரமுடியுமா என்றும் என்னிடம் கேட்பார். இதை நான்
炽 தமிழ் - முஸ்லிம் இன உறவுகள்

இங்கு குறிப்பிடுவதன் நோக்கம் என்னவெனில் தமிழ்நாட்டில் முதலாளித்துவக் கட்சிகள் முஸ்லிம்மக்களையும் தமிழ்இன உணர்வுடன் ஐக்கியப்படுத்திவைத்திருக்கின்ற வேளையில் இதனை ஏன் யாழ்ப்பாண தலைமையைக் கொண்ட கட்சிகளால் இலங்கையில் செய்யவில்லை என்பதே.
இங்கு நான் இன்னும் ஒரு விடயத்தை குறிப்பிடவிரும்புகிறேன். முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் காலம்சென்ற அஸ்ரப் அவர்கள் இறப்பதற்கு முன்னர் வெள்ளவத்தையில் பெண்கள் ஆய்வு மன்ற நிலையத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது ‘புலிகளும் அரசாங்கமும் பேசி ஒரு தீர்வை எட்டுமாயின் அப்போது உங்கள் நிலை என்ன? என்று ஒரு கேள்வியை நான் கேட்டேன். அதற்கு அஸ்ரப் அவர்கள் எவ்வித தயக்கமும இன்றி ‘அப்படி ஒரு நிலை வருமாயின் நான் தனி அலகு கேட்டு அதனைக் குழப்பமாட்டேன்’ என்றார். இவ்வாறு துணிந்து முடிவெடுக்கக்கூடிய தலைமை முஸ்லிம் மக்களுக்கு இன்று இல்லை என்பதும் முஸ்லிம் பிரச்சனைகளுக்கு ஒரு நல்ல தீர்வு இதுவரை கிடைக்காமைக்கு ஒரு காரணமாகுமோ என நான் நினைப்பதுண்டு. முஸ்லிம் காங்கிரஸின் தற்போதைய தலைவர் ஹக்கீம் அவர்கள் அண்மையில் லண்டனில் ஒரு கருத்தரங்கில் உரையாற்றும் போது ‘பெரும்பான்மை இனத்திற்கு எதிராக ஒரு சிறுபான்மை இனம் போராட்டம் நடத்தும் போது இரண்டாவது சிறுபான்மை யினம் பெருபான்மையினத்தின் செல்லப் பிள்ளையாக இருக்கும் என லெனின் தனது நூலில் எழுதியுள்ளார்’ என்று குறிப்பிட்டார். அதேவேளை இதனை உணர்ந்து பெரும்பான்மையினத்தின் சூழ்ச்சிக்குப் பலியாகாமல் தமிழ் முஸ்லிம் மக்கள் ஐக்கியப்பட வேண்டும் என குறிப்பிட்டார். அவர் மட்டுமல்ல நான் அறிந்தவரையில் பல முஸ்லிம் தலைவர்களும் இக்கருத்தையே கொண்டிருக்கின்றனர். அதேபோல் தமிழ் மக்கள் மத்தியிலும் இக் ஜக்கியத்திற்கான குரல்கள் ஒலிக்க ஆரம்பித்துள்ளன. யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்ட வேளையி லேயே இக் குரல்கள் ஒலித்திருக்க வேண்டும். ஆன்ால் பல வருடங்கள் கடந்து தாமதமாக தற்போது லண்டனில் ஒலிக்க ஆரம்பித்திருப்பினும் இவை மிகவும் அவசியமானதும் ஆரோக்கியமானதும் ஆகும்.
தேசம் இதழ் 30
தமிழ் - முஸ்லிம் இன உறவுகள் 9

Page 12
6nigmri (Hijab) assolub 6th60m (3Dm3unfumagib (Islamophobia)
சேனனி
உலகெங்கும் வலதுசாரி அரசுகளும் ஊடகங்களும் ஆசிய, ஆபிரிக்க மக்களின் குறிப்பாக முஸ்லிம் மக்களின் மீதான தாக்குதலை ஓங்கி நடத்துகின்றன.
‘எங்களது கலாசாரத்துக்கு உட்பட்டு நடவுங்கள். அப்படி முடியாதென் றால் இங்கு வர வேண்டாம் என்று ஏதோ தகப்பன் தனக்கு எழுதி வைத்த காணித்துண்டு போல் இங்கிலாந்து பிரதமர் ரொனிபிளேயர் அண்மையில் கூறியது அனைவரும் அறிந்ததே. ஈராக்கில் அநாவசியமாக அரை மில்லியனுக்கும் மேலான அப்பாவி மக்களின் சாவுக்கு நேரடிக்காரணமான இவர் அமெரிக்க கிறிஸ்தவ வலதுசாரி தலைவர் களுக்கு ஆதரவாக இருந்துகொண்டு முஸ்லீம்களைப் பார்த்து எங்கள் கலாசாரத்துக்கு அடிபணியுங்கள் என்று கூறுவது சகிக்க முடியாதுள்ளது. ஏற்கனவே வெறுப் படைந்துள்ள ஏராளமான இளைஞர்களை பயங்கரவாதத்தை நோக்கித் தள்ளும் வேலைதான் இது.
இவர் சொல்லும் கலாசாரத்துக்கு எதிராகத் தான் மில்லியன் கணக்கான மக்கள் தெருத்தெருவாய் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். இவர் குறிப்பிடும் இந்த கலாசாரத்துக்கும் பெரும்பான்மை இங்கிலாந்து மக்களுக்கும் எதுவித தொடர்பும் இல்லை. ஜக் ஸ்ரோ, ஜோன் ரீட்
20 தமிழ் - முஸ்லிம் இன உறவுகள்

போன்றவர்கள் மக்கள் நலம் என்ற பெயரில் சுயநலமாக முஸ்லிம்களை வேதனைப்படுத்துகின்றனர். ஜனநாயக முறைகளுக்காவது இவர்கள் கட்டுப்படுவார்கள் என்று நப்பாசை கொண்ட சனங்களின் முதுகில் அடித்தார் ஜோன் ரீட், சில ஜனநாயக உரிமைகளை விட்டுக்கொடுக்கக் கூடிய காலகட்டத்தில் நாம் இருக்கின்றோம் என்று அவர் கூறிய போது நாம் பேச்சிழந்துவிட்டோம். கிட்லரைப்போல் முஸ்லிம்களைப் பொறுக்கி எடுத்து வதை முகாம்களில் புதைக்கும் நடைமுறை வெகுதூரத்தில் இல்லை என்று நாம் சந்தேகப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் ஜோன் ரீட் பயங்கரவாதத்துக்கு எதிரான போருக்கும் பாசிசத்துக்கு எதிரான போருக்கும் வேறுபாடில்லை என்று தெரிவித்துள்ளார்.
இவர்கள் அச்சப்படும் இங்கிலாந்து முஸ்லிம்களின் நிலை பற்றி நாம் கதைத்துத்தான் ஆகவேண்டும். இந்நாட்டில் மிகவும் ஒடுக்கப்படும் மக்களாகவும் மிகவும் வறுமையில் வாடுபவர்களாகவும் இருப்பவர்களின் மேல்தான் இவ்வளவு துவேசம் காட்டப்படுகின்றது. இங்கிலாந்து முஸ்லிம் களில் 35 வீத குடும்பங்கள் எந்தவித வருவாயும் அற்று வாடுகின் றன. 73 வீதமான முஸ்லிம் சிறுவர்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின் றனர். 28 வீதமான இளைஞர்கள் வேலையற்று இருக்கின்றனர். முஸ்லிம் கள் வாழும் பகுதிகள் நாட்டில் வறுமையான பகுதிகளாக இருக்கின்றது. இப்படியிருக்க உலகின் மிகப்பெரிய பணக்கார நாடு ஒன்றின் அரசாங்கம் இந்த வறுமையை வேலையின்மையை போக்க முயற்சி எடுக்கும் என்று சிலர் கனவு காணலாம். ஆனால் அதற்கு எதிர்மறையாகவே எல்லாம் நடக்கின்றது.
2001ம் ஆண்டிற்குப் பிறகு ஆசியர்கள் மத்தியிலான பொலிசின் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளது. 2 வருடத்திற்குள் ஆசியர்களை நிறுத்தி விசாரணை செய்வது அதிகரித்துள்ளது. இதை உள்துறை அமைச்சு பெருமையாக வெளியிடுகிறது. 47 வீத ஆசிய இளைஞர்கள் இஸ்லாமிய எதிர்ப்பு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நடைமுறைகளுக்கு ஆதரவாக இமாம்கள், பல்கலைக்கழக கல்வியாளர்கள், வியாபாரிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் என்று ஒரு சிறுபான்மையை தன்வசம் இழுத்து வைத்துள்ளது அரசாங்கம். ஏறத்தாள 5000க்கும் மேற்பட்ட முஸ்லிம் பில்லியனர்கள் வாழும் இங்கு இது சாத்தியப்படுவது ஒரு புதிரில்லை. இருப்பினும் 1.6 பில்லியனுக்கும் அதிகமாக வாழும் முஸ்லிம் வறிய மக்களை இந்த ஆயிரத்துச் சொச்ச முஸ்லிம் ஆதரவாளர்களை கொண்டு கட்டி ஆழலாம் என்று நினைப்பது தான் தவறு.
தமிழ் - முஸ்லிம் இன உறவுகள் 21

Page 13
இதில் அதிகூடிய அளவில் பாதிக்கப்படுபவர்கள் முஸ்லிம் பெண் கள் தான். அரச ஒடுக்கு முறைகளுக்கு மேலாக குடும்ப ஆணாதிக்க ஒடுக்குமுறைகளையும் அவர்கள் எதிர்நோக்கியுள்ளார்கள். அதற்கு உதவுமுகமாக முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் பாராளுமன்ற தலைவருமான ஜக்ஸ்ரோ முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவதற்கு எதிராக குரல் கொடுத்துள்ளார். குறிப்பிட்ட சில புத்திஜீவிகள் இதைப் பற்றிப் பிடித்துக் கொண்டு பிரச்சனை கிளப்புகின்றனர். ஹிஜாப் அணிவதை எப்படி நியாயப்படுத்துவது? மதமொன்றின் பெண்களின் மீதான அடிமைப் படுத்தலின் அடையாளத்துக்கு ஆதரவு கொடுக்கலாமா? என்று அவர்கள் ஓங்கிக் கத்துகின்றனர். அவர்களுக்கு முதல் தெரிய வேண்டியது ஹிஜாப் அணிவது முற்றுமுழுதாக மதம் சார்ந்த நடவடிக்கை அல்ல.
இன்று உலகெங்கும் கிறிஸ்தவர்களாலும் ஏனைய மதத்தவர்க ளாலும் கொண்டாடப்படும் கிறிஸ்மஸ் கூட ஒரு மதச்சடங்கல்ல. பதினெட் டாம் நூற்றாண்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக புற்றீசல் போல் கிளம்பிய வியாபார நடவடிக்கைகளின் மூலம் மாறிய பொருளாதார சமூக உறவுகளே அதன் தோற்றத்தின் அடிப்படை. இயேசு காலத்தில் இருந்து கொண்டாடப்படுவது போல் ஒரு பிரேமையை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். உண்மையில் 18ம் நூற்றாண்டுக்கு முந்திய தலை முறைக்கு கிறிஸ்மஸ், கிறிஸ்மஸ் காட் என்றால் என்னவென்று தெரியாது. மதத்தின் செல்வாக்கு காரணமாக கிறிஸ்மஸ்க்குள் இயேசு புகுந்து மதச்சடங்காகிப் போனது. நிலப்பிரபுத்தவத்தின் கை ஒடுங்கி முதலாளித் துவ புரட்சியின் ஆரம்ப கட்டத்தில் இது நிகழ்ந்தது.
இதுபோல் தான் நிலப்பிரபுத்துவத்தின் கை உச்சிக்கு வந்த பொழுது மதம் சமுதாயத்தின் பல்வேறு நடவடிக்கைகளை நிர்ணயித்தது. ஹிஜாப்பின் கதையும் இது தான். சுமேரியர் காலத்தில் இருந்து ஹிஜாப் அணியப்பட்டதற்கான ஆதாரங்கள் உண்டு. பல்வேறு மதத்தினரும் இதை அணிந்து வந்ததற்கான ஆதாரங்கள் உண்டு. (இந்துமதம், கிறிஸ்தவ LD5lb sll'ul') 6JD55T6T 600 g,60i(6565ë(5 (pGirl Umayyad and Abbasid Dynasties காலத்திலேயே இது மதத்துடன் இணைக்கப்படத் தொடங்கியது. பின்பு சவுதி அரேபியாவில் இஸ்லாமில் ஏற்பட்ட பிரிவான வாகாயிப் பிரிவு கொண்டு வந்த பல்வேறு ஷரியா சட்டதிட்டங்களில் இதுவும் ஒன்றானது.
22 தமிழ் - முஸ்லிம் இன உறவுகள்

குர்ஆனில் ஹிஜாப் அணிய வேண்டும் என்ற எந்தக் கட்டாயமும் எழுதப்படவில்லை. நபிகளின் மனைவிமார் ஹிஜாப் அணிந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. அக்காலத்தில் ஹிஜாப் அணிவது உயர்தரமாக அதுவும் பெண்களை இளைஞர்களை கவர்ச்சிப்படுத்தவுமே நிகழ்ந்தது.
நிலப்பிரதித்துவ வரலாறு முடிவுக்கு வந்த பொழுது இஸ்லாமிய நாடுகளில் இதற்கு எதிரான குரல் எழும்பியது. 1923ல் துருக்கியில் ஹிஜாப்புக்கு மறுப்புத் தெரிவித்தார்கள். அதே ஆண்டு லெபனான், சிரியா, துனிசியா முதலான நாடுகளில் பொதுமக்கள் மத்தியில் ஹிஜாப்பை துறத்தல் நடவடிக்கைகள் நிகழ்த்தப்பட்டது. ஈரானில் 1927ல் இருந்து 1941 வரை Reza Pahlavi ஹிஜாப்பை தடை செய்திருந்தார். இந்த ஆண்டு (2006) நவம்பர் 3ல் பாகிஸ்தான் புஸ்வார் உயர் நீதிமன்றம் பெண் வழக்கறிஞர்கள் ஹிஜாப் அணிவதற்கு தடைவிதித்தது. இவ்வாறு அனைத்து இஸ்லாமிய நாடுகளிலும் ஒடுக்குமுறைக்கான போராட்டம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது.
இருப்பினும் ஹிஜாப்பின் அரசியல் இங்கு முன்னணிக்கு வந்துள்ள மைக்கான முக்கிய காரணம் ஈராக் யுத்தமும் இவர்கள் கூறும் பயங்கரவா தத்துக்கு எதிரான யுத்தமுமே. இவர்கள் இதை முன்னிலைப்படுத்துவ தற்கான காரணம் முஸ்லிம்களை கட்டுப்படுத்த மட்டுமே. மதத்துக்கு எதிரான அல்லது பெண்கள் உரிமைக்கான எந்த புனிதக் காரணங்களும் அவர்களுக்கு இல்லை. மதம் பிற்போக்கானது, மதச்சடங்குகள் பல அடக்குமுறையின் வடிவங்கள் என்பது தெளிவானது. இஸ்லாம் மட்டுமன்றி கிறிஸ்தவ, இந்து, பெளத்த, யூத என்று அனைத்து மதங்களினதும் தேவை இன்று இல்லாமல் போய்விட்டது. மதங்களுக்கான வரலாற்றுத் தேவை இனிமேல் இல்லை என்று உறுதியாக கூறலாம். இருப்பினும் ஒரு குறிப்பிட்ட மதத்தை கடைப்பிடிப்பதற்கு தடையளிப்பது ஜனநாயகத் துக்கு புறம்பானது. எந்த மதத்தை பின்பற்றவும் விரும்பிய உடை அணிய வும் அனைவருக்கும் உரிமை உண்டு. இது ஒவ்வொருவரதும் அடிப்படை ஜனநாயக உரிமை. தடை செய்வது அல்லது மத, உடை அடிப்படையில் உரிமைகளை நிராகரிப்பது ஒடுக்குமுறைகளை அதிகரிக்க மட்டுமே
தமிழ் - முஸ்லிம் இன உறவுகள் 23

Page 14
உதவும். ஜனநாயகத்தை நாம் விட்டுக்கொடுக்க வேண்டியுள்ளது என்று ஜோன் ரீட் சொல்வது இதைத்தான். பிரான்சில் ஜாக் சிராக் செய்ததும் இதைத்தான். பிரெஞ்சு தொழிற்சங்க மற்றும் இடதுசாரி அமைப்புகள் இதற்கு ஆதரவளித்தன.
அரச கருமங்களில் இருந்து மதத்தை வேறுபடுத்திய வரலாறு கொண்ட பிரான்சில் பாடசாலையில் ஹிஜாப் அணிவதை தடுப்பது நியாய மானதே. அதை தடுப்பது மதம், பொதுமக்கள் நடவடிக்கைகளில் தலை யிடும், வரலாற்றைப் பின்னோக்கித் தள்ளும் செயற்பாடு என்று அவை வாதிட்டன. ஹிஜாப் போட்டு வந்ததற்காக ஒரு மாணவி பாடசாலையை விட்டு வெளியேற்றப்பட்டதோடு அவர்கள் விவாதங்கள் ஒரு முடிவுக்கு வந்தன. பாடசாலைக்காகவும் அரசாங்கத்திற்காகவும் கதைப்பதா அல்லது வெளியேற்றப்பட்ட மாணவிக்காக போராடுவதா என்ற கேள்வி யில் வேற்றுக்கருத்து ஏற்பட முடியாது. தொழிற்சங்கங்களுக்கு அவர்கள் அரசாங்கம் சார்ந்து எடுத்த முடிவு இந்த மாணவிக்காக போராட்டத்தை நடத்த முட்டுக்கட்டையாக நின்றது. இத்தருணத்தில் புரட்சிகர இடதுசாரி கள் என்ற கட்சி மட்டும் அந்த மாணவியின் உரிமைக்காக போராட உடனடியாக முன்வந்தது. அவர்கள் மட்டுமே அரசாங்க தடைக்கெதிரான சரியான வாதத்தை தொடர்ந்து வைத்து வந்தார்கள்.
இதே தடை இங்கிலாந்தில் நடந்த பொழுது இங்குள்ள தொழிற் சங்கங்கள் முற்றிலும் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்தன. கேள்வியின்றி ஹிஜாப்புக்கு ஆதரவாக தங்களை அவர்கள் வெளிப்படுத்தினர். ஹிஜாப் அணிந்த ஆசிரியை பாடசாலையை விட்டு வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து இந்த பிரச்சனை விவாத மேடைக்கு தள்ளப்பட்டது. கல்வித் துறையில் ஹிஜாப் அணிவது பல்வேறு சிக்கல்களை எழுப்புகின்றது. முகத்தை மூடிமறைத்த ஆசிரியையிடம் இருந்து மாணவர்கள் கற்றுக் கொள்வதால் அவர்களின் கல்வி வளர்ச்சி பாதிக்கப்படுகிறதா? என்ற முக்கிய கேள்வி எழும்புகிறது. மனிதர்களுக்கிடையிலான உரையாடலில் முகத்திற்கான பங்கு ஆசிரிய மாணவர்களின் நெருக்கம் எவ்வளவு தூரம் கல்வி வளர்ச்சிக்கு உந்துதலாய் இருக்கின்றது போன்ற பல்வேறு
24 தமிழ் - முஸ்லிம் இன உறவுகள்

சிக்கலான கேள்விகளை எழுப்புகின்றது. இதற்கு சுருக்கமான விடை கிடையாது. ஹிஜாப் அணிவது பல்வேறு தொழில்களை (பெரும் லொறி கள் ஒடுவது, வழக்கறிஞர் தொழில் உட்பட) செய்வதற்கு தடங்கலாக இருக்கும் என்று பொதுவாக சொல்லலாம். ஆனால் அது ஒரு முழுமை யான வரைவு அல்ல. கைகள் இல்லாத ஓவியக் கலைஞர்களையும் கண் தெரியாத பாடகர்களையும் இசைஞர்களையும் உடலின் ஒரு பாகமும் உபயோகமற்று முளை மட்டும் வேலை செய்யும் விஞ்ஞானிகளையும் என்று எத்தனையோ சாதனைகளை சாதித்த மனித குலத்திற்கு சேவை செய்ய ஹிஜாப் பெரும் தடை அல்ல. இருப்பினும் ஒப்பீட்டளவில் ஹிஜாப் அணிவதை முன்னிலைப்படுத்த முடியாது.
எவ்வளவு தூரம் ஹிஜாப் அணிவதற்கான உரிமைக்காக குரல் கொடுக்கிறோமோ அதே அளவு ஹிஜாப் அணியாமல் இருக்கும் உரிமைக்காகவும் நாம் குரல் கொடுக்க வேண்டும். இந்த விடயத்தில் தான் பல இங்கிலாந்து தொழிற்சங்கங்கள் தவறு செய்கின்றன. பல குடும்பங்களில் வற்புறுத்தலாலேயே ஹிஜாப் அணிகின்றனர். அதற்கு எதிராக கல்வி புகட்ட வேண்டியதும் தொழிற்சங்கங்களின் கடமை தான். ஆனால் அதைப்பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை.
தேசம் இதழ் 30
தமிழ் - முஸ்லிம் இன உறவுகள் 25

Page 15
புலிகளின் நான்காம் ஈழப்போருக்கான முஸ்தீபும் முஸ்லிம்கள் மீதான இரண்டாம் இனச் சுத்திகரிப்புக்கான ஒத்திகையும
எளப்.எம்.எம்.பவுதிர்
தம் தாயகப் பிரதேசமான யாழ்குடாவில் இருந்து புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப் பட்டதை கவனயீர்ப்பு ஊர்வலம் மூலம் முஸ்லீம் மக்கள் நினைவு கூர்ந்தனர். கொழும்பு லிப்டன் சதுக்கத்தில் டிசம்பரில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் நிரந்தர சமாதானத்தை அடைய அரசையும் புலிகளையும் வலியுறுத்தினர்.
மறுபுறம் மாவீரர் தின உரையில் தமிழர்கள் மீதான சிங்கள அடக்குமுறை குறித்து புலிகளின் கரிசனையை பிரபாகரன் வெளிப்படுத் தினார்.அதுபோல் புலிகளின் முஸ்லிம்கள் மீதான அடக்கு முறையினை யும் பிரதியீடு செய்யும் சந்தர்ப்பமும் ஏற்படுகிறது. குறிப்பாக மூதூரை ஒரு பிரம்மாண்டமான வதைமுகாமாக மாற்றிய புலிகளின் அடக்குமுறை புலிகளின் முஸ்லிம்கள் மீதான அடக்குமுறையின் கிட்டிய உதாரணமா கும். எனினும் காலியிலும் மூதூரிலும் தமிழர்கள் மீதான பதில் தாக்குதல் களை பாரிய அளவில் எதிர்பார்த்த புலிகளின் தோல்வியும் இவ்வுரையில் புலப்படாமல் இல்லை.
எந்தத் திருமலையில் 1960களில் முஸ்லிம் அரசும் தமிழ் அரசும் என இரு அரசுகள் குறித்து தந்தை செல்வா பிரகடனம் செய்தாரோ அந்தப் பிரதேச மக்கள் புலிகளின் இனச்சுத்திகரிப்பின் கெடுபிடிகளுக்கு உள்ளாகி துயர்பட்டனர். மேலும் கிழக்கிலே ஒன்று அல்லது ஒன்றுக்கு
26 தமிழ் - முஸ்லிம் இன உறவுகள்

மேற்பட்ட பிரதேச சபைகள் குறித்து பல்லின சூழலை கருத்தில் கொண்டு பண்டா - செல்வா ஒப்பந்தம் செய்த தந்தை செல்வாவின் கருத்துக்கள் இன்று தீர்க்கதரிசனமாக புலப்படுகையில் காலாவதியான தனித் தமிழீழ வரசு சிந்தனைகளில் பிரபாகரன் இன்னும் மூழ்கியிருக்கிறார். சுயநிர்ணய உரிமை கோரும் சமூகங்களை கிள்ளுக்கீரை என நினைத்திருக்கிறார்.
மேலும் இருகட்சி இணக்கப்பாடு குறித்து பொம்மலாட்டம் எனக கேலி செய்யும் பிரபாகரனுடன் இவ்விணக்கப்பாட்டினை ஒரு ஜோடனை என எண்ணி வசதிக்கேற்ப சிங்கள பேரினவாதம் பேசுகிறார் றவுப் ஹக்கீம். இந்த றவுப் ஹக்கீமும், ஒப்பந்தங்கள் மூலமாக சிங்கள பேரின வாத ஆட்சியாளர்களுடன் சமரசம் செய்து கொள்கின்ற பிரபாகரனும் தங்களது சமூகங்களின் ஏகப்பிரதிநிதிகள் எனத் தங்களைத் தாங்களே பறைசாற்றுகின்றனர். இவர்கள் தனிமனித சமூகப் பலவீனங்களில் ஆழ்ந்தி ருக்கின்ற மக்களினை ஆதாரமாக கொண்டு உயிர்வாழ்கின்றனர். அத னால் தெற்கிலே சிங்கள தலைமைகள் புதிய ஆரோக்கியமான திசையில் பயணிப்பதற்கான ஆழ்நிலை ஏற்படுவதைக் கண்டு கிலி கொண்டு உள்ளார்கள்.
முஸ்லிம்கள் குறித்து ஒரு வார்த்தை தானும் பிரபாகரனின் மாவீரர் உரையில் குறிப்பிடப்படவில்லை. இது பிரபாகரனின் அல்லது புலிகளின் மமதையினையும், மறுபுறம் இப்போக்கு முஸ்லிம்களைத் தாக்குவது என்பது தமதுரிமை என புலிகள் வக்கிரமாக செயற்படுகின்ற கொடுரத்தினையும் உள்ளடக்கி இருக்கிறது. புலிகள் 1990 அக்டோபரில் வடமாகாண முஸ்லீம்களை விரட்டியடித்து கிழக்கு மாகாண முஸ்லிம்க ளைத் கட்டம் கட்டமாக அதே ஆண்டிலே ஆங்காங்கே கொன்றழித் தனர். இவ்வாறு முஸ்லிம்கள் மீதான இனப்படுகொலையினையும் (genocide) 36013 Big55a5fligoljub (ethnic cleansing) selyst,0335pbg560Tj. அதன் பின்னர் இலாப நட்டக் கணக்கினை, உலக அரசியல் பின்னணிக ளுடன், மாற்றங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து புதிய உபாயங்களுடன் மேற்கொள்ளப்பட்ட ஒத்திகைதான் மூதூர் மீதான புலிகளின் முற்றுகை. அதன் விளைவாய் நிகழ்ந்த முஸ்லீம்களின் பாரிய வெளியேற்றம். திட்டமிட்ட முஸ்லிம் இளைஞர்கள் மீதான படுகொலை. மாவிலாறும் மூதூரின் மீதான புலிகளின் முற்றுகையும் காரணகாரியத் தொடர்பற்றவை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. மூதூர் முஸ்லிம்கள் தங்களது அரசியல் தனித்துவத்தைப் பேணி வந்துள்ளனர். அது மட்டுமல்ல திரு கோணமலை மாவட்டத்திலுள்ள முஸ்லிம்களும் பல் வேறுபட்ட புலிகளின்
தமிழ் - முஸ்லிம் இன உறவுகள் 27

Page 16
நெருக்கடிக்கு மத்தியில் தமது தனித்துவத்தை நிலைநாட்டிவந்துள்ளனர். இது புலிகளை மிகவும் ஆத்திரமூட்டி வந்திருக்கின்றது. குறிப்பாக, கமாதானகாலச் சூழ்நிலையில் புலிகளுக்கும் மூதூர், தோப்பூர் முஸ்லிம்களுக்குமிடையிலான முரண்பாடுகள், அவை தோற்றுவித்த சிறுசிறு தமிழ்-முஸ்லிம் கலவரச் சூழ்நிலைகள் என்பவற்றினுாடாக இதனைக் காணமுடிகின்றது.
போர்நிறுத்த ஒப்பந்தத்துடன் 2002ம் ஆண்டு ஆரம்பத்திலேயே முஸ்லிம்கள் மீதான புலிகளின் கட்டாயப் பணப்பறிப்பு, ஆட்கடத்தல் சம்பவங்கள் இடம்பெற்றது. இதன் எதிர்விளைவுகள், மார்ச் 2003 இல் பாரிய அளவில் ஆர்ப்பாட்டமாக, கலவரமாக மாறியது. இக்கலவரங்களின் எதிரொலி, வாழைச்சேனையிலும் பிரதிபலித்தது. புலிகளின் முஸ்லிம் எதிர்ச் செயற்பாடுகள் தமிழ்-முஸ்லிம் மக்களை இன முரண்பாடுகளுக்குள் தள்ளியது. பரஸ்பர சந்தேகமும் அச்சமும் அவர்களது இன செளஜன்யத் திற்குத் தடையாக அமைந்தன.
புலிகளின் ஊதுகுழல்கள், உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் முஸ்லிம் ஊர்காவற்படையினர் அடிப்படைவாதக் குழுக்கள் என்று முஸ்லிம்கள்மீது பழிசுமத்தின. அத்துடன் தங்களது (புலிகளது) முஸ்லிம்கள் மீதான வன்முறைகளுக்கு மூன்றாவது சக்திதான் காரண மென்றும் குற்றஞ்சாட்டி வந்தன. இதற்கு முட்டுக்கொடுப்பது போல புலிகளின் வெற்றியிலேயே முஸ்லிம்களின் அரசியல் வெற்றியும் (win situation) தங்கியுள்ளதென சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவுப் ஹக்கீம் விடுத்த அறிக்கை அமைந்தது. சமாதானத்திற்குத் தடையாக முஸ்லிம்களிலும் ஒரு பகுதியினர் (தீவிரவாத) செயற்படுவதாக றவுப் ஹக்கீம் குறிப்பிட்டமையினை புலிகளின் ஊடகங்கள் இன்றுவரை இழுத்துப் பிடித்துக் கொண்டுள்ளன.
இந்தக்காலப் பகுதியில்கூட பரஸ்பரமாகத் தமிழ்-முஸ்லிம் மக்கள் அகதிகளாகத் தலா சுமார் 150 குடும்பங்கள் மட்டக்களப்புக்கும் கந்த ளாய்க்கும் முறையே இடம்பெயர்ந்தனர். மேலும் இந்தக் காலப்பகுதி யிலே மூதூர் கிழக்கு மக்கள் தாக்கியபோது கொல்லப்பட்ட இரண்டு புலி உறுப்பினர்களான சங்கர் என அழைக்கப்படும் மகேஸ்வரன், குட்டி என அழைக்கப்படும் தர்மலிங்கம் கமலநாதனின் எட்டாம் நாள் ஞாப
28 தமிழ் - முஸ்லிம் இன உறவுகள்

கார்த்த நிகழ்வின்போது வெளியிட்ட துண்டுப் பிரசுரத்தில் முஸ்லிம்களை விழித்து, சங்கரினதும் குட்டியினதும் மரணம் விதைக்கப்பட்டிருப்பதாக வும், அவர்களது விளைச்சலால் மூதூர் மக்கள் விரட்டி அடிக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. அன்று தொடக்கம் மூதூர் முற்றுகை வரை பல துண்டுப் பிரசுரங்கள் புலிகளின் முகவர் நிறுவனங்களால், வெளியிடப்பட்டன. அவ்வப்போது சமாதான ஒப்பந்தங்கள் புலிகளுக்கும். முஸ்லிம்களுக்கும் இடையே (பள்ளிவாசல் நிர்வாகிகள்) ஏற்படுத்தப் பட்டாலும் அவை வெறும் காகிதங்களாக நடைமுறையில் மதிக்கப்பட்டன என்பதற்கு மூதூரில் நிகழ்ந்த அண்மைய நிகழ்வு முடிவான ஒன்றாக அமைகின்றது. ;&* ..
முஸ்லிம் ஆயுதக் குழுவினர் தோற்றம் பெறுவதாகவும் அவர்கள் கருணா குழுவினர் போல் தங்களது தமிழீழத் தாயகத்திற்கு அச்சுறுத்த லாக அமைவார்கள் என்ற பரப்புரைகளை புலிகள் மேற்கொள்வதில் தீவிரம்காட்டினர். ஏனெனில் தாங்கள் செய்யப் போகின்ற செயற்பாடுகளை தமிழீழத்தின் இறுதி இலக்காக அல்லது முடிவான தீர்வாகக் கருதுகின்ற தமிழ் மக்களை (புலம்பெயர்ந்தவர்கள்) சங்கடத்திலாழ்த்தாமல் நியாயப் படுத்தும் மனப்பாங்கினைத் தோற்றுவிக்கின்ற வகையில் இப்பரப்புரைகள் மேற்கொள்ளப்பட வேண்டி இருந்தது. குறிப்பாக காத்தான்குடி, ஏறாவூர், அழிஞ்சிப்பொத்தானை படுகொலைகளும் வட மாகாண வெளியேற்றமும் இப்பரப்புரைகளின் பின்னணியிலேயே இடம் பெற்றன. மறுபுறம் முஸ்லிம் களை இன்று மேற்கு உலகு பயங்கரவாதிகளாகக் காட்டும் போக்கை புலிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகின்றனர்.
இன்று கிழக்கின் தனித்துவம் குறித்து எழுந்துள்ள அரசியல்இராணுவ நடவடிக்கைகளும் கிழக்கு முஸ்லிம்கள் மீது புலிகளை சந்தேகம் கொள்ளவைத்துள்ளது. எனவே மூதூர் முஸ்லிம்கள் மீதான முற்றுகை மூலம் புலிகள் கிழக்கு முஸ்லிம்களை கிலிகொள்ள வைத்துள் ளனர். மேலும் ஒரு கல்லில் இரண்டு மாங்காய்கள் என இராணுவத்தி னரைக் கொண்டே முஸ்லிம்கள் மீதான தாக்குதலையும மேற்கொண்டுள் ளனர். மறுபுறம் தங்களுக்கெதிராக குரல் எழுப்பும் இளைஞர்களை அடையாளம் கண்டு அழித்து ஒழித்தும் உள்ளனர். இவற்றினைச் செய்வதற்கான அகப்புறச் சூழ்நிலைகளை தந்திரோபாயமாகச் செய்து முஸ்லிம்களை வெளியேற்றினர்.
தமிழ் - முஸ்லிம் இன உறவுகள் 29

Page 17
இந்த அதிரடி நடவடிக்கை எதிர்காலத்தில் கிழக்கு முஸ்லிம்கள் மீதான தங்களின் தாக்குதலுக்கு, தங்களது இராணுவ பலத்திற்கு எடுத்துக்காட்டாக செய்யப்பட்டதாகும். மேலும் திருகோணமலைத் துறை முகத்தினை இலங்கை இராணுவம் தக்க வைத்திருக்கின்ற மூதூரைச் சார்ந்த கிராமங்கள் யாவற்றினையும் கட்டுப்படுத்திக் கொண்டு வருகின்ற செயற்பாடுமாகும்.
எவ்வாறெனினும் இலங்கை அரசின் இராணுவ எதிர்த்தாக் குதல்கள், களநிலை யதார்த்தங்கள் புலிகளைப் பின்வாங்கச் செய்திருக் கின்றன. தங்களைப் புலிகள் பாதுகாப்பார்கள் என்ற நம்பிக்கையிலிருந்த மூதூர் தமிழ் மக்களும் அகதிகளாகக் காட்டுப் பிரதேசங்களினூடாக அழிவுகளைச் சந்தித்தே இடம்பெயர்ந்தார்கள். சேருவில சிங்கள மக்களும் து முற்றுகை தொடங்கும் முன்னரே மாவிலாறு பிரச்சினை சூடுபிடிக்கத் தொடங்கவே இடம்பெயர்ந்தனர். ஒட்டுமொத்தமாக தமிழ், முஸ்லிம் சிங்கள மக்களின் வெளியேற்றம் அதிலும் முஸ்லிம் மக்களிடம் கொள்ளை யிட்டமை, முற்றுகையிட்டுத் துன்புறுத்தியமை, முஸ்லிம் இளைஞர்களைக் கடத்திக் கொன்றமை, தங்களது தந்திரோபாயத்தால் இராணுவத்தின்மீது முஸ்லிம்கள் அகதிகளாய் தஞ்சமடைந்திருந்த இடங்களிலிருந்தே தாக்கியமை, மறுபுறம் புலிகளின் பின்வாங்கிய நகர்வுகள் தமிழர்களையும் இராணுவத் தாக்குதல்களுக்குட்படுத்தி உள்ளது.
மொத்தத்தில் புலிகளின் தன்முனைப்பான மூதூர் முற்றுகை முஸ்லிம்களை மட்டுமல்ல தமிழர்களையும் பாதித்திருக்கிறது. முஸ்லிம் களைப் பொறுத்தளவில் மீண்டும் ஒரு இனப் படுகொலையும் இனச்சுத்தி கரிப்பும் அரங்கேற்றப்பட்டிருக்கின்றது. ஒருபுறம் புலிகளும், மறுபுறம் இராணுவமும் பொதுமக்களை அழிவுக்குட்படுத்தி இருக்கின்றன. இலங்கை அரசு தனது மக்களை பாதுகாக்க வேண்டிய தார்மீகக் கடமையிலிருந்து தப்பிவிடமுடியாது. சகல மனித அழிவுகளும் கேள்விக்கு உட்படுத்தப்பட வேண்டும். மூதூரிலிருந்து இடம்பெயர்ந்த தமிழ் முஸ்லிம் மக்கள் மீண்டும் ஒன்றாக வாழவே விரும்புகின்றார்கள்.
தேசம் இதழ் 29
30 தமிழ் - முஸ்லிம் இன உறவுகள்

afras6m
தமிழ் பேரினவாதம்
சட்டத்தரணி நிஸப்தார் மொகமட்
சிங்கள பேரினவாதிகள் இந்த உலகத்திலே தங்களுக்குரிய முதலும் முடிவுமான நாடு இலங்கை தான் அதில் யாருக்கும் பங்கில்லை என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருப்பது போலவே விடுதலைப் புலிகளின் நடவடிக்கையும் அமைந்துள்ளது. தமிழருக்கான முதலாவது என்றில்லாவிட்டாலும் இறுதியான தமிழ் நாடு தமிழீழம். அதில் யாருக்கும் பங்கில்லை என்ற நிலைப்பாடே அது. ஆகவே விடுதலைப் புலிகள் தமது இருப்பையும் தமிழீழத்தின் இருப்பையும் அதற்கான நிரந்தரப் பாதுகாப்பையும் ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளனரே அன்றி மற்ற விடயங்கள் தொடர்பாக அவர்களிடம் யாரும் எதையும் எதிர்பார்க்க முடியாதுள்ளது. அதாவது, சிங்கள பேரினவாதிகளிடம் இருந்து தமிழினம் எதையும் எப்போதும் பெற்றுவிட முடியாது என்ற பாலசிங்கத்தின் கூற்றினை, விடுதலைப் புலிகள் இலங்கைச் சோனகர் விடயத்தில் கொண்டுள்ள போக்கு அப்படியே பிரதிபலிப்பதைக் காணலாம். இதை உறுதி செய்வதாக பின்வரும் சம்பவங்கள் அமைகின்றன.
முதலாவது, ஆரம்ப ஆறு கட்டப் பேச்சுவார்த்தைகளில் இலங்கை சோனகர் தனிப்பிரிவாகக் கலந்து கொள்வதை விடுதலைப் புலிகள் தடுத்தமை. இதற்கான மதியுரைஞரின் விளக்கம்: ‘'இலங்கை முஸ்லிம்கள் தமக்குள் ஒற்றுமையாகி தமக்குள் ஒரு தலைமையைத் தேர்ந்தெடுங்கள்,பறகு தனிப்பிரதித்துவம்பற்றி யோசிக்கலாம்” என்பதே. தமிழ் - முஸ்லிம் இன உறவுகள் 3.

Page 18
நான் ஏற்கனவே, ‘தேசம்' சஞ்சிகையில் அடையாள இருட்டடிப்பு என்ற கட்டுரையில் சுட்டிக் காட்டியது போன்று முன்னைய அரசும் இதே மாதிரியான விளக்கத்தை விடுதலைப் புலிகளுக்குச் சொல்லியிருக்க, அதாவது தமிழ்த் தரப்புகள் எல்லோரும் ஒன்றுபட்டு ஒரு பொதுத் தலைமையைத் தயார் செய்யுங்கள், அதன் பிறகு பேச்சுவார்த்தை பற்றி யோசிக்கலாம் என்றிருந்தால், இன்றும் பேச்சுவார்த்தை பற்றி விடுதலைப் புலிகள் மூச்சுவிட முடியாது. ஏனெனில், டக்ளஸ் தேவானந்தா, ஆனந்த சங்கரி, இப்பொழுது கேணல் கருணா இன்னும் யார் யாரோ எல்லாம் தமிழினத்தைப் பிரதிநிதித்துவப் படுத்துவதை விடுதலைப் புலிகள் மறுதலிக்க முடியாது.
இரண்டாவது, விடுதலைப் புலிகளின் இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை (ISGA), இதில் 100சதவீதம் விடுதலைப் புலிகளின் பிரதிநிதித்துவம் காணப்படுகின்றது. தமிழினத்தை சிங்களப் பிரதிநிதிகள் எவ்வாறு புரிந்து கொள்ள முடியாதோ, முழுமையாகப் பிரிதிநிதித்து வப்படுத்த முடியாதோ, அது போலவே இலங்கை சோனகரை தமிழ்ப் பிரதிநிதிகள் அதிலும் குறிப்பாக விடுதலைப் புலிகள் முழுமையாக பிரதிநிதித்துவப்படுத்த முடியாது. மேலும், இந்த ISGA வடக்கும், கிழக்கும் ஒன்றிணைக்கப்பட்ட ஆட்சிப் பிரதேசத்தை நிர்வாகிக்கச் செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் ஆலோசனையாகும். இந்த இணைப்பு ஏற்பட்டால் இலங்கை சோனகரின் சனத்தொகை பரம்பல் விகிதாசாரம் இப்போது உள்ளதை விட அரைப் பங்காகக் குறைவதோடு, பிரதிநிதித்துவமே இல்லாத நிலையில் தமிழீழத்தின் அடிமைப் பிரஜைகளாக தாங்கள் வருவதை எந்தச் சோனகரும் விரும்பமாட்டார்கள்.
ஆனால், உத்தேச ISGA இனி எப்போதாவது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டின் இலங்கைச் சோனகருக்கு அதில் நியாயமான பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும். மூன்றாவதும் மிக மோசமானதுமான சம்பவம் 2004 டிசம்பர் சுனாமிக்குப் பின்னான மீள்கட்டுமான ஏற்பாடுகளாகும். சுனாமி கொடியது. ஆனால், விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு வெட்கித் தலைகுனிய வைப்பது. இலங்கைத்தீவில் சுனாமியால் பாதிக்கப்பட்ட சகல இன மக்களிலும் 50 சதவீதத்திற்கு மேலானோர் இலங்கை சோனகர். இது தமிழீழப் பகுதியில் மாத்திரமல்ல. தென்னிலங்கை முற்றிலுமாகும். இந்த மீள் கட்டுமானக் கட்டமைப்பில் இலங்கைச் சோனகர் சேர்க்கப்படவில்லை. சேர்க்கப்பட வேண்டும் என்று விடுதலைப் புலிகள் வேண்டுகோள் விடுக்கவுமில்லை. விடுதலைப் புலிகளால் சிங்களவர்க
32 தமிழ் - முஸ்லிம் இன உறவுகள்

ளுக்குக் கொடுக்கப்பட்ட மரியாதை, சக மொழிபேசும் பாதிக்கப்பட்ட இன்னொரு இனத்துக்குக் கொடுக்கப்படவில்லை. இதைவிட ஆத்திர மூட்டும் செயலாக திரு. சு.ப. தமிழ்செல்வனின் அறிக்கை அமைந்தி ருந்தது. “மீள்கட்டுமான அமைப்பில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் தொடர்பாக அவர்கள் அரசாங்கத்துடன் பேசி ஒரு முடிவுக்கு வர வேண்டும்” என்பதே அவரது கூற்று.
அண்மையில் ஐரோப்பிய இலவச தமிழ்ப் பத்திரிகை யொன்று கிழக்கண்டவாறு அங்கலாய்த்துக் கொண்டது. “அதிகாரம் அற்ற இந்த சுனாமி மீள்கட்டுமான அமைப்பை விடுதலைப் புலிகளிடம் தர இழுத்த டிக்கும் இலங்கை இனவாத அரசு எப்படி எமது சுயநிர்ணய உரிமை பற்றி சிந்திக்கும்?” என்று அது அங்கலாய்த்திருந்தது. இந்த கேள்வியை இலங்கை சோனகர் விடுதலைப் புலிகளிடம் கேட்டால் அவர்களிடமிருந்து என்ன பதிலை எதிர்பார்க்கலாம்?.
இந்த சுனாமி மீள்கட்டமைப்பு விடயம் மிக இலகுவான ஆனால் சிக்கலாக்கப்பட்ட ஒரு விடயம் என்பதை நியாய சிந்தையுள்ள எவரும் உணர்ந்துகொள்வர்.
இலங்கை அரசு வேண்டுமென்றே இலங்கை சோனகரை புறந் தள்ளி, அவர்களின் மூலமாகவே இந்த முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, விடுதலைப் புலிகளை இலாவகமாக வெளித்தள்ள அல்லது விடயத்தை இழுத்தடிக்க முயற்சித்தது. விடுதலைப் புலிகள் இதை மிகத் தெளிவாகப் புரிந்து கொண்டு, வெளிநாடுகளின் அழுத்தத்தை இலங்கை அரசுக்குக் கொடுப்பதன் மூலம் இந்த மீள்கட்டுமான அமைப்பில் தன்னைச் சம பங்காளியாக்கி அது சாத்தியமாகும் பட்சத்தில் 1SGA இதற்கான தனது ஒத்திகை நிர்வாகத்தை இதனுடாக வெளிப்படுத்தத் திட்டமிட்டிருந்தது. ஆனால், அவர்களின் ராஜதந்திரத்தில் சிக்கல் ஏற்பட்டுவிட்டது.
இலங்கை சோனகர் கோரிக்கை விடாமலேயே, அவர்களையும் பங்காளிகளாக்கும்படி இலங்கை அரசுக்கும், வெளிநாட்டுச் சக்திகளுக்கும் விடுதலைப் புலிகள் வேண்டுகோள் விடுத்திருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால், 1999 ம் ஆண்டுச் சம்பவம் ஒருவேளை மறக்கப்பட்டிருக்கும். ISGA வில் கூட சிறியளவிலான நம்பிக்கை ஏற்பட்டிருக்கும். இந்த அரிய சந்தர்ப்பம் தவறவிடப்பட்டுள்ளது.
தமிழ் - முஸ்லிம் இன உறவுகள் 33

Page 19
இதற்கெல்லாம் காரணம், நான் ஏற்கனவே கூறியபடி விடுதலைப் புலிகளுக்குத் தேவைப்படுவது தமது இருப்பு, தமிழினத்தின் இருப்பு, அதன் பாதுகாப்பு என்பவையே. இவை தவிர்ந்த எதுவும் அவர்கள் பிரச்சினை இல்லை. இவர்களால் தவிர்க்கப்பட்டவற்றில் இலங்கை சோனகரின் விவகாரமும் அடங்கும்.
இத்தகைய கள நிலவரங்களினூடாகப் பார்க்கும் போது, விடுத லைப் புலிகள் இன்று வெளிநாட்டு நிர்ப்பந்தங்களுடனேயே தமது அரசியல் பயணத்தை மேற்கொள்கின்றனர். வி. புலிகள் தமது படையணி களை தென் தமிழீழத்துக்கு வெளியே தெற்கு நோக்கி நகர்த்தினால் அதற்கு இலங்கை அரசு பெரிதாக ஒன்றும் செய்யத் தேவையில்லை. ஒவ்வொரு இராணுவ வீரரின் சாவையும் இலங்கை அரசு, வி. புலிகளின் எல்லை கடந்த பயங்கரவாதமாகவே உலகிற்குக் காண்பிக்கும். ஆகவே, வி.புலிகள் இனியொரு பாரிய தாக்குதலை தனது கட்டுப்பாடு தவிர்ந்த ஏனைய பகுதிகளில் நடத்துமானால் அது அவர்களுக்கெதிரான பிரச்சாரத் திற்கே வழிவகுக்கும்.
விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வெளியே தாக்குதல் நடத்தாமல் இருப்பது ராஜபக்ஷ அரசாங்கத்திற்கும் அவரது பதவிக்கும் வலிமை சேர்க்கும். இலங்கைத் தீவில் துப்பாக்கி வேட்டுக்கள் அதிகமாக ஒலிக்காத தன்மை சர்வதேச சமூகத்தை இலங்கையில் மேலும் அக்கறை கொள்ளச் செய்யும். இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்தைப் பயன்படுத்தி விடுதலைப் புலிகளை ஜனநாயகப்படுத்தல் என்ற போர்வையில் தமிழரின் நியாயமான அரசியல் உரிமைக்கு ஆப்பு வைக்க முயற்சிக்கும்.
இதைவிட விடுதலைப் புலிகள் இலங்கை சோனகரைப் புறந் தள்ளிய தீர்வொன்றுக்குத் தயாராகுவார்களேயானால் அது புதிய பாலஸ்தீ னத்தின் தன்மைக்கு வி.புலிகளின் ஆட்சிப் பிரதேசத்தைக் கொண்டு வரும். இலங்கை அரசு நிலையை தமக்குச் சாதகமாக பயன்படுத்தி தமிழினத்தை நிரந்தரப் பிரச்சினைக்குள் வைத்திருக்க முடியும் என்பது வெளிப்படையான இரகசியமாகும்.
இத்தகைய சாத்தியபாடுகளை எல்லாம் கணக்கில் எடுக்காமல் இலவச பத்திரிகை ஒன்று மாசி மாத இறுதியில் இடம்பெற்ற இருதரப்பிலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஜெனிவா மாநாடு ஒரு இறுதிச் சந்தர்ப்பம்’ என்று
34 தமிழ் - முஸ்லிம் இன உறவுகள்

கூறுகின்றது.
சிங்கள பேரினவாதம் ஒருபோதும் தமிழரின் நியாயமான உரிமைகளை ஏற்காதென்றால், ஏன் இந்த இறுதிச் சந்தர்ப்பம்? ஏன் வலிந்து வலிந்து சிங்கள அரசுக்கு சந்தர்ப்பங்கள் கொடுக்கப்படுகின்றன? விடுதலைப் புலிகளுக்கு சர்வதேச சமூகத்தைப் புறந்தள்ளி ஒரு தனி நாட்டை பிரகடனப்படுத்தும் சக்தி உள்ளதென்றால், தென் ஆபிரிக்கா போன்ற ஏதோ ஒரு நாடு அங்கீகாரம் தரத் தயாரென்றால் தமிழீழப் பிரகடனத்துக்கு ஏன் இந்தத் தாமதம்? ஆக, தமிழ் ஊடகங்கள் கூறுவது போன்று தனிநாட்டுப் பிரகடனம் அவ்வளவு இலகுவானதல்ல.
பல்லின மக்கள் கொண்ட நாட்டை இருவின நாடாகப் பார்ப்பதை விடுதலைப் புலிகள் முதலில் நிறுத்தி, சண்டை நிறுத்த, சமாதான, இறுதித்தீர்வு பேச்சுவார்த்தைகளில் இலங்கை சோனகரைப் புறந்தள்ளாது பல்லின அடிப்படையில் தீர்வொன்றை ஆராய்ந்தால், சர்வதேச சமூகம் தனது நேசக்கரத்தை நீட்டும். இனங்களுக்கிடையே புரிந்துணர்வு அதிகரிக் கும். புரிந்துணர்வு அதிகரித்தால் இலக்குகளை அடைவதும் சுலபமாகும்.
தேசம் இதழ் 26
தமிழ் - முஸ்லிம் இன உறவுகள் 35

Page 20
முஸ்லிம்களின் பிரச்சினை பார்க்கவில்லை கேட்கவில்லை பேசவில்லை.
த. ஜெயபாலனி
மாவீரர் நாள் உரையில் முஸ்லிம் சமூகம் பற்றிய நிலைப்பாட்டை வி.புலிகளின் தலைவர் பிரபாகரன் முன்வைக்கத் தவறியுள்ளார். சுனாமியால் முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டார்கள் என்ற ஒரு குறிப்பைத் தவிர அச்சமூகத்தைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. தமது பாரம்பரிய பிரதேசங்களில் இருந்து 15 ஆண்டுகளுக்கு முன் விரட்டப்பட்ட, இன்றும் தமிழீழ எல்லைகளுக்குள் வாழும் கொல்லப்படும் ஒரு சமூகம் பற்றி பிரபா மெளனமாக இருந்துள்ளார்.
மாவீரர் நாளுக்கு முன்னும் பின்னும் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து உள்ளது. கிழக்கில் புட்டும் தேங்காய்ப்பூவும் போல் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களிடையே வளர்ந்து வரும் பகைமை யைத் தணிக்க பிரபா குறைந்தபட்ச கவனத்தையும் செலுத்தவில்லை. இதன் மூலம் தமிழ் பேசும் மக்கள் என்று நுனி நாக்கில் அரசியல் பேசி, நாங்களே அவர்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவோம் என்பது பேரினவாத ஆட்சியாளர்கள் தமிழர்களைப் பிரதிநிதித்துவதாக கூறுவதற்கு ஒப்பாகும்.
வடக்கு கிழக்கில் அல்லது தமிழீழ எல்லைக்குள் தமிழ் மக்களே
36 தமிழ் - முஸ்லிம் இன உறவுகள்

பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். முஸ்லிம்கள் சிறுபான்மையினர். தமிழீழ எல்லைக்குள் வாழும் இச்சிறுபான்மையினம் விடுதலைப் போராட்ட வரலாற்றில் பல சமயங்களில் தாக்குதலுக்கு இலக்காகி உள்ளது. ஆகவே தமிழீழ எல்லைக்குள் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என அம்மக்கள் அஞ்சுவது முற்றிலும் நியாயமானது. நாம் ஒடுக்கப்பட்ட இனம் என்ற வகையில் இன்னொரு சமூகத்தின் அச்சத்தை புரிந்து கொள்ளும் பக்குவம் எமக்கு வேண்டும். ஆனால் விடுதலை அமைப்புகள் அவர்களைப் புரிந்து கொள்வதற்குப் பதிலாக ஒடுக்கியே வந்துள்ளனர்.
வடக்கு கிழக்கு இணைந்த தாயகத்தை தமிழர்கள் கேட்கும் போது அதனால் பாதிக்கப்படுபவர்கள் முஸ்லிம்களே. கிழக்கில் அவர்கள் 33 சதவீதம் ஏனைய சமூகங்களுக்கு இணையானவர்கள். ஆனால், வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டால் அவர்கள் 18 சதவீதம் ஆகிவிடுவார் கள். அதனால் அவர்களது அரசியல் பலம் அண்ணளவாக 50 வீதத்தால் குறைகிறது. அதிகாரத்துக்கு வரு முன்னரே தமிழீழ விடுதலைப் போராட்டம் அவர்களை ஒடுக்கி இனச்சுத்திகரிப்பில் ஈடுபட்டால் அதிகாரம் கிடைத்த பின் தங்களின் நிலையென்ன என்று அம்மக்கள் அஞ்சுவது நியாயமானதே.
அச்சத்தை நீக்கி அவர்களது இதயங்களையும் எண்ணங்களையும் வென்றெடுப்பது இலங்கை இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப் பதற்கு மிகவும் இன்றியமையாதது. முஸ்லிம்களுக்கு எதிரான அனைத்து ஒடுக்குமுறைகளும் புலிகளால் தான் மேற்கொள்ளப்பட்டது என்று கூறிவிட முடியாது. ஏனைய அமைப்புக்களுக்கும் அதில் பங்கு உண்டு. இந்திய இராணுவத்துடன் செயற்பட்ட அமைப்புகளும் திட்டமிட்ட முறையில் முஸ்லிம்களுக்கு எதிராகச் செயற்பட்டன. ஆனால், தமிழீழத் தாயகத் துக்குள் தமிழர்கள் பெரும்பான்மை சமூகம் என்றளவிலும் அவர்களைத் தாங்களே பிரதிநிதித்துவப்படுத்துவதாக புலிகள் கூறுவதாலும் இந்த இன உறவை வளம்படுத்தும் பொறுப்பு புலிகளின் கைகளிலேயே உள்ளது. கருணா பிரிவை குற்றம்சாட்டி தாம் தப்பிக்க நினைப்பது பிரச்சினைக்கு தீர்வாகாது. அப்படிக் கூறுவது கிழக்கு மாகாணத்தில் புலிகள் பலவீனப் பட்டு உள்ளார்கள் என்ற அர்த்தத்தையே ஏற்படுத்தும்.
மேலும் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற பெயரிலும் முஸ்லிம் சமூகம் சர்வதேச சமூகத்தினால் பாரபட்சமாக நடத்தப்படுகிறது
தமிழ் - முஸ்லிம் இன உறவுகள் 37

Page 21
என்ற குற்றச்சாட்டு முஸ்லிம் உலகில் வலுவாக உள்ளது. இலங்கை முஸ்லிம்கள் திட்டமிட்ட ஒடுக்குமுறைக்கு ஆளானால் இலங்கை முஸ்லிம்களை காப்பாற்றுவதன் மூலம், சர்வதேச அரங்கில் தன் நிலை யை மேம்படுத்த இலங்கை அரசு அதனைப் பயன்படுத்தும். இதனைப் பயன்படுத்தி முஸ்லிம் உலகின் மீட்பாளர்களாகத் தங்களைக் காட்டிக் கொள்ள அமெரிக்காவும் அதன் தோழமை நாடுகளும் தயங்காது. அது தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கு எந்த வகையிலும் உதவாது.
அடுத்த மாவீரர் நாள் வரை காத்திராமல் தமிழ் - முஸ்லிம் உறவை வளர்க்கும் கருத்துக்களை புலிகள் ஊக்குவிக்க வேண்டும். அவை வெறும் நுனிநாக்கு அரசியலாக அல்லாமல் இதய சுத்தியுடன் செய்யப்பட வேண்டும். வடக்கிலிருந்து விரட்டப்பட்ட மக்கள் அங்கு சுதந்திரமாக மீளக் குடியமர்த்தப்பட வேண்டும். அதற்கு முன் இரு இனங்களுக்கிடையேயும் உள்ள அச்சம் நீக்கப்பட்டு பரஸ்பரம் நம்பிக்கை யை வளர்க்க வேண்டும். தமிழீழ எல்லைக்குள் நாம் பெரும்பான்மை இனம் என்பதால் முதலில் நாம் தான் பெருந்தன்மையைக் காட்ட வேண்டும்.
இன உறவுகளை வளம்படுத்தும் விடயத்தில் புலிகள் மட்டுமல்ல, தமிழ் ஊடகங்களின் பங்களிப்பும் மிக இன்றியமையாதது. தங்களை புலிசார்பாகக் காட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காக புலிகளே தவ றென்று ஏற்றுக் கொண்ட விடயத்தை சில ஊடகங்கள் நியாயப்படுத்து கின்றன. முஸ்லிம்கள், போராளிகளின் மறைவிடங்களை காட்டிக் கொடுத் ததால் தான் வடக்கில் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதாக சிலர் நியாயம் கற்பிக்க முனைகின்றனர்.
ஒரு சிலரின் தவறுக்காக ஒரு சமூகத்தை தண்டிப்பது எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாதது. பிரதித் தலைவராக இருந்த மாத்தையா, பிரபாவின் நம்பிக்கைக்குரிய லெப். கேணல் கருணா ஆகி யோர் மறைவிடங்களை அல்ல போராட்டத்தையே காட்டிக் கொடுத்ததாக வி.புலிகள் குற்றம் சாட்டியுள்ளனர். அதற்காக வல்வை மக்களையும் மட்டு மக்களையும் தமிழீழத்தை விட்டு விரட்டியடிக்க முடியுமா?
கோரஸ்பாடும் தமிழ் ஊடகங்கள் மறைமுகமாக புலிகளை
38 தமிழ் - முஸ்லிம் இன உறவுகள்

மிகவும பலவீனப்படுத்தி உள்ளனர். புலிகள் இன்று தம்மைப் பற்றிய ஒரு பிம்பத்துடன் உள்ளனர். அந்த பிம்பத்தை இந்த தமிழ் ஊடகங்களே ஏற்படுத்தி உள்ளன. அதனுாடாக அவர்கள் தம்மைப் பார்க்கும் வரை அவர்களால் தங்களைப் புரிந்து கொள்ள முடியாது. ஆனால், சர்வதேசம் அந்த பிம்பத்துடன் புலிகளைப் பார்ப்பதில்லை. அதனால் சில நிஜங்களை அவர்கள் விளங்கிக் கொள்ள முற்பட்டுள்ளனர்.
இறுதியாக, பிரபா தனது உரையில் ‘சர்வ அதிகாரம் படைத்த ஜனாதிபதி சந்திரிகாவினால் கூட சிங்கள இனவாத சக்திகளை மீறி தமிழ் மக்களுக்கு ஒரு அதிகாரமற்ற சுனாமி நிர்வாக நிவாரணத் திட்டத்தைத் தானும் நிறைவு செய்ய முடியவில்லை’ என்று குற்றம் சாட்டியுள்ளார்.
ஆனால், அந்த அதிகாரமற்ற சபைக்கே முஸ்லிம் தரப்பை அனும திக்க புலிகள் மறுத்தது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாதது. அதிகாரமில்லாத சபையையே தங்களுக்கு தர இவர்கள் மறுக்கிறார்கள் என முஸ்லிம் பிரதிநிதிகள் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
இரு சமூகங்களுக்கும் இடையே புரிந்துணர்வுப் பாலத்தை கட்டியெ ழுப்புவதன் அவசியத்தை புலிகள் விரைவில் புரிந்து கொண்டு அதற்கு காத்திரமான பங்களிப்பைச் செய்ய வேண்டும். "நாங்கள் ஆயுதங்களின் மீது காதல் கொண்டவர்கள் அல்லர்’ என்ற பிரபாவின் கூற்று களத்தில் நிஜமாக்கப்பட்டு ஜனநாயகத்தின் மீதான புலிகளின் அச்சம் நீக்கப்பட்டால் மட்டுமே புலிகள் தமது அடுத்த கட்ட நகர்வை ஏற்படுத்த முடியும். இல்லையேல் மற்றுமோர் யுத்தச் சூழலுக்குள் வடக்கு, கிழக்கு தமிழ் பேசும் மக்கள் சிக்குண்டு போவது தவிர்க்க முடியாதது.
தேசம் இதழ் 23
தமிழ் - முஸ்லிம் இன உறவுகள் 39

Page 22
முஸ்லிம்களின் அரசியல் நிலைப்பாடு
எமது வழி இஸ்லாம்.
எமது மொழி தமிழ். பேராசிரியர். ஜலால்தீனி
இலங்கைக்கு வந்த அரபிகள் பற்றிய பிரபல வரலாற்றாசிரியர்கள் பின்வருமாறு கூறுகின்றனர்:
1. அரபிகளின் இலங்கை வருகையால், இலங்கை - சீன வர்த்தகத் தொடர்புகள் அதிகரித்துச் சென்றன. குறிப்பாக பத்தாம் நூற்றாண் டில் மிக உச்ச நிலையில் இது இருந்தது. (Pearson, “Coastal Western India', p.8)
2. 12ம் நூற்றாண்டில் இலங்கையின் வெளிநாட்டு வர்த்தக நடவடிக் கைகளில் இலங்கை மன்னனுக்கு ஆலோசனை வழங்குவதற் காக 16 பேர் கொண்டு அமைக்கப்பட்ட சபையில் 4 முஸ்லிம்க ளும்,4 யூதர்களும்,4 பெளத்தர்களும்,4 கிறிஸ்தவர்களும் அடங்கி ucibbg560Tj. (B.J. Perera. “The Foreign trade and commerce of ancient Ceylon” III, Ceylon Historcal Journal, (Ch.1), Vol.1, No. 4, 1954, p.318)
3. இலங்கையில் ஏழாம், ஒன்பதாம் நூற்றாண்டுகளில் மேற்கொள்ளப்
பட்ட பல நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு முஸ்லிம்களின் நீராவி இயந்திர (Hydrolic Engineering) தொழில்நுட்பமே முக்கிய காரண மாக அமைந்திருந்தன. முஸ்லிம்கள் இத்தொழில் நுட்பத்தை அவர்களின் சர்வதேச பிரயாணங்களின் மூலம் கற்றுக் கொண் L6GT. (R.A.L.H. Gunawardana, “Total Power of shared Power' Seminar for Asian Studies, Paper No.4, University of Peradeniya, 1983)
40 தமிழ் - முஸ்லிம் இன உறவுகள்

இவ்வாறு முஸ்லிம்கள் இலங்கையில் வர்த்தகம், வெளிநாட்டு வியாபாரம், பல்வேறு நீர்ப்பாசனத் திட்டங்கள், வீடமைப்பு, பொருளாதார விருத்தி என்பவற்றுக்கு மிகப் புராதன காலம் தொட்டே செய்த பங்களிப் புகள், பல்வேறு ஆய்வாளர்களாலும், வரலாற்றாசிரியர்களாலும் மிகத் தெளிவாக ஆதாரங்களோடு முன்வைக்கப்பட்டுள்ளன. அவற்றைத் தொகுத்துக் கூறுவதற்கு இச்சிறு கட்டுரையில் முடியாது.
ஏன், இன்று கொழும்பில் தலைநிமிர்ந்து நிற்கும், கொழும்பின் கம்பீரத்தையே உலகுக்குப் பறைசாற்றும், கொழும்பு மாநகர மண்டபக் கட்டிடம், கொழும்பு நூதனசாலைக் கட்டிடம் என்பவை ஆங்கிலேயர் காலத்தில் இலங்கை முஸ்லிம் ஒருவராலேயே நிர்மாணிக்கப்பட்டது. அம்முஸ்லிமின் வேண்டுகோளுக்கேற்ப, நூதனசாலை இன்றும் வெள்ளிக் கிழமைகளில் மூடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஆசியாவிலேயே பெரிய பல்கலைக்கழகமாக, 1942ல் பிரித்தானி யரால் உருவாக்கப்பட்ட பேராதனைப் பல்கலைக்கழகத்தின் உருவாக் கத்திற்கு மூலகாரணமாக இருந்தவர்களில் ஒருவரான நீதிபதி அக்பரை கெளரவித்து பெயரிடப்பட்ட பேராதனைப் பல்கலைக்கழக அக்பர் மண்டபம் இன்றும் அங்கே உள்ளது. கொழும்பு புறக்கோட்டைப் பகுதியிலுள்ள புராதன கட்டிடங்கள் பல, முஸ்லிம்களின் கட்டடத் தொழில்நுட்பத்தை இன்றும் பறைசாற்றிக் கொண்டுள்ளது.
சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாளால் பரப்பப்பட்ட மதம் 'இஸ்லாம் என்று ஒரு கருத்தை சில எழுத்தாளர்கள் முன்வைத்திருந்தார் கள். ஆனால், உலக வரலாற்றாய்விலும், அறிவியல் அரங்கிலும் புகழ் பெற்று விளங்கிய பேட்டன் றஸ்ஸல், ஹிட்டி, மைக்கல் ஹாட், கிரெள போர்ட், லிவிங்ஸ்டன், எஸ்.எஸ். லீடர், ஏ.ஜே.ரொயின்பீ, ஜீன்.எல். ஹியுரெக்ஸ், டி.டபிள்யு. அர்னால்ட், ஜீன் எல். ஹெரக்ஸ் போன்ற பல்வேறு சர்வதேச ஆய்வாளர்கள் வரலாற்று நிரூபணத்தின் ஊடாக, இஸ்லாத்துக்கு எதிரான இக்கருத்தை முற்றாக நிராகரித்து, உலக அரங்கில் ஒரு தெளிவை ஏற்படுத்தினார்கள். அதன் பெறுபேறாக உலக அரங்கில் இருந்து முற்றாக அக்கருத்து நீக்கப்பட்டது.
இவ்விடயத்தில் தமிழ் பேசும் உலகை மதிப்பைப் பெற்ற அறிஞர் அண்ணாவின் கருத்து குறிப்பிடத்தக்கதாகும். 'இஸ்லாம் வாளால்
தமிழ் - முஸ்லிம் இன உறவுகள் 4.

Page 23
பரப்பப்பட்டது என்ற கூற்று அர்த்தமற்றது. இஸ்லாத்தைப் பரப்ப வாள் பயன்படவில்லை. ஆனால், சிலுவை யுத்தங்களிலே இஸ்லாத்தைக் காக்க அது பயன்பட்டதுண்டு. இந்தியாவில் முகலாயர் ஆட்சியும், மற்ற முஸ்லிம் மன்னர் ஆட்சியும் இருந்தபோது முஸ்லிம்கள் ஒரு கோடிப் பேர் கூட இருந்ததில்லை. அந்த அரசுகள் எல்லாம் மறைந்த பின்பே பத்துக் கோடி மக்களாக முஸ்லிம்கள் பெருகினர். ‘ஒன்றே குலம். ஒருவனே தேவன்’ என்ற நன்நெறி பரவி இருந்த நாட்டிலே இடையிடையே அக்கருத்துக்கள் மறைந்திருந்த நிலையில் அக்கருத்துக்களை மீண்டும் வலியுறுத்த 1300 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் இஸ்லாம் பரவிற்று.” -
'முஹம்மதுவும், சொலமனும் என்ற பிரபல நூலை எழுதிய மற் றொரு அறிஞரான ஹென்றி பிரேன் (Henry Bran) பின்வருமாறு கூறுகின் றார்: “மேல் நாட்டவர்கள் இஸ்லாம் மார்க்கம் பலாத்காரனத்தினாலும் தீவிர பிரச்சாரத்தினாலும் பரப்பப்பட்டதுர்ன வாதிக்கிறார்கள். உண்மை அவ்வாறல்ல. இஸ்லாத்தின்பால் ஒருவரை திருப்புவதற்கு பலாத்காரத்தை உபயோகிப்பதை குர்ஆன் அழுத்தமாகக் கண்டிருக்கின்றது. இஸ்லாம் வேண்டுவதெல்லாம், அல்லாஹற்வுக்கு வழிபடுதல் மட்டுமே. ரோமர்கள் கிறிஸ்தவ சமயத்தை ஏற்றபோது அவர்களின் மனம் மட்டுமே மாறுதல் அடைந்து இருந்தது. ஆனால், அவர்கள் இஸ்லாத்தைத் தழுவியதும் அவர்களின் ஆன்மாவும், உடலும் பெருமாற்றத்தைக் கண்டன. இது பெரும் மாறுதலாகும்.”
சரித்திர நாவலாசிரியரான சாண்டியல்யனின் கூற்று பின்வருமாறு அமைந்துள்ளது. “முஸ்லிம் சமூகத்திடம் எனக்கு எப்பொழுதும் பெரும் மதிப்புண்டு. அவர்களின் மதபக்தியிலும் இன ஒற்றுமையிலும் பத்தில் ஒரு பங்குகூட ஹிந்துக்களுக்கு இருந்திருந்தால் ஹிந்துஸ்தானத்தை முஸ்லிம்கள் வென்றிருக்க முடியாது என்று நான் நினைத்த நாட்கள் உண்டு. ஆகவே, ஹிந்துக்களின் மத நம்பிக்கையை ஒப்பிட்டுப் பார்க்கும் போது, முஸ்லிம்களிடம் எனக்கு பொறாமை ஏற்படுகிறது என்று சொன்னால் அது பொய்யல்ல. அவ்வளவு ஆழ்ந்த மத பக்தி, சிறந்த ஒருமைப்பாடு முஸ்லீம்களுக்கு உண்டு.”
இவ்வாறு இஸ்லாத்தின் வெற்றிக்கும் அது சர்வதேச மதமாக மாற்றம் பெற்றமைக்கான காரணங்களை பல்லாயிரக்கணக்கான அறிஞர்கள் எழுத்தாளர்களின் கருத்துக்களிலிருந்து திரட்டித்தர முடியும். 42 தமிழ் - முஸ்லிம் இன உறவுகள்

இலங்கை முஸ்லிம்கள் தம்மை முஸ்லிம்கள் என்றே அடையாளப் படுத்த விரும்புகின்றனர். அது அவர்களின் உரிமையாகும். அவர்களை இஸ்லாமியத் தமிழர் என்றோ, வேறு பெயர்களிலோ அடையாளப்படுத்த எவருக்கும் உரிமை கிடையாது.
இலங்கையின் வரலாற்றில் 1879ம் ஆண்டில் இருந்தே முஸ்லிம் களைத் தமிழர்களாக இனங்காட்ட சேர் பொன்னம்பலம் இராமநாதன் முதலான பலரால் எடுக்கப்பட்ட சகல முயற்சிகளும் இன்றுவரை வெற்றி பெறவில்லை. 'இஸ்லாம் எமது வழி, தமிழ் எமது மொழி’ என்பது இலங்கை, தென்னிந்திய முஸ்லிம்களைப் பொறுத்தவரை யதார்த்தமாகும். இலங்கையில் முஸ்லிம்களின் பகிரங்க விரோதிகளாகத் தம்மை ஆரம்பத் திலிருந்தே அடையாளப்படுத்திக் கொண்டு ஆட்சி செய்த போர்த்துக் கேயரும், ஒல்லாந்தரும் இலங்கை முஸ்லிம்களின் தனித்துவத்தை சகல அரசியல் அமைப்புச் சட்டத்திலும், ஆவணங்களிலும் வழங்கிப் பாதுகாத் துள்ளனர்.
தேசம் : நவம்பர் 2003
மக்களும், மார்க்கமும் இஸ்லாம் 7ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மொகமட்டினால் ஸ்தாபிக்கப்பட்டது. 8ம் நூற்றாணிடில் இஸ்லாம் வேகமாக வளர்ந்தது. அக்காலகட்டத்தில் வாழ்வும் ஆண்மீகமும் ஒன்றாக இணைந்ததால் இவ்வளர்ச்சி ஏற்பட்டதாக கருதப்படுகிறது. இஸ்லாம் மதத்தில் சியா, சுனி, சுபிஸ்ம் என்ற பிரிவுகள் உண்டு. 3666) : World Atlas Encyclopedia - 1999
உலகில் 880 மில்லியனர் முஸ்லிம்கள் வாழ்கின்றனர். இவர்களில் 95% சுனி பிரிவினர். கிறிஸ்தவர்கள் 1,667 மில்லியனாகவும். இந்துக்கள் 663 மில்லியனாகவும் உள்ளனர். 9666) : Concise World Atlas 3rd Edition - 2000
இலங்கை சனத்தொகையில் 8 வீதம் 1.5 மில்லியன் இஸ்லாமியர்கள் உள்ளனர். பெளத்தர்கள் 69 வீதம் 13.2 மில்லியனாகவும் இந்துக்கள் 15 வீதம் 2.8 மில்லியனாகவும் கிறிஸ்தவர்கள் 8 வீதம் 1.5 மில்லியனாகவும் உள்ளனர்.
தேசம் : நவம்பர் 2003
தமிழ் - முளப்லிம் இன உறவுகள் 43

Page 24
சமாதானப் பேச்சுவார்த்தையும், முஸ்லிம்களின் நிலையும்
தொகுப்பு: த ஜெயபாலனி
தற்போதைய சமாதான நடவடிக்கைளில் முஸ்லிம்களின் நிலை என்ன என்பது பற்றியும், முஸ்லிம், தமிழ் இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வு பற்றியுமான சந்திப்பும், கலந்துரையாடலும் பிரித்தானி யாவில் புலம் பெயர்ந்து வாழும் முஸ்லிம் சமூகத்தால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. 2002 டிசம்பர் 7ம் திகதி மனோபார்க் போர்ட் சென்றரில் இடம்பெற்ற இக்கூட்டத்திற்கு பேராசிரியர் ஜனாப். எம்.வை.எம். சித்தீக் தலைமை தாங்கினார். எப்.எஸ்.எம். பாரூக், சட்டவல்லுனர் எஸ்.எம்.எம். பசீர், ஜலால்தீன், தேசம் ஜெயபாலன் ஆகியோர் இதில் உரையாற்றினர். சமாதானப் பேச்சுவார்த்தைகளில் ஆலோசகராகக் கலந்துகொண்ட எம்.ஐ.எம். மொய்தீன் இச்சந்திப்பில் பிரதம பேச்சாளராகக் கலந்து கொண்டு இலங்கைச் சமாதானப் பேச்சுக்களும், முஸ்லிம்களின் நிலையும் என்பது பற்றி விளக்கினார். கூட்ட முடிவில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
வடக்கு திழக்கு முஸ்லீம்களுக்கு தீர்வு இல்லை எண்நால் வடக்கு திழக்கில் சமாதானம் இல்லை:
நோர்வேயில் பேசியவர்கள் வெறும் கையுடன் தான் திரும்பி இருக்கிறார்கள் என்று தனது தலைமை உரையில் குறிப்பிட்ட சித்திக் அதிகாரப் பகிர்வு பற்றி இன்னமும் பேசப்படவில்லை எனத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து பேசுகையில் பேச்சு வார்த்தை இழுத்தடிக்கப்படுவதற்குக் காரணம் அதிகாரப் பகிர்வை தாமதிக்க அல்லது தவிர்க்கவே எனத் தெரிவித்தார்.
44 தமிழ் - முஸ்லிம் இன உறவுகள்

விடுதலைப் புலிகள் முஸ்லிம்களை தனித்துவமான இனமாக ஏற்றுக் கொள்ள பின்நிற்கின்றனர் எனக் குற்றம் சாட்டிய சித்தீக் புரிந் துணர்வு ஒப்பந்தத்திற்குப் பின்னரும் முஸ்லிம்களுக்கு எதிரான வன் முறைகள் நடைபெற்றிருப்பது முஸ்லிம்களை சந்தேகத்துள்ளாக் குவதாகக் குறிப்பிட்டார். மேலும் விடுதலைப் புலிகள் வடக்கு கிழக்கில் தன்னிச்சையாக ஆட்சி அமைக்க முற்படுவதாக முஸ்லிம்கள் ஐயப்படு வதாகக் குறிப்பிட்ட அவர் வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் பிரச்சினைக்கு தீர்வு இல்லை என்றால் வடக்கு கிழக்கு பிரச்சினைக்குத் தீர்வு இல்லை என்று சுட்டிக் காட்டியதுடன் முஸ்லிம்களின் பயம் நீக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
சமாதானத் தீர்வு அடிமைச் சாசனம் ஆகக் கூடாது.
சமாதானம் பற்றி மூன்று இனங்களுமே பயப்படுவதாகக் கூறித் தனது பேச்சை ஆரம்பித்த பாரூக், 1960 சமஸ்டி கேட்ட அமிர்தலிங்கம் போன்றோர் கொல்லப்பட்டனர். இத்தனை ஆயிரம் உயிரிழப்புகளுக்குப் பின் புலிகள் சமஸ்டி கேட்கின்றனர். அப்போது சமஸ்டி கொடுக்க மாட்டோம் என்ற ஐக்கிய தேசியக் கட்சி இன்று கொடுக்கத் தயாராய் இருக்கிறது. இவை எதுவுமே நம்பிக்கையூட்டுவதாக இல்லை என பாரூக் தனது உரையில் சந்தேகத்தை வெளிப்படுத்தினார். அவர் தொடர்ந்து பேசுகையில் 1948ல் இலங்கைக்கு வழங்கப்பட்ட சுதந்திரத் தீர்வு தமிழர் களுக்கு கொடுக்கப்பட்ட அடிமைச்சாசனம் எனக் குறிப்பிட்ட அவர் இன்றைய சமாதானத் தீர்வு முஸ்லிம்களுக்கு கொடுக்கப்படும் அடிமைச் சாசனமாக அமையக் கூடாது எனக் குறிப்பிட்டார்.
தனது உரையில் ஐரோப்பிய காலனித்துவ வாதிகளே முஸ்லிம் களுக்கு உரிமைகளை வழங்கி இருந்தபோது, முஸ்லிம்களுக்கு என்ன உரிமை இருக்கிறது என சிலர் கேட்பது ஆச்சரியமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார். அங்கு பேசிய ஜெயபாலன் தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை எல்லா இனங்களுக்கும் பொதுவான உரிமை என்றும் முஸ்லிம்களுக்கும் அதைக் கேட்கும் உரிமை உண்டு எனக் குறிப்பிட்டார்.
வேந்றுமையில் ஒற்றுமை,
இரண்டு பேரினவாதிகளால் பாதிக்கப்பட்டவர்கள் முஸ்லிம்கள்
என தனது பேச்சை ஆரம்பித்த பசீர் ஆயுதப் பேராட்டத்துக்குப் பின் முஸ்லிம்கள் மிகவும் துன்புறுத்தப்பட்டதாகத் தெரிவித்தார். மறப்பதும்,
தமிழ் - முஸ்லிம் இன உறவுகள் 45

Page 25
மன்னிப்பதும் அன்ரன் பாலசிங்கத்தின் உரிமையல்ல எனக் குறிப்பிட்ட பசீர், புலிகளின் தலைவருடன் பேசினாலும் பேசலாமே அல்லாமல் அன்ரன் பாலசிங்கத்துடனோ தமிழ் சங்கங்களின் பிரதிநிதிகளுடனோ பேச முடியாது எனச் சாடினார். சமாதானம் எங்கள் தலைமுறைக்கும் விட்டுச் செல்ல வேண்டிய ஒன்று எனக் குறிப்பிட்ட பசீர் வேறுபாட்டில் ஐக்கியம் காண வேண்டும் எனத் தெரிவித்தார். அதற்கு கீழ்மட்ட அளவில் வேலைத்திட்டங்கள் முன்வைக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். இறுதியில் ரணில் விக்கிரமசிங்காவும் பிரபாகரனும் கைகுலுக்கலாம் என்றால் தமிழர்களும் முஸ்லிம்களும் சேரலாம் என்ற நம்பிக்கையை வெளியிட்டார்.
அரசியல்வாதிகளை நம்பிப் பயனில்லை. முஸ்லீம்களின் உரிமையை வெண்சிறருக்க சுயாதீன அமைப்பு அவசியம்:
மொய்தீன் தனது பிரதம உரையில் பேச்சுவார்த்தை அரங்கிலும் அதற்குப் பின்னும் நடைபெற்ற அரசியல் விடயங்களை ஆழமாகவும், நகைச்சுவையுடனும் வெளிக்கொண்டு வந்தார். முஸ்லிம் அரசியல் கட்சித் தலைவர்கள் முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதற்குப் பதிலாக தலைமைக்கு சண்டையிடுவதை சுட்டிக் காட்டியதுடன், சுயாதீ னமான முஸ்லிம் குழு ஒன்றே தற்போதைய சூழ்நிலையில் முஸ்லிம்க ளைப் பிரதிநிதித்துவம் செய்ய முடியும் எனவும் தெரிவித்தார். அரசாங் கமும், விடுதலைப் புலிகளும் முஸ்லிம்கள் தனித்துவமாக பேச்சு வார்த் தைகளில் பங்குபற்றுவதை விரும்பவில்லை எனவும் அவர் தெரிவித்தார். அன்ரன் பாலசிங்கம் தாங்கள் பிற்பாடு அதுபற்றியப் பேசலாம் எனக் கூறியதாகக் குறிப்பிட்ட மொய்தீன் இந்த வாக்குறுதிகளை எல்லாம் இனிமேலும் முஸ்லிம் சமூகம் நம்பத் தயாராயில்லை எனக் குறிப்பிட்டார்.
தான், அரச சார்பில் கலந்து கொண்ட ரவுப் ஹக்கீமிற்கு ஆலோ சகராகவே கலந்து கொண்டதாகவும், அதனால் பேச்சுவார்த்தைகளில் பின் வரிசையிலேயே அதுவும் பலத்த போராட்டத்திற்குப் பின் அமர்த்தப் பட்டதாகவும் கூறிய மொய்தீன் இது முஸ்லிம்களை அவமதித்த செயல் எனக் குறிப்பிட்டார். எதிர்காலத்தில் தான் முஸ்லிம் பிரதிநிதியாகக் கலந்துகொள்ள அனுமதிக்கப்படாவிட்டால் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ளப் போவதில்லை எனச் சூளுரைத்தார். முஸ்லிம்களின் தலைமைத் துவ சண்டைகளை சாதகமாக்கி பேச்சுவார்த்தைகளில் முஸ்லிம்களை
46 தமிழ் - முஸ்லிம் இன உறவுகள்

கைவிட முடியாது எனக் குறிப்பிட்ட மொய்தீன் முஸ்லிம்களை உள்ளடக் குவதற்கான பொறிமுறையை அரசாங்கம் உருவாக்க வேண்டும் எனத் தெரிவித்தார். ரணில் பிரதமராகியதும் இந்தச் சமாதானப் பேச்சுவார்த் தைகள் ஆரம்பிக்கப்பட்டதும் அன்றைய சந்திரிக்காவின் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதால் தான் எனக் குறிப்பிட்ட அவர் அதற்கு வழிவகுத்த வர்கள் முஸ்லிம்கள் எனச் சுட்டிக் காட்டினார்.
முஸ்லிம்களது உரிமைகள் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று ஆணித்தரமாகக் கூறிய மொய்தீன் புலிகள் ஆயுதங்களை வைத்துக் கொண்டு எங்களுக்கு பூச்சாண்டி காட்டக் கூடாது எனத் தெரிவித்தார். உரிமைகள் மறுக்கப்பட்டால் புலிகளுக்கு 20 ஆண்டுகள் எடுத்த விடயத்தை முஸ்லிம் இளைஞர்கள் 10 ஆண்டுகளில் முடிப்பார்கள் எனத் தெரிவித்தார். மொய்தீனின் வார்த்தைப் பிரயோகங்களை அருகில் இருந்த பசீர் கட்டுப்படுத்த முயற்சி எடுத்துக் கொண்டார். மொய்தீன் உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளை வெளியிட்ட போதும் முஸ்லிம்கள் ஆயுதம் தூக்குவது விவேகமாகாது என்பதும் ஜனநாயக ரீதியில் சர்வதேச சமூகத்துடன் இணைந்து போராட வேண்டுமெனவும் மொய்தீன் பின்னர் கருத்துத் தெரிவித்தார். ஏனைய பேச்சாளர்களும் அதனை கோடிகாட்டினர். முஸ்லிம் இளைஞர்களை அந்நிலைக்கு தமிழர்கள் தள்ளிவிடக் கூடாது என்பது போன்ற கருத்துக்களும் வெளிப்பட்டன. விடுதலைப் புலிகளின் இரத்தம் சிந்திய போராட்டத்திற்கு மதிப்பளித்த பேச்சாளர்கள் முஸ்லிம்கள் தங்கள் உரிமைகளைக் கேட்பதை அன்ரன் பாலசிங்கம், திருத்தந்தை ஜெகத்களில் பார் அடிகளார் போன்றவர்கள் பேச்சுவார்த்தைகளை முஸ்லிம் கள் குழப்புகிறார்கள் எனக் காட்ட முயல்வது இரு இனங்களுக்கும் இடையிலான புரிந்துணர்வுக்கு உதவாது எனத் தெரிவித்தனர். ஐ பீ சீ வானொலி முஸ்லிம்கள், இனநல்லுறவு பற்றி கூடிய கவனம் எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர். கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரசின் ஆதரவாளர்கள், மொய்தீன் அவர்கள் கட்சியை அவமதிப் பதாகக் கருத்து வெளியிட்டனர். ஆனால், அவர்களுடைய கருத்து உடன டியாக மறுதலிக்கப்பட்டது. பேச்சுவார்த்தைகளில் தமிழர்கள் தங்களுக்கு என்ன வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள் எனக் குறிப்பிட்ட பேச்சாளர்கள் முஸ்லிம்கள் தமக்கு என்ன வேண்டும் என்பதை தெளிவாக முடிவு செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டனர்.
தேசம் : ஜனவரி 2003
தமிழ் - முஸ்லிம் இன உறவுகள் 47

Page 26
ai-uupSr6Ooru PD foooUD: தமிழர் - சோனகர்
முஹம்மது எஸ்.ஆர். நிளப்தார் - சமூகவியல் ஆய்வாளர்
முஸ்லிம் சோனகர் என்ற தமது இனப்பெயரில் அரசியல் நடத்து வதே அரசியல் சாணக்கியமாகும். சோனகர் என்போர் இலங்கையில் மாத்திரமல்ல. மொரோக்கோ தமிழ்நாட்டின் சில பகுதிகள் பிலிப்பைன்ஸ் ஆகிய இடங்களிலும் வாழ்வதால் இலங்கையில் உள்ளோர் இலங்கைச் சோனகர் (Ceylon Moor) என அழைக்கப்படுகின்றனர். இலங்கைச் சோனகர் தனது இனம், ஒரு தேசியம் (Nation). அத்தேசியம் தனது விவகாரங்களைத் தானே கவனிக்கும் சுயநிர்ணய உரிமை. (Right to Self Detemination) 9–60)Luughl.
இந்த சுயநிர்ணய உரிமை என்பது ஐ.நா. சபையினாலும், அதற்கு முன் 1993ல் மொன்டிவேடியோ ஒப்பந்தத்தாலும் (Montevideo Convention) ஏன் இன்றைய ஐரோப்பிய ஒன்றியத்தாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. இருந்தும் இந்த ஸ்தாபனங்களும் அதன் கட்டுப்பாட்டாளர்களும் காலத்தின் தேவைக்கும் பிரதேசத்தின் அக, புறச் சூழலுக்கும் ஏற்றவாறு மிகக் குறிப்பாகத் தங்கள் நாட்டின் அரசியல் பொருளாதார நலன்களைக் கருத்தில் கொண்டு வியாக்கியானம் செய்வதும் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதும் ஏற்க மறுப்பதும் உலக அரசியலில் புதிதல்ல.
முன்னைய யூகோஸ்லாவியாவில் இருந்து சர்வதேசச் சட்டங்களுக் கமைய ஐ.நா. சபையின் அங்கீகாரத்துடன் பிரிந்து சென்ற குரோவேசியா,
48 தமிழ் - முஸ்லிம் இன உறவுகள்

சுலொவேனியா, பொஸ்னியா. கேசர்கொவினா என்ற நாடுகளுக்கு 1992ல் ஐரோப்பிய ஒன்றியம் சர்வதேச சட்டங்களுக்கு மேலாக பல நிபந்தனை களை முன்வைத்தே அவற்றின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொண் டது. அதேநேரத்தில், இந்தோனேசியாவிலிருந்து 3 வருடங்களுக்கு முன் பிரிந்து சென்ற கிழக்குத் தீமோருக்கு அத்தகைய நிபந்தனைகள் இல்லா ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.
மறுபுறத்தில் உலகத்தில் வலுப்பெற்றுவந்த இஸ்லாத்தின் இருப்புக் கெதிராக அன்றைய பாப்பரசர், இரண்டாம் ஏர்பான் /உர்பான் (Urban I) 1095களில் ஐரோப்பாவில் தொடக்கி வைத்த சிலுவை யுத்தம் (Crusade) வெவ்வேறு வடிவங்களில் இன்று வரையும் தொடர்கிறது. இனியும் தொடரும் என்பதை சராசரி அறிவுள்ள எந்த மனிதனும் மறுக்கமாட்டான். அந்த வகையில் இன்று முன்னணியில் நிற்பது (இஸ்லாமிய) பயங்கர வாதத்துக்கு எதிரான போரென்று அழைக்கப்படும் அணுகுமுறையும், தனிமனித சுதந்திரத்தை வலியுறுத்தும் மனித உரிமைகள் அணுகுமுறை யுமாகும். இவை இன,மத, மொழி, பால், வயது வேற்றுமையின்றி கேள்வி யின்றி எல்லோராலும் கரிசனை காட்டப்படுகின்றது.
பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதிலோ அல்லது தனிமனித உரிமை மதிக்கப்பட வேண்டும் என்பதிலோ முஸ்லிம்கள் என்ற வகையில் நாம் யாருக்கும் இரண்டாம் தரமானவர்கள் அல்ல. போர்ச் சூழலிலும் கூட பயங்கரவாதத்துக்கு இடமில்லை என குர்ஆன் கூறுகிறது. அதேநேரத்தில் தற்பாதுகாப்பிற்காகவும் சொந்த மண்ணில் இருந்து விரட்டியடிக்கப்படும் போதும் புனிதப்போரை (ஜிஹாத், Holy War) எமக்கு நிபந்தனையுடன் இஸ்லாம் அனுமதித்துள்ளது.
இங்கே நாம் இனத்தை முதன்மைப்படுத்துவது மதத்தை முற்றாக மறக்க வேண்டும் என்பதற்காகவல்ல. ஆனால், நமது மத அடையா ளத்தை அரசியல் ரீதியில் கேள்விக்குறியாக்கும் எமது இன அடையா ளத்தை முதன்மைப்படுத்துவது தவிர்க்க முடியாதது.
சிங்களப் பேரினவாதம் எப்படித் தமிழ்த் தேசியத்தை அடக்கவோ அழிக்கவோ -உரிமையற்றதோ அதேபோல் தான் தமிழ் இனவாதம் சோனகர் இனத்தை அடக்கவும், அழிக்கவும் உரிமையற்றது.
தமிழ் - முஸ்லிம் இன உறவுகள் 49

Page 27
கலாசாரக்குழு, சமயக்குழு, தமிழ்பேசும் மக்கள் என்றெல்லாம் எமது அடையாளத்தை குறுக்கி நமது ஜனநாயக இருப்புரிமையை கேள்விக்குட்படுத்தக் கூடாது. சேர்ந்து வாழ்வதென்பது எமது சுயவி ருப்பத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டிய விடயம். அடையாள குறுக்கலின் மூலம் பயமுறுத்தி அடக்கியாள நினைப்பது பிறிதோர் விடயம். அதற்கு நாமும் துணைபோகக் கூடாது.
ஆக ஒரு சமயக் குழுவாக சுயநிர்ணய உரிமையைக் கோருவதைவிட, இன அடிப்படையில் நமது இனத்தின் சோனகர் என்ற தனித்த்பெயரின் கீழ் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளுவது இன்றைய காலத்தின் தேவை.
இனம் என்ற ஒன்று வலுவுள்ளதென்பதை நாம் பறைசாற்றிக் கொண்டுதான் இருக்கின்றோம். உதாரணம் அரபுலிக் அரபு வெளிவிவகார அமைச்சர்கள் மகாநாட்டில் ஏனைய அரபுகளற்ற முஸ்லிம் நாடுகளுக்கு அலுவல்கள் இல்லை. ஈரான் - ஈராக் யுத்தத்தில் இரண்டு முஸ்லிம் நாடுகள் என்பதைவிட அரபு - பாரசீகம் என்பது முதன்மை பெற்றிருந்தது. ஒடுக்கும் துருக்கியும் ஒடுக்கப்படும் குர்திஷ் மக்களும் அடிப்படையில் முஸ்லிம்கள் என்பதைவிட இனம் முதன்மை பெற்றுள்ளது. ஈரான், ஈராக், துருக்கி மூன்றும் குர்தீஸ் மக்களை முஸ்லிம் என்று மட்டும் மதித்தி ருந்தால் உலகத்தில் ஒப்புவமையற்ற நீண்டகால குர்திஸ்தான் என்ற நாட்டுக்கான விடுதலைப் போராட்டம் ஏற்பட்டிருக்காது. ஆப்கானிஸ்தான் உட்பூசலில் சம்பந்தப்பட்ட எல்லோருமே முஸ்லிம் என்பதைவிட “புஸ்தூன்” என்ற பேரினவாதமும் கூடவே குலகோத்திரவாதங்களும் முதன்மை பெற்றுள்ளன. இன்று சிதைவுற்றுள்ள சோமாலியா, அரசொன்றில்லாமல் தத்தளிக்க அந்நாட்டவர் பெரும்பான்மை முஸ்லிம் என்பதைவிட கோத்திர சண்டைகளே முழுக்காரணமாக உள்ளன.
இங்கே நாம் மிகவும் கவனமாக நோக்க வேண்டிய விடயம், நாம் இனத்தின் பெயரைத் தூக்கிவிடுப்பது மற்றைய முஸ்லிம்களிலிருந்து நம்மைப் பிரித்துக் காட்டவல்ல. நாம் இனத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க முற்படுவது சமயத்தால் முஸ்லிம்களல்லாத ஏனைய இனங்களி லிருந்து நம்மை அடையாளப்படுத்தவேயாம். ஏனைய இன்னல்கள் தொடர்பான விடயங்களில் நமது உரிமையை சுட்டிக்காட்டவும் பெறவுமே தவிர, யாரின் உரிமையையும் பறிக்கவோ மறுக்கவோ அல்ல.
50 *ぐ தமிழ் - முஸ்லிம் இன உறவுகள்

எனவே எது, எங்கு, ஏன் முதன்மை பெற வேண்டும் என்பதை நாம் தூரநோக்கில் சிந்திக்க வேண்டும். இலங்கையின் பிரச்சினை இனங்களின் பிரச்சினை என்பதால், இருபக்க இனத்துவக் கூர்மைகளுக்கு முகம்கொடுக்க வேண்டி இருப்பதால், சேர்ந்து வாழ வேண்டிய தேவை யுண்டு என்பதால் இனங்களுக்கிடையே புரிந்துணர்வும், உரிமைகளை மதிக்கும் குணமும் வேண்டும். அச்சம் நீக்கப்பட வேண்டும். நம்பகத் தன்மை அதிகரிக்கப்பட வேண்டும்.
தமிழர் பிரச்சினைக்கான தீர்வு எதுவாகவும் இருக்கலாம். அவர் கள் எதை விரும்புகிறார்களோ அதையே நாமும் அவர்களுக்கு விரும்பு கின்றோம். இதில் கருத்து வேறுபாடு கிடையாது. ஆகவே, சுயநிர்ணய உரிமை அவர்களுக்கு எப்படியோ நமக்கும் அப்படியே. இதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு நாம் தனி இனம் என்பது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.
தேசம்: இதழ் 19
தமிழ் - முஸ்லிம் இன உறவுகள் 5)

Page 28
இலங்கை முஸ்லிம்கள் சோனகர
முஹம்மது எஸ்.ஆர். நிஸ்தார் - சமூகவியல் ஆய்வாளர்
இனப்பிரச்சினைக்கான தீர்வுநோக்கி முன்னேறும் இந்த முக்கிய மான வரலாற்றுக் கட்டத்தில் எடுக்கப்பட வேண்டிய நியாயமானதும் அரசியல் ரீதியில் மிக முக்கியமானதுமான (Politically Crucia) விடயம் முஸ்லிம்கள் பற்றிய நிலைப்பாடு ஆகும். இக்கட்டத்தில் தெரிந்தோ தெரியாமலோ செய்யப்படும் தவறுகளும் செய்யத் தவறும் விடயங்களும் நாளைய அமைதியான ஒன்றுபட்ட இலங்கையில்; அல்லது சிங்களவர் தமிழர் சுயாட்சிப் பிரதேசங்கள் என்ற அமைப்புக்குள்; அல்லது யூரீலங்கா, தமிழீழம் என்ற இரண்டு இறைமையுள்ள நாடுகளில் இன்னுமொரு ஆயுதப் போராட்டத்தை தோற்றுவிக்கும்.
இன்று சிங்கள பேரினவாதம் (மறைமுக) தமிழ்ப் பேரினவாதம் என்பவை மாத்திரமல்ல வளர்ந்து வரும் தனி பெளத்த மதவாதமும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. உலகின் முதல் பிக்குகளாட்சி (Theo cracy) ஆட்சிக்கான நாடிப்பிடிப்புகளையும் இந்த இடத்தில் மறுப்பதற் கில்லை. (ஆனால் தமிழரிடையே மதவாதம் வெளிப்படுவதற்கான அறி குறி அரிதிலும் அரிதாகவே காணப்படுகின்றது). இலங்கை முஸ்லிம்கள் இன அடையாளம் இல்லாமல் மத அடையாளத்திலேயே தமது அரசியலை நடத்த விரும்பினால் பல இனங்கள் வாழும் நாட்டில் மாறுபட்ட சூழலிலுள்ள ஒரு நாட்டில் அதிலும் நாம் சிறுபான்மையினரிலும் சிறுபான்மையாய் வாழும் நாட்டில் சர்வதேசங்களின் கவனம் அதிகரித்து
52 தமிழ் - முஸ்லிம் இன உறவுகள்

வரும் ஒரு நாட்டில் அது நமது இருப்பையே கேள்விக்குறியாக்கிவிடும் என்பதில் சந்தேகமில்லை.
உதாரணமாக விடுதலைப் புலிகளின் முஸ்லிம்கள் தொடர்பான நிலைப்பாட்டை நோக்கும் போது அதில் சந்தர்ப்பவாதம் இழையோடுவதை இலகுவாகக் காணலாம். அவர்களில் தமிழ் பேசும் மக்கள் என்ற நிலை யை விடுத்து இப்போது விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் முஸ்லிம்களை ஒரு கலாச்சாரக் குழுவாக ஏற்றுக் கொள்வதாகக் கூறியுள் ளார். இந்தக் கலாச்சாரக் குழு என்ற சொற் பிரயோகம், தமிழ் பேசும் மக்கள் என்பதை விடவும் குறைவான நிலை. ஒரு மக்கள் கூட்டத்தில் பல வகையான கலாச்சாரங்கள் பின்பற்றப்படலாம். ஒருவன் உணவு உண்ணும் முறையிலிருந்து நாட்டை நிர்வகிக்கும் விடயங்கள் வரை பலவிதமான கலாச்சாரப் போக்குகளை கடைப்பிடிக்கலாம். இனம் என்ற பரந்த பரப்புக்குள் கலாச்சாரம் என்பது ஒரு சிறு பகுதியே. சரி ஒரு பேச்சுக்காக கலாச்சாரக் குழு என்பதை ஏற்றுக் கொண்டாலும் அக் குழுவின் நிலை என்ன, உரிமைகள் என்ன என்பதற்கு இன்னும் விடை கொடுக்கப்படவிலை.
இதைவிடவும் விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் இலங்கை முஸ்லிம்கள் ஒன்றுபட்டு ஒரு தலைமை யின் கீழ் வரவேண்டும், அதன் பிறகு அவர்கள் தனியான குழுவாக (Entity) பேச்சு வார்த்தை மேசைக்கு வரலாமா என்பது பற்றித் தீர்மானிக் கலாம் என்று கூறியது மிகவும் அவதானத்துக்குரியது. ஆலோசகர் பாலசிங்கத்தின் அரசியல், கூட்டல் கழித்தல் படி இலங்கை முஸ்லிம்கள் பரம்பரை பரம்பரையாக ஐக்கிய தேசிய கட்சி, பூரீலங்கா சுதந்திரக்கட்சி சார்ந்த அரசியல் நடத்தியவர்கள். 1990களில் துடிப்போடு முன்னேறிய பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) அதன் ஸ்தாபக தலைவர் மறைந்த அஷரஃப்பின் திட்டமிட்ட கொலையின்பின் துண்டு துண்டாகி முஸ்லிம் களின் அரசியல் குரல் அஸ்தமிக்க ஆரம்பித்து விட்டது என்பதாகும்.
‘இலங்கை முஸ்லிம்கள் தனியான பிரிவினர். எனவே நாட்டின் இனப்பிரச்சினை தொடர்பான சமாதான முன்னெடுப்புகளில் அவர்கள் பங்குகொள்ள வேண்டியது அவசியம். அதை விடுதலைப் புலிகளாகிய
தமிழ் - முஸ்லிம் இன உறவுகள் 53

Page 29
நாங்கள் உத்தரவாதப்படுத்துகிறோம். ஆகவே முஸ்லிம்கள் அதற்கான அதிகாரத்தை அவர்கள் விரும்பும் தலைமைக்கு அல்லது கட்சிக்குக் கொடுக்கலாம்' என்று பாலசிங்கம் கூறி இருந்தால் அதில் சந்தேகிக்க எந்த விடயமும் இல்லை. இதைவிடுத்து முஸ்லிம்கள் முதலில் ஒன்று படுங்கள் (ஒன்றுபடமாட்டார்கள் என்பது அவரது எதிர்பார்ப்பு) அப்புறம் மிகுதியைப் பார்க்கலாம் என்பது, இனப்பிரச்சினையின் சமாதானத் தீர்வுப் பேச்சுவார்த்தைகளில் முஸ்லிம்களுக்குத் தனியிடமில்லை என்பதற்கான முன் அறிவிப்பாகும்.
இந்த இடத்தில் கலாநிதி சித்தீக்கின் கூற்றொன்றும் சாலப் பொருந்தும். அதாவது முஸ்லிம்களை விட மிக அதிகமாக தமிழர்களே இன்று பிரிந்து காணப்படுகின்றனர். அவர்களின் பிரிவை பத்துக்கும் மேற்பட்டதாக அடையாளங் காணலாம் என்பதாகும். ஆக, இங்கு எத்தனையாக யார் பிரிந்துள்ளனர் என்பது பிரச்சினையல்ல. பேச்சுவார்த் தைக்கு யார் தகுதியான பிரிவினர் என்பதே முக்கியம். அரசதரப்பு, தமிழர்களே முதலில் ஒன்று படுங்கள். அப்புறம் மீதியைப் பார்க்கலாம் என்றால், போர் தொடருமே தவிர அருமையான இந்தச் சமாதான ஒப்பந்த சூழல் இன்று இருந்திருக்காது. என்றும் இருக்காது. ஏனெனில், ஜனநாயக ரீதியில் விடுதலைப் புலிகளின் தலைமையின்கீழ், தமிழர் எல்லோரும் ஒன்றுபடுவதென்பது நடக்க முடியாத விடயம்.
இலங்கையில் முஸ்லிம் என்ற சமயவழிப் பதப்பிரயோகம் இலங் கையின் எதிர்கால அரசியலில் அவர்களை ஒரு தேசிய இனத்தின் அந்தஸ்திலிருந்து கீழிறக்கிவிடும். ஆகவே அவர்கள் தமது இனத்தின் பெயரை தூசுதட்ட வேண்டும். இலங்கை முஸ்லிம்கள் சமய அடையாளத் தினுாடே அரசியலில் செயற்பட விரும்பினால் நாளை சிங்கள இனத்தின் கிறிஸ்தவர்களும் தமிழினத்தின் கிறிஸ்தவர்களும் கிறிஸ்தவர்களின் சிறுசிறு சமயப் பிரிவினரும் (Cult), ஏன் முஸ்லிம்களின் உட்பிரிவினரும் கூட தங்கள் இருப்புக்கான சட்ட அங்கீகாரம் கோரலாம். இலங்கையின் இன்றைய கிறிஸ்தவர், சிங்கள பெளத்தர்களின் உன்னிப்பான அவதானிப் புக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர். சமயரீதியான நெருக்குவாரங்கள் கிறிஸ்தவர்களுக்கு அதிகரிக்கும் போது அதற்கான நிவாரணமாக முஸ்லிம்களுக்கான பிரத்தியேக ஏற்பாட்டை கிறிஸ்தவர்களும் கோரலாம்.
54 தமிழ் - முஸ்லிம் இன உறவுகள்

விடுதலைப் புலிகளும் கூட முஸ்லிம்களின் நியாயமான கோரிக் கைகளைத் தட்டிக் கழிக்க தமிழ் கிறிஸ்தவர்களைக் காரணம் காட்டி தமதாட்சியில் ஒரு சமயப் பிரிவினருக்கு மாத்திரம் பிரத்தியேக சலுகை தர இயலாது எனலாம். நிலைமையை தங்களது அடக்குமுறைக்குச் சாதகமாகவும் பயன்படுத்தலாம்.
இதையெல்லாம் விட மிகப் பயங்கரமான விடயம், விடுதலைப் புலிகள் முஸ்லிம்களுக்கு எதிரான வெளிநாட்டு சக்திகளுடன் கூட்டுச் சேரலாம். அதிலும் விஷேடமாக அமெரிக்காவுடனோ அல்லது இஸ்ரேலு டனோ அல்லது இரண்டு நாடுகளோடும் சேர்ந்து இலங்கை முஸ்லிம்களை இஸ்லாமியப் பயங்கரவாதிகள் என்று பெயரிட்டு மிக இலகுவாக ஓரங்கட்டி விடலாம். இது அதீத கற்பனை அல்ல. ஏகாதிபத்தியவாதிகளினதும் பேரினவாதிகளினதும் கைவந்த கலை. விடுதலைப் போராட்டம், பயங்கர வாதம், நாட்டு நிர்மாணம், உலக ஒழுங்கு, நாகரீக உலகு என்ற பதப் பிரயோகங்கள் அவரவர்களின் நலன் கருதியே பொருள் வழங்கப்படும்.
ஆகவே நாம் நமது இனப்பெயரில் அரசியல் நடத்துவதே அரசியல் சாணக்கியமாகும். (Political manoeuVring). நமது இனத்தின் பெயர் நமது பிறப்புச் சாட்சிப் பத்திரத்தில் மிகத்தெளிவாகத் தெரியப்படுத் தப்பட்டு உள்ளது. சிங்களத்தில் ‘யோனக்க’ என்றும், தமிழில் ‘சோனகர்’ என்றும் ஆங்கிலத்தில் ‘மூர் (Moor) என்றும் எழுதப்பட்டு உள்ளது. இது எமக்கு இழுக்கல்ல. இது ஒரு காரணப் பெயர். எந்த இனமும் தூய்மையான இனமல்ல. அதனால் மாசுபட்டவர் என்ற பொருளல்ல.
நாம் ஒரு கலப்பினம். ஒன்றில் தமிழ்நாட்டில் காயல்பட்டினம், கீழ்க்கரையில் இருந்து வந்த அரபுக் கலப்புடைய தந்தையருக்கும் இலங்கையின் பெரும்பாலும் தமிழ்த் தாய்மாருக்கும் அல்லது நேரடி அரபுத் தந்தையர்களுக்கும் உள்ளுர் தமிழ், சிங்களத் தாய்மார்களுக்கும் அல்லது அரபு கிழக்கு ஐரோப்பியக் கலப்பில் வந்த தந்தை வழியினருக் கும் உள்ளுர் சிங்களத் தமிழ்த் தாய்மாருக்கும் அல்லது மேற்சொன்ன தந்தைவழி வட ஆபிரிக்கக் கலப்பில் தந்தை வழியினருக்கும் உள்ளுர
தமிழ் - முஸ்லிம் இன உறவுகள் 55

Page 30
தமிழ் சிங்களத் தாய்மார்களுக்கும் இடையே ஏற்பட்ட உறவில் அல்லது திருமணப் பந்தத்தின் வழிவந்தவர்கள் இலங்கைச் சோனகர்கள்.
இந்தச் சோனகர் என்போர் இலங்கையில் மாத்திரம் அல்ல, மொரோக்கோ, தமிழ்நாட்டின் சில பகுதிகள் பிலிப்பைன்ஸ் ஆகிய இடங்க ளிலும் வாழ்வதால் இலங்கையில் உள்ளோர் இலங்கைச் சோனகர் (Ceylon Moor) என அழைக்கப்படுக்கின்றனர். இலங்கைச் சோனகர்களின் இருப்பு, இஸ்லாம் இலங்கையில் அறிமுகப்படுத்தப்படும் முன்பு அல்லது அதன் சமகாலத்தில் ஏற்பட்டது என்பது வரலாறு. ஆக, சோனகர் என்பதை இஸ்லாத்துடன் முழுக்க முழுக்கத் தொடர்புபடுத்தி தமிழரில் இருந்தும் சிங்களவரில் இருந்தும் மதமாற்றம் பெற்றோர் எனச் சில இலண்டன் வானொலிகளும் தமிழ்ப் புத்திஜீவிகளும் கூறிவருவது நிரூபிக் கப்பட முடியாத வரலாற்றுப் பிழை. இலங்கைச் சோனகரின் தோற்றமும் வாழ்வும், அதன் மொழி, கலாச்சாரத் தாக்கங்கள், ஐரோப்பியப் படையெடுப்புக் காலங்களில் அந்த இனம் நாட்டுக்கு ஆற்றிய சேவை என்பன எல்லாம் நீண்ட வரலாறு ஆகும்.
ஆக, இலங்கைச் சோனகர் என்போர் தனித்தவொரு இனம். அவர்கள் ஒரு தேசியம் (Nation). அந்தத் தேசியம் தனது விவகாரங்களைத் தானே கவனிக்கும் சுயநிர்ணய உரிமை (Right to Self Determination) அதற்குண்டு. தேவைப்படின், நிபந்தனைகளுடன் கூட்டுச் சேரவும் (இதுதான் விடுதலைப்புலிகள் - முஸ்லிம் காங்கிரஸ் வன்னிச் சந்திப்பும் ஒப்பந்தமும் என்றால் பாராட்டப்பட வேண்டியதே) தனியே பிரிந்து செல்லவும் அதற்கு உரிமையுண்டு.
இந்த உரிமையைத்தான் இதுவரை காலமும் இலங்கையின் பேரினவாத அரசுகள் சிறுபான்மையினருக்கு, குறிப்பாக இலங்கைத் தமிழருக்கு கொடுக்க மறுத்து வந்தன. இப்போதும் மறுக்க முயல்கின் றன. சுயநிர்ணய உரிமையை தமிழர் தரப்பு சோனகர்களுக்குத் தரமறுத்தால் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கை நியாயமற்ற தாகிவிடும். அது அவர்களுடைய போராட்டத்தினை போலியாக்கிவிடும். ქ56 தமிழ் - முஸ்லிம் இன உறவுகள்

மேலும் ஏதாவது ஒரு இடத்தில் இனசுத்திகரிப்பு (Ethnic Cleancing) என்றால் சற்று நின்று உலக நாடுகள் அப்படியா என்று கேட்கின்றன. அதற்கு எதிராகி ஏதாவது செய்ய வேண்டுமென முன்வரு கின்றன. புயல் என்றால், வெள்ளம் என்றால், பூகம்பம் என்றால், நோய் என்றால் உதவ முன்வரும் நாடுகள் கூட ஒரு சமயத்தவருக்கு பிரச்சினை என்றால் அடிப்படைவாதிகளாக இருக்க வேண்டும் அல்லது பயங்கர வாதிகளாக இருக்க வேண்டும் என்ற ரீதியில் உதவ முன்வருவதில்லை. மாறாக பாதிக்கப்பட்ட மதத்தவருக்கு எதிரானவருக்கு கைகொடுத்து உதவுகின்றன. இதில் உள்நாடு வெளிநாடு என்ற பேதமெல்லாம் கிடை ԱմITՖl.
இவை அனைத்தையும் நாம் கவனத்தில் கொண்டால், உலகின் சமகாலப் போக்குக்கேற்பவே எமது உரிமைகளைப் பெறவும் அபிலாஷை களைப் பூர்த்தி செய்யவும் முடியும். சமயம் என்ற போர்வைக்குள் எமது அரசியலுக்கு பலம் சேர்க்க முயலலாம். ஆனால் இனம் என்ற வலுவான அடித்தளத்தில் இருந்து நமது கோரிக்கைகள் பிறக்க வேண்டும் என்பது எனது வாதம்.
தேசம்: இதழ் 18
தமிழ் - முஸ்லிம் இன உறவுகள் 57

Page 31
பொதுக் கட்டமைப்பும் முஸ்லிம்களும். எமது உரிமையும், பாதுகாப்பும் பறிக்கப்பட்டுள்ளன.
எளப்.எம்.எம்.பளயீர்
சுனாமியால் பாதிக்கப்பட்ட வட, கிழக்கின் பிரதேசங்களை புனருத்தாரணம், அபிவிருத்தி செய்தல் தொடர்பிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்கள் வழங்குதல் தொடர்பிலும் சர்ச்சைக்குரியதும், இழுபறிபட்டதுமான பொதுக்கட்டமைப்பு குறித்த ஒப்பந்தமொன்றில் யூன் 24ல் இலங்கை அரசும், புலிகளும் கையொப்பமிட்டுள்ளார்கள். இலங்கை ஜனாதிபதி தனது தற்துணிவு அதிகாரத்தினை, தான் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி என்ற அடிப்படையில் பாராளுமன்ற அதிகாரத்தையும் மீறி, தனது கூட்டணிக் கட்சியான ஜே.வி.பி.யினரது அச்சுறுத்தலையும் அதனைத் தொடர்ந்து அவர்களது வெளியேற்றத்தினையும் கருத்தில் எடுக்காது ஒந்பந்தத்தை அனுமதித்துள்ளார். விகிதாசார ரீதியில் 50 வீதத்துக்கு மேற்பட்ட பாதிக்கப்பட்ட சமூகமான முஸ்லிம்களின் அரசியல் பிரதிநிதிகள் ஒப்பந்தத்தில் சம பிரதிநிதித்துவத்தினை உறுதிப்படுத்தக் கோரிய நியாயபூர்வமான வேண்டுகோளையும் புறக்கணித்து இவ்வொப் பந்தத்தினை ஏற்படுத்தியுள்ளார் ஜனாதிபதி.
இவரது கட்சி அறுதிப் பெரும்பான்மை இழந்து கூட்டணி அமைத்து தொங்கிக் கொண்டிருக்கும் நிலையில், தான்தோன்றித் தனமாகவே இந்த முடிவினை ஜனாதிபதி எடுத்துள்ளார் எனறு குற்றஞ்சாட்டப்படுகிறது.
58 தமிழ் - முஸ்லிம் இன உறவுகள்

இன்னொரு புறம் தமிழ் மக்களுக்குள் ஜனநாயக செயற்பாட்டினை, மாற்றுக் கருத்தினை மறுக்கின்ற, சுனாமியால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் ஒப்பீட்டளவில் குறைந்த பகுதியினையும் மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற, அரசியற் படுகொலைகள் நடத்துகின்ற, உலகின் சில உதவி வழங்கும் நாடுகளில் பயங்கரவாத அமைப்பாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள புலிகளுடன் ஒப்பந்தம் செய்துள்ளது இலங்கை அரசு. இ."தானது இலங்கை அரசு, புலிகளுடன் நிர்வாகத்தைப் பகிர்ந்து கொண்டு சமபங்காளியாக்கி, சர்வதே நிதி வழங்கி, மீள்கட்டமைப்பில் ஈடுபடுவதற்கு முன்வந்துள்ள நாடுகள், அரச சார்பற்ற நிறுவனங்கள், சர்வதேச நாணய நிதியம் மற்றும் பல்வேறுபட்ட சர்வதேச உதவி வழங்கும் முகவர் நிறுவனங்களின் சட்ட அங்கீகாரத்தை புலிகளுக்கு இவ்வொப்பந்தம் மூலம் வழங்கியிருக்கிறது.
வடகிழக்கில் நிர்வாகம் பண்ணுகிற அரசு - புலி இணைந்த பொதுக்கட்டமைப்பு ஏற்பாடு, புலிகளுக்குள்ள அரசியற் தடைகளை நீக்குவ தற்கும், எதிர்கால அரசியல் கோரிக்கைகளை தங்களது உள்ளார்ந்த அரசியல் இலக்குகளை நோக்கி நகர்த்துவதற்கும் வழிசமைத்துள்ளது. ஆனால், ஜனாதிபதியும், நோர்வே அனுசரணையாளர்களும் ஏற்கெனவே அமுலில் உள்ள யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை, இப்பொதுக்கட்டமைப்பு பலப்படுத்தி இனப்பிரச்சினைத் தீர்வுக்கு வழிசமைக்குமென்று நம்புவதாக குறிப்பிடுகின்றனர். அதேவேளை, புலிகள் இது ஒரு மீள் கட்டுமான உத்தியினை பகிர்ந்து கொள்ளும் நடவடிக்கையென்றும், இதற்கும் சமாதான தீர்வுக்கும் எத்தகைய தொடர்பும் இல்லையென்றும் கருத்துக் களை வெளியிட்டு வருகின்றனர்.
“பொதுக்கட்டமைப்பு” பதம் பத்திரிகைகளின் பதப்பிரயோகம்தான் என்று ஜனாதிபதி விமர்சித்திருந்தார். இவ்வொப்பந்தமானது “சுனாமிக்குப் பிந்திய செயற்பாடு முகாமைத்துவக் கட்டமைப்பொன்றினை ஸ்தாபிப் Lugbsib35sT601 fibg|600156 L65 Ligdis605 Memorandom of Understanding of the Establishment of a Post Tsunami Operration Manangement Structure (P-Toms) என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இலகுவாகவும், அதிக சொற்களின்றியும் “சுனாமி அகதிகள் சபை - Tsunami Refuge Council என்றும் பரவலாக இது குறித்துரைக்கப்படுகிறது. எவ்வாறெனினும் சுனாமி யால் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்ததான ஒப்பந்தம் சுனாமியால் அதிகளவு
தமிழ் - முஸ்லிம் இன உறவுகள் 59

Page 32
பாதிக்கப்பட்ட மக்களை ஒப்பந்தத்தின் தரப்பாக கொண்டிருக்காமை இவ்வொப்பந்தம் முஸ்லிம்களை பொறுத்தவரை புரிந்துணர்வை ஏற்படுத்தவில்லை.
“புரிந்துணர்வு" இங்கு அரசியல்மயப்படுத்தப்பட்ட சர்வதேச சமூகங் களின் பின்னணியிலிருந்து நோக்கப்பட வேண்டும். முஸ்லிம்களைப் பொறுத்தவரை அவர்களது ஜனநாயக உரிமை மறுக்கப்பட்டு கசப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த P-Toms குறித்து முஸ்லிம்கள் எழுப்பிய முக்கியமான கேள்வி குறித்து புலிகள் இரட்டை வேடம் பூண்டிருக்கிறார்கள் என்று திட்டவட்டமாகவே தெரிய வந்துள்ளது. நோர்வே அனுசரணையாளர் ஹெல்கீசனிடம் மூன்றாவது தரப்பாக முஸ்லிம்கள் இடம்பெற முடியாது என மறுத்துவிட்டு, பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் தமிழ்ச் செல்வன், ஜனாதிபதியின் வாக்குறுதிகள் குறித்து தனது விமர்சனத்தை முன்வைத்து, “நாங்கள் முஸ்லிம்களை இணைப்பது குறித்து வலியுறுத்தி வருவதாகவும், தங்களால் ஜனாதிபதிபோல் வாக்குறுதி வழங்க முடியாது’ என்றும் வஞ்சகப் புகழ்ச்சியுடன் குறிப்பிட்டிருந்தார்.
ஜனாதிபதியின் முஸ்லிம்கள் பற்றிய செய்தியை காவிச் சென்ற விதார் ஹெல்கீசனிடம், புலிகள் தெட்டத் தெளிவாக முஸ்லிம்கள் பங்காளி யாக இருக்க முடியாது என்பதற்கு சட்டவாதம் ஒன்றையும் முன்வைத்த தாகக் கூறப்படுகிறது. யுத்த நிறுத்தத்தை தொடர்ந்த இலங்கை அரசும், புலிகளும் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு தரப்பினரிடையே யானது. இப்புதிய ஒப்பந்தம் முதலில் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் தொடர்ச்சி அல்லது அனுபந்தம் என்பதே அது. அதேவேளை, பொதுக் கட்டமைப்பு (இலகுவான புரிதலுக்காக பொதுக்கட்டமைப்பு என்ற பதம் பிரயோகிக்கப்படுகிறது) தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கையின் பிரிவு (2) (f) "23 பெப்ரவரி 2002 இலங்கை அரசும், புலிகளும் செய்து கொண்ட யுத்த நிறுத்த உடன்பாட்டினை தப்பபிப்பிராயத்தினை அல்லது அவ்வொப்பந்தத்தின் மாற்றுவதாக அமைந்து விடக் கூடாது” என்று குறிப்பிடுகிறது.
மேலும், இரு தரப்பினரையும் புலிகள் - அரசு என்று வரையறை செய்துள்ள ஒப்பந்தம் பங்காளிகளல்லாத போதும் நிர்வாகக் கட்டமைப்புக் களில் அவர்களது பிரதிநிதித்துவம் பற்றி கூறுமிடங்களில் முஸ்லிம் கட்சிகள் நியமிக்கின்ற அங்கத்தவர்கள் என்று பொதுவாகவே குறிப்பிட்டுள்ளது.
60 தமிழ் - முஸ்லிம் இன உறவுகள்

இது முஸ்லிம்களைப் பொறுத்தவரை காணப்படுகின்ற ஜனநாயகத் தன்மையையும், ஏகபிரதிநிதித்துவத்திற்கு எதிரான பரந்துபட்ட முஸ்லிம்க ளின் அரசியல் பிரதிநிதித்துவங்களையும் அதேவேளை முஸ்லிம்களுக்குள் உள்ள திட்டவட்டமான பொதுவான உடன்பாடு காணப்படாத வேறுபாட்டி னையும் கோடிட்டு காட்டுகிறது. எவ்வாறெனினும் அரசு - புலி என்பதில் தமிழ் மக்களுக்குள் உள்ள ஜனநாயக அரசியல் கட்சிகள், மனித உரிமை குறித்த அக்கறை கொண்ட அமைப்புக்கள், அரசியல் பிரதிநிதிகள் என்று எல்லோருமே இந்த உடன்படிக்கையால் முகவரி அழிக்கப்பட்டிருக் கிறார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பினர் உட்பட என்பது குறிப்பிடத்தக்கது. முஸ்லிம் தரப்பினர் பல்வேறுபட்ட பிரிவினராக கட்சியினராக பலமட்ட செயற்பாடுகளில் தங்கள் பிரதிநிதிகளை நியமிக்க பொதுக்கட்டமைப்பு ஏற்பாடு செய்கின்ற ஜனநாயகத் தேர்வு தமிழர்களுக்கு மறுக்கப்பட்டிருக் கிறது என்பது வெள்ளிடைமலை.
தமிழர்களின் மாற்றுக் கருத்தினருக்கும் கட்சியினருக்கும் புலிகள் வாய்ப்பளிக்காத போது, அதற்கு அரசு துணைபோகும் போது அரசு நிச்சயமாக இந்த ஒப்பந்தத்தினை செய்தே ஆக வேண்டிய நிர்ப்பந்தத் தினை சர்வதேச சமூகம் ஏற்படுத்தியதாக புலிகளின் தயா மாஸ்டர் கூறுகின்ற பொழுது, சர்வதேச சமூகம் முஸ்லிம்கள் குறித்த எந்த அக்கறையும் கொள்ளாது விட்டதிலேயிருந்து, முஸ்லிம்களை இலட்சக் கணக்கில் விரட்டிய, கிழக்கே பள்ளிவாசல்களில், கிராமங்களில் படுகொ லைகள் புரிந்த, துன்புறுத்திய புலிகளிடம் பொதுக்கட்டமைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் அதிகாரங்களை கையளித்து, முஸ்லிம்களின் புனர் நிர்மாணங்கள், நிவாரணங்களை நிர்வகிக்க எதிர்பார்ப்பது என்பது விசித்திரமானது. நோர்வே அனுசரணையாளர்கள் என்றுமே முஸ்லிம்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு எதிராகவே செயற்பட்டு வருகின்றனர். ஆனால், அவ்வப்போது ஆளும் அரசின் பொம்மை முஸ்லிம் தலைவர்க ளையும், பிரதிநிதிகளையும் அவர்கள் சார்ந்து இருக்கின்ற, கூட்டமைத்தி ருக்கின்ற ஆட்சித் தலைவர்களிடம் கையாளச் சொல்லி நோர்வே அனுசர ணையாளர்கள் காரியங்களை சாதித்து வருகின்றனர்.
ரணிலின் ஆட்சியில் மூன்றாம் தரப்பாக கலந்து கொள்ள அனுமதிக்கப்படாதது பற்றி அன்று அலட்டிக் கொள்ளாத ரவூப் ஹக்கீம், இன்று மூன்றாவது தரப்பாக கலந்து கொள்ள முடியாது என்று சட்டவாதம் முன்வைப்பதும், போராட்டம் வெடிக்கும் என்று புலம்புவதும் முஸ்லிம்களின்
தமிழ் - முஸ்லிம் இன உறவுகள் 6.

Page 33
அரசியலை அவர் பலவீனப்படுத்தியிருக்கிறார் என்பதனையே காட்டுகிறது.
பொதுக்கட்டமைப்பு உடன்படிக்கை முஸ்லிம்களுக்கு பிரச்சினை யாக அமைந்தால் அதனை இடைநிறுத்தி வைப்பதாக முஸ்லிம் பிரதிநிதி களிடம் ஜனாதிபதி வாக்குறுதி அளித்திருக்கிறார். தனது கட்சியிலுள்ள முஸ்லிம் பிரதிநிதிகளை, மக்களை திருப்திப்படுத்துவதற்காக ஜனாதிபதி முனைந்துள்ளார் என்பதையே இது காட்டுகிறது. அதாவது தமிழ்ச்செல் வனை பொறுத்த வரை தனது வாக்குறுதியை ஜனாதிபதி காப்பாற்றிவிட்டு முஸ்லிம்களுக்கு ஒரு வாக்குறுதியை அளித்துள்ளார். இடைநிறுத்தம் என்பது ஏற்கெனவே உள்ள ஒப்பந்தத்தில் காணப்படுகின்ற ஒன்றாகவே உள்ளது.
புலிகள் பொதுக்கட்டமைப்பை நணர்டகால அமைப்பாக தமிழர்கள் மீது மட்டுமல்ல, வடகிழக்கில் உள்ள அனைத்து மக்கள் மிதும் தமது அதிகாரத்தினை பிரயோகிக்க ஓர் அரிய வாய்ப்பாகக் கருதுகிறார்கள். சுனாமியைச் சாதகமாகப்பயன்படுத்தி உதவி வழங்கும் நாடுகளின் அங்கீகாரத்தை இலகுவாக பெற்றுள் ளார்கள். ஒருவகையில் புலிகளின்போராட்டம் வெற்றி பெற்றுள்ளது.
நாடளாவிய ரீதியில் எதிர்ப்பார்ப்பாட்டம் செய்யும் ஜே.வி.பீ. முஸ்லிம்களுக்கு இடமளிக்கப்படாதது குறித்து உண்மையிலேயே நியாய பூர்வமான வாதங்களை தெற்கிலே வைத்திருக்கிறார்கள். முஸ்லிம் மக்கள் என்ன செய்யப் போகிறார்கள்? ரவூப் ஹக்கீம் இன்னொரு தேர்தல் போராட்டத்துக்கு தன்னை தயார்படுத்துவதற்கான முனைப்புடன் செயற் பட்டு வருகிறார். அதேவேளை, சந்திரிக்கா அரசுடன் இணைந்து கொண்ட யூரீ.மு.கா. எம்.பி.க்கள் தங்களை வைத்தே ஹக்கீம் போராட்டம் நடாத்தி விடுவார் என்று திகைக்கிறார்கள். தாங்களும் பதவி விலகத் தயார் என்று கூறியவர்கள் தங்களது அறிக்கைகளை மறுபரிசீலனை செய்து கொண்டிருக்கிறார்கள். தேர்தல் ஒன்று வருமாயின் எதை வைத்து முஸ்லிம்கள் முன் தேர்தல் போராட்டம் நடத்துவது என்பது தான் இப்போதைக்கு இவர்களது கவலை. (இக்கட்டுரை எழுதப்படும்போது இலங்கை விமான சேவைகள் மற்றும் விமான நிறுவனங்களின் தலைவர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹற் பதவி விலகியுள்ளார்.)
62 தமிழ் - முஸ்லிம் இன உறவுகள்

பொதுக்கட்டமைப்பின் முகவுரையில் சமூகங்களுக்கிடையிலே, இனத்தவர்களுக்கிடையிலே கூட்டுறவை ஏற்படுத்த வேண்டிய தேவை பற்றி கூறப்படுகிறது. ஆனால், வடகிழக்கில் வாழும் தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள் என்ற சமூகத்தினரை பொதுவாக சமூகங்கள் என்றே குறிப் பிட்டு விட்டு நிர்வாகத்தினராக அரசும், புலிகளும் என்று குறிப்பிடுவதே நிர்வாகப் பங்காளியாக முஸ்லிம்கள் இல்லை என்பதையும், கூட்டுறவு என்பது கொச்சைப்படுத்தப்பட்டு உள்ளது என்பதையும் காட்டுகிறது.
பொதுக்கட்டமைப்பின் பிராந்திய குழுக்கள் கிளிநொச்சியில் இயங்குவதாக தீர்மானம் மேற்கொண்டால் நிதி, நிர்வாக விடயங்களை கையாளுதல் என்பது எவ்வாறு ஜனநாயக முறையிலே நடைமுறைப்படுத் தப்படும். இதற்கு அப்பால், புலிகள் பெறப்போகும் சர்வதேச அங்கீகாரம் மிக முக்கியமாக வட கிழக்கினை புலிகளின் Defactor எனப்படும் கட்டுப்பாட்டுப் பிரதேச ஆட்சியினை விஸ்தரிக்க வழி சமைக்கிறது. புலிகளின் கட்டுப்பாடற்ற பகுதிக்குள் பொதுக்கட்டமைப்பு என்ற போர்வை யில் மேலும் அத்துமீறல்கள் கட்டவிழ்த்து விடப்படும்போது முஸ்லிம்கள் தங்களது உரிமையை மட்டுமல்ல பாதுகாப்பு குறித்தும் மிகுந்த அக்கறை கொள்ள வேண்டி ஏற்பட்டுள்ளது.
இடைக்கால நிர்வாக அமைப்பொன்றினை இந்திய சமாதான ஒப்பந்தத்தினைத் தொடர்ந்து புலிகள் - இந்திய - இலங்கை அரசுகள் முன்வைத்ததிலும், இடைக்கால தன்னாட்சி சபை அதிகாரத்தினை கோரிய புலிகள் வரையிலும், இன்றைய பொதுக்கட்டமைப்பிலும் புலிகள் நியமிக் கும் அங்கத்தவர்கள் தொகை அதிகமாகவே காணப்படுகிறது. மேலும் வேறு தமிழ் பிரதிநிதிகள் எவரும் பங்கு கொள்ள முடியாததாகவும் அல்லது ஜனநாயகத்துக்கு வாய்ப்பளிக்காததாகவும் உள்ளது. அப்படிப் பட்ட பொதுக்கட்டமைப்பு எவ்வாறு பாதிக்கப்dட்ட மக்களின் அபிலாஷைக ளைப் பற்றிக் கவலைப்படும்.
இதற்கு மேல் பல்வேறுபட்ட நிதிக் குற்றச்சாட்டுகளுக்கு உட்பட்ட தமிழர் புனர்வாழ்வுக்கழக அமைப்பின் செயற்பாடுகள் இந்த மீள்கட்டுமா னப்பணிகளில், நிதி கையாளுகையில் புலிகளின் முதற் கண்ணாக செயற்படுகின்ற சூழ்நிலையில், வெளிநாட்டு உதவி நிறுவனங்கள் பல
தமிழ் - முஸ்லிம் இன உறவுகள் 63

Page 34
ரிஆர்ஒ வுக்கு எதிராக வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து புலிகள் மெளனம் காக்கின்ற நிலையில் பொதுக்கட்டமைப்புப் பணிகளில் ரிஆர்ஒ வின் பங்கு என்ன? என்ற கேள்வியும் எழுகிறது.
எது எப்படி இருப்பினும், எந்த உதவிக்காக புலிகள் டோக்கியோ மாநாட்டை புறக்கணித்தார்களோ, பேச்சுவார்த்தைகள் தடைப்பட்டனவோ, அதே உதவிகள் இன்று தன்னாட்சி சபைக்கான கோரிக்கையைத் தள்ளி வைத்துவிட்டு சுனாமிக் கட்டமைப்பு மூலமாக வழங்கப்பட வழிசமைக்கப்பட் டுள்ளது. முஸ்லிம்களின் தன்னாட்சி சபைக்கெதிரான மாற்று யோசனைகள் தமிழர் ஜனநாயக சக்திகளின் வேண்டுதல்கள் யாவும் செவிடன் காதில் ஊதிய சங்குதான். ISGA விற்கான பலமான அத்திவாரம் இடம்பெற்றுள் ளது. வெளிநாட்டு தமிழ்ச் சமூகம் தங்களது தாயகக் கனவுக்கான கட்டுமானமாக இக்கட்டமைப்பைக் காணுகிறார்கள்.
தேசம்: மே - யூலை 2005
64 தமிழ் - முஸ்லிம் இன உறவுகள்

பொதுக்கட்டமைப்பும் முஸ்லிம்களும்: பாதிக்கப்பட்ட சமூகம் ஒரம்கட்டப்பட்டது.
எளப். எல்.எம். பாரூக்
சுனாமி பேரழிவில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமூகம் தனது சனத்தொகையில் 1% த்தை இழந்துள்ளது. மொத்த அழிவில் பாதிக்கப்பட்டவர்களில் அரைவாசிக்கு மேற்பட்டோர் முஸ்லிம்களாவர். ஆனால் இச்சமூகம் இன்று அதன் மீள் கட்டமைப்புக்காக உருவாக்கப்பட இருக்கும் சுனாமி முகாமைத்துவ நிர்வாக கட்டமைப்பில் ஓரங்கட்டப்பட இருப்பது மிகவும் கண்டிக்கப்பட வேண்டிய விடயம்.
இந்த பொதுக்கட்டமைப்பை ஏன் முஸ்லிம்கள் எதிர்க்கிறார்கள் என்ற உண்மையை குறிப்பாக எமது சகோதர இனமான தமிழர்களுக்கு உணர்த்த வேண்டியது தமிழ் ஊடகங்களின் கடமை என்று நான் நினைக் கின்றேன். முஸ்லிம்கள் இந்த பொதுக்கட்டமைப்பை பின்வரும் காரணங்க ளுக்காக எதிர்க்கின்றார்கள்:
1. உருவாக்கப்பட்ட நோக்கம். 2. உருவாக்கப்பட்ட முறை. 3. உத்தேச செயற்பாடுகளில் உள்ள குறைபாடுகள்.
தமிழ் - முஸ்லிம் இன உறவுகள் 65

Page 35
உருவாக்கப்பட்ட நோக்கம்:
முதலில் இது உருவாக்கப்பட்ட நோக்கம் உதவிகளைப் பகிர்ந்த ளிப்பதற்காக அல்ல. இதில் சம்பந்தப்பட்ட நோர்வே அரசாங்கத்துக்கு, புலிகளுக்கு இலங்கை அரசாங்கத்துக்கு வெவ்வேறுபட்ட நோக்கங்கள் இருந்தன. பலஸ்தீன், இஸ்ரேல் பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட பின்னடை வுகளைச் சரி செய்வதற்காக நடுநிலைமையிலிருந்து தவறிய நோர்வே எதையாவது செய்து அமைதி முயற்சிகளை எடுத்து நடத்த வேண்டிய தேவை ஒன்று இருந்தது. வெளிநாட்டு உதவி - அரசாங்கத்தையும், புலிகளையும் ஒரே நேரத்தில் இந்த ஏற்பாட்டிற்கு சம்மதிக்க வைத்தது. இந்த நேரத்தில் ஒரு உண்மையை இலங்கையில் உள்ள எல்லா சமூகத் தினரும் உணர வேண்டும். வெளிநாட்டு உதவிகள் சும்மா வருவதில்லை. இன்று குறிப்பாக தெற்கிலும், வடக்கிலும் வெளிநாட்டு உதவி நிறுவனங் களால் கட்டாய மதமாற்றங்கள் நடைபெற்று வருவது காலப்போக்கில் தெரியவரும்.
புலிகள்:
அரசாங்கத்துடன் ISGA தவிர வேறு எது பற்றியும். பேசமாட்டோம் என்றிருந்த புலிகள் இன்று அரசாங்க இலாகாவுக்குள் செயற்படத் தயா ராகி விட்டார்கள் என்றால் அதற்கு வேறு காரணம் இருக்கின்றது. கரு ணாவின் வெளியேற்றத்தால் கிழக்கில் ஏற்பட்டுவரும் அரசியல் மற்றும் ஆயுத பல பின்னடைவுகளில் தள்ளாடிப் போயுள்ள புலிகள் கிழக்கிலும், வடக்கிலும் தனது செல்வாக்கைச் சரிக்கட்ட இந்த வெளிநாட்டு உதவிகளைப் பாவிக்கலாம் என்று கனவு காண்கின்றனர்.
இலங்கை அரசாங்கம்:
குழப்பமான பொருளாதாரக் கொள்கைகளாலும், உட்கட்சி முரண் பாடுகளாலும் தனது பதவியின் அந்திம காலத்தை கஷ்டப்பட்டு உருட்டிக் கொண்டிருக்கும் சந்திரிக்காவிற்கு இது ஒரு பெரிய ஆறுதல். அதன் பொருட்டு கிடைக்க இருக்கும் வெளிநாட்டு உதவியோ பெரும் அதிர்ஷ்டம். தெற்கில் சரிந்துவரும் தன் செல்வாக்கை தாக்குப்பிடிக்க இந்த உதவியைப் பாவிக்க இருக்கிறார். எனவே இந்த கட்டமைப்பு நாடகத்தில் கதாநாயகர்களிற்கே உதவி, பணத்தின் மேல்தான் கண். அல்லாமல் பாதிக்கப்பட்ட மக்களின் மீதல்ல.
66 தமிழ் - முஸ்லிம் இன உறவுகள்

எனவே, பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களை எல்லோரும் மறந்து போனதில் எதுவித ஆச்சரியமுமில்லை. தங்கள் தங்கள் அரசியல் லாபத்தையே கவனத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த கட்டமைப்பை எப்படி முஸ்லிம்கள் அங்கீகரிக்க முடியும்?
உருவாக்கப்பட்ட முறை:
இந்த பொதுக்கட்டமைப்பு முஸ்லிம்களின் பங்களிப்பு இல்லாம லேயே உருவாக்கப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட எந்த குழுவாவது தங்களது கருத்துக்களைக் கவனம் கொள்ளாத அமைப்பில் இருந்து எதனை எதிர்பார்க்க முடியும். இன்று இலங்கையில் உள்ள இனப்பிரச்சி னைக்கான தீர்வு தமிழ் மக்களின் பிரதிநிதிகள் (புலிகள்) இல்லாமல் உருவாக்கப்படுமானால் இதனைத் தமிழ் மக்கள் அங்கீகரிப்பார்களா?
உத்தேச செயற்பாடுகள்:
பொதுக்கட்டமைப்பு அடிப்படையில் உருவாக்கப்படும் முகாமைத் துவ நிர்வாக கட்டமைப்பில் மிக முக்கியமான அபிவிருத்தித் திட்டங்களை அங்கீகரிக்கும் நெறிப்படுத்தும் அமைப்பில் முஸ்லிம்களின் ஆதரவு இன்றி புலிகளும் அரசாங்கமும் சேர்ந்து முஸ்லிம்களுக்கு நன்மை பயக்கக் கூடிய திட்டங்களை அமுல்படுத்தலாம். முஸ்லிம்களை தனித்தரப்பாக ஏற்றுக்கொள்ள மறுக்கும் புலிகள் முஸ்லிம் பிரதேசங்களின் மீள் கட்ட மைப்பிற்கு உதவி செய்வார்களா? மாற்றுக் கருத்துக்களைக் கொண்ட தமது இனத்தவர்களையே பொறுக்காதவர்கள் மாற்று இனத்தவர்களை குறிப்பாக முஸ்லிம்களை மதிப்பார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?
தேசம் (ஐக்கிய இராச்சியம்) மே - யூலை - 2005
தமிழ் - முஸ்லிம் இன உறவுகள் 67

Page 36
முஸ்லிம்களது அரசியல் உரிமைகள் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
ச. முருகையா, இலணர்டனி
‘தேசம்" சஞ்சிகை இதழ் 15ல் காலத்தின் தேவை கருதி அரசியல் ஆய்வுப் பகுதியில் மிக அவசியமான ஒரு கருத்து வலியுறுத் தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஈழத்து இனப்பிரச்சினையை யதார்த்தமான நடைமுறை சாத்தியமான அணுகுமுறைகளால் வென்றெடுக்க வேண்டும் என்றும்; அதனை சமூகப் பொறுப்புள்ளவர்கள் கவனத்தில் எடுக்க வேண்டும் என்றும் தெளிவாகச் சுட்டிக் காட்டியிருக்கிறீர்கள்.
தற்போதுள்ள சமாதான ஒப்பந்த காலத்தில் சிங்கள மக்களுடன் உறவுகளை ஏற்படுத்தி, அரசியல் ரீதியாக தமிழருக்கு பிரச்சினைகள் உள்ளன என்பதை சாதாரண சிங்கள மக்கள் அறிந்து கொள்ள வழி செய்யும் வாய்ப்புக்கள் உள்ளன. இதற்கான அரசியல் செயற்பாடுகளை சிங்கள மக்கள் மத்தியில் முன்வைக்கத் தவறியது விடுதலைப் புலிகள் மாத்திரமல்ல, அவர்களுக்கு ஆதரவு தருகிறோம் என்று கூறிக் கொண்டு கொழும்பில் சிங்கள பேரினவாத அரசியல் தலைவர்களுடன் தமது சுய லாபங்களுக்காகப் பேரம் பேசிக் கொண்டிருக்கும் ஏனைய அரசியல் கட்சிகளும் தான் தவறிவிட்டன.
68 தமிழ் - முஸ்லிம் இன உறவுகள்

விடுதலைப் புலிகளை விட சிங்கள மக்களிடையே அரசியல் ரீதியாக நெருக்கமாகச் செயற்பட அதிக வாய்ப்புள்ளவர்களாக இருந்தும் 1980ம் ஆண்டு திரு. அமிர்தலிங்கம் தமிழ் மக்களுக்குச் செய்த அரசியல் துரோகத்தையும், காட்டிக் கொடுப்பையும் தமது அரசியல் தாரக மந்திரமா கக் கொண்டே இன்றும் அவர்கள் கொழும்பில் செயற்படுகிறார்கள்.
முஸ்லிம்கள் தமிழ் பேசுபவர்களாக இருந்தாலும் தனிக் கலாசார அலகு கொண்டவர்களாக இருப்பதால் அவர்களது அரசியல் உரிமை பற்றிய எதிர்கால அரசால் முன்வைக்கப்படும் முன்னதாக வி. புலிகளால் முன்வைக்கப்பட வேண்டிய சூழ்நிலை உள்ளது. அப்படியிருந்தும் கடந்த இடைக்கால நிர்வாக சபை உறுப்புரைகளில் இவை தெளிவாகக் குறிப் பிடப்படாமல் மேலோட்டமாகத் தொட்டுச் செல்லப்பட்டுள்ளன.
இது 1950களில் சிங்களத் தலைவர்களின் மீது தமிழருக்கு ஏற்பட்ட சந்தேகம் போல் முஸ்லிம்கள் வி.புலிகள் மீது சந்தேகம் கொள்ள வழியமைத்துள்ளது. இலங்கை மக்களின் பூர்வீகம், இதுவரை ஆய்வு பூர்வமான முடிவுகளால் அறுதியிட்டு நிரூபிக்கப்படாத நிலையில் இன்று வி. புலிகளால், தமிழர்கள் என உள்ளடக்கப்படும் முஸ்லிம்கள் நாளை தாமும் தாயகப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்படலாம்.
கடந்த இரு தசாப்தங்களுக்கு மேலான தமிழரின் போராட்டத்தி னால் ஈழத்தமிழர் இழந்தவையும், போராளிகளின் உயிர்த்தியாகமும் ஈடுசெய்ய முடியாததுதான். ஆயினும், சர்வதேச அரசியல் ஒழுங்கில் பூகோள ரீதியில் எதிர்காலத்தில் தாம் முஸ்லிம்கள் என்ற கோஷத்தை முன்னெடுத்து தமிழர்களுக்கு எதிராக இலங்கை தமிழ் முஸ்லிம்கள் ஆயுதப் போராட்டத்தை தொடங்கலாம். அதனால் மீண்டும் வடக்குக் கிழக்குப் பகுதியில் இரத்தக்களறியொன்று ஏற்படும். அப்பொழுது இன்று சர்வதேச மத்தியஸ்தத்துடன் ஆட்சியமைக்கும் தமிழினம் நாளை சிங்கள அரசின் நடுநிலைமைக்குக் கட்டுப்பட்டுப் பிரிந்து சென்று மீண்டும் பலவீன மான ஒரு சமூகமாக மாற இது வழியமைக்கும்.
இலங்கை வரலாற்றில் சிங்கள அரசர்கள் தனித்து நின்று தமிழர்க ளை வெற்றி கொண்டதாக வரலாறு இல்லை. நெருக்கடிகள் ஏற்படும்போது
தமிழ் - முஸ்லிம் இன உறவுகள் 69

Page 37
இந்தியாவின் உதவியுடனேயே இவர்கள் தமிழர்களுடன் பொருதி உள்ளார் கள். இதனால் வி. புலிகள் இந்தியா பற்றிய கொள்கையில் கடைபிடிக்கும் கடும் போக்கில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும் என்பதை “தேசம்” வெளிப்படுத்தியுள்ளது. கால மாற்றம் தேவைகள் கருதி நன்மை தருவ தாக இருந்தால் நமது கொள்கைகளை மாற்றிக் கொள்வதில் தவறில்லை என்றும் சுட்டிக்காட்டி இருப்பது வரவேற்கத்தக்கது. தங்களது கருத்துக் களில் தவறவிடப்பட்ட ஓர் அம்சத்தையும் இங்கு நான் பதிவு செய்ய விரும்புகிறேன்.
மலைநாட்டுத் தமிழர்கள் இந்த அரசியல் தீர்வுக்குள் அடக்கப் படாமல் உள்ளனர். எதிர்காலத்தில் குடியுரிமை வழங்கப்படும் போது அரசியல் ரீதியான அங்கத்துவம் பெற்றுக் கொள்ளும் நிலையில், குடித் தொகை அளவில் மலையகத் தமிழரும் இலங்கைத் தமிழ் முஸ்லிம்களும் தமிழர் பிரதிநிதித்துவத்தை விட அதிகமான பங்கை இலங்கை அரசிய லில் கொண்டிருப்பார்கள். இதன் காரணமாக சிங்கள பேரினவாத அரசால் இவர்கள் உள்வாங்கப்படலாம். மேலும் இந்தியத் தமிழர்கள் அரசியல் ரீதியாக இலங்கைத் தமிழர்களால் புறக்கணிக்கப்பட்டு விட்டார்கள் என்ற கோஷத்துடன், இலங்கையில் ஒர் அரசியல் சமூக பொருளாதாரக் குழப்ப நிலையை சிங்கள அரசுகள் தொடரவும் இது வாய்ப்பளிக்கும்.
தேசம் இதழ் 16
70 தமிழ் - முஸ்லிம் இன உறவுகள்

(2005 ஜனவரி 2ல் தேசம் சஞ்சிகையால் வழங்கப்பட்ட மருந்துப் பொருட்களுடனும் சிறுதொகை நிதியுடனும் அம்பாறை சென்று ஐனவரி 20ல் இலண்டன் திரும்பிய ஒரு பத்திரிகையாளரின் நேரடி அனுபவம். )
சுனாமிக்குப் பின் கிழக்கு மாகாணம் அம்பாறையில் இன உறவுகள்
மனிதன் அழிந்த நேரத்தில் மனிதம் தளைத்திருக்கிறது விமல் குழந்தைவேல்
இந்த மக்கள் எப்படி உயிருக்குப் போராடினார்கள், எதையெல் லாம் இழந்தார்கள் என்பது எங்களுக்குத் தான் தெரியும், நாங்களும் மனிதர்கள் தானே. ஆனால் கட்டளைகளை நிறைவேற்றும் உத்தியோ கத்தர்கள். இன்று நாங்கள் காப்பாற்றிய இதே மக்களுக்கு எதிராக துப்பாக்கி நீட்டும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் எவருமே மன்னிக்கப்பட முடியாதவர்கள் என்று கண் கலங்கினர் தமிழ் மக்களுடன் பேசிக் கொண்டிருந்த இராணுவத்தினர்.
அனர்த்தம் நடந்த அடுத்தடுத்த நாட்களுக்கெல்லாம் அம்பாறை, மாந்தோட்டம், 10ம் கட்டை . போன்ற இடங்களுக்கெல்லாம் நடந்து போய் உணவு கொடுத்திருக்கிறார்கள் சிங்களப் பெண்கள். தங்கள் அகதிகளை விட தமிழ் அகதிகளை மேலாகவே கவனித்திருக்கிறார்கள் முஸ்லிம்கள். அகதிகளாகச் சென்ற பெண்கள் மனதளவில் பாதிக்கப்பட்டி ருக்கக் கூடுமென்பதால் தங்கள் பெண்களை அவர்களிடம் போய் ஆறுதல் வார்த்தை பேசும்படி பள்ளிவாசல் ஒலிபெருக்கியில் சொல்லியி ருக்கிறார்கள்.
கடல் அடித்து ஆற்றில் விட்ட உடல்களை அள்ளிக் கரை சேர்த்து அடக்கம் செய்தவர்களில் அனேகமானோர் முஸ்லிம் இளைஞர கள். சுன்னத்து வைத்ததா, முக்காடு போட்டதா என்று மையத்துக்களை பார்க்க இது நேரமல்ல. மனிதன் அழிந்த நேரத்தில் தான் மனிதம்
தமிழ் - முஸ்லிம் இன உறவுகள் 7

Page 38
தளைத்திருக்கிறது. அரசியல் தலையீடுகள் இல்லாத பட்சத்தில் தமிழ் - முஸ்லிம் வளரும் என்கிறார் அவ்விளைஞர்களில் ஒருவர்.
ஊரைக் கிழித்து, பிரித்துப் புரட்டிப்போட்டு விட்டுப் போன சுனாமி சொல்லாமல், கொள்ளாமல் பலரின் சுயரூபங்களையும் வெளிக்காட்டி இருக்கின்றது. தாங்கள் மக்களின் ஏகோபித்த பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொண்டிருந்த வி.புலிகள், மக்களோடு நெருங்கி அவர்களை அனைத்து ஆறுதல் சொல்லக் கிடைத்த ஒரு சந்தர்ப்பத்தை துஸ்பிர யோகம் செய்துவிட்டார்கள். மட்டு, அம்பாறை மாவட்டங்களில் அனர்த்தம் நடந்து மூன்று நாட்களின் பின் வந்தவர்கள் தங்கள் அதிகாரத்தை காட்டி மிரட்டி நிர்வாகம் செய்ய முற்பட்டபோது மக்களின் கண்டிப் புக்கும் விமர்சனத்துக்கும் ஆளாகி இருக்கிறார்கள்.
ஆனால் இராணுவம் மக்களுடன் நட்பு ரீதியில் அவர்களுக்கு உதவியது. அதனால் மக்கள் மத்தியில் அவர்களுக்கு ஆதரவு இருந்தது. இது ஒரு மனிதாபிமான, மனநெகிழ்வில் செய்யப்பட்ட உதவி. இராணுவத் தினர் அலை அடித்துச் சென்ற பலரைக் காப்பாற்றி இருக்கிறார்கள். அலையின் வேகத்தில் ஆடை அவிழ்ந்து நின்ற பெண்களுக்கு தங்கள் சீருடையை கொடுத்திருக்கிறார்கள். முதல் 24 மணிநேரத்தில் பசித்த வர்களுக்கு தங்களால் முடிந்த அளவு உணவு கொடுத்திருக்கிறார்கள். தமிழ் அகதிகளுக்காக உணவு கேட்டுச் சென்றவர்கள் கண்கலங்கிய சம்பவங்களும் நடந்திருக்கின்றன. இப்போது அகதிமுகாமில் உள்ள சிறுவர்களோடு கிரிக்கட் விளையாடுகிறார்கள். அச்சிறார்களின் கவலை யை, ஏக்கத்தை சிறிது நேரம் மறக்கச் செய்கிறார்கள். -
ஏன் எம்மவர்களால் இதைச் செய்ய முடியவில்லை. காரணம் மாற்றுக் குழுப்பயம். இந்த நேரத்திலும் மக்களிடம் ஒரு அன்பான வார்த்தையோ ஒரு புன்னகையோ செய்யாமல் அவர்களைத் தீண்டத் தகாதவர்கள் போல் நடத்துகிறார்கள். இராணுவம் செய்த உதவிகளை தங்கள் வாழ்நாளில் மறக்க மாட்டோம் என்கிறார்கள் மக்கள். தமிழ், முஸ்லிம், சிங்களம் என்ற பாகுபாடற்ற ஒற்றுமையான சமூகக் கட்டுக்கொப் பொன்றை சுனாமி ஏற்படுத்தி இருப்பது பலர் வயிற்றிலும் புளியைக் கரைத்திருப்பது உண்மையே. இந்த இன ஒற்றுமைக்கு கொடுத்த விலை மிக அதிகம். இருந்தும் அது தொடர்ந்தும் காப்பாற்றப்படுமா என்ற அச்சமும் உள்ளது.
தேசம் இதழ் 21
72 − தமிழ் - முஸ்லிம் இன உறவுகள்

முஸ்லிம்களை அங்கீகரிக்க மறுப்பது
இந்துமதத் திணிப்பு
ஆசா மொகமட்
ஒரு சராசரி முஸ்லிம் பெண் சமாதானத்தைப் பற்றி என்ன நினைக்கிறாளோ அதை மாத்திரமே இங்கு எழுதுகிறேன்.
நான் மலையகத்தில் பிறந்தவள். எனது கணவர் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர். எமது தாய்மொழி தமிழ். எம் இருவருக்கும் தமிழ்மொழிப்பற்று சற்று அதிகம். அதன் நிதர்சனமான வெளிப்பாடாக இங்கிலாந்தில் ஆங்கிலம் பேசி வளர்ந்த எனது மகள் கடந்த ஆண்டு நடைபெற்ற தேசிய இனவெழுச்சி நாள் தமிழ்த்திறன் போட்டியிலே முதற் பரிசைப் பெற்று அந்தப் பிரமாண்டமான கூட்டத்தில் பேசிக் கைத்தட்டு வாங்கினாள். அந்தளவிற்கு தமிழ் மொழிமீது பற்றுக்கொண்ட நான் என்னை ஒரு இஸ்லாமியப் பெண் என்று தான் இங்கு அறிமுகப்படுத்திக் கொள்வேன். இது சரியா பிழையா என்று எனக்குத் தெரியாது. ஆனால் அது ஒரு யதார்த்தம் என்று நினைக்கிறேன்.
இன்னாருக்கு மகளாகப் பிறக்க வேண்டும் என்பது நான் செய்த தெரிவல்ல. அது இயற்கையாக நடந்தேறிய ஒரு நிகழ்ச்சி. எனது தாய்
தமிழ் - முஸ்லிம் இன உறவுகள் 73

Page 39
எனக்குத் தாய்ப்பாலை ஊட்டும்போதே தமிழ் மொழியையும், இஸ்லாமிய மதத்தையும் சேர்த்தே ஊட்டினாள். நான் சிறுமியாக இருக்கும் போது தமிழ் மொழியில் பேசினேன். தமிழ் மொழியில் சிந்தித்தேன். அம்மொழி யை நேசிக்கத் தொடங்கினேன். எனக்கு நிறைய இந்து மதத்தைச் சேர்ந்த நண்பர்கள் இருந்தார்கள். அவர்களோடு சேர்ந்து நான் விளையாடு வேன். தமிழ் மொழி எம்மை இணைத்தது. கொஞ்சம் வளர்ந்தவுடன் எனக்குத் தமிழ் இலக்கியங்களிலே ஈடுபாடு ஏற்பட்டது. மகாபாரதம், இந்துமதக் கடவுளர்களை கதாநாயகர்களாகக் கொண்டிருந்தாலும் கம்பனின் தமிழ் மதத் தன்மையை மறந்து அதைச் சுவைக்கச் செய்தது.
ஆனால் இலக்கியத்துறையில் சமரசம் செய்து கொள்ள முடிந்த அளவிற்கு கலைத்துறையில் சமரசம் செய்துகொள்வதற்கு எனது மத மும், எனது பெற்றோர்களும், எனது சமூகமும் என்னை அனுமதிக்கவில் லை. பரதநாட்டியம் பழக வேண்டும் என நான் விரும்பினேன். இந்துக் கடவுள்களையும், சைவக் கதைகளையும் அபிநயம் பிடித்து ஆடுவதை எனது மதம் தடுத்தது. ஆழகான கோயில் சிலைகளையும், சிற்பங்க ளையும் ரசிப்பதற்கோ, படைப்பதற்கோ எனது மதத்தில் இடம் கிடையாது.
கலாசார சமூக வாழ்க்கையிலும் நாம் அடிப்படையில் முரணான இரு சமூகங்களாகவே இருந்தோம். இந்து மதத்தை வழிபடும் தமிழ்மக்கள் பசுவைத் தமது தாயாக, தெய்வமாகப் பார்த்தனர். நாம் அதனை ஆண்ட வன் எமக்கு உணவாகப் படைத்த மிருகங்களில் ஒன்றாகப் பார்த்தோம். அதனால் மரபுரீதியான இந்துக்கள் எம்மைத் தீண்டத்தகாதவர் எனக் கருதி தள்ளி நின்று பழகுவதை நான் அவதானித்தேன். அதே போல, சிலை வணக்கம் செய்யும் இந்துக்களை தீண்டத்தகாதவர்களாக எம்மவர் கருதுவதைக் கண்டேன். இவற்றிற்கெல்லாம் எனக்கு அர்த்தம் புரிய வில்லை. ஆனால் நாம் இருசாராரும் ஒரே மொழியைப் பேசும் இருவேறு கலாசாரங்களை கொண்ட சமூகம் என்பது மாத்திரம் தான் எனக்குப் புரிந்தது.
நான் வளர்ந்தேன். நாட்டு நடப்புக்களைப் புரிந்து கொள்ளும் பக்குவம் எனக்கு வந்தது. நான் பிறந்த மண்ணை நேசித்தேன். ஆனால் எனது நாட்டின் ஆட்சி முறையிலும் அரசியலிலும் ஏதோ கோளாறு
74 தமிழ் - முஸ்லிம் இன உறவுகள்

இருப்பது தெரிந்தது. எமது ஆட்சி முறையில் என்றுமே சகல சமூகங்க ளும் சமவுரிமையோடு வாழ முடியாது என்பதை நான் புரிந்துகொண்டேன்.
ஏனெனில் அந்த ஆட்சி முறையின் கீழ், நாட்டின் சனத்தொ கையில் 70சத வீதத்திற்கும் அதிகமான எண்ணிக்கையைக் கொண்டிருக் கும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர்களே ஆட்சிக்கு வரமுடியும் என்பது எனக்குப் புரிந்தது. அவ்வாறு ஆட்சிக்கு வந்தவர்கள் எமது நாடு பெரும்பான்மை இனத்திற்கு மாத்திரமே சொந்தமான நாடு எனக்கூறி சிறுபான்மை இனங்களின் உரிமைகளை மறுக்கத் தொடங்கினார்கள். தமிழ்பேசும் மக்கள் செறிவாக வாழும் பகுதியில் குடியேற்றங்களை நிறுவி எல்லாப் பிரதேசங்களிலும் எம்மைப் பலவீனமான சிறுபான்மை மக்களாக மாற்ற முயன்றனர். தனிச்சிங்களச் சட்டத்தைக் கொண்டு வந்து எமது மொழி உரிமையையும் தொழில் உரிமையையும் பறித்தார்கள். இத்தகைய பாரபட்சத்திற்கு எதிராக எமது சிறுபான்மைக் குரல் எழும்பியபோது துப்பாக்கிமுனையால் அதனை நசுக்க முயன்றனர்.
ஜனநாயக வழிமுறைகளில் எமக்குத் தீர்வு கிடைக்கவில்லை. இளைஞர்களை அடித்து வதைத்துத் துன்புறுத்தி அவர்களை ஆயுதம் ஏந்தச் செய்தனர். இவை யாவும் என் கண்முன்னால் நடந்தேறிய மாற்றங் கள். ஆயுதப் போராட்டம் தொடங்கிய ஆரம்பத்தில் தமிழ்பேசும் மக்கள் என்ற முறையில் இந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றுபட்டே போராடினர். ஆனால் நாளடைவில் இந்துக்களுக்கு எதிராக முஸ்லிம்களும், முஸ்லிம்க ளுக்கு எதிராக இந்துக்களும் ஒருவருக்கொருவர் தமக்கிடையே போராடிய தை வேதனையோடு பார்த்தேன். நான் இந்து நண்பர்களோடு பழகுவது கூட ஒரு குற்றச்செயலாக எனது சமூகத்தில் உள்ள ஒரு சிலரால் பார்க்கப்பட்டது. அதேபோல ஒரு சில இந்து நண்பர்கள் எம்மைத் தமது எதிரியாகப் பார்க்கத் தொடங்கினர். அவர்களை குறை கூறவில்லை. அந்தளவுக்கு எமது உறவு பழுதுபட்டுப் போனது என்பதைத் தான் இங்கே கூற முனைகிறேன்.
இந்த நிலைமை மாற வேண்டுமென நான் மனமாற விரும்புகின் றேன். தமிழ் என்பது இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் பொதுவான மொழி. அதனை ஒரு மதத்தைச் சேர்ந்தவர்கள் மாத்திரம் உரிமை
தமிழ் - முஸ்லிம் இன உறவுகள் 75

Page 40
கொண்டாட முடியாது என்பது எனது திட்டவட்டமான அபிப்பிராயம். அதேசமயம் தமிழர்கள் என்று கூறிக்கொண்டு முஸ்லிம்களின் தனித்து வத்தையும் எமது உரிமைகளையும் அங்கீகரிக்க மறுத்தால் இந்துமத ஆதிக்கத்தை எம்மீது திணிக்க முனைவதாகவே அர்த்தப்படும்.
நான் இலங்கையில் சமாதானம் மலர வேண்டுமென விரும்புகி றேன். உலகின் சொர்க்கபுரி என அழைக்கப்பட்ட எமது அழகிய இலங்கை, அந்த அந்தஸ்தைப் பெற வேண்டும் என ஏங்குகிறேன். ஆனால் நான் விரும்பும் அந்த சமாதானம் யுத்தமற்ற நிலைமையை மாத்திரம் குறிக்கவில்லை. இலங்கையில் வாழும் சகல சமூகங்களும் சமவுரிமையோடு வாழும் அரசியல் சூழலைத்தான் நான் சமாதானச் சூழல் எனக் கருதுகின்றேன். அந்த சூழல் உருவாக வேண்டும். நான் சிறுமியாக இருக்கும் போது ஓடி விளையாடிய எனது தோழிகளோடு மீண்டும் நான் அதே நட்போடு பழகக்கூடிய சூழல் வேண்டும். ஒருவரை ஒருவர் ஒடுக்காத சூழல் வேண்டும். ஒருவரோடு ஒருவர் பரஸ்பரப் புரிந்துணர்வுடன் அந்நியோன்னியமாகப் பழகக்கூடிய சூழல் எனக்கு வேண்டும்.
அந்தச் சூழலை யாரும் ஏற்படுத்தித் தரமாட்டார்கள். அதனை நாம் தான் உருவாக்க வேண்டும். அந்த உன்னதமான சமாதானத்தை நாம் அனைவரும் ஒன்றிணைந்தால் தான் உருவாக்க முடியும். நாம் அனைவரும் எமது வேறுபாடுகளை மறந்துவிட்டு ஒன்றுபட்டுச் செயற்படு வோம். அந்த நன்னாளை உருவாக்குவோம்.
தேசம்: இதழ் 20
76 தமிழ் - முஸ்லிம் இன உறவுகள்

தமிழ் மேசும் மக்கள் : அடையாள இருட்டடிப்பு
முஹம்மது எளப்.ஆர். நிளப்தார் - சமூகவியல் ஆய்வாளர்
1948ல் இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து நீறுபூத்த நெருப்பாய் இருந்து வந்த இன அடக்குமுறையும் அதற்கெதிரான போராட்டமும் 1983இல் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. இரண்டு தசாப்தங்கள் தாண்டி இன்று இந்த இனப்பிரச்சினைத் தீ அணைந்து போகப் பலரும் பல வழிகளிலும் முன்னின்றுழைப்பது மகிழ்ச்சி தருவதாய் இருந்தாலும், இனப்பிரச்சினையின் உச்சகட்ட காலங்களில் ஆங்காங்கே முளைவிட்ட ஒரு கேள்வி இப்போது மரமாகிக் கிளை பரப்பியுள்ளது. இது பெரு விருட்சமாகி புதிய பிரச்சினைகளைத் தோற்றுவிக்காமல் இருக்க தேவைக்கேற்ப அழகாய், அளவாய் கத்தரித்து பராமரித்து வளர்க்கப்பட வேண்டுமா என்ற கேள்வியும் மிகத் தெளிவான குரலில் ஓங்கி ஒலிக்கின்றது.
பல்லின மக்களைக்கொண்ட இலங்கைத் தீவில் இனப்பிரச்சினை யைத் தீர்க்க சிங்கள இனத்தின் சார்பில் இலங்கை அரசும் (ஜனாதிபதி நீங்கலாக) தமிழினத்தின் சார்பில் தமிழீழ விடுதலைப்புலிகளும் (வேறு யாரும் சேர்க்கப்படாமல்) பிரதிநிதிகளாகச் செயற்படுவதால் இலங்கையில் இரண்டு இனங்கள் மட்டும் தான் உள்ளன என்பதோ அல்லது வேறு இனங்களுக்கு அரசியலை அடியொட்டியதான பிரச்சினைகள் இல்லை என்பதோ பொருளல்ல. தவிர, போரிட்ட இரண்டு இனங்களும் ஏதோ
தமிழ் - முஸ்லிம் இன உறவுகள் 77

Page 41
வொரு தீர்வை அடைந்தால் அது எல்லா இனங்களையும் திருப்திப் படுத்தும் என்ற உத்தரவாதமுமாகாது. ஏனெனில் இலங்கையின் இன்னு மொரு சிறுபான்மையினம் தொடர்பான அதன் அடையாளப் பிரச்சினையில் சில சிக்கல்கள் இருப்பதால் இனப்பிரச்சினை தொடர்பாக அதன் பங்க ளிப்பு கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளது.
*இலங்கை முஸ்லிம்கள்’ என்போரே இந்தப் புதிய பிரச்சினையின் கருப்பொருளாகும். 1990இல் நடந்த இரண்டு முக்கிய வரலாற்றுச் சம்பவங்கள் இந்தப் புதிய பிரச்சினைக்கான தீர்வொன்றின் தேவையை உணர்த்தியது. இதில் 1வது, கிழக்கிலங்கையில் தொழுகை நேரத்தின் போது வயதுபேதமின்றி சிறியோர் முதல் தள்ளாடும் வயதினர் வரை நூற்றுக்குமேற்பட்டோர் மசூதிக்குள் வைத்து புலிகளால் ஒரே நேரத்தில் காரணமின்றிச் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம். 2வது அதே ஆண்டில் யாழ், மன்னார், முல்லைத்தீவு ஆகிய தமிழ் - முஸ்லிம் பூர்வீக பகுதிகளி லிருந்து பலாத்காரமாக ஒரு சில மணிநேரத்தில் முஸ்லிம்கள் வெளியேற் றப்பட்டமை.
மேற்படி இரண்டு சம்பவங்களில் இருந்தும் எழும்பிய புதிய கேள்விகள் இக்கட்டுரையின் அடிப்படைப் பிரச்சினையாகிய 'சிறுபான்மை யினம்’ என்ற பதப்பிரயோகத்தின் சரியான விளக்கமொன்றின் தேவையை உணர்த்தி நிற்கின்றது. இந்த ‘முஸ்லிம்களை விடுதலைப் புலிகள் ‘தமிழ் பேசும் மக்கள்’ என்ற பதப்பிரயோகத்தின் கீழ் அடக்கித் தாம் இனப்பிரச்சினை விவகாரத்தில் ‘தமிழ் பேசுவோரின் பிரதிநிதிகள் என்றும், தமிழர்களுக்கும் சிங்களவருக்கும் இடையில் ஏற்படும் தீர்வும் உடன் பாடும் ‘தமிழ் பேசுவோர் எல்லோருக்குமான தீர்வே' என்ற நிலைப்பாட் டையும் கொண்டுள்ளனர். புலிகளின் இந்த நிலைப்பாட்டிற்கு வலிமை சேர்ப்பது போல் இலண்டனில் மையம் கொண்டுள்ள தமிழ் வானொலி களும் பத்திரிகைகளும் இலங்கை முஸ்லிம்கள் தொடர்பாக எந்தவித விளக்கமுமின்றி 'இஸ்லாமியத் தமிழர்’ என்றும் ‘தமிழ் பேசும் முஸ்லிம் கள்’ என்றும் இந்த இனத்தை அடையாளப்படுத்துகின்றனர்.
ஒரு இனம் தொடர்பான மேற்படி அனைத்து பதப்பிரயோகங்களும் அரசியல் ரீதியில் தெளிவை ஏற்படுத்தாதது மாத்திரமின்றி பிற்காலத்தில் புதிய பல பிரச்சினைகளையும் தோற்றுவிக்கக் கூடியதாகவே உள்ளன. விடுதலைப்புலிகளின் ‘தமிழ் பேசும் மக்கள்’ என்ற பதம் இனபேதமின்றி தமிழ் பேசும் மக்கள் எல்லோரினதும் நலன்களையும், பாதுகாப்பையும்
78 தமிழ் - முஸ்லிம் இன உறவுகள்

உறுதி செய்வதாக அமைந்திருக்க வேண்டும். அப்படியானால் 1990இல் நடந்த துயரச் சம்பவங்களும் இதுபோன்ற சிறிய அளவிலான குரங்கு பாஞ்சான், ஏறாவூர், மூதூர் போன்ற இடங்களில் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும், இனித் தொடரப் போகும் சம்பவங்களுக்கும் வி.புலிக ளின் சார்பில் சராசரி மனிதர்தானும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விளக்கங்கள், நியாயங்கள், உத்தரவாதங்கள் எதுவுமே இல்லை.
எனவே ‘தமிழ்பேசுவோர்’ என்ற சொற்பிரயோகம் நடைமுறையில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப் படுத்தவில்லை என்பது மிகத்தெளிவு. மேலும் ‘தமிழ் பேசுவோரின் பிரதிநிதிகள் தான் புலிகள் என்றால் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) உடனான ஒப்பந்தம் ஏன் செய்யப்பட்டது? அது எதுகுறித்துச் செய்யப்பட்டது என்ற கேள்விகளுக்கப்பால் அப்படியொரு உடன்படிக்கை தேவையும் இல்லாதது. (ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் தெளிவாகப் பகிரங்கப் படுத்தப்படவில்லை). ஆகவே தமிழரும் முஸ்லிம்களும் அரசி யல் ரீதியிலும் வேறுபட்டவர்கள் என்பது மிகத்தெளிவு.
மறுபுறத்தில் பொதுசனத் தொடர்பு சாதனங்கள் கூறும் 'இஸ்லா மியத் தமிழர்', தமிழ் பேசும் முஸ்லிம்கள், என்ற பதப் பிரயோகங்களும், மயக்கம் தரும் பண்புகளையே கொண்டுள்ளன. ஏனெனில் தமிழ் இனத்தில் உள்ளவர்கள் 'சைவத் தமிழர்’ என்றோ, 'கிறிஸ்தவத் தமிழர் என்றோ மத ரீதியில் அடையாளம் காணப்படுவது இல்லை. தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட சைவர்களும் கிறிஸ்தவர்களும் (அதன் உட்பிரிவினரும்) இன ரீதியில் தமிழரென்றே கொள்ளப்படுகின்றனர். தமிழ் பேசும் சைவர், தமிழ் பேசும் கிறிஸ்தவர் என்று யாரும் அழைக்கப் படாத நேரத்தில் தமிழ் பேசும் முஸ்லிம்கள் என்று மாத்திரம் வரையறைக் குட்படுத்தப்பட்டு உள்ளதைக் காணலாம். இதிலிருந்து தமிழ்பேசும் முஸ்லிம்கள் என்போர் இனத்தால் தமிழர் அல்லர் என்பதோடு மாத்திரம் அல்லாமல் சிங்களம் பேசும் முஸ்லிம்கள் என்போரின் இருப்பையும் உறுதி செய்கின்றது. இது ஒருவகையில் சிங்களம் பேசும் கிறிஸ்தவரின் நிலைபோன்றது.
சிங்களம் பேசும் கிறிஸ்தவரை தமிழ் இனம் உள்வாங்க முடியாது. காரணம் அவர்கள் இனத்தால் சிங்களவர். அதேபோல் தமிழ்க் கிறிஸ்தவர் மதத்தால் சிங்களவர் போன்று கிறிஸ்தவராயினும் இனத்தால் தமிழராகவே இருக்கின்றனர். (இது பேசும் மொழியை அடிப்படையாகக்
தமிழ் - முஸ்லிம் இன உறவுகள் 79

Page 42
கொண்டு அமைந்தது போல் காணப்பட்டாலும் இது முழுக்க முழுக்க சாரும் இனத்தை அடிப்படையாகக் கொண்டது. எனவே இங்கு சிங்களம் பேசும் முஸ்லிமை எவ்வாறு சிங்களவர் எனக் கருதக் கூடாதோ, கருத முடியாதோ, அதே போல் தமிழைப் பேசுவதால் மட்டும் தமிழ் பேசும் முஸ்லிம்களை தமிழர் என்று வரையறுத்துவிட முடியாது.
இந்த இடத்தில் கவனிக்கப்படவேண்டிய இன்னுமொரு விடயம், புதிதாகச் சமயம் மாறுவோர், சமயம் மாறி முஸ்லிமாகவரும் தமிழரும், சிங்களவரும் சமயத்தால் முஸ்லிம் என்பவரே தவிர அவர் இனத்தால் இன்னும் தமிழரும் சிங்களவருமே.
ஒரு காலத்தில் யாழ்ப்பாணப் பகுதியில் பெளத்தம் செழிப்புற்றி ருந்ததை வரலாறு கூறுகின்றது. அப்போது பெளத்தத்தைப் பின்பற்றிய தமிழர் சமயத்தால் பெளத்தர் என்று இனங் காணப்பட்டதால், அவர்களின் இனம் சிங்களம் என்றாகி விடவில்லை. அவர் அன்றும் இன்றும் என்றும் தமிழரே. அதேபோல் சமயத்தால் முஸ்லிமாக இருக்குமொருவர் சைவரா கவோ கிறிஸ்தவராகவோ பெளத்தராகவோ சமயத்தை மாற்றிக் கொண்டா ரென்றால் அவர் சைவர், கிறிஸ்தவர் அல்லது பெளத்தரே தவிர அவரின் இனஅடையாளம் தமிழர் என்றோ அல்லது சிங்களவரென்றோ மாறிவிடப் போவதில்லை. அப்படியானால் இங்கு எழும் நியாயமான கேள்வி இந்த இலங்கை முஸ்லிம் என்போர் இனரீதியில் யார் என்பதே.
தேசம் இதழ் 17 :
80 தமிழ் - முஸ்லிம் இன உறவுகள்

முஸ்லிம்களது நம்பிக்கை வெண்றெடுக்கப்படாமல்
ஒரு தீர்வு அமையாது.
கலாநிதி எம்.வை.எம்.சித்தீக்
மூன்றாவது கட்டப் பேச்சு வார்த்தைகளில் தமிழ் பேசும் மக்களின் தாயகப் பிரதேசங்களிற்கு உள்ளக சுயநிர்ணய உரிமை என்ற வரைய றைக்குள், ஐக்கிய இலங்கைக்குள்; தீர்வு காண அரசும் விடுதலைப் புலிகளும் உடன்பட்டனர். தமிழ் பேசும் மக்கள் என்பது தமிழர்களும் முஸ்லிம்களும் இம்முயற்சிகள் பெரும் வெற்றியென மக்கள் கருதினர். மேலும் விடுதலைப் புலிகள் தமது போக்கை மாற்றி ஏனைய சமூகங்க ளுக்கும் இடம்கொடுப்பார்கள் என மக்கள் நம்பினர்.
ஆனால் விடுதலைப் புலிகளால் முன்வைக்கப்பட்ட முழு அதிகா Jib & 6iron S60Li, BIT6) Jiu T'id 95 BITU 560)u (Interim Self-Governing Authority - ISGA) முஸ்லிம்களிடம் இருந்த நம்பிக்கையை கலைத்து விட்டது. இத்தீர்வுத் திட்டம் பிரதானமாக புலிகளதும் தமிழ் மக்களதும் நலன்களையே பாதுகாக்கின்றது; தீர்வுத் திட்டத்தின் ஆரம்பத்தில் விடுத லைப் புலிகள் குறிப்பிட்ட வாசகங்களுடன் அவர்களின் இடைக்கால சுயாட்சி அதிகாரசபை முரண்பட்டு உள்ளது.
(திட்டத்தின் ஆரம்பத்தில் புலிகள் குறிப்பிட்ட வாசகங்கள்: * சட்டமும், மனித உரிமைகளும் எல்லோரது சமத்துவமும், மக்களுடைய சுயநிர்ணய உரிமையும் ஏற்றுக் கொள்ளப்பட்ட விதிகளுக்கமைய பாதுகாக்கப்பட்டு இலங்கையில் வாழும் அனைத்து மக்களுக்கும் நிரந்தர அமைதியைத் தரும் தீர்வை ஏற்படுத்துவோம்.)
தமிழ் - முஸ்லிம் இன உறவுகள் 81

Page 43
இதனால் இத்திட்டம் இனப்பிரச்சினைக்கு அமைதித் தீர்வை நோக்கிச் செல்லும் என்ற நம்பிக்கை இல்லை. மேலும் புலிகளுடைய இத்தீர்வுத் திட்டம் இலங்கை அரசியல் யாப்பிற்கு வெளியே அமைக்கப்பட வேண்டும் என்று கேட்கப்பட்டு உள்ளது. அதனால் இலங்கை அரசு தனது இராணுவம், பொலிஸ்,மற்றும் நீதித்துறை உட்பட்ட சிவில் அதிகா ரங்களை வடக்கு கிழக்கில் இருந்து வாபஸ்பெற வேண்டும்.
கடந்த காலத்தில் முஸ்லிம் மக்கள் புலிகளால் வேதனைப் பட்டதை தீர்வுத் திட்டம் குறிப்பிடவில்லை. உண்மை இப்படி இருக்கையில் வட கிழக்கில் உள்ள முஸ்லிம்களது உரிமைகளுக்கும் பாதுகாப்புக்கும் யார் உத்தரவாதம் அளிப்பது. முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு மாறாக புலிகள் தொடர்ந்தும் வடக்கு, கிழக்கில் முஸ்லிம்களை துன்பு றுத்தி, கொலை செய்து வருகிறார்கள். இப்போது வடக்கில் இருந்து அனைத்து முஸ்லிம்களையும் வெற்றிகரமாகத் துரத்திவிட்டனர். இடைக் கால சுயாட்சி அதிகாரசபை அமைக்கப்பட்டால் புலிகளின் கைகளில் முஸ்லிம்கள் வேதனைக்கு உள்ளாவார்கள் என அஞ்சுவதில் நியாயம் உள்ளது.
புலிகள் முஸ்லிம் மக்களின் தனித்துவத்தை ஏற்றுக் கொண்டு; அதற்கு மதிப்பளிப்பதும் அவர்களுடைய சகல உரிமைகளுக்கும் உத்தர வாதம் வழங்குவதை உறுதிப்படுத்துவதும் மிகவும் அவசியம். முஸ்லிம் களது அச்சத்தினைப் போக்க புலிகள் இதுவரை எதுவும் செய்யவில்லை. மாறாக முஸ்லிம்களது பொருளாதாரம் உட்பட உரிமைகளை அழிக்கவும் பலவீனப்படுத்தவும் புலிகள் எல்லா முயற்சிகளும் எடுத்து உள்ளனர்.
இக்காரணங்களால் புலிகள் இறுதியாகத் தீர்வுத் திட்டத்தை சமர்ப்பித்ததும் அரசாங்கம் அதற்கு அமைதியாக இருந்ததும் சமாதான முயற்சிகளில் முஸ்லிம்களுக்கு இருந்த கொஞ்ச நம்பிக்கையையும் இழக்கச் செய்தது. முஸ்லிம்கள் தங்களுக்குரிய சட்டரீதியான (Legitimate Rights) உரிமைகளுக்கு மேலாக எதையும் கேட்கவில்லை. புலிகள் உதவும் சூழ்நிலை ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என முஸ்லிம்கள் எதிர்பார்க்கிறார்கள். அப்போது அவர்கள் புலிகள் மீது நம்பிக்கை வைக்க (Լքtջեւյւb.
புலிகளின் திட்டத்தின் அடிப்படையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு அமைந்து புலிகளின் கைக்கு வடக்கு கிழக்கின் அதிகாரம் சென்றால்; வடக்கில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டதைப் போல்; கிழக்கிலும் முஸ்லிம்
82 தமிழ் - முஸ்லிம் இன உறவுகள்

களை அவர்களது வீடுகளை விட்டு விரட்டி விட்டு புலிகள் தனி இன அரசை அமைத்துவிடுவார்கள் என முஸ்லிம்கள் அஞ்சுகிறார்கள். புலிகள் தீர்வுத் திட்டத்தை முன்வைத்ததைத் தொடர்ந்து முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் அதிருப்தி அதிகரித்து வருவதை இலங்கை அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் விளங்கிக்கொள்ள வேண்டும்.
இன்று திருகோணமலையில் நிலைமைகள் கவலை அளிப்பதாக உள்ளது. கடந்த சில வாரங்களாக இடம் பெற்ற சம்பவங்கள் புலிகள் முஸ்லிம்களை கிழக்கில் இருந்து வெளியேற்றுவதற்கான பயங்கரவாத நடவடிக்கைகளை ஆரம்பித்து இருப்பதையே தெளிவாகக் காட்டுகிறது. வடக்கு கிழக்கு யுத்தத்தில் முஸ்லிம்கள் பெருமளவில் பாதிக்கப்பட்ட சமூகமாக உள்ளனர். அரசாங்கமும் புலிகளும் முஸ்லிம்களுக்கு செவி சாய்க்க வேண்டும். முஸ்லிம்கள் தங்கள் தரப்பு நியாயத்தை முன்வைக்க தேவை யான காலத்தை வழங்க வேண்டும். சமாதானத்தையும் செழிப் பையும் இலங்கைத் தீவின் அடிப்படையில் விளங்கிக் கொள்ளாமல் அதைப் பற்றிப் பேசமுடியாது. வட கிழக்கில் உள்ள தமிழ், முஸ்லிம் மக்களுக்கு இடையே சமாதானம் ஏற்படாமல் இலங்கையில் சமாதானம் சாத்தியம் இல்லை என்பதே உண்மை.
ஆகவே எதிர்காலப் பேச்சுவார்த்தைகளில் முஸ்லிம் தரப்பும் தங்கள் நிலைப்பாட்டை முன்வைக்க தனித் தரப்பாக கலந்து கொள்ள வேண்டும். சர்வதேச சமூகம் அதனை ஏற்றுக் கொண்டுள்ளது. தமிழ் மக்களுடைய கேள்விக்கு தீர்வு ஏற்படும் அதே சமயம் முஸ்லிம்களது கேள்விக்கும் தீர்வு காணப்படுவது மிகவும் அவசியம். எதிர்காலப் பேச்சு வார்த்தைகள் முஸ்லிம்களது தேசியம், பாரம்பரிய தாயகம், அவர்களின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் அமைய வேண்டும்.
கிழக்கில் முஸ்லிம்கள் தமிழர்களுடன் சம பங்காளிகள். 19011931 சனத்தொகைக் கணக்கெடுப்பின் படி அங்கு தமிழர்களும் முஸ்லிம் களும் மட்டுமே அண்ணளவாக சம எண்ணிக்கையில் வாழ்ந்து உள்ளார் கள். 7ம் நூற்றாண்டு முதல் முஸ்லிம்கள் அங்கு வாழ்ந்து உள்ளனர். இதனை ஏற்றுக் கொள்வது நூற்றாண்டுகளாக வடக்கில் வாழ்ந்து இடம் பெயர்ந்த முஸ்லிம்களை மீளக் குடியமர்த்த வழியமைக்கும். முஸ்லிம் சிறுபான்மையினருக்கு ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒர் தீர்வை முன்வைக் காமல் அவர்களை முற்றாக நிராகரித்து விட்டு ‘சமாதானம்’, ‘விளங்கிக் கொள்தல்’ என்ற பதங்களை அரசாங்கமும் விடுதலைப் புலிகளும்
தமிழ் - முஸ்லிம் இன உறவுகள் 83

Page 44
பயன்படுத்துவது அர்த்தமற்றது. முஸ்லிம்களது உரிமைகளையும் பாதுகாப் பையும் உறுதிப்படுத்தாது; ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு தீர்வை வடக்கு கிழக்கு பிரச்சினைக்கோ, அப்பகுதியில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத் தவோ முன்வைக்க முடியாது. ஆகவே நிரந்தர தீர்வை ஏற்படுத்தும் முயற்சிகளுக்கான எதிர்காலப் பேச்சு வார்த்தைகளில் முஸ்லிம்களின் செயற்திறன் மிக்க பங்குபற்றுதல் அவசியம்.
இந்த உண்மை விளங்கிக் கொள்ளப்படாமலும் சரியாகத் தெரி விக்கப்படாமலும் விட்டால் நிரந்தர சமாதானம் ஏற்படுவது சாத்தியம் இல்லை என்பதே எங்களது பார்வை. இதனால் சர்வதேச நாடுகள் விடுதலைப் புலிகள் மீது வைத்துள்ள நம்பிக்கையை இழக்க நேரிடும் அபாயம் உள்ளது. முஸ்லிம்கள் தங்கள் பிரச்சினைகளை அரசாங்கம் கவனத்தில் கொள்ளும் என்ற நம்பிக்கையையும் இழக்க நேரிடும்.
(இலண்டனில் செயற்படும் Council of North & East Muslims of Sri Lanka 960)LDjair grijlso ஆங்கிலத்தில் இக்கட்டுரை தேசம் சஞ்சிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது)
84 தமிழ் - முஸ்லிம் இன உறவுகள்

“இனச்சுத்திகரிப்பு, இனப்படுகொலைகளை எதிர்கொள்வதற்கு மாற்று வழியாக முஸ்லிம் இளைஞர்கள் தீவிரவாத வழிகளை நாட வேண்டியது தவிர்க்க இயலாதது.”
மூன்றாவது மனிதன் ஆசிரியர் பௌசருடண் சந்திப்பு
ஜெயபாலனி
இலங்கையிலிருந்து வந்து 33வது இலக்கியச் சந்திப்பில் கலந்து கொண்ட பெளசர் அவர்கள் தேசம் சஞ்சிகைக்கு வழங்கிய செவ்வியை இங்கு காண்கிறீர்கள். மூன்றாவது மனிதன் இலக்கிய சஞ்சிகையின் ஆசிரியரான பெளசர் இலக்கிய கர்த்தா மட்டுமல்ல அரசியலில் ஈடுபட்டவர், ஊடகவியலாளர், மனித உரிமைச் செயற்பாட்டாளர். இவரின் வருகை ஐரோப்பிய இலக்கிய வட்டத்தில் சிறு சலசலப்பையும் ஏற்படுத் தியது. மேலும் பெளசர் அவர்கள் முஸ்லிம் மக்களின் உரிமைகளுக்காக நீண்ட காலமாக குரல் கொடுத்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறான பன்முகத் தன்மை கொண்ட பெளசரை அக்டோபர் 2, 2006ல் அவருடைய நண்பரின் அலுவலகத்தில் சந்தித்து பல்வேறு விடயங்களையும் கலந்துரையாடினோம். அதனை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
தேசம்: இலக்கியச் சந்திப்பிற்காக லண்டன் வந்திருக்கிறீர்கள்.
உங்கள் விஜயம் எப்படி அமைந்தது ?
பெளசர் 33வது இலக்கியச் சந்திப்பில் கலந்து கொள்வதற்காக வந்தேன். என்னைப் பொறுத்த வரையில் இப்பயணம் கருத்துப் பரிமாற்றங்களை ஏற்படுத்துவதாகவும், முற்போக்கு ஜனநாயக சக்திகளுடன் தொடர்புகளை ஏற்படுத்த வாய்ப்பாகவும் அமைந்தது. புலம் பெயர்ந்து வாழ்கின் றவர்களின் வாழ்வு முறையை நேரடியாக பார்க்கக் கூடியதாக இருந்தது.
தமிழ் - முஸ்லிம் இன உறவுகள் 85

Page 45
தேசம்: லணிடனின் இலக்கியச் சூழல் பற்றிய உங்கள் அபிப்பி
Tarudió 6T6ðf60T ?
பெளசர்: இலக்கியச் சூழலில் பெரிதளவு ஈடுபாடு இருப்பதை நான் காண முடியவில்லை. படைப்புத்துறையில் ஈடுபடுபவர்களும் குறைவா கவே இருக்கின்றார்கள் என நினைக்கின்றேன். ஒரு இலக்கியக் கூட்டத்திற்கு வந்து நேரத்தைச் செலவிட இங்குள்ள வாழ்க்கை அவர்க ளுக்கு இடம் தருவதில்லை. இலங்கையைப் பொறுத்தவரை வெவ்வேறு நெருக்கடிகள் இருந்தாலும் எழுத்து இலக்கியத்துறைக்கு அங்கு ஒரு இடம் உண்டு.
தேசம்: இலக்கியச் சந்திப்பு என்பது இலக்கியத்திற்கான ஒரு களமாக அமைய வேண்டும் என்று ஒரு சாராரும், அரசியல் இல்லாத இலக்கியம் வேண்டும் என்று ஒரு சாராரும், அரசியல் இல்லாத இலக்கியம் இல்லை என ஒரு சாராரும் அணி பிரிந்துள்ளனர். இது பற்றிய உங்கள் கருத்து என்ன ? பெளசர்; நிச்சயமாக இலக்கியம் என்பது அந்த மொழியினுடைய, அந்த மக்களினுடைய வாழ்வைப் பேணுவதாகவும் அவர்களுடைய மகிழ்ச்சி துன்பங்களை பகிர்ந்து கொள்ளும் நிகழ்வாகவே உள்ளது. உலக வரலாற்று இலக்கியங்களைப் பொறுத்த வரையிலும் அரசியலையும் இலக்கியத்தையும் பிரித்து பார்க்க முடியாது என்றே நினைக்கின்றேன். 80க்குப் பின்னான ஈழத்து தமிழ் இலக்கியத்தின் பெரும்பகுதி நேரடியான அரசியல் தாக்கத்தின் விளைவாகவே இருத்திருக்கிறது. ஆகவே ஈழத்து தமிழ் இலக்கியச் சந்திப்பில் அரசியல் கலக்கக் கூடாது எனச் சொல்வது அப்படிச் சொல்பவர்களின் வசதி கருதிய கூற்றுத்தான். உண்மை வேறாக இருக்கிறது.
தேசம்: நீங்கள் அரசியலில் ஈடுபட்டவர், ஆர்வமுடையவர், ஊடகவி
யலாளர், மூன்றாவது மனிதன் என்ற இலக்கிய சஞ்சிகை யையும் நடத்தி வருகிறீர்கள். உங்களில் மேலோங்கி நிற்பது என்ன? அரசியலா ? ஊடகமா ? இலக்கியமா ? பெளசர் நிச்சயமாக பத்திரிகைத்துறை தான் என்னுடைய தளம். அதேநேரம் நான் இலக்கியவாதியாகவும், அரசியல் மாணவனாகவும் இருக்க விரும்புகிறேன்.
86 தமிழ் - முஸ்லிம் இன உறவுகள்

தேசம்: இலக்கியச் சந்திப்பிற்கான உங்கள் வருகை ஐரோப்பிய இலக்கிய வட்டத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்ததே ? பெளசர்: எனது அரசியல் கருத்து நிலை இலங்கையில் வாழ்கின்ற முஸ்லிம் மக்களை பிரதானப்படுத்தியும் அங்குள்ள ஜனநாயகம், கருத்துரிமை, பேச்சுரிமை, பன்முகத்தன்மை என்பவற்றை வலியுறுத்த வதுமாக உள்ளதால் இந்த நிலைப்பாடுகளுக்கு மாற்றான கருத்துக் கொண்ட வி. புலிகளுடன் எங்களுக்கு நிறையவே தெளிவானதும் உறுதி யானதுமான கருத்து முரண்பாடுகள் உள்ளன. அதனால் இந்த 33வது இலக்கியச் சந்திப்பில் நான் கலந்த கொள்வதை தடுக்கும் நோக்கில் திட்டமிட்ட ஒருசில சக்திகளால் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் பொய்யானது என்பதுடன் அவை சோடிக்கப்பட்ட கற்பனையாகவும் இருந் தது. இப்படியான பொய்யான பரப்புரைகளுக்கு பிரதானமான காரணம் இலக்கியச் சந்திப்புப் போன்ற பொதுவான தளங்களில் எங்களைப் போன்றவர்கள் கலந்து கொள்வதால் பல விடயங்கள் வெளிச்சத்திற்கு வரும் என்ற உண்மையின் காரணமாகவே அவர்கள் இப்படியான பொய் பிரச்சாரங்களை கட்டவிழ்த்து விடுகின்றனர். எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் துணிவுடன் எங்களை அழைத்த நண்பர்கள் பல்வேறு உண்மைகளை நிலைநாட்ட முன்னின்றார்கள். இப்பொழுது பொய் பிரச்சாரங்களை கட்ட விழ்த்து விட்டவர்கள் ஆமை தனது ஒட்டக்குள் தலையை இழுத்துக் கொண்டு நிற்பது போல் நிற்கிறார்கள்.
தேசம்: உங்கள் லணிடன் வருகை உங்கள் மீதான குற்றச சாட்டை
நிவர்த்தி செய்ய உதவியதா ? பெளசர் பெருமளவில் நிவர்த்தி செய்திருக்கிறது. ஐயர் போன்றவர்கள் அப்பாவிகள் இல்லை. அபாண்டமான குற்றச்சாட்டை சுமத்துபவர் என்பதை பல நண்பர்கள் என்னிடம் நேரடியாகவே தெரிவித்தார்கள்.
தேசம்: சந்திப்பொன்றில் முஸ்லிம் இளைஞர்கள் தீவிரவாத
நிலைப்பாட்டை நோக்கி நகர்வதாகக் குறிப்பிட்டு இருந்தீர்கள். அதனை தவிர்க்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தி இருந்தீர்கள். ஆனால் நீங்களும் உங்கள் நண்பர்களும் தீவிர வாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. உங்க ளுக்கும் அவ்வாறான செயற்பாடுகளுக்கும் தொடர்பு உணர்டா
தமிழ் - முஸ்லிம் இன உறவுகள் 87

Page 46
பெளசர்முதலில் ஒரு அடிப்படை உண்மையை விளங்கிக் கொள்ள வேண்டும். இலங்கையில் தமிழ் மக்களுக்கு அரசியல் பிரச்சினை இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்கின்றோமேயானால் குறிப்பாக வடக்கு கிழக்கில் வாழ்கின்ற முஸ்லிம் மக்களுக்கும் அரசியல் பிரச்சினைகள் இருக்கின்றது என்பதை பத்திரிகையாளனாக, எழுத்தாளனாக இருக்கின்ற நான் சொல்ல வேண்டும். தமிழ் மக்களை, தமிழ் எழுத்தாளர்களை, செயற்பாட்டாளர்களை சிறிலங்கா அரசு எப்படி தமிழ் தீவிரவாதத்துடன் தொடர்புபடுத்தியதோ அதற்கு எந்த வகையிலும் குறைவில்லாத வகையிலேயே தமிழ் தேசியவாதம் எங்களைப் போன்றோர்கள் மீது இத்தகைய குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றது. இத்தகைய கபட நோக்கமிக்க குற்றச்சாட்டுகளினூடாக எங்களைப் போன்றவர்கள் பெரும் உயிர் அச்சுறுத்தலை எதிர்நோக்குகின்றனர்.
ஆனால் உண்மையான நிலவரத்தின்படி வடக்கு, கிழக்கில் முஸ்லிம் மக்கள் வி.புலிகளின் சித்தாந்தத்தினாலும் இராணுவ நடவடிக்கைகளாலும் மிக மோசமான வாழுதலுக்கான நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றனர். 1990க்களில் இருந்து வி.புலிகள் மோசமான அடக்குமுறையை வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் மீது மேற்கொள்கிறது. வி. புலிகளினால், முன்னெடுக்கப்பட்டு வருகின்ற இனச்சுத்திகரிபு இனப்படுகொலைகளை எதிர்கொள்வதற்கு மாற்று வழியாக முஸ்லிம் இளைஞர்கள் தீவிரவாத வழிகளை நாட வேண்டியது தவிர்க்க இயலாததாக உள்ளது. சமூக நிலவரங்களை வெளிப்படுத்த வேண்டியது கட்டாயமானதாகும். இப்படியான நிலை தோன்றுவதற்குரிய அரசியல் பிரச்சினைகளை இனம் கண்டு தீர்க்க வேண்டியது அனைவரது கடமையுமாகும். வன்முறையை நாங்கள் வெறுக்கிறோம். மனித உயிர்களுக்கு அதிகம் மதிப்பளிக்க வேண்டிய வாழ்க்கையைப் பற்றியே சிந்திக்கிறோம்.
தேசம்: இலங்கையில் தமிழ், முஸ்லீம் சமூகங்கள் மீண்டும் புரிந்து ணர்வுடன் வாழ்வதற்கான சூழல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உணிடா?
பெளசர்; நிச்சயமாக இருக்கிறது. முன்பைக்காட்டிலும் இன்றுள்ள நிலமை இந்தச் சூழல் ஏற்பட வேண்டும் என்பதை தமிழ் முஸ்லிம் மக்களிடையே
88 தமிழ் - முஸ்லிம் இன உறவுகள்

உளமார ஏற்படுத்தி இருக்கிறது. வடக்கு கிழக்கு வாழ்வும் முன்னேற்றமும் மகிழ்ச்சியும் தமிழ், முஸ்லிம் மக்களின் சமத்துவமான இணைந்த வாழ்விலேயே தங்கியுள்ளது.
தேசம்: சமாதானப் பேச்சு வார்த்தைகளில் முஸ்லிம் சமூகம் தனித் தரப்பாக கலந்து கொள்வதை வி.புலிகளும் அரசும் ஏற்கப் போவ தில்லை. அப்படியானால் முஸ்லிம் சமூகத்தினி அரசியல் எதிர்காலம் என்ன ?
பெளசர். இதுதான் வழிமுறை. இதுதான் யதார்த்தமான நிலைப்பாடு என்றால் முஸ்லிம் மக்களும் அவர்களது அரசியல் தலைமைகளும் தான் வடக்கு கிழக்கில் முஸ்லிம்கள் நிம்மதியாகவும் சமத்தவமாகவும் வாழும் வழி வகைகள் குறித்து யோசிக்க வேண்டும்
தேசம்: இலங்கைத் தமிழ் ஊடகங்களின் போக்கு எப்படி உள்ளது? பெளசர்பொதுவாகவே இலங்கைத் தமிழ் ஊடகங்களில் பெருமள விலானவை ஒரு அதிகாரத் தரப்பிற்கு சேவகம் புரிவதாகவே இருக்கிறது. பத்திரிகை தர்மமோ மானிட தர்மமோ அதில் காணமுடியாது. யார் கொல்கிறார்கள் என்பதை வைத்துக் கொண்டுதான் இலங்கைத் தமிழ் ஊடகங்களின் எழுத்து முறைமைகள் தீர்மானிக்கப்படுகின்றது.
தமிழ் - முஸ்லிம் இன உறவுகள் 89

Page 47
L5DD5U山前面凸 FFUp鱼色
எழுத்தாளர்கள், EGIL66'ubussiTj66T, ബ്ബി விபரத்திரட்டு
– UndôtĎ 2 – விரைவில் வெளிவருகின்றது.
90
 

ஈழத்தைப் பிறப்பிடமாகக் கொண்டு தற்போது புலம்பெயர் நாடுகளில் நிரந்தரமாக வாழும் எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள் கலைஞர்கள் தமது குறிப்புகளும் இத் தொகுதியில் இடம்பெற விரும்பினால் தயவு செய்து பின்வரும்
முகவரியுடன் தொடர்பு கொள்ளவும். P. M.Puniyameen. Cinthanai Vattam 14, Udatalawinna Madige,
Udatalawinna 20802 Sri Lanka.
TP : 0094-81-2493746 / 0094-81-2493892
Fax: 0094-8-2497246
9

Page 48
OS
Susi (Pais Road
தமிழ் - முஸ்லிம் இன உறவுகள்
 

rasiahlawGaol.com
N00TORW
தமிழ் - முஸ்லிம் இன உறவுகள் 93

Page 49
MMIGRATION / EMPLOYMENT/HOUSING/WELFARE
Rengan N Devarajan SOLICITORS
1ST FOOr 128 Ilford Lane, Ilford Essex, IG1 2LE
Tel: 020 84785797 Fax: 020 84784486
94. தமிழ் - முஸ்லிம் இன உறவுகள்
 
 
 

Í Döðéý áð:6).216
2IUU όν ο ΜύίOMδ όν area
சமூகப்பணிகளில் கற்பக விநாயகர் ஆலயம்
கி40000 தாயகத்திற்கு அனுப்பி உதவியது"
( கார்ள்டன் ரவல்ஸின் உதவியுடன் ) திருக்கோயிலில் உள்ள குருகுலத்தில் 36 சிறார்களை ஆலயம் பராமரிக்கிறது. தேர்த்திருவிழாவில் சேரும் நிதி வெண்புறாத் திட்டத்திற்கு வழங்கப்படுகிறது. மட்டக்களப்பில் C27000 செலவில் முதியோர் இல்லம் தமிழ் தேசிய விளையாட்டுச் சங்கத்திற்கு C2000 வழங்கப்பட்டது. மூத்தோர் நலன்புரி நிலையம் நடாத்தப்படுகிறது. இலக்கிய முயற்சிகளுக்கு உதவி வருகிறது.
தமிழ் - முஸ்லிம் இன உறவுகள் 95

Page 50
LoW Cost Accomodations in London
Finchley Rd, Archway, Holloway Rd Tube Stations 9(b5. T60)LDujo)
{0 Flats
0 Studios
0 Rooms நூற்றுக்கும் மேற்பட்ட வதிவிடங்கள் வாடகைக்கு உண்டு. சில நிமிடத்தில் சென்றடையக் கூடியதான போக்குவரத்து வசதிகள் நிறைந்த இடம்.
Tef stLSO1&S f l - £
குறிப்பு : மாத வாடகையுடன் ஒரு மாத வாடகை முற்பணமாக செலுத்த வேண்டும். கவுன்சில் ரக்ஸ் மற்றும் கட்டணங்களை குடி இருப்பாளர்களே செலுத்த வேண்டும். மாதாந்த வாட-ை கயை வங்கிக் கட்டளை - Standing Order மூலம் செலுத்த வேண்டும். D.S.S ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
Te V FaX : 0208905 0452 Email : tarrin(a)desilugroup.com
Web : www.desilugroup.com Tarrin Constantine, Group Finance Director, Desilu Group of Companies
Collingwood Business Centre, Mercers Rd, London N194PU
96 தமிழ் - முஸ்லிம் இன உறவுகள்


Page 51
We can help
tO return And assis Vy(
The International Organization for Mi I ways. In the UK. OM helps un igrants return - || Ieir finom un TARP 28thletits i Titelaking playing for th, se eligiEle for ex LITTLc ta y tu quality Tir I hoy I" Assistance, cal 7233 (0. Liverpool office (15 ps
MMI Intermini newrali I lr Intration I, u Nigri tionחייווחיה ירי - יולי 800785ו
 

you if you wish
o Sri Lanka. you further
Ritio Manages, migration ccessful asylum seckers an |regular ries by coordinating all their nuwe in light tickets. Asylum seekers an it countries of origin. To find on
800 78s 2332. London of |l 2. Glasgow ofice: 01 || 58 81
This name to co-inde
thampin niini