கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: குமரன் 1973.09.15

Page 1
குமரன் y27
தமிழர் போராட்ட விழித்தெழுந்த ே அலென்டேயின் அரசு முதலாளித் சவக்குழியிற் பே காலங்கள் அழு மாதரும் மார்க்சி கடுதாசி மல்லி கேள்வி? பதில்
Th
ச்ெப்டம்பர் 15, 1973
| იმ2aა: BO 55 in
 
 
 
 

மும் ஆளும்வர்க்கத் தமிழரும் தாட்டத் தொழிலாளி விஷப் பரீட்சை துவ வளர்ச்சி ாட்டிடுவோம்
வதில்லை
சமும்
D占
ஒ

Page 2
* குமரனின் குறிப்புகள் *
சென்ற மாதக்கடைசியில் சீன கம்யூனிசக் கட்சியின் 10-வது தேசியக் காங்கிரஸ் கூடியது. அவ்வேனே செள-என்-லா பால் படிக்கப் *ட்ட காங்கிரஸ் அறிக்கை மனிதவர்க்கத்தின் முன்னேடியாக சீனக் கம்யூனிசக்கட்சி இயங்குவதைக் காட்டி நிற்கிறது. மார்க்ஸிச, லென: னிச, மா-ஒ சிந்தனையின் அக்கட்சி வைத்திருக்கும் அசையா நம்பிக் கையையும் இப்பாதையின் எதிர்சக்திகளை உடைத்துக் கொண்டு முன் னேறி வளர்வதையும் இவ்வறிக்கை தெளிவாக்குகிறது.
உள்கட்சிப் போரட்டங்கள், வெற்றிகளையும், சீனுவின் பொருனா தாரம், பொதுநலன், விஞ்ஞானம், தொழில் நுட்பம் கல்வி, கலை, இலக்கிய வளர்ச்சியையும், சர்வதேச அணியில் உலக நாடுகளுக்கும் மனித வர்க்கம் முழுவதற்கும் பயன்தர சீனக்கம்யூனிசக் கட்சி ஆற்ற விரும்பும் சேவை, கடைப்பிடிக்கும் கொள்கை பற்றியும் அறிக்கை கூறிநிற்கிறது.
சீன கடைப்பிடிக்கும் கொள்கை பற்றி உலகில் எதிரிகளால் பரப்பப்படும் பொய்ப் பிரசாரம் அனைத்திற்கும் தெளிவான பதில் கூறுகிறது இவ்வறிக்கை.
லி சோ சி, லின் பியோ ஆகியோர் தனிமனிதர்களல்ல, இவர்களது வீழ்ச்சி உள்க் கட்சிக்குள்ளே நிலவிய தவருண சித்தாந்தத்தின் வீழ்ச்சியாகும். " கட்சியின் உள் போராட்டம் சமுதாயத்தில் நிலவும் வர்க்கப் போராட்டத்தின் பிரதிபலிப்பு என்று மார்க்ஸிச, லெனினிசம் கொள்கிறது. இப்போரட்டங்கள் உள்நாட்டு, சர்வதேச வர்க்கப் போராட்டங்களின் கூர்மையான வெளிப்பாடு" என்று இவ்வறிக்கை மார்க்ஸிசப்பார்வையில் கூறி நிற்கிறது. இவ்வறிக்கையின் சில பகுதி களை தேர்ந்து இவ்விதழில் வெளியிடுவதில் பெருமையடைகிருேம்.
இலங்கைத் தமிழரின் போராட்டங்கள் பற்றி தெளிவுபடுத்தும்படி பல கடிதங்கள் வந்தன. மாதவன் மார்க்ஸிய சித்தாந்தப்படி இப் போராட்டத்தின் நிலை பற்றி விளக்கியுள்ளார். இக்கட்டுரை பற்றி மேலும் கருத்துரை கூற, தெளிவுபெற விரும்புவோர் எழுதுக.
இலங்கையில் வளர்ந்து வரும் கூட்டுத்தாபனத்தினூடாக அரசு : முதலாளித்துவம் வளர்வதை ‘கலி காட்டுகிருர்.
-(2)-

குமரனின் கருத்துகள் trந்தத் தனிநபரையும் புண்படுத்த எழுதப் படு வையல்ல; பார்க்ஸிய, லெனினிஷ, மாஒ சித்தாந்தத்தை அடிப்ப உடை யாகக் கொண்டு எழுதப்படுபவை. எதிர்வர்க்கத்தினருக்குப் பயன்ப ‘டும் கலை, இலக்கியங்களை கூர்மையாகத் தாக்க குமரன் வேலெடுக்கவே செய்வான் த ைமுன கருத்துகள் விஷவித்துப் போன்றவை. அவற்றைக் களைய குமரன் சிறிதும் தயங்கமாட்டான். நாடகவிமர்சனம், மல்லிகை ஆய்வு பற்றி கற்கவும். 犧
விழிப்புற்ற தோட்டத் தொழிலாளர்களின் இன்றைய நிலையை தெளிவாக்கியுள்ளார் தியாகு, வரதபாக்கியனின் கவிதை சமூகநீதி வேண்டி வேகமாகப் பாய்கின்றது.
ஏராளமான கவிதைகள் எமக்கு வருகின்றன. அவையெல்லாம் தரத்தில் குறைந்தவையல்ல. அவற்றையெல்லாம் குமரனின் குறுகிய பக்கங்களில் வெளியிட முடியாமைக்கு வருந்துகிருேம். கட்டுரைகள் எழுதுவோரையும் சுருக்கமாக எழுதும்படி வேண்டுகிருேம், 景
ஜனவரி 73 முதல் குமரன் விலை :
தனிப்பிரதி சதம் 30 அரைஆண்டுச் சந்தா 6 இதழ்கள் ரூ. 2/- ஆண்டுச் சந்தா 12 இதழ்கள் ரூ. 41ஒர் ஆண்டிற்கு 6 சந்தா e5. 20/-
ஐந்து பிரதிகளுக்குமேலாக ஆங்காங்கே வரவழைத்து விற்பனை செய்ய விரும்புவோர் உடன் தொடர்பு கொள்க. இவர்களுக்கு வாய்ப்பான விசேட சலுகைகள் உள்ளன.
நிர்வாக ஆசிரியர், குமரன், 201, டாம் வீதி, கொழும்பு-12
மலிவு விலையில் முன் பிரதிகள்
25 இதழ்கள் (1 - 25) தனித்தனி ღtნ. 5.00 25 இதழ்கள் (1 - 25) பைன்டு செய்தபடி ரூ. 6.00
--arus
ー(3)ー

Page 3
அச்சுக் கலையில்
ஐம்பது ஆண்டுகள்
அனுபவம் பெற்ருேர்
குமரன் அச்சகம்
201, டாம் வீதி : ; கொழும்பு-12.
தொலைபேசி : 21 388
அழகான
* அவசர
Ar 6uresOUT
அச்சுவேலைகளுக்கு
எம்முடன் உடனே தொடர்புகொள்ளுங்கள்!
-(4)-

காலங்கள்
இத்தலைப்பில் அண்மையில் கொழும்பில் நாடகம் ஒன்று அரங் கேற்றப்பட்டது. நல்ல தலைப்பாக தோன்றினும் இது தவருனருதி தைப் பிரதிபலிக்கிறது. இயற்கையை மாற்றமுடியாது என்ற கருத்து பிற்போக்கானது; தவருனது.
வயது முதிர்ந்த தோட்டத் தொழிலாளி தன் இரு மக்களாலும் சுரண்டப்பட்டு, ஏமாற்றப்பட்டு ஆசுபத்திரியில் அணுதையாக மரண மடைகிருன். மரணச் சடங்கைச் சாட்டாக வைத்து பணம் சேர்த்து விடலாம் என இரு மக்களும் தம் லயத்திலேயே மரணக்கிரியை நடைபெறவேண்டும் என்று போட்டியிடுகின்றனர்.
நாடகம் பிரதிபலிக்கும் கருத்து மிகப் பிற்போக்கானது. தோட் டத்தொழிலாளர் மனிதாபிமானமற்றவர்கள் என்ற கருத்து பிரதி பலிக்கிறது. சுரண்டல் பற்றிப் பேசப்படுகிறது, முதலாளித்துவ சுரண் டலிஞலேயே மனிதாபிமானமற்று தொழிலாளர் நடக்க நேரிடுகிறது. என்ற கருத்துத்தானும் நாடகத்தில் சிறிதும் தொனிக்கவில்லை. ... ;
தொழிற்சங்கத் தலைவர்கள் தொழிலாளர்களைச் சுரண்டி சுபீட்ச மாக வாழ்கிருர்கள், தொழிலாளி தேய்ந்துகொண்டே போகிருன் என்ற கருத்து உரையாடல்மூலம் சாடப்படுகிறது. ஆளுல் இந்நிலைக்கு விடிவு என்ன என்பதோ, நசிந்த தொழிலாளி புரட்சி ஒன்றே வாழ்வு தரவல்லது என்பதை உணர்ந்து வீறுகொண்டு எழுவதோ எங்கும் கோடிட்டுக்கூடக் காட்டப்படவில்லை. தொழிலாளர்கள் விரக்தியடைந்:
தவர்களாகின்றனர் என்பதே சித்தரிக்கப்பட்டுள்ளது. i
நல்ல நடிப்பு, காட்சியமைப்பு, ஒளியமைப்பு யாவும் பிணத்தின் மேல் குவித்த மலராகிவிட்டன. தொழிலாளி விவசாயிக்கு இந்நாட! கத்தால் பயன் எதுவுமில்லை. அவர்கள் இழிவுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களை நசிக்கும் வர்க்கத்தவர், "பார்த்தீர்களா ! இதுவல்லவோ நல்ல நாடகம், தோட்டத் தொழிலாளி என்று வீரம் பேசுகிருர்கள், பெற்ற தந்தையின் சிறு உடைமைகளைக்கூடப் பறித்துத் தெருவில் விட்டுவிடுவார்கள். இது உண்மை’ என்று பாராட்டித் தம் வர்க்க நலனுக்கு இந்நாடகத்தையும் பயன்படுத்திக்கொள்வர்.
இன்றைய தோட்டத் தொழிலாளரின் ஐக்கியத்தையும் புரட்சி யுணர்வையும் இந்நாடகம் சிறிதும் பிரதிபலிக்கவில்லை.
இத்தகைய நாடகங்களை புரட்சியுணர்வு கொண்ட தொழிலாள! விவசாயிகள் தம் வர்க்க எதிரிகளால் மேடையேற்றப்படுவதாகவே கொள்வர், ()

Page 4
தமிழர் போராட்டமும் ஆளும் வர்க்கத் தமிழரும்
மாதவன் .
திமிழர்களின் போராட்டம் வலுவடையாத காரணத்தை விளக் கும்படி பலர் குமரனுக்கு எழுதியிருந்தனர். முதலாவதாக தமிழர் போராட்டம் வர்க்கப் போராட்டமல்ல. ஆகவே இத்தகைய போராட் டங்கள் வலுப்பெறுவது ஆளும் வர்க்கத்தின் பிரிவிலேயே தங்கியுள் ளது. ஆளும் வர்க்கத்தைச் சார்ந்த வலுவுள்ள பூஷ்வா வர்க்கம் தமி
ழரின் பெடரல் ஆட்சியையோ, பிரிவினை ஆட்சியையோ முற்ருக
ஆதரிக்கவில்லை. ஏனெனில் அவர்களது மூலதனம், சுரண்டலுக்குப் பயன்படும் பெரிய மார்க்கெட் வட, கீழ் மாகாணம் தவிர்ந்த பிற மாகாணங்களிலேயே உள்ளன.
y மொழி என்பது சமுதாயத் தொடர்புக்கும் ஊடுருவலுக்கும் முன்னக நின்ருலும் இது மேல்மட்ட அமைப்பைச் (Superstructure)
சார்ந்ததேயாகும். சமுதாய அமைப்பு மாற்றத்தைத் தீர்மானிக்க
வல்ல வலு இதற்கில்லை. அடிப்படையமைப்பான பொருளாதாரம், அதை ஆளுவதோடு நாட்டையும் ஆட்சி செய்யும் ஆளும் வர்க்கம்,
இவற்றின் பிரிவினையே நாட்டையும் பிரிக்கவல்லது. வங்காள தேசத் தில் அப்பகுதியைச்சார்ந்த தேசிய முதலாளிகள் ஓரளவு பலம்வாய்ந்த வர்களாக இருந்தனர். மேற்கிலிருந்து பிரிவது அவர்களுக்கு வாய்ப்
பாக இருந்ததினுல் ரகமான முன்வைத்துப் போராட்டத்திற்கு ஊக் கமளித்தனர். சணல் விவசாயப் பயிராகவும் பெருங்கைத் தொழிலாக வும் விளங்கியது யாவரும் அறிந்ததே. இத்தொழிலதிபர்கள் பிரிவினையை வேண்டினர். மனித இன (Ethnic), மொழி வேறுபாடு, வாழ்க்கைமுறை ஆகிய மேல்மட்ட அம்சங்களும் புவியியல் அமைப்பும் துணையாயிருந் தன. மதம் வலுவற்றதானது. இந்தியப் பேரரசுக்கும் எதிரியைப் பிரித்து வலுவற்றதாக்கும் வாய்ப்பு வேண்டியிருந்தது.
இங்கு வட, கீழ் மாகாணங்களின் முக்கிய பொருளாதாரம் விவசாய
மாகும். நிலம் பிரிந்ததால் நிலவுடைமையை அடிப்படையாகக்கொண்ட
பலமான பூஷ்வா வர்க்கம் இன்று ஆளும் வர்க்கத்தில் கிடையாது.
கைத்தொழில்களை எடுத்துக் கொண்டால் வட, கீழ் மாகாணம் மிக
வும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது. 1972-ம் ஆண்டு மத்திய வங்கி அறிக்கை கீழ்வரும் புள்ளி விபரங்களைத் தருகிறது:
கைத்தொழில் உற்பத்திப் மொத்த நிறுவனங்களின் பெறுமதி உற்பத்தியில்
எண்ணிக்கை el. 6J , DIT ST67 b | 58 2 Gjir 0.8% கீழ் மாகாணம் 15 1.3 கோடி 0.5% மேல் மாகாணம் 1284 226 கோடி 92.7% பிற மாகாணங்கள் 272 15 கோடி 6.0%
100.0%
ー(6)ー

மேலுள்ள புள்ளி விபரங்கள் பூஷ்வா வர்க்கத் தமிழரின் đầu பற்றி தெளிவாகக் கூறும். வட, கீழ் மாகாணத்தில் தொழிலதிபர்கள் ஆளும் உர்ச்சத்திலிருந்து பிரிந்து தமிழரின் பகுதியில் Lrn rid Gail தேடி அரசியலாதிக்கம் பெற விரும்புவோர் இல்லை என்றே கூறலாம். தமிழ்த் தொழிலதிபர்கள் யாவரும் சிங்களத் தொழிலதிபர்சளுடன் சங்கமமாக மேல் மாகாணத்திலேயே உள்ளனர். அவர்கள் ஆளும் வரிக்கத்துடன் ஒன்றியே நிற்பர். பிரிய வேண்டிய அவசியம் எதுவுமே இல்லை என்றே கூற வேண்டும்.
பூஷ்வா வர்க்க தமிழ்த் தொழிலதிபர்களை யாவரும் அறிவர். இவர்கள் எவரும் தமது தொழிற்சாலைகளை வட, கீழ்மாகாணங்க ளுக்கு பெயர்த்துச்செல்ல முயன்றதும் கிடையாது.
ஆகவே ஆளும் வர்க்கத்தில் பிளவு ஏற்படாத நிலையில் பிரிவினைக் குரல் எவரால் எழுப்பப்படுகிறது என்ற வின எழுகிறது?
தனிச் சிங்கள மொழியின் ஆதிக்கத்தால் ஆங்கிலம் படித்துவிட்டு முன்போல அரசாங்க உத்தியோகத்தில் நுழைந்து (ஒரளவு அரசியல் செல்வாக்கும்) வேலைபெற முடியாதவர், சட்டக்கல்வி கற்று சமுதா பத்தின் குருவிச்சையாக வாழ்ந்து தேர்தல் மூலம் அரசியலாதிக்கம் பெற விரும்புகிறவர்கள், சனப்பெருக்கத்தால் வட, கீழ்மாகாணத்தில் நிலத்தை இழந்து வரும் நிலவுடைமையாளர் ஆகியவர்களே இன்று பிரிவினைக்குரல் எழுப்புவதைக் காணலாம், இக்குரல் மூலம் ஆளும் வர்க்கத்திலிருந்து சிறு சிறு சலுகைகள் பெறலாம் என்பது உண் மையே நாட்டைப் பிரிப்பதற்கேற்ற வலிமை இவர்களிடம் கிடையாது. ஆளும் வர்க்கத்தைப் பாதுகாக்கும் முப்படை, பொலிஸ் ஆகியவற்றி லும் தமிழரின் செல்வாக்கு மிகக்குன்றியதேயாகும்.
ஆகவே ஒரே ஒரு காரணத்தாலேயே பிரிவினைக் கோஷம் வலு வடைய வாய்ப்பு ஏற்படலாம். இந்திய ஆளும் வர்க்கம் தமது பாது காப்புக்கு இலங்கையும் பயன்படும் என்று கருதும் போதாகும்; சிங் கள ஆளும் வர்க்கத்திடை இவ்வச்சம் நீண்ட காலமாகவே நிலவி வருகிறது. அவர்களிடை நீண்ட காலமாக நிலவி வரும் இந்திய எதிர்ப் புணர்ச்சிக்கு இதுவே முக்கிய காரணமாகும். பண்டார நாயகாவின் தேசிய பூஷ்வாக்குரலோடு இந்திய வியாபாரிகள், வட்டிக் கடைக் காரர்கள் ஆகியவர்களது செல்வாக்குகள் மட்டத்தட்டப்பட்ட பின்ன ரும் அச்சமும் எதிர்ப்புணர்ச்சியும் தொடர்ந்து நிலவுவதை எளிதில் asmi GMOTRymr b.
தேசிய இனங்களின் சுதந்திரமும் ஐக்கியமும் சோஷலிச சமுதாய அமைப்பிலேயே ஏற்பட முடியும். பேரரசுகளின் அருகே வாழ்ந்தும் தேசிய சுதந்திரத்தை அத்தகைய அமைப்பிலேயே பேணமுடியும். ஏனெனில் இச்சமூக அமைப்பில் லாபமே நோக்கம் கொண்ட qፆዳ லாளி வர்க்கம் வலுவிழந்து விடும். பெரும்பாலான மக்கள் நலன் கொண்ட பாட்டாளி வர்க்கம் தலைதூக்கிவிடும். O
-(7)-

Page 5
கடுதாசி மல்லிகை . . duli
மில்லிகை 9வது இதழ் பற்றி பலவாறு விமர்சிக்கப்படுகிறது. சோஷலிசம் என்ற வார்த்தை எவ்வாறெல்லாம் திரித்துக் கூறப்படு "கிறதோ அதேபோல "முற்போக்கு" என்ற வார்த்தையும் மயக்கமூட்டு வதாக பலரால் திரித்து ஒதப்படுகிறது. சரியான மார்க்ஸிச, லெனி னிச கண்ணுேட்டத்தில் கலை, இலக்கியங்களை விமர்சிப்பதிலும், தவருன கருத்துகளைக் கண்டிப்பதற்கும் குமரன் என்றும் தயங்கமாட்டான். முற்போக்கு என்ற பெயரில் தொழிலாள, விவசாயிகளுக்கு இலக்கியம் படைப்பதாகக் கூறிக்கொண்டு எதிர் வர்க்கத்தினருக்குப் பயன்படும் "இலக்கிய சேவை செய்வதை உரைத்துக் காட்டாதிருக்க முடியாது.
ஈழத்தின் "பிரபல எழுத்தாளர் பலர் இம்மலருக்கு மணம் தர
முயன்றுள்ளனர். எவ்வாறு அழகாக அலங்கரிக்க முயன்ருலும் தவ
ருன கருத்துகளுக்கு அழகு தருவதென்பது பிணத்தின் மேல் மல்லிகை மலர் பரப்புவது போன்றதாகும்.
பல இலக்கிய விமர்சனக் கட்டுரைகள் மலரில் வெளிவந்துள்ளன. இவையாவும் அவரவர் அபிப்பிராயமாக உள்ளனவேயன்றி விஞ்ஞான பூர்வமான மார்க்ஸிச கண்ணேட்டத்தை ஒரு விமர்சனமும் பிரதி பலிக்கவில்லை. இதனல் படிப்பவர் கலை, இலக்கிய விமர்சனம் பற்றி குழப்பமடைவரேயன்றி தெளிவடையமாட்டார். எந்த விமர்சனத்தி லும் கலை, இலக்கியங்கள் யாவும் வர்க்கம் சார்ந்தவை என்ற கருத்தோ, அடிப்படை அமைப்பை ஒட்டிய பார்வையோ, மேல்மட்ட அமைப் புக்கும் அடிப்படை அமைப்புக்கும் இடையில் இருக்கக்கூடிய உறவு, தாக்கம் பற்றியோ கூறப்படவில்லை.
சிவகுமாரன் வழமைபோல தான் அறிந்த 'இஷம் பற்றியெல்லாம் கூறி விமர்சகர் பற்றிய நீண்ட பெயர் பட்டியலையும் தந்துள்ளார். கதையின் முடிவு பற்றி ஆராய்ந்த நந்திமகன் "எழுத்தாளரின் நோக் கம் தனது படைப்பின் மூலம் சில தாக்கங்களை வாசகன் மீது ஏற் படுத்த வேண்டும்" என்று மல்லிகையின் குரலை ஒலிப்பதுபோலக் கூறு கிருர். அவர்கள் கூறும் இந்த வாசகன் யார்? இவனுக்கு எவ்வித தாக்கம் ஏற்பட வேண்டும்?

புதுக்கவிதை பற்றி கலாநிதி கா. சிவத்தம்பியின் கட்டுரையில் புதிய கலை உருவம் பற்றி மெல்லவும் முடியாது விழுங்கவும் முடியாத நிலையில் எழுதியுள்ளார். புதுக்கவிதை தோன்றக்கூடிய சூழ்நிலைபற்றி மார்க்ஸிச கண்ணுேட்டத்தில் ஆராய்கிருர், புதிய உருவத்தை முற் ருக வரவேற்கும் துணிச்சலில்லை. பண்டிதர்கள் கண்டித்து விடுவரோ என்ற அச்சம் பல்கலைக் கழகத்து முற்போக்காளர்களிடையே தான் இந்த நசிவுக் போக்கைக் காண முடிகிறது, பிற்போக்காளர் எப்போ தும் தம் கருத்தைத் துணிபாகக் கூறிவிடுவர். சரியான அரசியலை முன் வைத்து கலை, இலக்கியத்தைக் காண மறுப்பதிஞலேயே இத்தகைய நசிவுப் போக்கு பலரிடை ஏற்படுகிறது. புதிய கலை உருவம் எந்த சூழலில் பிறக்கிறது என்ற ஆராய்ச்சியல்ல எமக்கு பிரதானம், பிறந்த கலை உருவத்தை தொழிலாள, விவசாயிகள் தம் வர்க்க நலனுக்கு எவ்வாறு சிறந்த ஆயுதமாகப் பயன்படுத்தலாம் என்று விளங்குவதே ஒரு மார்க்ஸிச லெனினது விமர்சகனின் பணியாகும். எவற்றையும் அடிப்படை அமைப்பின் கீழ் ஆராய்வது மட்டுமே மார்க்ஸிய கண் ணுேட்டம் என்று கருதியிருப்பதும் ஒரு வகை திரிபுவர்த போக்கே யாகும். மேல் மட்ட அமைப்பான கலை, இலக்கிய உருவங்கள் (புதுக் கவிதை உட்பட.) அடிப்படை அமைப்பை மாற்ற எவ்வாறு பயன் படுத்தப்பட வேண்டும் என்று கூறுவதும் விமர்சகனின் கடமையாகும். பூஷ்வா கலை, இலக்கிய கர்த்தாக்கள் தமது வர்க்க நலனைக்கொண்ட கருத்துகளை புதுக்கவிதை மூலம் பரப்புகின்றனர். தொழிலாள, விவ சாயிகளாலும் தம் நலனுக்காக இப்புது உருவைப் பயன் படுத்த முடி பும் என்பதை எவரும் மறுக்க முடியாது. இந்த உண்மையை முற் போக்கு விமர்சகர்கள் என்று கூறுபவர் ஏன் மறைக்க வேண்டும்? இது நசிவுப் போக்கா? திரிபுவாதமா?
"தெணியான்" எழுதிய 'ஆளத்துடிக்கிருள் என்ற சிறுகதை லட் சத்தில் ஒன்ருக எங்கோ நிகழக்கூடியதாக கற்பனை செய்யப்பட்ட கதையாகும். தபுஞ்சகனுக்கு மனைவியான சிவசாமி வேருெருவனுடன் பாலுறவு கொள்வதை மைத்துணியே மன்னித்து விட்டு விடுகிருள். நிலவுடைமையில் மேல்மட்ட அமைப்பான ஒழுக்கத்திலும் பார்க்க அடிப்படை அமைப்பான சொத்துரிமை வரிமையானது என்று கூறுவ தில் தவறில்லை. ஆயினும் இக்கருத்தையும் கூற இத்தகைய இழிவான, மிக மிக அரிதான' கற்பனைக்கதையைக் கொண்டு வரவேண்டியதில்லை. பெண்களின் ஒழுக்கக்கேட்டை முன்வைத்து (அடிப்டை அமைப்பை மறந்த) நடைபெறும் கொலைகளை தாம் நாள்தோறும் பத்திரிகைகளில்: ug:&6:Geog h. .
-(9)-

Page 6
நெல்லை க. பேரன் "ஊரோடு உத்தியோகம்’ என்று யாழ்ப்பாணத் திற்கு தன் உத்தியோக மாறுதல் பற்றிய கய புராணத்தை சிறு கதை போல எழுதியுள்ளார். முற்போக்கான கண்ணுேட்டம் எதுவுமே இக்கதையில் கிடையாது. கிராம மக்கள் பற்றிய தவறன கருத்தும் கேலிப் பார்வையும் கதை முழுவதும் தொனிக்கிறது.
"எழிலமுதனின் "தகுதி"யில் தோட்டத் தொழிலாளியின் படித்த மகனுக்கு தோட்டத்து ஒப்பீசில் "கூலியாளின் மகன்’ என்ற காரணத் தால் வேலை கிடைக்கவில்லை. இதை நேரில் அறிந்த தொழிலாளி மகன் சண்முகம் "எதிர்ப்பது குடும்பத்தைப் பாதிக்குமென்பதை தெரிந்து, கைகளைப் பின்னுக்குக் கட்டிக் கொண்டு துரை அறையி லிருந்து வெளியேறுகிருன்."
*கூலியாளுடைய மகனுக்கு இங்கே வேல்பென்ருல் நம்ம மதிப்பு என்ன ஆவது?’ என்று துரை கேட்பது "நியாயமான கேள்வி என்று சண்முகம் ஒப்புவதாகத் தொனிக்கிறது. அநீதியைக் கண்டு கொதித் தெழும் வர்க்க உணர்வை முற்போக்கு கலை, இலக்கிய இதழில் காண முடியவில்லை.
திக்குவலை கமால் எழுதிய "முரண்பாட்டின் பின்னணியில்" என்ற கதை பட்டின சபை அங்கத்தவர் கக்கூஷ் கட்டிக் கொடுத்தால் ஏழை களின் சண்டைகள் தீர்ந்துவிடும் என்பது போல தவருன கருத்தைக் கூறி நிற்கிறது. "விடுதலை", "உக்கல்கள்" போலிக் கதைகளே. "வசந் தன் கவித் திரட்டு பற்றி அறிமுகப்படுத்தும் கனக. செந்திநாதன் "முற்போக்கை" எதிர்த்து "தற்போக்கு அணியில் நிற்பவர். பரவ லாக இலக்கியம் பண்ணி, இந்திய இறக்குமதிச் சரக்குகளுக்கு போட்டி ற்படுத்தும் உள்நாட்டுச் சரக்கு என்று வியாபாரம் செய்ய முனை డి என்று கூறுவதாயினும் நாம் கண்டிக்காதிருக்க முடியாது. னெனில் இந்த வியாபாரம் எதிர் வரிக்க நலன் சார்ந்தது. நாட் ல் நசிந்து வாழும் பெரும்பாலான தொழிலாள, விவசாயிகளின் லன் கரு தா த எக்கல், இலக்கியத்தையும் நாம் கண்டிக்கவே செய்வோம். இம்மலர் தொழிலாள, விவசாயிகள் மத்தியில் வர்க்க ணர்வு, வீர உணர்வு, செயலூக்கம் ஆகிய நறுமணங்களைப் பரப் மல்லிகையல்ல. காகித"மல்லிகை" மலராகும். .பெருமாள்

சவக்குழியிற் போட்டிடுவோம் !
* வரதபாக்கியான்
மெத்தையிலே . துரங்குகின்ற; முதலாளிக் கூட்டத்தார் அத்தரிலே. குளித்தாலும் அடிக்கொருக்காய், ஆட்டிறைச்சிச் *சூப்புக்’ குடித்தாலும் *சுதி’யான கன்னியரின் ஆப்பிள்ப் பழக் கன்னத்தில் ஆதரங்கள் பதித்தாலும் மூப்பிழக்க எத்தனையோ முறைகளைக் கையாண்டாலும் கப்பளித்துப், பிற்போக்குக் “காகிதத்துப் புலிக”ளெல்லாம் தூக்கிப் பிடித்தாலும். துப்பாக்கி, வெடிவகைகள் தாக்கி, எமையழிக்கத் தயாராக இருந்தாலும்.
உங்களை நாமின்னும் உயிரோடு விடுவதற்கு. எந்தவொரு காரணமும் எமக்கில்லை . ஆதலினுல். நாங்கள் புறப்பட்டு. நடுவழிக்கு வந்திட்டோம் நீங்கள் இனிமேலும். நித்திரையா கொள்வீர்கள்?.
எங்கள் குழந்தைகட்கு. இருக்க வொரு இடமில்லை அங்கம் மறைப்பதற்கு. ஆனதொரு துணியில்லே உண்ண உணவில்லை ஊசி குத்தப் பெலமில்லை இன்னும் பொறுமையுடன் இருப்பதற்கோ நெஞ்சமில்லை. மெத்தைச் சுகம் வேண்டாம் மின்விசிறித் துணைவேண்டாம் கட்டுடலிற் பூட்டுதற்கு.
கனக மணிச் சரம் வேண்டாம்
அத்தருடன் மேனி அலங்காரப் பொருள் வேண்டாம் இத்தனையும் வேண்டாம்
8)
இந்தப் பாழ் வயிறே தான் பற்றி எரிகையிலே. பசிவயிற்றுக் குண்பதற்குக் குத்தரிசிக் கஞ்சி. கேட்கின்ருேம், அதுகூடத் தப்பா, சதிச் செயலா தலைக் கிறுக்கா, சொல்லிடுவீர்.
மாடி மனைகளிலே. மலர் மஞ்சம் மீதிருந்து ஆடிக் களிப் போரே அவதானம், அவதானம். சுற்று மதில் வீட்டில் சுகிர்த் திருக்கும் மானுடரே! சுற்றி வளைக்காமற் துணிவுடனே, சொல்லுகிருேம் தினமும் பெருக் கெடுத்துத் திரளுகின்ற கூட்டமிது கணமும் சுணங்காது காரியத்தை முடிப்பதற்கு திட்டங்கள் தீட்டிடுவோம் தினமும் குறித்திடுவோம் சட்டங்கள் யாவினையும் சவக்குழியிற் போட்டிடுவோம்
நாங்கள் இளைஞர்கள்
தனிச் சொத்து தனி வாழ்க்கை தனி யுடமை இவைகளை
உடைத் தெறியு முரிமை
எங்களுக்கு இருக்கிறது!
இத்தரையில்
புத்துலகம் செய்வோம்
ஏனெனின் -
நாங்கள் இளைஞர்கள்
காலே இளம்சூரியன் போன்றவர்கள்
நாளை யுலகை
நடாத்த இருப்பவர்கள்
நாங்கள்!
ஆதலினுல் -
ளங்கள் மீது
எங்களுக்கு
நம்பிக்கை இருக்கிறது!
- அன்பு டீன்
- 11
)-

Page 7
வருங்காலத்தில், வர்க்கங்கள் மறைந்த பின்பும் பொருளாதார அடிப்: ளுக்கும் உற்பத்தி சக்திகளுக்கும். இடையில், முரண்பாடுகள் ஏற்படவே *: வவே செய்யும். அதாவது. முன்னேற்றத்திற்கும் பிற்போக்கிற்கும் சரியான விழி . . . . . با
- செள-ன்ன்-லாய் 10
கே: இலங்கையின் வர்க்க அமைப்பு எவ்வாறு அமைந்துள்ளது?
க. சின்னையா-நூரளை. ப: ஒரு நாட்டின் வர்க்க அமைப்பைக் காண்பதற்கு கீழ்கண்ட முறை யில் வினக்களை எழுப்பலாம். இலங்கையின் சரியான வர்க்க அமைப்பை ஆராய்ந்து கணிக்காததினலேயே இடதுசாரி இயக் . கங்கள். தவருன வழிகளில் தொழிலாள, விவசாயிகளே திசை திருப்பிச் சென்றனர். இலங்கை ஒரு விவசாய நாடு. ஆகவே, முதலாக விவசாய உற்பத்தி எவர் கையில் உள்ளது? (தேயிலை, ரப்பர், தெங்குப் பொருட்கள் உட்பட. கைத்தொழில் முறையில் இவை சிறு மாற்றமே அடைகின்றன. Semi procesed) இலங்கை யில் கைத்தொழில்கள் எவர் ஆதிக்கத்தில் உள்ளன? வெளிநாட்டு மூலதனத்தின் தொகை என்ன? இதன் பெரும்பகுதி எவர் ஆதிக் கத்தில் உள்ளது? இவற்றை வரவழைத்த அரசியல் கட்சிகள் எவை? இவை எவ்வர்க்கத்தை பிரதிபலிக்கின்றன?
கே: இலங்கை ரூபா மதிப்பைக் குறைப்பதஞல் எமக்கு அதிக வாய்ப்பு
ஏற்படமாட்டாதா?
க. பத்மாவதி-கண்டி, எம் நாட்டிலும் பார்க்க பிற நாட்டவர்க்கே அதிக லாபம் ஏற் படும். அதனலேயே ஏகாதிபத்திய நாடுகளும் அவற்றின் பாது காவலனுண உலக வங்கியும் ரூபா மதிப்பை மேலும் குறைக்கும் படி வற்புறுத்துகின்றன. எமது பெரும்பாலான அத்தியாவசிய இறக்குமதிப் பொருட்கள் உணவுப் பண்டங்களும் கைத்தொழில் களுக்கு வேண்டிய கணிப்பொருட்களுமாகும். ரூபா மதிப்பைக் குறைப்பின் நாம் இவற்றிற்காக அதிக வெளிநாட்டுச் செலாவ ணியை செலவு செய்ய நேரிடும், எமது ஏற்றுமதியில் பெரும் பங்கு தேயிலையாகும். இதனுல் கிடைக்கக்கூடிய லாபம் ஸ்ரேலிங் கம்பணிகளுக்கும். பிறநாட்டு வியாபாரிகளுக்குமே கிடைக்கும்.
Hரட்சிகர நாடுகளுடனும் ஏகாதிபத்திய நாடுகளுடனும் தவிர்க்க முடியாத d பத்தியத்துடன் சமரசமாகி ஒன்றுபடுவதற்கும் இடையில் உள்ள வேறுபாட்ை ண்டும் மீண்டும் பேசப்படுகின்றன. ஒவ்வொரு சமரசத்திற்கும் இடையிலுள்ள bபடக்கூடிய நட்டத்தைக் குறைப்பதற்காகவும் அவர்களை விரைவில் கைப்பற்றி காள்ளையில் பங்கு போடுவதற்காக பணமும் ஆயுதங்களும் வழங்குவதற்கும்இ ன்றுசேர்தல் என்பவற்றிற்குரிய வேறுபாட்டைப் பிரிந்தறிந்து கொள்ள ஸ்ே
 
 
 
 
 
 

ம்முரண்பாடுகளைப் பிரதிபலிக்கும் இருவழிகளிடை போராட்டங்கள் நில தவறிற்கும், இடையில் போராட்டங்கள் நடைபெறவே செய்யும்.
கங்கிரஸ் அறிக்கை -
குமரன் இலக்கியத் தொண்டு செய்ய ஏன் முனையப்படாது?
க, பொன்மலர்,-யாழ்ப்பாணம்,
இலக்கியத்தொண்டு என்று எதுவும் தனியாகக் கிடையாது கலை
அமைப்பிற்குச் சேவைசெய்வதாகவே அமையும். எந்த வர்க்கத்
தொண்டு என்னும்போது மக்களே, நாட்டில் தசிந்த வர்க்கமா கிய தொழிலாள, விவசாயிகளை மறந்த இலக்கியமாகிறது. இவ் வர்க்க நலன்கொண்ட இவர்களுக்கு வீர உணர்வும் செயலூக்க
படவேண்டும். அரசியல், வர்க்க நலன் கடந்த இலக்கியம் என் பது வெறும் ஏமாற்று. எமது உணவு தெருக்கடிக்கு முக்கிய காரணமென்ன?
மு. உவைஸ்,~கொழும்பு,
யும் வாங்கலாம் என்று தம் நலனை முன்வைத்து ஆங்கிலேயர் கற்பித்த பொருளாதார மயக்கத்திலேயே நாம் தொடர்ந்து ஈடு பட்டிருந்ததேயாகும். எம் நாட்டு பொருளாதாரமும் உற்பத்தி
தார நெருக்கடிகளும் பஞ்சங்களும் நீடித்துக்கொண்டேயிருக்கும்.
: தேசிய முதலாளிகளின் இன்றைய நிலை என்ன?
இ. கந்தசாமி,-மாத்தளை.
தேசிய முதலாளித்துவ வளர்ச்சியை கட்டுப்படுத்தி வருகின்றன. பலவீனமான தேசிய முதலாளித்துவம் பணக்கார பூஷ்வா (Rich. Bourgeois)வே இங்கு நிலவுவதாகக் கூறவேண்டும்.
ாலகட்டத்தில் சமரசம் பேசுவதற்கும் சோவியத் திரிபுவாதம் அமெரிக்க ஏசா
ட நாம் அறிந்துகொள்ள வேண்டும். லெனின் சுட்டிக்காட்டிஞர்: "சமரசங்கள் காரணங்களுக்கும் சூழ்நிலையும் ஆராயப்படவேண்டும். கொள்ளைக்காரரால்
த் தண்டிப்பதற்காகவும் பணமும் ஆயுதங்களும் கொடுப்பதற்கும் அவர்களது:
டையிலுள்ள வித்தியாசத்தை நாம் நன்கு கற்றுக்கொள்ள வேண்டும்; சமரசம்,
பண்டும்." . - செள-என்-லாய், 10வது காங்கிரஸ் அறிக்கை;
-( 13)- -
kan பிற்கும் மேல்மட்ட அமைப்புகளுக்கும் இடையில் - உற்பத்தி உறவுக்
திற்கு சேவை செய்கிறது. என்பதே முக்கியம்? 'இலக்கியத்
தேயிலையையும் ர்ப்பரையும் விற்று மலிவாக அரிசியும் கோதுமை
யும் இன்றும் எம் கையில் இல்லை. அது நீடிக்கும் வரை பொருளா
கூட்டுத்தாபனங்களின் வளர்ச்சி, அரசின் வரிக்கொள்கை, கைத் தொழில் துறையில் சர்வதேசக்கம்பணிகளின் ஆதிக்கம் ஆகியன.
இலக்கியம் மேல்மட்ட அமைப்பைச் சார்த்தது. அது அடிப்படை'
மும் புரட்சியுணர்வும் தரக்கூடிய கலை, இலக்கியமே படைக்கப்

Page 8
விழித்தெழுந்த தோட்டத் தொழிலாளி
தியாகு
தோட்டத் தொழிலாளர்கள் இன்று வேகமாக வர்க்க உணர்வு பெற்று வளர்ந்து வருகிருர்கள்; எவ்வித போராட்டத்திற்கும் தயா ராகி வருகிருர்கள். காரணம் அவர்களிடை என்று மில்லாதவாறு அச்சமும் நிலையற்ற தன்மையும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தோட்ட முதலாளிகளை எதிர்த்துப் போராடி வந்தவர்கள் என்ருே ஒருநாள் சோஷலிச அரசு ஏற்பட்டு தமக்கு விடிவு ஏற்படும் என நம்பியிருந் தார்கள்.
சோஷலிச நோக்கம் கொண்ட இவ்வரசு மூலமும் தமக்கு பாது காப்பும் சுரண்டலற்ற வாழ்வும் கிட்டும் என நம்பினர். அரசு பெருந் தோட்டங்களை சுவீகரிக்கத் தொடங்கியதும் தமக்குப் புதிய சோஷ லிசத்தில் நிரந்தர வேலையும் சுரண்டலற்ற உழைப்பின் பலனும் கிட் டும் என ஆரவாரித்தனர். ஆனல் நடந்தது வேறு. இந்திய தோட்டத் தொழிலாளர் எதிர்பார்த்த யாவுக்கும் முற்றும் முரளுக செயல்கள் நடக்கத் தொடங்கின. இன்று ‘பிச்சை வேண்டாம்; நாயைப் பிடி" என்ற நிலையில் 'அரசு வேண்டாம்; தனியார் முதலாளியே போதும்" ான்று கூறத் தலைப்பட்டுள்ளனர். எமது தோட்டத்தையும் அரசு சுவீ கரித்துவிடுமோ என்ற பயமும் கிலியும் அவர்களிடை ஏற்பட்டுள்ளது.
சோஷலிசம் பற்றி அவர்கள் எண்ணியிருந்தது வேறு இன்று அதன் பெயரால் நடப்பது வேறு. இம்முரண்பாடுகளிடை அகப்பட்டு சோஷலிசம் என்ற கோட்பாட்டின் மேல் வெறுப்பே ஏற்பட்டு வரு கிறது. பாவம்! அவர்களுக்கு சரியான சோஷலிசம் - மார்க்ஸ், ஏங் கெல்ஸ், லெனின், மாவோ காட்டிய சோஷலிசம் - பற்றி தெளிவாக விளக்குவதற்கு எவருமில்லை. அவர்கள் சோஷலிசம் பற்றிய மயக்க நிலையில் உள்ளனர். விரக்தியடைந்த நிலையில் இன்று வேலை நிறுத்தப் போராட்டங்களில் குதிக்கத் தயாராக, உள்ளனர்.
உழைக்கும் பாட்டாளி உலகத் தொழிலாளி வர்க்கத்தைச் சேர்ந்தவன். அவனுக்கு அநீதி வழங்கப்படுமாயின் அவன் வர்க்க உணர்வு பெற்று வீறுகொண்டு எழவே செய்வான் . அவ் வெழுச்சியில் அழிந்த ஆளும் வர்க்கங்களை வரலாறு காட்டும்.
-( 14)-

இந்தியத் தொழிலாளியின் உழைப்பு இந்நாட்டில் மிகக்கேவல் மாகச் சுரண்டப்படுவதை யாவரும் அறிவர். அத்தொழிலாளியின் வேலையைப் பறித்து இலங்கைத் தொழிலாளிக்கு வழங்கி வேலையில் லாப் பிரச்சினையைத் தீர்ப்பது என்பது கேலிக்கூத்தேயாகும். தொழில் வாய்ப்புகளிலும் வேகமாக சனத்தொகை அதிகரித்து வருகிறது. இந்தியத் தொழிலாளர் சில லட்சம் பேரை அனுப்புவதால் நாட்டுப் பிரச்சினை எவ்விதமும் தீரப்போவதில்லை. ஏனெனில் இத்தொகையி னர் இரண்டு ஆண்டுகளில் சனத்தொகை அதிகரிப்பால் தோன்றி விடுகின்றனர்.
எத்தனைதான் பாராட்டுப் பெற்றபோதிலும் சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தமும் செயலற்றதாகி வருவதை யாவரும் ஒப்புவர். இலங்கை அரசு இந்நாட்டுப் பிரசையல்ல என நிராகரிப்பவரை இந்திய அரசு ஏற்கத்தயாராயில்லை. இதனல் நடைமுறையில் நிராகரிக்கப்படுபவர் இலங்கைப் பிரசையாகின்றனர். மேலும் ஆளும் வர்க்கத்தில் செல்வாக் குள்ள பெருந்தோட்ட முதலாளிகள் இந்திய தோட்டத் தொழிலா காரை நாடுகடத்துவதை சிறிதும் விரும்பவில்லை. அவர்களிடம் பெறக் கூடிய மலிவான சிறந்த உழைப்பை சிங்களத் தொழிலாளர்களிடம் பெறமுடியாது என்பதை முதலாளிகள் நன்கு அறிவர், அதனல் இலங்கை - இந்திய ஒப்பந்தம் அமுலாவதை அவர்களும் விரும்பார். மீண்டும் நாடற்றவர்களாக்கி சுரண்டவே செய்வர்.
நாட்டின் முன்னேறிய வர்க்கம் தொழிலாள வர்க்கமே, இந்நாட் டின் வெளிநாட்டுச் செலவணி முழுவதையும் உழைத்துத் தருபவர் தோட்டத் தொழிலாளர்களே யாவர். அவர்கள் விழித்தெழுந்து போராடும்போது நாட்டின் பொருளாதாரம் சீர்குலையவே செய்யும்.
* கட்சி அங்கத்தவர் அனைவரும் மனப்பூர்வமாக மார்க்ஸ், ஏங் கெல்ஸ், லெனின், ஸ்ராலின், மாவோ எழுத்துகளைத் தொடர்ந்து கற்கவேண்டும்; பொருள்முதல் வாதம், வரலாற்றுப் பொருள்முதல் வாதக் கொள்கையைக் கடைப்பிடித்து கற்பனவாதத்தை எதிர்த்து தம் உலகியல் கண்ணுேட்டத்தை சீரமைத்துக் கொள்ளல்வேண்டும். சிரேஷ்ட கட்சி அங்கத்தவர் தொடர்ந்து மார்க்ஸிசத்தை வாசித்துக் சுற்று முற்ருகக் கிரகித்துக்கொள்ளல்வேண்டும்.
- செள-என்-லாய் - 10வது காங்கிரஸ் அறிக்கை
ー(15)ー

Page 9
'్య్మ్ళ??:': ' ' ' }' ...i
| மாதரும் மார்க்சிசமும் *
அன்புமிக்க சுகுஞ,
கடந்த கடிதத்தில் சோஷலிச - கமியூனிச சமுதாயத்தில் பெண் கள் பங்கு என்ன என்று வினவியிருந்தாய்.
இன்றைய முதலாளித்துவ நிலவுடைமை ஆட்சியின் கீழ் பெண்க ளுக்கு மிகக்குறைவான இடமே கொடுக்கப்படுகிறது. ஏகாதிபத்தியத் தினனும் அதிகாரத்துவ முதலாளித்துவத்தினுலும் நசுக்கப்பட்டு சுரண்டப்படுவதோடு மட்டுமின்றி அரசியல் அதிகாரம், குழுக்கள் (CLAN) அதிகாரம், மத அதிகாரம் ஆகியவற்றல் கட்டுப்படுத்தப் படுகின்றனர்.
சோசலிசத்தில் பெண்களுக்கு ஆண்களுக்குரிய சமஇடம் கொடுக் கப்படுகின்றது. பெண்கள் யாவரும் அரசியல் ரீதியாக சுதந்திரமும், பொருளாதார ரீதியாக தனித்துவமும் உடையவர்களாவர். பெண் கள் தேக ஆரோக்கியத்திற்கு ஊறுவின்விக்கக்கூடிய ஒருசில தொழில் களேத்தவிர பிற சகல துறைகளிலும் ஆண்களுக்குச் சரிசமமாக தோளோடு தோள் நின்று சோசலிசத்தைக் கட்டியெழுப்பும் பணியில் உற்சாகமாக ஈடுபடுகின்றர்கள். அத்துடன் அரசியலிலும் ஒருமித்து நேரடிப் பங்கு கொள்கின்றனர். மாபெரும் கம்யூனிஸ்ட் கட்சியிலும் புரட்சிகரக் குழுக்களிலும், மக்கள் கொம்யூன்கள் தொட்டு பிரதேச தேசிய சங்கங்கள் யாவற்றிலும் பெண் அங்கத்தினர் உளர்.
நவசீனவில் ஆண்பெண் இருபாலரும் செய்யும் ஒரே நேர அளவு வேலைக்கு சமமான ஊதியம் கொடுக்கப்படுவதோடு பெண் தொழிலா னருக்கு விசேட பாதுகாப்பு வசதிகளும் செய்து கொடுக்கப்படுகின் து. புரட்சிக்குப் பிந்திய காலகட்டத்தில் அங்கு ஏற்படுத்தப்பட்ட 5m Gp பரந்த நிலச்சீர்திருத்தம் ஆண்பெண் இருபாலாருக்குமிடையில் பொருளாதார சமத்துவத்திற்கான முதற்படியாக அமைந்தது. பிரபுக் ளின் அடக்கு முறையின் கீழ் அழுந்திக் கொண்டிருந்த நிலமற்ற வசாயிகளுக்கு வயது, பால் வித்தியாசமின்றி ஒவ்வொரு துண்டு நிலம் கொடுக்கப்பட்டது.
வேலை செய்யும் குடும்பத் தலைவியினது பிள்ளைகளைப் பராமரிப் து எப்படி என்று கேட்கிருயா? ஒவ்வொரு தொழிற்சாலையிலும் வேலைத்தனத்திற்கு அருகாமையிலும் பொது உணவு விடுதிகளும், ழந்தைப் பாடசாலைகளும் இளைஞர்க்கான பாடசாலைகளுமிருப்பதால்
ー(16)ー
 

பெண் தொழிலாளர் வேலைக்குப்போகும்போது பிள்ளைகளை அங்கு விட்டுச் செல்வர். மீண்டும் வேலைமுடிந்த போது கூட்டிச் செல்வர். ஏங்கெல்ஸ் சொல்கிருர் “பெண்கள் சமுதாய உற்பத்தியினின்றும் விலகி, தனிப்பட்ட சொந்த வீட்டு வேலையை மட்டும் செய்யுமாறு கட்டுப்படுத்தப் படும்வரை பெண்கள் ஆண்களுக்குச் ச ரி சம மா ச இயங்குவது என்பது முடியாத ஒன்று. பெண்கள் தாட்டின் தேசிய உற்பத்தியில் பெரும்பங்கு வகித்து தனிப்பட்ட, சொந்த கடமைகட்கு குறைந்தளவு முக்கியத்துவம் கொடுத்தால்தான் அவர்கள் உண்மை பில் விடுதலை அடைந்தவர்கள் ஆவர். 'சீனமாதர் தற்போது படித் தல், வேலை செய்தல், ஒய்வெடுத்தல் ஆகியவற்றுடன் ஆண்களுக்குச் சமமாக பொருளாதார கலாச்சார அலுவல்களில் பங்கு கொள்கின் றனர். ஒருகாலத்தில் நான்கு சுவர்களுக்குள்ளே மட்டும் அடைந்து கிடந்த அதே பெண்கள் தற்போது சகல உள்நாட்டு வெளிநாட்டு , விஷயங்களிலும் அதிக கவனம் செலுத்துகின்றனர். அவர்கள் கனவி' லேயே கண்டிருக்கமுடியாத சாதனைகள் பலவற்றைப் புரிந்துகொண்டு ஊக்கத்துடனும் உறுதியுடனும் விடாமுயற்சியுடனும் மக்களுக்குக் தொண்டு செய்கின்ருர் கன். w
தலைவர் மா-ஓ எமக்குப் போதிக்கின்ருர், "காலங்கள் மாறுகின் றன. இன்று ஆண்பெண் இருபாலாரும் சரிசமமே. ஆண் தோழர்கள் சாதிக்கக்கூடிய யாவற்றையும் பெண் தோழிகளாலும் சாதிக்க முடியும்' Va
அன்புடன், ஜெயம்
சர்வதேச அணியில் எமது கட்சி பாட்டாளியின் சர்வ தேசீயத்தை வலியுறுத்தும் ஏகாதிபத்தியம், காலணி ஆட்சி, நவீன காலனி ஆட்சி, குறிப்பாக அமெரிக்க ரஷ்ய நாடு களின் ஆக்கிரமிப்புக் கெடுபிடிகளால் துன்புற்று எதிர்த்துப் போராடும் மக்கள், நாடுகளுடன் ஐக்கியப்படுவோம் ዴD.. áኪ) ¢፩ முழுவதிலும் இயங்கும் உண்மையான மார்ச்சிச கட்சிக ளோடும் அமைப்புகளோடும் நாம் ஐக்கியப்பட்டு நவீன திரிபுவாதத்திற்கு எதிராகப் போராடவேண்டும். உள்நாட் டில் பாட்டாளியின் தலைமையில் மனித வர்க்கம் முழுவ தற்கும் பயன் தரத்தக்க உரமான சோஷலிசத்தைக் கட்டி எழுப்ப ஐக்கியப்பட்டு கடுமையாக உழைக்கவேண்டும்.
செள என் லாய் - 10வது காங்கிரஸ் அறிக்கை.
17 )-

Page 10
வெளிவந்துவிட்டது!
தமிழவேள்” எழுதிய
Ꮝ0 Ꮷ Ꭿl Ꮷ tᎠ lll th வினு - விடைமுறை விளக்கம்
க. பொ. த. 1974 முதல்
* சுருக்கமுறை, விரிமுறை வினவிடைமூலம் புதிய பாடத் திட்டம் முழுவதையும் எளிதில் கற்க உதவும் ஒரு நூல்.
* சைவசமய உண்மைகளையும் வரலாறுகளையும் உள்ளடக்
கிய அரிய நூல்.
பரீட்சையில் விசேட சித்திபெற விரும்பும் மாணவர் க்கு சிறந்ததோர் துணை நூல்.
உயர் வகுப்புகளில் பல்லாண்டு கற்பித்த அனுபவமும் புதிய பரீட்சை முறைகளில் ஈடுபாடும் அனுபவமும் கொண்ட ஆசிரியரால் எழுதப்பட்டது.
விலை : ரூ. 5-00
வெளியீட்டாளர் :
விஜயலட்சுமி புத் தகசாலை 248, காலி வீதி வெள்ளவத்தை
கொழும்பு-6.
தொலைபேசி : 88930

சுருக்குக் கயிருகும்
வர்க்க சமூகத்தில் சுரண்டல் அரசமைப்பு
வந்தமைந்த சட்டங்களத்தனையும் அரசு யந்திரத்தின் உழைக்கும் வெகுஜனத்தில்
கொள்கை கோட்பாடு சுருக்குக் கயிருகும்
கலாச்சார, என்றதஞல், கலை இலக்கியங்கள் சுரண்டுகின்ற சிந்தனையை
அத்தனையும் தொடர்ந்து விதைக்கின்ற சுரண்டுகிறவர்க்கத்தின்
அரசு அமைப்புக்கு
சுகபோகவாழ்க்கையினை
சுருக்குக் கயிறிட 0ل துபமிட்டு, பாதுகாக்க
தொடர்ந்து தோற்றுவிக்கிப் ந
செயல்படுவோம். | } Ll-L.--60)6).J &5 G637
இத்துடனே, - கணேசு
67ம் நாட்டு கைத்தொழில், விவசாயம், போக்குவரவு, நிதி, வாணிபம் யாவும் சிறப்பாக உள்ளன. வெளிநாட்டுக் கடனே உள்நாட்டுக் கடனே எமக்குக் கிடையாது. விலைகள் நிலையாக உள்ளன. சந்தை நிலை மிக செழிப்பாக உள்ளது. கலை, கலாச் சாரம், கல்வி, பொதுச்செளக்கிய நலன், விஞ்ஞானம், தொழில் நுட்பம் ஆகியவற்றில் பல புதிய வெற்றிகளை ஈட்டியுள்ளோம். செள-என்-லாய், 10வது காங்கிரஸ் அறிக்கை.
米 米 米
"லி சோ சியும் சென் போ-ரவும் 8வது காங்கிரஸ் நகல் தீர்மா னத்தில் சீனுவின் பெரிய முரண்பாடு பாட்டாளி வர்க்கத்திற் கும் பூஷ்வாவிற்கும் இடையிலல்ல. "முன்னேறிய சோஷலிச அமைப்பிற்கும் சமுதாயத்தின் பின்தங்கிய உற்பத்திச் சக்தி களுக்குமிடையில் என்பதை இரகசியமாக நுழைத்தனர் . இத்தவருண நகல் தீர்மானத்தை மத்தியகமிட்டி நிராகரித்தது.
செள.என்-லாய், 10வது காங்கிரஸ் அறிக்கை.
-( 19 )-

Page 11
அரசு முதலாளித்துவ வளர்ச்சி
பற்றிய கேலி சில குறிப்புகளும் புள்ளிவிபரங்களும்
அரசு முதலாசித்துவத்தின் நவீன உருவகங்களாக இன்றைய கூட்டுத்தாபனங்கள் வளர்ந்து வருகின்றன. இவற்றின் மொத்த எண் னிக்கை சென்ற மார்ச்சு மாதம் வரை 104. இவை யாவும் தனி முதலாளிகள் எதிர்பார்ப்பதுபோல இலாபகரமாக நடாத்தப்பட வேண்டும் என அரசு வலியுறுத்துகிறது.
இவற்றின் சேவைகளும் உற்பத்திகளும் தனியுடைமைபோல் ஆனவை; போட்டி கிடையாது. கூட்டுத்தாபன உற்பத்திப் பண்டங் கள் தனியாரால் உற்பத்தி செய்ய அனுமதி வழங்கப்படா. (உ-ம். சீமெந்து, கடுதாசி, ஒட்டுப்பலகை, உப்பு, சீனி, ரையர் :) இதனல் போட்டியில்லை, தரம் உயர்த்தும் அவசியமில்லை, இலாபத்தை நோக்கி எவ்வாறும் விலையை உயர்த்தலாம்.
கூட்டுத்தாபனங்களின் மொத்த மூலதனம் 500 கோடி ரூபா.
கைத்தொழில்களில் ஈட்டப்பட்ட மூலதனம் 183 கோடி ரூபா. கைத்
தொழில்களில் வேலை செய்வோர் தொகை 36,000 பேர். ஒருவருக்கு
வேலைதர ஈட்டப்படவேண்டிய மூலதனம் ரூ. 36,500. கைத்தொழில் மூலம் 1972இல் பெற்ற இலாபம் 9 கோடி ரூபா.
அரசின் உள்நாட்டுக் கடன் 800 கோடி ரூபா. வெளிநாட்டுக்
கடன் 240 கோடி.
அரசின் பெருந்தொழில்கள் யாவும் பல்வேறு பிறநாட்டுக் கடன் உதவியிலேயே ஆரம்பிக்கப்பட்டன.
எமது வெளிநாட்டுக் கடனில் பெரிய கடனை அமெரிக்காவிட மிருந்தே பெற்றுள்ளோம். தொகை 59 கோடி ரூபா. சென்ற ஆண் டில் பெற்ற அமெரிக்கக் கடன் 13 கோடி ரூபா. வட்டி முதலாக சென்ற ஆண்டில் பிற நாட்டவருக்குச் செலுத்தப்பட்ட தொகை 46 கோடி ரூபா. (விபரங்கள் மத்திய வங்கி ஆண்டறிக்கை
யிலிருந்து பெறப்பட்டன.)
-(20)-
 
 

அலென்டேயின் விஷப் பரீட்சையும் வீழ்ச்சியும்
* பெருமாள் *
விர்க்கங்கள் உள்ள சமுதாயத்தில் தேர்தல்மூலம் ஆட்சிக்கு வந்து சட்டமூலம் சோஷலிசத்தைக் கட்டி எழுப்பிவிடலாம் என்று எண்ணுவது கற்பளுவாதமாகும். தேர்தல் என்பது ஆளும் வர்க்க மான பூஷ்வா வர்க்கம் தனக்குச் சாதகமாக அமைத்த வழியாகும். இவ்வழியால் பதவிக்குவரின் அவர்கள் அமைத்த சட்டதிட்டங்களுக் கமைய நடந்து ஆளும் வர்க்க நலனைப் பாதுகாக்கவேண்டும். இந்த அமைப்பின் முதுகெலும்பாக இருப்பது ஆளும் வர்க்கத்தால் அமைத்த முப்படை, பொலிஸ் ஆகும். (ஆளும் வர்க்க நலனை பாதுகாக்கத் தவறும்போது இவர்கள் ஆட்சியைக் கைப்பற்றிக்கொள்வர்.)
இத்தகைய கட்டுப்பாட்டினுள் நின்றுகொண்டு அதே வர்க்கக் கோட்பாட்டைத் தகர்த்து எதிர் வர்க்கமான தொழிலாள - விவசாயி களின் சார்வாதிகாரத்தை நிலைநாட்டிவிடலாம் என்று எண்ணுவது, நம்புவது, செயல்படுவது யாவும் கற்பணுவாதமேயாகும். இத்தகைய முயற்சிகளில் ஈடுபடுபவர் மார்க்ஸிசவாதிகளல்ல. இவர்களை பூஷ்வா வர்க்கமே மார்க்ஸிஸ்ட் என்று பட்டம்சூட்டி, மட்டுப்படுத்தி, இவர் கள் காட்டும் சோஷலிசப் பாதை நாட்டை இழிவான நிலைக்கு ஈர்த் துச் செல்வது என்று மக்கள் முன் நிரூபித்து ஒழித்துவிடுகிறது. இத் தகைய திரிபுவாதப் போக்குகளால் தொழிலாள - விவசாயிகளின் வர்க்கப்போராட்டம் பின்தள்ளப்படுகிறது. இவ்விஷப் பரீட்சையில் இறங்குபவர்கள் அழிவது மட்டுமல்ல, இவர்களை நம்பி ஆதரவளித்த தொழிலாள - விவசாயிகள் எதிர்ப்புரட்சிவாதிகளால் இரக்கமின்றி நசுக்கப்படுகின்றனர். இத்தகைய நிகழ்ச்சிகளை நாம் உலக வரலாற் றில் பல தடவைகள் கண்டோம். இந்தோனேஷியாவில் நடைபெற்ற கோர நிகழ்ச்சிகள் இவ்விஷப்பரிட்சையின் மறக்க முடியாத கறை பாகும்; உலக வரலாற்றின் மிகப்பெரிய குரூரமாகும்.
ஒன்றையொன்று அழிக்கமுயலும் பகைமையற்ற வர்க்கங்கள்; பூஷ்வா வர்க்கம் தன்னைப் பாதுகாக்க, சமரசம்பேச அமைத்த அரசு இதன் பீடத்தில் ஏறியிருந்துகொண்டு இந்த வர்க்கத்தை அழித்து டலாம் என்று கனவு காண்பது புலி முதுகில் இருந்துகொண்டு அதன் கால் நகங்களால் அதைக் கொல்ல முயல்வது போன்றதாகும்.

Page 12
அலென்டேயின் வீழ்ச்சிகண்டு எந்த மார்க்ஸிச, லெனினிஸ்டும் வியப்படைவதற்கில்லை. அவரின் மரணம் எதிர்ப் புரட்சிவாதிகளின் இரக்கமற்ற குரூரத்தை உலகிற்குக் காட்டி நிற்கிறது.
சில்லியில் அலென்டே கட்டமுயன்ற சோஷலிசப் பாதையிலேயே நாமும் செல்கிருேம் என்று சமசமாஜ ஆங்கில ஏடு ஒன்று அடிககடி எழுதி வந்தது. இன்று எதிர்ப் புரட்சிவாதிகளைக் கண்டிப்பது ‘புலி, புலி' என்று கூக்குரலிடுவது போன்றதாகும்.
தொழிலாள, விவசாயிகள் தம் எதிர்வர்க்கத்தை என்றும் குறை வாக மதிப்பிட்டுவிடப் படாது. அவ்வர்க்கத்தை ஒட்டுப்போடுவதன் மூலம் ஒழித்துவிடலாம் என்று நம்புவது மார்க்ளிசமல்ல. கற்பணு வாதம் அல்லது திரிபுவாதமாகும். இக்கற்பனவாதத்தை நம்பி சோஷ லிசத்தை அமைக்க முயல்வது விஷப்பரீட்சையாகும். சில்லி நிகழ்ச்சி கன் இவ்வுண்மையையே காட்டி நிற்கின்றன. இந்நிகழ்ச்சி எம்நாட் டுத் தொழிலாள, விவாாயிகளுக்கும் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். @
விரைவில் வெளிவருகிறது !
இலங்கையின் தேசப் படப் புவியியல்
பேராசிரியர் க. குலரத்தினம் அவர்களது முன்னுரையுடன் Ցունգա5].
G. A. O, க. பொ. த. உயர்தர, சாதாரண வகுப்புகளுக்கு மட்டுமன்றி கீழ்வகுப்புகளுக்கும் பயன்படத்தக்க உயர்ந்த நூல்.
கிடைக்குமிடம்:
விஜயலட்சுமி புத்தகசால் 248, காலிவீதி, வெள்ளவத்தை,
கொழும்பு-6.
தொலைபேசி 88930
ー(22)ー

வெளிவந்துவிட்டன
புலவர் 'தமிழவேள்” எழுதிய தமிழ் இலக்கியத் தொகுப்பு - வினுவிடை ரூ. 375 தமிழ் இலக்கியத் தொகுப்பு - விளக்கம் ரூ. 5/50
க. பொ. த. (9-10) வகுப்பு -"அ" பாடத்திட்டம்
பொறியியலும் சடப்பொருட்களின் இயல்புகளும் MECHANICS & PROPERTIES OF MATTER ஜி. சி. ஈ. சாதாரணம், உயர்தர வகுப்புகளில் பெளதிகம், பிரயோக கணிதம் ஆகிய பாடங்களில் பயன்படத்தக்க நூல் பரீட்சை மாதிரி வினு - விடைகளையும் கொண்டது இ வே. இலகுப்பிள்ளை B. Sc. (Hons.) இரத்தினு தனபாலசிங்கம் B. Sc.
டாக்டர் மகேசன் ராசநாதன் எழுதிய அறிவுக் களஞ்சியம் (Junior Encyclopaedia in Tamil)
e5. 5-50
பா. பாலேஸ்வரி எழுதிய சுமைதாங்கி
90- 1 .5]ع
விஜய லட்சுமி புத்தக சாலை
248, காலி வீதி, - கொழும்பு-6
தொலைபேசி : 889 30
-(23) -

Page 13
இலங்கையில் செய்திப் பத்தி ரிகையாகப் பதிவுசெ
ஜி. சி. ஈ. (உயர்தர 6
உயர்தர இரசாயனம் - தாவரவியல்-பரமானந்தன் விலங்கியல் சங்கரஐயர் விலங்கியல் பயிற்சிகள் திருத்தொண்டர் புராணம் இரட்சணிய யாத்திரிகம்: - A CONCISE ATLAS GE - Foreword by Prof. K. F
ஜி. சி. ஈ. (சாதாரண வகு 1 நவீன இரசாயனம் 1 2. நவீன இரசாயனம் 11
பரமானந்தன் & பாலசுந்தரம் நவீன உயிரியல் 1 நவீன உயிரியல் II
பரமானந்தன், இராஜசே (திருத்திய பதி 5. நவீன பெளதிகம் 1
தமிழ் இலக்கிய விளக்கம்
க. கி. நடராசன் & இ
6.
வாங்கிவிட்டீர்களா ?
தமிழவேள் தமிழிலக்கியத் தொகு
"அ" பாடத்திட்டம்
கிடைக்குமிடம்:
விஜயலட்சுமி
248, காலி வீதி, ே
கொழும்
இப்பத்திரிகை கொழும்பு 12, டாம் வீதி, 201ல் டி அதே முகவரி யிலுள்ள குமரன் அச்சக நிருவாக ஆவியர் : மீ. கனேசனிங்கள்.
 
 

1- 1
■ டுள்ள * ய்யப்பட்டுள்ளது.
-
1+177 1
நூல்கள் |
பகுப்பு) நூ
கணேசர்&சிவபாலன் 364
2 பகுதிகள் 28பகுதிகள் 25.75 |-
3/ー - சிலுவைப் பாடு 2OGRAPHY OF CEYLON Kula Tatlam 5
ப்பு) பாட நூல்கள்:
450 8.75 (திருத்திய பதிப்புகள்)
500 6.50 *னன் & குலேந்திரன் ப்புகள்
5/50 3 VOO இரத்தினசிங்கம்
எழுதிய
Üıq - விளக்கம்
வினுவிடை
புத்தகசாலை வள்ளவத்தை,
-6,
தொஃலபேசி: 8893று
சிக்கும் மி. கணேசலிங்கள் ffair TT, ந்திங் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.