கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: குமரன் 1978.12.15

Page 1
இழப்பவர்கள் இயற்கையின் அழிவிலி இரு நாடுகளில் இரு ம எழுந்து வ கேள்வி? பதில் 1 கலேயும் சமுதாயமும் - ஒரு பெண் நட்சத்திரம
Ĥj)ñáÂILIÊb
݂ ݂
■
 
 
 
 
 
 
 
 

s!) |
விலே 60 சதம்
雷5。雷2。雷9Z$
ருந்தும் .
வட்டங்கள்
2
கிரு
كبير

Page 2
குமரன் குறிப்புகள்
கிழக்கிலங்கையில் சென்ற மாதம் வீசிய புயல், அழிவு பற்றி வேதனைப்படாதவர் எவரும் இருக்கமுடியாது. எம் நாட்டுக் கடற் கரையெல்லாம் மீனவரின் குடிசைகளே. பெரிய அழிவும் இழப்பும் ஏழைகளுக்கே, இயற்கையின் அழிவிலிருந்தும் பாதுகாப்புத் தேடிக் கொள்ளவேண்டும் என்பதை மாஒ அடிக்கடி நினவூட்டுவார். எம் நாட்டு அழிவுக்கு உடனடி நிவாரணம் காணமுடியாதபோது உல கெல்லாம் பிச்சையும், இரக்கமும் வேண்டுகிருேம். இவைதானும் துன்பப்படும் மக்களிடம் சேர்ந்துவிடுமா என்ற வினவிற்கு எல்லோ ருக்கும் விடை தெரியும். ஏனெனில் இது தனிச்சொத்துடைமையும் சுயநலனும் கொண்ட சமுதாய அமைப்பேயாகும்.
குமரன் இதழை மீண்டும் கண்ட குதூகலத்துடன் பழைய நண் பர்கள் பலர் எழுதியிருந்தனர். சந்தா, விற்பனை விரிவடைவது வளர்ந்துவரும் சமுதாயத்திடை குமரன் கருத்துகள் பரவும் ஆர் வத்தை காட்டுகிறது. W
இந்தியாவின் நெற்களஞ்சியம் என்று கூறப்படும் தஞ்சாவூர் மாவட்டத்தை வியத்நாமிலுள்ள தைபின் மாவட்டத்தோடு ஒப் பிடும் ஆய்வுக்கட்டுரை இல்விதழில் முடிவடைகிறது. நெல்லை விளை விக்கும் இரு மாவட்டங்கள், மக்களிடை எத்தனை வேறுபாடு? மக் கள் தேவைகளைப் பூர்த்திசெய்யாத எந்தச் சமுதாய அம்ைப்பும் நிலைக்கமாட்டாது.
முதலாளித்துவ கலை உலகில் ஏற்படும் முரண்பாடுகளும் தில்லு முல்லுகளும் பற்றி வெளி உலகத்தவர் பெரும்பாலும் அறிவதில்லை. பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் விளம்பரம் பெறுவதற்காகவும் தமது பூர் ஷ்வா வர்க்கத்தவரது தொழிலைப் பேணுவதற்காகவும் சினிமா உலகத்தையும் அவ்வுலக கலைஞர்களையும் புனிதப்படுத்துகின்றனர். அந்த உலகத்துடன் நன்கு தொடர்பு கொண்டுள்ள சென்னை செல் வன் 'ஒரு பெண் நட்சத்திரமாகிருள்’ என்ற முதல் கட்டுரையை இவ்விதழில் ஆரம்பித்துள்ளார். நீங்கள் இதுவரை காலமும் புனித மாக நம்பியிருந்த பல பொய்ல்மைகளை செல்வன் நெஞ்சுரத்துடன் உடைத்தெறிகிருர்,
மனித சமுதாய வளர்ச்சியில் விலங்கு பூட்டிய அடிமை, நி அடிமையின் பின், கூலி அடிமை என்ற வர்க்கம் தோன்றுகிற
2

இவ்வர்க்கத்தைச் சார்ந்த பெண் அரை நிலப்பிரபுத்துவ அமைப்பி லிருந்து தரகு முதலாளித்துவம் வளர்ந்துவரும் நகருக்கு பிரிக்கப் படுகிருள். அவளது உணர்வுகளில் திடீரென ஏற்படும் முரண்பாடு களை “சிற்றிறு பம்" என்ற சிறுகதை கோடிட்டுக் காட்டுகிறது. இச் சிறுகதை பலருக்கு அதிர்ச்சி தரலாம். ஆயினும் பல உண்மைகள் மட்டுமல்ல, செயல்களுக்கு விளக்கத்தையும் கதையிலேயே காண லாம். நகரங்களில் வாழ்க்கைச் செலவு உயர்வதனல் திருமணத்தைத் தள்ளிப்போடுபவர்கன் யும் திருமணமாகியும் குடும்பத்தோடு வாழ முடியாதவர்களையும் காணலாம். இவர்களுக்கெல்லாம் சிறு இன்பம் தருவதற்காகத் தான் ஆளும் வர்க்கம் பஸ்களிலும் ரயில்களிலும் நெரிசலிடை பிரயாணம் செய்ய வைக்கிருர்களோ என்றும் கூறத் தோன்றுகிறது 1 (அரசுடைமை ஆக்குவதென்பது ஆளும் வர்க்கத் தின் அதிகாரத்தில் கொண்டுவருவதாகும்.)
கொடுத்தழியாது இழந்தழியும் வர் க்கமே குட்டி பூர் ஷ்வா வர்க்கப் பாட்டாளி வர்க்கத்தின் ஒழுக்கவரம்பு களையும் துணிச்சலும் நம்பிக்கையும் கொண்ட வாழ்க்கையையும் இவ்வர்க்கத்தால் புரிந்து கொள்ள முடியாது. மாதவனின் கதை பாட்டாளி வர்க்கத்தைப் படம்பிடித்துக் காட்டுகிறது.
விளக்கம் தரமுடியாத எதற்கும் தெய்வாம்சம் தருவது நிலப் பிரபுத்துவ கோட்பாடாகும். கலையின் பணியை விளக்கமுடியா நிலையில் அது "தெய்வாம்சம் பொருந்தியது எனவும் தெய்வத்திற் காகவே கலை எனவும் கூறினர். முதலாளித்துவம் கலையை விற்பனைப் பண்டமாக்கியது. கலை கலைக்காக என்ற கோட்பாட்டையும் வைத் தது. "கலையும் சமுதாயமும் என்ற சென்ற இதழ் கட்டுரையை பலர் பாராட்டி எழுதியுள்ளனர். மார்க்சிய சித்தாந்தம் மூலம்' மட்டுமே கலையை பற்றியும் விஞ்ஞான ரீதியாக விள்க்க முடியும், தொடர்ந்து பல கட்டுரைகள் மூலம் இப்பணியைச் செய்யமுடி யும். கலை உணர்வு உழைப்போடு இணைந்தது என்பதையும் வரலாற் றுப் பொருள் முதல்வாத முறையில் அதன் தோற்றத்தையும் இவ் , வித்ழ் கட்டுரை விளக்க முனைகிறது. கலை, இலக்கியத்தில் ஆர்வ. முள்ள அனைவரையும் இக்கட்டுரைகளை தொடர்ந்து படிக்கும்படி: வேண்டுகிருேம், மேலும் விளக்கம் வேண்டும் பகுதிகள் பற்றியும் எமக்கு எழுதுக. ་་ : ۰ 。●
* --wry.

Page 3
கொடுத்தறியாது இழப்பவர்கள்
- மாதவன் -
*ஆளைப் பார்த்தால் பெரிய துரைபோல வேஷம் ?? மூலையில் பிளெயின் டீ குடித்துக் கொண்டிருந்த கந்தசாமிக்கு காசுப் பட்டறையில் ஏதோ கலாட்டா நடக்கும் ஓசை கேட்டது. நிமிர்ந்து பார்த்தான். சுன்னகத்து சுந்தரம், அவனுக்கு ஏன் இந்த நிலை? -
*உன்னைப் போல எத்தனையோ பொய்யர்களைப் பார்த்திருக் கிருேம். எடடா காசை.”*
... பில்லைக்கூட பெருது கந்தசாமி விரைந்து காசுப்பட்டறையை
நோக்கி நடந்தான்.
'ചേ', முத்தையா, இவன்ரை பொக்கெட்டெல்லாம் தடவிப் பார்.”* VK.
காசுப் பட்டறையில் இருந்த முதலாளி கூககுரலிட்டான். கந்த சாமி சென்று தடுத்தான். w
"என்ன மிஸ்டர், இவர் ஆர் என்று தெரியாமல் மரியாதையில் லாமல் பேசிறீங்க. இப்ப என்ன நடந்து பேச்சு.”
சுந்தரத்தின் முகம் பேயறைந்தது போல் காட்சியளித்தது. கந்த சாமிக்கு தன் நிலைமையைக் கூறவே தயங்கினன். அவன் வாய் திறக்கு முன் முதலாளி பேசிஞர். m تبر
*சாப்பிட்டு விட்டு பர்சை தொலைத்துப் போட்டேன் என்று எனக்கு கயிறு விடுகிருன்’
'அவரென்ன பொய்யாசொல்லுகிருர்?" “இப்பிடி யாட்களை நாங்க இங்கே நாள் தோறும் பார்க்கிறம்ே’ "அதுக்காக இவரையும் பொய் காரனென்ரு சொல்லுகிருய். பில் கொடுக்காவிட்டாலும் பணம் கொடுத்து விட்டுப் போகும் வர்க்கத் தைச் சேர்ந்தவர் இவர். பணம் இருந்தால் கொடுத்திருப்பாசே, பில் தொகை எவ்வளவு?"
கந்தசாமியின் வார்த்தையில் நளினமும் உறுதியும் இருந்தது. "இரண்டு ரூபா எழுபத் ைநஞ்சு சதம்"
4.

சந்தசாமி ஐந்து ரூபா நோட்ட்ைக் கொடுத்து சில்லரை பெற்றுக் கொண்டு சுந்தரத்தோடு வெளியேறிஞன்,
"தாங்யூ, கந்தசாமி உன் பணத்தை .” *அதெல்லாம் வேண்டாம் என்ன நடந்தது சொல்லு.” "என் பர்சை யாரோ பஸ்ஸில் அடித் து விட்டான். சாப்பிட்டு விட்டு பில் கொடுக்க பர்சை தேடிய போது தான் தெரிந்தது"
சுகந்தரத்தின் வார்த்தைகளில் வேதனையும் வெட்கமும் தொனித்தது.
*எவ்வளவு ரூபா உண்ம்ைபைச் சொல்லு.' கந்தசாமி நடைபாதையில் கோட்டையை நோக்கி நடந்தபடி கேட்டான்.
"இரு நூற்று ஐம்பதாவது இருக்க வேணும்."
'நீங்க பிறருக்குக் கொடுத்துப் பழகாத வர்க் கந்தானே." **ଡtଶst ଜor சொல்லுகிருய்." "கொடுத்துப் பழகாத வர்க்கம், இழந்து அழிகிற வர்க்கம்
என்கிறேன்."
"ஏனப்படி சொல்லுகிருய்?.
* நினைவிருச்கா. ஒரு தடவை இருபத் ைகஞ்சு ரூபா கடன் கேட்டன் இல்லை என்று கையை விரித்தாய். இப்ப இரு நூற்றைம்பது ரூபாவை இழந்து விட்டாய்." . ހޯށތ
*நீ கேட்ட போது என் னுகயில் காசு இருக்கேல்லை ??
*அது நல்ல சாட்டுத் தான். இருபத்தைந்து ரூபா கைமாறித் தர உன்னல் முடியாதா? இல்லை என்று சொல்லி லிட்டாய்."
“இத்தனை பணத்தை இழந்து போய் நிற்கிறேன். கொஞ்சமும் கூட இரக்கமில்லாமல் பேசுகிருயே."
'உண்மையைத் தானப்பா சொன்னேன். உனக்கு என்ன், உன் வர்க்கத்திற்கே கோபம் வாத் கான் செய்யும். சமாதானம் கூறுவ தென் ருல் இத்த%ன இழப்போடு தப்பினுய், அதற்காக சந்தோசப்படு என்று தான் சொல்ல முடியும்."
{ *நல்ல வேளை பாதிச் சம்பளத்தை நேற்று மாலதியிடம் கொடுத்து விட்டேன். அல்லது முழுவதுமே போய் விடும்." . .
s

Page 4
1. சுந்தரம் கந்தசாமியின் ஆறுதல் வார்த்தைகளை ஏற்றுக் கொண்டான். h− . برعه “இன்று அடித்தவன் அதிர்ஷ்டமில்லாதவன். நேற்றே அடித் திருச்க வேண்டும்."
"யார், உன் பாட்டாளித் தோழர் தான் என் பர்சையும் அடித்திருப்பார்கள்’
சுந்தர்ம் கூறினன். கந்தசாமிக்கு உடனே கோபம் வந்துவிட்டது. *நீ தருைய் புரிந்து கொண்டாய். உழைப்பு நேரத்தை முத லாளிக்கு விற்று அதனல் சுரண்டப்படும் சொத்து எதுவும் அற்ற வினே பாட்டாளி. உன் பர்சை பறித்தவரெல்வாம் சொத்து இன்றி வேலை யின்றி உயிர் வாழ முயலும் உதிரிப் பாட்டாளிகள்"
*அங்கள் பறித்தெடுக்க எங்களைப் போன்ற ஏழைகள் தான் கிடைத்தார்களா?" W
“வேலையில்லை உதவுங்கள் என்ருல் நீங்க உதவுவீர்களா? அவர்கள் பறித்துப் த னே எடுக்க வேண்டும். நீங்க ஏழைகளல்ல, குட்டி பூர் ஷ்வாக்கள் முதலாளிகள் உங்கள் உபரி உழைப்பை சுரண்டுவதை நீங்க அறிய மாட்டீர்கள். நீங்க வைத் கிருக்கும் சிறு சொத்துகளை முதலாளிகளின் சுரண்டலில் இழந்து பாட்டாளியாகி வருவதையும் தற்போது உணர மாட்டீர்கள்." $پ
இருவரும் கோட்டை பஸ் நிலையம் வரை வந்து விட்டனர். “ஏதோ நீ கூறுவதெல்லாவற்றையும் என்ருல் புரிய முடியவில்லை. ஊரிலை ம்ாலதியின் சீதன வீடு வளவுதான் தற்போது மிச்சமாயிருக்கு அதுவும் மீள முடியாத ஈட்டிலை கிடக்கு " -
"அதைத் தான் நானும் சொல்லுகிறேன். உன்னைப் போன்ற குட்டி பூர் ஷ்வாக்களில் பெரும் பகுதியினர் சொத்துகளை இழந்து என்னைப் போல் பாட்டாளி யாவதும் நடுத்தர விவசாயிகள் நிலத்தை இழந்து நிலமற்ற ஏழை விவசாயி அல்லது கூலி விவசாயி யாவதும் தவிர்க்க முடியாததாகும். இவர்களைத் தான் கொடுத்து பழகாது இழந்து அழியும் வர்க்கம் என்று கூறினேன்.”
*ஏதோ நீயும் உன் சித்தாந்தமும், இப்போது எங்கே வேலை செய்கிருய்? مح۔
*தறைமுகத்தில் நிரந்தரமில்லாத நாட்கூலி. உன் கம்பனி வேலை 6Titulg p" - . . .
* நீ எப்படித் தான் குடும்பத்தோடு சமாளிக்கிருயோ தெரிய வில்லை.” ܐ --
'உன்னைப் போன்ற போலி வாழ்க்கை என்னிடம் கிடையாதே. குடும் பரிெல் லாம் ஊரிலைதான், சையிலை சா சிாந்தn ல் தான் ஒட்டவில் சாப்பிட்டு விட்டு காசு கொடுப்பேன்" இல்லாவிட்டால் ஓசியில்,
6

சாப்பிட்டு விட்டு பில்லோடு வந்து விடுவேன். உன்னைப் போல உண்மை சொல்லி மாட்டுப்பட மாட்டேன்." V
ʻʻ-ay@ğ5 gi) 6vrrub என்னல் முடியாது, அகப்பட்டால்.” ‘அகப்பட்டால் என்ன? காசிருந்தால் தானே கொடுக்கலாம். காசில்லாவிட்டால் பட்டினியிருக்கச் சொல்லுகிருயா?”
கந்தசாமி கேட்டான். . . . "அதெல்லாம் சரி. இப்ப பஸ்சுக்கும் ஒரு ரூபா காசு தா. பிறகு கடனெல்லாம் தந்து விடுவன்." -
*பார்த்தாயா, அந்த குட்டி பூர்ஷ்வா குணம் வந்துவிட்டது. بي" நாவென் ருல் கையிலை காசில்லா விட்டால் பஸ்சுக்கோ, ரெயிலுக்கோ டிக்கட்டே வாங்க மாட்டேன்." ,
“என்னல் இதெல்லாம் முடியாது. காசு கடன் தா. பிறகு உன் வீட்டுக்கே கொண்டு வந்து தாறனே. எங்கே தங்கியிருக்கிருய் என்று சொல்லு?" a
"இந்தா ஒரு ரூபா வைச்சுக்கெர்ள். என்னல் உதவி செய்ய முடிந்தால் எவருக்கும் உதவி செய்வேன். திருப்பி வாங்குவது என்பது கிடையாது ""
சுந்தரம் கையை நீட்டிப் பணத்தை வாங்கிக் கொண்டே கூறினன். í f
é
is விசித்திரமான மனுசனப்பா? உன்னைப்போல் எல்லாராலும் வாழமுடியாது."
*உன்னைப் போல் பாட்டாளியாக வந்த பின், வாழ வேண்டு மென் ருல் இப்படித் தான் வாழ முடியும். நீயும் என்ருே அந்த நிலக்கு வந்த பின் பார்.” -
சுந்தரத்தின் குரல் அழுத்தம்ாக ஒலித்தது. “வீட்டுக்குப் போனதும் மாலதிக்கு எப்பிடிச் சமாதானம் சொல்வதென்று தான் கெரியவில்லை. மாதம் பூராவும் புகைந்து கொண்டேதான் இருப்பாள்" -
*சம்பளம் எடுத் ததும் சேலை வாங்கித் தரும்படி மூன்று மாத மாய் கேட்டுக் கொண்டிருந்தாள். இப்பகடன் வாங்கவும் ஆட்களில்லை'
'நீ ஏனப்பா வீட்டிலை சொல்ல :ேணும் ???
-༣
*சொல்லா விட்டால் சம்பளத்திலை மிச்சக் கசு எங்கே? குடிச்சியா? கூத்திக்குக் கொடுத்தியா என்று தான் கேட்பாள்.'
'உன் வர்க்கத்தின் வாழ் நிலக்கேற்ற பேச் சுவார்த்தை இல்லா 'மலா போகும் நீ மட்டு யென்ன? உன்னைப் போன்றவர் வீடெல்லாம்
ப்படித்தான் இருக்கும்." ܫ
7

Page 5
'உன் வீட்டிலேயென்றல் மனுஷி ஏசம்ாட்டாளா?"
"என்னிடம் உன்னைப் போல இழப்பதற்கு ஏதாவது இருந்தால் தானே. இந்த சமுதாயத்திலை எந்தக் குடும் பந்தான் அமைதியாக இருக்க முடியும்? எங்க வீட்டுச் சண்டை நான் தூர இருப்பதால் குறைவு. குடும்பச் சண்டைகளுக்குரிய அடிப்படைக் காரணத்தை என்னுல் அறிய முடியும். அதனுல் நான் உன்னைப் போல கோழை யாக இருக்க மாட்டேன்." ?
"நீ ஒரு விசித்திர பிறவி யப்பா?
சுந்தரம் கூறினன்.
"இதிலே என்ன விசித்திரமப்பா? என்னைப் போன்றவர் தான் இந்த நாட்டிலை ஏராளமாக உள்ளனர். அது உனக்கு எப்படித் தெரியப் போகிறது. நீ மேலே நிற்கிருய். கீழே விழுந்த பின் தான் எல்லாவற்றையும் அறிய முடியும்." N
பஸ் புறப்பட ஆரம்பித்தது. சுந்தரம் சோர்வோடு ஏறினன். சீட்டிலே உட்காந்த படி பஸ் புறப்படு முன் கந்தசாமியைப் பார்த்துக் கூறினன். S. m
"எப்படியும் நீ ஒரு வீரன்தானப்பா? உன் துணிச்சலும் நம்பிக் கையும் எனக்கில்லை. எப்பதான் வரும் என்றும் தெரியாது '
*பயப்படாதே, உன் மிச்ச சொத்தெல்லாம் இழந்த பின் கட்டாயம் வருவாய். நீ கொடுத்துவிட்டு வரமாட்டாய்.இழந்து விட்ட பின் தான் வருவாய்." . is
குமரன் சந்தா விபரம்
7-50 ydoT6 ........ ...... ... e5چھ 1
6 மாதங்கள் . beg Y + . . . ரூ. 4-00 தனிப்பிரதி . ... 88 சதம் 60
பழைய சந்தாதாரர் தபாலட்டை எழுதி தமது பிரதிகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
ド 。 -- 201, டாம் வீதி, கொழும்பு-12,
குமரன தெலபேசி: 2 88
8 - -

இயற்கையின் அழிவிலிருந்தும் எம்மைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டும்
esse கணேஷ்- ^
இயற்கையின் அமைப்புகளை நன்கு ஆராய்ந்து கற்று; இயற்கை யிலிருந்து கருவிகள் செய்து, இயற்கையை வென்று வாழ்பவன்
pags sår.
'மழை கொட்டியது; குருவளி வீசியது; வீடுகள் அழிந்தன; ஆயிரக்கணக்கானேர் இறந்தனர். இயற்கையின் சீற்றம்! நாம் என்ன செய்ய முடியும்?” என்று அரசியல் தலைவர்களும் ஆளும் வர்க்கக் தவரும் சமாதானம் கூறி, உதவுவதாக தர்மப்பணம் சேர்ப்பர்; தெய்வத்தின்மேல் பழி சுமத்துவர்.
புயல் வீசப்போகிறது என்பதை 3, 4 நாட்களின் முன்னரே வளி மண்டல ஆய்வாளர்கள் கூறிவிட்டனர். மீனவர்களுக்கும் மக்களுக்கும், பாதுகாப்புத் தேடுதல் அவசியமல்லவா? அப்படியிருந்தும் இத்தனை உயிரிழப்பு, சேதம் ஏன்?
மழையும், புயலும் புதிதல்ல. வ்ரட்சியும் அனல் காற்றும் உல கோடு தோன்றியவை. இவை மாறி மாறி வ்ருவதே இயற்கை. இவை வருவதை முன்னதாகவே அறியும் ஆற்றல் மனிதனிடம் உண்டு, இயற்கையின் போக்குகள் பற்றி புள்ளிவிபரங்கள் சேகரித்து விஞ்ஞான முறையாக ஆய்ந்து பாதுகாப்புத் தேடிக்கொள்ள முடி யும். நிலப்பிரபுத்துவம் இயற்கையை வெற்றிகொள்ளமுடியாத சமு தாய அமைப்பு. முதலாளித்துவம் இயற்கையை வெற்றிகொள்ளும் அமைப்பாகும். ஆயினும் பூர்ஷ்வா வர்க்கம் தமக்கு மட்டுமே பாது காப்புத் தேடிக்கொள்ளும், மக்கள் துன்பம் பற்றி கவலைப்படார்.
மழை கொட்டும் காலத்தில் நீரைச் சேகரித்து, வரட்சிக்காலத் தில் பயன்படுத்துவதே முற்போக்கான தன்மையாகும். வெள்ளம் இவ்வாண்டு பெருக்கெடுக்கும்போது சில ஆண்டுகளில் வரட்சியும் ஏற்படும் என்பதை நாம் உணரவேண்டும். மக்களின் சையில் ஆட்சி இல்லாதபோது முதலாளிசள் தமது சுயநலத்தை பேணுவாரன்றி மக்கள் நலத்தை ஒருபோதும் பேணமாட்டார். Xa
9

Page 6
வெள்ளம், புயல், வரட்சியினல் அவதிப்படும் மக்களுக்கு உதவு வதில் கூட லாபம் சேர்ப்பதே பூர்ஷ்வா வர்க்கத்தின் முதல் குறிக் கோளாக இருக்கும். தமது இரக்க சுபாவத்தை விளம்பரப்படுத்த பிச்சைப்பணம் போட்டு பத்திரிகைகளில் விளம்பரம் செய்வர். மோட்ச சாம்ராஜ்யத்திலும் இடம்தேட முயல்வர்.
அண்மையில் ஏற்பட்ட புயலாலும் வெள்ளத்தாலும் பாதிக்கப் பட்டவர் பணக்காரரல்ல; ஏழைகளே. -.
பூர்ஷ்வா வர்க்கத்தவர் 'கொங்கிறீட்" வீடுகள் கட்டி புயல், மழையிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வர். எப்பொழுதும் அவர்கள் வீட்டில் போதிய உணவுப் பண்டங்கள் இருக்கும். அல்ல தும் தட்டுப்பாடான வேளைகளிலும் என்ன பணமும் கொடுத்து உணவுப்பண்டங்களை வாங்கிக்கொள்வர்.
ஏழைகளது குடிசைகளை புயல் அடிப்பது வியப்பல்ல. அவர்கள் அன்ருடங் காய்ச்சிகளே. ஒருநாள் உழைக்காவிட்டாலேயே பட்டிணி. புயல் வருவதை அறிந்தும், உழைக்காவிட்டால் வீட்டாரும் பட்டிணி யிருக்க நேருமே என உயிரையும் மதிக்காது கடலுக்குச் செல்வர்: உழைப்பிற்குப் போவர். அவர்களுக்கு அங்கே மரணம். குடிசை வீழ்ந்து குடும்பத்தவருக்கு தவிப்பு: மரணம்.
விஞ்ஞானம் ஒரளவு வளர்ச்சியடைந்து காற்று அமுக்கம், புயலை முன்கூட்டியே அறிவிக்கிற்து. ஆயினும் மக்களுக்கு வேண்டிய பாது காப்பு அளிக்கத்தக்க நிலையில் சமுதாய அமைப்பு வளர்ச்சியடைய வில்லை. முதலாளித்துவ அமைப்பில் இது முடியாதது. சோஷலிஸ அமைப்பில் மட்டும் இவ் அழிவு சஞக்கு முடிவுகாணும் வேலைகள் ஆரம்பிக்க முடியும். இன்று செய்வதெல்லாம் வெறும் கண் துடைப்பே. -
தாசியின் படலையா
கட்டி வைத்த வேலியைத் இன்னுமேன் ஐயா தகர்த்தெறிந்து விட தல்ை இடம்கொடுக்க அந்நியர்க்குக் தட்டுப்பாடில்லாப் (p. ருள் கண்மூடித் தனமாய்க்
கின்ன்ே மக்களுக்கு 4 A *,母 :: Εθ και εί. @年色 காட்டுகின்ரு ய் கொழும்புநகர்
கொட்ட!டிக்கும் ஐயா தாசியின் படலையா? - பட்டதையா கைத்தொழில்கள் நம் நாட்டின் தலைநகரம் ? :படி அரிசியும் இல்லே என் நீர் < * சுேடுகுதையா குடலைத்தி! ஈழக்குயில் இத்ரீஸ்
1O

இரு நாடுகளில் இரு மாவட்டங்கள் 2. வியத்நாம் தைபின் மாவட்டம்
இன்று தஞ்சாவூரில் இருப்பது போன்ற வர்க்க அமைப்பே 1945ல் தைபின் மாவட்டத்திலுள்ள வுதாங் கிராமத்தில் இருந் தது. 4% குடும்பங்கள் நிலப்பிரபுக்கள்; 25% சிறு உற்பத்தியாளர் அல்லது குத்தகை விவசாயிகள்: 1% கைத்தொழிலாளர்; 70% விவசாய கூலிகள். பிரெஞ்சு காலணி ஆதிக்கத்திலும் யப்பானிய படையெடுப்பின்போதும் நிலைமைகள் மிக மோசமாக இருந்தன. அக் கிராமத்தில் வாழ்ந்த 5000 பேரில் 770 பேர் 1945 ஆரம்பத் தில் பஞ்சத்தால் மடிந்தனர்; யப்பானியர் பின்வாங்கியபோது இருப்பு நெல்லை எரித்துச் சென்றனர். :-
1945 ஆகஸ்டு புரட்சியை விவசாயிகள் வரவேற்றனர். நிலப் பிரபுக்களின் ஆதரவுடன் பிரெஞ்சு ஆக்கிரமிப்பாளர் வந்தபோதே புரட்சி ஏற்பட்டது. போராட்டம் 1953 வரை தொடர்ந்து தைபின்வில் ஆயிரக்கணக்கானவர் உயிரிழந்தனர். வுதங் கிராமத் தில் 250 பிரெஞ்சு ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். பிரெஞ் சுக்காரருக்கெதிரான விடுதலைப்போரின் போது ஆயிரக்கணக்கான சிறு குண்டுகள் கிராமத்திற்கு வந்தன. பிரெஞ்சுக்காரர் கடைசி யாக பின்வாங்கும்போது கிராமத்தை முற்ருக அழித்துச் சென்றன்ர்:
1956ல் வட வியத்நாமில் நிலச் சீர்திருத்தம் கொண்டுவரப் பட்டபோது (ஓரளவு நஷ்டஈட்டுடன்) நிலப்பிரபுக்களின் நிலங்கள் பறிக்கப்பட்டு குத்தகை விவசாயிகள், கூலி விவசாயிகளிடை விநி யோகிக்கப்பட்டது. நடுத்தர விவசாயிகள் தமது நிலத்தை வைத் துக்கொண்டனர். பணக்கார விவசாயிகள் நிலமற்றவர்களுக்கு, நிலம் உதவும்படி வேண்டப்பட்டனர். 1959ல் 14 கூட்டுறவுச் சங் கங்கள் அமைத்து நிலங்கள் ஒன்றிணைக்கப்பட்டு விவசாயமும், நீர்ப் பாய்ச்சலும் முன்னேற்றப்பட்டது 1961ல் யாவும் நாலு கூட்டுற வாகி 1965ல் ஒன்ருகியது: அக் கிராம குடிசனம் இன்று 4000. 1976ல் சராசரி அரிசி பங்கீடு மாதத்திற்கு வுதாங்கில் 25 கிலோ, கிராமாகும்; தஞ்சாவூரில் 8 கிலோகிராமாகும்.
வுதாய் விவசாயிகள் இறைச்சி அல்லது மீன், முட்டை, 高rü கறிகள் நாள்தோறும் சாப்பிடுகின்றனர். 75% தஞ்சாவூர் மக் களுக்கு இவை கிடையா. உடை வீட்டு தளபாடங்கள், வீடுகள்
11

Page 7
ஆகியன வுதாங் கிராம விவசாயிகளிடம் உள்ளவை தஞ்சாவூரில் வாழும் சிறு நிலப் பிரபுக்கள் அல்லது பணக்கார விவசாயிகள் ஆகியவர் உடைமைகளுடன் ஒப்பிடக்கூடியவை தஞ்சாவூரில் ஏழை விவசாயிகளும் கூலி விவசாயிகளும் சிறிய வீட்டுத் தளபாடமற்ற குடிசைகளில் கிழிந்த அழுக்கு உடையுடன் வாழ்கின்றனர். வுதாங் கிராமத்தில் ஆரம்ப, உயர்நிலை பள்ளிகள், ஆஸ்பத்திரி, குழந்தை கள் பராமரிப்பு நிலையங்கள், சினிமாப்படம் யாவும் உள்ளன, தஞ்சாவூரில் ஆரம்பப்பள்ளி தவிர மற்ற எவற்றிற்கும் பிள்ளைகள் போவதற்கு ஏற்ற பொருளாதார நிலை அற்றவர்களாக உள்ளனர். நாளாந்த வேலைப்போட்டி, பொருமையை தஞ்சாவூரிலும் கூட்டுற வின் ஒற்றுமை, உத்வேகத்தை வுதாங்கிலும் காணலாம்.
இவ் வேறுபாடுகளுக்கு அடிப்படைக் காரணம் தஞ்சாவூரில் பிறருக்காக, தனியார் "லாபத்திற்காக உழைக்கின்றனர். வுதாங் கில் தமக்காகவும் தேசீய செல்வத்திற்காகவும் பாடுபடுகின்றனர்.
மூன்று முக்கிய வழிகளில் வேறுபாடு உண்டு;-
(1) தைபின் மாவட்டத்தில், தி ட் ட மி ட ல் கூட்டுறவு ஆகியவற்றல் திறமை முழுமையாக பயன்படுகிறது. உள்ளூரில் கிடைக்கக்கூடிய உரம் யாவையும் சே க ரி த் துப் பயன் படுத்துகின்றனர். 30% ரசாயன உரம் மட்டுமே பயன்படுத்து கின்றனர். அரிசி குத்தும் யந்திரம், டிராக்டர், போரடிக்கும் யந் திரம் யாவையும் தாமே செய்துகொள்ளுகின்றனர். எல்லோரும் வாரத்தில் 40 மணி நேரம் உழைக்கின்றனர். யாவருக்கும் வீட்டுத் தோட்டமுண்டு. தஞ்சாவூரில் 60% மக்களுக்கு ஆண்டில் 6 மாதம் வேலையில்லை. வயலில் வேலை குறையும்போது கைத்தொழில், நெச வுத் தொழிலில் தைபின் மக்கள் ஈடுபடுகின்றனர். இங்கு மூன்று போகம் பெரும்பாலும் பயிர்செய்து 1976ல் ஹெக்ட்ருக்கு 7 டன் தா னி யம் விளைவித்தனர்; தஞ்சாவூரில் 4.1 டன்னே 76ல் விளைச்சலாகும்.
(2) தைபின் மாவட்டத்தில் எவ்வித சுரண்டலுமில்லை. தஞ்சா வூரில் நிலப்பிரபுக்கள், வட்டிக்கடைக்காரர், வியாபாரிகள், வெளி நாட்டுக் கம்பனிகள் சுரண்டுகின்றன. தைபின்னில் 70% பணம் கூலியாக பகிரப்படுகிறது தஞ்சாவூரில் 15%-30% மட்டுமே கூலி விவசாயிகளுக்கு கிடைக்கிறது.
(3) தைபின்னில் கூட்டுறவை சேர்ந்த 99% திறமை, திறமை யற்ற உழைப்பாளரின் ஊதியத்தில் அதிக வேறுபாடு கிடையாது.
12

டாக்டர், இஞ்சினியர் ஆகக்கூடியது மூன்று மடங்கு சம்பளம் பெற லாம். தஞ்சாவூரில் வருமான வேறுபாடு ஏழை விவசாயிக்கும் பணக்கார விவசாயிக்கும் இடையில் 10-15 மடங்காகவும் பெரிய நிலப் பிரபுக்களுக்கும் கூலி விவசாயிகளுக்குமிடையில் 1000-8000 மடங்காகவும் உள்ளது.
வுதாங் கிராமம் யுத்தத்தால் பாதிக்கப்பட்டது. ஒவ்வொரு குடும்பத்திலும் யுத்தத்திற்கு சென்று இறந்தவர் உள்ளனர். இத ஞல் பெண்கள் உழுதல், யந்திரங்களை பயன்படுத்தல், துப்பாக்கி ஏந்துதல், விமானங்களே சுட்டு விழுத்தும் பீரங்கிகளை பயன்படுத்தல் ஆகிய அனைத்திலும் பயிற்சி பெற்றனர்.
தையின் வளர்ச்சிக்கு காரணம் எல்லோரும் உழைத்தலும் கூட் டுறவு முறையுமாகும். இது தவிர உபரி உழைப்பு அங்கு அபகரிக் கப்படுவதில்லை. குத்தகை, வட்டி போன்ற சுரண்டல் முறைகளும் இல்லாததாகும்.- கதிலீன் கவ், பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக் கழக மானிடவியல் ஆராய்ச்சியாளர், நன்றி ‘மந்வி ரிவூ.?
விற்பனையாகிறது !
K. சங்கர ஐயர் எழுதிய புதுமுறை சுகாதாரக் கல்வி - 8ஆந் தரம் -- பாடத்திட்டம் முழுவதையும் அடக்கிய சிறந்த பாடநூல். -
ரூ. 6-50
வி. பி. பி. ஏற்றுக்கொள்ளப்படும்.
விஜய ல ட் சுமி புத் த க ச ரா லை 248, காலி வீதி - வெள்ளவத்தை,
.6-கொழும்பு } :۔
தொலைபேசி : 889 30
13

Page 8
~ 

Page 9
(3s:
Ĝas:
-سسه «6us) سس.
இயக்கவியல் பொருள் முதல்வாதக் கோட்பாட்டின்படி ஏகாதி பத்தியமும் மாறிக்கொண்டேயிருக்குமாயின் அதன் நவீன போக்கு கள் எவை? − மு. சந்திரன், கொழும்பு.
இரண்டாவது உலக யுத்தத்தின் பின்னர் ஏகாதிபத்தியம் பல புதிய அமைப்புகளை ஏற்படுத்தி இயங்கிவருகிறது. சர்வதேச கம்பனிகள் (Multinationals), உலக வங்கி, பசுமைப் புரட்சி, சுதந் திர வர்த்தக வலையங்கள், நட்சத்திர ஓட்டல்கள், உலக நாடுகள் அனைத்தையும் இணைக்கும் விமான சேவை, உதவி என்ற பெயரில் மூன்ருவது உலக நாடுகளுக்கு கடன்கள் முதலியன வழங்குவது யாவும் ஏகாதிபத்தியங்கள் தம் நலனுக்காக அண்மையில் அமைத்த நவீன வடிவங்களேயாகும்.
: பட்ஜெட் என்பது என்ன?
சு. கமலாவதி, கொழும்பு உழைக்கும் மக்களிடமிருந்து அபகரிக்கப்படும் உபரிக்குவியலை யும் உள்நாட்டு வெளிநாட்டு பூர்ஷ்வாக்களிடமிருந்து வட்டிக் குப் பெறப்படும் கடன்களையும் ஆளும் கட்சியினர் தமக்குச் சார்ந்த ஆளும் வர்க்கத்தவர்களுக்கு வாய்ப்பாக பங்கீடு செய் வதாகும். "நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு" என்று கூறுவ தெல்லாம் வெறும் ஏமாற்று வார்த்தைகளே. 'நாடு இன்று
வரை அபிவிருத்தியடையவில்லை காரணம். கட்சி' என்று ஆட்
சிக்கு வரும் கட்சிகள் மாறி மாறி குற்றம் சாட்டுவதை நாம் கேட்டுக் கொண்டேயிருக்கிருேமே.
விஞ்ஞானம் கற்றவர்களே மதம், சோதிடம் மூடச் சடங்கு
முறைகளை முழுமூச்சாக கடைப்பிடிக்கிருர்களே இதற்குக் கார
ணம் என்ன?
ந. சின்னராசா, யாழ்ப்பணம்.
விஞ்ஞானம் இருவகைப்பட்டது.
(1) பெளதிக விஞ்ஞானம்: இரசாயனம், பெளதிகம், உயிரியல், கணி
தம் போன்ற துறைகளில் பயிற்சி பெறுவதாகும். இத் துறை கள் இன்று மிகவும் வளர்ச்சியடைந்துள்ளன. காரணம் முதலா. ளித்துவ வளர்ச்சிக்கு இத் துறைகள் மிகவும் வேண்டுவதாகும் இவை பண்ட உற்பத்தியின் பெருக்கத்திற்கு பயன்படுபவை) யாகும். முதலாளித்துவத்திற்கு சேவை செய்பவை, (
6

(2)
சமூக விஞ்ஞானம்: தொல்பொருளியல், மானிடவியல், சித்தாந் தம், வரலாறு, புவியியல், பொருளாதாரம் ஆகிய சமூக விஞ் ஞானத் துறைகள் விஞ்ஞான ரீதியில், பெளதிக விஞ்ஞானம் வளர்த்த வேகத்தில், வளர்க்கப்படவில்லை. ஏனெனில் இவை முதலாளித்துவ வளர்ச்சிக்குப் பயன்படாதவை ஆபத்தா னவை. உதாரணமாக மார்க்சிய விஞ்ஞானம் சமூக விஞ்ஞா னத்தை சேர்ந்ததே. அது எத்தனை கல்லூரிகளில் கற்பிக்கப் படுகிறது? முதலாளித்துவ பொருளாதாரமே முதலாளித்துவ நாடுகளிலெல்லாம் கற்பிக்கப்படுகிறது. மார்க்சிய பொருளா தாரமல்ல. வரலாறு என்பது மக்கள் வரலாருக, பொருள் முதல் வாத ரீதியில் கற்பிக்கப்படுவதில்லை. தனி நபர்களின் வீரதீரச் செயல்களே வரலாருக, கற்பிக்கப்படுகிறது. ஆகவே நீங்கள் கருதும் விஞ்ஞானமெல்லாம் கற்றவர்களுக்கு பயன் படாத, முதலாளித்துவ அமைப்பிற்கு பயன்படும் விஞ்ஞானம் மட்டுமே ஆகும்.
அரசின் புதிய பட்ஜெட் பற்றி என்ன கூறுவீர்கள்?
செ. கந்தசாமி கொழும்பு. மேல் மட்டத்திலிருக்கும் குட்டி பூர்ஷ்வாக்களில் ஒரு லட்சம் பேருக்கு ஓரளவு வாய்ப்பாக இருக்கும். மற்றும் குட்டி பூர் ஷ்வா வர்க்கத்தைச் சார்ந்த 10 லட்சம் பேருக்கு 10 % சம் பள உயர்வு என்பதும் ஒரு வித ஏமாற்றே. ஆயினும் இவர் களது கூடிய கூலிகளை நாட்டிலுள்ள பிற ஏழை, கூலி விவசா யிகள், பாட்டாளிகளது உபரி உழைப்பிலிருந்து அபகரித்தே அரசு வழங்கும். அரசு 11 லட்சம் குட்டி பூர்ஷ்வாக்களை ஆளும் வர்க்கத்துடன் 10 % சம்பள லஞ்சம் கொடுத்து, அணைக்கி ஆரம்பித்துள்ளது. குட்டி பூர்ஷ்வாக்களது ஆதர வின்றி சர்வாதிகார ஆட்சி நிலைக்க முடியாது என்பது வர லாறு காட்டும் பாடமாகும்.
10 % சம்பள உயர்வு பெற்ற குட்டி பூர்ஷ்வாக்கள் இப் பணத்தைக் கொண்டு நுகர் பண்டங்களை வாங்குவர். இதஞல் வெளிநாட்டு முதலாளிகளும் நம் நாட்டு தரகு முதலாளிகளும் மேலும் பணம் குவிக்க வாய்ப்பளிக்கும். வெளிநாட்டுக் கடன் தொகையைப் பார்த்தால் கொதிப்பே ஏற்படும், சுதந்திரக்
கட்சி இலங்கையை பாதித் தொகைக்கு ஈடு வைத்தது. யு.
என். பி. என்றுமே மீள முடியாத அளவிற்கு ஈடுவைத்து வரு கிறது. புரட்சி ஒன்றின் மூலந்தான் நாட்டிற்கு மீட்சி ஏற் படுத்த முடியும்என பாட்டாளிக்கு பாடம் புகட்டும் பட்ஜெட் இதுவாகும்.
17

Page 10
கலையும் சமுதாயமும் -2
w− - செ. க. --
கலையின் தோற்றம்
நடுவிலே வேட்டையாடப்பட்ட புலி; அதைச் சுற்றிவந்து ஆடுகின் றனர். அவர்களது கரங்களிலே அம்பு, வில்லு, ஈட்டி, தடிகள். ஆதி மனிதனது ஆயுதங்கள். புலியைச் சுற்றிவந்து குரல் எழுப்புகின்றனர். ஆட்டத்திலே, உடல் அசைவிலே ஒரு ஒழுங்கு: அமைதி குரல் ஒசை யிலேயேயும் ஒருவித ஒழுங்கு அமைதி. குகைகளின் முன்னே நடை பெறும் அந்த ஆட்டத்திலும் ஒசையிலும் பெண்கள், குழந்தைகள் கூட பங்கு பற்றுகின்றனர், குரலிலே ஆ ஊ.ஒ. ஒலிகளே. சொற் கள் ஏதும் பிறக்கவில்லை.
குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்டவர் களால் நடாத்தப்பட்ட கலை நிகழ்ச்சியல்ல இது. வெற்றிக்களிப்பு உணர்வினுல் உந்தப்பட்ட ஆதி மனிதனின் ஆட்டம்; இசை, இயற் சையானது; இயல்பானது. கலை உணர்வு மனிதனேடு பிறந்தது. புலியை வேட்டையாடி விட்டனர். அன்றைய உணவுப் பிரச்சனை தீர்ந்துவிட்டது. கைகளில் அவர்கள் வேட்டையாட எடுத்துச்சென்ற கருவிகள். அவைகள் வெற்றியைத் தந்தன.
மனிதர்களிடை தேவைகள் அதிகரித்து வேலைப் பிரிவினை ஏற் படாத காலம்; சுதந்திரமான ஆதி மக்கள்; சுதந்திரமாக ஆடிப்பாடி னர். அவர்களது உடலசைவிலே ஒருவித ஒழுங்குமுறை, கால் களைத் தூக்கி வைப்பதில் ஒருவித அமைதியைக் கண்டோம் . காலப்போக்கில் இதுவே கூத்து, நடனம், ஒப்பரா போன்ற உடலசைவுக்கலை வடிவங் களாக வளர்ந்தன. குரலிலே ஏற்பட்ட ஒலிநயம், ஓசை அமைதி, வார்த்தைகள் தோன்றிய பின் கவிதையாக, பல்வேறு இசை வடிவங் களாக வளர்ந்து வந்துள்ளன.
அன்றைய புலி வேட்டையின் வெற்றிக்களிப்பும் , ஆட்டமும், அக் கணக் குழுவினரது ஐக்கியத்தையும் ஒற்றுமையையும் வலுப்படுத்து கிறது; தாம் தயாரித்த ஆயுதங்களின் (உற்பத்திக் கருவிகளின்) வளர்ச்சியையும் வன்மையையும் பறைசாற்றுகிறது. மறுநாள் யாவ ரும் மேலும் ஆர்வத்தோடு வேட்டைக்குச் செல்வதற்கு அக்கலை நிகழ்ச்சி மேலும் உந்து சக்தியாக விளங்குகிறது.
18

ஆகவே அவர்களது புலி வேட்டை ஆகிய உழைப்பின் வெற்றியி லிருந்து இயல்பாகப் பிறந்த கலை நிகழ்ச்சி ஒரு உந்து சக்தியாகி மீண், டும் உழைப்பில் ஒற்றுமையையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்தி விடுகி றது; உற்பத்திக் கருவிகளின் வெற்றியையும் அவற்றை மேலும் வளர்த்தெடுப்பதில் ஆர்வத்தையும் ஏற்படுத்துகிறது.
உழைப்பும் கலேயும் இணைந்தவை
மனிதன் சுதந்திரமாக வாழ்ந்தபோது உழைப்பும் கலையும் வாழ் வோடு ஒன்றிணைந்திருப்பதை காணலாம். உற்பத்திக் கருவிகள் வளர்ச்சியடையாத போதும் உற்பத்தி உறவு சுமுகமாக அன்று இருந் தது. உழைப்போடு கலை உணர்வு இணைந்து உந்து சக்தியாக விளங்கு வதை ஒடம் வலிக்கும்போது மீனவர் கூட்டமாக இசை எழுப்புவதி லிருந்தும் வயிலில் உழைக்கும்போது விவசாயிகள் பாடுவதிலிருந்தும் காணலாம்.
உணவு, தற்காப்பு இரண்டுமே ஆதி மனிதனது அடிப்படைத் தேவைகளாக இருந்தன. இவற்றில் வெற்றி பெறுவதற்கு மனிதன் கூட்டாக, ஒரே சமூகமாக வாழவேண்டி நேரிட்டது. மனிதனின் தனிச்சிறப்பு சமூக வாழ்வும் சமூக உழைப்புமாகும். இவற்றின் மூலமே இயற்கையின் நுட்பங்களை சிறிது சிறிதாக அறிந்து, அதை வெற்றிகொண்டு, தன் தேவைக்கேற்ப இயற்கையை அடிமைப்படுத்த மனிதன் ஆரம்பித்தான். இப்பெரிய, நீண்ட போராட்டத்திலும் பயணத்திலும் அவனுக்குத் துணையாக நின்றவ்ை அவனது (1) பயிற்சி அல்லது நடைமுறை (2) அனுபவம் அல்லது அனுபவத்தின் தொகுப்பு.
உணவிற்கும் தற்காப்பிற்குமாக இயற்கையில் கண்ட கல்லை எடுத்து வீசிய மிருகம் காலப்போக்கில் தன் தேவைகளுக்காக (உணவு, தற்காப்பு) கல்லை கல்மேல் தேய்த்து கூராக்கத் தொடங் கியபோதே மனிதனுக மாறத்தொடங்கினன் உற்பத்திக் கருவிகளை உற்பத்தி செய்யும் மிருகமே மனிதன் ஆவான். தன் புறத் தேவை களுக்காக உற்பத்திக் கருவிகளை கூர்மையாக்கிய மனிதன் அக உணர்வு வெளிப்பாடுகளை வெளிப்படுத்த பல்வேறு இசைக்கருவிகளையும் ஆக் கத் தவறவில்லை.
புறம், அகம்
LDesofaa5657 gi அனுபவ உணர்வு இரு சக்திகளாக வெளிப்படுகிறது. (1) உற்பத்திக் கருவிகள் (2) கலை வடிவங்கள். உற்பத்திக் கருவி கள் அவனது புறத்தேவைகளான உணவு, பாதுகாப்பு, உடை, வீடு
19

Page 11
நுகர்பண்டங்கள், ஆகியவற்றை ஆக்கி, மேலும் படைக்க உதவு கின்றன. கலை வடிவங்கள் அவனது அக உணர்வுத் தேவைகளை பூர்த்தி செய்து அவனது ஆக்க சக்திக்கு மேலும் உந்து சக்தியளிக்க உதவுகின்றன. V
மனிதர் ஒவ்வொருவரிடமும் இயல்பாகவே படைப்பாற்றல் உள்ளது. அதன்மூலமே உற்பத்திக் கருவிகளைக் கூர்மையாக்கி தன் புறநிலைத் தேவ்ைகளுக்காக உற்பத்தியைப் பெருக்குகிருன், அக நிலையை, அக உணர்வுகளை, அனுபவ உணர்வுகளை கலே வடிவமாக வெளிக்கொணர் கிருன். இது அவனது உற்பத்தித் திறனேடு ஒட்டி யது; அவற்றிற்கு உந்துசக்தி ஆவது. ஆதி மனிதனது வேட்டை ஆடிய வெற்றிக்களிப்பின் ஆட்டத்தில் இதனையே கண்டோம். வேலைப்பிரி வின் ஏற்பட்ட பின்னர் உற்பத்திக் கருவிகளை செய்வதும், கலை வடிவங்களைப் படைப்பதும் ஒருசிலரின் ஆதிக்கத்தில் எவ்வாறு வந்
தது என்பதனை பின்னர் பார்ப்போம்.
உற்பத்திக் கருவிகள் போலவே கலை வடிவங்களும் நுண்கலைக் கருவிகளும் வானத்திலிருந்து வந்தவையல்ல. மனிதஞலேயே படைக் ' கப்பட்டவை. தோலிசை (மத்தளம்), நரம்பிசைகள் (மிருகதசைநார்) மனிதனது உணவு வேட்டையிலிருந்து பிறந்த கருவிகளே. வ்ண்டு துளைத்த மூங்கில் குழாயின் ஒலியைக் கேட்டே புல்லாங்குழலைக் கண்டான் மனிதன், கண்ணன் என்ற இடையன் புல்லாங்குழலுடன் மாடுகள் மேய்த்தான் என்பதில் வியப்பு எதுவும் இல்லை. பானை வனையத் தொடங்கியதும் கடம் என்ற கருவி தோன்றியதிலும் வியப்பில்லை.
தன் சுற்ருடலை ஒட்டிய மிருகம், பறவை, பொருட்களுக்கு குறி யீட்டு வடிவந் தந்த மனிதன் காலப்போக்கில் அதை ஓவியக்கலை யாக வளர்த்தான். ஒவியம் இரு பரிமாணங்களைக் கொண்ட கலை வ்டிவமே. பின் அவற்றிற்கு முழு உருவம் தரமுயன்றன். பானை வணையத் தொடங்கியதோடு கழிமண்ணில் உருவங்களை செய்தான். பின்னர் மரம், கல், பளிங்குக்கல், பித்தளை ஆகியவற்ருல் முப்பரி மாண உருவங்களை செதுக்கினன். சிற்பக்கலை வளர்ச்சியடைந்தது.
உற்பத்திக் கருவிகளின் வ்ளர்ச்சியோடுதான் கலைகளும் வளர்ச்சி யடைந்தன. கூர்மையான கருவிகள் இன்றி சிற்பக்கலை வளர்ச்சி
உற்பத்தி கருவிகள் வளர்ச்சிபெற மனிதனல் உபரியாக (அடிப் படைத் தேவைக்கு மேலதிகமாக) வற்பத்தி செய்ய முடிந்தது அன்ருட உணவுப் போராட்டம் நீங்க ஓய்வு கிடைத்தது. அவ்
20

வேளை உற்பத்திக் கருவிகளோடு கலைகளையும் வளர்க்கத்தக்க வாய்ப்பு ஏற்பட்டது. அதோடு ம்ணித சமுதாய வளர்ச்சியும் வேகம்பெற்றது. ஆயினும் உபரி உழைப்பு பறிக்கப்படும் நிலையில் உழைப்பிலும் கலை யிலும் எவ்வாறு பாதிப்பு(ஏற்பட்டன என்பவை பற்றி பின்னர் ஆராய்வோம்.
வெறும் கலை வடிவங்களில் அழகுணர்வு மட்டுமல்ல, மனிதன் தன் தேவைக்காக பண்டங்களைப் படைக்கும்போதும் தன் படைப் பாற்றலையும் கலையுணர்வையும் வெளிப்படுத்துகிருன். பானை வனை வதிலிருந்து பறக்கும் விமானத்தைப் படைக்கும்போதும் அவற்றில் அழகைப் படைத்துக் காட்டுகிருன், சேலேகள், குவளைகள், கூடை கள், விளக்குகள், மேசைகள், நாற்காலிகள், எழுதும் பேணுக்கள் ஆகிய பண்டங்களைப் படைக்கும்போதெல்லாம் புதுமையாகவும், அழகாகவும் மனிதன் படைப்பதை காண்கிருேம். நம் சுற்ரு டலே வீடுகளை, அன்ருடம் பார்க்கும், தொடும் பண்டங்களையெல்லாம் அழகுறப் படைக்கிருன். கடைத்தெருவிற்குச் சென்று பண்டங்களை துணிகளை வாங்கும்போது நீங்கள் எவ்வாறெல்லாம் கவரப்படுகிறீர் கள். தேர்ந்தெடுக்க சிரமப்படுகிறீர்கள், காரணம் பண்டங்களை ஆக்குவதில் செலுத்தப்பட்ட கலை உணர்வுக்கும் உங்களது அழ குணர்வுக்கும் ஏற்படும் முரண்பாடாகும்.
ஆகவே கலேகளை நாம் இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்தலாம்.
நுண் கலைகள்: ஒவியம், சிற்பம், கூத்து, நடனம், பல்வேறு இசை வடிவங்கள் (தோல், நரம்பு, குழல், கருவி, குரல் முதலியன) முதலானவை.
பயன்படு கலைகள்: சேலைகள், கார், கண்ணுடி வகைகள், வீடு, தளபாடங்கள், நுகர் பண்டங்கள் ஆகியவற்றை படைக்கும்போது காட்டப்படும் தொழில் நுட்பத்தோடு இணைந்த அழகுணர்வு.
நுண்கலைகள் மனித உணர்வுகளோடு ஒட்டியவை. பயன்படு கலைகள் அன்ருடம் நாம் காணும், பயன்படுத்தும் பண்டங்களோடு, பண்ட உற்பத்தியோடு சம்பந்தப்பட்டவை. ۔
கலை என்பது வேறு; கலை வடிவங்கள் என்பது வேறு உள்ள டக்கமும் உருவமும் கொண்டதே கலை. கூத்து, நடனம், இசைக்கருவி இசைகளுக்கும் (வீணை, மேளம் முதலியன) உள்ளடக்கம் உள்ளது. நுண்கலைகளைச் சார்ந்த இவையும் உள்ளடக்கத்தின் மூலமே "கலை" என்ற நிலையைப் பெறுகின்றன. ()
21

Page 12
சினிமா உலகம்
ஒரு பெண் நட்சத்திரமாகிருள்
- சென்னை செல்வன் -
'உன்னை ஒரு சினிமா நடிகையாக்கிவிடுகிறேன்.”
*இல்லை. என்னை ஒரு சினிமா நட்சத்திரமாக்கவேண்டும்."
"நள்ளிரவின் மறு பக்கத்தில்" என்றேர் அமெரிக்க சினிமாப் Ut-th. நோவல் என்ற கதாநாயகி அம்மணமான உருவில் கோதியா என்ற சினிமா டைரக்டரோடு பாலுறவு கொள்ளும் நிலையில், டைரக்டருக்கு மேலே படுத்திருக்கிருள். விசித்திரமான இன்ப நிலையில் மேற்கூறிய உரையாடல் நடைபெறுகிறது.
"அப்படியே செய்கிறேன்.""
டைரக்டர் அவளுக்கு தன் அடுத்த திரைப்படத்திலேயே கதா நாயகி பாத்திரத்தை கொடுத்துவிடுகிருர், அவள் ஒரு பிரபல பிரெஞ்சு சினிமா நட்சத்திரமாகிவிடுகிருள். தன் பாலுறவுத் திறமையைக் கொண்டு தான் எண்ணிய அனைத்தையும் சாதிக்கிருள். ஒரு கோடீஸ்வரனேடு தொடர்பு கொண்டு ஆடம்பர வாழ்வு வாழ் கிருள். தன்னை வஞ்சித்த பைலட் காதலனை வேலையிழக்கச் செய்து, தன் கோடீஸ்வரஞன புதிய காதலனின் விமானத்தை ஒட்டும் கூலி அடிமையாக்கி விமானத்தில் பறக்கிருள்.
இது வெறும் கற்பனைக் கதைபோலப் பலருக்குத் தோன்றலாம். ஆஞல் அமெரிக்காவிலோ, பிரிட்டனிலோ, பிரான்சிலோ. யப் பானிலோ உள்ள சினிமா உலகை நன்கு அறிந்தவர் இப் படத்தில் உள்ள உண்மையை மறுக்கமாட்டார். s .م
இந்தியத் திரை உலகம் இதற்கு விலக்காகமாட்டாது. பூர்ஷ்வா வர்க்கம் எங்கிருந்தாலும் அதன் கலை, கலாசாரம் ஒரு வகையாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை. ஆண் தலையெடுத்த சமுதாய அமைப்பு, விற்பனைக்கான லாபமே நோக்கான கலைப்படைப்பு, கலைஞர்கள் தாம் தனிப்பிறவிகள் என்று எண்ணும் மமதைப் போக்கு ஆகியன முதலாளித்துவ நாடுகளிலுள்ள தனிச் சிறப்பு களாகும். இந்திய திரைப்பட உலகின் வழமைகளுக்கு தமிழ்நாடு பின் தங்கியதல்ல.
சினிமா உலகில் உள்ள தயாரிப்பாளர் தொடக்கம் "லையிட் போய்’ வரையிலுள்ள யாவரும் அறிந்த உண்மைகள் சில உள்ளன. சினிமா உலகில் நடிகையாக, வெறும் எக்ஸ்ராவாக வாயினும் ஒரு பெண் நுழையவேண்டுமாயின் முதலில் ஒரளவு அழகும் இளமையும் இருக்கவேண்டும். அடுத்ததாக கற்பு, ஒழுக்கம் என்ற கற்பனைகளை துறந்துவிட வேண்டும்.
22
 

'பத்மா என்று பதின் நாலு வயசில் ஒரு அழகான குட்டி இருக்கு சார். அதுக்கு சினிமாவில் நடிக்கவேண்டுமென்று ஒரே பைத்தியம் சார். உங்க அடுத்த படத்திலை ஒரு சான்ஸ் சார்'
சினிமா உலகுடன் தொடர்பு கொண்ட ஒரு புரோக்கர் தயா ரிப்பாளரையோ, நிர்வாகியையோ, டைரக்டரையோ, ஒளிப்பதி வாளரையோ இவ்வாறுதான் அணுகுவான்.
*சரி ஒரு தடவை. .ஒட்டலுக்குக் கூட்டிக்கொண்டு வா, unib.” s
பதில் இவ்வாறுதான் இருக்கும்.
அந்த அப்பாவிப் பெண் முதலில் ஆர்வத்தோடு ஒட்டல் அறைக்குச் சென்றதும் அதிர்ச்சியடைவாள். பின்னர் நேர்முகப் பரீட், சையின் போது ஒளிந்துவிட்ட புரோக்கர் மேல் சீறுவாள்.
'......... சுமி, என்ன.. ...ஹேமா கூட இப்படித்தானம்மா நட் சத்திரமானுங்க. வேறு வழியில்லை. இதுதான் வழியம்மா?" தமிழ் சினிமாக்சளில் வரும் பெனகள்போல அவள் தற்கொலை செய்து கொள்ளவிலலை.
பத்மா ஒரு தடவை, இரண்டு தடவை மீண்டும் ஏமாற்றப் படுகிருள்; ஆத்திரப்படுகிருள். நோவல் போலவே அதன் பின் யாவுககும் துணிந்து விடுகிருள். ஏழு, எட்டு, ஒன்பது . ஏமாற். றங்கள் ஏற்படலாம். பின் ஒரு படத்தில் எக்ஸ்ராவாகிவிடுகிருள். அவளுக்கு ஒருவித மகிமை ஏற்படுகிறது. புரோக்கரும் ஏற்படுத்தி விடுகிமு ன. தொடர்ந்து அங்சொன்றும் இங்கொன்று மாக "கால் சீட் கிடைக்கிறது. தான் பிஸியாக இருப்பதாக அவளும் காட் டிக் கொள்கிருள் ஸ்டூடியோக்களிலும் அவுட்டோர்களிலும் சினிமாவில் சில சணங்கள் தோன்றும் காட்சிக்காக நாட்களாக, வாரங்களாக தூங்கி நிற்கிருள். நாட் சம்பளம், போக்குவரத்துச் செலவ, காபி, பிரியாணி கிடைக்கிறது; அல்லது 15 நாள் கால் சீட் போட்டு ஐநூறு, ஆயிரம் மட்டும் கிடைக்கிறது. ரேட் பற்றி : அவளுக்குக் கவலையிலலை அவளுக்கு வேண்டியது ‘கால்சீட்டே". சினி மா நட்சத்திரம் என்ற பெயரே. ஏனெனில் அப் பெயருக்கு விபசார சந்தையில் தனிக் கிராக்கி ஒட்டலில் ஒரு இரவு ‘கால்சீட்" டுக்கு சில நூறு தொடக்கம் சில ஆயிரம் வரை கொடுப்பதற்கு கறுப் புப் பணம் குவிக்கும் வியாபாரிகள் ஏராளமாக உள்ளனர்.
s இக் காலத்தள்ளேயே ரூபா 400-800 வாடகையில் ஒரு பங். களா, அம்பஸ்டர் கார், டிரைவர், ஆயா யாவும் வந்துவிட்டது. புரோக்கரின் திறபையே யாவுக்கும் காரணம்.
பத்மா (சினிமாவில் வேறு பெயர்) மூன்ரு வத கதாநாயகியாக நடித்த ஒரு சினிமா ஏதோ ஆபாசக் காட்சியின் காரணமாக அல்லது த*ழ் நாட்டின் "தாய்குலத்திற்கு’ பிடித்தமான பாத்திர மாக இருந்த தில்ை அந்த மூன்ருந்தரமான படம் நூறு நாள் ஒடி விட்டது! விளம்பர சாதனங்கள் பறக்கின்றன. தெருவெல்லாம் போஸ்டர்கள். நடிகை வீட்டிற்கு சினிமாப் பத்திரிகை நிருபர்கள்: ஒடுகின்றனர். புரோக் கரும் சுறுசுறுப்பாக வேலை புரிகிறர்.
23

Page 13
பத்மா பேசுவது, சாப்பிடுவது, குடிப்பது, உடுப்பது, வின் பாடுவது எல்லாம் செய்திகளாகின்றன. பல்வேறு பால் கவர்ச்சிப் போஸ்களில் போட்டோ எடுக்க போஸ் தருகிருள். சினிமா இதழ் களிலெல்லாம் அவளின் வர்ணப் படங்கள்.
அவள் சில வாரத்திலேயே நட்சத்திரமாகிவிட்டாள். தயாரிப் பாளர்கள், டைரக்டர்களெல்லாம் "கால்சிட்' கேட்கின்றனர். மூன்று மாதத்திற்கு கிடையாது, ஆறு மாதத்திற்கு கிடையாது என கிராக்கி ஏற்படுகிறது. ரேட் ஏறுகிறது. சில ஆயிரங்கள், பல ஆயிரங்களாகி கால் அரை லட்சமாக ஏறுகிறது. . . " எட்டுமணிக்கு ‘கால்சீட்". கார் ஏழு மணிக்கே வந்து காத்து நிற் கிறது. பத்மா எட்டு மணிக்கே எழுந்து சாவதானம்ாக காலைக் கடன்களை முடித்து ஒன்பது மணிக்கு காரில் ஏறுகிருள். ஸ்ரூ டியோவிற்கு செல்லும் காரை ஸ்பென்சருக்கு திருப்புகிருள். ஷாப் பிங் முடித்து பத்தரை மணிக்கு ஸ்ரூடியோ சென்று மேக்கப் றுமுள் நுழைகிருள். தயாரிப்பாளர், டைரக்டர், காமராமென், யூனிட் சார்ந்த யாவரும் "செட்டில்" அவள் வருகைக்காக காத்து நிற்கின்றனர். .- பத்மாவை எதிர்த்துக் கேட்க எவருமில்லை. இரண்டரை மணி நேரம் லேட், “தயாரிப்பாளருக்கு ரூபா 2500/- நஷ்டம்ாகிவிட்டது" என்பதை சொல்லிக் கேட்க எவருக்கும் துணிச்சலில்லை.
முன்னர் ஒரு காலத்தில் வ்ேண்டிய வேளையெல்லாம் அவளை ஒட்டலுக்கு அழைத்த டைரெக்டர், காம்ராமென், நிர்வாகி ஆகிய அனைவரும் தற்போது அவளுடன் மரியாதையாக பழகுகின்ற னர். தயாரிப்பாளரிடம் கூறி அவர்களை அடுத்த படத்தில் அகற்றி விடும் ஆற்றல் அவளிடமுண்டு. ஒட்டல் கால்சீட்டிற்கு தற்போது அவளை எவரும் நெருங்கமுடியாது. பத்மா தான் விரும்பியவர்களை தானே தேர்ந்து கொள்கிருள், பெரிய கோடீஸ்வரர்கள் அவளது தொடர்பிற்காக தற்போது காத்திருக்கின்றனர். அவள் விரும்பின் ஓரிரவுக்கு பல ஆயிரங்கள் கேட்கத்தக்க வாய்ப்பு உள்ளது.
ஓரிரு ஆண்டுகள் கழிகின்றன. மூன்று, நாலு சினிமாக்கள் தொடர்ந்து தோல்வியடைகின்றன. பெரிய தயாரிப்பாளர் நட்ட மடைகின்றனர். "கால்சீட்" ஒழுங்கீனம் பற்றியும் கதை பரவுகிறது. பத்மா என்ற நட்சத்திரம் வானத்திலிருந்து விழத் தொடங்கு கிறது. கால்சீட் கேட்பாரில்லை. ஏற்றிய தொகையைக் குறைக்க இறுமாப்பு விடவில்லை இறங்கினும் அழைக்க ஆட்களில்லை. கால் சீட் தர தயாரிப்பாளர் தயாராக இல்லை. ,உழைத்த பணம் விரைவாக கரைகிறது. செலவுகளை சுருக்க محی பழகிய வாழ்க்கை முறையும் பழம் பெருமையும் விடவில்லை. புரோக் கர் "பொறுங்கம்மா, நல்ல காலம் மீண்டும் வரும்" என்றும் சமா தானம் கூறுகிருன். இளம்ை குன்றி, மேக்கப் பூசிய முகமெல்லாம் மரத்துவிட்டது. தவிர்க்கமுடியாது ஒழுக்கமான பெண்ணுக வாழ் கிருள். வாடகை குறைந்த மாடி வீடுகள் மாறி, நகரின் மூலைப்புற மாக வாடகை குறைந்த சாதாரண வீட்டில் வாழ்கிருள். பழைய அல்பங்களை இடையிடை புரட்டி பெருமூச்சு விட்டுக்கொண்டே நாட்களை கடத்துகிருள், y
2.

'நந்தா புரொடியூசர் தன் புதிய படத்தில் அம்மா காரக் டரில் நடிகக கேட்கிருரம்மா." : “எனக்கு இன்னும் இருபது வயசுகூட ஆகவில்லை என்று சொல்லு' வீழ்ந்த நட்சத்தின் பதில், இது ஒரு நடி ைசி யின் சினிமா வாழ்ச்சையின் கதை. இத்தகைய உச்ச நிலையும் வீழ்ச்சியும் பெரும்பாலான நடிகைகளுக்கு ஏறபடா: திருக்கலாம். ஆயினும் முதலாளித்துவ சமுதt; ய அடைப்பில் சினிமா உலகம் எல்லா நாடு சளிலும் இவவாரு க.வே இயங்குகிறது. தமிழ்நாடு இதற்கு விதிவிலக் கல்ல.
இச்தகைய யதார்த்த வாழ்க்கை நிலையில், சினிமாவில் நடிக், கும் பாத்திரத்திற்கும் அவர்களது சொந்த வாழ்க்கைக்கும் இடை யில் உள்ள முரண்பாடுகளைக் காணலாம்.
சினிமா படைக்கும் கலைஞரின் வாழ்க்கை முறையே விசித்திர மாக இருக்கும். அது ஒரு தனி உலக வாழ்க்கை முறை. அதற்: கும் சமுதாயத்திற்கும் உள்ள தொடர்பு மிகக் குறைவு. சினிமா ? வில் வெறும் கற்பனை உலகை படைத்துக் காட்டப்படுவதற்கும்: இது ஒரு காரணமாகும் .
சினிமா உலகில் நடிகைகள் நுழையும் வழி கோணலாக இருப்பு தால் திறமையுள்ள பெண்கள் அங்கு நுழைய தயங்குகின்றனர்: இதனுல் சிறந்த நடிகைகளை சினிமாவில் காண்பது அபூர்வமாக உள்ளது. திறமை ஒன்றைக் கொண்டே பெரும்பாலும் ஆண் நடி. கர்கள் சினிமா உலகில் நுழைகின்றனா. நடிகைகளைப் பொறுத் தளவில அவ்வாறு இல்லாதது பெரிய குறையாகும். இதனுல் நாட்டி லுள்ள திறமையான பெண் கலைஞரது நடிப்புகளை நாம் காண, முடியாதிருக்கிறது.
தமிழ் சினிமா உலகைப் பார்த்தால் பெரும்பாலும் தமிழ் நடிகைகளையே பார்க்க முடியாது. ஆந்திரா, மலையாள நட்சத்திரங் கள் இங்கும் முற்றுகையிட்டிருப்பதைக் காணலாம். நடிகர்களைப் பொறுத்தளவில் அவ்வாறு இல்லை. தெலுங்கு மலையாள, கன்னட நடிகர் மிக அரிதே. -
சிறந்த நடிகைகளை தேடுவதில், தேர்ந்தெடுப்பதில் சினிமா உலக தயாரிப்பாளர் சள் ஆர்வம் காட்டுவதில்லை. சினிமா என்ற பண்டத்தை சந்தையில் விற்று லாபம் சேர்ப்பதற்காக நட்சத்திரங் களைப் படைப்பதிலேயே கருததாக உள்ளனர்.
நட்சத்திரம் என்பது விளம்பரம், வியாபார தந்திரங்களால் சிருட்டிக்கப்படும் ஒரு பொய்மைத் தோற்றமே. நடிப்புத் திறமை இல்லாமலே ஒரு நட்சத்திரத்தை சிருட்டித்து விட முடியும். இதி ஞலேயே கலைஞர் (Artistc) என்பது வேறு. நட்சத்திரம் (Star) என்பது வேருகிறது. (உ+ம்: முறையே மனேரமா, லதா-சிவாஜி கணேசன், எம். ஜி. ஆர்.)
முதலாளித்துவத்தின் இத்துவரும் கலாசாரத்தை அவர்களுடைக கலை உலகத்திலும் கலைப் படைப்புகளிலும் எளிதாகக் காணமுடியும் அதை உடைத்தெறிவதன் மூலமே உயர்ந்த வாழ்விற்கு வழி காட் டக் கூடிய சிறந்த கலை உலகையும் கலைஞர்களையும் கலைப் படைப்பு களையும் சிருட்டிக்க முடியும். W །
25 N

Page 14
சிறு -- இன்பம் - சிற்றின்பம்
வந்து சென்ற இரு பஸ்களிலும் நுழைய முடியவில்லை. மிதி பலகையிலேயே தொங்கிக்கொண்டு பிரயாணம் செய்கின்றனர். எப் படி நுழைவது? காலை எட்டு மணியாகிவிட்டது. கூட்டத்துள் நெரி படுவதை தவிர்ப்பதற்காக வழமையாக ஏழரை மணிக்கு முன்பே பஸ் ஏறிவிடுவேன். நகர வாழ்விற்கு நான் புதிது, விடுதிப் பெண் கள் அறிவுரை சரியே. /
இன்று பிந்திவிட்டேன். இரவு நெடுநேரமாக தூக்கம் வர வில்லை. கட்டிலில் புரண்டு புரண்டு படுத்துப் பார்த்தேன். எத் தனையோ சிந்தனைக் குமைச்சல்கள். தனிமையின் கொடுமைகள். எழுந்தபோது ஏழு மணியாகிவிட்டது. காலைக்கடன்களை முடித்து விட்டு எட்டி நடந்து பஸ் நிலையத்திற்கு வந்தபோது நெருக்கடி.
கைக்கடிகாரத்தை மீண்டும் பார்க்கிறேன். 8-05 ஆகிவிட்டது. இனிமேலும் தாமதிக்க முடியாது. அடுத்த பஸ்ஸில் எப்படியும் நுழைந்து விட வேண்டும். அல்லது தலைமை ஆசிரியையிடம் ஏச்சுக் கேட்கவேண்டும். அவர் கண்டிப்பானவராம், நான் இன்னும் நன்கு பழகவில்லை.
அடுத்த பஸ்ஸிலும் அதே கூட்டந்தான். பெல்பொட்டம் அணிந்த ஒரு இளம் பெண் வேகமாக இடித்துக்கொண்டே ஏறு கிருள். அவளைத் தொடர்கிறேன். ஆண்கள், பெண்கள் என்ற பேதமே அங்கில்லை. என் பின்னே ஏறும் இளைஞர்கள் என்னைத் தள்ளிக் கொண்டே ஏறுகின்றனர். மார்பு எதிரே அகப்பட்டவரின் முதுகு, மார்புகளிலே உராய்ந்துசெல்கிறது. ஒருவித நோவு. அத்தோடு ஒரு வகை கிளுகிளுப்பு. தலைநிமிர்த்த தயங்குகிறேன். ஏறிய பஸ்ஸின் வாயில் புறத்தே அகப்பட்டுக்கொள்கிறேன். முன்னேயும் போக
h
முடியாது. பின்னேயும் போகமுடியாது. நெரிசலிடையே நின்றபடி கண்டக்டரிடம் சில்லரையை கொடுக்க முயல்கிறேன்.
| "எந்த நாளும் இதே கூட்டந்தான். இந்த வேளைகளிலாவது சில பஸ்களை எக்ஸ்ராவாக ஒட்டக்கூடாதா?”
'நாமெல்லாம் கூலியடிமைகள்தானே. அடிமைகளுக்கு இது போதாதா என்றே கார்களில் போகும் எமது எஜமானர்கள் எண் ணிக்கொள்வர்."
26

ஒருவர் கூறுவதற்கு மற்ருேர் இளைஞன் பதில் கூறுகிருன். அப் பதில் முற்முகப் புரியவில்லை. சிறிது முன் நகருகிறேன். அந்த இ 碑 ஞன் சிறிது ஒதுங்குகிறன். i
மற்ருெருவரது முழங்கை மார்பில் இடிக்கிறது. வேண்டுமென்றே தற்செயலாகவோ என்பதை அறியமுடியவில்லை. அந்த இடியை விரும் பாதவள் போல நடித்தபோதும் ஏதோ ஒருவகை சிறு இன்பம் உடwை புல்லரிக்கச் செய்கிாது. முழங்கை இடியிலிருந்து ஒதுங்கமுடியவில்லை! அவனும் என் நெரிசலில் சுகம்காணுகிருஞ? எல்லா ஆண்களும் இப் படித்தாளு?
என் முன்னே ஏறிய பெல்பொட்டம் அணிந்த பெண் சிறிதும் தயக்சமின்றி ஆண்களை ஒதுக்கிவிட்டு உஷாராக நிற்கிருள்.
எனக்கு ஏற்படும் உணர்வு சள் அவளுக்கு எற்பட மாட்டாதா இந்த நெரிசலிடை அவளும் இன்பத்தை சுவைக்கிருளா? அவ்வாருக தெரியவில்லையே. நான் மட்டும் நான் மட்டும் இது பாவமா தவிர்க்க (lp lq lur 5.5 rr! எலும்பைக் கடித்து இரத்தத்தைச் சுவைக் கும் நாயின் நிலையில உள்ளேனு? இந்த ஆண்களும் இப்படித்தான இவர்கள் இங்கு குடும்பங்களுடன் வாழாதவர்களா?
திருமண வாழ்வு கிட்டாததினுல்தான் இத்தகைய நிலை எனக் மட்டும் ஏற்படுகிறதா? அதற்கு நான பொறுப்பாளி. நான் பிறந்: வாழ்ந்த கிராமத்து சமுதாய அமைப்பா? ஆசிரியை என்ற எ திமிரா? திருமண வாழ்வை நான் வெறுத்தேனு? என் தராதரத் திற்கேற்ற இளைஞ%னத் தான் தேடினேன். நான் பயிற்றப்பட்ட ஆசிரியை. வெறும் விவசாயியைக் கட்டமுடியுமா? செம்பாட்டு நிர் வேட்டியும் தோளில் மண்வெட்டியும் துண்டுமாக ஒழுங்கையால் தோட்டத்தை நோக்கிப் போகும் வாலிபர்களை நாள் தோறும் பார்க்கிறேன். அவர்களில் ஒருவனை நான் எளிதாக தேர்ந்திருக் முடியும். சக ஆசிரியர்களுக்கு அப்படி ஒருவனை என் கணவர் என் அறிமுகப்படுத்த முடியுமா? அதிலும் பார்க்க திருமணம் செய்ய மலே இருந்துவிடலாம், ار
ஆசிரியர் அல்லது கொழும்பில் உத்தியோகம் பார்ப்பவரா? தேடினேன்; கிராமத்திலேயே பல வாலிபர்கள் இருந்தனர். என் விருப்பத்தை மறைமுகமாக அம்மாவிடம் தெரிவிப்பேன், அப்பர் நண்பர் மூலமோ, புரோக்கர் மூலமோ கலியாணப்பேச்சை ஆர பிப்பார். நான் அவரைத் திருமணம் செய்துவிட்டதாகவே கற்பை செய்து எதிர்கால இன்டக் கோட்டையைக் கட்டுவேன். சாதக
பொருத்தம், சீதனம், சாதிக்குள் சாதி, வயசு . இப்படி ஏதாவது:ஒ
27

Page 15
பிரச்சனை வந்து கலியாணப் பேச்சே அடிபட்டுப்போகும். சில வாரங் கள், மாதங்கள் மனமுடைந்து சோர்வடைந்திருப்பேன். மற்ருேர் வரன் வரும். அதுவும் முறிந்துவிடும். பின் மற்றென்று.
i. கொழும் பிலிருந்து லீவில் வந்து நிற்பவர்களை தெருவில் காண நேரிடும். அவர்கள் தயக்கமின்றி சிரிப்பர். என்னை விரும்புபவனுக கற்பனை செய்து விடுவேன். இரவில் கண்களை மூடிக்கொண்டு அவர் 'களுடன் பாலுறவு கொள்வதாகவே கற்பனை செய்து சுகம் காண் பேன்; கனவுகள் கூட காண்பேன், மீண்டும் மனக்கோட்டை பகற் கனவாகிவிடும். இப்படி எத்தனை காலம் கழித்துவிட்டேன்.
சிதம்பரம் நல்ல ஆணழகன், தோட்டம் செல்லும்போது ஒழுங் கையில் கண்டு சிரிப்பான். நான் வெறுப்பைக் காட்டி ஒதுங்கிவிடு வேன். கற்பனையில் மட்டும் அவனே நான் விரும்பினேனு? கனவில் கூட பல தடவை அவனைக் கண்டு ககங்கண்டேன். சென்ற இரவு afh - ...
அப்பா தம்பையாவின் 13 கன் தாமோதரத்தையும் வரன் பார்த்து என்னையும் கேட்டார். கொழும்பிலே நல்ல உத்தியோ கம். கறுத்த உருவமும் தொந்தி வண்டியும். ஆயினும் அதை மறந்து நான் ஒப்புக் கொண்டேன். அவன் உத்தியோகத்திற்கேற்ற சீதனம் கேட்டான். நானும் உழைப்பதைப்பற்றியே அவன் கவலைப்படவில்லையாம். அவன் ம்றுத்தபோது எனக்கு ஆத்திரமாகவே வந்தது, அவனைக் கொன்று விடவேண்டும் என்றுகூட அப்போது எண்ணினேன்.
தோல்வியான கலியாணப் பேச்சிலேயே 10, 12 வருடங்கள் போய்விட்டன. தலைமயிரில் ஆங்காங்கே தோன்றும் வெள்ளை மயிர் களைப் பிடுங்குவதிலேயே இப்போது அதிக நேரம் போய்விடுகிறது.
கலியாணச்சந்தையில் தோல்வி கண்ட அப்பாவும் என்னைப்பற்றிய கவலையுடன் போய்விட்டார் பாவம் அவரால் என் பிரச்சினைகளை தீர்க்கமுடியவில்லை. என் வயசு ஏறி வருவதைப்பற்றி அப்பாவிற் கும் அப் மாவிற்கும் ஒரே சவலை
எனக்குக் கொழும்புச்கு மாறுதல் வந்தது. எத்தனை முயன்றும் தடைசெய்ய முடியவில்லை, என் டைட் போன்று வேலை செய்யும் பெண் கள் தங்கும் விடுதியில் இடம் பெற்றேன். அறைக்குள்ளே தனிமை. பொழுதே போகாது. ரான்சிஸ்டர் ல் கேட்கும் சினிமா பாட்டுதான் "ஆறுதல். அவை கூட என் பாலுணர்வை தாண்டுபவையாகத் தான் இருக்கின்றன. பாடசாலை ச்கு நாலு மைல் பஸ்ஸில் செல்லவேண்டும் . இப்போது இந்த நெரிசலில் கணநேர சுகம் பெறுகிறேனு? கிராமத் தில் கிடைக் காத சுகம்.
அந்த இளைஞனும் மற்றவரும் சூழ்நிலையையே மறந்து பல விஷ புங்களைப் பற்றி விவாதிக்கின்றனர். கூர்ந்து கேட்கிறேன்.
28

Հ* “கூலியடிமையென்பது சமுதாய வளர்ச்சியின் p(t, காலகட்டத் தில் தோன்றிய வர்க்கம். நாமெல்லாம் அதே வர்க்கம் சார்ந்தவர் களே. இவ்வாறு நெரிபட்டு நாள்தோறும் உழைப்பை விற்கச் செல் வது இவ்வர்க்கத்தின் வாழ்க்கை முறை கலாச்சாரம்.’
எதிர்மறையர் க கண்டிக்கும் குரலில் அவனது பேச்சு இருந்தது. 'இது நாகரிகமான சமூகம் இல்லை என்ற கூறுகிறீர்?" மற்றவர் சூடாக கேட்கிருர் . ‘தாம் கூலி அடிமைகள் என்பதை மறந்து இவர்களெல்லாம் தம்மை உயர்ந்தவர்களாக எண்ணிக்கொள்கின்றனர். அதுதான் மிக விசித்திரமானது."
காதுகளைக் கூர்மையாக்கி அவர்களது உரையாடலைக் கேட்டுச் சிந்தனை போடும் வேளையில் பஸ் டிரைவர் பிரேக் போட்டான். ஒருவரோடு ஒருவர் முண்டியடித்துக்கொண்டோம். என் மார்பில் மீண்டும் முழங்கை, ஆ. ஊ.! வெட்கமேற்பட ஓரளவு ஒதுங்கி நிற்கிறேன். அவன் முழங்கையை அகற்ற எனக்குத் துணிவில்லையா: விருப்பமில்லையா?
பெல்பொட்டம் அணிந்த பெண் என் முன்னே நகர்ந்துவிட் டாள். அவளுக்குத்தான் எத்தனை துணிவு!
அவனது முழங்கையை பிடித்து “பிளிஸ்’ என்று கூறி ஒதுக்கி விட்டாள். அவனும் ‘சொறி" என்று மடக்கிக்கொண்டான். எத்தனை நாகரிகமாக செயல் நடைபெற்றது!
இதுவும் கூலியடிமை நாகரிகமா? அந்த இளைஞனது பேச்சில் ஏதோ ஒருவித உண்மை தொனிப்பதை உணர்ந்து பார்க்கிறேன்.
‘கூலியடிமைகள் கூலியடிமைகளுடன் சேர்ந்து கொள்வது தவிர்க்கமுடியாதது. அவர்கள் ஒன்றுசேர்ந்தே தமது அடிமைத் தகளகளை அறுத்து புதிய சுதந்திர சமுதாயத்தை ஏற்படுத்திக் கொள்வர்." ܫ .  ̄
அடுத்த பஸ் தரிப்பில் அந்த இளைஞனை நான் கூர்ந்து பார்த்து முன்னேறுகிறேன். அவன் என் மார் போடு உராய்வதை விரும்பா தவனக மீண்டும் ஒதுங்கி நிற்கிறன். நான் தலைகுனிந்து முன் னேறுகிறேன்.
மீண்டும் இரண்டு தரிப்பு கடக்கிறது. நெரிசலிடையே முன் னேறி நான் இறங்குகிறேன் ஒரு மயக்கத்திலிருந்து விடுபட்ட நிலை. நோக்கி நடக்கிறேன். சிந்தனை அந்த இளைஞனின் ாேர்த்தைகளை அசைபோடுகிறது.
29.

Page 16
"நானும் ஒரு கூலியடிமை" என்று என் அடிமனம் அடிக்கடி கூறிக்கொள்கிறது, w
நானும் ஒரு கூலியடிமையையே தேடிக்கொண்டிருந்தேன். அது உண்மையே. தானே உழைக்கும் விவசாயியைக் கட்ட என்னுலும் முடியவில்லையே! -
என் கஷ்டம், துன்பமெல்லாம் கூலியடிமைச் சமுதாயத்தின் துன்ப்ங்களா? அம்மா, தம்பி, தங்கை யருடன் கிராமத்தில் வாழ்ந்த என்னைப் பிரித்ததும் இச்சமுதாயந்தான். இங்கு வாழ்பவரெல்லாம் கிராமங்களிலிருந்து வந்தவர்களே. இங் குவாழ்க்கைச் செலவு அதிகம். பெரும்பாலானேர் குடும்பங்களைக் கிராமங்களிலேயே வைத்துள்ள னர். இங்கு வீடு கிடைக்குமா? கிடைத்தாலும் வாடகை.? இவர் களும் நெரிசலில் சிறு இன்பசுகம் காண்பவரா?
எனக்குத் திருமண வாழ்வே கிடைக்கவில்லை. பாலுணர்வுகளை கற்பனையிலும் கனவிலும் தான் அனுபவிக்கிறேன். தற்போது பஸ் ஸின் நெரிசலில், கூட்டத்தில் சுகிக்கப் பார்க்கிறேன? பஸ்ஸிலே இடித்த அந்த முழங்கை இப்படியா சுகம்தேட வேண்டும்?
இச்சமுதாயத்தை அழித்து எமது துன்பங்களை போக்க வல்ல புதிய சமுதாயத்தை ஆக்க முடியுமா?
எங்கே அந்த இளைஞன்? அவனே மீண்டும் காணமுடியுமா?
துயில் விழிப்போம்!
- சாருமதி -
பொய்களுக்கு மத்தியில் நெய் எடுக்கத் தயிர்கடையும் புரட்சிக்கு வித்திடுவோம் நேர்த்திகள் போல் இங்கே மெய்யுரைக்க வென்றே உடலிருக்க உயிர் உறிஞ்சும் மேனிக்குத் தீன் இடுவோம். உலகுகளைப் பொடிசெய்வோம்
கை அசைத்து கால் அசைத்து நல்லுலகைப் படைக்கின்ற கஞ்சிக்காய் நாமுழைத்த நாடித் துடிப் பறிவோம் தொய்வுற்ற வாழ்வுகளை பொய் உலகை கொல்வதற்குப்
"தூள்தூளாய் ஆக்கிடுவோம். போராட துயில் விழிப்போம். γ
30

க. பொ, த. சாதாரண பாட நூல்கள்
நவீன இரசாயனம் 1 - பரமானந்தம் W ლნ. 4.50 நவீன பெளதிகம் 4.00 இலகு பெளதிகம் 5.50 தமிழ் பயிற்சி - தமிழவேள் 5.00 தமிழ் இலக்கிய விணவிடை - தமிழவேள் A 5.75 சைவ சமயம் - தமிழவேள் 800 புதுக்கணிதம் 9 - 1 A. 5.00 பிற பாட நூல்கள்
பொது விஞ்ஞானம் 8 - 3.75 சுகாதாரக் கல்வி 8 - 6. 50 புதுக் கணிதம் 8 - 2 4.75 புதுக்கணிதம் 7 - 1 3.00
y 9 7 - 2 3.00 தேசப்பட புவியியல் 3.75 கவிதை நயம் Dr. க. கைலாசபதி 3.00
கொடுமைகள் தாமே அழிவதில்லை - செ. கணேசலிங்கன் 3.00
அக்கினிப் பூக்கள் - ஈழவாணன் 3.00 தோத்திரமாலை - இரத்தினம் 5.00 தாய்லாந்தின் தலைநகரிலே-கமால்தீன் 3 00 TAMIL WRITINGS IN SRI LANKA 5.75
ATLAS GEOGRAPHY OF CEYLON M 5.00
மற்றும் தமிழ், ஆங்கில மொழிகளில் பாட நூல்கிள், இலக்கிய நூல்களுக்கு எழுதுங்கள்.
வி. பி. பி. கவனிக்கப்படும்.
விஜயலட்சுமி புத்தகசாலை
248, காலி வீதி - வெள்ளவத்தை.
கொழும்பு-6.
தொலைபேசி: 88930
3.

Page 17
SS SSSSSLS SLS SLS SLSLSLSLSSS LSLSTTMSLS SLSLSSSMSSSLSSLSLS
KUMA RAN S T -201, DA
வெளிவந்துவிட்டன !
சங்கர ஐயர் எ புதிய உயர்தர விலங்கியல்
தயாளன் தயா கணிதம் 1 ரூ கணிதம் 2 ரூ விஞ்ஞானம் ரூ அரசின் க. பொ, த. (சாதாரண
தாள்சளுக்கு அமைய எழுத
விளக்கமான விடைகளுட
தமிழவேள் எ L35u sugs FLELLI FL
சைவசமயம் க. பொ.
தமிழ்ப் பயிற்சி க. பெ
மற்றும் தமிழ், ஆங்கில சிங்கள நூ G. T. A. J. Gje:fisi வியாபாரிகளுக்கு கழி
விஜயலட்சுமி பு
248 காவி விதி : ;
கொழும்பு
இப்பத்திரிகை கொழும்பு-12, 201 டாம் விதியிங் க3ாால், அதே முகவரியிலுள்ள புதிய குமரன் நச்ச
நிருவாதி ஆசிரியர்: கே. கனோர்விங்கன்

M STREET, COLOMBO-12.
"ழுதிய
- பகுதி 1 ரூ. 12.00 பகுதி I (அச்சில்) பகுதி I (அச்சில்)
"ரித்த
j, 3.00
375
-
5. 5-75
ம்) புதிய மாதிரி விஞத் ப்பட்ட வினுக்களும் -னும் கூடியது.
ழுதிய ம் 8 - ரூ. 3.75 த. - ரூ. 8.00
ா. த. - ரூ. 5.00
ால்கள் யாவும் கிடைக்கும்.
சப்படும்.
வ உண்டு.
|த்தகசாலை, வெள்ளவத்தை,
6.
தொலைபேசி: 8 8 9 3 0
வவிக்கும் செ. கண்ேசீவிங்கன் அவர் ததில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.