கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தாயகம் 1983.05

Page 1
0 தேசிய இயக்க நெறி
鲁· 0 மரணத்திலும் மகத்து 3 () அஞ்சலிப் பூக்கள்
() நியாயங்கள்
() பொம்மைகள்
() அழுகைக் கோச்சியிே
() மரபும் மாக்வியவாதி
0 ஹிட்லர் 鄭 0 அந்த இரயில் பாதை
藝 鬣 வைகாசி 1983
இது இது இது இது இது இழsuது 紫繫紫紫業繫勢
 

லை இலக்கியமாத இதழ்
彗
நீளும் பாரதியும்
- கே. செந்திவேல் வம்
- மணி
- மலேமகன்
- செ. யோகநாதன்
- யோ, பெனடிக்பாலன்
- ஜனப்பிரியன் யும்
- சி. சிவசேகரம்
- அய் குங் கள்
- தணிகையன்

Page 2

மலர்: 1 வைகாசி 1983 இதழ்: 2
warrisratar-a-genresas
தெற்கு - வடக்கு | * தேர்தல்
* பகிஷ்கரிப்பு * தமிழர் பிரச்சினே
தெற்கில் நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றம் பாரளுமன்ற இடைத் தேர்தல்களின் பெருவாரியான முடிவுகள், மக்களது எதிர் பார்ப்புகட்குப் பாதகமாக அமைந்தது நாம் எதிர் பார்த்ததொன்று தான். அது, எதிராளியின் செல்வாக்கால் அல்லாமல், வஞ்சனையா லும் ஏமாற்ருலுமே ஏற்பட்டது என்பது உண்மையென் ருலும் இதற்காக எதிரியின் பலத்தைக் குறைத் து மதிப்பிடக்கூடாது. ."ބީ- :". . . . ت :
அரசு இயந்திரம், ஆள்மாருட்டம், சண்டித்தனம், பணமுதலைகளது ஆதரவு என்பன ஒருபுறம் விஸ்வ ரூபத்தில் செயல்பட, மறுபுறம் நாட்டிலுள்ள குழப்ப மான நிலை எதிரிக்குச் சாதகமாக அமைந்து விட்டிது.

Page 3
தேர்தல்கள் பற்றிய பிரமைகளைக் கலைப்பதற்காகச் செயற்படும் காலம் இப்பொழுது நெருங்கி வருகிறது. தேசிய ஜனநாயக சக்திகளின் தலைமை இதைத் தெளி வாக உணரும் நிலையில் மட்டுமே இதனை இன்றைய சூழ லில் பரந்து பட்ட அளவில் செயற்படுத்த முடியும். ஆயி னும் தேர்தல் பகிஷ்கரிப்பு என்பது எவ்வாறு செயற் படுத்தப்பட வேண்டு மென் ற விஷயம், கவனமாகச் சிந்திக்கப்பட வேண்டிய ஒன்று.
பகிஷ்கரிப்பு ஒரு ஆக்கபூர்வமான அரசியல் நட வடிக்கையாக அமைய வேண்டும். அது திட்டமிட்ட ஒரு செயலாகவும் அமைய வேண்டும். அ த வ து பரந்து பட்ட யூ என். பி. விரோத ஐக்கியத்தின் அடிப் படையில் அமைவதுடன் பொதுவான அரசியல் வேலைத் திட்டத்தின் ஒரு அம்சமாகவும் அமைதல் வேண்டும்.
முதலாவது கட்டமாக, சகல நேர்  ைம யான யூ. என். பி. விரோத சக்திகளும் சமகால நிலையை உணர்ந்து ஒரு பொதுவான குறிக்கோளுக்கு இணங்க பொது வேலைத் திட்டம் ஒன்றை முன்வைத்து ஒன்றுபட வேண்டும். அதன் கீழ் வகுக்க வேண்டிய காரியங்களை, சூழ்நிலைகளை ஒட்டி த் திட்டமிட்டுச் செயற்படுத்த வேண்டும். அவ்வாறில்லாமல் வெறுமனே பகிஷ்கரிப் புக் கோஷம் எழுப்புவது அர்த்தமற்ற காரியம்.
எதிரியின் பலம்பற்றி அசட்டையாக இருப்பது போல தவறு எதுவும் இருக்க முடி யாது. இனத் துவேஷம், முற்போக்கு - தேசபக்த சக்திளிடையே ஒற் றுமையின்மை என்பன இன்று எதிரியின் பலமான ஆயு தங்கள். எனவே முதலில் எதிரியை "நிராயுதபாணி" யாக்கி எதிரியையும் எதிரியின் ஏவலாட்களையும் தனி மைப் படுத்துவது நம் முக்கிய பணிகளில் ஒன்ருகிறது. இதனை எதிரணி ஜனநாயக சக்திகள் கவனத்தில் எடுத் துச் செயல்படுத்த வேண்டும்.
2

வடக்கில் தேர்தலுக்கு முன் நடந்த துப்பாக்கிச் சூட்டுக்கும் வேட்பாளர்கள் வாபஸ் வாங்கியதற்கும் சம்பந்தம் இல்லையென்று சொல்ல முடியாது; தேர்த லன்று வாக்குச் சாவடியில் நடந்த வன்முறை அவசியம் தான? யாழ்ப்பாணத்தை எரித்து விடுவதற்காக அனுமான் அவதாரம் எடுத்தவர்கட்கு அது ஒரு வசதி யான சாட்டாகி விட்டது.
அரசாங்கமும் ஆயுதப் படைகளும் ஒரு புறம் மிரட் டவும், மறுபுறம் "தமிழீழ விடுதலைக்காக” செயல்களில் ஈடுபடுவோர் தம்முட் போட் டி போட்டுக்கொண்டு பீதி ஏற்படுத்தவும், நடுவே பொதுமக்கள் அகப்பட்டுக் கொண்டு திணறுகின்ற நிலை மகிழ்ச்சிக்குரிய ஒன்றல்ல. பகிஷ்கரிப்பு பிரசாரகர்கட்கு பொதுமக்கள் மீது நம் பிக்கை இருந்தால் பொதுமக்களை மிரட்டும் வகையி லான காரியங்களில் இறங்காமலிருப்பது அவசியம்.
மிரட்டல் ஏதும் இல்லாமலே, வாக்களிப்பு வீதம் நூற்றுக்கு இருபது இருபத்தைந்தாக இருந்திருந்தா லும் கூட, அது தமிழர் கூட்டணியினதும் அரசாங்கத் தினதும் முகத்திற் கரி பூசியதாகவே இருந்திருக்கும். இதனைப் பகிஷ்கரிப்பு பிரசாரகர்கள் கவனத் தில் கொள்ள வேண்டும்.
நாளேடுகளில் இப்போது அடிக்கடி வெளிவரும் செய்தி - தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண வேண்டு மென்பதுதான். காலத்துக்குக் காலம் எழுப்பப் படும் கோஷம் இது.
இன்று ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் யூ என். பி. 1977 - ல் பொதுத் தேர்தலில் நின்ற போது தமிழர் பிரச்சனை குறித்து அதிகம் பேசியது மட்டுமன்றி, தேர்தல் விஞ்ஞாபனத்திலும் ஏதேதோ எல்லாம் குறிப்
3

Page 4
பிட்டிருந்தது. அதே யூ. என். பி. ஆட்சியில் நடக் திருப்பதும் இன்று நடப்பதும் அப்பாவித் தமிழ் இளைஞர் களை "பயங்கரவாத சிறைபில் சித்திரவதை செய்வது தான்!
அரசியல் திர்வு காணப்பட வேண்டு மென்பதை சர்வகட்சிகளும் தேசப்பற்று மிக்க பிரமுகர்களும் மட்டு மன்றி ஆட்சியிலுள்ள அமைச்சர்களும் வரவேற்றுள்ள னர். இதற்கான காலமும் மிக நெருக்கமாக வந்து விட்டது. ஆகவே சர்வ கட்சிகளையும் தேசப்பற்று மிக்க பிரமுகர்களையும் அழைத்து, வட்ட மேசை மகா நாட்டைக் கூட்டி, தமிழ் மக்களின் பிரச்சனைகளை அலசி ஆராய்ந்து அரசியல் தீர்வு காண அரசு முன்வர வேண் டும். இதனை விடுத்து, “பேச்சுப் பல்லக்கு தம்பி கால் நடை' என்ற போக்கு இருக்குமானல் நாட்டில் நிரந் தர அமைதியை நிலை நாட்டத் தவறிய விளைவுக்கும் அரசே பொறுப்பேற்க வேண்டும்.
தாயகத்தின் இலக்கிய முயற்சிகளுக்கு உங்களின் ஒத்துழைப்பை நாடுகின்ருேம்
O தாயகத்தின் வளர்ச்சிக்கு
நிதி உதவுங்கள்! 0 தாயக சந்தா தாரர்களை
விரிவுபடுத்த முன்வாருங்கள்.
சந்தா விபரம்
ஆண்டுக்கு - 60.00
ஆறு மாதங்களுக்கு - 30.00 (தபர்ல் செலவு உட்பட)
தனிப் பிரதி ரூபா 5.00

பாரதி ஆய்வரங்குக் கட்டுரை - 2
தேசிய இயக்க நெறிகளும் பாரதியும்
- கே. செந்திவேல்.
பத்தொன்பதாம் நூற்றண்டின் இறுதியும் இருபதாம் நூற் ருண்டின் ஆரம்பமும் உலக முதலாளித்துவம் ஏகாதிபத்தியமாக மாற்றமடைந்த ஒரு காலப் பகுதியாகும். இக்காலகட்டத்தில் காலனி நாடுகளிலே ஆதிக்கம் செலுத்தி வந்த காலனி ஆதிக்க வாதிகள் தமது சுரண்டலையும், அட்டக்குமுறைகளையும் பன்மடங்கு தீவிரப்படுத்தினர். இதனுல் இந்நாடுகளிலே தேசிய இயக்கங்கள் வெடித்தெழுந்து வீறு பெற்று முன்சென்றன.
பிரிட்டிஷ் காலணி ஆதிக்கத்தின் கீழ் இருந்த இந்திய உப க்ண்டத்தில் பிரித்தானிய ஆட்சியாளர்கள் தமது ஆதிக்கத்தை வலுப்படுத்தி அடக்குமுறைகளையும் தீவிரமாக்கினர். "வாளினல் பெற்ற இந்தியாவை வாளினலேயே ஆட்சி செய்ய வேண்டும்" என்ற ஆங்கிலேய அடக்குமுறை மனுேபாவம் இந்திய மக்களின் மீது தனது கோரத்தனத்தை கட்டவிழ்த்து விட்டது.
பத்தொன்பதாம் நூற்ருண்டின் நடுப்பகுதியில் (1857-59) வரலாற்ருசிரியர்களால் சிப்பாய் கலகம் என அழைக்கப்படும் மாபெரும் பிரிட்டிஷ் எதிர்ப்பு போராட்டம் வெடித்தெழுந்தது. இப்போராட்டம் மிலேச்சத்தனமான அடக்குமுறையின் மூலம் முறியடிக்கப்பட்டிருந்தாலும் பிரித்தானிய ஆட்சியாளர்களை கதி கலங்கச் செய்த கிளர்ச்சி என்பதில் ஐயமில்லை, இக்கிளர்ச்சி பற்றி பிற்காலத்தில் நேரு எழுதுகையில், "இக்கிளர்ச்சியானது நாட்டின் ஒரு சில பகுதிகளேயே நேரடியாகப் பாதித்தது என்ரு லும் அது இந்தியா முழுவதையும், சிறப்பாக ஆங்கில நிர்வாக அமைப்பையே உலுக்கிவிட்டது' என்ருர், அன்றைய அக்கிளர்ச் சியின் பிரதான அம்சமாக இருந்தது இந்து - முஸ்லீம் ஒற்றுமை யாகும். இக்கிளர்ச்சியின் மூலம் பெற்ற பாடத்தை பிரித்தானிய ஆட்சியாளர்கள் மறந்துவிடவில்ஃ0 பிரித்தாளும் சூழ்சியில் கை தேர்ந்தவர்களான ஆங்கிலேயே ஆட்சியாளர்கள் இந்து முஸ்லீம் பிரிவினைக்கான விதைகளைத் தூவவும், சுதந்திரப் போராட்ட சுவாலைகள் கொளுந்து விட்டெரிந்த வங்காளத்தைப் பலவீனப் படுத்தவும் 1905ம் ஆண்டு வங்காளப் பிரி வினை  ைய நடை முறைக்கு கொண்டுவந்தனர்.

Page 5
தனது சொந்த தேசத்தின் மீது அக்கறை கொண்ட எந்த ஒரு சாதாரண தேசபக்தனையும் வங்கப் பிரிவினை என்ற ஆங்கி லேயப் பிரித்தாளும் சூழ்ச்சியானது பாதிக்காமல் விடவில்லை. இவ்வாறு பாதிக்கப்பட்ட பல்லாயிரம் தேசபக்தர்களில் ஒருவ ராகவே பாரதியும் தனது தேசிய இயக்கக் களத்தினுள் பிரவே சிக்கின்ருர்.
எட்டயபுரம் சமஸ்தானத்துக் கவியாகவும், பின் ஆசிரியரா கவும், அதன்பின் சுதேசமித்திரன் பத்திரிகையின் உதவி ஆசிரி யராகவும் இருந்த சந்தர்ப்பத்திலேயே 1905 ம் ஆண்டு வங்கப் பிரிவினை என்ற வரலாற்று நிகழ்ச்சி பாரதியின் வாழ்வில் ஒரு திருப்பத்தையே ஏற்படுத்தி விடுகிறது.'வங்கமேவாழிய” என்ற பாரதியின் கவிதை 15 - 9 - 1905 சுதேசமித்திரன் பத்திரிகையில் வெளிவந்தது. பாரதி ஒரு கவிஞனுக வாழ்ந்த அதே நேரத்தில் சிறந்த தேச பக்தனுகவும், பத்திரிகையாளனுகவும். தேசிய இயக் கத்தில் பங்கு கொண்ட ஒருவனுகவும் வாழ்ந்தார். எனவே பார தியை அவரது கவிதைகளில் இருந்து மட்டும் அளந்து விடமுடி யாது. அவரது ஏராளமான கட்டுரைகளில் இருந்தும் கணித்துக் கொள்வது அவசியம். இவற்றுக்கும் மேலால் பாரதியை அவர் வாழ்ந்த சமூகச் சூழலில் வைத்து மதிப்பீடு செய்வது அவசிய மானதொன்ருகும்.
*மனிதர்களின் அறிவுணர்வல்ல அவர்களின் சமூக வாழ்வை நிர்ணயிப்பது, மாருக அவர்களின் சமூக வாழ்வே அவர்களின் அறிவுணர்வை நிர்ணயிக்கின்றது' என்பது மாக்சிச தத்துவத் தின் ஒரு அடிப்படை விதியாகும். பாரதி வகித்த சமுதாய நிலைப் பாட்டை, குறிப்பாக அவர் இந்திய தேசிய இயக்கத்தில் வகித்த பாத்திரத்தை இந்த மாக்சிச விதிக்கு உட்படுத்தி மதிப்பீடு செய்வதே சரியான ஒரு மதிப்பீடாக அமைய முடியும்.
முதலில் இந்திய தேசிய இயக்கத்தின் வளர்ச்சியையும் அது பாரதியின் காலத்தில் எத்தகைய நிலையில் இருந்தது என்பதை யும் சுருக்கமாக ஆராய்வது ஒரு முன்தேவையாகும்.
இந்தியாவின் முதல் சீர்திருத்த இயக்கமான பிரம்மசமாஜம் என்ற ஐரோப்பிய பாணியிலான பொது ஸ்தாபனத்தை 1928 ல் வங்காளப் பிராமண ஜமீந்தாரான ராம்மோகன்ராய் (1772-1833) ஆரம்பித்தார். அவர் 'சம்வாத கெளமுதி” என்ற இந்தியாவின் முதலாவது வாரப் பத்திரிகையை வங்காள மொழியிலும், "மிராத்
6

உல் - அஹ்பார்" என்ற பாரசீக மொழிப் பத்திரிகையையும் வெளி யிட்டார். ராம் மோகன் ராய் ஒரு இந்து மத சீர்திருத்தவாதி யாகவே திகழ்ந்தார். அவர் நிலப்பிரபுத்துவத்தின் மீத மிச்சங்களை *"பிற்காலத்தில் படிந்த கசடுகள்" எனக் கூறி இந்து மதப் பிற் போக்குத் தனங்களுக்கு எதிராகக் குரல் கொடுத்தார். இச்சீர் திருத்தக் கருத்துக்கள் சில எல்லைகளுக்கு உட்பட்டே இருந்தன. அது அரசியல் ரீதியில் அந்நியருக்கு எதிரான ஒரு தேசிய இயக் கமாக வளர முடியவில்லை. ஆனல் அதே காலப் பகுதியில் ஆங் காங்கே அந்நியருக்கு எதிரான எதிர்ப்பு இயக்கங்கள் தோன்றவே செய்தன. இவற்றில் மிகவும் முக்கியமானதும் வரலாற்று முக் கியத்துவம் பெற்றதுமான கிளர்ச்சிதான் முன் குறிப்பிட்ட சிப் பாய் கலகம் எனக் கூறப்படும் கிளர்ச்சியாகும், பிரித்தானியப் படைப் பிரிவுகளில் இருந்த இந்தியச் சிப்பாய்கள இக் கிளர்ச் சியின் அச்சாணியாகத் திகழ்ந்தார்கள். சாதரண மக்கள் மட்டு மன்றி நிலப்பிரபுக்கள். மன்ன்ர் பரம்பரையினர் போன்ருேரும் இக்கிளர்ச்சியில் பங்கு கொண்டனர். சாராம்சத்தில் இக் கிளர்ச்சி பிரிட்டிஷ் எதிர்ப்பு போராட்டமாக இருந்த போதிலும் இ க் கிளர்ச்சி ஒழுங்குபடுத்தப்பட்டு ஸ்தாபன ரீதியில் முன்னெடுக் கப்பட்ட ஒரு இயக்கமாக வளர முடியாமல் போய்விட்டது. கார்ல் மார்க்ஸ் இக் கிளர்ச்சியின் தன்மையை பின்வருமாறு கணித்தார். "கிளர்ச்சி செய்த சிப்பாய்கள் தங்கள் அதிகாரிக ளைக் கொன்று கட்டுப்பாட்டு நுகத்தைக் கழற்றி எறிந்து விட் டார்கள். ஆயினும் பலதரப்பட்ட மனிதர்கள் அடங்கிய அந்தத் திரளால் தலைமைத் தளகர்த்தன் பொறுப்பை ஏற்க வல்ல மணி தனைத் தமக்கு இடையில் இருந்து தோற்றுவிக்க முடியவில்லை. ஆழ்ந்த முறையில் நீடித்து நடக்கும் எதிர்ப்பை ஒழுங்கமைக்க இத்தகைய திரள் சிறிதும் திறன் இல்லாதது ஆகும்" கொடிய அடக்கு முறையின் மூலம் இக் கிளர்ச்சி அடக்கப்பட்டாலும் அதன் தாக்கம் ஆங்கிலேய ஆட்சியாளர்களை மட்டுமன்றி தேசத் தின் பல்வேறுபட்ட மக்கள் பிரிவினரிடையே பலமான தாக்கத் தையும் ஏற்படுத்தியது.
1870-80 களில் வங்காளம் மகாராஷ்டிரம் மாகாணங்களில் தேசிய இயக்கத்திற்கான தீவிரக்கருத்துக்கள் பரவுதல் அடைந்தன. **சுதந்திரம் எனது பிறப்புரிமை; அதை அடைந்தே தீருவேன்' எனக்கூறி பாலகங்காதர திலகர் தேசிய இயக்க அரங்கில் பிரவேசிக் கின்மூர். 1881-ல் "கேசரி செய்திப்பத்திரிகையும் "மராட்டா" என்ற ஆங்கிலப் பத்திரிகையும் திலகரால் வெளியிடப்படுகிறது.
7

Page 6
1885-ல் இந்திய தேசிய காங் கி ரஸ் கூட்டப்பட்டது. இந்திய நிலப்பிரபுக்களும், பெரும் வர்த்தகர்களும், முதலாளிக ளும் ஒன்று சேர்ந்து பிரிட்டிஷ் அதிகாரிகளின் ஆதரவுடன் இந் திய தேசிய காங்கிரசை அமைத்தார்கள். இந்நிறுவனம் ஆரம் பிக்கப்பட்ட முதல் பத்தாண்டுகளுக்கிடையே அதற்குள் மிதவா தப் போக்குடையோரும், தீவிரவாதப் போக்குடையோரும் என்று இரு பிரிவுகள் வளரலாயிற்று.
சுரேந்திர நாத் பர்னஜி, கோபால கிருஷ்ண கோகலே போன் ருேர் மிதவாதக் கருத்துக்களைக் கொண்டிருந்தனர். இவர்கள் ஆங்கிலேயர்களை ஆத்திரப்படுத்தாது, அல்லது அவர்களை நாட் டைவிட்டு வெளியேற்றும் கருத்தை முன்வைக்காது விண்ணப் பங்கள், படிப்படியான சீர்திருத்தங்கள், சலுகைகள் பெறுதல் போன்றவற்றையே வற்புறுத்தினர். இதற்கு மாருக எ தி ர் ப் பு இயக்கங்கள் மூலம் ஆங்கிலேயர்களை நாட்டைவிட்டு அகற்றுவ தைக் குறிக் கோளாகக் கொண்டிருந்த தீவிரவாத தேசிய க் கருத்துக்களுக்கு திலகர், விபின் சந்திரபால், லாலால ஜபதிராய் போன்றேர் தலைமை தாங்கினர்.
தீவிர தேசிய எழுச்சிக் கருத்துக்களைக் கொண்ட இப் புதுக் கட்சியார் என அழைக்கப்பட்ட இந்திய இளம் முதலாளித்துவ சக்திகள் இருபதாம் நூற்ருண்டின் ஆரம்பத்தில் இந்திய தேசிய காங்கிரசுக்குள் பெரும் செல்வாக்குப் பெற்றவர்களாகத் திகழ்ந் தனர். அதேவேளை இவர்களது தீவிர தேசிய எழுச்சிக் கருத்துக் கள் நாட்டு மக்களிடையே பெரும் தாக்கங்களையும் செல்வாக் கையும் பெற்று வந்தன.
திலகர் தலைமையிலான புதுக்கட்சியார் எவ்வளவுக்கு தீவிர தேசிய எழுச்சிக் கருத்துக்களை கொண்டிருந்த போதிலும் இந்திய நிலப்பிரபுத்துவ அமைப்பு முறைகளுக்கோ அன்றி இந்திய ஆன் மீக தத்துவங்கள் பிறப்பித்த பிற்போக்குத் தனங்களுக்கோ எதி ராகச் செல்ல முடியாதவர்களாகவே இருந்தனர். மத, கலாச்சார அம்சங்களின் கையாலாகாத்தனங்களைக் கைவிடத் தயங்கினர் அதாவது ஐரோப்பிய முதலாளித்துவம் ஐரோப்பிய நிலப்பிரபுத் துவத்துடன் முட்டி மோதி நிலப்பிரபுத்துவத்தையும் அதன் மீத மிச்சங்களையும் அழித்தொழித்தது போல் இந்திய மு த லா ஸ் வர்க்கத்திற்கு இந்திய நிலப்பிரபுத்துவத்துடன் மோதல் எதுவும் ஏற்படமுடியவில்லை. வளர்ந்து வந்த இந்திய முதலாளிவர்க்கம் இந்திய நிலப்பிரபுத்துவத்தின் அரவணைப்புடனேயே வளர்ந்து
8

வந்தது. இதனுல் இந்திய சனத்தொசையில் பெரும்பான்மை யைக் கொண்ட இந்திய விவசாயிகளையும் ஏனைய உழைக்கும் மக்களையும் தேசிய இயக்கத்தின் பிரதான சக்தியாக்க வேண்டிய அடிப்படையான நிலை இல்லாது கைவிடப்பட்டது. இந்திய முத லாளி வர்க்கம் தனது எதிர்கால நலன் காரணமாக விவசாயி களை தேசிய இயக்கத்தில் அணி திரட்டுவதை கைவிட்டது. இது தேசிய இயக்கத்தின் ஒழுங்கமைந்த வளாச்சிப் போக்கைத் திசை திருப்பியது மட்டுமன்றி தேசிய இயக்கம் உண்மையான தேசிய விடுதலை இயக்கமாக வளர்வதையும் திட்டமிட்டே தடை செய் தது என்று கூறினலும் மிகையாகாது.
**விவசாயி வர்க்கம் தேசிய இயக்கத்தின் பிரதான படை யாக விளங்குகின்றது. விவசாயப்படை இன்றி சக்திமிக்க தேசிய இயக்கம் ஒன்று இல்லை. இருக்கவும் முடியாது' என்ற ஸ்டா லின் அவர்களின் கூற்றை அவதானிக்கும் போது இந்திய தேசிய இயக்கத்தின் பிரதான பலவீனம் எங்கிருந்தது என்பதைக்கணித் துக் கொள்ள முடியும். அதேவேளை சீனுவின் நிலையை சிறிது அவதானித்தால் சமகாலத்திலேயே தேசிய இயக்கம் பல்வேறு பட்ட விவசாயக் கிளர்ச்சிகளின் மூலம் முன்னேறியது மட்டு மன்றி சீனுவின் வளர்ந்து வந்த முதலாளி வர்க்கம், இந் தி ய முதலாளி வர்க்கம் வகித்த பிற்போக்கு பாத்திரத்தைவிட முற் போக்கானதாய் காணப்பட்டது. இந்த முற்போக்கு அ ம் சம் டாக்டர் சன் யட் சன் தலைமையில் மேலும் முன்னெடுக்கப்பட்டு சீனத்தொழிலாளி விவசாயி வர்க்கத்துடன் ஐக்கியப்பட்டு தேசிய இயக்கம் தனக்கே உரித்தான சரியான பாதையில் முன்னேறிய சந்தர்ப்பத்தைக் காண முடியும்.
இந்தியாவின் தொழிலாளி வாக்கம் தனது எதிர்காலச் சரித் திரக் கடமையை உணர்ந்து தன்னை ஸ்தாபன ரீதியில் உருவாக் கிக் கொள்ளாத ஒரு சந்தர்ப்பத்தில், இந்திய வெகுஜனங்களின் ஏகப் பெரும்பான்மையினரான இத்திய விவசாயிகள் கைவிடப் பட்டிருந்த நிலையில், வளர்ந்து வந்த இந்திய முதலாளி வர்க்கமே தேசிய இயக்கத்தின் தலைமைப் பாத்திரத்தைக் கொண்டிருந்தது. இத்தகைய நிலையை ரஜனி பாமிதத் பின்வருமாறு எழுதினர். 'வளர்ந்து வரும் தொழிலாளி வர்க்கத்து உணர்ச்சிகளை வெளி யிடும் திறனே, நிறுவனமோ இன்னும் முற்றிலும் ஏற்படாததா அலும், உழவர்கள் கோடிக்கணக்கில் ஊமையர்களாக இருந்ததா அலும் இந்திய பூர்ஷ்வாக்களே இந்தியாவின் மிக முற்போக்கான ஸ்தூலமான புரட்சி சக்தியாக விளங்கினர்கள்."

Page 7
இவ்வாருன ஒரு நிலையே 1905 ம் ஆண்டு பாரதியின் தேசிய இயக்கப் பிரவேசத்தின் போது நிலவியது. அவ்வேளை இந்திய தேசிய இயக்கத்தில் மூன்று முக்கிய போக்குகள் இருந்தன. ஒன்று மிதவாதப் போக்கு, இரண்டாவது தனிநபர் பயங்கரவாதப் போக்கு மூன்ருவது தீவிர தேசிய எழுச்சிப் போக்கு என்பன வாம். இம் மூன்று போக்குகளிலும் பாரதியார் எந்த நிலைப் பாட்டை எவ்வித கண்ணுேட்டத்தை கொண்டிருந்தார் என்பதை சுருக்கமாகக் கண்டு கொள்வது அவசியமாகும்.
O
முதலாவதாகக் கூறப்பட்ட இந்திய தேசியக் காங்கிரசுக்குள் நிலவிய மிதவாதப் போக்கை பாரதியார் ஆரம்பத்தில் இருந்தே தீவிரமாக எதிர்த்து வந்தார். ஆங்கிலேய ஆட்சியாளர்களின் தயவால், கருணையால் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்துவிடும் என்று நம்பிய மித வாதிகளை பாரதி ஆக்கிரோசமாகத் தாக்கி னர். அவர் 1907 ம் ஆண்டு ஜனவரி 19 ம் திகதி "இந்தியாப் பத்திரிகையில் மிதவாதிகளுக்கு கண்டனமாகவும், அறிவுறுத்த லாகவும் பின்வருமாறு எழுதினர். "பிரிட்டிஷ் ஜாதியாரின் தய வைச் சம்பாதித்து அவர்கள் கிருபையின் பெயரில் ந ம க்கு க் கிடைக்கும் அனுகூலங்களை வைத்துக் கொண்டு நாம் பிழைத்துவிட லாம் என்று நினைப்பவர்கள் தாதாபாய் நவுரோஜியின் கருத்துக்கு முற்றிலும் விரோதமானவர்கள், தாதாபாய் நவுரோஜி பிரிட் டிஷ் ஜாதியாரிடம் தமக்கிருந்த நம்பிக்கை முழுவதையும் இழந்து விட்டார். அவருக்கு 82 வயதாகிவிட்டது. சென் ற 50 வருஷ காலமாக பிரிட்டிஷாரை நம்பிநம்பி பார்த்தார். இவரது நம் பிக்கைக்கெல்லாம் அவர்கள் துரோகம் செய்து விட்டார்கள். இங்கிலாந்திலே போய் நவுரோஜி பல வருஷ காலமிருந்தார். பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவில் மகா அநீதியாக நடக்கிறது என் றும் அதை பிரிட்டிஷ் ஜனங்கள் மாற்ற வேண்டும் என்றும் 25 வருஷமாக மன்ருடினர். எத்தனையோ பிரிட்டிஷ் முக்கிய மந்திரி களிடம் போதனை செய்தும், கெஞ்சியும் தொண்டை நீரையெல் லாம் வற்றடித்தார். இ ன் னும் எத்தனையோ மந்திரிகளுக்கும் ராஜ தந்திரிகளுக்கும் கடிதம் எழுதி எழுதிக் காலத்தைக் கழித் தார். பார்லிமெண்டிலே மெம்பராய் இருந்து இந்தியாவின் குறை களை எடுத் துக் கூறி ஒலமிட்டுப் பார்த்தார். பத்திரிகைகளில் எல்லாம் மகாஞானத்துடனம் தக்க விவகாரங்களுடனும், பொறு மையுடனும் எழுதிப் பார்த்தார், இப் படி எல்லாம் இடை விடாது இரவுபகல் முயற்சி செய்த ம கா னை ப் போல் வேறு அனுபவசாலி யார் இருக்கிறர்கள். இவர் பிரிட்டிஷாரிடமிருந்த
10

அபரீதமான விஸ்வாசத்தை இழந்து விட்டார் என்ருல் இவரு டைய அநுபவத்திலே கால் பங்கு கூட இல்லாத சிலர், பிரிட் டிஷ் ஜாதியாரின் தயவிஞல் மோட்ஷம் பெற்று விடலாம் என்று நினைப்பதே மிகவும் வேடிக்கையான விஷயம் அல்லவா?"
மேலும் மிதவாதத் தலைவர்களில் ஒருவரான கோபால கிருஷ்ண கோகலேயை அவரது மிதவாதக் கருத்துக்களுக்காக கிண் டல் செய்யும் விதத்தில் 'கோகலே சாமியார் பாடல்" என்ற கவிதையை பாரதியார் பாடிஞர்.
இவ்வாறு தனக்கு சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் அன்றைய இந்திய தேசிய காங்கிரசுக்குள் இருந்து வந்த மிதவா தத் தலைமையையும் அவர்களது மிதவாதப் பிற்போக்குக் கருத் துக்களையும் எதிர்த்தும், விமர்சித்தும் வந்த பாரதி ஒரு போதும் அந்தக் கருத்துக்களை ஏற்றுக் கொள்ளவில்லை.
1915 க்கு பின் காந்தி இந்தியாவிற்கு வந்து தேசிய இயக் கத்தில் பங்கு கொண்ட ஆரம்பகாலங்களில் பாரதி காந்தியைப் போற்றினர் என்பது உண்மையே,
தாழ்வுற்று வறுமை மிஞ்சி
விடுதலை தவறிக் கெட்டுப் பாழ்பட்டு நின்றதாமோர் பாரத தேசம் தன்னை வாழ்விக்க வந்த காந்தி
என்று காந்தியின் ஆரம்பகால நடவடிக்கைகளின் காரண மாக பாரதி பாடி இருந்த போதிலும் காந்தியினுடை மிதவாதக் கருத்துக்களுக்கு எதிராக கிண்டல் செய்த சந்தர்ப்பங்களும் உண்டு. உதாரணமாக விதவைகள் மறுமணம் பற்றிய விவாதம் வந்தவேளை பார தி காந்தியின் கொள்கையை எதிர்க்கின்றர். இந்திய தேசிய இயக்கத்தின் பிற்கால நடவடிக்கைகளில் காந்தி கடைப்பிடித்த சரணடைவுவாத, பிற்போக்குவாத நிலைப்பாடுக ளின் போது பாரதி உயிர்வாழக்கிடைத்திருந்தால் நிச்சயம் காந் தியை எதிர்ப்பவர்களில் பாரதியும் ஒருவராக இருந்திருப்பார் என்று துணிந்து கூற முடியும்.
சுருங்கக் கூறின் பாரதி தன் வாழ்நாளில் ஆங்கிலேய ஆட் சியாளர்களை எதிர்ப்பதில் எந்த சர்தர்ப்பத்திலும் மிதவாதி
11

Page 8
களுக்கு சார்பாகவோ அல்லது சந்தர்ப்பவாதமாகவோ நடந்து கொண்டது கிடையாது என்பதை அவரது கட்டுரைகளில் கவிை களில் இருந்து கண்டுகொள்ள முடியும். VA
O , தேசிய இயக்கத்தில் பாரதி கலந்து கொண்ட காலகட்டத் தில் தனிநபர் பயங்கரவாதம் இந்தியாவில் ஒரு தாக்கமான இடத்தை வகித்து வந்தது எனலாம். இதில் வங்காளம், மகா ராஷ்ரம், பஞ்சாப் ஆகிய மாகாணங்கள் முக்கிய இடங்களாக அமைந்தன. டாக்கா - கல்கத்தாவில் அனுசீலன் சமிதி, மகா ராஷ்ரத்தில் சவார்க்கார் சகோதரர்கள் நிறுவிய மித்தமேளா குழு, கல்கத்தாவில் ஜ"கந்தர் குழு, அபிநவபாரத் சங்க ம் போன்ற இரகசிய ஸ்தாபனங்கள் தனிநபர் பயங்கரவாத 5வடிக்கைகளை திட்டமிட்டு செயல்படுத்தின.
முசாப்பூரில் கிங்ஸ் போர்டு என்ற ஆங்கில நீதிபதி  ைய நோக்கி குதிராம்போஸ், பிரபுல்லா சாக்கி என்ற இரு இளைஞர் கள் வெடிகுண்டு வீசினர். அது குறி தவறி இரு பெண்களைப் பலிகொண்டது. குராம் பிடிபட்டார். பிரபுல்லா சாக்கி தற் கொலை செய்து கொண்டார்.
அலிப்பூரில் அரவிந்தருக்கும் அவரது சகோதரர் பரீன் மீதும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக பயங்கரசதி வழக்கு தொட ரப்பட்டது. அவ்வழக்கின் அரசதரப்பு சாட்சியாக மாறிய ஒரு வர். சிறைக்குள்ளேயே கொல்லப்பட்டார். குதிராம்போஸ் தூக் கிலிடப்பட்டார். பரீன் நாடுகடத்தப்பட்டார். அரவிந்தர் விடு தலை செய்யப்பட்டார்.
மகாராஷ்டிரத்தில் நாசிக், பம்பாய். பூணு ஆகிய நகரங்கள் வெடிகுண்டு உற்பத்தி நகரங்களாயின, நாசிக் மாவட்ட மஜிஸ் ரேட் ஜக்சன் பிரிவுபசார விருந்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்திய இளைஞர்களை இங்கிலாந்தில் கொடுமைப்படுத்திய கர்ஸன் - வில்லி என்ற பிரிட்டிஷ் அதிகாரி பிரிட்டனிலேயே மதன்லால் திங்ரா என்ற இந்திய இளைஞனல் பட்டப்பகலிலே சுட்டுக் கொல்லப்பட்டார். திங்ரா தூக்கில் இடப்படுவதற்கு முன் 'இன்று இந்தியாவில் நாம் கற்றுக் கொள்ளவேண்டிய பாடம் என்னவென்ருல் எவ்வாறு மர ண ம் அடைவது என்பதுதான். அதைச் சொல்லிக் கொடுப்பதற்கு ஒரேவழி மரணம் அடைவது தான்' என்று கூறினன்.
2

அதேபோல் சென்னை யி ல் "பாரத மாதா சங்கத்தைச் சேர்ந்த வாஞ்சிநாதன் என்ற இளைஞன் மணியாச்சி ரயில் நிலை யத்தில் ஆஷ்துரை என்ற பிரிட்டிஷ் அதிகாரியை சுட்டுக் கொன் ரூன். தப்பிச்செல்ல முடியாத அவ் இளைஞன் தன்னைத்தானே கட்டு தற்கொலை செய்து கொண்டான்.
1906 ம் ஆண்டு ஏப்பிரல் 22 ம் திகதி ஜுகந்தர் பத்திரிகை பிரசுரித்த தலையங்கத்தில் "வன்முறையை வன்முறையால்தான் நிறுத்த முடியும்' என்று எழுதியது.
இவ்விதமான சூழ்நிலை நிலவிய சந்தர்ப்பத்தில் பாரதி தனி நபர் பயங்கரவாத வழிமுறைகளை ஏற்றுக் கொண்டதாகத் தெரி யவில்லை. அதேவேளை அதை கண்டித்த சம்பவங்களைக் கான முடியும். தென் நாட்டில் குறிப்பிடத்தக்க ஒரே ஒரு தனிநபர் பயங்கரவாதச் சம்பவமாக இடம் பெற்ற ஆஷ்துரை கொலேயை பாரதியார் கண்டிக்கின்ருர், "சென்னை மாகாணத்தில் பயங்கர இயக்கம் பிறக்கும் போதே உயிரற்ற பிண்டமாகப் பிறந்தது" என்று எழுதினுர்,
1908 ம் ஆண்டு சூரத் காங்கிரசில் பங்கு பற்றிய பின் பாரதி சென்னைக்குத் திரும்பி இருத்தார். அப்போது வடநாட் டில் இருந்து சந்திர காத்த சக்கர பாத்தி என்பவர் பாரதியின் இந்தியா பத்திரிகைக் கr:லயத்திற்கு வந்து தென் நாட்டில் ஆயுத நடவடிக்கைகளுக்கு சில இளைஞர்களை அறிமுகம் செய்து வைக்கும்படி வேண்டினர். பாரதி அவருக்கு உடன் இருந்த நீலகண்டன் என்ற இளைஞனே அறிமுகப்படுத்தினர், பாரதி முன் னிலையிலேயே இருவரும் தமது நடவடிக்கைகள்பற்றி பேச ஆரம் பித்தனர். அப்போது பாரதி பின்வருமாறு கூறினர் என "புரட்சி வீரர் நீலகண்ட பிரமச்சாரி" என்ற நூலில் ரா. அ. பத்ம நாபன் குறிப்பிடுகின்மூர்.
"நான் ஒரு கவி. நேரடியான புரட்சி நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டேன். என்குரு நிவேதித்தா தேவியின் கட்டளை அது. பிற தேச பக்தர்கள் தங்களுக்கு தோன்றும் எந்த வழி யைப் பின்பற்றினலும் எனக்கு ஆட்சேபம் இல்லை. அதே சமயம் நீங்கள் என்ன பேசிக்கொண்டாலும் அது என் காதில் விழத் தேவைஇல்லை. உங்களுக்கும் அது நல்லது. ஆதலால் நீங்கள் இரு வரும் வெளியே வராந்தாவில் உட்கார்ந்து பேசுங்கள்' இவ்
13

Page 9
வாறு கூறியதன் மூலம் பாரதியின் நிலைப்பாட்டைப் புரிந்து கொள்ள முடியும்.
மேற்படி பாரதியின் கூற்று இவ்வாறு இருக்க வெவ்வேறு ஆதாரமற்ற கூற்றுக்கள் பாரதியின் வாழ்வுடன் இணைத் துக் கூறப்படுகின்றன. அவை பாரதியின் உணர்ச்சி மிக்க சில கவிதை அடிகளில் இருந்து பிறப்பிக்கப்பட்ட மிகையான கூற் றுக்களாக மட்டுமே இருக்க முடியும்.
எனவே இந்திய தேசிய இயக் கத் தி ல் காணப்பட்ட மித வாதப் போக்கையும் அதற்கு நேர் எதிராக நின்ற தனி நபர் பயங்கரவாதப் போக்கையும் பாரதியார் ஏற்றுக் கொள்ளாத ஒருவாராகவே திகழ்ந்தார். அதே வேளை ஆங்கிலேயர்களுக்கு எதிரான இயக்கத்தில் ஏனைய தேசியவாதிகளும், தேசபக்தர் களும் நாடிய தனிநபர் பயங்கரவாதம் உட்பட ஏனைய வழி முறைகளை ஆங்கில ஆட்சியாளர்களுக்கு உதவக் கூடிய வகையில் எதிர்க்கவோ, கண்டிக்கவோ அல்லது காட்டிக் கொடுக்கவோ பாரதி எந்த சந்தர்ப்பத்திலும் முயன்றது கிடையாது. இது நேர்மையான ஒரு தேச பக்தனின் உயர்ந்த த ன்  ைம யின் வெளிப்பாடேயாகும்.
O
"ஆண்மையை இழந்து பள்ளத்தில் வீழ்ந்து கிடக்கின்றீர் களே! எழுந்து நின்று உங்கள் புருஷத் தன்மையை நிரூபித்துக் கொள்ளுங்கள்" என்றும் "ஒரு விதவைப் பெண்ணின் கண்ணி ரைப் போக்கவோ, ஒர் அஞதைக் குழந்தையின் வயிற்றுக்குச் சோறுடவோ சக்தியற்ற மதத்தை நான் மதம் என்று கொள்ள மாட்டேன்" என்றும் வீர வேதாந்தச் சூளுரைத்தவர் சுவாமி விவேகானந்தர். அவருடைய வேதாந்தக் கருத்துக்களால் கவரப் பட்டு அவரின் சிஷ் பையாக இந்தியாவிற்கு வந்து தேசத் தொண் டில் ஈடுபட்ட ஐரிஷ் பெண்மணி (மார்க்கிரட் நோபிள்) தான் நிவேதித்தா தேவி. 1905 ம் ஆண்டு காசி காங்கிரசிற்கு சென்று திரும்பும் போதே பாரதியாா நிவேதித்தா தேவியிடம் ஞான உபதேசம் பெற்ருர். அவர் அருளிய உபதேசம் **தேசபக்தி செய் சாதி மத பேதம் பாராட்டாதே, ஆண்பெண் சமமெனக் கொள்" என்பதாகும். மேற்படி உபதேசத்தை பாரதியார் தன் வாழ் நாளில் வேத வாக்காகவே கொண்டு வாழ்ந்தார் என்பதில் ஐய மில்லை. 3 .° لـ°, iii . . . .“
;4

பாரதி விவேகானந்தர் வழி வந்த வேதாந்தி ள ல் பதில் எவருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. இந்திய ஆன்மீகத் தத் துவங்களில் இருந்து பெறப்பட்ட பாரதியின் வேதாந்தக் கருத் துக்களும் கொள்கைகளும் இந்திய தேசிய இயக்கத்தில் பாரதி ஆற்றிய பங்கை எந்த விதத்திலும் தடை செய்யவில்லை. ஒரு சந்தர்ப்பத்தில் இலங்கையைச் சேர்ந்த கனவான்களில் ஒருவரா கக் கணிக்கப்பட்டவரும், பல பத்தாம்பசலிப் பிற்போக்கு கருத் துக்களைக் கொண்டவரும், பிற்காலத்தில் ஆங்கிலேயர்களின் சேர் பட்டத்தைப் பெற்றவருமான பொன்னம்பலம் இராமநாதன் சிதம்பரத்தில் சில உரைகள் நிகழ்த்தினர். அவ்வுரை ஒன்றில் இந்துக்களாகிய நாம் ஆன்ம லாபத்தை முதற் குறி ய ர கக் கொள்ள வேண்டும். அதுவே இந்துக்களின் சகல உயர்ச்சிகளுக்கும் வழியாகும் என்று கூறிய கருத்தை பாரதியார் இந்திய ப் பத் திரிகையில் கிண்டல் செய்கிறர். **. . . . சதா சங்கர " ." என்று சொல்லிக் கொண்டு யோக நிஷ்டை செய்யத் தொடங்கி விட்டால் நாம் இப்பொழுது இருக்கும் நிலையிலும் எத்தனையோ மடங்கு தாழ்ந்து விடுவோமென்று அஞ்சுகின்ருேம்." என பொன்னம்பலம் இராமநாதனின் கருத்தை மறுத்து எழுதியவர் Lurrtré.
பாரதியை ஏன் பொதுவுடமை வாதி ஆகவில்லை எ ன க் கேள்வி எழுப்பி அவரது ஆன்மீக வேதாந்தக் கொள்கைகளுக் காக அவரை நிராகரித்து ஒதுக்கும் சில வாட்டு வாதிகளும் காணப் படவே செய்கின்றனர். ஆணுல் பாரதியின் ஆன்மீக வேதாந்தக் கொள்கைகள் பிரபுத்துவ, மத கலாச்சார பிற்போக்குத் தனங் களுக்கும், மூட நம்பிக்கைகளுக்கும் ஆதரவாகத் துளியளவேனும் இருந்ததாகக் கொள்ள முடியாது. சமுதாய வளர்ச்சியின் மும் போக்கு அம்சங்களுக்கும், மக்களின் அன்ருட வாழ்க்கை முன் னேற்றத்திற்கும், தான் கொண்டிருந்த ஆன்மீக வேதாந்தக் கருத் துக்களை பாரதி ஒரு அளவு கோலாகப் பாவிக்க வில்லை என்ற அம்சம் அவரது நிலையைத் தெளிவு படுத்துகின்றது. அது மட்டு மன்றி இந்திய தேசிய இயக்கத்தில் தோன்றிய பல தீவிர வாதிகள் எனப்பட்டவர்கள் பிற்காலத்தில் முற்றிலும் தம்மை ஆன்மீகக் கூண்டுகளுக்குள் அடைத்துக் கொண்டனர். இது பற்றி திலகர் ஒரு முறை கூறுகையில் "நமது இளைஞர் கள் பாலியத்தில் புரட்சி இயக்க வீரர்களாக இருக்கின் ருர்கள். நடு வயதில் மிதவாதிகளாக இருக்கின்றனர். பிற் கா லத் தி ல் பூரீ ராமகிருஷ்ண மடத்தில் சேர்ந்து விடுகின்றர்கள்." திலகரின்
15

Page 10
இக்கூற்று தேசிய இயக்கத்தின் தலைமைப் பாத்திரத்தை வகித்த இந்திய தேசிய முதலாளித்துவ வாக்கத்தின் உள்ளார்ந்த பல வீனங்களில் ஒன்ருகவும் கொள்ள முடியும். அரவிந்தர், வ. வே. சு. ஐயர், சீதாராமராஜு, நீலகண்ட பிரமச்சாரி போன் ருேரின் பிற்கால நிலையின் வெளிப்பாடே இது வா கும். பாரதி யாரைப் பொறுத்தவரை தன் இறுதி நாள் வரை ஆன் மீக" வேதாந்தக் கருத்துக்களுக்கும் தேசிய இயக்கப் பணிகளுக்கு மிடையில் சரியான ஒரு எல்லை வகுத்து முன்னுதாரணமாகச் செயற்பட்டார் என்று கூற முடியும்.
இந்திய தேசிய இயக்கத்தில் காணப்பட்ட மித வா த ப் போக்கையும், தனிநபர் பயங்கரவாதத்தையும் ஏற்றுக் கொள் ளாத அதே வேளை பாரதி தீவிர தேசிய எழுச்சிக் கருத்துக்கண்க் கொண்ட திலகர் தலைமையிலான புதுக்கட்சியார் எனப்பட்ட சக்திகளின் தென்நாட்டுப் பிரதிநிதிகளில் குருவராகச் செயல் பட்டார்.
'நமக்குத் தொழில் கவிதை, நாட்டுக் குழைத்தல் இமைப் பொழுதும் சோராதிருத்தல்" எனக் கூறி கவிஞனுக்குரிய நல் நோக்கை வெளிப்படுத்தியவர் பாரதி. நாட்டுக்கு உழைக்கும் கவியான பாரதியார் இந்தியா பத்திரிகை மூலம் ஆங்கிலேயப் ஆட்சிக்கு எதிராக நெருப்பு மழை பொழியும் கட்டுரைகளை எழுதினர். அன்றைய பிரதான முரண்டாடு காலனி ஆதிக்கத் திற்கும் இந்திய மக்களுக்கிடையில் சி ஒன்று கவுமே இருந்தது. பாரதி இந்த முரண்பாட்டில் எவ்வச் சமரசத்திற்கும் இடமற்ற வகையில் தன்னை மக்களின் பக்கத்தில் நிறுத்தி திலகர் தன்மை யிலான தீவிர தேசிய வாதிகளின் எழுச்சிக் கருத்துக்களை மக்கள் மத்தியில் பரப்பும் பணியில் தன்னை முற்று முழுதாக அற்பணித் தார்
1906 - ம் ஆண்டு கல்கத்தா காங்கிரஸ் முதன் முதலில் சுயராஜ்யம் என்ற கோரிக்கையை முன் வைத்தது. ஆணுல் அதற்கு முன்பே திலகர் தலைமையிலான புதுக்கட்சியார் சுதேசியம். அந்நியப்பொருள் பகிஷ்காரம், தேசியக் கல்வி, என்ற மூன்று அம்சங்களை வலியுறுத்தி வந்தனர். சுயராஜ்யக் கோரிக்கை முன் வைக்கப்பட்ட பின் திலகர் விளக்கம் தருகையில் 'சுயராஜ்யம் மூலத்தண்டு என்றும் சுதேசியம், அந்நியப் பொருள் பகிஷ்கார மும் அதன் கிளைகள் என்றும் கூறினர்.
16
 

இவ் விடத்திலே இத்தியாவினதும் சீனவினதும் தேசிய இயக்கங்களுக்கிடையில் காணப்பட்ட தன்மைகளை சுருக்கமாகப் பார்ப்பது பயனுள்ளதாகும். இந்தியாவில் சுதேசியம், அந்நியப் பொருள் பகிஷ்காரம், தேசியக் கல்வி என்ற மூன்றும் வலியு றுத்தப்பட்ட சம காலத்திலேயே சீனுவில் டாக்டர் சன்யட் சன் தலைமையிலான முதலாளித்துவ சக்திகள் தேசியம், ஜனநாய கம், மக்கள் ஜீவனுேபாயம் என்ற மூன்று மக்கள் கோட்பாடு+ளே முன்வைத்தன. அதன் அடிப்படையிலேயே 1911 ம் ஆண்டு புரட் சியை சன்யட்சன் நடத்தினர். இப் புரட்சி யே சீன வின் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியாகத் திகழ்ந்தது. இப்புரட் சியில் முன் வைக்கப்பட்ட மூன்று மக்கள்கோட்டாடுகள் 1924 ல் சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் ஏற்பட்ட 2 ற வால் பு தி ய மூன்று மக்கள் கோட்பாடுகள் என மாற்றம் பெற்ற ன. கம்யூனிஸ்ட் கட்சியுடன் ஐக்கியம், சோவியத் யூனியனுடன் ஒத் துழைப்பு, தொழிலாளர் விவசாயிகளுக்கு உதவுதல் என்ன இவை மூன்றுமாகும். இது சீனக் கம்யூனிஸ்ட் கட்சி சீன முத லாளி வார்க்கத்தை கையாண்ட சரியான தன்மையால் மட்டு மன்றி சீன முதலாளித்துவத்தின் தேச நலன் கருதிய முற்போக் கான நிலையாலும் ஏற்பட்ட தொன்ருகும். இதனுலேயே சீன முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியானது தொடர்ச்சியாக முன்னேறி விரைவிலேயே தொழிலாளி வர்க்கத்தின் தலைமையி லான புதிய ஜனநாயகப் புரட்சியின் வெற்றிக்கு இட்டுச் சென் நறது. அதே வேளை இந்திய தேசிய இயக்கம் இந்திய நிலப்பிர புத்துவ இந்துமதப் பிற்போக்குத் தனங்களுக்கு எதிராகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முடியாத முதாளித்துவ சக்திகளின் பிடிக்குள் அகப்பட்டு தேசிய இயக்கம் தேசிய விடுதலை இயக்கமாக மாற்றமடைந்து இறுதியான வெற்றியை அடைய முடி யா து போய்விட்டது.
பாரதியார் இந்தியா பத்திரிகை மூலம் புதுக் கட்சியினர் கொண்ட கொள்கைகளையும் கருத்துக்களையும் தீவிரமாகப் பிர சாரம் செய்தார். 1907 ஜனவரி 12-ல் இந்தியா பத்திரிகையில் சுதேசியத்திற்கு விளக்கமளிக்கையில் பாரதியார் பின்வருமாறு எழுதிஞர் ' சுதேசியம் என்ருல் என்ன? தனது தாய் நாட் டின் கண் உண்டாகும் பேரன்பே சுதேசியமாகும். அந்த அன் பானது ஒரு மனிதன் பிறக்கும் போதே உடன் உண்டாகி விடு கிறது. ஒரு ஊரில் பிறந்தவன் அது பூண்டு முளையாத பாழ் நிலத்தில் அமைந்திருப்பினும் அதைப் பல விதமாய்ப் புகழ்ந்து
17

Page 11
பேசுவது வழக்கம்: அதன் காரணம் அந்த மண்ணில் பிறந்ததால் உண்டாகியிருக்கும் பேரன்புதான்".
இவ்வாறு தேசியத்திற்கு விளக்கமளித்த பாரதியார் தேசியக் கல்வி பற்றி பின்வருமாறு கூறுகிருர். ' தேசத்தின் வாழ்வுக் கும் மேன்மைக்கும் தேசியக் கல்வி இன்றியமையாதது. தேசியக் கல்வி கற்றுக் கொடுக்காத தேசத்தை தேசம் என்று சொல்லு தல் தகாது. அது மனிதப் பிசாசுகள் கூடி வாழும் விஸ்தாரமான சுடுகாடேயாகும்" என்ருர்,
பாரதியின் தேசியப் பார்வை மிகமிக அகன்ற தொன்ருகும். பல்வேறு மொழி, மத, கலாச்சார பிரிவுகளை உள்ளடக்கிய பரந்த இந்திய மக்களை ரத மக்களாகவே காண்கின்றர். பிரித்தா ளும் சூழ்ச்சி1ை ந3.முறைப் படுத்திய ஆங்கிலேய ஆட்சியின் கீழ் இந்திய மக்க%ள ஒரே மக்களாகக் கணித்த தேசியப் பார்வை யானது அன்றைய கட்டத்தில் மிக அவசியமான தொன்றேயா கும், "ஜ தி மதங்களைப் பாரோம் - உயர் ஜன்மம் இத்தேசத்தில் எய்தினராயின் . . முப்பது கோடியும் வாழ்வோம் - விழில் முப்பது கோடி முழுமையும் வீழ்வோம்" என தேசிய ஐக் கி யம் வலியுறுத்தி நின்றவர் பாரதி,
இந்தியாவில் இருந்து வந்த பல்வேறு மொழிகளையும் அவற் றுக்க இருந்த சிறப்பியல்புகளையும் போற்றி மதித்த பாரதியார் தமிழ் மொழிக்கு இருந்த தொன்மையையும், சிறப்பையும் வாயார வாழ்த்தினர். அதே வேளை தமிழ் மொழிக்கும், தமிழர்களுக்கும் இருந்த குறைபாடுகளையும், இழி நிலையையும் புட்டுக் காட்டி மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் பேசுவதில் பயன் இல்லை என இடித்துர்ைத்தார்.
பாரதியார் எச்சந்தர்ப்பத்திலும் குறுகிய தேசிய வாதத்திற் குள் தன்னை அமுக்கிக் கொண்டது கிடையாது. அன்று இந்தியா வில் ஆங்கிலேயர் தமது சூழ்ச்சிக்கு இரையாக்க முனைந்ததும் பிற்காலத்தில் வெற்றி பெற்றதுமான இந்து - முஸ்லீம் பிரிவி னையை பாரதியார் மிகத் தீர்க்க தரிசனத்துடன் அணுகினர் என் பது வெள்ளிடைமலை.
"ஹிந்துக்சளுக்கும், மகமதியர்களுக்கும் மத விரோதம் உண் டென்பதை ஆங்கிலேயர்கள் எடுத்து வற்புறுத்திக் காட்டுவதில்
18

யாரும் ஏமாந்து விடக்கூடாது. கிறிஸ்து மார்களுக்கும், மகமதி யர்களுக்கும் நூற்ருண்டுக் கணக்கான விரோதம் உண்டல்லவா? அதை மிருதுவான வார்த்தைகளால் ஆங்கிலேயர்கள் நழுவ விடுவதை நம்புவோன் நிகரில்லாத மூடனவான் ". இவ்வாறு ஆங்கிலேயர்களின் பிரச்சார சூழ்ச்சிக்கு ஆப்பு வைத்த பாரதியார் இந்து முஸ்லீம் ஒற்றுமையை வற்புறுத்தி கீழ்க்கண்டவாறு எழுதி ஞா.
* மகமதியர்கள் தங்கள் நாட்டை விட்டு இதையே சுய நாடாக எப்பொழுது அடைந்தார்களோ அன்று முதல் அவர்க ளுக்கும் நமக்கும் ஒரு வித சம்பந்தம் ஏற்பட்டு விட்டது. நாமும் அவர்களின் பேரில் பூர்வீக குற்றங்களை எடுத்துரைத்தல் தப்பி தம். அவர்களும் நம்மை உடன் பிறந்தவர்கள் எனப் பாவிக்கு நடக்க வேண்டும். நமக்குள்ளே எவ்வளவு சச்சரவுகள் நேர்ந்த போதிலும் நம்மைப் பிரித்து அரசாள எண்ணம் கொண்டுள்ள ஐரோப்பியரின் எண்ணத்தை குலைப்பதே நமது முதல் கடமை",
என வற்புறுத்திய பாரதியார், ஆங்கிலேய எதிர்ப்புக்குப் பெருவிழாவாக எடுக்கப்பட்ட வீர சிவாஜி விழாவோடு அக்பர் விழாவும் கொண்டாட வேண்டும் என வலியுறுத்தினர்.
பாரதியின் தேசியப் பார்  ைவ யானது மேலோட்டமான தொன்று என்று கூறிவிட முடியாது. அல்லது உயர் வர்க்கப் பிரிவினருடன் மட்டும் நின்று விட்ட தொன்றல்ல. அது சமுதா யத்தின் கீழ்மட்ட மக்களின் அன்ருட வாழ்வு தாழ்வோடு ஒன்றிணைந்ததாக இருந்தது. ஆங்கிலேய அடக்குமுறை ஆட்சி யாளர்களை நாட்டைவிட்டு அகற்றும் தேசிய இயக்கப் போராட் டத்தில் இந்தியச் சாதாரண மக்களின் பங்களிப்பை நன்கு உணர்ந்து, அவர்களைத் தட்டி எழுப்ப கவிதையாலும் கட்டுரை யாலும் பணி புரிந்தவர் பாரதி. தென் நாட்டிலே குறிப்பாகத் தமிழ் மக்கள் மத்தியில் சுதந்திரத்தின் மகிமை:ையும், விடுதலை யின் தன்மையையும் விரிவுபட எடுத்துக் காட்டுவதில் பாரதி யின் பங்களிப்பு மிகப் பெரிய தொன்ருகும். W வான மழை இல்வை என்றல்
வாழ்வுண்டோ? எந்தை சுயா .rw தீனமெமக் கில்லே யென்றல் - \
தீனரெது செய்வோம். . . . .
என்று கேட்டவர்
19

Page 12
வீரசுதந்திரம் வேண்டி நின்ருர் வேருென்று கொள்வாரோ?
என்ற உண்மையை ஊட்டியவர். பாரதி,
தாய்த்திரு நாட்டை தகர்த்திடும் மிலேச்சரை மாய்திட விரும்பான் வாழ்வு மோர் வாழ்வு கொல்? மான மொன்றிலாது மாற்ருர் தொழும்பராய் ஈனமுற்றிருக்க எவன் கொலோ விரும்புவான்?
இவ்வாறு தாய்நாட்டை பற்றிய பாசத்தை தூண்டி தேச பக்தியை தட்டி எழுப்பிய பாரதி, அன்றைய ஆங்கிலேய ஆட்சி யாளர்களுக்கு இருந்த அடக்குமுறை மனுேபாவத்தை "வெள்ளைக் கார விஞ்சு துரை கூற்று" என்ற கவிதையில் வெளிப்படுத்து கிருர். அதே வேளை தேசபக்தர்களுக்கு இருந்த மனேதிடத்தை தேச பக்தர் சிதமபரம்பிள்ளை மறுமொழி " என்ற கவிதையில் திறம்பட எடுத்துரைக்கின்ருர்.
*" தொண்டு செய்யும் அடிமை "" உனக்கு சுதந்திர நினைவோடா?"
என்று, " தொண்டு செய்யும் அடிமை என்ற கவிதையில் பாரதி நந்தனை பாரத வாசிக்கும், ஐயரை ஆங்கிலேயனுக்கும் ஒப்பிடும் ஒப்புவமை கருத்தாளம் மிக்கதும் அன்றைய நிலையில் துணிச்சல் மிக்கதொன்ருகும். y
இந்திய தேசிய இயக்கத்தின் தீவிர வாதக் கருத்துக்களைக் கொண்ட சக்திகளின் வீர முரசறையும் கவியாக பாரதி திகழ்ந் தார். சாதாரண மக்களில் ஒருவராக, அவர் க ளின் உற்ற நண்பஞக, ஆலோசகளுக, சில சமயங்களில் வழி காட்டியாகவும் செயல் பட்டார். அன்றைய கட்டத்தில் பல தேசிய இயக்கத் தலைவர்கள் அரசியல் ரீதியில் அந்நியரை விரட்டுவதிலும், சுய ராஜ்யம் வேண்டும் என்பதிலும் உறுதியாகவும் தீவிரமாகவும் இருந்த அதேவேளை சமூகப் பார்வையில் பல பிற்போக்குக் கண ஞேட்டங்களைக்கொண்டிருந்தனர். ஆஞல் அந்நியர்களிடம் இருந்து விடுபட்டுவிட்டால் சமுதாய விடுதலையும் பொருளாதார சுபீட்ச மும் தானகவே ஏற்பட்டு விடும் என்ற குருட்டு நம்பிக்கையை பாரதி எப்போதும் கொண்டிருக்கவில்லை.
20

பாரதியின் தேசியப் பார்வையானது தேசியக் கண்ணுேட் டத்தில் பரந்ததாக இருந்ததுபோல் சர்வதேசிய ரீதியிலும் அகன்ற தொன்றகவே காணப்பட்டது. உலகின் பல பாகங்களில் ஆங்கிலேயர்களுக்கும், ஏனைய அடக்குமுறை ஆட்சியாளர்களுக்கும் எதிராக மக்கள் கிளர்ச்சிகள் வெடித்தெழுந்தபோது உடனுக் குடன் அவற்றை ஆதரித்து மக்களின் பக்கத்தில் தன்னை பாரதி எப்பொழுதும் நிறுத்தி வந்தார்.
1905ம் ஆண்டு றஷியப் புரட்சியை அவதானித்த பாரதி 1917 ம் ஆண்டு அக்டோபர் புரட்சி வெற்றி பெற்றதும் அதை வாயார வாழ்த்திய முதலாவது இந்தியக் கவியாக பாரதி இருந் தார் என்ருல் சர்வதேசிய நடவடிக்கைகளில் அவர் காட்டிய முழுமையான ஈடுபாட்டை அறிந்து கொள்ள முடியும். ஜாரை இரணியனுக்கு ஒப்பிட்டு அதைப் பழைய ரஷியாவென்றும் பொது வுடமை ஆட்சியை புதிய றவியா எனவும் இனம் காட்டியவர் Lirfrg).
இந்தியாவின் அயல் நாடான சீன தேசத்தைப் பற்றியும் அத் தேசத்தின் தேசிய எழுச் சிப் போக்கையும் ஆழமாகக் கண்டு கொள்ளும் சந்தர்ப்பம் பாரதியாருக்கு முழுமையாக கிட்டவில்லை யாயினும் சீனுவின் எதிர்கால எழுச்சியில் ஒரு நம்பிக்கையைக் கொண்டிருந்தார் என்பது காணக்கூடியதே. " சீனு பெரிய ராக்ஷதன். ஆனல் துர்க்குணமுள்ள ராக்ஷதனன்று. ஒரு வகை யில் கும்பகர்ணனுக்கு ஒப்பிடலாம்" எனக் கூறிய பாரதியார், 1906 ம் ஆண்டு செப்டம்பரில் இந்தியா பத்திரிகையில் எழுது கையில் ‘* சீனு தனது தூக்க நிலையில் இருந்து எழுந்து விட்டதா ஞல் பிறகு கீழ்த்திசை முழுவதிலும் உன்னத நிலைக்கு வந்து விடும் என்பதில் சந்தேகமே இல்லை" என்ற பாரதியின் கூற்று எவ்வளவு நீர்க்க தரிசன மிக்கது என்பதை இன்று நடை முறை யில் நாம் காணமுடிகிறது.
முதலாவது உலக மகா யுத் த த் திற்கு முன்பு வீறு பெற் றிருந்த இந்திய தேசிய இயக்கம், தனி நபா பயங்கரவாதம் உட்பட யுத்தகாலத்துடன் தணிந்து போகிறது. தீவிரவாத தேசிய இயக்கத் தலைவர்கள் பலர் சிறைக்கு அனுப்பப்படுகின்ற னர். 1907 ல் திலகர் பர்மாவின் மாண்டலே சிறைக்கு அனுப் பப்படுகிறர். பாஞ்சாலச் சிங்கம் என வர்ணிக்கப்பட்ட லாலா லஜபதிராயும் அதே மாண்டலே சிறைக்கு அனுப்பப்படுகிறர்.
21

Page 13
வ. உ. சி. க்கு இருபது வருட கடூழியச் சிறை. சுப்பிரமணிய சிவாவுக்கு பத்து வருடச்சிறை. பாரதியை ஆசிரியராக க் கொண்ட இந்தியா பத்திரிகைக்கு கெடுபிடி. அதன் பதிவு ஆசிரி யர் கைது செய்யப்பட்டு 5 ஆண்டுகள் சிறைக்கு அனுப்பப்படுகி Сүт •
இந்நிலையில் 1908 ல் பாரதி சென்னையில் இருந்து பிரான் சுக் காலனியாக இருந்த புதுச்சேரிக்குத் தப்பிச் செல்கிருர். அங்கு இந்தியா பத்திரிகை தொடர்ந்து வெளியிடப்பட்டு 1910 ல் அதுவும் நின்று போய் விடுகிறது.
பத்து ஆண்டுகள் பாரதியார் புதுச்சேரியில் வாழ்கின்ருர், அங்கே அரவிந்தர், வ. வே. சு. ஐயர் போன்ற ஒரு கால தீவிர வாதிகள் இங்கு ஆன்மீக ஆராய்ச்சிகளில் காலத்தைச் செலவழிக் கின்றனர். இக் காலகட்டத்தில் ஆன்மீக மத ஆராய்ச்சிகளில் அதிகம் ஈடுபட்ட அரவிந்தர் போன்றேர் ஆன்மீக ஈடேற்றம் மட்டுமே இந்திய மக்களுக்கு விமோசனம் அளிக்கும் என்ற முடி வுக்கு வந்த வேளையிலும் பாரதி மிகவும் நிதானமாகவே இருந் தார். தனது முன்னைய கருத்துக்களையும், நிலைப்பாட்டையும் கைவிட்டு நேர் எதிரான நிலைப்பாட்டிற்கு அவர் வர விரும்ப வில்லை. இந்த வகையில் பாரதியை ஏனைய தீவிரவாதிகளை விட மிகவும் நிதானமடைந்த ஒரு விடுதல் வீரனுகவே மதிக்க வேண் டும். புதுச்சேரி வாழ்க்கை போதிய பலன் தரவில்லை யெனக் கண்டதும், மீண்டும் சென்னைக்கு 1918 ல் திரும்பிய பாரதி சுதேச மித்திரன் பத்திரிகையில் உதவி ஆசிரியராகச் சேர்ந்து பணி புரி கின்ருர்,
அக்காலத்திலேயே சர்க்கரைச் செட்டியார், சிங்காரவேலு செட்டியார் போன்றவர்கள் சென்னையில் தொழிலாளர் இயக்கங் களை கட்டி வளர்க்கும் பணிகளில் ஈடுபடுகின்றனர். இக் கட்டத் திலேயே பொதுவுடமைக் கருத்துக்களைப் பரப்ப வேண்டும் என்ற ஆர்வம் மேற்கூறியவர்கள் மத்தியில் தீவிரமடைகின்றது. பாரதி யார் இவர்களுடன் தொடர்பு கொண்டு தொழிலாளர் இயக்கங் களைக் கட்டி எழுப்புவதிலும், வேலை நிறுத்தங்களை உருவாக்குவதி லும் ஈடுபடுகின்றர். VA
இவ்வளவிற்கும் இந்தியாவில் பொதுவுடைமைக் கருத்துக்கள் ஆங்காங்கே காணப்பட்டாலும் பொதுவுடமைக் கட்சி என்பது
22

தேசிய மட்டத்தில் உருவாக்கப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கதாகும். 1921 - 22 ல் எம். சிங்காரவேலு செட்டியார் இன் னும் சிலருடன் சேர்ந்து பொதுவுடைமைக் கருத்துக்களைக் கொண்ட துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டார். இவர்களே தென்நாட்டில் முதன் முதலில் பொதுவுடமைக் கருத்துக்களை விதைத்தவர்கள் என்று குறிப்பிடப்படுகின்றது.
புதுச்சேரியை விட்டு 1918ல் சென்னைக்குத் திரும்பிய பாரதி மூன்று ஆண்டுகளில் அதாவது 1921 செப்டம்பர் பதினென்றில் இறந்து விடுகின்றர். இம் மூன்று ஆண்டுகளில்தான் பொது வுடமைக் கருத்துக்களை புரிந்திருக்க வேண்டுமானுல் புரிந்து கொள்ள வேண்டிய சந்தர்ப்பமும் தேவையும் பாரதிக்கு இருந் திருக்கும். ஆனல் தேசிய மட்டத்திலும் சரி, தென்நாட்டிலும் சரி பொதுவுடமைக் கருத்துக்கள் மிகக் குறைந்தளவு நிலையில் அதுவும் தனிநபர்களின் முயற்சியாலேயே தூவப்பட்ட நிலையில் இருந்த காரணத்தால் பாரதிக்கு பொதுவுடமைக் கொள்கைக ளின் மீது இருந்த சந்தேகங்களையும் விளக்கங்களையும் கண்டறிந்து கொள்வதற்கு சந்தர்ப்பம் இல்லாது இருந்தது எனலாம். பாரதி இறந்து நான்கு ஆண்டுகளுக்கு பின்பே அதாவது 1925 ம் ஆண் டிலேயே இந்திய பொதுவுடமைக் கட்சி தேசிய ரீதியில் ஆரம் பிக்கப்பட்டது என்ற வரலாற்றைத் தெரிந்து கொண்டவர்கள், ஏன் பாரதி முரணற்ற பொதுவுடமைக் கவியாக இருக்கவில்லை என விஞக்கிளப்பி விமர்சனம் செய்வோர்களின் வரட்டு நிலை யைப் புரிந்து கொள்ள முடியும்.
பார தி பொதுவுடமைக் கவியாகவோ, வர்க்கப்போராட் டத்தை வலியுறுத்திப் பாடவேண்டிய கவியாகவோ அன்று இருந் திருக்க முடியாது. அன்றைய சூழ்நிலையில் மிகவும் முற்போக் கான தொன்ருக இந்திய தேசிய இயக்க அரங்கிலே நின்ற தீவிர தேசிய வாத சக்திகளின் கவியாகவே, தேச விடுதலை விரும் பியாகவே பாரதி காணப்பட்டார். எனவே பாரதி வாழ்ந்த சூழ் நிலையில் வைத்து பாரதியின் நிலைப்பாட்டை கணித்துக் கொள் வதுடன் அன்றைய தேசிய இயக்கத்தில் பாரதி கொண்டிருந்த உறுதியான முற்போக்கான பாத்திரத்தை வரையறை செய்து கொள்வதே முற்றிலும் சரியான தொன்ருகும். இவ்வாறு வரை யறுக்கும் போது கீழ்வரும் முடிவுகளுக்கு வரமுடியும்.
23

Page 14
0 இந்திய தேசிய இயக்கத்தின் எழுச்சி மிக்க ஒரு காலகட் டத்தில் வாழ்ந்த பாரதி தமிழ் நாட்டில் அ த ன் உந்து விசையாக இருந்தார்.
0 அன்று நிலவிய பிரதான முரண்பாடு காலனி ஆதிக்க வாதி களுக்கும் மக்களுக்கிடையிலான தொன்றேயாகும். இம் முரண் பாட்டில் அந்நியரை நாட்டைவிட்டு அகற்றும் தேசிய இயக் கத்தில் எவ்வித சமரசத்திற்கும், விட்டுக் கொடுப்பிற்கும் இடம் கொடாது பாரதியார் இறுதிவரை தன் நிலையில் உறுதியாக இருந்தார்.
0 முழு இந்தியாவையும் முழுமையாகப் பார்த்த பாரதி குறு கிய தேசிய வாதத்திற்குள் தன்னைச் சிறைப்படுத்திக் கொண் டது கிடையாது.
0 இந்து - முஸ்லிம் ஒற்றுமையை சமகாலத்தவர்களை விட மிகத் துரதிருஷ்டியுடன் பார்த்து ஆக்க பூர்வமான ஆலோசனை களை வைத்தவர் பாரதி. s
0 தேசிய இயக்கத்தில் காணப்பட்ட மிதவாதப் பே r க் கை எதிர்த்து, தனிநபர் பயங்கரவாதப் போக்கை நிராகரித்தவர்.
O சாதி தீண்டாமையின் கேவலங்களை அம்பலமாக்கி எதிர்த்த வர். பெண் விடுதலையை வற்புறுத்தி சமூக வி டு த லை ப் போராட்டத்தின் ஒரு பகுதியாக அதனை இணைத்துப் போரா டியவர்.
0 பாரதி நாட்டையும் மக்களையும் தேசித்து எதிர்காலத்தை மிக நம்பிக்கையுடன் எதிர்பார்த்த சிறந்த தேசபக்தன். உண்மையான ஒரு தேசியவாதி.
இந்திய தேசிய இயக்கத்தின் நீண்ட காலப் பகுதியில் பாரதி யின் பங்களிப்பு மிகக் குறுகிய காலமேயாகும். அக் கு று கி ய காலத்திலும் தான்வாழ்ந்த சூழ்நிலைமைகளுக்கு அமைய தன்னு லியன்ற முற்போக்கான பணியை பாரதி ஆற்றி இருந்தார். அது பிற்கால சந்ததிக்குப் பல பயனுள்ள படிப்பினைகளையும் அனுபவங்களையும் கொடுத்திருக்கின்றது.
- Ο --
24

மரணத்திலும் மகத்துவம்
மே தினத்தின்
மாலை நேரம், வெள்ளி முகில்கள் பொன்னுயெரிந்து அவிந்து அடங்கி மேலைவானுடன் மெலிதாய்ச் சிவந்து கீழை மலைகளில் செம்மை தெறித்த இன்னுமொரு மாலை நேரம். சாயும் சூரியன் மெல்ல இறங்கும். சாகும் சூரியன் சிவந்து விரிந்து சாவிற் கூட அழகுடன் ஒளிரும், மூளிவானம் மேலும் சிவந்து மூன்று நாளிகை இரவை மறிக்கும், வானில்
மெல்ல வொரு வெள்ளியும் என் மனதில். போராளித் தோழர்களின் நினைவும்
எழும.
- மணி
கலைஞர்களுக்கு
கீழைக்காற்று
சுழன்றடிக்குது. ஆயிரம் காடுகள் அடர்ந்து இருள்கின்றன. போர் மூட்டம் ஆகாயத்தை கண்மறைக்கிறது.
கலைஞனிடமிருந்து புதியவார்ப்புகளைக் கேட்கிருேம்! அந்த வசந்தகால மலைகள் ரத்த நிறத்தில் வரையப்படட்டும்!
- லூ சூன் நன்றி: சோஷலிசக் கவிதைகள்.
25.

Page 15
26
* அஞ்சலிப் பூக்கள்
செலுத்தப்படாத அஞ்சலிக்காக சென்ற உன் ஆத்மா சாந்தி அடையவில்லையா? நண்பனேஅன்று
நீ மரித்தபோது உயிரற்ற உன் உடலை தூக்கி வைத்து ஒட்டு
கேட்டவர்கள் இன்று.
வருடந்தோறும் தேர்தல் வந்திருந்தால்
வாரந்தோறும் நீ நினைக்கப்பட்டிருப்பாய்
P -ஆனல்
அவர்கள் உனக்குமட்டுமல்ல
-உன் நினைவுகளுக்கும் அஞ்சலி செலுத்தி
-விட்டார்கள்பொன்மண்டம் அமைய வேண்டிய உன் புதைகுழியில் புல் பூண்டுகள் மண்டி விட்டதற்காக! நீ வருத்தப்படுகின்ருயா சந்தா பணத்தையே கணக்கிடும் இவர்களால் h− உண் தியாகத்தை கணிப்பிடத் தெரியாது சோதரனே!
உன் புதைகுழி வெடிக்கும் போதெல்லாம் எம் இதயமும் வெடித்துதான் போகின்றது. அன்று நீ ஒலமிட்டாயே அந்த -ஒலம் இன்றும் எங்கள் லயங்களில் கேட்டுக் கொண்டு தான் இருக்கின்றது
ஒரு முந்நூறு ஏக்கருக்காக மூச்சற்று போனுயே -இன்றுமுப்பதினுயிரம் ஏக்கர்கள் பறிக்கப்பட்டு விட்டன சோதரனே, போகிற போக்கில் எங்களைப் புதைக்க எட்டடி நிலம் கூட இருக்குமா என்பதும் சந்தேகமே! அந்நியர்களின் அஞ்சலியால் உன் ஆத்மா அசுத்தப் படக் கூடாது இதோ! எமது அஞ்சலிப் பூக்கள்
சிகப்பு பூக்களாய் - உன் பாதங்களில்
— Loapapasıdir

சிறுகதை
நியாயங்கள்
அந்தச் செய்தி எங்குமே பர பரப்பின விளைத்திருந்தது. ஆற் றுப் பள்ளத்தாக்குத் திட்டத்தி லுள்ள ஒவ்வொருவனது வாயி லும் அந்தச்சம்பவமே இரண்டு தினங்களாக பேசப்பட்டு, இன் லும் முடிவடையாமலே நீண்டு கொண்டு போகின்றது.
பிரதம பொறியியலாளர் பங்களாவின் திருட்டைப்பற்றிய செய்தியே அது. பிற நாட்டு பொறியியலாளர், பொருளr தார உதவிகளோடு நிர்மானிக் கப்பட்டு வரும் பாரிய வேலைத் தி ட் டத் தி ன் பிரதேசத்திலே நடந்த இத்திருட்டினே உடனடி யாகவே கண்டுபிடிக்கும் படி பிர தேச பொலிஸ் அதிகாரிக்கு, கொழும்பிலிருந்து கண்டிப்பான கட்டளை வந்துவிட்டது, இவர்க ளுக்குத் துணையாக கொழும்பிலி ருந்தும் விசேட கி.ஐ.டி. பொலிஸ் பிரிவினர் வந்துள்ளதாகவும் கதையடிபட்டது. அது உண்மை யாக இருக்கலாம். இப்போது புதி காக, சிலமுகங்கள் அங்கு தென்பட்டன. முன்னர் போல
* செ. யோகநாதன்
இல்லாமல் ஒவ்வொருவரும் இப் போது மற்றவரைக் கண்டால் அவசரமாகப் பேசினர். அல்லது பேசாமலே பரபரப்போடு தமது வேலைகளினுள்ளே பீதியுற்றமுகத் துடன் வேலையினுள்ளே புதைந்து கொண்டனர். நிர்வாக அதிகாரி பெட்டிஷன்களுக்காக இரண்டு  ைபல் களை திறந்துவிட்டார். புதிது புதிதாக மோசடிகள் பற்றி யெல்லாம் பெட்டிஷன்கள் வந்து கொண்டிருந்தன. தனது உதவி யாளரிடம் அவர் ரகசியமாகக் கிசுகிசுத்துக் கொண்டார்.
"மடையன்கள், ஒருதனைப் பற்றி ஒருதன் தகவல் கள் கொடுத்து கடைசியில் எல்லா ருமே முறையாக மாட்டுப்பட்டு நிற்கப் போருங்கள், அதுவும் சி. ஐ. டி. வந்திருக்கிற நேரத் திலை." பின்னர் நிர்வாக அதி காரி சில நிமிஷங்கள் வரை
யோசித்தார். எழுந்து வெளியே போனவர் ஸ்டோர்கீப்பரைக் கண்டார். அவரது பிரச்சினை
களை நெஞ்சிலே அ ப் படி யே சுமந்து கொண்டுவந்த ஸ்டோர்
27

Page 16
கீப்பரது மனதினுள்ளே முடி வொன் று உருவாகியிருந்தது. அதைப்பற்றி நிர்வாக அதிகாரி யோடு பேசி ஒரு நல்ல தீர்வினை எடுத்தாக வேண்டுமென்று அவ ரது மனம் முடிவு கொண்டிருந்
5.
“வெளியாலே இருந்துவந்து இஞ்சினியர் வீட்டிலே இவ்வளவு லட்சம் ரூபா ப் பொருட்களை களவெடுத்தவனை எல்லாருமாக ஒத்துநின்று பிடித்துக் கொடுக் கிறதுக்குப் பதிலாக நாங்கள் ஒரு தருக்கொருதர் குழிபறிக்கிற தாலே ஆருக்குத் தீமையுண்டா கும், எங்களுக்குத்தான். எப்படி யும் எல்லாரும் இந்த விஷயத் திலே ஒரு மனதான தீர்மானத் துக்கு வரவேணும் . ஒத்து நின்று இந்தக் கள்ளனைப் பிடிக்க வேணும். அதுக்காக எங்களினு டைய பணத்திலை நூறு ஆயிரம் என்று செலவு போனலும் பரவாயில்லை. இ ைத ப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்? நீங்கள்தான் இந்த விஷயத்திலை முன்னுக்கு நிற்கவேனும் என்கி றது என்னுடைய தாழ்மையான
அபிப்பிராயம். '
மூச்சுவிடாமலே கதைத்துக் கொண்டுபோன ஸ்டோர் கீப்பர் சிலகணங்களிற்கு நிறுத் தி , தன் னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு நிர்வாக அதிகாரியின் முகத்தினை ஊடுருவினர். தான் நினைத்ததை இவர் சொல்கிருரே
28
என்ற மனப்பூரிப்பு நிர்வாக அதிகாரிக்கு.
it சொல்லுகிறது முற்றி லும் உண்மைதான், இஞ்சினியர் லட்சக்கணக்கிலை திரு ட் டு க் கொடுத்திருக்கிறார். முதலில் அந் தக் கள் ள னை க் கண்டுபிடிக்க வேணும். அதைவிட்டு ஒருதருக் கொருதர் இங்கை வேலை செய் கிறவர்களே பெட்டிசம் போட்டுக் கொண்டிருந்தால் பலர் மறிய லுக்கும், மிஞ்சியுள்ள சிலர் நிரந் தரமாகவே வீட்டுக்கும் போ க வேண்டிவரும். இதை ஒவ்வொரு வரும் உணரச் செய்யவேணும். நாங்கள் இரண்டுபேரும் அந்த வேலையை உடனேயே தொடங்க வேணும். இர ண் டு அஸிஸ் டன்ட் இஞ்சினியர்களும் நான் சொன்னுல் அப்படியே கேட்டுக் கொள்ளுவினை. 86 பீல்ட் ஒபிசர் களேயும் அவர் கள் கவனிக்க முடியும். இந்த ஒ பி சிலை யும் 64 பேரையும் நாங்கள் உடனே தனித்தனியே சந்திக்க வேணும். பெரிய கஷ்டமில்லை."
"இஞ்சினியருக்கு பொலிசும் நல்ல அ ஃண வு என்று அறிந் தேன், இவருடைய மைத்துனர் கொழும்பிலே செல்வாக்கான ஒரு எஸ். பி. அதைவிட பிரதி மந்திரியினுடைய மகளைத்தான் இஞ்சினியருக்கு திருமணம் பேசி யிருப்பதாயும் அறிகிறேன்"
நீர்ஒரு ஸ்டோர்கீப்ப பத்திரிகை
''ge... ராயிருப்பதைவிட

நிருபராக இருப்பதற்கு பொருத் தமான ஆள்தான்!'
ஆச்சரியங் கலந்தகுரலிலே நிர்வாக அதிகாரி கூறிஞர் ஸ்டோர்கீப்பரின் சர்வாங்கமும் பரவசம் பெற்றது.
"ஆனதாலை இஞ்சினியருக்கு நாங்கள் செய்கிற உதவி பலவி தத்திலும் எங்களுக்கு நன்மை தரும், அல்லாவிட்டால் பெரிய கஷ்டங்களை எதிர் கொள்ள வேண்டிவருமென்கிறது சத்தி
யம்.
2
நிர்வாக அதிகாரிக்கு மிக வும் சந்தோஷம், அவருடைய இருபத்தி ஆறுவருஷகால அர சாங்கசேவையிலே, இதுபோன்ற திட்டமிட்ட காரிய மொன்று திட்டமிட்டபடியே இவ்விதமாக நிறைவு பெற்றதில்லை. சென்ற வாரம் க  ைத த் த விஷயத்தை அவரும், ஸ் டோர் கீப்பரும் சேர்ந்து அந்த ஆற்றுப்பள்ளத் தாக்கு நிர்மாண அமைப்புத் திட்டத்திலே பணியாற்றுகின்ற மொத்தம் 150 பேருக்கும் வெகு விரிவாக விளக்கிச் சொல்லி அவர் களை தங்கள் கருத்தினை அப்ப டியே ஏற்கும்படி செய்துவிட் டார்கள், அதை உறுதிப்படுத்து கிருற்போல இப்போது "பெட் டிச பைலுக்கு ஒருவிதமான பெட்டிசமும் வராமல் அப்படியே அலுமாரியின் அடித்தட்டுக்குள் கட்டி வைக்கப்பட்டிருந்ததுது
புதன் கிழமை மத்தியானம் பதினெரு மணியளவில் அலுவ லகத்துக்குள்ளே நிறைந்த சந் தோஷத்தோடு புகுந்தார் செக் கண்ட் கிளாக்கர். அவர் உத்தி யோகத்திற்குப் போன நாளிலி ருந்து கையிலே ஜேம்ஸ் கார்ட்லி சேஸ், ஜேம்ஸ் பொண்ட் நாவல் களைத் தவருது கொண்டு செல் பவர். தினசரி வரவு இடாப்புப் புத்தகம், சம்பளப்பட்டியல் என் பனவற்றில் கையெழுத்து ப் போடுவது தவிர்ந்த ஏனைய நேரங் களில் மேற்படி துப்பறியும் மர்ம நாவல்க்ளினுள்ளேயே ஆழ ந் து போயிருப்பவர். நிர்வாக அதி காரி அவரைக்கூட அணுகியிருந் தார். தான் இவ்வளவு காலமும் பெற்ற அரசாங்க சம்பளத்திற்கு தனது துப்பறியும் அறிவினை மிகநுட்பமாக பிரயோகிக்கப் போவதாக அவர். சூளுரைத்தார் ஐந்தாறு தினங்களாய் அப்பகுதி முழுவதும் பித் துப் பிடித்தவர் போல திரிந்த அவர், இ ன் று தான் இவ்வளவு மகிழ்வோடு அலுவலகத்துக்குள் பிரவேசிக் கின்ருர்,
"எல்லாச் சிக்கு களு மே அவிழ்ந்து போய்விட்டது, கள் ளன் பிடிபட்டுவிட்டான். கள் ளன் பிடிபட்டுவிட்டான்.'
அலுவலகப் பணியாட்கள் முழுப்பேருமே அவரை மொய்த் துக்கொண்டனர், காட்டிலுள்ள சிறு பழைய கட்டிடமொன்றி லுள்ள இரண்டுபேர் நின்றிருக்
29

Page 17
கின்றனர், சந்தேகத்திற்சிடமான முறையிலே, ஆட்களைப்பிடித்து நல்ல சாப்பாடு" கொடுத்த பின் னர் முழு உண்மையையும் சொல் லியிருக்கிருர்கள், புதைத்த இடம் எ வரெ வரிடம் கொடுத்து மறைத்து வைத்திருக்கிருர்கள் என்ற எல்லா விஷயமுமே அம் பலமாகிவிட்டது. கொழும்பிலி ருந்து இன்று காலையிலேதான் எஸ். பி. ஒருவரும் விசாரணை பற்றி அறிவதற்காக வந்திருக் கிருர், குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்ருல் இந்த எஸ். பி. பிரதம பொறியியலாளரின் மைத்
துனர் என்று சொன்னர் இங் குள்ள இன்ஸ்பெக்டர்.
'பார்த்தீர்களா? எது எப்
படியாயிருந்தாலும் சொந்தக்கா ரனின் ஆர்வத்தைவிட, பொலிஸ் காரனின் துப்பறியும் வேகந்தான் விஷயத்தையே அம்பலமாக்கியி ருக்கிறது. துப்பறிபவனின் கண் கள் அப்படித்தான் இருக்கவேண் டும்..? என்று ஒன்றுக்கொன்று பொருத் த மில்லாமல் அவர் சொல்லிக் கொண்டிருந்தபோது ஏனையோர் பிரதமபொறியியலா ளரின் பங்களாவை நோ க் கிச் செல்ல ஆரம்பித் துவிட்டார்கள்,
3.
பிரதம பொறியியலாளர் மிகவும் சந்தோஷ கரமாகக் காணப்படுவார் என நினைத்துப்
போன நிர்வாக அதிகாரிக்கு மிக வும் அதிசயமாகப் போய்விட்
30
முன்னரைவிடக் குழம்பிய . لقيـا மூகம், கவலை தோய்ந்த கண்கள். திடீரென முதுமைதட்டிய தோற் றம்.
"ஏன் சேர். , ஏன் இப்படி மாறிப்போய் விட்டீர்கள்? இந்த விஷயத்துக்கெல்லாம் இப்படியா tro 677 670) 35 uloj  ேப ா ட் டு யோசிக்கிறது. அதுவும் மைத் துனர் இவ்வளவு செல்வாக்கோ டும், உதவிசெய்து கொண்டும் இருக்கிறபோது, இனிக்கவலையை விட்டிட்டு ஒரு மாதலீவு எடுத் துக் கொண்டு எங்காவது நல்ல ஆறுதலாயிருந்து விட்டு வாருங்க. நான் 28 வருஷ காலம் இந்த சேர்வீசுக்குள்ளை கிடந்து Llofru! றன். எவ்வளவோ விழ்ச் சி யெல்லாம் வந்திருக்குது. அதுக் கதுக்கு தக்கவழிகளைக்கையாண்டு நல்ல நிம்மதியாக இருக்கப்பழக வேணும்."
பிரதம பொறியியலாளர், քիri , வாக அதிகாரியை மிகுந்த நன்றி
யோடு பார்த்தார். என்றுமே நிர் வாக அதிகாரியை அவர் மிகவும் மதித்து நடப்பவர். இருபத்தாறு வருஷ அரசாங்க சேவையிலே அவர் கொண்டிருந்த அனுபவம் மட்டுமல்ல. அதற்குக் காரணம் நிர்வாக அதிகாரியின் எந்த ஆலோசனையையும் கண்ணைமூடிக் கொண்டு, கைப்பிடிக்கலாம், நிச் சயமாகக் காப்பாற்றி விடும்,
சிறிது நேரம் பொறியியலாளர்
யோசித்தார். பின்னர் ஒரு தீர்

மானத்துக்கு வந்தவர் போல நிர் வாக அதிகாரியைப் பார்த்தார்.
"கொஞ்சம் நின்று கொள் ளுங்கள், சில விஷயங்கள் பேச வேண்டியதாக இருக்கிறது."
இப்படி அவர் சொன்னதும் மற்றவர்கள் ஒருவர் "பின் ஒரு வ ரா க பொறியியலாளரிடம் விடைபெற்றுக் கொண்டு கலைய ஆரம்பித்தனர். நிர்வாக அதிகா ரியை பொறியலாளர் தனது அறைக்குள்ளே அழைத்துச் செல் லவும், அவரது மைத்துனரான எஸ். பி. அங்கே வரவும் நேரம் சரியாக இருந்தது. எஸ், 'பியை நிர்வாக அதிகாரிக்கு அறிமுகப் படுத்திய பிரதம பொறியியலா ளர், 'நான் இவரோடு ஒரு அந் த ரங் க மும் வைத்துக்கொள்வ தில்லை. *" என்று நிர்வாக அதிகாரியைப் பற்றி க் கூறிய போது நிர்வாக அதிகாரிக்குப் பெருமை பி டி பட வில் லை. லேசாக காற்றிலே மிதப்பதாய் உணர்ந்தார்.
எஸ். பி யே தொடங்கினர்.
க  ைத  ையத்
**மொத்தமாய் ஏழு லட்சம் ரூபா காசாகவும், மூன்று சங் கிலிகள் ஒவ்வொன்றும் ஏழு தங் கப்பவுண் கொண்டதாகவும், மூன்று வைடூரியக் கற்கள், இன் னும் பொலிசாரால் மதிப்பிடப் படவில்லை. மூன்று வைர மோதி ரங்கள். சாதாரண மோதிரம்
நான்கு. இவற்ருேடு சிலபேணுக் களையும் களவெடுத்ததாக கள் ளின் ஒப்புக் கொண்டுவிட்டான். இருபதினயிரம் ரூபாவரைதான் மீட்க முடியவில்லை.
நிர்வாக அதிகாரியின் மூளை யிலே மின்னலடித்தது.
மூன்று மாதங்களின் முன்னே தான் பிரதம பொறியியலாள ரின் ஆண்டு வருமானத்தொகை u 1 t fi 6 TgibauTub Tes, G3 A5 mr L - Lவருமானமும் சேர்த்து எண்பதி ஞயிரம் ரூபா எனக் காட்டி "வரு மான வரிப் பணம்" கட்டப்பட் டது. வேருெரு அரசாங்க உறுதி மொழிப் பத்திரத்திலும், "எனது அறிவுக் கெட்டியவரையில் உண் மையாக எனது ஆண்டு தேறிய வரு மா ன ம் எண்பதினுயிரம்" என்று சத்தியம் செய்து ஒப்ப மிட்டுருந்தார் பொறியியலாளர்.
t "வாக்குமூலம் பதிந் தா கி
விட்டதா? .."
பரபரப்போடு ே கட்டார் நிர்வாக அதிகாரி. அவரை அர்த்தபுஷ்டியாகப் பார்த்தார். எஸ். பி.
'நீங்கள் ஏன் இந்தக் கேள்வி யைக் கேட்கிறீர்கள் எ ன் று எனக்குத் தெரியும். நீங்கள் புத்தி சாலிதான். ஆனல் வா க்கு மூலம் எடுப்பதை எவ்வளவு நாளைக்கு தாமதிக்க முடியும். அது மட்டுமல்ல நீதிபதியின் முன்
31

Page 18
இவனை ஆஜராக்க வேண்டும்."
சிறிது நேரம் யோசித்து விட்டு எஸ். பி. தொடர்ந்தார்.
*பிரதி மந்திரியின் மகளுக் கும் இவருக்கும் திருமணம் நடை பெறவுள்ளது என்பது எல்லோ ருக்கும் தெரிந்த விஷயம். போதாக் குறைக்கு இந்த ஸ்டேஷ னிலையுள்ள எஸ். ஐயும், இரண்டு பொலிஸ்காரரும் எதிர்க்கட்சிக்
காரருக்கு அனுசரணையானவர்
கள். இந்த விஷயம் வெளியில் தெரிந்தால் எதிர்க்கட்சிக்காரர் எங்களெல்லாரையும் நார்தாரா கக் கிழித்தெறிவார்கள்."
"இந்தச் சொத்து விபரம் எவ்வளவென்று எதிக்கட்சியை ஆதரிக்கிற பொலிஸ்காரருக்குத் தெரியுமோ??
- நிர்வாக அதிகாரி கூர்மை LurresøT LurrriřGochuGuumrG) G3s L strř. °வாக்குமூலம் பதியப்பட்டபிறகு இதெல்லாம் அம்பலத்துக்கு வரு கிற விஷயந்தானே."
கவலையோடு பெருமூச்செறிந் தார் எஸ். பி.
"வாக்குமூலம் பதியப்பட்ட தற்குப் பிறகுதானே எஸ். பி. உங்களிடமிருந்து
a 60-5,
சேர் இந்தப் பிரச்சினையெல் லாம். அதை விடுங்க. எஸ். பி. சேர் உங்களோடு நான் தனியாக ஒரு விஷயம் பேச வேணும்." பொறியியலாளரின் முகம் ஆச்சரி யங் கொண்டது.
4. அதிகாலையிலே அரைகுறைத் தூக்கத்திலிருந்த பொலிஸ்காரர் திடுமென விழித்தெழுந்தார்.
ஜெனரேட்டரின் மங் கிய ஒளி வெளிச்சத்தில் பொ லி ஸ் நிலையம் சோம்பித் தெரிந்தது. ஏதோ நினைவில் நித்திரைக்கலக் கத்தோடு நிமாண்ட் றுாமுக்கரு கிலே போன பொலிஸ்காரர் கொஞ்சம் உற்றுப் பார்த்தார். மீண்டும் உற்றுப் பார்த்தார். வாச விலே தலைகுப்புறவாய், பொறியியலாளர் வீட்டில் திரு டிய கள்ளன் இரத்தம் வழிய அலங்கோலமாகக் கிடப்பதைக் கண்டார். கிட்டவாகச் சென்று கதவுக்கம்பியின் வழியாக கையை வைத்து அவனது த லை யில் தொட, தலை அப்படியே முறிந்து சாய்ந்தது.
噸,*
கவிதை, கட்டுரை மற்றும்
இலக்கிய ஆக்கங்களை
தொடர்பு:
க, தணிகாசலம், 15/1, மின்சார நிலைய விதி யாழ்ப்பாணம், இலங்கை
32
எதிர்பார்க்கிறேம்.
- ஆசிரியர் குழு -

சொற்பாதம் யோ. பெனடிக்பாலன்
பொம்மைகள்
Markwww.
இச்சிறுதீவின் கள்ளர் குகைச் சதுக்கத்தில் பேச்சுக்கடை நடத்தும் அரசியல் வியாபாரிகள் பிரித்தானியர் கட்டிக்கொடுத்த *சனநாயகச் சந்தையில் மிக விரும்பி வாங்கும் விளையாட்டுச் சாமான் தலையாட்டிப் பொம்மைகள்
2
தலையாட்டும் வரை
sets சோக்கான பொம்மைகள் தலையாட்டம் நின்று போனல் ୫୫୫) ଈu பயமுறுத்தும் பூதங்கள் அவர்கள் விதிப்படி ஆடாத தல்ைகள் என்றும் ஆபத்தானவை தீக்குச்சி தட்டித் தலைகளைத் தேடுவோர் சட்டத்தின் அமைதி நிலவும் மூலை முடுக்குகளில் କଅଁ କଁ} &! துப்பாக்கி முனைகளில் தொங்குவதைக் காணலாம்!
SV 3.

Page 19
34
அழுகைக் கோச்சியிலே.
அழுகைக் கோச்சியிலே அவர்கள் செல்கிருர்கள் அதில் பலர்; ? " • ! பெற்ற மக்களேயும் ஈன்ற பெற்ருேரையும் வாழ்க்கைத் துணைவரையும் வாழ்க்கைத் துணைவியையும் வசந்தகாலத்து விளிம்பினிலே வானத்து சோடிகள் போல் வாழ்வை வட்டமிட்ட வாலிபரும் வனிதையரும்
ஏஞே * k மாடுகள் ஆடுகள் போல் பிரிந்தே செல்கிறர்கள்.
s
*சிக்கு புக்கு நீலகிரி தொப்பித்தோட்டம் - நாங்கப் போற கோச்சியிலே ஆளுக்கூட்டம்" என்று இன்றும் உண்மை கதை கூறும் - பல
ஊமைகள் நிலை கூறும்
அழுகைக் கேர்ச்சியிலே
அவர்கள் செல்கிருர்கன்,
அதஞல் தினம் பிரிவுகளே கருவாகிப் பிறக்கின்ற உலகத்தில் சிலரின் சீறிய மூச்சுக்கள் சிதறப் பிளக்கிறது வாண்.
அவர்கள் நாட்டிற்கு உழைத்தவர்கள் நாயாய் திரிகின்ற போதும் நாடு கடத்துதற்கே சிலர் பேயாய் திரிகின்ற போதும் "ஒய்யாரம் எமக்கென்ன வேண்டும்"
தினம் ரீங்காரம் செய்கின்ற பாடல் ஓங்காரம் தானும் செய்யாது - இந்த சங்கார வாழ்க்கை எமக்கேணுே ر சிக்கு புக்கு நீலகிரி தொப்பித்தோட்டம் - தாங்க போர கோச்சியிலே ஆளுக்கூட்டம் என்று இன்றும்
அழுகைக் கோச்சியிலே 噶歌 。 ayawrissir செல்கிறர்கள், ത്ത ஜனப்பிரியூன்

மரபும்
மாக்வியவாதியும்
மொழி, இலக்கிய மரபுகள் பற்றியும் மத ம் சடங்குகள், சம்பிரதாயங்கள் பற்றியும் மரபு வாதிகள் கொண்டுள்ள கருத்தும் மாக்ஸிய வாதிகள் கொண்டுள்ள கருத்துக்களும் sylgliu 60Lub முரணுனவை. ஆயினும் மாக் ஸியவாதிகளது நிலைப்பாடு பகுத் தறிவு வாதிகள் எனப்படுவோர் மற்றும் அவர்களைச் சார்ந்தோ ரது நிலைப்பாட்டினும் வேறுபட்டது. இந்த வேறுபாடு கள் அடிப்படையான சிந்த னை முறை சார்ந்தவை. சில சமயங் களில் நடைமுறைப் பிரச்சனை களை மாக்ளியவாதிகள் அணு கும் முறையும் கையாளும் வித மும் மர பு:பேணும் நிலைப்பாடு சார்ந்ததாகவே சிலருக்குத் தெள் படலாம். பகுத்தறிவு வாதிகள் எனப்படுவோர் இதன் கர்ரன மாகவே மாக்ஸிய வாதிகளுடன் பெரிதும் முரண்பட்ட சந்தர்ப்பங் களும் உள்ளன. ஆயினும், பகுத்தறிவு இயக்கத்தின் தடை முறை, தென் இந்தியாவில் அவர்களையே தம் சிந்தண்டிமுரண் பாடுகளது. கைதிகளாக்கி விட்
மிகவும்
- சி. சிவசேகரம் -
டதை நாம் காணலாம்.
மனித வாழ்க்கையை நாம் உற்று அவதானித்தால் எத்த னையோ “பகுத் தறிவு க் கு ஒவ் வாத" , "தேவையற்ற காரியங் களைக் காணலாம். இவை இல் லாமற் போவதால் மனிதனது நேரமும் உழைப்பும் பெருமள வில் மீதப்படுத்தப்பட்டுப் பய னுள்ள திசைகளில் பிரயோகிக் கப்படலாம் என்ற வா தம் மேலோட்டமாக நோக்கும்போது மிகவும் சரியாகவே படலாம். ஆயினும் இது மனிதன் என்கிற சமுதாய விலங்கின் தன்மையை அதன் வரலாற்றுச் சூழலினின்று பிரித்துப் பார்ப்பதன் விளைவே யாகும். இந்த இடத்தில்தான் மரபு வாதியும் "பகுத்தறிவுவாதி யும் தமது மாரு நிலையியலில் ஒருமை காண்கிருர்கள். மரபு வாதி சடங்குகளையும் சம்பிர தாயங்களையும் நிரந் த ரமா ன நியதிகளாக, சமுதாயச்சூழலுக்கு அப்பாற்பட்ட உண்மை சார்ந்த வையாகவே எண்ணுகிருன், பகுத்தறிவு வாதியும் அவற்றைச்
35

Page 20
சமுதாயத்தின் வரலாற்றுச் சூழ லுக்குப் புறம்பாகவே வைத்து நோக்குகிருன். பண்டைய இந் தியப் பொருள்முதல் வா தம் (லோகாயுதம்) நால் வேதங்க ளின் அடிப்படையிலான மதங்க ளையும் இவ்வாறே அணுகியது. மரபின் வலிமையும், ம ர  ைப எதிர்ப்பதில் அதனை முழுதாக விளங்கிக் கொள்ளும் ஆற் ற ல் இல்லாமையும் பொருள் முதல் வாதிகளது வீழ்ச்சிக்குக் காரண மாயின, இந்திய மெய்யியல் வர லாற்றில் அவர்களது தோல்வி அவர்களது மாரு நிலை யி ய ல் அணுகு முறையின் தோல்வியே எனலாம். இன்றைய "பகுத்தறிவு வாதியின்" நிலைப்பாடு பழைய லோகாயத வாதியினதினின்றும் அதிகம் முன்னேறிய ஒன்றல்ல.
இந்திய மரபும், வாழ்க்கை மு  ைற யும் பற்றிய ஆராய்வை அதற்குரிய வரலாற்றுப் பின்னணி யில் மேற்கொள்வதன் மூலமே அதைச் சரியாக விளங்கிக் கொள் ளவும், அச்சமுதாயத்தை அதன் சீரழிவினின்று மீட்கவும் முடியும். மரபு ட ன் குருட்டுத்தனமாக மோதுவது, இறுதி ஆராய்வில், பிற்போக்கான சக்திகளையே ஆத ரித்து நிற்கிறது. இந்திய சமுதா பத்தின் மரபுகட்கு அடிப்படை யாக அமைந்துள்ள நால் வேதங் களையும், அதற்குப் பிற் பட்ட பழம் நூல்களையும் மரபு வாதிகள் தெய்வீகமானவையாகப் போற்றி னர். காலப்போக்கில் சமுதாய மாற்றங்கள் அவற்றை வியாக்
36
கியானம் செய்வதில் புதிய பிரச் சனைகளை உண்டாக்கின. இதன் விளைவுகள் வேத நூல்கள் வேத மரபு சார்ந்தவர்கள் மத்தியில் முரண்பாடான கருத்து க் க
உருவாக்கியது மட்டுமன்றி வேத
நூல்களையே நிராகரிக்கும் சிந் தனை முறைகளையும் ஏற்படுத் தின. வேதங்கள் சொல் வன சரியா பி  ைழ யா, சரியாயின் அதன் உண்மைப் பொருள் என்ன என்ற வித மா க வாதங்கள் வளர்ந்தனவேயொழிய, நவீன
சிந்தனையும் மரக்ஸிய வரலாற்று
அணுகு முறையும் பரிச்சயமாகும் வரை, வேதங்கள் தம் ஆரம்பத் தில் கூற முனைந்தமை என்ன அவை எதைப் பிரதிபலித்தன என்பதில் அதிகம் தெளிவு பிறக்க வில்லை எனலாம்.
கொசாம்பி, டாங்கே போன் ருேர், வேத நூல்கள் அவை உரு வான காலத்தின் சமுதாய வாழ்க்கை முறையையே அடிப் படையில் பிரதிபலித்தன என் பதை விளக்கினர்கள். சடங்கு கள், சம்பிரதாயங்கள் எல்லாமே ஒரு கூட்டு சமுதாய வாழ்க்கை முறையினின்றும் உருவானவை என்று தெளிவு படுத்தினர். சமு தாய அபிவிருத்தி, வர்க்க சமு தாயத்தின் வளர்ச்சி எ ன் பன நீதிகள், சாஸ்திரங்கள் ஆகியவற் றுக்கு வழி கோலின. ஒரு சுரண் டல் சமுதாய அமைப்பு ஸ்திர
மானபோது இவ்வாருண மரபுகள்
எல்லாம் ஆளும் வர்க்கத்தின ட

ருக்குச் சாதகமான முறையில் அச் சமுதாய அ  ைம ப்பை ப் பேணும் வித மாக ஒரு 'நிரந் தரத் தன்மை எய்தின. அந்த அமைப்பு ஒரு நீண்ட வரலாற் றுக்காலகட்டத்துக்குப் பின்பு சமு தாய மாற்றங்கட்கு ஈடுகொடுக்க
முடியாமலும் சமுதாய மாற்றங்.
களை வேண்டி நின்ற சூழ்நிலை கட்கு முரண்பட்டும் நின்றன. இதன் விளைவாக இம் மரபுகள் அவற்றின் சாராம்சத்தினின்று விடுபட்டு யந்திர ரீதியாகவே பின் பற்றப் படுகின்றன. சில சூழ் நிலைகளில் சமுதாயச் சூழலில் ஏற்படும் மாற்றங்கள் இவற்றைக் குரூரமாக விகாரப்படுத்தியதும் உண்டு. இவ்வாருன விகாரப் படுத்தல் ஆளும் வர்க்கத்தின் குறுகிய கால நலனையொட்டி அமைவதும் பெ ரும் பாலும் தவிர்க்க முடியாததே;
மரபு வழியாக வந்த விஷ யங்கள் எல்லாமே சரியானவை, உள்ளபடியே பேணப்பட வேண் டியவை என்ற வாதம் சமுதாய மாற்றங்களின் விளைவாக தம் வர்க்க நலன்களும் அதிகாரங்க ளும் அழிந்து விடுமே என்று அஞ்சும் ஒரு வர்க்கத்துக்கு உரி யன. எனினும் மனித சமுதாயத் தின் மீது மரபின் பிடிப்பு மிகவும் பலமானது. பல பழக்கவழக்கங் கள், சம்பிரதாயங்கள், சடங்கு கள் நம்பிக்கைகள் போன்றன மக்கள் மத்தியில் ஊறிப் போய் விடுகின்றன. சமகாலச் சூழலில் அவசியமற்றன மட்டுமல்ல கெடு
போராடுவார்கள்3
தலானவை என்று பரவலாகவே தெரிந்தும் கூடச் சில மரபுவழிப் பயிற்சிகள் கடைப்பிடிக்கப்படு கின்றன. நீண்ட கால நடை முறையும் சமுதாய மாற்றங்க ளின் நிர்ப்பந்தங்களுமே மனி தன அவற்றின் பிடிப்பினின்று மெல்ல மெல்ல விடுவிக்கின்றன. அப்படியும் கூட, சில காரியங் கள் குறைந்த பட்சம் ஒரு பாசாங் காகவேனும் கடைப்பிடிக்கப்படு வதை நாம் உணரலாம். இத் தகைய சூழ்நிலையில் மரபை அப்
படியே பேண விரும்புவோர் அது
சாத்தியமற்றது என்று தெரிந் தும் அதன் காரணங்களை உண ரவோ ஆராயவோ முடியாமல் "கலி முற்றிவிட்டது" , "கால ம் கெட்டுப்போயிற்று" என்று முன கிக்கொண்டே நைந்து சிதைந்த மரபைத் தம்மால் முடிந்தவாறு பேண முனைகிருர்கள். சில சூழ் நிலைகளில் சமுதாயச் சிக்கல்கள் இவர்கட்குச் சாதகமாக அமை யும்போது வேதகாலத்தை நோக் கிச் சமுதாயத்தை செலுத்தப் இவர் கள் கூறும் வேதகாலம் என்னவென்று இவர்கட்குத் தெரியுமோ என்பது வேறு விஷயம். ஆயினும் படு பிற்போக்கு சக்திகள் இவர்களு டன் ஒன்றிணைவது என்னவோ தவிர்க்கமுடியாதது.
மரபு வழிவந்த மூட நம்பிக் கைகளையும் பகுத்தறிவுக்கொவ் வாத பழக்க வழக்கங்களையும் களைந்தொழிய முனையும் பகுத் தறிவுக் காரர்கள்" அவற்றைச்
37

Page 21
சமுதாய முழுமையின் கூறுகள்ாக வாழ்க்கையினின்றும் ஒரே யடி யாகப் பிரித்து நோக்க முடியாத விஷயங்களாக அவ தா னிப் ப தில்லை. எனவே இவர்கள் சமு தாயத்தைப் பகுதி பகுதியாகக் கழற்றிச் சீர்திருத்த முனை யும் "மெக்கானிக் குகளாகி விடுகிருர் கள். இந்தப் பழுது பார்த்தல் "சீர்திருத்தத் திருமணம்" , "கலப் புத் திருமணம்” , பிள் ளை யார் சிலை உடைப்பு, ராகு காலத்தில் சுப காரி யங் கள் செய்வது போன்று துண்டு துண்டாக நடை பெறும். இதன் ஒட்டு மொத்த மான விளைவு என்ன வென்ருல் ஒரு சடங்கின் இடத் தி ல் இன் னுெரு சடங்கும் ஒரு சமுதாய ஊழலின் இடத்தில் இன்னுெரு சமுதாய ஊழலும் வந்து அமை வதுதான். மரபின் பொரு ந் தாமை காரணமாக ஏற்படும் பிரச்சனைகளையே பிரதான முரண் பாடு என்று இனங் காண்பதால் இவர்களால் பெரும்பான்மை மக்களை வென்றெடுக்க முடி வ தில்லை. முடிவில் இவர்களது வைத்தியமே ஒரு நோயாகி விடு கிறது. சாதி எதிர்ப்பு பார்ப் பான எதிர்ப்பாகி இன்று அதுவே பிராமணரல்லாத உயர்சாதியின ரின் பார்ப்பணியமாகி விட்டது இதற்கு ஒரு நல்ல உதாரணம்.
"பகுத்தறிவு வாதிகள் தாம் தூக்கியெறிய முனைந்த பழமை யின் இடத்தில் எதை வைப்பது என்பது பற்றிய தெளிவில்லா மலே இருந்தார்கள் இவர்களது
38
வரலாறு சாராத கண்ணுேட்டம் ஒரு முழுமையற்றதும் தெளிவற் றதுமான ஒரு சிந்தனைப்போக் குக்கே இடமளித்தது. ஆரம்ப காலங்களில் இவர்களை நோக்கி (பல்வேறு அரசியல், சமுதா ய காரணங்களால்) வந்த இளைஞர் களை இவர்களால் வழி காட் டி வளர்த்தெடுக்க முடியவில்லை. புராணப்படத்தின் இடத் தி ல் எம். ஜி ஆர். , சிவாஜி பாணி யில் காதல், சரித்திர, சமுதாய சீர்திருத்த அ  ைர வேக்காடுக ளையே இவர்களால் தரமுடிந்தது. சமஸ்கிருத எதிர்ப்பு 'தனித்தமி ழுக்குப் போக முனைந்து திசை தெரியாமல் திண்டாடநேர்ந்தது. கலை இலக்கியத் துறையிலும் மேடைப் பேச்சிலும் கூட இவர் கட்கு தாமே உருவாக்கிய ஒரு போலித்தனத்தின் விளிம்பைத்
தாண்ட முடியாமல் போய்விட்
டது. இ ன்  ைற ய அரைகுறை முதலாளித்துவ வளர்ச்சி, நவ காலனித்துவத் தாக்கத்தின் விளை வான சமுதாயச் சீரழிவு போன் றவற்றைச் சரியாக அடையாளங் காண முடியாமை என்பன இவர் களது அணுகுமுறையின் இயங்கி யல் சாராத தன்மையுைம் அதன் தோல்வியையுமே குறிக்கின்றன.
மாக்ஸிய வாதிகளது அணுகு முறை எப்போதுமே சரியாக இருந்தது என் ருே அவர்களது நடைமுறை தவறுகட்கு அப்பாற் பட்டது என்ருே மாக்ஸியத்தின் பேரில் வரட்டுத்தனமான ஆய்வு கள் மேற்கொள்ளப்படவில்லை

என்ருே வாதிட நான் முனைய வில்லை. ஆயினும் மனித அறிவின் வரையறைகளையும், ஆராய்வு முறைகள் தவறுகட்கு உட்பட லாம் என்பதையும் மாக் ஸி யம் மறுக்கவில்லை. வரட்டுத்தனமான பகுத்தறிவு வா தம் மாக்ஸியத் துக்கு என்றுமே உடன்பாடான தல்ல. தவறுகளும், தோல்வி களும் கூட ஒரு மாக்ஸிய வாதி யின் அறிவுத் தேடலில் ப யன் படவே செய்கின்றன. எனவே மாக்ஸியவாதி தன் அறிவை என் றைக்குமே சரியானதாகவும், முழு மையானதாகவும், மாற்ற முடி யாத ஒன்ருகவும் கருதுவதில்லை. புதிய தகவல்களுக்கும் அனுபவங் கட்கும் சூழ்நிலைகட்கும் வரவேற் புள்ள மனதில் மூடப்பட்ட சிந் தனக்கு இடமில்லை.
மாக்ஸியவாதிகள் ம ர  ைப மனித சமுதா ய வரலாற்றின் அடிப்படையில் வைத்து நோக்கு வதால் அங்கே ஒரு புற ம் சம காலத்துக்குப் பயனு ஸ் ள வர லாற்று வழிச் சாதனைகளையும் இன்னெருபுறம் வளர்ச்சியின் போக்கிற்கு இசையாமல் இன் னும் ஒட்டிக்கொண்டு இருக்கும் விஷயங்களையும் 9 Go lurr GMT ub காண முடிகிறது பயனுள் ள அம்சங்கள் என்பவை கூட முற் ருகவே ஏற்கக் கூடிய வடிவில் குறைபாடுகள் இல்லாமல் இருப் பவையும் அல்ல. பயனற்றவை யாவுமே ஒரே வீச்சில், பாரதூர மான எதிர் விளைவுகள் இல்லா
மல், நீக்கப்படக் கூ டி யனவும் அல்ல. எனவே சமுதாய யதார்த் தத்தை மனதில் வைத் துக் கொண்டே மரபு சர்ர்ந்த விஷ யங்களை அணுக வேண்டியுள்ளது. கழிக்கப்பட வேண்டிய எந்த அம் சமும் பரவலான சமுதாய அங்கீ காரமின்றிக் கழிக்கப்படுவதில்லை. எனவே பரந்துபட்ட மக்களது நலன்களுக்கு விரோதமாக அமை யும் அம்சங்களைத் தெளிவாக இனங்காண்பதும் எடுத்துக்காட் டுவதும் ஒரு முக்கிய அம்சமாகி றது. அது மட்டுமன்றி நிராக ரிக்கப்படும் ஒரு அம்சம் போவ தால் ஏற்படும் வெற்றிடத்தை எவ்வாறு நிரப்புவது என்ற கேள் வியும் முக்கியமான ஒன்ருகிறது. இந்த அடிப்படையில்தான் மத சுதந்திரம், வழிபாட்டுச் சுதந்தி ரம், மரபுகட்கு மதிப்பளித்தல் என்பன சோஷலிஸ சமுதாய அமைப்பில் வலியுறுத்தப்படுகின் றன. சமய, கலாச்சார மரபுகள் சமுதாய விரோதமான முறை யில் பிற்போக்கு சக்திகளால் பயன்படுத்தப்படும் சூழ்நிலைகளி லும் சமுதாய மாற்றத்திற்கு முர னக நிற் கும் சூழ்நிலைகளிலும் மட்டுமே சம்பந்தப்பட்ட அம்சங் sei பிரச்சனைக்குரியனவாகின் றன. இங்கே கூட, ஒரு மதம் இன்னுெரு மதத்துக்கு வரலாற்று ரீதியாகக் காட்டிவந்த சகிப்புத் தன்மையை விட அதிகமான அள வில் சோஷலிஸ சமுதாயம் மதங் கள் எல்லாவற்றுக்குமே சகிப்புத் தன்மை காட்டி வந்துள்ளது.
39

Page 22
மரபு வழி யாக வந்த தொழில்நுட்பம், மருத்துவம் கைத்திறன், கலே வடிவங்கள் என் பன சமுதாய மாற்றத்தின்போது வெவ்வேறு அளவுகளில் பாதிப் புக்கு உள்ளாகின்றன. நம்முடை யது போன்ற சமுதாயத்தில் சமூ தாய மாற்றம் அதன் வளர்ச்சிப் போக்கில் நிகழ்ந்த குறுக் கீடு காரணமாக ஏற்பட்டதால் நம் பாரம்பரியத்தின் சகல அம்சங்க ளும் தேக்கத்துக்கோ பெரும் வரலாற்று முறிவுக்கோ உட்பட நேர்ந்தது. இதன் தீய விக்ாவுகளி வின்று மீள் வது மரபுவாதிக்கு வரலாற்றில் பின்னுேக்கிப் போவ தன் மூலமே சாத்தியமென்று படுகிறது. மரபுவாதியின் கண் ணில், நவீன சமுதாயத்தின் பிழைகளை யெல்லாம் அகற்றி விட்டு ஐநூருே ஆயி ர மோ ஐயாயிரமோ ஆண்டுகள் முன் பிருந்ததாகக் கருதப்படும் ஒரு அ ைம ப் பின் அடிப்படையில் பழைய விஞ்ஞான கலவடிவங் களை மீண்டும் உயிர்ப்பிப்பதன் மூலமே சமுதாயம் உரு ப் பட முடி யும் என்று தெரிகிறது. ஓரிரண்டு விஷயங்களில் பழமை எதையாவது விட்டுக் கொடுக்க லாம் என்ற சலுகை போக பழமை மீது இவர்களது நம் பிக்கை அசைக்க முடியாத ஒன் ரூகவுள்ளது.
*பகுத்தறிவுவாதி மரபை அதன் சம கா ல வ டி வி ல் , சிதைந்து போன அதன் வடிவில், நோக்குகிருள். அது அவனுக்கு
40
முற்ருகவே அகற்றப்பட வேண்
டிய ஒன் ரு க வே படுகிறது. அங்கே அதன் வரலாற்று முக் கியத்துவமோ ம னித உணர்வு கள் சார் ந் த தேவைகளோ, "பகுத்தறிவுக்கு ஒவ்வாத விஷ யங்களாகி விடுகின்றன. பழைய லோகாயுதவாதி மாதிரி, ஜடத் தன்மையானவையாகவே விஷ யங்களைக் கருதுகிறன்.
மாக் ஸி ய வா தி  ையப் பொறுத்த வரை மரபான து மனித குல த் தி ன் சாதனையாக மதிக்கத்தக்க ஒன்முக இருக்கி றதே ஒழிய வணக்கத்துக்குரிய ஒன்ருக அல்ல. அதே போல் மரபு எத்தனை இழிந்து விட்டா லும் அதில் மனித மனம் கொண் டுள்ள ஈ டு பா டு காரணமாக, மனித உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும் என்பதற்காக, அது கவனத்துடனயே கையாளப்படு கிறது. அது மட்டுமன்றி மரபு வழியான விஞ்ஞான, கலைச்சாத னைகளையும் பாரம்பரிய அறிவை யும் ஒட்டுமொத்தமாக நிராகரிக் கும் போக்கோ புறக்கணிக்கும் தன்மையோ மாக்ஸியவாதிக்கு ஏற்புடையதல்ல. ஆயினும் , சமகால விஞ்ஞானம், கலை என் பன மேற்கிலிருந்து திணிக்கப் பட்டவை" என்பதற்காக மட் டுமே அவற்றை நிராகரித்து, நம் பாரம்பரியத்தின் அடிப்படை யிலேயே புதிய ஆக்கங்கள் செய் யப்பட வேண்டும் என்றும் கருது வதற்கில்லை. எதுவுமே "புதியது"

என்பதாலோ "பழையது" என்ப தாலோ மட்டுமே ஏற்கத்தக்க தாகி விட முடியாது. சூழலுக்கும் வரலாற்றுப் போக் குக்கும் சார்பாகவே ஒவ்வொரு விஷயமும் மதிப்பிடப்படுகிறது. இங்கே இயந்திர ரீதியான அணுகு முறைக்கு இடமே இல்லை.
மரபு சார்ந்த விஷயங்களைக் கையாளும் நடைமுறையானது பிரச்சனைகட்கு அப்பாற்பட்ட தல்ல. சில அரசியற் சூழல் களும் சமுதாய நெருக்கடிகளும் நிர்ப்பந்தங்களும் தவருண முறை யில் விஷயங்களைக் கையாளும் நிலையை உருவாக்கி விடுகின்றன. ஆயினும் விழிப்புணர்வோடு செயற்படும் மாக்ஸிய இயக்கத் திற்கு இவை நிவர்த்தி செய்ய முடியாத த வறு க ள் அல்ல. லோச்சாரப் புரட்சியின் போது வ்வாறு இழைக்கப்பட்ட பல
சமகாலச்
தவறுகள் இன்று நிவர்த்திக்கப்
பட்டு விட்டன.) ஆயினும் மாக் ஸியத்தின் பேரா ல் தவருன அணுகு முறைகள் முன் வைக்கப் படுவதையிட்டு நாம் என்றுமே
எச்சரிக்கையாயிருக்க வேண்டும்.
மேலை நாட்டு நவகாலனித் துவ கலாச்சாரத்தை எதிர்க்கி ருேம் என்ற பேரில் பழைய கலை
|வடிவங்களே தம் கலைகளது எதிர் காலத் துக் கு அத்திவாரமாக
அமைய வேண்டும் எனும் வா த மும், பரதமும் கருநாடக சை
யும் புரட்சிக்கு ஒவ்வாதன_எனும்
வாதமும் மாக்ஸியத்தின் ^ பேரி லேயே வெவ்வேறு கோஷ்டிக ளால் முன்வைக்கப்பட்டுள்ளன. பழைய கலை வடிவங்களை மீட்ப தும் பயன்படுத்துவதும் ஒரு விஷ யம்; அவையே அடிப்படையாக அமைவது இன்னென்று என் பதையும் புரட்சி என்ருல் வெறும் *கத்தியும் ரத்தமும் சங்க தி அல்ல என்பதையும் இவர்கள் தவற விட்டுவிட்டனர். இவர் களில் சிலர் திருவள்ளுவர் நில வுடைமையாளரின் பாதுகாவலர் என்ற மாதிரி ஆராய்ச்சி வெடி குண்டுகளைப் போட்டு விட்டு அதற்கான ஆதாரங்களைக் குறட் பர்க்களுக்குத் தாம் தரும் வக்கிர மான வியாக்கியானங்களிலேயே தேடுவார்கள். துரதிஷ்டவசமாக இந்திய வரலாற்றியல் மர பில் எழுதப்பட்ட வரலாறு என்பது மிகவும் பலவீனமான அ ம் சம் என்பது போக அதை நிதான, மாக ஆராய முடியாதவாறு தமி ழின் தொன்மை பற்றிய புனை கதைகள் வழி மறித்து நின்றன. அண்மைக் காலங்களில் வரலாற் றியலில், காலம் சென்ற பேராசி ரியர் வானமாமலை அவர்களது Guglas TIL-62s ல க் கி ய த் துறையில், காலஞ் சென்ற பேரா சிரியர் கைலாசபதி அவர்களது விளக்கங்களும் தமிழக வரலாற் றுக்குச் சார்பாக தமிழ் இலக்கி யங்களை விளங்கிக் கொள்ள ஒர ளவு துணைபுரிந்துள்ளன. னும் மரபு பற்றிய முன்கூறிய
விறைப்பான பார்வை தொடர்ந்
4.

Page 23
தும் மாக்ளியத்தின் பேரரில் முள் வைக்கப்பட்டே வருகிறது.
சமீப காலமாக, மேலே மூத லாளித்துவ வாயிலாக நமைவத் தடைந்த தொழில் நுட்பம், மருத்துவம் ஆகியன ஏற்படுத் திய சிக்கல்களேயடுத்து, மரபு சார்ந்த விஞ்ஞானம், தொழில் நுட்பம், மருத்துவம் ஆகிய வற்றை நோக்கித் திரும்ப வேண் டும் என்ற கருத்து இந்தியாவில் முன்வைக்கப்பட்டு வருகிறது. இது நமக்கு முற்ருகவே புதிய ஒன்றல்ல. ஆயுர் வேதத்துக்கு நம் நாட்டில் புத்துயிரூட்ட எடுத்த முயற்சிகள் ஆயுர்வேத வைத்தி யர்களுக்கு ஸ்டெதஸ்கோப்பும் வெப்பமானியும் வழங்கி அவர்க ளது மருத்துவ அத்தாட்சிப் பத்திரங்களை செல்லுபடியாக்கி வைத்ததை விட எ  ைதயுமே பெரிதாகச் சாதித்துவிடவில்லை. ஆயுர்வேத மருந்துகள் லே பல் ஒட்டிய போத்தலில் வருவதால் அது ஆயுர் வேதத்தை நவீன மயமாக்கிப் பரவலாக்கியதாகி
விடாது. அது ஆயுர்வேதத்தை வர்த்தகமயமாக்கிய ஒரு பணியே தான். மரபுவழி மருத்து வம் சீனவில் நவீன மருத்துவத்துடன் இணைந்து செயற்பட முடிந்த எம்மக்குக் காரணம் மரபு முதன் மைப் படுத்தப்ப்ட்டமை அல்ல. சமுதாயத்துக்குப் பயனுள் ள விஷயங்களை அடையாளங்கண்டு அவற்றை ஊக்குவிக்கும்ாறு ஒரு சமுதாய மாற் ற ம் ஏற்பட்ட மையே ஆகும்.
எனவே மரபு பற்றிய விஷ யத்திலும் வரலாற்று அடிப்படை யில் சமகால சமுதாயத்தின் யதார்த்த நிலையைக் கணிப்பில் எடுக்காமல் செய்யும் ஆய்வுகள் ஆய்வாளரை இயங்கியல் மறுப் பான ஒருநிலைப்பாட்டுக்கு அவரை யும் அறியாம்லே இட்டுச் சென்று விடும். மாக்ஸியத்தையும் தம் மாரு நிலையியலையும் ஒன்ருகக் கருதிக் குழப்பிக் கொள்பவர்கள் நம் அனுதாபத்துக்கு உரியவர் கள் . O
-A
விஞ்ஞானம் தொழில் நுட்பமும் அதி உன்னத வேகத்தில்
வளர்ந்து வருகிறது.
கடந்த முப்பது ஆண்டுகளில் ஏற்படுத்தப்
பட்ட விஞ்ஞான தொழில் நுட்ப சாதனைகள் மனித சமுதாயம் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் ஏற்படுத்திய மொத்த ச் சாதனைகளையும் கடந்து விட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
42

O முல்லா கதைகள்
எஃபென்டி முல்லா ந ஸ் ரு தின், நஸ்ருதின் ஹோஜா ஆகிய பெயர்களில் வழங்கும் நஸ்ருதின் ஹோஜா துருக்கியில் 13ம் நூற் முண்டில் வாழ்ந்தாரென துருக் கியர்களாலும் தம் பிரதேசத்தில் வாழ்ந்தாரென சோவியத்யூனி யனிலுள்ள தாஜிக், உஸ்பெக் இனத்தவராலும் கொண்டாடப் படும் ஒரு நபரைக் குறிப்பதா கும். மத்திய ஆசியாவில் "ஐயா" என்ற கருத்தில் வழங்கும் எஃ பென்டி எனும் பெயரால் வழங் கப்படும் இவரது சமாதி துருக் கியில் ஆக்செஹிர் எனும் இடத் தில் உள்ளதாகவும் இவரது மூலப் பெயர் ரூமேனியாவைச் சேர்ந்த ஜோகா என்பதாகவும் துருக்கியர் கூறுவர். வருடாவருடம் அங்கு நஸ்ருதின் விழா நடைபெறுகிறது
நஸ்ருதின் கதைகள், தெனுவி ராமன் கதைகள், சிங்களத்தில் அந்தரே கதைகள் ஆகியன ஒத்த
தன்மையுடையன. இஸ்லாமிய
உலகில் முல்லா நஸ்ருதின் கதை
கள் பெரும் செல்வாக்குடையவை.
முல்லாக் கதைகள் வேடிக்கை யானவை மட்டுமன்றி ஆழமான
மதியூகமும் சமுதாய அவதான
மும் தம் முட் பொதிந்தவை
தெனலிராமன் கதைகளும் அந்
தரே கதைகளும் முல்லா கதை
களே ஒட் டி யே ஏற்பட்டவை என்று கருத இடமுண்டு, சமுதாய
சூழல்களின் வேறுபாடுகள் கதை
களின் தன்மையிலும் உள்ளடக்
கத்திலும் புலனுண போதும் அடிப்
படையான ஒற்றுமைகள் இழை
யோடவே செய்கிறது.
*தாயகத்தில் இடைக்கிடை சில முல்லாக் கதைகளை வெளி யிட உத்தேசித்துள்ளோம். இவை சிரிக்கவும் சம கால சமுதாயத் தைப் ப்ற்றிச் சிந்திக்கவும் உதவும் என நம்புகின்ருேம். (ஆ. குழு)
1. பாதுஷாவும் கண்ணுடியும்
ஒருநாள் முல்லா நஸ்ருதி னுடன் பேசிக் கொண்டிருந்த போது பாதுஷா (அரசர்) தன் முகத்தைக் கண்ணுடியிற் பார்த்து விட்டு "நான் அழகாகவே இல்ல்ை இனிமேல் கண்ணுடியில் பார்க் கவே மாட்டேன்" என்று கோபத் துடன்-முல்லாவிடம் சொன்ஞர்.
முல் லா நிதான மாக "ஆரசே! நீங்கள் ஒரே ஒரு தட வைதான் உங்கள் முகத்தைப் பார்த்தவிட்டு முறைப்படுகிறீர்
கள் தினமும் பத்துமுறையாவது
உங்கள் முக த் ைத ப் பார்க்க வேண்டி வருகிறதே. அவர்கள் எப்படியோ அதை ச் சகித்துக் கொள்ளவில்லையா?" என்ருர்,
43

Page 24
2. பெண்கள் சொல்
காதி ஒருவர் மக்களுக்கு எப் **நல்லது. என்னிடம் ஒரு போதும் 'பெண் கள் சொற் ஆடு உள்ளது, அதை உங்களுக் ' குக் கொடுக்கும்படி என் மனைவி சொன்னள். நான் உ ட ன் பட போதிப்பார். வில்லை. இப்போது நீங்கள் பிரச் சனையைத் தீர்த்துவிட்டீர்கள்' ஒரு நாள் முல்லா நஸ்ருதின் என்று சொல்லிவிட்டு முல் லா அவரிடம் வந்து 'ஐயா நான் போக எழுந்தார் இதைக்கேட்ட என் மனைவி சொன்னபடி கேட்க காதி திடுக்கிட்டு 'முல்லாவே! லாமா?' என்ருர், மதிப்புக்குரிய முல்லாவே! என்ன அவசரம்; கேளும், சமய நூல்க ளில் பெண்களின் சொல்லைச் சில சமயங்களில் கேட்கலாம் என்றும் காதி. சொல்லியுள்ளது' என்ருர்,
NZ NZ NZ |
கேட் க வேண்டாம்" எ ன்று
V
**இல்லை. கூடாது' என்ருர்
சுவீட்சலாந்து கடிகாரங்களுக்குப் பெயர் பெற்ற ஒரு நாடாக நீண்டகாலம் திகழ்ந்து வருவது தெரிந்ததே, 1969 லேயே சுவிஸ் நாடு முதலாவது குவாட்ஸ் கடிகாரத்தைச் செய்தது என்ற போதும் அதற்கு ஒரு எதிர்காலம் உண்டென்பதை உணர்ந்து கொள் ள வில்லை. ஆனல் யப்பானியரோ விரைவாகச் செயற்பட்டு தமது முன்னேறிய எலெக்ருேனிக் தொழில் நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்தி உயர்ந்த ரக குவாட்ஸ் கடிகாரங்களை உற்பத்தி செய்து உலக சந்தையிற் குவித்தார்கள். இதன் விளைவாக நூற்றி எழுபத்தி யெட்டு சுவிஸ் கடிகாரத் தொழிற்சாலைகள் 1970 பதுகளின் பிற் பகுதிகளில் பங்குகலோட்டடைந்து மூட வேண்டிய நிலையேற்பட்டது.
8
44

ஹிட்லர்
அய்குங்
நூTருண்டுகளுக்கு முன்னர் நெப்போலியனின் துணிவாற்றலான திட்டம் கானல் நீராயிற்று. பழைய சமுதாயம் தகர்க்கப்பட்டு - புதியமனிதன் - பாட்டாளி, அழைப்பின்றியே வரலாற்று அத்தியாயங்களில் கால் பதித்தான்.
அந்த மாயக்கவர்ச்சிகள் வலுவிழந்துபோய் நூருண்டு காலம் நிறைவுகண்டபின், பூர்ஜுவாக்கள் வெளித்தோன்றினர்கள். பழைய சமுதாயத்தில் புரையோடியிருந்த ராஜபோகங்களால் ஏற்பட்ட இழிநிலையை அகற்ற விதூஷகபாத்திரத்திலே, ஹிட்லரை இவர்கள் கொண்டுவந்து நிறுத்தினர்.
இவன்
வெறித்தனமான பைத்தியத்தோடு கட்டற்ற ஆசைகள், அறிவுக்குப் பொருந்தாத அகந்தை, என்பன உருவாக்கிய ஓர் பயங்கர ஆணவம்
அவனது பார்வையிலே அவனே கதாநாயகன் நிச்சயமாக போனபார்ட்டின் மலினமான பிரதிமை.
இவன்றிச்சார்ட்டை தீயிலிட்ட நஞ்சுமனத்தோன் '; ஜேர்மன் புரட்சியை மேர்ப்பமிட்ட வேட்டைநாய். *டுயூனிச் பொம்மைகளின் கையாளாய்
வஞ்சகத்திலும் சதியிலும் சூதாடியவன்.
45

Page 25
46
மனிதகுலத்தின் அறிவுபூர்வவேலைகளை எதிர்க்கின்ற, மனிதனிடையே சமாதானத்தை எதிர்க்கின்ற, மனிதாபிமான உயர்லட்சியங்களை எதிர்க்கின்ற வரலாற்றின் விதிகளை எதிர்க்கின்ற இவன், யாவையுமே மேலிருந்து கீழாகத்திருப்ப விரும்பினன். சித்திரவதையாலும், சவுக்கடியாலும் சட்டத்தையும், நீதியையும் மீறுவதாலும் , குண்டுகளாலும், துப்பாக்கிகளாலும், இவன் கலை கலாச்சாரத்தை மாற்றியமைக்க விரும்பிஞன்.
புரட்சியின் கழுத்தை நெரித்து, தொழிலாளரை அடக்கியொடுக்கி, புத்தி ஜீவிகளை நாடுகடத்தி, நல்லோர்களைச் சிறையிலிட்டு, ஜேர்மனி முழுவதையுமே பெரியதொரு யுத்த அகதி முகாமிற்குள் தள்ளி விட்டான்.
இவளுல்மக்கள் தமது ரொட்டியையும் பாலையும் இழந்தனர். விடுதலையையும் மகிழ்வையும் பிரிந்தனர். தோல் வார்ச்சவுக்கடியால் இவன், அவர்தம் தொடர்ச்சியான கடுமுயற்சியைப் பறித்துக் கொண்டாள். இவன் ஆக்கிரமித்த இடமெல்லாம் பீதியும் கண்ணிரும் நிறைந்தன! காற்று இரத்தவாடையாய் வீசிற்று. இரத்தக்கறை எங்கும் இருள் படர்த்திற்று, புதைபடாத எலும்புக் கூடுகள் எங்கெங்கும் தூவுண்டி கிடந்தன.
இவன் ஒரு கொலைகாரன்; மட்டமான கிறிமினல். தன் ஒழுக்கமாகப் பிசாசுக்குணத்தைக் கொண்டவன். பகிரங்கமாகவே நல்விஷயங்களை எதிர்த்தவன். எங்கள் காலத்தில் இவன் பெயரது சரியான அர்த்தம்: **குரூரம்", "பயங்கரம்" என்பதே. எல்லா மனிதருக்கும் துன்பத்தை உண்டாக்கினுள், சூருவளிபோல தன்னைப் பின்தொடரும் குதிரை வீரரை - எப்போதும், போர், இதாற்றுநோய்.பசி, மரணத்தை கொண்டுவானைப்பணித்தான்.

யுத்த நெருப்பு மூண்டெரிந்திட - இவன் இனவாதத்தை விசிறியாய் வீசினன் ஜேர்மணியரைக் கூட இவன் தனது காலடியின் கீழே போட்டு நசித்தான். ஒருகையிலே "மெயின் காம்பு" ம், மறுகையிலே பிஸ்டலும் தாங்கி உலகை வெல்வேனென்று வெறியனுய்ச்சிரித்தான்.
நாடுகள் அழிந்தன . மக்கள் அடிமைகளாயினர் . படிகுழியிலிருந்து வாய் பிளந்து சிரித்து இவன் கயவளுப் முனைப்புக்கொண்டபோது உலகின் செம்பாதி இருளிடையே மூழ்கிற்று.
ஆக்கிரமிப்புப் போதையைக் கொண்டிருக்கும் இவன் தன் கடைசி வீரதீரச் செயலுக்கு ஆயத்தமாகிருன் விடுதலையிலும் அமைதியிலும் நிறைந்துள்ள நாடுகளை ஆக்கிரமிக்க மாபெரும் சைனியங்களை அணிவகுக்க விட்டுள் w smrmrair
தடுத்து நிறுத்துகிற மக்கள் படை இவனே அதிர்ச்சியூட்டியது! எங்கள் துப்பாக்கி முழுக்கம் இவனது வஞ்சனைக்கு தண்டனை வழங்கிற்று!
இவளைத்தாக்குங்கள் 1 பயங்கரமாகத்தாக்குங்கள். முட்டாள்த்தனமான இவன் கனவுகளைத் தகர்த்தெறியுங்கள்!
இதுவே இவனைப்புதைத்திட நேரம்; இவன் தனது சவக்குழியைத் தானே தோண்டியுள்ளவன்
ஆக்கிரமிப்புக்குள்ளான நாட்டின் அடிமைப்பட்ட மக்களே எழுக!
47

Page 26
போலாந்தியராயினும், டேனியராயினும் பிராஞ்சியராயினும், பெல்ஜிய, கிரேக்கராயினும் உருக்கெனவே எல்லோரும், ஓரணியில் ஆகிடுக! மனிதகுலத்தின் விடுதலேக்காய் அமைதிக்காய், மகிழ்விற்காய், மனிதாபிமானத்தைக் காத்திடும் போருக்காய் செஞ்சேனையின் சிறந்த தோழமையோடு - சேர்ந்திடுக இரும்புச்சங்கிலியின் பலமாக இதுவே இக்கொள்ளையனைப் பூண்டோடு ஒழித்திட பொருத்தமான நேரம்!
தமிழில் : 'GurrassiT எழுதியது: யூலை 2, 1941 நன்றி : சீன இலக்கியம் 1979 யூன் இதழ்.
-----
சட்ப்பொருளும் சக்தியும் ஐன்ஸ்ரைனும்
ஐன்ஸ்ரைனின் மாபெரும் கண்டுபிடிப்பானது திணிவு, அதா வது சடப்பொருளின் அளவு, உறை நிலையிலுள்ள சக்தி என்ப தாம். வழமையான அநுபவத்தின் அடிப்படையில் இதை ஒரு வகையில் திண்ம நிலையிலுள்ள காபனீரொட்சைட்டுக்கும் காபனீ ரொட்சைட்டு வாயுவுக்குமிடையிலான உறவுடன் ஒப்பிடலாம். இரண்டுமே தோற்றத்தில் வெவ்வேருனவை ஆயினும் காபனீ ரொட்சைட்டு வாயு செறிவில் வேறுபட்ட காபனீரொட்சைட்டுத் திண்மம் தான்.
அது மட்டுமன்றி, ஐன்ஸ்ரைன் திணிவுக்கும் சக்திக்குமிடை யிலான சமன்பாட்டையும் நிர்ணயித்தார். இது அவரது பிர சித்தி பெற்ற E=mc2 எனும் சமன்பாட்டால் தரப்பட்டது. E என்பது m எனும் திணிவில் பொதிந்துள்ள சக்தி, c என்பது ஒளியின் வேகம் (ஒரு செக்கனுக்கு 186,000 மைல் அல்லது செக் கனுக்கு 300000 கிலோ மீற்றர்). ஒரு கிராம் திணிவில் உள்ள சக்தி முழுதும் வெப்பமாக மாற்றப்பட்டால் ஒரு முழுப் பட்ட ணத்தையே ஒரு வெறுங் கிடங்காக்கப் போதுமானதாயிருக்கும். அதாவது ஒரு கிராம் திணி வி ல் உள்ள வெப்பம் 2000000 (20 லட்சம்) கிலோ கிராம் அல்லது 8 லட்சம் கலன் பெற்ருே லில் உள்ள வெப்பதுக்குச் சமனனது.
மூலக் கருத்து Class Struggle
லண்டன்
48

இந்த இரயில் பாதைகள்
ஆடையாய் முகில் மூடும் அழகு மலைச்சாரல்களை ஊடறுத்து உள்நுழைந் வளைந்து :::ಜ್ಜತಿ। ஒடுகின்ற கங்கைகளின் மேலாக மேலாக வடக்கிருந்து தெற்குவரை விரிந்திருக்கும் பசுந்தரையில் நேராக நேராக நீண்டு நிமிர்ந்து வரும் இந்த இரயில் பாதைகள் இலங்கை மாதாவின் தேகமெங்கும் ஒடிப் பரந்திடும் நாடி நரம்புகள்.
அரை நூற்ருண்டுகளாக இந்த நரம்புகளினூடாகவே அந்நியர்கள் இவளது இரத்தத்தை உறிஞ்சிக் குடித்தனர்.
இதனுல் இவளுக்கு இப்பொழுதும் இடையிடையே வலிப்பு வருகிறது
அப்பொழுதெல்லாம் இந்த நரம்புகளில் இரத்த ஓட்டங்கள் தடைப்படுகின்றது.
தணிகையன்
வெடித்துச் சில வேளைகளில் இரத்த நெடில் கூட வீசுகின்றது. இந்த நாடியைப் பிடித்தே தேசமாதாவின் தேக நிலையை நாம் தெரிந்து கொள்கிருேம்,
அந்நியர்கள்
இந்த மண்ணைவிட்டு அகன்ற போதும் உலகத்தின் தெருக்களிலே இவளைக் காட்டி இரந்து வாழும் அவர்களது அடிவருடிகளே அதிகாரத்தில் இன்னமும் இருக்கிருர்கள். தேசமாதா சுகப்படுவதை இந்தத் தேசவிரோதிகள் விரும்புவதில்லை.
இதனல், பாதி உயிர் போய்விட்ட தேசமாதாவின் மீதி உயிர் போகுமுன்னே தேச புத்திரர்கள் விழித்தெழ வேண்டும்
தலை நிமிர்த்தி ஒன்று பட்டு
தளைகளை தகர்க்க வேண்டும்!
49

Page 27
தாயகம் பற்றி:- . . கடிதங்கள்
tausan ܗܼܗܹܘܚܲܡܣܗ
தாயகம் முதல் இதழ் கிடைத்தது. தரமான சஞ்கிகை என்
பதில் மகிழ்ச்சி. மாதிரிக்கு ஒரு கதை, கவிதை மற்றும் பெரும் பாலும் ஆராய்ச்சிக் கட்டுரைகள் என்றிருப்பது பத்திரிகை பரவ லான வாசகர்கள் மத்தியில் செல்வதற்கு கஷ்டமாக இருக்கும், கதை, கவிதை ஆகியவற்றிற்கும் களமான கட்டுரைகளுக்கும் இடையில் சமசந்தர்ப்பம் அளிக்கப்பட்டால் கூடுதலான வாசகர் களைக் கவரும் என்று நினைக்கிறேன்.
சக்தி
கொழும்பு - 13
1. உறவுகள் தெரிகின்றன - குமுதன்
கதையில் முருகேசருக்கும் "கதாநாயகனு" க்கும் இடையிலுள்ள உறவின் தன்மை பற்றி கதாநாயகன் மனதில் ஏற்படும் மாற் றம்கூட வலிமையாகச் சித்தரிக்கப்பட்டிருக்கலாம். அவன் வேலையை உதறிவிட்டு யாழ்ப்பாணம் திரும்புவது மனதுக்கு ஏற்றுக்கொள்ளப் படக் கூடியவாறு முன்வைக்கப்படவில்லை K. G. இன்டஸ்றிலில் 10 - 15 வருடம் முன்பு வேலைபார்த்த என் நன்பர் ஒருவரது அனுபவம் இக்கதையுடன் மிகவும் உடன்பாடான ஒன்று (. ) போன்ற குறிகளைப் பாவிப்பதில் ஆசிரியர் கூடிய சிரத்தை காண்” பிப்பது பயனுள்ளது)
2. நரியின் நீதி
(அ) சந்தத்துக்குக் கூடிய அவதானம் செலுத்தியிருந்தால் சிறப்பாக இருக்கும்.
(ஆ) ஓரிரு இடங்களில் வார்த்தை அமைப்புக் கவனயீன மாகிவிட்டது. (. சிங்கம் சிகிறிப்பாய்ந்து யாரடா அவன் என்னை மிதித்தவன் இறுமாப்புடையவன்" கர்ச்சனை செய்தது சிங்கம் . தீர்ப்பை உரைத்தது துணிவுடன் சொன்னது .) ァ (இ) "சீரியஸாக சொறிச்சேட்டை போன்ற பதங்கள் கவிதையின் பொதுவான தொனியுடனும் வார்த்தைப் பிரயோகத் துடனும் முரண்படுகின்றன.
(ஈ) நரியின் துணிவு போலியானது ஆகவே "துணிவுடன் க்ொன்னது" என்பது நன்ருக அமையவில்லை.
50

(உ) யானை தீர்ப்பை ஏற்கத் தயங்கியதாகவும் கூடக் கூறி யிருக்கலாம் நல்ல கருத்து. ஒசைநயம் இத்தகைய கவிதைகட்கு மிகவும் வலுவூட்டும் அம்சம் மரபுவழிச்சந்தம் (எதுகை மோனை அவகியமில்லை) முடிந்தவரை பேணப்படுவது படிக்கும் போது சொற்களுக்கு வலிவூட்டும். 3 கைலாஸ் கட்டுரையில் அச்சுப்பிரச்சனைகள்:
சில இடங்களில் Bold type துணைத்தலைப்பு என்ற அபிப்பிரா யத்தை ஏற்படுத்துகிறது. 1talic இல்லாவிட்டால் "சுதந்திரக் காற்றை" கவிதையில் பாவித்த மாதிரியான type அளவு பயன் படுத்தி இருக்கலாம்:-
4. குறிஞ்சி மைந்தன் கவிதை
வெய்யிலிலே - நல்லதணில்; மாறதோ - வந்திடாதோ ஒசை கள் மத்தியில் இயைவு குறைவு. ஒசைகள் அதிகம் முரண்படா திருப்பது நல்லது. சந்தம் அடிக்கடி முறிகிறது. போராட்ட உணர்வை விட எதிர்பார்ப்பே அதிகமாகத் தென்படுகிறது. *காலங்களும் உண்டு உண்டு" என்ற பிரயோகத்தில் உண்டு என்ற பதத்தின் இரட்டிப்புக்கு நியாயம் இல்லை. "காலங்கள் பலவுண்டு? என்று எழுதலாம் அல்லது "காலனெனஉருமாறும்" என்றே நிறுத் தியிருக்கலாம்.
மூன்றுவது பகுதி மிகவும் பலவீனமாகவே தெரிகிறது. உற் சாகப்படுத்த வேண்டிய கவிஞர். கருத்தில் முரண்பாடின்மைக்கும் வலிமைக்கும் மட்டுமன்றி க வி ைத யி ன் வ டி. வத் துக் கும் நாட்டம் செலுத்துவது பயனுள்ளது.
(மேற்படி குறைகள் கூறப்பட்ட நோக்கம் இவர்களது எதிர் காலப் படைப்புக்கள் மேலும் வேண்டும் என்பதே.)
கொழும்பு - 6 தாயகத்தில் பிரசுரமான கட்டுரைகள் பெறுமதியானவை **உறுவுகள் தெரிகின்றன" சிறுகதை நன்முக இருந்தது. எனக் குப் பிடித்தது
யோ. பெனடிக்ற் பாலன்.
கொழும்பு - 15, நீண்டகாலங்களுக்குப் பின் தாயகம் வெளிவருவது குறித்து மகிழ்ச்சி ஒரு புத்தகத்தை வெளியிடுவதிலுள்ள கஷ்டங்களைப்பற்றி அதிகம் தெரியாது. இருந்தாலும் விலை கூடிவிட்டதாக நினைக் கிறேன். முதலாவது இதழ் தரமாக இருந்தது. தொடர்ந்து வெளி வர வேண்டும் என விரும்புகிறேன்
N. யோகேந்திரராஜா மட்டக்களப்பு
51

Page 28
大 பயன்
சீனக் குட்டிக் கதை
இரண்டு பேரீச்சை மரங்கள் அடுத்தடுத்ததாக வளர்ந்தன. ஒன்றிலே பழங்கள் கொத்துக் கொத்தாகத் தொங்கின. மேலும் கனிவதற்கு நிறையக் காய்கள் சிலிர்த்திருந்தன. இரண்டா வது மரமோ இலைகள் சுருங்கி, வரண்டு போய் நின்றது.
பழங்கள் கனிந்திருத்த மரத்தினை நாடி மக்கள் வந்தனர். பழங்களைப் பறித்த னர் . சிலர் மரக்கிளைகளில்ஏறினர். தடி கொண்டு கிளைகளிலே அடித்துப் பழங்களை வீழ்த்தினர். பழங் கள் யாவையும் இழந்தமரம் மொட்டையாய் உருச்சிதைந்து போய் நின்றது. ஆனல் இரண்டாவது மரமோ முன்னர் இருந்த தோற்றம் மாருமல் நின்றவாறே மு த லா வது மரத்தைப் பார்த்து, "இதெல்லாம் உன்னுடைய தவருலேயே நிகழ்ந்தது' என்றவர்று தொடர்ந்தது.
‘'நீ நினைத்தாய் நிறையப் பழங்களைச் சுமந்து அவற்றை மக்களுக்கு கொடுப்பது நல்ல தென்று, இதனுல் நீ கஷ்டங்களையே தேடிக்கொண்டாய். என்னைப்பார். நான் எவ்வளவு நல்லாயி ருக்கிறேன். என்னிலிருந்து யாராவது ஒரு இலையைத்தன்னும் பிடுங்கிட நினைத்தார்களா?"
“நிச்சயமாக நீ பாதுகாப்பாகத்தான் இருக்கிருய்." என்று தொடங்கிய பழமரம் பின்வருமாறு கூறி முடித்தது.
*"ஆணுல் நீ இந்த உலகத்திற்கு உன்னுடைய பங்களிப்பாக எதனை வழங்குகிருய்?'
*
52


Page 29
à VII=
யாழ் நகரில்
ஒலிப்பதிவு ே
முன்னணி
றேடியே
58. கஸ்து யாழ்ப்ப தொலேபேசி
MAN F--
_ R.PAT''\'\"AftN
ასტან-FN* இலங்கை, இந்திய,
புத்தகங்கள், கலி மற்றும் வெளியிடுக! விஜயம் .ெ
| சுந்தரம் புத்
4/6, ஸ்ர
யாழ்ப்பு
இப் பத்திரிகை தேசிய ܘàܬ
பானம், 15/1, மின்சாரநிலேய வீ,
ளால் 407, யாழ் ஸ்ரான்வி வீதி அச்சிட்டு வெளியிடப்பட்டது.

சகல விதமான வலைகளுக்கும்
ஸ்தாபனம்
ாஸ் பதி
ாரியார் வீதி,
TTOT).
| :: 238.05.
ANER 도도 THil
சீன, சஞ்சிகைகள்,
ண்டர் படங்கள்
ளப் பெற்றுக்கொள்ள
卉
l
சய்யுங்கள்.
தக நிலையம்
تخت ான்லி வீதி, 。 ான்னம், ༄།།
*
இலக்கியப் பேரவைக்காக யாழ்ப் தியிலுள்ள சு. தணிகாசலம் அவர்க பிலுள்ள யாழ்ப்பான அச்சகத்தில்