கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தாயகம் 1989.08-09

Page 1
سمجھی جسمجھی جمعے جمقصے حصے حص۔--حیے۔ جے۔ جھے جے جے جےg
事
8 o 岛上 agaya V R
0 சு. முத்துகிருஷ்ணன் 5 சு. பொ. அகத்தியலிங்கம்
915ù፡ -ኃዛ5ኹ] I" ሠዐቓ5. Ro h. இரவிந்திரன் Ꮂ ° குமுதன் 4.9 புவிநேசன்
0 சேகர் o ஸ்வப்னு yo G. E T . GJ.
c IDITSh.15ử
ஜெயமதி
y
சத்திபா
FTIT i I iiiu'
எஸ். கருஞகரன்
பி. ஜி. ரேகொன்
இப்னு அலாமத் சு. சத்தியகீர்த்தி
తాతా-తా-తా-తా-తా ----------arx
HHHHHHHHHHHHHHH+ + + HHHHHHHHHHHH +
சுதந்திரம் புதிய ஜன --++++-
 

லக்கியமாதஇதழ்
சிறப்பிதழ்
ஓகஸ்ற் - செப்ரெம்பர்
1 Գ89
. . . . . . . . . . -----------H.HH 4-HHHHHHHHHHHH-FTTTTT
நாயகம் சுபீட்சவாழ்வு -------------------------------------

Page 2
}ཤད་ཡམས་ལ་ མང་ཚབ༠་ ཆབ་མས་ཙམ་
”அறிவுலகிற்கு ஒர் அழைப்பு
க்த:ள் ஜி. கரீனங்கள், ஈழத்து இலக்கிய வெளியீடுகள்
அறிவியல் நூல்கள், ஆகியவற்றைப் பெற்றுக்கே i ) ரு நீங்க :
/*
※
... " *曾° a i = s - o 3) .ق م " புத்தெழில் புத்தக நிலயம்
சங்கான விதி, ஓடிச் சுவேலி,
ASAS SSAS SSAS ASASA AA ASAAASAAASS YLL LLLLLLSSMSS
நாதன் வெல்டிங்ஸ்
*岛叙 莎】g等》、 Lu! - (y++ కిడీకి 12-14)
--o' is . . - -ག་ - " نفر S SSS eeS S tG G SAS S S S AAAeS eJ SiS y0S
*
"గ --
恶
ہمیجر
i
நாதன் வெல்டிங்ஸ்
பலாலி லீடு , 82.:fsᏪ1 Ꭰu 1fᏧ 31Ꭲ 1i %
− بار و 3 و 1 و نایل ق . پ . .
ELLA ASA AqASLSLgLLAA AAAAA S ii EEEELLLLLLLAASAAA Siq q S LMeMeiLLLLSLLLLS LLEEEEELLSEL SSLLL L S ALS LS qA AALLL S0A 000S

சுதந்திரம்! புதிய ஜனநாயகம்! சுபீட்ச வாழ்வு!
இதழ் 20 1989 ஒகஸ்ற் - செப்ரெம்பர்
புதிய ஜனநாயகம்
புதிய பண்பாடு
புதிய வாழ்வுக்காக போராடுவோம்!
இருபதாவது இதழை மொட்டவிழ்ப்பதில் தாய கம் மட்டற்ற மகிழ்வடைகிறது. அளவற்ற தடைகளை மீறி இருபது இதழ்கள் வெளிவந்த பெருமிதத்துடன் இந்த இதழ் விரிகிறது.
இலக்கியச் செழுமைக்கு நேரடித் தடைகள் மட் டும் அணைபோடுவதில்லை; மக்கள் தாமே வகுத்துக் கொண்ட சில வரம்புகளும் இடையூருக ஆவதுண்டு. மக்களை அத்தகைய வரம்புக்குள் அடைப்பதாய் சம கால சமூக பொருளாதார அரசியல் செயற்பாடுகள் அமைவதுண்டு.
புறச்சக்திகளும், மக்கள் தமக்குத் தாமேயும் பூட் டிக்கொண்ட இத்தகைய விலங்குகளை தகர்த்தெறி யும் மார்க்கத்தை வகுக்கும் கடப்பாடு மக்கள் நலன் விரும்பும் சக்திகட்குண்டு. இலக்கியவாதிகள் - கலை இலக்கிய இயக்கங்கள், இந்தக் கடமையிலிருந்து வில கிக் கொள்ள முடியாது.
தாயகம் தனக்குரிய இந்த வரலாற்றுப் பணியை தொடர்ந்து நிறைவேற்றி வந்திருக்கிறது. தேசத்தின் சுதந்திரம் இறைமையைப் பாதுகாக்கவும் - புதிய ஜன நாயக கலாச்சாரத்தைக் கட்டியெழுப்பவும், பரந்த ஐக்கிய முன்னணி அவசியம் என தாயகம் ஆரம்பம்

Page 3
முதல் வலியுறுத்தி வந்தது. மக்கள் எதிர்கொள்ளும் எத்தகைய நெருக்கடிகளுக்கும் ஐக்கியப்பட்ட செயல் முறைகளின் அவசியத்தையே தாயகம் தனது இருப தாவது சுவட்டிலும் அழுத்திக் கூறுகிறது.
பொதுவாகவே, வெவ்வேறு உலகக் கண்ணுேட் டங்களை கொண்டிருந்தாலும் இலங்கைத் தமிழ் எழுத் தாளர்களிடம் ஒப்பீட்டு ரீதியி ல் சமூகப்பார்வை மேலோங்கிக் காணப்படுவது விதந்துரைக்கத்தக்க நல்ல அம்சமாக இருந்துவந்துள்ளது; இன்றும் வெளி வரும் அரை டசினுக்கு மேலான இலங்கைத் தமிழ் சஞ்சிகைகளில், சம கால வாழ்வைச் சித்தரிக்கும் படைப்புக்களையே காண்கிருேம். கூடவே, மக்கள் நலனை அடிப்படையாகக் கொண்டு, அவையனைத்தும் பரந்து பட்ட ஐக்கியத்தை வலியுறுத்துவது அவசியமாகும். வெளிப்படையாக இதுவரை வலியுறுத்தி வரவில்லை யென்ருலும் அவையனைத்தும் இந்தக்கோட்பாட்டுக்கு விரோதமாக ஒருபோதும் கருத்துத் தெரிவித்ததில்லை.
இன்னுமொரு விடயத்திலும் இலங்கைத் தமிழ் சஞ்சிகைகள் ஒற்றுமையுடையன. குறித்த காலத்தில் எவையும் வெளிவரமுடியவில்லை. தாயகம் இருபதா வது இதழ் குறைந்தது மூன்று மாதங்களுக்கு முன் வந்திருக்க வேண்டியது காலதாமதமானதற்கான கார ணத்தை அனைவரும் அறிவர் என்பதால் விளக்க வேண்டியதில்லை.
இப்போதும் தாயகம் இருமாதம் ஒரு இதழ் தவ ருது வெளிவரவேண்டும் என பிரதிக்ஞை செய்கிறது. தொடரும் தடைகள் வழிவிட வேண்டும். எமது சொந் தப் பண்பாட்டு விருத்திக்கு தாயகம் எந்தக் கஷ்டங் களையும் தாங்கித் தன் பணி தொடரும்.
புதிய ஜனநாயகம், புதிய பண்பாடு, புதிய வாழ்
வுக்காக ஒருங்கிணைந்து போராடுவோம்!
2I-8-89

சிறுகதை
கதை முடியுமா?
*வேலையாலை வந்தா அப்
t டிய்ே கதிரையிலை குந்திக் கொண்டிருக்க வேண் டி ய து தான்'
அப்பொழுதுதான் வேலை யால் வந்து ஆடைகளைக்கூடக் களையாமல் எப்படியாவது ஒரு சிறுகதையை எழு தி நாளைக் காலையிலேயே அந்த காரிருள்" மாத இதழ் ஆசிரிய ரி டம் கொடுத்துவிடவேண்டும் என்று கதிரையில் அமர்ந்த எனக்கு மனைவியின் அந்த வார்த்தைகள் ஆலேசத்தைக் கிளப் புகிறது.
அவளை வாய்க்கு வந்தபடி பேச
வேண்டும் என்று சினத்தோடு திரும்புகிறேன்.
கோடிப் புறத்தில் கிடந்த விறகுகட்டைகளை கோடரியால் வெட்டிப் பிளந்து இரண்டுகை களிலும் அடுக்கி விழுந்துவிடா மல் மார்போடு அணைத்தபடி சுமையுடன் அ டு ப் படி யை நோக்கி மெதுவாக நடந்து செல்லும் அ வளைக் கண்ட தும் எனது வாய் அடைத்துவிடு கிறது. இருந்தாலும் மனதில் எழுந்த அந்த ஆவேச உணர்வு இன்னும் மறையவில்லை. கதை எழுதுவதைப் பற்றிய சிந்தனை குழம்பிப்போய் மனைவி அப்படிச் சொன்னது சரியா பி  ைழ யா
3
என்று
-O குமுதன்
என்ற கேள்வி என்னிடம் எழு கிறது
கதை எழுதுவது அப்படி என்ன தேவை இல்லாத ஒரு வேலையா? மனைவிகூட சம்பளம் இல்லாத உத்தியோகம் என்று அடிக்கடி குத்தலாகக் கூறுவாள், இன்றும் அதே உணர்வோடு தான் இ  ைத ச் சொன்னளா? அல்லது இத்தனை நாட்களாக இப்படிக் குந்தி இருந்தும் நான் கதையை எழுதி முடிக்கவில்லை என்ற உணர்விலும் சொல்லி இருக்கலாம்.
சிறுகதை தருவதாகக் கூறி ஒரு மாதத்திற்கு மேலாகிவிட் டது. அந்த இதழாசிரியர் கூட இரண்டு மூன்று தடவை வீடு தேடிவந்துவிட்டார். அந்த அள விற்கு நான் ஒரு பெரிய எழுத் தா ள னல்ல. ‘'சிரமமெண்டால் முதலே சொல்லியிருக்கலாம்" மாலையில் வேலையால் வரும்போது தெருவில் சந்தித்து அந்த இதழாசிரியர் சொல்லிய சொல்லிலிருந்தே எனது எழுத் தாளத் தகுதி எனக்குப் புரிந்து விட்டது. ‘எழுதுவது கொஞ் சம் சிரமம்தான். வேறு யாரிட மாவது கேளும்’ என்று சொல்லி வி ட் டு மற்றவர்களைப்போல் தானுண்டு தன் வேலையுண்டு

Page 4
எ ன் று இருந்துவிடலாம்தான். ஆனல் அது என்னல் முடிய வில்லை.
எழுதுவது ஒரு 8F ep க க் கடமை என்ற உணர்வு இறுகிப்
பதிந்துவிட்ட ஒரு நிலையில் சமூ
கத்தின் மனச்சாட்சியை என் னல் முடிந்தவரையாவது கிளறி விடவேண்டும் என்ற ஆவலுடன் எழுதத் துடிக்கும் எனது மனம் அதற்கு இடம்தரவில்லை.
நான் எழுத முயற்சிக்கவில்லை என்றல்ல, ஒவ்வொரு நாளும் தான் இப்படி வெற்றுக் காகி தத்தை அடுக்கி வைத் துக் கொண்டு பேணுவைத் தி ற ந் து வைத்தபடி எதிரே உள்ள சிவ ாையும், அருகில் யன்னலுக் கூடாகத் தெரியும் பாசிபடர்ந்து கருமையாகிவிட்ட அந்த மதிலை யும் வெறித்து வெறித் துப் பார்க்கிறேன்.
வெளியுலகில் கதை எழுது வதற்கான கருக்கள் இல்லை என் பதல்ல. பெரும் வீரகாவியங் களுக்கான கருவாக இல்லாவிட் டாலும் அறியாமை, அடிமைத் தனம் மனித உயிர்களை அற்பத் தனமாக குத்திக்குதறும் கோரத் தனம். இவை நாளாந்தம் கண் முன்னல் நடைபெறும் காட்சி கள்தான். உள்ளதை உள்ளபடி உண்மையை எழுதினல் எசிேது பவனின் கதை முடிந்துவிடலாம். கதை முடிவது ஒன்றும் பெரிய விடயமல்ல. சமூகத்துக்கு உப யோகமாக இருந்தால் அதுகூட சிறிய விடயம்தான். இப்படிப்
பேணுவை எந்தப்பக்கமும் சரித்து எழுத முடி யாது. நிமிர்த்தி எழுதவும் முடியாது என்ற நிலை
யி ல் மூடிவைத்து இருப்பதைத் தவிர வேறு எதைத்தான் செய்ய முடியும்.
இப்படித்தான் பேணுவை திறந்து திறந்து மூடி நாட்கள் நகர்ந்துவிட்டன. இன்று எப் படியும் எழுதுவது என்ற முடி வுடன் வந்தபோதுதான் மனைவி சொன்ன வார்த்தைகள் னைக் குழப்பிவிட்டன. என்ன இருந்தாலும் என து நிலைமை புரியாமல் அவள் இப்படிக் கூறி யிருக்கக் கூடாது. வங் கி யில் வேலைபார்க்கும் எதிர் வீ ட்டு வ ரதன் சொன்னது போல், பெண்களுக்கு அதிக சுதந்திரம் கொடுக்கக் கூடாது என்பது அந் தக் கணத்தில் எனக்குச் சரி போலவும் படுகின்றது.
அவனது மனைவியும் படித் தவள்தான். லீவு நாட்களில் லம்பேட்டர் ஸ்கூட்டரில்' இரு வரும் குழந்தையை விட்டுவிட்டு உல்லாசமாக வெளியே சுற்றி விட்டு வரும்போது தம்பதிகள் போலல்ல காதலர்கள் போலவே பார்ப்பவர் கண்களுக்கு படு வார்கள். ஒருநாள் அவளது ஒருகை முழங்கைகளுக்குக் கீழ் த டி த் து வீங்கியிருந்தபோது என்ன் ஏது என்று எனது மனைவி கேட்டிருக்க வேண்டும். அப் பொழுதுதான் இவர் க ளுக் கிடையே சீதனப் பிரச்சனையும் மனைவியை சந்தேகிக்கும் ஒரு போக்கும் இருப்பதாக மனைவி
ଜr affr |

கூறினுள். குடும்பம் என்ருல் இப் படித்தான் பலதும் இருக்கும் என்று நான் சமாளித் துக் கொண்டேன்.
அடுத்தவீட்டுப் புதினங் களில் அவ்வளவு அக்கறையுள்ள வளல்ல என் மனைவி. அந்த க் கதையை அவள் என் னிட ம் சொல்லியதற்கும் ஒரு காரணம் இருக்கவேண்டும்.
ஒரு குடிகாரத் தந்தையி டம் எனது தாயார் பட்ட அடி உதைகள் துன்ப து ய ர ங்களை சிறுவயதிலேயே கண்டு வெறுப் படைந்த என் மனதில் பெண் களை சமமாக நடத்தவேண்டும் என்ற உணர்வு இயல்பாகவே வளர்ந்திருந்தது. இதனல் மனைவி மீது அதிகாரம் செலுத்தாமல் வீட்டு வேலைகளிலும் ஆடைகள் துவைத்தல், வீடு துப்புரவுசெய் தல், சமையல் வேலை எல்லாவற் றிலும் நேரமுள்ளபோதெல் லாம் உதவிசெய்வதுண்டு. இவை களை அவதானித்துவிட்டுத்தான் வரதன் அப்படிச் சொல்லியிருக்க வேண்டும்.
ஒருவர் கொடுக்கவும் மற்ற வர் வாங்கவும் சுதந்திரம் என் பது என்ன வெறும் க டை ச் சரக்கா. ஏதோ ஒருவரது மன நிலையை ஒருவர் புரிந்து வாழ வேண்டும் அவ்வளவு தா ன் ஆனல் ஒரு கதையை எழு த நான் படும் அவஸ்தையைப் புரிந்துகொள்ளாமல் எனது மன நிலையைக் குழப்பியது மனைவி யின் தவறுதான்.
இந் தாங் கோ தேத் தண்ணி தலையை நிபர்ெத்தா மல் மேசைமீது பார்வையைச் செலுத்துகிறேன். தேனீர் ப் பேணியை மேசைமீது வைத்து விட்டு "ரியூப்லைற்  ைற யு ம் போட்டுவிட்டுச் செ ல் கி ரு ள் மனைவி வேலையால் வந்த களைப் பும் சோர்வும் தேனீரைக் குடிக்க வேண்டும் போல் இருக்கிறது: இருந்தும் தலையை நி மி ர் த் தி தேனீர்ப்பேணியைப் பார்த்து விட்டு பிடிவாதத்துடன் பேசா மல் இருந்துவிடுகிறேன். "டியூப் லைற் றை நோக்கிவந்த பூச்சி கள் வண்டுகள் மேசைமீதும் விழுகின்றன தேனீரை வீணக் கக் கூடாது என்பதற்காக முன் னெச்சரிக்கையுடன் பேப்பர் து ன் டா ல் அதை மூடிவிடுகி றேன்,
" தேத்தண்ணி ஆறப்போ குது குடிச்சிட்டு எழுதுங்கோ ରu ár" '
தேனீரைக் குடி க்காமல் மூடி வைத்ததை அவதானித்த மனைவி அருகில் வந்து சொல்கி ருள். ‘எழுதுங்கோவன்' என்ற மனைவியின் வார்த்தை கோபத் தை சற்று தணிக்க உதவுகிறது. முதலில் அவள் பேசிய வார்த் தையைப் பற்றி கேட்கலாமா? என்று யோசிக்கிறேன். அவள் அந்த வார்த்தையைச் சாதாரண மாகவும் கூறியிருக்கக் கூடும்: கதை எழுதுவதற்காகச் சிரமப் பட்டுக்கொண்டிருந்த எனக்கு அது பாரதூரானதாகப் பட் டிருக்கவும் கூடும். இதைப்போய் பெரிதாக எடுத்துப் பிரச்சனை
5

Page 5
யா க் கி ன ல் சொன் ன படி நாளைக்கு கதையை கொடுக்க முடியாது;
மூடி இருந்த தேனி  ைர எடுத்து மடமடவென்று குடிக் கிறேன். எனது மனப்போராட் டங் களை ப் புரிந்திருப்பாளோ என்னவோ காலியான தேனீர்ப் பே னி  ைய எடுத்துக்கொண்டு மனைவி அந்த இடத்தைவிட்டு நகர்கிருள். ஒரு மனப்பிரச்சனை யின் தீர்வும் குடித்ததேனீரின் உற் சாகமும் ஒரு தென்பைத் தர எ ப் படி யும் எழுதிவிடுவேன் என்ற நம்பிக்கையோடு கதிரை யில் நிமிர்ந்து உட்கார்கிறேன்.
அப்பொழுதுதான் பக்கத்து வீட்டுப் பிள்ளைகளுடன் விளை யாடிவிட்டு புழுதியும் மண்ணு மாக இரு பிள்ளைகளும் வந்து சேர்கின்றனர். அவர்கள் இருவ ருக்கும் நாலு வார்த்தைகள் கோபத்துடன் பேசி அவர்களைக் கிணற்றடிக்குக் கூட்டிச் சென்று கழுவுவதற்கிடையில் எழுந்த கூச் சல்கள் அந்த ஹோல் வாை வந்து குழப்பி எனக்குச் சினத்தை ஏற்படுத்துகிறது.
இதற்குத்தான் வீடு கட்டும் பொழுதே அமைதியாக இருந்து எழுதப் படிக்கக் கூடியதாக வீட் டைக் கட்டியிருக்க வேண்டும் வடக்கு வாசல் வீட்டுக்கு அப் படி வசதியாக அ றை கள் அமையவே அமையாது என்று அடித் துச் சொல்லிவிட்டார் சாத்திரியார். சாத்திரமும் மண் ணுங்கட்டியும் என்று அப்பொழு துதான் அந்தச் சாத்திரத்தின் மீதும் ஆத்திரம் வருகிறது
6
கடதாசியில் செய்த ராக் கெட்டுகள் ஹோலை வலம்வந்து எனது த லை  ைய உராய்த்துக் கொண்டு மேசைமீது விழுகின் றன. பாடசாலைகள் தொடர்ச்சி யாகப் பூட்டிக் கிடப்பதால் பிள் ளை களி ட ம் படிக்கவேண்டும் என்ற ஆசையே அற்றுப் போய் விட்டது. இந்தப் பிள்ளைகளின் எதிர்காலம் இதைப்பற்றி யார் தான் யோசிக்கிருரர்கள்? அதுவும் சரிதான் அதிகம் படித்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் நாங்கள்தானே. இவ்வளவு பூத கரமான பிரச்சனைகளை வளர்க்க உதவி இருக்கிருேம். ஒருவேளை படிப்பறிவு குறைந்தாலும் பிரச் சனைகள் தீரும்போலும்
"பிள்னைகள் படிக்கு தோ எண்டும் கவனிக்கிறேல்லை. சதா விளையாட்டை விட்டிட்டு புத்த கத்தை எடுத்துப் படியுங்கோ ? ?
அவர்கள் புத்தகங்களை கை யில் எடுத்ததும் மனைவி அடுப் படிக்குள் நுளைகிருள்.
* 'அப்பா பள்ளிக்கூடம் எப் பப்பா தொடங்கும்**
" தொடங்கிற நா ளை க்கு போகலாம். இப்ப அப்பாவைக் குழப்பாமை கவனமாப் படி யுங்கோ’ முகத்தைக் கோபத் துடன் வைத்துக் கொண்டு கடு மையாகக் கூறுகிறேன்.
இப் படி த்தான் பேயைக் கண்டனீங்களோ? பூதம் எந்த ஊரிலை இருக்கு? சந்திர மண்ட லத்திலையா கடவுள் இருக்கிருர்? என்று விளக்க முடியாத கேள்

விகளை கேட்டு திணறடிப்பாள் இளைய மகள்.
புத்தகத்தை விரித்து வைத் துவிட்டு எழுத்துக்களைப் பார்க் காமலே மனப்பாடமாகிவிட்ட பாடங்களை உரத்துக் கத்துகின் றனர்.
"அப்பாவைக் குழப்பாமல் மெதுவாகப் படியுங்கோ'
அடுப்படியிலிருந்து மனைவி யின் குரல் வருகிறது. பிள்ளைக ளும் தமது குரலைத் தாழ்த்திக் கொள்கின்றனர். -
இதுவரை அங்குமிங்குமாக அலைந்த உணர்வுகளை நிலை ப் படுத்தி ஓரிரண்டு வ ரி க ளா க எழுதி ஒரு பந்திவரை எழுதி விட்டேன். திருப்பி ஒருமுறை படித்துப் பார்த்தபோது எனக் குத் தெரிந்த சில விமர்சகர்கள் எனக்கு முன்னல் நின்று எக்காள மி ட் டுச் சிரிப்பதுபோன்ற ஒரு பிரமை, அவசரமாக அந் த ப் பந்தியை பேனையால் கீறிவிட்டு பேப்பரைப் புரட்டி மறுபக்கத் தில் எழுத முயற்சிக்கிறேன்.
அப்பொழுதுதான் பக்கத்து வீட்டிலிருந்து சாவீட்டின் ஒலம் போல் சின் ன ஞ் சிறுசுகளெல் லாம் "ஐயோ’ என்று கத்துகின் றன. வழமையாக கிழமையில் ஒருநாளாவது கேட்கும். இந்த அழுகை ஒலி எல்லோருக்கும் பழகிப்போன ஒன்று தா ன். இன்று சற்று அதிகமாகவே கேட்பதால் கதிரையில் அமர்ந் திருக்கமுடியவில்லை. ஏதாவது விபரீதம் நடந்துவிடுமோ என்ற
அச்சத்தில் எழுதுவதை நிறுத்தி விட்டு வெளியே வருகிறேன்.
அதி க ம் குடித்துவிட்டால் ஊர்தேசத்தை எவர் ஆண் டா லும் இராசையாவுக்கு த னது வீட்டுக்கு தான்தான் ராஜா என்ற நினைப்பு, தனது மனைவி மக் களை எப்படித்தான் அநி யாயமாக அடித்துத் துன்புறுத் தினுலும் எவருமே கேட்க வர மாட்டார்கள் என்ற துணிச்ச லில் நீண்ட நாட்களாகவே வீட்டுத்தர்பார் நடத்திவந்தான் நான்கு பிள்ளைகளுக்குத் தந்தை யான அவன் உ  ைழ ப்ப தைக் குடிப்பதிலேயே செலவழித்தத னல் அவனது மனைவியும் அயல் வீ டு களி ல் மா தூள் இடிக்க என்று கூலிவேலைக்குச் சென்று வந்தாள்.
இராசையாவுக்கு போதை ஏறிவிட்டால் போதும், சண் டைக்கு வேறு காரணம் தேவை யில்லை. எப்படியாவது கைகால் கள் நீளும் அளவி ற் கு வந்து விடும். வழமையாக அச்சிறுவர் களின் கூக்குரல் எ ன் ம ன  ைத வேதனைப்படுத்தும். இன்று எனது எழுத்துவேலையையும் குழப்பிய ஆத்திரமும் இரா ைச யா ைவ வழிக்குக் கொண்டுவர ஏதாவது செய்யவேண்டும் போல தோன் றுகிறது. ...”
தங்களோடு சேர்ந்து விளை யாடும் பிள்ளைகளின் அவல க் குரல் கேட்டு எனது பிள்ளைக் ளும் விழிகள் பிதுங்கியபடி நிற் கிருர்கள்.

Page 6
'இராசையா அவளை அடிச் சுக் கொல்லுருன்போலை போய்ப் பிடியுங்கோவன்’’
மனைவியும் கலவரத்துடன் என்ஜனப் பிடித்துத் தள்ளுகிருள். "என்ன கொஞ்சம் ஒவர் போலை கிடக்கு, பிடிச்சு இரண்டு குடுத்தாத்தான் சரிவரும்’ ’
கேற்றடியில நின்று சொல்லி விட்டு தனது கடமை முடிநத தாக திரும்புகிருன் வரதன்.
* பொறப்பா அடுத்தவன்ரை குடும்பப் பிரச்சனையிலை அவசரப் பட்டுத் தலையிடக்கூடாது'
நீங்க ள் உப்பிடித்தான் எதுக்கும் வேதாந்தம் சொல்லு வியள்’’
ம%னவி சொல்லி மு டி ப் ப தற்குள் பிள்ளைகளின் அழுகைக் குரலையும் மீறி இராசையாவின் ஐ வி யின் குரல் உரத்து மேலெழுகிறது.
நானும் இவ்வளவு நாளும் பொறுத்துத்தான் இருக்கிறேன் மாஇடிச்சாதல் என்ரை பிள்ளை சுஜா வளர்க்க எனக்குத் தெரி யும். ஒழுங்கா இருக்கிறதெண் ட்ா இரு. இல்லாட்டி வெளி u% Gurr
என்னடி சொன்னனி வேலைக்கு போன உடனை வாய் வைச்சிட்டுது என்ன?*
* உமக்குத்தான் அடிக்கத் தெரியும் எண்ட நினைப்பு'
அடிதடிகள் மாறி விழுகின்ற சத்தங்கள் கேட்கின்றன, பிள் ளைகளின் கூக்குரல்களும் மெல்ல அடங்குகின்றன.
8
'அடிச்சுப்போட்டா என் னடி
அளவுக்கு மிஞ்சிய போதை யின் சோர்வோடு அந்தவார்த் தையையே அழுகின்ற தொனி யில் திரும்பத் திரும்பக் கூறிய படி ஒய்ந்துவிடுகிருன்.
'இனித் திருந்துவார் தம்பி
நான் எதிர்பார்த்தது அங்கு நடந்துவிட்ட திருப்தியில் அரு கில் நின்ற மனைவிக்குச் சொல்லி விட்டு மீண்டும் எனது பணி யைத் தொடரும் அவசரத்தில் செல்கிறேன்.
“எண்டாலும் ஒரு ஆம்பிளை யைக் கைநீட்டி அடிச்சுப் போட் L for
""ஒ ஆம்பிளையள்தான். எல் லாரும் பெண்டுகளுக்குத்தான் ஆம் பிளை யா ய் இருக்கப்பாக் கினம் ?
* உதிலை குந்தின எழும்ப மாட்டியள் சாப்பிட்டிட்டு இருங் (35 To o
* சரி சரி கெதியாய் போடும்?" அடுப்படிக்குள் இருந்தால் மூட் குழம்பிவிடும் என் ப த ந் காக கோப்பையைத் தூ க் கி க் கொண்டு ஹோலுக்கு வருகி றேன். அங்குமிங்கும் நடந்தபடி
சாப்பாட்டை மென்றபடி கற் பனையில் ஆழ்கிறேன்.
* “araöTLiLifr
ஓரிடத்  ைத இருந்து சாப்பிடுங்கோவன். கண்? டறியாத கதை எழுத வென கிட் டு மூளையிலையும் தட்ப் போகுது’’
(8ம்ே பக்சும் பார்க்க)
 
 
 

இருப்பின் தேவை
O எஸ். கருணுகரன்
விழிகளில் முள் முளைத்த அக்ரமம் சூரியன் பாதியாய் சிதறிய கொடூரம் வானம் பூமியை அமுக்குகின்றதாய் உள்ளுணர்வு சாபத்தின் படிமமாய் எங்களது வாழ்வின் பொருள் சிதறிய உயிர்க்கவிதைகள். .
எந்தப் பொழுதிலும் காற்று - நிணமாய் மாறும்.
இலேசாக
மூக்கினுாடேயும் சில வேளைகளில் வாயினுாடாகவும் சீள்வாங்கி வெளியாகும் காற்று
மூச்சடைப்பாக நெரிப்பதன் பொருளென்ன?
நகம் வளர்ந்த கொள்கைகளால் மனிதத்தின் உன்னதங்கள் பிருண்டப்பட்டன. எங்களது இருப்பின் தேவையும் சுதந்திரமும் ஊரின் ஒவ்வோர் புறமும் முகாம்களின் முள்வேலிக்குள் முடிச்சிறுகிக் கிடக்கின்றன.
வாழ்வு அர்த்தமற்றதாய் என் நினைவுகளில் தெறிக்கிறது. எனினும் உயிர்ப்பின் ரகஷ்யம் உள்மனம் அறியும்.

Page 7
மிளிர்வின் பின்னே!
I 0
O 3 Tåsirsiu *அழகின் உயர்வே அமுதின் கனியே" - போற்றியும் பாராட்டியும் - மெய்மையில்
வியர்ந்து புகழ்ந்தும் கொள்வர்
உல்லாசகர் மனத்தில் - அவரவர் நிலைகளில் நிஜங்களாகும் காலாகாலம் புகழ்கொள்ளும் - அவை ஒவியங்களும், சிற்பங்களுமே
காமிராக்களில் உருவங்கள் நெகிழ்ச்சியாய் உதிக்கும் வண்ண அச்சுக்கலையில் நூலட்டைகளை மெருகூட்டும். . சித்திரமும் சிற்பங்களும் - ஆயுளின் சிதையாத வாழ்வைக் காட்டும் மாமல்ல புரமும், சிகிரியாவும் அஜந்தாவும் - நம்மஊர் *மாற்கு'வினதும் கூட வாழ்வின் வரலாற்றைக் கூறும். ஆயினும் அந்த வரலாற்றின் வாழ்வை மெய்மையாக்கிய தூரிகை பிடித்தோனையும் - உளியால் உரமாகியோனையும் - யார் நெஞ்சங் கொள்வர்?.
வாழ்வின் வசந்தங்களாகட்டும் சித்திரச் சிற்பங்களின் பின்னே என்றும். உளியின் உரசலும் தூரிகையின் துவட்டலும் கேட்ட படியே. - இன்னமும் .

முட்டாள் வாத மெய்யறிவில்!
- 3FT frsiTsin)
கற்பனையின் காகிதத்துக் கீறல்களால் மலர்ந்து - பின் கம்பியூட்டராகபிறந்ததாம். இல்லையேல்! கம்பியூட்டர்கள் தான் காகிதத்தைப் படைத்தனவோ? , எப்படியாயினும்; உலகை மாய்த்திட - ஊண; உறவைப் பறித்திட நீசர்களின் “நேசக்கரங்க ளேயிவை
யார் அறிவர்? பிச்சைக்காரர் சங்கத்திலும் ஆட்பதிவு கம்பியூட்டரில் மலம் கழிக்கவும், இனம் பெருகவும் சும்பியூட்டராம் . இஃதால் நாம் புதிய யுகம் நோக்கியென 'அரசு’ம் பறை சாற்றும்
ஏக்கம் நிறைந்த வாழ்வின் வசந்தம் - எனியும் கம்பியூட்டரில் மலருமா? இல்லையெனில் கம்பியூட்டரை சிலகாலம் கம்பி எண்ணவே வைத்திடுக! ஏகாதிபத்தியம் இன்னமும் ஏமாற்றிய வண்ணமே.
சிறப்பிதழுக்கான விசேட விலை
சிறப்பிதழாக கூடிய பக்கங்களில் அதிக விடயங்களோடு வெளியாகியுள்ள இந்த இதழுக்கான விசேட விலை ரூபா பத்து மட்டுமே.
தாயகம் தொடர்ந்து வழமையான விலைக்கு வெளிவரும்
என்பதை வாசகர்கள், கலை - இலக்கிய நண்பர்கள் ஆகி
யோர்க்கு அறியத்தருகிருேம். - ஆசிரியர் குழு
I

Page 8
ജ്യം
லிங்கம் வெல்டேர்ஸ் Dy(36)ha) O இரும்புவேலை
சகல வகையான
வெல்டிங் வேலேகட்கும்
தொடர்புகொள்க
i
லிங்கம் வெல்டேர்ஸ்
நிச்சாமம் சங்கானை.
லேட்டஸ்ட் கமலா ரெயிலேர்ஸ் வாச்வேக்ஸ் தையல் உலகின் சகலவிதமான நவீன முன்னுேடிகள் 4:44::#စ္သစ္ကို ழுதுபார்ப்பதில் Specialist in I 2 `ಅ-ತಿಣ್ಣ: Tailaring པ་ ་་་་་
o is atest வச்வேக்ஸ் Tailoring உரிமையாளர்: 113 மின்சாரநிலைய வீதி | தம்பு தேவதாஸன் f பிரதான வீதி . پیسے ـ مہ == حبل؟ யாழ்ப்பாணம் காங்கேசன்துறை
I 2
 

岛 回。 இரவீந்திரன்
தேசிய கலை இலக்கியப் பேரவை நடசத் திவரும் பேராசிரியர் ச. சைலாச தியின் 5-வது நினைவு ஆய்வு ரங்கில் மர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரை - 2
தேசிய இலக்கியக் கோட்பாடும்
கைலாசபதியும்
பேராசிரியர் க.கைலாசபதியின் ஆய்வுக்குட்பட்ட பல கலை இலக்கிய வாதிகளுள் அதிகம் கவனஞ் செலுத்தப்பட்டவர் பாரதி. சமத்துவ சமூகத்தை சிருஸ்டிக்க கலை இலக்கியம் பயன் படுமாறு நவீன இலக்கியத்தை நெறிப்படுத்துவதில் மகத்தான பங்களிப்பை
நல்கிய பேராசிரியர், தேசிய எழுச்சிக்கு இலக்கியத்தை DET L-as
மாகப் பயன்படுத்தி மக்கள் நலன் சார்ந்த அரசியல் இலக்கிய முன்னுேடியாசுத் திகழ்ந்த பாரதியின் ஆய்வுக்கு முதன்மை யளித்தது இயல்பானதே.
&_66ìaör Beauty is truth, truth Beauty. Grsörp soạtạsởT t-Jrrơ9. தமது “ஞானர்தம்” என்ற வகன காவியத்தில் "ஸெளந்தரியத்தைத் தாகத்துடன் தேடுவோர்களுக்கு ஸத்தியமும் அகப்பட்டுவிடும். 'உண்மையே வனப்பு, வனப்பே உண்மை" என்று ஓர் ஞானி சொல் வியிருக்கிழுர்’ எனக் கையாண்டிருந்ததை எடுத்துக்காட்டிய பேரா சிரியர், கீட்ஸின் கவிகை வரிகள் பாரதியின் கையில் "பாரதீயத்தின்" அங்கமாகிவிடுகிறது என்ருர்,

Page 9
؛ با ا... به بی: ؛ " : : . . . . . : இந்த நூற்ருண்டின் ஆரம்பந்தொட்டு முனைப்படைந்து வளர்ந்த தேசிய வாதத்தினல் பாரதியும் ஈர்க்கப்பட்டு இந்திய தேசிய உணர்வை இலக்கியமய்ப் படுத்தினர்; அத்தகைய புதிய இலக்கியப் போக்கினை 'பாரதீயம்' என இனங்காட்டுவது கவனத் துக்குரியது. தேசிய இலக்கியப் போக்குக்கு அத்திவார்மிடும் ஆரம்பப் படிகள் பதினெட்டாம் நூற்ருண்டிலேயே தோற்றம் பெற்றன. ་་་་་་་་་་་་་་
"பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து தமிழிலக்கியத்திலே பொதுமக்கள் சார்ந்த இலக்கிய வடிவங்கள் சில தோன்றலாயின. நாடகப் பண்பும் இசைப்பாங்கும் கொண்ட இவ்விலக்கியங்கள், வித்துவக் காச்சலும் வீண் அலங்காரமும், பகட்டும், படாடோ பமும் மலிந்த இலக்கிய நெறிக்கு எதிர் விளைவாகத் தோன்றின. இருபதாம் நூற்ருண்டு இலக்கியத்திற்கு முன்னறிவிப்புக் கொடுத்து நின்றன. ஆதீனங்களும் மடங்களும் ஆதரித்த மீனட்சி சுந்தரம் பிள்ளை போன்ற மகா வித்துவான்கள் கல்வியுலகில் கம்பீர நடை போட்டுத் திரிந்த சூழ்நிலையிலே "தெருப் பாடகராகப் புற எல்லை யில் நின்றவர்களே இப்புகிய வடிவங்களைப் படைத்தளித்தனர்"(2) எனக்காட்டிய பேராசிரியர், இத்தகைய தெருப்பாடகர்களை பாரதி அறிவு பூர்வம்ாக பின்பற்றியமை பாரதியின் இசை ஞானத்தால் இயல்பர்ய்மைத்தது எனக் கூறுகிருர், அவ்வாறே 'சேரிமெ ாழியை செந்தமிழோடு கலக் கும் விடயத்தில் கம்பன் மதத்தைத் தமக்குச் சம்மதமாக பாரதி கொண்டிருந்ததையும் காட்டுகிருர்,
மடாலயங்களிலும் சமஸ்தானங்களிலும் தங்கி வாழ்ந்தோரை யன்றி "தனியார்களாக இருந்த கோபால கிருஷ்ண பாரதியார், அண்ணுமலை ரெட்டியார், இராமலிங்கர் முதலியோரையே பாரதி கூடியளவு உட் காண்டிருந்தாரி என்பது பேராசிரியரின் கருத்து (39 '', இவர்கள் "பொதுமக்கள் சார்ந்த இலக்கிய் கர்த்தாக்கள்'(4) என்) தாலேயே பாரதி இவர்களைத் தனது முன்னேடிகளாக்க முற்பட்
" 7" - ?
ஒப்பியல்" நெறியை முழுமையாகப் பயன்படுத்துவதில் முன்னே டியாகத் திகழ்ந்த பேராசிரியர், சுந்தரம்பிள்ளையின் ‘பாஷாபிமானமும் தேசாபிமான மும் பாரதியிடம் பன்மடங்காகப் பரிணமித்தமையையும் காட்டுகிருர், (5) சென்ற நூற்றண்டில் வாழ்ந்த தலையாய தமிழ் மக்களில் சுந்தரம்பிள்ளை குறிப்பிடத்தக்க
ஒருவர்; பிரித்தானிய ஆதிக்கம் ஆங்கிலம் கற்ற புதிய நாகரிகம்'
படைத்த மத்தியதர வர்க்கத்தின் எழுச்சிக்கும் ' கைத்தொழில் ' பெருக்கத்துக்கும் கால்கோளமைத்தது; ஆங்கிலேயரது செல்வர்க்கு அதிகமாகக் காணப்பட்ட சென்னை, வங்காளம், பம்பாய், இராச காளிகளிலே க்ெக மக்தியதர வர்க்கத்தினரின் கலை இலக்கிய

வெளிப்பாடுகள் பத்திரிகை வாயிலTதவும் நூல்வடிவிலும் மலரத்
நீெர்ட்ங்கின. அவர்களில் ஒருவரான சுந்தரம்பிள்ளையும் அவர் போன்ருேரும் 'தமது தாய்நாட்டின் பழஞ்சிறப்பையும். தாய் மொழியின் செர்ல்வளத்தையும் உணர்ந்திருந்தனர். அதே சமயத் 'தில் மேனுட்டின் நவீன் காலச்சிறப்பையும் பெருமையையும் கண் 'டறிந்தன்ர் த்ம்து படைப்புக்கள் இவ்விரு, தகைமைகளுக்கு மேற்ப இருத்தல் அவசிய்ம்' என்று கருதினர்’ என்பது பேராசிரியர்
கருத்து (6) ' " '
k # ဝှို’’’’’’ ( ... .' ?.
. . . . . & , , i. . .
* சுந்தரம்பிள்ளை பிரதிநிதித்துவப் படுத்திய இப்ப்ோக்கும் பொதுமக்கள் சார்ந்த "தெருப்பாடகர்களின் இயல்பும் பாரதியில் ஒருங்கிணைந்து, புதிய ப்ரிண்மிப்பைப் பெற்றன: ،نم...).ن
இத்தகைய் புதியு செல்நெறிக்கு அச்சியந்திர சாதனமும் இல்க்கியமும் காரணமாயிருந்தன. அச்சுக்கலையின் வருகையால் வெகுஜன மார்க்க நெறி தமிழிலக்கியப் பரப்பில் விருத்தியடைந் ததை ‘தமிழ் நாவல் இலக்கியம்’ என்ற நூலிற் காட்டிய பேரா சிரியர்.இதற்கு முன்னுேடியூகிய ஆங்கில இலக்கிய வரலாற்றிலும் இதையொத்த'அடிப்படையிலான விருத்தியைச் சுட்டிக் காட்டி யுள்ளார். நீராவியின் சக்தியால்.அச்சியந்திரமும் இயங்குவதற்கு கைத்தொழிற் புரட்சி வகைசெய்தது என்பதோடு கைத்தொழிற் புரட்சியின் காரணமும் காரியமும் ஆகிய முதலாளித்துவம், நவீன சமூகத்தின் இலக்கிய சாதனமாகிய அச்சடித்த தாளின் வாயிலாக புதிய சமூகத்தின் தலைவர்கட்கு செவி வழியாகவும், மூத்தோர் வார்த்தையாகவும் விளங்கா மொழிகளில் இருந்த உண்மைகளை கண்ணற் பார்த்து சமுதாய வாழ்க்கை என்ற் உரைகல்லிற் தாமே சரிபார்க்க வாய்ப்பேற்படுத்தியும். கொடுத்தது என்கிருர்
புேராசிரியர்.() . . . . . f.
அச்சுத்தாள் புதிய சமூகத் தலைவர்களுக்கு அறிவூட்டுவதாய் மட்டுமன்றி வெகுஜன தொடர்பு சாதனமாகவும் பயன்பட்டது. முதல்ாளித்துவத் தலைவ்ர்கள் இவ்வகையில் தாம் அறிவைப் ப்ெறவும்,'கைத்தொழிற் புர்ட்சியின் காரணம்ாக விருத்தியான இத்துறையை வெகுஜன த்ொடர்பு சாதனமாகப் பயன்படுத்தி வெற்றிகளைத் துரிதப்படுத்து முகமாகவும் கையாண்டனர்; அவர்கள் தமது கேர்ரிக்கைகளை வெகுஜனங்களின், குறிப்ப்ாக விவசாயிகளின் கோரிக்கைகளுடன் இணைத்து, நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான தமது போராட்ட்த்தில் அவர்களையும் 'இண்ைத்துக் கொண்டனர். . . . . . . . . . . . . . ६. :- '\{३',' ', । ; }\ , , - இதற்கு பொதுமக்களின் மொழியில் கருத்துளை வெளியிடுதல், அவசியடிானதாயிருந்ததால் மொழியின் விருத்தி "பன்மடங்
15
வருகையால் வளர்ந்த வெகுஜன சாதனமாகிய உரைநடை ... .. "v

Page 10
காயிற்று. இங்கு இன்னெரு அவசியமும் மொழிவிருத்திக்குக் கால்கோளாய் அமைந்திருந்தது; முதலாளித்துவம் தனது உற்பத்தியை சந்தைப் படுத்துவதற்கு முதன் முதலில் தனது தேசத்தை தனதாக்கிக் கொள்ளல் அவசியமெனவும், அதனை உறுதி செய்த பின்னரே அயல் நாடுகளையும் தமது சந்தையாக்க வலுவுண் டாகும் எனவும் அறிந்து கொண்டது. அதனல் முதலாளித்துவத் தலைவர்கள் மொழிப்பற்றையும் தேசிய உணர்வையும் வெகுஜன மட்டத்தில் தூண்டினர். கூடவே சந்தைகளை விரிவாக்கும் வரலாறும் தொடர்ந்தது. . . . . . .
இந்தியா. இலங்கை போன்ற நாடுகளை பிரித்தானியா ஆக்கிர மித்த வரலாறு இத்தகையதே; இந்திய தேசிய முதலாளித்துவச் கருத்துக்கள் முளை கொண்டமையே மீனுட்சி சுந்தரம்பிள்ளையின் மொழிப்பற்றும் தேசப்பற்றும் எடுத்துக் காட்டியது. முழுமை பெற்ற தேசிய இலக்கிய வாதியாக பாரதி பரிணமிக்கக் கூடிய வரலாற்றுப் போக்கும் வளர்ந்து வரலாயிற்று.
தேசிய எழுச்சியின் விளைவாக பழந் தமிழர் இலக்கியங்களையும் தேசிய இலக்கியமாகக் காணும் ஒரு மயக்கம் இருக்கிறது "இத்தகைய எண்ணத்துடனேயே ஒர் எழுத்தாளர் சிலப்பதிகாரம் தமிழ் இனங்கண்ட தலைசிறந்த "தேசிய காவியம்’ என்று கூறுகிறர் ஆனல் வேருேர் எழுத்தாளர் பெரிய புராணமே தமிழ்த்தேசிய இன்த்தின் ஈடிணையற்ற இலக்கியம் என்கிருர், யாரை நம்புவது? எவர் கூற்றை ஏற்றுக் கொள்வது? பாரதிக்கு முன் தேசியம் என்ற அடைமொழியை இலக்கியத்துக்குப் பயன் படுத்தல் பொருத்தமா? இது சிந்திக்கவேண்டிய கேள்வி'(8) என்ற விஞவினூடு முதலாளித் துவத்தின் பிறப்புடன் தோன்றிய தேசிய எழுச்சிக்கு முன்ன தேசிய இலக்கியம் சனத்தியமில்லை என்பதைப் பேராசிரியா உணர்த்துகிருர். . . .
ஒரு வகையில் இந்திய தேசிய எழுச்சிக்கு ஒத்ததாயுள்ள அதே வேளை தனக்கேயுரிய தன்மைகளையுடையதாயும் இலங்கையின் தேசிய இயக்க வரலாறு அமைந்தது.
ஈழத் தமிழிலக்கிய வரலாற்றில் 'சனங்கள்" எனும் சொல் ை 'பரந்த-ஆழமான-பொருளில் நாவலர் பயன் படுத்தியுள்ளார் என்பதையும், "பொதுசனத் தொடர்பின் முக்கியத் கடவத்தை அறிவு பூர்வமாகவும் உணர்வு பூர்வமாகவும் குறிப்பிடிக் tچھہ چھ வகையில் தெளிந்திருந்தார்’ என்பதையும் கூறும் பேராசிரிய "அன்றுவரை நிலவிவந்த வழக்கத்திற்கு மாருக ஜமீனதா? களையோ, ஆதீன கர்த்தாக்களையோ அல்லது பரம்பரைப் பிரபுக
* డ

ககளயோ மாத்திரம் சற்காரியங்களுக்கு நம்பியிராமல் ச்ாதாரண கல்வியறிவுடைய மக்களிடமும் பொதுக் காரியங்களுக்கு உதவி கோரினர் நாவலர்' என்கிருர். பத்தொன்பதாம் நூற்றண்டில் ചെ துமககள் குறித்துக் கற்றேர் சிலர் மத்தியில் ஏற்பட்ட Age மாற்றத்தையே நாவலர் பிரதிநிதித்துவப் படுத்துகிருர், (9)
தமிழிலக்கிய வரலாற்றில் பத்தொன்பதாம் நூற்றண்டிற்குரிய முக்தியத்துவத்தை சிலர் எடுத்துக் காட்டியுள்ளனராயினும் போதிய அளவில் இன்னமும் விளக்கப் படவில்லை. எனக் குறிப்பிடும் பேராசிரியர் ஈழத்து இலக்கியத்தைப் பொறுத்த வரையிலே சில சிறப்பியல் புடைய வரலாற்றுக் காரணங்களினல் சென்ற நூற் முண்டு அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது என்ற அடிப் படையில், அக் காலத்து இலக்கிய வாதிகளை "ஈழத்து இலக்கிய முன்னேடிகள்" என்ற நூலில் விரிவாக ஆராய்ந்துள்ளதாக அந் நூலின் முன்னுரையில் குறிப்பிடுகிறர்.(10)
"ஒவ்வொரு சமூக மக்களும், தாம் ஒரு குறிப்பிட்ட பாரம் பரியத்துக்கு வாரிசுகள் என்னும் உணர்வுடையவராய் வாழ்கின் றனர். அது அவர்களுடைய வாழ்க்கைத் தத்துவத்தையும் DGDésa நோக்கையும் பெருமளவிற்குப் பாதிக்கிறது. குறிப்பாகக் கலை இலக்கிய, சமய நம்பிக்கை, ஒழுக்கவியல் ஆகிய துறைகளில் பாரம் ‘பரிய உணர்வு முன்ைப்பாகச் செயல்படுவதைக் காணலாம். ஆனல் அதே வேளையில், வெவ்வேறு காலப் பகுதிகளில் பாரம்பரியத்திற்கு வாரிசுகளாக இருப்பவர்கள் தமது பாரம்பரியக் கூறுகளில் சிற்சில பொருத்தமின்மைகளும் குறைபாடுகளும் இருப்பதைக் கண்டு அவற்றிற்குப் பரிகாரந்தேட் முற்படுவதையும் காண்கிருேம். பத்தொன்பதாம் நூற்ருண்டில் அத்தகைய ஒரு உணர்வு இலக்கைத் தமிழிலக்கிய உலகில் ஏற்பட்டது. பொதுவாகத் தமிழ்கூறு நல்லுல கிற்கு இது பொருந்து மாயினும் பல்வேறு காரணங்களினல், தமிழகத்திலும் பார்க்க இலங்கையிலே, அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணப் பிரதேசத்திலே பத்தொன்பதாம் நூற்றண்டு பல மாற்றங்களைக் கண்டதோடு, பின்வந்த மாற்றங்கள் பலவற்றுக்கு அத்கி: 1ாரம் இடப்பட்ட காலப் பகுதியாயும் அமைகின்றது"(11) எனக் கூறுகிருர் பேராசிரியர். /
இந்துக் கோயில்களில் இடம்பெறும் கணிகையரின் நடனம், வான வேடிக்கை முதலிய கேளிக்கைகள் காமுகர் கூட்டத்துக்கே உகந் ;ண் எனப் பாதிரிமார் கிண்டல் செய்த நிலையில், இக் குறை கள் திருத்தப் படவும்-பலதரப்பட்ட ஆதிக்க காரர்களின் அந் தஸ் $ 3 தப் பிரதிபலிக்கும் இடமாகவன்றி சைவ சித்தாந்த அடிப் படை விலான வழிபாட்டு இடங்களாக கோயில்கள் விளங்கவும் விரும்பிய நாவலர் அதற்கான போர்க்குரலை எழுப்பினர். "கோயி

Page 11
லதிகாரிகளும், பிராமணர்களும் பிறப்புரிமையாலும் சொத்துடமை யாலும் கோயில்களிலே தாம் எண்ணியவாறு நடந்தமையை நாவலர் கண்டிப்பதை நாம் கவனிக்கலாம். கோயிலோடு நேரடி யாகச் சம்பந்தப்பட்டிராதி நாவலரவர்கள் கோயில் நிர்வாகமும் வழிபாட்டு முறைக்ளும் சமயாசாரங்களும் எவ்வாறிருத்தல் வேண் டும் என நிர்ணயிக்க விரும்புவதை அவரது கூற்றுக்கள் தெளிவுறுத்து கின்றன"(12) என்பது "பேர்ாசிரியர் கருத்து.
கோயில்களில் கேள்க்கைக் கொண்டாட்டங்களுக்கு. மாற்றீடாக சித்தாந்த விரிவுர்ைகளையும், காலாட்சேபங்களையும் நடாத்த நாவலர் வழி அமைத்தார். ‘தமிழ் வேத்மா கிய"தேவர்ரத்தை கோயில்களில் பண்ண்ேடு இசைத்து ம்க்களுக்கு அறிவூட்டவல்ல கலைச் செல்வங்களைப் பயன் படுத்துமாறு வலியுறுத்தியதோடு அதைச் செயற்படுத்தியுங் காட்டினர். நாவலர் காலம்வச்ரை சைவ சமயம் கோயில்களிலும் மடாலயங்களிலுமே பேணிப்பாதுகாக்கப் பட்டு வந்தது. அவற்றுடன் நேரடியாகத் தொடர்பு “ கொண் டோரே, சமயம், தத்துவம், இறையியல் என்பன குறித்து அதிகார பூர்வமாகப் பேசவும் எழுதவும் தகுதியுடையவர்களாகக் கொ ள்ளப் பட்டு வந்தனர். இந் நிறுவனங்களுக்கு வெளியே ဓ၈#ဍ၊ சித்தாந்த நூல்களைக் காண்ப்து தானும் அரிதாயிருந்தது. நாவலரே முதன் முதலாக எந்த ஒரு கோயிலையோ, தேவஸ்தானத்தையோ, மடால யத்தையோ சார்ந்து நிற்காமல் சமயத்துறையில் அதிகாரபூர்வ மான கருத்துக்களைத் துணிவுடன் கூறத்தக்கவராய் இருந்தார். GOF6 FLOL சம்பந்தமான சொற் பொழிவுகளைத் தமிழ் மக்களுக்கு வழங்கியதன் மூலம், கோயிலதிகாரிகளினதும் மடாதிபதி க்ளினதும் ஏகபோக உரிமையாயிருந்த சைவத்திற்கு விடுதலை யளித்து, சமயத்தில் நேர்மையான அக்கறை கொண்ட எவரும் அதில் ஈடுபட்டு உழைக்கலாம் என்னும் கருத்துக்கு நாவலர் வலு
ஆட்டிஞர் எனக் காட்டுகிருர் பேராசிரியர்.(13) ރ. م ..."
நாவலரை இப்புது நெறியில் உழைக்கத் தூண்டியது சைவ சமயத்தின் அக முரண்பாடே ஆயினும், கிறிஸ்தவ பாதிரிமாரின் கிண்டல்கள் அதற்கு புறநிலை ரீதியாக உந்துதலளித்தது; ஏளனத் திற்குரிய அம்சங்களை மரபின் பெயரால் திருத்த மறுத்த நிலப் பிரபுத்துவ ஆதிக்க உணர்வு படைத்த மட்ாலயத்தினர்க்கும், பிராமணர்க்கும் எதிரான இத்தகைய போராட்டம் தவிர்க்க வியலாததாயிருந்தது. அத்தகைய இறுக்கமான மரபுப்பிடியைத் தகர்க்கும் புேர்க் குரலுக்கான கருத்துகளுக்கு ஆதாரத்தைபு பழமையிலிருந்தே தேட வேண்டியமை அன்றைய « ) βε நியதியாகும். . . . . . ... ... : . . . . . . . . ...
18 ’’, , , '

f
சைவ வேளாளர்ன்ன்க் கூறிக்கொண்டு சமயர்சாரங்களினின் றும் பிறழ்ந்து வாழ்ந்தோரைக் கண்டு)சினத்து, சாதியாசாரங்க% இறுக்கமாகப், பேண வேண்டுமென நாவலர் வலியுறுத்தியதை பேராசிரியர்குறிப்பிட்டுள்ளார்: 'சாதிமுறை தகரட்டும் சமத்துவ நீதி ஒத்திட்டும்' என்ற கோஷம் முனைப்படைந்து சமூக மாற்றத்த விழைந்து நின்ற சக்திகள் தீண்டாமை ஒழிப்பு முன்னெடுத்த வேளையில், நாவலர் இயக்கமும் ܤܸamܧܰ-ܐܝܼܟ̣ܕ݂ܳܐ *ணிக்கு வந்கது: "நாவலர் சாதியர்சாரம் இறுக்கமாக
ப்பட வேண்டும் என வலியுறுத்தியமையால் நிராகரிக்கப்பட தீண்டியவர் எனும் போக்கும், வருனசிரம தர்மம் வலியுறுத்தும் "அற நெறிகளை மீறும் ஆலயப் பிரவேசப் \போராட்டங்கள், வ முனவை என்ற பழமை வாதிகளின் கருத்தும் நிலவிய வேளையில்
பேராஜய்ர் இவ்விடயத்தை வலியுறுத்துகிழுர்.
# ༣ ༈ ་་ ༡༩. y . .
மதவழிப்பட்ட போராட்டங்களினூடாக தேசிய
ர்வை வளர்க்கும்வகையில் செயற்பட்டதன் மூலமாக தமது
காலத்துக்குரிய வர்லாற்றுப் பணியை நிற்ைவு செய்கிருர்; பின் தொடர்ந்த தேசிய எழுச்சியின் முன்னேடியாகிருர், மாழுக, நவீன சமூகத்தின் தேசியப் பிரச்சனைகள் மேலும் பரிணமித்த கூறுகளை
உள்ளடக்கியனவாகிறது. .  ܵ
R
பத்தொன்பதாம் நூற்ருண்டிலே நாவலருக்கு (1822 - 187g) . சமகாலத்தவராக வாழ்ந்த கோபால கிருஷ்ண'பாரதி ( 1785-Ꮧ875) ‘நந்தனர் சரித்திரக் கீர்த்தனை'யில் (முதற்பதிப்பு 1861-2) சா ஒப் பிரச்சனையைச் சமயப் பிரச்சனையாக நோக்கியிருந்ததைக் குறிப் பிடும் போது "கோபால கிருஷ்ண பாரதியார் காலத்தில் இது ஒருவேளை பொருத்தமாயிருந் திருக்கலாம். ஆனல் எமது காலத்தில் சாதிப் பிரச்சனையை சமயப் பிரச்சனையாக மாத்திரம் கணிக்க வியலாது வர்க்கப் பிரச்சனையாகவும், தேசியப் பிரச்சனையாகவும் அது இருக்கிறது'(4) என்று பேராசிரியர் வலியுறுத்துகிருர், தீண்டாமையை ஒழிக்கும் வகையிலான ஆலயப் பிரவேசப் போராட்டம் , உள்ளிட்ட 'சாதி முறை தகரட்டும் சமத்துவ நீதி ஓங்கட்டும்' என்ற 1966 ஒக்ரோபர் 21 எழுச்சியின் தொடர் போராட்டங்களின் வளர்திசையிலேயே (1969ம் ஆண்டில்) இத்னை அலர் குறிப்பிடுவதும் "ஈழத்தைப் பொறுத்தவரையில் இன்று ஆல்யப் பிரவேசம் ஒரு தேசியப் பிரச்சனையாகி விட்டது'(15) என அவர் வலியுறுத்துவதும் கவனிக்கத் தக்கன.
தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்க.சிறப்பு மலரில் (1969ல்) "போராட்டமும் வரலாறும்’ என்ற தலைப்பில் பின்வருமாறு எழுதுகிறர்: "பழைய இலக்கியங்களைக் காட்டி "காந்தியும் சமா தானமும் போதிப்போர் உண்மையில் மாற்றத்தை எதிர்ப்

Page 12
பவர்கள்; போராட்டத்தை விரும்பாதவர்கள். அவர்கள் இலக்கி யத்தைத் தமது நேரக்கிற்கு ஏற்பப் பயன்படுத்துகிருர் 3ள் வள் ளுவன் முதல் வள்ளலார் வரை, சோலோ முதல் ஷொலொக் கொவ் வரை மனிதாபிமானம் பேசியோர் தொகை பெரிதுதான், ஆனல் மனிதனது அடிமைத் தளைகள் தான் பலவிடங்களில் இன் னும் அறுபடவில்லை. "நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை" என்பது பழைய இலக் கியக் குரல். எல்லோரையும் உழைத்துண்ணும் நல்லவராககும் புரட்சியை நாடி நிற்கிறது இன்றைய உலகம். அந் நாட்டத்தின் ஒரு சிறு பொறியே சாதிப்போராட்டம்”(16).
தேசிய விடுதலையுடன் அதன் தவிர்க்கவியலாத பகுதியான சமூக விடுதலைக்கூறுகள் இணைக்கப் படாதமையினல், சுதந்திரத் தின் பின்னரும் தேசியப் பிரச்சனையின் இத்தகைய அம்சங்கள் தொடர்ந்தன. மகாகவி பாரதி தேசிய விடுதலையுடன் பெண் விடு தலையும் சாதிய்மைப்பின் தகர்வும் வறுமை ஒழிப்பும் உள்ளிட்ட சமூக விடுதலை அம்சங்கள் இணைக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி யிருக்கிருர்; ஆயினும் அவரது மறைவின் பின் இந்தியாவிலும் இலங்கையிலும் சமுதாய வரலாறு வேறு விதமாக அமைந்தது: தேசிய விடுதலை சமூக விடுதலையை ஈட்டத் தவறியது. சுதந்திரத் தின் பின்னர் அப்பணி முன்னெடுக்கப் பட்டதன் பகுதியாகவே தீண்டாமை ஒழிப்புப் போராட்டம் தொடர்ந்தது. *
நிலவுடமைச் சமூகத்தின் மிச்ச சொச்சமாக நீடித்த சாதி யமைப்பைத் தகர்க்கும் போராட்டங்களை ஆதரித்தது போன்றே பெண் விடுதலை அம்சங்களையும் பேராசிரியர் ஆங்காங்கே சுட்டிக் காட்டி வந்துள்ளார்; பெண்ணைச் சிறையிட்டு வந்த தந்தை வழிக் கூட்டுக் குடும்பத்தின் தகர்வைக் குறிப்பிட்டதோடு(17), இருகட் சிக்கும் கற்பு நெறியைப் பொதுவாக வைக்காத சமூகக் கொடுமை; யினுல் பழி சுமத்தப்படும் அகலிகைகளின் கதையைத் தனியாக' ஆராய்ந்து அந்தநிலை மாற்றப்படும் சரியான மார்க்கத்தையும் காட்டியுள்ளார்(18). சமூக மாற்றத்துக்கான போராட்டத்துடன் பெண் விடுதலை இலட்சியம் இணைக்கப் படுதல் அவசியம் என அள் வப்போது பேராசிரியர் வலியுறுத்துவதை அவதானிக்க மூடியும், தேசிய விடுத%லயை யொட்டி பெண் விடுதலைக் குறிக்கோள்களி s சில நிறைவு பெற்றது போலன்றிச் சாதியமைப்பில் தளர்வு 噶 படாத நிலையில் சர்தியமைப்புக் கெதிரான பல தாப்பூட போராட்டங்கள் தவிர்க்க முடியாதனவாயிருந்தன. அந்தவனிக்யில் தேசிய விடுதலை வரலாற்றைத் தொடர்ந்த தேசியப் பிரச்சினையின் பகுதியாகிச் சாதிப் பிரச்சனை வரலாற்று அரங்கின் முன்னணிக்கு ந்ெதது , "
- O
 
 

இதற்குரிய வரலாற்றுப் போக்கை பேராசிரியர் ஆங்க்ாங்கே குறிப்பிட்டுச் செல்கிருர், இலங்கையில் விடுதலைக்கு முற்பட்ட காலத்தில் இந்திய தேசிய வாதத்தின் செல்வாக்கு பல வழிகளில் இலங்கைத் தேசிய வாதிகளை பாதித்தது எனக் குறிப்பிடும் பேரா சிரியர், இலங்கையில் நவீன தேசிய வாதத்தின் தொடக்கத்தை பராதியின் சமகாலத்தவரும் பாரதியுடன் பல வகையில் ஒப்புவி மை யுடையவருமான துரையப்பா பிள்ளையிற் காண்கிருர், 'இந் நூற் தீண்டின் தொடக்கத்திலிருந்து இலங்கையிலே தேசியவாதம் படிப் டியாகப் பரிணமித்து வந்துள்ளது. இத் தேசியவாதம் முற்பகுதி பிலே சமய, சமூக, கலாச்சார துறைகளிலும் பிற்பகுதியிலே, பொருளியல் அரசியல் துறைகளிலும் முனைப்பாக வெளிப்பட்டது' என்கிருர்(19). V . . .
பேராசிரியர் குறிப்பிடுவது போல "ஆறுமுக நாவலரின் பன் : முயற்சிகளின் தருக்க ரீதியான வளர்ச்சியின் வடிவ eாக’(20) துலங்கிய துரையப்பா பிள்ளையின் தேசியவாதம் முற் பகுதியின் முதிர் நிலையாயிருந்தது; பொருளியல் அரசியற் துறை களில் முனைப்படைந்த தேசிய இலக்கிய நெறி ஐம்பதுகளின் நடுப் பகுதியிலிருந்தே அரும்பத் தொடங்குகிறது. "ஐம்பதுகளின் பிற் பகுதி வரையில், சமூகத்தின் அடிநிலைகளில் உள்ள மாந்தர் நாவல் களிலே பாத்திரங்களாக இடம்பெறவில்லை. அதனல் இல்லாமை யின் அடிப்படையில் உலகை நோக்கி மாற்றம் கோரியவர்கள் இலக்கிய உலகில் சஞ்சரிக்கவில்லை. மத்தியதர வர்க்கத்தினரே தத் தம் குடும்பப் போராட்டங்களிலும், போட்டா போட்டிகளிலும், மனப் போராட்டங்களிலும் ஈடுபட்டிருப்பதை நாவல்கள் சித்தரித் தன. உழைக்கவும், ஊதியம் பெறவும், சாதாரண மனித உரிமை களுடன் வாழவும் அவர்கள் போராடவில்லை’’(21) என்பது பேரா சிரியர் கருத்து.
இலங்கையில் 1953ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் தேசம் பரந்த மாபெரும் ஹர்த்தால் போராட்டம் இத்தகைய போராட் டங்களின் முன்னறிவிப்பாயிருந்தது. அதன் பரிணமிப்பாக யாழ்ப் பாணத்தில் அறுபதுகளின் தேசியப் பிரச்சனையாகிய சாதிப்பிரச்சனை முன்னணிக்கு வந்தது.
இவ் விடத்தில் பேராசிரியரது இலக்கியப் பணிப் பிரவேசம் பற்றியும் பரிணமிப்புப் பற்றியும் கவனஞ் செலுத்துவது தகும். மாபெரும் 53ம் ஆண்டு ஹர்த்தால் காலத்தில் "இலங்கைப் பல்கலைக்கழகப் புகுமுகத் தேர்வு எழுதிவிட்டுச் சிலமாத காலம் வீட்டிற் 'சும்மா இருந்த' வேளையில் ஆர்வத்தோடு நாவல்களைக் கற்று தொகுத்தும், வகுத்தும், பகுத்தும் ஒழுங்குபடுத்தி எழுதி
V-,
21

Page 13
W
1954ல் வீரகேசரி ஞாயிறு இதழில் வெளிவந்த ‘தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்’ என்ற கட்டுரைத் தொடரே வ ருடைய முதலாது ஆய்வுப் படைப்பாகிய ‘தமிழ் நாவல் இலக்கி யம்’(22). உழைக்கும் மக்களுடைய போராட்டம் முனைப்படைந்து ஏகாதிபத்திய சார்பு யு. என். பி ஆட்சியைத் தூக்கியெறிந்து தேசிய முதலாளித்துவ சக்திகள் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்ற வழிகோலிய மக்கள் எழுச்சிக் காலகட்டம் அது; அந்த ஆண்டு களே, (ஐம்பதுகளின் முற்பகுதியே) பேராசிரியர் பல்கலைக் கழகப் ஆடிப்பை மேற்கொண்ட காலமாகும்.
அப்போது மாக்ஸிஸ் சித்தாந்தம் உழைக்கும் மக்களிடமும் இளஞ் சந்ததியிடமும் உணர்வையும் அறிவையும் தூண்டும் தத்து வமாய் வீறுகொண்டு வளர்ந்தது; பேராசிரியரும் புதிய தேெ எழுச்சியாலும் மார்க்ஸியத்தாலும் கவரப்பட்டார். படிப்பை முடித்து 'தினகரன் பிரதம ஆசிரியராக இருந்தபோது, 1960ம் ஆண்டு நவம்பர் மாதம் 12-14ம் திகதிய கல்கத்தா மாநாட்டில் முற்போக்கு எழுத்தாளர் சங்கப் பிரதிநிதியாகக் கலந்துகொண் டார். தேசிய இலக்கியக் கோட்பாடு வேகம் பெற்றிருந்த வேளையில் - அந்தப் பின்னணியில் - முற்போக்கு எழுத்தாளர் சங்கப் பிரதிநிதி என்ற வகையிலும் தினகரன் பிரதம ஆசிரியர் என்ற வகையிலும் ஈழத்து இலக்கியத்தின் நோக்கையும் போக்கை யும் இயன்றவரை எடுத்து விளக்கியிருந்ததுபற்றி அவர் 198ல் எழுதியுள்ளமை (23) மனங்கொள்ளத்தக்கது.
தேசிய எழுச்சி முனைப்படைந்த அவ்வேளையில் பாரதின்ய முன் னிறுத்தி தேசிய இலக்கியப்பணி முனைப்படைவதாயிற்று. அவ்வியக் கத்தில் ஆர்வத்தோடு பங்குகொண்ட பேராசிரியர் "1956இல் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஏற்பாடு செய்த பாரதி விழா இலங்கையில் பாரதி இயக்கப் பரிணுமத்தில் முக்கியம் வாய்ந் தது" எனக் குறிப்பிடுகிருர்; தேசிய எழுச்சியின் காரணமும் காரி யமுமான பாரதி இயக்கம் பற்றிப் பிரஸ்தாபிக்கும்போது முருகை யனின் கருத்தையும் இணைத்துச் சொல்கிருர்: “பாரதி விழாவின் விளைவாக எழுந்த புத்துணர்ச்சியும், தூண்டுகோலாக அமைந்து தான் 1960 களில் இலங்கையில் இலக்கிய முற்போக்குவாதம் முனைப்புடன் செயற்பட்டுக் கொண்டிருந்தது. இதன் பன்முக வெளிப்பாடாகவே "தேசிய இலக்கியம் வேண்டுமென்று கோரிநின்று குரல்கொடுத்தமை, சாகித்திய மண்டலத்தின் சீர்கேடுகளை எதிர்த்து நின்றமை, மரபுவாதிகளின் பழமை வாதத்தைச் சாடியமை, தேசியூர் ஒருமைப்பாட்டுக்காக உழைத்தமை, தென்னிந்திய சஞ்சிகைகளின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தக் கோரியமை" (முருகையன் நாவலர் இயக்கம் புதுமை இலக்கியம் -பாரதி நூற்ருண்டு முன்னேடி மலர்) இயக்க அடிப்படையில் அமைந்தன’’(24).
22

தேசிய இலக்கியப்போக்கின் பரிணமிப்பில் மண்வாசனையும், சமகாலப் பிரச்சனைகளை மையமாகக் கொண்ட ஆக்கங்களும் இத் தகைய இயக்க ரீதியான போராட்டங்களினூடாக முனைப்புப் பெற்ற அதேவேளை, ஈழத்து இலக்கியப் பாரம்பரியத்தின் வரலாற் றுப் பேர்க்கை பின்னேக்கிப்பார்த்து ஒழுங்கமைக்கும் போக்கும் முன்னணிக்கு வந்தது. “கடந்த நூற்ருண்டைப் பின்னுேக்கிப் பாக்கும் பொழுது, முன் எப்பொழுதும் இல்லாத அளவில் தற்
வளர்ச்சியின் காரணமாகவும், இந்நாட்டின் பொதுவான கலாசார் எழுச்சியின் பெறுபேருகவும் அண்மைக்காலத்தில் இலங்கைத் தமி
சி ம் நாவலர் ஆய்வுகளுக்கு மிகவும் வாய்ப்பான ஒரு சூழ்நிலை திருத்தல் புலனுகும். இதற்குக் காரணங்கள் பல: நாவலர் இயக்க
ழிலக்கியம் பலரது கவனத்தை கவர்ந்துள்ளது. படைப்பிலக்கியத்
தேவைகளின் விளைவாகத் தோன்றிய தேசிய இலக்கிய இயக்கம், தொடக்கத்திலே சமகால இலக்கியங்களுக்கே முதன்மையளித்த தாயினும், தவிர்க்க இயலாதபடி விரைவிலேயே இலங்கைத் தமி ழிலக்கியப் பாரம்பரியம் முழுவதையும் தழுவித் தனதாக்கிக் கொள்ள முனைந்தது. ஆற்றலும் அழகும் நிறைந்த பழைய படைப் புகளிலிருந்து நவீன ஆக்கங்களுக்கு உயிர்ச்சத்துப் பெறவேண்டிய
தன் அவசியத்தை உணர்ந்தது. இவ்வியக்கத்தின் விளைவுகளில் ஒன்
முகவே நாவலர் ஆய்வுகள் சரித்திர நோக்கிலும் சமூகவியற் கண் னேட்டத்திலும் நடைபெறலாயின. பதினெட்டாம் பத்தொன்ப தாம் நூற்ருண்டுகளைச் சேர்ந்த தமிழிலக்கியம் துருவி ஆராயப்
படும் நிலை தோன்றியது"(25) எனும் பேராசிரியரது க்ருத்து DG7 ši
கொள்ளத்தக்கது.
தேசிய இலக்கிய மறுமலர்ச்சியே நாவலரியக்கத் தோற்றத்துக் குக் கால்கோளாயிற்று எனும் பேராசிரியர், நவீன இலக்கியப்
போக்கை நாவலர் மரபின் தொடர்ச்சியாகவே காண்கிருர். ஐம்
பதாம் ஆண்டுகளைத் தொடர்ந்த “கடந்த இரு தசாப்தங்களுக்கும் மேலாசு, சமுதாயநோக்கும் தேசாபிமானமும் தமிழிலக்கிய ஆர்வ
மும் கொண்டு, இன்றைய தேவைகளே இலக்கியத்திற் கலந்து ஈழத் துத் தமிழ் எழுத்தாளர் இயங்கி வருவதும், நாவலர் மரபின்
நவீன வெளிப்பாடு என்றே எண்ணத் தோன்றுகிறது. ஏனெனில், உண்மையான-உயிர்த்துடிப்பான - மரபு என்பது கடுமையான
வரையறையற்றது; அது புனிதமான பெயர்ப்பட்டியலில் தங்கி
யிருக்காதது. காலத்துக்குக் காலம் தன்னைத்தானே புதுப்பித்தும் தனக்கு வேண்டிய ஜீவசத்துப் பெற்றும் இயங்கிச் செல்வதே மரபு ஆகும். R
"இவ்வாறு பார்க்கும்போது நாவலர் மரபு என ஒன்று இருப் பதின் உண்மையையும், அது தொடர்ந்து இலங்கையில் இயங்கி
سیر "گر

Page 14
வந்திருக்கிறது என்பதையும், அதற்குச் சில சிறப்பியல்புகள் உண்டு என்பதையும், வெளித்தோற்றத்தில் சிற்சில மாற்றங்கள் தென்படி னும் அம் மரபு இன்றைக்கும் வாய்ப்புள்ள சில ஆக்கக்கூறுகளைக் கொண்டுள்ளது என்பதையும், அக் கூறுகளில் ஒருமுகப் படுத்தப் பட்ட இலக்கிய நோக்கு, மக்கட் சார்பு, நாட்டு நலநாட்டம் என் பன சிறப்பானவை என்பதையும் அவை மறைமுகமாகவேனும் உள் ளார்ந்த சக்தியுடன் செயற்படுவதனலேயே தற்கால ஈழத்துத் தமிழிலக்கியம் சிற்சில அம்சங்களில் தமிழக இலக்கியப் போக்கிலி ருந்து வேறுபட்டு விளங்குகிறது என்பதையும் நாம் ஐயத்துக்கிட மின்றி உணரக்கூடியதாக இருக்கிறது' என்கிருர் பேராசிரியர்(26).
நாவலர் தமது சமகாலத்தவரினின்றும் மாறுபட்டு காலதேச வர்த்தமானத்துக்கு அமைவாக முன்னெடுக்கப்படவேண்டிய வழி முறைகளை அறிந்து செயற்பட்டவர்;(27) அந்தநெறி (தத்தமது கால-இட மக்களது தேவைகளை முதன்மைப்படுத்தும் போக்கு) இலங்கையில் முத்துக்குமார கவிர்ாசர் (1780 - 1851) (28), உடுப் பிட்டி குமாரசாமி முதலியார் (1791 - 1874) ஆகியோரிடம் முகிழ்க்க ஆரம்பித்து(29) நாவலரிடம் பரிணமிப்பைப் பெற்றது; தொடர்ந்த நாவலர்மரபு இராமலிங்கம், தி. த. சரவணமுத்துப் பிள்ளை, குமாரசாமிப்புலலர், (1854-1922), தெ. அ. துரையப்பா பிள்ளை, இடைக்காடர் நாகமுத்து, அம்பலவாணர், சோமசுந்தரப் புலவர், பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை போன்ருேரூடாக வளர் ந்த வரலாற்றை 'ஈழத்து இலக்கிய முன்னுேடிகள்’ என்ற நூலில் பேராசிரியர் ஆராய்ந்துள்ளார். *
இந்த நூற்ருண்டின் ஐந்தாம் தசாப்தத்தில் (நாற்பதாம் ஆண்டு களில்) மறுமலர்ச்சி இயக்கத்தினர் இந்த மரபின் நேர்சீரான வளர்ச் சியை இறுதிநிலையில் வெளிப்படுத்தினர்; ஐம்பதாம் ஆண்டுகள், குறிப்பாக 53இன் மகத்தான ஹர்த்தால் போராட்டத்தைத் தொடர்ந்து சமய-சமூகத் துறைகளில் இருந்த தேசிய எழுச்சி பொருளியற் துறைக்குப் பரிணமித்ததும் வீறுகொண்ட புதிய மரபு ஐம்பதுகளின் பிற்பகுதியையொட்டி வளரலாயிற்று. அப்புதிய மரபு டன் தன் பணியை இணைத்த பேராசிரியர் அந்தநெறி சரியான மார்க்கத்தில் தொடர்வதற்கு அயராதுழைத்தார்.
அறுபதுகளிருந்து தென்னிந்தியத் தாக்கத்தை பெருமளவில் தவிர்க்கும் வகையில் இயக்க ரீதியாகச் செயற்பட்ட அணியில் பேரா சிரியரின் பங்களிப்பு மகத்தானது. நாவலரிலிருந்து மறுமலர்ச்சிக் கால இலக்கிய வாதிகள்வரை தமிழகத்துடன் கொண்டிருந்த உறவு வலுவானது. புதிய தேசிய மரபுக்கு அவசியப்பட்ட செல்நெறியை ஷ்முங்கமைக்க முடிந்தமையினல் தமிழ்கூறு நல்லுலகெங்கும் திரா விடரியக்க மரபு தனது வரட்டுத் தனமான நடையைத் திணித்த
24

போதும் இலங்கைத் தமிழிலக்கியப் பரப்பை அதனல் வெற்றி கொள்ள முடியாமற் போனது(திராவிடரியக்கத்தின் பிரத்ான அம்ச மாகிய பிராமணிய எதிர்ப்புக்கான சமூக அடித்தளம் இலங்கையில் இருக்கவில்லை என்பதும், தமிழகத்தில் பிராமணர் கொண்டிருந்த சமூக ஆதிக்கங்களைக்கூட இலங்கைத் தமிழர் மத்தியில் திராவிட ரியக்கத் தலைமைச் சக்தியான வெள்ளாளரே கொண்டிருந்தனர் என்பதும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய பிரதான அம்ச
மாகும்.)
தீ பேராசிரியர் கோயில் பிரபந்தங்களுக்கு முன்னுரை எழுதும் ப்ோதும் "இப்பிரபந்தங்களில் இடம்பெற்ற தலக்காட்சிகள், பிர தேச வருணனைகள், ஊர்உணர்வுகள் முதலியவ ற்றினடியாகவே
காலப்போக்கில் தேசிய இலக்கிய மரபு ஒன்று இந்நாட்டிலே பரிண மித்துள்ளது'(30) என்று தனது கருத்தை வலியுறுத்தி சமூகப் பார்வையும் இலக்கிய நெறியும் செழுமைப்பட உழைத்தமையை அவதானிக்கலாம்; மாக்ஸிஸம் பேசி கோயில் மலர்களுக்கும் முக வுரை எழுதுவதா என்ற அர்த்தமற்ற கண்டனங்களுக்கு அவர் அஞ்சியதில்லை; அவரைப் பொறுத்தவுரை சமூக மர்ற்றத்துக்கு அனுசரணையான விடயங்களே பிரதானமானவை; அதைவிடுத்து சமூகப் பிரச்சனையின் நிழல்களோடு(31) மோதி தனது பலத்தை அவர் விரயமாக்கியதில்லை. * w
ஈழத்து இலக்கியம் உலகப் பொதுவான தமிழிலக்கியத்தின் பகுதியேயாயினும் தேசிய இலக்கிய நெறி என்ற வகையில் ஈழத் தமிழிலக்கிய மரபு தனித்துவப் போக்குடையதாய் மிளிர்வது தவிர்க்கவியலாததாகும். ஒரேமொழியில் வெவ்வேறு தேசிய இலக் கியங்கள் அமைவது சாத்தியமானதே. றெனே வெல்லேக்கும்(Rene Welleke) 6267officir en Tur69) zb (Austin Warren) gegd;&u '3)avás Guu& கொள்கை'(Theory of Literature)எனும் நூலில் ஐரிஸ், அமரிக்கதேசங் களில் எழுந்த ஆங்கில மொழியூடான அந்தந்த நாட்டு தேசிய இலக்கியங்களை பிரித்தானிய இலக்கியத்திலிருந்து வேறுபிரித்துக் காட்டியுள்ளமையை அவதானிக்க முடியும்.(32)
அந்த வகையில் இலங்கையின் தேசிய இலக்கியமும் தமிழிலக் கியத்திற்கு வளமூட்டவல்ல வகையில் வ்ளர்க்கப்பட்டது. தினகரன் பிரதம ஆசிரியராக இருந்தது முதல் பேராசிரியராக மறைந்த இறுதிக் காலம்வரை வடக்கு, கிழக்கு, மலையகத் தமிழர்கள் அனை வரதும் விசேட அம்சங்களையும் அவ்வப் பிரதேசத்திற்கான மண் வாசனையையும் ஆக்க இலக்கியங்களில் வெளிக்கொணரத் துணை புரிந்தார். அவரிடம் தேசம்பரந்த விசாலமான பார்வை இருந்த மையினலேயே அனைத்துப் பிரதேச மக்களையும் இவ்வாறு பிரதி நிதித்துவப் படுத்தக்கூடிய செயற்பாட்டுக்கு வாய்ப்பிருந்தது.
நவீன ஈழத் தமிழிலக்கியத்தின் முழுப் பரிமாணத்திலும் கவ னஞ் செலுத்திய பேராசிரியர், ஒவ்வொரு பிரதேச மக்களதும்
i 25

Page 15
வாழ்முறையை இலக்கியமாக்கத் தகுதியானவர்களை உற்சாகமூட்டி எழுத்வைத்துள்ளார்; அவ்வாறு எழுதத் தூண்டப் பட்டவர்களில் ஒருவரான மறைந்த மலையக இலக்கிய மேதை சி. வி. வேலுப் பிள்ளை, தன்னுல் எழுதமுடியும் என்ற நம்பிக்கையை தனக்கு வளர்த்து எழுதவும் தூண்டிய முறையை பேராசிரியரின் அஞ்சலி
யுரையில் குறிப்பிட்டுள்ளார்.(33)
ஒவ்வொரு பிரதேசத்துப் பிரச்மனையையும் பேராசிரியர் தேசிய நலனின் அடிப்படையிலேயே நோக்கி, அவற்றை பிரதேசவாதமாக கொச்சைப்படுத்தும் போக்கை எதிர்த்தார். அவ்வாறே இலங்கைத் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சனையை அணுகியபோது, ஒரு புறம் சிறுபான்மை மக்கள் என்றவகையில் தமிழ் மக்கள் எதிர் நோக்கிய பிரச்சனைகளை சரியான நிலைகொண்டு நோக்கி நியாய மான போராட்டங்களை ஆதரித்தார்; மறுபுறம் குறுகிய தேசிய வாதமாக வளர்க்கப்படும் போக்கை எதிர்த்தார்.(34) \ ʻ ʼ .
1956ம் ஆண்டின் பின்னர் தேசிய எழுச்சியின் பொருளாதா ரத் துறைப் பரிணமிப்பு முனைப்பட்ைந்ததைத் தொடர்ந்து தேசிய
இலக்கியம் முழு இலங்கையிலும் ஈட்டிய இத்தகைய புத்தூக்கிம்
பெற்ற மறுமலர்ச்சிப்பாதை, இலக்கியப் பரப்பில் மாற்றுக் கருத்
துடையோரை மீறவியலா வரையறைக்குட்படுத்தியது; பேராசிரி
யரது முன்முயற்சியுடனும் வழிகாட்டலின் கீழும் பல படைப்புகள்
பரந்த நோக்கிலான தேசிய இலக்கியப்போக்கை நெறிப்படுத்திய
தால் மாற்றுப்போக்குடையோர் அரசியல் ரீதியில் ஏறக்குறைய
திராவிடப் பாரம்பரியப்போக்கை மேற்கொண்ட போதிலும் இலக் கிய நடையில் தேசியப்போக்கை மீறமுடியாதவர்களாயினர்.
−
பேரர்சிரியர் தொடர்பும் ஒரு காரணமாக இருந்தமையால் இனப்பற்றிலிருந்து தேசிய இலக்கிய நெறிக்கு விரைவாக ஈர்க்கப் பட்டமைக்கு அவரது பால்ய நண்பர் கவிஞர் முருகையன் சிறந்த உதாரணமாவர்: கவிஞர் முருகையனின் பரிணமிப்புக்களை பேரா சிரியர் மேல்வரும் மூன்று கட்டங்களாக வகுத்துக்காட்டியுள்ளார்: 1 . தொடக்க நிலை(1955 வரை) : காந்தீயம், வள்ளுவம், போர் வெறுப்பு, அமைதிநாட்டம், அறஒழுக்கம் ஆகியன மேலோங்கி யிருந்தன.
2 . ஐம்பதுகளின் பிற்பாதி: இனப்பற்று, மொழியுரிமைகோரும் அரசியல் வாழ்க்கைத் தத்துவத்தேடல், சமூக முரண்களின் அடி யான நையாண்டி வெளிப்பட்டது.
3 அறுபதுகளின் பின் சமுதாய நீதி, பகுத்தறிவுப் பார்வை, பொதுவுடமை நாட்டம், வாழ்க்கை அனுபவ விமரிசனங்கள் எனும் தளத்துக்கான பரிணமிப்பு(35). ' இத்தகைய பரிணமிப்புப் படிநிலைகள் ஏனைய ஆக்க இலக்கியவாதி கட்கும் பொதுவாயிருந்தன(36)எனக் குறிப்பிடும் கவிஞர் முருகை யன் பேராசிரியர் குறிப்பிடும் மூன்ருங்கட்ட வளர்ச்சிக்கு அவரு
26

டைய பால்யகாலநட்பு நீடித்தமையும் காரணமாயிருந்ததெனக் கூறிஞர்.
1956ம் ஆண்டைத் தொடர்ந்து வளர்ச்சி பெற்று வந்த தேசிய இனப்பிரச்சனை அவருடைய மறைவின்போது தேசியப் பிரச்சஜன aunts ரீவ்ளர்ந்திகுந்தது. அப்போதுங்கூட தேசியப் பிரச்சனையின் பகுதிய்ாகவே தேசிய இனப்பிரச்சனையைப் பார்க்க வேண்டும் என்ற நீதையே அவர் கொண்டிருந்தார்; "ஈழம்" என்பதை ஒருங் கிண்ந்த இலங்கையின் மறுபெயராகவே கருதிவந்த காரணத்தினல் இலங்கையின் தேசியஇலக்கிய முன்னேடிகளை இனங்காட்டும் தனது இறுதிப் படைப்புக்கு 'ஈழத்து இலக்கிய முன்னுேடிகள்" என * பெயரிட்டிருந்தார்.
அவருடைய தேசிய உணர்வும் குறுகிய கண்ணுேட்டத்தை லக்கியதாயமைந்தது; தேசிய உணர்வை பாட்டாளி வர்க்க சர்வ தேசியத்தின் பகுதியாக அவர் கண்டார். எமது தேசிய இலக்கியம் ஏனைய தேசங்களின் இலக்கியங்களோடு இணைந்து ஒரே உலகத்தை உருவாக்க வேண்டும் என்ற குறிக்கோளுடையவராக பேராசிரியர் விளங்கினர்.
தேசிய உணர்வுக்கான புறநிலையை உருவாக்கிய முதலாளித் துவமே ஒரே உலகுக்கான முன்தேவையையும் உருவாக்கியிருப்பதை கிாட்டுவதற்கு மாக்ஸ்-ஏங்கெல்ஸின் மேற்கோளை எடுத்தாள்கிருர்; ‘உலகச் சந்தையைச் சுரண்டுவதன் மூலம் பூர்ஷ்வா வர்க்கம், ஒவ்வொரு நாட்டின் பொருளுற்பத்திக்கும் பொருள் உபயோகத் திற்கும் ஒரு பொதுவான உலகத்தன்மை அளித்திருக்கிறது. புதிய தொழில்களின் உற்பத்திப் பொருட்கள் உள்நாட்டில் மட்டுமல்ல, உலகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் உவயோகிக்கப் படுகின்றன. தேசங்கள் உலக ரீதியாக ஒன்றையொன்று சார்ந்திருக்கின்றன; பெளதிகப் பொருளுற்பத்தியைப் போலவே, அறிவுப் பொருளுந் பத்தியிலும் இதே நிலமை. தன்னிப்பட்ட நீாடுகளின் அறிவுப் பட்ைப் புக்கள் பொதுச்சொத்தாகின்றன. ஒருதலைப் பட்சமான தேசிய்ப் பார்வையும் குறுகிய மனப்பான்மையும் மென்மேலும் அசாத்திய மாகின்றன. மிகப்பல தேசிய இலக்கியங்களிலிருந்தும் பிரதேச இலக்கியங்களிலிருந்தும் ஓர் உலக இலக்கியம் உதயமாகிறது"(37) இவை “கம்யூனிஸ்ட் அறிக்கை” யின் வரிகள்; இப் பகுதியை தனது 'ஒரே உலக இலட்சியத்திற்கு அனுசரணையாகக் காட்டுகிறர் பேராசிரியர்.
། இவ் வகையில் முதலாளித்துவத்தின் சந்தை பிடிக்கும் போட்டி உணர்வை துணையாக்கிக் கொள்ளும் போதே ஒரேஉலகக் ويقع G இறிக்கோளுத்தம் அடிப்படையை அமைக்கிறது. பொதுவாக ஒவ் வொரு தேசிய இனங்களிடையிலேயும் ஒடுக்குபவர்களதும் ஒடுக்கப் பட்டவர்களினதுமாக இரு வேறு தேசிய கலாச்சாரங்கள் உள்ளன . (38). முதலாளித்துவ சமூகத்தில் வரலாற்று ரீதியில் தவிர்க்கவிய
27

Page 16
லாத கோட்பாடாகிய ச்ேசிய இயக்க குறிக்கோளை, ஒடுக்கப்பட்ட மக்களது போராட்டமாய் உள்ளவரை, பாட்டாளி வர்க்க் உணர் வை மங்கச் செய்யாத வரையறைக்குள் மாக்ஸிஸவாதிகள் ஆத ரிப்பர்(39). அங்கே ஒரே தேசிய இனத்துள் உள்ள சுரண்டற் சிந் தனையுடனன் தேசிய கலாச்சாரத்துக்கு எதிரர்க ஒடுக்கப்பட்ட மக்களின் தேசிய கலாச்சாரம் தனது தவிர்க்கவியலாப் போராட் டத்தை நிகழ்த்தும், அக் காரணத்தினல் இயல்பாகவே அவை ஜன A5ft tus சோஷலிசக் குறிக்கோளுடைய தேசிய கலாச்சாரங்களாக அமையும். அத்தகைய ஜனநாயக, சோஷலிச அம்சங்களையுடைய தேசிய கலாச்சாரங்கள் அனைத்தும் இணைந்தே(40) ஒரு உலகக் கலாச்சாரம் கட்டி வளர்ச்கப்படுகிறது.
இத்தகைய புறநிலை யதார்த்தத்தை தோற்றுவித்த முதலாளித் துவம் இக் குறிக்கோள்களை முழுநிறைவான தாக்க முயற்சிச்க வில்லை. பேராசிரியரின் வார்த்தைகளில், 'இவை முதலாளித்துவ சகாப்தம் தோற்றுவித்த வாய்ப்பான அம்சங்கள். ஆனல் முதலா ளித்துவம் தனது உள்ளார்ந்த முரண்பாடுகள் காரணமாக மனுக் குலம் ஒற்றுமையாகவும் அமைதியுடனும் வாழ்வதற்குத் தடை யாக அமைந்து விடுகிறது. சுரண்டல் போட்டி, ஆக்கிரமிப்பு, யுத் 'தங்கள் முதலியனவும் முதலாளித்துவ சகாப்தத்தில் உலகளாவிய னவாக உள்ளன. இந் நிலையிலேயே சோஷலிசம் முதலாளித்துவத் தின் கொடுமையை நீக்கிப் புதியதொரு சமூக அமைப்பை உரு வாக்கும் மார்க்கத்தை உலகிற்கு அறிமுகப் படுத்தியுள்ளது. சோஷ லிஸத்திலே "மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இல் லாமையால் பேதமும் குரோதமும் மறைய வாய்ப்புண்டு'(41) எனக் கூறமுடியும்.
பேராசிரியரிடம் இத்தகைய பரந்த நோக்கு அமைய்ப் பெற்றி
மையினல் ஒவ்வொரு பகுதிப் பிரச்சினையிலும் மனிதகுல விடுதலை குறிக்கோளுக்கு சாதக பாதக நிலைகளை அவதானித்துத் தனது ஆதரவையும் எதிர்ப்பையும் தீர்மானித்துக் கொண்டார். எடுத்துக்
காட்டாக ஈரான்-ஈராக் யுத்தத்தின் போது தமிழர் விடுதலைக்:
கூட்டணி பகிரங்கமாகவே ஈராக்கை ஆதரித்தது; பேராசிரியர் இவையிரண்டுமே மூன்ருமுலக நாடுகள் என்ற வகையில், மேலா திக்க வாதிகளின் சதிகளை முறியடித்து அந்தப் பொது எதிரிகட்கு எதிராக ஈரானும் ஈராக்கும் ஐக்கியப்பட வேண்டியது அலசிய
மாக உள்ளமையிஞல் தமக்குள் உள்ள பிரச்சனைகளை சமாதான
மாகத் தீர்க்க வேண்டுமென வலியுறுத்தினர். (ஈரானின் நிலச் பாட்டை அடாவடித்தனமானது எனப் பலரும் வர்ணித்த போத், ஈரானின் சமூக அமைப்பு எவ்வாறு y 60 Lou வேண்டும் என்பதை ஈரான் மக்களே தீர்மானிக்க வேண்டும், தமது நாட்டின் சுதந்தி ரத்தைப் பேணும் இலட்சியத்துடன் இரு மேலாதிக்க வல்லரசுக ளுக்குமெதிராகப் போராடும் ஈரான் மக்கள் மதிக்கப்பட வேண்டி யவர்கள் என்ற கருத்தை பேராசிரியர் வலியுறுத்தினர்) (42).
28
 

ஒட்டுமொத்தமாக, தேசிய உணர்வை மனிதகுல விடுதலையின் திசைமார்க்கத்துக்கு எதிரானதடைக்கல்லாகப் பா விக் கும் கபடத்தனங்களை இனங்கண்டு, காட்டி பாட்டாளிவர்க்க சர்வதேச நெறியில் தேசிய இலக்கியம் உருவாக உழைத்தமை பேராசிரி டரின் குறிப்பான இயல்பாகும். அவரது எழுத்துக்களினூடாகீவே அவர் தேசிய இலக்கியத்திற்கு வழங்கிய இத்தகைய வரைவிலக் கணத்தைக் கண்டுகொள்ள முடியும்; தாம் வாழும் சூழலைப் பிரதி பலித்து, தமது சமகால மக்களின் வாழ்வை - உணர்வை பிரதி பலிப்பதே" டு, அவற்றை மனிதகுல விடுதலையின் திசை மார்க்கத் தி ற்கு இட்டுச் செலுத்தும் வகையில் சர்வதேச உணர்வோடு படைக்கும் இலக்கியம் தேசிய இலக்கியமாக அமையும் என்பது பேராசிரியர் கருத்து.
குறிப்புகள் 1. க.கைலாசபதி
பாரதிஆய்வுகள் NCBH, 41 - பிசிட்கோ இண்டஸ்ட்ரி யல் எஸ்டேட், சென்னை 600 098, முதற்பதிப்பு மார்ச் 1984
iš 100 அதேநூல் பக் 37 அதேநூல் பக் 41 அதேநூல் பக் 117 அதேநூல் பக் 74-5 ལ་ அதேநூல் பக் 56-7 - க. கைலாசபதி, "தமிழ் தாவல் இலக்கியம்’ NCBH, சென்னை 600 098, 3ம் பதிப்பு ஜூலை 1984, பக்.72-4) க. கை, 'அடியும் முடியும் (இலக்கியத்திற் கருத்துக்சள். பாரி நிலையம், 59 பிராட்வே, சென்னை 1, மார்ச் 70, பக் 261 9. க. கை, 'ஈழத்து இலக்கிய முன்னேடிகள்? பதிப்பாசிரியர்
மே. த . ராசுகுமார் முதற்பதிப்பு, 1988, பகில் 18.19 10. அதேநுரல் 9-10 11. அதேநுால் பக் 14, 12. க. கை "இலக்கியச் சிந்தனைகள்" விஜலட்சுமி புத்தகசாலை 248 காலி வீதி, கொழும்பு6, ஜனவரி 1983, பக் 35-61, 13. அதே நூல் பக் 39-40 14. அடியும் முடியும் பக் 349 15. அதேநுால் பக் 345 16. இலக்கிய சிந்தனைகள் பக் 130.1 17. அதேநுால் − 18. அடியும் முடியும் பக் 126-200
8
29

Page 17
19.
20 21. 22.
23. 24. 之5.
26. 27. 28. 29. 30.
31.
32.
33.
34.
35.
36
37.
38.
39.
40.
4 Il .
42。
30
ஈழத்து இலக்கிய முன்னேடிகள் பக் 111-2, அதேநூல் பக் 110
இலக்கிய சிந்தனைகள் பக் 108.9, தமிழ் நாவல் இலக்கியம் பக் 01 இலக்கிய சிந்தனைகள் பக் 29, பாரதி ஆய்வுகள் 218-9, க. கை. நாவலர் நூற்ருண்டு மலர் 1979 பதிப்பாசிரியர் க. கை பக் 12 ஈழத்து இலக்கிய, முன்னுேடிகள், பக் 65-6, நாவலர் மலர் 1969 பக ஈழத்து இலக்கிய, முன்னேடிகள், பக் 44-6, அதேநூல் பக் 31-3, கைலாசபதி (முகவுரை) 'திருக்கேதீச்சரத்துக் கெளரிநாயகி பிள்ளைத்தமிழ் '.சி. இ. சதாசிவம்பிள்ளை. யாழ் விவே கானந்தா அச்சகம், 1976 L._! I riřáš5; (3 _u pr mot 3?) rifo ulu rio சி. சிவசேகரம் 'மதமும் மாக்ஸிஸ் மும்" தாயகம் 19, ஒக்ரோபர் 1988 பக் ரெனே வெல்லேக், ஒஸ்ரின் வாரன் 'இலக்கியக் கொள்கை' தமிழில் Dr. வி. ஐ. சுப்பிரமணியத்தின் மேற்பார்வையில் Phd மாணவி எல், குளோறியா சு ந் தர ம தி, பாரிநிலையம் 59 , பிராட்வே சென்னை மார்ச் 66 , பக் 66.7 மாவலி 1983, பக் 6, h− செம்பதாகை, Red Banner சஞ்சிகைகளில் அவர் எழுதிய கட்டுரைகளைப் பார்க்க (மேலும், சி. கா. செந்தி வேல் சமர்ப் பிக்கும் கைலாசபதியின் சமூகநோக்கும் அரசியலும் ஆய்வுக் கட்டுரையை பார்க்க) சமூகத் தொண்டன் 1981 எமது கவிஞர்கள் - 1 பேராசி ரியரின் இக்கடடுரை கவிஞர் முருகையனின் 'மாடுகள் மயிறு அறுக்கும் " " கவிதை தொகுப்பில் (அச்சில்) பின்னிணைப்பாக உண்டு. முருகையன் ஒரு சில விதி செய்வோம் - கவிதைச் சிந்தனை * "வரதர் வெளியீடு யாழ்ப்பாணம் முதற் பதிப்பு 1972 பக் 6 இலக்கியச் சிந்தனைகள் பக் 87 லெனின் ' தேசியக் கொள்கையும் பாட்டாளிவர்க்கச் சர்வ தேசிய வாதமும் - சில பிரச்சனைகள்? முன்னேற்றப்புதிப்பகம் 1969 iji; 39 - 4 0
அதேநூல் பக் 43,
அதேநூல் பக் 27,
இக்கியச் சிந்தனைகள் பக் 87 - 8 செம்பதாகை மலர் - 2 இதழ் 6 - 7 1981 ஆணி - ஆடி பக் 5 உதயன் என்ற புனைபெயரில் 'உலக அரங்கில் - அங்கும் இங்கும்'

()
W
W W
W
Ο
y )
y
O புவிநேசன்
சிந்துகிறேன் சிந்துகிறேன் இரத்தத் துளிகளே எந்த நாளிலிருந்து. எந்த நாளிலிருந்து .
வந்ததுவா வசந்தம் தின்றதுவா கொடுமை சொந்த நாட்டிலின்று அந்நிய முகங்கள் இ ற்காய் தான சிந்திய இரத்தம் செலவாய் போனது.
எங்ங்னம் நிகழ்ந்தது . மனித வதைகள் இன்னமும் தொடர
ஆயுதம் கொண்ட அன்னிய மனிதச் நெஞ்சினை நிமிர்த்தி G35UTIT iii செல்லல் எங்ங்னம் நிகழ்த்தது எப்படி நடந்தது*
எங்கள் பகைவர் எங்கள் நண்பர் எவரெவரென உணரல் கடினம் ஆனதோ கடினம் ஆனதோ புதிதுணர் விழந்து புரிந்துணர் வின்றி காசியம் ஆற்றியது எவரெவர் தவருே!
வீரம் விழைந்ததென விதந்துரைத் திருந்தோம் உர நெஞ்சினைக் கண்டு உலகே வியந்தது ஆயிரம் சதிகள் நம்மைச் குழி விலங்கினை இறுக்கி விடிவினை இழந்தோம் விழைந்த வீரம் விழலாய் போனது.
முன்னேர் செய்த தவறென இகழ்ந்து நாமே இழந்தோம் அறிவினை இன்று எமது தவறுகள் எமக்கே வினைகள் தவறுகள் திருத்தி புது வழி செல்ல உறுதியை எடுப்போம் எல்லோர் கடமையும் இதுவென உணர்வோம்.
3 i

Page 18
சிங்களப் பத்திரிகைகள் - சஞ்சிகைகள் 1832 முதல் 1833 வரை >
۔--س۔۔۔۔۔ -- .۔ ــــــــــــــــــwwـ
--* இப்னு அஸ9மத்
'த்தொன்பதாம் நூற்ருண்டின் முற் பகுதி முதல் சிங்கள மக்களிடையே பொதுவான வாசிப்புத் திறன் ஏற்படத் தொடங் கிற்று. இதனல், புதிய சிங்கள மொழி இலக்கியம் இம் மக்களி
இதற்கு உறுதுணையாக இருந்த ஆரம்ப காலத்தைய சிங்களப் பத்திரிகைகளையும், சஞ்சிகைகளையும் நாம் ஒதுக்கிவிடுதல் இப லாத காரியமாகும்.
புதிய நாவல் இலக்கியத் துறைக்கு முன் வெளிவந்த நாவல் முறையான கதைகள், நாடோடிக் கதைகள், வாய்மொழிச் சிறு கதைகள், நாடோடிப் பாடல்கள் முதற்கொண்டு பின்பெழுத்து நாவல் போன்றவை பத்திரிசை சாஸ்த்ரீய சஞ்சிகைகளில் வெளி யாகத் தொடங்கின. இவற்றை தொடராக வெளியிடவும் செய் தனர். இதேநேரம் கவிதைகளை மிக அதிகம." பத்திரி கைகள், சஞ்சிகைகள் பிரசுரிக்கத் தொடங்கியதனல், சிங்களக் கவிதை இலக்கியம் மக்களிடையே பிரபலம் பெறமுடியுமாயிற்று.
சிங்கள கலை இலக்கியத் துறையில் பத்திரிகைகள் வெளிவரு வதற்கு முன்னரே, சஞ்சிகைகள் வெளிவரத் தொடங்கின. இந்த அடிப்படையில் வெளிவந்த முதல் சிங்களச் சஞ்சிகை மரதிக தேக்க (மாதாந்தப் பரிசு) என்ற சஞ்சிகையூே 1882 ஆம் ஆண்டு, காட்டையிலிருந்து வெளிவந்த இந்த சஞ்சிகை எட்டுப்பக்கங் களைக் கொண்டிருந்தது.
பைபிளில் இருந்து எடுக்கப்பட்டதும்; அதிலிருந்த கருத்துக் களைக் கையாண்டு எழுதப்பட்டதுமான ஆக்கங்களையே பெரும் பாலும் பிரசுரித்து வந்த இந்த மாஒக தேக்க' சஞ்சிகை, மிஷனரி பாடசாலை மாணவர்களிடையே விநியோகிக்கப்பட்டு வந்துள்ளமை கவனிக்கத்தக்கது. குறிப்பிட்ட சில காலமே இந்த முதல் சிங்களச் சஞ்சிகை வெளிவந்துள்ளது.
1839ல் ஆர். ஸ்பென்ஷர் ஹாட் எனும் ஃபாதரை ஆசிரிய ராகக் கொண்டு வங்கா நிதாயை' (இலங்கைப் புதையல்) எனும்
saaaa
32

சஞ்சிகை வெளிவரத் தொடங்கிற்று. கொழும்பு, மத புத்தக jšovLjub. (Colombo *eligious Tract Society) GTSyb Qff sysoudl’i பினல் வெளியிடப்பட்ட இந்த மாதாந்தச் சஞ்சிகை, தான் வெளி வரும் மாதம் சார்ந்த செய்திகளின் சாராம்சங்களைத் தொகுத்துத் தருவதையே தனது மிக முக்கிய பணியாகக் கொண்டிருந்தது. அதே நேரம் இருபத்தி நான்கு பக்கங்களைக் கொண்டு வெளிவந்த இந்த சஞ்சிகை மதக் ருேத்துக்களையும் கொண்டிருந்தது. 1846ஆம் ஆண்டு முடிவு பெறுவதற்குள் இந்தச் சஞ்சிகை மறைந்துவிட்டது.
மீண்டும், இதே "லங்கா நிதாவை சஞ்சிகையானது கண்டி சிங்களப் புத்தக நிலை யம் (Sinhalese Tract Society) 6Tg)|th அமைப்பின் மூலம் 1850ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. இந்த முறை, தொடர்ந்து பத்து வருடங்கள் வெளிவந்து பின் மீண்டும் மறைந்து விட்டது இச் சஞ்சிகை.
மூன்ருவது முறையாக, 1860ல் இதே "லங்கா நிதாயை’ சஞ்சிகை வெளிவந்துள்ளதை சிங்கள இலக்கிய வரலாற்றில் காண முடிகிறது. எனினும் எந்த விதத்திலும் இந்தச் சஞ்சிகை 1750 பிரதிகளுக்கு மேல் விற்பனையானதில்லை என்பது வரலாறு. 1860 முதல் வாரந்தோறும் பத்திரிகைகள் வெளிவரத் தொடங் கியதுடன் இந்தச் சஞ்சிகை மறைந்து விட்டது.
இதன் பின், 1842-ஜனவரி மாதம், கண்டி பெப்டிஷ்ட் மிஷன்
ത്ത്യ-ബി-
சபையினரால்" உரகல” எனும் சஞ்சிகை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஜே. ல்ெதே வெளியிடப்பட்ட இச் சஞ்சிகை
யானது - அதே கால கட்டத்தில் "Touchstone’ என்ற பெயரில் ஆங்கிலத்திலும் வெளிவந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சுமார் 20 பக்கங்களைக் கொண்டிருக்கும் இந்த "உரகல” சஞ்சிகையானது ஒன்பது இதழ்களுடன் முற்றுப்பெற்று விட்டது.
இதிலிருந்து இரண்டு வருடங்கள் கழித்து, அதாவது 1844ல் மேல் கூறிய அதே மிஷன் சபையினரால், சீ. சீ. டோஷன் பிதாவை ஆசிரியராகக் கொண்டு 'விவேசகயா' எனும் சஞ்சிகை வெளிவரத் தொடங்கியது. இதுவும், ஆங்கிலத்தில் The Comme ntator 6r6örp பெயரில் வெளிவந்துள்ளது. முப்பத்திரண்டு பக்கங் களைக் கொண்டு வெளிவந்த இந்த சிங்களச் சஞ்சிகை, முழுக்க முழுக்க மதக் கோட்பாட்டுக் கருத்துக்களே யே கொண்டிருந்தன. அப்படியும், இந்த சஞ்சிகை இரண்டு இதழ் க ளால் தான் தொடர்ந்து வெளிவந்துள்ளது.
. 33

Page 19
இது போன்றே, 1846ஆம் ஆண்டு மார்ச் மாதம் டீ. டீ. விஜேசிங்ஹ முதலி அவர்களினுல் வெளியிடப்பட்டு வந்த (சிங்கள. ஆங்கில இரு மொழிகளிலும்) கொழும்ப கதோலிக சங்கராவ' (கொழும்பு கத்தோலிக்க சஞ்சிகை) இதே வருட முடிவுக்குள் நின்று போய் விட்டது. இது இருபது பக்கங்களைக் கொண்ட மதப் பிரச்சார சஞ்சிகையாகும்.
"நேடிவ் நோமல் இன்ஸ்டிடியுஷன்" என்கின்ற சிங்கள ஆசிரியர் களின் விஞ்ஞான பீட மாணவர்களின் அமைப்பின் மூலமாக 1846ல் ஜோன் பெரெய்ரா என்பாரை ஆசிரியராகக் கொண்டு * சாஸ்திர நிதாயை' எனும் சஞ்சிகை, ஒராண்டு வரை வெளி வந்துள்ளது.
1851, மே மாதம் கண்டியில் ஆரம்பிக்கப்பட்ட 'சிங்கள அமத்யப சங்கராவ' ஒரே ஒரு இதழுடன் த  ைட ப்ப ட் டு போயிற்று. டீ. டீ. விஜேசிங்ஹ முதலி என்பாரினல் கண்டியி லிருந்து 1852, மார்ச் மாதம் முதல் வெளியிடப்பட்ட - லங்காபி வுர்த்திய’ எனும் சஞ்சிகையும் இதே ஆண்டு நின்றுப் போயிற்று. 1852, ஜுலையில் ஆரம்பிக்கப்பட்ட ‘சர்ச் மிஷனரி வார்த்தாவ' மாதாந்த வெளியீடாக தொடர்ந்து சில வருடங்கள் வெளிவந்தன. இப்படியாக, 1832 முதல் இருபது வருடங்கள் முற்று முழு தாக சிறு சிறுசஞ்சிகைகள் சிங்கள இலக்கியத் துறையில் நோன்றி மறைந்தாலும், இவை போதியளவு கல இலக்கிய வளர்ச்சிக்கு வித்திடவில்லை எனினும் வாசிப்புப் பழக்கத்தினை மக்களிடையே அதிகரித்துள்ளன என்பது உண்மை. (தொடரும்)
வாசகர்கள் கலை இலக்கிய வாதிகள் கவனத்துக்கு தாயகத்தை தொடர்ந்து - தாமதமின்றி - தவருது பெறுவதற்கு உடன் சந்தாதாரராகுங்கள்.
விரைவில் மாத இதழாக்கும் குறிக்கோளுடன், அதுவரை, இரு மாதம் ஒரு இதழ் இடையீடின்றி வெளிவரும். கலை இலக்கியவாதிகள் ஆக்கங்களைத் தாமதமின்றி உடன் அனுப்பி உதவுங்கள்.
தொடர்புகொள்ள வேண்டிய முகவரி:
ந. இரவீந்திரன் 15/1, மின்சார நிலைய வீதி, யாழ்ப்பாணம், இலங்கை,
34

(b. BET ക്കുകയ്പ് சேகர்
மாவலி முதல் மஞ்சள்நதி வரை சிந்து கங்கை யமுனை காவேரி யாங்ஸி மீகொங் ஐராவதி அமூர் யூபிரேட்டிஸ் டைகிரிஸ் வொல்கா டனுப் தைபர் நைல் நைஜர் ஸம்பேஸி ஸய்யிர் மிஸ்குரி மிஸிஸிப்பி அமேஸன் டாலிங் உட்பட உலகின் நதிகள் அனைத்தையுமே மனிதன் அளைந்து அனுபவித்துள்ளான்
மாவலி முதல் மஞ்சள்நதி வரை உலகின் நதிகள் அனைத்தின் நீரையும் மனிதன் சுவைத்து அருந்தியுள்ளான் வயல்களிற் செலுத்திப் பயிர்களை விளைத்துள்ளான் நதிகளில் விளைந்த மீன்களைப் புசித்துள்ளான் நீள அகலமாக நீந்தி அளந்துள்ளான் பாலம் அமைத்துப் படகில் மிதந்துள்ளான் அணேகள் எழுப்பித் தேக்கி மறித்துத் திருப்பி வளைத்துப் பொறிகளை இயக்கி ஆற்றல் விளைத்துள்ளான்
மாவலிமுதல் மஞ்சல்நதி வரை உலகின் அத்தனை நதியோரங்களிலும் மனிதன்
நடந்து திரிந்துள்ளான் ஊர்ந்தும் பாய்ந்தும்

Page 20
விழுந்து சிதறியும் சேர்ந்தும் பிரிந்தும் மெலிந்தும் விரிந்தும் மலைசளையும் மண்ணையும் கடலையும் இணைத்து அணைக்கும் நதிகளின் வேறுபடும் வேகமும் வடிவும் கண்டு சளித்து வியந்து நின்று பாடிப் புகழ்ந்துள்ளான் படங்கள் வரைந்துள்ளான்
மனிதனைச் குழு மாசமுத்திரங்களின் மேலாக மனிதனை ஆதரித்தவை மாவலிமுதல் மஞ்சள்நதி வரை மனிதன் புனிதமானவையாக் கருதிக் கொண்டாடிய
மாநதிகளே.
மனிதனைப் போஷித்த மாநதிகள்
இன்று மாநகரங்களை மூழ்கடித்து வயல்களை அழிக்கின்றன
உணவு விளைந்த நதிகளில் நஞ்சு பரவி மீன்கள் மடிகின்றன நோய்கள் பரவுகின்றன
வற்ருத ஜீவநதிகள் வரண்டு தெரிவதும் புனித நதிகளில் துர்நாற்றம் புரள்வதும் மனிதனின் அறியாமையாலா ?
இல்லை நண்பனே -
~தலாளித்துவத்துக்கு வாந்திபேதி ஏற்பட்டு மலைகள் மீதும் நதிகள் மீதும் கடல்கள் மீதும் முழுமானுட இனத்தின் மீதும் மலங்கழிப்பதனலே தான்!

தமிழிற் கலைச் சொற்கள்
O சி. சிவசேகரம்
"வீரகேசரி"யில் வெளிவந்த பேராசிரியர் சி.சிவசேகரம் அவர்களது "தமிழிற் கலைச்சொற்கள் கட்டுரை படித்தேன். பயிற்றுமொழி உத்தியோக மொழி என்னும் நோக்குகளில் தமிழ் மொழிக்கு நேர் எதிர்த்தடையாக ஆங்கில ஆதிக் கம் இங்கு கொடிகட்டிப் பறக்கிறது இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து நிற்க ஆங்கில ஆதிக்கத்தை சுமந்து கொள்ளும்படி தமிழ்மக்கள் பலர் கட்டாயப் படுத்தப்படுகிறர்கள். தெளி வான சிந்தனைக்கு வழி இருந்தும் "அரசியல் இலாப நோக்கு வெற்றிநடை போடும் அவலம் இன்றைய தமிழகத்தில் நீடிக் கின்றது. பேராசிரியர் சிவசேகரம் அவர்களின் செறிவார்ந்த கருத்துகளை இங்குள்ளவர்கள் பார்வைக்கும் சமர்ப்பிக்க வூேண்டும். தேசியூ இனப் பிரச்சனை இன்னமும் பொது மக்கள் அளவில் சிந்திக்கப்படாமலேயே இருக்கின்றது. பேராசிரியரின் கலைச் சொல்லாக்கக் கருத்துக்களை நூற்றுக்கு
நூறு ஏற்று மகிழ்ச்சி கொள்கிறேன். "வாய்ச்சொல் வீரம்" ஒதுங்க 'ஆக்கக் சொல் வீரம் வரும் நாள் எந்நாளோ என தமிழகத்தில் வேதனைக்குரல் எழுப்புவோர் வெகுசிலரே.
ஆய்வறிஞர் பெ. சு. மணி
சென்னை.
7 - 4 - 89
இன்றைய உலகில் இலக்கியம்’ எனும் நூலில் முருகையன் சமகாலத் தமிழின் சில பிரச்சனைகள் பற்றி விரிவாக எழுதியுள் ளார். அந்நிய மோகம், முக்கியமாக ஆங்கில மோகம், தமிழ் ஆக்க இலக்கியத் துறைக்கு ஏற்படுத்தியுள்ள தீய விளைவுகளைப் பற்றியும் தமிழ்க்கலைச் சொற்களைப் புரிந்து கொள்ளக் கூட ஆங் கிலத்தின் துணையை நாடும் வருந்த்ததக்க நிலை ஏற்பட்டுள்ளதைப் பற்றியும் அவர் விளக்கியுள்ளார். இதற்குரிய சில காரணங்கள், நீண்டகால அந்நிய ஆட்சியுடனும் நவீன விஞ்ஞானம், தொழில் நுட்பம், பொழுதுபோக்கு போன்ற துறைகளில் மேற்கு நாடு களின் ஆதிக்கத்துடனும் தொடர்புடையன. தமிழர் தமிழ்
37

Page 21
மொழியின் குறைபாடுகளையும் தேவைகளையும் அடையாளங்கண்டு ஆவன செய்யத் தவறியமை அனைத்திலும் முக்கியமான காரண மாகும், தமிழ்ச் சமுதாயத்தில் ஆதிக்கஞ் செலுத்தும் வர்க்கங் களைப் பொறுத்தவரை, தமிழின் வளர்ச்சி முக்கியமான ஒன்றல்ல. நமது பின்தங்கிய தொழில் விருத்தியும் சமுதாய அமைப்பும் அந்த வர்க்கங்களின் நலனைப்பேண இடையூருக இல்லை. நமது தேசிய உணர்வின் விருத்தி முழுமையற்ற ஒன்ருசவும் இன்னமும் அயலார் நிழலிலேயே வளர ஆசையுறும் ஒன்ருகவுமே தொடர்ந்து வருகிறது. அந்நியர் ஆட்சி போனபின்பும் நம் அந்நிய மோகம் போகவில்லை. நம் மொழி உணர்வும் இன உணர்வும் அந்நிய ஆதிக் கத்தினின்று விடுபடத்திணறும் சகோதர இனங்சட்கு எதிரான பகைமையை வெளிப்படுத்தும் அளவுக்கு மேலை முதலாளித்துவ நாடுகளின் கலாசாரச் சீரழிவின் தாக்கத்தினின்று விடுபடுவது
பற்றி அக்கற்ைபுடையனவல்ல.
இத்தியத் துனைக்கண்டத்தின் தேசிய விடுதல இயக்கத்தின் போது பல தேசிய இனங்களதும் மொழி உணர்வு விழிப்படைந் தது. அதன் விளைவாகத் தாய்மொழிப் பிரயோகம் விரிவடைந் தது. அந்த விரிவு தொடர்வதற்குத் துணையாகத் துணைக்கண்ட மொழிகளை நவீன மொழிகளாக விஞ்ஞானம், கலை , தொழில், துட்பம், மருத்துவம், சட்டம், அரசியல் ஆகிய சகல துறைகளி லும் சமகால அறிவை வழங்கவல்ல கருவிகளாக, விருத்தி செய் யும் ஆர்வம் காணப்பட்டது. ஆயினும் அதனை நடைமுறைப் படுத்துவதில் உள்ள பல இடர்பாடுகளின் விளைவாக மொழி விருத்தி அரைகுறையான நிலையில் தேக்கமடைந்துள்ளது. இதற் கான காரணங்களுள் முக்கியமான ஒன்று உயர் கல்வி பற்றிய நமது பார்வை எனலாம். கல்வியின் இலக்கு உத்தியோகம் எனு மளவுக்கு கல்வி உத்தியோக வாய்ப்புடன் நெருங்கிய தொடர் புடையதாகவே கருதப்பட்டு வந்துள்ளது. சாதாரண மக்களி டையே கல்வியைப் பரவலாக்குவதற்குவதற்கான முயற்சி மிகவும் குறுகலான இலக்குகளையே கொண்டிருந்தது விரிவான வலிய சமுதாய அத்திவாரம் இல்லாமலேயே தமிழிலும் பிற இந்தியத் துணைக்கண்ட மொழிகள் பலவற்றிலும் தாய்மொழி மூலம் உயர் கல்வி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டஅதேவேளை ஆங்கிலத்திற்கு பரிச்சயமுள்ளவர்கட்கு மட்டுமே கிட்டிய மேற்படிப்பு, தொழில், உத்தியோக வாய்ப்புக்கள், சட்டம், விஞ்ஞானம், மருத்துவம், கட்டடக்கலை, எந்திரவியல் போன்ற துறைகளில் ஆங்கிலத்தின் ஆதிக்கம் தொடரத் துணை நின்றன. தாய்மொழியில் நூல்கள் போதாமை, ஆசிரியர்கள் போதாமை, கலைச் சொற்கட்குத் தட்டுப்
38

பாடு என்றவாழுன வாதங்கள் தாய்மொழிக் கல்விக்குத் தடை யாக எழுந்தன. அவற்றுக்கு முகங்கொடுக்கும் முயற்சிபில் சிலர் முழுமனதுடனும் உற்சாகத்துடனும் பங்கு பற்றியதோடு, அம் முயற்கிக்கு அரசாங்க ஆதரவு இருந்துங்கூட, தாய்மொழி eup GULÒ உயர்கல்விப் போதனை முயற்சி கலைப்பாடங்களில் மட்டுமே ஓரளவு முன்சென்றது. விஞ்ஞானத் தொழில்நுட்பச் சார்புடைய துறை களில் ஆங்கிலமே தொடர்ந்தும் ஆதிக்கம செலுத்தி வருகிறது.
१*
சீனவிலும், ஜப்பானிலும் எவ்வாறு தாய்மொழி முலம் உயர் கல்வி நடைபெறுகிறது என்று நாம் வியக்கிறுேம். அந்தச் சமு தாயங்களில் ஐரோப்பிய மொழிகளினதும் கலாச்சாரத்தினதும் செல்வாக்குப் புகுந்த சூழ்நிலை நம்முடையதினின்றும் வேறுபட் டது. அங்கு முழுநாடும் நேரடியான கொலனி ஆட்சிக்கு உட் பட்டிருக்கவில்லை; அயல்மொழிபடித்த ஒரு நடுத்தர வர்க்கத்தினர் மூலம் அரச நிர்வாகம் நடைபெறவில்லை; அயல்மொழிக் கல்வி மூலமே ஒருவன் சமுதாயத்தில் மேம்பட முடியும் என்ற நிலமை இருக்கவில்லை. அதனல் அயல்மொழிகளதும் கலாச்சாரங்களதும் தாக்கத்தினின்றும் அந்தச் சமுதாயங்கள் காவலிடப்பட்டிருந்தன என்று நாம் கருதுவதற்கில்லை; அயல் நாடுகளிலிருந்து பெளத்தம் முதல் இஸ்லாம் வரையிலான பல மதங்களும், விஞ்ஞானமும் மருத்துவமும் தொழில்நுட்பமும், நவீன சிந்தனை மரபுகளும் அச் சமுதாயங்களுட் புகுந்துள்ளன. ஆயினும் அயல் ஆதிக்கம் இல் லாமலேயே அவை உள்வாங்கப்பட்டமையால், காலப்போக்கில், எளிதாகவே அவர்களது கலாச்சார மரபுடன் ஒன்றிவிடவும் புதிய சமுதாயத்தை உருவாக்குவதற்குப் பங்களிக்கவும் அவற்றுக்கு இயலுமாகியது. எந்த ஒரு அயற் தாக்கமும் புதிய முரண்பாடுகளை விளைவிக்குமெனினும் அயற் தாக்கம் ஏற்படும் சூழ்நிலையே விளைவு களின் தன்மையை நிர்ணயிக்கிறது. நமது சமுதாயச் சூழலில் மொழியின் பயன்பாடு வீட்டுக்கு ஒன்று, கோயிலுக்கு ஒன்று. வியாபாரத்துக்கு ஒன்று,விஞ்ஞானத்துக்கு ஒன்று என்ற விதமாகக் கூறுபோடப்பட்டுள்ளது. நாம் இதனின்றும் விடுபடும் வரை நமது மொழி வளர்ச்சி மிகவும் வரையறைக்குட்பட்டேயிருக்கும். எனவே நம் மொழி வளர்ச்சிக்கான போராட்டம் பரந்துபட்ட ஒரு சமு தாயப் போராட்டத்துடன் நெருங்கிப் பிணைந்துள்ளது; தாய் மொழியையே முற்றிலும் சார்ந்து நிற்கும் பரந்துபட்ட வெகு ஜனங்களின் அரசியல் ஆதிக்கத்தின் கீழேயே தமிழின் முழுமை யான் முன்னுேக்கிய பாய்ச்சல் நடைபெறமுடியும். '
39

Page 22
தமிழின் விருத்தி காலத்தால் மாருத ஒரு தமிழ்த் தன்மை யையோ அயல் மொழிக் கலப்போ பாதிப்போ இல்லாமையையோ சார்ந்திருக்க முடியாது. தமிழர் மட்டுமே வாழும் ஒரு உலகில் நாம் இலலை; தமிழருக்கு வேண்டிய அனைத்தையும் தமிழ்ப்பேசும் மாநில எல்லைகட்குள்ளேயேபெறவும் இயலாது. எனவே தமிழின் விருத்திபற்றிய நமது பார்வை, அந்நிய போகத்தை நிராகரிப்பது போன்று அந்நிய விரோதத்தையும் நிராகரித்து சர்வதேச மானுட சமத்துவத்தின் அடிப்படையில் தமிழ்ப் பேசும் மக்களின் கலாச் சார, சமுதாய விருத்தியைச் சார்நது நிற்கவேண்டும். எந்த அயல்மொழியோ, கலாச்சாரமோ நமது மொழிக்கும் கலாசாரத் துக்கும் வளமூட்ட முடியுமாயின் அதன் பங்களிப்பு வரவேற்கத்தக் கதே ஆயினும் குருட்டுத்தனமாகக், கைக்கெட்டிய சகலவற் 6ծ» (Duկմ) கொண்டுவந்து கொட்டிக்குவிப்பது வளர்ச்சியாகி விடாது. நமது சமுதாயத்தின் சமகாலத் தேவைகளையும் அதன் எதிர்கால வளத்திற்கு அவசியமான பணிகளையும் அடையாளங் கண்டு நமது மரபுவழிச் செல்வங் களையும் நம் வசமுள்ள வளங்களை யும் அயல் மரபுகளினின்று பெறக்கூடியவற்றுடன் இணைத் து ச் செயற்படுத்துவதெவ்வாறென்ற தெளிவான பார்வையை ந ம் விருத்தி செய்ய வேண்டும். கடந்த காலத்தில் மொழிவளர்ச்சி தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பல நல்ல முயற்சிகள் எதிர் பார்த்த அளவு வெற்றி பெருமைக்கு நம் சமுதாயு சூழலே முக்கிய காரணம் எனினும் அந்த முயற்சிகள் ஒரு முழுமையான சமு தாயப் பார்வையுடன் இணைந்திராமையும் முக்கியமானதே.
தனித்தமிழ் இயக்கம் தமிழை அவசியமற்ற வடமொழிக் கலப்பினின்றுந் தூய்மைப் படுத்தி எளிமையாக்கும் நோக்கில் முற் போக்கான ஒரு பணியை ஆற்றியது. ஆயினும் தமிழின் சொல் வளத்தைத் "தனித் தமிழ் எனக்கருதப்படும் சொற்களின் எல்லைக் குள் வரையறுக்கும் அதன் இலக்குப் பிற்போக்கானது. சமூக வியல், மெய்யியல் விஞ்ஞான, மருத்துவ தொழில்நுட்பக் கலைச் சொற்களைப் புதிதாகப் புனையும் முயற்சிகள் ஆங்கிலத்தில் உள்ள சொற்களுக்கு ஈடான தமிழ்ப்பதங்களை வழங்கு ம முயற்சி களாகவே இருந்தமை நமது சமுதாயச் சூழலில் தவிர்க்க அரியதே கலைச் சொற்களை வகுத்துச் சில பாடநூல்களைப் பிரசுரித்தல் மூலம் தமிழில் புதிய அறிவுத் துறைகள் நிலைபெறச் செய்யலாம் என்று சிலர் மனதார எதிர்பார்த்திருக்கலாம். ஆயினும் நமது சமுதாய நடைமுறைக்கு வெளியே விருத்தியடைந்த கல்வித் துறை களை நமது மொழியில் நிறுவும் முயற்சிக்கு ஆதாரமாக ஒரு சமு தாய அடிப்படை இல்லாத சூழ்நிலையிற் பலரது நல்ல முயற்சி களும் மணலில் விதைத்த நெல்மணிகள் போலாகின. தமிழில்
40

விஞ்ஞான, தொழில்நுட்ப அறிவை விருத்தி செய்யும் பல நல்ல பணிகள் உத்தியோகத்துக்காகவே கல்வி என்ற சமுதாய இலக் கின் முன்பு விழுந்து விட்டன. நமது விஞ்ஞான தொழில்நுட்ப அறிவு வளர்ச்சிக்கு ஒரு வெகுஜன அடிப்படை இல்லாத வரை யில், தமிழுக்குப் புதிய அறிவுத்துறைகள் தமிழர் நடுவே ஒரு சிறுபான்மைப் போக்காகவே இருக்க முடியும். அவற்றில் தேறு வோரது வர்க்க இயல்பும் கல்வித் தேவைகளும் தொழில்களின் தன்மையும் அவர்களை ஆங்கிலத்தை நோக்கியே உந்தும் நிலையில், தமிழ்மூலம், வழங்கப்படும் புதிய அறிவு தமிழின் விருத்திக்கு மேலும் உதவ இயலாது போய்விடுகிறது. இத்தகைய சூழலிற் தமிழிற் கலைச்சொல்லாக்கம் நடைமுறைத் தமிழினின்றும் பிரிந்தே நிற்கிறது. இது மட்டுமன்றி. உதிரியாக விஞ்ஞானத் தகவல்களை வழங்குகிற பத்திரிகை எழு ஆதாளர்கள் தங்கள் மனதிற்குப்பட்ட விதமாகக் கலைச் சொற்களைப் புதிய அர்த்தத்தில் பிரயோகிக் கவும் சில சொற்களை முற்ருகவே துஷ்பிரயோகம் செய்யவும்
நேருகிறது. ( சில சமயங்களில் தகவல்கள் கூடத் த வருக வே அமைத்து விடுகின்றன என்பதும் கவலைக்குரியது.)
தமிழிற் கலைச் சொற்களை உருவாக்கலில் மட்டுமன்றிப் பரவ லாக்குவதிலும் நடைமுறைக்கு கந்த ஒரு பொதுக்கொள்கையை வகுக்கவும் ஆக்கபூர்வமான முறையிற் கடைப்பிடிக்கவும் முடியு மாயின் அக்கொள்கை தமிழில் குறுகிய காலத் தேவைகட்காகப் புதிய அறிவுத் துறைகளை விருத்தி செய்ய உதவியாக இருப்ப தோடு, நீண்டகால நோக்கிலும் பயனுள்ளதாக இருக்கும்.
கலைச்சொல்லாக்கம் தொடர்பாக இலங்கையிற் கடைப்பிடிக் கப்பட்டுவந்த கொள்கைகள் பொதுவாக வரவேற்கத் தக்கனவே ஆயினும் அவை நடைமுறையைக் கணிப்பிலெடுக்கத் தவறும் போது நல்ல விளைவுகளைத் தரத் தவறுகின்றன. விஞ்ஞான தொழில்நுட்பக் கலைச் சொல்லாக்கத்தில் ஆங்கிலப் பதங்களை நேரடியாக மொழிபெயர்க்கும் போக்கே முதன்மை பெறுகிறது. வெகு காலம் முன்னர் Water - Fall எனும் பதத்தை நீர் வீழ்ச்சி என மொழி பெயர்த்து அருவி எனும் அழகிய சொல்லை மறக்கடித் தோம். (இன்று அருவி எனுஞ்சொல், ஓடை எனும் கருத்துப் பட, Stream எனும் ஆங்கிலச் சொல்லைக் குறிக்க எந்திரவியலில் பயன்படுகிறது.) பெரும்பாலான விஞ்ஞான - தொழில்நுட்பக் கலைச்சொற்கள் புதிதாகப் புனையப்பட வேண்டியுள்ளன. எனவே நேரடியான மொழிபெயர்ப்பு பெரிதும் தவிர்க்க முடியாததே. ஆயினும் மொழிபெயர்ப்பு அபத்தமான விளைவுகளைத் தராமற் காக்கும் தேவையும் நமக்குள்ளது.
41 -

Page 23
வெப்பவியக்கவிசையியல் (Thermodynamics) என்பது போன்ற நீண்டபதங்கள் அதிகம் இல்லையாயினும் இவ்வாருன மொழி பெயர்ப்பு அவசியமற்றது. வெப்பவியக்கவியல் என்பது சரியான மொழிபெயர்ப்பல்ல வெனினும் முன்னையதிலும் திருப்திகர மானது. கலைச் சொற்களில் எளிமை விரும்பத்தக்க ஒருபண்பு. எளி  ைம ய ர ன சொல்லாக்கம் எப்போதுமே சாத்தியமில்லை யாயினும் புதிய சொற்களை அமைக்கையிற் கருத்திற் கொள்ளப் படவேண்டிய இரு பண்புகள் எளிமையும் தெளிவும் எனலாம்.
ஒரு காலத்தில் Engineering என்ற சொல்லுக்குத் தமிழில் பொறியியல் என்ற சொல்லே வழங்கியது. ஆங்கில மூலத்தை விட அத் தமிழ்ச்சொல் பலவகையிலும் சிறப்பானது. எனினும் பொறி என்ற சொல் Machine ஐயும் குறிப்பதால் பொறியியலின் இடத்தில் எந்திரவியல் எனுஞ் சொல் புகுத்தப்பட்டது. (இது அவசியமற்றது என்பது என் எண்ண ம்.) இத்தகைய சொல் லாக்கம் ஆங்கிலப்பதங்களை நேரடியாகத் தமிழ்ப்படுத்தும் நோக் கஞ் சார்ந்தது, என்பது தெளிவு. மரபுத் தமிழுக்கும் பழந் தமிழ்ச் சமுதாயத்துக்கும் முற்றிலும் அந்நியமான துறைகளில் சிக்கலதிகமின்றி இக் கொள்கையைக் கடைப்பிடிக்கலாம். மொழி பெயர்த்தல் அசாத்தியமான இடங்களில் மூலச் செல்லைத் * தமிழ்ப் படுத்தி* உபயோகிக்கும் கொள் கை வரவேற்கத் தக்கதே. ஆயினும் சமகால மொழி நடைமுறை பற்றியும் சிறு பான்மைப் போக்காகவேனும் கடைப்பிடிக்கப்படும் மரபுபற்றியும் சவனங்காட்டப்படுவது அவசியம்.
கியர், கிளச்சு, தைனமோ, இலத்திரன், போன்ற தமிழ்ப்படுத் தப்பட்ட சொற்கள் மாற்றுச் சொற்களின்றியும் எஞ்சின், சிலின் டர் போன்றன எந்திரம், உருளை ஆகிய மாற்றுச் சொற்களுடனும் கலைச்சொற்களாக ஏற்கப்பட்டமை சரியானதே. மறுபுறம் கரி, கந்தகம் போன்ற நல்ல தமிழ்ச் சொற்களுக்குப் பதிலாக காபன், சல்பர் போன்ற சொற்கள் புகுத்தப்பட்டிருக்க வேண்டுமா என்ற நியாயமான கேள்வி எழுகிறது. இச் சொற்கள் கலைச்சொல்லாக் கத்தில் சில பிரச்சனைகளைத் தீர்க்கலாமெனினும் தமிழ் வரி வடி வத்தில், அதிருப்திகரமான முறையில், ஆங்கில மொழி வழக் கிலுள்ள பேர்களை எழுதும் முயற்சிக்கே உதவுகின்றன. அயல் மொழிப் பேர்களை வட எழுத்துக்களின் உதவியின்றி முடித்த வரை மரபுசார்ந்த முறையில் தமிழ் எழுத்துக்களில் எழுதுவதன் பிரச்சனைகளை நாம் நன்கு அறிவோம். பாரிய எழுத்துச் சீர்திருத்
42

தத்திற்கு முகங்கொடுக்க மனமின்றியும் அயல் மொழிச் சொற் களைத் தமிழில் எழுதுவதால் ஏற்படும் சிக்கல்களைத் தட்டிக் கழித்தும் செயற்பட்டதன் விளைவாக தமிழாகவுமின்றி ஆங்கில மாகவுமின்றிக் கருத்துத்தெளிவற்ற கலைச்சொற்கள் பல ஏற் கெனவே உருவாகியுள்ளன.
அயல்மொழிச் சொற்களை எவ்வாறு தமிழ்ப்படுத்தும் முயற் சியில் வடமொழிச் சொற்களைத் தமிழ்ப்படுத்தக் கையாளப்பட்ட பழைய வி தி கள் நம்சமகாலப் பிரச்சனைக்கு முகங்கொடுக்கப் போதா என்பதைப் பேச்சுத் தமிழ் நடைமுறை வலியுறுத்தி வரு கிறது. இப்பிரச்சினைக்குத் திருப்திகரமான தீர்வு காணுமை கலைச் சொல்லாக்கத்தைப் பெரிதும் பாதித்துள்ளது,
அயல்மொழிச் சொற்கள் தமிழிற் புகும் சூழ்நிலைகள் வேறு படுகின்றன. சிலரது ஆங்கிலமோகம் காரணமாகவோ தம் பிற மொழி அறிவை மற்றவர் அறியச்செய்யும் தேவை கருதியோ தமிழுடன் கலந்து பயன்படுத்தப்படும் சொற்கள் பெரும்பாலும் மொழிக்கு அயலானவையாகவே நிற்கின்றன. மறுபுறம், தகுந்த தமிழ்ச்சொல் இல்லாமையாலோ புனையப்பட்ட தமிழ்ச்சொல் பரவலாக ஏற்கப்படாமையாலோ நிலைபெறும் அயல்மொழிச் சொற்கள் தம்மூலவடிவிலோ தமிழ்ப்படுத்தப்பட்ட வடிவிலோ நிரந்தரமான இடத்தைப் பெற்று விடுகின்றன. அதேவேளை வழக்கில் உள்ள பல நல்ல தமிழ்ச் சொற்கள் இழக்கப்படும் சூழ் நிலையும் ஏற்பட்டு வருகிறது. நம்மிடையே தமிழ்ச் சொற்களைத் செம்மையாகவும் தெளிவாகவும் பயன்படுத்தும் வழக்கம் குறை வாக இருப்பது தமிழ்மொழிப் பிரயோகத்தைப் பலவீனப்படுத்து கிறது என்பதும் நம் கவனத்துக்குரியது. ஆங்கிலத்தில் எழுதும் போதும் பேசும்போதும் கவனமாகச் சொற்களைத் தெரிந்தெடுக்கப் பழகியவர்கள் பலர் தமிழில் எழுதும் போதும் பேசும் போதும் சொற்களின் தெரிவு பற்றி அசட்டையாக இருக்கிருர்கள். அச்சுப் பிழைகளும் இலக்கணப் பிழைகளும் வாக்கிய அமைப்பில் உள்ள தவறுகளும் கையெழுத்துப் பிரதி நிலைமுதல் இறுதி அச்சு வடிவு வரையிலான பல்வேறு கட்டங்களிலும் கவனிக்கப்படாது தப்பி விடுகின்றன; வாசகர் மத்தியிற் கூட அவை பற்றி அதிகம் கவலை
காட்டப்படுவதில்லை. இம் மனப்பான்மை மாறவேண்டும். கலைச்
சொற்களை அமைப்பதில் எளிமையும், தெளிவும் முக்கியமானவை யெனினும் நடைமுறையே அதிமுக்கியமானது என்பதை நாம் மறக்கலாகாது. கலைச்சொற்கள் அவை குறிக்கும் கருத்தையோ
全3

Page 24
பொருளையோ உணர்த்தவல்லவையாய் அம்ைவது கற்போருக்கு வசதியானது என்ற கருத்து வரவேற்கத்தக்க தெனினும் அதையே கலைச்சொல்லாக்கத்தின் அடிப்படை விதியாக்கவியலாது. நவீன உலகிற் பெருகிவரும் பல்வகையான கண்டுபிடிப்புக்கட்கும் தகுந்த காரணப் பேர்களை வழங் க இயலாததால் பல சமயங்களில் பொருட்களின் பேர்கள் அவற்றின் இயல்பையோ செயற்பாட் டையோ நேரடியாகவும் தெளிவாகவும் உணர்த்துவதில்லை. விஞ் ஞான, தொழில்நுட்ப வழக்கில், இடுகுறியாக வழங்கப்படும் பேர்கள் உட்படச் சகல கலைச்சொற்களும், பொதுவாக வே, அவற்றின் பாவனையின் போக்கில், நடைமுறைக்குச் சார்பாகவே விளங்கிக் கொள்ளப்படுகின்றன. தமிழிற் சலைச்சொல்லாக்கமும் இந்த உண்மையைக் கணிப்பில் எடுப்பது நல்லது. எந்தவொரு புதிய பொருளுக்கும் சமுதாய வழக்கிற் பரவலாக ஏற்கப்பட்ட ஒரு பேர் நிலைபெறுமாயின் அதையே அப்பொருளைக் குறிக்கும் சலைச்சொல்லாக ஏற்பது பெரிதும் உகந்தது. அவ்வாரு ன ஒரு சொல்லின் பிரயோகத்தால் பாரிய இடர்ப்பாடுகளோ தெளி வீனமோ ஏற்படுமெனின் அதை உரியவாறு மாற்றியமைப்பதும் அல்லாத பட்சத்தில் மாற்றுச் சொற்களைத் தேடுவதும் தகும். தமிழர் வாழும் வெவ்வேறு நாடுகட்கும் பிரதேசங்கட்குமிடையே மொழிப்பிரயோகத்தில் ஒற்றுமையைப் பேணுமாறு கலைச்சொற் களை அமைப்பதன் அவசியம் பலரால் வலியுறுத்தப்பட்டுள்ள போதும், மொழிவழக்குப் பற்றிய குறுகிய பார்வையும் பிராந்திய அரசியற் பிணக்குகளும் அதற்கான ஒத்துழைப்பை பறித்து வரு கின்றன.
கலைச்சொல்லாக்கம் எனும் போது தமிழுக்கும் தமிழ்ச் சமுதாயத்துக்கும் அயலான கல்வித்துறைகளை மட்டுமே நாம் கருத்திற் கொள்கிருேம். நமது மரபு சார்ந்த அறிவியற்துறைகளை விருத்தி செய்வது பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும். நம் சொல் வளத்தைப் பேணிப் பரவலாக்கவும் நம் மொழியின் வளமையைப் புதுப்புதுத் துறைகட்கு விரிக்கவும் நம் மரபை நாம் பயன்படுத்த முடியும். தென் ஆசியக் கலாச்சாரத்தின் நீண்ட வரலாற்றின் சாதனைகளை ஐரோப்பியர் சீரணித்து நமக்குத் திரும்ப வழங்க வேண்டிய நிலைக்கு நாம் நம்மைத் தாழ்த்திக் சொண்டுள்ளோம். நமது மரபுடன் நவீன விஞ்ஞானப் பார்வையை இணைக்கும் பணியை நாம் மேற்கொள்ள வேண்டும்.
கலைச்சொற்கள் எவ்வளவு எளிமையானவையாக இருப் பினும், பரந்தளவில் மக்களைச் சென்றடையும் வரை அவை
44

மாதர்தம்மை. கொழுத்துவோர்!
சுதந்திர இந்தியா பெண்களை இழிவு செய்யும் அறிவீனத்தைக் கொழுத்திடக் கனவு கண்டார் பாரதி. பணமுதலைகளது ஆதிக்கத்தின் கீழ் சீதனச் சீரழிவுகளால் இளம் மனைவியர் தீயிட்டுக்கொழுத் தப்படுவது உள்ளிட்ட படுகொலைகளே இன்று மிகையாகியுள்ளது.
மூன்று ஆண்டுகளில் சீதனக்கொடுமையால் நாலாயிரத்திற்கும் அதிகமான இளம் பெண்கள் இந்தியாவில் கொல்லப்பட்டுள்ளனர்; இந்திய தலை நகரத்தில் மட்டும் க ட ந் த ஓகஸ்ட்டிலிருந்து ஜனவரி வரையான ஆறுமாதங்களில் 50 இளம் யுவதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
- இத்தகவலை இந்திய உள்துறை அமைச்சர் :
பி. சிதம்பரம் லோக சபையில் அண்மையில்
தெரிவித்தார். இத்தனைக்கும் சீதனம் வாங்குவது
சட்டத்தின் மூலம் 1961 இலிருந்து தடைசெய்யப் பட்டுள்ளது.
-பத்திரிகைச்செய்தி
மொழியின் ஒரு கூருக முடியாது. கலைச்சொற்கள் சமுதாய நடை முறையூடே மொழியில் வேரூன்றுகின்றன. அவற்றின் செம்மை யான பாவனை பரவலாக்கப்படுவதன் மூலமே மொழி நவீன
அறிவுத் துறைகளை ஆராய்ந்து விளக்கும் வலிமையைப் பெறு
கிறது. எனவே கலைச்சொல்லாக்கத்தின் இலக்கு மேலும் விரிவு படுத்தப்பட வேண்டியுள்ளது. தமிழிற் புதிய தகவல்களை வழங்க மு ற் படுவோர் விஞ்ஞானக் கருத்துக்களைப் பொறுப்புணர்ச்சி யுடனுங் கவனத்துடன் முன்வைப்பதும் கலைச்சொற்களைச் செம் மையாகவும் தெளிவாகவும் பயன்படுத்துவதும் மிகவும் விரும் பத்தக்கன. 7
45

Page 25
* அமைதி காத்தல் 1987 ஐப்பசி , ................................ - Ο διυδί, (ευ)
எங்கள் வீதிகள் ஒழுங்கைகள் வழியே
எத்தனை காலம் அஞ்சி நடந்தோம் எங்கள் வேலிகள் சுவர்களின் நடுவே
எத்தனை நாட்கள் பதுங்கி மறந்தோம் எங்கள் வீட்டு இளைஞருக் காக : .
எத்தனை இரவுகள் நித்திரை மறந்தோம் எங்கள் வாழ்வை எமக்கென மீட்க
எத்தனை ஆண்டுகள் கடுந்தவமிருந்தோம்.
வந்தது போரின் முடிவெனச் சொன்னர்
வந்தது நல்ல தீர்ப்பெனச் சொன்னர் வந்தவர் அழையா விருந்தினரெனிலும்
வாசல்கள் யாவும் விரித்து திறந்தோம் வந்தவர் நண்பர்கள் என்று நினைந்தோம்
வீதிகள் தோறும் தோரணம் இழைத்தோம் வந்தனை செய்தோம் வாழ்த்தி மகிழ்ந்தோம்
வந்தது சூறையின் கண்ணிடை அமைதி.
கடற்கரை வயல்கள் வீதிகள் வெளிகள்
காணுந் திசைதொறுங் கவச ஊர்திகள் இடியென விழுந்த பலபெரும் வெடிகள்
தொடரும் பறிமுதல் கொள்ளைகள் கொலைகள் படைகளின் ஒதுங்கி நாடிய நிழல்கள் - பெருஞ்சிறை ஆயின ஆலய மதில்கள் சுடலையின் மோனம் சூழ்ந்திட எங்கள்
அமைதியைக் காத்தன ஆயுதப் படைகள்.
இருளாய் விடிந்த பொழுதில் விழித்தோம்
கனவு கலைந்தோம் போரில் எழுந்தோம் எங்கள் வாழ்வை எமக்கென மீட்க −
எத்தனை ஆண்டும் போரிடத் துணிந்தோம். )
46

ஒர் அரியாசனம்
v. M.M-M. Y M -m-ro-1, ... .. Vn- O அல் அஸஇமத்
உமக்கென்ன விசரே, தம்பி?
சுடுகா டெண்டால், எரிச்ச பிற்கு கூ ட் டி த் துப்புரவாக்கி என்ன அழகா வச்சிருக்கினம்! இடுகாடெண்டால், குழிகளச் சீமெந்தால மெழுகிப் பூஞ்சோலை மாதிரியெல்லோ பராமரிக் கினம்! நீர் எங்கட ஊரப்போய் மயானமெண்டு மயானத்தப் பகிடி
gold Gir? -
அது ஒரு நரகந் தம்பி! நரகத்தப் பாக்கோணுமெணடா சாக வேண்டியதில்லை! என்னுேட இப்ப புறப்படும்.
அண்டைக்கு ரா ஏழு மணியப்போல டப்டப்பெண்டு சத்தம் கேட்டுது. எங்களுக்கு விளங்கீட்டுது. முதல் நாளே பிள்ளயளத் தீவுக்கு அனுப்பிப் போட்டம். இவள் சமயலறையில அப்பத் தான் போய் அடுப்ப எரிச்சு விட்டவ. உடுத்தியிருந்த கவுனுக்கு மேலால சும்மா ஒரு சீலயச் சுத்திக்கொண்டு ஓடினதுதான்!
இவள்ட தாயும் எங்களோட நிண்டவ. மூன்று பேருமா குனிஞ்சும் பாஞ்சும் தவண்டும் ஆமிக்காரங்கள் மாதிரி ஒடினம். சடசடவெண்டு கேட்டது. அங்கயெல்லாஞ் சத்தம் வந்தாப் போல கீழயோ கிடங்குக்குள்ளயோ கிடந்திட வேண்டியதுதான்!
இனிக்கிடந்தம், ட்றக்கெல்லாம் போய்ப் பத்துப் பதினஞ்சி நிமிஷங்கழிச்சு ஒழும்பினம். ஒரு ஏழெட்டுப் பேர்போல் இருப்பம், இவள்ட தாய் ஒழும்பேல்ல! போய்ப் பாத்தன். த லைக் க யே சன்னம் பாஞ்சி கிடந்தவள். M
பிறகென்ன செய்றது? வாய்விட்டு அழக்கூட ஏ லா து! அவளக் காவிக்கொண்டும் போகேலாது; விடடுட்டும் போகே லாது ஊரடங்குச் சட்டம் வேற! பிறகு பக்கத்தில கிடந்த டயர், டியூபுகளப் போட்டுக் கொளுத்தினதுதான்!.
நீர் என்னமோ மயானக்கதை கதைக்கிறீர்!
அண்டைக்கே இன்னெண்டு. ஆறு பேரும் ஒரு சைக்குழந் தையும் அவசரமா ஒரு பயணம் போயிருக்கினம் ஹயரிங் கார்
και 47

Page 26
ஒண்டில. அப்பவும் அந்த நேரத்தில போகத் தேவை இல்லை யெண்டு இனசனம் மறிச்சிருக்குதுகள்! இவை கேட்காம வந்தவை. இடையில் காருக்கு என்னவோ ரிப்பயார் வந்ததில் ஊரடங்குச் சட்டமும் வந்திட்டுது! றைவர் கனவேகமாப் போயிருக்கிருன்.
ட்றுப்ஸ் துரத்தத் தொடங்கிட்டுது! றைவரும் வலு ஸ்பீடாப் போனவன். இதால ட்றுப்ஸ் காரன் சில்லுக்கு வெடிவச்சுப்
போட்டான்! றைவர் இறங்கி இருட்டுக்க ஒடீட்டான்! பிற கென்ன, ஆறு பேரயுஞ் சுட்டுக் கொண்டவங்கள்! அவங்களே பிரேதங்களோட காரக் கொளுத்திப்போட்டுப் போனவங்கள்!
ட்றுப்ஸ் போனபிறகு அக்கம் பக்கத்தால உள்ளவங்கள் வந்து பாத்திருக்கினம். ஆறுபேர்! குழந்தைப்பிள்ள வீதியோரமா ஒரு கானுக்க கிடந்துது! அதக் கொண்டுபோனவங்கள். பத்தொன்பது நாளைக்குப் பிறகுதான் , றைவர் ஒரு மாதிரியா அங்க இங்க மாஞ்சி போட்டு இனசனத்தாற்ற போய்ச் சொன்னவன்! இப்ப குழந்தப்பிள்ள இனசனத்தாரோட!
ட்றுப்ஸ் நான் குறை சொல்ல மாட்டன்! இவன் பணச் செடில்ல வந்தவன்! ..சரி, அது வேற கதை!
இப்படி எல்லாம் நடக்கிற எங்கட பூமிய நீர் புனிதமான மயானத்துக்கு ஒப்பிடுறிரே, விசரன் மாதிரி!
அஞ்சாறு நாளைக்குப்பிறகு, எப்படியும் தீவுக்குப் போற தெண்டு நானும் இவளும் தீர்மானிச்ச நாங்கள். படகில முதல்ல பேண்டுகள மட்டுங் கொண்டுபோவதெண்டு படகுக்காரன் சொன் னவன். இவளப் போவெண்டு ஏத்தி விட்டநான்.
ஒரு கால் மைல் போலப் போய் இருப்பினம் ஹெலி ஒண்டு பறந்துது. என்ன நடக்கப் போகுதோ எண்டு யோசிக்க முதல் ல, டப்டப்டப்பெண்டு சன்னங்கள் பாயுது!
படகில இருந்தவங்கள் தண்ணியிக்கக் குதிச்சிப்போட்ாங்கள்! ஹெலி போனபிறகு, படகுக்காரன் பெண்டுகளையும் ஏ த் தி க் கொண்டு திரும்பியே வந்துட்டான்! இவள் இனி பிரேதமாத் தான் என்னிட்ட வந்தவள்!.
என்ன இவ்வளவு லேசாச் சொல்லிப் போட்டனென்டு பாக்கிறீரே? நாங்களப்பா எண்டைக்கோ சா வோ லை யி ல
48

கையெழுத்துப் போட்டுக்குடுத்துட்டம்! அதுக்கும் பிறகும் சீரி யஸர் சீவிக்க முடியுமே? இப்ப சீரியஸ் என்னெண்டா, பிள்ள யஞம் நானும் உயிரோட இருக்கிறதுதான்! எல்லாருமே செத்துப் போயிட்டால் அதப்போல நின்மதி ஒண்டுமே கிடையாது! ܫܚܝ
உமக்கு இதெல்லாம் விளங்காது தம்பி! நெருப்பெண்டா உமக்குச் சுடுமே? .
நான் இந்த நேரத்தில கொழும்புக்கு வந்திருக்க மாட்டநான். என்ர பிள்ளயஸ் எப்படி எண்டுதான் ஒரே து டி யா ப் க் கிடக்குது!..அங்க இருந்திருந்தா நிம்மதி!.ஜெர்மனியில நிற்கிற மூத்தவருக்கு தாயைப்பற்றி அறிவிக்க வேணுமே? அதுக்காகத் தான் வந்தநான்.
அங்க என்னெண்டு தபால்? ஆர் ஆருக்கு எழுதுகிறது? வெளியில இருந்து வாறதுதான். அதுகள இனி ஷொப்பிங் பேக்கில போட்டு எண்டைக்காவது லொறியில காவிக்கொண்டு வருவாங்கள்! டெலிபோனும் கிடையாது. இருந்துதெண்டாத் தான் இஞ்சை யாருக்காவது போன் பண்ணி மூத்தவருக்கு அறி விக்கச் செய்திருப்பனே!.
நானெல்லாம் பேனையை எடுத்து எத்தின மாசமெண்டு தெரியாது! உட்கார்ந்துகொண்டு சுயசரிதை எழுதுறவைக்குத் - தான் தேவைப்படும்! அங்க ஆற்ற சுயசரிதம் ஆருக்குத் தேவை? சீனிக்கு நாப்பது ரூபாவும் மண்ணெண்ணெய்க்கு இருவத்திநாலு ரூபாவும் மாவுக்கு இருவது ரூபாவும் தேடுறதா, பேனையைத் தேடுறதா? முந்திரிப்பழம்தான் ரெண்டு மூன்று ரூபாய்க்கு கிடைக்குது!
அண்டைக்கெல்லாந் தம்பி, ஆம்பிளப் பிள்ளயல. வீட்டோடை வச்சிருக்கப் பயந்தம். அதுதான் வீட்டை ஈடுமானம் வச்சி மூத் தவர ஜெர்மனிக்கு அனுப்பின நாங்கள். இப்பப் பெட்டயள வச் சிருக்கப் பயமாக்கிடக்கு! அந்தக் காலத்தில சொல்லுவாங்கள், பெட்டயள வீட்டோட வச்சிருக்கிறது மடியில நெருப்பு வச் சிருக்கிறதுக்குச் சரியெண்டு. இப்ப, நெருப்புக்கு மத்தியிலதான் பெட்டயள வச்சிருக்க வேணும்! ஏதாவது நடக்கப் போகு தெண்டு தெரிஞ்சா டப்பெண்டு அப்பத்தான் நெருப்புக்க தள் ளிவிட வாய்ப்பா இருக்கும்! உமக்கு விளங்குதே இப்ப?
என்ன மலச்சுப் போனீர்? அப்பா, நாஞ்சொல்றது கோடியில ஒரு பங்கு!.
49

Page 27
ஒரு நாப்பது நாள் மட்டும் நாங்கள் வீட்டில இல்ல. கோயி லடி, இனசனத்தாற்ற வீடு, அங்க, இங்கயெண்டு தீவு, குடா நாடு முழுவதுமே மாஞ்சி பிறகு வீ ட் டு க் கு வந்தநாங்கள். சன்னங்கள் பட்டோ ஷெல்லடிகள் தெறிச்சோ சுவரெல்லாம் இந்த அம்மைத்தழும்புகள் வந்தமாதிரி ஒட்டையள்! எஸ்பெஸ் டாஸ் சீட்டுகளும் அப்பிடி கட்டில், மேசை, கதிரை, கொஞ்சம் சட்டி, பானைகளைத் தவிர வீட்டில ஒண்டுமே கிடையாது டீவீ, ரேடியேர், கடிகாரம், கெபினட், மெத்தையள் - எல்லாமே போச்சு! கல்லுக்குகைக்குள்ள ஆதிகாலத்தில மனிசன் சீவிச்ச மாதிரித்தான் சீவிக்க வேண்டிக் கிடக்கு!.ஆரெண்டு சொல்ல?
ஆரிட்ட போய்க் சொல்ல?.வீட்டுக்கு வீடு இதுதானே?.
பிறகு இப்ப மறுபடியும் பிள்ளயஸ் தீவில்தான்! அங்கயென் டால் பயமில்ல அதுவும் இன்டைக்கு நாளைக்கு எப்படியோ!. அழகான குமர்ப்பிள்ளை செத்துப் போனல், அவள எரிக்காமல் இல்லாட்டில் புதைக்காமல் சும்மா விட்டுட்டுப் போகக்கூட மனம் வருகுதில்லயெண்டால் நீர் புரிஞ்கொள்ளுமன்!
நாங்கள் பெடியன்களயோ ராணுவத்தையோ இண்டியன் ட்றுப்சையோ குறை சொல்ல முடியாது, தம்பி! எங்கட தமிழற்ற பழம்பெருமயப் பேசிப்பேசி நாங்கள் எப்பவிருந்தோ சாகத் தொடங்கிப் போட்டம்! எங்கட காலத்தில எங்களுக்காக நாங் கள் என்ன வெட்டிக் கிழிச்சுப் போட்டம்?. அதுக்குப் பலன் தான் இது! ஆரயும் குறை சொல்ற தெண்டா எங்கள நாங்கள் தான் குறை சொல்ல வேணும்!
நீதியெண்டு சொலுறம். அந்த நீதிய ஆர், தம்பி, படச்சது? மனிசன்தானே?.மணிசன் படச்சது மனிசனுக்குப் பெறுமதி இல்லத்தானே? அவன் எதுவுஞ்செய்யலாம், எப்பவுஞ் சொய்யலாந் தானே?.ஆண்டவன்ட நீதியெண்டு ஒண்டு கிடக்குது அதுதான் பொதுநீதி. அதைக் கடைப்பிடிச்சா எல்லாமே சரியா வரும்! இப்பத்தான் ஆண்டவனயே இல்லையெண்டு சொல்ருங்களே?. சரி, விடும்; இது ஒரு நாளும் உருப்பட்டு வரப்போறதில்ல!.
என்னிட்ட படிச்ச எத்தனயோ புத்திசாலிப் பிள்ளயஸ் எல்லாம் போயிட்டுதுகள்! அப்படி ஆயிரக்கணக்கில போயிட்டு துகள்!.ஆருக்கு நட்டமெண்டு யோசியும், நீர்! போனவயளுக்கா நட்டம்?
50

தத்துவம் பேசிறனெண்டு பாக்கிறீரா? அல்லாட்டில் குழந் தைப் பிள்ளபோல சிலாம்புறனெண்டு பாக்கிறீரா? எ ங் க ட ஊருக்கு, தம்பி இப்ப குழந்தப்பிள்ள யஸ் தத்துவம் பேசும்; என்னப்போல வயசு முறிஞ்சதுகள் மழலை பேசும் ரண்டும் ஒண்டுதான்!
என்னவோ, தம்பி! இப்ப ஊருக்குப் போறநான். போய்ச் சேருவனே உண்டதும் தெரியாது! சேர்றதெண்டாலும் எப்ப வெண்டுந் தெரியாது! உ மக்கு அறிவிக்கவும் மார்க்கமில்ல! ஏதோ ,. சீவன் இழுத்துக்கிடந்தா...ஒரு காலத்தில பாப்பம்!. என்ன?. சரி. நான் வாறன் ராசா 1.
என்ன நீர் பெட்டயளப் போல அழுகிறீர்?.சும்மாயிரும்! . எங்கட பெட்டயளிட்ட நீர் பாடம் படிக்க வேணும்!. பேசம், போம்!. வீட்ட போம்; இஞ்ச கொழும்புக்க எங்கயாவது குண்டு வெடிச்சாலும் வெடிக்கும் காலங்கெட்டுப் போய்க் கிடக்குது. நேரத்தோட வீட்ட போம், தம் பி.
★ ★ 女
சந்தா விப ரம்
ஆண்டுச் சந்தா (12 இதழ்கள்) இலங்கை : ரூபா 90.00
இந்தியா ; 9 அமெரிக்க டொலர் மத்தியகிழக்கு நாடுகள் 10 அமெரிக்க டொலர் ஐரோப்பா - அவுஸ்திரேலியா 11 அமெரிக்க டொலர் அமெரிக்கா - கனடா : அமெரிக்க 13 டொலர் (காசோலைகளில் PAY எனுமிடத்தில் “ N. RAVEEN DRAN PEOPLE’S BAN K - KANNATEIDDY S/A 71 40 6T6IT 6T(pg(33)/6örG) b.)
5 l

Page 28
அதே கரங்கள்
கு- பேணிஸ் ஜோன்ஸன் ரேகொன்
சிலி, நின் நீர்ப் பெருக்குகள் சொவேற்ருேவூடு சிவப்பாய்ப் பாய்கின்றன
சிலி பற்றி நீ கேள்விப்பட்டிருந்தால் சொவேற்ருே பற்றியும் கேள்விப்பட்டிருக்கிருய் அங்கு ஒடுக்குமுறையின் இரத்த ஆறு சுரங்கங்களின் ஆழத்துக்குப் பாய்கிறது
அயென்டேயின் ஜீவனை நெரித்த
அதே கரங்கள் - சொவேற்றேவின் சேறுபடிந்த தெருவொன்றில் குழந்தைதள் மீது துப்பாக்கி விசையை அழுத்தின
வில்மிங்றன் சிறையின் பத்துக் கூண்டுகளிற் சாவிகளைத் திருப்பிய கைகளே இளம் ஸ்ரீவ் மிச்செலைத் தூசு அடர்ந்த மலைச்சாரற் புதைகுழியிலிட்டன
சிலி,
நின் நீர்ப்பெருக்குகள் சொவேற்ருேவூடு சிவப்பாய்ப் பாய்கின்றன அதே கரங்கள் s அதே நீர்ப்பெருக்குகள்.
52

இலங்கை நூல் விமர்சனம்
இனஒடுக்கலும் --— விடுதலைப் போராட்டமும்
ஆசிரியர் : இமயவரம்பன்
வெளியீடு : புதிய பூமி ஜூன் 1988 பக்கங்கள் . 123
ELLL LLLL LSL S S S S SLSLS SL S S S LL SS LL S SL S SS LLL LLLL SS SSS SS SSLSLLSL S SSSSS SSSSS S SSSSSSSSLSSLLSLSSSSLSSL LSL S SLLLSSLLS LSLSLSLLSLLSLLLLL SL LSL SLL LS LSLLqS SSHSL SLLSLSLSLL LSLLLLL LSL LSL S CLSL LSL SSSSSLSSSSSSLSSSSS SSSS O 母妊。 முத்துகிருஷ்ணன்
இலங்கை இனப் பிரச்சினை  ைபப்பற்றி அண்மைக் காலத் தில் ஆங்கிலத்திலும், தமிழிலும் பல நூல்கள் வெளிவந்துள்ளன. அந்நூல்களில் பெரும்பாலானவை. இனப் பி ர ச் ச னை  ைய இலங்கை மக்களின் இனம், மொழி, சமயம், கலாசாரம் ஆகிய வற்றின் கோணங்களிலிருந்து ஆய்வு செய்கின்றன. ஆளுனல் இந் நூல், இலங்கை இனப் பிரச்சினையைச் சமூக, பொருளாதார அடிப்படையில், அதாவது மார்க்சிச லெனினிசக் கண்ணுேட்டத் தில் ஆராய்கிறது. நூல 1 சிரியர் எழுதிய இரண்டு தமிழ், ஓர் ஆங்கிலக் கட்டுரையின் தமிழ 1 க்கம் ஆகிய மூன்று சட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.
மொழி, சமயம், இனம் கலாசாரம் ஆகிய துறைகளில் தமிழ் - சிங்கள மக்களிடையே காணப்படும் வேற்று  ைD $ ளை விட, ஒற்றுமைகளே அதிகம்; அவ்வாறு இருந்தும் அவர்களிடையே இனவாதமும், இனவெறியும் தோன்றக் காரணம் பொருள: தாரப் பிரச்சினைகளும், வ ர் க் க முரண்பாடுகளுமேயாகும் ; பிரிட்டிஷ் ஆட்சி அதன் ஏ சிாதிபத்திய நலனுக்காகப் பிரித்தாளும் கொள்கையைக் கடைப்பிடித்து, தமிழ், சிங்கள மக்களிடையே இனவேற்றுமையைத் தோற்றுவித்தது; சுதந்திரத்திற்குப்பின் ஆட் சிக்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சி, பூரீலங்கா சுதந்திரக்கட்சி ஆகிய இரண்டும் வர்க்க நிறுவனங்களேயாகும். அவ்விரண்டும் தேசிய முதலாளிகளின் நலனைப் பாதுகாக்க இனவாதத்தை இனவெறியாக மாற்றின; தமிழ் காங்கிரஸ் ,அதிலிருந்து தோன்றிய தமிழரசுக் கட்சி ஆகியவையும் வர்க்க நிறுவனங்களேயாகும். இலங்கைவாழ் தமிழ் மக்கள் அனைவரின் நலத்தில் அவ்விரண்டு கட்சிகளுக்கும் அக்கறை இருக்கவில்லை; ஆளும் வர்க்கத்தின் ஆதரவு பெளத்த மதபீடங்களுக்குத் தேவைப்பட்டதால், பெளத்த பிக்குகளும் இனவாத அரசியலில் தீவிரமடைந்தனர்; தமிழரசுக் கட்சியின் செல்வாக்கு சரியத் தொடங்கியபோது, அதைச் சரிக் கட்ட இளைஞர்களைக் கொண்டு பல புது இயக்கங்களை அக் கட்சி தோற்றுவித்தது; ஆனல் காலப்போக்கில், அப்புது இயக்
53

Page 29
கங்கள் தமிழரசுக் கட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விலகித் தீவிர இயக்கங்களாக மாறிவிட்டன என நூலாசிரியர் இலங்கையில் தமிழ்த் தீவிர இயக்கங்கள் தோன்றிய வழிமுறையைச் சுட்டிக் காட்டுகிருரர்.
சிங்கள மக்களுக்குத் தமிழ் மக்கள் மீது சந்தேகம் ஏற்படத் தமிழரசுக் கட்சியின் செயல்களே காரணமாகும் என நூலாசிரியர் அக் கட்சியை ச் சாடுகிருர், அக் கட்சியின் "சமஷ்டி ' (Federal System) கோரிக்கை, 1956ம் ஆண்டு ஒருமொழிச் சட்டத்திற்கு எதிரான அதன் போராட்டம், 1957ம் ஆண்டு 'பூரீ' எதிர்ப்பு இயக்கம், 1961ம் ஆண்டில் அக் கட்சியின் தபால் முத்திரை வெளியீடு, தனித் தமிழ் இயக்கம் ஆகிய செயல்களைச் சிங்களர் கள் பிரிவினை முயற்சியாகவே கண்டனர்; சிங்கள மக்களது இந்தச் சந்தேகத்தைப் போக்கத் தமிழரசுக் கட்சி எவ்வித நட வடிக்கையும் எடுக்கவில்லை; இந்தச் சந்தேகத்தைச் சுரண்டல் காரர்கள் வர்க்க நலத்திற்காக இனவெறியாக மாற்றிவிட்டனர். என்பது நூலாசிரியரின் வாதமாகும்.
இலங்கையின் இனப் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு தனி ஈழம்தானு என்பதையும் நூலாசிரியர் ஆராய்கிறார். அமெரிக் காவில் நீக்ரோக்களும், தென் ஆப்பிரிக்காவில் கறுப்பர்களும் வெள்ளையரின் இனவெறிக்கெதிராகப் போராடிவருகிறர்கள். ஆனல், அவர்கள் தனி நாடு கோரவில்லை; இலங்கையின் இனப் பிரச்சினைக்குப் பிரிவினை ஒரு தீர்வு ஆகாது; வர்க்க நிறுவனங்களினல் அதற்கு ஒரு நிரந்தரத் தீர்வு கா ண வும் இயலாது. "தேசிய இனப் பிரச்சினைக்குத் தொழிவாளிவர்க்க அரசியல் அதிகாரத்தினுல் ஒரு நீண்ட காலத் தீர்வு காண முடியுமே அன்றி, அதற்கு வேறு வழி கிடையாது’’ (பக்கம் 90) என அவர் கருதுகிருர்.
மூன்ருவது கட்டுரையில், கடந்த 30 ஆண்டு காலத்தில் இப் பிரச்சினைக்குத் தீர்வு காண மேற்கொள்ளப்பட்ட முயற்சி களும். அம்முயற்சிகளை எவ்வாறு சுரண்டல் வர்க்கம் முறியடித் தன என்பதும் விளக்கப்பட்டுள்ளன. பின்னிணைப்பில் இப் பிரச் சினைக்குத் தீர்வுகாண இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி (இடது) யின் யோசனைகள் சேர்க்கப்பட்டுள்ளன. سم
ஒரு குறிப்பிட்ட அரசியல் கோட்பாட்டின் கோணத்திலிருந்து ஆராயப்பட்டாலும், இலங்கையின் இனப் பிரச்சினையின் பின் னணியிலுள்ள சமூக, பொருளாதாரச் சக்திகளை அடையாளம் கண்டு கொள்ள இந்நூல் பெரிதும் உதவுகிறது. இலங்கையின் இனப் பிரச்சினையைப் பற்றிப் மெருகி வரும் நூல்களில் இந் நூலுக்கு ஒரு முக்கிய இடமுண்டு.
நன்றி: தினமணி 13 - 2 - 89 (சென்னை)
AA

அலையில் வளையும் உண்மைகள்
ஆ சிவசேகரம் - - - - - ܚ ܝܝܫܫ
மாக்ஸிய உலகநோக்கையும் மாக்ஸிய அரசியல் இயக்கங்களை யும் மாக்ஸியச்சார்புள்ள படைப்பாளிகளையும் விமர்சகர்களையும் தூற்றுவதையே பணியாகக் கொண்டுள்ள பத்திரிகைகளில் அலை இன்னென்று. விரக்தியும் காழ்ப்புணர்வும் உந்த வெளியாகும் நிந் தனைகளும் அவதூறுகளும் அலைக்குப் புதியனவல்ல. பொதுவாக அவற்றை அலட்சியம் செய்வதே தகும். எனவே அலையில் அபிப் பிரயங்களைப் பற்றி நாம் அதிகம் அக்கறை காட்ட வேண்டிய தில்லை. உண்மைகளைத் திரிக்கவும் உண்மைகளை மிகுந்த சிக்கனத் துடன் கையாளவும் அலை முற்படும்போது அவற்றைச் சுட்டிக் காட்டுவது அலைபற்றிச் சிலரது பிரமைகளைக் களைய உதவும் என் பதால் அண்மையில் அலையில் வெளியான சில விஷயங்களைப் பற்றி மேலும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். wA
என் 'செப்பனிட்ட படிமங்கள்' (1988) சவிதைத் தொகு தியின் முன்னுரையில் சில கவிதைகள் பற்றிய சுருக்கமான குறிப் புக்களைச் சேர்த்திருந்தேன். தெலுங்குக் கவிஞர் பூரீபூரீயின் கவி தையொன்றன் ஆங்கில மொழி பெயர்ப்பைத் தமிழ்ப்படுத்தும் படி பத்மநாபஐயர் (1983 இல்) கேட்டிருந்தார். அதை உடனடி யாகவே செய்து ஆங்கிலவடிவம் படுமோசமானது எனவும் அதன் தமிழ்ப் படுத்தல் பற்றி எனக்கு மிகுந்த அதிருப்தி உள்ளது என வும் அவருக்கு எழுதினேன். அந்த ஆட்சேபனையை மீறி (1985இல்) அலை அதைப் பிரசுரித்ததையும் பின்பு புதிய பூமிக்கு அக் கவி தையைத் தழுவி எனக்குத் திருப்திகரமான முறையில் மறுபடி எழுதிய விஷயத்தையும் என் முன்னுரையில் குறிப்பிட்டதையிட்டு அலையில் (1989) ஒரு எதிர்வினை வெளியானது. அதில் நானகவே மொழிபெயர்ப்பைச் செய்து அனுப்பியதாக நான் கூறினேன் என்றவாறு கருத்துக் கூறப்பட்டுள்ளது. என் முன்னுரையைக் கவனமாக வாசித்து விட்டுத்தான் பதில் எழுதினர்களா தெரிய வில்லை. வழமையாகவே என் படைப்புக்கள் பற்றி நான் அதிருப்தி தெரிவிப்பதைக் காரணங்காட்டி அந்த மொழிபெயர்ப்பை வெளி யிட்டதை நியாயப்படுத்தியிருந்தார்கள். ஆனல் எப்போதாயினும் பிரசுரத்துக்கு அனுப்பும் நிலையில் என் ஆக்கம் எதைப்பற்றியும் அவ்வளவு கடுமையாக விமர்சித்து எழுதியிருந்தேனுயின் அந்த வாதம் நியாயமானதாக இருக்கும். எஸ். வீ. ராஜதுரை என் பவர் எழுதிய இருத்தலியல்வாதம் என்ற நூலை நான் 1983இல் அலைக்காக விமர்சித்து எழுதி அதன் பிரதியை திரு. ராஜதுரை யின் பார்வைக்கு நேரடியாக அனுப்பியிருந்தேன். அலையில்
55

Page 30
வந்த அவரது பதிலில், விமர்சனத்துக் கும் அப்பாற்பட்டு எழுப் பப்பட்ட சில விஷயங்கட்கு) நான் எழுதிய சுருக்கமான பதிலை அலை பிரசுரிக்கவில்லை. அதற்காக விளக்கத்தை பத்மநாப ஐயரிடம் பலமுறை கேட்டும் இதுவரை பதில் இல்லை. அலைக்கு விஷய தானம் கேட்டுப் பத்மநாப ஐயர் 1984-85 இல் பலமுறை எழுதிய போதும் நான் அனுப்பாத காரணம், முக்கியமாக, அலை விளக்கம் தரத் தவறியமையே. இச் சூழ்நிலையிலேயே, பிரசுரமாகாது என்று நான் நினைத்திருந்த மொழிபெயர்ப்பு எதிர்பாராத விதமாக வெளியானது. இரண்டு வருஷமாக மறக்கப்பட்ட மொழிபெயர்ப்பு திடீரென்று பிரசுரமான " " நல்லெண்ணத்துக்கு' நான் பத்மநாப ஐயரைக் குறை கூறவில்லை.
தமிழவன் படிகளிலும் நதிக்கரைமூங்கிலிலும் 1983 இனக் கலவரங்களைப் பற்றிய கவிதைகளை வெளியிட்ட சூழ்நிலையில் என்னைக் கலந்தாலோசிக்க அவருக்கு அவகாசமோ வசதியோ இருக்கவில்லை. நதிக்கரை மூங்கிலில் வெளியான அபத்தமான முன்னுரை பற்றி மனவருத்தம் தெரிவித்து அவர் எனக்கு எழுதி 'யிருந்ததையும் நான் அனுப்பிய கவிதைகள் பார்வைக்கு மட்டுமே என்று நான் குறிப்பிடத் தவறியதையும் இங்கு சொல்வது தகும். தமிழவன்-படிகள் என்று வரும்போது ருரு நியாயம் பத்மநாபன். அலே என்று வரும் போது இன்னுெரு நியாயம் என்று குறைப் படும் அலை ஆசிரியர்கள் தமிழவன் பிரசுரித்த சூழ்நிலையையும் அலை பிரசுரிந்த சூழ்நிலையையும் நன்கு அறிவார்கள் என்றே நினைக்கிறேன். அல, பத்மநாபஐயருடைய முதுகுக்குப்பின்னல் ஒளிய என்ன அவசியமோ தெரியவில்லை.
மோசமானது என்று நான் குறிப்பிட்டது குறிப்பிட்ட பூரீபூரீ கவிதையின் ஆங்கில மொழிபெயர்ப்பையே. கவிதை மொழி பெயர்ப்பின் தன்மை பற்றிய தெளிவை அலை ஆசிரியர்களிடம் நான் எதிர்பார்க்க நியாயமில்லை. ஒரு கவிதையை மொழிபெயர்ப் பது, உண்மையில், கிட்டத்தட்ட இன்னெரு கவிதையை உரு வாக்குகிறகாரியம் போன்றது. எனவே என் மொழி பெயர்ப்பு, அவர்கட்கு, என் கவிதைகள் பலவற்றையும் விடச் சிறப்பாகத் தெரிகிறது என்ருல் நான் அது பற்றி குறைப்பட அவசியமில்லை. எதையாவது முறையாக ஒப்பிட அவசியமானுல் புதிய பூமிக்காக பூரீ பூரீயின் கவிதையைத் தழுவி எழுதினேனே அதனுடன் ஒப்பிட் டிருக்கலாம். (அப்போது நான் முன்னுரையில் கூறிய கருத்து ஊர்ஜிதமாகியிருக்கும் என்ற அபாயம் பற்றி எச்சரிக்க வேண்டி யுள்ளது!) நிற்க -

சிலகாலமாக அ%லயின் கவனம் கவிஞர் முருகையன் மீதும் திரும்பியுள்ள து. இனவிதலை யும் பிரிவினையும் ஒன்றே அல்ல என் பதை உணர்த்தி விடுதலைப் போராட்டம் மக்கள் மீதான அடக்கு முறையாகவும் ,அராஜகமாகவும் வக்கிரமாவதைக் கண்டிக்கத் தயங்காத குற்றம் முருகையனுடையது. முருகையன் முற்போக்கு வாதியாக இருப்பதற்கு நாத் திகம் அவசியமான தகுதி என்று நான் கருதவில்லை. முருகையன் முருகனது சிறப்பியல் புகழைப் பற்றி ஒரு விரிவுரையில் அழகுபட எடுத்துரைத்தது பற்றி அலை (இரண்டு இதழ்களில்) குறை கூறியிருந்தது. இதே முருகையன் முருகனைப் பற்றிப் பேசாமல் கிரேக்கரோமன் கடவுள் ஒருவரைப் பற்றியோ அல்லது பெளத்தமரபிலோ சீனமரபிலோ வழங்கும் ஒரு தெய்வத்தைப் பற்றியோ பேசி இருந்தால் அது வேறு விஷயமாக இருந்திருக்கும். அலை ஆசிரியர்கள் முருகையன் ஒரு வரட்டு நாத்திகராக இல்லை என்று மனம் வருந்துகிருர்களோ தெரியவில்லை. இது போன்றே, கைலாசபதி மீதும், முன்பு, ஆறு முகநாவலர் பற்றிய அவரது ஆய்வுக்கட்டுரையை ஆதாரமாகக் கொண்டு தாக்குதல் தொடுக்கப்பட்டது. இவர்களது உண்மை யான மனத்தாங்கல் என்னவென்று தெரியவில்லை: ஒருவேளை, மாக்ஸிய விமர்சகர்கள் வரட்டு நாத்திகர்களாக இருந்திருந் தால் அதற்காக அவர்களைத் தாக்குவது எளிதாக இருந்திருக்கும் என்ற எண்ணமோ?
எங்கெங்கேயோ எழுதப்படுகிற விஷயங்களை அரைகுறையாக விளங்கிக்கொண்டு உள்ளூர் மாக்ஸிய வாதிகளின் வரட்டுத்தனத் தைத் தாக்குகிறதாகச் சொல்கிறவர்களது விமர்சனங்களில் சந்திர மண்டலத்துச் சோலைகள் கண்முன் விரிகின்றன.
நன்றி
தாயகம் - 20 கூடிய பக்கங்களுடன் சிறப் பிதழாக அமைய உதவி நல்கிய விளப்பரதாரர் கட்கும்,
தொடர்ந்து தாயகத்தை ஆர்வத்துடன் வாங்கும் வாசக அன்பர்கட்கும் சந்தாதாரர் கட்கும்,
தரமாகத் தாயகம் அமைய ஆக்கங்களும் ஆரோக்கியமான ஆலோசனைகளும் தந்துதவும் கலை இலக்கிய நண்பர்கட்கும்,
எமது மனமுவந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிருேம்.
- ஆசிரியர் குழு
7

Page 31
மறைந்தும் மறையாத நினைவுச் சுடர்கள்
இலங்கையின் முதலாவது தொழிலாளர் இயக்கத்தைக் கட்டிவளர்த்தவர்களுள் ஒருவரும், கல்விமானும், முதலாவது கம்யூனிஸ்ட் தலைவருமான தே ச பக்த ர் வைத்தியலிங்கம் அவர்களதும்
இலங்கை ஆயுள்வேத சங்கத்தின் ஊடாக தேசிய வைத் தியத்துறையை விருத்திசெய்த மேதை இமில் இன்னுசித்தம்பி அவர்களதும்
நாடகக்கலையை மக்களிடம் எடுத்துச்செல்லும் ஆர்வத்தில் சந்தர்ப்பம் வழங்கிய அனைத்துச் சக்திகளோடு ஒத்துழைத்தவரும், இறுதி ஆண்டில் தேசிய கலை இலக்கியப் பேரவையின் முழு அள வான செயற்பாடுகளோடு தன்னே இணைத்துக் கொண்டவருமான கலைஞர் எஸ். ஜெயக்குமார் அவர்களதும்
"தமிழர் சால்பு' உலகெலாம் விளங்க ஆய்வுநெறியைப் பயன்படுத்தியவரும், மக்களுக்கான நாடகமரபை வ குத் து ச் செழுமைப்படுத்தியவருமான பேராசிரியர் வித்தியானந்தன் அவர் களதும்
சிறுபான்மைத் தமிழர் மகாசபையூடாகவும் இ ல ங்  ைக கம்யூனிஸ்ட் கட்சியூடாகவும் வேறும் வாய்ப்பான களங்களுடா கவும் ஒடுக்கப்பட்ட சிறுபான்மைத்தமிழர்களது உயர்வுக்கு அய ராது உழைத்த எம். சி. சுப்பிரமணியம் அவர்களதும்--
சாதியத்தைத் தகர்த்து சமத்துவ நெறியைவளர்க்கும் பணி யைச் சாதிக்கண்ணுேட்டத்திலன்றி, தேசிய ப் பிரச்சனையின் பகுதியாக நோக்கி, தீண்டாமைக் கொடுமையை வேரோடு தகர்க்கும் வேணவாவோடு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி 1966 ஒக்ரோபர் 21இல் தலைமைதாங்கி முன்னெடுத்த ஊர்வலத்திலும், தொடர்ந்த பலதரப்பட்ட போராட்டங்களிலும் பங்கெடுத்து, அதன் வளர்ச்சியாக முகிழ்த்த தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக் கத் தி ன் தலைமைப் பொறுப்பையுமேற்று சாதியத்தைத் தகர்க்கும் போராட்டகாலங்களில் அளப்பரிய பங்களிப்புகளை நல்கிய எஸ். ரி. என். நாகரட்னம் அவர்களதும் -
மறைவுச் செய்திகள் ஒன்றன்பின் ஒன்ருக எம்மை அதிர்ச் சிக்குள்ளாக்கின; அவர்களுக்குத் தாயகம் தனது அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறது. துயரம் நிறைந்த இழப்புகளால் அனு பவிக்கும் துக்கத்தைப் பலமாக மாற்ற தேசபக்த ஜனநாயக முற் போக்காளர் அனைவரும் ஒருவர்போல் ஐக்கியப்படுவோம்! - ஆசிரியர் குழு 58 -

பிரம்படி
ஆசிரியர் : தணிகாசலம்
வெளியீடு: தேசிய கல இலக்கியப் பேரவைக்காக சென்னை
புக்ஸ், ஜூலை, 1988.
பக்கங்கள் : 195
O.----------------------- சு. பொ. அகத்தியலிங்கம்.
'இனவாதப் பொய்களையும் அரை உண்மைகளையும் நம்பி பழகிவிட்ட மனங்களுக்கு உண்மை உடனடியாக புலனுகாது. அதற்காக நாம் சோர்ந்துவிட வேண்டிய அவசியம் இல்லை. இன வாதிகளும் இனவெறியர்களும் என்றைக்குமே மக்களை ஏமாற்ற முடியாது. அதற்காக, கைகளைக் கட்டிக்கொண்டு காலம்வரும் என்று காத்திருக்கத் தேவை இல்லை. இனவாதச் சேற்ருல் கலங் குண்ட மனங்களை தெளியவைக்கும் கடமை நம் முன் உள்ளது. "'
-'பக்கம் 10 இன ஒடுக்கலும் விடுதலைப் போரட்டமும்.)
என்பதை தெளிவாக உணர்ந்து கொண்டு அப்பணிக்கு சிறு கதையை ஆயுதமாக ஒருவர் கையாள்வது மிகக் கடுமையான பணி.
இப்பணியை "பிரம்படி எனும் தனது சிறுகதைத் தொகுப் பில் க. தணிகாசலம் சிறப்பாகச் செய்துள்ளார்.
இத்தொகுப்பின் முன்னுரையில் கவிஞர் இ. முருகையன் கூறியுள்ளதாவது:
‘தணிகாசலம் தந்துள்ள கதைகள் ஈழத்துக் தமிழ் சமூகத் தினை அண்மைக் காலத்திலே உறுத்தி வரும் நிகழ்ச்சிகளை மட்டு மல்ல - உருட்டியும் விழுத்தியும் உழக்கியும் ஒழித்தும் வரும் நிகழ்ச் சிகளை படம் பிடித்துக் காட்டுகின்றன. என்ருே ஒரு நாள், ஏதோ ஒரு மூலையில் நடத்தேறும் ஆபூர்வ நிகழ்வுகளைப்பற்றித் தணிகாசலம் அக்கறை கொள்வதில்லை. அதுபோலவே ஆயிரத்தில் ஒருவராகவும் இலட்சத்தில் ஒருவராகவும், உள்ள அபூர்வ பிறவி களை இவர் கதை மாந்தர் ஆக்குவதில்லை. வகை மாதிரியான நிகழ்வுகள்; வகை மாதிரியான பாத்திரங்கள் இவையே இவரு டைய கலையாக்க நெறிபின் உயிர்நிலைகள் சி.
Ρς. Οι

Page 32
1983லிருந்து இன்று வரை இலங்கை பற்றி எரிகிறது பதட் டத்திலும் குழப்பத்திலும் மக்கள் தத்தளிக்கிருர்கள். உண்மைக் கும் போலிக் கும் அடையாளம் காண முடியாத குழப்பம் இவற்றி னுாடே தொழிலாளி வர்க்க நோக்கிலிருந்து வாழ்க்கை நிகழ்வுகளை கதையாக்கி இருக்கிருர். (சில இடங்களில் குறைபாடுகள் உண்டு)
குறள் நெறிக்கதைகளைப் போல் ஒவ்வொரு கதையும் ஒரு 'வர்க்க நெறியை' உள்ளடக்கி இருக்கிறது.
முதல் கதை (உறவுகள் தெரிவதில்லை ) 'தமிழ் தொழிலாளி விபத்தில் அடிபட்ட போதும் அக்கறை காட்டாத தமிழ் (LP5 லாளியையும், பரிவுகாட்டும் சிங்களத் தொழிலாளியையும் நன்கு படம்பிடிக்கிறது.”*
"மண்ணின் மைந்தர்கள்’’ எ ன் ற கதை "சின்னஞ்சிறு இலங்கை மண்ணிலிருந்து வயிற்றுப்பாட்டுக்காக மிடில் ஈஸ்ட்டுக்கு செல்லும் சிங்கள இளைஞர் இருவர். முஸ்லீம் இளைஞர் ஒருவர் தமிழ் இளைஞர் ஒருவர், இவர்களைச் சுற்றிப் பின்னப்பட்டுள்ளது. நால்வரும் ஒரேமாதிரி ஏமாற்றப்படுவதும் ஒன்ருக இணைந்து ஒரே அறையில் தங்குவதும் இ ன ம த வாதங்களை மீறிய மனித நேயத்தை நன்கு பதிய வைக்கிறது"
மூன்ருது கதை. "கூலிக் குழப்பம்" கதை தலைப்பே கருவைச் சொல்லி விட்டது (இது 1974ல் எழுதப்பட்டது.)
(**ஒரு பாதை திறக்கப்படுகிறது" கதை ஒரு கி ரா ம மே திரண்டு பாதை போட்ட கதை. கிட்டதட்ட நம்ம ஊரில் வந்த 'தண்ணிர்.தண்ணிர். சினிமா மாதிரி ஆனல் முடிவு சற்று நம்பிக்கையோடு முடிகிறது.
'சிவந்த பாதையிலே’ கதையில் தொடரும் இனக்கலவரங் களால் தொழிலாளர்கள் பிழைப்பில் மண் விழுவது ஒரு புறமும், மறுபுறம் "ம்ே தினத்தை எப்படிக் கொண்டாட வேண்டுமென்று எங்களுக்குத் தெரியும்." என்கிற வர்க்க எழுச்சியும் நன்கு கதை பாங்கில் சொல்லப்பட்டுள்ளது.
'தெற்கு நோக்கி’ பூசா முகாமிற்கு தவறுதலாக கொண்டு செல்லப்பட்டு மீண்ட ஒருவரின் கதை. ஆனல் மக்களை நோக்கிற் மனித நேயத்தினை இங்கு விவரிக்கிருர் 'போர் களத்தில் நிண்டு உபதேசம் செய்யிறதில பிரயோசனமில்லை. பாதிப்புக்கு எதிரா மக்களோடை நிண்டு நாங்களும் போராட வேணும். சிங்கள
60

வெறுப்போ, தமிழ்குண வெறியோ இன்றி மனித நேயத்தோடு இக்குரல் இக்கதையில் ஒலிப்பது சிறப்பானது.
அகதிகள் அனுபவிக்கும் பிரச்சனை, மண்ணை நம்பி வாழ் வோர் மன உளைச்சல், ஆயுதம்தரிக்கவேண்டிய நிர்ப்பந்தம் இவை சொல்லப்படுகிறது. இக்கதை முடிவில் ஆயுதம் தூக்க வேண்டி ஏற்பட்டது நிர்ப்பந்தமே தவிர ஆசையல்ல என்பதைக் கூறுகிருர், இந்த சிக்கலான கதையிலும் சிங்கள இன துவேசம் இல்லா திருப்பதும் இனவெறி ஊட்டாதிருப்பதும் கைதேர்ந்த சர்க்கஸ் கா ர னி ன் சாதுரியத்தோடு கதை செதுக்கப்பட்டிருப்பதைக் காட்டுகிறது "அகதி" கதை.
அகதி, நாய்கள், பிரம்படி மூன்றுமே நன்கு கதை நேர்த்தி யோடு இருப்பினும் இந்திய அமைதிகாக்கும்படை குறித்து அவர் கள் கருத்தினை பூடாகமாக கூறுகிறது: "ஆணுல் .காந்தியின் கைத்தடி நழுவி விழுந்து எங்களைக் காயப்படுத்திப் போட்டுது' (அமைதிகாக்கும்படை குறித்து நமது அரசியல் நிலைக்கு சற்று முரணுன கருத்துக்கள் சில இக் கதைகளில் உண்டு.)
பதின்மூன்ருவது கதை (நல்லநாள்) மணமகள் காத்திருக்க. மணமகனை விசாரணைக்கு அழைத்துப் போய் விட்டனர். அதனல் நல்ல நேரம்தவறிவிட்டது." ".ஒ . உங்கை ந ள் நச்சத்திரம் பாத்துக் கட்டின வீடுகள் குடும்பங்கள் உருப்படியாவே இருக்கு பிள்ளை இஞ்சை. வா’ மங்கல வாத்தியங்கள் இல்லாமல் மண வறை வெறிச்சோடி கிடக்க நின் ற நிலையிலேயே வேதாவின் கழுத்தில் தாலி ஏறுகிறது.
சில சமயம் கதாசிரியர் இடையில் புகுந்து பேசுவது கதை யோட்டத்தை தடுக்கிறது. கதாபாத்திரங்கள் பெரும்பாலும் அரசியல் பேசுவது சற்று மிகைப்படுத்தப் பட்டது போல் தோன் றினலும் இலங்கையின் நிகழ்காலத்தின் வெளிப்பாடுகள் அவை என்றே கருதலாம்.
ஒரு அச்சுத் தொழிலாளி -பல்கலைக்கழகத்திலோ - ஏன்? பள்ளிக்கூடத்திலோ கூட பயின்று பட்டம் பெருதவர். அனு பவமே அவரது பள்ளிக்கூடம்- ஆசிரியர் - தகுதி என்று எல்லாம் ஆகிவிட்டது. -
அவரது வாழ்க்கை அனுபவம் கதையின் கருவிலும் உருவி லும் தெரிகிறது.
61

Page 33
கதாசிரியரின் அரசியல் நிலைபாட்டில் நமக்கு சில மாறுபாடு கள் இருக்கலாம். ஆனல் "இலங்கையில் உள்ள உழைப்பாளி மக்களின் ஒற்றுமையே பிரச்சனைகளுக்கு முழுத்தீர்வு' என்கிற மைய அம்சத்தில் கதாசிரியர் நம்மோடு உடன்பட்டு நிற்கிருர்,
பொதுமைப் படுத்திய கதாபாத்திரங்களை சிருஷ்டித்திருப் பதால் சில இடங்களில் கட்டுரைப் பாங்கு தலை நீட்டினலும் கதையின் மைய இழையோட்டத்தில் காணப் படும் சத்திய ஆவேசம் அக்குறையை நிவர்த்தி செய்து விடுகிறது.
"பிரம்படி" இத்தொகுதி இனவெறியர்களுக்கு “ஒற்றுமைச் சங்கொலி** இதில் ஐயமில்லை.
சு. பொ. அகத்தியலிங்கம்
நன்றி தீக்கதிர் (சென்னை)
தாயகம் 21ல் வெளிவர இருப்பவை
SE பாரதி ஆய்வில் கைலாசபதி
O7áv
- பார்வதி கந்தசாமி
38 கலை இலக்கியமும் அரசியலும்
- சி. சிவசேகரம் -
ஃ கூணன் யன்யாங்
u
- தமிழில்: ந. சுரேந்திரன்

அலை சொன்ன கதை
- -- ~ \ - ~~~~Mu-x XXX- - - - -- O சத்திய
நீர்த்திவலைகள் முட்டிமோதி குவியாக மேலெழுகையில் அது நிகழ்ந்தது.
நீண்டு கூரிய முனையாக நுனிப்பகுதி முண்ப்புடன் வளரகொழுத்துப் பருத்திருந்த அடிப்பகுதி வற்றி ஒடுங்கி மெலிதாயானது. தூக்கி நின்ற சக்தி வற்றடிக்கப் படும் கணமே உயர்வும் தாழ்வும் தகர்ந்து சற்று உயர்ந்த தளத்தில் அனைத்தும் சமத்துவம் அடைவன,
காலிமுகத்திடல் கடந்து போகையில் நின்ற அந்தக் காட்சியோடுநீண்டு கிடந்த வான்முட்டும் மாளிகைகள், தொடர்ந்து செல்ல குடில்களில் அழுகல் நாற்றத்துள் வாடும் பல சீவன்கள் எல்லாம் இணைந்துமிணையாது முயங்கி எதையோ உணர்த்த முயல்வன எழுகையும் ஒடுங்கலும் முரண்வகை திசைகளில் ஓரிடத்தே நிகழ்ந்து, அடியந்த மாற்றமே நியதி ஆவதை தடுத்திட நளாயினி அவதரித்தாற்கூட முடியாதே!
63

Page 34
சாதியத்தை எதிர்த்த போராட்டப் பயணத்தில் எஸ். ரி. என். வழங்கிய
பங்களிப்பு
O ). Str. Glg.
தமிழர் சமுதாயத்தில் நிலவி வரும் பழமைவாதம் என்பது இன்றும் சமூகத் தாக்கம் மிக்க தொன்ற கவே காணப்படுகின்றது. நிலப்பிரபுத்துவ காலக் கருத்தோட்டங்களால் வலிமை பெற்ற இப் பழமை வாதமானது தமிழர் சமுதாயத்தின் அரசியல். பொருளாதார கலாச்சார துறைகள் அனைத்தையும் உள்ளடக்கிய சமூகவாழ்வில் ஆதிக்கம் பெற்று விளங்குகின்றது. "இரண்டா யிரம் ஆண்டு காலப் பழைய சுமையைக்' கொண்ட இப்பழமை வாதத்தின் பிரதான கூறுகளில் ஒன்ருகத் திகழ்வதே சாதிய LDIT (5 D.
சாதியததின் உட்கிடக்கை வர்க்க ஒடுக்கு முறைக்கு உட் பட்டதொன்ருகும். அடக்குபவர்களை எதிர்த்து அடக்குமுறைக்கு ஆட்பட்டவர்கள் போராடி வந்த வரலாறு மனிதகுல வரலாறு என்று கொள்ளப்படும் போது சாதியத்திற்கு எதிரான போராட்ட மானது உலகம் பரந்த வர்க்கப் போராட்டத்தின் ஒரு பகுதி யாகின்றது. இந்திய சுதந்திரப் போராட்ட எழுச்சிகள் உருவாக் கிய பல களங்களில் இருந்து நம்மவர்களிடையே சாதியத்திற்கு எதிரான உணர்வலைகள் பல்வேறு படிநிலைகளிலே கிளம்பலா யிற்று. பாரதியம், காந்தியம், திராவிடர் இயக்கம் போன்ற வற்றினுாடே வலுப்பெற்று வந்த சாதிய எதிர்ப்புக் கருத்துக்கள் தேசிய ஜனநாயக உணர்வுடன் ஸ்தாபன ரீதியில் அணிதிரண்ட ஜனநாயக சக்திகளினல் இந்த நூற்றண்டின் இருபது களி ல் போராட்டப் பயணமாகத் தொடங்கப்பட்டது. ஆனல் இப்பய ணத்தை வேகப்படுத்தி புதிய காலகட்டங்களுக்கு முன்தள்ளி வந்த வரலாற்றுப் பெருமை மாக்சிசத்திற்கும் மாக்சிச வாதி களுக்குமே உரியதொன்ருகும்.
மாக்சிசத்தைப் போராயுதமாகக் கொண்டு தமிழர் பழமை வாதத்தினையும் அதன் முனைப்பான கூருக விளக்கிய சாதியத்தை யும் எதிர்த்து போராட்டப் பயணத்தை மிகத் துணிவுடனும் , செயலூக்கத்துடனும் முன்னெடுத்துச் சென்ற மாக்சிச வாதிகளில் பலர் நம்மிடையே இன்று இல்லை. அவர்களில் மு. கார்த்திகேசன்,
64

ராமசுவாமிஐயர் பொன். க ந்  ைத யா, சி, தர்மகுலசிங்கம். அ. வைத்திலிங்கம், பொ. நாகலிங்கம், எம். சி. சுப்பிரமணியம், கே. டானியல், கவிஞர் க. பசுபதி, பேராசிரியர் க. கைலாசபதி போன்றவர்கள் என்றும் நினைவு கூரத்தக்கவர்களாவர். இத்த கைய மாக்சிசப் பாரம்பரியத்தைக் கொண்ட அணி யு ட ன் இணைந்து சாதியத்திற்கு எதிரான போராட்டப் பயணத்திற்கு தனது உயரிய பங்களிப்பை வழங்கிச் சென்றவர் அண்மையில் நம்மை விட்டுப் பிரிந்த தோழர் எஸ். ரி. என். நாகரட்ணம் ஆவர்.
எஸ். ரி. என். அவர்களை நினைவு கூரும் இவ்வேளை இருபது வருடங்களுக்கு முந்திய ஒரு போராட்ட காலகட்டத்தின் நினை வலைகள் பசுமையாக நினைவுக்கு வருகின்றன. தமிழர் சமுதாயத் தில் வாழ்ந்து வருகின்ற ஐந்து லட்சத்திற்கு அதிகமான தாழ்த் தப்பட்ட மக்களது வரலாற்றின் ஒரு திருப்புமுனைக் காலகட்ட மாகவே அன்றைய நாட்களைக் கொள்ளமுடியும். 1966ம் ஆண்டு ஒக்ரோபர் 21 எழுச்சி உருவாக்கிய புரட்சிகரப் போராட்டங் களினூடே ஒரு பரந்த போராட்டக்களம் உருவாகி இருந்தது. சமுதாயத்தின் அடிநிலை மக்களின் மறுக்கப்பட்ட உரிமைகளை வென்றெடுத்து நிலை நிறுத்துவதற்கான அன்றைய போராட்டக் களத்தில் தெளிவான திட்டமிட்ட கொள்கைகள் லட்சியங்கள் மக்கள் போராட்டங்களினல் முன்னெடுக்கப்பட்டன. அவ்வேளை பரந்து பட்ட வெகுஜன இயக்கம் ஒன்றிற்கான தேவையும் அதற் கான தலைமையும் தேவைப்பட்டது. அந்தவகையில் உருவாக்கப் பட்டதே அன்றைய தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம். அதன் தலைமைப் பொறுப்பு தோழர் எஸ். ரி. என். நாகரத்தினத் திடம் ஒப்படைக்கப்பட்டது. த ன க் கு ஒப்படைக்கப் பட்ட பொறுப்பை முழுமையாக உணர்ந்து கொண்டு அடக்கி ஒடுக் கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் விமோசனத்திற்காகத் தன்னை அர்ப்பணித்து தனது பங்களிப்பை சரியான முறையில் எஸ். ரி. என். வழங்கினர்.
அன்றைய போராட்ட காலகட்டத்தில் தோழர் எஸ். ரி. என். அவர்களுடன் மிக நெருக்கமாக இணைந்து நாளாந்தப் பணிகளில் ஈடுபட்ட காரணத்தால் எஸ். ரி. என். வழங்கிய பங்களிப்பின் பெறுமானத்தை அனுபவரீதியாக தெரிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு இருந்தது. எஸ். ரி. என். என்ற ஒரு முழுமையான மனித நேயமும் விடுதலை உணர்வும் மிக்க போராளியின் சொல் லையும் செயலையும் மதிப்பிடுவதற்கு அன்றைய போராட்ட களத் தினூடே பெறப்பட்ட அனுபவங்கள் அடிப்படையானதாகும். ஏனெனில் ஒருவர் சமாதான காலகட்டத்தில் எவ்வளவையும்
65

Page 35
பேசலாம். ஆனல் நெருக்கடி மிக்க போராட்டத்தருணத்தில் எவ்வாறு ஒருவர் நடந்து கொள்கிருர் என்பதே அவரைப்பற்றிய சரியான மதிப்பீட்டுக்கான அளவுகோலாகும். அந்த வகையில் எஸ். ரி. என். அவர்களை மதிப்பிடும் போது ஐந்து பிரதான அம்சங்கள் எம்முன்னே எழுந்து நிற்கின்றன.
l.
3.
66
அடக்கு முறைகளுக்கு எதிரான உறுதி மிக்க எதிர்ப்புணர்வு எஸ். ரி. என்னிடம் நிறைந்து காணப்பட்டது. இவ் எதிர்ப் புணர்வைக் குறுகிய தனி நபர் வழிகளிலன்றி மக்களை அணி திரட்டி மக்கள் போராட்டங்களினல் அடக்கு முறைகளை உடைத்தெறிந்து முன் செல்ல வேண்டும் என்ற பரந்த போராட்ட உணர்வு என்றும் தளராத ஒன்ருகக் காணப் பட்டது. இத்தகைய அடித்தளத்தில் இருந்தே சாதியத்தை எதிர்த்து வெற்றி பெற முடியும் என்ற திடமான நம்பிக் கையை எஸ். ரி. என். இறுதி மூச்சு வரை கொண்டிருந்தார்.
தலைமைப் பாத்திரத்திற்குரிய துணிவு அவரிடம் நிறைந்து காணப்பட்டது. போராட்டக் களங்களில் தலைமை தாங்கி நின்ற வேளைகளிலும் அரசு யந்திரத்தின் பொலீஸ் கெடுபிடி களின் போதும், பிற்போக்குவாதிகள் பல தடவைகள் அவரது உயிருக்கு உலை வைக்க முயன்றபோதிலும் அவையாவற்றுக் கும் மு ன்னு ல் ஒரு உறுதிமிக்கத்தலைமைப் போராளியின் துணிவை வெளிப்படுத்திய சந்தர்ப்பங்களை நேரில் காண முடிந்தது பெரும் அனுபவம் என்றே கூறவேண்டும்.
ஒரு பரந்த போராட்டத்தின் போது கூட்டு முடிவு களை செயல்படுத்தும் சந்தர்ப்பத்தில் தலைமை பாத்திரம் வகிப் போருக்கு இருக்கவேண்டிய கட்டுப்பாடு என்பது போராட் டத்தின் சரியான திசைக்கு மிக அவசியமாகும். தன்னிச்சை யான முடிவுகளை கட்டுப்பாடின்றி கையாள முற்பட்டால் அதன் விளைவு போராட்டத்தையே பலவீனப்படுத்தி விடும். அந்த வகையில் ஸ்தாபனத்திற்கும் ஸ்தாபன முடிவுகளுக்கும் கட்டுப்பட்டு தலைமைப் பாத்திரத்தை சீரிய முறையில் எஸ். ரி. என். செயல் படுத்தியமை ஒரு முன்னுதாரணமிக்க நடை முறையாக இருந்தது.
போராட்ட காலகட்டத்தின் உச்சகட்டங்களின் பல சந்தர்ப் பங்களில் போராட்டத் திசையைத் திருப்புவதற்கு "" பேச்சு வார்த்தைகள் " பல இடம் பெற்றன. அச்சந்தர்ப்பங்களில் போராட்ட நோக்கத்தில் இருந்து வழிதவறும் விட் டு க்

கொடுப்பை ஒரு சந்தர்ப்பத்திலாவது எஸ். ரி. என். விட்டுக் கொடுக்கவில்லை. இத்தகைய தலைமைப் பண்பிற்குரிய மனே வலிமையானது போராட்டத்தில் அணி தி ரண்ட ஆயிர மாயிரம் மக்களை உத்வேகமடையச் செய்து முன்தள்ளியது.
5. அன்றைய போராட்டங்களின் போதும்அவை வெற்றியடைந்த காலப்பகுதியிலும் பெறும் பெயர் புகழ்நாடாது மிகுந்த தன்னடக்கத்துடன் தொடர்ந்தும் சேவை செய்வதிலுமே ஆர் வம் கோண்டிருந்தார். ஒரு சிறு சந்தர்ப்பத்திலாவது பட்டம், பதவி, சுயநல முயற்சி எதையும் நாடாது தனது இறுதி மூச்சு வரை அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் விமோ சனத்திற்காக செயல் பட்டு வந்த எஸ். ரி. என். தன்னிடம் இருந்த வசதி வாய்ப்புகளில் ஒரு பகுதியை எவ்வித தயக் கமும் இன்றி போராட்ட இயக்கத்திற்கு அர்ப்பணித்திருந் தமை குறிப்பிடத்தக்கதாகும்.
தமிழர்களிடையே இறுக்கமடைந்திருந்த சா தி யத் தை எதிர்த்த போ ராட்டப் பயணத்தின் உச்ச காலகட்டத்தில் பொறுப்புள்ள தலைமைப் பாத்திரத்தை வெகுஜன இயக்கத்தில் பெற்றிருந்த எஸ். ரி. என். தான் ஒரு தனித்திறமை பெற்ற தலைவன் என்ற நிலைமை துளியளவேனும் கொண்டிருக்கவில்லை. அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களினதும் அவர்களினது போராட்டத் தையும் பிரதியலித்த ஒரு தலைமைப் போராளியாகவே செயல் பட்டு வந்தார். அதேவேளை அவர் தாழ்தப்பட்ட மக்களின் விமோசனத்திற்கு குறுகியவழிப் போராட்டங்களை ஒரு போதும் ஏற்றுக்கொண்டதில்லை. பரந்து பட்டதும் பல்வேறு வடிவங்களைக் கொண்டதுமான புரட்சிகர வெகுஜனப் போராட்டப் பாதை என்ற சரியான வழிமுறையை உறுதியாக ஏற்றுக்கொண்ட ஒரு வராகவே எஸ். ரி. என். வழி நடந்து வந்தார்.
சாதியத்திற்கு எதிரான போராட்டப் பயணத்தின் பிரதான போர்க்களத்தில் நின்ற வேளையிலும் எஸ். ரி. என்னிடம் குறுகிய சாதிவாதத்தை காணமுடியாதிருந்தது சிறப்பான அம்சமாகும். சாதியத்திற்கு எதிரான போராட்டத்தை ஒரு பரந்த பார்வையில் நோக்கிய போக்கு அவரிடம் குடிகொண்டிருந்தது. சாதியத்திற்கு எதிரான போராட்டம் தமிழர்களுடைய விடுதலையோடும், முழு இலங்கை மக்களினதும் விடுதலையோடும் உள்ளார்ந்த உறவைக் கொண்டிருக்கின்றது என்பதில் நம்பிக்கையுடையவராக இருத் தார். இன்று பேரினவாதத்திற்கு எதிரான போர்க்களத்தில் தமிழர் களிடையே குறைந்தபட்ச ஐக்கியம் தானும் நிலவுவதற்கு அடிப்
67

Page 36
படையாக அமைந்தது அன்றைய போராட்டங்கள் தான் என் பது ஆழ்ந்து நோக்கும் எவருக்கும் புலப்படக் கூடியதொன்ருகும். எனவே சாதியத்திற்கு எதிரான போராட்டப் பயணத்தின் ஒரு திருப்புமுனையாக அமைந்த எஸ். ரி. என். பிரதிநிதித்துவப் படுத் திய போராட்டங்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உரிமைகளையும் குறைந்தபட்ச விமோசனத்தையும் அளித்த அதேவேளை பழ ைம வாதப் பிடிக்குள் சிக்கி முன்னே செல்ல முடியாது தேக்கமடைந் திருந்த தமிழர் சமுதாயத்தின் ஒட்டு மொத்தமான முன்னேக்கிய நகர்வுக்கு வழிவகுத்துக் கொடுத்த வரலாற்றுண்மையையும் ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும்.
தேழர் எஸ். ரி. என். மனிதகுல விடுதலை என்ற மகத்தான இலட்சியத்துடன் தன்னை இணைத்துக் கொண்டு, சாதியக் கொடு மைகளுக்கு உள்ளான அடக்கப்பட்ட மக்களின் போராட்டங் களினூடே, தனது ஆற்றல் க ள் அனைத்தையும் பிரயோகித்து பயனுள்ள பங்களிப்பை வழங்கிச் சென்றுள்ள ஒரு போராளி என்பது, மக்களால் என்றும் நினைவு கூரப்படும். சாதிபத்திற்கு எதிரான போராட்டப் பயணம் முடிவடைந்த ஒன்றல்ல. அது மேன்மேலும் முழுமையான வி டு த லைப் போராட்டங்களுடன் இணைத்து முன்னெக்கப்பட வேண்டியதொன்றகும் அவ்வாறு தொடரப்படும் போது எஸ். ரி. என். வழங்கிச் சென்ற தன்னல மற்ற பெறுமதி மிக்க பங்களிப்பானது ஒளிபரப்பி போராட்டப் பயணத்திற்கு மேலும் பலம் சேர்க்கும் என்பதில் திடமான நம் பிக்கை உண்டு. - M.
வாசகர்கள் கலை இலக்கிய வாதிகள் கவனத்துக்கு
தாயகத்தை தொடர்ந்து - தாமதமின்றி - தவருது பெறுவதற்கு உடன் சந்தாதாரராகுங்கள்.
விரைவில் மாத இதழாக்கும் குறிக்கோளுடன், அதுவரை, இருமாதம் ஒரு இதழ் இடையீடின்றி வெளிவரும். கலை இலக்கிய வாதிகள் ஆக்கங்களைத் தாமதமின்றி உடன் அனுப்பி உதவுங்கள்.
தொடர்புகொள்ள வேண்டிய முகவரி:
ந. இரவீந்திரன் 15/1, மின்சார நிலைய வீதி, யாழ்ப்பாணம், இலங்கை. 68

நிதர்சன உலகில்
நிதர்சனமான நியாயங்கள்
கண்மூடித்தனமாக மீறப்படும் போது சாம்பல் குவியல்கள் உயரமாகிக் கொண்டே போக... இன்னும்
நம்பிக்கையிலும், நாளையிலும்
g TGT
எதிர் பார்ப்பிலேயே காலத்தைக் கழித்துக் கொண்டு. உட்கார்ந்திருக்கும் மானிட வர்க்கம்.
தட்டிக் கொடுக்க நீள்பவை கரங்கள் என ஆவலாய் பார்த்துக் கொண்டு நிற்க அங்கே... மூளையில்லாத, கண்ணில்லாத துப்பாக்கிகள் தான் நீழ குண்டுகள் குருதியுடன் சல்லாபம் செய்ய
மண்ணில் மற்ருெரு பிணக் குவியல்
இன்னமும் எதிர் பார்க்கிருேம் சமாதானம், பேச்சுவார்த்தை
莎9

Page 37
த
** நாளை நல்ல காலம் வரும் என்ற எண்ணத்தில் வீட்டை விட்டுப் போன மூத்த மகலேயும் கல்யாணத்திற்காகக் கர்த்துநிற்கும் பெண்களையும் யோசித்தபடி மேல் முகட்டை கண்களால் உரசியபடி கற்பனைகளின் ஊடே எல்லாவற்றையும் முடித்துக்கொள்ளும் தறுவாயில். அதையும் முடிக்க விடாமல் துப்பாக்கிகள்
எங்கோ, யாரையோ தழுவ. அவசர அவசரமாக நிஜத்திற்கு வந்து கதவுகளை, ஜன்னல்களை அடைத்து இடுக்குகளின் ஊடு கண்கள் தழுவ
துப்பாக்கிகளை. அடையாளம் கண்டு கொண்டு நாய்கள்
குரைக்க ஆரம்பிக்க . . . மனம் இப்போ கடவுளிடம் தாவிவிட
பயம் மட்டுமே
நெஞ்சில் நிறைய
(BSGSTSGT メ நீரை நிறைத்துக் கொள்ளும்.
70

அசுரன்
{} ழாவலி
கண்கள்சிவந்து கனல்வதுமில்லை மீசைசினந்து துடிப்பதுமில்லை கேசத்திற் பாம்பு நெளிவதுமில்லை கைகளிற் சூலமும் கத்தியுமில்லை செய்த தவத்தினிற் தெய்வம் ம்யங்கித் தந்தவரமென அஸ்திர்மில்லை வாயிற்குருதி வழிய இரண்டு கூரிய தந்தங்கள் நீள்வதுமில்லை மூச்சினிலே அனல் வெக்கைதெறிக்கப் பேச்சில் இடியொலி கேட்பதுமில்லை கால்கள் பதிந்திடப் பூமி நடுங்கி வானமுகடு அதிர்வதுமில்லை.
தொந்தி சரிந்து அலைந்துகுலுங்கக் கெக்கலி கொட்டிச் சிரித்திடமாட்டான் மார்தட்டித் தோளைக் குலுக்கிச் சிவந்த கண்ணை உருட்டி மிரட்டமாட்டான் உன்னையும் என்னையும் போல இருப்பான் இன்னும், இனியவன் போல நடப்பான் அன்பு அகிம்சை அறமெனச் சொல்வான் நீதிவகை பல நூறுமுரைப்பான்.
பூமியைப் பன்முறை தீய்த்திடவல்ல ஆயுதந் தாங்கிய ஏவுகணைகள் நீரில் நிலத்தினில் ஆழக்கிடங்கில் வான வெளியிலும் காவல் கிடக்கும் பாலையிற் செந்நிற ஆறு புரளும் சோதரர் மத்தியிற் பூசல் வளரும் நச்சு மருந்துகள் நோய்கள் பரவிப் பட்டினி பஞ்சமும் மாந்தரை உண்ணும்.

Page 38
உண்மை திரித்திடப் பொய்கள் பரப்பச் செய்தி நிறுவனம் வானெலி மற்றுஞ்
சித்திரங் காட்டிடுஞ் சாதனமுண்டு. வாட்டி வதைத்து விலங்குகள் போலக்
கூட்டில் அடைத்திடக் காவலர் கூட்டம் கொன்று குவித்திடக் கூலிப்படைகள் மாந்தரைத் தட்டி அடக்கியொடுக்கத் தேசம் பலவினும் தாசர்கள் உள்ளார்
தேவர்கள் அஞ்சி நடுங்கிய நாளிற் தெய்வங்கள் ஆயுதந் தாங்கின என்று பண்டை மரபிற் பலகதை உண்டு இன்னுங் கொடுமைகள் ஓங்கும் வரையில் மானுடர் காத்துக் கிடப்பதற் காமோ மானுடம் ஒன்றெனும் உண்மை உணர்க ஒன்று திரளுக அச்சம் ஒழிக மானுடர் ஒற்றுமை தெய்வ வலிமை
காளி
வாயு அசைந்தது
குறை பிறந்தது
சீறி எழுந்ததுவே ஆழி விரிந்தது
அலைகள் வளர்ந்தன
முகில்கள் நனைந்தனவே மேனி நடுங்கிய
பூமி அதிர்ந்தது
மலைகள் சரிந்தனவே தீயுமெழுந்தது
சுடர்கள் பரந்தன
பொறிகள் பறந்தனவே வாணமெரிந்திட
மின்னல் படர்ந்தது
இடிகள் முழங்கினவே காலம் நடுங்கினன்
காளி எழுந்தனள்
கருநிற மேனியளே
72
ஸ்வப்னு

கூவி எழுந்தனள்
லோகம் அதிர்ந்தது
ஊழி பிறந்ததுவே கொடுமை மிகுங்கலி
யுகமும் ஒழிந்தொரு
நவயுகம் வந்திடவே மனிதர் நிமிர்ந்தனர்
பணிதல் ஒழித்தனர்
அடிமை முடிந்திடவே மதில்கள் தகர்ந்திடச்
சிறைகள் இடிந்திடத்
தளைகள் அறுந்திடவே
அஸானிய பூமியிற் ,
காளி நடந்தனள்
கரியவர் பொங்கினரே'
நிறவெறி சாய்ந்திட நீதி நிமிர்ந்திட
மானுடம் வென்றிடவே.
(* தென்னுபிரிக்க மக்கள் எழுச்சிக்கு வாழ்த்து )
துளிர்! துளிர்! துளிர்!!! துளிர்!!!! மாணவர்களிடையே அறிவியல் (விஞ்ஞான) உண்மை
தம் பங்களிப்பை வழங்கும் உயர்ந்த நோக்குடன் தமிழ் நாடு - புதுவை அறிவியல் இயக்க வெளியீட்ாக வெளிவந்து கொண்டிருக்கும்,
அறிவியல் (விஞ்ஞான) மாத இதழ துளிர் இலங்கை வில் ரூபா 8-00 இலங்கையின் ஏக விநியோகஸ்தர்கள்: வசந்தம் புத்தக நிலையம் 405, ஸ்ரான்லி வீதி, யாழ்ப்பாணம்.
తాడిగా எடுத்து விளக்கி, சமுதாய நடைமுறைகளினூடாக அறிவியலை வளர்த்து, அதன் மூலம் சமுதாய வளர்ச்சிக்கு
73

Page 39
நோபல் பரிசு
ஒவ்வொரு சகாப்தங்களிலும் பல நிகழ்வுகள் உலகினைப் புரட்சிகரமாக்குகின்றன. அத்தகையதொரு நிகழ்வே நோபல் பரிசினது ஸ்தாபகமும் ஆகும்.
1895th ஆண்டு நவம்பர் 27ம் திகதி பரிஷ் மாநகரில் வைத்து 300 இலும் குறைவான சொற்களையுடைய அப்பிரபல்யம் மிக்க உயிலுக்கு அல்பிரட் நோபல் கையெழுத்திட்டார்.
வருடாந்தம் மனித இனத்திற்கு நன்மையளிக்கக் கூடிய வகையில் அவ்வருடத்தில் சாதனை புரிந்தவர்களுக்கு தனது முதலீடுகளின் வருமானத்தைப் பங்கீடு செய்து பரிசுகள் வழங்கு வது என்கின்ற அவ்வுயில்தான் நோபல் பரிசிற்கு வழி அமைத் தது. அவரது முதலீடுகளின் தற்போதைய பெறுமதி 200 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.
அல்பிரட் நோபல்-ஒர்-சிறந்த-கண்டு பிடிப்பாளராகத் திகழ்ந்தார். இவர் தமது வாழ்வுக் காலத்தில் 355 Patens க்கு உரிமையாளராகவும் இருந்தார். பல்தேகியக் கிட்டுத்தாபனங்களை தாற்றுவிப்பதிலும் முன்னுேடியாக விளங்கினர். ஐந்து கண்டங்
களிலும் உள்ள 20க்கும் மேற்பட்ட நாடுகளில் அமைந்திருக்கும் 90 தொழிற்சாலைகள் இவரது கண்டு பிடிப்புகளின் பொருளா தார முதலீடுகளாகும். ழனித சமூகத்திற்காக விஞ்ஞானம், இலக்
* ܐܸ,.
கியூழ், சமாதானம்-ஆகியவற்றின்-அபிவிருத்திக்கு தன் வாழ் வின் க் காலகட்டத்தை அர்ப்பணித்தார். ጳ•• அவின் இறுதி ததை னதத
1900th ஆண்டு தொடக்கம் அவரது உயிலினது நோக்கம் நோபல் பவுண்டேசனுல் விசுவாசத்துடனும் வெற்றி கரமாகவும் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றது. கணப் பொழுதிலும் மாறு பட்டுக் கொண்டிருக்கும் சர்வதேசச் சூழலில் உலகிலேயே, அதி கெளரவமிக்க விருதாக நோபல் பரிசு திகழ்கின்றது. 1988ம் ஆண்டு ஒவ்வொரு பரிசும் 2500,000 சுவீடன் கொரனர்களை (40 லட்சம் அமெரிக்க டாலர்கள்) கொண்டிருந்தது.
பரிசுத்தேதி டிசம்பர் 10 ஆகும். பரிசில்கள் பின்வரும் துறை களுக்கு அல்பிரட் நோபலினுல் குறிப்பிடப்பட்ட நிறுவனங் களால் வழங்கப்படுகின்றன:
74
 

பெளதீகவியல் ருேயல் விஞ்ஞான அக்கட்மி.
இரசாயனவியல்
மருத்துவம் - கரோலின்கா நிறுவனம். இலக்கியம் - சுவீடன் அக்கடமி சமாதானம் -- நோர்வே பாராளுமன்றம்:
வளர்ந்து வரும் விஞ்ஞான, தகவல் தொழில்நுட்ப வளர்ச் சிகளுக்கேற்ப மேலும் சில துறைகளுக்கும் இப்பரிசுத் திட்டத்தை விரிவு படுத்த நோபல் பவுண்டேசன் எண்ணியுள்ளது. அவையாவன,
1. வானியல் 3. du fugi) Guangs Lt. (Bio Physics)
2. பிறப்புரிமையியல் 4. இணங்களியல். (Phology)
அண்மையில் நோபல் பவுண்டேசனது தலைவர் கிலென்ஸ்ரன் (GYLLENSTEN) நிருபர் ஒருவருக்கு அளித்த பேட்டியொன்றில் பின்வருமாறு கூறியிருக்கின்ருர். "இன்றைய உலகின் அரசியல், இராணுவ நிலைமைகளை அல்பிரட் நோபல் பார்க்கக் கூடியதாக இருப்பின் அவர் மிகுந்த ஏமாற்றமடைந்திருப்பார். தற்போது சமாதானப் பரிசு தவிர்ந்த ஏனையவை அவரது நேர்க்கத்தினை மேலும் வளம் படுத்துவதாக உள்ளது."
(China Pictorial இல் வெளியான கட்டுரையைத் தழுவி எழுதியவர் சு. சத்தியகீர்த்தி.)
கல்யாணி கிறீ to ஹவுஸ்
குளிர்பானம் ஐஸ் கிறிம்
கேக்,
வகைகள்! . மட்டின் ருேல்,
கட்லற்,
பற்றிஸ்
சிற்றுண்டி வகைகள்! துருடான பானங்கள்
அனைத்துக்கும், கல்யாணி கிறீம் ஹவுஸ் 73, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்.

Page 40
O தமிழர் சமுதாயத்தில் சாதியம்
எவ்வாறு தோன்றி வளர்ந்து சமூ
கத்தாக்கம் மிக்கதொன்ருக விளங்கி
வருகின்றது என்பதையும், இத்தீய அமைப்புக்கு எதிராகப் பல்வேறு கால கட்டங்க ளில் எவ்வாறு போராட்டங்கள் முன்னெடுக்கப் பட் டன என்பதனையும் வரலாற்று அடிப் படையிலும் வர் க் க நோக்கிலும் ஆய்வு செய்யும் நூலாக வெளிவந் துள்ளது.
O புதிய பூமி வெளியீடு
* சாதியமும் .ب அதற்கெதிரான
போராட்டங்களும்.'
O வெகுஜனன் سمبر
O இராவணு
விலை: ரூபா. 25-00
கிடைக்குமிடம்
வசந்தம் புத்தக நிலையம்
405, ஸ்ரான்லி வீதி, யாழ்ப்பாணம்.
மற்றும் பிரதான புத்தக நிலையங்களிலும் பெற்றுக் கொள்ளலாம்.
 
 

நியூ ரஞ்சித் கபே
தேனீர்,
ருெட்டி,
கொத்து ருெட்டி, மற்றும் பலவகை சிற்றுண்டிகள், மதிய போசனம் நியூ ரஞ்சித் கபே 206, ஸ்ரான்லி வீதி,
யாழ்ப்பாணம்,
சிறீ அம்பாள் ஸ்ரோர்ஸ்
F56) 666. T60 . . . . U6) சரக்குச் சாமான்கள் பிஸ்கட், பால்மா வகைகள்,
மொத்தமாகவும் சில்லறையாகவும் பெற்றுக்கொள்ளலாம்.
சிறீ அம்பாள் ஸ்ரோர்ஸ்
திருநெல்வேலி சந்தி, திருநெல்வேலி.

Page 41
துர்க்கா ரெக் ஸ்ற் 164, நவீன சந்தை (உட்புறம்,) யாழ்ப்பாணம். (
Phone: 2 27 04 . புதிய டிசைன் சேலே வகைகள் (B)பிளவ்ஸ் துணிகள் சேட்டிங் சூட்டிங், . . . பஞ்சாபி சர்வாணி சூட் *९ சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரைக்கும் தேவையான றெடிமேட் உடைகளை தெரிவு செய்வதற்கு சிறந்த ஸ்தாபனம். DURKA TEXT
164, MODECL MARKET (INSIDE) J AFFN A.
செல்லையா சிவபாதலிங்கம் வைரக்கல் நகை வியாபாரம்
ஓடர் நகைகள் 22 og g6ão
குறித்த தவணையில் செய்துகொடுக்கப்படு செல்லையா சிவபாதலிங்கம்
வைரக்கல் நகை வியாபாரம்"
யாழ்ப்பாணம்.
தொலைபேசி : 23794
78
 

லிங்கநாதன் ஸ்ரோர்ஸ்
நிதான விலை! சிறந்த ரகம்!
அதி சிறந்த ரக கைத்தறிப் பிடவை உற்பத்தியாளரும், மொத்த - சில்லறை விற்பனையாளரும்! சிந்தெட்டிக் பிடவை வகைகள்
திருமண மற்றும் வைபவங்களுக்கேற்ற காஞ்சிபுரம் O மணிப்புரி நைலெக்ஸ் O வூலி M
சேலை வகைகளும் ! பட்டுவேட்டி, சேட்டிங், சூட்டிங் மற்றும்
፳$
ஏனைய பிடவைத் திணிசுகளையும் தெரிவுசெய்ய
ஜி. எஸ். லிங்கநாதன் அன் கோ.
79, கே. கே. எஸ். ருேட், யாழ்ப்பாணம் ,
சிவம் வெல்டேர்ஸ் சகலவிதமான
எலக்றிக் வெல்டிங்ஸ்
காஸ் வெல்டிங்ஸ்
வேலைகட்கு \ சிவம் வெல்டேர்ஸ்
370, மணிக்கட்டு வீதி, யாழ்ப்பாணம்,
7G

Page 42
நச ஸ் பாலர் வகுப்பு முதல் ரஞ ன பட்டதாரி வகுப்பு 17, 18, 18 A வரையிலான சகல
பாட நூல்களுக்கும். நவீன சந்தை, ஏனைய ஸ்ரேசனறி, u Typů L T53 Tio. சஞ்சிகைகளுக்கும். ஜவுளி உலகின் , ாலசிங்கம்! ی• நவீன முன்னேடிகள் புத்தகசாலை RANANAS | பஸ் நி'L
- யாழபபாணம. 7, 8, 8A, புத்தக களஞ்சியம் MODEL MARKET, தொழிற்சாலை. JAFFNA. (P.B.D.)
15/3, மின்சார நிலைய வீதி, : Phone: 24 0 15 யாழ்ப்பாணம். ; :
SIYANAS வினுயகா:
'TAILORS | G6îGalicio
Prop:
| M. U. M. THAHIR
Residence:
. 28, Azad Road,
Jafna.
176, Model Market
Jafna. நவநவீன டிசைன்களை
சியானுஸ்
ரெயிலேர்ஸ்
SF66) 66,586 (T5)
கடைச்சல் வேலைகட்கும்,
ܕ݁ܰܬ݂ ܐܼܲܕ݇
றிபோறிங் வேலேகட்கும்
நாடவேண்டிய இடம் 4 s
':
V gi வினுயகா ரேனிங்வேக்ஸ்
202, (30) ஸ்ரான்லி வீதி, !
யாழ்ப்பாணம், i.
 

-
With the Best compliments of
Dika Watch Works
404 - 1/1, HOSPITAL ROAD,
JAFFNA .
ஹோப் இன்ஸ்ரிரியூட்
ஆண்டு 1 முதல் ஆண்டு 11 வரை
சகல பாடங்களும்
பயிற்றப்பட்ட ஆசிரியர்களால் கற்பிக்கப்படுகிறது.
விஞ்ஞானம்: திரு. தியாகலிங்கம்
HOPE INSTITUTE
419, STANLEY ROAD, JAFFNA.

Page 43
8ம் பக்கத் தொடர்ச்சி கோப்பைக்குள் சொதியை ஊற்றியபடி நகைச்சுவையோடு கூறுகிருள் மனைவி.
- அவசரஅவசரமாக வாய்க்குள் எறிந்துவிட்டு கோப்பையைக் கழுவுகிறேன். எழுதுவதற்கான நம்பிக்கையும் உற்சாகமும் வந் ததுபோன்ற உணர்வுடன் ரையில் அமர்கிறேன்.
வெள்ளைத் தாள்களில் குமிழ் முனைப் பேணு வழுக்கிக் கொண்டு வளைந்து சுழன்று விரைகிறது. எழுதி முடிந்த ஒற்றைகள் ஓரி ரண்டை புரட்டி வைக்கிறேன். தூரத்கில் குரைத்த நாய்க ளின் குரைப்புக்கள் அருகருகே
க தி
சென்னை புக்ஸ் ஊடாக
புதிய வெளியீடு:
தேசிய கலை இலக்கியப் பேரவையின்
சண்டோர் பெட்டோஃவ்பியின் எத்தனைநாள் துயின்றிருப்பாய் என்னருமைத் தாய்நாடே!
மொழியாக்கம்:
வந்து பக்கம் நெருங்கி. அயல்
வீட்டு நாய்களெல்லாம் ஒன்று சேர்ந்து குரைக்கின்றன. அயல் வீட்டு விளக்குகள் எல்லாம் ஒர் வொன்முக அணைகின்றன.
அதிகாலையிலும் விளக்கு ப் போட அச்சமாக இரு க் கு ம் - விடிந்துவிட்டால் வீ ட் டு வேலை கள். சிறிதுநேரம் எழுதுவதை நிறுத்திவிட்டு சிலைபோல விறைத் து ப் போய் உட்கார்ந்திருக்கி றேன்.
எனது வீட்டு விளக்கும் அணைகிறது.
நாளையும் இக்கதை முடி
யுமா? 對
கே. கணேஷ்
பேரிடியாகக் கிடைத்திருக்கிறது.
சாதியம் முழு அளவில்
கலேப்பணி
தெரிவித்துக்கொள்கிறது
நடிகமணி அவர்கட்கு.
எமது பாரம்பரிய நாட்டுக்கூத்துக் கலையை அதன் மெருகு குன்ருது பேணி, புதிய தேவைகட்கு அமைவாக மாற்றி. அடுத்த சந்ததியிடம் செப்பனிடப்பட்ட கலையாகக் கைமாற்றிய நடிகமணி: வி. வி. வைரமுத்து அவர்களது மறைவுச் செய்தி கலை உலகிற்கும்
அரியாசனமாக அரிச்சந்திர வேடத்தில் "வீற்றிருக்க வேண்டியூர் நிர்ப்பந்தத்தை சாதியரக்கன் விதித்திருந்த
காரணமாக சலிக்காது மேடையேறியவர் வைர முத்து அவர்கள். இந்தப் பின்னணியிலேயே அவரது மூவாயிரத் துக்கும் மேற்பட்ட மேடையேற்றங்களைக் கணிக்க வேண்டும்;
கொடிய அடக்குமுறைகள், தாங்கமுடியாத ஏமாற்றுகள் மத்தியிலும் நெஞ்சுரத்துடன் முன்னேறிய மகத்தான கலைஞர் வி. வி. வைரமுத்து அவர்களுக்கு தாயகம் தனது அஞ்சலியிைதி
கோலோச்சியபோது, உரலே
காலகட்டத்திலும்

Ꭿ5 Ꭲ u 1 Ꭽ, D வர்ச்சிக்கு
நல்வாழ்த்துக்கள்
. . . அபிராமி
ப3:1 வி வீதி,
திருநெல்வேலி
சகலவிதமான கடைச்சல் வேலைகள், ஒட்டு வேலைகள்
மோட்டார் சைக்கிள், வாட்டர்பம் போறிங் அன்ட் ரிசீலிங் :ேன்றி வேஃகள் அ%னத்திற்கும்
. . டுங்கள்
Sharpe Turning and Welding Works
208, S t aril, ey Road,
„ AF'F N A

Page 44
)ெ இலங்கையில் செய்திப் பத்தி Registered as a News Paper
சாயி ரவல்ஸ்
இந்தியாவுக்கான யா, மேற்கு ஜேர்மன் - லண்ட
TGňu sur Ti". --FT
岛mā
241, FTTGðar r * | | Silfr பாழ்ப்
தலேமையகம் 33, 1-ம் மாடி
0ே2, விண்ட் ருேட்
HIMALAYAT
பாம்பலகை மற்று
' வெள்ளே சப்பு
x II, 2 × 2, x :
கமுகம் ச
தாத்தமாகவும் சில்றைபா:
y MińLD FT 5udu III
208, ஸ்ரான்வி விதி,
இச்சஞ்சிகை தேசிய கஃப் பானம், 15/1, மின்சார நிே அவர்களால், யாழ்ப்பாணம் f பாண அச்சகத்தில் அச்சிட்டு ே

ரிகையாகப் பதிவு செய்யப்பட்டது in Siti Lirik
அன ரூாஸ்
த்திரை ஒழுங்குகட்கும். -ன் பயண ஒழுங்குகட்கும்
பெற்றுககோள்ளவும்
ங்கள்
அன்ட் ரூர்ஸ் ர் (அங்கிலிகன் பில்டிங்)
IT GJITF
, நியூ ஜெமினி தொம் பிளெக்ஸ்
சென்னை É s') ) { if
IMBER WORKS
ம் கினிசப்பு, சீலிங்
பலகை வகைகளும்
ரீப்பை வகைகளும்
வாகைகளும்
ஈவும் பெற்றுக்கொள்ள பூ |டுங்கள்
மரக்கால *
யாழ்ப்பானம்.
இலக்கியப் பேரவைக்காக யாழ்ப் தய விதியிலுள்ள சு. தணிகாசலம் 17. ஸ்ரான்லி வீதியிலுள்ள யாழ்ப் 'வளியிடப்பட்டது,