கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: குமரன் 1983.01.15

Page 1
குமரன்
TTu uZZZuuSTKTT TT TT TuT lT ll tt TTS TT TT LLLT uTTTT LT T T T MTTLTTT
O
ج
O
கைலாசபதிக்கு அ5
குயில்களின் கூவல் ட செ. கி:ே
ஆய்வறிவின் தலே
= L୍ତ୍ତୀ ! பிராய்டு பற்றிய மீ - மாதவன்
பாரதி யார் ? - 3
- த. ச. இ
சொல்லும் வர்க்க
- விந்தன்
பொய்மையின் நி ட ரெ, .ே
அன்ரபோவ் நீடுவ - மாதவன்
இலக்கிய உலகில்
கேள்வி ? பதில்

மகனே அஞ்சலிப்போம் இரத்தினதுரை
ளாய்வு
ராசாமணி
ச்சார்பும்-2
|ழலில்
ாகநாதன்
ாழ்க

Page 2
மொங்கலும் விவசாயிகளு ம்
தை என்றதும் தைப்பொங்கல் திருநாளே எல்லோர் நினைவிலும் எழும். விவசாயிகளைப் பற்றியும் நாம் இந்த ஒரு நாளாவது எண்ணிப் untidiscoy b.
நாளிதழ்கள் சஞ்சிகைகள் பொங்கல் இதழ்களாக வெளிவரும். குமரன் சிறப்பிதழ் வெளியிடும் முயற்சி எதுவும் எடுக்கவில்லை. கார ணங்கள் பல. அவற்றை விரித்துக் கூறவேண்டியதில்லை.
விவசாயிகளைப் பற்றி இப்பொங்கல் நாளன்று எண்ணும்போது அண் மையில் நடைபெற்ற தேர்தல்களே நினைவில் வருகின்றன. சென்ற ஒரு மாதம் தேர்தல் மாதமாகவே கழிந்தது. இலங்கையில் பொதுசன வாக்கெடுப்பு, தென் இந்தியாவில் ஆந்திர, கர்நாடக மாநிலத் தேர் தல்களைக் கண்டோம். மூன்ருவது உலகநாடுகளிலே தேர்தல் முடிவு களைத் தீர்மானிப்பவர் விவசாயிகளே ஆவர். ஏனெனில் மூன்ருவது உலகநாடுகள் யாவும் விவசாய நாடுகளே, ஒரு சிலவற்றைத் தவிர. நகரங்களில் 20% மக்களே வாழ்கின்றனர். 80% மக்கள் கிராமப்புற விவசாயிகளே. ஆகவே தேர்தல் முடிவுகளைத் தீர்மானிப்பவர் இவர் களே ஆவர்.
விவசாயிகளென்ருல் யாவர் விவசாயப் பெருங்குடி மக்கள்என்று தேர்தல் மேடைகளில் பேசும் போது பெரும்பான்மையான கூலி, ஏழை விவசாயிகளை அபேட்சகர்கள் கருதுவதில்லை. பணக்கார, நடுத்தர விவ சாயிகளையே குறிப்பிடுகின்றனர். அரை நிலப்பிரபுத்துவ அமைப்பில் கூலி, ஏழை விவசாயிகள் வறுமையில் வாழ்பவர்களே. அவர்களுக்கும் வாக்குரிமை இருப்பதாக உயர்த்தி பணக்கார விவசாயிகளுடன் சமன் படுத்துவது 5, 6 வருடங்களுக்கு ஒரு நாள் மட்டுமே ஆகும். அதுவே தேர்தல் திருநாள். மாட்டுப் பொங்கலன்று மாடுகளுக்கும் குளிக்க வார்த்து, பொட்டிட்டு, பொங்கல் செய்வதில்லையா? அதுபோலவே தான.
r
இறுதியில் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிப்பவர் பணக்கார விவ சாயிகளாக இருப்பதைக் காணலாம்.
பணக்கார விவசாயிகள் என்ற வர்க்கம் நிலப்பிரபுத்துவத்தின் உடைவில் தோன்றிய புதிய வர்க்கமாகும். இவ்வர்க்கத்தவர் 1966 இன் பின்னர், உலக வங்கித்தலைவராகப் பதவி வகித்த மக்னமாரா ஏற்படுத் திய பசுமைப் புரட்சியை ஒட்டித் தோன்றியவராவர். விவசாயத்தில் நவீன முறைகளையும் விஞ்ஞானத்தையும் ஏற்றவர். மக்னமாரா உலக மெங்கும் கடனில் வழங்கிய டிரக்டர் , உரவகைகள், கிருமிநாசினிகள்,
நீரிறைக்கும் பம்செட், வங்கிக்கடன் ஆகியவற்றைப் பயன்படுத்தி முன்
னேறியவர்.

முதலாளித்துவ நாடுகளில் தேங்கியிருந்த யந்திரப் பண்டங் களை விற்பதற்கு மக்னமாரா கண்ட வழியே இக்கடன் தரும் யுக்தி யாகும். பணக்கார விவசாயிகள் என்ற இவ்வர்க்கம் நிலப்பிரபுவுக்கு அடி மையாகவிருந்த ஏழை விவசாயிகளே கூவி விவசாயிகளாக்கி நிலப்பிரபுத் துவத்தின் ஆதிக்கத்தை வீழ்த்தி, கிராமப்புறங்களின் அரசியல், சமூக அதிகாரத்தை நிலைநிறுத்தியவராவர். ஏழை கூலி விவசாயிகள், தேய்ந்துவரும் நடுத்தர விவசாயிகள் ஆகியோர் இன்று இவ்வர்க்கத்தி லேயே தங்கியுள்ளனர். இப்புதிய பிணைப்பு தேர்தல்களின்போது பணக் கார விவசாயிகளுக்கு அரசை மாற்றக் கூடிய அளவிற்கு அரசியலாதிக்கம் வழம்குகிறது. வறுமையில் வாடும் ஏழை கூலி விவசாயிகள் பணக்கார விவசாயிகளின் ஆதிக்கத்தில் கட்டுண்டு அவர்கள் வேண்டியவாறு சிறு V சலுகைகள் பெற்ருே, பெருமலோ தம் வாக்குகளை வழங்கி வருகின்ற னர். அரசை எதிர்த்து பணக்கார விவசாயிகள் போர் தொடுக்கும் போதும் இவ்வர்க்கத்தவரையே ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்களுக்குப் பயன்படுத்திக்கொள்கின்றனர். தமிழ் நாட்டில் பணக்கார விவசாயிக ளுக்குத் தலைமை தாம்கும் நாயுடுவின் போராட்டங்களின் போது இவ் வுண்மையை நேரில் தரிசிக்கலாம்"
தேர்தல் வேளைகளில் இவர்களும் பெரும்பாலும் ஏமாற்றப்பட்டு விடுகின்றனர். ஏனெனில் தேர்தலில் வெற்றிபெற்ருேர், விவசாயிகளு டன் இணைய முடியா நிலேயை ஆளும் வர்க்கமாகிய தரகு முதலாளிகள், யந்திர உற்பத்தியில் ஈடுபட்டிருப்போர் ஏற்படுத்தி விடுகின்றனர். அவர்களது கைப்பொம்மையாக தேர்தலில் வெற்றி பெற்ற கட்சியினர் மாறிவிடுகின்றனர். தமிழ்நாட்டில் நாயுடுவின் வெற்றியும் தோல்வி யும் இதற்கு நல்லதோர் எடுத்துக்காட்டு. கர்நாடகத்திலும் விவசாயப் போராட்டத்தில் நசுக்கப்பட்ட விவசாயிகள் மத்திய அரசிற்கு பாடம் புகட்டியுள்ளனர்.
ஆயினும் இவ்வெற்றியை நிரந்தரமாகக் காப்பாற்றுவதில்தான் பிரச்சனை உள்ளது. தேர்தலன்று பொங்கும் வெற்றி பின்னர் பறிபோய் விடுகிறது.
பொங்கலன்றுதான் கூலி, ஏழை விவசாயிகள் பொங்கி வயிருர உண்டு களிக்கின்றனர், அதன்பின்னர் அவர்கள் காண்பது துன்பப் பொங்கலே. சீன போன்று, விவசாயப் புரட்சி ஏற்படும்வரை இந் நிலேயே நீடிக்கும்.
(1)

Page 3
குட்டிக்கதை
- பேதம்
யோ. பெனடிக்ற் பாலன்
தாயம் என்னும் ஒரு நாடு. அங்கே தீன் மொழி பேசும் தீனரும், ஊன் மொழி பேசும் ஊனரும் பண்டு தொட்டு வாழ்ந்து வந்தனர். தீனர் பெரும்பான்மையினர் ஊனர் சிறுபான்மையினர். ஒருநாள், ஆண்டாண்டு காலமாக இரு இனத்தவரும் கூடி வாழ்ந்த தலநகரில் இனக்கலவரம் மூண்டது. - தினர்கள் ஊனர்களைத் தாக்கினர். ஊனர்களும் தீனர்களை எதிர்த்துத் தாக்கினர். தீனர் கூட்டமொன்று ஆயுதங்கள் ஏந்தி தலநகர் வீதிகளில் ஊனர்களைத் தேடி வெறிகொண்டலைந்தது. கடைத்தாழ்வாரமொன்றின்கீழ் ஒரு மனிதன் குந்தியிருந்தான். தீனர் கூட்டம் அவனே நோக்கிப் பாய்ந்து ஓடியது. ““Darir GoLuu Gor6örcsv? . எல்லோரும் ஆவேசம் கொண்டு கத்தினர். அவன் பதில் கூறவில்லை. *நீ தீனணு ஊனளு?" அவன் வாய் திறக்கவில்லை. ‘இவன் வாய் திறக்கிருனில்லை இவன் நிச்சயமாக ஊனன்தான்" ஒருவன் கூற அவனை எல்லோரும் அடித்தனர். அவன் முகம் குப்புற விழுந்தான். தீனர் கூட்டம் விலகிப்போனது. சிறிது நேரத்தில் அவன் மயக்கம் தெளிந்து எழுந்திருந்தான். கண்கள் வானத்தை நோக்கி இருந்தன. இன்ளுெரு கூட்டம் அவனை நோக்கி ஓடி வந்தது. அது உானர் கூட்டம். 'உன் பெயரென்ன?” அவன் தலே குனித்திருந்தான். 'நீ ஊனஞ தீனன? அவன் மெளனமாய் அவர்களை ஏறிட்டுப் பார்த்தான். f
‘இவன் பதில் கூற மறுக்கிருன். இவன் தீனனே, சந்தேகமில்கூர்
(2)

ஒருவன் சொன்னன். எல்லோரும் அவனை நையப்புடைத்து விட்டு ஓடினர். அவன் கூணிக் குறுகித் தரையில் வீழ்த்தான். நீண்ட நேரத்தின் பின் அவன் மயக்கம் தெளிந்தான். இரு கூட்டத்தினரும் தாக்கிய காயங்களிமிருந்து இரத்தம் கசிந்தபடி அவன் கண்களில் கண்ணிர்.
அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. அவன் ஊனன் ஒருவனுக்கும் ஊனச்சி ஒருத்திக்கும் பிறந்த ஒரு பிறவி ஊமை. O
கலை அறிவும் மார்க்சியமும்
கலைபற்றிய யதார்த்த அறிவை அடைவதற்கு, கலைப் படைப்பின் ஆழத்தை அளப்பதற்கு, கலை ஏற்படுத்தும் ‘அழகியல் தாக்கத்தின்" அமைப்பு முறைகளை அறிவதற்கு, அதிக காலம் செலவிட்டு மார்க்சிய அடிப்படைக் கோட்பாடுகளைக் கற்பதில் நாம் மிகக் கூடிய கவனம் செலுத்த வேண்டும். அவசரப்பட்டு வேறு விஷயங்களுக்குச் சென்று விடப் படாது. அவ்வாறு திசைமாறிச் செல்லின் ராம் கல் அறிவை (விஞ்ஞான பூர்வமாக) அடைய மாட்டேம். கலையின் கருத்துருவத்தையே (கருத்து முதல்வாதமாக) அடைவோம். لار
-அல்துாசர்
அருளும் அன்பும் ஆருயிர் ஒம்பலும் வள்ளுவர் தனது வர்க்கத்த வராகிய வணிகருக்குக் கூறியவை. நேர்மையாகப் பொருள் கொடுத்து நீதியாகப் பணம் பெறுமாறு வள்ளுவர் இடித்து இடித்துக் கூறிஞர். ஆஞல் வாய்ச் சொல்லால் வர்க்க இயல்புகள் மாறிவிடுமாயின் வரலாறே வேழுயிருக்குமே! வள்ளுவர் பலவாறு கூறி எச்சரிக்கை செய்திருக்கவும் வணிக வர்க்கம் தனது ஈவிரக்கமற்ற சுரண்டலைத் தொடர்ந்து நடத்தி யதை சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய காப்பியங்களும் பிற நூல் களும் எமக்கு ஒரளவு காட்டுகின்றன. அச்சுரண்டலையும் அதன் விளை வாகச் சமுதாயத்தில் பரவலாகக் காணப்பட்ட துன்ப துயரங்களையும் எதிர்த்து மூண்டெழுந்ததே 'பக்தி இயக்கம்" எனப்படும் வர்க்கப் போராட்டம் , தமது முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைத்த பெருநிலக்கிழாரும், பிரபுக்களும் சைவம் என்ற பெயரில் 'ஆவுரித்துத் தின்றுழலும் புயை' ரையும் உடன் காட்டி - அணிதிரட்டி, எதிர் வர்க் கத்தினரின் “தலையை அறுக்கும் அறத்தொழிலச்செய்ய முற்பட்டனா .
க. கைலாசபதி
(9)

Page 4
க்ல்லறை வாசகம்
யோ. பெ.
நான் கல்லறைக்குள் கிடக் இறேன் குற்றுயிரும் குறை உயிரும் அங்கிருந்தே பேசுகிறேன். என் குரல்வளை கண்டிப் போச்சு என் குரலில் ஒலி போச்சு என் மக்களே என் மையப் பெட்டியில் புள்ளபு பிட்டுக் காட்டிக் கொடுத்தனர் என் விரோதிகள்
ஆங்கே ஆணிகள் இறுக்கினர் மேளந்தட்டி பந்தங்கள் ஏந்தி என்னை இங்கே தூக்கிவந்தனர் துரோகிகள் கைகாட்ட என் மக்களே செய்தனர் என் மக்கள் அறியாது செய்த չ56մմ)! என் விரோதிகள் அறிந்து செய்த துரோகம் என் பெயர் சொல்ல எனக்குச் சுதந்திரமில்லை மனித சுதந்திரங்களும் மனித உரிமைகளும் என் உள்ளடக்கம்
நானே இக்கல்லறையில் அடக்கம் என் மக்கள் மயக்கத்தில் தூங்குகிருர் அவர்கள் விழிக்கையில் நான்
முழு உயிரும்
உண்மை உயிரும்
பெற்ெறழுவேன்
( 4 )
சுமை சுமப்பவர்களே
யோ. பெ.
இதுவரை காலமும் வாழ்விலே சுமை சுமந்த மக்கள் இப்போது
வாழ்வையே சுமக்கிருர்
கழுத்து தெரிந்தும் மூச்சுத் திணறியும் சுமந்தே செல்கிருர் சுமந்து சுவிந்து சுண்கெட்டுப் போனதால் தாம்த்ெ தாங்கிப் பழகிப் போனதால் பொறுமையோடு சுமக்கிருர் சுமத்தியவர்களை மறந்து சுமையை நொந்து நடக்கிருர் செல்லும் வழியில்
ஒளி எதையும் காணுேம் ஒளி அனைத்தவர்களே மறந்து இருளே நொந்து தடக்கிருர் இந்த ஈன வாழ்வை விதித்தவர்களை மறந்து விதியை நொந்து நடக்கிறர் சுமை சுமத்தியவன்களையும் ஒளி அக்னத்தவர்களையும் விதி விதித்தவர்களையும் இரட்சகராய் நம்பி அவர்கள் பின்னுல் நடக்கிமூர் இப்பயனம் ெதாடரும் இரட்சகரை
இனங்காணும் வரை
இப்பயணம் தொடரும்

கேள்வி ? பதில் !
- سه - سه حسسه sus) جاس-جی-جب حواب-- جنس ج هن- جمس - جیح - جیس-جی است.
கே.
கே
(g:
கே:
யாழ். சிற்றேடுகள் அங்கு நடைபெறும் சம்பவங்களைப் பற்றி மெளனம் சாதிப்பது பற்றி என்ன கூறுவீர் ?
- உ. முகிதின், மட்டக்களப்பு. . பாரதியின் பாஷையில்தான் அவர்களைப்பற்றிக் கூறமுடியும். நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி வஞ்சனை சொல் வாரடி கிளியே இவர் வாய்ச்சொல்லில் வீரரடி
அபிப்பிராய வாக்கெடுப்பின் வெற்றி பற்றிய உமது கருத்தென்ன ?
- இ. சிவநாதன், திருமலை.
பெரிய பிரச்சாரம், நடைமுறைகள் நடாத்தி சிறுமையான வெற்றி
பெற்றனர் என இந்திய ஆங்கில நாளிதழ் ஒன்று தலையங்கம் எழுதியது தவறல்ல என்றே கூறத்தோன்றுகிறது. அவசரகால நிலை, எதிர்க்கட்சித்தகர்ப்பு, குறைந்தளவு வாக்குப்பதிவு ஆகியன
யாவும் அரசுக்கு வாய்ப்பாகவே இருந்தன.
பாரதி பற்றிய குமரன் கருத்து பரவலான மற்றையோர் கருத்துக்கு முரண்பாடாக உள்ளதே, ஏன்? - மு. சின்னராசா, யாழ்.
குமரன் கருத்து பாட்டாளிகளின் கண்ணுேட்டம் கொண்டது. வரலாற்றுப் பொருள்முதல்வாதம் என்ற விஞ்ஞான கோட்பாட் டைக் கொண்டது. மற்றவர் கருத்து யாவும் குட்டி பூர்ஷ்வாக் களின் பார்வை கொண்டவை; கருத்துருவவாத அடிப்படை யானவை. பூர்ஷ்வா, குட்டி பூர்ஷ்வாக்களது கருத்தும் பாட்டாளி களது கருத்தும் முரண்படுவதில் வியப்பு எதுவுமில்லை.
ஆந்திரா, கர்நாடகத் தேர்தல் முடிவுகள் மொழிவாரி மாநிலங்களின் தனித்துவ, பிரிவினை வளர்ச்சியையும் இந்தி மொழியின் திணிப்பை யுமே காட்டுகிறது என்கிறேன். - க. தணிகாசலம்,. யூாழ்.
மொழித்திணிப்பு மட்டுமே காரணம் என்று கூறமுடியாது. முத
லாளித்துவ மாநில சுயாட்சி இந்தியாவில் நிலவுகிறது. மத்திய அரசு மாநில மக்களின் பொருளாதார, சமூக, அரசியல் நிலைமை களை நன்கு புரிந்து மதிக்காது அலட்சியப் போக்கைக் கடைப் பிடித்து வந்ததும் ஒரு முக்கிய காரணமாகும். இந்திய தேர்தல் முடிவுகளைத் தீர்மானிப்பவர்கள் பணக்கார விவசாயிகளே. கர்நாட
(5)

Page 5
கத்தில் நடைபெற்ற இவர்களது ஆர்ப்பாட்டங்கள் நசுக்கப்பட்ட தன் காரணமும் அங்கு தோல்வி ஏற்பட்டதற்கு ஓர் முக்கிய காரணமாகும். கே.அண்மைய இந்திய தேர்தல் முடிவுகள் அறிவிக்கும் பிரதேசக் கட்சி களின் வளர்ச்சியைப் போன்று புரட்சிகர கட்சிகளும் பிரதேச ரீதியாக வளரும் சாத்தியம் உண்டா?
- த. ம. சந்தானம், கண்டி. ப* புரட்சிகர இயக்கங்கள் ஆந்திராவில் வலுப்பெற்றிருப்பதுபோல கர் நாடகத்தில் இல்லை. விவசாயிகளிடம் மட்டுமல்ல, தொழிற் சாலைகள் மிக்க பங்களூரில் உள்ள தொழிலாளரிடை ஆந்திரா போன்று புரட்சிகர உணர்வு இல்லாததும் வியப்பே. தமிழ்நாட் டில் மட்டும் பிரதேச ரீதியாக கட்சி அமையவேண்டும் என்முேர் கருத்தும் நிலவுகிறது, தமிழ்மொழியின் அடிப்படையில் கட்சி இயங்கவேண்டும் என்ற கருத்தை ஏ. என். நாகராசன், குளு ஆகியோர் முன்வைக்கின்றனர். ஈழத்திலும் இத்தகைய கருத் தொன்று இளைஞரிடை நிலவுகிறது. இங்குள்ள நிலைமைகளே தமிழ்நாட்டிலும் சிலரிடை தாக்கம் ஏற்படுத்தியிருப்பதாகச் சிலர் கூறுகின்றனர். இப்போக்கு மார்க்சிய - லெனினிசக் கோட்பாடு களுக்கு முரணுனதே. லெனின் "இத்தகைய போக்கு சர்வ தேசியத்திற்கு முரணுனது. இது தேசிய குட்டி பூர்ஷ்வாக்களின் கருத்துமுதல்வாதம்" என்று கண்டித்துள்ளார். “உலகத் தொழி லாளர்களே ஒன்றுபடுங்கள்" என்ற மார்க்ஸ் - ஏங்கெல்சின் கம் யூனிஸ்டு அறிக்கையின் குரலுக்கும் முரண்படுகிறது என்பதில் சந்தேகமேயில்லை.
மரணம் ஒரு துன்ப நிகழ்ச்சி
"கொடிது கொடிது இளமையில் வறுமை; அதனிலும் கொடிது ஆற் ருெணுக் கொடு நோய் என்று ஒளவையார் பாடியதாகச் செய்யுள் ஒன் றுண்டு. 'அதனிலும் கொடிது இளமையில் இறத்தல்" என்றே திருத்திக் கூற வேண்டும். புறநாநூற்றுப் புலவன், சாதலும் புதுவது அன்று' என்று இறப்பை இயற்கை நிகழ்வாகப் பாடினன். உண்மைதான் வள் ளுவனே, "நெடுதல் உளன் ஒருவன் இன்றில்லை என்னும் பெருமை உடை த்து இவ்வுலகு" என்று இறப்பை நாடகத் தன்மையுடன் எடுத்து விளக் கிஞன். உண்மையே.
எனினும் இளமையின் தலைவாசலில் நிற்கும் ஓர் சிருஷ்டிகர்த்தா
ஆற்றல் மிக்க எழுத்தாளன்-திடீரென் இல்லாமற் போவதை மரணம் என்ற சொல்லால் குறிக்க இயலாமலுள்ளது. மரணம் என்பதிலும், துன்ப நிகழ்ச்சி என்பதே பொருந்தும்-(1972) வெள்ளி’ இதழில் க. கைலாசபதி அவர்கள் எழுத்தாளர் செ. கதிராமநாதனின்’ திடீர் மர ணத்தின்போது எழுதியது.
( 6 )

பிரஸ்னேவ் மறைந்துவிட்டார் அன்ரபோவ் நீடுவாழ்க! - 2 ‘
-மாதவன்
த்ெதாந்த முரண்பாடு
குருசேவ் ஒரு மார்க்சிய சித்தாந்த வாதியல்ல. ஆயினும் கட்சி யில் நீண்டகாலம் உழைத்தவர். இரண்டாவதுஉலக யுத்தத்தால் ரஷ் யாவில் ஏற்பட்ட தாக்கம் - உயிரிழப்பு, போரை ஒட்டிய ரஷ்ய யுத்தக் கைதிகள், யுத்தத்தால் ஏற்பட்ட அழிவைச் சீர்செய்ய எடுக்கப்பட்ட கட்டுப்பாடான நடவடிக்கைகள் ஆகியன கட்சியிலும் கருத்து வேறு பாடுகளை ஏற்படுத்தின. இச்சூழ்நிலைகள் ஸ்டாலின் இறந்ததும் விரக்தி யடைந்த புதிய தலைமையை முன் தள்ளின.
ஸ்டாலின் மிகவும் இக்கட்டான காலகட்டத்தில் கட்சித் தலைவ ராக இருந்தவர். ஒரு மார்க்சிய சித்தாந்தவாதி. மார்க்சிய நடை முறை, சித்தாந்தத்திற்கு அவரது பங்களிப்பு புறக்கணிக்க முடியாதது. சீனப்புரட்சிக் காலத்தில் மாஓ ஸ்டாலினுடன் முரண்பட்டிருந்தார். பாட்டாளியால் மட்டுமே புரட்சி நடாத்த முடியும் என்ற மார்க்சிய கோட்பாட்டில் ஸ்டாலின் நம்பிக்கை கொண்டவர். ஆகவே விவசாயி கள் புரட்சி நிடாத்துவது என்பது மார்க்சிய கொள்கைக்கு முரணு னது. ஆனல் மாஒ தமது படை கிராமப்புறப் பாட்டாளிகளைக் கொண் டது; தகர்ப்புறப் பாட்டாளிகளின் சித்தாந்தத்தை முன் வைத்துப் புரட்சியை முன் எடுத்துச் செல்கிறது என்ருர், புரட்சியை நடைமுறை யில் செயலாற்றிக் காட்டினர். தமது புரட்சி புதிய ஜனநாயகப் புரட்சி, இனிமேல் தான் சோஷலிசப் புரட்சி ஆரம்பமாகிறது என 1949ல் மக்கள் சீனம் முழுமையாக உதயமானபோது கூறினர்.
முன் கருத்து முரண்பாடு இருந்தபோதும் 1949 இன் பின்னர் ஸ்டா லினை மாலு மதித்தார். ஸ்டாலினும் மாஒவின் புரட்சியை வரவேற்றர்.
தனிநபர் வழிபாடு
பிப்.1956-ல் குருசேவ் தனிநபர் வழிபாட்டைத் தாக்குவதாகக் கூறி, ஸ்டாலின வரலாற்று ரீதியாக மதிப்பிடுவதைவிட்டு, ஒரேயடியாகத் தூக்கி எறிய முற்பட்டது, முதலாளித்துவ நாடுகளை மட்டுமல்ல சோஷ லிச நாடுகளையும் உலக மார்க்சிய சார்பானவர்களையும் திகைக்க வைத்தது. குருசேவ் தன் சித்தாந்த வறுமையையும் தீவிரவாத அர
( 7 )

Page 6
சியல் சார்பையுமே இந்நிகழ்ச்சி மூலம் காட்டிக் கொண்டார். (பின் னர் கியூபாவில் ஏவுகணை நிலையங்களை ஏற்படுத்த நடவடிக்கை எடு த்து, கெனடியின் பயமுறுத்தலுக்கு அஞ்சி வாபஸ் பெற்றதும் ஒரு தீவிரவாத நடவடிக்கையே.)
குருசேவ் தன் சித்தாந்த வறுமையைக் காட்டிய மற்றெரு எடுத் துக் காட்டு ரஷ்யா சோஷலிசப் புரட்சியை முடித்து கம்யூனிச சமுதா யத்திற்கு அடியெடுத்து வைத்துள்ளது என்ற பிரகடனமாகும்.
ஸ்டாலினை குருசேவ் முற்ருக நிராகரிக்கத் தொடங்கியது, தனி நபர் வழிபாட்டை கண்டித்ததைப் பார்த்து மாஓ குறிப்பு எதுவும் கூருது மெளனமாக இருந்தார். தானும் 'தனிநபர் வழிபாடு” என்ற கண்டனத்திற்கு ஆளாக நேரிடுமோ என அவரும் அஞ்சினர். 1956 மார்ச்சில் நடைபெற்ற சீன கம்யூனிஸ்டு கட்சியின் காங்கிரசில் *ஆயிரம் மலர்கள் மலரட்டும், ஆயிரம் கருத்துக்கள் மோதட்டும்" என்ற புதிய கருத்தை மாஓ வெளியிட்டார். இத்தகைய கொள்கை இறக்கம் சீன அரசியலில் பின்னர் கடைப்பிடிக்கவில்லை என ஒரு சாராரும், ஒர ளவு கடைப்பிடிக்கப்பட்டதில் பயன் எதுவும் ஏற்படவில்லை, தீங்கே ஏற்புட்டது என மறு சாராரும் கூறுவர்.
குருசேவின் சுய உருவம்
எப்படியிருப்பினும் குருசேவ் தன் சுய உருவத்தை 1956 அக்டோ பரிலேயே காட்டிவிட்டார். அதுவே கங்கேரிப் புரட்சியை அடக்கி, ஒடுக்க ரஷ்ய டாங்கிகள் புடபெஸ்டிற்கு அனுப்பப்பட்டதாகும். இந் நிகழ்ச்சியே மாஒவையும் சிந்திக்க வைத்தது. சித்தாந்த ரீதியில் குரு சேவைப் பார்க்கவும் துணை செய்தது.
பகைமை முரண்பாடு ஏற்படும் வேளையிலேயே ஆயுதப் போராட் டம் நடைபெற முடியும். ரஷ்யா, கங்கேரி ஆகிய இரண்டும் சோஷ விச நாடுகளாயின் எப்படி ஒரு நாட்டுப் படைகள் மற்றநாட்டுக்குள் நுழைய முடியும்? ஒரு சோஷலிச நாட்டுத் தொழிலாளர்கள் மற் றேர் சோஷலிச நாட்டுத் தொழிலாளரைக் கொல்ல முடியும்? சோஷ லிச நாடுகளிடை பகைமையற்ற முரண்பாடுகளே ஏற்பட முடியும், அவை ஆயுதபலத்தால் அல்ல, பேச்சுவார்த்தைகள் மூலமே தீர்க்கப்பட வேண்டும்.
மாஓ குருசேவின் தத்துவ வறுமையையும் திரிபுவாதப் போக்கையும் நன்கு மதிப்பிட்டார். ஆயினும் சித்தாந்த முரண்பாடுகள் 1952 வரை யிலேயே முழு உருவம் பெற்று வெடித்தன. ரஷ்யாவைப் பகைப்பதால் ஏற்படக் கூடிய பொருளாதாரத் தாக்கத்தை மாஒ நன்கு அறிந்திருந்
( 8 )

தார். ஆயினும் அவர் பொருளாதார வளர்ச்சிக்கு முன்னேடியாகப் புரட்சிகர சித்தாந்தம் வழிகாட்ட வேண்டும் என்பதில் அசையா நம் பிக்கை கொண்டிருந்தார். சீன கலாசாரப் புரட்சியும் மாஒவின் அசை யாத புரட்சிகர அரசியல் கோட்பாட்டிற்கு மற்ருேர் சிறந்த எடுத் துக் காட்டாகும். W
கங்கேரித் தொழிலாளர்களின் தேசிய எழுச்சியும் புரட்சியும் ரஷ் யப் படைகளினல் நசுக்கப்பட்டது. ரஷ்ய டாங்கிப்படைகள் புடபெஸ்ட் தலைநகரை துவம்சம் செய்தன. பல்லாயிரம் கங்கேரியர் கொல்லப் பட்டனர். இந்த அடக்குமுறைக்கும் ரஷ்ய ஆதிக்க வெற்றிக் கும் துணையாக நின்று தலைமைதாங்கி நடத்தியவர் வேறு யாருமல்ல. அவ்வேளை கங்கேரியில் ரஷ்ய பிரதிநிதியாக இருந்து, இவ் வெற்றியினுல் புகழ்பெற்று, ரஷ்ய கம்யூனிஸ்டு கட்சியின் மத்திய குழு வில் இடம் பெற்று, ரஷ்ய கேஜிபி உளவறியும் நிலையத்தின் தலைவராக வும் வளர்ந்தவர். இன்றைய புதிய ரஷ்யத் தலைவராகவும் பதவி ஏற் றுள்ள அந்திரபோவேயாகும்.
«« oO CO DEr リ Ö888 • 0000 w8
இலக்கிய உலகில்.
பேச்சாளர், எழுத்தாளர், நாடகாசிரியரான தேவன் சென்ற மாதம் காலமானர். இளம் வயதிலிருந்தே பலதுறைகளில் வல்லவராக இவர் விளங்கினர். இப்சனின்' 'பொம்மை வீடு" நாடகத்தை முதலில் மொழி பெயர்த்து நாடகமாக்கியவா இவரே விஞ்ஞானம், இலக்கியத்துறை களில் பல நூல்களை இலங்கையிலேயே வெளியிட்டார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் யாழ் பல்கலைக்கழகப் பொருளா. தார விரிவுரையாளர் மு. நித்தியானந்தனும் அவரது மனைவியார் நிர் மலா நித்தியானந்தனும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இருவரும் கலை இலக்கிய உலகிற்கு நன்கு அறிமுகமானவ கள். நித்தி நல்ல கலை,இலக் சிய விமர்சகர், விஞ்ஞான பூர்வ அணுமுறையில் பரிட்சயமானவர் தின கரனில் உதவியாசிரியராக இருந்தவர், நிர்மலா சர்வதேச கலை, இலக் கியத்துறையை நன்கு கற்றவா. நாடகத்துறையில் நல்ல அனுபவமுள் ளவர். வேற்றுமொழி நாடகங்களைத் தமிழில் பெயர்ப்பதில் புதிய முறை யைக் கையாண்டவர். பாலேந்திராவும் நிர்மலாவும் ஈழத்து நாடக வளர்ச்சிக்கு சில வருடங்களில் ஆற்றிய பங்களிப்பு மிகப் பெரியது.
ძზ ძ% ஃ 1977 - 80 ஆகிய நான்கு ஆண்டுகளுக்குமுரிய சாகித்திய மண்டலப் பரிசுகள் - மொத்தமாக 33 பரிசுகள் - அணமையில் அறிவிக்கப்பட்டன. இவற்றைப் பகிஷ்கரிக்க வேண்டும் என பல இயக்கங்கள் அண்மை யில் யாழ்நகரில் கூடித் தீர்மானித்துள்ளன. இப்பரிசுகளில் மு. நித்தி யானந்தன் வெளியிட்ட இரு நூல்களும் இடம்பெற்றுள்ளன. இவர் பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் தடுத்து வைத்திருப்பதும் பகிஷ்
கரிப்பதற்கு ஒரு காரணமாகக் கூறப்பட்டுள்ளது. \
(9)

Page 7
கைலாசபதிக்கு அஞ்சலிகள்
பாதிவழியினி லுன் பயணம் முடிந்ததடா
மீதிப் பயணமதை முன்னெடுக்க யாருண்டு.
கணத்தையில் நீயோர் கற்பூ ரமானயோ.
புதுவை இரத்தினதுரை.
உட்பொருளும் உணர்ந்து காணும் சமநீதி நடுநிலைமைச் சார்புள்ள தமிழறிஞர் சாந்தி கண்டார். - முருகையன்
தோழா உன் திருப்பணிகள் சர்வமும் மங்களமாய் வாழ ஒருத்தி தன்னுடைய வாழ்வுகளை கற்பூரம் போல கருகியதை மறந்தென்ன? உந்தனது சாதனையின் உரமான உத்தமியின் கண்ணீரைக் சுண்டும் கல்லோ இயமன் என்பான் அக்கா உன் கண்ணன் ஆயிரமாய் ஈழத்து போராடும் கலைஞர்களின் சிந்தனையாய் உயிர் பெறுவான் மறைந்தாலும் வாழும் திரு அறிந்த சித்தனவன் போய் வருக தோழா இந்த நூற்றண்டின் திருமகனுய் வாழ்ந்திடுக தோழா வளம் மிக்க கலைஞரிடை.
p. F. Gogu Lu Tavar.
சமுதாயத்தின் புற்றுநோய்களேச் சாகடித்த இலக்கியங்களைச் சந்தித்த நீ இரத்தப் புற்று நோயையும் சந்திப் பாயெனத் தெரியாததால் நாம் ஒரு சரித்திரத்தையே சந்திக்க மறுக்கப் பட்டிருக்கிருேம். -இந்துமன்றம் யாழ். ப.க.
கண்ணுடி முகத்தினிலே-நீ பண்ணுத குறும்பு இல்லை இன்று கண்ணுடிச் சட்டத்துள் அடக்கமாகிப் போனயோ.
auswas uomsoorauft.
கேள்வியும் கேட்டிடுவாய் - பதில் சொல்முன்னே தாம் நினைக்கும் பதிலும் நீ சொல்லிடுவாய். -தமிழ் மன்றம்.
மனங் கலங்க பெரும்மலை ஒன்று சரிந்தது நிழல் விருட்சம் வேரறந்து வீதியில் விழுந்தது.
மறுமலர்ச்சிக் கழகம் யா. ப. க.
( 10 )

ஆராச்சியில் நடுநில தவருச் செங்கோலை சிரிப்புடன் பணிசெய்யும் வதனத்தை, எல்லோரையும் நண்பராய் மதிக்கும் உயர்ந்த மனப் போக்கை, அன்பின் ஆட்சியை நாம் கண்டு கிளிகூர்வது இனி எக்காலம் - கத்தோலிக்க மாணவர் ஒன்றியம்
இலக்கிய விமர்சனத்தின் இலட்சியக் குரல் ஒய்ந்து விட்டது. அறிஞர் உலகத்தின் ஒளிவிளக்கு - அந்தோ அணைந்து விட்டது.
தமிழ் சிறப்பு மாணவர்
பொன் விழாக்காண சில மாதங்களிருக்கும் போது பேராசிரியர் அமரராகிவிட்டார் பாரதி நூற்ருண்டு எம்மால் மறக்கப்பட முடியாதி ஒரு ஆண்டாகிவிட்டது - எஸ். திருச்செல்வம் இலக்கியத்தை சமூகவியல் பார்வையில் அணுகியதன் மூலம் கலை இலக்கியத்தின் தற்கால நலஞய்வின் முதல்வராகவும் முன்னேடி யாகவும் விளங்கிஞர். - கே. எஸ். சிவகுமாரன் தமிழ் ஆராய்ச்சி உலகிற்கு இந்நூற்றண்டில் ஏற்பட்ட பேரிழப்பு கலாநிதி கா. சிவத்தம்பி தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிக்கு அவர் செய்துள்ள பங்களிப்பு வியக்கத் தக்கது - சி. தில்லைநாதன்
20ம் நூற்ருண்டின் தலை சிறந்த இலக்கிய ஆய்வாளராக, விமர் சகராக, சிந்தனையாளராக முற்போக்கு தமிழ் இலக்கியத்தின் முன் னேடி ஆசான்களில் ஒருவர். - இளங்கீரன்
பாழ். பல்கலைக்கழகத்திற்கும் பொதுவாக தமிழ்பேசும் நல்லுலகத் திற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழம்பு - உபவேந்தர் வித்தியானந்தன்
தமிழ் இலக்கிய விமர்சனத்திலும் இலக்கியப்புலமையிலும் பலதுறை அணுகுமுறைகளையும் ஒப்பியல் நோக்கையும் அறிமுகப்படுத்தியவர். அவரது இலக்கிய எதிரிகளும் தம்மைப்பற்றிய அவரது மதிப்பீட்டை அறிவதில் அதிக ஆர்வம் காட்டினர். - எம். ஏ. நுஃமான்
முற்போக்கு எழுத்தாளர் அணிக்குமட்டுமல்ல சர்வதேசிய கலை இலக்கிய உலகிற்கும் மாபெரும் இழப்பாகும்.
-நீர்வை பொன்னையன் ஈழத்து இலக்கியத்தின் ஒரு சகாப்தம் முடிந்து விட்டது.
- பிரேம்ஜி பழந்தமிழ் இலக்கியத்தையும் நவீன இலக்கியத்தையும் இணைத்து அவற்றிற்கூடாக முற்போக்குச் சிந்தனைகளை வெளிப்படுத்தியவர்.
என். கே. ரகுநாதன்
( 11 )

Page 8
தமிழ் கூறும் நல்லுலகின் பெரும் அறிவுச் சுடர் ஒன்று திடீரென அணைந்து விட்டமை பெரும் துரதிர்ஷ்டமாகும். --செ. நடராசா விசாலமான உள்ளம் படைத்தவர். தவறை மன்னிக்கும் பெருந் தன்மை கொண்டவர். எளிமையான வாழ்க்கை வாழ்ந்து மாணவர் களினதும் எழுத்தாளர்களினதும் உள்ளத்தைக் கவர்ந்தவர். சுருங்கக் கூறின் இந்நூற்றண்டு கண்ட தமிழ் அறிஞர்களில் முன்னணியில் இடம் பெற்று நிற்பவர். - ஆர். சிவகுருநாதன் எதையும் பரந்த பின்னணியில் அதன் சகல பரிமாணங்களோடும் பார்க்கும் ஆய்வு முறையை எமக்குக் கற்றுத்தந்தவர்.
- சி. மெளனகுரு நேற்றுவரை நின்ற மலை நீடு யர்ந்த கைலை மலை சேற்றுக்குள் புதைந்தது போல் சினையறுந்து போயினையோ,
- வலம்புரி. கவிதா வட்டம். அவர் சிறந்த சிந்தனையாளர்; தலைசிறந்த விமர்சகர்; எங்களை யெல்லாம் அரவணைத்து வளர்த்த பெருமனிதர். கைலாசபதி என்ற பரிமாணம் இன்னெருமுறை சாத்தியமாக அனேக காலம் எடுக்கும். செ. யோகநாதன் - گرم 圈 எனக்கு முன்னரே பூர்ஷ்வா வரலாற்ருசிரியர்கள் வர்க்க போராட்ட வரலாற்று வளர்ச்சியைப் பற்றி விபரித்துள்ளனர். பூர்ஷ்வா பொரு ளாதார நிபுணர்கள் வர்க்க பொருளாதாரத்தைப் பற்றி கூறியுள்ள னர். புதிதாக நான் கூறுவது யாதெனில் 1) உற்பத்தி அபிவிருத்தி என்ற வரலாற்று பிரிவுகளிலேயே வர்க்கங்கள் தோன்றியுள்ளன. 2) பாட்டர்ளியின் சர்வாதிகாரத்தை ஏற்படுத்துவதற்கு வர்க்கப் போராட்டம் அவசியம் 3) இச்சர்வாதிகாரம் எல்லா வர்க்கங்க களையும் ஒழித்து வர்க்கமற்ற சமுதாயத்தை ஏற்படுத்தும் என்பவை யாகும். -மார்க்ஸ்
பிறப்பால் பெறும் பேதத்தை பேச்சளவில் மறுத்த பொய்யா மொழியார் செய்தொழில் ; வேற்றுமையை அடிப்படையாக ஏற்றுக் கொண்டு, மனிதரிடையே ஏற்றத்தாழ்வை அமைத்து அமைதி கண் டார். வள்ளுவர் புத்துலகு அமைக்க முயன்றவர் அல்லர். பழைய உலகை புத்திசாலித்தனமாக நடக்கும்படி புத்தி கூறியவரே. தார்மீக புனருத்தாரண இயக்கத்தினர், முதலாளிக்கும் (முதலாளித்துவம் அல்ல) தொழிலாளிக்கும் நட்புறவும் நல்லெண்ணமும் உருவாக வேண் டும் எனப் பிரசாரஞ் செய்து கலை வடிவங்களில் அக்கருத்தை முக்கியப் படுத்துவது போலவே, தனது காலத்துச் சமூக முரண்பாட்டிற்கு **அமைதியான" நிவாரணம் காண முயன்ருர் வள்ளுவர். ஆணுல் அவர் அதில் எள்ளளவும் வெற்றி பெறவில்லை என்பது சரித்திரச் செய்தி. - க. கைலாசபதி,
N
( 12 )
 
 
 

பாரதி աՈ fr?
( 3 )
-த, ச. இராசாமணி - பேடியர் பிதற்றல்
கண்ணன் தேர்ப்பாகனக இருந்து போரை நடத்துகிருன். பார்த்தி பன் எதிர்வரிசையில் தம்முன் பகைவர்களாக நின்று போரிட வந்திருப் போரைப் பார்க்கிருன், தன் வில்லைக் கீழே போடுகிருன். ஒரே கனத்தை (குழுவை)ச் சார்ந்தவர் தங்களுக்குள்ளே போர்க்கருவிகளை எடுத்துப் போரிடல் ஆகாது என்பது அப்போதைய சமுதாயவிதி; நடை முறை, அதனல் அர்ச்சுனன் போரிட மறுக்கிமூன். அப்பொழுது தேரோட்டும் கண்ணன் அர்ச்சுனனுக்குக் கூறும் பகுதியை அறிவோம். இங்கு பாரதியின் பாடல் வசிகள் துள்ளித் தெறிக்கின்றன. வன்முறை வருமிடங்களிலெல்லாம்-தான் சார்ந்து நிற்கும் வர்க்கம் ஆயுதத்தைத் துரக்கும் இடங்களிலெல்லாம்-பாரதி வன்முறையோடு ஒன்றிணைந்து ஐக்கியமாகி விடுகிருன். எதிர் நிற்பவர்களின் தலேகளைத் தரையில் உருட்டிவிடுதல், வெட்டுண்ட முண்டங்கள் துடிப்பதைப் பார்த்து மகிழ்தல், போன்றவை போர்க்களத்தே படைவீரர்க்கு வேண்டும் பண் புகள் என்ருன் பாரதி. (சத்ரபதி சிவாஜி, வரிகள் 116-128) பண் டைத் தமிழர்களும் இறந்துபட்ட வேந்தனைப் படைவீரனை-கொன்ற வேந்தன் -படைவீரர்கள் சூழ்ந்து கொண்டு ஆடுதல் 1 தலையற்ற முண் டங்கள் பேய்மகளின் தாளத்துக்கிசைய ஆடுதல் 2 போன்ற போர்க் களச் செய்திகளைப் பற்றிப் பாடுவர். பகைவரின் தலைகளைக் கொய்து அவர்கள் முண்டங்கள் துடிப்பதைப் பார்த்து மகிழும் செயலைப் பார்த் திபன் செய்யவில்லை.
.களிற்ருெடு 1. பட்ட வேந்தனை யட்ட வேந்தன்
வாளொடு ஆடும் அமலேயும் - -தொல், பொருளதிகாரம் 72 ஆரிய அரசர் அமர்க்களத் தறிய விழி லாட்டிய சூழ்கழல் வேந்தன்
218 ,217 ,26 .சிலப் مى
2. எறிபினம் இடறிய குறையுடற் கவந்தம்
பறைக்கப் பேய்மகள் பாணிக் காடே
-சிலப். 26, 207, 208
( 13 )

Page 9
இவ்விடத்தில் தான் பாரதி கண்ணன் வாயிலாகப் பாடுகிருள். நொண்டிச் சமாதானம் கூறும் அர்ச்சுனன் அவன் கூற்றை-ஞானப் பிதற்றல் என்கிருன். அதற்கு மேலும் ஓர் அடைமொழி கொடுத்து வெறும் (பயனற்ற) பேடியர் ஞானப்பிதற்றல் என்கிருன். அவன் உள்ளுணர்வு மிகுந்து வெளிப்படும் இடங்களிலெல்லாம் மிகுதியான அடைமொழி கொடுத்துப் பாடுவதை அறியலாம். பேடிகள் தங்கள் கோழைத்தனத்தை - இயலாமையை - கையாலாகாத்தனத்தை - மறைக்கக் கைக்கொள்ளும் பிதற்றல் என்கிருன்.3 பாரதிமட்டுமல்லன் ஆழ்வார்களுள் ஒருவராகிய தொண்டரடிப் பொடியாழ்வார் பக்தியில் உருகும் இடமொன்றிண்யும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். தலையை அறுப்பதே தருமம்
வெறுப்போடு சமணர் முண்டர்
விதியில் சாக்கியரிகள், றின்பால்
பொறுப்பரி யணகள் பேசில்
போவதே நோய தாகி,
குறிப்பெனக் கடையு மாகில்
கூடுமேல் தலையை ஆங்கே,
அறுப்பதே தருமங் கண்டாய்
அரங்கமா நகரு ளானே!
இதனைப் பாடியவர் தொண்டரடிப் பொடியப்ாழ்வார். தொண்டர் கள் காலடித் தூசி போன்றவன் என்று தன் பெயரையே எளிமையாக்கிக் கொண்டவர். உள்ளத்தால் அவ்வளவு எளிமையானவருக்கும் கொலை வாளினைத் தூக்க வேண்டிய நிலை வந்ததுபோலும். பக்தியியக்கத் தைச் சார்ந்தவர்க்கும் தான் கொண்ட கருத்தினை நிலைநாட்ட வன்செய சிலச் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது போலும், சமண, பவுத்தர் களின் தலையை அறுப்பதைத் தன் கடமையாகக் குறிப்பிடுகிருர். தான் எந்த ஆயுதத்தைத் தூக்க வேண்டுமென்ற நிலையை எதிரிகள்தான்தோ ற்றுவிக்கிருர்களோ! தன்வர்க்க நலனைநிலைநாட்டதேவைப்படும்பொழுது எவரும் வன்முறையை வலியுறுத்துவர் கையாள்பவர், தன்வர்க்கத் தார் மீது எதிர்வர்க்கத்தார் வன்முறையை கையாளாதிருக்க அஹிம்சை அறிவுரை கூறுவர். இதுவும் தன் வர்க்க நலன் கருதியே. பாரதி மட் டும் இதற்கு விதிவிலக்காக முடியுமா? கவிதை ஓசை நயமுடையது.
3. நீலத் திரைகட லோரத்திலே - நின்று
நித்தம் தவஞ்செய் குமரியெல்லை - வட மாலவன் குன்றம் இவற்றிடையே - புகழ்
மண்டிக் கிடக்குந் தமிழ்நாடு. -பாரதி பாடல்
( 14 )

அங்கு சொற்கள் ஒரு வரையறைக்குள் நின்று ஓசை இன்பத்தை ஊட் டுதல் வேண்டும். அவ்வோசையின்பமே பல்லாயிரக்கணக்கான மக் களை ஈர்க்கவல்லது. எனவே, ஒசைநயத்துக்காக ஏற்றமான- துடிப் பான-சொற்களைப் பயன்படுத்தினன் எனலாமா? அன்று அவன் எழு திய உரைநடையிலும் வன்முறையையே வலியுறுத்தியுள்ளான். அவன் கட்டுரைத் தொகுப்பில் "தைரியம்" என்ற கட்டுரையும் ஒன்று. அக் கட்டுரையில் கீழ்க்காணுமாறு எழுதுகிருன்:-
துணிவுள்ளவனையே அறிவுள்ளவனென்பதாக நம் முன்னேர்கள் மதிக்கிருர்கள். எடுத்ததற்கெல்லாம் அஞ்சும் இயல்புடைய கோழை யொருவன் தன்னைப் பல சாஸ்திரங்கள் கற்றவனென்றும் அறிவாளி என்றும் சொல்வானேயானுல் அவனே நம்பாதே; அவன் முகத்தை நோக்கிக் காறியுமிழ்ந்துவிட்டு, அவனிடம் பின்வருமாறு சொல்:-
அப்பா, நீ ஏட்டைத் துளைக்கும் ராமபாணப் பூச்சியைப்போல் பல நூல்களைத் துளைத்துப் பார்த்து ஒருவேளை வாழ்நாளை வீணுக்கி யிருக்கக் கூடும். ஆனல் அச்சம் இருக்கும்வரை நீ அறிவாளியாகமாட் டாய். அஞ்சாமைக்கும் அறிவுக்கும் நம் முன்னேர்கள் ஒரே சொல்லை உபயோகப்படுத்தியிருக்கிருர்கள். அதை நீ கேள்விப்பட்டதில்லைப் போலும்!
ஆம். அச்சம் மடமை. அச்சமில்லாமையே அறிவு. விபத்துக் கள் வரும்போது நடுங்குபவன் மூடன். அவன் எத்தனை சாத்திரம் படித்திருந்தாலும் மூடன்தான். விபத்துக்கள் வரும்போது எவன் உள்ளம் நடுங்காமல் துணிவுடன் அவற்றையெல்லாம் போக்க முயற்சி செய்கிருனே அவனே ஞானி. ‘ஹரி ஓம்’ என்று எழுதத் தெரியாத போதிலும் அவன் ஞானிதான்.
சிவாஜி மகாராஜா தமது சொந்தப் பிரயத்தனத்தினுலும் புத்திக் கூர்மையாலும், அவுரங்க சீப்பின் கொடுங்கோன்மையை அழித்து மகாராஷ்டிரம் ஏற்படுத்தி, தர்ம ஸ்தாபனம் செய்தார். அவர் ஏட் டுப்படிப்பில் தேர்ந்தவர் அல்லர். இந்தக் காலத்தில் இங்கிலீஷ் பள் ளிக் கூடங்களில் படித்துப் பரீட்சைகள் தேறிப் பதினைந்து ரூபாவைக் கொண்டு பிழைப்பதற்காகத் தமது தர்மத்தையும், ஆத்மாவையும் விலைப்படுத்தக் கூடிய மனிதர்கள் ஆயிரக்கணக்கான சுவடிகள் படித் துக் கண்களைக் கெடுத்துக் கொண்டிருக்கிருர்கள். சிவாஜிக்கு மகா ராஷ்டிர ராஜ்யம் லாபம். இவ்விருவரிலே யார் அறிஞர்?
மோதி மிதித்து விடு
துணிவில்லாதவன் - வீரம் இல்லாதவன் - எவ்வளவு நூல்கள், கலே கள் படித்திருந்தாலும் என்னவாம்? அப்படிப் பட்டவன் தன்னை அறி
( 15 )

Page 10
வாளி என்ருல் நம்பாதே என்று பொதுமக்கட்குத் தெளிவுபடுத்து கிருர். இத்துடன் தன் கருத்தை நிறுத்திக் கொண்டிருக்கலாம். “அவன் முகத்தில் காறி உமிழ்," "மோதி மிதித்துவிடு* என்கிருரர். இங்கு வன் முறையே வீரம் என்று கருதுகிருர், பொதுமக்கள் இவ்வாறு வன் முறையின் வழியாக அறிவு புகட்ட வேண்டும் என்று பாரதி கருது கிருன். இப்படிச் செய்வதால் மக்களுக்குள் பிணக்கேற்படாதா. சண்டை சச்சரவுகள் நிகழாதா? சமாதானம், சமத்துவம் கெட்ாதா? என்பனபோன்ற விஞக்கள் சமுதாயத்தில் ஒரு சில பகுதி மக்களின் உள்ளங்களில் எழலாம் அல்லவா? பாரதி அதனைப்பற்றி எல்லாம் கவ லேப்படவில்லை. துணிவற்றவர்களால் - கோழைகளால்- அநீதியை வன் முறையால் தூக்கி எறியத் துணியாதவர்களால் - வீரமற்றவர்களால் - சுட்டப்படும் சமாதானம் - சமத்துவத்தைப் பாரதி மதிக்கவில்லை. மேலும் கோழைத்தனத்தால் சமாதானத்தைக் காட்ட முடியாது. சமத்துவம் நிலைக்காது என்று கருதுகிருர் போலும்.
வன்முறை கொள்கையன்று
பாரதி வன்முறையை ஆதரிக்கிருன். நீதியை றிலைநாட்ட வன் முறையின்றி வேறு வழியில்லை என்பதை அவன் உணர்கிருன். அநீ திக்கு எதிராக - கொடுமைக்கு எதிராக - எங்கெல்லாம் வன்முறை தல தூக்குகிறதோ அங்கெல்லாம் பாரதி வன்முறையைக் கையாண்டும் அவ்வன்முறைக்குத் தோல்வி வந்தால் தட்டிக் கொடுக்கிருன், ஊக்கு விக்கிருன்; பாராட்டுகிருன்; சமுதாய மாற்றத்துக்கும் அரசியல் விடு தலைக்கும் வன்முறையே வழியென்று உறுதியாக நம்புகிருன். இவற் றில் வன்முறையைக் கைக்கொள்ளாதவன் பேடி என்பது பாரதியின் கணிப்பு. அவர்கள் யாராக இருந்தாலும் பாரதியின் முன் அவர்கள் பேடியர்தான். பாரதிக்கு இதில் ஒரு வரையறுப்புண்டு. போருக்குக் கோலம்பூண்டு ஏகாதிபத்தியம் அல்லது நிலப்பிரபுத்துவம் ஆயுதம் தூக் கும் பொழுது அல்லது வன்முறையைக் கையாளும்போது அதனைப் பாரதி வன்முறையால் எதிர்க்க விரும்பினன். அவ்விருதரத்தாரும் கைக்கொள்ளும் வன்முறையை வன்முறையால் எதிர்க்கும் பகுதியினரை வாழ்த்தினன்; பாராட்டினன்; வெற்றிகண்டு பூரித்துப் போனன். அப்பொழுதெல்லாம் அவனும் அவர்களோடு இரண்டறக் கலத்துவிட் டான். ‘மாஜினியின் சபதம்’, ‘பெல்ஜியத்துக்கு வாழ்த்து’, ‘புதிய ருஷ்யா போன்ற தொடர் நிலச் செய்யுட்களில் இதனை நன்குனர லாம். எனவே, இவனுக்கு யார் ஆயுதம் தூக்க வேண்டும்? யார் ஆயு தம் தூக்கக் கூடாது என்பதில் ஒரு வரையறுப்புண்டு. இவன் சார்ந்து நின்ற வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற ஆயுதம் தூக்கும் பொழுது வன்முறையைக் கைக்கொள்ளும் பொழுது அதனை ஆதரித் தான்; நியாயப்படுத்திளுன். அதை வீரம் என்று பாராட்டுகிருன். மாற்று வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற ஆயுதந்தூக்கு
( 16 )

வதை, வன்முறையைக் கைக்கொள்வதை விரும்பவில்லை என்பதுமட்டு மல்ல வன்மையாகக் கண்டித்தான். அவ்விடங்களிலெல்லாம் கடுமை யான சொற்களைப் பயன்படுத்தி எதிர்த்தான். அவன் குழப்பமிக்கவன் என்று கருதுவாரும் உளர். இருபதாம் நூற்ருண்டுத் தமிழ்க் கவிஞர் களில் வரலாற்று வழியில் நிகழ்ச்சிகளைப் பார்த்தவன் பாரதியே என் பதில் எள்ளளவும் ஐயமில்லை. அவன் வரலாற்றுக் கடமையையும் செவ் வையாகச் செய்திருந்தான். அவன் சார்ந்து நின்ற வர்க்கம் அன்று இந்திய மண்ணிலிருந்து அந்நிய ஏகாதிபத்தியத்தைத் தூக்கியெறிய முனைந்து நின்றவர்க்கம்; நிலப்பிரபுத்துவ சாய்க்கடையை வழித்தெறி யத் துடித்து நின்ற வர்க்கம். எனவே அது முற்போக்கான வர்க்கம். இன்னும் அவ்வர்க்கத்துக்கு முற்போக்குத் தன்மையுண்டு வரலாற் றுக் கடமையும் இருக்கிறது. அவன் ஒரு வர்க்கச் சார்பாளன். அவ் வர்க்கம் வளரத் தடைக்கற்களாய் இருப்பவை எவை என்பவற்றை நன்குணர்ந்தான். அத்தடைகளை நீக்க இதுவரை உறுதியோடும், தெளி வோடும் இருந்தான். அவன் சார்ந்து நின்ற வர்க்கம் வன்முறையைக் கையாள வேண்டும் என்ற நிலைவரும்போது அதனை வலியுறுத்திஞன்; நியாயப்படுத்தினன். தன்வர்க்க நலனுக்காக வன்முறையை ஆதரித்து வற்புறுத்திய பாரதி அதே வர்க்க நலனுக்காக வன்முறையை எதிர்த்த இடமும் உண்டு. அவன் கொண்ட குறிக்கோள் வன்முறையை ஆதரிப் பதா இல்லையா என்பதன்று. தன்வர்க்க நலனுக்கு வன்முறை தேவை யானதா என்பதே. எதிரி வர்க்கம் தன்வர்க்கத்தின் மீது வன்முறை யைக் கையாண்டபோது அதனைக் கடுமையாக எதிர்த்தான்.
வன்முறை என்பது ஒரு கொள்கையன்று. ஒரு கொள்கையை நடைமுறைப்படுத்த எடுத்துக் கொள்ளும் செயல் முறையே.
8 d. 900 B-soo 8 0 0 eee je X.
வதையின் கதை
என் வேட்டியை உரிந்துவிட்டு, என்னை அந்த அறையில் கால்களைக் கட்டித் தலைகீழாகத் தொங்கவிட்டு, அடிப்பாகம் வெட்டப்பட்ட சாக்கை என் இடுப்பில் கட்டினர்கள். முகமும் சாக்கிற்குள் இருந்த தால் என்னுல் எதையும் பார்க்க முடியவில்லை, தணலில் மிளகாய்ப் பொடியைப் போட்டு என்னைக் கட்டியிருந்த சாக்கிற்குள் புகையை விட் டார்கள். கண்களிலும் மறைவிடங்களிலும் மிளகாய்ப் பொடியைப் பூசிஞர்கள். இடையிடையே கேள்விகள் கேட்டார்கள், 45 நிமிடங் கள் இந்தச் சித்திரவதை நீடித்தது
நீதிமன்றத்தில் நடராசா தங்கத்துர்ை, நீர்வேலி வழக்கில்
eprGssff 16-12-82
( 17 )

Page 11
சொல்லும் வர்க்கச் சார்பும்-2 -விந்தன்
விஞ்ஞான சோசலிச தத்துவமான மார்ச்சியத்தின்படி, மேலே சொன்ன தருமகருத்தாமுறை, பூமிதான இயக்கம், நிலச்சீர்திருத்தச் சட்டம் முதலானவைகள் எல்லாம் நிலவுடைமையாளர்களின் நலன் களைப் பாதுகாப்பதற்காகவே தோன்றியவை; அவை சமூக சீர்திருத் தப் போர்வையில் உடைமையாளர்களின் நலன்களை மிக நளினமாகப் பாதுகாக்கின்றன என்றே கூறவேண்டும்.
10. ஒரு சொல் வர்க்கச் சார்புடன் எவ்வாறு விளங்குகிறது என்ப தைப் பார்ப்போம். தமிழர்கள் யார் எந்த ஆய்வு முடிவை வெளி யிட்டாலும், அதில் தொல்காப்பியச் செய்திகள், குறள் செய்திகள் ஏதாவது இடம்பெற்றுள்ளனவா என்று பார்ப்பது வழக்கம். தீவிரத் தமிழன்பர்கள் "குறளில் இல்லாதது ஒன்றுமில்லை" என்று பஸ்சில் போகும்போதுகூட விதந்து கூறுவர்!
1.1. தொல்காப்பியம்: ஒரு மொழியில் அமைந்துள்ள சொற்களும் முரண்பாட்டின் அடிப்பன்டயிலே அமைந்துள்ளன. எதிர்மறை இல் லாத சொல் இல்லை என்று கூடக் கூறலாம்.
தொல்காப்பியர் காலத்தில் சொற்கள் வர்க்கச் சார்புடன் வழங் கப்பட்டன. ஒரு சொல் எவ்வாறு வர்க்கச் சார்புடையதாய் இருக் கிறது என்று கூறுவதற்கு தொல்காப்பியம் நமக்குச் சிரமம் வைக்க வில்லை. தொல்காப்பியம், சொல்லதிகாரம், எச்சவியல், 48 முதல் 52 வரையுள்ள சூத்திரங்கள் சொற்கள் வர்க்கச் சார்புடன் விளங்குகின்றது என்பதற்குச் சான்ருய் விளங்குகின்றன.
“ஈ, தா, கொடு" எனக் கிளக்கும் மூன்றும் இரவின் கிளவி ஆகு இடன் உடைய. (48). அவற்றுள். 'ஈ' என் கிளவி இழிந்தோன் கூற்றே. (49). *தா" என் கிளவி ஒப்போன் கூற்றே (50). “கொடு" என் கிளவி உயர்ந்தோன் கூற்றே (51). *கொடு" என் கிளவி படர்க்கை ஆயினும் தன்னைப் பிறன்போல் கூறும் குறிப்பின் தன்னிடத்து இயலும் என்மனர் புலவர் (52)
பின்னுல் வந்த நன்னூல் இலக்கண ஆசிரியர் பவணந்தி முனிவரும் சொல்லதிகாரம், பொதுவியல், 407 ஆவது நூற்பாவில் இதே கருத் தையே கூறுகின்றனர்.
( 18 )

ஈ, தா, கொடும் எனும் மூன்றும் முறையே இழிந்தோன், ஒப்போன், மிக்கோன் இறப்புரை. (407). தொல்காப்பியச் சூத்திரங்களின் பொருள் பின்வருமாறு: (1) இரத்தல் பொருளை உணர்த்த ஈ, தா, கொடு என்ற சொற் கள் பயன்படுகின்றன (48); இழிந்தோர் தன்னிலும் உயர்ந்தோரிடம் 'ஈ' என விளிக்க வேண்டும் (49);
'தா' என்னும் சொல்ல இழிந்தோர் எம்மைப்போல உள்ள பிற இழிந்தோரிடமும், உயர்ந்தோர் தம்மைப்போல உள்ள பிற உயர்ந் தோரிடம் பயன்படுத்த வேண்டும்; அதாவது சமூகத்தில் சமநிலையில் உள்ளவர் ஒருவருக்கொருவர் பயன்படுத்தும் பொழுது 'தா' என்ற சொல்லப் பயன்படுத்த வேண்டும் (50). உயர்ந்தோர் இழிந்தோரிடம் கேட்கும்பொழுது ‘கொடு" என்ற சொல்லேப் பயன்படுத்த வேண்டும் (51); பொதுவாக ‘கொடு” என்ற சொல் படர்க்கைப் பொருளிலே வந் தாலும், தன்னையே குறித்து வரும்பொழுது தன்மையிடத்தில்வரும் (52).
தொல்காப்பியரும் பவணந்தியாரும் கூறும் உயர்ந்தோன் மிக் கோன், இழிந்தோன் இருவரும் முரண்பாடான நலன்கொண்ட இரு வேறு குழுவினர், வர்க்கத்தினர் என்பது தெளிவு. அதாவது உடைமை யாளராகவும் உடைமையற்ற பாட்டாளிகளாகவும், ஆளுவோர்களாக வும் ஆளப்படுவோர்களாகவும், ஒடுக்குவோர்களாகவும் ஒடுக்கப்படு வோர்களாகவும் இருக்கின்றனர். (ஒப்போர்’ என்பது உயர்ந்த நிலைக் குள் ஒப்போர். இழிந்த நிலைக்குள் ஒப்போர் என இரண்டுக்குமாகும்)
தொல்காப்பிய கால உயர்த்தோன் “கொடு" என அதிகாரஞ் செய் கிருன்; இழிந்தோன் 'ஈ' என மானம் மரியாதைவிட்டு மன்ருடி நிற் கிருன். ஆக, ச, தா, கொடு ஆகிய மூன்று சொற்களும் வர்க்கச் சார் புடன் விளங்கினமையைக் கண்டோம்.
1.2. நிலப்பிரபுத்துவ சமுதாயத்தின் உடைமை வர்க்க நலனைப் பாதுகாக்க நீதி நூல்பாடிய வள்ளுவனின் திருக்குறளில், சொற்கள் எவ் வாறு வர்க்கச் சார்புடன் விளங்குகின்றன என்பதைப் பார்ப்போம் 1.2.1. செங்கோண்மை அதிகாரத்திலிருந்து, ஒரு குறள்:
கொலையிற் கொடியாரை வேந்(து) ஒறுதல் பைங்கூழ்
களைகட் டதனேடு நேர்.
'அரசன் கொடியவர்களைத் தண்டிப்பது, உழவன் பயிர்களைக் காக் கும் பொருட்டு களைபறிப்பது போன்றது."
( 19 )

Page 12
குயில்களின் கூவல்
செ. கணேசலிங்கன்
"சேன என்னிடம் வருவதாகச் சொன்னன். வந்தால் ஏதா வது செய்தி சொல்ல வேண்டுமா” என்றுமட்டும் கேட்டேன்.
• திடீரென பால் பொங்கி வழிவதுபோல சீதா கேரிய குரலு டன் விம்மி விம்மி அழத் தொடங்கிவிட்டாள். என், நிலை தர்ம சங் கடமாகிவிட்டது; அதிகம் பழகாக என்முன்னே ஒருபடித்த இளம் பெண் அழுகிருளே. காரணம் எதுவும் அறியாது நான் குழம்பினேன்.
‘இவர் மிஸ்டர் சேனரட்ன. சேஞ என்று அழைப்போம். எனக்கு மிகவும் வேண்டியவர். இங்கே இரவு தங்சிச் செல்ல உதவவும்.
நீண்ட நாள் நண்பரான கு ன த் தி லகா இரவு 9 மணிவரையில்
ஒரு இளைஞரை அழைத்து வந்து அறிமுகப்படுத்தினர். ‘எனக்கு அவசர
வேலை இருக்கிறது மன்னிக்கவும். அவர் உடனே காரில் ஏறிப் போய்
விட்டார். அவரது அவசரம் எனக்குப் புதிதல்ல. மிகச் சுறுசுறுப்பான வர். எதற்கு உதவுவதிலும் முன்னிற்பவர். அவருக்கு இந்திய முறை யிலான சைவ உணவு மிகவும் பிடிக்கும். வீட்டுக்கோ, ஒட்டலுக்கோ மத்தியான உணவிற்குப் போக முடியாவிடின் ஒரு மணிக்குச் சாப்பிட
வருவதாக டெலிபோன் செய்வார். ஆஞல் வந்துசேர இரண்டு மணி
ஆகிவிடும்.
வலிந்து சிரிக்க முயன்ற அந்த வாலிபனை நிமிர்ந்து unTrif தேன். அழுக்கடைந்த சேட்டும் சாரமும், வாராத தல்ல. முகத்தில் தாடி வளர்ந்திருந்தது. படித்த இளைஞன்தான். ஆளுல் சிங்களம்தவிர வேறு மொழியில் பேசத் தெரியாது. ஆங்கிலம் ஓரளவு புரியும். பேச வராது. -
சிங்களம் நன்கு பேசத்தக்க எனது மகனின் உதவியுடன் மாற்று உடை கொடுத்தேன். பின் குளிக்கச் செய்து, உடைகளைத் தோய்த்து உலரப்போடச் செய்தேன், மனைவியார் தோசை சுட்டுக் கொடுக்க ஆர்வமாகச் சாப்பிட்டான். அவன் பற்றிய விபரங்களைக் கேட்டறிய நான் விரும்பவில்லை. மேலும், மொழி ஒரு பிரச்சனையாக இருந்தது. காலையில் ஏழு மணிவரையில் தூக்கம்விட்டு எழுந்ததும் உடைகளேமாற் றிக் கொண்டு காப்பிமட்டும் அருந்திவிட்டுப் புறப்பட்டுவிட்டான்.
10 )

பின், இரண்டு மூன்று மாதம் கழிந்திருக்கும். இரவு 10 மணிவர்ை யில் கதவு தட்டும் சத்தம் கேட்டது. திறந்தபோது சேனவே. அவ னது வரட்டுச் சிரிப்பிலிருந்தே எதற்காக வந்துள்ளான் என்பதை அறி ந்து கொண்டேன். யாவும் உதவினேன். முன்போல நீண்ட மேசை ஒன்றில் பாய் தலையணைபோட்டுத் தூங்க ஏற்பாடு செய்தேன்.
இரவு 2 மணிவரை இருக்கும். ப யங் க ர சத் தம் கே ட் டு விழித்தேன். "ஆ, ஊ" என்ற ஒலியோடு சிங்களத்தில் பலத்த ஓசை கேட்டது. இரண்டு மூன்று நிமிடம் வரையிருக்கும். சேனவின் அருகில் சென்றபோது சத்தம் ஓய்ந்துவிட்டது, உடலெல்லாம் வியர்த்திருந்தது. மீண்டும் குறட்டைச் சத்தம் தொடர்ந்தது. அரவம் ஏற்படுத்தாது வந்து படுத்துக் கொண்டேன். அவ்வேளை விழித்துவிட்ட என் மகன் சேஞ சத்தமிட்ட சிங்களச் சொற்கள் சிலவற்றை தமிழிற் கூறினன். பிராய் டின் கனவு பற்றிய கருத்துக்கள் ஒரளவு படித்திருந்தேன். நினைவிலி மனதின் புலம்பல் எவருக்கும் நடைபெறலாம் என சமாதானம் செய்து கொண்டேன்.
இரண்டு மாதங்கள்வரை கழிந்திருக்கும். வெள்ளவத்தை நடை பாதையில் சேஞவை பொழுது கருகும்வேளை ஒரு பெண்ணுேடு பார்த் தேன். இவன் சேனவா என்ற சந்தேகமே ஏற்பட்டது. அவன் என் னைப் பார்த்துச் சிரித்த பின்னரே அவன் சேஞதான் என்பதை உறு திப்படுத்திக் கொண்டேன். அந்தப் பெண்ணிற்கு என்னைப் பற்றி சுட் டிக் காட்டி ஏதோ கூறுவதுபோல் இருந்தது. இருவரும் சிரித்தபடியே என் எதிரே வந்தனர்.
முன் கண்டவர்களால் தற்போது சேணுவை அடையாளமே காண முடியாது. வெள்ளை சேர்ட்டும் முழு நீள கால்சட்டையும் அணிந்திருந் தான். சவரம் செய்து, தலை சீவியிருந்தான். உசாரான தோற்றம், அவனது நடையும் சிரிப்பும் அவனைப் பற்றி முன்னர் நான் கொண்டி ருந்த கருத்தையே மாற்றிவிட்டன.
"சீதா' என்று அந்தப் பெண்ணைப் பெயர்மட்டுமே சொல்லி அறி முகப்படுத்தினன். அவள் கரிய நிறந்தான். ஆனல் எடுப்பான தோற். றம். கூரான நாடி. பளிச்சென்ற பல்வரிசை, மயிரைப் பின்னிவிட் டிருந்தாள். சாதாரண நூல்சேலைதான் உடுத்திருந்தாள். ஜாக்கெட் கைகள் இடையோடு அளவாகப் பொருந்தும்விதமாக அழகாகத் தைக் கப்பட்டிருந்தது. கல்லுரரிவரை படித்த பெண் என்பது நன்கு தெரிந் தது. அவள் ஆங்கிலத்தில் நன்கு பேசினுள்.
இருவரையும் என் புத்தகக் கடைக்கு அழைத்துச் சென்றேன். இரண்டு ஸ்டூலைப் போடச் செய்து உட்காரும்படி வேண்டினேன். அவர்
(21)

Page 13
கள் உட்காரவில்லை. இருவரும் அங்கிருந்த நூல்களை நோட்டம் போட் LGBT to.'
இரண்டு மூன்று நூல்களையும் ஒரிரு சஞ்சிகைகளையும் வாங்கிக் ـ கொண்டனர். பணம் வேண்டாம் என்ற போதும் அந்தப் பெண் வற் புறுத்திப் பணம் தத்தாள். இருவரும் விடை பெற்றுச் சென்றனர்.
சீதா அவனின் காதலியா? உறவினரா என்று என்னல் ஊகிக்க முடியவில்லை. நானும் கேட்கவில்லை. முன்னெரு தடவை இச்சந்தே கத்தில் நான் குடுபட்டது நினைவில் வந்தது.
ஒரு இளம் பெண்ணுேடு நாடகம் பார்க்க வந்த நண்பனைப் பார்த்து சிரித்துக் கொண்டே கேட்டுவிட்டேன்.
*கேள் பிரெண்டா? காதலியா?? "என் சிஸ்டர். விடுமுறைக்கு வந்திருக்கிருள்."
στούν முகத்தில் அறைந்தது போலாயிற்று. ‘சொறி" என்று சொல் லிச் சமாளித்தேன். அதன் பின்னர் அந்த நண்பனைக் காணும்போதெல் லாம் மனம் கூசியது.
மீண்டும் ஒருதடவை மாலையில் இருவரும் புத்தகக் கடைக்கு வந் திருந்தனர். சில நூல்கள் வாங்கிச் சென்றனர், சீதா வாங்கிய நூல் கள் எனக்கு அவள்மேல் ஓர் நல்லெண்ணத்தை ஏற்படுத்தியிருந்தது. அறிவில் நாட்டமும் அரசியலில் ஆர்வமுமுள்ள பெண்கள் சிங்களமக் களிடை உள்ளார்களே என்று வியந்தேன்.
ஆறு வருடங்கள்வரை கழிந்துவிட்டன. அவர்களை நான் காண வில்லை. அவர்கள் புத்தகக் கடைக்கும் வரவில்லை.
சீதாவை இரண்டு மூன்று தடவை எதிர்பாராது கண்டிருக்கிறேன். ஒரு தடவை கடைத்தெரு வழியாகப் புறக்கோட்டை மெயின்விதி தடைபாதையில் சென்று கொண்டிருந்தபோது அவள் எதிரேயுள்ளநடை பாதையால் போய்க் கொண்டிருந்தாள், நான் அவளைக் காணுதது போலச் சென்றுவிட்டேன். மற்ருெருதடவை பஸ்ஸில் செல்லும்போது கொள்ளுப்பிட்டியில் காலிவிதி நடைபாதையில் எவரோ தோழியரு டன் செல்வதுபோல் தெரிந்தது. அவளைக் காணும்போது சேணுவின் நினைவு வந்துவிடும். −
சேஞவைத் திடீரென ஒருநாள் கொட்டாஞ்சேனையில் நண்பர்களு டன் கண்டேன். உடல் இளைத்துப் போயிருந்தது. நெற்றியிலே ஆறிய
( 2),

காயவடு. முகத்திலே முன்பு கண்ட ஒளியில்லை. ஆழ்ந்த கண்கள் மட் டும் முன்போல் உக்கிரங் கொண்டதாயிருந்தது. . . . .
'அய்யா, சுகமா? வூட்டுக்கு வருவன்." தமிழில் கூறியது வியப்பாகவே இருந்தது. என்னுள் சிரித்துக் கொண்டே நான் வீடு நோக்கி நடந்தேன். ஆறு வருடங்களில் எங்கோ தமிழில் சில சொற்களைப் பேசப் பழகி விட்டான்! சீதாவையும் அவனை யும் எண்ணி என்மனம் வட்டமிட்டுக் கொண்டே இருந்தது. என் நண் பன் குணரட்ன லண்டனில் குடியேறியது போலாகிவிட்டான். அவ னுடன் இவர்களைப் பற்றி விசாரிக்க எண்ணியிருந்தேன். ஒருதடவை விடுமுறையில் அவன் வந்திருந்தபோது வீட்டிற்குச் சாப்பிடவந்திருந் தான், அரைமணி நேரமே. சாப்பிட்டதும் ஓடிவிட்டான். அவ்வேளை யும், சேனபற்றிக் கேட்க மறந்துவிட்டேன்.
அன்று இரவு 8 மணி. கடையடைக்கும் வேளை. ஒரு கதவுமட்டும் திறந்திருந்தது. சீதாமட்டும் கடைக்குள் நுழைந்தபோது எனக்கே வியப்பாயிருந்தது. ஏதோ நூல்களைப் பார்க்க வந்தது போலிருந்தது. முகத்தில் முன்போன்ற கலகலப்பில்லை. ஒருவித சோகம் படிந்திருந்தது. உடல் மெலிந்திருந்தது.
"டயற்’ பண்ணுகிறளா? நானே பேச்சுக் கொடுத்தேன். பல ஆண்டுகளாக அறிய வேண்டு மென என் மனம் குடைந்து கொண்டிருந்தது.
"சேஞ வரவில்லையா? வினு என்ன அறியாமலே வந்துவிட்டது, அவள் திரும்பி என்னைப் பார்த்தாள். விசித்திரமான பார்வை. தவருக ஏதோ கேட்டுவிட்டேனே என என்மனம் சஞ்சலப்பட்டது.
"சொறி, உங்களைக் கண்டு கனகாலம். சேஞவைப் போனவாரம் எங்கோ தெருவில் கண்டேன். வீட்டுக்கு வாறதாகச் சொன்னுன். உங் களுக்குள்ள உறவைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. கேட்டதற் காக மன்னிக்கவும்." . e - -
"உங்க வீட்டுக்கு வருவதாகச் சொன்னரா?” 's அவள் குரலில் வியப்புக் கேரல், முகம் கவலையில் தோய்ந்திருந்தது: "ஆமாம். உங்களை வந்து பார்ப்பதில்லையா? நான் ஏதாவது அவ னிட்ம் சொல்ல வேண்டுமா?"
( 3 )

Page 14
அவள் கண்கள் கலங்கின. கைக்குட்டையை எடுத்து வாயிலிருத்து அவளை மிஞ்சி வந்த விம்மலுடன் கூடிய அழுகையை அடக்க முயன் முள்.
என் நிலை மிகவும் கஷ்டமாகிவிட்டது. கதவைச் சாத்திவிட்டு கடை உதவியாளரை வெளியே நிற்கும்படி சமிக்கை செய்தேன்.
சீதாவை எதிரே உட்காரச் செய்தேன். இத்தனை பெரிய துன்பம் தரும் நிகழ்ச்சி என்ன நடந்தது? வளர்ந்த பெண், முற்போக்கான உரிமை பெற்ற பெண், அதிகம் பழகாத என் முன்னே கண்ணிர் விடு கிருளே.
"நான் ஏதாவது தவறு செய்திருந்தால் மன்னியுங்கள். சேனவுக்கும் உங்களுக்கும் உள்ள உறவைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. உங் கள் கவலையைப் போக்க என்ஞல் ஏதாவது செய்யமுடியுமானுல் சொல் லுங்கள்."
அவளின் விம்மல் சிலநேரத்தில் ஓய்ந்தது. கண்ணிரைத் துடை த்து, தன்னை அறியாது என்முன்னே அழுததற்கு வெட்கமடைவது போல சிரித்துச் சமாளிக்க முயன்ருள்.
நடந்த விசயத்தை அவள் மூலம் அறிய ஆவல்பட்டேன்.
அவள் கூறிய செய்திகள் யாவும் பயங்கரமாயிருந்தன. அத்தனை அதிர்ச்சி தரும் செய்திகளை நான் கேட்டதேயில்லை. நான் எத்தனே அப் பாவியாக இருந்தேன் என்பது என் மனதை வெட்கிக்கச் செய்தது.
சேன சாதாரண ஆளில்லை. 1971க் கிளர்ச்சியின்போது ஒரு மா வட்டத்தில் முக்கிய பங்கெடுத்த தலைவன். கிளர்ச்சியின் தோல்வியை ஒட்டி அவன் மேல் இராணுவமும் பொலிசும் வலை விரித்திருந்தது. அவன் தலைமறைவாயிருந்தபோது தமிழர்வீடு பாதுகாப்பாக இருக்கும் என்றே இருதடவைகள் என் வீட்டில் இரவில் வந்து தங்கிஞன்.
பின்னர் சீதாவின் காதலியாக வெளியே காட்டி நாடகம் நடத்தி னர். அவளும் இயக்கத்தின் ஓர் அனுதாபியாக இருந்தாள். கொழும் பிற்கு கட்சி அலுவலாக, தலைமறைவாக வரும் வேகளயே இந்நாடகம்\ நடைபெற்றது. ஐந்து தடவைமட்டுமே இந்நாடகம் நடைபெற்றது. அவனை ஒரு புரட்சி வீரனுகக் கருதி உள்ளுற சீதா அவனைக் காதலித் தாள். நாலாவது தடவை அவன் பாதுகாப்பு நாடகத்திற்கு வந்திருக் கும் பொழுது அவள் தனது காதல் அவனிடம் வெளியிட்டாள்.
( 24.)

'நீ ஆபத்தான மனிதனைக் காதலிக்கிருய். நன்கு சித்தித்து முடிவு செய்’ என்று சேன அவளை எச்சரித்தான். அவள் சிறிதும் மசியவில்லை. நாலாவது சந்திப்பின்போது காதல் உறுதியானது. இரக்கத்தில் ஏற்
பட்ட காதல். --
"என்ன நடந்தாலும் நான் உங்களுக்காகக் காத்திருப்பேன்."
"நான் உன்னைத் தவிர எந்தப் பெண்ணையும் தொடமாட்டேன்." சேன கையில் அடித்துச் சத்தியம் செய்ததாகச் சீதா தெரிவித்தாள்" அதன் பின்னர் கடைசித் தடவையே சந்தித்து உறவு கொண்டாடினர்.
சேஞவைப் பற்றி அதன் பின்னர் ஒரு தகவலுமேயில்லை. இராணு வத்தினரின் வலையில் அவன் விழுந்திருக்கலாம் என அவள் சந்தேகித் தாள். நாள்தோறும் தூக்கமின்றி அவன் வரவுக்காகக் காத்திருந்தாள். இரண்டு வருடங்களின் பின் ஒரு சிறு கடிதம்மட்டும் அவளுக்குக் கிடைத் தது. அது சிறையிலிருந்து எழுதப்பட்டதாகத் தெரிந்தது.
‘என்னை மன்னித்துவிடு. மறந்து விடு.--சேஞ. "சேனு’ என்பது தலைமறைவு காலத்தில் சூட்டிய பல கற்பனைப் பெயர்களில் ஒன்று. அதனல் பின்னர் சிறையில்கூட அவனைச் சென்று பார்த்துப்பேச முடியவில்லை. அவன் கடிதத்தால் அவள் சிறிதும், அசையவில்லை. அவன் என்ருே ஒருநாள் தன்னிடம் வருவான் எனக் காத்திருந்தாள்.
தேர்தல் முடிந்து யு. என். பி. அரசு வந்தது. 1977 நவம்பரில் அர சியல் சிறைக் கைதிகள் யாவரும் விடுதலை பெற்றனர். அவன் தன் னைத்தேடி வருவான் எனக் காத்திருந்தாள்.
நாலு மாதமாகிவிட்டது. வரவேயில்லை. நான் அவனைக் கண் டேன் என்பதே அவளேக் கலங்கச் செய்துவிட்டது.
அது எத்தனை கொடுமை. அவளின் இதயத்தையும் 6 வருட துன் பத்தையும் என்ஞல் நன்கு உணர முடிந்தது.
சேன என்ற வீர புருஷனை ஒருபுறம் எண்ணிவியந்தேன். மறுபக்கம்: ஒரு புரட்சிவீரன் ஒரு பெண்ணை ஏமாற்றிவிட்டுத் திரிகிருனே என்ற போது ஆத்திரம் வந்தது. புரட்சியாளருக்குக் காதல் ஒரு விளையாட்டா என்று மனம் நொந்தது. ஒரு தலைவனே இப்படியென்ருல் இந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்களே இப்படியானவர்களா என எண்ணி ஆத் திரப்பட்டேன்.
( 5)

Page 15
சீதாவிற்கு நான் ஆறுதல் கூறினேன். எப்படியும் அவன் என்னி டம் வருவான். உன்னிடம் அழைத்துவருவேன். உன் ஆறு ஆண்டின் சோக கீதத்தை நிறுத்துவேன். கவலை வேண்டாம் என ஆறுதல்கூறி அவள் வீட்டு முகவரியைப் பெற்றுக் கொண்டேன்.
கதவைத் திறந்து அவளை வழியனுப்பினேன். நன்றிகூறிக்கொண்டே அவள் நடந்தாள்.
அவளது கைகளிலும் இடையிலும் ஒட்டியிருந்த ஜாக்கெட் தொய் ந்துபோயிருந்ததைப் பார்த்தேன். என் நெஞ்சு நொந்தது.
அன்று தொடக்கம் ஒரு குயிலின் அலறற் கூவல் என் செவிகளில் ஒலித்துக் கொண்டேயிருந்தது. ஒரு குயிலா? நாட்டிலே புரட்சி பேசிய இளைஞர்களால் கைவிடப்பட்டு இப்படி எத்தனை குயில்கள் கூவுகின் நனவோ! வழியில், த்ெருவில் சேருவைப்போல் ஆராவது செல்லும் போதும் அவளு என்ற பிரக்ஞையே மனதில் எழுந்து கொண்டிருந் ,凸岛·
கடைசியாக ஒருநாள் இரவு சேன வந்து சேர்ந்தான். முன்போன்ற அழுக்கு உடையுடனல்ல. அது சதுரக்கோடிட்ட சேட், கரிய நிற கால் சட்டை என் மனம் நிலையிலில்லை. உள்ளே அழைத்து உபசரித்தேன்.
தமிழிலும், ஆங்கிலத்திலும் சில சொற்களை இணைத்துப் பேசப் பழகியிருந்தான். - t
சிறையில் இருந்தவேளை பேசப் பழகியதாகக் கூறினன்,
தோசை" என்று பழமையை நினைந்து சிரித்தபடியே கேட்டான். சூடாக மனைவியால் சுட்டுத்தர ஆர்வத்தோடு சாப்பிட்டான். w
முன்போலவே அன்றிரவு தங்குவதாகக் கூறினன். சாரம் ஒன்று கொடுத்தேன். மாற்றிக் கட்டிக் கொண்டான்.
படுப்பதற்குப் பாய் விரித்திருந்த இடத்திற்கு அழைத்துச் சென் றேன். அங்கு தனிமையில் சீதாவின் கதையை எடுத்தேன்.
“உன் தனிப்பட்ட பிரைவேட் விஷயத்தில் தலையிடுவதற்காக மன் னிக்கவும். என் மனச்சாட்சி உறுத்துவதைப் பேசித்தான் ஆகவேண்டும்." ஆங்கிலத்தில் தொடர்ந்தேன். அவன் எதிர்பார்க்காத விஷயம் என்பது முகபாவத்தில் தெரிந்தது. அவன் எதுவுமே பேசாது மெளன மாக இருந்தான். அந்நிலை எனது கோபத்தைக் கிளறியது. சீதாவின் கலங்கிய தோற்றம் என் கண் முன்னே தோன்றியது.
என் ஆத்திரமெல்லாம் சேர்த்துத் திட்டித் தீர்க்கத் தொடங்கி னேன்,
2

"சீதா எத்தனை தியாகம் செய்தாள்? உன் உறுதிமொழியை நம் பிக் கொண்டே இன்னும் வாழ்கிருள். நீ ஏன் இன்னும் போய்ப் பார் க்கவில்லை? புரட்சியின் பெயரைச் சொல்லிக் கொண்டு பெண்களை ஏமாற்றும் கயவர்கள் உங்கள் கட்சியில் இப்படி எத்தனைபேர் இருக் கிறீர்கள். நாணயமில்லாத நயவஞ்சகர்கள். காதல் என்பது மனித வாழ்வின் உன்னதமான காலகட்டம். புரட்சிக்காரரைக் காதலிக்க வேண்டாம் என்று நான் கூறவில்லை.
காதல் புரட்சிக்கு இடையூருக இருப்பதாயின் பழகும்போதே இடம் தராது நடந்திருக்க வேண்டும். உங்கள் அணியைச் சார்ந்தவர்களெல் லாம் புரட்சியின் பெயரைச் சொல்லிப் பெண்களே ஏமாற்றுபவர்க்ளா? உங்களைப்போன்ற கண்ணியம் இல்லாதவர்களுடன் நான் பழகவே விரு ம்பவில்லை. இப்பொழுதே நீ என் வீட்டைவிட்டுப் போயிடலாம்."
என் திட்டுகள் அவனுக்குக் கோபமூட்டவில்லை. கவலே ததும்ப நின் முன. VM
"நீ ஏன் பேசாமல் நிற்கிருய். உனக்கு மானம் வெட்கமில்லயா? என்று பின்னரும் சொன்னேன். அன்றுபோல் ஆத்திரப்பட்டு நான் ஒரு வரைத் திட்டிய நாட்கள் மிகக் குறைவே. s
ஆனல், அவனது செயல் ஒரு கணத்தில் என் வாயை அடைத்து விட்டது. சிந்தனையில் ஒரே அடி. மூச்சுப் பேச்சற்று ஊமையாக நின் றேன்.
"ஐயா, இஞ்சை பார். மிலிட்டரி ரோச்சர்." அரையில் கட்டியிருந்த சாரத்தை அவிழ்த்துக் கீழே விட்டான். அவனது ஆண்குறி எல்லாம் சிதைந்த நிலையில் இருந்தது. என் கொதிப்படைந்த இரத்தமெல்லாம் உறைந்துபோக அசை வற்று நின்றேன்.
"இப்படி நமக்குமட்டுமில்லை.எத்தனையோ.தோழர்கள்.வெளியே சொல்லுறது வெட்கமில்லையா."
தனக்குத் தெரிந்த அரைகுறை ஆங்கில, தமிழ் வார்த்தைகளில் அந்த வதைக் கொடுமைகள் பற்றிக் கூறினன்.
அதன் பின்னர், குயில்களின் கூவல்கள் கேட்கும் போதெல்லாம் சீதாக்களின் அலறலே என் நெஞ்சைக் குடைந்துகொண்டிருக்கின்றன. O
( ይ7 )

Page 16
ஆய்வறிவின் தலைமகனை இத்ைேர
அஞ்சலிப்போம் 女
தலைமைக் கவிஞனுக்கு, தகுதியுள்ள கவிராஜா! மலையை இழந்ததினுல். மாரடிக்க வரவில்லை இற்றைவரை மூவர் இறப்புக்கே பாவெழுதி, வைத்தேன் அதிலொருவன் வளாகத்துப் பேராசான் ஆய்வறிவின் தலைமகனை அஞ்சலிக்க வந்துள்ளோம் வாய்விட்டு அழுது, வற்றியபின் கூடியுள்ளோம் நிதியை இழந்து. நிமிர்ந்து யன்ற கைலாச பதியை இழந்து பாழிருட்டில் நிற்கின்ருேம் முப்பது நாள் சென்ற பின்னர் அஞ்சலிப்பா சொல்வாய் என அழைத்தார். சொல்லவந்து நிற்கின்றேன்.
வளாகத் தலைமைத்தேர் வடம்பிடித்த முதலாசான் விழாவுக்கணி கட்டி விடுகின்ற பேச்சாளன் இலக்கியத்தில் உயிரோடும் இடமறியும் மேதாவி பலநாட்டு அறிஞரது படைப்புக்களை கற்றறிந்தோன் சங்க இலக்கியத்தில் தனிநீச்சல் போட்டெழுந்தோன் பொங்கும் புதுத்தமிழை புலர்வித்த தினகரனர் (இவருக்கு), கூடஇருந்தே குழிபறித்தோர் ஏராளம் வாடா வெளியே. வா பார்ப்போம் என்பதுபோல் சண்டைக்கிழுத்த சத்தியர்கள் ஒருபக்கம் கண்டனங்கள் பெய்த கருமேகம் மறுபக்கம் நட்டநடுவில். நாயகன்போல் சிரித்தபடி தொட்ட பணியை தொடர்ந்துசெய்த துணிவாளன் சீக்கிரமாய் இந்தச் சிகரத்தில் இடிவிழுந்து தாக்குமென யாரும் சத்தியமாய் எண்ணவில்லே மாட விளக்கொன்று மங்காமல் நூருமென்றும் ஒடி விடுமென்றும் உண்மையிலே எண்ணவில்லை எத்தன்ைபேர்தன்னை ஏற்றிவிட்ட ஏணியது இப்படியாய் சரிந்து இளமையிலே முறியுமென யாரும் நினைக்கவில்லை. யாவாரம் நடத்துகின்ற பேரும் நினைக்கவில்லை பொழுதுபட்ட நாளாச்சு
( 8 )

இறப்பு நியதி. அது எல்லோர்க்கும் ஆளனுப்பும் சிறப்பென்ருல் வாழ்ந்த சிலகாலம் பேர்சொல்லும் அம்பலத்தான் வந்தான் ஆடிச் சிரித்துவிட்டு வெம்பலென வீழாமல் விருதுபெற்றுச் சென்றுவிட்டான்.
அடியும் முடியும் அறிந்தவனின் அடிமுடியை பொடியள் சிலர் காணப் புறப்பட்டுத் தோற்றர்கள். தோற்றவரைக் கூடச் சோகத்தில் மூழ்கவைத்து, கூற்றேன் இயற்கையென்ன கொடுமதியோன் அழைத்துவிட்டான்.
பேரரசன் போனல். பிறகொருவன் வருவதுண்டு ஆரரசன் ஆரரசன், ஆருமில்லாப் பாழ்வெளியே நீண்டு கிடக்கிறது, நிழல்மரங்கள் தெரியவில்லை ஆண்ட கைலாசின், அரியணைக்கு ஆக்களில்லை.
சிம்மாசனம் காலி. சிற்றரசர் எவருக்கும், சும்மா அதைவந்து தொடும் தகுதி கூட இல்லை. சிலகாலமல்ல. சிலவேளை நூற்ருண்டு பலகாலம் கைலாச பதியின் இடம் வெளியாய் இருக்கும் அதைநிரப்ப எவருமில்லை, எவருமில்லை.
தொம்சன்முதல் எங்கள் துரையப்பா பிள்ளைவரை அருணகிரி தொடக்கம் அல்துரசர் வரையாவும் ஆய்ந்தறிந்து ஆழம் அளவிட்ட மேதையவன் சாயும் வரை அந்தச் சந்தணக்கை ஓயவில்லை.
நாவலரின் சபையோர்க்கும் நல்லபிள்ளை, முற்போக்குப் பாவலரின் கூட்டோடும் பல தொடர்பு, அமெரிக்கப் பேரரசின் இலங்கைப் பிரிவோடும் தொடர்புண்டாம் ஆரரசில் வந்தாலும் அவர்களுக்கு இவர் தேவை
ப்படியாய் பலதோற்றம் எடுத்ததுண்டு. என்ருலும் தீப்பொன்றும் செய்யாமல் சனத்தோடு நின்றமகன்.
கட்சிகளின் பின்னே கைலாஸ் திரியவில்லை கட்சிகளே கைலாசின் கச்சையிலே தொங்கியன எல்லோரும் கைலாஸ் எங்களுடன் என்று சொல்ல பல்வேழுய் செய்து பார்த்தார்கள் முடிவில்லை. இருக்கும்வரை எவரும் இனம்காணும் வகைதன்னை சுருக்காது எல்லோர்ச்கும் சுழித்துவிட்டுப் போனமன்னன் வட்டநிலவை. வழிமறித்தோம் என்பதுபோல் குட்டைச் சொறிநாய்கள் குலைத்ததுண்டு. . நீ சிரிப்பை
( 29 )

Page 17
மட்டும் உதிர்த்து மாமேதை யாகிநின்ருய்.
தவறுகளே செய்யாத தனிப்பிறவி இலையெனினும் குமுறும் அளவுக்கு. குற்றங்கள் செய்யவில்லை.
ஏழுத மேடை. எழுதாத பத்திரிகை. கவருத எண்ணங்கள். குறிப்பிடவே ஏதுமில்லை இந்த வயதினுக்குள். இதுபோதும் என நினைத்தா ? சொந்தத்தையெல்லாம் துவளவிட்டுப் போய்விட்டாய்.
நீ வளர்த்தோர் ஆயிரம்பேர் நிழல்கொடுத்த தாயிரம்பேர் பாவெழுத வாய்க்கால் பண்ணிவிட்ட தாயிரம்பேர் அவர்கள் அழுகின்றர் அவர்களுடன் சேர்ந்துகொண்டு கயவர் சிலபேரும் கண்ணீரை விடுகின்றர்.) உன்னிறப்பை ஏணியென உயர்த்தி சுதிபெற முன்னிப்போர் இப்போ முழுமூச்சாய் நிற்கின்றர். பாரதிக்கும் இப்படியோர் பரம்பரையே தோன்றியது ஆரறிவார் உந்தனுக்கும், அப்படியோர் கும்பலதா? ஈழத்திலக்கியத்தின் இயக்கத்தை உசுப்பிவிட்ட காலைக்கதிரே! கவிதைகளை, v கட்டுாையை நாவல் இலக்கியத்தின் நரம்புகளை, சிறுகதையை பண்டைத்தமிழரது பண்பாட்டை, வழிபாட்டை உண்டு களித்து உலகுக்குச் சொன்னவனே! ஆய்ந்த தமிழறிஞ! அறிவுலகின் முடிமன்னு! காய்ந்த நிலத்தினிலே கங்கையைப்போல் பாய்ந்தவனே! சென்றுவருக! திரும்பிவரா விட்டாலும் நன்றியென்ற ஓர் உணர்வை நாம் சுமந்து நிற்கின்றேம்? சென்று வருக! திசைபார்த்து காத்திருப்போம்! இன்றில்லாவிடடாலும், எப்போதெனும் வருக!
O "இல்லையென்ற கொடுமை உலகில் இல்லையாக வைப்பேன்" என்று ப்ாரதி பாடியபொழுது அவனது குரலே மக்கள் விழையும் எதிர்காலப் பொற்காலம் இடம்பெறுகிறதன்முே. கிருத யுகம் சென்ற காலத்தின் சிறப்பு அன்று. இனிவரும் காலத்தில் நிறுவப்படவேண்டிய புதுயுகத்தின் நாமம் ஆகும். - க. கைலாசபதி
கெ விமர்சனம் என்பது உலகை விவரிப்பது மாத்திரமன்று. அது உலகத்தை மாற்றியமைப்பதற்கு உழைக்கும் வர்க்கமும் அதன் நேச சக்திகளும் ஓயாது பயன்படுத்தும் அறிவாயுதமாகவும் இருத்தல் வேண்டும். அப்போதுதான் விமர்சன இலக்கியம் ஆற்றலும் அழகும் பெற்றுத் திகழும். - க. கைலாசபதி
( so

O சிறுகதை -
பொய்மையின் நிழலில்
செ. யோகநாதன்
கனகுவின் திடீர் வருகையை நான் எதிர்பார்க்கவில்லை, அதுமட்டும் ான் சங்கடத்திற்கான அடிப்படைக் காரணமில்லை. தாடியும் மீசையு மாய் நிற்கிற அவனையும், கையிலுள்ள இற்றுநைந்து போன சூட் கேசையும் பார்த்தபோது என்னேடு சில நாட்களாவது தங்க வேண்டு மென்ற முடிவோடுதான் அவன் வந்திருக்கிருனென்பதனை என்னல் உணர்ந்துகொள்ள முடிந்தது. திகதி முப்பது, மனதினல் எனது பொருளாதார நிலையினைக் கணக்கிட்டவாறே, ‘சரி உள்ளே வா. p ான்று அவனை அழைத்தேன்.
நான் தங்கியிருக்கும் இந்தக் குச்சறையில் இருவர் வாடகைக்கு வாழ்கிருேம். இரு 'காம் பெட்”டுகள். மூலையில் இழுத்துக்கட்டிய கயிற்றுக் கொடியில் அங்குமிங்குமாய் காற்சட்டை, சேட், சாறங்கள் கட்டிலில்கிடக்கிற துவாய். இடதுபுற மூலையிலுள்ள சிறிய பெட்டிக் குள் சங்கள் இருவரதும் அன்ருடப் பாவிப்புக்கான பொருட்கள். அதற்குப்பக்கத்திலே இரண்டு சூட்கேஸ். ஒரு நாற்காலி. சிறியஸ்டூலில் கூஜா.
"உடுப்பைக் கழற்றி மாற்று. அதோ அந்த ஒடையோடு போனல் இடது புறத்திலே கிணறும், பக்கத்தில் கக்கூசும் இருக்கிறது."
துவாவை உதறிமடித்து கனகுவின் கையிலே கொடுத்த போது, என் அறையின் பங்காளியான ஹேமச்சந்திரா வெளியேயிருந்து வந்து கொண்டிருந்தான்,
"இவன் என் தம்பி கனகரெத்தினம். ஊரிலையிருந்து வந்திருக்கிருன். அறையிலிருக்கிற நண்பன் ஹேமச்சந்திரா. என்னைப்போலவே வேலை."
கனகு புன்னகை செய்தான். இப்போதுதான் அவனது முதற் புன்னகையினைக் காண்கிறேன்.
"அப்படியானுல் இன்றைக்கு வேலைக்கு லீவா ?? நான் அதனைப்பற்றி இன்னமும் ஒரு முடிவுக்கும் வரவில்லை. கனகரெத்தினத்தின் திடீர்வருகை என்னுள் பல ஐயங்களை விளைவித் திருக்கிறது. அவன் இரண்டுமுறை பல்கலைக்கழகப் புகுமுகப் பரீட்சை
( 81 )

Page 18
யில் தோல்வியடைந்தவன்; அவனுக்கு படிப்பொன்றே தவமாய் இலட்சியமாயிருந்ததாகையிஞல் அடுத்தடுத்த அவனது தோல்விகள் என்னைப் பெரிதும் அதிாச்சிக்குள்ளாக்கித்தானிருந்தன. மூன்று தங்கை கள். கடைச்சிப்பந்தியான தகப்பனர். தொய்வுகாரத் தாய். இந்தக் குடும்ப பாரத்தை என்னேடு இவன் தாங்கிக்கொள்ள ஒரு நல்ல நிலைமைக்கு இவனை உருவாக்க வேண்டுமென்று நினைத்திருந்தேன். எங்களுக்கு சொந்தமான வயற்காணியை விற்று கனகரத்தினத்தின் மேல் முதலீடு செய்ய நாங்கள் யாவருமே முடிவு செய்திருந்தோம்,
ஆணுல் அதற்குத் தேவையில்லாமற் போய்விட்டது.
'தம்பியோடு கதைத்துவிட்டுச் சொல்கிறேன்’
முகம் கழுவிவிட்டு வந்த கனகு, தான் வந்த விஷயம் அப்படி யொன்றும் அவசரமில்லை; மத்தியானமே கதைத்துக் கொள்ளலாம் என்ருன்.
“இரவு ரயில் ஒரே சனமாயிருந்தது. நின்றுதான் பயணம் செய்த ஞன். நித்திரை தூக்கியடிக்குது."
என் மனம் இலேசான உணர்வுகொண்டது. இன்றைக்கு களனி யின் பிரதான வீதிக்கு தார் ஊற்றுகிற நாள், என் மேற் பார்வையின் கீழ் இருபத்தி மூன்று தொழிலாளிகள் வேலை செய்கிருர்கள். தார்ப் பீப்பாக்கள் எட்டுமணிக்கு “வேர்க் சைற் றுக்கு வந்துவிடும். "சைற் சுப்பவைஸா’ திடீர் லீவில் நின் முல் இஞ்சினியருக்கு கோபம் நெருப்பா யெழுந்துவிடும், திட்டத்தொடங்கினல் ஒவ்வொரு சொற்களும் புல் டோசராகி தன்மான உணர்வினை மிதித்து நசுக்கி கிளறிக்கொண்டே யிருக்கும். கடைசி அஸ்திரமாக, * இதுக்குத்தானே உங்களைப் போலை ஆட்களுக்கு நான் இரக்கமே காட்ட விரும்புகிறதில்லை" என்று இஞ்சினியர் தில்லைநாயகம் சொல்கிற போது அதைவிட வேறு சித்திரவதை வேண்டியதில்லை.
“சாப்பாடு, ஒரு ஆள் கொண்டுவரும் நீ சாப்பிட்டுவிட்டிரு. 905 மணிக்குள்ளே வந்திடுவேன்."
حسن 2 سے
அனல் வெய்யில் உடம்பை எரித்துக்கொண்டிருந்தது. இரண்டு வருஷங்களாகவே பழகிப்போன இந்தச் சூழ்நிலை, இப்போது மட்டும் புதியதல்லவாயினும் மனப் புழுக்கமும் உடற்புழுக்கத்தை அதிகரித்துக் கொண்டிருக்கின்றன, மத்தியானம் சாப்பிட்டுக்கொண்டிக்கும்போது, தான் இனி வீட்டிற்குப் போகப்போவதில்லையென்றும், எங்காவது ஒரு சிறிய வேலையாவது தேடிக்கொள்ளப் போவதாகவும் கணகரெத் தினம் சொன்னது என்னை மிகவும் நிலைகுலையவைத்துவிட்டது.
(32)

"இந்த சிங்கள ஏகாதிபத்தியந்தான் என்னை உயர்கல்வி பெற முடியாமல் வஞ்சித்து நடைப்பிணமாக்கியது. இதன் தயவிலே எனக்கு முன்னேற்றம் கிடைக்குமென்று நான் நம்பவில்லை. ஆராவது தமிழ னுடைய நிறுவனத்தில் சின்ன வேலை ஒன்று கிடைத்தாலே போதும் "
"இதை நீ ஊரிலை தேடிபார்க்கமுடியாதோ?”
கனகரெத்தினம் சிறிது நேரம் மெளனமாயிருந்தான். முட்களாய் நாடியில் குத்திநிற்கிற ரோமத்தினை வருடியவாறு யோசித்தான்.
"எவ்வளவோ முயற்சிகள் செய்தஞன், கொஞ்சங்கூட இரக்க மில்லாமல் நூறு நூற்றைம்பது ரூபா சம்பளத்தோடை என்னை "அமத்தலாம்" என்று நினைக்கிருங்கள்."
"இங்கைமட்டுமென்ன? அதே மாதிரித்தான் நிலைமை. என் மூன்று மொழி அறிவை குறிப்பிட்டு, வேலைதேடி நானும் கொழும்புக் கடை கள் பலவற்றிலை ஏறி இறங்கியிருக்கிறன்; நாயை விரட்டுகிறது போலை நடக்கிருர்கள். நீ நினைக்கிறது போலை தழிழன் என்றதாலை மட்டும் வேலையை தமிழரிட்டை இருந்து பெறமுடியாது.”*
"ஆனல் வெகு நிச்சயமாக சிங்கள ஏகாதிபத்தியத்திடமிருந்து மட்டும் எங்களுக்கு நியாயமோ நியாயபூர்வமான சலுகைகளோ கிடைக்குமென்று நான் நம்பவேயில்லை. அல்லாவிட்டால் இவ்வளவு படித்தும் நான் பல்கலைக்கழகத்திற்குப் போகாமல் இருந்திருக்க முடியுமா ? நான் ஒரு சிங்களவனுகப் பிறந்திருந்தால் எனக்கு இப் படியொரு நிலைமை வந்திருக்குமா ?. வெகுநம்பிக்கையாக நான் பல்கலைக்கழகம் போயிருப்பேன். என்ன செய்ய ? நான் தமிழஞய் பிறந்திட்டேன்."
அவனது வார்த்தைகள் கொதித்தன. முகம் பொருமி, ஏமாற்றம் நிறைந்திருந்ததை அவதானித்தேன்.
"என்னவோ முதலிலை நீ இந்தத் தாடி மீசையை வழித்துக்கொள். ஆறுதலாக யோசித்து விஷயங்களை மேற் கொள்ளலாம்."
س----- 3 سس
இரண்டு வருஷ கால நண்பனயிலும் ஹேமச்சந்திரா மிகவும் பொறுமையும், நற்பண்புகளும் நிறைந்தவன். என்னைப்பெரிதும் கவர்ந் திருந்தான். அதிகம் கதைக்கமாட்டான். கம்பஹாவைச் சேர்ந்தவன். கச் சிக்கனமானவன் ஆங்கிலமும் சிங்களமும் சரளமாகப் பேசுவான். சுறுசுறுப்பான அவனிடம் எந்த முணுமுணுப்பினையும் நான் கேட்ட தில்லை. என்னைப்போலவே லீவெடுக்காமல் உழைக்கின்ற சைற் சுப்ப வைசர்”*
( 33 )
矢 诹

Page 19
மாலைப்பொழுதில் களனியின் ஓரமாக நடந்துசென்று கொண்டிருந் தோம்; மிகக் குறைவான சம்பாஷணையோடு.
ஆற்றேரமாய் வழிந்து தெரிகிற சேரிப் புறங்கள். ஆறு சுமந்து வருகிற அழுக்குகள்; அக்கரையிலே தெரிகிற புதிய கட்டிடங்களின்
வேக வளர்ச்சிகள்.
ஹெமச்சந்திரா, கனகரெத்தினத்தின் படிப்பினைப்பற்றிக் கேட் டான் என் மனதிலே இலேசான சஞ்சலம் அரும்பிற்று கனகுவின் மனம் இப்போது உறங்குகிற எரிமலை. அது வாய் திறந்தால் ?.
"தமிழ் இளைஞர்கள் ஆயிரக்கணக்கிலே என்னைப்போல மனங் கொதித்திருக்கிருர்கள். மோசமாக வஞ்சிக்கப்பட்டிருக்கிருரர்கள். நீங்கள் ஒரு சிங்களவர் தனிப்பட்ட முறையில் நல்லவராயிருக்கலாம். ஆளுல் பொதுவாக சிங்கள அரசே எங்களைப் போல விரக்தியுள்ளவர் களை உருவாக்கியதற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும். நீங்களே யோசித்துப் பாருங்கள், நான் உங்கள் இனத்திலை பிறந் திருந்தால் எனக்கு இந்த அவலமான கதி ஏற்பட்டிருக்குமா?...”* கனகு கூறினன்.
அமைதியாக நடந்து வந்து ஹேமச்சந்திரா, அனுதாபத்தோடு கனகுவைப் பார்த்தான்.
“உங்களின் ஏச்சத்தையும் திறமையையும் என்னல் உணரமுடிகிறது ஆஞல் இந்தப் பிரச்சினை எங்கள் இனமாணவர்களுக்கு இல்லை யென்று நீங்கள் நினைக்கிறீர்களா ?..”*
கனகு மெளனத்தோடு ஹேமச்சந்திராவைப் பார்த்தான்.
“மாறி மாறி ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு அரசாங்கமும், தமிழ ருடைய கல்விச் சலுகைகளைப் பறித்து சிங்களமக்களுக்கு வழங்குகிற முயற்சிகளைச் செய்து வந்திருக்கின்றன. இதன் மூலம் சிங்களமக்களை ஒருபுறத்தில் திருப்திப்படுத்துவதாய் நினைக்க வைத்து ஏமாற்றி உள்ளன. இரண்டு இனமக்களின் பிரச்சினைகளையும் தீர்க்காமல், இவர்களை ஏமாற்றி ஒருவரோடு ஒருவர் அதிருப்தி கொள்கிற வழி வகைகளை வளர்த்து வந்திருக்கின்றன."
நான் ஆச்சரியத்தோடு ஹேமச்சந்திராவைப் பார்த்தேன். 'நீங்கள் நினைப்பதுபோல அட்வான்ஸ்லெவல் பரீட்சை எடுக்கிற எல்லாச் சிங்கள மாணவர்களும் பல்கலைக்கழகம் செல்லவுமில்லை .
எல்லாப் பட்டதாரிகளுக்கும் உரியவேலை கிடைக்கவுமில்லை."
( 34 )

வெகு தொலைவில் விமானத்தின் இரைச்சல் கேட்டது. அதனை மேவிக்கொண்டு யானையொன்றின் பிளிறல்போல ஆலைச்சங்கு, விம்மி யொலித்து ஓசை கரைந்தது.
"இந்த ஆண்டு புள்ளி விபரங்களையே பாருங்கள் 1,60,000 மாணவர்கள் ஜி. சி.ஈ.அட்வான்ஸ் லெவல் பரீட்சைக்குத் தோற்றினர். இதில் 5.400 போே பல்கலைக்கழக அனுமதி பெற்றனர். இந்தத் தொகையில் 1,80,000 - சிங்களவரும் மிகுதி தமிழரும் வருவர். அப் படியானுல் எவ்வளவு சிங்களவர் பல்கலைக்கழகம் போக முடியாதநிலை வரும். நிச்சயமாக ஒரு லட்சத்துக்கும் மேலல்லவா ? '
எனது மூளையுள் நிறையவே கேள்விகள் குதிர்த்தன. என்ன பயங்கரமான தெகையினர்? இவை அதிர்ச்சியான தகவல்களல்லவா. ** சிங்கள மக்களின், மாணவரின் அதிருப்தியை திசைதிருப்பவே தமிழரிடமிருந்து அவர்களின் உரிமைகள் பறித்தெடுப்பதைப் போன்ற "தரப்படுத்தல்" முயற்சி. ஆனல் அடிப்படையில் சிங்கள, தமிழின மக்கள் தொடர்ந்து இவ்விதமாக அவர்களின் அபிலாஷைகள் நிறை வேற்றப்படாமல், ஏமாற்றப்பட்டுக்கொண்டு வருகிருர்கள். இதை புத்தி பூர்வமாக நீங்கள் உணரவேண்டும். '
கனகுவைப்பார்த்தேன். முகத்திலே நிறைய யோசனை: மெளனத் துள்ளேயே சுழல்கிற மன எண்ணங்கள் முகத்திலே தெரிகின்றன. "அது மட்டுமில்லை யோகா, என்னைப் பற்றிய ஒரு உண்மையையும் இன்று சொல்கிறேன். 1978ம் ஆண்டு நான் கொழும்பு பல்சலைக் கழத்தை விட்டு பட்டதாரியாக வெளிப்ேறினேன். எனக்கு வேலையே கிடைக்கவில்லை. அதனுல் வேறு வழியின்றி சைற் சுப்பவைஸர்" வேலைக்கு வந்து சேர்ந்தேன். எனது குடும்ப நிலைமை அப்படி.." -இந்த அதிர்ச்சியிலிருந்து நீண்ட நேரமாய் நாங்கள் மீளவில்லை.
LJLA YAAASJAAAeASJAeYYeALAeA ST YeS AALLLLLSS V33 sists s
JeeJJAAALKSeee Ase eAASGLGAsseseA ele S TsssYSSSytqS زمرہ:بی ... محم
வதையின் கதை (தொடர்ச்சி
துன்புறுத்தல் தாங்கமுடியாது தண்ணிர் கேட்டேன். டின் ஒன் றில் சிறுநீரைக் கொண்டுவந்து ஊற்றினர், என்னைக் கீழ்மாடி அறைக் குக் கொண்டு சென்றபோது அங்கு குட்டிமணி நிர்வாண நிலையில் சரிந்து, ஒரு கையை நிலத்தில் ஊன்றிய நிலையில் வேதனை தாங்காது துடித்துக்கொண்டிருந்தார். குட்டிமணியைக் கட்டியிருந்த கயிற்றின் ஒரு முனை அறை மேற்கூரையிலுள்ள கொழுக்கியில் கொழுவப்பட் டிருந்தது தங்கவேலு கைவிலங்கிடப்பட்ட நிர்வாண நிலையில் நிற்க முடியாது சரிந்துகிடந்தார். என் கால்சட்டையைக் கழற்றி காலில் கட்டி அதன்மேல் கயிற்றைக்கட்டி தலைகீழாக தொங்கவிட்டனர். கைகளினலும் பொல்லுகளினலும் பல தடவை தாக்கினர். பின் இடுப் பில் சாக்கைக்கட்டி நெருப்புத்தணலில் மிளகாய்த்தூள் தூவி புகையை 'முகத்தில் படச் செய்தனர்- வாயாலும் மூக்காலும் நுரை வந்தது. உடல் மயிர்களைப் பிடுங்கினர்கள், நான் மயக்கமானேன். மற்ருெரு தடவை ஒரு அடி நீள இரும்புக்கம்பி ஒன்றினல் ஆசன வாயிலில் இடித்தனர். கம்பியை உள்ளே செலுத்தினர். நான் ‘சாகிறேன், சாகிறேன்" என்று கத்தினேன். - தேவன் - நீர்வேலி வழக்கில்
- 12-1-83 ‘வீரகேசரி', 'தினபதியில் வெளியிடப்பட்ட விபரப்படி. . . . .
( 35 )

Page 20
கைலாஸ் விதைத்த வயல் உண்டு
55 S ******** ISK ississis
காடழிந்து நெருப்பிட்டு கணுக்கட்டை வேர் பிடுங்கி ஏர் பிடித்து உழுதற்கு ஏற்ற நிலம் ஆக்கியவன் வாய் விட்டு நாம் கதற, தமிழ் வயல் விட்டுப் போய்விட்டான்.
ஊர்க்குருவி பன்றி மாடு உலாவி வரும் வயலோரம் இராப் பொழுது காவல் பார்த்து; வயல் கலை காத்த எங்கள் பதி விடியு முன்னே போய் விட்டான் விளக் கொளியைத் தந்து விட்டு:
விமர்சனத்தால் திறஞய்வால் விதைத்த வயல் உரமிட்டு இமைப் பொழுதும் உழைத்துத்தினம்; தமிழ் ஏழ்மைக்கு முடிவு சொன்ன கமக்காரன் போய்விட்டான்; எமை
கண்ணீரில் குளிக்க விட்டு.
விதைத்த நெல் வயல்களுண்டு வீசிய உரங்கள் உண்டு கமக்காரன் 'கைலாஸ்’ தந்த கை விளக்கு கையில் உண்டு இமைப் பொழுதும் சோர மாட்டோம் இங்கு வரும் பன்றி மாடு; தமிழ் இலக்கியத்தை தீண்ட விடோம்; அவன் இலக்கினையே நாம் தொடர்வோம் !
- சாருமதி --
( 36 )

பிராய்டு பற்றிய மீளாய்வு
மாதவன் .
மூன்று புரட்சிக் கருத்துகள்
மனித அறிவு வளர்ச்சியின் வரலாற்றுல் மூன்று கருத்துப் புரட் சிகள் தோன்றின என்பர். இவற்றின் முன்னர், மனிதர் பெருமை யாகக் கொண்டிருந்த கருத்துகளெல்லாம் சிதறடிக்கப்பட்டன என்றும் கூறுவர்.
(1) 500 ஆண்டுகளுக்கு முன்வரை பிரபஞ்சத்தின் மையமே உலகம். மற்றைய கோளங்கள் யாவும் உலகத்தைச் சுற்றிவருகின்றன என நம்பப்பட்டு வந்தது. கொப்பனிக்கஸ் (1473-1543) தான் முதன் முதலில் அப்படியல்ல, உலகம் சூரியனைச் சுற்றிவரும் ஒரு சிறிய கோளம் என்பதை நிரூபித்தார்.
(2) 125 வருடங்களுக்கு முன்வரை கடவுளே மனிதனைப் படைத் தான் என்று தம்பப்பட்டு வந்தது. டார்வின் (1808-1882) தான் அப்படியல்ல, ஒர் உயிரணுவின் பரிணும வளர்ச்சி - குரங்கின் பரி ணும வளர்ச்சியே மனிதன் என்பதை நிரூபித்தார்.
(3) சென்ற நூற்ருண்டின் கடைசிவரை சித்தாந்தவாதிகள் யாவ ரும் மூளையை நனவு மனத்தோடு சமன்படுத்தினர். சிக்மன் பிராய்டு (1856-1939) மட்டுமே முதன்முதலில் மூளையின் ஒரு சிறு பகுதியே நனவு மனம். அதன் பெரும் பகுதி நினைவிலி மனம் என்பதை நிரூபித்தார்.
பிராய்டு என்றதும் பாலியல் பற்றிய அவருடைய கருத்தே முன் னிற்கும். அவர் மனித வாழ்வு முழுவதும் பாலியல் மனம் என்று கூறிவிட்டார், மனித இனத்தைப் பற்றி இழிவுபடுத்திவிட்டார் என்ற குற்றச்சாட்டுகளே முன்றிற்கும். உண்மையில் தவருன கருத்து மூலம் அவர் உலகப் புகழ் பெற்றுவிட்டார் என்றே கூறவேண்டும்.
சில தசாப்தங்களாக மழுங்கலாக இருந்த அவர் கருத்துகள் இன்று மேல்நாட்டு சித்தாந்தவாதிகளாலும் உளவியல் வல்லுனராலும் மீளா யப்படுகின்றன.
நினைவிலி மனம்
*கருத்துருவங்கள் நினைவிலி மனம் சார்ந்தவை. பெரும்பான்மை மனிதரிடம் இயல்பாகவே இவை திவிக்கப்பட்டு விடுகின்றன. நினைவிலி
( 37 )

Page 21
மனம் அனுதியானது. கருத்துருவங்களுக்கும் வரலாறு கிடையாது" இவ்வாறு அல்தூசர் போன்ற சித்தாந்த் வாதிகள் இன்று கூறுகின்ற னர். -
*பிராய்டு புதிய உலகத்தைத் திறந்தார். நாம் இப்பொழுதே அவரை ஆராயும் ஆரம்ப நிலையில் உள்ளோம்" என்றும் அல்துரசர் எழுதியுள்ளார். இன்றைய உலக மார்க்சிய அறிஞர்களில் ஒருவராக இவர் கருதப்படுவதை யாவரும் அறிவர்.
மார்க்ஸ் உற்பத்திச் சக்திகளைப் பற்றி ஆராய்ந்தார். மார்க்சிய கோட்பாடு மனித அறிவு வரலாற்றின் முன் என்றுமில்லாத புரட்சி என்றும் அவரே கூறியுள்ளார்.
பிராய்டு இந்த நூற்ருண்டு மனிதரே. அவர் 1939ல் புற்றுநோயி ஞல் மரணமடைந்தார். மனித மனம், சிந்தனை, உளவியல், கனவுகள், பாலியல் பற்றிய அவரது கருத்துகள் பல இன்று உலகில் ஆதிக்கம் பெற்றுள்ளதை எவரும் மறுக்க முடியாது. ܖ
பிராய்டின் பாலியல் பற்றிய கோட்பாடுகளை பலர் வெறுத்த போதும் அக்கருத்துக்கள் இன்று உலகத்தில் பெற்றிருக்கும் ஆதிக் கத்தை எவரும் ஒதுக்கிவிட முடியாது. .
பிராய்டின் கருத்துக்கள் இந்த நூற்ருண்டில், கலை, இயக்கத்தில் ஏற்படுத்திய பாதிப்புகளுக்கு எல்லையே இல்லை.
பிராய்டின் பின்னரே புதிய பேச்சொன்றைக் கேட்க முனைத்தோம் அதுவே நினைவிலி மனதின் பேச்சாகும், என்ருர் ஒரு அறிஞர்.
வாழ்வும் கல்வியும்
பிராய்டு மே மாதம் 1856ல் பிறந்தவர். யூத இனத்தைச் சேர்ந்த வர். இன்றைய செக்கோ சிலாவிகியா நாட்டிலேயே பிறந்தார். தத் தையார் ஒரு கம்பளி வியாபாரி. வியன்ஞநகரில் பின்னர் குடியேறினர். வியன்ன பல்கலைக் கழகத்தில் டாக்டராக 1881ல் பட்டம் பெற்ருர், மருத்துவத் தொழிலிலும் பார்க்க விஞ்ஞானத்திலேயே அதிக நாட்டம் கொண்டார். மாதா என்ற பெண்ணை காதலித்துத் திருமணம் செய்து
கொண்டார்.
ر"3$ )

புலமைப் பரிசில் பெற்று பாரிசில் சிலகாலம் பயின்ருர். அவ்வே ளேயே “கிஸ்ரீறியா" என்ற நரம்புத்தளர்ச்சி நோய் பற்றி ஆராய்ந்தார். உறுப்புக் கோளாறினல் பெண்களுக்குமட்டும் வரும் நோய் என்ற கருத்தே அக்காலத்தில் நிலவியது. பிராய்டு மூளை நரம்புகளின் பாதிப்பால் ஏற்படுகிறது என்று கூறிஞர். சில துன்பு நிகழ்வுகள் மூளையைப் பாதிக்கின்றன. அவை நினைவிலி மனதில் உள்ளன. அவற்றை உளவியல் ஆய்வு, விசாரணை மூலம் வெளிக் கொணர்ந்து நோயாளியை மாற்றிவிடலாம் என்ற கருத்தை முதன் முதலில் முன் வைத்தவர், பிராய்டே,
பிராய்டு தன் தந்தையை 40 வயதில் இழந்தார். 6 பிள்ளைகள், மனைவி, சகோதரி யாவரையும் பராமரிக்கும் பொறுப்பு அவர் தலையில் வந்தது. 10 வருடங்கள் நோய், அதிகவேலை, பண நெருக்கடியால்
கஷ்டப்பட்டார்.
கனவுகள்
இந்நூற்றுண்டின் ஆரம்பத்தில் கனவுகள் பற்றிய விளக்கங்களை ஆராய்ந்து வெளியிட்டார். களவுபற்றிய 2 புதிய கருத்துகளை முதன் முறை கூறியவர் அவரே.
(1) எல்லா கனவுகளும் விருப்புகளை நிறைவேற்றுவதாகவே பிரதி
பலிக்கும். (2) கனவு காணும் செயல் நினைவிலி மதிைன் செயல்பாட்டிற்கு
எடுத்துக் காட்டாகும்.
கனவு நித்திரையின் போதே வருகிறது. மனிதனின் நினைவுமனம் அவ்வேளை அமைதியடைந்து விடுகிறது"கனவு காண்பது இயல்பானது. நோயல்ல. விருப்புகளையே பெரும்பாலும் கனவுகள் பிரதிபலித்தாலும் நீங்கள் விரும்புபவற்றை எல்லாம் கனவில் காண முடியாது. w விருப்பு, மனதுள் நன்கு மறைந்துள்ளது. கனவில் திரிபு பட்டும் விடுகிறது,பால் விருப்பை ஒட்டிய கனவு என்பதை நீங்கள் அறிய முடியாதிருக்கலாம்,
விருப்பை நிறைவேற்றும் கன வுகள் பெரும்பாலும் பாலியல் ஒட்டியதாக இருக்கலாம். விருப்பின் ஒரு பகுதியே தணிக்கை செய்யப் பட்ட நிலையில் கனவில் தோன்றலாம். *
( 3 )

Page 22
ஒரு பெண் சீப்பை கனவில் கண்டாள். காரணத்தை ஆராய்ந்த போது அவளின் தாய் மற்றவர் சீப்பை பயன்படுத்தப்படாது என்று கண்டிப்பாக மகளிடம் உத்தர விட்டதே பலகாலத்தின் பின் கனவில் தோன்றியது. பல சம்பவங்கள் ஒன்று திரண்டு குறியீடாக, மாதிரி யாக கனவில் தோன்றலாம். கனவுகளின் விளக்கங்கள் அத்தனே சுலப
DIT Gurraren 6uuluva).
நரம்புத் தளர்ச்சியின் நுண் மாதிரி அமைப்பாகவே கனவு உள்ளது" தரம்புத் தளர்ச்சி என்பது நோயுள்ள நிலையல்ல, மனதின் செயற்பாட் டின் மற்றேர் நில; பிரதிபலிப்பு. மனதின் ஆழத்தில் பதிந்து மறைந் துள்ளவை விசாரணை மூலமும் எளிதில் வெளிவரமாட்டா.
இரு கோட்பாடுகள்
பிராய்டு இரு கோட்பாடுகளை முன் வைத்தார்.
(1) இன்பியல் கோட்பாடு: உடனடி மகிழ்வை நோக்கியே மனிதன்? உறுப்புகள் முதலில் இயங்குகின்றன. அதாவது விருப்புகளை நிறைவேற்றி திருப்தியடைவது இது நினைவிலி மனதுடன் ஒன் றியது.
(2) யதார்த்த கோட்பாடு திருப்தி, மகிழ்ச்சி ஏற்படுவதை தாம கப்படுத்துவதாகும்; சித்தனையோடு இணைந்தது. பாலியல் உணர் வுகளை தற்காலீகமாக தள்ளிப்போடுவதுடன் தம் சக்தியை. சிந் தனே, உழைப்பு, விளையாட்டு ஆகியவற்றை நோக்கி திசை திருப்புவது.
இவ்விரண்டு உணர்வுகளும் பகைமை கொண்டவையல்ல. இரண்
டுமே உணர்ச்சிகளின் விசைநிகலயை, உச்சநிலையைத் தணிப்பவையே.
எல்லா பழக்கங்களும் உணர்ச்சி நிலைகளை தணிக்கும் நிலயை நோக் கியே செயலாற்றுகின்றன.
குமரன் சந்தா 6 இதழ்கள் ரூபா 11 12 sy ரூபா 20
ஆசிரியர், குமரன் 201, டாம்வீதி, கொழும்பு-12.
(40)

அரிய நூல்கள் மீண்டும் கிடைக்கும்
சடங்கு செ. கணேசலிங்கன் செவ்வானம்
தரையும் தாரகையும் p.
போர்க்கோலம் 9
மண்ணும் மக்களும் அந்நிய மனிதர்கள் y V வதையின் கதை கலையும் சமுதாயமும் J சொந்தக்காரன் பெனடிக்ற் பாலன் வெற்றியின் இரகசியங்கள் அ. த. கந்தசாமி உயர்தர இரசாயனம் கணேசர் சிவபாலன்
(A. L. augül Luna-1576)
ரூ. 12.00
15.00
16.50
14.25
10.50,
13.50
15.75
11.25
13.50
15.00
90.00
இலக்கியச் சிந்தனைகள்- க. கைலாசபதி
19 ஆராய்ச்சி, விமர்சனக் கட்டுரைகளைக்
கொண்டது
ரூ. 15/-
விற்பனையாளர்களுக்கு கழிவு உண்டு. முற்பணம் அனுப்புவோருக்கு பார்சல் செலவு இளும். வி. பி. பி. ஏற்கப்படும்.
விஜயலட்சுமி புத்தகசாலை
248, காலிவீதி
கொழும்பு 6.
வெள்ளவத்தை
தொல்பேசி; 588930

Page 23
Kumaran 59 (15-1-1983), 201 ||
குமரன் குறிப்பு
அண்மையில் குமரன் ஆர்வலர் பளித்தது. குமரன் 57 இதழ் விற்பே கிருேம். அதற்குரிய காரணங்களு அரசியல், கலே இலக்கியத்தில் யதா குமரன் கடைப்பிடிப்பதும் முக்கிய இல்லாத பல தனிச்சிறப்புகள் குமர தங்கியிருக்கவில்லே. அதனுலும் சுத நி3லயில் உள்ளான். கலே, இலக்கி பல சிற்றேடுகள் நல்லபிள்ளே கள போது பிற்போக்கு அரசியலுள் த என்றே கூறமுடியும்.
மனித வதைகள் பற்றிய க,ை தராதபோதும் முதலாளித்துவ பத் லாம். இவற்றைப் படிக்கும் போ பண்பாட்டையும் மனிதாபிமான யையும் காணலாம். இவற்றை ே கலேயுருவம் தருவதற்கும் ஏன் அ வில்லே இவர்கள் தம்மை பாரதி நகைக்கத் தக்கதே.
சென்ற இதழ் கைலாசபதிக்கு விதழ் ஏற்படுத்திய தாக்கத்தை நா பிரதிகள் அச்சிடமுடியாது நேர்ந்த இவ்விதழிலும் அன்ஞரின் சில கரு இடம் பெற்றுள்ளன. பால் பொங் நாம் முற்ருக விடுபடவில்லே என்
அச்சு குமரன் அச்சகம், 2011 டாப் ஆசிரியர்: செ. கணேசலிங்கன்

Dam St. Colombo -12
ர்கள் காட்டிய ஆர்வம் எமக்கு வியப் னயை வைத்தே கணித்துக் கூறு நம் ஆராயப்படவேண்டியவையே. Tர்த்த நிலேயை, விஞ்ஞான நோக்கை
காரணமே, பிற சிற்றேடுகளுக்கு னுக்குஉண்டு. குமரன் விளம்பரத்தில் நந்திரமாகக் கருத்துகளேக் கூறத்தக்க யம் அரசியலுக்குப் புறம்பானதல்ல, ாகத் தம்மைக் காட்டிக் கொள்ளும் ம்மைப் புதைத்துக் கொள்கின்றனர்
தகளே எமது சிறு சஞ்சிகைகள் ந்திரிகைகளே வெளியிடுவதைக் கான தே இத்துவரும் முதலாளித்துவ த்தை அவர்கள் மதிக்கும் முறை நரடியாக வெளியிடத் தயங்குவோர் ஞ்சவேண்டும் என்பதுதான் தெரிய பரம்பரையினர் என்று கூறுவதும்
சிறப்பு அஞ்சலி செலுத்தியது. அவ் ாம் அறிவோம். அவ்விதழில் போதிய து வருத்தமே. அதைத்தொடர்ந்து த்துகளும் பலரது அஞ்சவிகளும் கலுல்ல, கன்னீர் பொங்கவிலிருந்து பதை இவ்விதழிலும் காணவிாம்.
வீதி, கொழும்பு-12