கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: குமரன் 1983.02.15

Page 1
* குமரன் 66
செ. யோகநாத
* பாரதி பார் F-4
த ச இராசாமணி
* சொல்லும் விந்தன்
* எரிதழல் தேடுவேன்
யோ, பெ.
* தனிச்சிங்களப் பெருை
சாருமதி
* {ւpւգhւ
பெனடிக்ற் பாவன்
* பிராய்டு பற்ற மாதவன்
R. E. F. FFF
 
 
 

K K a TSaLa LT L L TLTTTT TT TT L T L TTT T u TTTTu
மீளாய்வு
* ஒரு தாயின் குரல்
GJ. IGJIJSing.:T
பர்க்கச்சார்பும் - 3
* எங்கே செல்கின்றிர்? புதுவை இரத்தினதுரை
மகளும் தமிழ் கனவுகளும்
s கேள்வி ? பதில்
றிய மீளாய்வு 12

Page 2
குமரன் - சில குறிப்புகள்
குமரன் 80ஆவது இதழ்; பூரிப்பே ஏற்படுகிறது. இவ்விதழை ஒட்டி ஆங்காங்கே விமர்சனங்கள், கருத்தரங்கங்கள் நடாத்துவதாக இருந் தோம். 60ஆவது இதழையும் சிறப்பிதழாக வெளியிட இருந்தோம். பின்னர் இம்முயற்சிகள் கைவிடப்பட்டன. குமரன் இதழ்களைப் பின் ளுேக்கிப் பார்க்கும் கட்டுரை ஒன்று மட்டும் இவ்விதழில் வெளியிட்டுள் ளோம். காரணம்: இதனினும் மிகப் பெரிய பணி ஒன்று எம்முன் நிற் கிறது. அதுவே மார்க்ஸ் மறைந்த நூற்றண்டு நினைவு. மார்ச் 14இல்
வருகிறது.
இந்நினைவை ஒட்டி அடுத்த இதழ் சிறப்பிதழாக வெளிவரும். அது மட்டுமல்ல குமரன் 61- 72 வரை இதழ்கள் மார்க்ஸ் தந்த சமூக விஞ்ஞானக் கோட்பாடுகளை எளிதாக அறிமுகப்படுத்துவதற்கு முக்கி யத்துவம் தரப்படும். இவ்விதழிலேயே புலவர் இராசாமணி அவர்கள் "பாரதி யார்? என்ற தொடர் கட்டுரையில் வரலாற்றுப் பொருள் முதல் வாதம் பற்றிய முக்கிய கருத்துகள் சிலவற்றைக் கூறியுள்ளார். மார்க்சை ஓரளவாவது அறிந்து கொள்ள விரும்புபவர்கள் தமது சந்தே கங்களைக் கடிதமாக, வினக்களாக எழுதியனுப்பலாம். மார்க்ஸ் நினை வாக ஆங்காங்கே நடைபெறும் கூட்டங்கள், கருத்தரங்குகளிலும் பங்கு பற்றுவதும் பயன்தரும். ஆரம்ப அறிவைத் தரக்கூடிய பிரசுரங்கள் நூல்களும் எளிதில் கிடைக்க ஆவன செய்வோம்.
இரு பிரிவினர் பற்றி குமரன் ஆர்வலர்கள் விழிப்பாக இருக்க வேண் டும். ஒன்று: மார்ச்சிய விஞ்ஞானத்தில் ஆரம்ப அறிவும் இல்லாதவர்
மூலதனம்
தொழிலாளர்கள் மூலதனம் நூலை இலகுவில் அறிந்திருப் பதன் காரணம் அவர்களது நாளாந்த யதார்த்த வாழ்வை மூலதனம் விஞ்ஞானபூர்வமாகக் கூறுவதேயாகும். முதலாளித் துவ அமைப்பின் சுரண்டலால் அவர்கள் துன்பப்படுகின்றனர். அதனுலேயே மூலதனம் சர்வதேசத் தொழிலாளர் இயக்கங்
களின் பைபிளாகும் என்று ஏங்கெல்ஸ் 1886இல் கூறிஞர்.
- அல்துாசர்.
குமரன்,
 

மாரீக்சிஸ்டுகள் என்று தம்மையும் கூறிக் கொண்டு கருத்து முதல் வாத மாகப் பேசித் திரிபவர்கள். இரண்டு: மார்க்சிய சமூகவிஞ்ஞானத் தைச் சிறிதும் கற்காது, எம்மைத் தூற்றித்திரிபவர்கள். இவர்கள் இரு வருமே மார்க்சியத்தின் எதிரிகள். அவர்களை நாம் இனங் கண்டு கொள்ள வேண்டும். அதற்கு ஒரே வழி மார்க்சியத்தை நன்கு அறிய முயல்வதே. ஒரளவாவது கற்றுக் கொள்ளின் போலிகளையும் கருத்து முதல்வாதிகளையும் எளிதில் இனங் கண்டு கொள்ளலாம்.
சிக்மன் பிராய்டை நாம் அறிமுகம் செய்ததற்கும் ஒரு காரண முண்டு. அது சித்தாந்த ரீதியானது. அவரே நனவு மனதிலும் பார் க்க நனவிலிமனம் மூளையின் பெரிய பகுதியை ஆட்கொண்டுள்ளது என்ற உண்மையை முதலில் வைத்தவராகும். கருத்துருவங்கள் யாவும் நினைவிலி மனம் சார்ந்தவையே (இன்றைய) சட்டம்,அரசியல், சாதி, மத, இன, மொழி, கலை இலக்கியம் ஆகிய கருத்துருவங்கள் ஏற்படுத்தி யுள்ள பாதிப்பு யாவும் எம் சிந்தனை என்ற ஒளிமிக்க கண்ணுடியின் மேல் தூசியாகப் படிந்துள்ளன. இதல்ை அனைவராலும் நினைவிலி மனதில் படிந்துள்ள இத்தூசிகளின் ஊடாகவே சமுகத்தைப் பார்க்க முடிகிறது" ஆகவே அவை விஞ்ஞான பூர்வமான பார்வையல்ல. விஞ்ஞான பூர்வ மாகப் பார்க்க வேண்டின் விஞ்ஞான பூர்வமான கோட்பாடுகள் மூல மாகவே தூசிகளுக்கு ஊடாக சரியான கருத்துகளைக் காண மு44ம் அக்கோட்பாடுகள் இரண்டு. ஒன்று மார்க்ஸ் தந்த வரலாற்றுப் பொ ருள் முதல் வாதம் என்ற விஞ்ஞானம். இரண்டாவது இயக்கவியல் பொருள் முதல் வாதம் என்ற சித்தாந்தம். இவையிரண்டும் பாட்டாளி வர்க்கத்திற்கே உரியவை; அவர்களால் மட்டுமே எளிதாகப் புரிந்து கொள்ளக் கூடியவையாகும்.
மற்ற வரிக்கத்தவர் இவ்விஞ்ஞானத்தை நன்கு கற்று பாட்டாளி வர் க்க த்த வ ரின் வர்க்க நலனுடன் தம் சிந்தனையை இணைத்துக் கொள்வதன் மூலமும் இவ்வர்க்கத்தவரின் போராட்டங்களில் ஈடுபடு வதன் மூலமுமே சரியான மார்க்சிஸ்ட் லெனினிஸ்டாக வளர முடியும்.
9. :0000488 w
Ksaw w « « » Ο Κ.) A 哈哆哆**** t AAAqLLLL LLLLLLLL0LqL LLLLLLLL0L0000L0000000S0LLLL00L00L
குமரன் சந்தா 6 இதழ்கள் ரூபா 11 12 99 ரூபா 20
ஆசிரியர், குமரன் 201, டாம்வீதி, கொழும்பு-12.
குமரன் பக்கம் 1

Page 3
குட்டிக் கதை (ԼՔ ԼԳ 6)
o 8 - g-p محمحسبيحم﴿5
யோ. பெனடிக்ற் பாலன்
அது ஒரு பழைய கட்டில். அவன் வேலை முடிந்து வந்து அதில் படுத்துக் கொள்வான். சில வேளை முதுகில் கடிக்கும். சொறிந்துவிட்டுத் தூங்கிவிடுவான். முதுகில் கடிக்கும் இடங்கள் அதிகரித்து வந்தன. அவன் தூக்கத்தில் அவ்விடங்களைச் சொறிந்து விடுவான்.
பல நாட்கள் முதுகுக் கடியினல் நித்திரை முறிந்தது. தன் கட்டிலில் உள்ள மெத்தைத் தும்புகள் தான் குத்துவதாக நினைத்தான். அதன் மேல் ஒருவிரிப்பைப் போட்டுப் படுத்தான். கடி குறையவில்லை.
காலை பில் முதுகைத் தடவும்போது தடித்த தழும்புகள் பல இடங் களில் காணப்பட்டன. அவனுக்கு வேலைச்சுமை. அதைப் பற்றி யோ சிக்க நேரமில்லை. ஒருநாள் அவன் கட்டிலில் இருக்கையில் ஒரு மூட்டைப் பூச்சி அவன் காலில் ஊர்ந்தது. அதை மெதுவாகச் சுண்டிவிட்டான். அவன் ஒரு ஜீவகாருண்யன், அவனுக்கு அந்தக் கடிகள் பழகிவிட்டன. கையால் சொறிந்துவிட்டுத் தூங்கிவிடுவான்.
ஒருநாள் அவனல் துரங்கவே முடியவில்லை. புரண்டு புரண்டு படுக்க கட்டிலில் படுமிடமெல்லாம் கடி. கடிக்கும் இடங்களைத் தடவிப் பார்த் தான். இரண்டு மூன்று மூட்டைப் பூச்சிகள் அகப்பட்டன.
எழுந்தான். விளக்கை ஏற்றினன். மெத்தையைத் தூக்கி வெளி யில் போட்டான். கட்டிலைக் கூர்ந்து பார்த்தான் வெளியில் சென்று ஒரு கூரான இரும்பூசி எடுத்து வந்தான். கட்டில் துவாரங்களுக்குள் குத்தி ன்ை. மூட்டைப் பூச்சிகள் கும்பல் கும்பலாக விழுந்து அங்குமிங்கும் ஓடின. அவன் கோபாவேசத்துடன் அவற்றைத் துரத்திக் குத்திக் கொன்ருன்.
விழுந்த மூட்டைப் பூச்சிகள் அவனிடமிருந்து தப்பும் நோக்கத் துடன் ஒடிக் கொண்டிருந்தன. ஒரு மூட்டைப்பூச்சி விழுந்த இடத்தி லேயே கிடந்தது. ஒடிய மூட்டைப் பூச்சிகளுக்கு ஆச்சரியம்.
*நீ சாகவா போகிருய்? அவன் எங்களைத் துரத்திக் கொல்கிருன். நீ ஓடாமல் இருக்கிருய்?" என்று கேட்டன.
"நீங்கள் இமயமலைக் கோடினலும் அவன் எங்களைக் கொல்லாமல் விடமாட்டான்! விடவேமாட்டான்."
அந்த மூட்டைப் பூச்சி உறுதியாகக் கூறியது. "நீ ஏன் அப்படிச் சொல்கிருய்? ஒடிய மூட்டைப் பூச்சிகள் பயந்து நடுங்கிக் கேட்டன. அந்த மூட் டைப் பூச்சி கண்களை மூடிக் கொண்டு கூறியது:
"நாங்கள் உறிஞ்சிக் குடித்தது அவனுடைய இரத்தம்."
uskas 2 குமரன்

கேள்வி? பதில் 1 --- 6nu6io"” ༤-─ཁཡ བཛངས་མ་ཕམ། - -ཡག( تقسیمایی به بیبیسی می
கே. பொலிஸ், ராணுவ வதை பற்றி முதலாளித்துவ பத்திரிகைகளே போட்டி போட்டுக்கொண்டு செய்திகளை வெளியிடுகின்றவே, இது அரசை மதிப்பிறக்கம் செய்யும் வேலையல்லவா?
- க. முத்துவேல், கொழும்பு.
ப: முக்கியமாக இரண்டு தமிழ்ப் பத்திரிகைகளே இப்பணியைப்புரி கின்றனர். ஆங்கில இதழ்கள் பெரும்பாலும் இருட்டடிப்பே செய்கின்றன. தமிழ்ப் பத்திரிகைகள் விற்பனைக்காகவே இப் பணியில் ஈடுபட்டுள்ளன. நீதி 1 ன்ற த்தில் நடைபெறும் விசா ரணைகள் என்பதால் தடையின்றி வெளியிட உரிமை உண்டு" (பூர் ஷ்வா) ஜனநாயகத்தின் சிறப்பு என்றும் இதைக் கூறிக் கொள்வர். முதலாளித்துவம் பிறக்கும் போதே அதை அழிக்கும் கருவையும் அது கொண்டுள்ளது என்று மார்க்ஸ் கூறினர். முத லாளிகள் பணத்திற்காக எதையும் செய்வார்கள். போட்டா போட்டியில் அவர்கள் கண்கள் பலவேளைகளில் மூடப்பட்டுவிடு கின்றன. பத்திரிகைகள் பரபரப்பூட்டும் செய்திகளையே விற் பனைக்காகப் பெரும்பாலும் பயன்படுத்துகின்றன. செக்ஸ், வன் செயல், பரபரப்பூட்டுபவை முதலாளித்துவ இதழ்களின் விற் பனைப் பண்டங்கள். சினிமா, கலை, இலக்கியத்திலும் இத்தகைய போக்கைக் காணலாம். வதை பற்றிய உண்மைச் சம்பவங்களும் உணர்ச்சியும் பரபரப்பும் வன்செயலும் கொண்ட செய்திகளல்லவா?
கே: தற்போதைய தெரிவு முறையில் சிங்கள மாணவர்களா, தமிழ்
மாணவர்களா கூடுதலாகப் பாதிக்கப்படுகின்றனர் ?
- d. முத்தையா, கண்டி.
ப: உயர் கல்வி பெறுவதற்காக நடைபெறும் போட்டியே நாட்டின்
மிகப் பெரிய பிரச்சனையே அன்றி தரப்படுத்தலல்ல என்ற கருத்தையே குமரன் வைத்தான். பரீட்சை எழுதும் 1000 பேரில் 34 பேரே நுண் էքճվ பெற 966 பேரும் நடுத்தெருவுக்குத் தள்ளப்படுகின்றனர். இந்த 34 பேரை முதலாளித்துவ அரசு தற்போது அபிவிருத்திக்கு நட்ாத்தும் லாட்டரிச் சீட்டுப் போன்ற ஒருமுறை மூலமே தெரிந்தெடுக்கல7ம். போட்டிப் பரீட்சை என்று கூறி இளம்வயதினரின் நேரத்தையும் மூளை யையும் சிதறடித்து விரக்தியடையச் செய்ய வேண்டியதில்லை. பிரச்சனை எங்கோ இருக்க பொய், ஏமாற்று, புரட்டுச் செய்து மக்களைத் தவருன வழிக்குத் திசை திருப்புவது முதலாளித்துவத்தின் தொழிலாகும். இவ் ஏமாற்றுப் படுகுழியில் நாமும் விழுந்து விடப்படாது.
கே. புதிய அதிர்ஷ்டலாபச் சீட்டுப் பற்றி என்ன கூறுவீர்?
-தி. சிவராமன், கொழும்பு.
பு: மக்களை அபிவிருத்தியில் நம்பிக்கை வைக்காது அதிர்ஷ்டத்தில்
அதிக நம்பிக்கை வைக்கச் செய்யும் புது முயற்சி.
குமரன் பக்கம் 3
va

Page 4
எரிதழல் தேடுவேன்
இன்ன செய்வோருக்கு அவர் நாண நன்னயம் செய்யுமாறு வள்ளுவன் சொன்னுன் ஒரு கன்னத்தில் அடித் தோருக்கு
LD ID) கன்னத்தையும் கொடுக்கும்படி யேசு சொன்னுர் என் உழைப்பைச் சுரண்டி என் வயிறு காயவிட்டு எனக்கு இன்னு செய்தோருக்கும் என் இரு கன்னத்திலும் மாறி மாறி அறைந் தோருக்கும் நன்னயம் செய்து செய்து வாழ்வின்
இனியவை யெல்லாம் இழந்து நிற்கிறேன் ஏமாளியாய் ஏங்கி நிற்கின்றேன் வெட்கமிலா நாய்கள் நாணிக் கோணது என் தலையில் ஏணி வைத்து
--யோ. பெ.--
மாடி ஏறுகிருர் ஏறி நின்று வள்ளுவரையும் . யேசுவையும் எமக்குக் காட்டுகிருர். தானுகச் சாகாத இந்த உயிர்களே அறிந்தே பாரதி கொடுமையை எதிர்த்து நில் தனி ஒருவனுக்கு உணவில்லை யெனில் இந்த ஜெகத்தினை அழித்திடென்முன் அவனே தோழன் அவனே நண்பன் உணவின்றி ஏங்கும் நான் அவன் வழி செல்வேன் என் வயிற்றில் இரை பிடுங்கும் கைகளை எரித்திட எரிதழல் தேடுவேன் என் வழி பிழை என் போர் நிச்சயம் மாடியில் இருப்போரே.
9 பொருளாதாரத்தை முன்வைக்கும் தொழிற்சங்க வர்க்கப் போராட்டம் சுரண்டலுக்கு எதிரான தற்காப்புப் போராட்டமாகும். அரசியல் வர்க்கப் போராட்டம் எதிர்த்தாக்கல் போராட்டமாகும்; தொழிலாள வர்க்கத்தவரும் அவர்களைச் சார்ந்தவர்களும் அரசிய
லாதிக்கத்தைக் கைப்பற்றுவதாகும்.
பக்கம் 4
குமரன்
 
 

ஒரு தாயின் குரல்
- செ. கணேசலிங்கன்
அந்தத் தாய் கொடிகாமம் புகையிரத நிலையத்தில் இறங்கிவிட்டாள்ே
அவளது பெயரையோ, ஊரையோ நான் கேட்கவில்லை. யாழ்ப்பாண நிலையத்தில் நான் இறங்கும்வரையும் அவளது பேச்சுக்கள் என் செவி களில் ஒலித்துக் கொண்டிருந்தன.
இன்னும் அத்தாயின் முகம் மங்கலாக என் நினைவில் அடிக்கடி பளிச் சென்று தோன்றி மறைந்து கொண்டிருக்கிறது. அம்மங்கிய முக உருவில் பலநூறு தாயரின் முகத்தைக் காண்கிறேன்; குரல்களைக் கேட்கிறேன். தின்பதும் சாணிபோடுவதுமான எருமை மாடுபோல மனிதனும் வாழ்வதா என்று அவள் கூறிய வார்த்தை இன்னும் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அவளது அரசியற் கருத்துக்களை நாள் ஏற்காதபோதும் அவள் என் சிந்தனையில் எத்தனை தாக்கம் ஏற்படுத்தி விட்டாள்.
கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து நண்பகல் யாழ்ப்பாணம்
புறப்படும் உத்தரதேவியில் ஏறினேன். இடதுபுற சீட் காலி. நான்படிக்க எடுத்து வந்த புத்தகங்கள், பத்திரிகைகளை அதில் போட்டேன். வலது புறத்தில், நடைபாதைக்கு அருகாக இரண்டு சீட்டுகளிலும் அந்தத் தாய், மகள், ஒரு கைக்குழந்தை.
வண்டி மெதுவாக ஒடிக்கொண்டிருந்தது. குழந்தையின் துள்ளலும் கலகலப்புச் சிரிப்பும் புத்தகம் மேலிருந்த என் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருந்தது.
என் பத்திரிகைகளைப் படிப்பதற்காக மூத்தவள் வாங்கினுள். இரு வரும் மாறிமாறிப் படித்தனர். குழந்தை ஒருதாளை இழுத்துக் கிழித்து விட்டது. அதற்கு மன்னிப்புக் கேட்டதிலிருந்தே அவர்களுடன் பேச் சுக் கொடுக்க நேரிட்டது. மூத்தவளிடம் சொன்னேன்:
"பையன் கறுசுறுப்பாயிருக்கிருன். உங்க பேரனு?
இல்லை, என் மகன்”-சிரித்துக் கொண்டே கூறினுள்.
என் தவருன ஊகத்திற்கு உடனே பதிலடி கிடைத்துவிட்டது.
தோற்றத்தில் இருவரும் அக்கா, தங்கைபோல் இருந்தனர். இரு வரும் பழகியமுறை, உடைகளைக் கொண்டே தாயும் மகளும்என ஊகித்
குமரன் பக்கம் 5

Page 5
தேன். குழந்தை மகளுடையதாகவே இருக்க வேண்டும். என்னல்
மூத்தவள் பேச்சை முதலில் நம்பமுடியவில்லை. w
குழந்தை இருவர் மடியிலும் மாறி மாறி நின்று துள்ளி விளையாடி
யது. சிவந்த மெல்லிய உதடு. சுருண்ட மயிர். குதூகலச் சிரிப்பு.
மார்பை அவிழ்த்துப் பால் கொடுக்கும்போதுதான் என் அருகே இருந்த மூத்தவளே குழந்தையின் தாய் என்பதை உறுதி செய்து கொண் CLoir.
கிராமத்துப் பெண்போல அவள் இருக்கவில்லை. நீலநிற நைலெக்ஸ் சேலை உடுத்திருந்தாள். காதில் முத்துக் கம்பல். நெற்றியில் குங்கு மம். நீண்டமயிரைக் கொண்டையாக முடிந்திருந்தாள். நீண்ட கழுத்து.
மகள் யன்னல் ஒரமாக இருந்து வெளியே ஒடும் மரங்களைப் பார்த் துக் கொண்டிருந்தாள்.
சேலைத் தலைப்பால் குழந்தையையும் மார்பையும் தாய் மூடிக்கொண் டாள். குழந்தை பாலைச் சுவைக்கும்போது என்னைப் பார்த்துப் பெரு மையோடு சிரித்தாள். "என் குழநதை" என்பதை உறுதி செய்வதாயிருந் தது. மகள் ஸ்கேட்டும் 'பிளவு"சும் அணிந்திருந்தாள். உடை காட் டாதபோதும் முகம் வயதைக் காட்டியது. 'அம்மா" என்று அழைத் துப் பேசியதைக் கேட்ட பின்னரே மூத்தவள் தாய் என்பதை உறுதிப் படுத்திக் கொண்டேன். மகளின் உடை நவநாகரிகமாக இருந்தது. முதுகில் படிந்த கூந்தலிடை ஒரு கிளிப்பைச் சொருகியிருந்தாள், தாயின் முகத்தில் இருந்த சுறுசுறுப்பும் கலகலப்பும் மகளிடம் இல்லை. இவளுக்கு ஒரு சிறு தம்பியா என்பதை என்னல் எண்ணிப்பார்க்கவே முடியவில்லை. குடும்பத்திட்டப் பிரசாரங்கள் இத்தாயின் செவிகளில் ஏறவில்லையா?
பால் கொடுத்த பின்னர் அவளாகவே பேச்சைக் கொடுத்தாள்.
"பெரிய மகளையும் குட்டி மகனையும் பார்த்து உங்களுக்கு ஆச்சரிய மாயிருக்கா. இவளுக்கு மூத்ததாக ஒரு பையனே இருக்கிருன்."
சிரித்துக் கொண்டே என்னை மேலும் வியப்பில் ஆழ்த்துவதுபோலக் கூறிஞள்.
"இவன் ஒன்பதாவது பிள்ளை. இரண்டைப் பறிகொடுத்து விட் டேன்."
“பெரிய குடும்பந்தான். எப்படித்தான் பால் மா வாங்கிச் சமாளித் தீர்களோ, எனக்கு மூன்று பிள்ளைகளே. நான் பட்டபாடு."
"பால் மா என்ற பேச்சே கிடையாது. நானே பால்கொடுப்பேன். என் அம்மா பத்துப் பிள்ளைகளைப் பெற்று மூன்று குழந்தைகளைச் சிறு
பக்கம் 6 குமரன்

வயதிலேயே பறிகொடுத்து விட்டா. நான் அம்மாவிற்கு நாலாவது
airlin.
"அந்தக் காலங்களில் குடும்பத் திட்டமெல்லாம் இல்ல்.’
எனது பதில் அவளுக்குச் சிறிது சுடுவதாகவே இருந்தது, தாயின் பேச்சுகள் மகளுக்குப் பிடிக்கவில்லை என்பது மகளின் முகத்தில் தெரிந் 受gil・
'பிள்ளைகள் தான் செல்வம். எனக்கு இப்போது ஒரு குறையுமில்லை. நான் மகாராசியாயிருக்கிறேன்.”
"அப்பொழுது இனிமேல் குழந்தை தேவையில்லையே."
அவளது மகளைத் திருப்திப்படுத்தவே சொன்னேன். மகளும் நளின மான என்பேச்சை ரசிப்பவள்போலக் கடைவாயில் சிரித்தாள்.
"இந்தக் குழந்தை தரக்கூடிய சந்தோஷத்தை வேறு எவராலும். என் புருஷனல் கூடத் தரமுடியாது. கோடி பணத்தாலும் கிடைக்காது.
தன் வார்த்தையை நிரூபிப்பதுபோல குழந்தையை மார்போடு அணைத்து இரு கன்னங்களிலும் உதட்டைப் பதித்து முத்தமிட்டாள், பின் தொடர்ந்து பேசினுள்:
"ஆணுல் நாலு அஞ்சு வயதுவரையுமே குழந்தைகள் எம்மோடு ஒட்டி யிருக்கின்றன. நாங்களும் தூக்கி விளையாடி கொஞ்சி மகிழ்கிருேம். பிறகு அதுகள் தனியாகப் போய்விடுகின்றன. தமது விளையாட்டு, படி ப்பு என்று தூரத் தூரப் போகின்றன. அதனுலேயே இன்ளுெரு பிள் ளையைப் பெத்து கொஞ்சி விளையாடவேணும் என்று ஆசை வந்து விடு கிறது."
'வயிற்றிலை சுமப்பது, பெறும்போது நோக்காடு. பெற்றெடுத்து வளர்ப்பதெல்லாம் கஷ்டமில்லையா?
அதெல்லாம் அத்தனை கஷ்டமில்லை. முதல் பிள்ளைக்குத்தான் கொஞ்சம் பயமிருந்தது. பிள்ளையைக் கண்டதும் எல்லாக் கஷ்டமும் மறந்து விடுவோம். இவன் வயிற்றிலை உதைக்கும்போதெல்லாம் எத் தனை சுகமாயிருக்கும் தெரியுமா, ராஸ்கல்.’
சிரித்தபடி துள்ளிக் கொண்டிருந்த குழந்தையின் கன்னத்தில் தன் உதட்டைக் கடித்தபடி தட்டினள். vn
அத்தாயின் பேச்சு எனக்கு மிக விசித்திரமாக இருந்தது. முதல் குழந்தையை காசில்வீதி அரச மருத்துவ மனையில் பெற்றெடுப்பதற்குச்
குமரன் udisib 7

Page 6
சேர்த்தபோது என் மனைவிபட்ட வேதனை, எனக்கு ஏற்பட்ட அமைதி யின்மை யாவும் நினைவில் வந்தன. குழந்தை பிறந்தபின்னர் பொரளை, கோட்டே பக்கம் போவதென் முலே என் மனைவி காசில் வீதித் தெருப்பக் கமே வேண்டாம் என்பாள். இரண்டாவது குழந்தை என்றதுமே நடுங் கினள். இந்தத் தாய் ஒன்பது குழந்தையைப் பெற்றுவிட்டு இப்படிப் பேசுகிருளே. -
'நீங்கள் வீட்டில் தான் குழந்தைக%ளப் பெற்றிருப்பீர்கள். ஆஸ் பத்திரியென்ருல் குடும்பத்திட்ட அதிகாரிகள் வந்து ஆபரேசன் செய்யும் படி வற்புறுத்தியிருப்பார்கள். இப்படி ஒவ்வொரு வரும் பெத்தால் எல் லோருக்கும் வேலை கொடுத்து, சோறுபோட முடியுமா?
அவள் நிலப்பிரபுத்துவ கோட்பாடுகளுடன் பேசுவது தெரிந்தது. குடும்பத்திற்கு வயல் நிலம், தோட்ட நிலம் இருந்தது. எத்தனை பிள் ளைகளைப் பெற்றலும் அவர்கள் நிலத்தில் வேலைசெய்து, முதுமையில் பெற்ருரைப் பார்ப்பர் என்ற நம்பிக்கை.
மாதச் சம்பளம் பெறும் கூலி உழைப்பும், நுகர் பண்டங்களும் நிறைந்த முதலாளித்துவத்தை அவள் காணவில்லை. குறிப்பிட்ட கூலி உழைப்பிலே முப்பது நாட்களை ஒட்டவேண்டும் என்ற நிலை வந்ததும் குழந்தைகளைத் தாமே குறைத்துக் கொள்வர். இவற்றை நான் அறி வேன். அறியாமை தான் அதிகக் குழந்தைகளத் தருகிறது என்பதை நான் ஏற்கமாட்டேன். பெருந்தோட்டத் தொழிலாளரே இதற்கு நல்ல உதாரணம். இலங்கையில் குழந்தை பிறக்கும் சராசரியை பார்க் கும்போது குறைந்த குழந்தை பெறுபவர்கள் தோட்டத் தொழிலா ளரே. ஏனெனில் குறைந்த கூலி பெறுபவர்களும் அவர்களே. என் கேள்வியில் அவளை மடக்கிவிட்டேன் என்று எண்ணினேன். ஆனல் அவள் பதில் விவேகமாகவே இருந்தது.
நான் பாடசாலையில் படிக்கும்போது குடிசனம் 60 இலட்சம். அப் பவும் இதைத்தான் சொல்லிக் கொண்டிருந்தார்கள், இன்று 150இலட் சம் பேரும் பட்டினி கிடக்கினமா? இது ஏதோ வெளிநாட்டவன் சொல் விக் கொடுக்கிருன். இவர்களும் சொல்லுகிருர்கள். குடும்பத்திட்ட மாம். இவளைப் பாருங்கோ."
தன் மகளைச் சுட்டிக் காட்டுவதுபோல அவள் பக்கம் திரும்பினள். *அம்மா கக்கா " என்று மகள் அதிர்ச்சியடைந்தவள்போல நினைவூட்டி ஞன். சேலையில் வடிந்த குழந்தையின் சிறுநீரை தாய் கையால் தட்டி விட்டாள். அரையில் கட்டியிருந்த துண்டை அவிழ்த்து பேப்பரில் சுற்றி வைத்தாள். குழந்தையை "வாடா ராஸ்கல்’ என்று சொன்ன படியே கழிவறைக்கு எடுத்துச்சென்ருள்.
பக்கம் 8 w குமரன்

மகள் அப்படியே இருந்தபடி என்னைப் பார்த்துச் சிரித்தாள்.
“உங்களுக்கு எத்தனை குழந்தைகள்?’ அவள் கையை விரித்து சிரித்தபடி தலை குனிந்தாள்.
'அம்மாவின் பிள்ளையாகத் தெரியவில்லையே. உங்கள் கணவர் மாதச் சம்பளம் பெறுபவராயிருக்க வேண்டும். எங்கே வேலை செய்கிருர்?"
சவூதி அரேபியாவில்."
குழந்தையின் பின்புறத்தை சேலைத் தலைப்பால் துடைத்துக் கொ ண்டே தாய் வந்தாள். வேருேர் துணியை மடித்து அரையிலே மாட்டி ஊசி குற்றிவிட்டாள். குழந்தையை மகள் வாங்கிக் கொண்டாள்.
"எங்கோ அரைகுறையில் கதையை விட்டுவிட்டேன்.நினைவு வந்து விட்டது. இவளைப் பாருங்கோ, மாதம் ஆயிரம் ரூபா சம்பளம் எடு த்த புருஷனை அது போதாதென்று நகைகளை வித்து பதினருயிரம் கொடு த்து எங்கோ சவுதி அரேபியா வனந்தரத்துக்கு அனுப்பிப்போட்டு, குடும்பத்திட்டமென்று பிள்ளையும் பெருது, என் பிள்ளையைத் தூக்கி கொஞ்சிக் கொண்டிருக்கிருள். இது என்ன சமூகம் என்று எனக்குத் தெரியேல்லை."
‘இது முதலாளித்துவ சமுதாயம்’ என்பது என் நெஞ்சுவரை வந் தது. அடக்கிக் கொண்டேன்.
•சமூகம் மாறிக் கொண்டே வருகிறது, நீங்க கலியாணம் கட்டின காலத்திலை டி. வி. றேடியோ, பிறிட்ஸ், வூலிநைலெக்ஸ் எல்லாம் இருந் ததா? இப்ப இருக்கிறது. வாங்க ஆசையாக இருக்காதா."
மகள் டே"சக் கூடிய நியாயத்தை நான் கூறினேன். அவளும் ஆமோ திப்பது போலச் சிரித்தாள், ஆனல் தாய் கோபமடைந்தாள். மகளைக் கண்டிப்பது போல தயக்கமின்றி கோப உணர்ச்சியோடு தன் கருத்தை வைத்தாள்:
'உம்மைப் பார்த்தாலும் படித்த, வயது வந்தவர்போலத் தெரியுது. என்ன பணந்தான் வந்து இவை என்ன சுகத்தைக் காணப் போகினம். என்ன இருந்தாலும் ராத்திரியிலை புருஷனைக் கட்டிப்பிடித்துக் கொண்டு படுக்கிற சுகம், அந்தச் சூட்டில் கிடைக்கும் இன்பம் வருமா? ஒரு பிள் ளையைப் பெத்து கொஞ்சி மகிழ்கிற சந்தோசம் கிடைக்குமா? புருஷன் அங்கை வனந்தரத்திலை கிடந்து காயிருர். இவள் இங்கை காயிதத்தை பும் காசையும் பார்த்து ஏங்கிக் கொண்டிருக்கிரு. தபால்காரன்தான் இவளுக்குப் புதிய கடவுள்."
குமரன் பக்கம் 9

Page 7
தாய் சொன்ன செய்தி எனக்குப் புதுமையாயிருந்ததோடு நியாய மாகவும்பட்டது. மனித உறவுகளை எப்படி முதலாளித்துவமும் அது தரும் நுகர் பண்டங்களும் பணவேட்கையும் பிரித்து விடுகிறது என்று எண்ணினேன்.
"மருமகன் ஒரு தடவையும் வரவில்லையா."
‘ஒரு வருஷத்தாலை இப்பதான் ஒருக்கால் வந்தார். கமரா, ரெக் கோட், கசெட் என்று கொண்டு வந்தார். ஒரு மாதமாய் கொஞ்சக் காசை வீசினர். இந்த வீம்பெல்லாம் ஆருக்குக் காட்ட? இப்பதான் இவளோடை வந்து அவரைப் பயணமனுப்பிவிட்டுப் போகிருேம்; 'ஏயர்போட்டிலை விம்மி விம்மி அழுகிருள். இப்ப காய்ந்துபோய் வாழு. இனி அடுத்த வருஷம் வருவாரோ ஆருக்குத் தெரியும். இதை நினைத்தால் எனக்கு மூளையே வெடிக்கும் போலையிருக்கு. இவர்களுக்கு என்ன ஊரைப் பற்றி, நாட்டைப் பற்றி எந்தக் கவலையுமில்லை. வேண் டினது பணமும் பண்டமுந்தான். w
அவள் நாட்டைப் பற்றிப் பேசியது என் நினைவைக் கிள்ளியது. என் னிடமிருந்த பத்திரிகைகளையெல்லாம் அவள் முன்னே வாங்கிப் படித்து விட்டாள். நான் கொண்டு வந்த நூல்களையும் வாங்கி நோட்டமிட்டு விட்டாள்.
"நாட்டைப் பற்றிக் கவலைப்படுபவர்கள் குறைவுதான், அதுவும் பெண்கள் என்ருல் சொல்ல வேணுமா?
மகளை உதாரணமாக வைத்தே நான் சமாதானம் கூறினேன்.
நீங்கள் கொழும்பில் வாழுகிறீர்கள். பாதுகாப்பான இடம். நாங் கள் யாழ்ப்பாணத்தில் வாழ்கிருேம். அந்தக் கொடுமையைச் சொல்ல முடியாது. நீங்க பேப்பரிலை சிலவற்றைப் படித்திருக்கலாம். வாலிபப் பிள்ளைகளைப் பெத்த எந்தப் பெண்தான் இன்று கவலைப்படாமல் இரு க்க முடியும்." என்று கூறிய தாய் குரலைத் தாழ்த்தித் தொடர்ந்து சொன்னுள் 'என்ரை மூன்ரும் பொடியனும் உதிலை சேர்ந்துபோய்விட் டான்.ஒருநாள் வீட்டை பெரிய டிரக்கிலை மிலிட்டரிக்காரர் வந்து என்ன அட்டகாசம் செய்தார்கள் தெரியுமா? அதற்குப் பிறகுதான் என்பிள்ளை செய்கிறது சரிபோலைத் தெரிந்தது. நானும் இப்ப தலைநிமிர்ந்து நடக் கிறன். பிள்ளைகளாலை எனக்கு எதுவும் கிடைக்கவில்லை. நாலு வயது வரை கிடைத்த சந்தோஷந்தான். மருமேன் வந்து ஒரு சேலைய்ைத் தந்துவிட்டு என் மகனைத் திட்டினர். இவளும் அவர் பக்கந்தான். கொஞ்சிறதுக்கு மட்டும் என்பிள்ளை வேணும்."
பக்கம் 10 V குமரன்

தாயின் பேச்சுகள் என் ஆர்வத்தை மேலும் தூண்டின. தன் குடும் பத்தின் கதைகளையெல்லாம் கூறினுள். இடையிடை பேச்சுகள் தடை பட்டன.
ஒரு கூடையில் குழந்தைக்கும் தமக்கும் வேண்டிய உணவு, தண் ணி.ர், பிளாஸ்கில் காப்பி முதலிய யாவும் கொண்டு வந்திருந்தனர்.
சாப்பிடும்போதும், காப்பி அருந்தும்போதும் என்னையும் தம்முடன் பகிந்து கொள்ளும்படி வேண்டினர். மாலையில் இரண்டு பிஸ்கெட் மட்டும் அவர்களைத் திருப்திப்படுத்தப் பெற்றுக் கொண்டேன்.
வவுனியாவில் வண்டி நின்றதும் வண்டியின் இருபுறமாகவும் ஐம் பது அறுபது ராணுவத்தினர் வந்து சூழ்ந்து கொண்டனர். இறங்குப வர் ஒவ்வொருவரையும் நோட்டம் போட்டு வெளியே அனுப்பினர். பின்னா. வண்டி புறப்பட்டது. அவர்கள் ஏறிக் கொண்டனர். கதவுப் பக்கமாகச் சுழல் துப்பாக்கிகளுடன் ஒவ்வொரு பெட்டியிலும் காவல் புரிந்தனர். சில ராணுவத்தினர் பொதிகளையும் இளைஞர்களையும் அதட்டும் குரலுடன் சரிபாாத்துக் கொண்டு வந்தனர்.
எவனே ஒரு ‘புலி’ அதே வண்டியில் பிரயாணம் செய்வதாக அவர் களுக்குத் தகவல் கிடைத்ததாம். அதனுலேயே "செக்கிங்" நடைபெறு கிறது என்று சிலர் பேசிக் கொண்டனர். எம் செவியிலும் விழுந்தது.
தாயின் முகம் சோர்ந்துவிட்டது. மகளின் முகத்தில் பீதி, ‘அவர் கள் வேட்டையாட வந்திருப்பது என் மகஞயும் இருக்கலாம் என்பது போல அவளின் முகம் கறுத்திருந்தது. தர்பார் முடியும்வரை அவள் அதிகம் பேசவில்லை.
மாங்குளம் தாண்டியதும் என் ஆவலைத் தணிப்பதற்காக நானே மெல்லிய குரலில் கேட்டேன்.
உங்கள் மகன் இவ்வண்டியில் வரவில்லைத்தானே. ஏன் கவலைப் படுகிறீர்கள்?
‘என்னைப்போல யாரோ ஒரு தாய் பெற்ற பிள்ளையாகத்தானே அவ னும் இருப்பான்.”
என் உடல் ஒரு கணம் சிலிர்த்தது. பரவலான தாய்மை உணர் வுடன் அவள் ப்ேசியது அவளின் மேல் நான் வைத்திருந்த மதிப்பை மேலும் உயர்த்தியது.
இந்தப் பிரச்சினைக்கு விடிவு கிடையாதா” பொதுமையாக நான்எண்ணிக் கொண்டிருந்தது என்னையறியாது வாயில் வந்துவிட்டது.
"நாங்களும் பிள்ளைகளைப் பெத்துக் கொண்டிருப்போம். நாலு ஐந்து வயதின் பின்னர் அவர்கள் தனியாகப் போய்க் கொண்டிருக்கிருர்கள்.
குமரன் V . \, பக்கம் 11

Page 8
i
வருஷந்தோறும் பல ஆயிரக் கணக்கில் பதினறு வயதைத் தாண்டிக் கொண்டிருக்கிருர்கள். அவர்கள் தீர்மானிப்பதை யாரால் கட்டுப்படு த்த முடியும்."
'நீங்கள் உங்கள் மகனுக்குப் புத்தி சொல்லி ஏன் திருத்தவில்லை?
என் வார்த்தையைக் கேலி செய்வது போல் அவள் சிரித்தாள்.
சிறிது நேரம் தூங்கியிருந்த பையன் எழுந்து மீண்டும் துள்ளிச் சிரித்து வேடிக்கை காட்டிக் கொண்டிருந்தான்.
‘ஓரளவு வயசுவரைதான் பிள்ளைகளை ஒரளவு கட்டுப்படுத்தலாம் பிறகு அவர்கள் தளிமனிதராகி விடுகின்றனர். நாங்கள் சொல்வ தையா கேட்கப் போகின்றனர்."
“உங்கள் பேச்சைக் கேட்டால் இந்தப் பையனையும் பலி கொடுத்து விடுவீர்கள் போலிருக்கு."
குழந்தையைக் காட்டிச் சொன்னேன்.
டாக்டராக, இஞ்சினியராகப் பிள்ளையைப் படிப்பிக்க வேண்டும் என்று வழமையாக எண்ணும் தாய்போல் அவள் இருக்கவில்லை. அந்த நிலைமை மாறி வருகிறதா?
*பத்துப் பதினஞ்சு வருஷத்தின் பின் இவன் என் சொல்லைக் கேட் கப் போகிருன? மூத்தவன்போல இப்படியாகப் போவது பரவாயில்லை. நடந்த தர்பாரைப் பார்த்தீர்கள் தானே. நான் இரண்டு பிள்ளையை நோய்க்குப் பலிகொடுத்தேன். திண்டுவிட்டுச் சாணிபோடும் எருமை
மாடுபோல் வாழாமல் உயிரைப் பணயம் வைத்து ஏதோ செய்ய முயல் கிருர்களே. இதை எந்தத் தாயும் தடுக்கமாட்டாள்."
ஈழத் தாய்மாரின் பிரதிநிதிபோல அவள் கூறிய வார்த்தைகள் இத யத்தின் மூலம் சென்று இன்னும் என் சிந்தனையைக் குழப்பிக் கொண் னடிருக்கின்றது.
* மூலதனம் - மார்க்சின் மிகப்பெரிய உழைப்பாகும். அவர் தன் வாழ்நாளில் தனக்காகவும் தன் குடும்பத்திற்காகவும் வாழும் வாழ்வைத் தியாகம் செய்து இந்நூலைப் படைத்தார், - அல்துரசர்
/பக்கம் 12 குமரன்
 

சொல்லும் வர்க்கச் சார்பும்-3 -விந்தன்
பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதல் வேண்டும் என விலங்குகள் மாட்டு கொல்லாமையை வலியுறுத்திய வள்ளுவர் மனிதக் கொலையை ஏன் அங்கீகரிக்கிருர் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். காரணம் இதுதான். அன்றைய நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறைக்கு விலங்குகளின் உழைப்புத் தேவைப்பட்டது; அதஞல் அது பாதுகாக்கப்படவேண்டியது அவசியமாயிற்று; விலங்குகளைப் பாதுகாப்பது நில உடைமையாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதா கும். எனவேதான் மாடு என்ற ஒரு சொல்லே விலங்கையும் செல் வத்தையும் குறிக்க வழங்கலாயிற்று. ஆனல் உடைமையாளர்களின் ஏகப் பிரதிநிதியான வேந்தனின் நலனுக்கு விரோதமாய் இருப்பவர் கள் கொல்லப்பட்டாலன்றி உடைமையாளர்களின் நலனைப் பாதுகாக்க முடியாது. யார் யாரை ஒதுக்க முடியும்?- அதிகாரத்தில் உள்ளவன் ஆளப்படுவோனை ஒதுக்கலாம். கொடியவன் யார் நல்லவன் யார் என்பதைத் தீர்மானிக்கும் இடத்திலே இருப்பவன் உடைமையா ளனே தவிர வேறுயாருமில்லை. எனவே வேந்தனின் எண்ணத்திற்கு மாறுபட்டவர்களை வள்ளுவர் கொடியோராகக் காட்டுகின்ருர், ஆக “கொடியார்” என்ற சொல் வள்ளுவன் காலத்தில் உடைமையற்றவர் களுக்கும் வேந்தனின் எண்ணங்களுக்கு விரோதமானவர்களுக்கும் பயன் படுத்தப்பட்டது. இதன் மூலம், தான் எந்த வர்க்கத்தின் பிரதிநிதி என்பதையும் வள்ளுவன் காட்டிக்கொள்கிருன், நிற்க.
இக்குறளில் இயற்கையிலும் சமூகத்திலும் காணப்படும் இரு முரண்பட்டவர்க்கங்களை பாமரரும் புரியும் வண்ணம் எளிமையாக எடுத்துக் காட்டுகிருர். பயிரும் களையும் இயற்கையில் காணப்படும் முரண்பட்ட வர்க்கம்; வேந்தனும் கொடியரும் சமூகத்தில் காணப் படும் முரண்பட்ட வர்க்கம்.
கவித்துவம் தாண்டவமாடும் இக்குறளிலே, உடைமை, ஆளும், ஒடுக்கும் வர்க்கத்தினனன வேந்தனைப் பயிருக்கும், உடைமையற்ற பாட்டாளி, ஆளப்படும், ஒடுக்கப்படும் வர்க்கத்தினஞன “கொடியன்’ என நாமகரணஞ்செய்து களைக்கும் உவமையாக, படிமமாகக் காட் டுகின்றர். வாழைப்பழத்தில் ஊசி குத்துவதுபோல, உடைமைவர்க்க நலன் காக்க, பாமரப் பாட்டாளிகள் ஏமாந்து ஏற்றுக்கொள்ளும் வண்ணம் இங்கே கூறியிருக்கிருன். வேத்தனைப் ‘பைங்கூழ்" என்றும் அவனை எதிர்த்தவனை 'களை" என்றும் வர்க்கச் சார்போடு, பாசத் தோடு கூறியிருப்பதில் வியப்பே இல்லை.
குமரன் шäѣзъtйo 13

Page 9
ஒடுக்கப்படுவோர்களை ‘களை" என நாமகரணஞ் செய்தல், வள்ளு வன் காலத்தில் மட்டுமல்ல, இன்றும், வர்க்க வேறுபாடுள்ள, முரண் பாடுள்ள எல்லா நாடுகளிலும் தினசரி நடவடிக்கைகளில் ஒன்ருகிவிட் டது. ஒடுக்கப்பட்டோர்-கோரிக்கை எழுப்பினல் "கூச்சல்" என்றும் கூட்டங் கூடினல் "கும்பல்" என்றும்; போராட்டஞ் செய்தால் "கலகம்" "ரகளை "வன்முறை" என்றும் ஒடுக்குவோரால் வருணிக்கப்படுகிறது. ஆனல் உடைமை, ஆளும், ஒடுக்கும் வர்க்கம் தன்னலத்தைக் காப்ப பற்காக-உரிமைக்காகப் போராடும் மக்களை அடித்துப் பயமுறுத்த முற்படுவதை "அமைதியை நிலைநாட்ட லேசான பிரம்படி என்றும்; "வன்முறையைச் சமாளிக்க துப்பாக்கிச் சூடு' என்றும்; தங்களைத் தற் காத்துக்கொள்ள சமூக விரோதிகளைச் தீர்த்துக்கட்ட தீவிரமாகச் சுட்டுக் கொன்றனர்" என்றும், முன் கூட்டியே சொல்லி வைத்தாற்போல் சொல்லி வருகின்றனர். இவைகள் எல்லாம் சொற்கள் வாக்கச் சார் போடு வழங்கி வருகின்றமையையே எடுத்துக் காட்டுகின்றன.
1. 2. 2. ஆளுவோர், உடைமையோர், ஒடுக்குவோர் மக்களுக்கு விடுக்கும் வேண்டுதல்களும், விண்ணப்பங்களும் ஆணைகளாக-கட் டளைகளாக இருக்குமேயன்றி வேண்டுதலாக இருக்காது என்பதை வள் ளுவரின் குறள் கூறுகிறது. கொடுங்கோல் அதிகாரத்தில்
“வேலொடு நின்ருன் இடுஎன் றதுபோலும்
கோலொடு நின்முன் இரவு" *வேந்தன் குடிமக்களைப் பொருள் தரும்படி வேண்டுதல், வேல் கொண்டு வழிப்பறி செய்யும் ஆறளைக் கள்வர்கள் பிடுங்கிக்கொள்வது போன்றதாகும்" என்பது இக்குறளின் பொருள்.
இங்கே ஆளும், உடைமை, ஒடுக்கும் வர்க்கம் 'தாரீர்” எனக் கூறும் சொல், சொல்லுகின்ற வர்க்கத்தினூலே, அச்சொல் அவ்வர்க்கச் சார்பைப் பெறுகிறது.
நமது மத்திய மாநிலஅரசுகளால் குடிகளின் சேமலாபப் பணிகளுக்கு "ஈயுங்கள்’ ‘நிதி தாரீர்" என வேண்டுகோள் விடுக்கப்படுகின்றன. பொழுதெல்லாம், அரசு எந்திரம் வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போல வேகமாக காரியம் ஆற்றுவதை அன்ருட வாழ்க்கையில் கண்டு கொண்டுதான் வருகிருேம்.
1. 3. நெருக்கடி கால இந்தியாவில், ஆளும் வர்க்கத்திற்கு எதி ராக, பத்திரிக்கை தணிக்கைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், நூதன மான சொற்கள் மூலம், சில பத்திரிக்கைகள் தம் எதிர்ப்பைக் காட் டிக் கொண்டன. தினமணி எக்ஸ்பிரஸ் குரூப் பத்திரிகைகள் உள்பட பல பத்திரிகைகள் தலையங்க இடத்தைக் காலியாகவும், தணிக்கை
பக்கம் 14 குமரன்

செய்யப்பட்ட இடங்களைக் காலியாகவும் விட்டு எதிர்ப்பைக் காட்டின. இவை ஒருபுறம். இவற்றேடு இரண்டு பொருள்கள் தரும்படி ஒரு செய்தியைப் போடும் தன்மையை துக்ளக் பிரமாதமாகச் செய்தது. *சர்வாதிகாரி" என்னும் பழைய திரைப்படத்திற்கு விமர்சனம் செய்து சர்வதிகாரியை நடிப்பிற்காக எம். ஜி. ஆர். நன்றக எதிர்த்துள்ளார் (அப்போது எம். ஜி. ஆர். அவசரநிலையை தீவிரமாக ஆதரித்தார்) என்றும், பாரதியின் தேசிய கீதங்களை எடுத்துப் போட்டும், சஞ்சை காந்தியின் மரநடு விழா நிகழ்ச்சி ஒன்றினை வருணித்ததும் யாரும் மறக்க முடியாது. உண்மைகளை வெளியிடும் பத்திரிகைச் சுதந்திரம் பறிக்கப்பட்டுவிட்டது என்பதை எடுத்துக்காட்ட பல விநோதமான எட்டுக்கல"ச் செய்திகளை 'முரசொலி” போட்டது. அதில் ஒன்று **வெண்டைக்காய் சூட்டைத் தடுக்கும், வைத்திய - திலகம் பேருரை' என்று போட்டது. இது போல பல செய்திகளையும் போட்டது. உடன் பிறப்புக்கு எழுதிய கடிதங்களில் பயன்படுத்திய சொற்கள் பல இரு பொருள்களில் வரும் ஒன்று ஆளும் வர்க்கத்தைஎதிர்க்கும் சொற்களை அன்று கலைஞர் மு. க. பயன்படுத்தினர்.
இவ்வாறு அவசர நிலைகளின் போது, செய்திகள் முன் தணிக்கை செய்யப்படுகின்ற போது, சொற்கள் வர்க்கச் சார்பை தெளிவாக வெளிப்படுத்துகின்றன.
1. 4. அன்ருட நிகழ்ச்சிகளை கூறும் சொற்களில் வர்க்கச் சார்பு: வர்க்க முரண்பாடுள்ள நாடுகளில் போராட்டங்கள் அன்ருட நடை முறையாகிவிட்டது. அரசுக்கு எதிரான ஒரு போராட்ட நிகழ்ச்சியை ஆளும் வர்க்க சார்புடைய பத்திரிகைகள் தோல்வி என்றும், ஆளும் வர்க்க எதிர்ப்புடைய பத்திரிகைகள் ‘வெற்றி" என்றும் கூறும். எதிர் வர்க்கம் ஹர்த்தால் நடத்தினல், எவ்வளவுதான் வெற்றிகரமாக நடத்தினலும் ஆளும் வர்க்கப் பத்திரிகைகள் அதனை ‘தோல்வி" என்ருே. பிசுபிசுத்தது" என்ருே, 'பல இடங்களில் மாமூல் வாழ்க்கை பாதிக்கவில்லை" என்றுதான் எழுதுகின்றன. ஆளும் வர்க்கம் முட்டாள் தனமான திட்டம்எதையாவது அறிமுகப்படுத்தி தோல்வி கண்டாலும் 'திட்டம் மகத்தான வெற்றி" என்று ஆளும் வர்க்கச் சார்பு ஏடுகள் போடுகின்றன. இதுபோல பல பார்க்க முடியும். இங்கெல்லாம் சொற் கள், செய்திகள் வர்க்கச் சார்புடன்தான் பயன்படுத்தப்படுகின்றன என்பது தெளிவாகும்.
1.5. அன்றட் வாழ்க்கையில் வர்க்கச் சார்பான சொற்கள்: உண வைக் குறிக்கப் பல சொற்கள் இருக்கின்றன. 'கூழ், கஞ்சி, பழை யது" போன்றது பாட்டாளி மக்களின் வர்க்கச் சார்ப்போடு இணைந் ள்ளது. "சோறு, சாதம்” போன்றவை பாட்டாளிகள் அல்லாதவர் ரின் வர்க்கச் சார்பைச் சார்ந்துள்ளது.
குமரன் பக்கம் 15

Page 10
சாதிப் பெயர்களில் கூட வர்க்கச் சார்பு இருக்கிறது. ஒரு யாதவ இனத்தைச் சார்ந்தவனே, உயர்ந்த வர்க்கம் அழைக்கும் போது இடை பன், கோனன்” என்று அழைக்கும் இழிந்த வர்க்கம் அழைக்கும் போது ‘கோஞர், யாதவர்" என்று அழைக்கும். இதைப்போல் இரு நிலைத் தன்மை, முரண்பட்ட தன்மை எல்லா ஜாதிப் பெயர்களிலும் உள்ளது 'பார்ப்பான்-ஐயர்' பறையன்-அரிஜன் நாடார்-சாணுன்’ வெள்ளாளன்- 'பிள்ளை’
அன்ருட நிகழ்ச்சியில் காணப்படும் சொற்களின் முரண்பாட்டுத் தன்மையை 'இருநிலை வழக்கு (Diglossia)என்று மொழிஅறிஞர் பெர் si air GuT657 Gcri 96opL'uri (Charles A. Ferguson, Dig OSSa).
1. 6. முடிவுரை: தொல்காப்பியர் காலம்முதல் இன்றுவரை நம் அன்ருட வாழ்க்கையிலும் சொற்கள் வர்க்கச் சார் போடு வழங்கப்பட் டுள்ளமையைக் கண்டோம்.
"எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” என்ருர் தொல்காப்பி யர். "எல்லாச் சொல்லும் வர்க்கச் சார்புடையன" என்ருல் அது தவருகாது!
” |
* வர்க்க அடிப்படையிலே பாத்திரங்களை அணுகாமல் விசேஷ LOTGT தனிப்பிறவிகளை இலக்கிய மாந்தராகக் கொண்டமையாலேயே, ஒரு காலத்து முற்போக்கு எழுத்தாளர் ஜெயகாந்தன், இன்று *பிரம்மோபதேசம்’ செய்பவராக உரு மாறியுள்ளார். இது ஒரு குறிப் பிட்ட எழுத்தாளனது தனிப்பட்ட பலவீனம் மட்டுமன்று. அவன் பற்றிக்கொண்டிருந்த இலக்கியக் கோட்பாட்டிலே உள்ளார்ந்த பலவீன மாய் இருந்த அம்சத்தின் பரிணுமம் என்றும் கூறலாமல்லவா? ஜெய காந்தனை விதிவிலக்கான 'வில்லனக' நாம் விவரிக்க வேண்டியதில்லை" பல எழுத்தாளரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எடுத்துக்காட்டு என்றே கொள்ளவேண்டும். வர்க்க ஆய்வின் அடிப்படையில், தூலமான சந் தர்ப்பங்களில் பாத்திரங்களைச் சித்திரிக்கத் தவறும் எந்த எழுத்தாள னும் ஜெயகாந்தன் ஆவதற்கு அதிக நாள் பிடிக்காது.
இதை இன்னெரு வகையாகவும் நோக்கலாம். ஜெயகாந்தனது எழுத்தில் இன்றும் நுணுக்க விவரங்களைக் கூறும் “யதார்த்த’ப் பண்பு, அதாவது இயற்கையாகப் பாத்திரங்களைத் தீட்டும் ஆற்றல் குறைவின்றியே இருக்கிறது. மனிதாபிமான உணர்வும் இல்லையென்று அடித்துக்கூறவியலாது. ஆயினும் சமுதாய மாற்றத்துக்கு ஆதரவு தருபவராக அவர் இன்று இல்லை. எனவே பிழை எங்கே உள்ளது என்று கவனமாய்த் தேடவேண்டும். - s. 6366), FL
பக்கம் 16 குமரன்
 

எங்கே செல்கின்றீர்?
- புதுவை இரத்தினதுரை எங்கே செல்கின்றீர். என்னருமைச் சகோதரிகாள்! எங்கே செல்கின்றீர்.
கொழும்பில்.
விடிய முன்னர்
கிளம்பி எங்கே செல்கின்றீர்? உதயப் பணிப் பொழுதில் ஊர்வலங்கள் செல்வதுபோல் எங்கே செல்கின்றீர். என்னருமைச் சோதரிகாள். நில்லுங்கள்!
கொஞ்சம் நின்றெனது கேள்விக்கு சொல்லுங்கள். பதிலை, சொல்லிவிட்டுச் செல்லுங்கள். பாணந்துறை ரத்மலானை பஸ்களிலே நின்று கொண்டும் தொங்கி வழிந்து கொண்டும் சோர்வுடனே தினமும் நீர்.
எங்கே செல்கின்றீர்?
என்னருமைச் சோதரிகாள்
எங்கே செல்கின்றீர்?
ஊருக்கு விடிவதின் முன்
உங்களுக்கு விடிகிறதா?
இல்லாது விட்டால்
இரவெல்லாம் தூக்கமின்றி *கட்டுநாயக்கா' கம்பனிக்குள் வேலையெனக் கொட்டிக் கொடுத்து விட்டு
கேட்பதற்கு நாதியற்று
எங்கே செல்கின்றீர்? V வேலைக்கா செல்கின்றீர்?
வெளிநாட்டுக் கம்பனியில் சேலைகளைச் செய்வதற்கும் சேட்டுகளைத் தைப்பதற்கும் கூலிக்கு உடலுழைப்பைக் கொடுப்பதற்கும் செல்கின்றீர். மாடாய் உழைக்கின்றீர்.
மறுபேச்சு எதுவுமின்றி.
குமரன் பக்கம் 17

Page 11
ஒடாகத் தேய்ந்து உருக்குலைந்து போகீன்ஹீர். காலை; கடுமுச்சி; கங்குல்
என நீங்கள் வேலையெனச் சென்று வியர்வை நீர் பாச்சுகிறீர். மாதமுடிவில் மடிகணக்கும் ;
மறுநாளோ ஏதும் இருக்காது. இப்படியாய் மாளுகிறீர். "கட்டுநாயக்கா' கம்பனிகள் போட்டிருக்கும் திட்டங்கள் தெரியாமல் சிரிக்கின்ற தங்கைகளே! நீதிக்கு வழக்குரைக்க நிச்சயமாய் முடியாது. வாதிடவே எண்ணி வாய்திறக்க முடியாது. வேலை நிறுத்தங்கள் வெளிநாட்டுக் கம்பனிக்குள் காலைவிட முடியாது, கடும் சட்டம் காக்கிறது. “பல்தேச நிறுவனங்கள்" பங்கு வைத்து இந்நாட்டின்
செல்வருடன் சேர்ந்து சிக்கவைக்கும் பொறிக் கிடங்கில் வீழ்ந்ததறியாமல்.வீதிகளில் சிரிக்கின்றீர்
உங்கள் உழைப்பெங்கள் ஊர்மனையில் சுவறவில்லை. எங்கிருந்தோ வந்த எவனெவனே தின்னுகிருன். சிலந்தி வலையினிலே. சிக்குண்டு போவதையே விளங்க முடியாமல்.
விடிபொழுதில் செல்லுகிறீர்.
“யப்பான் பருந்துகளும்" *அமெரிக்க கழுகுகளும்" இப்போது வந்தெங்கள் இலுப்பையிலே. இருக்கிறது. எங்கள் “வெளவால்கள்" இவைகளுடன் சேர்ந்து கொண்டு உங்களையும் இரையாக்கி. ஊர்மனையைப் பாழாக்கி. தங்கள் பெருவயிற்றின் தாகத்தைத் தீர்க்கிறது, எங்கே போகின்றீர் என்னருமைச் சோதரிகாள்.
பக்கம் 18 குமரன்

It is ulti-4
த. ச. இராசாமணி
உற்பத்தி உறவு
மக்கள் உயிர் வாழ உணவு, உடை, வீடு போன்றவை தேவை. உணவு சமைக்க விறகு, கரி, எரிவாயு, மண்ணெண்ணெய், மின்சாரம் போன்றவை இன்றியமையாதவை. மனிதன் ஓரிடத்திலிருந்து வேருேர் இடத்துக்குப் பயணம் செய்ய வண்டிகள், உந்துகள், ஊர்த்திகள் வேண்டும். இவை போன்ற எண்ணற்ற பொருட்களை மக்கள் நாள் தோறும் பயன்படுத்துகின்றனர். இவற்றைத் தோற்றுவிக்கக் கருவிகள் வேண்டும். இதனை உற்பத்திக் கருவிகள் என்பர். இக்கருவிகளைக் கையாளுதற்குரிய வேலைத்திறன் பட்டறிவு பெற்ற மக்கள் வேண்டும். உற்பத்திக் கருவிகளையும் இவற்றைக் கையாளும் மக்களையும் உற்பத்தி சக்திகள் என்று குறிப்பிடுவர். படிமுறை வளர்ச்சியில் மனிதன் குரங் கிலிருந்து தோன்றியவன். அவனை விலங்கிலிருந்து வேறுபடுத்தியது எது? பொருளுற்பத்திக்காக உழைக்கும் உழைப்பின் சிறப்பே மணி தனை விலங்கிலிருந்து வேறுபடுத்திக் காட்டியது. உழைப்பு மனிதனை இரட்டை உறவில் ஈடுபடுத்துகிறது. ஒன்று இவனது இயற்கைச் சூழலு டனுள்ள (மனிதனுக்கும் உற்பத்திக் கருவிகளுக்குமுள்ள) உறவு இஃது உற்பத்தியில் - படைப்பில் - ஒரு பகுதியே. பொருளுற்பத்தியில் ஈடு படும் பொழுது அதில் ஈடுபடுகின்ற மனிதர்களுக்கிடையே நிலவும் உறவு மற்றென்று. இவ்வுறவை உற்பத்தி உறவென்பர்.
உற்பத்தி முறை
மனிதன் இயற்கையோடு போராடுதல், இயற்கையைப் பயன்படுத் துதல் என்ற இரு நிலையிலுள்ளான். சமுதாய வாழ்வில் தனிமனிதனுக நின்று இயற்கையோடு போராடுதலோ இயற்கையைப் பயன்படுத்து தலோ இயலாத செயல். கூட்டாகச் சேர்ந்துதான் - ஒத்துழைத்துத் தான் - பொருட்களைச் செய்கிருர் கள். குழுக் குழுவாகவும் சமூகம் சமூகமாகவும் இணைந்துதான் உற்பத்தியில் ஈடுபடுகின்றனர். உற்பத் தியில் ஈடுபடும் மக்களிடையே ஓர் உறவில்லாமல் பொருட்கள் உற்பத் தியாவதில்லை. இவ்வுறவு ஏதாவதொரு முறையிலிருக்கலாம். ஒருவனை ஒருவன் ஆதிக்கம் செலுத்தி, அடக்கி ஆளும் உறவாகவோ, ஒருவ னுக்கொருவன் அடிமைப்பட்டிருக்கும் உறவாகவோ அவை அமைய லாம். ஒருவன் மற்றவர்களை அடக்கி ஆளவும் மற்றவர்கள் ஒருவ ಕ್ಲಿ? அடங்கிப் போகவும் - அடிமைப்பட்டுக் கிடக்கும் நிலையையும், முதாயத்தில் காண்கிருேம். ஏன்? இதனை விதியென்று சொல்லித்
குமரன் பக்கம் 19

Page 12
தட்டிக்கழிப்பாரும் - திசை திருப்புவோரும் உளர். 'ஒருவனுடைய உடல்வலிமையும் - அவனிடமுள்ள போர்க் கருவியும் மற்றவர்களை யும் அடிமைப்படுத்திற்று எனலாமா? அன்று. யார் வேண்டுமானலும் ஒருவனை அடிமைப்படுத்தவோ . அவனைப் பயன்படுத்தவோ - இய லாது. ஓர் அடிமையைப் பயன்படுத்த வேண்டுமானல் ஒருவர் இருவ கைப்பட்ட பொருட்களை வைத்திருத்தல் வேண்டும். முதலாவதாக இவரது அடிமையின் உழைப்புக்கான கருவிகளும் பொருட்களும். மற் ருென்று அவனது பிழைப்புக்கான குறைந்த சாதனங்கள். எனவே அடிமைத்தனம் சாத்தியமாவதற்கு முன்னுல் உற்பத்தியில் ஒரு குறிப் பிட்ட மட்டத்தை எட்டியிருத்தல் வேண்டும். உற்பத்திப் பொருட் களைப்பங்கீடு செய்தலில் ஒரளவு சமத்துவமின்மை ஏற்கனவே நிலவியி ருத்தல் வேண்டும்’*1 இவையின்றி ஒருவனை அடிமையாக்கி வைத்திருத் தல் இயலாது. எனவே, உற்பத்தி உறவுகளின் தன்மை எப்படியும் இருக்கலாம். உற்பத்தி சக்திகளும் உற்பத்தி உறவுகளும் உறுப்பாய் நின்று சமுதாய அமைப்பை உருவாக்குகின்றன. உற்பத்தி சக்திகளும் உற்பத்தி உறவுகளும் இணைந்து உற்பத்தி முறையாகிறது.
இயக்க வியல்
இவ்வுற்பத்தி முறை என்றும் ஒரே தன்மையாக இருந்ததில்லைஎன்றும் மாறி மாறி வந்திருக்கிறது. உற்பத்திமுறையில் ஏற்படும் மாறுதல்கள் சமுதாய அமைப்பு முறை, சமுதாயக் கருத்துக்கள், சமு தாய நடைமுறைகள், அரசியல் கருத்துக்கள், அரசியல் அமைப்புக் கள் முழுவதிலும் பற்பல மாற்றங்களை நிகழ்த்துகின்றன. இவற்றைச் சமுதாய வரலாறு நமக்கு அறிவிக்கிறது. இவை தவிர்க்க முடியாதவை; நிகழ்ந்தே தீருபவை. இவற்றை மாற்றியவை - மாற்றத்துக்கு அடிப் படையானவை என்ன? உற்பத்தியுறவில் ஏற்படும் மாற்றமே இவற் றின் மாற்றத்துச் குக் காரணமாகவும் மையமாகவும் அமைகின்றன. இஃது உற்பத்தியின் ஒரு பண்பு.
மனிதனின் வாழ்க்கை முறை வாழ்வியல் எப்படியிருக்கிறதோ அதை மையமாக வைத்தே அவன் சிந்தனைமுறையும் அமையும். எப் படி வாழ்கிறனே அப்படியே சிந்திக்கிருன். வாழ்க்கைமுறையின் வர லாறும் - சமுதாய வளாச்சியின் வரலாறும் உற்பத்தி எவ்வாறெல் லாம் வளர்ந்தது, உற்பத்தி உறவுகள் எப்படியிருந்தன என்பதைப் பற்றிய வரலாறு தான். உழைப்பாளி மக்கள்தான் உற்பத்தித் துறை யில் முதன்மையான ஆற்றலாக உள்ளனர். அவர்கள் தான் சமுதா
1. ஏங்கெல்ஸ் டூரிங்குக்கு மறுப்பு, முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ,
1979. Ltd. 279
பக்கம் 20 குமரன்

யம் உயிவாழ்வதற்குத் தேவையான பொருட்களை படைக்கின்றனர். சமுதாய வரலாற்றைத் தெரிந்துகொள்ள அச்சமுதாயத்தில் நிலவிய அன்றைய உற்பத்திமுறையை ஆய்தல் வேண்டும். அதாவது சமுதா யத்தின் பொருளாதார வாழ்வை ஆய்வு செய்தல் வேண்டும்.
உற்பத்திக் கருவிகளில் வளர்ச்சியும் மாறுதலும் நிகழ்ந்து கொண் றேயிருக்கின்றன. ஏன்? மக்கட்கு வேண்டிய நுகர் பொருட்களின் தேவை வர வரப் பெருகிக்கொண்டே போகிறது. அவற்றின் தேக்கத் தைச் சமுதாயம் ஏற்றுக்கொள்வதில்லை. உற்பத்திக் கருவிகளின் வளர்ச்சி - மாறுதல் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு மணி தர்களிடையே உற்பத்தி உறவுகள் பொருளாதார உறவுகள் மாறுகின்றன.
உற்பத்திக் கருவிகளின் வளர்ச்சிக்கேற்ப உற்பத்தி உறவுகளிலும் மாற்றம் நிகழ்தல் வேண்டும். ஆனல் பல்வேறு சமயங்களில் உற் பத்தி உறவில் ஒத்த மாற்றம் நிகழாமல் தேக்கம் ஏற்படுகிறது. இத் தேக்கம் நீண்ட காலத்துக்கு நிலைத்திருக்க முடியாது. இவை உற்பத் திக் கருவிகளின் வளர்ச்சிக்கும் மாற்றத்துக்கும் ஏற்ப மாறியே தீர வேண்டும். இது சமுதாய விதி. இன்றேல் உற்பத்தி முறையின் கட் டுக்கோப்புக்குள்ளேயே உற்பத்தி சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கு மிடையேயுள்ள ஒற்றுமை குலையும். இஃது உற்பத்தியைச் சீர்குலைத்து அதிலொரு நெருக்கடியைத் தோற்றுவிக்கும் புரட்சி உற்பத்தி சக்தி களின் வளர்ச்சிக்கும் மாற்றத்துக்குமேற்ப உற்பத்தி உறவில் மாற்றம் நிகழ்ந்தே தீரவேண்டும். இன்றேல் ஒரு சமுதாயப் புரட்சி ஏற்பட்டே தீரும். அப்புரட்சி உற்பத்திக் கருவிகளின் மாற்றத்துக்கேற்ற ஒரு புதிய - பொருத்தமான - ஒர் உற்பத்தி உறவைக் கொண்டுவரும்: நிலை நிறுத்தும். முட்டையின் ஒடு பாதுகாப்பாக அமைகிறது. குறிப் பிட்ட காலத்தில் அக்கரு குஞ்சாக மாற்றம் பெறுகிறது. அக்குஞ் சுக்கு முன்பு பாதுகாப்பாக இருந்த ஒடே அதன் வளர்ச்சிக்கு இன்று இடையூருக இருக்கிறது. உள்ளிருக்கும் குஞ்சு ஓட்டை உடைத்துக் கொண்டு வெளியேறுகிறது. குஞ்சு உயிர்வாழ வேண்டுமேல் முட்டை யின் ஒடு உடைபடுவது இன்றியமையாதது. இதுவே இயற்கையா னது - சரியானது - என்போம். இதில் எவருக்கும் கருத்து முரண் பாடிருக்க நியாயமில்லை. முன்னேற்றம் தனி மனிதர்கட்கு மட்டு மின்றி ஒரு சமுதாயத்துக்கே இன்றியமையாதது. தனி மனிதனின் நிலையான முன்னேற்றம் சமுதாய முன்னேற்றத்தில் - மாற்றத்தில்இணைந்திருக்கிறது. சமுதாய அமைப்பிலும் முன்னேற்றமான உற் பத்தி உறவுக்குச் செல்லும்பொழுது பின்தங்கிய - வளர்ச்சிக்கு இடை யூருன - உற்பத்தி உறவைத் தூக்கி எறிந்துவிடுதல் என்பது இயல் பானதே. அது போலத்தான் எந்த உற்பத்தி உறவு ஒரு காலத்தில் தனக்குப் பாதுகாப்பாக இருந்ததோ அதே உறவு இப்பொழுது சமு
குமரன் பக்கம் 21

Page 13
தாய முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக அமைகிறது. எனவே பழைய - படுபிற்போக்கான - உற்பத்தி உறவை உடைத்தெறிந்து விட்டுப் புதிய உற்பத்தி உறவை உருவாக்குகின்றனர். இதனைத்தான் புரட்சி என்கிருேம். எனவே, புரட்சி என்பது சமுதாயத் தேவை. நடந்து தீரவேண்டிய ஒரு சமுதாய நிகழ்ச்சி. இப்புரட்சியின் வழி யாக பழைய உற்பத்தி உறவுகள் அழிந்து உற்பத்தி சக்திகளின் தன் மைக்குப் பொருத்தமான ஒரு புதிய உற்பத்தி உறவு உருவாக்கப் படும். இதைப் புரட்சியின் வழியாகவே நிறைவேற்ற முடியும். இதை ஏன் சிலர் ஏற்றுக்கொள்வதில்லை? எதிர்க்கின்றனர்? அவர்கள் யார்? என்ற விஞக்கள் நிரல்பட நம் மனக்கண் முன்னிற்கலாம். இருதுறை அறிவியல்
சமுதாயத்தை அறிவியல் நோக்கில் - அணுகுமுறையில் பார்ப்ப
தும் படிப்பதும் சரியான முறையாகும். அறிவியல் இரு வகைப்படும் இயற்கை அறிவியல், சமூக அறிவியல் என்பன அவை,
இயற்கை அறிவியல்:
பெளதிகவியல் (Physics), இரசாயனவியல் (Chemistry) போன் றவை. உற்பத்தி சக்திகளைப் பற்றி விளக்குவன. பண்ட உற் பத்தியைப் பெருக்கவும் பெரும் பொருளிட்டவும் பயன்படும். ஆளும் வர்க்கமும் அரசும் இதில் பெருங் கவனம் செலுத்துதலும் பெரும் பணஞ் செலவிடலும் இயல்பே.
சமூக அறிவியல்
மானிடவியல், தொல்பொருளியல், பொருளாதாரம், வரலாறு, கலை இலக்கியம், நீதி போன்றவை இவற்றுள் அடங்கும். இவை அறி வியல் முறையில் கற்றுத்தரப்படவில்லை. ஏன்? இவை உற்பத்தி உறவு களைப் பற்றியும் அதைப் பாதுகாத்து நீதிப்படுத்தும் மேல்மட்ட அமைப்புக்களைப் பற்றியும் அல்லவா தெளிவுறுத்துகிறது.
நாம் சமூகத்தை நன்கு தெரிந்துகொள்ள அந்தந்தச் சமூகத்தில் நிலவிய உற்பத்தி முறைகளில் தெளிவு பெறுதல் இன்றியமையாதவை. கவிஞனையோ, எழுத்தாளனையோ சிந்தனையாளனையோ அடையாளங் காண சமுதாயத்தைப் பற்றிய தெளிவு இன்றியமையாதது. சமூதா யம் என்றும் மாறிக் கொண்டிருப்பது. அவற்றில் வளர்ச்சி, மாற்றம் ஆகியவை பற்றிய அறிவு நமக்குத் தேவை. வளர்ச்சிக்கும், மாற்றத்துக்கும் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியும் மாற்றமும் உந்து சக்தியாய் அமைகின்றன. இவையே உற்பத்தி உறவுகளை வரையறுக் கின்றன.
பக்கம் 22 குமரன்

ஒன்றுக்கு மேற்பட்ட உற்பத்தி முறைகள் சமுதாயத்தில் இருக் கும்பொழுது அதில் ஏதாவது ஓர் உற்பத்தி முறைதான் ஆளுமை செலுத்துவதாயிருக்கும். அதைச் சார்ந்தே அரசும் இருக்கும். ஓர் அரசு எல்லா மக்கட்கும் பொதுவானது என்பது பொய்மைத் தோற்றந் தான. அவ்வாருயின் அத்தோற்றத்திற்கு ஓர் அடிப்படை இருக்கு
மல்லவா?
உழைப்புச் சக்தியை ஒருவன் மற்முெருவனுக்கு விற்கிருன்.
உற்பத்தியான பொருட்களைச் சந்தையில் - கடையில் - யார் வேண்டுமானலும் வாங்கலாம்?
இவை அனைத்து மக்கட்கும் பொது. இதில் அனைவர்க்கும் சுதந் திரம் உண்டு. அரசு அனைத்து மக்கட்கும் பொதுவானதுபோல் தோன் றுவதும், அரசு அனைத்து மக்களின் சார்பானது என்ற உணர்வும் இதிலிருந்துதான் தோன்றின. உற்பத்தி முறையில் ஆளுமை செலுத் தும் வர்க்கத்திற்கு தொண்டு செய்யும் - பாதுகாப்பளிக்கும் - முறை யில்தான் அரசு அமைப்பே இருக்கும்.
ஐந்து வகை உற்பத்தி உறவுகள்
ஐந்து வகைப்பட்ட உற்பத்தி உறவுகள் இதுவரை சமுதாயத் தில் நிலவின;-
1. தொன்மைப் பொதுவுடமை முறை 2. அடிமைச் சமுதாய முறை 3. பிரபுத்துவ முறை 4. முதலாளிய முறை 5. சோசலிச முறை
தொன்மைப் பொதுவுடைமை முறையில் உற்பத்திக் கருவிகள் சமுதாயத்தில் உடைமையாக இருந்தன. அன்றைய மனிதன் பட்டி னிக்கு இரையாகிச் சாகாமல் இருக்கவும் - கொடிய விலங்குகட்கு இரை யாகாது தப்பிக்கவும் - அக்கம்பக்கத்து மக்கள் கூட்டத்தால் அழிக் கப்படாமல் தவிர்க்கவும் அவர்கள் பொதுவாக உழைக்கவும் உற்பத் திப் பொருட்களைப் பொதுவாக நுகரவும் செய்தனர். இங்கு உற்பத்தி மிகவும் தாழ்ந்த நிலையில் இருந்தது. சொந்தப் பயன்பாட்டுக்கு மட்டுமே பொருள் உற்பத்தி செய்யப்பட்டது. சமூகம் வெறும் உயிர்ப் பிழைப்புக்கு மட்டுமே போராடிக்கொண்டிருந்தது. அதனை அந் நிலை யில் வைத்துப் பாதுகாக்கவே சமூக முழுமையின் ஒருங்கிணைந்த முயற்சி யோடு கூடிய உழைப்புத் தேவைப்பட்டது. உழைப்புப் பொதுவாயிருந் தது போலவே நுகர்வும் பொதுவாய் இருந்தது. உபரி ஏதுமில்லை. உற்பத்தி தாழ்ந்த நிலையில் இருந்ததால் அச்சமுதாயத்தின் தனிப்பட்ட
குமரன் பக்கம் 23

Page 14
உறுப்பினர்கள் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்து சுதந்திரமாக உயிர் பிழைத்திருக்க முடியாது. இவ் உண்மையின் காரணமாகவே சமூகத் தில் கூட்டமைப்பு நிலவியது. வெளிக் குழுக்களுடன் தொன்மைப் பொதுவுடமைச் சமுதாயத்தில் பண்டமாற்றுச் செய்யும் தேவை காலப்போக்கில் தோன்றியது. இச் சமுதாயத்தில் பிந்திய கட்டத்தில் உற்பத்திப் பொருட்கள் மேலும் மேலும், மிகுதியாக பண்டவடிவத்தை அடைந்தன. அதாவது அவை உற்பத்தி செய்வோரின் சொந்தத்துக் குப் பயன்படும் உற்பத்தி முறை குறைந்தது. பண்ட மாற்று நோக் கத்திற்காக மிகுதியாக உற்பத்தி செய்யப்பட்டன. தொடக்ககால உழைப்புப் பிரிவினை சமுதாயத்துக்குள்ளேயான பண்டமாற்று வழி யாக அகற்றித் தள்ளப்பட்டது. அவை எந்த அளவுக்கு மிகுதியாக வளர்ந்தனவோ அந்த அளவுக்கு சமுதாயத்தின் தனிப்பட்ட உறுப் பினர்கட்குச் சொந்தமான உடைமையில் சமத்துவமின்மை ஏற்றத் தாழ்வு வளர்த்தது. நிலமீதான பழைய பொதுவுடைமை மிகுதியாகக் குலைக்கப்பட்டது. பண்டமாற்று :
காலப்போக்கில் ஒரு குழு வெளிக் குழுக்களுடன் - ஒருவருக் கொருவர் ஒப்புக்கொள்ளப்பட்ட - பண்ட மாற்றுச் செய்யும் தேவை தோன்றியது. பண்டமாற்றுச் செய்தவை உபரிப் பொருட்களே. இப் பண்ட மாற்றில் ஓர் உணமை தொக்கி நிற்பதை நாம் நினைவு கூர் தல் வேண்டும். பண்ட மாற்றில் ஈடுபடும் ஒவ்வொருவரும் மற்றவரு டைய தனிவுடைமையை ஏற்றுக்கொண்டனர். அவ்வாறு ஏற்றுக் கொண்டதால் தான் பண்ட மாற்று மேலும் மேலும் வளர்ந்தது. உற் பத்தியாளர்கள் பண்டமாற்று நே 1 க்கங்கருதிப் பொருட்களை முறை யாக உற்பத்தி செய்யத் தொடங்கினர். அப்பொழுதுதான் பண்டங்கள் புழக்கத்துக்கு வந்தன. நம் தமிழகமும் இம்முறையைக் கடந்து வந் திருப்பதைச் சங்க இலக்கியங்கள் வாயிலாக உணரலாம். இடையன் பாலைக் கொடுத்து அதற்கீடாக தானியத்தை மாற்றிக் கொண்டதை யும் (குறுந். 22 1: 3-4), தயிரையும் மோரையும் மாற்றித் தானியத் தைப் பெற்று உணவு சமைத்துண்டதையும் (பெரும்பாண் 155-163), வேடன் தான் வேட்டையாடிக் கொண்டுவந்த மான் இறைச்சியை உழவனிடத்தில் கொடுத்து அதற்கீடாக நெல்லை மாற்றிக் கொண்ட தையும் (புறம் 336; 1-8), பாணர் உள்நாட்டு நீர் நிலைகளில் வலை வீசியும் தூண்டிவிட்டும் பிடித்த மீனைப் பாண் மகளிர் பயற்றுக்கும் தானியத்துக்கும் மாற்றியதையும் (ஐங்குறு. மருதம் புலவிப்பத்து 47) உப்பு வாணிகர் மாட்டு வண்டிகளில் நெல்லைக் கொண்டு வந்து கொடுத்து உப்பை மாற்றிக்கொண்டு போனதையும் (நற்றிணை 183); உமண பெண்கள் உப்பை நெல்லுக்கு மாற்றியதையும் (அகம் 140; 5 - 8; அகம் 390; 8 - 9), சங்க நூல்களில் பரக்கக் காணலாம்.
us& 24 குமரன்

தொடக்கக் கால உழைப்புப் பிரிவினை சமுதாயத்துக்குள்ளேயே மலர்ந்து பண்டமாற்று வழியாக அகற்றித் தள்ளப்பட்டது. இவை எந்த அளவுக்கு மிகுதியாக வளர்ந்தனவோ அந்த அளவுக்குச் சமுதா யத்தின் தனிப்பட்ட உறுப்பினர்கட்குச் சொந்தமான உடைமையில் ஏற்றத் தாழ்வு மிகுந்தது. நிலமீதான பழைய பொதுவுடமை மிகுதி யும் குலைக்கப்பட்டது. பொருள் உற்பத்தி தனிப்பட்ட மனிதர்களின் கைக்குத் தள்ளப்பட்டது அவ்வாறு உற்பத்தியான பொருட்கள் கூட் டுப் பகிர்ந்தளிப்பாக இருந்தது. எனவே இவற்றுக்கிடையே முரண் பாடு தோன்றிற்று. சமுதாயம் ஒரு புதிய உற்பத்தி உறவை நோக் கித் தள்ளப்பட்டது.
அடிமைச் சமுதாய முறை:
அடிமை என்ருல் என்ன் என்பதைத் தெளிவு படுத்திக்கொள்ளுதல் இன்றியமையாமை.
1. இங்கு உற்பத்தி சக்தியை விற்கும் உரிமை எம் மனிதனுக்
கும் இல்லை. 2. அடிமையின் உழைப்பின் உபரி முழுமையும் அவன் சொந்
தக்காரணுல் பறிக்கப்பட்டது.
உற்பத்திச் சாதனங்கள் அடிமையின் சொந்தக்காரனுக்குச் சொந் தம். அதுபோலவே உழைப்பாளியாகிய அடிமையும் அவனுக்குத்தான் சொந்தம். விலங்குகளே விற்பது வாங்குவது போலவே அடிமையை யும் விற்கவும் வாங்கவும் - அவன் பொருளுற்பத்தி செய்ய வலுவற்ற போது அவனுக்கு உணவும் உடையும் கொடுக்க விரும்பா மல் அவனைக் கொல்லவும் அவன் சொந்தக்காரன் உரிமை பெற்றி ருந்தான். அதாவது சமுதாயம் இதனை - நீதி - சரியானது - என்று நம்பிற்று, நம்பவைக்கப்பட்டது. இவைதான் அடிமைச் சமுதாய முறையில் நிலவிய உற்பத்தி உறவுகளுக்கு அடிப்படை. அக்கால உற் பத்தி சக்திகளின் நிலைக்கு அவ்வுற்பத்தி உறவுகள் மொத்தத்தில் பொருத்தமாகவே இருந்தன. கல்லாயுதங்கட்குப் பதிலாக உலோக ஆயுதங்கள் வந்தன. பண்டைக்கால வேடன் மேய்ச்சலையோ உழு தொழிலைபோ அறியான். அவனிடமும் மிகமிகப் பின்தங்கிய நிலை யில் வேளாண்மை இருந்தது அம்மிகப் பின்தங்கிய வடிவிலுள்ள அவ் வேளாண்மைக்குப் பதில் மேய்சலும், உழு தொழிலும், கைத் தொழி லும் தோன்றின. இவ்வுற்பத்தித்துறைகளிடையே வேலைப் பிரிவினை யும் தோன்றியது.
மனிதர்களிடையேயும், சமூகங்களிடையேயும் பண்டங்களின் பண்டமாற்று முறை நிலவும் நிலை தோன்றியது. பண்டத்தின் முதல்
குமரன் பக்கம் 25

Page 15
உருமாற்றம் இங்குத்தான் தொடங்கிற்று பண்டம் என்ற நிலை கடந்து பணம் என்ற நிலைக்கு மாறுகிறது. பணம் பண்டமாக மாறுதலும் இதனுள் அடங்கியிருக்கிறது. சங்கப் பாடலின் ஒரு பகுதி இதனை நமக்கு வலியுறுத்துகிறது.
இடைச்சியர் நெல்லைப் பண்டமாற்றுச் செய்வதைக் கைவிட்டனர். காசுக்கு விற்று அக்காசுகளைச் சேமித்து வைத்தார்கள். குறிப்பிட்ட தொகையாக காசு சேர்ந்தபோது அக்காசைக் கொடுத்துப் பசுவை யும், எருமையையும் விலைக்கு வாங்கிஞர்கள் என்கிறது பெரும் பாணுற்றுப்படை.
நெய்விலைக் கட்டிப் பசும்பொன் கொள்ளாள் எருமை நல்லான் கருநாகு பெறுர உம் மடிவாய்க் கோவலர். ( பெரும்பாண் 164 - 166)
பண்டம் பணமாகிப் பின் அதுவே பண்டமாக மாறும் நிலை தோன்றியதால் சமுதாயம் என்றும் கண்டிராத ஒரு புது நிலையைக் கண்டது. ஒரு சிலர் கையில் செல்வம் குவியும் நிலையே அப்புதிய நிலை. ஒரு சிறுபான்மைக் கூட்டத்தின் கையில் உற்பத்திக் கருவிகள்-நடை முறையில் - குவியும் நிலை தோன்றியது. பெரும்பான்மையான மக் களை ஒரு சிறுபான்மைக் கூட்டம் அடக்கும் நிலையும் அப்பெரும்பான் மையான மக்கள் அடிமைகளாக மாற்றப்படுவதற்குரிய நிலையும் தோன்றின. உற்பத்தித்துறையில் சமூக உறுப்பினர்கள் அனைவரும் ஈடுபட்ட ஒரு பொது உழைப்பை - சுயேட்சையான உழைப்பை-அங்கு காணவே முடியாது. அடிமைகளைக் கட்டாயப்படுத்தி வாங்குகிற கட் டாய உழைப்புத்தான் இங்கு நிலவியது. உழைக்காத அடிமையின் சொந்தக்காரன் அடிமைகளின் உழைப்பைச் சுரண்டினர். எனவே இங்கு உற்பத்திக்கருவிகளும் உற்பத்தியின் பயனும் தனிவுடைமையாயிருந்தது. அடிமைக்கு இதனுல் உற்பத்தியில் - அதனைப் பெருக்குவதில்-ஆர்வ மில்லை. இப்பெரும் பிற்போக்கான உற்பத்தி முறையிலிருந்து சமுதா யம் அடுத்த உற்பத்தி முறைக்கு அடியெடுத்து வைத்தது.
qqq LLLLLLLLYYYLTYYYYYYYYTuuTssssLrsuuuu uLLL r LrMM qysLsrrr rrr Ts YKKKeLesssYYTTYYeA
* தவீன காலத்திலே "திறனுய்வு” என்னும் சொல் குறிப்பதையே முற்காலத்திலும் இலக்கண நூல்கள் குறித்தன என்பதற்கில்லை. பண் டைக் காலத்தில்” அணியிலக்கணம் திறனுய்வின் ஒரு பகுதியையே சிறப்பாக ஆராய்ந்தது; உவமை, உருவகம் முதலியன செய்யுளுக்கு அழகு செய்வனவாய் - மெருகூட்டுவனவாய் - அமைவன என்பதே அணி யிலக்கணத்தின் அடிப்படைக் கருத்தாகும். ஆணுல், இன்று நாம் திற ஞய்வு எனக்கருதுவது அணியிலக்கணத்தை மட்டுமன்று. அழகை சுவைப்பதுடன், அதனுேடு பிரிக்க இயலாதவாறு பிணைக்கப்பட்டிருக் கும் செய்திகளையும் சிந்தனைகளையும் கருத்துருவங்களையும் கண்டுகொள் வதும் அவற்றை மதிப்பிடுவதும் அவற்றுக்கு விளக்கம் உரைப்பதும் திறனுய்வின் பண்பும் பயனும் ஆகும். - க. கைலாசபதி
பக்கம் 26 குமரன்

பிராய்டு பற்றிய மீளாய்வு-2
. மாதவன் .
இடிபஸ் கம்பிளெக்ஸ் :
பாலியல் பற்றிய பிராய்டின் கருத்துகள் அருவருப்பாகத் தோன்ற லாம். ஆயினும் அவற்றில் உண்மை இல்லை என முற்ருக நிராகரித்து விட முடியாது.
பாலியல் பற்றிய அவரது விளக்கங்களைப் பார்ப்போம் :
உலகப் புகழ்பெற்ற இடிபஸ் என்ற கிரேக்க இதிகாசக் கதை யைப் பலர் படித்திருப்பீர்கள். "இடிபஸ் கம்பிளெக்ஸ்’ என்ற பதம் பிராய்டின் பின்னரே வந்தது.
"உங்கள் பிள்ளை வளர்ந்து தந்தையைக் கொன்று தாயை மணம் முடிப்பான்" என தேம்ஸ் மன்னனுக்கும் ராணி ஜாகஸ்டாவுக்கும் தீர்க்கதரிசி ஒருவன் கூறினன். இடிபஸ் அவர்களுக்குப் பிறந்ததும் அவனை மலைப்பிரதேசத்தில் மரணிக்கவிட்டனர். இடையர் அப் பிள்ளையைக் காப்பாற்ற, மற்றேர் மன்னனிடம் மகளுக அவன் வளர்ந்து, தற்செயலாக தேம்ஸ் மன்னனைக் கண்டு போரிட்டுக் கொன்று, தேம்ஸ் மன்னணுகி ஜாகஸ்டாவை (தாயை) மணக்கிருன். அவள் தன் தாய் என அறிந்ததும் தன் கண்களை இடிபஸ் தானே குத்திக்கொள் கிருண். ராணி தற்கொலை செய்கிருள்.
ஒவ்வொரு குழந்தையும் சிறு வயதில் தாயைக் காதலித்து, தந் தையை பொருமையில் வெறுக்கிறது. தகாத பாலியல் கற்பனையான இக்கருத்தே இடிபஸ் கம்பிளெக்ஸ் - இடிபஸ் (உணர்ச்சிச்) சிக்கல் நிலை என்று கூறப்படுகிறது. பெண் குழந்தைகள் தந்தையுடனும், ஆண்பிள்ளைகள் தாயுடனும் பெரும்பாலும் அதிகப்பற்றக இருப்பதன் அடிப்படை உளவியல் காரணம் பாலியல் என்பதே பிராய்டின் கருத் தாகும்.
பாலியல் பற்றிய புதிய கருத்துகள் :
பாலியல், தகாத பாலுணர்வு பற்றியும் 19ம் நூற்ருண்டு வரை நிலவிய கருத்துகள் யாவையும் பிராய்டு புரட்டிவிட்டார். அவரின் புதிய கருத்துகள் வருமாறு :
1. இன்பத்தின் குறிக்கோள் இனப்பெருக்கம் மட்டும் என்று
முழுமையாகக் கூறமுடியாது.

Page 16
2. "பாலுணர்வு', 'பாலுறவு” ஆகிய இரண்டும் வேறுபட்ட
கருத்துள்ளவை.
3. பாலுணர்வில் கிட்டும் இன்பத்தை உடலின் எப்பாகத்திலிருந்
தும் பெற்றுக் கொள்ளலாம்.
4. பாலுணர்வு என்பது பாலுறவு மட்டுமல்ல - பாலுணர்வு எண்ணம், ஆர்வத்தையும் கொண்டது. உதடு, வாய், தொடு தல் ஆகியவையும் பாலியலின் உள்ளுணர்வு சார்ந்தவையே.
பாலுறவிற்கு வாய்ப்பில்லாதவர்கள் உடலைக்காட்டுதல், பிறரைப் பார்த்தல், தொடுதல், கனவு காணுதல் ஆகியவற்ருல் பாலுணர்வுத் திருப்தியடைகின்றனர்.
மனம், உடலுறுப்புகளின் எழுச்சி பாலியலுக்கு உள்ளுணர்வாகவே தூண்டுகிறது. இன்ப உணர்வுக் கிளறலினல் ஏற்படும் எழுச்சி எவ் வகையாகவோ தணிக்கவேண்டிய குறிக்கோள் கொண்டது.
பாலியல் பருவங்கள்
சிறு வயதில் குழந்தை தாயின் பாலை உறிஞ்சிக்குடிப்பதில் இன்பம் காண்கிறது. தாயே அதன் உலகம். பால் உறுஞ்சுதல் நிறுத்தப்பட்ட தும் குழந்தை கத்துகிறது.
ஆறு வயது வரை குழந்தைகள் தாமாகவே பாலின்பத்தை அனு பவிக்கின்றன. தம் பாலியல் குறிகளே அவர்கள் தொடுவதை, மெய் மறப்பதைக் காணலாம். இது இயல்பானது. பெற்ருர் காணும்போது கண்டிக்கின்றனர்.இது தவறு. அதன்பின்னர் குழந்தைகள் தாமே இத்த கைய செயல்களை விட்டுவிடுகின்றனர். பால் பற்றிய எண்ணப் நினைவிலி மனதிற்குச் சென்றுவிடுகிறது. பருவம் அடையும் நிலைவரை இந்நிலை நீடிக்கிறது. உலகத்தைப் பார்த்து குழந்தை 5, 6 வயதில் ‘இது தவறு" எனக் கற்றுக்கொள்கிறது. இதை மனிதரிடம் மட்டுமே காணலாம். மிருகங்களிடம் காணமுடியாது. பாலியல் பற்றிய விஷயங்களை அறிந்துகொள்ள பிள்ளைகள் ஆர்வப்படுவதை மனிதர்களிடம் மட்டுமே காணலாம்.
தகாத பாலுறவு
ஆதிக்குடிவாசிகளிடையே ஒரே குலத்துள் பாலுறவு கொள்வது தவிர்க்கப்பட்டது. தகாத பாலுறவு குலங்களிலே சட்டமாகி தடுக்கப் பட்டது. வெவ்வேறு குடும்பங்களிடையே மட்டும் பாலுறவு கொள் அனுமதிப்பதன்மூலமே சமூக அமைப்பு ஏற்படமுடியும். W
சகோதரியைத் திருமணம் செய்யப்படாது; கிட்டிய உறவான பெண்ணை மணக்கப்படாது; மற்ருேர் குடும்பத்திலேயே திருமணம்
பக்கம் 28 குமரன்

முடிக்கவேண்டும்; இத்தகைய பாலுறவுப் பரிமாற்றமே பண்பாடு, மானிடத்தொடர்பு ஏற்படுவதற்கு அடிப்படையாக அமைந்தன.
பிராய்டின் பாலியல் கருத்துகள் பல்வேறு மதத்தைச் சார்ந்தவர் களிடையிருந்தும் பலத்த எதிர்ப்பைப் பெற்றன.
ஒவ்வொரு மனிதரும் முதன்முதலில் தன்னையே காதலிக்கிருன். தன் உருவத்தைக் கண்ணுடியில் பார்த்து மகிழ்கிருன். "நான்" என்ற ஆணவம் ஒவ்வொருவரிடமும் உண்டு.
இவ்வாருக பல்வேறு புதிய சிந்தனைக்கருத்துகளையெல்லாம் பிராய்டு முன்வைத்தார். இவற்றையெல்லாம் அவரை ஆரம்பத்தில் மதித்து ஏற்றுக்கொண்டவர்களே பின்னர் எதிர்த்துக் கண்டித்தனர்.
பிராப்டின் சீடரான ஒருவர் பின்னர் அவர்மேல் முழுதாகக் கண் டனக்கணைகளை எய்தபோது பிராய்டு கூறிஞர் :
"இதென்ன பிரமாதம். இதனிலும் பார்க்க ஆழமான கருத்து களை என்னுல் கூறி என் கருத்துகளை மறுக்கமுடியும்."
வாய் தவறிக் கூறுவது :
‘பிராய்டின் நாத்தவறு (Sip) என்ருேர் வார்த்தை ஆங்கில
மொழியில் உண்டு. "வாய்தவறிக் கூறிவிட்டேன்" என்று நாம் சிலவேளை
கூறுகிருேமல்லவா? அவற்றிற்கும் பிராய்டு விளக்கம் சொன்ஞர் :
வாய்தவறிக்கூறுவது மனதின் தவறில்லை. நினைவிலி மனதின் குறிக்கோளும் விருப்புகளுமே வாய்தவறிய வார்த்தைத் தவறின் காரணம் என்ருர்,
பிராய்டும் மார்க்சும் :
பிராய்டு எல்லா மதங்களையும் வெறுத்தார். மனித ஆளுமையின் அடக்குமுறையின் ஒரு பகுதியாக "மனச்சாட்சி" வளர்க்கப்படுவதை அவர் விரும்பவில்லை. ஆராய்ச்சி, விஞ்ஞான ஆய்வுமுறையிலேயே நம்பிக்கை வைத்தார்.
முதலாவது உலக யுத்த அழிவைப் பார்த்து நாகரிகத்தின் முடிவு என்ன? என்று கேட்டார். மனித நாகரிகத்துள் நடைபெறும் வாழ் வுக்கும் மரணத்திற்கும் இடையில் உள்ள உள்ளுணர்வின் கொடிய உதாரணமாக யுத்தம் உள்ளது என்ருர்,
/g *மனிதர் உள்ளுணர்வாக இன்பத்தைத் தேடலாம். துன்பத்தை தவிர்க்க அவர்கள் அதிக முயற்சி எடுக்கின்றனர் என்பது உண்மையே.
குமரன் பக்கம் 29

Page 17
யதார்த்தத்தில் இன்பத்திலும் பார்க்க அதிக துன்பத்தையே பெரும் பாலோர் அனுபவிக்கின்றனர். ஒடுக்கப்பட்ட பெரும்பான்மையோரே மனித நாகரிகத்தைக் காப்பாற்றுகின்றனர். இவர்களுக்கு செல்வத்தின் ஒரு சிறு பகுதியே கிடைக்கிறது" என்ருர் பிராய்டு. பிராய்டு இவ் விஷயத்தில் மார்க்சுடன் உடன்படுகிறார்.
நினைவிலி மனம் - புதிய உலகம்
பர்லினில் 1933இல் ஹிட்லர் ஆட்சிக்கு வந்தபோது பிராய்டின் நூல்களும் மற்றைய சிந்தனையாளர் நூல்களோடு எரிக்கப்பட்டன. பல லட்சக்கணக்கான யூதாகள் சிறைப்பட்டு, எரிக்கப்பட்டதிலிருந்து பிராய்டு தப்பிவிட்டார். அவரது சொந்த சகோதரியரே எரிக்கப்பட்
6T.
1938இல் பிராய்டு குடும்பத்தினருடன் லண்டனில் குடியேறினர். அடுத்த ஆண்டில் மரணமடைந்தார்.
பிராய்டின் பல கருத்துகள் பற்றி இன்றும் விவாதங்கள் நடை பெற்றுக்கொண்டேயிருக்கின்றன. எல்லாக் கருத்துகளும் சரியானவை என நாம் வாதிட வரவில்லை. ஆயினும் நினைவிலி மனம் என்ற புதிய உலகை முதன்முதலில் திறந்து காட்டியவா சிக்மன் பிராய்டு. இதஞல் சித்தாந்தங்களையே நாம் மீளாய்வு செய்ய வழிவகுத்தது.
கருத்துருவங்களும் கோட்பாடுகளும்
கருத்துருவங்கள் யாவும் நினைவிலி மனம் சார்ந்தவை. இவை எமது சிந்தனையை பெரும்பாலும் ஆள்கின்றன.
கருத்துருவங்கள் என்பன விஞ்ஞானபூர்வமானவையல்ல. மதம், பரம்பரையாக வந்த குடும்ப பழக்கவழக்கங்கள், சடங்கு முறைகள், தவறன கல்வி முறைகள், கலை-இலக்கியங்கள், தொடர்பு சாதனங் கள் ஆகிய கருத்துருவங்களின் தாக்கங்கள் எம் நினைவிலி மனதில் படிந்துள்ளன. இதனுல் எமது சிந்தனை, எமது முடிவுகள் யாவும் சுதந்திரமானவை, சரியானவை, விஞ்ஞானபூர்வமானவை என்று கூறி விட முடியாது. விஞ்ஞானபூர்வமான கோட்பாடுகளை வைத்தே நாம் இக்கருத்துருவங்களை மீறி சரியாக, சுதந்திரமாக விஷயங்களைக் கண் டறிய முடியும். உதாரணமாக, மார்க்சிய கோட்பாடுகளான வர லாற்றுப் பொருள்முதல்வாதம், இயக்கவியல் பொருள்முதல்வாதம் ஆகியவற்றைக் கூறலாம். Χ
Lidaso 30 குமரன்,

ஒரு நிகழ்ச்சி, மூன்று அனுமானங்கள்
கோவி?
1. ஒடக்காரன் பாட்டு காலமெனும் நதியினிலே கதைகளெனும் தோணியடா. கதையென்னுந் தோணியிலே கருத்து வந்தா ஏத்திக்கடா
2. 0. முதல் அனுமானம். 2. 1. நந்தன் வேண்டுதல் சொந்தமுடன் அருகிருந்து
வந்தனங்கள் செய்திடவே, பந்தம்பறை யானதாலே
நொந்துமணம் வருந்துகின்றேன்" உந்தன்தேர் அடியினின்று
உந்தனெழில் கண்டிடவே, நந்திதனை விலக்கிவீர்
நந்தனுமை வணங்கிடவே!
2. 2. துவார பாலன் கண்டிப்பு
srí Lú Guom-m 1%vuT - Ssu sér
தீட்டுப் பட்டுப் போவான்; வெட்டித் தனமாய் ஆசை - குல
தருமம் மீற தேடா கட்டிப் பயலே நந்தா - சிவன்
காளை நோக லாமோ? பட்டி போல நின்னு - சும்மா
பார்த்துப் போடா நீசா
4. 0. இரண்டாவது அனுமானம் 4. 1. நந்தன் கோரிக்கை கொட்டு மேளம் முழக்குக்கெலாம்
வாருதோலு கொடுத்துவந்தேன்; இட்டமுடன் கோரோசனை
ஈசனுக்கே யளித்துவந்தேன்; வெட்டுவித்தேன் குளமுமொன்று
ஈசனடி யார்குளிக்க திடுக்கெட்ட ஜாதிநந்தன்
நாதனெழில் காண்பதெப்போ?
3, 2. சிவலோகநாதன் சலுகை ஈனப் பறையன் நந்தன்
ஆசை விடவே மாட்டான்; கோணக் கொள்கை கலகம்
மாற்றவே எண்ண மாட்டான்; தூண்டில் புழுவைப் போல
சலுகை தந்து பாலா, வீனன் அடிமை யாக
ஆணை வழங்கு கின்றேன்!
4. 0. மூன்ருவது அனுமானம் 4. 1. நந்தன் போராட்டம்
பல்லவி என்ன நியாயமோ - இது என்ன நீதியோ - அட ஏற்க லாகுமோ - உமைப் பார்க்கலாகுமோ.
சரணங்கள்
நாங்கள் தந்த வாரில்தோலில்
கொட்டுக் கொட்டுகிறீர்; நாங்கள் தந்த கோரோசனை
பூசை செய்கிறீர்; நாங்கள் வெட்டும் குளமதிலே
முழுக்குப் போடிறீர்; நாங்கள் காண நீருமேணுே
பயந்து சாகுறீர்!
(என்ன..)
நாங்கள் பறிச்ச பூவில்மாலை
சூட்டிக் கொள்கிறீர்; நாங்கள் தந்த சந்தனத்தைப்
பூசிக் கொள்கிறீர்; நாங்கள் தந்த சாம்பிராணி வாடை பிடிக்கிறீர்; நாங்கள் அளித்த பத்தி குடம்
நல்லா மணக்குறீர்!
குமரன்
பக்கம் 31

Page 18
5. 0, முடிவுரை 6, 0. வெண்மணி நந்தன்
8 பிரகடனம் 5. 1. தேரடி நநதன பாட்டு பல்லவி.
- பல்லவி" இதையும் கேளடா - நன்றம் உற்றுப் பாரடா - சொல்லை எண்ணிப் பாரடா தோழா உரசிப் பாரடா - உலகை சரணங்கள்
0. கொடிய பாம்பைக் கொல்வதற்கு சரணங்கள மகுடி தேவையா - இல்லை
தடிகள் தேவையா? நெடிய பேதம் காத்தசாமி - மயங்கி விடாதே - நீ சாமி வேண்டுமா - அதைப்
பூஜை செய்யவா?
வலதுபாலன் மொழியில் நந்தா
தூங்கி விடாதே! *一 。一一–*
சூடத தட்டைப் பறையன் காட்ட சிலபொழுது உன்னத்தானே சாமி இறங்குமா - நம் தட்டிக் கொடுக்கிருர் - உனக் பேதம் ஒழியுமா?
மடிய வேண்டும் சாமி, பூஜை
பேதம் அழியவே - புது (p-sibgli..... ) மனிதன் தோன்றவே!
குட்டி வைக்கிறர்
1. 1. நந்தன் கதை, தமிழ்க் கலை இலக்கிய வரலாற்றில், பல் வேறு காலங்களில், பல்வேறு இடங்களில், தீண்டாமையைப் பற்றிப் பேசும்போதெல்லாங்கூட, பேசப்பட்டுக்கொண்டே வருகிறது. கால மாறுதலுக்கு ஏற்ப, கதையும் கதையின் சம்பவங்களும் கூடுதல் குறை ச் சலோடு சொல்லப்பட்டு வந்திருக்கின்றன. இவைபற்றி கலாநிதி க. கைலாசபதி தமது ‘புலைப்பாடியும் கோபுர வாசலும்’ எனும் ஆய்வுக் கட்டுரையில் மிக விரிவாக எழுதியிருக்கின்றர். அவற்றை மீண்டும் இங்கே விரிவாகவோ அல்லது சுருக்கமாகவோ கூட கூறத் தேவை இல்லை. இங்கு என்னுடைய நோக்கமும் வேறு.
1, 1. "ஒரு நிகழ்ச்சி, மூன்று அனுமானங்கள், ஒரு முடிவுரை' என்னும் பாடல்கள், நந்தன் வரலாற்றை முழுமையாகக் கூறுவன அல்ல; திருப்புன்கூரில் நந்தனுக்கு ஏற்பட்ட அனுபவத்தை அல்லது சம்பவத்தை மட்டும் எடுத்துக்கொண்டு கூறுவதாகும்; அந்தச் சம்ப வம் அல்லது அனுபவம் எப்படி நிகழ்ந்திருக்கும் என்ற மூன்று அனு மானக் கருத்துக்களின் அடிப்படையில் கூறுவதாகும்.
1. 2. இப்படி வேறுபட்ட மூன்று அனுமானங்களை ஒரே கூட்ட மைப்புக்குள் கூறுவதற்கு, அதற்கேயுரிய வடிவமும் இங்கே தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளது.
2. திருப்புன்கூர் சிவலோகநாதன் தன்னைத் தரிசிப்பதற்கு ஏது வாக தமது காவல் பூதங்களில் ஒன்ருகிய வலதுபுற துவாரபாலன், மூலம் நந்தியை விலகச் செய்தார். அதாவது, குலமுறை நியதிகளுக்
பக்கம் 32 - குமரன்

குள்ளிருந்து நந்தன் தன்னைக் காண்பதற்கு சிவன் இசைவளித்திருக் கிருர் இதனை நினைவுபடுத்துவதுபோலவே திருப்புன்கூர் சிவலோக நாதன் கோவில் கட்டிடம் மற்றும் சிற்பக் கலை முதலானவை மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டிருப்பதை இன்றும் காணலாம் (இஃது இன்ஞெரு பகுதியில் விளக்கி உரைக்கப்பபட்டுள்ளது)
3. நந்தன் கதையை முழுமையாகப் பரிசீலித்துப் பார்த்தால், அவர் சிறந்த சிவத் தொண்டராய் இருந்தும், பார்ப்பனர் முத லான மேற் குலத்தாரைப் போல சிவனை அருகிருந்து வணங்க, இறுதிவரை அனுமதிக்கப்படவே இல்லை என்பது புலனுகும். நந்தனின் தில்லை தரிசனங் கூட. தீக்குளித்தெழுந்த “புதிய பார்ப்பனத்தன் மையோ’ அனுமதிக்கப்பட்டிருக்கிறது. இது நந்தன் காலத்திலும் அத ற்கு முன்னும் சமூக ஒடுக்குமுறை மிகக் கடுமையாக இருந்து வந்திருக் கிறது என்பதைக் கூறிவதன்றி வேறில்லை.
4. சமூக ஒடுக்குமுறை மிக மேலோங்கியிருந்த காலக் கட்டத்தில் நந்தனின் திருப்புன்கூர் சிவலோக நந்தன் தரிசனம், மூன்று விதமான அனுமானங்களை நம் உள்ளத்தில் தோற்றுவிக்கின்றன. (1) சிறந்த சிவத் தொண்டராய் விளங்கிய நந்தனரை தில்லைத் தீயில் மூழ்கச்செய்து சாகடித்த சண்டாளர்கள், தேரோடும் வீதியில் நின்முவது சிவலோக நாதனைத் தரிசிக்க அனுமதித்திருப்பார்களா என்ற கேள்வி என்னு டைய முதல் அனுமானம். ( 2 ) ஒருவேளை அப்படிே தேரடியில் நின்று தரிசிக்கும் அனுமதி நந்தனுக்கு வழங்கப்பட்டிருந்தாலும், அது அவ னுடைய சிவ பக்திக்குக் கிடைத்த வெகுமதி அன்று: மாருக அது நந் தனுக்கும் அவனைப் போன்ற பஞ்சமர் அனைவருக்கும் காட்சி வடி வில்-'நீங்கள் என்றென்றும் எங்கள் ஏவல் அடிமைகளே' என்பதை உணர்த்துவதற்காகவே, நந்தனைத் தேரடியில் நிறுத்தித் தரிசிக்க அனு மதித்திருக்கின்றனர்; இஃது இரண்டாவது அனுமானம்; (3) இவ் வாறு மேலோங்கியிருந்த சமூக ஒடுக்கு முறையை நந்தனே அல்லது அவன் கூட்டத்தவரோ தொடர்ந்து சகித்துக் கொண்டு வந்திருக்க முடி யாது; நிச்சயமாக என்ருவது ஒரு நாள் ஏதாவதொரு வகையில் தம் எதிர்ப்பைக் காட்டியிருக்க வேண்டும்; கலகங்கள் கூட செய்திருக்கக் கூடும்; ஆனல் அஃது அக்கால படிப்பாளிகளால் குறிக்கப்படாமல் வேண்டுமென்றே விடப்பட்டிருக்கும் அல்லது அவர்களுக்கு முக்கிய மற்றதாக ஒதுக்கப்பட்டிருக்கும்; இஃது மூன்ருவது அனுமானம்.
4. 1. மேற் சொன்ன மூன்று அனுமானங்களை உள்ளடக்கியதே 'ஒரு நிகழ்ச்சி மூன்று அனுமானங்கள் ஒரு முடிவுரை' என்னும்
திய நந்தன் கதைப் பாடல்.
குமரன் பக்கம் 33

Page 19
5. மேற்சொன்ன மூன்று அனுமானங்களில் மூன்முவதாக சொன்ன அனுமானம் நிச்சயமாக ஆதனூர் புலைப்பாடி நந்தன் காலத்தில் முதிர்ச்சி அடைந்திருக்க முடியாதென்பது என்னவோ உண்மை தான்; ஆனல், அதுவே, அவன் காலத்திலோ அல்லது அதற்கு முன்னே கருவாகி இருக்கக்கூடுமென்று கூறினல் அது தவருகாது.
5. 1. மேலும் மூன்ருவது அனுமானம் அந்த ஆதனுரர் நந்தன் கால அனுமானமே அன்று என்பதைக் கூர்ந்து கவனித்தால் தெரியும். 6. முதல் இரண்டாம் அனுமானங்களில் அடியாய், மூடஞய் இருந்த நந்தனை மூன்றுவது அனுமானத்தில் அடக்குமுறையை எதிர்ப் பவனுய் பகுத்தறிவுள்ளவனுய், ஏன் புரட்சியாளன்போலக் கூட காட் டியிருக்கிறேன். வரலாறு அறிந்த யாராவது இதைக் கண்டு எப் படி நந்தனை நாத்திகளுக்கலாம் என்று கேள்வி கேட்கக்கூடும். அவர்களுக்கு இதைத்தான் விடையாகக் கூறுவேன். நந்தனும் நந் தன்களும் என்றும் அடிமையாய் மூடராயும் இருக்கவேண்டுமென்று விரும்பவில்லை; மேலும் அவர்கள் என்றென்றும் மூடர்களோ அடிமை களோ அல்ல; அவர்களும் உண்மை உணர்ந்து அறிவு பெற்று அதனை ஆளுமை கொள்ளும் ஆற்றல் உடையவர்களாகவும் வர விரும்புகிறேன். எவன் ஒடுக்கப்பட்டிருக்கின்ருனே, அவன் தன் மீதுள்ள ஒடுக்குமுறை மூலம் ஒடுக்கவேண்டும். அதாவது ஒர் ஒடுக்குமுறையை ஒழிக்க இன் ஞெரு ஒடுக்கு முறையை கையாள வேண்டும். சரித்திரமும் இதைத் தான் போதிக்கிறது. எனவே நந்தன் நாத்திகளுய் புரட்சியாளஞய் காட்சி தருவதில் வியப்படைய வேண்டியதில்லை.
6. 1. இன்னும் ஆழமாகப் பார்ப்பீர்களேயாளுல், நந்தன் ஒடுக் கப்பட்டவனுக்கு ஒரு குறியீடு; அந்த ஒடுக்குமுறையை ஒவ்வொரு கால கட்டங்களில் ஒவ்வொரு முறையாக எதிர்த்து வந்திருக்கிருரன். மூன்ருவது அனுமானத்தில் அல்லது மூன்ருவது கால கட்டத்தில் அவ னுடைய எதிர்ப்புப் போராட்டம் புரட்சி உணர்வுபூர்வமாக வேகமாக இருக்கிறது. அவன் ஒடுக்குவோன் என்பதையோ, துவாரபாலன் ஒடுக் குவோனின் அரசு என்பதையோ நந்தி ஒடுக்கு முறையின் சட்டதிட் டங்கள் என்பதையோ நான் சொல்லித்தான் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டுமென்பது இல்லை.
6. 2. ஒடுக்குமுறை எதிர்ப்பின் கரு, வளர்ச்சி, முதிர்ச்சி ஆகிய மூன்று நிலைகளையும் அவற்றின் பரிணும வளர்ச்சியையும், நீங்கள் முறையே முதல், இரண்டாம், மூன்ரும் அனுமானங்களில் காணலாம்
பக்கம் 34 குமரன்

8. 3. பார்ப்பனர் முதலான மேற்குலத்தவரின் கடவுளான சிவனை, பறையன் நினைப்பது கூட மகாத் தவறு என்று கருதக்கூடிய காலகட்டத்தில், நத்தன் சிவ தெரிசனம் கிடைக்காதோ, என்று எண் ணத்தொடங்குவது அந்த சமூக ஒடுக்குமுறை எதிர்ப்பின் கருவாகும்.
( 2) அடுத்த பஞ்சம சாதியினருக்கு உயர்ந்த சாதி கடவுளின் தரிசனம் கூடாது என்ற காலகட்டத்தில், நந்தன் தேரடியில் நின்ற வது சிவ தரிசனம் பெறவேண்டுமென்று நினைப்பது அந்தச் சமூக ஒடுக்கு முறை எதிர்ப்பின் வளர்ச்சி நிலையாகும். (3) தங்களை இழிந்தவர் தாழ்ந்தவர் பஞ்சமர் என்றும் பிறரை மேலானவர் உயர்ந்தவர் மேல் சாதியினர் என்றும் கூறுவதற்கு ஆதாரமாக இருந்த கடவுளையே நந் தன் தகர்க்க நினைப்பது அந்தச் சமூக ஒடுக்குமுறையின் முதிர்ச்சி நிலையாகும்.
7. மேற்சொன்ன மூன்று அனுமானங்களையும் அவற்றின் வளர்ச்சி நிலைகளையும் ஒரே கட்டமைப்புக்குள் இணைக்கும் பாலமாக சரடாக ஒடக்காரன் பாட்டு, தொடக்கம் முதல் இறுதிவரை அமைந்து உள்ளது:
7. 1. இத்தகைய கட்டமைப்பு முறையை இரு திரைப்படங்களி லிருந்து எடுத்துக் கொண்டிருக்கிறேன். ஒன்று கிரிப்த்து இயக்கிய 'ssli air gold' (Grifth, D. W., “Intolerance', U. S. A. 1916); மற்றது அக்கிரோ குரசவா இயக்கிய "ரோசமான்" (Akira Kurosawa
Roshomon', Japan, 1950.)
7. 2. ஒரு நிகழ்ச்சியைப் பற்றி, பல்வேறு நபர்களிடம் கருத்துக் கேட்கும் போது, வேறுபட்ட அனுமானங்களோடு விடை கூறுகின்ற னர் என்பதற்காக ரோசமானின் அமைப்பு முறையையும், ஒடுக்கு முறை ஒவ்வொரு சமுதாய அமைப்பிலும் ஒவ்வொரு விதமாக தொடர்ந்து இருந்து வருகிறது என்பதை உணர்த்துவதற்காக சகிப் பின்மை அமைப்பு முறையும் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
ஒடக்காரன் பாட்டு சகிப்புத்தன்மையில் ஒவ்வொரு காலகட்டத் திலும் அன்னை, குழந்தையை தாலாட்டிக் கொண்டிருப்பது போன்று அமைந்திருக்கிறது. ;。
8. இந்த நந்தன் கதைப்பாடல் தோன்றுவதற்கும் காரணமாயிருந்த நிகழ்ச்சிகள், சம்பவங்கள், நண்பர்கள் பற்றி எல்லாம் கூறுவதானல், #ು வேறு கட்டுரையாக அமையும். X
குமரன் பக்கம் 35

Page 20
தனிச் சிங்களப் பெருமைகளும்
தமிழ்
ஒன்ருய் தொழில் புரிந்தோம் ஓர் அலுவலகமே சென்ருேம் என்ருலும் எம்மிடையே எத் தொடர்பும் இருந்ததில்லை பண்டா நீ சிங்களவன் பரம் பரை இன வெறியன் என்ருலும் நான் குறைவோ என் குரலும் தமிழ் ஈழம் இரண்டாகவே வாழ்ந்தோம்;இன ரேகை வரை ஓவியமாய். ஒன்ரு?ய் தொழில் புரித்தும் ஒவ் வோர் திசை ஆணுேம். அன்றந்த ஜூனில் மட்டும் அனைவரும் ஒன்ருனுேம் நின்ருேம் நாம் தெருவில் நீண்டொழித்தன நம்
கோசங்கள், சம்பள உயர்வு கேட்டோம்! சரிக்கட்ட முடியா வாழ்வின் சங்கடச் சுமை அறவே சம்பள உயர்வு கேட்டோம்! என்றும் போல் எம்முள் இன பேத உணர்வுகள் நெஞ்சை நிறைத்தாலும் நீண்ட நம் கரங்களினை கஞ்சிக்காய் கோர்த்து கர்ஜித்து நின்றேம். குண்டர் படைகள் குதிரைப் படைகள் எல்லாம் வந்தெம்மை மோதின வரலாற்றில் அந்தத் தேதி அழியாது போயின கஞ்சி கோரிய நம் நெஞ்சத்தின் கவலைகள் பெருகின ஒன்று இரண்டல்ல
அந்தச் சேதி வந்தது.
கனவுகளும்
.சாருமதி.
எண்பதி ஞயிரம் முகங்கள் இருளில் மூழ்கின. சோகம் என் முகத்தில் போர்வையாகக் கிடந்த
போதுதான்
சிங்களப் பெருமையில் சிந்தித்து வாழ்ந்த நீ நஞ்சுடன் கலந்தாயென நாளிதழ் சொன்னது.
வறுமை தாங்காத்
தற்கொலையென உன் இறப்பிற்கு வரை விலக்கலாம் கூறப்பட்டது. இன்றெந்தன் வீட்டில் இருக்கின்ற பொருளெல்லாம் ஒன் ருென்ரு ய் பறந்து அன்ருடக் கஞ்சியாய் ஆகிக் கொண்டிருக்கின்றது. என்றைக்கு நானும் உன்னைப் போல் நஞ்சிடம் தஞ்சம் புக வேண்டி வருமோ? வறுமையும் வாழ்க்கையும் உனக்கும் எனக்கும் ஒன்றென்பதை என்னல் இப்பொழுது தான் இனம் காண முடிகின்றது. "தனிச் சிங்களப் பெருமைகள்' உனது தற் கொலையை தடுக்க முடியாமல் போன
போது தான்
எனது 'தமிழ் கனவுகள்' தகரத் தொடங்கின. என்ருவது ஒரு நாளில் நமது ஆத்மாக்கள் ஒன்ரு கியே தீர வேண்டும்.
க்பகம் 36
குமரன்

ஒரு மீளாய்வு
* செ. யோகநாதன்
நீங்கள் காலை இளம் சூரியன் போன்றவர்கள், உலகம் உங்களு டையது; இலங்கையின் எதிர்காலம் உங்களுக்கு உரியது. உங்களது நெருக்கடியான காலகட்டத்தில் குமரன் வெளிவருகிருன். அவனது உருவம் எளிமையானது; ஆடம்பரமற்றது. எம்நாட்டுக் குழந்தைகள் போலவே அவன் காட்சியளிப்பான். அக்கிரமம், அதிகாரம், அநீதி யைக் கண்டு அவன் கொதித்தெழுவான். நீதிக்கும் நேர்மைக்குமாக அவன் வேலெடுப்பான்' என்ற இரத்தினச் சுருக்கமான, தத்துவ வீச்சு நிறைந்த பிரகடன்த்தோடு மாணவர் மாத இதழாகவே குமரன் முதல் இதழாக 15-1-1971இல் தன் பயணத்தைத் தொடங்கினன். முதல் இதழிலே 'பரீட்சை முறை ஒழிக்கப்பட வேண்டும்" என்ற "தியாகு"வின் ஆணித்தரமான கட்டுரை மாணவர்களிடையேயும், கல்வி வட்டாரங்
களிலும், முற்போக்காளர்களிடையேயும் குறிப்பிடத்தக்க தாக்கத்தினை
யும், பரபரப்பான கருத்து வெளிப்பாடுகளையும் உருவாக்கினதென் பதனை பின்னர் வந்த கடிதங்கள், கட்டுரைகள் என்பன துலக்கமாகவே தெரியப்படுத்தின. முதலாளித்துவ சமுதாய அமைப்பிலே பரீட்சை முறை என்பது இளந்தலை முறையை எவ்வளவு துன்பத்தினுள்ளும் விரக்தியினுள்ளேயும் அமுக்கி வெதும்பப் பண்ணுகின்றது என்பதனைக் குறிப்பிட்டு, இத்தகைய பரீட்சை முறையை ஒழிப்பதற்கு திரளும்படி மாணவர்களுக்கு தியாகு அறைகூவல் விடுத்தார். இதுவரை வெளி யான எந்தத் தமிழ்ச்சஞ்சிகையும் இத்தகையதொரு கருத்தினை இவ்
வளவு தெளிவாக முன்வைத்ததில்லை என்பதே குமரனின் புதிய தடத்
தினை உறுதிப்படுத்துவதாயமைந்தது. இதை வலுப்படுத்துகிறவிதத் தில் இரண்டாவது இதழில் ‘கல்வி முறையை உடைத்தெறிவோம்" என்ற கட்டுரை கல்வியமைப்பின் பிற்போக்குத்தனங்களைச் சுட்டிக் காட்டி புதிய தெறிப்பாட்டிற்கு அழுத்தங் கொடுத்திருந்தது. குட்டிக் கதைகள், உங்களுக்குத் தெரியுமா? புதிய செய்திகள் என்ற தலையங் கத்திலே வெளியான அம்சங்கள் மாணவர்களுக்கு சிந்தனைப் போக்கில் புதிய வெளிச்சங்களைச் சுட்டிக் காட்டின.
குமரன் பக்கம் 37

Page 21
காலத்தின் தேவை கருதியும், சிந்தனை விரிவாக்கத்தின் விளைவின லும் குமரன் இதழில், அதிகம் உழைக்கும் பெண் அடிமைகள், சுரண்ட லும் பகைமை உறவும், அரசு முதலாளித்துவம் (இதழ் 3) செத்துவரும் செய்யுள், மனிதனும் பொருளும், ஐ. பி. எம். என்ற பூதம் (இதழ் 4) மக்களும் யந்திரங்களும், பார்த்துச் சலித்த பரத நாட்டியம், டாலர் நெருக்கடி என்ருல் என்ன? (இதழ் 5) உழுதுண்டு வாழ்வோர், விவசாயி களைத் தரம் பிரித்தல் (இதழ் 8) வட்டிக்கடையும் செட்டியும் (இதழ் 9) போன்ற ஆழமான ஆனல் எளிமையான முறையிலே எழுதப்பட்ட கட் டுரைகள் தொடர்ந்து வெளியாகின. இவற்றைப் பற்றிய விளக்கங்கள், விமர்சனங்களும் பின்னர் வெளியிடப்பட்டபோது, இளஞ் சமுதா யத்தை மட்டுமல்லாது முற்போக்கு சிந்தனைப் பரப்பின் மீது கூட கும ரன் பதித்த ஆழமான தாக்கத்தை உணர முடிகின்றது.
குமரன் 15, மார்ச் 1972ஆம் ஆண்டு தனது குறிப்புகள் பகுதியிலே தேசிய இனப் பிரச்சினை குறித்து எழுதிய விஷயங்களை இப்போதும் மறு பிரசுரம் செய்வது மிகப் பொருத்தமாயிருக்கும். பாராளுமன்றக் கதி ரைகளை குறிபார்க்கிற அரசியல் வாதியின் சாகஸ வாாத்தைகளையும், ஏதாவதொன்றைச் செய்து அதிலே ஆதாயம் தேடவிளைகிற, மக்களின் நலனைப் பற்றி அக்கறையற்ற விதூஷகர்களின் அறிக்கைப் பரிவர்த்தனை களையும் கேட்டும் நம்பியும் இனிமேலும் மக்கள் ஏமாறத் தயாரில்லை என்பதனை குமரனின் குறிப்புகளும், லெனின் காட்டிய வழியிலேயே தேசிய இனப்பிரச்சினையினைச் சரியான முறையில் தீர்த்து வைக்க முடியு மென்பதனையும் கட்டுரைகளும் தீர்க்கமாகவே கூறிவந்திருக்கின்றன.
தேசிய முதலாளிகள் இங்கு பலமற்றவர்கள். ஏகாதிபத்தியச் சக் திகள் வந்து நாட்டைப் பிரிக்க இடமளிக்காது பாதுகாக்க வேண்டிய கடமை தொழிலாள வர்க்கத்தின் கடமை. தொழிலாளரிடை மத, இன, மொழி வேறுபாடு இருக்க முடியாது. இக்கொள்கையையே கும ரன் முன் வைத்து வந்தான்.
கலை இலக்கியத்துறையின் சமுதாயப் பார்வையினைப் பற்றிய கட் டுரைத் தொடர், யூன் 15, 1972 இல் குமரனில் தொடங்கிற்று. அடுத்த இதழிலேயே "மனித குலத்தின் வரலாறு' என்ற மார்க்சிஸ கண்ணுேட் டத்தில் எழுதப்பட்ட சமுதாய வரலாறு ஆரம்பிக்கப்பட்டது. இவ் விரண்டு கட்டுரைத் தொடர்களும் இளந்தலைமுறையினரின் மத்தியிலே, உற்சாகத்தையும் சிந்தனைப் பெருக்கையும் பரவச் செய்தன. இதுவரை காலமும் ஆங்கிலந் தெரிந்தோரிடமும், அரசியலாய்வாளரிடமுமே சொத்துப் போலிருந்த இக்கருத்துக்களை மிக எளிமைப்படுத்தி, அதே வேளையிலே கருத்துச் சேதமின்றி வெளியிடுவதில் குமரன் மிகவுழ் அக்கறை கொண்டு உழைத்தான். சர்வதேச அரசியல் போக்குகள்,
பக்கம் 38 குமரன்

புரட்சிகர இயக்க வரலாறுகள், செய்திகள் என்பனவற்றை குமரன் சரி யான அணுகு முறையோடு வெளிப்படுத்தினன். குமரன் இதழிலே (இதழ் 14) "யார் இந்தச் சாரு மசும்தா ? ? என்ற கட்டுரை நான்கு இதழ்களிற்குத் தொடர்ந்து வெளியாகிற்று. -
குமரன் 22வது இதழிலே ‘கிரிக்கெட் என்ருேர் விளையாட்டு’ என்ற கட்டுரை வெளியாகியுள்ளது. 10 வருஷங்களிற்குப் பிறகு இன்னும் அந்தக் கட்டுரை பொருந்தி நிற்கிறது. கிரிக்கெட் என்றவுடனே அதி லேயே மக்களை மூழ்க வைக்கிற முயற்சிகளை வெகு சாமர்த்தியமாகக் கையாண்டு வரும் வெகுஜனத் தொடர்பு சாதனங்களை நினைத்தால் எவ் வளவு அருவருப்பாயிருக்கிறது. குமரன் அடித்துச் சொல்லியுள்ள கரு த்து இதுதான். 'ஏகாதிபத்தியம் நம்நாட்டில் விட்டுச் சென்ற ஒருமட்ட மான விளையாட்டே கிரிக்கெட்". குமரன் 27 ஆவது இதழிலே வெளி யான ‘தமிழர் போராட்டமும் ஆளும் வர்க்கத் தமிழரும்”, “விழித்தெ ழுந்த தோட்டத் தொழிலாளி என்ற கட்டுரைகள் தமிழ்மக்களின் அர சியற் சிந்தனைகளை ஒளிவு மறைவுமின்றி விமர்சனம் செய்தன.
இலங்கையில் சமூக வர்க்கங்க%ள முதன்முதலில் ஆராய்ந்து வெளி யிட்டதும் குமரனே. லலிதாவின் இவ்வாய்வு பின் சிறு நூலாகவும் வெளிவந்தது. மருத்துவம் பற்றிய பல கட்டுரைகளும் வெளிவந்தன.
வேலை நிறுத்தம் தொடர்பாக (இதழ் 31, 35) வெளியான கட்டுரை களில் வேலை நிறுத்தமென்பது ஆளும் வர்க்கத்தால் அளிக்கப்பட்ட ஒரு சலுகையே என்பதை விளக்கி, உண்மையிலே தொழிலாள வர்க்கம் எவ்விதம் வெற்றிபெற முடியுமென்பது உணர்த்தப்படுகின்றது.
மே 15, 1974இல் (இதழ் 35) "எமது பிரச்சினைகள் பற்றி நாம் ஆராய்வோம்’ என்ற மொழிபெயர்ப்புக் கட்டுரை, தொடராக வெளி யிடப்பட்டது. அரசியல் பின்னணியில் எவ்விதமான மாற்றங்கள், மக் களைப் பற்றி எவ்வித அக்கறையுமின்றி செயற்படுத்தப்படுகின்றன என் பதையும், அன்றைய அரசியல் நிலைப்பாடு பற்றியும் கட்டுரை ஆராய்ந் தது. இக்கட்டுரையை இப்போது வாசிக்கிறபோது இன்றைய நிலை மைக்கான காரணங்களையும் எம்மால் உணர்ந்து கொள்ள முடிகின்
)gi
வழமையான விமர்சன வாய்ப்பாடுகளையெல்லாம் தூக்கியெறிந்து விட்டு மார்க்சியக் கண்ணுேட்டத்தில் செய்யப்பட்ட அருமையான கட் டுரைத் தொடர்களை த. ச. இராசாமண் குமரனில் எழுதியிருக்கிருர், “கவிஞர் கண்ணதாசன் ஒரு மதிப்பீடு', 'பாட்டில் தெறித்த பொறி" *ாரதி யார்?’ என்ற தொடர்கள் ஆழ்ந்த சிந்தனைக்குரியவை. "சொத் துடைமையுள்ள தனி மனிதனின் நலன் எதுவோ அதுவே சமுதாய நல
குமரன் பக்கம் 39

Page 22
ஞக வள்ளுவத்தில் சித்தரித்துக் காட்டப்படுகின்றது என்பதனை 'பாட் டில் தெறித்த பொதி அசைக்க முடியாத ஆதாரங்களோடு நிறுவுகின் ,f)gi•
“கலையும் சமுதாயமும்’ என்ற செ. கணேசலிங்கனின் கட்டுரைத் தொடர் கலைக்கு 0 சமுதாயத்திற்குமுள்ள தொடர்பு, நிலைப்பாடுகள், வளர்ச்சிப் போக்குகள், கருத்துருவாக்கங்கள் என்பனவற்றைத் தத்து வச் செறிவோடு அணுகியுள்ளது. தமிழ் நாட்டிலும் இக்கட்டுரைகள் பாராட்டுப் பெற்றன. இதுபோலவே அவரது 'கருமையே அழகு" போன்ற கட்டுரைகள் வாசகர் சிந்தனையைக் கிளறுகின்றன. புதிய முடிவுகளுக்கு அவர்களை இட்டுச் செல்லுகின்றன.
படைப்பிலக்கியத் துறையைப் பொறுத்தவரையில், கவிதை, சிறு கதை, குட்டிக் கதை, சொற்கோலங்கள் என்ற துறைகளிலே, குமரன் சித்தாந்த ரீதியான அம்சங்களை உள்ளடக்கி எழுதுகின்ற போக்கினை வளர்த்தும், கூர்மைப்படுத்தியும், படைப்பாளிகள் ஆக்குவதற்கான களத்தினைத் துணிவோடு வழங்கியிருக்கின்றது; வழங்கி வருகின்றது.
செ. கணேசலிங்கனின், "சட்டங்கள் எங்களுக்கே, “புதிய சுலோ கங்கள், “கொடுமைகள் தாமே அழிவதில்லை," "பாணும் கேக்கும், "புதிய சந்திப்பு, இரு முனைகள், தாலியும் போய்விடும்," "நம்பகை வர் நாம் அறியோம், "சமூக நீதி, ‘குயில்களின் கூவல்" ஆகிய சிறுகதை கள், வழமையான சிறுகதைத்தன்மையை உடைத்துக் கொண்டு உரு வத்திலும், உள்ளடக்கத்திலும் புதிய வேகத்தினைச் சுமந்து வெளியாகி இலக்கியகாரரை அதிரச் செய்தன.
யோ. பெனடிக்ற் பாலனின் 'சைத்தான்கள், "இரையாகி வந் தோம், 'துக்க தினம்." "அப்பா எனக்குச் சொல்லித்தா” போன்ற சிற ந்த சிறுகதைகளோடு, அவரின் கட்டமைவான குட்டிக் கதைகள், சொற்பாதங்கள் என்பன படைப்பிலக்கியத்தினில் ஆழமான தடம் பதித்தன. அரசியற் கருத்துக்களை மக்கள் மனதில் நன்கு பதியச் செய் கிற கலைவடிவமான குட்டிக்கதை, சொற்பாத வடிவங்களை கலைநயம் செறிந்த பாலனின் பேணு வெகு துணிச்சலோடு குமரனிலே படைத்து வந்திருக்கிறது. தமிழ்ப்படைப்பிலக்கியத் துறையிலே இவ்வடிவத்தினை உருவ உள்ளடக்க வளத்தோடு அறிமுகப்படுத்தி தொடர்கின்ற பெருமை குமரனுக்கும், பெனடிக்ற் பாலனுக்கும் உரியன.
குமரனே தனது குறிப்பிலே கூறியதுபோல. "புதிய உலகைச்சிருஷ் டிக்க ஆர்வமுள்ள துடிப்பின் வெளிப்பாடுகளையே (கவிதையில்) அவற் றில் காண்கிருேம் என்பதை குமரனின் கவிதைகள் உரத்து ஒலிக்கின் றன. உதாரணமாக சாருமதியின் ‘அடிமைகளாய் பாடவில்லை," "சிங்
பக்கம் 40 h− குமரன்

கமாய் நாமிங்கே எழுந்திடுவோம்," "உணர்வுகளில் மாற்றமென்றல், "நாங்கள் இலங்கையர்கள்," "முட்டை உடைய குஞ்சுகள் ஜனிக்கும்,
எங்கள் இதயங்களில்" என்ற கவிதைகளிலே போர்க்குரலின் தீட்சண் யத்தைக் காணலாம். இலக்கியம் என்பது மறைமுகமான அரசியலே ான்ற போதத்தினை சாருமதியைப் போலவே பெற்ற மற்றவரான புதுவை இரத்தினதுரையின் கவிதை, இசைப்பாடல் வடிவமாயும் பிர பல்யம் பெற்றதென்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இவர்களைப்போல ஒரு கலாசார அணியே குமரனை மையங் கொண்டு உருவாயிற்று. திரு மலை நவம், எம். ஏ. எம். யாஸின், சுபத்திரன், செங்காவலன், ரீ. மீரான், நல்லை அமிழ்தன், அரங்கன் ஸ்மத், மாத்தளை செல்வா, அன்பு டீன், கல்முனைப் பூபால், அனலக்தர் போன்ற கவிஞர்கன் சாதாரண மனிதர்களினதும், போராட்டத்தளங்களதும் உணர்வுகளைக் குமரனிலே தொடர்ந்து கவிதைகளாகப் படைத்து, தமது பங்களிப்பைச் செய்து வருகின்றனர். ww ་་༥༦ བཟོ་ A ് "
இந்த அம்சங்களோடு அவ்வக்காலத்து அரசியல், சமுதாய, பொரு ளாதார, கலாசார அம்சங்களைத் தெளிவுபடுத்துகிற கேள்வி பதில்கள் குறிப்புகள் என்பனவற்றைக் குமரன் வெளியிட்டுள்ளது.
; مج جہلمہ:........
திரைப்படமும் அரசியலும் (இதழ் 20) சர்வதேச திரைப்படங் களின் நவீன போக்கு (இதழ் 30) போன்ற ஆழமான கட்டுரைகளோடு தமிழ், மலையாளப் படங்களைத் தொடர்ந்து குமரன் விமர்சித்து வந்தி ருக்கிறன். பிரான்சிய, போலாந்து, சோவியத் திரைப்படங்களிற் கூடாக அந்நாடுகளின் அரசியல் நிலைமைகளும், சீரழிவும், எழுச்சிகளும் சுட்டிக் காட்டப்பட்டிருக்கின்றன. சத்யஜித்ரேயைவிட மிருணுள்சென் முன்னணிக்கு வருவதற்கான தர்க்கரீதியான காரணங்கள் விவாதிக்கப் பட்டிருக்கின்றன.
அண்மையிலும் பாரதி பற்றிய புதிய பாட்டாளி வர்க்கக் கண்ணுேட் டத்தை முதன் முதலில் வைத்தவன் குமரனே (57-59). தமிழ் நாட்டில் பாரதி பற்றி நூறு நூல்கள் வந்தபோதும் இத்தகைய விஞ்ஞானப் பார்வையை எவரும் முன்வைக்கவில்லை. .....” • • ፡”
இரண்டு சிறிய இடைவெளிகளைக் குமரனின் வளர்ச்சிப் போக்கிலே காண நேர்ந்திருக்கிறது. நீண்ட எதிர்பார்ப்பு, வேண்டுகோள்கள் மீண் டும் குமரனைப் புதிய பலத்தோடு நம்முன்னே கொண்டு வந்திருக்கின் றன. குமரனின் இடைவெளியை குமரனே நிரப்ப முடிந்திருக்கிற தென்பதே சரியான கணிப்பு. கிட்டத்தட்ட குமரனின் 59 இதழ்களும் 2000 பக்கங்கள் வரையில் விரிந்துள்ளன, இந்த ஒவ்வொரு பக்கமும்
ர்த்துடிப்புள்ள செய்திகளையே நமக்கு எடுத்துச் சொல்லுகின்றன ன்பதை எவரும் மறுக்கமாட்டார்கள். - +
umunjin
: ejrojør ";": " . ." ” பக்கம் 41

Page 23
KUMARAN - GO C15-02-1:
을 u
மீண்டும் தி
LĒgi
தரையும் தாரகையும் போர்க்கோலம் மண்ணும் மக்களும் அந்நிய மனிதர்கள் வதையின் கதை கலேயும் சமுதாயமும்
சொந்தக்காரன் {କା
வெற்றியின் இரகசியங்கள்
உயர்தர இரசாயனம் இே
YA
இலக்கியச் சிந்தகை 19 ஆராய்ச்சி, விமர் கொ
விற்பண்பாளர்களுக்கு கழிவு உள்
பார்சல் செலவு இரும்.
விஜயலட்சுமி 248, காலி வீதி !
கொழு
அச்சு குமரன் அச்சகம், ! ஆசிரியர் : செ. கணேசலிங்கள்
 

Registered J5 di Newspaper Iri Sri Lank7
201, DAM STREET, 283) COLOMBO-2,
IT si 35 sit
Bi க்கும்
செ. கணேசலிங்கன் ரூ 12.00
■- 5.
. 16.50
J卓、
重重 芷岳凸
| 15,70
11.25 பனடிக்ற் பாவன் 15.BD 匣 கந்தசாமி I. TIT-firr-srlJ LI JIFFLIĠIT g:0.ՍՈ
1. வகுப்பு பாடநூல்)
ள்- க. கைலாசபதி
சனக் கட்டுரைகளேக் FL
ரூ. 15
ஈடு முற்பணம் அனுப்புவோருக்கு
வி. பி. பி. ஏற்கப்படும்.
புத்தகசாலை
வெள்ளவத்தை ம்பு 5.
:01, டாம் வீதி, கொழும்பு-12
தொலேபேசி 588980
R