கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: குமரன் 1983.05.15

Page 1
"
노노 r:::-:i ուք էլ i-iուր - : -
ஒரு நூற்றண்டு மு = }}}| 515) - all 63 List - மற் - செ. கனேசவிங்கன் முற்போக்கு இலக்கிய - க. கைலாசபதி பூர்ஷ்வா விமர்சகர் ப = மாதவன் பாரதியும் இந்திய - Li i ii li 占- தெய்வசுந்தர விடிவு வேண்டுவோே – LIII. GLI. புதுக்கோணங்கி - அக்கினி புத்திரன் முதலாளிததுவத்தின் - அ. வரதராஜப்பெருமாள் இலங்கைத் தொழில நாடுகளுக்குச் செல் - நவமணி மார்க்சின் மூன்று - மாதவன் கோதாத் திட்டம் ப
- I DITij, i
இலக்கிப $25) is கேள்வி ? பதில்
: ::: -եւէ: E =le-է է, եւէ է: li:t: : at it է, Վ. ! ! : Li:: L TkKLL KLkO OSOKKuS O OOO kO OLOKD TLk LKOOkOaOmL aatmk KKKK
 
 
 
 

aSa S S SCK S J S S YYt S SS KK tCSML OOO OOOS OOHtMMT B ODODHYEt
டிவில்
|(მცუ டு sili யத்நாம்
மும் அழகியற் பிரச்சனகளும்
ற்றி நாம் விழி ப்பா யிரு ப்போம்
விடுதலைப்போரும்
ர உங்களுக்கு ஒர் நற்செய்தி
தோற்றமும் வளர்ச்சியும் - 2
ாளர் மத்தியகிழக்கு வது குறித்து ஒரு ஆய்வு
நூல்கள்
ற்றிய மதிப்பீடு
KK K K AKKK g KS KSSuSuS T AAa SMTTSSSLS SLLLS aa aLaL S SLL LLLL a L TT eOK0KHHOLOHO HHLLLLHH S L amKMOKOD DHDOHDOOLOB OOCC S uMMOMBDO
( விலை : ரூ. 2/

Page 2
፳፬ሶ',8-ዷ! -{ :›; •.፥
ரன் குர்ல்
இவ்விதழை ஏப்பிரலில் வெளியிட முடியாது நேர்ந்தது வருத்தமே. இலட்சிய நோக்கோடு வெளிவரும் சிற்றேடுகளுக்கு இத்தகைய நிகழ்வு ஏற்படுதல் விசித்திரமல்ல.
மார்க்ஸ் சிறப்பிதழைப் பாராட்டிப் பலர் கூறினர்: எழுதியுள்ள னர். அவர்கட்கு எமது நன்றி.
59 ஆவது இதழ்பற்றிப் பல காரசாரமான விவாதங்கள் நடை பெற்றதை நாம் அறிவோம். முக்கியமாக பிரஸ்னேவின் மறைவு அன்ரபோவின் வரவு, ஸ்டாலின் பற்றிய சில கூற்றுகள் பற்றியதாகும். குமரனைப் பற்றிக் கணிக்க, சிலர் அவசரப்பட்டுவிட்டனர் என்றே கூற வேண்டும். முக்கியமாக நாம் அக்கதைக்குக் கொடுத்த தலைப்பு பல ரிடை குழப்பம் ஏற்படுத்திவிட்டது.
ஆங்கிலத்தில் ஒரு மரபுண்டு. ஒரு மன்னன் இறந்துவிட்டால் அவர் கள் பின்வருமாறு கூறுவர்.
THE KING IS DEAD. LONG LIVE THE KING.
“மன்னர் இறந்துவிட்டார். மன்னர் நீடுவாழ்க’! மன்னர் பரம்பரை தொடர்வதையே ஆங்கில நிலப்பிரபுத்துவ மரபினர் கருதுகின்றனர். இம்மரணம் பெரியமாற்றம் எதையும் ஏற் படுத்தப்போவதில்லை, முன்னைய அரச நிலை தொடரும் என்பதே அவர் கள் மரபு. பலர் எமது கட்டுரையின் தலைப்பைப் புரிந்து கொள்வார் கள் என எண்ணியது எமது தவறே.
t ஸ்டாலின் மார்க்சியத்திற்கும் சோஷலிசத்தைக் காப்பாற்றுவ தற்குமாக ஆற்றிய சேவைகளை நாம் என்றும் குறைவாக மதிப்பிட வில்லை. அதே வேளை திரிபுவாதம் திடீரென ஏற்பட்டது என்றும் கூறி விட முடியாது. ஸ்டாலின் காலத்திலேயே புதிய வர்க்கம் ஒன்று அங்கு உருவாகத் தொடங்கிவிட்டது என்பதே குருசேவ் போன்ற மார்க்சிய சித்தாந்தத்தை திரிபுபடுத்தும் ஒருவரை ஸ்டாலின் மறைந்த உடனே கட்சியின் தலைமைப் பதவிக்குத் தள்ளிவிட்டதாகும். ரஷ்ய வரலாற்றை ஆய்பவர் எவரும் இவ்வுண்மையையும் மறக்கமாட்டார்கள். மனிதர் கள் எவருமே விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களல்ல. ஆயினும்
2 குமரன்
 
 

ஸ்டானுலிடைய நூல்களையும் சித்தாந்தக் கருத்துகளையும் சோவியத் ரஷ்யா முற்ருக இருட்டடிப்புச் செய்வதை எந்த மார்க்சிய வாதிகளும்
ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
மார்க்ஸ் எழுதிய நூல்களின் சுருக்கத்தை இந்நூற்ருண்டு வேளை யில் குமரனில் வெளியிடுவதும் எமது ஒரு திட்டமாகும். இவ்விதழில் அதை ஆரம்பித்துள்ளோம்.
நவமார்க்சிஸ்டுகள் பற்றி குமரனில் அறிமுகம் செய்து வந்த யாழ். வளாக பொருளாதார விரிவுரையாளரும் எழுத்தாளகும் விமர்சகரு மான அ. வரதராசன் சென்ற மாதம் கைது செய்யப்பட்டது வருத்தந் தரும் செயதியாகும். அவர் விரைவில் விடுதலை பெற்று வந்து மீண் டும் தொடர்ந்து குமரனில் எழுத வேண்டும்.
பாட்டாளி வர்க்கக் கவிஞர்களுக்கு இன்று இன்குலாப் தலைமை தாங்குகிருர், அவர் தேசிய முதலாளிகளின் கவிஞரான பாரதி பற்றி புதிய கண்ணுேட்டத்தில் எழுதியுள்ள கவிதையை இவ்விதழில் காண லாம். அக்கினி புத்திரனுடைய கவிதையையும் காண்க.
சிறந்த கவிஞர்களின் கவிதைகளை முழுமையாக வெளியிட தமிழ் நாட்டிலுள்ள சிற்றேடுகளே அஞ்சுவது வியப்பே.
பாரதி பற்றி புதுமையாகவும் துணிச்சலாகவும் டாக்டர் ந. தெய்வ சுந்தரம் இவ்விதழில் ஆராய்ந்துள்ளார்.
கே. எஸ். சிவகுமாரன் 'தினகரன்' ஞாயிறு இதழ் ஒன்றில் கலைநயம் பற்றிய தன் கருத்தைத் தெளிவாக வைத்துள்ளார். இக்கட்டுரை எமக்கு நன்மை செய்துள்ளது என்றே கூறவேண்டும். அழகியல், கலை நயம் பற்றிய சரியான கருத்தை நாம் தெளிவாகக் கூற வாய்ப்புக்கிட் டியது. கலைநயம் பற்றிய பல மயக்கங்களைப் போக்க கைலாசபதி, மாதவன் கட்டுரைகள் நன்கு உதவும் என்று கருதுகிருேம்.
மத்திய அமெரிக்க நாடான எல் சல்வடோரில் புதிய வியத்நாம் ஒன்று உருவாகி வருவது உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்நாட் டின் வர்க்கப் போராட்டத்தைப் பற்றி நாமும் கற்க வேண்டியது அவ சியமாகும். இல்விதழில் முதல் கட்டுரை வெளிவருகிறது.
குமரன் 3

Page 3
எல் சல்வடோர்.
மற்றெரு வியத்நாம்
-செ. கணேசலிங்கன்
எல் சல்வடோர் மத்திய அமெரிக்காவில் உள்ள சிறியநாடு, பரப் பளவிலும் (8124 ச. மைல்) குடித் தொகையிலும் (50 இலட்சம்) இலங் கையின் மூன்றில் ஒரு பங்காகும். குவாதமாலா, கொண்டுராஸ் ஆகிய நாடுகள், பசுபிக் சமுத்திரத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் எல் சல்வ டோர் நிலப்பரப்பைச் சுற்றி ஸ்ளன. இவ்விரு நாடுகளும் எல் சல்வ டோரும் அமெரிக்க நவகாலனி ஆதிக்கத்திலுள்ளவை. இராணுவத் தலைமையாலேயே ஆட்சி செய்யப்படுபவை.
4 இலட்சம் குடித்தொகை கொண்ட சான் சல்வடோர் இந்நாட் டின் தலைநகர். ஸ்பானிஸ் மொழியே மக்களின் பிரதானமொழி. எழு தப் படிக்கத் தெரிந்தவர் 50 வீதம். 98 வீத மக்கள் கத்தோலிக்க மதத் தைச் சார்ந்தவர். முக்கிய தொழில்கள் விவசாயம் (கோப்பி, பருத்தி, கரும்பு) வெள்ளிச் சுரங்கம், யந்திர உற்பத்தி (ஆடை, சீமேந்து, இரும்பு)
இலங்கைக்குத் தேயிலைபோல அங்கு கோப்பி, உலகச் சந்தையின் ஏற்ற இறக்கம் பொருளாதாரத்தைப் பாதிக்கும் நிலை. பொருளாதாரம் அமெரிக்கக் கம்பனிகளின் ஆதிக்கத்தில் உள்ளன.
இச்சிறிய நாடு இன்று உலக மக்களின் கவனத்தை ஈர்ந்துள்ளது. 6000 கெரிலாக்கள் ஆயுதமேந்தி நாட்டின் ஒரு பகுதியைத் தம் ஆதிக் கத்துள் வைத்துள்ளனர். அமெரிக்கா ஆயுத உதவிகள், யுத்த ஆலோ சகர்களை நேரடியாக அனுப்பியும் கெரிலாக்களை ஒடுக்கிவிட முடிய வில்லை. தவிர தன் நவ காலனியாகவுள்ள கொண்டுராஸ், குவாதமாலா எல்லைகள் மூலம் போரிட்டும் அடக்கிவிட முடியவில்லை. ஒரு பெரிய நாட்டால் விடுதலை வேட்கை கொண்ட சிறிய நாட்டை அடக்கிவிட முடியாது என்பதற்கு முன்பு வியட்நாம் உதாரணமாக இருந்தது.
இன்று வியட்நாமிலும் பார்கக 12 மடங்கு சிறியதான எல் சல் வடோர் உதாரணமாக விளங்குகிறது. அமெரிக்காவே தன் அண்மை யில் புதிய வியட்நாம் ஒன்று தோன்றிவிட்டதாக அஞ்சுகிறது. அதை நசுக்க ஜனதிபதி ரீகன் மேலும் மேலும் பணம் ஒதுக்க முயற்சி செய்தி கொண்டிருக்கிருன். அமெரிக்க மக்கள் வியட்நாம் அனுபவத்தை முன் வைத்து எதிர்ப்புத் தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.
4. குமரன்

மனித உரிமைக்காக வாய் வலிக்கப் பேசும் அமெரிக்க ஜனதிபதி எல் சர்வடோரில் நடாத்தும் கொலைகளுக்கும் கொடுமைகளுக்கும் எல் லையே கிடையாது.
எல் சல்வடோரின் விசித்திரமான நிலைமை யாதெனில் மக்களில் 98 வீதமானவர் கத்தோலிக்க மதத்தைச் சார்ந்தவர்களாவர். இப் போராட்டம் மூலம் கத்தோலிக்க தேவாலயங்கள் வர்க்க ரீதியாகப் பிரிந்துள்ளன. தொழிலாள, விவசாயிகள் வாழும் பகுதியைச் சார்ந்த கத்தோலிக்க தேவாலயங்கள் கெரில்லாப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குகின்றன. ஆளும் வர்க்கத்தைச் சார்ந்த தேவாலயங்கள் இதை எதிர்க்கின்றன.
கத்தோலிக்க தேவாலயங்களிடையே ஏற்பட்ட இவ்வர்க்கப் பிரிவு அமெரிக்காவிலும் கத்தோலிக்க தேவாலயங்களைப் பிரித்துள்ளன. பல தேவாலயங்கள் செரில்லாப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குகின் றன. இது ஒரு விசித்திர நிலையே.
அமெரிக்க ஆதரவுடன் அச்சிறு நாட்டில் கூலி, ஏழை விவசாயி களுக்கெதிராகச் செய்யப்பட்ட படுகொலைகள், வதைகள், துன்புறுத் தல்கள் மனித நாகரிகத்தையே அச்சுறுத்துவன. ஏழை விவசாயிகளில் குடும்பத்திற்கொருவர் இதுவரையில் கொலையுண்டோ, காயப்பட்டோ பிறவிதமாகவோ பாதிக்கப்பட்டோ உள்ளனர். இதனலேயே_வெற்றி அல்லது மரணம்’ என்ற போரில் ஈடுபட்டுள்ளனர்.
கத்தோலிக்க சுவாமிகளே இப்போராட்டங்களில் ஈடுபட்டுள்ள னர். பைபிளை வைத்தே பிரச்சாரம் நடைபெறுகிறது. ஓர் உதா ரணம்:
பணக்காரன் சொர்க்கத்திற்குச் செல்வதென்பது ஊசிக் காதின் ஊடாக ஒட்டகம் நுழைவதிலும் சிரமமானது. ஜேசுக் கிறிஸ்து ஏழை; அவர் ஏழைகளை நேசிக்கிருர். பணக்காரரால் செய்யப்படும் கொடு மைகளைத் தணிக்க ஏதாவது செய்யுங்கள்.
இத்தகைய போதகர்களேக் கொல்ல அரசு இராணுவத்தை அனுப் பியது; அவர்களைக் காப்பாற்றவும் விவசாயிகள் ஆயுதங்கள் எடுத்த னர். இன்று கெரில்லாப்படைகள் கட்டிவிட்டனர்.
அமெரிக்காவின் கவனத்தைமட்டுமல்ல உலகின் கவனத்தையே இன்று ஈர்த்துள்ள மற்ருெரு வியத்நாம் பற்றிய விபரங்களை நாமும் அறிந்திருப்பது அவசியமே.
(தொடரும்)
மெரன் 5

Page 4
இலக்கிய உலகில்...!
இலங்கைப் பல்கலைக்கழக யாழ். வளாக பொருளாதார விரிவுரை யாளரும் பேச்சாளரும் எழுத்தாளரும் மார்க்சிய சிந்தனையாளருமான அ. வரதராஜப்பெருமாள் ஏப்ரல் முதல் வாரத்தில் பொலிசாரால் கைது செய்யப்பட்டார். மார்க்ஸ் நூற்ருண்டு நினைவுக் கூட்டத்தில் கலந்து கொண்ட வேளையில் அவருடன் மேலும் சிலரும் கைது செய்யப் பட்டனர். இவர்கள் மேல் சட்ட நடவடிக்கை எடுப்பது பற்றி அரச சட்டத்தரணிகள் ஆராய்ந்து வருகிறர்கள் எனக் கூறப்படுகிறது.
யாழ். சிற்றேடுகளின் சிறுமைகள் பற்றி முன்னைய இதழ்களில் கும ரன் எழுதியது பயனளித்துள்ளது. யாழ். நிலைமைகளை வெளிப்படுத் தும் ஓரிரு புதிய இதழ்கள் வெளிவந்துள்ளன. தூங்கியிருந்த அலைகூட குமரனுக்கு மேலாக எழுந்து அலை எழுப்பியுள்ளது. இது குமரனில் பெரிய சாதனையாகும்.
மேஜ் (MIRE) என்னும் இனங்களுக்கிடையிலான நீதிக்கும் சமத்து வத்திற்குமான இயக்கம் நிர்மலா நித்தியானந்தன் முதலாக பயங்கர வாதச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்திருக்கப்படும் அனைவரையும் விடு தலை செய்யும்படியும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்கும்புடி யும் ஜனதிபதிக்கும் உலக மனித உரிமைக் கழகத்திற்கும் பொது அறி க்கை மூலம் வேண்டுதல் விடுத்துள்ளது.
கைலாசபதி நினைவுச் சொற்பொழிவை 2-6-83 அன்று இலங்கை மன்றக் கல்லூரியில் பேராசிரியர் ஏ.கே.இராமானுஜம் அவர்கள் நிகழ்த் துவார்கள். இவர் சிகாகோ பல்கலைக்கழகத்தில் மொழியியல், தொல் பொருளியல், தென்னிந்திய மொழிகள், நாகரிகம் ஆகிய துறைப் பேராசிரியராகஉள்ளார். மொழிபெயர்ப்பும் பண்பாட்டுப் புரிதலும் என்னும் பொருள்பற்றி சொற்பொழிவாற்றுவார்.
சோவியத்தைச் சேர்ந்த கம்யூனிச ஆட்சிகள் தம்புரட்சிகர
ஆத்மாவை இழந்து, புதிய இறுக்கம்ான புரோகித அமைப்பு
ஆட்சியின் வெளிப்பாடாகவும் பாதுகாவலராகவும் மாறி
யுள்ளன; இது மார்க்சிஸ்டுகள் தொழிலாள வர்க்கத்தின்
எல்லையாகக் கருதிய சோஷலிச சமுதாயத்துடன் எவ்வித
ஒற்றுமையுடையதாகவும் இல்லை. ଈର୍ଷୀ ଓ
‹gና
6 குமரன்

பாரதியும் இந்திய தேசிய விடுதலைப் போரும் டாக்டர் ந. தெய்வசுந்தரம் பாரதி காலகட்ட அரசியல் சூழ்நிலை
பாரதியின் காலகட்டம், ஆங்கிலேயரின் சுரண்டல் ஏகாதிபத்தி யச் சுரண்டலாக வளர்ச்சியடைந்திருந்த காலகட்டமாகும்; இக்கால கட்டத்தில்தான் 1885 - முதல் 1904 வரை காங்கிரஸ் நீடித்து வந்த வடநாட்டுத் தரகு முதலாளித்துவத் தலைமையைத் திலகர் போன்ற குட்டி முதலாளித்துவ வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு சிலர் எதிர்க்கத் தொடங்கினர். காங்கிரசின் பழைய நடைமுறைகளை அவர்கள் எதிர்த் தனர். மக்களைச் சார்ந்த இயக்கமாகக் காங்கிரசை மாற்ற அவர்கள் எண்ணினர். பகிஷ்கரிப்பு, சுதேசியம், சுயராஜ்ஜியம், தேசியக் கல்வி என்ற நான்கு கோஷங்களை முன்வைத்து, அரசியல் இயக்கத்தை முன் கொண்டு செல்ல அவர்கள் முயற்சித்தனர். v
ஆங்கிலேய அரசும் இக்காலகட்டத்தில் சில முக்கிய நடவடிக்கை களை மேற்கொண்டனர். இந்து-முஸ்லிம் ஒற்றுமையைச் சீர்குலைக்க, வங்காளப் பிரிவினையை அவர்கள் 1905 இல் ஏற்படுத்தினர். காங்கி ரஸ் தீவிரவாதிகளை அவர்கள் வேட்டையாடினர். 1909, 1919 ஆம் ஆண்டுகளில் மிண்டோ - மார்லி சீர்திருத்தம், மாண்டேகு - செம்ஸ் போர்டு சீர்திருத்தம் ஆகிய சட்டங்கள் மூலம் இந்திய மக்களை ஏமா ற்ற அவர்கள் முயற்சி எடுத்தனர். போலித்தன்மை கொண்ட தேர் தல், மக்கள்சபை ஆகியவற்றை இந்தியாவுக்கு அவர்கள் அறிமுகப் படுத்தத் தொடங்கினர்.
காங்கிரசின் மிதவாத - தீவிரவாதத் தலைவர்களுக்கு இடையே நீடித்த தகராறு முற்றி, 1907 இல் காங்கிரஸ் பிளவுபட்டது. அதன் பின் 1914 வரை காங்கிரஸ் இயக்கம் தேக்கமுற்று இருந்தது. பின் அன்னிபெஸண்டின் முயற்சியால் மிதவாதி - தீவிரவாதத் தலைவர்களி டையே “ஒற்றுமை’ ஏற்பட்டு, ஹோம்ரூல் இயக்கம் தோன்றியது. பாரதியின் அரசியல் வாழ்க்கை
1904 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 'சுதேசமித்திரன்’ பத்திரிகை யில் உதவி ஆசிரியனுகப் பணியில் அமர்ந்ததுடன், பாரதியின் அரசி யல் வாழ்க்கை தொடங்குகிறது என்று கூறலாம். உலக அரசியல் ಇ: ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்து, அப்பத்திரி கயில் எழுதத் தொடங்கிய காரணத்தால், அவருடைய அரசியல் அறிவு வளர்ச்சி அடைந்தது.
குமரன் 7

Page 5
1905 ஆம் ஆண்டு வங்காளப் பிரிவினைக்கு எதிரான திலகர், லிபின சந்திரபாலர் ஆகியோரின் போராட்டம், பாரதியைக் காங்கிரஸ் அர சியலில் இழுத்துச் சென்றது, அப்போராட்டத்தால் உந்தப்பட்டு, *வர் காங்கிரஸ் இயக்கத்தில் செயல்படத் தொடங்கினர். திலகரின் தீவிரவாதக் குழுவுடன் இணைந்து செயல்பட்டார்.
அந்த ஆண்டு பாரதி காசிக் காங்கிரசுக்குச் சென்று பங்கேற்ருர் . சென்னை திரும்புகையில் விவேகானந்தரின் சிஷ்யை நிவேதிகா தேவி யைச் சந்தித்தார்.
'சுதேசமித்திரன்’ பத்திரிகை மிதவாதத் தலைவரான ஜி. சுப்பிர மண்ய அய்யரின் பத்திரிகையாதலால், அவரால் தனது தீவிரவாதக் கருத்துக்களை அதில் எழுத முடியவில்லை. இந்நேரத்தில் அவருக்குத் தீவிரவாதக் குழுவுடன் தொடர்புடைய சுரேந்திரநாத் ஆர்யா, சீக்க ரைச் செட்டியார், வக்கீல் துரைசாமி அய்யர், ஹரிசர்வோத்தமராவ், வ. உ. சி. ஆகியோரின் நட்புக் கிடைக்கிறது. அவர்களுடைய உதவி 4-ன் அவர் “இந்தியா’ பத்திரிகைப் பொறுப்பாசிரியராக அமர்ந் தார். தனது கருத்துக்களை வெளிப்படையாக எழுதினர். இப்பத் திரிகைதான் தமிழ்நாட்டில் தீவிரவாதிகளின் ஒரே தமிழ்ப் பத்திரிகை யாக இருந்தது. பின் 'பாலபாரதா' என்ற ஆங்கிலப் பத்திரிகை ஒன்றை ஆரம்பித்தார்.
1906 ஆம் ஆண்டில்தான் லிபினசந்திரபாலரைச் சென்னைக்கு வர வழைத்துச் சொற்பொழிவு செய்ய பாரதியார் ஏற்பாடு செய்தார்.
1907 ஆம் ஆண்டு டிசம்பரில் சூரத் காங்கிரசுக்குச் சென்ருர், தன் லுடன் வ. உ. சி., மண்டயம் பூரீநிவாஸாச்சாரி ஆகியோரைக் கொண்ட சென்னை தீவிர இளைஞர் குழுவை அழைத்துச் சென்ருர், காங்கிரஸ் தீவிரவாதக் குழுவை ஆதரித்தார். இந்நேரத்தில் தான் அவர் திலகர், லஜபதிராய் ஆகியோரை நேரடியாகச் சந்தித்தார். வ. உ. சி.யின் தேசியக் கம்பெனிக்கு நிதி வசூல் செய்து அளித்து உதவினர். இதே ஆண்டில்தான் அவருடைய 'சுதேச கீதங்கள் வெளிவரத் தொடங்கி யது. அரசியல் உலகில் இருந்து கொண்டு, இலக்கிய உலகிலும் செயல் படத் தொடங்கினர்.
1908 ஆம் ஆண்டில் சென்னையில் “சுயராஜ்ஜிய தினம்" கொண்டா டிஞர். வ. உ. சி. சுப்பிரமணிய சிவா, சுதேசி பத்மநாம அய்யங்கார் ஆகிய மூவரும் அந்நேரத்தில் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் பாரதி சாட்சியம் அளித்தார். இந்த ஆண்டில்தான் அவரே தனது ‘சுதேச கீதங்கள்’ என்ற கவிதைத் தொகுதியை வெளியிட்டார்.
S W குமரன்

"இந்தியா’ பத்திரிகை மீது ஆங்கிலேய அரசு நடவடிக்கை எடுத் தது. அதன் சட்டபூர்வமான ஆசிரியர் கைது செய்யப்பட்டார். இந் நிலையில் பாரதி பாண்டிச்சேரிக்குத் தலைமறைவாகச் சென்றர். அங்கே இருத்து கொண்டு, 1908-1910 ஆண்டுகளில் “இந்தியா’ பத்திரிகை யைத் தொடர்ந்து நடத்தினர். ஆனல் அப்பத்திரிகையை இந்தியா வில் நுழையவிடாதபடி, ஆங்கிலேய அரசு தடுத்து நிறுத்தியது. இதன் விளைவாக "இந்தியா" நின்று போகிறது.
அதன்பின் அரவிந்தர், வ. வே. சு. அய்யர் தொடர்பு பாரதி க்குக் கிடைத்தது. கவிதைகள் படைப்பதிலும், தத்துவ ஆராய்ச்சியிலும் முழுமையாக ஈடுபடத் தொடங்கினர்
1918 ஆம் ஆண்டு பாண்டிச்சேரியைவிட்டுத் தமிழகம் திரும்பினர் ஆனல் திரும்பவும் வழியிலேயே கடலூரில் கைதுசெய்யப்பட்டார். பின் அன்னிபெசண்ட் அம்மையார் 'சுதேசமித்திரன்’ சுப்பிரமணிய அய்யர் போன்றேரின் உதவியுடன், ஆங்கிலேய அரசுக்குச் சில உறுதிமொழி களைக் கொடுத்ததன் மூலம், விடுதலை செய்யப்பட்டார். 24 நாட்கள் சிறையில் இருந்தார்.
1919 இல் மீண்டும் சென்னைக்கு வந்தார். ராஜாஜி வீட்டில் காந் தியைச் சந்தித்தார். 1920 இல் மீண்டும் 'சுதேசமித்திரனில் இணைந்து கட்டுரைகளை எழுதத் தொடங்கினர்.
பாரதியின் அரசியல் வாழ்க்கை 1905 லிருந்து 1910 வரை தீவிர மாக அமைந்தது. 1908 இல் திலகர் குழுவைச் சேர்ந்தவர்கள் பாதிப் புக்கு உட்பட்டுச் சின்னபின்னமாக்கப்பட்ட உடன், பாரதியின் அரசி யல் வாழ்விலும் மாற்றம் ஏற்பட்டது. தான் சார்ந்திருந்த காங்கிரஸ் இயக்கம் தேக்கம் அடைந்ததாகக் கூறிப் பாண்டிச்சேரி சென்ருர், பாண்டிச்சேரியிலும் 1910 வரை வாழ்க்கை தீவிர அரசியலிலிருந்து விலகி நிற்கத் தொடங்கியது. 10 ஆண்டுகள் பாண்டிச்சேரியில் அகதி வாழ் வை மேற்கொண்ட பாரதி, தளர்ச்சியடைந்து சென்னை திரும்ப நினைத் தார். தன்மீது எவ்வித ராஜத்துரோக வழக்குக்கும் வாய்ப்பில்லை என் பதை ஆங்கில அரசுக்குத் தெரிவித்து, சென்னை திரும்ப ஏற்பாடுகள் செய்தார்.
கடலூரில் கைது செய்யப்பட்ட பின்னர், அவருடைய விடுதலைக் குச் சென்னையில் அன்னிபெஸண்டை சேர்ந்த குழுவினர் முயற்சி எடுத் தனர். பொலிஸ் அதிகாரிகளைச் சந்தித்துப் பாரதிக்கும் தீவிரவாத அர சியலுக்கும் சம்பந்தமில்லை என்று பாரதியின் நடத்தைக்கு "உத்தர வூாதம்" அளித்தனர். இருப்பினும் பொலிஸ் அதிகாரிகள் தாங்கள் நேரடியாகவே பாரதியிடம் உறுதிமொழிபெற முடிவெடுத்தனர். பாரதியைச் சிதம்பரத்தில் சந்தித்து, உறுதிமொழி பெற்றனர். இனித்
குமரன்

Page 6
தீவிர அரசியலிலிருந்து விலகிவிடுவதாகவும், இனித் தான் எழு தும் படைப்புக்களை ஆங்கிலேய அரசின் தணிக்கைக்கு உட்பட்டு வெளி யிடுவதாகவும் பாரதி உறுதிமொழி அளித்தார்,
அத்துடன் பாரதி, தான் விரும்பி ஏற்ற "தீவிரக் காங்கிரஸ்" நடை முறையிலிருந்து ஒதுங்கிவிட்டார்.
w A பாரதியின் விடுதலைப்போரில் பங்கு 1904 இல் தொடங்கி, 1907, 1908 இல் உச்சக்கட்ட வளர்ச்சியடைந்து, 1910 இல் பின்னடைவுக்கு உட்படுகிறது. 1918 இல் அவர் ஆங்கிலேய அரசுக்கு அளித்த உறுதி மொழிகள், அவருடைய அரசியல் வீழ்ச்சியைக் காட்டுகின்றன. பாரதியின் அரசியல் வீழ்ச்சிக்குக் காரணம், அவர் சார்ந்திருந்த *தீவிரக் காங்கிரஸ்" இயக்கத்தின் தோல்வியேயாகும். இதனைக் கட்டு ரையின் இறுதியில் தெளிவாக ஆராயலாம். விடுதலைப்போர் குறித்து பாரதியின் கருத்துக்கள் (1) முழு விடுதலை
பாரதி காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து செயல்படத் தொடங்கிய காலத்தில் காங்கிரஸ் கட்சியானது இந்தியாவிற்கு முழு விடுதலை எள்ற கோரிக்கையை முன்வைக்கவே இல்லை. தனது தோற்றத்திலிருந்து 1999 வரை இருபதாண்டுக் காலமாகச் சீர்திருத்தக் கட்சியாகவே இருந்த காங்கிரஸ், மக்களின் வளர்ந்து வருகின்ற விடுதலை உணர்வைக் கண்டு தனது கொள்கையில் ‘மாற்றம்" செய்யத் தொடங்கியது. "சுயராஜ் இமான" ஆங்கிலேய அரசுக்கு உட்பட்ட சுய ஆட்சி அரசாங்கமே என்று காங்கிரசின் தலைவர்களான தாதாபாய் நவுரோஜியும். கோபாலகிருஷ்ண கோகலேயும் திரும்பத் திரும்பக் கூறிவந்தனர். தீவிரவாதக் குழுவின் தலைவரான திலகரும் அதையேதான் ஏற்றுக் கொண்டிருந்தார்,
ஆனல் பாரதியார் முழு விடுதலை என்ற கொள்கையைத்தான் கொண்டிருந்தார். ஆங்கிலேய ஆட்சிக்குட்பட்ட சுய ஆட்சி அரசாங் *ம் என்பது நாடகத்தில் வரும் ராஜாவை உண்மையான ராஜா என்று நினைப்பதற்குச் சமமானது என கூறுகிருர். இக்கருத்தை தனது கட்டுரை களிலும், கவிதைகளிலும் பல இடங்களில் கூறியுள்ளார்.
ஆளுல் பாரதியின் இக்கொள்கையில் அவருடைய அரசியல் வீழ்ச் சிக் காலகட்டத்தில் மாற்றம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. *ஆங்கி லேய சாம்ராஜ்யத்தைவிட்டு விலக வேண்டும் என்ற யோசனை எங் களுக்கில்லை" என்று அவர் கூறுகிருர், (2) போராட்ட வடிவம்
செய்கை எதிர்ப்பு, மானசீக எதிர்ப்பு என்ற இரண்டு போராட்ட் முறைகளைக் கூறி, முதல்வகையானது பலாத்கார வழி என்றும் இரண்
د - بیبیسی குமரன்
10

டாவது வகையானது சாத்வீக வழி என்றும் பாரதி கூறுகிருர், தான் இரணடாவது வழியைத்தான் ஏற்றுக் கொள்ள விரும்புவதாகத் தெளி வாகக் கூறலாம்.
சமாதானமாகவே சட்டத்துக்கு இணங்கிய முறைகளால்தான் சுய ராஜ்ஜியம்பெற தான் விரும்புவதாகக் கூறுகிறர். தான் சட்ட ரீதியாக சட்டத்திற்கு உட்பட்டுப் போராட விரும்புவன்தான் என்பதை ஆங் கிலேய அரசுக்கும் தெரியப்படுத்த விரும்பினர். தான் பலாத்கார வழி முறைகளுக்கு எதிரானவன் என்பதைப் பல நேரங்களில் தெளிவு படுத்தினுர்,
காங்கிரஸ் மிதவாதத் தலைமை ஆங்கிலேய அரசிடம் சுயராஜ்ஜி யத்திற்காக் விண்ணப்பிக்கும் போராட்ட முறையைக் கடுமையாகப் பாரதி கண்டிக்கிருர், இது பிச்சைக்காரத்தனம் என்று கூறுகிருர், மக் களைத் திரட்டி அந்நியரைப் பணிய வைப்பதே சரியான வழியென்று கூறுகிருர். ஆஞல் அமைதிவழி மக்கள் போராட்டம் தான் தேவை என்று கூறுகிருர்,
இதே பாரதி தனது அரசியல் வீழ்ச்சிக் காலகட்டத்தில் விடுதலைக் காக ஆங்கிலேய அரசிடம் பிரார்த்திக்கிருர்; விண்ணப்பிக்கிருர்.
பிரிட்டிஷ் பொருட்களைப் பகிஷ்கரிப்பது மூலமும், உள்நாட்டுப் பொருட்களை வாங்குவது மூலமும் ஆங்கிலேயஆட்சியாளரைப் பணிய வைக்க முடியுமெனப் பாரதி கருதினர். (3) காங்கிரஸ் மிதவாதத் தலைமை பற்றி
1885 லிருந்து 1905 வரை காங்கிரஸ் சட்டச் சீர்திருத்தங்களைத் தான் விரும்பியதே தவிர, ஆங்கிலேய அரசைத் தகர்க்க விரும்ப வில்லை என்று பாரதி குற்றம் சாட்டுகிருர்.
மிதவாதக் காங்கிரஸ் தலைமை ஆங்கிலேய அரசிடம் தேவையற்ற நம்பிக்கையை, அதாவது அவர்களாகவே ஆட்சியை விட்டுக் கொடுத்து விடுவார்கள் என்ற நம்பிக்கையை வைத்துக் கொண்டிருப்பதாகவும் அது நடக்க முடியாத ஒன்று என்றும் பாரதி கூறுகிருர்,
மிதவாதக் காங்கிரசில் பெரும்பாலோர் சில பதவி உயர்வுகளுக் காகத்தான் செயல்படுகின்றனர் என்று கூறி, அவர்களைப் பாரதி வன் மையாகக் கண்டிக்கிருர், a
காங்கிரஸ்கட்சி ஆங்கிலம் கற்ற பெரியவர்களால் ஆதிக்கம் செலுத் தப்படுகிறதே ஒழிய, மக்கள் கட்சியாக இல்லை என்று பாரதி குற்றம்
பூட்டுகிறர்.
குமரன் 11

Page 7
மக்களைத் தட்டி எழுப்பி, மக்களைச் சார்ந்த கட்சியாக காங்கிரஸ் மாற வேண்டும் என்று விரும்புகிறர் மக்களே உண்மையான சக்தி கள் என்று கூறி, அவர்களைச் சார்ந்த தலைமையாகக் காங்கிரஸ் தலை மை மாற வேண்டுமென்று அவர் கூறுகிறர்.
வருடத்திற்கு ஒருமுறை கூடித் தீர்மானம் போடும் அமைப்பாக இல்லாமல், வருடம் முழுவதும் செயல்படும் அமைப்பாகக் காங்கிரஸ் மாற வேண்டும் என்று கூறுகிறர்.
காங்கிரஸ் ஆங்கிலேயர்களுக்கு அதிக பாத்திரமும், முக்கியத்துவ மும் அளிக்கப்படுவதாகக் குற்றம் சாட்டி, அந்நியர்களுக்குக் காங்கிர ஸில் என்ன வேலை என்று கேட்டு, அந்நிலை மாறவேண்டும் என்று அவர் கூறுகிருர்,
வருடந்தோறும் மனுக்கள் தயார் செய்து கொண்டு, லண்டன் சென்று ஆங்கில அரசிடம் பிச்சை கேட்கும் வழிமுறையைக் காங்கிரஸ் கைவிட வேண்டும் என்று அவர் கூறுகிருர்,
காங்கிரசில் குறுகிய வாதப் போக்குடன் செயல்பட்ட பம்பாய்
மேதா கட்சியினரைப் பாரதி கடுமையாகச் சாடுகிருர்,
(4) அந்நியருக்கு எதிரான மக்கள் கூட்டணி
திலகர், லிபினசந்திரபாலர், லஜபதிராய் போன்றேர் இந்து மதத் தீவிர ஆதரவாளர்களாகச் செயல்பட்டு, இந்து-முஸ்லீம் ஒற்றுமைக் குப் பங்கம் வரும்வகையில் செயல்பட்டனர்.
ஆனல் பாரதியாரோ இந்து-முஸ்லீம் ஒற்றுமை விடுதலைப் போரில் மிக அவசியமான தேவை என்று உணர்ந்தார். தான் ஒரு இந்துவாக இருந்தபோதிலும், முஸ்லீம்களை அவர் எதிர்க்கவில்லை. மாருக இந்தியா வில் பிறந்த எல்லா மதத்தினரும் ஒன்றே என்று கூறுகிருரர். மேலும் மக்களைத் திரட்டுவதற்காக திலகர் போன்றேர் சிவாஜி, கணபதி பண் டிகைகளைக் கொண்டாட ஏற்பாடு செய்தனர். ஆனல் பாரதியோ அந்த விழாக்களுடன் அக்பர்விழா போன்ற பண்டிகைகளும் இந்திய மக்களால் கொண்டாடப்பட வேண்டும் என்று கூறினர்.
அடுத்து இந்து மக்களிடையே ஒற்றுமைக்கு ஜாதி அடிப்படைகள் தடையாக அமைந்திருந்ததைக் கண்டு, பாரதி அதைக் கடுமையாகக் கண்டனம் செய்கிருரர்.
திலகர் விதவைகள் திருமணத்தையும், எல்லா ஜாதியினரும் சமம் என்பதையும் ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே அவரை அரசியலில் ஏற் றுக் கொள்ளக் கூடாது என்று ஆசார திருத்தக் கட்சியினர் கூறியபோது அது வேறு, ராஜாங்க விஷயம் வேறு என்றும், மேற்கூறிய காரணத்
12 குமரன்

தால் ராஜாங்க விஷயத்தில் திலகருடன் ஒன்றுபடக் கூடாது என்று கூறுவது தவறென்றும் பாரதி கூறினர்.
பாரதியின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்
முழு விடுதலை என்ற கொள்கையைக் கொண்ட பாரதி, தன் அரசி யல் வாழ்வில் 1905 முதல் 1910 வரைதான் வளர்ச்சியைப் பெற்றிருத் தார். அதன் பின் அவர் அரசியல் வாழ்வில் வீழ்ச்சியே ஏற்பட்டது முழு விடுதலை தான் தேவை என்று கூறிய பாரதி, பின்னல் "ஆங்கிலே யரைவிட்டு விலக்குவது கிடையாது’ என்று கூறுவதும், காங்கிரசின் மிதவாதத் தலைமை ஆங்கில அரசிடம் மனு கொடுத்துக் கோரிக்கை கேட்பதைக் கடுமையாகவே சாடிய பாரதி, தானே பின்னல் ஆங்கி லேய அரசுக்கு விடுதலைக்காகப் பிரார்த்திப்பதும் விண்ணப்பிப்பதும் அவரது வீழ்ச்சியைக் காட்டுகின்றன.
பாண்டிச்சேரியில் அவர் வாழ்ந்த காலத்தில் சென்னை கவர்னருக்கு தான் எவ்வித ராஜத்துரோகமும் செய்யவில்லையென்றும், தன்மீது பொலிசார் வீணுகப் பழிசுமத்துகிருர்கள் என்றும், தன்னைப் பற்றிக் கவர்னர் யாரிடமும் அதுபற்றி விசாரித்துக் கொள்ளலாம் என்றும் கூறு வது, அவரது வீழ்ச்சியைச் சுட்டிக் காட்டுகின்றது. இங்கிலாந்து தொழிற்கட்சித் தலைவர் ராம்சே மக்னல்டுக்கு அவர் எழுதிய கடிதத் தில் இது தெளிவாக வெளிப்படுகிறது.
கடலூரில் கைது செய்யப்பட்டுப் பின்னர் உறுதிமொழி கொடுத்து விடுதலை பெறுவதும் அவரது அரசியல் தளர்ச்சியையே காட்டுகின்றது,
தனது தூல்களை வெளியிட வேண்டும் என்பதற்காக அவர் எட்டய புரம் மகாராஜாவுக்குக் கடிதம் எழுதும்போது, தன்மீது தற்போது ஆங்கிலேய அரசு நல்லெண்ணம் கொண்டிருப்பதாகக் கூறுவது அவரது பலவீனத்தையே காட்டுகிறது.
பாரதியின் அரசியல் வீழ்ச்சிக்கு அடிப்படை
பாரதியின் வீழ்ச்சிக்கு அவர் சார்ந்திருந்த காங்கிரஸ்கட்சியே கார் ணமாகும். முழு விடுதலை, மக்கள் இயக்கம் போன்ற முற்போக்குக் கொள்கைகளை உடைய பாரதிக்கு, ஆங்கிலேய அரசுக்கு உட்பட்ட சுய ராஜ்ஜியம், விண்ணப்பிக்கும் முறை, இராஜவிசுவாசம் போன்ற கொள் கைகளைக் கொண்டிருந்த காங்கிரஸ்கட்சி எவ்வாறு பொருத்தமாக அமைய முடியும்? ஓரளவுக்கு அவரது கொள்கைகளை ஏற்றுக் கொண்ட திலகர் கூட்டமும் காங்கிரசின் தரகு முதலாளித்துவத் தலைமையின் கீழ் சூழ்ச்சியினலும், ஆங்கிலேயர் அடக்குமுறையாலும் சிதறடிக்கப் பட்டது. காங்கிரஸ் மிதவாதத் தலைமைகூட 1910 ஆம் ஆண்டிலிருந்து
ஆண்டுகள்வரை தேக்க நிலையிலேதான் இருந்தது.
குமரன் 3.

Page 8
பாரதியின் கொள்கைகளுக்கு ஏற்ற இயக்கம், காங்கிரஸ் அல்லாத ஏனைய புரட்சிகர அமைப்புகளே. அவைதான் ஆங்கிலேயரை அடியோடு தகர்க்க விரும்பின. ஆனல் பாரதியின் அகிம்சைவழிப் போராட்டமுறை அவரை அப்புரட்சிகர அமைப்புகளுடன் இணையத் தடுத்துவிட்டது. மேலும் அப்புரட்சிகர அமைப்புகளும்கூட தெளிவான பார்வையும், நாடுதழுவிய ஒரு அமைப்பும் தொழிலாளி வர்க்கத் தலைமையும் இல் லாத காரணத்தால் தோல்வியையே தழுவின என்று முன்பே கண் டோம்.
எனவே பாரதியின் அரசியல் வீழ்ச்சிக்கு அவர் வாழ்ந்த காலகட்ட சமூக-அரசியல் சூழ்நிலையே அடிப்படைக் காரணமாகும்; பாரதியின் ஆத்மீகப் பிடிப்பும், தெளிவான வர்க்கக்கண்ணுேட்டமும் இல்லாமையும் பிற காரணங்களாக அமைகின்றன.
விடுதலைப் போரில் பாரதியின் பங்கை வரையறுக்க முயற்சிக்கும் போது, கீழ்க்கண்ட முடிவுகளே கிடைக்கின்றன.
(1) உண்மையாகவே விடுதலையை விரும்பியவர் (2) அதற்காகச் செயல்பட முன்வந்தவர்
(3) அந்நியருக்கு எதிரான போராட்டமே இந்திய மக்களின் அன் றைய அடிப்படைப் பிரச்சினை என்று எடுத்துக் காட்டி, அந் நியருக்கு எதிரான இந்திய மக்களின் ஒற்றுமையைத் தொடர் ந்து வலியுறுத்தியவர். (4) திலகர் போன்றவர்களின் இந்துமத வெறிக்குத் தன்னை ஆட்
படுத்திக் கொள்ளாதவர். (5) ஆன்மீகப் பிடிப்பும், தெளிவான வர்க்கக் கண்ணுேட்டம் இல் லாமையும் காரணமாக எது சரியான-உண்மையான இயக்கம் என்று பார்க்கத் தவறியவர். (6) அதன் விளைவாகத் தவருண இயக்கத்துடன் இணைந்து செயல்
பட்டுத் தோல்வி கண்டு, தளர்ச்சியடைந்தவர்.
ஏகாதிபத்தியத்தினதும் பாட்டாளிப் புரட்சியினதும் காலகட் டத்து மார்க்சியமே லெனினிசம் ஆகும். மார்க்சியத்திற்கு மேலாக லெனின் பின்வரும் கருத்துகளைச் சேர்த்தார்.
(1) ஏகாதிபத்தியம் ஏகபோக முதலாளித்துவம் பற்றிய ஆய்வு. (2) பாட்டாளியின் சர்வாதிகாரம். (3) சோஷலிச பொருளாதாரத்தைக் கட்டுதல். (4) தொழிலாள வர்க்கத்தின் தலைமை, (5) தேசிய இன காலனி பிரச்சனை. (6) தொழிலாள வர்க்கக்கட்கி.
லெனினிசம் என்றல் என்ன?
4 குமரன்

மார்க்சின் மூன்று நூல்க
(1) பிரான்சில் வர்க்கப் போராட்டம் 1848-50 (2) பிரான்சின் உள்நாட்டு யுத்தம்.
(3) லூயி பெண்பாட்டின் 18ஆவது புருமயர் . மார்க்சால் எழுதப்பட்ட மூன்று நூல்கள் இவை, கட்டுரைகள் சொற்பொழிவுகளின் தொகுப்பு.
பிரான்சில் 1848 இல் ஏற்பட்ட புரட்சி தொடக்கம் 1871 பாரிஸ் கம்யூன்வரை நடைபெற்ற புரட்சிகரச் சம்பவங்கள் பற்றிய ஆய்வுகள் இவற்றுள் அடங்கியுள்ளன.
ஏங்கெல்ஸ் 2, 3 ஆவது நூல்களுக்கு எழுதிய முன்னுரையில் மார்க்சின் வரலாற்றுப் பொருள் முதல் வாதத்திற்கு நன்றி கூறியுள் ளார். சமசாலத்தில் நடைபெற்ற வரலாற்றுச் சம்பவங்களின் குணும் சங்களைச் சரியான கண்ணுேட்டத்தில் ஆரம்பித்துள்ளார். குழப்பமான வர்க்க உறவுகளை ஆயும் முறைபற்றிய சிறந்த மாதிரிகள் இவை வர்க்கப் போராட்டங்களை உடனுடன் அறிந்து சரியான கோட்பாட் டைக் கடைப்பிடிப்பதற்கு இக்கட்டுரைகள் பயன்படும் எனவும் ஏங் கெல்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
இந்நூல்களில் உள்ளவை அறிவுறுத்தும் கட்டுரைகள் மட்டுமல்ல படிப்பதற்குத் திகிலூட்டுபவையுமாகும். தனித்தனியாகவும் கட்டுரை களைப் படிக்கலாம் தொடர்ச்சியாகப் படிப்பதே நல்லது. ‘பிரான் சின் வர்க்கப்போராட்டம்’ என்ற நூலிற்கு முன்பாக நடைபெற்ற சம் பவங்களின் சுருக்கத்துடன் 18 ஆவது பிருமயர் ஆரம்பமாகிறத.
ஏங்கெல்ஸ் இந்நூல்களின் முன்னுரையில் சிறப்பான சுருக்கம் ஒன் றைத் தந்துள்ளார்.
மக்கள் எழுச்சியினல் 1830 யூலை மாதத்தில் பேபோன்ஸ் மன்னன் வீழ்த்தப்படுகிருன். 1848இல் ‘பூர்ஷ்வா மன்னனுக" லூயி பிரிப்பு ஆட் சிக்கு வருகிமுன். வங்கியாளரின் விதிகளின்படி பிரான்சின் பழமை யான செல்வந்தர்களைப் பிரதிபலிப்பதாக இவன் ஆள்கிருன், தொழி லாளர்களின் பரந்த எதிர்ப்பில் இவன் வீழ்கிருன். குடியரசு பிரகட னப்படுத்தப்படுகிறது. சொத்துள்ள வர்க்கமும் அரசியல் ஆதிக்க த் தில் பங்கு வகிக்கிறது. 1848 பிப்ரவரிப் புரட்சியைத் தொழிலாளர் கள நடாத்தினர். ஆனல் பூர்ஷ்வா வர்க்கம் அவர்களது ஆயுதங் களைப் பிடுங்கிக் கொண்டது. இதஞரல் 1848 யூன் எழுச்சியில் தொழி
குமரன் 15 1 ܬ݂

Page 9
லாளர் தோல்வி கண்டனர். ஒன்று மாறி ஒன்ருகப் புரட்சியை நடாத் திய வர்க்கங்கள் ஆதிக்கத்தை இழந்தன; யூன் 1849 இல் குட்டி பூர்ஷ் வாக்களைத் தொழிலதிபர்கள் வீழ்த்தினர். ஆயினும் பின்னர் வந்த பண முதலைகளுக்கு அவர்கள் அடிபணிந்தனர்.
அவ்வேளை, சொத்துள்ள வர்க்கத்தவரிடை நிலவிய எதிர்ப்புண வைப் பயன்படுத்தி நெப்போலியனின் வழித்தோன்றலான லூயி பொனபாட் என்பவன் ஒடுக்கப்பட்ட விவசாயிகளின் ஆதரவுடனும் குடியரசின் ஜனதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டான். இவன் சதி மூலம் ஆட்சிப் பொறுப்பை முழுமையாக 1851இல் கைப்பற்றினன். இவனே 18 ஆவது புருமயர் என அழைக்கப்பட்டான். பின்னர் தன்னை மூன்ருவது நெப்போலியன் என நிறுவினன். 1848 இல் தொழிலாள ரின் ஆதரவுடன் பூர்ஷ்வா நடாத்திய புரட்சி, அவர்களிடையே ஏற் பட்ட பூசலால் தோல்வி கண்டது. லூயி பொனபாட்டும் ஒரு தீவிர வாதக் குழுவினரும் அதிகாரத்தைக் கைப்பற்றினர். ஆயினும் அக் காலகட்டத்தில் பிரான்சில் மிகப் பெரிய தொழில் அபிவிருத்தி ஏற்பட்
-il.
பொனபாட்டின் இரண்டாவது சாம்ராச்சியம் 1870இல் நடை பெற்ற பிரான்கோ-புருஷ்ஷின் யுத்தம்வரை நீடித்தது.
எல்லை விரிவாக்கல் அவாவினலேயே பொனபாட்டுக்குப் பிரச்சனை ஏற்பட்டது. ரையின் நதியின் எல்லை பில் தளம் வைக்க முயன்ருன், 1870 இல் புருஷ்சியர் அவனை வீழ்த்தினர். “தேசிய தற்காப்பு அரசு அமைக்கப்பட்டது.
இடைக்காலத்தில் பாரிஸ் தொழிலாளர் பாரிசைக் காப்பாற்ற ஆயுதம் ஏந்தினர், தேசிய தற்காப்பு அரசு பாரிசைக் காப்பாற்றுவதி லும் பார்க்க தொழிலாளரிடமிருந்து ஆயுதங்களைப் பறித்தெடுப்பதில் முன் நின்றது. 1871இல் புரஸ்ஸியருக்கு வழிவிட்டனர். அரசு வே செ யில்ஸ் நகருக்குச் சென்றது. பின்னர் யுத்தம் பாரிஸ் தொழிலாளருக் கும் வெசெயில்ஸ் நகரிலிருந்த அரசுக்கும் இடையில் ஏற்பட்டது. 1871 மார்ச்சில் பாரிஸ் தொழிலாளர் பாரிஸ் கம்யூனை அமைத்தனர். வெசெயில் சில் இருந்த பூர்ஷ்வா அரசு புருஷ்சிய ஆதிக்க வல்லரசுடன் இணைந்து, பாரிஸ் கம்யூன நசுக்கி, தொழிலாளரைக் கொன்று குவித்து அடக்கி ஒடுக்கியது.
இம்மூன்று நூல்களிலும் குறிப்பிடத்தக்க மார்க்சின் முக்கிய ஆய்வு கள் வருமாறு:
(1) 1848 இல் இருந்து பிரான்சில் ஏற்பட்ட புரட்சியின் முன் னேற்றம் பற்றிய ஆராய்வு. புரட்சியை ஊக்குவித்த சக்தி தொழி
16
குமரன்

லாள வர்க்கமே. ஆனல் புரட்சி பூர்ஷ்வா வர்க்கத்தை ஆதிக்கத்தில் நிறுத்தியது. பின் பூர்ஷ்வா தொழிலாளருக்கு எதிராகத் திரும்பியது; தனிமைப்படுத்தித் தோற்கடித்தது. இச்செயல் மூலம் பூர்ஷ்வா வர்க் கம் புரட்சிக்கு எதிராயிருந்தது; தன் புரட்சியைக் கைவிட்டது; தம் மால் ஆளமுடியாது என்பதையும் நிரூபித்தது.
(2) 18 ஆவது புருமயரில் குட்டி பூர்ஷ்வாவின் ‘சமூக ஜனநாய கம் அம்பலப்படுத்தப்பட்டது; ஜனநாயக வாதிகளின் பொய்மையை மார்க்ஸ் காட்டினர். அவர்கள் பாராளுமன்றத்தில் ஆற்றும் பேச்சு கள் விண்ணப்பங்களே செயல்களைத் தீர்மானிப்பன என நம்பியிருந் தார்கள்; வர்க்கப் போராட்டத்தின் யதார்த்தத்தை உதாசீனம் செய் தார்கள்; சமூகத்தில் வர்க்க நிலைகளுக்கேற்ப கருத்துகளும் கண்ணுேட் டங்களும் மாறுபடுகின்றன என்பதை மார்க்ஸ் காட்டிஞர்.
(3) 18 ஆவது புருமயரை அம்பலப்படுத்துவதன் மூலம் பூர்ஷ்வா அரசின் இயல்புகளை மார்க்ஸ் காட்டினர். அது முதலாளித்துவத்தின் நிறுவனம் என்பதை நிரூபித்தார். எல்லாப் புரட்சிகளும் அரசின் ஆதிக்கத்தையே பூரணப்படுத்தின; பாட்டாளி வர்க்கப் புரட்சியின் கடமை அதை உடைத்தெறிவதே என்பதை மார்க்ஸ் உறுதிப்படுத்தி ஞா.
(4) பிரான்ஸ் நாட்டுவிவசாயிகளின் நிலைமையை மார்க்ஸ் ஆராய்ந் தார். லூயி பொனபாட்டின் தனிமனித "சர்வாதிகாரத்திற்கு இவர்களே ஆதரவளித்தனர். ஆயினும் பிரான்சின் உள்நாட்டு யுத்தம் பற்றி எழு தும்போது விவசாயிகளுக்குத் தொழிலாளர் ஆட்சியின் மூலமே விமோ சனமுண்டு என்று கூறினர். தொழிலாளர் விவசாயிகளைத் தமது நேச சக்தியாக இணைத்துக் கொள்ள வேண்டும் என மார்க்சும், ஏஸ்கெல்சும் வற்புறுத்தினர்.
(5) பிரான்சுக்கும் புருஸ்சியாவிற்கும் இடையில் நடைபெற்ற யுத் தம் பற்றிக் குறிப்பிடும்போது புருஸ்சியாவின் பக்கமே நீதி இருந்தது என்று குறிப்பிடுகிருர். ஆயினும் பிஸ்மாக் ஆதிக்க யுத்தத்தைத் தொ டங்கினலும் ஜெர்மன் தொழிலாளர் அவனை எதிர்க்க வேண்டும் எனக் கூறினர். V (6) பாரிஸ் கம்யூன் பற்றி மார்க்ஸ் விரிவாகக்கூறினர். அதுவே தொழிலாள வர்க்கம் பொருளாதார விடிவு காண இறுதியில் கண்டு பிடி த்த அரசியல் வடிவம் என்று குறிப்பிட்டார்.
பாரிஸ் கம்யூன் பாட்டாளிகளின் சர்வாதிகாரம். ‘இந்தச் சர்வாதிகாரம் எது என நீங்கள் அறிய வேண்டுமா? பாரிஸ் கம்யூனைப் பாருங்கள். அதுவே பாட்டாளிகளின் சர்வாதிகாரம்”* இவ்வாறு ஏங்கல்ஸ் மார்க்கின் நூலை அறிமுகப்படுத்தினர்.
தொழிலாளர்கள் நிலைபெற்றுள்ள அரசு யந்திரத்தில் கை வைப்ப தல்ல. அதை நொருக்கித் தம் ஆதிக்கத்தை நிலை நிறுத்த வேண்டும். இதையே பாரிஸ் கம்யூன் நிரூபித்தது என்ருர்,
பாரிஸ் கம்யூனில் தொழிலாளர்கள்எடுத்த நடவடிக்கைகளை மார்க்ஸ் ஆராய்ந்தார். அதன் தவறுகளையும் குறைபாடுகளையும் கூடச் சுட்டிக் காட்டினர். -மாதவன்
குமரன் - 7

Page 10
புதுக் கோணங்கி
அக்கினி புத்திரன் குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு நாசகாலம் வருகுது நாசகாலம் வருகுது சாதிகள் தடிக்குது சண்டைகள் வலுக்குது உன்மத்த மதங்கள் விபரீதம் வளருது சொல்லடி சொல்லடி காஷ்மீர பகவதீ! வல்லரசு வாசலுக்கு நல்லகு றி சொல்லு தரித்திரம் பரவுது கறுப்பு குவியுது படிப்பை விதச்சா பாவம் விளையுது காகிதப் புலிகளின் நடமாட்டம் தெரியுது நாலுவித அசுரரின் நாட்டாமை நடக்குது நாட்டில் தரகு வியாபாரம் பெருகுது தொழில் செழிக்குது தொழிலாளி சாகிருன் யந்திர மந்திர தந்திரம் வளருது பிரிச்சே ஆளும் சூழ்ச்சி புரியுது. குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு சொல்லடி சொல்லடி மாகாளி பயங்கரி வல்லரசு வாசலுக்கு நல்லகுறி சொல்லு குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு துரைத்தனம் துரிதமாய் தடித்தனம் ஆகுது பேச்சு வார்த்தையில் ரவைஎச்சில் தெறிக்குது அரசியல் தரகர் அக்ரமம் பண்ணினல் போவார் போவார் ஜார் போல் போவார் குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு சாமியார்க் கெல்லாம் தைரியம் திரும்புது அதர்மம் தின்றே தர்மம் தடிக்குது நிலத் திமிங்கில நீச்சலில் கடல் குளமாகுது கொள்ளை அடிப்போர் கொள்கை உயருது பதுக்கல் கடத்தல் தேசியம் ஆகுது - விலைவாசி எட்டா விட்டத்திற் தொங்குது வரிசையா நிற்பது வாடிக்கை ஆகுது. அதிகார வர்க்கம் கொடிகட்டிப் பறக்குது நேத்திரம் பறிக்குது நியாயம் நெரிக்குது வேலிகள் முச்சூடும் பயிரை மேயுது பழைய கொடுமைகள் மேலெனத் தோணுது
18
குமரன்,

குமரன்
சாதிச்சங்கம் பேரணி போகுது
தொழிற்சங்க உரிமை சாகுது தேசபக்தி எறும்பா தேயுது யுத்த யூரியா தயார் ஆகுது.
ரெண்டு வல்லரசும் வியூகம் வகுக்குது ஆயுதக் கொள்முதல் மும்முரம் ஆகுது கரடியும் கழுகும் தரியா அலையுது ஒவ்வொரு நாடா கபஸ்ரீகரம் பண்ணுது கோஷ்டி பிரிக்க நாடுகள் கூடுது நடுநிலை நாடக வேசம் கலையுது ஆயுதக் கிடங்கா ஆசியா ஆச்சுது மூணும் உலகம் மூச்சு வாங்குது
சமாதானக் கன்றைக் காட்டி மயக்குது சகோதர மடிகளை மறுபடி கறக்குது எடுப்பார் பிள்ளையா தேசம் போச்சுது வெளுத்ததைப் பாலென ஜனங்க நம்புது
குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு சொல்லடி சொல்லடி காஷ்மீர பகவதி கண்டிகை சூலி சர்வாதிகாரீ! குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு
சோரம் போனு சுகங்கள் கிடைக்குது சாரம் மெல்ல இருளத் தொடங்குது நாளும் இதயம் சிலுவை சுமக்குது புகலிடம் தேடி புருக்கள் அலையுது தேவாசுர யுத்தம் மும்முரம் ஆகுது வழியும் நஞ்சு வாயைத் தேடுது கவ்விய சூதும் கடிவாய் இறுக்குது சத்தியம் வெல்லுமா சந்தேகம் முளைக்குது வெல்லும் சத்தியம் வேளை பாக்குது ராத்ரி தகனம் நடத்தி வருகுது
தூய விடுதலை சாத்தியம் ஆகுது
முடிவான வெற்றி நோக்கி நகருது குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு

Page 11
இலங்கைத தொழிலாளர்கள் மத்தியகிழக்கு நாடுகளுக்குச் செல்வதுகுறித்து ஒரு ஆய்வு
நவமணி
பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மத்திய கிழக்கு நாடுகளுக் குச் சென்று வேலை செய்து வருகின்றர்கள். தொழிலாளர்கள் மிக மோசமாக நடத்தப்படுவதாகவும், பல்வேறு ஒழுங்கீனங்கள் இடம் பெறுவதாகவும் நாளாந்தம் செய்திகள் வந்து கொண்டிருந்த போதி லும் வெளியேறிச் செல்வோரின் தொகை குறைவதாக இல்லை. இப் போது பெருந்தொகையில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் இறக்கு மதி செய்யப்படுவதற்கு வளைகுடாத் தொழிலாளர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவும் முற்பட்டிருக்கின்ருர்கள்.
பல பிரச்சனைகளுக்கு தோற்றுவாய் ஆன இந்நிகழ்ச்சிப் போக்கு இது வரை போதிய கவனம் எடுத்து ஆய்வு செய்யப்படவில்லை.
தாம் வாழும் நாட்டில் பெறுவதைவிட அதிக கூலிக்குத் தம் உழைப்பினை விற்பதற்காகப் பெருந்தொகையானேர் பெயர்ந்து செல் லுதல் எப்போதுமே பெரும் பிரச்சனைகளைத் தோற்றுவிக்கின்றது என் பதை வரலாறு நமக்குக் காட்டித் தந்திருக்கின்றது. மலையகத் தோட் டத் தொழிலாளர்கள் இதற்குச் சரியான உதாரணமாவர். தென் இந்தியத் தொழிலாளர்கள் இலங்கை உட்படப் பல நாடுகளுக்குக் குடி பெயர்ந்தமைக்கும் இன்று மத்திய கிழக்குக்குத் தொழில் நிமித்தமாகச் செல்கிறவர்களுக்கும் இடையில் குறிப்பிடத்தக்க ஒற்றுமைகள் உண்டு. தென் இந்தியத் தொழிலாளர்கள் மிக மோசமான தம் வாழ்க்கை நிலையின் காரணமாகவே பிறநாடுகளுக்குச் சென்ருர்கள். இடைத்தர கர்களாகக் கங்காணிகள் செயல்பட்டார்கள். தமது இலாபத்திற்காக அவர்கள் பொய்கள் பல கூறி மக்களை இட்டு வந்தார்கள்.
இன்றும் பொருளாதார நெருக்கடியும் வேலை இல்லாத் திண்டாட் டமும் வருத்துவதனலேயே தொழிலாளர்கள் மத்திய கிழக்கு நாடு களுக்குச் செல்கின்றர்கள். இடைத் தரகர்களாக ஏஜென்சிகள் செயல் படுகின்றன. ஏஜென்சிகள் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம் இவர்கள் அங்கு செல்வதற்கு வழி வகுக்கின்றன.
ஆரம்பத்தில் தென்னிந்தியத் தொழிலாளர்களும் ஒப்பந்த அடிப் படையிலேயே இங்கு கொண்டுவரப்பட்டார்கள். அறுவடை காலங் களில் அவர்கள் திரும்பிச் செல்லும் வழக்கமும் கொண்டிருந்தார்கள்.
20. . . V குமரன்

ஆரம்பத்தில் இப்படியாக இருந்த இந்த நிகழ்வு படிப்படியாக அவர் கள் நிரந்தரமாக இங்கு தங்குவதற்கு வழி கோலியது. கோப்பிப் பயிர்ச் செய்கை நலிவுற்றதும், தேயில்ைப் பயிர்ச் செய்கை ஆரம்பமrஇ யதும் மட்டுமே இதற்குக் காரணமல்ல. ஆழமான பொருளாதார காரணங்களும் உண்டு.
தொழிலாளர்கள் இறக்குமதி செய்யப்படுவதற்குக் காரணம் சொந்த நாட்டுத் தொழிலாளர்களைவிட அவர்களிடம் குறைவான கூலிக்கு உழைப்பை வாங்கலாம் என்பதே. தொடர்ச்சியான மூலதனத் திரட்டலுக்கு மேலும் அதிக அளவிலும், தொடர்ச்சியாகவும் இவர் களது உழைப்பை வாங்கி விற்கும் வளர்ச்சி படிப்படியாக ஏற்பட இவர்கள் அங்கு நிரந்தரமாகக் குடியேறி வாழும் வண்ணம் நிர்ப்பத் திக்கப்படுவார்கள். இதைவிட இயல்பான குடும்பப் பிரச்சஆண்களின் காரணமாகவும் ஒரு குறிப்பிட்ட பகுதியினர் நிரந்தரமாகத் தங்க ஆரம்பிக்க ஆரம்பத்தில் மிகக் குறைவான வீதத்திலேயானலும் இச் சமூகப் பகுதியினரின் ஜனத்தொகை அங்கு வளர ஆரம்பிக்கும்.
படிப்படியாக இவர்களிடையே ஒரு மத்தியதர வர்க்கமும் அறிவு ஜீவிகளும் வளர இவர்கள் கூலி மிகக் குறையவும், ஒடுக்கு முறைக்கு ஆளாக்கப்படவும், வர்க்க உணர்வுகள் முனைப்படைந்து பொரு ளாதார அரசியல் போராட்டங்களை இவர்கள் மேற்கொள்ள, மேலும் மேலும் இவர்கள் ஒடுக்கு முறைக்கு ஆளாக்கப்பட்டு நாட்டின் பெரும் பான்மை மக்களிடம் இருந்து தனிமைப்படுத்தப்படுவார்கள்.
இன ஒடுக்கு முறையை இவர்கள் மீது திறம்படப் பிரயோகிக்க இவர்கள் தேசிய செல்வத்தைச் சுரண்டுகிறவர்களென்றும் (வருவாயில் ஒரு பகுதியைச் சொந்த நாட்டுக்கு அனுப்புகின்ற காரணத்தினல்) வேலையில்லாத் திண்டாட்டத்திற்குக் காரணமானவர்களென்றும்,சுதேசி களின் காணி நிலங்களைக் கைப்பற்றிக் கொண்டவர்களென்றும் இவர் கள் மேல் பழி சுமத்தப்படும் என்பதில் ஐயமேதுமில்லை. வரலாறு நமக் குக் காட்டித் தந்திருக்கின்ற பாடம் இதுவேயாகும்,
கல்வி, வேலை வாய்ப்புகள் மறுக்கப்பட்ட உரிமையற்ற ஒரு சமூ கப் பகுதியினர் மத்திய கிழக்கு நாடுகளில் உருவாகவே இந்நிகழ்ச்சிப் போக்கு வழி வகுக்கும்.
தம் வாழ்க்கை நிலையைச் சீரமைத்துக் கொள்ள தமது சொந்தநாடு களிலே போராடுதல் என்ற உழைக்கும் வர்க்க நிலைப்பாட்டிலிருந்து மாறிப் பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்காது ஒடும் மனேபாவத்தையே இந்நிகழ்ச்சிப் போக்கு சுட்டிக் காட்டுகின்றது. மலையகத் தொழிலா ளர்கள் ஒரு நூற்ருண்டுக்கு முன்பு கொண்டிருந்த அதே மனுேபாவத்
குமரன் 1- ی

Page 12
தைத்தான் இன்னும் கொண்டிருக்கின்றர்கள் என்பதும் கவனிக்கப்பட வேண்டியதொன்றகும். இன்று சிங்களம் பேசும் தொழிலாளர்களும் அந்த நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்ருர்கள்.
*தென்னிந்தியத் தொழிலாளர்களை அதிக அளவில் இலங்கைக்குக் கொண்டு வருதல் பிரச்சனைகளை உருவாக்கும்" என அன்று டாக்டர் என். எம். பெரேரா சட்ட சபையில் பேசியபோது “தொழிலாளர்களை இறக்குமதி செய்து கொள்ளுவது தோட்ட முதலாளிகளின் உரிமையா கும். அது தொழில் வளர்ச்சிக்கு அவசியமானதாகும்" என்ற பதிலை இன்றைய ஐ. தே. கவில் உள்ள தலைவர்களும் இவர்களின் முன்னேடி களும் முன் வைத்தனர்.
முதலாளித்துவ ஆளும் வர்க்கங்கள் முனைந்து உருவாக்கிவரும் இப்பிரச்சனை குறித்துத் தொழிலாளி வர்க்கம் விழிப்போடிருக்க வேண் டியது அவசியமாகும்,
முதலாளித்துவ தேசியம் தேசியப்பகைமையையும் தேசிய ஒடுக்கு முறையையும் கொண்டதாகும். மூலதன வளர்ச்சியை முதன்மை யாகக் கொண்ட நிலையில் தேசியப் போராட்டம் தேசிய முதலாளி வர்க்கங்களிடை போராட்டத்தை ஏற்படுத்துகிறது.
தொழிலாள வர்க்கம் தேசிய ஒடுக்கு முறைக்கு எதிராகப் போ ராடி எல்லாத் தேசங்களுக்கும் சுயநிர்ணய உரிமையை வழங்குகிறது; முதலாளித்துவ தேசியம் வளர்ச்சியடைந்து சர்வதேச பகைமையை வளர்க்காது பாதுகாக்க வேண்டியதும் தொழிலாள வர்க்கத்தின் கட மையேயாகும்.
தேசிய இனப்பிரச்சினையைக் கையாள்வதில் தொழிலாளி வர்க்கம் முதலாளிகளின் தேசியத்திலிருந்து மாறுபடுகிறது. தேசிய ஒடுக்கு முறையையும், பகைமையையும் ஒழித்துத் தொழிலாள வர்க்கத்திடை யேயும் எல்லாத் தேசங்களிலும் வாழும் உழைக்கும் மக்களிடையே யும் நிரந்தர ஐக்கியத்தையும் தொழிலாள வர்க்கம் ஏற்படுத்துகிறது.
-ஸ்டாலின்.
மார்க்கிசின் படிப்பனைகளை லெனின் 1914இல் சுவிச்சலாந்தில் தலை மறைவாக இருந்தவேளை 7 தலைப்புகளில் சுருக்கிக் கூறினர். அவை
T66
(1) பொருள் முதல்வாத சித்தர்ந்தம். (2) இயக்கவியல். (3) வரலாறு பற்றிய பொருள் முதல்வாதக் கோட்பாடு. (4) வர்க் கப் போராட்டம். (5) மார்க்சின் பொருளாதாரக் கோட்பாடு, (6) சோஷலிசம். (7) பாட்டாளியின் வர்க்கப் போராட்டம் பற்றிய தந்திரம்.
22 குமரன்

முதலாளித்துவத்தின் தோற்றமும் வளர்ச்சியும் 2
அ. வரதராஜப்பெருமாள்
ஏகாதிபத்திய விரிவுரைக்குரிய வகையில் கைத்தொழில் முதலாளித் துவ நாடுகளிலும் நகரங்கள் விரிவடைந்து வளர்ச்சி பெற்றன. கால னித்துவ நாடுகளிலிருந்து பெருமளவு உழைப்பு தலைநகர நாடுகளில் குவிந்து கொண்டிருந்தது. இதனுல் மூலதனத்தின் உலகபரிமாணம் மேலும் மேலும் விருத்தியடைந்தது. இதன் விளைவாக ஏகாதிபத்திய நாடுகளின் இயந்திர தொழில் நுட்பமும், பணித்துறையாட்சி நுட்ப மும் துரிதமாக விருத்தியடைந்தன. இதனல் தலைநகர நாடுகளுக்கும் துணைக்கோள் நாடுகளுக்குமிடையே தொழில் நுட்ப இடைவெளி மேலும் மேலும் அதிகரித்தது. தலைநகர நாடுகளில் ஏற்பட்ட விரை ந்த தொழிநுட்ப விருத்தியானது அந்நாடுகளின் தொழிலாளர்களின் உற்பத்தித்திறன் அதிகரிப்புக்கும். அதன் விளைவாக தொடர்ச்சியான கூலிமட்ட அதிகரிப்புக்கும் வழிவகுத்தது. இதேவேளை அத்தொழிலா ளர்களின் மிகை உழைப்பு விகிதமும் அதிகரித்தது. இத்தொழிற்பாடா னது தலைநகர துணைக்கோள் நாடுகளின் தொழிலாள வர்க்கத்திடையே யான வருமான இடைவெளியினை (பணிரீதியிலும் மெய்ரீதியிலும்) பாரிய அளவில் அதிகரிக்கச் செய்தது.
தொழிலாள வர்க்கத்தின் கூலிமட்டம் பணித்துறையாட்சியின் படி நிலைக்கேற்ப பெருமளவு வேறுபட்டது. இதனுல் தொழிலடிப்படையி லான சமூக உறவுகளும், தொழிலாள வர்க்கப் பிரிவினைகளும் வளர்ச்சி யடைந்தன. ஏகாதிபத்தியம் தொழிலாள வர்க்கத்தின் உணர்வின் மீதும் சமூக உறவிலும் கூடுதலான அக்கறை கொண்ட ஓர் அமைப் பாகும். தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்திக் கையாழ்தல் என் பதில் மேலும் மேலும் சிறப்புத் தேர்ச்சியடைகின்றது. இந்நிலைமை கள் ஐரோப்பிய தொழிலாள வர்க்கம் திரிபு வாதங்கட்கு உட்படுவ தற்கும பாட்டாளி வர்க்கப் புரட்சிச் சூழ்நிலைகள் பிற்போடப்படுவ தற்குமான நிலைமைகளை வளர்த்தன. முதலாளித்துவமானது ஏகாதி பத்திய நிலைக்கு உயர்ந்ததன் மூலம் தன் நோக்கத்தைத் தற்காலிக மாக நிறைவேற்றிக் கொணடது.
ஏகாதிபத்திய பொருளாதார செயன்முறை மிகத் துரிதமான் தாகச் செயற்பட்டது. ஆனல் அதேவேகம் அதனைக் குறுகிய காலத் ல் 1930 களில் ஏகாதிபத்தியம் நெருக்கடியாகச் சந்திக்கும் நிலையைத் தோற்றுவித்தது. இலாப வீதம் இழிவுநிலை மட்டத்தை அடைந்தது. மிகப் பாரிய அளவு வேலையின்மை ஏற்பட்டது. உற்பத்திப் பொருட்
குமரன் 23

Page 13
கள் பெருமளவில் தேக்கமடைந்தன. இந் நிலைமைகள் இதுகாலவரை முதலாளித்துவம் கொண்டிருந்த தலையிடாக் கொள்கை என்பதனை முடி வுக்குக் கொண்டு வந்தது, இதன் விளைவு அரச முதலாளித்துவத் தைத் தோற்றுவித்தது. கெயிற்சியவாதம் ஏகாதிபத்திய நெருக்கடி யைத் தவிர்த்துக் கொள்வதற்கு எப்போதும் உதவக் கூடிய மருந்தாக-புரட்சிக் கருத்தாகக் கூறப்பட்டது. எனினும் நெருக்கடி யானது தவிர்க்க முடியாதபடி இரண்டாம் உலக மகா யுத்தத்தைத் தோற்றுவித்தது.
ஏகாதிபத்தியவாதிகள் புதிய சந்தைகளைப் பிடிப்பதிலும், தமது சந்தையைக் காப்பாற்றுவதிலும் ஈடுபட்டிருந்த உலக யுத்த வேளையில் சீனவையும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளையும் தொழிலாள வர்க்கம் முதலாளித்துவ சக்திகளிடமிருந்து பறித்தெடுத்துக் கொண்டது. கால னித்துவ நாடுகள் பலவற்றின் தேசியவாதிகள் தமது அரசியற் சுதந் திரத்தைப் பறித்தெடுத்துக் கொண்டனர். இரண்டாம் உலக மகாயுத்த களத்தைத் தனது சந்தையாகப் பயன்படுத்திக் கொண்டே அமெரிக்கா, இராணுவ பொருள்ாதார பலத்தில் முதன்மை ஸ்தானத்தைக் கைப் பற்றிக் கொண்டது. யுத்தத்தின் பின்னர் ஏகாதிபத்தியங்களிற்குத் தலைமைத்துவம் வகிக்கத் தொடங்கியதுடன் ஏகாதிபத்தியத்தை நவீன வடிவில் செயற்படுத்தத் தொடங்கியது.
நவீன ஏகாதிபத்தியம்
இரண்டாம் உலகமகா யுத்தத்தைத் தொடர்ந்து உலகம் மூன்று மண்டலங்களாக இயங்கத் தொடங்கியது. நவீன ஏகாதிபத்தியம் 3ஆம் மண்டல நாடுகள் பலவற்றுடனுன சுரண்டல் உறவை நவ காலனித்துவ வடிவத்துக்கு மாற்றியது. இவ்வடிவிலான உறவை அமெரிக்கா உல கின் பல நாடுகளோடு-குறிப்பாக லத்தீன் அமெரிக்க நாடுகளோடுமுன்னரேயே கொண்டிருந்த 3ஆம் மண்டல நாடுகளின் தேசியவாதி களைப் பொறுத்தவரையிலும் அவர்கள் நவகாலனித்துவத்திற்குப் பலி யாகும் பொருட்டுத் தம்மை ஈடுபடுத்திக் கொள்ளவும் தவிர்க்க முடி யாததாயிற்று.
இந்நவ காலனித்துவ சுரண்டல் உறவை நடைமுறைப்படுத்துவ தற்குரிய சர்வதேச பொருளாதார உற்பத்தி நிறுவனங்கள் பல்தேசி யக் கம்பனிகளின் வடிவில் செயற்படத் (CAயும்) தொடங்கின நவீன ஏகாதிபத்தியத்துக்கு அவசியமான சர்வதேச நிதி நிறுவனங்கள் உரு 6ùAffé6é5LILL.L-607.
ஆயினும் 1950 களின் பிற்பகுதியில் ஏகாதிபத்தியமானது சர்வ தேச வர்த்தக நெருக்கடிகளைச் சந்தித்தது. இவ்வேளை கியூபாவில் புர ட்சி வெற்றி பெற்றது. 1970 களின் நடுப்பகுதியில் ஏகாதிபத்தியம் நாணய நெருக்கடிக்குள்ளாகியது. இவ்வேளை வியட்னமையும் அங்கோ லாவையும் தொழிலாளர்கள் வென்றெடுத்துக் கொண்டனர்.
24 குமரன்

மான்செஸ்டர் தொழில் நுட்ப நிறுவனத்தின் பொருளியல் (Upsit மைத்துவ பேராசிரியர் உலக முதலாளித்துவத்தின் இன்றைய நிலை பற்றிப் பின்வருமாறு கூறுகின்றர்.
*பிரித்தானியாவின் கைத்தொழில் உற்பத்தி 10 வருடங்களுக்கு முன்னிருந்த நிலையைவிடக் கீழ் நிலையில் இருக்கின்றது. அமெரிக்கா வின் பொருளாதார வளர்ச்சி 1979 ல் நின்று விட்டது. மேற்கு ஜேர் மணிப் பொருளாதாரம் கடந்த இரண்டு வருடங்களாக வளர்ச்சியடைய வில்லை. யப்பானிய கைத்தொழில் உற்பத்தி கடந்த ஒரு வருடமாகத் தேக்கமடைந்துள்ளது. Sy
1979ல் அமெரிக்க பொம்மை மன்னன் ஷாவுக்கு எதிரான ஈரா னிய மக்கள் புரட்சி, 1980 ல் வெற்றிகரமான நிக்கர்க்குவாப் புரட்சி, கடந்த மூன்று ஆண்டுகளாக ஏகாதிபத்தி பத்துக்கு எதிராக மத்திய அமெரிக்கா முழுவதும் புரட்சிக் கொந்தளிப்பு, முதலாளித்துவ நாடு கள் அனைத்திலும் இலாப விகிதம் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து செல்கின்றமை, பணவீக்கமும் வேலையின்மையும் உற்பத்திப் பொருட் தேக்கமும் ஒரே நேரத்தில் தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்கின்றமை என்பன காணப்படுகின்றன. ஐ. எம். எப், ஐ. பி. ஆர். டி. போன்ற சர்வதேச நிதி நிறுவனங்கள், செயலிழந்து நிற்கின்றன. அவற்றின் சீர்திருத்தங்கள் எதுவும் பலனளிக்கவில்லை. யு. என். ஒ உம் அதன் உறுப்புகளும் தமது பொம்மை நிலையை ஒத்துக் கொண்டுவிட்டன. பல்தேசியக் கம்பனி முதலாளிகள் எந்த நாட்டிலும் நம்பிக்கையில்லா மல் ஒவ்வொரு நாட்டிலிருந்தும் அடிக்கடி தாவிக் கொண்டிருக்கின்ருர் d5 6T.
இன்றைய உலகின் இந்நிலைமைகள் வெறுமனே உலகின் தனித் தனியான தோற்றப்பாடுகள் அல்ல. இவையனைத்தும் ஒன்றே டொன்று நெருங்கிய தொடர்புடையவை. ஏகாதிபத்திய வாதிகள் மேற்கண்ட நோய்களைத் தீர்ப்பதற்குத் தனித்தனியாகவும் மொத்த மாகவும் மீண்டும் மீண்டும் வெவ்வேறுபட்ட வைத்தியங்களைச் செய்து பார்த்துக் கொண்டிருக்கின்றன. அவை எதுவும் ஏகாதிபத்தியத்தின் நோய்கள் எதனையும் தீர்த்துவிடுவதற்கான அறிகுறி எதனையும் காட்ட வில்லை. நோய்களை மேலும் மேலும் பரப்பிக் கொண்டும் விரிவாக்கிக் கொண்டும் உள்ளன.
இவ்விசயங்கள் அனைத்தையும் வரலாற்று ரீதியில் உற்று நோக்கும் போது தற்போதைய ஏகாதிபத்தியம் மேலும் ஒரு புதிய கட்டத்தை நோக்கி நகரப்போவதையும் தொழிலாள வர்க்கம் பல நாடுகளில் முத லாளித்துவ நிலப்பிரபுத்துவத்துக்குச் சாவுமனி அடிக்கப்போவதையும் இவை கட்டியம் கூறி நிற்கின்றன எனலாம். குமரன் & 25.

Page 14
முற்போக்கு இலக்கியமும்
அழகியற் பிரச்சனைகளும் - க. கைலாசபதி(கட்டுரைச் சுருக்கம்)
முற்போக்கு இலக்கியம் 'இழிசனர் இலக்கியம்’ என்று கூறப்பட்ட காலமும் இருந்தது. தற்போது அவ்வாறு பச்சையாகக் கூருது ‘இவர் களது படைப்புகளில் கலைத்துவம் அல்லது கலைநயம் இல்லை" என்று நாகரீகமாகத் தாக்கத் தொடங்கியுள்ளனர்.
மனிதனுக்கு நேர்மை, ஒழுக்கம், வாய்மை, கண்ணியம், கட்டுப் பாடு வேண்டும் என நாவலிக்கக் கூறுபவர்களே மக்களை மந்தை களாக மதித்துப் பொதுப் பணத்தைச் சூறையாடுவதை நாம் காண் கிருேம். விடாமுயற்சி, கடின உழைப்பு, விவேகம், முன்னேற்றம் என் றெல்லாம் சிலாகித்துப் பேசப்படுகிறது. கடின உழைப்பிற்கு உரிய ஊதியத்தைத் தொழிலாளி வற்புறுத்திக் கேட்ட மாத்திரத்தே அது அராஜகம், பொறுப்பின்மை, முட்டாள்தனம், சமுதாய விரோதம், பலாத்காரம் என்றெல்லாம் பலவாருகப் பெயர் சூட்டப்படுகிது. ஒரு வருக்கு ஒருநீதி. வர்க்க சமுதாயத்தின் வழக்காறு இது.
அதுபோலவே கலைத்துவம், கலைநயம், கலையழகு முதலியன இலக் கியத்திற்கு இன்றியமையாதன என்று ஒருவர் கூறியதும் இது உண்மை என்றே முதலில் தோன்றும். ஆனல் சிறிது கூர்ந்து நோக்கும்போதே முற்போக்கு இலக்கியத்தைக் குறைகூறி, அதற்கு மாசு கற்பிக்கும் கலை வாதிகள் முணுமுணுக்கும் கலைத்துவம், கலை நுணுக்கம், கலைநயம் இவையெல்லாம் உண்மையில் எதைக் குறிக்கின்றன என்பது தெரிய வரும்,
முற்போக்கு இலக்கியத்தில் கலையம்சம் இல்லை என்று உணரும் போது அவர்களின் அடிமனதில் இருப்பது யாது? இலக்கியத்தின் கலை யழகு பற்றி அவர்கள் கருதுவது எது? s
(1) எழுத்தாளன் தீர்க்கமான அபிப்பிராயம் கூறுவது பிரசாரம். விஷயமல்ல விபரிக்கும் முறையே முக்கியம். அதாவது உட்பொரு ளல்ல வடிவமே முதன்மையானது.
(2) இலக்கியத்தில் மொழி நடையே முக்கியமானது. எழுத்தாள னின் தனித்துவமும் இலக்கியத்தின் உயிர்நாடியும் இதுவே. 26
குமரன்

(3) இலக்கியத்தில் அரசியல் இடம் பெறக் கூடாது. அரசியல் அழகுணர்ச்சியைக் குறைத்துவிடும்.
(4) புற உலகிலும் பார்க்க அக உலக விவரிப்பே எழுத்தாளனது ஆளுமையையும் கலையுணர்வையும் வெளிப்படுத்துகிறது.
(5) எத்தகைய இயக்கத்தையும் சாராத "சுதந்திரமாக எழுத்தா ளன் இருக்க வேண்டும், சார்பின்மையே கலையின் தத்துவம். அடிப் படை இரகசியம்.
(6) வாழ்க்கையை உரைகல்லாக வைத்து இலக்கியத்தைப் பார் க்க இயலாது. கலை யாவற்றையும் கடந்தது.
எழுத்தாளன் பிரசாரம் செய்யக் கூடாது என்று கூறுபவர்கள், கருத் துகளின் பரம்பலை வெறுக்கின்றனர். கருத்துப் பிரசாரம் கலைவடி வத் கிற்கு ஊறு செய்கிறது என்பதை இவர்களால் நிரூபிக்க முடியாதி தாலேயே இத்தகைய கூச்சல் போடுகின்றனர். இவர்கள் போற்றும் சமய, தத்துவ காவியங்கள் யாவும் பிரச்சாரம் கொண்டவையே. உதாரணமாக நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் ஊழ்வினைவிடாது, பத்தினிப் பெண்டிர் போற்றப்படுவர், அரசியல் பிழைத்தோருக்கு அறம் யமனுகும் என்பவற்றையே பிரசாரம் செய்கிறது. −
நடைபற்றிய பேச்சு காவிய, இலக்கணங்களின் செல்வாக்கை இன் முறும் நிலைநிறுத்த முனைவதையே காட்டுகிறது. இது இலக்கியப் பிர புத்துவத்தின் ஒருவகை வெளிப்பாடு.
பிற்போக்கான இலக்கியவாதிகள் அழகியல்’, ‘கலைத்துவம்" என் Hதை பிரமாஸ்திரமாக அடிக்கடி பயன்படுத்துவர். ஆழமாக நோக் சின் இவர்கள் சமுதாய மாற்றத்திற்காகப் பாடுபடும் எழுத்தாளரின் "ழுத்துகளேயே நிராகரிக்க முயல்கின்றனர். இது தற்செயல் நிகழ்ச்சி யல்ல. வர்க்க முரண்பாட்டின் பிரதிபலிப்பேயாகும்.
‘இன்றைய ஆளும் வர்க்கத்தின் அளவுகோல்களை வைத்து புதிய சமுதாயம் வேண்டுவோரின் படைப்புகளை அளவிடுவது அபத்திமா னது. இன்றைய சமுதாயத்தின் ‘அசிங்கங்களை அழகுபடுத்துவதும் அநீதிகளை மூடிமறைப்பதுமே முதலாளித்துவ அழகியல் வாதத்தின் அரசியல் கடமை" என்று விமர்சகர் கலாநிதி ந. சண்முகரததினத்தின் கூற்று இங்கு பொருத்தமானது.
முற்போக்கு இலக்கியம் புதியதோர் உலகத்தை உருவாக்க விழை வதுபோல அதற்கு வேண்டிய அரசியல் அளவு கோல்களையும் உருவாக்
சிக் கொள்ளும். முற்போக்கு எழுத்தாளர்களுக்கும் ஒரு பாரம்பரியம் உண்டு.
குமரன் V 27

Page 15
பூர்ஷ்வா விமர்சகர் பற்றி நாம் விழிப்பாயிருப்போம்
மாதவன்
அண்மையில் 'தினகரன்' ஞாயிறு இதழில் கே. எஸ். சிவகுமாரன் "கலைநயம்’ என்பது பற்றிய அவரது கோட்பாட்டை மிகவும் தெளிவா கக் கூறியுள்ளார். இக்கட்டுரை ‘கலைநயம் பற்றிய பல பொய்மைகளை வெளிப்படுத்தவும் வாய்ப்பாக அமைந்துள்ளது.
சிவகுமாரன் கலைநயம் என்ற பெயரைக் கூறி முற்போக்கு எழுத் தாளர்களைத் தரம்பிரிக்க முயன்றுள்ளார். அக்கட்டுரை மூலம் அவர் கூற முயன்றவை:
(1) நீர்வைப் பொன்னையனின் கதைகளில் கலைநயம் உள்ளது எனக் கூறி, மயக்க மூட்டி, அவரின் கதைகளின் சிறப்பை மழுங்கடித்துள் Grm.fi. -
(2) கதைகளின் நடைச் சிறப்பே கலைநயம் என்ற தவரு ன தமது கோட்பாட்டை தெட்டத் தெளிவாக அம்பலப்படுத்தியுள்ளார்.
(3) கலைநயம் என்பது பிரசார வாடையின்றி, உருவச் சிறப்புடை யதாக இருத்தல் வேண்டும்; அணிகளைக் கொண்ட நடையுடனிருக்க் வேண்டும்.
சிறுபதுகளில் எழுப்பப்பட்ட இழிசனர் இலக்கியம் என்ற குரலின் பின்னர் கலைநயம், அழகியல் என அதன் சாயலில் மற்றேர் குரல் 1977 வரையில் சில பிற்போக்கு வாதிகளால் எழுப்பப்பட்டது. அதே குரலையே மீண்டும் சிவகுமாரன் மூலம் இன்று கேட்கிருேம். இது ஒரு தனி நபரின் குரலல்ல. ஒருவர்க்கத்தின் குரலாகும். முதலாளித்துவம் சார்ந்த குட்டி பூர்ஷ்வா வர்க்கக் குரலாகும். w
இத்தகைய குரல் முன்னர் எழுந்தபோது கலாநிதி கைலாசபதி அவர்கள் முற்போக்கு இலக்கியமும் அழகியல் பிரச்சினைகளும் என்ற தலைப்பில் சமர் இதழில் எழுதிய கட்டுரையின் சுருக்கத்தை மற்றெரு பகுதியில் தந்துள்ளோம். அக்கட்டுரையே சிவகுமாரன் போன்ருேர்க்கு தக்க பதிலாகவும் அமையும்.
சிவகுமாரன் இக்கட்டுரையை முன்னர் படிக்கவில்லை என்றும் கூற முடியாது. படித்த பின்னரும் இவ்வாறு பிற்போக்காக எழுதுவது அவ ரது பூர்ஷ்வா வர்க்கச் சார்பையும் அவர் சார்ந்திருக்கும் ஏகாதிடசித் திய நாட்டின் கலைபற்றிய கோட்பாட்டையுமே பிரதிபலிக்கின்றன.
28 |- குமரன்

கைலாசபதி மறைந்துவிட்டார் என்ற துணிபில், தாமே விமர்ச்ன ஜாம்பவான்கள் என பறைதட்ட முன் வருபவர்களுக்கு நாம் ஒன்று கூறமுடியும். கைலாசபதி மறைந்தாலும் அவர் வகுத்துக் காட்டிய கோட்பாடுகளும் மார்க்சிய சித்தாந்தமும் எம்மிடம் உள்ளன. வளர் ந்து வரும் கலை இலக்கிய உலகை இவர்கள் குழப்பியடிப்பதை நாம் ஒரு போதும் பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம்.
நடையழகே கலைநயம் என்ற தவருண பிரசாரத்திற்குக் கைலாச பதி பின்வருமாறு பதிலளித்தார்:
நடைபற்றிய பேச்சு உண்மையில் பழைய காவிய, இலக்கணங் களின் செல்வாக்கையே காட்டுகின்றது. ‘அலங்காரம் பழைய அர சவை இலக்கியங்களில் பல காரணங்களுக்காக வேண்டப்பட்டது. சமத்காரம், வித்துவத்தன்மை, சாதுரியம் முதலிய பண்புகள் போற் றப்பட்ட காலத்தில் அணி கவிதைக்கு இலக்கணமாக விதிக்கப்பட் டது. நடைச் சிறப்பு அத்தகைய அணி சம்பந்தமானதே. சப்த ஜாலங்களில் ஈடுபட்டுக் கிளுகிளுப்பை ஏற்படுத்தும் படைப்புகளுக்கு அது ஒருவேளை தேவைப்படலாம். ஆணுல் கலையழகு நடைச் சிறப் பிலேயே இருக்கிறது என்பது விபரீதமான வாதமாகும். அது ஒருவகையான இலக்கியப் பிரபுத்துவத்தின் வெளிப்பாடு என்றே கூற வேண்டும். (இலக்கியச் சிந்தனைகள் பக்: 123)
உவமான உவமேயங்கள் கருத்தை எளிமைப்படுத்துவதற்காகவே தோன்றியவை. அவை அணியழகாக கவிதைகளில் ஒசையத்துடன், மோனே எதுகைகளுடன் கையாளப்படும்போது 'சப்த ஜாலங்களுடன் கிளுகிளுப்பை ஏற்படுத்துவது இயல்பே. ஆனல் இதையே கலைநயம் என்று உருவத்தைப் பூசிப்பவர்கள் கூறி ஆழமான கருத்துக்களையும், தம் வர்க்கத்துக்கு ஆபத்தான சித்தாந்தங்களையும் மழுங்கடிக்கப் பார்க்கின்றனர்.
சிவகுமாரனும் இதையே செய்ய முயன்றுள்ளார். பொன்னைய னுடைய கதைகளில் வரும் உவமான, உவமேயங்கள், அணியழகுகளைப் பொறுக்கித் தந்துள்ளார். இவையல்ல பொன்னையனின் எழுத்துச் சிறப்புக்கள் நிலப்பிரபுத்துவத்தையும் அதன் சாதி, மதம் போன்ற குணம்சங்களைச் சாடுவதும் தொழிலாள வர்க்க ஒற்றுமையையும் போராட்டங்களையும் முன் வைப்பதுமே அவரின் கதைகளின் தனிச் சிறப்பும் கலை நயமுமாகும். ஒரு சில கதைகள் விவாதிக்கப்படலாம். கூட்டு மொத்தமாக அவர் எந்த அணியில் நின்று எந்தவர்க்கத்திற்காக எழுதினர் என்பதே முதன்மையாகக் காட்டப்பட வேண்டும். தாம் கூறவேண்டிய கருத்துகளுக்கு, கோட்பாடுகளுக்குச் சிறுகதை என்ற கலைவடிவத்தை அவர் பயன்படுத்தினர். கூறவேண்டிய கருத்துகளுக்
குமரன் , 29
1. "ممر" . .

Page 16
காகக் கலைவடிவத்தைப் பயன்படுத்தினரே தவிர, நடை அழகிற்காக அவர் சிறுகதை எழுதவில்லை" சிவகுமாரன் போன்ற பிற்போக்குவாதி களால் முற்போக்கு எழுத்தாளரைப் புரிந்து கொள்ள முடியாது என் பதையே அன்னரின் விமர்சனம் வெளிப்படையாகக் காட்டுகிறது.
கதைகளில் பயன்படுத்தப்படும் உவமான உவமேய அணிகள் நிலப் பிரபுத்துவத்தின் முக்கிய இலக்கிய வடிவமான கவிதையின் மிச்ச சொச்சங்களே. கல்வி அறிவு வளர்ச்சியடைய, கருத்தை எளிமைப்படு த்த இவற்றைப் பயன்படுத்துவது குறைந்து வருவது இயல்பே. முற் போக்கு எழுத்தாளர் தொழிலாள, விவசாயிகளுக்குக் கருத்தைக் கூறு வதற்கு இவற்றைப் பயன்படுத்துவதில் எவ்வித தவறு மில்லை. ஆனல் சிவகுமாரன் போன்றேர் தலையைவிட்டு வாலைப்பிடிப்பதுபோல கலைக்கு விமர்சனம் கூற முன்வருவதையே நாம் கண்டிக்கிருேம்.
நாம் கலைவடிவங்கள் மூலம் கூறும் கருத்துக்கள் இப் பிற்போக்கு வாதிகளை அச்சுறுத்துகின்றன. அவற்றுக்குத் தாக்குப் பிடிக்க முடியாத இப்போலி விமர்சகர்கள் ‘பிரசாரம், கலைநயமில்லை, அரசியல்’ என்ற கூச்சல்கள் போட்டு எம்மையும் எமது கருத்துக%ளயும் ஒதுக்கிவிட முயல் கின்றனர். எம்மைக் கண்டிப்பதின் மூலம் நிலப்பிரபுத்துவத்தினதும் முதலாளித்துவத்தினதும் அசிங்கங்களையும் மூடிமறைக்கவே இவ்விமர் சகர்கள் விரும்புகின்றனர்.
சமுதாய உணர்வுமிக்க கருத்துகளும் அனுபவங்களும் ஒன்றிணைந்து சிறுகதையில் உணர்வூட்டுவதாக, உந்து சக்தியாக அமையும்போது சிறந்த கலைப்படைப்பாகிறது. வெறும் அழகு நடையோ, வார்த்தை ஜாலங்களோ, கூறும் கருத்தை மழுப்புவதோ கலைநபமாகாது; இவற் றைப் பிணத்தின் மேலும் குவிக்கலாம். அது உயிர்பெறப் போவதில்லை. இதையே பிற்போக்கு வாதிகள் வேண்டுகின்றனர்.
கலையினது சமுதாயப் பணியையும் அதன் அமைப்பு விதிகளையும் நன்கு அறியாத இப்போலி விமர்சகர்கள் இருட்டு வீட்டில் கறுப்புப் பூனையைத் தேடுபவர்களே. இவர்கள் கலைநயம், அழகியல், பிரசாரம் என்ற பொய்மைகளை வைத்துக் கொண்டு பாட்டாளி வர்க்க கலை, இலக்கியம் படைப்பவர்களை அச்சுறுத்திக் கொண்டே இருப்பர்; அவர் கள்மேல் சேறுபூச முனைவர்.
பாட்டாளிகளும் பாட்டாளிவர்க்க நலன்பேணும் எழுத்தாளர் களும் இம்மாயவலையில் விழாது தம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதற்குப் பயன்படக் கூடியவை இரண்டு: கைலாசபதி போன்ற மார்க்சிய விஞ்ஞான விமர்சகர்களின் எழுத்துக்கள், மார்க் சிய விஞ்ஞானக் கல்வி.
ջ0 குமரன்

புதிய உலகத்தை, பாட்டாளி வர்க்க உலகை உருவாக்க நோம் இலக்கியம் படைக்க முன்வந்துள்ளோம். அதன் அழகியல் அளவு கால் களேயும் நாம் அறிவோம். நாம் விஞ்ஞான கோட்பாடுகளை முன் வைத்தே கலை, இலக்கியம் படைக்கிறுேம். அவை இக்கோட்பாடுகளை அறியாத, அறிய முயலாத வர்க்கத்தவர்களுக்கு விசித்திரமாகத் தோன் றலாம். அதனல் தவருக எம்மை விமர்சிக்க முற்படும் இவர்களை நாம் கண்டிக்காது விடமாட்டோம். இவர்கள் முற்போக்கு அணியைச் சார்ந் தவர்களைப் பற்றி விமர்சிக்காமல், திரிபுபடுத்தாமல் இருப்பதே நல்லது. “கலைமுதலில் கலையாக இருப்பதுடன் மக்களுக்காகவும் இருக்கவேண்டும் என்ற தத்துவத்தை வலியுறுத்தி மனக்குகை ஓவிய வார்ப்பில் ஆசிரி யர் (பொன்னையன்) எழுதியிருக்கும் நிறைவு’ என்ற கதையையும் படித்துப்பாருங்கள். பிரசார வாடையின்றி உருவச் சிறப்புடன் இவர் எழுதியிருக்கும் மற்ருெரு கதை "மேடும் பள்ளமும்.’’ என்ற சிவகுமா ரனின் கூற்று அவருடைய கலைபற்றிய கோட்பாடு யாவையும் அம்பலப் படுத்துகிறது. "கலை கலைக்காக ‘கலையில் பிரசார வாடை இருக்கபப் டாது" என்பதை தெளிவாகக் கூறியுள்ளார். பொன்னையன் கலை மக்க ளுக்காக என்று மட்டுமல்ல பாட்டாளியின்விடிவுக்காக என்ற கோட்பாடு கொண்டவர். அவர் பாட்டாளி வர்க்கநலன் பேணும் பிரசாரத்திற்காகவே எழுதுபவர். கலை அரசியலுக்கு அப்பாற்பட்டதல்ல என்ற கருத் துள்ளவர். மேற்கூறிய கூற்றுமூலம் பொன்னையனைப் பாராட்டுவதாகக் கூறமுடியாது. அவரது புரட்சிகர எழுத்துகளை சிவகுமாரன் மழுங் கடிக்கவே முயன்றுள்ளார்.
நடை எப்பொழுதும் எளிதாக, தொழிலாள விவசாயிகள் புரியத் தக்கதாக இருக்கவேண்டும். அதுவே பரந்துபட்ட பாட்டாளிகள் வேண் டும் அழகியலில் ஒரு அம்சமாகும். அவர்களுக்கு ஆடம்பர உடைகள் எட்டாதவை. உவமான, உவமேயங்கள், உருவகங்கள் கூட அவர்களுக் குப் புரியத்தக்கதாக, வாழ்வோடு ஒட்டியதாக இருக்கவேண்டும். இதுவே முற்போக்கு எழுத்தாளரின் கோட்பாடாகும்.
சிவகுமாரனுக்கு இறுதியாக ஒன்று கூறமுடியும். கலை பற்றிய முத லாளித்துவ, இத்துப்போன, பிற்போக்கான கருத்துகளை வைத்துக் கொண்டு தொழிலாள, விவசாயிகளுக்காக கலை, இலக்கியம் படைக் கும் முற்போக்கு எழுத்தாளர்களை விமர்சிப்பதை அவர் நிறுத்த வேண்டும்.
குமரன் 31

Page 17
ரொற்பாகம்
விடிவு வேண்டுவோரே ぐ
இதோ உங்களுக்கு ஒர் நற்செய்தி!
GuusT.
சுரண்டப்படுவதினுல் வருந்திச் சுமை சுமக்கும் தொழிலாளி வர்க்கமே! நெஞ்சொடிய வியர்வை சிந்தி பசி வயிற்ருேடு நெடுமூச்சு விடும் உழைப்பாளி மக்களே! சுதந்திரம் வேண்டி நிற்கும்
அடிமைகளே!
இது உங்களுக்கோர் நற்செய்தி!
தோ உங்கள் இரட்சகன்! இதோ உங்கள் தத்துவ ஞானி! இதோ உங்கள் தீர்க்கதரிசி! இதோ உங்கள் விடிவின்
பிதாமகன்!
இவரே உங்கள் வழிகாட்டி! இவரே உங்கள் வழித்துணை இவரே உங்கள் போதகர்! இவரே உங்கள் மேய்ப்பன்!
இதோ அவரைத் தரிசியுங்கள்! உங்கள் விடிவுக்காகவே சிந்தனையில் குருதி சிந்தி
வெளுறிய தலைமுடியும் தாடியும்
பொருள் முதல்ப் பார்வையில்
மெய்ஞ்ஞானம் சுமக்கும் விழிகள்!
எத்தகைய இடர் வந்த போதும்
அஞ்சாது கலங்காது பிரபஞ்சத்தை ஊடுருவி சத்தியம் தேடிய நெற்றிக் கண்! முதிர்ந்த ஞானம் அமைதி
கொள்ளும் முகம் மனித குலத்தின் நம்பிக்கை
ஒளிரும்
உடற் தோற்றம் இவரே மாமேதை கார்ல் மாக்ஸ்
பெ.
உலக வரலாற்றில்
அவரைப்போல் உங்களை நேசித்தவர் எவருமில்லை தத்துவத்திலும்
நடைமுறையிலும் உங்கள் விடிவுக்காக அவரைப்போல் தன் சுக
வாழ்வைப் பரிபூரணமாக அர்ப்பணித்து அயராது உழைத்தவர்
எவருமில்லை
அவரே!
சுரண்டும் வர்க்கத்தின்
பயங்கர பூதம் பாட்டாளி வர்க்கத்தின்
அன்புமிக்க தோழன்
அவரே கார்ல் மாக்ஸ்!
சொல்லொணு வறுமையில்
வாடிய போதும் குடும்பம் பசிப்பிணியில்
உழன்ற போதும் மெய் வருத்தம் பாராது விடிய விடிய விழித்திருந்து உங்களை மீட்டு இரட்சிக்கும்
புரட்சித் தத்துவம் கண்டோன்
உன்னத மேதா விலாசன்! மகோன்னத மனிதன்!
அவரே கார்ல் மாக்ஸ்!
அவருக்கு முன்னர் அறிஞர்களும் ஞானிகளும் உலகை விளக்கிக் கொண்டிருக்க அவரே உலகை மாற்றி யமைப்பதே அறிஞர்களின் தலையாய
பணியென
32
குமரன்

அறிவை ஆயுதமாக்கியவர்! அந்தச் சத்திய வாதியே இதுவரை நிகழ்ந்த வரலா
றெல்லாம் வர்க்கப் போராட்டத்தின்
வரலாறேயென வரலாற்றின் கபடத்திரையை
உரிந்து அதன் நிர்வாணத்தில் உங்கள் மகத்தான பாத்திரத்தை உங்களுக்குக் காண்பித்தவர்! அந்தப் புரட்சிப் பிதா மகனே! உலகத் தொழிலாளி வர்க்கமே இழப்பதற்கு ஒன்றுமில்லை வெல்வதற்கு இந்த உலக
முண்டென முதன் முதல் எங்களை அறைகூவி அழைத்து உலகத்தின் பொதுவுடைமையை வெளிப்படுத்தி நீங்கள் இழந்து போன உலகை
மீட்க உங்களைப் புரட்சி செய்யத்
தூண்டியவர்
அவரது பரித்தியாகத்தில் அவரது இரத்தமும் சதையும் மகோன்னத மேதைமையும் கலந்து
அவரே
கடைந்தெடுத்த தொழிலாளி வர்க்கத் தத்துவமே மாக்ஸிசம்!
அத்தத்துவமே விஞ்ஞான ரீதியான பிரபஞ்சக் கண்ணுேட்டத்தின் பொதுச் சித்தாந்த அடிப்படை! பொருள் முதல் வாதத்தினதும் இயக்கவியல் வாதத்தினதும்
ஒன்றிணைப்பு அத்தத்துவமே! முதலாளித்துவ சுரண்டல்
அமைப்பை ஒழித்து
மூலாதார நலன்களின் செயலூக்கத் தத்துவம்
ஏனைய தத்துவங்கள் அனைத்தும் சுரண்டும் வர்க்க நலன்களுக்குச் சேவகம் செய்யும்போது
. இத்தத்துவம் மாத்திரமே
இவ்வுலகில்
தொழிலாளி வர்க்கத்துக்கு
முற்று முழுதாகத்
தொண்டாற்றுகிறது
அவரும் ஏங்கல்சும் எழுதிய கம்யூனிஸ்ட் அறிக்கை தொழிலாளி வர்க்கத்தின்
கைநூல் அவரது மூலதனம் அவர்களது
சுவிசேசம் இத்தத்துவத்தின் ஆச்சரியம் மிக்க வழிகாட்டலில் மாமேதை லெனின் தலைமையில் மகத்தான ஒக்டோபர்
புரட்சி மூலம் ருஷ்யா சோஷலிச நாடாக
மாற்றியமைக்கப்பட்டது அத்தீச் சுவாலை ஹங்கேரி, போலாந்து, செக்கோ ஸ்லாவக்கியா அல்பேனியா முதலான நாடுகளுக்கு
விடிவைத் தந்தது மாசேதுங் தலைமையில் நடந்த
புரட்சி அடிமைச் சீனவை செஞ்சீளு வாக்கிற்று உலகின் மூன்றிலொரு பங்கு மாக்ஸிய ஒளியில் விடிவு
கண்டுள்ளது இத்தத்துவத்தின் ஆற்றல் மிக்க சக் இம்மாநிலத்தை வெற்றி
கொண்டு வருகிறது கீழைக் காற்று மேலைக் காற்றை ஓங்கி வீசிக் கொண்டிருக்கிறது உலகம் முழுவதும் சுரண்டல் அமைப்பு ஒழிவது
புதிய சோசலிச சமுதாயத்தை திண்ணம் றுவப் போராடும் சோஷலிச சமுதாயம் மலர்வது தாழிலாளி வர்க்கத்தின் ஒருதலை, 33
குமரன்

Page 18
எனவே தான் - துன்பப்படும் தொழிலாளி
வர்க்கமே! முதுகொடியும் பாட்டாளி
மக்களே! மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் இவரிலும் இத்தத்துவத்திலும் நிலைத்திரா விட்டில் இத்தத்துவத்தின் உண்மை
ஒளியில் ஊட்டம் பெற்று உணர்விலும் அறிவிலும் மறுபிறப்பு அடையாவிட்டால் நீங்கள் விடிவைக் காண
மாட்டீர்கள் என மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்! சுரண்டுவோரின் அநீதிகளை முற்ருக ஒழிக்கும்படி உங்கள பாதையைச
செப்பனிடவே மாக்ஸ் அயராது உழைத்தார். அவருக்குள் இயங்கிய
: ஞானசக்தி
மாக்ஸிஸ அமரதீபமாக
உற்பவித்தது.
அதுவே
உங்களுக்கு
வழியும் சத்தியமும்
ஜீவனும் வீறுமாய் இருக்கிறது,
இத தத்துவமே!
உங்களை அந்தகார இருளிலிருந்து
ஒளிமயமான பாதையில்
கெம்பீரமாய் வழிநடத்திச்
செல்லும்
புரட்சிப் பிதாமகன் மாக்சையும் புரட்சிகரத் தத்துவம்
மாக்ஸிசத்தையும் தன் வழித்துணையாகக் கைக்
கொள்ளாத எவனும் சுரண்டல் இருளின் பயங்கரப் பள்ளத்தாக்கிலே ஊன்று கோலும் கைவிளக்குமின்றி வருந்திப் பாரஞ் சுமந்து
கொண்டிருப்பான் அவன் விடிவைக் காண்பதில்லை
யென மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்!
மார்க்ஸின் போதனை
மார்க்ஸின் கருத்துக்களின், போதனையின் முழுத்தொகுப்பு முறையே மார்க்ஸியம். 19ஆம் நூற்ருண்டில் மூன்று முக்கியமான தத்துவப் போக் குகள் இருந்தன. அவை மூன்றும் மனிதகுலத்திடையே முன்னேற்றத் தில் தலை சிறந்தவையாக விளங்கிய மூன்று நாடுகளைச் சேர்ந்தவையா கும். அவை சாஸ்திரிய ஜேர்மன் தத்துவஞானம், ஆங்கிலேய சாஸ் திரிய அரசியல் பொருளாதாரம், பிரெஞ்சு சோஷலிசம், அத்துடன் பொதுவாக பிரெஞ்சுப் புரட்சிப் போதனைகள் என்பனவாம். இந்த மூன்று தத்துவப் போக்குகளையும் தொடர்ந்து ஆராய்ந்து அவற்றிற்குப் பூரணத்துவம் அளித்த மேதை தான் மார்க்ஸ். மார்க்ஸின் கருத்துக் கள் குறிப்பிடத்தக்க முறையில் முரணற்ற தன்மையும், முழுமையும் பெற்றிருப்பவை. அவரது எதிரிகள் கூட இதை ஒப்புக் கொள்ளுகின்ற னர். இந்தக் கருத்துக்கள் முழுவதுமாகச் சேர்ந்துதான் நவீன காலத் திய லோகாயுதவாதமாகவும், நவீன காலத்திய விஞ்ஞான சோஷலிச மாகவும் அமைந்துள்ளன. இவ்விரண்டுமே உலகிலுள்ள நாகரீக நாடுக ளெல்லாவற்றிலுமிருக்கிற தொழிலாளர் இயக்கத்தின் தத்துவமாகவும்
வேலைத்திட்டமாகவும் திகழ்கின்றன.
-லெனின்
34 குமரன்

ஒரு நூற்றண்டு முடிவில்.
இன்குலாப்
ஒரு பட்டுத் தலைப் பாகையோடும் புத்தம் புதிய கோட்டோடும் ‘கேட்கும் ஒலியில் எல்லாம்" உன்னைப் பற்றிய கீதங்களோடும் ஆரவாரமாய் அமர்க்களப்படும் ஒரு நூற்ருண்டு முடிவில். பாரதி!
கால்கள் மணலில் அழுந்த அதே கடல் கரையில் நானும். இவ்வளவுக்கும் பின்னல் உன் ஒரு சுவடாவது மிச்சப் பட்டுக் கிடக்கலாம்.
சுவடாக இல்லை, நீட்டிய கையோடும் நிமிர்ந்த நெஞ்சோடும்தான் நிறுத்தி வைத்திருக்கிருர்கள் பாரதி! மீண்டும் உன்னைப் புயல்தாக்காது இப்போதுசிலைகள் விஷயத்தில் கவனம்
அதிகம். கவிஞர்களை அரசாங்கம் w
கண்ணியப்படுத்தும் வாழ்ந்து பிணமானல் உன் போன்முேரை . பிணமாக வாழ்ந்தால் என் போன்றே ரை.
வண்ண விளக்கு வேடிக்கைகளில் உன்னைக் காணுது கண்கூச வேறு பக்கம் திரும்பினேன் சாய்ந்து கிடந்த படகிலிருந்து அவளும் வந்தாள்.
உன்மேல் மின்னும் விளக்கின் மோசமான மொழி பெயர்ப்பாய் சாயம் போன சேவையில்
ஜிகின மங்கலிட நம்பிக்கை
ஒரு புன்னகையோடு கேட்டாள்.
நெளிய
அஞ்சே அஞ்சு ரூவா." மெளன நகர்வில் என் காதில்
விழுந்தது. ‘இன்னிக்கு ஆம்புள யாரையும்
காணமே” இப்போதுன் வெளிச்சக்
கூச்சத்தால் என் விழிகள் கவிழவில்லை. எனது கடல் என் கண்ணில் கசிந்ததால்.
*அவளது பெயர் என்னவாய்
V இருக்கலாம்?" கண்ணம்மா. பாஞ்சாலி.
Lorresrr6'fl.-- 'திரித்த கடல் நுரையில்" அவள் புன்னகை இல்லை. உன்னைச் சுற்றிய மின் -
மத்தாப்புகள் அவள் புன்னகையை விட
பிரகாசித்தன.
கைகளைப் பற்றி எனக்குத்
தெரியும்’ இருட்டில் அவளை துகில் உரித்துத் துரத்திய துச்சாதனக் கைகளே உனக்கும் வெளிச்சப் போர்வை போத்தின.
மாகாளி கடைக்கண் ஒரம்
கனலும யுகப் புரட்சியை தேர்தல் களங்களில் அவித்ததால் ஒரத்தில் இப்போ ஊழித்தீ
தன் நிகர் இல்லா தலைவர் சிலரின் படுக்கை அறையில் எரிகிறது
சிவப்பாய்.
சாயும் படகில் சரியும் கண்ணம்மாவே. பாஞ்சாலியே. மாகாளியே.
குமரன்
35

Page 19
இல்லை
ஏதோ ஒரு பேர் கொண்ட
பெண்ணே!
GinTI "
நான்
ஆம்புள” இல்லை “பொட்டையும்
இல்லே மனுசனுக கூப்பிடுகிறேன் வா..! சாயம் போன சேலையை
அவிழ்த்தெறி. நிர்வாணம் ஆவோம் ஆடை போர்த்தியதால் மட்டும் மனிதர் என்ற மரியாதை
கிடையாது.
கசக்கிக் கட்டிய கந்தல் கண்களில் ஒழுகிய இளமையை உச்சக்
கொட்டி
நக்கும் கண்களுக்கு நடுவில்
நாமும்
பொத்திப் பொத்திப் போனது
போதும். மானம் என்பது குறிகளில் இல்லை.
சாயம் போகாத பட்டுத்
துணிகளில் தேசிய கெளரவம் உயரப்
பறக்கட்டும் நாம் நிர்வாணங்களை கொடிகளால் உயர்த்தி
நடப்போம், கம்பனியிலிருந்து காமராஜ்
வரைக்கும் பாரதி கண்ணகி மகாத்மா
-Det Lul محصبر
உருவங்கள் நிற்கிற இந்தச்
சாலையில்
இப்படியும் ஊர்வலம்போவோம்.
பாரதி சிலையை மூணு முறை
சுற்றுவோம். சொல்வோம்.
பாரதி! இப்படி பளிச்சிடும்
வெளிச்சத்தில் உனது
வெட்டி அடிக்கும் மின்னல்கள்
துருப்பிடித்து விட்டன.
காணுத உனது ஆனந்த
சுதந்திரம் 6956T கடைசி மானத்தையும் களவாண்டு விட்டது.
* பிணந்தின்னும் சாத்திரங்கள்"
சட்டங்கள் ஆனதால்
பேய்கள் கொழுத்தன நாய்கள்
கொழுத்தன,
மனிதகவுரவம்மீட்கப் போராடும்
இளம் தலை முறையின் ஈரல்
குலைகளை
பேயரசின் துப்பாக்கிப் பற்கள்
மெல்லுகின்றன.
நாமிருக்கும் நாடு நமக்குரிமை
ஆகாமல டாலர் மடியிலும் ரூபிள் அடியிலும் மல்லாந்தும் குப்புறவும் மாறிமாறிப் படுத்ததால் ஆடைகள் எமக்குப்
போலிகளாயின.
கடலும் கரையும் கட்டிட
வீக்கமும் சாலையும் சந்தும் சகலமும் அந்தச் சூதாட்ட சபையின்
தொடர்ச்சிகள்தாம்.
பாண்டவர் ஆண்டாலும்
பாஞ்சாலி ஆண்டாலும் மனித கெளரவம்
பயணமாகின்றது. ஏழைப் பாஞ்சாலிகளுக்கு
இரவில் விடிகிறது.
லெனினைப் பலாத்கார வாதி
எனறு நிராகரித்த காளிபக்தனே! “பெரும் கொலை வழியாம்
போர்வழி இகழ்ந்து.
36
குமரன்

வாழ்விக்க வந்த மகாத்மா தமது ஊன்றுகோலை எங்கே ஊன்றினர்?
காயம் பட்டுக் கிடக்கும் எங்கள் வயிறுகளைப் பார்.
குருடு ஒளி படைக்க வேண்டிய
கண்களுக்கு எலும்புருக்கி நோய் உறுதி கொள்ள வேண்டிய
நெஞ்சங்களுக்கு
விபசார்மும் வி. டி.யும் உனது. கண்ணம்மா. பாஞ்சாலி.
மாகாளிமார்களுக்கு இவை
உனது மகாத்மாவும் நீயும் சிலாகித்த தர்ம கர்த்தாக்கள் 65s ܀ வாழ்க்கைப் பாத்திரத்தில் போட்ட பிச்சைகள்.
போ பாரதி! "நல்ல காலம் வருகுது" என்றயே. யாருக்கு? நள்ளிரவில் உடுக்கை அடிக்கும் ஒவ்வொரு கோணங்கியும் "நல்ல காலம் வருகுது
என்றுதான் சொல்கினன்.
எங்கள் நல்ல காலமும் அந்தக் கோணங்கி போடும் ஏன் நீயும் போட்ட ஒட்டுப் போட்ட கோட்டாக
அல்லவா நகர்ந்து வருகிறது.
கண்ணம்மா. பாஞ்சாலி .
மாகாளி. இல்லை ஏதோ ஒரு பேர் கொண்ட பெண்னே வா!
இந்தச் சாலை நீண்டு கிடக்கிறது விடுதலை நாள் ஊர்வலம். குடியரசு தின ஊர்வலம். இன்னும் புனிதமான
ஊர்வலங்கள்.
கோல் குதிரைகளின்
அணிவகுப்பால்
மிதி பட்டுக் கிடந்தது நமது
வாழ்க்கையும் மானமுந்தான்
எனபதை
நிரூபணம் செய்வோம் நமது
நிர்வாண ஊர் வலத்தால்,
6 TT.
முதலாவதாக கோட்பாடுகளிலிருந்து நடைமுறைக்குச் செல்லாது பாட்டாளிவர்க்கம் விடுதலைபெறமுடியாது என்று மார்க்ஸ் உறுதியா கக் கூறியுள்ளார். கோட்பாடுமட்டும் பாட்டாளிக்கு விடுதலை தராது. அவர்களது சமூகநிலையும் விடுதலைக்கு உறுதிதராது. அவ்வர்க்கம் (1p5 லில் தம் வர்க்க நிலையை உணர்ந்து விடுதலையின் தேவையையும் அவசி பத்தையும் கட்டுப்பாடுகளையும் அறிந்துகொள்ள வேண்டும்.
-வகுவிஸ்
குமரன் w 37

Page 20
கோதா திட்டம் பற்றிய மதிப்பீடு
கோதாதிட்டம் பற்றிய மதிப்பீடு தொழிலாள வர்க்க கட்சியின் கோட்பாடுகள் நிகழ்ச்சிகள் பற்றிய அடிப்படை வினக்கள் பற்றிக் கூறுகிறது. ஜர்மனிய தொழிலாள வர்க்க இயக்கத்தின் மாநாடு ஒன்று கோதா என்ற நகரில் 1875 இல் நடைபெற்றது. அங்கு சமர்ப் பிக்கப்பட்ட நகல் திட்டம் பற்றிய மார்க்சின் குறிப்புகளை இந்நூல் கூறுகிறது. ஜர்மனிய சோஷலிச ஜனநாயகக் கட்சியினரின் சந்தர்ப்ப வாதிகள் மார்க்சின் குறிப்புகளை வெளிவராது தடுத்துவிட்டனர். ஏங் கெல்ஸ் அவற்றை 1891 இல் வெளியிட்டார்.
கோதா திட்டம் ஜர்மன் தொழிலாள வர்க்க இயக்கம் ஒன்றுபடு வதற்கு, ஒரு மேடை அமைப்பதற்கு வழி காட்டுவதாக இருந்தது.
இத்திட்டத்தின் பிரதான குறிப்புகள் வருமாறு;-
(1) முதலாளித்துவ உற்பத்திமுறை சோஷலிசத்தை முன்னுேக் கிச் செல்லக் கூடிய பொருளுற்பத்தி முறையைச் சிருட்டித்துள்ளது. சமுக உற்பத்தி சோஷலிசத்தில் விநியோகமாகும் முறையையும் இந் நூலில் கூறியுள்ளார். சோஷலிசம் கம்யூனிசத்தின் முதற்படி திற மைக்கேற்ற உழைப்பு உழைப்பிற்கேற்ப பண்டம் என்ற நிலை பிலிருந்து கம்யூனிச சமுதாயத்தின் கோட்பாடான திறமைக்கேற்ப உழைப்பு தேவைக்கேற்ப பண்டங்கள் என்ற நிலைக்கு மாறுகிறது.
(2) ‘உழைப்பின் பயன்களை ஒரளவு நீதியாகப் பங்கிடுவது" என்ற சீர்திருத்த வாதிகளின் சுலோகத்தைக் கண்டித்தார். இச்சுலோகத்தின் பின்னக கோட்பாட்டை குழறுபடியாக்குவதை அம்பலப்படுத்தினர். உற்பத்திமுறையின் தொடர்பாகவே உழைப்பின் பயன் விநியோகிக் கப்பட வேண்டும். "ஜனநாயகக் கட்டுப்பாட்டுள் அரசின் உதவி" என்ற சீர்திருத்த சுலோகத்தைக் கண்டித்தார். தற்போதைய உற்பத்திக் காரணிகளைப் புரட்சிமயப்படுத்துவதே தொழிலாள வர்க்கத்தின் குறிக் கோள் என்ருர்,
(3) தொழிலாள வர்க்கத்தோடு ஒப்பிடும்போது மற்றைய வர்க் கங்கள் யாவும் பிற்போக்கான கும்பல் என்ற கருத்தையும் தாக்கினர் . வரலாற்றின் ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு வர்க்கத்தின் நிலை யும் உறுதியாக ஆராயப்பட வேண்டும். இதையும் பிற்போக்கு, என்று ஒதுக்க முடியாது. நிலப்பிரபுத்துவத்திற்கு எதிராகத் தொழி லாளர்கள் முதலாளிகளின் ஒருபகுதியினருடன் சேர்ந்து போராடலாம்.
38 குமரன்

கீழ் மத்தில்தர வர்க்கத்தினருடனும் சேர்ந்து சில ஜனநாயக கோரிக் கைதிக்காகப் போராடலாம். இவ்வாறு பலவற்றைக் காட்டலாம்.
கோதாத்திட்டத்திலுள்ள குறுகிய தேசிய குறிக்கோளுக்கு எதி ری)* கத் தொழிலாள வர்க்கத்தின் சர்வதேசியக் குணம்சங்களையும் உ திப்படுத்தினர். ,
(5) "கூலியின் இரும்புச் சட்டவிதி" என்று கூறப்படுவதை எதிர்த் தார். இதன்படி தொழிலாளர்கள் உண்மையான கூலியை என்றும் பெருர் என்பதாகும், இக் கூலி உயிர்வாழ்வு நிலை பிலேயே நிலைக்கும் என்பதாகும். கூலி, விலை, லாபம் என்பதில் இது விரிவாகக் கூறப்பட் டுள்ளது.
(6) திருத்தல் வாதிகளின் ‘சுதந்திர அரசு’ என்பதைக் கண்டித் தார். முதலாளித்துவத்திற்கும் கம்யூனிஷத்துவத்திற்கும் இடைப்பட்ட காலம் புரட்சிகரமாக மாற்றும் சுதந்திர அரசுக்காலம் என்பதைக் கண் டித்து இக்கால கட்டமே புரட்சிகர பாட்டாளியின் சர்வாதிகாரக்
காலம் என்று கூறினர்.
வதையின் கதை (தொடர்ச்சி)
குருநகர் இராணுவ முகாமில் 10-4-83 இல் இறந்த க. நவரத்தின ராசாவின் உடலில் 25 வெளிக் காயங்களும் 10 உட்காயங்களும் காணப் மழுங்கிய நீண்ட ஆயுதங்களால் காயங்கள் ஏற்படுத்தப்பட் .7هـاهـا டன. அவரை அரச வைத்தியசாலையில் அனுமதித்துச் சிகிச்சையளித் திருப்பின் உயிர்தப்பியிருக்கலாம் எனப் பிரேதத்தைப் பரிசோதனை நடாத்திய டாக்டர் சரவணபவானந்தன் நீதிமன்றத்தில் சாட்சியத் தின்போது கூறியுள்ளார்.
முதலாளித்துவ வளர்ச்சியுடனேயே தேசம் அமைந்து சுதந்திர தேசிய நாடுகள் உருவாகின்றன. தேசங்கள் அமைவதில் முதலாளித் துவம் தலைமைதாங்கி, தேசிய இயக்கங்களுக்கு முதலாளித்துவ வர்க்க குளும்சங்களைத் தருகிறது. வலிமை கொண்ட நாடுகள் தேசிய சுதந் திரம் அடைய, வளர்ச்சி அடையாத பிறநாடுகள் வல்லரசுகளின் ஆதிக் கத்துக்குட்பட்டு விடுகின்றன. இதனல் ஒரு தேசம் மற்ருெரு தேசத் தை அடக்கி ஒடுக்கும் நிலை ஏற்பட்டு விடுகிறது.
ஸ்டாலின்
குமரின் 39

Page 21
கட்டுபெத்தை மாணவரின் மூன்று நாடகங்கள்
"தியாகு"
சென்ற மாதம் கட்டுபெத்தை பல்கலைக்கழக தமிழ்ச் சங்கத்தார்" :P சிறு நாடகங்களை கொழும்பு கதிரேசன் மண்டபத்தில் அரங்கேற்
6.
அக்கரைகள் பச்சையில்லை என்ற தயாபரனல் எழுதப்பட்டு நெறிப் படுத்தப்பட்ட நாடகம் உழைக்கும் வர்த்தகத்தின் துன்பங்களேயும் முதலாளிகளாலும் மேலாளராலும் ஏமாற்றப்படுவதையும் கூறுகிறது. கதை, உத்திகள், இசை, ஒளியமைப்பு, நடிப்பு யாவும் சிறப்பாக அமைந் துள்ளன. குறியீட்டு முறையாக கல்லுடைக்கும் உழைப்பைக் காட்டு வதும் மேலாளரின் நடையும் தென்மோடி இசையும் புதுமையாயிருந்தன. கல்லுடைக்கும் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துபவன் விஞ் ஞான பூர்வ நடைமுறைக்கு ஏற்றதாக தொழிற்சங்க அனுபவத்துடன் . சேர்ந்தவனுகக் காட்டப்பட்டிருப்பின் நாடகம் மேலும் கருத்தமைப்
பில் சிறப்புப் பெற்றிருக்கும்.
‘தூரத்தே ஒரு”. என்ற சிறீஸ்கந்தனின் நாடகம் தயாளனுல் நெறிப்படுத்தப்பட்டது. வேலையற்ற யாழ். இளைஞன் வீட்டுப் பிரச் சனைகளைத் தீர்க்க, காணியை விற்று, சவுதி சென்று குடும்பத்துப் பொ ருளாதாரப் பிரச்சனையைத் தீர்க்கிருன். ஆனல் அப்பிரிவு குடும்பத் தில் ஏற்படுத்தும் உணர்ச்சிப் பிரச்சனைகளைத் தீர்க்க முடியவில்லை. நிலப்பிரபுத்துவ உறவுகள் உடைபட்டு முதலாளித்துவ பண்ட உறவு கள் ஏற்படுவது நாடகத்தில் சிறப்பாக அமைந்துள்ளது. “மெலோ டிராமா? சம்பவங்கள் இடம் பெற்றபோதும் கதையைக் கூறக் கைக் கொண்ட உத்தி முறைகளும் ஆதீத உணர்வுகளைக் காட்டும் நடிப்பும் பாராட்டிற்குரியவை.
‘இனிச் சரிவராது" என்ற மாவை நித்தியானந்தனின் நாடகம் எஸ். பி. கனகரத்தினத்தால் நெறிப்படுத்தப்பட்டது. 1972 வரையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தாழ்த்தப்பட்ட மக்களின் ஆலயப் பிர வேசம் பற்றிய பிரச்சனையைக் கொண்டது. நாடகம் நல்ல நடிப்பும் நகைச்சுவையும் கொண்டது. உயர் சாதிக்காரர் தாழ்த்தப்பட்ட மக்க ளின் உழைப்பைப் பயன்படுத்தி, கோவிலைக்கட்டி, அவர்களே நுழைய முடியாது செய்து தமது புகழையும் லாபத்தையும் தேடிக் கொள்கின் றனர். இந்த நிலைக்கு எதிர்ப்புக் கிளம்புகிறது.
மூன்று நாடகங்களும் வெறும் கற்பனை, காதல் கதையாக இல்லாது நாட்டில் உள்ள பிரச்சனைகளைத் தொட்டுள்ளன. சிறப்பான நடிபபு, புதிய உத்திகள், நாடகத்தைத் தொழிலாகக் கொள்ளாத மாணவர் களால் மேடையேற்றப்பட்டது. தமிழ் நாட்டு நாடகங்களோடு ஒப்பி டும்போது இந்நாடகங்கள் மிகச் சிறப்பானவை.
குமரன் w 40

மார்க்ஸ் நூற்றண்டு நினைவு
PTர்க்ஸ் நூற்றண்டுக் குழுவினர் அன்னர் மறைந்த நூற்றண்டு நாளான 14-3-83 அன்று மாலை பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் மாபெரும் நினைவுக் கூட்டம் ஒன்று நடாத்தினர். மார்க்ஸ் கல்லறை அருகில் ஏங்கெல்ஸ் ஆற்றிய சொற்பொழிவை மும்மொழிகளிலும் படிப்பதுடன் கூட்டம் ஆரம்பமாகியது. பேராசிரியர் கார்லோ பொன் சேகா தலைமை வகித்தார். என். சண்முகதாசன், பர்னுட்சொய்சா, வாசுதேவ நாணயக்கார ஆகியோர் மார்க்சின் கோட்பாடுகள்பற்றி சொற்பொழிவாற்றினர். சிங்களத்தில் ஆற்றப்பட்ட உரைகளின் சாரத்தை செ. கணேசலிங்கன் தமிழில் கூறினர்.
யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் 18-3-83 அன்று நூற்ருண்டு நினைவு நாள் கூட்டம் நடைபெற்றது. செ. சணேசலிங்கன் தலைமைவகித்து “வர லாற்றுப் பொருள்முதல் வாதம்' பற்றிப்பேசினர். அ. வரதராஜப்பெரு மாள் அரசியல் பொருளாதாரம் பற்றியும் திருநாவுக்கரசு “மார்க் சின் அரசு பற்றிய கோட்பாடு’ பற்றியும் பேசினர்.
மார்க்ஸ் நூற்ருண்டுக் குழுவினர் யூன் மாதத்திலிருந்து முதல்வரும் புதன்கிழமை மாலைகளில் கொழும்பு அ. லி. சங்கக் கட்டடத்தில் சொற் பொழிவுகளும் கலந்துரையாடலும் நடாத்த ஒழுங்கு செய்துள்ளனர்.
தேசம் என்பது வரலாற்று ரீதியாக உருவாகும் நிரந்தர சமூக அமைப்பு: மொழி, நாடு ,பொருளாதார வாழ்வு, உளவியல் ரீதியான அமைப்பு யாவும் ஒரு சமூகத்தின் பண்பாட்டுடன் உறுதியாக இணைந் திருக்கும். இக்குணம்சங்கள் யாவும் அமைந்திருப்பின் அதுஒரு தேச் மாகும். չI
- ஸ்டாலின்.
குமரன் 41

Page 22
R
KUMARAN 62 (1505-19
அ ரிய நு
மீண்டும் இ
இளமையின் சிதம் குந்தவிக்குக் கடிதங்கள்
சடங்கு
செவ்வானம்
தரையும் தாரகையும் போர்க்கோலம் மண்ணும் மக்களும் அந்நிய மனிதர்கள் வதையின் கதை
கலேயும் சமுதாயமும்
சொந்தக்காரன் GLy.
வெற்றியின் இரகசியங்கள் .
உயர்தர இரசாயனம் க:ே (A. l.
இலக்கியச் சிந்தனைகள்
யுகமலர் - யோகா பாலச்சர்
விற்பஃனயாளர்களுக்கு கழிவு உண்
பார்சல் செலவு இனும்,
விஜயலட்சுமி 248, காலி வீதி
கொழும்
அச்சு குமரன் அச்சகம், 20 TTTTTLLLLLLLLY SS S TeYS TeeL LLTTL ttt S

gis tered T. II Newspaper In Sri Lanka 33 201, DAM STREET,
3) coloMed 12.
6) 35 3. டைக்கும்
கணேசலிங்கன் 0 0 =18 - תי
1, )
,
s .
夏、
盟0.5凸
-
.
*1、
եմIIգլմ, 1յ LITննե3/ ந. கந்தசாமி 5.0 ( ,
.طرق IFAFF GG I JITG's: | U || || ||
குேப்பு பாடநூல்)
ா - க. கைலாசபதி
Pj. 15
திரன் 1.
SS
டு. முற்பணம் அனுப்புவோருக்கு
வி. பி. பி. ஏற்கப்படும். புத்தகசாலை
வெள்ளவத்தை LH 6. ܐ
தொஃலபேசி 588930
1. பாம் விதி, கொழும்பு-12,