கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: குமரன் 1990.01.01

Page 1
இன்றைய நெருக் சோஷலிசத்தின் ெ
- என். சண்முகதாசன்
சோஷலிசப்புரட்சி
- தியாகு
நியூயோர்க் நகரின்
- மாதகல் கந்தசுவாமி
இந்தியாவில் சாதி
= சராட் பட்டில்
இலங்கையின் ஆளு சில குறிப்புகள் - 3
- "அழகன்"
சேமிப்பும் முதலீடு
சோஷலிசமும் சுற்
= போல் சுவிசி
இங்கங்களின் தீர்ப்பு
= மாதவன்
கேள்வி ? பதில்
 
 

ད།
72 ஜனவரி 1990
59. நருக்கடியல்ல
தோற்பதில்லை
மறுபக்கம்
ຄູພູມີ வர்க்கமும்
ம் வர்க்கம்

Page 2
s தமிழ் - ஆண்டு 10 V −
ரூபா 15.0
பயிற்சி விளக்கங்கள் விடைகளுடன் மாணவர்க்கும் ஆசிரியர்க்கும் பயன்படத்தக்க அரிய நூல்கள் ... .
கணேசர் - சிவபாலன் எழுதிய உயர்தர இரசாயனம்
4. 1. வகுப்பு பாடநூல்
விற்பனையாளர்க்கு கழிவு உண்டு
201, டாம் வீதி, கொழும்பு - 12.
 
 
 
 
 
 
 
 
 

சோஷலிசப்புரட்சி தோற்பதில்லை
தியாகு"
இன்று கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் நடை பெற்றுக் கொண் டிருக்கும் 'மீண்டும் ஜனநாயகத்திற்கு' என்ற கூக்குரலும் "சோஷ லிசம் தோற்றுவிட்டது" என்ற பிரச்சாரமும் சாதாரண மக்களுக் கும் சோஷலிச அனுதாபிகளுக்கும் இடையே குழப்பமேற்படுத்தவே செய்யும்.
ஆணுல் மார்க்சிய சித்தாந்தவாதிகளை இப் பிரச்சாரம் எவ்விதத் திலும் பாதித்து விடமாட்டாது. ஏனெனில் சோவியத்தில் குருசேவின் தலைமை ஏற்பட்ட காலத்திலிருந்தே மார்க்சிய சித்தாந்த வாதிகள் அங்கு ஏற்பட்டு வரும் திரிபு வாதப் போக்கைப் பற்றி விமர்சித் துக் ெேகாண்டே வந்தனர். பின்னர் மாவோ, சோவியத் திரிபு வாதத்தை சமூக ஏகாதிபத்தியம் என வர்ணித்தார். பேச்சளவில் சோஷலிசமும் நடைமுறையில் ஏகாதிபத்தியப் போக்கு எனவும் விளக்கம் கொடுத்தார்.
போல் சுவீசி போன்ற மார்க்சிய அறிஞர்கள் சோஷலிச நாடு கள் என்று ரஷ்யா, கிழக்கு ஐரோப்பிய நாடுகளைக் கூறுவதை விட்டு "புரட்சிக்குப் பிந்திய சமுதாயங்கள்’ என்று அவற்றைக் குறிப்பிடத் தொடங்கினர்.
பிரெஞ்சு அறிஞர் பெத்தெல்கெம் போன்ருேர் சீன கலாச்சாரப் புரட்சியின் தோல்வியின் பின் சீனவிலும் திரிபுவாதம் ஏற்படுவது பற்றி அச்சுறுத்தினர்.
மார்க்சிய அறிஞர்களின் முன்னைய கணிப்பு இன்று இதளிவாகி யுள்ளதைக் தெளிவாகக் காண்கிருேம். அவ்வளவே.
சோஷலிசப் புரட்சிகளை சீரழிப்பதற்குத் த ஆல் மை தாங்கு ம் கொபச்சேவை முதலாளித்துவ, ஏகாதிபத்திய நாடுகள் ‘உலகின் வீர Hருஷனுக இன்று பாரட்டுகின்றன. கழிந்த தசாப்தத்தின் வீர புரு ஷன் என அமெரிக்க பிரபல வார சஞ்சிகை ரைம்" கணிப்பிட்டுள் ளது. அந் நாடுகள் தமது நண்பஞக கொபச்சேவைக் கொள்ளத் தொடங்கியுள்ளனர். எதிரிகளின் பாராட்டு. முதலாளித்துவத்துக்குத் தலைமை தாங்கும் அமெரிக்கா கிரனடாவை முன்னர் விழுங்கியது. இன்று பனமாவை நசுக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இக் கொடுங் கோலர் கொபச்சேவைப் பாராட்டுகின்றனர். உழைக்கும் பெரும் பான்மையான பாட்டாளி வர்க்கத்தின் நலனுக்காகக் கட்டப்படும் சோஷலிஷமும் உற்பத்திச் சாதனங்களை உடைய சிறுபான்மையின
( . )

Page 3
ரின் வாழ்வுக்காக கட்டிக் காக்கப்படும் முதலாளித்துவமும் பகைமை கொண்ட அமைப்புகள், அவற்றிடையே சமரசம் ஏ ற் படு வது ம் * சோஷலிசத் தலைவனை" முதலாளித்துவம் பாராட்டுவதும் விழிப் போடு கவனிக்கப்பட வேண்டிய விஷயங்களே.
நிலப் பிரபுத்துவ உற்பத்தி உறவை உடைத்து கூலி அடிமைச் சமுதாயத்தை நிலை நிறுத்துவதற்கு 200 - 300 ஆண்டுகள் பிடிந் தன. இக் காலகட்டத்திலேயே எத்தனை ஏற்றத் தாழ்வுகள், யுத் தங்கள், பொருளாதார நெருக்கடிகள், போட்டா போட்டிகள். பல கோடி மனித உயிர்ப் பலிகள் ஏற்பட்டன. இது தவிர பெரும் பான்மையினரான பாட்டாளிகளை அடக்கி ஒடுக்க சிறுபான்மையின ரான முதலாளிகள் வன்முறையான அரசை நிலைநாட்டி உயிர்ப் பலிகளை நாள்தோறும் நடத்திக் கொண்டிருக்கினர்.
சீனுவிலும் ரூமேனியாலும் எதிர்பாராது ஏற்பட்ட பகைமை முரண்பாடுகள் பல மடங்குகளாகப் பெரிது படுத்தப்பட்டு பிரச் சாரம் செய்யப்படுகின்றன.
முதலாளித்துவம் 2, 3 நூற்ருண்டுகளில் சாதித்ததை சோவு லிசப் புரட்சியின் மூலம் சில தசாப்தங்களிலேயே சாதிக்க முடிந் ததை வரலாறு மறக்க முடியாது. சோஷலிசத்தின் வளர்ச்சியைக் கண்டு அமெரிக்க ஏகாதிபத்தியமே அஞ்சியதை நாம் கண் கூடாகக் கண்டோம். இன்று எதிரியின் அச்சம் நீங்கி வருகிறது.
ரஷ்யா கிழக்கைரோப்பிய நாடுகள், சீனவின் சந்தைகள் முத லாளித்துவத்திற்கு இன்று திறந்து விடப்பட்டுள்ளன. "சோஷலிச நாடுகள்" என்று கூறப்படும் நாட்டுத் தொளிலாளர்கள் முதலாளித் துவ, ஏகாதிபத்திய நாடுகளால் சுரண்டப்படுகின்றன.
மூன்ரும் உலக நாடுகளைச் சுரண்டுவதில் அமெரிக்காவுடன் ரஷ் யாவும் போட்டி போடத் தொடங் கி யு ள் ளது. ஒரு புறம் தமது தொழிலாளர்களேச் சுரண்ட அனுமதிக்கப்படும்போது மறு புறம் ஏழைநாட்டுத் தொழிலாளர்களும் சுரண்ட அனுமதிக்கப்படுகின்ற னர். இது வேடிக்கையானது மட்டு ம ல் ல வேதனையானதுமான முரண்பாடே.
இன்றைய உலகிலேயே கணக் குழு சமூக அ ைம ப்பு, கொத் தடிமை, நிலப்பிரபுத்துவம், முதலாளித்துவம் ஆகிய அமைப்புகள் கொண்ட உற்பத்தி முறைகள் நடைமுறையில் இருக்கு ம் போது
(24ஆம் பக்கம் பார்க்க)
( 2)

சோஷலிசமும் சுற்றடலும்
- போல் சுவீசி -
1917ல் நடைபெற்ற ரஷ்யப் புரட்சியை முன்வைத்தே நடைமுறை யிலுள்ள சோஷலிசம்" என்று பெரும்பாலும் பேசுகிருேம். இந்தச் சோஷலிசம் தோல்வியடைந்து விட்டதாக இன்று உலகெங்கும் பேசப் படுகிறது. சோஷலிசம் என்பதன் இலக்கணம் வகுக்கும் பிரச்சினையில் இன்றைய பேச்சில் நான் ஈடுபட விரும்பவில்லை. ஆனல் இன்று நடை முறையிலுள்ள சோஷலிசம் தோல்வியடைந்து விட்டது என்று நான் ஒப்புக் கொள்கிறேன். பிரச்சினை யாதெனில், அங்கிருந்து நாம் எங்கே போகிருேம்?
பொதுமையாகப் பேசப்படும் கருத்து யாதெனில், சோஷலிசம் தோல்வியடைந்து போனதால் முதலாளித்துவம் வென்று விட்டது என்பதே. ஏனெனில் உலகில் இன்று யதார்த்த வாய்ப்பாக இருப்பது இவ்விரண்டு அமைப்புகளுமேயாகும். தர்க்க ரீதியாகவும், அனுபவ வாதமாகவும் இது பொய்யாகும். இவ்விரு அமைப்புகளும் (நடை முறையிலுள்ளதாகக் கருதப்படும் முதலாளித்துவமும், சோஷலிசமும் தோல்வியடையவே செய்யும். இரண்டும் தோல்வியடைந்துள்ளது என்ற முடிவுக்கு ஆதாரம் தர முடியும்.
முதலாளித்துவத்தைப் பொறுத்தவரையில் மிக நீண்ட கால ஏற்ற இறக்க வளர்ச்சியின் பின்னரும் முன்னேறிய நாடுகளில் வேலையில் லாத் திண்டாட்டம் வரலாற்று ரீதியில் பார்க்கும்போது உச்ச மட் டத்திலேயே இன்றும் உள்ளது; இளம் சந்ததியினர் பயன் தரத்தக்க உழைப்பு வாய்ப்பற்ற எதிர்காலத்தை நோக்கவேண்டியுள்ளது. இத னிலும் மோசமான நிலையில் அபிவிருத்தியடையாத நாடுகளின் நிலை உள்ளன. பெரும்பாலான மக்களின் உண்மை நியதி வருமானமும், வாழ்க்கை நிலையும் 1980 களின் தசாப்தத்தில் குத்துவெட்டாக வீழ்ச்சி அடைந்துள்ளன. இதற்கு மேலாக முதலாளித்துவத்தின் தோல்வி பற்றிக் குறிப்பாகக் கூறுவதற்கு எதுவும் வேண்டியதில்லை.
முதலாளித்துவம், சோஷலிசம் ஆகிய இரண்டு அமைப்பு களும் தோல்வியடைந்தன என்ற முன்னுரையுடன் நாம் ஆரம்பிக் கலாம்; இரண்டுக்கும் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இரண்டும் விடு படும் வழி காணமுடியாதுள்ளது. இரு அமைப்புகளையும் நீண்ட கால நோக்கில் ஆராய்ந்து பார்ப்பதே நல்லது.
( 3 )

Page 4
முதலாளித்துவம்;
முதலாளித்துவ சமுதாயங்கள் மூலதனத் திரட்டலை அடிப்படை நோக்காகக் கொண்டவை. ஆகவே யந்திர உற்பத்தி, நிதிக் கொள்கை கள் அதிக லாபத்தை முதலாளிகளுக்கும், சொத்துடைமையாளர்க் கும் தேடும் போக்கில் அமைகின்றன. முதலாளித்துவ நாட்டிற்குத் தக்க உதாரணம் அமெரிக்கா; இங்கு இரண்டாவது உலக யுத்தத்தின் பின் சமனற்ற வகையில் வருமானமும், செல்வமும் பங்கிடப்பட்டுள் ளன. அதனல் மக்களின் வாங்கும் சக்தியின் வளர்ச்சி கட்டுப்படுத் தப்படுகிறது. திரட்சி ஒரு புறம் அதிகரிக்க மறு புறம் உண்மை நிலை உற்பத்தியின் வாய்ப்புகள் கட்டுப்படுத்தப்படுகிறது. இடையிடையே மூலதனச்சந்தையில் அடிப்படை முரண்பாடுகள் ஏற்பட்டுப் பரபரப்பும் பொருளாதார வீழ்ச்சியும் முதலாளித்துவ அமைப்பில் முன்னர் ஏற் பட்டன. அண்மைய தசாப்தங்களில் முதலாளித்துவ வர்க்கமும், அர சும் நெருக்கடி வேளைகளில் தலையிட்டு இத்தகைய வீழ்ச்சி நிலை ஏற் படாது தடுக்கின்றன. இதன் காரணமாக, மூலதனக் குவியல் போக்கு வீழ்ச்சியடையாது; வெறும் பொருளாதார நிலையும், ஊக வணிக மும் காப்பாற்றப்படுகிறது. முதலாளித்துவ நடைமுறையில் யப்பானு க்கு நிகராக வேறு நாடு உலகில் கிடையாது.
ஜப்பானிய பிரபல முகாமைத்துவ ஆலோசகர் ஒருவரை செவ்வி கண்டபோது அவர் கூறினர்;
ஜப்பானின் இன்றைய பெரிய பிரச்சனை வாணிபமல்ல; அதிகப் பணமும் யந்திர உற்பத்தியின் பரும அளவுமாகும். யப்பானில் குவிந்து வரும் உபரிநிதி. தனிப்பட்டவர் சேமிப்பும் கூட்டுக் கம் பெனிகளிடமுள்ள மேலதிக பணமுமாகும். தனியாட்களின் சேமிப்பு நாளொன்றிற்கு 100 கோடி, கம்பனிகளது 50 கோடி டாலர், லாபத்தின் மூலம் பெற்ற கூட்டுக் கம்பனி மூலதனம் முன்னர் புதிய யந்திரங்களை நிறுவப் பயன் பட்டது. ஏற்றுமதி வீழ்ச்சியினல் மேலும் அவ்வாறு முதலிட முடியாது போயிற்று. ஆகவே மூலதனம் பங்குச் சந்தை, வெளிநாட்டுச் செலாவணி, கட்டிட நிலச் சொத்து ஊக வாணிபத்தை நோக்குகிறது. முதலிட முடியாதபடி அதிக பணம் எம்மிடம் இருக்கிறது. அதிகப்பணம். பிரச்சனையின் தன்மை யாதெ னில் தொழில்களில் முதலீடு செய்யும் வாய்ப்புகள் உலகெங்கும் குறை வாக உள்ளன.
இக் குழப்பமான எதிர் விளைவுகள் 20ம் நூற்றண்டின் முடிவில்
முதலாளித்துவ அபிவிருத்தியின் நவீன போக்கின் உண்மை நிலையை லிளக்குகிறது. (தொடரும்)
4 )

இன்றைய நெருக்கடி சோஷலிசத்தின் நெருக்கடியல்ல - திரிபுவாதத்தின்
நெருக்கடி
என். சண்முகதாசன்
சோஷலிச சமுதாயம் என்பது ஆகாயத்திலிருந்து விழுவதில்லே பழைய சமுதாயத்தின் கல்லறையிலிருந்தே வெளிவருகிறது; ஆயிர மாயிரம் ஆண்டுகால வர்க்க சமுதாயத்தில் உருவான தனிச் சொத் துடமை, அதைச் சார்ந்த கருத்தியல்கள், கலாச்சாரங்களை வேரறப் பது என்பது எளிதானதல்ல என்ருர் லெனின்.
உற்பத்திச் சாதனங்களை சமூக உடைமை ஆக்கிய பின்னரும் வர்க்கங்கள், வர்க்க முரண்பாடுகள், போராட்டங்கள் நிலவவே செய்யும் என்ருர் மாவோ.
சீனவில் கலாச்சாரப் புரட்சியினூடாக பாட்டாளி வர்க்க
சர்வாதிகாரத்தை நிலைநிறுத்த மாவோ முயன்ருர். 1976 இல் அன்னு ரின் மரணத்தின் பின் நவீன திரிபுவாதிகள் தோன்றினர்.
சோவியத் யூனியனில் ஸ்டாலினின் மரணத்தின் பின் அதிகாரத் துக்கு வந்த குருசேவ் நச்சுத்தனமான தத்துவங்களை அறிமுகப்படுத் தினுர்,
முதலாளித்துவப் போக்கை இவர்கள் புகுத்தினர். தனியார் இலாபமே முதலாளித்துவத்தின் முதல் நோக்கு.
தனியார் இலாபம் மூலதன திரட்டலுக்கு வழிவகுக்கிறது. இதுவே முதலாளித்துவத்தின் போக்கு; சுரண்டலுக்குப் பாதை. இதை ஒழிப் பதே சோஷலிசம்.
குருசேவ் இத்தாலிய பியட் கம்பனி முதல் அமெரிக்க ஏகாதி பத்திய வங்கிகள் வரை நாட்டில் நுழைய அனுமதித்தார். ஜப்பான் சைபீரியாவை சுரண்ட இடமளித்தனர். கூட்டு விவசாயம் ஒழிக்கப் பட்டு (நடுத்தர) சிறு பண்ட விவசாய உற்பத்திக்கு வழிவிடப்பட் டது. முதலாளித்துவ பாதைக்கு இதுவே முன்னேடி என மா-லெ போதிக்கும்.
சீனவில் திரிபுவாதிகள் மாவோவின் மகத்தான சாதண்டிான
கம்யூன்களை ஒழித்து குடும்பங்களுக்கு நிலம் வழங்கினர், . . . . . . . . . ...::
( 5 )

Page 5
முதலாளித்துவத்தில் மக்கள் நலனை ஒட்டிய திட்டமிடல் கிடை யாது. தொழிற்சாலைகள், நாடுகளிடை போட்டா போட்டி, முத லாளித்துவ் நெருக்கடிகள் யுத்தங்கள் நடைபெறுகின்றன. பொரு ளியல் மாணவர் இதை அறிவர்.
மத்தியஸ்துவ திட்டமிடல் முறை சோஷலிசத்தில் இப் பிரச்சினை யைத் தீர்க்கிறது. மூலதன வளங்களை ஒட்டி மக்கள் தேவைகள் சம நிலைப்படுத்தப்பட்டு அனைத்தும் திட்டமிடப்படுகின்றது.
தவறுகள் ஏற்படலாம். அனுபவம், நடைமுறை மூலம் அவை திருத்தப்படுகின்றன.
'மத்தியஸ்துவம், ஜனநாயகம் ஆகிய இரண்டும் முரண்பாடான இரண்டு அம்சங்கள்: மத்தியஸ்துவ தீர்மானங்கள் அடிமட்டம்வரை பரிசீலனைக்கு அனுப்பப்படும்.
"அது மீளவும் மத்தியஸ்துவத்தால் பரிசீலிக்கப்படும். ஜனநாயக மத்தியஸ்துவம் என்றும் காப்பாற்றப்பட வேண்டும்.
"தனியார் சொத்துடைமை இடையிட்டு வந்ததே. ஆயினும் பல
நூற்ருண்டு கால தனிச் சொத்துடைமைச் சமூக உணர்வுகளை முற் முக அழிப்பதும் சிரமமே, சோஷலிச நாட்டு மக்களை முதலாளித் துவ பிற்போக்குச் சக்திகள் இழுக்க முயல்கின்றன. காரணம் ஆற்ற லின்மையல்ல. இரு சமூகத்திலும் ஆற்றலின்மை உள்ளன.
சோசலிசம் ஆக்கத்தன்மை கொண்டதல்ல என்று கூறுவது. அபத்தமானது.
லெனின், ஸ்டாலின் தலைமையில் ரஷ்யா கனரக உற்பத்தி தொடக்கம் கலை, கலாசார வளர்ச்சி வரை முதலாளித்துவத்தால் 200 ஆண்டுகளில் சாதிக்க முடியாததை சோஷலிச வளர்ச்சியின் போது 30-35 ஆண்டுகளில் சாதிக்க முடிந்தது.
முதலாளித்துவத்தின் யந்திர உற்பத்தி மூலதனத்திற்கும் வளர்ச் சிக்கும் 200 ஆண்டுகளுக்கு மேலான காலனித்துவ சுரண்டல் பயன் பட்டது. ரஷ்யா, சீன இத்தகைய சுரண்டலின்றியே வளர்ந்தது. கனரக உற்பத்தியில் ரஷ்யா 2 ஆம் உலக யுத்த காலத்தாலும் முத லாளித்துவ பயமுறுத்தலாலும் ஈடுபட நேர்ந்தது. நுகர்பண்ட உற் பத்தியில் இந்நாடுகள் சிறிது பின்னடைவாக இன்று தோன்றலாம். முதலாளித்துவத்தின் 2-3 நூற்ருண்டுகளோடு 4-6 தசாப்தங்களை ஒப்பிட முடியாது. . .
"கிழ்க்கு"ஐர்ேப்பிய நாடுக்ளும் புரட்சிகர் அரசியலை விட்டு திரிபு வாத தலைமைத்துவத்திை வளர்த்ததே.வேதனேயானது: இன்று:
(6)

O O O
1990களில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சிதைவு
அமெரிக்காவின் ஏற்றத்தையும் வீழ்ச்சியையும் பின்வரும் காலப் பகுதிகளாகப் பிரித்து ஆராயலாம்.
1. 1940கள் 1950ன் ஆரம்ப காலம் வரை முதலாளித்துவ' அமைப்பின் உச்சநிலை.
2. உள் நாட்டிலும் வெளிநாட்டிலும் வீழ்ச்சியின் அறிகுறிகள். 1960களின் ஆரம்ப காலத்திலிருந்து 1973 - 74பொருளாதார வீழ்ச்சி யும் வியத்நாம் யுத்த தோல்வியும்.
3. உள் நாட்டிலும் வெளிநாட்டிலும் 1970களின் நடுப்பகுதிவரை யிலான தொடர்ந்த வீழ்ச்சி. :
4. நீகனின் காலகட்டம் (1980 - 88) மீண்டு எழும் முயற்சி யின் தொடர்ந்த வீழ்ச்சி.
5. 1990களில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சிதைவும் போட்டி பான வாணிப, நிதிக் குழுக்களின் புதிய அமைப்பொன்று ஏற்படக் கூடிய நிலையும் உள்ளது.
(போல் சுவீசி)
o o o
முதலாளித்துவ நாடுகள் தமது இனமாக கிழக்கு ஐரோப்பிய நாடு கள் மாறுவதைப் பாராட்டுகின்றன. வலெசாவை பாப்பரசர் ஆசீர் வதிக்கிருர், ஏகாதிபத்திய வங்கிகள் போலந்து, கங்கேரிக்கு போட்டி யிட்டு கடன்கள் வழங்குகின்றன. கிழக்கு ஜேர்மனியரை மேற்கு ஜேர்மனி பணம் கொடுத்து கவர்ந்திழுக்கிறது. கொபச்சேவ் வீழ்ச்சி யடையலாம் என மேற்கு நாடுகள் அஞ்சுகின்றன. ரஷ்யாவில் சோஷ லிசம் கட்டப்படுமானல் முதலாளித்துவம் அஞ்சியல்லவா இருக்கும்.
முதலாளித்துவத்திலிருந்து கம்யூனிசத்திற்கான மாற்றம் என். பதன் சாராம்சம் ஒன்றே - பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்.
தாராள ஜனநாயகம், பூர்ஷ்வா ஜனநாயகம் என்பவை முத லாளித்துவ சர்வாதிகாரமே.
ரஷ்யா, சீன மற்றும் கிழக்கு ஐரோப்பாவை ஆகர்சித்திருக்கும் நெருக்கடி சோஷலிசத்தின் நெருக்கடியல்ல; திரிபுவாதத்தின் நெருக்கடியே.
மற்ருெரு பாட்டாளி வர்க்கப் புரட்சியிஞல் மாத்திரமே இந்த நாடுகளில் சோஷலிசத்தை மீள்விக்க முடியும், ’’ ، ‘۔ ۔ ۔۔۔
t
(நன்றி. வீரகேசரி கட்டுரைச்சுருக்கம்)
( 7 )

Page 6
நியூயோர்க் நகரின் மறுபக்கம்
- மாதகல் கந்தசுவாமி -
2-லகின் மிகப் பெரிய புகழ்பெற்ற நகரங்களின் வரிசையில் குறிப்பிடத்தக்கவை; லண்டன், வாஷிங்டன், நியூயோர்க், டோக் கியோ, ஷங்ஹாய். இவற்றில் பெருமை மிக்கது நியூயோர்க் என்று சொன்ஞலும் அது மிகையுரையல்ல. உலகில் 159 நாடுகள் அங்கம் வகிக்கும் சர்வதேச நிறுவனமான ஐக்கிய நாடுகள் செயலகம் அங்கே தான் செயல்படுகின்றது.
இந்த நியூயோர்க் நகரின் நீண்ட புகழையும் புதுமையையும் நிரூபிப்பதற்கு ஆயிரம் ஆயிரம் ஆதாரங்களை எடுத்துக்காட்டலாம். ஆனல் அதற்கும் ஒர் இருண்ட பக்கம் இருக்கின்றது. அதனல் உல கப் பெரு நகரமாகிய நியூயோர்க் நாளிலும் பொழுதிலும் சீரழிந்து கொண்டிருக்கின்றது.
வானெஸா காம்பெல் என்ற பெண் நியூயோர்க் தபாலகம் ஒன் றில் வேலை செய்பவர். 27 ஆண்டுகளாக நியூயோர்க் நகரிலே நிரந் தரமாக வாழ்பவர். அவரது கூற்றின்படி இந்நகரம் நாளொரு மேனி யும் பொழுதொரு வண்ணமும் நரகமாய் மாறிக்கொண்டிருக்கிறது.
ரெயில் நிலையங்களிலும், குறுக்கு வீதிகளிலும் பிச்சைக்காரர் களின் படையெடுப்பை அவர் தினமும் தரிசிக்கின்ருர்,
வீதி முடக்குகள், சந்து பொந்துகள் எங்கும் போதைவஸ்து விற் பனையாளரின் குசுகுசுப்பு செவிகளில் விழுகின்றது.
தெரு ஒரக்குண்டர்கள் வழியே செல்லும் மக்களைத் தாக்குகின்ற னர். “போதைப் பொருட்களாலும் வன்முறைகளாலும் எல்லாம் மோசமாகி வருகின்றன" என்கிருர் திருமதி காம்பெல், தபாலகத்தில் அடிக்கடி அவர் இரவுச் சுற்றில் கடமை ஆற்றுபவர்.
"வீட்டிலிருந்து புறப்படும்போதுகூட வீதியில் இருமருங்கையும் பாராமல் இறங்க இயலாது. பத்திரிகையை விரித்தால் அல்லது தொலைக்காட்சியை முடுக்கினல், போதை வஸ்துப் பற்றிய செய்தி அல்லது யாரோ சுடப்பட்டார் என்பதையே காண்கிருேம். இரவிலும் வேலை செய்வதால், சர்வசதா பீதியுடன் செத்துக்கொண்டே நான் சீவிக்கின்றேன்" என்கிருர் காம்பெல்.
1989 ஜூன் மாதத்தில் மட்டும், 164 பேர் கொல்லப்பட்டனர். சராசரி ஒரு நாளைக்கு 5.4 பேர் வீதம் என்று பொலிஸ் புள்ளி விபரங் கள் புகல்கின்றன. w . . . . . . .
( 8 )

நகரின் ரெயில் நிலையங்களும், பஸ் தரிப்புகளும் வீடற்றவர் களின் உறைவிடங்களாய் மாறியுள்ளன.
துறைமுக அதிகார சபை பஸ் திருப்புமுனையிலிருந்து 4ஆவது வீதிவழியாய் சாரி சாரியாக மக்கள் வந்துகொண்டிருக்கின்றனர். "அவர்கள் மத்தியில் சில்லறை வியாபாரிகளின் திருக்கூட்டம் ஒரு புறம். பாலியல் நூல் விற்பனை நிலையங்களின் வரிசை மறுபுறம். அங்கு வேலையின்மை அதிகம். பகுதிநேர வேலையின்மை மேலும் அதி கம். வீடுவாசலில்லாது அலைவோர் இன்னும் அதிகம்"என்று கொலம் பியா பல்கலைக்கழகப் பேராசிரியர் சஸ்கியா சஸென் கூறுகிருர்,
நாட்டின் மிகப் பெரிய நகராகிய நியூயோர்க் பூராவும் வாழ்க்கை நிலை சீரழிந்து வருகின்றது. வீடுவாசலின்மை, வீதிகளிலே வசிக்கின்ற மக்களின் எண்ணிக்கை குறைந்தது 25,000 - 30,000 ஆகும்,
குற்றங்களும், வீதி வன்முறையும், 1979இல் நகர வீதிகளில் கொல்லப்பட்டோர் தொகை 1,117. 1988இல் அத்தொகை 1896 ஆக, அதாவது 70 வீதம் உயர்ந்துள்ளது. நாளுக்கு ஐந்து பேர் வீதம் கொல்லப்படும் இந்த நிலை நகர வரலாற்றில் கண்டிராதது.
கற்பழிப்புக்களின் எண்ணிக்கை 2,141லிருந்து 3,412ஆக, அதா வது 59 வீதம் அதிகரித்துள்ளது. W−
கொள்ளையும் வழிப்பறியும் 74,102லிருந்து 86,578ஆக, அதாவது 17 வீதம் கூடியுள்ளது. நியூயோர்க்கில் தினம்தோறும் 237 கொள்கள கள் அல்லது வழிப்பறிகள் நிகழ்கின்றன என அங்குள்ள பொலிஸ் வட் டாரங்களே தெரிவித்துள்ளன.
போதைவஸ்து துஷ்பிரயோகம் 1970இல் 52,470 பேர் போதைப் பொருள் குற்றங்களுக்காக கைதுசெய்யப்பட்டனர். 1988இல் அத் தொகை 88,642 பேராக, அதாவது 69 வீதம் அதிகரித்துள்ளது.
பாடசாலை இளைஞர் பிரச்சினைகள், வீதிக்குற்றங்கள் அடிக்கடி பாடசாலைகளுக்குள்ளும் பரவுகின்றன. அதனல் கல்வியும் பாதிக்கப் படுகின்றது g அதிகாரிகள் அறிவிக்கின்றனர். சமுதாயப் பிரச்சிரை கள் பிள்ளைகள் பெருமளவில் கெடுவதற்கும், துர்மார்க்கங்களில் ஈடு படுவதற்கும் வளமூட்டுகின்றன.
வாழ்க்கைச் செலவு அமெரிக்கா வதிலும் நியூயோர்க்கில்ே పో@h వ7, மொழழுதிஆகிழாக்ஐ அது மிதமிஞ்சிய செலவுடையநகரமாகியுள்ளது. ஒரு சிறிய" குடும் பம் வசிக்கக்கூடிய ஒரு சிறிய வீட்டின் விலை 185,000'ட்ாலர்: இன்னும் பொருட்களின் விலைகள் ஏறிக்கொண்டே இருக்கின்றன, ... - 8
(9)

Page 7
பூர்ஷ்வா ஜனநாயகமும் சோஷலிச ஜனநாயகமும் மதி
பூர்ஷ்வா சமூக பொருளாதார அமைப்பில் வாய்ப்பாக வாழும் சிறுபான்மையினர் மட்டும் பெறும் ஜனநாயக உரிமையே பூர்ஷ்வா ஜனநாயகமாகும். பரந்துபட்ட பெரும்பான்மை மக்கள் ஒடுக் கு முறைக்கு உள்ளாகி சமத்துவமற்று வாழும் நிலை. சோஷலிசத்தில் கிட்டும் ஜனநாயகம் பரந்துபட்ட மக்கள் பெறும் ஜனநாயக உரிமை யாகும். அங்கு சமத்துவமும் சமநீதியும் அனைவருக்கும் கிட்ட வழி வகுக்கப்படும்.
லெனின் அரசும் புரட்சியும் என்ற நூலில் இவ்வுண்மையை பின்வருமாறு_விளக்குவார்:
முதலாளித்துவ சமுதாயத்தில் கிட்டும் ஜனநாயகம் கட்டுப் படுத்தப்பட்ட, கொடுமையான, பொய்மையான, ஜனநாயகமாகும், சிறுபான்மையினரான பணக்காரருக்கே ஜனநாயகம், கம்யூனிசத்திற்கு செல்லும் இடைப்பட்ட காலகட்டத்தில் பாட்டாளியின் சர்வாதி காரம் முதல் தடவையாக , பெரும் பான்மையான மக்களுக்கு ஜன நாயகம் கிட்டும் அவ்வேளை, சுரண்டும் சிறுபான்மையினர் ஒடுக்கப் படுவர். கம்யூனிசம் மட்டுமே முழுமையான ஜனநாயகத்தை மக் களுக்கு வழங்க முடியும்; முழுமையாக அனைவர்க்கும் ஜனநாயகம் கிட்டியதும் அடக்குமுறைகள் தேவையற்று தானே உலர்ந்துவிடும்.
லெனின் மேலும் பின்வருமாறு விளக்கிக் கூறினர்:
வேறு வார்த்தைகளில் கூறுவதாயின் முதலாளித்துவத்தில் 'அரசு" அதன் முழு அர்த்தத்திலும் நிலவுகிறது. ஒருவர்க்கம் மற்ருெரு வர்க் கத்தை அடக்கிஒடுக்க உள்ள விசேடயந்திரம் உள்ளது; சிறுபான்மை யினரை அடக்கிஒடுக்கும் அரசுயந்திரம். இயல்பாகவே பெரும்பான் மையினரைச் சுரண்டும் சிறுபான்மையினர் அடக்கிஒடுக்குவதற்கு வேண் டிய ஈவிரக்கமற்ற காட்டுமிராண்டி முறைகள் தேவைப்படுகின்றன. அடிமை, கொத்தடிமை, கூலிஅடிமை நிலைகளை நிலைநாட்ட இரத்த ஆறுதேவைப்படுகிறது.
மேலும், முதலாளித்துவத்திலிருந்து கம்யூனிசத்திற்கு மாறும் காலகட்டத்திலும் ஒடுக்குமுறை தேவைப்படுகிறது; ஆனல் இத்தடவை
(. 10 )

சுரண்டப்பட்ட பெரும்பான்மையினர் சுரண்டிய சிறுபான்மையினர் மேல் காட்டும் அடக்குமுறையாகும்.
'அரசு’ என்று கூறும் அடக்குமுறை என்ற விசேட யந்திரம் இன்னும் தேவைப்படுகிறது. இது இடைப்பட்ட கால அரசு. முத லாளித்துவத்தில் அமையும் 'அரசு” யந்திரமல்ல. சுரண்டும் சிறு பான்மையினரை அடக்குவதற்கு, பெரும்பான்மையான கூலி அடிமை யாக இருந்தவர்கள் அடக்குமுறையை கையாள்வது முந்திய நிலை யோடு ஒப்பிடும்போது எளிமையானதே. எழுச்சியுற்ற அடிமைக்ளே யும் கொத்தடிமைகளையும் கூலி அடிமைகளையும் அடக்கி ஒடுக்கு வதற்கு கொட்டப்பட்ட இரத்தத்திலும் மிகக் குறைவானதாகவே இது இருக்கும். அதற்கு இணைவாக குடித் தொகையில் பெரும் பான்மையானவர்கட்கு ஜனநாயகம் விரிவாக்கப்படுவதோடு ஒடுக்கு முறையான 'அரசு” யந்திரமும் காலப்போக்கில் மறைத்து போவதற் கும் வழிவகுக்கும்.
и чучи var rpr, Yr vir ww~7 wrur WAY*YugWYMAV
ஊக்கியும் உருக்கியும் .,
அவர்கள் உடுப்பது உடைகளல்ல - மாருய் துவைப்பதுதான் உடைகள்! அதஞல்தான் அவர்களின் விளுக்குறி முதுகளில் அத்தனை பெரிய அழுக்குப் பூக்கள் ஆமாம்! அழுக்குப்படிந்த ஆடைகளை ་་ அடைந்தெடுத்த மாராப்பு(பூ) பூக்கள்
O o es Od
இப்போ அவர்களின் முதுகுகள் வளையா விட்டால், பலருக்கு : எப்பவுமே உடல் நிமிராது! இதரூல் தன் ".கடலோர மணற்பரப்பில் அம்மணமாய் . தம் தளிர் மேனிகளுக்கு "ஒலிவொயிலிட்டு u፰• “ነ ` .· உடலுருக இன்பமுடன் சூரியக் குளிப்பில் மிதக்கின்ற சைனிஸ் கன்னியர்கள் போல் ." . . அவர்கள், கந்தைக் கோவணத்துடன். வியர்வை "ஒலிவொயில்" சிந்த சூரிய எரிப்பில் தோல் உருகின்ருரர்கள்.

Page 8
கேள்வி? பதில்!
f(66)
இந்தியத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் திடீர் வளர்ச்சி இந்து மத எழுச்சியின் சின்னமாகத் தோன்றுகிறது என்பேன்.
மு. சிவலிங்கம், கண்டி
பு: நிலப்பிரபுத்துவம் உடைந்து முதலாளித்துவ வளர்ச்சி ஏற்படுங்
கே:
Gas:
காலத்தில் மத எழுச்சியும் ஏற்படுவதைக் காண்கிருேம். இலங்கை யில் இந்துத் தமிழர்களும் இஸ்லாமியர்களும் சிங்களவர்போல் நீண்டகாலம் வடகிழக்கில் வாழ்ந்தபோதும் இலங்கை பெளத்த சிங்கள நாடு என்ற குரலையே பேரின மரபுக் கோட்பாட்டாளர் முன்வைப்பதைக் காண்கிருேம். ஈரானில் ஷா எண்ணெய் நிலப் பிரபுத்துவத்தை உடைத்து முதலாளித்துவப் போக்கை நிலை நாட்ட முயன்ற போது இஸ்லாமிய மதகுரு கொய்மேனி ஷா வைத் தூக்கினறிந்து ஆட்சிக்கு வந்தார். பா.ஜ.கட்சியும் இந்தியா வில் இந்து சாம்ராஜ்யத்தைக் கட்டக் கனவு காண்கிறது. ராம் ஜன்ம பூமியில் கோவில் கட்ட இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பிரச்சாரம், பா. ஜ. கட்சியைச் சார்ந்தே எந்த அரசியல் அமைப்பும் அங்கு ஆட்சி புரியமுடியும் என்பதையே காட்டுகிறது.
இந்திய தேர்தல் முடிவுகள் பற்றி என்ன கூறுவீர்?
க. சின்னராசா, யாழ்
தெற்கே உள்ள சிறு முதலாளிகளும் பணக்கார விவசாயிகளும் காங்கிரசை விரும்பும்போது வடக்கேயுள்ள பெருமுதலாளிகளும் பணக்கார விவசாயிகளும் காங்கிரசுடன் ஊடல் கொண்டிருப்ப தாகத் தெரிகிறது.
இந்திய அரசியல் மாற்றத்தால் இலங்கை இந்திய உறவிலும் மாற்றங்கள் ஏற்படுமா?
தி. செந்தூரன் திருமலை
பெரிய மாற்றங்கள் ஏற்பட மாட்டாது. இந்திய வெளிநாட்டுக் rெள்கைகள்ை வெளிநாட்டு அலுவல்களைக் கையாளும் அதி கார்களே பெரும்பாலும் தீர்மானிக்கின்றனர். இல் அதிகாரிகள்
( 12 )

பெரும்பாலும் உலக வல்லரசுகளின் நாடுகளில் பணியாற்றியவர் கள். தேசப்பற்றுடன் இந்தியாவையும் ஒரு வல்லரசாக கட்டி எழுப்ப வேண்டும் என கனவு காண்பவர்கள். இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கைகளை அனுபவமில்லாத அரசியல்வாதி களே கையாள்கின்றனர். அதஞலேயே இடையிடை குழப்ப நிலை ஏற்படுகிறது. இந்திய அமைதிப்படை வெளியேறுவதை Gypsirhatu அரசே முடிவு செய்து நடைமுறைப்படுத்தத் தொடங்கி dE/357.
கே: கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் சோஷலிசம் கட்டும் முயற்சிகள்
தோல்வியடைகின்றனவே. இ. சுபைர், யாழ்,
ப; சோஷலிசத்தைக் கட்டுவதிலுள்ள சிரமங்களை புதிய அனுபவங் க%ளக் கொண்டு நாம் கற்கவேண்டும். ஸ்டாலினின் பின்னர் ஏற் பட்டு வந்த திரிபுவாதப் போக்கை மார்க்சிய சித்தாந்த வாதி கள் முன்னரேயே சுட்டிக்காட்டி வந்தனர்.
(இதே இதழில் மற்றைய கட்டுரைகளையும் பார்க்க)
கே: சோஷலிசம் தோல்வியடைந்து முதலாளித்துவ நாடுகளின் ஜன நாயகமே வெற்றி பெற்று வருவதை நீங்கள் ஏற்கமாட்டீர்களா?
து. சுந்தர், மட்டக்களப்பு
ப: அமெரிக்க ஜனநாயகம் முன்னர் கிரனடாவை ஆக்கிரமித்தது. தற்போது பனமாவை பசியாறுகிறது. உலகிற்கு முதலாளித் துவத்தின் சிறப்பைப் போதிக்கும் அமெரிக்காவிலேயே வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கம், குற்றச்செயல் கள், போதைவஸ்துகளின் பரவலான விற்பனை, சுற்ருடல் மாசுபடுத்தல், வறுமை, பொய்ப்பிரசாரம் அனைத்தையும் காண லாம். முதலாளித்துவத்தின் இதே வெற்றியைத்தான் பத்திரிகை களெல்லாம் குதூகலித்துப் பாராட்டுகின்றன. கிழக்கு ஐரோப் பிய நாடுகளும் இவ்வாறு மாற வேண்டும் என உலக முதலாளித் துவ நாடுகள் விரும்புகின்றன.
இன்று நடைமுறையிலுள்ள சோஷலிசம் இன்றைய நெருக்கடி யிலிருந்து மீட்சியடைய வேண்டியது மிக முக்கியமாகும். ஏனெனில் முதலாளித்துவத்தால் முற்ருக செயலாற்ற முடியாதவற்றில், நடை முறையிலுள்ள சோஷலிச அமைப்பு தீர்வு வழிகளை உள்ளடக்கி யுள்ளது. எல்லா சோஷலிச நாடுகளும் இன்றைய நிலையில் முத ல்ாளித்துவப் பாதையில் செல்லின் நாகரிகமடைந்த மனித இனம், தன் மீட்சிக்கு வேண்டிய சூழலை மீண்டும் நிறுவ நீண்டகாலமாகலாம்.
சுவிசி,
juggu umu -- Nu ju Nui
( is j :

Page 9
இந்தியாவில் சாதியும் வர்க்கமும்
சாதாரண மக்களின் தேவையை ஒட்டியே சமூகப் புரட்சி ஏற் படுகிறது. மக்களும் அதன் தேவையை உணர்ந்துகொள்ளும் நிலை ஏற்பட வேண்டும். அடிமைச் சமுதாயத்தில் நிலவிய வர்ண அடிப் படைப் பிரிவுகள் (பிராமணன், வைசியன், சத்திரியன், சூத்திரன்) கி. மு. 6ம் நூற்றண்டு வரையில் சாதி அமைப்புக் கொண்ட நிலப் பிரபுத்துவ சமூகமாக மாறத் தொடங்கியது.
விவசாய உற்பத்தியை மேம்படுத்த முயன்ற இந்திய மக்களில் ஒரு பகுதியினர் கைத்தொழிற் பண்ட உற்பத்தியில் ஈடுபட்டு உள் நாட்டிலும், கடல் கடந்த நாடுகளிலும் வாணிபம் செய்ய ஆரம்பித் தனர். இவர்கள் புதிய நிலப் பிரபுத்துவ மன்னர்கட்கும் வரிகள் கொடுத்தனர். இவ்வர்க்கத்தவர் புத்த மதத்தையும், சங்கத்தையும் ஆரம்பித்து சமூகப் புரட்சிக்கு அறிவு பூர்வமாகத் தலைமை தாங்கினர்.
அடிமைகள் விவசாயத் தொழிலாளர்களாக மாற்றப்பட்டனர். புதிய உற்பத்தியைக் கைக்கொண்ட சுரண்டலர்களே சமூகப் புரட்சிகளை யும் ஆரம்பிக்கின்றனர். பிரக்ஞையுடனும் பிரக்ஞை அற்றுமே இரு முக முரண்பட்ட நிலையில் இம்மாற்றங்கள் ரஷ்யப் புரட்சிவரை தொடர்ந்தன.
மார்க்சிய லெனினிச அரசியல் பொருளாதாரமே பின்னர் விவ சாயிகளையும் பிரக்ஞையுடன் ஏற்படும் ஜனநாயகப் புரட்சிக்கு தூண் டியது. சீனுவில் மாவோ தலைமையில் புதிய ஜனநாயகப் புரட்சி ஏற்பட் டது. தரகு முதலாளிகள் அதை எதிர்த்தனர். இந்தியாவில் உயர் சாதிக்காரரான முதலாளிகள் இந்திய சாதி முறையற்ற ஜனநாய கப் புரட்சிக்கு எதிராக உள்ளனர். அம்பேத்கார் கூறினர்: "இந்திய தொழிலாளி வர்க்கமே சாதித் திமிர் கொண்டதால் இந்திய ஜன நாயகப் புரட்சிக்கு எதிராளிகளாக உள்ளனர்! இந்திய ஜனநாயகப் புரட்சிக்கு உந்து சக்தியாக விளங்குபவர் ஒடுக்கப்பட்ட தொல்குடி யினரும், சாதியினருமேயாவர்". a . . . . .
- - ኃቋ, *y 。 :... ".) ۰۰۰، ه . ، ، ، ، ۰ .
வேத காலத்திய இந்திய சமுதாயம் வர்ண முறையான ஒடுக்கு முறைக்கு எதிராகவும் அதற்குப் பிந்திய பெளத்த இந்திய சமுதாயம் இன்று வரை சாதி, இனப் போராட்டமாகவுமே வரலாறு.காட்டு கிநிது. تنها از آ؛ نعیمہ گیا۔ نہم ؟ ... امرالله أخذ عيد بناء ميسي ية : د. منذ شهة مش ...
r"- - ، " -
- : « . . بر :: ، با ۶۴ " "نی
~ پ* : 'هه
. . . ." . 。 * : ,
வழமையான கம்யூனிஸ்டுகளும் சமயமற்ற, சாதி, இனமற்ற வர்க்
( 14 )
 
 
 
 

உலகில் கல்வியறிவற்றவர் அதிகமாக உள்ள நாடு இந்தியா: (44 கோடி) 15 ஆண்டுகளில் கல்வி கற்று வேலையற்றவர் 40 லட்சத் திலிருந்து 250 லட்சமாக உயர்ந்துள்ளனர். சாதி ரீதியில் கல்வியறி வற்றவரில் பெருந்தொகையினர் தாழ்ந்த சாதியினராகக் கருதப்படு பவரே. தொல் குடியினரில் 16% ஒதுக்கப்பட்ட பிற சாதியினரில் 21% மட்டுமே எழுதப் படிக்கத் தெரிந்தவராவர். இச் சமூகங்களில் பெண்களின் நிலை இன்னும் மோசமானது.
பிரெஞ்சு நாட்டில் 200 ஆண்டுகளின் முன்னர் "சுதந்திரம், சமத் துவம் , சகோரத்துவம்" என்ற குரலுடன் முதலாளித்துவப் புரட்சி ஏற்பட்டதோடு விவசாயிகளுக்கு நிலமும் கிடைத்தது. இந்தியாவில் திலகர் முதலானேரே சாதி அமைப்பு ஒழியாது, சுதந்திரம் கிட்டாது என்றனர். 74.5% மக்கள் இன்றும் சாதி என்ற பெயரால் ஒதுக்கப் பட்டுள்ளனர். சாதி ஒழியாது அவர்கட்கு ஜனநாயகமே கிட்டப் போவதில்லை.
இந்திய முதலாளிகளே வர்க்கமாக இல்லை. தனிச் சமூகமாக உள் ளனர்; மானியா உயர் சாதியினரே அனைத்திலும் முதன்மையில் உள் ளனர். இந்திய தேசிய காங்கிரசின் சுலோகமே சாதியை இறுகப் பிடிக்கும் வேதாந்தமாகும். உயர்ந்த சாதியினரே இன்றும் ஆளும் வர்க்கமாகவும், அரசியல் தலைவர்களாகவும் உள்ளனர்.
வறுமைக் கோட்டின் கீழே உள்ளவர்களில் பெரும்பான்மையினர் சாதியால் ஒதுக்கப்பட்ட மக்களே. உணவு, உடை. இருப்பிடம், நிலம், நீர், மருத்துவம் அனைத்திலும் இந்திய சராசரி அளவிலும் பார்க்க கீழ் மட்டத்தில் இருப்பவர்களும் இவர்களே. உச்சவரம்பு, நிலச் சீர் திருத்தச் சட்டங்கள் எதுவும் இவர்களுக்கு வாய்ப்பளிக்கவில்லை.
புராதன கம்யூனிச சமுதாயத்தின் பின்னர் சமுதாயத்தில் இரு முரண்பாடுகள் தோன்றின. பகைமை முரண்பாடு, பகைமையற்ற முரண்பாடு, வர்க்க முரண்பாடே பகைமை முரண்பாடானது. புரட்சி மூலம் தீர்க்கப்படுவது என் ருர் மார்க்ஸ்.
பகைமை பகைமையற்ற முரண்பாடுகள் ஒன்று மற்றென்ருகவும் மாறுபடலாம். வர்க்கப் போராட்டத்தின் ஆரம்ப நிலை, பகைமை அற்ற வடிவத்தில் இருக்கலாம் என்ருர் மாவோ. இதன்படி சாதி முரண்பாடே பகைமை வடிவமெடுத்து. புரட்சி மூலம் தீர்க்கப்படும் நிலை ஏற்படலாம். முழுழையான இந்தியப் புரட்சி மூலழ் சாதி, பால், வர்க்க பேதங்களை ஒழிப்பதற்கு பரந்துபட்ட ஒடுக்கப்பட்ட மக்களை பும், புரட்சி உணர்வுடன் அணி திரட்டுவது அத்தியாவசியமாகும்.
SSAS SSASS S SSAASS SSSSS S SDSSDD S AAAAA AAAAS MS ELL LLLLLLLLS LLLLLLTTAAArAS
( 15 )

Page 10
d சுபத்திரன் சுமந்த துவக்கு
-சருமதி
செய்திகளைச் சொல்லவல்ல செயல்களைப் புரிய . உள்ளதைக் காட்ட வல்ல உன்னதங்களைக் காட்ட . வல்லதான வார்த்தைகளையே நான் கவி வரம் கேட்டுப் பெற விரும்புகிறேன்.
பொல்லாமைகளைப் பொசுக்கும் பொங்கலுக்குள்
ஒரு
புல்லாக வாவது நின்று புனிதம் பெற வேண்டு மென்றுதான் என் கவிதை வில்லின நான் வளைக்கின்றேன்.
சுபத்திரன்
சுட்டிக் காட்டிய சொல்லால் ஆன துவக்கையே நான்
சுமந்து நிற்கின்றேன். மல்லாக்கி வீழ்த்த நினைத்த மடமைகளைத் தான் சொல்லால் சுட முயல் கின்றேன் நானும் தோற்கலாம்.
ஆனல்
நாளை உண்டு
அங்கு -
சுபத்திரன்;
நான்
நினைவு கூரப் படாமலா போவோம்?
ச0.10-1979 அன்று அகாலமரணமுற்ற கவிஞர் சுபத்திரன் அவர்களின் புத்தாம் ஆண்டு நினைவு தொடர்பாய் இக் கவிதை,
( 16 )

இலங்கையின் ஆளும் வர்க்கம் சில குறிப்புகள்-3
அழகன்
ஆளும் வர்க்கத்தின் தேவை, நலனை ஒட்டியே அரசு இயங்கு கிறது. முதலாளித்துவ வளர்ச்சியே பாராளுமன்றம் போன்ற, "மக் கள் பிரதிநிதிகள்" என்ற போர்வை கொண்ட அமைப்பைக் கொண்டு வந்தது.
அனைவருக்கும் வாக்குரிமை உண்டு, தமக்கு விரும்பியவரை சட்டமியற்ற, நிர்வாகத்தை நடத்த பாராளுமன்றத்திற்கு தேர்ந்து அனுப்பலாம் என்ற "பரந்த நோக்கை" முதலாளித்துவம் நிறுவியது. முதலாளிக்கும் தொழிலாளிக்கும், பணக்காரனுக்கும் ஏழைக்கும்* பணக்கார விவசாயிக்கும் கூலி விவசாயிக்கும், கற்றவருக்கும் கல்லாத வருக்கும், நகரவாசிக்கும் கிராமத்தவனுக்கும் ஒரே வாக்குரிமை யுண்டு எனச் சமன்படுத்தியது. தேர்தலில் போட்டியிட ஏற்படக் கூடிய செலவு, தகுதி, சாதி, மத, இன, பால் பேதங்கள் அனைத் தையும் முதலாளித்துவம் மூடி மறைக்க புதிய பொய்மை வடிவத் தைச் சிருட்டித்தது. கல்வி, மதம், குடும்பம், கலை இலக்கியம் போன்ற கருத்தியல்களை தன் சார்பாக முதலாளித்துவம் சிருட்டிப் பது போலவே இவ் அரசியல் வடிவத்தையும் சிருட்டித்தது.
அரசியலைத் தொழிலாகக் கொண்டு கட்சி அமைத்துத் தேர்தலில் போட்டியிடுபவர்கட்குப் பின்னே ஆளும் வர்க்கம் நிற்பதை எளிதில் கண்டுகொள்ளலாம். இந்த ஆளும் வர்க்கத்தக்கவரின் தேவையை ஒட்டியே அரசு இயங்கவேண்டும். தவறின் ஆளும் வர்க்கத்தவர் தக்க சந்தர்ப்பம் பார்த்து அக் கட்சியினரை வீழ்த்தி அரசியல் கட்சி மாற்றத்தை ஏற்படுத்திவிடலாம்.
சுதந்திரக் கட்சி 1971ன் ஜே. வி. பி.யின் ஆயுதக் கிளர்ச்சியை ஈவிரக்கமின்றி அடக்கியதை ஆளும் வர்க்கம் ஆதரித்தது. அந்நியச் செலாவணி மீறல்களை குற்றவியல் ஆணைக்குழு முன் நிறுத்தி தண் டிப்பதை எதிர்த்தது. 1977 தேர்தலில் சுதந்திரக் கட்சியை ஆளும் வர்க்கம் வீழ்த்தியது. . . . ." . . . . . . . . . . . . . . . .
( 17 )

Page 11
தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சியினருக்கு ஆளும் வர்க் கத்தவருடன் முரண்படக்கூடிய பிரச்சனைகள் முக்கியமாக தேர்தல் காலத்தில் ஏற்படுகிறது. மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காகவும் தமது வெற்றிக்காகவும் ஆளும் வர்க்கத்தவர் பாதிப்பு ஏற்படக்கூடிய சில உறுதிமொழிகளை மக்கள் முன் கட்சிகள் வைக்க நேரிடுகிறது.
" உதாரணமாக, யு. என். பி. ஜனசக்தி திட்டம் என உணவு மானியம் பெறும் குடும்பங்களுக்கு மாதம் ரூபா 2500/- வழங்குவ தென்பதை ஆளும் வர்க்கம் விரும்பவில்லை.
வெறும் தேர்தல் பிரசாரம் என ஆளும் வர்க்கம் இப் பிரசாரத் தை விட்டிருக்கலாம். ஆயினும் உறுதி கூறிய அரசியல் கட்சி ஒரு சிறு பகுதியினருக்காவது மாதம் ரூபா 2500 வழங்கியே தீரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது
தேர்தல் வாக்குறுதியை முன்வைத்து உழைக்கும் தொழிலாளர் கள் ஆகக் குறைந்த மாதச் சம்பள மாக ரூபா 2500 வேண்டுவது ஆளும் வர்க்கத்திற்கு அச்சமூட்டவே செய்தது. அரசின் அவசரகாலச் சட்ட மும் உள்நாட்டுப் போரும் இன்று யாவையும் திசை திருப்பி ஆளும் வர்க்கத்தைக் காப்பாற்றி வருகிறது.
மீண்டும் ஜனநாயகம் தலையெடுக்கும் போது வாக்குறுதியை காப் பாற்றத் தவறியதால் மக்களும் , தொழிலாளர்களால் வீண் கோரிக் கைக்கு வழிவகுக்கும் போக்கை முன்வைத்ததால் ஆளும் வர்க்கமும் ஆளும் அரசியல் கட்சியை வீழ்த்த முயலலாம்.
இலங்கையின் ஆளும் வர்க்கம் பலங்குன்றியிருப்பதாலும் ஓரளவு அரசியல் விழிப்புடன் மக்கள் கல்வியறிவுடன் வளர்ந்து வருவதாலும் சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து தொடர்ந் அரசியல் மாற்றங் கள் ஏற்பட்டு வந்துள்ளன. அரசியல் கட்சிகளும் காலத்துக்குக் காலம் தமது கொள்கைகளையும் மாற்றிக்கொண்டே நிலைபெற முயல் கின்றன.
ஆளும் வர்க்கம் சார்ந்து நின்று தவறன அரசியல் போக்குகளைக் கையாண்டதால் இன்று அரசை எதிர்த்த ஆயுதப் போராட்டங்களும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன இதனுல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதைச் சீராக்க பாசிசம் போன்ற கடும்போக்கு அரசியல் நடவடிக்கை கையாளப்படுகின்றன. இதனல் பூர் ஷ்வா ஜன்நாயக உரிமைகளும் பாதிக்கப்படுவதைக் காணலாம். தொழி லிசள்ரின் ஆர்ப்பாட்டங்கள், வேலை நிறுத்தங்கள், ஊர்வலங்கள், பொதுக் கூட்டங்கள் யாவும் குறைந்து வருவதையும் காண்கிருேம். .
( 18.)

சேமிப்பும் முதலீடும்
qqeSeLMLSSSLSLSSSSSSMLMLMLSSLSLSSLSLSSLSLSLSSL SLSSLSLSSLSLSSLSL
சேமிப்பு = முதலீடு என்பதில் உண்மை இருப்பதாக பெரும் பாலான பொருளாதார நிபுணர் கூறுவர். இதை நிரூபிக்க தவருன நியாயங்களையும் சொல்வர். அரசியல் நிபுணர்களும், பத்திரிகை யாளர்களும் சேமிப்பை அதிகரிக்கச் செய்யின் முதலீடும் மேம்படும் என்பர். சென்ற 200 ஆண்டு வரலாற்றை எடுத்து பொருளாதார நிபுணர்கள் பொருளாதாரம், முதலீடு பலமான வேளை நாடு செழிப் படைந்ததாகவும் பலம் குன்றியவேளை தேக்கமடைந்ததாகவும் காட்டு வர்; இதன் மூலமும் சேமிப்பை ஊக்குவிக்கும் கொள்கையை வலி யுறுத்துவர். இறுதியில் அவர்கள் கூறிவரும் நியாயம்: சேமிப்பை உயர்த்துவதன்மூலம் செல்வமும் வருமானமும் அடித்தட்டு, நடுத்தர மக்களிடையே மீளப் பகிரப்படுகிறதுஎன்பர்.
றிகனுடைய ஆட்சிக் காலத்தில் இப்போக்கே கடைப்பிடிக்கப் பட்டு புஷ் நிர்வாகத்திலும் தொடர்கிறது என்பர். 80 களில் முதலீடு முன்னைய 3 தசாப்தங்களிலும் பார்க்க வீழ்ச்சியடைந்தது; உயர்ந்த இராணுவச் செலவு, பற்ருக்குறை பட்ஜெட் ஆகியனவையே பொரு தாரம் வீழ்ச்சியடையாது காப்பாற்ற உதவியது என இன்று கூறுகின் றனர். ஏன்? சேமிப்பு = முதலீடு என்ற சமன்பாட்டை முன்வைத்து அவர்கள் தவருண பொருளாதார தர்க்கத்தில் ஈடுபடுகின்றனர்.
யதார்த்த நிலையாதெனில் முதலீடு சுதந்திரமாக, தானக மாற்ற மடைவது. அதிலேயே சேமிப்புத் தங்கியுள்ளது என்பதே. முதலீடு அதிகரிக்க வருமானம் திரட்சியடைவதன் மூலமே சேமிப்பு மேம் படக் கூடும். ஆனல், சேமிப்பு அதிகரிக்காது எவ்வாறு முதலீட்டிற்கு நிதி தேடலாம் என நீங்கள் கேட்கலாம். சுலபமான பதிலுண்டு. அபிவிருத்தி அடைந்த முதலாளித்துவ நாடுகளில் பெருந்தொகை மூலதனம் பணக்காரர், கூட்டுத்தாபனங்கள், வங்கிகள், ஓய்வூதிய நிதிகள்: காப்புறுதிக்கம்பனிகள் முதலியவற்றில் தேங்கியுள்ளன.
இவற்றில்.ஐது பங்கு. தீக்க,உற்பத்தியில்.நிலகெண்டிருக்கலாம்.

Page 12
அதேவேளை பெரும் பங்கு வங்கி மீதங்கள், வைப்புச் சான்றிதழ்கள் நிதிச் சந்தைக் கணக்குகள் முதலியவற்றில் கிடக்கின்றன. இவற்றையே புழக்கத்திலுள்ள பணம் என்கிருேம். வாய்ப்பான முதலீடு கிட்டும் போது இவை உற்பத்தி நோக்கி புரட்டப்படலாம். அதேவேளை மறு புறமாகவும் பார்க்க வேண்டும். தக்க முதலீடுகளுக்கு வாய்ப்பில்லாத போது உற்பத்தி சுற்றிலுள்ள நிதி முதலீட்டிலிருந்து வெளியேறியும் விடலாம்.
அவ்வேளை முதலீடு சுருங்க, வருமானம் குறைந்து சேமிப்பும் கீழ் நிலை அடையும். அமெரிக்காவின் இன்றைய நிலையும் இதுவே என்று கூறுவதில் தவறில்லை. அமெரிக்காவுக்குள் ஆண்டு தோறும் 15, 000 கோடி டாலர் வெளிநாட்டுப் பணமாக வருகிறது. இங்கே பயன்படுத்தப்படாத மூலதனத்துடன் இப் பணமும் சேர்கிறது. ஒரு பகுதியே உற்பத்திக்குப் பயன்படுகிறது. (உ+ம். அமெரிக்க கம்பனி யோடு இணைந்து ஜப்பான் மோட்டார் கார் உற்பத்தியில் முதலீடு செய்வது போன்றவை.) அமெரிக்காவுள் நுழையும் பணத்தில் பெரும் பங்கு அரசின் முறிகள், நிலங்கள், கட்டிடங்கள் முதலியவை போன்று அமெரிக்க மூலதனம் நுழையும், தேங்கும் நிலைகளிலே நுழைகின் p607. (MR)
குமர ன் (இதழ் 72 இல் இருந்து)
தனிப்பிரதி ரூ 41
6 இதழ்கள் ரூ 24/-
12 இதழ்கள் ரூ 48
விற்பனையாளர்க்கு கழிவு உண்டு.
ஆங்காங்கே வரவழைத்து விநியே கிக்க விரும்புவோர் தொடர்பு கொள்க:
ஆசிரியர் , குமரன், 201, டாம் வீதி, கொழும்பு - 12, தொலைபேசி: 431388
- 20 -.
 
 

சிங்கங்களின் நீதி
- மாதவன் -
சிங்கத்தின் குகையில் விசாரணை. நீதி வழங்க மூன்று சிங்கங்கள் நியமிக்கப்பட்டிருந்தன.
அடுத்த குகைகளில் மான் கூட்டம் சோடி சோடியாக அடைக்கப் பட்டிருந்தன.
ஒரு சிறு குகையில் இரண்டு கலை மான்கள். விசாரணையின் போது எவ்வாறு பதிலளிப்பது, நடந்து கொள்வது என்ற ஆராய்ச்சியிலும் விவாதத்திலும் ஈடுபட்டிருந்தன.
* எத்தகைய நிலையிலும், வதையிலும் உண்மையைக் கூறுவதில்லை, சுற்றவாளி என்பேன். முடிந்தால் குற்றத்தை அவர்களே நிரூபித்து, நீதி வழங்கட்டும்" என ஒரு மான் தன் முடிவை உறுதியாகக் கூறி tUg5Il.
"உன்னை வதைத்துக் கொன்று விடுவார்கள். நான் உண்மையைக் கூறப்போகிறேன். மன்னிப்புக் கிடைக்கும். புத்தர், யேசு, காந்தியில் நான் நம்பிக்கை கொண்டவன். குறைந்த தண்டனை கிட்டினும் உயி ரைக் காப்பாற்றி விடுவேன்" என்றது மற்ற மான்.
'சிங்கங்கள் புத்தரோ, யேசுவோ அல்ல."
உயிர்க் கொலையை எல்லாத் தெய்வங்களும், மதங்களும், logs குருமாருமே எதிர்க்கின்றனர். கருணையையே போதிக்கின்றனர்"
"இரத்த வெறி பிடித்த சிங்கங்களின் மதமே வேறு'.
"அது என்ன மதமோ”
** இரத்தம்’
விசாரணைகள் ஆரம்பித்த குரல்கள் கேட்டன. சிங்கங்களின் கர்ச் తాడిr.
முதலில் மான்கள் நடுங்கின. பின் மன உறுதியை வரவழைத்தன. கோழைத்தனமாக நடுங்கிச் செல்வதில்லை எனத் தீர்மானித்தன. "
எப்படியும் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள் வேண்டும் என்பதில் ஒரே கருத்து. - , : - : -
( 21 )

Page 13
முதலில் அழைக்கப்படுபவரின் தீர்ப்பை மற்றவருக்கு அறிவிப்பதற்கு வழி தேடினர். அதை ஒட்டி இரண்டாவது மான் தீர்மானம் எடுக் கலாம்.
விடுதலை எனின் ஒரு தடவை சத்தமிடுவதென்றும், தண்டனை எனின் இரு தடவை என்றும், மரண தண்டனை ஆயின் மூன்று தடவை கத்துவதென்றும் தீர்மானித்தனர். குரல்களையும் சரி பார்த்தனர். குரல்களை இடைநேரம் விட்டு மீண்டும் தொடர்ந்து ஒலிக்க வேண்
டும்.
விசாரணைக்கு அழைத்துச் செல்லும் சிங்கம் கர்ச்கித்துக் கொண்டு வந்தது.
மான்கள் நடுங்கின.
சுற்றவாளி என்ற உறுதியில் குற்றத்தை நிரூபிக்கும்படி வேண் டும் மானே முதலில் அழைக்கப்பட்டது.
தைரியத்தை வரவழைத்துக் கொம்புகளை நிமிர்த்திய நடையுடன் மான் சென்றது.
சுற்றவாளி" என்றதும் தலைமை வகித்த சிங்கம் கர்ச்சித்து, ஒரித்தது. மற்ற இரண்டும் கர்ச்சித்தபடி உற்றுப் பார்த்தன.
"உன் கொம்ைைபக் காட்டி மிருகங்களை நீ பயமுறுத்தவில்லையா?”
இல்லை" நீ பொய் பேசுகிருய். உண்மையைச் சொல்லு"
நான் பயமுறுத்தவில்லை"
பொய் பேசும் உனக்கு மரண தண்டனை'
தலைமை வகித்த சிங்கம் தீர்ப்பு வழங்கியது.
விசாரணை எதுவுமின்றி, சாட்சிகளை அழையாது சர்வாதிகாரப் போக்கில் தீர்ப்பு வழங்கியதைக் கண்டு மான் அதிர்ச்சியடைந்தது
விசாரணையில்லாது தண்டனையா?" வியப்போடு மான் கேட் اریت
22 )

"நாங்கள் விசாரிப்பதற்கல்ல, தண்டனை வழங்கவே உள்ளோம். உன் உடலை மனிதர்போல நாம் எரித்துவிட மாட்டோம். பசியோடு உள்ளவர்க்குப் பயன்படும்"
மான் தன் தோழனை நினைத்து மூன்று தடவை சத்தமிட்டது.
உண்மையைக் கூறத் தயாராக இருத்த மான் அழைத்து வரப் tul L-5l.
'உண்மை பேசி உயிரைக் காப்பாற்றத் தெரியாத மிருகம்" என மனதுள்ளே தன் தோழனை வைதபடி வந்தது.
'நீ உண்மை பேசப் போகிருயா, அல்லது உன் தோழன் போல பொய் பேசிச் சாகப் போகிருயா?"
உண்மையே பேசப் போகிறேன்.
"உன் கொம்பைக் காட்டி மிருகங்களை விரட்டினயா?"
**ஆமாம்"
*வேறு என்ன செய்தாய்? நடந்தவற்றைச் சொல்லு. பொய் பேசப்படாது"
தாம் போராடிய காரணம், உடனிருந்த தோழர்கள், வீரச் செயல் கள் யாவையும் மான் கூறியது. மன்னிப்பும் கேட்டது.
"நீ உண்மை பேசியதற்காக எங்கள் பாராட்டுகள்”
தலைமைதாங்கிய சிங்கம் சொன்னது
"நான் போகலாம் தானே"
மான் புறப்படத் தயாரானது.
“ஒப்புக் கொண்ட குற்றத்திற்குத் தண்டனை இருக்கிறது"
மான் வியப்போடு திரும்பிப் பார்த்தது.
( 23 J

Page 14
மரண தண்டனை."
**இது அநியாயம்! அக்கிரமம். நான் உண்மை பேசினேன். மன் னிப்புக் கேட்கிறேன்."
* மன்னிப்பா???
தலைமைச் சிங்கம் கர்ச்சித்தது.
*புத்தர், யேசு கூட உண்மைகூறி மன்னிப்புக்கேட்பின் மன்னித்து விடுவார்கள்."
"அவர்கள் தெய்வங்கள், நாங்கள் மிருகங்கள்’. O
(2ஆம் பக்கத் தொடர்ச்சி) சோஷலிச உற்பத்தி முறையும் நிலவ முடியும் என லெனின் கூறி ரஷ்யாவில் புதிய புரட்சிச் சமுதாயத்தைக் கட்டி எழுப்பினர்.
அதன் தற்காலிக பின்னடைவைப் பார்த்து ரொக் சீ ய சார் புடையயவர்களும் அன்னரின் "உலகப் புரட்சி"க் கோட்பாட்டை முன் வைத்து சோஷலிசத்தின் தோல்வி என விளக்கம் கூற முன் வருவதாயும் காண்கிருேம்.
புரட்சிக்குப் பிந்திய சமுதாயங்களிலுள்ள தொழிலாளர்கள் அதிகாரத்துவத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட வேண்டிய குழல் ஏற்பட்டு விட்டது. அதிகாரத்துவம் பலமான வர்க்கமல்ல. இன்றைய தற்காலிக சூழல் நிலையைக் கண்டு புரட்சிப் பாதையோ கம்யூனிசத்தை நோக்கிய பயணமோ தடைப்பட்டு விட்டது என்று கூறிவிட முடியாது.
முதலாளித்துவம் என்ற தொற்று நோய் பரப்பப்பட்டது. நோய்க்கு தாக்குப் பிடிக்கத் தக்கதாக சோஷலிசம் கட்டப்பட வில்லை. பொருளாதாரத்திற்கும் நுகர் பண்டத்திற்கும் அதிக முக் கியத்துவம் அளிக்கப்பட்டது. புரட்சிகர அரசி ய ல் பின் தள்ளப் ளப்பட்டது.
திரிபுவாதத்தின் தோல்வியையே இன்று கண் முன்னே காண் கிருேம். சோஷலிசப் புரட்சி தொடரும், அது தோற்று விட ப் போவதில்லை.
( 24 )

நூல்கள்
w
ண்ணடிம்ை தீர
பார்க்கோலம்; 1ண்ணும் மக்களும் அயலவர்கள் பொய்மையின் நிழலில் " அந்நிய மனிதர்கள்
பதையின் கதை லையும் சமுதாயமும் குந்தவிக்குக் கடிதங்கள் மான்விழிக்குக் கடிதங்கள்
சிறுவர்களுக்கான சிந்தனைக் கதைகள்
總 紳
அபலையின் கடிதம் ' . சொந்தக்காரன் பெனடிக்ற் பாலன்
ரணத்திற்குப் பின் பொ. சங்கரப்பிள்ளை சைவசித்தாந்தம் " , க்க்ள் தொடர்பு சாதனமும் மகளிரும் . ’ ' சந்திரிகா சோமசுந்தரம்
மதமாற்றம் நாடகம் அ. ந. கந்தசாமி
ன்பணம் அனுப்புவோருக்கு பார்சல் செலவு இணும். மரன் புத்தகசாலை
கொழும்பு-12 தொலைபே
ம் கிடைக்கும் !
னேயாளர்க்கு கழிவு உண்டு. வி. பி.பி. ஏற்கப்படும்.
ரியன் கிழக்கில் உதிப்பதில்லை செ. கணேசலிங்கன் 33.00
'கும்ரனுக்குக் கடிதங்கள் 21.00
13.50. 45.00 80,00 ;

Page 15
KUIVI ARAN = 72 (01-01குமரன் குரல்
கிழக்கு ஐர்ோப்பிய நாடுகளில் வங்கள் சோஷலிச அனுதாபிகளின் யிருக்கலாம். மார்க்சிய - லெனினிச இந்நாடுகளின் சித்தாந்த நழுவல் டே அவர்கள் எச்சரித்துக்கொண்டிருந்தர்
சோஷலிச அனுதாபிகளிடை ஏற் மீண்டும் நம்பிக்கை ஏற்படுத்துவதில்
இவ்விதழிலுள்ள கட்டுரைகள் முறை சோஷலிசத்தையும் முதல மட்டுமல்ல அதன் பொய்ப்பிரசாரங்
முதலாளித்துவத்தின் இயலாடை டம் ஒன்றே போதும் என போல் :
முதலாளித்துவத்துக்கு முன்னேய கள் வளர்ச்சியடையாதிருந்தது. அ படைத் தேவைகளே பூர்த்தி செய்வ நிலவியது. மனித வரலாற்றில் வே. பிரச்சினேயை முதலாளித்துவமே கெ படைந்தும் முதலாளித்துவத்தால் இ வில்லே. சோஷலிசத்தின் சமூக உன் யினுல் மட்டுமே இப்பிரச்சினேயைத்
முதலாளித்துவத்தின் தலே நகர பற்றி மாதகல் கந்தசுவாமி எழுதிய சிறப்பிற்கு இது ஒன்றே போதுமான
டிசம்பரில் குமரன் இதழை விெ மைக்கு வருந்துகிருேம், பத்திரிகைத் போன்ற சிறிய இலக்கிய சஞ்சிகை விதழிலிருந்து தனிப்பிரதியின் விவேக நேர்ந்துள்ளதும் வருத்தமே. இவ் நோக்குக் கொண்டதல்ல என்பதை
குமரன் அச்சகம், 2 ஆசிரியர் : செ. கணேசலிங்கன்

201, DAM STREET,
1990) COLOMBO-2,
அண்மையில் நடைபெற்ற சம்ப டையே குழப்பத்தை ஏற்படுத்தி சித்தாந்த வாதிகளின் நிவே வேறு. பாக்கை முன்னரேயே இனங்கண்டு
பட்டிருக்கும் மயக்கத்தை தீர்த்து சிரமம் இருக்கவே செய்யும்.
பல்வேறு கோணங்களில் நடை ாளித்துவத்தின் இயலாமையை களேயும் விளக்க முயன்றுள்ளன.
மக்கு வேலேயில்லாத் திண்டாட் சுவீசி கூறுகிருர்,
சமூகங்களில் உற்பத்திக் கருவி னேவரும் உழைத்தனர். அடிப் தற்கான கட்டளவான உற்பத்தி லேபில்லாத் திண்டாட்டம் என்ற ாண்டுவந்தது. இத்தனே வளர்ச்சி |ப்பிரச்சினேயைத் தீர்க்க முடிய டைமை சமூக உற்பத்தி முறை
நீர்க்க முடியும்.
ான நியூயோர்க் நகரத்தின் நிவே புள்ளார். முதலாளித்துவத்தின் Tಷ್ರ!
பளிக்கொணர முடியாது நேர்ந்த தாளின் விலேயேற்றம் குமரன் களேப் பாதிக்கவே செய்யும். இவ் யை ரூபா நான்காக உயர்த்த விஃபயிலும்கூட குமரன் இலாப பும் நினேவூட்ட விரும்புகிருேம்:
- ஆசிரியர்
01, டாம் வீதி, கொழும்பு-12.