கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: குமரன் 1990.02.01

Page 1
சோஷலிசமும் சு
- ĠLI Ti Ji
இன்றைய பண்ப பத்திரிகைகளின்
- பேராசிரியர் கா. சிவத்தப்
தம்பையரின் தவி
ட ர ,
கலாச்சார ஒரழிவி வன்முறைத் திை
- தியாகு
இரண்டடி பின்ே
- மாதவன்
இதுவும் அதுவும் நிகழ்க
- சாருமதி
 
 

ற்ருடலும் - 2
ாட்டுருவாக்கத்தில்
LI TÉ բլր 5
LIL
ரப் படங்கள்

Page 2
l
0.
I
1
6
அரிய நூல்கள் மீண்டும் கிடைக்கும் !
சூரியன் கிழக்கில் உதிப்பதில்லை செ. கணேசலிங்கன்
பெண்ணடிமை தீர குமரனுக்குக் கடிதங்கள் V
போர்க்கோலம் . . மண்ணும் மக்களும் அயலவர்கள் பொய்மையின் நிழலில் ,,灘。 அந்நிய மனிதர்கள் வதையின் கதை கலையும் சமுதாயமும் குந்தவிக்குக் கடிதங்கள் மான்விழிக்குக் கடிதங்கள் V » சிறுவர்களுக்கான சிந்தனைக் கதைகள் அபலையின் கடிதம் சொந்தக்காரன் பெனடிக்ற் பாலன் மரணத்திற்குப் பின் சைவசித்தாந்தம் மக்கள் தொடர்பு சாதனமும் மகளிரும்
சந்திரிகா சோமசுந்தரம்
அ. ந. கந்தசாமி
பொ. சங்கரப்பிள்ளை
மதமாற்றம் - நாடகம்
குமரன் புத்தகசாலை
33.00
4800
21.00
14.86
0, 50
45.00
37.50
13,50:"
15.75 11.8ỡ 18.00. 16. βρ. 24.00.
8. ፮ፊ›
13,60 45:08.
30.00
21.00 30.00
விற்பனையாளர்க்கு கழிவு உண்டு. வி. பி. பி. ஏற்கப்படும். முன்பணம் அனுப்புவோருக்கு பார்சல் செலவு இனும்,
201, டாம் வீதி, கொழும்பு - 12 தொலைபேசி: 421388
 

இரண்டடி பின்னே
- மாதவன் -
பொருளாதாரம்
சோஷலிசத்தின் சிறப்பும் எதிர்கால மனித சமுதாயத்தின் வாழ் வும் இரு முக்கிய அடிப்படை அம்சத்தில் தங்கியுள்ளது. ஒன்று உலக வளங்களை சரியாகப் பயன்படுத்துவது. இரண்டாவது சந் தையைத் திட்டமிட்டு உற்பத்தியில் ஈடுபடுவது. இவ்விரண்டும் . முதலாளித்துவத்தால் உதாசீனப்படுத்தப்படுவதை மனித சமுதாயத் தின் எதிர்காலத்தை எண்ணிப் பார்க்கும் பொருளாதார அறிஞ்ர் அனைவரும் அறிவர்.
முதலாளித்துவம் லாபமே நோக்காக இயற்கை வளங்களைச் சிதைத்து வருகிறது; சுற்றாடலைக் கெடுத்து மனித வாழ்விற்கு அத்தியாவசியமான காற்றையும், நீரையும் அசுத்தப்படுத்துகிறது: அநாவசிய உற்பத்திகளில் ஈடுபட்டு சந்தையைக் குப்பையாக்கி விர யப்படுத்தியுள்ளது. தொடர்ந்து இச்சீரழிவு நடைபெற்றே வருகிறது.
முதலாளித்துவ பொருளாதார நிபுணர்கள் கேள்வியை ஒட்டியே வழங்கல் நடைபெறுவதாகக் கூறுவர். ஆனால் இன்றைய பரவலான ஆதிக்கம் செலுத்தும் மக்கள் தொடர்புச்சாதனங்கள் (ரி.வி.,ரேடியோ, பத்திரிகைகள்) மூலம் தேவையற்ற பண்டங்களுக்கும் கேள்வியை ஏற் படுத்தி விற்றுவிட முடியும், முதலாளித்துவத்தில் அதுவே நடை பெறுகிறது. நுகர் பண்டங்களை தேவைக்கு மேலாக குவிக்கும் முதலாளித்துவத்தால் உலகின் பட்டினிச் சாவு, போஷாக்கின்மை, சிறு பிள்ளை மரணம் ஆகியவற்றை நிறுத்திவிட முடியவில்லை;
அரசியல்
சோஷலிசத்தின் வீழ்ச்சியைக் கனவு காணும் முதலாளித்துவ நாடு கள் சோஷலிச நாடுகளில் சர்வாதிகார ஆட்சி இதுவரை காலமும் நடைபெற்றதாகவும் ஜனநாயகம் நிலவவில்லை எனவும் பிரச்சாரம் செய்கின்றனர்.
சில முதலாளித்துவ பத்திரிகைகள் லத்தீன் அமெரிக்க நாடுகளில் நடைபெறும் இராணுவ சர்வாதிகார ஆட்சியுடன் ஒப்பிடவும் முயல் கின்றனர்.

Page 3
உற்பத்திச் சாதனங்களை தனியுடைமையாகக் கொண்ட சிறு பான்மையினரான ஆளும் வர்க்கத்தவர் பரந்துபட்ட பெரும்பான்மை மக்களை அடக்கி ஒடுக்கும் முதலாளித்துவம் பூஷ்வா ஜனநாயகம் ஆகும். சிறுபான்மையினரான இராணுவத்தினரும், உற்பத்திச் சாத னங்களைக் கொண்ட ஆளும் வர்க்கத்தவரும் நடத்துவது சர்வாதி கார இராணுவ ஆட்சி: இவை இரண்டுடனும் சோஷலிசப் புரட்சி யின் பின் நடைபெறும் பரந்துபட்ட உழைக்கும் மக்கள் சிறுபான் மையினரான முதலாளிகள் மேல் காட்டும் சர்வாதிகாரத்தை ஒப்பிட இன்று சிலர் முயல்கின்றனர். இவர்கள் அரசியல் அறிவோ, வர்க் கப் பார்வையோ அற்ற முதலாளித்துவ பாதுகாவலர் ஆவர்.
முதலாளித்துவம் பெரும் பான்மையினரான ஒடுக்கப்படுபவர் மேல் செலுத்தும் வன்முறை அளவு சோஷலிசத்தில் சிறுபான்மை யினரான முதலாளி வர்க்கத்தவர்மேல் செலுத்த வேண்டியிராது என லெனின் கூறினார். இச்சிறு வன்முறைக்கே முதலாளித்துவம் பெருங் கூச்சலிட்டு பிரச்சாரம் செய்வதைக் காணலாம். W
சமூகவியல்
முதலாளித்துவம் அமைக்கும் சமூகம் போட்டிச் சமுதாயமே. எவ ருக்கும் திருப்திதராத போட்டாபோட்டி. ஒருபுறம் அளவுக்கு மீறிய செல்வம். மறுபுறம் வறுமை, நோய், துன்பம் வேலையில்லாத் திண் டாட்டம் இனம், மதம், சாதி, நிறம், பால் பாகுபாடும் வன் முறை அடக்கி ஒடுக்கலும் சட்டம், கருத்தியல் ரீதியாக நடைமுறை யிலுள்ளது. உழைப்போருக்கு தமது உற்பத்திப் பண்டமே கிட்டாத அந்நியப்படும்போக்கு. முதலாளித்துவத்தின் லாபத்திற்கான உற்பத்தி மக்கள் அனைவரும் கூலி அடிமைகளாக சுரண்டப்படுவது நீதியாகக் கருதப்படுகிறது. வல்லான் பொருள் குவிக்கும் தனியுடைமை.
இத்தகைய சமூகத்தில் அமைதி எப்படி நிலைக்க முடியும் ?
கலை கலாச்சாரம்
கலை, கலாச்சார ரீதியிலும் மனித சமுதாயத்தை முதலாளித் துவத்தால் மேம்படுத்திவிட முடியவில்லை. டி. வி, ரேடியோ, சினிமா, மலிவுநூல்களையே முதலாளித்துவத்தின் மிகப் பெரும் பிரதி பலிப்பாக இன்று காண்கிறோம். டி. வி. ரேடியோ பண்ட விற்பனை விளம்பரத்தைப் பறை சாற்றுகிறது. அத்தோடு கலை, இலக்கியம் என்ற பெயரில் நாடகம், சினிமா, இசை ஆகியவற்றையும் வழங்கு கிறது. பண்டமும் கலையும் ஒன்றையொன்று அண்டி நிற்கின்றன,
(4ம் பக்கம் பார்க்க)
حي- 2 -ـي

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின்
ஏற்றமும் வீழ்ச்சியும்
போல் சுவீசி
அமெரிக்கா இரண்டாவது உலக யுத்தத்தில் நுழையும்போது அதன் தலைவர்கள் தாம் அடையக் கூடிய முடிவையும் நன்கு அறிந்திருந்தனர். பிரிட்டன், ஜெர்மனி, யப்பான் ஆகியபோட்டி வல்லரசுகள் ஒழிந்து விடும்; உலக வாணிபம், முதலீடு யாவும் தமது ஆதிக்கத்தில் வரும் என்பதைத் தெரிந்திருந்தனர்.
இவ்வல்லரசுகளின் பொருளாதார, நிதி மையங்கள் அமெரிக்கா வின் ஆதிக்கத்தில் வர அவர்கள் அமெரிக்காவில் தங்கியிருக்கும் கீழ்நிலைப் பங்குதாரராயினர். ஐ. எம். எவ், உலகவங்கி அமெரிக்கா வின் ஆதிக்கத்தில் வந்தது. சோவியத் யூனியனும் கிழக்கு ஐரோப் பிய கோளங்களுமே தனியாக வெளியே இயங்கின.
முன் என்றுமில்லாத விதமாக அமெரிக்கா உலகில் தன் மேலா திக்க நிலையை நிலைநாட்ட பல பிரச்சினைகளையும் சமாளிக்க நேரிட்டது. அமெரிக்க ஆளும் வர்க்கமும் மக்களும் உலகின் ஆதிக் கத்தை தாமே நிலைநாட்ட முடியும் என்பதில் நம்பிக்கை கொண் டிருந்தனர். உலகின் இறுதி ஆயுதம் (அணுகுண்டு) தாம் ஏகபோக மாக இருப்பதையிட்டு பெருமை கொண்டனர். அமைதி நிலைக்குத் திரும்பவேண்டும் என்ற பரவலான குரலுக்கு இணங்கி குறுகிய காலத்தில் படையைக் கலைத்து யுத்தகால இராணுவ யந்திரத்தின் பருமனைக் குறைத்தனர்.
தமது புதிய வல்லரசை எவராலும் அசைத்துவிட முடியாது
என்ற கருத்துக்குரிய காலமே நீடித்தது. 1949 புரட்சியின் பின்
சீனா அமெரிக்க சார்பை விட்டு வெளியேறியது, அடுத்த ஆண்டு கொரிய யுத்தம்.
கம்யூனிஸ்ட் தலைமையையும் புரட்சியையும் தடுத்துவிட Փւգ யாது என்பதை சீனாவும் கொரியாவும் காட்டின.
வழக்கத்திலிருந்த சிற்றாயுத உற்பத்தி, உலக உளவறியும் போக்கு, புதிய சதி முயற்சிகளிலும் அமெரிக்கா நுழைய நேரிட்டது.
- } --

Page 4
அமெரிக்க மேலாதிக்கத்திற்கு எதிர்ப்பு ஏற்பட அமெரிக்க ஆளும் வர்க்கம் சோவியத் யூனியன் அனைத்தும் பின்னாகவும் ஆதிக் கப் போட்டியில் நுழைந்துள்ளது என விளக்கம் கூறியது. அதில் அத்தனை உண்மையில்லை. யுத்தத்தால் களைப்படைந்த சோவியத் யூனியன் தற்காப்பு நிலைய்ை எடுத்து உள்நாட்டுப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் ஈடுபட்டிருந்தது.
யுத்தம் முடிந்ததும் உலக மக்களுக்கும் அமெரிக்கருக்கும் அமைதி யான நல்வாழ்வு கிட்ட அமெரிக்கா உதவும் என உறுதியளித்தது; ஜெர்மனியரும் யப்பானியரும் உலகை அச்சுறுத்திய வேளை சோவி யத் யூனியன் முன்வந்து உதவியமைக்கு நட்புக் காட்டி நன்றி கூற வேண்டும் எனவும் கூறியது.
(தொடரும்)
(2ம் பக்கத் தொடர்)
முற்போக்கு அறிஞர் பார்வையில் அவையெல்லாம் கலையல்ல, கலைப்போலிகள்.
சினிமா வன்முறை, செக்ஸ் கலந்த விற்பனைப் பண்டமாக வழங்கப்படுகிறது. சினிமா காட்டும் முதலாளித்துவ வீர புருஷன் வன்முறையில் வெற்றி வாகை குடுபவனாகவும் காமுகனாகவும் சித் திரிக்கப்படுகிறான். நேரக் கொல்லிகளாக சந்தையில் குவியும் மலிவு நூல்களும் துப்பறியும் வீரர்களையும் காமாந்தகர்களையுமே சித்திரிக்கிறது. முதலாளித்துவம் கண்டு பிடிக்கும் தொழில் நுட்பங் களும் போலிக்கலை, இலக்கியங்களைப் பரப்பவே பயன்படுகிறது. வீடியோ, ஒடியோகசெட்டுகளையும் சேர்த்தே குறிப்பிடுகின்றேன்.
இன்று முதலாளித்துவப் பாதையே நல்ல பாதை என்று செல் லும் சோஷலிச நாடுகள் காலப்போக்கில் சந்தனம் எனக் கருதி முன்கூறிய முதலாளித்துவ சேற்றையே பூசிக் கொள்வர் என்பதில் சந்தேகமில்லை. சந்தனத்தையும் சேற்றையும் பிரித்தறிவதில் தொழி லரளி வர்க்கம் பின்னடையப் போவதில்லை. தற்போது இரண்டு அடிகள் பின் வாங்க நேரலாம். பின்னர் பாய்ச்சலில் பாட்டாளி வர்க்கம் முன்னேறும் என்பதில் சந்தேகமில்லை. “உலகத் தொழி லாளர்களே ஒன்று சேருங்கள்" என்ற மார்க்சின் குரலை தொழி லாளி வர்க்கம் என்றும் மறந்துவிடப் போவதில்லை.
一、4 一

இதுவும் அதுவும்
கொஞ்ச நேரம் பொறு
ஆம்! இனிச் சரி போ!
சைகை செய்தனன் போலிஸ்காரன். அவனில்லாமலும் அது நிகழ்ந்தது பச்சை, சிவப்பு மின் விளக்குகள்,
என்ன விளங்குகிறது இதில்? எதைச் சொல்கிறது இது ?
ஒன்று மனிதன் ஒன்று விளக்கு இரண்டுமே இயந்திரம் ஆழ்ந்து நோக்கின். பயணிகளின் அவசரம் அல்லது பதைப்பு
இதில் யாருக்குப் புரிகிறது.? இரண்டிற்கும் புரிவதில்லை!
பெரும் நகர் பார்த்தவர் இந்தப் புதினம் புரிவர்.
எங்களைச் சூழவும் இதுவே வழக்கு எல்லா வற்றிலும், 4லை வள்ளல்கள்
அவர் - காலைத் தொடும் கும்பிடல்கள்
சீ. விடுங்கள்
இதோ மனிதர்கள்
குளிரில்
மிக மிக குளிரில்
நானும் அதைப்போல்.
- சாருமதி
நிகழ்க !
விண்வெளி இராச்சியம் வருக
இங்கு
வீழ்ந்தவரெல்லாம் மீண்டும் எழுக எந்த மனிதர்களுக்கும் சிலுவை
இனி இல்லை என்றுதான் மொழிக.
எங்கும் இராமர்கள் திரிக ஆயின் எந்தச் சீதையும் நெருப்பில் வெந்து படாது இருக்க வேண்டிய வினைகளைச்சொரிக.
தம்பி விபுஷ்கர்கள் ஆள்க தமையர் இராவணர்கள் வீழ்க.
என்ருலும் வல்லாண்மைத் தளங்களுக்காக வாலிக் குரங்குகளை வஞ்சித்துக் கொல்லும் வழமைகள் மறைக.
முந்தி நடந்தவை முடிக அவள
குந்திதேவிக்குக் கொடுபட்ட குளிகை இனி எந்தக்
குமருக்கும் கொடுபடாது அழிக.
நந்தி தேவர்கள் விலகுக அநத நாதர் கள் இருந்தால் நேரில் வருக சிந்திய குருதியில் குளித்து வானில் சீக்கிரம் உதயம் நிகழ்க.
- சாருமதி

Page 5
இன்றைய பண்பாட்டுருவாக்கத்தில் பத்திரிகைகளின் பங்கு
-பேராசிரியர் கா. சிவத்தம்பி
பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள் சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் இலக்கியத் துறையில் விருந்துப் பேராசிரியராக 1987 கடைசியில் அழைக்கப்பட்டிருந்தார்.
அவ்வேளை தமிழ் நாட்டில் சென்ற தசாப்தத்தில் காளான் களாக முளைத்துப் பரவி நிலைகொள்ள முயன்ற செய்தி விமரி சன சஞ்சிகைகள், பாக்கெட் நாவல்கள் போன்ற "போலி இலக் கியங்கள்' பற்றிய ஆய்வு ஒன்றிற்கு முன்னோடியாக இருந் தார். அதைத் தொடர்ந்து ‘இன்றைய பண்பாட்டு உருவாக் கத்தில் பத்திரிகைகளின் பங்கு' என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றிற்கும் தலைமை தாங்கி உரையாற்றினார்.
இக் கருத்தரங்கில் படிக்கப்பட்ட கட்டுரைகளை விழுப்புரம், சரவணபாலுப் பதிப்பகத்தார் நூலாக வெளியிட்டுள்ளனர்.
அக்கருத்தரங்கில் பேராசிரியர் ஆற்றிய தலைமையுரையும் தொகுப்புரையும் இந்நூலை அணி செய்கின்றன. அவற்றின் முக் கிய பகுதிகளின் கருத்தை இங்கே தருகிறோம்.
திமிழ் நாட்டுச் சூழலின் பின் புலத்தில் இவ் விடயம்பற்றி ஆரா
யும் போது மூன்று விடயங்கள் முக்கியமாகின்றன.
(1) இன்றைய பண்பாடு (2) அப் பண்பாட்டை உருவாக்கும்
சக்திகள். அவற்றுள் வெகுசனத் தொடர்ப்புச் சாதனங்கள் (Mass Media) பெறும் இடம் (3) அவற்றுள் பத்திரிகைகள் பெறும் இடம்.
தமிழ் நாட்டுச் சூழலில் பண்பாடு என்ற எண்ணக் கரு சமூக-அர
சியற் கனதியுடைய ஒரு பதமாகும்.
பண்பாடு என்பது குறிப்பிட்ட ஒரு மக்கட் கூட்டம் தனது சமூக
வரலாற்று வளர்ச்சியினடியாகத் தோற்றிவித்துக் கொண்ட பெளதீகப் பொருட்கள், ஆத்மார்த்தக் கருத்துக்கள், மத நடைமுறைகள், சமூகப் பெறுமானங்கள் ஆகியவற்றின் தொகுதியாகும்.
يجب- 6 --سي

ஒரு கூட்டத்தினரின் பண்பாடு என்பது அவர்களின் தொழில் நுட்ப வளர்ச்சி, உற்பத்தி முறைகள், உற்பத்தி உறவுகள், கல்வி, அறிவியல், இலக்கியம், கலை, நம்பிக்கைகள் ஆகியவற்றின் தொகு தியாகும்.
இப் பண்பாடானது சமூக உருவாக்கத்துடன் தொடர்புடைய தாகும். சமூக உருவாக்கத்தின் முக்கிய பண்புகளை மேலாண்மை யுடைய தாகவுள்ள உற்பத்திமுறை தீர்மானிக்கிறது.
சமூகத்தின் குறிப்பிட்ட ஒரு காலகட்டத்தில் பல உற்பத்தி முறைகள் தொழிற்படலாம். அவற்றுள் ஒன்று மேலாண்மையுடைய தாகவிருக்கும்.
தமிழ் நாட்டின் சமூக உருவாக்கத்தில் மேலாண்மையுடைய உற் பத்தி முறைமை, முதலாளித்துவத் தன்மையினைக் கொண்டதே. இது கைத்தொழில் நிலைப்பட்ட மேற்கு நாடுகளில் நிலவும் முத லாளித்துவம் போன்ற தன்று. இது பின்வரும் வரலாற்று பொரு ளாதாரச் சூழலில் இயங்குவது:
(1) கொலோனியலிச வரலாறு (2) அதன் பின் ஏற்பட்ட சந் தைப் பொருளாதார வளர்ச்சி (3) அரச முதலாளித்துவம் (4) தொடர்ந்து நின்று நிலைக்கும் முதலாளித்துவத்திற்கு முந்திய உறவுகள்.
இவற்றுடன் மேலாண்மையுடையதாக விளங்குவது ‘சந்தைப் பொருளாதாரமே. இதன் சமூக நிலை வெளிப்பாடு வெகுசனப் பண்பாடு. இப் பொருளாதார நிலையினுள் மக்கள் யாதேனும் ஒரு 'திரள் நிலை" (Mass) யிலேயே காணப்படுவர்.
திரள் நிலைத் தொடர்புக்கு ஏற்ற வெகுசனத் தொடர்ப்புச் சாதனங்கள் தோன்றி வளர்ந்தன. அவற்றை இரு பிரிவுகளாகப் பிரிப்பர்;
(1) அச்சுச் சாதனங்கள் - நூல்கள், பத்திரிகைகள் முதலியன. (2) மின் பொறிச் சாதனங்கள் - வானொலி, திரைப் படம், தொலைக் காட்சி என்பன.
பத்திரிகைத்துறை, அறிவைச் சனநாயக ரீதியில் பரவலாக்கு
வது. அத்துடன் இந்த அச்செழுத்துக்கள் ஏதோ ஒரு சருத்து நிலை யைக்கொண்டு செல்வதாகவுள்ளன.
பத்திரிகைகளைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது அதனைச் சன நாயகத்தின் சிசு, அதே வேளையில் சனநாயகத்தின் செவிலி என்றும் சொல்வர்.

Page 6
முதலில் செய்திப் பத்திரிகையாகவே தொடங்கி வளர்ந்த இத் துறை இப்பொழுது பல்வேறு வகைப்பட்டதாக வளர்ந்துள்ளது.
இன்றைய தமிழ் நாட்டின் பத்திரிகைத் துறை அதன் அரசியல், சமூக, பண்பாட்டு நடைமுறைகளிலிருந்து புறம்பானவையன்று. தமிழ் நாட்டின் பண்பாட்டமிசங்கள் என நேரடியாகவும் மறைமுக மாகவேனும் ஏற்றுக்கொள்ள வேண்டிய காரணிகள் பலவற்றின் பெறு பேறாகவே இந்தப் பத்திரிகைகளின் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்தப் பத்திரிகை "மரபு அந்த பண்பாட்டமிசங்கள் தொழிற்படுவதற்கு இடமளிக்கிறது. நெய்க்குடத் தொன் னைக்கு உள்ள உறவுதான் இந்தப் பத்திரிகைகளுக்கும் இன்றைய பண்பாட்டு நிலைக்கும் என் பது மறைக்கப்படக் கூடாத ஒரு சமூகவியல் உண்மையாகும்.
இவை ஒவ்வொன்றும் பற்றிய விரிவான ஆய்வு மேற்கோள்ளப்பட வேண்டும்.
வெகுசனப் பண்பாட்டின் வெளிப்பாடுகளாக செய்தி விமரிசன இதழ்கள், மாதநாவல்கள், ஜனரஞ்சக இதழ்கள் வெளிவருகின்றன. இவற்றின் பிரதான அடிப்படைகள் இரண்டு:
(1) அந்நியப்பட்டுக் கிடக்கும் தனிமனிதனது தணியாத ஆசை கள், விகாரங்கள் ஆகியனவற்றுக்கு இவை தீனி போடுகின்றன. "பரபரப்பான" "விறுவிறுப்பான’ என இவை மேற்சொன்ன மெளன ஆசைகளின் ஒட்ட வேகத்தைக் குறிக்கும்.
(2) இவை கலைவடிவங்கள் என்ற சுய அறிவிப்பு கோரிக்கை யுடன் வெளிவருகின்றன. உண்மையில் இவை கலைகள் அன்று. கலைப்போலிகளே. (மக்களே போல்வர், கயவர் என்ற குறளுக்கு நல்ல உதாரணம்)
கலைப்போலிகளின் முக்கியமான பண்பு அவை உண்மையான கலை வடிவங்களைப் பயன்படுத்திக் கொள்வதாகும். இக் கலைப் போலிகளின் வலு அவை சிலரின் உண்மையான சமூக அபிலாஷை களைப் பூர்த்தி செய்கின்றன என்பதிலேதான் உள்ளது.
இந்த வெகுசனப் பண்பாட்டு வெளிப்பாடுகள் ‘தமிழ்ப் பண்பாடு என்ற சுலோக உலோகத்துள்ளேயே உள்ளன; தொழிற்படுகின்றன.
இதன் வாசகர் வட்டம் முக்கியமானது. மாதநாவல்கள், விம ரிசன இதழ்கள் ஆதியனவற்றை உன்னிப்பாக ஆராயும் பொழுது அவற்றின் மொழிநடையும், அளிக்கைக் கவர்ச்சியும் மொழிப் பரிச் சயமுடையோர் இதன் வாசகர் அல்லர் என்பது வெளிப்படை. இவை
- 8 -ణా

"அப்பம் என்றால் புட்டுக்காட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கும் வட்டத்தையே மனதில் வைத்து தன் சந்தை வட்டமாகக் கொண்டு எழுதப்பட்டன என்பது தெரிய வரும்.
தமிழ் நாட்டில் நடுநிலைப் பள்ளிக்குப்பின் கல்வியை விடுவோர் தொகை 55% என்பர். இவர்கட்கு வாசிக்கத் தெரியும்; ஆனால் ஆழமாக அல்ல.
மாத நாவல்கள் போன்றவை ‘நேரங் கொல்லிகள்". கொல்லப் படவேண்டிய நேரமுள்ளவர்களுக்கு இந்த வாசிப்புப் பண்டங்கள் போதைப் பொருளாகின்றன. இவை பெண்களாலேயே போற்றப் படுகின்றன. எத்தகைய பெண்கள் ஏன் என்பதை நன்கு விளங்கிக் கொள்ளவேண்டும்.
முதலாவதாக நாம் இவ்வெழுத்துக்களை "நம்பியிருக்கலாமா? இவ்வினா மூலமே நாம் ஒரு எதிர்ப்பண்பாடு பற்றிச் சிந்திக்க முடியும். இரண்டாவதாக, இந்த ஆய்வுகள் எந்த அளவுக்கு 'காத்திர மான கலை வாசிப்புக்கு" எம்மை இட்டுச் செல்லும்" என்பதாகும். இட்டுச்செல்லவேண்டும் என்பதே நமது குறிக்கோள்.
முதலாளித்துவ சோஷலிச நெருக்கடி
முதலாளித்துவத்தின் நெருக்கடி கெய்னீசியன் பொய்மை களுக்கும் அபிவிருத்தி பற்றிய கருத்தியல்களுக்கும் முடிவு கட்டி விட்டது என்பதில் சந்தேகமில்லை. அத்தோடு சோஷலிசத்தின் நெருக்கடிக்கும் தீர்வு காணப்படவில்லை.
இவ்விரு நெருக்கடிகளால் ஏற்பட்ட வெற்று இடத்தை, மாறுதல்களை விரும்பாதவரின் தாக்கமாக, புதிய - தாராள வாதத்தை புகுத்த முனைகின்றனர். இப்போக்கு அனைத்திற் கும் தீர்வு காண "சந்தை மார்க்கத்தைக் காட்டுகிறது.
சந்தை மூலம் மோசமடைந்துள்ள சமூக, அரசியல் பிரச் சினைகளுக்கு உள்நாட்டிலோ சர்வதேச அரங்கிலோ தீர்வு காணமுடியாது.
-சமீர் அமீன்

Page 7
சோஷலிசமும் சுற்றாடலும் - 2
போல் சுவிசி
20 ம் நூற்றண்டின் முடிவில் முதலாளித்துவ அபிவிருத்தியின் நவீன போக்கின் உண்மை நிலையை இன்று காண்கிருேம். (தொழில் களில் முதலீடுசெய்யும் வாய்ப்புகள் உலககெங்கும் குறைவாக உள்ளது என்பது யப்பானிய நிபுணரின் கூற்று) உலக நிதி அமைப்பு பலூன் போல வீங்குவது போல உள்நாட்டிலும் நடைபெறுகிறது முதலளித் துவ வர்க்கத்தின் வாடகைப் பொருளாதார, அரசியல் ஆதிக்கம் ஏற்றமடைகிறது. உண்மைநிலை உற்பத்திமுறை தேக்கமடைகிறது. வேலையின் மையும் அதன் சமூகத் தாக் மும் - முதலாளிததுவ நாகரி கத்தின் ஆத்மீக மற்ற குழப்பம், சிறப்பான எதிர்கால நம்பிக்கை litið தன்னம்பிக்கை இன்மையும - எதிர்கால சமுதாயத்துக்கு பாதுகாப்பும் பூரண திருப்தியும் தரத்தக்க கண்ணோட்டமின்மை, மனிதப் பண்பின்மையும் முதலாளித்துவ தரிசனமாகும்.
இப் பின்னணியில் முதலாளித்துவம் அண்மை நிலை போலவே நீண்ட காலம் நிலைப்பதற்கு வாய்ப்பில்லை எனவே நான் கருது கிறேன். அதன் அமைப்புள்ளேயே அதை அழிக்கும் சக்திகள் செய லாற்றுகின்றன. 19-ம் நூற்றாண்டிலும் 29-ம் நூற்றாண்டின் ஆரமபத்திலும் ரெயில் பாதை, மோட்டார் கார் போன்ற போக்குவரத்து வாகனப் புரட்சி போன்று பாரிய முதலீட்டுக்குரிய முன்னணி அமைப்புக்கள் ஏற்படுத்தி நிலைமையை மாற்றும் வாய்ப் புக்களையும் இன்று காண முடியவில்லை.
சில அவதானிகள் சமகாலத்து விஞ்ஞான - தொழில் நுட்பப் புரட்சியில் நம்பிக்கை வைத்துள்ளனர். இது யதார்த்த நிலையை துரிதப்படுத்தலாம். ஆனால் இயற்கை, உயிரியல் விஞ்ஞானத்தில் புதுமை படைப்பதற்கு அதிக மூலதனம் தேவைப்படாதது மட்டுமல்ல எதிர்விளைவும் ஏற்படக் கூடும்; புதிய தொழில்நுட்பம் தொழி லாளர் உழைப்பையும் வேதனத்தையும் குறைத்துவிடலாம்; இம் முதலீட்டுப் பணத்தை தேய்மான ஒதுக்குப் பணத்திலிருந்தும் பெற்று விடலாம்.
முதலாளித்துவத்திற்கு இன்று ஏற்பட்டுள்ள நெரு க் க டி யும் தொடர்ந்து ஏற்படப் போவதையும் பார்த்து அது வீழ்ச்சியடைந்து ஒழிந்து விடும் என்று எண்ணக் கூடாது. நெருக்கடி ஏற்படும் சமூக அமைப்புகளுக்கு அவ்வாறு ஏற்பட்டுவிடுவதில்லை. அது தொங்கிக் கொண்டு சிலவேளை நூற்றாண்டுகளுக்குத் தொடரலாம்; மாற்றாக புரட்சி அல்லது ஆக்கிரமிப்புப் போன்ற புற சக்திகள் வீழ்த்தி அவ் விடத்தில் புதிய அமைப்பை ஏற்படுத்தும் வரை நீடிக்கலாம். இவ் வாறே முதலாளித்துவத்திற்கு முடிவுகட்டலாம்; வாய்ப்பானதும்
- 10 -

இதுவே. ஆனால் அண்மையில் அது புத்துயிர் பெறும் வாய்ப்பில்லை. முடிவற்ற நெருக்கடியும் அது நிலைபெறும் முயற்சியும் நடைபெற் றுக் கொண்டேயிருக்கும். இனி சோஷலிசத்தின் நீண்டகால வாய்ப் டைப் பார்ப்டோம்.
சோஷலிசம்:
சோஷலிச நாடுகள் அனைத்திலும் மாற்றங்கள் ஏற்பட்டு வரு கின்றன. இது பல வகையில் நடைபெறுகின்றது. மாற்றத்தில் மிகத் தெளிவாகத் தோன்றியவற்றை மாவோ முதலாளித்துவப் பாதை என்றார். சீனாவும் இவ்வழிக்கு முன்னோடியாக உள்ளது. ஹங்கேரியைத் தொடர்ந்து யூகோசிலாவகியா, போலந்து தொடர் கிறது; முதலாளித்துவம் எங்கும் நடைமுறையாகவில்லை, ஆனால் முதலாளித்துவப் பாதையின் முடிவு எத்தனை தூரப் பயணத்தின் பின்னரும் முதலாளித்துவமே என்பதில் சந்தேகமில்லை. சோவியத் யூனியன் இவ் வழிசெல்வது தெளிவாகுவதற்குப் பல வருடங்களாக லாம். இதுவே ஈடாட்டக்காரர்மேல் பெரும் பாதிப்பு ஏற்படுத்தும்.
இவ் ஆய்வை ஏற்பின் சில சோஷலிச நாடுகள் முதலாளித்துவத் திற்கு திரும்பும் போக்கில் உள்ளன. உலக முதலளித்துவ அமைப்பு களுடன் விரைவாகவோ தாமதமாகவோ இவை ஒன்றிணைந்து விட லாம். முன்னர் நாம் கூறி ய முதலாளிததுவத்தின் வீழ்ச்சியுடன் இணையும்.
வேறு வழிதேடும் சோஷலிச நாடுகள் இன்றைய நெருக்கடியி லிருந்து விடுபடும்வேளை என்ன தடைபெறும் என்ற வினாவே எஞ்சி யுள்ளது. அந் நாடுகளும் சரியான வழி காணமுடியாத ஒரு காலகட் டத்தின் பின் முதலளித்துவ பாதையையே தேர்ந்துகொள்ளும் என்பதே தக்க பதிலாகும். அப்போது முதலாளித்துவத்தைக் கடந்து செல்லும் உலகின் மிகப் பெரிய முயற்சி தோல்வியடைந்துவிடும்.
இத்தோல்வி நடைபெற நேரின் சோஷலிசம் முற்றுப் பெற்று விட்டது என்றும் கருதிவிட முடியாது.
இத்தாலியில் இடைநடுக் காலகட்டத்தில் முதலாளித்துவம் பல உறுதி மொழிகளுடன் நன்கு ஆரம்பித்தது. பின்னர் பிரிவுகள் ஏற் பட்டு நிலப் பிரபுத்துவ சூழல் பகையாக முதலாளித்துவம் வலு விழந்தது.
அடுத்த நாலு நூற்றாண்டுகளில் புதிய பூகோளக் கண்டு பிடிப்பு
களால் அத்தலாந்திக் சமுத்திரம் சார்ந்த நாடுகள் 15, 16-ம் நூற் றாண்டுகளில் உலகின் ஆதிக்கம் மிக்க நிலையில் மேம்பட்டன.
- ll -

Page 8
வரலாற்றுக் கண்ணோட்டத்தின்படி சில நூற்றாண்டுகள் நீண்ட காலமல்ல. சோஷலிசம் தோன்றி குறுகிய காலமே ஆனது. ஈடாட் டத்துடன் அது தோன்றிய போது எனக்கு ஏழு வயதே. ஒழுங்கான மனித சமுதாய அமைப்பிற்கு சோஷலிசமே வழிகாட்டும் என்ற அடிப்படைக் கருத்தில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். இக்கட் டான வாய்ப்பற்ற சூழலில் சோஷலிசத்தைக் கட்டுவதில் தோல்வி ஏற்படுவதையிட்டு நாங்கள் நம்பிக்கையை இழந்துவிடப் போவதில்லை.
20-ம் நூற்றாண்டு முடிவடையும் இக் கால கட்டத்தில் வழமை யான வரலாற்றுப் போக்கில் நாம் சிந்தித்துப் பார்க்கலாம். நாலு நூற்றாண்டு முதலாளித்துவம் உலகத்தை முன்னைய வரலாற்றில் ஆயிரமாண்டு காலத்திலும் பார்க்க வேகமாக மாற்றியமைத்துள்ளது: மனித சமூகத்தை பூமியோடும் பிற வாழ் வினங்களோடும் ஒப்பிடும் போது அளவற்ற விகிதத்தில் வளர்ந்துள்ளது. உலக குடித் தொகை 1800-ல் 50 கோடியாக இருந்து, 2000 ஆண்டில் 600 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. 1100 வீத வளர்ச்சி.
தனி நபர் பயன்படுத்தும் வளமும் வியப்புறும் வகையில் அதி கரித்துள்ளது. இயற்கைச் சுற்றாடலும் சீர் செய்ய முடியாத அளவில் மோசமடைந்து வருகிறது. முதலாளித்துவ அமைப்பிலேயே இப் போக்கு வேரூன்றியுள்ளது. ஒவ்வொரு தசாப்தத்திலும், நிலைமை மேலும் மோசமடையும் போக்கையே காண்கிறோம்.
(தொடரும்)
குமரன (இதழ் 72 இல் இருந்து)
தனிப்பிரதி ரூ 4/- 6 இதழ்கள் ரூ 24/- 12 இதழ்கள் ரூ 48/-
விற்பனையாளர்க்கு கழிவு உண்டு.
ஆங்காங்கே வரவழைத்து விநியோகிக்க விரும்புவோர் தொடர்பு கொள்க:
ஆசிரியர், குமரன், 201, டாம் வீதி, கொழும்பு - 12. தொலைபேசி: 421388
همس - ۰ 2 il -اس

- செ. க. --
தம்பையரின் நெஞ்சில் மெல்லிய துன்ப அலைகளே வீசிக்கொண் டிருந்தன. அன்று ஜெர்மனியிலிருந்து வந்த கடிதம் இதயத்தில் புயல் அலைகளை எழுப்பி விட்டது.
மூன்றாவது மகன் முகுந்தன் சில வாரங்களின் பின் கடிதம் எழுதியிருந்தான். ஆங்காங்கே அவரது செவியில் விழுந்தவற்றை வதந்திக் கதைகள் என ஒதுக்கியிருந்தார். கடிதம் அவர் கணித்த வதந்திகளை உண்மையாக்கி விட்டது.
அமைதியிழந்த நிலையில் அங்குமிங்குமாக நடந்து கொண்டிருந் தார். தேநீரும் கையுமாக வந்த மனைவி முத்தம்மா அவரின் முக பாவத்தைக் கண்டு கேட்டாள்:
‘என்ன ஒரு மாதிரி நிற்கிறியள். தபால்காரன் வந்தான். சின்னத்தம்பியின் கடிதம் ஏதேன் வந்ததா?'
"அப்பிடி ஒன்றுமில்லை. பென்சன் போம்தான் வந்தது.”
கடிதத்தை மறைத்து வைத்துக்கொண்டே பதில் கூறினார்.
அரசுப் பணியிலிருந்து அளவாகவே சம்பளம் கிடைத்தது. சிக்கன மாக வாழ்ந்து பையன்களைப் படிக்க வைத்தார். சிக்கனத்துடன் கண்டிப்பாகவே பிள்ளைகளை வளர்த்தார். ஆனால் மூன்று பையன் களில் ஒருவனும் அவர் எதிர்பார்த்தபடி வரவில்லை, தான் வாழ்ந் ததுபோல பெற்றாரின் சொல்லைக்கேட்டு ஒரு பையனும் நடக்க வில்லை. ஒரே ஏமாற்றமாகிவிட்டது.
தந்தையார் விவசாயம் செய்துகொண்டு அவரை ஆங்கிலக் கல்வி கற்க தூரத்துக் கல்லூரிக்கு அனுப்பினார். பத்தாம் வகுப்பில் தேறிய தும் அரசாங்க சேவையில் கிளார்க் வேலைக்கு விண்ணப்பிக்கச் செய் தார். அதிகச் சிரமமின்றி வேலை கிடைத்தது. சில ஆண்டுகளில் முத்தம்மாவைப் பெண் பார்த்து தக்க சீதனத்துடன் திருமணம் செய்து வைத்தார். வீடு வளவுடன் ரொக்கமாகவும் சீதனம்.
வாழ்க்கை அமைதியாக நடைபெற்றது. முத்தம்மா முத்தாக மூன்று பையன்களைப் பெற்றாள். பெண்குழந்தையில்லை என்ற ஒரு
- 18 =

Page 9
குறை முத்தம்மாவை வாட்டவே செய்தது. ஆயினும் உள்ளூரப் பெருமை. பையன்கள் படித்து பட்டம் பெறுவர். டாக்டர் இஞ்சினிய ராவர், மூன்று மருமகள் வருவர், ஆட்சி செய்யலாம் என்று கனவு கண்டாள். தம்பையர் பெரிய சீதனத்துடன் மூன்றுவீட்டுரிமை யுடன் பெண் தேடலாம் என பகற்கனவு கண்டு கொண்டிருந்தார்.
அவர் எதிர்பார்த்த கற்பனைக்குக் கிட்ட எதுவும் வரவில்லை.
மூத்தவன் 12 ஆம் வகுப்பில் சித்தியடைந்தும் பல்கலைக்கழக நுழைவு கிட்டவில்லை. தமிழீழ விடுதலை இயக்கத்தில் சேர்ந்துவிட் டான். வீட்டுக்கு வருவதேயில்லை. வேறு இயக்கம் சார்ந்த பையன் கள் தெருவில் அவரைக் காண நேரும்போது மரியாதையாக , “மகனை மதுரையில் கண்டேன், திருமலையில் பார்த்தேன், தீவில் நிற்கிறார்" எனறு கூறிவரும் செய்தி மட்டுமே எட்டி வந்தது,
காண்பவர் மதிப்பளித்துக் கூறுவதையும் அவர் முழு மனதுடன் ஏற்காதவராக 'ம் . ம் மட்டும் கூட்டிக் கேட்பார், தானாக எவரை யும் விசாரிப்பதில்லை. வீட்டிலும் எதுவும் சொல்லுவதில்லை. முத்தம்மா மூத்தவனைப் பற்றி எங்கோ என்னவோ" என்று ஒப்பாரி வைக்க ஆரம்பிக்கும்போது மட்டும், ‘உன்ரை மேனை தின்னவேலி இரத்தினத்தாற்றை மேன் பரந்தனிலை கண்டதாக முந்தநாள் சொன்னான்" என்று மறைமுகமாக ஆறுதல் கூறி அமர்த்திவிடுவார்.
இரண்டாம் பையன் இந்திரனால் 12 ஆம் வகுப்பே தேற முடிய வில்லை. ஆண்டு தோறும் அப்பரீட்சையில் நாலுபாடத்திலும் சித்தி யடையாது தோல்வியுறும் எண்பதினாயிரத்திற்கு மேற்பட்ட சிங்ககா, தமிழ் மாணவர்களில் ஒருவனாகச் சேர்ந்து கொண்டான். அதிர்ஷ்ட வசமாக நல்ல கம்பனி ஒன்றில் வேலை மட்டும் தேடிக்கொண்டான்.
கொழும்பிலிருந்து அடிக்கடி லீவில் வந்து போய்க்கொண்டிருந் தான். தம்பையர் எதிர்பார்த்தது நடக்காதபோதும் ஏதோ "பிழைக் கிறான்" என்று, வெளியே காட்டாதபோதும் உள்ளூ ர திருப்தி யடைந்தார். பெரும்பாலான இளைஞர்களும் இயக்கங்களில் அல்லது வெளிநாடுகளில், உள்ளூரில் உழைக்கும் பையன்களுக்கு நல்ல கிராக்கி. தக்க சீதனம் பெற்று திருமணம் செய்து அவனை உயர்த்திவிட வேண்டும் என்று திட்டமிட்டுக் கொண்டிருந்தார். ஆங்காங்கே விசா ரணைகளும் நடத்திக் கொண்டிருந்தார். இவை இந்திரன் செவிகளை யும் எட்டாமலில்லை. முத்தம்மாவும் வீட்டுக்கு விளக்கேற்ற புதிய மருமகளை எதிர்பார்த்திருந்தாள்.
இந்திரன் அத்தடவை இரண்டு வாரவிடுமுறையில் வந்திருந்தான். முத்தம்மாவுக்கு அவனது வருகை அமைதியும் மகிழ்ச்சியும் தரும்.
- 14 -

தம்பையர் அதிகாலையில் நிலம் வெளிக்கு முன் 5 மணிக்கு முருகன் கோவில் மணியடித்ததும் முதற்பூசைக்குப் புறப்பட்டு விடு வார். முருகன் துதியை முணுமுணுத்தபடி கோவிலுக்குச் செல்லும் போது இந்திரன் முழு உடலும் மூடியபடி தூங்கிக்கொண்டிருப்பான்.
அன்று அதிகாலையில் கோவிலை நோக்கிப் புறப்பட்டபோது அவரின் பின்னே எதிர்வீட்டு ஜோன் பிள்ளையும் அவரைத் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தார்.
ஜோன் பிள்ளையை தம்பையருக்கு அத்தனை பிடிக்காது. குறைவாகவே அவரைக் கணித்தார். தன் தராதரத்திற்கு அவ ரில்லை என்பது அவர் முடிவு. பணம், சாதி, சமயம், கல்வி அனைத்தையும் மதிப்பிட்டே அவர் ஒதுக்கியிருந்தார். எதிரிடையாக அவரைக் காண நேரினும் முகத்தைத் திருப்பிக்கொள்வார்.
கோவிலை நெருங்கிய போதும் அதிகாலையில் வெறிச்சோடிக் கிடந்த தெருவில் ஜோன் பிள்ளை பின்னே வந்துகொண்டிருந்தார். இடையிடை தம்பையர் திரும்பிப் பார்த்து, "ஏன் இந்த மனிதன் இந்த வேளையில், என்றுமில்லாதவிதமாக" என எண்ணிக் கொண்டார்.
கோவிற்பக்கமாக இறங்க முன்னர் சிறிதுநேரம் தரித்து நின் றார். ஜோன் பிள்ளை அவரை நோக்கியே வந்தார்.
‘என்ன காணும் இந்த நேரத்தில்."
'மகள் அன்ரனெட்டை வீட்டில் காணவில்லை.'
ஒரு தந்தைக்கு அதிர்ச்சி தரும் செய்திதான். ஆனால் அதை இந்த மனுஷன் இந்தவேளையில் இப்படியா வந்து சொல்லவேண்டும்.
தம்பையர் தன்னுள் பேசிக் கொண்டார்.
"எங்காவது தேடிப் பார்க்கிறதுதானே. இங்கே இந்த நேரத் திலே வந்து என்னிடமா சொல்ல வேண்டும்"
"வேறு ஆரிடம் சொல்லி ஆறமுடியும்' 'ஏதாவது காதல், கீதல் என்று எவனுடனாவது ஒடியிருப்பாளோ'
கேலித்தொனியுடனேயே வார்த்தைகள் வெளிவந்தன. 'உங்க மகன் இந்திரனோடுதான் ஓடிவிட்டாள்"
*" என்ன சொன்னாய்?
- 15 -

Page 10
அதிர்ச்சிக்குரல் அவரையறியாது வந்துவிட்டது. ஜோன்பிள்ளை மெளனமாக நின்றார்.
அவரது சிந்தனையில் ஒரு மின்னல். அவர் புறப்பட்டு வந்த போது இந்திரனின் படுக்கையைப் பார்த்த நினைவு. பாய், தலை யணை, விரிப்பு அப்படியே கிடந்தது. வெளிக்குப் போயிருப்பான் என்ற நினைவுடன் அவர் கோவிலுக்குப் புறப்பட்டார்.
அன்ரனட் அடிக்கடி அவர் வீட்டுக்கு வருவாள். "அன்ரி, அன்ரி" என்று முத்தம்மாவோடு பொழுதெல்லாம் கழித்து அவளுக்கும் அமைதி தந்தாள். தம்பையருடன் அத்தனை பழகுவதில்லை, அச்சம் கலந்த மதிப்பு. ‘அங்கிள்' (ான்று அழைத்து தேவைக்கு மட்டும் பேசிக்கொள்வாள்.
அன்ரனட்டோடு கொழும்புக்கு ஓடிய இந்திரனை அவரால் மன் னிக்க முடியவில்லை. முத்தம்மா எத்தனை வேண்டியும் அவர் அவர் களை அழைக்கத் தயாரில்லை. பேரப்பிள்ளை பிறக்கட்டும் என முத்தம்மா காத்திருந்தாள்.
மூன்றாம் மகன் முகுந்தன் விடுதலை இயக்கங்களில் சேர்ந்து விடாது தடுப்பதற்காக ஏஜென்சிக்குப் பணம் கொடுத்து ஜெர் மனிக்கு அனுப்பி வைத்தார். அவன் அங்கு அகதியாகி பின் வேலை யும் தேடிக்கொண்டான். வீட்டுக்கு ஒழுங்காகக் கடிதம் எழுதிப் பணமும் அனுப்பிக்கொண்டிருந்தான்.
தம்பையர் செலவு செய்த பனம் யாவும் அனுப்பிவிட்டான்; அவருக்கு வேறு பணம் தேவைப்படாத போதும் அவன் தொடர்ந்து பணம் அனுப்பிக்கொண்டேயிருந்தான்.
"அம்மா, அப்பா உங்களுக்கு என்றும் எந்தக் குறையுமில்லாமல் என்றும் காப்பாற்றுவேன்" என்று தொடர்ந்து பணம் அனுப்பும் போதெல்லாம் எழுதிக்கொண்டிருந்தான்.
இந்த அடித்தள வார்த்தைகளுள் அவன் எதிர்பார்த்திருந்த "சுதந்திரமான தீர்மானத்தை" அவரால் ஊகிக்க முடியவில்லை.
முருகன் கோவிலின் அருகே வாழ்ந்த முகுந்தனின் பள்ளித்தோழன் பரமநாதனின் தங்கை பத்மாவுக்கும் அவன் கடிதம் எழுதிக்கொண் டிருக்கிறான் என்ற செய்தியும் இடையிடை தம்பையரின் காதில் விழுந்துகொண்டிருந்தது. அவர் அதை நம்பவில்லை. மேலும், அவன் ஜெர்மனிக்கு அகதியாய் சென்றவன் இங்கே வந்து திருமணம் செய்ய முடியாது என்பதையும் அவர் அறியாமலில்லை.
---س 6 I س

முத்தம்மா ஒரு தடவை அவரிடம் கூறியிருந்தாள்:
முகுந்தனின் பள்ளித்தோழன் நாதன், முன்னர் அடிக்கடி இங்கே வருவானே. அவனது தங்கை பத்மா இன்று திருவிழாவிலே கண்டு நெடுநேரம் கதைத் தாள், தல்ல அடக்கமான பெண். தமையனுக்கு இடையிடை தம்பி கடிதம் எழுதுவானாம். எங்களுக்கு அனுப்பிய படமாயிருக்க வேணும் அங்கும் அனுப்பியிருந்தானாம். நல்லாய் கொழுத்திருக்கிறார் என்றாள்'
வெள்ளிக் கிழமைகளில் காலைப் பூசையின்போது நாதனோடு அந் தப் பெண் கோவிலுக்கு வருவதையும் அவர் பார்த்ததுண்டு. நாதன் அவர் அருகே வந்து ஊர் உலக விசயங்களைப் பேசிச் செல்வதுண்டு.
இந்த மெல்லிய உறவு தம்பையரைப் பொறுத்தவரை பேரிடி ஒன்றைக் கொண்டுவரும் என அவர் எதிர்பார்த்ததில்லை.
அன்று வந்த கடிதத்தை அவர் மறைத்து விட்டபோதும் அதில் கூறப்பட்டிருந்த முக்கிய வார்த்தைகள் அவரது நெஞ்சை அசைத்து, அமைதியைக் குலைத்துக் கொண்டிருந்தது.
'என் நண்பன் நாதனின் தங்கை பத்மாவை நான் திருமணம் செய்யத் தீர்மானித்து விட்டேன். நான் அங்குவர முடியாது என் பதை அறிவீர்கள். ஆகவே பத்மாவை ஏஜென்சி மூலம் அகதியாக வரவழைக்க ஏற்பாடு செய்துவிட்டேன். பத்மா இதுவரையில் கொழும்புக்கு வந்திருப்பாள். இத் திருமணம் உங்களது வாழ்க்கையை எவ்வித மும் பாதிக்கப்போவதில்லை உங்களுக்கு நான் செய்யவேண் டிய கடமையை தொடர்ந்து செய்துகொண்டேயிருப்பேன். அண் ணாவை மன்னிக்காத நீங்கள் என் முடிவையும் ஏற்கமாட்டீர்கள் என்பதை அறிவேன். அதனாலேயே இம்முடிவை நானே எடுத்தேன்.
அப்பா சீதனத்தைப் பற்றிக் கவலைப்படலாம். நீங்கள் அங்கு எனக்குப் பெறக்கூடிய சீதனப் பணத்தை என்னால் இங்கு சில மாதங்களிலேயே இலங்கை ரூபாயில் உழைத்து விட முடியும். ஆகவே அப்பா சீதனச் சந்தையில் என் தன்மானத்தை விலை பேசி விற் கும் பிரச்சினையிலிருந்தும் இத் திருமணம் மூலம் நான் தப்பிக் கோள்கிறேன். என் பணத்திலேயே பத்மாவை வரவழைக்கிறேன். நான் ஆண்மகன். அது எனக்குப் பெருமையும் கூட.
அப்பா இக்கடிதம் கண்டு அதிர்ச்சி அடையலாம். ஆயினும் காலப்போக்கில் என்பக்கமே நீதி, நியாயம் உள்ளது என்பதை
உணர்ந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்."
مس۔- 17 سست۔

Page 11
அவன் எழுதிய கடிதத் தர்க்க நியாயம் எதையும் அவ்வேளை அவர் ஏற்பதாக இல்லை. அவர் கடைசியாக நம்பியிருந்த மூன்றா வது மகனும் தன்னை மீறிய செயலில் ஈடுபட்டதை அவரால் தாங் கிக் கொள்ள முடியவில்லை. முக்கிய பிரச்சினைகளில் தன்னிடம் அனுமதி பெற்று செயலாற்றாது தாமே முடிவு செய்துவிட்டு அறி விப்பதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சீதனம் பெற வேண்டிய இடத்தில் பெண்ணை அழைக்க அவனே லட்சம் ரூபா விற்கு மேலாக செலவு செய்கிறானே. அவர் மனம் கொதித்தது.
தன் பரம்பரையில் தான் நடந்துகொண்ட முறைகளை இப் பையன்கள் தகர்த்தெறியும் போக்கை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதற்குரிய தக்க காரணங்களையும் அவரால் காண முடியவில்லை.
சேட்டையும் சால்வையையும் போட்டுக்கொண்டு புறப்பட்டார். “வெளியே போய்விட்டு வருகிறேன்"
வீட்டின் பின்புறம் நோக்கி முத்தம்மாவிற்கு குரல் கொடுத்தார்.
காலில் செருப்புப் போட மறந்ததையும் தெருவில் ஏறிய பின்
னரே அறிந்து கொண்டார். அவ்வேளை செருப்பும் முக்கியமாக அவருக்குத் தோன்றவில்லை.
கந்தசாமி மாஸ்டர் வீட்டை நோக்கி நடந்தார். அவரோடு பேசுவதிலாவது ஆறுதல் பெறலாம் என்ற ஒரு சலபம்.
கிணற்றடியில் குளித்துக்கொண்டிருந்த மாஸ்டர் தம்பையரைக் கண்டதும் குரல் கொடுத்தார்:
*"பேப்பர் வந்துவிட்டது. படியுங்கோ. வந்து விடுகிறேன்’
பத்திரிகையில் வெளிவந்திருந்த அரசியல் செய்திகள், இயக்க மோதல்கள் பற்றியவை எதுவுமே அவரது கவனத்தை ஈர்க்கவில்லை.
மாஸ்டர் வேட்டியைக் கட்டி தலையை உலர்த்திய துவாயுடன் வந்து அவரிடம் பேச்சுக் கொடுத்தார். முன்னைய கதைகளையெல் லாம் அவர் அறிந்திருந்தார். அவரது இன்றைய மனோ நிலையை அறிந்து கோள்வதற்கு அரைமணி நேரம் சென்றது.
தம்பையர் கூறிய சம்பவங்கள், குற்றச்சாட்டுக்கள் அனைத்தை யும் மாஸ்டர் முதலில் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்தார்.
'மாஸ்டர் என் மனத் துன்பத்தை உங்களால் முற்றாக அறிய முடியாது. நீங்கள் என் நிலையிலிருந்தால்தான் அதை அறிய முடி
- 18 -

யும். பரம்பரை இடைவெளி, "ஜெனரேசன் காப்" என்று சொல்லி நீங்க தப்பிவிடுவீங்க. என் அப்பாவிற்கும் எனக்கும் மட்டும் ஏன் இத்தனை இடைவெளி இருக்கவில்லை'
*இதையெல்லாம் "ஜெனரேசன் காப்புள் நான் அடக்கவில்லை. உங்கள் அப்பா காலத்திற்கும் உங்களது காலத்திற்கும் இடையில் இந்நாட்டிலும் உலகிலும் ஏற்பட்டிருக்கும் விஞ்ஞான, தொழில் நுட்ப மாற்றங்களை எண்ணிப் பாருங்கள். டண்ட உற்பத்தியின் பெருக்கம் மட்டுமல்ல வேலையில்லாத் திண்டாட்டம், உயர் கல்வியில் ஏற்பட்டுள்ள போட்டா போட்டி ஏற்படுத்தியிருக்கும் அரசியல், சட் டங்களின் மாற்றங்களையும் பாருங்கள்.'
** அதற்கும் இதற்கும் என்ன தொடர்பு. மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போ டுறீங்கள்"
'இவை ஏற்படுத்திய தாக்கங்கள் குடும்ப உறவுகளையும்
சிதைத்து தனிமைப்படுத்தி புதிய மதிப்புகளையும் கலாச்சார மாற் றங்களையும் ஏற்படுத்தி வருகிறது.”
*அதற்காக"
'அது உங்கள் குடும்பத்தில் மட்டுமல்ல. பரவலாக எல்லாக் குடும்பங்களையும் பாதிக்கிறது என்பதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இத்தகைய ஆழ்ந்த பார்வையில்லாவிடின் நாம் எமது வாழ்வை துன்ப மயமாக்கியே சாகவேண்டி நேரிடும்."
அத்தர்க்க நியாயம் எதுவும் தம்பையரின் தவிப்பை அவ்வேளை ஆற்றிவிடவில்லை.
ALAAeAe AAAAS ASLALAMLMLMMeSeAe AALeMLLLLLL LLLLLLLLeLeLeLALLS
YAMA-Aler MAYA-NA
கர்த்தராம் யேசுபிரான் போதனைகள்
கெளதம புத்தபிரான் அறிவுரைகள் அர்த்த நா ரீசுவரன் அன்பின் நெறி
அல்லாஹ்வின் மார்க்கத்தின் மறைவழியும் அர்த்தமில் லாமலின்று ஆனதந்தோ!
அநியாயம் தலை விரித்து ஆடுதின்றே விர்த்திக்கு வழியில்லை வீண் அழிவே
விளிதலின்றி வேறென்ன விளைவு கண்டோம்?
சி. அழகுப்பிள்ளை
WMWM
- 19 -

Page 12
கேள்வி ? பதில்
வேல்"
கே: இறந்தவர் உடம்பை புதைப்பதா, எரிப்பதா உலகில்
G35:
மேலோங்கியுள்ளது?
மு. சிவராசா, யாழ்
அவ்வவ் நாட்டு மக்கள் கொண்டிருந்த சித்தாந்தங்கள், வழக் கங்கள், மதபோதனைகளை ஒட்டியே புதைக்கும் - எரிக்கும் முறைகள் மேற்கொள்ளப்பட்டன. பண்டைய எகிப்தியர் ஆத்மா சூக்கும சரீரத்தில் வசிக்கிறது என்றும் புற உடம்பு ஒரு போர்வை எனவும் நம்பினர். இறந்த பின்னரும் உடம்பில் தங்கவும் வெளி யேறவும் வல்லது என உடம்புகளை கல்லறைகளில் பேணி வைத்தனர். உலக அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படும் பிர மிட்டுகள் இக்கல்லறைகளிற் சில என்று கருதப்படுகிறது. ஆதி யில் புதைத்து வந்த தமிழர்கள் பின்னர் உடல் உயிர் பிரிந்த பின் பயனற்றது என எரித்தனர். ஆயினும் புதைக்கும் வழக் கும் நிலவி வருகிறது. நடுகல் வழக்கமும் வழிபாடும் தொடர்ந்து வந்துள்ளது. சீனாவில் உடலை நீண்டகாலம் பேணி வைக்கும் முறைகளைக் கண்டு பிடித்துப் பேணி வந்தனர். கிறிஸ்தவர் கள் உடலைப் புதைப்பர் எனப் பலர் எண்ணுகின்றனர். எரிக் கும் வழக்கமுண்டு. முன்னர் அதுவே நடைமுறையாயிருக்க வேண் டும். புதைகுழியில் இட்டு மண்ணைப் போடும்போது மதகுருமார் STTTT T T TE ELT LLLL L0T TTTTTTT LGTTTT TTS SLLLLL LL LLLLLLLLS Ashes to Ashes) 67 Göy G3/p ge, goy GhairAp607ri.
சிங்கள தமிழ் மக்களிடையேயுள்ள ஒற்றுமை - வேற்றுமைகள் என்ன என்று விளக்குவீர்களா?
த. இளவரசன் - கனடா
சிங்கள அறிஞர்களில் ஒருவரான றெஜி சிறிவர்தனா அண்மை யில் ஒரு கூட்டத்தில் சிங்கள மக்களின் மொழி கலாச்சாரம் பற்றிய உண்மை நிலையை பின்வருமாறு கூறி ஒரு வினாவை யும் எழுப்பினார்.
சிங்கள மக்கள் போத்துக்கீசர் தந்த 'பைலா'வை தமது முக் கிய இசையாக ஏற்றுக் கொண்டனர். இந்திய பாளியும் தமிழும்
- 20 -

கலந்த மொழியை பயன்படுத்துகின்றனர். இந்தியா வழங்கிய புத்த மதத்தை தம் வாழ்வோடு இணைத்துக் கொண்டனர். தமிழர்கள் வணங்கும் இந்துக் கடவுள்களை தாமும் வழிபடு கின்றனர். கேரளத்தவரது, தமிழரது உணவு உடைகளை ஒப் புக் கொண்டனர். கரையோர மக்கள் மேல் நாட்டு மொழி, உடை, கலாச்சாரத்தை பெருமையாகக் கடைப்பிடிக்கின்றனர்" இன்றைய நாடக மரபில் மேல் நாட்டு மரபுகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. அயலவர்களாக வாழும் தமிழர்களை மட்டும் ஏன் பகைக்க வேண்டும் என்று தெரியவில்லை?
கே. சோவியத் ரஷ்யாவில் ஏற்பட்டுவரும் தேசீய இனப் பிரச்சினை
பற்றி என்ன கூறுவீர்கள்? க. முத்துலிங்கம், கண்டி,
ப: சென்ற நூற்றாண்டுக் கடைசியிலும் இந் நூற்றாண்டின் ஆரம் பத்திலும் ஐரோப்பிய நாடுகளிடையே தேசிய இனப் பிரச்சினை சுடர்விட்டு எரிந்தது. அது ரஷ்யாவில் மிகவும் சிக்கலடைந் திருந்தது. நிலைமையை ஆய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கும் பணி சோவியத்தில் ஸ்டாலின் தலைமையில் விடப்பட்டது. அன்னார் 1912-ல் வெளியிட்ட அறிக்கையை லெனின் அங்கீகரித்தது மட்டு மல்ல அக் கொள்கை ரஷ்யப் புரட்சிக்கும் உதவியது என்றே கூறவேண்டும். சோவியத் ரஷ்யாவில் பிளவுபட்டிருந்த தேசி" இனங்களை லெனின் தலைமையிலான சோஷலிசப் புரட்சி ஒன்று படுத்தியது. சோஷலிச அன்மப்பில் மட்டுமே தேசிய இனங்கள் பகைமையின்றி வாழ முடியும் என்பதை லெனினும் ஸ்டாலி னும் செயலில் காட்டினர். இன்று சோவியத் யூனியனில் தேசிய இனங்களிடையே பகைமை உறவு ஏற்படுவது சோஷலிசத்திலி ருந்து நாடு நழுவிப் போவதையே தெற்றெனக் காட்டுகிறது.
கே. பஞ்சாப்பிலும் காஷ்மீரிலும் நடப்பது என்ன? அதற்கும் சோவி
யத் யூனியனுக்கும் இலங்கைக்கும் தொடர்பு உண்டா?
க. சிவராமன், கண்டி
ப; யாவும் தேசிய இனப் பிரச்சினைகளே. இன்றைய உலக வல் லரசுகளின் மேலாதிக்கத்தில், முதலாளித்துவ அமைப்பில் தேசிய இனப் பிரச்சினைகள் தீர்க்கப்படாது அடக்கி ஒடுக்கும் நிலையே நீடிக்கின்றது. காஷ்மீரிலும் பார்க்க பஞ்சாப் நிலை மிகவும் சிக்கலானது. சீக்கியரும் இந்துக்களும் ஏறக்குறைய சம அளவின ராக பஞ்சாப்பில் உள்ளனர். இவர்கள் மதத்தால் மட்டுமல்ல பொருளாதாரம், உற்பத்தி முறையாலும் வேறுபடுகின்றனர். இந்துக்கள் யந்திர உற்பத்தி, வணிகம், நிதிவாய்ப்பில் முதன்மை
سسہ 21 سے

Page 13
பெறுகின்றனர். சீக்கியர் (பணக்கார) விவசாய உற்பத்தியில் முதன்மை பெற்றுள்ளனர். விவசாயிகள் யந்திர உற்பத்தியாள ரின் டிராக்டர், உரம், கிருமிநாசினி விற்பனை மூலம் சுரண் டப்படுவதை தடுப்பது இயலாதது. இப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது எளிதல்ல. இந்திய குடித்தொகையில் 83% இந்துக்கள். சீக்கியர் 2%; ஆயினும் முப்படைகளில் 12% உள்ளனர். (இலங் கைத் தமிழரின் நிலை எதிர்மாறானது) சோவியத் அசெபை சான் பிரச்சினையில் கொபச்சேவின் கடுமைப் போக்கை அமெ ரிக்கா ஆதரிக்கிறது. இந்திய அரசின் போக்கை சோவியத் ஆத ரிக்கும். இலங்கைப் பிரிவினையை இந்தியா ஆதரிப்பின் காஷ் மீர், பஞ்சாப்பில் பிரச்சினைகள் மேலும் மோசமடையும் என் பதை இந்திய தடுவண் ஆட்சியாளர் நன்கு அறிவர்.
apagã
ALSLLTSLSALALSSSSSSSMSSSMLSSSLLLSLLqSqLLSLLSSLLSSLSq LLALALSASLLALSSTLSSMLL LALASSMLLLLLSLS LALS
சோவியத் பொருளாதார நெருக்கடி
பிரஸ்ரொய்க்கா 1985 இல் ஆரம்பிக்கப்பட்டது. 1989 இல் நுகர் பண்ட சந்தை நாடு பூராவும் வீழ்ச்சியடைந்தது. சீனிக்கும் சோப் புக்கும் கூட கட்டுப்பாடு வந்தது.
சோவியத் நாடு பற்றி கணிப்பீடு செய்பவர்கள் "அதிகாரத்துவத் தின் ஆதிக்கம் பிரஸ்ரொய்க்காவிற்கு தடைகல்லாக உள்ளது என்கின்றனர். சோவியத் ஏகபோக அமைச்சர்களின் ஆதிக்கம் பொருளாதார மாற்றத்தை திசை திருப்பி தேசிய சந்தையின் வளர்ச் சியை ஒழிக்க முயல்கிறது. வெறும் சட்டங்களால் தடை செய்யும் சக்திகளை மீற முடியவில்லை. இன்றுள்ள அமைச்சுகளை ஒழிப்பது ஒன்றே பிரஸ்ரொய்க்கா பொருளாதார ரீதியில் செயல்பட வாய்ப் பளிக்கும். பிரஸ்ரொய்க்காவின் த லலயாய திட்டப்படி தொழிற் சாலைகள், கட்டிட வேலைத் தளங்கள், வளங்கள், உழைப்பாளர், மூலதனம் அனைத்தும் கீழ் மட்டத்திலிருந்து மீளமைக்கப்பட்டு, புதியபொருளாதாரத்தில் தனித்தனி கணக்கிடும் கூறுகளாக செயற் பட வேண்டும்.
மதிப்புடன் வாழ்ந்த முகாமையாளரும் அமைச்சர்களும் எளி தாக தமது வாய்ப்புகளையும் ஆதிக்கத்தையும் விட்டுவிடமாட்டார் கள். அவர்களை அரசியல் தலையீட்டால் பதவி நீக்கம் செய்ய வேண்டும் அல்லது சிறு கூறுகளாக்கி ஆதிக்கத்தைக் குறைக்கவேண்டும்.
- தியோடோர் சாளின் (M.R)
سے 22 ستـ

( முதலாளித்துவ கலாச்சார சீரழிவில்
வன்முறைத் திரைப்படங்களின் பங்கு )
~പ്പ~- ~-് ܚܔܠ ܐܘܚܔܠ ܐܘܚܢܔܠr محسیح - தியாகு -
சென்ற 40 ஆண்டுகளில் முதலாளித்துவ உலக திரைப்படங்கள் தொடர்ந்து வன்முறை, பாலியல் சார்ந்து வளர்ந்து வருகிறது. இது எல்லா வயதினரையும் உளவியல் ரீதியில் பாதிக்கிறது.
61 நாடுகளில் வெளிவந்த 1500 திரைப்படங்கள் பற்றிய சர்வ தேச ஆய்வு 72% படங்கள் தீங்கு விளைக்கக் கூடியவை எனவும் 52% வன்முறையில் உச்சநிலைப்பட்டிருப்பதாகவும் கூறுகிறது.
வன்முறைப் படங்களை தயாரிப்பதில் இன்று தலைமை தாங் கும் நாடுகள் அமெரிக்கா, மெக்சிக்கோ, கொங்கொங் ஆகும். அடுத்தே இந்தியா வருகிறது. வன்முறையில் அடுத்த நிலையிலுள்ள நாடுகள் பிரிப்டன், இத்தாலி, பிரான்ஸ் ஆகும். சோஷலிச நாடு களில் யூகே சிலவாகியா மட்டுமே ஓரளவு வன்முறைப்படங்கள் தயாரிக்கிறது. இதுவும் பெரும்பாலும் முதலாளித்துவ உலக விற் பனைக்காகவே தயாரிக்கப்படுகிறது.
வெடிகுண்டு, கொலை, கற்பழிப்பு, சிரச்சேதம், உடல்களைச் சிதைத்தல் போன்ற காட்சிகளும் வரும் கடும் வன்முறைப் படங் கள் 15%மாக உள்ளன. பிறரைத்துன்புறுத்துவதில் மகிழ்ச்சியடை யும் (SADSM) படங்களையும் கடும் வன்முறைப் படங்களையும் குழந்தைகளே பார்க்கும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது. தியேட்டர் களில் வயது வந்தவர்களுக்கு மட்டும் என்று தடுக்கப்படுபவற்றை குழந்தைகள் வீடுகளிலே வீடியோ கசெட் மூலம் பார்க்கும் சூழல் இன்றைய உலகில் நடைபெறுகிறது. இது தவிர பயங்கர பேய் பிசாகப் படங்களும் தயாரிக்கப்படுகின்றன. அமெரிக்காவிலிருந்து வெளிவரும் படங்களில் 12% இத்தகையவையே. 1000 வன்முறைப் படங்கள் பற்றி ஆய்வு நடத்திய உளவியலார் குழந்தைகளுக்கு மட்டு மல்ல வயது வந்தவர்களுக்கும் இவை தீமை விளைவிக்கிறது என்று
கூறியுள்ளனர்.
"உளவியல் ரீதியான நீண்டகாலத் தாக்கம், குறுகியகாலப் பாதிப்பு ஆகியவற்றை ஆராய்ந்த முடிவின்படி அமெரிக்காவில் நிக ழும் 25% 50% வன்முறை நடவடிக்கைகளுக்கு நேரடியாகவோ
- as -

Page 14
மறைமுகமாகவோ வன்முறைப் பொழுது போக்குகளே காரணம்' என ஆய்வாளர் கூறியுள்ளனர். முதலாளித்துவ அரசு இது பற்றிக் கவலைப்படுவதில்லை. வளர்ந்து வரும் வன்முறைப் போக்குகளை அரசு வன்முறையால் எவ்வாறு அடக்கி ஒடுக்கலாம் என ஆட்பலம் ஆயுத பலத்திற்கு பணம் ஒதுக்கித் திட்டமிடுவர்.
வன்முறைக் காட்சிகள் பரபரப்பூட்டி கலாச்சாரத்தைச் சீரழிக் கின்றன. இளைஞர்சளின் குற்றச் செயல்கள், குழு (Gang) வாகக் கூடி அழிவு நடவடிக்கைகளில் ஈடுபடுதல் ஆகிய சம்பவங்களைக் காட்டி அவர்களது செயல்களை வீர தீரச் செயல்கள் என ஏற்கும் போக்காகவும் திரைப்படங்கள் மறைமுக பிரச்சாரம் செய்கின்றன. அவை இளம் வயதினரின் நினைவிலிமனதில் பதிந்து தீவிர நட வடிக்கைகளை நீதிப்படுத்தி அவற்றில் ஈடுபடச் செய்கின்றன.
திரைப்படம் விற்பனைப் பண்டமாக, யந்திர உற்பத்தித் தொழி லாக எத்தனை லாபம் தருகிறது, வரி வழங்குகிறது என்று கணக் கிடுவ்திலேயே முதலாளித்துவம் ஈடுபட்டுள்ளது. அவற்றால் ஏற் படத்தக்க சமுதாயத் தீங்குகள் பற்றி எண்ணிப் பார்ப்பதேயில்லை.
அமெரிக்காவில் வன்முறை, பயங்கர பேய்ப்பட வீடியோ சுசெட் மூலம் 1971 ல் 60 லட்சம் டாலர் வருமானம் கிடைத்தது. 1987 வரையில் இவ்வருமானம் 20 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இப் பொருளாதார வளர்ச்சியையே நாட்டின் மேம்பாடு என முதலா வித்துவம் கணிக்கும். பொழுதுபோக்கு என்ற பெயரால் நடைபெறும் தீங்கு, கலாச்சாரச் சீரழிவையே இவ் விபரங்கள் பேசுகின்றன.
பேய் பிசாசு, பயங்கர, வன்முறைப் படங்களைப் பார்த்தபின் ஏற் படும் மனக்கிலி, கோரக் கனாக்கள், ஏக்கம் ஆகியவை பரபரப்பை விரும்பும் பழக்கமாகி காலப் போக்கில் பெருந் தீங்கை விளைவிக்கக் கூடியது. பழக்கத்திற்கு அடிமையாகிப் பலர் இத்தகையவற்றையே தொடர்ந்து பொழுதுபோக்கு என விரும்பிப் பார்ப்பதையும் காண லாம். "இத்தகையவர் அன்றாட வாழ்வில் மிக விரைவில் இயல்பான உணர்ச்சி நிலையை இழப்பவராகின்றனர்" என உளவியலார் ஆய்வு
கூறுகிறது.
லாபமே நோக்காகக் கொண்ட முதலாளிகளின் ஆட்சியில் இத் தகைய வன்முறை, பயங்கரப்படங்கள் தடையோ, தணிக்கையோ செய்யப்பட மாட்டா. இவை ஆபாசப் படங்களிலும் பார்க்க தீங்கு விளைவிக்கக் கூடியவை என்பதே ஆய்வாளரின் முடிவாகும்.
முதலாளித்துவம் விஞ்ஞான - தொழில்நுட்ப வளர்ச்சி என வீரம் பேசி பொழுதுபோக்குத் தரும் இத்தகைய நுகர் பண்டங்களையும் சந்தையில் குவிக்கிறது. அவை பரப்பக்கூடிய தீமைகள், இழிவான கலாச்சாரம் பற்றிக் கவலைப்படுவதில்லை. இத்தகைய போக்குகளி லிருந்து விடுபட்டிருந்த சோஷலிச நாடுகளையும் இத்துவரும் இக் கலாச்சார சீரழிவுக்கே முதலாளித்துவம் இழுத்து வருகின்றது.
- 84 -

எங்கும் விற்பனையாகிறது!
‘தமிழவேள் எழுதிய
தமிழ் - ஆண்டு 9
ரூபா 14,00
தமிழ் - ஆண்டு 10
ரூபா 15.00
பயிற்சி விளக்கங்கள் விடைகளுடன் மாணவர்க்கும் ஆசிரியர்க்கும் பயன்படத்தக்க அரிய நூல்கள் கணேசர் - சிவபாலன் எ ழுதிய உயர்தர இரசாயனம்
ரூபா 90.00
A. L. வகுப்பு பாடிநூல்
விற்பனையாளர்க்கு கழிவு உண்டு குமரன் புத்தகசாலை 201, டாம் வீதி, கொழும்பு - 12.
Tel : 421 388
qSSeYSJJkSEEeLeLSzeSeESSzzSYSYSCEkSHLHHLeeeS

Page 15
KUMARAN-73 (01-02-1
குமரன்
இந் நூற்றாண்டின் ஆரம்ப வரத்து வாகனப் புரட்சி (ரெயில், முதலீட்டுக்கு வழிவகுத்தது. இன் இல்ல. தொழில் நுட்பத்தில் புது வேண்டியதில்லை. அவ்வாறு முதல் வேலையற்றோரையே பெருக்கும். இறங்கும் சோஷலிச நாடுகள் எ4 முதலாளித்துவத்தையே சென்றன டலும்" என்ற கட்டுரையில் போல் மைக் கருத்துகளைக் கூறுகிறார்.
தமிழ் நாட்டில் முதலாளித் து: பரப்பான, விறு விறுப்பான" மா. இதழ்களை "கலைப் போவிகள்" சிரியர் சிவத்தம்பி தமது கட்டுரை
TTT காட்சித் தரும் இவற்றை குறளுக்கு ஒப்புவமை கூறுகிறார். கர திரைப்படங்கள் சமுதாயத்தில் யும் கலாச்சாரச் சீரழிவையும் "தி யுள்ளார்.
"தம்பையரின் தவிப்பு" என்ற இளைஞர்கட்கும் இடையில் ஏற்ப வெளியால் (ஜெனரேசன் காப்) அ பெருக்கம், வேலை யின்மை, உயர் படுகிறது என கந்தசாமி மாஸ்டர் தொழிலாளிவர்க்கம் முதலான பின்னே வைத்துள்ளது. "உலகத் ே கள்" என்ற மார்க்சின் குரலை ம
சமாதானம் கூறுகிறார்.
சென்ற இதழ் காத்திரமாக, களை நன்கு விளக்குகிறது. வேறு எர் இத்தனை தெளிவான விளக்கம் த னர். அவர்களது பாராட்டுக்கு நன் ஆய்வுடன் அனைத்திற்கும் விளக்சு யாகக் கூற முடியும்.
அச்சு குமரன் அச்சகம்,
ஆசிரியர் : செ. கணேசவிங்கள்

2O, DAM STREET,
990) COLOMBO-12.
குரல்
காலத்தில் ஏற்பட்ட போக்கு கார்) முதலாளித்துரைத்தின் பாரிய று அத்தகைய வாய்ப்பு எதுவும் மை படைக்க அ தி க முதலீடு წGწ.) செய்வதும் எதிர் ଜର୍ଜିଲିଂ ଶitଗift+; முதலாளித்துவப் பா  ைத யில் ன்று கூறப்படுபவை இத்தகைய நடவர். "சோஷலிசமும் சுற்றா * சுவீசி இவ்வாறான பல புது
வப் பண்டமாக வெளிவரும் "பா த நாவல்கள், செய்தி விமர்சன நேரங் கொல்விகள்" எனப் பேரா ாயில் சாடுகிறார். கலை வடிவங்க மக்களே போல்வர் சுயவர்" என்ற வன்முறை, பேய் பிசாசுப் பயங் ஏற்படுத்தக் கூடிய தீங்குகளை பாகு" தன் கட்டுரையில் விளக்கி
கதையில் தந்தைக்கும் இன்றைய டும் முரண்பாடு பரம்பரை இடை ல்ல, உலகின் பண்ட உற்பத்திப் * கல்வி வாய்ப்பின்மையால் ஏற்
புது விளக்கம் கூறுகிறார்.
சித்துவப் பாதையில் இரண்டடி தொழிலாளர்களே ஒன்று சேருங் றந்து விடவில்லை என மாதவன்
இள்றைய சோஷலிச" 臀 $தப் பத்திரிகையோ, சஞ்சிகையோ ரவில்லை என பலர் எழுதியுள்ள ன்றி. "குமரன்" என்றும் விஞ்ஞான ம் கூறிவருவான் என்பதை உறுதி
- ஆசிரியர்
201, டாம் வீதி, கொழும்பு-12.