கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: குமரன் 1990.05.01

Page 1
:
© 4 ໄດ. (85lბჭ,
:
ஆசிரியா மு E. - மாதவன் 接 3. முதலாளித் உயர்ந்தது? ー。ー -ー。 |-
I
O Ꮎ .6béᏐ5 £☽ .6ᏈᏁᏌ ( ) ட ரே. ந.
இ சாதி அயை
- "தியாகு"
سمیتےسات*
܋ܩܒܒ݀ܕ*
இ யுத்தமற்ற
ட கார்ல் மர்விப்ான
6 (3,56, P
 
 
 
 

கியத்தில் யதார்த்தம் - 2
தல் அரசியல்வாதி வரை
துவம் எத்துறையில்
2க்கும் மக்களது விழா
>ப்பு என்ற சாபக்கேடு
SS S S S S S S S S S S S S S S S S S S
AKSS S K S A AAA S S S S L
를
விலை: ரூ. 4/-

Page 2
அரிய நூல்கள் மீண்டும் கிடைக்கும்
1. சூரியன் கிழக்கில் உதிப்பதில்லை செ. கணேசலிங்கன் 33.00 2. பெண்ணடிமை தீர 9 9 ፶8.00 3. குமரனுக்குக் கடிதங்கள் á p 2 : 00 4. போ! : சோலம் p 丑4.25 5. மண்ணும் மக்களும் p I 0,50 6. அயலவர்கள் v 、45.00 7. பொய்மையின் நிழலில் y P 37.50 8. அந்நிய மனிதர்கள் I3.50 9. ைெதயின் கதை 15. 75 10. கலையும் சமுதாயமும் а р 1.25 11. குந்த விக்குக் கடிதங்கள் O AO 8.00 12. மான் விழிக்குக் கடிதங்கள் 卸腾 16.50 13. சிறுவர்களுக்கான சிந்தனைக் கதைகள் " 24.00 14. அபலையின் கடிதம் 、?。75 15. சொந்தக்காரன் பெனடிக்ற் பாலன் 13.50 16. மக்கள் தொடர்பு சாதனமும் மகளிரும்
சந்திரிகா சோமசுந்தரம் 2.00 17. ம க மாற்றம் - நாடகம் அ. ந. கந் கசாமி 30.00 18.  ை லாசபதியும் நானும் கே. எஸ். சிவகுமாரன் 12.00 濠豪懿盗婆婆器豪擦擦婆豪濠蚤接姿婆海藻泰豪擦擦豪豪豫 19. மரணத்திற்குப் பின் பொ சங்கரப்பிள்ளை 45.00 20. சைவசித்தாந்தம் p 30.00
பொ. சங்கரப்பிள்ளை அவர்கள் 21.2.90 அன்று அமெ ரிக்காவில் மரணமடைந்த செய்தியை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்ளுகிறேம்.
泰海接器海盗豪姿豪漆漆接豪豪豪擦擦擦豪漆豪豪谦懿藻藩
விற்பனையாளர்க்கு கழிவு உண்டு வி. பி. பி. ஏற்கப்படும். முன்பணம் அனுப்புவோருக்கு பார்சல் செலவு இணும். குமரன் புத்தகசாலை
201, டாம் வீதி, கொழும்பு - 12 தொலைபேசி: 421388

சோஷலிசத்திலும் பார்க்க
-முதலாளித்துவம்எத்துறையில் உயர்வானது?
: * · ყჭ’ ·:.* *** <; ჯ. ` :
இராணுவத்திலா? பொருளாதார பலத்திலா? அரசியலிலா? கல்ை, கலாச்சாரத்திலா? 3.
ஒராண்டு காலமாக உலக முதலாளித்துவம் கம்யூனிசம் தோல்வி யடைந்து விட்டதாகவும் முதலாளித்துவம் வெற்றிபெற்று வருவதா கவும் பிரசாரம் செய்து வருகிறது. . . . . . . . . . . .:
முதலாளித்துவ மக்கள் தொடர்பு சாதனங்களுக்கெல்லாம்:கிழக் கைரோப்பிய நாடுகள் தொட்டு நிக்கரகுவா வரையில் நடைபெற்று * வரும் சம்பவங்கள் நல்ல தீனியாகக் கிடைத்தன: செய்திகள், அறிக் கைகள், சிறப்புக் கட்டுரைகள். ஆராய்ச்சி முடிவுகள் என்பன் மட்டு மல்ல பல ஆங்கில நூல்களே சுடச்சுட வெளிவந்து கொண்டிருக் கின்றன. w
சோஷலிசத்தின் வெற்றியை நாம் 1917இல் இருந்து கணித்துக் கொள்ளுகிறோம் : 73 ஆண்டுகள். முதலாளித்துவத்தின் வளாச்சிக் கட்டத்தை 300 ஆண்டுகள் எனக் கொள்வோம்:
73 ஆண்டுகளாக முதலாளித்துவம் சோஷலிசத்தை -எதிர்த்துப் போட்டியிட்டு எத்துறைகளில் வெற்றி பெற்றுள்ளது? 1
1. இராணுவ பலத்திலா? முதலாளித்துவத்தால் வென்று விட மூடியவில்லை. முதலாளித்துவத்தின் சந்தைக் கெடுபிடி ஐரோப்பா வில் பாசிச சர்வாதிகாரத்தையே கொண்டு வந்தது. இத் தாலி, ஜேர்மனி, ஸ்பெயின் வரலாற்றை எவரும் மறந்து விட முடியாது. அதை முறியடிக்க முதலாளித்துவமே வரலாறு காணாத கடும் யுத் தத்தில் ஈடுபட நேர்ந்தது. அப்போதும் சோஷலிச அமைப்பே முன் வந்து பாசிசத்தை ஒழிப்பதிலும் முதலாளித்துவத்தைக் காப்பாற்று வதிலும் துணை புரிந்தது. . . . ༔ ༦ ༠༠:་

Page 3
ஆபாசிச் சர்வாதிகாரத்திலும் பார்க்க பூர்ஷ்வா ஜனநாயகம் உயர்ந்த வடிவமே. இவ்வ்டிவமே சோஷலிசத்திற்கு இட்டுச்செல்லும் வழியையும் அமைக்கக்கூடியது. " ... . . . . . . . »
பாசிச நாடுகளால் உற்பத்தி செய்யப் பட்டதிலும் பார்க்க அதிகமான டாங்குகள், விமானங்கள், பீரங்கிகள் முதல் துப்பாக்கி கள் வரை ரஷ்யாவால் சில ஆண்டுகளில் உற்பத்தி செய்ய முடிந்
از روی
3. பொருளாதார பலத்தில் வெற்றி பெற்றதா? இரண்டாவது உலக யுத்தம் முடிந்த பிந்திய காலத்தை மட்டும் எடுத்துக் கொள் வின் முன்கூட்டி முடிவுகட்ட முடியாது. மூன்றாவது உலக நாடுக ளைச் சுரண்டுவதில் எந்த நாடுகள் முன் நின்றன. ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகளே. இரண்டாவது உலக யுத்தத்தினால் துரிதி வளர்ச்சி பெற்ற அமெரிக்காவிலேயே பொருளாதார வீழ்ச்சி 197374இல் இருந்து ஏற்படத் தொடங்கி விட்டது. அதன் கடன் பளு ஏறி வருகிறது. மற்றும் ஜப்பான், ஜேர்மனியின் வளர்ச்சி அபாயக் குரலை அமெரிக்காவிற்கே எழுப்புகின்றது. இதே நாடுகளில் உழைக் கும் மக்கள் பண வீக்கத்தால் அல்லற்படுகின்றனர். வேலையில்லாத் திண்டாட்டம் வேறு நிலவுகிறது. போதை வஸ்து, குற்றச்செயல்கள், கற்றாடல் பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன. ஏழ்மையும் அத்து மீறிய செல்வமும் அருகருகே இருப்பதே முதலாளித்துவத்தின் முரண் பாடு. இந்நிலையை சோஷலிசத்தில் காண முடியாது.
3. அரசியலமைப்பிலா? சோஷலிசத்தின் அடிப்படை தாற்பரியங் களை சிறிதும் அறியாதவர்களாகவே முதலாளித்துவம் பிரச்சாரம் செய்து வருகிறது. உற்பத்தி சாதனங்களையும் தனிச் சொத் துடைமை வாய்ப்புக்களையும் கொண்ட பூர் ஷ்வா ஜனநாயக அமைப்பின் போலித்தன்மைகளை மார்க்ஸ், ஏங்கெல்ஸ் போன்றார் விஞ்ஞான பூாவமாக விளக்கியது மட்டுமல்ல. லெனின் பு தி ய அமைப்பை நிறுவி முதலாளித்துவ சர்வாதிகாரத்திற்கு எதிராக பாட்டாளிகளின் சர்வாதிகாரத்தை நிலைநாட்டுவதைப் பற்றியும் தெளிவுபடுத்தியுள்ளார். முதலாளித்துவக் கடலில் நீந்துவோருக்கு பாட்ட்ாளியின் சர்வாதிகாரத்தைப் புரிய வைப்பது அத்தனை எளி தல்ல. பூர்ஷ்வா ஜனநாயகத்தின் அர சி ய ல், பொருளாதார அமைப்பை சோஷலிசத்தைக் கற்றவர்களாலேயே அறிய முடியும். முதலாளித்துவமும், சோஷலிசமும் இரு வேறு கோட்பாடுகள், கருத் தியல்களைக் கொண்டவை. கற்பனாவாதம்-இயக்கவியல் பொருள் முதல் வாதம், மன்னர்களின் வரலாறு. வரலாற்றுப் பொருள் முதல் வாதம் ஆகியன இரு வேறு எதிர் முனைகள். இவற்றிடை விவாதங்கள் முரண்பாடுகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். முதலாளித்துவப்
. - 8

பிரச்சார சாதனங்கள் வலிமை மிக்கன என்பது உண்மையே. நாமும் அந்தக் கடலிலேயே நீந்திக் கொண்டிருக்கிறோம் என்பதை மறந்து விட முடியாது. SuSASJSeSA AS SSeS SeS SiSSSSSS
4. கலை, கலாசாரத்திலா? இல்லை. இத்துவரும் முதலாளித்துவ கலை, கலாசாரங்களும் முதலாளித்துவ சமூகத்தை பின்னோக்கித் தள்ளிக் கொண்டிருக்கின்றன. முதலாளித்துவம் அனைத்தையும் விற் பனைப் பண்டமாக்குவது போல, கலை, கலாசாரங்களையும் இலாபம் என்ற ஒரே நோக்கோடு, சந்தையை முன் வைத்து உற்பத்தி செய்து கொண்டிருக்கிறது. சினிமா, டி.வி. காட்சிகள் யாவிலும் பாலியலும் வன்செயலும் நிறைந்துள்ளன. பெண்ணினத்தை இழிவுபடுத்துவ தில் சினிமாவும் , டி.வி.யும் முதலிடம் வகிக்கிறது. பண்ட விற்பன்ை விளம்பரங்களே அவற்றின் தரத்தை நிர்ணயிக்கின்றன. டி.வி. கலை நிகழ்ச்சிகள் என்று முதலாளித்துவ நாடுகள் வழங்குபவற்றை "கலை" என்பதன் கீழ் நிரைப்படுத்த வேண்டாம் என்றும், கலை, இலக்கிய விமர்சனங்களில் உயர் மட்டத்தில் நிற்பவர்கள் கூறிவருகின்றனர். நாவல், சிறுகதை, கமிக்ஸ் யாவும் துப்பறியும் நிபுணர்களையும், பொலிசாரின் திறமைகளையும், கற்பனையான வீரதீர புருஷர்கள்ை யுமே சித்தரிக்கின்றன. துப்பறியும் வீரதீர புருஷர்களை டி.வி.யில் பார்க்கும் போதே இந்நாடுகளில் மலிந்து வரும் குற்றச்செயல்களின் பிரதிபலிப்போ எனவும் எண்ணத் தோன்றுகிறது. "
சீன, ரஷ்ய,போலந்து, ஹங்கேரிப் படங்களில் இத்தகைய இழிந்த போக்குகளைக் காண்பதரிது. சோஷலிசத்தைக் கட்டும் su. புருஷர் கள் அங்கு படைக்கப்படுகிறார்கள். ரஷ்ய, சீன ஒப்பராவுக்கு நிகரான் இசை, நாட்டிய வடிவங்களை உலகின் வேறு எந்த நாட்டிலும் கான முடியாது. ‘மாதிரி மனிதரைச் சிருட்டிக்காது "விதி விலக்கான செல் வந்தர்களின் ஆடம்பர வாழ்க்கைகளையும் இழிந்த செயல்களையுமே முதலாளித்துவ கலை, இலக்கியங்கள் சித்தரிப்பதைக் கான
அவ்வர்க்கத்தின் கலாசாரப் பிரதிபலிப்பாகவே இவற்றைக் கொள்ள வேண்டும். ஆடம்பரம், பலரக கார்கள், பயனற்ற பல நுகர்பல புங் களே மனித கலாசாரத்தைத் தீர்மானிக்கின்றன என முதலாளித்துவ விமர்சகர்கள் பெருமைப்படலாம், - ................................ابی۔
வறுமையும் செல்வமும் குற்றச் செயல்களும், வேலையி யும், போதை வஸ்துக்களும் மாசடைந்த காற்றும் நீரும், திராக மழையுமே முதலாளித்துவம் கட்டி எழுப்பிய கலாசாரமாகும். . முதலாளித்துவ நாடுகள், சிறப்பாக அமெரிக்கா தன் இராணுவ பலத்தால் சோஷலிசத்தை அழித்துவிடுவதற்கு சென்ற75 ஆண்டு
sme O m

Page 4
ள்ள்க்வே முயன்று வந்துள்ளது சோஷலிச வளர்ச்சி தமது உலக் ஆதிக்கத்தை அழித்துவிடுமோ என அஞ்சியது. இரண்டாவது உலக யுத்தத்தின்போது பாசிசத்தை ஒடுக்க சோஷலிசத்தின் உதவியை அமெரிக்காவும் ஆதரித்தபோதும் யுத்தம் முடிந்த பின் அமெரிக்கா
"மக்காதிசம்' என்ற கொள்கையைக்
கடைப்பிடித்து சோஷலிச
ஆதரவாளர்களை இழிவுபடுத்தி, சிறையில் தள்ளியது.
தென் கொரியாவுக்குத் துணை நின்று, வட கொரியாவை அழிக்க முயன்றது. தோல்வி. பின் கியூபாவை ஒடுக்க இராணுவத்தையே
தயாரித்து அனுப்பியது. தோல்வி.
வியத்நாம் யுத்தத்தில் நேரடி
யர்க் ஈடுபட்டு வடவிய்த்தர் மின் சோஷலிசப் போக்கை நசுக்க முயன்
றது: ஆப்பில் அகப்பட்ட குரங்காக
gբեԳեւե3;]-
யுத்த நடவடிக்கையே விட்டு
ஐரோப்பாவில் அணு ஆயுத பலம் குறைக்கப்படுகிறது: கிழக்கு
மேற்கு ஜெர்மனி இணைகிறது; அமெரிக்க ஆயுத பலங்கள் நீக்கப்
படும் காலம் வெகு தூரத்திலிலில்லை.
மேற்கு ஐரோப்பிய நாடுகள்
பொருளாதார் ரீதியில் ஒன்றுபட்டு வருவதையும் காண்கிறோம்.
இராணுவ் பலத்தினால் சோஷலிசத்தை அழிக்க முயன்று தோல்வி
யடைந்த அமெரிக்கா இன்று பிரச்சார பலத்தாலும் பண உதவியைக்
காட்டியும் சோஷலிசப் போக்கை அழித்து வருவதாகக் கனவு காண்
கிறது. அதன் உள் முரண்பாடுகளே
அழித்து வருவதை சில அமெரிக்க கின்றனர்.
தோழனுக்கு . தோழனேஎழுந்துவா - ... "
உனக்கான கடமைகள உன்னை அழைக்கின்றன.
. .
42 வருடமாக வசந்தம்:பூக்கும் கனவுகளில் வாழ்வை செலவிட்ட நீ வோட்டுக்களையும் வேட்டுக்களையும் கண்டதுதானே மிச்சம்
தோழிலாள தோழனே
அன்றிருந்தது போலத்தான் இன்றும் இருக்கிறாய்
அந் நாட்டின் ஆதிக்கத்8ை
அறிஞர்களே அச்சுறுத்தி வரு
சுதந்திர ஈழத்தில் கனவுகள் கண்டதும் விடுதலைப் பாதையில் நின்று விழிமூடி தூங்கியதும் இனிமேல் வேண்டும் எமக்கொரு வாழ்க்கை
事 மேதினங்களில் உன்னுடைய பெயரைச் சொல்லி சோஷலிசம் பேசும் உலக உருண்டை எத்தனை மேதினங்கள் நீ என ன கண்டாய் தோழா?
本 率
தோழாஇனிமேலாவது எழுந்துகொள் உனது கரங்கள் வலிமை பெறட்டும் உனது வாழ்வு உரிமைபெறட்டும்

தியாகு --
இந்திய சாதி அமைப்பு முறை உலகிலேயே மிக விசித்திர
மான சமூக அமைப்பின் ஒரு தனி வடிவமாகும்; அவற்றைப் பற்றிய சமூக விஞ்ஞான ஆய்வுகள் ஒரு புறம் நடைபெறும்போது அவற்றை எவ்வாறு தகர்க்கலாம் என்ற முயற்சிகளும் செயல்பட்டுக்கொண்டி ருக்கின்றன. இரண்டும் முடிவுகண்டதில்லை.
நடைமுறையில், ஒடுக்கப்பட்ட சாரியினருக்குத் தலைமைதாங்கி இந்திய அரசியல் யாப்பில் தக்க உரிமை யும் பிரதிநிதித்துவமும் பெறுவதில் பாடுபட்டுழைத்த பெருமை டாக்டர் அம்பேத்காருக்குரி யது. அத்தோடு ஒடுக்கப்பட்ட சாதியினரை "கல்வி கற்பியுங்கள், ஆர்ப்பாட்டம் செய்யுங்கள், இயக்கமாகச் செயற்படுங்கள்’ என்று போராட்டக் குரல் கொடுத்தவரும் அவரே தான்.
அம்பேத்கார் 1891 ஏப்ரல் 14ல் பிறந்தவர்: 1956 டிசம்பர். 6ல் மரண மடைந்தார். அன்னாரின் பிறந்த நூறாவது ஆண்டு விழா இவ்வாண்டு ஏப்ரல் 14 ல் இருந்து ஓராண்டுக்கு இந்தியா பூராவும் கொண்டாடப்படுகிறது.
இந்திய அரசியல் யாப்பு நிலைக்கும் வரை மட்டுமல்ல சாதி
யமைப்பு இந்தியாவில் தகர்த் தெறியப்படும் வரை அன்னாரின் பெயர் ஒடுக்கப்பட்ட இந்திய, உலக மக்களிடை நிலைத்திருக்கும் என்ப
தில் சந்தேகமில்லை. சாதியினால் அடக்கி, ஒடுக்கப்பட்ட மக்களிடை
விழிப்பூட்டும் ஆண்டாகவும் அன்னாரின் பிறந்த நூற்றாண்டு அமை պւb.
மகாத்மா காந்தி தேசீய விடுதலைப் போராட்டத்தில் சாதி யில் ஒடுக்கப்பட்டவரையும் இணைக்கும் நோக்குடன் அவர்கனை 'ஹரிஜனர்கள்’ (கடவுளின் பிள்ளைகள்) என பெயரளவில் மதிப் பளித்து சமூக சீர்திருத்த வழிகளில் சாதிமுறைகளை ஒழிக்கப் பாடு பட்டு உழைத்தது உண்மையே. கோ வில் களைத் திறந்துவிடுதல் விதவா விவாகம் ஆகியவற்றை 'ஆதரித்து பால்ய விவாகம் போன்ற வற்றை ஒழிக்கவேண்டும் எனப் பிரச்சாரம் செய்தார். அதுமட்டு
سسیسی 5 --

Page 5
மல்ல தாழ்ந்தவர் செயலல்ல" என தன் கையால் மலசலகூடம் சுத்தம் செய்வதை பரிசுத்த தொழிலாகச் செய்தும் காட்டினார். இச் செயல் இந்திய உயர் குடி மக்களது இதயத்தை மட்டுமல்ல "ஹரி ஜனர் களது நெஞ்சையும் தொட்டது உண்மையே.
ஆயினும் டாக்டர் அம்பேத்கார் இத்தகைய சீர்திருத்தங்களை எதிர்த்துக் குரல் கொடுத்தார்.
"தொழில் நுட்பம் வளர்ச்சியடைந்த சமூகத்தில் இத்தகைய அசுத்தமான தொழிலை மனித இனம் செய்யத்தேவையில்லை" என் றார். மேலும் மற்றைய பகுத்தறிவு வாதிகள் போன்று கூறினார்:
"சமுக சீர்திருத்தம் பிரச்சனையின், அடிவேரைத் தொடமாட் டாது. இந்து குடும்ப அமைப்பில் சீர்திருத்தம் வேண்டியதில்லை. இந்திய சமூகம் மீளமைக்கப்பட்டு புதிதாகக் கட்டப்பட வேண்டும். விதவை மறுமணம், பால்ய விவாகம் முதலியன பற்றிய சீர்திருத்தப் பிரச்ச்னையல்ல அவசியம்: சாதிமுறைமுற்றாக ஒழிக்கப்பட வேண்டும்.
ஆளும் வர்க்கம் தொடக்கம் நிர்வாக அதிகாரிகள் வரை உயர் சாதிக்காரர்கள் ஆதிக்கம் செலுத்துவதை அம்பேத்கார் அம்ப லப்படுத்தினார்.
"பயிற்சி பெற்ற திறமை யடிப்படையில்லாது பெற்றாரின் சமூக அந்தஸ்தின் படி முன்கூட்டியே பதவிகளில் தேர்ந்து கொள் வதை சாதி அமைப்புக் கொண்டுவந்தது’ என்றார்.
அம்பேத்கார் மார்க்சியத்தின் வர்க்கப்போராட்டத்தை ஏற் றவரல்ல. ஆயினும் நடைமுறை அனுபவத்தை அவரால் மறுக்கமுடிய வில்லை. "சாதி முறை வெறும் வேலைப் பிரிவினை மட்டுமல்ல, , உழைப்பவர்களின் பிரிவு, ஒன்றின் மே லொன்றான உழைப்பாளர் களின் படிநிலை அமைப்பு' என்றார்.
சாதி அமைப்பையும் இந்துக்கள் என்று பெருமைப் படுகிறவர் களையும் அவர் சாடிய் கூற்றுக்கள் பிரபல்யமானவை.
“சாதி பொதுசன அபிப்பிராயத்திற்கு அப்பாற்பட்டது. ஓர் இந்துவின் பொதுவாழ்வு சாதி. அவர் பண்பு என்பதும் சாதி யோடு சவாரி செய்கிறது. ஒழுக்கம் என்பதும் அவர் சாதியோடு கட்டுப் - ". لكسانا لا
-ی- 6 حسپه و

தர்மம் வழங்குவதுபோல உயர்சாதியினரின் அரசினால் சலுகை கள் தருவதைப் பற்றி அவர் உயர்வாகக் கருதவில்லை. சுய மரியாதை யுடன் மானிட சமத்துவத்தை அவர் வேண்டினார்.
y சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்த உயர் குடியினரான பெரியார் இராமசாமி நாயக்கர் பிராமணியத்தை எதிர்ப்பதில் ஆரம் பித்து உலோகாயத வாதியாகி மதம், மதச் சடங்குமுறைகளை எதிர்த்துப் பிரசாரம் செய்தார். சாதி அமைப்பையும் சாடினார்.
டாக்டர் அம்பேத்கார் ஒதுக்கப்பட்ட சாதியில் பிறந்து சாதி அமைப்பை எதிர்ப்பதில் ஈடுபட்டு, இந்தியாவில் பிராமணியத்தை முதன் முதலில் எதிர்த்த புத்தமதத்தில் தமது ஆதரவாளர்களுடன் சேர்ந்து கொண்டார். (இலங்கையில் சிங்கள-பெளத்த மதத்தவர் களிடையே சாதி அமைப்பு இன்றும் நிலவுவதைக் காணலாம்.)
மதமும் சாதியும் கருத்தியலாக இந் தி யா வில் மட்டுமல்ல இலங்கையிலும் பின்னிப் பிணைந்துள்ளது. பாட்டாளி வர்க்கப் புரட்சி யாலேயே இரண்டு மலைகளையும் தகர்க்க முடியும். அதுவரை நாம் சும்மா இருக்க வேண்டுமென்றில்லை.
சாதியை ஒழிக்கும் போராட்டங்கள், அம்பேத்கார் போன்ற முன்னோடிகளின் வழிகாட்டலும் சமுதாயத்திற்கு உந்து சக்தியாய் விளங்கும் என்பதில் சந்தேகமில்லை.
கு LDU 60 (இதழ் 72 இல் இருந்து)
தனிப்பிரதி ரூ 4/-
6 இதழ்கள் ღtნ 24/-
12 இதழ்கள் eit 48/-
விற்பனையாளர்க்கு கழிவு உண்டு.
ஆங்காங்கே வரவழைத்து விநியோகிக்க
விரும்புவோர் தொடர்பு கொள்க:
ஆசிரியர், குமரன், 201, டாம் வீதி, கொழும்பு - 12. தொலைபேசி: 421388

Page 6
கலை, இலக்கியத்தில் யதார்த்தம்-2
-- மாதவன் -
“யதார்த்தம் என்பது உண்மையைத் தேடிக் காணும் நெறி. புற உலக நிகழ்ச்சிகளைத் தெரிந்தெடுத்து அவற்றினுாடாக பாத் திரங்களின் உணர்வுப் படிவங்களைப் புலப்படுத்துவது யதார்த்த இலக்கிய நெறியாகும்.” என்று க. கைலாசபதி தன் "தமிழ் நாவல் இலக்கியம்" என்ற நூலில் விளக்க முயல்கிறார்.
யதார்த்தம் என்பது உண்மை. Realism என்ற ஆங்கிலப் பதத்தையே யதார்த்தம் என கலை, இலக்கிய விமர்சனங்களின் போது தமிழில் பயன்படுத்துவது மரபாகிவிட்டது.
முற்போக்கு இலக்கிய கர்த்தாக்கள், விமர்சகளிடை இயற் பண்புவாதத்திற்கும் யதார்த்தத்திற்கும் இடையிலுள்ள வேறுபாடு கள் பற்றிய மயக்கம் கிடையாது. முதலாளித்துவ எழுத்தாளர், விமர்சகர்களே தெளிவின்றி. இரு வார்த்தைகளதும் வேறுபாட்டை அறியாது குழப்பத்தோடு இலக்கியக் குட்டையைக் குழப்பிக்கொண் டிருக்கின்றளர்.
யதார்த்தம் (Realism) என்பது மார்க்ஸ் ஏங்கெல்சின் வழிவந்த வார்த்தையாகும்.
"Realism, to my mind, implies, besides truths of detail, the truthful reproduction of typical characters under typical circumstances..."'
ஏங்கெல்ஸ் ஒரு கடிதத்தில் குறிப்பிட்டதை பின்வருமாறு பெயர்த்து க. கை. விளக்குகிறார்:
"யதார்த்த நெறி என்பது நுணுக்க விவரங்களின் உண்மை யுடைமை தவிர, வகை மாதிரிக்குப் பொருத்தமான பாத்திரங்களை வகை மாதிரிக்குப் பொருத்தமான நிலைமைகளுக்கு இணங்க மெய்மை குன்றாத வகையிற் சித்தரித்தலாகும்’ என்பது ஏங்கெல் சின் மணிமொழி. இரத்தினச் சுருக்கமான இவ்வரைவிலக்கணம் மார்க்சீய சிந்தனைகளை உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
- 8 --

"வகை மாதிரிக்குப் பொருத்தமான பாத்திரங்களும் நிலைமை களும் என்ற ஏங்கெல்ஸ் ‘கண்டதையும் கடியதையும் கருதினா ரல்லர்.
உதாரணமாக, "வகை மாதிரிக்குப் பொருத்தமான’ விபசாரி ஒருத்தியை சூழ்நிலைமைக்கிணங்க மெய்மையுடன் சித்தரிக்கும் முறையை அவரது வரைவிலக்கணம் விலக்கிவிடுகிறது.
சிமுதாய இயக்க விதிகளையும் எதிர்காலச் சமுதாய வளர்ச் சியையும் நன்கு விளங்கிக்கொண்டு அவ்வுணர்வுடன் குறிப்பிடத் தக்க பாத்திரங்களை மெய்மை குன்றாத வகையிற் சித்தரிப்பவனே யதார்த்தவாதியாவான்.
சுருங்கக் கூறின், யதார்த்தவாதி சமுதாயத்தின் இயக்கத்தை யும் வளர்ச்சி முறையையும் விளக்கவல்ல "வகைமாதிரிக்குப் பொருத்த மான" பாத்திரங்களை முழு உணர்வுடன் திட்டப்படி தேர்ந் தெடுக்கிறான்.
பொதுப்படையாகக் கூறுமிடத்து, இயற் பண்பு நெறியும் யதார்த்தவாதமும் முதலாளித்துவ சமுதாயத்திற் பிறப்பனவே இயற் பண்பு நெறி என்பது "வாழ்க்கை முட்களில் விழுந்து இரத் தங்கக்கும் சோக உள்ளங்களின் துன்ப இயற்கைக் கோட்பாடு.
யதார்த்த வாதம் சமுதாய முரண்பாடுகளும் அவற்றுக்குக் காரணமான பெளதீக நிலைகளுமே வாழ்க்கையின் தன்மைக்குக் காரணம் எனக் கண்டு, "துன்பமே இயற்கை' என்னும் சொல்லை மாற்ற முயலும் உள்ளங்களின் நம்பிக்கைக் குரல்."
இத்தோடு க. கை. நின்றுவிடாது றேமண் வில்லியம்ஸ் என்ற உலகப் புகழ்பெற்ற விமர்சகரது கூற்றையும் தருகிருர்;
* யதார்த்த வாதம், முற்போக்கு இயக்கங்களினதும், புரட்சிகர இயக்கங்களினதும் கொள்கைக் குரலாக நிலைகொண்டுள்ளது."
“இத்தகைய சிறப்புமிக்க யதார்த்த இலக்கிய நெறி தமிழ் நாவ : லுலகிற் பெருவழக்குப் பெற்றுள்ளதெனக் கூற முடியாது. உணர்ச்சி முனைப்புடைய புனைவியற்பாணியிலமைந்த (Romantic) நெடுங் கதைகளும்; இயற் பண்பு பொருந்திய தொடர்கதைகளுமே நாவல் என்ற பெயரில் வெளிவந்துகொண்டிருக்கின்றன. கல்கி ஓர் எழுத் தாளருக்குச் சொன்னாராம், "இன்னும் 50 ஆண்டுகளுக்காவது தமிழ்
f k
ཡམས་ཡམས 9 - ༤

Page 7
மிாட்டில் காதல் கதைகள் எழுதிக்கொண்டிருக்கலாம்" என்று. இது கட்டுக் கூற்றாக இருப்பினும், நிலைமையைத் தொகுத்துக் கூறுகிற தென்பதில் ஐயமில்லை."
‘சமுதாயத்தின் இயக்கத்தையும் வளர்ச்சி முறையையும் விளக்கவல்ல பாத்திரங்களை யதார்த்த இலக்கியவாதி தேர்ந் தெடுக்கிறான் என்பதை க. கை. அடிக்கடி வலியுறுத்துவதைக்
5IT6576) Tito
இதற்கு வரலாறும் பொருள் முதல் வாதம் பற்றிய மார்க்ஸ் ஏங்கெல்சின் அறிவை எழுத்தாளர், விமர்சகர் பெற்றிருக்கவேண்டும். வரலாற்றை விஞ்ஞானமயப்படுத்திய சிறப்பு இவ்விருவரையுமே சாரும்.
யதார்த்த நெறியில் கலை, இலக்கியம் படைப்பவர்கள், விமர்சகர்கள் மார்க்சின் இயக்கவியல் பொருள் முதல் வாதம் பற் றிய சித்தாந்த அறிவும் பெற்றிருக்கவேண்டும். அது உலகிற்கு, சமு தாயத்திற்கு வெறும் விளக்கம் கூறி நிற்பதல்ல. உலகை மாற்றி அமைக்கும் கோட்பாடும் கொண்டது.
சமுதாயத்தின் முரண்பாடுகள் பற்றியும் அதன் வளர்ச்சிப் போக்கையும் இவ்விரு கண்கள் கொண்டே விஞ்ஞான முறையில் காணமுடியும். vx
க. கை. மேலும் கூறுகிறார்:
*யதார்த்தவாத முறையே கலையுண்மையும் கலை வடிவமும் சிறந்து பொலிவுறுவதற்கேற்றது. சமுதாயத்தில் வர்க்கங்களின் அடிப்படையிலும் சமூக வேறுபாடுகளினடிப்படையிலும் பிளவு இருப் பதை எழுத்தாளன் பொது நியதியாக ஏற்றுக்கொள்கிறான்.
ஆனால், எதிரெதிர் வர்க்கங்கள் ஒன்றுக்கொன்று முரணா னவையாகவிருப்பினும், மனிதரது வாழ்க்கையில் இவையிரண்டின் தொழிற்பாடும் பங்குகொள்கின்றன. முரண்பட்டு நிற்கும் வர்க்கங் கள் ஓயாது போராடிக்கொண்டிருக்கின்றன."
வர்க்கப் போராட்டத்தின் மூலம் சமூக முரண்பாடுகள் Giorfić சிப் போக்கில் தீர்மானிக்கப்பட்டு வருகின்றன. இக் கண்ணோட்டம் யதார்த்த கலை, இலக்கியங்களில் தொக்கி நிற்கவேண்டும்.
 ைெகமாதிரிக்கான பாத்திரங்கள் யதார்த்த இலக்கிய படைப்புகளில் ஊடுருவி நிற்பதையும் காணலாம். உதாரணமாக
ത്ത 10 =

ஒரு தொழிலாளியை தேர்ந்தெடுக்கும்போது அவன் அத்தொழிலாளி வர்க்கத்தை பிரதிபலிக்கவேண்டும்; அதற்குப் பதிலாக உதிரிப் பாட் டாளி ஒருவனை எடுத்து வகை மாதிரிப் பாத்திரமாக நிறுவின் அது யதார்த்த இலக்கியக் கோட்பாட்டில் அடங்கிவிடாது.
இதே போன்றே வகை மாதிரிக்குப் பொருத்தமான சூழல் களில் அப்பாத்திரம் இயங்கவேண்டும்.
ஒரு தொழிலாளி குடிக்கிறான், சூதாடுகிறான், மனைவியை அடிக்கிறான் போன்ற வகைமாதிரியற்ற, விதிவிலக்கான சம்பவங் களைப் பின்னி அவ் வர்க்கத்தை இழிவுபடுத்த முயல்வது யதார்த்த இலக்கியமாகாது. முதலாளித்துவ எழுத்தாளர் தயாரிக்கும் இயற் பண்பு நிலையிலேயே அவை அமையும். ــــــــ
* பிற உலக நிகழ்ச்சிகளைத் தெரிந்தெடுத்து விவரித்து அவற்றி னுாடாகப் பாத்திரங்களின் உணர்வுப் படிவங்களைப் புலப்படுத்து வது யதார்த்த் இலக்கிய நெறி துன்பத்தில் சூழ்ந்திருக்கும் மணி தனையோ சிலரையோ பொருளாகக் கொள்ளின அத் துன்பத்தின் காரணமும் காரணிக்குரிய வரலாற்றுச் சூழமைவும் பாதிக்கப்பட்ட மனிதனின் உணர்வுக் கோலங்களும் பிரச்சனை சளின் உள்ளியல்பு களும் தெளிவுறுத்தப்படுத்துவதே யதார்த்த நெறி. வரலாற்றுக்கும் இந் நெறிக்குமுள்ள பிணைப்பு இதனால் பெறப்படுகிறது. இயற் பண்புவாதம் வரலாற்றுணர்வு சாராதமையாலேயே எதிர்காலத்தைக் கருத்திற் கொள்ளது. முன்னேற்றம், வளர்ச்சி, விமோசனம் முத லியவற்றிற்கு அர்த்தமும் அவசியமும் அற்றுவிடுகிறது." என்ற க. கை.யின் கூற்று மீண்டும் நினைவில் நிறுத்தக்கூடியது. யதார்த்த இலக்கியம் வரலாற்றுணர்வு கொண்டது என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது.
யதார்த்த இலக்கியம் வெறும் மனித அனுபவத் தொகுப்பல்ல, அவற்றுள் மறைந்திருக்கும் விஞ்ஞான உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும். மாங்காய் கீழே விழுவது இயல்பான் அனுபவமாகக் காட்டுவது இயற்பண்பாகலாம். அது பூமியின் ஆகர்ண சக்தியாலேயே மேலே போகாது, பூமியை நோக்கி விழுகிறது என்ற விஞ்ஞான உண்மை பார்ப்பவர், படிப்பவர் உணர்ந்துகொள்ளின் அது உயர்ந்த கலை வடிவமாகாதா? யதார்த்த கலை இலக்கியத்தின் விஞ்ஞான உண்மையைத் தேடிக் காணும் நெறி இதுவே.
வர்க்கப் போராட்டத்தின் மூலமே உலகை மாற்றியமைக்கமுடி யும் என்பதும் சமூக வரலாற்று உண்மை. மார்க்ஸ் கண்ட யதார்த்த நெறி. அதனாலேயே மார்க்சும் ஏங்கெல்சும் கம்யூனிஸ்டு அறிக்கை மூலம் குரல் எழுப்பினர்: *உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்.
- 11 -

Page 8
G5:
Ges:
கே:
கேள்வி ? பதில்!
* வேல்"
இலங்கையில் அதிகமாக விற்பனையாகும் நூல் எது என்று கூறு
வீரா?
த. சின்னராசா, யாழ்.
பஞ்சாங்கம். இங்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டிலும் முதல் மார் கெட் இதற்கே. இது ஒன்றிலிருந்தே நாட்டின் அறிவியல் வளர்ச் சியை அறிந்து கொள்ளலாம்.
இலங்கையின் இன்றைய பொருளாதார நிலை எந்நிலையிலுள் ளது?
எஸ். குணேஸ்வரன், யாழ்.
பண்டங்களின் விலை ஏற்றத்திலிருந்தே அனைவரும் அறிந்து கொள்ளலாம். விலை ஏற்றம் பற்றிக் குரல் கொடுக்கத்தக்க மக்
கள் தொடர்பு சாதனங்கள் இல்லாதது வருந்தத்தக்கது. மேலும்,
அரசியல், தொழிற்சங்க இயக்கங்களின் குரல்களையும் கேட்க முடியாதிருக்கிறது. ஆர்ப்பாட்டங்களையும் காண முடியவில்லை. பாராளுமன்றத்தில் சிலர் கூக்குரலிடுவது மட்டும் ஆங்காங்கே சில பத்திரிகைகளில் தெரிகிறது. மக்களின் அமைதிப்போக்கு விசித்திரமானதே. சில வேளை புயலுக்கு முந்திய அமைதியாகவும் இருக்கலாம்.
பெற்ற்ார், பெரியவர், ஆசிரியர், மதகுருவின் கால்களில் விழுந்து
சிறியவர் ஆசி பெறுவது பற்றி என்ன சொல்லுவீர்?
சு செல்வமணி, கண்டி,
இலங்கைத் தமிழரிடை இந்நிலப் பிரபுத்துவ பழக்கம் அருகி விட் டது. படித்த கரையோரச் சிங்கள மக்களிடமும் குறைவு. முதலா ளித்துவ வளர்ச்சிப் போக்கில் மறைந்து வரும் இவ்வழக்கத்தை அரசு இன்று நிலைநாட்ட முயல்கிறது. தொலைக்காட்சியில் கால்களில் விழுந்து ஆசி பெறும் நடிப்புகளைக் காட்டி பிரபல் யப்படுத்துகிறது. மதகுருக்கள் முன், அரசியல் தலைவர்களே மண்டியிட்டு ஆசீர்வாதம் பெறுவதையும் காணலாம். மாறா மரபேற்புக் கோட்பாடுகளை (FUNDAMENTALISM) நிலை நிறுத்த முயலும் போக்குகளே இவையாகும்.
- 12 -

கே:
@6。
மனித அடிப்படை உரிமைகளை அனைத்து அரசியல் கட்சியி னர் ஆராய்ந்து அரசியல் யாப்பில் இணைக்கும் முயற்சி பற்றி
என்ன கூறுவீர்?
சோ. வேலு, அட்டன்.
மிக நன்று. அவற்றை நடைமுறையில் நிலை நிறுத்தும் வாய்ப் புகளும் கிட்ட வேண்டும். தற்போது அரசியல் யாப்பில் தரப் பட்டிருப்பவற்றிற்கே அவசரகால சட்டம் திரை போட்டுக் கொண்டிருக்கிறது. ஆளும் வர்க்கம் சார்ந்தவர்க்கு மட்டுமே பேச்சு, எழுத்துச் சுதந்திரம் கூட கிட்டுகிறது. டி.வி., ரேடியோ பத்திரிகைகளைப் பார்ப்பின் இவ்வுண்மைகளை எளிதிற் காண லாம். பூஷ்வா ஜனநாயகத்திற் கிட்டும் உரிமைகள் இன்று மக் களுக்கு கிடைப்பின் பரவாயில்லைப் போல் தோன்றுகிறது. தொழிலாள வர்க்கம் தம் குரல் எழுப்ப ஆண்டில் ஒரு நாள் மட்டுமே கிட்டுகிறது. போலும். மே முதல் நாள். அன்னாரின் கூட்டங்கள், கோரிக்கைகள், ஆர்ப்பாட்டங்கள், வேலை நிறுத் தப் போராட்டங்கள் எதையும் இன்று காண முடியவில்லை.
(ஒரு வேளை தொழிலாளர்கள் அத்தனை செழிப்பாக வாழ்
கிறார்களோ என்றும் எண்ணத் தோன்றுகிறது!)
லித்துவேனியா, ஜோர்ஜியா, பிரச்சினைகள் எவ்வாறு தீர்வு
பெறும்?
மா. சிவராமன், வவுனியா,
இவற்றிற்கெல்லாம் ஆரூடம் கூற முடியாது. 1922இல் ஜோர் ஜியா பிரச்சினை எழுந்த போதும் லெனின், போல்ஷவிக் கட்சி யினரால் இப்பிரச்சினை ஆராயப்பட்டது.
ஜாரின் ரஷ்யாவை லெனினும், போல்ஷவிக்கினரும் ‘தேசங் களின் சிறைச்சாலை" எனக் கூறி வந்தனர். ரஷ்யர் அல்லாத நாடுகள் ஒடுக்கப்பட்ட தேசங்களாகவே இருந்தன. இத்தேசிய ஒடுக்குமுறையை நீக்கி ஐக்கியப்படுத்தும் நோக்கிலேயே "பிரிந்து செல்லும் உரிமையை வழங்கி ஒன்றுபடுத்தினர். ஆதிக்கமுள்ள நாட்டுத் தொழிலாளர் ஒடுக்கப்பட்ட தேசங்களின் தொழிலா ளருக்கு எதற்காக அடங்கி வாழ வேண்டும்? என லெனின் வின வினவினார். ஒன்றிணைந்த அரசு யந்திரம் என்பதை விட்டு இரா ணுவம் அரச தூதுவர் (D(PLOMATIC) நிலைகளில் ஏற்படும் தேவைகளில் மட்டும் இணைந்திருக்கலாம் எனவும் கருதினார். இதே நிலைக்கு லித்துவேனியா மட்டுமல்ல, ஜோ ர் ஜியா
போன்ற தேசங்களுக்கும் ஏற்படுத்தி சோவியத் யூனியனை முற்
றாக சிதைவுறாது காப்பாற்றலாம்.
- 13 -

Page 9
ஆசிரியர் முதல் அரசியல்வாதி வரை
- மாதவன் -
திமது தொழிற்சங்கக் கோரிக்கைகள், தொடர உள்ள போராட்டம் பற்றிய செய்திகள் தினப் பத்திரிகைகளிற்குக் கொடுத்து நாலு நாட்களாகிவிட்டது. ஒரு பத்திரிகையும் பிரசுரிக் காதது விக்கிரமனுக்கு எரிச்சலூட்டியது.
தொழிற் சங்க உலகில் அவனது பெயர் மிகவும் பிரபல்யம் வாய்ந்தது. தொழிலாளர் நலன், பண்டங்களின் விலை ஏற்ற அறி விப்பு, அரசின் வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப் பிக்கப்படும் வேளைகளின் போதெல்லாம் பத்திரிகை நிருபர்களே அவனைத் தேடிச் சென்று அவனது அறிக்கைகளைப் பெற்று வெளி யிடுவதுண்டு. தற்போது அவையெல்லாம் நின்றுவிட்டதை அவன் அறியாமலில்லை.
பத்திரிகை நிலையங்களைத் தேடிச் சென்று அவன் கொடுத்த அறிக்கைகளே தற்போது வெளிவருவதில்லை. அதற்குரிய காரணங் களை அவன் ஊகித்தறியாமலில்லை.
ஆயினும் அந்த வாரம் அவன் தந்த முக்கிய அறிவித்தலின் சுருக்கத்தைத் தானும் வெளியிடாது விட்டது, அவனுக்கு ஆத்திர மூட்டியது. அரசின் ஆதிக்கத்திலுள்ள பத்திரிகைகள், டி.வி. ரேடியோ வெளியிடாதபோதும் தனியார் நடத்தும் இதழ்களாவது வெளியிட் டிருக்கவேண்டும் என்பதே அவன் முடிவாயிருந்தது.
நாளிதழ், வார இதழ்களை வெளியிடும் பிரபல தனியார் பத்திரிகை நிலையத்திற்கு நேரடியாகவே சென்று காரணத்தை ஆசி ரியரிடமேயே கேட்பது என அன்று தீர்மானித்தான்.
ாதுகாப்பு பரிசோதனைகள் முடிந்தபின் வரவேற்பறையிலிருந்த பெண்ணிடம் நாளிதழ் ஆசிரியரைப் பார்க்க வந்ததாகச் செய்தி அனுப்பினான்.
- 14 -

காலதாமதமின்றி அழைப்பு வந்தது. மீண்டும் "செக்அப்". ஆசிரியர் அவனுக்குக் கைகொடுத்து வரவேற்று உட்காரச் செய்தார்3
தமது தொழிற் சங்கத் தீர்மானம் பற்றிய செய்தி வெளிவரா தது பற்றி முறைப்பாடு செய்தான்.
**வேறு பத்திரிகைகளில் அச் செய்தி வெளிவந்ததா?*
"இல்லை. உங்களது பத்திரிகைச் சுதந்திரத்தை மட்டுமே நான் நம்பினேன். அதுவும் ஏமாற்றமாகிவிட்டது."
**சிறிது நேரம் பொறுங்கள்."
பஸ்ஸரை அழுத்தி ஆசிரியர் பியூனை அழைத்தார்.
உரிய உதவி ஆசிரியரை அழைக்கும்படி கூறி தேனிருக்கும் உத்தரவிட்டார்.
உதவி ஆசிரியரிடம் விக்கிரமனை அறிமுகப்படுத்தி உரிய செய் தியைப் பற்றி ஆசிரியர் விசாரித்தார். உதவி ஆசிரியர் நினைவு கூர்ந்து உரிய பைலை எடுத்து வந்து அந்தச் செய்தியை எடுத்து ஆசிரியர் பார்வைக்கு வைத்துவிட்டுச் சொன்னார்:
**அவசரகாலச் சட்டம் வேறு. தற்போதைய ஜெனரல் பொலிசியின்படியே நானே தடைசெய்தேன். இதற்கு மட்டும் எப் படி விதிவிலக்களிக்க முடியும்."
செய்தியை நோட்டம் போட்டுவிட்டு ஆசிரியர் விக்கிரமனைப் பார்த்துச் சொன்னார்:
"மிஸ்டர் விக்கிரமன், நாட்டு அரசியல் நிலைமை பற்றியும் எமக்குள்ள அதிகாரங்கள் பற்றியும் எங்களிலும் பார்க்க வெளியே உள்ள உங்களைப் போன்றவர்கள் அதிகமாக அறிந்திருப்பீர்கள். எமது கைகள் கூடக் கட்டப்பட்டுள்ளன. நாங்களும் கூலிக்காக இங் கேயிருந்து வேலைசெய்பவர்களே."
*"அப்படியானால் நாமெல்லாம் எங்கே போய்க்கொண்டிருக் கிறோம்? பேச்சுச் சுதந்திரம், பத்திரிகைச் சுதந்திரம் பற்றியெல்லாம் நீங்கள்தானே எழுதுகிறீர்கள். பேசிக்கொள்கிறீர்கள்."
விக்கிரமன் அழுத்திச் சொன்னான்.
-سے، 15 مــــــــ

Page 10
'பத்திரிகைகளின் முதலீட்டாளர்கள், விளம்பரதாரர், அரசி விளம்பரங்கள் பற்றியெல்லாம் நீங்கள் மறந்துவிடப்படாது.”
"இவையெல்லாம் பொதுவான நிலைப்பாடுகளாகத்தானே முன்னரும் இருந்தது. எங்கள் செய்திகளெல்லாவற்றையும் தேடி வெளியிட்டீர்கள்."
'இன்று முற்றிலும் நிலைமைகள் மாறியுள்ளதை நான் சொல் லியா நீங்க தெரியவேண்டும்."
**இந்த நிலைமையை நீடிக்க விடலாமா? இன்னும் எத்தனை காலம் பொறுத்திருக்கவேண்டும்?”
"அதையெல்லாம் தீர்மானிக்கவேண்டியவர்கள் நீங்களே
9
தான்.
ஆசிரியர் விக்கிரமனைப் பார்த்துச் சொன்னார்.
'உங்களைப் போன்றவர்கள் ஆதரவு தராமல்."
"அதிலுள்ள ஆபத்தையும் நீங்க எண்ணிப் பார்க்கவேண்டும். தேநீர் சாப்பிடுங்கள்."
'எனக்குக் கூட அச்சுறுத்தல் போன் வந்தது. நான் இதற் கெல்லாம் அஞ்சப்போவதில்லை. அச்சத்தில் அமைதியாயிருப்பவர் களும் நிலைமைக்கு ஆதரவளிப்பவர்களே' - ஆசிரியரையும் கண் டிப்பதாகவே சொன்னான்.
*இ ப்படியான இலட்சியப் போராட்டத்தில் எல்லோரும் ஈடு படமாட்டார்கள். இந்தச் செய்தியை நாங்கள் மட்டும் தடை செய்யவில்லை. மற்றப் பத்திரிகைகளும் அதே கொள்கையே கடைப் பிடிப்பதை நீங்களே பார்த்தீர்கள்."
"ஒரு சிலராவது மக்களது, தொழிலாளர்களது பிரச்சனைகள் பற்றிய மாற்றுக் கருத்துக்களை வெளியிட முடியவில்லையென்றால்."
'நாடாளுமன்றத்தில் பேசுபவற்றை நாம் சுருக்கியாவது வெளி யிடுகிறோம். நீங்க படித்திருப்பீர்கள். பொதுக் கூட்டம் போட்டுப் பேசுங்கள். நாங்கள் செய்தி வெளியிட முயல்வோம்." S.
இயலாத விஷயம் என்பதை தெரிந்துகொண்டே ஆசிரியர் கூறினார்.
- 16 -

"பொதுக் கூட்டமா, பார்க்கலாம். இதற்கெல்லாம் எப்போது முடிவு ஏற்படப்போகிறது?"
** என்றோ முடிவு ஏற்பட்டுத்தானே தீரவேண்டும். நிலமை சீரானதும் அவசரகாலக் சட்டம் நீக்கப்படும் எனவும் அண்மையில் அறிவிக்கப்பட்டுள்ளது. நீங்க்ளும் அறிந்திருப்பீர்கள்’
விக்கிரமன் விடைபெற்று வெளியே புறப்பட்டான். அவ்வேளை பத்திரிகை நிலைய தொழிலாளர் சங்கத்தின் செயலாளரான நிகால் சில்வா ஒடி வந்து விக்கிரமன் அங்கு வந்த செய்தியைப் பற்றி மதிப் போடு விசாரித்தான்.
“எல்லாம் யுத்த கால நிலைமை போலாகிவிட்டது. பத்திரிகை
கள் கூட அச்சத்தில் அரசைச் சார்ந்து நிற்கின்றன. இங்கே எங்
களாலேயே எதுவும் செய்ய முடியவில்லை. களை எடுப்பு வேறு நடை பெறுகிறது."
ஆசிரியரோடு நடைபெற்ற உரையாடலைக் கேட்டுவிட்டு நிகால் சில்வா தெரிவித்தான்:
*நிலைமையைக் கண்டு சும்மா இருக்க முடியாது. மாற்று நட வடிக்கைகள் பற்றி நாம் ஆராயவேண்டும்."
விக்கிரமன் விடைபெற்றுச் சென்றான். அனைத்துத் தொழிற் சங்கங்களும் இணைந்த பொதுக் கூட்டத்தை நடாத்தும் விஷயம் பற்றி அவன் சார்ந்த தொழிற்சங்கத்தில் ஆராயப்பட்டது.
கூட்டத்திற்கு அனுமதிபெற உரிய பொலிஸ் நிலையத்திற்குச் சென்றான். இன்ஸ்பெக்டர் விக்கிரமனிடமிருந்து தப்புவதற்காக உதவி பொலிஸ் சுப்பிரிண்டனிடம் அழைத்துச் சென்றான். பல்கலைக் கழகப் பட்டதாரி அவன்; அங்கு முன்னர் இடதுசாரி இயக்கத்தில் இருந்தவன். யாவையும் விசாரித்தபின் அவன் சொன்னான்:
“பொதுக் கூட்டத்திற்குத் தானே அனுமதி கிடையாதே அவசரகாலச் சட்டம் நீங்கட்டும். பார்க்கலாம்."
"அதுவரை காத்திருக்க வேண்டுமா?*
விக்கிரமன் இடைமறித்துச் சொன்னான்.
* மேதினம் வருகிறது. ஒரு நாளுக்கு நீங்கள் உங்கள் ஊர் வலங்கள், கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், கோரிக்கைகளையெல்லாம் வைக்கலாம். எங்கள் நாடு ஜனநாயக நாடு."
= 17 -

Page 11
உதவி சுப்பிரிண்டனின் பேச்சில் நளினம் தொனித்தது.
"ஆண்டுக்கு ஒரு நாளாவது ஜனநாயக உரிமை வழங்கப்படு கிறது என்று கூறுகிறீர்களா?"
*அப்படியே வைத்துக்கொள்ளுங்களேன்."
தோல்வியடைந்த விக்கிரமன் நன்கு அறிந்து பழக்கமான நாடாளுமன்றப் பிரதிநிதியிடம் சென்றான். அவர் தீவிர இடதுசாரித் தலைவர்களில் ஒருவர்.
விக்கிரமன் தொழிற்சங்க செய்தி வெளியிட முயன்ற அனு பவம் தொட்டு பொதுக்கூட்டப் பிரச்சனைவரை யாவையும் கூறினான்.
'நீங்க நாடாளுமன்றப் பிரதிநிதியாக தேர்தல் திருவிழாவில் தேர்ந்தெடுக்கப்பட்டுச் சென்றீர்களே. அங்கே உங்களால் என்ன சாதிக்க முடிந்தது? இன்னும் எம் பி. என்ற பதவியையெல்லாம் காப்பாற்றிக் கொண்டிருக்கிறீர்களே. இன்றைய நிலைக்கு நீங்களும் உடந்தை என்றுதானே கூறவேண்டும்.”
விக்கிரமனின் வார்த்தைகள் கடுமையாகவே ஒலித்தன.
'நீ சிறியவன். இன்னும் அரசியல் அனுபவம் போதாது சகோ தரா. இன்றைய நிலை ஒரு வகையான பாசிசமே. நாடாளுமன்ற மும் ஒன்று இருக்கிறது. அங்கே மட்டும் எங்களால் ஓரளவு கத்த முடிகிறது."
"ஓ அதுதான் சலசலப்பு ஏற்படுத்தும் இடம், சற்ற பொக்ஸ்"
என்று லெனின் பெயரிட்டார் போலும்.”
விக்கிரமன் நளினமாகச் சொன்னான்.
"நாங்களும் அதைத் தெரிந்துகொண்டுதான் அங்கு நுழைந்துள் ளோம். இன்றைய சூழலில் எமக்கும் வேறு வழியே இல்லை."
"இதைத்தான் தற்காலிக ரக்ரிக்ஸ்", அரசியல் தந்திரம் என் றும் சொல்லுவீர்கள். அப்படித்தானே.”
"நாமும் பார்ப்போமே" என்று கூறியபடியே விக்கிரமன் எழுந்தான். s (15-4-90)
- 18 -

ழ், மன்னனும் ஒரு பசுவும் ઝં 茨 滨 55.5355.53555.53555.5355.53553
Tெயில் மணி கணிர் என ஒலித்தது.
நீண்ட காலமாக ஒலிக்காத மணி ஓசை கேட்டு எல்லாள மன் னன் அதிர்ச்சியடைந்தான்.
அனுராதபுர ஆட்சிக் காலத்தில் மன்னனது வாயில் மணி ஒலித்த நாட்களை அவனால் விரல்களினால் எண்ணிவிடக் கூடும்.
வாயிலை நோக்கிப் புறப்பட மன்னன் உடனே எழுந் தான்.
வாயிற் காவலன் ஓடி வந்தான்.
"வாயிலில் யாரங்கே?' மன்னனின் குரல் ஒலித்தது.
"கிராமத்துக் குடியானவன் பதட்டமடைந்த பசுவோடு காத்து நிற்கிறான்."
மன்னன் வாயிலில் வந்து "உன் குறை என்னவோ’ என்று தணிந்த குரலில் கேட்டான்.
"மன்னா இந்த வாயில்லாப் பிராணியின் முறைப்பாட்டைக் கூறவே வந்துள்ளேன்."
'பசுவுக்கு என்ன பதட்டம்? என் ஆட்சியில் எவராவது பசுவை யும் கொல்ல முனைந்தார்களா?
மன்னன் கண்ணிர் வடித்த பசுவைப் பார்த்தபடி குடியானவனி டம் கேட்டான்.
*அதன் பயமறியாத பச்சிளம் கன்று கொலை செய்யப்பட்டு விட்டது."
"யார் அவன் கொன்றவன்? எப்படிக் கொல்லப்பட்டது?
*தேர்க்காலில் அகப்பட்டுக் கொலையுண்டது."
"யாருடைய தேர் அது?
- 19 -

Page 12
"தங்கள் ஏக புத்திரனது" மன்னன் ஒரு கணம் அதிர்ச்சியடைந்தான். ஆயினும் நிதானத் தையும் நடு நிலையையும் கைவிடவில்லை.
"அவனை அழைத்து வா?
காவலாளிக்கு மன்னன் ஆணையிட்டான்.
இளவரசன் சிறிது நேரத்தில் அங்கே அழைத்து வரப்பட்டு விசா ரிக்கப்பட்டான்.
“பசுக் கன்றே தேர்க்காலில் ஓடிவந்து விழுந்து விட்டது" இளவரசன் தயக்கத்தோடு கூறினான். *அப்படிச் சாட்டுக் கூறித் தப்பி விட முடியாது. நீ வேகமாகத் தேரை ஓட்டியிருப்பாய். பசுக்கன்று மட்டுமல்ல பிற உயிர்களைப்பற்றி நீ கவலைப்படவில்லை. உன் கவலையீனத்திற்குரிய தண்டனையை நீ பெற வேண்டும். அப்பொழுதே நீ திருந்தி உயிர்கள் மேல் கருணை காட்டி தக்க மன்னனாக வர முடியும்." m
"என் தவறை ஏற்றுக்கொள்கிறேன். இனிமேல் இப்படியான தவ றைச் செய்ய மாட்டேன்".
இளவரசன் கருணை வேண் டி மன்னனிடம் ம ன் னி ப் புக் கோரினான். S.
"இத்தவறை நீ எதிர்காலத்தில் மறந்து விடாதிருக்கக்கூடிய தண் டனை தர வேண்டும். பசுவுக்குரிய தொகையை இக்குடியானவனுக்கு நீ வழங்க வேண்டும், ஒராண்டுக்கு நீ தேரோட்டுவதை நிறுத்த வேண் டும்.இப்பசுவை நீராட்டி உணவு கொடுத்து வளர்ப்பது உன்பொறுப்பு. கன்றை இழந்த அதன் துன்பத்தை உன் சேவையால் துடைக்க வேண்
ம். - W
மன்னன் தன் தீர்ப்பை வழங்கினான்.
முதலாளித்துவ ஆதிக்கம்
*சர்வதேசக் கம்பனிகளின் முகாமைத்துவ அறைகளிலே பண்டங் கள் பற்றிய கொள்கைகள் தீர்மானிக்கப்படுகின்றன. இதன்மூலம் கோடிக்கணக்கானோரின் வாழ்வும் தீர்மானிக்கப்படுகிறது. அக்கம்பனி களே உலக பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்தி முகாமைத் துவப்படுத்தி உரிமையாக்கியுள்ளது." - கிலோமொன் ரேயின்
இக்கூற்றில் உண்மையுள்ளது. ஆயினும் "சர்வதேசக் கம்பனி ஆதிக்
கம் என்பதிலும் பார்க்க "முதலாளித்துவம்’ என்று கூறுவதே சரியாகும். - ஆர்தர் மக்சிவான்
حبس 20 منتس

யுத்தமற்ற உலகம்?
- கார்ல் மர்லானி -
இன்றைய கிழக்கைரோப்பிய மாறுதல்கள் யுத்தமற்ற உல கைக் கொண்டுவரலாம் என சில அரசியல் விற்பன்னர் ஆரூடம் கூறுகின்றனர். அதன் அடிப்படையில் ஐரோப்பிய - கம்யூனிச அணி யைச் சார்ந்த கார்ல் மர்ஸானி என்ற அமெரிக்கரின் சில கூற்றுக் களைக் காண்க. சமாந்தர நிலையிலிருந்து முதலாளித்துவ, சோஷ லிச அமைப்புகளின் போட்டி ஏற்படும் காலம் வந்துள்ளதாகவும் சிலர் கருதுகின்றனர். அடிமைகளை வைத்தாண்ட அமெரிக்காவால் இனவாதத்தையே விட்டுவிட முடியா நிலையில் உள்ளது எனவும் அன்னார் கூறுகிறார். ஆ + ர்.
மக்னமாரா, பண்டி (BUNDY) ஆகிய இரு அமெரிக்க மூத்த அரசியல் தலைவர்களும் இன்று ஏற்பட்டுவரும் நிலையில் இனிமேல் அணு ஆயுத யுத்தம் ஏற்படாது. ஏற்பட முடியாது என்கின்றனர். அதன்படி மரபு யுத்தமே நடைபெறாது என்றும் கொள்ளலாம்.
யுத்தம் ஏற்படாவிடின் அரசியல் நிலையில் பல மாற்றங்கள் ஏற்படும் சோவியத்தின் டாங்கிப்படையின் உச்ச நிலையும் அமெ ரிக்காவின கடற்படை வலுவும் அத்தியாவசியமற்றதாகும். பல்லா யிரக்கணக்கான அணு ஆயுதங்களை அழித்துவிடலாம். கிழக்கைரோப் பிய நாடுகள் தாம் விரும்பியவாறு நடந்துகொள்ளலாம்.
யுத்தமில்லாவிடின் மக்னமாரா கூற்று சரியாகும்; புதிதாக நாம் சிந்திக்கவும் வேண்டும்.
அவ்வாறாயின் இஸ்ரேல், லெபனான் அல்லது ஆப்கானிஸ்தான் சிக்கலை தீர்க்கமுடியுமா? பிரேசில், ஈராக், பங்களாதேஷ் அல்லது இன்னோரன்ன பிறநாடுகளில் ஏற்படும் சமூகப் புரட்சிகளை கையாள முடியுமா? ஐ. நா. சபையும் வல்லரசுகளும் இணைந்து ஒப்புக்கொள் ளும் சமாதான நடவடிக்கைகள் செயற்படுத்தப்படவேண்டும்.
யுத்தமில்லாவிடின், அமைதியான புரட்சி வெறும் சமூகக் கற். பனையாகாது; நீண்ட காலமாகிலும் பிரயாணத்தின் முதிதற் காலடி யாக இருக்கும்.

Page 13
யுத்தமில்லாவிடின் முதலாளித்துவமும் சோஷலிசமும் சமநிலையி லிருந்து போட்டியிடும். பழமை எப்படியிருப்பினும், எதிர்காலம் எப் படி நிலை மாறினும் (முதலாளித்துவ பொருளாதார வீழ்சிச் எத் தனை மோசமாயினும்) இரு சமூக முறைகளுக்குமிடையில் போட்டி தொடரவே செய்யும்.
அமெரிக்க புளோரா லூயி பின் வருமாறு எழுதுகிறார் :
"சோவியத் வெற்றி பெறும் ஆபத்து இருப்பின் அது அவர் களது சமூகத்தின் பலத்தினாலல்ல எமது பலவீனத்தால். 6 TLDE இளைஞர்கள் கல்வியில் குறைபாடுள்ளவராயுள்ளனர். கற்கும் ஆர்வ மற்றவர். வெற்றுமனைகள் இருந்தபோதும் வீடற்று, பூங்கா விலும் தெருக்களிலும் வாழ்பவரை நாம் உற்பத்தி செய்கிறோம் சிறந்த சமூக அமைப்பைக் கட்டும் வாய்ப்பு நம்மிடம் உள்ளது ஆனால் நாம் செயற்படுத்த வேண்டுமே. .'
சோஷலிச நாடுகளுக்குப் பிரச்சினைகள் உள்ளன. முதலாளித்து வத்திற்கும் உள்ளன. வெற்றிகொள்ள முடியாது என்று கருதிய ஜெர்மன் படையை முறியடித்த நாட்டில் இன்றைய பிரச்சனையைத் தீர்க்கமுடியாது என்று கூற முடியாது. இராணுவத்தில் மட்டும் வல் லரசு என்று சிலர் கூறலாம். சோவியத் தயாரிக்கும் விமானங்கள் அமெரிக்காவினதிலும் சிறப்பானவை, r
அடிமைகளை வைத்துவளர்ந்த நாடு இனவாதத்தை விட்டுவிட மாட்டாது. கல்வியில் தேர்ந்த கோடிக்கணக்கானவரை இறக்குமதி செய்யும் நாடு (குடிவரவாக) அடுத்த பரம்பரைக்குக் கல்வியூட்டப் போவதில்லை, வேலை வழங்கப்போவதில்லை; போதைப் பொருட் களின் அழிவிலிருந்து தப்புவதற்கு வீடுகட்டித் தரப்போவதில்லை.
இந் நிலையில் IG) மாற்றங்கள் ஏற்படுவது தவிர்க்கமுடியாதது. அமெரிக்கா இராணுவ தளபாட உற்பத்தியை ஒழிக்க நேரும். நாம் நடந்துவந்த பாதையைப் பார்ப்பின், குறிக்கோள்களை நோக்கின், குறைகள் இருப்பினும், இரு அணிகளிலுமே காணலாம். ஆயினும் நன் நோக்குப் பார்வையே வேண்டும். எதிர்காலம் சூனியத்தில் முடி யப்போவதில்லை, சிறப்புகளை கம்பியூட்டரில் இட்டு ஒத்திணைத்துப் பார்ப்பின்சோஷலிசமே கூடிய சிறப்பான அமைப்பாக அமையும்.
۶- سینB2 نامیم.

உலக மக்களது மதச் சார்பற்ற ஒரே
- செ. க. --
§&
வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் மக்கள் சடங்காசாரங் களில் ஈடுபட்டு புனித நாளாகக் கொண்டாடுவதே விழாவாகிறது. *
*சடங்காசார கருமங்கள் மத நம்பிக்கைகளோடு தொடர்புற்று நிற்பவை" என பேராசிரியர் கா. சிவத்தம்பி கூறுவார். " " " ، ...."
வெறும் நம்பிக்கை, மதங்கள் போன்ற கருத்தியலைக் கட்ந்து நிற்கும் ஒரு விழாவே மேதினமாகும். −
பிற விழாக்களெல்லாம் ஆங்காங்கே மதம் சார்ந்தவர்களிடையே மட்டுமே கொண்டாடப்படுகிறது. V,' ʻ. ? • ° X
மேதினம் மட்டுமே உலகெங்கும் அனைத்து நாடுகளிலும் உழைப்பவர்களால் கொண்டாடப்படும் திருநாளாகும்.
உழைக்கும் மக்களில்லாத நாடு கிடையாது. உலகத் தொழி லாளர்களது எழுச்சி நாளாக, “உழைப்பவர்க்கே உலகம் சொந்த மானது” என்ற நினைவாகக் கொண்டாடப்படும் தினம் மேதின்மே."
தொழில் வளம் மிக்க அமெரிக்காவிலேயே மேதினம் ஆரம் பித்தது வியப்புக்குரியதல்ல. − . . . .
தொழிலாளர்களது ஐக்கியத்தையும் தொழிற் 'சங்கங்களது: பலத்தையும் அறிந்த ஏகாதிபத்திய அரசு உலகச் சூறையாடலில் அவர்களுக்கும் ஒரு பங்கைத் தந்து அவர்களது புரட்சி உணர்வை தற்காலிகமாகத் தடுத்திருக்கலாம். ...Y
இன்று அமெரிக்காவிலேயே நிலைமை மாறி வருகிறது. பற்: றாக்குறை பட்ஜெட்டால் பணவீக்கம் ஏற்பட்டு தொழிலாளர் இன்று:
- 23 -

Page 14
இன்னலுறும் காலகட்டத்தில் நுழைந்துள்ளனர். அவர்கள் வீறு கொண்டெழும் காலம் தூரத்திலில்லை.
மற்றைய முதலாளித்துவ நாடுகளிலும் தொழிலாளர்கள் தூங்கி விடவில்லை. அன்னாரின் ஐக்கியமும் போராட்டங்களும் முதலாளித்துவத்தை அச்சுறுத்திக்கொண்டே இருக்கின்றன.
சோஷலிச நாடுகள், தமது முதலாளித்துவ அமைப்பை நோக்கி முன்னேறுவதாக முதலாளித்துவம் பிரச்சாரம் செய்துகொண்டிருக் கின்றது. இதன் மூலம் தொழிலாளர்களின் வர்க்க உணர்வை மழுங்க லடித்து விடலாம் எனக் கனவும் காண்கின்றது.
அமெரிக்கத் தொழிலாளர்கள் எட்டுமணி வேலைப் போராட் டத்தை மே முதல் நாளன்று 1886ல் ஆரம்பித்தபோது மார்க்ஸ், ஏங்கெல்சை அவர்கள் கற்றிருக்கவில்லை. தாமே வர்க்க உணர்வால் ஐக்கியப்பட்டுப் போராடி வென்றனர். இன்று உலக நாட்டுத் தொழி லாளரெல்லாம் மேதின வெற்றியை அனுபவிக்க முடிந்தது.
இன்று மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் குரல்கள் உலகெங்கும் ஒலிக்கின்றன. மேதினத்தில் அன்னார் படங்களையும் மணிமொழி களையும் ஊர்வலங்களில் தாங்கிச் செல்கின்றனர்.
முதலாளித்துவ உலகமே, சோஷலிசம் தோற்றுவிட்டதாகப் பிரசாரம் செய்யும்போது தொழிலாளர்கட்கு மார்க்ஸ், லெனின், மாவோ போன்ற சோஷலிச முன்னோடிகளை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
தொழிலாளி வர்க்கத்தவர் அத்தனை சோடைபோனவரல்ல.
முதலாளித்துவ அமைப்புக்குள்ளேயே அதை அழிக்கும் கருவும் வளர்கிறது என மார்க்சே கூறினார்.
தனிச் சொத்தற்ற பாட்டாளிகளின் உலகைக் கட்டி எழுப்ப
மார்க்சும் ஏங்கெல்சும் 1848லேயே வழி கூறினர்:
“உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்."
மேதின விழா இன்று அவர்களது குரலின் வெற்றி விழா வாகத் திகழ்கிறது.
- 84 -

எங்கும் விற்பனையாகிறது
‘தமிழவேள்' எழுதிய தமிழ் - ஆண்டு 9
ரூபா 14,00
தமிழ் - ஆண்டு 10
ரூபா 15.00
பயிற்சி விளக்கங்கள் விடைகளுடன்
மாணவர்க்கும் ஆசிரியர்க்கும்
பயன்படத்தக்க அரிய நூல்கள்
கணேசர் - சிவபாலன் எழுதிய உயர்தர இரசாயனம்
Μη μπ 90,00 A. L. வகுப்பு பாடிநூல் w
விற்பனையாளர்க்கு கழிவு உண்டு குமரன் புத்தகசாலை 201, டாம் வீதி, கொழும்பு - 12.
Tel: 421 388

Page 15
KUMARAN-76 co-os
குமரன்
(UPதலாளித்துவம் சோ ஷ வி தாயின் எத்துறைகளில்? பொருள இராணுவ பலத்திலா? கலை, சவு சோஷலிச அமைப்பை வென்று கிறார்.
மேதின விழா ஒன்றே உல உழைக்கும் வர்க்கத்தை இணைப்பு தும் மதம் சார்ந்தவை. மே பார்க்கி,
"ஆசிரியர் முதல் அரசியல் வ நாயக உரிமைகளை நாடிச் செ இன்றைய பிரச்சனையைக் கோடி
அம்பேத்காரின் நூற் றாண் என்ற சாபக்கேடு என்ற கட்டுை கருத்தியலையும் கூறுகிறது.
அமெரிக்காவும் சோவியத் யூ சப் போக்கைக் கடைப்பிடிப்பதாக மற்ற உலகைக் கட்டுவதாகவும் யில் ஏற்படும் போ ட் டி யி ல் எ பெறும். சிறு கட்டுரை காண் சு.
யதார்த்த நெறியான கலை, பொருத்தமான மாந்தரை, வகை மைகளில் சித்தரிக்கவேண்டும், ! சமூக முரண்பாடுகளை வளர்ச்சிட் அது புரட்சிகர இயக்கங்களது ெ கனங்களை மாதவன் முன் வைக்
அச்சு குமரன் அச்சகம், ஆசிரியர் : செ. கனேசவிங்க

201, DAM STREET, 1990) COLOMBO-12.
T குரல்
ச சமூக அமைப்பிலும் உயர்த்தி ாதாரத்திலா? அரசியலமைப்பிலா? ாசாரத்திலா? எ த் துறை யிலும் விடவில்லை என மதி" நிரூபிக்
கி ன் மிகப் பெரும் விழா உலக பது, மற்றைய விழாக்கள் அனைத் தினத்தை ஒட்டிய கட்டுரையை
ாதிவரை" என்ற சிறுகதை ஜன ல்லும் தொழிற் சங்க வாதியின் ட்டுக் காட்டுகிறது.
டை ஒட்டிவரும் சாதி அமைப்பு ர அன்னாரின் சாதனைகளையும்
ஈரியனும் உலகச் சுரண்டலில் சமர ா ஒரு குரல் இருக்கும்போது யுத்த கூறப்படுகிறது. அத்தகைய நிலை 'த்தகைய சமூக அமைப்பு வெற்றி
இலக்கியம் வகை மா தி ரி க்கு ப் மாதிரிக்கு பொருத்தமான நிலை அது வரலாற்றுனரிவு கொண்டது
போ க் கி ல் சித்தரிக்கவேண்டும். காள்கைக் குரல் என வரைவிலக்
கிறார்.
= ஆசிரியர்
SASSSLS SSS D DD D S SLS S
2011 டாம் வீதி, கொழும்பு-12,