கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: குமரன் 1990.06.01

Page 1
மலையகத்தொழி வந்த உல்லாசப் ப
- "மதி
புதிய ஏகாதிபத் யப்பானியர்களும்
இலங்கை பெளத்
- மாதவன்
கேள்வி ? பதில்
வேல்
கவிதைகள் - சுபத்திரன்
- சாருமதி கம்யூனிசத்திற்கு
- "தியாகு"
வீடு என்பது செ
- சே, க.
ரஜனிகாந்தும் اوو
-
 
 

யணிகளல்லர்
வந்துவிட்டார்கள்
தர்களிடை புதிய புயல்
எதிரான யுத்தம் 1848 - 1989
ார்க்கமல்ல
Sழ் திரைப்படமும்

Page 2
三 அரிய நூல்கள் மீண்டும் கிடைக்கும்
7.
18.
19.
20.
பெண்ணடிமை தீர 歸 象
குமரனுக்குக் கடிதங்கள்
போர்க்கோலம் ps
மண்ணும் மக்களும்
அயலவர்கள்
பொய்மையின் நிழலில் 9 is அந்நிய மனிதர்கள் வதையின் கதை கலையும் சமுதாயமும் குந்தவிக்குக் கடிதங்கள்
மான்விழிக்குக் கடிதங்கள்
சிறுவர்களுக்கான சிந்தனைக் கதைகள் அபலையின் கடிதம் சொந்தக்காரன் பெனடிக்ற் பாலன்
மக்கள் தொடர்பு சாதனமும் மகளிரும்
சூரியன் கிழக்கில் உதிப்பதில்லை செ. கணேசலிங்கன் 33.00
48.00
2.00
卫4,25
10.50
45。00
37.50
13.50
15.75
I I.25
18.00
16. 50
24.00
3.75
13.50
சந்திரிகா சோமசுந்தரம் 21.00
மதமாற்றம் - நாடகம் அ. ந. கந்தசாமி 30.00 கைலாசபதியும் நழனும் கே. எஸ். சிவகுமாரன் 12.00 மரணத்திற்குப் பின் பொ. சங்கரப்பிள்ளை 45.00
சைவசித்தாந்தம் 姆 象 30.00
விற்பனையாளர்க்கு கழிவு உண்டு. வி. பி. பி. ஏற்கப்படும். முன்பணம் அனுப்புவோருக்கு பார்சல் செலவு இணும்.
குமரன் புத்தகசாலை
201, டாம் வீதி, கொழும்பு - 12 தொலைபேசி 421388

மலையகத் தொழிலாளர் விசா’வில் வந்த
உல்லாசப் பயணிகளல்லர்
- *மதி" VM
இலங்கையின் அடிப்படைப் பிரச்சினைகள் பல உள. அவை எளிதில் தீர்க்கக் கூடியவையல்ல. அவை தலைகாட்டத் தொடங் கும் வேளைகளில் அரசு யந்திரம் பிற பிரச்சினைகளைக் கிளப்பி தன் ஆதிக்கத்திலுள்ள வெகுஜனத் தொடர்பு சாதனங்கள் மூலம் அவற்றைப் பூதா காரமாக்கி அடிப்படைப் பிரச்சினைகள் எழாதபடி தடுக்க முயல்கிறது. பல தடவைகளில் வெற்றியும் பெறுகிறது.
புதிய பிரச்சன்ைக் கிளப்பி நாட்டைத் திசை திருப்புவதில் பெருந்தோட்ட அமைச்சர் ரஞ்சன் விஜயரட்ன திறமையானவர். அண்மையில் இந்திய பாஸ்போட் பெற்ற இந்திய வம்சாவழியினரை கப்பலேற்றப் போவதாக ஒரு குண்டைத் தூக்கிப்போட்டார். அக் குண்டு பலருக்குப் பல பிரச்சனைகளை ஏற்படுத்தியது. அடிப்படைப் பிரச்சனைகள் இவ்வாறு தற்காலிகமாக திசைதிருப்பப்பட்டன.
மலையக மக்கள் முன்னணித் தலைவர் சந்திரசேகரன் தோட்டம் தோட்டமாகச் சென்று நாடுகடத்துவதற்கு எதிர்ப்பிரசாரம் செய் தார். இச்செயல் அரசோடு இணைந்து செயல்படும் தோட்டத் தொழிற்சங்கத்தவரைப் பாதித்தது. மேலிடங்களுக்கு முறையிட, அவர் கைதுசெய்யப்பட்டார்?
மக்கள் எழுச்சியும் குரலும் சந்திரசேகரனுக்கு ஆதரவாக இருந் தது. தோட்டத் தொழிலாளர் வேலை நிறுத்தம் செய்தனர். உண்ணா விரதம், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இலங்கையில் இன்றைய பயங்கர அரசியல் சூழலில் வேலை நிறுத்தம், ஆர்ப்பாட்டம் செய் யத் துணிந்தவர் மலையகப் பாட்டாளி மக்களே என்பதை நாம் காண்கிறோம். பிற இடங்கள் எங்கும் இன்றைய பாசிசப்போக் கிற்கு எதிர்நடவடிக்கை எடுப்பதைக் காணமுடியாது.
சந்திரசேகரனின் குரல் வெற்றிபெற்றது. விடுதலை செய்யப்
பட்டார்.
இந்திய வம்சாவழியினரில் கடவைச் சீட்டுப் பெற்றோரை நாடு கடத்துவதற்கு இன்று எதிர்ப்புக்குரல்கள் வலுத்து வருகின்றன.
سست 11 سس۔

Page 3
இத்தொழிலாளர்கள் விசா பெற்றுவந்து மேலதிக நாட்கள் தங் கும் உல்லாசப் பயணிகளல்ல என புதிய செங்கொடி சங்கத் தலை வர் என் சண்முகதாசன் கூறியுள்ளார்.
சிறிமாமோ சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் பாஸ்போர்ட் பெற்றவர் கள் இறந்து விட்டார்கள். அவரது அடுத்த பரம்பரையினரை பலாத்காரமாக அனுப்ப முடியுமா என பிற தொழிற் சங்கங்கள் கேட்கின்றன. உழைக்கும் மக்களுக்கு மனிதாபிமானம், மனித உரி மை 9ள் காட்டப்பட வேண்டும் என வேறு குரல்களும் முன்வைக் கப் படுகின்றன. .
ஈழ விடுதலைப் போராளிக் குழுக்கள அனைத்தும் நாடு கடத்
துவதை எதிர்ப்பது மட்டுமல்ல வட, கிழக்கில் குடியேறவும் அனுமதி வழங்கத் தயாராக உள்ளனர்.
இந்திய அரசு 1987ம் ஆண்டு ஒப்பந்தத்தை முன்வைத்து இலங்கை அகதிகளோடு பரிமாற்றம் செய்யத் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது. இவ் ஒப்பந்தத்தை மீறின் இலங்கையோடு செய்து கொள்ளப்பட்ட சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம், கச்சத்தீவு ஒப்பந்தம் யாவையும் நிராகரிக்கலாம் என புதுடில்லி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அச்சுறுத்துகிறது.
உலகில் எந்த நாட்டிலும் எமது தோட்டத் தொழிலாளர் பந் தாடப்பட்டது போன்ற பயங்கர விளையாட்டு நடைபெறவில்லை.
முதலில் அவர்கள் மக்களா சவே கருதப்படவில்லை. பிரிட்டிஷ் காரர் கூலிகளாகக் கொண்டுவந்து தே? 'டங்களில் குடியமர்த்தினர்.
இலங்கையர்க்கு அரசியலுரிமை வழங்கியதாகக் கூறி வாக்குரிமை யும் வழங்கினர்.
சிங்கள உயர் குடியினர் இது தமக்கு ஆபத்தானது எனக் கண்டு, தொழிலாளி வர்க்கத்தையே நசுக்குவதாக, அவர்களின் குடியுரி மையை சட்டமியற்றிப் பறித்தனர்.
இதற்கு எதிராக 42 ஆண்டுப் போராட்டம் நடத்தியும் பிரச் சினை தீர்ந்ததாயில்லை. இடையே ஒப்பந்தங்கள் எழுத்து உழைக்கும்
மக்கள், பண்டமாகக் கருதப்பட்டு பரிமாற்றம் செய்யப்பட்டனர்.
தொடர்ச்சி 3ம் பக்கம் 27

புதிய ஏகாதிபத்தியம்
யப்பானியர்கள் வந்துவிட்டார்கள்
1972 ஏப்ரல் குமரன் (11) இதழில் 'யப்பானியர்சளும் வருகிறர்கள்’ என்ற தலைப்புடன் ஒரு கட்டுரை எழுதப்பட்டது. சென்ற 18 ஆண்டு கள் வளர்ச்சியில் யப்பானிய ஏகாதிபத்தியமே வந்து விட்டதான நிலைமை ஏற்பட்டுள்ள ை5:ாவரும் காணாதவர் குருடராவும் இருக்க (ADI- LITTgl.
தெருக்களிலே காணப்படும் கார்கள், வான்கள், லொறிகள் ஆகிய வற்றோடு பலரக யந்திரங்கள், உதிரிப்பாகங்களில் பெரும் பகுதி யப்பா னின் உற்பத்திகளே. வீடுகளுள்ளே காணப்படும் ரேடியோ, டிவி,மின்
2-ம் பக்கத் தொடர்.
ஏற்ற நாடும் இம்மக்களுக்கு தக்க வாழ்வளிக்கவில்லை. அதனா லேயே குடிபெயர்வதற்கும் அஞ்சும் நிலை ஏற்பட்டது.
என்றும் உயராத கூலியில் அடிமைகளாக நடத்தப்படுகிறார்கள் என பிறநாட்டு சமூகவியலாளர் அனைவரும் ஆய்வுரை வழங்கிக் கொண்டேயிருக்கின்றனர். ...
தொழிலாளர் வாழ்வு வளம்பெறவில்லை. கூலி, வசிப்பிடம், கல்விவாய்ப்பு, சுகாதாரம் எதுவுமே உயர வில்லை. வாழ்க்கைச் செலவு மட்டும் ஏறிக்கொண்டே போகிறது.
பெரிய தோட்டத் தொழிற் சங்கங்கள் முதலாளித்துவ spr சோடு ஒட்டி உறங்குகின்றனர்.
பலர் பாஸ்போட்டை இழந்துள்ளனர். இறந்தவர் பலர். வாக் குரிமைக்காகப் பதிந்தவர் பலர். இந்நிலையில் வன்முறையாக நாடு கடத்திப் பார்க்கட்டும்" என்ற குரலும் எழுகிறது. . . .
பொருளாதாரத்திலும் அரசியலிலும் வீழ்ச்சியடைந்துவரும் இந் நாட்டிற்கு தக்க வழிகாட்டி வாழ்வளிக்கத்தக் கவர்கள் இந்நாட்டு உழைக்கும் பாட்டாளிகளே. அவர்களில் பெரும் பங்கினர் மலைய கத்திலேயே வாழ்கின்றனர் என்பதை முற்போக்கு அணியிலுள்ள எவரும் மறுக்க மாட்டார்கள். . . . Y

Page 4
உபகரணங்கள், துணிகள் யாவும் யப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவையே.
எமது ரூபவாகினி டி.வி. நிலையம் யப்பானியரின் கடன் உதவி யிலேயே கட்டப்பட்டது. அதன்மூலம் லட்சக்கணக்கான டிவி செட்டு களையும் யப்பானியரால் எமக்கு விற்க முடிந்தது.
தென்கிழக்காசியச் சுற்றுப்பயணத்தின் போது யப்பானியப் பிர தமர் ரொசிக்கி கைபு இங்கு 17 மணிநேரச் சுற்றுலாவொன்றை மேற் கொண்டார். எம் நாட்டின் மன்னர் வருவதுபோன்று வரவேற்பு நடந் தது. அதற்குரிய காரணங்களை விவேகமுள்ள அனைவரும் அறிவர். ன்று அமெரிக்க, பிரிட்டிஷ் செய்திகளல்ல யப்பான் செய்திகர் நாள் தாறும் டி. வி.யில் ஒளிபரப்பப்படுகிறது. "ஒசின்" என்ற தொடர் நாட கம் டி. வி.யில் சென்ற இரண்டு, மூன்று ஆண்டுகளாகக் காட்டப்படு கிறது.
இலங்கைக்குக் கடனுதவி வழங்குவது, பண்டங்களை விற்பனை செய்வதில் அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனியே முன்னர் முதலிடம் வகித்தன. சென்ற ஆண்டில் மட்டும் 800 கோடி ரூபா கடனுதவி வழங்கி யப்பான் முதலிடத்தைப் பிடித்துள்ளது. 1200 கோடி ரூபா வுக்குப் பண்டங்களை எமக்கு விற்பனைசெய்துள்ளது.
யப்பானியரின் 105 தொழில் நிறுவனங்கள் இலங்கையில் உற்பத்தி யில் ஈடுபட்டுள்ளன,
யப்பான் எம்மிடமிருந்து தேயிலை, மாணிக்கக் கற்கள் போன்ற ஏற்றுமதிகளை 460 கோடி ரூபாவுக்கு மட்டும் வாங்குகிறது,
யப்பானிய வங்கி (Bank of Japan) அல்லது சின்வா (Sinva) வங்கி விரைவில் கொழும்பிலும் காலூன்றப் போகிறது. மற்ற வங்கிகளை யெல்லாம் இவ்வங்கி ஏப்பமிடுமென்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் 1975இல் உல்கின் மிகப்பெரிய பத்து வங்கிகளும் அமெரிக்க வங்கிகளா யிருந்தன. 1989இல் யப்பானிய வங்கிகள் முதலிடங்களைப் பிடித்து விட்ட்ன. (1975இல் உலகின் மிகப்பெரும் சர்வதேசக் கம்பனிகள் ஐம் பதில் நாற்பத்தொன்பதும் அமெரிக்கரது; 1989இல் பத்தொன்பது மட்டுமே )
இந்நிலையில் யப்பானிய ஏகாதிபத்தியம் என்று கூறுவதில் தவ றில்ல்ை. லெனின் ஏகாதிபத்தியத்திற்கு வரைவிலக்கணம் கூறும்போது மூன்று சிறப்பம்சங்களைக் குறிப்பிட்டார். 1. மூலதன ஏற்றுமதி:2. யம் திர உற்பத்தி மூலதனமும் நிதிமூலதனமும் ஒன்றிணைதல், 3. ஏக போக உற்பத்தி. .
அமெரிக்காவின் நவ காலனியாக இருந்த இலங்கை யப்பானுடைய தாக மாறிவருவதை இன்று காண்கிறோம். ஒரு வேறுபாடு; யப்பான் இராணுவ பலத்துடன் வரவில்லை. பொருளாதார ஆக்கிரமிப்பூட னேயே வருகிறது. அதுவே சமுதாயத்தின் அடிப்படை அமைப்பு. தகைய நிலையில் மகாயன புத்தம் யப்பானிலிருந்து வருவதும் வியப் பில்லையல்லவா?
na A -

இலங்கைப் பெளத்தர்களிடையே * புதிய புயல் *
-- மாதவன் -
சிங்கள பெளத்த மதகுரு வண. பெல்பொல விப்பாசி யப்.ா னில் மகாயன புத்த மதத்தில் சேர்ந்து இங்கு மே மாதக் கடைசியில வருவதான செய்தி ஒன்று வந்தது. அதைத் தொட்டு ஏனைய பெளத்த மதகுருக்கள் கண்டனக்குரல்கள் எழுப்பிய செய்திகள் ரேடியோ, டி. வி, பத்திரிகைகள் ஆகிய அனைத்து தொடர்பு சாத னங்கள் மூலமும் வீசப்பட்டன,
இங்குள்ள தமிழர்கள், முஸ்லிம்கள், பிற மதத்தவர்களே தேர வ. தம், மகா யன பெளத்தம் இரண்டுக்குமுள்ள வேறுபாடுகளையே அறியார். இது என்ன போர்க்கோலம் என்றே வியப்படைகின்றனர்,
இதுவரை காலமும் சிங்கள -பெளத்தம் பற்றியே மக்கள் அறிந் திருந்தனர். புத்த மதத்தில் வேறுபாடா என்று வியப்புறுகின்றனர். பெளத்தர்களாக, பரம்ப உரய வாழும் சிங்கள மக்களே இவற் றின் வேறுபாடுகளை அறியார்.
யப்பான் நாட்டிலிருந்து கிளப்பப்பட்ட இப்புயல் பற்றி அர சின் பிரச்சாரத்தின் மூலம் மக்கள் ஒரு வேறுபாட்டை மட்டும் அறிந்துள்ளனர். -
மகா யன புத்த மதகுருக்கள் சட்டரீதியான திருமண வாழ்வில் இருந்துகொண்டே மதப் பிரச்சாரத்தில், வழிபாட்டில் ஈடுபடலாம். தேரவாத சாசனத்தை ஏற்ற பிக்குகள் (அவ்வாறு சட்டரீதியாக) திருமணம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள். பிரமச்சரியத்தைக் கடைப்பிடித்தே ஆக வேண்டும். அல்லது மதகுரு நிலையிலிருந்து வெளியேற வேண்டும்.
(இவ்விடத்தில் ஒரு மரபை நாம் நினைவில் கொள்ள வேண் டும். புத்த சாசனத்தை முழுமையாக ஏற்று மதகுருவாக வாழ்ப வர் முழுமனிதர். அவர்கட்குரிய கடப்புாடுகள் தனித்துவமானவை, புத்த சாசனத்தை ஏற்று சாதாரண மனித வாழ்வில் ஈடுபடுபவர் அரை மனிதர்கள். மகாவம்சம் இவ்வாறு கணிக்கும் இவர்களது
سی۔ 5 ــــــــــــــ۔

Page 5
கடமைகட்டுப்பாடுகள் வேறானவை. ஏணிதை இங்கே குறிப்பிடுகி றேன் என்றால் சமணமதப் பிரிவில் ஒரே கட்டுப்பாடுகளை இரு பகுதியினருக்கும் விதித்ததாலேயே அம்மதம் வீழ்ச்சியுற்ற காரணங் களில் ஒன்று என வரலாற்றாசிரியர் சிலர் கூறுவர்.)
தேரவாதம், மகாயனத்துக்கிடையே அதிக வேறுபாடில்லை என்று வாதிடும் பெளத்த மதகுருமாரும் உள்ளனர். அவர்களும் வேறுபாட்டை விரிக்காது சமரசம் செய்ய முயல்கின்றனர்.
தேரவாதம் என்ற பாளி வார்த்தை, "மூத்தோர் கோட்பாட் டில் நம்பிக்கை வைப்போர்" என பொருள் படும். இதை சிற் றுார்தி (சிறு சைக்கிள்) எனவும் அழைப்பர்;
பர்மா, சயாம் பிற சில தென்கிழக்காசிய நாடுகளுக்கு இங்கி ருந்து பரவியதாகக் கூறுவர் சீனா, யப்பானுக்கு மகாயனம் கங்கை யின் வடபகுதியூடாகவும் தென்னிந்தியா வழியாகவும் சென்றதாக வும் வரலாற்றாசிரியர் கூறுவர். ஏனெனில் இந்தியாவெங்கும் பரவி யது மகாயணமேயாகும். மகாயனம் பேரூர்தி (பெரிய சைக்கிள்) என்பர்.
"மகா சங்கியர்" (மகாயனம்) பெருங்கூட்டத்துறுப்பினர் எனப் பொருள்படும்.
புத்தரின் பரிநிர்வாணத்துக்கு நூற்றாண்டின் பின் வைசாலியில் இரண்டாவது பேரவை கூடிய வேளை சிறு வேறுபாடுகள் காரண மாக பிளவு ஏற்பட்டது என்பர். பின்னரே பல கோட்பாட்டு வேற் றுமைகள் ஏற்பட்டது. தேரவாதத்திலுள்ள புராண, இதிகாசக் கட் டுக் கதைகள் அளவுக்கு மகாயனத்தில் இல்லை. (உ+ம் புத்தர் இருதடவை இலங்கைக்கு வந்தார்) இது ஒரு கருத்து.
மதங்களில் பிளவு ஏற்பட்டு விரிவது விசித்திரமல்ல. எல்லா மதங்களிலுமே பல பத்துப் பிளவுகள் உள்ளன. கிறிஸ்துவம், இஸ் லாம், இந்துமதம் எதுவுமே விதிவிலக்கல்ல. பிரிந்தபின் ஒரு குழு வினர் மற்றவரைத் தூற்றுவதும் “அது சரியான மதமல்ல" என தாக்குவதும் வரலாற்றில் நடைபெற்றுக்கொண்டேயிருக்கின்றன. கத்தோலிக்க மதம் பிளவுபட்டு புரட்டஸ்தாந்து பிரிந்த காலந் தொட்டு 300 ஆண்டுகளாக ஐரோப்பாவில் சிலுவை யுத்தமே நடந் தது. பல லட்சம் மக்கள் கிறிஸ்துவின் பெயரால் கொல்லப்பட்ட னர். கிறிஸ்து நாதரது அகிம்சைக் கோட்பாடுகள் அங்கே மதவெறி tர்களால் இம்சையாக்கப்பட்டன.

உலகிலேயே அகிம்சைக் கோட்பாடுகளை முதன்முதலில் இயக்க மாகப் போதித்தவர் புத்தரும், மகாவீரருமேயாவர். இலங்கையி லுள்ள தேரவாதிகள், புத்த மதத்தைத் தொடர்ந்து வன்முறை மதமாகவே வளர்த்து வந்துள்ளனர் என டாக்டர் குமாரி ஜெய வர்த்தனா கூறுவார். இரண்டாவது உலக யுத்தத்தின்போது மகா யன பெளத்த யப்பானியர் காட்டிய வன்முறை வரலாற்றில் இரத் தத்தால் பொறிக்கப்பட்டுள்ளது. அதை ஒடுக்க கிறிஸ்தவ அமெ ரிக்கா போட்ட அணுகுண்டுப் பேரழிவுகளை உலகம் என்றுமே மறந்து விடப்போவதில்லை.
நரி கார்சுனா என்ற தென் இந்திய சித்தாந்த வாதியே தன் குழுவினருடன் மகா யனப் பிரிவை கி. பி. 6ம் நூற்றாண்டு வரை யில் ஏற்படுத்தி வடக்கேயும் பரப்பினார் என பூரி ஜயவர்தனபுர வரலாற்றுப் பேராசிரியா மென்டிஸ் ரோகணதீப கூறுவார். List யனம் தென்னிந்தியாவிலிருந்து யப்பான் சென்றதனலாலேயே மதத் தோடு சென்ற திராவிட சொற்கள் அங்கு வேரூன்றின என கூறு வோருமுளர். (டாக்டர்கள் திரு. திருமதி சண்முகதாஸ் போன்றோ ரின் ஆய்வுகள் நடைபெறுவதை யாவரும் அறிவோம்)
பேராசிரியர் பசாம் (BASHAM) தன் "வியத்தகு இந்தியா" என்ற புகழ் பெற்ற நூலில் கிரேக்கர், பாரசீகர் ஆகியோரின் வட இந்தியப்படையெடுப்புகளோடு அந்நாடுகளின் சித்தாத்தங்களும் பெளத்தத்தில் தாக்கம் ஏற்படுத்தியதன் விளைவாகவே மகாயனம் தோன்றி இந்தியாவில் பரவியது என்கிறார்.
சீன யாத்திரிகர் கி. பி. 400 வரை இந்தியா வந்தபோது அங்கு புத்த மதத்தில் 18 பிரிவுகள் இருந்ததாகவும் 4 பெரும் பிரிவுகள் இருந்ததெனக் குறிப்பிட்டிருப்பதாகவும் சித்தாந்தப் பேராசி ரியர் T. M. P. மகாதேவன் எழுதியுள்ளார்.
இம் மத வேறுபாட்டு ஆராய்ச்சியை சிறிது நிறுத்தி இவ் வேளை இங்கு ஏன் இம் முரண்பாடு கூர்மையடைகிறது என்று நோக்கின் பல சுவையான, வேதனையான செய்திகளை ஊகித்தறி யலாம்.
சென்ற குமரன் (76) இதழில் "தியாகு" எழுதிய "சாதிஅமைப்பு என்ற சாபக்கேடு’ என்ற அம்பேத்கார் பற்றிய கட்டுரையில் அடைப் புக் குறிக்குள் ஒரு உணமையைக் கூறியிருந்தார். அது வருமாறு: இலங்கையில் சிங் ள பெளத்த மதத்தவர்களிடையே சாதிஅமைப்பு இன்றும் நிலவுவ ை+ காணலாம்.
-- .7 ܒܩܘ

Page 6
டாக்டர் அம்பேத்கார் புத்த மதத்தில் சேர்ந்தார் எனின் அது மகாயனமாகவே இருக்க முடியும். ஏனெனில் தேரவாதம் இலங்கை யில் வேறு வகையில் அமைந்துள்ளது. மகாயன சீனா, யப்பானி லும் சாதிப் பாகு பாடுகள் மிக அரிதே.
இலங்கையில் நிலவுடைமை கொய் கம (வேளாளர்) சாதியின ரின் பிரதிபலிப்பாகவே தேரவட புத்தமும் மல்வத்தை, அஸ்கிரிய,
மகாநிக்சாய மகா நாயக்கரின் மத பீடங்களும் உள்ளன.
இலங்கை வரலாற்றில் முதன் முதலாக ஜனாதிபதி பிரேமதாச அவர்கள் தன் பதவியேற்பு வைபவத்தையும் சத்தியப் பிரமாணத் தையும் கண்டி தலதா மாளிகையில் மகாநாயக்கர் ஆசீர்வாதத் துடன் ஏற்றுக் கொண்டார். இது வரலாற்றுச் சிறப்பு மிக்கதே.
கரையோரச் சிங்கள மக்களின் பெளத்த மத பீடத்தவர் உயர்
குழாத்தினரால் நீண்ட காலமாக ஒதுக்கப்பட்டு வந்ததை <架6ö)6ö7 வரும் அறிவர். இவர்கள் இன்று சமநிலை பெறும் நோக்கில் மகா யன பெளத்தத்தை முன்வைக்கின்றனர் என்பதை ஊகிக்க (LP 9
கிறது. நில ஆட்சி, பணத்தால் தேரவட மகாநாயக்கர் உயர் நிலை யில், உயர் குடியினராகவும் உள்ளனர். யப்பான் இன்று பொருளா தார ரீதியில் இலங்கையின் முதன்மையான பொருளாதார ஆக்கிர மிப்பு நாடாக விளங்குவதை அனைவரும் அறிவர். அத்துடன் மதச் செல்வாக்கும் நுழைவது வியப்பல்ல. வரலாறு, பூராவும் இப்போக் கிற்குச் சாட்சி பகரும்.
மத ஆதிக்கம் அரசியல், பொருளாதாரத்திற்கு அப்பாற்பட்ட தல்ல. இன்றைய சூழலில் ஜனாதிபதி இரண்டு போக்கிற்குமிடை யில் சமரசம் கொண்டு வருவது அத்தனை எளிதல்ல. அவருக்கு மதிப்பளித்த மகாநாயக்கரை அவர் ஒதுக்கிவிட முடியாது. மறுபக் கத்தில் வளர்ச்சிகண்ட சித்தாந்தமும் அரசியலில் அவருக்கு ஆதரவு வழங்கும் மக்களும் உள்ளனர்
எவ்வாறு நோக்கிலும் இன்று இலங்கையில் வெளிப்பட்டு சந் திக்கு வரும் பெளத்த முரண்பாடு வளர்ச்சியடையவே செய்யும். நிலப் பிரபுத்துவம் உடைந்தவேளை அதன் கருத்தியல்களிலும் மாற் றங்கள் ஏற்படவே செய்யும்.
பல்கலைக் கழகங்களிலும் மடங்களிலும் சேரும் இன்றைய இளைஞர்கள் புதிய குரல்களை எழுப்பவே செய்வர். உலகின் பல நாடுகளில் பல மதங்களிடையேயும் இப்போக்குகளைக் காண்கிறோம். (தொடரும்)
- 8 -

கேள்வி ? பதில்
வேல்"
கே. வெகுசனத் தொடர்பு சாதனங்கள் மூலம் அரசு நாட்டின் உண்மை
கே.
நிலையை மக்களுக்கு தெரிவிக்கத் தவறுகிறது எனக் கூறுவேன்
க. சிவலிங்கம், கொழு. பு
எல்லா விஷயங்களிலும் அரசு அவ்வாறு செய்கிறது என்று கூறி விட முடியாது. உதாரணமாக, நாட்டில் வறுமை நிலவுகிறது. அதை அகற்ற அரசு திடசங்கற்பம் செய்துள்ளது என்று அடிக்கடி ஒரு உண்மை நிலையைக் கூறிவருவதை நாம் பாராட்ட வேண்டும். இதைக் கூறும்போது 13 ஆண்டுகள் யு. என். பி. ஆட்சியால் வறுமையை ஒழிக்க முடியவில்லை என்பதை நாம் ஊகித்தறிய வேண்டும். ஜனசக்தித் திட்டத்தின் வெற்றியை மாற்று அரசு ஏற்படினே நம் முற்றாக அறிந்துகொள்ள முடியும்! மற் றொரு வேடிக்கை என்னவெனில் இதே கட்சியின் ஜே. ஆர். ஆடசியின் போது ஆரம்பிக்கபபட்ட ‘உங்கள் அதிர்ஷ்டத்தில் நம் பிக்கை வைத்து லட்சாதிபதி ஆகுங்கள்' என்ற பிரச்சாரம் மகாஜன சம்பத், லொட்டோ, செவன சீட்டிழுப்பு, குதிரைப் பந்தயங்கள ஆகியவை மூலமி தொடர்ந்து கொண்டே இருக்
கின்றன. இது பல லடசககணக்கானவாகளை ஏழைகளாக்கி ஒரு சிலரைப் பணக்காரராக்கும் போக்கு என்பதை விவேக முள்ள அனைவரும் அறிவர். ஜனசக்தி திட்டத்திற்கு எதிர்மாறாக இது தோன்றுகிறது. இது நிற் க, அரசு யந்திரத்தின் வெகுஜனத் தொடர்பு சா த ன நீங்க ள் யாவும் ஆளும் வர்க்கத்தின் நலனை ஒட்டியே செயல்படும்
என்ற அடிப்படைக் கோட்பாட்டை நாம் மறந்து விடப்படாது.
புத்த மதத்தில் தேரவட புத்தம், மகாயன புத்தம் என்றுகூட பிரிவுகள் உண்டா? இவற்றுக்குள்ள வேறுபாடுகளை விளக்குவிரா?
மு. மாலினி, கண்டி மதங்கள் அனைத்திலும் பல்வேறு பிரிவினைகள் தோன்றுவது தவிர்க்க முடியாதது. வெறும் நம்பிக்கைகளின் அடிப்படையில்

Page 7
மனித வரலாற்றின் ஒரு காலகட்டத்தில் சில தேவைகளை ஒட்டி அமைக்கப்பட்டவையே. எல்லா மதங்களும் ஒரே கோட் பாடு கொண்டவை, ஒரே கடவுளே உள்ளார் என்று கூறிக் கொண்டே மதங்களிடையேயும், அவற்றின் உட்பிரிவுகளிடையே யும் பகைமை முரண்பாடுகளே ஏற்பட்டு பல கோடிக்கணக்கான மக்களின் உயிர்கள் பலியிடப்பட்டதை வரலாறு கூறும். ஐரோப் பாவில் சிலுவை யுத்தம் மூன்று நூற்றாண்டுகளாக நடைபெற் றது. மகாயன புத்தமத குருமார் குடும்ப வாழ்விலும் ஈடுபடு வர் என்ற ஒன்றே இரு பிரிவுகளிடையேயும் உள்ள வேற்றுமை என்று தவறாகப் பிரச்சாரம் செய்யப்படுகிறது. சித்தாந்த ரீதி யிலேயே பல வேற்றுமைகள் உள்ளன. தேரவடப் பிரிவு இலங்கை, சியாம் நாடுகளில் மட்டுமே ஆதிக்கம் பெற்றுள்ளன. சீனா, யப்பான், இந்தியா எங்கும் ம காயனப் பிரிவே பரவி
யுள்ளது. உலக பெளத்த குடித்தொகையில் 5%க்கு உள்ளா கவே தேரவடம் இருக்கலாம். இங்கு இவ்வேளை இப் பிளவு தோன்றியதன் காரணங்கள் மிகச் சுவையானவையும் வேதனை
யானதும் ஆகும். மாதவனின் தனிக்கட்டுரையை மற்றோர் பகு
கே.
தியில் படிக்க. இங்கு ஏற்பட்டுள்ள இம்முரண்பாட்டின் பின னணியிலுள்ள பல மர்மங்களை இக்கட்டுரை மூலம் மட்டுமே ஓரளவு அறிய முடியும்.
போதைப் பொருட்களின் உற்பத்தியும் விநியோகமும் எவ்வாறு
பெரு வணிகமாக மாறியுள்ளது. இதை முற்றாக நிறுத்திவிட
முடியாதா? M
தி. இராமன், கண்டி
முற்றாக நிறுத்திவிட முடியாது. ஏனெனில் இவற்றை உற்பத்தி செய்யும் நாடுகள் ஏழை, பின்தங்கிய விவசாய நாடுகளே. அவர் களது பிற விவசாய உற்பத்திப் பண்டங்களிலும் பார்க்க, போதைப் பொருட்களை பெருந்தொகையாக வாங்கி உட்கொள் ளும் முதலாளித்துவ நாடுகள் அதிக விலை கொடுக்கிறார்கள். இதனால் ஏழை, நிலமற்ற விவசாயிகளும் ஓரளவு நலன்பெறு கின்றனர். முதலாளித்துவ நாடுகளிலே இவற்றைப் பெரும்ப லும் நுகர்பவர்கள் வேலையில்லாதவர், வீடற்றவர்கள், Gigi களில் வாழ்பவர்கள் என சமூகவியலாளர் கூறுகின்றனர். இவர் கள் தமது துன்பங்களை தற்காலிகமாக மறக்க போதை வஸ் துக்களின் துணையை நாடுகின்றனர். உற்பத்தி, விநியோகத்தில் ஈடுபடும் லும்பன் முதலாளிகளே இத்துறையில் பெரும் பணம் ஈட்டுகின்றனர். மேலே கூறிய உற்பத்தியாளர், நுகர்வோரின்

Gas.
பிரச்சினைகள் தீரும்வரை இவ் உற்பத்தி தொடர்ந்துகொண்டே இருக்கும். ஒரு சிலரை அங்கே தூக்கிலிடுவதாலோ சிறைப் படுத்துவதாலோ முதலாளித்துவம் சிருட்டித்த இப் போதைப் பொருட்களின் உற்பத்தி, நுகர்வை நிறுத்திவிடப் போவதில்லை.
அமெரிக்க ரைம்' சஞ்சிகையின் ஏப்ரல் 90 இதழ் ஒன்று அரசி னால் தடைசெய்யப்பட்டதாக அறிந்தேன். எதற்காக?
க. சுப்பிரமணியம், யாழ்ப்பாணம்
இவ்விதழின் தடை நீக்கப்பட்டுவிட்டது. இலங்கையில் பத்திரி கையாளர், மனித உரிமை பேசும் வழக்கறிஞர்கள் நாட்டை விட்டு ஒடுகின்றனர். தவறின் கொல்லப்படுகின்றனர். இவ்வாறு சென்ற 24 ஆண்டுகளில் 12 பேர் கொல்லப்பட்டனர், 10 பேர் நாட்டைவிட்டு ஓடியுள்ளனர், ஜனநாயகம் அழிகிறது, அரசு கண்டனத்தை ஏற்கத் தயாரில்லை என்று கூறி றிச்சட் டி. சொய்ஸா தொடக்கம் பிறின்ஸ் குணசேகரா வரை ஆதாரம் காட்டியது. பத்திரிசைச் சுதந்திரம், மனித உரிமைகள் மறுக் கப்படுவதாக கடும்போக்சாக கண்டனம் எழுப்பிய பிரபல அமெ ரிக்க சஞ்சிகையின் கூற்றால் நாட்டுக்குக் கிடைக்கக்கூடிய வெளி நாட்டு உதவிகள் தடைப்பட்டு விடுமோ என அரசு அஞ்சி யிருக்கலாம். பின்னர் ஜனநாயகம் உள்ளது என்பதை நிலை நிறுத்த சஞ்சிகையின் தடையை நீக்கியிருக்கலாம்.
குமரன் (இதழ் 72 இல் இருந்து)
தனிப்பிரதி ரூ 48 இதழ்கள் ரூ 24/- 12 இதழ்கள் ரூ 48/-
விற்பனையாளர்க்கு கழிவு உண்டு. ஆங்காங்கே வரவழைத்து விநியோகிக்க விரும்புவோர் தொடர்பு கொள்க:
ஆசிரியர், குமரன், 201, டாம் வீதி, கொழும்பு - 12 தொலைபேசி: 421388
- I -

Page 8
மக்கள் சக்தி
மக்கள் என்ற வைத்தியர்கள் தான் எனது
ஊமைக் கவிதைகளைப் பேசச் செய்தனர் குருட்டுக் கவிதைகளைப் பார்க்கச் செய்தனர் செவிட்டுக் கவிதைகளைக் கேட்கச் செய்தனர் கோழைக் கவிதைகளை போராடச் செய்தனர்.
நண்பர்களே!
உங்கள் கவிதைகளையும் அந்த வைத்தியனிடம் அனுப்பி வையுங்கள்.
866 to நெருங்குதடா
கோடித் தலையுடன் சீறி வருங்கடல் கோபமுன் கோபமடா - தோழா வாடி உழைத்திடும் போது எரிமலை வாயின துள்ளமடா - குடில் தேடிக் கிடந்திடும் துன்பமரிந்திடத் தோழா எழுந் திடுவாய் - பல கோடிப் புலியொரு யானை யென உரு கொண்டது என்று நட
வைய மெல்லாம் ஒரு கையினுள் வைத்திடும்
வேகம் படைத்தவனே - உல
குய்ய எழுந்திடுங் கோலம் படைத்திடக் காலம் நெருங்குதடா - ஒரு பொய்மையில்லா உயர் பூமி யொன்றாக்கிடப்
பொங்கிடும் மலைகள் - சரம் எய்ய எழுந்து நடந்தனவோ என எட்டி நடத்திட டா!
- சுபத்திரன் -
- 2 -

புத்தருக்கோர் புத்திமதி
**செத்தவர் பிறப்பார் பிறந்தவர் சாவார்" புத்தனே! உன் பிறப்பின் போது செப்பப்பட்ட இந்த அசரீதி உண்மையாயின் நீயே இனிப் பிற.
அரச மரத்தடி இனி உன் அகலிடம் அல்ல. புகலிடம் தேடியோர்க்கு புத்தனே நீ s புண்ணிய மூர்த்தியும் ஆகாதே.
மடியில் மடித்த உன் கைகளை எடு விடுதலை வேண்டுவோரின் விரல்களோடு உன் விரல்களைச் சேர் முடியுமானால்
மறுபடி நீ பிற
மண்ணின்
உயிர்கள் உய்ய உன் கரம் உயர்ந்தது.
விடைகள் வேண்டுமாயின் உன் முன் கேள்விகளுக்கு விளக்கம் கேள். மா ஒவும் உன் போல் ஆசியாவில் பிறந்தவன் தான் எம்மோடு அணி சேர்.
* சாருமதி -
- 19 -

Page 9
கம்யூனிசத்திற்கு எதிரான யுத்தம் 1848 - 1989
-திய ாகு
PTர்க்ஸ், ஏங்கெல்சின் கம்யூனிஸ்ட் அறிக்கை 1848இல் வெளி աn 60735].
அவ்வறிக்கை **இதுவரையான சமுதாயங்களின் வ ர லா று அனைத்தும் வர்க்கப் போராட்ட வரலாறு' என ஆரம்பித்து சோஷ லிசத்தை அமைக்க 'உலகத் தொழிலாளர்களே ஒன்றுசேருங்கள்" என்று குரலெழுப்பி முடிகிறது.
அந்நாட் தொடக்கம் முதலாளி வர்க்கம் மார்க்சியக் கோட் பாட்டை வெறுப்புடனும் அச்சத்துடனேயே கவனித்துவந்தது.
சார் மன்னன் ஆட்சியிலேயே மார்க்சின் "மூலதனம்" நூல் ரஷ்ய மொழியில் பெயர்க்கப்பட்டது.
மார்க்சிய சோஷலிச ஜனநாயகக் கட்சிகள் ஐரோப் பா வில் வளர்ச்சியடைந்து வந்தன.
1878இல் மார்க்சிஸ்டுகளை ஒழிக்க பிண்மாக் பொலிசுக்கு அதிக அதிகாரமளித்துக் கடும் சட்டமியற்றினான்.
1914இல் முதலாவது உலக யுத்தத்தை முதலாளித்துவ நாடுகள் தம் முரண்பாடுகளைத் தீர்க்க நடத்தியபோது சிந்தப்பட்ட இரத்தத் தைக் கண்டு மக்கள் கொதித்தெழுந்தனர்,
மூன்று ஆண்டுகளில் ரஷ்யாவில் புரட்சி வெடித்தது. மன்னராட்சி கள் ஐரோப்பாவில் வீழ்ச்சியடையத் தொடங்கின.
லெனின் போல்ஷவிக்கினரை "பிறப்பிலேயே கொன்றுவிடவேண் டும்" என இங்கிலாந்து, பிரான்சு, யப்பான், அமெரிக்கா ஆகிய நாடு கள் உள்நாட்டில் குழப்பம் ஏற்படுத்தப் படைகளையே அனுப்பின.
சோவியத் வெற்றிகண்டது. முதலாளித்துவ நாடுகள் முசோலினியின் பாசிசத்தை 1922 வரை
யில் கிளப்பிவிட்டு ஆதரித்தன. இத்தாலியில் குண்டர்கள் தொழிற் சங்கங்களையும், தலைவர்களையும் அடித்து நொறுக்கினர்.
- 4 -

இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டியெழுப்பிய கிராம்சி இரு பதாண்டுச் சிறைத்தண்டனை பெற்றார். பல்லாயிரக்கணக்கானவர் அடிபட்டு, சிறையில் தள்ளப்பட்டுக் கொலைசெய்யப்பட்டனர். ‘நாக ரிகத்தைக் காப்பாற்ற இறைவனால் அனுப்பப்பட்டவர்" என பாப் பாண்டவர் முசோலினியை பாராட்டினார்: "போல்ஷவிசத்தை ஒழிக்க வந்த வீரன்’ என சர்ச்சில் புகழ்ந்தார்.
ஜெர்மனியில் கிட்லர் முசோலியின் பாசிசத்தைக் கடைப்பிடித் தான். யூத எதிர்ப்பைக் கிளப்பியதோடு கம்யூனிஸ்டுகளை ஒழிக்கவும் முயன்றான்.
ஜெர்மனி மீண்டும் இராணுவ பலம் பெறுவதை அமெரிக்காவும் வத்திக்கானும் ஆதரித்தன; பாசிசத்திற்கு வழிவிடப்பட்டது. மஞ்சூரி யாவை யப்பான் 1932இல் ஆக்கிரமித்தது. ஆஸ்திரியா ஜனாதிபதி 1984இல் வீயன்னா தொழிலாளர்கள்மேல் பீரங்கி மழை பொழிந் தான். எத்தியோப்பியாவை முசோலினி கைப்பற்றினான். கிட்லர் 1937இல் ஆஸ்திரியாவை முற்றுகையிட்டான். பிராங்கோவின் பாசிச ஆட்சிக்கு உதவ ஸ்பெயினுக்கு கிட்லரும் முசோலினியும் படை அனுப் u9627 fi.
கலாசாரரீதியாக அமெரிக்க, ஐரோப்பியப் பத்திரிகைகள் கம்யூனி சத்திற்கு எதிராகவும், சோவியத்தைக் கண்டித்தும் எழுதிக்கொண்டே இருந்தன பல்கலைக்கழகங்களில் பொருளாதாரப் பேராசிரியர்கள் மார்க்சியத்தின் மூலதனத்திற்கு எதிராகப் பேசி, எழுதிவந்தனர். கெயின்ஸ் எதிர்த்துப் பேசியபோது அவரது மாணவி ஜேன் ரொபின் சன் மார்க்சியத்திற்காக பிரச்சாரம் செய்தது வியப்பானதே.
கம்யூனிசத்திற்கு எதிராகக் கண்மூடித்தனமாக கிட்லர் எதிர்த்த வேளை அவன் இராணுவ பலம் பெற பிரிட்டனும் உதவியது.
இரண்டாவது உலக யுத்தத்தின்போது சோவியத்தின் இழப்பு அள விற்கு அமெரிக்காவோ, பிரான்சு, இங்கிலாந்தோ பாதிக்கப்பட வில்லை.
1800,000 சதுரமைல் நிலம், மூன்றிலொரு குடித்தொகை, அரைப் பங்கு நிலக்கரிச் சுரங்கங்களும், மின்நிலையங்களும், யந்திர உற்பத்தி களையும் கிட்லர் ஒரு கட்டத்தில் கைப்பற்றியிருந்தான்; பல பெரிய நகரங்கள் கற்குவியலாகின" என எட்கா சினோ கூறியுள்ளார்.
இத்தகைய அழிவோடு கிட்லரை வீழ்த்தி சோவியத் வெற்றிபெற் sogile
- U -

Page 10
சில ஆண்டுகளில் அமெரிக்காவிற்கு சமமாக ரஷ்யாவும் அணுசக்தி யைப் பயன்படுத்துவதில் சமநிலை பெற்றது.
மக்காதி பிரச்சாரம் அமெரிக்காவை மட்டுமல்ல உலகெங்கும் பர வியது. ஆனால் 1957இல் முதலாவது ரஷ்ய ஸ்புட்னிக் உலகை வலம் வந்தபோது முதலாளித்துவ நாடுகளெல்லாம் வானத்தைப் பார்த்து அஞ்சின.
சோவியத் பயமுறுத்தலே ஆயுதப்போட்டியை முதலாளித்துவ நாடுகளில் ஏற்படுத்தியதென்று பொய்ப்பிரச்சாரம் செய்யப்படுகிறது. அமெரிக்க இராணுவத் தளபாட உற்பத்தியாளர்களே இவ்வாறு பிர சாரம் செய்து, நாட்டை இத்துறையில் ஊக்கப்படுத்திக் கடனாக்கியுள் ளனர். ஆண்டுதோறும் பத்தாயிரம் கோடி டாலர் கடனாளியாகும் நிலை அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ளது.
இன்று கம்யூனிசம் தோற்றுவிட்டதாக மீண்டும் புதிய பிரச்சாரம் தொடர்கிறது.
"கம்யூனிசத்தைக் கட்டுவதில் பிரச்சினை ஏற்படலாம். அது இறந்துவிட்டதென்று கூறுவது வெறும் பொய். இருபதாம் நூற்றாண் டின் தனிச்சிறப்பான அரசியல், சித்தாந்தக் கோட்பாடு கம்யூனிசமென வரலாற்றில் நினைவுகூரப்படும்' என்ற அமெரிக்கரின் கூற்றை எவரும் புறக்கணிக்கமுடியாது.
கம்யூனிசம் தோற்றுவிடப் போவதில்லை. ஏனெனில் அது தொழிலாளி வர்க்கத்தின் வரலாற்று, இடக்கவியல் பொருள்முதல் வாத சித்தாந்தம், அதன் வளர்ச்சிப்போக்கை கற்பனாவாதிகளான
முதலாளித்துவத்தால் புரிந்துகொள்ள முடியாது.
(M. R. கட்டுரை தழுவல்)
மேற்கு ஜெர்மனியும் பாசமும்
மேற்கு ஜெர்மனியில் 1933-45 வரையான காலப்பகுதியின் வரலாறு ஓர் இருண்ட அறைபோன்றது. இக்காலப் பகுதியின் வர லாறு பாடசாலைகளில் கற்பிக்கப்படுவதில்லை. கற்பிக்கும் சில இடங் களிலும் மக்கள் டாசிசத்தை எதிர்த்த போதும் கிட்லர் பல முள்ள வராக இருந்தமையினால் பாசிசத்தை முறியடிக்க முடியாது போய் விட்டதாகவே போதிக்கப்படுகிறது. யாரும் பாசிசம்பற்றி விமர்சிப் பதில்லை. பாசிசம் சமுதாயத்தின் ‘ஒரு மட்டத்தின்கீழ் இருப தால் எந்நிலைமையிலும் வெளிவரலாம் - மேற்கு ஜெர்மனியிலி ருந்து வெளிவரும் தூண்டில்" ஏப்ரல் இதழிலிருந்து.
س- 6 il سه

வீடு என்பது சொர்க்கமல்ல!
- செ. க. --
'வாடகை எவ்வளவு"
"நாநூற்று ஐம்பது ரூபா"
மாதச் சம்பளத்தில் சமாளித்து விடலாம் என சிவராசாவின் மனம் சொன்னது. வீடுதேடிக் களைத்தஅவசர முடிவு. அவன் நண்பன் ரஞ்சித் உள்ளூறச் சிரித்துக்கொண்டான், -
வீட்டின் பின்புறத்தில் தனி அறை ஒன்று. சமைப்பதற்கு சிறு பகுதி. சிறிய வராந்தா. நாலு நாற்காலிகள் போடலாம். கிணறு அத்தனை ஆழமில்லை. வீட்டுப் புறத்தில் தனியான கழிவறை.
விமலா விற்குப் பிடிக்காது போகலாம். அவளைத் திருப்திப் படுத்துவதென்றால் இயலாத காரியம் என்பதை அறிவான்.
"உங்களுக்குப் பிடித்துக்கொண்டால் போதும். நான் எதிர்புக் கூற மாட்டேன்'
தாமதமின்றி வாடகை வீட்டை எடுத்து விடவும் என அவள் எழுதிய கடிதத்தை கவனமாக வைத்திருந்தான். நினைவு படுத்திக் கொண்டான்.
கொழும்பிற்குப் புறம்பே வத்தளையில் பிரதான தெருவிலிருந்து உட்புறமாக அரை மைலாவது இருக்கலாம். நடப்பதைப் பற் றிக் கவலையில்லை. பஸ்ஸில், மினிபஸ்ஸில் நெரிவதே பயங்கரமா
னது.
லீவு போட்டுவிட்டு அங்கு வரும்போது நண்பன் ரஞ்சித்துடன் பட்ட பிரயாணக் கஷ்டத்தை அவ்வேளை மறந்திருந்தான்.
சிங்கள நண்பனை புறம்போக்கான சிங்களப் பகுதியில் வீடு பார்க்க உதவிக்கு அழைத்து வந்தான். கண்டியில் வேலைபார்த்த போதே அவனோடு பழகியிருந்தான்.
கலியாணத்துக்கு முன்னரே வீடு தேடத் தொடங்கியிருந்தான். அவ்வேளை நண்பர்களிடம் மட்டுமே சொல்லியிருந்தான். அவர்கள் கூறிய செய்திகள் பயமுறுத்தின. வாடகை மட்டுமல்ல 83ல் நடந்த இனக் கலவரத் துன்பங்கள் வேறு.
-سس 7 i --

Page 11
நகருக்குள்ளே தமிழர் வசிக்கும் பகுதி பாதுகாப்பானது என்ற னர். ஆனால் அப்பகுதிகளில் அனெக்ஸ், பகுதி வீடு எடுக்கவே அவ னது மாதச் சம்பளம் போதாததாயிருந்தது.
திருமணத்தின் பின் வீடு பார்க்கலாம் என தள்ளிப்போட்டான். ஊருக்குச் சென்றபோது வீடு பற்றியே எல்லோரும் கேட்டனர்.
அதற்கு மேலாக விமலாவின் ஆரம்பகால காதலும் ஊடலும் கண்டிப்பும், தான் ஆண்மகன், செயல் வீரன் என்பதைக் சாட்ட அலைந்தான். "உங்கள் வீடு சொர்க்கமாகட்டும்’ என நண்பன் ஒரு வன் திருமண வாழ்த்தில் எழுதியிருந்தான். விமலா அவ்வார்த்தை களை அடிக்கடி நினைவூட்டினாள். ஒவ்வொரு கடிதத்திலும் எழுதிக் கொண்டேயிருந்தாள்.
வாய்ப்புள்ள ஒரு நண்பன் வசதியான வீடாகப் பார், உனக்கு கட்டக் கூடியதாக ஒரு பகுதியைத் தருவேன் என்றான்.
பத்திரிகை விளம்பரங்களைப் பார்த்து பரவலாக எல்லா இடங் களுக்கும் அலைந்தான். வாடகையும் முற்பணமும் பயங்கரமாக இருந்தன.
நகரில் எப்பக்கம் திரும்பிலும் 2000 ஆண்டில் எல்லோருக்கும் வீடு" என்ற அரசின் சுலோக விளம்பரம் கண்களில் படவே செய் தது. திருமணம் முடிந்த இவ்வேளையல்லவா வீடு வேண்டும் என எண்ணிக் கொண்டான்.
பத்து லட்சம் வீடுகள் கட்டும் அரசின் திட்டம் வெற்றியளித் ததாக பிரச்சாரம் செய்யப்படுகிறதே. அப்படியானால் வீட்டுப் பிரச்சினை முற்றாகத் தீர்ந்திருக்குமே என கணக்கிட்டுப்பார்த்தான்.
'பத்து லட்சம் வீடுகள், இலங்கையின் மூன்றில் ஒரு பங்கு மக் களுக்கு வீடு கிடைத்திருப்பின் மற்றவர்கட்கு ஏற்கெனவே வீடு இருக்கிறதே" என ரஞ்சித் பிரச்சாரத்தின் பொய்மை பற்றித் தெரி வித்தான்.
செல்வந்தர் வாழும் பகுதிகளில் வாடகைக்காக வீடுகள் விளம் பரப் படுத்தப்பட்டவற்றையும் பார்த்து வாடகை பற்றியும் விசா ரித்து ஏமாந்தான்.
பல பெரிய வீடுகளில் இரண்டு மூன்று பேர்மட்டுமே. வேலை யாட்கள், கார், நாய்களுடன் வாழ்வதைக் கண்டு வியப்படைற் தான். இச் செய்தியை தன் நண்பன் ரஞ்சித்திடம் தெரிவித்த
- 18 -

போது அவன் கூறிய புதிய கருத்தில் உண்மையிருப்பதாகவே தோன் றியது.
"புதிய வீடுகளைக் கட்ட முன்னர் தற்போது வெறுமனே உள்ள வீடுகளில் வீடில்லா மக்களைக் குடியிருத்த வேண்டும். பின் னரே வீடில்லாதவருக்கு வீடு கட்டித்தர வேண்டும். ஒருபுறம் சேரி களில் உழைக்கும் மக்கள் மூச்சுவிட இடமின்றி துன்பப்படுகிறார் கள். மற்றப் பகுதியில் உள்ள பெரிய வீடுகளில் இருப்பதற்கு ஆட் களில்லை?"
"நகர்ப் புறத்தில் வசிக்கத்தக்க பழைய வீடுகளை உடைத்து புதிய வீடுகள் கட்டுகிறார்களே'
'அவை நிறுத்தப்பட்டு வீடற்றவர்களைக் குடியிருத்த வேண் டும். கறுப்புப் பணங்களை வீடுகளில் முடக்கும் முதலாளித்துவப் போக்கு இது"
அரசின் புதிய வீடு கட்டும் கொள்கையால் நாட்டில் பணவீக் கம் ஏற்பட்டது என்றும் ஒரு கருத்தை அவன் கேட்டிருந்தான் வரு மானம் தராது மூலதனம் முடங்குகிறது என்று எங்கோ படித்த நினைவும் மனதில் தோன்றியது.
“வீட்டிற்கு மூன்றுமாத முன்பணம் தந்தால் சரிதானே"
விமலாவுக்கு அன்றே "வீடு கிடைத்தது. சொர்க்கமாக்குவது உன் பணி" என எழுதிவிடலாம் என்ற ஆர்வத்துடன் தான் கொண்டுவந்த பணத்தையும் கணக்கிட்டு விட்டுச் சொன்னான்.
“மூன்றுவருட முன்பணம் தரவேண்டும்"
ஒரு கணத்தில் சிந்தனையே நின்றுவிட்டது. எப்பதிலும் கூற முடியாதவனாக நின்றான். கழுத்துப் பகுதியில் வியர்வையே அரும் பியது.
ரஞ்சித் அவனின் முதுகைத் தட்டி யதார்த்த நிலைக்குக் கொண்டுவந்தான்.
பேரம் பேசத்தக்க வாய்ப்பும் இல்லாத நிலை. ஒருவருட முன் டணம் கூட உடனே தேடமுடியாத சூழல்.
பிரதான தெருவை நோக்கி ரஞ்சித்துடன் நடக்கும்போது மேலும் எங்கே பணம் கடன் பெறலாம் என சிந்தித்துப்பார்த்தான்.
- 19 -

Page 12
அவற்றைத் திருப்பித்தரக்கூடிய வாய்ப்பு எப்படி ஏற்படமுடியும்? மாதச் சம்பளத்தில் வட்டியுடன் கொடுத்துவிட முடியுமா? r,
"தோட்டத்து முன்னுாறு ரூபா இருட்டறையில் விமலா வந்து சமாளிப்பாளா?' மனம் ஊசலாடியது, ஒரு மாத முன் பணமே . தோட்டம் என்ற சொல்லை கொழும்புக்கு வந்த பின்னரே அவன் ரஞ்சித் மூலம் அறிந்தான்.
* தோட்டப்பக்க வீடு என்றால் என்ன?"
*சேரி என்பதற்கு நாகரிகமான வார்த்தை. சமூகவியலாளர் சேரி’ என்றே அழைப்பர்.
ஒன்றன் பின் ஒன்றாக கார்கள் ஊர்ந்து கொண்டிருந்தன. உல கத்து நாடுகள் அனைத்தினதும் நவீன மாடல் கார்கள். ஒருவர், இருவரே கார்களில் பிரயாணம் செய்வதைக் காணமுடிந்தது
பஸ்கள், மினி பஸ்களில் நுழைய முடியாதளவு கூட்டம். மிதி பலகையில் ஒருகால், உடல்கள் வெளியே, விபத்து ஏற்படக்கூடும் என்று தெரிந்தும் ஏன் இப்படியாகப் பிரயாணம் செய்கிறார்கள்.
‘இவர்கள் கூலி அடிமைகள். கார் களில் எசமானர்கள்" - ரஞ் சித் சொன்னான்.
நெரிபட்டு ஏறிய மினி பஸ்ஸில் தலை குனிந்தபடி நின்றான். ரஞ்சித் குள்ளம். சமாளித்தான். அது ஊர்ந்து கொண்டிருந்தது. பெண்களே அவனது உடலோடு நெரிவதாக உணர்ந்தான். உடனே விமலாவின் நினைவு வந்தது. ஏதோ தவறு செய்வதாக உணர்ந்து உடலை ஒதுக்கினான். மற்றொரு முதியவரின் முழங்கை இடித்தது.
வாகனம் நின்றுவிட்டது. ரவிக் ஜாம்' என எவரோ கூறிய குரல் கேட்டது. S.
"தெருக்கள் இடம் கொள்ளாத அளவிற்கு எதற்காக வாகனங் களை இறக்குமதி செய்ய அனுமதிக்கிறார்கள்?"
"மக்களுக்கு வசதியாகவும் விரைவாகவும் பிரயாணம் செய்யத் தக்க வசதியை அல்லவா அரசு ஏற்படுத்த வேண்டும். இத்தனை தனியார் கார்கள் எதற்காக? நாலுபேர் பயன்படுத்தும் இரண்டு புதிய காரின் விலைக்கு ஒரு பஸ்ஸை இறக்குமதி செய்து மக்களை ஏற்றி இறக்கலாமே. கார் ஓரிரு தடவையே பயன்படுத்தப்படுகிறது. பஸ் ஆயின் காலையிலிருந்து இரவு வரை முப்பது நாற்பதுபேரை பல தடவை ஏற்றி இறக்கலாமே"

நண்பன் ரஞ்சித் அன்றொருநாள் கூறியது அவ்வேளையும் அவன் நினைவில் வந்தது.
"இப்படியான தவறான போக்குகள் ஏன் நீடிக்கின்றன’ சிவ prnrgFrt G35'-L-Tóór,
"இது பணக்காரருக்காக நடத்தப்படும் முதலாளித்துவப் போக்கான அரசாங்கம்"
"வீடுகள், வறுமை ஒழிப்பு, பிரயாண வசதிபற்றியெல்லாம் பேசுகிறார்களே.'
"மக்களுக்கு வெறும் வார்த்தைகளே திரும்பத்திரும்ப வழங் கப்படுகின்றன. அவர்கள் நம்புகிறார்கள். கடவுளை நம்பவில்லையா? அதே போலத்தான்".
நண்பன் கூறுவதிலெல்லாம் உண்மை இருப்பதை அவனால் உணர முடிந்தது. கடவுளைப்பற்றி ரஞ்சித் கூறியதை அவனால் ஏற்க முடியவில்லை; புரிந்து கொள்ளவும் முடியவில்லை.
சிறுநகரிலிருந்து பெரிய பட்டினத்திற்கு மாறுதலாக வந்த பின் னரே அங்குள்ள பெரிய பிரச்சினைகளை அவனால் உணர முடிந் தது. முக்கியமாக வீடு, பிரயாணப் பிரச்சினை.
“இத்தனை தொல்லைகளுள் மக்கள் ஏன் நகரை நோக்கி வரு கிறார்கள்'.
"அதுவே முதலாளித்துவப் போக்கு. எல்லாம் பழக்கமாகி, இதுவே வாழ்வு, தலைவிதி என நம்பிவிடுகிறார்கள்."
'இதற்கு மாற்று வழி கிடையாதா?"
"ஏன் கிடையாது? காலம் வரும், வெற்று வீடுகளிலெல்லாம் சேரிகளில் துன்பப்படும் தொழிலாள மக்கள் குடியேற்றப்படு வார்கள். கார்களும், வான்களும் தொழிலாளர்களை ஏற்றி இறக்
கப் பயன்படுத்தப்படும்".
அறையை நோக்கி நடக்கும்போது ரஞ்சித் சொன்னான்; அவன் குரலில் இருந்த உறுதியை சிவராசாவால் புரிய முடியவில்லை.
*எப்போது நடைமுறையில் வரப்போகிறது"
- I -

Page 13
"துன்புறும் தொழிலாளர்கள் புதிய தலைமையில் ஒன்றுபடும் போது'
புதிய நம்பிக்கையோடு எத்தனை காலம் வாழ வேண்டும். விமலாவிற்கு என்ன பதில் எழுதலாம்?
சிந்தனை குழம்பிக்கொண்டிருந்தது. ரஞ்சித்தின் குழப்பமற்ற ஆலோசனைகளே அவனுக்குத் தஞ்சம் அளித்தது.
ஆரம்பத்தில் தவறுபோலத் தோன்றிலும் சிந்தனையின் பின் அவை சரியாக இருப்பதைக் கண்டான்.
"நகரின் தோட்டப் பகுதியில் முன்னூறு ரூபா வாடகையில் வீடு பார்த்துள்ளேன். அங்கு பிற தொழிலாளர்களுடன் வாழப் பழகிக்கொண்டாலே இங்கே வாழ முடியும். கொழும்பு மாநகரின் யதார்த்த நிலையை நீ அங்குதான் வாழ்ந்து புரிந்துகொள்ள முடி யும். கற்பனையான வானத்தில்தான் வீடுகள் சொர்க்கமாக முடியும்'
விமலாவிற்கு அன்றே கடிதம் எழுதிவிட்டான்.
Man
மகாயனமும் போதிசத்துவரும்
புண்ணியம் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு மாற்றப்படக் கூடியதென்னுங் கருத்து மகாயன நெறிக் கோட்பாட்டிலே ஒரு சிறப்புக் கூறாகவுள்ளது. தேர வட நெறியின்படி ஒருவன் தனது ஒழுக்கத்தாலும் அறிவுரையாலும் மற்றொருவனை வீட்டு நெறியிற் செலுத்தத் துணைபுரிதல் மட்டுமே கூடும். மேலும் போதிசத்துவர் அருளாளராசு மட்டுமேயன்றிப் பிற உயிர்களின் பொருட்டுத் துன்பம் ஏற்பவராகவுங் கருதப்பட்டார். இது சிலவேளைகளிற் பெரும் பாலுங் கிறித்துவின் அருண்மொழியை ஒத்துளது. "எல்லா உயிர் களின் வினைகளையும், நிரயங்களிலும் மற்றை உலகங்களிலும் தண்டனை அனுபவிக்கும் மண்டலங்களிலும் வாழ்வோரின் வினை களையுமே. யான் என்பால் ஏற்றுக்கொள்கின்றேன். அவர்தம் துன்பத்தை யான் ஏற்றுக்கொள்கினறேன்.” மன்னுயிர்க்காகத் துன் புறும் போதிசத்துவர், பாவத்தினின்று பலரை மீட்பதற்காகத் தம் முயிரை வழங்குபவரெனக் கிறிஸ்து மதத்தவர் கொள்ளுங் கடவுளைப் பெரிதும் ஒத்திருத்தலால், இக்கோட்பாட்டைப் பெளத்த மதம் கிறித்து மதத்திலிருந்து எடுத்திருத்தல் கூடுமென்பதை யாம் தள்ளு தற்கில்லை; கி.பி. 3ஆம் நூற்றாண்டு முதல் கிறித்து மதம் பார சீகத்திற் சிறந்தோங்கி விளங்கியது. (Dr.பசாம், வியத்தகு இந்தியா)
- 22 -

38888.88%388.888; ஐ ரஜனிகாந்தும் தமிழ் திரைப்படமும்
- 'ரசிகன்’ - -
கொழும்பு மாநகரில் தமிழ் திரைப்படங்கள் காட்டப்படும் 10 தியேட்டர்களில் 6இல் ரஜனிகாந்த் நடித்த 5 படங்கள் ஒரே 3ே1ளையில் திரையிடப்படுகின்றன. இவை புதிய படங்களுமல்ல. சென்ற 3, 4 ஆண்டுகளின் முன்னர் தமிழ் நாட்டில் திரையிடப்பட் டவையே.
※ 茨 兴
இலங்கையிலுள்ள தியேட்டர்கள் அனைத்தும் அரசு சார்ந்த இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் ஆதிக்கத்திலேயே உள். ளன. அவர்கள் எதற்காக ரஜனியின் படங்களுக்கு முன்னுரிமை வழங்குகின்றனர். (ஆண்டுதோறும் 150க்கு குறையாத புதிய தமிழ் திரைப்படங்கள் வெளி வருகின்றன. அவற்றில் ரஜனி படங்கள் 3 அல்லது 4 ஆகும்) பணம் சேர்ப்பதற்காக. ரஜனியின் படங்களுக்கு அத்தனை கூட்டம். திரைப்படக் கூட்டுத்தாபனமே தமிழ்ப் படங்க களிலேயே உயிர் வாழ்வதாகக் கூறப்படுகிறது. சிங்கள, ஆங்கிலப் படங்களால் கடன் பளுவே ஏறியுள்ளது.
ரஜனியின் படங்களை முன் வைத்துக் கொண்டே தமிழ் திரைப் படத்தின் இன்றைய போக்குகளை மதிப்பிடலாம். இந்திய திரைப் படங்களில் நடிப்பதற்கு அதிக தொகை பெறுபவர் ரஜனி என்பதை அனைவரும் அறிவர். அதுவும் தமிழ் படத்தில் நடிப்பதற்கே வழங் கப்படுகிறது. இந்தி படங்களில் நடிக்க நேரின், அச்சந்தை அகண்ட இந்தியாவாக இருந்த போதும், தமிழில் பெறுவதன் நாலில் ஒரு பங்கே தரப்படுகிறது. தமிழ்ப் பட உலகில் ரஜனி வகிக்கும் பெரும் பங்கை இது காட்டுகிறது.
தமிழ் படங்களின் உற்பத்தி, விநியோகம் விசித்திரமானது. ரஜனியின் படம் என்றதும் 11 ஏரியா (Area) விநியோகத் தரும் என்ன விலை கொடுப்பர் என்பதை அவரே அறிவார். சந்தையில் கிடைக்கக் கூடியதில் தன் பங்கை ஒப்பந்த மூலம் (கறுப்பு வேறு. வெள்ளை வேறாக) பெற்றுக் கொள்வார். இக் கூலியில் 4 நல்ல ரக மான கலையம்சம் பொருந்திய திரைப்படத்தை தன்னால் ஆக்கித் தர முடியும் என பிரபல டைரக்டர் ஒருவர் கூறியுள்ளார்.
- 23 -

Page 14
ரஜனியுடன் எந்தப் பிரபல நடிகையும் கூலியின்றியே நடிக்கத் தயாராவாள். ஏனெனில் அதன் பின்னர் அவளின் மார்க்கெட் உயர்ந்து விடும். (மற்ற நடிக, நடிகைகளும் அவ்வாறே. இதனால் மற்றவர் களுக்கு கூலி தரப்படுவதென்றில்லை. ரஜனியுடையதுடன் ஒப்பிடும் போது மிக மிகக் குறைவாயிருக்கும்.)
ரஜனியின் படங்கள் யாவும் வாய்பாடான படங்களாகவே இருக்கும். குறைந்தது ஏழு பெரிய சண்டைகள் இருக்க வேண்டும் என அவரே டைரக்டரிடம் வற்புறுத்துவார், அப்புறம் 4 பாடல் களுக்குக் குறையாது இருக்கும். "டுயற் வேறு" . கதாநாயகி ஒருமூன்று நிமிடப் பாட்டில் 10, 15 தடவை உடை மாற்றுவாள். ரஜனிக்கு புதுப் புது ரக உடைகள், சண்டை போடப் புது புது ஆயுதங்கள். இடங்கள், சந்தர்ப்பங்கள். பயங்கர சண்டைக் காட்சிகளில் டூப் (DUPE) பே நடிப்பதை பலர் அறியார்.
கொலைக்காரர், திருடர்கள், கற்கழிப்போர், ஏமாற்றுவோர். பொய் பேசுவோர், கொடுமைகள் புரிவோரே சமுகத்தில் நிறைந் துள்ளனர்! அவர்களையெல்லாம் வெற்றி கொள்ளும் வீர புருவு னாக ரஜனி விளங்குவார்.
இதில் வேடிக்கை என்னவெனில் படத்தின் முடிவு வரை பெரும் பாலும் கொலை, கபடக்காரரே வுென்று வருவர். கதாநாயகி யைக் கூட கடத்திக் கற்பழிக்க முயல்வர். கடைசிக் காட்சியில் யாவரையும் முறியடித்ததும் காதலி ரஜனியின் காலில் விழுந்து கட்டி அணைப்பாள். பெரும்பாலும் ரஜனி பெண்களின் காதல் வலைகளில் விழ மாட்டார். கதாநாயகிகளே அவருடைய காதலுக் காக ஏங்கித்தவித்து வெற்றி பெறுவர். இரு காதலிகள் போட்டி யிட நேரின் ஒரு வ ர் கொல்லப்டாடுவார். இவ்வாய்பாட்டை தொடர்ந்து காணலாம். பழைய கள்ளை புதிய புதிய பாத்திரத் தில் தந்து பார்வையாளரை மயக்கி வெற்றி கொள்வதே இன்றைய தமிழ் திரைப்படத்தின் வெற்றி.
ரஜனி ஸ்ரைல்" என சிறுவர்கள் அவரைப் பின்பற்றி நடித் துப்பேசிச் சண்டையிடுவதைக் காணலாம். இச்சிறுவர், பெற்றோ ரையும் வற்புறுத்தி அழைத்துச் செல்வதே ரஜனிக்கு பெரிய மார்க் கெட்டைத் தந்துள்ளது.
இத்தகைய ஏமாற்று வித்தையை கலை என்று விமர்சிக்க பல சினிமாப் பத்திரிகைகள் வெளியாகின்றன. இலட்சக்கணக்கில்
விற்பனையாகின்றன.
一 24一

எங்கும் விற்பனையாகிறது! ‘தமிழவேள்” எழுதிய
ரூபா 14,00 !
தமிழ் - ஆண்டு 10 ! ரூபா 15.00 | தமிழ் - ஆண்டு 11 |
. . ரூபா 18.00
பயிற்சி விளக்கங்கள் விடைகளுடன் மாணவர்க்கும் ஆசிரியர்க்கும் பயன்படத்தக்க அரிய நூல்கள்
கணேசர் - சிவபாலன் எழுதிய
உயர்தர இரசாயனம்
ரூபா 90.00
A. L. வகுப்பு பாடிநூல் . . . . . . .
விற்பனையாளர்க்கு கழிவு உண்டு
குமரன் புத்தகசாலை 201, டாம் வீதி, கொழும்பு - 12.
Tel: 42 1388

Page 15
KUMARAN-77 (01-06-1 990)
குமரன் கு
" சிங்கள - பெளத்தர்கள் " என்றே மக்கள் அனைவரும் இதுவரை காலமும் இங்கு பெளத்த மதத்திடையே பெரும் பி தொடர்பு சாதனங்கள் அனைத்தும் ே நின்று குரல் எழுப்பின. மகாயனம் யப்ப அதன்படி புத்தகுருமார் திருமணம் வேற்றுமை இருப்பதாகக் கூறப்பட்டது. அடைந்துள்ளனர். ஏன், இவ்வேளை முத் பற்றிய பிரச்சனை எமுந்தது, அதன் பின் துள்ள அரசியல், சித்தாந்த, பொருளா வன் சுட்டிக்காட்ட முயன்றுள்ளார். கே.
கொழும்பு நகரத்தில் மட்டுமல்ல உ லெல்லாம் மக்கள் தீர்க்க முடியாதமூர் அகப்பட்டு இன்னல் படுகின்றனர். வீடு, இவற்றில் ஆரம்ப குடும்பவாழ்வை சொர் சாவின் பிரச்சனைகளுக்கு ரஞ்சித் விளக் சொர்க்கமல்ல சிறு கதை பார்க்க மு
தொடப்பட்டுள்ளன.
மலையகத் தொழிலாளரில் பாஸ்ே விசாவில் வந்தவர்கள் போல நாடுகடத் ஏற்பட்டுள்ள எதிர்ப்புப் பற்றிய கட்டுை
மேலும் கொழும்புத் தியேட்டர்சு படங்கள் ஆக்கிரமித்துள்ளது பற்றிய கட் தற்போதைய வாய் பாட்டுப் போக்கையு
அச்சு குமரன் அச்சகம், 201
ஆசிரியர் : செ. கனேசவிங்கன்

2O, DAM STREET, COLOMBO-2,
குரல்
இலங்கை, இந்திய, உலக எண்ணி வந்தனர். திடீரென ளவு இருப்பதாக அரசுயந்திர தரவட பெளத்தம் சார்ந்து ானிலிருந்து வரப்போகிறது.
செய்யலாம் என்றுமட்டுமே
அனைவரும் குழப்ப நிலுை நல் தடவையாக இப் பிரிவுகள் புறத்தில் மர்மமாக, மறைந் தாரப் பிரச்சனைகளை மாத ள்வி, பதிவிலும் காண்க.
லகிலுள்ள பெரிய நகரங்களி ன்று பெரிய பிரச்சனைகளில்
போக்குவரத்து, சுற்றாடல். ர்க்கமாக்க வீடுதேடும் " சிவரா சும் கூறுகிறான். வீடு என்பது pதலிரண்டு பிரச்சனைகளும்
பாட் பெற்ற ஒரு பகுதியினர் $த எடுக்கப்படும் முயற்சிக்கு ரே படிக்க.
ளில் தொடர்ந்து ரஜனியின் ட்டுரையில் தமிழ் சினிமாவின் ாம் காணலாம்
- ஆசிரியர்
டாம் வீதி, கொழும்பு-12.