கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ப்ரவாகம் 2000.08-09

Page 1
ஆகஸ்ட்-செப்டம்பர் 2000 PRAVAG
 
 

SSN 139-5827 இவற்று துளி 4

Page 2
HEAD OFFICE: 291B, KANDY ROAD, KIRIBATHGODA FACTORY: THALGAMUWAROAD, USSAPTIYA, ARRANAYAKE.
TEL: 910741 || 914376
 

ஊற்று தளி 4 ஆகஸ்ட் - செப்டம்பர் 2000
உள்ளே.
விருது பெறும் கலைஞர்கள் கற்க கசடற பூ பூக்கும் புன்னன்கை இஸ்லாமிய இலக்கிய வரலாறு காவிக் கூண்டும் ஒரு கருநிறத் தென்றலும் ஐம்பது ஆண்டு அனுபவத்தின் பிரதிபலிப்பு அக்கனிப்பூக்கள்.
மலையக இலக்கியத் தடங்கள். வித்துவத்தீபம் அருள்வாக்கி அப்துல் காதர் இருபதாம் நுாற்றாணர்டின் ஈழத்து
இதழியலும் இலக்கியமும்
கடந்த நுாற்றாண்டில் ஈழத்தில் தமிழ்த் தேசிய இலக்கியம்
கடந்த நுாற்றாண்டு ஈழத்துக் கவிதை
சிறு கதைகள்
கவிதைகள்
முனிவன் பதில்கள் குறுக்கெழுத்துப் போட்டி
நாங்கள் பேசுகின்றோம்.
இந்தத் தேசத்தின் மகுடம். நம் மணிணை நனைக்க நதிகளும் அருவி களும் சுரந்து கொடுத்த தாய். வியர்வை விழுதுகளால் நமது மணிணைத் தோள்கொடுத்துத் தாங்கிய உழைப்பாளிகள் கொணர்ட மலைநாடு. இனங்களும், நிறங்களும், மொழிகளும், மனிதர் களின் முகங்களைப்போல் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளத்தான் வேறுபடுத்தப் பட்டன என்டிதை உணராமல். முதலாளி வர்க்கங்கள் விதைத்த கொடூரமான உணர்வுகளின் விளைவுகளை இன்னும் அறுத் துக்கொணர்டிருக்கும். அநீதி மட்டுமே தோட்டத் தொழிலாளர்களுக்கால்டிஇந்த இதழை சமர்ப்பிக்கின்றோம்.
இழைக்கப்பட்ட
விதைக்கும் முன்பே சிதைக்கப்பட்ட அந்த வித்துக்களுக்குள் விருட்ஷங்கள் இருந்ததையும். வளர நினைக்கையிலெல்லாம் வெட்டப்பட்டு செடிகளென்றே சரித்திரமாகிப்போன மரங்களின் வேர்கள் சொல்லும் கணிணிர்க் கதைகளை வெளிச்சத்துக்குள் கொண்டு வரவும். உங்களோடு நாங்களும் இணைகின்றோம்.
வார்த்தைகளால் மட்டுமல்ல
உள்ளதைச் சொல்கிறேன் இதயங்களாலும்,
துணுக்குச் செய்திகள் நட்புடன் நான்காவது உலகக் கிண்ணப்போட்டி ஆஷிப் ஏ புஹாரி
ஆசிரியர்
Chief Editor :Aashif A Buhary Sub Editor : Ukuvvela Akram
:Galagedara Unais
Layout & Designs Type Setting
:Aashif A Buhary : M.N. M. Rifas, Rifsa Naheem & Arafath A Buhary
Published at :No 9, Matale Road, Ukuwela. Post Code 21300. Printed at :Daafir Creations, 22 E5, Galle Road, Dehiwela. e-mail :pravagamGDyahoo.com ISSN NO: 1391 - 5827
Our special thanks : Mr Antony Jeeva A. R. M. Sirai, V. Senthilvel, & M. N. Naseeth
ஊற்று 1 தளி 4 ஆகஸ்ட் செப்டம்பர் 2000

Page 3
鄒
&
ஆசிச் செய்தி புத்தாயிரமாம் ஆண்டில் மலையகம் காணவிருக்கும், காணவேண்டிய புதுமைகள் பல, அவற்றில் எனது அமைச்சினால் மலையக சாகித்திய விழாவை பல்வேறுபட்ட பல்சுவை அம்சங்களுடன் ஹட்டனில் நடாத்துவதையிட்டு நான் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
சங்கத் தமிழின் இனிமையைத் 'தித்திக்கும் தெள்ளமுதாய்த் தெள்ளமுதின் மேலான முத்திக் கனியே முத்தமிழ்" எனப் பண்டைச் சான்றோரால் போற்றப்பட்ட நமதருந்தமிழ் உலகின் மொழிகள் பலவற்றுள்ளும் முதிர்ந்த முதன் மொழியாய் வழி காட்டும் ஒளிவிளக்காய் அழகு மிளிர்ந்து, இளமை ததும்பி பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துக் காக்கும் எல்லையற்ற பரம்பொருள் போன்று விளங்குகின்றது. இம் முருகுத் தமிழை சிறப்பிக்கும் முகமாகவே, இனி வரும் யுகங்களுக்கும் LJffs புகழ் விளங்கச் செய்யும் வகையில் சிறப்புற நடாத்தும் இச் சாகித்திய விழாவில் தமிழ் கலை, கலாசாரம், பாரம்பரியம், பண்டர்டுகளை பிரதிபலிக்கும் பல நிகழ்ச்சிகள் நடைபெற இருப்பது இந்த விஞ்ஞான யுகத்திலும் எமது பாரம்பரிய பண்பாடுகள் அழிந்து போகமல் கட்டிக் காக்கும் வகையில் எடுத்துக்கொண்ட ஒரு பெரும் முயற்சியாகும்.
இலக்கிய உணர்வோடும், இலட்சிய நோக்கோடும் இளைஞர்களின் கூட்டு முயற்சியால் ப்ரவாகித்திருக்கும் இப் புதிய இளம் மலராகிய ப்ரவாகம் எனும் சஞ்சிகை ஊற்றெடுத்திருப்பதை சாகித்திய விழாவிற்கு சிறப்பு மலர் வெளியிடுவதையிட்டும் எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
அத்தோடு அவர்களது இப் புதிய பிரவாகம் பாரெல்லாம் பரவ அனைவரது மனங்களிலும் நிலைத்து மணம்பெற வாழ்த்துகின்றேன்.
கெளரவ அமைச்சர் வேலுசாமி இராதா கிருஷ்ணன் (மத்திய மாகாண இந்து கலாசார அமைச்சர்)
மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா சிறப்பு மலர்
 

இருபத்தி ஓராம் நூற்றாண்டில் மத்திய மகாணத்தில் வெகு சிறப்பாக கொண்டாடவிருக்கும் மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழாவில் “ப்ரவாகம் சிறப்பு மலர் வெளிவருவதையிட்டும் அதற்கு ஆசிச் செய்தி எழுதுவதையரிட் டும் பெருமகிழ்ச் ச |யட்ைகின்றேன்.
தமிழரின் தனித்துவமான கலாசார பண்பாடுகளை பிரதிபலிக்கும் வகையில் அதற்கு உறுதுணை பூண்ட எழுத்தாளர்கள், க வரிஞர்கள் , கல் வரி மானி களர் , சாதனையாளர்கள் அனைவரையும் கெளரவிக்கும் முகமாக தமிழ் சாகித்திய விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே இவ்வாறு சிறப்பாக நடைபெறவிருக்கும் சாகித்திய விழாவினை மேலும் சிறப்பிக்கும் வகையில் ப்ரவாகம் வெளியீட்டாளர்கள் இச் சிறப்பு மலரை வெளியிடுவதையிட்டு அவர்களது சேவை பல்லாண்டு காலம் மணம் வீச எனது நல்லாசிகள்.
திரு. பி. கே. இராஜேந்திரன் (மத்திய மாகாண இந்து கலாசார அமைச்சின் பொதுசன தொடர்பு இணைப்பாளர்)
ஆசிச் செய்தி
உக்குவளைப் பிரதேச இலக்கிய வாதிகள் ஒன்றிணைந்து பிரவாகமாக ஊற்றெடுத்திருக்கும் “ப்ரவாக” மலருக்கு ஆசிச் செய்தி எழுதுவதில் மிக்க மகிழ்ச்சி யடைகின்றேன்.
"இலக்கியங்கள் காலத்தின் கண்ணாடி’ எனப்படுகின்றன. அவ்வவ் காலத்தில் இடம்பெறும் சம்பவங்கள், கலை, இலக்கிய, பண்பாடுகளை ஆதாரமாக வைத்து அவ்வவ் காலத்தின் இலக்கியங்கள் படைக்கப் படுகின்றன. ப்ரவாகமும் தனியே காதலையும், காமத்தையும் மட்டுமே எழுதாது சுற்றி நடக் கும் அக் கிரமங்களை, கொடுமைகள் போன்ற பல ரகங்களையும் சுமந்து வருவதால் அனைவரது மனதையும்
ப்ரவாகிக்கும் என்பதற்கு சந்தேகமில்லை.
எனவே இது போன்று மென்மேலும் நல்ல பல அம்சங்களை மக்களுக்குக் காட்டி மனிதம் மாண்புற ப்ர்வாகம் பல்லாண்டு காலம் மணம் பரப்ப எனது நல்லாசிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
தமிழர்களின் பண்பாடு, கலாசாரம், தனித்துவம், கலை போன்றவற்றை பாரெல்லாம் பரவச் செய்யும் வண்ணம் வெகு சிறப்பாக கொண்டாடவிருக்கும் மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழாவினை சிறப்பிக்கும் வகையில் சிறப்பு மலர் ட்ரவாகம் வெளியீட்டாளர்களால் வெளியிடுவதையிட்டு எனது பாராட்டுக்கள் உரித்தாகட்டும்.
திரு. வி. சாந்தகுமார் (மத்திய மாகாண இந்து கலாசார அமைச்சின் இந்து கலாசார அலுவல்கள் இணைப்பதிகாரி)
ஊற்று தளி 4 ஆகஸ்ட் செப்டம்பர் 2000

Page 4
(03) இராமையா சடகோபன் செல்விஅம்பிகை வேல் முருகு வசந்தங்களும் வசீகரங்களும் அர்ச்சுனன் தபசு.
(புதுக்கவிதை)
游 மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா சிறப்பு மலர்
 

மத்திய மாகாண சாகித்திய விழாவில்
சிறப்பு விருது பெறும் கலைஞர்கள்
(O1) பெயர் - ஏ.பி.வி.கோமஸ்
பெற்றுள்ள
Lishab6ft - தமிழ்மணி,கலைக்குரிசில்
எழுதிய நூல்கள் - வாழ்க்கை ஒரு புதிர்(சிறுகதைத் தொகுதி) அங்கமெல்லாம் நெறஞ்ச மச்சான் (நாட்டார் பாடலில் குறு நாவல்)
(02) பெயர் - துரைசாமி நடராஜா
இலக்கிய பங்களிப்பு பத்திரிகை. பாரம்பரிய நிகழ்சிகள், கவிதை, நாடகம், வரலாற்றுக் கட்டுரைகள் போன்றன.
(O3) பெயர் - பெரியசாமிபிள்ளை
லோகேஸ்வரன் பெற்றுள்ள பட்டங்கள் - சித்திரசிகாமணி,
ஒவியமலை
எழுதிய நூல்கள் - என்றும் அன்புடன் (கவிதை),நினைவெல்லாம் இனிய வசந்தமே (கவிதை). அவரவர்க்கு வெளிச்சம் (கவிதை), தூது (கவிதை), அழகியற்கலை சித்திரம் (பாடநூல்), சித்திரம் (பாடநூல்),மற்றும் ஓவியக் கண்காட்சி
(04) பெயர் - வெள்ளையன் முனுசாமி
பெற்றுள்ள பட்டங்கள் - சமூகச் சுடர்,
கலைப்பங்களிப்பு-நாடகங்கள் பயிற்றுவித்தல்
(05) பெயர் - செல்லமுத்து
கிருஷ்ணமூர்த்தி
பெற்ற பட்டம் - கலைஞானி
(O6) பெயர் - வசந்தகுமாரி சூரியகுமாரன்
பெற்றுள்ள LJ Filab6ft - பரத சூடாமணி, ரத்ன தீபம்,
நாட்டிய சிறோன்மணி
இலக்கிய பங்களிப்பு -
45 மாணவ மாணவிகளின் அரங்கேற்றம், நடனக் கருத்தரங்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் வெளிநாட்டு அரங்கேற்ற நிகழ்ச்சிகள்.
(07) பெயர் - பெருமாள் ஆறுமுகம்
(மலரன்பன்)
பெற்றுள்ள பட்டங்கள் - இலக்கிய வித்தகர்
இலக்கிய பங்களிப்புசிறுகதை, நாவல், குறு நாவல், கவிதை, மெல்லிசைப்பாடல்கள், கட்டுரைகள். மற்றும் அரச தேசிய சாகசித் திய விருது பெற்றவர் (கோடிச்சோலை, சிறுகதைத்தொகுதி).
(08) பெயர் - முத்துசாமி மகாலிங்கம்
இலக்கிய பங்களிப்பு62 மேடை நாடகங்கள் அரங்கேற்றம் , நெறியாள்கை, வானொலி கலைஞர்.
(0.9) பெயர் - எம்.எச்.எம்.ஹலீம்தீன்
பெற்றுள்ள பட்டங்கள் - கல்லூட்டுக்கவிராயர்,
கலாபூஷணம்
இலக்கிய பங்களிப்பு. கவிதை, சில கவிதைத் தொகுதிகள் வெளியிட்டுள்ளார்.
ஊற்று 1 துளி 4 ஆகஸ்ட் செப்டம்பர் 2000

Page 5
(10) பெயர் - அலோசியஸ் ஸ்டீவன்.
பெற்ற விருது - இரத்தின தீபம், புனித
யோசேவாஸ்
கலைப்பங்களிப்புஇசை, மேடை நாடகங்கள் வானொலி நிகழ்ச்சிகள்.
(11) பெயர் - திருமதி. ஸர்தாஹஸன்
(பேராதனை ஷர்புன்னிஸா)
பெற்ற பட்டம் - தமிழ்ஒளி,கலபூசணம்
இலக்கிய பங்களிப்பு - கிராமிய மணம் (சிறுகதைத் தொகுதி) கவிதை கட்டுரை.
கெளரவ விருது பெரும் கலைஞர்கள்
(01) - போரசிரியர் எம். சின்னத்தம்பி பொருளியல் பீடம் பேராதனை பல்கலைக்கழகம், சமுகவியல் ஆய்வாளர்.
பெயர்
(02) - பேராசிரியர் எம்.எஸ்.மூக்கையா
துணைவேந்தர் கிழக்குப் பல்கலைக்கழகம், சமுகவியல் ஆய்வாளர்.
பெயர்
(03) கலாநிதி பிரதாப் இராமனுஜம் அமைச்சின் செயலாளர், தோட்ட உட்கட்டமைப்பு
பெயர்
(04) திரு.கே.மாரிமுத்து மேலதிக செயலாளர் சுற்றுலாத் துறை, சமூக சேவையாளர்.
ܚ
பெயர்
(05) - கெளரவ டி.ஈஸ்வரன்
தலைவர் கம்பன் கழகம், கெளரவ தூதுவர் மொரீசியஸ்
(06)
பெயர்
பெயர் - எம்.என்.ராஜா
பாடகர், பாடலாசிரியர், நடிகர், வர்ணனையாளர், தொலைக்
காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர்
(07) - திரு.டி.ஆர்.ராஜன்
தொழிலதிபர், சமூக சேவையாளர்
பெயர்
(08) - சிதம்பரம் தேசோமாயானந்தம்
கல்விப்பணி
(OJIsr
(09)
முத்தையா முரளிதரன் சர்வதேச கிரிக்கெட் வீரர்
பெயர்
(10) - எம்.மனோகரன்
மரதன் ஒட்ட வீரர்
பெயர்
(1 l) - பி.முத்தையா
செய்தி ஆசிரியர், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்,
GLJuJi
நன்றிகள்
ப்ரவாகம் மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா சிறப்பு மலருக்காக பலவிதங்களிலும்
ஆலோசனைகளும் ஊக்கமும் நல்கிய திரு அன்தனி ஜீவா அவர்களுக்கு ப்ரவாகம் ஆசிரியர் குழு தம் மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றது
6 மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா சிறப்பு மலர்
 

தேயிலைத் தொழிற்சாலையின் சல்லடைக் காம்பிராவில் அவன் நிற்கிறான். அந்த ஒரு நாள் தான் அவனது கடைசி நாளாக இருந்தது. அந்தக் கணப்பொழுதில் முத்தையாவைப் பொருத்தளவில் எல்லாமே நடந்து முடிந்து விட்டன.
இனிமேல் என்றுமே திரும்பி வரமுடியாத இந்த ஊரைவிட்டே போக வேண்டிய ஒரு நிலைமை அவனுக்கு ஏற்பட்டு விட்டது. அவன் ஒரு போதும் இனி இங்கே வரமாட்டான்.
இனி எதுவும் நடக்குமென்று நினைத்துக்கூட பார்க்க முடியாது. அந்தச் சல்லடைக் காம்பிராவில்
உருளும் சக்கரங்களின் சுழற்சியிலேயே அவனது பதினைந்து ஆண்டு கால இளமை வாழ்வு எண்ணி முடிந்தது! எந்த நாளும் சதா அவனது கைகள் பட்டு பட்டு அந்தச் சல்லடைக்காம்பிராவின் கதவுப்பிடி தேய்ந்து போயிருந்தது. முத்தைய்யா அந்த சல்லடைக்காம்பிரா வேலைக்கு பதினைந்து வயதில் வந்தான். அன்று தொடக்கம் இன்று வரை அவனது வாழி வும் உலகமும் அதே தொழிற்சாலைதான்.
கொஞ்ச நாளாய் அந்த ஒதாழிலில் அவனுக்கு ஒரு வித வெறுப்பும் கசப்பும் ஏற்படத் தொடங்கின ஒரு விரக்தியான நிலையில் இருந்தானி , இப்படியொரு நிலை மூன்று மாதங்களுக்கு முன்பு அதாவது அவன் மதுரைக்கு யாத்திரை போவதற்கு முன்பே ஏற்படத்தொடங்கியது.
எந்த நேரமும் சுழன்று கொணர்டிருக்கும் ரோதைகளின் ஒலமும் ஆடிக்கொண்டேயிருக்கும் சல்லடை யந்திரத்தின் அதே சத்தமும் அவனைச் சலிப்படையச் செய்தன.
ஆனால் இன்று அந்த நிலமை வித்தியாசமாக மாறியிருந்தது! அவனிடம் ஒரு திடீர் மாற்றம் காணப்பட்டது. அங்கே ஆடி இரைச்சலிடும் யந்திரங்களெல்லாம் அவனை வசப்படுத்தின படக்
படக்கென அடித்துக்கொண்டிருக்கும் அவனது
நாடித்துடிப்புகளோடு அவைகளும் சேர்ந்து கொணர்டன.
வேலை முடிந்து ஆணிகளும் பெண்களும் தொழிற்சாலையை விட்டுப் போகும் வரை அவன் தயங்கியபடியே அங்கே நின்றான். கடைசியாக ஒரு தடவை அந்த சல்லடைக்காம்பிராவைப் பார்த்து விட்டுப் போக ஆசைப்பட்டான். தொழிற்சாலையில்
தொழிலாளர்கள் எவருமில்லை
வெறிச்சோடிக் கிடந்த சல்லடைக் காம்பிராவுக்கு திடீரென ஜீவன் வந்தது! தேயிலைத் துரளின் வாசமும் இரும்புக் கழியில் பூதங்களால உறங்கிக்கிடந்த ரோதைகளின் சக்தியும் வெறி கொண்டு எழுந்தன! அவன் உடலுக்குள் அந்த ஆவேசங்கள் புகுந்தன! முத்தையாவின் மனமும் உடலும் இயந்திரமயமாகி இயங்கத் துடித்தன.
அவனது பதினைந்து ஆண்டுகால வாழ்க்கை கொழுந்துகள் வாட்டமாகும். பச்சிலைத் தட்டுகளிலும், துTள் சலிக்கும் சலலடைகளிலும் ஒலமிட்டுக்கொண்டிருக்கும் இயந்திர சத்தங்களிலும் இரண்டறக் கலந்து கிடந்தது.
“நாளைக்கு இந்த நேரம் ?. மனம் குமைந்தது. ஹீஹீநா போயிட்டா எனக்கு பதிலா எவனாவது வருவான். வழமையா சல்லடகாம்பிரா வேல நடக்குற மாதிரி நடந்துக்கிட்டுதான் இருக்கும். இங்க இருக்குற சாமாண்களெல்லாம் இருந்த மாதிரித்தான் இருக்கும். நான் மட்டுந்தான் இருக்க மாட்டேன்! இதுதான வாழ்க்க. அவனி மனம் நியாயப்படுத்திக்கொணர்டது. ஒருத்தன் போனா இன்னொருத்தண் வருவான். ஆமாம் முத்தைய்யா போய்விட்டால் மாத்திரம் எதுவும் குடைசாய்ந்து இந்த உலகத்தில ஈடு இணையற்றவர் என்று எவரும் கிடையாது.
போய் விடாது!
என்ன இருந்தாலும் அந்தத் தோட்டத்தில் முத்தையா சக தொழிலாளர்களால கை
ஊற்று துளி 4 ஆகஸ்ட் செப்டம்பர் 2000
7

Page 6
விடப்பட்டவனாகக் கருதி வேதனைப்பட்டான். அவன் நாடி தளர்ந்தவனாய் தொங்கிய முகத்தோடு தொழிற்சாலையை விட்டு திறந்த நெடுஞ்சாலையில் நடந்தான். ஆமாம் திறந்த நெடுஞ்சாலை பாதை தான் இங்கு வெட்ட வெளியாக திறந்துக்கிடக்கிறது. நாளை என்ற ஒரு நம்பிக்கையும் எதிர்காலமும் இல்லாத பாதை.
வேலை முடிந்து வீட் டைநோக்கும் தொழிலாளர்களோடு கலந்து அவனும் நடந்தான். அவர்களின் உறவும் நெருக்கமும் இன்றோடு ஒதுங்கிவிட்டதாக உணர்ந்தான். வழமையாக அவன் கணிகளில் எதிர்ப்படும் காட்சிகளெல்லாம் இன்று வெறும் சூனியமாகவே தெரிந்தன. நடந்து முடிந்த பழைய நினைவுகள் அவன் மனதில் பளிச்சிட்டு மறைந்தன. ஹீஹீஊருக்குப் போகும். பிரயாணப் பத்திரங்களை வாங்குவதற்கு அவன் கொழும்புக்குப் போய்வந்த அந்த முதல் நாளை நினைத்துப்பார்த்தான். இமிக்கிரேஷன் டிபாட்மணர்ட் ஆபிசில நடந்த விசாரணை அவன் நினைவில் ஆடியது. அந்த அதிகாரி அந்த முரட்டு மனிதன், முதுகும் பிடரியும் ஒரேயளவாக ஊதிப்புடைத் திருக்கும் அந்த மாட்டுக் கழுத்தன்! கண்களில் தீப்பிழம்பு கக்க முத்தையாவின் முன்னால் நின்றான். முத்தையாவின் பார்வையில் அந்த ஆப்பிசர் வலையில் சிக்கிய ஒரு காட்டு மிருகமாகவே காட்சிக் கொடுத்தான்.
56M g5 g.-Pftsu (Temporary Resident PaSSport) புதுப்பிக்க முத்தையா அவனிடம் போயிருந்தான். கொழும்பில் அது நடந்தது. அந்த அதிகாரி முத்தையாவைப் பார்த்ததும் பயங்கரமாகக் கர்ஜித்தான். அந்தக் கர்ஜனையைக் கணிடு அங்கு வந்திருந்த ஏனைய தொழிலாளர் கூனிக் குறுகிப் போய் நின்றார்கள்.
முத்தையா தனது பத்திரங்களை அந்த அதிகாரியிடம் கொடுத்து விட்டு நின்றான்."ஒண்ட டி.ஆர்.பியை புதுப்பிக்க முடியாது! ஒடிப்போ!. அந்த மாட்டுக் கழுத்தன் ஒரு பன்றியைப் போலவே மூர்க்கமாக உறுமினான்.
"ஐயா!. முத்தையா திகதித் திணறினான். "கோயில் கொளத்த சுத்திப் பார்க்குறதுக்காகத்தான் நா மதுரைக்கு போயிட்டு வந்தேன். நா சிலோன்ல தாங்க. இங்க தாங்க, தோட்டத்துலதாங்க பொறந்து வளர்ந்தவன். கொஞ்சம் தைரியமாக முத்தையா சொன்னான்.
"ஆமாண்டா!. "மாட்டுக் கழுத்தன் ஏளனமாகச்
சிரித்தான். ஒவ்வொரு பிச்சைக்காரனும் இனிமேல் சிலோன் காரண்தான்! இல்லையா? உனக்கு இங்க செய்றதுக்கு ஒன்னுமில்லேன்னா வூட்ல போய் செப்டா!...” எவ்வளவு கீழ்த்தரமான பாஷையில இவன் பேசுறான்! இந்த அதிகாரியெல்லாம் ஏன் இப்பிடி குரூரமா நடந்துக்குறாங்க? அந்தப் பிரஜாவுரிம அதிகாரியும் இவனப் போலத்தான் ரொம்ப ராங்கித்தனமா நடந்துகிட்டான். எங்கப்பாவ எங்கம்மா கல்யாணம் கட்டிக்கிட்டாங்களான்னு கேட்டான். இதெல்லாம் ஒரு கேள்வியா? வெறுப்பான
அந்தக் கசப்பான சம்பவங்களெல லாம் அவன நெஞ்சுக்குள் நுழைந்து ஓடின.
米米来米
முத்தையாவுக்கு தன் தாயின் நினைவு வந்தது. பாசம் வடியும் அந்தக் கருணை முகம் அவன் முன்னால் தோன்றியது. கணிணிச் நிறைந்த கருவிழிகள் அதில் துயரத்தோடு இழையோடும் ஒர் ஏழ்மையான பாமரப் புன்னகை காட்சி தந்தது. வார்த்தையால் வடிக்கமுடியாத ஒரு வலி அவன் இதயத்தைத் துளைத்தது. அந்த வேதனை அங்கமுழுவதும் மின்சாரமாய் பாய்ந்தது.
அவள் ஆவி பிரிந்த அந்த நாளை இன்னும் அவன எவி வளவு தெளிவாக நினைவில வைத்திருக்கிறான்? கணிகள் வரண்டு போகும் வரை அவன் எப்படி அன்று கதறி கதறி அழுதான்? அவள் தன் கடைசி மூச்சை உள்ளே இழுத்து விட முடியாத வேதனையிலும் எவ்வளவு தெம்பாக, தெளிவாகப் பேசினாள்.
"மவனே! என்னைய நெனைச்சி ஒன் வாழ்க்கய அழிச்சிக்காத கண்ணு நா எப்பவும் ஒன்னோடத்தான் இருப்பேன் சாமீ. அவள் கொஞ்சம் மெளனமாகித் தொடர்ந்தாள். "ஒடம்ப நல்லா கவனிச்சிக்கணும் என் ராசா குட்டிநாய நல்லாப் பார்த்துக்கணும் ஒங்கப்பாருதான் இந்த நாய்க் குட்டிய வூட்டுக்கு கொணர்டந்தாரு 1. T
அந்த நாய்க்குட்டி சினி னதில் மொழு மொழுவென்றிருக்கும். உடலில் அப்பி முளைத்திருக்கும் பஞ்சு முடி சில்க் துணியைப் போல பள பளக்கும். காதுகளை மடக்கிப் பின்னால் இழுத்து உடலை நெளித்து நெளித்து வாலை ஆட்டிக்கொண்டு நிற்கும் அந்த அழகிய காட்சி இன்னும் அவன் நினைவில் இருக்கிறது.
தாயின் மரணத்துக்குப்பின் முத்தையாவை விட்டு குட்டி பிரிவதில்லை அவனோடு நெருக்கமாக ஒட்டிக்கொணர்டது. கந்தல் துணியில் மிஞ்சியத்
8 மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா சிறப்பு மலர்

துணர்டாய் அந்தச் சின்ன உயிர் தாயின் பிரிவிலே கிடைத்த ஒரு ஞாபகப் பரிசு ஒர் ஆறுதல் சொத்து என்று முத்தையா நினைத்தான், சின்னாயி சித்தப்பா எல்லாரையும் விட குட்டியையும் பிரிய வேண்டிய நேரம் வந்து விட்டது.
"எப்பிடி குட்டிய விட்டுட்டு நெஞ்சறை நிர்மூல மாக்கப்பட்ட குடிசையாய் உருவிழந்துக் கிடந்தது அவனது உறவாய் உயிராய் இருந்த குட்டியை யாரிடம் கொடுத்து விட்டுப்போவது? "சின்னாயி பாசமே இல்லாத ஒரு பிறவி அவ குட்டிய விரும்ப மாட்டா. பெக்டரி வோச்சர் ராமனிடம் கொடுத்து விட்டுப் போகத் தீர்மானித்தான். இருந்தும் அவர் மனதை அறிய.
ராமன் நாய்க் குட்டிய கேக்குறான்!." என்று , ஜாடையாகச் சொன்னான். அவள் கொஞ்சங் கூட கவனிக்கவில்லை. அந்த அலட்சியத்தை பிறகு அவனால் தாங்கிக்கொள்ள
போறது?. "அவன்
அவனி பேச்சைக்
முடியவில்லை.
வீடு வந்துவிட்டது. வாசலில் போய் நின்றான். பிறந்ததும், வளர்ந்ததும், வாழ்ந்ததுமான அந்த லயத்துக் காம்பிராவை அந்தப் புறாக் கூட்டை விட்டு அவன் வெளியேறி விடவேண்டும்.
முதி தையா விட்டுக்கு வந்ததும் பயணத்துக்குரிய எல்லா ஏற்பாடுகளும் தயாராக இருந்தன. சித்தப்பாவும் அவன் வீட்டுக்கு வந்திருந்தார். சின்னாயி ஒரு துணிப்பையில் அவனது சாமான்களையெல்லாம் மூட்டைக்கட்டி காம்பிரா மூலையில் வைத்திருந்தாள்.
முத்தையா வழமையாக எவரிடமும் அதிகமாகக் கதைக்க மாட்டான். அது அவனது சுபாவமும் கூட அன்றைய தினம் அவனது நாக்கு பின்னிக் கிடந்தது. அந்த நிலமையில் பரஸ்பரம் அவர்களது மனவுணர்வுகள் மெளனமாக அழுதன சங்கடமான அந்தச் சூழலில் சித்தப்பா பேசினார்.
முத்தையா. அந்த வார்த்தையில் வேதனைக் கலை நிறைந்திருந்தது. "ஓங்க பாட்டன காலத்துலதான் நாங்க கிராமத்தவுட்டு சிலோனுக்கு வந்தோம். இப்ப ஏதோ தூரத்துச் சொந்தமுன்னு யாராவது அங்க இருப்பாங்க நா யாரக் கண்டேன்? எவரக் கண டேனர்? எல்லாப் பாரத்தையும் ஆணர்டவன் மேல போடு! திக்கத்தவங்களுக்கு தெய்வந்தான் தொணை காயிதம் சல்லிகள கவனமா வச்சிக்க." என்று நா தளுதளுத்தார். அவரால் மட்டும் என்ன செய்து விட முடியும்?
"சரிங்க சித்தப்பா! சரிங்க சித்தப்பா!" என்று
பலதடவை முத்தையா சொல்லிக் கொண்டான். அந்த இரணர்டு வார்த்தைகளில் அவன் என்னவெல்லாமோ சொல்ல நினைத்த்ானோ அதில் அத்தனையும் அடங்கி யிருந்தன. பலவீனப்பட்டு போன மனிதர்கள் எலியப் பூச்சிகளாய் இருக்கும் வரை வலிமை நிறைந்தவர்கள் மிதித்துக் கொண்டுதான் இருப்பர்.
பிரியும் நேரம் வந்தது.
முத்தையா துணி மூட்டையைத் துாக்கிக் கொண்டு மறுகையில் குட்டியை அணைத்தப்படி மெளனமாக விடைபெற்று நடந்தான். பெக்டரி வோச்சர் ராமன் வீட்டை நோக்கி அந்தத் தேயிலைக் காட்டு வழியாக அவனது கால்கள் பின்னிப்பின்னி நகர்ந்தன.
பலவந்தமாக அவனை இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படும் அந்தப் பயணத்தைப் பற்றியே தொழிலாளர்களெல்லாம் பேசிக் கொண்டிருந்தார்கள். முத்தையாவை பலி பீடத்துக்கு அனுப்பி வைப்பதாக அவர்கள் துயரப்பட்டார்கள்.
முத்தையா குட்டியை இறுக அணைத்த படியே நடந்தான். குட்டி அவன் முகத்தை அடிக்கடி முகர்ந்து பார்த்துக்கொணர்டது. அதுதான் அவனோடு சேர்ந்து போகும் கடைசிப் பயணம் என்று அதுக்குத் தெரியாது.
ஏனர் நாய் க பிரஜாவுரிம கடுதாசு வைச்சிருக்கணுமுண்னு எவனும் கேக்கல்ல?. ஹம் சில நேரம் அதுகளுக்கும் ஏதாவது ஒரு மாதிரியான கடுதாசு இருக்கும்! இல்லாட்டிப் போனா அதுக வாழ்க்கைக்கும் ஆபத்து வந்திரும் அப்படியான ஒரு ஆபத்து குட்டிக்கும் வந்திரக் கூடாது! (He wondered why dog's were not required to get citizenship papers. Perhaps they too had some kind of paper. Other wise their life would be in danger. He hoped that Such a tragedy would not be fall sooty”) Sreigi (36)ư6ơi tạo 65760ăL-Toở. அவன் மனம் பேதலித்திருந்தது.
ராமன் தனக்காகக் காத்துக்கொண்டிருப்பதை முத்தையா கவனித்தான். இன்னும் சொற்ப நேரமே இருக்கிறது அதற்குள் இருவரும் ஏதாவது கதைத்துக் கொள்ளவேண்டும்.
"அந்தச் சின்ன அறையில் போட்டு அடைச்சி வச்சிக்கிறேன்." என்று ராமன் குசினிப் பக்கமிருந்த ஒரு அறையைக் காட்டினான். அது கொஞ்ச நாளையில பழகிடும் நீ கவலப்படாத நா கவனிச்சுக்குவேன்." என்று முத்தையாவுக்கு
ஊற்று துளி 4 ஆகஸ்ட் செப்டம்பர் 2000
9

Page 7
ஆறுதல் கூறினான். முத்தையா அவன் மெதுவாக கதவருகே சென்றான். குட்டி அவன் உடலோடு உடலாய் ஒட்டிக்கொணர்டது. அதை கீழே இறக்கிவிட்டு அந்த அறைக்குள் கூப்பிட்டான். குட்டி நகரவில்லை! அவன் அடித்து விடுவானோ என்ற பயத்தோடு அவனை ஏக்கத்தோடு பார்த்தது. முத்தையா அதைத் தடவினான். அதன் பஞ்சு மயிர்களைத் தன் மூக்கோடு உரசினான். அன்பாகத் தட்டிக் கொடுத்து, தூக்கி அந்த அறைக்குள் தள்ளிக் கதவைச் சாத்தினான். குட்டி கதவைப் பிராண்டியது வெளியே வருவதற்காக அலைமோதியது. கத்தியது. முணங்கியது.
இருவரும் மெளனமாக ரயில் நிலையத்தை நோக்கி நடந்தார்கள். அந்தி சாயும் நேரம் இருள் மெல்லப் படர்ந்தது. குட்டியின் அழுகுரல தூரத்திலிருந்து கேட்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக அந்தச் சத்தம் இப்போது மங்கி மறைகிறது. எங்கோ நடு ராத்திரியில் அழுது ஒயும் குழந்தையின் சத்தைத்தைப் போல! அந்தப் புலம்பல் தன் தாயின் கல்லறையிலிருந்து வருவதாய் முத்தையா
கலங்கினான்.
சுடுகாட்டில் தேயிலைச் செடியின் அடியில் அவனது தாயின் குழி மேட்டிலிருந்து ஒரு பிடி மணர்ணை அள்ளி முடிந்துகொண்டு விரைந்தான். அந்த மணி முடிச்சு அவன் உயிரில் கலந்த பொக்கிஷமாய் ஒன்றாய் கலந்தது.
ரயில் நிலையம்
வழமையான சந்தடி, நடமாட்டம் முத்தையா திருச்சி சந்திக்கு ஒரு டிக்கட் வாங்கினான். கடைசி மணி ஒலித்தது. "உள்ளுக்கு போ முத்தையா க.வ.ல.ப்.ப.டா.த.!. ராமனின் நாக்கு தடுமாறியது. முதி தையாவைப் அவனுக்கும் ஒரே வயது சமமாக நசுக்கப்படும் நிலை! சமமாகத் துயரப்படும் வாழ்க்கை அந்த ஏழை நணர்பனின் ஈரலும் பிடுங்கப்பட்ட நிலையில் அந்த ரயில்வே கேட்டுக்கு வெளியே சிலையாக நின்றான்.
போலவே
முத்தையா கேட் வழியாக உள்ளே நுழைகிறான். ரயில்வண்டி வந்து நிற்கிறது. பட்டா பரியாக. எழும்பிய கூட்டம் குய்யோ முறையோ.." வென்று கூவியது ஒரே புலம்பல், ஒரே குமுறல், ஒரே விம்மல் கட்டியணைத்துப் பிரிய முடியாமல் பிரியும் அவலம்.
முத்தையாவுக்காக அழுவதற்கு அங்கு யாருமில்லை அவன் தனித்துப்போய்விட்ட ஒரு நடைப்பிணம். கோச்சிப் பெட்டிக்குள் ஏறினான். ஜன்னல் ஒரமாக உட்கார்ந்தான். பக்கத்தில் ஒரு இளம் பெணி அமர்ந்திருந்தாள். மனம் குழம்பி ஜீவனற்ற
ஜடமாக எதையுமே
புரிந்துகொள்ளும் திரானியற்றவனாக சமைந்திருந்தான்.
ரயில் நகர்ந்தது. கீரிச்சிட்டு, கடகட சத்தம். ராமன் கன்னத்தில் கைவைத்துக் கொணர்டு கேட்டிலே சாய்ந்தபடி நிற்கிறான். முத்தையா அவனையே பார்க்கிறான். இருவரும் பரளப்பரம் கைகளை அசைத்துக் கொள்ளவில்லை வணர்டி வேகத்தில் திமிர் எடுத்தது. சமதரை பாதையில் தடதடவென கடூராமான ராகத்தை இசைத்து ஓடியது. அந்த வண்டிச் சக்கரங்களின் ஒலம் அவனை வதைத்தது. அவன் வாழ்க்கையும் சக்கரமாகியதோ? கடைசி ஒரு தடவையாக ஜன்னலில் தலையை நீட்டி அவன் வேலை செய்த தொழிற்சாலையின் மினி சார வெளிச்சங்களைப் பார்க்கிறான்.
தொழிற்சாலையின் வெளிச்சம் ரயில் நிலையத்தில் பிரிவால் துடித்த பெண்களின் கூக் குரல் குட்டி நாயின் முணங்கல் எல்லாம் ஒன்று கூடி அவன் மூளையைச் சம்மட்டியால் சிதறியடித்தன.
(முற்றும்)
ஆங்கிலத்தில் ஸி.விவேலுப்பிள்ளை தமிழாக்கம் மு.சிவலிங்கம்
குசும்புகுப்புசாமி
யாழ்ப்பான தமிழ் மக்களால்(போராளிகளால்) இனி முஸ்லீம் மக்களுக்கு அநீதி இல்லையாம். தமிழீழம் தாயகமாம் விரட்டியடிக்கப்பட்டு 10 வருடங்களின் பின் ஞானோதயம். புலியின் மீசையில் மண் ஒட்டாத இன்னொரு தற்காப்பு கருவிக்காக இந்த அழைப்பா? அப்பப்பா புலி பசித்தாலும் புல்லை தின்காது. மனிதர்களை மட்டும்தான் சாப்பிடும். வியூகம் எதற்காக பொறுத்திருங்கோ. x
※荃来 ※、裘※
ஏனுங்கோ. அத்தியவசிய பொருள்களின் விலையை அடிக்கடி அதிகரித்தீங்கோ. இருந்தும் தண்ணீரையும் மின்சாரத்தையும் அடிக்கடி தடை செய்து இன்னும் நம்மல இம்சிக்கலாமா?
※瑙家、泳曦水 சிலது இருக்குதுங்கோ திறமை. ஆர்வம் இருக்குதோ இல்லையோ பெயரும், புகைப்படமும்பத்திரிகையில் வர அலையுதுகள். புகழ் தேடி கிடைப்பதில்லை. தானே தேடி வரனும்கறது.இதுகளுக்குளப்போவிளங்குமோ?.
10 மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா சிறப்பு மலர்
 
 

LDனிதன் எப்படி தோன்றினான்.? குரங்கிலிருந்து பிறந்தான். டார்வினின் பரிணாம கோட்பாட்டை இவ்வுலகமே இன்றுவரை ஏற்றுக் கொளர் ளப் பட்டு Li si i F s 6D 6 , காலாசாலைகளில், சரித்திர நூல்களினாலும் கற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறது.
கோட்பாடுகள் என்றால் என்ன? கோட்பாடுகள் என்பவை நிரூபிக் கப்பட்ட விஞ ஞான உணி மைகள் அலல. இவை வெறும் அனுமானங்களே! காலப்போக்கில் இவை உண்மை என நிரூபிக்கப்பட்டாலும் படலாம் அல்லது நிரூபிக்கப்படாமல் “பொய்' என்று புறக்கணிக்கப்பட்டாலும் படலாம். இதனையே (Theory) கோட்பாடு என்று வரையறுக்கலாம்.
அதாவது மனிதன் குரங்கிலிருந்து தோன்றினான் என்ற பரிணாம வளர்ச்சிக் கொள்கை இன்னமும் நிரூபிக்கப்பட்ட உண்மையாகிவிடவில்லை என்பதை மேலுள்ள கூற்று மூலம் தெளிவாக புரிந்து கொள்ளலாம்.
இனி இவ்வுலகம் எவ்வாறு தோன்றியது, மனிதன் எவ்வாறு தோன்றினான் என்பன குறித்து விஞ்ஞானம் பின்வருமாறு கூறுகின்றன. வாயுக்களும், தூசுக்களும் ஒன்றாகச் சேர்ந்து உருவான பொருள் வெடித்து சுழலும் கோள்களாக மாறியது. இதன் மூலமே இந்தப் பூமியும் இந்தப் பிரபஞ்சத்தில் காணப்படும் இதர கோள்களும் தோன்றின.
பூமி உருவானதன் பின்னர் அல்லது பூமி உருவாகிக் கொண்டிருந்த போது. இரசாயன மின்சார சக்திகள் தற்செயலாக ஒரு மாற்றத்திற்கு உற்பட்டு , ஒரு வித திரவத்தை உருவாக்கின இதிலிருந்து உயிரினங்கள் தாமாகவே தோன்றின. அவை
தொடர்ந்து பெருகிப் பரவலாயின.
மிக மிக நுணி னிய முதல் உயிரணுவிலிருந்து தான் பின்னர் ஏராளமான செல்களைக் கொண்ட உயிரினங்கள் தோன்றின.
ஏராளமான செல்களைக் கொண்ட இந்த உயிரினங்களில் சில கடலிலிருந்து வெளிப்பட்டு ஊர்ந்து செல்லும் உயிரினங்களாக நிலத்தில் வாழ வந்தன. இன்னும் சில பறப்பனவாயின அப்போது தற்செயலாக ஏற்பட்ட சில மாற்றங்களின் காரணமாகவே இது போன்ற ஊர்வனவும், பறப்பனவும் இன்னும் உள்ள உயிரினங்களும் தோன் றின. இந்த மாற்றங்களை தாக்குப்பிடிக்க முடியாதவை இறந்து விட்டன. இந்த மாற்றங்களை தாக்குப்பிடித்து வாழும் அளவுக்கு சக்தி படைத்தவை நீண்ட நாட்கள் வாழ்ந்தன. அதோடு ஏராளமான குட்டிகளையும் ஈன்றெடுத்து இனப் பெருக்கமும் செய்தன. இலட்சக் கணக்கான ஆண்டுகளுக்கு பின்னர் ஒவ்வொரு வகை உயிரினமும் பல்வேறு உயிரினங்களாகப் பிரிந்து பரவின.
ஊர்ந்து செல்லும் பிராணிகளிலிருந்து குட்டிப்போட்டு பாலுட்டி வளர்க்கும் பிராணிகள் உருவாயின. குட்டிபோட்டு பாலூட்டி வளர்க்கும் பிராணிகளினிருந்து, ஒரு தனி இனம் தோன்றியது இந்த இனம் மரங்களில் மட்டுமே வாழ்வதாக இருந்தது. இது தோற்றத்தில் குரங்கை போல் இருந்தது ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப்பின் இந்த இனம் மரங்களை விட்டு நிலத்தில் வாழ ஆரம்பித்தது காலப்போக்கில் இந்த இனத்தை சேர்ந்தவை நடப்பதற்குத் தங்கள் கைகளை பயன் படுத்துவதற்குப் பதிலாக நிமிர்ந்து நிற்கலாயின, காலப்போக்கில் கைகளை நடப்பதற்குப் பயன் படுத்துவதை முழுமையக நிறுத்திக்கொண்டன.
இப் படிக் கைகள் நடக்கின்ற வேலையிலிருந்து விடுபட்ட உடன் சில கருவிகளோடு பரிமாறும் அனுபவம் இந்தக் குரங்குகளுக்குச் சந்தர்ப்பவசத்தால் ஏற்பட்டது. இந்த அனுபவம் அவற்றின் மூளை வளர்ச்சிக்குப் பயன் பட்டது. நீண்ட நெடிய காலங்களுக்கு பின்னர் அவை மனித வடிவம் பெற்றன. இந்நிலையில் அவை சிந்திக்கவும் பேசவும் கற்றுக்கொண்டன, எனினும் அந்த குரங்கினதும் பழக்க வழக்கங்களில் சில மனித
ஊற்று 1 துளி 4 ஆகஸ்ட் செப்டம்பர் 2000
11

Page 8
இனத்திடம் இருந்துகொண்டிருந்தன இன்னும் பல வருடங்கள் கழிந்த பிறகு இந்தக் குரங்குக் குணங்கள் அதனிடமிருந்து அகன்றன. முழுமையான மனிதன் உருவானான் மனிதன் கற்காலத்தை கடந்து அறிவிலும் நாகரிகத்திலும் முன்னேற ஆரம்பித்தான். மெசபத்தோமியா எகரிப்து ஆகிய நாகரிகங்களுக்குச் சொந்தக்காரன் ஆனான். பின்னர் எழுதும் கலை கைவரப் பெற்றான். எழுதும் கலையை அவன் கற்றுக்கொண்ட நாள் முதல் அவனுடைய
வரலாறு எழுதப்பட்டது.
இவையே மனிதன் எவ்வாறு தோன்றினான் என்பதற்கு விஞ்ஞானிகள் கூறியுள் ள விளக்கம் இனி சில உயிரினங்களின் தற்காப்புக்கான விசேட தன்மைகளைக் கொஞ்சம் அவதானிப்போம்.
y:
மான் தனது தற்காப்பு முறையாக வேகமாக ஓடுவதைக் கொண்டுள்ளது. ஆமை தன் மேலுள்ள ஒடு போன்ற பகுதியை தாக்குதலை தடுக்கும் கேடயமாய்ப் பயன் படுத்துகிறது. ஓணான் தனது பாதுகாப்பு அரணாக நிறத்தை மாற்றும் கலையை காட்டுகின்றது. பல் லி தனது வாலை துTண்டித்துவிடுகிறது. பாம்பு கொடிய விஷத்தையும் (ஒக்டோபஸ்) ஓர் நீர் விலங்கு (Octopus) தன்னுடைய பாதுகாப்பிற்காக ஒரு வித மையை சுரந்து நீரின் நிறத்தை மாற்றி தப்பி விடுகிறது.
முள்ளாம் பன்றி தனது உடல் மேலுள்ள முற்களை சிலிர்க்கச் செய்கிறது. வெளவால் எதிரியை இனங் கணி டு ஒதுங்கிப்போய் விடுகிறது. மலாங்கு மீன் வகை தன்னை பிடிக்க வருபவையை நோக்கி மின்சார அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றது. இவை எல்லாம் எதேச்சையாக ஏற்பட்டவையா?
சந்தர் ப் பவசதி தால் நிகழ்ந்தவையா? உயிரினங்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு விபத்தின் காரணமாகவே தோன்றினவா? என்ற ஐயம் ஏற்படுகின்றது. அதேபோல்
விஞ்ஞானிகள் கூறுவதைப் போல் பொதுவான ஆழ்நிலைகளை தங்களது சொந்த சக்தியால் தாக்கு பிடிக்க முடிந்தவை மட்டுமே வாழும் என்றுரைத்த பரிணாம வளர்ச்சிக்காண கொள்கை பின்வரும் எறும்புகளைப்பற்றி என்று சொல்லப் போகின்றது.
அடிமை எறும்புகளுக்கு மற்றைய எறும்புகள் உதவி செய்திராவிட்டால் இன்றுவரை அவை உயிர்வாழ்ந்து எம்மை சிந்திக்க துTண்டியிருக்குமா? எறும்புகளில் சில ஊழியர்களாக உழைக்கின்றன. சில எறும்புகள் காவல் சிப்பாயிகளாக காவல் காக்கின்றன சில எறும்புகள் மேய்க்கின்ற பணியை தொடர்கின்றன.
இச் செயற்பாடுகள் பரிணாம கொள்கையின் தத்துவத்திற்கு முரணானதே! ஆகவே இன்னும் இவைகள் எப்படி உ (பிர் வாழ்கின்றன.
மேலும் சில உயிரினங்களை 50 வருடங்கள் வரை உணவூட்டிக் கவனமாக வளர்த்துப் பார்த்த பிறகும் அதிலிருந்து எந்தப் புதிய உயிரினமும் தோன்றக் கானோம். (உ+ம் குளோனிங் முறை) குதிரைகளின் நல்ல ரகம் வேண்டும் என விரும்புபவர்கள் , ஒரு குறிப்பிட்ட இனக்குதிரையை பிறிதொரு குறிப்பிட்ட இனக்குதிரையோடு புணரச் செய்து நல்ல ரக குதிரைகளை ஈன்றெடுக் கச் செய்துள்ளார்கள் இதை அவர்கள் பல ஆண்டுகளாகச் செய்தும் வருகின்றார்கள் இவர்களின் அனுபவத்தில் , பிறக்கும் குட்டிக்குதிரைகள் தரத்திலும், நிறத்திலும், தன்மையிலும் மாறுபடுகின்றன. ஆனாலும் அவை குதிரைகளாகத்தான் இருக்கின்றன. அவை ஒருபோதும் குதிரை இனத்திலிருந்து மாறி முற்றிலும் மாறுப்பட்ட இன்னொரு புதிய இனமாக ஆனதல் லை. காலத் தால் குதிரையினம் மாறி ஆடுகளாகவோ, மாடுகளாகவோ அல்லது இன்னொரு இனமாகவோ மாறியதில்லை.
விஞ்ஞானிகளின் பரிணா (1) க் கொள் கையில் உணர் மை இருந்தால் மனிதக்குரங்கையும் (Gorillas) ஆபிரிக்கக் கண்டத்தில் வாழும் வாலில்லா குரங்குகளையும்
12 மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா சிறப்பு மலர்
 

(Chimpanzees) u if 600Tst LD 6) 6Tijd fli பாதையைப் பின் பற்றி மனிதனாக மாறுவதிலிருந்து தடுத்தது எது? இந்த மாற்றத்தை அடைவதற்குப் போதிய காலங்கள் அவை வாழ்ந்தே இருக்கிறது. பல இலட்சம் ஆண்டுகள் அவை வாழ்ந்தே இருக்கின்றன. எனினும் அவை ஏன் இந்த மாற்றத்தை அடையவில்லை?
அப்படியானால் பரிணாம வளர்ச்சிக் கொள்கை தொடர்ந்து செயல்படுவதில்லை, அது குறிப்பிட்ட கால கட்டத்தோடு ஒரு முடிவுக்கு வந்து விட்டதா?
பி. ஆயிஷா லெமு
(மேற்குறிப்பிட்ட வினாக்க ளுக்கு தெளிவான மாற்று கருத்துக்க ளையும் விமர்சனங்களையும் கல்விமானி கள், இலக்கியவாதிகளிடமிருந்து "கற்க கசடற பகுதி வரவேற்கிறது.)
உள்ளபடியுரைத்தலால்.
ஆசிரியர் சொன்னதுமதுதான்.
பிள்ளைப் பிராயத்தில் உம்மாவும் வாய்பாவும் அழுத்தியழுத்தியுரைத்ததுமதுதான்.
பின்னொருகால் மேற்சொன்னவர்கள் சொன்னபடி உள்ளதை உள்ளபடியுரைக்க நண்பர் சிலர்க்கென்னைப் பிடித்துப்போயிற்று இன்னுஞ் சிலரோ முகஞ்சுழித்து முறித்துக்கொண்டனர் எனதுறவை.
6. I Luigim 60I feoir வெறுப்புப் பூசி வினோதமாய்ப் பார்த்தனர்.
பின்னொருகால்
புத்தகமும் வயதுந்தந்த பக்குவமும் நாட்டுநடப்புகளும் அனுபவமும் தெளிய வைத்ததில் புரிந்துபோயிற்று.
உள்ளதை உள்ளபடி உரைத்தலில் காலமும் இடமும் கவனிக்கப்பட வேண்டுமென்பதும், தவறினால் தலைபோகுமென்பதும்.
அஷ்ரப் சிஹாப்தீனர்
புதிய நூலகம் (நூற்பெயர்க் கோவை) அன்புள்ளங் கொண்டவர்களே, வணக்கம்
புதிய நூலகம் என்ற பெயரில் கடந்த பத்து ஆண்டுகளாக (1990 முதல் 1999 வரை) வெளிவந்த இலங்கை எழுத்தாளர்களின் நூல்களைப் பற்றிய நூற்பெயர்க்கோவை ஒன்றினை வெளியிடும் முயறி சியரில ஈடுபட்டுள்ளேன்.
புதிய நூலகம் என்ற இந்த நுாற் பெயர்க் கோவையில் வடக்கு, கிழக்கு, மலையகம், தென்னிலங்கை என இலங்கையின் பல பிரதேசங்களில் வெளியிடுகின்ற நுTல களைப் பற்றிய விவரங்களை உள்ளடக்கியதாக இந்நூல் வெளிவரவேண்டும் என்பதே என் அவாவாகும்.
புதிய நூலகம் என்ற இந்த நுாற்பெர்க் கோவையில்
* நூலாசிரியர்
நூலின் பெயர்
06).j6sfujulu (SLLD
Q6.6sfufu. To Tf
பதிப்பித்த ஆண்டு
L58556T
விலை போன்ற விவரங்கள் இடம் பெறுவதுடன் நூலின் முன்னுரை, அணிந்துரை, பதிப்புரை ஆகியவற்றில் இடம்பெற்ற மிக முக்கியமான நூலின் உள்ளடக்கம் பற்றிய குறிப்பும் இடம்பெறும்.
※
:
எனவே நூலாசிரியர்களோ அல்லது
வெளியீட்டாளர்களோ நூலின் பிரதியொன்றினை Anthony Jeeva P.O.BOX. 32 Kandy. Sri Lanka.
என்ற முகவரிக்கு ஒக்டோபர் 25ம் (25-102000) திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். நூற்பிரதி கிடைத்ததும் அனுப்பி வைத் தவர்களுக்கு தகவல தெரிவிக்கப்படும்.
இதுவரை புதிய நூலகம் நூற்பெயர்க் கோவைக்காக இலங்கை எழுத்தாளர்களின் 425 நூல்கள் வரை திரட்டிவிட்டேன். புதிய நூலகத்தில் இடம்பெற்ற நூல்களை இலக்கிய ஆர்வாலர்களின் பார்வைக்காக புத்தக திருவிழா என்ற பெயரில் ‘புதிய நூலகம்' நூால் வெளியீட்டு விழாவின் பொழுது கண்காட்சி ஒன்றினையும் ஏற்பாடு செய்யப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்தனி ஜீவா
ஊற்று 1 துளி 4 ஆகஸ்ட் செப்டம்பர் 2000
13

Page 9
Gந ரமாகிவிட்டது
எழுந்து ே பாங்கிள்
என்று சொல்கிற
பூங்காக்கள் உள்ளவரை
வாழ்க்கை
அநாகரீகமானதுதான்.
(நட்புக்காலம் அறிவுமதி)
இயந்திரத்தனமாகிவிட்ட வாழ்க் கையை படம்பிடித்து, ஆறு வரிகளுக்குள் மனதில் ஒரு மூலையில் எப்போதோ அனுபவித்து வலித்து மறந் துபோன வேதனையை கிளறிவிட்ட கவிதை இது. இயற்கையை ரசிப்பதற்கு மனிதனின் உணர்வு களுக்குள் இருக்கும் தாகமும் கடமையாகிப் போனதை அவலத்தோடு சொன்ன கவிதை இது.
இதன் விமர்சனம் இப்படியும் இருக்கலாம். பந்தியாக எழுதவேண்டிய ஒரு கருத்து வரிகளாக் கப் பட்டு கவிதை வடிவம் வழங்கப்பட்டிருக்கிறது.
ஆனால், வரையறுக்கப்படாத புதுக் கவிதை களின் இலக் கணங்களுக்குள் இந்தக் கவிதையை பெருமிதத்தோடு இருகரம் நீட்டி நான் வரவேற்கிறேன் . இதில் சொல்லப்பட்ட உண்மை. இது கவிதையாக அறிமுகப் படுத்தப்பட்ட காரணத்தால்தான் எனக்கு உறைத்தது.
கவிதை எல்லா இடங்களிலும் இருக்கிறது. காணவும் உணரவும் நமக்கு புலன்கள் இருந்தால் நாம் சாதாரணமாக உணர்ந்து எத்தனையோ நிகழ்வுகளை, நிஜங்களை அதன் அர்த்தங்களை கவிதைகள் நமக்கு அற்புதமாக அறிமுகப்படுத்தி வைக்கின்றன. அப்போதுதான் உணர்வது போல் அவற்றை நாம் புதிதாக உணர்கிறோம்.
வாழ்க்கையில் ஒரு தடவையாவது கடிதம் எழுதிப்பார்த்தவர்களை புன்னகைக்கச் சொல்கிறது அறிவுமதியின் இன்னொரு கவிதை.
உனக்கு பாடல் எழுத
உட்காருகிற போது
மட்டும் தான்
அப்புறம்
எழுதிக்கொள்ளலாம்
என்பதற்கான
அர்த்தமற்ற காரணங்கள்
மிக எளிதாய்
கிடைத்து விடுகின்றன
எனக்கு.
இலக் கணங்களுக்குள் இல் லா விட்டாலும். இதயங்களுக்குள் வந்துவிட முடிகிறது புதுக்கவிதைகளால் ஆனால் புதுக்கவிதையின் அற்புதங்கள் சில இடங்களில் புறக்கணிக்கப்பட்டதன் காரணம் . கவிஞர்கள் எது புதுக்கவிதை புரிந்து கொள்ளாமல் .
கடகடக்கிறது பேரூந்து படபடக்கிறது பட்டாம்பூச்சி இரண்டுமே
கவிதை தான்
(ஹரனி-கவிக்கோ இதழில் இருந்து)
எழுதுவதையெல்லாம் கவிதையென்று அறிமு கப்படுத்த முற்பட்டதால்தான்.
கறுப்பு என்பது காகம் வெள்ளை என்பது கொக்கு
என்ற ரீதியிலான கிறுக்கல்கள் கவிதை என்ற பேரில் பத்திரிகைகளில்
14 மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா சிறப்பு மலர்
 

பிரசுரிக்கத் தொடங்கியதுதான் புதுக்கவிதை சந்தித்த மிகப் பெரிய தோல் வி.
இடைவெளிகளை நிரப்ப பத்திரிகைகளும்
சஞ சிகைகளும் கவிதைகளையும் உபயோகப் படுத் தத் தொடங் கரியதன் விளைவுதான் அவை.
நீ வருவது உறுதியெனில் வானுக்கும் மணினுக்கும் காத்திருத்தலிலேயே இடையேயுள்ள எண் வாழ்வு முடியட்டும். தூரம் தான்
மரபுக்குள் சிக்கியிருக்கும புதுக்கவிதை fi.
உனக்கும் எனக்கும்
வானுக்கும் மண்ணுக்கும்
உள்ள துாரம்தான்
ஆனாலும்
என் கணிணிர்
எண்றென்றும்
மழையாய்
உன்னுள்
விழுந்து கொண்டேயிருக்கும். (இந்தியன் ஸமஸ்வானவில்லின் மொழிபெயர்ப்பு)
காதலெனிறு சொல் லாமல்
காதலைச் சொல்கிறது. இந்தக் கவிதை. ஒரு காட்சியை வெறும் பெண் சிலால் வரைவதா. நீர் வர்ணங்களால் தீட்டுவதா. எண்ணை வர்ணங்களுடன் நாட்கணக்கில் மெனக்கெடுவதா. என்பதை தீர்மானிக்கும் பொறுப்பு ஒரு ஓவியனுக்கு இருக்கிறது. இதில் எது உயர்ந்தது என்பதில் தர்க்கிப்பதற்கு எதுவும் இல்லை. எதன் மூலம் இதயங்களைத் தொடலாம் என்பது. காட்சி அமைப்பிலும் ஒவியனின் சிந்தனையிலும் தங்கியிருக்கிறது.
ஒரு அழுமூஞ்சிக் குழந்தையும் சிடுசிடுத்த கிழவியின் சுருக்கம் விழுந்த முகமும் கூட ஒரு நல்ல புகைப்பட கலைஞனால் சரித்திரத்துக்குள் கொண்டு வந்துவிட முடியும். முடிந்திருக்கிறது. ஒவியங்களை விடவும் புகைப்படங்களை விடவும் கவிதை மிகவும் எளிமையான அதைவிடவும் ஆழமான ஒரு ஊடகம்
pski), 1 glerf* 4 366rüü 65üLLibŁJń 2000
என்பதை யாரும் மறுத்துவிட முடியாது.
ஒரு கவிதையின் கடைசிப்பகுதியில்.
இன்றும் உன் வீட்டுக்கும் எண் விட்டுக்கும் இடையில்
இறுக்கமான வேலி இருக்கிறது.
உனக்காக
மாலைகளைத் தொடுத்துக் கொண்டிருக்கிறேன் உதிர்ந்து விழும் என் மனதிலிருந்து
என் வீட்டு ரோஜா உன் கூந்தலுக்காகவே
பூப்பூக்கிறது.
அதற்கு தெரியாது விதவைகள்
பூச் குடுவதில்லையென்று.
(உக்குவளை மகின் எம் சகீல் கவிப்ரவாகம்)
புதுக்கவிதையின் பூரணத்துவம் தலைப்பிலோ கடைசி வரியிலோ.இருக்கிறது. இந்தக் கவிதையின் கடைசி வரி அதற்குள் உறைந்து போன ஒரு சோகத்தில் ஆழத்தைச் சொல்கிறது. அதையும் எளிமையாகச் சொல்கிறது.
நல்ல நட்பு என்பது சுயநலமில் லாதது விட்டுக்கொடுப்பது ஒன்றையொன்று உணர்ந்து கொள்வது.போலித்தனங்கள் இல்லாமல் கண்டிப்பது.
நீ என்னிடம்
பேசியதைவிட
எனக்காக
பேசியதில் தான்
உணர்ந்தேன்
நமக்கான
நட்பை.
(அறிவுமதி நட்புக்காலம்).
(23b Lié6ID LIIIff55)
15

Page 10
s
8.
A நடைபெற்ற இடம் - இந்தியா,பாகிஸ்தான்
A கிண்ணத்தின் பெயர்ரிலயன்ஸ் கிண்ணம்
R இறுதிப் போட்டியில் கலந்துகொண்ட
அணிகள் - அவுஸ்திரெலியாஇங்கிலாந்து
A வெற்றிபெற்ற அணி அவுஸ்திரெலியா 07
ஓட்டங்களால்,
இறுதிப் போட்டியின் ஓட்ட விபரம் அவுஸ்திரெலியா 253/5 (50) இங்கிலாந்து 246/8 (50).
தொடரில் அதிக ஒட்டம் பெற்ற அணி மே.இ.தீவுகள் 360/4(50) இலங்கைக்கெதிராக
இத்தொடரில் குறைந்த ஓட்டம் பெற்ற அணி 135 சிம்பாபே இந்தியாவுக்கெதிராக
தொடரில் ஒரு போட்டியில் தனிநபர் பெற்ற அதிகூடிய ஒட்டம் - 181 ரிவியன் ரிச்சட் (மே.இ.தீவுகள்) இலங்கைக்கெதிராக
இத்தொடரில் சிறந்த பந்து வீச்சு சி.மெக்டொமெட் 5/44(அவுஸ்திரெலியா) பாகிஸ்தானுக்கெதிராக
தொடரில் கூடிய ஒட்டம் பெற்ற வீரர் கிரஹம் கூச் 471 (இங்கிலாந்து)
தொடரில் அதிக விக்கட்டுக்களை கைப்பற்றிய பந்துவீச்சாளர் சி.மெக்டொமெட் 18 (அவுஸ்திரெலியா)
தொடரில் சதம் அடித்த வீரர்கள் * ரிவியன் ரிச்சட் (மே.இ.தீவுகள்)
இலங்கைக்கெதிராக
18
鲇/尔 O U & 彭乙 தயாரிப்பு: அக்ரம்
* டேவிட் ஹவ்டன் (சிம்பாபே) 141
நியுசிலாந்துக்கெதிராக. * ஜெக் மாஸ் (அவுஸ்திரெலியா) 126*
நியுசிலாந்துக்கெதிராக. * கிரஹம் கூச் (இங்கிலாந்து) 115
இந்தியாவுக்கெதிராக, * ரமீஸ் ராஜா (பாகிஸ்தான்) 113
இங்கிலாந்துக்கெதிராக, * ஜெக் மாஸ் (அவுஸ்திரெலியா) 110
இந்தியாவுக்கெதிராக. * ரிவியன் ரிச்சட் (மே.இ.தீவுகள்) 110
பாகிஸ்தானுக்கெதிராக * டெஸ்மன் ஹேன்ஸ் (மே.இ.தீவுகள்) 105
இலங்கைக்கெதிராக * சுனில் கவாஸ்கர் (இந்தியா) 103*
நியுசிலாந்துக்கெதிராக. * ஜாவிட் மியண்டாட் (பாகிஸ்தான்) 103
இலங்கைக்கெதிராக * சலீம் மாலிக் (பாகிஸ்தான்) 100
இலங்கைக்கெதிராக
இத்தொடரில் ஒரு ஓவருக்கு கூடிய ஓட்டம் கொடுத்த பந்து வீச்சாளர் டேவிட் பூன் (அவுஸ்திரெலியா) 1 ஓவருக்கு 17ஓட்டங்கள்
R இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகன்
டேவிட் பூன் (அவுஸ்திரெலியா)
gitqgiqndಷ್ರ ஒரு இனத்தின் அங்கீகாரம் பெற்ற 'மணி’யான பத்திரிகையின் சில நிருபர்கள் எழுதிக் கொடுத்ததை அப்படியே பிரதி பண்ணும் போட்டோ கொப்பி மெஷின்கள் ஆகிவிட்டினம் பாருங்கோவிசாரித்து,ஆராய்ந்து உண்மையான தகவல்கள் கொடுக்குறதுமில்ல. இவ்வாறான நிருபர்களால் பத்திரிகையின் எதிர்காலம் என்ன. வாசகர்களுக்கு அதன் செய்திகளின் நம்பகத் தன்மையில் சந்தேகம் தான் மிஞ்சுமாக்கும். பத்திரிகை ஆசிரியர்கள் நிருபர்கள் விடயத்தில் கொஞ்சமாச்சும் கவனம் செலுத்துவாங்களோ?
16
மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா சிறப்பு மலர்
 
 

ஏ.எம்.இபாம் கல்ஹின்னை.
கே பூகோளம் இன்று பூகோளக் கிராமமாக மாறியுள்ளதாம். இது உண்மையா?
u 凸响, தொடர்புசாதனத்துறையின் LOLLLLLLL SYYYT SS S S00LLLL S SLL அளவில் குறையாத போதும் கருத்துப் ufluonssid gjanmdi குறைத்துள்ளது.
இதனால் நன்மைகளை விடத் தீமைகளே அதிகம். இளைய சமுதாயத்தினரது அறிவு வளர்ச்சியில் இது பங்கு பற்றுவது போலவே,
di Buffa56Mg 2 GSUI) fi gluna வீழ்ச்சிக்கும். கலாச்சார சீரழிவுக்கும்
gou Ósmy Mih.
→→ート
எம்.என்.எப்.சாலிஹா எண்டறுத்தன்னை
கே "அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்' “மாதா, பிதா, குரு, தெய்வம்” ஆகிய பழ மொழிகள் ஏக தெய்வக் கொள் கை யைப் பரிணி பறி நும் முஸ் லரிம் களுக்கு பொருந்துமா?
Lu Gunógōgō.. ĉu GråGO BLUE Lugiō LA T6Jā (peză Ergif
தெய்வங்கள் GEDT Jeff BOEDIsla) கூறியிருந்தால் உங்கள் (af)săř FTLIG நியாயமானது. Såg stü 6u 6GH
ஒருமையில் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னறி
பெயர் குறிப்பிடாத வாசகர்
Gli OTT, LMIT, etc, Giuù suò என்பதும் இவர்களை வரிசைப்படுத்தல் SÚeau. எல்லோருக்கும் Date தெய்வத்தை அறிவதற்குப் பிள்ளைக்கு உதவுபவர்கள் இம் மூவருமாவர், என்பதே
இதன் பொருளாகும். இப்பழமொழியைத் Giftsun as Glsitiltiltibilitillsiltí Gill 包西 éllöljággplanuú பயன்படுத்தினால்
போயிற்று. மாதா, பிதா, குரு - தெய்வம். இப்போதுகுழப்பம் தீர்ந்ததாசகோதரியே!
→--ト-ト
தர்கா-நகர்
கே ஆக்கங்களை எழுதியவர்களது பெயரைக்
குறிப்பிடச் சொல்வது நியாயம்.வயதை யும் குறிப்பிட்டு அனுப்பச் சொல்வது ஏன் ?சில 'விதி தியாசமான (?)' சஞ்சிகைகள் போன்று ப்ரவாகமும் வயதைக் (385 l ʼ u g5 5 uum uu LD (T?
'' Gu'1 g5 gTust of to IT EDT '' F G of" (D) en 25 Grf 'guno" தேவைகளுக்காக uuni LišajTL). பொதுவாக தமக்கு லேனர்டியவர்களது ஆக்கங்களையே slúkungið flysflánasnið , sanna úysunesið
d36i6 Inglů UNGU. எப்போதும் jJuoTET வற்றுக்கே JGlyTagga) 岛L凹凸面。 வளர்ந்து வரும் எழுத்தாளருக்கு கரம் ElainGúusngu Úsunnud Sðisflusta. Ef silö Leslsi pers. di Giglů y gyfffffffledi ei gôl go தரம் இருக்கின்றதா
என்பதை அறிவதும், அவற்றுக்கு உரிய Slgi angú Gugógá Gain(Süugtto üJGITE: Lb
firsluffa5 GTI BErTalá asiń. LILLI LILLGer Lð சமூக 6UEnöMeld சிந்திக்கவே TG)ů போதாது Geará alglaiá Slas5m ni g2gjafi gejuō ū DJ Guma5Ó
ஆசிரியர் குழுவுக்கு நீங்கள் நினைப்பது
என்பதை முள்+அறி எனப் பிரித்துக் uTsið Gungd fåglar 5 Taudilsiú amau. ölgja) Iló. digi Ggi png) éiglenfljjei தைரியமாக ஆக்கங்களை அனுப்புங்கள். Emil bunstsst uGld. gaug
baixa) agi gigutó Lslgst 6ið உங்கள் கேள்விகள் வரவேண்டிய முகவா இறைவனாகிய தெய்வத்தை முதன் முதலில் SSSSSSS SSSSSSSSSSSSLSSSSSS SLSLSLS S SSS SSSSSSSSSSLS éugslué Glarus Lusuffish GTGCTü GUITsject முனிவன் பதில்கள் San GGGumi). agbangang ஒருவன், ப்ரவாகம்." அவனைத் தினமும் ஐவேளை தொழ சுதந்திர கலை இலக்கியப் பேரவை வேண்டும் என உங்களுக்கு முதலில் இல09, மாத்தளை வீதி. Shiusufasst um? Egiptira ésasun உக்குவளை, (21300)
ஊற்று 1 துளி 4 ஆகஸ்ட் செப்டம்பர் 2000

Page 11
தமிழ் இஸ்லாமிய இலக்கியம் 12ம் நூற்றாண்டு முதலே தோற்றம் பெற்றாலும் அதன் வரலாறு எழுதப்பட்டது அண்மையில் தான் அதாவது யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக கடமையாற்றிய கலாநிதி சு.வித்தியானந்தர் தான் எழுதிய
"இலக்கியத்தென்றல்' என்ற நூல் 1953ல் வெளிவந்தது இதில் 'இஸ் லாமியர் தமிழ்த்தொண்டு' என்ற பகுதியே இஸ்லாமிய இலக்கிய வரலாற்றின் முதல் முயற்சியாக கருதப்படுகிறது.
இதன் பின்னர் 1953ம் ஆண்டு தனது எம்.ஏ. பட்டத்திற்காக 'முஸ்லீம்கள் தமிழ்க்கு ஆற்றிய தொண்டு என்ற ஆய்வு நூலை மு.மு. உவைஸ் எழுதினார். இதன் மூலம் தமிழ் இஸ் லாமிய இலக் கரிய வரலாற்றை முறைப்படுத்தி விரிவாக உலகறியச்செய்தார்.
இன்றய அச்சு இதழ்கள் 17ம் நுாற் றாணி டில் தோன்றினாலும் 16ம் நூற்றாண்டிலேயே தமிழ் மொழி அச்சுக்கண்டு விட்டது என்றாலும் 18ம் நூற்றாண்டில்தான் தமிழ் இதழ் மொழி ஆயிற்று. 19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் (1802) இல் இலங்கையின் அரசிதழாக அரசாங்க வர்த்தமானி' வெளிவந்தது. தமிழ் நாட்டில் ‘மாசத்தினச்சரிதை (1812) என்ற முதல் தமிழ் இதழை ஞானப் பிரகாசம் என்ற தஞ்சாவூர் தமிழர் சென்னையரில் தனது 'மாசத்தினச்சரிதை அச்சுக்கூடத்தில் அச்சிட்டு வெளியிட்டார். இந்தியர் வெளியிட்ட முதல் இதழும், இந்திய மொழிகளில் முதல் இதழும் இதுவே.
தமிழ் முதல் இதழ் என கருதப்படும் கிறிஸ்துவ சமய இதழான 'தமிழ் இதழ் (1831) லும், முதல் இந்து சமய இதழ் 'தத்துவ
போதனி’ (1864) இல் சென்னையிலும் வெளிவந்தது. (“கிறிஸ்தவ மறுப்பு -1885'விவேக விலாசம்’-1856-இல் தமிழ் இதழ் வந்துள்ளபோதும் அவை பற்றிய விபரங்கள் தற்போது இல்லாமையால் 'தத்துவ போதினியே முதல் இந்து சமய இதழாக கருதப்படுகிறது.)
முதன் முதலாக இஸ்லாமிய இதழாக 'ஆலமதி இலங் காபுரி 1869 இல் கொழும் பிலிருந்து ஜனாப் சால் தனை ஆசிரியராகக் கொண்டு மதாந்த இதழாகவும் புதினாலங்காரி' 1876இல் கொழும்பிலிருந்து நெ.ம.வாப்பு மரைக்காயரை ஆசிரியராகக் கொணி டு வெளிவந்தது. இருப்பினும் இலங்கையில் தமிழ் முழுமையான இஸ்லாமிய இதழாக 1883இல் மு.கா.சித்திலெப்பை அவர்களால் வெளியிடப்பட்ட ‘முஸ்லீம் நேசன்' என்ற இதழாகும். (ஈழத்திலிருந்து வெளிவந்த முதலாவது பத்திரிகை(1841)இல் உதய தாரகை) தமிழ் இலக்கிய பரப்பிலே
தொண்ணுாற்றி ஆறு வகையான பிரபந்தங்கள்
உண்டு என்பர். இந்த தொண்ணுாற்று ஆறு வகை பிரபந்தங்களை வைத்து எழுதிய இஸ்லாமிய நூல்கள் இல்லை எனலாம் எனினும் அவற்றில் பல வற்றை இஸ்லாமிய தமிழ் இலக்கியப் பரப்பிற் காணக் கூடியதாக உள்ளது.
இஸ்லாமிய புலவர்களால் எழுதப்பட்ட தமிழ் இலக்கியங்களில் சிறப்புத் தன்மை வாய்ந்ததாகவும் ஏனைய 8F LD U அடிப்படையிலான தமிழ் நூல்களிலே காண முடியாத L1@h 660) 85 (JT 60 பிரபந்தங்களையும் உருவாக்கியுள்ளனர் அவற்றுள் குறிப்பிட்டுக் கூறக் கூடியதாக 'படைப்போர்’ (War Balad) இப்பிரபந்த தமிழ் சொற்களைக் கொண்டதாக இருந்த போதும், இஸ்லாமிய இலக்கிய வாதிகளுக்கே உரித்தான பிரபந்தமாக காணப்படுகிறது.
18 மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா சிறப்பு மலர்
 

இஸ்லாமிய வரலாற்றில் நடைபெற்ற போர்களைப் பற்றிய வருணனைகளைக் கொண்ட பிரபந்த வகை வேறெந்த நாட்டு இஸ்லாமிய இலக்கியத்திலும் காணமுடியாதது இஸ் லாமிய தமிழ் இலக் கயத் தனி தனிச்சிறப்பாக திகழ்கிறது.
இந்தியாவின் தமிழ் நாட்டிலிருந்து இஸ் லாமிய இதழ்கள் 1888 ତ୍ରି (୫ ର) வெளிவந்துள்ளது, 'வித்தியா விசாரிணி புலவர் குலாம் காதிரு நாவலர் அவர்களால் மார்க்க வினா விடையாகவும் அடுத் ததாக காரைக் காலிருந்து காசிம் முகைதரீன் இராவுத்துரை ஆசிரியராகக் கொண்டடு வெளிவந்த 'முகம்மது சமாதினியும் முஹம்மது யூசூப் பை ஆசிரியராகக் கொணி டு சென்னையிலிருந்து வெளிவந்த சம்அல் ஈமான் என்பனவையும் முறையே முதல் மூன்று இதழாக தமிழ் நாட்டிலிருந்து வெளிவந்தது.
இந்தியாவில் 12ஆம் நூற்றாண்டில் வெளியான 'பல்சந்த மாலை தான் தமிழில் தோன்றிய முதலாவது இலக்கியம் ଶ ପର୍ଯ୍ୟ [] கருதப்படுகிறது. இதனை தொடர்ந்து யாகூப் சித்தர் பாடல் (15ம் நூற்றாண்டு) 'ஆயிரம் மசாலா(572) என்று இஸ்லாமிய இலக்கியம் தொடங்கினாலும் மிகவும் குறிப்பிடக்கூடியதாக 1703 ஆண்டு வெளியான "சீராப்புராணம் இது கம்பராமாயணத்துக்கு ஈடான எழிலும் இலக்கிய வளமும் கொண்டதாக இலக்கியவாதிகளால் முன்மொழியப்படுகிறது.
இதைப் போலவே திருக்காரப் புராணம்(1812 சேகுனாப் புலவர்) நாகூர் புராணம் (1882 குலாம் காதிரு புலவர்) ஆகிய இரண்டுக்கும் இஸ்லாமிய இலக்கியத்தில் தனிச் சிறப் புணர் டு என்பதை எவரும் மருப்பதற்கில்லை. அன்று காப்பியங்கள் மட்டுமே இலக்கியம் என்று கருதப்பட்டதால் பல காப்பியங்கள் மட்டுமே இஸ்லாமிய கவிஞர் களால் கலைஞர் களால் எழுதப் பட்டுள்ளன சுமார் முன்னுTறு ஆண்டுகளாக செய்யுல்களும் காப்பியங்களுள் முனாஜத், கிஸ்ஸா, மஸ்சுலா, அந்தாரி, மெளலூத் போன்ற சிற்றிலக்கியங்களுமாக நாலாயிரத்துக்கு மேற்பட்ட இலக்கியங்களை இஸ்லாமியத்தமிழ் புலவர்கள் படைத்தும் இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் என்றால்
உமருப் புலவரின் சீராப் புராணத்தையும் , குணக்குடி மஸ்தானின் பாடல்களையும் மக்கள் உணர்ந்த நிலை நெடுங்காலமாக நிலவி வந்துள்ளது.
புதிய இஸ்லாமிய இலக்கியத்தை இதழ்களே வளர்த்தன என்றால் மிகையானது. இலங்கை முஸ்லீம் எழுத்தாளர்களில் ஒருவரினால் எழுதப்பட்டு அச்சில் வெளிவந்த முதலாவது நூலின் பெருமையை 1868இல் பேருவளை செய்கு முஸ்தபா (வலி) என்பவரால் வெளியிடப்பட்ட மீஸான் மாலை என்பதாகும். இதன் பிறகு முதல் சிறுகதைத் தொகுதியை 1898ல் ஜதூருஸ் லெவ்வை மரைக்காயர் எழுதிய 'ஹைதர் ஷா சரித்திரம்' என்ற தொகுதியோடும் சிறுகதைகளில் முஸ்லீம் எழுத்தாளர்களின் பங்களிப்பு தொடர்கிறது. இஸ்லாமிய இலக்கியத்தில் எப்போது சிறுகதை ஆரம்பமானது என்று வரையறுத்து கூற இயலாது இதழ்களின் ஆரம்பத்துடனேயே சிறுகதையின் தொடக்கத்தையும் ஆராய வேண்டியுள்ளது. அதாவது இஸ்லாமிய தமிழ்ச்சிறுகதையின் தோற்றமும், தமிழ் இதழ்களின் தோற்றமும் ஒன்றுக்கொன்று சார்ப்பானவை, இணையானவையாகும்.
நாவல் துறையை பொருத்தமட்டில் ‘அஸன்பே சரித்திரம்’ சித்திலெப்பை அவர்களால் 1885இல் எழுதப்பட்ட முதலாவது நாவலாகும். அதாவது இலங்கை திருநாட்டில் எழுதப்பட்ட முதலாவது நாவல் எனாலாம், ஏனெனில் ஆரிய ராஜ கருணா எழுதிய ‘சிங்கள நாவலின் தோற்றம்' என்ற நூலிலே சைமன் டி.சில்வா 1905 இல் எழுதிய 'மீனா' என்ற நாவலே இலங்கையின் முதலாவது சிங்கள நாவல் எனக் குறிப்பிடுகின்றார். இத்தகவலின் படி இலங்கையின் முதலாவது நாவல் அஸன்பே சரித்திரம் என்று கருத இடமுண்டு.
இனி எது இஸ்லாமிய இதழ், இலக்கியம் என சற்று கவனிப்போம். இன்று இலங்கை இஸ்லாமிய இலக்கிய வாதிகளால் நாவல், சிறுகதை, கவிதை, நாடகம் போன்றன வெளியிடப்படுகின்றன. அவற்றுள் எத்தனை வீதமானவை இஸ்லாமிய இலக்கியமாக கருதி தறி கொள்ள முடியும் என்பது கேள்விக்குறியே ஒரு இனத்தின் சமய பணி பாட்டு கருத்துக் களைக் கருவாக
ஊற்று 1 துளி 4 ஆகஸ்ட் செப்டம்பர் 2000
19

Page 12
அமைத்து பாடப்படும் இலக்கியங்கள் அவ்வினத்திற்குறிய இலக்கியங்களாகும் என மு.மு.உவைஸ் தெளிவுபடுத்துகிறார், மோலும் இஸ்லாமியக் கொள்கையைக் கருப்பொருளாகக் கொண்டு படைக்கப்பெற்ற தமிழ் நூலாகவே இஸ்லாமிய தமிழ் இலக்கியம் என்று மேலும் மேலும் தெளிவுபடுத்துகிறார் கலாநிதி மு.மு.உவைஸ்.
முஸ் லீம் ஒருவர் இயற்றும் இலக் கரியம் 6, 65 6) Tf @ 6mö 6II) TT du u இலக்கியமாகுமா? ஆகாது' என்று சொல்லாமலே புலனாகும். எமக்கென உள்ள கலாச்சார தனித்துவத்தை பிரதிபலித்துக்காட்டும் தமிழ் இலக் கரியமே இஸ் லாமிய தமிழ் இலக்கியமாகும் என்று அறிஞர் ஏ.எம்.ஏ.அஸிஸ் அவர்களும்
'இஸ்லாமிய பண்பாடு, கோட்பாடு, வரலாறு, வாழ் வியல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு எழுந்த தமிழ் இலக் கரியங்களே இஸ் லாமிய தமிழ் இலக்கியங்கள்' என்று இந்தியப் பேராசிரியர் மு.சாய்பு மரைக்காயர் வரையறுத்துக் கூறினார். அதேப்போல் இஸ்லாமிய படைப்பாளனைப் பற்றி இலக்கிய அறிஞர்கள் பின்வருமாறு கூறுகிரார்கள்.
இஸ்லாமிய இலக்கிய படைப்பாளன் இஸ்லாமிய வாதியாக இருப்பது இலக்கியத்தை இலக்கியமாக காண்பதற்கு நிபந்தனை இஸ் லாமிய சிந்தனையில் ஆழ்ந்து, உள்ளத்தில் அதனை உணர்வுபூர்வமாக ஏற்றவனால்தான் இஸ்லாமிய இலக்கியத்தைப் படைக்க முடியும். வாழ்வையும் நிகழ்வுகளையும் பிரச்சினைகளையும் வேதனைகளையும் வரலாற்றையும் இஸ்லாமிய உள்ளத்தோடு அவன் பார்க்க வேண்டும் அப்போது தான் இஸ்லாமிய இலக்கியம் பிறக்கும் அதே போல்
உலகின் எந்த மொழியிலும் இலக்கியம் என்பது அந்தக்காலகட்டத்தின் பிரதிபலிப்பாகவே இருந்து வந்துள்ளது. ஒவ்வொரு காலகட்டத்திலும் மனித வாழ்வின் புற இயக்கங்களையும் உள் சலனங்களையும் பதிவு செய்யாத படைப்பு எதுவுமே காலத்தை எதிர் நீச்சல் போட்டு வென்று கரையேறியதாக வரலாறு கிடையாது. (தோப்பூர் மீரானின் சாய்வு நாற்காலி, துறைமுகம், கடலோரக் கிராமத்தின்
கதை. ஜனாப் எம்.எச்.எம்.ஷம்ஸின் கிராமத்துக் கனவுகள் போன்ற நாவல்கள் காலத்தை வென்று நிற்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை)
இன்று இஸ்லாமிய இலக்கியத்தை வளர்ப்பதில் இஸ்லாமிய பதிப்பகங்களும், இஸ் லாமிய நுTல் களும் , இஸ் லாமிய கழகங்களும், இஸ்லாமிய எழுத்தாளர்களும், இஸ் லாமிய இதழாளர் சங்கங்களும், உலகளாவிய இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடுகள் நடாத்தப்பட்டு இஸ்லாமிய இலக்கியத்தை வளர்த்து வருகின்றன.
இன்று அநேக இஸ் லா மரிய இலக்கிய வாதிகளால் எழுதப்படும் நாவல், சிறுகதை, கவிதை, நாடகம் போன்றன இஸ்லாமிய கோட்பாட்டுக்கு முரணானதாகவே உள்ளது. இஸ்லாமிய இலக்கிய வாதிகள் காத் தரமான படைப்புக் களை வழங்க முன்வந்தால் இஸ்லாமிய தமிழ் இலக்கியம் மென்மேலும் தலைத்தோங்கி முன் நிற்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
உசாத்துணை நூல்கள்
-தமிழ் இஸ் லாமிய இதழ்கள் (s). LDIT. 5 TË)
-மீள்பார்வை
(இது முழுமையான ஆயப் வல்ல தமிழ் இஸ்லாமிய இலக்கியத்தின் ஒரு துளியைத்தான் நாம் எழுதியுள்ளோம் வளரும் கலைஞர்கள் அறிந்துகொள்ளும் வகையில் இதை பூரணமாக ஆராய் நீது எழுத வேண்டியது மூத்த ஆய்வாளர்களின் பொறுப்பாகும்)
-நிலாப்பித்தன் -
தனக்குத் தானே
வலையைப் போட்டு மீனைப் பிடிக்கும் "மனிதன்”
நுளம்பிற்குப் பயந்து தன்னைத்தானே வலைக்குள் மாட்டி விட்டான்.
வயலற்சந்திரேசகரம் சிலாபம்
20 மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா சிறப்பு மலர்
 
 
 
 

(3 பரினவாதம் எனும் பதத்திற்கு
எதிர்ப்பதம் என்ன எனக் கூறமுடியுமா? சறினவாதம் ? சிறுபாண்மை வாதம் ? பேரினத்தாராளம். எது சரியானது? இன்று நமது நாட்டின் புதிய தலையிடி பேரினவாதமாகும். ஒரு நாட்டில் பேரினவாதம் என்பது எந்தளவு பொருத்தமானது எனச் சிந்திப்பதை விட அதனை ஒரு இழிவான செயலாகவே கருத வேண்டியுள்ளது.
வீட்டில் அதைத் தா. இதைத் தா. என்று பிள்ளைகள் அடம்பிடிக்கலாம். சட்டை வாங்கிக் கொடு மிட்டாய் வாங்கித் தா, புத்தகங்கள் வாங்கிக் கொடு என தனது தேவைளுக்கும் போதுமானவற்றை வேண்டி பிள்ளை கேட்கலாம். தந்தையின் வசதிக்கேற்ப தந்தை அவற்றைப் பெற்றுக்கொடுப்பது கடமை.
அப்போதுதான் பிள்ளை குதூகலிக்கும். தந்தை சொல்லும் வேலையைச் செய்யும். வீட்டுக்கும் குடும்பத்துக்கும் புகழை ஈட்டிக் கொடுப்பதற்காக உழைக்கும். வீட்டின் உயர்ச்சியையும் குடும்பத்தின் வளர்ச்சியையும் கருத்திற் கொண்டு செயற்படும் ஒவ்வொரு தகப்பனும் தனது பிள்ளையின் நியாயமான கோரிக்கைகளுக்குச் செவிமடுக்கத்தான் செய்வான். செவிமடுத்துத்தான் ஆகவேண்டும்
தந்தை தமது கோரிக் கைகளை நிறைவேற்றித் தருவார் என்ற காரணத்துக்காக வீட்டினை தனது பெயருக்கு எழுதிக் கேட்க முடியுமா? அல்லது வீட்டைக் கூறு போட்டு தனக்காக ஒரு பங்கைக் கேட்க முடியுமா? வீட்டின் தலமைத்துவத்தைக் கேட்கத்தான் முடியுமா? கேட்கும் பிள்ளை தனது தகுதிக்குத் தகுந்ததைக் கேட்க வேண்டும்.
இதற்குப் புறம்பாக தந்தை பிள்ளையிடம் எனக்கு உரிமை வேண்டும் எனக்கேட்டால், யார்தான் வினோதமாகப் பார்க்க மாட்டார்.
வீட்டின் தலைவனான தந்தையே தனது உரிமை பேணப்பட வேண்டும். பிள்ளைக்கு வழங்கப்படும் மிட்டாய் தனக்கும் வேண்டும், பிள்ளைக்கு வழங்கப்படும் காற்சட்டை தனக்கும் வேண்டும் என அடம்பிடிப்பது வேடிக்கையாக அமைகின்றது, என்பதை விட கீழ்த்தரமானது எனக் கூறலாம்.
இதைப்போன்றுதான் ஒரு நாட்டின் பேரின வாதமும் குறிப்பிட்ட நாடொன்றில் வசிக்கும் சிறுபான்மையினர் தமது உரிமைகளையும் தேவைகளையும் ஆட்சியாளர்களிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும். உரிமைகள் மறுக்கப்படும் போது அவர்கள் போராட்டத் துக்குத் தள்ளப்படுவது இயற்கையானதே. போராட்டமும் நியாயமானதே.
தமது உரிமைகளை வெற்றி கொள்ள ஆயுதப் போராட்டம் போன்ற மாற்று வழிகளைத் தெரிவு செய்தல் தவறானதாகும். சிறு பான்மையினர் தமது உரிமைகளைக் கேட்டு உரிமைக்குரல் எழுப்பலாம். நீதி மன்றம் செல்லலாம். அகிம்சைப் போராட்டங்கள் கூட நிகழ்த்தலாம், ஆனால் தவறான வழிகள் கூடாது.
இலங்கைத் திருநாட்டில் சிறுபான்மைச் சமூகம் தமது உரிமைகளைக் கேட்டு பேசும் போது பேரினவாதிகளோ புரட்சி வரை சென்று விடுகின்றனர். இன்று பேரினவாதம் இந்நாட்டில் பல புதுப் பிரச்சினைகளைக் கிளப்பியுள்ளது.
சிறுபான்மை மக்களது உரிமைகள் வழங்கப்படக் கூடாது. சிறுபான்மையினரைப் புறக்கணிக்க வேண்டும் என பேரினவாதிகள் கூக்குரலிட ஆரம்பித்துள்ளனர். சிறுபான்மை மக்களை குறிப்பாக முஸ்லிம்களையும் மலையகத் தமிழர்களையும் வந்தேறு குடிகளாகவே இவர்கள் கருதுகின்றனர்.
முஸ்லிம்கள் ஆரியர் காலத்திலேயே இலங்கைக்கு வந்து விட்டனர். இதற்கான
ஊற்று 1 துளி 4 ஆகஸ்ட் செப்டம்பர் 2000
21

Page 13
சரித்திர சான்றுகள் போதியளவுள்ளன. அதுமட்டுமல்ல மலையகத் தமிழர்களும் முஸ்லிம்களும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கின்றனர். எனவே இவர்களைப் புறக்கணிக்க முனைவது எவ்வகையிலும் தகாது.
பேரினவாத அமைப்புக்களும், பேரினவாதக் கட்சிகளும் பூதாகாரப்படுத்தி வருகின்றனர். இனவாதக் கருத்துக்களைப் பேசிப்பேசியே இனங்களுக் கிடையே பாரிய பிளவை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இனவாதக் கருத்துக் களால் மக் களது மனதைத் திரையிட்டு அதன் மூலம் அரசியல் மற்றும் பொருளாதார இலாபங்களைச் சம்பாதிக்க முனைகின்றர். இந்தியாவில் இனவாதத்தையே (8u gf) Lü (8U gf) பள்ளிவாசல் களையும் , தேவாலயங்களையும் அழித்து, ஆட்சி பீடமேறிய பீ.ஜே.பீ. சிவசேனா, ஆர்.எஸ்.ஐ. போன்ற கட்சிகளைப் போல் தாமும் ஆட்சிபீடமேற சில குறும் புத் தரியுள்ள அரசியல் வாதிகள் எத்தனிக்கின்றனர். இதற்கு மூளைச்சலவை செய்யப்பட்ட ஒரு சில சிறுபான்மையினர் துணைபுரிகின்றனர்.
‘சிங்களவர்களது உரிமையைப் பேணு வோம்' எனக்கூறிக் கொண்டு அதே பெயரில் கட்சி ஒன்றையும் அணி மையில் ஒரு பேரினவாதக் குழு ஆரம்பித்துள்ளது. அதன் அறிக்கை ஒன்றில் சிறுபான்மைக் கட்சிகளை, அடிப்படைவாத, இனவாதக் கட்சிகளெனக் குறித்துக் காட்டியுள்ளது.
மேலும் சிறுபான்மை மக்களுக்கு அதிகமான உரிமைகளையும் ரேப் பிர சாதங்களையும் அரசாங்கம் G ற் றுக் கொடுப்பதாகவும், சிங்களவர்களுக்கு அநீதிகள் நடப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை
நீக்கத் தாம் அரசியலில் குதித்துள்ளதாக தெரிவிக் கசின்றனர். இதன் அர்த்தம் சிறுபான்மையினரை நசுக்கி அவர்களது உரிமைகளை பறித்துப் புறந்தள்ளுவோம் என்பதல்லவா?
தவறியேனும் இத்தகைய விசமிகள் ஆட்சி பீடம் ஏறினால் எமது நிலை என்னாகும் என்பதை சிந்தித்துப் பார்த்தல் அவசியம். இந்தியாவில் “பாபர் மஸ்ஜித்”, “ஸராரே ஷரீ.ப்” போன்று இலங்கையரில் பள்ளி வாயில் களும் , இந்துக்கோயில்களும் தரைமட்டமாக்கப்பட மாட்டாது என்பதற்கு என்ன உத்தரவாதம்?
சிங் களவர்களது வீரம் பற்றிக் கூறிக்கொண்டு தோன்றிய ஒரு இனவாத அமைப்பின் செயற்பாட்டை கடந்த காலங்களில் எம்மால் கண்கூடாக காண முடிந்தது. நாடு முழுவதும் இனப்பிரச்சினைகளைத் தூண்டி விட்டு அதன் மறைவில் முஸ்லிம்களதும் தமிழர்களதும் உடமைகளைச் சூறையாடியதில் மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் பல பாதிப்புக்களை ஏற்படுத்தி, மக்கள் மனதில் மறக்க முடியாத கலங்கத்தை ஏற்படுத்தியது.
காணியில்லாப் பிரச்சினை வேலையில்லாப் பிரச்சினை வறுமை என்பன இந்நாட்டில் சிங்களவர்களுக்கு மட்டுமே உள்ளது எனப் பொய்ப் பிரச்சாரம் செய்து, அப்பாவி சிங்கள மக்கள் மனதில் இனவாத நச்சு விதையை இவ்வமைப்புக்களும் கட்சிகளும் வளர்த்து வருகின்றன.
மேலும் 1815ஆம் ஆணி டு பிரித்தானியருக்கும் இலங்கையருக்கும் இடையில் நிகழ்ந்த மலையக ஒப்பந்தத்தில் ஐந்தாம் ஷரத்து கூறும் “புத்த மதத்தைப் பாதுகாத்தல்" இன்று நடைபெறுவது இல்லை என இந்த இனவாதிகள் சுட்டிக் காட்டுகின்றனர். இன்றும் கூட புத்தசாசன அமைச்சின் மூலம் பெளத்த மதத்தை பாதுகாத்து செயற்படுத்த அதிகளவு நிதி ஒதுக்கப்படுவதை தெரிந்து கொண்டே இத்தகைய பிரச்சாரங்களை இவர்கள் மேற்கொள்வது ஏனென்பதை கூறாமலே புரிந்து கொள்ளக் கூடியதாக உள்ளதல்லவா.
சிறுபான்மை மக்கள் கூட மதிப்பளித்துப் பாதுகாக்கும் இலங்கையின் வரலாற்றுப் புகழ்மிக்க பெளத்த சமய மற்றும் கலாசார கேந்திர முக்கியத்துவமுடைய இடங்களிலுள்ள பெறுமதி மிக்க பொருட்களை இவர்களே சூறையாடுவது நாடறிந்த இரகசியமாகும்.
22
மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா சிறப்பு மலர்
 

மேற்படி ஒப்பந்தத்தில் ஐந்தாம் ஷரத்தைப் பற்றிப் பேசும் இவ்வமைப்புகள் தாமே அதனை மீறுவதை மறந்து சிறுபான்மை மக்கள் மீது பழியைப் போடுவதும், சிறுபான்மை மக்களது உரிமைகளைப் பாதுகாத்தல் தொடர்பான ஷரத்துகளை மறந்து விட்டது போல் ஒதுக்கித் தள்ளுவதும் ஏனோ என வினா எழுப்பத் தோன்றுகிறது.
இத்தகைய அமைப் புக் களால வெளிச்சத்துக்குக் கொண்டுவரப்பட்ட ஒரு பெளத்த மத குரு சிறுபான்மையினரை எவ்வளவுகெவ்வளவு இழிவாகப் பேச முடியுமோ அந்தளவு இழிவுக்குற்படுத்துவதும், அதற்கு ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனம் துணைபோவதும் வெளிப்படையாகவே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
சிறுபான்மை மக்களுக்கு உரிமைகள் வழங்கப்படக்கூடாது என்பதற்காக நாடளாவிய ரீதியில் உண்ணா விரதங்களையும், வேலை நிறுத்தங்களையும் நடாத்த அப்பாவி பெளத்த மக்களையும் பெளத்த பிக்குகளையும் திரை மறைவில் நின்று ஏவுபவர்களும் இவர்களே. அறிவு மிக்க பல பிரபல அரசியல் வாதிகளும், கலைஞர்களும், விளையாட்டு வீரர்களும் திரை மறைவில் நினி நு இவர்களை வழி நடாத்துவதோடு இவர்களுக்கு ஆதரவு வழங்குவதும் மிகவும் வேதனை தரக்கூடிய ஒரு விடயமாகும்.
பிரபலமான ஒரு தொலைக்காட்சி நடிகர் சிங்கள வீரம் பேசும் இனவாத அமைப்பின் பிரச்சார செயலாளராக கடமையாற்றுவது மட்டுமல்லாமல் பாமர சிங்கள இளைஞர்களை மூளைச் சலவை செய்து இவ்வமைப்பின் கிளைகளை நிறுவியும் வருகின்றார்.
சாதி சமய வேறுபாடுகளின்றி அனைவர் மனதிலும் இடம் பிடித்த, அண்மையில் ஒய்வு பெற்ற பிரபலமான கிரிகட் வீரர் சிங்கள உரிமை பேசும் இனவாத கட்சியில் சேர்ந்து கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடத் தயாராகி வருகின்றார்.
பிரபல அரசியல் வாதிகள் சிலரும் இத்தகைய அமைப்புக்களை துாண்டி விடுவதன் மூலம் தமது அரசியல் நிலையை ஸ்திரப்படுத்த முயன்று கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு பக்க பலமாக ஒரு சில சிறு பான்மையின பிரதி நிதிகள் இருப்பது அதிர்ச்சியைத் Psaron 1 serf 4 &serio GhSLiburr 2000
தரக்கூடிய உண்மையாகும்.
வடக்கில் பயங்கர வாதிகள் புரியும் அட்டகாசத்திற்கு அப்பாவித் தமிழ் மக்கள் எவ்வகையிலும் பொறுப்புதாரிகள் அல்லர். அது போன்றே குறிப்பிட்ட ஒரு சில பேரினவாதிகள் செயல்களைக் காரணம் காட்டி அனைத்துச் சிங்கள மக்களையும் நாம் குறை கூறவோ பகைமை பாராட்டவோ கூடாது.
இத்தகைய இனவாதிகளின் சதித்திட்டங்களை முறியடிக்க நாம் செய்ய வேண்டியது ஒன்றே. இனங்களுக்கிடையில் ஒற்றுமையைப் பேணி இனவாதிகளுக்கு எதிராக அகிம்சைப் போர் தொடுப்பதாகும்.
பூ பூககும புனன.
15ம் பக்கத் தொடர்ச்சி ஒவ்வொரு நணி பர்களும் உணரவேணி டிய நிஜம் . சினி னதாக எளிமையாக அதன் ஒரு முக்கிய கோணத்தின் முகத்தை நமக்கு காட்டுகிறது கவிதை.
கவனியுங்கள் . புதுக் கவிதை என்பது கிறுக்கலல்ல.வடிவங்களுக்காக விஷயங்கள் தேடும் அளவுக் கு இயந்திரத்தனமானதல்ல. அது உணர்வு களைச் சொல்லும் ஒரு புலன். கண்களைப் போல அது பார்வை. தொடுகையைப் போல அது ஸ்பரிஸம். அளவுகளில் எலியாகவும் ஆழங்களில் அதன் வளையாகவும் இருப்ப துதான் அதன் அடிப்படை இலக்கணம்.
எண்ணிக்கைகளால் எழுத்தின் தகுதிகளை அளவிடாதீர்கள். ஆழங்களுக்குள் கவிதைகளை அழைத்து வாருங்கள்
சிகரங்களைத் தொடுவோம்.
நட்புடன்
உக்குவளை ஆஷ்ரம்

Page 14
5〕 வசேகரம் பனிக் கொட்டும்
காலை வேளை, பழைய நைந்துபோன ஸ்வெட்டரால் தன்னுடம்பை குளிர்வாட்டாம் இருக்க உடலுக்கு கவசமாக்கினார். தலையில் காதுகளை மூடிய தலைப்பாகை-கோச்சின் இடைவிடாத புகைபோல் வாயிலிருந்து சுருட்டின் புகை அந்த சூழலை கொஞ்சம் மாசுபடுத்தியது.
நாற்பத்தியாறு வயது காதோரமும் தலையில் ஆங்காங்கே சில நரைகள் முதுமையை வரவேற்கத் தயாராகின. அன்று լ Ոս / ՖT & சொன் ன வார் தி தைகள் சிவசேகரத்தினதும் மற்றும் அனைத்து தமிழ் குடும்பங்களின் மனதையும் ஈரம் கசிய வைத்தன.
யாரையும் எதிர்க்கக்கூடாது என்பதற்காக அன்றே செய்த ஆழ்ச்சியா? அல்லது காலத்தின் தண்டனையா..?
சிவசேகரம் சின்னவனாக இருக்கும் போது தாத்தா சொன்ன சம்பவம் ஞாபகத்திற்கு வந்து வேதனை தந்தது. 1922-ம் ஆண்டு திருச்சிராப்பள்ளி நகரத்தில் பல தரகர்களும் 8f । ତd நிறுவனங்களும் இலங்கைத் தேயிலைத்தோட்டங்களில் தொழிளாலருக்கு வேலை பெற்றுத் தரப் படும் . இலங்கை செல்வதற்கு பணம் அறவிடப்படமாட்டாது. பிரயாண வசதி இலவசமாக செய்து தரப்படும். தரமான அரிசி அரை விலையில் கொடுக் கப்படும் தொழிலாளர்களின்
பிள்ளைகள் கல்விக்கற்க
"ஏய் உங்கடவர்களின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகுது. நீங்கள் எங்களை அராஜகம் செய்வதா..? இந்தப் பிரதேசத்தில் தமிழர் ஒருவரையும் வைப்பதில்ல எல்லாத்தையும் வெரட்டுவேன். வேலைக்கு வந்தவன்கள்.
எங்களை அடிமைப் படுத் துவதா. மரியாதையில்லாமல் பேசுவதா.” மீண்டும் சிவசேகரமின் விழிகள் ஈரமாகின. இதேப்போல் எத்தனை வேல வார்த்தைகள் எம் இதயங்களை தாக்கி அழித்திருக்கின்றன. ஏன் எங்களை கொல்லாமல் கொல்கிறார்கள். நாம் இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் என்ன தவறு செய்தோம்.
நாட்டின் பொருளாதாரத்தை நிமிர்த்துவதற்காக எங்கள் பெண்ணினத்தின் முதுகை கொளுந்து கூடையால் வளைத்தார்கள். ஆண்களின் முகங்களை புல் செதுக்கவும். கவாத்து வெட்டவும் என்று цр60ӧї மீதே அமிழ்த்தினார்கள்- ஏன் இவர்கள் இனிமேல் தலைநிமிந்து வாழக்கூடாது.
பாடசாலை வசதி, கவர்ச்சிகரமான சம்பளம், இருக்க சகல வசதிகளோடு வீடு இப்படி எத்தனை எத்தனை பொய்கள் சொல்லி வரவழைத்தார்கள். இங்கு வந்தப்பிறகு அறைகுறையான சாப்பாடு சம்பளமில்லாமல் இரத்தத்தை உறிஞ்சும் காட்டேரித்தனமான முதலாளித்துவத்தின் ஈனச்செயல்கள். இருக்க வீட்டுக்கு பதிலாக மாட்டுக்கொட்டில்கள் அமைத்து தந்தார்கள். சுகாதார வைத்திய வசதியில்லை. மலசலக் கூடம் இல்லை, எத்தனை கொடுமைடா தம்பி. கடவுள் எமக்கு ஏன் எம் சமூகத்துக்கு இந்த தண்டனையை கொடுத்தாரோ என்று சொல்லிவிட்டு பெருமூச்சு விட்டார் தாத்தா. அன்று சொன்னது ஒன்றும் விளங்கவில்லை. தாத்தாவின் ரணமான குமுறலின் வேதனையை சிவசேகரம் வளர்ந்ததும் தான் அனுபவரீதியாக உணர்ந்தான்
水米米米米米冰水水米米
பியதாச உக்கிரமாக மண்ணை தோண்டிக்கொண்டிருந்தான். நம்ம தாத்தா நாற்பது வருஷத்திற்கு முன் புதைச்சு வைச்சது
24 மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா சிறப்பு மலர்
 

இன்னும் இருக்குமா..? தாத்தா சொன்ன அடையாளம் எல்லாம் இப்பிரதேசத்திற்கு ஒத்து வருகின்றன. அது மட்டும் இங்கு கிடைத்து விட்டால். இங்கு ஒரு தமிழனையும் இருக்க விடமாட்டேன்- அவன் உடம்பில் துவேசத்தின் இரத்தம் ஆடேறி கொதித்தது. மிகுந்த நேரம் வியர்வை வடிய வடிய சோர்வின்றி மண்ணை மணி வெட் டி உதவியோடு தோணி டிக் கொண்டிருந்தான்.
林水水冰冰冰米冰米米
எம் சமூகத்துக்கு எப்போதுதான் விடியல் வருமோ..? அந்த கடவுள்தான் அறிவார். காலை முதல் மாலை வரை கடினப்பட்டு உழைத்தும் விலைவாசி உயர்வுக்கேற்ப ஊதியமில்லை. எம் பிள்ளைகள் கல்விக்கற்க பாடசாலை இல்லை, வைத்தியசாலை இல்லை எல்லாவற்றிலுமே எமக்கு ஒரவஞ்சனைதான். மற்றைய நகரத்தினர் கொம்பியூட்டரோடு போட்டி போடும் போது எம் பிள்ளை மாத்திரம் இன்னும் தேயிலை செடிகளோடு போராடுகின்றன. இங்குள்ள ஒவ்வொரு தேயிலைச் செடியின் வரலாற்றை நாம் சொல்வோம். எம் வாழ்வின் அவலத்தை, வரலாற்றை தேயிலை செடி சொல்லுமா. யார் சொல்லுவார். கண்ணிர் தானே எமக்கு ஆறுதல்.
கொழும்பில் குண்டு வெடித்தால், இங்கு தேடுதல் வேட்டை நடத்தி எம் இளைஞர்யுவதிகளை கொடுரமாக வேதனை செய்கிறார்கள். யாழ்ப்பாணத்தில் யுத்தம் நடந்தால ஒன்றுமறியா எங்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக தாக்குகிறார்கள்பஸ்ஸில் எம் கலாச்சாரப்படி உடையணிந்து பொட்டு வைத்து செல்ல இயலாது. அநேகரின் வெறிப்பார்களை வேல்வார்த்தைகள், சோதனை அது இதுன்னு எத்தனை அவதிகள், நாம் தமிழனாக பிறந்தது தவறா..? நாம் நாட்டின் பொருளாதாரத்தை குலைக்க வில்லை. முன்னேற்றவே பாடுபடுகிறோம், இருப்பினும் எம்மை ஏன் வேதனை செய்கிறார்கள்.
*冰冰*林米本来来率来
பரியதாஸ் வின் மணி வெட் டி மணி ணை வாரியிறைத்துக்கொண்டிருந்தது. மீண்டும் தன் மண்வெட்டியை மண் மீது பிரயோகித்த போது "ணங்.ணங்.." சத்தம் அவன் செவிகளை குளிர வைத்தது. சுறுசுறுப்பாகி மீண்டும் தோண்ட
ஆரம்பித்தான். அவன் விழிகள் சந்தோஷத்தால் விரிந்தன. "ஹைய்யா.’ புத்தர் சிலை. இன்னும் இரண்டு கலஷகங்களும் ஒரு சின்ன புத்தர் சிலையும் இருக்கனும் மீண்டும் தோண்ட சிறிய புத்தர் சிலையும் ஒரு கலசமும் மாத்திரம் கிடைத்தது. மற்றயதை மிகுந்த நேரம் தேடியும் கிடைக்கவில்லை. பரவாயில்லை இது போதும் எனக்கு. விடயம் காட்டுத் தீ போல் ஊரெங்கும் பரவியது. சிங் கள மக்களும் மற்றும் தமிழ்மக்களும் அவ்விடத்தை ஆழ்ந்து கொண்டு வேடிக்கை பார்த்தனர்.
பரியதாஸ் தொணி டையைக் கனைத் துக் கொணி டே விபரங்களை கூட்டத்தினருக்கு சொல் லிக் கொண்டே இப்பிரதேசத்தில் நம் சாதுமார்கள் மடம் அமைத்து நற்போதனைகளை நடாத்தி வந்துள்ளார்கள் என்பதற்கு இங்கு கிடைத்தவைகள் சாட்சியம் சொல்கின்றன எமக் கு. சொல் லிவிட்டு எல்லோரின் முகபாவனையையும் ஆராய்ந்தான். எல்லோரும் அவனின் சொல்லை ஆமோதிப்பது போல் தலையாட்டினர். சந்தோஷமாய் பியதாஸ் நாம் இங்கு பன்சலை ஒன்றை அமைத்து, இங்கு கிடைத்த பொக்கிஷங்களை பன்சலையில் வைத்து இப்பிரதேசத்தை புண்ணிய பிரதேசமாக நாம் பிரகடனப்படுத்தனும் . நாம் எம் இனத்திற்கு, மதத்திற்கும் செய்யும் பெரிய தொண்டு இது.
ஆமாம். ஆமாம். பியதாஸ் சொல்வது சரி, இங்கு விகாரை ஒன்றை அமைப்போம். எங்கும் கூக்குரல்கள். அதில் ஒரு அரசியல் தலை 'இது விடயமாக அரசாங்கத்தோடு பேசி பணத்திற்கு நான் ஏற்பாடு செய்கிறேன்' குரல் கொடுத்தது. ஒவ்வொருத்தரும் ஒவ்வொன்றை செய்வதாக உறுதிமொழி கொடுத்தனர்.
"அப்படின்ன புண்ணிய பிரதேசத்தில் உள்ள தமிழ் குடும்பங்களை என்ன செய்வது?" வேறு எங்காவது சென்று வாழச்சொல்வோம். கூட்டத்திலிருந்து பல குரல்கள் வந்தது.
சிவசேகரம். அவரைச்சேர்ந்தோர் அதர்ந்தனர் 'இவ் வளவு காலம் சகோதரர்களாக வாழ்ந்த எம்மை நீங்கள் வேறு எங்காவது போக சொல்வது நியாயமல்ல அய்யா. எங்கள வெரட்டினா நாங்க எங்க சென்று வாழ்வது.”
ஊற்று 1 துளி 4 ஆகஸ்ட் செப்டம்பர் 2000
交丐下

Page 15
சில படித்த ரிடையரான சிங்கள பெரியவர்கள் மனதால் வெந்தனர். ஏன் இந்த விரிசலை இரு சமூகங்களுக்கிடையே உருவாக்க நினைக்கின்றனர். குரல் கொடுக்க திராணியற்ற அந்த நல்ல உள்ளங்கள் வேடிக்கை பார்ப்பதை விட தம்மால் ஏதும் பேச இயலாது என்பதை உணர்ந்து மெளனம் காத்தனர்.
"ஏய் இந்த மண் எங்களுடையது. நாடும் எம்மினத்தினருக்கு சொந்தமானது. நீங்க போங்க இந்தியாவுக்கு.
கூட்டத்திலிருந்து விஷமிகளின் வார்த்தைகள் அம்பாக வெளிவந்தன.
தயவு செய்து அப்படியெல்லாம் பேசாதிங் க. இது உங்கL மணி தான் நாங்கமறுக் கல. இந்த மண்ணில் தான் நாங்களும் பிறந்துள்ளோம் , எங் கட மூதாதையர்கள் இந்தியா வம்சாவழியினராக இருக்கலாம். ஆனால் நாங்கள் இந்த மண்ணில் பிறந்த புதல்வர்கள். இங்குள்ள இறப்பர் மரங்களும், தேயிலைச்செடிகளும் எங்கள் இரத்த வியர்வை உரத்தால் வளர்ந்தவை. எங்களுக்கு வேறு இடங்களில் வாழ ஒழுங்கு செய்துகொடுத்தால், நாம் அங்கு சென்று வாழ்கிறோம். "அப்படியெல்லாம் செய்து தர இயாலாது” அதிகாரத்தின் ஆணைக் குரல் அங்கு ஒலித்தது.
"அப்ப எங்கட சமூகத்தின் நிலை"
"நீங்க எங்க போனா எப்படி செத்தா எங்களுக்கென்ன..” நீங்க பெரியவங்க, படித்தவங்க மாற்று ஏற்பாடு செய்யாம- இப்ப வாழுகிற இடத்தை விட்டு எப்படி நாம புள்ளைக்குட்டிகளோடு போவது.
'ஏய் போக முடியாதுன்னு சொல்லாமல் சொல்லுகிறாயா ..? போக லெனி னா கொன்னுருவம்.
சிவசேகரம் தன்னையறியாமல் விரக்தியாய் சிரித்தார். சகோதரர்களே எப்போதே நாம் செதி துட்டம் எங்களையும் , எங்கள் உரிமைகளையும் நீங்க கொல்லவில்லையா?. மீதி உள்ள உயிர்களையும் உணர்வுகளையும் இன்னும் கொன்றுக்கொண்டுதானே இருக்கிறீங்க. உங்கள் இரத்தவெறி தீரும்வரை கொல்லுங்க மேலும் பேச இயலாமல் சிவசேகரத்தின்
விழிகள் கண்ணிர் வடிந்தது.
'ஏய் அவன் அதிகமாக பேசுறான். அவனைத் தாக்கு பேசவிடாதே' சில இளைஞர்கள் (தாக்குவதற்கு) சிவசேகரத்தை அண்மித்தனர். அப்போது
சைரன் ஒலியோடு பொலிஸ் ஜீப் வந்து நின்றது. அதிலிருந்து நாற்பது வயது மதிக்கத்தக்க இன்ஸ்பெக்டர் கருணாரத்ன இறங்கி கூட்டத்தை நோக்கி விரைந்து சென்று 5 6 விடை யங் களையும் (335 (6 அறிந்துவிட்டு.
புத்தர் சிலையும், 6Tuyup நோட்டமிட்டவரின் சிந்தனையில் ஏதோ பொறி தட்டியது. "இங்குள்ள இரண்டு இனத்தாரும் எந்த விதமான அசம் பாவிதங்களிலும் ஈடுபடக்கூடாது. நான் சென்று திரும்பி வரும் வரை” உத்தரவு பிறப்பித்து விட்டு நான்கு பொலிஸாரை காவலுக்கு வைத்து விட்டுபொலிஸ் ஸ்டேசனை நோக்கி வேகமாய் விரைந்தது ஜீப். ஸ்டேசனில் சில பைல்களை தூசிதட்டி எடுத்து வாசித்து மிகுந்த சிரமத்தின் மத்தியில் ஒரு பைலை எடுத்துக்கொண்டு அந்த பெரிய பெளத்த விகாரைக்குச் சென்று எண்பது வயது மதிக்கத்தக்க வண பிதா ரன் சித கங் கொடவில (3 g5 J sí ó விடயத்தைக்கூறி, ஜிப்பிலேயே சம்பவம் நடந்த இடத்துக்கு அழைத்து வந்தார் இன்ஸ்பெக்டர் கருணாரத்ன.
ரன்சித் கங்கொடவில தேரரைக்கண்ட கூட்டம் பயபக்தியாலும் பயத் தாலும் கைகளைக் கட்டி சிரமம் தாழ் தி தரி கண்ணியப்படுத்தினார்கள். வயதுபோனாலும்
26 மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா சிறப்பு மலர்
 
 
 

பார்வை மங்காத தேரர் பொருட்களை பார்த்து விட்டு புத்தப்பிரானுக்கு நன்றி கூறிக்கொண்டே
“பியதாஸ் இந்தப் பொருட்களை முதலில் நீயா கண்டாய்?"
"ஆமாம் சாது” அமைதியாய் தலையாட்டினான்
தேரர் கூட்டத் தைப் பார்த்து 'பக்தர்களே இதில் இன்னும் ஒரு கலசம் குறையுது. அதையும் கொஞ்சம் சிரமம் பாராமல் தேடுங்களேன்,
பியதாஸ் உடல் வியர்க்கலானான்.
கூட்டம் மகுடிக்கு கட்டுப்பட்ட பாம்பைப் போல்
மண்வெட்டியை எடுத்து தோண்ட ஆரம்பித்தது. அவர்களோடு சிவசேகரமும் அவரைச் சேர்ந்தோரும் இணைந்துக் கொண்டனர். சிவசேகரத்தைக் கண்ட தேரர் அவன் மீது சாந்தமான புன்னகையைத் தவழ விட்டார்.
அரை மணித்தியால தோண்டலின் பின் கலசம் கிடைத்தது, தேரர் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை.
மீண்டும் கூட்டம் கோரஸாகா "இங்கு விகாரையொன்றை அமைத்து இப்பிரதேசத்தை புண்ணிய பிரதேசமாக பிரகடனப்படுத்தி இங்கு வாழும் தமிழ் குடும்பங்களை வேறு எங்காவது போகச் சொல்லவும்” என்று தேரரை நோக்கி குரல் கொடுத்தது.
கூட்டத்தை நோக்கி தேரர். “கொஞ்சம் அமைதியாக இருங்கள். உங்கள் மனங்களை அமைதி பெறச்செய்யுங்கள். நம் மதத்தின் மீதும் என் மீது விசுவாசமும் நம்பிக்கையும் கொண்டிருந்தால்” கூட்டத்தினர் தேரரின் வார்த்தைக்கு கட்டுப்பட்டனர்.
இங்கு நடந்த பிரச்சினைப்பற்றி இன்ஸ்பெக்டர் கருணாரத்ன சொல்லி அழைத்து வந்தார். முதலில் ஒரு விடயத்தை உண்மையை நம்புங்கள். இங்கு தோண்டி எடுக்கப்பட்ட சிலை, கலசங்களும் நாற்பது ஆண்டுகளுக்கு முன் ரனதிஸ்ஸ விகாரையில் திருடப்பட்டு காணாமல் போனாவைகள்.
"பியதாஸவின் முகம் விகாரம் அடைந்தது, உடல் பயத்தால் தடுமாறியது, “தாத்தா செய்த குற்றத்திற்காக என்னை கண்டுப்பிடித்து தண்டித்து விடுவார்களோ..?
நான் அப்பாவியான தமிழ் மக்கள் மீது செய்த ஆழ்ச்சி என் மீதே வந்து விடுமோ." பயத்தால் அவன் உடல் வியர்க்க ஆரம்பித்தது.
என் பொறுப்பிலிருந்த இவைகள் காணாமல் போனதிலிருந்து இதுவரை காலமும் நான்பட்ட வேதனைகள் பல, இன்றுதான் சாந்தி பெற்றது. கடவுள் இதற்காகத் தான் என் ஆயுளை நீடித்து வைத்துள்ளாராக்கும்.
சகோதரர்களாக வாழ வேண்டிய நீங்கள் தமிழ் மக்கள் மீது சீறிப்பாய்ந்து, அவர்களை தாக்க, அவர்களை விரட்ட எடுத்த உங்கள் முடிவு பெளத்த மதத்தையும் என்னயுைம் சிறுமை அடையச் செய்கின்றன.
“ஸ்ப்பே தஸந்தி தண்டஸ்ஸ
ஸப்பேஸ்ம் ஜீவித்தம் பியம்
அத்தானம் உபமங் கத்வா
நஹனெய்ய ந காதயே’
இப்பூமியில் உயிர்வாழும் உரிமை எல்லா உயிர்களுக்கும் உண்டு. வாழும் உரிமை மனித உரிமையின் அடிப்படையாகும். ஆனால் எளியவர்கள் வலியவர்களை அழுத்தப்பார்க்கின்றனர். வலுவுள்ளவையே வாழவேண்டும் என்ற கொள்கை நீதிக்கு புறம்பானது. புத்தப்பெருமான் அகிம்சையாக போராட சொல்லியிருக்கிறார். எந்த உயிரையும், ஜீவனையும் துன்புறுத்த எங்களுக்கு சொல்லிக்கொடுக்கவில்லை.
வழிகாட்டவும் இல்லை ஏன் நீங்கள் அப்பாவி தமிழ் மக்கள் மீது வைராக்கியம் கொண்டு தாக்குகிறீர்கள், தாக்கமுற்படுகிறீர்கள் அவர்களும் இந்த நாட்டின் புதல்வர்கள் அவர்களுக்கான உரிமைகள் சலுகைகளை வழங்குங்கள் அவர்களையும் மனிதர்களாக நடத்துங்கள் இந்த நாட்டில் யுத்தம் இன வேற்றுமை இருக்காது நாடு சுபீட்சம் பெறும் உங்களைப் போன்றே மற் றைய எம் சகோதரர்களும் ஒவ்வொரு பிரதேசமாக புத்தர் சிலைகளை தோட்டி எடுத்துவிட்டு இது புண்ணிய பூமி இங்கு வாழாதே போவென்றால் இந்நாட்டில் மற்றைய இன மக்கள் எங்கு போய் வாழ் வார்கள். எப் படி வாழ்வார்கள் சகோதரர்களே. அவர்களும் எங்களைப்போல உணர்வுகளுள்ள மனிதப் பிறவிகள்தானே. என்று சிற்றுரையை முடித்த தேரர்.
ஊற்று 1 தளி 4 ஆகஸ்ட் செப்டம்பர் 2000
27

Page 16
கூட்டத்தை நோக்கி தன் விழிகளை சுழலவிட்டார். குற்றம் செய்ய துடித்த ஒவ்வொரு உள்ளமும் தெளிந்த மனதோடு ஒரே குரலில் 'தவறாக நிகழ்ந்து விட்ட இச்சம்பவத்திற்கு மன்னிப்பு கோருகிறோம் ஸ்வாமி - இதன் பிறகு இப்பிரதேசத்தில் எங்கள் இரு இனங்களுக் கிடையில் எந்தப் பிரச்சினையும், கருத்து வேறுபாடு வராது ஸ்வாமி”.
"இந்த நம்பிக்கையான வார்த்தைகள் போதும் சகோதரர்களே என்னிடம் மன்னிப்புக் கோருவதை விட புண்பட்டு, காயம்பட்ட தமிழ் சகோதரர்களிடம் உங்கள் மன்னிப்பபை கேளுங்கள்.'
தேரர் கூறி முடிக்கும் போதே
பரியதாஸ் கட்டிப்பிடித்து
"என்னை மன்னித்துவிடு சிவசேகரா. இதன் பிறகு உன் இனத்திற்கு இதேப்போல் இன்னொரு வேதனையை இப்பிரதேசத்தில் யாரும் தரமாட்டோம்.”
பியதாஸ்வின் குரல் தழுதழுத்தது. விழிகளில தனி தவறை உணர்ந்த நீர்க்கோடுகள்
சிவசேகர தி தை
இது போதும் பியதாஸ் இனி நாம் இவ்விரு இனங்களுக்குமிடையில் உறவுப் பாலமாக இருப்போம், இனிமேலும் இப்பிரதேசம் இனவொற்றுமைக்கு எடுகோளாகும் மற்றய பிரதேசங்களுக்கு. இருவரும் கட்டிப்பிடித்து இனவொற்றுமையையும், சகோதரத்துவத்தையும் பலமாக் கரிக் கொணி டனர். இவைகளை அவதானித்த தேரரின் நாவிலிருந்து
“தம்மங் ஷாரே ரக்கத்தி டம்ம
ஷாரே”
என்ற வார்த்தை அவர் நாவிலிருந்து வெளிவந்தது.
(யாவும் கற்பனை.)
பனித்துாறல
மாதி தளை மணிக் கூட்டு கோபுரத்திலிருந்து ராஜ வீதி வழி uT353 Gig 60s) b(3urg, St. Thomas T.S. எதிர்ப் புறச்.66 لنا (6 ريك சுவரொன்றில் சில வாரங்களுக்கு முன்பு வரை நீண்ட நாட்களாகப் பாதசாரிகள கண்களில் பட்டுக் கொண்டிருந்த நாலடிச் சிங்களக் கவிதையொன்று நல்ல வேளை, தேச சமாதானத் துக்காய் ஏங்கும் தமிழ் நெஞ்ச மொன்றில் ஒட்டிக்கொண்டதால், சுவரின் இடிபாடுகளில் சிதைந்து போகாமல் தப்பிக் கொண்டது.
ஓர் அநாமதேயச் சிங்களக்கவி சுவரில் எழுதிய சேதி சமாதானத்துக்கான சிறு பனித்துாறலாய் இங்கு தமிழில்:
நல்விளக்காயினும் தூண்டா தொளிருமோ தானாய் இருட்போதிலே வில்லிடம் விடுபட்டு கணையொன்று நகருமோ . கை விரல் அசையாமலே நில்லாது தொடர்வ தேன் நெடும் பகை பண்ட்குலம் இன மதப் பூசல்களே எல்லோரும் மனித தாய் நல்லுறவுபூணுவோம் எமது மாத்தளை மண்ணிலே
கவிஞர் கோட்டகொடை ஏறலுமான சிங்களக் கவிதை இதோ: ருந்த
පන්දම් නැතිව යන්නට බැරිය කළුවරේ
· දුන්නට නැතිව විදින්නට බැරිය ඊතලේ | ජාතිය ආගම් හේදය මුදලේ කලේ : කුමටද අපිට අපිනම් වැසියෝය. මාතලේ ,
28 மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா சிறப்பு மலர்
 
 
 

5ரையோர வாழிடத்தோர் கண்டு கழிக்கும்
ஓர் இயற்கை அம்சம் கடலலைகள். இவை மீண்டும் மீண்டும் தாழ்ந்தும், உயர்ந்தும் வீசுகின்றன. இவ்வலைகளின் இவ்வியக்கத்திற்கு சந்திரனே காரணம்.
இது எவ்வாறு நிகழுகின்றது? பிரபஞ்சத்தில் இரு பொருட்கள் ஒன்றையொன்று ஒருவித சக்தியரினால் கவர்ந்து கொள்ளுகின்றன. இதனை கண்டு உணந்தவர் சேர் ஐசக் நியூற்றன் ஆவார். இதற்குஅவர் புவியீர்ப்பு மைய விசை என பெயரிட்டார். இவ் ஈர்ப்பு வேகமானது இரு பொருட்களின் திணிவை (Masses) பொருத்தது. இரு பொருட்களையும் பிரிக்கும் துாரம் அதிகமாகும் போது ஈர்ப்பின் வேகம் குறையும்.
இந்த தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு சந்திரனையும் பூமியையும் தொடர்பு படுத்தலாம். இயல்பாகவே இவையிரண்டும் ஈர்ப்பு சக்தியை ஒன்றன் மீது ஒன்று செலுத்திக் கொண்டிருக்கின்றன. இந்த பூமியானது ஒரு குண்டு போல சிறிய பொருளல்ல. இது 12,756 km குறுக்களவைக் கொணி ட பெரிய நிலப்பகுதியாகும். ஆனாலும் அது உறுதியற்ற ஒரு பொருள். அதன் உருவ அமைப்பு அடிக்கடி மாறுபடக்கூடியது. இதற்கு சான்று சுழன்றவாறு இருக்கும் நம் பூமி துருவப் பகுதிகளில் தட்டையாகவே இருக்கின்றது.
சந்திரனை நெருங்கியிருக்கும் பூமியின் பக்கத்திலிருந்து சந்திரன் 6,400kmல் உள்ளது. பூமியின் மத்திய பகுதிபோலும் எதிர்பக்கத்தை காட்டிலும் ஈர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும். எனவே பக்கத்து பகுதிமத்திய பகுதிகளில் ஈர்ப்பு சக்தி அதிகமாகவும், எதிர்பக்கங்களில் குறைவாகவும் காணப்படும் . எனவே இருபகுதிகள் புடைப்புடையதாகவும் இருபகுதிகள் தாழ்ந்தும் காணப்படுகின்றன. புடைப்புகள் உயர்ந்து வீசும் அலைகலையும் தாழ்ந்தப் பகுதிகள் குறுகி வீசும் அலைகளையும் குறிக்கும். எனவே புவியில் எக்காலத்திலும் இவ்விருவகையான
அலைகள் இருந்து கொண்டே இருக்கின்றன. நிலத்தை போன்று நீர் திணி மா மாக இல்லாததால் புடைப்புகள் தெளிவாக தெரிகின்றன. நாம் கண்ணால் காணுகின்ற அலையானது நிலத்திற்கும் நீரிற்கும் இடைப் பட்ட 60) 6) மோதலாகும் . கடற்கரைகளில் நிலத்தின் மீது மோதி வீசும் அலைகள் ஒரு சில அங்குலங்களே மேலே உயரும். கடலுக்குள் நீரின் மேலேயே வீசி அடிக் கும் அலைகள் சாதாரண நிலமைகளிலேயே 2m வரை உயரும்.
பூமியானது மேற்கிலிருந்து கிழக்காக சுழல்வதால் தரை மேற்பரப்பில் ஏற்படும் சந்திர ஈர்ப்பு அலைகள் கிழக்கிலிருந்து மேற்காக நகரும். பூமி ஒருமுறை சுழல்வதற்கு 24 மணிநேரம் எடுத்து கொள்வதாலும் எந்த நேரத்திலும் எங்காவது உயர்மட்ட அலைகள் இருப்பதாலும், அவை ஏறத்தாழ 12 மணிக்கு ஒரு தடவை ஒரு புள்ளியை அடையும். அவ்வாறே தாழிந்த அலையும் ஏற்படும்.
சந்திரன்,சூரியன் என ஒப்பிட்டு பார்க்கையில் பூமியை சூரியன்தான் அதிகளவு தன்பால் ஈர்க்கின்றது. ஆனால் பூமி சூரியனை
தான் சுற்றி வருகிறது. சந்திரனை சுற்றுவதில்லை. இருப்பினும் சூரியனால் அலைகளை உருவாக் கும் . ஆற்றல் அவி வளவாக இல் லை. சந்திரன்
அதிகப்படியான அலைகளை ஏற்படுத்துவது போல் சூரியனால் ஏற்படுத்தப்படுவதில்லை. எனவே பூமியின் வேறுபட்ட உருண்டை வடிவில் ஏற்படுகின்ற சந்திரன் ஈர்ப்பு அலைகளை ஏற்படுத்துகின்றது என்பது தெளிவு. இதே வேளை சந்திர ஈர்ப்பினால் ஏற்படுகின்ற அலை உயரத்திலும் அரைவாசியளவே சூரிய ஈர்ப்பினால் ஏற்படுத்தப்படுதின்றது. அமாவாசை நாட்களில் சூரிய ஈர்ப்பு அலையும் சந்திர ஈர்ப்பு அலையும் இணைந்து விடும் . இந்நாட்களில் அலைகள் மிக உயரமாகவும் வேகமாகவும் அடிக்கும். இவ்வலைகளையே வற்றுப் பெருக்கு 60 6 என்று
(46ம் பக்கம் பார்க்க)
ஊற்று 1 துளி 4 ஆகஸ்ட் செப்டம்பர் 2000
29

Page 17
ஐம்பது ஆண்டு அனுபவத்தின்
பிரதிபலிப்பு
ஏ.பி.வி.கோமஸ்
6. 6 Ф
ரவாகம்' ஆசிரியர் குழுவைச்
சார்ந்த அன்பர் அக்ரம் அவர்கள் என்னிடம் வந்து, மூத்த எழுத்தாளராகிய நீங்கள் ப்ரவாகத்தின் அடுத்த வெளியீட்டுக்கு “மலையகம்” பற்றிய ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்று பணி புடன் கேட்டுக் கொண்டதால் சுமார் நாற்பது ஆண்டுகள் மலையகம் பொதுவாக கண்டுள்ள மாற்றங்கள், முன்னேற்றங்கள் பற்றி எழுத தொடங்குகிறேன். இவை என் எண்ண மனப்பதிவுகள் தாம் முடிந்த முடிவாகிய ஆராய்ச்சியல்ல.
கொழும்பில் பிறந்து வளர்ந்த நான் மலையகத்தோடு மாறாத தொடர்புடையதானது 1955ம் ஆண்டு பேராதெனிய பல்கலைக் கழகத்தில் காலடி எடுத்து வைத்ததுடன் தான். ஆனால், மலையக தமிழ் மக்களுடன் பரம்பரை தொடர்பு உண்டு என்பதை பாசத்தோடு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
முதலில் ஆசிரியனாக நியமனம் பெற்று பின் அதிபராகப் பணியாற்றி ஓய்வு பெற்று இன்று இன்பமாக வாழ்ந்து வருவது மலையகத்தில் தான். எனவே இந்த நாற்பத்தைந்து ஆண்டுகளில் நான் கண்ட, காணும் மாற்றங்களை என் மனப்பதிவின் பிரதி பிம்பங்களாகத் தருகிறேன், ஏற்கலாம், மறுக்கலாம். உடன்பாடாக சொல்வதானால் நான் பொதுவாக முன்னேற்றத்தையே காண்கிறேன்.
ஆம், அடிப்படையாக கல்வி, கலை, கலாசாரம், தொழில், மக்களின் குணநலன்கள், குடியேற்றம் ஏன் சமயமும் சம்பிரதாயமும் கூட இன்று "அரசியலால்' தாக்கப்படுவதை காண்கிறோம். 'பனை மரத்தில் தேள் கொட்டினால் தென்னை மரத்தில்" நெறிக் கட்டுவதைக் கண்ணார காண்கிறோமல்லவா! நல்லதுக்கா என்பது வேறு பிரச்சினை
முதலில் அரசியலை எடுத்துப் பார்த்தால் மக்களிடம் ஒரு விழிப்புணர்ச்சி
ஏற்பட்டிருப்பது தெட்டத் தெளிவு. மலையக மக்கள் என்ற விழிப்புணர்ச்சி, எனவே பிரிவினைகள் வேண்டாம் பரிவுடன் வாழ்வோம் என்ற எண்ண மனவெழுச்சியே நமக்குத் தேவை. இந்த எணர் ணத் தையும் விழிப் புணர்ச்சியையும் வளர் கி க வேணி டியவர்கள் அரசியல் வாதிகள் , ஆசிரியர்கள், தொழிற்சங்க வாதிகள் என்பது எம்மின் தாழ்மையான எண்ணம்.
மனித குலத்துக்கே அடித்தளம் அமைத்து அத்திவாரமிடும் ஆதார சுருதி ஆசிரியர் என்பது எம் எண்ணம். எனவே கல்வித் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், முன்னேற்றங்கள் பற்றி சற்று சிந்திப்போம்.
நான் பொதுவாகத் தான் சொல் லுகிறேன் கல வரிக் கூடங்கள் மலையகத்தில் கூட "அறிவை’ விருத்தி
செய்யும் ஒரு சாதனமாகவே மாறிவருகிறது. மக்களின் மனப்பாங்கை மாற்றுவது என்ற பிரதான நோக்கங்களில் ஒன்று மங்கி மறைந்து வருகின்றது என்பது உண்மை. இருபது, இருபத்தைந்து ஆண்டுகளாக பொதுவாக உலகெங்கும் ஏற்பட்டு வரும் ஒரு மாற்றம் என்பது உண்மை, எனவே மலையகமும் அவ்வாறே மாறிவருகிறது, மாறிவந்துள்ளது. சமயம், நாட்டியம், சித்திரம், சங்கீதம் போன்றவை குறைந்து கணிதம், விஞ்ஞானம் முதல் "கொம்பியூட்டர்" வரை வளந்து விட்டது.
மேலும் தொழில் துறையிலும் மாற்றம் காண்கிறோம். ஆம் தேயிலை, இறப்பர், போன்ற தோட்டங்களில் வேலை செய்வதில் முக்கிய இடத்தை பெறுவதுமாறி சில்லறைக் கடைகளில் விற்பனையாளர்களாகவும், வெளிநாடுகளில் “ஹவுஸ் மெயிட்” ஆவது வரை வளர்ந்துள்ளது. தோட்டம் விட்டு வெளியில் போவதை பெரிதும் விரும்புகின்றனர், அதையே செயல் முறைப்படுத்துகின்றனர்.
இதனால் கலாசாரமும் கலையும் கூட பாதிக்கப்பட்டுள்ளன. முப்பது, நாற்பது வருடங்களுக்கு முன் கோயில் திருவிழாக்கள் நடைபெறின் நாடகமும் நாட்டியமும்
30 மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா சிறப்பு மலர்
 

நடைபெற்றன, ஏன் “காமன் கூத்து’ போன்றவை நடைபெற்றன. இப்போது அருகியில்லாமற்போய் விட்டது.
இப்படி எழுதிக்கொண்டே போகலாம். எனவே எழுத்து, மன்றம் பற்றி எழுதி முடிக்கலாம் என்று எண்ணுகிறோம். ஐம்பது, அறுபதுகளில் ஒரு பெரிய இயக்கமாக பிறந்து வளர்ந்த மலைநாட்டு வாலிபர் சங்கம், இயக்கமாகவும், மன்றமாகவும், சங்கமாகவும், முன்னணியாகவும் அடிப்படையாக "அரசியல்' எண்ணக் கருத்துகளுக்கு இணங்க மாறி மாறி எழுத்தாளர் சங்கம், எழுத்தாளர் மன்றம், பேரவை, இலக்கிய, கலை இலக்கிய என்றும் தேவை. மேலும் அமைப்பு காரணமாக மலையகம் என்றும் மாறி மாறி வந்துள்ளது மலைநாடு கூட என்ன சொல்லுவது?
ஆனால் ஒன்று என்னதான் பெயர் மாறினாலும் இப்பகுதியில் வாழும் நாம் எல்லாரும் இப்பத்திக்கு உரியவர் என்ற எண்ணம் எழவேண்டும். மனிதன் என்ற நிலையில் எண்ணினால் நல்லது என்று எண்ணுகிறோம். எனவே, இன, மத, சாதிசமய
போக்கு எல்லாம் மாறி மனிதம் பற்றி அதன் முன்னேற்றம் கருதி எழுதினால் நல்லது என்று எண்ணுகிறோம். மக்கள் மத்தியில் அன்பு, அறிவு, ஆற்றல் வளர சிந்தித்து செயற்பட்டு “ஒன்றே குலம், ஒருவனே தேவன்” என்ற எண்ணத்தில் திளைத்து இலக்கியம் படைத்து கலைகள் வளர்த்தால் நல்லது என்று எண்ணுகிறோம்.
米 米米冰冰米米米米米米米
இல்லத்தை வசந்த மாளிகையாகவும் கசந்த மாளிகையாகவும் காட்டும் திறம்படைத்தவள் ஒரு பெண்ணே (காண்டேகர்)
ஆணர்களது இதயஇன்பப்பூங்காவின் தேன். தென்றல் பெண்களே (பஷ்கின்) 3
ஒவ்வொரு மனிதனும் ஒரு பெண்ணினி மகன் (ரஷ்யா)
ஒரு நல்ல பெண்ணிருக்கும் வீட்டில் ஆனந்தம் ஜன்னல் வலியாகச் சிரிக்கின்றது.
-எம்.எம்.அன்ஸார் - அனுராதபுரம்
நல்ல நால்களுக்கு
நாடவேண்டிய இடம்
OPPING COMPLEX
KOTAGALA . TEL: 05124171
fossibD 1 grsrf 4 &escriot Gleft"|Lubuni 2000
31

Page 18
மக்கள் தலைவன் ஆவாய்
அன்பு கொண்டு அரவனைத்து
அறிவுடன் நீநடந்தால் பண்பு கொண்டு பாசந் தோய பழகி நீயே வாழ்ந்தால் பண்புகொண்டுமக்கள் உன்னை
நாடிநாளும் வருவார் என்பும் பிறர்க்காய் ஈயும் தலைவன் என்றே உன்னை அழைப்பார்.
கடமை வேண்டும் கருணை நிறைந்த
கண்ணியமும் வேண்டும் மடமை நீக்கும் மமதை போக்கும் மனதும் உனக்கு வேண்டும் கடமை என்று தொண்டு செய்யும்
கண்ணிய உள்ளம் கொண்டால் மடிமை போக்கும் மக்கள் தலைவன்
மன்பதையில் நீயே ஆவாய்.
கலைகளுடனே எழுத்தும் சேர்ந்தால்
கருத்தை வளர்க்க முடியும் மலையகத்தின் நிலையை மாற்றி
மாண்பு காண முடியும் விலையில்லாதநல்ல குணங்கள்
விளைத்திடவே முடியும் தலைவனாகிநாமும் இங்கு
தனித்துவம் காண முடியும்.
ஏ.பி.வி.கோமளப்
IB5-H நட்புதான் நல்ல உறவு அதுவே கடைசி வரை நிலைக்கும் உறவு அது இனிமையான உறவு இதமான உறவும் அதுவே.
IDUIQUI I06ü8°ủ đểô6ỉì6jš){}
பூமியின் வல்லமை
பூமிக்கு மேலேயுள்ள புறப் பொருள் அத்தனையும் பூமிக்குள் புதைத்து விடும்
வல்லமை பூமிக்குண்டு
பூமியின் மேலே நின்று புறம் பெனநிற்பவைகள் பூமிமேல் வாழச் செய்யும் வல்லமை பூமிக்குண்டு
பூமியில் வாழுகின்ற புறவுயிர்க் குணவு வகை பூமியில் விளைத் தளிக்கும் வல்லமை பூமிக்குண்டு
பூமியைத் தலமாய்க் கொண்டு புகழுடன் வாழ்வுயிர்கள் பூமியில் காத் துயர்த்தும் வல்லமை பூமிக்குண்டு
பூமியின் வல்லமையும் பூமியின் பெரும் பொறையும் பூமியின் குண நலனும் பெற்றிடல் மேன்மை தரும்
கவிஞர் ஏ.இக்பால்
விடுதலை
இரவு வந்தவுடன் பகலுக்கு விடுதலை பள்ளி முடிந்தவுடன் பிள்ளைக்கு விடுதலை பெண்ணின் திருமணம் பெற்றோர்க்கு விடுதலை ஜாதியே, எப்போது உனக்கு விடுதலை?
"வாழச்சேனை அமீண்"
32 மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா சிறப்பு மலர்
 

பிரவாகம்
தானேன் அன்பே
இத்தனைக் காதல்
சிற்றா றொன்றின் சிறுமார் பகத்துள் பொங்குமாகடல் பாய்வது ஏனோ?
இங்கென் கரைகள் இரண்டையும் தகர்த்துக் கழுவிச் செல்வதுன் காதல் ப்ரவாகம்
என்னை யிழந்திட எண்ணிய தில்லை தான் இம்மலர் மாலையை உன்னிடம் தர நான் அவாவுற்றதுவும் அன்பே உண்மைதான்
என்னுள் மோதும் இக்கொடும் புயலின் கண்ணிரலைகளின் காரணம் அதுவோ?
தசையுடல் தாண்டி மனவெளி கடந்து கைத்தலம் பற்றி அழைத்துச் செல்ல
விரும்பும் அவ்விடம் எது சொல் அன்பே
தேன் பாயும் எந்தத் தாருக வனத்தில் இந்த லீலை இறுதியாய் ஒயுமோ?
வங்கக் கவி- நஸ்றுல் இஸ்லாம் தமிழில் - பாணர்ணாமத்துக் கவிராயர்
சலனம் பாறையாய்த் துயிலுமென்னை உசுப்புதற்கு நீ யார்?
ராகங்களின் பனி உருகிப் பாய்கிறது நாதவெள்ளம்
சோர்வுற்ற அலட்சிய மனம் இப்போ தவிக்கிறதுன் தழுவலுக்காய்
பல ஜீவித விழித் துளிகளுன் பாதங்களில் விழப் பரிதவிக்கின்றன.
இசைலயம் கொண்டவுன் பாத ஸ்பரிஸத்தால் மொக்கவிழ்கின்றதென் பாடல் மொட்டுகள்
உன் குழலில் உயிர் முடிக்கத் துடிக்குமென் பாடல் மொட்டுகள்
உன் மருள் விழிகளா லென் வானமெங்கும் கூசும் ஒளி வெள்ளம்
வங்கக் கவி- நஸ்றுல் இஸ்லாம் தமிழில் - பாணர்ணாமத்துக் கவிராயர்
அன்பு என்பது அன்பு என்பது வெறும் பேனாமையினால் எழுதப்படுவதல்ல அன்பு என்பது வெறும் வார்த்தையினால் உச்சரிக்கப்படுவதல்ல அன்பு என்பது தூய உள்ளங்களில் இருந்து வெளிப்படுவது.
3)TG 03o கல்ஹின்னை
ஊற்று துளி 4 ஆகஸ்ட் செப்டம்பர் 2000
33

Page 19
R
@ក្ដព្រឹក្សាគ្រឿ|Gក្រុ
1%elete്യലേ.tkedow.
LOCAL CALLS IDD CALLS
FAXX PHOTO COPY
NO 6, MATALE ROAD. UKUWELA
TEL: 066 43206, FAX: 066 44167
34 மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா சிறப்புமலர்
 
 
 

"அதி கணிப்பூக்கள் "
அந்தனிஜீவாவுடன் ஒரு சந்திப்பு
கலை இலக்கிய உலகில். கலகக் கார கலைஞர் என்று அறியப்பட்ட அந்தனி ஜீவா அவர்களை கணி டியிலுள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தோம். அமைதியாக அவரது கலை, இலக்கியப்பணி தொடருவதை நேரில் காண முடிந்தது. அவரது "அக்கினிப் பூக்கள்’ நாடக நூலுக்காக தேசிய அரசு இலக்கிய விருதினை பெற்றுள்ளார். மத்திய மகாண சாகித்திய விழாவிலும் அவரது நாடக நூலுக்கு விருது வழங்கப்பட உள்ளது. அவருக்கு 'ப்ரவாகம்' சஞ்சிகை ஆசிரியர் குழுவினரின் சார்பில் எங்கள் வாழ்த்தை தெரிவித்துக் கொண்டு, அவரிடம் சில கேள்வி கேட்டோம். •
கே: உங்களின் கலை
பத்திரிகைப் பணிகளைப் பற்றி.?
படிக் கும்
ப நான் பாடசாலையில
காலங் களிலேயே எனக் கு நாடகத் தரிலும் , வாசிப் பதிலும்
அதிகம் ஆர்வமிருந்தது. மாணவனாக இருந்த பொழுது சக மாணவரும் இப் பொழுது பிரபல ஓவியமான எஸ்.டி.சாமி படங்கள் வரைய நான் எழுத இருவருமாக கையெழுத்து பத்திரிகை நடத்த மாணவர்களிடையே விநியோகித்தோம்.
பின்னர் எட்டாம் வகுப்பில் படிக்கும் பொழுது ‘கரும்பு' என்ற சஞ்சிகையை அச்சில் வெளியிட்டோம், இரு இதழ்களே
வந்தன.
பின்னர் நடகக்கலைஞர் கலைதாசனுடன் இணைந்து ‘தேசபக் தனி ' என்ற
பத்திரிகையை வெளியிட்டோம். இதில் எனது முதல் சிறுகதை வெளியாகியது. அப்பொழுது தான் அறிஞர் த.ந.கந்தசாமி சில்லையூர் செல்வராசன் தொடர்பும் முற்போசத் எழுத்தாளர் சங்க செயலாளர் பிரேம்ஜி, இளங்கிரான், சோமகாந்தன், எச்.எம்.பி.மொஹிடின் போன்றவர்களின் அறிமுகம் கிடைத்தது.
பாடாசலையை விட்டு வெளியேறியவுடன் இடது சாரி இயகத்தில் இணைந்து லங்கா தோட்டத் தொழிலாளர் கலகத்தில்
இலக் கசியப்
முழுநேர ஊழியனானேன். அங்கு ஜனசக்தி என்ற பத்திரிகையின் ஆசிரியரானேன், பின்னர் தினபதி, சிந்தாமணி பத்திரிகையில் பணியாற்றினேன். யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த ஈழநாடு செய்தி வாரப் இதழ் ஆகியவற்றில கொழும் பு நிருபராக பணியாற்றியுள்ளேன்.
கேள்வி: கொழும்பு சஞ்சிகையைப்பற்றி?
பதில்: எண்பதுகளில் மலையக இலக்கிய வளர்ச்சிக்காக "மலையக கலை இலக்கியப் பேரவை’ என்ற அமைப்பை உருவாக்கி செயற்பட்டோம். அதன் விளைவாக 1986இல் கொழுந்து என்ற சஞ்சிகை வெளியிட்டோம்.
இதுவரை பதிமூன்று இதழ்கள் வந்துள்ளன.
மலையக இலக்கியம் பற்றிய காத்திரமான தகவல்களை இச்சஞ்சிகை தந்தது.
அத்துடன் தோட்டப்பிரதேசங் களுக்கான கூட்டுச் செயலகம் என்ற அமைப்பு குன்றின் குரல் என்ற சஞ்சிகையை வெளியிட்டு வந்தது. எனது பொறுப்பில் அந்த சஞ்சிகை வெளிவந்த பொழுது அதனை காத்திரமான இலக்கிய சஞ்சிகையாக வெளிக் கொணர்ந்தேன். மலையக எழுத்தாளர்களுக்கும் களம் அமைத்துக் கொடுத்தேன்.
酸
இயக்குனர் பாலுமகேந்ராவுடன் அன்தனி ஜீவா
கேள்வி: மலையக வெளியீட்ட்கம் பற்றி.
பதில்: மலையக கலை இலக்கிய பேரவை மலையகத்தின் பல பகுதிகளுக்கும் சென்று இலக்கிய வளர்ச்சிக்காக பயிற்சி பட்டறைகள், கருத்தரங்குகள், நுால் வெளியீடுகள் நடத்தினோம். ஆனால், அவை எல்லாம் காற்றோடு கை குலுக்கிய கதையாக விடக் கூடாது என்பதற்காக மலையக வெளியீட்டக மூலம் நூல்களை வெளியிட
ஊற்று துளி 4 ஆகஸ்ட் செப்டம்பர் 2000
35

Page 20
தொடங்கினோம். 1986இல் எமது வெளியீட்டு முயற்சிகளை தொடங்கினோம். சாரல் நாடனின் "சி.வி.சி.சிந்தனைகள்", சு.முரளிதரனின் "தியாக யந் தரங்கள்' ஆகிய நுால களை வெளியிட்டோம். இதுவரை 17 நூல்களை வெளியிட்டுள்ளோம். இந்த பணி தொடர்கிறது.
கே. உங்களுடைய சாகித் திய விருது பெற்றுள்ள "அக்கினிப் பூக்கள்’. பற்றி
பதில்: "அக்கினிப் பூக்கள்" நாடக அரங்கில் எனக்கு பெயரும் புகழும் தேடி தந்த நாடகம்,
கலை எனக்களிப்பது ஊதியமல்ல, உயிர் என்ற 858F just 60T உண்மையுடன் கலைத்துறையில் எனது காலடிச் சுவடிகளைப் பதித்தேன்.
அக் கணிப் பூக்கள் அபூர்வமான
சிருஷ்டியல்ல, அந்த நாடகத்தில் நீங்கள் சந்திக்கும் பாத்திரங்கள் ஏற்கனவே நீங்கள்
மலையகத்திலிருந்து முதன் முதலாக பிரசுரமான நூல் "கோப்பிக்கிருஷிக் கும்மி" 1869இல் ஆபிரஹாம் ஜோசப் எழுதியது. * இலங்கையில் முதல் நாவல் அசன்பேயின் சரிதம் 1885இல் அறிஞர் சித்திலெப்பை அவர்கள் எழுதியது. மலையக கவிதையின் பிதாமகள் அருள் வாக்கி அப்துல் காதிறுப் புலவர். இவர் 30இற்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார்: மலையகத்தின் முதல் நாவல் "காதலின் வெற்றி" அல்லது "சுந்தரமீனாள்" இதனை 1930களில் மஸ்கெலிய அபோல் என்பவர் எழுதி வெளியிட்டார். மலையகத்தின் முதல சிறுகதை "திருராமசாமி சேர்வையின் சரிதம்" கோநடேசய்யர் அவர்களால் எழுதப்பட்டது. முதன் முதலில் மலையக எழுத்தாளர்களை
குமாரவேல் ஆவார். மலையகத்தில் முதல் நாவல் வெளியிட்ட இஸ்லாமியப் பெண்மணி திருமதி. நயிமா சித்திக் 1975இல் வாழ்க்கைப் பயணம் மலையகத்தில் வீதி நாடகங்களை அறிமுகப்படுத்தியவர் அந்தனி ஜீவா ஆவார். மலையகத்தில் முதன்முதலில் தயாரிக்கப் பட்ட டிவி நாடகம் காலங்கள் ஆகும்.
சந்தித்தவர்கள் உங்களோடு தினசரி உறவாடியவர்கள். அவர்களில் ஒருவராகக் கூட நீங்களும் நானும் இருக்கலாம். நாடகத்தில்
நான்
எழுதியுள்ள வசனங்கள் எண்
வாயிலிருந்து வரவில்லை, இதயத்திலிருந்து பிரிட்டு வந்த ஆத்மாவின் ராகங்கள்.
அக்கினிப் பூக்கள் ஒரு தடவை பதுளையில்
நடைபெற்ற தொழிற் சங்க மாநாட்டில் பத்தாயிரத்திற்கும் அதிகமான மக்கள்
முன் னிலையில்
மேடையேறியது.
அப்பொழுதுதான் இந்த நாடகத்தை எழுதியதன் பயனை நான் இதய பூர்வமாக அனுபவித்தேன்.
(மிகுதி அடுத்த இதழில்.)
மலையக இலக்கியத் தடங்கள்.
料
冰
来
தயாரித்தவர் மாத்தளை கார்த்திகேசு மலையகத்தின் முதல் பெண் எழுத்தாளர் மீனாட்சி அம்மையார். ஈழத்தின் முதல் பத்திரிகை உதய தாரகை 1841இல் வெளியாகியது.
கோ.நடேசய்யர்: மலையக மக்களின் விடிவுக்காக எழுத்தையும் பேச்சாற்றலையும் ஆயுதமாக பயன்படுத்தியவர். அரசியல் பத்திரிகை தொழிற்சங்கம் ஆகியவற்றின் முன்னோடி மலையக ஆக்க இலக்கியத்தின் பிதா மகன். : சி.வி.வேலுப்பிள்ளை; மலையகம் என்ற சொல்லுக்கு உயிரும் உருவாக்கமும் கொடுத்தவர். மலையக இலக்கியத்தின் வாய்மொழி இலக்கியம், கவிதை, நாவல், சஞ்சிகை ஆகியவற்றின் முன்னோடியாக கருதப்படுபவர். ဒြိုး မွို "தீண்டத்தகாதவன்” 1947இல் கே.கணேஸ் என்பவரால் மொழி பெயர்க்கப்பட்ட மலையகத்தின் முதல் நூல் : சுயா, பானான், ஆனந்தன் இலங்கைச் சி கதையின் முன்னோடிகள் சி.வைத்தியலிங்கம், இலங்கையர்கோன், சம்பந்தன் ஆகிய மூவரும் இலங்கைத் தமிழ் சிறுகதைக்கு புத்தூக்கமும், புதிய வடிவமும் வழங்கிய முன்னோடிகள்: မွို
— 36
மத்திய மாகான தமிழ் சாகித்திய விழா சிறப்பு மலர்
 
 
 
 
 

சித்தி' போன்ற வியத்துகு சாதனைகளைப்
நுTற்றுக் கணக்கான ஈழத்து இஸ்லாமிய இளைஞர்களும் யுவதிகளும் தரமிகு கவிஞர்களென தம்மை இனங்காட்டிக் கொண்டு அழுத்தமாக தடம் பதித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையிலே, அவர் தம் கவிதா ஆளுமையினாலும் காத்திரமான சிந்தனைகளாலும், கற்பனை வளத்தினாலும் தமிழ்க் கவிதையைப் புதிய பாதைகளிலே வழி நடத்திச் செல்ல முயலும் இக் காலகட்டத்திலே, ஈழத்து இஸ்லாமியத் தமிழ்க் கவிதை முன்னோடிகளான பதுருத்தின் புலவர், கோட்டாறு செய்கு சுலைமானுல் காதிரிய்யி, காலி காதர் பாவா லெப்பை, கசாவத்தை ஆலிம் புலவர், பதுருத்தீன் ஹசைன் , மாத்தறை காசிம் புலவர் போன்றோரின் படைப்புகளை படிப்பதும் அவர்களின் வாழ்வினைப் பற்றி அறிந்திருப்பதும் ஈழத்து இஸ்லாமியத் தமிழ்க் கவிதை வளர்ச்சியினை எடை போடுவதற்கும், அதன் எதிர்கால வளர்ச்சிப் போக்குகளை உத்தேசமாக நிர்ணயிப்பதற்கும் உதவியாக இருக்கும்.
புரிந்தும், பக்தி பரவசமூட்டும் பாமாலைகளால் தமிழன்னையை அழகுபடுத்தியும், தன் அற்புத நாவன்மையால் இஸ்லாமிய மார்க்க உணர்வை ஊட்டியும் அன்றைய மக்களின் மனங்களைச் சுவீகரித்துக் கொண்ட அப்துல் காதர் புலவர் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த திருப்புத்துார் எனும் ஊரிலிருந்து கலஹா பிரதேசத்திற்கு வந்து, அங்கே சில சிறிய கோப்பித் தோட்டங்களுக்கு உரிமையாளராக விளங்கிய அல்லாபிச்சை என்பருக்கும், கண்டி மாநகருக்கு நீங்கா அழகை வழங்கிக்கொண்டிருக்கும் கண்டி வாவியினை அன்றைய கண்டி மன்னனின் கட்டளைக்கேற்ப நிர்மாணித்த மாமு நெய்னார் என்பவரின் வழித் தோன்றலான ஹவ்வா உம்மா என்பவருக்கும் மகனாக 1866ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30ம் திகதி பிறந்தார்.
"பொலியுமிளம் மலைமகளின் பூங்குழல் மேற் பூ முடித்தாற் போல ழகிற் கூட்டம் மொய்க்கும் ஒலியுமிழும் அருவி மகன் உவகை பொங்க ஓடி வந்து ஊட்ட வயல் நிலம் செழிக்கும் கலையவிழும் காட்சி பல நல்கு ழர்”
நேற்று எங்கு இருந்தோம்? இன்று எங்கு இருக்கின்றோம் என்பதை அறிந்தால் தானே வளர்ச்சியினை உணரமுடியும். இந்த வகையில் தமிழ் இலக்கியவாதிகளால் விரிவாகவும் ஆழமாகவும் அறியப்பட வேண்டியவர் வித்துவ சிரோன்மணி எனவும் வித்துவத் தீபம் எனவும் கற்றோராலும் மற்றோராலும் ஏற்றிப் போற்றப்பட்ட அருள்வாக்கி அப்துல் காதர் புலவராவார். மாலை, பதிகம், அந்தாதி, பிள்ளைத்தமிழ் என முப்பதுக்கும் மேறி பட்ட பிரபந்தங்களை இயற்றி இஸ் லாத்தையும் தமிழையும் வளர்த்த இப்பாவலர் பெருமகனின் இலக்கியப்பணி தெளிவாக இனம் காட்டப்படவேண்டிய ஒன்றாகும்.
பாட் டால விளக் கெரித் துப் பாட்டதனாலேயே அதனை அணைக்கும் "தீப
இயற்று 1 துளி 4 ஆகஸ்ட் செப்டம்பர் 2000
அருள்வாக்கி அப்துல் காதர்
புலவர்
என கவிமணி ஸ"பைரினால் வர்ணிக்கப்பட்ட தெல்தொட்டை எனும் கிராமமே புலவரின் பிறந்த ஊராகும்.
சிறு வயதிலே அப்துல் காதர் தனது ஊர் மத்ரஸாவிலே குர்ஆன் ஓதக் கற்றார்.
பாடசாலையிலே தமிழ் கற்றார். பின்னர் கண்டியில் இயங்கிக் கொண்டிருந்த "குயின்ஸ் அக்கடமி” எனும் கல்லூரியில் சேர்ந்து தமிழும் ஆங்கிலமும் படித்தார். இங்குதான் இவரின் தமிழ்ப்பற்றும் தமிழறிவும் துலாம்பரமாக வெளிப்படலாயின. இயல்பாகவே கவித்திறன் பெற்றிருந்த அப்துல் காதர் தன் உள்ள உணர்வுகளைக் கவிதைகளாக வெளிப்படுத்த ஆரம்பித்தார். s
கல்லூரி இலக்கிய மன்றங்களும், முஸ்லிம் வீடுகளிலும் பள்ளிவாசல்களிலும் நடந்த கந்தூரி வைபவங்களும், மலையகத் Gög5fTLCL (58a56ffl6) — 6ô (QAEä(g5— Q)arujuuuJul: l
37

Page 21
விழாக்களும் இளம் அப்துல் காதருக்குக் கவி அரங்குகளாகின. இந்த மேடைகளில் அவரது கவிதைகளுக்குக் கிடைத்த அமோக வரவேற்பு, அவருக்கு உற்சாகத்தையும் தன்னம்பிக் கையையும் வழங்க, தனது பதினாறாவது வயதில் யாழ்ப்பாணத்தில் நடந்த ஒரு கவியரங்கத்திலே அவர் பங்கு பற்றினார்.
அந்த கவியரங்கில் பங்கு பற்றிய ஏனைய கவிஞர்கள் அனைவரும் அறிவிலும் அனுபவத்தலும் முதர்ந்தவர்கள் , பார்வையாளர்களாக குழுமியிருந்தோரும் அத்தகையோரே அரங்கத்திற்குத் தலமை தாங் கயவரோ, தமிழகத் தலிருந்து வருகைதந்திருந்த புகழ்பூத்த தமிழறிஞர் வித்துவசிரோன்மணி அம்பலவான கவிராயர். இத்தகையதோர் உயர் மேடையில் அமர, 16 வயதினைக் கூட தாண்டியிராத இளம் அப்துல் காதர் ஏறியபோது, அவையோர் பலரின் விழிகள் வியப்பால் விரிந்தன. மேடையின் தரமறியாது சிறுவன் ஏறிவிட்டான் என நினைத்த புலவர் ஒருவர் அச்சிறுவரை நோக்கி “உமக்கு என்ன காணும் முடியும்?” என நக்கலாக வினவ, இளைஞரின் வாயிலிருந்து கீழ்வரும் கவிதை துள்ளி விழுந்தது.
அட்டகிரி எட்டையும் பந்தாகவே உருட்டி
அம்பலம் முன்னில் வைப்பேன் அதனை வான்மீதிலே பற்றி யெறிவேன் வானத்தை வில்லாக வளைப்பேன் அதில் மழை பொழியவும் வைப்பேன் ஏழு கடலைப் பாலனைக் கொண்டு வீசி விளையாடச் செய்வேன்
எந்த அவை அப்துல் காதரை ஏளனம் செய்ய முயன்றதோ, அந்த அவையே அவரது கவித்துவத்தைக் கண்டு வியந்தது. அவருக்கு “அருள்வாக்கி’ என்ற பட்டத்தைச் சூட்டி மகிழ்ந்தது.
கவிஞன் என சான்றோரால் ஏற்கப்பட்டிருந்தபோதும் 'கற்றது கைமண்ணளவே" என நினைத்த அப்துல் காதர் தமிழில் மேலும் பாண்டித்யம் பெறுவதற்காக மதுரை சென்று வித்துவ சிரோன்மணி மஹற்மூது முத்து வாப்பா புலவரின் மாணவரானார். தனது புதிய ஆசானிடம் கற்க வேண்டியவை அனைத்தையும் ஐயந்திரிபற கற்று முடித்த அப்துல் காதர் தனது அறிவு தேட்டத்தை
அத்தோடு நிறுத்திக் கொள்ளாது, இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் பலரைச் சந்தித்து, அவர்களது நட்பைப் பெற்று, தனது மார்க்க அறிவினையும் பெரிதும் வளர்த்துக் கொண்ட பின்னரே இலங்கை திரும்பினார்.
நிறைவான தமிழறிவு, அதற்கொப்பான மார்க்க அறிவு எனும் உறுதியான தூண்களின் மீதே அருள்வாக்கி அப்துல் காதர் அவர்களின் இலக்கியப்பணி எனும் மணிமணி டபம் எழுப்பப்பட்டது. திருமதீனத் தந்தாதி மாலை, ஆரிபு மாலை, கண்டி செய்கு சிஹாப்புத்தீன் வலியுல்லாஹற் பதிகம், முத்துப்பேட்டை சேகு தாவூது வலியுல்லாஹற் பதிகம், முஹியத்தீன் ஆண்டகை காரணப் பிள்ளைத் தமிழ், கண்டிக் கலம்பகம் என முப் பதுக்கும் மேற்பட்ட கவிதா படைப்புகளைத் தமிழ் இலக்கிய உலகுக்கு வழங் கிய அருள் வாக்கி அவர்களின் கவித்துவத்தை காட்டுபாவா சாகிபு கும்மியில் கீழ் வரும் பாட்டு நன்கு உணர்த்துகிறது.
“காட்டு வழிதனி லெங்களை விட்டிந்தக்
கள்வர்கள் வாதைக் ககப்படவோ சூட்டின னாதி தலையெழுத்து தோவென்று
சொல்லி யழுதனர் தோகையரே. வள்ளலே கண்ணே நவமணி யேகுரு
மாமணியே தவப் பூமணியே தெள்ளிய காட்டுபா வாமணி யேதிருத்
தீன்மணி யேமரு மான்மணியே நாதா வேதிருத் தாதா வேயெங்கள்
நாயக மேதிருத் தாயகமே வேதா வேகாட்டு பாவா வேயென்று
மேலுங்கண் ணிர்மழை யூற்றிநின்று
மதுரைத் தமிழ் சங்கத்தின் சங்கப் புலவராக சேர்த்துக்கொள்ளப்பட்ட அருள்வாக்கி புலவர் சமகால புலவர்களாலும் அறிஞர்களாலும் பெரிதும் மதிக்கப்பட்டவராக திகழ்ந்தார். அப்துல் காதர் புலவர் அவர்களை தான் எந்தளவு மதித்தார் என்பதை முகம்மதுக் களஞ்சியப் பாவலர் என்பவர்.
"இலக்கணவி லக்கியங்க ளெல்லா முணர்ந்து விலக்கு விதியறிந்த மேலோர் - சொலக்கணமே யாக்கிக் கவிதை சொல்லுமப்துல்கா திற் புலவன் வாக்கிற் சிறந்தவித்து வான்”
எனும் பாட்டால் வெளிப்படுத்தியுள்ளார்.
UT 6n 6o 6OD D 60o u Lj போலவே
நாவன்மையையும் பெற்றிருந்த வித்துவத்தீபம்
38 மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா சிறப்பு மலர்

அவர்கள் மார்க்க உபன்னியாசங்கள் மூலம் இஸ்லாமியர்களுக்குச் செய்த தொண்டும் மகத்தானதாகும். அவருக்கு வழங்கப்பட்டிருந்த 'தரிவ்ய கவி நாவலர்’ எனுமி பட்டம் அருள்வாக்கி அவர்களின் நாவன்மையைச் சுட்டிக் காட்டுகின்றது.
இலங்கை முஸ்லிம் களினி 'மறுமலர்ச்சித் தந்தை” என போற்றப்படும் அறிஞர் சித்திலெப்பை தனது எழுத்தாலும் பேச்சாலும் ஈழத்து முஸ்லிம்கள் மத்தியில் அன்று நிலவிய மூட நம்பிக்கைகளையும் தவறான போக்குகளையும் சாடிய போது, பழமைவாதிகளினி கடும் எதிர்ப் பை எதிர்நோக்க வேண்டியிருந்தது. அவரது வாழ்க் கையின் சோதனையான இந்த காலகட்டத்திலே அவருக்கு பக்கபலமாக நின்று உதவியவர்களுள் முக்கியமான ஒருவர் அருள்வாக்கி அப்துல் காதர் புலவர் ஆவார் என்பது மனதிற் கொள்ளப்பட வேண்டிய உண்மையாகும். அறிஞர் சித்திலெப்பைக்குத் துணையாக நின்றதன் மூலம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் ஈழத்து முஸ்லிம்கள் மத்தியில் ஏற்பட்ட மறுமலர்ச்சிக்கு அப்துல் காதர் புலவர் அவர்களும் தம் பங்களிப்பினை வழங்கியுள்ளார்கள் என கூறலாம்.
அருள்வாக்கி அவர்களின் வாழ்வோடு தொடர்பான ஒரு முக்கிய நிகழ்வு, அவர் கண்டியில் நிகழ்த்திய "தீப சித்தி” என்பதாகும். இந்த அற்புதமான நிகழ்வை அறிஞர் அல்ஹாஜ் எஸ்.எம்.ஏ.ஹஸன் "அருள்வாக்கி அப்துல் காதர்' எனும் தமது நுாலில் பின்வருமாறு வர்ணித்துள்ளார்.
"அலங்கரிப்பட்ட தூய்மையான ஒரு இடத்தில் குத்து விளக்கு வைக்கப்பட்டது. விளக் கசில எண் ணெய் ஊற்றப் பட்டு, விளக் கைச் சுற் றரி மக்கள் நின்று கொண்டிருந்தனர். புலவர் பாட விளக்கும் எரிய வேண்டும். புலவரின் இம்மகத்துவத்தைக் காண ஈழத்திற் பல பாகங்களிலிருந்தும் ஏராளமான மக்கள் வந்து குழுமிவிட்டனர். குறிப்பிட்ட நேரம் வந்து, விளக்கு வைக்கப்ட்டிருந்த மேடைக்கு அப்துல் காதர் புலவர் வந்து, மேற்குத் திசையை நோக்கிய வண்ணம் தியான நிலையில் விற்றிருந்தார். பின்னர் விளக்கின் பக்கமாக திரும்பி
"மெஞ்ஞான நாயகா இரசூலே!
மெஞ்ஞான நாயகா இரசூலே!”
என்று பலமுறை உச்சரித்த வண்ணமிருந்த புலவர் திடீரென உரத்த குரலில் ‘எரிவாய் விரித்தெழுந்து எண்ணெய் மேல் தோய்ந்து கரிவாய் இருள் போக்கிக் காட்ட - அரியணையில் தூண்டா விளக்கே சுடர் விட்டு நீ என்முன் ஈண்டிங் கெழுந்து எரி”
என்று Lu (r L 6)FT 601 (T fi . பாடலின் ஈற்றடியிலிருக்கும் ‘எரி” என்ற சொல்லை அதிகாரத்தோடு உரத்துக் கூறவே முதற் திரி எரியத் தொடங்கியது. மீண்டும் எரி, எரி என்று கூறவே மற்றையத் திரி ஒவ்வொன்றாக எரிய ஆரம்பித்தன.
தான் கண்ணுற்ற இந்த அதிசயக் காட்சியை
“எல்லா அதிசயத்தும் ஈது மிகப் பெரிதாம் வல்லான் மெய்ஞ் ஞானியப்துல்காதிர் பல்லார் முன் பாட்டால் விளக்கெரித்துப் பாட்ட தனா லேயணைத்துக் காட்டி விட்ட இக்காட்சி காண்”
என பாட்டில் வடித்து, அருள்வாக்கி அவர்கள் நடத்திக் காட்டிய "தீபசித்திக்கு” சான்று பகர்ந்துள்ளார் யாழ்பாணத்தைச் சேர்ந்த பொன்னம்பலக் கவிராயர்.
தமிழுக்கும் இஸ்லாத்துக்கும் பெரும் தொண்டாற்றி பெருவாழ்வு வாழ்ந்த கண்டி மீரமக்காம் தர்கா வித்துவான் அருள்வாக்கி அப்துல் காதிர் புலவர் 1918ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23ம் திகதி காலமானார். அவர் மறைந்து விட்ட போதும் அவரது இலக் கரியப் U 685)L- Lü u485 6íi இன்றும் முஸ்லிம்களுக்கு பயன் அளிக்கின்றன.
ஊற்று 1 தளி 4 ஆகஸ்ட் செப்டம்பர் 2000

Page 22
(GANES R VIDEO
VIDEDCASTERECORDING HIGHQUALITY VIDEO CASSETELENDING
LUCKYLAND BISCUS MANUFACTURERS NANDARAMPOTHA, KUNDASALE.
TEL: 08 224217, 232574, FAX: 948-233740
40 மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா சிறப்பு மலர்
 
 
 
 
 
 
 
 
 

இருபதாம் நூற்றாண்டின் ஈழத்து
இதழியலும் இலக்கியமும்
இதழியல் என்பது 'அவசரக் கோலம் பூண்ட ஆழமற்ற எழுத்து' என்னும் கருத்தே பரவலாக இருந்த காலம் ஒன்றிருந்தது.
இலக்கியம் நிதானமான கொண்ட வாழ்வின் விமர்சனம்.
ஆழம்
இந்த இரண்டும் நேர்மாறானவைகளாகத் தெரிந்தாலும் ஒன்றில் லாமல் மற்றதில்லை என்னும் ஒரு அபூர்வப் பிணைப்பு கொண்டது.
செய்திகளைச் சுடச்சுடத் தருவதன் பாற்பட்டதே இதழியலின் அவசரம் Journalism is Literature in Hurry. Sig, 65. Gjógif என்னும் பதம் இலக்கியம் என்பதை விடவும் எழுத்து என்பதையே, எழுத்தில் உள்ளவை என்பதையே குறிக்கிறது.
இந்த இரண்டு துறைகளுக்குமான பிளவை இணைத்ததில் வெற்றி கண்ட சஞ்சிகைகளே இலக்கியச் சஞ்சிகைகள் என்று காலத்தால் அழியாமல் நிலைத்து நிற்கும் பெயர் கொண்டன.
ஈழத்தில், பிரித்தானியர் ஆட்சியும், மிஷனரிமாரின் வருகையும், அச்சு எந்திரத்தின் அறிமுகமும் பத்திரிகைகள் தோன்றுவதற்கான சூழலை ஏற்படுத்தின. கிறிஸ்தவத்தைப் பரப்புவதற்காகத் தோன்றிய உதயதாரகை, உதயாதித்தன் கத்தோலிக்கப் பாதுகாவலன் போன்றவைகளும் அலைகளுக்கு எதிர்க்குரல் கொடுத்த சைவ உதயபானு, சைவாபிமானி, இந்த சாதனம் முதலிய இதழ்களும் தோற்றம் கொணி டன. ᎧᏛᎠ ᏭᎦ 6h] 9) 5ui Li Tg) யாழ்ப்பாணத்திலும் மதுரையிலும் ஏக காலத் தில் வெளிவந்த ஏடு என்பது குறிப்பிடத்தக்கது.
மதம் பரப்புதல் மதத்தினைப் பாதுகாத்தல் போன்றவைகளின் தீவிரம்
குறைந்ததும் , சமூகப் பொருளாதார விருத்திக்கான ஏடுகள் தோற்றம் கொள்ளத் தொடங்குகின்றன.
தழிழகத்தின் மணிக்கொடியின் வரவு ஈழத்து எழுத்தாளர்களையும் பாதிக்கவே செய்திருக்கிறது.
ஆனந்த விகடனுக்கெழுதி ஆனந்தப் பட்டவர்களுடன் மணிக்கொடியில் பங்கேற்று மன நிறைவு கொண்ட நமது முன்னோடிகள் ஈழத்து இலக்கியத்தின் நெடும் பயணத்துக்குப் பாதை வெட்டியவர்கள்.
சென்ற நுாற்றாண்டில் தோற்றம் கொண்ட சஞ்சிகைகளே இந்த நுாற்றாண்டின் இலக்கியச் செழுமைக்கு வித்திட்டவைகளாகத் திகழ்கின்றன.
மறுமலர்ச்சியின் தோற்றத்துடன் இருபதாம் நூற்றாண்டின் ஈழத்து இதழியல் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியது. இந்த மண்ணும் அதன் மக்களும் இந்த நாட்டின் எழுத்துக்களில் பிரதிபலித்தாக வேண்டும் என்னும் கருத்து வலியுறுத்தப்பட்டது. அரசியலை இழுத்து இலக்கியத்துக்குள் போட மாட்டோம் என்று வெளிப்படையாகவே கூறி வந்த மறுமலர்ச்சிக் குழுவினர், பிந்திய ஐம் பதுகளில் எழுந்த முறி போக்கு இயக்கத்தினரின் பல்வேறு பலம் வாய்ந்த செயற்பாடுகள் மூலம் மூடப்பட்டனர். படைப்பில் கலைத்துவத் தகுதிப்பாட்டைக் காட்டிலும் அரசியல் தகுதிப் பாட்டுக் கே அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற கொள்கையை அடித்தளமாகக் கொண்டு இயங்கிய முற்போக்கு எழுத்தாளர் சங்கம் 'படைப்பில் அரசியல் வேண்டாம் கூறிய மறுமலர்ச்சிக் குழுவினரையும் அவர்தம் ஆதரவாளர்களையும் இலக்கியக்காரர்களாக ஏற்க மறுத்தனர்.
அரசியலுக்கே முக்கியத்துவம் என்னும் கருத்து படைப்புக்களைப் போலவே விமர்சனத்திலும் வெளிப்பட்டது. இலைகளின் ஆதரவிற்கும் அனுசரணைக் குமென் எணி ணற்ற இதழ்கள் தோன் றின. அத்தனையத்தனை இதழ்களும் இந்தக் கருத்தினையே வலுவடையச் செய்தன. இந்தக் கருத்து தவறாகப் பயன்படுத்தப்பட்டால் யதார்த்தத்தை நோக்கி மனித உணர்வுகளைப் பண்படுத்துதல் என்னும் கலை இலக்கியத்தின் அடிநாதமே அழிந்து போய்விடும் என்னும் உண்மை புறக்கணிக்கப்பட்டது.
இந்தப் புறக் கணிப் பினாலும்
ஊற்று 1 தளி 4 ஆகஸ்ட் செப்டம்பர் 2000
41

Page 23
முற்போக்கு அணியினரின் ஆக்கிரமிப்பின் ஆதிக்கத்தினாலும் ஆத்திரம் கொண்ட ஒரு சிலர் தங்கள் கருத்துக்களை முன் வைக்க வென்று சில ஏடுகளை வெளிக் கொணர்ந்தனர்.
அரசியல் பின் பலத் துடனும் ஸ்தாபன மயமாக்கப்பட்ட அமைப்பின் அதிகாரத்துடனும் செயற்பட்ட முற்போக்கு அணியினரை மிகவும் மூர்க்கமாக எதிர்க்கும் அந்தத் துணிச் சலின் முதற் குரலாக அலையைக் கொள்ளலாம். எழுபதுகளின் இந்த எதிர்ப்புக் குரலின் தொடர்ச்சியாக புதுசு, பூரணி, திசை என்றும், முற்போக்கு இலக்கியத்தின் எழுச்சிக்கும், வளர்ச்சிக்கும் ஆதரவாகவும் அனுசரணையாகவும் எதிர்ப்புக் குரல்களுக்குப் பதிலடி கொடுக்க வென்றும் மல்லிகை, புதுமை இலக்கியம், வசந்தம், தாயகம், நதி, சமர் என்று இதழ்கள் தோன்றி ஈழத்தின் இதழியல் வரலாற்றினை ஆழ அகலப்படுத்தின.
முற்போக்கு இலக்கிய ஏடாகவே ஆரம்பிக்கப்பட்டாலும் நடுநிலை நின்று இலக்கியவாதிகளையும் அரவணைத்து ஈழத்து இலக் கயம் , இலக் கயவாதிகளைக் கெளரவிக்கும் ஒரு ஏடாக, 35 வருடங்களாகத் தொடர்ந்து வெளிவரும் மல்லிகையின் வரலாறு பெருமைக்குரியது. முற்போக்கு எதிர்ப்போக்குச் சண்டைகளுக்குள் சிக்குப்படாத ஆனால் ஈழத்து சுடர், வயல், புதிய உலகம் போன்ற ஏராளமான ஏடுகளும் ஈழத்தில் தோற்றம் கொண்டன.
அரசியல்,சமூக, பொருளாதார ரீதியில் மிகவும் பின் தள்ளப்பட்ட மலையக சமூகத்தினரிடையே இருந்தும் காலத்துக்குக் காலம் தோன்றிய ஏடுகள் தங்களது தோற்றங்களுக்கான நோக்கங்களை நிலை நிறுத்தியே வந்துள்ளன.
கவிதைகளுக்கெனவும் தனியாகச் செயற்பட்ட சஞ்சிகைகள் இதழியல் வரலாற்றில் பதிவு செய்யப்பட வேண்டியவை.
இலைகள் தவிர்த்த ஈழகேசரி, வீரகேசரி, சுதந்திரன், சிந்தாமணி, தினகரன், தினக்குரல் போன்ற பெருஞ் சஞ்சிகைகளின் தோற்றமும் அவைகளின் இலக்கியப் பங்களிப்பும் கவனத்தில் கொள்ளப்பட வேணி டியவை. தமிழகத் துப் பெரும் சஞ்சிகைகளிலிருந்து இவைகளின் பணிகள் மிகவும் வித்தியாசமானவை.
எண்பதுகளின் முனைப்புப் பெற்ற இன ஒடுக் குமுறை அரச பயங்கரவாதம் , தமிழர்களுக்கெதிரான அடக்குமுறைகள் போன்றவற்றிற்கெதிராகக் குரல் கொடுக்க வென்றே தோன்றிய ஏடுகளில் குறிப்பிட்டுக் கூறப்பட வேண்டிய சரிநிகர், மூன்றாவது மனிதன் போன்றவற்றின் இலக்கியப் பங்களிப்புக்கள் போன்றவைகளை விரிவாக ஆராய்ந்து ஆவணப்படுத்தும் முயற்சி இவ்வாய்வுக் கட்டுரை மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
(தமிழகத்தில் நடைபெற்ற தமிழினி 2000 மாநாட்டில் வாசிக்கப்பட்ட கட்டுரையின் சுருக்கம்)
தெளிவத்தை ஜோசப்
வறுமைத் தீ பாதை ஓரத்தில் குடும்ப வாழ்க்கை அகதிகள் அரைகுறை உடை ஒரு கரத்தில் மதலை மறுகரத்தில் பிச்சை பால் சுரக்க தாய்க்கு உணவில்லை வாய்க்கு வெறும் நீர்
வெயில் நெருப்பில்
6}} வழிச் செல்வோர் கவனம் ஈர்க்க ஈனக்குரல் எழுப்புவர் இதயம் உள்ளோர் ஏதும் ஈந்திட்ட இதயம் கல்லானோர் சீ! எனச் சிறி விழுவர்
ஏனிந்த வறுமைத் தீ.? சமுதாயக் கண்கள் திறக்க மறுப்பதேன்? முதலாளி வர்க்கம் வறியோரை ஏறெடுத்துப் பார்க்க மறுப்பதேன்?
கவிஞர் எம்.வை.எம். மீஆத் தும்புளுவாவை
42 மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா சிறப்பு மலர்

போர்ச் சூழலால் தமிழில் புதிய இலக்கிய வடிவங்கள்
தமிழ் மொழியில் புதிய இலக்கிய வடிவங்களை உருவாக்கும் சாத்தியப்பாட்டை ஈழத்துப் போர்ச் சூழல் ஏற்படுத்தியுள்ளது என்றார் பேராசிரியர் கா.சிவத்தம்பி.
சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறை வியர்ழக்கிழமை நடத்திய "போரும் இலக்கியமும்” என்ற கலந்துரையாடலில் அவர் கூறியதாவது.
ஈழப் போர்ச் சூழல் காரணமாக உலகம் முழுவதும் தமிழர்கள் பரந்து வாழ்கின்றனர். பல்வேறு தனித்துவங்களோடு, பல்வகைப்பட்ட வாழ் நிலைகளில் இருந்து உள்வாங்கப்பட்ட அனுபவங்களை இப்போது நியாயப்பூர்வமாகப் பதிவு செய்து வருகின்றனர். இதில் ஈழப்போரால் ஏற்பட்ட அனுபவங்களே மிகுதியாக இடம் பெறுகின்றன.
போர்ச்சூழல் காரணமாக ஏற்படும் மனித இனி ன ல கள் குறித தவற்றை அக்கறையோடு ஆங்காங்கே பதிவு செய்து வருகின்றனர்.
தமிழின் அகற்சி என்பது போர்ச் சூழல் காரணமாகவே ஏற்பட்டுள்ளது. அது பலநாட்டு வாழ்வு அனுபவங்களை உள்வாங்கித் தமிழுக்குக் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் தமிழ் சர்வதேசத் தரத்தைத் தன்னளவில் பெற்றுள்ளது.
இப்போர் அனுபவங்கள் மனித நேயம் சார்ந்ததாக இருக்கும் பட் சதி தில அவ்விலக்கியம் தன் வரலாற்றுப் பாத்திரத்தைச் சரியாகவே ஆற்றியுள்ளது என்றார் சிவத்தம்பி.
தமிழ் இலக்கியத் துறைத் தலைவர் வீ. அரசு வரவேற்றார். கலந்துரையாடலில் பார்வதி கந்தசாமி (கனடா), சரவணன் (நோர்வே), பாரதிதாசன், நடராஜ சுசீந்திரன் (ஜெர்மனி), செல்வம் அருளானந்தம், சேரன் (கனடா), நட்சத்திர செவி விந்தியன் (அவுஸ்திரெலியா), வில்வரத்தினம், நந்தினி சேவியர் (யாழ்ப்பாணம்) பங்கேற்றனர்.
போரால் ஏற்படும் வினைவுகள்
மலையக இலக்கியத்தில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து அந்தனி ஜீவா, சாரல் நாடன் பேசினர்
கவிஞர்கள் இன்குலாப், அறிவுமதி எழுத்தாளர் பா.ஜெயபிப்ரகாசம், அ.மங்கை பங்கேற்றனர்.
(நன்றி- "தினமணி. 08:09,2000)
மழை மூட்டிய தழல்
கோடித்துளி விழுது குவித்தெறிந்து மாரி என்னும் ஆலமரம் நிற்கிறது.
ஆம்; மழையின் இழைகளினை காற்றுத் தறிநெய்து காய்ந்த நிலத்துக்குப் போர்க்கிறது குளிராடை! வானின் வெறிப்புசத்தல். அசைபிரிக்க முடியா இடியாய்த் தெறிக்கிறது. மேகத்தைக் கிழிக்கும் மின்னல் ஒளிவாள்கள்; வானத்தின் தொட்டிலென வர்ணவில்;
குளிர் கலந்து கூதல் விசாரிக்கக் குறண்டும் செடிகொடிகள் ஈரஞ் சிதம்ப எடுத்த அடி புதைந்துறைய நீர்ச்சிரங்குக் கால்கள்! வெள்ளம் நெகிழ்ந்து போன வெண்மணலில் ஓர் விறைப்பு விதைகளிலே புத்துயிர்ப்பு! பொன் மினுங்கப் புற்களிலே புன்னகைப்பூ! பருவத்தில். M கண்ணடிக்கும் காலம் கார்க்காலம்!
கவிஞருக்கும் காதலர்க்கும் பச்சைக் கொடிகாட்டும் நீர்க்காலம் தனித்திருக்கும். என்னுள் தகிக்கும் இளநெருப்பு
எனையெரிக்க நெய்போல் விழுகுதென்மேல் நீர்க்கோலம்!
த.ஜெயசீலன்-நல்லூர்
ஊற்று 1 துளி 4 ஆகஸ்ட் செப்டம்பர் 2000
43

Page 24
கடந்த நூற்றாண்டில் ஈழத்தில்
தமிழ்த் தேசிய இலக்கியம்
*ழத்தில் தமிழ்த் தேசியச் சிந்தனையின் மூலவராக ஆறுமுக நாவலரை சிலர் இனம் காட்டுவர். ஆனால் நாவலர் யாழ்ப்பாணத்தின் உயர் சைவ வேளாளரின் நலன்களை மட்டுமே பிரதிபலித்தவர். சைவ மீளெழுச்சிதான் இவரது முழுநோக்கம். சமஸ்கிருதமய மாக்கலின் யாழ்ப்பாண வடிவமே நாவலர்.
நாவலரின் பாரம்பரியம் என அடையாளம் காணப்பட்டாலும் சி.வை.தாமோதரம்பிள்ளை சைவத்திற்கு அப்பால் சங்கத் தமிழ் இலக்கியங்களைத் தேடிப் பதிப்பிக்க முன் நின்றவர். தமிழ் மொழியை தமிழ் நிலைப்பட்ட பண்பாட்டின் உருவகமாக்கி தமிழ்த்தாய் என்ற படிமத்தை முன்வைத்தவர். இது சமய வேறுபாடு கடந்த தமிழர் தேசியத்திற்கான ஓர் பொது இணைப்புச் சின்னமாயிற்று.
கிழக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசியத்தின் முன்னோடிகளாக அறிஞர்கள் திருகோணமலை தி.த.கனகசுந்தரம்பிள்ளை, தி.த.சரவணமுத்துப்பிள்ளை இருவரையும் மட்டக்களப்பு விபுலானந்த அடிகளையும் குறிப்பிட வேண்டும். தென்னிலங்கையில் தமிழர் வரலாற்றாய்விலும், தமிழ் புலவர் சரித்திரத்தை są, bial605 565 (TAMIL PLURACH) எழுதுவதிலும் ஈடுபட்ட சைமன் காசிச்செட்டியும், நீர்க்கொழும்பில் 'திராவிட மித்திரன்' என்னும் பத்திரிக்கையில் சமயம், சாதி பேதம் கடந்த தமிழ்த் தேசியக் கருத்தியலை முற்போக்கான
முறையில் முனி வைத் த ஜே.ஆர். மிரண்டோவையும் குறிப்பிடலாம். A.
பொன்னம்பலம் அருணாச்சலம்
தமிழ்த் தேசிய அரசியலின் முன்னோடியாவார். தமிழர் மகாஜனசபையை நிறுவியும் மலையகத் தொழிற்சங்கத்தை நிறுவியும் முற்போக்கான பாத்திரத்தை வகித்த, இவரது மரணத்தின் uரின் இடையfடறிறுத் தொடர்வதாய் இருக்கவில்லை. யாழ்ப்பாண வாலிபர் காங்கிரசோ, தமிழ்க் காங்கிரசோ, தமிழ் மார்க் சியர்களும் தமிழ் தி தேசிய அரசியலிற்கும் சேர்த்துத் தலைமை வழங்கத்
தவறிவிட்டனர்.
1948ல் இலங்கை சுதந்திரம் எய்திய கையோடு இந்திய வம்சாவழித் தமிழரின் வாக்குரிமை, குடியுரிமைகளைப் பறித்ததோடு வடக்கு-கிழக்கு வாழ் தமிழரின் பாரம்பரியப் பிரதேசத்தில் சிங்களக் குடியேற்றத்தையும் ஆரம்பித்து வைத்தது. இதற்கெதிராக ஓங்கி ஒலித்த குரல்கள் இலக்கியங்களிலும் எதிரொலித் தன. 5 (3L 60o Fu uuri, மீனாட்சியம்மையைத் தொடர்ந்து சி.வி. வேலுப் பிள்ளை, சக்தி அ. பாலையா ஆகியோரின் படைப்புகள் அ.செ.மு.வின் காளிமுத்துவின் பிரஜா உரிமை ஆகியன குறிப்பித்தக்கன.
19566üb öflifb6Tib up 06ub ğFİLLib நிறைவேற்றப்பட்டது. இதன் தாக்கம் ஆங்கிலமே கற்றறிந்த தமிழ்ப் புத்திஜீவிகளையும் தமிழின் பாலும், தமிழ் இலக்கியத்தின் பாலும் தருப் பயிற் று. இவ் ஈர்ப் பிற்குள் ளான ஏ.ஜே.கனகரட்னா தமது முதல் நூலான “மத்து” வை சிங்களம் மட்டும் சட்டத்திற்குச் சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். ஏ.ஜே. போன்றோர் ஓர் அறிவு நிலைப்பட்ட பார்வையை வரித்துநிற்க, க.சச்சிதானந்தன், காசி ஆனந்தன் போன்றோர் உணர்வு மயப்பட்ட பார்வையை வகிக்கின்றனர். இவர்களது கவிதைப் படைப்புகள் தமிழ்த் தேசியத்தின் உணர் நிலைப்பருவத்தின் தேவையைப் பிரதி பலித்ததை வெறுமனே நிராகரிப்பது சரியல்ல.
“சுதந்திரன்’ பத்திரிகை தமிழ்த் தேசியம் சார்ந்த படைப்புகளுக்குக் களம் அமைத்தது. 1956இல் இதில் வெளிவந்த
மு.த.வின் தியாகம் சிறுகதையில் வரும்
இளைஞனின் பாத்திரம் தமிழ்ப் பிரச்சினைக்காப் போராடி இறந்து போவதாக காட்டப்படுகிறது. 1960இல் அவரே எழுதிய ‘கலை செல்விக்கான” போட்டியில் முதலிடம் பெற்ற "ஒரு தனி வீடு” நாவல் தமிழர் பிரச்சினைக்கான தீர்வாக தனிநாட்டு கோரிக்கையையும் அதற்கான வழிமுறையாக ஆயுதப் போராட்டத்தையும் முன்வைக்கிறது. ஒரு நாலாணி டு கால இடைவெளிக் குள் பிரச்சினையின் தீவிரப் பார்வையுடைய கலைஞன் தமிழ்த் தேசியத்தின் சிந்தனையில்
44 மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா சிறப்பு மலர்
 
 
 
 
 

எய்தும் திடீர் பாய்ச்சலை இது காட்டி நிற்கிறது. நாடகத் துறையில் இத்தகைய ஒரு தீவிர அரசியற் பார்வையைச் சங்கிலித் துரோகிகள் நாடகங்கள் வாயரிலாக பேராசிரியர் கணபதிப்பிள்ளை முன்வைத்தார்.
1970களில் யாழ்பாணத்தில் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டைக் குழப்பியடிக்க ஐக்கிய முன்னணி அரசு முயன்ற போது தமிழ் முற்போக்கர்கள் அதற்கு துணை நின்றனர். இறுதிநாள் நிகழ்வில் ஒன்பது தமிழர்கள், படையினரால் கொல்லப்பட்டனர். அதுவுமன்றி அவர்கள் நினைவாக நிறுவப்பட்ட கற்தூண்கள் அடிக்கடி சிதைக்கப்பட்டதன் விளைவாக மக்கள் நடுவில் கொதிநிலை காணப்பட்ட போதும் முற்போக்கர்கள் உள்ளிட்ட “சீரியஸ்” படைப் பாளிகள் மெளனம் சாதித்தனர். ஆயினும் தமிழ் மக்களின் கொதிநிலையை 'கல்லும் அலைகளும்’ என யேசுராசா கவிதையில் வெளிப்படுத்தியது காலப் பெறுமானமுடையது.
1975இன் பின்னர் தமிழ்த் தேசியச் சிந்தனைப் போக்கிலும் இலக்கியப் போக்கிலும் பெறும்மாற்றம் நிகழ்கிறது இயக்கங்களின் தோற்றம், ஆயுதப் போராட்டம், 1977இல் பேரினவாத அரச பயங்கரவாதம் , தென்னிலங்கையில் இருந்து தமிழ் மக்கள் அகதிகளாகிக் கப்பலில் யாழ்பாணம் செல்லுதல், கப்பலின் பெயரான "லங்கா ராணி” யின் பெயரிலேயே வெளிவந்த அருளரின் நாவல் வடிவ நேர்த்தியுடன் அமையாவிடினும் ஓர் ஆவணப் பாங்கில் பின்னால் வரவிருக்கும் கோவிந்தனின் "புதியதோர் உலகம்” போன்ற நாவல்களுக்கு ஓர் முன்னோடியாக அமைந்தது. இக்காலத்தைய படைப்புகள் யதார்த்தத்தில் பெரிதும் காலூன்றி நின்றமையோடு இரத்தமும் சதையுமான போராட்டங்களில் மையப்பட்டு நின்றமையால் உண்மைத்தன்மை பேணும் ஆவணப்படுத்தல்களாகவும் அமைவது தவிர்க்க முடியாததாயிற்று. 1981இல் யாழ்பாணத்தில் நிகழ்ந்த பண்பாட்டுப் படுகொலைகள் குறித்த கலாநேர்த்தியான ஆவணப் படுத்தலாக நு.. மானின் ‘புத்தரின் படுகொலை' சி.சிவசேகரத்தின் '52" (1985 வெலிக்கடை படுகொலை) இத்தகு படைப்புகளிற் கு உதாரணங்கள்.
1960களில் இன உரிமை, உணர்வு சார்ந்த பல் கவிஞர்களின் தொகுப்பான "தமிழ் ஊற்று 1 துளி 4 ஆகஸ்ட் செப்டம்பர் 2000
எங்கள் ஆயுதம்” 1985இல் “மரணத்துக்குள் வாழ்வோம்' 1995இல் “காலம் எழுதிய வரிகள்” என வெளிவந்தவை யாவும் கலாரீதியான ஆவணமுயற்சிகளாகவே கொள்ளப் பட வேண்டும். சிறுகதைகளின் இத்தகு முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. ஆனால் தமிழ்த் தேசியச் சிந்தனையின் தொடக்கத்திலிருந்து வெளிவந்த முக்கியமான சிறுகதைகள் வாரந்தோறும் தொடராக 'திசை" பத்திரிகையில் வெளியிடப்பட்டதை குறிப்பிட வேண்டும்.
1990 களின் f6i இயக் க முரண்பாடுகள், உள்ளியக்க முரண்பாடுகள், இரண்டாம் ஈழ யுத்தம், இந்தியப் படையினர் காலம் என்பவற்றின் நிகழ்வுகள் துணிச்சலுடன் பதிவு செய்யப்பட்டன. அலை, திசை இக் காலங்களில் இவற்றைத் துணிவுடன் வெளியரிட்டன. பரிணி னால் ஏறி பட்ட புலப் பெயர்வுகளினால் படைப் பாளிகள் வெளியேற்றம், பெண் படைப்பாளிகளின் அகால மரணங்கள் இவற்றினால் ஒரு வெற்றிடம் ஏற்பட்டது. ஆயினும் கருத்துச் சுதந்திரத்தைப் பேணும் பன்மைக் குரலாக “சரிநிகர்’ வெளிவந்ததனூடாக அவ்வெற்றிடம் ஓரளவு நிரப்பட்டது. தமிழ்த் தேசியச் சிந்தனை குறித்த காத் திரமாகத் தொடர் கட்டுரைகள் , விவாதங்களிற்கு சரிநிகர் நல்லதொரு களமாயிற்று. அதனூடாக வெளிவந்த இளம் படைப்பாளிகள் பலராவர்.
புலம் பெயர்ந்த படைப்பாளிகளில் அநேகர் வெறுப்பின் திரட்சியும் புலப்பெயர் வாழ்வின் அவலமும் தாக்க தமிழ்த் தேசிய வாதத்தின் பால் தீண் டாத்தன்மையுடைய படைப்புகளையே வெளியிட்டனர். சிலர் இதற்கு விதிவிலக்காகவும் இருந்தனர். எவ்வாறோ வேற்றுலக வாழ்வனுபவங்கள் தமிழுக்கு வந்து சேர்ந்தன. தற்போது ஒரு மீள்பார்வையுடன் தமிழ்த் தேசியச் சிந்தனையை அரவணைக்கும் போக்கும் புலம்பெயர் படைப்பாளிகள் மத்தியில் எழுதுவதை இனம் காணலாம்.
கடந்த நூற்றாண்டினைச் சரிபாதி இரு கூறுகளாகப் பகுதி து ஆராய் நீ தால் (சுதந்திரத்திற்கு முன் பின்) பிற்கூறிலேயே தமிழ்த் தேசியச் சிந்தனை வலுப்பெற்றதுடன் அது சார்ந்த படைப்பிலக்கியங்களும் - முக்கியமாகக் கவிதைகள் தோன்றின. இன்றைய நிலையில் நமது வாழ்நிலை மக்கள்
45

Page 25
துண்டுபட்ட நிலையில் சிதறி வாழ்வதனால் எமது பணி பாடு கலை இலக் கிய வெளிப்பாடுகள் குறித்த கருத்தாடல், ஒன்று கூடல், முரண்படுதல் ஊடாக வளர்ச்சியுறு தலுக்கான வாய்ப்புகள் அடைப்பட்டுள்ளன. எனினும் இதையும் தாண்டி எழுவோம் எனும் நம்பிக்கை எமக்குப் பாலமாய் அமைவதாக உள்ளது.
(தமிழகத்தில் நடைபெற்ற இனி 2000 மாநாட்டில் வாசிக்கப்பட்ட கட்டுரையின் சுருக்கம்)
இங்கே ஒரு நிமிடம்!
།།《
# உங்களின் தரமான ஆக்கங்களுக்காகக் காத்தி
ருக்கின்றது ப்ரவாகம். # இதழின் மூன்று பக்கங்களுக்கு மேற்படாத
வாறு ஆக்கங்களை எழுதுங்கள். * கவிதைகள் 40 வரிகளுக்குள் அமைவது
நன்று. * எழுதுபவரின் முழுப்பெயர் விலாச்ம் வயது
என்பன கட்டாயமாகக் குறிப்பிடப்படல்
வேண்டும்.
(புதிய இளம் எழுத்தாளர்களை இனம்கண்டு
அவர்களுக்கு சந்தர்ப்பமும் ஊக்கமும்,
அளிபபதற்காகவே அவர்களது வயது விய
ரங்கள் கேட்கப்பட்டுள்ளன.ஆர்)
# ஆக்கங்களுக்கு படைப்பாளிகளே பொறுப்பு.
ஆக்கங்களைத்திருத்தவும் மாற்றங்கள் செய யவும் ஆசிரியர் குழுவிற்கு முழு உரிமை யும் உண்டு.
ப்ரவாகம் - - - - சுதந்திர கலை இலக்கியப் பேரவை இல.09. மாத்தளை வீதி, உக்குவளை (21300)
(25ம் பக்கத் தொடர்ச்சி) அலைகளும் வற்றுப். குறிப்பிடுகின்றோம். இன்று கடலலைச் சக்தியிலிருந்து மின்சக்தி உற்பத்தியாக்குவது போல் வற்றுப் பெருக்கலைச் சக்தியில் இருந்து பெருமளவு மின் சக்தி உற்பத்தி. ஆக்கப் படுகின்றது. (அலைகளின் வேகத்தில் சக்கரங்களை சுலரச் செய்து அவற்றை டைனமோக்களுடன் இணைத்து மின்னுற்பத்தி மேற்கொள்ளப்படும்.)
அலைகளின் இயக்கம் மேற்பரப்பபை கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி தொடர்ந்து இழுப்பதால் பூமியின் சுழற்சியை தடை செய்யும் (Brake) சாதனமாக இயங்குகின்றது. இதனால் பூமியின் சுழற்சி வேகம் மெதுவாக குறைந்து கொண்டே வருகிறது. ஆனால் கவலை வேண்டாம். ஒரு நுாற்றாண்டுக் காலத்தில் வேகக் குறைவு என்பது ஒரு வினாடிக்கும் (Second) குறைவானதே.
கோகிலா ஜெயராஜ்
பெண்களின் இதயம் ஆண்கள் செய்யும் குற்றங்களை மண் ணிக்கும் நீதிபதி ஆணி களின் இதயம் பெண்களின் குற்றங்களை அலசும் எதிர்த்தரப்பு வக்கீல
நட்புக் கொள்ளும் விஷயதி தில் அவசரப்படாதீர்கள் நிதானமாக இருங்கள் நட்புக் கொண்ட பின்பு அந்த நட்பு நிலைத்து நிற்க வழி தேடுங்கள். நீ பணத்திற்காக அன்பு வைக்காதே அது கண்ணாடி போன்று உடைந்து விடும். நீ அழகுக்கு அன்பு வைக்காதே அது மலர் போன்று வாடி விடும். நீ அன்புக்காக அன்பு வை அது காலத்தால் அழியாது நிலைத்து நிற்கும்.
உனது பாதையும் வழுக்கல் நிறைந்ததுதான் எனவே கீழே விழுந்தவனைப் பார்த்து சிரிக்காதே!
பாவத்திற்கும் பல கருவிகள் உண்டு ஆனால் அவற்றிற்கெல்லாம் மிகப் பொருத்தமான கை பிடி பொய்,
-எம்.எம்.அன்ஸார்- அனுராதபுரம
மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா சிறப்பு மலர்
 
 
 
 
 

e •
47
ஊற்று 1 துளி 4 ஆகஸ்ட் செப்டம்பர் 2000

Page 26
எண்ணில்லா இலக்கியவாதிகளையும், கலைஞர்களையும் வளர்த்த பெருமை பத்திரிகை, சஞ்சிகைகளுக்குண்டு என்பதை எவரும் மறுப்பதற்கில்லை இவை வரலாறு உணர்த்தும் உண்மையும் கூட.
இதில் சஞ்சிகைகள் குறிப்பிட்ட சிலவற்றைத் தவிர மற்றயவைகள் குறுகிய காலத்தில் தன் சுவட்டை அழித்து, அழிந்து விடுகின்றன, ஆனால் பத்திரிகைகள், தினசரி, வாராந்தம் என சிரஞ்சீவி வரம்பெற்று நீடுழி வாழ்கின்றவை.
பத்திரிகைகள்,
புதிய எழுத்தாளர்களை ஊக்குவிக்கின்றதா? என நோக்கும் போது ஒரு வெற்றிடம் நிரப்பப்படாமலே உள்ளதை
எவரும் அறிவர். புகழ்பெற்ற, பிரபலமான கலைஞர்களின் ஆக்கங்களுக்கே முன்னுரிமை கொடுக் கசின்றன. வளரும் ஒரு சில கலைஞர்களை தவிர மற்றயவர்கள் பாராமுகமாகவே கணிப்பிடப்படுகின்றனர். ஏன் இந்த திரை?
எதிர்காலத்தில் இலங்கை இலக்கியத்துறையில் ஒரு பாரிய இடைவெளி ஏற்படும் , ஏற்படவுள்ளமை எவராலும் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கும். பத்திரிகைத்துறையில் தினகரனைத் தவிர மற்றயவைகள் வளரும் கலைஞர்களுக்கு என்ன பங்களிப் பு செய்துள்ளன? தினகரனின் சனிக்கிழமை தினசரியில் "புதுப்புனல்’ என்ற பகுதியின் மூலம் ஜனாப்.எம்.எச்.எம்.ஷம்ஸ் அவர்கள் பல இளம் படைப்பாளிகளை அறிமுகம் செய்து அவர்களை மிளிரவும் வைத்துள்ளார். இதற்காக இளைய படைப் பாளிகள்
öllö
தினகரனுக்கும் ஜனாப்.
அவர்களுக் கும் கடமைப்பட்டவர்களாவர்.
எம்.எச்.எம்.ஷம்ஸ் நன்றி 5ກ D
ஆனால் இதேபோல் ஒரு பகுதியை மற்றய பத்திரிகை ஆசிரியர்களும் தொடங்கி பல இளைய படைப் பாளிகளின் தரமான ஆக்கங்களுக்கு களம் அமைத்துக்கொடுத்து, எதிர்கால இலக்கிய உலகிற்கு சிறந்த இலக்கிய வாதிகளையும், கலைஞர்களையும் உருவாக்கினால் என்ன? அல்லது முதிய கலைஞர்களே போதுமென்று நினைக் கிறார்களோ!
இன்றய பழம் பெரும் எழுத்தாளர்கள் இன்னும் எத்தனை வருடங்களுக்கு தாக்கு பிடிப்பார்கள். முதுபெரும் எழுத்தாளர்கள் இளையவர்களுக்கு வழி விட்டு அவர்களை உற்சாகப்படுத்தி ஊக்குவிக்க வேண்டும். அதேபோல் பத்திரிகை ஆசிரியர்களும் புெயரையும், தனக் குத் தெரிந்தவர், புகழ்பெற்ற எழுத்தாளர் என்று பார்ப்பதை தவிர்த்து தரமான ஆக்கங்களுக்கு களம் அமைத்துக் கொடுத்து எதிர்காலத்திற்கு ஆக்கபூர்வமான கலைஞர்களை உருவாக்க வேண்டுமென்று பணிவுடன் வேண்டுகிறேன்.
ரோஜா அழகானவைதானி , பிரசித்த மானவைதான் அதற்காக மொட்டுக்களை கிள்ளியெறிய நினைப்பதேன். இன்றைய மொட்டு நாளைய இலக்கிய வானில் பிரகாசிக்கும் ரோஜா என்பதை மறக்காதீர்கள். பத்திரிகை ஆசிரியர்களே!
தறமையான இளம் கலைஞர்களை புறக்கணித்து விடாதீர்கள். அவர்களின் முயற்சியை, இலக்கிய ஆர்வத்தைக் கண்டு அவர்களை உற்சாகப்படுத்தி அவர்களின் இலக் கரிய வாழ்வுக்கு செப் பனிடும் ஏணிப்படிகளாக உங்களை உருவாக்குங்கள். நிச்சயம் ஆயிரமாயிரம் இதயங்கள் உங்களை துதிபாடுவதோடு இலக்கிய உலகில் நீங்கள் ஒரு கலங்கரை விளக்கமாக என்றும் பிரகாசிப்பீர்கள்.
48 மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா சிறப்பு மலர்
 
 
 

1) கம்பளி இருந்தும் சளியுடன் தும்மும் செம்மறியாடு, 7)
பசுவை விற்றாயிற்று 2) (b. சுரந்துகொண்டேயிருக்கிறது பிறகு வா பட்டாம்பூச்சிே கண்ணிர். கால் பட்டழிகிறதே பூவிதழ்ப் பனி
3)
வராதா மழை? கப்பல்களுடன் கத்திருக்கும்
குழந்தை.
6) 4) தொடர்ந்த நடை நிழல் விழாமல் கவனிக்கிறேன் நத்தையின் காலடியில் தெரு விளக்கில் மலை உச்சி!
படிக்கும் சிறுவன்.
5) ஆவி பறந்து போகிறது முடங்கிக் கிடக்கிறது
கோப்பைக்குள் தேநீர். Y
தமிழகத்தில் ஐக்கூ கவிதையின் முன்னோடியும். ஒவியருமான அமுதபாரதி எழுதி அச்சில் வெளி வரவுள்ள "ஐக்கூ விதைகள்.” நூலின் சில கவிதைகள
ஊற்று 1 துளி 4 ஆகஸ்ட் செப்டம்பர் 2000 49

Page 27
ஒருவரையொருவர் முணர்டி யடித்துக் கொணர்டு அவர் ராவும். ஹஸ்னாவும் பஸ்ஸினுள் ஏறினார்கள். கால் வைத்து நிற்கக் கூட முடியாமல் பஸ் சனத்தால் நிரம்பியிருந்தது.
ஏதோ ஒரு உணர்வில சட்டெனத் திரும்பிய அவ்ரா, ஹஸ்னாவை ஒருவனி விழுங்கிவிடுவதைப் போல் பாா த து க கொண டி ரு ப ப ைத அவதானித்தாள்.
முக்காடு போட்டு மூடவேணர் டிய முகடுகள் மூடப்படாமலிருக்க ஹஷ னாவோ எதையும் உணராமல் இருப்பதைப் போல் இருப்பதைக் கண்ட அவ்ராவுக்கு கோபம் தாங்க முடியவில்லை. "ஹஸப்னா தாவணியை ஒழுங்காப் போடுடி எனக் கோபமாய் அவ்ரா கூறினாள். "ஏன் ஒழுங்காத்தானே இருக்குது என எதையும் பொருட்படுத்தாமல் திரும்பிக் கொணர்டாள். "ச்சீ என்ன பொணர்ணு இவ. முஸ்லிமா யிருந்தும் அதற்குரிய லட்சணங்கள் இல்லாமல்" என தனக்குத்தானே அவிரா முணுமுணுத்துக் கொண்டாள். "என்ன முணுமுணுப்பு இது ஹஸ்னா "ஒண்ணுமில்லை" எனத் திரும்பிய அவ்ரா
இனினும் அவனது கணர்கள் ஹஸி னாவையே மொய்த்துக் கொணடிருப்பதைக் கணி டாளர் .
ஆனாலும் ஹஸ்னாவுக்கு இவள் எதைச் சொனினாலும் ஏற்கும் மனம் இல்லையென்பதால் மெளனமானாள்.
கணிடக்ரரின் கத்தல்கள் காற்றில் கலக்க
டிரைவர் பஸ்ஸை உயிர்ப்பித்தார்.
அவர் ராவும் , ஹளப் னாவும் உயர்தரம் வணிகப்பிரிவில் கல்வி பயின்று கொணடிருக்கும் மாணவரிகள் . நணர்பிகளான இருவரும் அழகிலோ, அறிவிலோ, அந்தஸ்த்திலோ ஒருவருக்கொருவர் சளைத்தவர்களல்ல. ஆனாலும் இருவரும் வேறுபட்ட
கொள்கைவாதிகள்.
ஹஸ்னா தன் அழகு வெளிப்படும் விதமாய் ஆடைகள் அணிவாள். தலைக்குப் பாதி மார்புக்குப் பாதியாய் தாவணியைச் சுற்றிக் கொள்வாள். ஆனாலும் அவ்ரா அடக்கமே பெண மைக்கு அழகென மேகத்தினுள் மறைந்து கொள்ளும் நிலவாய் தனி அழகையெல்லாம் பர்தாவுக்குள் மறைத்து சலனமில்லா நீரோடை போல் வெளியே செல்வாள்.
"இன்னைக்கென்ன இவ்வளவு பெரிய மழை இன்னும் விடுறாப்பிலே இல்லையே” எனக் கூறியவாறே அவிராவின் தாய் சோபாவில் வந்தமர்ந்தாள்.
"காலம் மாறிப் போச் சு. மழைபெய்ய வேண்டிய காலத்தில் மழை இல்லை. வெயில் அடிக்க வேண்டிய
காலத்துல இப்படிக் கொட்டுதே. எல்லாம்
அல்லாஹ்ட குதரத்து"
எனற வளி வந்தததைக் கூட உணராது சிந்தனை யில்
மகள் தான
50 மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா சிறப்பு மலர்
 
 

இருப்பதைக் கண்டு "அவ்ரா. அவ்ரா." எனச் சற்று உரத்த குரலில் கூறினாள். "எனின உம்மா" எனத் தூக்கம் கலைந்தவளைப் போல் திடுக்கிட்டுக் கேட்டாள். "இந்தச் சூழலையே மறந்து அப்படி என்ன யோசளை." என்றாள். "உம்மா, பெண்களை இந்தச் சமூகம் ஏன் வேற கணிணோட்டத்தில் பார்க்குது'
எனச் சோகமாய் வினவினாள். "ஏன் இப்படிக் கேக்குற" என மகளின் நிலை அறிந்து தாய் கேட்டாள். "இல்ல இன்னைக்கு டியூசன் விட்டு வரும் போது சிராஜ் மாமா கணிடு எங்கே போனேன்னு கேட்டார். நான் சொன்னதும் குமருப் பிள்ளைங்க இப்படிச் சீரழிந்து படிக் கதி தேவையிலலை. நான வாப்பாவோடை கதைச்சுக் கொள்கிறேன் எனச் சொன்னார்." எனக் கூறிய அவிரா சாரளத்தையே வெறித்தாள். "அத நினைச் சா இவி வளவு பெரிய யோசனை" எனச் சிரித்துக் கொணர்ட அவ்ராவின் தாய் கேட்டாள். "இல்லம்மா இந்த மாதிரி டியூசன் போய் சில பேர் சீரழிந்து போறதால் எல்லாரையும் அப்படியே எடைபோ டக்கூடாது. நாம ஒழுக்கமா போனால் தேவையில்லாத பிரச்சனைக்கு முகம் தேவையில்லை" என நிதானமாகக் கூறி முடித்தாள். "நாங்க உன்னை நம்புறோம். அதனால இந்த மாதிரி விஷயத்துக்கெல்லாம் மனதைப்போட்டுக் குழப்பிக் கொள்ளாதே"
கொடுக் கதி
எனக் கூறி மகளின் தலையை அன்புக் கரங்களால் தடவினாள்.
வகுப்பறையினுள் நுழையும் போதே ஹஸ்னாவின் உரத்த சிரிப்பொலி கேட்டது. அனைவருக்கும் ஸலாம் சொல்லிக்
கொண்டே அவ்ரா உள்ளே நுழைந்தாள். ஸலாத்துக்குக் கூட பதில் சொல்லாது ஹளப் னா பேசிக் கொணர்டிருந்தாள். பெரியதொரு மாநாட்டின் தலைவியைப் போல் தோழிகள் சூழ்ந்திருக்க பஸ்ஸில் நடந்த அசிங்கங்களை எல்லாம் அழகென பெருமையால் கூறிக்கொணர்டிருந்தாள். திடீரென ஒருத்தி,
புதுசா ஒணர்ணும் அகப்படலையா" என்றாள். "அதுல மட்டும் குறைவில்லை. இப்ப ஒரு சிங் களனவனர்" எனக் கர்வமாய் புன்னகைத்தாள் நேற்று பஸ்ஸில் நடந்த சம்பவத்தை நினைத்து அவ்ராவின் உடல் சிலிர்த்த்தது.
ஹஸி னா அவனுடன என்ன நளினமாய் நின்று உதடு பிதுக்கி கணிணால பேசி எப்படியெலலாம் பதிலளித்தாள். விருப்பமில்லை என ஒரே வார்த்தையில் முகம் திருப்பிக் கொள்ளாமல் மேலும் அவனுக்கு ஆசையூட்டும் விதத்தில் பேசியதை நினைக்கும் போது அவ்ராவின் கொதித்தது ஹஸனா நணர்பிகளுடன் கதைப்பதைக் கேட்டுச் சகிக்கமுடியாமல் அவ்ரா வகுப்பை விட்டு வெளியேறினாள்.
உள்ளம்
அவிரா இடைக்கிடை டியூசன் வகுப்புக்கு கட் பணிணி காணாமல் அதே பாடசாலைக்கும் இடைக்கிடை வந்தாள். ஆனால் இந்தக்கிழமை போல் தொடர்ந்து மூன்றுநாள் வராமல் இருந்ததில்லை ஹஸ்னா.
போவாள். போல தான
அவ்ராவுக்கு ஒரே யோசனை. மூன்று நாட்களாய் ஹஸனா ஏன பாடசாலை வரவில்லை? வராவிட்டால் நிச்சயம் காரணம் சொல்லியனுப்புவாள்.
ஊற்று 1 தளி 4 ஆகஸ்ட் செப்டம்பர் 2000
51

Page 28
என்ன தான் நாகரிகமாய் நடந்தாலும் நல்ல அவளுக்கு சில விஷயங்களை நல்ல முறையில் எடுத்துக் கூறி திருத்த வேண்டும் எனப் பலவிதமாய் யோசித்துக் கொணர்டி ருந்தவளை முற்றத்தில் கேட்ட குரல் திசைதிருப்பியது.
உம்மாவிடம் அடுத்த வீட்டு தாத்தா கூறுவதைக் கேட்டவள் அப்படியே
பெண ஹஸனா
நிலைகுலைந்து போனாள்.
விஷயத்தைச் சொல்ல அவ்ராவின் தோள் அவளைத் தேட அவள் அங்கே இல்லை.
ஹஸ்னாவைப் பார்த்த அவிரா அப்படியே உறைந்து போனாள். "இவள் என் நண்பி ஹஸ்னாவா? இல்லை - - - இப்படி . இப்படி அவள் ஒரு காலமுமே இருந்ததில்லையே
என தனக்குத்தானே புலம்பினாள். ஹஸ்னா . அங்கே எண்னம்மா நடந்தது" என அன்பாய் கேட்டாள்.
"ஏனி மெளனமாயிருக்கு பேசும்மா" என்றாள். "எதைச் சொல்ல? என்னால நானே அழிந்து போனதையா? அல்லது என்னை நானே இழந்ததையா? எல்லாவற்றுக்கும் அவன் காரண மில்லை. நானே தான் காரணம். பூவில் பருகவேணர்டிய தேனெல்லாம் குடித்துவிட்டு என னை இப்படி விட்டுவிட்டுப் போறானேன்னு நாணி கவலைப்படக்கூடாது" என நிறுத்தி நகத்தினுள் இல்லாத அழுக்கை தேடி எடுத்தாள்.
"நீயும் தான அழகானவ? எண்கூடத்தான் நீயும் வந்தாய். ஆனால்
எனக்கு மட்டும் இப்படி வரக்காரணம் நானேதான். எண்னோட நாகரிகம்தான் பாதுகாக்க வேண்டியதைப் பார் வைக்கு
விட்டேன் பாழாகிப்போச்சு. எண் வாழக்கை அழிஞ்சிரிச்சி ஆனால் என்ன மாதிரிப் பெணிகள் அழிந்து பாதுகாப்பதுதான் எண் வாழ்க்கையின் இலட்சியம். அவ்ரா. அவ்ரா. ஏதோ ஒரு விதத்தில் முயற்சிப்பேன். காலமெல்லாம் முயற்சிப் பேணி .
போகம
காலமெலலாம் முயற்சிப்பேன் இன்ஷா அல்லாஹ்." எனத் தெளிந்த மனதுடன் உறுதியாய்க் கூறினாள். ஹளப்னா
அஸ்தமனத்தினால் இனினு மொரு உதயம் வரப்போகிறது என்ற சந்தோஷத்தில் அவள் இலட்சியத்துக்கு உறுதுணையாய் இருக்க சம்மதித்தாள் அவிரா. இந்தப் பறவை இழந்தது வானத்தைத் தான் சிறகுகளை அல்ல.
பேசாமலிருந்தேன்
ஏதாவது பேசு என்றாய் பேசிக்கொணர்டிருக்கிறேன் நிறுத்தச் சொல்லி நீயும் பேசிக்கொண்டிருக்கிறாய் இப்படி பேசிக்கொண்டு இருப்பதில் என்ன இருக்கிறது? பேசாமல் இருந்ததிலாவது "மெளனம்" இருந்தது
பாதிவரை வந்து திரும்பி விட்டாய் கால்மாட்டிக் கொள்ளும் வெடிப்புகளில் கசியும் ரத்தமாய் மீதி தூரம்
என்னோடு வந்துகொண்டிருக்கின்றன உனக்கான கவிதை.
ச.இளம்பிறை - கணையாழி
52 மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா சிறப்பு மலர்

Tower & MastFixing
Steel Roof Fabrication & Fixing
Demolishing of Old Building
Jo 心
● ---- 心 心 鲁©
· = �—→ 鲁6–) 仰韶 由 就 €--> 川 === 鸭儿 
■ �- --> s-No.
1. No 旧化 石才中 而迦 照的 口以 G所上 = u(5. GS G() 6- No 2 Ř, S, L. GO
○○○ No © 阳业 GÐ |----
Mobile: 077802728
ஊற்று தளி 4 ஆகஸ்ட் செப்டம்பர் 2000
53

Page 29
AH.M. FAZAE EL ീശ്ലേ Pander
EDs
Engineers, Designers Constructors, Surveyors ö éuppliers.
49, Princes Gate, Colombo 12.
I Tel: 077350736 | Branch: No 18, EIkaaluva Ra, Ukuvela.
54 மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா சிறப்பு LD6 off
 
 
 
 
 
 

கடந்த நூற்றாண்டு ஈழத்துக் கவிதை
மு.பொன்னம்பலம்
uЯя இன்று மரபாக நமக்குத் தோற்றுவது ஒரு காலத்து خانو
புதுமையே என்பதை நாம் 一ー மனதில் விளக்கினால்
மரபும் புதுமையும் மாறி AZOoo மாறி ஊடாட்டங் கொண்டு இன்னொன்றை, மூன்றாம் ஒன்றை சதா பிறப்பித்துக் கொண்டிருக்கும் இயங்கியல் தன்மையை நாம் பதித்தவாறே கவிதை பற்றிய நமது ஆய்வை மேற்கொள்ள வேண்டும்.
இன்று செய்யுளில் வடிக்கப்படும் கவிதைகளை மரபுக்கவிதை எனக் கூறலாமா? இன்று நாம் மரபுக் கவிதை எனக் கொள்வனவும் பல மாற்றங்களுக்குள்ளாகியே வந்துள்ளன. அகவல், வெண்பா, கலிப்பா, என எழுதப்படும் பலவற்றை அகவல் பாவினத்துக்குள் அடுக்கிக்காட்டலாம் என்ற கருத்தை எம்.ஏ.நு.மானும் முருகையனும் கூறியுள்ளனர். அது மட்டுமல்லாமல் நுட்மான் தனது அகவல் பாங்கான கவிதைகளை இன்றைய புதுக்கவிதை பாணியில் மடக்கி, நீட்டி பிரசுரித்துள்ளார். ஆனால் அதற்காக செய்யுள் மரபைத்தாண்டிய கவிதைகள் இல்லை என்பதல்ல.
ஆனால் இச்சந்தர்ப்பத்தில் எம்முன் இன்னொரு முக்கியமான கேள்வி செய்யுள் மரபை மீறி எழுதப்படுபவை எல்லாம் புதுக் கவிதைகளா? படுபிற் போக் கான கருத்தொன்றை செய்யுள் மரபை மீறிய கவிதையொன்று உள்ளடக்குமானால் அதைப் புதுக் கவிதையெனலாமா? அதேவேளை புதுமையான முற்போக்கான கருத்தொன்று மரபுக் கவிதை மூலம் வெளிப்படுமாயின் இது அப்பொழுதும் மரபுக்கவிதைதானா?
இதை இன்னொரு வகையரில் பார்க்கலாம், ஆங்கில கவிதை மரபை உடைத்துப் புதுமை செய்தவை என்று ரி.எஸ். எலியட்டின் கவிதைகள் புகழப்படுவதுண்டு. ஆனால் அவரது கவிதைகளில் பிற்போக்கு பாஸிசக் கருத்துக் கூறுகள் உள்ளன என்பதால் அவற்றை புதுக்கவிதைகளில் இருந்து ஒதுக்கிவிடலாமா?
இதற்கு நாம் பதில் காண வேண்டுமாயின், கலைஇலக்கியத்தில் புது உருவ மாற்றங்கள் ஏன் தேவைப்படுகின்றன என்ற கேள்விக்குப் பதில் காண வேண்டும். ஆம், கலை இலக்கிய உருவ மாற்றங்கள் ஏன் தேவைப்படுகின்றன?
இதற்குப் பதில் எமது அனுபவ வெளிப்பாட்டை பிறரில் தொற்றவைப்பதற்கு ஏலவே இருக்கும் கலை இலக்கிய உருவங்கள் ஆற்றல் இழந்தவையாகக் காணப்படும் சந்தர்ப்பங்களில், தமது சக்தியைப் பூரணமாக அவை இழந்து விட்ட நிலையில் புதிய உருவங் களர் தேவைப் படுகண் றன. ஒரேவகையான உருவங்களிலே பேசப்படும் விஷயங்கள் வாசகர்களுக்கு அலுப்பைத் தருவனவாக மாறுகின்றன. நல்ல விஷயங்கள் அவை போர்த்துள்ள உருவங்களால் வலுக்குன்றியலையாகத் தெரிகின்றன. ஆகவே இத்தகைய (Exhaustion) களைப்பிலிருந்து விடுபட வைப்பவை புதுக்கவிதைகளாக, புது இலக்கிய உருவங்களாக மாறுகின்றன.
ஆனால் புது உருவம் தரிப்பவை எல்லாம் புதியனவாக மாறிவிடா. இங்கே இன்னொரு விஷயம் கவனிக்கப்பட வேண்டும்.
சங்க காலம், சங்கம் மருவிய காலம் பல்லவர் காலம் என்று வந்த நமது கவிதை வரலாற்றில் அகவல், வெண்பா, கலிப்பா, குறட்பா என்று வந்த செய்யுள் உருவங்கள் கம்பனின் விருத்தத்தில் ஓர் உச்ச நிலையை அடைகின்றன.
உலகம் யாவையும் தாமுள வாக்லும் நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா அலகிலா விளையாட்டுடையான் அவன் தலைவன், அன்னவர்க்கே சரண், நாங்களே
இங்கே கம்பனின் சொற்கையாள்கை முறையும் அவனது பரந்த கருத்தியலும் அவனது படைப்பை உச்ச நிலைக்கு ஏற்றி விடுகின்றன. இங்கே இவன் கையாளும் தாமுளவாக்கல்' என்கின்ற சொற்களை நீக்கி விட்டு அவ்விடத்தில் நாம் வேறொன்றையும்
ஊற்று தளி 4 ஆகஸ்ட் செப்டம்பர் 2000
55

Page 30
பெய்துவிட முடியாது. அவ்வாறே அவனது கவிதையில் காணப்படும் கருத்தியலும் இன்றைய சமயகொள்கை சார்ந்த குறுகிய கோட்பாடுகளை மீறி சகல மானிடத்தையும் இணைக்கும் பரந்த கருத்தியலாக விரிகிறது. இத்தகைய ஒரு பெரும் கலை இலக்கியப் பணி பு கம்பன் வாழ்ந்த ஆயிரம் வருடங்களுக்குப் பின்பு பாரதியில் தான் நாம் காணக்கூடியதாக இருக்கிறது.
அவ்வாறெனின் இவ்விடைப்பட்ட காலத்தில் கவிதையில், கவிதை எடுத்துச் சொல் முறையில் மாற்றங்கள் ஏற்படவிலலையா? என்ற கேள்வி நியாயமானது.
5 aj 3F u u LDMT ab LDH mở []] Lô ஏற்பட்டிருக்கிறது. ஆனால் எந்த வகையில் என்பதுதான் முக்கியம், யமகம், திரிபு. சிலேடை என்றும் கோயில் புராணங்கள் பிரபந்தங்கள் என்ற வகையிலும் தான் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. எடுத்துச் சொல் முறையில் இந்த அவலம் ஏற்பட்டு உன்னத கவிதை ஏற்படாமல் போனதற்குக் காரணம் என்ன?
இங்கேதான் நாம் கருத்தியல் வறுமையைக் காணகப்படுகிறதோ அந்த நாட்டில் ஆட்சிக்கு வருவோன் வெறும் கட்டிடங்களையும் கோபுரங்களையும் ‘கட் அவுட் களைந்தான் கட்டியெழுப்புவான். ஆனால் மக்களோ மிகுந்த வறுமையிலே கிடந்துக் கொண்டிருப்பர்’ என்றான். இதற்கு நல்ல உதாரணம் இன்றைய தமிழ் நாடு. கட்டிடங்களும் ‘கட் அவுட்களும் மலிந்தனவேயன்றி மற்றவையயெல்லாம் சீரோடிக்றி” தான். மீண்டும் யமகம், திரிபு, சிலேடையையும் வித்துவச் செருக்கையும் அள்ளித் தந்த நாயக்கர் காலத்திற்குப் போய்விட்டோமோ என்று ஐயப்பட வேண்டிய எழுத்துக்கள். கேய்யிஸாம் லெஸ்பியனிஸம், ஸ்ரக்ஷறலிஸம், மொடனிஸம், போஸ்ட் மொர்டனிஸம் என்று மேற்கை அபிநயக்கும் போக்கு தன் தேவையிலும் சூழலிலும் சூல் கொள்ளும் கருத் தரியலுக் கான தரிசனமின்மையால் தறிகெட்டும் போன சில்லறைத் தனங்கள். கோணங்கியின் எழுத்துக் கள் இதரில் இன்னொருவகை, குவண்டம் தியறி, அணுவின் பிளவு போன்ற சிக்கலான விஷயங்களையே இன்றுமிகுந்த
தெளிவோடு கவித்துவம் மிளிரத் தருகின்ற காலத்தில் சிக்கலற்ற விஷயங்களையெல்லாம் வார்த்தைச் சிக்கலால் ‘உன்னதங்கள்’ என்ற மாயையைத் தோற்றுவிக்கும் போலிப் போர்வைகள் அவசியமா? இவை மீண்டும் நாயக்கர் கால தத்துவ வறுமையின் வெளிப்பாடான யமகம், திரிபு சிலேடை என்னும் வித்துவச் செருக்கை நோக்கிய ஓட்டம் 6T6O6oT DIT?
ஒக்ஸ்.போர்ட் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட தற்கால கவிதைகள் தொகுப்பு நுாலுக்கு பி.ஜே.என்ரைட் வழங்கிய முன்னுரை கவிதை பற்றி பின்வருமாறு கூறுகிறது. "இருண்மை உயர்ந்த இலக்கியத்தின் பிரிக்க முடியாத அம்சம் என்றும் எளிதில் புரிந்துக் கொள்ளக்கூடியது நல்ல இலக்கியமல்ல என்றும் கருதப்பட்டது. ஒரு கவிதையின் இயல் பாலேயே கடினமாக இருக் கரிற கவிதைவேற். எழுதியவனே புரிந்து கொள்ள முடியாத கவிதைப்படைப்பு வேறு. ஒரு கவிதை மீண்டும் நம்மை படித்துப் புரிந்துக் கொள்ள முடியாத கவிதைப்படைப்பு வேறு. ஒரு கவிதை மீண்டும் நம்மை படித்துப் புரிந்துக் கொள்ள வைக்கிற ஆவலை உண்டாக்குகிறதா? இதுதான் நல்ல கவிதையின் அடையாளம்.”
இவற்றின் பின்னணியிலேயே கடந்த நுாற்றாண்டு ஈழத்துக் கவிதைப் பற்றிய ஆய்வுக்குள் நுழைகிறோம். எவ்வாறு பாரதியின் பரந்த தரிசனவீச்சும் அதன் வழிவந்த கவிதைப் பரிசோதனைகளும் மரபுடைப்பும் அவர் பின் வந்த தமிழ்நாட்டுக் கவிஞர்களுக்குச் சித்திக்காமல் போயிற்றோ, அவ்வாறே அனேகமான ஈழத்துக் கவிஞர்களின் நிலையும். ஆறுமுகநாவலரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட சைவசமய ஆசாரம் பேணும் இறுக்கமான போக்கே, கடந்த நுாற்றாண்டின் ஈழத்துக் கவிதைபோக்கின் ஆரம்ப கர்த்தாக்களாக விளங்கிய பாவலர் துரையப்பாபிள்ளை, ஆசுகவி கல் லடி வேலுப் பிள்ளை. மாவிங்கவிசவம், முத்தமிழ்ப்புலவர், மு. நல்லதம்பி, நாவலியூர் சோமசுந்தப்புலவர் ஆகியோரிடம் செல்வாக்கு செலுத்திற்று. ஆகவே இவர்களை நவீன ஈழத்துத் தமிழ் கவிதை வளர்ச்சிக்குப் பங்காற்றியவர்கள் என்று சொல்லமுடியாது.
இவர்களுக்கு முன் நாவலர் காலத்தில் வாழ்ந்த “கனகிபுராணம்' எழுதிய
56 மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா சிறப்பு மலர்

கவிஞர் சுப்பையாவிடமிருந்துதான் ஈழத்து நவீன கவிதை ஆரம்பிக்கிறது எனலாம்.
‘புல்லை மேய்ந்தங்கு நின்ற திமிர் புரி இடபக்கன்று. கல்லையும் இழுத்துக் கொண்டு காட்டிடை ஓடும்”
என்ற கவிஞர் சுப்பையாவின் கவிதை வரிகள் நாம் இன்று அதிகமாகப் பேசப்படும் யதார்த்தத்தையும் பேச்சோசைப் பண்பையும் காணலாம்.
ஈழத்துக் கவிதையின் உயிர்த் துவத்தையும் அது இன்று எய்தியிருக்கும் நிலையையும் சுருக்கமாக அறிவதற்கு இன்றைய ஈழத்துக் கவிதைப் போக்கின் வகைகளை இவ்வாறு வகைப்படுத்தலாம்.
1. முதலாவது எந்தவிதக் கருத்தியல் சார்புமற்ற
யதார்த்தப் பாங்கான கவிதைகள்.
2. இரண்டாவது பழமைபேண் மார்க்சீயக்
கருத்துக்கள் அல்லது
எடுத்துச் சொல் முறையில் மாற்றம் ஏற்படுத் தரியுள்ள ஏற்படுத் தி வரும் கவிதைகளையே.
கனகிபுராணம் எழுதிய கவிஞர் சுப்பையாவால் ஆரம்பித்து வைக்கப்பட்டது நவீன கவிதையென்றால் அதற்குக் காரணம், அவர் மரபுக் கவிதைக்குள் கையாண்ட எளிமையான சொற்களைக் கொண்ட பேச் சோசை பாங் கான கவிதைகளே. இப் போக்கு தனது முழு விரிவையும்
மஹாகவியரின் கவிதைகளில் பெற்றுக்கொள்கிறது.
பாரதியரின் நேர் வாரிசாகக
கொள்ளப்பட்ட பாரதிதாசன் இனிய தமிழில் கவிதை எழுதினார். ஆயினும் அவரது கவிதைகளை மேலோங்காது தடுத்தது அவரது குறுகிய திராவிடக்கருத்தியலாகும். இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் ஈழத்து நவீன கவிதையரின் ஆரம்ப கர்த் தாவாக கொள்ளப்படும் மஹாகவி பாரதியால் அதிகம்
க வ ர ப ப ட |ா து ,
சமயக் கருத்துக்கள்
சார்ந்த கவிதைகள்.
பாரத தா சனா லு ம க  ைல வ |ா ண னா லு ம
3. இன்னவைதான் என்று எந்தக்
கருத்தியலையும் சாராத எதிர்ப்பு இலக்கிய
வகையைச் சார்ந்தவை. அதாவது தமிழிழப்
போராட்டத்திற் சார்பா எதிர்ப்பிலக்கியக்
தமிழகத்தில் நடைபெற்ற தமிழ் இனி 2000 கருத்தரங்கில மு.பொன்னம்பலம் அவர்களால் வாசிக்கப்பட்ட கட்டுரை. வடக்கு, கிழக்கு பிரதேசங்களை சேர்ந்த கவிஞர்களை தவிர ஏனைய பிரதேச கவிஞர்களை சிலர் மறந்து விடுவது ஏனோ?
இத்தகைய வரலாற்று தவறுகள்
கவரப்பட்டார். இவர்களிடம் ம ஹ (ா க வரி ய ட ம  ைக ய ள ப ப த ற கு பாரதியரின் தரிசனம் இருக்கவில்லை. ஆகவே மஹாகவி யாழ்ப்பாணத்து மத்தியத் தர வர்க்கத்து மக் களது ஆசை அ பபி ல T  ைச க  ைள
கவிதைகள். அடுத்தது போராட்டத்தை
தற்போது மேற்கொள்ளும் அமைப்புக்கு
எதிரான எதிர்ப்பிலக்கிய கவிதைகள்.
தொடர்ந்தே
சேர்ந்த
4. ஒத்தோடும் இன்றைய
படுகினிறன. மலையகத்தை பணிணாமத்துக் கவிராயர். சுமுரளிதரன் போன்ற கவிஞர்களின் படைப்புகள் இவர் கணிணில் படவில்லையா..?
வெளிப்படுத்தும் யார்த்தக் கவிஞராவே நிற்கிறார். ஐரோப்பிய இலக்கியத்தில் பால்சாக் எவ்வாறு ஒரு சிறந்த யதார்த்தவாதியாக கருதப்பட்டாரோ அவ்வாறே மஹாகவியையும் நாம் Glassigil 6T6) Tub.
நிகழ்த்தப்
பலதரப்பட்ட சமூக
அமைப்புகளுக்கும் எதிரான புதிய கருத்தியல் சார்ந்த எதிர்ப்பிலக்கிய கவிதைகள்,
இப்போக்குகளை இனங்காணும் போது ஈழத்து நவீன கவிதைகளையும் இனங்காண முடியும் எனலாம். நான் நவீன கவிதை என இனங்காணுவது மேற்கூறப்பட்ட வகைகளிலும்
“காலை ஒன்று கிழக்கில் விடிந்தது”
என்று மஹாகவி தனது ஒரு சாதாரண மனிதன் சரித்திரம் என்னும் காவியத்தின் முதல் கவிதையை ஆரம்பிக்கும் போதும்.
ஊற்று 1 துளி 4 ஆகஸ்ட் செப்டம்பர் 2000
57

Page 31
'இந்திரன் இறங்கி வந்தான் இமயத்தின் அடிவாரத்தே"
என்று அகலிகை கவிதையை ஆரம்பிக்கும் போதும் எவ்வாறு எளிமையான சிறுசிறு பேச்சோசைப் பாங்கான சொற்களால் இனிமையான கவிதைகளை தோற்றுவிக்கலாம் என்பதை காட்டிச் செல்கிறார். இவர் காலியம், நாடகம், தனிக்கவிதைகள் என்று நிறையவே எழுதியுள்ள போதும் இவர் தனது படைப்புகளை அதிகமாக கலிவெண்பா, கட்டளைக் கலிப்பா,வெண்பா என்கிற செய்யுள் வகைகளுக்குள்ளேயே புகுத்தியுள்ளதால் இவரது கவிதைகள் அனைத்தும் ஒருவித Monotonous எண் கிற ஒரே வகைத்தன்மைக்குள், ஒசைக்குள் வீழ்வது ஒரு பலவீனமாகவே கொள்ளலாம். அவரது நவீனத்துவத்தை கட்டிபோட்டு விடுகிறது என்று கூட சொல்லலாம்.
இவருக்குச் சற்று பிந்தியவர்களான நீலாவாணன், முருகையன், சில்லையூர் செல்வராசன் ஆகியோரும் மரபுவழிவந்த செய்யுளிலேயே தம் கவிதைகளை வடித்துத் தந்துள்ளனர். இவர்களில் முருகையன் மரபு வழி வநீத மார்க் சீய பார்வையை வரித்தவராகவும் அதே வேளை ஆறுமுகநாவலர் வழிவந்தோர் அழுத்தும் சைவ சித்தாந்த இறுக்கமும் இவர் கவிதைகளில் செல்வாக்கு செலுத்துவதை காணலாம்.
எவ்வாறாயினும் இவர் கவிதைகளில் தெறிக்கும் விஞ்ஞானப் பார்வையின் மினுக்கமே வேறுகவிஞர்களிடம் காணப்படாத அழகூட்டும் அம்சமாகும். இவரது காவியமான ‘நெடும் பகல நாடகங்களான ‘கடுழியம்','வந்துசேர்ந்தான்’ இதற்கு நல்ல உதாரணமாகும்.
நீலாவாணனின் கவிதைகள் ஏனைய இவர் காலக் கவிஞர்களிடமிருந்து வேறுபடுத்துவது அவர் தனது படைப்புக்களை பல்வகைப்பட்ட செய்யுள் வடிவங்களில் தந்ததோடு அவற்றுள் என்றும் இன்பந்தரவல்ல ஆத்மார்த்தப் பண்பைப் புகுத்தியதுமே. இதை இன்னோர் வகையில் சொல்வதானால் ஒரே வகையான எடுத்துச் சொல் முறையில் வெவ்வேறு ஒளிச்சேர்க்கையை ஏற்படுத்தியோர் என முருகையனையும் நீலாவாணனையும் குறிப்பிடலாம்.
ஒ.ஓ. வண்டிக்காரா ஒட்டுவண்டியை ஒட்டு ஒட்டுபோவோம் புதிய நகரம் நோக்கி
பொழுதுபோகுமுன் ஒட்டு பணியின் விழிநீர்த்துயரத் திரையில் பாதை மறையும் முன்னே பிணியில் தேயும் நிலவின் நிழல் நம் பின்னால் தொடருமுன்னே ஒ.ஓ. வண்டிக்காரா ஒட்டுவண்டியை ஒட்டு
மேற்காணும் நீலாவணனின் கவிதை அவர்பற்றி நான் கூறுவதை தெளிவுபடுத்தும் இனிய கவிதையாகும்.
சில் லையுர் செல் வரா சனி மேற்கூறப்பட்ட கவிஞர்கள்போல் காவியங்கள் நாடகங்கள் என்று எழுதாவிட்டாலும் தனிக்கவிதைகள் நிறையவே எழுதி யுள்ளார். அங்கதச் சுவை மிளிரக் கவிதை எழுதுவதில் இவருக் கென தனியான இடமுண்டு.
எவ்வாறாயினும் நீலாவணன் முருகையின், சில்லையூர் செல்வராசன் ஆகிய இவர்கள் மஹாகவியின் எடுத்துச் சொல் முறையிலிருந்து அதிகம் வேறுபடவில்லை. நீலாவணன் தனது ஆத்மார்த்தப் பண்பை மரபுச் செய்யுள் வழியேதான் ஓடவிட்டார். இக்கவிஞர் எவரும் வசனக் கவிதையைச் சிறிதும் வரவேற்காதவர்.
அப்படியானால் மஹாகவிக்குப் பின்னர் கவிதையில் நவீன மாற்றத்தை ஏற்படுத்திய எடுத்துச் சொல் முறைக்கு வரவேண்டுமானால் 60 களிலும் 70 களிலும் கவிதை எழுதத் தொடங்கியோரான மு. பொன்னம்பலம் தா.இராமலிங்கம், எம்.ஏ.நு. மான், சண்முகம், சிவலிங்கம், அயேசுராசா, எஸ். வில்வரத்தினம், சி.சிவசேகரம், சேரன், வ.ஐ. சஜயபாலன் ஆகிய கவிஞர்களின் கவிதை பற்றி நாம் சிறிது பார்க்க வேண்டும்.
எம்.ஏ.நுட்மான், சண்முகம், சிவலிங்கம் , சிவ சேகரம் ஆகியோர் மரபுரீதியான மார்க்சீயக் கருத்தியலை ஏற்றுக் கொண்டு கவிதை எழுதியவர்கள். இவர்கள் மூவரும் மரபுரீதியான செய்யுள்களில் கவிதைகளை ஆரம்பத்தில் எழுதியவர்கள். நு.மானின் கவிதைக்கு உதாரணமாக இக்கவிதையைக் காட்டலாம்.
58 மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா சிறப்பு மலர்

வைகறை நிலவு வாசலில் விழுந்தது. நெய் உறைந்தது போல நீண்ட வானில் மேற்கே கவிழ்ந்து விழப்பார்க்கிறது மேகக் கூட்டம் மிதந்து சென்றது. போகப்போகப் புதைந்த புதைந்து வெள்ளிப் பூக்கள் மலர்ந்தன மங்கி.
சண்முகம் சிவலிங்கம், சிவசேகரம், நு.மான் செய்தது போல் தொடர்ந்து யாப்பமைதிச் செய்யுளில் கவிதை எழுதாது வசனத் தரில் கவிதை 61 (Լք ՖՖ தொடங்கியவர்கள். ஆனால் இவர்களுக்கு முன்னரே மு.பொன்னம்பலம் 1962ல் எழுத்தில் புதுக்கவிதை எழுதினார்.
இதனால் மஹாகவி இவரை ‘இன்னும் தமிழை இனிதுபடுத் தவல்ல பொன்னம் பலத் தின் பா புதிது’ என அறிமுகப்படுத்தினார். இவருக்குப் பின் 60களில் நடுப் பகுதியில் தா.இராமலிங் கத்தின் புதுமெய்க்கவிதைகள்' 'காணிக்கை ஆகிய இரண்டு தொகுப்புக்கள் வெளிவருகின்றன. இவை ஈழத் துப் புதுக் கவிதையுலகின் சாதனையாகவும் தமிழகப் புதுக்கவிதைப் போக கலிருந்து தம் மைப் பெரிதும் வேறுபடுத்திக்காட்டுபவையாகவும் நிற்கின்றன.
'பள்ளர் குடிப்பிறந்தாள் கிட்ட பன்னாங்கில்
என்று ஆரம்பமாகும் இவரின் 'ஆசைக்குச் சாதியில்லை' என்ற கவிதை, புதுக்கவிதையின் தரமான வெளிக்காட்டலாகும். இதனால் தான் இவரின் கவிதைப் பற்றி பேராசிரியர் கா.சிவதம் பி கூறும் போது ‘புதுக் கவிதையை அதன் இலட் சணப் பொலிவுடன் கையாளத் தொடங்கியவர்களுள் ஈழத்தைப் பொறுத்தவரை முக்கியானவர் தா. இராமலிங்கம் ஆவார்' என்றார். இக்காலப் பகுதியில் வெளியான மு.பொன்னம்பலத்தின் 'அது' கவிதைத் தொகுதியில் 'புதியவை என்ற பிரிவில் புதுக்கவிதைக்கென தனியான இடம் ஒதுக்கப்படுகிறது.
மஹாகவிக்குப் பின்னர் கவிதை எடுத்துச் சொல் முறையில் மாற்றம் இக்காலப் பகுதியில் இவற்றிலிருந்தே ஆரம்பிக்கிறது எனலாம், எழுபதுகளில் சண்முகம் சிவலிங்கம் எழுதிய "ஆக்காண்டி ஆக்காண்டி” நு.மானின்
தாத்தாமரும் பேரமாரும்” கவிதைகள் இன்னும் பழைய வழியில் புதிய விஷயங்களைச் சொன்னவையாகவே நின்றன. இக்கவிதைகளில் மார்க்சீயப் பார்வை அழுத்தம் பெற்றது. பொதுவாக ஈழத்திலிருந்து வெளிவந்த மார்க் சீயக் கவிதைகள் இக் காலத்தில் தமிழ் நாட்டில் மார்க் சீயத்தை வரித்த வானம் பாடிக் குழுவினரின் கவிதையான 'இரத்தப்பூக்கள் சிவந்த வானம்', ‘நீமாடியிலே இருக்கிறாய் நான் கோடியிலே கிடக்கிறேன்” என்பன போன்றவை மாதிரி சிரிப்புக்கிடமாக எழுதப்படவில்லை.
எண் பதுகளின் ஆரம்பத் தோடு ஈழத்துப் கவிதை உலகில் புதுக்கவிதையே பொதுப் பண்பாகிறது. ஆனால் இவற்றின் எடுத்துச் சொல் முறையில் , அல்லது வெளிப் படுத்த பட்ட முறையரில சில புதுப்பரிமாணங்கள் தெரியத் தொடங்கின.
தமிழர் விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவான எதிர்ப்பிலக்கிய வகையைச் சார்ந்த கவிதைகளை சண்முகம் சிவலிங்கம் அ. யேசுராசா, சு.வில்வரத்தினம், மு.பொன்னம்பலம் எஸ்.சிவசேகரம், வ.ஐ.ஜெயபாலன் ஆகியோர் எழுதினர். சணி முகம் சிவலிங்கத்தின் வெளியார் வருகை மரணத்துள் வாழ்வோம்' கவிதைகளையும் சு.வில் வரத் தினத்தின் ‘அகங்களும் முகங்களும் காலத்துயர் ஆகிய தொகுதிகளில் காணப்படும் கவிதைகளையும் சிவசேகரத்தின் வடலி கவிதையையும் போரின் முகங்களில் காணப்படும் கவிதைகளையும் மு.பொன்னம்பலத்தின் விடுதலையும் புதிய எல்லைகளும் 'விலங்கை விட்டெழும் மனிதர்கள் ஆகிய தொகுப்புகளில் காணப்படும் கவிதைகளையும் அயேசுராசாவின் "புதிய சப்பாத்தின் கீழ்' ஆகிய கவிதைகளையும் இந்த வகையைச் சார்ந்தவை எனலாம்.
இதே வேளை சேரன், சோலைக்கிளி ஆகியோர் தமிழர் விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான அதாவது இவ் விடுதலைப் போரட்டத்தை முன்னெடுத்த விடுதலைப் புலிகளை கண்டனத்திற்குள்ளாக்குகின்ற போக் கில், அமைந்த எதிர்ப்பிலக்கிய வகையைச் சார்ந்த கவிதைகளையே எழுதினர்.
சண்முகம் சிவலிங்கம் சிவசேகரம் ஆகிய இருவரும் மரபுவழிக் கவிதைக்கும் புதுக் கவிதைக்கும் இடைப்பட்ட யாப்மைதியில்
ஊற்று 1 துளி 4 ஆகஸ்ட் செப்டம்பர் 2000
59

Page 32
எழுதினர். இதோ சண்முகம் சிவலிங்கத்தின் ஓர் கவிதை இப்படித்தான் ஆரம்பிக்கிறது.
“இன்று மிகத்துயர் உற்றேன் என் இனிய நண்ப இவ்விரவின் நிலவொளியில் என்னுடன் நீ இருந்தால்
வெண்பனியின் துளிசொட்டும் பூங்கொத்தைப் போன்று விம்முகின்ற என் நெஞ்சில்
ஆறுதல்கள் தருவாய்”
மேற் படி கவிதையின் ஓசை அமைதியுடனே சிவசேகரத்தின் கீழே தரப்படும் வடலி அமைந்துள்ளது.
“இந்தக் கரும்பனைகள் இங்கேதான் முளைக்கும் இடம் பெயரச் சொல்லி எவர் வேரோடு கிள்ளி வெளியே எறிந்தாலும் வடலி வளரமுதல் வெட்டிச் சரித்தாலும் இந்தக் கரும்பனைகள் இங்கேதான் முளைக்கும்'
வில் வரத் தினம் , யேசுராசா, மு.பொன்னம்பலம் ஆகியோரது கவிதைகள் தமக் கே உரிய வித் தியாசங்களைக் கொண்டவை.
வில்வரத்தினத்தின் கவிதைகள் மஹாகவியின் கவிதைகள் போல் யாழ்ப்பாணத்து மண்வாசனை கமழ வரும், அதே வேளை தொன்மம், ஆத்மார்த்தம் இன்னும் தனக்கே உரிய ஓசையாலும் வேறுபடுவன, இதோ சு.வில்வரத்தினத்தின் கவிதை ஒன்று
இதயமே,
ஏன் கிடந்து புலம்புகிறாய்? உடைந்த சிலம்பின் கதறலாய் தனித்து விடப்பட்ட தீவின் குமுறலாய் புலம் பெயர்ந்து அலைகிற குரல்களின் UTL6M) Tu
பொழுதெல்லாம் துயரெழுந்து நீள் கிறதுன் புலம்பல்.
மு.பொன்னம்பலத்தின் கவிதைகள் வசனமாக எழுதப்பட்டன அதனால் அவை கவித்துவ நடையில் எழுதப்பட்ட வசனங்கள் எனச் சிலரால் விமர்சிக்கப்பட்டன. ஆனால்
இவர் கவிதை சிந்தனையின் வழியில் உணர்வு செயல்பட சிலிர்த்தெழவைப்பது. இதோ அவரது கவிதை ஒன்று
எப்படிச் சுகம் என்றொருத்தன் கேட்டால் செருப்பைத் துாக்கிக் காட்டு, ஸென் பெளத்தன் பாணியில்! செருப்பைக் கண்டவன் தன் இருப்பைத் தொடலாம் தொட்டு மனிதனாகிப் புதுச் சொல்லோ (OL-p6)TLD.
தற்போதைக்கு, உன்னைச் சூழ்ந்து விலங்கிடும் பழஞ் சொற்படைத்தளத்தை
தகர்த்தெறி! போராளிச் சொற்கள் புகுந்து புரட்சிக்க!
ஜெயபாலன் கவிதைகளுக்கும் சேரனின் கவிதைகளுக்கும் இடையே ஒசை அமைதி, ஒத்திசைவு என்பவற்றில் அதிக வித்தியாசம் காணமுடியவிட்டாலும் முன்னவர் கவிதைகளில் சிவசேகரத்தின் கவிதைகளில் காணப்படுவது போல் யாப்பமைதியையும் காணலாம். இதோ அவரின் கவிதையொன்று.
"உட்கொலை மலிந்து விடுதலைக் கனவுகள் சிதைந்த எண்பத்தாறின் கோடை ஏழை பஞ்சில் ஆடையும் பஞ்சு ஏழையில் அணிகளும் நெய்கிற கோவை புறநகர் தலைமறைந்திருந்தேன்”
ஜெயபாலனோடு ஒப்பிடும் போது சேரனின் கவிதை அதிக ஒத்திசைவு இல்லாத வசனப்பாங்கானது என்றே கூறலாம். அவரது "தீ" என்ற கவிதை இப்படி ஆரம்பிக்கிறது.
இலைகளே ஆயிரம் தீநாக்குகளாக நெருப்பின் எண்ணற்ற நிறங்களுடன் புகை அவிழாது வெப்பம் கிளர்த்தாது பற்றி ஸ்ரிகின்ற மரங்கள் மரங்களில் தீ கொடிகளில் தீ செடிகளும் தீ
காலத்தீ
சோலைக்கிளியின் கவிதைகள் இவற்றைவிட எளிமையானவை. ஆனால்
60 மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா சிறப்பு மலர்

இவற்றிடம் அதிகம் காணப்படாத உருவகப் புனைவுடையவை. அதனால் இவற்றிலிருந்து வேறுபட்டவை. நெட்டி முறித்துக் கொண்டு விடிந்தது காலை சூரியனுக்கு, ஒரு கோப்பி குடித்துவிட்டு, பீடியொன்று பற்றவைக்க
எண்ணந்தான் ஆனாலும் ஆளில்லை, குடிக்க கோப்பி கொடுக்க
எண் பதுகளில மேலோங் கசிய
இக் கவிதைகளை பின் வருமாறு வகைப்படுத்தலாம்.
எம் . ஏ. நுட் மான் , சணி முகம் சிவ லிங் கம் சிவசேகரம் ஆகியோர்
செய்யுளுக்கும் புதுக் கவிதைக்கும் இடைப்பட்ட நிலையில் நின்றவாறு கவிதை எழுதினர் என்றால் சேரன், ஜெயபாலன் ஆகியோர் இவர்களிலிருந்து விடுப் பட்டுப் புதுக் கவிதையின் பிரக்ஞையோடு எழுதினர். மு. பொன்னம்பலம் கவிதை என்பதை உணர்வு நிலையால மட்டுமல்ல புதுச் சிந்தனை வகையாலும் உருவாக்கலாம் என்பது போல கவிதையை வசனத்திலேயே பயின்றுவர எழுதினார்.
சு.வில் வரத்தினம் யாழ்ப்பாண மண்வாசனையும் தொன்மமும் ஆத்மார்த்தமும் இணைந்து வர எழுதினார். சோலைக்கிளி இவர்களில் இருந்து இன்னும் வேறுபட்டு அ.நீரிணைப் பொருட்களை உருவகப் படுத்துவதன் மூலமே கவிதைகளை பெய்தார். ஆனால் இவர் செய்த தவறு என்னவெனில், எவ்வாறு மஹாகவி ஒரேவித யாப்பமைதிக்குள் கவிதைகளைத் தந்து சலிப்படைய வைத்தாரோ அவ்வாறே சோலைக்கிளியும் தனது ஒரே வகையான அட்றிணைப் பொருட்களின் உருவகிப்பின் மூலம் தனது கவிதையை வலுவிழக்க வைத்தார். சு.வில்வரத்தினத்தின் கவிதைகளின் ஓசை அமைதியும் இத்தகைய ஒத்த தன்மை கொண்டிருப்பது பலவீனம் என்றே கருத இடமுண்டு.
தொணி னுாறுகளில இன்னும் வித்தியாசமான எடுத்துச் சொல் முறை கவிதைகளில் வெளிவரக் காண்கிறோம். மேலே குறிப்பிட்ட கவிஞர்களின் ஆக்கங்களில் அனேகமானவை உணர்வுக்கே முதலிடம் கொடுத்தன. ஆனால் 90களில் சிந்தனைக்கே
முதலிடம் தரும் கவிதைகள், சித்தனையால் உணர்வுகள் சிலிர்த்தெழவைக்கும் கவிதைகள் மேலெழுகின்றன. சிந்தனையையும் அதன் வழிவரும் உணர்வையும் மாறி மாறி பின்னவிடும் இக்கவிதைகள் வாசுதேவனின் ‘வாழ்ந்து வருதல் தொகுப்பு 93 ல் வெளிவந்ததிலிருந்து ஆரம்பிக்கிறது எனலாம். அவரது 'ஒரு மாலையும் நானும் கவிதை இப்படித்தான் ஆரம்பிக்கிறது.
வானம் இருளடைந்து காற்று பலமாய் வீசும் இந்தமாலையில் நான் பெருக்கெடுக்கிறேன். துயரில் நெஞ்சு கனக்கிறது காரணம் புரியாது அடிவயிற்றில் கத்திகள் பாய்கிறது.
படிமம், உருவகம், உவமை என்று எந்த ஆரவாரமும் இல்லாமல் சாதாரணமாகப் பெய்யப்படும் வார்த்தைகளால் கவிதை ஊற்றெடுக் கும் ஒரு போக்கு இங்கு அறிமுகமாகிறது.
இதோ நட்சத்திரன் செவ்விந்தியனின் ஒரு கவிதை இவ்வாறே வெளிவருகிறது. அவரது ’பிரிந்து போனவர்-1’ என்ற கவிதை:
“நமக்கான காலம் போய்விட்டதைப் போலுள்ளது யுத்தம் வந்து ஊர்களுக்குள் நதிகளையும் புகவிட்டு வாரியடித்துக் கொண்டு போயிருக்கிறது”
அவ்வாறே ஓட்டமாவடி அறபாத்தின் ‘எரிநெருப்பிலிருந்து கவிதை தொகுதியில் 'நிலா மெலிந்து போன நேற்றிரவு முற்றத்தில் உறங்கிப் போனேன்’ என்று ஆரம்பிக்கும் கவிதையிலும் சுபத்திரன் கவிதைகள் தொகுப்பில்; ”
“மகோச்சந்தியில் இனத்தின் பேரால் மாவைக் கோயிலிற் சாதியின் பெயரால் மலையில், கொழும்பில் வர்க்கத்தின் பெயரால் இரத்த தானம் செய்த எனக்கு வாழும் உரிமை எங்கே உண்டு?”
என்று கேட்கும் மேலோட்டமான சிந்தனைக் கவிதையிலும் உணர்வு
ஊற்று 1 துளி 4 ஆகஸ்ட் செப்டம்பர் 2000
61

Page 33
சிந்தனையின் ஒழுங்கமைப்பால் கிளறப்படுவது தெரிகிறது. இந்தப் போக்கு ஜபாரின கவிதையில் பெரியளவு விரிந்து அஸ்வகோஸின் கவிதையில் தனக்கென தடம்பதிக்கிறது. ஜபாரின் தரப்பட்டுள்ள அவகாசம் தொகுப்பில் ஒரு தலைப்பில்லாக் கவிதை:
”பெருவிருட்சம் மீது ஒரு மரங்கொத்திப் பறவை அலகு பதிக்கும் புள்ளியில் வாழ்க்கை கண் அற்று கால் அற்று நக்கரித்து நக்கரித்து எனினும் உயிருருவும் விரல்களிடை சுழலும உலகு எனதல்ல - எமது
இவ்வாறே கவிஞர் அஸ்வகோஸின் 'வனத்தின் அழைப்பு தொகுதியில் காணப்படும் அனேகமான கவிதைகள் உள் ளன. உதாரணத்திற்கு 'இருள் என்ற ஒரு கவிதை 10 மண் மீட்புப் போருக்குப் போயிருந்த மைந் தனி இறுதியாக எவ்வாறு வீடு திரும்பியிருந்தான் என்பதை அவனது தாய் (அல்லது தந்தை) சொல்லுகிற பாணியில் பின்வருமாறு சொல்லப்படுகிறது.
இறுதியாக
என்னிடம் வந்திருந்தான் அவனது தேகம் குளிர்ந்திருந்தது இரத்தம் உறிஞ்ச நுளம்புகள் வரவில்லை ஈக்கள் அண்ட நான் விடவில்லை
இங்கே கவிஞர் எந்தவித படிமமும் உருவகமும் அற்று, சாதாரண விடயங்களை ஒழுங்கமைத்த முறையில் சிந்தனை முனைப்புற உணர்வுகள் கிளரப்படும் போக்கு.
இவ்வாறே இவரது சமகாலத்து கவிஞர்களான அகிலன் கருணாகரன், றஷமி, அமரதாஸ், முல்லைக்கமல், சித்தாந்தன் ஆகியோரின் கவிதைகளும் இத்தகைய ஓர் சிந்தனை முனைப்பில் உணர்வெழுப்பும் தன்மையுடையனவாய் இருப்பது பற்றிய ஆய்வு சுவையாகவே இருக்கும்.
பெண்கவிஞர்களின் கவிதையிலும் இதைத்தான் பெரிதாகக் காணலாம். 'சொல்லாத
சேதிகள் தொகுப்பில் காணப்படும் பெண்ணியக் கருத்தை முன்வைத்த கவிஞர்களான அ.சங்கரி சி.சவாமணி, சன்மார்க்கா, ரங்கா மசூறா ஏ.மஜிட், ஒளவை ஊர்வசி, மைத்திரேயி, ரேணுகா ஆகிய கவிஞர்களின் கவிதையில் இச் சிந்தனை கவிதையா கி கமே மேலோங்கியுள்ளது.
எனக்கு முகமில்லை இதயமில்லை ஆத்மாவும் இல்லை அவர்கள் பார்வையில் இரண்டு மார்புகள் நீண்ட கூந்தல் சிறிய இடை பருத்த தொடை இவைகளே உள்ளன.
என்று சங்கிரியின் கூற்றில் முதன்மை பெறுவது சிந்திக்க வைக்கும் முனைப்பே. அண்மையில் வெளிவந்துள்ள அழியாளின் 'உரத்துப்பேச கவிதைநுால் இப்போக்கின் மொத்தவடிவமாகவே நிற்கிறது. அந்நூலின் முதல் கவிதையான 'தடை தாணி டி' இவ்வாறுதான் முடிவுற்றது:
"நீயும் நானும் b வரையறைகளைக் கடக்க வேண்டும் நான்
உன் விவேகத்தோடும் நீ என் வீரியத்தோடும்
எனினும்
என் கருவறையை நிறைப்பது உன் குறியல்ல என்ற புரிதலோடு
6JT'
ஒளவை கூறும்
"தோழி எழுந்து வா!'
இன்னும் என்னடி இருட்டில் வேலை? என்ற கூற்றையே எதிர்கால அறை கூவலாக எடுத்து இக்கட்டுரையை நிறைவு செய்கிறேன்.
(தமிழகத்தின் சென்னையில் நடைபெற்ற தமிழ் இனி 2000 - மாநாட்டில வாசிக்கப்பட்ட கட்டுரையின் சுருக்கம்)
62 மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா சிறப்பு மலர்

குறுக்கெழுத்துப் போட்டி - 04
2 இற்கான விடைகள்
1 2 3
இடமிருந்து வலம் முத்திரை அரி
கோட்டை
குடிசை
8Ꮟ[Ꭲ Ꭷu0
சுகம் வைத்தியம்
4
7 மேலிருந்து கீழ்
. (P9
திராட்சை திரிசூலம் கோடி
8
இடமிருந்து வலம்.
G
Ա)
(3360) காகம்
5価し」
ஆதவனைக் காதல் கொள்ளும் மலர்.
முகம், ஆதிவாசிகளுள் ஒருவர் இறுதியை இழந்து நிற்கின்றார். வறண்ட பிரதேசத்தில் இவற்றாலான காடுகளே அதிகம் திறமை, கெட்டித்தனம் எனப் பொருள்படும்.
லிருந்து கீழ்
ஆபத்தானது. ஆனால் மழையைக் கொண்டு வரும். ஒளியும், வளியும் மட்டுமல்ல சில வேலை காதலும் இதற்கூடு பறந்து செல்வதுண்டு. தமிழர்
இது சமயம், மார்க்கம் எனவும் அழைக்கப்படுவதுண்டு. மனித உறுப்புக்களில் ஒன்று.
கையில் கடைசி எழுத்தைக் காணவில்லை.
பரிசு பெறும் அதிஷ்டசாலிகள்
முதற் பரிசு 100/- 2ub Líflai: 75/= 3ம் பரிசு 50/= செல்வி. யோகேஸ்வரி சுப்பைய்யா M.H.M.fu_T6mò M.அதீக் கலீல் எல்கடுவ ரோட் 162/1,பள்ளி வீதி 126, LDL6.j6061T 6535, உக்குவளை, கல்ஹின்னை. கட்டுகளிஸ்தோட்டை.
பாரட்டுப் பெறும் ஐவர்
1. ஏ. செபஸ்டியன் -
எம்.கே.ஜூவைரியா -
2 3. இப்னு எஸ்.ஹமீத் 4. நஸ்ரின் லதீப் - 5. எம்.ஐ.ஏ.அஸ்ரப் -
(இவர்களுக்கு ப்ரவாகம் 4ம் இதழ் இலவசமாக
உக்குவளை
வரக்காமுறை - LDT.g5560)6t
கலகெதர
அலவதுகொட
குறுக்கெழுத்துப் போட்டி 03 "ப்ரவாகம்." சுதந்திர கலை இலக்கியப் பேரவை இல09, மாத்தளை வீதி,
A. உக்குவளை. (21800)
அனுப்பி வைக்கப்படும்.)
ஊற்று 1 துளி 4 ஆகஸ்ட் செப்டம்பர் 2000

Page 34
SIRILLANIK SPCC 8 CC 8NNR8
GENERAL MERCHANTS AND DEALERS IN CEYLON PRODUCE
b.
NO 164, MAN STREET, MATALE, SRI LANKA.
LEL: 066 22345, 2005 || 074 460097 FAX:009466 24021. MOBILE:072228556,077393423
64 மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா சிறப்பு மலர்
 
 
 

UKY
Egg
2િ9'૭, ઉછGfifg G6d "G8fg છિi6COif8
LUCKYLAND BISCUTS MANUFACTURERS NANDARAMPOTHA, KUNDASALE
TEL: 08 224217, 232574, FAX: 948-233740

Page 35
101, Colombo Te: O6
LESL0 LEE 0LELELLL LL0LLLSLLLLLLLS S 0aLS0 SEEE
 

İNSANAS ULERS
Street, Kandy 232545
LLLL LLLSaSEELS 0LLLLLSLS LSSEHHS 0EE0L000S