கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ப்ரவாகம் 2000.10-12

Page 1

1391-SS27
n
O=
:品缸仙己) AWAGHAM סBפלטת வி ைந:
GÉNIEUW GRUITGEGAJ, SELGIJGENGTT.

Page 2

ஒக்டோபர் - டிசம்பர் 2000
நாங்கள் பேசுகின்றோ நாளைக்கு"
என்ற வார்த்தைதான் நம் மிகப்பெரிய ஊற்று 1 துளி 5 பலவீனம். இந்த ஒற்றை வார்த்தையால் மட்டும் நம் வாழ்தாளின் அதிகமான பகுதி அர்த்தமே இல்லாமல் விண்டிக்கப்பட்டிருப்பதை நாம் உணர்ந்தி ருக்கின்றோமா?
உள்ளே. CL S0 S SSSLL L SLLS S SC S SSSSLS SSSS
ஆயுள் என்பது நமக்குத் தீர்த்துத் தரப்பட்ட கட்டுரை . ஒரு பொக்கிஷம். நம் இஷ்டத்துக்கு வளர்க்க
இரவு தேவதை முடியாத, பெருக்க முடியாத ஒரு சொத்து. ஹலோ பர்தா.(கற்க கசடற) ஒட்டைப் பாத்திரத்தில் தணர்ணிச் மறையாத நிழல். அஷ்ரப். ஊற்றப்பட்டு தலைக்கு மேல் தூக்கிப் பிடிக்கப் தமிழகத்தில் சிறுகதை1950 முதல் 2000 வரை பட்டது போல். நம்மைக் கேட்காமலேயே துளித்
பரீட்சையா பயப்படாதீர்கள் துளியாகத் தீர்ந்து கொண்டிருக்கிறது.
ஸ்னேகப் புண்ணகை பிறந்தோம். வளர்ந்தோம். இறந்தோம் அக்கினிப்பூக்கள்-அந்தனி ஜீவா என்பதல்ல நம் கனவு."வாழ்ந்தோம்." என்பது.
தோல்வியினால் உயர்வு நமக்குள் இருக்கும். ஆயிரமாயிரம்
கடந்த நூற்றாண்டின் மலையக இலக்கியம்
கனவுகளில் . அர்த்தமுள்ள ஒன்றையாவது முழுமையாக்க நேரத்தோடு நாம் போராடியி
கதைகள்
பொழுதுகளும் போக்குகளும்
Arawuh
பூரிப்பில் ஒரு பூகம்பம்
ருக்கின்றோமா? முழுமூச்சாக முயற்சித்திருக்கின்
வீணாகிக்கொண்டிருக்கும் நம் வினாடிக ளுக்காக நம் ஆயுளின் ஒரு அவசரமான நேரத்தில் நாம் வேதனைப்பட வேண்டி இருக்கும் என்பது
கவிதைப்பகுதி
suru-sosá *617Ftb
மட்டும் ஒரு முழு உண்மை, கசப்பான நிஜம். நம் பாதையைத் தேடவேணர்டி இருக்கின்றது. காயங்களால் வளர்ந்து, அனுபவங்களால்
கவிப்ரவாகம் e
செதுக்கப்பட்டு, நம் உணர்வுகளுக்கு உருவம்
மற்றும் கொடுத்து இந்த வாழ்க்கைக்கு அர்த்தம் தேடிக்கெள்ள
இது அந்தனி ஜீவாவின் பக்கம் வேண்டி,இருக்கின்றது.
ப்ளீஸ் ரிலெக்ஸ் - போட்டி இல 1 யானைகள் ஜாக்கிரதை. உள்ளதைச் சொல்கிறேன்
ஒடிக்கொணர்டிருக்கும் உலகத்தோடு ஒட்டிக்கொள்ள அவசரப்பட வேணர் டியும் இருக்கின்றது.
நேரத்தை முந்துங்கள்
விளையாட்டுத் திடல் ஒரு சின்ன அறிவிப்பு. நட்புடன் குசும்பு குப்புசாமி ஆஷிப் ஏ புஹாரி ஆசிரியர் Chief Editor :Aashif A Buhary Sub Editor :UkuWela Akarn
: Gallagedara Vinais layout & Designs :Aashif A Buhary
Type Setting
:M. N. M. Rifas, Rifsa Naheem & Arafath A Buhary
Published at :No 9, Matale Road, Ukuwela. Post Code 21300. Printed at :Daafir Creations, 22 E5, Galle Road, Dehiwela. e-mail :pravagham Gyahoo.com ISSN NO: 1391 - 5827
Our special thanks to
ஊற்று துளி 5 ஒக்டோபர் - டிசம்பர் 2000
Mrs Rizana Naufat, Miss Faumida Rausdeen, MN. Naseeth & A.R.A. Humaid
O

Page 3
உதிர்ந்து வீழ்ந்த மலர்
கிளைக்குத் திரும்புகின்றது
ஒ. பட்டாம்பூச்சி
(மோரிடாகே)
ஒரு நல்ல கட்டுரை விஷயத்தை மார்பில் தாங்கிப் போருக்கு வருகிறது. ஆனால் ஒரு நல்ல கவிதை தன் கருவை முதுகில மாட்டிக் கொணி டு கை கட்டி நிற்கிறது. தேடிப் பார்த்து ரசிக்கும் பொறுப்பு வாசகனுக்கு விட்டுக்கொடுக்கப்படுகின்றது. மேலோட் டமாக வாசிக்கும் போதே அநேகமான கவிதைகள் வாசகனுக்குப் புரிந்து விடுகின்றன. ஆனால் அபூர்வமான சில கவிதைகள் என்னைத் தேடிப்பார் என்று மர்மமாகப் புன்னகைக்கின்றது.
தேடி உணரும் சுகம் அலாதியானது.
பக்குவம் பார்த்துப் பொறுக்கி, எடுத்துக் கழுவி, வெட்டுவதற்குக் கத்தியோடு, தட்டில் வைத்து நீட்டப்படும் உயர்ரக பழங்களை விடவும்.
நெஞ்சிலும், கை கால்களிலும், மரத்தின் பட்டை தந்த சிராய்ப்புக்களில் கசியும் ரத்தக் காயங்களுடன். ஒடிந்து விழுமோ என்று சந்தேகிக்கச் சொல்லும் கிளைகளில் ஒற்றைக் காலும் . வைக்க இடமின்றி அந்தரத்தில் தொங்கும் மற்றக் காலுமாய். இலைகளுக்குள் தலை நுழைத்து. எறும்புகளின் செல்லக்கடி சகித்து, அணில் கடித்து விட்டுச் சென்ற பழத்தின் மீதியை. மனப்பூர்வமாக சாப்பிட்டு அனுபவிப்பதில் காயங்களின் வலியைத் தாண்டிய ஒரு சுகம் இருக்கிறதே. முயற்சித்திருக்கின்றீர்களா?
இல்லையென்றால்.
மூன்றே வரிகளில் உங்களின் முகம் மாற்றும் ஹைக்கூக்களுக்கு வாருங்கள்.
இந்த அழகிய கிண்ணத்தில் பூக்களை அடுக்கி வைப்போம். அரிசிதான் இல்லையே!
(பாஷோ)
என்று தன் சோகத்தை நம் நெஞ்சில்
ஏற்றுகிறது ஒரு கவிதை.
மெதுவாக என் தோளைப் பற்றிய இறந்த நண்பனின் கைபோல். இந்த - இலையுதிர்கால வெயில்,
(குசடாஒ) என்று அதிரவைக்கிறது இந்தக் கவிதை.
இங்கேயெல்லாம் நமக்குத் தேடல் இருக்கிறது. புரிந்துகொண்டு ரசிக்க சில நொடிகள் எடுத்துக் கொள்ள வேணி டி வருகிறது. நமக்கு நன்கு பரிச்சயமான சொற்களே. நம் முன்னால் முக்காடிட்டு தலை குனிகின்றன.
ஹைக்கூக்களைப் பற்றிய ஒரு தப்பான உணர்வு சில புதிய எழுத்தாளர்களிடம் இருக்கின்றது. புரியாத வார்த்தைகளால் அகராதிகளில் இல்லாத மொழிப்ெயர்ப்புச் சொற்களால் குழப்பி எழுதப்படுவதுதான் ஹைக்கூ என்று அநேகமானோர் நினைக்கின் றார்கள்.அப்படியல்ல.ஒரு சராசரி வாசக னால் புரிந்துகொள்ளமுடியாமல் போனாலும், ஒரு தரமான வாசகனாலி ஏறி று கி கொள்ளப்படாமல் போனாலும் புதுக்கவிதைக்
குள், ஹைக்கூ எனும் தலைப்புக்குள் ஒரு
கவிதை அங்கீகாரம் பெற முடியாது.
ஆவி பறந்து போகின்றது முடங்கிக் கிடக்கிறது கோப்பைக்குள் தேனீர். (அமுதபாரதி)
இங்கே சொல்லப்படும் கருத்து ஒரு
தேனீர்க் கோப்பையில் காலா காலமாக
ஊற்று துளி 5 ஒக்டோபர் - டிசம்பர் 2000
 
 
 

நடக்கும் சம்பவத்தைப் பற்றியதல்ல, ஒரு பழமொழிபோல், எத்தனையோ சம்பவங்களின் தொகுப்பு இந்தக் கவிதை,
ஏன். ஒரு ஆசிரியரிடம் கல்வி கற்று, ஒரு மாணவன் உயர்ந்த நிலைகளை அடைகின்றான். அவனை வழியனுப்பி விட்டு, அவன் உயரங்களுக்குக் காரணமாக இருந்த ஆசிரியர், இன்னும் அதே இடத்தில் இருக் கறார். இப் படி பொருத்தமான விளக்கங்களைத் தேடிக் கொள்ளும் பொறுப்பை வாசகனுக்கு விட்டுக் கொடுக் கின்றன ஹைக்கூக் கவிதைகள்,
ஹைக்கூ. மூன்று வரிப் புதையல் அது, ஒரு கடல். ஒரு சிப்பி. கடைசியில்
அழகான ஒரு முத்து. வார்த்தைகளைக்
கொட்டித் தீர்க்க உங்களுக்கு இங்கே அனுமதி இல்லை, வரிகளை அதிகப்படுத்த வாய்ப்பில்லை, விதிகள் அதிகமில்லை, வியப் பூட்டும் உவமைகளும், சிலிர்க்க வைக்கும் கற்பனைகளுமே உங்களின் வரம்புகள்.
நம் முன்னோர்கள் விட்டுச் சென்ற ஏராளமான பழமொழிகள், விடுகதைகள் நம்மிடம் இருக்கின்றன. இப்போதெல்லாம். பாவனையாளர்கள் குறைந்து போனதால் பழமொழிகளும் புழக்கத்தில் இருந்து மறைந்து வருகின்றன. ஆனாலும். நம் கிராமங்களின் பொக்கை வாய்களுக்குள் வெற்றிலையும் பழமொழிகளும் கலந்து விட்டிருப்பதை அவ்வளவு சுலபத்தில் நாம் புறக்கணித்துவிட முடியாது.
"அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும்’ என்பது மிகப் பிரபலமான ஒரு தமிழ்ப் பழமொழி. இங்கே கருப்பொருள். அம்மியல்ல. விடாமுயற்சி, அமுதபாரதியின் வரிகள் அதற்கு ஹைக்கூ வடிவம் கொடுக் கின்றன.
தொடர்ந்த நடை நத்தையின் காலடியில் மலை உச்சி.
நகர்வதே தெரியாமல் சுவரில் ஏறிக்கொண்டிருக்கும் நத்தையை ஊற்று துளி 5 ஒக்டோபர் - டிசம்பர் 2000
போகிற போக்கில் தட்டி விடும் நம் கரங்கள். இந்தக் கவிதையைப் படித்த பிறகு, கொஞ்சமாவது தயங்கத்தான் செய்கிறன.
விடுகதைகள் கூட இப்படித்தான். ஹைக்கூ விடுகதையின் மறுவடிவமோ என்று சில நேரங்களில் தோன்றுகின்றது. புளியமரம் என்பது நம்மில் அநேகமாக அனைவரும் அறிந்த ஒன்று. எவ்வளவு பெரிதாக வளரும் மரம் அது? அத்தனை பெரிய விருட்ஷத்தின் இலைகளை அவதானித்திருக்கின்றீர்களா? அந்தப் பிரபலமான விடுகதை ஒரு மாற்றமும் இல்லாமல் இங்கே ஹைக்கூ வடிவம் பெறுகின்றது.
ஆணை படுக்க நிழலிருந்தும் மிளகு சுருட்ட இலையில்லை புளியமரம்.
என்ன ஒரு கொடுமை, புளியமரத்தின் புதிர் இது. படைப்புகளுக்குள் வெளிப்பட்ட இறைவனின் நகைச்சுவை உணர்வு இது.
இனினுமொரு விடுகதை இங்கே ஹைக்கூவாகின்றது.
கொக்கு நிற்க நிற்க வற்றிக்கொண்டே போகிறது குளம் எணர்ணைவிளக்கு.
ஹைக்கூ பெண்ணின் மனம் போல் ஆழமானது. குழந்தையின் கன்னம்போல் மிருதுவானது, சாக கடையானாலுமி சந்தனமானாலும் ஹைக்கூ வரிகளுக்குள் வேறு முகம் இல்லை, அதன் விரல்கள் நீட்டப்படுவது சாக்கடைக்கா? சந்தனத்துக்கா? என்று தர்க்கிக்கத் தேவையுமில்லை.
கற்றுக்கொள்ள இங்கு எதுவுமில்லை. மலையென்று மலைத்து நிற்பதல்ல நம் வேலை.
நத்தைகளாய் நகர்ந்து கொண்டே
இருங்கள். உச்சிகள் உங்களுக்கே.
நட்புடன்
உக்வளை ஆஷ்ரம்

Page 4
நவ நாகரீகத்தின் உச்சகட்டம் இந்த கொம்பியூட்டர், இண்டர்நெட் காலம் எனலாம்.
டைட்டான டிசேட் , டைட்டான ஜீன்ஸ் மறைக் கப் பட வேணி டிய பெண ணினி அங்கங்கள் அச் சொட் டாக நிழலாக பாதையில் செல் வோரை கிறங் கடித்து, கிளர்ச்சியுற வைக்கின்றன. இன மத பேதமின்றி சகல யுவதிகளும் இன்றைய நாகரீக மோகச் சிறையில். தத்தளித்து இன்பம் அடைகின்றனர்.
இஸ்லாமிய பெண்களின் மறைக்கப் ul (86u 6i gu LDTf Li 5 5 Li UU 19 8 6i அலங் காரமாக கழுத தைச் சுறி றி வளையமிடுகின்றன. இன்றைய இஸ்லாமிய யுவதிகள் எவ்வாறான அனாச்சாரமான உடைகளில் உலாவுகின்றார்கள் என்பதை டியூசன் வகுப்புகளிலும், பெரிய நகரங்களிலும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
பர்தா (ஹரிஜா பி ) இஸ் லாமி பெண னுரிமைக்கு இடப்பட்ட பெரிய சிறையா..? சுதந்திரம் இழந்த கூட்டுக் குருவிகளா இந்த இஸ்லாமிய பெண்கள். இவ்வாறான பல குற்றச் சாட்டுக் களை மேற்குலக நாடுகளும் மற்றும் சிந்தனா வாதிகளும் மேலும் இலக்கியவாதிகளும் பத்திரிகைகளும் குற்றம் சுமத்துகின்றனர்.
மேற்குலக நாடுகளோ, தங்களினி பொருட்களை
ப்ப்டுத்தும் வியாபார நேர்க்கோடு
அவற நுக கான கேள வ ய ல ன அதிகரிப் பதறி காகவும் இஸ ல | பயே பெண்மணிகளை தம் உற்பத்தி பொருள1ளை நுகர்வு செய்வதற்காகவும் மேற்போந்த குற்றச்சாட்டை இஸ்லாமிய சமூகத்தின் மீது சுமத்தி, எம் பெண் மணிகளை நாகரீக மோகவலையில் சிக்கவைத்து, தம் வியாபார அழகு சாதனங் களினி கேளி வியரினை அதிகரித்த வெற்றிக்களிப்பில் அவர்கள் நம் சமூகமோ இனி னும் மீள முடியாத பாதாளச் சிறையில்,
'பெண் என்பவள் தொடப்படும் போது தான் உணர்ச்சிவசப்படுகிறாள். ஆனால் ஆண, கணிகளால் அவதானிக்கும் போதே உணர்ச்சிவசப்படுகிறான்.' என்ற கூற்று விஞ்ஞானிகளால் ஆராய்ச்சிகள் மூலம் உறுதிசெய்யப்பட்ட உண்மையாகும்
மேற்சொன்ன கூற்றின் உண்மையை ஆழ நோக்கின், பெண்கள் ஆடவர்களின் முன் எவ்வளவு கணணியமாக ஆடை அணி நீ து அவ i களி ன பார்வைக் கிளர்ச்சியிலிருந்து தம்மை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பதை உணரக்கூடியதாக உள்ளது.
பெண்கள் சீரழிவதற்கு முதல் காரணம் அவர்களின் ஆடைகளாகும், அரை குறை ஆடைகள் அணிந்து சென்றிபெண்மணிகள் எத்தனை ஆயிரம் பேர் கடத்தப்பட்டு, கற்பிழந்தவர்களாக்கப்பட்டு இன்று தம்மு டலை விற்கும் விபசாரிகளாக்கப்பட்டிருப்பதை மேற்குலக நாடுகளிலும், மற்றும் நம்
ஊற்று துளி 8 ஒக்டோபர். டிசம்பற்o00
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நாட்டிலும் வரலாற்று ரீதியாகவும், பத்திரிகை வாயிலாகவும் நாம் அறியலாம்.
இன்று ஆடைக் குறைப்பு நவநாகரீகம், பெண்ணுரிமை என்று அதிகமாக பேசப்படும் நாடுகளிலும், சமூகங்களிலும்தான் பெண்கள்
சம்பந்தமான பிரச்சினைகள் அதிகமாக
உள் ளது எண் பதை எவரும் மறுக் க இயலாது. இஸ்லாமிய முறைப்படி தன் உடலை மறைத்து பர்தா அணிந்து வாழும் நாடுகளிலா பெணிகள் பிரச்சினைகள் அதிகரித்துள்ளது என்பதை நாம் ஒவ்வொருவரும் சிந்திக்க தவறக்கூடாது.
இஸ் லா மரிய வாழ் கி கை முறை மனிதர்களால் உருவாக்கப்பட்டதல்ல. படைத்த இறைவனால் உருவாக்கப்பட்ட ஒரு சிறப்புத் தன்மை வாய்ந்த வாழ்க்கை முறையாகும்.
மேற்குலக உற்பத்தியாளர்களும் நாடுகளும் தம் ஆடம்பரப் பொருட்களுக்கான புதிய சந்தைகளை வெற்றி கொள்ள வேண்டிய தேவை அவர்களுக்கு உள்ளது. இதனால் தான அவர் களு ககு பெண களின விசேட தி தனி  ைமகளும் அவர்களுடைய தலைமயர், அவர்களுடைய குர ல , அவர்களுடைய உடம்பு, அவர்களுடைய சுவைகள் அவர்களுடைய அனுபவம் , அவர்களுடைய பெளதீகத் தோற்றங்கள் எல்லாம் வெளிக்காட்ட வேண்டிய தேவைகள் ஏற்படுகின்றன. தங்களுடைய கழிவுப் பொருட்களை பிரசாரம் செய்வதற்கும் விற்பனை செய்வதற்கும் பெண் களின் தன்மைகள் தேவையாதலால் இவர்கள் பர்தாவுக்கெதிரான தம் கட்டவிழ்ப்புகளை பெண னுரிமை, பெண சுதந தர ம
ஊற்று துளி 5 ஒக்டோபர் - டிசம்பர் 2000
சம் பந்தமான
போன்றவற்றை காரணம் காட்டி, இஸ்லாமியப் பெண களின சந தனைகளை இறை உணர்வுகளை மழுங்கடித்து மூளைச் சலவை செய்து தம் ஆடம் பரப் பொருட்களை விற்பனை செய்யும் சந்தை வாய்ப்புக்காக பெண் சுதந்திரம் என்ற போலி நாடகத்தால் எம் சமூகப் பெண்களை கவர்ந்து, இன்று தமி மூலப் பொருட்களையும் அழகு சாதனங்களையும் எம் இளநங்கையரிடத்தில் அறிமுகம் செய்து வெற்றியும் கண்டுள்ளனர்.
இன்று நவநாகரீக ஆடையில் செல்லும் பல பெண்மணிகளின் உடல்களை எத்தனை ஆயிரம் விழிகள் காமக் கணிகளோடு அவதானித்து, அந்தக் கற்பனையாலே அவளை நர் வாண மாக க அவளை நினைவால் வார்தையால் கற்பனையில் கற்பழிக்கிறன.
அந்த பெண்ணின் அங்க அளவுகளை எடை போட்டு அவளை காணும்போதெல்லாம் இன் புறுகின்றன. நாகரீக ஆடை யென்று மெச்சியணியும் ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு நாளும் ஓராயிரம் இளைஞர்களால் கற்பனையால் களங்கப்படுகிறாள்.
இவ்வாறான கற்பனையால் களங்கம் ஏற்படாமல் இருக்கத் தான் இஸ் லாம் பெண்களுக்கு பர்தா என்ற பாதுகாப்பு ஆயுதத்தை வழங்கியுள்ளது.
இன்றைய கால கட்டத்தில் பல பெண்களால் பர்தா என்ற துய்மையான ஆடை போலியாக உபயோகப்படுத்தப்படுவது வேதனைக்குரியது, தனக்கு திருமண வீட்டிற்கு அணிந்து செல்ல நகைகள் கழுத்தில், காதில், கரங்களில் இல்லையா? உடனே பர்தா  ைவ (3 UT L G5 மறைத்துக் கொள்வது அல்லது ஒவ்வொரு காலகட்டத்திலும் பெஷனாகும் ஆடைகளை போல் சில காலம் பெஷனுக்காக பர்தா அணியப் படுகின்றது. இவையெல்லாம் எவ்வளவு தவறானவை, மார்க் கத்துக்கு முரணானவை, நம் சமூகத்துக்கும் பாதகம் தேடித் தரக் கூடிய செயல் என்பதை நம் நினைவில் நிறுத்திக்கொள்வது நல்லது.
O5

Page 5
பர்தா உங்களது குடும்ப வழியால் உங்களுக்கு கிடைத்தாக இருக்கலாம். இதனால் உங்கள் மீது திணிக்கப்பட்ட பெண்மையின் ப்லவீனங்களையும் நீங்கள் அதனுள்ளே சுமந்து செல்ல கூடும்,
மேலும் பர்தா என்பது உங்களது தகப் பனா லி , சகோரனால அலி லது கணவனால் அணியும் படி வற்புறுத்தப் பட்டிருக கலாம் . நங் களு மி அதனி உண்மையான பொறுப்பினை, நோக்கங்களை உணர்ந்துகொள்ள முயற்சி செய்யாமலும், உங்களை நீங்கள் சுத்திகரிக்காமலும், சீர் செய்யமாலும் இந்த உடையை உடுத்தப் பழகியிருக்கலாம்.
இந்த நிலைகளில் இஸ்லாமிய தனித்துவத்தை பேணுவதற்கு, இஸ்லாத்தை ஒரு வாழ்கை முறையாக பின்பற்றாதவரை, அதன் விசாலமான கொள்கையை கண்டு கொள ளா த வரை, உங்களுடைய நோக்கங்கள், விஷேட குணநலன்கள். இலட்சியங்கள் எப்படி ஈடேற முடியும்? போலியாக பர்தா ஆடைகளை அணிவதை விட்டு, இஸ்லாத்தை உணர்ந்து, உங்களை அதன் கொள்கையோடு இணைத்து கொண்டு மனத் தூய்மையோடு, விருப்போடு பர்தாவை அணிந்தால் அதன் தூய்மை, வாழ்வில் உங்களுக்கு வழிகாட்டும்.
பர்தா இஸ லாமிய பெண ணினி கற்புக்கும் , பக்திக்கும், பாதுகாப்பாக இடப்பட்ட கவசமாக இருக்கும் ஒரு ஆயுதமாக, வாழ்க்கை நெறியாக பர்தா ஆடையை நாம் பின்பற்றும் போதுதான் இவ்வாடை விருத்தியடைந்த ஒன்றாகவும், மு ன னேறி றகரமான தாகவும சரிய
உதாரணங்களை வழங்கக் கூடிய ஒரு
எப்பொழுது
கொள்கையாக மாற்றம் பெறவும் முடியும்.
பெண்களை பர்தா எனும் அங்கிக்குள் அடக்கி அவர்களின் சுதந்திரத்தை இஸ்லாம் பறிக் கணிறதா ? வேலை செய்யும் பெணிகளுக்கு பர்தா ஒரு சுமையா..? மேற்போந்த குற்றச்சாட்டுகளுடன், இன்னும் பலதரபட்ட மக்களாலும் பல குற்றச் சாட்டுக்கள் முன் வைக்கப்படுகின்றன.
பெண்கள் தங்களின் அங்கங்களை மறை த துக் கொள்ளும் வகையான கணிணியமான ஆடையைக் கொணி டு தங்களை மறைத்துக் கொள்ள வேணடு மென்று இஸ் லம் கட்டளையிடுகிறது. எப் பொருளி மறைதி து வைக்கப்படுகின்றதோ, அப்பொழுதே அது தமையான பார்வைகளிலரு நீ தும் , தாக்கங்களிலிருந்தும் பேணிப்பாதுகாக்கப் படுகின்றது.
மற்றும் , இஸ் லாம் பெணி களின் சுதந்திரத்தை பறிக்கவில்லை. இஸ்லாம் பெண்கள் பணியில் ஈடுபடுவதையோ, பொது வாகனங்களில் பிரயாணிப்பதையோ, பொது இடங்களுக்கு சமுகமளிப்பதையோ, சாலைகளில் தேவைக் காக செனிறு வருவதையோ ஒரு போதும் தடுக்கவில்லை. ஆனால் பிற ஆணிகளை சந்திக்கும் சாத்தியக் கூறு உணர்டு என்றிருக்கும் நரிலையிலும் , அவர்களால தனக்கு பாதுகாப்பில்லை என்று அவள் உணரும் சந்தர்ப்பங்களிலும் அவ்விடத்தை விட்டு செல லுவதற்கு மி அவர்களினி தய பார்வைகளில் இருந்து தன் பெண் மையை பாதுகாக்கும் பொருட் டு பர்தாவுடைய ஆடையிலும் தக்க துணையுடனும் செல்ல வேண்டும் என்று இஸ் லாம் கட்டளை யிடுகிறது.
மேலும் இஸ்லாமியப் பெண் மணிகள் பர்தா அணிந்து வியாபாரம் செய் ப வர்களாகவும், ஆசிரியைகளாக, எழுத்தா ளர்களாக, நிர்வாகஸ்தர்களாகவும், மருத்து வத் துறையிலும், மற்றும் பல பணிகளிலும் அரபுநாடுகளில் பர்தா அணிந்து கொண்டே
ஊற்று தளி 5 ஒக்டோபர் - டிசம்பர் 2000
 
 
 
 

ஈடுபடுகன் றார்களே...! இது எவ்வாறு அவதானிகளால சுமை என று கூற முடிகிறது? மற்றும் கிறிஸ்தவ கன்னி யாஸ் திரிகள் வெண்ணிற பர்தா ஆடையை அணிந்து கொண்டு ஆயுள் முழுவதும் அ ைன த து சேவைகளை யுமே செய்கிறார்களே. இவர்களுக்கு எப்படி இந்த உடை வசதியாக அமைகிறது?
பர்தா முறைகேடான பார்வைக ளிலிருந்தும் காமக் கணிகளிலிருந்தும் பெண்களை கண்ணியப்படுத்தும் ஓர் ஆயுதம். அது தவறான எண ன முடைய வரால அணியப்படும் போது கறை பட்டாலும் பெரும பா ன மை யான முஸ லம பெண் மணிகளின் தூய்மையான ஆடையே பர்தா, ஒரு சிலரைக்கொண்டு ஒரு சமூகத்தை எடை போடலாமா? பலர் சொல்வதைக் கேட்டு நாம் கேள்வி எழுப்புவதை விட்டு, அது சம்பந்தமாக அம் மார்க்கத்தில் என்ன
சொல்லியுள்ளது என்று ஆராய்ந்து விட்டு
கேளி வரி கே ட பது உண  ைம யான தெளிவுகளை நமக்கு பாடம் புகட்டுமல்லவா.
நிலாப்பித்தன்
(பர்தா பறி றிய பல சந்தேகங்கள் உங்களுக்கும் இருக்கலாம். அவ்வாறான சந்தேகங்களையும். இக்கட்டுரை சம்பந்தமான உங்களது விமர்சனங்களையும் கற்க கசடற பகுத வரவேறி கனி றது. உங்களது கேள்விகளுக்கு உரியவர்களை நாடி பதில் அளிக்கப்படும்.)
ஊற்றுதளி5 ஒக்டோபர் - டிசம்பர் 2000
நீங்க படுக் கற Bed ல ஒரு யான படுத்துக்கிட்டிருந்தா என்ன பண்ணனும்?.
வேற எங்கயாவது போய்ப் படுத்துக்குங்க
ஒரு யான ஒரு நுளம்ப ரொம்ப காலமா காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிச்சாம். First Night 6) uT601 Gig 658 (5 fait 601 Mistake கால நுளம் பு செத துப் போச்சாம். அப்படி யான என்னதான் பண்ணிச் சி?. Mosquito Coil LJgỗg, 6ìlở đì3 3 Tư).
ஒரு யானைக்கும் எறும் புக்கும் சண்ட வச்சிருச்சாம். கோவத்துல யான எறும்பு தொரத்திக்கிட்டே ஓடிச்சாம். எறும்பு ஓடி ஓடிப் போய் ஒரு கோவிலுக்குள்ள ஒளிஞ்சிறுச் சாம். தேடிக்கிட்டே வந்த யான உள்ள போய்ப் பார்க் காமலே எறும்பு கோவிலுக்குள்ளதான் இருக்கு ண்ணு கண்டுபுடிச்சிருச்சாம். எப்படி?
கோவில் வாசல்ல எறும்போட செறுப்பு இருந்துச் சாம்.

Page 6
கிழக்கு மாகாணத்தின் அரசியல் சுடர் இன்று அணைந்து விட்டதா..? பல்லாயிரம் இளைஞர்களின் வாழ்வுக்கு ஒளியேற்றிய அகல். தன் சமூகத்தை முகவரியுள்ள சமூகமாக உயர்த்தி அவர்களுக்கான பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் , அரசியல் தலைவர்களிடம் எவருக்கும் தலை வணங்காது உண்மையாக எதிர்த்த குரல். அந்த ஆர்ப்பரித்த அலை. இன்று நிரந்தர உறக்கத்தில்.
இலங்கையின் இஸ்லாமிய அரசியல் வரலாற்றில் மறைந்த மர்ஹம் அஷ்ரப் ஒரு காவியம் படைத்த நாமம். அவரின் மறைவின் காரணமாக, சின்னச் சின்ன பிரதேசங்களில் உள ள கடை கள முதல பெரு ம நகரத த லு ள ள கடை கள வரை அடைக் கப்பட்டன. ஒவ்வொரு இஸ்லாமிய ஊர்களிலும் ஜும்மா பள்ளிவாயல் களில் ஜனாஸா தொழுகை தொழுவிக்கப்பட்டது.
ஒவ்வொரு தாயுள்ளமும். தன் மகன்
இறந்து விட்ட சோக வெள்ளத்தில் , இஸ்லாமிய இளைஞர்-யுவதிகள் மத்தியில் இச் செய்தி பொய்யாக இருக்கக் கூடாதா என்ற ஏக்கம் உள்ளத்திலும்,
விழிகளில் துயரம் தாளாத கணிணிர் கோடுகளோடும் தம் அன்றாட கடமைகளை மறந்து துன்ப வெள்ளத்தில் அலைமோதினர்.
இன்று வரை அவரை பல உள்ளங்கள் நினைவு கூருகின்றன. சில உள்ளங்கள் அவரை வசைபாடுகின்றன. மர்ஹ*ம் அஷ்ரப் நம்மைப்போல் ஒரு சாதாரண மனிதர் தான்.
அவர் தவறு இழைத்திருக்கலாம், ஏனெனில் மனிதனி மற த ககு மி , தவறுக குமி உட் பட் ட வன என பதை நாமி மறுப்பதற்கில்லை. அவ்வகையில் அஷ்ரப் அவர்களின் தனிப்பட்ட சில தவறுகளை நோக்காமல் அவர் சமூகத்துக்கும், கிழக்கு மாகாணத்துக்கும் செய்த அபிவிருத்தி
திட்டங்களையும் முன்னேற்றங்களையும்
சிந்தித்து வியப்பது நம் கடமையல்லவா?
32 ஆணி டுகளுக்கு மேலாக தனி இருபெரும் கட்சிகளின் ஆட்சிக் காலத்தில் கிழக்கு மாகாணம் காணாத அபிவிருத்தியை மர் ஹ*ம் அஷரப் ஆறு வருடங்களில் நிகழ்த்திக் காட்டினார் என்பது வியக்கத்தகும் உணர்மையல்லவா?
இன்றும் பல கட்சிகளில நம் இஸ்லாமிய அரசியல்வாதிகள் இருக்கி றார்கள். அவர்கள் எம் சமூகத்திற்கும் நம் ஊர்களுக்கும் என்ன செய்துள்ளார்கள்? தன் கட்சிக்கும் தன் அரசியல் தலைமைக்குமதான் நிறையவே செய்துள்ளார்கள். சமூகம் என்று நோக்கும் போது அவர்களின் சேவை பூச்சியம் என்பதை அவதானிக்கலாம்.
 
 
 
 
 
 
 
 
 
 

ஜாதி, இன மத பேதமின்றி மர்ஹும் அஷ்ரப் அவர்கள் யாவருக்கும் ஒரு
உணமையான அரசில வாதியாக, ஒரு
தோழனாக , நல ல நண பனாக திகழ்ந்துள்ளார்கள் என்பதை அவர்களின் சேவையினூடாக மக்களின் வார்த்தைகள் உணர்த்துகின்றன.
மர்ஹம் அஷ்ரபின் மறைவுக்குப் பின் முஸ்லீம் காங்கிரஸ் இனி நிலைத் து நிற்காது, ஆட்டம் கண்டு சரிந்து விடும் என்று பேரினவாதகள் கனவு கணி டார்கள் . அதற்கேற்றாற் போல நம் சமூகமும் ஒற்மையின்றி பல கருத்து முரண்பாடுகளை வளர்த்து, பிரிந்து பல கட்சிகளில் தன் சுயத்தையும் சமூகத்தின் சுயத்தையும் தன் சுயநலனுக்காக அடகுவைத்து, முஸ்லீம் வாக்குகளை சின்னாபின்னமாக்குவதில்ேயே குறியாக இருந்தது.
இதில் கிழக்கு மாகாண முஸ்லீம் வாக்காளர்கள், கல்விமான்கள், மார்க்க அறிஞர்கள் உஷாராக இருந்ததால் நடந்து முடிந்த தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் வெற்றி பெற்றது.
69 (5 வே  ைள தோல வரி அடைந்திருப்பின் இம் மக்களின் வாழ்வு இருளடைந்திருக்கலாம், முன்னேற்றங்கள். அபிவிருத்திகள் தடைப்பட்டு, மற்றைய கட்சி அரசியல தலைவர்களால அரசியல பழிவாங்கல்களுக்கு இச்சமூகம், இப்பிர தேசம் உள்ளாகியிருக்கலாம்.
முன்னைய இருபெரும் கட்சிகளின் ஆட்சி காலத்தில் மூடி மறைக்கப்பட்ட கழக கு மாகாணமாக மணி டு ம உருப்பொறாமல், இருள் சூழ்ந்த பிரதேசமாக மாறியிருக கலா மி , குளி ளநரிகளினி கூக்குரலில். அரசியல் சாக்கடைக்குள் முழ்கி தத்தளிக்கும் ஒரு இனமாக. மீண்டும் முகவரி இழந்து முகவரி தேடும் உயிர்களாக தம் உரிமைகளை, எண்ணங்களை சொல்ல நாதியற்றவர்களாக நாம் மாறியிருக்கலாம்.
கருத்துக் களால் , கட்சிகளால , ஊற்று துளி 5 ஒக்டோபர் - டிசம்பர் 2000
தனிப்பட்ட கோப தாபங்களால் பிரிந்தவர்கள்.
நம் இனத்தின் உரிமைக்காக ஒன்றிணைந்து நம் வாக்குகளை இட்டு காங்கிரஸ் என்ற
மரத்தை வாட விடாமல் நீருற்றி, பாதுகாப்பாக வேலியமைத்து மீண்டும் ஒரு விருட்சமாக பேரினவாத அரசியலுக்கு சவாலாக உயிர்தெழ வைத்ததால்.
மர் ஹ? மீ அஷ ரபின கனவை நனவாக்கி, கிழக்கு மாகாணத்தின் அரசியல் சக்தியை கால காலமாக போற்றப்படும் பொன் எழுத்துக்களால் வரையப்படும் ஒரு புதிய வரலாறாக உயிர்ப்பித்திருக்கின்றோம்.
மீண்டும் புதுத்தெம்போடு உயிர் பெற்று, மீணி டும் உருத் தெரியாமல் அழிந்து போய வரிடு மி என று பேரா சை கணி டுகொண்டிருந்த பேரினவாதிகளினி கனவுகளை தவிடு பொடியாக்கியது கிழக்கு மாகாணத்தின் முஸ்லீம் காங்கிரஸின் வெற்றியும் , மற்றைய பிரதேசங்களின் வெற்றிகளும், சிறுபான்மை மக்களுக்கு எவ்வளவோ தேர்தல் பிரச்சினைகளை ஏற்படுத்தி சிறுபான்மையினரின் வெற்றி வாய்ப்பினை குலைக்க முயன்ற பல அரசியல் வாதிகளின் சூழ்ச்சிகளையும் முறியடித்த இந்த வெற்றி, சிறுபான்மை யினரின ஒற று மையரின பல த தை அவர்களுக்கு உணரவைத்தது.
(பொடிப் பையன்)

Page 7
தமிழ்ச் சிறுகதை நுாறாண்டு வரலாறுடையது எனர் பார்கள் . முதல் சிறுகதையை எழுதியது வ.வே.சு.ஐயரா, பாரதியா எனும் தர்க்கம் மிக மெல்லிய குரலில், முனகல் கள் போல, இன்னும் ஆங்காங்கே கேட்கக் கிடைக்கிறது. அதெல்லாம் இல்லை, கதை என்பது முதல தமிழனினி கபால தி தரினுளி உறைந்து கிடந்ததொன்றுதான் எனவும, சங் கப் பாடல களி லுமி நா ட டார் கதைகளிலும் எழுதப்படாத வடிவங் களிலும் இறைந்து கிடந்ததுதான் எனவும, எதுவுமே புதிது கிடையாது எனவும் ஆய்வாளர்கள் பல்கலைக் கழக அரங்கு களில் பொழிகிறார்கள். ஆனால் படைப்பு பழங் கணக்குப் பார்த்துக் கொண்டிருப் பதில்லை. முட்டை முந்தியதா, பெட்டை முந்தியதா என்பதுவும் அதன் கவலை இல்லை.
நுாறான டு காலச் சிறுகதைப் பரப்பை எணணிப் பார்க் கறபோது ஏராளமான முகங்கள் மாறி மாறித தென்படுகின்றன. 1950-க்கு முன்பு சற்று வாரி நத தளத தல கடைக கால ஊன்றியவர் எனவும், இந்த ஐம்பதாண்டுக் காலத்தில் அழித்துவிடாதவர்கள் எனவும் தமிழ்ச் சிறுகதைக்கு ஒரு இயக்கம் கொடு த த வர் கள என வும நாம புதுமைப்பித்தனி , மெளனி, கு.ப.ரா, கு, அழகாரி சாமரி என இன னு ம பாராட்டுகிறோம். அவர்களில் மெளனி தனது சிறுகதைகளில் மூன்றில் ஒரு பங்கை 1950-க்கு பிறகுதான் எழுதினார் அலலது வெளியரிட் டார் தொடக கக காலக கலைஞர்களில ஒருவராகவே இன்றும் கருதப்படுகிறார்.
1950-க்கு முன்பு எழுதிய மிகச் சிலருக்கும் விரிவான தளங்கள் இருந்தன 10
தமிழகத்தில் சிறுகதை, 1950 முதல் 2000 வரை நாஞ்சில் நாடன்
என றாலும்
விடுதலைப் சமூக விடுதலைத் தளம், தனிமனித விடுதலைத் தளம் என இலட்சியவாதமும் ரொமானி டிசிசமும் கதைப் பொருளாயின.
ஐ ம ப்துகளுக குப ஆவேசமாய் நிகழ்ந்தது ஜெயகாந்தன்
என்று குறிப் பரிட்டேனி போராட்டத் தளம் ,
பரிறகு
பிரவேசம் "ஐம்பது அறுபதுகளில் லட்சக்கணக்கில் வெளியாகும் வெகுஜனப் பத்திரிகைகளில் இலக்கியத் தரமான கதைகள் இலலை என கற வசை என னால கழந த து' என றுமி 'தமிழ்ச்சிறுகதை உலகில் இந்த அரை நுாற்றாண டுக் காலத்தில் உலகின் ی۔ தரத்துக்கு உகந்த கதைகளை எழுதித் தமிழையும் தன் கைகளையும் உயர்த்திக் கொணி ட ஒரு சில எழுதி தாளர்கள் உண்டு. அவர்களின் நானும் ஒருவன்' என்றும் நம்பியவர் அவர்,
ஆனால் தமிழ்ச் சிறுகதைப் பரப்பில் ஜெயகாந்தனின் இடம் எது என்பது இன்று வெகுவாக விவாதத்துக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது. 1967-ல் க.நா.சு. எழுதினார் - 'நான் சாதாரணமாக நல்ல சிறுகதைகள் எழுதியவர்கள் என்று ஒரு எட்டு ஒன்பது பேரைக் குறிப்பிட்டுச் சொல்வது வழக்கம். என்னளவில் எண் இலக்கிய ரசனைக்கு எட்டுகிற அளவில் இந்த ஒன்பது பேரில்
ஊற்று துளி 5 ஒக்டோபர் - டிசம்பர் 2000
 
 
 
 
 

மெளனி, கு.ப.ரா, ந. பரிச் சமூர்த தரி , த ஜான கரா மணி , லா, ச. ராமா மிர்தம் , கு.அழகரி சாமி, ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி - ஒரு இரண்டு மூன்று பெயர்களை விமர்சகனாக நான் அடிக்கத் துணியாவிட்டாலும் நிர்த்தாட் சண்யமாக காலம் அடித்துவிடும்.'
க.நா.சு. வின் பட்டியலில் காலம் அடித்துவிட்ட பெயர்கள் என்ன என்பதை சற்று தயவு தாட்சண்யமின்றி யோசித்துப் பார்ப்பது வாசகர்களுக்கு சுவாரசியமான அனுபவமாக இருக்கும். காலம் அடித்துப் போடுவது என பது, அந த சி சறுகதையா சரிரியர்கள சரித தரப் பெருவெள்ளத்தில் கரைந்து போய்விட்டனர் என்பதுவா?
புதுமைப் பரிதி தனி ,
Hall of Fame என்பது போல தமிழ்ச் சிறுகதைக் கு என்று இருக்குமான்ாலி , அவர் களி புகைப் படங் களர் அ த ல தொங்கவிடப்பட்டு கெளரவிக்கப்படலாம். ஆனால் இன்றைய வாசிப்புக்கு எந்த உயிர்ப்புமற் ற் கதைகளாக அவர்களின் சிறுகதைகள் போய்விட்டன என்று பொருள் கொள்ளலாம்.
வணிக இதழ்கள் பரபரப்பாகத் துாக்கிப் பிடித்த எழுத்துக்கள் பின்பு சுவடற்றுப் போய்விட்ட வரலாறு நம் முன் கிடக்கிறது. ஆனால் ஜெயகாந்தண் மட்டும் அதிலொரு விதிவிலக்கு என்று சொல்லத் தோனி நுகறது. வணிக இதழி களில குறிப் பரிடும படி எழுதய வர்களைப் பிரதிநிதிப்படுத்துபவர் என்றும் சொல்லலாம்.
சமூக த துட ன நேரடியான எதிர்கொள்ளலை நிகழ்த்திய சிறுகதையாளர் புதுமைப்பித்தன் என்றால் அந்த வகையில் ஜெயகாந்தனுக்குள்ளும் ஒரு தொடர்ச்சி p—6хії (6.
தமிழி சி சறு கதையுலக ல வெகுஜன எழுத்து என்று தீவிர இலக்கிய எழுத்துப்பிரிவு கல்கி - புதுமைப்பித்தனின் தொடர் சி சரியாக, ஐ ம ப துகளில தீவிரப்பட்டுவிட்டது என்பது காணக் கி டைக்கிறது. வணிக எழுத்துக் குவியலில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாதிரி ஜெயகாந்தன் ஊற்று தளி 5 ஒக்டோபர் - டிசம்பர் 2000
எனில் , அவர் கால கட்டத்திலேயே எழுதவந்த சுத்த இலக்கிய முயற்சிகளுக்கு எடுத்துக்காட்டாக சுந்தர ராமசாமி.
"ஒரு கதம்ப ரசனையை இலக்கிய ரசனையாக தமிழ் மக்கள் ஏற்றுக்கொணி டிருக்கிறார்கள்" என்பது ஜெயகாந்தன் கூற்று. ஆனால த. ஜான கராமனி கூறுவது, 'கலைக்கும் நுணி தொழிலுக்கும் உள்ள வேற்றுமை அது. சிலசமயம் நான் செய்கிற நுணி தொழிலைக் கண்டு கலைவடிவம் என்று தப்பாகப் புரிந்துகொண்டு விடுபவர்கள் உண்டு.”
இந்த வணிக எழுத்து, இலக்கிய எழுத்து என்ற இருவகைப்பட்ட மனோபாவம் ஐம்பதுகளுக்கு முன்பும் இருந்தது, பின்பும் தொடர்ந்தது. “சிந்தனையைக் கிளறுகிற எழுத்தைப் படித்துப் பழகாத தமிழ் வாசகர்கள் பத்திரிகைக் கதைகள் மட்டும் படித்துப் பழகியவர்கள்' என்று க.நா.சு. குறிப்பிடுவது வணிக மனோபாவத்தைத் தான். தமிழ்ச் சிறுகதைக் கு வணிகப் பத தரிகை ஆலைகளின் பங்களிப்பு என்கையில் ஜெய காந்தனை விட்டால் வேறு பெயர் நினைவுக்கு வரவில்லை. ஆனால் கல்கி என்றும் தேவன் என்றும் விந் தனி என்றும் சொல்லிக் கொள்பவர்கள் இருப்பார்கள்,
தமிழில் சிற்றிதழ்கள் மட்டும்தான் சிறுகதையின் தளம் பிரிவாகவும் இயங்க
தொடர்ந து வழி ககு த துத த ந து கொணடிருக்கின்றன. கடந்த ஐம்பது ஆண்டுகளில், ஐம்பதுகளுக்குப் பிறகும்
சிறுகதை இயக்கத்தை அவமானப்படுத்தவும் குழிதோண்டிப் புதைக்கவும் வணிக இதழ்கள் தீவிரமாக முனைந்தபோது, சிற்றிதழ்கள்தாம் இயக்கத்தைக் காப்பாற்றப் போராடியவை.
ஐ ம ப துக ளு க குப் பிறகு பொதுவுடைமைத் தத்துவத்தின் தாக்கம் சிறுகதைகளுக்குள்ளும் தீவிரமாக ஊடுரு வியது. வறுமை, வேலையில லாத திண்டாட்டம், சாதிக்கொடுமை அவற்றின் சகல நிறங்களுடனும் தீட்டப் பட்டது. யதார் த த வாதமி எனவுமி சோசலிச யார் தி தவாதம் எனவும் முறி போக்கு இலக்கியவாதிகள் என்றும் தத்துவச்
சார்புடைய எழுத்துக்கள் என்றும் பீறிட்டுக்

Page 8
கிளம்பின. அறுபது எழுபதுகளில், ஒரு பக்கம் புதுமைப்பித்தனின் தொடர்ச்சியான நம்பிக்கை வறட்சி எனும் பொதுச் சரடும் தனி மனித ஆற்றாமையும் உள் மனச் சிக் கல்களின் தாக்கமும் கொண்டவர்கள். இன்னொரு பக்கம் தமது கொள்கைகளைப் பிரகடனம் செய்துகொணி டு புரட்சியால் உலகைப் புரட்டிவிட முடியும் என்ற நம்பிக்கை கொண்ட முறி போக குவாத கள இரு வருமே யதார்த்தவாதத்ததைக் கையாண்டார்கள் எனினும் முற்போக்குவாதிகள் அதனைத் தமது மாபெரும் ஆயுதமாகக் கருதிப் படைக்கத் துவங்கினர்.
அரசியல் சார்புடைய, தத்துவச் சார்புடைய, கொள்கைப் பிரகடனங்கள் கொண்ட யதார்த்தவாத எழுத்துக்களுக்கு
தனிக் கவர்ச்சியும் வரவேற்பும் இருந்தன.
பல கலைக கழக வளாக ங் களரி ன அறிஞர்களாகக் கருதிக் கொண்டவர்களிடம் செல்வாக்கும் பெற்றன.
பொதுவுடமைச் சாயல் கொண்ட சிறுகதையாசிரியர்களில் யதார்த்தவாத பாணி மூலம சறு கதையை வலுவாக க கையாண்டவர்கள் பூமணி, பா.ஜெயப்பிரகாசம் போன்றவர்கள். ஆனால் பொதுவுடமைச் சார்பு இல்லாமல் அற்புதமான சிறுகதைகள் படைத்த வண்ணநிலவனையும் கிருஷ்ணன் நம்பியையும் இங்கு கருத்தில் கொள்
வேண்டும்.
வேதசகாயகுமார் தனது கட்டுரை ஒன்றில், 'பொதுவுடமை நடப்பியல் போக்கு தனக் கென மகதி தான கலைஞர்கள் யாரையும் தோற்றுவிக்கவில்லை என்ற உண்மையையும் நாம் கணக்கில் கொண்டாக வேண்டும்” என்கிறார். இதை யதார்த்தவாதம் மீதானதோர் குற்றச் சாட்டு என்று நான் எடுத்துக்கொள்ளவில்லை. ”யதார்த்தப்போக்கு புதுமைப்பித்தனிடம் அதிகம் இருந்ததால் நான் அவரால கவரப் பட் டேனி ' என பது சுந்தரராமசாமியின் வாக்குமூலம்,
பிரகடனங்கள் ஏதும் செய்து கொள்ளாத யதார்த்தவாதச் சிறுகதைகள்
எழுதிய ஜி.நாகராஜன், கி.ராஜந்ாராயணன் ஆகயோ ருக கு ப ைட பி  ைப யு மி தத்துவத்தையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்கத் தெரிந்திருந்தது. தத்துவம் படைப்பை எந்த எல்லை வரைக்கும் பாதிக்கலாம், படைப்பாளி அதை எதுவரை அனுமதிக்கலாம் என்பதையெல்லாம் விரிவாக யோசித்துப் பார்க்க வேண்டும். இராசேந்திர சோழனின் சிறுகதைகளை ஆழமான தத துவப் பார்வையும் கலை நேர்த்தியும் கொண்ட எழுத்துக்கு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.
த ஜான கராமனைப் போல சிறுகதைகளில் நுணுக்கமும் கலையம்சமும் அகவய மான பார்வையும் கொணி ட ஆ. மாதவ னினி சரிறு கதைகள் கூட ஒருவகையில் யதார்த்தவாதப் பாணிதான். ஆனால் அவரிடம் பிரகடனங்கள் ஏதும் இல்லை. யதார்த்தவாதம் கொடிவீசிப் படர்ந்து கொண டிருந்த காலத் தல , வணி ண நிலவனுக்கும் பூமணிக்கும் சமகாலத்தவரான வண ன தாசனுடைய எழுத துக் களை யதார் த த வாத எழுதி துக் களி என று வரையறைப் படுத்துவதில் எனக்குத் தயக்கம் உணி டு.
மனித சோகமு ம 6 g. 6) (D விளைவிக்கும் சோகமும் பூமணியின் சிறுகதைகள் எனில் அன்பு வணிண தாசனுடைய பிரச்சினையாயிற்று. அன்பினால் மோசடி செய்கிறவர் என்ற அவர்மீதான விமர்சனக குறி றச் சாட் டு மிகவும் அபத்தமானது. அவருடைய சிறுகதைகளின் அடிப்படையையே தகர்ப்பது, நியாயமற்றது. சிறுகதைகளின் தன்மையை பூமணிக்குள்ளும் ஆ.மாதவனுக் குளி ஞமி வணிணநல வ னுக்குள்ளும் மாத்திரமே வகைப்படுத்திப் பொருத்திப் போட்டு விட முடியாது என்பதற்கு வணிணதாசன் நல்ல எடுத்துக் காட்டு,
முற்போக்குச் சிறுகதைகளின் இலக்கு என்ன என் பதில் சோசலிச யதார் த த வாத எழுதது க களை க கையாணி டவர்களுக்கு நல்ல தெளிவு இருந்தது உண்மை. யதார்த்தம் அதற்கு ஊற்று துளி 5 ஒக்டோபர் - டிசம்பர் 2000
 

மிகவும் பயன்பட்டது. அதனால் முற்போக்குச் சிறுகதை எழுதுபவர்கள் , யதார்த்தச் சிறுகதை எழுது கறவ ரெல் லாம் ஒரு குடையின் கீழும் ஒரு கொடியின் கீழும் வரவேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு மாக்சீயத் திறனாய்வாளர்களிடம் இருந்தது.
படைப்பாளி அனுபவங்கள் சார்ந்து இயங்குகிறவன். அதன் மீது தத்துவச் சாயம் ஏற்றுவது என்பது படைப் பின் இயற்கை ஒளியை மறைப்பதாகும் அனுபவங்கள் சார்ந்து கிடைக்கும் பார்வைகள் முக்கியம் என்று எனக்குத் தோன்றுகிறது.
எப்போதுமே கலைப்பார்வை ஒரு முகம் மட்டுமே கொண்டதல்ல. அதற்கு ஒரு முகம் மட்டுமே போதும் என்பதும் அது முற்போக்கு என்று நாம் கற்பிக்கும் முகமாகவே இருக்கவேண்டும் என்பதும் சரியான எதிர் பார்ப்பல்ல. முற்போக்கு என்பதைத் தீர்மானிப்பது யார்? அவ்விதம் தர்மானமி பெறாதோர் சறுகதை பிற்போக்கானதா? மார்க்சியத்தில் தீவிரமான பிடிப்புக் கொண்டவர் அம்பை. ஆனால் அவருடைய எநி த சி முற்போக்குப் பதாகையைப் பட்டொளி வீசிப் பறக்கச் செய்வது இல்லை அல்லவா?
'தத்துவத்தை விளக்குவதற்காக, அனுபவங்களைச் சுருக்கிப் பயன்படுத்தினால் அதன் மூலம் எந்திர ரீதியான இரண்டாம் பட்சமான படைப்புகள் தாம் உருவாகும். பெரும்பாலும் தமிழில் உருவாகி வருவது இந்த வகையான படைப்புகள்தாம்’ என்று சுந்தரராமசாமி குறிப்பிடுவதற்கு ஆதாரமான ஏராளமான சிறுகதையாளர்களைச் சொல்ல (փլգակմ),
யதார்த் தத்தில் எழுதினாலும் தத் துவக் கொடியின் கீழே நிழலுக்கு நரிற் காம ல , நமீ பரிக்கை இழப் பரினை எழுதுகிறவர்களை நச்சு இலக்கியம் படைக் கறவர்கள் , நகவு இலக்கியம் படைக்கிறவர்கள், அழுமூஞ்சிகள், சமூக விரோதிகள், அராஜகவாதிகள் என்றெல்லாம் பிரித்து நிறுத்திக் கசையடி கொடுத்த சக ஊற்று துளி 5 ஒக்டோபர் - டிசம்பர் 2000
சிறுகதையுமி
போதே,
படைப் பாளிகள் , திறனாய் வாளர்கள் இருந்தார்கள். ஆனால் நச்சு இலக்கியம் என்று முத்திரை குத்தப்பட்டவர்களைக் காலம் அழித்துவிடவும் இல்லை, முற்போக்கு
இலக்கியம் எழுதிய பலரைக் காலம்
காப்பாற்றி விடவும் இல்லை.
எம்.வி.வெங்கட்ராமும் லா.ச.ராமா மிர்தமும் அசோகமித்திரனும் சா.கந்தசாமியும் சுந்தரராமசாமியும் ஆமாதவனும் சார்வாகனும் ஜி.நாகராஜனும் ஆதவனும் தி.ஜானகிராமனும் கி.ராஜநாராயணனும் கிருஷ்ணன் நம்பியும் காலத்தின் கொடுங் காற்றில இன்னும் சருகாகிப் பறந்து போய்விடவில்லை.
யதார்த்தவாதம் நல்ல சிறுகதையும் த ருவ தறி கு முயறி சரி செய து கொண்டிருந்தபோது திராவிட இயக்கம் கலை இலக்கியத் துறைகளிலும் தனது கரங்களைப் பரத்தியது. மொழியை சலவைத்துTள் போட்டுத் துவைத்து நிறமி போக்க மணம்போக்கி திராவிடச் சாயம் ஏற்றிய படைப்புக்கள் வந்தன. இன்று சொல்லும் தரத்தில் ஒரு சிறுகதையாசிரியன் கூட நினைவுக்கு வரவில்லை என்பது அந்த இயக்கத்தின் இயலாமையைச் சுட்டும் அவலம்.
வாழ்ந்த மனிதனை அவமரியாதை செய்வதற்காக செதி த பரிணத தைச் செருப் பாலடிக்க வேணி டிய அவசியம் இல்லை. இழவு விசாரிக்கப் போகும்போது கூட தி தனது அடையாளங் களையும் அரிதா ரங் களையும மறந துவரிடாத அரசியல்வாதிகள் போல, வெறும் மொழி அலங்காரங்களை மட்டுமே நம்பிப் பிழைக்க முயன்று தோற்றுப் போனவை அவை,
யதார்த்தவாதக் கதைகள் தமது தீவிர வேகத்துடன் வந்து கொண்டிருந்த
அபுர்வமான கலை த தன்மைகளுடன் அசோகமித்திரனும் சுந்தர ராமிசாமியும் சா.கந்தசாமியும் சிறுகதைகள் படைத்தார்கள்,
(அடுத்த இதழில் தொடரும்)

Page 9
G 6
அணி ணா! இது சரியில்லை.
இவ்ளோ நேரம் நான் பாத்துட்டு இருக்குறன், இப் டி வந்து செனலை மாத்துறாயே’ கத்தினாள் நளினி. “போ. போ. இண்டக்கி பாகிஸ்தான் அடிக்குது, சக்தி டிவி எல்லாம் பார்க்கேலா போய் அம்மாவுக்கு உதவி செய்” தங்கையை அடக்கினான் நம் கதையின் நாயகன் நவீன்,
அவனொரு கிரிகட் பைத் தியம் , பை த தய மென றால பரித துமுறி றிய பைத் தியம் . சுவாரஸ்யமாக கிரிக் கட் பார்த்துகொணர் டிருந்த நவீனை அப்பா அழைத்தார்.
"டேய், நவீன் நீ இன்னும் ரெடியா கல்லையா?”
ʻʻ 6I (5i a5 Lj Lu IT (3UIT (30 Tud ?'' தொலைக் காட்சியை விட்டு கணிணை அசைக் காமலேயே கேட்டான்,
‘எங்க போறோமா? ஒனக்கு பொணி Luffé ab! Quôuoff Glgssö6060)60uss?
"ஆங். சொன்னாங்க அப்பா, ப்ளிஸ் நீங்களே போய் பார்த்துட்டு வந்துடுங்களே.' கெஞ்சும் குரலில் கேட்டான் நவீன்,
"டேய், பெண்பார்க்க போறது ஒனக்கு. ம். ம். சீக்கிரமா பொறப்படு, டைமாகுது.' அப்பா கூறிவிட்டு சென்று விட்டார். அரை மனதுடன் தொலைக் காட்சியை அணைத்து விட்டு உடை மாற்றச் சென்றான் நவீன்,
k k sk
நவீனுக்கு திருமணம் முடிந்து ஒரு வாரமாயிற்று. இரவு கடிகாரமுள் ஒன்பது முறை அடித்து ஓய்ந்தது. 'அம்மா
கணிவான குரலில் மருமகளை கேட்டார் நாகலிங்கம்.
'இல்ல மாமா, யாரோ ப்ரண்ட் வீட்ல செட்லைட்டில் கிரிக்கட் போகுதாம் பார்துட்டு வாரனுணர் டு சொல் லிட்டுப் போனார்.’ மென்மையான குரலில் பதிலளித்தாள் பூரணி.
'அவன் வர்ற நேரம் வரட்டும். நீ வந்து சாப்பிட்டுட்டு தூங்கு' மாமியார் கூற.
"இல்ல அத்த அவர் *TÜLTL(3m61.”
வந்ததுமே
பூரணி அவன் வந்துட்டானா?
'என்னமோம்மா, இவன் இப்படித்தான் கிரிகட் என்றால் உலகத்தையே மறந்து டுறான், இவன நம்பி கடையை ஒப்படைக் கவும் பயமா இருக்கு. அம்மா பூரணி. நீங்க ரெண்டுபேரும் தனிக்குடித்தனம் போனாத்தான் இவன் திருந்துவான். நீதான்ம்மா இவன
தருதி தனும் ' என்று தனி சுமையை மருமகளின் தலையில் ஏற்றி விட்டு பெருமூச்சு விட்டார் நாகலிங்கம்,
米米来
நவீன் தம்பதியினர் தனிக் குடித்தனம் வந்து ரெண்டு மாதங்கள் ஓடி விட்டன. நாகலிங்கம், "நாகலிங்கம் டெக்ஸ்டைல்ஸ்’ என்ற தன் கடையை மகனிடம் பொறுப்பு கொடுதது விட் டார். உணி மையரிலி , மருமகளை நம்பியே மகனிடம் கடையை ஒப்படைத்தார்.
“என்னங்க. என்னங்க. இன்னக்கி கடைக்கி போகலியா? இப்படி தூங்குறீங்க?"
ஆஹர் ஆ. பெரிய கொட்டாவியுடன் “எத்தன மணி ஆகுது?’ என்றான் நவீன்
'எட்டு மணியாகுது எழும் புங் க' கூறினாள் பூரணி, வேகவேகமாக எழுந்து குளியலறைக்குள் புகுந்தான் நவீன். நவீனின் இந்த செய்கையை பார்த்து மாறிவிட்டாரோ என வியந்தாள் பூரணி. உள்ளுக்குள் சிறிது
 
 

ஆனந் தத்துடன் காலை உணவு எடுத்து வைத்தாள். சிறிது நேரத்தில் வெளியே வந்த நவீன், "பூரணி கடைக்கு ஒரு கோல் எடு' என்றான் , 'ஏன்?' என்று மனதிற்குள் கேட்டவாறு தொலைபேசியை நோக்கிச் சென்றாள் பூரணி.
'ஹலோ, நாகலிங்கம் டெக்ஸ டைல்ஸ்’ எதிர் குரல் கூறியது.
"ஹலோ, மனேஜரா? கொஞ்சமிருங்க.
தொலைபேசியை கையிலெடுத்த நவீன் "ஹலோ, கணேஷ் மெச் இருக்கிறதால நான் இண்டக்கி கடக்கி வரமாட்டன் கணக்கு எழுதி வைங்க. நான் நாளைக்கி வந்து பார்க்கறன்' என்று கூறி தொலைபேசியை வைத்துவிட்டு சாப்பாட்டு மேசைக்கு வந்தான். பூரணி மனதிலி எழுந்த சினத்தை அடக்கி, உள்ளுக்குள் ஒரு திட்டம் தீட்டினாள்.
"என்னங்க! எத்தன மணிக்கு மெச் தொடங்குது?"
"ஏன் கேக்குற?”
"சொல்லுங்களே!’
'ஒன்பது மணிக்கு.'
'மெச் என றால உங்களுக்கு
அவ்வளவு ஆசையை' தனி பெரிய
விழிகளை விரித்து சிறுபிள்ளைபோல
ஊற்று துளி 8 ஒக்டோபர் - டிசம்பர் 2000
வினவினாள் பூரணி.
"என்ன அப்டி கேக்கிற? கிரிக்கெட் என்றால் எனக்கு பசி, தூக்கம் எல்லாமே
மறந்துரும். ஸ்கூலில் படிக்கும் போது, ஒரு
நாள் ஸ்கூலை கட் அடிச்சிட்டு கண்டில நடந்த கிரிகட்டை பார்க்கபோய் அப்பாகிட்ட அடிவாங்கினது இன்னும் நெனவிருக்கு” என்று தன் கிரிக்கட் ஆசையை பற்றி பெருமைடித்தான் நவீன்.
9.00 மணிக்கு நவீனை முத்திக்கொண்டு
பூரணியே தொலைக்காட்சியை போட்டாள். புதுமையாக அவளை பார்த்த நவீன்,
"என்ன நீயும் கிரிக்கட் பார்க்கிறாயா?” என்று கேட்டான்.
"இவ்ளவு ஆசையா பார்க் கிறிங்களே அந்த கிரிக்கெட்டில் அப்படி என்னதான் இருக்கென்ற பார்ப்போமே' என்று கூறி அவள் அமரும் போது தொலைபேசி கணு கணுத தது. தொலைபே சரியை கையிலெடுத்த பூரணி, "என்னங்க உங்களுக்குத்தான் கடையில இருந்து' என்றாள்.
O
‘' என னணி னு கேளு நவீன சொன்னான்.
'ஹலோ, என ன வரிஷயம சொல்லுங்க',
"மேடம் , ஒருத்தர் ஒரு புடவை
பிஸினஸ விஷயமா முதலாளியோட பேசனுமாம்' என்றது எதிர் குரல். இதை பூரணி நவீனிடம் கூற, அவன்
"நாளைக்கி வரச்சொல்லு' என்றான். சொல்லிவிட்டு தொலைக்காட்சிக்கு முன் வந்தமர்ந்தாள் பூரணி.
பகல் ஒரு மணி நவீனுக்கு பசி எடுத்தது. "பூரணி, சாப்பாடு எடுத்து வை. பசிக்கிறது' என்றான்.
'என்னங்க, புரியாம பேசறிங் க. இவ்வளவு நேரம் ஒங்களப்போலதானே நானும்
* கிரிக்கட் பார்த்துட்டிருக்கிறேன். நான் சாப்பாடு
ஆக்கல' என்றாள்
J60sf.
15

Page 10
“என்ன பூரணி இது. இப்படி உக்காந்து டீ வரி பார் த து கொணி டிருநதா யார் சமைக்கிறது? டி.வி பார்க்கிறண்டா வீட்டு வேலைகள் செய்றதில்லையா?’ என்று சினந்து கூறினான் நவீன்.
"அப்ப, பொம்பள நான் டீவி பார்க்க கூடாது. வீட்டு வேலை செய்யனும், ஆனா, நீங்க ஒரு கிரிக்கெட்மெச் பார்க்க தொழிலுக்கு போகாம டிவி முன்னால உட் கார்ந்து விடுவீங்க அது பிழையில்லை இல்லையா? என்னங்க இது நியாயம்’ என்று ஏளனமாக கேட்டாள் பூரணி.
நவணினி த லை ய ல யாரோ சம்மட் டியால் அடிப்பது போலிருந்தது. இருநதாலுமி , புரணி சொல வதை ஒப்புக்கொள்ள முடியாமல், "அப்படின்னா, கிரிக்கெட்டே பார்க்க கூடாது என்கிறாயா?' என்று கேட்டான்.
‘நான் அப்படி சொல்லல்லையே? கிரிக்கட் பாருங்க ஆனா, இப்படி கடைக்கு போகாமல் பார்க் கிறீங்களே, இப் படிப் பார்க்காதீங்க என்கிறேன்.' அப்போது மறுபடி தொலைபேசி சிணுங்கியது
“ஹலோ?”
'அம்மா, நான் மனேஜர் பேசறேன்’
"செல்லுங்க” இது பூரணி
"அநியாயமா ஒரு பெரிய பிஸினஸ்ஸை மிஸ் பண்ணிட்டோம்,'
"ஏன் என்ன நடந்தது?’ பதறியபடி கேட்டாள் பூரணி.
'முதலாளி நாளக்கி வரச் சொன்ன அந்த ஆள் நம்ம எதிர்கடையில அந்த பிஸினஸை முடிச்சிட்டாரு. அந்த பிஸினஸ் மூலமா நமக்கு வெளிநாட்டுக்கு துணிகளை எக்ஸ் போட் பண்ணுற வாய்ப்பிருந்திச் சு. அதுவும், இல்லாம போயிடுச்சு, முதலாளகிட்ட 16
சொல்லுங்க.” என்று ஆதங்கத்துடன் கூறிய மனேஜர் தொலைபேசியை துண்டித்தார். பூரணி விபரத்தை சொன்னதும் , நவீனின் தலையில் இன்னுமொரு இடி விழுந்தது.
இந்த வாய்ப்பை நழுவ விட விரும்பாத பூரணி.
“பார்த்திங்களா? கடைக்கு போகாததால் எவ்வளவு பெரிய நஷ்டம் ஏற்பட்டிருச்சி. காக கெட் டுங் கறது வரிளையாடு ற வங் களுககு த தா ன தொழல பார்க்கிறவங்களுக்கில்ல. சிலர் இதை புரிஞ்சி கிரிக்கெட்ட ஒரு பொழுது போக்காகத்தான் பார்க்கிறாங்க. ஆனா, உங்களை போல சிலர் தொழிலுக்குப் போகாம, வேலையெல்லாம் விட்டுட்டு இந்த கிரிகட்ல மூழ்கிறாங்க. இதால கிடைக்கிற நஷ்டம் எத்தனையோ இருக்குது. ஆனா ஒரு நன்மைய உங்களால சொல்ல முடியுமா?’’ ஒரு குட்டிப் பிரசங்கத்திற்கு பின் பூரணி கேட்ட கேள்விக்கு நவீனால் பதில் சொல்ல முடியவில்லை. ஆனால், அவள் கூறிய ஒவ வொன நு மி அவ ன ம ன த ல பசுமரத்தாணியாய் பதிந்திருந்தது.
米米米
“ஹலோ, முதலாளி நான் மனேஜர் பேசறேன். இன்று கிரிக்கட் இருக்கிறதால கடைக்கு வரமாட்டீங்க தானே?’ என்று அலுப்புடன் கேட்டது எதிர்குரல்.
'இல் ல கணேஷ் நான் கடைக்கு வரத்தான் ரெடியாகுறேன் .' கூறிவிட்டு
தொலைபேசியை துணி டித்து திரும்பிய
நவீனின் முன்னால்,
கணிகள் பனிக்க புன்னகை பூத்த
வண்ணம் நின்றிருந்தாள் பூரணி.
2 க்குவளை
ரிஸ்னா ரஹீம்
ஊற்று துளி 5 ஒக்டோபர் - டிசம்பர் 2000
 
 
 
 

இன றைய ஒவ வொரு
மக்களினதும் பிரிக்கமுடியாத ஒரு தொற்று நோயாக பரவியுள்ள வியாதி இந்த பிரதேசவாதமாகும். இவன் அங்கிருந்து வந்தவன். அவன் இங்கிருந்து வந்தவன் என்ற பிரிவினைத் தீச்சொற்கள் நம் ஒவ வொருவர் உள்ளத த லரிரு நீ தும் வெளிவருவதை நாம் அவதானிக்கலாம்.
ஒடுக் கப்பட்ட தன் சமூகத்துக்கு, மக்களுக்கு உரிமை கேட்டு போராடும் விடுதலைப் புலிகள் கூட ஒரு மலையக சகோதரனை ‘மலை நாட்டான்' என்று அன்னியவனாக கருதும் ஒரு மனப்பான்மை நிலையே உள்ளது. அதே போல கிழக்கு மாகாணத்தில் அரசியல் பேரவையாக காட்சிதரும் முஸ்லீம் காங் கிரஸினி (அஷ்ரப் பரிணி முறைவுக் குப் பிணி ) தலைமைத்துவத்துக்கு இந்த பிரதேச வாதம் எவ்வளவு தூரம் செல்வாக்கு செலுத்தும் காரணியாக மாறியுள்ளது என்பது அரசியல் அவதானிகளால் கணிப்பிடப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண முஸ்லீம்களால் உருவாக்கப்பட்ட கட்சியின் தலைவராக மத்திய மாகாணத்தில் ஒருவர் வருவதா..? அதாவது காத்திருந்தவன் பொண்டாட்டியை நேற்று வந்தவன் கொண்டு செல்வதா. என்ற மனநிலை அங்குள்ள மக்களின் குரலாக, வெப்பக் காற்றாக. தீச்சுடராக ஒவ்வொரு மனங்களிலும் பரவியுள்ளது.
ஈமானி கொணி ட ஒவ்வொரு மு மனு மி மறி றைய அடியானுக கு சகோதரனாவான் என நபி(ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள் என்று இஸ்லாமியர் நாம் சிந்திக்கும் போது எப்படி கிழக்கு மாகாண முஸ்லீம்களால் இந்த பிரதேச வாதம் தோற்றம் பெறுகின்றது?
த  ைல  ைமத துவ த து க கு ம . புகழுக்கும், சுயநலத்துக்கும் நாம் அடிமை யானால் நிச்சயம் முஸ்லீம் காங்கிரஸின் மூலம் தனி சமூகத்துக்கு அளப்பரிய சேவையாற்றி பாரளுமன்றத்தில் தன் சமூகத்துக்கு, தன் மணி னுக்கு, மற்றும் இலங்கையில் பரந்து வாழும் முஸ்லீம் சமூகத்துக்கு எதிரான பல பிரச்சினைகளை
ஊற்று துளி 6 ஒக்டோபர் - டிசம்பர் 2000
சுமூகமாக தீர்த்து வைத்து அரசியல் சாணக்கியத்தில் தனக்கோர் இடத்தையும், இலங்கை அரசியல் வரலாற்றிலும் ஒவ்வொரு இஸ்லாமியர் மனதிலும் குடிகொண்ட மர்ஹ"ம் அஷ ர ப அவர்களின கனவு கள
இலட்சியங்கள் சிதைந்து விடும்.
இன்னும், பல பிரதேசங்களில் வாழுகின்ற முஸ்லீம் சமூகத்துக்கு ஒரு முஸ லமி அரசியல வாத ஒரு வரை ஒற்றுமையாக செயற்பட்டு பெற்றுக்கொள்ள இயலாமல் தவிக்கின்றமைக்கு முதற் காரணம் இந்த பிரதேசங்களும, மற்றும் தன் சுயநலங்களுக்கு சேவையாற்றும் குறுகிய மனப்பாங்கு கொண்ட சகோதரர்களுமாகும்.
இன்று நமது ஊர்களை உற்று நோக கனி பல சகோதரர்களி பல கட்சிகளுக்கு வேலை செய்து எம் மக்களின் வாக்குகளை பல திசைகளில் சிதற வைப்பதிலும், அதன்மூலம் தனக்கும் தன் குடும்பத்திற்கும் நன்மை ஏற்படுவதையே எதிர்பார்க்கின்றாரே ஒழிய, இதன் மூலம் தனி ஊருக்கு தன் சமூகத்துக்கு பல நன்மைகளை பெற்றுக் கொடுக்கமுடியும் என்று துார நோக்கு கொண்டு சிந்திக்கும் எம் சகோதரர்கள் குறைவாகவே உள்ளனர்.
சிந்திக் கதவறிய ஒரு சமூகமாக, சுயநலங்களுக் குமி தனி ஒரு வணினி நன்மைக்காக சமூகத்தை பலிகொடுக்கும் சகோதரர்களாக நாம் மாறிக் கொண்டிருக் கிறோம். இந்த பிரதேசவாதம், சுயநலம் மாற வேண்டும். தனக்காக அல்லாமல் சமூகத்தைப் பற்றிய தூர நோக்கோடும். தம் எதிர்கால சந்ததியினரின் ஒளிமயமான எதிர்கா லத்தையும் ஒரு சிறுபான்மை சமூகத்தின் விடிவையும் எண்ணி. ஒவ்வொரு முஸ்லிம் மக்களும், அரசியல் தலைவர்களும் மார்க்க அறிஞர்களும் சிந்தித்து செயல்பட வேண்டிய காலமிது.
பிரதேசவாதங்களை உடைத்தெறிந்து S6m)
லாமிய சகோதரத்துவத்தையும் - ஒற்றுமை யையும் நிலைநாட்ட முயற்சிப்போமாக.
விமர்ஷன்
* ብ7 :

Page 11
ଶ ଭର୍ସି
தோட்டத்தில் உட்கார்ந்திருந்த பெயரறியாப் பறவையை உனக்காக காகிதத்தில் பிடித்து வைக்க முயன்றேன் சொல்ல வந்ததற்கும் சொல்லில் வந்ததற்கும் நடுவில் பறந்து போயிருந்தது பறவை
"கணையாழி.
அம்மா அப்பாவிடம் அறிமுகப்படுத்த முதன் முதலாக என்னை நீ உனது வீட்டிற்கு அழைத்துச் சென்றிருந்தபோது வழக்கமான அம்மாக்களின் சந்தேகத்தையொத்த பரிமாறலுக்கு நடுவே. 'எப்போதும் இவன் உன் மருமகனாக முடியாது ஏனெனில இவன் என் நிச்சயிக்கப்பட்ட நண்பன்' என்ற உன் குரல் இப்போதும் கேட்கிறது எனக்குள்
-நட்புக்காலம்
நீலக்காலையில் சீக்கிரமே நான் எழுந்து விட்டேன்
எனக்கு முன்னால்
எழுந்து விட்டது என் காதல்
வைகறையின் வாசலிலிருந்து
வேட்டையாடப்ப்ட்டு, இறந்து கொண்டிருந்த பிராணி
பாபாகோ மலையில்
என்னைப் பார்த்தது
என் காதலின் கணிகளால்
-தொலைபேசிக்கண்ணிர்.
அதிசயமாய் ஒரு குழந்தையின் தலையையுடைய ரோஜாவை கொய்து சூடுவாரோ யாரேனும் தன் சட்டைப் பொத்தானில்
-தாமரை.
சிறுகதை நுாலை வெளியிட்டு வைத்தார்
தொடர் கதையாளர் தலமை வகித்தார்
குறுங் கதையாளரும் கூடியிருந்தார்
மணிக் கதையாளர் முன்னால் அமர்ந்தார்
பெருங் கதையாளர்
நன்றியுரைத்தார்
கதை எழுதுபவரைத் தான் காணவே இல்லை
 
 

நம் நேற்றைய சந்திப்பு கடந்த பின்
உன்னை எந்த நிமிடமும் எதிர்கொள்ள நான் தயாராகவே இருக்கிறேன்.
நீயும் நானும் வரையறைகளைக் கடக்க வேண்டும்-நான் உன் விவேகத்தோடும் நீ என் வீரியத்தோடும்
எனினும்
எண் கருவறையை நிறைப்பது உன் குறியல்ல என்ற புரிதலோடு
6T
ஒன்றாய்க் கடப்போம் நீ என் விவேகத்தோடும் நான் உன் வீரியத்தோடும்.
'மூன்றாவது மனிதன்.
' as ୱ୍ (8 ଘ୪) !
இனி நாம்
தாஜ்மஹாலில் சந்திக்க வேண்டாம் ஏனெனில்
இங்கே ஒரு பணக்கார மன்னன் ஏழைகளின் காதலை ஏளனம் செய்திருக்கிறான்'
-கேள்விகளால் ஒரு வேள்வி.
இந்த வானவில் மனிதனின் மகத்தான முயற்சிகளைப் பிரதிபலிக்கிறது இதைச் சிந்தித்துப் பார்!
ஊற்று துளி 5 ஒக்டோபர்-டிசம்பர் 2000
பிரதிபலிக்கும் வர்ண ஜொலிப்பில்தான் நம் வாழ்க்கை அடங்கியிருக்கிறது என்பதை நீ தெளிவாகப் புரிந்துக்கொள்வாய்
"பூப்படைந்த சப்தம்
‘இனி நான் வாழ்வேன். வார்த்தை விதைகளைத் துTவி விட்டேன் இனி எனக்கு மரணமில்லை’. . . . .
.பிர்தெளசி.
'அவன் ஒரு பட்டு வேட்டி பற்றிய கனவில் இருந்த போது கட்டியிருந்த கோவணமும் 356TGAJT L LJL Lg5”.
*வைரமுத்து
'வரங்களே
சாபங்களானால்
இங்கே
தவங்கள் எதற்காக?”
"அப்துல்ரஹற்மான்
“முதன் முதலாகக் கொடை கொடுக்க விரும்பியவன் கர்ணன் வீட்டுக் கதவைத் தட்டியது மாதிரி பூங்கொடிக்கே நான் பூ வாங்கி வந்தேனா?”
-Iரா.
சிறகு விரித்து விதையொன்று அலையும் முளைக்க ஒரு பிடி மணி தேடி
கவிக்கோ.

Page 12
鼠
கொஞ்சம் சிந்தித்துப்
அன்றைய பொழுது நான் ஓய்வாக
இருந்தேன். எனவே, சாய்வு நாற்காலியில் அமர்ந் திருந்தேன். அந்நேரம் எனக் குத் தெரிந்த மூன்று மாணவர்கள் வந்தார்கள்.
"சார், ஒரு விஷயம் பேச வேண்டும் நேரம் இருக்குமா?’ என்று கேட்டனர். 'ஏனப்பா, உங்களுக்கெல்லாம் அட்வைஸ்
பண்ணத்தானே நான் இருக்கிறேன். என்ன.
என்ன” என்றேன்.
ஏபிவிகோமஸ்
'சார், எங்கள் பரீட்சைகள் அடுத்த மாதம் தொடங்குகிறதுதானே? அதான் பயமா இருக்கு சார்.' என்று இழுத்தார்கள்.
'ஏனப்பா பயப்படவேண்டும். முதல் ல படிக்கிறதை நீங்கள் பொழுதுபோக்காக எடுத்துக்கொள்ளுங்கள், பொழுது போக்கு என்றால் என்ன செய்வீர்கள்? ரொம்ப "இன்டரஸ்ட்டா செய்வீர்கள், அப்படியென்றால் படித்தலையும் இன்ரஸ்ட்டா, பொழுது போக்கா
எடுத்துக் கொள்ளக் கூடாது? ஒரு கிரிக்கெட்
மெட்ச் என்றால் விடிய விடிய ப்ரக்டிஸ் பண்ணுவீர்கள், பொழுது போக்காக உள்ள ஒரு டான்ஸ், டிரோயிங் என்றால் எவ்வளவு சுவாரஸ்யமாக செய்வீர்கள்? இதையும் அப்படியே எடுத்துக் கொள்ளுங்கள்' என்றேன் , (பெற்றோர்களே நீங்களும் பாருங்கள் நான் சொல்வதுதான் சரியானது என்பது இல்லை. ஆனால், நாற்பத்தி இரண்டு ஆண்டுகள் படிப்பித்தவன், மாணவர்களுடன் பழகினவன் பேசுகிறேன். ஆம் அனுபவம் பேசுகிறது.)
பரீட்சைக்குப் படிக்கும் மாணவர்களே, உங்களுக்காக சில குறிப்புகள் தருகிறேன். ஏனெனில் ஆங்கிலத்தில் "Pupils are pupils' 67 Gol L T if ds Gif. 'LDT 601 Glst 3, aff கண்மணிகள் என்று பொருள்படும். ஆம். நீங்கள் என் கண்ணின் மணிகள்,
1. பரீட்சைக்கு ஏற்ற, பொருத்தமான விதத்தில்
தயார் செய்தல் வேண்டும். உதாரணத்துக்குப் பாருங்கள். அறிஞர் ஐன்ஸ் டீன் கூட,
பெளதீகவியலில் கொஞ்சங் கூட பிடிக்காமல்
பள ள க கூட பாட  ைசகளில தேர் சி சரிய  ைட ந தருக க முடியாது. ஒப்புக்கொள்கிறீர்கள்தானே? ஆமாம். நீங்கள் எவ்வளவுதான் புத்திக்கூர்மை கொண்டவராய் இருந்தாலும், திட்டமிடப்பட்ட, கட்டுப்பாடான, ஒழுங்கு முறையிலமைந்த பாடம் படித்தல் என்பது மிக மிகத் தேவை. ஒரு திட்டமிடல், சாதாரணமாக சொல்வதானால் ஒரு நேர சூசி
தேவை. இத்தனை மணிக்கு உட்காருவேன்
என்று மனதில் கொள்ளுங்கள். நேர சூசி எழுதப்பட்டுத் தான் இருக்க வேணடும் என்பது இல்லை.
நாளை நாளை என்று நாளைக் கடத்தாமல், பரீட்சை என்று அறிந்த நாள் முதலே படிக்கத் தொடங்கி விடுங்கள். ஒரு நாளைக்கு இரண்டு மூன்று மணி நேரம் போதுமானது. ஒரேயடியாய் ஒருமணி நேரம் உட் கார்ந்து விடாதீர்கள். இடையிடையே வேறு ஏதாவது செய்யுங்கள்.
2. பரீட்சையின் உண்மையான தாற்பரியத்தை உணர்ந்து, அறிந்து கொள்ளுங்கள். ஆமாம். நீங்கள் குறிப்பிட்ட பரீட்சையை ஏன் எழுதப் போகிறீர்கள் என்று சற்று நேரம் நேர்மையாக சிநீ தரித துப் பாருங்கள் . அதறி காக, பரீட் சைகளைப் பற்றி எண்ணி எண்ணி பயப்பட வேண்டாம்.
3. மனவுறுதி, மனங்கலங்காமை, எதையும் தாங்கும் இதயம் போன்ற நற்குணங்களை
Dumčiump 1 sorf 5 9äkilurur - pasubur 2000
 
 
 
 
 
 

வளர்த்துக் கொள்ள வேண்டும். பரீட்சைக்கு படிக்கிறவர்களுக்கும், தோற்றப் போகிற வர்களுக்கும் மனக் கட்டுப்பாடு, சலனமற்ற மனச் சமநிலை, போன்ற குணங்கள் தேவை, மனத்தையும், உடலையும் ஓய்வு நிலையில் வைத்துக் கொள்வது மிகமிக முக்கியம்.
4. தோல்வி மனப்பான்மை தோன்றாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது உங்கள் கடமை. எதையும் எ தர்மறையாக எண்ணாதீர்கள். உடன்பாட்டு எண்ணமே நமது மனதல எழவேணி டு மி , எந்தவொரு செயற்பாட்டின் வெற்றிக்கும் தோல் விக்கும் மனமே காரணம். எனவே, ‘வெற்றி நமதே என்ற எண்ணத்துடனேயே செயற்படுங்கள். நண்பன் தோல்வியடைந்து விட்டான் எனவே, நானும் தோல்வியடைந்து விடுவேன் என்று எண்ணவேணி டாம், முயற்சி திருவினை யாக்கும் என்று எண்ணங் கொள்ளுங்கள். தோல்வி மனப் பாணிமை கொணி டோர் பேச்சுக்கு கொடுக்க வேண்டாம்.
5. மன ஓய்வும் உடல் ஓய்வும் மகத்தானவை என்று மனங்கொள்ளுங்கள். சிந்தித்து சிந்தித்து மனஞ்சிதையாதீர்கள். பயப்பீதியால்
பரிதவித தடாதீர்கள் எப்பொழுதும் பாட சையைப் Lu i g எண ன மனங் கலங்காதர்கள் . ஆழ்ந்த மூச்சு
விட்டுக் கொண்டே இறைவனைப் பற்றி சிந்தியுங்கள். மனத்தையும், உடலையும், உள ளத தல எழும உடன பாட டு எண்ணங்களால் நிரப்பி ஓய்வாக, தளர்வான நிலையில வைத்துக் கொள்ளுங்கள் . கணிகளை மூடி, மனத்தில் நல்லெணி ணங்களை வரவழைத்து சிறிது நேரம் தியானிப்பது நல்லது, நல்ல பலன்தரும்.
6. சத்துள்ள உணவை உணர்ணுங்கள். ஆனால், சத்து வேண்டி மருந்து மாத்திரை நாடாதீர்கள். வழமையான உணவையும், p. 600T 6 முறையை யு ம LD IT J D வேண்டியதில்லை. சிலர் நித்திரையைக் குறைத்து, கோப்பி தேனீரை பெருக்கி, மாத்திரைகளை விழுங்கி பரீட் சைகளுக்கு தயாராவார்கள். இது வேலையற்ற வேலை, அவ சரியமே இல லை, மதுவோ, புகைபிடித்தலோ, மாத்திரைகளோ, எந்த விதத்திலும் உதவப் போவதில்லை என்பதை நன்கு பதித்துக் கொள்ளுங்கள். விட்டமின் மாத்திரைகள் வேண்டும் என்றால் ஊட்டத்தை கூட்டுவதற்கு உதவலாம். அவ்வளவுதான். ஊற்று துளி 5 ஒக்டோபர் - டிசம்பர் 2000
வைத்துக்கொள்ளவுழ், சீர்செய்துகொள்ளவும் ஏதாவ் போக கை மேற்கொள் விளையாட்டுகள் முதல் பாடல்கள் கேட்டல் வரை எதுவாகவும் இருக்கலாம். ஆனால் உடலையும் உள்ளத்தையும் உற்சாகப் படுத்தக் கூடியவையாய் அமையவேண்டும், கலக்கிக் கெடுப்பவையாய் இருக்கக் கூடாது. சிந்தித்து செயலாற்றுங்கள்.
8. பரீட்சைக்கான சட்டதிட்டங்களை அறிந்து தயாராகுங்கள். பரீட் சைகள் எவ்வாறு நடத்தப்படுகின்றன. அவைகள் எவை, எங்கே, எப்படி நடத்தப்படுகின்றன, எவ்வாறான வினாக்கள் கேட்கப்படுகின்றன, எப்படிக் கேட்கப்படுகின்றன. எழுத எவ்வளவு நேரம் தருவார்கள் போன்றவைகளை நன்கறிந்து நம்மை நாமே தயார் படுத்திக் கொள்வது மிகமிக முக்கியம்,
9. வினாத்தாள்களை அறிந்து, புரிந்து கொள்ளுதல் வேண்டும். பரீட்சைகளின் கேளிர் விதி தாளி கள் கடைக் குமாயினி அவைகளின் அமைப்பு, கேள்விகளின் எணினிக் கைகள் , எதிர்பார்க் கப்படும் பதில்களின் அளவு என்பனவற்றைப் பற்றி
ஏலவே தெரிந தருப் பரிணி மிகவும உபயோகமாய் இருக்கும் . எனவே, இவைகளைப் பார்த்துகொள்ளவும். இது
போலவே, பரீட் சை எழுதும் பொழுது வினாத்தாள்களைப் புரிந்து ஏற்ற பதில் அளித்தல் வேண்டும்.
10. இன்னும் முக்கியமான ஒன்று. பரீட்சைக்கு தயார் செய்யும் பொழுதும், பதில் எழுதும் பொழுதும் மனத்தளம்பல் இல்லாமல் பார்த்து கொள்ளல் வேண்டும்.
ஏதோ பத்து சிறு குறிப்புகள் இங்கு தரப்பட்டுள்ளன. இவைகளை விட உங்கள் அனுபவத்தில் பெற்ற, கண்ட எத்தனையோ நற்கருத்துகள் இருக்கலாம். அவைகளும் ஏற்றவை எனில் ஏற்றுக் கொள்ளுங்கள்,
‘வெற்றி நமதே' என்ற மேலான
உடன்பாட்டு எண்ணத்துடன் படித்து, பரீட்சை
எழுதி, தேர்ச்சி பெற்று வாழ்வில் வெற்றி
பெறுங்கள். W
“Lò. Take it easy", எனது நல்வாழ்த்துக்கள்.

Page 13
ஸ்னேகப் புன்னகை
அறிவுமதி
பெண்ணத்துப் பூச்சியின் இரட்டைச் சிறகுகளாய்ப் படபடத்துக் கொண்டிருந்த ஆண் பெண் வாழ்க்கை, வற்றிய ஆற்றின் சு டு மணல ல பரிள நீ து கடக குமி வெண் கிளிஞ்சல் ஓடுகளாய். இன்று!
உடல்களின் அதிர்வுகளில் இசைபிசகாமல் மிக இயல்பாய் வாழ்ந்த வாழ்க்கை தமிழ் வாழ்க்கை,
புறவேட்டையில் பகலும், அகவேட்டையில் இரவுமாய் வாழ்வைப் பிழிந்துபிழிந்து பருகிய காலம் குறிஞ்சிக் காலம், ஆண் பெண் . பெண் ஆண் எனும் சமஅளவில் பின்னப்பட்ட உயிர்ச் சங்கிலிகளாய் நீண்ட அவர்தம் வாழ்வே இயல்பு வாழ்வு.
செடிகள், கொடிகள், பறவைகள், மரங்கள், ஓடைகள், அருவிகள், கூழாங்கற்கள், மழை, குளிர், நெருப்பு, ஆடுகள், மாடுகள் என இயற்கையின் பிடி தளராமல் ஆணும் பெண னுமாய் ப் புல் லாங் குழலுக் குளி முறு க கே றரி நுழைந து இசையாய வெளியேறிய முல்லைக் காலத் தோடு முற்றுப்பெற்றது உயிரின் இயற்கை.
மருதத்தில் தொடங்கிற்று அடிமை வாழ்வு. அரசு. பேரரசு எனும் மனிதவேட்டை நாளி களினி போர்ப் புழு தரிகளிளுடே தொலைந்தது ஆணிபெண் நிகர்நிலை.
ஆளுமைத்திமிர் பிடித்துக் கொழுப்பேறி, அடக்குதல் . அகலப்படுத்துதல் எனும் வெறிபிடித்துக் கிளம்பிய ஆணி மை. இயற்கைகளை வேட்டையாடத் தொடங்கிய நேரத்தில முற்றுப்பெற்றது பெண்மையின்
i JD ,
விலங்கு வேட் டையரிலிருந்து மனித வேட் டைக்கு மாறிய மனினர்களை. 'மூளைவேட்டை’ வெற்றிகண்ட சூழலில் தூய்மை இழந்தது நம் தொன்மம்.
பெண் கட்டளைக் களித்துறை என்றானது இங்குதான். பெண்ணின் மூளைப்படிவுகளில் குவிந்துகிடந்த கேள்விகள் யாவற்றையும் துளியும் மிச்சமின்றித் துடைத்துப் போட்டது #oż
நகரம் கருத துருவாக க மையமாய் மாறத்தொடங்கிய சூழலில் . பெண் அந்தப் புரச் சுவர்களுக்குள் முடங்கினாள். அதிலிருந்து எத்தனை காலமாயிற்று! பெண். தனது சிந்தனைகளில் பேசி! தனக்காகத்தான் மூச்சிழுத்து! தண்ணீர்ச் சிறகுதட்டி நீச்சலிட வாய்த்ததோ அவளுக்கான நாட்கள் ! ஆடைகளும் அணிகலன்களும் சுமக்க முடியாமல் அசிங்கப்பட்டது அவளின் அம்மணம், காலம் புரள்கிறது.
பெணி ஆணி எனக் கிழிந்துகிடக்கும் கவிதைத் தாளை ஒருசேர ஒட்டிவைத்துப் பார்க் க. படிக் க. இயல பு நிகழ் சம்மதிக்கிறது.
காமம் கிளறி வணிகம் செய்யத் துணியும்
உலகமயமாதலுக் கூடேயும் நட்பு. நம் தொன் மத்தின் மிச்சமாய் வளர்கிறது. குறிப்பாக ஆணிபெண் நட்பு, உடல்களின் முரணி இணைவில் தாம் உயிர்த்தொடர்ச்சி. ஆனாலும் காமமே. காதலே அல்ல வாழ்வின் தொடர்ச்சி.
வடிந்த ஆற்றின் நொய் மணலில் தோண்டிய ஊற்றுக் குழியில். கலங்கலத்தணிணிரை இரைத்து முடித்தபின் ஊறும் தெளிந்த தணிணிராய் நிறைந்து தளும்புகிறது நட்பு. தளும்பும் நட்பில் வானம் ஊற்றிக் குடிக்கிற பக்குவம் தூண்டவே. இந்த நட்புக்காலம்!
இயல்பாய். மிக இயல்பாய். திருவிழாவின் பேரிரைச்சலுக்கு நடுவே கேட்டு மகிழும் நாட்டுப்புறப் பாடலாய் வாய்த்திருக்கிறது இந்த நட்பு.
புன்செய்க் காடுகள் நெடுக நம் பாட்டன் மார்களும் பாட் டிமார்களும் வாழ் நீத வாழ்க்கைதான் இது. புதிதொன்றுமில்லை. பள எரி களி லுமி கல லுTாரிகளிளு மி அலுவலகங்களிலும் பயணங்களிலுமாய் மறுபடியும் வாய்த்திருக்கிறது அந்த வாழ்கை.
ஆண் பெண் எனும் வேட்டைவெறி ஒதுக்கி. நட்புப்பண்பாட்டிற்கு முதன்மைதந்து வருகிற. நட்பின் நூற்றாண்டு. உனக்கு ஸ்னேகமாய் ஒரு புன்னகை.
-நட்புக்காலம்
ஊற்று துளி 8 ஒக்டோபர் - டிசம்பர் 2000
 
 

ஊற்றதுளி 5 ஒக்டோபர் - டிசம்பர் 2000
ళ్ల్క NEJPOČETIRÀ O ܚܡܠ 片
O \
}}్కస్టీస్కీ ULU
நடைபெற்ற இடம் - அவுஸ்திரெலியா,
நியுசிலாந்து
இறுதிப் போட்டியில் கலந்துகொண்ட அணிகள் பாகிஸ்தான்-இங்கிலாந்து
வெற்றிபெற்ற அணி. பாகிஸ்தான் 22 ஓட்டங்களால்.
இறுதிப் போட்டியின் ஓட்ட விபரம் (மெல்போன்) பாகிஸ்தான் 249/6 (50) இங்கிலாந்து 227 (49.2).
தொடரில் அதிக ஒட்டம் பெற்ற அணி இலங்கை 313/7(50) சிம்பாபேக்கெதிராக
இத்தொடரில் குறைந்த ஓட்டம் பெற்ற அணி பாகிஸ்தான் 74 இங்கிலாந்துக்கெதிராக
தொடரில் ஒரு போட்டியில் தனிநபர் பெற்ற அதிகூடிய ஓட்டம் - 119* ரமீஸ் ராஜா (பாகிஸ்தான்) நியுசிலாந்துக்கெதிராக
இத்தொடரில் சிறந்த பந்து வீச்சு மெய்ரிக் பிரிங்கள் 4/11(தென்னாபிரிக்கா) மே.இ.தீவுகளுக்கெதிராக W^.
தொடரில் கூடிய ஓட்டம் பெற்ற வீரர் மார்ட்டின் குரோ (நியுசிலாந்து) 456
தொடரில் அதிக விக்கட்டுக்களை கைப்பற்றிய பந்துவீச்சாளர் வசீம் அக்ரம் (பாகிஸ்தான்) 18
தொடரில் சதம் அடித்த வீரர்கள்
* ரமீஸ் ராஜா (பாகிஸ்தான்) 19*
நியுசிலாந்துக்கெதிராக
* என்டி பிளவர் (சிம்பாபே), 115*
இலங்கைக்கெதிராக,
* தயாரிப்பு: அக்ரம்
Wilhil: [al}|
* அமீர் சொஹைல் (பாகிஸ்தான்) 14
சிம்பாபேக்கெதிராக, * கில் சீமன்ஸ் (மே.இ.தீவுகள்) 110
இலங்கைக்கெதிராக, 5. * ரமீஸ் ராஜா (பாகிஸ்தான்) 102*
மே.இ.தீவுகளுக்கெதிராக, * மார்ட்டின் குரோ (நியுசிலாந்து) 100*
அவுஸ்திரெலியாவுக்கெதிராக, * டேவிட் பூண் (அவுஸ்திரெலியா) 100
நியுசிலாந்துக்கெதிராக * டேவிட் பூன் (அவுஸ்திரெலியா) 100
மே.இ.தீவுகளுக்கெதிராக
இத்தொடரில் ஒரு ஓவருக்கு கூடிய ஓட்டம் கொடுத்த பந்து வீச்சாளர் ஏ.பி.குயிபர் (தென்னாபிரிக்கா) ஒவருக்கு 18ஓட்டங்கள் நியுசிலாந்துக்கெதிராக
இத்தொடரில் குறைந்த ஓட்டம் கொடுத்த பந்து வீச்சாளர் டி.ஏ.ரிவி (இங்கிலாந்து) 5-3-1-3 பாகிஸ்தானுக்கெதிராக
இறுதிப் போட்டியின் શ્રt.t- நாயகன் வசீம் அக்ரம் (பாகிஸ்தான்)

Page 14
"பொறுக்கி"
தினமும்
விடியலை எழுப்பிவிட்டுத்தான் நான்
உறங்கினேன்.
பயிற்சி புத்தகத்தின் பாதியிலும் - மற்ற மீதியிலும் - அவளைப் பாட்டாக்கி வைத்திருந்தேன்.
மணிக்கணக்கில் தனித்திருந்து அவள் பெயரை அலங்காரம் செய்ததில் சின்ன ஒவியனாய் ஜென்மம் எடுத்தேன்.
அவள்
பாதத்தடம் அழியுமென்று பாதையோரம் நடக்காமல்
@(5 புண்ணகை தவறிப் போகுமென்று கணஇமைகூட சிமிட்டாமல் கவனமாயிருந்தேன்.
@(5
கடிதம் எழுதும் முயற்சியில் - என் நடு விரலும் பேனாவும் நணர்பர்களானதில்
பெருமிதமும் கொணர்டேன்.
நாள் பார்த்து -- சுப நேரம் பார்த்து.
நல்ல சகுனமும் பார்த்து. அவள் கைகளிலே - என்
காதலைக்
கொடுத்தபோது.
அவள் தந்த பதிலையே தலைப்பாக்கி - இந்தக் கவிதையும் எழுதினேன்.
உக்குவளை ஆஷ்ரம்
வரம்பு மீறிய வாழ்க்கை
துடுப்பில்லாத படகு தூணில்லாத வீடு! உயிரில்லாத உடல்! பயிரில்லாத வயல்! நீரில்லாத நிலம்!
எம்.எச்.எப்.பளப்லியா கல்ஹின்னை,
கணிணிர் தேசம்
கதி கலங்கியிருக்கும் நம் கணினிர் தேசத்தில். இரந்த கங்கைகள் பிறப்பெடுத்து ஓடுகிறதே பார்த்தாயா.?
துப்பாக்கிச் சூட்டின் ஓசையும்
ஊற்று துளி 5 ஒக்டோபர் - டிசம்பர் 2000
 

குண்டு வெடிப்பின் ஓசையும் காதிற்கு கேட்டு சலித்த திருமண வீட்டில் பட்டாசுக்கள் போல்.
நாட்டிற்காக உயிரை மாய்த்த தேசிய வீரர்கள் மீண்டும் ஒரு முறை கற்சிலையாய் இரவு பகலாய் கணி விழித்து நிற்பதை பார்த்தாயா..?
நகரமெங்கும் அழகான கட்டிடங்களுடன் ஆங்காங்கே சிதைந்த கல்லறைகளை பார்க்கையில்
எண் கணர்களை முட்கள் தைப்பது போல்.
நான் பிறக்கும்
முன் தேசம் இப்படித் தான் இருக்கும் என அறிந்திருப்பின் தாயின் கருவரையில் எனக்கோர் கல்லறையைக் கட்டியிருப்பேன்
உக்குவளை கவிப்பிரியை சம்சியா இஸ்மாயில்
ஊற்று துளி 5 ஒக்டோபர் - டிசம்பர் 2000
ஒத்துழைக்கத் தான்மதுப்பாரி
ஒற்றுமைதான் வேண்டு
பற்று கொண்டே இனத்தின் மீதே பாசங்கொள்ளத் தான் வெறுப்பார் சற்றே நீரே சிந்திப்பீரே சால்புடனே வாழ வேண்டில் கற்று நலமே ஏற்றங் கண்டால் காலம் நம்மை வாழ வைக்கும்
மற்றவர்கள் பேச்சுக்காக வாய்பிளக்க வேணர்டாம் கணிடிர் கற்று நீரே கருத்தாய் இருந்தால் கணிணியமாய் நடந்து கொண்டால் மற்றவர்கள் வாழ்வுக்காக மனமுவந்து சேவை செய்தால்
போற்றுபவர் போற்றுவார்கள்
பொண்மனத்துச் செம்மலாவீர்
உயர்வு தாழ்வு பார்க்கவேணடாம் உணர்மையண்பே தேவை கணிடிர் அயர்வு இன்றி அகம் திறந்து அடுத்தவர்க்காய் உழைப்பீர் நீரே வியர்வை சிந்தி உழைக்கும் மக்கள் வித்தை பலவும் கற்றுமேலும், நிறைவு கொண்ட மனத்தினோடு நெடிது வாழ வழிகள் செய்வீர்
ஏ.பி.வி.கோமளப்
25

Page 15
னெம் கறுத்துக் கொண்டிருந்தது. முழக்க ஒலி வானைப் பிளந்து மழைக்கான அறிகுறி நெருங்கிக் கொண்டிருந்தது. "புள்ள
வரக்காமுறை ஜூ வைரியா
உடலில் ஒன்றும், கொடியில் ஒன்றுமாக ஆக இரண்டிேதுணி தானே! அதன் அருமை ஏழ்மையில் வாழும் மனிசனுக்கு மட்டும் தான் விளங்கும்.
வெளியில் கிடந்த உரலை குசினிக்குள் உருட்டி வந்த ரிழ்வான் அதில் அமர்ந்து கொண்டபடி ரிஸ்னா ஊற்றிக்கொண்டிருக்கும் தேனிருக்காகக் காத்துக்கொண்டிருந்தான். ‘ரிஸ்னா. 'எனக்கு இப்ப்த்தான் மனசு சந்தோசமாயிருக்குது." ა».
"எதைச் சொல்றீங்க?" ரிஸ்னா கேட்டுக் கொண்டு தேனிரை நீட்டினாள். அதை வாங்கியபடி "நம்ம வயல் நிலத்துல பல வருஷமா சென்ரி அடிச்சிருந்த இராணுவம் நேத் துல இருந்து எழும்பியாச்சே. இனி வயல் செய்யலாம் தானே. அத நினச் சுத் தான் சந்தோசப்படுற்ன்" என்றபடி தேனீரை ஒரு வாய் குடித்துக் கொண்டர்ன்'
“என்ன ரிஸ்னா தேயிலச் சாறில இனிப்பயே காண்ல?’ ரிஸ்னாவைப் பார்த்தான். டி . . .
"சீனிக்கு காசு எங்கிருக்கு.? அவ்வளவுதான் கிடந்தது. இத பாருங்க
சல்மாவும் ஸ்கொலசிப் சோதனயில பாஸ் பண்ணிட்டாள். அதக் கொண்டு டவுன்ல ஒரு பெரிய ஸ்கூல்ல சேத்திட்டோமெண்டா என்னங்க..? ரிஸ்னா ஆவலுடன் கூற.
“சேர்க்கப் பணம் தேவைப்பட்ாமல்
போயிட்டாலும் அந்தச் சாப்பாடு. இந்த
வகுப்பு, புத்தகமெண்டு எக்கச்சக்கமா. செலவாகுமே! அதுக்கு எங்க போறது. ஏழைகள் நம்மால முடியுமா?"
"இதப்பாருங்க நமக்கு இருக்கிறது ஒரே பொண்ணு. அதுவும் நம்மளோட இங்கிருந்து கஷ்டப்படவேணா. நீங்க சொன்னபடி நம்மட வயல இந்த முறை செஞ்சா நல்ல காசு வருமே அதைக்கொண்டு படிப்பிக்கலாமே” தீர்வொன்றைச் சட்டெனக்கூறிமுடித்தாள் ரிஸ்னா,
"அதப்பத்தி மறுபடி யோசிப்பம். மண் வெட்டி எடு, வயல்ல இருக்கிற பத்தைகள் வெளியாக்கிட்டு வாறன் மழையும் நிண்ட மாதிரிக்கிடக்கு." என்ற படி தலையில் ஒரு துவாய் துணி டைக் கட்டிக் கொண்டு மண்டிவெட்டியுடன் குடிசையை விட்டு வெளியேறினான். கடவுளே இந்தக்கானில நல்ல விளைச்சல் கிடைக்க நீதானப்பா வழி காட்டனும் என மனசுக்குள் எண்ணிக் கொண்டு வலது காலைத் தூக்கி பூமியில் வைத்தான். அடுத்த காலை நிலத்தில் ஊன்ற விதி சம்மதிக்கவில்லை.
(45ம் பக்கம் பார்க்க)
fessidomo, sisi 5 Qě5BL-IL - pribir. 2ooo
 
 
 
 

விலையை பேசிடும் இந்த உலகில் இந்த 9 andfall IË இண்சொல் பேசிடு நீ.
ཁ་ * s A-A . பகட்டாய் வாழ்ந்திடும் இந்த உலகில் புதையல் தேடிடும் இந்த உலகில் பணிவாய் வாழ்ந்திடு நீ.
இதயம் தேடிடு நீ. 3.
. * R * ις και காதலை கவிபாடும் இந்த உலகில் பணத்தை தேடிடும் இந்த உலகில் கல்வியை கற்றிடு நீ. மனத்தை தேடிடு நீ.
மஞ்சத்தை தேடிடும் இந்த உலகில் நெஞ்சத்தைத் தேடிடு நீ.
காமத்தை நாடிடும் இந்த உலகில் கற்பைக் காத்திடு நீ.
சீதனத்தைக் கேட்டிடும் இந்த உலகில் சிங்கமே நான் என்றிடு நீ.
வம்பை காட்டிடும் இந்த உலகில் பணியைக் காட்டிடு நீ.
கோபத்தைக் காட்டிடும் இந்த உலகில் சினேகத்தைக் காட்டிடு நீ.
வேகத்தைக் காட்டிடும் இந்த உலகில் விவேகத்தைக் காட்டிடு நீ.
கத்தியைத் தீட்டிடும் இந்த உலகில்
புத்தியைத் தீட்டிடு நீ. ஆக்கம் பொன் நகையை நாடிடும் இந்த உலகில் செல்வி இஸ்வி பேகம் நிசார் புன்னகையைக் கொடுத்திடு நீ. கணர்டி.
Quality Offset Printing, Screen Printing, & computer Designing
(RLATIONS
22 E 5, aேl Road, nெe
Tel: 077309325
ஊற்று துளி 5 ஒக்டோபர் - டிசம்பர் 2000 %غ

Page 16
画
சென்ற இதழின் தொடர்ச்சி.
கே! உங்களிடம் ஒரு முக்கியமான கேள்வி
கேட்க விரும்புகிறேன். நீங்கள் மலை யகத்தை சாராதவர் என்று சிலர் குறிப் பிடுகிறார்களே!
நல்ல நேரத்தில். நல்ல சந்தர்ப்பத்தில் இந்த கேள்வியைக் கேட் டீர்கள். ஒரு தடவை ஒரு கூட்டத்தில் பேசிக் கொணி டிருக்கும் பொழுது ஒருவர் மலையகத்திற்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு? என பகிரங்கமாக கேட்டார். உடனே நான் அவருக்கு சொன்னேன். உங்களைப் பெற்ற தயா ருக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு உள்ளதோ அதே தொடர்பு எனக்கும் மலையகத்திற்கும் உள்ளது.
ஆனால் இப்பொழுது சிறிது விளக்க மாக சொல்லலாம். நான் பிறந்து வளர்ந்தது, படித்தது எல்லாமே தலை நகரான கொழும் பில் , மிக இளம் வயதலேயே இடதுசாரி இயக கங்களால் ஈர்க் கப்பட்டு முழுநேர தொழிற் சங்கவாதியாக சமசமாஜக் கட்சியின் கீழ் இயங்கிய லங்கா தோட்டத் தொழிலாளர் யூனியனில் முழுநேர ஊழியராக பணியாற்றினேன். அப்பொழுது முதல் இன்று வரை மலையகத்தோடு இரண்டறக் கலந்தே வாழ்ந்து வருகிறேன்.
கட நீ த இருபது வருடங் களாக
மலையக கலை இலக்கியப் பேரவை
உருவாக க
என ற அமைப் பை
[Ꮭ 6Ꮘ) 6Ꭰ ᏓlᎫ ᏧᏏ 85 6) 6) இலக கய
வளர்ச்சிக்கு எண் சக்திக்கு மீறிய செயற்பாடுகளை செய்துள்ளேன் என்ற நம்பிக்கை எனக்குண்டு.
அந்தணி ஜீவாவுடன் ஒரு சந்திப்பு
கே:
கே:
கே:
யகத்தைப்
கரு ம்யூரான்
கொழும்பிலே இருந்து கொண்டு மலை பற்றி பேசுவதை விட மலையகத் தல வழி நீ துகொணி டு மக்களின் இன்ப துன்பங்களில் பங்கு கொண டு அவர்களுக்காக குரல் எழுப்புவதை கடமையாக கொண்டுள் ளேன்.
தங்களின் நாடக முயற்சிகளைப்
பற்றி.
மலையகத்தைப் பொறுத்தவரையில்
நாடகத்துறை மிகவும் பின் அடைந் துள்ளது. மலையகத்தில் பல நாடக பயிற்சி பட்டறைகளை நடத்தியுள் ளேன். வீதி நாடக முயற்சிகளில் ஈடு பட டுளி ளேன . . . இநீ த பணி தொடர்கிறது.
மலையக இலக்கிய வளர்ச்சியைப் பற்றி.?
மலையக இலக்கிய வளர்ச்சியைப் பற்றி அறுபதுகளில் ஏற்பட்ட எழுச்சி. அதன் பின்னர் எண்பதுகளில் ஏற்பட்ட வளர்ச்சி என்று பெருமை பேசலாம். ஆனால் பழையவர்களே இன்னும் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். சிறு கதையை எடுத்துக் கொண்டால் மலரன்பன்,மல்லிகை சி.குமார் என்று பழையவர்களே எழுதிக்கொண்டிருக் கிறார்கள் ஆனால் கவிதைத் துறையில் சில நம்பிக்கை தரும் புதிய முகங்களை காணக் கூடியதாக இருக்கிறது. புதிய பரம்பரை ஒன்று இலக்கியம் படைக்க முன்வரவேண்டும்.
தங்களுடைய புதிய முயற்சி.
இனி றைய இளைய தலைமுறை
யினர்க்கு தங்களுடைய முன்னோர்க
ஊற்று துளி 5 ஒக்டோபர் - டிசம்பர் 2000
 
 
 
 

ளைப் பற்றிய வரலாறு தெரியாது. மலையக கல்வி, கலை. இலக்கிய, தொழிற் சங்க வளர்ச்சிக்கு உழைத்த பெரியார்களைப் பற்றிய விவரண தரைப் படங் களை தயாரிக க வேணடும் என திட்டமிட்டுள்ளேன். ந ம மரிடையே வாழும மூத த எழுத்தாளர்களையும் 'வீடியோ’வில் பதவு செய்ய வேண டு மி என ற எண்ணத்தில இருக்கிறேன். தனி மனிதனாக இவைகளை சாதிக்க முடியாது. கூட்டு முயற்சியாக செயல் படுத்த வேண்டும் இதற்கு மலையக மெங் குமி ஆர்வமுள் ள இளைய தலைமுறையினரின் ஒத் துழைப்பு அவசியம்.

Page 17
ப்ரவாகம் சஞ்சிகை குழுவினர் ஒவ்வொரு இதழிலும் தொடர்ந்து எழுத வேண்டும் என்று அன்புக்கட்டளை போட்டு விட்டனர். உற்சாகம் தரும் சங்கதி, எழுதுவதை விட எனக்கு வாசிப்பதிலே அதிக விருட்பம் ஒரு தடவை கவிஞர் கண்ணதாசன் அவர்களை திருச்சியில் சந்தித்து உரையாடிக் கொண்டிருந்த பொழுது "கண்டதையும் படி, பண்டிதனாவாய்" எனக் குறிப்பிட்டார்.
அதே போல, நான் எதையும் தேடித் தேடிப் படித்து அறிவை விசாலித்துக் கொண்டேன். இனி தொடர்ந்து சந்திப்போம்
தீக்குள் விரலை வைத்தால்.
'ப்ரவாகம்' சஞ்சிகையை கொண்டு
வருபவர்கள் இலக் கரிய ஆர்வமுள்ள இளநி த லைமுறையினர். இவர்களினி
செயற்பாடு கண்டு, என் இளமை காலமே
என் ஞாபகத்திற்கு வந்தது.
'தக் குளி விரலை வைத்தால நந்தலாலா, நின்னை தீண்டும் இன்பம்
தோன்றுதடா நந்தலாலா’ என்ற மகாகவி
பாரதியரின் பாடல் எனக்கு மிகவும்
பிடித்தமானது.
இந்த பாடல் வரிகளை "கொழுந்து' சஞ்சிகை வெளியிடும் பொழுது நினைத்துக் கொள்வேன். தீக்குள் விரலை வைத்தால் எத்தகைய இன்பம் ஏற்படுமோ அதேபோல கொழுந்து சஞ்சிகை அச்சிட்டு முடிந்ததும் அச்சகத்திற்குரிய பணத்தை கொடுக்க முடியாமல் திண்டாடும் பொழுதும் இத்தகைய இன் பத்ை டைவதுண்டு. 30
எழுதுவது என்பது எனக்கு
அத்தகைய அனுபவங்கள் சஞ்சிகை வெளியிடுபவர்களுக்கு ஏற்படுவதுணி டு, 30ரூபாய் கொடுத்து வீடியோ படத்தை வாடகைக்கு வாங்கிப் பார்ப்பார்கள். ஆனால் 10ருபாய் கொடுத்து பத்திரிகையையோ சஞ்சிகையையோ வாங்க மாட்டார்கள்.
நம்மிடையே வாசிப்பு பழக்கத்தை தூண்ட வேண்டும். மலையகத்தை பொறுத்த வரை வாசிப்பு பழக்கம் மிகவும் குறைந்து விட்டது. மாணவ மணிகளை குறை சொல்லி பயனில் லை. மலையக ஆசிரியர்களே வாசிக்க மாட்டார்களே. பத்திரிகை கூட வாசிப்பது மிக மிக குறைவு.
அக்கினிப் பூக்களுக்காக சாகித்திய விருது பெறும் அன் தனி ஜீவா,
இனி ஒரு வரி த செய வோமி ஆசிரியர்கள் நல்ல நூல்களை தேடி வாசிக்க வேண்டும் பின்னர் தமது மாணவர்களை வாசிக்க தூணிட வேண்டும். இதனை யார் செய்வது? பூனைக்கு மணி கட்டுவது யார்? மத்திய மாகாண கல்வி அமைச்சு இந்த பணியினை முன்னெடுக்க வேண்டும். அது எப்படி?
மததய மாகணத்தல உள் ள பாடசாலை நூலகங்களுக்கு தரமான எல்லாம்
ஊற்று தளி 5 ஒக்டோபர் - டிசம்பர் 2000
 
 
 
 
 
 

நூல்களை மாகாண அமைச்சு வாங்கி வழங்க வேண்டும். அது மாத்திரமல்ல தமிழ் உறுப் பனர் கள தங் க்ளு க கு ஒதுக்கப்பட்டிருக்கும் நிதியிலிருந்து மலையக எழுத தாளர்களின , இலங்  ைக
எழுத்தாளர்களின் தரமான நூல்களை வாங்க
ஒரு தொகை ஒதுக்க வேண்டும். நல்ல நூல்களை வாங்குவதற்கு ஆலோசனை வழங்க கல்வியாளர்கள், இலக்கிய வாதிகள், கொண்ட ஆலோசனை சபை ஒன்றினை மத்திய மாகாண கல்வி அமைச்சர் நியமிக்க வேண்டும் ,
ஞானம் + ப்ரவாகம் = 2
மத்திய மாகாணத்திலிருந்து இரண்டு சஞ்சிகைகள் வெளிவருகின்றன. ஒன்று உக்குவளையிலிருந்து வரும் சுதந்திர கலை இலக்கியப் பேரவை வெளியிடும் ப்ரவாகம் இதுவரை நான்கு இதழ்கள் வந்துள்ளன. மற்றது கண்டியிலிருந்து நாவலாசிரியர் தி. ஞானசேகரனை ஆசிரியராகக் கொண்டு "ஞானம்' வருகிறது. இதுவரை ஐந்து
இதழ்கள் வெளிவ்ந்துள்ளது. ஒவ்வொரு
இதழிலும் படைப்பாளிகளின் காத்திரமான பேட்டிகள் இடம் பெற்றுள்ளது.
எழுத்தாளர் எஸ்.பொன்னுத்துரை. மல்லிகை டொமினிக் ஜீவா, கவிஞரும் விமர்சகருமான எம்.ஏ.நுஃமான், எழுத்தாளர் செ.யோகநாதன், மூத்த எழுத்தாளர் வ. அ.இராசரத் தினம் ஆகியோரின் பேட்டிகள் இடம் பெற்றுள்ளன.
இந்த இரண்டு இதழ்களையும் உயர் வகுப்பு மாணவர்கள் படிக்க வேண்டும். பயனுள்ள பல இலக்கியத் தகவல்களை தெரிந்து கொள்ள முடியும்.
சிறு சஞ்சிகை வரலாற்றில் இந்த இரு சஞ்சிகைகளும் தடம் பதிக்கும் என நம்பிக்கை எனக் குண்டு.
"புதிய நூலகம்’ என்ற பெயரில் இலங்கை எழுத்தாளர்களின் நூல்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறேன்.
fboIIIfbD துளி 5 ஒக்டோபர் - டிசம்பர் 2000
இதில் அறிமுகமாகும் பல நூல்கள் நான் பணம் கொடுத்து வாங்கியவை.
புதிய நூலகம்
கடந்த பத்தாண்டுகளில் இலங்கை எழுத்தாளர்கள் எழுதிய நூல்களைப் பற்றிய விவரங்களைக் கொண்ட நூற் பெயர்க் கோவை ஒன்றினை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். இதற்குறிய அறிவித்தலை தேசிய பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் வெளியிட்டேன். ஐம்பதுக்கும் மேற்பட்ட எழுத்தாளர் களுக்கும் அறிவித்தல் அனுப்பி வைத்தேன். ஒரு சிலரைத் தவிர ஏனையோர் ஆர்வம் காட்டவில்லை.
ஆனால் எனது தனிப்பட்ட முயற்சியின் காரணமாக ஐநுாறு நுTல களர் வரை தரட் டி விட டேன . ஆனாலி இந த பத்தாண்டுகளில் ஆயிரக்கணக்கான நூல்கள் வெளிவந்துள்ளன. புலம்பெயர்ந்து சென்ற நம ம ர் கள Li 6) Ť நுT ல களை வெளி டுள்ளனர்.
என்ன செய்வது திரட்டிய விபரங்களை வைத்து டிசம்பருக்குள் "புதிய நூலகம்’ நூற் பெயர்க் கோவையை கொண்டு வந்து விடுவேன் என்ற நம்பிக்கை உண்டு. மீண்டும் ஒரு தடவை கேட்டுக் கொள்கிறேன். இந்த இலக்கிய முயற்சிக்கு வடக்கு, கிழக்கு, புலம்பெயர்ந்து வாழும் எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளை அனுப்பி உதவ வேண்டும்
கவிராஜன் கதை செப்டம்பர் மாதம் பாரதி மாதம். முதலாந் திகதி சென்னையில் 'பாரதி'
திரைப்படம் திரையிடப்பட்டது. 'தமிழ் இனி
2000' கருத்தரங்கு முடிந்து மறு நாளே நானும சா ர ல நாடனும 'பாரதரி'
திரைப்படத்தை 'தேவிகலா' திரையரங்கில்
பார்த்தோம்.
'பாரதி'யின் சவ ஊர்வலத்துடன் படம்
தொடங்குகிறது.
பட ஆரம்பமே நம்மை

Page 18
கணி கலங்க வைக்கிறது. ஆரம்ப முதல் இறுதிவரை விடுகிறோம்.
படத் தோடு ஒன்றி போய்
பாரதியாக சயாஜி சிண்டே என்ற வங்காள மேடை நடிகர் பாரதியாக வாழ்ந்து காட் டியிருக் கறார். செல லம் மாவாக தேவயானி நடித்துள்ளார்.
எழுத தாளர் தி.ஜானகிராமணினி "மோகமுள்’ திரைப்படத்தை இயக்கிய ஞான இராஜசேகரன் 'பாரதி' படத்தையும் இயக்கி இருக்கிறார்.
பாரதியார் வாழ்ந்த வீடுகள் காசி. பாரதி காலத்தையே தன் கமிராவால் காவியமாக தீட்டியிருக்கிறார் ஒளிஓவியர் தங்கர் பாச்சன். பாரதி பட வெற்றிக்கு இன்னொரு காரணம் இசை, இளையராஜா மனதை தொடுகிறார்.
மன்னனை விட மகாகவியே பெரியவன் என வாழ் நீது காட்டிய கவிராஜனை அற புதமாக த ரை கா வரிய மாக தீட்டியிருக்கிறார்கள், பாரதியை படமாக்கிய அனைவரும் பாராட்டுக் குறியவர்கள்.
வீரங்கனை சுசந்திகா!
குறுந்தூர ஒட்ட வீராங்கனை என வர்ணிக்கப்பட்ட சுசந்திகா. ஐம்பத்திரெண்டு ஆண்டுகளுக்கு பின்னால் நமது நாட்டிற்கு வெண்கலப் பதக்கத்தை வென்று பெயரையும் புகழையும் தேடி தந்துள்ளார்.
சாமானிய குடும் பத்தில் பிறந்து சாதனைக்கு மேல சாதனை படைத்த சு சந்திகா கடந்த காலத்தில் அவருக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் மூலம் அவர் எத்தகைய தடைகளை தாணி டி வந்துள்ளார் என்பதை நினைக்கும் பொழுது சுசந்திகாவின் தைரியமும், துணிவும் ஏனைய விளையாட்டு வீரர்களுக்கு ஒரு பாடமாக அமையட்டும்,
வ"ராங் கனை சு சந த கா தொலைக் காட்சிக்கு அளித்த பேட்டியில் 'தான் வாழ்வதற்கு ஏற்ற வசதிகளை செய்து தரும்படி அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார். ஏற்கனவே தான் ஒட்டப்பந்தயம் மூலம் சம்பாதித்ததை விற்று தான் அமெரிக்காவில் பயிற்சி பெற்றதாக குறிப்பிட்டார்',
நாட் டிறி கு பெருமையையுமி கீர்த்தியையும் தேடித்தந்த சுசந்திகா மேலும் பல சாதனைகளை செய்வதற்கு அரசு அவருக்கு தேவையான வசதிகளையும், வாய்புகளையும் எற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
சுசந்திகா போல வெளிச்சத்திற்கு வராமல் இருட்டுக்குள்ளிருக்கும் விளையாட்டு வீரர்கள் வெளிச்சத்திற்கு வர வேண்டும், சு சநீ தரிகா வைப் போல அவர்களும் சாதனைகள் படைக்க வேண்டும்.
மீண்டும் அடுத்த ப்ரவாகத்தில்.
 
 

d # 183 "ஆணடு வியாபாரத்தில் தோல்வி
அமெரிக்காவின் தந்தை என்று போற்றப்படும் ஆபிரகாம்லிங்கன், தன்னுடைய வாழ்வில் உயர்வடைய வேண்டும் என்று
தீர்ணித்து செயலில் இறங்கினார். பிறந்தது ஏற்மையான குடும்பம் தான் எனினும், எப்படியும் உயர்வடைய வேண்டும் என்று முடிவு செய்து கொண்டார்.
அவருடைய வாழ்வில் எத்னைத் தோல்விகள்!
ஒரு சாதாரன குடிமகன், ஜனாதிபதி ஆக வேண டுமானால என னெனி ன துன்பங்களையும், தோல்விகளையும் சந்தித்து இருக்க வேணடும்? தானி சநீதித் த தோலி விகளையெலலாம் , தன்னுடைய உயர்வுக்கு வழி காட்டும், பாதையென்று எண்ணியே காரியமாற்றினார்.
வெற்றி பெறுவோம் என்ற உறுதி மட்டும் நம்மிடம் இருந்துவிட்டால், நிச்சயம் வெற்றி பெற்றே தீருவோம், நம்பிக்கை இழக்காதவர்கள் எப்படியும் வெறியடைந்தே தீருவர்.
தோல்விய்ைப் பற்றியே சிந்தித்துக் கொண்டு இருப்பவன் ஒரு நாளும் வெற்றி காண முடியாது. 'மனதில் உறுதியான முடிவுட னி இருப் பவனி தனக்கேறி ற முறை ய ல உலகையே அ ைமத துக்கொள்கிறான்' என்று கூறுகிறார் கதே.
நெஞ் சில துணிவு ஏற்பட்டால் தோல்வி மனப்பான்மை மாறி, நம்பிக்கைக்கு வழி பிறக்கும் தன்னுடைய பணியை மேற் கொண்டார்.
அவருடைய வாழ்வில் அடைந்த தோல்விகளைக் கண்டாலே, அவர் எப்படித் தோல் வியில் உயர்வினைக் கணி டார். என்பதை அறிய முடியும். தோல்வியை ஒரு பொருட்டாக அவர் மதிக்க வில்லை.
ஊற்று துளி 5 ஒக்டோபர் - டிசம்பர் 2000
அவர்
1832 ஆணிடு தேர்தலில் தோல்வி
1833 ஆணிடு வியா 1ாரத்தில் தோல்வி 1834 ஆணிடு சட்டசபைத் தேர்தலில்
தோல்வி. v 1835 ஆண்டு காதலில் தோல்வி 1836 ஆணிடு நரம்பு கோளாறு நோய் 1838 ஆண்டு சட்டசபைத் தேர்தலில்
தோல்வி. 1840 ஆண்டு எலக்டர் தேர்தலில் தோல்வி 1843 ஆண்டு காங்கிரஸ் தேர்தலில்
தோல்வி 1848 ஆண்டு காங்கிரஸ் தேர்தலில்
தோல்வி 1855 ஆணிடு செனட் தேர்தலில் தோல்வி 1856 ஆணிடு உதவி ஜனாதிபதி தேர்தலில் தோல்வி 1860 ஆணிடு ஜனாதிபதி பதவி.
பதிமூன்று முறை, தோல்வி கண்டு இறுதியில் எவருமே அடைய முடியாத, உன் மான பதவியை அடைந்து விட்டார்! தேf யையே உயர்வாக நினைத் து செயலலி இறங்கியதால் தான் இந்த நிலையை அடைய முடிந்தது.
தோல்விகளை சந்திந்தே வெற்றியை சாதத்து விட் டர்ர்! நாமும் இந்த முறையைத் தானே பின்பற்ற வேண்டும்.
நடந்தைப்பற்றியே கவலைப்பட்டுக் கொண்டிந்தால், நம்முடைய உள்ளம் ஒளி இழந்து விடும் நடந்ததைப் பற்றியே நினைத்துக் கொண்டு, நடக்கப்போவதையும் மறந்துவிட்டு, மேலும் தோல்வியைத் தழுவச் செய்வது சிறப்புடையது அல்ல! உயர்வோம் தவிர தோற்று விடுவோம் என்று நினைத்து, சும்மா இருந்து விடக்கூடாது.
V
தொகுப்பு
ரம்சின் முஹமட் தரம் 112 மா அந் நூர் முமவி வறக்காமுற

Page 19
கடந்த நூற்றாண்டின் மலையக இலக்கியம்
சாரல் நாடன்.
பொருளாதார அபிவிருத்தியை கருத்தில் கொண்டு தமது காலனித்துவ நாடுகளில் ஆங்கில ஏகாதிபத்திய வர்க்கத்தினர் ஒருவித புதிய குடியேற்றத்தை அறிமுகம் செய்தனர். 18ம் நூற்றாண்டில்
இந்தியாவிலிருந்து இவ்விதக் குடியேற்றம்
ஆபிரிக்கா, பிஜி, மலேயா, பர்மா, இலங்கை போன்ற நாடுகளுக்கு மேற்கொள்ளப்பட்டது. இந்தியாவில் நிலவிய பஞ்சத்தையும் வரட்சியையும் காரணம் காட்டி, அங்கிருந்த விவசாய மக்களை ஆசைவார்த்தைகளும் பொய் வாக்குறுதிகளையும் அள்ளித் தெளித்து இலங்கையில் குடியேறச் செய்தனர். அவ்விதம் வந்து குடியேறியவர்களின் பரம்பரையினர் தான் இலங்கையின் இன்றைய மலையகத்தவர்கள்
இவர்களின் வரலாறு ஏறக்குறைய 185 வருடங்களைக் கொண்டிருந்தாலும் அதற்கு முன்னரே ஓர் 75 ஆண்டுகளுக்கு தொன்னிந்தியாவிலிருந்து வந்தவர்கள் 'கண்டிச்சீமையில் மன்னர்களாக இருந்த காரணத்தால் அந்தச் செல்வாக்கும்,
நிலவியது.
அவர்கள் கட்டியெழுப்பிய கோப்பி JTiguuD (Hemileia Vastatrix) 616öp GEHTquu நோய்வாய்ட்பட்டு அழிந்தபோது, மனந்தளராது மீண்டும் ஒரு புதிய பயிர்ச் செய்கையை
எரிந்த சாம்பலிலிருந்து உயிர் பெறும் பீனிக்ஸ் பறவையைப் போல் இந்த மக்கள் தேயிலைத் தோட்டங்களையும், றப்பர் தோட்டங்களையும் உருவாக்கினர்.
அவ்விதம் உருவாக்கியபோது அங்கு நிலவிய ஒரு சமூகக் கூட்டு வாழ்க்கை, அவர்களிடையே ஒரு தனித்துவமான கலாசார
மனோபாவம் உழைப்புடன் அல்லது உற்பத்தியுடன் தன்னைச் சம்பந்தப்படுத்திக் கொண்டபோது உருவாகிய வினை 34:
பொருளாய் பீறிடும் கலை இலக்கிய உணர்வுகள், தாலாட்டு என்று தொடங்கிக் காதல், ஒப்பாரி கும்மி என்று விரிய ஆரம்பித்தன. அதன் ஆதாரமாய் நிற்பது என்னவோ தமிழ்நாட்டின் பண்டைய கிராமியச்
தென் ஆபிரிக்காவில் - பிரிம்டோரியா விலிருந்து திரும்பி வந் திருந்த மகாத்மாகந்தியின் செல்வாக்குக்கு இந்திய மக்கள் ஆட்பட்ட நேரம். கடல் கடந்த இந்தியர்களின் நிலை குறித்து இந்திய கண்டத்தில் குரல்களெழும்பின. இலக்கிய கர்த்தாக்களின் கவனம் ஈர்க்கப்பட்டது. நடேசய்யர், சத்யவாகீஸ் வரர், மீனாட்சியம்மை, நல்லம்மா போன்ற இந்தியர்கள் இலங்கையில் தங்கிப் பணியாற்றினர்.
நடேசய்யர் ஒரு யுகப்புயல், இந்த மக்களை எழுதுவதற்கும் , தமது உரிமைக்காய் எழுந்து நின்று பேசுவதற்கும் தயார் செய்தவர், பன்னிரணி டு பத்திரிகைகளையும், பதினான்கு புத்தகங்களையும் இந்த மக்களுக்காய்
ஊற்று துளி 5 ஒக்டோபர் - டிசம்பர் 2000
 
 
 

தோற்றவித்து பணியாற்றியவர், 1920 - 1947 க்குள்ளான காலப்பகுதியில், இவராற்றிய பணிகளால் மலையக நிர்மாணச் சிற்பி என்றறியப்பட்டவர்.
பிரேஷ் கேர்டில் என்ற இளைய ஆங்கிலேயனும், மணிலால் என்ற இந்திய கம்யூனிஷட்டும் இத்தொழிலாளர்கள் பால் ஆர்வம் காட்டினர். நாட்டுப் பாடல்களாகவும், பெட்டிஷன்களுமாக இவர்களின் அவலங்கள் பதியப்படுவதில் மாற்றம் ஏற்பட்டது.
புதுமைப்பித தனி , கருஷணனி போன்றோர் தம் இலக்கிய ஆளுமையால் கடல் கடந்து இலங்கையில் துயருறும் மக்களின் நிலை குறித்து தாம் எழுதிய துனி பக் கேணியரிலே, (மணிக கொடி) தேயிலைத் தோட்டத்திலே (ஜனசக்தி) என்ற படைப்புக்களில் எழுதியிருந்தனர். w
1927ல் மகாத்மா காந்தியின் இலங்கை வருகையும் 1939ல் பண்டிதர் ஜவகர்லாலின் இலங்கை வருகையும் இந்த மக்களின் பால் வளர்ந்து வந்த வெறுப்புணர்வை குறைக்கப் பயன் படவில்லை. பணி டிதரும் தனது செய்தியில் (1939) "இந்தியா பலவீனமான நாடாக இருக்கின்றது. இன்று கடல் கடந்த அதன் பிள்ளைகளுக்கு அதிகமாக எதுவும் செய்ய முடியாத நிலையிலிருக்கிறது' என்பதனைத்தான் சொல்ல முடிந்தது.
அது இந்த மக்களை குடி இருந்த தோட்ட நிலத்தை விட்டு அகற்றும் உரிமை சம்பந்தப்பட்டது! உருளை வள்ளி தோட்டம் சம்பந்தமானது.
அன்று தொடங்கிய "தோட்ட நிலம்
விட்டு இந்த மக்களை குடி பெயரச் செய்யும் நோக்கம் பல விதங்களில் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. அதை ஆதரிக்கும், எதிர்த துமி நடந து கொண டுவருமி பரிணாமமாகவே இனி றைய மலையக இலக்கியம் இருக்கிறது.
இலங்கை வாழ் இந்தியர்களாக ஒரு நுாற்றிருபது ஆண்டுக் காலம் அறியப்பட்ட இத்தென்னிந்தியர்கள், இலங்கை, இந்தியா என்ற இருதேசங் களிலும் சொந தமி கொண்டாடியவர்கள்.
1947ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத தால பெரிதும் ஊற்று துளி S ஒக்டோபர் - டிசம்பர் 2000
வதை கி குளிர் ளான வர் களி இலட் சக க
ணக்காண மக்கள் தமது தேசம் இலங்கையா இந்தியாவா என்று தீர்மானிக்க முடியாது நட்டாற்றில் விடப்பட்டனர், நாடற்றவர்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டனர்.
1964ம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட "சிறிமா - சாஸ்திரி' ஒப்பந்தத்தின் பின்னர், அதுகாலவரை நிலவிய நாடற்றநிலை மாற்றம் பெற்றது. இவ்வொப்பந்தம் மக்களின் விருப்பத்துக்கு இடமளிக்காத விதத்தில் அமுல படுதி த பட்ட குறை பாட  ைடக கொண்டிருப்பினும், இவர்களை இலங்கை அல்லது இந்தியா என்று இரண்டிலொரு நாட்டைத் தீர்மானிக்க வைத்தது.
அது காலவரை எல்லாவித திலும் புறக்கணிக்கப் பட்டவர்களாகத் துயருற்ற ஒரு சமூகத்தவர்கள், தாம் வாழ வேண்டிய நாட்டில் தமக்கென ஓர் அடையாளத்தைக் தேடினர்.
1947ம் ஆண்டு குடியுரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டவேளை தங்களைக் 'கணிடித்தமிழர்' என்று குறிப்பிடவேண்டும் என இவர் களது குர ல இலங்கை நாடளுமன்றத் தில் ஒலித்தது. அதில வெளிப்பட்ட நியாய பூர்வமான உணர்வை Sத் து 'வீரகேசரி’ பத தாகை யத் தலையங்கம் தீட்டி ஆதரித்தது. ர்களின கோாக கை வெறி ற
ரில்லை. இந்தியனாகவும், தோட்டக் ா னாகவுமே தாமி இன மி
ஆங் கலச் சொல  ைல வ ரும Uப
35

Page 20
பயன்படுத்தினர். பத்திரிகைகளில் எழுதும் போது ஆங்கிலத்திலும் தமிழிலும் இச் சொல லையே ம க கள கவரி மண ஸி. வி.வேலுப் பளி ளை பாவிக கத தொடங்கினார்.
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் உலகின் பல பாகங்களிலும் மாறுதல்கள் தோன்ற ஆரம்பித்தன. சிந்தனையாளர்கள் தோன்றினர். உரக்கச் சிந்திப்ப வர்களுக்குப் பத்திரிகைகளும் நூல் ஊடகமாக அமைந்து சமூக மாற்ற துக்கு உந்து சக்தியாகின்றன. இந்தப் பொது நியதிக்கேற்பவே, இக் காலப்பகுதியில் மலைப்பிரதேசத்திலும் அச்சில் ஆங்காங்கே புத்தகங்கள் வெளியிடப்பட்டன. :
இலங் கைய ல அரசாங் கமீ மேற்கொண்டே குடிசன மதிப்புக் க்ளில் தெளிவாகக் குறிப்பிடப்படாது போனாலும், 1871ல் 12 சதவிகிதத்திலும், 192ல் 21 சத விகிதத்திலும் 1941ல் 80 சதவிகிதத்திலும் இலுங்கையில் பிறந்தவர்களை உள்ளடக்கிய சமூகமாக இந்திய வம்சாவளி மக்கள் வ6 தொடங்கியிருந்தனர்.
தெரிந்தவர்கள் என்று கூறுவதற்குக் கூட ஆட்களைத் தேட வேணி டியிருந்தது. இருந்தும் அவர்கள் மத்தியில் கலையும் வாய் மொழி இலக்கியமும் ஜீவியமாக உயிர் வாழ்ந்தன. உண்மையில் இந்தக் காலப் பகுதிதான் ஐம்பதாண்டுக் காலத்துக்குப் பின்னர் 'மலையக இலக்கியம்' என்று உயிர்ப்புப் பெற்றது எனலாம்.
"ஒரு சிறு நதியானது, திரண்டு நுங்கும் நுரையுமாகப் பிரவாகம் எழுப்பதற்குச் சுமார் ஐம்பது வருடங்கள் பிடிதி தன. ஐம்பதாண்டுகளுக்கு முன்னரும், அதாவது, சதாரண மக்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாத காலத்திலிருந்தே, உயர்வான மக்கள் இலக்கியம் இந்தப் புது நி லத்தில் ஆழமாகவும் தாக்கமாகவும் வளர்ந்து வந்திருக்கின்றது. பரந்த அடிப்படையவில் நாம் இவற்றை நோக்கினால் தமிழ், கலை, கலாசாரம், இலக்கியம் ஆகியன 36 ဒွိ မွို”
இங்கு
ஊற்று துளி 5 ஒக்டோபர் - டிசம்பர் 2000
வளரத் தொடங்கின. அது மட்டுமல்ல ஒரு தனித்துவமான பிரசித்தத்தோடு அத்துறைகள் வளர்ந்தும் வந்துள்ளன’, என்று கூறுகிறார், மலையக இலக்கிய முன்னோடிகளில் ஒருவரான ஸி.வி.வேலுப்பிள்ளை.
இலக கய கர்த்தாக்களில் முக்கியமான ஒருவர். தானே படைப்பாளியாக இருந்தும், தனக்குப் பின்னர் தமிழ் மொழி மூலம் பரவலாக வளரத்த
D 6) 6 85
இவர்
தொடங்கிய இலக்கியத்தைப் பற்றிய அவதானியாக இருந்தும் இவர் காத்திரமான கருத்துக்களைக் கூறியுள்ளார்.
தேசபக்தன், இலங்கை இந்தியன், சத்யமித்ரன் என்ற பத்திரிகைகளின் பணி 1930ம் ஆண்டுவரையிலும் கவனிக்கத்தக்கது. அதற்குப்பிறகு வீரகேசரி (1930), தினகரன் (1932) என்ற தமிழ்த் தினசரிகளில் இந்தப் பணிகள் மேற் கொள்ளப்பட்டன.
நடேசய்யரின் பல புத் தகங்கள் இக்காலப் பகுதியில் வெளியாகின. அவற்றுள் அதிகமானவற்றில் இலக்கிய நயம் இல்லை என்று ஸி.வி.வேலுப்பிள்ளை குறிப்பிடுவார். மலையக இலக்கியத்தோடு சம்பந்தமா
 
 
 
 
 
 
 
 
 
 

னவைகளாக நீ மயங்குவதேன்' (1931), இந்திய தொழிலாளர் அந்தரப் பிழைப்பு நாடகம் (1938) என்ற இரண்டையும் குறிப்பில் கொள்ள வேண்டும்.
மலையக மக்களின் வரலாற்றில் இக் காலப் பகுதி மிகவும் முக்கியமானது. இக் காலப் பகுதியில் இலங்கையிலிருந்த இந்திய வம்சாவளியினரின் தொகை கட்டத் தட்ட எட் டு லட் சம எணி பது சத வரி க தத தரினர் இலங் கை யரில பிறந்தவர்களென ற அடிப் படையில ஆறு லட்சத துககு மேற பட் டோர் இலங்கையில் பிறந்தவர்கள் என்றாகிறது. இவர்களின் எதிர்பார்ப்புக் கள் இடிந்து நொறுங்கின. சுதந்திர இலங்கையின் முதற் சட்டமே, இநீ தச் சமூக த தனாரினி குடியுரிமையைப் பறிப்பதாக அமைந்தது. இவர்கள் சிறகொடிந்த பறவையானார்கள். இக்காலப் பகுதியில் ஊதி ஊதி இவர்களின் தனித்துவத்தைக் கனலோடு காக்கவேண்டி யிருந்தது.
மக்களிடையே படிப்பறிவு குறைவு என்பதோடு, பத்திரிகை வாசிக்கும் பழக்கமும் அரிதாகவே காணப்பட்டது. மக்கள் மத்தியில் செயற்பட்ட சிலர்களால் சமூகத்தில் புதிய எழுச்சி உண்டாயிற்று.
மலையக இலக்கியப் பாரம்பரியத்தின் செல் வாக்கு மிகுந்த நாட்டுப்பாடலின் தாக்கத்துக்கு இவர்கள் ஆட்பட்டிருந்தனர். பொது ம க களை இவை பெரிதுமி கவருவதாயின.
இலங்கையில் இந்திய எதிர்ப்பு ணர்வுகள் மேலட் டு இச் சமூகதி தன ருக்கெதிரான சட்டங்கள் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட 1930களில் ஜவகர்லால் நேரு இலங்கைக்கு வந்து, இந்த மக்களை ஓரணியில் திரட்டி இவர்களுக்கென்று 'இலங்கை இந்திய காங்கிரஸ்' என்ற அமைப்பை உருவாக்கிப் போனார். இது மிகவும் அபூர்வமான நிகழ்ச்சி. இது குறித்து ஏராளமான பாடல் புத்தகங்கள் வந்துள்ளன. சுதந்திரம் பெற்ற இலங்கையில் தமது குடியுரிமை பறிக்கப்பட்ட போது பாடல்களால் தமது குமுறல்களை வெளிப்படுத்தினார்கள். 1964ல் சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம் ஊற்று துளி 5 ஒக்டோபர் - டிசம்பர் 2000
கைச் சாத் திடப்பட்டபோது நெஞ் சுருகும் பாடல்களை இவர்கள் பாடினார்கள்.
இக் காலப் பகுதியில் மலைப் பிர தேசங்களில் மக்களிடையே தமிழறிவையும் தமிழுணர்வையும் வளர் த து வந த பணியினைத் தமிழகத்திலிருந்து வெளிவந்து கொண்டிருந்த திராவிட முன்னேற்றக் கழகக் கருத்துகளைப் பரப்பிய பத்திரிகைகளும்
திரைப்படங்களும் செய்துள்ளன. இந்தக்
கருத்துக்களால் கவரப்பட்ட இளைஞர்கள் தோட்டங்களில் மன்றங்களை ஏற்படுத்திச் சமூக மாறி றங்களை முனி னெடுக் க முனைந்தனர்.
தமிழகித்துத் திராவிடக் கழகங்களோடு தொடர்பு கொண்டிருந்த எழுத்தாளர்களில் டீ.எம்.பீர்முகம்மது குறிப்பிடத்தக் கவர். இவரின் துணையோடு, “நவஜீவன்' என்ற பத தாரிகை 95 OLD. ஆணி டு தோற்றுவிக்கப்பட்டது.
முழுக்கமுழுக்க இந்தியவம்சாவளி மக்களின் குடியுரிமைப் பிரச்சினை குறித்துக் கருத்துக்களை வெளிப்படுத்தி, குடியுரிமைப் போராட்டத்துக்குத் துணை புரியும் ஒரு படைக்கலனாக ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பத்திரிகையில் சிறுகதைகள் நிறையவே வெளி வந்தன.
சிதம்பரநாத பாவலரின் நாவல் இதில் தொடராக வெளிவந்தது.
1960களில் மலையகத்தினரிடையே புதியதொரு மாற்றம் ஏற்பட்டது. 1952ல் நடைமுறைப்படுத்தப்பட்ட குடியுரிமைச் சட்பூத்தால் நாடற்றவர்களான இவர்கள், 1956ல நடைமுறைப் படுததப் பட்ட “சிங்கள்மொன்றே" மொழிச்சட்டத்தால் தமது நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக இந்நாட்டில் இருளடை நீ து வருகனி றதென பதை உணர்ந்தனர். எழுத்து, பேச்சு, கவிதை என்ற துறைகளில சீறி ற த தோடு தம் மை வெளிப்படுத்தும் பரம்பரையினராக இவர்கள் தோற றமளித தனர். இவர் களை 'ஆத்திரப்பரம்பரையினர்' என்று அழைப்பர். அது கால வரை 'அழுகுரலாக வெளி
வந்துகொண்டிருந்த இலக்கியப் படைப்புக்கள்
ஆர்தி தெழும் பும் ஆரம்பித்தன.
குரலாக' ஒலிக் க

Page 21
: பட்டப் படிப்பிட மேற் கொணி டிருந் தவர்களும் , இலங் கைப் பல்கலைக்கழகத்தில் தமது பட்டப்படிப்பை மேற் கொண்டிருந்தவர்களுமான ஒரு சிறு
தொகை யரினர் இந த மாறு த லை முன்னெடுத்துச் செல்லும் பணியினில் பங்கேற்றனர். இவர்களில் குறிப்பிட்டுக் கூறத் தக் க அளவுக் குப் பரிர பல யம்
பெற றவர்களென இர சரி வலங் க ம . எஸ்.திருச்செந்துாரன் ஆகியோரைக் குறிப்பிட வேண்டும். இவர்கள் அட்டன் நகரில் கல்லூரி ஆசிரியர்களாகக் கடமையாற்றிக் கொண்டி ருந்தனர்.
1960 களி ல S9 i Lu Q ତୃ if ஆரோக் கயமான நிகழ்வு இலங்கை
மலையகத்தில் நட்ந்தது. மலையகம் வாழ்
மக்களில் பெரும்பாலானவர்கள் தேயிலை, றப்பர் தோட்டங்களில் வேலைக்கமர்த்தப்பட்ட தொழிலாளர்கள். அதுகாறும் இலக்கிய உலகில் வெளிப்படுத்தப்படாத அவர்களது வாழ் கி கையை வெளிப் பார்வைக் குத் தரிசனத்துக்கு வைக்கும் முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டன.
சஞ்சிகைகளும் பத்திரிகைகளும் இம் முயற்சிக்கு உதவும் நிர்ப் பந்தத் துக்குள் ளாயின. தமிழ்ப் பத் திரிகைகள் நிறைந்த அளவில் தோட்டப் புறங்களில் விற்பனையாகிக் கொண்டிருந்த காலமது.
தமிழகத்தில் வெளிவந்து கொண்டிருந்த தினத்தந்தி, தினமணிப் பத்திரிகைகளையும் திராவிடக் கழக ஏடுகளான முத்தாரம், முரசொல, தென்றல, மாலை மாணி போன்றவைகளையும் கல் கி. கல் கண்டு, குமுதம் , ஆனந்த விகடன் , போன்ற சங்சிகைகளையும் காசுகொடுத்து வாங்கிக் கொண்டிருந்தவர்களும், தினகரன், வீரகேசரி, சதந்திரன், ஈழநாடு போன்ற இலங்கைப் பத்திரிகைகளைக் காசு கொடுத்து வாங்கிக் கொணி டிருந்தவர்களையும் அதுகாறும்
கண்டிருந்த மலைநாட்டில் உமா, கங்கை, கலைமகள், எழுத்து ஆகிய இலக்கியப் வா சரிப் பவர்கள
பத தாரி கை கள
அப்பத்திரிகை ஆரம்பிக்கப்பட்ட
உருவாகியிருந்தனர்.
வீரகேசரிக்கு மலைநாட்டில் நிறைய விற்பனைத் தளமிருந்தது. உண்மையில், 1930s) ஆணி டிலிருந்தே அது இலங்கை வாழ் இந்திய வம்சாவளியினரின் சேம நலத்தில் காரி சனை காட் டியே வந துளி ளது. அப்பத்திரிகையைத் தோற்றுவித்தவர் ஓர் இந்தியரே. சுப்பிரமணியச் செட்டியார் என்பது பெயர்.
மலைநாட்டுத் தமிழ் வாசகர்களிடையே தேசபக்தன், தினத்தபால், சத்யமித்திரன் என்ற தமிழ்த் தினசரிகளுக்குப் பின்னால் அதிகமாக விற்பனையான தினசரி வீரகேசரிப் பத்திரிகையே ஆகும். தினகரன், தினபதி, தனத த ந தரி, தனக குரல, என ற தினப்பத்திரிகைகளின் விற்பனை எந்த ஒரு காலத்திலும் வீரகேசரியை மிஞ்சவில்லை. இந்த விற்பனைப் பின்னணியில் தானி ,
மலையகத்தினருக்கான பத் திரிகைப்
பங்களிப்பு மிகுந்தது.
வீரகேசரி தனக்குள்ள கடப்பாடுடன். தோட்டவட்டாரம்’ என்ற தனிப்பகுதியை 1959ம் ஆண்டு ஆரம்பித்தது. தினகரன் ‘மலைநாட்டு தபால்' என்ற ஓர் அம்சத்தை ஆரம்பித்தது. இரண்டுக்கும் ஸி.வியின் பங்களிப்புப் பின்னணியிலிருந்தது. இரண்டு
பத தாகை களிலும அவருக குத தொடர்பிருந்தது.
இந்த வரிசையில எழுதப் பட்ட
கட்டுரைகள் படிப்படியாகத் தம் சமூக வேர்களைத் தேடவும், தம்மை ஒரு தேசிய
இனமாக இலங்கையில் நிலைநாட்டவும்
எடுக்கப்படும் முயற்சிகளாக வளர்ச்சி காட்டின. தமது வரலாறி நுப் பரின னணி யை
மேலெடுக்கவும். கலை கலாசார பரிமா ணங்களை வெளிப் படுத்தவும் அவை உதவின.
மலையகத் தமிழ் மக்களுடைய இன மரபுகளையும் பிரச் சனைகளையும பண்புகளையும் இனங் காட்டும் கட்டுரைகளாக இன று நறையவே வெளிவர ஆரம்பித் திருப்பது ஆரோக் கியமான ஊற்று துளி 5 ஒக்டோபர் - டிசம்பர் 2000
 

எதிர்கால த துக் கான அறிகுறியாக கி கொள்ளலாம். .
இந்து சமய கலாசார அலுவல்கள் இராஜாங் க அமைச் சர் அலுவலக மி வெளியிடும் சாகித்திய மலர்களிலும், ஊவா மாகாணசபையும் மத்திய மாகாணசபையும் வெளியிடும் தமிழ் விழா மலர்களிலும், இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் வெளியிடும் ‘புதுமை இலக கயம மலர்களிலும் இவர்களின் கட்டுரைகள் விரும்பி பிரசுரிக்கப்படுவதையும் நாம்
கவனத தல எடுத துக கொளி வது ஏற்புடையதே.
கவிதைகள்
மலையக இலக்கியப் பரப்பில் பலரது படைப்புக்களை உள்ளடக்கிய முதலாவது தொகுதியாக வெளிவந்தது ஒரு கவிதைப் படைப்பே என்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. வாய் மொழிப் பாடல பாரமபரியத்திலும், வாய் மொழிப்பாடல் அமைப் Uல உருவான பாடல களை உருவாக்கிய பாரம்பரியத்திலும் நெடுங்காலம் தோய்ந்திருந்த சமூகத்தில், நவீன இலக்கிய முயற்சிகளை மேற்கொண்ட போது கவிதை பூத்துக் குலுங்கவே செய்யும்.
வளர்ந்து வருகின்ற சமுதாயத்தின் தெலை வையையும் மாறி ற த  ைதயுமி நுணி ணய தறமையோடும் ஆழி நீ த புலமையோடும வெளிப் படுதது கற கவிதைகள், முன்னேறி வரும் சமுதாயத்தின் மூச்சுக் குரலாக அமைந்து மொழிக்குப் புதியதோர் அழகையம் இனத்துக்குப் புதியதொரு வலிமையையும் தருவன. ஒரு சமுதாய அமைப்பு முறையில பல துறைகளினதும் அடுக்கணிக் காட்சிகளை - Panorama- அழகுற வெளிப்படுத்துவன கவிதை இலக்கியமேயாகும்.
1960ம் ஆண்டு வரையிலும் இலங்கை அரசாங்கம் மலையக மக்களை இலங்கைக் குடிகளாக்க எதையும் செய்யத் தவறி Рmim t s of 5 9ša mu - uperbuj 2000
விட் டது. இந் நிலையில இநீ தய த தலைவர்களைப் போற்றவும். இந்தியாவைத் தாயகமாக எணி ணவும் இயல பாகவே அவர்கள் தள்ளப்பட்டிருந்தனர்.
1964ல் சிறிமாவோ சாஸ்திரி ஒப்பந்தத்துக்குப் பின்னர் மலையக இலக்கிய முயற்சிகளில் புதிய வேகமும் புதிய நோக்கும் தெரிந்தன. அவை புதிய தொனியில் ஒலிக்க ஆரம்பித்தன. இலங்கையைத் தாயகமாகக் கருதும் மனோபாவமும், ஈழத்து இலக்கிய முயற்சிகளில் பரிச்சயம் கொண்ட நிதானமும் அவற்றில் தென் பட்டன. மலையகக் கவிஞர்களின் குரல் கவி அரங்குகளிலும் பத்திரிகைகளிலும் ஒலிக்க ஆரம்பித்தன.
தொகுதி அதனி
'குறிஞ சிப் பு, பிரதிபலிப்புதான். இத்தொகுதியைப் பற்றி
'பெருமூச் சில , கணிணிரில் தங்கள் காவிய த தைப் படைத்து வநீத நமி மலைநாட் டு மக்களிடையே இனிறு கணிணிரை, கலக்கத்தை, கவியாக்கும் காளையர்கள் பலர் தோன்றியுள்ளார்கள். இன் சுவைத் தமிழா எம்மவர் ஏக்கத்தை
எடுத்துரைக்கும் ஏந்தல்கள் தமது உள்ளக் குமுறல்களை ஏட்டில் தவழ விட்டதால் இன்று மலர்ந்தது 'குறிஞ்சிப்பூ” என்று கூறும்

Page 22
இர. சிவலிங் கம் ‘உள்ளே காணுமி கவிதைகள் அனைத்திலும் சொற்களை மீறி அழகும் இனிமையும் வழிந்தோடுகின்றன என்று கூற முடியாவிட்டாலும், எங்கள் நெஞ்சின் சூட்டினைப் பார்க்கலாம்! ஆசை அலைகளின் ஆர்ப்பாட்டத்தைக் கேட்கலாம்” என்று சேர்க்கிறார்.
தேயிலைத் தோட்டத்திலே என்ற தலைப்பில் ஸி.வி.வேலுப் பிள்ளையின் தமிழ்ப்பாடுத்திய கவிதை முதலாவதாகக் காணப்படுகிறது.
கருத்தாலும் கவினுறு சொற்களாலும் அமைந்த இக் கவிகையைத் தமிழில தநீ தருப்பவர் சக் த அ. பாலையா. ஆங்கிலத்தில் தனது கவிதைகளை இயற்றி அவனியெங்கும் ஏழைத் தொழிலாள மக்களின் இன்னல்களை வெளிப்படுத்திய
பெருமை ஸி.வி.க்கு உண்டு. ஆனால் அவை
அந்த மக்களுக்குப் பயன்படவிலலை. ஆங்கிலத்தில் எழுதி சர்வதேசப்புகழ் பெற்ற இவரையும், இவரது சகாக்களைான கணேஷ், சக்தி அ.பாலையாவையும் மலையக மக்கள் பெரிதுபடுத்தாது போனார்கள், !
மலையக இலக்கியகர்த்தாக்களில், அறுபதுக்கு முன்னர் தடம் பதிக்கும் பணிகளைச் செய்தவர்களில் கே.கணேஷ் குறிப் பரிடத் தக் கவர். 1946ல இவர் தோற்றுவித்த 'பாரதி' இலக்கிய சஞ்சிகை இனி லுமி நனைவு கூரப் படு கறது. இந்தியாவின் முல்க்ராஜ் ஆனந்தின் ஆங்கில நாவலைத் தமிழ்ப் படுத்திய பெருமை இவருக்குண்டு. தமிழகப் பத்திரிகைகளோடும் தமிழக எழுத்தாளர்களுடனும் நிறைந்த நெருக் கமி கொணி டவர். ஏராளமான கமி யுனிஸ் ட இலக கயங் களைத தமிழ்ப் படுத் தியவர். மொழிபெயர்ப் புத் துறையில் தான் ஈடுபட்டதற்கு, நமது சமூகத்தவராலும் இதைச் செய்து காட்ட முடியும் என்ற சவாலான நினைப்பே' என்று கூறும் இவரும் , ஸ்வி' யைப் போல படிப் பறி வரி ல குறைந தரு நீ த மலையகத த வாரின கவனிப் பைப் பெறவில்லை 40徽
அறுபதுகளில பிறரிட்டெழுமி பிய மலையக இலக்கிய உணர்வின் வெளிப்பாட்டு அத்தாட்சியாகக் கதைக்கனிகள் தொகுதியும் 'குறிஞ்சிப்பூ தொகுதியும் விளங்குமாப் போல எண்பதுகளில் ஏற்பட்ட மீளெழுச்சியைக் காட் டு ம க வரிதை , சறுகதை களி தொகுதியாக்கப்பட்டுள்ளன.
நாவலகள
தேசநேசன் (1921-1923), தேசபக்தன் (1924-1929), சத்யமித்ரன் (1926), காந்தி (1939) என்பன தினசரிகளாக வநீத பத்திரிகைகள். இவற்றுள் "தேசபக்தன்' பத் திரிகையில மூலையில் குந் திய முதியோன் அல்லது துப்பறியுந் திறம்' என்ற தொடர் நாவலைக் கோ. நடேசய்யர் எழுதியுள்ளார். இந்நாவல் ஒக்டோபர் 1924இல் ஆரம்பமானது.
இத்தொடர் துப்பறியும் பாணியில் அமைந்திருந்தது. நடேசய்யர் இலங்கையில் முதலில் பணியாற்றிய தமிழ்ப் பத்திரிகை தேசநேசன், தேசநேசனிலிருந்து அவரைக் கழற்றி விடுவதற்காகச் சிலர் மேற்கொண்ட சதி நடவடிக்கைகளை, தேசநேசனை ஒரு பெண்ணாக உருவகித்து எழுதுவதன் மூலம் வெளிப்படுத்த முயற்சி செய்திருப்பதாக நடேசய்யர் குறிப்பிடுகின்றார்.
"சத்யமித்ரன்' பத்திரிகையில் "சரஸ்வதி அல்லது காணாமற் போன பெண்மணி' என்ற தொடர் நாவலை து.தொ.சு.இராசம்மாள் எழுதியுள்ளார். 1926இல் தொடர் நாவலாக வெளிவந்த இது 1929ல் நூல் வடிவம் பெறி றது. இவர் வரிரண டு தொடர் நாவல்களைப்பற்றி இங்கு நாம் குறிப்பிடுவது அந்நாவல்களின் யோக் யாம் சத்துக்காக அல்ல. அப்படிக் குறிப்பிட்டுக் கூறுமளவுக்கு அவை தரமான படைப்புகளுமல்ல. மலையக நாவல குறித்த வாசகனின் அறிவுப் பரப்பளவை அறிந்துகொள்ள இத்தகவல்கள் உதவும் என்பதாலேயே இவ் விலக்கிய வரலாற்றுத் தகவல்கள் இங்குத் தரப்படு கின்றன. V
ஊற்று துளி 5 ஒக்டோபர் - டிசம்பர் 2000
 
 
 

95 () 1960கள் வரை இநீ த மக்களிடையே மிகவும் செல் வாக்குடன் வாசிக்கப்பட்டவை பெரிய எழுத்துப் புத்தகம் என்றறியப்பட்ட நூல்களாகும்.
இந்நூல்களின் ஆசிரியர் புகழேந்திப் புலவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. புகழேந்திப் புலவர் இயற்றிய நூல்கள் வரிசையில நல ல தங் காளி கதை, அரிச்சந்திரன் கதை, மயிலிராவணன் கதை, தேசிங்குராஜர் கதை, பஞ்சபாண்டவர் கதை, கோவலன் கண்ணகி கதை, அல்லி அரசாணி மாலை, பவளக் கொடி மாலை, புலந்திரன் கனவு மாலை, புலந்திரன் தூது, மதுரைவிரன் கதை, காத்தவராயன் கதை என்பன போன்றவை உள்ளன. இவர் இயற்றியதாகக் கூறப்படும் ‘கண்டிராஜன் கதையும் உள்ளது.
இத்தகு நூல்களின் தோற்றத்தை ஆராய் நீ த வர்கள் , இவை இருபதாம் நுாற் றாணி டில் தானி வெளிவந்துள்ளன என் பதையும் தென் இந்திய மக்கள் கட் ல தாண டிய பரதேசங் களி ல குடியேறத்தொடங்கியதன். பின்னால்தான் இத்தகு நூல்கள் அச்சுருவம் பெற்றுள்ளன என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளனர்.
எழுத தறி வரில குறைநத ஒரு வாசக மட்டத்தினருக்கு தமது கவித்துவ ஆற்றலின் மூலம், தமிழில் புகழ் வாய்ந்த ஒரு புலவரின் பெயரைப் பயன்படுத்திக் கொண்டு இப்பணிகளை முன்னெடுத்துச் சென்ற புகழேநீதப் புலவர் எண் றறி யப்பட்டவர் ஆற்றியுள்ள சமுதாயப் பணி பாராட்டப்பட வேண்டிய ஒன்றுதான்.
காலனித் துவக் காலப் பகுதியில் , இந் நாவலி கள் இலங்கையில் எழுதப்
பட்டபோதுதான் தமிழகத்தில் புதுமைப்
பித்தன் "துன்பக்கேணி 1934என்ற தனது குறுநாவலை மணிக கொடிய லுமி , எஸ்.கிருஷ்ணன் 'தேயிலைத் தோட்டத் த லே' ஜனசக்தியிலும் எழுதியிருந்தனர்.
ஊற்று துளி 5 ஒக்டோபர்-டிகம்பர் 2000
என ற தனது குறுநாவலை
ஒரு குட் டி யானையுமி அம் மா யானையும் தண்டவாளத்துள் நடந்து போய்க்கிட்டிருந்துச்சாம். திடீர்ன்னு Train வந துருச் சாமி , அம் மா யானை குட்டியானையை இழுத்துகிட்டு வேகமா வெளியில குதிச்சி மயிரிழைல உசிரு தப்பிருச்சாம். நல்ல வேள கடவுள் எங்க மூணு பேரயுமே காப்பாத்திட்டாருண்ணு. அது எப்படி மூணு பேரு?
குட்டி யானைக்கித் தான் எண்ணத் தெரியாதே.
ஒரு யான ரொம்ப வேகமா ஓடி வந்து ஒரு பழக் கடக்குள்ள நொளஞ்சிச் சாம். மொதல்ல அது என்ன வாங்கும்?
மூச்சி வாங்கும்

Page 23
ć6
நேத்து மாதிரிதானிருக்கு. ஊரவிட்டு வந்து. இந்த பிரச்சினை எல்லாம் உருவாகி. நம்மலையும் ஒரு இல்லடம் இல்லாம அங்கையும், இங்கையுமா அலைஞ்சி திரியவைச்சிட்டு. நம்மட ஊரில தான் எவ்வளவு சுதந்திரமும், இன்பமும், இங்கை என்றால் நிரந்தரமா ஒரு இடமில்ல. காலைநீட்டி ஒழுங்கா உட்காரக் கூட இடம் போதாது. வாசலென்று சொல்ல எதுவுமே இல்ல. வாடகக் குடிசையிலதான் எத்தனை நாளைக்கு வாழ்றது? அங்காலயும், இங்காலையும் பெரிய சத்தம். ச்சே இதென்ன நரக வாழ்க்க.” குடிசைக் கதவருகில் குந்திக்கொண்டு கபூர்க் கிழவர் தன் வழமையான பல்லவிகளைப் பாடத் தொடங்கி
விட்டார்.
இப்போதெல்லாம் கபூர் கிழவர் இப்படித்தான் அலுத்தக்கொள்வது. அவரின் அன்றாடப் பிரச்சினையாக மாறியிருந்தது. யுத்தம் தொடங்கும் முன் சுதந்திரமாக கிராமத்தில் வாழ்ந்திருந்த காலங்களை நினைக்கம் போது வெப்பிசாரம் வெடிக்கும் “இனப்பிரச்சினை’ தேசிய ரீதியாக உருவெடுத்தபோது அவர்கள் அகதிகளாக
வெளியேற்றப்பட்டனர் கிராமத்திலிருந்து. ஓர்
இரவுக்குள்ளேயே அங்கிருந்த குடும்பங்கள் எல்லாம் விரட்டியடிக்கப் பட்டன. ஆனால் கபூர் கிழவர் மட்டும் அங்கிருந்து இலகுவில் வெளியேறிவிடவில்லை, பிள்ளைகளும் உறவினர்களினதும் பகீரதப்பிரயத்தனத்தை
யடுத் தே அங்கிருந்து மனமின்றி
42
வெளியேறினார்.
அவர் அங்கிருந்து வெளியேரும் முன் பல வழிகளிலும் முரண்டு பிடித்தார். ஆனால் அவரின் குடும் பத் தார் அதனை தட்டிக்கழித்துவிட்டனர். "என்னை விட்டுட்டு நீங்க போங்க. நான் மெளத்தாவுற என்றாலும் அது இங்குதான் நடக்கும். எனக்கு இந்த ஊரவிட்டு வேற எங்கேயுமே வரமுடியாது.” கபூர் கிழவர் பிடிவாதமாக கூறிக்கொண்டிருந்தார். நாள் செல்லச் செல்ல அவரின் பிடி கொஞ்சம் தளர்ந்து பின் உறவினர்களுடன் வெளியேறியவர் தான். இன்று பத்து வருடங்கள் கடிகார முட்களாய் நகர்ந்து விட்டது. கிராமத்திற்கு செல்லா விடினும் தொடர்ந்து கிராமத்துக்கு போக வேண்டும் என்ற ஆத்மாவின் கீதம் அவரின் உயிரை ஊசலாட வைத்துக் கொண்டிருந்தது.
அடிக்கடி கிராமத்திற்கு போக வேண்டும் என்று பிடிவாதம் பிடித்ததால் கபூர் கிழவ ருக்கு தனியொரு குடிசையை வாடகைக்கு எடுத்துக்கொடுத்தனர். இளய மகன் ரமீஸ் அவர் மீது அளவுகடந்த அணி பு வைத்திருந்தான். அவரின் அன்றாட பிரச்சினைகளை கேட்டு அவரின் தேவைகளை அணுதினமும் பூர்த்தி செய்தான். இருப்பினும், இடம்பெயர்வு பற்றியதான துயரத்தை மட்டும் தந்தையின் மனதை விட்டு மறக்கடிக்க முடியாமல் தவித்தான்.
அன்று ஒரு விடியற்காலை
“டேய் மனெ. நாம எப்படா கிராமத்துக்கு போறது? சொல்லுடா மனெ.” கபூர் கிழவரின் குரல் கசிந்து கொண்டிருந்தது.
ரமீஸ் வேலைக்குப் போகும் அவசரத்தில்
ஓரிரு வார்த்தைகளை சூடாக கொட்டினான். “என்ன வாப்பா உங்கட கரச்சல் பெரிசாப் போயிட்டு. நீங்க மட்டுமா அங்க போய் வாழபோறிங்க..? சும் மாணி டு தான் இருங்களேன்' என்றபடி ரமீஸ் வேலைக்குச் சென்றான்.
 
 

ரமீஸின் வேல் வார்த்தைகளைக் கேட்ட கபூர் கிழவருக்கு சோகம் அப்பிக் கொண்டது.
‘இன்னும் எத்தன நாளுக்குத் தான்
இங்கிருந்து சாகுறதோ' நெஞ்சின் குமுறல் அவரை அவ்விடத் திலேயே மல்லாந்து உறங்கச் செய்தது. இலேசாக இமைகளை மூடும் தருணம், யாரோ வரும் அரவம் கேட்கவே உடனேயே உறக் கத்தை தொலைத்து எழுந்தார்.
'அட றம்முளானா? வா மச் சான் கண காலத்துக்குப் பொறகு வாராய் வாவென்.' தன் பழைய நண்பனை கண்டதில் அவர் மனமெங்கும் சந்தோஷம் நிரம்பி வழிந்தது. இருவரும் பள்ளிக்கால வாழ்க்கையை தடம் பார்த்து, கிராமத்தின் சுவடுகளை மீட்டிப் பார்த்தனர்
'ச்சே. இந்த பாழாப் போன யுத்தம் எம்மலை இந்தப்பாடு படுத்திப்
தான் போட்டுது.' றம் முளாரின் நாவிலிருந்து வேதனை வார்த்தைகள், அவ்வேதனையின் சாரலாக இருவரும் கொஞ்சநேரம் எதுவுமே பேசாமல் வானத்தையே வெறித்து நீண்ட மெளனத்தின் பின் 'அப்ப கபூர் நான் சுனங்கள. போட்டு வாரேன்." என்றவாரே கபூர் கிழவரின் நரைத் தை முடியை தன் கரங்களால் கோதிவிட்டெழுந்தார்.
றமுளாரின் கரங்களை கபூர் கிழவர் கெட்டியாக பிடித்துக்கொண்டார். அவரின் பிடியைப்போலவே உதடுகளும் உணர்ச்சிக் கொதிப்பில் துடிப்பெடுத்தன. “றமுளான் அடிக் கடி இங்கால வந்து பார்த்துட்டுப் ஊற்று துளி 5 ஒக்டோபர் - டிசம்பர் 2000
போடா. மனசுக்கு கொஞ்சம் தெம் பா இருக்கும்.”
நண்பனின் உருவம் மறைந்தும் கிராமத்தின் நினைவுகள் மட்டும் அவரை மீண்டும் ஆட்கொண்டது.
சிறிது நேரதின் பின் மெல்ல எழுந்து மகள் ஆயிஷாவின் வீட்டை நோக்கி மெல்ல அடியெடுத்தார்.
'வாப்பா, வந்திட்டீங்களா? இப்புடி உக்காருங்க. ஊரப்பத்தி இப்ப இங்க கதைக்கக் கூடாது சரியா..?" எச்சரித்தாள் ஆயிஷா.
கபூர் கிழவர் சாரத்தை கட்டிய வணி ணமே 'இல்ல மகள், எப்பவாம் ஊருக்குப் போற எண் டு கேட்டுகிட்டு
போகலாம் ன்னுதான் வந்தனான்.'
சினம் கொண்ட ஆயிஷா. 1. நீங்க மட்டும் போங்க போய் அ. கயே சாவுங்க, இவருக்குத்தான் பெரிய
ஊருபத்து. எத்தின பேரு எல்லாத்தையும்
அங்க விட்டுட்டு சும்மா கெடக்கானுகள். இவருக்கு மட்டுந் தான் பெரிய ஊருபத்து வந்திட்டுது.’ அவரின் மனைவியும் மேலும் கணவனின் மனதை புணர் படுத்தினாள் ரணம் பட்ட மனதோடு தன் குடிசையை நோக்கி செல்ல எத்தனிக்கும் போது, அவ்விடம் ரமீஸ"ம் வந்த சேர்ந்தான்.
'ரமி'ஸ் ஓன்ற வாப் பாட தொல் ல பெரிசாப் போயிட்டுது. எப்ப ஊருக்கு போற. போற. என்றுதான் ஒரே கதையா இருக்கு” என்றாள் கபூர் கிழவரின் அன்பு மனைவி.
"வாப்பா, எதுக்கு வாப்பா நீங்க இங்க வந்தீங்க. கொஞ்சம் பொறுங்களேன் எல்லாரும் போனப்புறம் நாமலும் போகலாம் தானே’ என்றபடி ரமீஸ் வாப் பாவை சைக்கிலில் ஏற்றிக் கொண்டு குடிசையை நோக்கி விரைந்தான்.
米米米
நீர்ப்பட்ட சவர்க்காரம் போல் காலம்
43

Page 24
மிக வேகமாக கரைந்துகொண்டிருந்தது.
கபூர் கிழவரின் வயதின் இயலாமையும் தன் கிராமம் பற்றிய நெஞ்சின் சுமைகளும் அவரை நோயாளியாயப் படுக் கையில் தள்ளியது. இருப்பினும் கிராமத்தைப்பற்றிய தகவல்களை அறியும் வேட்கை தீப்பொரியாய் அணைந்து விடாமல் அவர் உள்ளத்தில் சுடர்விட்டுக்கொண்டிருந்தது.
அன்று வெள்ளிக் கிழமை ஜும்மா முடிந்து வீடு திரும்பும் அனைவரையும் அந்த ஒலிபெருக்கி சத்தம் வியப்படைய வைத்தது. 'அஸ ஸலாமு அலை க கு ம | ஊர் ஜமாஅத்தாருக்கு ஓர் அறிவித்தல், பிரச்சினை காரணமாக இடம் பெயர்ந்து அகதியாய் வாழும் பொதுமக்கள் அனைவரும் நாளை மீண்டும் தம் சொந்த கிராமங்களுக்கு மீள் குடியேற்றம் செல்வது பற்றிய கூட்டம் நடைபெற இருப்பதால் அனைவரும் நாளை காலை கூட்டத்திற்கு சமூகமளிக்கமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றீர்கள் ' ரமீஸ் அவ்வார்த்தைகளை கேட்டு சந்தோஷப் பட்டவனாக தன் தந்தையை சந்திப்பதற்காக வேகமாக சைக் கிளை மிதிக் தான்.
வீட்டை நெருங்கிய போது வீட்டின் முன் னாலிருந்து ஜனத் திரள் அவனை திகிலடைய வைத்தன. வீட்டினுள்ளே கபூர் கிழவர் கபன் துணியால் போர்த்தப்பட்டு பாயில் கிடந்தார்.
தான் கொண்டு வந்த சந்தோஷ செய்தியை கேட்டு பூரிப்படைய வாப்பா உயிரோட இல்லையே. அவரின் ஆசை ஈடேறும் வேளை அவரோ உயிரற்ற உடலாய் தன் ஆன்மாவை கிராமத்தின் மீதும் தன் சாரீரத்தை இங்கும் விட்டுச் சென்றுவிட்டாரே! ரமீஸின் வேதனைத் துளிகள் கண்ணிராய், அழுகையாய் அந்த சிறிய குடிசையை அதிரவைத்துக் கொண்டிருந்தன.
பாலைநகர்
ஏ.எச்.எம்.ஜிப்ரி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஊனம். 26ம் பக்கத் தொடர்ச்சி 'ரிஸ்னாதாத்தா. ரிஸ்னாதாத்தா. ஒடி வாங்கோ!' பக்கத்து குடிசையில் வசிக்கும் நிஸ்ார் ஓடி வந்தான்.
“என்னடா நிஸாரா? என்ன?.' ரிஸ்னா பதட்டத்துடன் கேற்க. “தாத்தா ரிழ் வான் நாநாவ ஹொஸ பரிட் டலுகி குக் கொணி டு போறாக . . குணி டடிபட்டு. சக் கரம் வாங் கோ போய்பார்ப்போம்,'
நிசார் ஓட அவன் பின்னால் தலைவிரி கோலமாக அழுத முகத்துடன் ரிஸ்னா ஓடினாள். நிசாரின் காலைப்பார்த்து ரிஸ்னா தேம்பித்தேம்பி அழுதாள்,
"நான் யாருக்கு பாவம் செஞ்சேன் அந்த இறைவன் இப்படி பணிணிவிட்டானே'
ரிழ்வானின் காலடியில் விழுந்து ஒப்பாரி வைத்தாள்.
நலத் தல புதைக் கப் பட்டிருநீத மிதிவெடியில் ரிழ்வானின் கால்சிக்கியதால் முழங்காலுக்கு கீழ் அவனின் வலது கால் அகற்றப்பட்டிருந்தது.
ரிழ் வான் மெதுவாக கணி விழித்துப் பார்த்தான். 'ரிஸ்னா. ஏ. ஏன் அழுற? இங்கப்பாரு எனக்கு ஒரு கால்தான் இல்ல இநீ த ரெணி டு கையரிருக்கும் மட்டுமி உங்களைக் காப்பத்துவன்.”
மனைவரி க கு தெமி பு, ட டினானி , பக்கத்தில் நின்ற சல்மாவை அருகில் அழைத்து அவளின் தலையைத் தடவினான். 'எனக்கு ஒனணும் ஆக லடா பெரிய ஸ கூல ல படிக் கபோற பிள்ள இப் படி அழக கூடாது' அவள் கனி னத தில வழிந்திருந்த கணிணிரை துடைத்தபடி அனைத்துக் கொண்டான்.
i i i f
b» ... ... , , , ,4 ፶e); ፤ እኳሻ ,31 " ( , ፩ 1 u 01, ir - Ubbil: i for ta 'sit hi ta' 6N„ჯi*
*。 ."أو ان ،
ولد 1 2 3 و : لا ان ان - كولر
3" لا 1 و 1 : د. الام , , , , , , , )؛ (3 ملل
ஊற்று துளி 8 ஒக்டோபர் - டிசம்பர் 2000

Page 25
No. 2, Moscue Building Dambula Rod Naula
COGSS-46S 1 1 E.
 

*இவ் விதழி முதல குறுக கெழுத து போட்டிக் குப் பதிலாக இப் போட்டியை அறிமுகம் செய்கிறோம்.
*சரியான விடை எழுதும் பணப் பரிசு வழங்குவதுடன், மேலும் 25 அதிஷ்டசாலிகளுக்கு அம்மாத ப்ரவாகம் இதழ் இலவசமாக அனுப்பி வைக்கப் படும்.
* மேலும், குறுக்கெழுத்துப் போட்டிக்கான விதிகள் இதற்கும் பொருத்தமானதாகும்.
ப்ளீஸ் ரிலாக்ஸ் போட்டி 1 1. தற்போதை ஒலிம்பிக் சர்வதேச சங்கத்
தலைவர் யார்? \
2. இலங்கைக்கு ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்று தந்த இரு வீரர்களின் பெயர் என்ன? எவ்வாண்டுகளில் பதக்கம் வென்றார்கள்?
3. ஐ.நா சபையின் முதல் பொதுச் செயலாளர் யார்? எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
4. உலகின் முதல் பெண் பிரதமரை தெரியும். உலகின் இரண்டாவது பெண் பிரதமராக பதவியேற்ற பெண்மணி யார்?
5. ஒரு ஓவரில் 6 சிக்ஸர் அடித்த கிரிக்கட் : 6ửjñ856iĩ uJIIff ujffff ?
கு.எ.போ. s இற்கான விடைகள்
இடமிருந்து வலம் மேலிருந்து கீழ்
1. அம்புலி 1. அந்தம் 4. சனி 2. புத்திரன் 5. தந்திரம் 3. கனி .ே மது 4. சம்மதம் 8. மான் 7 தும்பு 9. தம் 8. Dirapu
10. தலை -
11. வேம்பு
ஊற்று துளி 5 ஒக்டோபர் - டிசம்பர் 2000
மூவருக்கு
பரிசு பெறும் அதிஷ்டசாலிகள். முதற் பரிசு 100/-
பி.முனிரா
இல,7, மீதெணிய,
கண்டி வீதி
வரக் காமுறை
இரண்டாம் பரிசு 75/- எம்.ஆர்.எம்.நெளசாட் இல,46, வைத்தியசாலை வீதி, கம்பளை.
முன்றாம் பரிசு 50/-
சியானா ஏ. காதர் மின்ஹாத் கனிஷ்ட வித்தியாலய விடுதி, யோனகபுர,
திக் வல்லை.
பாரட்டுபொறும் ஐவர்
1.எம்.எம்.மசூமியா - கெகிராவா 2.சியானா சனுான் - கல்ஹின்னை 3.எஸ்.ஜே.பசாகிரா - வரக் காமுறை
4.பஹற்மிதா ரவ் ஸ்தீன் - உக்குவளை 5.ஜி.நித்யா - மாத்தளை
இவர்களுக்கு ப்ரவாகம் ஐந்தாம் இதழ் இலவசமாக அனுப்பிவைக்கப்படும்.

Page 26
A.H.M. FAZEEL
Engineers, Designers Constructors, Šurveyors ö
éuppliers.
49, Princes Gate, Colonbo 12.
MeV ()77 35(0)736
Br. No 8. EIkaduya Rali, Uk u tela.
 
 
 
 


Page 27
Ji
Gl’ILL FLuři
பதினாறு இலங்கை வரலாற்றில்
(ീ காவியம் எழுதிய சோக நாள்
ன்ேறுதான் இலங்கை அரசியலில் விருட்சழேமொன்று
வீழ்ந்தது
சம்மாந்துறை மண்ணில் உதித்த Tā arī அரனாயக்க வானில் ைேEந்தது
இந்த ஒளிச்சுடரின் LDPαιΤΕι முஸ்லீம்களுக்கு LDLGLDE) இந்நாட்டிற்கே ஒரு பேரிழப்பு
எம் தேசத்தில் ിബL LI
வேண்டுமென e Glljesit UEJ 6ീLT
ിIL്ഥu'I ஒற்றுமைக்காக தேசிய ஐக்கிய முன்னணியை உருவாக்கிய
தலைவர்
முஸ்லீம்களின் முகவரிக்காக அரசியவில் பாடி புரட்சிகளை செய்தார் ந்ேத புரட்சி கொடியே இன்று சரிந்து விட்டது
P| |NTEI) B' L}, \ FII ('J.E.NT, N.S. I.5,
 

5:LE தகர்தெறிந்து ി[LI്ഥu'
_fഥ18 உயர்பீடத்தில் ஓங்கி ஒலித்த அவர் குரல்
இரத்த கரற பழந்த எம் தேசத்தின் யுத்த வரலாற்றை மாற்றியமைக்க துடியாய் தடித்தவர் நின்று எம்மைவிட்டு ീ8 ബീ'LIf.
அரசியலில் சவால்களையெல்லாம் TgangscTTITä.4VL சரித்திர நாயகன் ஐம்பத்திரென்டு வயதில் சமாதியானது இறைவரின் நாட்டமோ?
ஷஷநான் எனும் நீலகி பாடி
(ീ
புகழ் பரப்பிய கிழக்கின் சூரியன் மேற்கில் மறைந்து
போனது
விதியா. சதியா..?
மனன்னறைக்குள் அடைக்கலமாகினாலும்
சிவரின் மனச்சிரையில் என்றும் வாழ்ந்துகொண்டிருப்பார்
பர்வின் இஸ்மாயில் வரக்காமுவிற
SLLL LLLL LEEELSS S LLLLLLLL S SLLLLSSHHHHHS Ka0E00