கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ப்ரவாகம் 2001.01-03

Page 1
3313fl – IEHjä 2001 PRAWA
சுதந்திர கலை இலக்கி
 
 

ஊற்று 1 துளி 6
|
JAWA

Page 2
ஆ
Pઈ'િe, ઊછGfifg Gt)d TGSíg BiSCGftS
LUCKYLAND BISCUITS MANUFACTURERs NANDARAMPOTHA, KUNDASALE.
TEL: 08 224217, 232574, FAX: 948-233740
 
 
 
 

ஊற்று 1 துளி 6 8g6OITes Irf - DrTrrègF. 2001
உள்ளே.
கட்டுரை
அக்கினித் தாகம் ஹாய் பிரணர்ட்ஸ் தமிழகத்தில் சிறுகதை 1950-2000 கடந்த நூற்றாண்டின் மலையக இலக்கியம் இன்றைய கவிஞர்களின் பார்வையில் ஈழத்து முஸ்லிம்களின் வாழ்வியல்
கவிதை
கவிப்ரவாகம் ஹைக்கூ பூக்கள் எனக்குள் ஏனோ நட்சத்திரம்
சிறுகதை
மனுஷியம் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால். கலைஞன்
மற்றும்
இது அந்தனி ஜீவாவின் பக்கம் சரிநிகர் சரிநிகராக கவனிக்கவில்லை
bré186fr ELSE:'6öGnortið.
புதிய சீருடைகளும். பக்கங்களின் ஒரங்கள் மடிக்கப்படாத புத்தகங்களுமாய், அடுத்த வகுப்பில் தடம் பதிக்கக்காத்திருக்கும் மாணவர்களும்.
ஒரு பூப்பூத்து வாடிப்போகும் நேரத்துக்குள் காணமல்போன சென்றவருடம்
போலவே அடுத்த வருடமும் காணமல்
போய்விடும். உங்களின் வெள்ளைச் சீருடைகள் அழுக்காவதற்குள். அடுத்த பரீட்சை உங்களுக்கு "ஹலோ” சொல்லும்,
உங்களின் தகுதி என்ன? உங்களுக்குள் முகம் மறைத் து உட்கார்ந்திருக்கும் திறமைகள், லட்சியங்கள், கனவுகள் உங்களைக் கொண்டு போய்ச் சேர்க்கப்போகும் முகவரி என்ன?
உங்களின் எதிர்காலம் என்ன?.
அணிந்திருக்கும் வெள்ளைச் சீருடைகளை நிரந்தரமாகக் கழற்றி வைக்கும் முன் பு உங்களை இனங் கணி டு கொள்ளுங்கள். இனி என்ன விலை கொடுத்தும் உங்களால் வாங்க முடியாத மாணவப் பருவம் வீணாக்கப் படவில்லை என்பதை இனியாவது நிச்சயப்படுத்துங்கள்.
தவற விட்டுத் தவித த சம்பவங்களின் சுவடுகளை முதுகில் சுமந்து உங்கள் முன்னால் நாங்கள் நிற்கின்றோம். முன்னால் சென்றவர்களின் கொடுமையான அனுபவங்களை நீங்கள் பாடங்களாக்கிக் கொள்ளவேண்டுமென்ற நிர்ப்பந்தமில்லை.
எச்சரிக்கைகளையாவது ஏற்றுக்
புதிய பூபாளங்கள் கொள்ளுங்கள்.
கிளிஞ்சல்கள் இலண்டனில் நுால் கண்காட்சி ஆவழிப் ஏ புஹாரி ஆசிரியர்
Chief Editor :Aashif A Buhary r Sub Editor : Uku Wela Akram & A. R. ASWarul Humaid
Layout 8. Designs Type Setting
:Aashif A Buhary
: M. N. M. Rifas, Rifsa Naheem & Arafath A Buhary
Speacial Thanks
:K. M. M. Na Seeth & S. J. M. RiZVj
Published at :No 9, Matale Road, Ukuweia. Post Code 21.300. Printed at :Daafir Creations, 22 E5, Galle Road, Dehiwela. e-mail :pravagamGDyahoo.com ISSN NO: 1391 - 5827
காசுக்கட்டளை
ÜL(36) Tf : S.H.M. Akram, Ukuwela Post Office 67607 (3/3ÜLîL6)jub
துளி ജബ dritë

Page 3
உன்னைவிட அழகானது - உன்
(35 Futb.
என்னைவிடப் பாவமானது - என்
காதல்.
(ப.கோ.பிரபாகர் - விகடன்)
கவிதைகள். உணர்வுகளின் வடிவம். செறிவான, செழுமையான, ஆழமான. எல்லாவற்றையும் விட அழகான ஒரு வடிவம் உணர்ச்சிகளின் முழு வடிவமாக மனிதன் இருக்கின்றான். அவனால் வெளிப்படுத்த முடிகின்றது. புரிந்து கொள்ள முடிகின்றது. கோபம், வேகம், வெட்கம், பொறாமை, (3 g ff ab LD , சந்தோஷம் , ஏக்கம் என்று எ ப் போது மி ஏதாவது ஒரு உணர்வின் பிரதியாக இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் மனிதனுக்கு இருக்கத்தான் செய்கின்றது.
அக்கினித்
உணர்வுகளோடு 35 (60 إرك வெளிப் படுத் தும் அவசியமும் சேர்ந்துகொள்கின்றது. பகிர்ந்து கொள்ளல் என்ற தலைப்புக்குள்தான் எத்தனை ஆயிரம் விஷயங்கள் இருக்கின்றன? ஆனால் சொல்லும் விதம் தான் ஒரு மிகப் பெரிய கேள்விக்குறியாக நம்முன் நிற்கின்றது.
சொல்லப்போவதை எளிமையாக, அழகாகச் சொல்லி உங்களின் உணர்வை. அது எதுவாக இருந்தாலும் கேட்பவரால் அதை உணர்வுகளுக்குள் ஏற்றுக்கொள்ள முடிகினிறதென்றால் . உங்களின் உணர்ச்சிகளுக்குள் அவரும் வந்து விடுகின்றாறென்றால். எழுத வேண்டுமென்ற எண்ணமும் உங்களுக்கு இருக்கின்ற தென்றால். தள்ளிப்போடாதீர்கள்.
நினைவில் வைத்திருங்கள். எந்தக் குழந்தையும் பிறந்தவுடன் எழுந்து நடந்து ஓடியதில்லை. காயங்கள் வாங்காமல், வியர்வையோ, கண்ணிரோ சிந்தாமல் சாதனைகள் சம்பவித்ததாக சரித்திரங்கள் இல்லை.
சமுதாயச் சிந்தனையும்,
ஆரம்ப கால எழுத் துகள் எல்லாம் மற்றவர்களிடம் அங்கீகாரம் பெறப்பட வேண்டுமென்று எதிர்பார்க்காதீர்கள். உங்களைச் செதுக்கிக்கொள்ளாதவரை நீங்கள் சிற்பியென்று சுயம் ஏற்காதீர்கள்.
ஒரு எழுத்தாளனால் வாசகனின் உணர்வுகளில் கை வைக்க முடிகின்றது. அவனின் காயங்களை ஆற்றவும் , வழிகாட்டவும், நல்ல சிந்தனைகளைக் கற்றுக்கொடுக்கவும். அவனின் தவறுகளில் ஆணியடிக்கவும் உங்களின் எழுத்துக்கு
சக்தியிருக்கின்றது.
தாகம எழுத்துலகில் கால் வைக் க நீங்கள் ஆசைப் படுகின்றீர்களென்றால், அங்கீ காரத்துக்காக காத்திருக்கின்றீர்களென்றால். தாய்மண்மீது காதலும் உங்களுக்குள் இருக்கின்ற தென்றால்.
ப்ரவாகத்தின் பக்கங்கள் உங்களைச் சுமக்கக் காத்திருக்கின்றது.
கவிதைகள் என்பது இலக்கியம் மட்டும்தான் என்று சிலர் ஒதுங்குகின்றார்கள். அது வெறும் கிறுக்குத்தனம் என்று சிலர் ஒதுக்குகின்றார்கள். இரண்டுமில்லை. ரோஜாவுக்கு எழுதப்பட்ட உவமை போல் கவிதை என்பது கவிதையாக இருப்பது. அவ்வளவுதான்.
பகலும் இரவும்
(36J6OSTLLIT DIT?
சூரியனாய் இரு.
(விகடன்)
சுடவேண்டும். அல்லது சூடு தணிய வேண்டும். உணர்வுள்ள வாசகனை எதுவும் செய்யாத எழுத்துக்கள் பத்திரப்படுத்தத் தகுதியற்றவை.
மு. மேத்தா எழுதிய "மனிதனைத் ’ என்ற கவிை யின் வரிகளை ஒரு
 

தடவை ஆழமாகச் சுவாசித்துப் பாருங்கள். கவிதைக்குள் கொண்டுவருவதற்கு உலகில் இன்னும் எத்தனையோ விஷயங்கள் மிச்சமிருப்பது புரியவரும்.
சிறகுகள் உனக்குச்
சீதனமாய் வந்தன.
சிலுவைகளைத்
தயாரித்துக் கொண்டாய்
பாரம் சுமப்பதாய்ப்
பாறைசாற்றுகின்றாய் என்று தொடங்கி.
வரங்களே உனக்கு
வழங்கப்பட்டன.
அவற்றை
சாபங்களாய் மாற்றி ஏன்
சங்கடப்படுகின்றாய்? என்று கேள்வியோடு முடிகின்றது. செய்வதையெல்லாம் செய்துவிட்டு விளைவுகளை சமுதாயத்தின் மீதோ, படைத்தவன் மீதோ அள்ளிப்போடும் முழு மனித குலத்தையும் சாட்டையால் தொட்டுப் பார்க்கின்றது அந்தக் கவிதை.
நீங்கள் எழுதிக் குவித்திருப்பவைகளை ஒரு வாசகனாகப் படித்துப் பாருங்கள். உங்களின் எழுத்துக்களின் எத்தனை வரிகள் சமூகத்தின் விழிப்புக்காக வேர்த்திருக்கின்றது என்று அலசுங்கள்.
நம் கண் முன்னால் அநீதிகள் நடக்கின்றன. அசிங்கங்கள் தினம் தினம் அம்பலமேறிக்கொண்டிருக்கின்றன. இனப் பிரச்சினை, மதக்கலவரம், சீதனக் கொடுமை. ஒழுக்கச் சீர்கேடு. வழி தவறுவதை நாகரீகமாக்கிக் கொண்டிருக்கும் மாணவர் சமுதாயம். அரைகுறை ஆடைகளும்.
ஆபாசங்களும், தெருக்களில் நடாத்தும் அட்டகாசம், சினிமாக்களின் பாதிப்பால் ஹிரோக்களாக அங்கீகரிக்கப்படும் ரவுடிக் கூட்டம். பாடல் கேட்கும் பெயரில் சொந்த மானத்தை வானலைகளில் விற்றுக் கொண்டிருக்கும் நம் வீட்டுப் பெண்கள்.
என்று. குப்பைகளால் மூடப்பட்டுக் காணமல் போய்க்கொண்டிருக்கின்றது நம் சின்னத்தேசம்.
சமுதாயம் என்பது நானும், நீங்களும் T6.
நம்மைச் சுற்றி நடப்பவைகளில் கண்மூடித்தனமாக இருந்து விட்டு, எங்கோ நடப்பவைகளை எள்ளிநகையாட நமக்கு எந்த உரிமையும் இல்லை.
குப்பைகளைக் களைவதற்கு ஒரு காக்கைக்கு இருக்கும் உணர்வாவது நம்மிடம் இல்லையெனிறால் . மனிதனென்ற தோலுக்குள் முடங்கிக்கொள்ள நமக்குத் தகுதியும் இல்லை.
நாகரீகப் போர்வைக்குள் முடங்கிக் கிடக்கும் குற்றங்களைச் சுட்டெரிக்கப் புறப்பட்டு வாருங்கள்.
உங்களின் படையெடுப் போடு
இணைந்து கொள்ள பெருமையுடன் காத்திருக்கிறது ப்ரவாகம்.
நட்புடன் உக்குவளை ஆஷ்ரம்
ஊற்று துளி 6 ஜனவரி மார்ச்

Page 4
ஹாய் பிரணர்ட்ஸ்
உலகில் ஒரு மனிதனை மனிதனாக வாழச் செய்வதுதான் கல்வி. அகிலமெங்கும் பரந்து கிடக்கும் செல்வங்களிலே கல்விச் செல்வமொன்றே தனித்துவமானது. இதனால்தான் இஸ்லாம் கூட் கல்வியின்பால் ஒரு ஆழ்ந்த அக்கறையைக் கொண்டு திகழ்கிறது. இஸ்லாமிய ஷரீஆ கல்வி கற்பதை ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாக்குவதன் மூலம் கல்வியின் சிறப்புக்கு அத்திவாரமிடுகிறது.
இஸ்லாமிய வேத நுாலாகிய அல்குர்ஆனை, அல்லாஹற் ஒரு அறிவுப் பொக்கிஷமாக, அறிவியல் கலசமாக ஆக்கி. மனிதனை விழிப்படையச் செய்கிறான். வல்ல அல்லாஹற் அல்குர்ஆன் வாயிலாகப் பேசிய முதல் வார்த்தை "இக்ர..". ஓதுவீராக, படிப்பீராக என்றுதான் தொடங்குகிறது. அப்படியானால், இஸ்லாத்தின் ஆரம்பமே
அல்லது அத்திவாரமே கல்வியில்தான்
தொடங்குகிறது. இந்தளவுக்கு இஸ்லாம் கல்வியை முதனிலைப் படுத்தி இருக்கிறது. ஆனால் இன்றைய முஸ்லிம் சமூகமோ. கல்வியை கால்தூசாக நினைக்கிறது. கற்பதையும், கற்றுக் கொடுப்பதையும் பொழுது போக்காகவும், வீணாகவும் நினைக் கரிறது. மாணவர் கூட்டம் மடையர்களாகவும், காடையர்களாகவும் மாறிக் கொண்டிருக்கிறது. விழுந்து விழுந்து படித்தாலும் வாழ்க்கை சிறக்கவில்லை; கல்வி இனிக்கவில்லை. இதற்கு ஒரே காரணம் ஒழுக்கமின்மைதான்.
கல்வி புனிதமானது, இனிமையானது. "அது ஒழுக்கமானவர்களால், ஒழுக்கமும், பணி பும் உடையவர்களுக்குத் தான் போதிக்கப்பட வேண்டும். ஒழுக்கம் என்பதொன்றும் கடையில் வாங்கும் சரக்கல்ல. தாயின் பாலோடு பருகிய அன்பு, பண்பு, பாசம், நேசம், கருணை. இவைகளின் வெளிப்பாடுதான் ஒழுக்கம். நல்ல தாயின்
-வரக்காமுறையூர் ராஸிக் -
மடிதான் ஒழுக்கத்தின் கலாசாலை. இத்தகைய ஒழுக்கம் உள்ளவர்களிடம்தான் உன்னதமான கல்வி ஒட்டிக் கொள்ளும். ஒழுக்கம் என்றால் என்ன? என்று தெரியாதவர்களுக்கு கல்வி போதிப்பது, கழுதைகளுக்கு வேதம் சொல் லிக் கொடுப்பதற்குச் சமன்.
ஒரு மாணவனின் ஒழுக்கத்தை உரசிப்பார்க்க வேண்டும். அவனது பேச்சு, உடை, நடை, பாவனை போன்ற அனைத்து செயற்பாடுகளும் மரியாதைக்குரியதாக ஆக வேண்டும். அப்போதுதான் அவன் கல்வி பெறுவான்.
கல்வி பெற பணம் அவசியமில்லை. ஆனால் ஆர்வம், ஆசை, மரியாதை, கடும் உழைப்பு என்பன இருக்க வேண்டும். ஆனால் மரியாதை நமது சமூகத்தில் இன்று மருந்துக்கும் இல்லை. கற்றாரையே கற்றார் வீழ்த்தும் வித்தியாசமான உலகமிது. அதனால்தான் முஸ்லிம்களின் கல்வி வீழ்ச்சி தவிர்க்க முடியாதவொன்றாகி விட்டது.
"நீங்கள் எவரிடத்தில் கல்வியைக் கற்றுக் கொள்கிறீர்களோ, அவரிடத்தில் பணிவுடன் நடந்து கொள்ளுங்கள்” என்பது நபிமொழி. ஆனால் அந்த பணிவைத் தொலைத்து விட்டு மாணவச் சமூகம் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. "பணிவுடன் நடந்து மரியாதை செலுத்தாவிட்டாலும் பரவாயில் லை; அவமதிக்காமலாவது இருக்கலாமே” என்று எடுத்துச் சொன்னால், "பணம் பெற்றுத்தானே கற்றுத் தருகிறார்கள். இவர்களுக்கென்ன மரியாதை’ என்று கேட்போர் பலர் இருக்கிறார்கள். சம்பளம் என்பது கல்வி போதனைக்கான கூலியல்ல; சிரமத்திற்கான சன்மானம், கல்வியை
பணத்திற்கு வாங்கவும் முடியாது. விற்கவும் முடியாது. அது விலை மதிக்க முடியாத சொத்து.
 
 
 

அந்தக் கல்விச் சொத்தின் சொந்தக்காரர்கள்தான் உங்கள் வாழ்வின் ஊற்றுக்கண்கள். அந்த ஊற்றுக்களை அடைத்துவிட்டு நீங்கள் வரண்டு போகாதீர்கள் ஒரெழுத்தைக் கற்றுத்தந்தாலும் அவருக்கு நீங்கள் அடிமை என்பதை உணருங்கள். “எவரேனும் எனக்கு ஓர் எழுத்தைக் கற்றுக் கொடுத் தாலும் அவருக்கு நான் அடிமையாவேன். அவர் என்னை உரிமை விடவும் செய்யலாம் அல்லது விற்றுவிடவும் செய்யலம்’ என்ற அலி (ரலி) அவர்களின் கூற்றை ஒரேயொரு தடவை சிந்தையில் எடுங்கள். “நாங்கள் ஓர் அரசருக்குப் பயப்படுவது போல் எங்களுடைய ஆசிரியர் இப் றா ஹரீம் (ரஹ ) அவர்களுக்கு பயந்திருந்தோம்” என்ற மு.கீரா (ரஹற்) அவர்களின் வாக் கை மனப் பாடம் செய்யுங்கள்.
இறுதியாக, ’’ 6I 6)! Tĩ தனி ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்தவில்லையோ, அவர் வெற்றியடைய முடியாது” என்ற இமாம் அபூ யூசுஃப் (ரஹற்) அவர்களின் அருள் வாக் கையாவது எண் ணிப் பாருங்கள். அப்படியானால் மரியாதையும், கல்வியும்தான் இரட்டைக் குழந்தைகள். மரியாதை இல்லாதவனுக்கு கல்வி பூஜ்யம்தான் என்பது தெளிவான 2 - 600i 60) Du T (5 f. இதனால் தானி "ஆர்வமின்றியும், அலட்சியமாகவும் ஒருவர் கல்வி கற்க ஆரம்பித்தால் அவர் வெற்றியாளராக முடியாது. மாறாக எவரொருவர் தாழ்மையுடன், வறுமை நிலையிலும் கல்வி கற்கின்றாரோ அவர் வெற்றியாளராக முடியும்” என்றதொரு தெளிவான கருத்தை இமாம் ஷாபியீ (ரஹற்) அவர்கள் முன் வைக்கிறார்கள். இதே கருத்தை ஒட்டித்தான் "உடலை வருத்தாமல் கல்வியைக் கற்றுக்கெள்ள முடியாது” என பல அறிஞர்கள் உறுதியாக க் கூறியுள்ளார்கள்.
இதேபோன்றுதான் “கல்வி கற்க
நாணப்படுபவர் அல்லது பெருமையடிப்பவர் கல்வியைக் கற்றுக் கொள்ள முடியாது”
என்ற நபிமொழி, புகாரி ஷரீபிலே வரையப்பட்டுள்ளது. அப்படியானால்
ஒழுக்கம், ஆர்வம், சிரமம் இவைகள்தான்
கல்வியின் மூலதனம் என்பதை இனியாவது சிந்தையில் கொள்வோம்.
எனவே, ‘கல்விக்காக உயிரைக் கொடுப்பவன் ஒருபோதும் மரணமாவ தில்லை' என்ற நபி மொழிக்கேற்ப எம்
உயிர் மூச்சுக் களை கல் விக்காக அர்ப் பணிப் போம்! இதே போன்று ‘அறிவாளியரின் கரங்களிலுள்ள
எழுதுகோலானது போர்விரனின் வீரவாளை விட மிகப் புனிதமானது.’ என்ற நபி மொழிக்கிணங்க அந்தப் புனிதக்கரங்களை நாழும் புனிதப்படுத்துவோம்!
கடைசியாக “கல்வி ஒரு முஸ்லிமின் கைதவறிப்போன ஒட்டகை போன்றது. அதனை நீங்கள் எங்கு கண்டாலும் பிடித்துக்கொள்ளுங்கள்’ என்ற நபி மொழியை ஆழ்ந்து நோக்கி எங்கும், எதிலும் கல்வியைத் தேடிப் படித்து ஈருலகிலும் ஈடேற்றம் பெறுவோமாக.
"முற்றும்
நட்சத்திரம்
நடு நிசி இரவில் வானத்தை நோக்கிய விழிகள் தொலைதுார நட்சத்திரமாய் கண்னோரம் சோகம்
தொட்ட இடம் தடயமாய் வான் வெளியில் பரந்து காரிருளில் ஒளியைத் தேடி காரிகை போல் மிளிரும்
பாரினில் பிறந்து சுதந்திரமாய் திரிந்து கல்யாணம் ஆகாமல் காலனவன் பிரித்துவிட்ட
வண்ணப் பூக்களே!
இந்த நட்சத்திரங்கள்
செல்வி எஸ்.யோகமலர்

Page 5
தமிழில். சிறுகதை 1950 முதல் 2000 வரை
நாஞ்சில் நாடன்
(சென்ற இதழ் தொடர்ச்சி.)
அசோக மித்திரன் பிரகடனம் செய்து கொள்ளாத நவீனத்துவவாதி. சமகால தனிமனித வாழ் வின் நுட்பமான அவலங் களைக் குரலுயர்த் தாமல் எளிமையான மொழியில் சிறுகதைகளாகப் பெயர்த்தவர். மெளனியின் கையறுநிலை வேறு, அசோகமித்திரனின் அவலம் வேறு.
'காடன் கண்டது என்ற தருமு சிவராமுவின் சிறுகதையில் உரைநடை கவிதைத் தன்மையையும் தாண்டிச் செயல்பட முடியும் என்பது நிரூபணமாகியது.
சா. கந்தசாமியோ, மொழி மூலம் மொழியைத் தாண்ட முயன்றவர் 'அது மொழிக்குள்ளே அடங்கி இருப்பது இல்லை. அதற்கு காலமும் இடமும் இல்லை என்பதுபோலவே மொழியும் கூட இல்லாமற் போய்விடுகிறது. அதாவது மொழியில் எழுதப்படுகிற இலக்கியம் மொழியின் வாயிலாகவே எல்லைகளைக் கடந்து விடுகிறது என்பது சா.கந்தசாமியின் தன்னிலை மொழிதல். ஆனால் நன்றாக எழுதிக்கொண்டிருந்த சிறுகதையாசிரியர்கள் பலருக்கும் சிறுகதை மொழி கை நழுவிப்போய்விட்டது என்பதும், அதை அவர்கள் அறிந்து கொள்ளக்கூட இல்லை என்பதும் நமது ஏமாற்றங்கள்.
தொடர்ந்து யதார் தி த வாத எழுத்துக் களில் எழுதுபவனுக் கு எண்பதுகளுக்குப் பிறகு சலிப்பு ஏற்பட்டிருக்க வேண்டும். மேலும், மேலை நாடுகளின் நவீன பாணிகளின் தொடர்ந்த தாக்கங்களும் அவனுள் படைப்பு மனநிலையில் மாற்றங்களைக் கொண்டு வந்திருக்க வேண்டும். எனவே சிறுகதைகளைப் படைக்கும் பாணியில் , மொழியில் , கையாளும் விஷயங்களில் புதிய தன்மைகள் புலப்பட்டன. யதார்த்தவாதம் தான் எல்லாமா எனும் கேள்வி பிறந்தது. 1950க்கு முன்
06
எழுதிய சிறுகதையாசிரியர்கள் ஒரு விவசாயியைப் போல் இலக்கியப் பயிர் செய்தபோது, 1980களுக்கு பிறகு எழுத வந்தவர்கள் வெளிப்பாட்டுத் தந்திரங்கள் அனைத்தும் தெரிந்தவர்களாக இருந்தனர்.
எநீ த இயக் கத்தோடும் நேரடித்தொடர்பற்ற சிறுகதையாசிரியர்களின் தொகை பெருகத் துவங்கியதும் இந்த காலகட்டத்தில் தான். உள்ளடக்கத்துக்கு இருந்த முக்கியத்துவம் குறைந்து, உருவ நேர்த்திக்கும் புதுமைகளுக்கும் சிறுகதைகள் இடமளித்தன. உள்ளடக்கம் மிக அற்பமானதொன்றாக இருந்தபோதும் கூட, சிறுகதைகள் சில உருவத்தில் புதுமையாக இருந்தன.
யதார்த்தத்தில் திருப்தி கொள்ளாத மனநிலை, மரபிலிருந்தும் விடுதலை கொள்ளச்செய்தது. நூதனமான தத்துவச் சிக்கல்களையும் புதிய தலைமுறை எதிர்கொண்டது. உருவம் எது உள்ளடக்கம் எதுவென்று தீர்மானிக்க சிரமமான சிறு கதைகள் எழுதப்பட்டன, கோபிகிருஷ்ணன் போன்றவர்களால்.
ஆனால் அடிப்படையான சில கேள்விகள் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
இன்று தேவாலயங்களின் வாசல்களில், கோயில்களின் முன் மண்டபங்களில், பள்ளி வாசல்களின் முன்னால் தொழுநோயாளிகளிகள், கை கால் முடம்பட்டோர், குருடர், சிறுவர் பிச்சை எடுக்கிறார்கள்.
இன்றும் தருமண வீட் டின் விருந்துக்கூடங்களில் நீரழிவு நோயாளிகளும் இரத்த அழுத்தக்காரர்களும் விள்ளாமல் வைத்துவிட்டு போகும் இனிப்பு வகைகள்
 
 
 
 
 
 
 

எச்சிற்கூடைக்குப் போய், அங்கிருந்து பொறுக்கப்பட்டு பாலிதீன் பைகளில் சேகரிக்கப்பட்டு குட்ய்த்துக் குழந்தைகளுக்கும் முதியோருக்கும் விநியோகம் ஆகின்றன. இன்றும் இரயில் தடங்களில் வீசப்பட்ட எச்சில் பொட்டலங்களில் மிச்சம் தேடுகிறான் மனிதன்
ஆனால் வாழ்வின் அவலங்களோடும் உள் ளார்ந்த வேதனைகளோடும் தவிப் புக்களோடும் படைக் கப்பட்ட சிறுகதைகள் வேறு செய்திகளில் கவனம் கொள்ளலாயின, ஜெயகாந்தன் பாணிக் கதைகளின் தொடர்ச்சி அல்ல நான் கோருவது. தொடக்கத்தில் காணப்பட்ட வண்ணநிலவனின், கந்தர்வனின், பூமணியின், தமிழ்ச்செல்வனின் வீரியங்கள் தொடர்ந்து வரவில் லை. அனுபவ நகல் களும் போலிகளும் ஒருதலைப் பட்சப்பார்வைகளும் பதிவாகிப் புறக்கணிக்கப்படும் நிலையில், துன்புறும் மனிதன் சிறுான்மை ஆகிப் போய் கவனிப்பாரின்றிக் கிடந்தான். தத்துவங்கள் ஏதுவும் அவனைப் பொருட்படுத்த வேண்டிய நிர்ப்பந்தங்கள் அற்றுப் போய் நின்றன. கலைநேர்த்தி பற்றிப் பேசுகிற எழுத்துக்கள் மனிதனின் உடைவை, சிதிலத்தை, இருண் மை யைப் பேசினவே தவிர, உதிரிகளை, விளிம்பில் கை சலிக்கத் தொங்கிக் கிடப்பவர்களைப் பேசும் வலுவான சிறுகதைகள் அருகரியோ, புறக்கணிக்கப்பட்டோ வருகின்றன.
தீவிரமான சிறுகதைகள் எழுதிய பலரைப் பார்த்து வாசகன் இன்று கேட்க (1ՔtԶավլք உங்கள் அறச்சீற்றம் எங்கே போயிற்று? வயதின், வாழ்க்கை வசதிகளின், கண்ணோட்ட மாறுதலின் அல்லது கோட்புக்குவியலின் இடையே குரல் அமுங்கிப் போய்விட்டதா? இதெல்லாம் இப்படித்தான் இருக்கும். யாரும் எதுவும் செய்துவிட முடியாது என்ற ஒப்புக் கொடுத்தலா?
1975
வாக்கில் நான் எழுத
வந்தபோது எனக்கு முன்னே எழுதி வெற்றி கண்ட நான் ஒரு பாமர ரசிகனைப் போல வியந்து பாராட்டி நின்ற சிறுகதையாளர்களின் தீவிரங்கள் எல்லாம் இன்று ஊற்று வற்றிய
பாழடைந்த கிணறுகளாய்ப் போனதேன்? வண்ணதாசனை விட்டு விடலாம். அவர் அன்பின் நுட்பங்களை இன்னும் தேடிக் கொண்டு போகிறவர்தான். ஆனால் எஸ்தர், பாம்பும் பிடானும் ஆகிய கதைகள் எழுதிய வண்ண நிலவனுக்கு என்ன ஆயிற்று? அம்பையின் சீற்றம் போய் ஒளிந்து கொண்டதெங்கே? பூமணிக்கு நேர்ந்ததென்ன?
சிறுகதை எழுத்தாளன் தன்னைப் புதுப்பித்துக் கொள்வதுடன், நவீனப்பட்டுக் கொள்வதுடன் , அடிப் படை ச் சிக்கல்களிலிருந்து அகன்று விடவும் கூடாது என்று எனக்குத் தோன்றுகிறது. உலக இலக்கியப் போக்குகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதுடன், சொந்த மண்ணின் வேரைக் களைந்துவிடவும் கூடாது என்று தோன்றுகிறது.
எந்த வடிவத்திலும், உத்தியிலும், சொல்லும் தீவிரத்திலும் இன்று விதவை மறுமணம் பற்றியோ, கலப்புத்திருமணம் பற்றியோ எழுதிப் பயனில்லை. சாதிக் கட்டுமானங்கள் தகர்ந்து கொண்டிருக்கின்றன. மத, இனக்கலவரங்களின் அடிப்படை அரசியல் இலாப நோக்கங்கள் என்பதை இன்றெவரும் அறியாதவரல்ல. எனவே இன்றைய மனிதன் முன் கிடக்கும் மகத்தான கேள்விகள் எவை என்பதை ஆராய வேண்டும்.
சா.கந்தசாமி அவதானிப்பது எழுபதுகளுக்குப் பின்னால் எழுத ஆரம்பித்தவர்களின் சிறுகதைகளில் கசிந்து உருகுவது, உபதேசம் செய்வது, கைதுக்கி மேலே விடுவது போன்ற அம்சங்கள் குறைய ஆரம்பித்தன என்று.
படைப்பு என்பது ஒரு சுய விமர்சனமாகக் கூட ஆகிப்போயிற்று.
அசோகமித்திரன் சொல்கிறார், புனைகதைகளில் வெகு விரைவாகவும் எளிதிலும் தொய்வும் அலுப்பும் தட்டக்கூடியது கீழ் மத்திய வர்க்க வறுமை' என்று.
வறுமையும் வேலையில் லாக்
tgefggi giri

Page 6
கொடுமையும் புதுமைப்பித்தன் காலத்திலும், ஜி.நாகராஜன் காலத்திலும், பூமணி காலத்திலும் இன்றும் தொடர்ந்து வரும் பிரச்சினைதான் என்றாலும், சிறுகதைப் படைப்பாளர்கள் அலுத்துப் போய் விட்டனர் போலிருக்கிறது.
யதார்த்தப் பாணியில் அற்புதமர் ன சிறுகதைகள் படைத்த கோணங்கி இன்று ஆள் நடமாட்டமில்லாத அத்துவானங்களில் அலைந்து திரிந்து கொண்டிருக்கிறார். நவீனத்துவம், அமைப்பியல்வாதம், பின் நவீனத்துவம், மாய யதார்த்தம் எல்லாம் தாண்டியதோர் பெருவெளியில் அவரது அலைவுகள் சம்பவிக்கின்றன. சோ. தர்மனுக்கு யதார்த்தமே இன்னும் போதுமானதாக இருக்கிறது. விமலாநித்த மாமல்லனுமி, சுரேஷ்குமார இந்திரஜித்தும் மனிதனின் அகமனச் சிக்கல்களை மட்டுமே ஆழமாகப் பார்க்கிறார்கள். நோயும, வறுமையும், இயலாமையும் திலீப்குமாருக்கு இன்னும் பிரச்சினைதான். ஆனால் வாசகன் நையாண்டியில் வெகுநேரம் திளைத்துப் போகிறான்.
99. 65) LD Lj Luo uJ 6Ŭ 6)} ST ĝ5 (Up LD நவீனத்துவமும், பின்நவீனத்துவமும், மாய யதார்த் தமும் தமது ஆட்சிகளை அதிதீவிரமாகச் செலுத்த ஆரம்பித்த
நிலையில், சிறுகதை மையத்தை அறவே
துறக்க ஆரம்பித்தது. பல்திசைகளிலும் சிதறி விரியும் தன்மை கொண்டதாக மாறிற்று. துணிச்சலுமி, எப்பொருளையும் கையாளும் திறனும, மொழியை தேர்ந்த சிலம்பு வீச்சுக்காரனைப்போலச் சுழற்றும் ஆற்றலும் கொண்டதாயிற்று. பன்நூறு ஆண்டுகளாகக் கட்டப்பட்ட சீலங்களைப் பொழிக்கும் வேகம் கொண்டதாயிற்று.
நேர்மையான கலைஞன் தன்னைக் கட்டுப் படுத்து கற விஷயங்கள் என்னவென்பதை அறிவான். அதற்கெதிரான கலகக்காரனாக உருவாகும் அதேநேரத்தில், கட்டுப்பாடுகளின் வல்விலங்குகளுக்கு அவன் தணிந்தும் போகிறான்.
பேராட் சி செய்து கொணி டிருந்த காலகட்டத்திலேயே அதனின்றும் வெகு தூரத்தில் விலகிப் போன தளங்களிலும் சிறுகதை இயங்கிக் கொண்டிருந்தது என்பதுதான் உண்மை. இன்று மதிப்பீடு செய்கிற கோணத்தில் எப்படி சா.
கந்தசாமியையும், அசோகமித்திரனையும்
யதார்த்தவாத எழுத்தாளர்கள் என்று சொல்ல முடியாதோ, அதே விதத்தில் ந. முத்துசாமி எழுதிய அபூர்வமான கதைகளையும் அவற்றோடு ஒப்பிட முடியாது. நகுலன் முற்றிலும் மாறுபட்ட நனவோடைப் பாட்டையில் தனது கதைப் பயணத்தை நடத்திக் கொண்டிருந்தார்.
தமிழ்ச் சிறுகதைப் பரப்பை ஊன்றிப் பார்த்தோமானால், ஒன்றிலிருந்து ஒன்று கிளைத்தது என்று அறுதியிட்டுக் கூறிவிட முடியாது. ஒன்றைப் புறக்கணித்து ஒன்று கிளைத்தது என்றும் கூறிவிட இயலாது. அத்தனை வகைகள், அத்தனை பாணிகள்!
தமிழ்ச் சிறுகதை நவீனமானது என்று காலவரையறை செய்வதும் கூட அத்தனை எளிதல்ல. நவீனம் என்பது கூட ஒரு சார்புடைய கருத்தாக்கம் தான். புதுமைப்பித்தனின் அன்றிரவு, வா. ச. ரா. வின் சிறுகதைகள், நகுலனின் கதைகள், அம்பையின் கதைகள், அசோகமித்திரனின் கதைகள் பலவற்றில் நவீனத்துவத்தின் கூறுகள் அன்றே தெரியக் கிடந்தன.
நவீன படைப் பாளி கடந்த இருபதாண்டுகளில் மேலும் மேலும் தனிமைப்பட்டுப் போய்க்கொண்டிருப்பவன். இந்தக் காலகட்டத்தில் அவன் எதிர்கொள்வது எதிர்வாதம் , நம்பிக்கை இழப்பு இருண்மை. அரசியல் சகல விதங்களிலும் அவனைக் குழப்பிக் கொண்டிருக்கிறது. அவனைக் கட்டுப்படுத்துகிறது. அவனைத் தகர்க்கிறது. இவற்றிலிருந்தெல்லாம் தன்னை விடுத்துக் கொள்ளும் நோக்கமாகத்தான் அவன் நவீனத்துவத்திற்குள்ளும் புகலிடம் தேட
வேண்டியதாயிற்று.
படைப்பினுள் சொல்லொணாச்
 

சுதந்திரத்தை அனுபவிக்க அவனுக்கு வசதி உண்டு. ஆனால் அந்த சதந்திரத்தை அவன் எப்போதும் முழுமையாகப் பயன்படுத்தி வந்தவன் என்று தீர்மானமாகச் சொல்லிவிட முடியாது. படைப்பாளியைக் கட்டுப்படுத்துவது இங்கு அரசியல் மாத்திரம் அல்ல. பண்பாட்டுக் கட்டளைகள் , மரபுத் தளைகள் , மொழிப்பீடங்கள் , மதஇன அச்சுறுத்தல்கள்.
தன் கேள்விகளுக்கான விடைகளை தொன்மங்களில், இதிகாசங்களில் தேட வே ணி டிய நிர்ப் பந்த தி தை சிறுகதையாசிரியனுக்கு ஏற்படுத்தியதும் இந்த நெருக்கடிகள்தாம் . அதற்கானதோர் சுதந்திரத்தை நவீனத்துவம் படைப்பாளிக்கு வழங்கியது. ஜெயமோகன், புராணங்களின் உள்ளே அலைந்து திரிவதன் காரணம் மேற்சொன்ன கட்டுப்பாடுகளை மீறும் முயற்சிதான். தொன்மங்களின் துணையற்ற அவர் கதைசொல் லத் தெரியாதவர் என்பதல்ல.
மேலும் பல காலமாய் வழங்கிய புனைகதை நடை வாசகனைச் சோர்வுறச் செய்தபோது, உருவம் உத்தியில் மட்டுமல்லாமல் மொழியிலும் கதாசிரியன் பல பரிசோதனைகளைச் செய்து பார்க்க முனைந்தது எண்பதுகளுக்குப் பிறகே.
மொழியை அரசியல்வாதிகளும், மேடைப்
பேச்சாளர்களும், சினிமாக்காரர்களும், வணிக இதழாளர்களும் அடித்துத் துவைத்துக் கந்தலாக்கி வைத்திருந்தார்கள் செத்த பிணம் தூக்கிச்செல்லும் சவவண்டிக்குக் கூட ஆடம்பரமான பெயர்கள்- அமரர் ஊர்தி, வானவர் ரதம், சொர்க்க வாகனம் என்று சூட்டப்பட்டன. எனவே கந்தலாகிப்போன துணியை, விசையும் வலிவும் கூட்ட வேண்டி முறுக்கியோ, நனைத்து முறுக்கியோ அடிக்க வேண்டியதிருந்தது.
கையாளுவதற்குச் சங் கடம்
ஏற்படுத்திய மனத்தடைகள் பலவற்றை நவீனத்துவம் உடைத்தெறிந்தது. நான் சாரு நிவேதிதா கதைகளை மனதில் கொண்டு மாத்திரம் இதைச் சொல்லவில்லை. உள் நுழைந்த மூஞ்சூறு என பெருமாள் முருகன்
எழுதிய சமீபத் தைய அடங்கலாகத்தான்.
கதை
மேலும் இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் மனித மனம் சில்லுச்சில்லாய் உடைந்து போய்க் கொண்டிருந்தது. சாரு நிவேதிதாவின் கதைகள் சிதறுண்டு போன மனித மனங்களின் வெளிப்பாடுகள் என்று சொல்லும் போது, பழைமைவாதிகள் அதைப் பாலியல் வக்கிரம் என்றார்கள். எது நேற்று வக்கிரம் என்று நினைத்தோமோ அது இன்று வக்கிரமாக இல்லை. இன்று வக்கிரம் என்று ஒரம் தள்ளுபவை கூட நாளை அவ்விதமே ஆகிப்போகும். கோவையில் பாலுறவுத் திரைப்படங்கள் திரையிடும் அரங்குக்கு வரும் மனிதர்களின் சராசரி வயது ஐம்பது என்று காண எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆழ் மனத்தில் மனிதன் என்னவாக இருக்கிறான் என்பதை சாரு தோண்டி வெளியே வீசும் போது மூக்கைப் பொத்தி
என்ன பயன்?
நடந்து போகும் வழியில் இருக்கும்
பாழுங்கிணறு, எட்டிப் பார்த்த 1950ன் சிறுகதையாசிரியனுக்கும் 1970 ன் சிறுகதையாசிரியனுக்கும் 1990ன்
சிறுகதையாசிரியனுக்கும் தந்த உணர்வுகள் ஒன்றாகவே இருக்க வேண்டும் என்று ஒரு கட்டாயமும் இல்லை.
இன்று தடுக்கப்பட்ட சொற்கள், பிரயோகங்கள் கிடையாது. மொழியை அதிக உரிமையுடன் கையாளும் சொந்தம் தெரிகிறது. சிறுகதைப் பிரதேசங்கள் இவை மட்டுமே என்ற வரையறை இல்லை. எவரும் இன்றைய சிறுகதையாசிரியனிடம் தமிழ் ஆசிரியர் பணி செய்யவும் இயலாது. ஐம்பதுகளுக்கு முந்திய இலக்கியவாதி நேர்கொண்ட சவால்கள் வேறு, இன்றைய இலக்கியவாதி நேர்கொள்ளும் சவால்கள் வேறு.
வாசிப்புத் தன்மையும் நம்பகத் தன்மையும் படைப்புக்கு இன்றியமையாதவை என்று சொல்வார்கள். ஆனால் இரண்டையும் கோரிப் பெற முன்னிறுத்தும் வாசகன் யார்

Page 7
எனும் கேள்வியும் உண்டு.
L.] 6ᏁᎩ நவீனத் துவ , பரின் நவீனத்துவக்கதைகள் இந்தக் கேளிக்கை அம்சத்தைப் பொருட்படுத்துவதில்லை. திலீப்குமாரின் கடவு வாசகனை மறுத்துப் புறம் தள்ளாத போது, ஜி. முருகனின் கன்னி அல்லது குமார செல்வாவின் 'குறுவெட்டி புரிதல் பற்றிய சிக்கலைக் கொண்டிராதபோது, எஸ் ரா ம க ருஷ னனிடம் வாசகன் இச் சலுகையை இயல்பாகப் பெற்றுக் கொற் கிறபோது, கோணங்கி எந்தச் சலுகையையும் வாகனுக்குத் தர மறுக்கிறார். எனக்கு மிகவும் புதிராக இருக்கும் விஷயம் இது காலம் என்ன சொல்லப் போகிறது என்பதைக் கண்டு தெளிய எனக்குக் காலம் மறுக்கப்பட்டு விடவும் கூடும்.
இலக்கியம் என்பது அற்பத்
தந்திரங்களும் மோடி வித்தைகளும் அல்ல.
சர்க்கஸ் கோமாளி வேஷம் போடுபவன் கூட பல்துறை நிபுணனாக இருப்பான் என்று சொல்வார்கள். எந்தப் புதிய முயற்சிகளிலும் ஈடுபடுகிறவர்கள் அதை நினைவில் கொள்வது நல்லது.
நகுலன் சொல்கிறான், THEMACHINE HAS TAKEN OBER 6T6őTB), 56f6OT UD6óî56óî6ÖT சிதைவுகளுக்குக் காரணங்களில் அதுவும் ஒன்று என்று கொண்டால, நவீனச் சிறுகதைகளையும் அது வெகுவாகப் பாதித்து வந்துள்ளதைப் பார்க்கிறோம். மேலும் சுற்றுச்சூழல், இயற்கை மீதான நாட்டம், இயற்கைக்குத் திருப்பிச் செலுத்துதல் ஆகிய புரிதல்களும் நவீன சிறுகதைகளுக்குள் பரவிக் கிடக்கின்றன.
பிறமொழிப் பிரதேசங்களில் தலித் மக்களின் எழுச்சி, தலித் இலக்கியமாகவும் வளர்ந்தெழுந்ததைப் போல, தமிழிலும் தலித் இலக்கியம் என்ற பிரகடனத்துடன் சிறுகதைகள் படைக்கப்பட்டன. ஏற்கனவே தலித் பிச் சினைகளைக் கைய்ாண்ட எழுத்தாளர்கள் முக்கியத்துவம் பெற்றார்கள். ரவிக்குமார் கூறுவதைப்போல, தலித் அல்லாதவருக்கு தலித்தியம் பேசுவதில் அனுகூலம் இருந்தது. எனவே சில சிmக5ை
எழுத்தாளர்கள் திடீர் தலித் எழுத்தாளர்கள் எனத் தோற்றம் கொண்டார்கள். பின்பு தலித் பிரச்சினையை தலித் மட்டுமே சரியான உணர்வுடன் படைக்க முடியும், பிற எழுத்தாளர்கள் கையாள முடியாது என்றனர். அது மிகச் சரியான வாதம் என்றே தோன்றியது. திறனாய்வில் மார்க்சியம் பார்வை, பின் நவீனத்துவப் பார்வை என்பனபோல் தலித்தியப் பார்வை என்பதும் வந்துது. ஆனால் சிறுகதை: தலித் சிறுகதையோ, பின் நவீனத் துவச் சிறுகதையோ. அடிப்படையில் அது இலக்கியமாக இருக்க வேண்டும். வெகுவான ஆதரவு இருந்தும் தலித் சிறுகதைகள் வளமாக இருக்கின்றன என்று சொல்ல முடியவில்லை. பலர் இன்னும் பழைய யதார்த்தப் போக்கையே கையாண்டு கொண்டிருக்கின்றார்கள்.
பின்னர் பெண்ணியச் சிறுகதைகள் வந்தன. அவற்றில் பெரும் பான்மை ஆண்களால் எழுதப்பட்டன. தமிழ்ச் சிறுகதையாளர்களில் தேர்ந்தவர்களில் ஒருவரான அம்பையை பெண்ணியச் சிறுகதை எழுத்தாளர் என்கிறார்கள். அது முழுமையான பார்வை அல்ல. பெண்ணியம் அவரிடம் இருக்கலாம், இருக்கிறது. ஆனால் அந்த வரம்புக்குள் மட்டும் கட்டுப்படுகிறவை அல்ல அவர் சிறுகதைகள், 'வீட்டின் மூலையில் சமையலறை ஒரு பெண்ணியக்
கதை மட்டுமே அல்ல.
மறுகண்டுபிடிப்புச் செய்து,
10
இந்தக் கால கட்டத் தரில திறனாய்வுக்குள்ளும் புதிய பார்வைகள் வந்தன. படைப் பில் பல இருண் ட பரிரதேசங் களில புதரிய ஒளிகள் பாய்ச்சப்பட்டன. தமிழ்ச் சிறுகதைக்கு புதியதோர் கதி கிடைக்கும் என்ற நம்பிக்கை வளர்ந்தது. ஆனால் திறனாய்வுகள் அகழ்வாராய்ச்சிகள் செய்வதிலும் ஈடுபடலாயினர். குருபீடங்களில் அமர்ந்து கொண் டவர்கள் எழுத்தாளர்களை 36)}|Eildb60)6TU இன்றைய
U60) LUI UH56ð FF (BLI L-60T Ť.
மதிப்பீடுகளை வைத்துக் கொண்டு,
வெளிநாட்டுப் புத்தகங்களின் வெளிச்சத்தில் ஐம்பகாண்டுக் (8 ball lot to
 
 
 
 
 
 
 

மறுகண்டுபிடிப்போ, மறு பார்வையோ, மீள் பார்வையோ செய்யும் திறனாய்வின் காய்தல், உவத்தல் கொண்டுதான் கருத்துக்கள் வெளிவரும்.
கலைஞன் என்பவன் தனது பிரதேசத்தை, மொழியை, மதத்தை, இன்த்தைக் கடந்து செல்ல முயற்சி செய்பவன். திறனாய்வாளனை விடவும் கலைஞனுக்கு உண்மையும, நேயமுமி, நேர்மையும் அதிகம் . அவனுள் ஒடிக் கொண்டிருக்கும் பல் வகையான உணர்வுகளில் இன, மத, உணர்வுகளைப் புறக்கணித்துவிட்டு அல்லது அடக்கி ஆண்டு வரி ட் டுத் தான் 5 606). U ul 600T tij மேற்கொள்கிறான். ஆனால் அவன்
சிறுகதையில் கையாண்டதோர் சொல்லை,
உரையாடலை, பிரயோகத்தை, அதன் முழுமையிலிருந்து தனிமைப்படுத்தி அகழ்ந்தெடுத்து அவனைச் சாதீயச் சேற்றில் புரளும் பன்றி என அடையாளங்காட்டும் பார்வைகள் நம்மிடம் வந்தன.
1990 க்குப் பிறகு சிறுகதையில் ஒரு கதாபாத்திரம் இன்னொரு கதாபாத்திரத்தைத் திட்டும் போது எச்சரிக்கை அடைய ஆரம்பித்தது. கு.ப.ர்ா.வின் பறைச்செங்கான் பல ஆண்டுகளுக்குப் பிறகு ‘பண்ணைச் செங்கான்’ ஆகிவிட்டான் என்பார்கள். பார்ப்பனச் சாதிப் பெண்ணைத் தவிர வேறெந்த சாதிப்பெண்ணும் ஓடவோ சாடவோ செய்யும் போது முலைகள் குலுங்கக் கூடாது. கதாபாத்திரங்களும் கதாசிரியர்களும் கூட முக்காடு போட்டுக் கொண்டுதான் தேவாலயத்துக் கோ,
பள்ளிவாசலுக்கோ, கோயிலுக்கோ போக
இயலும். ஆனால் கள்ளுக்கடைக்கோ வேசிவிட்டுக்கோ முக்காடின்றிப் போகலாம். எனவே பெரும் பாலும் எல லா ச் சிறுகதையாசிரியர்களுமே தன்னைக் காபந்து செய்து கொள்ள ஆரம்பித்தனர்.
இன்று எந்த மனிதனும் அவன் படைப்பாளி ஆனாலும், திறனாய்வாளன் ஆனாலுமி, போதகன் ஆனாலும், அறிஞனோ தத்துவ ஞானியோ ஆனாலும் முற்றிலும்
இனத்தை மதத்தைத் துறந்தவன் இல்லை. ஆனால் படைப்பாளியை மாத்திரம் முதுகைக் காட்டச்சொல்லி தோட்டா சுடுவது என்ற வீரம் நம்மிடம் வளர்ந்தது. எனவே சில ஆணி டுகளாகச் சிறுகதை சதுப்பு நிலங்களைத் தவிர்த்து, தாண்டியோ, சுற்றிக்கொண்டோ போகிறது.
திறனாய்வாளர் அல்லது தத்துவவாதி பல்துறை அறிஞனாக இருக்கலாம். நூல் பல கற்றவனாக இருக்கலாம். வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொண்டு கற்றவனாகவோ, கற்பிப்பவனாகவோ இருக்கலாம். ஆனால் அந்த அறிவு என்பதும் தத்துவச் செல்வாக்கு என்பதும் படைப்பை அடக்கி ஆள்வதற்கோ, படைப்பாளியை ஒன்றுமில்லாதவனாகச் செய்வதற்கோ அல்ல. படைப்பு என்றுமே சுதந்திரமானது. கீழடங்க மறுப்பது.
கடந்த பத்தாண்டுச் சிறுகதைகளைச் சற்றுக் கூர்ந்து நோக்கும் போது தொன்மங்களினுள்ளும், புராணங்களினுள்ளும் உருவகங்களினுள்ளும் எவரும் எளிதில் புரிந்து கொள்ள இயலாதபடி முறுக்கிக் கட்டப்பட்ட மொழி வேலிகளுக்குள்ளும், சிறுகதைப் படைப்பாளிகள் ஒளிந்து கொள்ள முயல்வதும் தொழில் அரசியல் அல்லது இலக்கிய அரசியல் காரணங்களுக்காகவே என்று எனக்குச் சொல்லத் தோன்றுகிறது.
கடந்த ஐம்பதாண்டுச் சிறுகதைகளை ஒரு பருந்துப் பார்வையாகவும் தேர்ந்தெடுத்து மறுபடியும் படிக்க நேர்ந்தபோது, இந்தக் கட்டுரையில் இதுவரை குறிப்பிடாத ஏராளமான சிறுகதை ஆசிரியர்கள் தீவிரமாகவும் தெளிவாகவும் நவீனமாகவும் கையாண்டு கொண்டிருப்பவர்கள் முன்னால் ஊசாடுகின்றனர், கெளதம சித்தார்த்தன். லக்ஷ்மி மணிவண்ணன், சூத்ரதாரி, கா. சீ. சிவக்குமார் போன்று.
தமிழ்ச் சிறுகதை உலகத்தரத்தையும் பிறமாநில மொழிச் சிறுகதைகளின்
22ம் பக்கம் பார்க்க.
66OT .

Page 8
L) 60) வழி ம் -மல்லிகை சி.குமார்
“எபோவடின்.” சிரித்தாள்.
இதைக் கேட்டு அவள்
“என்ன சிரிப்பு.? ” “நீ நினைக்கிற மாதிரி நான் எபோஷன் செஞ்சிக்க மாட்டேன்’
“ஏன்.? ”
“என் வயித்தில உருவாகுறதை நான் ஏன் அழிச்சுக்கணும். இது ஒண்ணும் திருட்டுத் தனமல்ல. வெளிப்படையானது. அவரோட வாரிசு. ஊரறிஞ்ச விசயம்.” 'நீ எபோஷன் பண்ணி இதை அழிச்சுட்டு அவர விட்டு தொலைஞ்சி வீட்டோட வந்திடு, திரும்பவும் மகளா ஏத்துக்கிறதா அம்மா (66.'
“போடி.! நீயும் ஒங்க அம்மாவும். மானமே போயிருச்சின்னு அந்த தாயி நினைச்சா. போயி தூக்கு போட்டுக்கச் சொல்லு. இத வயித்துல சுமக்கிறது நான் தான், அவயில்ல
தெரியுமா? அந்த அம்மா கர்வம் பிடிச்சவ. கெளரவம் பாக்குறவன்னு எனக்கு விவரம் தெரிஞ் சதில இருந்து தெரியுமே.” குமுறினாள் சக்ரா,
'அக்கா. அம்மாவ நீ நல்ல புரிஞ்சி வச்சிருக்க” என்ற சுதர்வழி,
விடுதலை?’’
’’அவருக்கு 6T UJ LJ
எனக்கேட்டாள்.
“சொல்லமுடியாது.”
SLJ LDITFLib...?
“மூணக் கடந்திருச்சி.”
“தொட்டுப்பார்க்கட்டுமா..?’ ‘எதை...?” 'வயித்தைதான்” - லேசாக சிரித்த சக்ரா
‘அம்மாவுக்குத் தெரிஞ்சா உன்னக் கோவிப்பாளே..?”என்றாள்.
"சே. அது கெடக்கட்டும், அவளுக்கு அவதான் பெரிசு.
“லேபர் கிளாசுல போயி நம்ம சக்ரா விழுந்துட்டாளே மானமே போயிருச்சே"ன்னு
2
சும்மா கத்துவா.”
என்று சொல்லிக் கொண்டே சக்ராவின் வயிற்றுப் புற சேலையை ஒதுக்கிய சுதர்ஷி. மெதுவாக உள்ளங்கையால் வயிற்றை தடவினாள்.
அந்த இதமான தடவலில் சக்ரா கூச்சப்பட்டாள். குனிந்து அந்த வயிற்றில் முத்தமிட்டு நிமிர்ந்த தங்கையை அப்படியே அணைத்துக் கொண்ட சக்ராவிக்கு கண்ணிர் பெருகியது. வீட்டைவிட்டுப் பிரிந்து வாழ்ந்தாலும் உடன்பிறப்பு என்ற பாசப் பிணைப்பு விட்டு பிரியுமா?
'அக்கா 稣 செஞ்சது ரொம்ப சரி.”
“எத பிள்ளை பெத்துக்கிறதையா?”
"அவரையே கணவனா அடைந்ததை யும்தான்” சக்ரா கண்ணிரைத் துடைத்துக் கொண்டு சிரிக்கிறாள். சுதர்ஷி தொடர்ந்தாள். "அவருதான் உள்ள இருக்காறே. உனக்கு எப்படி இங்க வசதி எல்லாம்.? “வசதியை நாமத்தான் ஏற்படுத்திக்கனும், எனக்கு இந்த யூனியன்ல இருந்து சம்பளம் கிடைக்கிறது. அவரோட வீடு, உதவிக்கு அவரோட அம்மா. பிறகென்ன.” “அவரப் போய் பார்த்தியா..?” “மூணு நாளைக்கு முன்ன போய் வந்தேன்” "அவரு செய்த குற்றம்.?” “ஒரு அப்பாவி தொழிலாளியை அடிச்ச துரையை எதுத்து அடிச்சதுதான்.” “தொழிலாளியை துரை அடிச்சா யூனியன்ல சொல்லி நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே. எதுக்கு இவரு.”
"யூனியன் நடவடிக்கை எல்லாம் காலம் கடந்துதான் நடக்கும். தன்னோடு வேலை செய்யுற ஒரு தொழிலாளி தாக்கப்படுவதை பார்க்கும் இன்னொரு தொழிலாளி சும்மா இருக்க மாட்டான். தன்னால் இயன்றதை செய்யத்தான் முனைவான். அவரும் அப்படித்தான் அவரு செய்தது சரி. இல்லாவிட்டால் அடுத்த தொழிலாளிமீதும் அந்த துரை கை வைட்பான்
 
 
 
 
 

தானே.”
"அக்கா இப்ப நீ முழுசாகவே மாறிட்ட அந்தஸ்து கெளரவம் அது இதுன்னு பார்க்கிற அம்மா, அப்பாவின் குணங்களை விட்டு விட்டு வெகு தூரம் வந்திட்ட” என்ற சுதர்ஷி
இந்தா இத வச்சிக்க.” என்று ஒரு பார்சலை தான் கொண்டுவந்த பிளாஸ்டிக் கூடையிலிருந்து எடுத்து நீட்டினாள். “என்ன இது.?” 3Tj. “வேணாண்டீ.” ‘அம்மா கொடுக் கல்ல. நான் தான் உனக்காகவே எடுத்தேன். பிளிஸ் . வாங்கிக்க.” சக்ரா வாங்கிக் கொண்டாள். "ஆமா இந்த யூனியன் ஆபிசில இப்ப நீ மட்டுந்தானே இருக்க.?” “இப்ப லஞ் டைம் மற்றவுங்க லஞ் எடுக்கப் போயிட்டாங்க. "அப்பர் ஒனக்கு.? “கொண்டு வந்திருக்குறேன். நீயும் கொஞ்சம் சாப்பிடே.” வேணா. நீ சாப்பிடு, கர்ப்பஸ்திரிங்க சத்துணவா சாப்பிடணும். “அதுசரி. இப்ப நீ என்னோட சாப்பிடர.” '2_dtd....' சக்ரா கொண்டுவந்த உணவை இருவரும் சாப்பிடுகிறார்கள். ‘பர வாயரில் லையே. சமைச்சிருக்கியே.” "இது நானில்ல, அவரோட அம்மா சமைச்சது” "குட். நீ கொடுத்து வச்சவ.” அக்காவும் தங்கையும் சாப்பிட்டு முடிந்தனர். ‘ஆமா. அம் மாக் கிட் ட எதுவும் சொல்லணுமா?” "சொல்லு. உன் மூத்தமக சக்ரா இப்ப முழுகாம மூணு மாசத்தக் கடந்திட்ட. இத தாங்கிக்க முடியாட்டி ஒன்ன ஆத்திலயாவது குளத்திலயாவது மூழ்திட சொல்லிட்டான்னு சொல்லு.” சக்ராவின் பேச்சைக் கேட்டு சிறிது நேரம் அமைதியாக இருந்த சுதர்ஷி. "அப்ப. நான் வரட்டுமா..?- என்றாள். "திரும்ப.?”
(baul T
“அடுத்த வீக். இதே நாள் லஞ்சோடு
வருவேன்’
விடை பெற்றுக் கொண்டு சுதர்வழி படி இறங்கி கடக்கிறாள். ஜன்னல் வழியாக தெருவில் நடந்துப் போகும் அவளைப் பார்த்துக் கொண்டு நின்றாள் சக்ரா, டெலிபோன் மணி ஒலிக்கிறது டெலிபோன் இருக்கும் மேசை அருகில் வந்து ரிஸிவரை எடுக்கிறாள் ஹலோ. கட்சித் தலைவர் கொழும்பிலிருந்து பேசுகிறார். “லஞ் டைம் நான் மட்டும் தான் இருக்கிறேன் (8g.
நாளைக்கு கொன்பிரன்ஸ்"க்கு கொழும்புக்கு வந்திடுவார் சேர்
அவர்
சரிங்க சேர் ரெண்டு மணிக்கு மறுபடியும் போன் பண்ணுங்க சேர் ஜி.எஸ் வந்திடுவார்.
yy
“சரிங்க சேர். அப்புறம் அவர் எப்ப சேர் ரிலீஸ் ஆவார்.
`....................... י יף
ஹஸ்பண்ட்”
& y
யெஸ் செங்குட்டுவன் தான் சேர்.
"இல்லங்க சேர். பிணைக்கட்டி வெளிய எடுக்கல்ல.
“சரிங்க சேர். தெங்கியூ சேர்.” அவள் ரிஸிவரை வைத்துவிட்டு கதிரையில் உட்காருகிறாள். இவளின் கணவன் செங்குட்டுவனை வெளியே எடுப்பதாக தலைவர் உறுதி கூறிவிட்டார். “செங்குட். י וי அவனைப் பற்றிய நினைவு இவளுக்கு. தான் வேலைப் பார்க்கும் எஸ்டேட்
அலுவலகத்திலேயே தன் மகளையும் ஒரு டைப்பிஸாக அமர்த்திக் கொள்ள இவளின் தந்தை நினைத்தார். ஆனால் சக்ராவோ

Page 9
பிடிவாதமாக ஒரு யூனியன் ஆபிஸில் டைப்பிஸ்டா சேர்ந்திட்டாள்.
"தோட்ட ஹெட் கிளார்க் மக. போயும் போயும் லேபர்ஸ் கூடும் யூனியன் ஆபிசுக்கு வேலைக்கு போயிட்டா.” இதையே அவமானமாய் எடுத்துக் கொண்ட அவளின் பெற்றோர்கள். அவளை அந்த வேலையிலிருந்து விடுபட எடுத்த முயற்சி. முடியவில்லை. மகளுக்கும் பெற்றோருக்கும் இடையே கசப்பு வேண்டாத மருமகள் போல மகளை கரித்துக் கொட்டினாள் தாய். “பெண் என்பவள் புகுந்த வீட்டில் மட்டுமல்ல பிறந்த வீட்டிலும் ஏதோ ஒரு வகையில் அடக்கப் படுகிறாள். அதிலும் தன் குடும்பம் போன்ற மத்திய தர குடும்பங்களில் சாதி,
சமையம், கெளரவம், பதவி என்ற அந்தஸ்துக்களில் பெண்ணின் உரிமைகள் அமுக்கப்படுகின்றதே.’ என சக்ரா
யோசித்தாள். அவள் தன் முடிவை மாற்றிக் கொள்ள வில்லை. தொடர்ந்து தொழிற்சங்க காரியாலயத்திலேயே வேலை செய்தாள். தொழிலாளர்களின் பிரச்சினைகள், தொழிலாளர்களுக்கும் நிர்வாகத்திற்கு மிடையே உள்ள முரணி பாடுகள குடும்பத்திற்குள் ஏற்படும் சண்டைகள், காதலர்கள் பிரச்சினைகளி, அண்டைவீடு எதிர்வீடுகளின் சச்சரவுகள்.
எல்லாமே தீர்வுக்காக. தொழிற்சாலை அலுவலகத்தினுள் நுழைவதால். பள்ளியில் படிக்காத ஒரு பாடத்திட்டத்தை சக்ரா ஆர்வத்துடன் சந்திப்பது போல இருந்தது. அவளுக்கு அந்த வேலை ரொம்பவே பிடித்துவிட்டது. அதே போல இங்கு வரும் தொழிலாளர்களிடமும் அவள் அன்பாக பழகினாள்.
செங்குட்டுவன். பக்கத்து தோட்டத்தில் ஒரு இளந்தொழிலாளி. கட்சியரின் இம் மாவட்ட வாலிபர் முன்னணியின் தலைவனும் அவன்தான். கலகலப்பாக பேசுவான் எதிலும் ஒரு தீவிரம், கட்சி செய்யும் தவறுகளையும் அவன் தட்டிக் கேட்பான். தொழிலாளர்களுக்கு என்னென்ன தேவைகள் என்பதை தலைவருடன் அமர்ந்து கதைப்பான். அவனின் எடுப்பும் ஆற்றலும்
சக்ராவை மிகவும் கவர்ந்தது. அவள் அலுவலகத்தில் வேலை செய்யும் போது இடை இடையே வாசிக்கும் குடும்ப, காதல், துப்பறியும் புத்தகங்களை மாற்றி, புத்திஜீவியான. தொழிலாளர் வர்க்க சிந்தனையை தூண்டும் புத்தகங்களை வாசிக்க ஏற்பாடு செய்தவனும் அவனே. “செங்குட் உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.”
"அப்படியா..? உம்ம். தோழர்ன்னு அழைக் கணும் அப்புறம்.
“சொல்லு.”
“புறகு சொல்லுறேன்.” நாட்கள் சில கடந்தன. "செங்குட். எங்க வீட்டில எனக்கு தொல்ல அதிகமாக இருக்கு, உங்க வீட்டுல தங்கி இருந்து வேலைக்கு வரட்டுமா?" “வரலாம். அதைப்பத்தி ஒண்ணுமில்ல, நானும் எங்க அம்மா மட்டும் தான். ஆனா.” “நான் எஜஸ் பண்ணிக்குவேன். லயம்
பங்களா எல்லாம் எனக்கு ஒண்ணுதான்.”
“守f.” செங்ட்டுவின் வீட்டில் சக்ரா தங்கலானாள். ‘பாவி சண்டாளி குடும்ப மானத்தை கப்பலேத்திட்டா. போயும் போயும். ஒரு லேபர். சீ. நல்ல உத்தியோகம் பார்க்கிற ஆயிரம் மாப்பிள இருக்கப்ப. அந்த ஒடுகாலி. கிளாக்கள் ஐயா மகளை தலை முழுகினார். * “நாடுமாறி எவனோடயோ குடும்பம் நடத்தப் போயிட்டா. அந்த வேஷ தொலைஞ்சி போவட்டும்.’ அம்மா மண்ணவாரி இறைத்தாள்.
“செங்குட். நான் உங்கள வச்சிருக்கிறதா கதை பரவுது.” "அதுக் கென்னா..?” "அப்ப கட்டிக்குவோம்.” உம்ம். "சிம்பலா. ரிஜிஷ்டர் மெரேஜ்.” “子f.”
ஒரு பிரதிநிதி, ஒரு தொழிலாளி சாட்சியாக வெட்கட், சக்ரா பதிவு திருமணம் சாதாரணமாக நடந்தது. “சக்ரா.” “SD Lubb...”
ei தனி göster - romiňá VMYM
 
 

“லயத்துவாசம்?” “பிடிச்சிருக்கு” "6 silesbps...' “ரொம்பவே.” “நான்.? “வந்து. பிடிக்கல” அவன் பதறினான். "ஏன்.ஏன் சக்ரா.” “பின்ன என்னா. லேபர் கிளாஸ், லேபர் கிளாசுன்னு நம்மள ஏளனப் படுத்தி தன்னை உயர்த்துக்கிற எங்க அம்மா அப்பா முன்னால இது என் குழந்த. லேபர் கிளாசுக்கு பொறந்தது தான், இதுக்கு என்னா கொறவுன்னு நான் அவுங்க மூஞ்சில அடிச்சிக் கேட்க வேண்டாமா? அதை விட்டுட்டு, இது என்ன. அது இதுன்னு கேள்விகள்."
இருவரும் சிரித்தார்கள். தோட்டத்தில் வேலை நிறுத்தம். கம்பெனிக் காரன் ஒன்று என்றால் அதை இரட்டிப்பாக்கும் தோட்டத்துரை.
தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் கொஞ்சம் கூடிவிட்டதென்றால், வேலை நேரமும் எடுக்கும் கொழுந்தின் நிறையும் கூட வேண்டும் என்ற பிடிவாதம் அவனுக்கு. ஆண் தொழிலாளர்களை விட பெண் தொழிலாளர்களை இது மிகவும் பாதித்தது. தின்றும் தின்னாமலும். ஒரு சரித்திரம் மீண்டும் திரும்புவது போல, எட்டு மணி நேர வேலைத் திட்டத்திலிருந்து ஆறு மணி நேர வேலைத்திட்டத்திற்கு தேயிலை பெண்கள் போராட முனையும் இந்த கால கட்டத்தில் - இப்படியொரு அடக்குமுறை எதற்கு எதிராக. வேலை நிறுத்தம். கட்சிகள் கூட்டாகி ஒன்றுபட்ட ஒரு உணர்வு அன்று துரையுடன் பேச்சுவார்த்தை, தொழிலாளர்களின் பேச்சுக்கு ஒத்து வராமல் முரண் பிடிக்கும் துரை. அவனின் வாக்குவாதம். "சேர் உங்க பிடிவாதத்துக்கு நாங்க வாலாட்ட முடியாது’ - ஒரு தொழிலாளி நிமிர்ந்து கேட்கவும், 'ஏய். நீ வாய் மூடு. அதிகம் பேசினா போலீசுக்குத்தான் சொல்லுவேன்.” “என்னா போலீசைக் காட்டி எங்கள
பயமுறுத்திறியோ?” ”ஆமாண்டா. ஆமா.” - ஆத்திரத்துடன் எழுந்த துரை ஆ
UDb oppour១
மீது பாய்ந்தார்.
அடுத்த கனம். பக்கத்தில் நின்ற சில தொழிலாளர்களால் அந்த துரை நையப் புடைக்கப்பட்டான்.
டெலிபோன். பொல்ஸ் ஸ்டேஷன். ஜீப். துரையை அடித்த தொழிலாளர்கள் கைதியானாலும் பிரதான எதிரியாக செங்குட்
ஆனான்.
ஒரு வாரத்திற்குள் துரை மாற்றலாகி விட்டாலும் கைதானவர்களில் செங்குட் இன்னும் வெளிவரவில்லை.
டெலிபோன் ஒலித்தது.
செங்குடடுவனின் நினைவில் இருந்து விடுபட்ட சக்ரா எழுந்து போய் ரிஷிவரை எடுத்தாள். “ஹலோ.”. மீண்டும் தலைவர்.
“சரிங்க சேர்.” ரிஷிவரை வைத்தாள் அவள் முகத்தில் ஒரு சந்தோஷம். அதே நேரம் பகல் சாப்பாட்டிற்கு வெளியே போயிருந்த பிரதிநிதியும் உள்ளே நுழைந்தார். “என்ன சக்ரா.?” "சேர். தலைவர் பேசினார் என் செங்குட்டை. “இன்னும் ரெண்டு நாட்களில் வெளியில் கொண்டு வருவதாக கொழும்பிலிருந்தே சொல்லி விட்டார்” என்றாள். இதைக் கேட்டு சிரித்த பிரதிநிதி, W “இந்தாப் பாரு சக்ரா. தலைவர் இன்னும் ரெண்டு நாட்கள் கழித்து தானே உன் புருஷனை வெளியில் கொண்டு வருவதாக சொன்னார். ஆனா. உன் புருஷன் இன்றைக்கே வெளிய வந்தாச்சே.
‘ஆமா சக்ரா தொழிலாளர்களே
பிணைப் பணத்தைக் கட்டி அவனை வெளியே எடுத்துட்டாங்க. செங்குட் அதோ வர்ரதைப் பாரேன்.” பிரதிநிதி சொல்லிக் கொண்டிருக்கும் போதே சில தொழிலாளர்களுடன் உள்ளே நுழைந்தான் செங்குட்டுவன். “மனிதநேயம் மகத்தானது. அதிலும் தொழிலாளர்களுக்கிடையே பின்னிப் பிணைந்து வேர் பிடித்து ஆழமாகிக் கொண்டிருக்கும் அந்த மனுஷநேசம்.”
சக்ரா நன்றியோடு அவர்களை நோக்கினாள்.
(யாவும் கற்பனை)

Page 10
கே? இன்று பல
சரிநிகர் சரிநிகராக கவனிக்கவில்லை. அமைச்சர் வீ. இராதாகிருஷ்ணன் - நேர்காணல்
LD 63D 6l) UU 6 பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறைநிலவுகின்றன. இதனை நிவர்த்திசெய்ய நீங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? அல்லது இனிவரும் காலங்களில் அதற்காக தாங்கள் எடுக் கப் போகும் நடவடிக்கைகளைப் பற்றி.?
மத் திய DT 56 6 தமிழ் Lu III Legomo 60) 6)#56f6č giŕ LDT ñî l 776 ஆசிரியர்கள் பற்றாக குறை நிலவுகின்றது. இதற்கான முக்கிய காரணம் அண்மைக்காலங்களில் ஆசிரிய-ஆசிரியைகள் நியமிக்கப் படாமையும், மாணவர்களின் வரவு அதிகரித்தமையும் ஆகும்.
வெகு விரைவில் 400 ஆசிரியர்கள் தருவதாக மத்திய அரசு இணக்கம் தெரிவித்துள்ளது. அதற்கிணங்க பட்டதாரி மாணவர்களிடமிருந்தும், உயர்தரம் கற்றவர்களிடமிருந்தும் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. மேலும் பூரீ பாத கல்லூரியில் இருந்தும் ஆசிரியர் பயிற்சி முடிந்து பல நுாறு பேர் வெளியேற இருக்கிறார்கள். இவர்களின் மூலம் ஓரளவு நிவர்த்தி செய்வதோடு, அரசாங்கத்திடமும் ஆசிரியர் பற்றாக் குறையையும் ஒரு கோரிக்கையாக முன் மொழிந் திருக்கின்றோம்.
இன்றைய மலையக மக்களின் முக்கிய பிரச்சினையாக உங்களது அமைச்சு எதை கருதுகின்றது?
அடிப்படை வசதிகள். அதாவது, இருப்பிடம் , பாதை, தணிணிர்,
மலசலகூடம் மற்றும் வேலையில்லாப் பிரச்சினைகள் ஆகியவற்றைக்
கே
கூறலாம்.
வடக்கு-கிழக்கு யுத் தத்தால் மலையக மக கள எவ வாறான பிரச்சினைகளை அன்றாடம் சந்திக்க நேர்கின்றது. v
வடக்கு-கிழக்கு யுத்தத்தால் நம் மக்கள் சுதந்திரமாக வீதிகளில் நடமாட கஷ்டப்படுவதோடு, தமிழர் என்றதும் சந்தேகக் கண்கொண்டு பார்வைகளால் இம் சிகி கப் படுகின்றனர். மேலும் எமது கலாச்சாரம் பாதிக்கப்படுவதோடு எம் மக்கள் பல பொருளாதார பிரச்சினைகளுக்கும் உள்ளாக நேரிடுகின்றது.
மலையக எழுத்தாளர்களுக்கும், சிறு சஞ சிகைகளை வெளியரிடும் இலக்கிய ஆர்வம் உள்ளவர் களுக்கும் உங்களது அமைச்சு
எவ வகையான உத வரிகளை செய்கின்றது.
மலையக எழுதி தாளர்களின்
நூல்களையும், சஞ்சிகைகளையும்
குறிப்பிட்டளவு கொள்வனவு செய்யும்
உத்ததேசம் எம் அமைச் சுக்கு உள்ளது. மற்றும் சிறந்த புத்தகங்களுக்கு பரிசில் களை வழங்கி எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் ஊக் குவிப் பதற்காக, பயிற்சி பட்டறைகள் மூலம் வழிகாட்டி அவர்களின் விழாவுக்
கெல் லாம் நான் கட்டாயம் சமூகமளித் து அவர்களை உற்சாகப்படுத்துகிறேன்.
இன்றைய நவீன உலகில். பல பாடசாலைகளில் கொம் பியூடர்
 
 

கே
கே
இ.தொ. காங்கிரசின்
பயிற்சி நெறியையும் கற்றுக்கொடுக்கிறார்கள். இவ்வாறான வாய்ப்புக்கள் மலையக மக்களின் சந்ததியினருக்கு எப்போது கிட்டும்?
இவ்வருடம் இருபது பாடசாலைகளில் தனியாக கொம்பியூடர் யுனிட்களை உருவாக்குகிறோம். இதன்படி ஒரு
பாடசாலைக் கு ஐந்து கொம்பியூடர்களை வழங்குகின்றோம். சென்ற வருட மி மூன்று
பாடசாலைக்கு 15 கொம்பியூடர்களை
வழங் கரினோம் . இனி வரும் வருடங்களில் இன்னும் கூடுதலாக வழங்கும் எதிர்பார்ப் பரில் இருக்கின்றோம்.
மலையக இளைஞர்-யுவதிகளின் வாழ்வை மேம்படுத்துவதற்காக கைத்தொழில் பயிற்சிக் கூடம் - ஏதேனும் அமைக்கும் முயற்சிகள் உள்ள்தா?
கொட்டகலையில் 600 பேருக்கு தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்கும் முகமாக கைத்தொழில் பேட்டை ஒன்றை உருவாக்கி யுள்ளோம். மேலும் சிறு சிறு கைத் தொழில் கிராமங்களை உருவாக் கும் திட்டங்களை வகுத்துள்ளோம். எதிர்காலத்தில் இச்செயற்பாடுகள் மூலம் அவர்களின் வாழ்வினை மேம்படுத்தும் என்று நம்புகிறோம்.
“மத்திய மாகாண சாகித்திய விழா ஒரு தேர்தல் திருவிழாவாகவும்
மக்கள் மத்தியில் ஏற்பட்டிருந்த வீழ்ச்சியை
மீண்டும் நிலைநிறுத்துவதற்காக நடாத்தப்பட்ட ஒரு திருவிழாவாகும்” என சரிநிகர் தனது 204வது இதழில் விவரித்திருப்பதைப் பற்றி உங்களின் கருத்து என்ன?
கொழும்பு,
ஊற்ற துளி 6 ஜனவரி மார்ச்
சரிநிகர் பத்திரிகையில் இவ்வாறான கட்டுரையை பிரசுரித்ததற்கு எனது
ஆழ்ந்த அனுதாபங்கள். பத்திரிகை
சுதந்திரம் இந்நாட்டில் எல்லா பத்திரிகைகளுக்கும் உண்டு, எவரும் எதைவேண்டுமென்றாலும் எழுதலாம். ஆனால், சரிநிகர் சரிநிகராக
கவனிக்கவில்லை என்பதே என்
ஆதங்கம்.
அவர்களின் கூற்று கூறுவது போன்று இ. தொ. காங்கிரஸ் வீழ்ச்சியடைந் திருப்பது என்பது எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. ஏற்கனவே, பல அரசியல் தலைவர்கள் இ. தொ. காங்கிர சிலிருந்து விலகிச் சென்றும். இம்முறை மலையக தேர்தலில்
குறிப்பாக நுவரெலிய மாவட்டத்தில்
இ. தொ. காங்கிரஸ் 3 பிரதிநிதிகளை பெற்றதன் மூலம் இ. தொ. காங்கிரஸ் வீழ்ச்சியை நோக்கிச் செல்லவில்லை என்பதை நிரூபித்துள்ளது.
ஹட்டனில் நடைபெற்ற சாகித்திய விழா அநேகமான கலா ரசிகர்களுக்கு நிகழ்ச்சிகளை கண்டுகளிக்க வாய்ப்பில்லாமல்போனதால் "பெரிய மண்டபங்கள் இருக்கும் நகரங்களில் ஏற்பாடு செய்திருக்கலாமே. ஏன் இங்கு கொணி டு வந்து நடாத்துகிறார்களோ..?’ என்ற முணுமுணுப்பை பலரிடம் கேட்க முடிந்தது. ஹட்டன் நகரத்தை தாங்கள் தெரிவு செய்தமையைப் பற்றி எம் வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டு உண்மை நிலவரத்தை தெளிவு படுத்தலாமே?
Gifu மனிட பங்கள் கணி டி ஆகிய நகரங்களில் மட்டுமே உள்ளன. நுவரெலியாவைப் பொறுத்த மட்டில் ஹட்டனிலுள்ள மாணிக்க பிள்ளையார் கோவில் மண்டபம் தான்

Page 11
கே
L
கே
I
பெரியது. அத்தோடு ஹட்டன் நூற்றுக்கு எண்பது வீதமான தமிழ் மக்கள் செறிந்து வாழும் ஒரு நகராகும் . இவ் விழா அவர்களை கெளரவித்தது போன்றாகும். அத்தோடு மாணிக்க பிள்ளையார் கோவில் பரிபாலன சபையும் மற்றும் வர்த்தகர்களும், பொதுமக்களும் இவ் விழா எல்லாவகையிலும் சிறப்புற செய்ய முன்வந்ததால் ஹட்டன் நகரை தெரிவு செய்தோம்.
"மலையக மணி னில் நவீன வசதிகளுடன் கூடிய ஒரு ஆசிரியர் பயிற்சி கலாசாலை உதயமாகுமா?" என்ற படித்தவர்களின் கனவை நனவாக்குமா இ.தொ. காங்கிரஸ்.
சில மாதங்களுக்கு முன் கொட்டகலை 'யதன் ஸைட் ’ பகுதியில் ஆசிரிய கலாசாலை அமைப் பதற்கு அடிக் கல் நடப்பட்டுள்ளது. வருங்காலத்தில் இதன் கட்டிடத் தொகுதி பூரணமாக்கப்பட்ட பின் மலையக மக்களின் கல்வியறிவில் பல முன்னேற்றங்களை இது சாதிக்கும்.
இன்றைய இளைஞர் - யுவதிகளின் எண்ண மாற்றங்கள், சிந்தனைகளைப் பற்றி?
இன்றைய இளைஞர்கள், கல்வியறிவு கூடியவர்களாகவும், தோட்டப் பகுதிகளில் வேலை செய்ய அவர்களின் தகுதி ஒத்துக்கொள்ளாத தன்மையும், இதனால் இவர்களின் வேலைவாய்ப்புக்கான தார்மீக கடமை எம்மீது உள்ளதாலும், இவர்களின் எல்லா வகையான தொழில் வாயப் ப் புக் களையும்
iiiiiiiiiiiiiiiiiii து தனியார்
கே
துறை மூலமும் , தொழில் பயரிற் சிகளை ஏறி புடுத்திக் கொடுப் பதன் op 6d LDT 35 6 UĎ
வேலையில்லா பிரச்சினையை
தீர்க்கலாம என்ற நம்பிக்கை உள்ளது.
பிரசித்திபெற்ற பல கலையம்சங்கள் மலையக மணி னில் அருகி வருகின்றன. அவைகளை மீண்டும் உருப் பெற வைப் ப ைதயரிட் டு உங்களது முயற்சிகள்?
அதற்காக வேண்டிதான் இவ்வாறான சாகித்திய விழாவை நடாத்துகிறோம். இது மட்டுமல்லாமல் கலைஞர்களை ஊக்குவிப்பதும் பயிற்றுவிப்பதும் எமது அமைச் சிண் தலையாய கடமையாக உள்ளது.
மலையக மக்களின் விடிவுக்காக பாடுபட்ட சி. வி. வேலுப்பிள்ளை அமரர் தொண்டமான் . அவர்களைப்பற்றி.
சி. வி. வேலுப்பிள்ளை மலையகத்தின் விடுதலைக்காக இலக்கியத்தின்
eyp 61) (puf, தன் அரசியல் பிரதிநிதித்துவத்தின் மூலமும் LI FT (6 LJ L L - 6aJfi என்ற
முறையிலும், ஒரு பெரும் கல்விமான் என்ற வகையிலும் அவர்மேல் என்றென்றும் எனக்கு தனிப்பட்ட அபிமானமும்-பெருமையும் உண்டு.
அமரர் தொண்டமான் அவர்கள் மலையகத்தின் தந்தையாக மதிக்கப் படுகிறவர். இந்திய வம்சாவழி மக்களின் உரிமைகளை வென்று தந்தவர். அவரின் அரசியல் பாசறையில் வளர்ந்த நாங்கள், அவருடைய கொள் கைகளை இன்றும் , எதிர்காலத் தரிலும்
முன்னெடுத்து செல்வதற்காக செயற்படுவோம். ی
 

s s $ 邑
YsgripY
நினைப்பதெல்லாம் חטח6 ח85"ח- எல்லாம் வெள்ளைப் பெண் தேடப்போனதால் வந்த வினை
米 米 米
இன்று காலையிலிருந்தே பர்வின் சந்தோஷமாக இருக்கிறாள். என்ன காரணம் காலையில் தேனீர் தரும்போது அவள் தந்த புன்னகை "அப்பப்பா” என்ன அற்புதமான வசீகரம். சிந்தனையில் மதிமயங்கினான்.
சரூக்கின் குடும்பம் பெரியது. வீட்டில் மூன்று தாத்தா, மச்சான், தாத்தாவின் பிள்ளைகள், பெற்றோர் என்று களைக்கட்டிய குடும்பம். கலகலப்புக்கும், சிரிப்பொலிக்கும் வஞ்கமில்லாத நந்தவனம். இந்த குடும்ப நந்தவனத்தின் தலைவியாக இருந்து சகலருக்கும் மனம் கோணாமல் பல உதவிகள் செய்து எல்லோரிடமும் அன்பாக, ஆதரவாக செவிலித் தாய்போல் குடும்பம் போற்றும் மருமகளாக விளங்கினாள் பர்வின்.
பர்வின் மனதிற்குள் முனங்கினாள், என்ன மனுஷன் இவர், இவருக்கு சத்தியமாய் தெரியாதா, எல்லாத்தையும் மறந்து விட்டாரா? இன்று எவ்வளவு பெரிய சந்தோஷமான நாள், அதைக்கூட மறந்து விட்டாரே சரூக் குளித்து விட்டு வந்து பழைய ஆடைகளை அணியச் சென்ற போது கணவனுக்கு தெரியாமல் வாங்கி வைத்திருந்த புதிய ஆடைகளை கொடுத்து அணியச் சொன்னாள். சரூக் ஒன்றும் புரியாமல் 'இன்னைக்கு வீட்டில் என்ன விஷேசம்? காலையிலிருந்தே உன் சந்தோஷத்திற்கு அளவே இல்லாமல் நிலா போல் ஜொலிக்கிறாயப் ஏயப் என்னவென்று சொல்லேன். சஸ்பென்ஸ் என்னால் தாங்க முடியாது சொல்லு கெஞ்சினான் சரூக்.
“ம்ஹம்” சொல்ல மாட்டேன். உடுத்து விட்டு ஹாலுக்கு வாங்க. என்னவென்று சொல்கிறேன். விர்ரென்று அவனிடமிருந்து விலகி அடுப்பறையை
நடந்துவிட்டால்.
நஹிம்
நோக்கி விரைந்தாள். இந்தப் பெண்களே இப்படித்தான் எதையும் சொல்லமாட்டார்கள், என அலுத்துக் கொண்டான் சரூக். தன்னறையை விட்டு ஹாலுக்கு வந்த சரூக் பிரமிப்பால் அதிர்ந்தான். ஹால் முழவதும் வர்ணக்கோலம், குடும்பத்தினர் அனைவரும் மேசையைச் சுற்றி, பர்வின் கணவனை அணுகி கத்தியை நீட்டி,
'அந்த கேக்கை வெட்டுங்க.
நானா! ஏன்!
'ஏன் னா இன் னைக்கு உங் கட
பிறந்தநாள்.'
மனைவியின் அன்பை நினைத்து அவன் விழிகளிலிருந்து நீர்த்திவலைகள்
விழத் தயாராகின.
இப்ப எதுக்குங்க கண்கலங்கிறீங்க.
வேணி டா மென்று கணிகளால் கெஞ்சினால், சரூக் மனதிற்குள் 'மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்” இறைவனுக்கு நன்றி செலுத்தி சந்தோஷப்பட்டான், மனதால்,
அவனின் வாழ்க்கையில் மூன்று வருடத்துக்கு முன் நடந்த சம்பவம் மலைச்சாரலாய் மனதில்
来 来 米
சரூக் அவன் பெற்றோருக்கு கடைக்குட்டி ஒரு கம்பனியில் மெனேஜராக வேலை செய்தான். தாத்தாமார் மூவரின் திருமணத் தை முடித்து விட்டு திருமணமத்திற்காக காத்திருந்தான். அவனின் பெற்றோர்களோ பெண்பார்க்கும் படலத்தில் மும்முரமாய் ஈடுபட்டிருந்தனர். மகள் பர்வினுக்கு பெற்றோர் மணமகன் தேடிக்

Page 12
கொண்டிருந்தார்கள். பர்வின் மட்டுமே அவள் வீட்டில் செல்லப் பிள்ளையாகும். சரூக்கின் பெற்றோருக்கு பர்வினை மருமகளாக எடுப்பதற்கு நல்ல விருப்பம், இதே போன்று பர்வினின் பெற்றோருக்கும் சரூக்கை மருமகனாக எடுப்பதற்கு நல்ல விருப்பம். ஆனால் திருமணம் செய்யப்போகும் சரூக்கு மட்டும் கொஞ்சம் கூட விருப்பமில்லை. சரூக்கின் பெற்றோரும், சகோதரிகளும் எவ்வளவு கூறியும் கொஞ்சம் கூட விருப்பப்படுவானா என்று விளங்கவில்லை.
காரணம் பர்வின் கறுப்பு நிறமுடையவள் என்பதால் ஆனால் அவளின் மனமோ வெள்ளை நிறம். அவளை கறுப் பழகி என்று கூறுவதை விட வெள்ளையழகி என்றே கூறலாம். அவள் படித்தவள், பண்பானவள், எல்லாவற்றிலும் கெட்டிக்காரி. சரூக்கின் குடும்பத்திற்கேற்ற பெண்ணாகவும் இருந்தாள். சரூக்கோ வெள்ளைப் பெண்ணைத்தான் முடித்தாலும் முடிப்பேன் என்று ஒற்றைக் காலில் நின்றான். உங்கள் மகனுக்கு, மனைவியாக வரப் போகிறவள் வெள்ளைப் பெண்ணாகத்தான் இருக்க வேண்டும் என்று ஒரே வார்தையில் கூறிவிட்டான்.
சரூக்கின் பெற்றோர் தரகரிடம் வெள்ளைப் பெண்ணாப் பார்க்கும் படி கூறினார்கள். இப்படி எத்தனையோ பெண்களை பார்த்து பார்த்து ஆறு மாதமாகி விட்டது. கடைசியில்
ரவுப் நாநாவின் மகள் பரீனாவை போய் பார்த்தார்கள். ஆனால் அல்லாஹற்வின் வேலையோ என்னவோ பரீனா வெள்ளை நிறமுடையவளல்ல, பொது நிறமுடையவள்.
ரவூப் நாநாவுக்கு இரண்டு ஆண் பிள்ளையும்,
கடைசியில் பெண்பிள்ளையுமாகும். இரு வீட்டாரும் விருப்பப்பட்டு சரூக்-பரீனா திருமணம் நல்லபடியாக முடிந்தது. ஆனால் பர்வினுக்கு இண் னும் திருமணம்
முடியவில்லை. சரூக்-பரீனா தம்பதியினர், சரூக் வீட்டிலே நிரந்தரமாக இருந்தார்கள்.
ஆனால் திருமணம் முடிந்து இரண்டு மாதம் கூட செல்லவில்லை, கணவனுக்கும், மனைவிக்குமிடையில் ஒரே சண்டை. கணவனுக்கு தேவைக்கில்லாமல் வாய்க்கு வந்தபடி திட்டுவாள். விடுமுறை நாளன்று கூட கணவனுடன் சந்தோஷமாக இருக்க மாட்டாள். எனக்கு இவ்வளவு நல்ல ஒரு கணவனை பெற்று, வளர்த்து
பெரியாளாக்கி, எனக்கு மணம் முடித்து தந்த
பெற்றோர்களே என்று கூட நினைக்கவில்லை. சரூக் கிண் சகோதரிகளுடனும் ஒரே சண்டையாகவே இருந்தாள்.
அவள் முகத்தில் யார் முழித்தாலும் அந்த நாள் அவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் சரியில்லாமல் தான் இருந்தது. ஒரு நாளில் கூட அவள் முகத்தில் சிரிப்பை கண்டதேயில்லை. நிம்மதியாய் இருந்த அந்த குடும்பத்தில் இடி விடித்தொடங்கியது. எந்த நேரம் பார்த்தாலும் காரணமில்லாத சண்டையாகத்தான் இருக்கும். சரூக்கின் குடும்பத்துக்கு சரூக் உதவி செய்தால், அவளுக்கு பிடிக்காது. அவளுக்கு வீட்டுக்கு விருந்தாளிகள் வருவது விடிக்காது.
அவளுக்கு தனியாகயிருப்பதற்குத் தான் விருப்பம். 'தாயைப் போல் பிள்ளை, நூலைப் போல் சேலை” என்பது பழமொழியாக இருந்தாலும், இவர்களுக்கு பொருத்தமாகத்தான் இருந்தது. பரீனாவின் தாயும் மகளைப்போல் திமிர் பிடித்தவள். ரவூப் நாநாவைப் போல அவளுடன் வேறு யாருமே வாழ மாட்டார்கள்.
சரூக் பரீனாவுடன் நிம்மதியிழந்து ஆறு மாதமாக வாழ்ந்தான். இந்த ஆறு மாதத்திலும் பொறுமையாகவே இருந்தான். ஆனால் பொறுமைக்கும் ஒரு அளவு இருக்கிறது. இவனுக்கு இதற்கு மேலும் பொறுக்க இயலாமல் ஒரு முடிவுக்கு வந்தவனாக பரீனாவை விவாகரத்து செய்ய வழக்கு போட்டான், வழக்கில் சரூக்தான் வெற்றியடைந்தான்.
 

அதன் பிறகு வாழ்க்கை இந்த மாதிரி பாழாய் போய் விட்டதே என்று நினைத்து வேதனையடைந்தான். வாழ்க்கை வெறுத்து அவனுக்கு நாட்கள் கொஞ்சம் கொஞ சமாக நகர் நீ து மூன்று மாதமாகிவிட்டது. எத்தனை நாளைக்குத் தான் இவன், இப்படி தனியாக வாழ முடியும். இவனுக்கு இவனைப் போன்றே மணம் முடித்து விட்டு விவாகரத்து செய்த பெண்ணையே மணம் முடித்து வைப்போம் என்று பெற்றோர் கூறுவதை கேட்டுக் கொண்டிருந்த சரூக் அறையிலிருந்து முன் ஹாலுக்கு வந்தான்.
வாப்பா, உம்மா என்னை மன்னித்து விடுங்கள். நான் வெள்ளைப் பெண் தேடப் போய் வெளுத்ததெல்லாம் பால் என்று நினைத்து படுக்குழியில் விழுந்து விட்டேன். அன்று நான் கறுப்பு கற்பூரம் என்று நினைத்திருந்தால் என் வாழ்க்கையே சீரழிந்து பேர்யிருக்காது. உம்மா எனக்கு மாதிரி, எந்த ஆணுக்கும் இப்படி நடக்கக்கூடாது. என்னைப் போன்ற எல்லா இளைஞர்களுக்கும் கூறுவது என்னவென்றால் வெள்ளை உருவத்தை பார்க்க வேண்டாம், மனம் வெள்ளை நிறமுடைய பெண்ணையே உங்களுக்கு மனைவியாக்குங்கள் என்று உம்மாவின் முன் கூறினான்.
உம்மா இப்போதே நான் மாமாவின் வீட்டிக்கு போய் பர்வின் மதினியை எனக்கு மனைவியாக கேட்கப் போகிறேன் என்று கூறி விட்டு சென்றான். சென்ற காரியம் வெற்றியாகவே வீடு திரும்பினான். அதன் பிறகு ஒரு வாரத்தில் சரூக்-பர்வின் மிகவும் விமர்சையாக முடிந்தது. பர்வின் அந்த விட்டில் காலடி எடுத்து வைத்த அன்றிலிருந்து இன்று வரைக் கும் அந்தக் குடும் பம் சந்தோஷமாகத்தான் இருக்கிறது. என் மனைவி பர்வின் எனக்கு கிடைத்த பெரும் பொக்கிஷம். அவளின் குணத்தால் முன்பு நடந்த திருமணத்தை ஒரு கெட்ட கனவாக நினைத்து மறந்து விட்டேன் என்று சரூக் அழுதான் மனதிற்குள்.
米,米 米
என்னாங்க வந்து கேக் வெட்டுங்க” என்ற பர்வின் குரல் கேட்டதும் கண்களிலிருந்து கண்ணிர் வடிய மனைவியைப் பார்த்தான்.
சிறு பிள்ளையைப் போல் நீங்க இந்த நல்ல
நாளுல் போய் அழலாமா. என்று கூறினாள் பர்வின்.
சரூக்கோ ஆனந்த வெள்ளத்தில் தத்தளித்துக்
கொண்டிருந்தான்.
(யாவும் கற்பனை)
இந்த புதிய அறிவிப்பின் படி,
சிறைத் தணர்டனையின் ஒரு பகுதியை வீட்டில் கழிக்கலாம் என்று சொன்னால யார்தான் சம்மதிக்க மாட்டார்கள் இந்த வசதி இலங்கையில் இல்லை. சிங்கப்பூரில் அறிமுகப்படுத்தப்படுகிறது.
சிறைத்தண்டனையில் அதிக பட்சம் ஆறு மாதம் வீட்டில் இருக்கலாம். அப்படி வட்டில, கைதரியாக வசிக்கும் போது வேலைக்கு போகலாம், கலலூாரிக்கும் போகலாம். ஆனால் இரவு பத்து மணி முதல் காலை ஏழு மணி வரை வீட்டில் இருக்க வேண்டும்.
இத்திட்டத்தில் சொல்லப்படும் ஒரே நிபந்தனை, கைதிகள் எப்போதும் எலக ரோனிக அட்டையை வைத்திருக்க வேண்டும். கைதிகள் பகல7ல, இரவரில எங்கு
போகிறார்கள், வருகிறார்கள் என்று கண்காணிக்கவே இந்த ஏற்பாடு மாதம் ஒரு முறை நாற்பது கைதரிகள் இப் படி செல்ல அனுமதிக்கப்படுவார்களாம்.

Page 13
(11 பக்க தொடர்ச்சி.)
தரத்தையும் ஒப்பீட செய்யும் விதத்தில் இருக் கறது என்று L 6u (5 LĎ ஒத்துக் கொள்கிறார்கள் . ஆனால் புதுமைப்பித்தனும், மெளனியும் தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் இன்னும் எவரும் கால்பதித்துத் தாண்ட முடியாத சிகரங்களில் நிற்கறார்கள் என்றும் சொல்கிறார்கள்.
இந்த ஐம்பதாண்டுச் சிறுகதைகளை ஒருசேரப் படிக்கும் போது, புதுமைப்பித்தனும் மெளனியும் தாண்டிவிட முடியாத சிகரங்கள் அல்ல என்றும் அவர்கள் போட்ட கோடுகளைத் தாண்டிய்ம் தமிழில் சிறுகதைகள் எழுதப்பட்டிருக்கின்றன என்றும், அந்தத் தரத்தில் தலைக்கு இரண்டு மூன்று சிறுகதைகளாவது எழுதியவர்கள் நம்மில் ஐந்நூறு பேர்கள் இருக்கிறார்கள் என்றும் எனக்குச் சொல்லத் தோன்றுகிறது
(தமிழ் இனி 2000 கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட
கட்டுரை)
"அந்த சாப்ட்வேர் என்ஜினியர் போலின்னு எப்படி கண்டு பிடிச்சே."
6& "இது மூலிகைல செஞ்ச 'பிளாட்பி. இதுல வைரஸ் பிடிச்சுச்சின்னா தன்னாலயே அழிச்சிடும்னு சொன்னாரு"
-سسسسسسسسصY" ۶سسسسسسسسسسسس-J-m
"ஏன் தோசை நடுவில ஒட்ட இருக்கு.?"
"இதுதான் புதுசா வந்திருக்கிற C, D. தோசைங்க"
எனக்குள் ஏனோ?
ஏக்கப்பெருமூச்சிகள் அக்கினி ஜுவாலைகளைத் தொடாமலே, ஜன்னல் கம்பிகளை செந்நிறமேற்றியதும், கண்ணீரை அருவியாக்கி காகித ஒடம் விட்டுக் . கொண்டிருக்கும் இதயத்துக்குள் ஏமாற்றங்கள் வந்ததுமேனோ?
இறந்துவிட்ட இளமைகளுக்குள் இடிந்துவிட்ட நேரத்தையும் அந்தி மறைந்த வானத்துக்குள், அஸ்தமித்த ஆரியனையும் தேடிஅலைவதில் நிகழ்வதுமேதோ?
நான் உதிர்ந்து,விழுந்த சருகைப் பார்த்து வசந்தத்தை வரவேற்றும், நட்சத்திரத்தில் வீடு கட்டி நான் மட்டும் வாழ நினைத்ததை எண்ணி எண்ணிய்ே, எனக்குள்ளே அன்னியமானதுமேனோ?
மண்ணுக்குள் மறைந்துவிட்ட மழைத்துளிகளை மனதினுள் தேடியதும்,
பணியாய் ஒளிந்துவிட்ட இறந்த காலத்துக்கு சிறகுகள் கட்டி பறக்கநினைத்த பருவங்கள் முறிந்ததுமேனோ?
இரவுகளைத்தேடி, புலரிகளைத் தொலைத்து அழுததும், ரோஜாக்களைப் பறித்து, முட்களால் மாலைகளை ஆடிக்கொண்டதுமேனோ?
இமைகளை நனைக்கவந்த இதய ஊற்றுக்கள் வரண்டுபோய், இடையில் வந்த தவறுகள், இடறிவிழுந்து, இன்னுமொரு மனிதனை பிறக்கச் செய்வதுமேனோ?
றஸ்மியா றாஸிக். espl a 6 grar - Letía
 
 
 

ASRR RCE PRODUCTS
dSuppliers of Qualít v GSRíce
Pahala wela, Ukuwela, MATALE.

Page 14
பிரவாகமே!
பிரவாகமே! உன் புகழ்பாட என் கற்பனையை கருவாக்கி கவிப்பூகளை சமர்பிக்கிறேன்!
நீரோடையாக பிரவாகித்திருக்கும் பிரவாகமே! நாளை கலையுலகில் - நீ சமுத்திரமாய் பிரவாகித்துபாய வேண்டும்!
米 米 来
உன் ஒவ்வொரு ஆக்கமும் சாக்கடைக்குள் தடுமாறி தத்தளித்து கொண்டிருக்கும் - எம் சமுகத்தின் கண்களை திறக்க வேண்டும்!
米 米 米 எதிர்கால ഉ_ഞെക படைக்க தயாராகும் இளைய சிற்பிகளை இலட்சிய படைபாளிகளாக - நீ வார்த்தெடுக்க வேண்டும்!
米 水 米
தடைக்கற்களையும் படிக்கற்களாகக் கருதி - நீ முன்னேற்றப் பாதையில் வீரநடை பயில வேண்டும்!
米 米 米
இலக்கிய வானில் என்றும் - நீ ஜொலிக்க - என் வாழ்த்துகள் பலகோடி!
பர்வின் இஸ்மாயில் வறக் காமுறை
விடியல் வரும் முன் விழித்தெழு!
வெளிச்சத்தில் துயிலும் முஸ்லிம்களே! மக்கள் மத்தியில் மறைந்து போன
D60.1360)uj
தூசி தட்டி
துடைத்தெடுக்க துயில் களைவோம் சோதரரே!
ஒரு வித பேஷன் விபசாரத்தில் வீழ்ந்து விட்ட - நம் விடலைப் பெண்கள்
மேற்குலகம் தந்த மோடன்
மோகத்தால் கோலம் மாறிய கோமாளிகளாய் - நம் இளைஞர்கள்
காமவெறி கொண்ட காடையர்களுக்கு பசி தீர்க்க பலியான - நம் சிறுவர்கள்
நாகரீக ஜாஹிலிய்யத்தில் நடைபோடும் - நம் சமூகத்தின் இன்றய நிலை இதுதானடா.
இஸ்லாத்தின் உணர்ச்சியை உணர்ந்த மிலேனியத்தில் ஓர் எழுச்சி பெற
முஸ்லிம்கள் மு.மின்களாக சீரழிந்த நம் சமூகம் சீர் பெற விடியல் வரும் முன் விழித்திடு சோதரா! உனக்கு ஒரு விடைகிடைக்கும்.
பஹற்பமிதா ரவுஸ்டீன் உக்குவெலை. ஊற்ற, தளி 6 ஜனவரி மார்ச்
 
 
 

சரித்திரம்
கணக்குகள் பெருக்கங்களாகி வெறிபிடித்து அலைந்து திரிகின்றன. கடன் வளர்க்கும் முட்கள் குத்தகையின் விஷ நாவுகள் வரியிறுக்கும் கயிறுகள் வட்டி பின்னிய வலைகள் வாடகையின் வாள்கள்.
69(5 அடியாட்களின் dini'LLDT35, 96006 திமிறித் திமிறித் திரிகின்றன எல்லாம் வழிப்பறி செய்கின்றன.
ஒரு ஏழையின் வழிநெடுக இவ்வாறெல்லாம் வழிப்பறிகள் நடந்திருக்க வேண்டாமென்று காலத்தின் சுவர்களில் மோதித் தெறிக்கின்றன நியாயக்குரல்கள் நியாயக்குரலை மிதித்துத் துவம்சமாக்கி வந்தன கொள்ளைக் காரரின் குதிரைகள்.
ஒரு ஏழை ' புன்னகையைச் சந்திக்காத பிறவி கண்ணிரைக் குதிரைகளின் காலடியில் விட்டுக் கேட்டான்
நானொரு ஏழை என்னை விட்டு விடுங்கள்’ என்று. /
இரையும் காற்றில் அவன் குரல் அள்ளுண்டு போயிற்று.
கொள்ளைக் கரங்களின் நெருப்பெரியும் பந்தத்தில் அவன் சொற்கள் எரியுண்டழிந்தன. மூண்டெரியும் குடிசையில் அவன் சரித்திரம் தொலைந்தது.
குதிரைகள் கனைத்துத் துள்ளின
புழுதி சுழலப் பறந்தன
கொள்ளைக் காரரின் குதிரைகள் பாய அவன் உயிரும் கொள்ளை போயிற்று
கருணாகரன்.
மண்ணுக்கு விண் தந்த விளக்கு
மண்ணுக்காய் விண் ஈன்றெடுத்த தவப்புதல்வியே! நிலவு மகளே!
உன் ஒளியினை என் வீட்டு விளக்காய் வைத்துக் கொண்டு உனக்கொரு கவி யாசம் செய்கிறேன்.
வையக் கவிஞர்களின் பேனாக்கள் என்றும் மறவாமல் வர்ணிப்பது வனப்பு மிக்க உன் வதனமதை
மங்கையவள் தம் மகவுக்கு
சோறுாட்டுவதும் காதலர்கள் சாட்சியாக சத்தியம் செய்வதும் உன் முன்னிலையிலேயே இதை நீ அறிவாயா?
விஞ்ஞானி உன்னை பதம் பார்த்தானே!
கதிரவன் உன்னை கட்டியனைத்தானே! ஆகவே! உன்னை கன்னி என்பேனா? களங்கமானவள் என்பேனா?
கதிரவன் உன்னை கட்டியணைத்ததால் தானே
வந்தது கிரகணம் அதை நினைத்துத் தானா நீ மாதமொரு முறை தேய்ந்தும் மறைந்தும்
விடுகிறாய்
இரவில் நாமெல்லாம்
விழி மூட
எமக்காக நீ மட்டும் விழித்திருக்கிறாய்
நிலவே! என் பேனா கூட உன்னை வர்ணித்து வர்ணித்து பூப்படைந்து பூரித்து போயின.
உக்குவளை கவிப்பிரியை சம்சியா இஸ்மாயில்
25 ஊற்ற துளி 6 ஜனவரி - மார்ச்

Page 15
கடந்த நூற்றாண்டின் மலையக இலக்கியம் சாரல் நாடன்
(சென்ற இதழ் தொடர்ச்சி.)
முதல் நாடாளுமன்றத்தில் (1947) அங்கம் வகித்த ஆறு இ. இ. கா பிரதிநிதிகளும் இரண்டாவது நாடாளுமன்றத் தேர்தலில் (1952) போட்டியிட் வாய்ப்பில்லாது போனபோதுதான் ‘சத்தியாக்கிரகத்தை முன்னின்று நடாத்த முனைந்தனர்.
இவ்விதம் 1952ல் நடாத்தப்பெற்ற 101 நாட்கள் நீடித்த சத்தியாக்கிரகத்தை ஆதரிக்கவும், இலங்கைவாழ் இந்திய வம்சாவளி மக்களின் சக்தியை ஒன்று திரட்டிப் பலமுள்ள ஓரணியை உருவாக்கவும்
நவஜீவன் ' தர்மானித்தது.
வாரப் பத்திரிகையான ‘நவஜீவன்
நாளிதழானது.
இதே விதத் தி ல 1964ல
கைச் சாதிடப்பட்ட Uரீமா - சாஸ்திரி
ஒப்பந்தத்தின் போது எழுந்த எதிர்ப்பலைகள் கூர்மைப்படுத்த வேண்டி வாரப்பத்திரிகையான "செய்தி' நாளிதழானது.
இந்த இரண்டு பத்திரிகைகளும் மலையக நாவலிலக்கியத்துக்குக் காத்திரமான பங்களிப்புச் செய்துள்ளன.
கடந்த நூற்றாண்டின் மலையக இலக்கியம் -சாரல் நாடன்.
16-11-1952ல் ஆரம்பமாகியது ஜானகியின் துணிவு என்ற தொடர் நாவல. 58 அத்தியாயங்களில் முடிவுறும் இந்நாவலை, நவஜீவன் பத்திரிகையில் எழுதியவர் சிதம்பரநாத பாவலர்.
நவஜீவன் ’ பதி திரிகையில ஆசிரியராகக் கடமையாற்ற ஒப்புக் கொண்ட - Lņ. 6TD. பீர்முக்மது 'கங்காணி மகள்' என்ற பெயரில் ஒரு நாவலை நூலாகவே தந்துள்ளார். இது ஒரு குறைப்பிரசவம் என்று சில்லையூர் செல்வராசன் தன்னுடைய நூலில் குறிப்பிடுகின்றார். தோட்டப்புறப் பேச்சு வழக்கை இந்நூலில் டி. எம். பீர்முகமது லாவகமாகக் கையாண்டுள்ளதாகத் தன்னுடைய நூலில் கனகசெந்திநாதன் குறிப்பிடுகின்றார். இந்தத் துரண்டுதலால்
உந்தப்பட்டு 'யார் கொலைகாரன்? என்ற ஒரு நாவலை சாமி பசறையிலிருந்து வெளியிடுகிறார்.
நூல் வடிவில் வெளிவந்த இந்த நாவல் முயற்சிகள் காலந்தாழ்த்தி எழ இருக்கின்ற ஓர் ஆத்திரப் பரம்பரையினர் பற்றிய சூசகங்களாக அமைந்திருப்பதை இன்று எம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது.
LD 60) 6) Ults LD ö5 d#5 60) 6IT öğ குறித்தெழுதப்பட்ட நாவல்களில் இது காலவரையில் இருபத்தைந்து, நூல் வடிவில் வெளிவந்துள்ளன. VO
பத் தரிரிகைகளிலும் , சிறு சஞ்சிகைகளிலும் தொடராக வெளிவந்து இன்னும் நுால வடிவம் பெறாத பதினேழுக்கும் மேற்பட்ட நாவல்கள் உள்ளன.
மலையக நாவல்களைபற்றி ஆராய முனைபவர்கள் இந்தப் பின்னணித்
தகவல்களைப் பற்றி அறிந்திருப்பது
முக்கியமானது.
பிரசுர வசதிகள் எதுவுமற்ற
மை யகத்தில் நூல்களாக வெளிவந்த நாவ்ல்களை மாத்திரம் இலகுவாகக்
கணக்கிலெடுத்துக் கொண்டு ஆராய்ச்சி செய்வதுவும, அபிப் பிராயங்கள் தெரிவிப் பதுவும் சில ஆபத் தான முடிவுகளைத்தர ஏதுவாக அமையும் அபாயம் இருக் கின்றது. தொடர் நாவலா! வந்தவைகளையும் நாவல்களாக அங்கீகரித்து ஆராய்வது இன்னும் இரு தசாப்தங்களுக்கேனும் அவசியமாக இருக்கும்.
தனது நாவல்கள் அனைத்தையும் முதலில் பத்திரிகையில் தொடராக வெளியிட்ட மலையகத்தின் பிரபலமான இலக்கியகர்த்தா ஸி. வி. வேலுப்பிள்ளை ஆவார். இவரது ஆங்கில நாவல்கள் தமிழ்ப்படுத்தப்பட்டுத் தினகரன் பத்திரிகையில் வெளிவந்தன.
வாழ்வற்றவாழ்வு (1959) எல்லைப்புறம், ergö) துளி 6 ஜனவரி மார்ச்
 
 
 

பார்வத என்பவை அவ் விதமான நாவல்கள்,பொன்.கிருஷ்ணசுவாமி என்ற மலையக இலக்கியகர்த்தா. ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதிய தி டெயிலிமிரர் என்ற ஆங்கிலப் பத்திரிகைக் குழுவிலிருந்து, தற்போது இந்தியன் எக்ஸ்பிரஸ் என்ற தென்னிந்திய ஆங்கிலப்பத்திரிகைக் குழுவிலிருக்கும் பெருமைக்குரியவர். இவரது மொழிபெயர்ப்பில் தினகரனில் வெளிவந்த ஸி.வி வேலுப்பிள்ளையின் வாழ்வற்ற வாழ்வு (Lifeless Life) இவைகளோடு, எல்லைப்புறம், பார்வதி ஆகியனவும் நூல் உருவில் வரவில்லை. சுதந்திர இலங்கையின் முதல் தலவாக்கொல் லைப் பகுதியிலிருந்து தேயிலைத் தோட்டத் தொழிலாளிகளின் அபரிமிதமான வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டவர் ஸி. வி. வேலுப்பிள்ளை ஆவார். ஆங்கிலத் தில் ğ5 LD ğ5] கவிதைகளையும் நாவல் களையும் எழுதிப்புகழ் பெற்றவர். இந்தியவம்சாவளி மக்களின் துயரம் மிகுந்த வாழ்க்கையை வெளி உலகுக்கு - தமிழ் தெரியாதவர்களும் வாசித்துப் புரிந்து கொள்ளச் செய்தவர்.
வீடற்றவன் (1962), இனிப்படமாட்டேன் (1984) என்ற நாவல்களை வீரகேசரியில் தொடர் நாவல்களாக வெளியிட்டார். இவை இரண்டுமே நுால வடிவில் இன்று கிடைக்கின்றன. இவையிரண்டும் தமிழகத்தில் அச்சுருவம் பெற்றன. வீடற்றவனுக்கு இன்னொரு சிறப்புமுண்டு. ‘வைகறை வெளியீட்டகம் மூலம் மலையக இலக்கிய முயற்சிகளுக்கு சாசுவதம் தர முயன்ற மு. நித்தியானந்தன், இலங்கையில் அது முதலில் நூலாக வெளிவந்து, பத்தனை பூரீபாதக் கல்வியியல் கல்லூரியில் (1995) பாட நுாலாக்கப்பட்டதால் , மேலும் இரு பதிப்புக் களை அது தமிழகத்தில் கண்டுள்ளது. "இலங்கைத் தீவினில் இன்றும்
நாடாளுமன்றத் துக் குத்
வந்த போது வெட்டியும் குறைத்தும் காணப் பட்ட பகுதிகள் எல் லாம் ஒன்றிணைக்கப்பட்டு முழு உருவில் நூலாக வந் திருக்கும் இந் நாவல் அமரர் க. கைலாசபதியின் வேண்டுதலால் ஆங்கிலத்திலும் ஸி. வி. வேலுப்பிள்ளையால் மொழி பெயர்க் கப்பட்டு, இன்னும் நூலாக்கப்படாதிருக்கின்றது. இலங்கையில் 1983ல் ஏற்பட்ட இன வன் முறைக்குப் பின்னர், சிங்கள தமிழ்க்கலப்புத் திருமணம் செய்துள்ள ஒரு குடும்பத்துக்குள் ஏற்படும் பிரச்சினைகளைக் கூறும் நாவலிது. இதை எழுதிய ஸி. வி. வேலுப்பிள்ளை நிஜ வாழ்வில் கலப்புத்திருமணம் செய்திருந்தவர். தொழிற் சங்கப் பணிக்கு தன்னை
அர்ப்பணித்துக் கொண்டவர். இந்த நாவல்
வஞ்சிக்கப்பட்டவர்களாகத் துயருறும் ஏழை
இந்தியத் தமிழர்களின் கதை’ என்று, ஸி.
வி. இந்நாவலுக்கான முன்னுரையில்
குறிப்பிடுகறார்.
இனிப்படமாட்டேன் ஸி. வி. எழுதிய ಆಪಾ-ತಿ! நாவல், விரகேசரியில் தொடராக
அவரது சுயசரிதை என்று எண்ணுமளவுக்கு நறுக்குத் தெறிந்தாற் போன்ற சுருக்கமான வாக்கியங்களில் கதை மிகவும் யதார்த்தமாக எழுதப்பட்டிருக்கின்றன.
அறுபதுகளில் மலையகத்திலேற்பட்ட இலக்கிய விழிக்கு உருவம் அமைக்க முனைந்தவர்களுக்குக் களம் அமைத்துக் கொடுத்த 'செய்தி பத்திரிகையில் டி. எஸ். இராஜ" நெடுந்தூரம் (1964) என்ற தொடர் நாவலை எழுதியுள்ளார். மலையக மக்களின் வரலாற்றை விளக்கும் முறையில் அமைந்த இந்த தொடர் நாவல் நாற்பத்து மூன்று அத்தியாயங்களைக் கொண்டது. மாத்தளை வடிவேலன் எழுதிய 'தொடுவானம் தொடர் நாவலும், தெளிவத்தை ஜோசப் 'அஞ்சலி சஞ்சிகையில் எழுதிய மாறுதல்கள் தொடர் நாவலும் இன்னும் நூலுருவம் பெறக்
Est (3600TLD.
கோகிலம் சுப்பையா எழுதிய சென்னை 'தமிழ்புத்தகாலய வெளியீடாக நூலுருவில் வெளியான நாவல் தூரத்துப் பச்சை' (1964) .
தென்னிந்தியாவிலிருந்து கண்டிச்சீமை என்றறியப்பட்ட இலங்கைக்கு, புதுவாழ்வு தேடி எண்ணற்ற வசீகர எதிர்பார்ப்புகளுடன் குடி பெயர்ந்த ஒரு தமிழ்க் குடும்பத்தின் கதை. இந்திய வம்சாவளி மக்களின் ஆரம்பகால சோக வரலாற்றைச் சித்தரிக்கும் პეპ8ა: პXპჯ3X8.8XXXXXXXჯპ8ჯXSპ-8X8,8X33X23X38XXXXXXX | gailf

Page 16
நாவலாக மிளிரும் இதில் மூன்று தலை முறையினரின் கதை சொல்லப்படுகின்றது. இந்நாவல் 1948 க்கு முற்பட்ட, காலனித்துவ இலங்கையின் தேயிலைத் தோட்ட வாழ்க்கையைச் சித்தரிக்கின்றது. இலங்கை வாழ்வு தென்னிந்திய தமிழ் வம்சாவளியினரைப் பொறுத்தமட்டில் தூரத்துப்பச்சை தான் என்று கூறும் இந்நாவல் பெருந்தோட்ட ஆசிரியப் பயிற்சிக்கான பாடநூலாக வைக்கப்பட்ட பெருமையுடயது. அந்த உலகத்தில் இந்த மனிதர்கள் (1984) நாவலில், தோட்டப்புற இளைஞன் ஒருவன் மாணிக்கக்கல் தோண்டுவதற்கு களுகங்கை வட்டாரத்துக்குச் சென்று அல்லலுறுவதைச் சித்தரிக்கிறார். இந்த
நாவல் குறித்து ’கனவுப் பயிர்வளர்த்து
ஆசையரின் பலன் களை அறுவடை செய் வதற்காக அரும் பாடுபடுகிற மனிதர்களைப் பற்றிய கதை' என்று வல்லிக்கண்ணன் குறிப்பிடுகின்றார்.
எல்லை தாண்டா அகதிகள் (1994)
நாவலில் மாத்தளை சோமுவின் எழுத்து நடையில் முதிர்ச்சி தெரிகிறது. தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை துயரம் மிகுந்த ஒன்று. துன்பக்கேணி என்ற ஒரு சொல்லால் புதுமைப்பித்தன் அந்த மக்களின் நித்திய துயரத்தை அற்புதமாக 1930களில் உருவகித்தார். சுதந்திர இலங்கையில் அந்த மக்களுக்கு நிரந்தர அகதி வாழ்க்கைதான். சொந்தமென்று கூறிக் கொள்ள ஒன்றுமில்லாத அந்த மக்களின் உலகம் அவர்கள் குடியமர்த் தப் பட்டுள்ள தோட் ட எல்லைக்குள்தான் என்பதைக் குறிக்கும் யதார்த்தமான நாவலிது. வீரகேசரிப் போட்டிக்கு சிறுகதையாக எழுதப்பட்டு முதற் பரிசினைப் பெற்ற 'எல்லை தாண்டா அகதிகள் அதே பெயரில் பின்னால் நாவலாக விரித்தெழுதப்பட்டது என்கிறார் மாத்தளைச் சோமு.
மலையக இலக்கியத்தோடு தம்மைப் பின்னிப் பிணைத்துக் கொண்ட சி. வி. வேலுப்பிள்ளை, க. கைலாசபதியின் அஞ்சலிக் கூட்டத்தில் (1982) பின் வருமாறு கூறினார்.
நாவல் எழுத வேண்டும் என்ற
துTணி டுதல் எனக் கு Ֆ! Լ0 Ù if கைலாசபதியிடமிருந்து தான் வந்தது. மலை நாட்டிலிருந்து இன்னும் ஒரு நல்ல நாவல் வரவில்லை. நீங்கள் அதை எழுதவேண்டும். தோட்டங்களில் உத்தியோகம் செய்கின்ற யாழ்ப்பாணத்தவர் என்ன செய்கின்றார்கள் என்பதை எனக்குச் சொல்லி இருக்கின்றீர்கள். அவைகளைப் பச்சையாக இந்த நாவலில் எழுதுங்கள். நான் பத்திரிகையில்
போடுகிறேன். அப்போது தான் இவர்களுக்குச் சுரணை வரும் ' என்ற அவரது வார்த்தைகளுக்கிணங்க நான் எழுதிய
நாவலை வாசித்த பின்னர் சில நண்பர்கள் என் னுடன் பேசுவதை நிறுத் திக
கொண்டார்கள்.
இன்றுள்ள பணி
அரசியல் சுதந்திரம் அடைந்த பின்னர் ஆழ்ந்த பொருளாதார சமூக, அரசியல், பண்பாட்டு மாறுதல்களைச் செயல்படுத்தும் வரலாற்றுச் சிறப்புள்ள பணி இவர்களின் முன் நிற்கிறது.
இந்த பணிகளை ஆற்றுவதில் முன் நிற்கிற எழுத்தாளர்களின் நாவல்கள் 20, சிறுகதை படைப்புக்கள் 15, கட்டுரை நூல்கள் 10 என்று சந்திக்கின்றன. இவை எண்ணிக்கையில் குறைவானவைகளே யானாலும் எண்ணத்தில் உயர்ந்தவைகள்.
இந்த மக்களின் எழுத்துக்களில் பேராசிரியர் தண்டாயுதம், அறிஞர் பெ. சு. மணி, தாமரை மகேந்திரன், வல்லிக்கண்ணன், திறனாய் வாளர் தி. சு. நடராஜன் , போத்திரெட்டி போன்றவர்கள் அவதானித்த கருத்துக்கள,
இந்தியா அரசியல் மட்டத்தில்
இலங்கையுடன் நட்பு பேணுகிறது. இலங்கை அரசியலில் செல்வாக்கு செலுத்துகிறது. ஆனால் அதன் நடவடிக்கைகள் செயற்பாடுகள் தான் நாட்டிலிருந்து நூற்று எண்பது ஆண்டுகளுக்கு முன்னர் சென்றவர்களின் பரம் பரையரினர் தாண் டிய வர்கள்
பத் துலட் சதி தை அங்கு மதி திய
 
 

மலைநாட்டில் வாழ்வுப் போராட்டம் நடாத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதைக் கண்டு
கொண்டதாக அமைய காணோம்.
இங்குள்ளவர்களுக்கு ஈழத்து தமிழர்கள் என்றால் வடபுலத்து தமிழர்கள் தாம் நினைவுக்கு வருகிறார்கள்.
கல்விச் சிறப்பினாலும், தமிழ் மொழிப் புலமையரினாலும் , நுால கள் வெளியிடுவதாலும் அவர்களின் இந்திய தொடர்பு நெருக்கமானதுதான். மலையகத் தமிழர்கள் அத்தகு நெருங்கிய தொடர்பினை வைத்திருக்கவில்லை. மேலாக இரத்த உறவால் அவர்களில் வெகு பலர் இந்தியாவுக்குரியவர்களாயிருக்கிறார்கள்.
எங்கள் மலையகத்தை சேர்ந்தவர்கள் லட்சம் பேர் இன்று இங்கு 'தாயகம் திரும் பரிய வர்கள்' என் று அழைக்கப்படுகிறார்கள் குன்னூர், கோத்தகிரி, நீலகிரி என்று தோட்டப்புறங்களிலும் மதுரை, தஞ்சாவூர், இராமநாதபுரம் என்று தங்கள் சொந்த கிராமங்களிலும் மைசூர், கர்நாடகம் என்று தென்னிந்திய மாநிலங்களிலும் சிதறி கிடக்கிறார்கள்.
நிறைவேறாத ஆசைகளுடன் இங்கு வந்த, தாயகம் திரும்பிய பெரும் பாலானோரின் வாழ்க்கை கவலை தருவதாக இருக்கின்றது. இலங்கையில் தமது எண்ணிக்கை பலத்தை இழந்துபோன மலையகத் தமிழர் அதை ஈடு செய்ய வேண்டி இருக்கிறது.
1983ல் இலங்கையில் நடந்த இன படுகொலை என்றும் மறக்க முடியாத வடுக் களை தந் தருக் கறது. சிந்தனையாளர்களையும், இலக்கிய கர்த் தாக் களையும் கடல் கடக் &5 விட்டிருக்கிறோம். தமிழகத்தில் இலக்கிய இர. சிவலிங்கம் காலமாகிவிட்டதை ஈடு செய்ய முடியாத இழப்பாக கருதுகிறோம்.
எனினும், தூரத்துப் பச்சை, குருதிமலை
என்ற இரண்டு நாவல்களை தந்த
மலையகம் , அதன் இருத் தலை வெளிப்படுத்தும் மகத்தானதொரு படைப்பை இந்த நூற்றாண்டு தரும் என்று நம்பிக்கை இருக்கிறது.
(தமிழகத்தில் நடைபெற்ற தமிழ் இனி 2000 கருத்தரங்கில் படிக்கப்பட்ட கட்டுரை)
இலை நுனியில் விழத் தயங்கும் பனித் துளியை சிதறி விடாமல் விரல் பரப்பால் வருடிப் பார்ப்பதுபோல்.
ஒடு
LULL /TLb 4ářóf செட்டை வண்ணம் - கையில் ஒட்டிக் கொள்ளாமல் தொட்டுப் பார்ப்பதுபோல்.
குழந்தையொன்று சிணுங்கிச் சிரிக்கையில் - கன்னச் (76/1760L LOL 6lf
வலிக்காமல் என்னில் வாங்கிக் கொள்வதுபோல்.
காற்று கலைக்குமுன் - சின்ன நீர்ப்பரப்பில்
Cupé5tb LITig5g/
ரகசியமாய்
ரசிப்பதுபோல்.
இமையடைந்த - ஒரு நேரத்தில் இடையனைத்து - உன் முச்சுக் காற்றால் மட்டும் உயிர்வாழ - நான் ஏங்குகிறேன்.
6, 1607(56007//
Այրի
நீ!?
அளப் வருல் ஹ?மைட
29 estadiogrup, 1 gassif 6 836 ostemario - torfù)

Page 17
இது அந்தனி ஜீவாவின் பக்கம்.
கமல்ஹாசன். என்றவுடன் நமக்கு தெரிந்தவர் நடிகர் கமலஹாசன்தான் பன்முக ஆற்றல் கொண்ட கலைஞர் அவர். அவருக் குள் 6) ([b கவிஞனும் ஒளிந்திருக்கிறான்.
பாலுமகேந்திரா, சுஜாதா, பாலகுமார் போன்றவர்கள் அவருக்கு நெருக்கமான நண்பர்கள்.
அண்மையில் தமிழகம் சென்றிருந்த பொழுது சிறு சஞ சிகைகளை புரட்டிக்கொண்டிருந்த பொழுது சூரண்பயம் என்ற சஞ்சிகையில் கமலஹாசன் எழுதிய சில கவிதைகள் கண்ணில் பட்டது. அதை எனது குறிப்பேட்டில் பதிவு செய்து கொண்டேன். அதில் இரண்டை உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன்.
'பெருஞ்சிங்கம் ஞானமெனும் பெருஞ்சிங்கம் எறும்புகளை உண்பதில்லை இறந்த பின் சிங்கத்தை எறும்புகள் உண்பதுண்டு
இன்னொரு கவிதை. சுதந்திர (மான) கவிதை
இருமலுக்கும் தும்மலுக்கும் பெருவிளக்கம் சொல்லி வைத்து சிறுவயதில் என் மனதை சிறகொடித்த காரியமேன்? மூணுபேராய் போன வேலை உருப்பாடது பூனை எந்தன் வழி நடந்தால் சரிப்பாது, எத்தனை சொல்லி என்னை குழப்பி விட்டீர்.
கந்தனுக்கும் கண்ணனுக்கும் கன்னந்தொட்டு தலை வணங்கி கணக்கெழுதும் காகிதத்தில் கணபதிக்கு சுழி போட்டு படியேறி மலையேறி
பாசிக்குளம் பச்சை மூழ்கி உயிர் கொடுத்த சாமிக்கு மயிர் கொடுத்து மயங்கி விட்டேன்.
S6örg)|LDT உன் பாதையில் தடை கற்கள்? மன்னன் சொல் கேளா மக்களை வழி. திருப்ப மதம் என்பது சொல்லி வைத்த மார்க்கமெல்லாம் எந்தனுக்கு பொருந்துமோ அம்மா..?
தாத்தா பிரிமுள்ள பாட்டி உங்கள் கோவில்கள் இடியாமல் நான் பார்த்து கொள்கிறேன் உன் பாதையில் வைத்த சடங்குகளை என் மகன் இடறாமல் நீர்பாரும் நாளை உங்கள். கோவில்களை அவன் இடித்தால் நான் பொறுப்பல்ல.
யுகப் புயல் நடேசய்யர்
"இலங்கை வாழ் பெருந்தோட்டத் தமிழரின் கடந்த நூற்றியெழுபது வருட கால வரலாற்றில் யுகப்புயல் ஒன்றை ஏற்படுத்திய மாமனிதர் கோதண்ட ராம நடேசய்யர் ஆவார்.”
இவ்வாறு தேசபக்தன் கோ. நடேசய்யர் என்ற நூலின் முன்னுரையில் நூலாசிரியர் சாரல் நாடன் குறிப்பிட்டுள்ளர். இந்த நூலுக்கு அரசின் தேசிய சாகித்திய விருதும் கிடைத்தது.
நவம்பர் 7ம் திகதி என்றவுடன் இவர் நினைவு எனக்கு வருவதுண்டு. நடேசய்யர் மறைந்த தினம் இதுவாகும் (7-11-1947) இவர் மறைந்து 50வருடங்களுக்கு மேலாகிவிட்டன. அவர் எந்த சமூகத்துக்காக பாடுபட்டாரோ. எந்த மக்களுக்கு உழைத்தாரோ. அவர்கள் இவரை மறந்து விட்டனர்.
 

இன்று நாடாளுமன்றத் தில் மலையகத்தவர்கள் அமர்ந்திருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணகர்த்தாவாக
இருந்தவர் நடேசய்யர். இன்று மலையகத்தில்
தொழிற் சங்கங்கள் சுதந்திரமாக செயல்படுகிறது என்றால் அதற்கு முன்னோடியாக மலையகத்தில் முதல் தொழிற்சங்கம் அமைத்தவர் நடேசய்யர்.
இன்று தொழிற்சங்கங்களே இவரை மறந்து விட்டன, “தேசபக்தன் நடேசய்யர்” என்ற நூலாசிரியர் சாரல் நாடன். 'இலங்கை பல்கலைக்கழகம் பேராதெனியாவில் அமைக்கப்பட வேண்டும் என்று தீவிரமாக வாதாடிய வர்களில நடேச யப் யர் குறிப்பிடத்தக்கவர்.
இப்படி பல தகவல்கள் நூலில் இடம் பெற்றுள்ளன. மலையகத்தில் பத்திரிகை, அரசியல், தொழிற்சங்கம், ஆக்க இலக்கியம் ஆகியவற்றில் முதல்வராகவும், பிதா மகனும் இவரே எனக் குறிப்பிட வேண்டும்.
நடேசய்யர் அவர்களின் வாழ்க்கையே ஒரு சகாப்தத்தின் தொடக்கமாகும்.
கட்சிக் குரியவராக இருப்பதற்கு
இணையற்ற ஆற்றல் படைத் தவர். நூற்றுக்கணக்கான செயற்கரிய செயல்களை ஆற்றிய பெரியார். பல சூழ்நிலைகளை சாமார்த்தியமாக வென்றவர். நிகழ்ச்சிகள் இவரை சுற்றி வட்டமிட்டன. நிகரற்ற தலைவராக விளங்கினார். இவர் பல துறைகளிலும் ஈடுபட்டர் என மலையக மக்கள் கவிமணி சி. வி. வேலுப்பிள்ளை ஐம்பதுகளில் தினகரனில் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
'தொழிற் சங்கத் தந்தையெனச் சொல்லலாகும். தூய தமிழ் பத்திரிகை ஆரம்பித்து, எழிலாக முதன்முதலில் நடத்தி வந்தோன். இந்நாட்டு அரச சபை அங்கம் பெற்றான்" என கவிஞர் பி. ஆர். பெரியசாமி ஐம்பதுகளில் தினகரனில் 'என் குருநாதன்
என்ற தலைப்பில் கோ. நடேசய்யர் பற்றி எழுதிய கவிதை.
இரண்டு கவிஞர்கள். தான் தோன்றிக்கவிராயர் என்ற பெயரில் கவிதை எழுதிவந்த பன்முக ஆற்றல் கொணி டவர் கவிஞர் சில் லையு,ர் செல்வராசன். இவர் எழுதிய கவிதையை அவரே வாசிக்கும் பொழுது, அதைக் கேட்க மிகவும் அற்புதமாக இருக்கும். எனது பாடசாலை கால முதல் கவிஞர் அமராகும் வரை அவருடன் எனக்கு தொடர்பு இருந்தது. (கவிஞர் 14-10-1995 அமரரானார்)
அவரது கவிதைகளை இப்பொழுது அவரது துணைவியார் கமலினி செல்வராசன் தொகுத்துள்ளார். "பாரதி கவிதை சமர்” என்ற நூல் வெளிவந்துள்ளது. இதன் அறிமுக விழா அணி மையரில் கொழும் பில் நடைபெற்றது.
“இன்றைக்கு மூன்றரை பதின்மங்களுக்கு (35 ஆண்டுகளுக்கு) முன் பாரதி நினைவு நாளை ஒட்டி தினகரன் ஞாயிறு இதழில் தான் தோன்றி கவிராயரும் "மஹாகவி' யும் மற்றும் சிலரும் எழுதிய கவிதைகள், கட்டுரைகள் மிகவும் பரிமளிப்பாக வெளியாகி இருந்தன. அப்பொழுது தினகரனில் முதன்மை ஆசிரியராக நண்பர் கைலாசபதி பொறுப்பேற்றிருந்தார். அந்த ஞாயிற்றுக் கிழமைக்கு இரண்டு நாளுக்கு முன்பே கைலாசபதியிடமிருந்து ஒரு கடிதம் கல் வயலிலே அப் பொழுது வாழ் நீ து கொண்டிருந்த எனக்கு வந்தது. அதிலே தினகரனிலே தான்தோன்றிக் கவிராயர் ஆகிய சில்லையூர் செல்வராசனின் கவிதை வெளியாகவுள்ளது என்றும் அதற்கு நான் ஒரு பதிற் கவிதை எழுத வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. பாரதி நினைவு நாளை ஒட்டிச் செல்வராசன் எழுதித் தினகரனில் பிரசுரமாகிய “சூட்டி வைத்த நாமங்கள் சொல்லும்தரமோ” என்ற பாட்டுக்குப் பதில் பாட்டொன்றை நான் எழுதினேன். அது அடுத்த ஞாயிற்றுக்கிழமை பிரசுரமாயிற்று.
3 LDĩ
81 U19 பாரதி கவிதை
eamgöng it. Sief, 6 Agosto - omtë

Page 18
முன்னுரையில் சுவையான பல தகவல்களை கவிஞர் முருகையன் எழுதியுள்ளார். அது மாத்திரமல்ல, கமலினி செல்வராசன் சிறப்பான அறிமுக குறிப்பொன்றையும் எழுதியுள்ளார்.
“பாரதி கவிதை சமர்” என்ற நூலை தேசிய கலை இலக்கியப் பேரவை வெளியிட்டுள்ளது. கவிதையை விரும்பும் அனைவரும் படித்துச் சுவைக்க வேண்டி நூல் இது.
கவிஞர் சில்லையூர் மறைந்த சில தினங்களுக்குப் பின்னர், மலையகத்தின் முக்கிய முன்னோடி கவிஞரான குறிஞ்சி தென்னவன், “என்றும் சாஸ்வதமானவன் சில்லையூரன்” என்ற தலைப்பில் கவிதை ஒன்றை 'கொழுந்து' சஞ்சிகையில் பிரசுரிப்பதற்காக அனுப்பி வைத்திருந்தார். ஆனால் என்ன செய்வது, கொழுந்து இதழும் மரணித்து விட்டது.
கவிஞர் குறிஞ்சி தென்னவனும் இன்று நம்மிடையே இல்லை. எனது பைலில் பத்திரமாக பாதுகாத்து வைத்திருந்த கவிதையை உங்கள் பார்வைக்கு தருகிறேன்.
கலைத்துறையில் நீ - ஒரு துருவ நட்சத்திரம் கவிதைச் சாலையில் நீ - ஒரு மைல்கல் கற்கண்டுத் துண்டுகளாம் உன் - கவிதைச் சொற்கண்டு - சுவைத்தவர்கள் - உன் - பொன்மேனியைப் பூக்கொண்டு அலங்கரிக்க உன் - ஆன்மாவின் கண் கண்டு ஆனந்தம் கொள்ளும்
மேடைகளில்
உன் - விகசித்த முகமும் - ஒடைகளின் குளிர் நீர்ப் பிரவாகமாய் - பெருக் கெடுக்கும் - செழுந்தமிழ்க் கவிதைப்பெருக்கும் இனி - கேட்பதற்கு செவிக்கும் சுவைப்பதற்கு மனத்திற்கும் வறுமை தான்!
தவிசிருந்த கலைச் சிம்மாசனம் வெறுமையில் மனம் வெதும்பும்
தோளோடு கைபோட்டு சோதரனாய் அணைத்து பாசத்தின் பண்பில் பேதத்தைக் கடந்த பெரு வெளியாம் - உன் இதயம் பூவினும் மென்மை உன் - நேசத்தை - இன்று நினைத்தாலும் நெஞ்சத்தில் சோகத் தீ
சுடுகிறதே! ஓரெழுத்தில்
கவிதை உரைத்த - வாய்மூடி ஈரெழுத்து - ‘சாவு’ எனும் இயற்கை கவிதையானாயே!
சூரியக் கதிர்களாய் சுடும், உன்கவிதை பேத மனங்களை;
 

ஆயினும் , நிலவின் குளிர் கதிர்களாய் சோலையில் மிதந்து வரும் பூ மணத் தென்றலாய் தேகத்தை மட்டுமல்ல இதயத்தையே தொட்டு குளிர்விக்கும்!
[[6 - பாரதியைப் போல் தலைப் பாகையை தரிக்கவில்லை தமிழ்ப் 'பா'வையே தரித்துக் கொண்டவன்!
சில்லை - இனி - உன் BLLD.T.L.D வீதிகளில் இல்லை எனினும் -
எங்களின் மனவீதிகளில்
உன் பாதம் உலா வரும்.
கவிஞனுக்கு மரணம் இல்லை, என்றான்
கண்ணதாசன்,
இம்மண்ணில்
உன் - உட்ல் மறைந்தாலும் கவிதையும் இதை - ஆளும்
மனங்களும உள்ளவரை உனக்கு - மரணம் இல்லை [É - சிரஞ்சீவி என்றும் சாஸ்வதமானவன் சில்லையூரா
உன் - ஆன்மா சாந்தி பெறட்டும்!
(இன்னும் பூக்கும்.)
BOMBAY SWEET MAHAL
For Delecious Bombay Sweets, Faluda de Sort-Eats Etc.
Orders could be executed
No. 188, Galle Road, Delhivala. Te 7232OO
ஊற்று துளி ஜேனவரி மார்ச்
4۵۶ سمعہ علم موہر

Page 19
இரவு அழகான ஒரு மரபுக்கவிதை. அதில் நிலா, படித்தாலும் மனதைவிட்டு அகலாத புதுக்கவிதை போன்றது. எப்போது, எந்நேரம் நினைத்தாலும் அழகானது, இரசனையானது. நிலா சொல்லும் போதே நா இனிக்கிறதல்லவா.
அந்த இரவில் கௌசல்யாவின் மனதைப்போல் சந்தோசத்தால் நிலா குளத்து நீரில் மிதந் துக் கெர்ணி டிருந்தது. குளத்தங்கரையோர பெரிய கருங்கல்லில் தவளை ஒன்று கத்திக்கொண்டிருந்தது. தன் துணையைத்தேடி.
'மித்ரா கவிதை சொல்லேன்'
"ம்ஹம் கவிதையில் நான் பூச்சியம்’.
‘இல் ல மித்ரா கேள் வரி ஞானமிருந்தால் போதும் புதுக்கவிதை எழுதலாம் ண் னு யாரோ சொல் லக் கேட்டிருக்கேன்.
பிடிச்ச மனதை விட்டு அகலாத கவிதை சொல்லவா’.
* (О ағ т 6р லு சொல லு அவசரப்படுத்தினாள் கெளசல்யா.
தவளை நீரில்-பாய தடுமாறியது நிலா.
மித்ரன் சொல்லி முடிக்கும் போதே கருங் கலி லில் துணையைத் தேடி கத்திக்கொண்டிருந்த தவளை "தொப்பென நீரில் குதித்ததால் நீரில் மிதந்துகொண்டிருந்த நிலா தவளையின் தாவலால், நீர் அலையாட்டத்தால் தடுமாறியது. மித்ரன் சொன்ன கவிதையை அனுபவரீதியாக இரசித்து உணர்ந்தாள் கெளசல்யா.
கலைஞன்.
-உக்குவளை அக்ரம்
ஒன்றை கேட்டு இரசிப்பதை விட கேட்டுக்கொண்டே கண்களினுட்ாக பார்த்து இரசிப்பது எவ்வளவு பெரிய வரம் தெரியுமா? அந்த வரத்தை கெளசல்யா பெற்று மனதில் இனம்புரியத சந்தோசத்தை அடைந்தாள்.
'கலை ஒரு ஆன்மீகம் போன்றது. கலைஞர்கள் இறவா வரம் பெற்ற ஜீவன்கள், இவ்வுலகில் இருக்கும் ஒவ்வொரு கலைஞனும் போற்றப் படக் கூடிய பொக்கிஷங்கள், அவர்களின் ஒவ்வொரு படைப்பும் அனுபவத்தின் சாரல் மித்ரா',
'நீ கலைஞன் என்கிறதாலா
பொக்கிஷம்னு சொல்லுற.
'வார்த்தையில கிண்டல் தொக்கி நிற்குதே மித்ரா.
'நீ கலைஞர்களை உயர்வா சொன்னா அது கேலிக்கூத்தான வார்த்தை தானே.”
'கலையை நுகர தெரியாத மானுடம் அப்படித்தான் பேசும். அந்த மானுடத்தில் நீயும் ஒருத்தன் தானே. உன்னை மட்டும் திருத்திட முடியுமா?
'இதயத்தை அறுத்து விட்டு நூற்களால் கோர்க்கிறாயே கெளசல்யா.
'நீ மட்டும் என் துறையை கேவலமாக பேசியது என்ன நியாயம்.
"கெளசல்யா இங்குள்ள கலைஞர்கள் எல்லோரும் உண்மையான வர்களில்லை, ஒரு சிலரைத் தவிர மற்றயவர்கள் போலியான வர்கள் . இவ் வுல கல் பச்சோந்தியின் குணம் கொண்ட கலைஞர்கள் ஏராளம்.'
நீ இப்படித்தாக்குவது வீண் மித்ரா
 

இல்ல கெளசல்யா நான் கண்ட அனுபவங்கள், என் விழிகள் படம் பிடித்த புகைப்படங்கள் இவைகளை மறைக்க முடியாது, மறக்கவும் இயலாது என்னால்,
இது என் அரசாங்கம், எனது கட்சி ஆட்சியிலிருக்குது, ஏன் அந்த இலக்கிய அமைப்பு என்னை நிராகரித்தது? அந்த ஆட்சிகாலத்தில் அந்தந்த கட்சி சார்பான கலைஞனுக்கு விருது, பட்டம் கொடுத்து கெளரவித்தார்கள். எங்கட ஆட்சில ஏன் அவனுகள கெளரவிக்கனும், எங்கள புறக்கணிக்கனும் இத நான் விடமாட்டன், சம்பந்தப்பட்ட மந்திரியோட இதப்பத்தி நான் கதைக்கனும். இப்படி எத்தன கலைஞர்கள் இந்த மண்ணில், இன்னும் பல உண்மையான திறமைசாலியான பல கலைஞர்கள் அரசியல் சாக்கடையால் விலாசமில்லாமல் ஆக்கப்பட்டு, பல போலி கலைஞர்கள் பணத்தால் பட்டம் பெற்று இங்கு உலாவவில்லையா கெளசல்யா?
எல்லோரும் அப்படியில்ல மித்ரா, ஒரு சில கலைஞர்கள் செய்யும் தவறைக்கொண்டு எல்லோரையும் எடைபோடுவது தவறு.
நான் எல்லோரையும் சொல்லல. அந்த ஒரு சிலரால் மற்ற எல்லாக் கலைஞர்களும் அவமானப் படுவது எவ்வகையில் நியாயம்? அதை அந்த ஒரு சிலர் உணரனும். இன்று அரசாங்கம், தனியார் நிறுவானங்கள்-அமைப்புகள்
கலைஞர்களை கெளரவிக்கின்றனர்,
ஊக் குவிக்கின்றனர். சந்தோசம் , ஆனால் ஒரு கலைஞன் அவனை சுயவிளம்பரப்படுத்தித்தான் அந்த விருதுகளை பெறும் நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளான். நினைக்கும் போது வேதனையாகவும் மறுபுறம் நகைச்சுவையாகவும் இருக்கு கெள சல யா. உணி மையாக ஒரு கலைஞனை கெளரவிக்க விரும்பினால் அரசாங்கமோ, தனியார் அட்ைபுகளே சிறந்த கலைஞனை அவர்களே ஆராய்ந்து தெரிவு செய்யணும். அதுதான் உண்மையான கலைஞனுக்கும், கலைக்கும் கிடைக்கும் மிகப்பெரிய விருது. கேட்டு வாங்குவதில் என்ன பெருமையிருக்குன் எனக்கு
விளங் கள கெளசல் யா. ஆனால் உண்மையான ஒரு கலைஞன் தன்னை சுய விளம் பரப்படுத் தரி விருதுகளை தேடிப்போகமாட்டானி.
விருதுகளும், பட்டங்களும் அவனைத்தேடி வந்தால் ஆனந்தம் அடைவான். அது தான் கெளசல்யா கலையின் ஆன்மீகம்.'
கலையின் நெளிவு சுளிவுகளை அறிந்து வைத்துக்கொண்டா ஒன்றும் தெரியாதவன் போல இவ்வளவுக் காலம் என்னிடம் நடித்தாய். செல்லமாக மித் திரனின் தலைமுடியை இரு கைகளாலும் பிடித் திழுத்து அவனை வதனைக்குள்ளக்கினாள்.
பனி சின்னச் சின்ன துளிகளாக அவர்களை ஈரப் படுத் தி குளிரை உருவாக்கியது. நிலா இவர்கள் இருவரின் சம்பாஷனையை இமை கொட் டாமல் பார்த்துக்கொண்டிருந்தது. எங்கோ ஒரு நாய் உறங்க இடமில்லாமல் தன் வேதனையை சொல்லி ஊளையிட்டது. பக்கத்து குடிசையிலிருந்து "டொக். டொக். பாட்டி வெற்றிலை இடித்துக்கொண்டிருப்பது அந்த இரவில் ஒரு புதிய இசையாய் செவிகளை நனைத்தது.
“கெளசல்யா.
if .. சொல் லுங்க நீங்க சொல்வதைக்கேட்க ஆவலாய் இருக்கிறேன். தெரியாதவைகளை கேட்கும் போது வியப்பாகவும், எமக்கு அனுபவமாகவும் இருக்கும் னி னு நெனைக் கிறேன் சொல்லுங்க.
இன்று பல இடங்களில் கலை விழா நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன அது பெயருக்குத்தான் கலைவிழா. பணக்காரர் விழான்னு பெயர் வைத்தால் நன்றாக இருக்கும் , ஏனெனில் எந்தவொரு
கலைஞனையும் விழா ஏற்பாட்டாளர் வாங்க.
35 ဒွိ ဒွိ
வாங்கன்னு சொல்றதில்ல கண்டாலும் காணத மாதிரி வேறு பக்கம் திரும்பிக்கொள்கின்றனர். ஆனால் ஊற்று துளி 6 ஜனவரி - மார்ச்

Page 20
பணக்காரர் வரும்போது அவருக்கு என்ன மரியாதை மூத்த கலைஞர்களின் உபசரிப்பு, பாசாங்கு வார்த்தைகள் குனிந்து, தலைசொறிந்து, தேவைக்கில்லாத வற்றிற்கெல்லாம் சிரித்து. இப்படியான நிகழ்வுகளை அவதானித்து இருக்கிறாயா..? கெளசல்யா அனுபவித்திருந்தால் உனக்கு இதன் உண்மை எல்லாம் புரிந்திருக்கும்.
கலைஞன் 9 (5 நாக்கு உள்ளவனாக எதறி கும் தலை சாய்த்திடாமால் உண்மைக்கு மாத்திரமே தலைவணங்குபவனாக இருக்கனும் . அரசியலில், செல்வத்தில் சோரம் போகாமல், மற்றவர்களின் வாழ்விற்கு குழி பறிக்காமல், விருதுகளை வியாபாரமாக் காமல் இருக் கணும் அப்பதான் கலையை, கலைஞனை உயர்ந்த உன்னதமான பொக்கிஷங்களாக இந்த மண், நாடு, மக்கள் போற்றுவார்கள்.
சொல்லிவிட்டு பெருமூச்சு விட்டான் மித்திரன்.
'நெஞ்சை நீவி விடவா. குறும்பு செய்தாள் கெளசல்யா.
குளிரில் உன் அங்கங்கள் என் மேனியில் பட்டால் அந்த மின்சாரமே ஹைய்க் கூ கவிதையாகும். குழம்பி புரியாமல் என்னவென்று பே என்று மித்திரனை பார்த்தாள்.
"கெளசல்யா. ஏய் இன்னும் என்ன யோசனை
நீ சொன்னது விளங்கல்ல.
ஹைக்கூ கவிதை ஒரு அட்சயப் பாத்திரம் போன்றது. படிக்கப்படிக்க தினம் புதுக் கருத்துக்களை சொல்லும் ஆழம் நிறைந்த நான்கு அடிகள். அதே போல்தான் காதல் ஸ்பரிஷங்களும்.
இதுக்கு போய் யோசிக்கிறியே மண்டு. அதை விட்டுடு மறந்திடு பிறகு ஒரு
rei Troia GPIBDB:
கெளசல்யா தொணி டையை கனைத்துக்கொண்டு மித்திரனை நோக்கி, நம்ம மூத்த கலைஞர்களை பத்தி உன் கணிப்பீடு என்ன மித்திரன?.
மித்திரன் கெளசல்யாவை ஏற இறங்க பார்த்துவிட்டு நையாட்டியுடன் என்ன நீ என்னை பேட்டி காண்கிறாயா..?
கெளசல்யா அதே நையாண்டியுடன் ஆமாம் அப் படித் தான் நினைத்துக்கொள்ளேன்.
இவர்களின் ஊடலைக் கண்டு நிலா மேகத்தில் சிறிது நேரம் ஒளிந்துக்கொண்டது.
கெள சல் யா, இந்த மூத்த கலைஞர்கள் அதாவது எழுத்தாளர்கள், கவிஞர்கள், நாடகசிரியர்கள், சித்திரக் கலைஞர்களோடு எனக்கு செல்ல கோபமுண்டு. இவர்கள் தன்னோடு தன் கலையும் இறந்து விட ட் டும் என நினைக்கிறார்களோன்னு விளங்கல.
'இன்னும் குழப்பாமா சொல்லு மித்திரா
இன்று பல இடங்களில் மூத்த கலைஞர்கள், தான் கற்றறிந்தவற்றை வளர்ந்து வருகின்ற கலைஞர்களுக்கு சொல்லி கொடுக்கவோ வழிகாட்டவோ இன்றி இளைஞர்களின் ஆர்வத்துக்கு ஆதரவளிக்காமல் முடங்கியிருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த மூத்த கலைஞர்கள் பயரிற் சிப் பட்டறைகள் செய்து ஆலோசனைகளை வழங்கி சீரான ஒரு இலக்கிய வட்டத்தை உருவாக்கலாமே என்ற ஆதங்கம் என்னில் மட்டுமல்ல
பலரிடையில் உள்ளது. பெரும்பான்மை
சமூகத்தினரின் மூத்த கலைஞர்கள் தம்மிடத்திலிருந்து விட்ட கலையை தொடர்வதற்கு சிறந்த ஒரு இலக்கிய அமைப்பொன்றை உருவாக்கி, இலங்கையில் இலக்கியத்துறையில் மற்றய சமூகத்திற்கு முன்னோடியாக திகழ்கிறார்கள் என்றால் அது பொய்யில்ல. மித்திரன் தன் பேச்சை நிறுத்தி
 
 
 
 
 

விட்டு
கெளசல்யா. அணுஅனுவாக உன்னை அறுத்திட்டேன் கவியொன்று சொல்லேன்.
கெளசல்யா சிறிது நேரம் சிந்தித்து விட்டு கீழ்வருமாறு கவிதைச் சொன்னாள்.
காலை வேளை
பூ அழுத்து வண்டுக்காக.
'ஏய் என்ன கவிதை இது பூ. அழுமா..?
'அழும் மித்திரா. என் கவிதையில் பூ அழும்
‘எப்படின்னு சொல்லு. மித்திரனை பார்த்து புன்முறுவலோடு. காலை பனியில் நனைந்திருந்த பூ. பூவிதழ்களில் தேங்கியிருந்த பனித்துளிகள். சொட்டு சொட்டாய் வடிந்து விழுந்தது மண்ணில். அது என் கற்பனைக்கு பூ அழுவதாக கிரகித்து கவி வடித்தேன். தரமான, வித்தியாசமான கற்பனைத்தான்
. கவிஞர்களின் பெரிய சொத்து.
* பிர மாதம் G 356it 3 6b u|T. புகழ்ந்துக்கொண்டே போனான் மித்திரன்.
‘துT க் கமீ 6η Ι (ΠΕ ξ5 G3LJ Tuj தூங்குவோமா..? கண்களை கசக்கியப்படியே கெளசல்யா கேட்டாள்.
மனைவியை அணைத்தப்படியே 'ம்' சரியென தலையாட்டினான் மித்திரன்.
ஆங். மித் திரா. என் கலை விழாவிற்கு அரசியல் சம்பந்தப்பட்டவர்களே, பணக்காரர்களோ இருக்க வேண்டாம். இன் வைட் பணி ணாதிங்க. எல்லாம் கலைஞர்களா பார்த்து அழைங்க அவர்களுக்கு உங்களுக்கு 6J Ť3 tu பாதிப்புகள் ஏற்படாத மாதிரி கெளரவம்
கொடுத்து கண்ணியப்படுத்துவோம். ப்போ எனக்கு அழைப்பிதழ் இல்
இவ்வளவு நேரம்
7இஊற்று துளி 6 ஜனவரி மார்ச்
கெளசல்யா. உன் கணவன் நான் தானே இந்த ஊரிலே பெரிய பணக்காரன்னு ஊரார் சொல்றாங்க.
"கெளசல்யா சிரித்தவாறே முதல் அழைப்பே உங்களுக்குத்தான். ஏன்னா செலவு செய்யப்போறது நீங்கத்தானே. கண்ணைச்சிமிட்டிக்கொண்டே சொன்னாள்.
கலையை நேசிக்கும் அந்த இரு உள்ளங்களும் தன்னறை சென்று போர்வைக்குள் உறங்கிப்போனார்கள். வேடிக் கை பார்க்க ஒரு மனிதத் தலையையும் காணாததால் நிலவும் துங்கிப்போனது.
(u JT6Lib கற்பனை)
வெகுவிரைவில். ப்ரவாக வெளியீடாக உக்குவளை அக்ரமின்
“அம்ரிதாவின் கதைகள்’
வெளிவர உள்ளது. யதார்த்தமான கதைப்பின்னல், சமகால பிரச்சினைகளை உங்கள் மனதில் நிழலாட வைத்து அக்கதைகளில் நீங்களும் ஒரு பாத்திரமாகவே மாறிவிடும் நிகழ்கால நிஜத்தினர்
உணர்மைகள.

Page 21
JUNCTION
HOTEL (5 BAKEOY
SPECIAL CAKES, SQRT-EATS,
foQD TEMS ET MORE ܗܝ
Orders Undertaken
No. 31 1, Katugastotal Road
Kandy
 

இன்றைய கவிஞர்களின் பார்வையில் ஈழத்து முஸ்லீம்களின் வாழ்வியல்.
இலங்கைக்கு 7ஆம் நூற்றாண்டில் அரேபிய நாட்டிலிருந்து ஹாஷிம் கிளையைச் சேர்ந்த ஒரு பகுதியினரை கலீபா அப்துல் மாலிக் ஆட்சி பீடமேறியதும் நாடுகடத்தினார். அவர்கள் யூப்பிரட்டீஸ் ஆற்றைக்கடந்து, தெற்கே சென்று, இந்திய குடாநாட்டின் தென்பகுதியிலுள்ள கொங்கன் பிரதேசத்திலும் இலங்கையிலும் , மலாக் காவிலும் குடியேறினர். இலங்கைக்கு வந்த கூட்டத்தினர் ஈழத்தின் வடகிழக்கு, மேற்கு கரையோரங்களில் எட்டு பிரிவாகப் பிரிந்து குடியேறினர். திருகோணமலை, யாழ்ப்பாணம், மாந்தோட்டம. மன்னார், குதிரைமலை, புத்தளம், கொழும்பு, பார்பரின் (பேருவளை), காலி ஆகிய இடங்களில் குடியேறியுள்ளனர். முஸ்லீம்களின் ஆரம்ப கால வரலாறு இவ்வாறு தொடர்கிறது.
சிங்களம், தமிழ், முஸ்லீம் மூவின மக்களும் தத்தம் மொழியையும் பண்பாட்டையும் பேணி, வாழ்வோடும் வளத்தோடும் அமைதியாக வாழ்ந்து வந்தனர். ஐம் பதுகளின் பிற்பகுதியில, இனரீதியான கலவரங்கள்,
தற்போது யுத்தங்களாக உருவெடுத்து
நாட்டையும் அப்பாவி மக்களையும் சின்னாபின்னமாக்கி பெரும் சேதத்தையும் உயிர் சேதத்தையும், ஏழை மக்களுக்கு அடக்க முடியாத விலை வாசியையும் ஏற்படுத்தியுள்ளது எனலாம்.
இதில் முஸ்லீம் சமூகம், இரண்டு இன அரசியல்வாதிகளினாலும் ஒதுக்கித் தள்ளப்பட்டு, ஒரு மூன்றாவது இனமாக ஏற்றுக்கொள்ளப்படாமலும், இரு இன அரசியல் வாதிகளினாலும் பகடைக் காய்களாக நகர்த்தப்பட்டு வாழ்ந்து வந்த வரலாற்றை எம்மால் அறிய முடிகிறது.
இந்நாட்டின் முஸ்லீம் மக்கள் அரசியல்
ரீதியாகவும, இன ரீதியாகவும, இந்த கொடுமையான யுத்தத்தாலும் நிறைய
*உணர்வுகளை
பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இவ்வாறான
நிகழ்வுகளை இலக்கியங்கள் மூலம் ஆவணமாக்க எம் இலக்கியவாதிகள் தயாராக இருக்கவில்லை, அல்லது முயற் சிக்கவும் இல் லை என்றே தோன்றுகிறது. ஆனால் சகோதர தமிழ் கலைஞர்கள் தமக்கெதிராக இழைக்கப்பட்ட ஒவ்வொரு கொடுமைகளுக்கெதிராகவும் தம் கவிதைகளாக, சிறுகதைகளாக, நாவலாக, நாடகங்களாக, பாடல்களாக தம் பதிவுகளை வருங்கால சந்ததியினருக்கு விட்டுச்சென்றுள்ளனர். ஆனால் முஸ்லீம்களின் நிலையோ பரிதாபப் படக்கூடியதாக சுவடுகளை தொலைத்து, மறந்து வாழ கி கூடிய சமூகமாக மாறிவிட்டிருப்பது கவலைக்குறியதுதான்.
இருப்பினும் அண்மைக் காலமாக எம்
இலக்கிய வாதிகள் அல்லது புதிய இளம் எழுத்தாளர்கள் தம் சமூகத்தின் கண்ணின் சோகங்களை, இரத்தத் துளியின் துயரக் கதைகளை தம் எழுத்துக்களால் கவிதை வடித்துள்ளமை நிறைவைத் தருகின்றன.
20ஆம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியில் இருந்தே குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் நடந்தேறியுள்ள்ன என்றபோதிலும' 1749 ஆண்டில் நல்லூரில் குடியிருந்த முஸ்லிம்களை துரத்தியடித்து விட்டு நல்லூர் கந்தனை அங்கு குடியமர்த்திய தமிழ் வீரமே இதற்கு முன்னோடியாகும். இதன் பின் 1915 இல் கம்பளை சிங்கள முஸ்லீம் இன கலவரமாகும். இதில் முஸ்லீம்களுக்கு அந்நாளைய பெறுமதியில் 55 இலட்சம் பொருள் சேதம் ஏற்பட்டது. இவ் அநியாயங்களுக்காக பின்பு கூடிய சட்டசபையில் தமிழ், சிங்கள பிரதிநிதிகள் குரல் எழுப்பாததோடு, கலகம் நடந்த இடங்களில் வரிவிதிக்கப்படவேண்டும் என்றும, முஸ்லீம்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்கப்பட வேண்டும் என்றும் அரசாங்கம்
ஊற்று துளி 6 ஜனவரி மார்ச்

Page 22
கொண்டு வரவிருந்த சட்டங்களை பொணி. இராமநாதன் மிக கடுமையாக எதிர்த்ததோடு, இவ் இனவெறி நடவடிக்கைகளுக்காக சிறைப்படுத்தப்பட்டிருந்த சிங்கள இன வாதிகளை விடுவிக்க இங்கிலாந்து வரை சென்று வாதிடவும் பின் நிற்கவில்லை.
இந் நிகழ்வுகளை “குருவிக்கூடு”
எனும் தலைப்பில் அன்புடீன் பின்வருமாறு
கவிதையாக்குகின்றார்.
முதன்முதலில் 1749இல் நல்லூர் தொடங்கியது அதன் தொடக்கம் ஒரு மொழி பேசும் இரு இனத்தவர்கள் அவர்கள் இருந்தாலும், ஒரு இனத்தின் மீது மறு இனம் நடத்தியது அந்தச் சதிமானத்தை.
மீண்டும் நடந்தது அந்தச் சதிமானம் 1915 இல் கம்பளை பள்ளிவாசலுக்கு முன்பாக. ஒரு மொழி பேசும் இரு இனங்களல்ல அவர்கள் இரு மொழிபேசும் இரு இனங்கள் ஒருவர் மீதே ஒருவர் நடத்தினர் அந்தச் சதிமானத்தை.
ஒரு நீண்ட வரலாற்றின் சுவட்டை கவிஞர் மிக எளிமையாக சில வரிகளில் இங்கு வடிக்கிறார். அன்றைய காலகட்டத்தில் இனவாதிகளாகச் செயற்பட்ட பொன் இராமநாதன் இலங்கை முஸ்லீம்கள் தென் இந்தியாவிலிருந்து, இந்து மதத்தில் இருந்து இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்ட இழிந்த சாதியைச் சேர்ந்த தமிழர்களின் சந்ததியினர் என்றும், அநகாரிக தர்மபால சிங்களவரை பூமி புத்திரர்கள் என்றும் முஸ்லீம்களை அந்நிய நாட்டு வியாபாரிகள் என்ற கருத்தையும் அன்று முன்வைத்தார்கள். இந் நிகழ்வை கவிஞர் அன்புடீன் அதே கவிதையில் பின்வருமாறு.
பொன் இராமநாதன் அநகாரிக தர்மபால இவர்கள் இருவருமே அங்கீகரிக்கவில்லை அவர்களை.
கீழ்சாதிக்காரர்கள் என்று முதலாமவரும்
வந்தான் வருத்தானுகளென்று இரண்டாமவரும்
வசைபாடினர் அவர்கள் மீது.
(யாத்ரா ஆண்டுமலர்)
இவ்வாறு முடித்து. மீண்டும் அதே கவிதையில். 1987 இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் விளைவையும், காத்தான்குடி ஏறாவூர் படுகொலைகளையும், 1990இல் யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு நாளில் விரட்டப்பட்ட முஸ்லிம்களின் சம்பவத்தையும் தன் கவிதை வரிகளால் வரலாற்று ஆவணமாக மாற்றியுள்ளார் கவிஞர் அன்புடீன் 水 米 米
1990இல் சொந்த மண்ணிலிருந்து விரட்டப்பட்ட நிகழ்வை "விடியாத இரவுகள்” எனும் தலைப்பில் இறக்காமம் பெரோஸ் இவ்வாறு கவிதையாக்கியுள்ளார்.
அன்று மாலையில் தான் துரத்தப்பட்டோம் கட்டிய துணியுடனும் விரும்பாத மனசுகளுடனும்
அகதிகளாக்கப்பட்ட எங்களுக்கு இரவின் இருள் ஆடை கொடுத்தது மரங்கள் உணவு கொடுத்தன நிலவு கூட வழிகாட்டியது
என்று இயற்கையை வர்ணித்துவிட்டு கடைசி வரிகள் இதயத்தை சம்மட்டிகளால் தாக்கி, பல கேள்விகளையும் எதிர்வுகளையும் உண்டாக்குகின்றன. ஆனால். மனிதன்தான் கொஞ்சமாவது மனமிரங்கவில்லை
(ப்ரவாகம் 3ஆவது இதழில்)
இந்நிகழ்வை, புலம்பெயர்ந்து கனடாவில் வாழும் கவிஞரான சக்கரவர்த்தி, தன் இனத்தின் செயல் நியாயமா? அநியாயமா?
 
 
 
 

என்பதை தன் கவி வரிகளில்.
இனச் சுத்தம் இனச் சுத்தம் எனச் சொல்லி சோனகரை எல்லாம் ஒற்றை நாள் இடைவெளியில் நாட்டை விட்டு நாம் விரட்டியடித்தோம்
என்று எழுதிவிட்டு, தம் இனத்தின் நேர்மையற்ற செயலை இவ்வாறு கேள்வி எழுப்புகிறார்
நாமென்ன நாசிகளுக்கா பிறந்தோம்? நம் பூர்விகம் என்ன ஜேர்மனியா..? என்ற கேள் வரி வரிகளோடு அம்மக்களின் துயரத்தை,
தூக்கிச் செல்ல மனச்சுமையும் ஐந்நூறு ரூபாவையும் மட்டுமே அனுமதித்த நாம் ஏன் மறந்தோம்
(அமுது மார்ச் 2000)
பாட்டன், முப்பாட்டன் பரம்பரை சோனகராக இருப்பினும் அவர்களும் தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட முஸ்லீம்கள் என்பதை ஏன் மறந்தீர் என்ற தன் மன ஆதங்கத்தை முன் வைக்கிறார். கவிஞர் சக்கரவர்த்தி.
அகத என்ற கொடுரமான வாழ்க்கைப் பதிவுகளையும், ஆதங்கத்தையும் நாச்சிய தீவு பர்வின் இவ்வாறு கவிதையாக கொட்டுகிறார்.
ኦ எனக்கு அந்நியமாய்ப்
போய்விட்டது சிரட்டை மண்வைத்து சிறு வயதில் நான் 616 p.
என் தந்தையுடலை இதோ இந்த சந்தியில் தான் துப்பாக்கி ரவைகள் ருசி பார்த்தன
குண்டு மாரியில் என் குடும்பம்
அழிந்து போனது அதோ அந்த ஆல மரத்தின் கீழ்தான்
இந்த ஊருக்கு நான் பழையவன் தான் முகவரி மட்டும் முற்றாக மாறி விட்டது அகதி என்று.
(யாத்ரா இதழ் 03)
குற்றமில்லாமல் தண்டிக்கப்பட்ட சமூகமாக இந்த பத்து வருடமும் , வாழ்க் கைக்கு ஒத்துவராத வரண்ட பிரதேசங்களிலும், உண்ண உணவின்றி, உடுக்க மாற்றாடையின்றி ஒலைக் குடிசைகளில் “அகதி’ என்ற புனைப் பெயரோடு வாழும் மக்களின் துயரங்கள் எண்ணிலடங்காதவை. அவைகளில் சில
இவ்வாறு கவிதைகளாக ஊற்றெடுத் திருக்கின்றன.
ust Just 600T g5 605 விட் டு
துரத்தியடிக்கப்பட்ட மக்களை நினைத்து சு. வில்வரத்தினம் தன் கவிதையில் தனக்குத் தானே இவ்வாறு கேட்கிறார். (கவிதையின் ஒருபகுதி)
எப்படி முடிந்தது என்னால் தொழுகை வடுப்பூத்த நெற்றிப் பொட்டில் சுத்தியலால் ஓங்கி அடித்தது போல் அவர்களை பிறந்த மண்ணினின்றும் துரத்தி என்னை நான் காயப்படுத்திக்கொள்ள.
(நெற்றி மண் கவிதைத் தொகுதி)
※ 米 米
இந்தக் கொடிய யுத்தத்தால் வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்தோர் எத்தனை ஆயிரம் பேர். வீடுகள் உடைக்கப்பட்டு, சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு கணவனை, பிள்ளையை, தாய் தந்தையை, சகோதர சகோதரிகளை இழந்து விரக்தியின் விளிம்பில் தத்தளிக்கும் உள்ளங்கள்தான் எத்தனை ஆயிரம் ஆயிரம் ஊற்று துளி 6 ஜனவரி மார்ச்

Page 23
கணவனை இழந்த பெண் ஒருத்தி வெளிநாடு போவதற்காய் புறப்படுகிறாள். அவளுடைய உரையாடலின் பின் தன் மனப்புண் வேதனையை “என்னைத் தீயால் எரித்தவள்.” எனும் மகுடத்தில் அஷ்ரப் சிகாப்தீன் கவிதை ஒன்று, எம் மனங்களில் ஈரம் பதிக்கின்றது.
வெளிநாடு போயேனும் வறுமை துடைப்பதற்கு சிறிசுகளுக்கேனும் சோறும் இடும் கனவுளை கலங்கிக் கிடந்த உன் கண்ணில் வைத்திருந்தாய். என்று தொடங்கி.இடையில்
“ரெண்டு வருஷமாச்சி. கொள்ளி எடுக்கப் போனவர சுட்டுப் போட்டாக மூணு புள்ள எனக்கி ஒரு றாத்தல் பாண் வாங்கித் தின்னக் குடுத்து தங்கச்சிக் கிட்ட பாரங் குடுத்துட்டு வந்தன் வாப்ப.” (மீள்பார்வை பக்கம்39 ஆண்டு மலர்)
தன் கணவன் ஒரு இதயமில்லா மிருகத்தின் துப்பாக்கி ரவைக்கு பலியான குடும்பப் பெண்ணின் துயரத்தின் வரிகளை கவிஞர் வர்ணிக்கும் முறை. வாசிக்கும் ஒவ் வொருவரினதும் விழிகளையும் மனங்களையும் நிச்சயம் கசக்கிப் பிழியும்.
“பிடுங்கப்பட்ட வேர்கள்’ என்ற தலைப்பில் புத்தளம் மரிக்கார் தன் சமூகத்தின் வேதனையை இவ்வாறு கவி வரியாக்குகின்றார்.
பெயர்க்கப்பட்ட என்னை அந்த இரவு நேர மாட்டு லொறி அறியும் என் வேர்கள் பிடுங்கப்பட்ட பிரதேசமே
நாம் செய்த குற்றம் என்ன..?
சிறகால் மறைத்த குற்றமா..?
சோறு போட்ட குற்றமா..? இல்லை ரத்த தானம் கொடுத்து ராத்திரி விழித்த குற்றமா..?
பலஸ்தீனப் பிரச்சினையையும்,
(அல்ஹஸனாத்) இவ்வாறு தன் கவிதையால் கேள்வி எழுப்புகிறார்.
米 米 来
கவிதைத் துறையில் இவ்வாறான சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு பல கவிதைகள் வந் திருப்பினும் , சிறுகதைள்ை ப் பொறுத்த மட்டில் இவ்வாறான சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு கதைகள் வெளிவந்தது குறைவு.
இருப்பினும், காத்தான்குடி பள்ளி வாசல் படுகொலையை தத்ரூபமாக கதையாக்கியவர் சக்கரவர்த்தி. "யுத்தத்தின் இரண்டாவது பாகம்” எனும் தலைப்பில் 'அமுது' சஞ்சிகையிலும் , பின்னர் அல்ஹஸனாத்திலும் மறு பிரசுரமாக பிரசுரிக்கப்பட்டது.
இதன பின் யாழ்ப்பாணத்தை விட்டு துரத்தப்பட்ட மக்களின் உணர்வுக்ளை அடிப்படையாக் கொண்டு உக்குவளை அக்ரமின் “நட்பு" எனும் கதை “மீள்பார்வை' ஒக்டோபர் இதழில் வெளியாகி இருப்பதை அவதானிக்க முடிகின்றது.
இலங்கை மண்ணில் பல மூத்த முஸ்லீம் கவிஞர்கள், சிறுகதையாளர்கள் தமிழ் மக்களின் கொடுமைகளையும் தம் எழுத்துக்களில் இலக்கியமாக பதிக்கும்கால, எமது அவலங்களையும் புறக்கணிக்காமல் வரலாற்றில் பதிவது காலத்தின் தேவையாகும் என்பதை உணர்வார்களா?
(இக்கட்டுரை பூரணமான ஆய்வல்ல. எமக்கு கிடைத்த சில ஆதாரங்களைக் கொண்டு வரையப்பட்டதாகும்)
'நிலாப்பித்தன்”
 

புதிய பூபாளங்கள்
சஞ்சிகை பெயர் : புதிய தொனி
ஆசிரியர் ; வாழையூர் வை. எல். எம்
றிஸ்வி (மன்பஈ) வெளியீடு இளங்கலை இலக்கியப்
பேரவை விலை : 2O/ தொடர்புகளுக்கு : ஆசிரியர்
புதிய தொனி
இளங்கலை இலக்கியப்
பேரவை, வீ. சி. வீதி,
வாழைச்சேனை கட்டுரை, சின்னக்கதைகள், கவிதைகள் மற்றும் பல தரபட்ட சுவையான விடயங்களுடன் முதலாவது வெளிவந்துள்ளது.
சஞ்சிகை பெயர் : ஞானம் (இதழ் 8) ஆசிரியர் : தி. ஞானசேகரன் விலை : 15/- தொடர்புகளுக்கு : தி.ஞானசேகரன்
19/7 பேராதனை வீதி, கண்டி. மலையகத்திலிருந்து வெளிவரும் காத்திரமான கலை இலக்கிய சஞ்சிகை. நேர்காணல், சிறுகதை, கவிதைகள், கட்டுரைகள் என பலதரப்பட்ட வாசகர்களை கவரும் இலக்கிய மாதாந்த இதழ்.
சஞ்சிகை பெயர் : மூன்றாவது மனிதன்
ஆசிரியர் :எம். பெளசர்
விலை ; 60/-
தொடர்புகளுக்கு : ஆசிரியர்
37/14, வொக்சோல் லேன் கொழும்பு 2
யாவரையும் கவரும் வித்தியாசமான அட்டைப் படத்துடனும் கட்டுரை, கவிதை, சிறுகதை, நேர்காணல் என ஒவ்வொன்றும் வாசகனின் தேடலுக்கும் சிந்தனைக்கும் விருந்தளிக் கும் . ஆழ் மனதின் கருத்தோவியங்களாக, மனதை கவரும் காத்திரமான சஞ்சிகை. ஒவ்வொரு வாசகரும் கட்டாயம் படிக்க வேண்டிய காலாண்டிதழ்.
இதழ்
நூல் பெயர் மீண்டும் வசிப்பதற்காக
(கவிதைத் தொகுதி) ஆசிரியர் மேமன் கவி வெளியீடு மல்லிகை பந்தல் விலை : 100 مستدل தொடர்புகளுக்கு மல்லிகை பந்தல்
2011/1, ரீ கதிரேசன் வீதி, கொழும்பு 13
யுகராகங்கள், ஹிரோஷிமாவின் ஹீரோக்கள், இயந்திர சூரியன், நாளைய நோக்கிய இன்றில் வரிசையில் ஐந்தாவதாக மலர்ந்த ஆசிரியரின் கவிதைத் தொகுதி பல படிமங்களில் தன் ஆழ்மன உணர்வுகளையும் சமுதாயக் கோணல்களையும் சித்தரிக்கும் சிறந்த தொகுதி.
நூல் பெயர் : uJT5i (BIT6)]6ë) ஆசிரியர் ! முல்லை அமுதன் வெளியீடு : ரிஷபம் பதிப்பகம்.
31/45, இராணி அண்ணா நகர் பி.டி.இராஜன் சாலை சென்னை 600078 விலை :50/- (இந்திய விலை)
சமகால ஈழத்து இலக்கிய வெளியில் நம்பிக்கைக்குரிய படைப்பாளிகளில் ஒருவர். வாசிப்பு, எழுத்து, சிந்தனை முயற்சிகள்
என்கிற இந்த வட்டத்தில் நின்று இன்னும்
வீச்சான படைப்புக்கள் பலவற்றை அவர்
தரவேண்டுமென்கிற என் விருப்பத்தை இங்கு
முன்வைக்கிறேன்.
-தேவகாந்தன் முன்னுரையில்.
நூல் பெயர் காணமல் போனவர்கள்
(கவிதைத் தொகுதி) ஆசிரியர் அஷ்ரப் சிஹாப்தீன் விலை : 100/- தொடர்புகளுக்கு : ஆசிரியர்
37. தங்கானந்த வீதி, மாபோளை, வத்தளை.
சின்னஞ்சிறிய எங்கள் வீடு போர்க்களமானது.

Page 24
ஆழ்ந்த அர்த்தம் கொண்ட இலங்கைத் தேசப் பின்னணியைச் சுட்டிக்காட்டும் சொல்லாடலில்
துவங்கி, யுத்த வன்முறையின் கலவரத்
தீக் காயங்களில் சாகக் கிடக் கும் பாதுகாப்பற்ற வாழ்க்கையை அஷ்ரபின் கவிதைகள் பதிவு செய்கின்றன.
ஹெச்.ஜி.ரசூல் -இன் விமர்சனத்திலிருந்து
(புதிய பூபாளத்தில் உங்களது நூல்களும் சஞ்சிகைகளும் இடம்பெற வேண்டுமாயின் நூல்களின் இரண்டு பிரதிகளை ப்ரவாகம் விலாசத்திற்கு அனுப்பவும்.
பழைய சி. டி. களை என்ன செய்வது..? வீடியோ, ஆடியோ நாடா என்றால் புதிதாக பதிவு செய்யும்போது பழையது அழிந்து போய் புதிதாகிவிடும். ஆனால் சி. டி. யில் அப்படி நாமாக எதுவும் செய்ய முடியாதே.!
பழைய சி. டி. களை புதிதாக்கும் ரீ-சைக்கிளிங் முறை இப்போது வந்துவிட்டது.
பழைய சி. டி. களின் லேபிள், வர்ணப்புச்சு, அலுமினிய
U Tuf 65 ...... பிறகு பதிவு செய்யப்பட்டிருக்கும் படம் அல்லது பாடல் படிப்படியாக நீக்கப் படுகிறது. மீதமாக இருக்கும் பாலிகார்பனேட் தட்டில் மீண்டும் வீடியோ, ஆடியோ பதிவு செய்யப்பட்டு, அலுமினிய
பாயில், லேபில் ஒட்டப்பட்டு
புதிய சி. டி. யாக வெளிவருகிறது. |
வுைறக்கூப் பூக்கள். வீட்டுக்குக் கூரை வெட்டப்படும் மர உச்சியில் குருவிக் கூடு!
米 米 米
புது வெள்ளம் அடித்துச் செல்கிறது. பழைய குப்பை !
※ 米 米
முதலிரவு
பேச வார்த்தையின்றி ஊமைகள்!
தூக்கம் வரவில்லை தலையணையில் விருந்தாளி கிடக்கிறார்!
米 冰 米
கையில் சம்பளம் தடுக்கி விழுந்தேன் மனைவியின் புதுச் சேலையில்!
米 米 米 பலத்த காற்று சிதறுகிறது. வெற்றுச் ‘சிலுபேக்'
水 米 米
தொலைந்த இடத்தில் தேடாதே. கிழக்கில் சூரியன்!
மடவளை அன்சார் எம்.வழியாம்
இறந்த பின்னேன் வெந்நீர் குளியல் தேனீர் கோப்பையில் - ஈ
米 米 米
பாய்ந்து ஓடி வந்த போதும் தப்பிக்க முடியவில்லை கரையில் மோதியது அலை
米 米 米
அவன் கிறுக்கனில்லை கிறுக்கனாக்கப்பட்டவன் அவளால்
ப்ரவினா - நாச்சியாத்தீவு
 

6et Cyasity Tadies, gents S.
G/i/dren Garuntent
MODULAW
O5.
K
e CO2(SCCS2C37
s() 唱
刁 愿族 Q = 杠 几
■ - =]
·

Page 25
கிளிஞ்சல்கள்
ப்ரவாகத்தின் ஒவ்வொரு தலைப்புத்
துளிகளும் உணர்வு பூர்வமாக அமைந்திருப்பதை வாசிக்கும் போதே உணர முடிகின்றது. ‘விமர்ஷகனின் சூடான பக்கத்தின் வாசகங்கள் நியாயமானதும் சுட்டிக்காட்டப்பட வேண்டியதுமாகும்.
ப்ரவாகம் எம் சமூக சமுத்திரத்தில் எழுச்சி அலைகளை ஏற்படுத்த வேண்டும். அது வரலாற்றில் விலாசம் காணவேண்டும்.
பீ. எம். எம். பெறோஸ்
இறக்காமம்
வளர்ந்து வரும் எழுத்தாளர்களுக்கான ஒரு சராசரிக் களமாகவே இப்போதைக்கு ப்ரவாகம் எனக்குத் தென்படுகிறது. காலப்போக்கில் புதிய பரிமாணம் ஒன்றை அது எடுக்கலாம். ப்ரவாகத்தின் நீண்ட ஆயுளுக்குப் பிரார்த்திக்கின்றேன்.
அஷரப் சிஹாப்தீன்
வளர்ந்து வரும் இளம் எழுத் தாளர்களின் கைவண்ணத்தில் மிளிர்ந்துள்ள 'ப்ரவாகம் அள்ளி வந்த அனைத்து அம்சங்களுமே பிரமாதம். வரும் இதழ்கள் மேலும் சிறப்பாக மிளிர எனது வாழ்த்துக்கள்.
ஏ.சி.எம்.முஸம்மில் குளியாப்பிடிய
ஓ! பிரவாகித்தோட காலடி வைத்த ப்ரவாகமே! எம் போன்ற இளநெஞ்சங்களின் கரம்கொண்டெழுதிய கலையாக்கங்களினை பிரசவித்து பல்லாயிரம் இதழின்று நீடுழி வாழ் என் அபிமானப் ப்ரவாகமே!
கலால்பிடிய இர்ஷாத்
பரிரவாக பம் வடிவமைப் பரில் சிறப்புற்றிருக்கின்றது. ஆனால், மன்னிக்க முடியாதளவு எழுத்துப்பிழைகள் இலக்கியம் என எதை நினைத்து மாழுகிறீர்களோ விளங்கவில்லை. ‘மனோரமா - இயர்புக் 2000, ‘அரும்பு போன்ற அறிவியல் வெளியீடுகளின் தகவல்கள் பிரவாகத்திற்கு உகந்ததா?
தலையங்கங்கள் (ஆசிரியர்) தலையிடிதான். தேசப்பற்று முதல் யாருக்கு இருக்கவேண்டும்? எவ்விதமிருக்கவேண்டும்? தேசம் என்ன செய்ய வேண்டும்? தேசத்துக்கு நாம் என்ன செய்ய வேண்டும்? புரியவில்லை. அதிகபிரசங்கித் தனத்தை சற்று ஆற்றுதல் சிறப்பு. அங்கீகாரம் தேடி அநியாயமாக அவதிப்படுதல் உசிதமல்ல. எல்லோரும் வாழ பிரார்த்திப்போம்.
கவிஞர் ஏ. இக்பால்
தர்கா நகர்
இன்று பிரவாகம் ஒன்றை வாங்கினேன். தாங்கள் ஒரு புதுமையான வெளியீட்டை உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள்.
நவீன சித்திரம், தரம் உயர்ந்த கட்டுரைகளிர், அதில் அட்டைப்படம் மிகவும் விசேஷம் சிந்தனைக்கு ஆகாரம். உங்களை பாராட்டுகின்றேன்.
வை. எல். எம். நசீம்
கட்டுகளில்தொட்ட
ப்ரவாகம் நணி பர்களுக்கு
வாழ்த்துக்களும் நன்றிகளும். இதழ்களை இன்னும் விரிவும் ஆழமும் நோக்கி பயணிக்க வையுங்கள்.
46
கருணாகரன் கிளிநொச்சி.
 
 

தமிழ் இலக்கியத் துறையில் சிறப்பாகத் தமிழ் வளர்க்கும் ஏனைய பிரதேசங்களுக்கு எவ் வகையிலும் உக்குவளைப் பிரதேசம் பின்தங்கிய தாயில்லை என்பதற்குப் ப்ரவாக இதழ்கள் சான்று பகர்கின்றன.
எஸ்.எம்.கமால்தீன்
ஒரு அறிவார்ந்த, தூர இலக்குள்ள இளைய தலைமுறையினரினதும், கலைக்கே வாழ் வைத் தர முனைபவர்களினதும் , அதற்காக உழைப்பவர்களினதும் , மொத்தமாக பரந்து விரிந்த பல இலக் குகளுக்காக தோல் வியைத்
தோற்கடிக்க, தோள்களால் அல்ல.
அன்பாலும், நியாயத்தாலும், மனவுறுதியாலும் சமாதானத் தேடலையும் சத்தியத் தேவையையும் நிஜமாய் நிரப்பியவர்களது துTயப் மையானதொரு முயற்சியரின் காத்திரமான ஒரு படைப்பாகவே இது தெரிகிறது.
பொதுவாக சஞ்சிகைகள் தோன்றிய வேகத்திலேயே சமூகங்களையும் மனித மனங்களையும் விட்டுத் தொலைந்து போவது இயல்பு. விரல் விட்டு எண்ணக்கூடிய சஞ்சிகைகளே இன்றுவரை பல தசாப்தங்கள் தாண்டியும் வாழ்வதை நாம் காண்கிறோம். இந்த வரிசையில், சு.க.இ.பேரவையினால் வெளியிடப்படுகின்ற இதுவும், இதைப்போன்ற ப்ரவாக எழுச்சிகளும் , இனிவரும் உண்மையான உள்ளங்களையும் இணைத்து, சத்தியத்தைச் சுமந்த இளைய - மூத்த தலைமுறைகளுடன் கைகோர்த்துக் கொண்டு, கலை வாழும் உலகின். அதன் கடைசிச் சொட்டும் உயிர்வாழுகின்ற நேரம் வரைக்கும். தேசங்கள் தாண்டி மானுட மனங்களை நனைத்துப்போக வேண்டும் என்பதே என் ஒரேயொரு உண்மையான &xb60ᎠéᏠ . "
ரிஹானா முஸ்தபா புத்தளம்.
இலண்டனில் ஈழத்தமிழ் எழுத்தாளர்களின் நூல் கண்காட்சி வெகுவிரைவில்
ஈழத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிக்கும் நோக்குடன் ஈழத் தமிழ் எழுத்தாளர்களின் நூற்கண்காட்சி ஒன்றை இலண்டனில் நடாத்துவதற்கு ஏற்பாடாகி வருகின்றது.
ஈழத்து எழுத்தாளர்கள் எந்நாட்டில் வாழ்ந்தாலும் அவர்கள் தங்கள் ஆக்கங்களின் ஐந்து பிரதிகளை எமக்கு அனுப்பி உதவினால் அவற்றைக் கண்காட்சியில்
வைத்து அறிமுகம் செய்யப்படும்.
நூல் கண்காட்சி நடைபெறும் இடம்,
காலம் பின்னர் அறிவிக்கப்படும். இந் நூற்
கண்காட்சியை வெற்றிகரமாக நடத்துவதற்குச் சகல தமிழ் எழுத்தாளர்களும் தங்கள் பூரண ஆதரவையும் ஒத்துழைப்பையும் அளிக்குமாறு பணிவுடன் வேண்டப்படுகின்றனர்.
ஆக்கங்களை அனுப்ப வேண்டிய
முகவரி Mr. R.Mahendran (Mulai Amudan) Exhibition Organisers Eelam Tamil Book Writers Exhibition Committee 34 Redriffe Road Plaistow London El 3 OJX
(இக்கண்காட்சியில் தம் புத்தகங்களும் இடம் பெற விரும்பும் எழுத்தாளர்கள். தமது நுால் களை ப்ரவாகம் முகவரிக்கு அனுப்பினால், இலண்டனுக்கு SeaMailஇல் எம்மால் அனுப்பி வைக்கப்படும். )
ஆசிரியர்
ஊற்றுதளி 6 ஜனவரி மார்

Page 26
ΟθΘφψ0)
On WOrks
No. 63A, Hi Street, De Waal
Le E 365 676, OZ1 -265466, OZ3-4OG21 C
LXX Z73S)224 E-mail technoGPUsa.net Ve: Se VeCOCO
 
 
 
 

انتخاباSشے
Rice Products
Saéééeva a4 2azaéléty 3&ee
Warakamura Ríce Míl
Pahalavela, Ukuvella, MATALE
Tel: 066-44559, 44623, 44822

Page 27
NAGALI l
10, COLOMEO
THI ()
PRINTEL) BY DA AFIR CREATIONS, 22, E5, GA
 
 

LLE ROAD. DEHIWELW, TEL: O177 313 || 32