கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கண்டி இலக்கியச் செய்தி மடல் 1997.03.01

Page 1
ஆசிரியர்:- இரா. அ. இராமன் - துணை
மாத இதழ் 01.03.
ஒரு தங்களது மூன்றாவது இலக்கியச் செ கெளரவிக்கப்பட்ட நாற்பத்தொன்பது பேரில் த நான் தங்களுக்கு தெரிவிப்பதாவது, தலைவர் 6 தெரிவு செய்யவில்லை. எமது நிருவாகக் முடிவு செய்யப்பட்டவர்களுக்கே நாம் ரத்தினத்
ஆகவே விருது வழங்கப்பட்டவர்களில் கேட்டுக்கொள்கின்றேன்.
உங்களது கூற்று விருதுபெற்ற சகலன பல காரியங்கள் நடைபெறும் போது அதை
நிறையப் பேர்கள் உண்டு என்பதும் நாம் அ எனது தாயாராகிய கண்டி ஊர் சர் அரும்பணியாற்றியுள்ளார். எனது சகோதரன் S. சாம்பசிவராசா நாடகத்துறையிலும், இல எனக்க வேண்டியவர்களுக்க விருது வழங்க நான் விரும்பியிருந்தால் இவர்களுக்கே
இதிலிருந்து நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் வேண்டியவர்களுக்கு இவை அனைத்தையும் விட தங்களது அடுத்த செய்தி மிகவும் கொடுரமானதாகும். "மை பிரதேச வெறி மட்டுமல்ல, இன, மத, மொழி வெறிகள் கூட துளியளவும் எ பார்த்தால் புரிந்து கொள்ளீர்கள். நீங்கள் பெயர் குறித்தவர் மலையகத்தில் பலமுறை மலையகம் ஒன்றும் ஆலை இல்லா ஊர் அல்ல என்பதையும் நீங்கள் அறிந்து கொள்
இது எங்களது முதல் முயற்சி இதனை ஆரம்பத்திலேயே அறுத்தெறிய 2.தட்டளவு ஆதரவை அள்ளி வழங்கினர். அவர்களது அறிவுரைகளை எல்லாம் ே அமைந்திருக்கும்.
கல்விமான்களை நடுவராகக் கொண்ட குழுவமைத்து செயற்படும்படி நீங்கள் விருது வழங்கும் வைபவத்திலும் மலை நாட்டைச் சேர்ந்த நாடக எழுத்தாளன், கலை கூறும் இந்த நடுவர் கழுவுக்க மலைநாட்டுக் கலைஞர்களைப் பற்றி என்ன தெரியும். ே வெளியிடச் செய்யுங்கள்.
அப்போது அவர்களால் ஒதுக்கப்பட்டவர்கள் கல்விமான்களால் தேர்ந்தெடுக்கட் நிரூபிக்கின்றேன். எமது தெரிவுக்குழுவில் நீங்கள் கூறியது போல கல்விமான்கள், அதி நாடக எழுத்தாளர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், உள்நாட்டு, வெளிநாட்டு சினிமா வேறு எவரும் இருக்க முடியாது என்பதே எமது நிலைப்பாடாகும்.
ஒரே நாளில் எம்மிடையே வாழும் சகல கலைஞர்களையும் ஒரே மேடையில் வழங்கி கடை நடாத்தும் வணிகத் தொழிலுக்கொப்பானதுமாகும்.
விழாவன்று நாம் வெளியிட்ட விழா மலரிலும் எனது கருத்தைக் குறிப்பிட் குறிப்பிட்ட ஒரு சிலரே கெளரவிக்கப்படவுள்ளார்கள். பல்வேறு துறைகளிலும் பணியா மிகவும் மனம் வருந்துகின்றேன். இக்குறையினைப் போக்கும் முகமாக இனிவரும் ஒ பேதமின்றி அனைவருக்கும் வழங்கி தேசிய ஒற்றுமையையும், இனங்களுக்கிடையே ச எனது இம்முயற்சிக்க உங்களது ஆதரவையும் ஒத்துழைப்பையும் முழுமையாக எதி நன
-கலாகுரு- ராஜ தலைவர், மலையக, க3
ཡརྗོད་
(- . . ーエー
புகழ் பூத்த ஒரு விளையாட்டு வீரரின் பாராட்டுக்கள்
நான் வீடு வந்ததும் கண்டி இலக்கியச் செய்தி மடல் மூன்று இதழ்களும் எனது
அறிந்து கொள்ளும் ஒரு சாதனமாக திகழ்கின்றது. ஒரு இதழில் என்னைப் பற்றி படத்தோடு கவிதையும் உள்ளது. மற்றும் சமூகத்துறைகளில் ஈடுபட்டுள்ள நல்ல
முத்தையா முரளிதரன் லக்கிலேண்ட் பிஸ்கட் - நத்தராம்பொத்த குண்டசாலை
இது ஒரு மக்கள் கலை இல
 
 
 
 
 
 
 
 

ஆசிரியர். இக்பால் அலி
1997 அன்பளிப்பு ரூபா 10.00
து கலைஞனின் உள்ளக் குமுறல்கள் ய்தி மடலில் மலையக கலை கலாசார சங்கத்தால் 22. 12, 96ல் விருது வழங்கி குதியற்றவர்களுக்கும் விருது வழங்கியுள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். இதனையிட்டு என்ற முறையில் என் சொந்த எண்ணத்தின்படி நான் யாருக்கும் விருது வழங்குவதற்கு தழுவினரால் பலமுறை ஆராயப்பட்டு விருது வழங்க மிகவும் தகுதியானவர் என்று தீபம் - 96 விருதுகளை வழங்கினோம். யார் தகுதியற்றவர் என்பதை பெயர் குறிப்பிட்டு உங்கள் பத்திரிகையில் விளக்கமளிக்குமாறு
ரையும் பாதித்துள்ளது. அதைக் களைய வேண்டியது உங்களது பொறுப்பாகும். நல்ல தட்டிக் கொடுப்பதைவிட எட்டி உதைக்கும் கழுவினரே சிறப்பாக நம் தமிழினத்தில் றிந்த உண்மையே.
திரா மலையக நாடகத்துறைக்கும், இலங்கைத் தமிழ்ச் சினிமாத்துறைக்கும் பங்கைத் தமிழ்ச் சினிமாத்துறையிலும், ஆங்கில, பிரஞ்சு, திரைப்படங்களிலும் நடித்தவர்.
நான் விருதுகளை அள்ளி வழங்கியிருக்க வேண்டும். விருது வழங்கினேன் என்பது எவ்வளவு தவறானதும் பொய்யானதுமான கருத்தாகும் லயகத்தைச் சார்ந்த சிலரிடம் பிரதேச வெறி உண்டு" என தாங்கள் குறிப்பிட்டுள்ளதாகும். ம்மிடம் இல்லை என்பதை நாம் விருது வழங்கியவர்களின் பெயர்ப்பட்டியலை நீங்கள் கெளரவிக்கப்பட்டவர். கெளரவிக்கப்பட்டவர்களையே மீண்டும் மீண்டும் கெளரவிக்க ள வேண்டும். பலர் முயற்சித்தனர். சிலர் எம்மிடம் வந்து இவருக்கு விருது வழங்குங்கள் என்று கட்டிருந்தால் கழுதையை அங்காடிக்குச் கமந்தவர்கள் " கதையாக எமது விழா
கூறியுள்ளீர்கள். அக்கல்விமான்களை நடுவராகக் கொண்டு செயல்பட்ட (நீங்கள்) எந்த ஞன், தமிழ் சினிமா தயாரிப்பாளன் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளனரா? நீங்கள் வேண்டுமானால் அவர்கள் தேர்ந்தெடுத்தவர்கள் ஆற்றியுள்ள பணிகளை சான்றுகளுடன்
பட்டவர்களை விட விருது பெற மிகவும் சிறந்தவர்கள் என்பதை நான் சான்றுகளுடன் பர்கள். ஆசிரியர்கள், கவிஞர்கள், சிறுகதை எழுத்தாளர்கள், நூல் வெளியீட்டாளர்கள், தொடர்பாளர்கள் நிறையப் பேர்கள் உண்டு. இவர்களை விட தகுதியான கல்விமான்கள்
வைத்து விருது வழங்கி கெளரவிப்பது என்பது முடியாத காரணமானதும் விருது
டுள்ளேன். " சிறியோனாகிய என்னால் எடுக்கப்பட்ட முதல் முயற்சியின் பயனாக இன்று ற்றியுள்ள பலரையும் இன்று இம்மேடையில் கெளரவிக்க முடியாமல் போனதையிட்டு வ்வொரு ஆண்டிலும் இந்த இரத்தினதீபம் விருது ஜாதி, இன, மத, மொழி, லை, இலக்கியத் தொடர்பையும் ஏற்படுத்த வேண்டுமென்பது எனது பேரவாவாகும். ர்பார்க்கின்றேன்.
负
ா ஜென்கின்ஸ்
லை கலாசார பேரவை
ஒரு நல்ல இதயத்தின் பாராட்டு கண்டி இலக்கிய செய்தி மடல் மூன்று இதழ்களும் பாராட்டத்தக்க அளவில்
மூனறு ழிகளு
அமைந்துள்ளது. அச்சுப்பதிவு, எழுத்து, பக்கங்களின் வடிவமைப்பு, சின்னச்சின்ன செய்திகள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் அறிமுகம், இளம் எழுத்தாளர்களின்
|ஒரு பத்திரிகை தொடர்ந்து வருவது மனங்கொளத்தக்கதாகும். இவ்விதழ் தொடர்ந்து
வெளிவர வாழ்த்துகிறேன்.
திரு. இரத்தினசபாபதி மோகன் ஜே. பி.
"நாகலிங்கம்ஸ்’
101. கொழும்பு வீதி, கண்டி
- - - - - .لطمس

Page 2
கண்டி இலக்கியச் செய்தி மடல்
கண்டி இலக்கியச்செய்தி மடல் நூறு மலர்கள் மலரட்டும்
நாறும் கீழ்மைகள் தகரட்டும் தொடர்புகளுக்கு ஆசிரியர் 18/13, பூரணவத்தை கணடி
0-03-1997
ஆசிரியர் உரை கட்டாயத் தேவைக்கான
ஒரு வேண்டுகோள்
கண்டி மாநகரில் இப்போது அடிக்கடி கலை இலக்கிய நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. இம்மாநகரில் பல இலக்கிய அமைப்புகள் செயல்பட்டு வருவதையும்
அறிவீர்கள் இலக்கியவாதிகளுக்கென்று ஒரு மண்டபம் இல்லை. பல ஆயிரக்கணக்கான ரூபாய்களை செலுத்தி மண்டபம் பெறவும் முடியாது. ஆகவே, எமது தமிழ் கல்வி அமைச்சர் மாண்புமிகு வீ. புத்திரசிகாமணி கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ எஸ். இராஜரட்ணம் மற்றும் கண்டியைச் சேர்ந்த மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோர்களுக்கு மக்கள் கலை இலக்கிய ஒன்றியமும், கண்டி இலக்கியச் செய்தி மடலும் ஒரு வேண்டுகோளை உங்கள் முன்விடுக்கின்றது. கண்டி இலக்கியவாதிகளுக்கென்று ஒரு சிறிய மண்டபத்தை இலக்கிய நிகழ்வுகளுக்கென்று ஏற்படுத்தித் தருமாறு கேட்பதோடு இம்மண்டபம் உங்கள் அனைவரினதும் பெயர்களைப் பதிவு செய்வதோடல்லாமல் என்றும் ஒளிவீசிக் கொண்டே இருக்கும் இவ்வேண்டுகோளை நிறைவேற்ற நீங்கள் "மனம் வைத்தால் உங்களால் முடியும். கட்டாயம் எங்களுக்கு
ஒரு மண்டபம்
கிடைக்கும்.
இவ்வேண்டுகோள் உங்கள் சிந்தனைக்கு
நன்றி
என்றென்றும்
அன்புடன்
உங்கள்
இரா. அ. இராமன்
፴® கடந்த மாதம் 26
பேரவையின் ஏற்பாட்டில் மணி தமது இலக்கிய, சமூகப் நா. சோமகாந்தனுக்கு பாராட
மத்திய மாகாண தலைமைதாங்கினார். கவிஞ எம். எச். எம். ஹலீம்தீன் ச மாண்புமிகு அை எஸ். இராஜரட்ணம் அவர்க மணிவிழா கண் லக்கிலேன்ட் பிஸ்கட் முத்ை இரத்தினசபாபதி அவர்கள் திருமதி லட்சுமி முத்தைய
- கம்புவளிதி ஜெபு வரவேற்றார். பேராசிரியர் அட ஆகியோர் பாராட்டுரை வழ நன்றி உரை ஆற்றினார். மனதை விட்டு அகலாது.
கைலாசபதி ஆய் சிட்டிமிஷன் மண்டபத்தில் அரங்கேறியது. முதலாவது கவிஞரும், தமிழ்த்துறை வி மெய்யியல்த்துறை விரிவுரைய விரிவுரையாளர் கலாநிதி துை ' குருதிமலை , கள்வா " ல
பே திரு. ஆர். மகேஸ்வரன் தன திரு. எஸ். விஸ்வநாதராஜ பல்கலைக்கழக பேராசிரியர்கள்
திரு. வ. மகேஸ்வரன் பத்திரிகையாளரும்,
பெரும் பாராட்டைப் பெற்ற இறுதியாக துணை விரிவு நித்தியானந்தன் நடந்த நிக
செயலாளர் g
பெ. மு:
பெ. முத்துலிங்கத் மலையக கலை இலக்கிய
க. ப. சிவம் தலைமையில் முன்னால் பொதுச்செயலாளர்
பேராசிரியர் அம்பலவாணர் அந்தனி ஜீவா ஆகியோரும் செல்வி ஜோதி லட்சுமி பி. வழங்கினார்.
67
 
 
 
 
 
 
 
 
 
 
 

01.03. 1997
di ani
மணிவிழாக்கண்ட நல்ல மனிதருக்கு நல்லதோர் பாராட்டு விழா -ம் நாள் கண்டி சிட்டி மிஷன் மண்டபத்தில் மலையக கலை இலக்கியப் விழா கண்டவரும், மனிதநேயமிக்கவரும், அனைவராலும் மதிக்கப்படுபவரும், பணிகளுக்காக பல பட்டங்களும், விருதுகளும் பெற்றவருமான ட்டு விழா நடைபெற்றது. தமிழ்க்கல்வி அமைச்சின் இணைப்புச் செயலாளர் திரு. டி. வி. மாரிமுத்து நர் சு. முரளிதரன் கவிவாழ்த்து வழங்க, தமிழ் ஒளி, கல்ஹின்னை விமடல் வாசித்து அளித்தார். மச்சர் வீ. புத்திரசிகாமணி அவர்களும் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் 5ளும் பிரதம விருந்தினர்களாக கலந்து கொண்டனர். ட நா. சோமகாந்தனுக்கு சமூகத்தொண்டரும், சமாதான நீதவானுமான தயா பொன்னாடை போர்த்தி கெளரவித்தார். சிறிலங்கா சிகாமணி நாகலிங்கம் நினைவுச் சின்னத்தை வழங்கினார். திருமதி பத்மா சோமகாந்தனுக்கு
மாலை சூடி கெளரவித்தார். ராஜ் அவர்களுக்கு சமூகத்தொண்டர் திரு. ஏ. அரியரத்தினம் மாலை சூடி" ம்பலவாணர் சிவராஜா, திருமதி லலிதா நடராஜா, டாக்டர் தி. ஞானசேகரன் ங்கினார்கள். திரு. நா. சோமகாந்தன் பதில் உரை கூற திரு. க. ப. சிவம் ஒரு நல்லவருக்கு, வல்லவருக்கு நடந்த் இப்பாராட்டு விழா என்றும்
கைலாசபதி நினைவுதின நிகழ்வுகள்
ப்வமைப்பின் ஏற்பாட்டில் கைலாசபதி நினைவு தின நிகழ்வுகள் கண்டி 02-02-1997 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வுகள் மூன்று அரங்கமாக அரங்கத்தில் பேராசிரியர் அம்பலவாணர் சிவராஜா தலைமையில் முற்போக்கு ரிவுரையாளருமான எம். ஏ. நுஃமான் கைலாசபதி நினைவு பேருரையாற்றினார். ாளர் திருமதி மல்லிகா இராஜரத்தினம் தலைமையில் முதுநிலை தமிழ்த்துறை ரை மனோகரன் இலங்கையின் பிரபல நாவலாசிரியர் டாக்டர். தி. ஞானசேகரனின் த்து நாவல்களை ஆய்வு செய்தார். தமிழ்த்துறை விரிவுரையாளர் யத்துச் சிறைகள்” நாவலை ஆய்வு செய்தார். மூன்றாவது அரங்கத்தில் ராதனைப் பல்கலைக்கழக நூலகத்தின் துணை நூலகருமான லைமையில் நாடக சினிமா நடிகரும், பண்டைய இலக்கிய ஆய்வாளருமான ா பண்டையத்தமிழர் நாடக அரங்கு என்ற தலைப்பில் உரையாற்றினார். ர், விரிவுரையாளர்கள், பேச்சாளர்கள், மத்தியிலும், பார்வையாளர்கள் மத்தியிலும் ார். அனைவரினதும் பார்வையில் நல்லதோர் சிந்தனையாளராக திகழ்ந்தார். ரையாளரும் கைலாசபதி ஆய்வமைப்பின் இணைச் செயலாளருமான ஆர். ழ்வுகளை மீள்பார்வை செய்தார். கைலாசபதி ஆய்வமைப்பின் இணைச் இரா. அ. இராமன் நிகழ்வுகளை வழிநடத்தினார்.
ந்துலிங்கத்தின் எழுதாத வரலாறு அறிமுக விழா தின் எழுதாத வரலாறு நூல் அறிமுகவிழா கண்டி சிட்டிமிஷன் மண்டபத்தில் பேரவையின் ஏற்பாட்டில் அண்மையில் நடைபெற்றது. தமிழ்மணி நடைபெற்ற இவ்விழாவில் இலங்கை திராவிட முன்னேற்றக்கழகத்தின் நாவலர் ஏ. இளஞ்செழியன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். சிவராசா சிறியாத கல்லூரியின் விரிவுரையாளர், கவிஞர் சு. முரளிதரன், உரையாற்றினார்கள். நூலாசிரியர் பெ. முத்துலிங்கம் பதில் உரையாற்றினார். ஏ. (சிறப்பு) வரவேற்புரை நிகழ்த்த, செல்வி யோகேஸ்வரி நன்றியுரை
ஒரு இலக்கியவாதிக்கு சமாதான நீதவான் நியமனம் ழத்தாளரும், கவிஞரும், பத்திரிகையாளரும், கண்டி கலைமகள் வித்தியாலய திபரும், சமூகத் தொண்டருமான திரு. முத்துசம்பந்தர் இலங்கை அரசால் மாதான நீதவான் நியமனம் வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளார். சமூகத்தோடு ணைந்து இருப்பவரும், மனிதநேயம் கொண்டவருமான இவருக்கு இந்த யமனம் மிகப் பொருத்தமானதாகும். எங்களின் அன்பான பாராட்டுக்கள் வருக்கு.

Page 3
C
கண்டி இலக்கியச் செய்தி மடல்
இலக்கியத்தோடு கலந்துவிட்ட "பூரணவத்தை" கண்டி சிட்டிமிஷன் மண்டபம் எப்படி கண்டி இலக்கியத்தோடு இரண்டறக் கலந்துவிட்டதோ, நான் வாழும் பூரணவத்தை பகுதியும் இலக்கியத்தோடு இணைந்து கொண்டது. இப்பூரணவத்தை பகுதி மலை சூழ்ந்த ஒரு ஊராகும். 1893-ம் ஆண்டுகளில் தேயிலைத்தோட்டமாக இருந்துள்ளது. இத்தோட்டம் பூரணம் என்ற ஒரு தமிழ் பெண்ணுக்குச் சொந்தமானது. இப்பகுதியில் ஆங்காங்கே தேயிலைச் செடிகள் காணப்படுகின்றன. தோட்டத்துரையின் பங்களா, கண்டாக்கையா பங்களா இன்றும் இருக்கின்ற்து. எங்கள் பகுதியில் உள்ள ஒரு பாலத்தில் "பூரண எஸ்டேட் 1893 என்று பொறிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் வாழும் வயது முதிர்ந்த ஒருவரிடம் உரையாடிய போது நிறைய தகவல்களைத் தந்தார். லயங்கள் இருந்த இடங்களை கூறினார். காலகிரமத்தில் தேயிலைச்செடிகள் அழிந்து, ஒரு நகர் பகுதியாக மாறி இன்று தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் மிக ஐக்கியமாக வாழ்ந்துக் கொண்டிருக்கின்றார்கள். புதிய, புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு மிக அழகான இடமாக திகழ்கின்றது. இந்த அழகான இடத்தில்தான் பத்திரிகையாளனாக நானும், ஓவியரும், புகைப்படக் கலைஞருமான வி. எம். எஸ். குணமும் குடும்பத்தோடு வாழ்ந்துக் கொண்டிருக்கின்றோம்.
வாழ்த்துகின்றோம் பேராதனைப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவியான செல்வி அம்பிசை வேல்முருகு முதல் பட்டதாரி மாணவியாக சித்தியெய்தி பி. ஏ. (சிறப்பு) பட்டத்தினை பெற்றுக்கொண்டார். இவர் எழுத்துத் துறையிலும், பேச்சுத்துறையிலும் தம்மை வளர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் சகலத்துறைகளிலும் பிரகாசிக்க செய்தி மடல் வாழ்த்துகின்றது.
வாசகர்களுக்கு ஓர் நற்செய்தி மத்திய மாகாண இந்து மாமன்ற நூலகத்தில் ஏறத்தாழ 1900க்கு மேலான நூல்கள் உள்ளன. ஆய்வுக்கான தேடலில் ஈடுபட்டிருப்போர் இந்நூல் நிலையத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்நூலகத்தின் நூலகராக திரு நல்லையா உள்ளார்.
மல்லிகைப்பந்தலின் முகவரி மாற்றம் மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவாவின் மல்லிகைப்பந்தல் புதிய இடத்தில் அமைந்துள்ளது. தொடர்பு கொள்ள விரும்புவோர்
டொமினிக் ஜீவா மல்லிகைப்பந்தல் 201-1/1, g கதிரேசன் வீதி, கொழும்பு - 13.
கண்டியில் செயல்பட்ட, செயல்படுகின்ற பதிப்பகங்கள்
பதிப்பகம் பதிப்பாசிரியர் ஆண்டு பீர்-அச்சகம் முகமட் பீர் சாய்பு 1939 பாரத அச்சகம் - 960 கலா நிலையம் எஸ். எம். ஹனிபா 1960. இக்பால் பதிப்பகம் எம். எம். பாலிஹற் 1963 தமிழ்க்கழகம் செல்வம் 1964 செய்தி பதிப்பகம் ரா. மு. நாகலிங்கம் 1964 கவிதா நிலையம் மு. கு. ஈழக்குமார் 1965 கலைவாணி அச்சகம் - 1966 இஸ்லாமிய எழுத்தாளர் இயக்கம் அ. லெ, அப்துல் காதர் லெப்பை 1970 தமிழ்மன்றம் எஸ். எம். ஹனிபா 1970 சிந்தனை வட்டம் பி. எம். புன்னியாமீன் 1979 மக்கள் கலை இலக்கிய ஒன்றியம் இரா. அ. இராமன் 1996
நன்றி, திரு. சாரல் நாடன் தமிழ் சாகித்திய விழா மலர் - 1992
முறைசாரா கல்வி ஒலிபரப்பில் ரூபராணி ஜோசப்பின் நேர்காணல் எழுத்தாளர், பேச்சாளர் ரூபராணி ஜோசப்பின் நேர்காணல் மார்ச் 1ம் திகதி மாலை நான்கு மணிக்கு முறைசாரா கல்வி ஒளிபரப்பில் இடம்பெறவுள்ளது. சந்தித்தவர் தம்பிஐயா தேவதாஸ் அவர்கள்.

3) 01. 03, 1997
வாழ்த்துகின்றோம் இலங்கையின் பிரபல எழுத்தாளர், செங்கை ஆழியான் யாழ்ப்பாண பல்கலைக்கழக பீடாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பதை மிக மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றோம். இவர் நிறைய நாவல்களை எழுதி வெளியிட்டுள்ளார். இவரது படைப்புக்கள் தமது பிரதேச மண்வாசனையோடு படைக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நாடறிந்த ஒரு எழுத்தாளர் செங்கை ஆழியான். இந்த உயர்ந்த பதவி மேலும் சிறக்க வாழ்த்துகின்றோம்.
மலையக தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகள் அறிஞர் முகம்மது சித்திலெப்பை, வித்துவ தீபம் அருள்வாக்கி அப்துல் காதர் என்போரே மலையக தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளாக கொள்ளப்படுகின்றனர். இவர்களுள் இலங்கையின் முதலாவது நாவலான அஸன் பேயின் கதை என்பதை எழுதியவரான சித்திலெப்பை அவர்களது எழுத்துக்கள் தூங்கிக் கிடந்த சமூகத்தைத் தட்டி எழுப்பி அந்நியர் ஆட்சியில் இருந்து விடுபட வேண்டுமென்ற தேசிய உணர்வினையும் ஏற்படுத்தியது. இவர் தமது காலத்தில் சில பத்திரிகைகளையும் வெளியிட்டுள்ளார். மலைநாட்டில் மாத்திரமல்ல மற்றைய இடங்களிலும் பெரும் கவிஞனாக மதிக்கப்பட்ட அப்துல் காதர் அவர்கள் பல பாடல்களை இயற்றி மலையக மக்களிடையே பாடிக்காட்டியவர் ஆவார்.
பேராசிரியர். அ. சிவராசா நல்ல உள்ளங்கள் அனுப்பிய வருட சந்தா
பேராசிரியர் சோ. சந்திரசேகரம் 一 120.00
(கொழும்புப் பல்கலைக்கழகம்)
கலாநிதி ந. வேல்முருகு - 50.00
(பேராதனைப்பல்கலைக்கழகம்) பிரபல விமர்சகர் திரு. கே. எஸ் சிவகுமாரன் - 120.00 திரு. பாலா சங்குப்பிள்ளை 250,00 -۔ (எழுத்தாளர் - அட்டன்)
திருமதி நவம் வெள்ளைசாமி - 20.00
துணை அதிபர் கண்டி பெண்கள் உயர்தர பாடசாலை செல்வி கமலினி நமச்சிவாயம் - 150.00 திரு. ஆர் ராதாகிருஷ்ணா - 120.00
முத்தமிழ் மன்றம் - கொழும்பு
ஒரு மனித நேயமிக்க மனிதருக்கு அகில இலங்கை சமாதான நீதவான் நியமனம்
தொழில் அதிபரும், சமூகத்தொண்டரும், மனிதநேயமிக கவரும் , பொதுப் பணிகளுக் கெலி லாம் இலக் கணமாக திகழ்பவருமான லக்கிலேண்ட் எஸ். முத்தையா அவர்களுக்கு இலங்கை அரசு அகில இலங்கை சமாதான நீதவான் நியமனம் வழங்கி கெளரவித்துள்ளது. இந்நியமனம் ஒரு பொருத்தமானவருக்கு, சமூகத்தின் மீது அக்கறை கொண்டவருக்கு, ஒரு நல்ல மனதுக்கு கிடைத் திருப்பது மனங்கொளத்தக்கதாகும். 14-02-96 அன்று
கண்டி பொலிஸ் நீதி மன்றத்தில் சரியாக 230 மணியளவில் பத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். இலக்கியவாதிகளோடு தமிழ், சிங்கள, முஸ்லிம் அன்பர்கள் அன்னாருக்கு மலர் மாலை சூடி அவரை கெளரவித்த விதம் எனது நெஞ்சை தொட்டன. நல்ல மனங்கொண்டவருக்கு கிடைத்த இக்கெளரவம் கண்டி இலக்கியவாதிகளுக்கு கிடைத்த கெளரவமாகும். வாழ்க! பல்லாண்டு வாழ்க! அவரின் சமூகப்பணிகள் தொடர்க!!!
கலந்து கொண்ட அனைவருக்கும் சமூகத்தொண்டர், சமாதான நீதவான் கனகரத்தினம் தவநாதன் (கருணாநிதி ஸ்டோர்ஸ்) கட்டுக்கலை லியோன் கபே ஹோட்டலில் பகல் உணவு வழங்கி கெளரவித்தார்.
உங்கள் பத்திரிகை வளர்ச்சியடைய எங்கள் வாழ்த்துக்கள் (s. DGhsbfJsl ஸ்டார் லேண்ட் அச்சகம் 13/135 எம். டி. மாகியாவ 7ம் ஒழுங்கை,
محے ------------------- - - -

Page 4
கண்டி இலக்கியச் செய்தி மடல்
கலாநிதி துரை மனோகரன் பார்வையில்
இவர்கள்.
மலையக மண்ணில் ஒரு எழுத்து மலை
யாழ்ப்பாணத்திலே பிறந்து, வளர்ந்து, கல்வி கற்று, மலையக மண்ணில் 30 ஆண்டுகளாக வைத்தியத் தொழில் புரிந்து கொண்டு எழுத்தாளராகவும் விளங்குபவர், தி. ஞானசேகரன். அவரை ஓர் எழுத்தாளராகத் தெரிந்து வைத்திருப்பவர்கள், அவர் ஒரு சிறந்த நடிகர் என்பதை அறியமாட்டார்கள் யாழ்ப்பாணப் பிரதேசத்திலுள்ள கல்லூரி ஒன்றில் படிக்கும்போதே நாடகம் எழுதி அதில் நகைச்சுவை பாத்திரம் ஏற்றுச் சிறப்புற நடத்தியவர், அவர் காலப்போக்கில் சிறந்த சிறுகதை ஆசிரியராகவும், நாவலாசிரியராகவும் மலர்ந்தவர். காலத்தரிசனம் என்ற சிறுகதைத் தொகுதியை வெளியிட்டுள்ள அவர், புதிய சுவடுகள், குருதி மலை, லயத்துச் சிறைகள், கவ்வாத்து என்னும் நாவல்களையும் வெளியிட்டுள்ளார். ஆரம்ப காலத்தில் தமக்கு நன்கு பரிச்சயமான யாழ்ப்பாணப் பிரதேச பின்னணியில் சிறுகதைகளையும் புதிய சுவடுகள் என்ற நாவலையும் எழுதினார். கடந்த முப்பது ஆண்டுகளாக மலையகத்தில் உதவி வைத்தியராக தொழில் பார்த்து வரும் அவர் மலையகத்து மக்கள் பிரச்சனைகளை மையமாகக் கொண்டு எழுதி வருகிறார். மலையகம் இப்போது அவருக்கு நன்கு பரிச்சயமான பூமியாகி விட்டது. அதன் விளைவாகக் குருதி மலை, லயத்துச் சிறைகள், கவ்வாத்து ஆகிய நாவல்கள் அவரிடமிருந்து பிறவியெடுத்தன. இவற்றுள் குருதி மலை என்ற நாவல் எழுபதுகளில் மலையக வரலாற்றின் ஒரு வெட்டுமுகத் தோற்றமாகவும், ஆவணமாகவும் அமைந்துள்ளது. அந்நாவல் இலங்கையில் சிறந்த தமிழ் நாவல்களுள் ஒன்று மட்டுமன்றி, தமிழில் வெளிவந்த சிறந்த நாவல்களில் ஒன்றாகவும் விளங்குகின்றது. ஒரு நாவலாசிரியருக்குரிய பொறுப்புணர்வுடனும், கலாநேர்த்தியுடனும், துணிச்சலுடனும் இந்நாவலை இவர் படைத்துள்ளார். இவ்வகையில் ஈழத்தின் சிறந்த நாவலாசிரியர்களுள் ஒருவராக விளங்குகின்றார். குருதி மலை போன்ற சிறந்த படைப்புகளைத் தமிழ் இலக்கிய உலகம் ஆவலோடு அவரிடமிருந்து எதிர்பார்க்கின்றது.
கவிதைக் காற்று
ஈழத்தின் தமிழ் கவிதை வளம் மிக்கதாக வளர்ச்சியடைந்து வருகிறது. அதே வேளை, பிறமொழிக் கவிதைகளின் அனுபவக் காற்றினையும் அவ்வப்போது அது பெற்று உயர்ந்துள்ளது. இவ்வகையில், பண்ணாமத்துக் கவிராயரின் (ஷய்யத் முகம்மத் ஃபாறுக்) காற்றின் மெளனம் என்ற மொழிபெயர்ப்புக் கவிதை தொகுதி, தமிழுக்கு புதிய வளத்தைச் சேர்க்கும் முயற்சியாக அமைந்துள்ளது. பாலஸ்தீன கவிஞர்களான மஹ்மூத் தர்வேஷ், ஷமி அல்காசிம், ஃபல்ஸி அல் அஸ்மார், சுலபா அல்- ஹொகாவி, ரஷ”த் ஹுசைன், தல்ஃபீக் ஸயாத், ஹுசைன் மர்வான், அன்ரோயின் ஜிபாரா ஆகியோரின் கவிதைகளையும், பாகிஸ்தானைச் சேர்ந்த ஃபைஸ் அஹமத் ஃபைஸ் இஃதிப்கார் ஆரிப், பங்களாதேஷைச் சேர்ந்த ஸஹtதுல்லாஹற் கைஸர், சிலியைச் சேர்ந்த பாப்லோ நெருடா, என்போரின் கவிதைகளையும் பண்ணாமத்துக் கவிராயர் மொழி பெயர்த்து தந்துள்ளார். மொழி பெயர்ப்பு என்பது கடினமான முயற்சி. அதுவும் கவிதை மொழிபெயர்ப்பு என்பது மூல மொழி கவிதையானது உயிரும், அனுபவமும் சிதைவுறாமல் அமைய வேண்டியது. அவ்வகையில், பேராசிரியர் சிவத்தம்பி தமது முன்னுரையில் குறிப்பிட்டமை போன்று, " மொழிபெயர்ப்பாளர் ஒரே வேளையில் தாயாகவும் மருத்துவிச்சியாகவும் இருக்க வேண்டிய தேவையுள்ளது. இந்த சோதனையில் பண்ணாமத்துக் கவிராயர் பிரமாதமான சித்தியை பெறுகிறார். இந்தத் தொகுதியில் இடம்பெற்றுள்ள அனைத்துக் கவிதைகளும் பாலஸ்தீனிய, பங்களாதேஷிய, பாகிஸ்தானிய, சிலி நாட்டினது விடுதலை உணர்வுகளின் அனுபவங்களை தமிழும் பெற வாய்ப்பளிக்கின்றன. இன்றைய நிலையில் அடக்கு முறைகளுக்கு ஆட்பட்டிருக்கும் எந்த நாட்டினதும், சமூகத்தினதும் உணர்வுகளோடு ஒத்துப்போகத் தக்கவையாகத்தான் இத்தொகுதியிலுள்ள கவிதைகள் தரும் உணர்வுகளும், அனுபவங்களும் உள்ளன. தாமே ஒரு தரமான கவிஞராக விளங்கும் பண்ணாமத்துக் கவிராயர் இத்தொகுதி மூலம் தாம் இந்நாட்டில் சிறந்த கவிஞருள் ஒருவர் என்பதையும் நிலைநாட்டியுள்ளார். அவரது காற்றின் மெளனம் ஒரு இனிய கவிதை காற்று.
(6.
6
6.
Ι Ο
Q
 

0. 03, 1997
மலையக மக்களின் துயரம் நிறைந்த வாழ்வியலை படம்பிடித்துக் காட்டிய நாவல்கள்
62) 65 மக்களுடைய துன்பத் துயரங்களை, சோகத்தை, றுமையை அவர்களது போராட்டங்களை, லயத்து வாழ்க்கையை, டிப்பறிவில்லா அந்த மக்களின் ஏமாற்றங்களை அந்த மக்களோடு வாழ்ந்து ழகி அவர்களிடம் கற்று அவற்றை நாவல் வடிவத்தில் பலர் தந்துள்ளார்கள். ாக்டர் நந்தி - மலைக்கொழுந்து - 1964 பா. பெனடிக்ட் பாலன் - சொந்தக்காரன் - 1968 தா. சிக்கன் ராஜு - தாயகம் - 1969 தளிவத்தை ஜோசப் - காலங்கள் சாவதில்லை - 1974 க. ஆர். டேவிட் - வரலாறு தோற்றுவிட்டது - 1976 ாக்டர் தி. ஞானசேகரன் - குருதி மலை - 1979
வி. வேலுப்பிள்ளை - இனிப்படமாட்டேன் - 1984 லோலியூர். க. சதாசிவம் - மூட்டத்தினுள்ளே - 1988 ாத்தளை சோமு - அந்த உலகத்தில் இந்த மனிதர்கள் - ாக்டர் தி. ஞானசேகரன் - லயத்துச் சிறைகள் - 1994 ாத்தளை சோமு - எல்லைத் தாண்டா அகதிகள் - ாக்டர் தி. ஞானசேகரன் - கவ்வாத்து - 1976
எங்கள் இலக்கியக் குடும்பத் திருமணம்
லங்கையின் பிரபல நாவலாசிரியர் டாக்டர் தி. ஞானசேகரன் தம்பதிகளின் சல்வப் புதல்வி வசந்தராவின் திருமணம் கடந்த 09-02-97 அன்று கொழும்பில் டைபெற்றது. இத்திருமணத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து காண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 18-02-97 அன்று கண்டி சிட்டிமிஷன் ண்டபத்தில் நடைபெற்ற மணமக்கள் வரவேற்பு விழாவில் 400க்கு மேற்பட்ட க்கள் கலந்து சிறப்பித்தார்கள். ஞானசேகரன் தம்பதிகள் மனித நேயமிக்கவர்கள் ன்பதை இவ்விழாக்கள் எடுத்துக் காட்டியது. வாழ்க மணமக்கள்! மேலும் 1ளர்க இவர்களது மனிதநேயம்
மல்லிகை ஜீவா உங்களால் முடியும் தாழர் ஜீவா அவர்களே! அன்று முதல் இன்று வரை மணம் வீசிக் காண்டிருக்கும் மல்லிகை இதழை திரும்பவும் ஈழத்து இலக்கிய வானிலே ளிவீசச் செய்வீர்களா? மல்லிகையின் மணத்தை நுகர ஆயிரமாயிரம் வாசகர்கள் திர்பார்த்துள்ளார்கள் என்பதை உங்கள் கவனத்திற்கு ஈர்க்கின்றோம். உங்களால் bடியும் தோழரே!
வாசிக்க வேண்டிய தரமிக்க மலையக சிறுகதைகள் சில
றுகதை மன்னன் புதுமைப்பித்தனின் - துன்பக்கேணி ருச்செந்தூரானின் - உரிமை எங்கே? ஸ். ஏ. முருகானந்தனின் - காளிமுத்துவின் பிரஜாவுரிமை ன். எஸ். எம். ராமையாவின் - ஒரு கூடைக் கொழுந்து லரன்பனின் - பிள்ளையார் சுழி தளிவத்தை ஜோசப்பின் - கூனல் - பாட்டி சொன்ன கதை - மீன்கள்
தொடரும்.
இக்பால் அலியின் முற்றத்திற்கு வாருங்கள் கவிதைத் தொகுதி நூல் வெளியீட்டு விழா க்கள் இலக்கிய ஒன்றியத்தின் வெளியீடான இக்பால் அலியின் முற்றத்திற்கு ாருங்கள் கவிதைத் தொகுதி வெளியீட்டு விழா மார்ச் மாதம் 30ம் திகதி ண்டி சிட்டிமிஷன் மண்டபத்தில் நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
உங்களின் இலக்கிய வளர்ச்சிக்கு எங்கள் அன்பான வாழ்த்துக்கள் தேவி ஜவல்லர்ஸ்
தரமான தங்க ககைகளுக்கும், வெள்ள் பாத்திரங்களுக்கும் இன்றே
விஜயம் செய்யுங்கள். 38, டி. எஸ். சேனாநாயக்க விதி dᏏᎧᏛilᏭ.

Page 5
கண்டி இலக்கியச் செய்தி மடல்
கவிதை
யுத்த ஆண்டாய்ப் பிறந்திடாதே புத்தாண்டே
வானம் இன்னும் மாற்றம் காணவில்லை
பூமிகூடு - அதில் ஏமாற்றம் கொண்டதில்லை.
மனித மனமோ அடிக்கடி மாறுதிங்கே அதை மாற்றி புதிய யுகம் தோன்றுமோ புத்தாண்டில் இங்கே!
யுத்த மோகம் இங்கே நித்தம் களையாதோ அதைப் பித்தர் வேலையென்று எண்ணி இத்தரை: திருந்தாதோ! வித்திடாதோ - அதற்கு புத்தாண்டு.
பட்டதுயர் போதும், பட்டினி
பசிக்கொடுமை
யாவும்
விட்டொழிந்து: விடிவொன்றுக்கான பிறக்காயோ! புத்தாண்டே
எட்டுத்திசைகளிலும் ஏங்கி அழும்: அகதிகள் படும்துயர் போக்கி, இரவினில் பயமின்றித்: தூங்கி எழும் 85.16) fy 35605, பிறப்பாயோ! புத்தாண்டே
விம்மி விம்மி வடிக்கின்ற கண்ணிர்த் துளிகளும் அம்மி மிதித்து அருந்ததி பார்த்து: மணவறை ஏறவேண்டிய தேன்மொழிகளும் தேக்கநிலை மாறி தேகசுகம் காண பிறக்காயோ!
புத்தாண்டே!
கண்டி இலக்கியச் செய்தி மடல் தொடர்ந்து வெளிவந்து
சிறப்புற எமது நல்லாசிகள் அரிசிமா, பாசிப்பயறு உடனுக்கு உடன் அரைத்து கொடுக்கப்படும்
விதைத்த பயிரை வெட்ட முடியவில்லை சந்தைப் பொருளை விற்க முடியவில்லை ஏன் இந்நிலை, என்பதை மாற்றி விந்தை யுகம்காண பிறப்பாயோ! புத்தாண்டே.
அடையாள அட்டையின்றி, வீதித்தடை ஏதுமின்றி விடையேதும் சொல்லாமல், நடை பயிலும், நல்லாண்டாய்
பிறப்பாயோ!
புத்தாண்டே.
மாவெலி பாயும் இந்த மண்ணில் சாவினி இல்லையென சொந்தம் காண, சொர்க்கமே நமது பூமியென, மேனாட்டார் மோகம் கொள்ள, பிறப்பாயோ! புத்தாண்டே.
துயர் இனி இல்லையென, ஏட்டினில் எழுதிட நாட்டினில் நாசமே இல்லையென, UT 196ofia LIIIIq67L - பாவலர் பிறந்திடவே, பிறந்திடுவாயோ! புத்தாண்டே.
இத்தரையில் இனி யுத்தமே இல்லையென சொல்லிட
பிறப்பாயோ! புத்தாண்டே.
-கிண்ணியா உலாவரும் கலா
அரிசி மா மொத்தமாகவும் சில்லறையாகவும் விநியோகிக்கப்படும். EUáaugl éfið lol snew Ih Gita sai 79/15, கட்டுகஸ்தொட்ட விதி
ᏧᏂᏛiᎬᏪ.
 
 
 
 
 
 
 
 
 
 

01. 03, 1997
AKYA XX
அடையாள அட்டை வாக்காளர்கள் அடையாள அட்டையில் இருந்த முகம் மலர்கள் கசங்கி தனதென்றான் அவன் உதிர்ந்த பின்னர் இல்லை என்றார்கள் அவர்கள் நார் மட்டும் அட்டை 10 வருடம் பழையது ஆயினும் அடுத்த மாலை கட்ட முகம் தனதென்று வாதாடினான் மீண்டும் தேவைப்பட்டது. அவனது முகம் வாவியில் மிதந்த போது -இறையன்பு
அவனுடையதாக இருக்கவில்லை.
-பேராசிரியர் சிவசேகரம்
அடையாளம் காட்டுபவள்
*சமையல் *கை பிடித்தவன்
அறைக்குள்ளேயே 'தலாக்" என்றதும்
வாழ்க்கையைத் மூடிய பர்தாவை விலக்கி
தொலைத்துவிட்ட மதத்தை விசாரித்த
என் அம்மாவா? ஷாபானுவா?
*சமுதாயத்தை *இவளா
செல்லரிக்கும் அடையாளம் அற்றவள்?
வரதட்சணை கிருமிகளுக்கு இல்லை.
பலியான நம் தேசத்தை
முதிர்கன்னியா? அடையாளம் காட்டுபவள்.
* சதி” யால் - வறியவன்.
பலியான -நன்றி : மகளிர் சிற்றிதழிலிருந்து.
ரூப்கன்வரா?
" காவல் நாய்களால் 姆
குதறப்பட்ட பாடுங்கள்
பத்மினியா? " இன்னவைதாம் கவி எழுத
ஏற்ற பொருள் என்று, பிறர்
*விடை தெரியாத சொன்னவற்றை நீர் திருப்பிச்
வறுமைக்கு சொல்லாதீர்! சோலை, கடல்,
தாய் தந்தையால் மின்னல், முகில், தென்றலினை
பதிலாக்கப்பட்ட மறவுங்கள்! மீந்திருக்கும்
அமீனாவா? இன்னல், உழைப்பு - ஏழ்மை உயர்வு
என்பவற்றைப் பாடுங்கள்
மஹாகவி
கவிதை என்பது.
கவிதை என்பது உள்ளத்து உணர்வுகளின் மென்மையான வெளிப்பாடு என்பதோடு அது மிகப் பழமை வாய்ந்த இலக்கிய வடிவமுமாகும். கவிதை என்பது பல கூறுகளினால் ஆகிய கூட்டுப்பொருள், ஓசை, அலங்காரம் சொல்லுக்கு அப்பால் குறிப்பாக நிற்கும் உணர்வு ஆகிய பல அம்சங்கள் அதனுள் அடங்கி உள்ளன. இத்தகைய பல உறுப்புக்கள் அளவாக கலந்து பிரிக்க முடியா வண்ணம் இயைந்து இருப்பதுதான் கவிதை. அண்மைக் காலத்தில் புதுக்கவிதை என்ற வடிவம் பிரபல்யம் அடைந்து வருகின்றது. யாப்பமைதி, ஒசைநயம், சொல்வளம் இவற்றிலே புதுக்கவிதை மரபுவழிக் கவிதையிலிருந்து பெரிதும் வேறுபடுகின்றது. இது படிமம், குறியீடு, பேச் சோசை, பேச்சு வழக்கு, மணி வாசனை என பனவற்றை முக்கியத்துவப்படுத்துகிறது.
பேராசிரியர் அம்பலவாணர் சிவராசா
முற்றத்திற்கு வாருங்கள் கவிதைத்தொகுதி
ஆசியுரையிலிருந்து

Page 6
கண்டி இலக்கியச் செய்தி மடல்
இக்கறைகள்
மஞ்சுளா மாறிமாறி பாயில் புரண்டு படுத்துக்கொண்டிருந்தாள். பக்கத்தில் அம்மாவும் தம்பியும் சுருண்டு கிடந்தார்கள். குப்பி லாம்பின் வெளிச்சம் அந்தக் காம்பிறாளில் இருப்பதைக்கூட ஒழுங்காகக் காட்டவில்லை. வெளியே மூடியிருந்த பனி அந்த லயத்துக்கூரையின் உள்ளும் புகுந்து பொட்டுப் பொட்டாய்ப் பூத்திருந்தது. சொட்டென விழுந்து சில்லிட்டதால் பனிக்குளின் கனம் அதிகமாக இருந்தது. மஞ்சுளாவுக்குத் தூக்கம் வரவில்லை. தூங்கவும் முடியவில்லை, பக்கத்து வீட்டு மாமியின் மேசைக்கடிகாரம் பாயின் பக்கத்தில் இருந்தது. அதைப் பார்ப்பதும் படுப்பதுமாக இருந்தாள். சே! இந்த நேரம் சுருக்கா போகமாட்டேங்குதே!" மனதில் ஒரே தவிப்பு.
மனத்திரையில் படமாக சம்பவக்கோர்வை-ஐந்து நாட்களுக்கு முன் ஒரு அரசாங்கக்கடிதம், பிரித்துப்பார்த்தபோது ஒரே ஆச்சரியம்: ஆனந்தம். ஆசிரியர் போட்டிப் பரீட்சையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அதற்கான நேர்முகத்தேர்வுக்கு உரிய சான்றுகளோடு வரும்படி கிடந்தது. வீட்டில் கிடந்த கடிதங்களோடு பெற்றுக்கொள்ள வேண்டிய ஏனையவற்றையும் ஒடியாடி எடுத்துக்கொண்டாள். சரி சட்டையெல்லாம் மங்களம் அக்காவிடம் வாங்கியாச்சு. கடிதம் கிடைத்த நாள் முதல் மஞ்சுளாவுக்கு நிலைகொள்ளாத ஆனந்தம். அக்கம் பக்கத்து லயத்தின் நண்பிகளுக்கெல்லாம் காட்டிவிட்டாள். தான் ஆசிரியையாகிவிட்டதாகவே நனவும் கனவுமாகிவிட்டது. பாவம்! அவளும் மனிதப்பிறவிதானே ஆசைகள் அவளுக்கு மட்டும் இருக்கக்கூடாதா என்ன?
"இந்த முறை விட்டுக் கொடுப்பதில்லை போராட்டம் தான் மலையக இளைஞர்களுக்கு முன்னுரிமை கொடுக்கச் சொல்லியிருக்கோம் இல்லாட்டி பெரியளவில் சங்கம் ஸ்ரைக் பண்ணும் சாகும் வரை உண்ணாவிரதம் எங்கள் தலைவர் சொல்லிவிட்டார்."
யூனியன் மாநிலப் பிரதிநிதி சத்தம் போட்டு மேசையில் குத்தி பேசினானே! இவனுகள நம்பிதான் எங்கள் மலையக மக்கள் நாசமாப் போறாங்க.
உள்ளக்குமுறலோடு அவள் பாதையில் நடந்தாள். பின்னாலும் அதே போல் பல வாடிய முகங்கள்.
ஐந்தாம் ஆண்டுவரை தோட்டத்துப்பள்ளியில் படிப்பை முடித்துக்கொண்டவள் தொடர்ந்து படிக்க விரும்பினாள். அந்தப் பாடசாலை அதிபருக்கு ஐந்து மைல்களுக்கு அப்பாலிருந்த நகரப்பாடசாலை அதிபர் நன்கு பழக்கமாதலால் அங்கே சேர்த்துவிட்டார். தந்தையை இழந்துவிட்ட மகளை படிக்க வைப்பது தாய்க்கு பெரிய சுமைதான். என்றாலும் மகளின் ஆசையை வீணடிக்காது அம்மாவும் கஷ்டத்துக்கு மத்தியில் படிக்க வைத்தாள்.
இரண்டு மைல் இறங்கி நடந்து மூன்று மைல் பஸ்ஸில் சென்று படித்து மீண்டும் வீடு வந்துசேரும் போது மாலையாகிவிடும். அந்தப் பாதை பஸ்ஸை நம்பி ஏமாந்து பாடசாலை செல்லாமலும் திரும்பிய நாட்கள்
எத்தனையோ! மஞ சுளா வின் முயற்சி வீணாகிவிடவில்லை.
 

0. 03, 1997
திரு. எம். நாமதேவன் கண்டி விவேகானந்த வித்தியாலயத்தில் அதிபராக கடமை புரிகின்றார். அதிபர் தரம் " ஒன்று தகுதி பெற்றவர். முன்பு இயங்கிய மலையகத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் செயலாளராகவும் கடமை ஆற்றியுள்ளார். மலையக சமூகத்தின் முன்னேற்றத்தில் அக்கறையுடையவர். 1996 ஆம் ஆண்டு வெளிவந்த "ராதா" வார இதழில் இவரது முதல் கவிதை பிரசுரமானது. தொடர்ந்து வீரகேசரி, சிந்தாமணி, குன்றின்குரல், கொந்தளிப்பு ஆகியவற்றில் இவரது ஆக்கங்கள் வெளிவந்தது. வீரகேசரி வார மலரிலும், குன்றின் குரல் சஞ்சிகையிலும் இவரது நல்ல சிறுகதைகள் பிரசுரமானது. பழகுவதற்கு இனிமையானவர்.
தொடர்ந்து இவர் நல்ல படைப்புக்களைத் தரவேண்டும்.
-ஆசிரியர்
பச்சையில்லை
தேவன்
சாதாரணதரப்பரீட்சையில் நல்ல பெறுபேற்றை பெற்று வகுப்பில் முதல் மாணவியாகிவிட்டாள். அவள் அதிர்ஷ்டம் சித்தியடைந்த ஆறு மாதங்களுக்குள்ளாகவே ஆசிரியர் போட்டிப்பர்ட்சையும் வந்துவிட்டது. அதிலும் சித்தியடைந்து விட்டவளுக்கு இதோ நாளை நேர்முகப்பரீட்சை, மஞ்சுளாவுக்கு நேரத்தை எப்படியோ போக்கியாகவேண்டும். மனதில் ஒரு ஐயம்! பைலில் எல்லாவற்றையும் ஒருக்கால் திரும்பவும் சரிபார்த்துவிட்டால் என்ன? பெட்டியைத்திறந்து எடுத்து நோட்டம் விட்டாள். எல்லாம் சரியாக இருந்தன. மீண்டும் பெட்டிக்குள் வைக்கும்போது அடுத்த வீட்டுப் பூனை எலியொன்றை துரத்திய சத்தத்தில் அம்மா விழித்துக்கொண்டாள். "மஞ்சு. இன்னும் தூங்கலியாம்மா..? பகலெல்லாம் மலையேறி கொழுந்தெடுத்த அலுப்பில் தான் தூங்கிவிட்டதே தெரியாமல் திடீரென வந்த விழிப்பில் மஞ்சுளா இன்னும் தூங்காமல் இருப்பதைக்கண்டு வாஞ்சையோடு கேட்டாள். காலையில் மகள் போகவேண்டிய கருமத்தில் ஆசையோடு இருப்பதை அம்மா உணர்ந்துகொண்டாள். ஆண்டவனே.
மேசைக்கடிகாரம் கணிரென ஒலித்தது. மணி அதிகாலை நான்கு. மஞ்சுளா எழுந்துவிட்டாள். இப்போது காரியம் தொடங்கினால் தான் காலை ஏழு மணி பஸ்ஸைப்பிடித்து நேரத்துக்குப்போய்ச் சேரலாம். அம்மாவும் எழுந்துவிட்டாள். மகளுக்கு உதவியாக எல்லாம் செய்து கொடுத்தாள். மஞ்சுளா தாயின் காலில் விழுந்து வணங்கி புறப்பட்டாள். பழகிப்போய் விட்ட அந்த மலைப்பாதையில் இறங்கி நடந்தவள் மெயின்ரோடை அடைந்தாள்.
நேரம் கடந்துகொண்டிருந்தது. தூரத்திலே சத்தம். பஸ் மாதிரி ஏதோ. ஆம்! வண்டிதான். வழமைக்கும் மாறாக பஸ்ஸில் கூட்டம். பஸ் நின்றது. ஒருவாறு முண்டியடித்து ஏறிவிட்டாள்.
நேர்முகப்பர்ட்சைக்கு ஒரே கூட்டம், ஆயினும் ஒரு அமைதியற்ற நிலை. மஞ்சுளாவின் முறை வந்தது-அழைக்கப்பட்டாள். உள்ளே சான்றிதழ்கள் பரிசோதிக்கப்பட்டன. சம்பந்தமில்லாத பல கேள்விகள். கடைசியாக - " ஏ லெவல் பாஸ் பண்ணியிருக்கா..? மினிஸ்ட்ரி அதைத்தான் கேட்குது. மஞ்சுளாவுக்கு மின்சாரம் பாய்ந்த உணர்வு. வெளியே அமைதியில்லாத காரணம் இப்போது புரிந்தது.
இந்தக் கேள்விக்கு அவள் பதில் சொல்லவில்லை. பைலை எடுத்துக்கொண்டு வெளியேறினாள். "இந்த முறை விட்டுக் கொடுப்பதில்லை! போராட்டம்தான்! மலையக இளைஞர்களுக்கு முன்னுரிமை கொடுக்கச்சொல்லியிருக்கோம்! இல்லாட்டி பெரிய அளவில் சங்கம் ஸ்டிரைக் பண்ணும் சாகும்வரை உண்ணாவிரதம் எங்கள் தலைவர் சொல்லிவிட்டார்.
யூனியன் மாநிலப்பிரதிநிதி அன்று சத்தம்போட்டு மேசையில் குத்திப்பேசினானே! இவனுகள நம்பித்தான் எங்கள் மலையக மக்கள் நாசமாப் போறாங்க. உள்ளக்குமுறலோடு அவள் பாதையில் நடந்தாள்.
பின்னாலும் அதே போல் பல வாடிய முகங்கள்.

Page 7
கண்டி இலக்கியச் செய்தி மடல்
நாடறிந்த பத்திரிகையாளர்
ஊர் அறிந்த நாடறிந்த ஒரு பத்திரிகையாள திரு. க. ப. சிவம் "மலைமுரசு" சிவம் என்றா6 எல்லோர் மனதிலும் பளிச்சிடும். கண்டி மீக்கனுவ மண்ணில் பிறந்தவர் இவ அம்பிட்டிய ரோமன் கத்தோலிக்கத் தமிழ வித்தியாலயத்தில் தமது ஆரம்பக்கல்வியை கற்று அம்பிட்டிய கல்லூரியில் (அக்கடமி) படித்து கண்டி புனித சில்வஸ்ட்டர் கல்லூரியில் கல்வியை முடித்தார். இலங்கைத் திராவிட முன்னேற்றக் கழகத்தின
கண்டி மாவட்டச் செயலாளராக இருந்து பலி
சீர்திருத்தக் கருத்துக்களைப் பரப்பினார்.
1960 களில் திரு. மு. கு. ஈழக்குமாரை இணைத்துக் கொண்டு முத்தமிழ் முழக்கம்", "மலைமுரசு சஞ்சிகைகளை வெளியிட்டார் இன்று மலையகத்தில் பிரபல எழுத்தாளர்கள் எல்லாம் அன்று மலைமுரசு இதழ மூலம் உருவாகி வந்தவர்கள் தான்.
முதன்முதல் மலைமுரசு" மூலம் சிறுகதை, கவிதை, கட்டுரை போட்டிகளை நடத்தினார். அப்போட்டிகளில் கலந்து கொண்ட பலர் இன்று மலையக இலக்கிய வானில் பிரகாசித்துக் கொண்டுள்ளனர். மலைநாட்டு நல்வாழ்வு வாலிபர் சங்கம், மலைநாட்டு எழுத்தாளர் சங்கம் போன்ற அமைப்புகளின் ஊடாக கலை இலக்கியப் பணியாற்றியுள்ளார். பத்துக்கு மேற்பட்ட நாடகங்களை கண்டியில் மேடையேற்றி உள்ளார். அதில் டாக்டர் நந்தியின் குரங்கு நாடகம் குறிப்பிடத் தக்கது. வாக்காளர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த ஆரம்பிக்கப்பட்ட மக்கள் நல உரிமைச் சங்கத்தின் நிறுவாகச் செயலாளராகவும், சர்வதேச திட்டமிடல் நிறுவனத்தின் மீக்கனுவக் கிளையின் செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார் தாம் வாழும் மீக்கனுவ மக்களின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டு ஒரு சமூக அமைப்பை உருவாக்கி செயலாளராக இருந்து சேவையாற்றியுள்ளார் மத்திய மாகாண இந்து மாமன்றத்தின் ஸ்தாபன உறுப்பினர்களில் இவரும் ஒருவர்.
இவரது கலை . இலக்கியப் பத்திரிகைத்துறை பங்களிப்டை கெளரவிக்கும் முகமாக முன்னாள் இந்து கலாசார அமைச்சர் பி. பி. தேவராஜ் அவர்களால் "தமிழ்மணி பட்டமளிக்கப்பட்டது. மலையகத்தின் முதல் சாகித்திய
விருது வழங்கி கெளரவித்தார்.
மலையக கலை இலக்கியப் பேரவையின் பத்தாண்டு நிறைவு விழாவில் மானன்புமிக அமைச்சர் லக்ஸ்மன் ஜெயகொடி அவர்கள் விருது வழங்கி கெளரவித்தார்.
22-12-96 அன்று மலையக கலை கலாசார சங்கத்தால் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
அண்மையில் இலங்கை அரசால் அகில இலங்கை சமாதான நீதவான் நியமனம் வழங்கி கெளரவிக்கப்பட்டார். மக்களோடு இருக்கின்ற மக்களைப்பற்றி சிந்திக்கின்ற க. ப. சிவத்திற்கு மிகப் பொருத்தமான ஒன்றுதான் சமாதான நீதவான் நியமனம்.
கிட்டத்தட்ட 32 வருடகாலமாக வீரகேசரி கண்டி நிருபராக இன்று வரை கடமையாற்றி வருகின்றார். ஒரு சிறந்த பேச்சாளர், சிங்கள உரைகளை தமிழில் மொழிபெயர்ப்பதிலும் வல்லவர், நண்பர் சிவம் அவர்கள் தொடர்ந்து தமது கலை இலக்கிய சமூக, பத்திரிகைத்துறை சேவைகளை நல்க வேண்டுமென வாழ்த்துகின்றோம்.
 
 

Q7) 01. O3, 1997
இடமிருந்து வலம்:- (முன்வரிசை) திருமதி. ஜி. சிவசுப்பிரமணியம், திருமதி. 01. கிருஷ்ணமூர்த்தி, திரு. டி. ரட்ணராஜா, யு. திருமூர்த்தி, திரு. ஏ. பி. ஹேரத் (அதிபர்), பி. முரளிதரன், ஜனாப் ஐ. எம். ம.ரூப், திரு. ஐ. பி. சதாரூபன்
இடமிருந்து வலம்:- (பின்வரிசை) ஜே. பி. வெஸ்லி, எம். யோகேஸ்வரன், என்.
ரவீந்தன், எம். அருண்பிரகாஷ், எம். எச். எம். சாபீர், ஏ. எம். சஜாயின்
புனித சில்வஸ்டர்ஸ் கல்லூரியின் தமிழ் இலக்கிய மன்றத்தின் பொன்விழாவும் ஒரு இனிய கலைவிழாவும் பாராட்டு விழாவும் கண்டி புனித சில்வஸ்டர்ஸ் கல்லூரியின் கலை விழா 97 கடந்த ஞாயிற்றுக்கிழமை
கல்லூரி அதிபர் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் பிரதம விருந்தினராக
கண்டி மாவட்ட குருவான அருட்திரு பாலா ராஜேந்திரன் கலந்து கொண்டார்கள். சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் அதிபர் திரு. பி. நில்லேகொட, மத்திய மாகாண கல்வி அமைச்சின் (தமிழ் பிரிவு) உதவிச் செயலாளர் தேசோமயானந்தம், மத்திய மாகாண கல்வி அமைச்சின் (முஸ்லிம் பிரிவு) உதவிச் செயலாளர் எஸ். ஏ. ஆர். எம். பாரூக் கல்வி உதவிப் பணிப்பாளர் என். எம். எம். இஷாக் ஆகியோர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் தமிழ் மன்ற மாணவர்களின் கருத்து மிக்க கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தமிழ் மன்றத்தினரால் வருடந்தோறும் வெளியிடப்படும் கலைஞானி மலர் வெளியிடப்பட்டது. இம்மலரை உதவி கல்விப் பணிப்பாளர் என். எம். எம். இஷாக் வெளியிட்டு வைத்தார். முன்னாள் அதிபரின் முப்பத்தைந்து வருட கல்விச் சேவையை கெளரவிக்கும் முகமாக அன்னாருக்கு பொன்னாடைப் போர்த்தி கெளரவித்தார்கள். பெருந்தொகையான பெற்றோர்கள், மாணவர்கள் பொதுமக்கள் கலந்து இள்விழாவை சிறப்பித்தார்கள். இவ்விழாவினை கல்லூரியில் தமிழ் பிரிவின் அதிபர் ஆர். ரட்ணராஜா நெறிப்படுத்தினார்.
எங்களின் கண்ணிர் அஞ்சலி
எங்கள் இலக்கிய குடும்பத்தைச் சேர்ந்த சகோதர எழுத்தாளன், கவிஞன் பத்திரிகையாளன், பேச்சாளன், மனிதநேயமிக்கவன் கு. இராமச்சந்திரன் காலமானார் என்ற செய்தி கேட்டு கலங்கினோம். தான் சாகும் வரை அவனின் பேனா எழுதிக் கொண்டேயிருந்தது. சிறந்த எழுத்தாளன் மாத்திரமல்ல சிறந்த மொழிப்பெயர்ப்பாளனும் கூட. அருமையான பிறமொழிக் கவிதைகளை தமிழ் வடிவத்தில் தந்தவன். கண்டியிலிருந்து வெளிவந்த செய்தி பத்திரிகை இவனின் பேனாவால் சிறப்பு பெற்றது. பிறமொழிக் குட்டிக் கதைகளை எமக்கு தமிழ் மொழியிலே தந்தவன். கடந்த இரண்டாம் திகதி கண்டி இலக்கிய செய்தி மடலைப் பாராட்டி அவனிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. விரைவில் மொழிப்பெயர்ப்புக் கவிதையொன்று அனுப்புவேன் என்று எழுதியிருந்தான் அந்த கவிஞன். ஆனால் அறுபது வயதில் அவன் காலமானான். அவன் எழுதியவை சாகா வரம் பெற்றவை. அவனது குடும்பத்தவர்களுக்கும் ஈழத்து இலக்கிய உலகுக்கும் எங்கள் துக்கத்தை, சோகத்தை தெரியப்படுத்துகின்றோம்.

Page 8
0.
கண்டி இலக்கியச் செய்தி மடல்
நல்ல மனம் வாழ்க தொழில் அதிபர் அல்ஹாஜ் ஏ. றசாக் அவர்கள் நாடறிந்த ஒருவராக திகழ்கின்றார். பொபி பத்திகள் எப்படி வாசனை வீசுகின்றதோ அதைப்போல றசாக் என்ற மனிதனும் சமூகத்தில் மனம் வீசிக்கொண்டுள்ளார். விளையாட்டுத் துறையில் அதிக ஈடுபாடு கொண்ட இவர், அத்துறைக்கு பெரும் சேவையாற்றி வருகின்றார். கண்டியில் உதைப்பந்தாட்ட வளர்ச்சிக்கு ஒரு மைதானம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார். . பல வறியக் குடும்பங்களுக்கு மறைமுகமாக இவர் செய்து வரும் உதவிகள் வெளிச்சத்திற்கு வராதவை. இவரின் உதவியால் பல வறியக் குடும்பங்கள் வாழ்ந்து கொண்டு உள்ளன. தமது தொழிற்சாலையின் மூலம் எத்தனையோ பேர்களுக்கு தொழில் வழங்கி அவர்களின் குடும்பத் துன்பங்களில் பங்கு கொண்டுள்ளார். கலை இலக்கியத் துறைகளில் ஈடுபட்டுள்ளோர்களது பணிகளுக்கு கைகொடுத்து வருகின்றார். இவரைப் போன்றவர்கள் பணத்தை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு வாழ்பவர்கள் அல்ல. இச்சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று சிந்திப்பவர்கள். இந்த மனங்கள் பல்லாண்டு வாழவேண்டும் என வாழ்த்துகின்றோம். ----- -- --ܢ ܢܼ-ܨܚܚ -
கண்டி இலக்கியச் செய்தி மடல் கட்டாயத் தேவைக்கான ஒரு பத்திரிகை தொடர்ந்து வெளிவர எங்களின் பூரண ஆதரவு உண்டு. ஆசிரியர்- கே. பி. சத்தியசீலன்
A/L LOGIC A/L 98 Ilf îfa Jibini 22-08-97 சனி (11-15-1-15) குறியீட்டு அளவைகள் A/L - மீட் ல் வகுப்பு நடைபெறுகின்றது. தனிப்பட்ட குழு வகுப்புகளுக்கு தொர்புக்கொள்க.
... P. - 8,500i is கட்டுகளல்தொட்ட ரோட் கண்டி.
இலக்கியப் பணிகளுக்கு என்றும் எங்கள் ஆதரவு கிட்டும்.
பி. செல்வராஜ் மங்களா ஜுவலர்ஸ் தரமான தங்க நகைகளுக்கு மங்களா நம்பிக்கைக்கு ஓர் இடம் மங்களா 68, யட்டிநுவர வீதி, கண்டி
ܓܠ
محمد
இலக்கியம் என்பது ஒரு சமூகப் பணி. தொடரட்டும் உங்கள் இலக்கியப் பணி ஆசிரியர்:- ஏ. எச். ம.நுப்
சமூகக்கல்வி - அரசியல் விஞ்ஞானம்
E. P. I. – soo
கண்டியிலிருந்து வெளிவரும் இச்செய்தி மடலுக்கு எமது நிறுவனத்தின் நல்வாழ்த்துக்கள் கந்துரட்ட எண்டர்பிரைசஸ் 17. கொட்டுகொடல விதி கண்டி பயணப்பைகள், கைப்பைகள், குடைகள், மற்றும் ஆடைப் பெட்டி போன்றவைகளை இங்கும் பெற்றுக் கொள்ளலாம். அத்தோடு விசேட ஓடர்களும் ஏற்றுக்கொள்ளப்படும்.
6Gzaz1z7a71zz7 frt Uork - Printing ኅ/ Aesigners & Photography Artis
கண்டி பூரணவத்தை 18/13ச் சேர்ந்த இரா. அ. இராமன்
இல. 302, லதா இம்ப்ரஸில்
 
 
 
 
 

B)
01. 03. 1997
நல்ல மனம் வாழ்க கனகரத்தினம் தவநாதன் அவர்கள் கண்டியில் குறிப்பிட்ட சமூகத் தொண்டர் சிலருள் ஒருவர், மூக உணர்வும் , சமய உணர்வும் , இச்சமூகத்திற்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற நல்ல மனங்கொண்டவர். க. தவநாதன் என்றால் எல்லோரும் அறிந்த ஒரு பெயராகும். கண்டியில் சமூக, சமய, கல்வி, கலை கலாசாரத் துறைகளுக்கு உதவி செய்து வரும் இவர் கணி டி கட்டுக் கலை செல் வவிநாயகர் ஆலயத்தின் சமயப் பணிகளுக்கு பின்னால் அவரது சேவை உள்ளது என பது குறிப்பிடத்தக்கது. கலை இலக்கியத் துறைகளில் ஈடுபட்டுள்ளோர்களுக்கு பல்வேறு வழிகளில் உதவி செய்து வருகின்றார். கண்டி கருணாநிதி ஸ்டோர்ஸ் உரிமையாளராகவும், நியூ இமாலயா பிஸ்கட் கம்பனியின் இணை உரிமையாளராகவும் திகழ்கின்றார். இவரது
சமூக சமயப் பணிகளுக்காக கண்டி மாவட்ட சமாதான நீதவான் நியமனம் அன்மையில் கிடைத்தது. பழகுவதற்கு இனிமையானவராகவும், எல்லோருக்கும் நல்ல நண்பராகவும் திகழும் இவர் பணத்தை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு வாழ்பவர் அல்ல. இச்சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என சிந்திப்பவர். இந்த நல்ல மனங்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துகின்றோம்.
உங்கள் இலக்கியப் பயணம் தொடர வாழ்த்துகின்றோம்.
இளங்கோவன் "நடராஜாஸ்” கதிரேஷன் கோயில்
39. காசல் வீதி - கண்டி
a 3
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - N
தரமான தங்க ககைகளுக்கும், சுத்தமான வெள்ள் பாத்திரங்களுக்கும் சிறந்த இடம். தங்க ககைகளும் வடகும் பிடிக்கப்படும். 27, டி. எஸ். சேனாநாயக்க விதி, கண்டி. தொ. பே. இல, 222642
V
இலக்கியப் பயணம் தொடர எங்கள் நிறுவனம் قرونی کسم
வாழ்த்துகின்றது. -
வெரோணிக்கா tேண்டர்பிரைசஸ் 28, யட்டிநுவர விதி - கண்டி
விதவிதமான பாடசாலைப் பிள்ளைகளுக்கான புத்தகப் பைகள், பயணப்
பைகள், குடைகள் மொத்தமாகவுடிசிஷ்லறையாகவும் பெற்றுக் கொள்ளலாம். அத்தோடு விஷேட ஒடர்களும் ஏற்றுக் கொள்ளப்படும்.
இன்றே விஜயம் செய்யுங்கள்.
கண்டி இலக்கியச் செய்தி மடலுக்கு எங்களின் இனிய வாழ்த்துக்கள் கே. வி. இராஜேந்திரன் புகைப்படம், மற்றும் வீடியோ படப்பிடிப்பாளர்கள் புகைப்படம் பிடிப்பதற்கும் - வீடியோ படப்பிடிப்பிலும் திறமை
வாய்ந்தவர் &y೧೩ಿಹi: இல்லம்:- இல, 56, பியூட்டிவிசன்டர் 12, &ł67bdólfu 6J II 56, கொழும்பு வீதி, கண்டி. கண்டி.
புதிய தொ. பே. இல. 071 - 54125
%. S. (e
t & Photographer 3/3, Cemetary Road, Kandy
" séu என்னால் கண்டி டி. எஸ். சேனாநாயக்க வீதி,
அச்சிட்டு வெளியிடப்பட்டது.