கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கமலம் 1996.10

Page 1
D6) if:-4 மலர்வு- (வள்ளுவரான
 

ண்டு) தி.பி துலாம் 2027 கி.பி ஐப்பசி 1996

Page 2
தமிழ்த்தாய் வணக்கம் உலகம் யாவிலும் உரைமொழி ஆக்கியும் திலகமாய்க் குமரிநன் நாட்டிடை நின்றும்பூ
-உலகம் யாவிலும்.
எங்கும் மானிடம் ஏற்புறப் பண்பெனும் அங்கம் ஆகினாய் அன்னையுன் தாள் தலைக்கே
-உலகம் யாவிலும்.
பலமொழி உலகிடைப் பயின்று வளமுறப் பலமுதற் பொருள்படு சொற்கள் நல்கியே நலமுறப் பிறமொழி நின்றாய் இயற்கையின் பலமுறப் பார்முதற் பிறந்த என்தமிழே
-உலகம் யாவிலும். குமரியில் முதலெனப் பிறந்தவன் வாயிடைப் புகுந்தனை முப்பிரி விலக்கணம் கொண்டே உலகிடைப் பலவினம் தோன்றியப் பின்னும் அலகிலாப் புகழுறப் பரந்தனை தமிழே
-உலகம் யாவிலும். முண்டெழு புதுமையிற் பலமொழி பிறந்தும் தோற்றம் அழிவெனப் பலமொழி சிதைய முத்தும் காத்தும் முருகினிற் சிறந்தும் போற்றும் என் தமிழே! புவிதனில் நிலைத்தாய்.
-உலகம் யாவிலும். வள்ளுவன் கம்பன் வான்புகழ் இளங்கோ தெள்ளிடு புலமைத் திருமகள் அவ்வை சங்கச் சான்றோர் சாற்றிடப் பெருகிய மங்காப் புகழே! என்தமிழே பணிந்தேன்
-உலகம் யாவிலும். பாடல்.அழலாடி.
பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைந்தால் சங்காரம் நிசமென்று சங்கே முழங்கு - - சங்கே முழங்கு
தமிழ் எங்கள் உயிருக்கு நேர் தமிழீழம் எங்கள் வாழ்வுக்கு வேர்
LLALLSAKAAeeAeeSeSeSeAJAJASeSAALALALALALAeAeASASASAKAJKSAeHALALALAAAAALASLSASSSJSJSJKKKHAKKALeeKAHHKSJEeLLAASALLLASLASLKLKHALAHJLLASLLALALALLAeLeLALkAeASAEEELELLALALLKLLAALLALJLLALASKSLLLLLLLLEELLEELLLALALKKALSLASLJEJLeALALALLSLEELELAeLeAeieAeKLLLLELeLeLKLiLiLSM

மிலரிதழ்கள்
5606) இதழெண்
ஆசிரியம் 2 வள்ளுவ விஞ்ஞானம் 5 தேடல்-இருளும் ஒளியும் O தேடுங்கள் மெய்யுரையை 14 சுப்பிரமணியபாரதி தமிழர் முகம் 19 காட்டிக்கொண்ட ஆரியமனத்தர் கம்பரசம் 23
தமிழகத்தில் ஒரு தலை 31 மறைவானதமிழ் அழிப்பு ஒளவைப்பாட்டியும் 34 அணுவிஞ்ஞானமும்
அன்புத் தமிழ் இளவல்களே -
உலகற்கே மொழியியலை வழங்க, வரம்பிறந்து
கமலம் உங்களை அழைக்கறது
தமிழ், இயற்சொல், s'fର ୪ [Tର), தசைச்சொலி என நான்கு வகைச் சொற்
வளம் கொழிக்கும் தொல்காப்பியப் பெரு நூல், வேண்டிய இடங்களில் எல்லாம், பார்ப்பனியத்தன் வெட்டு ஒட்டு களுடன் தான் நம் கைகளில் வலம் வருகிறது. அந்த வெட்டு ஒட்டுகளைக் கணடறிந்து செம்மைப்படுத்தல் தமிழியலன் சிறப்பு இன்னும் மேன்மையுறும். அசட்டுத் தமிழறிஞர்களை நம்பிக் கொணடிராமல், சிந்தனை மறம் மிக்க நீங்கள் புறப்பட வேணடும் என்று
என்று இன்று தொல்காப்பியத்தல் இருப்பது தரிபாகும். அப்படியானால், சரியான நால்வகைச் சொற்கள் யாவை?
இப்பணக்கு,
வட சொல், čb 6O 6T UU60) L- Ugi
ஆய்ந்தறியுங்கள் சிறந்த ஆய்வு கெளரவிக்கப்படும்

Page 3
مركع
ஆசிரியம்
என்று மாறும் தமிழகம்?
சேர்மன் நாட்டிலே, இறைன மாநகரிலே, ஆடி 96ல், எழுச்சி மாநாடு கூடுவதற்குச் சற்று முன்பாக, தமிழகம் கலைஞர் கருணாநிதி அவர்களிடம் ஆட்சியை ஒப்படைத்தது. அதேபோல், சுதந்திரப் போராட்ட மாயையால் ഥ56ഞണ് ஏமாற்றி, ஆட்சியில் அமர்ந்து, தென்னகத்து வளங்களைச் சுரண்டிக்கொண்டிருந்த வடவாரிய ஆதிக்கம் தகர்க்கப்பட்டு, தென்னகத்துத் திராவிடரிடம் நடுவணரசு கைமாறியது. இந்த நிகழ்வு கண்டு மகிழ்ந்த தமிழீழத் தமிழர்கள், இந்த மாற்றங்களால் தங்கள் துன்பங்களுக்கு விடிவு கிடைக்கும், என்கிற நப்பாசையில், மாநில, நடுவண் அரசுகளைப் பாராட்டியும், தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தியும், நல்ல பல தீர்மானங்களை மாநாட்டிலே நிறைவேற்றினார்கள் ஆனால், தமிழீழத் தமிழர்களுடைய அந்த நம்பிக்கைகள் கானல் நீரானது தான் மிச்சம்.
ஆடசியமைத்த ஆரம்பங்களில் ஈழத்தமிழர்களின் துயரங்களைத் தமிழகம் பார்த்துக் கொண்டிராது என்ற வார்த் தைகள்- உள்நாட்டு விவகாரங்களில் இந்தியா தலையிடாது என்றாகி இராமதாசு-கீரன் போன்ற ஒரு சில தமிழுணர்வு மிக்க தமிழர்களையும், ஈழத்தமிழர்களுக்காக பொதுக்கூட்டம் போடக்கூடாது என்று தடைச்சட்டம் போடுகிறார்கள். தவிர வெளிவிவகார அமைச்சர் குல்ராஜ் சந்திரிகாவுடன் குசு குசு பேசுகிறார். தமிழ்-தமிழ் என்கிற தமிழகத்து அரசியல்வாதி களுக்கு, தமிழினத்தை விட, தமிழக மாநில மன்றின் ஆட்சிக்கதிரை பெரிதாகிப் போய்விட்டதா?
1940 களில் தமிழுக்காகத் தன்னைத் தரநின்ற கருணாநிதி, 1990களில் தனக்காக-ஆட்சிக் கதிரைக்காக, தமிழினத்தைவிடத் தயாரானது மானக்கேடு.
1993 ல் பேர்லின் மாநகரில் நடந்த பன்னாட்டுத் தமிழுறவு மன்ற மாநாட்டில், நாளை அழியும் பட்டம் பதவிக்காக அலையாமல், இளங்கோவைப்போல் கரிகாலனைப் போல் சாகாவரம் வேண்டுமானால் பழைய கல்லக்குடியாக வா! என்று அறைகூவல் விட்டேன் கருணாநிதிககு. அன்றைய என் பேச்சில் தமிழகத்தார் பலர் சாடப்பட்டதற்காக அந்தப் பேச்சு ஒலியிழை (வீடியோ) நாடாக்களில் வெட்டி இருட்டடிப்புச் செய்யப்பட்டது. அந்தவேண்டுகோள் கருணாநிதியை எட்டியதா? அந்த மாநாட்டின் தலைவர் தமிழுக்காக வாழுகிறேன் என்று உலகமெல்லாம் சொல்லித் திரிகிற, பெரும் கவிக்கோ

ご
வா.மு.சேதுராமன் தான். தமிழகம் எங்கள் தாயகம் என்கிற உணர்வோடு, அங்கே தமிழை விற்கிற போலிகளைக் கண்டு நாங்கள் கொதித்தால், அதிலுள்ள உண்மையை உணர மறுத்து, எங்களை எள்ளிநகையாடுவதா என்று தவறாகச் சிந்திக்கிறார்கள் பல நல்ல தமிழர்களும்.
அண்மையில் ஆடி 96ல், சேர்மனியில் நடைபெற்ற மாநாட்டுக்கு, தமிழகத்து இரா.சனார்த்தனம் அவர்களும் வந்திருந்தார்கள், அழைப்பின் பேரில். அவர் கமலத்தைப் பார்த்தார். பாரதி என்ற சுப்பிரமணியனைக் குற்றவாளியாகக் காட்டியிருப்பதைக் கண்டார். மாறுபாடு காணில் எதிர்த்துரைக்க முனையவோ, உடன்பாடு காணில் என் கருத்தை ஆதரித்து வலிவு தரவோ முனையவில்லை, அதை எண்ணிப்பார்க்கவும் விரும்பாமல் போலும், ஆனால், மாநாட்டுத் தலைவரான என்னைப் பற்றி ஏதாவது கூறவேண்டும் என்பதால் கமலத்தைத் தொட்டார்.
மாநாட்டுத் தலைவர் அந்த நூலை எழுதுவதற்கு இருந்த துணிச்சல், எனக்கு வாசிப்பதற்கு இருக்கவில்லை. அவர் தாக்காமல் விட்டவர்கள் உலகத்தில் யாருமில்லை. ஆனால், எனக்கு ஒரு மகிழ்ச்சி பாரதியாரையும் ஒரு பிடி பிடித்திருந்தார். ஈழம் எரிகிறது என்று ஒருநாடகம் போட்டோம், அதில் ஒரு சிங்களவன் கேட்டான், "உங்கள் பாரதியாரே சிங்களத்தீவு என்று தானே பாடியிருக்கிறார் என்று. அதற்கு காசிஆனந்தனாக நடித்த அவர், ஈழத்தைப் பற்றி தமிழக மக்கள் புரிந்துகொணடது அவ்வளவு தான், என்று இதைச் சொல்லிவிட்டுச் சனார்த்தனம் பாரதியார் தவறுதான் விட்டு விட்டார் என்று. கூறினார். தவறு விட்டவனை ஏனையா தடவுறாய்? தண்டி அல்லது கண்டி. பார்ப்பாரப்பாரதி வேதஇந்துமத-ஆரியத்துள் தமிழினத்தை தள்ளிப் புதைக்க, விடாமல் முயன்ற சதி, தெளிவாக எடுத்துக் காட்டப் பட்டிருக்கிறது. இருந்தும் நழுவல்- வழுவல் பதில் கூறி பாரதியின் பாாப்பரச் சதியை மறைக்க வேண்டிய அவசியம் சனார்த்தனனுக்கு ஏன் வந்தது. கமலம் தாக்காமல்விட்டது யாருமேயில்லை என்ற அவருடைய சொல்லிலிருந்தே, அவருடைய நெஞ்சம் புலப்பட்டது. தொட்டுத் தடவி நக்கித் தின்கிறதுகளை நான் கண்டித்து எழுதினால், தவறு விட்டவரைச் சுட்டிக்காட்டினால் மற்றவருக்கு ஏன் கோபம் வரவேண்டும். அதாவது, நல்லதோ-கெட்டதோ நாங்கள் ஒரு கூட்டம் என்ற உணர்வுதானே.
சனார்த்தனன் என் இனிய நண்பர். ஈழத்தமிழர்களுடன்

Page 4
4A
இணைந்து அவர்களுக்காக நீண்டகாலமாகப் போராடுபவர். அப்படியிருந்தும் கமலத்தில் எழுதியுள்ளதை எண்ணிப் பார்க்க மறுக்கிறார். இதுதான் தமிழகத்தை-படித்த தமிழகத்தைப் பிடித்த சாபக்கேடு. பாரதி என்ன கற்றுக் குட்டியா? பன்மொழிப் பண்டிதன். சிங்களம்-புட்பகம்-சாவகம் வரலாறு தெரிந்தவன். பிரெஞ்சு-ஆபிரிக்கா-அமெரிக்க--ருசியா எல்லாம் தெரிந்தவன், அந்தப் பார்பானுக்கு, பார்ப்பாரச் சதி முடாத ஈழம் தெரியவில்லை, பண்டைப் பழமை பெற்ற யாழ்பாணம் தெரியவில்லை. சிங்களத் தீவு என்று இல்லாத பெயர் தெரிந்தது. இத்தகைய சனார்த்தனமே Աë) மெழுகப் புறப்பட்டால் இனி யாரை நம்புவது? இப்படிப் போனால் தமிழகம் எப்படித் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளப்போகிறது,? எந்தத் தமிழறிஞராவது, பாரதியை நியாயப்படுத்த முடிந்தால், உலகறியப் பொதுமேடை அமைக்கட்டும் நான் தயாராக இருக்கிறேன் விவாதத்திற்கு.
என் இனிய தமிழகத்துத் தம்பிகளே! நீங்கள் விழித்துக் கொண்டுவிட்ட, வீறு கொண்ட புதிய சமுதாயம். மெல்லத் தமிழைச் சாகடிக்கப் பார்க்கும் இத்தகையவர்களிடமிருந்தும், அரசியல் வாதிகளின் சந்தர்ப்பச் சதிகளிலிருந்தும், நாட்டெல்லைகளைக் கடந்து, தமிழையும் தமிழினத்தையும் காக்க, உடனே புறப்படுங்கள்! இருகரம் கூப்புகிறேன்.
தமிழார்வம் மிக்க எண் இனிய தமிழன்பர்களே!
உங்கள் கையில் மணங்கமழும் கமலம், தமிழையும்தமிழனையும் தூய்மைப்படுத்த, அனைத்துத் தமிழர்களும் மறைக்கப்பட்ட தமிழினத்தின் மாணர்பு களை அறிந்து எழுச்சிகொள்ள, பணி செய்வதே இலக்காகக் கொண்டுள்ளது. இந்த நற்பணி சிறக்க தங்கள் நல்லாதரவு வேண்டும். ஆகையால் ஆண்டு அறநிதியாக (சந்தா) 20 டி எம் கொடுத்து உதவுங்கள் கமலத்திற்கு.
Sparkasse Ibbenbüren konto nr:-67514943. BLZ-403 51060
தங்கள் ஆதரவுக்கு நன்றி தமிழால்
தமிழுக்குள் தமிழனைத் தேடும் கமலத்தின் நற் பணிக்கு உரமுட்டுங்கள்--- பணிவன்புடன் -அழலாடி
 
 
 
 
 
 
 
 
 
 
 

S
வள்ளுவ விஞ்ஞானம் தமிழகத்திலே தமிழல்லாத மொழிகளில், ஆங்கிலம் இந்தியில் தமிழன் கல்வி கற்கும் நிலை. தன் தாய்மொழியைப் புறக்கணித்து, அயலான் மொழியில் கல்வி கற்கும் இனம் உலகிலேயே தமிழ் இனமாகத்தான் இருக்கும். வெட்கித் தலைகுணியவேண்டிய மானங்கெட்ட நிலை. வெட்கங்கெட்ட தமிழர்கள்.
இதற்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. இந்திய மாநில சுயாட்சியில், இந்தி ஆங்கில மொழிகளின் மேலாதிக்கம், பல்வேறு மாநில மொழிகளின் வேறுபாடுகள், பிறமாநில வேலை வாய்ப்புக்கள். இப்படி ஏராளம். இது தமிழனுக்கு LDB LD6ð6o, பதினெட்டு மாநிலங்களுக்கும் பொதுவானது தான். ஆனால், தமிழனைத் தவிர மற்ற மாநிலக்காரர்கள், தங்கள் தங்கள் தாய்மொழியில் தான் கல்வி கற்கிறார்கள். ஏன் இப்படித் தமிழன் தன்னிலை கெட்டுப் போனான். காரணம், இரண்டாயிரங்களுக்கு முன்பிருந்தே, இந்திய மண்ணுக்குச் சொந்தக்காரனான தமிழன், திட்டமிட்டுப் பழக்கப்படுத்தப்பட்டுள்ளான், அடிமைத் தனத்தை ஏற்பதற்கும், அடங்கிப் போவதற்கும். அதுவும் ஆரியச் சிறுக்கரின் அடிதடவும் தமிழர்களாலேயே.
சுப்பிரமணியன் என்கிற பார்ப்பாரத் தமிழ்க் கவிஞன், சிந்திக்கத் தெரியாத மரமண்டைத் தமிழர்களிடம் நன்றாக இடம் பிடித்தவன், அந்நாளில் கல்வித் திட்டங்கள் பற்றி ஒரு ஆலோசனை வழங்கினான். தமிழில் போதிய விஞ்ஞானச் (அறிவியல்) சொற்கள் இன்மையால் காசியிலே, பிராமணர்கள் கூடித் தயாரிக்கிற சமக்கிருதக் கலைச் சொற்களை, அப்படியே தமிழிலும் ஏனைய மாநில மொழிகளிலும் பின்பற்ற வேண்டும். தமிழை ஆரியத்துள் தள்ள, தமிழால் தமிழரை ஏமாற்றி வாழ்ந்த சுப்பிரமணியன் தந்த இந்த ஆலோசனையை, பின்பற்றி, முடிச்சுமாறித் தமிழரான-பிறமொழிப் (வடமொழிஆங்கிலம்) பண்டிதர்கள் (தமிழகம் மட்டுமல்ல ஈழத்திலும் கூடத்தான்) தமிழ் அறிவியற் சொல்வளம் இல்லாதது என்று புலம்பிக்கொண்டிருந்தார்கள். இன்றுந்தான். தமிழ் அழிந்தால் என்ன, தங்கள் வயிறு நிறைந்தால் போதும்.
இவர்கள் கூற்றுப்படி பார்த்தால், தமிழில் அறிவியற் சொல் இல்லை என்றால், தமிழுக்கும் அறிவியலுக்கும் தொடர்பே இல்லை, என்பது இவர்களுடைய வாதத்தின் எதிர்ப்புறம். தமிழ் இலக்கியங்களுள் கிடக்கும் அறிவியற் குறிப்புக்களைக் கண்டால், பொய் புளுகுப் புராணங்களை

Page 5
o
மெய் என்கிற ஆரியதாசர்கள், அவை கற்பனை எண்பார்கள். எத்தகைய சதி எத்தகைய மடையர்களாகத் தமிழர்கள் வாழ்ந்தார்கள், வாழுகிறார்கள்.
எனவே தான், உலகின் உயரிய தமிழ்ப் புலமையான குறளுக்குள் காணப்படும் விஞ்ஞானக் குறிப்புகளை வெளிக் கொணர முயல்கின்றேன்.
முதலில் உழவு என்னும் அதிகாரத்தைப் பார்ப்போம். இவ்வதிகாரத்தின் முதற் குறளிலேயே, உழவின் சிறப்பைக் கூறிய வள்ளுவன், மாபெரும் விஞ்ஞான விந்தையை அதனுள் அடக்கியுள்ளான்.
சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால் உழன்றும் உழவே தலை. உழுதலால் வரும் மெய்வருத்தம் நோக்கி, வேறு தொழில் செய்து ஓடித் திரிந்தாலும், முடிவில் உலகம் ஏர்வழியதாயிற்று. ஆகவே, எத்துயர்ப் படினும் உழவே சிறந்ததாகும். இது பார்ப்பாரப் பரிமேலழகன் உரையின் சுருக்கம். உலகம் என்ற சொல்லை இடவாகுபெயராக்கி, உலகில் வாழும் மக்கள் மீது சுமத்தி, சுழல்தல் என்ற சொல்லுக்கு அலைதல் எனப் பொருள தந்து, நேர்ப்பொருள் பாராமல் மிக முயன்று பொருள் கண்டு, மிகச் சிரமப் பட்டிருக்கிறான் அந்தத் தமிழ் கற்றுத் தேறிய பார்ப்பான். இந்தக் குறளுக்கு மிகத் தெளிவாகவே பொருள் இருந்தும், முடிச்சுப் போட்டிருக்கிறான் மொட்டந்தலையோடு.
பம்பரம் சுழலும், சுற்றும் பாம்பும் சுழன்றாடும். சுழல்-தன்னைது தானே சுற்றும்படி ஏவும் ஏவல்வினை. சுழல்தல்-தன்னைத்தானே சுற்றுதல் தொழிற்பெயர். ஆகவே, சுழன்றும் உலகம்=இந்தப் பூமி தன்னைத்தனே சுற்றியும், --சுழன்றும், இந்த உம் விகுதியிலே, வியப்புக் குறிப்னுத் தொக்க வைத்தான் வள்ளுவன். அந்த உம் விகுதி காட்டும் வியப்பென்ன?
பூமி தன்னைத்தானே சுற்றுகிறது. மிக விரைவாகச்
சுற்றுகிறது. பூமியின் மேற்பரப்பிலே நிறைந்து கிடக்கும், இயற்கைப் பொருட்காளன அறிவுடைய உயிரினங்களும்,
சடப்பொருள்களான ஆறு-மலை கடல்களும், மனிதனின் செயற்கைப் படைப்பான அணைகளும்-ஏரிகளும் மாடகூடங் களும், அனைத்துக் கட்டுமானங்களும், குலையாமல்
சிதையாமல், அவையவை அப்படியே இருக்கவும், சலனமின்றி அவை தம்முள் இயங்கவும் வைத்துக்கொண்டே சுழல்கின்ங்து.

17
இந்தச் சுழற்சி அற்புதம். செயற்கரிய செயல். இந்த அற்புதமான சுழற்சியைச் சுட்டவே வள்ளுவன், சுழன்றும் என்று உம்மில் வியப்பை வைத்தான். இந்தச் சுழற்சியின் வேகத்தால், சுற்றுகை ஏற்படுகிறது, இதனால் இரவுபகல், பருவகாலங்கள், உயிர்கள் உயிர்ப்ப, செடிகொடிகள் தழைப்ப முடிகிறது. இப்படியான அற்புதங்களை பூமி தன்னைத்தானே சுற்றுவதால் புரிகின்றது.--அப்படிச் சுற்றியும், ஏர்ப் பின்னது உலகம்-ஆம்-கொழுமுனையின் பின்னால் தான் உலகின் சிறப்பு. ஏர்-உழவுத் தொழிலையும், கொழுவையும் குறிக்கும்.
கலப்பை மண்ணில் இறங்கவில்லை என்றால், மண் வளம் குன்றும். உணவுப் பொருட்கள் விளையா, பயிர் பச்சை இலைதழைகள் வளரா, ஆணினம, பால்சொரியா, வறுமை தாண்டவமாடும், தானதருமங்கள் நடைபெறா, அறம் பிறழும், அமைதி குலையும், களவும் பெருகும், ஒழுக்கம் குன்றும், ஆட்சியில் கொடுமை விளையும், வான்மழை பொய்க்கும், (கோன் நிலை திரியில் கோள் நிலை திரியும் என்கிறது மணிமேகலை) பருவகாலங்கள் மாறுண்டுபோம், உயிரினங்கள் அழிந்துபடும். இவையெல்லாம் உழவன் உழவில்லை என்றால் நடக்கும். எனவே உழவன் உழவில்லை என்றால் பூமியின் அந்த அற்புதமான சுழற்சியால் பயனில்லை
சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம், ஆகையால், உழன்றும் உழவே தலை=எத்தகைய இடர்ப்படினும் உழவுத்தொழில் செய்வதே தலையாய சிறப்புடையதாகும்.
இந்த அரிய பொருள் தெளிவாக, விளக்கமாகத் தெரிகிறது, பரிமேலழகன்- வள்ளுவனுக்கு முன்பே தமிழன் வானியல் அறிவைப் பெற்றிருந்தான் என்பதை மறைப்பதற்காக, மிகச் சிரமப்பட்டு பகடிக்கிடமான உரை தந்துள்ளான்.
எனவே, மேற்படி குறளின் உறுபொருள்-இரவுபகல், பொருட்களின் நிலைப்பிற்குரிய புவியீர்ப்பு போன்றவற்றுக்காக உலகம் தன்னைத் தாளே சுற்றுகிறது. உழவன் உழவில்லை என்றால் இந்த அற்புதச் சுழற்சியால் பயனில்லை. ஆதலால் உழவே சிறந்ததாகும்.
இதே அதிகாரத்தில் இன்னொரு குறளை நோக்குவோம். எரினும் நன்றாம் எருவிடுதல் கட்டபின் நீரினும் நன்றதன் காப்பு. ஏரினும் நன்றாம் எருவிடுதல்- நன்கு உழவேண்டும் அதனினும் நன்று நன்கு எருவிடுதல். கட்டபின்-களை பிடுங்கிய பின், நீரினும் நன்று அதன் காப்பு- நன்கு நீர் பாய்ச்சல் வேண்டும்

Page 6
ح؟
அதனிலும் பயிர்க்காப்பு சிறந்ததாகும். நன்கு உழவேண்டும் உழுதாலும் போதாது, நன்கு எருவிடல் வேண்டும். களை பிடுங்கவேண்டும், களை பிடுங்கினால் போதாது, நன்கு நீர் பாய்ச்ச வேண்டும். இவ்வளவும் செய்தால் போதாது, பயிர்க் காப்பு வேண்டும். களைகட்டல் பயிர்காப்பில் முதன்மை யானதாகும். அப்படிக் களை கட்டிய பின், அப்படிக் களை கட்டியபோது பிடுங்குண்டு மறுநடுகைப்பூட்ட பயிர்களும், வேரறுந்த பயிர்களும் நன்கு வளரும் பொருட்டு வரப்புயர நீர் கட்டவேண்டும். நீர் கட்டலும் ஒரு பயிர்க்காப்புத் தான். இத்தனையும் முடிந்த பின்பு வள்ளுவர் பயிர்காப்பு என்று இறுதியில் கூறியுள்ளதை நன்கு கவனித்தல் வேண்டும்.
பரிமேலழகன் கூறுவது போன்று, மந்தைகளில் இருந்து பயிரைப் பாதுகாத்தல் என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. ஏனெனில், அந்நாளில் மருதநிலம் சார்ந்த முல்லை நிலங் ’களில் மந்தைகளுக்கான மேய்ச்சற்தரைகள் பாதுகாக்கப் பட்டிருந்தன. மருதநிலத்தவர்களின் மந்தைகளைக் கட்டுக் காவலுடன் மேய்ப்பதற்கு, இடையர்கள் அமர்த்தப்பட்டிருந்தமை சங்க இலக்கியங்களில் தெரிகின்றது. அந்நாளில் மந்தைகள் செல்வங்களில் எல்லாம் சிறந்ததாக வைக்கப்பட்டது. அதனால் விலங்குகளில் இருந்தும் , பகையரசர்களிடமிருந்தும் பாதுகாக் கப்பட்டிருந்தன. அதுமட்டுமல்ல, பழந்தமிழ் இலக்கியங்களிலும் பழமொழிகளிலும் பயிர்க்காப்புக்கு வேலிகள் இருந்தமை அறியமுடிகிறது. மருதநிலவோரம் மந்தைகள் கயிறுகளால் கட்டி வளர்க்கப்பட்டதும் காணப்படுகிறது. இன்னும், பகை யரசர்கள் தேரோட்டி,கழதைகளை ஒட்டி, யாளை குதிரைகளை ஒட்டி, பயிர்களை அழித்ததாகக் குறிப்புகள் காணப்படு கின்றனவே தவிர, ஆனிரைகள் புகுந்த வயல்களை அழித்ததாக எங்குமே குறிப்பில்லை. அதமட்டுமல்ல, பரந்த மருதநில வெளியிலே, கரையோரம் தவிர்ந்த பகுதிகளில் மந்தைகளினால் அழிவேற்படாது. ஆயலோட்டல் எனப் பறவைகள் விளைந்த தானியங்களை அழிக்காமல் காவல் காத்தமை தெரிகிறது: அதுபோல மந்தைக்காவல் செய்ததாக அறியவில்லை. ஆகவே, மந்தைகளிலிருந்து பயிர் காத்தலை வள்ளுவர் குறிப்பிடவில்லை. ஐந்து பூதங்களில் இருந்து காத்தலோவெனில் الأوك மனிதனால் முடியாதவொன்று. இயற்கையின் குமுறலை மனிதன் தடுக்கமுடியாது. ஆக, எதிலிருந்து காப்பது.
வள்ளுவண் ஏர்கூறி, எருவிடுதல் கூறி, களைகட்டல் நீர்கட்டல் கூறி, இவை ஒவ்வொரு காலப்பகுதியில்

9
மட்டுமே செய்யப்படுவன. ஆனால், வள்ளுவர் நீர் விட்ட பின் காப்புப் பற்றிப் பேசுகிறார். அதாவது எல்லாக் காரியங்களும் முடிந்தபின் காப்பு அவசியம். களைகட்டிய பின் காப்பு வேண்டும் என்கிறார். பயிர் கருத்தரித்துக் குடலைப்பருவம் அடையும் முன் களைகட்டப்படும். இதன் பின் குடலையில் நோய்கள் பாலுறிஞ்சும் பூச்சிகளினால் தொற்றக்கூடும், இளம் பயிராக இருக்கிற காலத்தில் நெற்பயிரை நோய்கள் கடுமையாகத் காக்குவதில்லை என்பதை உழவர் பெருமக்கள் அறிவார்கள். எனவே, நோய்களிலிருந்து காப்பு வேண்டும் என்பது தான் வள்ளுவர் கூறியது. ஆகவே, வள்ளுவன் காலத்திற்கு முன்பே, தமிழர்கள் பயிர்களுக்கான நோய் ‘களையும், அந்நோய்களைத் தடுப்பதற்கான மருந்துகளையும் பற்றி அறிந்திருந்தாாகள், என்பது இக்குறளினால் புலனாகின்றது.
ஆரியத்தால் மறைக்கப்பட்ட தமிழர்களுடைய பண்டைச் சிறப்புகளை, மீட்டெடுத்துக் காட்டுவதன் மூலம்,தலை தாழ்ந்து நிற்கும் தமிழினத்தை, தன்னையுணர்ந்து தன்மானத்துடன் தலை நிமிர வைப்பதே இந்த ஆய்வுகளின் நோக்கமாகும். இத்தகைய உணர்வுடைய ஆக்கங்கள் வரவேற்கப்படும்.
சாமிக் காரியமே சதிகாரக் காரியமா????
பார்ப்பான் தான் தமிழனை வடமொழியால், ஆயிரம் வருடங்களாகத் ஏமாற்றித் தின்ற பழக்கத்தால் இன்றும் வடமொழியால் ஏமாற்றுகிறான் என்றால், சைவம் என்கிற தமிழ் அந்தணன் கூட அல்லவா கோவிலிலும் - சடங்குகளிலும் வடமொழி மந்திரம் சொல்கிறான். தமிழனை ஏமாற்ற அந்த
மொழி தான் ஏற்றது என்று அந்தணனும் பார்ப்பான் ஆகிவிட்டான்
urăscă NigéagrTali GurTaŭgafarITLdi??????
aðLnaða gnslunaletLmu?
: Eunnigðamdurhald staðangavefurðamgömu Qurang!
: LGGGL LLL LLTTL M TLTTT LTMLLL CTTMLLLLL MT
LLLTLLTLLLLLLLLS LLLLL LGLC LLTLLL TLGGTTTCLT LLL LLTTL LLLLLL MMMGGL LLLLS LMMLLLLL MTMMTLS TTLLS LMLL GLMTT TTTTLLMT YLLLLLL LGG CLTLLL S LLLlTLLLLSS SMTTTTTMT GCMTT LS TMCL MT TLTLLLLLLL MTLG LLLLLLS Gums), Gundigdtermd Edigdj0 locard- வாக்கத்திற்குரிய நகரத் தந்தை; GöLITodd, Rui Linha os Sônigsludib ണ്ണിളർിൽ. 1 LLGGLCLMTC LLTTLL TTMMTL TLL LLTTLTLTTMLMLLMS
:
s
lubasiggdi algang LyLyd eg Batai.
;

Page 7
1)
தேடல்-இருளும் ஒளியும்
இருள்.எங்கும் இருள்.வாழ்க்கையின் முதற்படியில் தன் அடி பதித்து, முன்னேற முயன்ற முதல் மனிதனின் எண்ண த்தில் எழுந்த ஆயிரமாயிரம் கேள்விகள் எல்லாமே இருளாகி நிற்க ஒளியைத் தேடி அவன் உள்ளம் விழைகிறது. அடி எடுத்து வைக்கிறான். என்ன ஆகுமோ--?எது ஆகுமோ--? என்ற அச்சத்துடன் அவன் பதித்த பாதங்கள், நடந்து போகப் போக, நடந்ததை தான் நடந்து வந்ததை தன் எண்ணத்தில் எடுத்தாராய்கின்றான். முன்னே இருண்டிருந்த கருமை கலைந்து போக, அவன் பாதை, எதிர்காலம் துலங்கித் தெரிந்தது. இன்னும் நடக்கிறான் நடந்ததைச் சீர்தூக்கி ஆராய்கிறான். ஆமாம், இப்படியாகத்தான் மனிதகுலம் தன்னை உருவாக்கிக் கொண்டது. கடந்தகாலம் அனுபவமாகவும், நிகழ்காலம் சோதனையாகவும், எதிர்காலம் எதிாப்பார்ப்புகளுக்கான பரிசோ தனைகளுக்காகக் காத்திருப்பதும் மனிதனைச் ‘சூழ்ந்திருக்கும் மூன்று புலங்கள. இந்தப் புலங்களைப் நோக்கிய தெளிவான தேடலே மனிதனை முழுமையாக்கி முன்னேற்றப் படிகளில் அவனை ஏற்றிவைக்கக் கூடியது. இந்தத் தேடலில் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாகத் தன்னை ஈடுபடுத்தி, 21ம் நூற்றாண் டை எட்டிவிடப் போகும் மனிதனின் வாழ்க்கைப் படிகளில், வாழ்வின் போக்கினை கடந்த சில ஆயிரம் ஆண்டுகளாக நிர் ணயித்து, நாட்டுக்கு நாடு, பண்பாட்டுக்குப பண்பாடு வேறுபட்ட வகையில், இன்று இலக்கணம் பெறும், மதம் அல்லது சமயம் பற்றி இங்கு நாம் காண்போம்.
ஒன்றையொன்று அறியாமல் 'உலகின் பலவேறு மூலை களில், வாழ்ந்து வந்த மக்கள் குழுமங்கள் (கூட்டங்கள்) அடிப் படையில் ஒன்றான, நடைமுறைகளைக் கொண்டவைகளாகத் தங்கள் மதங்களை பின்பற்றி வருவது முக்கியமாகக் கவனிக்கப் படவேண்டிய ஒன்றாகும். மதம்-சமயம் என்றும் இன்னும் பல குறியீடுகளாலும், அழைக்கப்பட்டு வரும் “வாழ்க்கை நெறி'யின் வரவுக்குக் காரணிகளாக நின்று மனிதனைத் தூண்டிய நிகழ்வு களைக் கொஞ்சம் அலசிப் பார்ப்போம்.
மிருக வாழ்விலிருந்து தன்னை வேறுபடுத்தி உயர்வான ஒன்றாக உணரத் தலைப்பட்ட மனிதன், 560)Gourteo இருப்பிடங்களை ஆற்றுப் பள்ளத்தாக்குகளில் அமைத்துக் 'கொண்டு, உறுதியான ஒரு வாழ்க்கை நெறியினைப் பின்பற்றத் தொடங்கினான்.இன்று போல் வளர்ச்சியடையாத-மொழி வளர்ச்சி வியடைந்திராத அன்றைய நாட்களில், மனிதனின் அறிவு அனுபவ
அடிப்படையிலும், செவிவழிச் செய்திகளின்படியும் அமைய

14
வேண்டியிருந்தது. எண்ணங்களைப் பதிந்து வைக்கும் எழுத்தியல் அறியப்படாமல் இருந்த ஒரு காலம் மனிதன் எண்ணத்தில் எழுந்த ஆயிரமாயிரம் கேள்விகளுக்கு, அனுபவ அறிவால் விடைகளைக் கண்டு கொண்டான். இன்று நினைத்த இடத்தில் நெருப்பைப் பற்ற வைக்கின்றோம். அதன் குணாதி சயங்களை முற்றும் அறிந்திருக்கின்றோம். ஆனால் அன்றைய மனிதனோ தேடலில் முழுமை பெறாத நிலையில் தீயைத் தன்னால் ஆக்கமுடிந்த அளவிற்கு வந்தபின்னும், 安 பிராணவாயுவின் அசைவுக்கேற்ப அசைந்தாடிப் பக்கத்தில் இருந்தவற்றை எரித்தபோது, தீயினிடத்தில் உயிரைக் கண்டான். ஒப்பற்ற ஆற்றலைக் கண்டான். இதை தேய் (நெருப்பு) எனக்கொண்டான். தேய் இலிருந்து தெய்வம் என்ற சொல் உருவானது. (இலத்தீனில் Theo) இதைப்போல, கதிரவன், வான், கடல், நதி, நிலம் காற்று என்று இயற்கையின் ஒவ்வொரு அங்கங்களையும் ஒரு உயிர்ப்பின் துடிப்பாக, பேராற்றலாகக் கண்டு வணங்கி வந்தான். இதன் அடிப்படையில் தான், உலகின் அனைத்து ஆதிநாகரீகங்களிலும் இயற்கை வழிபாடு இருந்தது. இதைப்போலவே, இயற்கையின் அனர்த்தங்களை தெய்வ கோபத்தால் விளைற்தது என்று எண்ணினான். அதற்கேற்ப அவன் அமைத்துக்கொண்ட வாழ்க்கைநெறியே, அவனுடைய தேடலின் சிறந்த முடிவொன்றைப் பெற உடைந்தையாய் இருந்தது. 0SSS S 0S SS
தேடலில் தன்னைப் பற்றியும் அறியத் தலைப்பட்ட மனிதனுள், தன்பிறப்பிற்கான காரணத்தையும், அவசியத்தையும் அறியும் ஆவல் ஏற்பட்டது. அதில் அவன் கண்டது, தன் வாழ்வின் நோக்கம் அன:பும் அறனும் எனக்கண்டறிந்தது. இக்காலகட்டம் மானிட வாழ்வின் ஒப்பற்ற காலமாகும்.
ஒருகால கட்டத்தில இருள் நிறைந்த மானிடவாழ்வில் ஒளியை நோக்கிய பாதையாகச் சமயம் காணப்பட்டது. இதன் விளைவு, இப்பாதையில் யார்யாரை நம்பி அடி எடுத்த வைப்பது -இந்தப் பாதையில் வழிகாட்ட ஆளுண்டா? பயணம் பயன் தருமா? என்ற கேள்விகள்-எதிர்பார்ப்புகள்-மதத்தின் நெறிப்படுத் துதலில் பல விளைவுளை ஏற்படுத்தின. அதன்பயனாகப் பற்பல தத்துவங்களும் சம்பிரதாயங்களும் ஏற்பட்டன.
அப்படியானால் கடவுள் இல்லையா? ஏன் இந்தத் துயரம் நிறைந்த வாழ்வு, வாழ்வின் நெறிமுறைகன் அவசியம் தானா? என்றெல்லாம் எண்ணிவிட வேண்டாம்.
கடவுள் இருக்கிறார். உள்ளத்தின் உந்து சக்தியாகவும், ஆன்மபலமாகவும், அண்டசராசரங்களின் ஆயிரமாயிரம் இரகசியங்

Page 8
12
களிடையே அதனை அறியத் தூண்டும் ஆவலாகவும், இன்னும் பலவாறாகவும் வெளிப்பட்டு நிற்கும் இறை சக்தியே கடவுள். இந்த இறையின் சக்தியை உணர்ந்தவர்களே மானிடத்தை வாழ வைக்கும் ஞானியர் ஆவர். ஆனால், இப்புனிதமான இறையைப் போற்றும் மதங்கள் விரும்பப்படாதவர்களின் கைகளில் அகப்பட்டுக் கொண்டது. (உலகின் எல்லா மதங்களுக்கும் இது பொருந்தும்) மதவாதிகளின் சுயநலம் சார்ந்த நியாயக் கற்பிதங்கள் சமயநெறிகளாகப் பின்பற்றப்பட நிர்ப்பந்திக்கப் பட்டன. இது இன்றும் புதிய புதிய வடிவங்களில் தொடர்கின்றது என்பது எம்மால் ஆழமாக உணரப்படவேண்டியது. நான் என்ற அகங்காரமும், மமதையும் கொண்டவர்கள், சமய அதிகார ங்கனைக் கைக்கொண்டு, தம்மையே மற்றவர்கள் வணங்க வேண்டும், என்று கட்டளையிட்டு, வாழ்க்கை நெறியான சமயத்தில் தமது ஆளுமையைச 'செலுத்தி, தங்களுடைய செயல்களையெல்லாம் தெய்வீக நிலைக்கு ஏற்றி, அவையே வாழ்க்கை நெறிகளாக வலம்வர விட்டனர்.
இதேவேளை மக்கள் நலம் கருதிய அரசர்களும் பெரி யோர்களும் தன்னலமறுப்புடன் வாழ்ந்து போற்றப்பட்டுள்ளார்கள். இவர்கள் காலப்போக்கில் மக்களால் கடவுள் நிலைக்கு உயர்த்தப்பட்டு வணங்கப்பட்டார்கள்.இவர்களுடைய வரலாறுகள் கற்பனைகளும்-சுவைகளும் கலக்கப்பட்டு புராணங்களாகப் பின்னாளில் உருவாகின.
ஆகவே, மதம் என்பது இன்னும் தேடலுக்கு உரியது தான். இதில் நல்லபக்கங்களும் உண்டு, தீயபக்கங்களும் உண்டு. இவ்வகையாக மதங்கள் வளர்ந்து விட்டமைக்கு நம் முன்னோர் குற்றவாளிகள் அல்லர். அவர்கள் மானிடவுணர்வுகளின் தேடலின்போது, இந்த ஊடுருவல்களுக்கு இடம் கொடுத்து விட்டார்கள். ஆனால், அவர்களுடைய வாழ்வின் அனுபவங்களில் இருந்து, நல்லதையும் கெட்டதையும் பிரித்தறியும் அறிவாற்றல் கொண்ட காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிற நாம், மானிடம் நலம் பெறவேண்டியதை ஏற்றும், திய ஊடுருவல்களை உதறித் தள்ளவும் வேண்டிய நம்கடைமையை இனியாவதுஉணரவேண்டும். இந்த வகையிலே உலகின் தென்கோடியில் பல்லாயிரம் ஆண்டு களாக பலவிதத்திலும் மனிதகுலத்திற்குப் பெருமை தேடித் தந்தும், உண்மை வரலாறு மறைக்கப்பட்டதன் மூலம், பின் தங்கிப் போய்விட்டதுமான நம் தமிழினம் பற்றிச்சிந்திப்போம்.
மேற்கண்டவாறு மதத்தின் உருவாக்கலும், வளர்ச்சிப் போக்கும் மதவாதிகளின் கைப்பட்டு, சாதாரண மக்களின் பலவி னங்களை தம் பலங்களாகக் கொண்டு, மதங்களில் இறைவனின் பெயரால் நுழைந்துவிட்ட புல்லுருவிகளை இனங்கண்டு, மத

12
நெறியில் இருந்து மட்டுமல்ல, சமூகக்கட்டிலிருந்தே தூக்கி எறிந்துவிட வேண்டும். இன்றுபோல் அன்று மனிதன் தொழிற் றிறன் பெறப் பயிற்சிச்சாலைகள் இருந்ததில்லை. எனவே, தொழில் சம்பந்தமான கற்பிதங்களும் அனுபவங்களும் பரம்பரையாகக் குழந்தைப் பருவத்திலிருந்தே கைமாற்றம் பெற்று வந்தன. தொழில் தொடர்ந்து வளர்வதற்கான சிறந்த வழியாக அன்று சந்ததித் தொடர் இருந்தது. இது அன்று சாதிப்பிரிவு அல்ல. பின்னாளில் இத் தொழிற்பகுப்பு, ஆரிய வருண (சாதி) அடிப்படைக்கு ஏதுவாக மாற்றப்பட்டது. கூடவே உயர் வருணம் எனப்பட்ட அரச-பிராமணர்கள் மட்டுமே உயர் கல்வி கற்கமுடியும் என்ற விதிகளும் புகுத்தப்பட்டு, நான்கு வருணங்களால் (பிராமண-சத்திரிய-வணிக-குத்திரர்) தமிழர் தாழ்த்தப்பட்டனர். நான்கு வருணங்களிடையே கலப்பு மணம் அனுமதிக்கப்பட்டு, அதன்வழி எண்ணற்ற சாதிகளை உருவாக்கி தமிழர்களின் ஒற்றுமையை ஆரியர்கள் சிதைத்தார்கள். இந்த ஆரியச் சூழ்ச்சிகள் மதச்சட்டங்களாக இறுக்கப்பட்டன.
அன்றைய அரசர்களும்-அறிஞர்களும் தீர்க்கதரிசனமற்று வடவரின் சூழ்ச்சிகளை ஏற்றுக் கொண்டு இளித்துக் கிடந்ததை
எண்ணின் வேதனை வெடிக்கும்.
இங்2ே: முடியாத விபரீதக் கொடுமைகளை விதி எனக்கூறி, அவனை வாளாதிருக்கும்படி செய்து,அவனுடைய இன்பங்களைத் தான்நுகர, மதத்தால் அடிமையாக்கிவிட்ட ஆரிய ரின் திறனை எண்ணிப் பாருங்கள். உலகின் எல்லா மொழிகளி லும் விதி என்ற சொல் இருந்தாலும், தமிழனைப் பொறுத்த மட்டில் தலைவிதியென சமயத்தின் பெயரால் ஏற்று, அடங்கும் மனப்போக்குக்கு அடிமையாகிக் கிடக்கிறான். எந்த இழிந்த நிலையையும் மாற்ற முனையாமல் விதியின் பெயரால் தமிழன் ஏற்றுக்கொள்வான். விளங்காததை விளங்கத் துணிந்த உந்தலே இன்றைய மனிதனின் வளர்நிலைக்குக் காரணம். இந்த உந்தலை தமிழன் உடனடியாகத் தன் உள்ளத்தில் ஏற்றிக்கொள்ளவேண்டும். தேசியம் என்பது இன்றுபோல் உருப்பெற்றிராத காலத்திலே மதங்களே மக்களை ஒரு பொதுவான அடையாளத்துள் சுட்டிக் காட்டும் சக்திகளாக இருந்தன. அதனால், அரசர்களைவிட மதத்தலைவர்களே மக்களை ஆளும் அதிகாரத்தைக் கொண்டி ருந்தனர் .(இன்றும் சிங்களசிறீலங்காவில் புத்தபிக்குகளே ஆளுகின்றனர்-ஆசிரியர்) இந்த மதவாதிகளால் மதங்களின் போக் கும்-நோக்கும், இறையிடம் இருந்து மதத்தை வேறுபடுத்தி அவர்களுடைய அதிகாரபீடங்களாயின.ஆகவே, தமிழர்கள் மதநெறி வழியில் எதையும் எண்ணிப் பார்த்து இனநல நோக்கில் செயற்படவேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
ஞால வணி

Page 9
44
தேடுங்கள் மெய்யுரையை! அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.
திருக்குறளுக்கு பரிமேலழகன் மொழிந்த, திரிபும் பொய்யும் நிறைந்த, உண்மைகள் மறைக்கப்பட்ட உரையையே, தமிழ கத்துத் தமிழறிஞர்கள் ஏற்று உரைவிரித்து வந்தார்கள். எவரும் இவ்வுரைகள் சரியா? எனக் கடந்த 50 ஆண்டுகள் வரை சிந்தித்தாகத் தெமரியவில்லை. 50 ஆண்டுகளுக்குள், அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தோன்றி தமிழ் மானமிக்க தமிழறிஞர்கள் வீறுகொண்டு எழுந்துபோதும், அவர்கள் குறிப்பிடத் தக்களவு வெற்றி பெற்றதாகக் கூறமுடியவில்லை. சிறிது திருந்திய உரையை மு.வ தந்தார். தேவநேயரும் தமிழ் உணர்வோடு சிந்தித்தார். பாரதிதாசன் தமிழ் உணர்வோடு மட்டுமல்ல தமிழ்ப் பண்போடும் எண்ணினார். இருந்தும் அவர்கள் எண்ணிப்பார்த்த அந்தக் கொஞ்சம் கூட, மக்களைச் சென்றடையவில்லை. ஆரியம் அவற்றை வெளிவர விடாமல், மழுங்கடித்தது. தமிழகத்தின் தமிழறிஞர்கள், அதிகமானோர் ஏடெழுதி ஒடேந்திக் காலத்தை ஒட்டுவதிலேயே காலத்தைக் கழித்தார்கள். இன்னும் சிலதுகள் ஆரிய நாய்களின் கால் நக்கி வாழ, தமிழுக்கு மூலம் வடமொழி என்று நிறுவப் படாதபாடுபட்டார்கள். சான்று தமிழ்ப் பேரறிஞன் என்று தமிழகம் போற்றிய வையாபுரிப்பிள்ளை என்பவன். உலகம் போற்றும் குறளுக்கு உரைத்த உரைகள் சரியர்? என்று எண்ணிப் பாாக்க மறந்தார்கள். மறுத்தார்கள். எண்ணிப் பார்த்தால் ஆரியச் சதி வெளியாகி வாழ்வு மண்ணாகி விடாதா? அவர்களுக்கு.
திருக்குறளின் முதற் குறளிலேயே, தன் ஆரியச்சதியை பார்ப்பாரப் பரிமேலழகன் தொடங்கிவிட்டான்.
உலகப் படைப்புக்கு எல்லாம் முதலாகவுள்ளவன் கடவுள் என்பதால் ஆதிபகவன் முதற்றே உலகு என்றும், தமிழுக்கு மட்டுமல்லாமல், வடமொழிக்கும் அகரம் முதலாக உள்ளதால், அகரமுதல எழுத்தெல்லாம் என்றும், இன்னும் பொருந்தா இலக்கணக் கூறுகளைப் பொருத்தி, கற்றவர் மயங்கும் வண்ணம், பொய்ப்பொருள் கூறியுள்ளான்.
சுருக்கமாக, அவனுடைய கருத்து, உலகப்படைப்புக்கு இறைவன் முதலாக இருப்பது போல, அகரம் தமிழுக்கும் வடமொழிக்கும் முதலாக இருக்கிறது. இது வடநூல் முடிவு என்றும் சான்றாதாரம் காட்டியுள்ளான். தமிழ் நூலுக்குப் பொருள் உரைக்க வந்த பரிமேலழகன் வேண்டாத இடங்களில் எல்லாம், இது வடநூல் முடிவு என்று கூறியுள்ளான்.

15
அதாவது, தமிழ்ப்புலமை வடநூல் சார்ந்த அறிவினால் பெறப் பட்டது எனக்காட்டி, தமிழ்ப் புலமையை மறைக்க முயன்றுள்ளான்.
பரிமேலழகன் ஆதிபகவன் என்ற சொற்றொடரை கடவுளைக் குறிக்கும் இரண்டு சொற்கள் ஒன்று சேர்ந்து வடநூல் முறைப்படி, இருபெயரொட்டு என்ற இலக்கண வரம் பினுள் வந்ததாகக்கூறுகின்றான். (திருக்குறள் பரிமேலழகன் உரையைப் பார்க்கவும்) ஆனால், தமிழ் இலக்கண முறைப்படி, பகவன் என்ற பெயர்ச் சொல்லின் சிறப்பைக் காட்டும் பொருட்டு, எழுவாய் அடைமொழியாக, அனைத்திற்கும் முந்திய மிக்க முதன்மை 'ஆதி எனப்பட்டது. அது மட்டுமல்ல ஆதி என்ற சொல் தனித்து நின்று எங்கும் இறைவனைக் குறிப்பதாகக் காணப்படவில்லை. பகவன் என்ற சொற்கூடத் தமிழில் இறைவனைக் குறிக்காது. அப்படிக் குறித்தாலும், பகவான் என்ற வடசொல்லின் மீது திரிக்கப்பட்டது ஆகும்.
இனி இக்குறளுக்கு கமலம் தேடிய மெய்யுரையைக் காண்போம். -ஆதி=அனைத்திற்கும் முந்திய-அனைத்துக்கும் மூலமான, பகவன்=கதிரவன், முதற்றே-முதலாகக் கொண்டே, உலகம்=உலகின் கண்ணுள்ள அனைத்துப் படைப்புக்களும் தாவரசங்கமங்களும் தோன்றின்,(உலகில் அடங்கியுள்ளவற்றை ஆகுபெயராக உலகம் எனப்பட்டது:) அகரம்=அ என்ற
எழுத்தை, முதல-முதல் எழுத்தாகக் கொண்டே, எழுத் தெல்லாம்-உலகில் உள்ள மொழிகளெல்லாம் தோன்றின.
கதிரவனை முதலாகக் கொண்டே உலகிலுள்ள அனைத்தும் துோன்றின. அதுபோல அ வை முதலாகக் கொண்டே உலகிலுள்ள மொழிகளெல்லாம் தோன்றின.
பக பகவென மின்னியது. பக-ஒளிர்தல். பகல்=ஒளி உள்ள வேளை. பூரண சந்திரனும் ஒளி வீசும் ஆனால் பகல் என்பதில்லை. தன்னிடத்தே பகவைக் கொண்டிருக்கிறவனின் ஒளி வரும்போது தான் பகல்,
பகல் ஒரு பண்புப் பெயர். பகவன்=பகவைத் தருதலால் வினையாலணையும் பெயர். பகவன் ஒளியைச் செய்பவன். இதை உறுதி செய்ய, 10,000 ஆண்டுகளுக்கு முன்னரே நிலந்தரு திருவிற் பாண்டியன் (நெடியோன்) காலத்தில் கதிரவனுக்குப் தைப்பொங்கல் விழாவும், மதிக்கு இந்திர விழாவும் எடுக்கப்பட்டதை நோக்குக. அந்நாளில் இறைவனு க்கான விழாக்கள் இருந்ததாகத் தோன்றவில்லை. தமிழனின் பண்டு தொட்டு இன்றுவரை உள்ள ஒரே விழா, சூரியனுக்கான

Page 10
16
தைப்பொங்கல் என்பதை உணர்க! கடவுள் உணர்வு பெற முன்னரே, தமிழன் கதிரவனின் சிறப்பையறிந்து போற்றினான். தெய்வமும் தெய்வ வழிபாடும் தோன்றியது பற்றி, தேவநேயப் பாவாணரின் ஆய்வும் இதை உறுதி செய்யும். தி-தே-தேயுதெய்-தெய்வம் ஆனது. டார்வின் தத்துவமும் இதை உறுதி செய்யும். எனவே, சூரியன் இறைவனுக்கு முந்தியது.
எழுத்து என்ற சொல்லானது தமிழ்நெடுங்கணக்கிலுள்ள முப்பது எழுத்துக்களையும், 247 வரிவடிவங்களையும் குறிக்கும் சொல் மட்டும் அல்ல.
" அகர முதல னகர இறுவாய் எழுத்தெனப்படுப முப்பதென்ப" எனத் தொல்காப்பியம் எழுத்தென்று தனி எழுத்தைக் குறித்தபோதிலும், இலக்கண இலக்கியங்களில் எழுத்து என்ற சொல் மொழியைக் குறிப்பதாகவே காணப்படுகிறது.
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு.
இங்கே எண்ணும் எழுத்தும் என்ற சொற்கள் கணிதமும் மொழியும, என்ற கருத்தைத் தருகின்றனவே தவிர, இலக்கமும் எழுத்தும் என்ற பொருளைத் தரவில்லை.
e. எண்ணும் எழுத்தும் கண் எனத்தகும்
இவ்விடத்தும் முதற்பொருளே பொருந்தும். 9. எழுத்தற வாசித்தாலும்
அதிக மொழிப்பயிற்சியுடன், பொருளுணர்ந்து (அக்கர சுத்துமாக) வாசித்தாலும். RF. எழத்தறிவத்தவன் இறைவன் ஆசிரியன் இறைவனுக்கு நிகரானவன். எழுத்தறிவித்தல் 30 எழுத்துக்களையும் கற்பித்தல் அல்ல. முப்பது எழுத்தறிவு கற்றல் அல்ல. முப்பது எழுத்துக்களையும் தெரிந்து கொண்டவன், மொழியறிவையோ ஞானத்தையோ பெற்றுவிட முடியாது. எனவே, எழுத்தறிவித்தலாவது, அகரம் முதல் னகரம் வரையான உயிரும் மெய்யும் புணர்ந்து, அந்த எழுத்துக் கூட்டுகளில் சொற்பிறந்து, சொற்களின் வழி கருத்துப் புலப்பாடுடைய, மொழியறிவுட்டுதலாகும்.
இவைபோல் எழுத்து என்ற சொல் மொழியைக் குறிப்பதை ஏராளமான இடங்களில் காணலாம். அது மட்டுமல்ல, ஒரு தனி எழுத்தே ஒரு சொல்லாகப் பொருள் தரும் சிறப்பும் தமிழுக்கு உண்டு. உ-ம்--கா=சோலை.
மேற்காட்டப்பட்ட எடுத்துக்காட்டுகளில் இருந்து எழுத்து என்ற சொல், உயிர்-மெய்-உயிர்மெய் என்கிற வரி

17
வடிவங்களை மட்டுமல்ல, சிறப்பாக மொழியைக் குறிக்கும் சொல் என்பது புலனாகின்றது. எனவே எழுத்தெல்லாம் என்ற சொல் மொழிகளெல்லாம் என்ற பொருளையே தரும். நான் அறிந்த உலகமொழிகளின் முதல் எழுத்தெல்லாம் அ வாக அல்லது சற்று ஒலித்திரிபில் அ வாகவே இருக்கிறது. வள்ளுவம் தோன்றிய கி.மு முதலாம் நூற்றாண்டில், இன்று போல் மூவாயிரம் மொழிகள் இருந்திருக்காது, மிகச்சில மொழிகளே இருந்திருக்க முடியும் என்ற உண்மையை மனத்திருத்திப் பார்த்தால், அந்த மொழிகளெல்லாம் தமிழிலிருந்தே தோன்றின என்பதற்கு மறுப்பு இருக்கமுடியாது. இந்த உண்மையை உணர்ந்துதான் வள்ளுவர் சூரியனையும் அகரத்தையும் ஒப்பிட்டுக் கூறினார்.
பரிமேலழகன் கூறுகிற மாதிரி அண்டசராசரங்களுக்கும் அவற்றின் படைப்புக்கும் மூலமாயிருக்கிற இறைவனையோ, அல்லது நான் கூறுகிற மாதிரி, உலகத் தோற்றத்திற்கும படைப்புக்கும் மூலமான சூரியனையோ, இரண்டு மொழிகளின் முதல் எழுத்தாக இருக்கும் அகரத்திற்கு ஒப்பிடுவானா வள்ளுவன்? ஒப்பீடு பொருந்துமா? அன்று உலகில் மிக உயர்ந்திருந்த, கிரேக்க-பாபிலோனியமொழிகளும் இருந்தனவே. ஆகவே, ஒப்பீட்டுப் பொதுத்தன்மையில் வழுவினான் வள்ளுவன் என்று கூறமுடியுமா? முடியாது.
பரிமேலழகன் கூற்றிலேயே எழுத்து என்ற சொல் மொழியைக் குறிக்கும் என்ற கருத்து இருக்கிறது. ஆகவே, இரண்டு என்ற எண்ணைக் குறிப்பதற்கு எல்லாம் என்ற சொல் கையாளப்பட்டதாக फ्Iा6ीं{3!} கிடையாது. அறியப்பட்ட, அறியப்படாத அனைத்தையும் குறிப்பிடவே வள்ளுவன் எல்லாம் என்ற சொல்லைக் கையாண்டான். (தமிழ் எப்படிப் பிரிந்து உலகில் பல மொழிகளாயின என்பதை, திருக்குர்ஆன் புனிதவேதாகமம் என்பவற்றின்வழி ஆய்ந்து எழுதப்பட்ட எனது "சைவசமயமும் சர்வமத சமரசமும்"என்ற நூலில் காண்க)
குறளில் எந்த ஒரு இடத்திலும், அது ஒரு தமிழ் நூல் என்பதைக் காட்டாத வள்ளுவுன், முதற்குறளிலேயே, முதல் சொல்லிலேயே, முதல் எழுத்தையே அகரம் எனத் தொடங்கி பகவனைப் பின் வைத்து ஒப்பிட்டான் என்றால், பகவனிலும் உயர்ந்த இடத்தை அகரத்திற்குத, தந்தான் என்றால், படைப்பில் சிறந்த மாந்தப் படைப்பின் உயர்வுக்கும், நாகரீக மேம்பாட்டுக்கும் மூலமானது மொழியே, மொழியின்றேல் மனிதனும் விலங்கே. ஆகவே, படைப்பாற்லிலும் உயர்ந்தது மொழி. அந்த முதல் மொழி தமிழ் அதனின்றே அனைத்து

Page 11
மொழிகளும் தோன்றின என்ற வரலாற்று உண்மையை அறிந்தே, தமிழைச் சூரியனுடன் ஒப்பிட்டான்.
எனவே,உறுபொருள். அகர முதல எழுத்தெல்லாம்=உலகின் மொழிகள் எல்லாம் தமிழின் உயிர்முதலான அ விலிருந்து தோன்றின. ஆதி பகவன் முதற்றே உலகு=காலம் கடந்த சூரியனை முதலாகக் கொண்டு உலகப் படைப்பெல்லாம் தோன்றின. பொதுத்தன்ம்ை மொழிகள் முழுமைக்கும் அகரம், உலகம் முழுமைக்கும் சூரியன், தோற்றத்தின் மூலமாக இருந்தன.
இன்றைய விஞ்ஞானம் ஒப்புக்கொண்ட இந்த உண்மையை-விண்ணியல் அறிவை இரண்டாயிரங்களுக்கு முன்னரே, தமிழன் அறிந்திருந்தான் என்பதை மறைத்து, தமிழைத் தாழ்த்த பாாப்பாரப் பரிமேலழகன் எத்துணைப் பொய்யுரை தந்துள்ளான்.
கடவுள் வாழ்த்தில் பத்துக் குறளகள் உண்டு, மிகுதி ஒன்பது குறள்களும் இறைவனைப் பற்றிப் பேசுகின்றன. வள்ளுவன் இறை நம்பிககையுடையவன், ஆனால், கடவுள் நம்பிக்கை அற்றவன். இறை ஒன்றானது. கடவுள் பலவானது. மதங்களுக்கு காரணமானது வள்ளுவனுக்கு மதங்கள் ஏற்பில்லை. ஆதலால், எல்லா மதத்தாராலும் போற்றபபடும் சூரியனை முதலில் சொல்லி, பின் பல கடவுளருக்கும் பொருந்தும் வண்ணம் ஒன்பது குறள்களையும் பாடினான்.
அன்பாகளே! கண்ணை முடிக்கொண்டு, யாரோ உளறிய உரைகளை மனப்பாடம் செய்யாமல், குறளானாலும் சரி, இலக்கியங்களானாலும் சரி, தெரிந்து தெளிந்து படியுங்கள் என வேண்டுகிறேன்.
MPMMMMMM-~~~~
; எனக்குப் புரியவில்லை!
சென்னையிலே ஆங்கிலப் பாடலுக்குப் பரதநாட்டியம் ஆடுகிறார்களாம்.: ; அந்தப் பரதத்தை அறிமகப்படுத்திப் பேசுகிறவரும் ஆங்கிலத்தில் தான் : ;பேசுவாராம். அருந்தமிழ்ப் பரதக்கலை இப்படிக் கற்பழிக்கப்படுகிறதே! 羲 ஏன்டா தம்பி கல்லே கிடையாதா சென்னையிலே? எனக்குப் :புரியவில்லையே!
தமிழார்வலர்களே! -
அறிவுசான்ற, பயன்விளைக்கும், நல்ல தமிழ் நூல்கள் பெற
விரும்புவோர், முத்திரையிடப்பட்ட மடலுறையுடன் கமலத்துடன் தொடர்பு 2
கொள்ளுங்கள். தமிழுணர்வையும் தமிழறிவையும் வளர்ப்பதற்காக, இலாப
நோக்கற்ற விற்பனை, விரைக! பயன் பெறுக!
&2S2 XXX 것 - 2& & Չմ: 2 XX
分 XXVIKOM S23232 23 sa
貓
X2:2
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

1G
சுப்பிரமணியபாரதி தமிழர் முகம் காட்டிக்கொண்ட ஆரியமனத்தார்.
இத்தலைப்பு அமரர் பாரதியாரை அவமானப்படுத்துவதற்காக அல்ல! வீரத்தமிழர் போல் மிசையும் தாடியும்-தலைப்பாகையும்ஒப்பனைக் காட்சியும்-ஏறு போன்ற அவரது தோற்றமும்தமிழரிடம் சிறப்பான நம்பிக்கையை ஏற்படுத்தியது உண்மை.
ஆனால், 96). Jgll நெற்றியும், மார்பகப்பூணுTலும் அவருடைய வேதாந்தப் பழக்கத்தையே காட்டியது. இது அவரது பழக்க வழக்கம் என்பதில் யாரும் சினங்கொள்ள முடியாது. அது அவரது தனிப்பட்ட விருப்பம் என்பதும் மறுக்க (ԼplգեւIf755].
அவரது காலச்சூழல், அரசியல் நிலை, இவற்றால் ஏற்பட்ட இவரின் நோக்கும் போக்கும், ஏன் எப்படி என்பதல்ல எமது நோக்கம். சூழ்நிலைத் தாக்கம் எவ்வாறு இவரைப் பாதித்தன என்பதும் இங்கே கேள்வியல்ல. இங்கே முக்கிய கேள்வியே, அவரது ஆக்கங்களின்-பெரும்பாலான பாடல்களின் கருப்பொருள்களே கோவிற்பட்டி எட்டயபுரத்திலிருந்துபுதுச்சேரி வருவதற்கு முன்பும் பின்பும், அவரது படைப்புக்களின் பின்னணி மாறிவிடவில்லை.
அவர் விடுதலைப் புரட்சிப் பாடல்களை எழுதியதிலோ, ஒளிந்து புனைபெயரில் எழுதிய ஏடுகளினாலோ நாம் இந்தச் சிக்கலை எழுப்பவில்லை. பிரச்சனை எனப் பெரிதபடுத்த வில்லை. பன்மொழிப் புலவர் என்றும், இசை நுட்பம் தெரிந்தவர் என்றும், பலவகைப் பாவினத்தில் பாடியவர் என்றும் சொல்லப்பட்டவர். மிக இளவயதில் எப்படி அபூர்வமாக எழுதினார் என்பதிலும் மாற்றுக் கருத்துாைக்க முடியாது.
எனினும், தமிழைக் கற்று, தாய்மொழி தமிழல்ல என்று மூவாயிரம் ஆண்டுகளாக இன்று வரை சொல்லிக் கொண்டு வாழ்ந்துவரும் ஆரியத் தமிழராகப் பாரதியும் வாழ்ந்தவர் தான். எப்போதும் இருவகைக் கருத்தாளர்களாக உள்ளவர்கள் இந்த வெள்ளையின ஆரியப்பூரியர்கள். தமிழரை விடத் தமிழ்நாட்டுப் பார்ப்பார் தமிழைச் சிறப்பாகக் கற்றுத் தேறியவர்கள். எனினும் இவர்கள் தங்கனை, நாங்கள் தமிழரல்லர் எனச் சொல்வதில் வெட்கப்படுவதில்லை.
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா
என அதேகாலத்தில், தமிழ் நாட்டில் பாவலர் இராமலிங்கனார் பாடியது போலவும் புதுவைப் பாரதி பாடவில்லை.

Page 12
eK UY
புதுச்சேரியில அவர் அமைத்த கவிதாமண்டலமும் அந்தக் காலத்தில் தமிழ் எழுச்சியைத் தரவில்லை. தமிழ் முழக்கத்தையும் ஒலிக்கவில்லை.
"ஆரிய நாடெங்கள் நாடு” என ஆயிரமுறை பாடினார் சுப்பிரமணியர். எங்கள் இந்துஸ்தானம் ஏற்றம் பெறுக என்றார். ஆனால் ஐந்தாறு முறையே தமிழ்-செந்தமிழ் என ஓசை எழுப்பினார். என்று பிறந்தவள் தமிழ் என்று வரலாறு சொல்ல முடியாமல் பிதற்றினார்.
ஒன்றுக்கு ஒன்பதாக உயர்த்தியே வடமொழியைப் புகழ்ந்து பாடியது பார்ப்பாரை ஒன்று படுத்தும் நோக்கமே தவிர, தமிழரை ஒன்றுபடுத்த அல்ல.
பார்ப்பாரை ஐயரென்ற காலமும் போச்சே, வெள்ளைப் பறங்கியரைத் துரை என்ற காலமும் போச்சே-எனப்பாடியது விடுதலை முழக்கமல்ல. ஐயரெல்லாம் அரசியல்வாதி ஆகவேண்டும் என்பது தான் அவரது ஆவல். வெள்ளையண் பதவி எல்லாம் ஆரியக் கொள்ளையரிடம் வந்துவிட வேண்டும் என்பது தான் உள் ஆசை. இவரைச் சுற்றி இருந்தவர்கள் புரட்சித் தோழர்களே! இவர்களும் ஆரியவீரர்கள் தான். சுப்பிரமணிய சிவா-வாஞ்சிநாதன் மற்றும் சிலர்.
வடஇந்திய புராண, இதிகாசங்களையும், தமிழரல்லா தவரின் வரலாறுகளையும் தமிழில் LJT9ф தமிழைக் கெடுத்தார். பாஞ்சாலி சபதம், கண்ணன் பாடல்கள் எல்லாம் அப்படிப்பட்ட குப்பைகளே. தொன்மக் கதைகளும், வரலாற்று நாயகர்களும், கற்பனைகளும் வியக்கத்தக்க புரட்டு.
புரட்சிகளை ஒருபக்கம் பாடிக்கொண்டே, வெள்ளையர் எதிர்ப்பை வளர்த்து, தமிழினத்தை ஒன்றுபட அறைகூவி, மறைமுகச் சதிகளைச் செய்ய இவர் கருவியாகப் பயன் படுத்தப்பட்டதும், ஆரிய இனத்தாக்கமும், ஆதிக்கமும் இவரை முன்னணிக்குத் தள்ளின. பிரங்சுக்காரரிடம் தஞ்சம் பெற்று வாழ்ந்தபோது பிரஞ்சு மக்களைப் பாடியதும் இங்கு குறிப் பிடத்தக்கது.
செந்தமிழ் நாடெனும் போதினிலே
இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே- என தமிழனுக்காகவோ, தமிழின ஒற்றுமைக்காகப் பாடியதாகவேர் கொள்ளமுடியாது. தமிழனை ஏமாற்றவே பாடப்பட்டது.
நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் எனப் LITլգԱlՖl, தமிழறிந்த பாரதி அக்காவியத்தைச் சுவைத்தின்புற்ற வகையில் தான்.
நேதாசி இயக்கத்தையும்-இது கல்கத்தா இணைப்பில்

幻1
தேசியத் தமிழர் புரட்சியாக மிளிர்வதையும் பாரதி கண்டு கொள்ளவில்லை. தமிழேடுகள் யாவும் ஆரியர் ஆதிக்கத்திலே இருந்தன. தினமணி-சுதேசமித்திரன்-இந்து போன்றவை தமிழாக இருந்தாலும் பாரதியின் பகற்கனவுக்கே பக்கபலம் பாடின. அவர் இட்டுக் கட்டிய கதைகளும், பாடல்களும, புதுக்கவிதை களும் தங்களினம் சுவைப்பதற்காகவே.
பாரதி காலத்தில் பாரதி பாதிப்புகள் பாரதியிடம் இல்லை. பாரதமக்களின் பேராதிக்கச் சாதியான ஆரியர்களின் பாதிப்பே அவரை இயங்கச் செய்தது. பின்னணியில் பலர் அவரை இயக்கினார்கள். அதற்கேற்றவாறு தாளம் போட்டு ஆடிப்பாடி மகிழ்வுடன் திகழ்ந்தார்.
இத்தகைய தாக்கமே இவரது படைப்புகளுக்கு வேராக இருந்தது. ஒரு பக்கம் இவரது புரட்சி, மறுபக்கம சமுகப் புரட்டு இவரை உருவாக்கி கரு சமைத்துக் கொண்டது. தேசிய பக்தராகத் தம்மை உருவகித்துக் கொண்டு, தமக்காகவும் தம் இனத்துக்காகவும் எழுதியதுடன், தாமும் ஏடு நடாத்தினார். தமது சமுகத் தாள்களிலும், அரசியல் எழுதினார். இவரால் படித்த சமுதாயமான இவரது இனமே எழுச்சி பெற்று, சுதந்திர போராட்ட காலத்தில், வெள்ளையனிடம் இருந்து நாட்டை மீட்டு, தமிழரைப் புறந்தள்ளி விட்டு, தாங்களே அரசபதவி களைக் கைப்பற்றிக் கொள்ளவேண்டும் எனத் திட்டமிட்டு, 1947ல் நிறைவேறியது.
யார்யாரையோ புகழ்ந்தும் போற்றியும் பாடினார். ஆரிய இராமனைத் தெய்வமாகப் பாடிய வாய், இராவணனைப் பாடவில்லை. பாடியதும் அவனைப் பழித்தே. இது ஒன்றே இவர் தமிழர் வேடம் போட்ட ஆரியக் கூத்தாடி என்று அன்று தமிழின முன்னோடிகளைக் கருத வைத்தது.
வரலாறு தெரியாமல் பொய்களைப் புகழ்ந்தவரே இந்தச் சுப்பிரமணயர். சிங்களம்-புட்பகம்-சாவகம் என்றார். யாழ்ப்பாணம் இவர் கண்ணுக்குத் தெரியவில்லை. ஈழம் என்பதையும் படித்தறியாதவரா இவர்? சிங்களவன் வாழும் நாடு எனப் பிதற்றியது, சிலோனையா? இலங்கையையா?
எத்தனை எத்தனை ஆண் பெண் கடவுள்கள் இவரது கற்பனைகளில் உருவாக்கப்பட்டன என அறியாத மக்கள், படிப்பறிவற்ற மக்கள் அன்று தமிழ் நாட்டில் நிறைந்திருந்தனர். ஆனால், ஈழத்தில் தமிழர்கள் படித்தவர்களாக இருந்தார்கள்.
என்று சுதந்திரம், என்று சுதந்திரம் என்று பாரதி கேட்டது, எப்போது பாாப்பார்கள் நாட்டை ஆள்வது என்ற போராசையில் தான். அவரது எழுத்திலும், சொல்லிலும்

Page 13
るる
இருந்தது புரட்டுத் தானே ஒழிய புரட்சி அல்ல. மறைந்து ஓடிப் புதுச்சேரியில் ஒளிந்து வாழ்ந்து, இப்படி நாடகமாடியவர்கள் அனைவரும் பார்ப்பன ஆரியர்களே தவிர தமிழரல்லர். ஆரிய வேதமும், வேதாந்தகிதமுமே எங்கள் தாரகமந்திரம் என்பது இவர்களுடைய உயிர்மூச்சு. யாகமும் யோகமும் எங்களது கலைகள் எனப் போதித்தார் சுப்பிரமணியர்
யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல் வள்ளுவன் போல் யாங்கணுமே கண்டதில்லை என்று சுப்பிரமணியர் பாடியது ஆரியக் கதை பாடிய கம்பனுக்கு முதன்மை தரவே. Elbu6 முதலாம் LLD, திருவள்ளுவரின் சிறப்புக்கு இரண்டாம் இடமே அவரால் தரமுடிந்தது. எல்லாம் கதைவிட்ட கதை வரலாறு. பெண்களை வீட்டில் பூட்டி வைக்காதீர் என்றது, பாாப்பனப் பெண்கள் வெளியே வந்து துமுக்கியைத் தூக்குவதற்கல்ல. படித்த பெண்களான அவரது இனம் ஆட்சியில் சமபங்கேற்கத் தூண்டத்தான். தமிழிச்சிகளைப் பார்த்து அவர் அழைக்கவில்லை.
வந்தேமாதரம் வந்தேமாதரம் என்ற வடமொழிச் சொல்லை அதிகமதிகம் பயன்படுத்தினார். ஆரியப் பழக்க வழக்கங்கள் படைப்புகளில் தலைகாட்டின. இந்துமதம், இந்துவேதம், இந்துப்புராணங்களைப் போற்றி, கீர்த்தனைகளும் பசனைப் பாடல்களும் பாடியவர் தான் இந்த வரகவி.
சமயவழக்கும், ஆரியகலாச்சாரப் புழக்கமும் இவரது படைப்புகளில் நீரோட்டமாக ஓடின. அந்நாளில் தமிழையழிக்க ஆரியர் புகுத்திய மணிப்பிரவாள நடையில், தமிழை உரைநடைப் பிழையில் எழுதினார். இவ்வாறு சுப்பிரமணியர் ஆரிய பார்ப்பனப் பாசத்தால் தமிழரை ஏமாற்ற தன் புலமையால் போலி முகம் காட்டியவராவார்.
மலேசியாவிலிருந்து-துருவன்.
அன்புள்ளவர்களே!
பிறந்தநாள், திருமணம், பூப்புனிதம் எதற்கான அழைப்பிதழ் என்றாலும், தமிழில் இல்லாமல் வேற்றுமொழியில் அழைத்தால், அல்லது கலப்பில் அழைத்தால், அவர்களை வாழ்த்துவதற்குப் பதிலாக, திட்டுவது என்று இன்றுமுதல் உறுதி கொள்ளுங்கள். உங்கள் திட்டுக்குப் பயந்தாவது தமிழன் தமிழனாக இருப்பானா பார்ப்போம்.
தமிழால் தமிழுக்குள் தமிழனைத் தேடுவோம்

அண்ணாவின் வழி நின்று
கம்பரசம் காளைமாடு காணாமல் போனதால் கலங்கிய கண்ணன் அதைத் தேடச் சொல்கிறான் வேலனிடம். காளையின் அடையாளம் கூறுகிறான் கண்ணன். என் காளை கறுப்பு-- g fl. வளைந்த கொம்புடையது--ஒகோ நடுத்தர உயரம்-அப்படியா! யாராவது குழந்தை கூடப்பிடித்துவிடலாம் உதைக்காதுமுட்டாது நாலே பல்-போதும் சார் அடையாளம் சொன்னது, எப்படியும் கண்டுபிடித்து விடுகிறேன். எப்படியும் கண்டு பிடித்துவிடு வேலன், மற்றொரு அடையாளம் கூறமறந்துவிட்டேன், முக்குத் துவாரம் அகன்று இருக்கும், வால் மயிர் கத்தையாக இருக்கும். என்ன சார்! முக்குத் துவாரத்தையும் வால் மயிரையும் கூடவா வர்ணிக்கவேண்டும், முன்னர் சொன்ன அடையாளங்களே போதும். என்னமோ தம்பி எனக்கு அந்தக் காளை மீது கொள்ளை ஆசை, அது தான் அடையாளம் ஒன்றையும் விடாமல் சொல்கிறேன். வண்டியில் பூட்டினால் ஒரு மைல் ஒட நுரை தள்ளும், முதுகில் தட்டினால் பெருநடையாய்ப் போகும். சரியாய்ப் போச்சு, என்ன சார் நான் வண்டியில்பூட்டி ஒட்டியா கண்டு பிடிப்பது.
வேலன் என்ன நினைத்திருப்பான் கண்ணனைப் பற்றி, இவனுக்கு மாடு கெட்டதுடன் மதியும் கெட்டுப் போச்சு என்று தானே
காளையைப் பற்றி இப்படிக் கூறினவனையே, இப்படிக் கேலி செய்வதாயின், தன் காதலியைப் பற்றி இதைவிட மோசமாக, ஆபாச அங்க அடையாளங்களை கூறும் ஆடவனை என்ன கூறுவது? அவ்விதம் கவிதை பாடிய கவியைப் பற்றி என்ன சொல்வது? காளையின் வால் மயிர் பற்றிக் கூறியதைக் கேட்டு வேலன் விலாநோகச் சிரித்திருப்பான். ஆனால் சொற்செல்வன் அனுமான் பக்தி பூர்வமாக நின்று, இராமன் சீதாபிராட்டியாரைப் பற்றிக் கூறிய வர்ணனைகளைக் கேட்டு இன்புறுகிறான். அவதாரபருஷர்களின்(அவ)லட்சணம்.
அனுமனே! கேள், என்று தொடங்கிய இராமர் தன் மனைவியின் அங்கங்களைப் பற்றி சகலமும் கூறிய பின்தான் நிறுத்தகிறார். முப்பத்துநான்கு பாடல்கள் ஐயா! இதற்கு. தன் மனைவியின் அங்கங்களை அது அப்படி இருக்கும், இது

Page 14
%갔4
இந்தளவு இருக்கும், எது பளபளவென்று இருக்கும், என்று அனுமனிடம் கூறுகின்றார். இராமனின் மனைவி மகாலட்சுமியின் திருஅவதாரம், பொன்னவிர் மேனியாள், பூவிரி மணத்தினள், புன்னகை முகத்தினள், அழகொழுகு கண்ணினள் என்று கூறலாம். மற்றப் புலவர்கள் அப்படித்தான் உரைப்பர். தங்கை எனினும் கொங்கை பற்றி மறைக்க மறுக்கும் கம்பர், அப்படிக் கூறுவது தமது திறமைக்குத் தகாது என்று, சீதையின் அழகை விளக்க, எல்லா அங்கங்களையும் வருணிக்கிறார். சீதையின் மறைவிடங்களைப் பற்றி எல்லாம் இராமர் அனுமனிடம் கூறி, இவ்விதமானவள் என் சீதை, நீ அவள் இருக்குமிடத்தைத் தெரிந்து வா, என்று கூறியதாகச் சொல்லும் கவியின் பிரதிநிதிகளைக் கேட்கிறேன், இராமன் கூறியபடி சீதையின் மறை உறுப்புக்களான, தொடை பெண்குறி, இடைவயிறு, நாபி, நாபிக்கு மேல் மயிரொழுங்கு, வயிற்று இரேகை, தனங்கள் (முலைகள்) ஆகியவற்றை அனுமன் அடையாளம் காண்பதெப்படி? ஒவ்வொரு பெண்ணையும் துகிலுரிந்தல்லவா தேடவேண்டும். அப்படித் தேடினால் உயிருடன் திரும்புமா அந்தக் குரங்கு?
ஒரு புலவனின் திறமையை விளக்க ஒரு பாவை நிர்வாணமாக்கப்படுவதா? அதுவும் மனைவியை நிர்வாணமாக்க கணவன் முனைவதா? அதிலும் நண்பன் முன்பா? அதிலும் அனுமன் என்னும் நித்திய பிரமச்சாரி முன்பா? வரைமுறைமறைதிரை ஒன்றும் தேவையில்லையா? ஆம், கம்பருக்குப் பெண்கள் 8Flbubg5LDIT85 எழுதும்போது எந்த நீதியும் குறுக்கிடாது. போகி, காமுகர். இவர் கடவுள் கதை ஏன் எழுதினார். கன்னியின் முத்தம், கலவிக்கடல் என்று ஏதாவது எழுதியிருக்கலாமே? எந்த இலக்கியத்தில் எந்தரசம் இருக்கவேண்டும் என்ற முறையில்லையா?
வாராழி கலசக் கொங்கை
வஞ்சிபோல் மருங்குவாள் தன் தாராழிக் கலைசார் அல்குல்
தடங்கடற்கு உவமை தக்கோய் பாராழி பிடரில் தங்கும் பாந்தழும்
பணிவென் றோங்கும் ஓராழித் தேரும் கண்ட உனக்கு
நான் உரைப்பதென்ன? இராமபிரான் அனுமனிடம் கூறுகிறார், சீதையினுடைய கொங்கைகள் கலசம் போன்றவை, அல்குல் (பெண்குறி) அகன்ற கடல் போன்றது. பாம்பின் படத்தை விடப் பெரிது

525
தேர்த்தட்டைப் போன்று இருக்கும் என்று. உலகிலே உள்ள எந்தப் பித்தனும், தன் மனைவியன் கொங்கைகள்-அல்குல் பற்றி வேறொருவனிடம் கூறமாட்டான். அப்படிப்பட்ட கதாநாய கனை எந்த நாட்டு இலக்கியத்திலும் எந்தக் கவியும் பாடவில்லை. கோமர் முதல் பெர்னாட்சா வரை பாருங்கள், மதனகாமராசன் கதை முதல் மன்மதவிசயம் வரை காமக் கூத்து ஏடுகளையம் பாருங்கள், எதிலேயும் எண் மனைவியின் மேலிடமும் கீழிடமும் இப்படி இருக்கும் என்று பிறரிடம் கூறிய பேயன் எவனுமில்லை. ஆனால், இராமபிரான் கூறுகிறார். அந்தப் பரிதாபத்திற்குரிய அனுமனின்பாடு எவ்வளவு திண்டாட்மாக இருந்திருக்கும். இந்த இலட்சணங்கள் பொருந்தியவளைக் கண்டுபிடி என்று, கடவுள் அவதாரம் கட்டளையிடுகிறதே, குரங்குக்கு கோமளவல்லிகளின் ஆடைக்குள் இருப்பதைக் கண்டுபிடி என்று கோதண்டராமன் கூறுவாரா? அதையேனும் எண்ணிப்பார்த்தானா? கம்பன்.
இதுமட்டுமா? சீதையின் தனங்கள், இப்படிப்பட்டதா? அப்படிப்பட்டதா? உவமை தேடுகிறானாம் இராமன் இதில் கம்பர் தன் முழுத்திறனையும் காட்டியுள்ளார்.
செப்பெண்பன் கலசம் என்பன்
செவ்விள நீரும் நேர்வன் துப்பொன்று திரள்கு தென்பன்
சொல்லுவன் தும்பிக் கொம்பை தப்பின்றிப் பகலின் வந்த
சக்கரவாகம் என்பன் ஒப்பொன்றும் உலகில் காணேன்
பல நினைத்து உலைவன் இன்னும். என் மனைவியின் கொங்கைகளுக்கு உவமை தேடுகிறேன், உலகில் ஒரு பொருளும் அவைகட்கு இணையாக இல்லை. செம்பா? கலசமா? செவ்விளநீரா? யானைக்கொம்பா? சக்கர வாகமா? அறியேன் என்கிறார்.(சக்கரவாகம் இரவில் துணையை ப்பிரிந்தால் உயிர் வாழாத ஒரு பறவை. அது எப்படி கொங்கைகளுக்கு உவமை என்பது தெரியவில்லை)
ஆண்டவன் இப்படிக் கூறுகிறார். ஆண்டவனுக்கு ஏற்ற பக்தன். பக்தனுக்கேற்ற ஆண்டவன். இதுதானா? இராமாயணம் தோழர்களே! இதைப் பருகுவோர் பரமபதம் போவார்களாம்.
புலவர் சிலர், கம்பர் குறளின் அருமை உணர்ந்து, தன் னுடைய காதையிலே, பல இடங்களில் குறளைப் புகுத்தி யுள்ளார். தங்கத்தட்டிலே வைரமணி இழைத்தது போல், என்று

Page 15
கூறுக் களித்து, பிறர் களிப்புற கம்பராமாயணத்திலே எத்தனை இடங்கயில், குறள் இருக்கக் காண்கிறோம் என்று ஆராய்ச்சி செய்து அட்டவணை தயாரிப்பர். அவர்கட்குச் சிறு யோசனை. கம்பருக்குக் குறளிடம் மதிப்புப் பெரிதா? மங்கையரின் கொங்கைகளில் மயக்கம் பெரிதா? என்பதைக் காண கம்பர் எத்தனை இடங்களில் அந்த மேட்டினைப் பாடி யுள்ளார் எனக் கணக்கெடுத்து ஒப்பிட்டுப் பார்த்துச் சொல்ல வேண்டுகிறேன்.
மலையையும் மலைச் சிகரத்தையும் கண்டு பாடிய புலவர்கள் பலர். ஆனால் அவற்றை மங்கையரின் உறுப்புக ளுடன் ஒப்பிட்டுப் பாடியவர் கம்பரன்றி வேறு யார் என்பதும் அவர்களின் ஆராய்ச்சிக்கு உரியது.
கம்பரசத்தைப் பார்த்த பிறகு, இதென்னப்பா புதிய தொல்லை, சித்திரவதை செய்யவேண்டாம் கொளுத்தித் தொலையுங்கள் என்று, மக்களின் மனதை மாற்றியமைக்க வேண்டுமென்பதில் அக்கறையுள்ள நண்பரொருவர் கூறினார். கம்பரசம் பருகிய பிறகு என் நிலையும் அதுதான் என்பதை அவர் அறியார். இலக்கியம் எழுச்சிக்குத் தேவைதான், ஆனால் பருகிடும் இனத்தையே இளித்தவாயராக்கி, ஏய்த்துப் பிழைக்கும் கூட்டத்தின், பாதந்தாங்கிகளாக்கிடவன்றோ அந்த இலக்கியங்கள், இதிகாசாதிகள் பயன்படுகின்றன. என்பது தான் என் மனக்குறை.
இயற்கையின் அழகையும், இளமங்கையின் எழிலையும் கவிகள் தீட்டிக்காட்டும் போது களிப்புண்டாகாமலா இருக்கும். நான் என்ன சிலையா? சர்வ உணர்ச்சியும் உள்ளவன் தானே! ஆனால், ரசமான நிலை இனத்தைக் கொலை செய்கிறது என்பது என் கவலை. அதனால் கம்பரசம் தயாரிக்கிறேன். கொஞ்சம் காரசாரமாக இருக்கும் கலப்பு முறையின் விசேடத்தால்.
காமச்சுவையைக் கரை கண்டவர் கம்பர். ஆற்றோர த்தில் உலவிக்கொண்டு, அரைநிர்வான மங்கையரைக் கண்டு களித்து, ஆனந்த ஊற்று எழ, அந்தத் துணையோடு, இணை யில்லா இந்த இக இன்பக் காட்சிகளைப் பாடினாரா? கம்பர் என்று அவருடைய பாடல்களைப் பார்க்கும்போது தோன்றுகிறது. எதோ ஒரு மங்கையர் நீராடும் இடத்தருகே தான் கம்பா தன் காலத்தைக் கழித்தார் என்பதில் சந்தேக மில்லை. ஆனால் அவர் கண்டு களித்தது அரை நிாவாணமா? முழு நிர்வாணமா என்பதில் தான் சந்தேகம்

24 f
அவ்வளவு சுகியாகவும், அனுபவசாலியாகவும் கம்பர் இருந்திரா விட்டால, மற்றவர்கள் மறைவாகக் கூறிய மறைவிடங்களை, கம்பர் மட்டும் பூரிப்போடு படம் பிடித்து,கலைநயமாக ஒளிவிட, கடவுள் காதையிலே காட்டிட முன்வந்திருப்பாரா?
பாலில்லாத தனத்தைப் பாலகன் பற்றி இழுத்துப் பால் வரப் பெறாததால், தாய் முகம் நோக்கி அழ, மன்னவா நான் உன் முகம் நோக்கி வந்தேன், என்று வறுமையால் புலவர்கள் பாடியதாகப் படித்ததுண்டு. கம்பருக்கும் வறுமைக்கும் தொடர்பில்லை, அவருக்கும் வனிதையருக்கும் நெருங்கிய தொடர்புண்டு என்பதை காவியத்திலே கொட்டியிருக்கிறார். அவர் விளக்கியிருக்கும் அங்க லட்சணங்கள் முழுவதும் தெரிந்தால் மூச்சுத் திணறிவிடும் நமக்கு.
பக்தன் எந்தக் கோலத்திலே என்னைக் காண விரும்புகிறானோ அந்தக் கோலத்திலே காட்சி தருவேன் என்கிறதாம் கீதை. அதன்படி தான் போலும், பக்தர்கள் ஆண்டவனை நங்கை உருவிலிருந்து நாய் உரு வரை சித்தரித்துள்ளார்கள். நாத்திகா நாக்கறுப்பேன் ஆண்டவனையா நாய் என்கிறாய் என்று என்மீது கோபம் கொள்ளாதீர்கள். மகாவிட்ணு மோகினி உருவம் கொண்டதிலிருந்து, வைரவர் நாயாக வந்தது வரை, எல்லாம் ஆண்டவ சொருபம் என்கிறார்களே, அதைச் சொன்னேன். பக்தர்களின் மனோபாவம் இதுவெனில், கம்பரின் மனோபாவமோ எந்தப் பொருளைக் கண்டாலும், குன்றோ, குருத்தோ, இயற்கைக் காட்சியோ எதுவானாலும, மங்கையரின் அங்கங்களை நினைவூட்டும் நிலை பெறுகிறார். யோசித்துப் பாருங்கள் எப்பொருளும் எம்பிரானாகத் தெரிவது பக்தி என்றால், எந்தப் பொருளும் மங்கையரின் அங்கமாகத் தோன்றுவது, காமம்-பெண்பித்துவிரகபோதை-மையல் என்றுதானே சொல்ல வேண்டும். மலையைக் கண்டால் மங்கையரின் கொங்கையும, மலைச் சிகரம் கொங்கைக் காம்புமாகவா ஞாபகம் வரவேண்டும் கவிக்கு. மலைச்சிகரத்தில் வழியும் மழைத்துளி காம்பின் வியர்வையா? விந்தையல்லவா இது. இத்தகைய நினைப்பை படித்தாலும், படிக்கப் பக்கம் நின்று கேட்டாலும் முக்தி தரும் புண்ய கதையிலா இணைத்துத் தருவது. போ! போ! கம்பர் எங்கே அப்படிச் சொன்னார் என்று கேட்கிறீர்களா? "பரவை அல்குல் ஒளிபுறத்தளிப்ப" என்ற பாடலை நான் காட்டித் தந்த பின்புமா? இவை மடடுமல்ல, திரைமறைவில் நடைபெறும் நிகழ்ச்சிகளைக்கூட தேனொழுகும் பாடல்களில் தந்திருக்கிறார்:

Page 16
7Ky QV
அற்தப் பாடல்களையும் அம்பலத்திற்குக் கொண்டுவரத்தான் போகிறேன்.
பலப்பல (பார்ப்பாரப்) பத்திரிகைக்காரர்கள், கம்பர் கவி இன்பம், கம்பச்சித்திரம், கம்பர் தரும் காட்சி என்றெல்லாம் அவர்கள் மூடிப்போட்டு வைத்திருக்கும் பாடல்களை முச் சந்திக்குக் கொண்டுவந்து நிறுத்துகிறேன: பிறகு கூறுங்கள்! கம்பனின் காவியத்தைப் பற்றி.
இராமர் அவதாரபுருசர். ஆகவே அவர் கதையை எழுது கிறேன் என்று தொடங்குகிறார் கம்பர். அப்படிப்பட்ட அவதாரத்தை கம்பர் எப்படித் திட்டிக் காட்டுகிறாரோ, அதற்கு ஏற்பத்தானே மக்களின் மனம் தூய்மையடைவதோ, மாசடைவதோ அமையமுடியும்.
உப்பில்லாப் பண்டமும், உப்பு அளவுக்கு மீறிய பண்டமும் இரண்டும் குப்பையில் g5/1660. D6öldu á&lÖ போக்கும் மருந்து, பிறவிப்பிணி தீர்க்கும் மருந்து, புண்யலோகத்துக்குச் செல்லும் பாதை, எண்றெல்லாம் கூறப்படும் இராமகாதையிலே, உத்தம புத்திரரின் உரையாடல் காட்டும் காம உணர்ச்சியும் கடவுள்தன்மையா காட்டுகிறது. இராமனின் வாயுரை என்று கம்பர் கூறுகிறபடி பார்த்தால், என்ன உணர்ச்சி உண்டாகும் என்று யோசியுங்கள்.
காணகம் (காடு) புகுந்த காகுத்தன் தன்காதலிக்கு, கிளியையும்.குயிலையும், மானையும்-மயிலையும் காட்டி, மகிழ்ந்தால் சரி. அவ்வேளை அனபின் மிகுதியால், ஆருயிரே! அஞ்சுகமே! சானகி வைதேகி என்று கூறி மகிழ்ந்திருக்கலாம். ஆனால் காட்டுவளம் காட்டுகையில் இராமர் தேவியை வர்ணித்ததாகக் கூறும் பாடலைப் பார்த்தால், காட்டுவளம் காட்டவில்லை காதலியின் கொங்கை வளம் காட்டுவதில் ஈடபட்டிருந்தார் என்பது விளங்கும்
வடங்கொள் பூண்முலை LDLLDu (86) என்கிறார் சானகியை. ஆரமாகிய அணியை அணிந்த முலைகளையுடைய மயில் போன்றவளே! இந்தத் தெய்வத் திருக்கதையைப் பிரசங்கம் செய்யும் பரமாத்மாக்கள், தொண்டையைக் கனைத்துக் கொண்டு, கண்களில் ஒளிவீச, எப்பக்கத்தில் ஆதரவற்ற அணங்கு இருக்கிறாளோ, அப்பக்கம் பார்த்து

சீதா! சானகி! அழகிய ஆபரணங்கள் புரளுகின்ற முலைகளை உடையவளே! என்று தசரதத் திருக்குமாரன் கூறினார் என்று அழகுறக் கூறுவார்.
அர்த்தராத்திரி-அரைத்துக்கம்-மேலாடைஒத்துழையாமை, சித்திரகூடப் பருவத்திலே இராமன் கண்டதைவிட, கவர்ச்சி யாய்க் காணுவார் இந்தப் பிரசங்கியார். இதற்குப் பயன்படவே இப்பாடல். பகவத்நாமாவளிக்கோ! பக்திப் பிரவாகத்துக்கோ அல்ல. எங்கிருந்து பக்தி பிறக்கும் பகவான் பூண்முலை பற்றித் தன் மனைவியிடம் பேசும் பாடலைப் படித்தால். அத்தோடு விட்டாரா இராமர்? அவர் விட்டாலும் கம்பர் விடாரே! அந்த மேலிடத்தைப் பற்றி குழைந்து குழைந்து பொழிகிறார்.
இழைத்த நூலிணை மணிக்குடம்
சுமக்கின்ற தென்னக் குவித்த நுண்ணிடைக் குவியிள
வளமுலைக் கொம்பே ஒரு இழை நூலானது இரண்டு கும்பங்களைச் சுமப்பது போல், தளரும் மெல்லிய இடையிலே, குவிந்துள்ள இளமையான அழகிய முலைகளைக் கொண்ட பூங்கொம்பு போன்றவளே! இதுதான் நாயகன் நாயகியுடன் பேசிய பேச்சு. இதைப் படித்து பக்தி மார்க்கம் தேடிட, பண்பாடு உணர்ந்து கம்பர் பாடியது.
குவியிளவளமுலை- குவிந்து திரண்டிருந்தால் போதாது. இளம் முலையாகவும் இருக்கவேண்டும், வளமானதாகவும் இருக்கவேண்டும். காமக் கனிரசக் கலச இலக்கணத்தைக் கற்றுக்கொள்ளவும், கற்றவர் பரீட்சிக்கவும், அந்த வாய்ப்புப் பெறாதார் அக்கம் பக்கம் பார்த்துப் பெருமூச்செறிங்வும் பாடம் கிடைக்கும் ழி, பூக்தி போதனையா கிடைக்கும். எவ்வளவு போகியாக இருந்தால் குவி இள வள முலை என்று வருணிக்க முடியும். இந்தளவு சொன்னால் போதுமா? போதாது என்று கருதிய கம்பர், இராமர் மூலம் அந்த மேலிடத்தை மேலும் விளக்குகிறார்.
செம்பொனாற் செய்து குலிகமிட்டெழுதிய செப்போர் கொம்பர் தாங்கியதெனப் பொலிவன முலைக்கொடியே. நிறம், உரு, அமைப்பு மூன்றின் விளக்கம் இது. தங்கம் போல் தகதகவென்றிருக்கும் நிறத்தில், சிமிழ் போல் குவிந்திருக்கும் உருவத்தில், கொம்பில் தொங்கும் கனிபோல் இருக்கும் அமைப்பில். அத்தோடு தெய்யில் எழுதப்பட்டிருக்கும் (சந்தணக் குங்குமச் சாந்தினால் மார்பில் கோலமிடல்தொய்யில்) அதனால் அந்த முலைகள் அழகாக இருக்கும்.

Page 17
5ტ
பாற்கடலில் பள்ளிகொண்ட பரந்தாமன் அவதரித்தது துஷ்ட நிக்கிரகத்துக்கா? (தீயரை அழித்தல்) பாவையரின் முலைகளுக்கு இலக்கணம’ கூறவா?
எண்ணிப் பாருங்கள் தோழாகளே! இந்த ராமாயணத்தைப் பாடி தமிழனை உய்யச் சொல்கிறான் பார்ப்பான். இப்படிப்பட்ட காமக்களஞ்சிய இராமாயணத்தில், தமிழரின் பண்பாடும் கலாச்சாரமும் தேடிக்கொண்டிருக்கும் மரமண்டைகளை என்னென்று சொல்வது தோழர்களே!
--தொடரும்
தேடக்கிடையாத சந்தர்ப்பம் தமிழார்வம் மிக்க அன்புத் தமிழ் நெஞ்சங்கள்ே! உங்களுக்காக ஒரு அரிய சந்தர்ப்பத்தை உருவாக்கித் தருகிறது கமலம். தவறவிடாதீர்கள்.
பொய்யாமொழி-தமிழ்மறை - தெய்வத்தமிழ் என்று உலகு போற்றும் திருக்குறளைப்படித்து இன்புறவும், உங்கள் தமிழறிவைப் பெருக்கிக் கொள்ளவும், நேரம் கிடைக்காமல் இருக்கிறீர்களா? அந்தக் கவலை இனி உங்களுக்கு வேண்டாம்.
கமலம் இசையுடன் பாடப்பட்ட திருக்குறளை ஒலியிழைகளில் (கசட்) வெளியிடுகிறது. நீங்களும் உங்கள் குடும்பத்தவரும் தொழிலாற்றிக்கொண்டோ, கார் ஒட்டிக்கொண்டோ குறளைக் கேட்கவும் கற்கவும் வாய்த்த அரிய சந்தர்ப்பம். தவறவிடாதீகள்
உங்கள் பிரதிகளுக்கு முத்திரை ஒட்டிய மடலுறையுடன் கமலத்துடன் தொடர்பு கொள்ளுங்கள்.
சிந்தனைக்கு
ஒருவர் - குட் மோர்கள் அண்ணை, ஆர்வயிற்றாலை போல
மற்றவர்- ஓம் தம்பி, வேலையாலை தான்.
முதலாமவர் - உரிலை ஒரே புறொப்பிளேமாம் எப்ப தான் தமிழிழம்
கிடைக்கப்போகுதோ
இரண்டாமவர் - நீங்களெல்லாம் எப்ப தமிழராய் மாறுகிறியளோ
அண்டைக்குத் தான் தமிழீழம் கிடைக்கும் தம்பி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

و" 2
தமிழகத்தில் ஒரு தலை மறைவான தமிழ் அழிப்பு
பார்ப்பாரப் பயல்களும், அதுகளுடன் கலந்த அயலகத்து நிலங்களுடையவும் கையில் தமிழகத்துச் ஒளிநாடகம் (திரைப்படம்)அகப்பட்டுக் கிடக்கிறது. அத்தான் என்ற 9905 தமிழ் (885 L இடத்தில், 566600 அண்ணா(ஏன்னா)என்கிறாள் பார்ப்பாரப் பத்தினி. ஒளிநாடகத்துறையில், தமிழ் இல்லை. தெலுங்கு-இந்திமலையாளம்-ஆங்கிலம் எல்லாம் கலந்து குழம்பி, தமிழல்லாத கொச்சை மொழிகள் தமிழாகித் தமிழனிடம் வந்து கொண்டிருக்கின்றன.
கிராமிய வழக்கு மாதிரி, " கம்மனாட்டி குட்டியை இஸ்துக்கிட்டுப் போயிட்டானு" தமிழைக் கெடுக்க இப்படி ஒரு வழி ஒளிநாடகத்துள்
வாயைப்பயம் தின்கிறவனும், பட்சணம் பட்சிக்கிறவனும் ஒருபுறம் தமிழைக் கெடுக்கிறான்.
வரதட்சினை வாங்கிக்காமலே உன்னைப் பண்ணிக்க பையன் ரெடிம்பான்.--சிவசங்கரி
வாக் போயிட்டு வந்துண்டு இருந்தப்போ, ஆபீஸ்லேயிருந்து சாரும் திரும்பிட்டு இருந்தா.
--சிவசங்கரி
ஆஸ்தியரம் ஒண்டி தான் தெரியும் ஆல்ஜிப்றாண்னா பேதி போறது. ரெயில்வேயில தானே பொன்மலைல தானே எட்கிளார்க்கா இருக்கான் --சுஜாதா r ஏங்க நாப்பத்தெட்டு செகண்ட் ஆயிடுத்தே, என்று தன் வாட்சைப் பார்த்துச் சொல்லி- இதோ பார்ரா உன் கர்ல் ஃபிரண்ட், என்னடி நீ எச்சுமி பெண்தானே! ra சுஜாதா
இப்படி எழுதுகிற கதாசிாயர்கள் ஒருபுறம், என்ன
வெல்லாமோ குப்பைகளைக் கலந்து, தமிழால் கதை எழுதுகிற மாதிரி தமிழைக் கெடுக்க என்ன தேவை என்று தெரிந்து எழுதுகிறான். என்ன தேவை என்று எண்ணி எழுதாமல், எப்படி எழுதினால் எடுபடும் என்று, தொடாத இடமெல்லாம் தொட்டுப் பார்க்கவிட்டு, அதனூடாகத் தமிழைக் கெடுக்கிறான்
நறுந்தமிழ் மு.வ வையும் கலைஞரையும், விடவா, இவர்கள் சுவைபட எழுதிவிட்டார்கள்?
கொஞ்சக் காலமாகத் தமிழகத்தில் தமிழுணர்வு பெருகி வருகிறது. அதைத் தடை செய்ய வேண்டுமல்லவா? தமிழனின்

Page 18
یکی (ی
ஒளிநாடகத் தில் நடித்துத் தமிழால் வாழ்கிறவன், தமிழனைத் தமிழனாக இரு என்று நடியாமல், தமிழனை "இந்தியன்"ஆக இரு என்று நடித்துக்கெடுக்கிறான்.
இப்போது கொஞ்சம் தமிழ்ச் சங்கீதங் களும், தமிழில் பாடி, அநதப் பாட்டுப் பற்றி ஆங்கிலத்தில் பேசுதுகள். இன்னும் கொஞ்சம் வந்து போனதுகளின் "வாதாபி கணபதிம்" விடாமல் வைத்துக்கொண்டு தமிழை அழிக்குதுகள்
பதிப்பாலயங்கள், வெளியீட்டாலயங்களைப் பார்த்தால், தமிழில் தான் வெளியிடுகிறார்கள். ஆனால் தமிழே வெளியிடுவதில்லை. பசனா-பகவத்நாமா-சகஸ்ரநாமா வரிசையில் 25 விழுக் காடு. மர்மக்கொலை-காரிருளில் காரிகை இந்த வரிசையில் ஒரு 15 விழுக்காடு. சனரஞ்சகம் என்று சொல்லிக் கொண்டு, எழுதிக் கெடுக்கிற சுஜாதா போன்றவர்களின் கதைகள் 25 விழுக் காடு. தமிழனைத் தள்ளி வீழ்த்தப் பயன்பட்ட இராமாயணம்-பாரதங்கள் பற்றி ஆய்வுகளும்-தெளிதேன்களும்-ரசங்களும் 15 விழுக்காடு. சோதிடம் கைரேகை சமையற்கலை வகையில் ஒரு 10 விழுக்காடு. மீதியில் என்னவெல்லாமோ வெளியிட்டு, 2-3 விழுக்காடு நல்ல தமிழ் நூல்கள் இருக்கும். இந்த மிகக் கொஞ்ச பழந்தமிழ் வெளியீடுகளும் தெரிந்தோ, தெரியாமலோ தமிழ் அழிப்பிற்கே துணையாகின்றன.
திருக்குறள்-சங்கத்தமிழ்-ஐம்பெருங் காப்பிய ங்கள். என்று எல்லா வகையான பண்டைத் தமிழ் நூல்களினதும் புதிய பதிப்புக்கள், இனிய தெளிந்த உரைகளுடன் அறிஞர்கள் வரைந்து கொடுக்க, அச்சுக் கோப்பவரின் கவனயீனத்தால், அருங்சொல் அறிவு போதாமையால், இலக்கியப் பயிற்சி போதாமையால், அறுவைக்குட்பட்டு, சொற்கள் உரிய வடிவம் மாறி வருகின்றன.
உதாரணம்- நனி-கணி எந்த இலக்கியப் பதிப்ப்ை பார்த்தாலும் இந்தப் பிழைகள் காணப்படுகின்றன. தமிழைக் காக்கப் புறப்படுகிறோம் என்று, கூவிக் கொண்டு உலகம் சுற்றும் தமிழகத்து அறிஞர்கள் வீட்டுக்குள் தமிழ் அழிவதை காணாமல் இருக்கிறார்கள். யாரும் இதைக் கவனித்ததாகத் தெரியவில்லை. ஆகக் குறைந்தது உரையாசிாயர்களாவது தங்கள் நூல்களில் பிழைகள் விளையாது பார்க்க்கூடாதா? எழுத்துப் பிழைகள் - சொற்பிழைகளை ஏற்படுத்தி- கருத்து மாறி மூலத்தையே ஐயுற வைத்துவிடும். முன்னரே இப்படித்தான் தொல்காப்பியம் வரை எழுத்தை மாற்றி மூலம் கெடுக்கப்பட்டிருக்கிறது. இதனால்

யாருமறியாமல் 25.50 ஆண்டுகளின் தமிழின் தூய்மை கெடுக்கப்பட்டுவிடும்.
மு.வ விலிருந்து புலியூரான்-சிலம்பொலி அனைவரின் படைப்பகளிலும், அச்சுப் பிழைகள் என்கண்ணில் படுகின்றன. உரையில் பிழை இருந்தால் ஆபத்தில்லை. மூலத்தில் பிழை ஏற்படுவது ஆபத்து. பார்ப்பாரக் கத்தரிக்கோலும் தையலூசியும்
ஏற்கனவே, வெட்டும் ஒட்டும் போட்ட தொல்காப்பியப் பெருநூலில், புதிதாக அச்சுப்பிழையும் நுழைந்தால் தமிழின் கதி என்ன?
அச்சுக் கோர்ப்பவர் அருந்தமிழ்ச் சொற்கள்
தெரிந்தவராக இருக்கமுடியாது. இருக்கவும் வேண்டியதில்லை. எனவே அப்பிழையை அவரால் கண்டு கொள்ள முடியாது. இதனால் பண்டைத் தமிழ் நூல்கள் மூலம் மாறுகிள்றன என்பதைத் தமிழறிஞர்கள் புரிந்து கொண்டு, தமிழக அரசின், தமிழ்த்துறை அமைச்சர் தமிழ்க்குடிமகனின் கவனத்திற்குக் கொண்டு வருக!
எழுத்துப் பிழைகளுடன் இலக்கிய நூல் களை வெளியிடும் அரச-தனியார் நிறுவனங்கள் தண்டிக்கப்படல் வேண்டும் எனச் சட்டம் இயற்றல் வேண்டும்.
வெளியாகும் இலக்கிய நூல்களைச் சரி பார்க்க, தகுதி வாய்ந்த அறிஞர் அமைப்பு அரசால் அமைக்கப்படல் வேண்டும்.
இதுவரை வெளிவந்த இலக்கியநூல்களும் சரிபார்க்கப்பட்டு பிழைகள் உள்ளவை விற்பனை யில் இருந்து அப்புறப்படுத்தப் படல் வேணடும்
இன்றேல், அகத்தியனில் இருந்து, நேற்று வரை வாழ்ந்த வையாபுரி வரை, தமிழே என் உயிரே! என்றுகொண்டே, தமிழை ஆடறுத்தவன்- கள் போல், இன்னும் பின்னால் வரப்போகிறவர் களிடம் இருந்து தமிழைக் காப்பாற்றமுடியாமல் போய்விடும்- எச்சரிக்கிறேன்! என் அன்புத் தமிழகத்துத் தம்பிகளை!
3.
கமலத்தின் நோக்குடைய தூயதமிழ்ப் புரட்சிச் சிந்தனைகள்,: :பண்டை இலக்கியங்கள் மீதான புதிய ஆய்வுச் சிந்தனைகள், 23
23தமிழின் உண்மையான உயர்வினைக் காட்டும் கட்டுரைகள்,:
*குமுகாயப் புரட்டுகளுக்கு எதிரான எண்ணங்கள் வரவேற்கப்படும்: ; எழுதுங்கள். உலகம் பயன்பெற.
3.
:
ع
2
ع

Page 19
ஒளவைப்பாட்டியும்-அணுவிஞ்ஞானமும் திருவள்ளுவரைப் பாராட்டிப் பல புலவர்களும் பாடிய பாடல்கள் திருவள்ளுவமாலை என்ற பெயரில் தொகுக்கப் பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று இடைக்காடனார் பாடியது. கடுகைத் துளைத்து ஏழ் கடலைப் புகுத்தி குறுகத் தரித்த குறள். ------ என்ற பாடல். சின்னக் கடுகைத் துளைத்து, அதற்குள்ளே உலகை நிரப்பி யுள்ள ஏழுகடல்களையும் புகுத்தி வைத்தாற்போல், எழுசீர் கொண்ட குறள் வெண்பாக்கள் பெரும் பொருள் விரிவைக் கொண்டுள்ளன. என்பது பாடற் பொருள். கடுகு குறளுக்கு உவமானம். ஏழ்கடல் பொருள்விரிவுக்கு உவமானம்.
இந்த உவமை ஒளவையாருக்குப் பிடிக்கவில்லை. கடுகுக்குள் ஏழு கடலையும் புகுத்தியிருப்பது பெரிய சாதனையல்ல. சிறிதுகளிலும் சிறிதான கட்புலனாகா ஒன்றுக்குள், ஏழுகடல்களையும் புகுத்தும் செயல் தான், அளப்பரும் பொருள் விரிவை குறள் வெண்பாவால் கூறுவது: ஆகவே, குறளும் பொருளும் ஒப்பு நோக்கில் அணுவுக்குள் ஏழ்கடலைப் புகுத்திய செயலுக்கு நிகர் என எண்ணினார். பாடல் பிறந்தது.
அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டி குறுகத் தரித்த குறள். ஏழ்கடலைப் போல் பெருகும் அறிவை, அணுவைப்போல் சிறிய குறளில் அடக்கப்பட்டுள்ளது என்பது பொருள். இந்த மேலெழுந்த வாரியாகக் கொண்ட பொருளை விட்டு, ஆழ்ந்து நுணுகி ஆராயின், முதலில் தோன்றிய பொருளினின்றும் வேறொரு பொருள்விரிந்து, அதனின்றும் வேறொரு பொருள் பிறந்து, இவ்வாறு அறிவு பெருகும் கருவூலம் குறள்.
அதாவது ஏழ்கடலையும் அணுவுக்குள் புகுத்தி விட்டு, வெளியே உடைத்து விட்டால் எவ்விதம், பொங்கிப் பெருகி, எல்லையின்றிப் பரக்குமோ, அது போல் குறளில் பொருள் விரியும்.
ஏழ்கடலும் புறப்பட்டால் அதன் ஆற்றலைத் தடுச் வல்லது எது? உலகை அழித்துத்தான் அவை ... .த காணும்.
சைவசித்தாந்தம் சொல்லும், அணுவினால் அண்டம் பிறந்தது. அண்டத்திலிருந்து பிண்டம் (ஊனுடல்) பிறந்தது என்று. எனக்கு அணுவிஞ்ஞானம் தெரியாது. அணுசக்தி பற்றிச் சிறிது தெரியும். எனவே, ஒளவையின் இந்த உவமானத்தின்

பின்னால் பெரியதொரு விஞ்ஞான இரகசியம் இருப்பதைக் காணமுடிகிறது.
காட்சிப் புலப்பாடற்ற அணுவை பிளக்கும்போது, அந்த அணுப் பிளவுகள் தொடர்ந்து பிளவடைந்து எல்லையிலாச் சக்தியைப் பரப்பும். கட்புலனாகா அணு எவ்வாறு தன் வலிவைப் பரப,புகிறது என்றால், அதனுள் ஏழ்கடலையும் அடைத்து வைத்து அந்த அணுவை உடைத்தால் எப்படிப் பெருகுமோ, அத்தகைய வலிமையைப் பரப்பும் ஆற்றலுடையது அணு. அணுப்பிளப்பால் ஆற்றல் தோன்றும்.
இந்த அணுசக்தி பற்றி ஒளவையார் மிகத் தெளிவாக கூறியிருப்பதை நோக்கும்போது, அணுசக்திபற்றிய அறிவைத் தமிழன் அன்றே பெற்றிருந்தான் என்று துணியமுடிகிறது.
ஒரு புலவர், அறிஞர் மட்டத்தில் அறியப்பட்ட ஒன்றை, ஒரு பொதுமக்கள் சார்ந்த பாடலில் உவமையாகக் கொள்ள மாட்டார். அப்படிக் கூறின் பொதுமக்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள். எனவே, பொதுமக்கள் புரிந்து கொள்ளக்கூடிய உவமானங்களையே கூறுவார்கள். அப்படியானால், அன்று பொதுமக்கள் மட்டத்தில் அணு பற்றிய அறிவு இருந்தது.
முற்கூறிய சைவசித்தாந்தக் கூற்றையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அணுபற்றிய அறிவை அன்றைய தமிழர்கள் பெற்று இருந்தார்கள், என்பதை உணர்ந்து என் உள்ளம் இறும்பூது எய்துகிறது.
தமிழ் இலக்கியங்களுள்ளும், தேவார திருவாசகங் களுள்ளும், பழமொழிகளுள்ளும் ஏராளமான விஞ்ஞானச் செய்திகள் புதைந்து கிடக்கின்றன. தமிழ் ஆர்வலர்கள் அவற்றைத் தேடித்தாருங்கள், கமலம் ஆர்வமுடன் வரவேற்கும்.
உங்கள் தமிழ்ப் பசிக்கு விருந்து படைக்க இனிய நறுந்தமிழில் வாழ்த்துப் பாடல்கள்* திருமண அழைப்பிதழ்கள்* உள்ளத்தை உருக்கும் தமிழில்
அஞ்சலிப்பாக்கள்* முடிந்தளவு தனித்தமிழில் வேண்டிய
விஎச்பரங்கள்* எதுவானாலும் தமிழுணர்வைப் பேணும் வகையில் மலிவாகச் செய்து தரும்
"கமலம்"
விபரங்களுக்கு முத்திரை ஒட்டிய மடலுறையுடன் தொடர்பு கொள்க!

Page 20
D>
வென்றே தீருவோம் சிங்கள தேசமதை வென்றே தீருவோம் செந்தமிழர் ஈழமதை நன்றே நாட்டுவோம்
--- --சிங்களதேசமதை அன்று வென்று கொண்ட புகழ்
இன்று காட்டுவோம்அன்று முதல் வென்ற தமிழ்
ஆண்மை காட்டுவோம்
--சிங்கள தேசமதை. முத்து நின்று காத்த தமிழ்
முதன்மை காட்டுவோம்முத்தமிழால் உலகாண்ட
பான்மை காட்டுவோம்
--சிங்கள தேசமதை. எங்கள் செந் தமிழிசையால்
ஏற்றஞ் சொல்லுவோம்பொங்கு தமிழ் வீரத்தினால்
போரை வெல்லுவோம்
--சிங்கள தேசமதை
புத்தமுதச் சொற்றமிழை பூத்தமிழைப் பாத்தமிழை முத்தமிழை ஒப்பில் முதுதமிழை மென்றமிழை கோத்தமிழைப் பைந்தமிழைக் கொற்றமிகு நற்றமிழை மாத்தமிழைத் தண்டமிழை வண்டமிழைத் தாய்த்தமிழை வேற்றுமொழிச் சொற்கலந்து வீணரின்று பேசுகின்றார். ஆற்றொனா வெங்கொடுமை ஐயகோ! அன்னவர்கள் பொற்புமிகும் இல்லாள் புடையிருக்கத் தீநெறிசேர் அற்பப் பொதுமகளிர்க் காசைமிகக் கொண்டலையும் பித்தரினும் கீழாவார் பீடிழப்பர் நன்றிழப்பர் இத்தரையில் உண்மை இது
கோ.வே.அர்த்தநாரி-வேலூர்-நன்றி.தெளிதமிழ்
நம்பிக்கைத்துரோகி? தமிழினத்தை ஏமாற்றிக் கழுத்தறுத்தவன்? தமிழே தமிழே என்று உலகத்தமிழரை ஏமாற்றியவன்? தன்னினத்தை அழிப்பவனைக் கூடிக் குலாவுபவன்? தணக்குக் கிடைத்தவாய்ப்பைப் பயன்படுத்தித் தமிழினத்தைக் காப்பாற்றாமல் தான் வாழமுனைபவன்? அண்டை வீட்டில் தன் உடன்பிறப்புக் குண்டுகளால் கொல்லப்படு வதைக் கண்டும் காணாமல் இருப்பவன்? நயவஞ்சகண்? இனப்பற்று இல்லாதவன்? யார் இவன்? சிறந்த பதிலுக்கு ஓராண்டு கமலம் இலவயமாக அனுப்பப்படும். எங்கே உங்கள் பதில்?

தமிழன்றோ மொழி! தமிழே நீயே மொழியம்மா!-என் தருக்கும் செருக்கும் நீயம்மா!
தமிழே நீயே மொழியம்மா எமதென் பதனால் புகழவில்லை-உன் ஏற்றங் கண்டே மகிழ்கின்றேன் நமதென் பதனால் வைக்கோலை-நான் நல்ல கரும்பென்று உரைப்பேனா?
தமிழே நீயே மொழியம்மா அகிலம் கண்ட மொழிகளிலே-மிக அதிகம் வாழ்நாள் கண்டவள் நீ மகிழ்வும் நெகிழ்வம் மட்டுமின்றி-உயர் மறமும் சினமும் தருபவள் நீ
தமிழே நீயே மொழியம்மா கடல்கள் தாண்டி மிதந்தவள் நீ-மொழிக் கடன்கள் வழங்கி மகிழ்ந்தவள் நீ உடல்கள் தோறும் உயிராகத்-தமிழ் உள்ளம் தோறும் வாழ்பவள் நீ
தமிழே நீயே மொழியம்மா தாயைக் காக்கச் சாவார்கள்-இளம் தங்கை மானம் காப்பார்கள் தாயாய் உன்னைக் கொண்டன்றோ-இளம் தமிழர் உனக்காய் மடிவார்கள்
தமிழே நீயே மொழியம்மா வயதைத் தாண்டி வாழ்பவள் நீ-புவி வளங்கள் அனைத்தும் ஆள்பவள் நீ முயற்சி முயற்சி முயற்சியென-என்னை முன்னே முன்னே அழைப்பவள் நீ
தமிழே நீயே மொழியம்மா-என் தருக்கும் செருக்கும் நீயம்மா
உங்கள் தமிழ்ப் பசிக்கு விருந்து படைக்க
இனிய நறுந்தமிழில் வாழ்த்துப் பாடல்கள்*திருமண
அழைப்பிதழ்கள்* உள்ளத்தை உருக்கும் தமிழில் அஞ்சலிப்பாக்கள்* முடிந்தளவு தனித்தமிழில் வேண்டிய விளம்பரங்கள்* எதுவானாலும் தமிழுணர்வைப் பேணும்
வகையில் செய்து தரும் El D6DLD முத்திரை ஒட்டியமடலுறையுடன், தொடர்பு கொள்க!

Page 21
அன்புத் தமிழீழ உலகத் தமிழின
P தாம் வாழத்தமிழழிக் > ஆரியத்தின் அடிதடவி > தமிழிருக்கப் பிறமொ
> தமிழர் பன்னாட்டைத் ஆபாசக் காவியங்கை
* எழுந்தமானத்தில் எழு எழுத்தாளன் என் தமிழால் அடித்துத்திருத்;
t கதிரவனின் வரவால் கமலம் ' - வண்டினங்க
மங்கையர்கள் குழல்குடி தமிழின் பகை கண்டால். தமிழறியாத் தமிழனைக் கனன்று எரிக்க தீயில் ம: JL naon ஒரு பொ தொகுப்பு நூலான முத்திங்கள் கமலத்தின் எண்ண கருத்துடையோரின் எழுத்துக்கள் Golf IL fTL
Кап
Friedric
48268-Grey
தமிழ் எங்கள் தமிழிழம் எங்கள்

மக்களே மே!
கும் தமிழ் விரோதிகளை, பும் அடிமைத் தமிழர்களை, ழிக்கு புகழ்பாடும்,
தரங்கெட்ட தமிழர்களை, தாழ்த்தி நிற்கும், ஆரிய 1ளப் போற்றி நிற்கும்
தமிழ்ப்பேதைகளை, முதுகின்ற, நானும் ாகின்ற தமிழ்ப்போலிகளை, தி நேர்ப்படுத்த மலர்கிறது 1GOLO * விடியல் கண்டு மலரும் ள் மதுவாடிக் களியாட மகிழாட மலரும் மலரல்ல
563, LT65--- லரும் கமலம், ழுதுபோக்கு இதழல்ல. ஆய்வுத்
ஏடு. சத்தடிப்படையில் சீர்திருத்தக் i வரவேற்கப்படும் புகளுக்கு паlaп hsburg-10 en-Germany
உயிருக்கு நேர்
வாழ்வுக்கு வேர்