கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: உதயம் 1994.07-09

Page 1
கலை இலக்கிய காலாண்
 
 
 
 
 
 
 
 


Page 2
)
( )

2.
நேர்காணல் பேராசிரியர். க. சிவத்தம்பி 17
சிறுகதைகள் நந்தாவதி - நவம் 05
திலோத்தமாஅன்னலட்சுமி இராஜதுரை 49
கட்டுரைகள் தொலைக்காட்சியில் பாரதக் கதை -
கி. பி. அரவிந்தன் 33
திரையில் கவிதை எழுதும் பாலு -
கே. எஸ். சிவகுமாரன் 39 அரங்கேற்றம் - து. குருசாமி ஐயர் 57
கவிதைகள் பொய்மை பொசுங்குகிறது-நீலாவணன் 03 திருவிழாக் கூட்டத்தில் நான் - வாசுதேவன் 38 மழை - ம. சுனர்ந்தினி 44 ஆத்திரம் தீர்த்த அலை - முகமட் அபார் 45 போர்க்கொடிகள் - சசிகலா சுப்பையா 46 மண்ணறைத் தாலாட்டு - கவிஞர் ஞானமணியம் 47
மற்றும் LGML-IL16 26 நிகழ்வுகள் 30

Page 3
மட்டுநகரில்!
ඊටටටළුටට්ටටටළුට්ටටටළුළු එඑචථළුඑළුළුඑළුඑළළඑඑචථළුපට ඝට්ටළුටළු' එළුසසළු
O O O JIPIM Ihhh h5D50IIIll එපඑපටපපථපළුළුපටපටනපපටෙසෙතටළුපටටපටහැංචුළුපටටපතළුපටළුළුළුළුපට්ස්
பாலர் வகுப்பு முதல் பல்கலைக்கழகம் வரை மாணவர்களுக்குரிய நூல்கள்.
இ எழுது கருவிகள் இ உபகரணங்கள் இ நாவல்கள்
இ அகராதிகள்
இ கணக்கு எழுதும் கொப்பிகள் இ அலுவலக காகிதாதிகள்
இ) Fax இயந்திரத் தாள்கள் என்பவற்றை நியாய விலையில் பெற்றிட
நம்பிக்கையுடன் நாடுங்கள்
RAJAH'S B00K (CENTRE
1 l 1 MAN, STREET, EBATTICALOA, LqOOqOLOLMTOLLMLqOMMOMLMLOLOLeLOLOLOLOLSLLMLLL LLeLeLLLLLLeLeeL
attalia ーふみーごー
 

8
பொய்மை, பெ ாசுங்கிற்று
- நீலாவணன் -
நீதியைக் கோரும் மரணப்பெரும் அமைதி, நிசியின் முன்கைகட்டி நீதியையே வேண்டி நிற்கும் வஞ்சகப் பொய்யிருட்sோ. வார்த்தை ஏதும் இன்றி நெஞ்சழுத்தத்தோsே நிமிர்ந்து கொலுவிருக்கும்! நீதியைக்கோரும் மரணப் பெரும் அமைதி: மாயாண்டி, கன்மன் மருகர் துணையோடு ஆயபொருளான ஆத்மன் திணறக் கழுத்தை நசித்துக் கொலைசெய்து ஊர்ச் சந்தியிலே போட்டுவிட்டு போத்தல் முறித்த களியாட்டில் மயங்கி.
கிழக்கிலங்கையின் கவிஞர்களுள் முக்கியமானவர் நீலாவணன் (1935-1969) இவரது கவிதைகள் சில
* 够 "வழி" என்ற பெயரிலும் குறுங்காவியம் ஒன்று வேளா
ண்மை என்ற பெயரிலும் வெளியாகியுள்ளன, பத்திரி கைகளில் வெளி வந்தும் நூலுருப் பெறாத பல கவிதை கள் உள்ளன. இக்கவிதை இது வரை பிரசுரமாகாதா அவரது கவிதை.
03

Page 4
04
அரசு நடித்துகின்ற வஞ்சகப் பொய்யிருட்டின் வாய்கிழிந்து விட்டீதுபோல் அஞ்சாறு சேவல்கள்! வஞ்சகத்தின் வாகைக் குரலாகி நெஞ்சம் குலுங்கும் படியாகச் சங்கொலிக்கும்
எக்களித்தே
முடக்குயில் கத்தும்!
காக்கைகளும். வஞ்சகத்தின் வெற்றிக்கே வாழ்த்திசைக்கும் . நீதியைக்கோரும் மரணப்பெரும் அமைதி நீதி கிடைக்கா நெருப்பு நெடுமூச்சையும்! முன்னே. கடலை முரசு முழங்க வைக்கும் போச்சுதே என்று வஞ்சப் பொய்மை புடைத்தலற செந்தழல்
வானம் சிவந்திடச் சினந்ததோ வந்தது! பத்தெனச் செந்தீ - பொய்மையை அந்தரத்திருந்தே - தூக்கிவிட்டுப் பொசுங்கி அழிந்தது - ஹா.ஹா இந்த வரையில் பிடித்ததே! வையமெல்லாம் சுதந்திர நீதிச் சுடர்.
 

நந்தாவதி
நவம்
இரவு Fifluurtas 6T l " G9 Lp6ozofo, கொழும்பு, " கோட்டை "ப் புகை யிரத நிலையத் தி ன் முதலாவது * பிளாட்பாரத்தை அநாயாசமாக உதறி எறிந்து விட்டு, "ஜம்" என்று புகையைக் கக்கிக்கொண்டு புறப் பட்டது மட்டக்களப்பு மெயில் வண்டி,
வண்டி என்றும்போல் அன்றும் பொங்கி வழிந்தது. இந்த அம் பாரை நீர்ப் பா ச ன இராட்சத * அணைத் திட்டம் " மட்டக்களப் புக்கு வந்தாலும் வந்தது. மட்டக் களப்பு மெயிலின் நிலை ஒரு பூர்ண கர்ப்பிணியின் நிலைதான்.
புறப்பட்ட ஐந்து நிமிஷங்க ளில், கொழும்பு ந க ரி ன் அடுத்த பெரிய ஸ்டேஷனான மருதானை யை "நொறுக்கி"க் கொண்டு கடந்து சென்றது வண்டி,
ஈழத்துச் சிறுகதை இலக்கியத்துக்கு கிழக்கிலங்கையின் பங்களிப்பும் கணிசமானது.பித்தன் தொடக்கம் உமாவர தராசன் வரை இதற்குச் சான்றுண்டு. கிழக்கிலங்கையின் பழைய எழுத்தாளர் தொடக்கம் புதிய எழுத்தாளர் வரையான சிலரின் சிறுகதைகளைத் தொகுத்து வெளி யிடும் திட்டம் உதயத்துக்குண்டு. தொகுப்பில் இடம் பெற வுள்ள சில கதைகள் உதயத்திலும் வெளிவரும். நந்தா வதி அவற்றுள் ஒன்று ஆசிரியர் நவம் ஆரையம்பதியைச் சேர்ந்தவர் 1960 களில் கல்கி நடத்திய ஈழத்துச் சிறுகதை போட்டியில் முதற்பரிசு பெற்று கல்கியில் அன்று வெளி வந்த கதை இது. கல்கியில் வெளிவந்த நந்தாவதியின் படத்தையே நாமும் பிரசுரித்துள்ளோம். இனப்பிரச்சனை இன்று மட்டுமா? அன்றும்தான் எம் எழுத்தாளரைப் பாதித்துள்ளது.

Page 5
கோட் டை யி லிருந்து மரு
தானை வரையும், கழுத்தை வெளி
யே நீட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்து வந்த நான், இப்பொழுது தலையை உள்ளுக்கு இழுத்துக்கொ ண்டு என் இருப்பிடத்துக்கு திரும் பினேன்.
இந்த வண்டியில், இரண்டாம் வகுப்பு ‘சிலீப்பிங் கா ரில் நா ன் பிரயாணம் செய்து கொண்டிருந் தேன். . . . . . . . . . .
எனது ' படுக்கை எண் பதி 627 ਫਰੰg.
2.Égin
எனது "படுக்கை" க்குச் சரிநே
ராக மேலே இருந்தது பதின்மூன்
றாம் இ லக் கப் "படுக்கை”. அது
வெறுமையாகவே இருந்தது.
இரண்டே இரண்டு "படுக்கை களே உள்ள அந்தத் தனிப் பெட் டியில், ஏகாங்கியாக நான் மட்டும் பிரயாணம் செய்வது என்னவோ போலத்தான் இருந்தது.
தட தட வென் று யாரோ கதவை இடிக்கும் சத்தம் கேட்டுத் திடுக்கிட்டுக் கண்திறந்தேன். தூக்
6
கக் கலக்கத்தில் ஒன்றுமே புரிய வில்லை. மின் வி சிறி தன் பாட டுக்குச் சுழன்று கொண்டிருந்தது.
"லைட் டைப் போட்டுவிட்டுக் கதவைத் திறந்தேன். எதிரே ஒரு பெ ள த் த பிக்கு நின்றிருந்தார். அவருருடைய ஒரு கையில் அடக் Bb LDsT6T ஒரு தோல் பையும், மறு கையில் விசிறியொன்றும் காணப் பட்டன. பாதத்தை உ ய ர் த ர 'சிலிப்ப ரும், தேகத்தைத் தூய மஞ்சள் அங்கியும் அணி செய்தன. முகத்தில் காந்தியும், சா ந் தி யும் போட்டியிட்டன. கண்களில் ஒரு கனிவு, மூக்கில் ஒரு கம்பீரம். இத ழ்க்கடையில் ஒரு குறுகுறுப்பு நெளி ந்தது. மஞ்சள் அங்கியின் தழுவ லுக்குத் தப்பியிருந்த திருவதனத் தில், தேகத்தின் சந்தன வர்ணம் பளிச்சிட்டது.
'ஆய்போவன்" என்று சிங்க ளத்தில் வணக்கம் கூறிக்கொண்டு நிதானமாக உள்ளே நுழைந்தார் பிக்கு,
N பதிலுக்கு நானும் மரியாதை யுடன் கைகூப்பி அவருக்கு அஞ்சலி செலுத்தினேன்.
"மன்னிக்க வேண்டும்" உங்
கள் தூக்கத்தைக் கெடுத்து விட்
டேன் இல்லையா?" என்று ஆர ம்பித்தார் பிக்கு.
" அப்படியொன்று மில்லை "
என்று சம்பிரதாயமாய்ச் சொல்லி வைத்தேன் நான்.
தொடர்ந்து நானே கூறினேன்.
 
 
 
 
 
 
 
 

'தங்களைக் கொழும்பிலேயே நான் எதிர்பார்த்தேன், “படுக்கை" "புக்" பண்ணியிருக்கிறது. ஆனால் ஆளைக் காணோமே என்று'
**ஆமாம்! இங்கு றாகமையில் "படுக்கை” "புக்" பண்ணுவது மிக வும் சிரமமாதலால், கொழும்புக்கு "டெலிபோன்' பண் ணி அங்கிரு ந்தே படுக்கைக் கு ஒழுங்கு செய்து விட்டேன். இப் படி ச் செய்திரா விட்டால் இன்று இந்த ரயிலில் பொலநறுவைக்குப் போனமாதிரித் தான்! அப்பப்பா என்ன கூட்டம் என்ன நெரிசல்!” என்று அலுத் துக் கொண்டார் பிக்கு.
'நல்ல காரியம் செய்தீர்கள்' என்று அவருக்கு ஒரு பாராட்டுக் கொடுத்து விட்டு, மே ற் கொ ண் டு பேசுவதற்கு விஷயம் ஒன்றும் இல் லா த தால் மெளனமாயிருந்தேன் நான். ヘ
'தம்பி தூக்கம் வருகிறதா?" "இல்லை; நாங்க ள் பேசிக் கொண்டே வரலாம்'
** ந ல் ல து. அப்படியானால் உங்களிடம் ஒன்று கேட்டுத் தெரி ந்து கொள்ளவேணுமே?”
"கேளுங்கள்." "சிங்களவர்களைப் பற்றி நீங் கள் எ ன் ன நினைக்கிறீர்கள்?" அமைதியாகத்தான் கேட் டார் கேள்வியை. ஆனால் அவர் காட் டிய அமைதியை என்னால் கடைப் பிடிக்க முடியவில்லை.
கண் இமைக்கும் நேரத்தில்" கடந்த காலக் கறைபடிந்த புண்
ணான நிகழ்ச்சிகள் என் மனத்தி ரையில் சினிமாக் காட்டின. மொழி வெறித் திரையால் விழிகள் மறை க்கப்பட்ட சிங்களவரின் கு ரூ ர நிகழ்ச்சிகள் என் நெஞ்சில் ஊழிக் கூத்தாடின. அன்பையும், அஹிம் சையையும் போதித்த புத்த பிரா னின் " புத்திரர்கள் பூதகணங்க ளாக மாறி மனிதக் குரு தி யி ல் நீச்சலடித்த பேய்க்காட்சி பூதாகா ரமாக எ ன் மு ன் தோன்றியது. நாடு முழுவதும் பரந்து கிட ந் த தமிழர் கூட்டம், நாதியற்று நடுத் தெருவில் நலிவுற்று நின்ற கோரக் காட்சி என் இளம் ரத் த த் தி ல் சூடேற்றியது.
**தம்பீ! நான் கேட்ட கேள்வி அநாதையாக நிற்கிறதே" என்று என் சிந்தனையை முறித் தா ர் பிக்கு
*"கேள்வி மட்டும்தானா அனா தையாக நிற்கிறது? இந்த நாட் டில் வாழும் தமிழர் நிலை யும் இன்று அநாதரவாகத்தானே இரு க்கிறது. இந்தப் பதிலிலேயே அவ ருடைய கேள்விக்குரிய பதிலையும் அவர் கண் டி ருக்க வேண்டும். தொடர்ந்த அவருடைய பேச்சிலி ருந்து இந்த உ ண் மை நன்கு விளங்கியது.
**தம்பீ! இப்படி ஏகமாக நீங் கள் சிங்களவர் மீது பழி சுமத்து வது ஒருதலைப்பட்சமானது. உதா ரணமாகக் கலவரகலை நிகழ்ச்சி களை எடுத்துக் கொள்ளுங்கள்."
நான் சற்று "உஷார்" அடைந் தேன். நானே தொடங்கிச் சிங் களவர்களின் அ ட் டூ பூழிய த் தை
7

Page 6
பிக்குவுக்கு உணர்த்த வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த கலவர கலை நிகழ்ச்சிகளை, இவ ரும் உதாரணத்துக்கு எடுக்கிறாரே' என்பதை எண்ணும் போது சற்று வியப்பாக இருந்தது. என்றாலும் அவரிடம் கூறினேன்.
'இ ல ங் கை யி ல் ஏற்பட்ட இனக் கலவரம் சிங்களவர்களுக்கு என்றும் நீங்கா த - நீக்கவொண் ணாத - கறை, வடு!'
"அப்படியென்றால்?".
* சிங்களவர் மிருகங்கள்தான்; ஒத்துக் கொள்ளுகிறேன். ஆனால்,
தமிழர்களும் .'
நான் வாய்மூடி மெளனியாகும் அளவுக்குப் பிக்கு பேசிக்கொண்டு போனார். வண்டியும் தன்பாட் டில் ஒடிக்கொண்டிருந்தது.
1வது பரிசு: ரூ. 10,000/-
இலங்கை தேசிய கலை இலக்கியப் பேரவை சுபமங்களாவுடன் இணைந்து நடாத்தும்
ஈழக் குறுநாவல் போட்டி
3ம் பரிசு (8 படைப்புகளுக்கு) தலா ரூபா 1000/- முடிவு திகதி: 30-09-1994. அனுப்ப வேண்டிய முகவரி:
செயலாளர், தேசிய கலை இலக்கியப் பேரவை 14, 57வது ஒழுங்கை, கொழும்பு - 6.
2வது பரிசு ரூ. 7000/-
"அ ப் படி ச் சொல்லிவிட்டுத் தமிழர்கள் ஒதுங்கிக் கொள்வதால் உண்மை மறைக்கப்பட்டு விடுமா?*
"தாங்கள் என்ன கூறுகிறீர் &ଙt ? ' '
'உண்மையைச் சொல்கிறேன். கசப்பாக இருக்கிறது என்பதற்காக உண்மையை ஏற்றுக்கொள்ளாமல் இருந்துவிட முடியுமா?"
8
டுங்கும் நுரையுமாகக் காலு கங்கை பதினாயிரம் சுழி போட் டுப் பெருகி ஓடிக்கொண்டிருந்தது. நீர்ச் சுழிகளில் சிக் கி ய காய்ந்த மூங்கிற் சருகுகள் படாதபாடுபட் டுப் பல்லாயிரம் கரணங்கள் அடி த்து நீரோட்டத்தோடு அள்ளுண்டு கொண்டிருந்தன. கங்கையின் இரு மருங்கிலும் * வரிசை பிசகாமல்" ஒழுங்கற்று நின்ற காட்டுமரங்க

ளின் கிளைகள், ஆற்றின் சீற்றத் தால் பெயர்த் தெறிய ப் பட்டு நீரோடு உருண்டு கொண்டிருந்தன. அதற்கு முந்திய தினம், சிவனொ ளிபாத மலை ச் சாரலில் கொட் டிய கோர மழை யின் காரண மாக, அம்மலையில் பிறக்கும் காலு கங்கை, பொங்கிப் பிரவாகமெடுத் துக் கம்பீரத்தோடு அவசரப் பிர யாணத்தை மேற்கொண்டிருந்தது.
* ஹோ " என்ற பேரிரைச்ச லோடு, எக்காளத் துள்ளலோடு நதி சென்ற காட்சி, பார்ப்பதற் குப் பயங்கரமாகவும் இரு ந் த து: பசுமையாகவும் இருந்தது.
இந்த நதிப் பெண் ணு க் கு இன்று என்ன நேர்ந்தது? என்று மில்லாத உக்கிரத்தோடு இன்று அவள் போர்க்கோலம் பூ ண க் காரணம் எ ன் ன? தன்மைக்கும், சாந்திக்கும் பெயர் பெற்ற பெண் களோடு ஒப்பிடும் இந்தக் கங்கைக் கன்னிக்கு, இன்று மட்டும் அப்படி என்ன ஆவேசம் வந்தது? மலைப் பாறைகளையும், மண் மேடுகளை யும் கிழித்துத் துவம்ஸம் பண்ணி இப் படி ஒரே ஒட்டமாக ஓடுகி றாளே! ஊழிக் காலம் நெருங்கி விட்டதா? அல்லது . சற்று நேரத் தில் இந்நதிப்படுகையில் அசாதா ரண நிகழ்ச்சியொன்றுக்குக் கட்டி யம் கூறுகிறாளா? பின் ஏன் இத் துணை துள்ளல்? ஏன் இத்தனை துடிப்பு? ペ
ஆற்றைக் கடந்து அக்கரை செல்ல வேண்டும் அருணாசலம், அந்த அக்கரைச் 'சீமையில்தான் அவனுடைய பாடசாலை, மட்டக்
களப்பிலிருந்து நூற்றுக்கணக்கான மைல்களைத் தாண்டி ஆசிரியத் தொழில் புரிய வந்திருக்கிறான் அவன்.
இடம் புதிது; இனம் புதிது; இயம்பும் மொழி புதிது இதற்கு முன் மலைநாட்டுப் பக்கம் தலை காட்டக்கூட இல்லை அவன். தான் மட்டக்களப்பு ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியில், "பயிற்சி ஆசிரியனா கப் பயின்ற போது, ஆசிரிய மாண வர் க ளெ ல் லா ம் ஒரு தடவை இலங்கை முழுவதும் சுற்றுப் பிரயா ணம் போனார்கள். அப்பொழுது கூட அவன் போன தி ல்லை. "சிவனே' என்று கல்லூரியிலேயே இன்னும் சில மாணவர்களோடு இருந்து விட்டான். அந்தக் 'கிணற் றுத் தவளை மனப்பான்மையை இன்று அவன் தனக்குள்ளாகவே கடிந்து கொண்டான்.
"பேசாமல் "மானேஜ்மெண்ட், பாடசாலை ஒன்றில் இடமெடுத் ருந்தால், உாரோடேயே, வீட்டுக் குப் பக்கத்திலேயே ராஜா மாதிரி படிப்பித்துக் கொண்டிருக்கலாமே!" என்ற "கட்டுப் பெட்டி மனப்பாங் கான எண்ணமும் தலைநீட்டத் தான் செய்தது.
"பேசாமல் வந்த வழியே திரும் புவோமா? என்று அவன் தீர்மா னிப்பதற்குள், அக்கரைக்குச் செல் லவேண்டிய இன்னும் சில பிரயா ணிகள் அங்கு வந்து சேர்ந்தனர். அத்தனை பேரும் சிங்களவர்கள்!
வந்தவர்கள், 'சிரியோ! சிரி யோ!" என்று “ஒறுவ"க்காரனுக்
9

Page 7
குக் (தோணி க்கா ர ன்), குரல் கொடுத்தனர்.
"கொஞ்சம் இருங்கள். இதோ வருகிறேன்" என்று சிங்களத்தில் குரல் கொடுத்துக் கொண்டு, அக் கரையிலிருந்த தன் சின்னஞ் சிறு குடிசையிலிருந்து வெளிப்பட்டான், தோணிக்கார்ன்.
வெளிப்பட்டவன் ஐந்து நிமி ஷத்தில் தன் தோணியைச் செலுத் திக் கொண்டு இக்கரைக்கு வந்து சேர்ந்து விட்டான்.
அடித்துப் புரட்டிக் கொண்டு ஆங்காரத்தோடு ஓடிக் கொண்டி ருந்த நதியை ஊடுருவி அவன் வந்த அநாயாசத்தைக் கண்டபோது அரு ணாசலத்துக்குக் குலை நடுக்க ம் எடுத்தது.
தோணியில் எல்லாரும் பக்குவ மாய் ஏறிக் கொண்டதும், அதைச் செலுத்தத் தொடங்கி னா ன் தோணிக்காரன். நதியின் மத்தியில் தோணி வந்ததோ இல்லையோ; எங்கிருந்தோ ஒரு பூதாகாரமான சுழி தோன்றித் தோணியையும், தோணி க்கு ஸ் இருந்தோரையும் வலம்புரியாய்ச் சுழற்றி நீருக்குள் குப்புறக் கவிழ்த்து விட்டது. எல் லாம் மின்வெட்டும் நேரம்தான்.
அருணாசலத்தின் மூக்கின் வழி யாக நீர் என்ற மின்னல் ஒன்று புகுந்து அவன் மூளையைத் தாக் கியது. மூச்சுத் திணறிய அருணா சலம், நீச்சல் தெரியாத காரணத் தால், நீரி ன் போக்கோடு அள் ளுண்டு சென்றான். அவனுடைய அவஸ்தை, அவனுடைய தவிப்பு
()
இவை எவற்றையுமே லட்சி யம் செய்யாத அந்தப் பயங்கர ஆறு சுழிக் கரங்களால் அவனை உருட்டி அடித்துக் கொண்டு ஓடிக் கொண்டிருந்தது.
கண்விழித்தஅருணாசலத்துக்கு இன்னுமொரு "மூச்சுத் திணறல்" காத்திருந்தது. நீரில் மூழ்கியபோது ஏற்பட்ட மூச்சுத்திணறலை விட, இந்த மூச்சுத்திணறல் அவனை மிக வும் திக்குமுக்காடவைத்துவிட்டது.
*சற்றுமுன் தான் கங்கையின் மடியில் கிடந்துபட்ட அவஸ்தை யைப் பார்க்கச் சகிக்காமல், கங்கா தேவியே நேரில் தோன்றி என்னை மீட்டுவிட்டு இதோ நிற்கிறாளா? என்ற பிரமை தோன்றியது அருண சலத்துக்கு. w
உலகத்து அழகெல்லாம் ஒன்று
திரண்ட ரூபலாவண்யத்தோடு ஒரு மோகனாங்கி அவனெதிரே சொட்
டச் சொட்ட நனைந்தபடி நின்று
கொண்டிருந்தாள்!
ஆற்றின் முத்துநீர் அவளின் தங்க மேனியிலிருந்து இன்னமும் உலரவில்லை. பல பளிங்கு நீர்த் திவலைகள் அவளின் சுருட் குழலில்
எண்ணெய் தடவி, அவள் வனப்
புக்குப் பட்டை தீட்டின. முகம் எனும் செங்கமலத்தில் சிந்திய நீர் மணிகள், அவள் கதுப்புக் கன்னங் களில் "கிரீம் தடவி ஒப்பனை செய் தன. அவள் தேகத்தில் உறவாடிய நீரோ, அவளுக்குப்பட்டு" வாயிலாக அணி செய்தது.
அருணாசலம், சுற் று ப் புறச் சூழலை ஒரு தடவை பார்த்துக்

கொண்டான். கங்கைக் கரையோர மாக உள்ள ஒரு கரும் பாறையில் தான் நனைந்தபடி படுத்திருப்பது தெரிந்தது.பக்கத்தில் அந்தப்பெண் ணைத் த விர, வேறு ம னி த வாடையே தெரியவில்லை.
அருணாசலக்துக்குச் சற்று முன் னால் நடந்த நிகழ்ச்சிகள் ஒன் றொன்றாக நினைவுக்கு வந்தன. தன் எதிரில் நி ன் ற பெண்ணை நிமிர்ந்து நோக்கினான் அருணா ச
g). D.
பீதியும், பரபரப்பும் முகத்தில் நெளிய அவள் அவனையே பார்த் துக் கொண்டு நின்றாள். படபடத்த அவள் கண்கள் பதினாயிரம் கதை கள் பேசின.
*" தெங் கோமத மாத்தயா?" தனிச்சிங்களத்தில் தேன்வதையை அருணாசலத்தின் காதுகளில் பிழிந் தாள் அந்த மோகனாங்கி.
"இசையைப் பருக மொழி அவ சியமே இல்லை!" என்ற ஒரு புது உண்மை அருணாசலத்துக்கு அப் போதுதான் வெளிச்சமாகியது.
"எனக்குச் சிங் க ள ம் தெரி யாது. இந்த இடமே எனக்குப் புதிசு. வந்த இடத்தில்..' நிறுத்தி நிறுத்திப் பேசினான் அருணாசலம். அப்படிப் பேசினால் தமிழ் அவளுக் குப் புரிந்துவிடும் என்ற நினைப்பு அவனுக்கு!
என்ன விந்தை! அவன் நினைத் தது சரியாகவே இருந்தது. அவ ளுக்குத் தமிழ் புரிந்தது! கொச் சைத் தமிழில் கொஞ்சினாள்.
*"அது பத்திக் காரியம் இல்லே; என க் கு கொஞ்சங் கொஞ்சங் தமில் வரும்! "
"பரவாயில்லையே! நீ ங் க ள் நன்றாகவே தமிழ் பேசுகிறீர்கள். இந்தச் சிங்களப் பகுதியிலிருந்து கொண்டு நீங்கள் எப்படித் தமிழ் பேசப் பழகினிர்கள்?"
*அதெல்லாம் பொறகு சொல் றேன் இப்பே ஒங்களுக்கு எப்படி இரிக்கி? அதை சொல்லுங்க” என் றாள் அவள்.
'ஒருவிதக் குறையுமில்லை. அது சரி, ஆபத்திலிருந்து என் னைக் காப்பாற்றினது யார்?"
"ஏன் என்னெப் பார்த்தாத் தெரியலே?"
**தெரிகிறது, தெ ரி கிற து: ஆனால்?...”*
"இந்தப் பொம்பிலேப் புள்ள யாலே தண்ணியிலே நீந்த முடியுமா என்று சமிசயப்படுறிங்க. இல் லையா , மாத்தயா?*
அவள் கஷ்டப்பட்டுக் கூறிய திலிருந்து பல உண்மைகள் புரிந் தன அருணாசலத்துக்கு.
கங்கையில் அள்ளுண்டு சென்ற அவனை நந்தாவதி - அது தா ன் அவள் பெயர் - கண்டிருக்கிறாள். உடனே நீரில் குதித்து நீந்திச் சென்று அருணாசலத்தை எமன் வாயிலிருந்து சாமர்த்தியமாக மீட் டுக் கொண் டு வந்திருக்கிறாள். அவள் தரையில் மான்! தண்ணி ரில் மீன். பொதுவாகக் கங்கைக்
1

Page 8
க்ரையை அடுத்த கிராமங்களில் வாழுகின்ற ஆண்கள் - பெண்கள் குழந்தை - குட்டிகளுக்கு நீச்சல் தண்ணிர் பட்ட பாடு. நதி பஞ் சனை மெத்தை.
அருணாசலம், நந்தாவதியின் குடிசைக்குச் செல்வதற்கிடையில், நந்தாவதியின் குடும்ப விவரம்முழு வதையும் தெரிந்து கொண்டான்:
அ ப் புஹா மி - புஞ்சிநோநா தம்பதிகளின் ஒரே பெண் நந்தா வதி. இறந்த காலத்தில் சிறப்பாக இருந்த குடும்பம், இடையில் ஏற் பட்ட கால மாற்றத்தால், நிகழ் காலம் இருள் சூழ்ந்ததாகிவிட்டது. இரத்தினக் கல் வியாபாரத்தில் ‘டால் வீசிக் கொண்ருந்த அவர் கள் குடும்பம், அதில் ஏற்பட்ட பாரிய நஷ்டத்தால் இன்று வறு மைக் குழியில் தள்ளப்பட்டுக் கிடந் திது. நந்தாவதி பக்குவமடைந்த பத்தாம் நாளிலேயே அவள் அன் னை புஞ்சிநோநா பரலோக யாத் திரையை மேற்கொண்டுவிட்டாள். இத்தனையும் போதா தென்று, சிவ னொளிபாதத் தெய்வம், அப்புஹா மியின் கால் ஒன்றைக் குரூரமாகப் பறித்துக் கொ ண் டு அ வ ைர நொண்டியாக்கி விட்டது. கடந்த வருஷம் வைகாசிப் பெளர்ணமி யன்று தன் இரு கால்களாலும் சிவனொளிபாத மலைக்கு ஏறிய அப்புஹாமி, உச்சிக்குச் சமீபத்தி லுள்ள "காமிட்டிப்பான" என்ற இடத்தில் கால் தடுக்கி விழுந்து, தன் ஒற்றைக் காலைக் கடவுளுக்கு அர்ப் பணித்து விட்டு முடமாகத் திரும் பினார். உயிர் பிழைத்ததே ஆச்ச ரியம்! இன்று அந்தத் துரதிர்ஷ்
2
டம் பிடித்த குடும்பத்துக்குத் 'ன போடுவது நந்தாவதியின் துணிச் சலே!
அவர்கள் கிராமத்துக்குப் பக் கத்திலுள்ள எலுபுளுவ ரப்பர்த் தோட்டத்தில் கூலியாகச் சேர்ந்து, இரத்தத்தை வியர்வையாக்கி உண வாக்கும் ஜா ல வித்  ைத" யைச் செய்து கொண்டு வருகிறாள் நந் தாவதி!
இந்த விவரங்களை இத் தோட் டத்தில் வேலை செய்யும், ‘மலை நாட்டுத் தமிழர்" களிட மிருந்து பெற்ற தன் "கொஞ்சங் கொஞ்சங் தமிழால்’ கூறி முடித்தாள் நந் கா வதி. V
அருணாசலம், திமியாவையிலு ள்ள அரசினர் சிங்களப் பாடசாலை யில், தமிழ் "செக்ஷ னுக்கு வந்து இப்பொழுது ஐந்து வருடங்களாகி விட்டன. இந்த ஐந்து வருடங்க ளில் அவனிடத்தில் எத்தனையோ மாற்றங்கள். சிங்களம் அவனுக்கு இப்பொழுது தண்ணிர் பட்டபாடு! நீச்சலில் அ வ  ைன மிஞ்ச அந்த வட்டாரத்திலேயே இப்பொழுது ஆள் கிடையாது!
இவற்றில் மட்டுமின்றி, தோற் றத்திலும் அருணாசலத்திடத்தில் ஒரு புதுமை பொலிந்தது; அவன் இங்கு வரும்போது, அவனுடைய மூ க்கு க்கு ம், மேலுதட்டுக்கும் இடைப்பட்ட பா க ம் "மழுமழு’ வென்று இருந்தது. இப்பொழுது அந்த இடத்தில் 'கருகரு” என்று அரு ம் பு மீசை அணிசெய்தது. மட்டக்களப்பின் "கருக்கும் வெயி

லில் கருமையாகியிருந்த அவ ன் மேனியில் மலைநாட்டுச் சீதளச் சுவாத்தியம், ச ந் த ன வர்ணத்
தைச் சீதனமாய் வழங்கியிருந்தது. நவரத்தினங்கள் பிறக்கும் காலுக ங்கையில் நீச்சலடித்து நீச்சலடித்து அ வ ன் மேனியே வைரம்போல் மாறியிருந்தது.
இத் த  ைன மாற்றங்களுக்க மத்தியில், அவன் உள்ளத்திலும் ஒரு பெரிய மாற்றம். தன் ஒரே தங்கையும் மற்றும் அவனது தாய் தந்தையரும் இடம் பெற்றிருந்த அவனது உள்ளத்தில், நான்காவது பேர்வழியாக நந்தாவதியும் வந்து, நெருக்கியடித்துக் கொண்டு உட் கார்த்திருந்தாள்.
அவள் போக்கிலும்கூடச் சில மாற்றங்கள் ; முன்னர், "கொஞ்சங் கொஞ்சங் தமிழ் பேசத் தெரிந்த வள், இப்பொழுது நிறைய நிறை யத் தமிழ் பேசக் கற்றிருந்தாள். திருக்குறளில் கூட இரண்டொன்று மனப் பா ட ம்! முன்னரெல்லாம் எத்தனைதான் கஷ்டம் தொடர்ந் தும், கண்ணீர் விடத் தெரியாதி ருந்தவள், இப்பொழுது அடிக்கடி கண்ணிர் சிந்தப் பழகியிருந்தாள். அனேகமாகச் சித்திரையும், ஆவ ணியும், மார்கழியும் அவள் கண் ணிர் சிந்துவதற்கென்றே பிறந்து கொண்டிருந்தன. இந்த மூன்று மாதங்களிலும்தான் அருணாசலம், விடுமுறைக்காக மட்டக்களப்புக்குச் செல்வது!
பட்ட கடன், தொட்ட கடன், ‘பாவியார் வயிற் றி ல் பிறந்த கடன் எ ன் று எல்லாக் கடன்க ளையும், இந்த ஐந்து வருடங்க
ளில் தீர்த்து விட்டான் சலம்.
அருணா
சென்ற தையில்தான் அவனு டைய தங்கையின் திருமணம் ஒரு படியாகக் 'கல்லில் நார் உரித்தது போல், நடந்துவிட்டிருந்தது. மாப் பிள்ளையும் அவனைப்போல் ஆசி ரியன்தான்.  ெவலி ம  ைட யி ல்
வேலை பார்க்கிறான். திருமணம் முடிந்த அடுத்த மாதமே மனை வியை அ  ைழ த் து க் கொண்டு
போ ய் வி ட் டா ன். இனி த் தொல்லை இல்லை. எந்த நிமிஷத் திலும் தன் நெஞ்சைக் கவர்ந்த நந்தாவதியை முறைப்படி தனக்கு ரியவளாக்கிக் கொள்ள வேண்டி யதுதான்!
இந்தச் சமூக நிலையில்தான் இலங்கையில் இ ன க் கலவரத் தீ பற்றிக் கொண்டது! நெருப்புக்கம் இலங்கைக்கும் ஒரு நீங்காத உறவு போலும்! மு ன் ன ர் ஒருதடவை அனு மா ன் சுட்டுப் பொசுக்கி னான். அவன் வழித்தோன்றலான மனிதர்கள் இன்று சுட்டுப் பொசு
க்குகிறார்கள்!
இத் தருணத்தில் அருணாசலத் துக்கு ஊரிலிருந்து ஓர் அவசரத் தந்தி வந்தது:
*அன்னையின்" உடனே புறப்படு!"
நிலை ஆபத்து.
தந்தியை நந்தாவதியிடம் படி த்துக் காட்டினான் அருணாசலம்.
* 'இந்நிலையில்’ நீங்கள் எப் படிப் போக முடியும்? வழியெல் லாம் வெறி யர்கள் சவக்குழி தோண்டுகிறார்களே!"
3

Page 9
"நான் இங்கு இருப்பதும் ஆபத்துத்தானே! தவிரவும், நான் ஊர் செல்லா விட்டால் அம்மா பிழைக்கவே மாட் டா ள். நான் எப்படியும் போயே தீரவேண்டும்: தங்கைகூட இல்லை. மாப்பிள்ளை யும் அவளு ம் வெலிமடையில் என்ன ஆனார்களோ?? எ ன் று குமைந்தான் அருணாசலம்.
நந்தாவதிக்குஒன்றுமே ஒடவில்லை.
"நான் எப்படியும் இ ன் று போயே தீரவேண்டும்’ என்று வெறிபிடித்தவன்போல் கத்தினான் அருணாசலம்,
அவனைத் தடுப்பதில் பயன் இல்லையெனக் கண்ட நந்தாவதி, மெல்ல அவனை அணுகி, 'உங்க ளோடு நானும் வருகிறேன்!" என்றாள்.
அவள் கோரிக்கையை ஏற்கக் கண்டி ப் பா க மறுத்துவிட்டான் அருணாசலம்.
அவன் உறுதியை அ  ைசக் க முடியாதெனக் கண்ட நந்தாவதி, ஒருமுடிவுக்கு வந்தவளாய், அவன் காதுக்குள் எதையோ "குசுகுசுத் தாள். அதைக் கேட்ட அருணாச லத்தின் முகத்தில் நம்பிக்கை ஒளி படர்ந்தது.
அருணாசலம் இப்பொழுது அரு ணாசலமாகவே இல்லை! ரத்த வெறி பிடித்த ராக்ஷஸனாக மாறி யிருந்தான் மனித இனத்தின் ஊன் குடிக்கும் "ஊத்தைக் குடிய*னா கத் தோற்றமளித்தான்.
4
மட்டக்களப்பு - ப து ைள ச் சாலையில், கரடியனாற்றுக் காட் டின் மத்தியில், பல குண்டர்களைத் துணை சேர்த்துக் கொண்டு மனித வேட்டைக்காகப் பதுங்கியிருந்தான்.
தூரத்தே, பதுளைப் பக்கமி ருந்து இருளைக் கிழித்தபடி ஒரு கார் மின்னல் வேகத்தில் பாய்ந்து வந்தது. இதைக் கண்டுவிட்ட அரு ணாசலம், சாலையின் குறுக்கே கட்டையைப் போட்டு மறிக்கும்படி தன் குண்டர்களுக்குக் கட்டளை பிறப்பித்தான்.
இமைக்கும் நேரத் தி ல் கட் டளை நிறைவேற்றப்பட்டது. துப் பாக்கியைத் தயார் பண்ணியபடி எல்லாரும் காட்டுக்குள் பதுங்கிக் கொண்டனர்.
இதோ கார் நெருங்கி விட்டது. கரும் பூதம்போல் சாலையின் குறுக் கேகிடந்த கட்டைக்குச் சமீபமாக வந்த கார், "கிரீச்” என்ற "பிரேக் கோடு நிறுத்தப்பட்டுவிட்டது.
காருள் இருப்பது சீனாப் புள்ளியா? தானாப் புள்ளியா? என்று பார்த் துவர இர ண் டு குண்டர்களை அனுப்பி வி ட் டு, துப்பாக்கியை நீட்டியபடி 'ரெடி'யாக நின்றான் அருணாசலம்.
மோப்பம் பிடிக்கச் சென்றவர் கள், கா ரு க் கு ஸ் இருப்பவர்கள் “சீனாப்புள்ளி'கள்தான்' எ ன் ப தற்கு அடையாளமாகச் சீழ்க்கை யடித்தார்கள்; அடுத்த க ண ம்?

‘டுமீல், டுமீல்" என்று துப்பாக்கி முழங்கி ஓய்ந்தது. எல்லாக் குண் டர்களும், "த ட, தட' என்று காருக் குச் சமீபமாக ஓடினார்கள் .அருணா சலம் 'டார்ச்"சை அடித்து காட்டுக் குள் பார்வையைச் செலுத்தினான்.
உள்ளே ... ?
ஒரு கிழவர்; ஒரு பெண் ; டிரைவர் - மூவரும் இரத்த வெள் ளத்தில் நீச்சலடித்தார்கள்.
அந்த மூன்று ஜீவன்களும் முக்கி
முனகிய படி மரண ஒலமிட்டுக் கொண்டிருந்தன அந்த மயான ச் சூழலின் மத்தியிலும் அவர்களில் யாரோ எதையோ கூற முயல்வதும் வெளியில், நின்ற அருணாசலத்துக் குத் தெளிவாய் கேட்டது.
‘துவே! மகே ரத்ரம் துவே! நந்தா! நந்தா வத்தீ ‘* பழக்கப் பட்ட ஒரு கிழக்குரல் முனகியது.
காதைக் கூராக்கினான் அரு ணாசலம்
"தாத்தே! மகே தாத்தே!
தமிஸ தமிஸ்" என்று குரல் கொடுத் தது ஒர் இனிய குரல்.
அந்தக் குரலைக் கேட்ட அரு ணாசலத்தின் உரோமங்கள் குத் திட்டு நின்றன. சருமத்தைக் கிழித் துக்கொண்டு வெளியே பாய்வதற்கு ஆயத்தமானது அவன் குருதி.
'நந்தாவதி என் அன்பே' என்று அலறி விட்டான் அருணா சலம், காருக்குள் அலங்கோலமாகக் கிடந்த அவள் ரத்தமேனியைவாரி எடுத்துத் தன் மார்பில் அணைத் துக் கொண்டான்.
யில்
நந்தாவதி அவன் அணைப்பில் மெய்மறக்கக்கூடிய நி  ைல யி ல் , இல்லை. உயிர் பிரிவதற்கிடையில், தான் வந்த நோக்கத்தைக் கூறத் தொடங்கினாள்:
** அன்பரே! விதியின் பிரகாரம் விஷயம் நடந்துவிட்டது. இப்பொ ழுது உங்கள் நாட்டை நெருங்கிக் கொ ன் டி ரு க் கும் இன்னொரு விதியை நீங்கள் உடனடியாக மாற் றியமைக்க வேண்டும்; உங்கள் நாட்டைத்துவம்சம் பண் ணு வ தற்கு, இரத்தினபுரியிலிருந்து லாரி கள் மூலம் புறப்பட்டுள்ள நரசோ ரக் கோஷ்டி, இதற்குள் கொழும்பு DfTri jk, Aaf Ts5 L பொலநறுவைக்கு வந்து சேர்ந்திருக்கும். அங்கு பொல ந று  ைவ க் கோஷ்டியை ஜோடி சேர்த்துக் கொண்டு மட்டக்களப் புக்குள் புகுவது அதன் திட்டம். இந்தச் சதித்திட்டத்தை ரகசிய மாக அறிந்து கொண்டு, நானும், தந்தையும் உங்களைப் பார்க்க விரைந்து கொண்டிந்தோம். இடை இப்படி ஆகிவிட்டது. என் னைப் பற்றியோ, என் தந்தை யைப் பற்றியோ நீங்கள் இனிக்கவ லைப்பட நேரம் இல்லை. போங் போய் உங்கள் நாட்டு மக் களை எச்சரிக்கை செய்யுங்கள்.”* * மளமள வென்றுகூறி முடித்தாள் ந ந் தாவ தி, அணையப்போகும் விளக்கின் பிரகாசம் மின்னியது அவள் பேச்சில்.
கள் .
அருணாசலத்தின் மூளைக்குள் துப்பாக்கி வெடித்தது; மின்னல் மின்னியது; இடியிடித்தது சமூத் திரம்பொங்கியது செயலிழந்துநின்ற அவன் மார்பில் துவண்டு கிடந்த
15

Page 10
நந்தாவதியின் மூச்சும் செயலிழந் தது! அவள் தந்தையும், கார் டிரை வரும் அப்பொழுதே விறைத்து விட்டார்கள்!
பிக்கு கதையைக் கூறி முடிப்ப தற்கும். வண்டி ‘ஹஅய்' என்ற பேரிரைச்சலுடன் பொல நறு 656160 வந்து அடைவதற்கும் சரியாக இருந்தது:
அதுவரையில் கதையில் ஒன்றி யிருந்த நான் மணியைப் பார்த் தேன். பின் ஜாமம் 3 - 30. புறப் பட எழுந்த பிக்குவிடம், 'அன் னையைப் பார் க் க ஊருக்குச் சென்ற அருணாசலம், திடீரென்று அத்தனை கொடிய வெறியனாக எப்படி மாறினான்? கலவரம் உச்ச நிலையை அடைந்திருந்த அந்தப் பயங்கர வேளையில் அவன் எப்படி ஊருக்குச் சென்றான்?" என்று இயற்கையாகவே என்னுள் எழுந்த கேள்விகளைக் கேட்டு வைத்தேன்.
அவர் பதிலே பேசவில்லை. மெதுவாகக் கீழே இறங்கி 'விருட்" டென்று நடந்து விட்டார்! ஆனால் அவர் அமர்ந்திருந்த இடத்தில் கிடந்த "டயரி" ஒன்று என்னைப்
பார்த்துச் சிரித்து நின்றது!
அவசரம் அவசரமாக அதை எடுத்து அவரிடம் கொடுப்பதற்கு முயன்றேன். அதற்குள் அவர் மறைந்தே விட்டார்!
என்னை மீறிய ஆவலொன்று அந்த "டயரி"யைப் புரட் டி ப் பார்க்கத் தூண்டியது பு ர ட் டி
16
னேன், என்ன விந்தை! முத்து முத் தான தமிழில் அந்த டயரி" எழு தப்பட்டிருந்தது.
“என்னதான் எழுதப்பட்டிருக் கும்?’ என்று படிக்கத் தொடங் கினேன்.
‘புத்தர் பிரானே! போதிமர நிழலில் மோனத் தவமியற்றும் புனிதத் தலைவனே! கருணைப் பெருங்கடலே! என்னை மன்னித்து விடு ஐயனே! அன்று நான் அத் தனை வெறியாட்டமாடி மனித ரத்தம் குடித்ததற்கு என் ஒரே தங்கையை இழந்து தவித்ததே காரணம். அன்னையைப் பார்க்க ஓடோடிச் சென்ற என்னை வர வே ற் றது" வெலிமடையிலிருந்து வந்த அந்தப் பயங்கரச் செய்தி. கருவுற்றிருந்த என் தங்கையைக் கண்ட துண்டமாக வெட்டி எறிந்து விட்டார்கள் சிங்களவர்கள். அத னால் ஏற்பட்ட பழி உணர்ச்சி, என் உயிரை நீரிலிருந்து மீட்ட என் நாட்டைப் பயங்கர ஆபத்தி லிருந்து காத்த - என் உயிரினும் இனியவளையே பலி கொண்டு விட் டது! இதைவிடத் தண் ட  ைன எனக்கு வேண்டியதில்லை, தேவா! அன்று என் அன்னையைக் காண, அந்த உத்தமி. சொன்ன ஆலோச னைப்படி புனித மஞ்சளங்கி தரித் துத் தற்காலிக பிக்குவாகி, ஒர் ஆபத்துமின்றி ஊர் போய்ச் சேர்ந் தேன். இன்று அதே புனித அங்கி தரித்து நிரந்தரமாகவே உன் பக் தனாகி விட்டேன். உன் நிழலில் ஒதுங்கியுள்ள என்னை நீ ஏற்றுக் கொள்ள வேண்டும். ஞானதேவா! அருணாசலம்’.

நேர்காணல்
ஈழத்து இலக்கியம் - நாடகம் பற்றி
பேராசிரியர் கா. சிவத்தம்பி
பேராசிரியர் சிவத்தம்பி யாழ்ப்பாணப் பல்கலைக் கழக நுண்கலைத் துறைத் தலைவர். இலங்கையில் மாத்திரமன்றி உலக நாடுகளிலும் அறியப்பட்ட கணிக்கப்பட்ட அறிஞர்; ஆய்வறிவாளர்; விமர்சகர்; சிருஷ்டிகர்த்தா. கிழக்குப் பல்கலைக் கழகத்தில் விரிவுரைகளாற்ற வும், விபுலாநந்தர் நினைவுச் சொற்பொழிவாற்றவும் இந்த வருட முற்பகுதியில் மட்டக்களப்புக்கு அவர் வருகை தந்திருந்தார். அச் சமயம் அவரை உதயம் பேட்டி கண்டது.
கேள்வி: பேராசிரியர் சிவத்தம்பி அவர்களே,
ஈழத்தின் அண்மைக்கால இலக்கிய முயற்சிகள் பற்றி உங்கள் அவதானிப்புக்களும், அபிப்பிராயங்களும் என்ன?
ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் நாம் எண்பதுகளில் ஒரு முக் கியமான திருப்புமுனையில் இருக்கிறோம் என்று நான் கரு துகிறேன். அறுபது எழுபதுகளில் இருந்த நிலையோ அல்லது முப்பது நாற்பதுகளில் இருந்த நிலையோ அல்ல இன்றுள்ள நிலை. இந்த சமூகத்தின் அனுபவங்கள் இ ன்று முற்றிலும் மாறுபட்டவையாகவும் உணர்வாழம் கொண்டவையாகவும் மாறியுள்ளன. தமிழ் சமூகத்தைப் பொறுத்தவரை இவ்வனு பவம் முன்னர் ஏற்படவில்லை எனலாம். இதனால் இந்த
17

Page 11
கேள்வி :
பதில் :
జబizషత
இலக்கிய வெளிப்பாடுமிக
வும் அசாதரணமானதாக IQ பெண் நிலை நோக்கு
வும், இதற்கு முந்திய இல இன்றைய இலக்கிய போ
க்கியங்களிலிருந்தும் வித் தியாசமானதாகவும் இரு க்கப் போவது உண்மை. அத்தோடு சிறிதுகாலம் செல்ல முழுத் தமிழ் இலக்கியத்திற்கும் இது போய்ச் சேர்கின்ற பொழுது முழு த் தமிழ் இலக்கியத்தின் பரிணாமத்தையும் இது மாற்றியமைக்கப் போகிறது என்பதும் உறுதி.
க்குகளின் பிரதான அம் சங்களில் ஒன்று.
தமிழிலக்கியம் இப்போது ஒரு மாறுதலுக்குட் பட்டுள்ளதாகக் கூறுகிறீர்கள். கவிதைத்துறையில் இதன் தாக்கம் எப்படியுள் ளது? இவ்வகையிற் குறிப்பிடத்தக்க கவிஞர்கள் யாவர்?
எண்பதுகளிலிருந்து இம்மாற்றங்கள் கவிதைத் து  ைற யில்
ஏற்பட்டுள்ளது. அறுபது எழுபதுகளில் எழுதியவர்கள் தொட
கேள்வி :
பதில் :
18
ர்ந்து இப்புதிய அனுபவங்களை எழுதிக்கொண்டு வ ரு வ து ஒரு புறமாக இருக்க, முற்றிலும் இப்புதிய அனுபவத்தினுT டாகவே தம் ஆக்க ங் க  ைள எழுதி வெளிப்படுத்திய புதிய தலைமுறையும் இதோடு சேர்கிறது. இவர்களின் வருகையுடன் புதுக்கவிதை எமக்கு ஒரு நிலை பேறுடைய இலக்கிய வடிவ மாக மாறுகிறது. உதாரணமாக "மரணத்துள் வாழ்வோம். என்ற கவிதைத் தொகுதியைக் குறிப்பிடலாம். சேரன், இள வாலை விஜயேந்திரன், புதுவை இரத்தினதுரை போன்ற கவிஞர்கள் முக்கிய இடத்தை வகிக்கின்றார்கள். ஒடுக்கு நிலைக்கு எதிரான மனிதாயுதக் குரலாக கவிதை வெளிப்ப டுகிறது. இக்கட்டத்தில் புதுக்கவிதை ஒரு புதிய குழ லி ல் வெளிவரத் தொடங்குகிறது. இந்த அடியையொற்றி வளர்ந் தவர்களில் கிழக்குப் பகுதியில் பிறந்து தமிழிலக்கியம் முழுவ தற்கும் உரியவராக மாறிக்கொண்டு வருகிற சோலைக்கிளி போன்றவர்களின் கவிதைகளைக் குறிப்பிட விரும்புகிறேன்.
புனைகதைகளில் இதன் தாக்கம் எவ்வாறுள்ளது? குறிப்பிடத் தக்க எழுத்தாளர்கள் யார்?
புனைகதையைப் பொறுத்தவரை இப்போது ஒரு புதிய அனு பவமும் அதை எடுத்துச்சொல்லும் முறைமையும் வந்துள்ளது. புனை கதைத் துறையைப் பற்றிப் பேசும் பொழுது உணர் ஒன் என்று ஒன்றுள்ளது: Sensibility என்று ஆங்கிலத்திற்

கேள்வி :
கூறுவர். மக்களுடைய உணர்திறனும் எழுத்தா IO மக்களுடைய உணர்திற
ளரின் உணர்திறனும் இப் 8 " o போதுமாறியுள்ளது.இவர் ಇಳ್ದ 356T இப்போது பிரதான தாள 9 - 600 றனு மாக”வெளியில் நின்று இன்று மாறியுள்ளது.
பார்ப்பவர்களாக இத னைப் பார்க்காமல் அதற்குள்ளேயே இருந்துகொண்டு எழுதுப வர்களாக வளரும் நிலையைக் காணலாம். ஆனால் அதேவே ளை இப்போது ஏற்பட்டுவரும் மாற்றங்களின் தன்மை, எதிர் காலம் பற்றிய தெளிவு, பற்றிய விளக்கம் இப்போது இருக்க முடியாது. வரலாற்றுக் காரணங்கள் அவை.
மனிதனின் சமூக உறவுகளையும், பிரச்சினைளையும் ஆராய்ந்து அதற்குள் வழிகளைக் காட்டுகின்றதுமான நா வ ல் போன்ற பேரிலக்கியம் பெயரளவில் வந்தாலும் ஆழமாக வருவதற்குச் சற்றுக் காலம் செ ல் லு மென் றே நான் நினைக்கின்றேன். ஆனால் இவற்றைப் பதிவு செய்கின்ற சிறுகதைகள் வ ர த் தொடங்கி விட்டன எ ன் று கருதுகிறேன். சிறுகதை எழுத் தாளர் என்னும்போது இக்காலகட்டத்தில் இருவரை முக்கிய பிரதிநிதிகளாகக் கொள்வேன். ஒன்று வடக்குப் பகு தி யில் ரஞ்சித்குமார், (அவரின் கோசலை, காலம் உனக்கொருபாட் டெழுதும், கோளறுபதிகம்) கிழக்குப் பகுதியில் உமாவரதரா சனைக் குறிப்பிடுவேன். அவருடைய கதைகளெல்லாம் மிக மிக முக்கியமான கதைகள் கிழக்குப்பகுதியின் எஸ். எல். எம். கணிபாவின் "மக்கத்துச் சால்வை’ நல்ல அற்புதமான கதை. ஆனால் அது புதிய உணர்திறனுடன் வந்ததல்ல, அறுபது எழுபதுகளின் Sensibility ஒரு சிறப்பான சிறுகதை வடிவமாக வந்ததின் பயனே அது.
வேறு என்ன புதிய போக்குகள் தற்கால இலக்கியப் போக் கிலே உங்களுக்குத் தென்படுகின்றன?
முதலாவதாக நான் குறிப்பிட விரும்பும் முக் கி ய போக்கு பெண்கள் தம் உணர்வுகளை இலக்கியத்திற் பதிவு செய்யும் முறைமை அது இப்போது பிரதான போக்காகத் தொடங்கி யுள்ளது. இவ்வகையிற் “சொல்லாத சேதிகள் க வி ைத த் தொகுதி சிறிய நூலாயினும் முக்கியமான நூல். சிறுகதைத் துறையிலும் பெண்நிலை நோக்கில் நின்று பார்க்கும் சில சிறுகதைகள் வந்துள்ளன. உதாரணமாக கோகிலா மகேந்தி ரன் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர். பெண்நிலை நின்று நோக்கும் பார்வை இதிற் குறிப்பிடத்தக்கது.
19

Page 12
கேள்வி :
2O
இவையெல்லாம்மேலாண்
மையுள்ள இலக்கிய வடிவ O வடக்குப் பகுதியில் ரஞ் ங்களே. எனினும் பாரம்
பரிய இலக்கிய வடிவங்க சித்குமார், கிழக்குப் பகு ளும் தொடர்ச்சியாக வந் தியில் உமா வரதராஜன் துகொண்டிருக்கின்ற ன. முக்கியமான சிறுகதை
வாசிக்கப்படுகின்றன. இத னை நான் அழுத்திச்சொ ல்ல விரும்புகிறேன். நாவ லும், சிறுகதையும் வரும் அதே வேளையில் கோயில் தெய்வம் பற்றியபாரம்பரிய இலக்கிய வடிவங்கள் பெருவாரியாக வருவது குறிப்பிடத்தக்கது. அண்மைக்காலமாக நான் அவதா னித்த இன்னொன்று ஆழமான கவிதைகளை இசைப்பாடல் களாகப் பாடுகின்ற மரபு. அதிற் புதுவை இரத்தினதுரையின் பாடல்கள் சிறப்பானவை.
எழுத்தாளர்கள்.
இலக்கியப் போக்கின் இன்னொரு முக்கிய விடயம் என்ன வெனில், நாற்பது ஐம்பதுகளில், அறுபது, எழுபதுகளிலே பல்கலைக்கழகம் | பல்கலைக்கழகத்திற்கு வெளியே என்ற கோடு கீறிக் காட்டப்பட்ட ஒரு தன்மையிருந்தது. அதிஷ்ட
வசமாக இப்போது பல்கலைக்கழகம் எ ன் பது கொழும்பு,
பேராதனையுடன் நின்றுவிடாமல் யாழ்ப்பாணம், மட்டக்க ளப்பு என அகன்றுள்ளது. இதனால் பல்கலைக்கழகமும் சமூ கமும் ஒன்றிணையும் தன்மை காணப்படுகின்றது. இதனால் எழுத் தா ள ர்க ட் கும் புலமையாளர்களுக்குமிடையேயுள்ள ஊடாட்டம் மிக விரிபட்டு ஸ்ளது. இது சிங்கள மக்களுக்கு ஏற்கனவே அறுபதுகளில் ஏற்பட்டது. இதற்கூடாகத்தான் றெஜி சிறிவர்த்தனா, குணதாச அமரசிறி, ச ரத் சந் தி ரா போன்றோர் வெளிவந்தனர். அதே போல எழுபதுகளுக்குப் பிறகு எண்பது தொண்ணுரறுகளில் அப்போக்கு தமிழ்பேசும் மக்களிடையேயும் காணப்படுகிறது. இதுவும் ஒரு மு க் கி ய போக்காகக் கருதுகிறேன்.
இலக்கியத்தில் தாங்கள் கூறிய அபிப்பிராயங்களை நாடகத் திற்கும் பொருத்திப் பார்க்கலாமா? இதனைப் பின்னணியா கக் கொண்டு ஈழத்தின் அண்மைக்கால் நாடகப் போக்குகள்
பற்றிய தங்கள் மனப்பதிவுகள் என்ன?
அரங்கியல் வளர்ச்சி இலக்கிய வளர்ச்சியிலும் பார்க்க மிகுந்த உற்சாகத்தையும், நம்பிக்கையையும் தருவதாக உள் ள் து. ஆழமான நிலையிற் பார்க்கையில் இலக்கிய / நாடக வளர்ச்

கேள்வி :
பதில் :
கேள்வி :
சியில் வேறுபாடில்லை யென்றாலும் நாடகம் O வித்தியானந்தன் மீது
வளர்ந்த சூழலுக்கும் னக்கப் a r \ முறைமைக்கும், இலக்கி :ပ္ဗူအံ့'ဈဖူ"P:ဲဖုံး၊ ၊၊ யம் வளர்ந்த சூழலுக்கும் ண்டு எனினும் அவர்
முறைமைக்குமிடையே ஒரு தமது கூத்துக்களில்கோ வேறுபாடுண்டு அறுபதுக ரஸைப் பயன்படுத்தியது ளில் பேராசிரியர், வித்தி சம்பந்தமாக எனக்கு யானந்தனால் அவர்மாண ஆழமான பிரச்சினை
வர்கள் மூலமாக மீ. கண் டுபிடிப்புச் செய்யப்பட்ட நாடகவடிவமானது எழுப துகளில் ஒரு ஸ்திரமான வடிவை அடைந்ததன் பின்னர், அந்த மீள் கண்டுபிடிப்புச் செய்யப்பட்ட நாடக வடிவத்தை ஒரு ஜீவனுள்ள, மக்களோடு தொடர்புள்ள, மக்களின் பிரச்சினை களை எடுத்துத் காட்டுகிற கலை வடிவமாக ஆக்க முடியும் என்பதனை வித்தியானந்தனுக்குப் பின்னர் வந்த அவரது மாணவர் பரம்பரையினர் செய்து வந்தனர்.
யுண்டு.
எழுத்தாளர் மத்தியிற் காணப்பட்ட பிளவு, சண்டை நாட கக் கலைஞர் மத்தியிற் காணப்படாமை மிக முக்கிய அம்ச மாகும். இதில் நாடக அரங்கக் கல்லூரி முக்கிய இடம் வகித் தது. அது தொடங்கிய காலகட்டத்தில் 2 செல்நெறிகள் காணப்பட்டன .
அந்நெறிகள் யாவை, அதன் முக்கியஸ்தர்கள் யாவர்?
ஒன்று சண்முகலிங்கம், மெளனகுரு, தாசீசியஸ், சிவானந்தன் போன்றவர்கள் சேர்ந்து இந்த நாடகக் கல்லூரி மூலம் தொழிற் படுகின்ற முறைமை, மற்றது பாலேந்திரா நிர்மலா ஆகியோர் மொழிபெயர்ப்பு, த ழு வ ல் நாடகங்களை மேடையிட்டுத் தொழிற்படுகின்ற முறைமை. நாட்டின் நிலைமை காரணமாக பாலேந்திரா மேனாடு சென்ற பின் அச்செல்நெறி ஒரளவு நின்று விடுகிறது.
பாலேந்திரா, நிர்மலா போன்றவர்கள் சென்றபின் ஒரு போக்கு ஒரளவு நின்று விட்டதாகக் குறிப்பிப்டீர்கள். மற்றப்போக்கு எவ்வாறு வளர்ந்தது என்று விளக்க முடியுமா?
நாடக அரங்கக் கல்லூரியினர் மீட்டெடுக்கப்பட்ட நாடக வடிவங்களுக்கூடாக ஒரு புதிய அல்லது பாரம்பரிய அரங்ளினைச் கண்டுபிடிப்புச் செய்வதற்கான சில நடைமுறைகளை மேற்
21

Page 13
22
கொள்கிறார்கள். இந்த V
நிலை ஏற்படுகின்றபொ O கல்வி அரங்கு ஒன்று ழுது எண்பதுகளில் புதிய (Educational Theatre) உணர்திறன் மக்களிடை உருவாகியுள்ளது யேயும் வருகிறது; கலை ஞர்களிடையேயும் வருகி றது. இதனூடாகத்தான் 1983 களில் சண்முகலிங்கத்தின் "மண் சுமந்தமேனியர் வரு கிற து. இந் நாடகம் திடீரென வரவில்லை. அதற்கும் ஒரு வரலாறுண்டு. உதாரணமாக, மீட் டெ டு க்க ப் பட்ட நா ட க வடிவத்தை அதே நாடக வடிவம் மூலம், புதிய விடயங்களைச் சொல்லலாம் என்பதற்கு மெளனகுருவின் 'சங்காரம்" ஒரு நல்ல உதாரணம். ஆனால் புதிய பொருளைப் பழைய உருவத்திற் சொல்கிற போது வரும் சில இடர்பாடுகளையும் சங்காரத்திற் காணக் கூடியதாக இருந்தது. அதிலிருந்து எல்லாருமே சேர்ந்து நாடக அரங்கக் கல்லூரியில் ஐரோப்பிய நாடக அரங்கில் வளர்ந்த புதிய முறைமைகளை உள்வாங்கி ஒரு புதிய அரங்கைக் கொணர் கின்றனர். இது மிக முக்கியமானது. இது நடக்கும் அதேவே ளையில் இன்னொரு மிக மிக முக்கிய நிகழ்வு அரங்க வரலாற் றில் நடைபெறுகிறது. அது என்னவெனில் குழந்தைகளுக்கான அரங்கு, பாடசாலைக்கான அரங்கு என்ற ஒரு அரங்கு வளர் கிறது. அதில் மெளனகுரு, சிதம்பரநாதன், பிரான்சிஸ் ஜெனம் ஆகியோர் முக்கியமானவர்கள். இது முக்கியம். ஏனெனில் பாடசாலை நாடகம் என்பது பரிசளிப்பு விழாவுக்கு நடத் தப்படுவது மாத்திரமல்ல. அதற்கு மேல் அது கல்வியோடு சம்பந்தப்பட்டது; பாடசாலையின் நியமமான கல்விநெறி யோடு சம்பந்தப்பட்டது; மாணவரின் திறன்களை வெளிக் கொணரும் ஒரு சாதனம் சம்பந்தப்பட்டது என்ற வகையில் இவைமுக்கியமானவையாயின.இதன் காரணமாகக்கல்வி அரங்கு (School Theatre) படிப்படியாக வளரத் தொடங்கியது.குழந்தை sprig, (Children Theatre)uit LaFIT 606) grufig (School Theatre)
இரண்டையும் இணைத்து நான் கல்வி அரங்கு (Educational
1heatre, எனக் குறிப்பிடுவேன்.
இது நடக்கும் போதுதான் நாடகம் பற்றிய கற்கைநெறியில் எம்மிடையே அதிஷ்டவசமான ஒரு மாறுதல் ஏற்படுகிறது. என்னவெனில் க. பொ. த உயர்தர வகுப்புக்கு நாடகம் ஒரு பாடமாகிறது. இதனால் Educational Theatre சில பாடசாலை களில் முற்றுமுழுதாக ஒரு பாடமாக வளர்கின்ற நிலைமையை
நாம் காணமுடிகிறது.

கேள்வி:
பதில்
கற்கை நெறியாக பாட சாலை மட்டத்திலும்,
புதிய வடிவத்தேடலாக O சிங்கள நாடகத்தை விட
வெளியிலும் வளர்கின்ற வன்மைப்பாடான ஒரு பொழுது மண் சுமந்த வடிவமாக ஈழத் தமிழர் மே ணி யர் நாடகத்தில் மத்தியில் இன்று நாட
சொல்லப்பட்டமுறைமை நன்கு வள ர் வ தனைக் காணலாம். இது மக்களி டையே தமக்கு வேண்டிய ஒரு நாடகம் வடிவம் வந்துவிட்டமை போன்றதைக் காட்டுவது போல இருந்தது அவர்கள் அதற்குக் கொடுத்த வரவேற்பு.
கம் உள்ளது.
இதனைத் தொடர்ந்து பல்வேறு நாடக முயற்சிகள் நடக்கின் றன. இசையும் ஆட்டமும், பாவமும் உணர்ச்சியும் இணைந்த ஒரு நிலையில் நாடகம் வரத் தொடங்கும் பொழுது, அதுதான் எமது உண்மையான பாரம்பரிய அரங்கு அதனைக் கண்ட சனங்கள் அந்த அரங்கிற்குப் போகத் தொடங்குகிறார்கள்.
இது நடக்கும் பொழுது தான் இன்னொரு முயற்சி நாடகத் துறையில் ஏற்பட்டது. அதாவது பல்கலைக்கழகத்தில் நாட கம் ஒரு படிப்பாக இடம்பெறத் தொடங்குகிறது. இது தொடங் கியவுடன் சில மாற்றங்கள் படிப்படியாக இப்போது ஏற்படு கின்றன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும், கிழக்குப் பல் கலைக்கழகத்திலும் நாடகம் ஒருவரன் முறையான பாடமா கப் பயிற்றுவிக்கப்படுகிறது.
இது நாடகத்தைக் காத்திரமான கலையாகப் பலரையும் நோக்க வைத்தது.
இவற்றை விட வேறு ஏதும் போக்குகளை தமிழ் நாடக உலகில் குறிப்பிட முடியுமா?
மேலாண்மையுடைய இப்போக்கு மாத்திரமல்லாமல், பழை மையான பாரம்பரிய வடிவங்களை அப்படியே போடுகின்ற முறைகளும் உதிரியாக நடந்து கொண்டிருக்கின்றன. உதார ணமாக பாலசுந்தரத்தின் "காத்தவராயன்' நாடகம். காத்த வராயன் கூத்து ஒரு Theatre Catogary அல்ல. அது ஒரு நாட கம்தான். ஆனால் அதை மீட்டும் போட்டபடியினால் மீண் டும் அப்பாரம்பரியத்தை மீட்டுப் பார்க்கும் தன்மை ஏற்பட்
2
3.

Page 14
கேள்வி:
பதில்
24
டது. ஆனால் அது மிகத் தூரம் செல்லவில்லை. ஏனெனில் கற்பனா பூர்வமாக அதனை எடுத்து ஆளும் திறன் அதனைச் செய்வோர்க்கு வேண்டும்.
இக் காலகட்டத்தில் துர் அதிஷ்டவசமாக வைரமுத்து இறந்து விட்டார். வைரமுத்து இறந்ததன் பின்னர் அவரது ஸ்பெசல் நாடக மரபில் (இசை நாடக மரபு) ஈடுபாடுண்டாகிறது. செல் வராசா, கனகரெத்தினம் போன்றோர் இதனை ஆடும் முறைமை யைக் காண்கிறோம். «Y
மட்டக்களப்பிலும்,முல்லைத்தீவிலும், மன்னாரிலும்,மலை நாட் டிலும் பெரும்பாலும் பாடசாலை மட்டங்களில் அவ்வப் பிர தேசக் கூத்துகள் ஆடப்பட்டமையும் குறிப்பிடற்குரியது.
முழுமையான நாடக வளர்ச்சியில் ஒன்று.நடந்துவிட்டது. என்ன வெனில் தி. மு. க. பாணியில் வந்த சினிமாப்பண்பு கலந்தவ சன நாடகங்கள் மறைந்து போனமை, துர்அதிஸ்டவசம் என்ன வெனில் இத்தகைய நாடக மரபு கொழும்பில் இன்னும் இருக் கிறது.
சிங்கள நாடகத்திற்கும் தமிழ் நாடகத்திற்கும் இன்றைய நிலையிலுள்ள உறவு என்ன ?
50, 60 களில் நாம் அனைவரும் சம்பந்தப்பட்ட காலங் களில் சிங்கள நாடக வளர்ச்சி உந்துதலாக எமக்கு அமைந் தது. சரத் சந்திராவினால் மீட்டெடுக்கப்பட்ட சிங்கள நாட கத்தினுடைய அமைப்பில் நாங்கள் எமது நாடகங்களை மீட் டெடுத்துக் கொண்டோம். வித்தியானந்தன் மீது எனக்குப் பெருமதிப்புண்டு எனினும் அவர்கோரஸை பயன்படுத்தியது சம்பந்தமாக எனக்கு ஆழமான பிரச்சினையுண்டு. சரத்சந் திரா கோரஸைப் பயன்படுத்திய படியினால் அவரும் பயன் படுத்தினார். ஆனால் கோரஸ் பயன்படுத்துதல் கிரேக்க நாடக முறைமை. கீழைத்தேய பாரம்பரியத்திற் கதை கூறு பவர்கள், அண்ணாவியார், கட்டியகாரன், பொருத்தேகு ஆகியோரே கதையை நடத்துவர். இது சமூகமும், நாடக மும் இணைந்த பிரச்சினை. சிங்களத்தில் மீட்டெடுக்கப்பட்ட வடிவத்திலேயே நாங்களும் செய்ய முனைந்தோம். அதுதான் பிரச்சனை. இதில் வித்தியானந்தனுடன் பல நாடக முக்கி யஸ்தர்கள் அன்று சம்பந்தப்பட்டிருந்தனர். சுந்தரலிங்கம் குறிப்பிடத்தக்கவர்,

எழுபதுகளில் தேசிய நாடகவிழா ஒன்று நடைபெற்றபோது சிங்கள தமிழ் நாடகங்கள் ஒரே மேடையில் மேடையேறின. அப்படிப் பார்க்கையில் எமது நாடகங்கள் பின்தங்கியனவாக இருக்கவில்லை என்பதை அன்று காணக் கூடியதாக இருந்தது.
ஆனால் ஒன்று எழுபதுகளுக்குப்பின் ஒரு திறந்த பொருளா தார அமைப்பு இலங்கைக்கு வந்து அதுதன் செல்வாக்கை சிங்களப் பகுதிகளில் நிலைநாட்டிய பின்னர் அறுபது எழுப துகளில் காணப்பட்ட அரங்க மரபு ஓரளவு ஷிணித்து விட்
டது. இப்போது புதிய அரங்கு மேனாட்டு அரங்க முறை மைகளில் நடிக்கும் ஒரு தன்மையும் காணப்படுகிறது இப்ப
படிப் பார்க்கையில் எண்பது தொண்ணுறுகளில் சிங்கள மக் களின் பிரதான வெளிப்பாட்டு வடிவமாக நாடகம் இருக்க வில்லை. ஆனால் ஐம்பது அறுபதுகளில் The best expressive form of lhe Sinhalese was Thertre giGuTé lona) sigodiva). ஆனால் இப்போது தமிழர்களைப் பொறுத்த வரையிற் அவர்கள் பத்திரிகையில் எழுத முடியாத வானொலியில் பேசமுடியாத, ரூபவாகினியில் வெளியிட முடியாத விடயங் களை நாடகத்தின்மூலம்வெளிப்படுத்துகிறார்கள் வீதி நாடகங் கள் பண்பாட்டு பவனி நாடகங்களில் இதனைக்காண்கிறோம்.
காமணி கத்தெட்டுவகம போன்றோர் சிங்கள மக்களிடம் இன்று வீதி நாடகம் போடினும் இன்று வன்மைப்பாடான ஒரு வடிவமாக நாடகம் தமிழ் மக்களிடையே தானுள்ளது.
இந்த அளவுக்குச் சிங்கள நாடகம் இப்போது இல்லை. என்று நான் மிகத் திட்டவட்டமாக கருதுகிறேன்.
பேட்டி. சி. மெளனகுரு
உதயம் வெளியீடு: 13
கண மகேஸ்வரனின்
எல்லை வேம்பு
சிறு கதைகள்
விலை ரூபா. 50/-
உதயம் வாசகர் வட்ட
உறுப்பினர்கள் தங்களுடிைய இலவச
பிரதிகளைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
ஆசிரியர்
weB : httpwww.thanizham net 25

Page 15
UGO)UUdd
தோப்பில் முகம்மது மீரான் சிறந்த தமிழ் நாவலாசிரியர். இது
வரை இவரது முன்று நாவல்களும் ஒருசிறு கதைத் தொகுதி யும் வந்துள்ளன.
நாவல்களாவன
i) ஒரு கடலோரக் கிராமத்தின் கதை (1988) ii) துறைமுகம் (1991) ii) கூணன் தோப்பு (1993) இவர் எழுதிய முதல் நாவல் கூணன் தோப்பு ஆயினும் முத லில் வெளியாகி வாசகரின் கவனத்தை ஈர்த்த நாவல் ஒரு கடலோரக் கிராமத்தின் கதையே. கல்லூரியில் இவர் பயின்று வந்தது மலையாள மொழியிலா கும். தாய்மொழியான தமிழை சுயமுயற்சியாற்கற்றுக் கொண் டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்லாமிய சமுதாயத்தை அது அன்று எப்படியிருந்ததோ
அப்படியே காட்ட முயலும் முயற்சியில் தமிழில் வந்த முதல் நாவல் இது என்று பேராசிரியர் பொ. ஜெயராம பாண்டியன் கூறுகிறார். இந் நாவல் பற்றி கலாநிதி நுஃமான் அருமையான ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.
உதயம் வாசகர்கட்கு இந்நாவலை அறிமுகம் செய்யும் பொருட்டு இக் கட்டுரை பிரசுரிக்கப்படுகிறது.
ஒரு கடலோர கிராமத்தின் கதை
Bவீனத் தமிழ் இ லக் கி ய ப் படைப்பாளருள் முஸ்லீம் கவிஞர் கள் பலர் உள்ளனர். இக்கவிஞர் கள் த ம் படைப்புக்களினுTடாக முஸ்லீம் சமுதாய வாழ்க்கையை யும் சித்திரிக்கின்றனர். கவி கா. மு, செ ரீ ப், சாரணபாஸ்கரன்,
26
செ. போத்திரெட்டி
சிராஜ் பாக்கவி, மேத்தா, அப்துல் ரகுமான், இன்குலாப் ஹபி என இவர் க ள் வரிசை வளர்கிறது. ஆனால் சமுதாயப் பொறுப்புணர் ச்சியுடன் தரமான நாவல், சிறு கதை எழுதி வெற்றியடைந்த முஸ்

லீம் எழுத்தாளர்கள் தமிழில் அரு கியே காணப்படுகின்றனர். தமிழ் முஸ்லீம்களின் வைக்கம் மு க ம து பவுதிர் இன்னமும் பிறக்கவில்லை என்றே க ரு த த் தோன்றுகிறது. ஆகவே நம்மில் ஒரு சாராரிடையே நிகழ்ந்து வரும் மாற்றங்கள் இது நாள் வரை சிறந்த கலைப் படைப் பாக வடிவம் பெற்று வெளிவர வில்லை. இக்குறையை ஓர ள வு போக்கும் வகையில் திரு முஹம்ம துமீரா னின் "ஒரு கடலோரக் கிரா மத்தின் கதை" வெளி நதுள்ளது வரவேற்கத் தக்கது.
முஸ்லீம் முரசில் தொ ட ர் கதையாக எழுதப்பட்டு நூல் வடி வில் இன்று வெளியிடப்பட்டுள்ள இந்நாவல் திருநெல்வேலியிலுள்ள சிறிய வெளியீட்டகமான ஜலீலா பப்ளிஷிங் ஹவுசால் வெளியிடப் பட்டுள்ளமையால் தமிழ் இலக்கிய ஆர்வலர்களின் தகுந்த கவனிப்பி னைப் பெறவில்லை. தொழில் முத லாளித்துவத்தின் வளர்ச்சிக் கால கட்டத்தில் நிலப்பிரபுத்துவச் சரிவு அல்லது சீர்குலைவு என்பது தவிக்க இயலாத உடன் விளைவு. முதல் உலகப் போருக்குப் பின் இச்சரிவு இந்திய நாட்டில் தொடங்கியது. இரண்டாம் உலகப்போர் அதற்கு பிற்பட்ட அறுபதுகளில் அச்சரிவு அல்லது சீர்குலைவு ஏ ற த் தா ழ நிறைவேறியது என்றே முடிவுசெய் யலாம். முதல் உலகப் போருக்குப் பின் ஏ ற் பட் ட பொருளாதார நெருக்கடி மற்றும் விழிப்புணர்ச்சி ஏ  ைன ய சமூக த் தாரிடையே தோற்றுவித்தது போல தமிழ் பேசும் முஸ்லீம் சமூகத்தினரிடை யேயும் புதியசமூக மதிப்புகளைத் தோற்றுவித்து. இதனைத் திறம்
Lll- எழுத்தில் வடிக்கும் முயற்சியில் திரு மீர்ான் ஈடுபட்டு பெரும் வெற் றியை ஈட்டியுள்ளார்.
இந் நூற்றாண்டின் தொடக் ககாலப் பகு தி யில் கேரளத்தில் முதன் முதலாக ஆங்கிலப் பள்ளி கள் நிறுவப்பட்ட பொழுது நம்பூ திரிகள் தம்மிடையே ஆங்கி லக் கல்வி புகுத்தப்படுவதைக் கடுமை யாக எதிர்த்தனர். ஆங்கிலக் கல் விக் கூடங்களுக்குத் தங்கள் குழ ந்தைகளை அனுப்ப மறுத்தனர். வேதமொழியான சமஸ்கிருதத்தை யும் சமஸ்கிருத வழிபட்ட கல்வி யையுமே பெரிதாக மதித்தனர். கிறித்தவ சமயம் சார்ந்த ஆங்கி லேயரின் இழிந்த கல்வியைக் கற் பது ச ம ய தர்மத்துக்கு விரோத பானது என்று அக்கல்வியைப் புறக் கணித்தனர். பா ர தி இதனைக் குறித்துக் கூறுமிடத்து "நம்பூதிரி கள் காலத்தின் குறிப்பறியாமல் தாழ்ச்சியடைகிறார்கள்" என எழு தினான். அதுபோலவே இஸ்லாத் தில் அளவற்ற நம்பிக்கையும், பழ மைப் பிடிப்பும் உடைய முஸ்லீம் களும், அரபிப் பாடசாலைகளுக் கப்போய் சமயக் கல்வி கற்பகை விட்டு ஆங்கிலக் கல்வி தற்பதனால் எவ்விதப் பய னு ம் விளையாது என்று திடமாக நம்பினர். இந்நம் பிக்கையை நாவலாசிரியர் மீரான் சீராக வடி த் துத் தந்துள்ளார். வடக்கு வீட்டு அஹமது கண்ணு முதலாளி கிராமத்துத் தலைவர் மட்டுமல்ல பள்ளிவாசல் முதல் கூடியும் ஆவார். அரபிக் குதிரை யும் பல்லக்குச் சவ்வாரியும் அவ ரது சமூக அந்தஸ்தின் வெளிப்பிர கடனங்கள். அவருடைய ஆணை
27

Page 16
கள் தடங்கலோ, மறுப்போ இன்றி நடைமுறைப் படுத்தப்படும் இவ் வாறு தம் கட்டளைகளை மறுத் துரைப்போர் இன்றி காட்டு தர் பார் நட த் தி வந்த அவர் சிறு வியாபாரி முஹ்மூது தன்னை எதிர் க்கும் போது நிலைதடுமாறுகிறார். அவனை ஒழித்துக்கட்டப் பல முறை முயல்கின்றார். ஆனால் இறுதிவரை அவர் அம்முயற்சியில் தோல்வியையே தழுவுகிறார். (p5 லாளிக்கும் முஹ்மூதுக்கும் இடை யே ஏற்படும் போராட்டம் புதிய சமூக மதிப்புகளுக்கும் காலாவதி யாகிவரும் பழைய சமூக மதிப்பு களுக்கும் இடையே நடைபெறும் போராட்டமாகும்; இப்போராட் டத்தை இயல்பாகக் கொ ன் டு செல்வதில் மீரான் வெற்றி ஈட்டி யுள்ளார்.
கமலாம்பாள் சரித்திர த் தி ல் வரும் தமிழாசிரியர் ஆடுசாப்பட்டி அம்மையப்ப பிள்ளையைப் போல் அர பி ஆசிரியர் ‘அசனார் லெப் பை" வகை மாதிரிப் பாத்திரமாகப் படைக்கப்பட்டுள்ளார். அன்றா டங் காட்சிகளான ஏழை எளிய மக்களை அநியாயமாகச் சுரண்டும் கடைக்காரர் உஸன் பிள்ளை தனக் கென்று ஒரு வாழ்வுண்டு எ ன ச் சிந்தித்தறியாத முதலாளி வீட்டுக் கணக்கர் (அவுக்கார்), பல நிலை
ப்பட்ட தொல்லைகட்கும், அவமா
னங்களுக்கும் இடையேயும் குடி செய்வலில் முந்தி நிற்கும் மெஹ பூப்கான், தான் காதலித்த பெண்
தனத்குக் கிடைக்காமற் போ ன
நிலையிலும் வரம்பு க ட வா து வாழும் பரீது, போன்ற உன்னதப் பாத்திரங்களும் இந்த நா வலில் இடம் பெறுகின்றனர்.
28
மதத்தின் மீது மக்க ளு க் கு இருக்கும் குருட்டு நம்பிக்கையைச் சுரண்டலுக்கும், சமூகச் சீரழிவுக் கும் பயன்படுத்தும் பேர்வழிகளாக முஹமது முஸ்தபா இம் பிச் சி கோ யா தங்ங்ளையும், அசனார் லெப்பையும், படைத்துக் காட்டுகி றார். இப்பாத்திரப் படைப்புகளில் அவர் வெற்றி ஈட்டியுள்ள போதி லும் திரு. ஜெயராம பாண்டியன் இந் நாவலுக்கு எழுதியுள்ள அணி ந்துரையில் குறிப்பிடுவது இவ்விட
த்தில் கருதத் தகுந்தது. "ஆசிரியர்
நாவலில் குறிப்பிடும் த ங் நுக ள் ஏமாற்றுக்காரராகவே இருக்கின் றார். ஒரு பாத்திரப்படைப்பை உருவாக்கும் போது அது வகைமா திரியாக இருந்தால்தான் யதார்த் தம் கைகூடும் விதிவிலக்குகளைப் பொதுமைப்படுத்துவது யதார்த்த த்திலிருந்து விலகிச் சென்றுவிடும்’
இந்திய சமூக அ  ைம ப் பி ல் பெண் கல்வி குறிப்பாக முஸ்லீம்க ளிடையே இன்றளவும் போ தி ய ஆதரவு பெறவில்லை. தமிழகத் தில் கூட சிறந்த மதிப்பெண்கள் பெற்றுத் தேறிய முஸ்லீம் மாண விகள் மேல்நிலைப் பள்ளிப் படிப் பிற்கு மேல்செல்ல அனுமதிக்கப்ப டுவதில்லை. நகரங்களில் கூட இந் நிலையே நீடிக்கிறது. ஒய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி திரு. வி. ஆர். கிருஷ்ணய்யர் அவர்கள் இந்
திய முஸ்லீம் பெண் கல்வி வளர்ச்
சிக்கென தனியே ஒரு குழு  ைவ அமைத்துள்ளார். இக் குழுவினர் இந் தி ய முஸ்லீம்மக்களிடையே பெண்கல்விக்கு ஆதரவு கோ ரி வருகிறனர். இந்நிலையில் இந்நா வலில் வரும் அபலைப் பெண்கள்
நுவரீபாத்தும்மா, ஆயிஷா ஆகிய

இருவரும் நம் கவனத்திற்கு உரிய வர்களாகின்றனர்; நுஹிபாத்து ம்மா ஆயிஷாவிடம் ‘நாம் வீட்டு மிருகம், ஊமைப் பிராணி, நமக் கென்ன சுதந்திரமிருக்கு, ஒரு குஷ் டரோகியின் கையிலிருக்கும் தாலி க்குக் கழுத்தை நீட்டிக் கொடுக்கச் சொன்னால் நீட்டிக் கொடுக்கவும் அவர் படு க் கை அறையில் அவ ரோடு படுத்துத் தன் ஜென்மங் களை பாழ்படுத்த விதிக்கப்பட்ட அனுசரணையுள்ள மிருகம்” என்று சொல்வது பெண்கள் எவ்வளவு ஈனப்பிறவிகளாகக் கருதப்பட்ட னர் என்பதை உணர்த்துகிறது.
நிகழ்ச்சிச் சித்தரிப்புகள் யதா ர்த்தமாக அமைவதால் இந்நாவ லைத் தமிழ் முஸ்லீம் சமூகச் சூழ லைச் சீரிய முறையில் படம் பிடி த்துக் காட்டும் சமூக யதார்த்த நாவலாகவும் சமூக ஆவணமாகவும் கொள்ளலாம் என்னும் பூரீகுமாரி யின் கருத்தினை அப்படியே ஏற்று இந்நூலிற்கு முதற்பரிசுவ ழ ங் கப் பரிந்துரை செய்கிறேன.
இந்நாவலுக்குத் திரு. ராம பாண்டியன் வழங்கியுள்ள அணிந்துரையில் பின் வரு மாறு கூறுகிறார்: "முதலாளிக்கும் முஹ் மதுக்கும் இடையே நடைபெறும் போராட்டத்தை ஆசிரியர் கவன மாகக்கொண்டு செ ல் கிறார்; யாருக்கு வெற்றி என்பதைப்பற்றி அவர் சொல்லவில்லை. ந்தப் போராட்டத்திலும் வெற்றி தோல் வியைப் பற்றி திட்டமான முடி வைக் காண இயலாது என்பது தான் யதார்த்தம் அணிந்துரை யில் காணலாகும் மேற்கூறிய வாச கங்கள் நாவலாசிரியரைச் சரியாக இனங்கண்டு கொள்ளத் தவறிய
ஜெய
தால் எழுந்த பிழையான மதிப்பீ டேயாகும். வடக்கு வீட்டு முதலா ளியின் பாத்திரப்படைப்பை உள வியல் ரீதியான ஆய்விற்கு உட் படுத்தி அதன் சிறப்பைப் புலப் படுத்தும் அணிந்துரையாளர் வர்க் கத் திமிர் பிடித்த நிலப் பிரபுத்துவ சரிவை அடையாளங் கண்டு கொள் ளத் தவறுவது ஏனோ கெரியவில் லை! சிறந்த கலைஞன் தன் படைப் பில் இவர் வென்றார் இவர் தோற் றார் என்று வெளிப்படையாகப்
பறை சாற்ற வேண்டிய அவசிய
மில்லை, குறியீடுகளே அதனைத் தெளிவாக்கி விடும்போது அவன் நேரிடையாகப் பேசவேண்டிய அவ சியம் இல்லை அல்லவா? “குதிரை லாயத்தில் சாணிக்கூட்டத்தின் மீது இரத்தம் சிந்திக்கொண்டுகால்களை விரித்தவாறு தலை நீட்டி வடக்கு வீட்டுப் பிரதாபத்தின் நெற்றிப் பொன் குதிரை செத்து மடிந்து கிடப்பதைக் கண்டபோது அந்த உண்மைச் சேவகனின் நெ ஞ் சு வெடித்து விட்டது" இவ்வரிகள் நிலப்பிரபுத்துவத்தின் தோல்வி யைத் திட்டவட்டமாக உணர்த்த வில்லையா? ஆகவே தயக்கம் எது வும் இன்றி இந் நாவலுக்கு முதற் பரிசு வழங்கி இந் நாவலாசிரியர் மேலும்தொடர்ந்து எழுத ஊக்கு விக்க வேண்டுகிறேன்.
(தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் அறிவித்த 1989 ஆம் ஆண்டிற்கான நாவல் போட் ; யில் சிறந்த நாவலாக 'ஒரு கடலோர கிராமத்தின் கதை" தேர்வு செய் யப்பட்டுள்ளது. தேர்வுக் குழுவி னரின் மதிப்பீடே இக்கட்டுரை)
நன்றி: ஆராய்ச்சி
29

Page 17
+ b^^ ~上 ~此·—~~~!v引八
đię șasessoqørı 1,99$ųGTOko 417 1ņo($ as uogae)oseqpo qofnin Turi aegeri gospoơn -- Trīņos ļoĝigilo qe ușș nori ușop 1996) ugi rnegoő o ușoangorms@ąffe 1909910909$1]* oș gignus qe q. 9 gosmaĵorosos rūti --ı uaf go dr. qp@@ -1-igi oog)se quae o sous 1,96), Trīņ–1-14) qi-17.Tri „g-ię u-i,, Qș@so.greko 4/1/07@ đgqis woesiqi urmăềse ogon Q& goșųjai tī£ıņo?@ mtāTugi o rin oqs.goog) #rmoooooņigoŐ
: CúUı
குழ9ழுகு டிஅருகுசி) ெஒாகுதி(மஞ் assoso qisfīgs Ēō (sous les? qİrtegorieg) (grņi u@ șafgøąïreserı af 1991Jng) isosoɛ wɔsosego 1,99£oolse o o upo deo@-lo “solo ips@gifteųortelo) qøsningen geko No đi@số qışfīņ9
★ 'q1@u-15mų9felo) More er gogorno-a so@ : sous
1907Trını~ısmųofeso) qø#6-20-g g HIT@uoc.) șocesses „Haireo 0909091°» Igogo tíreagoog)g', 'aego w
-- -裂心付
umyslere
·ęđạorio-iges gogori:Trogoo .***r H니9守宮守 李gr***** @過z則增白z n&77n ** pretog „giroagoo gosmoscofio", “gs」gEngbsee。『g
★r
· 1994 u@@@@ ₪nfo@)şa’r Gyqi-TŐ 定自g引Lega *** ởặsēụereo oyooajaoso so repos Jeg耻圈g的sg 曲目与90唱忒 g g @ qs-Toநாஞ்ாரசிquae9&$1 gaeso · 1,00$ $ $ 4,5 g) formgoti ongrigo)ę osaïqĪrio-logi og și i-a regean 199łegi tsi-7s3 filogoo ș; 5-20-ra tëzimisoisso issore?
quomo909ơi
apon@gí– úvoos@
teeeeeeeee
tĦısı@uoc.) .
*서 4,14*11-14-24*· þp-i-iri siająorng-Tosong)qø som ɑn ɑ9 logo so qø@$rı-ı logo a reșąogfeg snuri T.T.uog) quo-ı Ligj , , 1990-II uqTg) @ u 11090'ı, , -i-. Trīrī£đì)19 go uige
Gortog)'tır.soņio osog) ‘ayo 19 : @@
☆·
• Noas
QĪri (0-7099ĩ qe (5 șTI--I logo qi u do o
șaf 1990 i 4@a903so que o qī logo uri
ņđi urm qe çmongo logoso qiająfogy
IĘ14ko Inti-Tugio Grī 199ųno o ug: riasofi syfed,94 u207@ ₪949 oC)
*
·kg-1·ırı ri-isomųore@ a9@$rı-ı logoan y 1,5 冠哈哈时阎圃 gge@哈49@ ggn 0709 logosto qølsī Ģ Ģ uolo) șogoş 1768 ... 119°41@googi aeg , , rmg đù19 quot;segao urī109@ 01@sqjo
qī 1999 LIITIĞfi um
goooooeeeeeeeeeeeeeeeeeeeeeeee;
Is slt siis §
�����������������������������
eCeeeeee
30

•qi@LGT? qiłę ogo?-15īņỰ@ (ngorm @@@rısıų9190)IT] (Qo) 109 (99)
£ lufto logo GTsĒĢńskiqaĥourm 1,9 o se ? đi so sĩ (1990íQÏTC) q–7(§ 119°54′đỉogi dogoo megsē, Novgo@771.gif|Illaig) qi fm fn ~i u qĪ Ģ1rī 199ụ99 gelogo uqa 1,90€ șolț (3119 urno Įirmųjų5? qao-Tugi , u.do u ngyo, 199 urısı-ıgori 199ų9 o přelo qī 1999-T11:5839) *0,919 puș șof) · 4/1/199@@đỉogi 1109Hņaffeo quorțjegao uri on gais).Ģ Įred9095199@șorgio afąfog)ę 19 go 1991ğıdı gı 1999 ~ıldıçãếg, oggi@@ ‘Norm@ ș u-1, q2≤nơngo logoso qiorgio prelogo uqī rūđfigeri syll@q9o
199ão uogiđiçerısı,goqp@@ qđī) urte qoaeg 1991/1151 mg 968 șđỉogi Hısıaffeg ,(1909 ugi
199ố? Jogi, sąj-Tqi qos@@rı ~ı soğ9ơn 40,9 osoggi, 0,9ų uri
----• Nou9.191$. as'ınøło gotooɗosta rỉ trườsonoff i ongyo
o prie Jan Ørefè soglo 11@lumg) ugs- (sooqsreg, gason) 0,911@orns)
·ą919 · @@ 4ırmųjų3f( 1,9 gosẽ 199 –i ngo , q 0) {@șaĵo.»[[Form (8 gass gewoo oođèo ornalo· q (fi) org/servolg 4, 70,9 ugi@paľoes? șaewoo gross@eg ‘qi@oprtolo „so un -aĝo 19 · @@ q. 109 #efoglạlo @şafges@qopgesố · 1994/1-7-Trinio șige muesøe) (??ų907-17Tr. greqi) șąją egy prawesi looș-TTg7 69959 „fige seascogs @ logofă, sfre « I „gegợ–ısı 1@asou o soñ gewoon yn o gwsgroß qegori-Taegooi 1ço o úgy go rms@h hại đòiloso)
HTrauu9中學T니ICT
• No le 1,26)-Trısı-TŲmųorto0 qolom ongengeko 1gools @Ő mégsử ( gosso seg ) tī1/1999 tego o #13 qson (q’uso gresī£) po 499@To m @ đÐ so uso preko u eu d-roi a9090905·ąo lo reco@-æ ou 75m genso ngɔ o șGo@g957ko dovou o
-ı urıfuerosoɛluogi 4/glo |-... ) – oso ! ....–.......... kwa mwa
|-
引
羽于
--ırıņa’q’rmg)-1990ng)eggnJ
uggedi grb-ı içeces 11@@ơn solumnogo
–ī£ €re u-l-īus qoỹngiwe kgolo
qio-ilugŤ reco-opoulogŤ , , torņiĝo
」Js)eQfjSQ. Legge luaso ugog polyofloc) HqiđÐLoC)
*
· @@@no-igo qī qəg@rī -ı leşen 1,9-layo 1995īgolo 1909 11@ @ơi qe s'n q'i (po logo lo eo?đỉogi Inti-T ugi , , 01@ga mg@@şi ,, Inggrşı fino 1,9 so se 1999 u GT 199ựco 11fedụ9ĝoấ30) (go urte gro) udøo.
*
* 1,9 og u no Ģ Ģđĵo ĝis 109Hņaffeg yderi -īrī ாக பி1ெ99ராகு *ழு "குெ குரா (§ U-T si sı(2009:9 logo sĩ ofioș0969? qørı sı@șđfig o Isaf'ąfrag)--10947 q95ūtī775īņ@ųolloc) q976-20-†g Jđiyo @-15mųofeso) u-i ugi osgosố qırmış9ỗ 09& 1ą959 ... u úrī, ,
Hquốī) uolo)
*长、→

Page 18
“கூட்டுறவு நாட்டுயர்வு”
உங்களுக்குத் தேவையான சகலவிதமான நுகர்ச்சி, உடுதுணி மற்றும் பாவனைப் பொருட்களையும் நியாய விலையில் பெற்றுக் கொள்ளலாம்,
மண்ணெண்ணை மொத்தமாகவும் சில்லறையாகவும் நியாய விலையில் கிடைக்கும்.
உங்கள் உதவியே எங்கள் வளர்ச்சி *
ஈச்சந்தீவு - கன்னன்குடா ப - நோ. கூ. சங்கம் வவுணதீவு = கன்னன்குடா
 
 

தொலைக்காட்சியில் பாரதக்கதை
கி. பி. அரவிந்தன்
மகாபாரதக்கதையைத் தமக்கு தமக்கு ஏற்றபடி வியாக்கியானம் பண்ணுவோர் ஏராளம்,பார்ஸி நாடக மரபுக்கூடாக வந்த நடிப்பு முறையும், ஆடை அலங் காரங்களும், காட்சி ஜோடனைகளும் மலிந்த மகாபார தமே பொதுவாக நமக்கு அறிமுகமான மகாபாரத மாகும். தூரதர்ஷனில் சோப்ரா இதனைத் தொடர்ந்து அளித்தார். இப்போது இலங்கையில் ITN. தொலைக் காட்சியிலும் நடைபெறுகிறது.
மகாபாரத்தைத் தொலைக்காட்சிக்காகத் தயா ரித்த இன்னொருவரும் இருக்கிறார். பீட்டர் புறுா க் எனும் மாபெரும் நாடகமேதை அவர். இந்திய மக்க ளுக்குரிய காவியமான மகாபாரதத்தை உலக மக்களின் காவியமாகக் கண்டவர் அவர். அவரது மகாபாரதம் பிறஞ்சு நாட்டில் ஒளிபரப்பப்பட்டது:
இரண்டு மகாபாரதங்கள் பற்றிய அறிமுகத்தை இக்கட்டுரை தருகிறது.
இந்தியாவின் தேசிய தொலைக் யான பல்வேறு தேசிய இனமக் காட்சி நிலையமான "தூர்தர்ஷன் களை தன்பால் ஈர்க்க முடிந்தது: மகாபாரதம். இ ரா மா ய ண ம் இந்திய துணைக்கண்டத்தின் உள் தொடர்களை ஒளிபரப்பிய போது ளக முரண்பாடுகளை, அவை கூர் தான் இமயம் முதல் குமரி வரை மையடைவதை தணிக்க, இவ்விதி
33

Page 19
காசத் தொடர்கள் ஒரளவுக்கேனும் துணையாயின. ஆனால் இந்துத் துவ அடிப்படை வாதம் வளர்ச்சி பெறவும், மதவெறி தலைவிரித் தாடவும், இத்தொடர்கள் காரண மாயமைந்தன என சமூகவியலா ளர்கள் கூறுகின்றனர். இத்தொடர் கள் ஒளிபரப்பப்பட்ட ஒவ்வொரு ஞாயிற்றுக் கி ழ  ைம க ளி ன து ம் காலை 10 மணி தொடக்கம் 11 மணிவரையான ஒரு மணி நேரமும் இந்திய ம க் க ள் அைைவரும் தொலைக்காட்சிப் பெட்டிகளின் முன் பக்திப்பரவசத்துடன் அமர்ந் திருந்தனர். மின்தடை காரணத் தாலோ, வேறு கோளாறுகளி னாலோ, ஒளிபரப்பில் தடங்கல் ஏற்பட்ட போது பக்திப்பரவசம் வன்முறையாய் வெடித்தது.
தொலைக்காட்சிப் பெட்டிகள் உடைக்கப்பட்டு, பிராந்திய ஒளி பரப்பு அஞ்சல் நிலையங்கள் முற் றுகைக்கு உள்ளாயின. புகைவண் டிகளில் தொலைதுாரங்களுக்கு பய னம் செய்வோரும், இத்தொடர் கள் பார்ப்பதைத் தவறவிடக் கூடாது என்பதற்காகப் புகையிரத நிலையங்கள் தோறும் தொலைக் காட்சிப் பெட்டிகள் வைக்கப்பட் டன. ஒளிபரப்பப்படும் ஒரு மணி நேரமும் புகைவண்டிகள் ஏதோ ஒரு புகையிரத நிலை ய த் தி ல் தரித்து நின்றன. இவ்விதிகாசத் தொடரினில் பாத்திரமேற்ற நடி கர்கள் புனிதர்களாய் கருதப்பட்டு பொது இடங்களில் அவர்களைக்
காண, தொட, மக்கள் கூட்ட மாய் தவம் கிடந்தனர்.
நடந்து முடிந்த இந்திய
பொதுத்தேர்தலின் போது இந்துத்
34
துவ அடிப்படைவாத கட்சியான பாரதிய ஜனதா க்கட்சி பெருமள வில் வெற்றி பெறவும் இவ்விதிகா சத் தொடர்களும் இதில் நடித்த வர்களும் பயன்பட்டனர். இவ்விதி காசங்களான மகாபாரதமும், இரா மாயணமும் தென் கி ழ க் கா சி ய
பிராந்தியம் எங்கும் செல்வாக்கு மிக்க பழங்கதைகளாக விளங் குகின்றன;
ஒவ்வொரு பிராந்தியத்திலும் இக்கதைகளின் மூலத்தில் பெருமள வில் மாற்றமின்றி வாய்மொழி யாய், பழங்கதையாய், புராண மாய், புராதன இலக்கியமாய், பக்தி நூலாய் கொள்ளப்படுகின் றன. குறிப்பாக இந்திய சமுதா யத்தின் பல்வேறு மொழிப் பிரிவி னரிடையே அவர்கள் வாழ்வுட னும் கலை இலக்கியத்துடனும் பின்னிப் பிணைந்துள்ளன.
அகண்ட பாரத கனவினாலோ அமைதி காக்கும் நல்லெண்ணத் தினாலோ இலங்கைத் தமிழர்க ளின் வாழ்வில் இந்திய இராணு வம் தலையிட நேர்ந்த அந்த துயர் மிக்க நாட்களில் மகாபார தக் கதையினை இலங்கைத் தமி ழர்களும் தொலைக்காட்சியில் பார்த்தனர்.
இந்திய இராணுவத்தின் ‘ஒய் வும் மனமகிழ்ச்சியும்" என முக்கா டிடப்பட்டு, இந்திய வானொலி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ) ரா
ணுவ முகாம்கள் ஊடாக ஒளி பரப்பஞ்சல் செய்யப்பட்டன.
இலங்கையின் ரூபவாகினி"
ஒளிபரப்பாகும் அதே அலைவரி

சையில் 'தூரதர்ஷன்'ம் ஒளிபரப் பப்பட்டதானது "இந்திய த் திணிப்பு" என்னும் நல்நோக்கத்தை உணர்த்தும் சான்றாகும். இந்திய இராணுவத்தின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொல்லைமிக்க அறு வையாக இருந்த போதும், வீட் டிற்குள் அடைபட்டிருக்கவேண்டிய நேரங்களில் அதுவும் மின்சாரம் 566) - LT.g. இரு க் கை யி ல் தொலைக்காட்சிப் பெட்டிகளின் முன்தான் மக்கள் தஞ்சமடைந் தனர். இருந்தும் இந்நிகழ்ச்சிகளில் "மகாபாரதத் தொடர் இந்தியா வின் புகழ்மிக்க இயக்குனர் சியாம் பெனகல் தயாரித்தளித்த நேருவின் "இந்திய வரலாறு" என்னும் தொடர் என்பவை குறிப்பிடத் தக்கவையாகும். அத்துடன் இந்திய தேசிய விருது பெற்ற சில திரைப்
இந்திய இராணுவம் இதனை இலங்கைத் தமிழர்களுக்கும்ஒளிபரப் பியதானது. அவர்களைப் பக்திப் பரவசத்துள் ஆழ்த்துவதும் சிந்த னையை திசை திரு ப் புவது ம் போன்றதான பலநோக்கங்களை உள்ளடக்கிய இராணுவ நல்லெண் ணத்தினாலேதான்.
ஆனால் மகாபாரதம் பக்திப் பரவசமூட்டுவதற்குப் பதில் எதிர் விளைவையே உண்டு பண்ணி இருக்க வேண்டும், பக்கிப் பரவச மூட்டவா மகாகவி பா தி. பார தக்கதையின் "பாஞ்சாலி சபதத்தை மீண்டும் எழுதினான். கவிதையில் பேசினான்.
இம்மாதத்தில் ஜூலையில் பிரான்சிலுள்ளவர்களும் மகாபார
படங்களையும் பார்க்க முடிந்தது தத்தினை O தொலைக்காட்சியில் சிறப்பம்சங்களாகும். பாாததனா .
நெருப்பு
இது மனிதன் உயிர் வாழ்வதற்கும் தோசை சுடிவும் குளிர் காயவும் உண்டானது நெருப்பு - ஆனால் இப்பொ ழுதோ மனிதன் எத்தனை பேராசைக்காரனா கி விட்டான் அவன் யாரை வேண்டுமானாலும் எப்பொழுதும் வேண்டு மானாலும் எரிப்பதற்கும், நெருப்பு வைப்பதற்கும், பயன் படுத்துவது நெருப்பை என்பது பொது விதியாகி விட்டதே!
மகாபாரதத்தினை தயாரித்த பம் பாய் படமுதலாளியின் நோக்கம் புனிதத்தன்மையும் தெய்வாம்சத் தையும் உயர்த்திக்காட்டி ஆடை அணிகலன், மாயாஜால தந்திரக் காட்சிகள், சோடனைகள் என் பவை மூலம் மக்களை சொக்க வைத்து பக்திப்பரவசமூட்டி வியா பாரம் செப்வது என்பதேயாகும் .
89ம் ஆண்டில் இரு மொழி யில் தயாரிக்கப்பட்ட இத்தொடர் பிரான்சுக்கு இரண்டாண்டுகள் காலந்தாழ்த்தி ஒளிபரப்பப்படுவது ஏனென்று தெரியவில்லை.
இந்தியா ஒளிபரப்பிய மகா பாரத தொடரினின்றும் பல்வேறு
அம்சங்களில் வேறுபட்ட தன்மை
35

Page 20
யும் குணாம்சமும் கொண்ட ஐரோப்பிய மொழி பேசுப இம் peh v Lj. 1 TT 35 lub 9. tř (Libië. PE 1 ER BROOK ன்னும் 65 வயதான கலைஞனின் கைவண்ணத்தில் உருவாக்கம் பெற்றதாகும் மருந்து தயாரிக் தம் ரஷ்யனின் மகனாய் லண்டனில் பிறந்த பீற்றர் புருக் ஒக்ஸ்பேட் பல்கலைக்கழகத்தில் தொழில் முறை நாடக இயக்குன ராய் படித்து சான்றிதழ் பெற்ற வர். 1970ம் ஆண்டில் இருந்து பாரிசில் வாழ்ந்து வரும் பீட்டர் புருக் அவர்கள் சர்வதேச நாடக ஆய்வு மையத்தினையும் INTERN A IONAL CENT ER OF THEAT RE RESEARCH 5p6í ujaši 677 př. *குரு', 'ரிஷி முனிவர் "அறிஞர் என பல்வேறு பெயர்களால் அன் புடனும் மரியா  ைத யு ட னு ம் அழைக்கப்படும் இவர் உலகில் வழங்கிவரும் புராதன இலக்கியங் களிலும், இதிகாசங்களிலும் ஆழ்ந்த புலமையுள்ளவர். ஏழு மொழிக ளைக் கற்றறிந்தவர்.
தற்போது ஆங்கில பெருங்கவி Gays 6svl Sufflsår THE TEMPESig பிரெஞ்சு மொழியில் தயாரித்துக் கொண்டிருக்கின்றார்.
*மூலக்கதையில் மாற்றமின்றி நவீனப்படுத்துவதிலும் தன் எண் ணத்தை அவையூடே வெளிப்படுத் துவதிலும் வல்லமை மிக்கவர், ஒப்பிடத்தகுந்தவர் யாருமில்லை என விமர்சகர்கள் இவர் பற்றி குறிப்பிடுகின்றனர்.
அவரது மகாபாரதத்தில் இக் கலை வல்லமையை நாம் தரிசிக்க
முடிகின்றது.
36
நாமெல்லாம் படித்த கேட்ட , கோவில்களில் பாகவதம் செய்யப் பட்ட மகாபாரதக் கதை தானே இது. ஆசியாவின் தென்கிழக்குப் பகுதியில் வழங்கி வந்த இந்த இதிகாசத்தினை எத்துணை கலைத் துவத்துடன் ஆற்றலுடன் படைத் தளித்துள்ளார். சர்வதேச மயப் படுத்தியுள்ளார்.
மகாபாரதம் மனிதனின் ஆதி இலக்கியம் என கருதுகின்றார் பீட் டர் புருக் அவர்கள்
ஒவ்வொரு காட்சியையும் மிகுந்த கலைநுணுக்கத்துடனும் கூரிய பார்வையுடனும் வரலாற்று உணர்வுடனும் அமைத்துள்ளார்.
கதையில் எந்த அம்சத்தையும் தன் கருத்துக்கு மாற்ற அவர் முனை யவில்லை.
ஆனால் மகாபாரதம் -அவரது உயர் எண்ணங்களான -சர்வதேசி யம், மனிதமூலம், நாகரிகவளர்ச்சி, மனிதகுடிப்பரம்பல் - என்பவற்றை யெல்லாம் வெளிப்படுத்துகின்றது. என்ன ஆச்சரியம். இது என்ன கலை ஆற்றல், கதையின் பாத்தி ரங்களுக்கு நடிகர்களை தெரிவு செய்துள்ளமையே அவரின் எண் ணக்கருத்துக்களை முதலில் எமக்கு புலப்படுத்துகின்றன. மனிதமூலம் ஒன்றேயான போதும் மூன்று நிறங் களுக்குள் மனிதன் பிரிக்கப்பட் டுள்ளான்.
பீட்டர் புருக் அவர்கள் இவ்
விதிகாசத்திற்கும் இம்மூன்று நிறங் களில் இருந்தும்-கறுப்பு,வெள்ளை,

மஞ்சள் நடிகர்களை தெரிவு செய் துள்ளார். பாரதக் கதையில் துரோ னாச்சாரியார் பாண்டவர்களின தும் கெளரவர்களினதும் ஆசானா வார். பீட்டர் புருக் இப்பாத்திரத் திற்கு மஞ்சள் நிறநடிகரை தெரிவு செய்துள்ளார். ஆசியாவின் கிழக் குப் பகுதியில் வாழும் மங்கோலிய இன மஞ்சள் நிற மக்கள் (குறிப் பாக சீன, யப்பானியர்.) தற் காப்பு கவலைகள் அனைத்திலும் திறன்மிக்கவர்கள், துரோணரின பாத்திரம் இப்பின்னணியிலேயே சித்தரிக்கப்பருகின்றது எத்தனை பொருத்தம்,
இப்படியே பா த் தி ரங் கள் அனைத்திலும் பீட்டர் புருக் தனது எண் ணத்தை மிக லாவகமாய் வெளிப்படுத்துகின்றார். பார்வை யாளர்களில் சர்வதே சி ய த்  ைத தொற்ற வைக்கிறார்" பாரதப் போர் தொடங்குகின்றது. 18 நாள் யுத்தம்-குருஷேத்திரம். ஒவ்வொரு
நாள் யுத்தத்திலும் திறன்மிகு வல்லாளர்கள் தலைமையேற்கின் றனர்.
பீட்டர் புருக் நாகரிக வளர்ச் சியை, காலஇடைவெளியை, மிக நயத்துடன் இதில் எமக்கு அறி முகப்படுத்துகின்றார். பாரதக்கதை யில் மூத்தவர் பிதாமகர் என வர்ணிக்கப்படும் பீஷ்மர் கங்கை யின் புத்திரன் என கூறப்படுவார். இவர் குருஷேஷ்திர யுத்தத்தில் தலைமையேற்கையில் "பல்லக்கில் அமர்ந்து போரிடுவர். இறந்தவர் களை சுமப்பது பாடை உயிருடன் உள்ளவர்கள் பவனி வருவது பல் லக்கு. தேரும் வண்டியும் இக்
காலத்து வாகனம். பீஸ்யர் வீழ கர்ணன் போருக்குத் தலைமை யேற்பான். கர்ணன் குதிரைகள் பூட்டியதேரில் போருக்கு வருவான் . அவனது தேர்ச் சக்கரம் மண்ணுக் குள் புதையும்.
இப் படியே ஒவ்வொரு காட்சி யும், சம்பவமும் நகர்ந்து செல்லும். பட்டுப் பீதாம்பரங்கள் ,பொன்னா LID ணங்கள், முடிகொடி செங்கோல் எவையுமின்றியே பாத்திரங்களை வேறுபடுத்தி பார்வையாளருக்கு அடையாளம் காட்டுகின்றார். கதர்நூல் சேலைகளும், களும், சட்டைகளும், வேட்டிக ளும் பாத்திரங்களின் ஆடையலங் காரங்களாகி, மனித குணாம்சங்க ளுடனும் உண்ர்வுகளுடனும் உல வுகின்றன .பாத்திரங்கள் தெய்வாம் சம் கொள்ளவில்லை. கதை முழு தும் உயர்வு நவிற்சியின்றி, மிகைப் படுத்தலின்றி, இயல்பாய் பார்வை யாளனுக்கு நெருக்கமாய் மகாபார தம் படைக்கப்படுகின்றது.
சால்வை
கலையும் உணர்வும் கலந்த கலவையாக பார்வையாளர் கலை வடிவத்துடன் ஒன்றித்து விடுகின் றனர். மானுடத்தின் மூல இலக்கி யங்களில் ஒன்றெனத்தான் கருதும் மகாபாரதத்தினை நவீன ஊட கத்தில் இணைத்து "சர்வதேச மயப்படுத்தி அடுத்த யுகத்திற் கும் கையளிக்கும் பணியினை முடித்துள்ளேன், என்ற பெருமிதத் தில் பீட்டர் புருக் எ ன்னும் மாபெரும் கலைஞன் புன்முறுவல் பூத்து நிற்கின்றான்.
நன்றி: ஒசை
37

Page 21
திருவிழாக் கூட்டத்தில் நான்
வாசுதேவன்
MqL LLSAS SAL AM MLqLAM MSSLAS MA AAM MLqLM MMq LSMM MM SAMM MMqSqLSLSLAA LqLLA MLAAS SMLSLAT LAMT LAMLS MLMLMS LLLLMS MMLLLLLAS
திருவிளா கூட்டமொன்றில் அகப்பட்டுக் கொண்டுள்ளேன் . பறவைகளின் மெல்லிய ஒலிகளாலும் துன்புறும் நானோ ஒலிபெருக்கிகளின் சந்தைக்குள் தூக்கி எறியப்பட்டுள்ளேன்! நான் செல்லும் திசைக்கு எதிராய் சாரிசாரியாய் சனத்திரள் வருகிறது . நாநூறு பேர்களை எதிர்த்த பிறகுதான் நாலு அடிகளை முன்வைத்துள்ளேன் ஐந்தாவதடியை வைக்கத் தூக்கினால் ஆயிரம் பேர்கள் எதிரே உள்ளனர் ஒரு எருமை மாடு
என்னை மோதி விழுத்தியது
எழ முயற்சிக்கையில் இன்னெரு மாடு ஏறி மிதித்தது வலியும் முனகலுமாய் கிடக்கும் என் மீது, பொட்டு வைத்த மாடுகள் கழுத்துப் பட்டி அணிந்த மாடுகள் வெள்ளை மாடுகள்
கறுத்த மாடுகள் என்றிவ்வாறு மிதித்துச் செல்கின்றன எனினும் கைகளை ஊன்றி எழுந்து கொள்கிறேன் நான் சேர வேண்டிய இலக்கோ இன்னும் வெகு தொலைவில் தெரிகிறது
எதிரே
சாரிசாரியாய் சனத்திரள் வருகிறது . ஒரு குழந்தை மட்டும் எனக்குக் கையசைக்கிறது!
38

யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த பாலநாதன் மகேந்திரன் பெனடிக்ட் 40 களின் பிற்பகுதியிலும் 50 களின் முற்பகுதியிலும் மட் டக்களப்பைச் சேர்ந்த அமிர்தகழியில் தமது பெற்றோருடன் வாழ்ந்து வந்தார். அவர் தந்தையார் பாலநாதன், அவர் மாமனார் ரட்னப்யா போன்றவர்கள் கணிதத்தில் புலிகள், பாலநாதன் மாஸ்டர் வேட்டி சால்வை அணிந்துதான் பாடசாலைக்கு வந்து கணிதம் போதிப்பார். பயிற்றப்பட்ட ஆசிரியராக இருந்ததனால், கஷ்டமாக எனக்குப்பட்ட கணிதமும் அவர் போதனையால் இலகுவாகப் புரிந்தது. அவர் ஆங் கிலம் பேசினார் என்றால், பிபிஸி உச்சரிப்பாகவே இருக்கும். மட் டக்களப்பில் பிரபலமான பள்ளிக் கூடங்சளில் ஒன்றான அர்ச். மிக் கேல் கல்லூரியில் 1947 - 53 காலப்பகுதியில் நான் படித்து வந்தேன். எனது தம்பியார் திருச்குமாரனுடன் அதே கல்லூரியில் பெனடிக்ட் படித்து வந்தார். இருவரும் நண்பர்கள். இருவரும் சண்டை பிடிப் பார்கள். பெனடிக்ட் அப்பொழுது உயரத்தில் குட்டையாக இருந்தார். அவருடன் பழகும் சந்தர்ப்பம் 1954 - 1964 காலப் பகுதியில் கிடைக் கவில்லை. 哆
1964 அளவில் ஒரு நாள் வாரித்தம்பி, சச்சிதானந்தம் போன்ற சில: இளைஞர்கள், கொழும்பிலே என்னுடன் அறிமுகம் செய்து கொண் டார்கள். அவர்களில் ஒருவராக இந்த பெனடிக்கும் இருந்தார். இப் பொழுது இவர் உயரமாக இருந்தார். நெளிநெளியான தலைமயிர். குறுகுறுத்த பார்வை. முன்னர் செய்த குறும்புகள் யாவுமின்றி சுயநம்
39

Page 22
பிக்கையுடன் காணப்பட்டார். இவர் யார் என்று கேட்டபோது, பால நாதன் மாஸ்டரின் மகன் மகேந்திரன் என்றார்கள் ஏனயை நண்பர் கள். அடேயப்பா இவரா, அவர் என்று வியந்துபோயிருக்கையில் தாம் ஒரு பத்திரிகை நடத்தப் போவதாகவும் கட்டுரை வேண்டும் என்றும் கூறினார்கள். 1959 ஆம் ஆண்டு தொடக்கம் தமிழ் நாட்டில் "எழுத்து" *சரஸ்வதி,' 'தீபம்,' 'தமிழ் சினிமா’ போன்ற பத்திரிகைகள் வெளிவந்து கொண்டிருந்தன. அவற்றிலே சில இதழ்களில் நானும் எழுதிக் கொண்டிருந்தேன். அக்கட்டுரைகளைத் தாம் படித்தாகக் கூறிய இந்த இளைஞர்கள் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்கள். விளை யாட்டுகளில் தனது திறமையைக் காண்பித்து வந்த பெனடிக்ட் 10 வருடங்களுக்குள் தரமுள்ள இலக்கியப் பத்திரிகைகளைப் படித்து வரு கிறார் என்று அறிந்ததும், அவர் வயதில் என்னை விட இளையவரா யிருந்தபோதும் ஒரு மதிப்பு ஏற்பட்டது.
த சத்தியஜித்சிராய் கூறியிருப்பது போல கேட்கப்படாத இசையாகத் திரைப்பட இசை இருத்தல் வேண்டும்.
ஒ அர்ச்சனா எனது வழிகாட்டலின் பேரில் தொழிற்படும் சிரி
யசான திரைப்பட மாணவி.
**தேனருவி' என்ற அவர்களின் பத்திரிகையில் நான் எழுதச் சம் மதித்தே ன. பிரபல எழுத்தாளர்களான எஸ். பொன்னுத்துரை "தீ" என்ற நாவல், கே. டானியலின் "டானியல் கதைகள், "மற்றும் "குங்கு மம்" போன்ற திரைப்படங்களின் விமர்சனங்களைத் "தேனருவிக்கு எழுதிக் கொடுத்தேன். அவை பிரசுரமாயின. மகேன்' என்ற பெயரில் சில எழுத்தாளர்களை அவர்களின் புகைப்படத்துடன், பாலு மகேந் திரன் அறிமுகப் படுத்திவந்தார். "வடிகால்" என்ற சிறுகதையை எழுதினார். புகைப்படக்கலையில் நாட்டம் செலுத்தி வந்தார். கலை இலக்கியங்களில்நன்கு பரிச்சயம் பெற்றவராக வளர்ந்து கொண்டிருந்த பாலு மகேந்திரன், நில அளவைத் திணைக்களத்தில் படவரைஞராகப் பணிபுரிந்து கொண்டிருந்தார். பின் அவருடன் தொடர்பு அற்றுப் போய்விட்டது. சில வருடங்களுக்குப் பின் அவரை மட் டக் க ள ப் பு கொழும்பு ரயிலில் சந்தித்தேன். அவர் திருமணமாகியிருந்தார். பூனே திரைப்படக் கல்லூரியில் பயின்று வருவதாகவும் குறிப்பிட்டார்,
இன்னும் சில ஆண்டுகளில் கொழும்பு கமலாலயம் கலைக் கழகத்தின்
ஆதரவுடன் பின் "கோட்டையிலிருந்து ஒரு நோக்கு என்ற குறும்படம் ஒன்றை கொழும்பு சவோய் தியேட்டரில் காண்பித்தார்.
அதன் பின்னர், சில ஆண்டுகளின் பின் தமிழ் நாட்டில், தலை சிறந்த ஒரு நெறியாளர் கலைத்துவமான படங்களை எடுத்துவருவதாகப்
40

பத்திரிகைகளில் படித்தோம், அவர் பெயர் பாலு மகேந்திரா என்றும் அறிந்தோம். அதற்குப்பின் 1990 ஆம் ஆண்டில் பல முயற்சிகளின் பின்னர் சாலிகிராமம் என்ற இடத்தில் உள்ள அவருடைய வீட்டில் அவரைச் சந்தித்தேன். மிகவும் நிதானமாக, ஆழமாக, அழகான ஆங் கிலத்தில் அவர் உரையாடினார். இந்தியாவின் தலைசிறந்த புகைப்ப டக் கலைஞராக விளங்கும் பாலு மகேந்திரா என்னையும் ஒரு படம் Lugšgiji 95 jis 35T tř. Sy 356067 Gulu “ “ Aspects of Culture in Sri Lanka” என்ற எனது ஆங்கிலப் புத்தகத்தின் பின் அட்டையில் பிரசுரித்தேன். பிறிதொரு தடவை அவரைச் சந்தித்த பொழுது, தமது வீட் டி ல் எனக்குக் காலை உணவு தந்தார். அவருடைய துணைவியாரும், மகனும் கூடவே இருந்து உபசரித்தார்கள். அதன் பின்னர் பாலு மகேந்திராவை ஓரிரு தடவைகள் சர்வதேசத் திரைப்பட விழாக்களிலே சந்தித்து உரையாடினேன். கடைசியாகச் சந்தித்தபொழுது அவருடைய "மறுப டியும்’ படம் வெளியாகியிருந்தது. பிரபல எழுத்தாளர்கள் எஸ். கணே சலிங்கன், செ. யோகநாதன், எஸ். தம்பிராசா ஆகியோர் சகிதம் அவ ரைச் சந்தித்தபொழுது, அப்படத்தில் நடித்த புதிய நடிகையை அறி முகப்படுத்தியிருந்தார்.
நடிகை ஷோபா மறைந்த பொழுது, "குமுதம்" பத்திரிகையில் அவர் எழுதிய கட்டுரைத் தொடர், பாலு மகேந்திராவின் எழுத்து வன்மைக்கும், நளினத்திற்கும் ஒரு நல்ல எடுத்துக் காட்டு.
女 女 ★
தொடருவது, பாலு மகேந்திராவுடன் நான் ஆங்கிலத்தில் நடத்தி
*"The Island" பத்திரிகையில் வெளிவந்த நேர்காணலின் சாராம்சம்:
கேள்வி : ஒரு படத்தின் காட்சியை அல்லது காட்சிக் கோவையை
எவ்வாறு நீங்கள் படம் பிடிக்கிறிர்கள்?
பதில் : எனது எழுத்துப் பிரதியின் தேவைகள் அல்லது நான் மன தில் வைத்திருக்கும் காட்சியின் தேவைகளின் ஆணைக்கேற்ப ஆக்க பூர்வமான தீர்மானம் ஒன்று எடுக்கப்படுகிறது: படுக்கை அறையுள் ஒரு காட்சியை எடுக்கப்போகிறேன் என்று வைத்துக் கொள்வோம்; இரவிலேயே காட்சி இடம் பெறுவதாக நான் பொதுவாகத் தீர்மானித்திருக்கிறேன். அக்காட்சி இரவில் இடம் பெறுவது என்று தீர்மானித்தபின், எவ்விதமாக நான் ஒளியைப் பயன்படுத்த வேண்டும் என்று என்விருப்பப்படியே அவ்விதத்தை நான் தேர்ந்தெடுக்கலாம். அதேவேளையில், காட்சியின் பொருத்த முடைமைக்கேற்ப ஒளி அமையவேண்டும். இதுவே, எழுத்துப் பிரதி தொடர் பான எனது பார்வையாகும். முன்பின் யோசியாமல், நான் காட்சியை அமைப்பதில்லை. நன்றாகச் சிந்தித்த பின்னரே, சூழல், பொருத்தமுடைமை, காட்சியின் தன்மை போன்ற
41

Page 23
கேள்வி :
கேள்வி :
பதில்
கேள்வி :
42
வற்றைக் கருத்திற் கொண்டே காட்சி இடம் பெறும். எனவே கருத்தை சினிமா மொழி பெயர்ப்பதில் படப் பிடிப்பு மிகவும் முக்கியம் பெறுகிறது. வர்த்தக ரீதியான படங்களில், மின் விளக்கு அல்லது விளக்கு எரிந்தால் மாத்திரமே இராக் காட்சி என்று நாம் அனுமானிக்க முடிகிறது. எல்லாம் எரியாவிட்டால், இரவுக்காட்சி, பகல் காட்சி எல்லாமே ஒன் றாகத்தான் இருக்கும்.
வர்த்தக சினிமா, பிரதான நீரோடை சினிமா, இடை நிலை சினிமா, சிறுபான்மையினர் சினிமா - இவற்றின் விளக்கம் என்ன?
பிரதான நீரோட்டத்தில், அதிக வசூல் பெறும் படங்கள் பொதுவாக வர்த்தக சினிமா எனப்படும். கூடிய சீக்கிரம் பணம் சம்பாதிக்கவோ, அதிகப்படி பணம் திரட்டவோ
மேற்கொள்ளப்படும் வர்த்தக ஏற்பாடுகள் திரைப்படத் தயாரிப்புக்கு அடிப்படையாகின்றன. போட்ட முதலைத்
திருப்பி எடுக்க வேண்டும். கலைப்படம் முற்றாகவே சமரசம் செய்வதை மறுப்பது. வர்த்தகத் தேவைகளிருந்து விடுபட்டது இடை நிலை சினிமா, வர்த்தக சினிமாத் தேவைகளுக்கு இடங் கொடுக்காவிட்டாலும், முழுக்கமுழுக்கக் கலைப்பாங்கான
படமும் அல்ல. இரண்டிற்கும் இடைப்பட்ட நிலையில் உள் ளது. சிறுபான்மை சினிமாவில் நெறியாளர் தமது கூற்று ஒன்றை விளக்க சினிமா பயன்படுத்தப் படுகிறது. தமது கருத்தோட்டத்தை ஆக்கத்திறன் அடிப்படையில், பகிர்ந்து கொள்ள பார்வைளாளரை நெறியாளர் அழைப்பதை சிறு பான்மை சினிமா எனலாம்.
திரைப்பட உருவாக்கத்தால் நெறியாளரே மிக முக்கியமா னவர் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
அவ்விதமாகச் சிந்திப்பவர்களில் நானும் ஒருவன். சினிமா என்ற ஊடகத்தின் ஆசான்,எஜமான் நெறியாளரே. கட்டிடத் திற்கான நிர்மாணப் படத்தை வரைந்தவுடன் அவன்பணி முடிகிறது. ஆயினும் திரைப்படக் கதைப் பிரதியை எழுதுவது என்பது வேறு, அதனைத் திரைப்படமாகப் படம் பிடிப்பது என்பதுவேறு. ஆக்கபூர்வமான நெறியாளருக்கு படக்கதைப் பிரதி ஒர் உந்துசக்தி மாத்திரமே.
திரைப்படத்தில் நடிப்பு எப்படி இருக்க வேண்டும்?
நடிகர்கள் நடிக்காமல் இருக்கும் பொழுது நெறியாளரும்,

கேள்வி :
கேள்வி :
கேள்வி :
பதில்
ஒளிப்பதிவாளரும் ஒரு காட்சியை படம் பிடித்துள்ளார்களோ என்று பார்வையாளர் ஐமிச்சப்படும் பொழுதும், அங்கே தமது நடிப்பு படம் பிடிக்கப் படவில்லை என்று நடிகர்கள் கருதும் வேளையிலும் மிகவும் உயர்ந்த நடிப்பு இடம் பெற்று விடுகிறது;
பல "ஷொட்களை" எடுத்துப் பின்னர் "எடிட்' பண்ணு வீர்களா அல்லது வழக்கத்திலேயே "சிங்கிள் டேக் காகவே எடுத்துக் கொள்வீர்களா?
படம் பிடிக்கப்படும் பொழுது, நான் பயன்படுத்தப் போவ தில்லை என்ற ஷொட்களை எடுக்கமாட்டேன் "ஸ்கிறிப்ட்" டிலேயே முக்கிய வெட்டுக்களைச் செய்து விடுவேன். அங்கீ கரிக்கப்பட்ட எழுத்துப் பிரதியையே நான் படம் பிடிப் பேன். நான் முன் கூட்டியே திட்டமிட்டு விடுவேன். கூடிய அளவு சிக்கனமாகவும், பொருத்தமான தாகவும் உருவாக்கு வேன். தாக்கமான முறையில் பரிவர்த்தனை செய்யவேண்டும் என்றால் எளிமை அத்தியாவசியமானது.
படப் பிடிப்பை ஆரம்பிக்கு முன்னர் நடிகர்களிடம் எப்படி, நடிக்கவேண்டும் என்று சொல்லிக் கொடுப்பிர்களா?
''ஸ்கிறிப்ட்"டில் அவரவர்க்குரிய பகுதிகளைக் கொடுத்து விடு வேன். நான் அவர்களுக்கு எதனையும் விளங்கப்படுத்துவ தில்லை. நான் நெருக்கமாகப் பழகும் நடிகர்களிடம் மாத்தி ரம் கதைப்போக்கு எது என்று போக்கோடு போக்காக கூறி வைப்பேன். அர்ச்சனாவுக்கு மாத்திரம் எழுத்துப் பிரதியை வாசித்துக் காட்டுவேன்; ஏனென்றால் எனது வழிகாட்டலின் பேரில் தொழிற்படும் "சீரியசான திரைப்படமாணவி அவர் . ஏனையவர்களைத் தங்கள் கற்பனைக்கு ஏற்ப எது எதிர் பார்க்கப்படுகிறது என்ற என் விளக்கத்தைத் தாம் பொருள் கொண்ட விதத்தில் வெளிப்படுத்தும்படி கேட்டுக் கொள் வேன். ஒவ்வொரு "சீக்குவன்" சிலும், நடிகர்கள் கொடுத்த விளக்கம் (வெளிப்பாடு) சரியானதா என்பதை நான் தீர் மானிப்பேன். மனதால் தீர்மானமெடுக்கும் பொழுது நடிக ரின் பங்களிப்பும் கலந்துரையாடப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படுகிறது.
திரைப்படங்களில் பின்னணி இசை எப்படி இருக்கவேண்டும்?
சத்தியஜித் ராய் கூறியிருப்பது போல கேட்கப்படாத இசை யாகத் திரைப்படப் பின்னணி இசை இருக்கவேண்டும்.
43

Page 24
இடைநிலையிலுள்ள படங்கள் பின்னணி இசையை நன்கு பயன்படுத்துகின்றன. கதையுடன் பின்னிப் பிணைந்ததாக பின்னணி இசையிருக்கவேண்டும். பாத்திரத்தின் தன்மை யைப் பலப்படுத்தவும் பாத்திரத்தைப் பார்வையாளர் புரிந்து கொள்ள உதவும் விதத்திலும் பின்னணி இசையிருக்க வேண் டும். எனது படங்களில், நான் ஒரு நாளும் உதட்டால் பாடும் பாடல்களைச் சேர்ப்பதில்லை. எனது பாத்திரங்கள் வாயைத்திறந்து பாடுவதில்லை. பின்னணியிலேயே பாடல்கள் எனது படங்களில் ஒலிக்கும். இந்தியாவில் 90% மானவை படம் பிடிக்கப்பட்ட நாடகங்களும், பாடல்களுந்தான்!!
女
பாலுமகேந்திரா திரையில் கவிதை எழுதும் ஓர் அழகியல் வாதி மாத்திரமல்லர், மனித உணர்வுகளையும், விழுமியங்களையும் மதிக்கும் ஒர் ஆய்வறிவாளருங் கூட5
மழை
நட்சத்திர தாரகைகள் பூமிக்கு வழங்கிய நன் கொடை முத்து அலையும் ஆன்மாக்களின் அவலக் கண்ணிர்த்துளிகள் சூரிய தேவன் போரில்
இறந்ததால்
வழியும் குருதித் துளிகள் வானத்து தேவதையின் கூந்தலில் சூடிய மலர்களில் இருந்து வழியும் தேன் துளிகள் மகா முனிவர்கள் மேலோகத்தில் குளிக்கும் போது சிந்திய நீர்த்துளிகள் இறைவன் துப்பிய எச்சில் இந்த மழை. ம. சுனர்ந்தினி
திருகோணமலை.
MLLLLLLLLLLLLLeLLLLLLLLkLLeqLLTLLLeLLLLLLeeLeLLe LLLe LLeLeLeeLeLeLLLLLLeLeLLLLLLLL
44

ஆத்திரம் தீர்த்த அலை - முகமட் அபார்
கடலலைகள் பொங்கி எழுந்து தலையால் அடித்துக் கொண்டது தரையில்:
நண்டுகளும், ஊரிகளும். தலைவேறாய்,
கால்வேறாய்
இந்தக் காலத்து மனித பிணத்தைப் போல் கிடந்தது.
ஊரெல்லாம் பயங்கரம் உயிரெல்லாம் ஒரே அடக்கம் கடலலைகள் பொங்கி, பொங்கி சீறியது.
நமது பட்டாளங்களைப் போல் கொம்புகளை நீட்டிக்கொண்டு தேசத்தை எட்டிப்பார்த்தன இரண்டு கடல் உயிரினங்கள்.
நேற்றுமுட்டையிட்டு சென்ற கடலாமையின் முட்டைகளை சுறாவும்திருக்கையும் கொட்டைப்பாக்கைப் போல் பிடித்து பிடித்து அங்குமிங்கும் எறிந்தன:
என்
காதலியின் அலறல் கடலலையோடு சேர்ந்து அடிக்கடி என்னையும் அரட்டியது.
அழிவு, அழிவு என
கத்தித் திரிந்த ஊர் காகங்களோடு சேர்ந்து நானும் கத்திக் கொண்டேன்.
45

Page 25
46
போர்க்கொடிகள்
செல் வி. சசிகலா சுப்பையா, கிழக்குப் பல்கலைக்கழகம்
பூங்கொடிகள் அல்ல நாங்கள் போர்க்கொடிகள்; ஆர்த்தெழும் அலைகடல் அடங்காத புயற்காற்று ஆற்றல் கொண்டெழுந்து அணை உடைக்கும் பெரு வெள்ளம், மாற்றம் காண எழும்: மாதரணி.
等 爱 சரித்திரமே நில் எங்கள் சாட்சியத்தை பதிவு செய் பெண் இனத்தை அடிமை கொண்டு பெரும் பயனை உண்ணுகின்றோர் எண்ணம் இனியும் ஈடேறா, என்று எழுதி வை.
邻器 "தாயே என்றழைத்துத் தாளங்கள் போட்டெம்மை நாயே போல் நடாத்தும், நயவஞ்சகம் நாமறிவோம்; பெண் அவள் பேயென்றும் பெரும் பீடை நோயென்றும் முன்னோர் எழுதி வைத்த மூடச்சாத்திரங்கள் தன்னை எரிக்கத் தணல் எடுத்துச் செல்லும் பெண்கள் படை யென்று எங்கள் பெயரெழுது.
钦、 令德 YL0LL0S0L0LSL0S LLL S00SSLLL0SSL LLLLSLLLLL0LL0LL0
 

மண்ணறைத் தாலாட்டு
கவிஞர் ஞானமணியம்
மண்ணிலுயி ருள்ளவரை மதிப்புமில்லை மன்னு தமிழ்ப் பாவலர்க்குச் சிறப்புமில்லை மண்ணறையி லன்னவர் உறங்கும் போது மாந்தரிவர் தாலாட்டையோ மறப்பதில்லை!
நாட்டிலவர் நல்லபுகழ் ஈட்டுங் கலைஞர் நந்தமிழுக் கின்பவளம் ஊட்டுங் கவிஞர் பாட்டிலவர் பண்டிதராய்ப் பாடும் புலவர் பாளுலகப் பாராட்டுக்கள் கேட்டாரில்லை.
பாடுமிசை மீனகத்தின் பண்புத் தனையர் பனையாழம் மானிலத்தின் பாசப் பிரியர் மோடுவரை வாழும்மலை வம்சத் துணைவர் மூச்சணையும் முன்னிதயங் குளிர்ந்ததில்லை.
காரதனிற் பயணமிவர் செய்தாரில்லைக் கால்நடையிற் பணிபுரிந்து கண்டாரெல்லை தேரதனிற் பவனிவரும் கண்ணன் தாஸர் செகத்தின ருவப்பதையோ கண்டாரில்லை.
மாதவனின் கீதைமறைப் பொருளுணர்ந்தார் வழுத்தியதை வண்ணப்பா வடித்தெடுத்தார் ஆதரவைத் தேடியலைந் திலவே காத்தார் ஆயினுமால் ஆசியுடன் அருளிச் செய்தார்!
47

Page 26
48
புகழேந்திப் புலவனிவன் தானோவென்று புகழாரம் பாடியொரு கவிஞன் சொன்னான் புகழேந்திப் புவியரங்கில் நின்றபோதே புண்ணியரை எண்ணியவர் இங்கேசிலரே.
எங்கள் மணித் திருநாடென்று ஏற்றுஞ் சீலர் ஏந்தலவர் என்றுசிலர் போற்றிச் சொல்வார் மங்களநற் தொண்டரென மகிழ்ந்து சொல்வார் மற்றவரோ பற்றிலர் மறந்தே செல்வார்.
நாவுக்கு அரசர் திருத் தாழ் திறந்தார் நற்தேசப் பதிகள் பல தாம் திறந்தார் பாவுக்கு அரசரிவர் பரிபாலித்தார் பந்தமுறும் பக்தர்தமைப் பார்த்தாரில்லை.
உள்ளதையும் நல்லதையும் உரைத்திட்டாரே ஒன்றுகுலம் ஒரிறைவன் எனவிண்டாரே வள்ளலெனக் கல்விநலம் வழங்கினாரே வாழும்வரை வாழ்த்தியினம் வரக்கண்டாரோ. ?
கண்டதுவுங் கேட்டதுவுங் கவிதையாகிக் கலையேடாம் "உதயம்’ தன் இதழிலேறி விண்டமரக் கலைஞர்நிலை விம்மி விம்மி விரைகின்ற சேதியிது வியப்புக் காணிர்!
பாரதி அமரத்துவம் அடைந்த பின்னரே அகில உலகமும் அவனைப் பாராட்டத் தொடங்கியது. அவனுக்கு மண்ண றைத் தாலாட்டுக்கள் பாடத் தொடங்கியது. அதனாற் தான் அவனை "மகாகவி' என்று அழைப்பதிலும் பார்க்க "அமரகவி' என்று அழைப்பதிலேயே இந்த பூவுலகம் பூரிப்
- பாரியல்

வங்காளக் கதை ‘பனாபுல் எழுதியது
ஆங்கிலவழி தமிழாக்கம்: அன்னலட்சுமி இராஜதுரை
திலோத்தமா
அங்கொன்றும் இங்கொன்று மாய் ஒரு மனிதனின் வாழ்வில் திடீர் நிகழ்வுகள் தோன்றுகின்ற கணங்கள் வருகின்றன. அப்போது ஒரு கண் இமைக்கும் நேரத்தில், எங்களது எல்லாக் கணக்குகளும், ஒழுங்குகளும் மாற்றம் கண்டு விடு கின்றன. வடக்கு மேற்குப் பாயும் ஆறு, திடீரென்று, தெற்கு நோக் கிப் பாய்கின்றது. எந்தவித எச்ச ரிக்கையும் இல்லாமலே பணி மூடிய மலை இடிந்து ஆழ்ந்து அகன்ற குழியாகி விடுகிறது. சாதாரண மக்களின் வாழ்வில் இந்த மாதிரி விடயங்கள் நடந்தேறி விடுகின் றன. இந்தமாதிரி அனுபவங்கள் ஏற்பட ஒருவர் ஒரு வீரனாகவோ அல்லது பாவியாகவோ இருக்க வேண்டியதில்லை.
நக்குல் நந்தி ஒரு சாதாரண மனிதன். அதே போல அவரது ம க ன் கோகுலும், கல்லூரியில் படித்து பட்டதாரியான பின்னர் அவன் ஏனைய இளைஞர்களைப் போலவே சீட்டு ஆடிக்கொண்டும், அமைச்சூர் நாடகங்களில் பங்கு பற்றிக் கொண்டும், அரசியலைப் பற்றி விபரிப்பது அல்லது இலக்கி யத்தைப்பற்றி விவாதிப்பது போன் றவந்நிலும் தனது நேரத்தினைக் கழித்துக் கொண்டிருந்தான். சுருக்
கமாகச் சொன்னால் அவன் சோம் பேறித்தனமாகப் பொழு  ைதக் கழித்தான் என்பதுதான்.
எல்லா இளைஞர்களுக்கும் வரு வதைப் போலவே, கோகுலுக்கும் பலர் திருமணம் பேசி வந்தார்கள். கல்யாணச் சந்தையில் அவனக்கு நல்ல கிராக்கி இருந்தது. பி ன் என்ன, பட்டினத்தில் மூன்று மாடி கள் கொண்ட வீடு, வட்டிக்குப் பணம் கொடுக்கும் அவனது தந் தையின் வியாபாரம், அவனது தாயின் குடும்பத்தின் காணிபூமிகள் இவையெல்லாம் இருக்கின்ற போது கோகுல் தனது வாழ்க்கைக்காக ஒரு போதும் உழைக்கத் தேவை யில்லை.
அவனுக்குள்ள வ ச தி க் கு , அ வ ன் விரும்பினால், த ன து வாழ்க்கை முழுவதுமே நாடகத்தை ஒரு பொழுது போக்காகக்கொண்டு "ராஸியா என்ற பாத்திரத்தில் அதி உன்னத நிலைக்கு உயரலாம்.
திருமணப் பேச்சுக்கள் வந்து கொண்டே இருந்தன. அவ னு டைய தந்தை நக்குல் நந்தி உலக அனுபவம் நிறைய உள்ளவர். அவர் ஒரு பெண்ணினுடைய ஜாத கம், குடும்பப் பின்னணி, தோற்
49

Page 27
றம், சீதனம் போன்ற விடயங் களை எல்லாம் சீர் தூக்கிப் பார்த் தபின், அவர் அந்தப் பெண்ணை மகனுக்கு ஏற்ற மணப்பெண்ணா
கத் தேர்ந்தெடுத்தார். அவளது
மறு பெயர் நிலு. உண்மைப்
பெயர் திலோத்தமா.
பழைய நாகரீக மனிதராக
இருந்த திருவாளர் நந்தி, அந்தப் பெண்ணைப் பார்ப்பதற்கு மகனை அழைத்துச் செல்லவில்லை. அதற் குப் பதிலாகத் தாமே சென்று, ஆமோதித்து விட்டார். கோ கு லுக்கு அவளது பெயர் பிடித்துப் போய்விட்டது. காவியத்தில் வரு கின்ற வானத்துத் திலோத்தமை என்ற அழகிய பெண்ணுருவை அவன் கற்பனை செய்தான். அவன் அவளது கற்பனையில் மிதந்தான்.
அவளை நேரில் பார்த் த போது அவன் அதிர்ச்சியடைந் தான். அவனுடைய திலோத்தமை இவளா? அவள் கறுப்பாகவும், உருளையாகவும் இருந்தாள்.
அவளது கண்கள் சிறியனவாக இருந்தன அதில் நாணமும் பயமும் தெரிந்தன. ஆனால், சங்குகளின் எதிரொலிக் கூச்சலிலும், பெண்க ளின் காதைத் துளைக்கின்ற மூச் சொலியிலும், பீங்கான்களின் ஒலி யிலும் அவன் அவளைத் தனது மனமார ஏற்க வேண்டியதாயிற்று.
அவனுடைய தந்தை நக்குல் நந்தியின் ஏமாற்றமும் குறைந்த தல்ல, அவர் எண்ணியது போல், பெண்ணின் தந்தை ஒரு நேர்மை யான மனிதரல்ல. ஓயாமல் தன்
50
கைகளை முறுக்கிக்கொண்டு. திரும ணச் சடங்கின் போது, நல்லவரைப் போல் இளித்துக்கொண்டு திரிந்தா லும் எந்தவொரு வாக்குறுதியை யும் அவர் நிறைவேற்றவில்லை. சீதனப் பணத்தைக் கொடுக்கின்ற போது முழுத்தொகையும் தரத்தன் னால் அப்போது முடியவில்லை என்றும், மிகுதியைப் பின்னர் தருவ தா க ச் சொல்லியும் குறைந்த தொகையையே கொடுத்தார்.
மணமகனுக்கும் மணமகளுக்கும் அவர் கொடுத்த பரிசுப் பொருட் களும் தரங்குறைந்த பொருட்கள் தான். அவளது சிவப்பு தலை முக் காட்டுத் திரைத்துணியும் சாயம் போனது. கையில் கடிகாரம் இருக் கவில்லை. ஒன்றுக்கு கல்கத்தாவில் 'ஒடர்" "கொடுத்திருக்க வேண்டும். ஆனால் வந்து சேரவில்லை. மோதி ரமும் தங்கமோ, இல்லையோ, யாருக்குத் தெரியும்? அது பித் தளை போலத் தெரிந்தது.
ஓர் ஏ மா ற் றுக்காரனுடன் அவர் உறவுப் பிணைப்பை ஏற்ப டுத்திக் கொண்டுவிட்டார்? தலை யை ஆட்டிக் கொண்டும், அருவ ருப்பான சிரிப்புடனும் கைகளைப் பிசை ந் த ப டி சொல்வதையெல் லாம் ஏற்றுக்கொண்டும் இருந் தார்.
நக்குல் நந்தியின் கோரிக்கை கள் கொஞ்சம் கூடுதல்தான். அப் படி அவர் கொடுக்காதவரை இந்த அழகற்ற, தடிப்பான கறுப்புப் பெண்ணை ஏன் அவர் தனது பரு மகளாக ஏற்க வேண்டும்? ஒவ் வொன்றுக்கும், நீதியானதும், தகு

தியானதுமான ஒரு விலை இருக் கிறது. உண்மையாக, என்ன குழப் பமோ இது அடக்கமும் மரியாதை யும் உள்ள ஒரு மனிதன் இப்படி அவருக்குச் செய்வான் என்று யார் எதிர்பார்த்திருக்க முடியும்?
தவிர்க்க முடியாதபடி கோகு லின் தாய் திருவாளர் நந்திக்கு நல்ல ஏச்சுக்கொடுத்தார். கோகுலின் தந்தை மூப்படைந்த அடையாளத் தைக் காட்டுகிறார். என மீண்டும் மீண்டும் சொன்னாள். அவரைப் போன்ற குணாதிசயங்கள் உள்ள ஒரு மனிதன் அவனுடைய மகனு க்கு மணமகள் என்று இப்படி ஒரு பெண்ணை எப்படிக் கொண்டு வரு வார்? வெட்கக்கேடு!
நக்குல் இந்த வேதனையில் இருந்து தான் தப்பிக் கொள்வதற் காக பொய் சொன்னார்.
"நான் பார்த்தது இந்தப்பெண் ணை அல்ல. அவள் சிவப்பி. நல்ல முக வெட்டு, அழகான உடல்வாகு. அவளுக்கு நிறையத் தலைமயிர் இரு க்கும். அந்த ஆள் ஒரு ஏமாத்துக் காரன். தந்திரசாலி என் மகனுக்கு நான் இன்னொரு கல்யாணம் கட்டி வைப்பேன்" என்றார். அந்த விஷ யத்தில் அங்கே மாறுபாடு இல்லை! அதற்கு கோகுலும் தயாராக இருந் தான்.
என்றாலும், திலோத்தமாவைத் தெரிய வந்ததும், அவளில் ஏதோ ஒன்று இருப்பதை கோகுல் கவனிக் கத் தவறவில்லை. நிலு ஒரு நல்ல பெண். கத்தரிக்காய் மாதிரிக் கறுப் பாயும், அத்தோடு அதிகம் தலை
முடி இல்லாமல் இருந்த போதும், அவளது முகத்தில் நல்லதன்மைகள் அச்சிட்டாற்போல் பளிச்சிட்டன: அவள் அவனிடம் கதைப்பதற்கு பெரும் பிரயத்தனம் செய்ய வேண் யதாக இருந்தது. அவளது விழிகள் பெரும் ஆச்சரியத்தைத் தருவதாக இருந்தது.
அவள் மீதும் அவளது தகப் பன்மீதும் வீசப்பட்ட அவதூறுகள் எல்லாவற்றையும் அவள் எதிர்க்க வில்லை. பருவ காலத்தில் மழை பெய்தாலும், காலையில் சூரியன் உதித்தாலும் அது அவளைத் தாக் குவதில்லை என்பது அவனது உள் ளத்தில் படவில்லை. அவளது திரு மணத்தைப்பற்றி சில த கராறு அவளை ஏன் தடுமாறச் செய்ய வேண்டும்? அது வழமையானது.
தன்னைப்பற்றி நக்குல் நந்தி கூறிய பொய் குறித்து அவள் விரும்பி இருந்தால் எதிர்த்திருக்க முடியும். ஆனால் அவள் அப்படிச் செய்ய வில்லை. அவள் மெளனமாகவே இருந்து கொண்டாள். கோகுலைப் போன்ற ஒரு கணவனைப் பெற்ற தற்கு நன்றி உள்ளவளாக இருக்க வேண்டும். அங்கு எதிர்க்கவோ அல் லது எதிர்க்குற்றம் சாட்டவோ என்ன தேவை இருந்தது. ஒரு தற் செயல் அதிஷ்டத்தினால், சொர்க் கம் என்று கருதக் கூடிய ஒரு மகிழ்ச் சிக்கு வந்துவிட்டோம் என உணர்ந் திருந்தால் கோகுலுக்கு தான் தகு தியில்லை. அவனுக்கு தான் உரிமை இல்லை என்று அவள் அறிந்து இருந் தாள். சண்டையிடுவதன் மூலம் தனது மகிழ்ச்சியை இழந்துவிட அவள் விரும்பவில்லை;
51

Page 28
நான் திரும்பவும் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என் றான் கோகுல்
நிலு அமைதியாக இருந்தாள்
"பதில் கூறுவதில்லையா?" "அந்த மாதிரி. விஷயங்கள் இந்துக் குடும் பங்களில் நடக்கின்றன’
"நீ அதுகுறிந்துக் க வலைப் Lu L-6raivooaavuunt?
"நான்?. இல்லை" என்றவள் சிறிது நேர மெளனத்தின் பின் "அப்படி நான்கவலைப்பட்டாலும், நீங்கள் மகிழ்சியாக இருந்தால், நான் அதைப் பொறுத்துக்கொள் வேன்" என்றாள்.
ஒருவரிடம் ஒடிப்போனது எந்த வொரு மோகத்தில் இருந்தும் விலக்கிக்கொள்ள அவனுக்கு ஒரு வருடம் போதுமானது. நிலுவுக்கு இருக்காலம். அவள் படிக்காதவள். டாடும்திறனில்லை. பண்பாடுகளும் இல்லை. அவளுக்குள்ள ஒரே ஒரு கொடை எருமைமாடுபோல்வேலை செய்வாள். அலுப்புச் சலிப்பில்லா மல் நிறையப் பாத்திரங்களைத் தேய்த்துக் கழுவுவாள்.குவியல் குவி யலாக துணிமணிகளைத் துவைத் துப் போடுவாள்.
குசினிக்குள் நுழைய அவனது தாய் அவளை அனுமதிக்க மாட் டாள். ஆகவே வெளியில் செய்யக் கூடிய வேலைகள் எல்லாவற்றையும் செய்வாள். எப்போதும் தான் சுறு சுறுப்பாக இருக்கப் பார் த் து க் கொள்வாள். சந்திரன் உதயமாகி விட்டது அல்லது மரங்களில் புறாக்
S2
கள் அழைக்கின்றனவா என்றெல் லாம் பார்க்கஅவளுக்கு ஒருபோதும் G5prb இருந்ததில்லை.
கனவுலகிலும், கவிதா உலகி லும் நாட்டம் கொள்ளும் இயல் புள்ள. நாடகக் கலையில் ஆர்வம் கொண்ட கோகுல் உற்சாகம் குன் றியவனானான். கடைசியில் அவன் கையை விட்டு விட்டான். எவ்வளவு காலத்துக்குத்தான் ஒரு வேலைக் காகப் பெண்ணைக் காதலிப்பது?
வங்கிகள்
நமக்குப் பணம் தேவை யில்லை என்பதை நாம்
நிரூபித்தால் எ ம க் குக் கடன் கொடுக்கத் தயா
ராக இருக்கும் இடம்.
பாப்ஹோப்
நக்குல் நந்தி தனது புதிய உறவுக்காரர்களுடன் பெரும் ஆத் திரத்தோடு இருந்தாலும், மேலும் ஒரு இரண்டாவது கல்யாணமும் செய்து வைக்கின்ற விஷயத்தை ஒருபோதும் பிரஸ்தாபிக்கவில்லை. தன் பாட்டிற்கு ஒரு கல்யாணப்பேச் சைத்துவக்குவது கோகுலுக்கு கஷ்ட மாக இருந்தது. ஆனால் ஒருநாள் ஒரு வாய்ப்பு அவனுக்கு வாய்த்தது.
'சந்திர குப்தா நாடகத்துக்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப் பட் டன. செலுக்காய் மற்றும் அன்ரி கோனஸ் பாத்திரங்களுக்கு நடிகர்

கள் தேடிக் கண்டுபிடிக்கப்பட்டு விட்டார்கள். ஆனால் ஆடை அணி கள் இருக்கவில்லை. அவற்றினை கல்கத்தாவுக்குப் போய் வாங்கி வரும் பொறுப்பு கோகுலிடம் ஒப்ப டைக்கப்பட்டது.
புகையிரத நிலையத்தில் அவன் டிக்கட்டை வாங்கிக்கொண்டிருந்த போது, கூட்டத்தில் இடிபட்டுக் கொண்டிருந்த ஒரு வ யோ தி ப மாதைக் கவனித்தான். த ன து மூட்டை முடிச்சுகளையும் பார்த் துக்கொண்டு அதேவேளை டிக்கட் டையும் அவளால் வாங்கிக்கொள்ள முடியாதிருந்தது. குழுமிநின்ற மக் கள் அவளைப் பின்னே தள்ளி விடு பவர்களாக இருந்தனர். அவன் அவளுக்கு டிக்கட் வாங்கிக்கொடுத் தான். அவளும் கல்கத்தாவுக்குத் தான் போகவிருந்தாள்.
பிரயாணத்தில் அ வ ைள ப் பார்த்துக்கொள்ள யாரும் இல்லை. அ ந் த ப் பொறுப்பை ஏற் று க் கொண்ட கோகுல், அதே கொம் பார்ட் மென்டில், அவளுக்கும் ஒரு சீட் பிடித்துக்கொடுத்தான் தானும் அசெளகரியத்தை அனுபவித்துத் கொண்டு, இன்னொரு பிரயாணி யுடன் சண்டையும் பி டி த் து க் கொண்டு, அவள் படுக்கவும் வழி செய்து கொடுத்தான்.
கிழவிக்குத் திருப்தி. கொம்பாட்டு மன்டில் உள்ள பிரயாணிகள் படி ப் படி யாக க் குறைந்த பின்னர், தனது பொட் டணியில் இரு ந் து "பானை' எடுத்து அவனிடம் கொடுத்தாள். த 'ா னு ம் எடுத்துக்கொண்டாள்,
புகையிலை வைக்கும் "பளபளிச்கும் வெள்ளி டப்பி ஒன்றினை எடுத்துக் கொண்டாள் 'பானு' டன் புகை யிலை உபயோகிப்பதில்லை என்று கோகுல் மறந்துவிட்டான். புன்சி ரிப்பு சிரித்த கிழவி, "நான் விதவை யாகினதற்கப்புறம்,ஒவ்வொன்றாய் எல்லாவற்றையும் விட்டுவிட்டேன் இதை மட்டுந்தான் பிடிச்சுக் கொண் டிருக்கிறேன்" எ ன் று சொல்லி, வாய்க்குள் ஒரு சிறு உருண்டை யைப் போட்டுக்கொண்டாள்.
மீண்டும் புன்னகை செய்த அவள் , எச்சியை உமிழ்வதற்காக யன்னலுக்கு நீட்டினாள்.
வெளியே தலையை
அவர்கள் ஒருவரை ஒருவர் அறி முகம் செய்து கொள்ளத்தொடங்கி னார்கள். நீண்ட நேரம் பேசினார் கள் கோகுல் தன்னைப்பற்றிக்சொல் லுமாறு கிழவி தூண்டினாள். அவள் மீது நய பிக்கை வைத்த கோகுல் தனது வாழ்க்கைக் கதையை கூற ஆரம்பித்தான் எதையும் மறைக்க வே ண் டு ம் என்று அவனுக்குத் தோன்றவில்லை. அது சடுதியான தும் பரஸ்பர நம்பிக்கை கொண்ட தாகவும் இருந்தது.
அவன் தனது கதையைக் கூறி முடிந்ததும், "நீங்க இன்னுபொரு கல்யாணமும் செய்யப் போறதாய்ச் சொல்லுறீங்க பெண்ணைப் பார்த் திட்டீர்களா?" என்று கேட்டாள்.
இன்னும் இல்லை
இன்னுமொரு "பானை" எடுத்த
அதற்கு புகையிலையும் சேர்த்துப் போட்டுக் கொண்ட அவள் "உங்க
53

Page 29
ளோட நான் வெளிப்படையாகவே பேசுகிறேன் மகனே, எனக்கு ஒரே மகள் இருக்கிறாள் அவள் பிறந்ததோட நான் விதவையாகிப் போனேன். நான் விரும்புகிற ஒரு மகனைத்தான் தேடுகிறேன் உங்கள் எனக்கு நல்ல விருப்பம் 31ந் திட்டுது என் மகளிட்டேயும் பாராட்டக்கூடிய பல அம்சங்கள் இருக்குது நீங்க ஒரு வாக்குத் தரு
ஒ து
மேலே
வீங்க என்றால். பிறகு. . .
இந்தமாதிரி ஒரு விஷயத்தை
எதிர்பார்க்கவில்லை. அவனுக்கு
1 ன்ன சொல்வதென்றே தோன்ற வில்லை.
'நீங்க முதல்ல உஷாவைப் பா
ருங்க . நீங்க அவளை விரும்பு வீங்க என்றால் . “ என்றாள் கிழவி.
“எனக்கு ஏற்கனவே ஒரு மனைவி இருக்கிறாள் அதைப்பற்றி உங்க மகள் அறிய வந்தால், ஆட்சேபனை செய்வாள்' என்றான் கோகுல்.
"நான் விரும்புறதை என் உஷா மறுப்பாளா? அவள் அப்படியான வள் இல்லை. நான் அவளுக்கு நல்ல படிப்பும், சங்கீதப் பயிர்ச்சியும் கொ டுத்திருக்கிறேன். ஆனா இந்தக் கால த்துப் பெண்களைப் போல, பெரி யவங்களை எதிர்த்துப் பேசுறதுக்கு படிக்க விடேல்ல. உங்களுக்கு இன் னொரு மனைவி இருந்தால் என்ன! நீங்க இன்னொருக்காக் கல்யாண மும் செய்ய இருப்பதாலே, நிச்சய மாக அவளை விட்டுவிடப் போறி ங்க இல்லையா?
54
உண்மைதான் என்றான் அவன்.
"அப்போ அவள் இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன, என்ன வித்தியாசம் இருக்கப் போகி றது? என்ன சொல்றீங்க?
உஷா அவளது பெயருக்கு ஏற் றமாதிரி இல்லை. அவள் காலைப் பொழுதைப் போல்மிருதுவாக இரு க்கவில்லை.நண்பகல் வேளைபோல் பிரகாசித்தாள். வெய் யி ல் ஒளி யோடு, பிரகாசமான தங்க ஒளி யோடு, அவள் மினுக்கித் தோன்றி னாள். அவளது பேச்சு, அவளது பார்வை, அவளது முகம் யாவுமே கண்ணைப்பறிக்கும் காட்சிகளாக மின்னின. சித்தாரில் அத்தனை அழகாக வேறு யாரும் வாசித்ததை அவன் கேட்டதில்லை.
 

கோகுல் தன்னை மறந்தான்.
ஒரு மாதத்துக்குள்,ஒழுங்குகள் பூர்த்தியக்கப்பட்டன. உஷாவுடன் வந்து சேர்ந்த அவளது தயார், கோகுலின் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொண்டு தங்கி, அவனது பெற் றோருடன் பேச்சு வார்த்தையைத் தொடங்கினாள். உஷா வைக் கண் டதும் கோகுலின் தாய்க்கு நிரம் பிய திருப்தி அவளது. சீதனப்பணத் தொகையைப் பார்த்ததும், கோகு லின் தந்தை உருகிப் போனார்.
திருமணத்திற்குப் பின் ன ர். அவர்களுக்கு பத்தாயிரம் ரூபா ரொக்கம்,பெருந்தொகை நகைகள், ஒரு சிறிய தோட்டக்காணி கிடைக் கவிருந்தன. உஷாவின் தாயாரின் பேரில் இருந்த ஒரு அவதூறு அவ ளுக்குத் துணையைத்தேடுவதில் கஷ் டத்தை உண்டாக்கியது என்றும் கதை அடிபட்டது. ஆனால் நக்குல் நந்தி அந்தத் தகவல்களை அறிந்து தடுமாறவில்லை. அதைத்தான் அல ட்வியம் செய்ததோடு மட்டுமல்லா மல், ஆகக் குறைந்தது கல்யாணம் நடை பெறும் வரை குடும்பத்தில் வேறுயாரும் அறிந்துகொள்ளாத விதம் பார்த்துக் கொண்டார்.
நாங்கள் எல்லோரும் ஒன்றி ரண்டு பிழை செய்வதுண்டுதான் என அவர் எண்ணிக் கொண்டார். உஷா ஒரே ஒரு நிபந்தனை மட்டும் கோகுலுக்கும் அவன் பெற்றோருக் கும் போட்டாள். அதாவது கல் யாணத்திற்குப் பின் திலோத்தமா அவளது வீட்டு க்கு நிரந்தரமாக அனுப்பிவைக்கப்பட வேண்டும் என் பதாகும்.
இரவு லேட்டாகி
விட்டது
கோகுல் கட்டிவில் படுத்தான். அவன் விழித்தவாறு தனியாகக் கிடந்தான். காலையில் உஷாவின் தாயார், தனது பூர்வாங்க ஆசீர் வாத த்  ைத வளங்கவிருந்தாள். திலோத்தமா இன்னமும் படுக்கை க்கு வரவில்லை. ஏன்? அவளைச் சுற்றி எவ்வளவோ காரியங்கள் நட ந்துகொண்டு இருக் கி ன் றன. திலோத்தமா ஒரு வார்த்தைதனும் பேசவில்லை. அவளது சம்மதத் தைக் கேட்பது அவனது கடமை. கோகுல் திரும்பித் திரும்பிப் பார்த் தான். திலோத்தமா தனது வலை களை எல்லாம் முடித்தபின் வந்து படுக்க, வழமையிலும் பார்க்க நேர
மாகி விட்டது. அதிகாலையில் படுக்கையை விட் டு எழுந்துவிட்
டாள்.
அவளைத் தனியே பார்ப்பது கோகுலுக்கு கஷ்டமாக இருந்தது. கடந்த இருபது அல்லது இருபத் தைந்து நாட்களாக அவன் அவளி பும் ஒருவார்த்தைதானும் கதைக் கவில்லை. அவர்கள் இருவரும் புதிய ஒழுங்குகள் பற்றி ப் பேச வே இல்லை,
அவளைக் கேட்கத் தான் வேண் டும்,
கோகுல் சடுதியாக எழுந்தான்
திலோத்தமா மெல்லக் கட்டி லில் இருந்து நழுவுவதைக் கண்ட டான். அப்போது விடியல் வேளை
*கோப்! கேய்!”
“என்னது?"
55

Page 30
'இன்றைக்கு ஆ ஸிர் வா தம் நடக்க இருக்கிறது. உனக்குத் தெரி nyom?
“-gиотиѣ”
“இங்கே பார் உனக்கு ஆட் சேபனை இல்லையா? இருக்கிறதா?
"இல்லை"
"க ல் யா ணத்துக்குப்பிறகு நீ வீட்டுக்குஅனுப்பிவைக்கப்பட்டுவிட வேணும் என்று வற்புறுத்துகிறாங்க அவங்க" கேள்விப்பட்டியா?
"கேள்விப்பட்டேன்; நல்லது நான் போகிறேன். இடைக்கிடை நீங்க என்னை பார்த்தீங்கன்னா திரு ப்திப்படுவேன். இப்ப நான் போக வேணும். செய்யிறதுக்கு நிறைய வேலை இருக்கு.
அவள் அங்கிருந்து அகன்றாள்.
கோகுல் சிறிதுநேரம் கட்டிலில் கிடந்தான் ஆழ்ந்தயோசனையோடு பின்னர் எழும்பி உட்கார்ந்தான். கட்டிலை விட்டுச் சென்று, ஜன்னல் அருகில் சிறிது நேரம் நின்றான் திலோத்தமா சாம்பல் குவியல்க ளுக்குப் பக்கத்தில் இருந்து பாத்தி ரங்களைத் தேய்த்து கழுவுவதைப் பார்த்துக் கொண்டு நின்றான்.
சடங்குக்கு வேண்டிய எல்லாப் பொருட்களோடும் தாயார் வந்து சேர்ந்தாள். அவளது ஆயத்தங்கள் எல்லாம் விஸ்தார மானவை. உஷா தானே மாலை தொடுப்பதற்காக இ ர விர வாக
56
உ ஷா வின்
நித்திரையின்றி இருந்தாள் என்று புன்னகையோடு சொன்னாள்.
கோகுல் நீராடினான். அவன் அமர்வதற்காக ஒரு சந்திரக் கம்ப ளம் விரிக்கப் பட்டது. அவன் மாலையை அணிந்து கொண்டு, கம்பளத்தில் உட்காரப் போன போது "சங்கை ஊதுறது ஆரு? எனக்கு உதட்டின் மத்தியிலே ஒரு கொப்புளம் எங்கே அந் த ப் பொடிச்சி? சங்கை எடு!" என்றாள் அவனது தாயார்,
திலோத்தமா கையில் சங்கு டன் வந்து, கதவுக்குப்பக்கத்தில் பயத்துடன் நின்றாள்;
முதலாவது பலமான சங்கூது தலின் போதே, கோகுலிடம் ஓர் அதிர்ச்சி பரவியது. அது ஒரு மின் னல் கீற்று தாக்கியது போன்ற அதிர்ச்சி.
*" என்னை மன்னிச்சுக் கொள் ளுங்க என்னாலே அதைச் செய்ய ஏலாது".
தனது கழுத்திலிருந்த மாலை
யைப் பிய்த்து எறிந்தவன், எழுந்து மேல்மாடிக்கு ஓடினான்.
வங்கிகள்
மழை பெய்யாத பொழுது
குடையைக் கொடுத்துவிட்டு, மழை பெய்ய ஆரம்பித்ததும்
அதைத் திருப்பிக்
கேட்பவர்கள்
ராபர்ட் பிராஸ்ட்

அரங்கேற்றம்
து. குருசாமி ஐயர்
LDL is disatility.
சில நூற்றாண்டுகளுக்கு முன் னர் தமிழகத்தில் எந்த ஒரு நூலும் வெளிவருவதற்கு முதற்படியாக, அந்த நூல், கற்றோர்கள், புலவர் கள், பண்டிதர்க்ள் நிரம்பிய ஒரு சபையில் வாசிக்கப்பட்டு அந்த சபையினரால் அங்கீகரிக்கப்பட வேண்டியிருந்தது. அந்த நிகழ்ச்சி அரங்கேற்றம் என அழைக்கப்பட் டது. நூலை இயற்றியவர் எப் பேர்ப்பட்ட பெரிய புலவராகவோ பண்டிதராகவோ இருந்த போதி லுங்கூட அவருடைய நூல், முறைப் படி அரங்கேற்றப்படாவிடின் அந் நூல் கல்விமான்களால் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
பொதுவாக அ ரங் கே ற்ற நிகழ்ச்சி ஒரு பெரும் அறிஞரின் தலைமையில் நடைபெறும். ஆக்கி யோனுடைய அழைப்பின் பேரிலும் தமது சொந்த விருப்பின் பேரிலும் பல்வேறு புலவர்களும், பண்டிதர்க ளும் நூல் வல்லுனர்களும் அங்கு குழுமியிருப்பார்கள் சமய சம்பந்த மான நூல்களாயிருந்தால் கோவில்
மண்டபங்களில் இறைவன் சன்னி
தானத்திலேயே அவற்றின் அரங் கேற்றங்கள் ஒழுங்கு செய்யப்பட் டன. ஒரு குறிப்பிட்ட சுபதினத் தில் ஆரம்பிக்கும் அரங்கேற்றம் நூலின் அளவுக்கும் புலவர்களா லெழுதப்படும் ஆட்சேபனைகளுக் கும் அமைய பல நாட்கள் அல்லது பல வாரங்கள், மாதங்கள் என நீடிப்பதுண்டு.
நூலை இயற்றிய புலவர் தமது நூலின் ஒவ்வொரு செய்யுளையும் உரக்க வாசித்து அதற்கு விளக்கம் கூறுவார். (அக்காலத்து நூல்கள் யாவும் செய்யுள் நடையிலேயே அமைந்திருந்தன என்பது ஈண்டு குறிப்பிடற்பாலது.) ஆக்கியோனு
டைய விளக்கம் குறித்தும் செய்யு ளிற் காணப்படும் இலக்கணமரபு நபை ஆகியன குறித்தும் தத்தமது மனதிற் தோன்றும் ஐயப்பாடுக ளைத் தெரிவிக்கவும் Tஅவற்றிற் குரிய விளக்கம் கேட்கவும் சபையி இள்ள எவருக்கும் உரிமையிருந்தது. ஆக் கி யோன் பா ல் அசூயை கொண்ட புலவர்கள் வேண்டு மென்றே விதண்டாவாதமான பல கேள்விகளைக் கேட்டு அவரைத் திக் குமுக்காடச் செய்துவிடுவதுமுண்டு. ஆயினும் எத்தகைய கேள்விகள் கேட்கப்படினும் ஆத்திரமடையாது அவற்றிற்கெல்லாம் அமைதியாக வும் பொறுமையுடனும் பதிலளிக்க வேண்டிய கடப்பாடு ஆக்கியோ னுக்கிருந்தது.
கம்பர், கச்சியப்ப சிவாச்சாரி யார் போன்ற மாபெரும் புலவர் கள் கூட தாமியற்றிய நூல்களை அர ங் கேற்று விக்க வேண்டிய நிலைக்கு உள்ளாகியிருந்தார்கள். அது மட்டுமன்றித் தமது நூல்களை அரங்கேற்றிய சமயத்தில் பல இடங் களில் சொற்பிழை பொருட்பிழை ஆகியன இருப்பதாகக் குற்றஞ்சாட் டப்பட்டு அவற்றிற்கு விளக்கமளிக் கவேண்டிய நிலைகூட அவர்களுக் கேற்பட்டதென் ப ைத யறி யும் போது நமக்குப் பெரும் ஆச்சரிய முண்டாகிறதல்லவா?
கவிச்சக்கரவர்த்தியெனப் புகழ் பெற்றிருந்த கம்பர் கூட இராமா யண காவியத்தைப் பாடி அதை அரங்கேற்றப்பட்ட பாடு கொஞ்ச நஞ்சமன்று. முதலில் தில்லை மூவா யிரவரிடம் சென்று அவர்களுடைய அங்கீகாரத்தைப் பெறவேண்டிப் பல நாட்கள் காத்திருந்தும் அவர் களெல்லோரையும் ஒருங்கு சேர திரட்ட முடியாமல் அவதியுற்று
57

Page 31
இறைவனைப் பிரார்த்திக்க இறை புவன் அருளால் தில்லை மூவாயிரவ ருடைய ஒரு குடும்பத்தில் ஒரு குழந்தைக்குப் பாம்பு தீண்டி அது இறந்துவிட தில்லை மூவாயிரவர் அனைவரும் அங்கு கூடியிருந்தார் கள் அந்தச் சந்தர்ப்பத்தில் கம்பர் அங்கே சென்று தாம் பாடிய கம்ப ராமயாணத்தில் நாகபாசப் படலத் தில் சில பாடல்களைப் பாட அக் குழந்தை உயிர்பெற்றெழுந்ததாக வும் அதன் பின்னர் தில்லை மூவா யிரவர் இராமாயணத்தின் மகிமை யையுணர்ந்து அதற்கு அங்கீகாரம் வழங்கியதாகவும் கூறுவர்.
ல்லை ாயிரவரிடம் அங்' தி மூவாயரவmடம் அங் க்க நிலையிலிருப்பவர்க்கு முன்பக்
கீகாரம் பெற்ற பின்னர், பூறிரங்கத்
திலிருந்த நாதமுனிகள் என்னும்
பேரறிஞரின் தலைமையில் கூட்டப் பெற்ற சபையில், பலமான எதிர்ப் புகளுக்கும். ஆட்சேபங்களுக்கும் மத்தியில் இராமாயண த்தை
முறைப்படி அரங்கேற்றம் செய்வித்
ததாக வரலாறு கூறும்.
அரங்கேற்றத்தின் போது நூலில் காணப்படுவதாகக்கூறப்படும் இலக் கண இலக்கிய சம்பந்தமான கேள் விகளுக்கு சமாதானம் கூறுவதுடன்
சமயோசிதமாகவும் விடையளிக்கக்
கூடிய வல்லமையை ஆக்கியோன்
கொண்டிருக்க வேண்டும், உதார
60 LOntas, as buttonttu 600T turtl லொன்றில் மலர்களில் மது(தேன்) உண்ணும் வண்டுகளைச் சங்கு ஊது பவர்களுக்குக் கம்பர் ஒப்பிட்டிருந் தார். அந்த உவமையை ஆட்சே பித்த ஒரு புலவர் சங்கு ஊது வோர் சங்கின் பின்புறத்தில் வாயை வைத்து ஊதுவார்கள்; ஆனால் வண்டுகளோ மலரின் முன்புறத்தில் வாயை வைத்தே தேனைப் பருகு வதால் அந்த உவமை பிழையான தென அவர் வாதாடினார். புத்தி
சாதுரியமிக்க கம்பரோ சிறிதும்
கலக்கமடையாமல் மதுவுண்டு மய
கம் பின்பக்கம் என்ற பேதம் தெரி யாது போய் விடுவது இ யல் பு தானே எனச் சமயோசிதமாகக் கூறித் தப்பித்துக் கொண்டார்.
இவ்வாறு தீ விர பரிசோத னைக்கு உட்படுத்தப்பட்ட கார ணத்தினாலே தான் பழையநூல் கள் அழிந்தொழிந்து போகாமல் இன்றும் புதுப்பொலிவுடன் விளங் குகின்றன.
படைப்பாளிகளே! உங்களுடைய ஆக்கங்களை எமக்கு அனுப்பிவையுங்கள்.அவை தரம்கண்டு பிரசுரிக்கப்படும்.
LIGGuid.
அனுப்பவேண்டிய முகவரி:
ஆசிரியர் உதயம்
85, லேடி மனிங் டிறைவ், மட்டக்களப்பு.
N W
பிரசுரிக்கப்படும் ஆக்கங்களுக்கு சன்மானமும் வழங்கப்
58
 

(60ம் பக்க தொடர்சி)
வலிந்து கேட்டு எழுதிய போதும் சிலர் பதிலேதுமின்றி வாளாவிருக்கிறார்கள். இன்னும் சிலர் தருவதாகக் கூறி இழுத் தடிப்பதிலேயே காலத்தைக் கழிக்கிறார்கள். வந்து சேருகின்ற அனைத்துமே பிரசுரிக்கும் தகுதியைப் பெற்றிருக் காமை ஒரு காரணம்; தனிப்பட்ட காழ்ப்புணர்வே நோக்க மாக கருப்பொருளாகக் களம்காண முயல்வது பிறிதொரு காரணம், இவற்றையெல்லாம் இனங்கண்டு - தரங்கண்டு பத்திரிகாதர்மம் கோணாமல் இதயசுத்தியோடு வெளியிட வேண்டிய பெரும்பணியை நாம் சுமக்கின்றோம்.
இந்த நிலையில் திட்டமிட்டபடி வெளிக்கொணர ஏனோ முடியாமலே போய் விடுகின்றது. பல சஞ்சிகைகள் தேன்றிய வேகத்தில் நின்று போவதற்கு இதுவும் ஒரு அடிப் படைக் காரணமோ என எண்ணத் தோன்றுகின்றது.
எனவே, எழுத்தாள நண்பர்களே! வாசகர்களே! எம் மோடு சேர்ந்து தோள்கொடுக்க உங்களை அன்புக்கரங்கள் நீட்டி வரவேற்கின்றோம். அயராது சோராது. உங்கள் ஆக்கங்களை அனுப்பி வையுங்கள். இந்த இதழின் தாமத மான வருகையும் இதன் பின்னணியிலும் தங்கியுள்ளதென் பதைப் புரிந்து கொண்டு உணர்வுபூர்வமாகச் செயற்படுமாறு அன்பு வேண்டுகோள் விடுக்கின்றோம்.
இவ்விதழில் கிழக்கிலங்கையின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான "நவம்" அவர்களின் ‘நந்தாவதி, மறுபிரசுரம் பெறுகிறது. ஈழத்து இலக்கியம் நாடகம் என்பன பற்றிய பேராசிரியர், கா, சிவத்தம்பி அவர்களுடனான நேர்காண லும், கமராக் கலைஞர் பாலு மகேந்திரா அவர்கள் பற்றிய கே. எஸ். சிவகுமாரனின் அறிமுகமும் மற்றும் வழமையான அம்சங்களும் இதழைச் சிறப்புற அலங்கரிக்கின்றன.
அடுத்த இதழ் குறித்த காலத்தில் வெளிவருமென்பதை அறியத் தருகின்றோம்.
ஆசிரியர்
59

Page 32
உதய நாதம்
உதயம் முதலாவது இத ழைப் பாராட்டி, ஊக்கு வித்து, கண்டித்து இன்னமும் பலத்த எதிர்பார்ப்புக்களை ஏக்கக் குரல்களாக வெளிப் படுத்தி ஏராளமான வாசகர் மடல்கள் கா ரி யால ய ம் நோக்கி வந்தன. ஆனால் இந்தளவிற்கு விடயங்களும் வந்திருந்தால்.
நாம் என்னதான் முற்று முழுதாகி எம்மை அர்ப் பணிப்பதாக முயன்றாலும் எமது எண்ணங்கள் செயற் பாடுகளைப் புரிந்து கொண்டு விடயதானங்கள் நல்கி பூரண ஒத்துழைப்புத் தரவேண்டி யது படைப்பாளிகளின் கைக ளிலேயே தங்கியுள்ளது.
ஒரு சஞ்சிகையின் அவசி யத்தை - அதன் முக்கியத்து வத்தை நோக்கி எவ்வளவு பேர் குரல் கொடுத்தாலும் அதன் வளர்ச்சியைத் துரிதப் படுத்தி காத்திரமாக வெளிக் கொணர்வதற்கு ஒத்தாசை புரிவதில் மட்டும் ஏனோ இலக்கியப் பிரம்மாக்கள் பின் னடிப்பதாகவே நமக்குப் படு கிறது.
(தொடர்ச்சி - 59ம் பக்கம்)
5.
བློ་ 雷幕 尉 के ६ ई ई ई 還 器* 霍 떤 - ح 5 يخ S 5 E 漆 孟。强 G5, 월, T (ES E. 9 丽”。 丽 当 常引
தொடர்பு
உதயம்
65, லேடி மனிங் டிறைவ், மட்டக்களப்பு
ழறிலங்கா
ୋ 065 – 2086.
 


Page 33
உதயத்திற்கு ந
M.N. dii,
R 。 N R
א
א N N N N
"o":
இப் அ ஆர்க்க உதயம் பதிப்பாசிரியர் திரு. புர்த, சேபத்தியார் அச்ாகத்தில் ஆர்சிட்
 

Registered as a News Paper in Sri Lanka.
s 5)ITib bl. ந்கள்
அன்ட் கொம்.
NTHY & Co.
R ჭ N
R R R א 》 N N
N ܬ ܢ א
S.
N
N א
א
R א
א
》 嵩 א
N
א
N
ბზუბზუბზე ܛܠ ! R
SKS MLLS0LT SKMMLLT uuuut S S TT CLLOCmaSS ', 15 || 7 |''44 ei - E11-fli í ll | | |.