கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சமாதான முன்னெடுப்பின் அரசியல் சவால்கள்

Page 1
சி.அ.யே
இனங்களுக்கிடையே சம கெ

『.
ாதிலிங்கம்
ாளியீடு . 2) is:
ாதானத்துக்கான ஆய்வகம், ாழும்பு.

Page 2

flolljle முன்னெடுப்பின் d9Jflub fungió6ñ
சி.அ.யோதிலிங்கம்
B.A. (Hons) Po-sc, M.A.(Po-sc), Dip-in-Int.af (BCIS), Dip-in-Edu (NIE) (அரசயில் ஆய்வாளர், இணைச்செயலாளர், இனங்களுக்கிடையே சமாதானத்துக்கான ஆய்வகம்)
சமூக அபிவிருத்தி ஆய்வுநிறுவனத்தினால்
திருக்கோணமலை நகர சபை மண்டபத்தில்
26.06.2004 இல் நடைபெற்ற கருத்தரங்கில் ஆற்றிய உரையின் தொகுப்பு
வெளியீடு:
கொழும்பு.
இனங்களுக்கிடையே சமாதானத்துக்கான ஆய்வகம்
ר
... =ܓ݂ܠ
الد=

Page 3
தலைப்பு சமாதான முன்னெடுப்பின் அரசியல் சவால்கள்
ஆசிரியர் சிஅயோதிலிங்கம் (C)
பதிப்பு முதல் பதிப்பு 2004.
வெளியீடு இனங்களுக்கிடையே சமாதானத்துக்கான ஆய்வகம் 143/3, கியூ வீதி, கொழும்பு 02

foLIGOOTib
இனங்களுக்கிடையே நீதியையும் சமத்துவத்தையும் நிலைநாட்டுவதற்காக தன்வாழ்வை அர்ப்பணித்த சார்ல்ஸ் அபேசேகராவுக்கு இந்நூல் சமன்பபணம்

Page 4
வெளியீட்டுரை
சமாதான நடவடிக்கைகள் தேக்க நிலையில் இருக்கும் இக்காலகட்டத்தில் அரசியல் சமூக ஆய்வாளர் சி. அ. யோதிலிங்கம் “சமாதான முன்னெடுப்பின் அரசியல் சவால்கள்’ என்ற நூலை எழுதியுள்ளார். எல்லா கோணங்களிலும் இன்றைய சமகால அரசியல் நிலையை இந்நூல் தெளிவாக காட்டி
நிற்கின்றது. سمر
பேராசிரியர் சிவத்தம்பி இந்நூலுக்கு வழங்கியுள்ள அணிந்துரை இந்நூலிலுள்ள விடயங்களை மேலும் ஆழமாக மெருகுபடுத்தியுள்ளது.
இனங்களுக்கு இடையே சமாதானத்துக்கான ஆய்வகம் இந்நூலை முதன்முறையாக வெளியிடுவதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறது.
கடந்த 20 வருட கால உள்நாட்டு யுத்தத்தினால் சின்னாபின்னமாக இருக்கும் இந்நாட்டை வழமை நிலைக்கு கொண்டு வரவும், இங்கு வாழும் அனைத்து இனங்களும் சிறந்த புரிந்துணர்வுடன் வாழவும், நாட்டில் ஒரு பன்மைக் கலாச்சாரத்தை உருவாக்கவும், ஒரு இனத்தின் அரசியல் கலை, கலாச்சார பாரம்பரியங்களை இன்னோர் இனம் மதிக்கும் சூழலை உருவாக்கவும் எமது அமைப்பு முழு முயற்சியுடன் செயற்படும்.
நடராசா ஜனகன்
இணைச் செயலாளர் இனங்களுக்கிடையே சமாதானத்துக்கான ஆய்வகம்
01

அணிந்துரை
என் மாணவ நண்பர், திரு. சி. அ. யோதிலிங்கத்தின் நூல்களுள் இதுதான் மிகச் சிறியது எனக் கருதுகின்றேன். ஆனால், அவருடைய மற்றைய நூல்களுள் தொக்கி நிற்கும் விடையாழம், புலமை நேர்மை, புலமைத்திறமையின்பால் உள்ள ஈடுபாட்டார்வம், ஆகியனவற்றை இச்சிறு நூலில் பரக்கக் காணலாம்.
இந்நூல் அவர் திருமலையில் (26.06.2004) அன்று ஆற்றிய சொற்பொழிவின் செவ்விதாக்கம் பெற்ற அச்சு படிவம் ஆகும்.
இம் முன்னுரையில் இரண்டு விடையங்கள் பற்றி குறிப்பிட விரும்புகின்றேன்.
1 திரு. யோதிலிங்கத்தின் இவ்விடயாடுப்ாட்டுணர்வும் அறிவாழமும் பற்றியதாகும். 2. இந்த சிறுநூலில் முக்கியப்படுத்தப்படாது போன தென்இலங்கை அரசியல் செல்நெறிகள்.
முதலில் இரண்டாவது விடயத்தை எடுத்து கொள்வோம். 2002ம் ஆண்டு தொடங்கிய தீர்வுக்கான இணக்க நடைமுறை போக்குக்கள் 2003 லேயே ஏறத்தாழ ஸ்தம்பித நிலைக்கு வந்துவிட்டது. விடுதலைப புலிகளோ அரசாங்கமோ யுத்தமீட்பை தமது தெரிவு நடவடிக்கையாக இன்னும் மேற் கொள்ளவில்லை. இணக்கப் போக்கிற்கான நடைமுறைகளில் காணப்பட்ட சில பண்புகள் இந்த ஸ்தம்பித நிலையை ஏற்படுத்தியுள்ளது. 2004 செப்டெம்பர் இறுதியாக இன்று வரை விடுதலை புலிகள் தரப்பிலும், அரசாங்க தரப்பிலும் முகம் கொள்ள வேண்டியிருந்த சில யதார்த்தங்கள் யுத்தத்தின்
02

Page 5
விளிம்பிற்கு நாட்டை மீண்டும் கொண்டு செல்வதாகவே அமைந்திருப்பினும், யுத்தத்தினை அரசாங்கமோ விடுதலைப் புலிகளோ, மேற்ெெகாள்ளாமைக்கான சில முக்கிய அழுத்தங்கள் உண்டு. தமிழ் தரப்பின் முன்நிலை பிரதிநிதிகளாக உள்ள விடுதலைப் புலிகள், மீண்டும் போருக்கு போகாதற்கான பிரதான நியாயங்கள், தேச நிலையிலும் பார்க்க சர்வதேச நிலைப் பட்டவை ஆகும்.
1994 முதல் 2001 வரை ஆட்சியில் இருந்த அரசாங்கம் விடுதலைப் புலிகளையும் தமிழர் உரிமை போராட்டத்தையம் சர்வதேச மட்டத்தில் ஓர் இழுக்கான பார்வைக்கு ஆளாக்கி யிருந்தது. அந்த பிரச்சாரத்தில் முக்கியமான அம்சங்களுள் ஒன்று விடுதலைப் புலிகளின் சமாதானத் தீர்வு நோக்கற்று ஒரு எதேச்சதிகார போக்கு என்று அந்த அரசு மிகுந்த வன்மையுடன் பரப்பியிருந்தது. இதனால், இலங்கைத் தமிழருக்கிருந்த அரசியல் பாரபட்சத்தினையும் அதிகம் கணக்கெடுக்காத ஒரு மனப் போக்கே மேற்கு நாடுகளில் வளர்ந்தெடுக்கப்பட்டது. இலங்கைத் தமிழரின் அரசியல் உரிமை போராட்டத்தினை தொடர்ந்து நடத்திய ஒரே ஒரு நிறுவனம் என்பதால் மாத்திரமல்லாமல், வரன் முறையான யுத்தமாக மாறிவிட்ட அரசாங்க விடுதலைப் புலிகளின் மோதுகையில் கையாண்ட முறைமையினாலும் விடுதலைப் புலிகள் தம் நிலையை சீர் செய்து கொள்வதற்கான ஓர் இடத்தை இலங்கைக்கு வெளியே வைத்துக் கொள்ளாமல் இலங்கைக்குள்ளேயே வைத்து சிங்கள அரசாங்கத்தின் செயலிழப்பு நிலைக்கு சில வேளைகளில் தள்ளியமையினாலும், கிடைத்த ஒரு வெற்றியே விடுதலைப் புலிகளுக்கு ஒரு மெளன அங்கீகாரத்தை வழங்கியது. இலங்கைக்குள் இருந்த ஆள்புல கட்டுபாட்டு வலு இத்துறையில் முக்கியமானதாகும். இந்த வலு நிலைமைகள் காரணமாக மாத்திரமே, யுத்த நிறுத்தம் வந்ததன் பின்னர் தொடர்ந்து தாம் ஒரு யுத்த தெரிவையே மேற்
03

கொண்டால், அது தமது போராட்ட இலக்கானது தமிழரின் அரசியல் உரிமைக்கு சர்வதேச அரசியல் அரங்கில் ஒரு ஊறுபாடான நிலையை ஏற்படுத்தலாம் என்பதற்காகவே பிரதானமாக விடுதலைப் புலிகள் யுத்தத்தை தமது தெரிவாக காட்டிக் கொள்ள விரும்பவில்லை. மேலும் தமிழர் உரிமை போராட்டத்தின் ஒரே அரசியல் சக்தியாக விளங்கும் நிலையைப் பெற்றுவிட்ட விடுதலைப் புலிகளுக்கு யுத்த நிறுத்தம் சர்வதேச சமூகத்திற்கு தங்கள் நிலைப்பாட்டை காட்டிக் கொள்வதற்கான ஓர் அரசியல் சந்தர்ப்பமாகும்.
அரசை பொறுத்தவரையிலும் யுத்த நிறுத்தத்திற்கான, காரணங்கள் அழுத்த வேறுபாடு உடையனவாகும். முதலாவதாக, உள்ளூர் முதாலாளித்துவம் முதற்தடவையாக ஒன்று சேர்ந்து பொருளாதார இருப்பு வேண்டுமெனில், யுத்த நிறுத்தம் அத்தியாவசியம் என்றது. அதற்கு மேல், ஆள்வலு குறைவும், படிப்படியாக ஒரு பாரிய பிரச்சனையாயிற்று. இறந்த, காயப்பட்ட படைவீரர் தொகை சிங்கள கிராமங்களில் சினத்துக்குரிய விடயமாயிற்று. இவற்றுக்கு மேல், படைமுகாம், படைகாவல் என பல அம்சங்கள் எதிர் நோக்கப்பட்டன.
இந்த சூழ்நிலையிலும், மீள யுத்தத்திற்கு செல்லப் போகிறோம் என்பது முடியாத காரியமாகும். மீள யத்தத்திற்கு செல்லப் போகிறோம் என்பதிலும் பார்க்க இந்த நிலையில் யுத்தத்தை நிறுத்தியதால் யுத்த நிறுத்தம் என்பது, தமது வாழ்க்கை தொடர்ச் சிக்கான வலுமிக்க காரணியாக அமையும் என்ற எதிர்பார்ப்பும், உண்மையும் ஒரு முக்கிய காரணியாகும். பொதுஜன ஐக்கிய முன்னணியின் நிலைப்பாடுகள் வறட்சியுற்று போன நிலையில், யூ.என்.பியை பொறுத்த வரையில் யுத்த நிறுத்தம் தங்கள் செயற்பாட்டுக்கு வேண்டிய இடைவெளியை தரும் என்பதாகும்.
இந்த சூழ்நிலையிலேதான் யுத்த நிறுத்தம், ஓர் அரசியல்
04

Page 6
உண்மை நிலையாயிற்று. ஆனால், மேற்கூறிய பாதுகாப்பு நிலமை, பொருளாதார நிலமை ஆகியனவற்றுக்கு மேலே ஓர் அரசியல் ரீதியான மனம் திருப்புகை ஏற்பட்டிருந்ததா? என்பதே முக்கியமான கேள்வியாகும். அத்தகையதொன்று நடைபெறவில்லை. தென் இலங்கையில் நடைபெற்றதோ, இந்த இணக்க அரசியலுக்க நேர்மாறான, சில விடயங்களே. ஆண்டாண்டு காலமாக இரண்டு கட்சி நிலைமைகளும் தாம், தாம், ஆட்சி நடத்திய காலத்தில் விதைத்த இனவாத, வகுப்புவாத போக்குகள் முக்கியமாகின்றன. அவற்றில் எந்த வித மாற்றமும் ஏற்படவில்லை. அத்தகைய நிலைப்பாட்டை மாற்றச் சொல்லி இரண்டு கட்சிகளுமே சிங்கள மக்களை கேட்கவில்லை.
இவற்றுக்கு மேலாக பெளத்த சிங்கள மக்களிடையே தொடர்பு வலு மிக்க, பெளத்த சங்கங்கள், தமது திராவிட எதிர்ப்பை, தொடர்ந்து நடத்திக்கொண்டே வந்திருந்தன. இவை யாவற்றிற்கும் மேலாக அரச மதமாகிய பெளத்தம், அரசின் சில நிறுவனங்கள் ஆகியன ஒவொன்றும் தனித்தும், இணைந்தும் போர் நடப்பதற்கான காரணம் எவை என மக்களிடத்தே கூறியதாகும். அடிப்படையில் இனவெறி சார்ந்த ஒரு காரணத்தையே கூறினார்கள். தமிழர்கள் நாட்டை பிரிக்கிறார்கள். அவர்களே பிற அந்நிய செல்வாக்குகளோடு நாட்டை பிரிக்கிறார்கள். இது சிங்கள, பெளத்த ஏகத்துவம் உள்ள ඉO5 நாடு என்று கூறினர். இப்போதும் அதையே கூறுகின்றனர்.
நமது நாட்டு கல்வி முறை காரணமாகவும் இலங்கை வரலாறு சிங்கள மக்களுக்கு எடுத்துக் கூறப்பட்ட முறைமை காரணமாகவும், இவை மிக்க ஆவலுடன் நம்பப்படுகிறது. அரச நிர்வாக மட்டத்திலும் சர்வதேச நெருக்குதல் மட்டதிலும் தான், தமிழர் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் எனும் ஓர் அவசரப்பாடு உள்ளது. பொதுசன அபிப்பிராய நிலையில், குறிப்பாக பொதுசனம் விரும்பும் நிலையில், இவர்களுக்கு
05

எதுவும் கொடுக்காது விருவது நல்லது என்ற கருத்தே நிலவுகின்றது. அந்த அரசியல், சமூக சூழலில் அது ஒரு இயல்பான நம்பிக்கையாகும்.
இலங்கையின் இன அடையாள பிரச்சினைகள் தோன்றிய காலம் தொட்டே இந்த உணர்வு சிங்கள மக்களிடையே மிக வலுவான நிலையில் பரப்பப்படுகிறது. பிரிவேனாக் கல்வி முறையில் இந்த கல்வி முறை அச்சாணியாக உள்ளது. இப்போது தேசிய கல்வி மட்டத்தில் இது கொண்டு வரப்பட்டுள்ளது.
19ம் நூற்றாண்டின் இறுதி வருடங்களில், 20ம் நூற்றாண்டின் தொடக்க கால் நூற்றாண்டிலும் முதல் கால் நூற்றாண்டு காலத்தில், குறிப்பாக அனகாரிக தர்மபால செயற்பாடு, சிங்கள பெளத்த எழுச்சி, நகர்புறங்களில் இருந்த முக்கியமாக கொழும்பில் இருந்த விதேசிகளுக்கு எதிரானதாகவே அமைந்தது. முஸ்லீம்கள், மலையாளிகள் எனப் பலர் அப்பொழுது குறிவைக்கப்பட்டனர். இத்தகையதொரு பின்புலத்திலேதான், 1915ல் நடந்த சிங்கள, முஸ்லீம் கலவரத்தின்போது, சைவத்தமிழ் தலைவரான சேர். பொன்னம்பலம் இராமநாதன் முஸ்லீம்களுக்கு எதிராக பெளத்தர்களுக்காக வாதாட லண்டன் சென்றார்.
சிங்கள பெளத்த தேசியமே ஒரு விதேசிய எதிர்ப்பு உட்கிடக்கையை கொண்டது. அது முஸ்லீம் எதிர்ப்பு, மலையா ளிகள் எதிர்ப்பு, இந்தியர்கள் எதிர்ப்பு என திசை மாறி, மாறி படிப்படியாக இலங்கை தமிழருக்கு எதிராக வந்தது.
இந்த சிங்கள பெளத்த தேசிய வாதத்தின்படி இலங்கை முற்றிலும் ஒரு பெளத்த, நாடு தமிழர்கள் ஆதிகாலம் தொட்டே இலங்கையின் பெளத்த ஆட்சிகளை அழிக்க முனைந்தவர்கள், அந்த தொழிற்பாட்டை இப்போதும் செய்கிறார்கள், எனவே, அவர்களுக்கு இருப்புக்கு மேற்பட்ட விசேட சலுகைகள் வழங்க கூடாது என்ற நிலைப்பாடே உண்டு. அடி நிலை தமிழ், சிங்கள
06

Page 7
பண்பாடடு உறவு பற்றியோ, பெளத்தத்திற்கு தமிழர் ஆற்றிய தொண்டுகள் பற்றியோ, இந்து-பெளத்த உறவுகள் பற்றியோ, உத்தியோக பூர்வ நிலைகளில் எதுவும் பேசப்படுவதில்லை.
வாக்கு பலத்தை விரும்பும் அரசியல் கட்சிகள் ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்தை நிலைகுலையச் செய்வதற்கு மக்களின் இந்த அடிப்படையான மன உணர்வுகளை அரசியல் லாபங்களுக்கு பயன்படுத்துவது வரலாறு ஆயிற்று.
இடதுசாரி அரசியல் முதன்மை பெற்று இருந்த 1930, 1954 காலகட்டத்தில் இது ஓர் அளவுக்கு ஒரு கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. உண்மையில் அந்த காலகட்டத்தில் இது தன்னை ஓர் அரசியல் கோசமாக காட்டிக்கொள்ளவில்லை. 1956ல் ஏற்படும் மாற்றங்கள் இடதுசாரி அரசியலில் முக்கியமானது. சர்வதேச உலக மட்டத்தில் நடந்த கெடுபிடி யுத்தம் காரணமாக சோவியத் யூனியன், பின்காலனித்துவ நாடுகளில் வந்த முற்போக்கான அரசாங்கத் தினை பொதுவுடமைக் கட்சிகள் ஆதரிக்க வேண்டும் என கூறியதாலும் தேசிய பண்பாடுகள் பற்றிய விளக்கமின்மை யினாலும் இடதுசாரிகள் படிப்படியாக தங்கள் மொழிக் கொள்கையை விட்டு விட்டு சுதந்திரக் கட்சியின் யூ.என்.பி எதிர்ப்புக்கு வலுச்சேர்த்தனர். இந்தப்போக்கு இறுதியில் 1964ல் பிரதான இடதுசாரி எதிர்க்கட்சிகள் இரண்டும் தமது இரு மொழிக் கொள்கையை கைவிட்டு தனிச் சிங்கள கொள்கையை ஆதரித்தன. மொழி பிரதான பண்பாட்டு சின்னமாக அமைந்த அரசியல் சூழலில் இடதுசாரிகளின் இந்த நடவடிக்கை தமிழ், சிங்களம் என்ற நேர்கோட்டு பிரிப்புக்கு வசதியாக அமைந்தது. எனவே இதில் உள்ள முக்கிய அம்சம் என்ன வென்றால் தமிழரிடையே இராணுவமயப்பட்ட உரிமைப் போர் தொடங்கிய காலத்தில் 1970களில் இடதுசாரி செல்வாக்கு சிங்கள பிரதேசத்தில் இல்லாமலே போயிற்று. இதனால் இனத்துவ உணர்வுகள் மேலும் வளர்ந்தன.
07

போர் பற்றி சாதாரண சிங்கள மக்களுக்கு ஊடகங்கள் மூலம் தெரிவிக்கப்படுபவை இந்தப் பக்கச் சார்பான படமே. சிங்களத்தின் அச்சு ஊடக வரலாற்றுள், சிங்கள பெளத்த தேசியம் நிலையான ஓர் இடத்தை பிடித்து கொண்டு இருக்கிறது. அவர்கள் தொடர்ந்து இந்த பெரும்பான்மை கருத்துகளையே விரும்புவர். இந்த தொடர்பியல் நிலைமை காரணமாக கடந்த 30 ஆண்டு காலமாக நடந்த போர் உக்கிரம் பற்றியோ கோரிக்கைகளின் நியாயம் பற்றியோ, சாதாரண சிங்கள மக்களிடம் சரியான மனப்படம் ஏற்படவில்லை. மாறாக 1996-2000 காலப்பகுதியில், இது நாட்டிற்கான வீர யுத்தம் என்ற கருத்து பிரதமர்கள், ஜனாதிபதிகள் மட்டத்திலேயே வளர்க்கப்பட்டது.
இவற்றின் சாதக பாதக தன்மை ஒரு புறமிருக்க, அல்லது உண்மை பொய் ஒரு புறமிருக்க இங்கு நமக்கு முக்கியமாக உள்ளது என்ன வென்றால். தமிழ் மக்களின் கோரிக்கைகளை வழங்குவதற்கு ஏற்ற உளவியற் சூழல் சிங்கள மக்களிடையே வளர்க்கப்படவில்லை என்பதாகும். இதனால், எந்த ஒரு கட்சியுமே, இலங்கையில் அரசியல் யதார்த்தத்தையோ எடுத்துக் கூறும் நிலையில் இல்லை. இலங்கையின் சமாதான தீர்வுக்கு பெரும் தடைக்கல்லாக இருக்கும் மிக முக்கிய காரணி இதுவாகும். சிங்கள மக்களிடத்து ஒரு பயஉணர்வு எற்படுத்தப் பட்டுள்ளது. கடந்த சில வருடங்களாக இந்த தமிழ், முஸ்லிம் எதிர்ப்பின் செறிவு நிலையாக இரண்டு காரணிகள் தென் படுகின்றன. ஒன்று சிஹள உறுமையாலின் தோற்றம், சிஹள உருமையா, ஹெல உறுமைய ஆகியுள்ளது. இதை விட ஜேவிபியின் எழுச்சி முக்கியமானதாவியது. ஜேவிபியை புரிந்து கொள்வது என்பது இலகுவான காரியமல்ல, 1948க்கு பின்னர் சிங்கள பகுதிகளில் ஏற்பட்ட வர்க்க உருவாக்கம், அந்த வர்க்க உருவாக்கத்தின் ஊடே உருவாகியிருந்த இனத்துவ உணர்வுகள், தனிச் சிங்கள ஆட்சி சலுகைகள், அடிநிலை மக்களுக்கு
08

Page 8
மறுக்கப்பட்டமை, அந்நிய சக்திகளின் விரோதம் திரிபு படுத்தப்பட்ட மார்க்சீய சிந்தனை வளர்ச்சி ஆகியவை எல்லாம் இணைந்துதான் ஜே.வி.பி.யை உருவாக்கியுள்ளது. ஜே.வி.பி.யை யூ.என்.பி. கண்களை கொண்டோ, சிறிலங்கா சுதந்திரக் கட்சி கண்களை கொண்டோ பார்க்கக் கூடாது. ஜேவிபியின் தோற்ற கால அரசியல், அடுத்து வந்த தலைமைத்துவ போட்டிகள் ஆகியவற்றின் ஊடாக இப்பொழுது வளர்ந்திருக்கின்ற ஜேவிபி. இயக்கம் ஏனைய தேசிய இனங்களைப் சிறுபான்மையினரைப் பற்றியே பேசத்தயங்குகிறது. ஆனால் அதேவேளையில் அதற்கு மலையகத்திலும், நகள் புறத்திலும், ஒரு வலுவான தளமுண்டு. இவர்கள் மிக முக்கியமாக பாதுகாப்பு படையினரின் அடி நிலையினரிடையே தங்களுடைய செல்வாக்கு வளரவேண்டும் என பெரிதும் விரும்புகின்றனர். 1989ல் தாம் எதிர்நோக்கிய சக்திகளை புறங்கண்டு மேலேவர விரும்புகின்றனர். இவர்களை தவறாகவோ, குறைவாகவோ மதிப்பிடக் கூடாது.
இங்கு முக்கியம் என்ன வென்றால் அவர்கள் தங்கள் செல் வாக்கு, கருத்துகளை பேணுவதற்காக சமாதான பேச்சுவார்த்தைகளை எதிர்க்கின்றனர். விடுதலைப் புலிகளின் பிரதான இலக்கு என்னவெனில், இவர்கள் கருத்துப்படி விடுதலைப் புலிகள் சிங்கள மக்களிடையே தாங்கள் செய்ய முடியாததை தமிழர்களிடையே செய்துவிட்டனர் என்பதுதான். அதற்காக அவர்கள் விடுதலைப் புலிகளை மன்னிக்கவே தயாராக இல்லை. சிங்கள தரப்பில், இவர்கள் தனிப்பட்டவர்கள், அவர்கள் இந்த சமாதானதீர்வு முறையை எதிர்க்கின்றனர். இதற்கு எவ்வாறு முகம் கொடுப்பது. இத்தகைய நிலைப்பட்ட சிங்கள நிலைப்பாடுகளை அரசாங்கம் எதிர்க்கவும் முடியாது வரவேற்க்கவும் முடியாது.
இப்பொழுது உள்ள நிலவரம் என்னவென்றால் இந்த நிலைப்பாட்டை மாற்றுவதற்கு எவ்வாறு தொழிற்படப்
09

போகிறதென்பதே. கடந்த இரண்டு வாரங்களுக்குள் தான் ஒரு ஆசிய சக்தி என்பதை ஜேவிபி. நிலை நிறுத்தி உள்ளது. இந்திய இடதுசாரி ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் ஜேவிபி. இந்திய பார் வார்கு புளக் தமிழ் நாட்டில் மணி மண்டப திறப்பு விழாவில் பங்குபற்றி அதனை திறந்து வைத்தது. அத்துடன் இந்துவில் பேட்டியும் வழங்கியுள்ளது. ஏறத்தாழ அதே சமயம் சீன அதிபரையும் சந்தித்துள்ளது. இதிலுள்ள ஒரு சோகம் என்னவென்றால் இலங்கையின் NGO சுற்றில் திரும்பத்திரும்ப விடுதலை புலிகள், மனித உரிமைகள், சமாதான தீபம் என்றெல்லாம் பேசப்படுகிறதே தவிர ஜே.வி.பி.க்கு லகான் போடுவது பற்றி எவரும் பேசவில்லை, பேசப்பயம். ஜேவிபி. தமிழர் ஒருமை நிலைப்பாட்டை விரும்பவில்லை என்பது அதன் அண்மைக்கால நடவடிக்கை மூலம் நன்கு காட்டியுள்ளது. கருணா விவகாரத்தை அரசு சரிவர நடத்தவில்லை என்பதை மனம் திறந்து கூறியது. இதன் மூலம் அவர்கள் தமிழர் ஒருங்கிணைவு நிலையை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது புலனாகிறது. அவர்களுக்கு விடுதலைப் புலிகளின் தோல்வியே முக்கியம். இந்த யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளாமல் சமாதானத்தின் வருகையை ஊர்ஜிதம் செய்ய முடியாது. தென்னிலங்கையின் நடைமுறை அரசியல் பிரச்சினைகள் சமாதான முன்னெடுப்புக்கு எவ்வாறு எதிராக உள்ளன என்பதை எவரும் முனைப்புப் படுத்துவதில் லை. அப்படி முனைப்படுத்தினாலும் அதை கட்சிகளின் லாபத்துக்கே முனைப்புப்படுத்துகின்றனர். இதனால் இந்த முன்னுரையில் சற்று விரிவாக குறிப்பிடப்பட வேண்டி ஏற்பட்டது. இந்தச் சிறு நூலின் அமைப்பு காரணமாக எடுத்துப் பேசப்பட முடியாத இன்னொரு விடயம் சமாதானப் பேச்சுவார்ததையில் யார் யாரை உள்வாங்குவதென்பதாகும்.
முஸ்லிம்கள் பற்றி ஏற்கனவே யோதிலிங்கம் குறிப்பிட்
10

Page 9
டுள்ளதால் அது பற்றி நான் இங்கு பேசவில்லை. தமிழ் தரப்பிலும் சில உட்புகுத்துகைகள் வேண்டும் என்ற கோசம் விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்த எடுக்கப்படும் முயற்சிகளாகவே தமிழ் மக்களால் பார்க்கப்படுகின்றது. இந்த விடயத்தில் தெளிவு பெறுவதற்கு ஒரு சிறிய உரைகல் உள்ளது. அது இதுதான், விடுலைப் புலிகள் தவிர்ந்த மற்றைய இயக்கங்கள் எதுவும் சமாதான தீர்வுகள் பற்றி அரசிடம் கோரிக்கைகள் எதுவும் வைத்துள்ளனவா? அரசுடன் உள்ள உறவில் அது பற்றிய நிபந்தனைகள் யாதேனும் உண்டா? இது ஒரு முக்கியமான கேள்வியாகும். சமாதான முன்னெடுப்பு பற்றிய அரசாங்கங்களின் நடவடிக்கைகளை பார்க்கின்ற போது எந்தவொரு கட்சியும் தமிழர்களுக்கு எந்தளவு அரசியல் உரிமை வழங்கப்பட வேண்டும் என்று கூறுவதில் பாரிய தயக்கம் காட்டுவதை அவதானிக்கலாம். இந்த நிலையில் ஒருமைப்பாடான நிலைபப்பாட்டை முன்வைப்பது என்பதில் கூட தங்களுக்கு உள்ளேயே தங்கள் நிலைப்பாட்டை எடுத்துக் கூற கட்சிகள் தயங்குகின்றன.
அடுத்து யோதிலிங்கம் பற்றிய ஒரு சிறு குறிப்பு: யோதிலிங்கம் இன்று இலங்கை தமிழர் பற்றிய நிபுணத்துவ அறிவுள்ள ஆய்வாளராக மேற்கிழம்பியுள்ளார். 20ம் நூற்றாண்டின் பல்வேறு ஆட்சி யாப்புக்களில் இப்பிரச்சினை எவ்வாறு கையாளப் பட்டுள்ளது என்பதனையே இவர் தமது சிறப்பு ஆய்வுத் துறையாக கொண்டுள்ளார். யாழ் பல்கலைக்கழகத்தில் அரசறிவியல் துறை சிறப்புப் பட்டம் பெற்ற இவர் மதுரை காமராஜ பல்கலைக்கழக எம்.ஏ.பட்டதாரியாகவும் பயினுனர் சட்டத்தரணியாகவும் உள்ளார். தமிழ் புலமையாளர்கள் தங்கள் ஆய்வு புலக் கருத்துக்களை பகிர்ந்து கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டுக்கு ஆட்படாதவர். உள்ளுர், புலம்பெயர் வானொலி இவருக்கு அரசியல் அலசல், அரசியல் துறை விடயங்கள் பற்றிய
11

நிகழ்ச்சிகளில் முக்கிய இடமுண்டு. யோதியிடம் நான் காணும் மிகப் பெரிய பண்புதான் இன்னும் படிக்க பல உள்ளன. அவற்றை அறிவதற்கான வழிவகைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற புலமையார்வ உணர்வே. உண்மையான ஆராய்ச்சி மாணவன் தன் புலமைத் தேடல்களை எந்த நிலையிலும் எந்த வயதிலும் போதும் என்று சொல்ல மாட்டான். சொல்லக் கூடாது. யோதிலிங்கம் மேலே செல்ல வாழ்த்துகிறேன்
பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி தகைசார் ஓய்வுநிலைப் பேராசிரியர் யாழ்ப்பாணப் பல்கலைக்ககழம்
12

Page 10
முன்னுரை
சமாதான முன்னெடுப்புகள் எல்லாம் தேக்கமடைந்து யுத்தம் மீண்டும் வருமா? என்ற சந்தேக நிலை ஏற்பட்டுவரும் காலப்பகுதியில் சமாதான முன்னெடுப்புகளை தொடர்ச்சியாக தக்க வைப்பது சமாதான விரும்பிகள் அனைவரதும் கடமையாகும்.
சமாதான முன்னெடுப்புகள் எல்லாம் தேக்கமடைந்து செல்வதற்கு இனங்களுக்கிடையே புரிந்துணர்வின்மைதான பிரதான காரணம்.
இந்த நிலையில் இனங்களுக்கிடையே புரிந்துணர்வைக் கட்டியெழுப்புவதுதான் சமாதான விரும்பிகளின் பிரதான பணியாக இருக்க வேண்டும்.
இதற்கு ஒரு இனத்தின் அரசியல் நியாயப்பாடுகள் மற்றய இனங்கள் மத்தியில் ஒழுங்காகப் பேசப்பட வேண்டும். இனங்கள் அதனை ஏற்க வேண்டும் என்பது இரண்டாம் கட்டமான விடயம். முதலாம் கட்டத்தில் அரசியல் நியாயப் பாடுகள் பேசுபொருளாக வரவேண்டும்.
இனங்களின் அரசியல் நியாயப்பாடுகள் பேசுபொருளாக வரும்போதுதான் மக்களின் சிந்தனைகளில் மாற்றம் ஏற்படும். அவர்களும் யதார்த்தமான உண்மைகளைக் கண்டுகொள் வார்கள். உண்மைகள் வெளிக் கொணரப்பட்டு மக்களும் அதனை ஏற்றுக்கொள்ளும்போது முரண்பாடுகளைத் தீர்த்துக் கொள்வது கடினமாக இருக்க மாட்டாது.
இந்த நோக்கின் அடிப்படையில் தான் இந்த நூல் வெளி வருகின்றது. எல்லா இனங்களின் மத்தியிலும் இந்த விடயப்
13

பொருளைக் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக சம காலத்தில் சிங்களத்திலும், ஆங்கிலத்திலும் வெளியிடப் படுகின்றது.
இந்த நூல் பாதிக்கப்பட்டவர் நோக்கு நிலையிலிருந்து எழுதப்படுகின்றது. பாதிக்கப்பட்ட ஒருவர் இனமுரண்பாட்டின் வரலாற்றினையும், சமாதானச் செயற்பாடுகளையும் எப்படிப் பார்க்கின்றார்? சமாதானச் செயற்பாடுகளை வினைத்திறனுடன் முன்கொண்டு செல்ல என்ன செய்ய வேண்டும் என நினைக் கின்றார்? போன்ற விடயங்களை இந்நூல் விபரிக்கின்றது.
பாதிக்கப்பட்டவரின நோக்கு நிலையிலிருந்து இந்நூல் எழுதப்பட்டதனால் இந்நூலில் உள்ள விடயங்கள் பற்றி மாறுபட்ட கருத்துக்களும் இருக்கலாம். அதனை நான் மறுக்கவில்லை. அக்கருத்துக்களை நான் வரவேற்கின்றேன். இது பற்றி நூலின் இறுதியிலும் கூறியிருக்கின்றேன். மாறுபட்ட கருத்துக்கள் ஒன்றுடன் ஒன்று மோதும்போதுதான் பொதுவான உண்மைகளைக் கண்டுகொள்ள முடியும் என்பது இயங்கியல். அந்த இயங்கியலை ஆய்வாளர்கள் எவரும் நிராகரிக்க (UDLqu IT ġil.
இந் நூல் உருவாக்கத்திற்கு பலர் ஒத்துழைப் பத் தந்திருக்கின்றன. அவர்கள் எல்லோருக்கும் எனது நன்றிகள்.
குறிப்பாக திருகோணமலை சமூக அபிவிருத்தி ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த நண்பர்கள் யதீந்திரா, கமலகாந்தன் என்போருக்கும், இனங்களுக்கிடையே சமாதானத்துக்கான ஆய்வகத்தைச் சேர்ந்த நண்பர்கள் ஜனகன், நடராசா ஆகி யோருக்கும், இந்நூலை வெளியிடும் இனங்களுக்கிடையே சமாதானத்துக்கான ஆய்வகத்திற்கும் எனது நன்றிகள்.
பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் இந்நூலுக்கு நல்லதொரு அணைத்துரையினைத் தந்திருக்கின்றார். ஒரு நல்ல ஆசிரியர்,
14

Page 11
ஒரு நல்ல தந்தை, ஒரு நல்ல நண்பர் என பன்முக பாத்திரத்தையும் ஏற்று எங்களுக்கு வழிகாட்டி வருகின்றார். அவருக்கும் எனது நன்றிகள்.
திரு சார்லி - அபயசேகரா அவர்கள் இனங்களுக் கிடையே நீதியையும், சமாதானத்தையம் நிலைநாட்டுவதற் கான தன் வாழ்நாளையே அர்ப்பணித்தவர். இனங்களுக் கிடையே நீதிக்கும், சமமத்துவத்துக்கான இயக்கத்தில் நீண்ட காலம் தலைவராக இருந்து இன நல்லுறவினை விரும்பும் அனைவருக்கும் வழிகாட்டியவர்.
நான் சரிநகர் பத்திரிகைகளில் பணியாற்றிய போது அவரை அறிவேன். பத்திரிகையாளர்கள் என்ற வகையில் எங்களுக்கு ஏற்பட்ட பாதுகாப்பு நெருக்கடிகள் தொடர்பாக மிகவும் அக்கறையாக இருந்தவர். மற்றவர்கள் மனம் கோணும்படி ஒருவார்த்தை கூடபேசத் தெரியாதவர். அவரைப் பார்க்கும் போதெல்லாம் தந்தை செல்லரவின் உடல் தோற்றம் தான் எனக்கு ஞாபகத்திற்கு வரும்.
அவர்மீது கொண்ட பற்றுதலினால் அவரது மரணச் சடங்கில் முதலில் இருந்து இறுதிவரை நான் கலந்து கொண்டிருந்தேன். அரசியல் வாதியல்லாத ஒருவரின் மரணச் சடங்கில் பல்வேறு இனத்தைச் சேர்ந்தவர்களும் திரளாக வந்து கலந்து கொண்டமை இவரது மரணச் சடங்கில் தான்.
உண்மையில் இனங் களுக் கிடையே நல்லுறவினை கட்டியெழுப்ப விரும்பும் சக்திகளுக்கு இவர் ஒரு குறியீடு என்றே நான் கருதுகின்றேன்.
நான் நன்கு நேசிக்கும் சார்லி - அபயசேகராவுக்கு இச்சிறு நூலை காணிக்கையாக்குவதில் பெரு மகிழ்ச்சி யடைகின்றேன். இறுதியாக இந்நூல் எனது ஐந்தாவது நூல். எனது ஏனைய 15

நூல்களுக்கு இல்லாத சிறப்பு இந்நூலுக்கு உண்டு அதில் ஒன்று இந்நூலில் எனது கருத்தரங்கு உரை நூலாக தொகுக்கப் படுகின்றது. இரண்டாவது இந்நூல் மூன்று மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்படுகின்றது.
எனது முன்னைய நூல்களுக்கு தந்த ஆதரவினைப் போன்று இச் சிறு நூலுக்கும் மக்கள் ஆதரவு தருவார்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு.
நன்றி
143/3, கியூவீதி, அன்புடன் கொழும்பு-2 சிஅயோதிலிங்கம்
16

Page 12
மதிப்பிற்குரிய தலைவர் நண்பர் யதீந்திரா அவர்களே! என்னுடன் இணைந்து கருத்துரையாற்ற வந்த கொழும்பு பல்கலைக்கழக விரிவுரையாளர் நண்பர் உதய தென்னக்கோன் அவர்களே! இக்கருத்தரங்கினை நடாத்தும் சமூக அபிவிருத்தி ஆய்வு நிறுவன நிர்வாகிகளே! உங்கள் அனைவருக்கும் முதலில் எனது தாழ்மையான வணக்கங்கள்.
சமாதானத்துக்கான முன்னெடுப்புகள் எல்லாம் தேக்க மடைந்து மீண்டும் யுத்தம் வருமா? என்ற சந்தேக நிலை ஏற்பட்டுவரும் ஒரு காலகட்டத்தில்தான் அது பற்றிய ஒரு மீள் பரிசீலனையாக இந்த கருத்தரங்கினை நடாத்திக் கொண்டிருக்கின்றோம்.
யுத்தம் இலங்கையில் வாழ்ந்த சகல மக்களையும் பாதித்திருந்தது என்பது உண்மை. தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையக மக்கள் எவரும் இதற்கு விதிவிலக்காக இருக்கவில்லை. ஆனால், பாதிப் பின் அளவினைப் பொறுத்தவரை இவற்றில் வேறுபாடுகள் காணப்படுகின்றன. தமிழர்கள் பாதிக்கப்பட்ட அளவிற்கு ஏனைய சமூகத்தவர்கள் பாதிக்கப்பட்டார்கள் எனக் கூறமுடியாது. விடுதலைப் போரை நடாத்துகின்றவர்கள் என்ற வகையில் இது எதிர்பார்க்கக் கூடியதே.
17

இலங்கையில் வாழ்ந்த எல்லோரும் பாதிக்கப்பட்டார்கள் என்பதனால் எல்லோருக்கும் சமாதானம் தேவையாக இருந்தது. ஆனால் சமாதானம் என்றபதம் உள்ளடக்கம் விடயதானங் களைப் பொறுத்தவரை அங்கும் வேறுபாடுகள் காணப்பட்டன.
குறிப்பாக யுத்தத்தில் ஈடுபட்ட இரு சமூகங்களையும் பொறுத்தவரை சிங்கள சமூகத்திற்கு யுத்த மில்லா நிலை மட்டும் சமாதானமாக இருந்தது. ஆனால் தமிழ்ச்சமூகத்திற்கோ யுத்தமில்லாநிலை, இயல்பு நிலையை கொண்டுவருவதல், நிரந்தரத்தீர்வு என்பவைதான் சமாதானமாக இருந்தன.
இவ்வாறு பார்க்கும்போழுது சிங்கள மக்களுக்கு சமாதானம் வந்துவிட்டது. தமிழ் மக்களுக்கு சமாதானம் இன்னமும் கிடைக்கவில்லை என்ற தமிழ் மக்களினால் முன்வைக்கப்படும் விசனங்களை ஆய்வாளர்கள் என்ற வகையில் நாம் புறக்கணித்துவிட முடியாது.
சமாதானத்தை தமிழ் மக்களுக்கும் உரிய சமாதானமாக மாற்றுதல் என்பதே இன்று சமாதானம் எதிர்நோக்கும் பிரதான சவால் என்று நான் கருதுகின்றேன்.
இலங்கையில் முழுமையான சமாதானத்தை கொண்டுவர வேண்டுமாயின் தமிழர்களுக்கும், சிங்களவர்களுக்கும் சமாதானம் வந்துவிட்டால் போதாது முஸ்லிம்களுக்கும். மலயக மக்களுக்கும் கூட அது வரவேண்டும். இதுதான் சமாதானம் எதிர்நோக்கும் இரண்டாவது சவால்.
இவையெல்லாம் இலங்கையின் ஆட்சியமைப் பினை பன்மைத்தன்மை கொண்டதாக மாற்றியமைப்பதுடன் தொடர் பட்டது. இந்த பன்மைத்தன்மை என்பது மத்திய மட்டத்தில் மட்டுமல்ல மலையக பிரதேச மட்டத்திலும் கொண்டுவரப்பட வேண்டும். -
18

Page 13
சுருக்கமாக கூறப்போனால் ஆட்சியமைப்பில் பன்மைத் தன்மையை மத்திய மட்டத்திலும், பிரதேச மட்டத்திலும் எவ்வாறு கொண்டுவருவது என்பதே சமாதானம் சந்திக்கின்ற ஒட்டு மொத்தமான சவால் என நான் நினைக்கின்றேன்.
பன்மைத்தன்மையைக் கொண்டு வருவது மட்டுமல்ல, கொண்டுவரும் பன்மைத்தன்மைக்கு தொடர்ச்சியான பாதுகாப்புகளும் அவசியம்.
முறைசார்ந்த, முறைசாராத வகைகளில் பன்மைத் தன்மையையும் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடு களையும் கட்டியெழுப்புவதற்கான மார்க்கங்களை நாம் கண்டாக வேண்டும்.
எனது இந்த உரை, மேற்கூறிய மையக் கருத்தினை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும் தமிழ்-சிங்கள முரண் பாட்டிலேயே அதிககவனம் செலுத்துகின்றது. சபையோர் இதனை புரிந்து கொள்ள வேண்டுமென விரும்புகின்றேன்.
சமாதானத்தை தமிழ் மக்களுக்கும் உரிய சமாதானமாக மாற்றுதல் என வரும்போது தமிழ் மக்களின் அரசியல் போராட்டம் பற்றிய வரலாற்றினை முதலில் புரிந்து கொள்வது அவசியமாகின்றது.
தமிழ் மக்களினுடைய அரசியல் போராட்டமானது நான்கு பெரிய காலகட்டங்களினுTடாக வளர்ச்சியடைந்து வந்திருக்கின்றது.
பிரித்தானியர்களிடமிருந்து இலங்கையர்களிடம் அதிகாரங்கள் கைமாற்றப்பட்டமையானது அரசியல் யாப்புகள் மூலம் படிப்படியாக நடைபெற்றமையாலும் சுதந்திரம் அடைந்த 19

பின்னரும் கூட பன்மைத்தன்மையை நிராகரித்து. ஒற்றைத் தன்மையை இறுக்கும் செயற்பாடுகள் அரசியல் யாப்புகள் மூலம் மேற்கொள்ளப்பட்டமையினாலும் அரசியல் யாப்புகளை யொட்டியே இந்தகாலகட்டப் பிரிப்புகளையும் நான் மேற் கொண்டுள்ளேன். இப்பிரிப்பு தொடர்பாக பல்வேறு தரப்பினரி டமும் பல்வேறு அபிப்பிராயங்கள் இருக்கலாம். அதனை நான் மறுக்கவில்லை.
முதலாவது காலகட்டம் 1833-1921
இலங்கையில் நவீன அரசுருவாக்கம் என்பது கோல்புறுக் அரசியல் சீர் திருத்தத் துடனேயே ஆரம்பமாகின்றது. பிரித்தானியர்கள் தங்கள் ஆட்சி அதிகார வசதிகளுக்காக பெரியளவிற்கு தொடர்புபடாத தனித்தன்மை வாய்ந்த ஆட்சி மரபுகளைக் கொண்ட பிரதேசங்களை எல்லாம் ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டுவந்தார்கள். இவ்வாறுதான் வடகிழக்கு மாகாணங்களும் ஏனைய மாகாணங்களுடன் இணைக்கப்பட்டு ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. இவ்வாறு நான் கூறும்போது வடகிழக்கு முழுவதும் ஒருே ஆட்சி மரபினை வரலாறு பூராவும் கொண்டனவாக இருந்தன என நான் கூறவரவில்லை. ஆனால் வடகிழக்கின் பெரும்பகுதி ஒரே ஆட்சி மரபினைக் கொண்டதாக இருந்தது. கற்பிட்டிக்கும் திருகோணமலைக்கும் இடையே ஒரு கோட்டினைக் கீறினால் அதன் மேற்பகுதி முழுவதும் யாழ்ப்பாண இராச்சியத்திற்கு உட்பட்டதாக இருந்து மட்டக்களப்புச் சமூகத்தின் வரலாற்றை பொலனறுவை கால சோழர் ஆட்சியுடன் உட்படுத்திப் பார்க்கும் ஆய்வுகளும் உள்ளன. இதைவிட சில குறிப்பிட்ட காலம் கிழக்கின் சில பகுதிகள் கண்டி இராச்சியத்திற்கும் உட்பட்ட வரலாற்றிணையும் நான் மறுக்கவில்லை.
20

Page 14
வரலாற்றின் ஆரம்ப கட்டங்களில் வட-கிழக்கு முழுவதும் ஒரே மன்னராட்சியின் கீழ் இருந்தது என்பதற்கான வரலாற்று ஆய்வுகளும் உண்டு. மன்னராட்சிக் காலத்தில் ஆட்சிப் பிரதேசங்கள் அடிக்கடி மாறுவது வழக்கம். இதனால் கிழக்கின் பிரதேசங்கள் அடிக்கடி கைம்மாற்றப்பட்டமை ஆச்சரியப்படக் கூடிய ஒன்றல்ல.
இவ்வாறு நான் கூறுவதனால் ஆட்சி மரபுகள் மாத்திரம் பன்மைத்தன்மைக்கு அவசியமாக இருக்க வேண்டும் என நான் வாதிடவரவில்லை. ஒரு மக்கள் பிரிவு அம்மக்கள் பிரிவாக இருக்கின்ற காரணத்திற்காகவே ஆட்சி அமைப்பிலிருந்து புறக்கணிக்கப்படுகின்றபோது அங்கு பன்மைத்தன்மை அவசியமாகின்றது.
இங்கு நான் வற்புறுத்துகின்ற விடயம் கோல்புறுக் அரசியல் சீர்திருத்தம் அறிமுகப்படுத் தப்பட்டபோது இலங்கையில் தனித்தன்மை வாய்ந்த மரபுகளைக் கொண்ட மக்கள் கூட்டமும், பிரதேசங்களும் இருந்திருக்கின்றன. அவற்றை யெல்லாம் இணைத்து ஒரு ஆட்சி அமைப்பினை உருவாக்குகின்ற போது அந்த ஆட்சி அமைப்பினையும் பன் மைத் தன்மை வாய்ந்ததாகவே உருவாக்கியிருக்க வேண்டும். மாறாக பிரித்தானிய ஆட்சியாளர்கள் அவற்றை யெல்லாம் நிராகரித்து ஒற்றைத் தன்மை வாய்ந்த ஆட்சியமைப்பையே உருவாக்கியிருந்தனர். இந்த ஒற்றை ஆட்சி அமைப்புத்தான் இனமுரண்பாட்டின் மூல ஊற்றாக இருக்கின்றது. − இந்த விடயத்தில் இந்தியாவில் கையாண்ட அணுகுமுறையிணை பிரித்தானியர்கள் இலங்கையில் கையாளவில்லை. இந்தியாவில் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்சிப்பிரதேசங்களை ஒரே நிர்வாகத்தின் கீழ் இணைக்கும் போது ஆட்சி அமைப்பில் பன்மைத்தன்மைக்கு இடம்
21

கொடுத்தனர். சுதந்திர ஆட்சியாளர்கள் இந்த பன்மைத் தன்மையை மேலும் வளர்த்தெடுத்துக் சென்றனர். இதற்கேற்றவகையில் அரசியல் யாப்பினையும் நெகிழ் வுடையதாக உருவாக்கினர். இதன் விளைவாகத்தான் இன்று இந்தியாவில் 28 மாநிலங்களையும் 6 யூனியன் பிரதேசங்களையும், ஒரு தலைநகர் பகுதியையும் நாம் காண்கின்றோம். இது மட்டுமல்ல சில மாநிலங்களில் உள்மட்டமளவில் பன்மைத்தன்மையை பேணுவதற்காக சுயாட்சி உள்ளமைப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன. அசாம், மேகலாயா, மீசோராம், மேற்குவங்காளம் போன்ற மாநிலங்களில் வாழும் பழங் குடி மக்களுக்காக சுயாட்சி உள்ளமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் உள்ள இந்தப் பன்மைத்தன்மை அங்குள்ள மக்களின் அரசியல் அபிலாசைகளைத் தீர்க்கப் போதுமானது என நான் கூறவரவில்லை. ஆனால் பன்மைத்தன்மை என்ற அரசியல் கலாச்சாரம் சிறியளவிலாவது அங்கு உள்ளது என்பதையே நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
இலங்கைத்தீவில் தமிழர் அரசியலின் ஆரம்பமும் கோல்புறுாக் அரசியல் சீர்திருத்தத்துடன் தான் ஆரம்பமாகிறது. சட்டசபையில் பெயரளவுப் பிரதிநிதித்துவம் தமிழர்களுக்கும் கொடுக்கப்பட்டதுடன் ஆரம்பமாகின்றது. ஆனால் பிரித்தானியர் உருவாக்கிய ஒற்றையாட்சியின் ஆரம்ப காலத்தில் அதிகாரம் பிரித்தானியர்களிடம் மட்டும் இருந்ததினால் ஒற்றையாட்சி வடிவம் தமிழர்களுக்கு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக அதிகாரத்தினை எவ்வாறு சுதேசிகள் பெற்றுக் கொள்வது என்பதே பிரச்சினையாக இருந்தது. அதனைப் பெற்றுக் கொள்வதற்காக சிங்கள மக்களுடன் இணைந்து அவர்களும் போராடினர். பிரித்தானிய ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில்
22

Page 15
முன்னிலைத் தலைவர்களாகவும் தமிழர்களே விளங்கினர். சேர் முத்துக்குமாரசுவாமி, சேர். பொன் இராமநாதன், சேர். பொன் அருணாசலம் போன்றோர் இதில் முக்கியமானவர்களாவர். இவர்களில் சமூக மாற்ற அரசியலின் மூலகர்த்தாவாகவும் பொன் அருணாசலம் ஆவார். ஏ.ஈ. குணசிங்கா போன்றவர்கள் இவரைப் பின்பற்றியே சமூக மாற்றத்திற்கான அரசியலுக்கு வந்தனர்.
கலாச்சார மட்டத்தில் பிரித்தானியர்களுக்கு எதிரான செயற்பாட்டினை கலா ஜோதி ஆனந் தகுமாரசுவாமி முன்னெடுத்திருந்தார். மதமட்டத்தில் ஆறுமுகநாவலரின் பணி பிரதானமானதாக இருந்தது. தென்னிலங்கையில் சுதேச மதங்களின் மீள்எழுச்சி ஆறுமுகநாவலரின் அடியொட்டியே முன்னெடுக்கப்பட்டது.
எனவே இக்காலகட்டத்தில் தமிழர்களின் அரசியல் என்பது தமிழர் என்கின்ற அடையாளத்தையும் இலங்கையர் என்ற அடையாளத்தையும் பேணுவதாகவே இருந்தது. பண்பாட்டுத் தளத்தில் தமிழர் என்ற அடையாளத்தை பேணிய அதேவேளை அரசியல் தளத்தில் இலங்கையர் என்ற அடையாளத்தினைப் பேணினர். சமஅளவில் காணப்பட்ட இனவாரிப் பிரதிநிதித்துவ முறையும் இப்பேணுகைக்கு உதவுகின்ற ஒன்றாக இருந்தது. இதைவிட கே.எம்.டி.சில்வா குறிப்பிடுவது போல இதற்கு இன்னோர் காரணமும் இருந்தது. இக்காலகட்டத்தில் தமிழர்கள் தங்களை ஒரு சிறுபான்மை இனத்தவராக கருதவில்லை. மாறாக இலங்கையில் சிங்களவர்களும் தமிழர்களும் பெரும்பான்மை இனத்தவர்கள் ஏனையவர்களே சிறுபான்மை இனத்தவர்கள் என்ற கருத்தினைக் கொண்டிருந்தனர்.
1921இல் அறிமுகப்படுத்தப்பட்ட மானிங் அரசியல் சீர்திருத்தம் இந்தப் பேணுகையை யெல்லாம் சீரழித்தது. 23

தமிழர்கள் தனியான இன அரசியலை நோக்கி நகர நிர்ப்பந்திக்கப்பட்டனர். இவ் அரசியல் சீர்திருத்தத்துடன் தமிழர் அரசியலின் இரண்டாவது கால கட்டமும் ஆரம்பித்து விட்டது எனலாம்.
இரண்டாவது கால கட்டம் 1921-1949
1921இல் அறிமுகப்படுத்தப்பட்ட மானிங் அரசியல் சீர்திருத்தம் பிரதேசவாரிப்பிரதிநிதித்துவமுறையைக் கொண்டுவந்தது. இலங்கை அளவில் சிங்களப் பிரதேசங்களே கூடுதலாக இருந்த நிலையில் இப்பிரதிநிதித்துவ முறை சிங்கள சமூகத்திற்கே வாய்ப்பாக அமைந்து ஏற்கனவே இருந்த சமநிலைப் பிரதிநிதித்துவத்தை குலைத்தது. சிங்களப் பிரதிநிதிகளாக 13 பேர் தெரிவு செய்யப்பட்ட அதேவேளை தமிழர் பிரதிநிதிகளாக 3 பேரே தெரிவு செய்யப்பட்டனர். எண்ணிக்கை அடிப்படையிலான ஜனநாயகச் செயன்முறையின் விளைவே இது. எண்ணிக்கை ஜனநாயகம் மனிதத் தலைகளை கவனத்தில் எடுக்கின்றதே தவிர தனித்தன்மை வாய்ந்த சமூகங்களை கவனத்தில் எடுப்பதில்லை. சமூகங்களுக்கான ஜனநாயகத்தினை கவனத்தில் எடுக்கும்போதுதான் தீர்மானம் எடுக்கும் செயல்முறையில் பன்மைத்தன்மையைப் பேண (փlգեւյւb.
இந்த ஜனநாயகச் செய்முறையில் எண்ணிக்கையில் குறைந்த சமூகங்களுக்கு பாதிப்பு ஏற்படும் போது அதனைத் தடுக்கின்ற அதிகாரங்களையாவது அந்தச் சமூகங்களிடம் கொடுத்திருக் கலாம். பல நாடுகளில் இதற்காக இரட்டைவாக்குமுறை பின்பற்றப்படுகின்றது. எண்ணிக்கையில் குறைந்த சமூகங்களை பாதிக்கின்ற விடயங்கள் வரும்போது மொத்த சபையின் வாக்கெடுப்புக்கு அப்பால் குறிப்பிட்ட சமூகத்தின் பிரதிநிதிகள்
24

Page 16
மத்தியிலும் வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும் என்பதே இரட்டைவாக்கெடுப்பு முறையாகும்.
ஆனால் இவற்றிற்கு மாறாக அரசியல் அழுத்தங்களுக்கு முகம் கொடுக்கக் கூடிய நிலையிலுள்ள தேசாதிபதியிடமே இவ்வாறான சட்டங்கள் தொடர்பில் மறுப்பாணை அதிகாரம் கொடுக்கப்பட்டது அது நடைமுறையில் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு பாதுகாப்பாக அமையவில்லை என்பதே சுதந்திரத்திற்கு முற்பட்ட அரசியல் சீர்திருத்தங்கள் மூலம் கிடைத்த அனுபவமாகும். சுதந்திரத்திற்கு பின்னர் நடைமுறையில் இருந்த சோல்பரி யாப்பில் இவ்வதிகாரம் நீதிமன்றத்திடம் கொடுக்கப்பட்டது. இவ்நீதிமன்றங்களும் இனவாதத்தை நிலைநிறுத்தும் இயந்திரங்களாக இருந்த மையினால் அவற்றிலிருந்தும் போதியளவு பாதுகாப்பு கிடைக்கவில்லை. மொழிப் பிரச்சினை தொடர்பான கோடீஸ்வரன் வழக்கு இதற்கு சிறந்த உதாரணமாகும்.
இங்கே கவனிக்க வேண்டிய முக்கிய விடயம் யாப்பினால் கிடைத்த அதிகாரத்தைப் பயன்படுத்தித்தான் ஆட்சியாளர்கள் தமிழ் மக்களை ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கினார்கள். சோல்பரி அரசியல் யாப்பின் கீழ் முழுமையான அதிகாரம் வந்ததும் ஒடுக்கு முறையும் அதிகமாகியது. தமிழ்ப் பிரதேசத்தின் நிலத் தொடர்ச்சியை கோறையாக்கும் வகையிலும் தமிழ் மாவட்டங்களின் இனவிதிகாசாரத்தை செயற்கையாக மாற்றும் வகையில் திட்டமிட்ட சிங் களக் குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டன, தேசியக் கொடியில் தமிழர்கள் புறக்கணிப்புக்கு உள்ளாகினர், சிங்கள மொழி மட்டும் அரச கருமமொழியாக மாற்றப்பட்டது. உயர்கல்வியில் மொழி மூல தரப்படுத்தல் முறை கொண்டுவரப்பட்டது.
25

ஒடுக்கு முறைகளை மேற்கொள்வதற்கு யாப்பு ஏற்பாடுகள் போதாமல் இருக்கின்றபோது யாப்பினை மீறியும் செயற்பட்டார்கள். அதேவேளை தமிழ் மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கின்ற யாப்பு ஏற்பாடுகளை நடைமுறையில் செயற் படுத்தாமல் விட்டார்கள். 1956 இல் நிறைவேற்றப்பட்ட தனிச் சிங்களச் சட்டமும், 1978ஆம் ஆண்டு யாப்பின் 16வது திருத்தச் சட்டம் மூலம் நிறைவேற்றப்பட்ட தமிழ் மொழி அரச கரும மொழிச்சட்டமும் இதற்கு நல்ல உதாரணமாகும்.
தனிச்சிங்களச் சட்டம் சோல்பரி யாப்பின் 29வது பிரிவினை மீறி உருவாக்கப்பட்டது. 16வது திருத்தச் சட்டம் போதியளவு நடைமுறையில் நிறைவேற்றப்படவில்லை.
சட்டங்களை அமுல்படுத்தும் அரச இயந்திரங்களும் இனவாத மயப்பட்டிருப்பதுதான் இதற்கு காரணம்.
சோல்பரி யாப்பின் பின்னராக வந்த குடியரசு யாப்புகளில் இவ்வாறான பெயரளவு பாதுகாப்புகளும் இல்லாமல் செய்யப்பட்டன. இதற்குமாறாக, ஆட்சி அமைப்பின் ஒற்றைத்தன்மையை மேலும் மேலும் இறுக்குவதிலேயே கவனம் செலுதத்தப்பட்டது. 1972ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட முதலாவது குடியரசு அரசியல் யாப்பு இந்த விடயத்தில் உச்சநிலையில் இருந்தது. எண்ணிக்கை ஜனநாயகத்தின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட தேசிய அரசுப் பேரவை “அரச அதிகாரத்தின் அதி உயர் கருவி” என கூறப்பட்டமை இதன் வெளிப்பாடே ஆகும். 1978 இல் அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டாவது குடியரசு அரசியல் யாப்பும் ஒற்றைத் தன்மையை வலியுறுத்துவதில் அதிக கவன்ம் செலுத்திய ஒன்றாக இருந்தபோதிலும் ஆட்சியாளர்கள் தங்கள் நலன்களுக்காக உருவாக்கிய ஜனாதிபதி தேர்தல் முறையும், விகிதாசாரப் பிரதிநிதித்துவ தோதல் முறையும் கட்சி அரசியல்
26

Page 17
காரணமாக மறைமுக நிலையில் மத்திய மட்டத்தில் சிறியளவு பன்மைத்தன்மை வளர்வதற்கு உதவியாக அமைந்தன.
இனி மீண்டும் நான் இரண்டாவது கட்டத்தின் ஆரம்பத்திற்கு வருகின்றேன் N
மானிங் அரசியல் சீர்திருத்தம் ஏற்படுத்திய பிரதிநிதித்துவ சமநிலைக் குலைப்பினை நீக்கும் வகையில் தமிழ்ப் பிரதிநிதிகள் பழைய சமபிரதிநிதித்துவ முறையினை பேணுமாறு வேண்டினர். குறைந்தது சிங்களப் பிரதிநிதிகளில் மூன்றில் இரண்டு பங்காவது தமிழர்களுக்கு தரப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். இதன் போதுதான் இலங்கை தேசிய காங்கிரஸை உருவாக்கும் போது வாக்குறுதியளித்த மேல் மாகாணத் தமிழருக்கான பிரதிநிதித்துவத்தை தருமாறு கோரினர். வாக்குறுதியளித்த சிங்களத் தலைமை அதற்கு தாங்கள் பொறுப்பல்ல எனக்கூறி கையை விரித்தது. இதுதான் வாக்குறுதி மீறல்கள் தொடர்பாக தமிழ்த் தரப்பிற்கு கிடைத்த முதலாவது அனுபவம். இந்த அனுபவம் தொடர்பாக சிங்கள அரசியல் வாதிகளில் ஜேம்ஸ் பீரிஸ் தொடக்கம் ரோகண விஜேவீராவரை எவருமே விதிவிலக்காக இருக்கவில்லை. 1982ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது ஜேவிபித் தலைவர் ரோகண விஜேவீர தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றிருந்தார். இன்று சிறிய ஒரு அதிகாரப் பங்கீட்டுக்குகூட ஜே.வி.பி. தயாராகவில்லை.
வாக்குறுதி அளிக்கும் போது மத்தியஸ்தராக இருந்த சேர். பொன் அருணாசலம் இதனால் மனமுடைந்தார். இலங்கைத் தேசிய காங்கிரசைவிட்டு வெளியேறி 0தமிழர் மகாஜனசபை0 என்ற அமைப்பினை 1921 ஆகஸ்டில் உருவாக்கினார். இதன் தோற்றத்துடன் தமிழர்களது இன அரசியலும் ஆரம்பித்துவிட்டது எனலாம். இலங்கைத் தேசியத்திற்காகவும், இலங்கை தழுவிய
27

சமூக மாற்றத்திற்காகவும் உழைத்த ஒரு மகான், இலங்கை தேசிய இயக்கமான இலங்கைத் தேசிய காங்கிரசின் முதலாவது தலைவராக இருந்த ஒரு மகான் இன அரசியலை நோக்கிச் செல்லும் படி வரலாறு அவரை நிர்ப்பந்தித்தது.
1924 இல் அறிமுகப்படுத்தப்பட்ட மானிங்-டிவன்சயர் அரசியல் சீர் திருத்தமும் இது விடயத்தில் பெரிய முன்னேற்றத்தைக் கொடுக்கவில்லை. மேல் மாகாணத் தமிழர்களுக்கு ஒரு பிரதிநிதித்துவத்தை கொடுத்ததோடு அது தன்னுடைய கடமையை முடித்துக் கொண்டது. 1931 இல் அறிமுகப்படுத்தப்பட்ட டொனமூர் அரசியல் யாப்பு ஒற்றைத்தன்மை வளர்ச்சியின் மூன்றாவது படிக்கல்லாக இருந்தது. இந்த யாப்பின் மூலம் மட்டுப்படுத்தப்பட்ட பொறுப்பாட்சி இலங்கையர்களுக்கு வழங்கப்பட்டது. எண் ணிக்கை ஜனநாயகத்தின் அடிப்படையில் உருவாகிய நிறுவனங்களிடம் ஆட்சி அதிகாரம் கொடுக்கப்பட்டமையால் அது இயல்பாகவே பெரும்பான்மைச் சமூகத்திடம் சென்றது. ஏனைய சமூகங்கள் ஓர நிலைக்கு தள்ளப்பட்டன. ஒற்றைத் தன்மை மேலும் இறுக்கமாக்கப்பட்டது. 1936 இல் உருவாக்கப்பட்ட மந்திரிசபை தனிச்சிங்கள மந்திரிசபையாக உருவாக்கப்பட்டமை இந்தப் போக்கின் உச்ச வெளிப்பாடாக அமைந்தது.
இந்நிலையில் தான் ஜிஜிபொன்னம்பலத்தின் தலைமையும் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியும் முன்னணிக்கு வந்தன. மத்திய மட்டத்தில் சமவாய்ப்புக்களைக் கோருகின்ற 50.50 கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இவ்வாறு மத்திய மட்டத்தில் சமத்துவம் கோருகின்ற ஒரு அரசியலாகத்தான் இந்தக்கால கட்ட தமிழர்களின் அரசியல் அமைந்தது.
28

Page 18
1947 இல் அறிமுகப்படுத்தப்பட்ட சோல்பரி அரசியல் யாப்பு தீவின் முழுமையான அதிகாரத்தினை சிங்கள மக்களுக்கு வழங்கியது. இதன் மூலம் ஆட்சி அதிகாரத்தின் ஒற்றைத் தன்மைக்கு முழு வடிவம் கொடுக்கப்பட்டது. பெரும்பான்மைச் சமூகம் ஆட்சி அதிகாரத்தை முழுமையாகவே பெற்றுக் கொண்டது. ஏனைய சமூகங்கள் ஆட்சி அதிகாரக் கட்டமைப் பிலிருந்து தூரவீசப்பட்டன.
ஆட்சி அதிகார மையங்கள் இந்தநிலைக்கு உயர்ந்த போது தமிழர் அரசியலும் எதிர் நிலைக்கு உயர்ந்தது. மத்திய மட்டத்தில் சமவாய்ப்புக்குக் கோரிக்கை இனிச் சரிப்பட்டு வராது என தமிழர் உணர்ந்தனர். அவ்வாறு அவர்கள் உணரத் தொடங்கியதும் தமிழர் அரசியல் அடுத்த கட்டத்திற்கு பாய்ந்தது.
மூன்றாவது காலகட்டம் 1949-1968
தமிழர் தாயகத்தை வரையறுத்து அத்தாயகத்திற்கு அதிகாரங்களைக் கோருகிண்ற சமகூழ்டிக்கோரிக்கையாக இக்காலகட்டத்து தமிழர் அரசியல் அமைந்தது. தமிழரசுக் கட்சி இக்கட்டத்தினை நகள்த்திய அரசியல் இயக்கமாக இருந்தவேளை, தந்தை செல்வா இக்கட்டத்தினை நகர்த்திய தலைவராக விளங்கினார். இக்கட்டத்தில்தான் இன அரசியல் தமிழ்த்தேசிய அரசியலாக மாற்றமடைந்தது. குடாநாட்டுடனும், கொழும்புடனும் மட்டும் மட்டுப்பட்டிருந்த தமிழர் அரசியல் வடக்கு-கிழக்காக பரந்தது. கோரிக்கைகள், மனுக்களை அனுப்புதல், சட்டசபை விவாதங்களில் கலந்து கொள்ளுதல் என இருந்த தமிழர் அரசியல் வழிமுறைகள் மக்களை இணைத்த போர்ாட்ட அரசியல் வழிமுறைகளாக வளர்ச்சியடைந்தன, மத, பிரதேச சாதி வேறுபாடுகளையும் மேவி தமிழ்த் தேசியம் வளர்ச்சியடைந்தது. 1956 காலி முகத்திடல் சத்தியாக்கிரக போராட்டம், 1957 இன் திருமலை யாத்திரை, 1961 இன் வடக்கு
29

கிழக்கு தழுவிய சத்தியாக்கிரகப் போராட்டங்கள் என மக்களின் போராட்டங்கள் எழுச்சியடைந்தன.
மறுபக்கத்தில் போராட்ட நிர்ப்பந்தங்கள் காரணமாக பண்டாசெல்வா ஒப்பந்தம் (1957), டட்லி-செல்வா ஒப்பந்தம் (1965) என்பன கைச்சாத்திடப்பட்டன. இவ்வொப்பந்தங்கள் ஆட்சி அதிகார இயங்கு நிலையில் ஒரு பன்மைத் தன்மையை கொண்டு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தென்னிலங்கை அரசியல் பன்மைத்தன்மைக்கு தயாராக இருக்கவில்லை. ஒரு ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டது. மற்றய ஒப்பந்தம் உறைநிலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
ஒப்பந்தங்களின் தோல்வி, போராட்டங்கள் மிருகத்தனமாக அடக்கப்பட்டமை, போன்றன தமிழ் மக்களை இலங்கை என்ற அரசமைப்பிக்குள் தீர்வு தேடும் முயற்சிகளின் நம்பிக்கை இழக்கச் செய்தன. அவர்கள் இலங்கை அரசமைப்பிலிருந்து முற்றிலும் விடுபடுகின்ற தமிழ் ஈழப் போராட்டத்தினை முன்னெடுக்கத் தலைப்பட்டனர். இந்த முன்னெடுப்போடு தமிழர் அரசியல் நான்காவது கட்டத்திற்குள் பாயத் தொடங்கியது.
நான்காவது கால கட்டம். 1968க்கு பின்னர்
நான்காவது கால கட்டம் முற்றிலுமாக அதிகாரத்திணைக் கைப்பற்றுகின்ற போராட்டமாக இருந்தமையினால் போராட்ட வழிமுறையும் பாராளுமன்ற அரசியலிலிருந்து விலகி ஆயுதப் போராட்ட அரசியலுக்கு செல்வதாக இருந்தது. 1972ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட முதலாவது குடியரசு அரசியல் யாப்பு இப்போராட்டத்தினை ஊக்குவித்தது. இவ்வரசியல் யாப்பு முழுமையாகவே தமிழர்களை அந்நியப்படுத்தியது. பெயரளவில் தமிழர்களுக்கு காப்பீடாக இருந்த அரசியல் யாப்பின் 29 வது பிரிவு நீக்கப்பட்டதோடு பெயரளவில் துணைக்காப்பீடுகளாக
30

Page 19
இருந்த நீதிப் புனராயப்பு அதிகாரம் , பிரித்தானிய கோமறைக்கழகத்திற்கு முறையிடும் உரிமை என்பனவும் நீக்கப்பட்டன. அதேவேளை அதிகார மையத்தின் ஒற்றைத்தன்மையை மேலும் இறுக்கமாக்கும் வகையில் அதன் இனத்தன்மை கெட்டியாக்கப்பட்டது. சிங்கள இனத்தின் இனரீதியான அடையாளங்களுக்கு அரசியல் யாப்பு அந்தஸ்து கொடுக் கப்பட்டதோடு பெளத்த மதம் முதன்மை மதமாக்கப்பட்டது. இதன் மூலம் இந்த அடையாளங்களுக்கு அப்பால் உள்ள சமூகங்கள் ஆட்சி அதிகாரங்களோடு தொடர்புபடாதவர்கள் என்பது தெளிவாக்கப்பட்டது.
1972ம் ஆண்டு யாப்பு இலங்கை அரசு தொடர்பாக தமிழ் மக்களுக்கிருந்த சிறிதளவிலான நம்பிக்கைகளையும் இல்லாமல் செய்தது. இதனால் தமிழீழப் போராட்டம் எழுச்சியடையத் தொடங்கியது.
1978ம் ஆண்டின் இரண்டாவது குடியரசு யாப்பு எழுச்சியடைந்து வந்த இந்த போராட்டத்தினை நசுக்குவதற்கு முயற்சி செய்தது. 6வது திருத்தச் சட்டம் இந்த நசுக்கும் முயற்சியில் முன்னிலையில் நின்றது. இதற்கு மேலாக பாராளுமன்றச் சட்டமான பயங்கரவாதத்தடைச் சட்டம் தமிழ் மக்களுக்கு கூட்டுத் தண்டனையை வழங்குவதற்கு உதவிகரமாக அமைந்தது. இதைவிட பன்மைத்தன்மைக்கான மாற்றங்கள் கொண்டுவரப்படக்கூடாது என்பதற்காகவே மாற்றத்திற்கான ஏற்பாடுகளைத்திருத்துவது கடினமாக் கப்பட்டது. இவ்வகையான திருத்தங்களுக்கு பாராளு மன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையும், மக்கள் தீர்ப்பு ஒன்றின் மூலம் மக்களின் சம்மதமும் அவசியம் எனக் கூறப்பட்டது.
மறுபக்கத்தில் ஆயுதப் போராட்டம் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளினால் மீகத் தீவிரமாக முன்னெடுக் கப்பட்டது.
31

அப்போராட்டத்தினால் தமிழர் அரசியல் இலங்கை மட்டம், பிராந்திய மட்டம், என்பவற்றைத் தாண்டி சர்வதேச மட்டத்திற்கு சென்றது. இடைக்காலத்தில் தீர்வு முயற்சிகளாக மாவட்ட அபிவிருத்திச் சபைகள், மாகாண சபைகள் என்பன கொண்டு வரப் பட்டபோதும் அது தமிழ் மக்களின் அபிலாசைகளைத் தீர்க்க போதுமானதாக இருக்கவில்லை.
மாவட்ட அபிவிருத்திச் சபைகள் தமிழ் மக்களினது கூட்டுரிமை என்ற அரசியல் அந்தஸ்தினைப் புறக்கணித்தது. மாகாண சபைகள் பாதிக்கப்பட்ட மக்களின் நலன்களைக் கவனிக்காது, அவர்களினுடைய பங்களிப் பினையும் பெற்றுக் கொள்ளாது இலங்கை-இந்திய அரசுகள் தங்களினுடைய நலன்களின் அடிப்படையில் உருவாக கியதாக இருந்தது.
இவ்வாறு தமிழர் அரசியல் சர்வதேச மட்டத்திற்கு கொண்டு சென்ற நிலையில்தான் சர்வதேச சமூகத்தின் தலையீடு காரணமாக யுத்த நிறுத்தம் கொண்டுவரப்பட்டது. சமாதான முயற்சிகளுக்கான அடித்தளம் போடப்பட்டது. இறுகிப் போய் கெட்டியாகியுள்ள ஆட்சிமையத்தின் ஒற்றைத்தன்மையை மாற்றி பன்மைத் தன்மையைக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டன. இந்தச் செயற்பாட்டினை ஆரம்பித்த போதுதான் சவால்களும் எழுந்தன.
இதனை ஆராய்வதற்கு சமாதானச் செயற் பாட்டின் வளர்ச்சிக்கட்டங்களை ஆராய்வது அவசியமா னதாகும்.
III
சமாதானச் செயற்பாடுகள் யுத்தத்தினை நிறுத்துதல், அழிவுகளை சீர்செய்தல், யுத்தம் ஒன்று எதிர்காலத்தில் வருவதைத் தடுத்தல் என்பவற்றை நோக்கங்களாகக் கொண்டவை.
32

Page 20
இந்த நோக்கங்களை யுத்தத் தினை நிறுத்துதலும், சமாதானத்துக்கான அடித்தளைத்தினை உருவாக்குதலும், இயல்பு நிலையினைக் கொண்டுவருதல், நிரந்தரத் தீர்வுகாணல் என்ற மூன்று கட்டங்களினுTடாக அடைந்து கொள்வதே சர்வதேசரீதியாக பின்பற்றப்படும் வழிமுறைகளாகும்.
யுத்தத் தினை நிறுத்துதலும் சமாதானத்துக் கான அடித்தளத்தினை உருவாக்குதலும் என்ற முதலாவது கட்டத்தில் யுத்தத்தில் ஈடுபட்ட இருதரப்பினரதும் உண்மையான வலுநிலைகள் அங்கீகரிக்கப்பட்டு இருதரப்பினரையும் சமத்துவ பங்காளிகள் என ஏற்றுக் கொணி டே யுத்தநிறுத்தம் மேற்கொள்ளப்படுகின்றது.
உண்மையில் யுத்தத்தின் தொடர்ச்சியான தோல்வியே சர்வதேச சமூகத்தை எமது பிரச்சினையில் தலையிடவைத்தது. போரினால் சர்வதேச சமூகத்தின் நலன்கள் பாதிக்கப்படுவதும் இதற்கு காரணம்.
சர்வதேச சமூகம் தலையிடுகின்ற போது சர்வதேச ரீதியாக ஆதிக்கம் பெற்றிருக்கின்ற சக்திகளினது நலன்கள் ஒரு பக்கத்தில் இருந்தாலும் சர்வதேச ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட விழுமியங்களுக்கேற்பவே சமாதான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதுண்டு.
சர்வதேச சமூகம் இலங்கை போன்ற இனரீதியான விடுதலைப் போராட்டங்களில் அவை ஆரம்பகட்டங்களில் இருக்கின்றபோது பங்குபற்றுவதில்லை. மாறாக விடுதலைக்காக போராடிய ஒரு தரப்பு அரசினை அமைக்கக் கூடிய பலமான நிலையில் இருக்கின்ற போதுதான் பங்குகொள்கின்றது. ஆட்சிஅதிகாரத்தில் நியாயமானவகையில் போரிட்ட தரப்பு பங்கு கொள்வதற்கான வாய்ப்பினையும் உருவாக்கிக் கொடுக்கின்றது. இதற்காகத்தான் யுத்த நிறுத்தம் மேற்கொள்கின்றபோது இருதரப்பின்
33

வலுநிலைகளையும் அங்கீகரித்து இரு தரப் பிற்கும் சமஅந்தஸ்தை கொடுக்கின்றது. இதனால் விடுதலைப் போரை முன்னெடுத்த தரப்பிற்கும் சர்வதேசரீதியாக ஒரு அரை அரசு அந்தஸ்து கிடைத்து விடுகின்றது. இரு தரப்பினதும் வலுநிலைகளை அங்கீகரித்தே யுத்த நிறுத்த நிபந்தனைகளும் உருவாக்கப்படுகின்றன. யுத்தத்தினை நிறுத்துதல், யுத்த நிறுத்த நிபந்தனைகளை உருவாக்குதல், இந் நிபந்தனைகளை கண்காணிக்கும் பொறிமுறைகளை உருவாக்குதல், இரண்டாம் மூன்றாம் கட்டங்களுக்கு பெயரளவில் ஒத்துக் கொள்ளுதல் என்பவற்றுடன் முதலாவது கட்டம் முடிவடைகின்றது.
இரண்டாவது கட்டத்தில் யுத்த அழிவுகளை சீர் செய்வதற்கான பணிகள் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்படுகின்றன. விடுதலைக்காக போராடிய தரப்பே இங்கு அதிக அழிவுகளை சந்தித்திருக்கும். அந்த அழிவுகளைச் சீர்செய்வதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமாதானம் தொடர்பான நம்பிக்கையூட்டப்படுகின்றது. அந்த மக்கள் அங்கீகரித்த மக்களின் பிரதிநிதிகளிடத்தில் புணர் நிர்மாணத் திட்டங்களுக்கான பணிகள் ஒப்படைக்கப்படுகின்றன. இதன் மூலம் அந்த மக்கள் தற்காலிகமாக, சுய ஆளுகையை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இதுவே இடைக்கால நிர்வாகம் என அழைக்கப்படுகின்றது.
எனவே இரண்டாவது கட்டத்தில் பிரதான செயற்பாடு யுத்த அழிவுகளை சீர்செய்யும் வகையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு
ஒரு இடைக்கால நிர்வாகத்தினை உருவாக்கிக் கொடுப்பதே.
மூன்றாவது கட்டத்தில் நிரந்தரத் தீர்விற்கான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் மூலம் யாப்புரீதியாகவே விடுதலைக்காக போரிட்ட தரப்பு அதிகாரப் பங்கீட்டினை
34

Page 21
பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு உருவாக்கப்படுகின்றது. ஒரு அரசமைப்பிற்குள் அதிகாரப் பங்கீட்டினை மேற்கொள்வதாயின் சமகூழ் டி ஆட்சிமுறையே அதிகளவில் சிபார் சு செய்யப்படுகின்றது. முரண்பாட்டின் தன்மை, விடுதலைக்காக போரிட்டதரப்பின் வலுநிலை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டே சமகூழ் டி ஆட்சியின் அதிகாரப் பங்கீடு நிர்ணயிக்கப்படுகின்றது.
இந்த அதிகாரப் பங்கீட்டு நடவடிக்கை களுக்கூடாக சர்வதேச ஆதிக்க சக்திகள் தங்களுடைய நலன்களை உத்தரவாதப்படுத்திக் கொள் வதிலும் கவனமாக இருக்கும் என்பதும் மறுப்பதற்கில்லை.
இலங்கையின் சமாதான முயற்சிகளைப் பொறுத்தவரை முதலாவது கட்டம் நிறைவு பெற்றுள்ளது. யுத்தநிறுத்தத்திலிருந்து தொடங்கி புரிந்துணர்வு உடன்படிக்கையூடாக ஒஸ்லோவில் சமகூழ்டி ஆட்சி முறையினை நிரந்தரத் தீர்வாக ஏற்றுக் கொண்டதுடன் முதலாவது கட்டம் முடிவடைந்து விட்டது.
இரண்டாவது கட்டத்தினை நகர்த்துவதுதான் தற்போது சவாலாக இருக்கின்றது. இரண்டாவது கட்டத்தினை நகர்த்தும் வகையில் விடுதலைப் புலிகள் இடைக்கால தன்னாட்சி யோசனைகளை முன்வைத்துள்ளார்கள் அதனை அடிப்படையா கவைத்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுக் கலாம், என்பதை சர்வதேச சமூகம் ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனால் தென்னிலங்கை அரசியல் அதற்குத்தயாராக இல்லாத நிலையில் தான் தற்போது சமாதான முயற்சிகள் அனைத்தும் கேள்விக்குறியாகியுள்ளன. இரண்டாவது கட்டத்தினை நகர்த்த முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்ற அதேவேளை, முதலாவது கட்டத்தில் பெற்றுக் கொண்ட வெற்றிகளைப் பேணுவதில்கூட கடினநிலை ஏற்பட்டுள்ளது. சர்வதேச சமூகம் மிகச் சிரமப்பட்டே
35

அப் பேணுதலை மேற்கொண்டுவருகின்றது. சர்வதேசச் சமூகத்தின் இத்தாங்கிப்பிடிப்பும் இல்லாவிட்டால் சமாதானச் செயற்பாடுகள் அனைத்துமே இன்று குழம்பிய நிலையில் இருந்திருக்கும்.
இவ் இரண்டாவது கட்டம் நகர்த்தப் படாமையினால் பாதிக்கப்பட்டவர்கள் முழுக்கமுழுக்க தமிழ்மக்கள்தான். சமாதானம் அவர்களது வாழ்க்கையில் இயல்பு நிலையினைக் கொண்டு வரவில்லை. தங்கள் வீடுகளுக்கு அவர்களால் செல்லமுடியவில்லை, தங்கள் நிலங்களுக்கு செல்லமுடியவில்லை. தங்கள் கடல்களுக்கு செல்ல முடியவில்லை தங்கள் கோவில்களுக்கு செல்ல முடியவில்லை.
இவ்விடயங்களையெல்லாம் மனிதாபிமானப் பிரச்சினை யாகப் பார்க்காமல் அரசியல் பிரச்சினையாகப் பார்ப்பதன் தான் விளைவுதான் இது.
அரசியல் பிரச்சினை தீரும் வரை மனிதா பிமானப் பிரச்சினையும் தீரக் கூடாது எனக் கூறுவது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல.
இந்நிலையில் நிரந்தரத் தீர்வு என்ற மூன்றாவது கட்டத்தினை எட்டிப்பிடிப்பது என்பதே நினைக்க முடியாத ஒன்றாக உள்ளது.
உண்மையில் இரண்டாவது கட்டத்தினை எப்படி நகள்த்துவது என்பதுதான் இன்றைய சவால், சுருக்கமாகக் கூறுவதாயின் இடைக்கால நிர்வாகம் ஒன்றினை அமைப்பதற்கான சூழலை எவ்வாறு உருவாக்குவது என்பது தான் இன்றைய சவால்.
இந்தச் சவாலை வெற்றி கொள்ள வேண்டுமாயின் பிரதான
சவாலையும் துணைச் சவால் களையும் அடையாளம் கண்டு
அதனை வெற்றிகொள் வதற்கான மார்க்கங்களை சமாதான விரும்பிகள் கண்டாக வேண்டும்.
36

Page 22
V
சமாதானத்திற்கு தோன்றியுள்ள பிரதான சவால் தென்னிலங்கை அரசியல்தான். இந்த அரசியலை விளங்கிக் கொள்வதற்கு சிங்கள சமூகத்தின் சமூகஉருவாக்கத்தையும், அதன் வழி உருவான இலங்கையின் அரசஉருவாக்கத்தையும் நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.
சிங்கள சமூகம் என்பது சிங்கள பெளத்த கருத்துக்களைக் கொண்டுதான் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. இந்த கருத்து நிலைகளின் அடிநாதமான விடயம் இலங்கைத் தீவு சிங்கள பெளத்தர்களுக்கு மட்டும் உரியது என்பதே. எனவே இதன் படி இலங்கையை ஆளும் குழுமம் சிங்கள பெளத்தர்கள் மட்டும்தான். ஏனைய சமூகங்கள் வேண்டுமானால் இந்த நாட்டில் வாழ்ந்துவிட்டுப் போகலாம் ஆனால் ஆட்சி அதிகாரங்களில் பங்கெடுக்க முடியாது.
இந்த கருத்து நிலைகள் வெறுமனவே அரசயில்வாதிகளால் தங்கள் தேர்தல் அரசியல் தேவைகளுக்காக கட்டியெழுப்பப் படவில்லை. மாறாக வரலாற்று ஐதீகங்கள், மத நம்பிக்கைகள், என்பவற்றின் மூலம் மரபு வழியாக கட்டியெழுப்பப்பட்டுள்ளது. வரலாற்று நுல்களும் இந்த வகையில்தான் எழுதப்பட்டுள்ளன. பெளத்த மத நிலையத்தின் தலைமையின் அனுசரணையுடன் எழுதப்பட்ட நீண்டவரலாறு இலங்கைக்கு இருப்பது இதற்கு உதவியாக அமைகின்றது. மக்கள் மத்தியில் இந்த கருத்து நிலைகளைப் பேணிப்பாதுகாப்பவர்களாக மத குருமார்கள், சிங்கள ஆசிரியர்கள், சிங்கள ஊடகவியலாளர்கள், சிங்கள ஆயூள்வேத வைத்தியர்கள் உள்ளனர். சிங்கள அரசியல் வாதிகள் செய்ததெல்லாம் இந்த கருத்துநிலைககட்டுக்குமேல் குந்திக்கொண்டதுதான்.
37

ஆனால் மறுபக்கத்தில் போர், அதனால் ஏற்பட்ட சர்வதேச நிர்ப்பந்தம், திறந்த பொருளாதார தேவைக்கான நெருக்கடிகள் என்பன சமாதானச் செயற்பாட்டுக்கு செல்லுமாறு அரசியல்வாதிகளை நிர்ப்பந்திக்கின்றன. இதனால் அரசியல் வாதிகளுக்கு இரண்டக நிலை ஏற்படுகின்றது. ஆட்சி அதிகாரத்தினை காப்பாற்ற வேண்டுமானால் சமாதானச் செயற்பாட்டிற்கு செல்ல வேண்டும். தங்களது அரசியல் இருப்பினை பாதுகாக்க வேண்டுமானால் சமாதானத்திற்கு எதிராகச் செல்லவேண்டும். இந்த இரண்டக நிலையில் இருப்பதனாலும் பெளத்த சிங்கள, கருத்து நிலைகளினால் பீடிக்கப்பட்டவர்களாக அவர்களும் இருப்பதானாலும் ஆட்சிக்கு வருபவர்கள் சமாதானச் செயற்பாடுகளில் நேர்மையாக
ஈடுபடுவதில்லை மாறாக எதிர்த்தரப்பினை பலவீனப்
படுத்துவதிலேயே கவனத்தினை குவிக்கின்றன
சுருக்கமாகக் கூறப்போனால் சிங்கள அரசியல்வாதிகள்
இனவாதத்தினை தமது அரசியல் இருப்பிற்கு பயன்படுத்திக் கொண்டார்கள்.
இரண்டு பிரதான கட்சிகளும். இப்போக்கிற்கு விதிவிலக் கானவையாக இருக்கவில்லை. அளவில் மாத்திரம் வேறுபாடுகள் இருக்கலாம். இதன் வெளிப்பாடாகத்தான் ஐக்கியதேசியமுன்னணி புலிகளுக்கு எதிராக சர்வதேச இராணுவ வலைப்பின்னலை உருவாக்குவதில் கவனம் செலுத்தியது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு கிழக்கில் பிளவினை ஏற்படுத்தி புலிகளைப் பலவீனப்படுத்துவதில் கவனங்களைக் குவித்தது. இந்தக் குறுக்கு வழி அரசியல் சமாதான முன்னெடுப்புகளுக்கு ஒருபோதும் உதவப் பேவதில்லை.
உண்மையில் சமாதானம் தொடர்பாக இரண்டு பிரதான கட்சிகளும் செய்திருக்க வேண்டிய பிரதானபணி
38

Page 23
சிங்களமக்களை சமாதான முன்னெடுப்புகளுக்கு சார்பாகத் திருப்புவதுதான். இதற்கு சிங்கள மக்கள் மத்தியில் ஊன்றிப் போயுள்ள சிங்கள, பெளத்த மேலாதிக்க கருத்து நிலைகளுக்கு பதிலாக பன்மைத்தன்மைகளை ஏற்றுக் கொள்கின்ற கருத்து நிலைகளைக் கட்டியெழுப்பியிருக்க வேண்டும். இதனூடாக சிங்கள மக்களை சிங்கள பெளத்த கருத்து நிலைகளிலிருந்து விடுவித்திருக்க வேண்டும்.
சமாதானப் பிரச்சாரத்தை சிங்கள மக்கள் மத்தியில் நிறுவன ரீதியாக முன்னெடுத்திருந்தால் இதில் சில வெற்றிகளைப் பெற்றிருக்க முடியும். அந்த வெற்றிகளை அடிப்படையாகக் கொண்டு மேலும் முன்னேறியிருக்கலாம்.
ஆனால் இரண்டு கட்சிகளுமே பெளத்த சிங்கள கருத்து நிலைகளோடு மோதுவதற்கு தயாராக இருக்கவில்லை. மாறாக ஐக்கிய தேசிய முன்னணி இவற்றிக்கு வெட்டியோடியே சமாதானச் செயற்பாட்டின் முதலாம் கட்டத்தினை நிறைவு செய்திருந்தது. இந்த வெட்டியோடுதலுக்கு கொடுத்த விலைதான் சென்ற தேர்தலில் அதற்குக்கிடைத்த மிகப் பெரிய தோல்வி அந்த தோல்வி தந்த அதிர்ச்சியில் இருந்து ஐக்கிய தேசிய முன்னணி இன்னமும் விடுபடவேயில்லை. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சமாதானச் செயற்பாட்டுக்கு செல்ல முடியாமலும், அரசு அதிகார இருப்பினைக் காப்பாற்ற முடியாமலும் திணறிக் கொண்டிருக்கின்றது. பங்காளிக் கட்சியான ஜேவிபியின் தொல்லைவேறு.
இவைதான் தென்னிலங்கை அரசியலின் தற்போதைய நிலை.
இந்த நச்சு நிலையில் இருந்து தென்இலங்கை அரசியலை விடுபடச் செய்வதுதான் சமாதான விரும்பிகள் செய்ய வேண்டிய முதலாவது பிரதான பணி
39

இதன் முதற்கட்டமாக சமாதான முன்னெடுப்புகளைச் செய்வதற்கு மத்தியில் ஒரு உறுதியான அரசாங்கம் இருக்க வேண்டும். இரண்டு பிரதான சிங்களக் கட்சிகளையும் ஒரு உடன்பாட்டிற்கு வரச் செய்வதன் மூலம் ஒரு உறுதியான அரசாங்கத்தை அமைத்துக் கொள்ளலாம். இதற்கான அழுத்தங்களை சர்வதேச சக்திகள் கொடுக்கலாம். ஆனால் இரு கட்சிகளும் உடன்பாட்டிற்கு வருதல் தொடர்பாக தமிழ், சிங்கள, மலையக மக்களிடம் ஒரு அச்சமும் இருக்கின்றது. இவ்விரண்டு கட்சிகளும் இணைந்து தங்களை ஒடுக்கி விடுவார்கள் என்ற அச்சமே அது. இந்த அச்சம் வராமல் பாதுகாத்துக் கொள்வதும் சர்வதேச சமூகத்தின் கடமையாகும். இந்த உடன்பாட்டிற்காக ஒரு குறிக் கப்பட்ட காலம் சகல தேர்தல் களையும் ஒத்திவைத்தாலும் நல்லது என்றே நினைக்கின்றேன். தேர்தல் அரசியல் இரு கட்சிகளும் உடன்பாட்டிற்கு வருவதைக் கடினப்படுத்தலாம்.
இரு கட்சிகளும் உடன்பாட்டிற்கு வந்த பின்னர் இரண்டும் இணைந்து சிங்கள மக்கள் மத்தியில் நிறுவன ரீதியாக சமாதானத்துக்கான பிரச்சாரங்களை முன்னெடுக்க வேண்டும். அதாவது ஒற்றைக்கருத்து நிலைகளிலிருந்து சிங்கள மக்களை மாற்றி பன்மைத் தன்மையினை அவர்களை ஏற்கச் செய்வதற்கு முயற்சிக்க வேண்டும்.
அதேவேளை இதுவிடயத்தில் சிங்கள, சிவில் நிறுவனங் களையும் ஈடுபடுத்த வேண்டும். இதனுTடாக சமாதான இயக்கத்தினை ஒரு மக்கள் இயக்கமாக சிங்கள மக்கள் மத்தியில் முன்னெடுக்க வேண்டும்.
இதுவிடயத்தில் தமிழ்த்தரப்பிற்கும் குறிப்பாக தமிழ்
மக்களின் தலைமை இயக்கமான தமிழீழ விடுதலைப்
புலிகளுக்கும் ஒரு பொறுப்பு உண்டு என்றே கருதுகின்றேன். 40

Page 24
சிங்கள மக்களை சமாதானத்திற்கு சார்பாக திருப்பும் பணிகளை அவர்களும் மேற்கொள்ள வேண்டும். தமிழர் அரசியல் நிலை நின்று பார்க்கும் போது கூட இது மிக அவசியமான ஒன்று. தமிழ் மக்களினது அரசியல் நியாயப்பாடுகளை சிங்கள மக்களுக்கு அவர்கள் புரிய வைக்க வேண்டும். தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் சிங்கள மக்களுக்கு ஒரு போதும் அச்சுறுத்தலாக இருக்காது என்பதை தெளிவு படுத்த வேண்டும். இதனை தமிழர் அரசியலின் ஒரு பகுதிப் பணியாகக் கொள்ளவேண்டும். இந்தப் பணிகளை மேற்கொள்ளக்கூடிய வகையில் சிங் களப் புலமையாளர்களோடும் சிவில் நிறுவனங்களைச் சேர்ந்தவர்களோடும் தொடர்புகளைக் கட்டி யெழுப்ப வேண்டும். அரசு சார் பற்ற நிறுவனங்கள் இத் தொடர்புகளைக் கட்டி யெழுப் புவதில் பெரிய பங்களிப்பினைச் செலுத்தலாம். ஆக்கபூர்வமான தொடர்புகள் சமாதான முன்னெடுப்புகளில் பாரிய பங்களிப்பினை ஆற்றக் கூடியனவாக இருக்கும். உண்மையில் இந்த வகையான பரஸ்பர தொடர்புகள் தான் இரு சமூகங்களும் ஒருவர் தொடர்பாக ஒருவர் கொண்டிருக்கின்ற ஐதீகங்களையும், தவறான எண்ணங்களையும் களைவதற்கு உதவக்கூடியதாகவும் இருக்கும்.
சிங்கள மக்களைப் பொறுத்தவரை குறிப்பாக கிராமங்களில் வாழ்கின்ற அடிமட்ட சிங்கள மக்களைப் பொறுத்தவரை தமிழ் மக்களின் அரசியல் நியாயப் பாடுகள் அவர்களைச் சென்றடைந்துள்ளது எனக் கூறமுடியாது புலிகளின் ஊடகங்களும் சிங்களக் கிராமங்கள் வரை விரிவாக்கப் படவில்லை.
எனவே சிங்கள மக்களினது மொழியில் தமிழ் மக்களினது அரசியல் நியாயப்பாடுகளை முன்வைப்பதற்கு புலிகள் முன்வர வேண்டும். ஏற்கனவே நடைமுறையில் இருக்கின்ற அரச,
41

தனியார் ஊடகங்களுக்கு அப்பால் புலிகள் தங்களது சொந்த ஊடகங்கள் மூலமாகவும் இதற்கான முயற்சிகளை மேற் கொள்ளுதல் வேண்டும்.
இங்கே சிங்கள மக்கள் அனைவரும் சமாதானத்தின் எதிரிகளாக இருக்கின்றார்கள் என புலிகளோ, தமிழ் மக்களோ நினைக்கக்கூடாது. தமிழ் மக்களின் அரசியல் நியாயப்பாடுகளை ஏற்றுக்கொண்ட பலர் அங்கும் இருக்கின்றனர்.
பிரதான சவாலைக் கையாளும் போது இன்னுமோர் விடயத்தையும் நாம் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். நடைமுறையில் இருக்கின்ற யுத்த நிறுத்தத்தினை தொடர்ச்சியாக தக்கவைக்கின்ற விடயம்தான் அது. இந்த யுத்த நிறுத்தத்தினை தக்கவைக்க முடியாவிட்டால் நிலைமைகள் எல்லாமே மீண்டும் ஆரம்பப் புள்ளிக்கு வந்துவிடும்.
யுத்த நிறுத்தத்தினை தக்கவைப்பதற்கு பிரதான காரணமாக இருப்பது இரு தரப்பிற்கும் இடையிலான வலுச்சமநிலைதான். அவ்வலுச்சமநிலை தொடர்ச்சியாக பேணப்பட வேண்டும். அதனைச் சீர்குலைப்பதற்கு இருதரப்புமே முயற்சிக்கக்கூடாது. அரசாங்கம் புலனாய்வுப் பிரிவினர் மூலமாக தொடக்கிவைத்த போர், ஏற்றுக் கொள்ளத் தக்கதல்ல. அரசாங்கம் உடனடியாக அதனை நிறுத்த வேண்டும்.
வலுச்சமநிலை தொடர்பான அச்சுறுத்தல் கிழக்கில் ஓர் போர்ச்சூழலை உருவாக்கியுள்ளது என்பதை எவரும் குறைத்து மதித்துவிட முடியாது.
புலனாய்வு பிரிவினரின் போருக்கு அப்பால் சமாதான
காலத்தில் மேற் கொள்ளப்பட்ட, சிங்களக் குடியேற்ற
நடவடிக்கைகளும் வலுச் சமநிலைக்கு அச்சுறுத்தல்களாக
உள்ளன. திருக்கோணமலை மாவட்டத்தில் இவ்வாறான ஏழு
42

Page 25
குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதாக செய்திகள் வந்துள்ளன இவை உடனடியாக தடுத்துநிறுத்தப்பட வேண்டும்.
பிரதான சவாலுக்கு புறம்பாக துணைச் சவால்களும் புறக்கணிக்கத்தக்கவை அல்ல. அதில் பிரதானமானது சமாதான முன்னெடுப்புகள் தொடர்பாக முஸ்லிம் தரப் பின் நிலைப்பாடுகள். இது முழுக்க முழுக்க வட-கிழக்கு பிரதேசத்தில் பன்மைத்த்னமையைக் கொண்டு வருவதுடன் தொடர்புடையது. இங்கு வாழும் இரு சமூகங்களும் தங்களுக்கிடையே நியாயமான வகையில் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு தயாராக இருக்க வேண்டும். இதில் எண்ணிக்கையில் கூடிய சமூகம் என்றவகையில் தமிழ்த்தரப்பிற்கே அதிக பொறுப்புண்டு. அவர்கள் தாங்களே முன்கையெடுத்து முஸ்லிம்களோடு புரிந்துணர்வைக் கொண்டுவருவதற்கு முயற்சிக்க வேண்டும்.
இதற்கான நடைமுறைச் செயற்பாடுகள் சற்றுக் கடினமாக இருக்கலாம். ஒரு பக்கத்தில் ஏகத்தன்மை கொண்ட விடுதலை இயக்கமும் மறுபக்கத்தில் தேர்தல் போட்டி அரசியலுக்கு முகம் கொடுக்கும் முஸ்லிம் கட்சிகளும் இருக்கும்போது இதனை முன்னெடுப்பது கடினமாகத்தான் இருக்கும். ஆனால் இப்பணி முன்னெடுக் கப்பட வேண்டும் என்றே வரலாறு நிர்ப்பந்தித்துள்ளது. தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும் இடையே கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு உடன்பாடு இச்செயற்பாட்டிற்கு அடித்தளமாக இருக்க உதவலாம்.
மேலும் வட-கிழக்கு பிரதேசத்தை பன் மைத் தன்மையானதாக மாற்றும் போது வட-கிழக்கில் வாழும் சிங்கள மக்களுக்குரிய இடத்தை வழங்குவதற்கு தமிழ்த்தரப்பு
தயங்கக் கூடாது.
43

இரண்டாவது துணைச்சவால் இந்தியா. ஏனைய சவால்களை முடிவுக்கு கொண்டுவந்தால் இந்தியாவிலிருந்து வரும்சவாலை சமாழிப்பது கடினமாக இருக்காது என்றே நினைக்கின்றேன். இந்தியப் பாதுகாப்பு, இந்திய ஒருமைப்பாடு என்பதற்கு இலங்கையின் சகல தரப் பிலிருந்தும் ஒரு கூட்டு உத்தரவாதத்தினை வழங்கிக் கொள்வதன் மூலம் இந்தச் சவாலை தவிர்த்துக் கொள்ளலாம். இது விடயத்தில் இந்தியாவும் தனது ஒற்றைநலன்களை அழுத்துவதிலிருந்து விடுபடவேண்டும். பரஸ்பர நலன்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு தயாராக வேண்டும். இதற்கான அழுத்தங்களை சர்வதேச சமூகமும் இந்தியாவிற்கு வழங்குவதற்கு முன்வர வேண்டும்.
V
இறுதியாக எனது புரிதலுக்கு எட்டிய வகையில் இந்த உரையினூடாக சில கருத்துக்களைக் கூறியிருக்கின்றேன். பாதிக்கப்பட்டவர் நிலைநின்றே அதிகளவில் கருத்துக்களைக் கூறி இருப்பதனால் இதற்கு மாறுபட்ட கருத்துகளும் இருக்கலாம். பக்கச் சார்பு இருப்பதாகவும் கருதலாம். இவை தவிர்க்க முடியாதவை யென்றே நினைக்கின்றேன்.
சமாதானம் பற்றிய கருத்துக்கள் சிங்கள தரப்பிலிருந்தும், முஸ்லிம் தரப்பலிருந்தும் முன்வைக்கப்பட வேண்டும். இதற்கு புறம்பாக சர்வதேச தரப்பிலிருந்தும் முன்வைக்கப்பட வேண்டும்.
இவ்வாறு பல்வேறு பார்வைகளும் முன்வைக் கப்படுகின்ற போதுதான் அதிலிருந்து பொதுவான உண்மைகளைக் கண்டு கொள்ள முடியும். இந்தப் பொதுவான உண்மைகள் தான் தீர்வுகளைக் கண்டு கொள்வதற்கு மிகவும் உதவக் கூடியதாக இருக்கும். தீர்வுகளில் பன்மைத் தன்மையினை பிரதிபலிக்கச் செய்வதற்கும் வாய்ப்புகளைக் கொடுக்கக் கூடியதாக இருக்கும்.
44

Page 26
எனது உரைக்கு நீண்ட நேரம் எடுத்துவிட்டேன். அதற்காக என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். இங்கு உரையாற்ற சந்தர்ப்பம் அளித்தமைக்காக எனது நண்பர்கள் யதீந்திரா, கமலகாந்தன் ஆகியோருக்கும் சமூக அபிவிருத்தி ஆய்வு நிறுவனத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
எனது உடல்நிலை, வேலைப்பளு காரணமாக இங்கு வந்து உரையாற்றக் கூடிய நிலையில் நான் இருக்கவில்லை எனது இரு நண்பர்களின் வேண்டுகோள்கைள மறுக்க முடியாத நிலையிலேயே இங்கு வந்திருக்கின்றேன்.
இவ்வளவு நேரமும் பொறுமையாக என் உரையினைக் கேட்ட உங்கள் அனைவருக்கும் நன்றி கூறி விடை பெறுகின்றேன்.
நன்றி
வணக்கம்.
45

10.
11.
12.
13.
உசாத்துணை நூல்கள்
சிவராஜா. அ. (1989), இலங்கை அரசியல், கைதடி,
ஜெயவர்தனா குமாரி (1987), இலங்கையில் இனவர்க்க
முரண்பாடுகள், சென்னை.
நித்தியானந்தன், வி. (1989), இலங்கையின் அரசியற் பொருளாதாரம் 1948 - 1956 வர்க்க இனத்துவ நிலைப்பாடுகள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்,
யோதிலிங்கம். சி.அ. (1998), இலங்கையின் அரசியல் யாப்புகள். கொழும்பு - 04.
யோதிலிங்கம் சிஅ. (2000), இலங்கையின் இனக்குழும
அரசியல், கொழும்பு
யோதிலிங்கம் சி.அ. (1999), இலங்கையில் அரசியல் கட்சி முறைமை, கொழும்பு
தமிழ்மாறன், விரி (1999), அரசியலமைப்பாக்கச் சிந்தனைகள், கொழும்பு
சிவத்தம்பி கார்த்திகேசு, 2000), யாழ்ப்பாணம் சமூகம், பண்பாடு, கருத்துநிலை, சென்னை
குலரத்தினம் க.சி, (1996) நோத்முதல் கோபல்லாவரை. யாழ்ப்பாணம்.
அரசாங்க வெளியீடு, (1972), இலங்கை சோசலிச ஜனநாயக குடியரசின் அரசியலமைப்பு.
பாராளுமன்ற செயலகம், (1998), இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பு
இலங்கைத் தமிழரசுக் கட்சி வெள்ளிவிழாமலர், (1974), யாழ்ப்பாணம்.
சபாரத்தினம், த. (1998), “தந்தை செல்வா’ தினகரன் வாரமலர்.
கொழும்பு
46

Page 27
14.
15.
16.
18.
19.
20.
21.
22.
23.
24.
25.
26.
27.
28.
பாரதி இராசநாயகம் (1995), இனவாத அரசியல் அன்று முதல் இன்னு வரை, வீரகேசரி, கொழும்பு
சிவத்தம்பி கார்த்திகேசு, 2001), இலங்கைத் தமிழர் யார்? எவர்?. கொழும்புத் தமிழ்ச் சங்கம், கொழும்பு நடராஜன் ச.அ. (1996), இந்திய அரசியல் சாசனம், சென்னை.
ஜெயபாலன் நா. ஜோசப் செ. (1997), தற்கால அரசாங்கங்கள், சென்னை.
குணராசா. க. (1996), ஈழத்தவர் வரலாறு, கொழும்பு
புஸ்பரத்தினம். ப. (2000), தொல்லியல் நோக்கில் இலங்கைத் தமிழர் பண்பாடு, கொழும்பு
சூரிய நாராயணன். பா. (1972), தற்கால கூட்டாச்சி நாடுகளில் மையமாநில உறவுகள், தமிழ் நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை.
முகம்மது சமீம். அ. (1998), ஒரு சிறுபான்மைச் சமூகத்தின் பிரச்சினைகள் - எை, சென்னை.
Silva K.M.D. (1977), A Tale of three Constitutions.
Silva K.M.D. (1973) The History and Politics of the Transfer of Power.
Cludowyck E.F, The Modern History of Ceylon
Vrmila Phadwis (1976), Religion and Politics in Sri Lanka, New Delhi. w
Peries G.L., (2000), Jowards Equity, Colombo.
Appadurai A. (1952), The Substance of Politics, Madras
பத்திரிகைகள் 4. நவமணி 1. வீரகேசரி 5. எங்கள் தேசம் 2. தினக்குரல் 6. ISland
3. தினகரன் 7. Daily mirror
47

இனங்களுக்கிடையே சமாதானத்துக்கான ஆய்வகம
அறிமுகம் இனங்களுக்கிடையே முரண்பாடுகளும் தவறான எண்ணங்களும் அதிகரித்த காலப்பகுதியாக இக்காலகட்டம் காணப்படுகின்றது. இத்தவறாண எண்ணங்களும் முரண் பாடுகளும் இலங்கையில் வாழும் தேசியஇனங்களை துருவநிலைக்கு கொண்டு செல்கின்றது. ஒவ்வொரு இனமும் தனித்துத் தனித்து செயற்படுகின்ற நிலைமைகளும் இனங்கள் ஐக்கியப் படுவதற்கான மார்க்கங்கள் அருகிவருவதற்கான நிலைமைகளும் வளர்ந்து வருகின்றன.
அரசியலில் தேசிய ரீதியாக அனைத்து மக்களையும் அணிதிரட்டும் அனைத்து அரசியல் சக்திகளும் இழந்து வருகின்றன. அரசியல் தளத்தில் ஏற்பட்ட இந்த நிலைமையை சிவில் சமூகத்திலும் ஊடுருவி ஊடகவியலாளர், தளம்-புலமையாளர், தளம் என்பனவும் இனரீதியான அடையாளங்களை பேணவே முயற்சிக்கின்றன.
இந்த நிலையானது ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் அரசியல் அபிலா சைகளையும், அதன் நியாயப்பாடுகளையும் அறவே ஒதுக்கிவிடுகின்ற நிலையையும் உருவாக்கி விடுகின்றது. இதற்குக் காரணம் ஒரு இனத்தின் அரசியல் அபிலாசைகள் மற்றைய இனங்களின் மத்தியிலே ஒழுங்காகப் பேசப்படா மையாகும்.
உதாரணமாகத் தமிழ் மக்களின் அரசியல் நிலைப்பாடுகள் சிங்கள மக்கள் மத்தியில் ஒழுங்காகப் பேசப்படவில்லை. முஸ்லிம் மக்களின் அரசியல் நிலைப்பாடுகள் பற்றி தமிழ் மக்கள் மத்தியில் ஒழுங்காகப் பேசப்படவில்லை. மலையக மக்களின் அரசியல் நிலைப் பாடுகள் பற்றி சிங்கள். தமிழ், முஸ்லிம் மக்களின் மத்தியில் ஒழுங்காகப் பேசப்படவில்லை.
எனவே இந்த ஒவ்வொரு இனத்தினதும், குறிப்பான ஒடுக்கப்படும்
48

Page 28
தேசிய இனங்களினதும் அரசியல் நிலைப் பாடுக்ள மற்றைய இனங்களின் மத்தியில் பேசுபொருளாக்குவது அவசியமாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணியாக உள்ளது.
அதுவும் இனப்பிரச்சினைக்க தீர்வு காண்பதற்காக சர்வதேச ஒத்துழைப்புடன் முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் காலப்பகுதியில் இப்பணி மிகவும் அவசியமானதென்றே கருதுகி ன்றோம். காணப்படும் தீர்வுகள் இலங்கையில் வாழ்கின்ற அனைத்து இனங்களினது பிரச்சினைக்கு தீர்வினைக் கொண்டுவருவதற்கு இப்பனி அவசியமாக உள்ளது.
அனைத்து இனங்களையும் இணைத்த ஒரு புலமைத்துவ செயல்பாட்டினா லேயே இத்தகைய பணியினை சாத்திய மாக்க முடியும்.
இனங்களுக்கிடையே சமாதானத் துக்கான ஆய்வகம் இப்பணிகளை செய்ய தன்னாலான வரை முயற்சிக்கும்
49

(1) நோக்கங்கள்:
. பிரதான நோக்கங்கள்
ஒடுக்கப்படும் இனங்கள் அரசியல் நிலைப்பாடுகளை பேசுபொருளாக் குவதன் மூலம் இனங்களிடையே சமாதானத்தை உருவாக்குதல்.
(9)
(ஆ)
(S)
(FE)
(Σ)
(p.61)
1. துணை நோக்கங்கள்
ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் அரசியல் செயற்பாடுகளை ஏனைய இனங்களின் மத்தியில் கொண்டு செல்லுதல். இனமுரண்பாட்டுக்கான அடிப்படை களை அடையாளம் காணலும் அதனை தீர்ப்பதற்கான வழிவகைகளையும் கண்டறிதல். ஒடுக்கப்படும் இனங்களின் அரசியல் நிலைப்பாடுகளை அனைத்து இனங்களும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தினை உருவாக்குதல். இனமுரண்பாடுகளை தீர்ப்பதற் கான சர்வதேச அனுபவங்களை பெற்றுக் கொள்ளுதல் இனமுரண்பாட்டுத் தீர்வில் இந்தி யாவின் தலையீட்டை வெற்றி கொள்ளும் வழி வகைகளை கண்டறிதல் இனமுரண்பாட்டுத் தீர்வில் பூகோல மயமாக்கள் சக்திகளின் தலையீடுகளை வெற்றிகொள்ளம் வழி வகைகளை கண்டறிதல்
(2) வேலைத் திட்டங்கள்
(9)
(ஆ)
(S)
(RF)
(@一)
. கல்வி வட்டங்களை நடத்துதல்
இனமுரண்பாடுகளை தீர்ப்ப தற்கான கோட்பாட்டு விடயங்கள் பற்றிய அறிமுகம் தமிழ் மக்களின் அரசியல் நியாயப் பாடுகளும் அதனை தீர்ப்பதற்கான வழி வகைகளும் தமிழ் தேசிய அரசியல் தொடர்பாக சிங்கள மக்கள் மத்தியில் நிலவும் தறவான எண்ணங்களும் அதனை தீர்ப்பதற்கான வழி வகைகளும் முஸ்லிம் மக்களின் அரசியல் நியாயப்பாடுகளும் அதனை தீர்ப்பற்கான வழிவகைகளும் முஸ்லிம் மக்களின் அரசியல் தொடர்பாக தமிழ் மக்கள் மத்தியில்
50

Page 29
(611)
(எ) ”
(ஏ) (33)
(9)
(அ)
(ஆ)
(9) (ஆ) (S) (ዙ)
(약) (GTI)
(அ) (ஆ) (9) (AF)
நிலவும் தவறான எண்ணங்களும் அதனை தீர்ப்பதற்கான வழி வகைகளும் மலையக மக்களின் அரசியல் நியாயப்பாடுகளும் அதனை தீர்ப்பதற்கான வழி வகைகளும் வடக்கு கிழக்கிக்கும் மலையகத்திற்கும் வெளியே வாழும் தமிழ் முஸ்லிம் அரசியல் அபிலாசைகளும் அதனை தீர்ப்பதற்கான வழி வகைகளும் இன முரண்பாட்டுத் தீர்வு சர்வதேச அனுபவங்கள் இன முரண்பாட்டுத் தீர்வில் இந்தியாவின் தலையீடும் அதனை வெற்றி கொள்வதற்கான வழி வகைகளும் இனமுரண்பாட்டுத் தீர்வில் பூகோல மயமாக்கள் சக்திகளின் தலையீடுகளும் அதனை வெற்றிகொள்வதற்கான வழி வகைகளும்
. சிறிய அளவில் இலகுவான மொழி நடையில் நூல்களை
வெளியிடுதல்
ஒடுக்கப்படும் இனங்களின் அரசியல் நிலைப்பாடுகளை விளக்கும் நூல்கள் கல்வி வட்ட உரைகளும் கலந்துரையாடல்களும்
III. மக்கள் மத்தியில் சிறிய அளவிலான கருத்தரங்குகளையும்
பயிற்சிப் பட்டறைகளையும் நடத்துதல்
ஒரு சிங்களப் பிரசேதம்
ஒரு முஸ்லிம் பிரசேதம்
ஒரு தமிழ் பிரதேசம்
ஒரு மலையகப் பிரதேசம் வடக்கு கிழக்கு மலையகம் அல்லாத தமிழ் பிரதேசம் வடக்கு கிழக்க மலையகம் அல்லாத முஸ்லிம் பிரதேசம்
IV. கள ஆய்வுகைள நடத்துதல்
முரண்பாடு அதிகளவில் உள்ள ஒரு சிங்கள பிரதேசம் முரண்பாடு அதிகளவில் உள்ள ஒரு தமிழ் பிரதேசம் முரண்பாடு அதிகளவில் உள்ள ஒரு முஸ்லிம் பிரதேசம் முரண்பாடு அதிகளவில் உள்ள வடக்கும் கிழக்கும் மலையகமும்
51

(@一)
(9) (ஆ) (S) (FF) (Φ ) (961) (61) (6J)
அல்லாத ஒரு தமிழ் பிரதேசம் முரண்பாடு அதிகளவில் உள்ள வடக்கும் கிழக்கும் மலையகமும் அல்லாத ஒரு முஸ்லிம் பிரதேசம்
V. பல்வேறு இனங்கள் வாழும் கிராமங்களுக்கு நல்லெண்ண
விஜயங்களை மேற்கொள்ளல்
வன்னி மாவட்டம்
அம்பாறை மாவட்டம்
uITþ tDT6)]LLLb
மட்டக்களப்பு மாவட்டம் திருகோணமலை மாவட்டம் - (மூதூர் பகுதி) நுவரெலியா மாவட்டம் அம்பாந்தொட்டை மாவட்டம் உடப்பு முந்தல் பகுதிகள்
52

Page 30
ஆலோசகர்கள் :-
தலைவர் :
உபதலைவர்கள
இணைச்செயலாளர் :-
பொருளாளர் :-
வெளியீட்டு பொறுப்பாளர்:-
கல்வி வட்டப் பொறுப்பாளர்:-
பிரதேச ரீதியான கருத்தரங்குபொறுப்பாளர் :-
கலை இலக்கிய குழு பொறுப்பாளர் :-
மகளிர் பிரிவு பொறுப்பாளர்
செயற் குழு உறுப்பினர்கள:-
மொழிப்பெயர்ப்பாளர்
பேராசிரியர். கா.சிவத்தம்பி கலாநிதி விக்ரமபாகு கருணரத்தின பேராசிரியர். சோ.சந்திரசேகரம்
திரு. ரனத்குமாரசிங்க
திரு. நடராசா கண்டிபன்
திரு. மஞ்சுள வெடிவர்த்தனா
திரு. வ.திருநாவுக்கரசு
திரு. சி.அ.ஜோதிலிங்கம் திரு. நடராசா ஜனகன்
திரு. ஆரோக்கியநாதர் தீபன்
திரு. தம்பிராசா நடராசா
திரு. தனபாலன் யோகநாதன் திரு. பி.எம்.முஜிபுர் ரகுமான்
திரு. குணசேண விஜயசிங்க
திரு. நடராசா கண்டீபன்
செல்வி. அன்ரனிட்றா சிராணி
திரு. வி.புவிதரன் திரு. சந்தன ஜெயதிஸ்ஸ திரு. ரஞ்வித் கமகே திரு.ஜெயதேவ திரு. தஸ்லிம் திரு. பூமிநாதன் திரு. ஈ.தம்பு
திரு. எஸ்.மணியம்
53


Page 31
சி.அயோதிலிங்க பிறப்பிடமாகக் கெ அரசறிவியல் துறைய மதுரை காமராசர் பல் முதுமாணிப் பட்ட பண்டாரநாயக்கா ச விவகாரங்களில் பட் கல்வி நிறுவனத்தில் பெற்றிருக்கின்றார். பயிலுநர் சட்ட ம பத்திரிகையின் உதவி பல ஆய்வுக் கட் தினக்குரல், திசை ஆ ஆகிய வெளியீ எழுதியுள்ளார். சக்தி ரூபாவாஹினி ெ தொலைக்காட்சி, ல எப்.எம். இலங்கை ஒ ஆகியவற்றில் நடாத்தியிருக்கின்ற இலங்கையின் இனக் கட்சி முறைமை, இல தீர்வு யோசனைகளு கொழும்பு பல்கலை விரிவுரையாளராக கொட்டாஞ்சேனை ந பணியாற்றுகின்றார்.

b - யாழ் மாவட்ட குப்பிழானைப் ாண்ட இவர் யாழ் பல்கலைக்கழகத்தில் பில் சிறப்புக் கலைமாணி பட்டத்தினையும், கழைக்கழகத்தில் அரசறிவியல் துறையில் த்தினையும் பெற்றவராவர். கூடவே ர்வதேச கற்கை நிலையத்தில் சர்வதேச டப் பின்னிலை டிப்ளோமாவையும், தேசிய பட்டப் பின் கல்வி டிப்ளோமாவையும் தற்போது இலங்கை சட்டக் கல்லூரியில் ாணவராக கற்று வருகின்றார். சரிநிகள் வி ஆசிரியர்களில் ஒருவராக பணியாற்றி டுரைகளை எழுதிய இவர் வீரகேசரி, ஆதவன், எங்கள் தேசம், விடிவு, மனிதம் டுகளிலும் ஆய்வுக் கட்டுரைகளை தொலைக்காட்சி, ஐரிஎன் தொலைக்காட்சி தாலைக் காட்சி, லண்டன் ரி.ஆர்.ரி. ண்டன் தீபம் தொலைக்காட்சி, சூரியன் லிபரப்புக் கூட்டுத்தாபனம், லண்டன் ஐபிசி
ஆப் வுக் கலந்துரையாடலை ார். இலங்கையின் அரசியல் யாப்புகள், குழும அரசியல், இலங்கையின் அரசியல் பங்கையின் இனப்பிரச்சினையும் அரசியல் ம் எனும் நூல்களை வெளியிட்டுள்ள இவர், க்கழகத்தில் சிறிது காலம் வருகை தரு பும் கடமையாற்றியுள்ளார். தற்போது ல்லாயன் கன்னியர் மடத்தில் ஆசிரியராகப்