கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பண்பாடு 1991.08

Page 1
சிங்கள நாடகக் கலை 1 மரபின் தாக்கம்
மகாகவி பாரதியின் தத் வியாக்கியானங்களும்
எண்பதுகளில் இலங்ை திறனாய்வு
விபுலானந்தர்: தமிழ் சாகித்திய விழா மார்ச்
அடிமைச் சின்னம் - க
பழந்தமிழ் இசை ஆரா அடிகளின் யாழ் நூலு!
இலங்கை பிராமிக் கல்ெ வலியுறுத்திய தஞ்சை
D
குறிப்புகள்
இந்துசமய, கலாசார அ
 
 
 
 
 

மரபில் தமிழ் நாடகக் கலை
3துவநோக்கும் பகவத் கீதை
கயில் தமிழ் இலக்கியத்
திறனாய்வு முன்னோடி
1991
விதை
ய்ச்சியும் சுவாமி விபுலானந்த D - சில தகவல்கள்
வட்டுகளி வன் முக்கியத்துவத் தை மாநாடு

Page 2
பதிப்பு: 1991 ஆகஸ்ட்
விலை ரூபா. 20/-
பண்பாடு பருவ இதழில் கூறப்பட்டுள்ள கருத்துக் களின் சொந்தக் கருத்து வெளியிடும் திணைக்கள
பலிப்பனவாகா.
வெளியீடு:
இந்துசமய, கலாசார அலுவல்கள் * காப்புறுதி இல்லம்",
96ng LD nr - ,
21, வொக்ஷோல் வீதி, கொழும்பு-02.

பிரசுரமாகியுள்ள் கட்டுரைகளில் கள் யாவும் கட்டுரையாசிரியர் க்களேயாகும், அவை இவ்விதழை த்தின் கருத்துக்களைப் பிரதி
- ஆசிரியர்.
திணைக்களம்,

Page 3
60)
(பருவ
LD6)fr 1 இதழ் 2
ஆசிரி க. சண்மு
உதவி ஆ எஸ். தெய்
வெளி
இந்துசமய, கலாசார அ

II (6
இதழ்)
1991 1 ஆகஸ்ட்
turf
கலிங்கம்
ஆசிரியர் வநாயகம்
*ܗܿ : ܨܵܕ݂ ܨܰܪ& à .à:
லுவல்கள் தின்ன்க்க்

Page 4
பொரு
சிங்கள நாடகக் கலை மரபில் தமி பேராசிரியர் ஈ
மகாகவி பாரதியின் தத்துவநோக்
சிதம்பர ரகுநா
எண்பதுகளில் இலங்கையில் தமிழ்
எம். ஏ. நுஃமா
விபுலானந்தர்: தமிழ் திறனாய்வு கே. எஸ். சிவகு
சாகித்திய விழா மார்ச் - 1991
எஸ். தெய்வதா
அடிமைச் சின்னம் - கவிதை
றெஜி சிறிவர்த்
பழந்தமிழ் இசை ஆராய்ச்சியும் சு
அடிகளின்
இலங்கை பிராமிக் கல்வெட்டுகளில்
ஆ. தேவராசன்
குறிப்புகள்
மேல்நிலையாக்கம்
தென்னாசியாவின் தேசி
கடிதங்களி லிருந்து • ጳ°
ஆய்வுத்திட்டம்

நளடக்கம்
ழ் நாடகக் கலை மரபின் தாக்கம்
. ஆர். சரத்சந்திர
கும் பகவத்கீதை
வியாக்கியானங்களும்
தன்
p இலக்கியத் திறனாய்வு
முன்னோடி
மாரன்
யகம்
தனT
வாமி விபுலானந்த யாழ்நூலும் - சில தகவல்கள்
ன் முக்கியத்துவத்தை
வலியுறுத்திய தஞ்சை மாநாடு
un Tg5b
01.
04
11
19
27
33
39
43
45
48
5 *
52

Page 5
சிங்கள நாடகச் தமிழ் நாடகக் கை
Guy r$hfluff RF.
(இந்து சமய, கலாசார அலுவல்கள் இணைந்து தமிழ் நாடக அரங்கு கலை கருத்தரங்கினை யூன் 27, 28ம் திகதிகளில் இக்கருத்தரங்கின் தொடக்க விழாவில் ஆங்கிலத்தில் நிகழ்த்திய உரையின் தமிழ் ெ
வரலாற்றின் எல்லா காலகட்டத்தி லும் தமிழ், சிங்கள பண்பாடுகளுக்கிடையே பரஸ்பர உறவுகள் இருந்து வந்தன. இன்றைய சிங்கள கிராமிய கலாசாரத்தை ஆராயும் பொழுது இவ்வுண்மை ஐயந்திரி பற வெளிப்படுகிறது. இலங்கையின் சில பாகங்களில் உள்ள சடங்கு முறைகள் பத்தினி, ஐயனார் ஆகிய இந்து தெய்வங் களின் வழிபாட்டினை ஆதாரமாகக் கொண் டவை 'கம்மடுவ' 'புனாமடுவ' போன்ற பத்தினி வழிபாட்டுடன் தொடர்புடைய சடங்குகள் சிலப்பதிகாரத்தை ஆதாரமாகக்
கொண்டவை. இந் து சடங்குகளை கொண்டே பலவிதமான நாட்டுக் கூத்து வடிவங்கள் உருவாகின. உதாரணமாக
'சொக்கறி" எனப்படும் கூத்து, வயலில் நெல்லை அறுவடை செய்து சூடுமிதிக்கும் களத்தில் ஆடப்படுவதாகும். 'கமத்த' என அழைக்கப்படும் சூடு மிதிக்கும் களம் வட்ட வடிவான அமைப்பைக் கொண் டது. 'சொக்கறி" கூத்து எழுந்த பின்னணி அதற்கு உரிய அரங்கை வட்டக்களரியாக அமைக்கும் தேவையை உண்டாக்கியது. புரா தன நாடக அரங்குகளான ஆங்கில நாட் டின் "மம்மர் " நாடகங்கள் சமஸ்கிருதத் தின் மெருகு பெற்ற நாடக வடிவங்கள் ஆகியவற்றிலும் இத்தகைய வட்டக் களரி முறையைக் காணலாம்.
தேரவாத பெளத்த மதம் இந்து மதத்திலிருந்துபல அம்சங்களை உள்வாங்கி யும் ஜீரணித்தும் கொண்டது. இந்து

கலை மரபில் ல மரபின் தாக்கம்
ஆர். சரத்சந்திர
திணைக்களமும், இலங்கை மன்றக் கல்லூரியும் பற்றிய பிரச்சினைகள் எனும் பொருளில் இலங்கை மன்றக் கல்லூரியில் நடத்தினர். பேராசியர் ஈ. ஆர். சரத்சந்திர அவர்கள் மாழி பெயர்ப்பு இது.)
கடவுளர்களை பக்தி செலுத்தி வணங்கும் முறைகள் பெளத்தத்தில் தமிழ் மரபு ஊடாக புகுந்து கொண்டன. உதாரணமாக விஷ்ணு ஸ்கந்தகுமார (கத்தரகம தெவியோ) சரஷ் வதி, கணேஷர் (கனதெவியோ) ஆகிய வணக்க முறைகள் பெளத்தரிடம் பரவி உள்ளன. சரஷ்வதி கல்விக்குரிய தெய்வமா கும். கணேசர் வியாபாரம், தொழில் முயற்சி ஆகியவற்றின் வெற்றியை வேண்டி வழிபடும் தெய்வம். இத் தெய்வங்களை பெளத்தர்கள் *" வழிபடுகின்றார்கள் ' என்று சொல்வதை விட காணிக்கைகளைச் செலுத்தி அவற்றின் பாதுகாப்பையும் அனுக்கிரகத்தையும் வேண்டுகிறார்கள் என் பதே பொருத்தமானது. வாழ்க்கையின் துன்பங்களையும் பி ர ச் சினை க ளையும் தணிப்பதற்கும் தீர்ப்பதற்கும் இக் கடவு ளரின் பாதுகாப்பு வேண்டப்படுகிறது. தேரவாத பெளத்தத்தின் இத்தகைய நோக்கு நிலை தம்மபதத்தில் உள்ள பின் வரும்வசனங்களில் வெளிப்படுகிறது.
மானிடர் பயத்தின் காரணமாக இயற்கை பொருட்களான மலை களையும் அடர்ந்த காடுகளையும் சோலைகளையும் வணங்குகிறார்கள். இது அவர்களுக்கு நிலையான ஆறு தலையும் துன்பங்கள் யாவற்றில் இருந்தும் விடுபட்டு கொள்வதற்கான வழியையும் கொடுப்பதில்லை".
சடங்கு முறையில் அமைந்த கிராமிய நாடக அரங்கினைப்பற்றியே நான் இது
1.

Page 6
வரை குறிப்பிட்டேன். ஆனால் இது உண்மையில் இரசிப்பதற்கும் சுவைப்பதற் கும் உரிய முழுமை பெற்ற நாடக வடிவம் அல்ல. அத்தகைய நாடகவடிவம் சிங்களத் தில் உருவாவதற்கு தமிழ் மரபில் வளர்ச்சி பெற்ற "தெருக் கூத்து' உந்துதலாக அமைந்தது. நவீன நகரம் சார் சிங்கள அரங்கக் கலை தெருக்கூத்தில் இருந்து உருவான நாடகம் மூலமே உருப்பெற்றது. இந்நாடகம் ஏனைய இலக்கிய வடிவங்க ளான கவிதை, புனைகதை ஆகிய வற்றை யும் விட உயர்ச்சி பெற்று முன்னணியில் நிற்கும் கலை வடிவமாக சிறப்பு ப் பெற்றுள்ளது.
தமிழில் இருந்து தெருக்கூத்து அல்லது வீதி நாடகம்தென்பகுதியில் உள்ள சிங்கள கிராமங்களுக்கு ஒருசுற்று வழியின் மூலம் வந்து புகுந்தது. தெருக் கூத்து முதன் முதலில் யாழ்பாணத்தில் உள்ள கத்தோ விக்கர்களால் சமயக் கருத்துக்களைப் பரப்புவதற்காகக் கை யா ள ப் பட்டது. கத்தோலிக்க சமய கருத்துக்களை கொண்ட கதைகளை சொல்வதற்கு தெருக் கூத்தை ஒரு சாதனமாக இவர்கள் கொண்டனர். இக் கூத்தை அவர்கள் 'கர்நாடகம்' என அழைத்தார்கள். என்ற தகவலை சேர். சிற்றம்பலம் கார்டினர் அவர்களுடைய நெருங்கிய உறவினர்களிடம் இருந்து நான் தெரிந்து கொண்டேன். இந்த வகை நாட கங்களை "பிலிப்புசின்னோ " என்பவர் எழுதினார். நாட்டுக் கூத்து என்று பரவ லாக அழைக்கப்படும் இந்த வகையான சனரஞ்சகமான கலை வடிவம் யாழ்பாணத் தில் மட்டுமன்றி கிழக்கு மாகாணத்திலும் நிலவியது. நாட்டுக் கூத்தில் தென்மோடி, வடமோடி என இருவகைகள் உள்ளன. வடமோடி என்னும வடிவமே சிங்கள வரால் பின்பற்றப்பட்டது. தென்மோடி நாடகக் கூத்தில் இன்னிசை, கலிப்பா, கொச்சகம், வெண்பா, பரணி, முதலிய இடைக்கால இசைப்பா வடிவங்கள் பயன் படுத்தப்பட்டன. இதற்கு மாறாக வட மோடி நாட்டுக் கூத்தில் பழைய இராகங் கள் பயன் படுத்தப்பட்டன. இந்த இனிய, இராகங்கள் சிங்கள கிராம வாசிகளையும்

நகரம் சார் நாடகப் பிரியர்களையும் கவர்ந்தன. 'டவர்' மண்டபத்தில் மேடை ஏற்றப்பட்ட நாடகங்களின் இனிமையான பாடல்கள் ஊடாக சிங்கள மக் க ள் மத்தியில் இந்திய இசையின் இராகங்களை ரசிக்கும் இரசனை உணர்வும் விருப்பும் வளர்ந்தன. தமிழ் நாட்டுக் கூத்து மரபில் உள்ள பல்வேறு வடிவங்களை ஒப்பிட்டும் ஆராய்ந்தும் "மனமே" என்னும் நாட கத்தை நான் எழுதி நெறிப்படுத்தி மேடை யேற்றினேன். இந் நாடகம் பார்வையா ளர்களின் பெருவரவேற்பை பெற்றது. அவர்களின் இதயத்தை தொட்டது. தமிழ் நாட்டுக் கூத்தில் உள்ள இனிமையான பாடல்களில் பரிச்சயம் பெற்று இருந்த சிங்கள நாடகப் பிரியர்கள் மனமே நாட கத்தின் இசையை விரும்பி இரசித்தனர். தமிழ் நாடகத்தின் இசை வடிவங்கள் நீண்ட வரலாற்றை உடையவை அவற்றின் அமைப்பு பரவலாக மக்கள் அறிந்துள்ள இராகங்களை தழுவியவை. உதாரணமாக 'உருத்து" என்பது பாடல்களுக்கு இணி மையை சேர்கின்றது 'உருத்து" என்பதன் பொருள் *"ஆபரணம்' என்பதாகும். உருத்து விரைந்து பாடப்படுவது இது பாடலுக்கு ஒரு தனிப்பட்ட இரசனையை யும் இனிமையையும் அளிக்கும். உருத்து வேறு இசைவடிவங்களில் இல்லாத நாட கத்தில் மட்டும் காணப்படுவதான ஒரு சிறப்பு அம்சமாகும். ஒரு குறிப்பிட்ட நாடக பின்னணிக்கு உருத்து விசேட மெருகு ஒன்றை கொடுக்கின்றது. நாடகத்தின் குறித்த கட்டத்தின் உணர்வு நிலையை வெளிக் கொணர இது உதவுகின்றது.
புராதன கூத்து வகைகளான 'சொக் கறி" "கோலம்" போல் அல்லாது. நாடகம் முழுமைபெற்ற மரபு ஒன்றை கொண்டு உள்ளது. அரங்கிலே நடித்துக் காட்டுவதில் பயனில்லை எனக் கருதப்படும் பகுதிகளை எடுத்துச் சொல்லும் கட்டியக்காரன் ஒருவன்நாடகத்தில் அதன் கதையை நடத் திச் செல்ல உதவுகிறான் இதே வேளை நடிப்பின் மூலம் வெளிப்படுத்தப்பட வேண்டிய சுவையான விடயங்கள். பார் வையாளருக்கு நடித்து காட்டப்படும்

Page 7
நாடகத்தில் நடிகமாந்தர் வட்டமாக சுற்றி வந்து ஆடும் மரபு உள்ளது. இதை சிங்களத் தில் பரிஸ்கிறமண என்பர் இவ்விதம் சுற்றி ஆடுவதால் நடிகர்கள் மேடையில் தோன் றும் இடம் மாற்றப் படுகிறது. இம்முறை சமஸ்கிருத நாடக மரபிலும் உள்ளது. பொருட்களை கொண்டு சித்தரித்து காட்ட வேண்டிய செயல்களை அங்க அபிநயத்தின் மூலம் நடிகர்கள் சித்தரிப்பர். இம் முறை தொன்மைக்கால அரங்க முறையுடன் ாடகம் கொண்டுள்ள நெருங்கிய உறவை டுத்துக் காட்டுகிறது. ஆந்திர பிரதேசத் ல் "பாகவ மேள நாஇரrசரத்தினம் அரங்க கலை உள்ளது. இதே போல்
இந்து போர்டு இராசரத்தினம் எ யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்; சுப்பிரமணி ராகத் திகழ்ந்தவர் காரைநகர் ச. அரு தொடர்பினாலே சைவ வித்தியாவிருத்தியி
1923ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இராமநாதன், சேர். வைத்திலிங்கம் துரைசா பெற்ற சைவ வித்தியா விருக்கிச் சங்கத்தில் கொண்டவர். சைவ வித்தியா விருத்திச் சங்க கூடங்களைத் தாபிக்த்தோடு பிறர் ஆரம்பி நடத்தி வந்ததாகும்.
t சைவப் பள்ளிகளுக்கு வேண்டிய 6 கோப்பாய் பயிற்சிக் கல்லூரி முழுவதாக வித்தியாவிருத்திச் சங்கம் 1982 ஆம் ஆண் சைவாசிரியர் பயிற்சி நிறுவனத்தைத் தெ பணி மூலம் அக்காலத்திற் சைவக் கல்வி : 1928 ஆண்டிலே சைவ அநாதசாலை பிள்ளை போன்றோர் உதவியுடன் ஆர பெண்களும் சேர்க்கப்பட்டனர். சைவ அறி வீடொன்றில் ஆரம்பிக்கப்பட்டதாகும்.
1924 இலே சட்டசபைப் பிரதிநிதிய அச்சபையிலே சைவருக்குத் தீமையான மாற்றமடைய காரணமாயிருந்தவர்களில் சைவப்பள்ளி தொடங்கவும் ஆரம்ப கா6 வாய்ப்பினை அடையவும் இக்கால கட்ட குறிப்பிடத்தக்கது.

اسسسسسسسسسسسسسسسسسـسـفلقتيليس سنقصكمصطلعهمقعـ
乐。1884-1970
வங்காளத்தில் 'யாத்திரா" என்னும் வடி வம் உள்ளது. சிங்கள மக்கள் மத்தியில் காணப்படும் நாட்டுக் கூத்தும் இவை போன்றே தொன்மைக்கால சமஸ்கிருத நாடகத்தில் இருந்து உருவான சனரஞ்சக மான நாடக வடிவமாகும் இவ்வரங்கக் கலை வடிவங்கள் உயர் குழாம் ஒன்றின் குறுகிய வட்டத்தில் இருந்து நாடகத்தை விடுவித்து மக்களின் மத்தியில் எடுத்துச் செல்வதற்கு செயற்பட்ட முயற்ச்சிகளின்
தமிழில் க. சண்முகலிங்கம்
ன்று சிறப்பிக்கப்பெற்ற இராசரத்தினம் ரியம் என்பவரின் புதல்வர். வழக்கறிஞ நணாசல உபாத்தியாயர் முதலானோரின் லே கவனம் செலுத்தியவர்,
ஒன்பதாம் தேதி சேர். பொன்னம்பலம் மி போன்றோரது ஆதரவுடன்"ஆரம்பிக்கப் ன் வளர்ச்சியிலே முக்கிய பங்கு எடுத்துக் கம் தமிழ்ப் பிரதேசங்களிலே புதிய பள்ளிக் த்தவற்றையும் பொறுப்பேற்றுத் திறம்பட
சைவாசிரியர்களை அரசாங்கம் நடத்திய நிறைவேற்ற முடியாத நிலையிலே சைவ டு ஒக்தோபர் மாதம் திருநெல்வேலியிலே ாடங்கியது. அது பயிற்றிய ஆசிரியர்கள் உயிருடன் இயங்கக் கூடியதாயிற்று.
திருநெல்வேலி டாக்டர் எஸ். சபாபதிப் ம்பிக்கப்பட்டது. 1938 இலே அநாதைப் நாதசாலை ஏழு மாணவருடன் வாடகை
பான இராசரத்தினம் ஏழு வருடம் நீடித்த பட்சபாதமான கல்விச் சட்டங்கள் பல ஒருவராவர், கிறித்தவ பள்ளிக்கு அருகிற் லம் முதல் உதவி நன்கொடை பெறும் ந்திய சட்டசபை காரணமானது என்பது
நன்றி - இந்துக்கலைக்களஞ்சியம்
பகுதி இ. பக்கம் 192-193. ஆசிரியர் பேராசிரியர் பூலோகசிங்கம்

Page 8
மகாகவி பாரதியின்
பகவத் கீதை வி
சிதம்பர
('பாரதி - காலமும் கருத்தும்" எனும் யொன்றினை இங்கு நன்றியுடன் வெளியி ரகுநாதன் பிரபல தமிழ் இலக்கிய விமர்ச வரலாற்றுப் பின்னணியில் நவீன கால இந் ளாலும். பகவத் கீதை எவ்விதம் வியாக்கிய யின் தத்துவநோக்கு இச் சிந்தனைப் பின்ன யும் ரகுநாதன் ஆராய்கின்றார்.
இருபதாம் நூற்றாண்டில் இந்தியாவி இந்தியச் சிந்தனையையும், கலைகள் இலக் இருப்பதை அறிந்து கொள்வதற்கு இக்கட்
குருக்ஷேத்திரப் போர் களத் தி ல் கிருஷ்ணனுக்கும் அர்ஜ"னனுக்கும் நடந்த சம்வாதமாக மகா பாரதத்தில் இடம் பெற்றுள்ள பகவத் கீதை இந்தியத் தத் துவ உலகில் இன்றும் செல்வாக்கு வகித்து வரும் நூலாகும். இந்நூலுக்கு ஆதிசங்க ரர் முதல் இந்தக் காலத்து ஆசாரியர்கள் வரையிலும் பலர் சமய நோக்கில் பற்பல வியாக்கியானங்களையும் விரிவுரைகளையும் எழுதி வந்துள்ளனர் என்ற உண்மை ஒரு புறம் இருக்க, அரவிந்தர், திலகர், மகாத்மா காந்தி, ராஜாஜி முதலியோர் தொடங்கி, காந்தியின் சீடரும் பூதான இயக்கத் தலைவருமான வினோபா பாவே ராஷ்ட்ரியா சுயம் சேவச் சங்கத்தின் *குருஜி"யான கோல்வால்கர் முதலியோர் வரையிலான அரசியல்வாதிகளும் விளக்க வியாக்கியானங்கள் எழுதி வந்துள்ளனர். பாரதியும்கூட, தனது புதுச்சேரி வாசத் தின்போது, பகவத் கீதையைத் தானும் தமிழில் மொழிப்பெயர்த்து. அதற்கு ஒரு நீண்ட முன்னுரையையும் எழுதினான். (ஏனோ இந்த மொழிபெயர்ப்பும் முன் னுரையும் பாரதி உயிர் வாழ்ந்த காலத் தில் அச்சேறி வெளிவரவில்லை. பின்னர் தான் வெளியிடப்பட்டன). எனினும் ,
4.

i தத்துவநோக்கும் பாக்கியானங்களும்
ரகுநாதன்
நூலின் பக்கம் 174 - 186 வரையுள்ள பகுதி டுகின்றோம். இந்நூலின் ஆசிரியர் சிதம்பர
கராவர். இந்தியச் சுதந்திரப் போராட்ட தியதத்துவ ஞானிகளாலும் சிந்தனை யாளர் ானம் செய்யப்பட்டது என்பதையும் பாரதி ாணியில் எவ்விதம் உருப் பெற்றது என்பதை
ல் தோன்றிய நவ வேதாந்தக் கோட்பாடு கியம், பண்பாடு ஆகிய வற்றையும் பாதித்து நிரை பயன்படும்.)
நாம் இவற்றையெல்லாம் இங்கு ஆராயப் புகவில்லை. சமய நூலாகப் பன்னெடுங் காலமாகப் பயிலப்பட்டு வந்த ஒரு நூலை , அரசியல்வாதிகள் ஏன் தத்தம் நோக்கில் விளக்க முற்பட்டார்கள். அதிலும் குறிப் பாக பாரதி சம்பந்தமாக நாம் பரிசீலித்து வரும் கால கட்டத்தில் அந்நூல் எவ்வாறு வியாக்கியானம் செய்யப்பட்டது. பயன் படுத்தப்பட்டது என்பதை மட்டுமே நாம் இங்கு பரிசீலிப்போம்.
'நாவலாசிரியரான பங்கிம் சந்திர சாட்டர்ஜிதான் பத்தொன்பதாம் நூற் றாண்டில் கீதையை வியாக்கியானம் செய்து, அதிலிருந்து நேரடியான அரசியல் உத்வேகத்தைப் பெற முனைந்த, தற்கால கட்டத்தின் முதல் சிந்தனையாளராவர்" என்று திலிப் போஸ் எழுதுகிறார். (Bhagavat Glta and Our National Movement - Dilip Bose — uši 8). Fff. Luiši Guð சந்திரர் (1838-1894) பகவத் கீதையை ஏன் அவ்வாறு விளக்க முற்பட்டார்? உண் மையில், அன்னியராட்சிக்கு எதிராகத இந் தியாவில் தேசிய உணர்ச்சி விழித்தெழுந் போது, இந்தியா தனது தேசிய கெளர வத்தை நிலைநாட்டிக்கொள்ள வேண்டி

Page 9
யிருந்தது. இதனால் இந்தியாவின் தனித் தன்மையை இனம் கண்டு கூறும் அவசி யமும் தேட்டமும் அதிகரித்தன. இந்தப் போராட்டத்தில், தமக்கு ஒரு தேசிய அந்தஸ்தை அளிக்க மறுத்துவந்த அன்னிய ஆட்சியாளர்களின் முன்னால், *உன் னுடைய நாகரிகத்தையும் சிந்தனை வளத் தையும் காட்டிலும் மேலான தொன்மை வாய்ந்த நாகரிகத்தையும் சிந்தனை வளத் தையும் பெற்றவர்கள் நாங்கள். பார் அவற்றை!" என்று வீசியெறிந்து பேச வேண்டிய வேட்கையும் அவசியமும் இந் தியத் தேசியவாதிகளுக்கு ஏற்பட்டது. மேலும், இவற்றை நாட்டு மக்களுக்கும் உணர்த்தி அவர்களது நம்பிக்கையையும் போராட்ட உணர்வையும் அதிகரிக்கவும் வேண்டியிருந்தது. எனவேதான் அவர்கள் பகவத் கீதை முதலிய பண்டை நூல்க ளுக்கு விளக்க வியாக்கியானங்கள் கூற வும், அவற்றையும் தமது போராட்டத் துக்குப் பயன்படுத்திக்கொள்ளவும் முற் பட்டனர். பங்கிம் சந்திரரும் அவ்வாறு தான் கீதையைப் பயன்படுத்தினார். புது விளக்கம் கூறினார். சரி, அவர் எவ்வாறு அதனை விளக்க முயன்றார்? இதனை மேற்கூறிய நூலில் திலிப் போஸ் ஒரளவு விளக்கியுள்ளார். அதன் சாரம் வருமாறு:
பகவத் கீதைக்கு எழுதப்பட்டுள்ள வியாக்கியானங்களில் ஆதிசங்கரரின் (788820) வியாக்கியானமே நமக்குக் கிடைப் பனவற்றில் ஆகத் தொன்மையானது. அவரது கருத்தின்படி பிரம்மம் ஒன்றே சத்தியமானது: நித்தியமானது. மற்றபடி நாம் கண்ணால் காணும் இந்தப் புற உலகம் முழுவதும் - அதுவும் பரம் பொருளின் தோற்றமே எ ன் ப தை உணர்ந்து கொள்ளாத வரையில்-மாயை தான்; அவித்யையின் விளைவுதான். இந்த மாயையிலிருந்து விடுபடச் செய்வது ஆத்ம ஞானமே யாகும்; இந்த ஞானத் தைப் பூரணமாக உணரப் பெற்றுவிட் டால், அதுவே கர்மத்துக்கு எதிர்மறை யாகிவிடும். அதாவது சங்கரரின் கருத் துப்படி, ஆத்மாவைச் சுத்திகரிப்பதற்கு, புனிதப்படுத்துவதற்கு கர்மம் அத்தியா வசியமானதே என்றாலும், ஞானத்தை

எய்தியவுடன் கர்மம் அற்றுப்போகிறது. இதன்மூலம் அவர் ஞான-கர்ம சமுச் சயத்தை, அதாவது. இரண்டின் சேர்க் கையையும் நிராகரித்து விடுகிறார். சுருங் கக்கூறின் இது உடலையும் உள்ளத்தை பும் இரு வேறாகப் பிரித்துக் காணும் விளக்கமாகவே இருந்தது.
அன்னிய ஆட்சியாளர்கள் மறுக்க முனைந்து வந்த இந்தியத் தனித்தன்மை யைத் தேடிக் காண முற்பட்ட இந்திய தேசியவாதிகளுக்கு, குறிப்பாக, பங்கிம் சந்திரருக்கு சங்கரரின் ஞானபாதம் மிக வும் எதிர்மறையான தன்மை படைத்தது. என்றும், அது செயலின்மைக்கே வழி வகுக்கும் என்றும் பட்டது. எனவேதான் பங்கிம் சந்திரரும், அவரது வழியில், பின்னர் விவேகானந்தரும், திலகரும் பக வத் கீதையின் கர்ம யோகத்தை வலி யுறுத்தத் தொடங்கினர் என்று எழுதுகி றார் திலிப் போஸ்.
பங்கிம் சந்திரர் குரு-சிஷ்ய சம்வாத பாணியில் தர்ம தத்துவம், பூரீமத் பகவத் கீதை என்ற இரு நூல்களை எழுதினார். அதில் அவர் அனுசீலன் என்ற கருத்தை, அதாவது உடலையும் உள்ளத்தையும் (ஆம், உள்ளத்தை-ஆன்மாவை-மட்டும் அல்ல) பண்படுத்த வேண்டும் என்ற கருத்தை முதன்முதலில் வெளியிட்டார். இந்த நூல்களில் அவர் சுகம், துக்கம், தர்மம் என்பன என்ன என்ற கேள்வியை ஒழுப்பி, அதற்கு அனுசீலனே பதில் என்று கூறி விடுகிறார். அதாவது உடலையும் உள் ளத்தையும் பண்படுத்துவதே மனித தத்து வம் எனக் கூறுகிறார். கர்மம் என்பது என்ன என்பதைப் பற்றிக் கூறும்போது, அது அவரவர்களின் சுதர்மத்தை நிறை வேற்றி வருவதே என்றும், அதுவே கர் மத்துக்கு அடிப்படை என்றும் கீதை கூறு கிறது. இந்தச் சுதர்மந்தான் அனுசீலன் என்றார் பங்கிம் சந்திரர். இதை அவர் எவ்வாறு விளக்கிக் கூறினார்? அவர் இவ்வாறு எழுதுகிறார்;
"கீதையின் இந்தப் பகுதியின் நோக் கம், சுதர்மத்தை வளர்த்துக்கொள்ள வேண்டிய அத்தியாவசியத்தை நிரூபிப்ப தேயாகும். சுதர்மம் என்று கூறும்போது
5

Page 10
படித்த சமூகத்தினருக்கு (இங்கு ஆங்கி லம் படித்தவர்களையே இது குறிக்கின் றது.) இதன் அர்த்தம் புரிவது சிரமமாக இருக்கக்கூடும். எனவே, நாம் இங்கு அதற்கு இணையான ஆங்கிலப் பதமான Duty (கடமை) என்பதைப் பயன்படுத்தி னால் மேற்கொண்டு பிரச்சினை ஏதும் இராது. கீதையின் இந்தப் பகுதியின் நோக்கம் இதுதான்; இந்தக் கடமையை நிறைவேற்றும் அத்தியாவசியத் தேவையை நிரூபிப்பதுதான். ஒவ்வொரு மனிதனும் ஒரே விதமான சுதர்மத்தைக் கொண்டி ருக்கவில்லை. சிலருக்கு அது மற்றவர் களைத் தண்டிப்பதாக இருக்கிறது; ஏனை யோருக்கு (மற்றவர்களை) மன்னிப்பதே சுதர்மமாக இருக்கிறது. போர் வீரனின் கடமை எதிரியைக் காயப்படுத்துவது தான்; டாக்டரின் சுதர்மம் காயப்பட்ட வனுக்குச் சிகிச்சை அளிப்பதுதான் மணி தன் செய்ய வேண்டிய காரியங்கள் பல தரப்பட்டவை. அவனது சுதர்மமும் அதற்கு ஏற்பவே இருக்கும். ஆயினும் எல்லாச் சுதர்மங்களிலும், போர் புரிவதே மிகவும் கொடியதாகும். ஒருவர் போரைத் தவிர்க்க முடியுமென்றால், அதனைப் புரி வதும் எவரது கடமையும் அல்ல. ஆயி னும் இந்தக் கொடிய செயலைச் செய்வது தவிர்க்க முடியாத அத்தியாவசியமாகி விடும் நிலைமையும் எழுவதுண்டு. ஒரு தைமூர் லாங் அல்லது நாதிர் ஷா உங்கள் நாட்டைச் சுட்டுப் பொசுக்க, கொள்ளை யடிக்க வருகிறான். அத்தகைய சந்தர்ப் பங்களில் எவருக்கும் எப்படிப் போரிட வேண்டும் என்பது தெரியும். அவருக்கு அப்போது போர் புரிவது தவிர்க்க முடி யாததாகிவிடுகிறது; அத்தியாவசியமான சுதர்மமாகி விடுகிறது." (பங்கிம் சந்திர ரின் நூல்கள் - தொகுதி. 1. பூணி மத் பக வத் கீதை - பக் 717).
ஒருவன் போரைத் தவிர்க்க முடியு மென்றால், போர் புரிவது அவனது கடமை அல்ல என்று பங்கிம் சந்திரர் கூறுகிறார். ஆயினும் அதே epä86), தர்ம யுத்தம் எனக் கூறக்கூடிய போரை ஒருவன் புரிந்துதான் ஆகவேண்டும் என்
6

றும் அவர் கூறுகிறார். மேற்கூறிய பகுதி யில், தைமூரின பெயரையும் நாதிர் ஷா வின் பெயரையும் அகற்றிவிட்டு அதற்குப் பதிலாக, பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் என்று வாசித்துப் பார்த்தால், பங்கிம் சந்திரர் சுதர்மத்துக்கு எவ்வாறு மறைமுகமாக ஒரு புதிய அர்த்தபாவத்தை வழங்குகிறார் என் பதை புரிந்து கொள்ளலாம். மேலும், குரு-சிஷ்ய சம்வாதபாவத்தில் எழுதப்பட் டுள்ள இதே நூலில், குரு சிஷ்யனுக்கு இறுதி யாக இவ்வாறு கூறுகிறார்: "எல்லாத்தர் மங்களிலும் மிகவுயர்ந்தது தாய் நாட் டின் மீது கொள்ளும் அன்புதான் என்பதை நீ மறந்து விடாதே"
எனவே சுதர்மத்தைப் புரிவதற்காக ஒவ்வொருவனும் கர்மத்தின் மூலம் தனது உடலையும் உள்ளத்தையும் பண்படுத்திக் கொள்ளவும் வலுப்படுத்திக் கொள்ளவும் வேண்டும் என்றும், அதுவே அனுசீல மார்க்கம் என்றும் பங்கிம் கூறியதைப் புரிந்து கொண்டால், இந்தக் கட்டுரையின் முற்பகுயில் குறிப்பிடப்பட்ட வங்க நாட் டின் புரட்சிகர இளைஞர்களது சங்கத்துக்கு அனுசீலன் சமிதி என்ற பெயரை அவர் கள் ஏன் தேர்ந்தெடுத்தார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும்.
விவேகானந்தரும் இத்தகைய கர்ம யோகத்தையே வலியுறுத்தினார், அவரும் உடலை வலுபடுத்திக் கொள்ள வேண் டும். உடல்வலு இல்லாமல் உள்ளம் வலுப் பெறாது என்றும், எனவே உடலை வலுப்ப டுத்திக் கொள்வது அவசியம் என்றும் கூறி னார். இதற்கு இக்கட்டுரையின் முற்பகுதி யில் கூறப்பட்டுள்ள மேற்கோள்களே சான் றாகும், விவேகானந்தர் கீதையை பலம் பெறுவதற்கான ஒரு மார்க்கமாகவே அர்த் தப் படுத்தினார், 1900 ஆம் ஆண்டில் அவர் சான் பிரான்சிஸ் கோவில் பேசும் போது இவ்வாறு கூறினார்: ‘ஒரே ஒரு பாவம்தான் உண்டு. அதுதான் பலவீனம், நான் சிறுவனாக இருக்கும்போது, மில்ட்ட னின் 'இழந்த சுவர்க்கத்தைப்படித்தேன் அதில் நான் மதிக்கக்கூடிய ஒரே நல்ல மனிதனாகக் காட்சியளித்தவன் சாத்தான்

Page 11
தான். எவனோருவனின் ஆத்மா பலவீனப்படுவதில்லையோ, எதையும் இஞ் சாது எதிர்நோக்குகிறதோ, போரீாடிச் சாகவும் துணிகிறதோ அவனே ஞானி. சகல பலவீனமும் சகல அடிமைத்தனமும் கற்பனைதான். அதனைப் பார்த்து ஒரு வார்த்தை சொன்னால், அவை ஒடி மறைந்து போய்விட வேண்டும். பலவீன் மடையாதீர்கள். வேறு வழியே இல்லை. நிமிர்ந்து நில்லுங்கள்; பலத்தோடு இருங் கள், பிறகு பயமாவது, மூடநம்பிக்கையா வது? சத்தியத்தை நேர்நின்று நோக்குங் கள். சாவு வந்தால்-அதுவரட்டும்ே. நாம் சாகவும் தயாராயிருக்கிறோம். இதுதான் Brrøór S|stólsög eruðulb ...” (Thoughts on Gita-பக், 73-74).
கீதையைப் படித்து விமோசன மார்க் கத்தைத் தெரிந்து கொள்வதைக் காட்டி லும் கால்பந்து விளையாட்டின்மூலம் அதனைத் தெரிந்து கொள்வது சுலபம் என்ற பொருளில் விவேகானந்தர் கூறிய கூற்று ஒன்றையும் முன்னால் பார்த்தோம். உண்மையில், விவேகானந்தரின் பார்வை யில் கால் பந்து விளையாட்டு மைதானம், "கீதா ரகசிய"த்தைக் கறறுக்கொடுக்கும் களமாகக் காட்சியளித்தது எனலாம். சற்று யோசித்துப் பார்ப்போம்: கால்பந்து விளை யாட்டு மைதானத்தில் விளையாட்டு வீரர் கள் இரு கட்சிகளாகப் பிரிந்து விளையாடு கின்றனர். எதிர்க்கட்சியில் தனக்கு வேண் டிய நண்பர்கள், உறவினர்கள், மதிப்புக் குரிய மூத்தவர்கள் எவரும் இருக்கலாம். எனினும் விளையாட்டு வீரன் ஒருவன் எதிர்க்கட்சியில் அத்தகையோர் யாரேனும் இருக்கிறார்களா என்று பாராமல், அவர் கள் எந்தப் பக்கம் நிற்கிறார்கள் என்பதை மட்டுமே பார்த்து. தனக்கும் தன் கட்கிக்கும் வெற்றி தேடித் தரும் ஒரே நோக்கத்தோடு விளையாட்டில் ஈடுபடுவதுதான் அவனது கடமை; தர்மம், சுதர்மம். இல்லையா? குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் அர்ஜ" னன் எதிர்த்தரப்பில் தனது ஆசாரியரான துரோணரும், தனது மதிப்புக்குரிய பீஷ் மரும் மற்றும் உற்றார் உறவினரும் நிற் பதைக் கண்டு, அவர்களை எதிர்த்துப்போர் செய்வது எப்படி என்று தயங்கியபோது,

# ற்பவர்கள் யார் என்று பாராதே,
,ள். எந்தப் பக்கம் நிற்கிறார்கள்* نے தர்மத்தின் பக்கமா, அதர்மத்தின் பக்கமா என்று பார் என்று கூட்டிக்காட்டி அர்ஜுனனுக்குக் கண்ணன் அவனது சுதர் மத்தைச் சுட்டிக் காட்டியதுதானே பகவத் கீதை!
சொல்லப்போனால், பால கங்காதர திலகரும்கூட கீதா ரகசியத்தை இப்படித் தான் புரிந்து கொண்டார் எனலாம். திலகர் தமது 'கீதா ரகசிய'த்தை மாண்டலே சிறையிலிருக்கும் போதுதான் எழுதினார்; சிறையிலிருந்து அவர் வெளிவந்த பின் 1915ல் தான் அந்நூல் வெளியாயிற்று) ஆயினும், அவர் 1902 ஆம் ஆண்டு நாக் பூரில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய போதே, "கீதா ரகசியம்' பற்றிய கேந் திரக் கருத்தை முதன்முதலில் வெளியிட் டார் என்று திலகரின் வரலாற்று ஆசிரியர் கள் கூறுகின்றனர். அந்த உரையின் போது அவர் இவ்வாறு கூறினார்: * கீதை வேதாந்தத்தைப் போதிக்கிறது. அது விமோசனத்துக்கு வழி காட்டுகிறது என் பன போன்ற, கீதை பற்றிய ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள பல்வேறு கருத்துக் களைப்பற்றி நான் பேசப் போவதில்லை, மனம் ஐயப்பாடுகளால் அலைக்கழிந்து. செயலுக்கான மார்க்கத்தைத் தீர்மானிக்க இயலாதபோது செயலுக்கான பாதையைக் கீதை காட்டுகிறது என்றே எனக்குத் தோன்றுகிறது. பாரத யுத்தத்தின் தொடக் கத்தில் அர்ஜூனனின் மனநிலை அப்படித் தான் இருந்தது; கீதையைக் கேட்ட பிறகு, அவனது சந்தேகங்கள் அகன்றுவிட்டன. அவன் மனம் அமைதியடைந்தது. கிருஷ்ண னின் உபதேசப்படி அவன் செயல் பட்டான்.' மேலும் அவர் பேசும்போது, செயலின் விளைவுகளுக்குப் பயந் து வாழ்க்கையைத் துறப்பது, தப்பித்து ஒடும் விமோசன மார்க்கமாகும் என்றும், கீதை தனி நபரின் கடமை யுணர்ச்சியை விழித் தெழச் செய்கிறது என்றும், நிஷ்காமிய மான முறையில் செயல்படக் கற்றுக் கொடுக்கிறது என்றும் கூறி, ‘என்னைப் பின்பற்று; போரிடு!" என்ற கீதா வாச
7

Page 12
கத்தின் பால் கவனத்தைப் பிரத்தியேக மாக ஈர்த்தார் என்றும் வரலாற்றாசிரியர் as Gir ø5pólůLS "Gair GMTGOTř. (Loknimanya Titak -G. P. Pradhan; A. K. Bhagvat ...luš. 358 - 359). அதாவது விடுதலைப் போராட் டத்தில் ஈடுபட்டுள்ள வீரர்கள் அன்னிய ஆட்சியை அகற்றுவதில், நாம் கொண்ட கொள்கையின் புனிதத் தன்மையைப்பற்றி மட்டும் கருதிப் பார்க்க வேண்டுமேயல்லாது அதற்கான வழிமுறைகளைக் குறித்துச் சஞ்சலப்படக் கூடாது என்பதே திலகரின் சகீதா ரகசிய'த்தின் சாரமாக இருந்தது.
சொல்லப் போனால், பங்கிம் சந்திரர் தொடங்கி, திலகர் வரையிலும், Liles6 ġ5 கீதையை அரசியல் நோக்கங்களோடு அர்த் தப்படுத்தி வந்த அரசியல்வாதிகள் பலரும், கீதையில் காணப்படும் மூன்று அம்சங் களையே பெரிதும் வலியுறுத்தி வந்தனர். அதாவது: (1) ஆத்மா அழிவற்றது; அழிக்க முடியாதது. (2) எவனொருவன் துன்பங்களுக்கு மத்தியிலும் துவளாமல், இன்பங்களின்பால் வேட்கை இல்லாமல் இருக்கிறானோ, எவனிடமிருந்து கோபமும் பயமும் பற்றும் விலகிப் போய்விட்டனவோ, அவனே ஞானி; அவனே லட்சிய மனிதன்; அவனே ஸ்திதப் பிரக்ஞன். (3) கர்ம யோகம்-அதாவது நிஷ்காமியமாக, பற் றற்று, பலனை எதிர்பாராது கருமத்தைகடமையை ஆற்றுவது. சுருங்கக் கூறின், தேச விடுதலைக்காகப் போராடும் வீரர் கள் மரணத்தைக் கண்டு அஞ்சாமல், துன்பங்களைக்கண்டு கலங்காமல், பந்த பாசங்களுக்கு இடங்கொடாமல், கருமே கண்ணாகத்தமது போராட்டத்தை நடத் திச் செல்ல வேண்டும் என்பதே இதன் சாரமாக இருந்தது.
எனவேதான் அன்றைய வங்கப் புரட்சி யாளர்கள் மத்தியில் பகவத் கீதை ஒரு வேத நூல்போல் பிரபலமாக இருந்தது. ரகசியச் சங்கங்களில் சேரும் இளைஞர்கள் ஒரு கையில் வாளும் மற்றோரு கையில் பகவத் கீதையையும் தாங்கி, காளியன்னை யின் சந்நிதியில், தாய்நாட்டுக்காக உயிரை யும் கொடுத்துப்போரிடத் தயாராயிருப்ப தாகச் சபதம் எடுத்துக் கொண்டனர்.
8

விவேகானந்தரின் தம்பி பூபேந்திரநாத தத்தரும், அரவிந்தரின் தம்பி பரீந்திர கோஷ"ம் ஆசிரியர்களாகவிருந்து நடத்திய *யுகாந்தர்' பத்திரிகையின் தலைப்பில்.
'பார்த்தா! எப்போதெப்போது தர் மத்துக்குப் பங்கமுண்டாக அதர்மம் தலை தூக்குகிறதோ, அப்போதெல்லாம் நான் தோன்றுகிறேன். நல்லோரைக் காப்பதற் காகவும், தீங்கு செய்வோரை நாசம் செய்வதற்காகவும் தருமத்தை நிலைநாட்டு வதற்காகவும் நான் யுகந்தோறும் வந்து வந்து பிறக்கிறேன்."
(பகவத் கீதை-4, 7, 8).
என்ற சுலோகமே அதன் லட்சிய வாசகங்களாகப் பொறிக்கப்பட்டிருந்தன, இந்த யுக மாற்றத்தைக் குறிக்கும் விதத்தி லேயே அந்தப் பத்திரிகையின் பெயரும் (யுகாந்தர்) இருந்தது.
மேலும், பின்னால் ஆங்கிலேய ஆட்சியா ளர்கள் புரட்சியாளர்களின் ரகசியச் சங்கங் களைச் சோதனையிட்டபோது, அவர்கள் அங்கிருந்து பகவத் கீதைப் பிரதிகளையும் கைப்பற்றினர். உதாரணமாக, டாக்கா நகரிலிருந்த அனுசீலன் சமிதியில் 17 பகவத் கீதைப் பிரதிகளையும், அரவிந்தரின் தம்பி பரீந்திர கோஷின் மாணிக்தோலா தோட்ட ஆசிர மத்திலிருந்து மூன்று பிரதிகளையும் அவர்கள் கைப்பற்றினர் இதனால்தான் 1810 ஆம் ஆண்டில் ஸர் ஹெர்பர்ட் ரிஸ்லே என்பவன் வைசிராயின் சபையில் படுமோசமான பத்திரிகைச் சட்டம் ஒன் றைப் பிரேரேபித்துப் பேசிய காலத்தில் ஏனைய பலவற்றோடு, "உணர்ச்சி வசமான கிறிஸ்தவர்களுக்கு "கிறிஸ்துவின் வழியில்? (Imitation of Christ) 6 TGör so grav GT6i Gaungpy தோன்றுகிறதோ, அதுபோல் இந்துக் களுக்குத் தோன்றும் ஒரு நூலான கீதையி லுள்ள கிருஷ்ண-அர்ஜுன சம்வாதம்ஆகிய அனைத்தும் உணர்ச்சி வசப்படும் உள்ளங்களில் ஆவேசக் கனலை உருவேற் றும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றன’’ என்று பேசினான். இதேபோல் 1918 ல் வெளியிடப்பட்ட ரெளலட் கமிட்டி அறிக்

Page 13
கையும், புரட்சி இயக்கத்தின் மீதும் தேசிய இயக்கத்தின் மீதும் பகவத் கீதைக்கு இருந்த செல்வாக்கைப் பற்றிக் குறிப்பிட்டது. அந்த அறிக்கையைத் தயாரிப்பதற்கு, ஜேம்ஸ் காம்பெல் கெர் என்பவன். ரெளலட்டுக்கு எழுதிக் கொடுத்த ரகசிய அறிக்கையில் (இப்போது இது வெளியிடப்பட்டுள்ளது.) அவன் அனுசீலன் சமிதியைப் பற்றி எழுது கையில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தான்: "இந்தச் சங்கத்தில் ஒர் உள்வட்டம் இருந்தது; அதில் அதன் உண்மையான நோக்கத்துக்கும், ராஜத் துரோகத்துக்கும் முற்றிலும் தயார் செய்யப்பட்டவர்களே இருந்தனர்; அவர்களுக்குப் பிரதானமாக நீதிநெறி வகுப்பு எனக் கூறப்படும் வகுப் பின் மூலமே பாடம் கற்றுக் கொடுக்கப் பட்டது; இதன் போது கொலை புரிவதை நியாயப்படுத்தும் வகையில் பகவத் கீதை அர்த்தப்படுத்தப்பட்டது.' (PoliticalTrouble in India — 1907 — 1917, J. C. Kerr பக். 343).
ஆத்மா அழிவற்றது என்ற கீதையின் உபதேசம் உண்மையில் புரட்சி வீரர்களை அஞ்சா நெஞ்சர்களாக்கியது. வரலாற்று ஆசிரியர் மஜும்தார் இவ்வாறு எழுதுகிறர்: **அழியாத ஆன்மாவில் இருந்த உறுதியான நம்பிக்கை, புரட்சிகர இளைஞர்களை மரண பயத்தையும் உடல் வேதனை பற்றிய பயத் தையும் உதறித் தள்ளுமாறு செய்தது. அவர்கள் கொண்டிருந்த சமய நோக்கு. தேசத்தின் வடிவிலேயே கடவு ளை க் கண் டுணருமாறு அவர்களைச் செய்தது; தாய் நாட்டின் பலிபீடத்தில் உயிர்த் தியா கம் செய்யவும் அவர்களைத் தயாராக் Sugi. (History of Freedom Movement, in India - R. C. Mazumdar. Gaste, S-2). ஆத்மா அழிவற்றது என்ற இந்த உபதேசம் புரட்சிகர இளைஞர்களின் மனத்தில் எவ் வாறு ஆழப்பதிந்து உருவேறியிருந்தது என்பதற்கு. 1908 ஆம் ஆண்டில் முசாபர் பூரில் வெடிகுண்டு வீசியதற்காகக் கைது செய்யப்பட்டுத் தூக்குத்தண்டனை வழங் கப்பட்ட குதிராம் போஸ் என்ற 16 வயது இளைஞன், தூக்குமேடைக்குச் செல்லும் போது கையில் பகவத் கீதையை எடுத்துச்

சென்றான் என்பதிலிருந்தும், 'இப்போது விடைகொடு, தாயே! நான் மீண்டும் வருவேன்' என்ற பொருள்கொண்ட ஒரு பாடலையும் அவன் அப்போது பாடினான் என்ற உண்மையிலிருந்தும் தெரிந்து கொள்ளலாம்.
பாரதி நிவேதிதாவைச் சந்தித்து உப தேசம் பெ ற் ற தை நி வே தி தா **கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு விசுவரூபம் காட்டி ஆத்துமநிலை விளக்கியதொப்ப** தனக்கு ஸ்வதேச பக்தி உபதேசம் செய்த தாகக் குறிப்பிடுவதையும், **துறவுப் பெருமை'யை உணர்த்தியதாகக் குறிப் பிடுவதையும், நாம் பகவத் கீதைக்கு தேசிய இயக்கத்துக்கும் உள்ள சம்பந்தம் பற்றி மேலே கூறப்பட்டவற்றின் பின்னணியி லேயே புரிந்து கொள்ள வேண்டும். தேசப் பற்றுக்காக ஏனைய பற்றுக்களையெல்லாம் அவன் உதறித் தள்ளி, நிஷ்காமிய கர்ம யோகியாகப் பணியாற்ற வேண்டும் என்று அந்த அம்மையார் உபதேசித்ததையே.
* பற்றிய பற்றற ஒன்றே-தன்னைப்
பற்றச் சொன்னார்;
பற்றிப் பார்த்த விடத்தே."
என்று அவன் பாடலில் பாடியுள்ள வரி களுக்கும் பொருளாகக் கொள்ளவேண்டும். எனவே, பாரதி நிவேதிதா தேவியிடம் ஏனைய இளைஞர்களைப் போல் பகவத் கீதையின் அன்றைய அரசியல் அர்த்த பாவத்தின்படியேதான் உபதேசம் பெற் றான் என்று நாம் கொள்ள முடியும்.
எனினும், இன்னும் ஒரு கேள்வி எஞ்சி நிற்கிறது. "கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு விசுவரூபம் காட்டி ஆத்துமநிலை விளக்கிய தொப்ப, எனக்குப் பாரததேவியின் ஸம் பூரண ரூபத்தை'யும் காட்டி, நிவேதிதா தேவி தனக்கு உபதேசம் செய்ததாகக் கூறுகிறானே, அதற்குப் பொருள் என்ன என்பதே அந்தக் கேள்வி:
இந்தக் கேள்விக்கு நாம் மீண்டும் நிவேதிதா தேவியின் ஆளுமையைத் தான் முதலில் நினைவு படுத்திக்கொள்ள வேண்
9

Page 14
டும். நாம் பிறிதோரிடத்தில் முன்னர் குறிப்பிட்ட நெவின்சன் என்ற பிரிட்டிஷ் பத்திரிகையாளர், நிவேதிதாவின் ஆளு மையை நெருப்பாக வருணித்துவிட்டு, மேலும் கூறுகின்ற சில வரிகளை இங்கு நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். நெவின்சன் எழுதுகிறார்: “நெருப்பைப் போல், சிவனைப்போல், காளியைப்போல், மற்றுமுள்ள இந்திய ஆன்மசக்திகளைப் போல், அவர் (நிவேதிதா) ஒரே சமயத்தில், அழிவாற்றலும் படைப் பாற்றலும் கொண் டவராக, பயங்கரமும் பரிவுணர்ச்சியும் கொண்டவராகக் காட்சியளித்தார். அவரி டம் மந்தமான சகிப்புத்தன்மை என்பதே இருக்கவில்லை. எவரும் அவரைச் சாந்த மானவராகக் குறிப்பிட்டதாகவே எனக்குத் தோன்ற வில்லை. அவரது இதயத்தில் கோபாவேசம் ஆழக் குடிகொண்டிருந்தது என்பதில் எனக்குச் சந்தேகமில்லை, என்றா லும், உன்னதமான பரிவுணர்ச்சித் தன்மை கள் கொண்டிருந்த எல்லோரிலும், அவரே மிகமிக அற்புதமானவராக விளங்கினார்." (Studies from an Eastern Home-H. W. Nevinson, பக். 33). நிவேதிதஈ தேவியின்
நன்றி - “பாரதிஆசிரியர்: சித
முதற் பதிப்பு: மீன. GQaF6
10

இந்த ஆளுமையை நாம் சற்றே புரிந்து கொள்ள முயன்றால், அவர் தென்றலாக வும், தீயாகவும், சாந்த சொருபியாகவும்" கோபாவேசக் கனலாகவும், ருத்ரமூர்த்தி யான சிவனையும் காளியையும் போலவும், அதே சமயம் அன்பை அள்ளிச் சொரியும் அன்னையைப் போலவும், தமது உணர்ச்சி களுக்கு ஏற்ப உணர்ச்சிப் பிழம்பாகமாறிக் காட்சியளிக்கும் ஆளுமையை, கண்டார் வியக்கும், திகைக்கும், அஞ்சும், அதே சமயம் அன்பு கொள்ளவும் விரும்பும் ஆளுமையைக் கொண்டிருந்தார் என்று நாம் உணர்ந்தரியலாம், எனவே, பாரதி நிவே திதா தேவியைச் சந்தித்து அவரோடு தனிமையில் உரையாடிய காலத்தில், அவன் அவரது உணர்ச்சிப் பிழம்பான தோற்றத் திலேயே, 'பாரத தேவியின் ஸம்பூர்ண ரூபத்தையும், கீதோபதேசம் செய்த கிருஷ்ணனையும் கணடு பரவசம் எய்தியிருக் கிறான் என்றும், அந்தப் பரவச அனுப வத்தையே அவன் தனது சமர்ப்பண உரை களில் அவ்வாறு நமக்கு உணர்த்தியிருக் கிறான் என்றும் கொள்வதே பொருத்த மாகும்.
காலமும் கருத்தும்’ ம்பர ரகுநாதன்
ாட்சி புத்தக நிலையம் ானை, தமிழ்நாடு.

Page 15
எண்பதுகளில் இலங்கையில் தமிழ்
எண்பதுகளில் தமிழ் இலக்கியத் திற னாய்வுத் துறையைப் பொறுத்த வரை இரண்டு முக்கிய இழப்புகள் நிகழ்ந்தன. 1982 இறுதியில் பேராசிரியர் கைலாசபதி காலமானார். சுமார் கால் நூற்றாண்டு காலம் ஈழத்து இலக்கிய உலகில் முக்கிய இடம் பெற்றிருந்தவர் அவர். அறுபது களின் பிற்பகுதியிலிருந்து தமிழகத்தின் திறனாய்வுச் சிந்தனைப் போக்கிலும் செல் வாக்குச் செலுத்தி வந்தவர். இலக்கியத் திறனாய்வில் மார்க்சியச் சார்பான சமூக வியல் பார்வையை வலியுறுத்தி வந்தவர். அவ்வகையில் இலக்கியத்தின் உள்ளடக்கத் துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தவர் அவர்
எண்பதுகளின் இறுதியில் (1988ல்) தமிழகத்தவரான க. நா. சுப்ரமண்யம் காலமானார். சுமார் அரை நூற்றாண்டு காலம் தமிழ் இலக்கியத் துறையுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர் அவர். தானே ஒரு படைப்பாளியாக இருந் ததோடு நவீன தமிழ் இலக்கிய விமர் சனத்தின் தலைமகனாகவும் சிலகாலம் விளங்கியவர். மார்க்சிய எதிர்ப்பாளரான இவர் இலக்கியத் திறனாய்வில் மார்க்சிய பார்வைவை அங்கீகரிக்காதவர். அவ்வகை யில் உள்ளடக்கத்தைவிட உருவ அமை திக்கு முதன்மை கொடுத்தவர்.
க. நா, சுவின் மதிப்பீடுகள் சிலவற் றைத் தனது எழுத்துக்களில் கைலாசபதி ஆக்காங்கே ஒப்புதலோடு குறிப்பிட்டுள்ள போதிலும் அவரது அடிப்படையான கண் ணோட்டத்தைத் தீவிரமாக நிராகரித் தார். எழுபதுகளின் நடுப்பகுதியில் க. நா. சு. பற்றி கைலாசபதி எழுதிய கார் விமர்சனம் திறனாய்வுப் பிரச்

இலக்கியத் திறனாய்வு
- எம். எ. நுஃமான்
சினைகள் க. நா. சு. குழுபற்றி ஒர் ஆய்வு' என்ற தலைப்பில் 1980 பிப்ரவரியில் வெளிவந்தது. க. நா. சு. கைலாசபதியின் விமர்சனப் பார்வை பற்றி நேரடியாக எதுவும் எழுதாவிட்டாலும் அவர் பிரதி நிதித்துவப் படுத்திய மார்க்சியப் பார் வைக்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டிருந்தார் என்பது வெளிப்படை, இலக்கியத் திறனாய்வைப் பொறுத்தவரை இவ்விருவரும் இருதுருவ முனைகளில் இருந் தனர். எளிமைப்படுத்திச் சொல்வதானால் கைலாசபதி உள்ளடக்க வாதத்தையும் க.நா. சு. உருவவாதத்தையும் பிரதிபலித்து நின்றனர் எனலாம்.
1980 களில் இலங்கையில் தமிழ் இலக் கியத் திறனாய்வு பற்றி மதிப்பிடுகையில் இவ்விருதுருவ நோக்குகளில் இருந்தும் சற்றே விலகி நிற்பது அவசியமாகின்றது. ஈழத்து இலக்கிய விமர்சனத் துறையிலே கைலாசபதிக்கு இருப்பதுபோல், க.நா சு வின் நேரடி ஆதிக்க பலத்தால் இயங் கும் விமர்சகர் யாரும் இருப்பதாகச் சொல்ல முடியாது. ஆயினும் எதிர்முற் போக்கு அணியினரின் விமர்சனப் பார்வை யில் நேரடியாகவோ மறைமுகமாகவோ க. நா. சு வின் செல்வாக்கு வெவ்வேறு அளவில் இருப்பதை மறுக்க முடியாது. இலக்கியம் பற்றிய இந்த இருதுருவ நோக்கு ஆரோக்கியமான விமர்சன வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று கூற முடியாது. இவ்விரு போக்குகளின் சாதக மான அம்சங்களை ஒன்றிணைப்பது இவ் வகையில் பயனுடையதாக இருக்கும். இலக்கியத்தின் சமூகப் பயன்பாட்டையும் அதன் கலைச் செழுமையையும் ஒரே சம யத்தில் வலியுறுத்தும் ஆக்கபூர்வமான விமர்சன வளர்ச்சிக்கு இது அவசியம் என்
11

Page 16
பது கடந்த பத்தாண்டுகளில் பரவலாக இல்லாவிட்டாலும் ஒரு சிறுபான்மையின ராலேனும் தீவிரமாக உணரப்பட்டமை ஒரு முக்கியமான அம்சமாகும்.
எண்பதுகளில் இலக்கியத் திறனாய்வு பற்றி நோக்குகையில் எண்பதுகளில் தொடக்கத்தில் நடைபெற்ற இலக்கிய அழகியல் பற்றிய சர்ச்சை முக்கியமான தாகத் தோன்றுகின்றது. அடிப்படையான இலக்கியத் திறனாய்வுப் பிரச்சினைகள் பலவற்றை இச்சர்ச்சை தொட்டுச் சென் றது. எழுபதுகளின் இறுதியில் (19796) வெளிவந்த "இருபதாம் நூற்றாண்டு ஈழத்து தமிழ் இலக்கியம்" என்னும் விமர்சன பூர்வமான இலக்கிய வரலாற்று நூல் இச்சர்ச்சை தொடங்குவதற்கு மறைமுகமான காரணியாக அமைந்தது. இந்நூலின் ஆசிரியர்கள் மார்க்சிய சித் தாந்தத்தில் ஈடுபாடு கொண்டவர்கள். எழுபதுகளில் இலங்கை முற்போக்கு இலக் கியத்துடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தவர்கள். ஆயினும் ஒரு நடு நிலையான விமர்சனப் பார்வையை இந் நூலில் கடைப்பிடித்திருந்தனர் , இலக்கிய வரலாறு எழுதும்போது கொள்கைப்பற்றுச் சார்ந்த மனத்தடைகளை மீறி திறந்த மனதுடன் இலக்கியத்தை அணுகவேண் டும் என்பது இவர்களின் நோக்கமாய் இருந்தது.
இக்கண்ணோட்டத்தின் அடிப்படை யில் அமைந்த இந்நூலில் 50களின் நடுப் பகுதியில் இருந்து இலங்கையில் வளர்ச்சி யடைந்துவந்த முற்போக்கு இலக்கியம் சில அடிப்படையான அழகியல் குறை பாடுகளைக் கொண்டிருந்தமை சுட்டிக் காட்டப்பட்டது. முற்போக்கு விமர்சகர் களால் புறக்கணிக்கப்பட்ட அல்லது நிரா கரிக்கப்பட்ட எதிர் முற் போ க்கு அணியைச் சேர்ந்த சில முக்கியமான எழுத் தாளர்களின் பங்களிப்புப் பற்றி ஒரு நடு நிலையான மதிபீடும் இந்நூலில் முன்வைக் கப்பட்டது இக்காரணங்களிளால் முற் போக்கு இலக்கியவட்டாரத்தில் இந்நூல் ஒருவித அசெளகரியத்தை ஏற்படுத்திய
12

அதேவேளை,முற்போக்கு விமர்சகர்களைத் தாக்குவதற்கு எதிரணியினருக்கு ஒரு பக் கத்துணையாகவும் அமைந்தது.
இந்நூல் வெளியீட்டையொட்டி நூலா சிரியர்கள் ஒரு கலந்துரையாடலை ஒழுங்கு செய்திருந்தனர், வெவ்வேறு இலக்கிய நோக்குடையவர்கள் கலந்துகொண்ட இக் கலந்துரையாடல் கருத்து மோதலில் முடி வடைந்தது. இதன் உடன் விளைவே கைலாசபதி சமர் சஞ்சிகையில் எழுதிய (1979) முற்போக்கு இலக்கியத்தின் அழகி யல் பிரச்சினைகள்" என்னும் கட்டுரை. அடுத்து வந்த ஆண்டுகளில் இலங்கையில் நடைபெற்ற தீவிரமான திறனாய்வுச் சர்ச் சைகளுக்குத் தோற்றுவாயாக இக்கட்டுரை அமைந்தது.
கலை இலக்கியத்தில் அழகியலை வலி யுறுத்துவது முற்போக்கு விரோதமானது என்ற மனோபாவத்தையே கைலாசபதி தன் கட்டுரையில் வெளிப்படுத்தினார் இலக்கியத்தில் அழகியலை வலியுறுத்திய வர்களைக் "கலைவாதிகள்" எனச்சாடிய அவர், அவர்களை அர ல் ரீதியில் பிற் போக்குவாதிகள் என நிரூபிக்க முயன்றார். " "ஆழமாக நோக்கினால் கலைவாதிகள் அறிந்தோ அறியாமலோ சமுதாய மாறுத லுக்காகப் பாடுபடும் எழுத்தாளர்களின் ஆக்கங்களையே அழகியலின் பெயரில் நிரா கரிக்கின்றனர். இது தற்செயல் நிகழ்ச் யல்ல வர்க்க முரண்பாட்டின் பிரதி பலிப்பாகவே உள்ளது," என்பது அவர் கூற்று. முற்போக்கு இலக்கியம் எதிர் நோக்கவேண்டிய அழகியல் பிரச்சினைகள் அநேகம் உண்டு என்றும் அதுபற்றித் தனி யாக ஆராய வேண்டும் என்றும் அதே கட்டுரையில் அவர்கூறியுள்ளார். ஆனால் அதற்காகவே. அதே தலைப்பில்-எழுதப் பட்ட கட்டுரையில் அதை ஆராயாமல் அழகியலை வலியுறுத்தியவர்களுக்கு எதி ரான பழைய வாதங்களை மட்டுமே அவர் முன்வைத்தார். எழுபது, எண்பதுகளில் இங்கு இலக்கியத்தின் அழகியலின் முக்கி யத்துவத்தை வலியுறுத்தியவர்கள் யாரும் தூய அழகியல் வாதிகள் அல்ல என்பதும்

Page 17
வெவ்வேறு நோக்கில் இலக்கியத்தின் சமூகப் பயன்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்த வர்களே என்பதும் இங்குமனங்கொள்ளத் தக்கது.
கைலாசபதியின் கட்டுரை வெளிவந்த அதே இதழில் 'ஈழத்து இலக்கியமும் இடதுசாரி அரசியலும்" என்ற தலைப்பில் மெள. சித்திரலேகாவின் கட்டுரை ஒன்றும் வெளிவந்தது. ஒரு வகையில் கைலாச பதியின் வாதங்களை மறுப்பதாக அமைந்த அக்கட்டுரையில் 'சமூகப் பயன்பாட் டுணர்வு இலக்கியத்தில் நிலைபேறு அடைந்து விட்ட இக்கட்டத்தில் எமது குறைகளை மனந்திறந்து பேசுவதும் விவாதிப்பதும் அவசியம்' என்பதைக் கட்டுரையாசிரியர் வலியுறுத்தியிருந்தார். இக்கட்டுரையாளர் முன்குறிப்பிட்ட 'இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியம்' என்னும் நூலாசிரியர்களுள் ஒருவர் என்பதும் இவரது கட்டுரையும் முன்குறிப்பிட்ட கலந்துரை யாடலின் உடன் விளைவு என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
கைலாசபதியின் கட்டுரைக்கான எதிர் வினைகள் 'அலை' சஞ்சிகையில் வெளிவந் தன. அலை ஆசிரியர்கள் தமக்கே உரியபாணி யில் கருத்து நிலைப்பட்டதும் தனிப்பட்ட ரீதியிலுமான கண்டன விமர்சனத்தை முன்வைத்தனர். அவர்களுடைய வாதங்கள் பலவற்றில் உண்மை இருந்த போதிலும் அவர்களது அணுகுமுறையும் தொணியும் ஆக்க பூர்வமான கருத்துப்பரிமாற்றத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக கோஷ்டிமனப் பான்மையை மேலும் வளர்ப்பதற்கே பெரி தும் உதவின. இந்த மனப்பாங்கின் தொடர்ச்சியை சற்றுப் பிந்தி 1982, 83ஆம் ஆண்டுகளில் மல்லிகையில் கந்தையா நடேசன் தொடக்கிவைத்த சர்ச்சையில் காணமுடிந்தது. சர்ச்சையில் கலந்து கொண்டவர்கள் இலக்கியத்தில் அழகியலை வலியுறுத்துபவர்களை முற்போக்கு இலக்கி யத்தின் மோசமான எதிரிகளாகவே இனங் கண்டனர். இத்தகைய கோஷ்டி மனப் பான்மை காரணமாக அடிப்படையான இலக்கியப் பிரச்சினைகளில் அறிவுபூர்வ

மான விசாரணை எதுவும் நிகழமுடியாது போயிற்று.
ஆரம்பத்தில் சமர், அலை சஞ்சிகை களில் தொடங்கிய இந்த இலக்கிய விவா தம் ஆங்கில இதழான 'லங்கா கார்டிய னில்' தொடரப்பட்டபோது சில அடிப் படையான இலக்கியப் பிரச்சினைகள் தொடர்பான கோட்பாட்டு ரீதியான விவா தமாக வளர்ச்சி யடைய வாய்ப்புக் கிடைத் தது . கார்டியனில் சமுத்திரன் தொடக்கி வைத்த இவ்விவாதத்தில் றெஜி சிறிவர்த்தன ஏ. ஜே கனகரத்தினா, சிவசேகரம், மு. பொன்னம்பலம் முதலியோர் கலந்து கொண்டு வெவ்வேறு நிலைப்பாடுகளில் எழுதினர். இக்கட்டுரைகளில் பல பின்னர் சமர், அலை ஆகிய இதழ்களில் மொழி பெயர்த்தும் வெளியிடப்பட்டன. தமிழகத் தில் இருந்தும் இதன் எதிரொலிகேட்டது
ச்முத்திரன் அழகியல் பற்றிய விவா தத்தை மார்க்சிய வாதிகளுக்கும் உருவ வாதிகளுக்கும் இடையிலான பிரச்சினை யாக இனங்கண்டார், உருவவாதிகளே அழகியலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர், மார்க்சிய வாதிகளைப் பொறுத்தவரை உருவத்தைவிட உள் ளடக்கமே பிரதானமானது என்பது அவ ரது கருத்தாய் இருந்தது. பாரம்பரிய முற்போக்குவட்டாரத்தின் பொதுக்கண் ணோட்டமும் இதுவே, இந்நிலைப்பாடு சாராம்சத்தில் உள்ளடக்க வாதம் சார்ந்த தேயாகும். அடித்தளம், மேல்கட்டுமானம் என்னும் மார்க்சிய கருத்தாக்கங்களை யாந் திரிகமாக் கலை இலக்கியத் துறையில் பிரயோகித்ததன் விளைவே இது எனலாம், வரலாற்றுப் போக்கில் நிகழும் சமூக மாற்றங்களுக்கு ஏற்ப சில கலை இலக்கிய வடிவங்களில் மாற்றம் எற்படுவதை இக் கருத்தாக்கங்களின் அடிப்படையில் நாம் விளக்க முடியும் என்பது உண்மையே ஆனால் இதையும் தாண்டி ஒவ்வொரு கலைப்படைப்புக்கும் இதனைப்பிரயோகிக்க முயன்று ஒரு படைப்பின் உள்ளடக்கமே அதன் உருவத்தை நிர்ணயிக்கின்றது என பாரம்பரிய மார்க்சிய விமர்சகர்கள் நம்பி
13

Page 18
னர். இதனாலேயே உள்ளடக்கத்தை முதன் மைப் படுத்தினர் படைப்பு வெளிப்படுத்தும் அடிப்படைக்கருத்தே அதன் உள்ளடக்கம் எனவும் இவர்கள் கருதினர். அழகியல் அல்லது கலையம்சம் என்பது அக்கருத் துக்குப் போர்த்தப்படும் ஒப்பனைச் சாத னங்களே என்றும் இவர்கள் நம்பினர்,
'உருவம் உள்ளடக்கம், LDmt rfj;&Fulu விமர்சனம்" என்ற கட்டுரையில் றெஜி சிறிவர்த்தனா இக் கண்ணோட்டத்தை நிரா கரித்தார். "ஆக்க இலக்கியத்திலே உள்ள டக்சமும் உருவமும் ஒன்றை ஒன்று சார்ந்து பின்னிப் பிணைந்து இருக்கின்றன’ என்பதை அவர் அழுத்திக் கூறினார். மார்க்சிய அழகியல் பற்றிய இந்த விவாதம் மேலும் சில அடிப்படையான அழகியல் பிரச்சினை களையும் தொட்டுச் சென்றது. கலை என் றால் என்ன? கலையைக் கலை அல்லாத வற்றில் இருந்து வேறுபடுத்துவது எது? ஒரு குறிப்பிட்ட கால இடச் சூழ் நிலயில் தோன்றியகலை பிறிதொரு கால இடச் சூழலிலும் ரசிக்கத்தக்கதாக இருப்பது எவ்வாறு? போன்ற கேள்விகளுக்கு விடை தரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
எவ்வாறாயினும் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது எண்பதுகளில் நடைபெற்ற இந்த இலக்கிய விவாதம் ஏ. ஜே. கனகரத்தினா சொன்னதுபோல 'சூடு பிடித்தது உண்மையே ஆனால் அந்த அளவுக்கு. ஒளி பிறந்ததாகக் கூற முடியாது" கோஷ்டி மனப்பான்மை என்னும் குறுகிய வட்டத்துள் நின்றே பலரும் இயங்கினர். நான்கு வேறுபட்ட நிலைப்பாடுகளை உடையவர்கள் இச்சர்ச்சையில் கலந்து கொண்டனர். ஸ்தாபன மயப்பட்ட பாரம் பரிய மார்க்சிய வாதிகள். ஸ்தாபனச் சார் பற்ற மார்க்சிய வாதிகள், எதிர் மார்க்சிய வாதிகள், மார்க்சியச் சார்பு அற்றவர்கள் எனப் பருமட்டாக இவர்களைப் பாகு படுத்தலாம்.
இச்சர்ச்சையின்போது முற்போக்கு இலக்கியங்கள் மட்டுமே அழகியல் குற்றச் சாட்டுக்கு உட்படுத்தபட்டமை துரதிஷ்டவச
14

மானது. இதனால் பாரம்பரிய மார்க்சிய விமர்சகர்கள் ஒரு தற்காப்பு நிலைப் பாட்டை எடுக்கவேண்டிய நிர்ப்பந்தத் துக்கு உள்ளாகினர். ஏனைய பிரிவினர் எல்லாரையும் ஒரே முகாமுக்கு தள்ளி முற்போக்குவாதிகள் எனப் பெயர் சூட்ட அவர்கள் முயன்றனர். கைலாசபதி, கா. சிவத் தம்பி உட்பட முற்போக்கு வட்டாரத்தி னரின் அணுகுமுறை இத்தன்மைத்ததாகவே இருந்தது. "அழகியல் மார்க்சியமும் மார்க் சிய அழகியலும்" என்ற தலைப்பில் இது தொடர்பாக எழுதிய சிவத்தம்பி (மல்லிகை ஆகஸ்ட் 81) ஸ்தாபனச் சார்பற்ற மார்க் சிய விமர்சகர்களின் கருத்துக்கள் ஆக்க பூர்வமானவை என்று ஏற்றுக்கொண்ட போதிலும் மாணிக்கவாசகர் பாணியில் 'நாடகத்தால் உன்னடியார் போல் நடித்து உள்நுழைய முனைந்த போலிகள் என்ற சந்தேகப் பார்வையுடனேயே அவர்களை அணுகினர். இது உண்மையில் தற்காப்பு நிலைபாட்டின் வெளிப்பாடு என்றே கொள்ள வேண்டும். இதற்கு மறுதலையில் ஸ்தாபனச் சார்பற்ற சில மார்க்சிய விமர் சகர்கள் குறிப்பாக (சிறு மார்க்சிய கட்சி ஒன்றுடன் இணைந்து நின்று) சிவசேகரம் உட்பட முற்போக்கு இலக்கியத்தை அதன் வரலாற்றுப் பின்னணியில் நோக்காது முற் றாக நிராகரிக்கும் நிலைப்பாட்டை எடுத் தனர். இவர்களுட் சிலர் பாரம்பரிய விமர் சகர்களுக்கு மார்க்சியமே தெரியாது என்று நிரூபிக்கவும் பிரயத்தனப்பட்டனர்.
இது எவ்வாறாயினும் இக்காலகட்டத் தில் மார்க்சியப் இலக்கிய பிரச்சினைகள் தொடர்பாக வெளிவந்த இரண்டு விமர்சன நூல்கள் முக்கிய கவனத்துக்குரியன. முதலா வது நூல் ஏ. ஜே. கனகரத்தினாவின் "மார்க்சியமும் இலக்கியமும் . சில நோக்கு கள், என்பது. மார்க்சிய அழகியல் பற்றிய' சர்ச்சை உச்ச நிலையில் இருந்த எண்பது களின் தொடக்கத்தில் (1981ல்) இந்நூல் வெளிவந்தது. இப்பிரச்சினை தொடர்பாக சோவியத் அனுபவத்தைக் தமிழ் வாசகர் களுக்கு அறிமுகப்படுத்துவது இந்நூலின் பிரதான நோக்கமாய் இருந்தது. அலன் ஸ் விஞ் வூட் , கேரிசோல்மோர்சன்

Page 19
ஆகியோரின் சோவியத் இலக்கிய அனுபவம் பற்றிய மொழிபெயர்ப்புக் கட்டுரைகளும் றெஜி சிரிவர்த்தனாவின் "உருவம் உள்ளடக் கம், மார்க்சிய விமர்சனம்" என்னும் கட்டுரையின் மொழியாக்கமும், மார்க்சிய மும் இலக்சியமும் என்ற நூலாசிரியரின் கட் டுரை ஒன்றும் இந்நூலில் இடம்பெற்றது. மார்க்சிய அழகியல் என்பது ஒரு குறுகிய அரசியல் பயன்பாட்டுவாதமாக இருக்கமுடி யாது என்பதை இந்நூல் வலியுறுத்தியதுஇரண்டாவது நூல் 1987 இறுதியில் வெளி வந்த இக்கட்டுரையாசிரியரின் "மார்க்சிய மும் இலக்கியத் திறனாய்வும்" என்பது. தமிழ் இலக்கியத் திறனாய்வில் ஆகிக்கம் செலுத் தும் வரட்டு மார்க்சிய, எதிர்மார்க்சியப் போக்குகளை இந்நூல் விமர்சனத்துக் குள்ளாக்கியது. வரட்டு மார்க்சிய வாதமும் எதிர் மார்க்சிய வாதமும் வாழ்க்கையையும் இலக்கியத்தையும் புரிந்து கொள்ளவும், இலக்கிய ரசனையை வளர்த்துக்கொள்ள வும் இலக்கியத் திறனாய்வை வளப்படுத்த வும் உதவ மாட்டா என்பதை இந்நூல் வலியுறுத்தியது.
மார்க்சிய அழகியல் பற்றிய இந்த விவாதத்துக்குப் புறம்பாகவும் இலக்கியத் திறனாய்வுக் கோட்பாடுகள் சார்ந்த ஈழத்தவர்களின் சில நூல்கள். கடந்த பத்தாண்டுகளில் வெளிவந்துள்ளன. பேரா சிரியர் கா. சிவத்தம்பியின் இலக்கியமும் கருத்து நிலையும், தமிழில் இலக்கிய வரலாறு மு ரு கை ய னின் இன்றைய உலகில் இலக்கியம், செ. கணேசலிங்கனின் கலை யும் சமுதாயமும், சோ.கிருஷ்ணராஜாவின் விமர்சன் மெய்யியல் சபா ஜெயராசாவின் அழகியல் ஆகிய நூல்கள் இவ்வகையில் முக்கியமாகக் குறிப்பிடத்தக்கன. கே. எஸ். சிவகுமாரனின் கலை இலக்கியத் திறனாய்வு என்னும் நூலும் எ ண் பது க ளின் இறுதியில் வெளிவந்தது. கலை இலக்கியத் திறனாய்வு பற்றி ஒரு மேலோட்டமான அறிமுகத்தை இந்நூல் தருகிறது.
கோட்பாட்டு ரீதியான திறனாய்வு முயற்சிகள் மட்டுமன்றி தனிப்பட்ட படைப் புக்கள், படைப்பாளிகள் பற்றிய செயல் முறைத் திறனாய்வு முயற்சிகளும் 80களில்

இங்கு ஒரளவு நடைபெற்றுள்ளன. குறிப் பாக பாரதி நூற்றாண்டை ஒட்டி 80களின் தொடக்கத்தில் நடைபெற்ற பாரதி ஆய்வு கள் முக்கியமான திறனாய்வு முயற்சிகளா கக் கருதத்தக்கன. பாரதியின் ஆளுமையை இலக்கிய நோக்கில் மட்டுமன்றி வெவ்வேறு நோக்கு நிலைகளில் இருந்தும் புரிந்து கொள்ள இம்முயற்சிகள் உதவின. இக் காலப்பகுதியில் நடைபெற்ற பாரதி ஆய்வு களில் கைலாசபதியின் பங்கு முக்கியமானது. 80 களில் அவர்வாழ்ந்திருந்த முதல் மூன்று ஆண்டுகளிலும் பாரதி இயல்பற்றி அவர் அதிகம் எழுதினார். அவரது மறைவுக்குப் பின் வெளிவந்த பாரதி ஆய்வுகள் என்ற அவரது நூலில் 80 க்கு பின்பு அவர் எழுதியகட்டுரைகளோடு 80 களின் முதல் மூன்று ஆண்டுகளிலும் அவர் எழுதிய 12 கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன. On Bharathi என்ற தலைப்பில் அவரது ஆங் கில நூல் ஒன்றும் 1986 ல் வெளிவந்தது. அவரது ஆலோசனையுடன் தேசியகலை இலக்கியப் பேரவை 1982 ல் மாதம் தோறும் நடத்திய பாரதி பற்றிய கருத் தரங்குகளும் முக்கியமாகக் குறிப்பிடத் தகுந்தவை இக்கருத்தரங்குக் கட்டுரைகள் பாரதி பன்முகப்பார்வை என்ற தலைப் பின் நூல் உ ரு வம் பெற் றன, கா. சிவத்தம்பி அ. மார்க்சுடன் சேர்ந்து எழுதிய பாரதி; மறைவு முதல் மகாகவி வரை, செ. ரவீந்திரனின் பாரதி யின் மெய்ஞானம் எம். எ. நூஃமானின் பாரதியின் மொழிச் சிந்தனைகள் ஆகிய நூல்கள் இத்துறையில் 80 களில் வெளிவந்த குறிப்பிடத்தகுந்த ஈழத்தவரின் முயற்சி
களாகும்,
ஈழத்து எழுத்தாளர் சிலர் பற்றிய சில நூல்களும் இக்காலப் பகுதியில் வெளி வந்தன. புனைகதை எழுத்தாளர்களான நந்தி, டொமினிக் ஜீவா ஆகியோரின் மணி விழா தொடர்பாக வெளிவந்த-மலர்கள் இந்தகைய மலர்களுக்கே உரிய" புகழ்மணம்” கொண்டிருந்த போதிலும் இவ்வெழுத்தா ளர்கள் பற்றிய விமர்சன மதிப்புரைகளை யும் கொண்டிருந்தன. சி வி. வேலுப்பிள்ளை பற்றி சாரல்நாடன் எழுதிய சி. வி. சில நினைவுகன் என்னும் நூலும் இவ்வகையில்
15

Page 20
குறிப்பிடத்தக்கது. 19 ஆம் நூற்றாண்டு ஈழத்து இலக்கிய அறிஞர்கள் சிலரைப்பற்றி கைலாசபதி அவ்வப்போது எழுதிய கட்டுரைகளின் தொகுதி ஒன்றும் ஈழத்து இலக்கிய முன்னோடிகள் என்ற தலைப்பில் எண்பதுகளின் பிற்பகுதியில் வெளிவந்தது. இலங்கையிலே நவீன இலக்கியத்தின் தோற்றுவாய்க்கான பின்புலத்தை விளங் கிக்கொள்ள உதவும் ஒரு முக்கியமான நூல் இது. ஏ. இக்பால் கவிதைகள் ஒரு மதிப்பீடு என்னும் நூலை றஜபுன்னி சா என்ற ஒர் இளம் பெண் விமர்சகர் 1987ல் வெளியிட்டார். இவைதவிர மஹாகவி, நீலவாணன் முருகையன், சேரன் முதலிய கவிஞர்கள் பற்றிய சிறு அளவிலான மதிப் பீட்டு முயற்சிகளும் இக்காலப்பகுதியில் நிகழ்ந்தன. முந்திய காலப் பகுதிகளில் தனிப்பட்ட படைப்பாளிகள் பற்றி நிகழ்ந்த ஒற்றைவரி மதிப்பீடுகளுடன் ஒப்பிடுகையில் 80 களில் முன்னேற்றம் காணப்பட்டது என்று கூறலாமாயினும் இலக்கியத் திற னாய்வுக் கோட்பாட்டு நிலைப்பட்ட வளர்ச் சியில் இவற்றின் பங்களிப்பு முக்கியத்துவம் பெறவில்லை என்றே கூற வேண்டும்.
சில தனிப்பட்ட படைப்புகள், தனித் தனி இலக்கிய வடிவங்கள், சில இலக்கியப் பொருள்கள் பற்றிய விமர்சன மதிப்பீட்டு முயற்சிகள் சிலவும் கடந்த பத்தாண்டுகளில் நிகழ்ந்துள்ளன. ராஜம் கிருஷ்ணனின் "வீடு' தெணியானின் 'கழுகுகள் ஆகிய நாவல், கள் பற்றி சிவத்தம்பி சற்று விரிவாகவே எழுதினார். மிகச் சிக்கலான சமூகப் பிரச் சினைகளை ஒரு வகையில் மிகை எளிமைப் படுத்திச் சித்திரிக்கும் அழகியல் தவறுடைய இப்படைப்புகள் பற்றிய இம் மதிப்பீடுகள் சற்று மிகையானவை என்றே கூறுவேண்டும். சுந்தர ராமசாமியின் ஜே. ஜே. சில குறிப்பு கள் நாவல் பற்றி சிவசேகரமும், மு. பொன்னம்பலமும் ஒன்றுக்கொனறு மாறு பட்ட மதிப்பீடுகளை முன்வைத்தனர். விமர்சகனின் சமூக-இலக்கியத் கோட்பாடு கள் மதிப்பீட்டின் தன்மையை நிர்ணயிக் கின்றன என்பதற்கு இவர்களின் மதிப்பீடு கள் உதாரணமாக அமைந்தன. மு. தளைய சிங்கத்தின் ஒரு தனி வீடு' நாவல் பற்றிய
16

சமுத்திரனின் மதிப்பீடு, அதன் அடிப்படை யான பலவீனத்தை வெளிப்படுத்திய வகை யில் முக்கியத்துவமுடையது.
இலக்கிய வடிவங்களின் வளர்ச்சிப் போக்குகள் என்ற வகையில் செ. யோக ராசா எழுதிய 'ஈழத்துப் புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் (மல்லிகை 1980), சமகால ஈழத்துக் கவிதை ஒரு கண் ணோட்டம் (மல்விகை 83) எம். எ. நூஃ மானின் 'ஈழத்துப் பா நாடகங்கள் (மல் லிகை 1980) நா. சுப்பிரமணியன் எழுதிய * 1978ன் பின் ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்" (மல்லிகை 1988) முதலியவை கவனத்துக்குரியன. 1956 க் குப் பிந்திய ஏழாண்டுகால ஈழத்து இலக்கிய வளர்ச்சிப் போக்குகள் பற்றி மு. தளையசிங்கம் 1963ல் எழுதிய கட்டுரைத் தொடர் ஒன்று ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி என்ற பெய ரில் 1984 ல் நூல்வடிவில் வெளிவந்தது. 80 களில் தமிழ் நாட்டில் மு. தளையசிங்கம் மீள் கண்டு பிடிப்புச் செய்யப்பட்டதன் பெறுபேறாக போர்ப்பறை, மெய்யுள் உட் பட அவரது நூல்கள் பல அங்கு பிர சுரிக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத் தக்கது.
இலக்கியத்தின் பொருள் நிலைப்பட்ட ஆய்வுகளாகவும் இக்காலப்பகுதியில் சில கட்டுரைகள் எழுதப்பட்டன. குறிப்பாக இலக்கியத்தில் தமிழ்த்தேசிய வாதம் முக் கிய கவனம் பெற்றது. மரணத்துள் வாழ் வோம் கவிதைத் தொகுப்பு சம்பந்தமாக வும் சேரன் கவிதைகள் சம்பந்தமாகவும் வெளிவந்த விமர்சனங்களில் ஈழத்துக் கவிதையில் தமிழ்த் தேசிய வாதம் விவா திக்கப்பட்டது. இலங்கைத் தமிழ்ச் சிறு கதைகளில் தமிழ்த் தேசிய இனப் பிரச்சினை பிரதிபலிக்கப்பட்டவாற்றை அ. யேசுராசா மதிப்பிட்டார். ஆசிய நாடுகளில் விடு தலைப் போராட்டமும் கவிதையும் என்ற நூஃமானின் கட்டுரையில் இந்திய, பலஸ் தீன, இலங்கை அனுபவங்களின் அடிப்படை யில் அரசியலுக்கும் கவிதைக்கும் இடையில் உள்ள உறவு ஆராயப்பட்டது. ஈழத்தில் சமூக, அரசியல் நிலையில் தேசிய இனப்

Page 21
பிரச்சினை கொந்தளிப்பான முதிர்நிலை அடைந்திருப்பினும் ஈழத்து இலக்கியத்தில் அதன் வெளிப்பாடு இன்னும் ஆரம்ப நிலையிலேயே இருப்பதால் அதுபற்றிய திறனாய்வு முயற்சிகள் ஆழமாகவும் விரி வாகவும் இடம்பெறுவது சாத்திய மற்றதாயிற்று.
இலக்கியத்தின் மொழியம்சம் பற்றிய ஆய்வுகள் சிலவும் இக்காலப்பகுதியில் வெளிவந்தன. இவ்வகையில் சி. வன்னிய குலத்தின் ஈழத்துப் புனைகதைகளில் பேச்சு வழக்கு என்ற நூல் குறிப்பிடத்தக்கது.
முந்திய தசாப்தங்களுடன் ஒப்பிடுகை யில் 80 களில் இங்கு நடைபெற்ற திற னாய்வு முயற்சிகள் இலக்கியத்தை மட்டு மன்றி நாடகம், திரைப்படம், நவீன ஒவியம் போன்ற பிற கலைத்துறைகளை யும் அதிக அளவில் உள்ளடக்கியமை ஒரு குறிப்பிடத்தகுந்த அம்சமாகும். 80 களில் புதியதும் பழையதுமாக நாடகங்கள் பல மேடையேற்றப்பட்டமையும், வீதி நாடகங் களின் தோற்றமும் நாடகம் பற்றிய விமர் சன முயற்சிகளை ஊக்குவித்தன. தனித்தனி நாடகங்கள் பற்றியும் பொதுவாக நாடகப்
போக்குகள் பற்றியும் சாதகமாகவும் பாதகமாகவும் பல கட்டுரைகள் எழுதப் பட்டன; சர்ச்சைகள் நடைபெற்றன.
மெளனகுருவின் சடங்கில் இருந்து நாடகம் வரை, காரை. செ. சுந்தரம் பிள்ளையின் ஈழத்து இசை நாடகமரபு ஆகிய நாடகக் கோட்பாடு, வரலாறு சார்ந்த நூல்களும் வெளிவந்தன.
திரைப்படம் இக்காலப்பகுதியில் முக் கிய கவனத்தைப் பெற்றது. சமூகவியல் ரீதியாகவும் கலையியல் ரீதியாகவும் திரைப்பட விமர்சனங்களும் பிறமொழிப் படங்கள் பற்றிய அறிமுகங்களும் இடம் பெற்றன. மேலைய, இந்திய, சிங்கள கலைப்பட நெறியாளர்களின் பேட்டிகளும், சுருத்துரைகளும் மொழிபெயர்க்கப்பட் டன, அதேவேளை ஜனரஞ்சக தமிழ் கினிமா பற்றிய மதிப்பீட்டுக்கான அவசியம் பரவலாக உணரப்படவில்லை என்பது

முக்கிய கவனத்துக்குரியது. விதிவிலக்காக இத்துறைபற்றி தமிழ் சமூகமும் அதன் சினிமாவும் என்ற சிவத்தம்பியின் சிறு நூல் ஒன்று எண்பதுகளின் நடுப்பகுதியில் (1983) தமிழகத்தில் வெளிவந்தமை இங்கு குறிப் பிடத்தக்கது.
இக்காலப்பகுதியில் பரவலாக இல்லா விட்டாலும் ஒரு சிறு குழுவினர் மத்தியிலே னும் நவீன ஓவியம் பற்றிய பிரக்ஞை தீவிரம் பெற்றது. ஒவியக்கண்காட்சிகள் சில நடைபெற்றதோடு ஒவியம் பற்றிய கட்டுரைகளும் (குறிப்பாக அலை சஞ்சிகை யில்) அவ்வப்போது வெளிவந்தன. இவற் றுட் சில தமிழகச் சஞ்சிகைகளில் வந்த வற்றின் மறு பிரசுரங்களாக அமைந்தன. அதேவேளை இளம் ஒவிய விமர்சகர்கள் சிலரும் இங்கு உருவாகினர். ஒவியர் மார்க் கைக் கெளரவிக்கும் முகமாக "தமிழியல்" வெளியிட்ட தேடலும் மடைப்புலகும் என்ற நூல் இவ்வகையில் மிகுந்த முக் கியத்துவம் உடைய ஒர் ஆக்கமாகும்.
எவ்வாறெனினும் இலக்கியம், நாடகம், திரைப்படம், நவீன ஓவியம் உட்பட எல்லாக்கலைகளுக்கும் பொதுவான கலைக் கோட்பாடுகள் பற்றியோ தனித்தனிக் 856060 வடிவங்களுக்குரிய குறிப்பான அழகியல் பிரச்சினைகள் பற்றியோ கோட் பாட்டு ரீதியில் விரிவான ஆய்வுகள் எவை யும் இங்கு மேற்கொள்ளப்படவில்லை என்பதைக்குறிப்பிட வேண்டும். இத்தகைய கோட்பாட்டு அடித்தளம் இல்லாமல் விமர்ச னத்தின் எல்லைகளை விஸ்தரித்தல் சாத்தி யம் இல்லை. இத்தகைய எல்லை விரிவுக்கு மார்க்சிய அழகியல் - சமூகவியல் பற்றி மட்டுமன்றி மொழியியல், குறியியல், அமைப்பியல் போன்ற பிற துறைகளின் அறிவும் நமது விம ர் சக ர் களு க்கு அவசியமாகும்,
இது தொடர்பாகக் குறிப்பிட வேண் டிய பிறிதொரு முக்கிய அம்சம் திறனாய் வின் வளர்ச்சி படைப்புகளின் வளர்ச்சியில் தங்கியிருக்கின்றது என்பதாகும். சிறந்த படைப்புகள் இல்லாமல் சிறந்த திறனாய்வு உருவாக முடியாது. கலைப்படைப்புகளை
17

Page 22
அடிப்படையாகக் கொண்டே கலைக் கோட்பாடுகளும் விமர்சனங்களும் 2-(ијајп“. கின்றன. கிரேக்க நாடகங்கள் இல்லாமல் அரிஸ்டாட்டிலின் கலைக் கோட்பாடு 2-CD, வாகி இருக்க முடியாது. நமது விமர்சனத் தின் பலமும் பலவீனமும் எமது படைப்பு, களின் பலத்திலும் பலவீனத்திலும் தங்கி
(29-3-91 முதல் 31 கண்டி மாநகரில் நடைபெற்ற தமிழ் சாகித்தி பெற்ற "80 களில் இலங்கையில் தமிழ் இலக்கி கட்டுரை இது)
இந்து ச
யாழ்ப்பாணத்திலிருந்து சைவபரிபாலன் சாதனம் எனும் தமிழ்ப் பத்திரிகையையும் கையையும் வெளியிட்டு வந்துள்ளது. 1889ஆ தேதி முதல் வெளியீடு வந்தது, அப்பொழுது அகத்திற்றமிழும் புறத்தில் ஆங்கிலமும் கொ திற்கு ஒரு முறை புதன்கிழமையில் வெளிவந் தும் சைவப்பிரகாச அச்சியந்திரசாலையிற் பி
ஆரம்பத்திலே தமிழ்ப் பத்திராசிரியரா மகன் நல்லூர் த. கைலாசப்பிள்ளை, ஆங்கி? புரம் பிரதம நீதியரசராக முன்பு விளங்கிய
அக்காலத்திற் சைவர்கட்குரிய ஆங்கில அபிமானிகள் பலர் இப்பத்திரிகையை ஏற்று தானங்கள் செய்துதவியும் வளர்த்து வந்த6 1899-gh goorG. The Hindu Organ 6 திற்கு ஒரு முறையும் தனித்தனியாக வெளிவ
இவ்விரு பத்திரிகைகளும் சமய சம்ப கருத்துகளையும் தாங்கி வந்தன. சமய சம்ட கொடுத்துப் பிரசாரஞ் செய்தன. திருக்ே தேவாரம் பெற்ற திருத்தலங்களின் புணருத் வந்த ஊக்கம் குறிப்பிடத்தக்கது.
மனேஜர் த. கைலாசப்பிள்ளையை
பெ. கார்த்திகேயேயிள்ளை பண்டிதர். வே மு. மயில் வாகனம் என் போர் விளங்கியுள்ள அ. சபாபதி ச. சிவகுருநாதர் தெ. அ. துை எம், எஸ். இளையதம்பி, வி. நாகலிங்கம், என்போர் ஆங்கிலப் பத்திரா சிரியர்களாக ந. சிவப்பிரகாசம் இரு பத்திரிகைகளுக்கும்
1 8

யுள்ளது என்பது நாம் இங்கு மனங்கொள்ள வேண்டிய முக்கிய அம்சமாகும்,
அடுத்துவரும் பத்தாண்டுகளில் சிறந்த படைப்புகள் பல உருவாகி நமது விமர்ச னத்தின் எல்லைகள் மேலும் விரிவாகும். என நம்புவோமாக
-3-91 வரை ய விழாவில் இறுதிநாள் நிகழ்ச்சியாகதடை யம் பற்றிய கருத்தரங்கில் படிக்கப்பட்ட
ாதனம்
எசபை 1889 ஆம் ஆண்டு முதலாக இந்து he Hindu Organ GTg)lb găl6)aoli L 33țfl ம் ஆண்டு செப்தம்பர் மாதம் பதினோராம் "டெமி' பிராமணங் கொண்ட தாளிலே ண்ட ஒரு கூட்டுப் பத்திரிகையாகப் பட்சத் தது. சைவபரிபாலன சபையார் அதனைத் பிரசுரம் செய்தனர்.
க விளங்கியவர் ஆறுமுக நாவலரின் பெறா
லப் பத்திராசிரியராக இருந்தவர் திருவனந்த தா. செல்லப்பாபிள்ளை.
தமிழ் பத்திரிகை இதுவாக அமைந்ததனால் வாசித்தும் அறிஞர் பலர் அரிய பல விடய Srii.
பாரம் ஒரு முறையும் இந்துசாதனம் பட்சத் ரத் தொடங்கின.
ந்தமான கட்டுரைகளையும் செய்திகளையும் ந்தமான நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கதீஸ்வரம், திருக்கோணேஸ்வரம் முதலிய தாரணத் திருப்பணிகளுக்கு இவை அளித்து
அடுத்துத் தமிழ்ப் பத்திராசிரியர்களாகப் திருஞானசமபந்தபிள்ளை கு. சிற்சபேசன் னர், செல்லப்பாபிள்ளையைத் தொடர்ந்து ரயப்பாபிள்ளை, எம், எஸ், இராஜரத்தினம் ஏ. வி. குலசிங்கம் த. முத்துசாமிப்பிள்ளை விளங்கியுள்ளனர். இவர்களை அடுத்து ஆசிரியராக விளங்கினார்,
நன்றி; இந்துக்கலைக்களஞ்சியம் பகுதி - "இ" பக்கம் 176-177 ஆசிரியர் பேராசிரியர் பூலோகசிங்கம்

Page 23
விபுலானந்தர்: g முன்ே
கே. எஸ். சி
மறைந்த சுவாமி விபுலானந்தர் அவர்கள், ஒரு சிலரினால் 'ரசிக விமர்சகர், என்று இளக்காரமாகக் கணிக்கப்பட்டாலும் அவருடைய படைப்புக்களைப் படித்ததன் காரணமாக, எனது சிற்றறிவுக்கு எட்டிய மட்டிலும் அவரை நான் இலங்கையின் முதலாவது தமிழ்த் திறனாய்வாளர் என்று கூற முற்படுகிறேன். இதுவே, இந்தக் கட்டுரை மூலம் நான் உணர்த்த விரும்பு வது,
திறனாய்வுத்துறை இன்று இலங்கையில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றது. இதற்கு மூலகர்த்தாவாக சு வா மி விபுலானந்தரையே குறிப்பிட வேண்டும் என்பது எனது அவா. இதனை நிரூபிக்கு முகமாக அவருடைய இலக்கியக் கட்டுரை களில் இருந்து பெறப்பட்ட ஆதாரங்களை வைத்து இந்தக் கட்டுரையை எழுதுகிறேன்.
சுவாமி விபுலானந்தரின் ஆளுமை பல்வேறு தரிசனங்களைக் கொண்டிருந்த போதிலும் அவரைத் திறனாய்வாளர் என்ற முறையில் மாத்திரமே இங்கு ஆராய்வோம்
சுவாமி விபுலானந்தரைப் பற்றிக் கேள்விப்பட்டிராத இன்றைய இளம் சந்ததியினர் நலன் கருதி அவரைப் பற்றிய சில முக்கியமான தகவல்களைத் தொகுத்து நோக்குவோம்:
சுவாமி விபுலானந்தரின் இயற்பெயர் மயில்வாகனம் ஆகும். இவர்

மிழ் திறனாய்வு னாடி
வகுமாரன்
அம்பாறை மாவட்டத்திலுள்ள காரைதீவு என்ற இடத்தில் 1892 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29 ஆம் திகதி பிற ந் தா ர். இவருடைய ஆரம்பக் கல்வி கல்முனை மெதடிஸ்த் ஆங்கிலப் பாடசாலையிலும் மட்டக்களப்பு புனித மைக்கல்ஸ் கல்லூரி யிலும் இடம்பெற்றது. அந்நாட்களில் p560L-(p60soulai) goigs Cambridge Senior பரீட்சையில் சித்தியடைந்த பின்னர் அவர் புனித மைக்கல்ஸ் கல்லூரியில் ஆசிரியராகச் சில காலம் பணி புரிந்து அதன் பின் மட்டக்களப்பில் உள்ள ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு தென் கோவை கந்தையாபிள்ளை என்பவரிடம் பண்டைய தமிழ் இலக்கியங்களைக் கற்கும் வாய்ப்பு அவருக்கு ஏற்பட்டது. குறுகிய காலத்திற்குள் கொழும்புத் தொழினுட்பக் கல்லூரியில் விஞ்ஞானத்துறை டிப்ளோமா வகுப்பில் பயில்வதற்கான வாய்ப்பும் அவருக்கு அளிக்கப்பட்டது, 1916 ஆம் ஆண்டு அவர் இந்த டிப்ளோமாப் பரீட்சையில் சித்தியடைந்ததுடன் மதுரை பண்டிதர்கள் பரீட்சைக்குத் தோற்றவும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. இலங்கையில் இருந்து இப்பரீட்சைக்குத் தோற்றுவதற்கு இடமளிக்கப்பட்ட முதலாவது அறிஞர். சுவாமி விபுலானந்தராவர்.
அடிகளார் யாழ்ப்பாணத்திலுள்ள புனித பற்றிக்ஸ் கல்லூரியில் ஆசிரியராகப் பின்னர் சேர்ந்து லண்டன் பல்கலைக்கழக B. Sc. பரீட்சைக்குத் தோற்றினார்.
19

Page 24
1920 ஆம் ஆண்டில் அவர் அந்தப் பரீட்சை யில் சித்தியடைந்தார். அ த னை த் தொடர்ந்து மானிப்பாய் இந்துக் கல்லூரி யின் அதிபராக நியமனம் பெற்றார். 1922 ஆம் ஆண்டில் அந்தப் பதவியில் இருந்து விலகிக்கொண்ட பண் டி த ர் மயில்வாகனனார் என்று அழைக்கப்பட்ட இந்த அறிஞர், இராமகிருஷ்ண மிஷனில்
அடிகளாராகச் சேர்ந்து கொண்டார்.
தமிழ் நாட்டிலுள்ள மயிலாப்பூர் மடத்தில் பிரபோத சைத்தன்ய (Prabodha Chaitanya) பிரிவில் அவர் பிரமச்சாரியாக அங்கீகரிக்கப்பட்டார். இரண்டு வருடங்கள் அங்கு பயின்ற அவர் இராமகிருஷ்ண மிஷன் வெளியிடும் ஆங்கில இதழான "Gaignt:55 G5éfin” (Vedanta Kesari)6rasi p சஞ்சிகையின் ஆசிரியராகப் பணி புரிந்தார். அங்கு வெளியான ‘இராமகிருஷ்ண விஜயம் என்ற சஞ்சிகையின் ஆசிரியராக வும் பணிபுரிந்தார். விபுலானந்த அடிகளா ரின் கட்டுரைகள் ‘செந்தமிழ்" என்ற தமிழ் நாட்டுச் சஞ்சிகையில் வெளியாயின.
ஆங்கில, தமிழ், விஞ்ஞானத் துறைக ளில் அவருக்கு இருந்த பாண்டித்தியம் இக்கட்டுரைகளில் வெளிப்படலாயிற்று. ஷேக்ஸ்பியரின் நாடகங்களை அடிப் படையாகக் கொண்டு அவர் பல திறனாய் வுக் கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறார். இக்கட்டுரைகள். 'மதங்கசூளாமணி’ என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ளன, ஆங்கிலக் கவிதைகளின் அரியதொரு தமிழாக்கத்தை இந்த நூலில் காணலாம் என்று அறிஞர் எஸ். அம்பிகைபாகன் அவர்கள் குறிப்பிட் டுள்ளார்கள். துரதிஷ்டவசமாக இந்தக் கட்டுரையைத் தயாரித்த வேளையில் 'மதங்கசூளாமணி"யைப் படிக்கும் வாய்ப்பு எனக்கு ஏற்படாது போயிற்று.
சுவாமி விபுலானந்தர் அவர்கள், 1924 ஆம் ஆண்டில் துறவியானார். அதன் பின்னர், அவர், இலங்கை திரும்பி இராமகிருஷ்ண மிஷன் மேற்கொள்ளும் கல்விப் பணிகளை ஒருங்கமைத்தார். சமய இலக்கிய மகாநாடுகளில் அவர் கலந்து
20

கொண்ட போதிலும் இக்காலப் பகுதியில் அவருடைய வெளியீடுகள் எதுவும் வெளி வந்ததாகத் தெரியவில்லை.
1931 ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தமிழ்ப் பேராசிரியர் பதவிக்காக ஒருவரைத் தேடிய பொழுது சுவாமி விபுலானந்தரே அந்தப் பதவிக்கு முற்றிலும் தகுதியானவர் என்று உணர்ந்து, அவரை அப்பதவிக்கு நியமித்தது. இந்தியா வில் உள்ள எந்தவொரு பல்கலைக்கழகமும் இதற்கு முன்னர் தமிழ்த்துறையை நிறுவ வில்லை. இப்பதவியை வகித்த சுவாமி விபுலானந்தர் அவர்கள், தமது கடமையைச் செவ்வனே செய்து, தமிழ் நாட்டு மக்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்தார். அக்காலப் பகுதியில்தான் அவருடைய இசை சம்பந்த மான ஆராய்ச்சி ஆரம்பமாகியது புராதன தமிழர் இசை பற்றி அவர் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். 1934 ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவர் பதவியில் இருந்து விலகி இலங்கை திரும்பிய அடிகளார், இங்கு இராமகிருஷ்ண மிஷன் மேற்கொண்டுவந்த கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.
இராமகிருஷ்ண மிஷன் இமயமலைப் பகுதியில் உள்ள அல்மோரா (Almorah) என்ற இடத்தில் இருந்து வெளியிடும் Gullós Luitpas (Prabuddha Bharatha) என்ற சஞ்சிகையின் ஆசிரியராக 1939ஆம் ஆண்டில் விபுலானந்த அடிகள் நியமிக்கப் பட்டார். அங்கு இரண்டு வருடங்கள் பணி புரிந்த அவர், தமிழ், இலக்கியம், இசை, சமயம் என்பன பற்றி ஆராய்ச்சிக் கட்டுரை களை ஆங்கிலத்தில் எழுதினார்.
1943 ஆம் ஆண்டில், இலங்கையில் பல்கலைக்கழகம் இயங்கத் தொடங்கிய பொழுது தமிழ்த்துறையின் முதலாவது பேராசிரியராகப் பணிபுரியும்படி விபுலா னந்த அடிகளிடம் கோரிக்கை விடுக்கப் பட்டது. தமிழ் ஆய்வுத்துறை எவ்வழியிற் செல்ல வேண்டும் என்ற திட்டங்களை சுவாமி விபுலானந்த அடிகளே வகுத்தார் என்பது நினைவில் இருத்தத்தக்கது.

Page 25
அவரைத் தொடர்ந்தே பேராசிரியர் கணபதிப்பிள்ளை, பேராசிரியர் செல்வ நாயகம், பேராசிரியர் வித்தியானந்தன், பேராசிரியர் சதாசிவம் போன்ற அறிஞர்கள் தமிழ்த்துறையை விருத்தி செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் தமிழ்த் திறனாய்வுத்துறை வளர்ச்சிபெறு வதற்கு முதற்படியை அமைத்துக் கொடுத்த வர் சுவாமி விபுலானந்தரே என்றால், அது மிகையாகாது.
சுவாமி விபுலானந்தர் சுகவீனம் காரண மாகப் பேராசிரியர் பதவியில் இருந்து விலகிக்கொள்ள நேர்ந்தது. 1947 ஆம் ஆண்டு ஜுலை மாதம் இறைவனடி சேருமுன்னர், அவர் தமது மாபெரும் ஆராய்ச்சி நூலான *யாழ் நூலை வெளியிட்டார்.
அடுத்ததாக, சுவாமி விபுலானந்தர், எவ்வாறு இலங்கைத் தமிழ் திறனாய்வுத் துறைக்கு மாத்திரமன்றி பொதுவாக தமிழ்த் திறனாய்வுத்துறைக்கும் முன்னோடி யாக இருந்தார் என்பதைப் பார்ப்போம். கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தர வகுப்பிற்கான பாடத்திட்டத்தை வரைந்த குழு, அவ்வகுப்பிற்குரிய பாட நூல்களுள் ஒன்றாக, விபுலானந்த அடிகள் எழுதிய இலக்கியச் கட்டுரைகள் அ ட ங் கி ய தொகுப்பை 1974 ஆம் ஆண்டு தேர்ந் தெடுத்தது.
அந்த நூலில் இடம்பெற்ற கட்டுரை களை ஆதாரமாகக் கொண்டே எனது கருத்தை நிறுவ முயல்கிறேன். கருத்தை, கருத்தாக மாத்திரம் தெரிவித்தால் போது மானதாக அமையாது. எனவே, குறிப் பிட்ட கட்டுரைகளில் இருந்து பொருத்த மான பகுதிகளைத் தேர்ந்தெடுத்து விளக்க முயல்கிறேன்.
முதலிலே, ‘இலக்கியச் சுவை” என்ற தலைப்புள்ள கட்டுரையைப் பார்ப்போம், 1939 ஆம் ஆண் டு கல்முனை நகரத்தில் நடைபெற்ற ஆசிரியர் விடுமுறை க் கழகத்தினரின் ஒரு கூட்டத்தில் அடிகளார் தலைமைதாங்கினார். அங்கு இலக்கியம்

கறறலும் இலக்கியச் சுவையில் ஈடுபடலும் என்பது பற்றி அவர் ஆற்றிய இலக்கிய நயச் சொற்பொழிவு இதுவாகும்.
எம்மில் பலர் இன்றும் கூடப் பழந்தமிழ் இலக்கிய வரிசையை வகுதி ரீதியில் நிரற் படுத்தத் தெரியாதவர்களாக இருக்கிறோம். ஆயினும் , சுமார் 52 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் இலக்கியங்கள் எவ்வாறு சுவை பயக்குகின்றன என்று அடிகளார் வகுத்தார். அவர் கூறுகிறார்:
* பரந்துபட்ட தமிழ் இலக்கியம் என் னும் பரவையின் உள்ளே சங்கமிருந்து தமிழ் ஆராய்ந்து நல்லியப் புலவர் வகுத்தமைத்த பத்துபபாட்டும் , எட்டுத் தொகையும், பதினெண்கீழ்க்கணக்கு என் பனவும் பின்னரெழுந்த சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, சூளாமணி, நீலகேசி என்பனவும், கொங்குவேள்மார்க் கதையின் மூவர்தமிழும், திருவாசகமும் திருக்கோவை யாரும், நா லாயிர த் திவ்வியப் பிரபந்தமும், பெரியபுராணம் ராமாவதாரம்,கந்தபுராணம்,வில்லிபாரதம் திருவிளையாடற் புராணம் இரண்டும், என்பனவும் ஆரியப்புலவர் பாகவதமும், காசிதாண்டவமும், நைடதமும், ரகுவமிச மும் தேம்பாவணியும், சீறாப்புராணமும், ரக்ஷணியயாத்திரிகமும், சிறு பிரபந்தங்கள் என நின்றவற்றுள்ளே, குமரகுருபரரும், சிவப்பிரகாசமும், மீனாட்சிசுந்தரரும், சுப்பிரமணியபாரதியும் வகுத்தமைத்தனவும் தமிழ் மாணவராலே பயிலப்பட்டு வரு கின்றன. இவை யாவும் செய்யுள் நடை இலக்கியங்கள்'.
** உரை நடை இலக்கியங்கள் தமிழில் அருகி நடப்பன. நக்கீரனார் கண்ட களவி யல் உரையும், பரிமேலழகியார் ஈர்ந்த திருவருளுரையும், நச்சினார்க்கினியர் அரு வந்தளித்த சிந்தாமணியுரையும், அடி யார்க்கு நல்லார் வழங்கிய சிலப்பதிகார உரையும், பெரியவாச்சான்பிள்ளை உதவிய பிரபந்த உரையும், ஆறுமுக நாவலர் அன்பினோடருளிய பெரியபுராண வசனம், திரு விளையாடற் புராண வசனம்
21.

Page 26
என்பனவும் இந்நாளிலே தமிழுக்கு வரம் பாகி, தென்றிசைக்கலைச்செல்வர், பெரும் பேராசிரியர், எழுத்தறி புலவர், என உலகு புகழ, நீடு நின்று தமிழ் தொண்டாற்றி வரும் சாமிநாதர் அருளிய மீனாட்சிசுந்தரர் சரிதம், உதயணன் கதை, பெளத்த தர்ம சங்கம் என்பனவும், சிந்தாமணி, சிலப்பதி கார, மணிமேகலைக்கதைச் சுருக்கங்களும், உரை நடை இலக்கியங்களாகி நிலவு கின்றன".
இவ்வாறு குறிப்பிட்ட விபுலானந்த அடிகள் பின்னர், "இலக்கியம் இவையெனத் தந்தோம், இனி இலக்கியச் சுவையாவது யாது, அச்சுவையில் ஈடுபடுதற்கு வேண்டிய மனப்பழக்கம் யாது, இலக்கியம் கற்றற்கு இயைந்த கருவிகள் யாவை' என்பன போன்ற வினாக்களை எழுப்புகிறார். இவ்வாறு செய்வதே ஒரு திறனாய்வாளனின் முயற்சிகளில் முதல் படி நிலைகளாகும். இந் தப் படிகளை அரை நூற்றாண்டுக்கு முன்னரே விபுலானந்த அடிகள் தெட்டத் தெளிவாகத் தெரிவித்திருக்கிறார். அது மாத்திரமல்ல, கலை இலக்கியத்துறைகளின் அடிநாதமாகத் தொனிக்கும் விஷயங்களை இன்றைய விமர்சகர்கள் இன்று கூறிவரும் அதே கருத்துக்களை, அன்றே அவர் கூறியுள்ளதையும் அவதானிக்கலாம். உதா ரணமாக, விபுலானந்த அடிகள் இவ்வாறு குறிப்பிடுகிறார்;
** மணமானது வெளிப்பட்டுத் தோன்று மிடத்து அறிவு, இச்சை, துணிவு என முத்திறப்பட்டு நிற்கும் என்பது மன நூலார் கண்ட முடிவு. அறிதல், இச்சித்தல், துணிதல் என்னும் முத்திறச் செயலின் தெளிவு, இனிமை, உறுதி என்னும் குணங் களை அளாவி நிற்பன. இவை முறையே
உண்மை, அழகு, நன்மை என்னும் குணிகளைச் y Triugor''. இ த ற் கு அடுத்ததாக நூல்கள் எவ்வாறு வகுக் கப்படலாம் என்பதைச் சுட்டிக்காட்டு கிறார்:
'உண்மை உணர்த்தும் நூல்கள் பூத பெளதீக விஞ்ஞான நூல்களும் தர்க்க
22

நியாய தத்துவ நூல்களும். அழகு உணர்த் துவ: இசை ஒவிய நூல்கள். நன்மை உணர்த்துவ அற நூல்கள். உண்மை, அழகு, நன்மை ஆகிய அனைத்தும் உணர்த்துவ நல்லிசைப் புலவர் அளித்த இலக்கிய நூல்கள். இவை, செய்யுள் எனப்படும்". பேராசிரியர் விபுலானந்தர் அவர்கள் செய்யுளின் முக்கியத்துவத்தையும் தொட்டுக் காட்டுகிறார். ** ஏ  ைன ய கலைத்துறைகள் உள்ளத்தின் ஒவ்வொரு திறத்தினைப் பற்றி நிற்கச் செய்யுள் மாத் திரம் உள்ளம் முழுவதையும் பற்றி நிற்கும். ஆதலினாலே மதிப்பிடற்கரியதொரு நிறை வினையும் மறுமலர்ச்சியையும் உள்ளத்திற்கு அளிக்கும்."
திறனாய்வாளன் ஒருவனின் தேடல் முயற்சிகளில் ஒன்று ஒப்பீடு ஆகும். பல்வேறு இலக்கிய வகைகளுக்கும் இடையில் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளைச் சீர்தூக்கிப் பார்ப்பது அதன் பணிகளில் ஒன்று எனலாம். வில்லி பாரதத்தில் வரும் இலக்கியக் காட்சி களைக் கிரேக்கக் கவி ஹோமரின் (Homer) படைப்புகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் முன்னோடித் தன்மையை விபுலானந்தர் அவர்களிடம் காண்கிறோம். பிற்காலத்தில் பேராசிரியர் க. கைலாசபதி அவர்கள் தமிழ் சங்ககாலப் படைப்புக்களைக் கிரேக்க வீரகாவியங்களுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்து கலாநிதிப் பட்டம் பெறுவதற்குத்தூண்டு கோலாக, சுவாமி விபுலானந்தரின் இந்த ஒப்பீட்டுப் பாங்கு அமைந்ததோ என்றும் நாம் வியக்கலாம். குறிப்பிட்ட வில்லிபார தக் காட்சியொன்றை விளக்கிய அடிகளார், 'இத்தகையதோர் காட்சியினை ஹோமர் எழுதிய வீர காவியங்களிலும் காண்தலரிது" என்று கூறுகிறார்.
ஒப்பீட்டாய்வு என்று பார் க் கும் பொழுது வில்லிபாரதத்தில் வரும் போர்க் களத்திலும் பூஞ்சோலையிலும் காட்சிகளை ஒப்பிட்டு இலக்கியச் சுவை எத்தகையது என்று அவர் விளக்குகிறார். அது வருமாறு:
*" போர்க்களத்திலே பெருமிதச் சுவை
தலையாய சுவையாகி நிற்கும். செயற்கருஞ் செயல்களைப் கண்டு இறும்பூதெய்தும்

Page 27
உள்ளத்திலே மருட்கை என்னும் சுவை தோன்றும். எள்ளி நகைக்கின்ற நகையும் அசைவு கண்டிரங்கும் அவலமும் பகைமேற் செல்லும் வெகுளியும் இகழ்ந்துரையாடும் இழிவரலும் அஞ்சத்தக்கன கண்டுழி நிகழும் அச்சமும் வெற்றியாலெய்திய உவகையும், என ஏனைய சுவைகளும் போர்க்களத்திலே தோன்றுதற்குரிய."
இவ்விதமாகச் சுவைகளைச் சுட்டிக் காட்டிய விபுலானந்தர், தொடர் ந் து பூஞ்சோலைக்காட்சியை இவ்வாறு வெளிப் படுத்துகிறார்:
'பூஞ்சோலைக்காட்சியின் உள் ளே காதலர் இருவர் கருத்தொப்ப ஆதரவு பட்ட உவகையும் இனிய நகை யும் வியப்பின்பாலதாகிய மருட்கையும் பிரிவு நோக்கிய அச்சமும் பிரிவாலெய்திய அவல மும் பெருவரவின் பொருள் குறித்து எழுந்த சுவையினால் மாத்திரமன்று, பாவினகத்து எழுத்துக்கள் அமைந்து நின்ற தாளவிகற்பங்களினாலும் கவிஞர் தமது உள்ளக் குறிப்பினை வெளிப்படுத்துவர்".
அடிகளார் மேலும் விளக்குகிறார்; **வளவன்பதி முதலாக வயங்கும்பதி தோறும் துளவங்கம ழதிசீதள தோயங்கள்
படிந்தே இள வண்ட மி றெழு தேடு முன் னெதிரேறிய துறைசூழ் தளவங்கமழ் புறவஞ்செறி தண்கூடல்
புகுந்தான்' எ ன் னு ம் செய்யுளின் பின் "குன்றில் இளவாடை வரும் பொழு தெல்லாம்" என்னும் செய்யுள் வருகிறது. இடையினவெழுத்துப் பயின்று மெல் லென்று நீர்மையாகி நிற்கும், "துழவங்கம ழதிசதள தோயம்', 'இளவண்டமழி ழெழுதேடு’, ‘தவழங்கமழ் புறவம்' என்னும் சொற்றொடர்களின் நயத்தை நோக்கும்படி கூறுகிறார் அடிகளார்.
இந்தக் கட்டுரையில் பேராசிரியர் விபுலானந்த அடிகள் மடக்குகள் பற்றியும் சுவைகள் பற்றியும் எடுத்துக்காட்டியிருப்ப துடன் சந்தவிருத்தத்தின் இலக்கணத்தை நாம் அறிந்திருக்க வேண்டும் என்றும் ஆலோசனை கூறுகிறார்"

இன்றைய சூழலில் இந்த விமர்சன அணுகுமுறைகள் ஒன்றும் புதிதானவை போல் தோன்றாமல் இருக்கலாம். ஆயினும் இந்த அணுகுமுறைகள் தமிழ் இலக்கியப் பரப்பில் நவீனத்துவ நோக்கில் முதற்றட வையாகத் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களாகும். அதனால்தான் விபுலானந்த அடிகளைத் தமிழ் திறனாய்வுத்துறை முன்னோடியென நாம் வலியுறுத்துகிறோம்.
"சென்சிபிலிட்டி" (Sensibility) என்ற ஆங்கில விமர்சனப் பதம் பற்றி இன்னமும் தெளிவான ஓர் விளக்கம் நம்மிடையே இருப்பதாகத் தெரியவில்லை. சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அ க ரா தி °செ ன் சி பி லிட் டி' என்ற ஆங்கில வார்த்தைக்குக் கொடுக்கும் வியாக்கியானம் வருமாறு:
*"ஊறுகோள் உணர்ச்சி, உணர்ச்சி வயப்படும் நிலை, எளிதில் உணர்ச்சி களுக்கு ஆட்படும் நிலை, உணர்வுச் செவ்வி, மெய்யுணர்வு நயம், எளிதில் ஊறுபடும் தன்மை’.
விபுலானந்த அடிகள் "செந்தமிழ்" என்ற ஏட்டில், 1940 ஆம் ஆண்டு வெளியா கிய 38 ஆவது தொகுதியில் "ஐயமும் அழகும்" என்ற த லை ப் பில் ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார். அந்தக் கட்டுரையில் *சென்சிபிலிட்டி’ என்ற ஆங்கில விமர்சனப்பதத்தின் நுட்ப வியாக் கியானத்தைத் தமிழ் இலக்கிய ரீதியாக அவர் விளக்கும் பாங்கு பாராட்டத்தக்கது.
'காட்சிக்கும் துணிவுக்கும் இடையே ஐயம் நிகழும். காட்சி ஐம்புல வாயிலாக எய்தும் உணர்வு, துணிவு யாதொரு பொருள் யாதோர் இயல்பிற்றாய்ற்றோன் றினும் அத்தோன்றிய வார் த் தை கண்டொழியாது அப்பொருளின் கண் நின்று மெய்யாகிய பொருளைச் காணும் மெய்யுணர்வு. ஆதலின் ஐயத் தின் நீங்கிற்தெளிந்தாரான் எய்து தற்குரியது.
அளவினால் எல்லைப்பட்ட பொரு ளினைக் கண்ணுற்றோன் ஒரு நோக்கோடு
:23

Page 28
அமைவான். நோக்குந்தோறும் புதிய புதிய அழகினைத் தோற்றுவிக்கும் ஒரு பொருள் கண்ணெதிர்ப்படுமாயின் அ த னை க் கண்டோன் நோக்கிய கண் இமையாமல் நோக்கி நோக்கி அப்பொருளின் காட்சி நலனைத் துய்த்தற்கு முயல்வான். இம் முயற்சியே ஐயவுணர்விற்கு அடிப்படையா யிற்று. ஆதலினாலே ஈண்டு நாம் ஆராயும் காட்சி, ஐயம் என்னும் இரண்டினுள்ளும் காட்சியினும் ஐயம் சிறப்புடையது என்று அறிதல் வேண்டும். ஐயமானது வியப்பு எனவும் மருட்கை எனவும் தமிழ் நூலார் வகுத்துக் கூறிய அற்புத ரசத்தினைச் சார்ந்து வருவது. ஒருபாற்கிளவி கண்ணும் வருவகை தானே வழக்கென மொழிப என ஆசிரியர் தொல்காப்பியனாரும் “ஒரு மொழி யொழிதன் இனங்கொளற் குரித்தே' எனப் பிற்காலத்தாரும் கூறிய விதி சொல்லிலக்கணத்திற்குப் போலவே பொருளிலக்கணத்திற்கும் பொருந்துவது”* என விபுலானந்தர் சுட்டிக்காட்டுகிறார்.
சுவாமி விபுலானந்தர், இன்றையத் தொடர்பியல் அடிப்படைகளைத் தொட்டுக் காட்டுவது போல அன்றே இலக்கியத்தில் தொடர்பியல் பயன்படுவதைத் தொட்டுக் காட்டியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. உதா ரணமாக, அவர் கூறுகிறார்:
**நல்லிசைப் புலவர் யாத்தமைத்த கவியிலே ஈடுபட்டு நெஞ்சமுருகி இன்புறு வோன் அக்கவிதையின் பால் அன்பு செலுத்துகிறான். கவிதையை யாத்த புல வன் படிப்போருக்ரு இன்பம் பயப்பது கருதியே யாத்தான். ஆதலின் படிப்போருக் கும் படிக்கப்படும் கவிதைக்கும் இடையே அமைந்த தொடர்பு பெருந்திணையன்று. கைக்கிளைத்திணையாம் என்பது வெளிப் படை. ‘* 'இயற்கைக்கும் புலவனுக்கும் இடை யி லா ன தொடர்பு கைக்கிளைத் திணையின்பாற் படுவதென அறிகிறோம். இவ்வாறு பொதுவாய் நிற்கும் இன்பம் பற்றிய அன்பினை நூன் முறையாக வகுத் துக் கூறப்புகுந்த ஆசிரியர் மிக்கதின்மேல் வைத்துக் கூறினார் எனினும், "குழவி மருங்கினும் கிழவ தாகும்" "ஊரோடு
24

தோற்றமும் உரித்தென மொழிப' எனக் கைக்கிளைப்புறனாகிய பாடாண் பகுதியி னுள்ளே பிறவற்றிற்கும் ஏற்றுக் கூறினார்’ என்பது அடிகளாரின் கூற்று.
சுவாமி விபுலானந்தர் அவர்கள் விஞ் ஞான, கணிதத்துறைகளிலும் ஒரு மேதை. அன்னாரின் அறிவியல் அறிவும் அழகியல் அறிவும் இணைந்தது காரணமாக, காரண காரியத்தொடர்புடைய திறனாய்வுப் பாங்கு இயல்பாய் வந்தமைகிறது.
நாம் இப்பொழுது ஆராயும், 'ஐயமும், அழகும்" என்ற கட்டுரையிலேயே வெளிப் படும் ஏனைய கருத்துக்களையும் இப் பொழுது நாம் நோக்குவோம்.
* ஐம் புல ன் உணர்வினைக்கூறும் பொருளியல் நூல்களுக்குக் காட்சி, கருவியா கும். ஆதாவது சயன்ஸ் (Science) எனப் படும் விஞ்ஞானம்".
'நோக்கிய கண் இமையாமல் நோக்கி நோக்கி' இன்புறுதற்குரிய ஓவிய நூல், வட்டிகைச் செய்தி என்றித் தொடக்கத்த வாகிய அழகு நூல்களுக்கு ஐயம் கருவியா கும். ஆதாவது, "பைன் ஆட்ஸ் (Fine Arts) எனப்படும் நுண்கலைகள்".
'துணிவு தத்துவ ஞானம் என வட நூலார் கூறும் மெய்யுணர்வு நூல்களுக்கும் ஐயம் கருவியானது. ஆதாவது, ஃபிலோசபி (Philosophy).”
‘ஐயத்தின் வழி அழகு பிறப்பதென உணர்த்துவதற்கு ஆன்றோர் செய்தளித்த அழகிய செய்யுட்களை" அடிகளார் பின் னர் எடுத்துக்காட்டி விளக்குகிறார்.
இக்கட்டுரையின் ஈற்றிலே செய்யுள் அணிகள் ஆன்றோர் செய்யுள்களில் இயைந்து நிற்பதை எடுத்துக்காட்டி, ஈன்று உரைப்பிற் பெரும் என முடிப்பதில் இருந்து திறனாய் வின் முக்கிய பண்புகளில் ஒன்றாகிய சுருங்கக் கூறி விளங்க வைக்கும் பண்பிற்கு முக்கியத்துவம் அளிக்கிறார்.

Page 29
**செய்யுட்களில் தன்மை, உவமை, உருவகம், தீவகம், பின்வருநிலை, வேற்றுப் பொருள் வைப்பு, ஒற்று, அதியசம், தற்குறிபேற்றம், நிரநிரை, ஆர்வமொழி சுவை, ஒப்புவமைக்கூட்டம் என்னும் செய் யுள் அணிகள் இயைந்து நிற்பதை’’ விபுலானந்தர் குறிப்பிட்டிருக்கிறார்.
இவ்வாறு பகுப்பாய்வு செய்ததன் மூலம், உருவம், உள்ளடக்கம் ஆகியன ஒன்றோடு ஒன்று இயைந்து இருப்பதைத் திறனாய் வாளர் சொல்லாமல் சொல்லுகிறார் எனலாம்.
பேராசிரியர் விபுலானந்த அடிகள் வெறுமனே இலக்கியத் திறனாய்வாளர் மட்டுமல்ல. அவர் ஒரு கலை விமர்சகரும் கூட. இதனை அவருடைய அரை நூற் றாண்டிற்கு முன் எழுதப்பட்ட கட்டுரை ஒன்றில் இருந்து நாம் அறிய முடியும். "செந்தமிழ் தொகுதி 38ல் அடிகள் எழு திய "வண்ணமும் வடிவும் கட்டுரை இதைக் காட்டும்.
** மிகப்பழைய காலத்தில் சிற்பங்களை வடிப்பவர்கள் "மண்ணிட்டாளர்" எனப் பட்டனர். இவர்களை ஒவியர் என்பதும் இவருக்குரிய நூலினை ஒவியச்செந்நூல் என்பதும் பழைய வழக்கு" என்கிறார் அடிகளார் அவ்வோவியங்களை அமைப் போர், நுண் உணர்வும் நுழைந்த நோக்கும் உடையராதல் வேண்டும் எ ன் பதை 'மதுரைக்காஞ்சி"ச்செய்யுள் ஒன்றிலிருந்து எடுத்துக் காட்டுகிறார். அந்தச்செய்யுள் அடிகள் வருமாறு:
** எவ்வகைய செய்தியும் உவ ம ங் காட்டி நுண்ணிதின் உணர்ந்த வளைந்து தோக்கிற் கண்ணுள் வினைஞர்."
இந்தக்கண்ணுள் வினைஞர் யாவர்? அடிகளார் கூறுகிறார்:
*வெண்சிதையில் தீட்டிய உருவத்தி னது இயற்கை வண்ணம் வெளிப்படுமாறு வர்ணம் தீட்டுவோரும், வட் டி கை பலகையிலேயே துகிலினைக் கோலினாலே

பல வித வர்ணங்களை எழுதி அழகிய சித்திரங்களை அமைப்போரும் கண்ணுள் வினைஞர் எனப்பட்டனர்."
விபுலானந்த அடிகள் மேலும் விளக்கு கிறார்:
**கண்ணுள் வினைஞர் - சித்திரகா கிதள்' என அடியாருக்கு நல்லார் உரை கூறும் எனவும்,
'தூவர வட்டிகை மணிப்பலகைவண்ண நுண்டு சிலிகை என்னும் சித்தாமணிச் செய்யுள் அடியினுள்ளே கண்ணு ஸ் வினைஞருக்கு வேண்டிய கருவி மூன்றும் கூறப்பட்டன" எனவும்,
'வட்டிகை என அடியாருக்கு நல்லார் கூறுதலின், இக்காலத்து மேனாட்டுச் சித்திரக்காரிகள் வழங்கும்' ப லே ட் (Palate) என்னும் பலகையினை ஒத்த வட்டிகைப் பலகைகளே பண்டை நாளிலும் இருந்தன என எண்ண இடமுண்டு’ எனவும் அடிகளார் கூறுகிறார்.
ஒவியக் கலைத் திறனாய்வு தொடர் பாக முதலில் ஒவியம் பற்றிய சில செய் களைத்தருகிறார். அவற்றைப் பழந்தமிழ் இலக்கியத்தில் இருந்து எடுத்துக்காட்டுவது, அடிகளார் நமது பழைய பண்பாட்டில் ஊறித்திழைத்திருந்தமையையும் அப் பண்பாடு நவீனத்துவத்திற்கு ஆதாரமாக இருப்பதையும் உணர்த்தி, அவர் ஒரு நல்ல திறனாய்வாளர் என்பதையும் வெளிப் படுத்துவதனால் அவரை நமது முன்னோடித் திறனாய்வாளர் வரிசையில் முதன்மை இடம் வகிக்கச் செய்கிறது.
கீழைத்தேய ஓவிய மரபு பற்றி ஓரிரு வாக்கியங்களில் பொருத்தம் குறித் து உதாரணங்களுடன் காட்டியபின்பு, திற னாய்வாளர் விபுலானந்தர், திறனாய் வாளன் நூட்பமாக ஆராய வேண்டிய விஷயம் ஒன்றையும் கோ டி ட் டு காட்டுகிறார்.
25

Page 30
அவர் கூற்று வருமாறு:
‘மண்ணீட்டாளர், கண்ணுள் வினை ஞர் ஆகிய இருபாலாரையும் ஒவியர் என்பதும், வண்ணம், வடிவம் என நுணுகி வேறுப்படுத்தாது அனைத்தினையும் ஒவி யம் என்பதும் ஒருகலை.”*
இந்த ஒரு தலைப் பாங்கை விரும்பத் தகாத அம்சமாகச் சொல்லாமல் சொல்வி அடிகளார் ஒவியத்தை எவ்வாறு அளவிட வேண்டும் என்ற வரைவிலக்கணம் ஒன்றையும் தொடடுக்காட்டுகிறார்:
"ஒவியனானவன் படாத்தில் வர்ணம் தீட்டியோ, சுவர் மீது சிதையினால் புனைந்தோ, வெண் சலவைக்கல்லைச் செதுக்கியோ, கருங்கல்லை பொளிந்தோ வெளிப்படுத்திய உருவத்தை அறிவுடை யோன் நோக்கும்போது ஒ வியன து கைவன்மையை வியப்பதோடு egy 6ött) யாது, 'ஒவியன் உள்ளத்து உள்ளியது" இதுவெனக்கண்டு வியத்தல் வேண்டும். ஒவியனது உள்ளக்கருத்தே ஒவியத்திற்கு உயிர் போன்றது.”*
‘நவில் தோறும் இனிமை பயக்கும் நூல் நயம் போலவும், பயிலும் தோறும் இனிமை பயக்கும் பண்புடையினர் தொடர்பு போலவும், பார்க்கும் தோறும் அறிவுடையோனுக்கு உவகை அளிக்கும் ஒவியமே அழகிய ஓவியமாகும்.'
இவ்வாறு அழகாக த மி  ைழ க் கையாண்டு திறனாய்வுக் கோட்பாடுகளை விளக்கிய முதல்வர் அடிகளார் என்பதில் எந்தவித ஐயமும் வேண்டாம்.
“வண்ணமும் வடிவமும்’ என்ற கட்டுரை யிலே தொடர்ந்து வரும் செய்முறைத் திறனாய்வு விளக்கத்தைப் படிக்கும் பொழுது திறனாய்வாளர் விபுலானந்கரின் திறனை வியக்காமல் இருக்க முடிவதில்லை, இதோ அடிகளாரின் சம்பந்தப்பட்டபகுதிகள்:-
"பஞ்சரத்தில் உள்ள கிளிப்பிள்ளை பொன்வட்டிலிட் பாலடிசில் உண்ணுவதை
இவ்வோவியம் காட்டுகின்றது' என்று ஒர்
26

ஒவிய விமர்சகர் கூறினால், அது போது மான விளக்கம் இல்லை என்கிறார் அடிகளார். அவர் கூறுகிறார்:-
'காட்சி மாத்திரத்திலே அளந்து தீர்ப்பதற்குரிய ஓவியம் அறிஞருக்கு உவகை பயப்பதில்லை. இப்பொழிலகத்தே நிற்கும் மாமரத்தின் கனியினை இக்கிளிப்பிள்ளை உண்ணுகின்றது, எனக்குரிய ஓவியமும் முன்னையதைப் போல்வதே. ஆனால் ஓர் ஓவியன் இவ்விரண்டினையும் ஒரு படத் திலே சித்திரித்துத் தருகின்றான் என வைத்துக்கொள்ளோம். பொழில் நடுவில் அழகிய மாளிகை. மாளிகை மேல்மாடத் தில் ஒரு மடவரல். பஞ்சரத்துக் கிளிக்குப் பாலடிசில் ஊட்டுகின்றாள். பக்கத்தில் உள்ள மாமரக்கிளையில் இருக்கும் கிளி தன்னிச்சையாக மாங்கனியினை உண்கின் றது." இப்படத்தினைப் பார்த்தவுடனே நமது சிந்தையிலே பல்வேறு எண்ணங்கள் உதிக்கின்றன. இப்படம் சு த ந் தி ர வாழ்க்கைகையும் அடிமை வாழ்க்கையையும் குறிப்பிடுகின்றதா? அன்றேல், மனை வாழ்க் கையையும் பட்டிக்காட்டு வாழ்க்கையையும் காட்டுகின்றதா என இவ்வாறு எல்லாம் சிந்திக்கின்றோம். கண்ணினைக்கவர்ந்த படம் மனத்தினையும் கவர்ந்துவிட்டது' எனக் கூறிச் செல்லும் விபுலானந்த அடிகளை வெறுமனே, "அழகியல் ரசிக விமர்சகர்’ என்று அறியாதவர் கூறுவதை மேலும் நாம் அனுமதிக்கலாமா?
இன்னும் ஒன்று, இக்காலத் திறனாய் வாளர் பெரும்பாலும் எடுத்துக்கொண்ட பொருளைக் கோட்டைவிட்டுவிட்டு அங்கிங்கெல் லாம் சென்று தமது போலித் தன்மையான ஆழத்தைப் பறைசாற்றுவர். ஆனால் விபுலானந்த அடிகளோ மிகவும் இறுக்க மாகத் திறனாய்வு செய்வார். உதாரண மாக, இந்தக் கூற்றைக் கவனிப்போம்:-
**செயிவின்பம் நாவின்பம், மூக்கின்பம், ஊற்றின்பமாகிய ந்ான்கும் எடுத்துக் கொண்ட ஆராய்ச்சிக்குப் புறம்பானவை ஆதலின், அவை தம்மை ஒழித்து வண்ண மும் வடிவமும் காட்டும் செய்யுளானது (34ம் பக்கம் பார்க்க)

Page 31
சாகித்திய விழா
எஸ். தெய்வ
தமிழ் சாகித்திய விழா இவ்வாண்டு மார்ச் 29, 30. 31ம் திகதிகளில் கண்டி நகரில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அரசின் ஆதரவோடு நடைபெறும் இத் தகைய இலக்கிய விழா சுமார் 10 ஆண்டு இடைவெளிக்கு பின்னர் இவ்வாண்டு இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்துசமய கலாசார இராஜாங்க அமைச்சு அலுவலக மும், இந்துசமய கலாசார திணைக்களமும் இவ்விழாவினை நடாத்தின.
புத்தக்கண்காட்சி
மூன்று நாட்களும் இடம்பெற்ற புத் தகக் கண்காட்சி இவ் விழாவின் சிறப்பு அம்சமாக விளங்கியது. மட்டக்களப்பு திருகோணமலைப் பகுதிகளில் இருந்து அரசாங்க உத்தியோகஸ்தர்களும் இலக்கிய ஆர்வலர்களும் பல அரிய நூல்களை இக் கண்காட்சிக்கு அனுப்பியிருந்தனர். கொழும்பில் இருந்தும் இரு எழுத்தாளர் கள் தமது சேகரிப்பிலிருந்து பல நூல்' களைக் கொடுத்து உதவினர். வடபகுதி யில் உள்ள எழுத்தாளர்கள் தமது சேக ரிப்புக்களை அனுப்பி வைக்க முடியவில்லை. இக் கண்காட்சி மிகவும் பயனுடையதாக அமைந்ததோடு எல்லோரது பாராட்டுக் களையும் பெற்றது.
ஊர்வலம்
29ஆம் திகதி மாலை கண்டி கட்டுக் கலை செல்வ வினாயகர் ஆலய முன்றலில் ஆரம்பித்து திருத்துவ கல்லூரி மண்ட பத்தை நோக்கி சென்ற அலங்கார ஊர் வலம் பலரின் கவனத்தையும் கவர்ந்தது. இளங்கோ, கம்பர், ஒளவையார், உமறுப் புலவர், பாரதியார், வள்ளுவர், வீரமா முனிவர் போன்ற புலவர்களின் நூல்கள் யானை மீதும், பல்லக்குகள் மீதும் ஊர் வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. இப் புலவர்களின் வேடம் தாங்கிய மாணவ,

LDT Tj - 199
நாயகம்
மாணவிகள் ஊர்வலத்தில் பங்கு கொண் டதும் பெரும் தொகையான மாணவ மாணவிகள் அணிவகுத்து சென்றதும், பொதுமக்களும், இலக்கிய ஆர்வலர்களும் ஊர்வலத்தில் கலந்து கொண்டதும் விழா விற்கு ஒரு சோபையை ஊட்டியது. பல் லின மத மக்கள் வாழும் கண்டி மாநக ரில் மூன்று பெரும் மதங்களைச் சார்ந்த இலக்கியங்களை முதன்மைப்படுத்தி தமிழின் சமரச நோக்கினை எடுத்துக்காட்டிய இவ் ஊர்வலம் முக்கியமானதொரு செய்தி யையும் விழாவில் பங்கு கொண்ட மக்க ளுக்கு எடுத்து சொல்லியது என்றால் மிகையாகாது.
கருத்தரங்கும் கலை நிகழ்ச்சிகளும்
சாகித்திய விழாவில் இரண்டாம் நாள் (மார்ச் 30ம் திகதி) காலையில் கண்டி திருத்துவ கல்லூரி மண்டபத்தில் * மலையகத்தமிழ் இலக்கிய போக்கும் நோக்கும்" என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. முதுபெரும் எழுத்தாளர் திரு. கே. கணேஷ் அவர்களின் தலைமையில் பல எழுத்தாளர்கள் கலந்து கொண்ட னர். இறுதி நாள் நிகழ்ச்சியில் "எண்பது களில் தமிழ் இலக்கியம்' என்னும் கருத் தரங்கு இடம் பெற்றது. பேராசிரியர் சி. தில்லைநாதன் அவர்கள் இதற்கு தலைமை தாங்கினார்.
ஒவ்வொரு நாள் நிகழ்ச்சியின் இறுதி யிலும் மாலையில் விசேட கலை நிகழ்ச்சி கள் நடைபெற்றன. இவை மக்கள் மன தைக் கவர்ந்தன. இறுதி நாள் நடந்த விகுது வழங்கும் வைபவத்தில் மாண்புமிகு பிரதமர் டி. பி. விஜேதுங்கா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சாகித்திய பரிசு பெற்றவர்களுக்கான விருதுகளை வழங்கினார்.
27

Page 32
இவ்விழாவில் மாண்புமிகு பிரதம ரோடு பல அமைச்சர்களும் அரசியலாள ரும், அறிஞர்களும், அதிகாரிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அமைச்சர்கள் எஸ். தொண்டமான். ஏ. ஆர். மன்சூர், பி. வி. கவிரத்ன, எம். எஸ். செல்லச்சாமி. திருமதி. இராஜமனோகரி புலேந்திரன், மத்திய மாகாண சபை ஆளுனர், கண்டி மாநகர சபை மேயர், மேல் மாகாண சபை ஆளுனர், மத்திய மாகாண சபை முதல்வர், அமைச்சர் அவரின் செயலாளர், கண்டி அரசாங்க அதிபர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இவ் விழாவில் 'இலக்கிய செம்மல்" விருது வழங்கி நான்கு எழுத்தாளர்கள் கெளரவிக்கப்பட்டனர். இருபத்து மூன்று பேர் 'இலக்கிய வித்தகர்' என்னும் பட் டம் வழங்கி சிறப்பிக்கப்பட்டனர். இலக் கிய செம்மல், இலக்கிய வித்தகர் பட்டங் கள் வழங்கப்பட்டோர் விபரங்களைக்
கீழே தந்துள்ளோம்.
“இலக்கியச் செம்மல்" விருது பெறுவோர்
பண்டிதர் மு. கந்தையா
இவர் யாழ்ப்பாணம் ஏழாலையைச் சேர்ந்தவர். தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மும் மொழிகளில் சிறந்த பாண்டித்தி யம் பெற்றவர். சைவ சித்தாந்தத்தை கற்றுத் தெளிந்தவர். பல செய்யுள் நூல் களும், ஆய்வு நூல்களும் இவரால் வெளி யிடப்பட்டுள்ளன. மாவை பிள்ளைத்தமிழ், நாவலர் பிள்ளைத்தமிழ், சித்தாந்த விளக் கிற் சைவக் கிரியைகள், சித்தாந்த செழும் புதையல், அரியவும் பெரியவும் (இரண்டு பாகங்கள்) திருக்கேதீஸ்வரம் மான்மீயம் (புராதன காலம்) ஆகிய நூல்களை இவர் வெளியிட்டுள்ளார்.
வித்துவான் எவ். எக்ஸ். வR. நடராசா
யாழ்ப்பாணம் காரை ந க ரி ல்
2 l. 01 . 191 lb ஆண்டு பிறந்தவர்.
1950ஆம் ஆண்டு வித்துவான் பட்டம்
28

பெற்றவர், 1952ம் ஆண்டு தொடங்கி 1968ம் ஆண்டு வரை அரசகரும மொழித் திணைக்களத்தில் மொழிப்பெயர்ப்பு அத்தி யட்சகராகவும் கடமையாற்றி 1971ல் ஒய்வு பெற்றார். சொந்தப் பெயரிலும் புனைப் பெயர்களிலும் 300க்கு மேற்பட்ட கட்டுரை களை எழுதியுள்ளார், 1981இல் மதுரையில் நடைபெற்ற அனைத்துலக தமிழ் ஆராச்சி மகாநாடுகளிலும் 1976இல் மட்டக்களப்பில் நடைபெற்ற மகாநாட்டிலும் ஆய்வுக்கட் டுரைகள் படித்தார். இருபது நூல்கள் இவரால் எழுதப்பட்டுள்ளன. 1968இல் சாகித்திய மண்டல விருது வழங்கப்பட்டது,
எண்ணெய் சிந்து, ஈழமும் தமிழும் மொழிபெயர்ப்பு மரபு, மட்டக்களப்பு மான் மீயம், ஈழத்து நாடோடிப் பாடல்கள் ஈழத்து தமிழ் நூல்கள் வரலாறு, காரை நகர் மான்மீயம், மட்டக்களப்பு மக்கள் வாழ்க்கை என்பன இவர் எழுதிய நூல் களுட் சில,
திரு. கே. கணேஷ்
கரந்தல தோட்டம் தலாத்து ஒயா வைச் சேர்ந்த இவர் 2 - 3 - 1920இல் பிறந்தவர். 1945இல் முற்போக்கு எழுத்தா ளர்களை ஒன்றிணைத்து முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை தமிழகத்தில் ஆரம் பித்தார். சுவாமி விபுலானந்த அடிகளை தலைவராகவும் மாட்டின் விக்கிரமசிங் காவை உப தலைவராகவும் கொண்டு அகில இலங்கை எழுத்தாளர் சங்கத்தை ஆரம்பித்து கலாநிதி சரத் சந்திராவோடு இணை காரியதரியாகவிருந்து இலங்கை வாழ் தமிழ் சிங்கள எழுத்தாளரை ஒன்றிணைத்து பலப்படுத்தியவராகவும் இருக்கிறார்.
சிறந்த மொழிப்பெயர்ப்பாளர் சிறு கதை ஆசிரியரும் கூட. இலங்கை தமிழ் எழுத்தாளரின் பிரதிநிதியாக ரஷ்யா, பல்கேரியா போன்ற நாடுகளுக்கு எல்லாம் சென்றுள்ள இவருக்கு உலக கவிதை விழா வில் பங்கு பற்றியதற்காக யப்பானிய சக்கரவர்த்தி ஹரீரோ லிட்டோலின் விரு தும் கிடைத்துள்ளது, இவர் எழுதிய

Page 33
"ஆகஸ்ட் தியாகி ஆறுமுகம்" என்னும் சிறுகதை பலரின் பாராட்டையும் பெற்றுள் ளது குறிப்பிடத்தக்கது.
பேராசிரியர் ம. மு. உவைஸ்
பாணந்துறை (கொறக்கானை) யில் 18 - 1 - 1922இல் பிறந்தவர். தமிழ் சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பாண்டித்தியம் பெற்றவர். தமிழ் இலக்கி யத்திற்கு முஸ்லிம்களின் பங்களிப்பு என்ற தலைப்பில் ஆய்வு செய்து எம். ஏ. பட்டம் பெற்றவர்.
1975 பேராதனை பல்கலைக்கழகம் கலாநிதி பட்டம் கொடுத்தது. தனது சொந்தத்திலும் தொகுப்பாகவும், மொழி பெயர்ப்பாகவும் 46 நூல்களை இவர் வெளியிட்டு இருக்கிறார். இஸ்லாமியத் தென்றல், நம்பிக்கை, ஞானவள்ளல்குடி யார், நீதியும் நியாயமும், இஸ்லாமும் இன்பத் தமிழும், மக்காப் பயணம் போன்ற நூல்களை எழுதியிருக்கின்றார். மாட்டின் விக்கிரமசிங்காவின் கம்பெரலிய நாவலை "கிராமப் பிளவு" என்ற தலைப்பில் மொழி பெயர்த்து இருக்கிறார். சென்னை உமறுப் புலவர் பேரவை தமிழ் காவலர் பட்டத்தை யும் மதுரை முஸ்லிம் கலைஞர் சங்கம் * 'இலக்கிய சித்தர்' என்ற கெளரவ பட்டத்தையும் இவருக்கு வழங்கி கெளர வித்தன.
சாகித்திய பரிசு பெற்ற நூலாசிரியர்கள் *இலக்கிய வித்தகர்' என்னும் விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டனர். 1981ம் ஆண்டு முதல் 1988ம் ஆண்டு வரை வெளியிடப்பட்ட நூல்களுள்பரிசு பெறு வனவும் அவற்றின் ஆசிரியர் விபரமும்.
1. கொடுத்தல்:
இந்நூலாசிரியர் சுதாராஜ். 10-6-1983 ஆம் திகதி வெளியிடப்பட்ட இந்நூல், ஒரு சிரித்திரன் பிரசுரம் (யாழ்ப்பாணம்). சிறு
கதைத் துறையில் 1983 ஆம் வருடத்துக் கான சிறந்த நூற்பரிசைப் பெறுகிறது.

2. பிரசவங்கள்;
இந்நூலின் ஆசிரியர் கோகிலா மகேந் திரன். ஏப்ரல் 1986இல் வெளியிடப்பட்ட இந்நூல், 'சிவன் கல்விநிலைய' (தெல்லிப் பளை) வெளியீடு. சிறுகதைத் துறையில் 1986ஆம் ஆண்டுக்கான சிறந்த நூற் பரிசு இந்நூலுக்குக் கிடைக்கிறது.
3. மூட்டத்தினுள்ளே,
புலோலியூர் க. சதாசிவம் என்பவர் இந்நூலின் ஆசிரியர். ‘வீரகேசரி வெளியீ டாக வெளிவந்த இந்நூல், ஜுலை 1983ல் எழுதப்பட்டது. நாவல்துறையில் 1983ஆம் வருடத்துக்கான சிறந்த நூற் பரிசைப் பெறுகின்றது.
4. தண்ணீர்:
பிரபல நாவலாசிரியர் கே. டானியல் இந்நூலை எழுதியிருக்கிறார். 2-8-1987இல் வெளிவந்த இந்நூல். வாரா வெல்லை வெளியீடு (பருத்தித்துறை). நாவல் துறை யில் 1987ஆம் ஆண்டிற்கான சிறந்த நூற்பரிசு இந்நூலுக்கு வழங்கப்படுகிறது.
5. சாகுந்தல காவியம்:
இந்நூலின் ஆசிரியர் க. திருஞான சம்பந்தன் (சம்பந்தன்). மே 1987இல் வெளியிடப்பட்ட இந்நூல். கவிதைத் துறைக் கான 1987ஆம் வருட சிறந்த நூற்பரிசினைப் பெறுகிறது.
6. பொன்னாடை
இந்நூலின் ஆசிரியர் ஜூனைதா ஷெரீப். (கே. எம். எம். ஷெரீப்) 1988 மேயில் வெளியிடப்பட்ட இந்நூல் நாட கத்துறையில் 1988ஆம் ஆண்டுக்கான சிறந்த நூற்பரிசைப் பெறுகிறது,
7. தம்பி வந்த தாடி ஆடு;
இத்நூலின் ஆசிரியர் கலாநிதி சி. மெளனகுரு அவர்கள்; யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் நுண்கலைத்துறை விரிவுரையாளர். 1987 மார்ச்சில் வெளி யிடப்பட்ட இந்நூல், நாடக அரங்கக் கல்லூரி (யாழ்ப்பாணம்) வெளியீடு. சிறுவர் இலக்கியத் துறையில் 1987ஆம் வருடத்துக் கான சிறந்த நூற் பரிசு இந்நூலுக்கு வழங்கப்படுகிறது.
29

Page 34
* காட்டில் ஒரு வாரம்:
இந்நூலாசிரியர் அநு. வை. நாகராஜன் 23 நவம்பர் 1988இல் வெளிவந்த இந்நூல் *வைரமான் வெளியிடு? (தெல்லிப்பளை), சிறுவர் இலக்கியத்துறையில் 1988ஆம் வருடத்துக்கான சிறந்த நூற்பரிசை இந்நூல் பெறுகிறது.
9. தேசபக்தன் கோ. நடேசையர்:
இந்நூலின் ஆசிரியர் சாரல்நாடன். கண்டி, மலையக வெளியீட்டகத்தினால் ஜூன் 1987இல் வெளியிடப்பட்டது. 1988ஆம் ஆண்டுக்கான சிறந்த நூற்பரிசை ‘வாழ்க்கை வரலாறு' துறையில் இந்நூல் பெறுகிறது.
10. உள்ளதும் நல்லதும்:
இந்நூலாசிரியர் புலவர்மணி ஏ. பெரிய தம்பிப்பிள்ளை புலவர்மணி பெரியதம்பிப் பிள்ளை நினைவுப் பணி ம ன் ற ம் (மட்டக்களப்பு) 1982 இந்நூலை வெளி யிட்டுள்ளது. வாழ்க்கை வரலாறு என்ற துறையில் 1982 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூற்பரிசு இந்நூலுக்கு வழங்கப்படுகிறது.
11, 14 ஆம் நூற்றாண்டு முதல் 18 ஆம் நூற்றாண்டிறுதி வரை ஈழத்து தமிழ் இலக்கிய வளர்ச்சி:
இந்நூலாசிரியர் கலாநிதி க. செ. /5lسس ராசா அவர்கள். 1982இல் வெளியிடப்பட்ட இந்நூல், கொழும்பு தமிழ்ச் சங்க வெளியீடு. "இலக்கிய வரலாறு' துறைக்கான 1982ஆம் வருடத்துக்கான சிறந்த நூற் பரிசு இந்நூலுக்கு வழங்கப்படுகிறது.
12. பாரதியின் மொழிச் சிந்தனைகள்-ஒரு
மொழிசியல் நோக்கு:
இந்நூலின் ஆசிரியர் கலாநிதி எம். ஏ. நுஃமான் அவர்கள்: 1984மேயில் வெளி வந்த இந்நூல், யாழ்ப்பாணப்பல்கலைக் கழக கலைப்பீட வெளியீடு 'சமூகவியலும் மானிடவியலும்" துறைக்கான 1984ஆம் ஆண்டுக்கான சிறந்த நூற்பரிசு இந்நூலுக்கு வழங்கப்படுகிறது.
30

13. கீழைத்தேய கல்வியியற் சிந்தனைகள்.
இந்நூலாசிரியர் காலஞ்சென்ற என். கே. தர்மலிங்கம் 01-10-1977ஆம் வருடம் வெளியிடப்பட்ட இந்நூல், 1987ஆம் வருடத் திற்கான "சமூகவியலும் மானிட வியலும் துறைக்கான சிறந்த நூற் பரிசைப் பெறுகிறது.
14. இலங்கையிற் தொல்லிய லாய்வுகளும்
திராவிடக் கலாசாரமும்: இந்நூலாசிரியர் திருமதி. தனபாக்கியம் குணபாலசிங்கம். 1988 வைகாசியில் வெளி வந்த இந்நூல். 'சமூகவியலும் மானிடவிய லும் துறைக்கான 1988 ஆம் வருடத்துக் குரிய சிறந்த நூற்பரிசைப் பெறுகிறது.
1989 ஆண்டில் வெளியிடப்பட்ட நூல் களுள் பரிசு பெறுவனவும் அவற்றின் ஆசிரியர் விபரமும்
1. கோடிச் சேலை:
நூலாசிரியர் 'மலரன்பன் வடக்கு மாத்தளை கவுடு பெலல்லவைச் சேர்ந்த வர். 05-10-1989இல் வெளியிடப்பட்ட இந்நூல், 'சுஜாதா பிரசுரமாக வெளி வந்தது. சிறுகதைத் துறையில் இந்நூல் 1989ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல் பரிசைப் பெறுகிறது. ஆசிரியரின் 12 சிறு கதைகள் இந்நூலில் அடங்கியிருக்கின்றன.
2. நம்பிக்கைகள்;
நூலாசிரியர் பேராசிரியர் சிவஞான சுந்தரம் (நந்தி) யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மருத்துவத்துறைப் பேராசிரியர். 01-12-1989இல் வெளிவந்த இந்நூல் ஒரு "வரதர் வெளியீடு" (யாழ்ப்பாணம்). நாவல் துறையில் 1989ஆம் வருடத்துக்கான சிறந்த நூற்பரிசை இந்நூல் பெறுகிறது:
3. மஹாகவியின் புதியதோரு வீடு;
நூலாசிரியர் உருத்திரமூர்த்தி (மஹா கவி). செப்ரெம்பர் 1989இல் வெளியிடப் பட்ட இந்நூல், ஒரு 'வாச வெளியீடு' (கல்முனை). நாடகத்துறைக்கான 1989ஆம் வருடத்துக்குரிய சிறந்த நூற் பரிசை இந்நூல் பெறுகிறது.

Page 35
4. குழந்தைப் பாடல்கள்:
நூலாசிரியர் த. துரைசிங்கம் அவர்கள். இவர் ஒரு கல்வி அதிகாரி. 1989 வைகாசி uSci) வெளியிடப்பட்ட இந் நூ ல் பூரீசுப்பிரமணிய புத்தகசாலை (யாழ்ப் பாணம்) வெளியீடு சிறுவர் இலக்கியம் என்ற வகுதியினுன் இந்நூல் 1989ஆம் ஆண்டுக்கான சிறந்த நூற் பரிசைப் பெறுகிறது.
5. 6GLADíñasFaoT G ucbutuuñtHsñè):
இந்நூலாசிரியர் க லா நி தி சோ. கிருஷ்ணராஜா அவர்கள். இவர் யாழ்ப் பாணப் பல்கலைக்கழக மெய்யியல்துறை முதுநிலை விரிவுரையாளர். 1989இல் இந்நூல் வெளிவந்தது. இது ஒரு 'நான்" வெளியீடு (யாழ்ப்பாணம்), இலக்கியத் திறனாய்வு என்ற துறையில் இந்நூல் 1989ஆம் ஆண்டுக்கான சிறந்த நூற் பரிசைப் பெறுகிறது.
6. சமஸ்கிருத இல்க்கியச் சிந்தனைகள்: பேராசிரியர் வி. சிவசாமி அவர்கள் இந் நூலின் ஆசிரியர். இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமஸ்கிருதத் துறைத் தலைவர். ஜுலை 1989இல் வெளியிடப் பட்ட இந்நூல், ‘இலக்கிய வரலாறு துறைக்கான 1989ஆம் ஆண்டுக்குரிய சிறந்த நூற் பரிசைப் பெறுகிறது.
பல்கை
6)
ஆங்கில இலக்கியத்தை மட்டும் கற் உலக வரலாறு மானிடவியல், தத்துவம்,
வற்றையும் இடைவிடாது படித்து வந்திரு உளப் பாங்கு அவரிடத்தே வளர்வதாய் கொண்டிருந்த பொழுதும் அது அளவா? வில்லை. பாரதியாரை அடிகளார் போ!
காரணமாயிருந்திருக்கலாம்.
நன்றி; வி
(

7. இலங்கை அரசியல் பொருளாதார அபி விருத்தி 1948-56 வர்த்தக இனத்துவ நிலைப்பாடுகள்: இந்நூலின் ஆசிரியர் கலாநிதி வி. நித்தியானந்தன் அவர்கள்; யாழ்ப் பாணப் பல்கலைக்கழக பொருளியல் துறை முது நிலை விரிவுரையாளரான இவர், பொருளியல் துறையின் தலைவரும் கூட. 1989இல் வெளியிடப்பட்ட இந் நூ ல், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகக் கலைப்பீட வெளியீடாகும். "சமூகவியலும் மானிடவிய லும் துறைக்காக 1989ஆம் வருடத்துக் குரிய சிறந்த நூற் பரிசை இந்நூல் பெறுகிறது.
8. தாயாகப்போகும் உங்களுக்கு:
இந்நூலாசிரியர் டாக்டர் எம். கே. முருகானந்தன் அவர்கள் இது ஒரு * யதார்த்தா" (பருத்தித்துறை) வெளியீடு. ஜனவரி 1989இல் வெளியிடப்பட்ட இந் நூல், 1989ஆம் வருட அறிவியல் துறைக் கான சிறந்த நூற் பரிசைப் பெறுகிறது.
9. சிரித்திரன் சித்திரக்கொத்து:
திரு. சி. சிவஞானசுந்தரம் (சுந்தர்) இதன் ஆசிரியர். ஆவணி மாதம் 1989ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்நூல், ஒரு சிரித்திரன் வெளியீடு ( யாழ்ப்பாணம்) ஏனைய துறைகள் என்ற வகுதியுள், இந்நூல் 1989ஆம் ஆண்டுக்கான சிறந்த நூற் பரிசைப் பெறுகிறது.
பதோடு அமைந்தவர் அல்லர் அடிகள்
நக்கிறார். இவற்றின் விளைவாகவேபரந்த பிற்று. தமிழ்காதல் அடிகளாரை ஆட் 5வே இருந்தது. காதல் வெறியாக மாற ற்றியதற்கு இத்தகைய மன ஒற்றுமையும்
புலானந்த அடிகளார் படிவமலர், முத்தமிழ் முனிவரின் ஒப்பியல் நோக்கு" ராசிரியர் க. கைலாசபதி அவர்கள்
வேந்தர்
விஞ்ஞானம், புராதன மொழிகள் முதலிய
31

Page 36
32
Colonial
Regsie S
in the evenings my father aloud from Macaulay or Ab and Napoleon, his hero; 1, My mother, born in a villag
that superior tongue, When house; she called at School She spoke to the teacher i of the class, hearing the se
followed her out, as she sa was glad it was my last pealed; a gang of boys cal and shouted in chorus, ''G
My mother pretended not The snobbish little bastards them? That day 1 was dee Now, whenever remembel

Cameo
irizwardene
used to make me read bot's Nepoleon' (he was short, his hope for the future). ge, had never been taught
was six, we were moving
to take me away, n Sinhala, sensed the shock arvants' language; in dismay
aid, ' ' Gihing ennang. ''
day there. But then the bell me out, Sniggering, iihing vareng1' as my farewell
to hear the insult,
But how can blame ply ashamed of my mother. ... I am ashamed of my shame.
F
(Reproduced from POENIX Vol. 1, 1990)

Page 37
அடிமைச் ஆங்கிலம்: றெஜி சிறிவர்த்தனா
மாலை வேளைகளில் எனது தந்தை மக்காலே அல்லது அப்போற் எழுதிய (அவர் குள்ளமானவர், நெப்போலியே நானே அவரின் எதிர்கால நம்பிக்கை. கிராமத்தில் பிறந்த எனது தாயோ,
அந்த மொழியை ஒருபோதேனும் படி
எனது ஆறாம் ஆண்டில் வீடு மாறிே பள்ளியை விட்டெனை அழைத்துச் ெ அம்மா அன்று பள்ளிக்கு வந்தாள் ஆசிரிய ரோடு சிங்களம் பேசினாள் வேலைக் காரரின் மொழியைக் கேட்டு
வகுப்பறை அதிர்ந்ததை நானும் உண
* கிஹிங் என்னங்' என்றவள் சொல் அவளைத் தொடர்ந்தேன். அதுவே அ நான் மிக மகிழ்ந்தேன். ஆனால் உட மாணவர் கும்பல் வெளியே வந்தது,
கும்பலாகக் கத்திக் கொண்டும் 'கிஹ என்பதே எனக்குப் பிரியா விடையாய்
எனது தாயோ அவமரியாதையைக் ே பாவனை செய்தாள். தகப்பனை அறி ஆயினும் எப்படி அவர்களை ஏசுவேன் தாயைக் குறித்து ஆழ்ந்த வெட்கம் அ இன்றோ அதைநான் நினைக்கும் பே வெட்கம் பற்றியே வெட்கப்படுகிறேன்
குறிப்பு: இக்கவிதை றெஜி சிறிவர்த்தனாவி யின் தமிழாக்கம். இதன் ஆங்கில மூ சிங்கள மொழியில் 'கிஹிங் என்ன 'கிஹிங் வறெங்’’ (போய் வா) மரிய சிங்களத்தில் என்ன (வருக/வாருங் அழைக்கவும் வறெங் (வா) என்பது மாக வேலைக்காரர்களை அழைக்கவு காலனித்துவ இலங்கையில் ஆங்கி சிங்களம் வேலைக்காரரின் மொழிய! றெஜி இக்கவிதையில் சுட்டுகிறர். தட

சின்னம்
தமிழில்: எம். ஏ. நுஃமான்
த்தமிட்டு வாசிக்கச் செய்வார்
* நெப்போலியனை"
ன அவரது வீரன்
மேன்மைக்குரிய
த்தறியாதவள்.
ör frð
சல்ல
ார்ந்தேன்.
ல தைரியம் குலைந்து நான் அங்கென் கடைசிநாள் என னே மணி அதிர்ந்தது. நகைத்துக் கொண்டும் பிங் வறெங்’
.
களாதவள் போல் யாத் தற்குறிப் பயல்கள்! ? நானும் அன்று என் |டைந்தவன் தானே! ாதெலாம் எனது
air Colonial Cameo GT airpo -gi Sad 56,605 லம் எதிர்ப்பக்கத்தில் தரப்பட்டுள்ளது. ங்' (போய் வருகிறோம்) மரியாதை வழக்கு ாதை அற்ற வழக்கு, கள்) என்ற ஏவல் வினை சமமானவர்களை சமூக நிலையில் தாழ்ந்தவர்களை, உதாரண ம் பயன்படுத்தப்படுகின்றன. லம் உயர்வர்க்க மொழியாகமாறிய சூழலில் ”க அடிமைச் சின்னமாகக் கருதப்பட்டதை விழுக்கும் இது பொருந்தும்.
33

Page 38
(26ம் பக்க தொடர்ச்சி)
வல்லான் வகுத்த ஓவியம் போன்று அகக் கண்ணுக்கு 9 of as அளிக் கும் மாண்பினை." இவ்வாறு எழுதிச் செல்லும் அடிகளார் தேவைக்கேற்ற அளவுகோல்களை
மாத் தி ரம் வலியுறுத்துவதை நாம் காண்கிறோம்.
அடுத்ததாக ‘நிலவும் பொழிலும் என்ற கட்டுரையை எடுத்துக்கொள்வோம். அங்கு, விபுலானந்த அடிகளார் இவ்வாறு கூறுகிறார்;
'இன்பப் பொருள் அனைத்தும் அழகி னோடு இயைந்து நிற்பன. அழகினை அளத்தற்கு மனிதர் கொள்ளும் அளவு கோல் இரண்டு உள. *கண்டு கேட்டு உண்டு உயிர்த்துற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணேயுள' என்று அமை யின் மகளிர் பாற்பெறும் இன்பவிழைவின் வயப்பட்டோருக்கு பணி மலர்க்குழற் பாவை நல்லாரே எல்லா அழகிற்கும் அவ்வலகின் வழியெய்தும் எல்லா இன்பங் களுக்கும் நனி சிறந்த எடுத்துக் காட்டவர் என்பது வெளிப்படை."
'கவிஞன் கண்ணாடி போன்று பிறர் நிகழ்ச்சியை தன்னிகழ்ச்சியாகக் காட்டும் ஆற்றல் வாய்ந்தவன் ஆதலின் மேற்கூறிய அளவுகோல் இரண்டினாலும் அழகினை அளத்தல் அவர்க்கு இயல்பாகும்' என் கிறார் விபுலானந்தர்.
சுவாமி விபுலானந்தர் ஆங்கில இலக்கியத் தில் நன்கு பரிச்சயம் பெற்றவர் என்பது அவருடைய கட்டுரைகளைப் படிக்கும் பொழுது நமக்கு தெரியவருகிறது. குறிப் பாகத் ரொமாண்டிக் பொயெட்ஸ் (Romantic Poets) எனப்படும் மனோரதியக் கவிஞர்கள் கவிதா அனுபவத்தைப் பெரிதும் சுவைத்த வர். உவேட்ஸ்வேர்த், ஷெலி, கீட்ஸ், ப்ளேக், கோலரிட்ஜ் போன்ற மனோரதிய இயற்கை, கவிஞர்களைத் திறனாய்வு நோ க் கில்
சுவைத்தவர்.
34

ஜோன் கீட்ஸ் என்ற கவிஞரின் ஆக்கங்களில் இருந்து சில வரிகளை அழகு தமிழில் தந்து 'கவியும் சால்பும்' என்ற கட்டுரையில் எழுதி இருக்கிறார். இக் கட்டுரை 1941ம் ஆண்டு "செந்தமிழ்" தொகுதி 38ல் வெளியாகியது.
அக்கட்டுரையை விபுலானந்த அடிகள் இவ்வாறு ஆரம்பிக்கிறார்:-
'திருமலி யழகுடைச் செழும்பொருள் தானே உவகை நீர்மையது; ஆங்கள்வுவகை பன்னாட் கழியினும் கழியா வியற்பிற் றண்டா வின்பந் தந்துநிற்பதுவே" என ஆங்கில மொழிப் புலவராகிய கீற்ஸ் என்பவர் தாம் இயற்றிய "எந்திமியோன்" என்னும் பெருங் காப்பியத்திற்குத் தோற்றுவாய் கூறினார்.'
இவ்வாறு கூறும் திறனாய்வாளர் விபுலானந்த அடிகள், கீட்ஸின் 'A thing of beauty is a joy for ever" GT Gör gp -Th பிக்கும் கவிதை மொழித்தொடரை இவ் வாறு தமிழிற்தருகிறார்:
"அழகுடைய பொருள் என்றும் உவகை தருவது; அழியாவின்பத்தில் நீர்மையது; ஆதலின் அதுவே புலவராற் பாடுதற்கமைந் தது' இது கீற்ஸ் நிறுவிய முடிவு என்கிறார் விபுலானந்தர்.
கீற்ஸின் மற்றோரு சிந்தனையான “Beauty is Truth, Truth Beauty - that's all ye know on earth and all ye need to know" என்பதை இவ்வாறு தமிழில் தருகிறார் அடிகளார்:
'அழகே உண்மை, உண்மை அழகென உலகினில் அறிந்தோர் அறிவு பிற வேண்டார்".
இதை விளக்கும் விமர்சகர்' "ஆண்டு அழகிற்கு உண்மை ஒப்புடைப் பொருளா கக் கூறப்பட்டது' என்கிறார்.
அது மட்டுமல்லாமல், இந்தியத்தத்துவ ஞானத்தின் சில கூறுகளுடன் எவ்வாறு மேலைத்தேய இலட்சியச் சிந்தனைகள்

Page 39
இணைக்கின்றன என்பதையும் தொட்டுக் காட்டுகிறார். அவற்றை நாம் மீள அவதா னித்தல் பொருத்தமுடையது:
"அறிவு, இச்சை, செயல் (ஞானசக்தி, இச்சாசக்தி, கிரியாசக்தி) எனும் மனநீர்மை மூன்றினுள் அறிவு உண்மைப்பாலது: இச்சை அழகின்பாலது; செயல் செம்மைப் பாலது. உண்மை, அழகு, செம்மை என்பன முறையே அறிவு, இச்சை, செயலுக்கு எல்லையாகவும் நிலை க்க ள மா கவும் அமைந்தன."
'மன நீர்மை மூன்றாயினும் மனம் ஒன்றே ஆதலினாலே உண்மை, அழகு, செம்மை என்பன தம்முள்ளே ஒப்புடைய வாயின. அழகே உண்மை, உண்மையே அழகு, அழகே செம்மை, செம்மையே
அழகு, உண்மையே செம்மை, செம்மையே 2-6ot solo”.
"செம்மை, உண்மை, அழகென்னும் இவற்றை வடநூலார் சிவம், சத்தியம், சுந்தரம் என்பர்". ஆங்கில நூ லார் Goodness, Truth, Beauty grairLiii.
இவ்வாறு அழகாக ஒப்பீடு செய்யும் அடிகளாரின் விளக்கவுரை, மேலும் இலக்கி யத் திறனாய்வு நயச் செறிவைத்தருகிறது. அதனையும் பார்ப்போம்.
* நெஞ்சத்து நல்லம் யாமென்னும் நடுவு நிலைமையாற் கல்வியழகே அழகு என்புழி. "நெஞ்சத்து நல்லம்" எனச் செம் மையும் "கல்வியழகு" என அறிவும் அழகின் வேறின்மையாதற் கூறப்பட்டது; "உரு வின் மிக்கதோர் உடப்பினைப் பெற்றோ ரும் கல்வியறிவில்லாதவழி அறிவுடையோ ரால் அழகிலரெனக் கருதப்படுவராத லின் கல்வியழகேயழகு" என்னுமிடத்து வந்த ஏகாரம் பிரிநிலையும் தேற்றமுமா யிற்று.' விபுலானந்தர் மேலும் கூறுகிறார்:
* அழகும் உண்மையும் கவிப்பொருளா யினவாறு போலச் செம்மை வயத்ததாகிய சால்பும் கவிப் பொருளாயிற்று. காப்பியத்

தலைவனிடங் காணப்படும் இயல்பே காப்பியக்கவிகள் விளித்துக் கூறும் பெரும் பொருள்."
‘வாழ்க்கையிலே en á L afrtíisö தோனாகிய கவிஞனொருவன் சால்பினைக் கவிப்பொருளாகக் கொண்டு செய்யுள் செய்வானாயின், அச்செய்யுள் இனிமையும் மாண்பும் உறுதியுந் தந்து மிளிருமென்பது அறிஞராயினாருக்கு உடம்பாடேயாம்".
குறிப்பிட்ட 'கல்வியும் சால்பும்" என்ற இக்கட்டுரையின் நோக்கத்தை ஒரு திறனாய் வாளனுக்கே உரிய திட்டவட்டமான முனைப் புடன் விபுலானந்தர் எடுத்துக் கூறுவதும் இங்கு நோக்கத்தக்கது.
வெள்ளக்கால் கிழார் இயற்றிய தனிச் செய்யுள்கள் பற்றிக் குறிப்பிடும் விபுலானந் தர் இவ்வாறு கூறுகின்றார்;
* "வெள்ளக்கால் கிழார் இயற்றிய தனிச் செய்யுளகத்துக் காணப்படும் கவியழகு கள் பல துறைய. அவையனைத்தையும் ஆராய்ந்து கூறப்புகின் உரை பெருகுமாத லின், மக்களைத் தேவராக்கும் நீர்மயரா கிய "சால்பு' என்னும் பெரும் பொருளினைக் குறித்து, வாழ்க்கையிலே சால்பு வாய்ந்த இப்பெரும் கவி கூறிய பல கவிதைகளிலே ஒரு சி ல வ ற் றை ஆராய்ந்து அவை தம்முட் பொதிந்த அழகினை எடுத்துக் காட்டுதலே ‘கவியும் சால்பும்" என்னும் பொருளு ரை யி ன் நோக்கமாகும்.'
மேற்கண்டவாறு கூறிவிட்டு பொருளு ரையை திறனாய்வாகவே விபுலானந்தர் எழுதியிருப்பதைப் படிப்பவர்கள் உணரத் தவறார்.
'இலக்கியத் திறனாய்வு' என்ற வகுதிக்குள் இலக்கிய கட்டுரைகளையும் அடக்கலாம். அத்தகைய இலக்கியக் கட்டுரைகளில் ஒன்று ‘யாழ் நூல்' பற்றி அவர் எழுதியதாகும். அக்கட்டுரையில் யாழ் உறுப்பியல் என்ற தலைப்பிலே வில் யாழ், பேரியாழ், கவைக்கடை ஆகியன
35

Page 40
பற்றி வரைபடங்களுடன் தகவல்களை அவர் இலக்கிய நயம் செறிந்த கட்டுரையாகத் தருவது திறனறிந்து சுவைக்கும் வாசகர் களுக்குப் பரமதிருப்தி அளிக்கும்.
இதேபோன்றே ‘இயலிசை நாடகம்' என்ற கட்டுரையையும் குறி ப் பி ட வேண்டும்.
வசன நடை கைவந்த வல்லாளன் என்று ஆறுமுக நாவலரைப் போற்றுவதில் தவறில்லை. ஆனால் விபுலானந்தரின் தமிழ் நடையையும் மொழியாக்கத் திறனையும் வியந்து பாராட்டாமல் இருக்க முடிய வில்லை. பிற்காலத்தில் ரா. பி. சேதுப் பிள்ளை, அறிஞர் அண்ணா போன்றவர்கள் தமிழைக் கையாளும் ஆற்றலைப் பெறு வதற்கு முன்னோடியாக திகழ்ந்தவர்
விபுலானந்த அடிகள் என்றால் அது மிகையாகாது.
தமிழரும், யூதரும் ஆபிரிக்கரும் இன்று உலக நாடுகளின் கவனத்தை ஈர்ப்பவர்கள்" தமிழருக்கென்று தனி நாடு ஒன்று இல்லா விட்டாலும், "யாம் ஊரே யாவரும் கேளிர்" என்ற உலக நோக்குக்கிணங்க ஆறு கோடி தமிழர் இன்று உலகெங்கிலும் பரவிக் காணப்படுகின்றனர். சுவா மி விபுலானந்தரின் ஒரு கூற்று இந்த இடத் திலே பொருத்தமானது. அவர் கூறுகிறார், "உலக சரித்திரமே தமிழ்க் குலத்தாரோடு தொடங்குகின்றது என்பதும், இற்றைக்கு 9 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே பூவல யத்தின் நடுப்பாகம் முழுவதிலும் தமிழ்க் குலத்தார் சீரும் சிறப்பும் உற்று வாழ்ந் தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது."
சுவாமி விபுலானந்தர் 'ஆங்கில வாணி' என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை, முதற்தடவையாக ஆங்கில இலக்கியச் செல்வங் களைத் தமிழ் இலக்கியத்திற் பழகிய அனை வரும் எளிதிற் புரிந்து கொள்ளும் விதத்தில் எழுதப்பட்டமையும் நமது திறனாய்வு நோக் கிற்கு உட்பட்டதே.
தமிழ்நாட்டுப் பண்புகள் சில வும் ஸ்கொட்லாந்து நாட்டுப் பண்புகள் சிலவும்
ஒத்திருப்பன. ஸ்கொட்லாந்து மக்கள்
96

ஆங்கிலம் பேசும் முறையும் இலங்கைத் தமிழர் ஆங்கிலம் பேசும் முறையும் ஒத்திருப் பதை நாம் குறிப்பிடலாம். ஐ. டி. என். தொலைக்காட்சியில் இடம்பெற்ற ஸ்கொட் லாந்து தொலைப் படத்தின் சில காட்சி களில் பாத்திரங்கள் பேசு ம் முறை யாழ்ப்பாணத்துத் தமிழர் ஆங்கிலம் பேசும் முறையைத் தழுவியதாக இருந்ததை நாம் அவதானித்தோம். ஸ் கொ ட் லா ந் தி ல் பிறந்த புகழ்பெற்ற எழுத்தாளர் சேர் வோல்டர் ஸ்கொட். அவரைப் பற்றி விபுலானந்தர் இவ்வாறு மதிப்பீடு செய் கின்றார்:
"வோல்டர் ஸ்கொட் எத்தனையோ சிறந்த வசனக் காவியங்களைச் செய்திருக் கின்றார். இவர் ஆற்றிய செய்யுள் வடிவ நூல்கள் அத்துணை உயர்வுடையவல்லவா கினும் கதை பொதிந்த பனுவல்களாதலின் இளைஞர்களுக்கு உவகை பயப்பன. இவர் ஸ்கொட்லாந்தில் பிறந்தவர். தேசாபி மானம் நிறைந்தவர். பழைய காலத்திலே தமது நாட்டிலே வாழ்ந்த குறுநில மன்னரது வீரச் செயல்களையும் அவர்களது மன்றங்களிலே யாழிசைத்த பாண ர் திறத்தினையும் சிறப்புறக் கூறுவார்."
வரலாற்று மனோரதிய நாவல்களை அதாவது "உறிஸ்ரோறிக்கல் ரொமான்சஸ் (Historical Romances) sógóổiv 6TpG புகழ் பெற்ற "கல்கி" கிருஷ்ணமூர்த்தியைத் தமிழ்நாட்டு சேர் வோல்டர் ஸ்கொட் என்றும் கூறுவர். 'கல்கி" ஸ்கொட்டினால் கவரப்பட்டவர் என்பது வெளிப்படை.
திறனாய்வாளர் விபுலா ன ந் த ர் ஸ்கொட் பற்றிக் குறிப்பிடும் மேலும் சில பகுதிகளும் அவதானிக்கத்தக்கவை;
"இவரது பாடல்களைப் படி க்கு ம் பொழுது பழந்தமிழ் நாட்டின் நினைவு உள்ளத்திலே இயல்பாக எழும். பன்னுயிர் காக்கத் தம்முயிரை ஈயும் மறவச் செய லும், அடுகளத்திலே தம்மைந்தர் பொருது வீழ்ந்த செய்தி கேட்டு உவகைக் கண்ணிர் புகுத்த வீரத் தாயார் செயலும் ஆண்மை. சான்ற் ஆடவரும் அழகு வாய்ந்த அரிவைய

Page 41
ரும் கேட்டு உளமுருகுமாறு வீரச்செறிந்த பாடல்களை யாழ் இசையோடு பாடும் பாணர் செயலும், பழந்தமிழ் நாட்டுக்கு உரியனன்வன்றோ? இத்தகைய செயல்கள் வோல்டர் ஸ்கொட் என்னும் கவிஞரது நாட்டுக்கும் உரியன".
திறனாய்வாளர் விபுலான ந் த ர், உவேட்ஸ்வேர்த் என்ற கவிஞனின் ஆக்கம் ஒன்றையும் தமிழிற் தந்து திறனாய்வு ரீதி யில் அறிமுகப்படுத்துவதும் பாராட்டத்தக்கது. ரொமான்ரிக் கவிஞர்கள் எனப்படும் உவேட்ஸ்வேர்த், ஷெலி, கீற்ஸ், பைரன், ஆகியோர் பற்றியும் தொட்டுப் பார்க்கும் அடிகளார் கீற்ஸ், மறைவின் நூற்றாண்டு விழாவிற்குத் தாம் அனுப்பிய கவிதை ஒன்றையும் இக்கட்டுரையிற் சேர்த் துள்ளார்.
மற்றும் ரெனிசன், G32)/prT uô ri-, பிரவுனிங், ஜோர்ஜ் பேர்னாட்ஷோ போன்றவர்களையும் அடிகளார் அறி முகம் செய்கிறார்.
விபுலானந்த அடிகளார் எழுதிய மற் றொரு பயனுள்ள நீண்ட திறனாய்வுக் கட்டுரை, 1922ஆம் 23ஆம் 24ஆம் ஆஷ் டு களில் ‘செந்தமிழ்" ஏட்டில் வெளியாகின. மேற்றிசைச் செல்வம்" என்னும் தலைப் பிலே வரலாற்றுச் செய்திகளை அழகு தமிழில் தருவதோடல்லாமல், ஒர் ஆய்வறி வாளனுக்கே உரிய முறையில் கருத்துக்களைத் தர்க்க ரீதியாகவும் தருகிறார்.
உதாரணமாக இந்தப் பகுதியைப் பார்ப்போம்:
'.இவ்வாறெல்லாம் மேலைத்தேச சாஸ்திரிகள் ஆராய்ந்து கண்டிருக்கிற முடிவுகளை நமது புரானே திகாச முடிபுக ளோடு ஒட்டி யுக்தி கொண்டு ஊசிக்கக் கிடக்கும் சித்தாந்தங்கள் சிலவுள. அவற்றை முடிந்த முடிவுகள் என்று கொள்வதற்குப் போதிய சான்றில்லையாதலதல், 'இருத்தல் கூடும்' என்னும் படியிற்கெண்டு ஆராய்வது அறிஞர் கடன்" என்கிறார். இதுவும் திறனாய்வுப் பண்பு அல்லவா? இன்னோர் இடத்திலே. இவ்வாறு கூறுகிறார்:

"ஹோமர் என்னும் மகாகவி இயற் றிய இலியட், ஒடிசி என்னும் காப்பியங்கள் இரண்டும், யவனபுரத்தாருக்கு நாற் பொருள் பயக்கும் நீர்மையவாகப் பின்நூல் பலவற்றிற்கும் முதன் நூலாக நிலை பெற்றிருந்தன".
**இக்காவியங்கள் ஒவ்வொன்றும் 24 காதைகளால் அமைந்தன. 30 காதைக ளால் அமைந்த மணிமேகலை நூலின் செய்யுள் தொகை 30 அகவற்பாவாலானது போல இவ்விரு காப்பியங்களும் 24 வீர பாக்களால் முடிந்தன. வீரப்பா பலவாய அடிகளால் நீண்டு நடக்கு நேர்மையது".
'இதன் யாப்பினை ஆராயுமிடத்து அடியொன்றுக்கு ஆறு சீராய் முதலைந்து ஒரும் குருலகு லகு என நிற்க ஈற்றிச்சீர் குருகுரு எனக்காண்போம். ஒரோவொரு சீர் இடையிநூல் குருகுருவென நிற்பதுண்டு. வடமொழி யாப்பின் வழிவந்த செய்யுளி னங்கள் தமிழில் வந்து நடப்பது போல யவன மொழியின் வழிவந்த வீரப்பாவை யும் சொல்லாசிரியருரைத்த க லிப் பா வகையினுள் அடக்கித் தமிழிலெழுது வாம்." என்று அவர் எழுதுவதைப் படிக்கும் எவரும் விபுலானந்த அடிகளின் ஒப்பீடு செய்யும் தன்மையை அவதானிக்க லாம்.
'தமிழ் ஹெரோயிக் பொயெற்றி" என்ற தலைப்பில் பேராசிரியர் க. கைலாச பதி ஆங்கிலத்தில் எழுதிய நூலிலேகிரேக்க, தமிழ், வீரயுகப்பாடல்களை ஒப்பீடு செய் தார். கைலாசபதிஅவர்களுக்குக் கலாநிதிப் பட்டம் இந்த ஆராய்ச்சி மூலம் கிடைத்தது. கைலாசபதி அவர்கள் நவீனத்துவ நோக்கில் திறனாய்வுத்துறையை வளர்த்துச் செல்ல முன்னோடியாக நின்றவர் விபுலானந்த
'அடிகளே.
அடுத்து வரும் மேற்கோள் இதனை ஒரளவு நிரூபிக்கும். விபுலானந்தர் கூறுகி றார்: "ஹோமருடைய காலம் கலி 2057 என ஒரு சாராரும், கலி 2050 என மற்றொரு சாராரும் கூறுவர். கலி 2300 வரையில் இருந்த ஹெஸியோட் என்னும்
37

Page 42
பெரும்புலவர், 'நாளும் வினையும்" என்ற பெயரில் நூலொன்று செய்தளித்தார்.
இந்நூல் நமது மொழியில் உள்ள பதி னெண் கீழ்க்கணக்கினையொத்த நடையி னது. ஹோமர் இயற்றிய தனிப்பாசுரங் களும் பலவுள. இவை யாவும் வீரச் சுவை யும் இன்பச் சுவையும் செறிந்தன".
இன்னொரு இடத்திலும் திறனாய்
வாளனுக்குரிய ஒப்பியல் நோக்குத்தன்மை யைக் காண்கிறோம். 'தமிழ் நூலில் தலைசிறந்து விளங்கும் புறநானூறு என்னும் நூலானது வ டி வே லே ந் தி அடுகளத்துப்பொருத சுத்த வீரர்களால் பாடப்பட்ட வஞ்சினக்காஞ்சி போன்ற செய்யுட்களைத் தன்னகத்துக் கொண்டமை யானன்றோ நாம் அதனைப் பொன்னே போற் போற்றுகிறோம். யவனபுரத்துப் பூர்வ நூல்களும் இத் த கை ய ன வே. ஆதலினாலன்றோ அவை இன்றும் நிலை பெற்று இன்று தேவருலகத்தில் அமுதம் போல படிப்போருக்கு உற்சாகத்தையும் தீவிரத்தையும் தருகின்றன".
(இலங்கை முற்போக்கு எழுத்தாள சுவாமி விபுலானந்த அடிகள் நு வாசிக்கப்பட்ட
பாரதியும் , 'சுப்பிரமணிய பாரதியார் எழுதிய முன்னேற்றமான கருத்துக்களைப் பொ இலக்கியங்களைக் கற்றறிந்த பண்டிதர்க மரபோடும் முற்றப் பொருந்தாமையின் வெறுத்தனர். அப்பாடல்களுக்குரிய ே ஆனால் அடிகளார் அண்ணாமலை நகர் ஒரு சங்கமும் கூட்டி அப்பாடல்களை இை பாடுவித்தார். அதன் பின்னரே பாரதியா பரவின. தேடாதிருந்த பாரதியாரைத் சுவாமி விபுலானந்த அடிகளுக்கே உரித்
38

ஒரு திறனாய்வாளனுக்கு இருக்க வேண்டிய கட்டுக்கோப்பான நெறி முறையை அடிகளார் நினைவுறுத்துவார். ‘'எடுத்துக்கொண்ட விஷ ய த் தோடு தொடர்புடைய பொருளை மாத்திரம் பேசலாம் என்று எண்ணுகிறேன்' என அவர் 'சோழமண்டலத் தமிழும் ஈழ மண்டலத் தமிழும்" என்ற ஒப்பாய்வுக் கட்டுரையில் குறிப்பிடுவதை நாம் அவதானிக்கலாம்.
விபுலானந்த அடிகளின் மாணவரே பேராசிரியர் கணபதிப்பிள்ளை. பின்னவரின் 'நானாடகம்' என்ற தொகுதியைப் படித் துச் சுவைத்த அடிகளார் 'மட்டக்களப்பு வழக்கு மொழியினையும் ஓரிரண்டு நாடகங் களிலே படம்பிடித்து வைப்பது நன்று' என ஆலோசனை கூறினார்.
திறனாய்வாளர் என்ற வகையில் மறைந்த சுவாமி விபுலானந்தர் அவர்கள் எவ்வாறு செயற்பட்டார் எனக்காட்டும் முகமாக சில விபரங்களை இக்கட்டுரை
யில் தொகுத்துத் தந்தோம்.
ர் சங்கம் 26-7-91 ஏற்பாடு செய்த ாற்றாண்டு விழா நினைவுரையாக - கட்டுரையிது)
அடிகளாரும் பாட்டுக்கள் யாவும் மிகுந்த உணச்சியுடன் திந்துள்ளனவாய் இருந்தாலும் இலக்கண ள் அவை பழைய யாப்பமைதியோடும் தமிழ் உண்மையான தமிழ் கவிதைகளல்ல என லான சிறப்பையும் கொடுக்க மறுத்தனர் அடைந்தபோது அங்கு பாரதி கழகம் என்ற சயறிந்த புலவரைக் கொண்டு இசையுடன் ர் புகழும் பாட்டுக்களும் தமிழ் நாடங்கணும் 5மிழ் உலகம் கனம் பண்ண வைத்த பெருமை 5ாகும்.
'அடிகளார் படிவமலர்' யாழோசை பேராசிரியர்: க. கணபதிப்பிள்ளை

Page 43
பழந்தமிழ் இசை ஆ விபுலானந்தர் 9 &
சில தக
(தமிழியல் மாணவன் ஒருவனின் குறிப்ே
தமிழிசை இயக்கம்:
1930ற்கு பிற்பட்ட இரு தசாப் தங்களில் தமிழகத்திலே தமிழிசை இயக்கம் எழுச்சி பெற்றது. தமிழிசை இயக்கம் வேகம் பெற்ற காலத்திலே தமிழிசை பற்றி நடந்த முக்கிய ஆராய்ச்சிகளின் பெறுபேறு தான் சுவாமி விபுலாநந்தரின் யாழ்நூல்" இப்பின்னணிபற்றிக் க லா நிதி பொ. பூலோகசிங்கம் எழுதியிருப்பது.
"1929இலே சிதம்பரத்தில் அண்ணா மலைச் செட்டியார் இசைக் கல்லூரி நிறுவினார்; 1932இலே சிதம்பரம் இசைக் - கல்லூரி அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தோடு இணைக்கப்பட்டது. அண்ணா மலைப் பல்கலைக்கழக இசைப்பகுதி 1940 வரை தமிழ் அல்லாத மொழிகளின் பாடல் களுக்கே முக்கியத்துவம் கொடுத்து வந்தது. 1940 - 1941 ஆம் ஆண்டுகளில் அண்ணா மலைச் செட்டியார் பழைய தமிழ் இசைப் பா ட ல் க ளை ப் பிரபல்லியப்படுத்தவும், புதிய தமிழிசைப் பாடல்களை ஊக்குவிக்க வும் 20,000 ரூபா வழங்கினார். 1941 ஆகஸ்டு 14 - 17 தேதிகளில் முதல் தமிழ் இசை மாநாடு அண்ணாமலையில் நடந் தது 1943 மே மாதம் சென்னை தமிழ்ச் சங்கம் நிறுவப் பெற்றது. அங்கு 1943 திசெம்பர் 23 முதல் 1944 ஜனவரி 4 வரை முதல் தமிழ் இசைச்சங்க மாநாடு நடைபெற்றது. சென்னைத் தமிழ்ச் சங்கம் 1944 ஜனவரியில் இசைக் கல்லூரியை நிறுவியது. எனவே நாற்பதுகளிலே தமிழிசை இயக்கம் வேகம் பெற்றமை தெளிவாகின்றது.'

ஆராய்ச்சியும் சுவாமி களின் யாழ்நூலும்
வல்கள்
பட்டில் இருந்து தொகுக்கப்பெற்றவை.)
யாழ் நூல் அரங்கேற்றம்:
யாழ்நூல் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தி னால் 1947ம் ஆண்டு வெளியிடப்பட்டது. யாழ் நூல் அரங்கேற்றம் பற்றி அருள் செல்வநாயகம் எழுதியிருப்பவை.
'அடிகளார் பத் தாண் டு களாக ஆராய்ந்து கண்டுணர்ந்த இசை நூலான யாழ்நூலினனக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்து ஆதரவில் திருக்கொள்ளம்பூதூர்த் திருக் கோயிலில் சர்வசித்து ஆண்டு ஆவணித் திங்கள் 20ஆம், 21ஆம் நாள் (20-21-6-47) அரங்கேற்றினார்.
முதலாம் நாள் விழாவில் திருக்கோயில் வரிசைகளுடன் இயற்றமிழ் புலவர்கள், அறிஞர்கள் சூழ்ந்துவர அடிகளாரைத் தெற்கு வாயிலாகத் திருக்கோயிலுக்கு அழைத்து வந்தார்கள். அழைப்பு ஊர்வலத் தில் மறைந்தொழிந்த யாழ்களை அடிகளா ரின் கணக்குப்படி தயாரித்து முளரியாழ், சுருதி வீணை, பரிசாத வீணை, சதுர்த் தண்டி, வீணைகளைத் தாங்கிச் சிலர் சென்றார்கள்.
நாச்சியார் முன்னிலையில் அடிகளார் இயற்றிய நாச்சியார் நான்மணிமாலை வித்துவான் ஒளவை துரைசாமிப்பிள்ளை அவர்களாற் படிக்கப்பட்டு நிறைவேறியது. பின்னர் எல்லோரும் அரங்கேற்று மண்ட பத்தினுக்குச் சென்றார்கள்.
தேவார இன்னிசைப் பண்களோடு தொடங்கிய அரங்கேற்று விழாவில் கோனுார்ச் சமீந்தாரும் திருக்கொள்ளம் பூதூர்த் திருப்பணிச் செல்வரும் கரந்தைத்
39°

Page 44
தமிழ்ச் சங்கத்துப் புலவருமான திருவாளர் பெ. ராம. சித்ம்ப்ரம் செட்டியார் அவர்கள் அனைவரையும் வரவேற்று வரவேற்புரை நிகழ்த்தினார். பின்னர் அடிகளார் யாழ் நூலினுக்கு விளக்கம் கொடுத்தார். அடுத்துக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்து அமைச்சரான திரு. கந்தசாமி அவர்கள் அடிகளார் ஆராய்ந்தளித்த யாழ்களின் சிறப்புகளைப் பற்றிப் பேசினார். பின்னர் திரு. தி. சு: அவிநாசிலிங்கம் செட்டியார், திரு. ஆர். பி. சேதுப்பிள்ளை ஆகியவர்கள் அடிகளாரைப் பாராட்டி விரிவுரைகள் நிகழ்த்தினார்கள்.
சங்கீத பூஷணம் திரு. க. பொ. சிவானந்தம்பிள்ளை அவர்கள் அடிகளார் கண்டுணர்ந்த யாழ்களை மீட்டி இன்னிசை பொழிய, முதலாம் நாள் விழா நிறை வெய்தியது.
இரண்டாம் நாள் விழாவில் நாவலர் சோமசுந்தரப் பாரதியார், குமரன் ஆசிரி யர் சொ. முருகப்பா, தமிழ்ப் பேராசிரியர் தெ, பொ. மீனாட்சி சுந்தரம்பிள்ளை, சென்னைப் பல்கலைக்கழக இசைப் பேரா சிரியர் சாம்பமூர்த்தி ஐயர் ஆகியவர்கள் விரிவுரை நிகழ்த்தினார்கள். பின்னர் அடிகளார் யாழ்பற்றிய பல உண்மைகளை எடுத்துக் கூறினார். அடுத்து வீணை வித்தகர் சிவானந்தம்பிள்ளை அவர்கள் யாழ் நூலிற் கண்ட கணக்குப்படி அமைத்த சுருதி வீணையில் ஏழ்பெரும்பாலைகளைக் கிரகசுவரம் மாற்றி இசைத்து அவை யினோரை ஆனந்தப்படுத்தினார்.
இறுதி யா க வித் து வா ன் வெள்ளைவாரணனார் யாழ் நூலின் பெரு மைபற்றிப் பேச, யாழ் நூல் அரங்கேற்றப் பட்டது. கரந்தைத் தமிழ்ச் சங்கத்து அமைச்சர் திரு, கந்தசாமி அவர்கள் நன்றியுரை கூற, யாழ் நூல் அரங்கேற்று விழா இனிது முடிவுற்றது."
தமிழிசை ஆராய்ச்சி:
விபுலாநந்தர் எழுதிய நூலின் அருமையையும் பெருமையையும் L. GR) அறிஞர்கள் போற்றிப் புகழ்ந்துள்ளனர்.
4.

இருப்பினும் யாழ் நூல் பற்றிய முறையான மதிப்பீடு ஒன்றை ஈழத்து அறிஞர் ஒரு வராவது செய்யத்துணியவில்லை. அடிக ளார் மீது கொண்டிருக்கும் மதிப்பும் பக்தியும் புற நிலையான ஆய்வு முயற்சிக்குத் தடையாக அமைந்ததோ? அ ல் ல து தமிழிலக்கியப் புலமையும் இசை பற்றிய ஆழ்ந்த ஆய்வறிவும் உள்ளவர்களின் பஞ்ச மும் இசை, பல்கலைக்கழக மட்டத்தில் ஒரு கல்வித்துறையாக இங்கு விருக்தியுறாத தும் தான் காரணமோ என்பது சிந்தனைக் குரியது. பழந்தமிழிசை பற்றிய ஆய்வாளர் களில் விபுலானந்தரும் ஒருவர் என்பதை யும், யாழ்நூல் அரங்கேறிய பின்னருள்ள சுமார் 50 ஆண்டு காலத்தில் (இலங்கை யைப் போல் அன்றி) தமிழகத்தில் தமி ழிசை ஆராய்ச்சித் துறையில் பல முயற்சி கள் மேற்கொள்ளப்பட்டன என்பதையும் மனதிற் கொள்ளுகலும், பின்வந்த ஆய்வு களின் பின்னணியில் யாழ் நூலினை மதிப் பீடு செய்தலும் விபுலானந்த அடிகளிற்குச் செய்யும் கெளரவங்சளில் தலையாயது எனக் கொள்ளலாம்.
இராவ்சாகிப் கு, கோதண்டபாணி பிள்ளை "பழந்தமிழிசை" என்னும் நூலை எழுதினார் இக 1959ம் ஆண்டு சித்திரை மாகம் கழக வெளியீடாக வந்துள்ளது. இந்நூலின் முன்னுரையில், அ ன் று அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றிய திரு. மு. நாராயணசாமி எழுதியிருப்பவை:
'தமிழ் இசை ஆராய்ச்சி என்று எடுத்துக் கொண்டால் ஆபிரகாம் பண்டிதர் விபுலானந்தர், இராமநாதன் என்னும் மூன்று பெயர்கள் முன்னிற்கின்றன" இசை ஆராய்ச்சி, ஆபிரகாம்பண்டிதர் காலத்தில் தொடங்கியது எனலாம். அவர் ஆராய்ச்சிக் குப் பலபடிகள் உயர்ந்து நிற்பவை விபுலானந்தர் ஆராய்ச்சியும் அவர் யாழ் நூலும், இவ்விருவர் நூல்களுக்கும் மேல் சிறந்து விளங்குவது பல இசை நுணுக்கங் களையும் பழைய இசை முறைகளையும் விளக்குவது சங்கீத பூஷணம் இராமநாதன் இயற்றிய 'சிலப்பதிகாரத்திசை நுணுக்க

Page 45
விளக்கம் என்னும் நூல் மதுரை பொன்னுச்சாமிப்பிள்ளை அவர் களும் குடந்தை சுந்தரேசன் அவர்களும் இத்துறை யில் உழைத்து தமிழ் இசை முறையை விளக்கியிருக்கிறார்கள், இப் பேரசிரியர் கள் எல்லோருடைய ஆராய்ச்சிக்கு மேலும் சென்றுவிட்டது இந் நூ லி ற் காணும் ^ஆராய்ச்சி."
முன்னுரையொன்றில் நூலாசிரியர் ஒரு வரைப் புகழ்தல் வழக்கமே. இருப்பினும் நாராயணசாமி அவர்கள் குறித்துள்ள தகவல்களைக் கருத்திற் கொள் ள ல் ஆராய்ச்சியாளர் கடன்,
இதே நூலின் ம தி ப் பு ரை யி ல் ஞா. தேவநேயன் பின்கண்டவாறு எழுதி யுள்ளார்.
'கி. பி. 10ம் நூற்றாண்டிற்கு மேல் முற்றும் மறையுண்டு போன இசைத் தமிழிலக்கணத்தை இது வரை ஆராய்ந்த அறிஞர் காலஞ் சென்ற த ஞ் சை (இராவ்சாகிபு) ஆபிரகாம்பண்டிதர், மதுரை இசைக்குழல் (நாதசுரம்) பொன்னுச்சாமிப் பிள்ளை. ஈழத்து விபுலானந்த அடிகள் ஆகிய மூவரும், இது போது வாழும், கோவை இசையணிகலம் (சங்கீதபூஷணம்) இராமநாதன், சென்னை (ஒய்வுபெற்ற துணைத் தண் ட லா ள ர்) இராவ்சாகிபு கு. கோதண்டபாணிப்பிள்ளை ஆகிய இரு வரும் ஆவர். இவருள்: ஆபிரகாம் பண்டிதர், ஆயப்பாலை வட்டப்பாலைத் திரிவு முறைகளைக் கண்டார், பொன்னுச் சாமிப்பிள்ளையார் தா ய் ப் பண் க ள் (மேளகர்த்தாக்கள்) முப்பத்திரண்டே என் றும் இசை இடங்கள் (சுரத்தானங்கள்) பன்னிரண்டே, பதினாறல்லவென்றும் கண் டார். விபுலானந்த அடிகள் விழுமிய ஆராய்ச்சியாளரேனும், அடிப்படை தவறா கக் கொண்டமையின் பலவுண்மைகளைக் காணவியலாது போயினர்: இராமநாதனார் மயங்காமரபின் இசை முறை காட்டிக் குரலே சட்சம் என்னும் பழங்கொள்கையை நாட்டி, முல்லைப்பண் மோகனம் என்று கண்டார்; கோதண்டபாணிப்பிள்ளையார்

ஐந்திசை முறை ஏழிசையிற் கிளையாய்ந்து வகுத்ததே என்றும், பேரிசைகளே அமைந்த ஏழிசை முறையும், பேரிசையும் சிற்றிசையும் கலந்த பன்னீரிசை முறையும் இவற்றின் இடைவெளிகளான இருபத்தீரலகு முறை யும் தொன்று தொட்டு வரும் தமிழிசை மரபேயென்றும் தம் 'பழந்தமிழிசை"யில் வலியுறுத்தியுள்ளார்."
தஞ்சை ஆபிரகாம்பண்டிதர்:
தமிழ் இசை ஆராய்ச்சியின் முன்னோடி எனப்படும் தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் பற்றி பேராசிரியர் பூலோகசிங்கம் தரும் தகவல்கள்.
** இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப தசாப்தங்களிலே தஞ்சாவூர் இராவ்சாகிப் மு. ஆபிரகாம் பண்டிதர் (1859 - 1919) இசை ஆராய்ச்சியில் ஈடுபட்டார். ஆயினும் அவர் யாழும் வீணையும் ஒன்றே என்ற கருத்தின் அடிப்படையில் ஆய்வு செய்த வர். செங்கோட்டி யாழ்தான் வீணை என்பது அவர் கருத்து. (கருணா மிர்த சாகரம், முதற் புத்தகம், 1917, பக் 580, 581) இதனாற் பழந்தமிழ் இசை ஆராய்ச்சியில் அவர் பங்களிப்புக் குறைவா கவே காணப்படுகின்றது. அ வர் கருணா மிர்த சாகரத்தில் செய்த முக்கிய ஆய்வு, சுருதிகள் பற்றியதாகும். சுருதிகள் இருபத்திரண்டல்ல இருபத்து நான்கு என்பதை அவர் நிறுவ முற்பட்டுள்ளார்".
ஆபிரகாம் பண்டிதர் பற்றிக் கலைக் களஞ்சியம் தொகுதி - 1 பக் 388ல் உள்ள தகவல்களும் பயன் உடையன.
ஆ. அ. வரகுணபாண்டியன்:
ஆபிரகாம்பண்டிதருடைய நூலையும் விபுலானந்தரின் யாழ்நூலையும் ஒப்பீடு செய்து ஒரு சிறு கட்டுரையை கலாநிதி பொ. பூலோகசிங்கம் எழுதி னா ர். ஆபிரகாம் பண்டிதரின் மைந்தர் எழுதிய நூல் ஒன்று பற்றியும் கலாநிதி. பூலோக சிங்கம் குறித்துள்ளார்.
"பாணர் கைவழி எனப்படும் யாழ்நூல் என்ற பெயரிலே 1950 இலே தமிழ்
41

Page 46
நாட்டிலே ஒரு நூல் வெளிவந்தது. அதன் ஆசிரியர் ஆ. அ. வரகுணபாண்டியன். அவர் தஞ்சாவூர் இராவ்சாகிப் மு. ஆபிரகாம் பண்டிதரின் தவப்புதல்வர். யாழும் வீணை யும் ஒன்றே என்ற தம் தந்தையின் கருத்து. சுவாமி விபுலானந்தரின் யாழ் நூலால் ஏற்றுக் கொள்ளப்படாததால், தந்தையின் கருத்தை மீண்டும் நிலை நிறுத்த எழுந்தது புதிய யாழ்நூல். ஆயினும் அம் முயற்சி வெற்றியளித்திருப்பதாகக் கூறுவதற்கில்லை'.
யாழ் நூல் சுருக்கம்:
விபுலானந்த அடிகள் யாழ் நூலில் எதைப்பற்றி எழுதியிருக்கிறார்? அவர் நிறுவ முனைந்த கருத்துக்கள் எவை? என்பன சாதாரண வாசகர்களும் தெரிந்து  ெகா ள் ள க் dih lg u மு  ைற யி ல் விளக்கப்பட வேண்டும் விபுலானந்தர் நூற்றாண்டு கொண்டாடப்படும் வேளை யில் யாழ் நூல் பற்றிய சுருக்கக் கட்டுரை ஒன்றையாவது எழுதுதல் பயன் உடைய தல்லவா? யாழ்நூலின் பொருளமைப்புப் பற்றியும் பழந்தமிழ்ப்பண்களின் ஆய்வுக்கு
ஆதாரம்- 1 "பழந்தமிழ் இசை" கழக 2 "யாழும் வீணையும்' கல
3 ' கலைக்களஞ்சியம்' தெ
4 'விபுலானந்த இன்பம்"
நவீன
இழிதல் இலகு, ஏறுதல் கஷ்டம், இம அகத்தியர். மட்டாந்தரைப் பரப்பாகிய கொண்டுவந்த முதலும் பாழ் போயிற்று மலைப்பாங்கரான கூர்நுனி உச்சிகளையன ஆராய்ச்சி நூலாயிற்று அதுவும் நிலை அடிகளார் நவீன அகத்தியர்.
ந
42

அது கொடுத்த உத்வேகம் பற்றியும் கலாநிதி பூலோகசிங்கம் எழுதியிருப்பவை.
'சுவாமி விபுலானந்தர் பண்டைய யாழ்க் கருவியை உருவாக்கி, அதன் அடிப்படையில் வழக்கொழிந்து போன தமிழ் இசையின் இலக்கணங்களை வகுத் துரைக்க முற்பட்டுள்ளார். ஏழிசை, சுருதி கள், சுருதி வீணை, ஐவகைக் பிரமங்கள் பன்னிருபாலை, 103 பண்கள் என்பன யாழ் நூலால் விளக்கம் பெற்றுப் பண்டைய தமிழ் இசையின் அறிவுக்குப் போதிய விருந்தாயின. தேவாரத் தமிழ்ப் பண்களை யும் குடுமியாமலை இசைக் கல்வெட்டினை யும் சதுர்தண்டி வீணையின் 72 மேளங்க ளின் இசை அமைப்பினையும் கூட யாழ் நூல் விளக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இராகங்களிற் பெயர்மாறி ஒளித்திருக்கும் பழந்தமிழ் பண்களை இனங்கண்டு வெளிப் படுத்தும் அருநோக்கினைச் சென்னைத் தமிழ்ச் சங்கத்தின் ஆராய்ச்சி மாநாடுகள் செய்து வந்தன. இதற்கு வழிகாட்டி வைத்தது யாழ் நூலாகும்."
தொகுப்பு:- 'சண்?
வெளியீடு 1959 கு. கோதண்டபாணி பிள்ளை
ாநிதி பொ’ பூலோகசிங்கம்
தேசிய சாகித்திய விழா மலர் 1991
ாகுதி ஒன்று பக்கம் - 388
'அருள் செல்வநாயகம்"
அகத்தியர் யமலைச் சாரலில் இருந்து இழிந்து வந்தார் தென்னகத்தைச் சார்ந்தார். அகத்தியர் அடிகளாரோ பேராறு பெருக்கத்தோடும் டந்து தமிழ் வளர்த்தார். தமிழாராய்ந்தார் பேறு பெற்று விளங்குவதாயிற்று ஆகவே
ள்ஹி: “ “Jo Lq66mr1 fir u qal Dwift''
வித்துவான் எப். எக்ஸ். சி. நடராசா

Page 47
இலங்கை பிராமிக் கல்வெ
வலியுறுத்திய
ஆ. ே
இந்திய கல்வெட்டியல் கழகத்தின் பதினேழாவது மாநாடு கடந்த பெப்ரவரி 2 - 4 திகதிகளில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கல்வெட்டியல் துறை யின் ஆதரவில் தஞ்சாவூர் பல்கலைக்கழகத் தில் நடைபெற்றது. தென்னிந்திய கல் வெட்டுகளின் முதல் தொகுதி வெளியிடப் பட்டு ஒரு நூற்றாண்டு முடிவடைந்ததைச் சிறப்பிக்கும் முகமாக இலங்கைப் பிராமிக் கல்வெட்டுகள் பற்றியும், கல்வெட்டியலும் தென்னிந்திய வரலாற்று எழுதியல் பற்றி யும் இரண்டு சிறப்புக் கருத்தரங்குகள் இடம் பெற்றன.
இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்கள் பற்றிய கருத்தரங்கை ஏற்பாடு செய்ய இலங்கையில் உள்ள தனிநாயகம் பண் பாட்டு, சமுதாய நிறுவனம் பெரும் பங்களிப்புச் செய்தது என்பது நினைவு கூரத்தக்கது. இலங்கையிலிருந்து இலங்கைத் தொல்லியல் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் கலாநிதி. டபிள்யூ. எஸ். கருணரத்தின, இன்றைய கல்வெட்டியல் பணிப்பாளர் கலாநிதி (திருமதி) மாலினி L– u Giv, பேராதனைப்பல்கலைக்கழக தொல்லியல்துறை விரிவுரையாளர் திரு. ஏ. எம். பியதிஸ்ஸ சேனநாயக்க, யாழ் - பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளர் கலாநிதி பொன்னம்பலம், இரகுபதி ஆகி யோர் ந்ேரில் கலந்து கொண்டு கட்டுரை கள் படித்தனர். அத்துடன் யாழ் - பல் கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசியர் வி. சிவாசாமி, கலாநிதி சி. க. சிற்றம்பலம், திருவாளர்கள் ப. புஷ்பரத்தினம், செ. கிருஷ்ணராஜா ஆகியோர் கட்டுரைகள்

ட்டுகளின் முக்கியத்துவத்தை தஞ்சை மாநாடு
தவராசன்
சமர்பித்திருந்தனர். இந்திய ஆய்வாளர்கள் டாக்டர் ஐ. கே. சர்மா, டாக்டர் கே: இ ரா ஜ ன் திரு வா ளர் க ள் எ ஸ், இராகோபால், இரா. பூங்குன்றன் ஆகி ய்ோர் கட்டுரைகள் படித்தனர்.
இலங்கைப் பிராமிக் கல்வெட்டுகள் பற்றிய கருத்தரங்குக்கு இந்திய மத்திய அரசு தொல்லிய திணைக்களத்தின் கல் வெட்டியல் இயக்குநர் டாக்டர் கே. வி ரமேஷ் தலைமை தாங்கினார், அவர் தனது தலைமை உரையில் தென்னிந்திய பிராமி குறிப்பாகத், தென்பாண்டிப் பிரவி அசோக பிராமியைவிட காலத்தால் முந்தி யது என்றும் இலங்கையின் காலத்தால் முந்திய பிராமி வரிவடிவம் தென்பாண்டி நாட்டுப் பிராமியை ஒத்தது என்றும் கூறினார். இந்த வரிவடிவத்தை இலங்கை தென்பாண்டி நாட்டிடம் கடன் பெற்றதா அன்றி தென்பாண்டி நாடு இலங்கையிடம் கடன் பெற்றதா என்பதை திறந்த வினா வாகவே இப்போதைக்கு விட்டுவிட்டு மேலும் ஆய்வின் மூலம் அதைத் தீர்மானிக் கலாம் என்றும் சொன்னார்.
இலங்கையின் முன்னாள் தொல்லிய ஆணைளாளர் டாக்டர் டபிள்யூ. எஸ். கருணரத்தின இலங்கைப் பிராமியில்வரும் '*ள" வை 'ற' வென்று பரணவிதானை படித்தது தவறென்று ஆதாரங்களுடன் நிறு வினர். டாக்டர் மாலினி டயஸ் இலங்கைப் பிராமிக் கல்வெட்டுகளை மூவகையாகப் பிரித்து அவற்றின் பொருளடக்கம் தன்மை பற்றி ஒரு பொதுவான கட்டுரை படித்தார். திரு, பியதிஸ்ஸ சேனநாயக கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்தில் இ ல ங் கை யில்
43

Page 48
சமூகத்தில் செல்வாக்குடன் விளங்
பரதவர், நாகர், வேனிர், ஆயர், போன்ற குழுக்கள் பெற்றிருந்த செல்வாக்கையும் பங்கு பணிகளையும் விளக்கினார். அவர் கள் தென்னிந்தியாவில் செல்வாக்குடன் இருந்த குழுக்களின் வழித் தோன்றினர்கள் என்று கூறினார்கள். மதுரை தொல்லியல் அலுவலகத்தைச் சேர்ந்த திரு. இராஜ கோபால் மருமகர் என்று அந்த மரபு பல்லவர், சோழர் காலத்திலும் தொடரப் பட்டதாகப் கூறினார் யாழ் - பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த கலாநிதி சி. த. சிற்றம்பலம், ஊட்டி தொல்லியல் அலுவல கத்தைச் சேர்ந்த திரு. இரா. பூங்குன்றன் ஆகியோர் வேனிர் செல்வாக்கை விளக்கி 60Tri. யாழ் - பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த திரு, ப. புஷ்பரத்தினம் பூநகரிப் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட பிராமி எழுத்துப் பொறித்த மட்பாண்ட சிதைவு கள் பற்றிக் குறிப்பிட்டார். அவை மிகப் பழையவை - சில தமிழாக அமைந்திருப் பதை வலியுறுத்தினார். யாழ் - பல்கலைக் கழக முன்னாள் விரிவுரையாளர் கலாநிதி லெல். இரகுபதி இலங்கைப் L SUITL bli; கல்வெட்டுகளின் மொழி திராவிடம் சார்ந்ததாக இருப்பதை வலியுறுத்தினர். தஞ்சைப் பல்கலைக் க ழ த் தை ச் சேர்ந்த டாக்டர். கே. இராஜன் கொடுமனையில் கிடைத்த பிராமி ச் சாசனங்களின் காணப்படும் சில சின்னங்
ஒருவன் உன்மேல் பகை கொண்டா அவனுக்கு உண்மையை எடுத்துக் காட்ட வற்புறுத்தி அவன் மேல் பழி சுமத்தக்கூட தாகக் காட்டிக்கொள்ள வேண்டாம். அவனெண்ணத்தை மாற்று, அவன் பிழைெ ஒரு செயலுக்குப் பல காரணங்கள் உண்டு நிச்சயிக்க எவளவோ விசயங்களை ஆரா
நன்றி அடிகளா
44

கள் இலங்கைப் பிராமாயிலும் இருப்பதா sj GoIF ft Götesorrrrir.
இந்த மாநாடு சில முக்கிய உண்மை களை வலியுறுத்தியது.
1. இலங்கையின் தெய்வேந்திர முனையிலி ருந்து இந்தியாவில் ஆப்கானிஸ்தான் எல்லை வரையிலும் (அதற்கு சற்று அப்பாலும்) பிராமி எழுத்துமுறை கி, மு. 3 முதல் கி. பி. 3 வரையாவது வழக்கில் இருந்தது.
2. சங்க இலக்கியங்களில் காணப்படும் சமூகக் குழுக்கள் பற்றிய தத்வங்கள் தென்னிந்திய பிராமிச் சாசனங்களில் இல்லை.
3. அந்தக் குழுக்கள் பற்றிய தகவல்கள் இலங்கைப் பிராமியில் கிடைக்கின்றன.
4. இலங்கை - தென்னிந்திய தொடக்க கால வரலாற்றை எழுத இலங்கைப் பிராமிக் கல்வெட்டுகளின் துணை மிக அவசியம்.
5. ஆதலால் இலங்கைப் பிராமிக் கல் வெட்டுக்கள் மிக ஆழமாக ஆராயப் பட்டு மீள் விளக்கம் அளிக்கபட வேண்டும்.
இதனால் 1992 தை முதல் வாரத்தில் சென்னையில் மூன்று நாள் மாநாடு நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.
னென்றால், அவனுடன் அன்பு வைத்து வேண்டும். அதிலும் அவன் குற்றத்தை ாது. உன்னுடைய பொறுமையையும் பெரி மனமார அவனுக்கு உதவி செய்து சய்தானென்பது உனக்கு எப்படித் தெரியும்" .ெ மற்றொருவன் செய்தது தவறு என்று பவேண்டும்.
* படிவமலர் 'சுவாழி விபுல்ானந்தர்'

Page 49
குறிப்
மேல்நிலையாக்கம் (Sankritization)
தனிநபர்களும், குழுக்களும் சமூகத்தில் வகிக்கும் இடம் அல்லது அந்தஸ்தில் ஏற் படும் மாற்றத்தைச் சமூக அசைவியக்கம் (Social Mobility) 6Taiturf. சமூகம் வரன் முறை அமைப்புடையதாயும் உயர்வு தாழ்வு என்னும் பேதம் உடையதாயும் உள்ளது. தனிநபர்கள் சமூகத்தின் கீழ்ப் படியில் இருந்து உயர்படிகளை நோக்கி இடம் பெயர்வர். இவ்விதமான மேல் நோக்கிய மாற்றத்தைக் கூட்டாக ஒரு குறித்த சமூகக்குழுவும் பெறுதல் இயலும். அவ்விதமாற்றம் சமூகத்தின் பல்வேறு குழுக்களின் சார்புநிலை அந்த ஸ் தி ல் மாற்றத்தை உண்டாக்கும்.
நவீன காலத்தில் எமது நாட்டிலும் தென்னாசியாவின் பிறநாடுகளிலும் சமூக அசைவியக்கம் முன்னரில்லாத துரித கதியில் செயற்பட்டது. இதன் பிரதான உந்து சக்தி மேற்குமயமாதல் (Westernisation) என்பது வெளிப்படை. இதையே நவீனமய மாதல் (Modernisation) என்றும் குறிப்பர்.
மேற்கத்தைய தொடர்புக்கு முன்னர் இந்திய சமூகம் மாற்றமின்றி சமூக அசை வியக்கமின்றி நிலைத்திருந்ததாக கூற முடியுமா? மேற்குமயமாதலிற்கு முற் பட்டதான மேல்நிலையாக்கம் என்னும் செயல்முறை இந்திய சமூகத்தில் நிகழ்ந்து வந்தது. அது இன்றும் செயற்படுகிறது. அதனை "சன்கிறிற்றிசேசன்" (Sankritization) என்ற கருத்தாக்கம் eupah விளக்கியுள்ளார் எம். என். சிறிநிவாஸ் என்னும் இந்திய சமூகவியலாளர். சன் கிறிற்றிசேசன் என்பதை சமஸ்கிருதமய மாதல் என்பதை விட மேல்நிலையாக்கம் எனறு தமிழில் கூறுதல் பொருத்தமானது. மேல்நிலையாக்கம் சமூக அசைவியக்கத்தின்

புகள
க. சண்முகலிங்கம்
உடன் நிகழ்வான பண்பாட்டு மாற்றத் 695Gu (Cultural Change) g) 31 (3a5256 pg. இந்துமதப் பண்பாட்டின் முக்கிய சில கூறு களை பகுத்தறிந்து இனம் கண்டுகொள்ள இது நமக்கு உதவும்.
"The Cohesive role of Sankritization என்ற தலைப்பில் எம். என். சிறிநிவாஸ் எழுதிய பழைய கட்டுரை ஒன்றினைத் தழுவி எமது கண்ணோட்டத்தில் அவரின் இக்கருத்தாக்கத்தை இங்கு தந்துள்ளோம். gai5l Gao) T India and Ceylon - Unity and Diversity (Ed. Philip Mason, 1967) என்ற நூலில் உள்ளது.
தாழ் நிலையில் உள்ள இனக்குழுமம் (tribe) சமூகக் குழு அல்லது சாதி தன்னி லும் மேல் நிலையில் உள்ள உயர் சமூகக் குழாத்தின் பழக்க வழக்கங்கள், சடங்குகள், நம்பிக்கைகள், மதவழிபாட்டு முறைகள் சிந்தனைப் பாங்குகள் ஆகிய வற்றைக் கடைப்பிடித்தலே சன் கிறிற்றி சேசன் அல்லது மேல்நிலையாக்கம். மேல் நிலைப் பண்பாட்டை சமஸ்கிருதம்‘ என்ற சொல் குறிக்கின்றது. பிராமணர் சமூகமும் வடமொழிசார் பண்பாடும் இந்து மதப் பாரம்பரியத்தில் மேல் நிலைப் பண்பாட் டைச் சுட்டி நின்றதால் "சன்கிறிற்றிசேசன்' என்ற சொற்புனைவு மேல்நிலையாக் கத்தை விளக்குவதற்குப் பொருத்தமாயுள் ளது. தாழ்நிலையில் இருந்த சமூக குழுவின் எழுச்சி வெறுமனே பண்பாட்டு நிலைப் பட்ட உயர்ச்சி அன்று. குறித்த சமூகக் குழுவின் மேல்நோக்கிய இடப் பெயர்வை, &eps, gyao)&F sigudi.55605 (Social Mobility) அது குறிக்கும், இவ்வித இடப் பெயர்ச்சி இருகாரணங்களால் ஏற்படலாம்.
45

Page 50
1. சமூகக் குழுவொன்றின் பொருளியல் அந்தஸ்தில் ஏற்படும் மாற்றம். முன்னேறிய விவசாய உற்பத்தி முறையை மேற் கொள்ளும் இனக் குழுமம் ஒன்று உணவு சேகரிக்கும் அல்லது வேட்டையாடும் வாழ் முறை யில் இருந்து உயர்ச்சியடைவதை உதாரணமாகக் குறிக்கலாம்.
2. ஒரு சமூகக் குழு அல்லது குலம் சடுதியாக அரசியல் பலம் பெற்ற குழுவாக மாறுதல். புதிதாகக்
கிடைத்த அரசியல் ப ல ம் அக்குழுவை சமூக ஏணிப்படியில் உயர்த்தி விடும்.
இவ்விரு காரணங்களும் ஒன்றிணைந்தும் ஒரு குழுவின் உயர்ச்சிக்குத் துணையாகச் செயற்படலாம். குழுக்களின் இத்தகைய எழுச்சி அவற்றிற்குத் தம்மைப் பற்றிய புதிய தன் உணர்வை (Self Consciousness) உருவாக்கும். சமயச்சார்பற்ற மட்டத்தில் அதாவது பொருளியல் அரசியல் தளத்தில் ஏற்படும் இந்த எழுச்சிக்கு மதநிலைப்பட்ட அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும். அந்த அங்கீகாரம் எப்படிக்கிடைக்கிறது? ஒரு இனக்குழுவாக அல்லது சமூக அந்தஸ்தில் கீழ்ப்பட்ட சாதியாக இருந்த பிரிவினர் பொருளியல் அல்லது அரசியல் பலம் காரணமாக சமூக ஏணியில் உயர்ந்து செல்லும் பொழுது அச்சமூகக் குழுவின் குலதெய்வங்களும் வணக்க முறைகளும் ஒரு இனக்குழுவின் வணக்க முறை என்ற நிலைமாறி இந்து மதத்தின் உயர் நெறிக் (956ir (Great tradition) gọi 9)L-56)4595 தேடிக் கொள்கின்றன. உயர் அந்தஸ்துக்குப் பொருத்தமான உயர் பண்பாட்டை அச் சமூகக் குழு தழுவிக்கொள்கிறது.
உயர் சாதிகள், சமூகத்தின் மேற் தட்டினர், மேலோங்கிகள் (elites) தமது பண்பாட்டை உயர்ந்ததாகவும் மேன்மை யுடையதாகவும் கருதுவர். சமூகத்தின் கீழ் நிலையில் உள்ளோர் இந்தப் பண் பாட்டை ஏக்கத்துடன் பார்ப்பதுண்டு, இதைத் தமதாக்கி கொள்ளும் ஆவல் சமூக
46

அந்தஸ்தில் உயரும் போது அவர்களிடம் உண்டாகும். இது ஒரு கெளரவப் பிரச் சினையும் கூட. தாழ்ந்தோர், உயர் குலத்தாரின் பழக்க வழக்கங்கள், உடை கள், பண்பாடு ஆகியவற்றை பின்பற்றவும் தமதாக்கிக் கொள்ளவும் முனை யும் பொழுது அதற்கு எதிராக வன்முறைகளும் ஏற்படுவதுண்டு. இத்தகைய தடைகளையும் மீறி மேல்நிலையாக்கம் இந்திய சமூகத்தில் ஏற்பட்டு வந்துள்ளது.
மேல்நிலையாக்கம் முழுமையானதும் பன்முகப்பட்டதுமான பண்பாட்டுச் செயல் முறை. மேல் நிலையாக்கத்தின் தாக்கத்தை மொழி, இலக்கியம், இசை, நடனம், நாடகம், சடங்கு, மதம், வாழ்க்கைமுறை ஆகிய எல்லா வகைப் பண்பாட்டு அம்சங் களிலும் காணலாம். மதக்கொள்கை, வழிபாட்டுமுறை, சமய அனுட்டானம் ஆகியவற்றிற்கு மட்டுமன்றிப் | 16oor பாட்டின் எ ல் லா அம்சங்களிற்கும் விஸ்தரிக்கப் படக்கூடியது இது. ஐயனார், வைரவர், காளி போன்ற தெய்வ வணக்க முறைகள் கிராமிய மக்களிடம் பரவலாக உள்ளன. நகரங்களின் சேரிகளில் வாழும் ஏழைகளும் இத்தெய்வங்களைப் போற்று வர். சிவன், முருகன், விநாயகர் முதலிய கடவுளரின் கோவில்கள் ஆகம விதிகளின் Lit?. இயங்குபவை. மதக்கிரிகைகள், கோட்பாடுகளை நன்கு கற்ற அந்தணர் களால் நித்திய வழிபாடுகள் இக் கோவில் களில் செய்யப்படும். இவ்வுயர் நெறியைப் பின்பற்றுவோர் பெரும்பாலும் கிராமப் புறங்களில் வாழும் வசதிபடைத்த உயர் வகுப்பினராவர். மத வழிபாட்டு முறை களில் சமூக அந்தஸ்திற்கு ஏற்ப உண்டாகும் பேதம் எமது நாட்டில் பல்வேறு பகுதி களிற்கிடையேயும், ஒரு பகுதியிலேயே உள்ள சமூகக் குழுக்களிற்கிடையேயும் வெளிப்படுகிறது. உதாரணமாக மலை நாட்டின் நகரப்பகுதிகளில் உள்ள கோவில் கள் தோட்டங்களில் உள்ள கோவில் களிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை. இந்தப் பண்பாட்டு இடைவெளி மதத்தில் மட்டுமல்ல இசை, நடனம், நாடகம்,

Page 51
இலக்கியம் ஆகிய வற்றிலும் கூட உண்டு. காத்த வராயன் கூத்தும் பரதநாட்டியமும், நையாண்டிமேளமும் கர்நாடக இசையும் ஒன்றில் இருந்துமற்றது அந்தஸ்து பேதம் கொண்டிருப்பதன் அடிப்படைக் காரணம் யாது? சமூகக் குழுக்களின் மேலாதிக்கம் தனித்து அரசியல் பொருளியல் தளங்களில் மட்டும் செயற்படுவதில்லை. பண்பாட்டு GLDont9ä5b (Cultural hegemony) 6T 55rp இன்னோர் அம்சமும் உள்ளதென்பதை சிறிநிவாசின் கருத்தாக்கம் எ ம க் குத் தெளிவு படுத்துகிறது.
இந்திய வரலாற்றில் அதன் சமூக பரிணாமத்தில் மேல்நிலையாக்கம் வகித்த பங்கினை விளக்கும் பொழுது இந்து மதத்தின் தனித் தன்மையான சிறப்பியல்பு கள் சிலவற்றை சிறிநிவாஸ் சுட்டிக் காட்டு கின்றார். இந்து மதத்தின் இவ்வியல்பு களில் முக்கியமானது அதன் பல்லினத் தன்மை (diversity) எனலாம். இந்துமதம் பல்விதப்பட்ட வணக்கமுறைகளின் இறுக்க LDjibo sin. L' L-GOLD'Lunts (a loose confederation of innumerable cults) alói GT7. இந்த ஒருங்கிணைப்பிற்கான நூலிழைதான் மேல் நிலையாக்கம். கிராமியத் தெய்வங் கள், சாதித்தெய்வங்கள், ஒரு குலத்தின் மூதாதையரை தெய்வமாக உயர்த்தி வழிபடும் வணக்க முறைகள் முதல் சிவன், விஷ்ணு, பிரம்மா, பார்வதி வரை எண்ணிறந்த தெய்வங்களும் வழிபாட்டு முறைகளும் அதில் உள்ளன. இதனால் சமூக அசைவியக்கத்தின் பயனாக எழும் பண்பாட்டு மாற்றம் இலகுவாகச் செயற் படுகிறது.
இந்து மதத்தின் மூலதத்துவம் இது தான் என்று வரையறுப்பது கடினம்: கத்தோலிக்க மதம் போன்று ஒருங்கிணைக் கப்பட்ட கட்டமைப்பு அதற்கு இல்லை. வழிபாட்டிற்காக யாவரும் ஒன்று கூடும் கட்டாயம் இல்லை. சமய மாற்றத்தை நோக்காக கொண்டு உழைக்கும் குருமார் இல்லை. இதனால் அது வரையறையற்ற மதமாக இருந்து வந்துள்ளது.

இந்து மதத்தின் பல் கடல் வளர் Guó007 is (p60p (Poly-thesism) GLDáia06) யாக்கத்தை இலகுபடுத்தியது. அதில் பல் கடவுளர் வணக்கம் இருந்தபோதும் முழு முதற்கடவுள் ஒருவர் உள்ளார் என்னும் கருத்தும், "கடவுள் ஒருவரே அவரைப்பல பெயர்களால் அழைக்கிறோம். ஒரு கடவு ளின் பல்வித வெளிப்பாடுகளே பல்வேறு தெய்வங்கள், என்னும் கோட்பாடும் பல் விதப் பண்பாடுகளின் சங்கமத்திற்கு இடம் தருகின்றது. ஒரு தெய்வத்தை வணங்கும் போதுகூட அத்தெய்வத்தின் பல்வித அம் சங்களையும் போற்றித்துதிக்கும் முறை உள்ளது. 108 மந்திரங்கள் அல்லது 1008 மந்திரங்களை உச்சரிக்கும் போது ஒரு தெய்வத்தின் பல்வேறு இயல்புகளும் குணங்களுமே போற்றித்துதிக்கப்படுகின் றது. இதுவும் பல கூட்ட மக்களினதும் வழிபாட்டுமுறைகள் ஒன்று சேரவும் அங்கீ காரம் பெறவும் வாய்ப்பு அளிக்கின்றது. பல கடவுளர்களிடையே உள்ள உறவுப் பின்னல் இந்து மதத்தின் தனித்துவங்களில் ஒன்று. சிவனின் மனைவி பார்வதி. முருகனும் விநாயகரும் அவர்களின் பிள்ளைகள் எனப்போற்றப்படுவர். தெய் வங்களுக்கிடையே ஒரு வேலைப்பகுப்பும் கூட உண்டு. விக்கினங்களை நீக்குபவன் விநாயகன். கல்வியின் தெய்வம் சரஸ்வதி. இவ்விதம் ஒவ்வொரு தெய்வங்களின் குணங்கள் இயல்புகள் தொழில்கள் வேறு படுகின்றன.
கடந்த காலத்தை விட சமகால வ்ர லாற்றில் மேல் நிலையாக்கம் ஒரு வகையில் கூடிய முக்கியம் பெற்றுள்ளதென்று கூற லாம். ஏனெனில் மத்திய கால இந்தியா வில் மேல்நிலையாக்கம் படிப்படியாகவும் மெதுவாகவும் ஏற்பட்டது. கீழ்ப்படியில் உள்ள மக்களுக்கு உயர்ச்சிக்கான வாய்ப்புக் கள் அரிதாகவே இருந்தன. சமூகத்தின் நோக்கு எல்லைகள் குறுகியவை. பொருளி யல் மாற்றம் மந்தகதியிலேயே சென்றது. மக்கள் இடம் விட்டு இடம் பெயரும் வாய்ப்புக்கள் இருக்கவில்லை. இதனால் கீழ் மட்டத்தில் இருந்த குழுவொன்று அரசியல் அல்லது பொருளியல் பலத்தைப்
47

Page 52
பெறு த ல் சாத்தியமற்றதாயிருந்தது. தற்செயலாக அவ்வித வாய்ப்பு ஒன்றைப் பெற்று உயர்ந்தாலும் தமது பிற்பட்ட நிலையின் அடையாளங்களைத் துடைத் தெறிவது இலகுவானதாக இருக் க வில்லை. இத்தடைகள் தீண்டப்படாதவர் களுக்கு எதிராக மிகவும் தீவிரத்துடன் செயற்பட்டதால் அத்தடைகளை மீறுவது அவர்களுக்கு அரிதாகவே இருந்தது.
இதற்கு மாறாக சமகால வரலாற்றில் ஆங்கிலச்சட்டமுறை, ஜனநாயக அரசியல், புதிய தொழில் வாய்ப்புக்கள், கல்வி ஆகி யன சமூக அசைவியக்கத்திற்கு கூடிய வாய்ப்புக்களை அளிக்கின்றன. இந்நிலை யில் சமூகத்தின் பண்பாட்டுத்துறை மாற் றங்களை புரிந்து கொள்வதற்கு மேல் நிலையாக்கம் என்ற கரு த் தா க் கம் (concept) உதவுகின்றது.
இந்தியாவிற்கு மட்டுமன்றி இந்துப் பண்பாட்டின் எல்லைக்குள் அமையும் இலங்கை, திபெத், இந்தோனிசியா ஆகிய நாடுகளின் சமூக மாற்றங்களையும் விளக்கு வதற்கு இக்கருத்துப் பயன்படும் என்று சிறிநிவாஸ் கூறியுள்ளார்.
இலங்கையில் இந்துமதத்தின் பண் பாட்டு அமிசங்களை விளக்கும் ஆய்வுகள் பல தமிழில் வெளிவருகின்றன. “இத்தி மரத்தாள்’ முதல் "இணுவில் கந்த சுவாமி வரை பல கோவில்கள் பற்றிய வரலாறு கள், வழிபாட்டு முறைகள் பற்றிய விபரத் தொகுப்புகள் உள்ளன. தரவுகளும் விபரங் களும் தேவைதான். அத்தரவுகளைப்
தென்னாசியாவி
தேசியவாதம் என்னும் கோட்பாடு பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய இரு தேசிய அரசுகளின் தோற்றத்தோடு உருவாகியது. இதுவே தேசியவாதத்தின் வரலாற்றின் முதற்கட்டம். பின்னர் ஜேர்மனியிலும், இத்தாலியிலும், கிழக்கு ஐரோப்பாவிலும் தென்னமெரிக்காவிலும் தேசிய வா தம்
4s

பகுத்தாய்வதற்கான கோட்பாடு வேண் டும். கோட்பாடு இருட்டு வழியில் செல்வ தற்கு உதவும் கைவிளக்கு போன்றது.
யாழ்ப்பாணத்தில் இருந்து நீண்ட காலமாக வெளிவரும் இரகுநாதய்யர் பஞ்சாங்கம் கொடியேற்றம், திருவிழா தேர்த்திருவிழா ஆகியன நிகழும் ஆகம விதிப்படி வழிபாடுகள் நடைபெறும் சைவக் கோவில்களின் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. ஒரு ஐம்பதாண்டு காலப் பஞ்சாங்கங்கள் யாவற்றையும் கால வரன்முறைப்படி ஒருவர் ஆராய்ந்து பார்த்தால் யாழ்ப்பாணக் கிராமங்களின் சமூக மாற்றங்களை பஞ்சாங்கத்தின்பட்டி யல்களைக் கொண்டு விளக்கிவிடலாம், ஒரு கிராமத்தின் கோவில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டு அந்தணரால் ஆகம விதிப்படி பூஜை நிகழ்த்தப்படும் நிலைக்கு மாற்ற முறுவதை அக்கிராமத்தின், அக்கோயிலைச் சார்ந்தோரின் சமூக எழுச்சியின் விளைவா கக் காணலாம் என்கிறார் க லா நிதி. கா. சிவத்தம்பி (இவரது ஆய்வுக்கட்டுரை வெளிவந்த “கும்பாபிஷேக மலர்' பற்றிய விபரம் ஞாபகத்தில் இல்லை. மலரும் கொழும்பில் உள்ள நூலகங்களில் பெற முடிய வில்லை). பஞ்சாங்கம் தரும் தகவல் 956) அடிப்படையாகக் கொண்டு எம். என். சிறிநிவாஸ் தெரிவிக்கும் மேல் நிலையாக்கம் என்ற கோ ட் பா ட் டி ன் பின்னணியில் அவர் எழுதியுள்ள கட்டுரை சமூகவியல் பண்பாட்டு ஆய்வுகளிலும் மதத்தின் சமூகவியலிலும் அக்கறையுடை யோர் அவசியம் படிக்க வேண்டிய ஒன்று.
lன் தேசியவாதம்
அடுத்து எழுந்தது. ஆசியா வி லும் ஆபிரிக்காவிலும் குடியேற்றவாத ஆட்சிக்கு எதிராகக் கிளர்ந்த தேசியவாதம் வரலாற்று ரீதியில் பிற தேசியவாதங்களுக்குப் பிற் பட்டது. குடியேற்றவாதத்தின பின்னணி யில் எழுந்த இந்த நாலாவது தேசிய வாதத்தைப் பின்வரும் மாதிரிகளுக்குள் வகைப்படுத்தலாம்.

Page 53
1. ஆரம்பகாலக் கிளர்ச்சிகள் - 1857 இந்திய சிப்பாய்க் கலகம், சீனாவின் பொக்சர் கலகம் போன்றவை.
2. யப்பானின் "மெஜி ஆளும் குழு உருவாக்கிய அரசு நிலைப்பட்ட தேசியவாதம்.
3. தென்னாசிய தேசியவாதம்-இந்தியா வில் காந்தீய கோ ட் பா ட் டி ன்
பின்னணியில் உருவாகியது.
4. மாஓ, கோ.சி-மின், பனன், கப்ரால், கஸ்ரோ முதலியோர் வழிவந்த புரட்சிகர தேசியவாதம்.
5. தென்கொரியா, தைவான், சிங்கப்பூர் பிரேசில் ஆகிய புதிய கைத்தொழில் நாடுகளின் (NICS) பொருளியல்சார் தேசியவாதம்.
19ம், 20ம் நூற்றாண்டுகளில் எழுந்த தேசியவாத எழுச்சிகளை மேற்குறித்த ஐந்து வரலாற்று வகைகளாகப் பிரித்துக் கொள்ளுதல் தேசியவாதத்தின் கூறுகளைப் பகுப்பாய்வு செய்து புரிந்துகொள்வதற்கு மிகவும் பொருத்தமானது. இந்த வகைப் பாட்டினை ரதிகா குமாரசுவாமி தமது Historical Models 8 Nationalism 61 girlso as Gao!TuSci) (The Thatched Patio Vol. 3 No. 1 1990) தந்துள்ளார். இவற்றுள் தென்னாசிய தேசியவாதம் பற்றி அவர் கூறும் கருத்துக்களை மட்டும் தொகுத்துத் தந்துள்ளேன். (மொழிபெயர்ப்பு அல்ல).
காந்தியின் தேசியவாதத்தின் முக்கிய அம்சம் அதன் அகிம்சைக் கோட்பாடு மட்டுமன்று. சமூக உளவியல் அடிப்படை யில் அது ஒரு கலகக் குரலாக அமைந்தது. அரசியல் அதிகாரம், பொருளியல் பலத் தைப் பெறுதல் ஆகியனவற்றை முக்கியப் படுத்தாத காந்தீயம் வாழ்க்கைமுறை, ஆoமீக அறஒழுக்கம் ஆகியவற்றை முதன்மைப்படுத்தியது.
S&civpjög) (Ashis Nandy) g)sög)um வில் பிரிட்டிஷ் ஆட்சியின் கருத்துநிலை அடிப்படைகளை மூன்றாக வகுத்துக் கூறி
first nitri.

அ. அரசாட்சி, பொருளியல், இராணு வம் ஆகிய எத்துறையிலாயினும் பிரிட்டிஷ் ஆட்சி இந்தியா முன்னர் எப்பொழுதும் அறிந்திராத அறிவு FITrif அமைப்பினை (Rational Organisation) கொண்டிருந்தது.
ஆ. பின் த ங் கி ய இந் தி யா வி ன் முன்னேற்றத்திற்கான வரலாற்றின் கருவி என்ற எண்ணம்.
இ. இந்தியாவின் ராஜ மறவர் குலங்கள் (Martial Races) LGril 1963 guitifs, களாகக் கூடியவர்கள் என்ற கருத் தில் அவர்களோடு (ராஜபுத்திரர் சீக்கியர் முதலியோர்) உறவாடுத லும் இந்திய வெகுஜனங்களையும் பிற இந்தியரையும் தகுதியற்றவராக ஒதுக்குதலும்.
பிரிட்டிஷ் ஆட்சியாளரின் இந்த மூன்று அனுமானங்களையும் காந்தி தலைகீழாகப் புரட்டினார். அவற்றை இகழ்ச்சிக்குரியவை ஆக்கினார். பிரிட்டிஷாரின் முன்னேறிய அரசியல், பொருளியல் , ராணுவ முறைகள் இந்திய நிலைமைகளுக்கு சற்றும் பொருத்த மற்றவை எனத்தூக்கி வீசினார். இந்தியா வின் மறவர் ஜாதிகளை பிரிட்டிஷார் உயர்த்திப் பேசியவேளை, சாந்தமும் அகிம்சையும் பொருந்திய இந்தியாவின் சாதாரண மனிதர்களின் மகிமையை புகழ்ந்தார் காந்தி. அவரின் கோட்பாடு கள் பிரிட்டிஷ் ஆட்சியின் அடிப்படை அனுமானங்களுக்கு எதிரான சமூக உளவி யல் எதிர்ப்பினையும் கலகத்தையும் உட்பொருளாகக் கொண்டவை என்பது வெளிப்படை.
காந்தீய தேசியவாதத்தின் இத்தன்மை கள் இரு விளைவுகளை உண்டாக்கின. ஒன்று அரசியல் அதிகாரம், பொருளியல் முன்னேற்றம் ஆகியன பற்றிய அக்கறை யின்மை ஒரு இடைவெளியை உருவாக்கி யது. (நேரு அரச பரம்பரை காந்திய தேசியவாதத்தின் இந்த இடைவெளியை நிரப்பியது) மற்றது தென்னாசிய சமூகம் பற்றிய உண்மை இயல்புகளைத் திரிக்கும்
49

Page 54
பொய்மைச் சித்திரம் ஒன்றை இத்தேசிய burg, b all 6Triggigi. (Mystification of Actual Nature of South Asian Society). இது பல தேசியப் பொய்மைகளை (National Myths) as 6triggs51. gly பொய்மைகள் தென்னாசியாவின் அம்மண Lрп 60T, அவலட்சணமான பொருளியல் அரசியல் தோற்றங்களுக்குத் திரைபோட்டு மூடியது. இப்பொய்மைகளின் முக்கிய கூறுகள்:-
1. மேற்கத்தைய சமூகம் கூட்டிணைவு அ ற் ற து. யாந்தீரீகமயமானது (Mechanical) ஆன்மா அங்கே அழிந்துவிட்டது. கிழக்கத்திய சமூ கம் கூட்டுறவு, ஐக்கியம், நல்லுறவு என்ற அடிப்படைகளில் அமைந்தது.
2. முரண்பாடும் பூசலும் (Conflict) கீழைத்தேச சமூகத்திற்கு அந்நிய மானவை. பூசலும் சிக்கலும் மேற் குச் சமூகத்தின் இயல்புகள்.
3. கைத்தொழில் நகரம் சார் வாழ்க்கை முறை உடையது மேற்குலகு. கிழக் கின் ஆன்மா கிராமங்களில் உறை கிறது.
உளவியல் ரீதியில் இந்தியர்களின்
தாழ்வுமனப்பான்மையை நீ க் கு வது ம்
*ஜாதிக
பரந்த அடிப்படையில் அமைந்திருக் ளுக்கு மாணவர்களைத் தெரியும் முறையுட மதிப்பு வாய்ந்த தொழிற் துறைகளில் உண்டாக்கியுள்ளது. ஆனால் இவ்விதம் பதவிகளை பெற்றவர்கள், நாட்டின் எதி நகர்ப்புற முதலாளித்துவ வகுப்பே தட உணருகின்றனர். இதனால் 'ஜாதிக சி. குழாத்தைச் சேர்ந்தவர்களிடையே ஏற் யாகும். கிராமப் பின்னணியைக் கொண் பின்னணியைக் கொண்டவர்களான ஆ ஆனால் இவ்விரு சாராருக்குமிடையே வ பற்றிய அபிலாஷைகளிலும் அடிப்படைய
50

தன்னம்பிக்கையை உருவாக்குவதும்தான் காந்தியின் நோக்கம். ஆனால் அவரின் கருத்துக்கள் மக்கள் கள்ளங்கபடமற்றவர் கள், குழந்தைகள் போன்ற தூய உள்ளம் படைத்தவர்கள் என்ற எண்ணத்தை உரு வாக்கியது. அவர்களின் இப்பண்புகளுக்கு 2500 வருடப் பழமையும் மரபும் உண்டு என்பன போன்ற பொய்மைகளும் உருவாகின.
W தென்னாசியாவின் இத்தேசியவாதம் நேர்மை, சத்தியம், நியாயம் ஆகியவற்றின் அடிப்படைகளில் கட்டப்பட்டதென்ற தன் நினைப்பு ஒன்றில் அசையாத உறுதி கொண்டதாய் விளங்கியது. இதனால் g)g360)68r Morall y Self-righteous Natiomalisms எனக் கூறலாம். இதன் கருத்து நிலை வேர்கள் சமூகத்தில் ஆழமாகப் படர்ந்துள்ளன. குறைவிருத்தியின் சிக்க லான யதார்த்த நிலைகளையும், அரசியல் கொந்தளிப்புகளையும் சரியான முறையில் எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தை இத் தேசியவாதம் இந்தியர்களுக்கு வழங்க வில்லை. 'ஆன்மீகமயமான கிழக்குலகு" (Spiritual east) 6T6Tsp sbLu6)65ruia5T D55) யில் உலகின் மிகத் தீவிரமான பலாத்கார வெளிப்பாடுகளையும் முரண்பாடுகளையும் கொண்ட சமூகம் ஒன்றை நாம் நிதர் சனத்தில் காண்கின்றோம்.
சிந்தனய’ கும் பாடசாலைகளும், பல்கலைக் கழகங்க b ஒரு கிராமத்தின் இளைஞனுக்கும், மிகவும் இடம் பிடித்துக் கொள்வதற்கு வசதியை மதிப்பும் சுகபோக வசதிகளும், பொருந்திய ர்காலத்தைத் தொடர்ந்தும் ஆங்கிலம் கற்ற மது கையில் வைத்திருக்கின்றது என்பதை ந்தனய’ என்பது எமது சமூகத்தில் உயர் பட்டுள்ள முரண்பாடுகளின் வெளிப்பாடே டு சிங்களம் மூலம் கல்வி கற்றவர்கள், நகரப் ங்கிலம் கற்றவர்களை எதிர்க்கிறார்கள். ாழ்க்கைத் தரத்திலும் அவர்களது எதிர்காலம் ான வேறுபாடு எதுவும் இல்லை.
- சீ. ஏ. சந்திரப்பெரும -

Page 55
கடிதங்களிலிருந்து.
நம்பிக்கை
1960க்கு முன் ஆங்கில மூலம் கல்வி பயின்றவர்களுக்கும் அதன்பின் தமிழ் மூலம் கல்வி பெற்றோருக்குமிடையில் ஏற்பட் டுள்ள இடைவெளியை நிரப்ப வேண்டு மென்ற அவாவைக் கொண்டுள்ளார் பணிப் பாளர், கல்வி பொதுத் தராதரத்திலிருந்து பட்டதாரி மாணவர்கள் வரை பயன் பெற வேண்டு மென்று கருதுகிறார் அமைச்சர். அறிஞர்களின் அறிவுத்தாகத்தைக் தீர்க்க வேண்டுமென்று விரும்புகிறார் செயலாளர். "பண்பாடு’’ இம் மூன்றினையும் நிறை வேற்றும் என்பது என் நம்பிக்கை.
கே. சி. லோகேஸ்வரன் செயலாளர், கனிவளம் சார் தொழில் அமைச்சு
கொழுமபு.
எது வழி?
ஆங்கில சுய மொழிக் கல்வியாள ரிடையே உள்ள இடைவெளிபற்றி ஆசிரியத் தலையங்கத்தில் குறிப்பிட்டீர்கள். ஆனால் "பண்பாடு” போன்ற சஞ்சிகைகளால் மட்டும் இந்த நீண்டு செல்லும் இடை வெளியை நிரவ முடியுமா? இந்த இடை வெளியை நிரப்புவதற்கான சிறந்த வழி வருங்கால அறிவியல் சமூகத்தினரை ஆங்கி லப் பரிச்சயமுடையவர்களாக்குவதே. அது நிறைவேறினால் இடைவெளியினை நிரப்பும் பாரிய தொந்தரவு மிக்க - எளிதில் கைகூடாத பணி - தேவையற்றதாகிவிடும்.
சி. கனகசிங்கம் எல். எல். பி. சட்டத்தரணி, கொழும்பு-13.

அறிவுப்பசி
நீங்கள் அனுப்பிய 'பண்பாடு பிரதி கள் பதினைந்தையும் பல்கலைக் கழகத்தில் நண்பர்கள் பெற்றுக்கொள்ளும் வகையில் விற்பனைக்காக வைத்தேன். அன்றே முழுப் பிரதிகளும் போய்விட்டன. இங்குள்ள அறி வுப்பசியை இதிலிருந்து நீங்கள் புரியக்கூடும். *பண்பாடு இங்கு கிடைப்பதற்கு ஏற்ற வழிவகைகளைச் செய்யுங்கள்:
செல்வி. அ. சின்னத்தம்பி, விரிவுரையாளர் பொருளியல் துறை யாழ் பல்கலைக்கழகம்
பண்பாடு
களம் அமைத்துள்ளது
ஆய்விதழின் கட்டுரைகள் கருத்தாழம் மிக்கனவாக உள்ளன. அத்தோடு பலவித கருத்துக்களுக்கும் **பண்பாடு* களம் அமைத்துள்ளது. இந்துமதம் விரிந்த நோக் குடையது. பிற மதங்களையும் அவற்றின் பண்பாடுகளையும் மதித்தலும் அதேவேளை தனது மதக்கோட்பாடுகளை பற்றுறுதி யோடு பேணி வருதலும் இந்து மதத்தின் சிறப்பியல்பு. இதனால் தான் பண்டைய நாள்முதல் இன்று வரை அதுயாவர்க்கும் ஏற்புடையதாய் நிலைத்து நிற்கின்றது. இப் பண்புகள் பண்பாடு இதழிலும் வெளிப் படுவது மகிழ்ச்சிக்குரியது.
வி. ஈ. எஸ். ஜே. வஸ்தியாம்பின்ளை
Gug T.Griffluuri கொழும்பு பல்கலைக்கழகம்
5.

Page 56
ஆயவுத
மனிதரின் வாழ்க்கைப்படி நிலைச் சட தகவல் சேகரி
பாரம்பரிய சமூகத்தில் மனிதரது பிர தான வாழ்க்கைப் பருவங்களான பிறப்பு, பருவமெய்தல், திருமணம், கருவுறல், இறப்பு ஆகியவை நிகழும் போது அவற்றைச் சார்ந்து பல்வேறு சடங்குகளும் நடைபெறுகின்றன. இந்தச் சடங்குகளா வன, வாழ்க்கைப் படிநிலைகள் குறித்து அவை நடைபெறும் சமூகங்களது கருத்துக் கள், நம்பிக்கைகள், எதிர்பார்ப்புகள் ஆகிய
வற்றின் குறியீடுகளாக அமைகின்றன.
நவீன காலத்தில் சமூகத்தின் பாரம் பரியத் தன்மைகள் மறைவதுடன் தொடர்பு சாதனங்களின் பரவலாக்கத்தால் கலா சாரங்களில் பல்வேறு வகையான கலப்பு ஏற்படுகிறது. இதனால் சடங்குகள் பல கைவிடப்படுவது மாத்திரமன்றி, மாற்றங் களும் இடம் பெறுகின்றன. எனவே இவை பற்றிய விபரங்களைச் சேகரித்துப் பேணு வது, சமூகங்களின் பாரம்பரியங்களையும் தனித்தன்மைகளையும் தெரிந்து கொள் வதற்கு இன்றியமையாததாகும்.
இப்பின்னணியில் இலங்கைத் தமிழர் மத்தியில் வாழ்க்கைப் படிநிலைகளில் நிக ழும் சடங்குகளின் விபரங்களைச் சேகரிப் பதற்கும் ஆராய்வதற்கும் இந்து கலாசார அமைச்சு ஆய்வாளர்களைத் தேடுகிறது.
ஆய்வுப் பரப்பு:
பிறப்பு, பருவமெய்தல், திருமணம், இறப்பு தொடர்பான இலங்கையின் வடக்கு, கிழக்கு, மலையகப் பிரதேசங் களில் தமிழரிடையே வழக்கிலுள்ள சடங்குகள்.
52

திட்டம்
-(556ir (Rites de Passage) Libgu ப்பும் ஆய்வும்.
முறை
மேற்படி பிரதேசங்களைச் சேர்ந்த கிராமங்களில் முதியவர்களான ஆண், பெண் இருபாலார் தரும் தகவல்கள்:
சடங்குகளை நேரடியாக அவதானித் தல், இத் தகவல் சேகரிப்புக்களை உபயோ கித்து ஆய்வுக்கட்டுரைகள் எழுதுதல்.
கட்டுரைகள் பின்வரும் பொதுத் தலைப்புக்களுக்கு அமைவாக இருத்தல் வேண்டும்:
1. கர்ப்பம், குழந்தைப்பேறு ஆகிய வற்றுடன் தொடர்பான சடங்குகள். 2. பூப்பெய்தல் சடங்குகள். 3. திருமணச் சடங்குகள்.
4. மரணச் சடங்குகள்.
ஆய்வாளர் தமது கட்டுரையின் நோக்கங் களுக்கேற்ப கட்டுரைத் தலைப்பில் மாற்றம் செய்யலாம்.
ஆய்வுகள் வரலாற்றுரீதியாகவும், ஒப் பீட்டுரீதியாகவும் பிரதேச வேறுபாடுகளை மனங்கொண்டும் அமைவது விரும்பத் தக்கது.
சடங்குகள் தொடர்பான மானிடவி யல், சமூகவியல், நாட்டாரியல் கோட்பாடு களை அனுசரித்தும், இத்துறைகளில் இலங்கையில் முன்னர் நடைபெற்ற ஆய்வு களின் அறிவுடனும் கட்டுரைகள் அமைதல் வேண்டும்.
ஆய்வு, சமூகவியல், நாட்டாரியல் துறைகளில் அனுபவமுள்ள பேராசிரியர்கள்

Page 57
முதுநிலை விரிவுரையாளர்கள் ஆகியோரது மேற்பார்வையில் நிகழுதல் வேண்டும். ஆய்வாளர்கள் தமக்குப் பொருத்தமானவர் எனக் கருதும் மேற்பார்வையாளரிடம் ஒப்புதல் பெற்று எமக்கு அறிவிக்க வேண்டும்.
ஆய்வாளர் இலங்கைப் பிரஜையாக இருத்தல் வேண்டும்.
86T6)o:
ஆய்வு 1991ம் ஆண்டு நவம்பர் 1ம் திகதி தொடங்கி 1992ம் ஆண்டு ஜனவரி 31ம் திகதி வரை நடத்தப் படல் வேண்டும்.
உதவித்தொகை:
ஆய்வுக்கான உதவித்தொகை ஒரு வருக்கு ரூபா. 5,000/- ஆகும். உதவித் தொகை பின்வரும் முறையில் மேற் பார்வையாளரின் சிபாரிசுக் கடிதம் பெறப்பட்ட பின்னர் வழங்கப்படும்.
18 ஆய்வுத் திட்டம் ஏற்கப்பட்ட
வுடன் ரூபா, 500/-
2. ஒவ்வொரு மாதமும் ரூபா 350/- படி மூன்று மாதங்களுக்கு ரூபா 1050/- வழங்கப்படும். இவற்றைப் பெறுவதற்கு மேற்பார்வையாள ரின் விதப்புரையுடன் அனுப்பப் படும் கட்டுரை தகுதியுடையதென ஏற்கப்பட்டபின் ரூபா 2000/- வழங்கப்படும். ஆய்வாளர் குழு ஒன்றினால் கட்டுரை மதிப்பீடு செய்யப்பட்ட பின்னர் தகுதியெ னக் காணப்படுமிடத்து மீதிப்ப ணம் ரூபா 1450/- வழங்கப்படும்.
கட்டுரை அமைப்பு:
* கட்டுரை 7500 சொற்களுக்கு குறை
யாமலும் 10000 சொற்களுக்கு மேற் படாமலும் இருத்தல் வேண்டும்.

* கட்டுரைகள் 1991ம் ஆண்டு பெப்ரவரி 28ம் திகதிக்கு முன்னர் பதிவுத்த பாலிலோ அல்லது நேரிலோ கீழே குறிப்பிடப்படும் முகவரிக்கு அனுப்பு தல் வேண்டும்.
கட்டுரைகளை மேற்குறித்த முக வரிக்கு சமர்ப்பிக்க முடியாதவர்கள் 20.02.1992க்கு முன்னர் தமது மேற் பார்வையாளர் ஊடாக காலநீடிப்புக் கோரி விண்ணப்பித்தல் வேண்டும்.
* 1992ம் ஆண்டு மார்ச் 20ம் திகதிக்கு முன்னர் சமர்பிக்கப்படும் கட்டுரைகள் மட்டுமே கவனத்திற் கொள்ளப்படும்.
இத்திட்டத்தில் ஐந்து ஆய்வாளர்களே தெரிந்தெடுக்கப்படவுள்ளனர் எ ன் பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாய்வில் ஈடுபட விரும்புவோர் தாம் விரும்பும் ஆய்வுப் பரப்பு, தலைப்பு ஆகியவற்ற்ையும் குறிப்பிடுவதுடன், சுய விபரக் கோவையுடன் இத்துடன் பிரசுரிக் கப்பட்டுள்ளமாதிரி விண்ணப்பப்படிவத்தில் பின்வரும் முகவரிக்கு விண ன ப் பிக் க வேண்டும்.
பணிப்பாளர், இந்துசமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், 9வது மாடி, **றக்ஷண மந்திரய', 21, வக்ஷோல் வீதி, கொழும்பு-02.
க. சண்முகலிங்கம், பணிப்பாளர்,
இந்துசமய, கலாசார அலுவல்கள் திணைக்களம்.
53

Page 58
01.
02.
●多。
04.
05.
06.
07.
08
09.
10.
11,
விண்ணப்
முழுப்பெயர்:-
பிறந்த திகதி;-
anahontatib:- (தற்போதையது)
நிரந்தர விலாசம்:-
தொழில்:-
பல்கலைக்கழகம்|உயர்கல்வி நிறுவனங்களில் பெற்ற கல்வி
ஆண்டு:-
எழுதிய நூல்கள்: எழுதி
ஆய்வுக்கட்டுரைகள்; கட்டு
ஆய்வு அனுபவம்:-
நீங்கள் தெரிந்தெடுத்துள்ள ஆய்வுக்கட்
ஆய்வு மேற்பார்வையாளரின் பெயர்;-
விலாசம்;
மேற்கூறப்பட்டுள்ள ஆய்வாளர்
மேற்கொண்டுள்ளார் என்பதனை உறுதிப்ட
மேற்பார்வையாளர்
ஒப்பம்.
திகதி:
ஆய்வாளர் கையொப்பம்.
திகதி

பப் படிவம்
வயது
பட்டம் பல்கலைக்கழகம்
பாடங்கள்:
யநூல் வெளியிடப்பட்ட ஆண்டு
ரைத்தலைப்பு ஆய்விதழின் தலைப்பு
டுரைத் தலைப்பு;-
பதவி:
ாது மேற்பார்வையின் கீழ் தனது ஆய்வினை டுத்துகின்றேன்.

Page 59
SS LLLLLSSLLLLSSLLLLSLSLLLLLSLS LSLSLS LSLLLLLLSLLLLS LLLLMLSSLLLL LLLLLLLLSLSLSLL LLLL LLLSLLLSLSLLLSLSLSLL LL
பகுதி - (அ-ஈ)
இந்துக் கலைக்களஞ்சியம்
- பேராசிரியர் பொ. பூலோகசிங்கம் அவர்
கள் இதன் ஆசிரியர் உயிர் எழுத்துக்களில்
இதில் இடம் பெறுகின்றன. 70 விடயங் கள் பற்றி எழுதப் பெற்றுள்ளது. தெய்வம், பெரியோர், நாடு, நலம் நூல், சஞ்சிகை, விழா, விரதம் பொருள் என்பன பற்றிய விடயங்களாக அவை அமைகின்றன. தமிழ் நாடும் ஈழமும் பெரும்பான்மையான விடயங்களுக்குக் களமாக விளங்கியுள்ள போதும் அவற்றுக்கு அப்பாலும் நோக்கப் பட்டுள்ளது இந்துக்கலைக்களஞ்சியம் உயர் வகுப்பு மானவர்களுக்கும். இந்து சமயத் துறையில் ஆய்வுகளை மேற்கொள்வோர்க் Lகும் மிகவும் பயன்படக்கூடிய கருவூலம்.
"அ" தொடங்கி "ஈ" வரை உள்ள சொற்கள்
இலங்கை விலை ரூபா 250/- கிடைக்குமிடங்கள்:
இந்து சமய, கலாசார
அலுவல்கள் திணைக்களம்,
பி. எஸ். சுந்தரம் அன்ட் சன்ஸ், 75. பாபர் வீதி, கொழும்பு 13
=്യജആii:ജi.===
Printed by: Rajam Friintars.
 

SLSL S LSLSSLSLSSLSLSSLSLSSSMLSSSMLSMSMSMSMSMSMSMSMSMSMSMSMSMMSSSMMLSSSMSSSMSSSLSSSMSSSMSSSMSSSMSSSLSSSLSS
5 var vo ܓܝܼܐܐ̈ܠܠ * Wipulananda ***
A Biography The Iman and his achievements
K. KANA, PATH|P| LLAI
B.A., F.R.G.S.
சுவாமி விபுலானந்தா
(ஆங்கிலம்)
-
ஆசிரியர் கே. கணபதிப்பிள்ளை
பி. ஏ. எவ், ஆர். ஜி. எஸ். இலங்கை விலை ரூபா, 200/-
muhimu -- mmar
31, Kew Lane, Colombo-2.

Page 60