கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பண்பாடு 1996.08

Page 1
Zulain
弓今^2=/esつ(ノ
தமிழிலக்கியத் திறன
* கலை இலக்கிய விமரி
* திருகோணமலையிற்
ஆர். சண்முகசுந்தரத்
onal
இந்துசமய, கலாசார
 
 
 
 
 
 

ாய்வு - அன் 1) If இன்றும்
சனக் கொள்கைகள்
சோழ இலங்கேஸ்வரன்
தின் "நாகம்மாள்'

Page 2
பதிப்பு - 1996 ஆவணி விலை - ரூபா 25/-
பதின்மூன்றாவது இத
பேராசிரியர் சி. பத்மநாதன்
வரலாற்றுத்துறைப் பேராசிரிய குழுவின் பிரதித் தலைவராகவு
டாக்டர் க. பஞ்சாங்கம
புதுச்சேரி, காஞ்சிமாமுனிவர் உயர்ச பணிபுரிகிறார். இலக்கியத்திறனாய்வுெ
கலாநிதி சோ. கிருஷ்ணராஜா
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மெய் மெய்யியல், இந்துநாகரிகம், கலைகளின் எழுதியுள்ளார்.
திரு. சி. ஆர் இரவீந்திரன்
தமிழகம் கோயம்புத்தூரைச் சேர்ந்த ( பெற்றவர். கவிதை, நாடகம், இலக்கிய ஈடுபாடு மிக்கவர்.
பண்ப கூறப்பு சொந்த திணை

ழின் கட்டுரையாசிரியர்கள்
ர். பல்கலைக்கழக மானிய ஆனைக் ம் கடமையாற்றுகின்றார்.
ல்வி மையத்தின் தமிழ் விரிவுரையாளராகப் தாடர்பாக ஆய்வுக்கட்டுரைகள் எழுதிவருகிறார்.
பயியல் துறையின் தலைவராகப்பணிபுரிகின்றார். வரலாறு தொடர்பான பல ஆய்வுக் கட்டுரைகளை
இவர், ஆங்கில இலக்கியத்தில் எம். ஏ பட்டம் விமரிசனம், மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளில்
ாடு பருவ இதழில் பிரசுரமாகியுள்ள கட்டுரைகளில ட்டுள்ள கருத்துக்கள் யாவும் கட்டுரையாசிரியர்களின் க் கருத்துக்களேயாகும். இவை இவ்விதழை வெளியிடும் ாக்களத்தின் கருத்துக்களைப் பிரதிபலிப்பனவாகா.
ஆசிரிய

Page 3
பண்
(பதின் மூன்ற
ஆசிர் க. சண்மு
உதவி ஆ எஸ். தெய் Lo. 35öTui
வெளி
இந்துசமய, கலாசார அலு இல. 98, வோ
கொழு

1996 ஆவணி
யர் கலிங்கம்
சிரியர்கள் வநாயகம் pகநாதன்
huG:
பவல்கள் திணைக்களம். 'ட் பிளேஸ், Ly – 07.

Page 4
பொரு
தமிழிலக்கியத் திறனாய்வு - அன்
கலை இலக்கிய விமரிசனக் கொ உருவாதத்திலிருந்து பின்ன
திருகோணமலையிற் சோழ இ
ஆர். சண்முகசுந்தரத்தின் *நா

நளடக்கம்
ாறும் இன்றும் O
க. பஞ்சாங்கம்
'ள்கைகள் 12
ாமைப்பியல் வாதம் வரை
சோ. கிருஷ்ணராஜா
லங்கேஸ்வரன் 34
சி. பத்மநாதன்
கம்மாள்”* 54
சி. ஆர். ரவீந்திரன்,

Page 5
உருவாக்கிய கோட்பாடுகள் தொல்காப் பியமாக நிலைத்து நிற்கின்றன. தொல்காப் பியம் ஒரு தனிமனிதனின் வெளிப்பாடாக இல்லை ஒரு காலகட்டத்தின் வெளிப்பாடாக நிற்கிறது: அகம் புறம் என்றும், செய்யுள் உறுப்புக்கள்" என்றும், நாடக வழக்கு, உலக வழக்கு என்றும், அழகியல் இன்பம் என்பது “தான் அமர்ந்து வரும் மேவற்றாகும்” என்றும் உவமை, உள்ளுறை, இறைச்சி என்றும், யாப்பு, வனப்பு, மரபு, மெய்ப்பாடு என்றும் பேசுவ தோடு, மொழியாடல் எப்படி எப்படி அமைக்கப் படவேண்டும் என்றெல்லாம் தொல்காப்பியம் எடுத்துரைக்கிற பரந்த வெளியை நினைத்துப் பார்க்கும் போது எத்தகைய அளவிற்கு அன்றைக்குத் திறனாய்வுப்புலமை மிக வீரியத் தோடு செயல்பட்டிருக்க வேண்டும் என்பதை உணரமுடிகிறது. சி. கனகசபாபதி, தெ.பொ.மீ, கா. செல்லப்பன், ப.மருதநாயகம், முதலிய பேராசிரியர்கள் தொல்காப்பியரின் திறனாய்வுப் புலமையை இன்று வெளிக் கொணர்ந் துள்ளனர்; மேலும் இலக்கிய ஆக்கத்திற்குத் துணைநிற்கும் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய அனைத்தையும் இணைத்து ஆராய்ந்துள்ள பாங்கு இன்றும் பரவசத்திற்கு உரியதாக விளங்குகிறது. இத் தகைய தன்மை, மொழியை முதன்மைப்படுத்தி இலக்கியத் திறனாய்வு செய்கிற ரோலன் பர்த்தின் திறனாய்வுத் தன்மையோடு ஒத்திருக் கிறது எனக் காண்கிறார் தமிழவன். (ஸ்டரக் சுரலிசம், பக் , 12 - 13 ) தொல் காப்பியத்தின் திறனாய்வுப் புலமையை இன்னும் விரிவாக விளக்குவதற்கு நிறைய இடைவெளிகள் கிடக் கின்றன என்பதுதான் உண்மையாக இருக் கிறது.
தொடர்ந்து இடைக்காலத்தில் மு. வரத ராசனார் கருதுவது போலத் தொல் காப் பியரின் திறனாய்வு மரபு பின்பற்றப்படவில்லை என் றாலும் ( தமிழிலக்கியத் திற னாய்வு, 2ஆவது உலகத்தமிழ் மாநாட்டு விழா மலர், ப.4)
2

நன்னூல் பாயிரம், அணியிலக்கண நூல்கள், யாப்பிலக்கண நூல்கள், பொருளி லக்கண நூல்கள், பாட்டியல் நூல்கள் எல்லாம் தமிழில் நிகழ்ந்துள்ள திறனாய்வுச் செயல்பாடுகளைப் புலப்படுத்து வனவாக உள்ளன. மேலும் இடைக்கால உரையாசிரியர்கள், திறனாய்வுப் புலமையின் வேலைப்பாடு என்பது சூத்திரங் களை வகுப்பது மட்டுமல்ல, பழம் பெரும் இலக்கியங்களைத் தன் காலத் தேவை க்கு ஏற்ப உரையெழுதி விளக்குவதன் மூலம், அவைகளுக்கான ஆயுளை நீட்டிப்பதும் ஆகும் என் பதையும் நிறுவியுள்ளனர். மேலும், ஆதிக்க சக்தியாக விளங்கிய வடமொழியை யும் அதன் திறனாய்வுப் புலமையையும் இடைக் காலப் புலவர்களும் உரையாசிரியர்களும் தங்களின் திறனாய்வுச் செயற்பாடுகளால் தமிழுக்குள் உள்வாங்கித் தமிழை வளப்படுத்தி உள்ளனர் என்பதையும் அறிய முடிகிறது.
மேலும் சங்க காலத்தில் இருந்தே அரங்கேற்றம், அவைக்களம், தொகுப்புப்பணி, சங்கம் முதலிய அமைப்புகள் மூலமாகவும் இலக்கியம் பற்றிய திறனாய்வுச் சொல்லாடல் நிகழ்த்தப்பட்டுள்ளது என்பதையும் அங்கங்கே கிடைக்கும் குறிப்புகள் மூலம் அறிய முடிகிறது திருவெள்ளறைச் சாசனத்தின் மூலமாகப் பட்டினப்பாலை சோழநாட்டில் அரங்கேறிய செய்தியை அறியமுடிகிறது. (பாட்டும் தொகை யும், முகவுரை, ப3) வி. நா. மருதாசலக்கவுண் டர் அரங்கேற்றம் என்பது இக்காலத்தில் நூல்மதிப்பீடு செய்வது போன்ற ஒரு பணி யைச் செய்திருக்கலாம் எனக்கருதுகிறார். (புலமை, ப -207) வ.சுப. மாணிக்கம் அது இன்றைய தணிக்கைக்குழு போல் இயங்கி யது' என்கிறார். (இலக்கிய முத்திறன், இரா. பி. சேதுப்பிள்ளை வெள்ளி விழா மலர், ப. 75 ) அரங்கேற்றத்தின் நடைமுறைகள் எழுதப் பட்டுக் காப்பாற்றி வைக்கப்பட்டிருந்தால், தமிழ் இலக்கியத் திறனாய்வு வரலாற்றிற்குப் பெரும் பங்களிப்பாக இருந்திருக்கும்.

Page 6
ஐரோப்பியர் வருகைக்குப் பிறகு, ஆங் கிலக் கல்வியின் மூலமாக நவீன இலக்கிய வகைகள் அறிமுகம் ஆகின்றன; கூடவே நவீன திறனாய்வு முறைகளும் வெளிப்படு கின்றன; மேலும் தமிழ் நாட்டில் வடமொழி, தெலுங்கு ஆகிய ஆளும் வர்க்கமொழிகள் இருந்த இடத்தில் ஆங்கிலம் போய் அமர்ந்து கொண்டது; கூடவே இலக் கியத்தின் மூலப் பொருளான மொழியை வெளிப்படுத்தும் புதிய கருவிகளின் வருகை, (அச்சு இயந்திரம்) அதனால் ஏற்பட்ட புதிய தொழிலான பத்திரி கைத் தொழில், புத்தகப் பதிப்புத் தொழில் முதலியன இலக்கியம் பற்றிய செயல்பாடு களைப் பன்மடங்குப் பெருக்கின! இத்துடன் வெளி உலகிலும் இந்தியத் தேசிய இயக்கமும் தமிழ் மறுமலர்ச்சி இயக்கமும் முழு வீச்சுடன் பரவிக் கொண்டிருந்தன. இத்தகைய தேசிய எழுச்சிக்குக் கிறித்துவக் குருமார்களின் இலக் கிய, இலக்கண ஆய்வுகளும், சமூக ஆய்வு களும் உரம் ஊட்டின; அச்சேறிய பழம்பெரும் நூல்களின் வருகையும், அந்நூல்களின் வரலாறும், திறனாய்வு பெருகுவதற்கான அடிப்படைச் சூழலை அமைத்துக்கொடுத்தன. எனவே இக்காலகட்டத்தில் நிகழ்த்தப்பட்ட திறனாய்வு, மூலபாடத்திறனாய்வாகப் பெரி தும் விளங்கியது. தொடர்ந்து பழைய நூல் களுக்குப் புதிய காலச் சூழலுக்கு ஏற்ப விளக் கம் எழுத வேண்டிய சமூகக் கட்டாயமும் இருந்ததால், பழைய உரை மரபுத் திறனாய்வும் தொடர்ந்து செயற்பட்டது. மேற்கூறியrமூல பாடத் திறனாய்விலும், உரைமரபுத் திறனாய் விலும் தமிழ் மறுமலர்ச்சி இயக்கத்திற்குத் தேவையான "தம்மேம் பாட்டுக் கொள்கை" என்ற பார்வை தான் மேலோங்கி செயற் பட்டுள்ளது என்பதை இன்று கணித்துக் கூற முடிகிறது.
தம்மேம்பாட்டுக் கொள்கையிலான கருத்தாக்கங்களை உள்வாங்கிச் செயல் பட்ட

வர்களில் "கல்வியாளர்கள்" பெரும்பங்கு வகிக்கிறார்கள்; தமிழ்ச் சமூக வரலாற்றில், புதிதாக உருவான இந்த நடுத்தர வர்க்கக் கல்வியாளர்கள், இந் நூற்றாண்டில்'கருத்துக் களை விதைப்பதில் பெரும்பங்குவகித்துள் ளார்கள்; ‘கல்வி எல்லோர்க்கும்’ என்ற வரலாற்று மாற்றம்," எழுத்து இலக் கியமும் எல்லோர்க்கும் தான்" என்ற நிலையை ஏற் படுத்தியது; இதனால் அரசியல் பற்றிய சொல்லாடல் பெருகியதுபோலவே, இலக்கியம் பற்றிய சொல்லாடலும் பெருகியது, "வாசித் தல்" என்பதே இப்பொழுதுதான் பெருவாரி மக்களுக்கு ஓர் அனுபவமாக ஆகியது என்ற சூழலில், அதைப் பற்றிப் பேசுதல் என்பது மிகவும் ஆர்வமாக நிகழ்த்தப்பட்டுள்ளது - எனவே இலக்கியத்திறனாய்வு வளர்வதற்கான சூழலும் பெருகியுள்ளது - இத்தகைய சூழலைக் கல்வியாளர்கள் எந்த அளவிற்கு ஆக்க பூர்வமாகப் பயன்படுத்தியுள்ளனர் என்ப தில் விமர்சனம் முன் வைக்கப்படுகிறது. "பாண்டித்யத் திறனாய்வு " என்றும் (க.கை லாசபதி, இலக்கியமும் திறனாய்வும், ப. 132) அனுபவத் தரித்திரம் மிக்கவை, ஆங்கில மோகமும் மலட்டுத்தனமும் கொண்டவை என்றும் (சுவடு (தொ), தமிழிலக்கிய விமர் சகர்கள், ப. 16) குற்றம் சாட்டுகின்றனர். பொதுவாகவே கல்வியாளர்கள் தாங்கள் வாழ்ந்து பெற்ற அனுபவங்களைத் தங்கள் திறனாய்வு எழுத்தில் காட்டிக்கொள்வதே இல்லை; அவர்களின் பதவி உயர்வு, மாதச் சம்பள வாழ்க்கை, அரசாங்கம் அளிக்கும் பணத்தில் பல கருத்தரங்கு நடத்தும் வசதிகள், புத்தகம் வெளியிடவும் விற்கவும் அமைந்துள்ள பல எளிய வழிகள் முதலியனவெல்லாம் அவர் களைக் கட்டுப்படுத்துகின்றன. எனவே தான் கல்வியாளர்களில் பெரும்பாலோர் பிரச்சனை கள் முளைக்க வாய்ப்புள்ள தற்கால இலக்கியங் களை விடப் பழைய இலக்கியங்களைப் பற்றிப் பேசவே பெரிதும் முயலுகின்றனர்; தற்கால இலக்கியங்களைப் பற்றி எழுத நேர்ந்தாலும்

Page 7
பிரச்சினை ஏதும் ஏற்படாமல் யார் வாயிலும், நிற்காமல் எழுதுகிற விலாங்கு மீன் நடை யைத் தெரிந்து வைத்துள்ளனர் ; இத்தகைய நடுத்தர வர்க்கக் குணம் தான் கல்வியாளர் களுக்கு மேற்கண்ட விமர்சனத்தை வாங்கித் தந்துள்ளது எனலாம். திருமணம் செல்வக் கேசவராய முதலியார் தொடங்கி, இன்றைய மறைமலை வரை உள்ள கல்வியாளர்களின் திறனாய்வைத் தனியாக மதிப்பிட்டு ஆராய இடம் இருக்கிறது.
நவீன இலக்கியத் திறனாய்வு என்று சொல்லத்தக்கப் புதிய புதிய திறனாய்வு முறை கள், புதிய இலக்கிய வகைகளாக அறியப்பட்ட புதினம், சிறுகதை, புதுக்கவிதை முதலிய இலக்கியங்கள் பற்றிய சொல்லாடல்கள் பெரு கும் போது தனியே தெரியத் தொடங்கின. பாடு பொருளையும், இலக்கணக் குறிப்புகளையும் வைத்தே பல கல்வியாளர்கள் பழைய இலக் கியங்களை அணுகிக் கொண்டிருந்த போது, நவீன இலக்கியம் சார்ந்த புதியவர்கள், அழகி யல் இன்பம், வடிவம், உத்தி, சோதனை, உள்ளொளி, படிமம், குறியீடு, இருண்மை என்று இலக்கியத்தின் அக உறுப்புகளைப் பற்றிப் பேசினர். இவர்கள் இலக்கியத்தில் பேருணர்ச்சி, அனுபூதிநிலை, உன்னதம், தரிசனம், தேடல், புதிர் முதலிய தத்துவார்த்த சொற்களால் இலக்கியத்தை அனைத்திலும் மேலாகக் கொண்டாடினர். இலக்கியம் சார் பற்றது என்றனர்; தனி'உயிரியாக இயங்கு கிறது என்றனர்; எந்தச் சித்தாந்தத்திற்காக வும் "இலக்கியத்தனத்தை" விட்டுக் கொடுத்து விடக் கூடாது என்று வாதாடினர் என்றைக் கும் மாறாத-நிலையான-"இலக்கியத்தனம்" ஒன்று இருக்கிறது என்கிற கற்பிதத்தில் உருவான இவர்களின் வெறித்தனமான வாதம், தமிழிலக்கிய உலகம் இதுவரை கண்டறியாதது. "வடிவ இயல் திறனாய்வாளர் கள்" என்ற இவர்கள் எந்த நிறுவனத்திற் குள்ளும் நின்று இயங்காததால் சுதந்திரமாக
4.

எழுதினர். மேலும் தம்மேம்பாட்டுக் கொள்கை யினால் "பழைய இலக்கியங்கள் உன்னத மானவை; எல்லாம் அதில் அடக்கம் ' என்ற பார்வை, கோலோச்சிக் கொண்டிருந்த ஒரு கால கட்டத்தில், புதிய இந்த இலக்கிய முயற் சியை நிலைநிறுத்த வேண்டும் என்ற உந்துதல் இவர்களின் எழுத்தில் வேகத்தைக் கூட்டியது: நிகழ்கால வாசகனுக்கென்று தயாரிக்கப்பட்ட பத்திரிகைப்பலமும் இவர்களுக்குத் துணை யாக நின்றது.
இவ்வடிவவியல் திறனாய்வாளர்கள் "இலக்தியத் தரம் " பற்றிப் பேசுவதற்குக் காரணம் புறத்தே நிலவிய அரசியல் இயக்கங் களின் வீச்சினால், வெற்றுமுழக்கங்களையே பேரிலக்கியங்களாகப் பெரிதுபடுத்தும் சூழல்
தான் என்றாலும், கோபுர அடுக்குப் போன்ற இச்சாதியச் சமூகத்தில், இலக்கியமும் கல்வி யும் எல்லாச் சாதியினர்க்கும் பொதுவாகிவிட்ட சூழலில், தன்னைத் தனியாக அடையாளப் படுத்தி நிறுத்த முயலும் உயர்சாதி மனப் பான்மையின் ஒரு செயல்பாடுதான் இந்தத் "தரத்திற்குக்" கொடுத்த அழுத்தமோ என்று கருதுவதற்கும் இடம் இருக்கிறது. ஏனென்றால் வடிவ இயல் திறனாய்விற்கு அழுத்தம் கொடுத்தவர்கள்- கொடுப்பவர்கள் - பெரும்பாலோர் உயர்சாதிக் காரர்களாக இருக்கிறார்கள் என்பது சாதாரணமான ஒரு உண்மை அல்ல; ஆனாலும் இவர்களால்தான் புதிய திறனாய்வு, உளவியல் திறனாய்வு, சமூகவியல் திறனாய்வு முதலிய பலவிதமான திறனாய்வு அணுகு முறைகள் தொடக்க காலத்தில் அறிமுகமாகி புள்ளன; டி. எஸ். எலியட், ஐ. ஏ. ரிச்சர்ட்ஸ் முதலிய மேலை இலக்கியத் திறனாய்வாளர்களைப் பின்பற்றிச் சொல்லாடுகின்ற புதிய முறைகளும் உருவாகி யுள்ளன. இலக்கியம் பற்றிய உரையாடலை இவர்களைப் போலக் கோட்பாட்டு அடிப்படை யில் விளக்குவதற்குத் தமிழ் மறுமலர்ச்சி இயக்கத்திற்குள் மனதைச் செலுத்திய கல்வி

Page 8
நெறித் திறனாய்வாளர்களால் இயலவில்லை; அதனால்தான் மறுமலர்ச்சி இயக்கத்தின் செல்வாக்கினால் தோன்றிய இலக்கியங் களைப் புறக்கணிக்கிற போக்குத் தொடர் கிறது: தமிழிலக்கியக் கல்வியில் கோட்பாட்டு அடிப்படையில், தர்க்க முறையில் எழுதுகின்ற வர்கள் ஒன்று அறிவியல் பாடத்தைப் படித்து விட்டுத் தமிழிலக்கியம் படிக்க வந்தவர்களாக இருப்பார்கள், அல்லது தாய் மொழிவழிக் கல்வி நிலவுகின்ற இலங்கையைச் சார்ந்தவர் களாக இருப்பார்கள்!
தமிழ்த் திறனாய்வு வரலாற்றில் பெரி தும் ஆற்றலுடன் செயல்பட்டதும்- செயல் பட்டுக் கொண்டிருப்பதும் - மார்க்சீயத் திறனாய்வுமுறையாகும் வடிவ இயல் திறனாய் வாளர்களின் நிர்ணயவாதமும், ஒற்றைவாத மும் மார்க்சீயத் திறனாய்வாளர் களின் வளர்ச்சிக்கு உரமாக அமைந்தன எனலாம்! இடதுசாரி அரசியல் பின்புலமும், மாஸ்கோ பதிப்பகப் புத்தகங்களின் வரவும், எந்த ஒரு சிறு நிகழ்வையும் கருத்தையும் தத்துவத்தளத் தில் ஆழமான தேடல் வெறியோடு அணுகு கின்ற மார்க்சீயத் தத்துவச் சொல்லாடலும் இலக்கியத் திறனாய்வை விரிவு படுத்தின. உண்மையில் இன்றுவரை மார்க்சீயத் திறனாய்வு, எல்லாவிதமான இலக்கிய வகைமைகளுக்குள்ளும் நிகழ்த்தி இருக்கிற உரையாடலை வேறு திறனாய்வுகள் நிகழ்த் தவில்லை எனலாம். இதற்கு இன்னும் ஒரு காரணமும் தமிழ்ச் சூழலில் சுட்டத்தக்கதாகும்; 1967 - இல் தி.மு.க ஆட்சிக்கு வந்தபிறகு, அதன் செயல்பாடுகளில் உண்மைத் தன்மை யைக் காணமுடியாத பல இளைஞர்கள், இடது சாரிகளின் பக்கம் வந்து சேர்ந்ததும் ஒரு முக்கியமான வரலாற்று நிகழ்வு ஆகும்
மார்க்சீயத் திறனாய்வு, இலக்கியங் களின் தோற்றம், வளர்ச்சி, வகைமை, மொழி, வடிவம், உத்தி ஆகிய அனைத்திற்கும் வர்க்க

வரலாற்றின் அடிப்படையில் விளக்கம் கொடுத் தது; தமிழ்ச் சிந்தனை மரபிற்கு வளம் சேர்ந் தது; மேலும்" சங்க இலக்கிய காலம் புனித மானது; அது ஒரு பொற்காலம்" போன்ற திராவிட இயக்கங்கள் உருவாக்கி விட்ட கருத் தாக்கங்களைத் தலைகீழாக மாற்றியது; சங்க இலக்கியச் சமூகத்தில் வர்க்க வேறுபாடு இருந்தது ; பெண்ணடிமை உருவானது; வறுமை பெருகியது; மன்னராட்சி எனப்படும் அதிகார அரசு உருக்கொண்டது; அழிக்கிற போர்முறைகள் போற்றப்பட்டன; என்றெல்லாம் கருத்துக்கள் முன்வைக்கப் பட்டன. இது போலவே, சிலப்பதிகாரம் ஆளும் நிலவுடைமை வர்க்கம் சார்ந்த அரசுக்கும் புதிதாகத் தோன்றிய வணிக வர்க்கத்திற்கும் இடையில் "தோன்றிய முரண்பாட்டின் விளை வினால் உண்டான ஒரு காவியம் என விளக்கப்பட்டது; இராமன் சகோதரத்துவம் நிறைந்தவன் எனப் புரியப்பட்டான், நந்தனார் சரிதம், பள்ளுப்பாடல் முதலியன ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகத் தோண்டி எடுக்கப்பட்டன; இடைக்காலப் பக்தி இயக்கம் கூட மக்கள் இயக்கமாக விளக்கம் பெற்றது "யாமார்க்கும் குடியல்லோம்" என்ற நாவுக்கரசரின் குரல், அதிகார அமைப்பிற்கு எதிரான கலகக் குரலாக மார்க்சீயத் திறனாய்வு பதிவு செய்தது; இவ்வாறு பழைய இலக்கியங்களின் மேல் புதிய விளக்கங்களைப் பாய்ச்சியதோடு, அழகியல் இன்பம், இன்ப இயல், துன்ப இயல், கலை ஞனின் சுதந்திரம், கலையின் நிரந்தரத் தன்மை, இலக்கியத் திற்கும் அரசியலுக்கு முள்ள உறவுநிலை, கலைத் தத்துவம், இலக் கியத்திற்கும் நவீன அறிவியலுக்கும் உள்ள தொடர்பு நிலைகள் என்று பல தளங்களில் இலக்கியச் சொல்லாடலை நிகழ்த்துவதற்கு மார்க்சீயத் திறனாய்வு துணை செய்துள்ளது.
மார்க்சீயத் திறனாய்வாளர்களின் பெரிய பங்களிப்பாகக் கருதத்தக்கது, இலக் கியத்தை யதார்த்த வாதம், சோசலிச யதார்த் தவாதம், பிரதிபலிப்புக் கொள்கை ஆகிய
5

Page 9
வற்றின் அடிப்படையிலும், பொருள் முதல் வாதம், முரண்பாடுகளின் ஒற்றுமை, அளவு மாறுபாடும் குணமாறுபாடும், நிலை மறுப்பின் நிலைமறுப்பு ஆகிய இயங்கியல் தத்துவச் சிந்தனைகளாலும், அந்நியமாதல்' என்கிற பார்வை மூலமாகவும் வாழ்க்கை பற்றிய தேடல் குணத்தோடு விளக்கியது ஆகும் ஆனாலும் ஞானி, நுஃமான் ஆகியோர் வேதனையோடு சுட்டிக் காட்டுவது போல, கொச்சையான உள்ளடக்க வாதமாக மட்டும் மார்க்சீயத் திறனாய்வை, நிறுவனமயப்பட்ட சில மார்க் சீயத் திறனாய்வாளர்கள் சுருக்கி யதால் ஏற்பட்ட தீங்கையும் கணக்கில் எடுக்கத்தான் வேண்டும்! எவ்வளவு பெரிய தத்துவமாக இருந்தாலும் நிறுவனமயப்பட்டு அதிகாரமாய் இறுகும்போது, அது வாழ்க்கைக்கு எதிர்நிலை யிலேயே போய் விடுகிறது; தாங்கள் திரட்டிய வியக்கத்தக்க, மொத்த மார்க்சீய அறிவையும், வடிவவியல் திறனாய் விற்கு எதிராக உள்ளடக் கத் திறனாய்வை வலியுறுத்தும் போராட்டத் திலேயே சிக்கிச் சிதறடித்து விட்டனர். இதனால் தங்களை அறியாமலேயே உருவம் / உள்ளடக்கம் என்று க.நா.சு போட்ட வளையத் திற்குள்ளேயே சிக்கிக் கொண்டனர். தனக்கு எதிர்நிலை என ஒன்றைப் புனைந்து கொள்ளும் போது, ஒருவனின் செயல் அனைத்தும் அந்த ஒன்றைச் சுற்றியே மையம் கொண்டு, பரந்துகிடக்கும் "வெளி" க்குள் வரமுடியாமல் சிக்கிக் கொள்கின்றன; எதை எதிர்க்கிறோமோ (பகை உணர்வு) அந்த ஒன்றையே அவாவி விடுகிற மனநிலைக்குள் சிக்கிக் கொள்ள நேர்கிறது! பல மார்க்சீயத் திறனாய் வாளர்கள் இப்படித்தான் சிக்கிக் கொண்ட வேளையில், தமிழவன் போன்றோர் இதை எப்படியோ உணர்ந்து, இந்த வளையத் தில் இருந்து தப்பி உள்ளனர். இவ்வாறு திமிறிக் கொண்டு வெளியே வரமுடிந்தமைக் குத் தமிழ்ச் சூழலில் ஏற்பட்ட வரலாற்று மாற்றங்களும் புறக்காரணிகளாக அமைந்தன.
6

திராவிட இயக்கம் ஆட்சிக்கு வந்த போது, இடதுசாரி இயக்கத்திற்கு நம்பிக்கை யோடு வந்த பல இளைஞர்கள் உட்ப்டப் பலரும் இடதுசாரி இயக்கத்திலும் நம்பிக்கை இழக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. நம்பிக்கையோடு வெடித்துக் கிளம்பிய தீவிரவாத இயக்கங்கள் உட்பட அனைத்தும் சிதறிப் போயின; மேலும் நிறுவனமாக இறுகிப் போன இயக்கங்களின் சலிப்பு தரும் பாராளுமன்ற அரசியல் செயல் பாடு, போலி வேடங்கள், போலிக் கூட்டணிகள் சாதியத் தலைமை, வறட்டுச் சூத்திரத்தனமான அணுகுமுறை ஆகியன எல்லாம் எதிலும் நம்பிக்கை கொள்ள முடியாத சூழலை வடி வமைத்தன; இந்திய மார்க்சீய அமைப்புக் களுக்குள்ளேயும், உலக மார்க்சீய அரசி யலிலும் பல வினாக்கள் எழத் தொடங்கி விட்டன; ஏகாதிபத்தியத்தின் புதிய முகங்கள், தகவல் தொடர்புக் கருவிகளின் கொடூரமான ஆக்கிரமிப்பு, கணணிகளின் வருகை, நுகர்வுப் பண்பாட்டில் ஈசலாய்க் குவியும் பெருவாரி மக்களின் போக்கு ஆகிய எல்லாமே சிந்திக் கின்றவனை நிலைகுலையச் செய்தன; மார்க் சீய அரசாங்கத்திற்குள்ளேயே செயல் படும் அதிகாரம்பற்றிய விமர்சனங்கள் கூர்மையாக முன்வைக்கப்பட்டன. இத்தகைய ஒரு சூழலில் தான் , 1982 இல் தமிழவனால் முன் வைக்க்ப் பட்ட அமைப்பியல் சிந்தனைகள் எல்லோரு டைய கவனத்தையும் ஈர்த்தன; காலத்தின் வெளிப்பாடு எனப் புரியப் பொறுமையின்றி, தனிமனிதனின் - தன் முனைப்பின் - விளைவு எனத் தாங்கள் கடைப்பிடிப்பதாகக் கூறிக் கொள்ளும் பொருள் முதல் வாதத்திற்கு எதிரா கப்புரிந்து கொண்டு," "மார்க்சீயத்திற்கு இது எதிர் இல்லையா? தமிழ்ச் சூழல்களுக்குப் பொருந்துமா? புரியவில்லையே மார்க்சீயத் திற்குள்ளேயே இத்தகைய சிந்தனைகள் இல்லையா?" என்று பலவிதமான முணு முனுப்புகளுடன் அமைப்பியல் சிந்தனைகள் இங்கே நுழைந்தன. பத்து ஆண்டுகளில் இன்று கருத்தாக்கத் தளத்தில் இயங்கும்

Page 10
எல்லோரிடமும் அமைப்பியல் சிந்தனைகள் .பரவியுள்ளன. எளிதாக எதையும் உள்ளே விட மறுக்கும் பல்கலைக் கழகக் கருத்தரங்கு களிலும், நாட்டுப்புற ஆய்வுகளிலும் இன்று ரோலன் பர்த், லெவிஸ்ட்ராஸ், தெரிதா , லெக்கான் மிஷல் ஃபூக்கோ முதலிய பெயர்கள் ஒலிக்கத் தொடங்கிவிட்டன:-
சசூரின் மொழி பற்றிய கோட்பாடு, ஆசிரியனை மையப்படுத்தி - பிரதியை மையப் படுத்திப் பார்த்து வந்த பழைய திறனாய்வு முறைகளை உடைத்து, வாசகனை மையப்படுத் திப் பார்க்கும்படிச் செய்துவிட்டது; குறிப்பான், குறிப்பீடு, குறி பற்றிய புதிய விளக்கங்கள், மொழிக்கிடங்கு, பேச்சு என்கிற விவரங்கள் எல்லாம் சேர்ந்து பிரதிக்குள் குத்துக் கோட்டிலும், கிடைக்கோட்டிலும் குறுக்கும் நெடுக்குமாக ஒடும் பல கூறுகளைக் கணக் கில் கொண்டும் பிரதியைப் புரிந்து கொள்ளப் போராடுகின்ற வாசகனின் செயல்பாடு முன்னிறுத்தப்பட்டது; பிரதிக்குள் ஒவ்வொரு வார்த்தையும், வாக்கியமும் , அசையும், ஒலிக் குறிப்பும், இலக்கணக்காரர்களின் மொழிக் கான அர்த்தத்தைக் களைந்துவிட்டு, வேறொரு தளத்தில் இயங்குகிறது. அதாவது பிரதியின் அமைப்பு, வேறொரு மொழியைத் தன் உள்தர்க்கமாகக் கொண்டுள்ளது; அந்தச் 'சொல்லாடலை வாசகன் தனக்கான மொழியைவைத்து அர்த்தம்' கற்பித்துக் கொள்ளுகிறான்; இவ்வாறு எல்லாமே வித்தி யாசப்படுத்துவதன் மூலமாக அர்த்தத்தை உருவாக்கிக் கொள்ளும் மொழியின் விளை யாட்டு என்றநிலையில் "ஆசிரியன் இறந்து போனான்” என்ற அறிவிப்புப் பிறக்கின்றது; ஆசிரியனுக்குள் இருக்கும் 'பேச்சு எழுத் தாகும் போது 'செத்து விடுகிறது; அதற்குள் புகுந்து வாசிக்கிற வாசகன் மீண்டும் தனக் கான பேச்சை அதிலிருந்து பெற்றுக் கொள்ளு கிறான். எனவே வாசகன் படைப்பாளியாகி விடுகிறான். இப்படிப்படைப்பு என்பது மனித

அனுபவத்திற்கும் மொழிக்குமான தலைகீழ் விளையாட்டாக இருப்பதால் தான் அல்துTசர், "மனித சமூகத்தின் வர்க்கப் போராட்டம் முழுவதையும், ஒரு வார்த்தைக்கும் மற்றொரு வார்த்தைக்கும் நடந்த சண்டையெனச் சுருக் கிக் கூறலாம்" எனச் சொல்ல முடிந்தது Gurgh (Popular fictions, 1985)
ஒரு பிரதியை அர்த்தப்படுத்துவது, அந்தப் பிரதிக்குள் ஒடும் குறியீடுகள் படிக் கின்றவனுக்கு ஏற்ப எவ்வாறு அர்த்த மாகிறது என்பதைப் பொறுத்து அமைகிறது; மேலும் பிரதிக்குள் பல இடைவெளிகள், மெளனங்கள், பல குரல்கள் உறைந்து கிடக்கின்றன; அவை களைத் தேடி அர்த்தம் காணும் போது, மர பார்ந்த வாசிப்பு இதுவரை ஏற்படுத்தியிருந்த ஒற்றை அர்த்தம் சிதறுண்டு போகிறது; இவ் வாறு வாசகன் இன்று அதிகாரத்திற்குத் துணைபோகும் "ஒற்றைப் பொருள் கொள்ளும்" கொடுமையில் இருந்து தப்பிக் கின்றான்; ஆதிக்கங்களின் இருத்தலுக்கான தர்க்கங்கள் இப்படி உடைபடுகின்றன.
அமைப்பிய்லின் வருகை, இதுவரை தமிழ்ப் பண்பாட்டில் ஆழமாக வேரூன்றிக் கிடந்த யதார்த்தவாதம், அனுபவவாதம் முதலி யவற்றைக் கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது. யதார்த்த வாதம் இருக்கிற நிலைமையைச் சித்தரிக்கிறேன் என்ற தோரணையில், சமூகத் தில் நிலவும் மனிதனுக்கு எதிரான கூறுகளை யும் மன அமைப்பாக மாற்றி விடுகிற பணியைத் தனக்குத் தெரியாமலேயே செய்துவிடுகிறது ; இந்தக் கொடுமையில் இருந்து விடுதலைபெற வேண்டுமென்றால், மொழிக்கான மரபார்ந்த அர்த்தத்தைச் சிதைக்கிற விளையாட்டில் படைப்பாளி வெற்றிபெற வேண்டும்; எல்லாமே மொழி எனும் குறிகளின் உறவு நிலையில் அர்த்தம் கொள்ளுகின்றன என்ற விழிப்புணர் வோடு செயல்பட வேண்டும்; கல் என்ற குறி, பல்' என்ற குறியோடு கொள்ளுகிற உறவில்
7

Page 11
தான் அர்த்தம் பெறுகிறதே ஒழிய, உண்மை யில் அவைகளுக்கென்று எந்த விதத்தனி அர்த்தமும் இல்லை என்று உரக்க முழங்கித் தமிழ்ச் சூழலை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. இந்நிலையில் மார்க்சீய விமர்சனத் தில், மார்க்சீயம் பற்றிய அவரவர்களின் புரி தலின் தன்மைக்கு ஏற்பப் பலவிதமான தளங் களில் இயங்கியது போலவே, அமைப்பியல் பற்றியும் எழுதுபவர்கள் அவரவர்களின் புரி தலுக்கு ஏற்பப் பல்வேறு தளங்களில் எழுதிக் கொண்டிருக்கின்றனர்; ஒரு குழப்பமான சூழலே எஞ்சுகிறது; ஆனாலும் வேறு எந்த நூலையும் படிக்காமல் மு.வ. வின் 'இலக்கியத் திறன்' நூலை மட்டும் வாசித்துவிட்டுத் திறனாய்வுக் கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரை கள் தயாரித்த கல்வியாளர்கள் போலவே, இன்றும் தமிழவனின் அமைப்பியல் பற்றிய நூலை மட்டும் படித்துக் கொண்டு, அமைப்பி யல் திறனாய்வு செய்கிற கல்வியாளர்களும் உருவாகி விட்டனர்; இந் நிலையில் ஒருவர் மற்றொருவர் எழுத்தை அரைகுறையானது; புரியாமல் எழுதப்பட்டது (காலச்சுவடு - சிறப்பிதழ் ப - 66) என்றும் குற்றம் சாட்டிக் கொள்ளுகின்றனர். உண்மையில் இந்த வாழ்க்கையும், வாழ்க்கை தொடர்பான அனைத்துக் கருத்தாக்கங்களும் தெளிவான புரிதலுக்கு உட்பட்டவை அல்ல; "எல்லா வற்றிலும் தெளிவாக இருக்கிறேன்" என்ப வன் மனநோயாளி (அ) அதிகாரம் செலுத்து பவன்; மார்க்சீய விமர்சனத்திலும் எல்லா வினாக்களுக்கும் விடை கையில் இருக்கிறது என்ற மனபாவத்தோடு எழுதிய அதிகாரக் குரல்தான், அதன் பலவீனத்திற்கு அடிப்படை யானது; எதிரே இருப்பவனின் தரம்தான், தன் நடையின் தரத்தை நிர்ணயிக்கிறது என்ற நிலையில் எழுதுபவன், அதிகாரத்திற்காக எழுதுபவன்; இத்தகைய புரிதல்கள் இருக்கு மானால், திறனாய்வாளர்கள் இடையே நிகழும் ஞானப்போரை நிறுத்திக்கொண்டு ஒவ்வொரு
8

வரும் தான் புரிந்த அளவில் தமிழ் இலக்கியத் திற்கும் வாழ்க்கைக்கும் தன் பங்களிப்பைச் செய்யலாம்.
அமைப்பியல் சிந்தனையின் கலகக் குரலைத் தொடர்ந்து தமிழ்ச் சூழலில், உலகப் போருக்குப் பின்னால் தோன்றிய நவீனத்து வம், பிற்கால நவீனத்துவம் சார்ந்த கருத்துக் களும் இப்போது இங்கே பெரிதும் பேசப்படு வது மிகவும் கவனத்திற்குரிய ஒன்றாகும் 'உயரிய கலைகள், சாதாரணப் பெருவாரி மக்களுக்கான கலைகள், அதன் மதிப்பீடுகள் என்கிற வேறுபாடுகள் எல்லாம் ஒழிக்கப்பட்டு வாழ்க்கை என்ற இந்தப் பெருங்கடலில் எல்லாம் மொத்தமாகக் கரைக்கப்படுகின்றன. மரபார்ந்த இலக்கியப் பார்வைகள் நொறுங்கிச் சிதறுகின்றன! மையத்தில் வாழும் மனிதர் களே இலக்கியக் கதைமாந்தர்களுக்கான தகுதியுடையவர்கள் என்ற மாயை உடைபடு கிறது; திருடர்களாய், கொலைகாரர்களாய், பரத்தையராய், உதிரிகளாய் வாழும் ஒரத்து மனிதர்களும் இலக்கியக் கதை மாந்தர் ஆகலாம் என்று நிலை நாட்டப்படுகிறது ; பன்முகப்பட்ட நிலையில், சாத்தியப்படுகின்ற எல்லா வகையிலும் கலகக் குரலை எழுப்புவது தான் சரியான இலக்கியச் செயல்பாடு என்ற சிந்தனை பரவுகிறது.
இப்படி அமைப்பியல், நவீனத்துவம் போன்ற சிந்தனைகளின் பின்னணியில் பெண்ணியம், தலித்தியம் ஆகிய விமர்சனப் பார்வைகளும் மிகத் தீவிரமாக முன் வைக்கப் படுகின்றன. பிற்கால அமைப்பியல் சிந்தனை யின் ஒரு கூறான "தலைகீழாக மாற்றுதல்" என்ற அணுகுமுறையின் மூலம், பெண்ணிய மும், தலித்தியமும் வேகமாக இயக்கம் கொண் டிருக்கின்றன. ஒடுக்கப்பட்ட தன்மையின் அடிப்படையில் இவை இரண்டும் ஒன்று சேரு கின்றன.

Page 12
மனித வாழ்க்கை உறவுகளால் ஆனது இந்த உறவுகளுள் ஆண் - பெண் உறவு அடிப்படையானது ஆற்றல் வாய்ந்தது; இந்த உறவு வடிவமைக்கப்பட்டிருக்கும் பாங்கில் ஏற்றத்தாழ்வு நிகழ்கிறது; உயிரியல் கூறு, அனுபவம், மொழி , நனவிலி மனம், சமூகம் மற்றும் பொருளாதாரச் சூழல் முதலிய ஐந்து கூறுகளிலும் இந்தச் சமத்துவமின்மை ஏற்றப் பட்டிருக்கிறது; ஆண் - பெண் - என்ற பால்வேறுபாட்டைக் கட்டிக் காத்து அதிகார அமைப்பை நடத்திச் செல்லும் ஆணாதிக்க வரலாறாக மனித வரலாறு அமைந்திருக்கிறது என்ற உண்மை வெளிக்கொணரப்பட்டிருக்
கிறது.
ஃ ப்ராய்டின் உளவியல் கருத்தாக் கங்களின் மேல் மறுவாசிப்பு செய்த லக் கானின் எழுத்துக்கள் மரபார்ந்த பல கருத்துக் களை உடைத்து இருக்கிறது; ஆண் / பெண் என்ற பால் வேறுபாடே - அந்த மனோபாவமே - மொழியின் விளையாட்டினால் விளைந்தது எனக் கூறி அதிர்ச்சியடைய வைக்கிறது; மேலும் பெண்ணியலாளரால், ஆணுக்கும் பெண்ணுக்கும் உறவு இயற்கை யானது இயல் பானது என்ற சிந்தனையும் தகர்க்கப்பட்டு, இந்த உறவிலும் ஆணாதிக்க அரசியல் எப்படி யெல்லாம் செயல்பட்டிருக்கிறது என்பது முன்னிறுத்தப்பபடுகிறது ; எல்லா விதமான பாலியல் உறவிலும் அடிநாதமாக ஓடிக் கொண்டிருப்பது ஆணாதிக்க அரசியல்தான்; ஹெலன் சிக்ஸி எழுதியுள்ள "மேடுகாவின் புன்னகை" என்ற கட்டுரை, பெண்ணியத்திற் கான அறிக்கை எனக் கருதப்படுகிறது; அவர் ஆணாதிக்கம் எனப்படும் "லிங்கமைய" அணுகுமுறையினால் விளைந்த மொழியை மறுத்து உதறிவிட்டுப் பெண்கள் தங்களுக் கான மொழியைப் படைத்துக்கொள்ள வேண் டும் என்கிறார்! பெண் உடம்பால்தான் பெண்ணாக இருக்கிறாள்; சிந்தனையால் அவளும் ஆணாகத்தான் இருக்கிறாள்;

காரணம் அவள் சிந்திப்பது ஆணாதிக்கம் உற்பத்தி செய்த மொழியால்! எனவே பெண், தனக்குள்ளே தனியாகத் திரண்டிருக்கும் பெண்மையைப் பிடிப்பதற்குத்தனக்கே உரிய மொழியைக் கண்டுபிடித்துக் கொள்ளுவது பெண்ணின் கட்டாயத் தேவை என்கிறார். "ஒரு பெண்ணின் உடம்பு தன்னுடைய ஆயிரக் கனக்கான உணர்ச்சி வெப்பத்தை மூல நெருப்பாகக் கொண்டு பலப்பல மொழிகளை ஒலி அதிர்வுகளை உருவாக்கிக் கொள்ளும் ஆற்றல் உடையது " என வாதிடு கிறார். (நிகழ்- சிறப்பிதழ் - 25 ) இத்தகைய பெண்ணியல் சிந்தனைகளின் வரவினால், இதுவரை வாழ்க்கை பற்றியும், மொழி, இலக் கியம் பற்றியும் கொண்டிருந்த பார்வைகள் தலைகீழாக மாறுகின்றன, பழைய இலக்கி யங்கள் பற்றிய மதிப்பீடுகளும் மறு பரி சீலனைக்கு உள்ளாகின்றன; ஆனால் இங்கே ஒன்றைக் கூறவேண்டும். பெண்ணியம் இங்கே "அரசியலாகத்தான்" ஆரவாரமாக இயக்கம் கொண்டிருக்கின்றது; பெண்ணியம் தொடர்பான பல புத்தகங்களும், கட்டுரைத் தொகுப்புகளும், வெளிவந்த வண்ணம் இருக் கின்றன! பெண்ணியல் சிந்தனைகளை இலக் கியக் கோட்பாடுகளாக வகுத்துக் கொள்ளும் போதுதான், பெண்ணியல் திறனாய்வுப் புலமை என ஒன்று உருவாகும் ! திராவிட இயக்கச் சிந்தனை களையும், அதன் அடிப்படையில் தோன்றிய இலக்கியங்களையும் இணைத்துக் கோட்பாடாக வகுத்துக் கொள்ளாத குறையை இன்று தமிழ்த்திறனாய்வு உலகம் ஆழமாக உணர்கிறது; இந்தக் குறை பெண்ணியத்திற் கும் ஏற்பட்டுவிடக் கூடாது.
அம்பேத்காரை முன்னிறுத்தி, அகில இந்திய அளவில் ஒரு அரசியல் தீவிரமாக வெளிப்பட்ட சூழலில், தமிழகத்திலும் அது எதிரொலித்தது; அதன் விளைவாகத் தமிழ் இலக்கிய உலகிலும் இன்றுதலித்தியம் பெரு அளவில் பேசப்படுகிறது. அம்பேத்காருடைய
9

Page 13
எழுத்துக்கள், அர்ஜுன் டாங்களே போன்ற மராட்டிய எழுத்தாளர்களின் வெளியீடுகள், இலங்கை டானியல் எழுத்துக்கள், கர்நாடக மாநிலத்திலுள்ள சித்தலிங்கையா சிந்தனை கள் எனத் தமிழில் பலவாறு தலித்திய எண்ண வூட்டங்கள் பெருகியுள்ளன. கலகம் செய் வதைத் தவிர தலித்துகளுக்கு வாழ்க்கையெணு வேறு ஏதும் இருக்க முடியாது என்ற நிலை, நெஞ்சு வலிக்க உணரப்படும் சூழல் ஏற் பட்டுள்ளது. இந்தக் கலகக்குரல், பின் நவீனத்துவம், பின் அமைப்பியல், கட்டுடைப்பு முதலிய திறனாய்வுநெறிமுறைகளின் துணை யோடு இலக்கியப் படைப்பிலும், திறனாய்விலும் எதிரொலிக்கின்றது; பழைய பிரதிகளுக்குள் இருக்கும் உயர்சாதி, அதிகாரத்துவக் கருத் துக்களை உடைத்து நகைக்கிற அணுகுமுறை முன்னிறுத்தப் படுகிறது; மொழி என்பது தலித்திய பார்வையில் காரியமாக - நிகழ் வாகக் கருதப்பட்டுச் சண்டையாக மாற்றப் படுகிறது (எம்.டி.எம், பிற்கால அமைப்பியலும் குறியியலும்) ஆனால் ஒடுக்குமுறைக்கு எதிரான தலித்தியம், பெண்ணியம் இரண்டுமே, தாம் எதை எதிர்க்கின்றனவோ, அவற்றையே அவாவி, அவற்றுக்குள்ளேயே வீழ்ந்து தாண்டமுடியாமல் போகிற அவலம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்ற விழிப் புணர்வு தேவைப்படுகிறது; ஏனென்றால், பெண்ணியல் எழுத்துக்கள் ஆண்களையும், தலித்திய எழுத்துக்கள் உயர்சாதிக்காரர்களை யும் எதிரியாக மட்டுமே நிறுத்திக் கொண்டு இயக்கம் பெற முனைகின்றன; அரசியல் தளத்தைத் தாண்டி, அதிகாரம் பற்றிய ஃபூக் கோவின் சிந்தனைகளையும் உள் வாங்கிச் செயல்பட்டால் ஆக்கபூர்வமான விளைவுகள் ஏற்பட வாய்ப்புண்டு; இல்லை யெனில் திரும் பத் திரும்பக் கூறுகிற ஒரு வட்டத்திற்குள்ளேய இவைகள் சிக்கிக் கெள்ளும். ஃபூக்கோ, "சமூகத்தின் அடிப்படையான நெசவில் அதி காரம் கலந்திருக்கிறது என்கிறார். ”எல்லா வற்றையும் அதிகாரம் அனைத்துக்
10

கொண்டிருக்கவில்லை, எல்லாவற்றிலிருந்து எல்லாத் திசைகளிலிருந்தும் புறப்படுகிறது" என்கிறார். அது நிறுவனம் அல்ல; அமைப்பு அல்ல; குறிப்பிட்ட சிலரிடம் மட்டும் இருக்கும் சக்தி அல்ல; ஒரு சிக்கலான சமூகச் செயல் பாட்டின் பெயரே அதிகாரம்- (எம்.எடி.எம்.மே. நூல்) இத்தகைய புரிதல் ஒடுக்கு முறைக்கு எதிரான கலகக்குரலை எழுப்புவர் களுக்கு அடிப்படையாக நின்று செயல் பட்டால் எழுத்தும் வாழ்வும் ஓர் உயர்ந்த தளத்திற்கு நகர்ந்து செல்ல வாய்ப்பு ஏற்படலாம்.
தமிழவனின் அமைப்பியல் திறனாய்வு அறிமுகமானதற்குப் பிறகு, அவரைச் சுற்றியே இயக்கம் கொண்டிருந்த தமிழ்த் திறனாய்வு, இன்று தமிழவனை மீறிப்புதிய போக்கிற்கு வழி ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய புதிய ஒரு போக்கினைப் பிரேம் எழுத்துக்கள் கொண்டி ருக்கின்றன; அமைப்பியல், பின் நவீனத்துவச் சிந்தனைகளாக அவைகள் இருந்தாலும், தமிழ்ச் சூழலுக்கு ஏற்ப அதற்குரிய தீவிரத் தோடு, எந்தவித சமரசமும் இன்றி அவைகள் வெளிப்படுகின்றன. பாலியல் - குடும்பம்அதிகாரம்-தலித்தியம் - பெண்ணியம் பற்றிப் பிரேம், சாரு நிவேதிதா ஆகியோர் வைத்துள்ள கருத்துக்கள் முழுமையான கலகக்குரலாக வெடிக்கின்றன. ஆண் - பெண் உறவு, ஓரினப்புணர்ச்சி, சுயபுணர்ச்சி ஆகிய மூன்றும் இயல் பானதுதான்; இதில் மேல், கீழ் என்ற பார்வைக்கு இடமில்லை என்றும் குடும்பம் என்ற பாலியல் ஒடுக்குமுறை நிறுவனம் சிதை யாமல் எதையும் அசைக்க முடியாது என்றும் பிரேம் வைக்கிற சிந்தனைகள் பலரைப் பயங் கொள்ள வைக்கின்றன. "ஞானிகளின் கேள்விகளுக்குப்பைத்தியக்காரிகளின் பதில்" என்ற கட்டுரை மூலம் "எல்லாவற்றையும் சிதைப்பதொன்றே செய்யத் தக்கது" என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது; இதையும் தீர்மானமான் குரலில் ஒலிக்காமல், இதுவும் குழப்பமாகத்தான் இருக்கிறது என்று முன்

Page 14
வைக்கும் போது, வாழ்வின் இருள் அடர்த் தியை நாம் உணர முடிகிறது; "மையம்" அமைந்துவிடாமல், எப்பொழுதும் சிதைக்கிற வேலையிலேயே ஈடுபடவேண்டும்; அப் பொழுது தான் கலைஞன் கலைஞனாக வாழ முடியும், திறனாய்வாளன் திறனாய்வாளனாக வெளிப் பட முடியும் - இத்தகைய கலகச் செயல்பாடு சாத்தியப்படாத போது, அழகியல், கலை, இலக்கியம் ஆகியவை கூடத் தேவை யில்லை என்று எழுதும் போது, "உண்மையின் பக்கம் நெருங்கிவிட்டோமோ" என்று உணர முடிகிறது; இவ்வாறு ஒரு நூற்றாண்டில் தமிழ்த்திறனாய்வு பலவாறு வளர்ச்சி அடைந்து
பிற்குறிப்பு:
ஒரு நூற்றாண்டின் ஆற்றல் மிகு ே
கட்டுரையின் நோக்கம் ஆதலால், திறனா கவனம் கொள்ளவில்லை.

ஒரு கலகக்குரலாக உச்சநிலை அடைந் துள்ளது. இந்தக் குரல் கல்வி நிறுவனங் களிலும் எதிரொலிக்கும் போது, நல்ல விளைவு களை எதிர்பார்க்கலாம் இந்தக் கட்டுரையைப் புதுமைப்பித்தனின் ஒரு கூற்றோடு முடிக் கலாம்
" பொதுவான என்னுடைய கதைகள் உலகத்துக்கு உபதேசம் செய்து உய்விக்க ஏற்பாடு செய்யும் ஸ்தாபனம் அல்ல ; பிற்கால நல்வாழ்வுக்கு செளக்கியம் பண்ணி வைக்கும் இன்ஷாரன்ஸ் ஏற்பாடும் அல்ல. "
பாக்குகளை மட்டும் சுட்டிக்காட்டுவது ய்வாளர்களின் பெயர்களைச் சுட்டுவதில்

Page 15
கலை இலக்கிய விம உருவவாதத்திலிருந்து பின்
சோ.கிரு
1. அறிமுகம்.
உருவவாதம்முன்னர் எப்பொழுதுதே. தோன்றிய கலை; இலக்கியக் கொள்கையல்ல. இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் அமெரிக் காவிலும் ரஷ்யாவிலும் தனித் தனியாகத் தோன்றி உருப்பெற்றதொரு கலை இலக்கியக் கொள்கையே உருவவாதமாகும். அமெரிக்கா வில் புதிய விமரிசனம் என்ற பெயரிலும் ரஷ்யா வில் கலை - இலக்கியங்களின் குறியியல் என்ற பெயரிலும் உருவவாதம் வளர்ச்சி யடைந்து வந்தது. கலை இலக்கியங்களிற் குரிய நியமப்பண்புகளை ஆதாரமாகக் கொண்டு அவற்றை மதிப்பிடுவதே விமரிசன மாகுமென இவ்விரு சிந்தனர் கூடத்தினரும் கருதுகின்றனர். இலக்கியத் தில் என்ன சொல்லப் படுகிற தென்பது முக்கியமல்ல: எப்படிச் சொல்லப்படுகிறது. எத்தகைய சொற் கள் பயன்படுத்தப் பட்டுள்ளனவென்பதே உருவவாதிகளுக்கு முக்கியமானது. இவர் களுடைய அபிப்பிராயப்படி கலை இலக்கியங் கள் ஒவ்வொன்றும் தமக்கேயுரிய 'சிறப்பியல் பான உருவத்தால் நுகர்வோனிடத்து அழகியல் உணர்வைத் தோற் றுவிக்கவல்லனவாயுள்ளன. இதன்படி இலக்கிய உள்ளடக்கம் பற்றிய உரையாடல் ஒரு போதும் இலக்கியம் பற்றிய 9-60) JUTL6) Gb இருக்க (plg. LUFT ġi). DstOT85, அவ்வுரையாடல் அவ்விலக்கியம் வருணிக்கும் உலகு பற்றிய உரையாடலாகவே இருக்கு மென்றும், அது இலக்கியத்தின் வரையறை களுக்கப்பாற்பட்டதென்றும் உருவவாதிகள் வாதிடுகின்றனர். இலக்கியத்தோடு தொடர் புறா விடயங்களை இலக்கியத்தோடு தொடர்பு படுத்துவதன் மூலம் இலக்கிய உரையாடல்கள்
12
4wr

ரிசனக் கொள்கைகள்
எனமைப்பியல் வாதம் வரை
ஷ்ணராஜா
திசை திருப்பப்படுகின்றன. எவ்வாறு ஒவியத் தின் சிறப்பு அதிலிடம் பெற்றுள்ள ரேகை களிலும், வர்ணத்திலும், வடிவத்திலும், தங்கி யுள்ளதோ அவ்வாறே ஒரு இலக்கியத்தின் சிறப்பு அது எதனைச் சொல்லுகிறதென்ப தாலல்ல எப்படிச் சொல்லு கிறதென்பதிலேயே தங்கியுள்ள தென்பது உருவவாதிகளின் நிலைப்பாடாகும்.
கலை-இலக்கியங்களில் உருவத்திற்கு முதன்மையளிக்கும் இச்சிந்தனைப் போக்கு இருபதாம் நூற்றாண்டிற்கே சிறப்பாக உரியதாயினும், இதன் ஊற்றுக்களை அரிஸ்ரோட்டலின் கவிதையியலில் காணலாம். கதையை அதன் ஆக்கப் பின்னலிலிருந்து வேறுபடுத்திய அரிஸ்ரோட்டில் ஆக்கப் பின்னலென்பது பல்வேறு தனிப்பட்ட சம்பவங்களை ஒன்றாக ஒழுங்குபடுத்தியமைத் தல் எனக்குறிப்பிட்டார். அரிஸ் ரோட்லின் இக்கருத்து, இருபதாம் நூற்றாண்டின் உருவ வாதிகளின் அக் கறைக்கு உள்ளானது. ஒரு படைப்பின் இலக்கியத்தகுதி அப்படைப்பின் ஆக்கப்பின்னல் அமைப்பிலிருந்தே பெற்றுக் கொள்ளப்படுவதாக இவர்கள் வாதிட்டனர். நாவல்களிலும், சிறுகதைகளிலும், என் நாட கங்களிலும் கூட நடைபெறுவதாக கூறப்படு வன, எமது நாளாந்த நடைமுறை வாழ்க்கை யில் இடம்பெறுவனவேயென ஏற்றுக் கொண்ட உருவவாதிகள் ஏலவே பரிச்சயமான இச்சம் பவங்களை ஒரு படைப்பினுாடாக கலைஞர்கள் நுகருவதில் ஆர்வம் கொள்வதற்கான காரணம் அப்படைப்பின் ஆக்கப் பின்னல் முறையாகுமேயெனக் கூறுகிறார்கள். பரிச்சய மான விடயங்களை பரிச்சயமற்ற முறைகளில்

Page 16
கூறுவதாலேயே அவற்றை நுகரும் ஆர்வம் கலைஞருக்கு ஏற்படுகிறது. உள்ளடக்கம் அக் கறைக்கு உரியதல்லாததாகப் போய்விடுகிறது. கலைத்துவத்தை அனுபவிக்கும் வழிமுறையே கலையென்பதால் அங்கு உள்ளடக்கம் முதன்மை பெறுவதில்லையென ரஷ்ய உருவ வாதச் சிந்தனாகூடத்தைச் சாந்த விக்டர் ssoGehff Gaum süssvé (Victor Shklovsky) குறிப்பிடுவது மனங்கொள்ளத்தக்கது.
2. புதிய விமரிசனம்.
1920களில் இங்கிலாந்தில் தோன்றி அமெரிக்காவில் பரவிய புதிய விமரிசனம் என்ற கலை இலக்கியக் கொள்கையும் ஒரு உருவவாத அணுகுமுறையாகும். ரி.எஸ். gsölu' (T.S.Eliot) 9.6).f3 g (Tigh) (I.A. Richards) இவ்வியக்கத்தின் முன்னோடி களாவர். 1940களில் பிளக்மூர் (R.P.Blackmur), புரூக் (Brook) ரெனே வெல்லக் (Rene Welek)' 6Gbesmrš (Wimsatt), 66666ño (LeaVis) ஆகியோர் இவ்வியக்கத்தின் முக்கியஸ் தர்களாக விளங்கினர்.
புதிய விமரிசனக் கொள்கையினரின் உருவவாத விமரிசன அணுகுமுறை பின்வரு மாறு தொகுத்துக் கூறப்படுகிறது.*
(அ) கலை-இலக்கியங்களின் தோற்றுவாய், அவற்றின் சமூக-அரசியற் பின்னணி, சமூகப்பயன் என்பவற்றைத் தொடர் புறுத்தாது, கலை, இலக்கியத் தன்மை களை முதன்மைப்படுத்தும் விதத்தில் விமரிசனம் அமைதல் வேண்டும்.
(ஆ) ஒரு இலக்கியப் பிரதியின் ஆசிரி யனையோ அன்றி வாசகரது துலங் கலையோ மனத்திற் கொள்ளாது, பிரதி யின் அமைப்பையே முன்னிலைப்படுத்தி விமரிசனம் அமைதல் வேண்டும்.

(இ) உருவம் - உள்ளடக்கம் எனப் பிரித்துப் பார்க்கும் இருமைவாத நிலை நிற்காது ஒரு கலை இலக்கியப் பிரதியை முழுமை யான தொரு அலகாக அணுகுதல் வேண்டும். அதாவது, எழுத்தையும் அதன் அர்த்தத்தையும் தனித்தனியாய் பிரித்துப்பார்க்காது, அவை அனைத்தை யும் ஒரு முழுமையான கலை இலக்கியப் பிரதியின் கூறுகளாக இணைத்துப் பார்த்தல் வேண்டும்.
(*) சொற்களின் நுட்பவேறுபாடு பற்றிய விழிப்புணர்வுடன் பிரதியின் முழுமை யையும், அர்த்த வேறுபாடுகளையும் மனதிற்கொண்டு கவனமாக வாசிப்பில் (Close reading) FFGuLG616tt (Sub.
(உ) சமயம்,ஒழுக்கம் ஆகியவற்றின் தொடர் பின்றி இலக்கியம் அணுகப்படல் வேண் டும்.
இலக்கியத்தை இலக்கியமல்லா அளவு கோல்களைக் கொண்டு விமர்சித்தலாகா தென்ற நிலைப்பாடே புதிய விமரிசன வாதி களின் உருவவாத அணுகுமுறைக்கு காரண மெனலாம். உருவவாத பொருள் கொள்ளியல் (Formalist hermeneutics) (up60sousa)6OLnfig புதிய விமரிசனப் பார்வைக்கு கவனமான வாசிப்பு இன்றியமையாததே.
உளவியல் வரலாறு, சமூகவியல் போன்ற அணுகுமுறைகளினூடாக கலைஇலக்கியங்களின் ஊற்று, பின்னணி என்பன பற்றி அவை எத்துணை சுவையாயிருப்பினுங் கூட, விமரிசனம் அக்கறை கொள்ளத் தேவை யில்லையென்றும், அத்தகைய அணுகுமுறை யினால் விளையும் பயன் எதுவுமில்லை யென்றும் புதிய விமரிசனக் கொள்கையினர் வாதிடுகின்றனர்.

Page 17
அதுபோலவே வாசகர்களின்தனிப்பட்ட அனுபவங்களும் விமரிசனத்திற்கு முக்கிய மானதல்லவென்பதும் இவர்களது நிலைப்பாடு. இது தொடர்பாக விம்சாத்தும் பியேர்ட்ஸ்லியும் (Beardsley) இணைந்தெழுதிய இரு கட்டுரை கள் குறிப்பிடத் தக்கவை. நோக்கற் போலி (The Intentional Fallacy) g Goričg) Gun SS) (The Affective Fallacy 1949) ஆகிய இவ்விரு கட்டுரைகளும் படைப்புக் களை உற்பத்தி செய்த எழுத்தாளர், நுகர் வோனான வாசகன் என்ற இரு பகுதியினரதும் தொடர்பின்றி இலக்கியத்தை ஒரு செய்பண்ட மாக ஏற்றுக் கொண்டு. அதன் இலக்கிய இயல்பை வெளிக்கொணர முயலுவதே புதிய விமரிசனக் கொள்கையினரின் அணுகுமுறை ஆகுமெனக் கூறுகின்றது. எவ்வாறு βς (5 மோட்டார் வண்டியின் உறுப்புக்களனைத்தும் நேர்த்தியாக ஒத்திசைந்து இயங்குகின்றனவா வெனப் பார்த்து மதிப்பிடுவார்களோ, அவ் வாறே ஒரு இலக்கியப் பிரதியில் உள்ளடக்கிய கூறுகள் அனைத்தும் ஒத்திசைவு உடையன வாகக் காணப்படுகின்றனவாவென மதிப்பிடு வதே விமர்சகனின் கடமையாகும்.
கலை-இலக்கியப் பிரதி சுயாதீன இருப் பைக் கொண்டுள்ளது என ஏற்றுக் கொண்டு அப்பிரதியை அமைப்புரீதியாக மதிப்பீடுசெய் தல் வேண்டும். பிரதியின் கருத்தமைவு, விளக்கம் என்பன இசைவிணக் கத்துடன் கூடிய சமநிலையைப் பேணும் வகையில் எவ் வாறு முழுமை பெற்று விளங்குகிறதென்பதை இங்கு அமைப்பு என்ற பதம் சுட்டும் . இதன் மூலம் மொழியியல், குறியியல், அணியியல், மெய்யியல், உளவியல் கூறுகள் எவ்வாறு ஒரு பிரதியில் தன்னியைபுடைய முழுமையாக விளங்குகிற தென்பதை எடுத்துக் காட்டக் கூடியதாய் இருக்கும். ஒரு பிரதியின் இசை விணக்கமுடைய சமநிலை எவ்வாறு அமைப்பு ரீதியாக பேணப்படுகிறதென்பதை வெளிக் கொண்டு வரும் வகையில் வாசிப்பு முறை
14

அமைதல் வேண்டுமென இவர்கள் வாதிடு கின்றனர்.
“கலை கலைக்காகவே” என்ற காண் டின் (Kant) அழகியற் கொள்கையை ஏற்றுக் கொண்ட புதிய விமரிசனக் கொள்கையினர் ஒரு புறம் ஒழுக்கவியல், சமயம், விஞ்ஞானம் உளவியல், வரலாறு என்பவற்றிலிருந்து கலை - இலக்கியங்களைத் தனிமைப்படுத்தி ஆராய வேண்டுமென்ற நிலைப்பாடுடையவர்களாக வும். மறுபுறம் கலை - இலக்கியங்கள் யதார்த் தத்தின் நிழலுரு வாகவும், போலச் செய்தலாக வும், அனுபவத்தை ஆதாரமாகக் கொண்டிருப்ப தாகவும் வாதிடுகின்றனர். எனவே பிரதியை கவனமாக வாசிப்பிற்குட்படுத்த வேண்டு மென்று கூறுவதுடன் இலட்சிய வாசகனின் வாசிப்பு முறையே கவனமான வாசிப்பு எனக் கருதுகின்றனர். கவனமான வாசிப்பு பிரதி யின் அழகியற் குணாதிசயங்களை வெளிக் கொண்டு வருவதாக இருக்கும்.
உருவகமே கவிதை என்றும், கவிதை உருவகமே என்றும் வாதிடுகின்ற புதிய விமரி சனக் கொள்கையினர் கவிதை சொல்லா டல்களின் அரசி என்று கூறுவதுடன், கலை இலக்கியங்களின் அமைப்பியல்பான ஆய் விற்கு விமர்சகர்கள் பின்வருமாறு செயற்பட வேண்டுமென்று அறிவுறுத்தினர். 3
1. விமரிசனத்திற்கான பிரதியைத் தெரிவு
செய்க.
2. பிறப்பியல்பான விமரிசன அணுகு
முறையைக் கைவிடுக.
3. இரசனை முறை ஆய்வைத் தவிர்க்க.
4. வரலாற்றுச் சார்பில்லாத, சுய்ாதீன
இருப்புடையதாக பிரதியைக் கருதுக.

Page 18
10.
1.
2.
13.
14.
15.
16.
தெளிவற்றதும் சிக்கலானதும் வலு வான தன்னொருமை கொண்டதே கலை இலக்கியப் பிரதியெனக் கருதுக.
பன்முகத்தான வாசிப்பைச் செய்க.
முரண்பாடுகள் நிறைந்த நாடகமாக பிரதியைக் கருதுக.
பிரதியில் தொடர்ச்சியான கவனத்தைச்
செலுத்தி கருத்துத் தொடர்புகளை
வெளிக் கொணருக.
பிரதி உருவக இயல்புடையதென்றும்,
இதனால் இலக்கிய மொழி அதீத ஆற்ற லுடையதென்றும் கொள்க.
பிரதியின் அர்த்தத்தை பிரித்துப்பார்க் காது முழுமையாக நோக்குக.
பிரதியின் கூறுகள் அமைப்பியலான இசைவிணக்கமுடையவை என ஏற்றுக் கொண்டு அதனை பிரதியிற் தேடுக?
முரண்பாடுகளுக்குக் குறைந்த முக்கி (பத்துவம் கொடுக்க.
ஒருமைப்பாட்டைப் பாதிக்கும் விடயங் களைக் கருத்திற் கொள்க.
பிரதியின் அறிக்கையிலான, அனுபவ வியலான பரிமாணங்களைக் கவனத் திற் கொள்க.
பிரதியின் அமைப்புக் கூறுகளில் ஒன்றே அர்த்தம் எனக்கருதுக.
இலட்சிய வாசகனாக சரியான வாசிப்
பிலிடுபடுக.
1970களில் அமைப்பியல் வாதம, கடட
விழ்ப்பு வாதம் எனபன கலை - இலக்கிய விமரிசன உலகில் பிரவேசித்ததைக் தொடர்ந்து புதிய விமரிசனக் கொள்கை
யினரின் உருவவாத விமரிசன முறை தன் செல்வாக்கை இழந்தது.

3. கலை-இலக்கியங்கள் பற்றிய
குறியியல் விமரிசன முறை.
முதலாம் உலக யுத்தத்தின் பின்னர் இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் எவ்வாறு புதிய விமரிசனம் என்ற உருவவாத விமரிசனக் கொள்கை எழுச்சி பெற்றதோ அவ்வாறே கிழக்கைரோப்பிய நாடுகளில் குறிப்பாக முதலில் ரஷ்யாவிலும், பின்னர் செக்கோஸ்லா வாக்கியாவிலும் பிறிதொரு உருவவாத விமரி சன முறை வளர்ச்சி பெற்றது. கலை-இலக்கி யங்களை சிறப்பியல்பான குறியியலாக இனங் கண்டு கொண்ட இவ்விமரிசன முறையை கிழக்கைரோப்பிய உருவவாதம் என அழைக் கலாம். ரஷ்ய கலை - இலக்கிய உருவவாத விமரிசனம் மாஸ்கோ மொழியியல் வட்டம், பீட்டஸ் பேர்க்கவிதை மொழி கல்விச் சங்கம் (Moscow Linguistic Circle & Petersburg Society for the Study of Poetic Langu-age) STsirp 9g மையங்களை ஆதாரமாகக் கொண்டு வளர்ச்சி அடைந்தது. றோமன் யகோப்சன் (Roman Jakobson) போறிஸ் தமஷேவ்ஸ்கி (Boris Tomashevasky) ஆகியோர் மாஸ்கோ மையத்திலும், விக்டர் ஸ்கோலோவ்ஸ்கி Gurgjisio Frë,56ërGuth (Boris Eichenbaum) ஆகியோர் பீட்டஸ்பேர்க் மையத்திலும் முதன்மை பெற்ற ஆய்வாளர் களாக விளங் கினர். றோமன் யக்கோப்சன் 1920 இல் பிராக் (Prague) நகருக்குச் சென்றதைத் தொடர்ந்து மாஸ்கோ மையம் கலைந்தது. தொடர்ந்து யக்கோப்சன் இருபதாண்டுகள் பிராக் சிந்தனா கூடத்துடன் சேர்ந்தியங்கினார். ரஷ்யா உருவவாத விமரிசன அணுகு முறையின் தொடர்ச்சியான வளர்ச்சி பிராக் சிந்தனா கூடத்தில் முக்கிய இடத்தைப் பெற்றது. இச் சிந்தனா கூடத்தின் முக்கியஸ் தர்களான றோமன் யக்கோப்சன், முகரோவ்ஸ்கி (Mukarovsky) g(5(EUlsiu (351Ti (Trubet skoy), ரெனே வெல்லாக் ஆகியோர்
5

Page 19
இலக்கியக் கொள்கையாளர்களாகவும், விமர்சகர்களாகவும் விளங்கினர். பீட்டர்ஸ் பேர்க்மையம் 1930ஆம் ஆண்டள வில் செயலிழந்தது. பிராக் சிந்தனா கூடம் இரண்டாம் உலக யுத்தகாலத்தில் கலைந்தது. றோமன் யக்கோப்சன், ரெனே வெல்லாக் ஆகியோர் அமெரிக்காவில் குடியேறினர்.
ஆரம்பகால ரஷ்ய கலை - இலக்கியக் கொள்கையாளர்களும் விமர்சகர்களும் இலக் கியத்தை ஒரு விஞ்ஞானமாகக் கருதி அதற் குரிய விஞ்ஞான முறையியலொன்றை ஸ்தா பிக்க முயன்றனர். இம்முயற்சியே காலப் போக்கில் இலக்கிய அமைப்பியல் வாதமாக முதலில் பிராக் சிந்தனாகூடத்தினராலும், பின்னர் பிரெஞ்சுகலை - இலக்கியக் கொள் கையினராலும் வளர்த்தெடுக்கப்பட்டது. குறிப் Lumta35 GOT 6u6óTŮ umriġ (Roland Barthes) தினால் வளர்த்தெடுக்கப்பட்ட பிரேஞ்சு இலக் கிய அமைப்பியல்வாத அணுகுமுறைக்கு பிராக் சிந்தனா கூடத்தினரின் குறியியலாய்வுகள் முன்னோடியாக அமைந்தன.
ரஷ்ய உருவவாதிகளில் ஒருவரான போரிஸ் ஈக்கன் பேம், கலை இலக்கியங்களின் உருவம் பற்றி - குறிப்பாக கவிதையின் உருவம் பற்றி, செய்த ஆய்வுகள் இங்கு குறிப் பிடத்தக்கவை. கவிதை சாதாரண மொழியிலே எழுதப்பட்டாலும் கவிதைமொழி சாதாரண மொழி வழக்கிலிருந்து தன் தொழிற்படு திறனால் வேறுபட்டிருக்கிறது. கவிதைமொழி பற்றிப் பேசும் பொழுதெல்லாம் கவிதை பற்றி யும், கூடவே கவிதையியல்பு பற்றியும் பேச வேண்டியேற்படுகிறது. உருவம் பற்றிய உரை யாடல்களிலிருந்து இலக்கிய உத்திகள் பற்றி யும், அவற்றின் இலக்கியப் பணிபற்றியும், கவிதை ஒத்திசைவு என்பதிலிருந்து இலக் கியச் சொல்லாடலின் வடிவம் பற்றியும், இலக் கியத்தின் பொருள் என்பதிலிருந்து அதன் உட்கோள்வடிவம்" பற்றியும், இலக்கிய உத்தி
4

களின் பயன்பாடு வேறுபாடுகளால் இலக்கிய வடிவங்களின் வளர்ச்சி பற்றியும், பேசவேண்டி யேற்படுகிறது எனக்கூறுகிற ஈக்கன்பேம் இத்தகைய கலை - இலக்கிய ஆய்வு களிலிருந்து விமரிசனத் திற்கான கட்டளைக் கல்லொன்றை உருவாக்க முயன்றார். *
போறிஸ் ஈக்கன் பேமின் அளவுகோல் கள் இன்று எமக்கு ஏற்புடையதல்லவெனினும், முதன் முதலில் கலை இலக்கியங்கள் தொடர் பான ஊகத்தினடிப்படையில் அமைந்ததும் அனுபூதி நெறி நின்றதுமான அழகியலாய்வு களிற்கெதிரான பார்வையை இவர் முன்வைத் தமை குறிப்பிடத்தக்கது. சித்தாந்த வாதத்திற் Gle55yr607 (Anti-dogmatic) 960)|U6) glyů படையிலமைந்த ரஷ்ய உருவவாத விமரிசன அணுகுமுறை உலகளாவிய விமரிசன வரலாற்றில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் பெறுகிறது. விடயவாத அழகியலணுகு முறை யில் இருந்து விடுபட்டு தமிழிலக்கிய விமரிசன வரலாற்றிலிருந்து கூறுவதாயின் டி.கே.சி, பி. பூரீ பண்டிதமணி , கனக - செந்திநாதன் ஆகியோர்களுடைய இரசனை முறைத் திறனாய்வில் இருந்து விடுபட்டு இலக்கிய விமரிசனத்தை விஞ்ஞான பூர்வமாக மேற் கொள்ள வேண்டியதன் அவசியத்தை ரஷ்ய உருவவாத அணுகுமுறை எடுத்துக் காட்டியது. அதாவது இலக்கிய விமர்சனத்தை சமய, மெய்யியற் சார்வுகளிலிருந்து விடுவிக்க இச் சிந்தனைப் போக்கு பெரிதும் உதவிய தெனலாம்.
ரஷ்ய உருவவாதத்தின் தொடர்ச்சியான வளர்ச்சி கலை இலக்கியங்களின் குறியியல் ஆய்வாக பிராக் சிந்தனா கூடத்தினரால் வளர்த்தெடுக்கப்பட்டதென்றும் இதுவே பின்னாளில் அமைப்பியல்வாத அணுகு முறைக்கு ஆதார சுருதியாக அமைந்த தென்றும் ஏலவே குறிப்பிட்டோம்.
1920ம் ஆண்டிலிருந்து கலை, இலக்கி யங்களை ஒரு குறியமைப்பாக ஏற்றுக்

Page 20
கொண்டு இயங்கிய பிராக் சிந்தனா கூடத்தின் ஆய்வுகளிற்கு ரஷ்ய உருவவாதம், பேடினட் டி.சசூரின் (De Saussure) மொழியமைப்பு - பேச்சுமொழிப்பாகுபாடும், கால் பூலரின் (Kart Buhler)பேச்சு நடத்தை மொழியமைப்பு (Speech act-language Structure), 6T6ip வகையீடும் உந்துசக்தியாக அமைந்தன. பிராக் சிந்தனா கூடத்தைச் சார்ந்த மத்தாசியஸ் (mathesius) என்பார் மொழி யியல் ஆய்வில் அறிமுகப்படுத்திய தளப் Uni606) (Synchronic), o TGojuri6O6 (Diachronic) என்ற வகையீடும் கலை இலக் கியங்களில் அமைப்பியல்வாத விமரிசன அணுகுமுறைக்குப் பேருதவியாக அமைந்தன.
புற உலகின் பொருட்களைச் சுட்டுவ தற்கு சாதாரண மொழி பயன்படுகிறது. ஆனால் கவிதை மொழியோ குறிகள் பற்றிய தாக இருக்கிறது. கவிதையின் இக்குறி யியல்பே கவிதைக் குறியீட்டியல் பற்றிய ஆய் வாகவும், பொதுவாக கலை இலக்கியங்கள் பற்றிய ஆய்வுகள் கலைக் குறியியல் பற்றிய ஆய்வுகளாகவும் பிராக் சிந்தனா கூடத் தினரால் வளர்த்தெடுக்கப் பட்டது. கவிதைக் கோட்பாடு என்ற நூலின் முன்னுரையில் ஸ்கோலொவ்ஸ்கி பின் வருமாறு குறிப் பிடுகிறார். இலக்கியத்தின் உட்கோள்வடிவமே எமது அக்கறைக்குரியது. அது எப்பொருளால் ஆனது, எவ்வாறு ஆக்கப்பட்டது போன்ற பிரச்சனைகளே கலை, இலக்கிய விமரிசன ஆய்விற்கு முக்கிய மானது". புடவைத் தொழிலை உவமானமாக எடுத்துக் காட்டி எத்தகைய நூல் பயன்படுத்தப்பட்டுள்ளது, எவ்வாறு நெசவு செய்யப்பட்டுள்ளது என்பதே எமக்கு முக்கியமானதேயன்றி சந்தையில் இத்துணி விலை போகுமா என்பது எமது கரிசனத் திற்குட்பட்டதல்ல என்கிறார். ஆனால் முகரோவ்ஸ்கியோ இலக்கிய உத்திகளை கால இடத் தொடர்பின்றி ஆராய முடியாதெனக் கூறுவதன் மூலம் இலக்கி

யங்களை சார்பு நிலைக்குட்படுத்தியே ஆராய வேண்டுமென வாதிடுகிறார். எவ்வாறாயினும் இலக்கியத்தின் அமைப்பியல் ஆய்விற்கு முன் நிபந்தனையாக இலக்கியத்தின் குறியியல் பண்புகள் தெளிவுபடுத்தப்படல் வேண்டுமென் பதில் இவ்விருவரிடையேயும் ஒத்த கருத்தே நிலவியது. எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் இடையில் தொடர்பேற்படுத்தும் ஊடகமாகவே கலையாகிய குறியமைப்பு இருக்கிறது. பிராக் சிந்தனா கூடத்தினரின் இலக்கியம் பற்றிய இவ்விளக்கம் இலக்கியத்தை கலைஞனின் உள்ளத்தின் நேரடி வெளிப்பாடாக அல்லது இலக்கியம் புற உலகை நேரடியாகப் பிரதிபலிப் பதாக இருக்குமென்று கூறும் வாதங்களுக்கு எதிரான நிலைப்பாடுடையது.
விமரிசனத்தின் பொழுது கலை-இலக் கியங்களை நாம் ஒரு குறியமைப்பாகவே கருதி அணுகவேண்டும். சசூரின் குறியியற்கொள் கையில் கூட்டுப் பிரக்ஞை (Collective consciousness) என்றதொரு கருத்தாக்கம் பயன்படுத்தப்பட்டுள்ளது. சசூரின் அபிப்பி ராயப்படி எல்லாக் குறியமைப்புக்களிற்கும் இக்கூட்டுப்பிரக்ஞையே அடிப்படையாக இருக் கிறது. சசூரின் கூட்டுப்பிரக்ஞை என்ற இக்கருத்தாக்கத்தை கலை - இலக்கியங்கள் பற்றிய விமரிசன ஆய்வில் பயன்படுத்திய முக ரோவ்ஸ்கி, கலை - இலக்கியங்கள் செய் பண்டங்கள் (artefacts) என்றும், அவை வெளிப்படையான குறிப்பான்களாக (signifers)விளங்கின்றனவென்றும், இக்குறிப்பான் களிற்காக குறிப்பீடு (signified) சமூகத்தின் கூட்டுப்பிரக்ஞையின் காணப்படுகிறதென்றும் வாதிடுகிறார்.
எனவே விமரிசனமென்பது கலைஞ னால் /எழுத்தாளனால் உருவாக் கப்பட்ட கலை இலக்கியங்கள் என்ற குறிப்பான் பற்றிய ஆய்வுமல்ல, கலை இலக்கியங்கள் சமூகத் தோடு கொண்ட தொடர்புபற்றி ஆராய்வது
17

Page 21
மல்ல, மாறாக படைப்பாளியும் வாசகனுமாகிய கலை - இலக்கியச் சமூகத்தின் கூட்டுப் பிரக்ஞையில் பதியப்பட்டுள்ள குறிப்பீடு பற்றிய ஆய்வாகுமேயென இவர் எடுத்துக் காட்டு கிறார். ஒரு கலை-இலக்கியப்பிரதி அதாவது செய்பண்டம் கால ஓட்டத்தில் எத்தகைய மாற்றத்திற்கும் உட்படுவதில்லை, ஆனால் அப்பிரதியை விமர்சிப்பதற்கும் ஆராய்வதற்கு மான நியமங்களும் விதிகளும் அதாவது இலக்கணம், அழகியல், ஒழுக்கவியல் சார் கருத்துக்கள் மாறிக் கொண்டே வரும். எனவே விமரிசனமென்பது கலை - இலக்கியச் சமூகத்தின் கூட்டுப் பிரக்ஞையில் மாறிக் கொண்டே வருகிற குறிப்பீடு பற்றிய அமைப் பியலாய்வாகவே இருக்க வேண்டு மென்பது முகரோவ்ஸ்கியின் நிலைப்பாடாகும்.
குறிக்கும், குறிசுட்டும் புற உலகின் விடயங்களிற்கும் இடையிலான தொடர்புகள் பிராக் சிந்தனா கூடத்தின் ஆய்வுகளில் அதி முக்கியத்துவம் பெற்றதொன்றாகும். கலைஇலக்கியங்களின் அழகியற் செயற் பாடுகள் பற்றிஆராய்ந்த முகரோவ்ஸ்கி மொழியமைப் பில் இடம்பெறும் பேச்சு நடத்தையின் (Speech act ) இயல்பு பற்றி கால்பூலர் செய்த ஆய்வு களை ஆதாரமாகக் கொண்டு தன் கொள் கையை விருத்தி செய்தார். கால் பூலர் 1. பேசப்படும் விடயம், 2. பேசுபவன், 3. கேட் போன், என்ற வகையீட்டில் மனிதனின் பேச்சு நடத்தையை ஆராய்ந்தார். இவரது அபிப் பிராயப்படி பேச்சு நடத்தையில் எம்மால் பேசப் படும் மொழியானது பின்வரும் மூன்று பிரதான பணிகளைச் செய்கிறது."
1. பேசப்படும் விடயம் தொடர்பான சுட்டுரைக்கும் பணி (Representational Function).
2. பேசுவோனின் வெளிப்பாட்டுப் பணி
(Expressive Function).
18

3. கேட்போனுடைய கருத்துக் குறிப்புப் u60 of (Cognitive Function).
பூலரின் மேற்குறித்த மொழியின் பணி கள் (தொழிற்பாடுகளும்) சாதாரண தொடர் பாடலிற்கு இன்றியமையாதவையென ஏற்றுக் கொண்ட முகரோவ்ஸ்கி, கலை - இலக்கிய மொழியைப் பொறுத்தவரை அவற்றிற்குப் பிறிதொரு பணியும் இருப்பதாக எடுத்துக் காட்டினார். அதாவது அழகியற் பணி என்பதே அந்த நான்காவது தொழிற்பாடாகும். கலைஇலக்கியங்களைக் குறியாக நாம் ஏற்றுக் கொண்டால், அக்குறியின் மையப் புள்ளியாக அழகியற்பணி விளங்குகிறதென இவர் வாதிட் டார். இலக்கியத்தில் மொழியின் அழகியற் பணி முதன்மை பெற, மொழியின் ஏனைய மூன்று பணிகளும் அழகியற்பணிக்கு அனு சரணையாக விளங்கு கிறதென்பது முகரோவ்ஸ்கியின் நிலைப் பாடாகும். அழகியற் பணி காரணமாகவே இலக்கிய மொழியானது மொழி கடந்தும் மொழிக் கப் பாலாயும், சில விடயங்கிளை உணர்த்தி நிற்கிறது.
றோமன் யகோப்சன் இலக்கியத் தொடர்பாடல் பற்றி - பொதுவாக தொடர் பாடல் பற்றி, பிறிதொரு வகையில் விளக்கு கிறார். இவர் பூலரின் காட்டுருவையும் (MOdel) சசூரின் பேச்சு (Parole) மொழியமைப்பு (Langue) என்பதையும் இணைத்து தனது கலை-இலக்கியத் தொடர்பாடல் காட்டுருவை முன்மொழிந்தார். இக் கட்டுரையில் பின்வரும் ஆறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. "
பேசுவோன்/எழுத்தாளன் (AddreSSer). உணர்ச்சித்துாண்டற்பணி (Emotive function)
2. கேட்போன்/வாசகன் (Addressee). 85(55gjö, (5.5uliusof (Cognitive function)

Page 22
3. சந்தர்ப்பம் (Context) சுட்டும் பணி
(Referential function)
4. சங்கேதம்(Code). மொழிக்கப் பாலான/மொழிகடந்த (Metalingual function
5. தொடர்பு(contact). தொடர்புறுத்தற்
uGoof (phatic function,
6. செய்தி (message) . அழகியற் பணி
(poetic function)
பூலருடைய தொடர்பாடல் வகையீட்டின் சுட்டுரைத்தல், வெளிப்பாடு, கருத்துக் குறிப்பு ஆகிய மூன்று மொழியின் பணிகளும் யகோப் சனின் க்ாட்டுருவில் வருகிற சுட்டும்பணி, உணர்ச்சித் தூண்டற் பணி, கருத்துக் குறிப்புப் பணி என்ற மூன்றிற்கும் சமமானது. முகரோவ்ஸ்கியின் அழகியற்பணி யகோப் சனின் காட்டுருவில் வருகிற செய்திக்குரிய அழகியற் பணியுடன் ஒன்று படுகிறது. முகரோவ்ஸ்கியின் அபிப்பிராயப்படி கலை - இலக்கியங்களின் பிரதான செயற்பாடு அழகி யற்பணியை மையமாகக் கொண்டது. ஆனால் யகோப்சன் செய்திக்கே முக்கியத்துவம் கொடுக்கிறார். செய்தியின் அளிக்கை முறைமையில் அழகியலும் ஒரம்சமாகவே வருகிறது. யகோப்சனின் அபிப்பிராயப்படி அழகியற் பணியே இலக்கிய மொழியின் முழு நோக்கமுமல்ல. இலக் கியத்தில் மொழியின் அழகியற்பணி முதன்மை பெற ஏனைய ஐந்து பணிகளும் முதன்மை குன்றிய வகையில் செயற்படுகிறது.
பிராக் சிந்தனா கூடத்தினரின் குறியி யல் ஆய்வுகள் கலை - இலக்கியப் பிரதி யொன்றை குறியாக ஏற்றுக் கொண்டு அவற்றின் அமைப்பியலான ஆய்விற்கு வழி வகுத்ததுடன், பின்னாளில் அமைப்பியல்

வாதம் என்ற பிரேஞ்சு மூலத்தைக் கொண்ட கலை - இலக்கிய ஆய்வின் தோற்றத்திற்கும் வழியமைத்துக் கொடுத்தன.
4. அமைப்பியல்வாத அணுகுமுறை
சசூரின் மொழியியற் சிந்தனை, சிக் மன்ட் பிராய்டின் உளப்பகுப்பாய்வுக் கொள்கை. ரஷ்ய மற்றும் பிராக் சிந்தனா கூடத்தினரின் ஆய்வுகள் என்பவற்றிலிருந்து, வெளி ஸ்ரோ சஸ் என்ற பிரேஞ்சு மானிட வியலாளரால் விருத்தியாக்கப் பட்டதொன்றே அமைப்பியல் வாதமென்ற ஆய்வணுகு முறையாகும். 1960 களிலேயே கலை - இலக்கிய ஆய்வுத்துறை யில் பெரும் செல்வாக்கைப் பெற்றமைப்பியல் ஆய்வின் புகழ்பெற்ற விமர்சகர்களாக GuLITTGOTg56ör GSVsi (Jonathan Culler) (GOTLD6öIT யக்கோப் சன், ஜெரால்ட் பிறின்ஸ்(Gerald Prince), FITŮLDsör (Chartman) (GpIT606örů LITriệ5, QìgUITử Qg6ũTị) (Gerard Genette). கிறிமாஸ் (Greimas), தோடோறோவ் (Todorov), éfólsvg6num (Kristeva) போன்றவர்கள் கணிக்கப்படுகின்றனர்.
வரலாற்று ரீதியான காலப்பார்வை
என்ற அணுகுமுறைக்குப் பதிலாக தளப் பார்வை என்ற அணுகுமுறை மூலம் மானிட வியலிலும், கலை, இலக்கியங்களிலும் சில பொது அமைப்புக்கள் இருப்பதாக எடுத்துக் காட்டியமையே அமைப்பியல் வாதத்தின் முக் கிய பங்களிப்பாகும். கலை இலக்கியப் பிரதி களை அமைப்பியல்வாத அணுகுமுறையில் ஆராய்வதன் மூலம் இது வரை எதிர்பார்த் திராத அர்த்தங்களை அப்பிரதிகளிற் கண்டு கொள்ளலாமென யொதன் கலர் வாதிட்டமை இங்கு மனங்கொள்ளத்தக்கது. 10
மனித உறவுகள் பற்றிய ஆய்வுகளின டியாக மனித பண்பாட்டு வரலாற்றின் மர்மங்
களைத் தெளிவுபடுத்த முயன்ற லெவி ஸ்ரோ
19

Page 23
சஸ் பழங்குடிகளின் ஐதீகங்களை ஆராய்வதன் மூலம் அதனைக் கண்டுபிடிக் கலாமென்று கருதி, அவ்வழியிற் தன் கவனத்தைச் செலுத் தினார். இவ்வாய்விற்கு சசூரியினதும், சிக் மன்ட் பிராய்ட்டினதும் கண்டுபிடிப்புக்கள் பெரிதும் உதவின. மனிதமனத்தை நனவு நிலைமனம், நனவிலிநிலைமனம் எனப் பாகு படுத்திய சிக்மன் பிராய்ட் நனவு நிலைமனம் பற்றிய ஆய்வுகளிலிருந்து நனவிலிமனத்தின் இயல்பைக் கண்டறியலாமென்றதொரு உளவி யற் கொள்கையை ஸ்தாபித்தார். எவ்வாறு நனவுநிலை மனம் பற்றிய தரவுகளிலிருந்து நனவிலிமனத்தின் இயல்பை பிராய்ட் கண் டறிய முயன்றாரோ அவ்வாறு பழங்குடிகளின் ஐதீகங்கள் பற்றிய அமைப்பியலாய்விலிருந்து பண்பாட்டுக் கூறுகளி லொன்றான உறவு முறை (Kinship) பற்றிய உண்மைகளை ஸ்ரோசஸ் கண்டறிய முயன்றார். இதற்காக சசூர், யகோப்சன் ஆகியவர்களால் பயன்படுத் தப்பட்ட வகையீடுகள் ஸ்ரோ சஸினால் பயன் படுத்தப்பட்டன. எல்லாச் சொற்களிற்கும் ஒரு Sę6ôlůLJig. Loph(Sound Image) 95bGörfuLu கருத்தும் (Concept) இருப்பதாக சசூர் குறிப்பிட்டர்ர். ஒலிப்படிமம் குறிப்பான் எனவும், கருத்து அதன் குறிப்பீடு எனவும் அழைக் கப்பட்டது. ஐதீகங்களைக் குறிப்பான் என ஏற்றுக் கொண்டு அவற்றிற்குரிய குறிப் பீட்டைத் தேடும் முயற்சி ஸ்ரோசஸினால் மேற் கொள்ளப்பட்டது.
மொழியியலாளரான யகோப்சன் மொழி யிலுள்ள உயிரெழுத்து, மெய்யெழுத்து என்ற வகையீடு மனிதனின் எதிர்நிலையான ஈரிணைச் சிந்தனையின் பெறுபேறே என எடுத்துக் காட்டினார். மனித சிந்தனையின் அடிப்படையில் இந்நிலை காணப்படுவதாக இவர் குறிப்பிட்டார். உதாரணமாக பகல்இரவு, காலை-மாலை, பிறப்பு-இறப்பு, நன்மைதீமை, சரி-பிழை, முதலான எண்ணக்கருக்கள் ஈரிணைகளாகவே மனித சிந்தனையிற்
20

தோன்றுகின்றன. இவ்விருமைத் தன்மை மனித நடத்தைக் கோலங்களிலும் காணப் படுகிறது. ஐதீகங்களிலும் இவ்வாறு எதிர் நிலைகளான ஈரிணை அமைப்பு காணப்படு கிறதென ஸ்ரோசஸ் ஏற்றுக் கொண்டார்.
லெவி ஸ்ரோசஸினால் ஆராயப்பட்ட ஐதீகங்களில் தன் சகோதரி மீது காதல் கொண்ட ஒருவனைப் பற்றிய கதையும் ஒன்று. ஒருவன் தன் சகோதரி மீது காதல் கொண் டான். ஆனால் அச் சகோதரியோ தன் தமையனிடமிருந்து தப்புவதற்காக முகில் க்ளிடம் சரணடைந்து சந்திரனாக மாறினாள். சகோதரியைத் தேடிப்பிடிப்பதற்காக அவன் சூரியனாக மாறினான். தினமும் சூரியன் சந்திரனைக் கலைத்து கொண்டிருக்கிறது. மேலெழுந்தவாரியாகப் பார்க்கும் பொழுது இவ்வைதீகம் சூரிய சந்திரர்களது தோற் றத்தை விளக்குவதுபோலக் காணப்படுகிறது. ஆனால், இதற்கு ஒரு உள்ளார்ந்த அர்த்தம் இருப்பதாக ஸ்ரோசஸ் வாதிட்டார். மனித உறவு முறையில் சகோதரர்களிற்கிடையே தகாப்புணர்ச்சி விலக்குண்டு என்ற குறிப் பீட்டையே சூரியனாகவும் சந்திரனாகவும் மாறிய சகோதர - சகோதரிக் கதை சுட்டுகிற தென்ற முடிவிற்கு ஸ்ரோசஸ் வந்தார்.
வெவ்வேறு பண்பாடுகளில் வழக் கிலிருக்கும் ஐதீகங்களைப் பற்றி ஆராய்ந்த ஸ்ரோசஸ் அவற்றிடையே சாயலொற்றுமை காணப்படுவதையும், அவையனைத்தும் ஒரே விதமான அமைப்புடையதாக இருப்பதையும் அவதானித்தார். சசூர் எடுத்துக்காட்டிய மொழியமைப்பு பேச்சு வடிவம் என்ற வகையீடு, ஸ்ரோசஸின் அவதானிப்பிற்கு உதவியாய மைந்தது. மொழியமைப்பென்பது மாறா இயல்புடைய தொன்று. ஆனால் பேச்சு வடி வமோ மாறுபடும். எவ்வாறு மொழியின் பேச்சு வடிவம் மாறுபட்டாலும் மொழியமைப்பு மாறாத ஒன்றாக இருக்கிறதோ அதுபோல் ஐதீகங்கள் பண்பாட்டிற்குப் பண்பாடு வேறுபட்டாலும்

Page 24
அவையனைத்திற்கும் பொது வான தொரு அமைப்பு உண்டென்று ஸ்ரோசஸ் வாதிட்டார்.
கலை - இலக்கியங்களின் உருவவி பலான அமைப்பை ஆராய்வதில் ரஷ்ய சிந் தனா கூடத்தினரும் அக்கறை கொண்டி ருந்தனரென ஏலவே குறிப்பிட்டோம். இவர் களில் ஐதீகம் பற்றிய ஆய்வுகளில் முன்னோடி யாக விளடிமீர் uG.prtů (Vladimir Propp) விதந்து கூறப் படுகிறார். ஐதீகங்கள் பற்றிய ஆய்விலிருந்து ஸ்ரோசஸ் கண்டறிந்த மானிட வியலறிவும் புறோப் கண்டறிந்த ஐதீகங்களின் கலை - இலக்கிய அடிப்படைகள் பற்றிய அறிவும் கிறிமாஸ் , தொடோற்ோவ், ஜெராட் ஜெனற் போன்றவர்களால் அமைப்பியல்வாத கலை - இலக்கிய அணுகுமுறையாக விருத்தி செய்யப்பட்டது.
இரஷ்ய உருவவாத சிந்தனா கூடத்தின் முன்னோடியாக விளடிமிர் புறோப் வன தேவ தைகள் பற்றிய ஐதீகங்களை ஆராய்ந்த பொழுது, அவைனைத்தும் ஒரு பொது வடிவத் தினுள் பொருந்தி வருவதை அவதானித்தார். வாக்கியங்களிற்குரிய எழுவாய் - பயனிலை அமைப்பு போல் ஐதீகங்களிற்குரிய பொது அமைப்பொன்று இருப்பதாக புறோப் எடுத்துக் காட்டினார். எழுவாய் பயனிலை வாக்கிய அமைப்பிலிருந்து எவ்வாறு புதுப்புதுவாக்கியங் களை உருவாக்கலாமென்பதை பின்வரும் உதாரணத்தால் விளக்கலாம். அரசிளங் குமாரன் ஒரு மிருகத்தை ஈட்டியால் குத்திக் கொன்றான். இவ் வாக்கியத்தில் வருகிற அரசிளங்குமாரனுக்கு விக்கிர மாதித்தன் என்ற பெயரையும், ஈட்டி என்பதற்கு பதிலாக வாள் என்பதையும், மிருகம் என வருமிடத்தில் வேதாளம் என்ற சொல்லையும் பயன்படுத் தினால் வாக்கியத்தின் அமைப்பை மாற்றா மலே முற்றிலும் புதியதொரு வாக் கியத்தைப் பெறலாம். இவ்வாறு ஐதீகங் களிற்குரிய பொதுவடிவமொன்று இருப்பதாக புறோப்

எடுத்துக்காட்டினார். இவரது அட்டவணையில் பின்வரும் ஏழு கூறுகளும் முக்கியமானவை.
1. அருஞ்செயல், ஒன்றைச் செய்யுமாறு
கதாநாயகனுக்கு சவால் விடப்படும்.
2. அவனால் அச் செயல் சாதிக்கப்படும்.
3. அவன் போற்றப்படுவான்.
4. போலிக்கதாநாயகன் வில்லன்
வெளிப்படுவான்.
5. அவனுக்கு புதிய தோற்றம் தரப்படும்.
6. வில்லன் தண்டிக்கப்படுவான்.
7. கதாநாயகன் ஆட்சியதிகாரத்தைப்
பெற்றுத்திருமணம் புரிவான்.
வனதேவதைகள் பற்றிய ஆய்வி லிருந்து பெறப்பட்ட இவ்வட்டவணை காப்பியங் கள் உட்பட அனைத்துக் கதை வகைகளிற் குரிய பொதுவடிவமாக புறோப் பினால் எடுத் துக் காட்டப்பட்டாலும் சற்றுச் சிக்கலான கதையமைப்புகளிற்கு இதனைப் பயன்படுத்து வதிலுள்ள பிரச்சினையை அவர் உணர்ந்தார். இதனால் ஏழுவிதமான பாத் திரங்கள் வாயிலாக கதை நடைபெறுவதாகக் குறிப் பிட்டார். அவை முறையே
வில்லன்
1.
புரவலன்
உதவியாளன்
அரசியும் அவள் தகப்பனும்
முடித்துவைப்பவர்
கதாநாயகன்
போலிக்கதாநாயகன்

Page 25
ஈடிபஸ் ஐதீகத்தைப் பயன்படுத்தி தனது அனைத்துக் கதைவகைகளிற்குரிய பொது வடிவத்தை புறோப் பின்வருமாறு விளக்கு கிறார். ஸ்பிங்ஸ் என்ற வினோத மிருகம் விடுத்த புதிரை ஈடிபஸ் ஏற்கிறான். (1) ஈடிபஸ் சினால் அப்புதிர் விடுவிக்கப்படுகிறது. (2) இதனால் ஈடிபஸ் கதாநாயகன் அந்தஸ் தடைந்து போற்றப்படுகிறான். (3) பின்னிர் மணம் புரிந்து ஆட்சியிலமருகிறான். (7) ஈடிபஸ் தந்தையைக் கொன்று தாயை மணம் புரிந்ததால் போலிக் கதாநாயகனாகவும் வில்லனாகவும் தோற்றமளிக்கிறான் (4,5) ஈடிபஸ் உண்மையறிந்து தன்னைத்தானே தண்டித்துக் கொள்கிறான்.
ஈடிபஸ் கதையில் ஒருவரே பல பாத்திரங் களை ஏற்கவேண்டியிருக்கிறது. அரசியும் அவள் தந்தையும் என்பதற்குப் பதிலாக, அரசியும் அவள் கணவனும் (தாயும் - தந்தை யும் ) இடம் பெறுகின்றனர். ஈடிபஸ் கதாநாய கனாகவும், நாட்டைக் காப்பாற்றிய புரவலனா கவும், போலிக் கதாநாயகனாகவும், வில்லனா கவும் ஒன்றுக்கு மேற்பட்ட பாத்திரங்களில் இயங்குகின்றான்.
புறோப்பினது கொள்கை கிறிமாஸ் (1966) என்பவரால் திருத்தியமைக்கப் பட்டது. இவர் மூன்று எதிர் நிலைகளான ஈரிணை களினடிப்படையில் எல்லாக் கதை களுக்கு முரிய பொதுவாய்ப்பாட்டை அமைத் தார். புறோப்பினால் எடுத்துக் காட்டப் பட்ட ஏழு வகை பாத்திரச் செயற்பாடுகளும் இதனுள்ள டங்குகிறது.
1. 65ultiS - 6Suluh (subject-object)
2. வழங்குநர் - பெறுநர் (Sender
Receiver)
3. உதவியாளர் - எதிராளி(Helper
Opponent)
2
2

ஈடிபஸ்சின் கதையை கிறிமாசின் வாய்ப்
பாட்டின்படி பின்வருமாறு விளக்கலாம் :
1.
ஈடிபஸ் லொயோசைக் கொலை செய்தவனைத் தேடுகிறான். இங்கு அவனே விடயியும் விடயமுமாகிறான்.
அப்பலோ தெய்வம் ஈடிபசின் தீவினை பற்றி முன்மொழிகிறது. ஈடியசின் அரசவைக்கு வந்த குருடான சித்தன், ஜொக் காஸ்த், தூதுவன், இடையன் ஆகியோர் தெரிந்தோ தெரியாமலோ உண்மையை உறுதி செய்கின்றனர். செய்தியைத்தவறாக ஈடிபஸ் புரிந்து கொண்டதே இக்கதை.
தூதுவனும் இடையனும் தம்மையறியா மலே கொலையாளியாரென அறிய ஈடீபசுக்கு உதவி செய்கின்றனர். ஈடி பஸ் சரியான விளக்கத்தைப் பெறுவ தற்குத்தானே தடையாக இருக்கிறான்.
கிறிமாசைத்தொடர்ந்து கதை கூறலின்
அமைப்பு பற்றிய ஆய்வுகளில் தோடறோவின் முயற்சிகள் குறிப்பிடத்தக்கன. செய்வோன் அல்லது செயல் என்ற அடிப்படையில் சொல்லப் படும் கதைகளைப் பிரித்துப் பார்ப்பதன் மூலம் அவற்றின் அமைப்பியற் தொடர்புகளை அறிந்து கொள்ளலாமென இவர் எடுத்துக் காட்டுகிறார். ஈடிபஸ் பற்றிய ஐதீகம் தோடறோ
வின் முறைப்படி பின்வருமாறு அமைக்கப்படும்.
1 x ஒரு அரசன். 2. y என்பவன் X இன் தாய். 3. X என்பவர் X இன் தந்தை. 4. x,y யைத் திருமணம் செய்கிறான். 5.'x,Z யைக் கொலை செய்கிறான்.
இவ்வட்டவணையில் x, y, z என்பன
முறையே ஈடிபஸ், ஜொக்காஸ்த் , லொயோஸ்

Page 26
ஆகிய மூவரையும் சுட்டுகிறது. முதல் மூன்று வாக்கியங்களிலும் கதையின் மூன்று பாத் திரங்களும் (செயற்படுவோர்) வருகின்றனர். முதலாவதும் இறுதி இரு வாக்கியங் களும் மூன்று பயனிலைகளை (செயல்களை) அர சனாயிருத்தல், திருமணம் செய்தல், கொல்லு தல் , உள்ளடக் கியிருக்கிறது. பயனிலைகள் பெயரடை யாகவும் (உதாரண மாக அரசனா
தல்) வினைச் சொல்லாகவும் (மணத்தல், கொல்லுதல்) செயற்படும். இவ்வாறு கதை வடிவங்களை செயற்படுவோர் செயல் என்ற அடிப்படையில் சிறிய சிறிய வாக்கியங்களாக அட்டவணைப் படுத்தியதன் பின்னர் இவை அனைத்தையும் ஒரு தொடர் நிகழ்ச்சியாக இணைக்கலாம். ஒன்றன்பின் ஒன்றாக வரும் நிகழ்ச்சித் தொடர் முழுமையான கலைப்பிரதி யாக மாறுகிறது.
கலை - இலக்கியம் தொடர்பான அமைப்பியல் வாதச் சிந்தனையின் அடுத்த கட்ட வளர்ச்சி ஜெராட் ஜெனற்றின் ஆய்வு களிலிருந்து தொடங்குகிறது. கதை வேறு, அதன் ஆக்கப் பின்னல் வேறு என்ற ரஷ்ய உருவவியல்வாதிகளின் பாகுபாட்டை அடி யொற்றி ஜெனற் தனது கொள்கையை விருத்தி செய்தார். இதன்படி கதை (Story) கருத்தாடல் (Discourse) எடுத்துரைப்பு (Naration) என்ற மூன்று தளங்களை எல்லா இலக்கியங்களும் கொண்டிருக்குமென்று எடுத்துக் காட்டப்படுகிறது.
இதுவரை மேலே கூறப்பட்ட பிரெஞ்சு இலக்கியக் கோட்பாட்டாளர்கள் எவ்வாறு இலக்கியங்களை எடுத்துரைப்புக்களாக (Narration) வரைவிலக்கணப்படுத்தி அவற்றின் உருவாக்கம் தொடர்பான விளக்கத்தை தந் தனரோ அவ்வாறே , பிறின்ஸ் , சாட்மன் போன்ற அமெரிக்க இலக்கிய விமரிசகர்களும் இலக்கியங்களை எடுத்துரைப்புகளாக வரை விலக்கணப்படுத்தி அவற்றின் இயல்பு பற்றிய

விளக்கங்களைத் தந்தனர். மொழியிலக்கணம் போன்றதொரு பொது அடிப்படையைத் தேட முயன்ற இவர்களில் பிறின்ஸ் குறிப்பிடத் தக்கவர். நாவல்கள், சிறுகதைகள் ஆகிய வற்றின் கூறுகளாக ஏற்றுக் கொள்ளப்படும் கதாபாத்திரங்கள், கதாபாத்திரங்கள் செயற் படும் தளம், கதைத்திட்டம் மற்றும் வாசகனின் துலங்கல், இலக்கிய மொழி என்பவற்றை உள்ளடக்கிய முறையில் ஒரு கலைச்சூத்திரம் பிறின்ஸினால் உருவாக் கப்பட்டது. இச்சூத் திரத்தினடிப்படையில் எண்ணிறந்த நாவல் களையும் சிறுகதை களையும் உருவாக்க முடியுமென இவர் வாதிட்டார். எவ்வாறு மொழியிலக்கணம் தெரிந்த ஒருவரால் புதிய புதிய வாக்கியங்களை உருவாக்க முடியுமோ அவ்வாறே கதை கூறுபவர்களால் இச் சூத்திரத் தினடிப்படையில் புதிய பல கதைகளை உருவாக்க முடியுமென்பது இவரது நிலைப்பாடாகும்.
பிறின்ஸின் அபிப்பிராயப்படி கதை கூறல் அல்லது எடுத்துரைத்தலின் மிகச் சிறிய அலகு ஒரு சம்பவமாகும். இலக்கியப் பிரதி யொன்று ஒரு எடுத்துரைப்பாக இருப்பதற்கு குறைந்த பட்சம் இரு சம்பவங்களாவது இருத் தல் வேண்டும். மேலும் அவை ஒரு காலத் தொடரில் நிகழ்வதாகவும், ஒன்றிலிருந்து ஒன்றை வாசகர்கள் முன்னூகிக்க முடியாததா கவும் இருத்தல் வேண்டும். எடுத்துரைத் தலின் ஒவ்வொர் துணுக்கும் ஒரு உத்திரியை அடையலாம். இவ்வாறு எடுத் துரைத்தலின் உருவாக்கம் எவ்வாறு நிகழ்கிறதென அமைப் பியல் ரீதியாக விளக்கியதன் பின்னர்; சம்பவ வருணனை. சம்பவங்களை ஒரு தொடராக இணைத்தல் ஆகியவற்றின் விதி முறைகள் பற்றி பிறின்ஸ் விளக்கிச் செல்கிறார்.
எடுத்துரைப்புக்களிற்கு எவ்வாறு கூறு வோன்/எழுதுவோன் ஒருவன் இருப்பானோ அவ்வாறே அவற்றைக் கேட்பதற்கு / வாசிப்
23

Page 27
பதற்கு குறைந்த பட்சம் ஒரு வாசகனாவது இருத்தல் வேண்டும். வாசகனை, சாதாரண 6) Its 8, sit (Virtual reader) Quotijun GOT 6JTg 856ór (real reader) gaul'élus) irrets, siT (Ideal reader) என்ற மூன்று வகையாகப் பாகுபடுத் தும் இவர், கதாபத்திரங்கள் போல வாசகனும் ஒரு நாவலில் இணைந்திருப்பான் என வாதிடு வார். இவருடைய வாசிப்புத் தொடர் பாடலானது படைப்பாளி-எடுத்துரைஞன் - கேட்போன் -சாதாரண வாசகன் - மெய் பானவாசகன் -இலட்சிய வாசகன் என்ற தொடரில் நிகழ்கிறது.
கேட்போன்/ வாசகன் தொடர்பான பிறின்ஸின் கணிப்பீடுகள் விமரிசனத்திற்கு முக்கியமானவை. வாசிப்பில் குறைந்த பட்ச வாசிப்பு, கூடியபட்சவாசிப்பு என்றதொரு பாகுபாட்டை மேற்கொண்ட இவர், ஒரு இலக் கியப் பிரதியின் அகலக்குறிப்பைப் புரிந்து கொள்வதற்கு குறைந்த பட்ச வாசிப்பே போது மானதென்கிறார். ஒரு பிரதியுடன் தொடர் 460)Lu அனைத்து அம்சங்களையும், அர்த்தச் செறிவுகளையும் புரிந்து கொள்வதற்கு கூடிய பட்ச வாசிப்பு அவசியம். அத்துடன் கருத் துரைத்தலின் நிமித்தம் வாசிப்பதற்கும், தன்னளவிலான துலங் களிற்கான வாசிப் பிற்கும் இடையில் ஒரு வேறுபாடு இருப்பதாக பிறின்ஸ் குறிப்பிடுகிறார். கருத்துரைத்தலின் நிமித்தம் வாசிப்பிலிடுகின்றனர். வாசிப்பின் பொழுதே ஒரு பிரதியிலிருந்து தேவையான தகவல் களைத் தெரிந்தெடுத்து மீளொழுங்கு செய்து கொள்கிறார். ஆனால், தன்னள விலான துலங்கலின் நிமித்தம் ஒரு பிரதியை வாசிப்பவர் எதுவிதக் கட்டுப்பாடுகளுமில்லாது தனது கற்பனைகளையும் வாசிப்புடன் கூடவே இணைத்துக் கொள்வர். தனது சொந்தக் கற்பனைகளையும் பிரதியுடன் இணைத்து தொடர்பற்றவைகளையும் உள்வாங்குவதனால் பிரதியுடனான நேரடித் தொடர்பை வாசிப்பவர்

இழந்துவிடுகிறார். இத்தகைய வாசிப்பை நிராகரிக்கின்ற பிறின்ஸ், வாசிப்பென்பது ஒரு பிரதியை பல்வேறு சங்கேதங்களினடிப் படை யில் (Code) புரிந்து, ஒழுங்குபடுத்தி, விளங் கிக் கொள்வதாகுமெனக் கூறுகிறார். கலை, இலக்கியப் பிரதியில் காணப்படும் சங்கே தங்களையும், மரபுகளையும் விமரிசகன் அறிந்து கொள்வதற்கு மொழிப்புலமை, தருக் கம், மரபுகள் பற்றிய பரிச்சயம், பாரம்பரியக் குறியீடுகள் பற்றிய விளக்கம் , இலக்கிய வகைகள், பாத்திர இயல்புகள் என்பன பற்றிய அறிவு அவசியமானது.
இலக்கிய மரபுகளையும் சங்கேதங் களையும் பற்றிய புலமைத் திறனுள்ளவர் களாலேயே ஒரு பிரதியை அர்த்தச் செறிவுள்ள இலக்கியமாகக் கண்டு கொள்ள முடியுமென யொனதன் கலர் குறிப்பிடுகிறார். இவருடைய அபிப்பிராயப்படி ஒரு பிரதியின் இலக்கிய இயல்பை முடிந்தளவிற்கு வெளிக் கொண்டு வருவதே அமைப்பியல் வாத விமரிசனத்தின் நோக்கமாகும்.
அமைப்பியல்வாத அணுகுமுறையாளர் களில் றொலன்ட் பார்த் என்ற பிரெஞ்ச் இலக் கிய விமர்சகரும் முக்கியத்துவம் பெறுகிறார். ஒரு இருப்புவாதியாகத்தன் இலக்கிய உலக வாழ்க்கையை ஆரம்பித்த இவர், காலப் போக்கில் அமைப்பியல்வாதியாகவும் இலக் கிய விமர்சகராகவும் பிரபல்யம் பெற்றார். குறிப்பாக, இலக்கிய விமரிசனத்தை சமூகவி யலுடன் இணைத்தவராக பார்த் கருதப் பட்டாலும், எல்லாவகை யான ஒழுங்குபடுத் 56) (Up60p8,606 Tuth (Systematization) நிராகரித்தவராகக் காணப்படுகிறார்.
மரபு வழியாக சமூகவியலாளர்கள் ஏற்றுக் கொண்ட ஆய்வுமுறைகளை நிரா களித்து, பிரதியின் மொழிக்கே முக்கியத்துவம் கொடுத்தார். பிரதிவாசிப்பின் பொழுது பிரதி விதிக்கும் கட்டுப்பாடுகளிற் கப்பாற் சென்று

Page 28
பகுத்தறிவிற்கு மாறானவையும், தர்க்க முரண் பாடுகளையும் வெளிக் கொணர்ந்தார். எழுத் துக்களில் மறைந்துகிடந்த தவறான கற்பிதங் களையும் கருத்துக்களையும் அப்பிரதி யிலிருந்து வெளிக்கொண்டு வருவதில் பார்த் வெற்றி பெற்றாரென்றே கூறவேண்டும்.
லெவி ஸ்ரோசஸினால் மொழியியலி லிருந்து மானிடவியலிற்கு அறிமுகப்படுத்தப் பட்ட தளப்பார்வை என்ற கருத்தை நல்ல முறையில் பயன்படுத்த முடியுமென்ற நிலைப் பாடுடையவராக பார்த் காணப்பட்டார். சசூரின் மொழியமைப்பு - பேச்சு என்ற பாகுபாட்டை பயன்படுத்தி எல்லாவகையான ஐதீகங்களின தும், சிந்தனை முறைகளினது பொது அடிப் படைகளை ஸ்ரோசஸ் எவ்வாறு கண்டறிய முயன்றாரென ஏலவே குறிப்பிட் டோம். அவ் வாறே ஒரு இலக்கியப் பிரதியில் எழுதப்பட்டதற் கும் - எழுதப்படாததற்கும், சொல்லப்பட்டதற் கும் சொல்லப்படாததற்கும் இடையிலான இடைவெளியை-முரண்பாடுகளை- வெளிக் கொண்டுவர முயன்ற பார்த்திற்கும், அமைப் பியல்வாத அணுகுமுறை மிகவும் ஏற்புடைய தாயிருந்தது. எழுத்திற்கும் வாழ்க்கைக்கும் இடையில் காணப்பட்ட இடைவெளியை நிரப்ப முடியாதவர்களாகக் காணப்பட்ட இலக்கிய கர்த்தாக்களின் புரட்சிகர எழுத்துக்களிற் காணப்பட்ட முரண்பாடுகளை வெளிக் கொண்டு வருவதற்கு அமைப்பியல்வாத அணுகுமுறை சரியான வழிகாட்டல்களைச் செய்தது. தமிழிலக்கிய அனுபவப்பரப்பில் டானியலின் "கானல்", என்ற நாவல் பற்றி தமிழவன் முன்வைத்த விமரிசனக் குறிப்பை இங்கு உதாரணமாக எடுத்துக் காட்டலாம்.
எழுத்தாளனின் மொழியூடாக இலக்கிய ஆக்கத்தை அணுகுவதும், ஒரு குறிப்பிட்ட பிரதியின் மொழியை, மொழியின் பொதுவான வரலாற்றுப் பரிமாணங்களிலிருந்து வேறு படுத்தியறிவதும், மிகவும் பயனுடையதென

பார்த் கருதினார். ஒரு எழுத்தாளன் தனது கருத்துக்களையே தன்னாக்கத்தில் சொல்ல வந்த பொழுதும், தற்செயலான நிகழ்ச்சித் தெரிவும், சொற்களும் அவற்றில் வந்து சேர்ந் திருக்கும். இவற்றைக் கவனத்திற் கொண்டு பிரதியில் காணப்படும் பல்வேறு கருத்துக் களையும் உணர்வனுபவங்களையும் வெளிக் கிெணர பார்த் முயன்றார். அத்துடன் கூடவே எழுத்தாள னுக்கப்பால் அவனது எழுத்து தனக்கென்றதொரு உயிர்ப்பைக் கொண்டிருக் குமென்றும் பார்த் வாதிட்டார்.
"எழுத்தாளன் இறந்துவிட்டான்" என்று ஒரு கட்டுரைக்கு தலைப்பிட்டதில் இருந்தே இலக்கியம் தொடர்பான பார்த்தின் நிலைப்பாட்டை ஒருவர் புரிந்துகொள்ளமுடியும்.
குறியியலின் மூலகங்கள் என்ற நூலில் பேச்சு மொழி, எழுத்துமொழி ஆகியவற்றின் குறிகளை விளக்குவதன் மூலம் பார்த் மொழி யனுபவத்தைக் கருத்துருவமாக்க முயன்றார். மொழியானது நியமப்பண்புடை யதாயினும் மொழியின் கூறுகளான சொற்களோவெனில் கூடிய சமூகவியல்பான தாகக் காணப்படு கின்றது. சொற்களின் சமூகவியல்பு காரண மாக மொழியானது. செய்தியை (கருத்தை) வெளியிடும் சாதனமாக இருப்பதுடன் கூடவே பேசுவோனின்/ எழுதுவோனின் கருத்து நிலையையும் ஊடுகடத்தும் இயல்புடையதா யுள்ளது. எனவே ஒரு இலக்கியப் பிரதியில் எழுத்தாளன் கையாளும் சொற்களின் ஊடாக, வாக்கியங்களினூடாக , அவனால் வருணிக் கப்படும் உலகின் மாயத்தோற்றத்தை உடைத்து அம்பலப்படுத்த வேண்டுமென்ற நில்லப் பாடுடையவராக பார்த் செயற்பட்டார். இலக் கியப்பிரதியினூடாக எல்லா வகையான கருத்து நிலைகளினதும் மாயத் தோற்றத்தை உடைத்தலே பார்த்தின் ஆரம்பகால விமரிசன அணுகு முறையாகும். இவ்வணுகுமுறை பின்வரும் அம்சங்களைக் கொண்டிருந்துத் எடுத்துக் காட்டப்பட்டது. 1 \ბს Sio
臀
25 o "“ھلftهه

Page 29
1. ஒரு இலக்கியப் பிரதியை அதிற் கூறப் படும் விடயங்கள் அல்லது சிந்தனை என்ற அடிப்படையில் அணுகாது, அதனை ஒரு மொழியமைப்பு வடிவ மாகக் கருத்திற் கொள்க.
2. பிரதியை செயப்படுபொருள் குன்றிய குறியீட்டு மொழியாகக் கருதுக.
3 பிரதியில் என்ன கூறப்பட்டுள்ளதோ அதனை விடுத்து, விமர்சகன் பிரதியில் கண்ட தெதுவோ அதனையே அப்பிரதி யின் கருத்தாக ஏற்றுக் கொள்க.
4. பிரதியில் நேரடியாக விபரிக்கப்படாத, ஆனால் பிரதியில் விமர்சகன் கண்டு கொண்ட அர்த்தங்களை விமரிசன மாக ஒழுங்குபடுத்திக் கொள்க.
ஆனால், மிக விரைவிலேயே அதாவது 60 களின் பிற்கூறுகளிலேயே, பார்த் தன்மேற் படி நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார். இலக்கிய விமரிசனத்தில் உருவவாத அணுகு முறையிலிருந்து முற்றாக விலகிக் கொண்ட துடன், பிரதிவாசிப்புமுறையிலேயே தன் முழுக் கவனத்தையும் செலுத்தினார். வாசகப் பிரதி எழுதுப் பிரதி என்ற புதியதொரு வகையீடு
பார்த்தினால் முன் வைக்கப்பட்டது.
வாசகப் பிரதி, குறிப்பாக செந்நெறி இலக்கியங்கள் இத்தகையன. ஏலவே ஸ்தா பிதமான உலகையும், மதிப்பீடுகளையும் உள்ளடக்கி, காலத்தில் உறைந்து போனவை யாய், உலகு பற்றிய காலம் கடந்துபோன காட்டுருவாக வாசகப்பிரதிகள் காணப்படு கின்றன. இவை குறிப்பானுக்கும் குறிப்பீட்டிற் கும் இடையில் ஸ்தாபிதமான உறவுகளைக் கொண்டு விளங்குகின்றன. ஆனால் எழுது பிரதியோ ஸ்தாபிதமான உலகு பற்றிப் பேசாது, நாம் வாழும் உலகு பற்றி, எம்மையும் இணைத் துப் பேசுகின்றது. இவற்றில் வரும் சங் 'கேதங்களின் பல்குறிப்பால் வாசகன் தடுமாற வேண்டியேற்படுகிறது. குறிப்பானி லிருந்து
26

குறிப்பீட்டை இலகுவில் கண்டறிய முடியா துள்ளது.
குறிப்பானிலிருந்து குறிப்பீட்டைக் கண் டறிய முடியாததால் எழுதுபிரதி, பார்த்தின் விசேட அக்கறைக்குள்ளாகியது. பால்சாக் என்ற பிரெஞ்ச் எழுத்தாளனின் “சராசீன்” என்ற கதையை எழுது பிரதி பற்றிய தன்னாய் விற்கு எடுத்து கொண்ட பார்த், ஒரு கட்டுரை யில் இதனைப் பற்றி ஆராய்கிறார். தன்னாய் விற்கான முன்நிபந்தனையாக ஐந்து வகைச் சங்கேதங்கள் பற்றிக் குறிப்பிடுகிறார். அவை
UT66
1. பொருள் கொள்ளியல் சங்கேதம். 2. சொற்பொருட்குரிய சங்கேதம். 3. குறியீட்டுச் சங்கேதம். 4. செயலைச்சுட்டும் சங்கேதம். 5. பொருள்கட்டற் சங்கேதம் என்பனவாகும்.
பொருள்கொள்ளியல் சங்கேதமும், செயலைச் சுட்டும் சங்கேதமும் ஒரு பிரதியில் கதையின் நிகழ்ச்சித் தொடர்ச்சியை ஒழுங்கு படுத்துகின்றது. இதில் முதலாவது கதையின் புதிர் பற்றியும், அப்புதிர் படிப்படியாக விடு விக்கப்படுகிறது பற்றியதுமாகும். செயற்ச மிக்ஞை கதையில் இடம் பெறுகிற செயற் பாடுகளை பிரித்தறிய உதவுகிறது. சொற் பொருளிற்குரிய சங்கேதமும் குறியீட்டுச் சங்கேதமும் கதையில் வருகிற கதா பாத்திரங் கள், சந்தர்ப்பங்கள், நிகழ்ச்சிகள் என்பன வற்றின் அர்த்தத்தை அட்டவணைப் படுத்து வதற்கு உதவுகின்றன. குறிப்பாக கதைய மைப்பை உருவாக்க உதவியாயிருக்கும் பல் வகை முரண்பாடுகளைச் சுட்டியறிய குறி யீட்டுச் சங்கேதம் பயன்படுகிறது. இவ்வாறு பல்வேறு சங்கேதங்களினாலும் சுட்டி எடுத்து காட்டியவற்றையெல்லாம் தொகுத்து எவ்வாறு ஒரு கதை தன் பிரதிக்கு வெளியே பிறிதொரு யதார்த்தத்தைக் கொண்டிருக்கு மென்பதை எடுதுக் காட்ட பொருட்கட்டற் கங்கேதம் பயன்படுகிறது. சங்கேதங்களைப் பற்றிய

Page 30
இவ்வாய்விலிருந்து ஒரு பிரதி எவ்வாறு பல குரல்களால் பின்னப்பட்டுள்ள தென்பதை பார்த் எடுத்துக்காட்டுகிறார். இவருடைய அபிப்பிராயப்படி எல்லா இலக்கியப் பிரதி களிலும் இவ்வாறு பல குரல்கள் தொனிக்கும். இதனால் பிரதிவாசிப்பின் ஒவ்வோர் தடவை யிலும் ஒவ்வோர் வகையான விளக்கத்தை விமர்சகர் பெறலாமென்கிறார். அதாவது ஒரு பிரதியிலேயே பல பிரதிகளைக் கண்டு கொள்ளலாம். பல் பிரதித்தன்மையினால் ஒரு பிரதி எவ்வாறு வாசிக்கப்படுகிறதோ அவ்வாறு அதனைமீள எழுத முடியாதென்பது பார்த்தின் நிலைப் பாடாகும்.
பார்த் தன் பிற்கால நூல்களில், இலக் கியப் பிரதியின் வாசிப்பு இன்பம் என்ற கருத் தோட்டத்தை முன் வைக்கிறார். இன்பம் (Pleasure), (SuTeiguityL (Enjoyment), என்றதொரு வகையீட்டைச் செய்து, அறிவு நிலைசார் செய்தியைக் கொண்ட பிரதிகள் இன்பத்தைத்தருவனவாகவும்; தனிமை, திருப்தி, பாலியற் திருப்தி ஆகிய வற்றைத் தருவன போகத்துய்ப்பிற்குரிய பிரதிகள் என வும் பார்த் வகைப்படுத்தினார். இக்கால எழுத்துக்களில் மெய்யியல் , அழகியல் ஆகி யவை தொடர்பான விடயிவாத நிலைப்பாட்டிற் கும், மொழியியலின் உருவவாத நிலைப்பாட்டிற் கும் இடையிலான பாலம் ஒன்றை பார்த் அமைக்க முற்படுகிறார். இயற்கை மொழியில் குறுக்கீடு செய்யும் சங்கேதங்களினாலான புதிய மொழி யொன்றை பார்த் உருவாக்கு வதன் மூலம் இலக்கியப் படைப்பு பற்றிய அழகியற் தீர்ப்புக்களைப் பேணும் அதே சமயம் பெறுமானத் தீர்ப்புக்களை அகற்றும் முயற் சியிலிடுபடுகிறார். ஒரு பிரதியில் பல பிரதி களைக் காண்பதுவும், வாசகர் ஒவ்வொருவரும் ஒரு பிரதியைத் தமக்கேயுரிய முறையில் விளங் கிக் கொள்கின்றன என்பதுவும் எத்தகைய பெறுமானத்தையும் ஒரு பிரதிக்குகொடுக்க முடியாத நிலையை ஏற்படுத்தும் அதே சமயம்

பொதுவான அழகியற் தீர்ப்பிற்கு இடமளிக்கு மெனலாம்.
5. பின்னமைப்பியல் வாதம்
இலக்கியங்களைப் புரிந்து கொள்ளவும், அழகியலனுபவத்தை பெறுவதற்கும் அக்கலை யாக்கங்களிற்கு ஏதுவாயிருந்த காரணிகள் பற்றிய அறிவு இன்றியமையாததெனக் கூறும் கலைக் கொள்கைகள் அனைத்தையும் பின்னமைப்பியல்வாதிகள் எனப்படும் கட்ட விழ்ப்புக் கொள்கையாளர் நிராகரிக்கின்றனர். இவர்களின் அபிப்பிராயப்படி கலையாக்கத்திற் கேதுவான காரணிகளைத் தேடுவது பயனற்ற தொரு முயற்சியாகும். மேலும், ஒரு குறிப்பிட்ட படைப்பாக்கத்திற்கு ஏதுவான காரணிகளை அறியமுடியாதவிடத்து அப் படைப்பைப் புரிந்து கொள்ளவோ அன்றி ரசிக்கவோ முடியா தென்பதும் தவறான வாதமென்பது இவர்களது அபிப்பிராயமாகும். ஒரு படைப்பு தோன்றிய சந்தர்ப்ப சூழ்நிலை களும், ஏதுவாயிருந்த காரணிகளும் பற்றிய அறிவு அப்படைப்பைப் புரிந்து கொள்ள அவசிய மானதெனக் கூறப் பட்டாலும், இத்தகைய புரிந்து கொள்ளலை ஒருவராலும் ஒரு பொழுதும் பெறமுடியாதென பின் னமைப்புக் கொள்கையினர் வாதிடு கின்றனர்.
சமகாலத்தில் வாழ்கிற படைப்பாளி யினால் உருவாக்கப்பட்ட தென்றாலுங் கூட, படைப்பாளியும் நாமும் வேறுவேறு நபர்கள் என்பதனால்,அவன் தன் படைப்பைப் புரிந்து கொண்டதெவ்வாறோ அவ்வாறு எம்மால் புரிந்து கொள்ள முடிவதில்லை. மேலும் ஒரு படைப்பு வெவ்வேறு நபர்களால் வெவ்வேறு வகையாகப் புரிந்து கொள்ளப்படுகிறதென் பதனால் புரிந்து கொள்ளல் பல வகைப்படு மென்பதும் பெறப்படும்.
வரலாற்றின் ஒவ்வோர் கால கட்டத் திலும் இலக்கியம் பற்றி வெவ்வேறு விதமான விளக்கங்களே கொடுக்கப்பட்டு வந்துள்ளன.
27

Page 31
இதனால் இலக்கியம் பற்றிய உண்மையான விளக்கமென ஒரு விளக்கமில்லீையென்பதும், உண்மையான விளக்கம் என்ற கருத்தாக்கமே அர்த்த மற்றதொருவெற்றுச் சொல்லென்பதும் பெறப்படும்.
பின்னமைப்புக் கொள்கையினரின் *அபிப்பிராயப்படி கலைப்படைப்பின் அர்த்திம் ஒருவராலும் ஒருபொழுதும் முழுமையாக அறியப்படுவதில்லை. ஒரு இலக்கியப் படைப் பில் இடம் பெறுகிற குறிகள் சந்தர்ப்பத்திற்குச் சந்தர்ப்பம் வெவ்வேறு அர்த்தங்களைப் பெறும். பின்னமைப்பியல் வாதத்தை இலக் கியம் பற்றியதொரு விளக்கமாகவே நாம் கருதல் வேண்டும். கலைஞனது நோக்கத்தை சுவைஞர்கள் ஒரு பொழுதும் மீளமைக்கவோ அல்லது குறிப்பிட்ட காலத்திலும், இடத்திலும் பயன்படுத்தப்பட்ட குறியீடுகளாக மட்டும் கருதுவதோ அல்லது பெரும்பாலான மக்கள் கருத்தெதுவோ அதுவே குறிப்பிட்டதொரு இலக்கியத்தின் விளக்கமாகுமெனவோ கூற முடியாதென இவர்கள் வாதிட்ட பொழுதும், எந்தச் சமூகக் கட்டமைவில் ஒரு கலைப் படைப்பு தோன்றியதோ அந்த சமூகக் கட்டமை வின் கருத்துநிலைகள் பற்றியறிவதற்கு அவை உதவுமென வாதிடுகின்றனர். இக்கருத்தில் பின்னமைப்பியல்வாதிகள் மார்க்ஸிச இலக் கியக் கொள்கையினருடன் ஒன்றுபடுவது அவதானிக்கத்தக்கது.
ஒரு குறிப்பானின் (Signifier) அர்த்தம் நாம் அறிந்து கொண்டதிலும் பார்க்க அதிக மாகவே இருக்குமென பின்னமைப்புக் கொள்கையினர் வாதிடுகின்றனர். சாதாரண கலைப்படைப்புகளும் சாதனைகளாகக் கருதப் படும் கலைப்படைப்புகளும் ஒரே வித அந்தஸ் துள்ளமையென்பது இவர்களது நிலைப்பாடு. சந்தர்ப்ப சூழ்நிலையிலிருந்து பிரித்தெடுத்துக் கலைகளை தனியாக ஆராயமுடியாதெனவும்; ஒரு படைப்பாளி எந்த விதத்திலும் தான்
28

வாழ்ந்த சமூகத்திலிருந்தும், தன்காலத்திய கருத்து நிலையிலிருந்தும் விடுபட்டுச் சுயாதீன மாக இயங்க முடியாதெனவும் வாதிடும் இவர்களது அபிப்பி ராயப்படி ஒரு அற்புதமான தகவல்கூட கலைப் படைப்பொன்றின் விளக் கத்திற்கு இன்றிய ையாததாகலாம். சில சந்தர்ப் பங்களில் ஒரு ஓவியத்திலும் பார்க்க அவ்வோ வியம் பொருத் தப்பட்ட சட்டம் பல முக்கிய தகவல்களத் தருவதாயிருக்கலாம். மாயாவி யின் மலைக் கோட்டை மர்மத்தி லிருந்து சிலப்பதிகாரம் வரை, மூன்றாந்தர சினிமா விலிருந்து சத்தியஜித் ரேயின் பதர் பாஞ்சலி வரை எதுவும் கனதியாக ஆய்விற் குட்படுத்தப் படலாம் என்பது இவர்களது அபிப்பிராயமாகும்.
பின்னமைப்புவாதக் கொள்கையான கட்டவிழ்ப்பு வாதம் யாக்கஸ் டெறிடா என்ற பிரெஞ்சு சிந்தனையாளரால் ஆரம்பிக்கப்பட்ட தொரு சிந்தனை முறையாகும். இது ஒரு முறையிலோ அல்லது விமரிசன வகையோ அல்லவென டெறிடா கூறிக் கொண்டாலும் அவரைப்பின்பற்றுபவர்களின் அபிப்பிராயப்படி கலை இலக்கியப்பிரதிகளின் விமரிசனத்திற்கு கட்டவிழ்ப்புவாதம் பயனுடையதொரு முறையிய லாகும். பழகிப்போன சிந்தனை முறையைத் தகர்த்து உள்ளடங்கியவற்றை வெளிக் கொண்டு வருதலே கட்டவிழ்ப்பு வாதமாகும்.
ஒரு பாடத்தில் கட்புலனாகாது இருப் பவற்றையும், நிகழ்ச்சியின் தருக் கத்திற்கும் அந்நிகழ்ச்சிகளின் வருணனை யானவாக் கியத்திற்குமிடையில் காணப்படும் முரண் பாட்டையும், சொல்ல வந்ததற்கும் சொல்லப் பட்ட விதம் காரணமாக எழுந்த வேறுபாட்டை யும் விழிப்புடன் தேடிக்கண்டு பிடிப்பதே கட்ட விழ்ப்பு விமரிசனமாகும். கலை இலக்கியப் பாடமொன்றை விளக்குவதற்கு அப்பாடத்தில் வருகிற உருவகம், அடிக்குறிப்புகள்,சொல்லா டிலிற் தற்செயலாய் ஏற்படும் திருப்பங்கள்

Page 32
என்பன போன்ற சாதாரணமாகப் பிடிபடாது போகுமிடங்களைக் கண்டுபிடித்து விளக்க முயலும் ஒரு வகையான மீள்பார்வைத் தந்தி ரோபாயமாகவே இலக்கித்தில் கட்டவிழ்ப்புவாத விமரிசனம் செயற்படுகிறது.
கட்டவிழ்ப்பு என்பது ஒரு வகையான வாசிப்பு முறையாகும். நிஜவுலகு, மொழி, சிந்தனை என்பன பற்றி எமது பழகிப்போன சார்புகளிலிருந்து விடுபட்டு வாசிப்பதே டெறிடாவின் வாசிப்பு முறை. டெறிடா தனது நிலைப்பாடு பற்றி மீண்டும் மீண்டும் வற் புறுத்திக் கூறிவந்ததிலிருந்து கட்டவிழ்ப்பு வாதத்தை ஒரு செயற்படு முறையாகவும், உத்திமுறையாகவும் கருதலாகாதென்பதை மனங்கொள்ளுதல் வேண்டும்.
கட்டவிழ்ப்பை ஒரு முறையியல் எனக் கூறுவதன் மூலம் டெறிடாவினால் நிராகரிக் கப் பட்டதும் பிளேட்டோ முதற் காலம் கால மாக மேற்கத்திய சிந்தனை மரபினால் வளர்த் தெடுக்கப்பட்டதுமான எண்ணக் கருக்களை யும் வகையீடுகளையும் உள்ளடக்கிய நியாயித் தல் முறைக்குள் கட்டவிழ்ப்பு வாதத்தையும் உள்ளடக்கிவிடுவதான தவறைச் செய்கிறோம். கட்டவிழ்ப்பு வாசிப்புச் செயலிற்கு இத்தகைய மரபுவழிச் சிந்தனை குந்தகமாக அமைகிறது. ஒரு குறிப்பிட்ட பிரதியை வாசிப்பதற்கு ஒரு குறிப்பிட்ட முறையியலைப் பின்பற்றுகின்றோ மெனில் அம்முறையியல் விதிக்கும் கட்டுப்பாடு களையும் ஏற்றுக் கொண்டே நாம் செயற்பட வேண்டும். ஆனால் டெறிடாவோ ஒரு பிரதியை வாசித்து விளக்குவதற்கு எத்தகைய முறை யியற் கட்டுப்பாடுகளும் அற்ற சுதந்திரமிருத் தல் வேண்டுமென்கிறார்.
எமது சிந்தனைக்குரிய, நியாயித்தல் முறையானது எப்பொழுதும் ஒருமையத்தைக் கொண்டிருக்கும். உதாரணமாக நான் என்ற மையத்தைக் கொண்டே எனது செயற்பாடுகள்

பற்றிச் சிந்திக்கலாம். இந்த "நான்" என்பதே சிந்தனைகள் அனைத்தையும் ஒரு அமைப் பினுள் கொண்டு வருவதற்குரிய ஒருமைத் தத்துவமாகும். நனவு நிலை, நனவிலி நிலை, என்ற வகையீட்டின் மூலம் சிக்மன்ட் பிராயட் இந்த 'நான்’ என்ற மையத்தத்துவத்தின் அடிப்படையைத் தகர்த்து விட்டார். இது பேரிலவே சாராம்சம், திரவியம், உண்மை உருவம், நோக்கம், மனிதன், இறைவன் என் பன போன்ற எண்ணிறந்த சொற்கள் எழுது சிந்தனையை மையப்படுத்தும் தத்துவங்களா கச் செயற்படுகின்றனவென டெறிடா குறிப்பிடு கிறார். உதாரணமாக, நனவுநிலை என்ற எண்ணக்கருவை விளக்க அதுநனவிலி நிலைக்கெதிரானது என்போமாயினநனவு - நனவிலி என்ற இருதுருவங்களைக் கொண்ட ஒரு அமைப்பினுள் நாம் அகப்பட்டுவிடுகி றோம். இதைப்போலவே உடன், உளம். நன்மை - தீமை என்பன போன்ற ஈரிணை களும் ஒன்றையொன்று சார்ந்தே அர்த் தத்தைப் பெறுகின்றன. நன்மையின் சார் பின்றி தீமை யையோ அல்லது தீமையின் சார்பின்றி நன்மை யையோ எம்மால் விளக்க முடிவதில்லை.
ஒரு பாடத்தை விளக்குவதில் கட்டவிழ் தந்திரோபாயச் செயல்முறையானது இரு சவால்களை எதிர்நோக்குகிறது.
1. மாறா உண்மை அல்லது உண்மை யான விளக்கம் என்ற வார்த்தை மையவாத நிலைப்பாட்டை நிராகரிப்பதன் மூலம் ஒன்றிற்கு மேற்பட்ட விளக்கங்கள் ஒரு பிர தியில் சாத்தியமே என்பதை எடுத்துக் காட்டு
தல.
2.பிரதியின் வெளிப்படையான அர்த்தம் (கருத்து) வெளிப்பாட்டைக்குழப்புகிற அல்லது பிரதியின் இயல்பான தருக்கப் போக்கிற்கு இடையூறாகவிருக்கிற அர்த்தக் குழப்பத்ை தைக் கண்டுபிடித்தல். அதாவது பிரதியில்
29

Page 33
கட்புலனாகாதிருக்கும் குருட்டுப்புள்ளிகளால் அர்த்தம் ஈடாட்டம் கொள்ளுமிடங்களைத் தேடிக் கண்டுபிடித்தல், இவ்வாறு இரு திசை களில் கட்டவிழ்ப்பு வாசிப்பு செயற்படுகிறது. ஒரு பிரதியில் வருகிற மருட்கை யூட்டும் விடயங்களைக் கண்டு பிடிப்பதி லிருந்து கட்டவிழ்வாசிப்பு ஆரம்பமாகிறதென டெறிடா குறிப்பிடுகிறார்.
1983ம் ஆண்டில் விமரிசனம் தொடர் பாக டெறிடா ஆற்றிய உரையொன்றில் கட்ட விழ்ப்பு என்பது தருக்கத்துள் சிந்திப்பதும், தருக்கத்திற்கெதிராகச் சிந்திப்பதுமான தந் திரோபாயம் எனக் குறிப்பிட்டார். தற்கால அறிவின் வளர்ச்சியால் எமது சொல்லாடல் முறைகளும் வாக்கிய அமைப்பு முறைகளும் பல்வேறு விதமாக, சிக்கலான முறையில் விருத்தி பெற்று வளர்ச்சியடைந்துள்ளன. எனவே பிரதியொன்றில் எழுத்தாளனின் பிரக்ஞையின்றியே வந்துசேர்ந்த அர்த்தங் களையும், பிரதியின் அர்த்தத்திற்கு இடை யூறாக வருகிறவைகளையும் இனங் காட்டுப் புள்ளிகளை தேடும் முறையில் விமரிசனம் செயற்பட வேண்டும் என்றும், பிரதியில் விளக்கம் பெறாத சிறிய பந்திகள், அடிக் குறிப்புக்கள் இடைமுறிப்பாய் வரும் தொடர் கள், என்பனவற்றின்பால் கட்டவிழ் விமரிசனம் தன் கவனத்தைச் செலுத்த வேண்டும் என்றும், இத்தகைய குருட்டுப் புள்ளிகளையே வாசிப் பின் பொழுதுகவனத்திற் கொள்ள வேண்டும் என்றும் டெறிடா வாதிடுகிறார்.
எமது சிந்தனையின் தருக்கம். வார்த்தைமையவாதம் (Logocentrism) என்ற அமைப் பினுள் அகப்பட்டுள்ளதெனக் கூறி டெறிடா விமர்சிக்கிறார். வார்த்தை எழுத்து என்ற வகையீட்டில் வார்த்தை முதன்மையான தென்றும், ஒரு வார்த்தையின் அர்த்தம் அதன் எழுத்தில் முழுமையும் பிரசன்னமாவதில்லை என்றும் ஏற்றுக்
30

கொண்டு வார்த்தைகளின் அர்த்தத்தை அறிதலும், அதன்வழி உண்மையைக் கண்டு பிடித்தலுமே தமது பணியாகும் என இதுவரை காலமிருந்த மெய்யிலாளர்கள் சிந்தித்துச் செயலாற்றினர். பிளேட்டோ முதல் சசூர் வரையிலான இச் சிந்தனையாளர்களின் வார்த்தைமைய நிலைப்பாட்டை டெறிடா நிரா கரிக்கிறார். எழுத்தே எல்லா வகையான ஆய்விற்கும் முன்நிபந்தனையாகும். எழுத்தின் வழியே தான் தலைமுறை தலைமுறையாக கருத்துக்கள் கையளிக்கப்பட்டு வந்துள்ளர். எழுத்துவடிவில் இல்லாத அறிவைப் பற்றியும், பண்பாட்டைப் பற்றியும் வரலாற்றைப் பற்றியும், எவராலும் சிந்திக்கவோ ஆராயவோ முடியாது. எழுத்தில்லாத பொழுது (பிரதிவடிவம் பெறாத பொழுது) இவையனைத்தும் இல்லாது போய் விடுகின்றன வென்பதால் எழுத்தே முதன்மை யானதென டெறிடா குறிப்பிடுகிறார். எழுத்து வடிவத்தில்மைந்த பிரதியே எல்லா வகையான ஆராய்ச்சிகளினதும் தொடக்கமாக விருக்கிற தென்றும், பேச்சு அல்லது வார்த்தையின் பிரசன்னம் காலத்தில் கரைந்து விடுவதால் எத்தகைய ஆய்வுகளின் தொடக்கமாகவும் அது இருக்க முடியாதென்றும் இவர் வாதிடு கின்றார்.
வார்த்தை மையவாதத்தின்படி எழுத்து மொழியானது சப்தத்தினடியான வரிவடிவத் தைக் கொண்டது. இதன்படி பேச்சு மொழியை அடிப்படையாகக் கொண்ட குறிய மைப்பே எழுத்து மொழியாகும். எழுத்து மொழி - பேச்சுமொழி என்ற வகையீட்டில் எழுத்து மொழி இரண்டாம் பட்சமானதினால் பேச்சின் அர்த்தம் அவ்வாறே முழுமையும் எழுத்தில் பிரசன்னமாவதில்லை. ஏற்றுக் கொண்டு உண்மையான அர்த்தத்தைத் தேடுதலே தமது பணியாகுமெனக் கருதி இதுவரை காலமும் விமர்சகர்கள் செயற் பட்டனர். உண்மை பற்றியும், அதன் மூலம் பற்றியும் ஆராய் வதற்குரிய வழிமுறையாகப் பேச்சை ஏற்றுக்

Page 34
கொள்வதை டெறிடா நிராகரிக்கிறார். எழுத்து வழிநிலையான தென்றும், வார்த்தையின் அர்த்தம் அவ்வாறே முழுமையும் எழுத்தில் பிரசன்னமா வதில்லையென்றும் கூறுகிற வார்த்தைமை யவாத நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டாலுங் கூட, பேச்சு எழுத்து வடி வத்திலேயே ஆராயப்படுகிற தென்பதை மறுக்கமுடியாது. அதாவது, பேச்சின் அர்த்தம் எழுத்தின் பதிலீட்டின் பதிலீடாக மாறிவிடுகிற தென்கிறார் டெறிடா.
மொழி என்ற குறியமைப்பில் (Sign System) வருகிற ஒரு குறிப்பான் மாறாத அர்த்தத்தைக் கொண்டிருக்கும் என்ற எடு கோளின் அடிப்படையிலேயே உண்மை யைத் தேடுதல் என்ற கருத்தாக்கம் வார்த்தை மையவாதிகளால் பயன்படுத்தப்படுகிறதென டெறிடா கூறுகிறார். இவருடைய அபிப் பிராயப்படி ஒரு குறிப்பின் (சொல்லின்) குறிப் பீடு ( கருத்து) நிலையானதல்ல. எனவே எந்தவொரு குறிப்பீட்டையும் எந்தவொரு குறிப்பானாலும் நிரந்தரமாகச் சுட்ட முடியாது. அர்த்தம் எப்பொழுதும் மாறாதிருக்கும் எனக் கருதியதே மரபுவழிச் சிந்தனையாளர்கள் விடுத்த தவறாகும். குறிப்பானின் மாறுபடும் இயல்பால் அதுசுட்டும் குறிப்பீடாகிய அர்த் தமும் எல்லையற்று மாறிக் கொண்டி ருக்கும் என்ற தருக்க நிலைப்பாட்டிலிருந்து எதுவும் தப்பமுடியாதென்பதால், இலக்கியப் படைப் புக்களை நாம் மீண்டும் மீண்டும் விமரிசனத் திற்குள்ளாக்க வேண்டுமென்பது பெறப்படும்.
வார்த்தை குறிப்பது எழுத்து என்ற குறியில் முழுமையும் பிரசன்னமாகாது போவ தேன் என ஆராய்ந்த டெறிடா , குறியின் இரட்டை இயல்பே இதற்குக் காரணமென் கிறார்.
இதனை (Differ) என்ற வினைச் சொல்லினடியாக வரும் (Difference) என்ற

சொல்லைப் பயன்படுத்தி விளக்குகிறார். (Differ) 61 стрбilsоботi Gla T6) (Differ) அதாவது வேறுபடுதல் என்ற கருத்திலும் (Defer) அதாவது ஒத்திப்போடல் என்ற கருத்திலும் வரும். வேறுபடுதல் என்பது ஒன்றிலிருந்து ஒன்று விலத்தியுள்ளதென்ற வெளிசார் வேறுபாடு என்ற கருத்திலும், ஒத்திப்போடுதல் காலம் சார்ந்ததொரு கருத் திலும் வருகிறது.
அதாவது, ஒரு குறியானது தன்னர்த் ததில் ஏனையவற்றிலிருந்து வேறுபடுகிற தெனும் பொழுது வெளிசார் வேறுபாடு என்ற கருத்தையும், ஒத்திப்போடுதல் என்ற கருத்தை யும், ஒத்திப்போடுதல் என்ற கருத்தில் வரும் பொழுது தன் அர்த்தத்தை முடிவிலியாய் ஒத் திப்போடுதல் என்ற காலம்சார் கருத்திலும் வருகிறது. இதனை வார்த்தைமையவாதம் உணரத்தவறி விட்டதென டெறிடா குறிப்பிடு கிறார். இவரது அபிப்பிராயப்படி குறியானது எப்பொழுதும் தன் அர்த்தத்தை ஒத்திப் போட்டுக் கொண்டேயிருக்கும் என்ற நிலைப் பாட்டிலிருந்து இலக்கியப்பிரதி பற்றிய உண்மை யான விளக்கம் என ஒரு விளக்கம் இல்லை என்பதும், ஒரு பிரதியை பலவாறாக விளக்க முடியும் என்பதும் விளக்கப்பட வேண்டும் என்பதுவும் பெறப்படும்.
* இலக்கியப் பிரதி என்பது முடிவற்ற கருத்து வெளிப்பாட்டு ஆற்றலுடையதெனக் கூறுகிற டெறிடா, ஒவ்வொரு வாசிப்பிலும் நாம் அதனை ஒவ்வொருவிதமாக வாசிக்க வேண்டு மென்கிறார். எழுத்தாளனின் பிரக்ஞை இல்லா மலேயே அவனது பிரதியில் பல செய்திகள் உலவிக் கொண்டிருக்கும். ஒரு பிரதியின் பல் பிரதித் தன்மையிலான எழுத்தை ஒரு குரலாக இனங்கொள்ளுதல் கூடாதென பின்னமைப் பியல்வாதிகள் வாதிடுகின்றனர். சுருங்கக் கூறின் ஒரு பிரதியில் வெளிப் படையாக கூறப்படும் விடயத்திற்குப் பிறழ்வாக வருமிடங்
31

Page 35
களைக் கண்டுபிடித்து அப்பிரதியை விளக்க முயலுவதே கட்டவிழ்ப்புவாத விமரி சனப் பார்வை எனலாம்.
தற்கால விமரிசன மரபில் கட்டவிழ்ப்பு வாதம் குறிப்பிடத்தக்க செல்வாக்கைப் பெற்றுள்ளது. மார்க்சிசம் உட்பட தற்காலத்திய பிரதான அறிவுலகச் செல்நெறிகள் அன்ை த்தும் டெறிடாவின் கருத்துக்களால் தத்தம் கொள்கைகளை மீளப் பரிசீலனை செய்யும் அளவிற்கு நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பது பின்ன மைப்பியல் வாதமான கட்டவிழ்ப்பு வாதத்தின் முக்கியத்துவத்தை சொல்லா மலேயே எடுத் துக் காட்டும்.
6. முடிவுரை
புதிய விமரிசனம், இலக்கியக் குறியிய லாய்வு, அமைப்பியல்வாதம், பின்னமைப்பி யல்வாதம் ஆகிய விமரிசனப் பார்வைகளின் பிரதான இயல்புகள் பற்றிமேலே சுட்டிக் காட்டப் பட்டவைகள் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் உருவவாதச் சிந்தனைகளாகவே காணப் படுவதை ஏலவே கூறப்பட்டன வற்றிலிருந்து ஒருவர் புரிந்து கொள்ளலாம். இலக்கியத்தின் உருவம், உள்ளடக்கம் என்ற வகையீட்டில் உருவத்தையே முதன்மைப் படுத்தியவையாக புதிய விமரிசனம், இலக்கியக் குறியியலாய்வு கள் காணப்பட்ட பொழுதும், தொடர்ந்து இந்த நூற்றாண்டின் பின்னரைப்பகுதியில் எழுச்சி பெற்ற அமைப்பியல் வாதமும், பின்னமைப் பியல் வாதமும் முற்றிலும் புதிய முறையில் இலக்கியப்படைப்புக்களை அணுகுகிறது. இலக்கியப் படைப்புக்களை இலக்கியப் பிரதி யாக (text) இனங்கண்டு அவற்றின் அமைப் பியலான ஆய்விற்கு அமைப்பியல் வாதமும், பின்னமைப்பியல் வாதமும் வித்திட்டன. சாராம்சத்தில் இவ்விருவகை இலக்கியப் பார்வைகளும் உருவவாதத்தின் பிறிதொரு
32

பரிமாணத்தைச் சுட்டுவனவே யென்பதை நாம் மனங்கொள்ளுதல் வேண்டும்.
இச்சிந்தனைப் போக்குகள் அனைத் தும் நேரடியாகவே தமிழிலக்கிய விமரிசனப் பார்வையைப் பாதித்தன வென்பதிற்கில்லை. எனினும் க.நா.சு, சி.சு. செல்லப்பா போன்ற வர்களின் விமரிசனப் பார்வை அறிந்தோ/ அறியாமலோ புதிய விமரிசனக் கொள்கை
யினரின் அணுகு முறையுடன் பொருந்தி வரு வதை அவதானிக்கலாம்.
"கலை நுட்பங்கள் " என்ற நூலில்;
"நான் இலக்கியத் தரம் என்ற ஒரே விசயத்தைத் தான் இதுவரை வற்புறுத்தி வந்திருக்கின்றேன்" என்றும்
"கவிதையில். வார்த்தைகளிற்கு ஒரு
மந்திர சக்தி இருப்பதை எல்லோரும் ஏற்றுக் கொண்டுவிடுகிறார்கள். "என்றும்,
"இலக்கியத்தில் சிருஷ்டித்தரமான எல்லாத்துறைகளிலுமே நுட்பமான நகாசு வேலைகள், கலைத்தரமானவை உடன் வரத் தான் வருகின்றன" என்றும்
". இந்த நுட்பங்களினால் தான் ஒர் இலக்கியாசிரியனின் எழுத்து முழுமையும் ஆழமும் பெறுகிறது."
என்றுங் கூறுகிற கருத்துக்கள் இங்கு அவதானிக்கப்படவேண்டியவை.
சி.சு. செல்லப்பா புதிய விமரிசனப் பார்வையின் பக்கம் நிற்பதாகவே தெரிகிறது. "தமிழில் இலக்கியவிமரிசனம் "
என்ற நூலில்,
"விமரிசன முறைகளில் அதிக பட்சம் படைப்பின் நயத்தை வெளிக்காட்டும் ஆய்வு முறை விமர்சன வகைகளில் இந்த"புதிய விமரி சனம் "அதிக பட்ச நயத்தைக் காட்டக் கூடிய விமரிசனப் பாாவையாகக் கருதப்படுகிறது."
என்று குறிப்பிடுவதும்,

Page 36
"நமது இலக்கிய ரசனை உயர வேண்டு மானால் ஆய்வுமுறையைக்கையாண்டு படைப் பின் குணாதிசயங்கள் வாசகனுக்குத் தெரியச் செய்யவேண்டும். அது தத்துவத்தகவலாக, அறிவுத்துறை ஆய்வாக இல்லாமல் இலக்கியத் தகவலாக, கலைத்துறை ஆய்வாக இருக்க வேண்டியதுதான் முறை. நமது படைப்புகளின் தரம் உயரவேண்டு மானால், படைப்புக்குள் உள்ளோடும் கலை மதிப்பு அம்சங்கள் மொழி மூலம் உருவாகி இருக்கும் விதத்தை ஆராய்ந்து படைப்பு உருவான விதத்தையும்
பகுத்துக் காட்டியாக வேண்டும். "
என்றும் சி.சு. செல்லப்பா தனது விமரி
சனப் பார்வைக்கான முன்னோடித் தகவல்
அடிக்குறிப்புக்கள்
1.
பிராக் சிந்தனா சுட்டத்தின் முக்கியஸ் தர்களில் ஒருவரா குடியேறி பின்னர் விமரிசனக் கொள்கையாளர்களில் ஒ
2. Leitch, Vincent B (1988) American Literary
Press, P. 26-27
3. ibid., p. 35
4. scs நாவல் அல்லது கவிதையின் உருவாக்கமென எதை
குறிப்பிடப்படுகிறது.
5. Volpe, Gaivano Della, Setting Accounts with
6. Matejka, Ladislav & Titunik, Irwin R (ed. 19o
7. Ibid., P. 270
8. Ibid., P. 275
9. Ibid., P.276
10. இவர் தொடக்கத்தில் அமைப்பியல் வாத அணுகுமுறை அணுகுமுறையை ஏற்றுக் கொண்டு அதன் முக்கியஸ்
11. Davidson Huch M, "The Critical Position of
No 3 P.374.
12. கப்பிரமண்யன் க.நா. (1988) கலை நுட்பங்கள்
13。 செல்லப்பா சி.சு (1974) தமிழில் இலக்கிய விம
14.
தமிழவன் (1991) அமைப்பியல் வாதமும் தமி

களை மேற்படி நூலில் தருவதும் அவரை புதிய விமரிசனப்பார்வையைத் தழுவிய விமர்சகரா கவே எண்ண வைக்கிறது.
தமிழவன், பூரணச்சந்திரன் போன்ற சமகால ஆய்வாளர்களாலேயே இலக்கியத்தின் குறியியலாய்வு: அமைப் பியல்வாதம், பின்னமைப்பியல்வாதம் போன்ற விமரிசனச்
செல்நெறிகள் தமிழில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. இவர்களில் தமிழவன் குறிப்
பிடத்தக்க அமைப்பியல்வாத அணுகுமுறை யாளராக விளங்குகின்றார். அமைப்பியல்
வாதமும் தமிழ் இலக்கியமும் 14 என்று நூல் இவ்வகையில் குறிப்பிடத் தக்கது.
ன இவர், இரண்டாம் உலக யுத்த காலத்தில் அமெரிக்காவில் ருவராக விளங்கினர்.
Criticism. From 30s to 80s, Colombia University
னை அழைக்கிறோமோ அதுவே உட்கோள்வடிவம் என இங்கு
the Russian Formalists NLR, P. 33-34
76) Semiotics of Art, MIT Press, p. 265-267.
பாளராக இருந்த பொழுதும் 70 களிலிருந்து கட்டவிழ்ப்புவாத தர்களில் ஒருவர் என்ற கணிப்பைப் பெற்றார்.
Roland Barthes", Contemporary literature (1968),
ா, வேள் பதிப்பகம், சென்னை.
ரிசனம், எழுத்து பிரசுரம், சென்னை.
ழ் இலக்கியமும், காவ்யா வெளியீடு, பெங்களூர்.
3
3.

Page 37
திருகோணமலையிற் ே சி. பத் 1. இலங்கையிற் சோழ இலங்கேஸ்வரன்
பத்தாம் நூற்றாண்டின் முடிவிலே, அருண் மொழிவர்மனாகிய முதலாம் இராஜராஜ சோழ னின் ஆட்சியில் (985 -1016), அயலிலுள்ள இராச்சியங்கள் பலவற்றைக் கைப்பற்றி வலிமைமிக்க பேரரசொன்றைச் சோழர்கள் அமைத்தார்கள். அவனுடைய ஆட்சியின் ஆரம்பத்திற் பாண்டிநாடு, சேரநாடு, இலங்கை, கொல்லம், கங்கபாடி, நுளம்பபாடி, வேங்கி ஆகியவற்றையும், மேற்கிலுள்ள தீவுக்கூட்டங் கள் சிலவற்றையுஞ் சோழர் கைப்பற்றிக் கொண்டனர்.
தமிழகத்திற்கு வடக்கிலுள்ள இராச்சி யங்கள் மீது சோழர் நடாத்திய படையெடுப்பு களுக்கு, இளவரசனான மதுராந்தகன் தலை மை தாங்கிச் சென்றான். அவன் போர்களில் ஈட்டிய சாதனைகளும் இராஜராஜன் காலத்தில் ஏற்பட்ட சோழரின் ஆதிக்கப் படர்ச்சிக்கு ஏது வாயிருந்தன. மதுராந்தகன் கங்கபாடி, வேங்கி என்னும் மண்டலங்களுக்குப் பொறுப்பான தண்டநாயகனாக நியமனம் பெற்றிருந்தான். அவன் துளுவம், கொங்கணம் ஆகிய நாடு களையும் கைப்பற்றியதோடு சேரனை அவனு டைய நாட்டிலிருந்தும் துரத்தினான்.?
மதுராந்தகனை கி. பி. 1012 ஆம் ஆண்டிலே துணையரசனாக முடிசூட்டினார்கள். அதன் பின் அவனுக்கு இராஜேந்திரன் என்னும் பட்டப்பெயர் உரியதாகியது. இராஜராஜன் இறந்தபின் கி. பி. 1016 ஆம் ஆண்டிலே இராஜேந்திரன், சோழச் சக்கரவர்த்தியாக முடிசூடிக் கொண்டான். அவனுடைய ஆட்சியிற் சோழராதிக்கம் உன்னத நிலையினை அடைந் தது. செல்வ வளத்திலும், ஆட்சித் திறனிலும், கலாசார மேம்பாட்டிலுஞ் சோழப்பேரரசு பரத கண்டத்திலே முன்னணியில் இருந்தது.
இராஜேந்திரனின் கங்கைப் படையெடுப்பு, கடாரப் படையெடுப்பு ஆகியன கவிவாணரி னாலும் அரண்மனை அதிகாரிகளினாலுஞ் சிறப்புமிக்க சாதனைகளாக நெடுங்காலம்
34

சாழ இலங்கேஸ்வரன் நாதன்
போற்றப்பட்டன. அவற்றின் காரணமாக முறை யே கங்கை கொண்ட சோழன், கடாரங்கொண்ட சோழன் என்னுஞ் சிறப்புப் பெயர்கள் அவனுக் குரியனவாகின. கங்கைப் படையெடுப்பினைத் திக்குவிசயம் என்று திருவாலங்காட்டுச் செப் பேடுகள் வருணிக்கின்றன. கங்கைப்படை யெடுப்பின் விளைவாக ஓங்கி உயர்ந்த தன் புகழைப் பரத கண்டத்தவர்க்கு உணர்த்தும் வண்ணமாகக் கங்கைகொண்ட சோழபுரம் என்னும் புதியதோர் இராசதானியை இராஜேந் திரன் அமைத்தான். அத்துடன் சோழகங்கம் என்னும் பெருந்தடாகத்தினையும் அவன் அமைத்தான். அதனை "ஜலமயமான ஜயஸ் தம்பம்” என்று திருவாலங்காட்டுச் செட்பேடுகள் வர்ணிக்கின்றன.
சோழப்பேரரசு சோழமண்டலம், ஜயங் கொண்ட சோழ மண்டலம் (தொண்டைநாடு), இராஜராஜப் பாண்டி மண்டலம், மலைமண்டலம் (சேரநாடு), அதிராஜராஜ மண்டலம் (கொங்கு தேசம்), முடிகொண்ட சோழமண்டலம் (கங்கபாடி), நிகரிலிச் சோழமண்டலம், (நுளம்பபாடி) ஈழமான மும்முடிச் சோழ மண்டலம், வேங்கி மண்டலம் என்னும் 9 பிரிவுகளைக் கொண்டிருந்தது. வேங்கியிற் சோழரின் ஆதரவுடன் கீழைச் சாளுக்கிய மரபினரான சக்திவர்மன், விமலாதித்தன் என்போரும் அவர்களின் வழியினரும் ஆட்சி புரிந்தனர். ஏனைய மண்டலங்கள் எட்டும் சோழரின் ஆட்சியின் கீழ் அமைந்திருந்தன.
அவற்றுள் ஒவ்வொன்றும் இராஜராஜனின் காலத்தில் அவனுடைய சிறப்புப் பெயர்களுள் ஒன்றினால் வழங்கியது. மண்டலங்கள் முன்பு தனித்தனி இராச்சியங்களாய் இருந்தமையும் குறிப்பிடத் தகுந்தது. இராஜேந்திர சோழன் மண்டலங்கள் சிலவற்றின் இராஜப்பிரதிநி களாக இளவரசரிற் சிலரை நியமித்தான். அத்தகைய இளவரசர் அரசர்க்குரிய பட்டாபி ஷேகம் பெற்று முடிசூடிக் கொண்டனர். அவர்களுள் ஒவ்வொருவரும் தாம் அதிகாரஞ் செலுத்திய நாட்டு வழமைகளுக்கு ஏற்பப்

Page 38
பட்டங்களைச் சூடிக்கொண்டனர்.
இராஜேந்திரனின் மகனாகிய சுந்தரசோழன் மதுரைக்குச் சென்று, அங்கு தங்கியிருந்து பாண்டி நாட்டின் மீது அதிகாரஞ் செலுத்தினான். அவனுடைய காலத்தில் மதுரை, இராஜேந்திர சோழபுரம் என்னும் புணர்நாமத்தைப் பெற்றது. அங்கு புதிதாக அமைக்கப்பெற்ற அரண் மனையில் அவன் தங்கியிருந்தான். அவனைச் சோழபாண்டியன் என்று குறிப்பிட்டனர். பாண் டிய மன்னர்களின் மாறிவரும் பட்டப்பெயர் களில் ஒன்றான ஜடாவர்மன் என்பதை அவன் சூடிக்கொண்டான். சோழபாண்டியரின் ஆட்சி, பாண்டி நாட்டில் முதலாங் குலோத்துங்க சோழனின் காலம் வரை (1070 -1122) நிலைபெற்றது.
இராஜேந்திர சோழனின் மக்களுள் வேறோருவனாகிய மதுராந்தகன் கங்கபாடி யான முடிகொண்ட சோழமண்டலத்திலே இராசப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டான். அவன் அங்கு அதிகாரம் பெற்று முடிசூடிக் கொண்ட போது சோழகங்கன் என்னும் பட்டப்பெயரை அவனுக்கு வழங்கினார்கள்.
இராஜேந்திரனின் குமாரர்களுள் ஒருவன் இலங்கைக்குச் சென்றிருந்தான். அவன் அங்கு அரசனாக முடிசூடிய பொழுது சோழ - இலங்கேஸ்வரன், சங்கவர்மன் என்னும் பட்டங் களைப் பெற்றான். திருகோணமலை மாவட்டத் திலுள்ள மானாங்கேணி, கந்தளாய் என்னும் ஊர்களில் மட்டுமே அவனுடைய காலத்துச் சாசனங்கள் கிடைத்துள்ளன.
இராஜராஜ சோழனின் காலம் முதலாகச் சோழர், பாண்டி நாட்டு வழமையினைப் பின்பற்றிப் பெருநிலப் பிரிவுகளைத் தங்கள் ஆவணங்களிலே வளநாடு என்று குறிப்பிட்டார் கள். நாடு என்னும் பல பிரிவுகளை உள்ளடக்கி யதே வளநாடு என்பதாகும். வளநாடுகளுக்குப் பெயரிடுமிடத்து அவற்றுக்கு அரசரின் பெயர் களையும் பட்டப் பெயர்களையும் வழங்கினார் கள். அத்தகைய வளநாடுகள் பல ஈழமான மும்முடிச்சோழமண்டலத்திலும் இருந்தன.
தமிழகத்து நாடுகள் பெரும்பாலானவற்றில் ஊர், தனியூர், சதுர்வேதிமங்கலம், நகரம்

என்ற பிரிவுகள் இருந்தன. அவற்றுள் ஒவ் வொன்றும் குறிப்பிட்ட எல்லைகளினுள் அமைந்த நிலப்பகுதியில் நிர்வாக அதிகாரங் கொண்டிருந்தது. நிலம், நீர்விநியோகம், கோயில், தேவதானம், அறநிலையம் முதலி யன பற்றிய நடவடிக்கைகளை அவை கவனித்து வந்தன. புரவு, வரிப்பொத்தகம் என்ற வகைகளுக்குரிய ஆவணத் தொகுதிகள் அவற்றின் வசமிருந்தன. ஊரிலுள்ளவர்களைப் பற்றியும் நிலங்களைப் பற்றியுஞ் சில விபரங் கள் அவற்றில் எழுதப்பட்டிருக்கும்.
சோழப் பேரரசின் பல பாகங்களிலுஞ் சைவம், வைணவம், சமணம், பெளத்தம் ஆகிய சமயங்களைப் பின்பற்றியவர்கள் வாழ்ந் தனர். தமிழகத்திற் சமணம், பெளத்தம் ஆகியவற்றின் செல்வாக்கு அருகி வந்தது. அவற்றைச் சேர்ந்த நிலையங்கள் அங்கும் இங்குமாகச் சில ஊர்களிலே காணப்பட்டன. சைவாபிமானிகளாய் விளங்கிய சோழர், சமணப்பள்ளிகளையும் பெளத்த விகாரங் களையுஞ் சில சமயங்களிலே கட்டியதோடு அவற்றுக்கு நிலங்களையும் வேறு பொருள் களையும் நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
சோழப் பேரரசர் காலத்துக்குரிய சிறந்த தமிழ் நூல்களிற் சில சமண, பெளத்த நூல்களாகும். சீவகசிந்தாமணி என்னும் பெருங் காப்பியமும், சூளாமணியும், நீலகேசியும், வளையாபதியும் இலக்கண நூல்களில் ஒன்றான நன்னூலுஞ் சமணரால் எழுதப் பெற்றவை. குண்டலகேசி என்னும் காவியமும் வீரசோழியம் என்னும் இலக்கணமும் பெளத் தரால் எழுதப்பெற்றவை. சோழ மன்னர் பலரைப் பற்றிய பாடல்கள் வீரசோழியத்தில் உள்ளன.
வைணவம் சோழராட்சியிலே தமிழகத்திற் சிறப்புற்று விளங்கியது. தமிழகத்தின் எல்லாப் பகுதிகளிலும் வைணவத் தலங்களும், பிற வைண்வ நிறுவனங்களுஞ் சீரான நிலையிற் காணப்பட்டன. ஆழ்வார்களின் பாடல்பெற்ற தலங்களிலும் பிறவிடங்களிலும் அமைந் திருந்த கோயில்கள், புனர்நிர்மாணமும் விரி வாக்கமும் பெற்றன. புதிய வைணவக் கோயில் களை அமைப்பதற்கும் பழைய கோயில்களிற்
۶ الاطاarg
莎
所科

Page 39
புதிய மண்டபங்களையும், கோபுரங்களையும், பிராகாரங்களையும் நிர்மாணிப்பதற்கும் சோழர் பல வழிகளிலும் ஆதரவு புரிந்தனர்.
நாதமுனிகள் என்னும் ஆச்சாரியார் ஆழ் வார்களின் பாடல்களைத் தேடிப்பெற்று அவற்றை நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் என்னுந் திரட்டாகப் பத்தாம் நூற்றாண்டிலே தொகுத்தனர். ஆழ்வார்களின் பாசுரங்களையும் திருப்பாவையினையும் வைணவக்கோயில் களில் ஒதுவது வழமையாகியது. நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், ஆண்டாள் முதலியோரின்’ படிமங்களைக் கல்லிலும் உலோகத்திலும் உருவாக்கி அவற்றை விண்ணகரங்களிலே தாபனஞ் செய்து, அவற்றுக்கு வழிபாடு நிகழ்த்தினார்கள். இராமாவதாரத்தின் மகிமை யினையும், வைணவங் கண்ட வாழ்க்கை நெறியினையும், ஈடும் எடுப்புமற்ற வகையிற் செப்புவதான கம்பராமாயணம் பன்னிரண்டாம் நூற்றாண்டிலே தோன்றியது. இக்காலத்தவரான பூரீ இராமானுஜர் ஆழ்வார்களின் பக்திநெறி யினை அடிப்படையாகக் கொண்டு வேதாந்தத் திற்குப் புதியதோர் வடிவஞ் செய்தனர். அவர் பரதகண்டத்தின் பல பாகங்களுக்குஞ் சென்று சமயவாதம் புரிந்து வைணவ சம்பிரதாயம் மேன்மைபெறச் செய்தார்.
சோழப் பெருமன்னர் காலத்திற் வைசமே தமிழகத்து மக்களிற் பெரும்பான்மையோரின் சமயமாக விளங்கியது. வெவ்வேறு நிலப்பகுதி களில் வாழ்ந்தவர்களையும், பல்வேறு தொழில் களில் ஈடுபட்டிருந்த சமுதாயப் பிரிவுகளையும், இணைக்குஞ் சக்தியாகவும் அது தொழிற்பட் டது. அரசர்களும் அரச குடும்பத்தைச் சேர்ந்த பிறரும் ஆலயங்களைப் புனரமைத்தும், புதி தாக அவற்றை நிர்மாணித்தும், அவற்றிலே நாள்வழிபாடுகளும் விழாக்களும் நடைபெறு வதற்கென நிவந்தங்களைச் செய்தும் வைவ சமயத்தை ஆதரித்தனர். அவர்களின் முன் மாதிரியைப் பின்பற்றி ஆட்சியதிகாரிகளும், குறுநில மன்னரும், வணிகரும் வேறு பலருந் திருப்பணிகள் பலவற்றை மேற்கொண்டனர்.
சோழ மன்னரின் முயற்சியால் அமைக்கப் பெற்ற ஈஸ்வரங்கள் நூற்றுக்கணக்கானவை. கோயில்களைக் கற்றளிகளாக அமைக்கும்
36

முறையினைச் சோழர்களே தமிழகமெங்கும் வழமையாக்கினார்கள். அதற்கு முன்பு மாமல்லபுரம், காஞ்சிபுரம் போன்ற சில நகரங்களில் மட்டுமே கற்றளிகள் அமைந் திருந்தன. சோழரின் ஆட்சியிற் கோயில மைப்புப் பெரிதும் வளர்ச்சி பெற்றது. ஓங்கியுயர்ந்த விமானங்கள், சித்திர வேலைப் பாடுள்ள தூண்கள் பொருந்திய மண்டபங்கள், கோபுர வாயில்கள், திருநடமாளிகைகள் முதலியன பொருந்திய கலைவனப்பு மிக்க கோயில்கள் பலவற்றைச் சோழப்பெருமன்னர் அமைத்தனர். அத்தகைய கோயில்களில் முதலாம் இராஜராஜன் (985- 1016), முதலாம் இராஜேந்திரன் (1012-1044), இரண்டாம் இராஜ ராஜன் (1146-1163), மூன்றாங் குலோத்துங்கன் (1178-1218) என்போரால் முறையே அமைக்கப் பெற்றவையான தஞ்சைப் பெருவுடையார் கோயில், கங்கை கொண்ட சோழேஸ்வரம், ஐராவதேஸ்வரம் என்னும் இராஜராஜேஸ்வரம், திரிபுவன விரேஸ்வரம் என்னுங் கம்பஹா ரேஸ்வரம் ஆகியவை மிகப் பிரதானமானவை. வனப்பில் இவற்றுக்கு நிகரான வேறு கோயில் கள் தென்னிந்தியாவில் அரிதாகவே உள்ளன.
சோழர் காலத்தில் நாயன்மார்களின் பாடல் பெற்ற தலங்களிற் கோயில்கள் புனரமைக்கப் பட்டன. சிதம்பரம், காஞ்சி, திருவாரூர், திரு விடைமருதூர், திருவையாறு முதலிய தலங் களில் விமானங்களும், பரிவாரதேவர் கோயில் களும், மண்டபங்களும் கற்றளிகளாக அமைக் கப்பட்டன. கோயில்கள் பலவற்றில் அமைக் கப்பட்ட மண்டபங்களும், மடங்களும், அறச் சாலைகளும் பெரும்பாலுஞ் சோழமன்னர்களின் பெயர்களால் வழங்கி வந்தன. தமிழகத்துக் கோயில்களிற் பெரும்பாலானவற்றுட் காணப் படும் சாசனங்கள் வழிபாடு, கோயில் நிர்வாகம், நிவந்தங்கள், தேவதானங்கள் என்பன பற்றிய விபரமான செய்திகளைக் கொண்டுள்ளன.
சோழர் காலத்திற் சைவசமயத்தில் ஏற்பட்ட பிரதான வளர்ச்சிகளுள் ஒன்று நாயன்மார் வழிபாடு ஏற்பட்டமையாகும். சமயகுரவரான நாயன்மார்கள் தெய்வாம்சம் பொருந்தியவர்கள் என்றும், வழிபாட்டுக்கு உரியவர்கள் என்றும், சைவர்கள் கருதினார்கள். நாயன்மார்களின்

Page 40
படிமங்களைக் கல்லிலும் உலோகத்திலும் உருவாக்கி அவற்றைக் கோயில்களிலே தாபனஞ் செய்து வழிபடும் வழக்கம் தோன் றியது. முதலாம் இராஜராஜன் தஞ்சையில் அமைத்த இராஜராஜேஸ்வரத்தில் நாயன்மார் பலரின் படிமங்கள், அரச குடும்பத்தவராலும் பிற பலராலுந் தாபனஞ் செய்யப்பட்டன. கண்டேஸ்வரரின் திருவுருவம் ஈஸ்வரங்களில் வழிபாடு செய்தற்பொருட்டுத் தாபனம் பண்ணப் பட்டது. சில தலங்களிற் சமய குரவருக்குத் தனிக்கோயில்கள் அமைக்கப்பெற்றன.
நாயன்மார் வழிபாடு வளர்ச்சி பெற்ற காலத்தில் அவர்களைப் பற்றிய தனியான இலக்கிய மரபொன்று உருவாகியது. சுந்தர மூர்த்தி நாயனாரின் திருத்தொண்டர்த் தொகை யினை அடிப்படையாகக் கொண்டு நம்பியாண் டார் நம்பி திருத்தொண்டர் திருவந்தாதி என்னும் பனுவலைப் பாடினார். அவரது காலத்தில் நாயன்மார்களைப் பற்றி உருவாகி யிருந்த ஐதிகங்களும் மரபுகளும் நம்பியின் மூலமாக இலக்கிய வடிவம் பெற்றன. திருச் சண்பை விருத்தம், ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி, ஆளுடைய பிள்ளையார் திரு வுலாமாலை முதலிய நூல்களிலே திருஞான சம்பந்தமூர்த்தி நாயனாரின் சிறப்புகளை நயம் பொருந்திய வண்ணம் பாடியுள்ளார். திருநாவுக் கரசர் திருவேகாதசமாலை என்னும் பனுவ லொன்றையும் அவர் இயற்றினார்.
பன்னிரண்டாம் நூற்றாண்டிலே சேக்கிழா ராற் பாடப்பெற்றதான பெரியபுராணம், நாயன் மார் வழிபாடு விருத்தி பெற்றிருந்த காலத்துப் பேரிலக்கியமாகும். தமிழகத்துச் சைவசமய வளர்ச்சியிலே திருத்தலங்களும், திருத்தொண் டரும், அருள்நெறியான பக்திநெறியும் பெற்றி ருந்த ஈடிலாச் சிறப்பினை உவமையிலாத வண்ணமாகச் செப்புகின்ற இலக்கியமாக அது விளங்குகின்றது.
சோழர் நிர்வாகத்தில் உயர்பதவியிலிருந்த வரிப்பொத்தகம் சேக்கிழார் மரபில் வந்தவரும் அரசசேவை புரிந்தவருமான சேக்கிழார், தமிழ கத்து ஊர்கள், தலங்கள், சமூகப்பிரிவுகள், நாட்டு வளம், வழமைகள், காலபருவங்கள் என்பவற்றை நன்கறிந்தவராக விளங்கினார்.

இலக்கண இலக்கியங்களிலும் யாப்பு, அணி இலக்கணங்களிலும் புலமை மிக்கவரான அவர், சைவசமய தத்துவங்களைப் பற்றியும் ஆசாரங்களைப் பற்றியும் ஆழமான அறி வினைக் கொண்டிருந்தார். நாயன்மாரின் சிறப்பு களைச் சைவசமய மரபுகளோடும் சமுதாய நிலைகளோடும் இணைத்து, எளிமையுந் தெளிவும் இனிமையுங் கலந்த கவிநடையிற் கூறிந் தனிப்பெரும் காப்பியமாய் அமைந்தது பெரியபுராணம்.
சோழர் காலத்துச் சைவசமய இலக்கி யங்களிலே பக்திப் பாடல்களுங் குறிப்பிடத்தக் கவை. சேந்தனார், திருமாழிகைத் தேவர், கருவூர்த்தேவர், திருத்தக்கதேவர், பட்டினத்துப் பிள்ளையார் முதலியோர் பாடிய இனிமையுங் கனிவுஞ்செறிந்த பாடல்கள் அக்காலத்துப் "பக்திநெறி சார்ந்த இலக்கியப் பாங்கினைப்
பிரதிபலிக்கும் கருவூலங்களாகும்.
ஒன்பதாம் நூற்றாண்டிலே தேவாரப் பாடல் களைக் கோயில்கள் சிலவற்றில் ஆராதனைக் காலங்களிற் படிப்பதற்கென அறக்கட்டளைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. பத்தாம் நூற்றாண்டு முதலாகத் தேவாரங்களைக் கோயில்களிற் பாடுவது பொது வழக்காகியது. கோயில்களில் ஒதுவார் பணிகளைக் கவனிப்பதற்கெனத் தேவாரநாயகம் என்ற அதிகாரி ஒருவன் நிய மிக்கப் பெற்றிருந்தான் என்பதை முதலாம் இராஜேந்திர சோழன் காலத்துச் சாசனங்கள் மூலமாக அறிய முடிகின்றது. கோயில்களிற் படிப்பதற்கும், ஒதுவார்க்குப் பயிற்சி அளிப்ப தற்கும், தேவாரங்களைக் காலாகாலம் புதிய ஏடுகளில் எழுதிவைக்க வேண்டியிருந்தது. இப்பணியை மேற்கொண்ட போது பழைய ஏடுகளைப் பெற்றுக் கொள்வது சிரமமாயிருந் தது. கிடைக்கக்கூடிய ஏடுகளும் செல்லரித்துஞ் சிதைந்துங் காணப்பட்டமையாலே தேவாரப் பதிகங்கள் நாளடைவிற் கிடைக்கப் பெறாது ஒழிந்துவிடும் என்ற அச்சம் ஏற்பட்டிருத்தல் கூடும். அதன் விளைவாகவே தேவாரப் பதிகங்களை எழுதி வைத்துள்ள ஏடுகளைப் பரிசோதிக்கலாயினர். திரு முறைத் தொகுப் புக்குத் தேவையான அடிப்படை வேலைகள் பலரின் நீண்டகால முயற்சியாக அமைந்
37

Page 41
திருத்தல் வேண்டும். ஆயினும் திருமுறை கண்ட புராணம், இராசராசன் என்னும் அரசனும், திருநாரையூர்ப் பொல்லாப் பிள்ளையார் கோயில் அர்ச்சகரான நம்பியாண்டார் நம்பியும் இதற்குப் பொறுப்பாக விருந்தனர் எனக் குறிப்பிடுகின்றது. முதலாம் இராஜராஜனின் காலத்தில், அவனுடைய ஆதரவுடன், நம்பியின் தலைமையிலான குழுவொன்று திருமுறை களைத் தொகுக்கும் பணியினை நிறைவேற்றி யது என்று கொள்வது ஒரு. பொருத்தமான முடிபாதல் கூடும். முதலேழு திருமுறைகளே இவர்களாலே தொகுக்கப்பட்டன என்ற கருத்து அறிஞர் பலராலும் இந்நாட்களிலே வற்புறுத்தப் படுகின்றது. காலப்போக்கில் திருமுறைகள் பன்னிரண்டு ஆகின.
2. இலங்கையிற் சோழர்
முதலாம் இராஜராஜனது 8ஆம் ஆண்டள வில் இலங்கையின் வட பகுதியைச் சோழர் கைப்பற்றிக் கொண்டனர். மாதோட்டம், பத வியா, திருகோணமலை ஆகிய இடங்களிலுந் தஞ்சைப் பெருவுடையார் கோயிலிலுமுள்ள அவனுடைய காலத்துச் சாசனங்கள் இலங்கை யின் வடபகுதியில் இராஜராஜனின் ஆட்சி நிலவியதற்குச் சான்றாயுள்ளன. சோழராலே கைப்பற்றப்பட்டிருந்த இலங்கையின் பகுதி யினை ஈழமான மும்முடிச் சோழமண்டலம் என்று சோழர் குறிப்பிட்டனர். இராஜராஜனின் ஆட்சியில் ஈழமான மும்முடிச்சோழ மண்டலம் வளநாடு என்ற பிரிவுகளாகப் பகுக்கப்பட்டிருந் தது. அவற்றிலே நிாவாகப் பொறுப்புக்களை மேற்கொண்டிருந்த சோழப் பிரதானிகளும், வணிகரும், படையாரும், கோயில்களை அமைத்து அவற்றுக்கு நிவந்தங்களை வழங்கி யிருந்தனர்.
முதலாம் இராஜேந்திர சோழனின் 5ஆம் ஆண்டிலே (1017) ஐயங்கொண்ட சோழ மூவேந்தவேளான் என்னுஞ் சேனாதிபதி தென் னிலங்கையிலே தங்கிருந்த மகிந்த மன்னனை யும் அவனது தேவியையும், அவர் களின் முடி முதலான அணிகலன்களையும், முன்பு ஒரு நூற்றாண்டுக்கு முன்பாகத் தென்னவனான இராஜசிம்மன் சிங்கள மன்னரிடம் அடைக்கல
38

மாக வைத்திருந்த பாண்டியரின் முடி முதலான அணிகலன்களையுங் கைப்பற்றிக் கொண்டு போய்ச் சோழ மன்னனிடம் ஒப்படைத்தான்." அப்படையெடுப்பின் விளைவாக இலங்கையிற் சோழராதிக்கம் விரிவு பெற்றது. தக்கிண தேசத்தின் வடபகுதியிலும் உறுகுணையின் கிழக்குக் கரையோரப்பகுதியிலுஞ் சோழரின் ஆதிக்கம் ஏற்படலாயிற்று. இவ்விதமாக வளர்ந்த சோழரின் ஆதிக்கம் கி. பி 1070ஆம் ஆண்டளவில் முதலாங் குலோத்துங்க சோழன் அரசனாகும் வரை இலங்கையில் நிலை பெற்றது.
தென்னிந்தியச் செல்வாக்கு முன்னொரு காலத்திலும் காணப்படாத அளவில் இலங்கை யில் ஏற்பட்டது. சோழர் அமைந்த நிர்வாக நிலையங்களிலும் படைத்தளங்களிலும் பெரு மளவிலே நிர்வாக சேவையாளரும் படை யினரும் சென்று தங்கியிருந்தனர். நானாதேசி வணிகர் அக்காலத்தில் இலங்கையின் உள் நாட்டு வாணிபத்திலும், அயல்நாட்டு வாணிபத் திலும் பெரும்பங்கு கொண்டிருந்தனர். அவர் களால் அமைக்கப்பெற்ற வணிக நிலையங் களும் அவற்றைச் சூழ்ந்த குடியிருப்புக்களுங் காலப்போக்கில் நகரங்களாக வளர்ச்சி பெற்றன. அவற்றிலே தென்னிந்தியாவிலிருந் துஞ் சென்ற பல்வேறு வணிகர் குழாங்களும் போர்வீரர்களும் உற்பத்தியாளரும் கூடி வாழ்ந் தனர். இத்தகைய வளர்ச்சிகளினால் இலங் கைச் சமுதாயத்திற் குறிப்பிடத்தக்க மாற்றங் கள் ஏற்பட்டன. சோழராட்சியில் இவ்விதமாக இலங்கையில் ஏற்பட்ட குடியேற்றங்கள் அங் குள்ள பூர்வீகத் தமிழ்க் குடிகளோடு சங்கமமா கின. சோழப்பெருமன்னர் காலத்திலே தென்னிந் தியாவில் வளர்ச்சிபெற்ற சமய, கலாசார மரபுகள் இலங்கையிற் பரவலாயின. பத்தாம் நூற்றாண்டு முதலாகத் தமிழகத்தில் வழக் கிலிருந்த ஆலய வழிபாட்டு நெறிகளையும் கட்டிட-சிற்ப முறைகளையும், இலக்கிய மரபு களையும் சோழர் காலத்திற் சென்று இலங்கை யிற் குடிபுகுந்தவர்கள் அங்கு அறிமுகஞ் செய்தனர். அதன் பயனாக இலங்கையில் வளர்ச்சி பெற்ற இந்து கலாசாரத்தை அக் காலத்துக் கோயில்கள் பிரதிபலிக்கின்றன.

Page 42
21 மாதோட்டமான இராஜராஜபுரத்துக்
கோயில்கள்
அருண்மொழித்தேவ வளநாட்டு மாதோட்ட மான இராஜராஜபுரத்தில் இராஜராஜ - ஈஸ்வரம், திருவிராமீஸ்வரம் என்னுமிரு கோயில்கள் அக்காலத்தில் அமைக்கப்பட்டிருந்தன. இலங் கையிலிருந்த சோழப் பிரதானிகளில் ஒரு வனான சோழமண்டலத்துச் ஷத்திரிய சிகா மணி வளநாட்டு வேளார்நாட்டுச் சிறுகூற்ற நல்லூர் கிழவன் தாழிகுமரன் என்பவனால் இவற்றுள் முதலாவது கோயில் அமைக்கப் பட்டது. அதற்கு இறையிலித் தேவதானமாக மாதோட்டத்தில் நிலம் வழங்கப்பட்டது. அந் நிலம் இராஜராஜப் பெருந்தெருவுக்குக் கிழக் கிலும் கம்மாணச்சேரிக்குத் தெற்கிலும் அமைந் திருந்தது. "இவ்வூர்க்குடி குன்றன் தாமன் இருந்த மாளிகையும் விடும் தோட்டமும் நீங்கலர்க"வே நிலம் கோயிலுக்குக் கொடுக்கப் பட்டது. அத்துடன் அரசாங்கத்துக்குரிய வரு மானங்களும் நிவந்தமாகத் தாழிகுமரனாற் கோயிலுக்குக் கொடுக்கப்பட்டன. மாதோட்டத் தில் நெசவாளரிடமிருந்து மாதந்தோறுந் தறி யொன்றினுக்கு அரைக்கால் அக்கம் வரியாகக் கொள்ளப்பட்டது. வாணிபத்தில் விற்பானிடத் துங் கொள்வானிடத்தும் ஒவ்வொரு காசு பெறுமதியான பொருளுக்கும் ஒவ்வொரு வட்ட மாக வரியிறுக்கப் பெற்றது. அரசாங்கத்துக் குரிய இவ்வரிகளைக் கோயிலுக்குக் கொடுக்க வேண்டுமென்று தாழிகுமரன் பிரகடனஞ் செய்தான்."
கோயிலுக்கு வழங்கப்பெற்ற நன்கொடை களினின்றும் வரும் வருமானத்தைக் கொண்டு ஒவ்வொரு காலத்துக்கும், மூன்று நாழியரி சியாக நாள்தோறும் ஆறுநாழி அரிசியும் திருவமிர்து அடுவிக்கும் பிராமணர் இருவருக்கு நாள்தோறும் எட்டுநாழி நெல்லும் கொடுக்க வேண்டுமென்றும், "வைகாசி விசாகம் ஏழு நாளும்" விழா எடுத்துத் தீர்த்தம் ஆட்டுவிக்க வேண்டுமென்றும் தாழிகுமரன் அறக்கட்டளை ஏற்படுத்தியிருந்தான். இவற்றைக் குறிப்பிடும் சாசனம் திருக்கேதீஸ்வரத்திற் காணப்பெற்ற தாலும் இராஜராஜ-ஈஸ்வரம் மாதோட்டத்தில் இருந்ததென்று சாசனங் கூறுவதாலும் பாடல்

பெற்ற தலமான திருக்கேதீஸ்வரத்திற் புதிய கோயிலொன்றைத் தாழிகுமரன் அமைத்தா னென்று சிந்திக்கலாம். h
திருவிராமீஸ்வரம் என்னும் சிவாலய மொன்றும் மாதோட்டத்தில் அமைந்திருந்தது. இராஜேந்திர சோழனின் "பெருந்தனத்துப் பணி மகன்" சிறுகுளத்தூருடையான் தேவன் ஆக்கோயிலிற் சந்திவிளக்கு எரிப்பதற்கு ஏற்பாடுகள் செய்திருந்தான். அத்தர்மத்தில் பொருட்டு மூன்று வணிக கணங்களிடம் அவன் காசினை ஒப்படைத்திருந்தான்." நகரத் தார் என்போரின் ஒரு பிரிவினரான சங்கர பாடியரிடம் இரண்டு காசும், வெற்றிலை வாணியரிடம் ஒரு காசும், வாழைக்காய் வாணியர் வசம் ஒரு காசும், முதலிருப்பாக அவனாற் கொடுக்கப்பட்டன. தாம் பெற்றுக் கொண்ட காசின் வட்டியினைக் கொண்டு கோயிலிற் சந்திவிளக்கு எரிப்பதற்கு வணிக கணங்கள் மூன்றும் பொறுப்பேற்றன. மாதோட் டத்திலிருந்த வணிகர் கோயில் விவகாரங் களோடு நெருங்கிய தொடர்பினைக் கொண்டிருந்தமை கவனித்தற்குரியது.
22 உத்தமசோழ ஈஸ்வரம், பண்டிதசோழ
ஈஸ்வரம்
உத்தமசோழ ஈஸ்வரம் என்னுஞ் சிவாலயத்தைப் பற்றி வடமத்திய மாகாணத்துக் கடவத்கோறளையிலுள்ள ஆத கட என்னும் ஊரிற் கண்டெடுக்கப்பெற்ற கல் வெட்டினால் அறியமுடிகின்றது. அது இராஜ ராஜனுக்கு முன்பு அரசனாயிருந்த உத்தம சோழனின் பெயரால் வழங்கியது. அக்கோ யிலை 11ஆம் நூற்றாண்டில் இலங்கை யிலிருந்த தமிழ்ப்பிரதானிகள் அமைத்தனர். அரங்கன் இராமேசன் என்பான் கோயிலுக்கு ஒரு வேலி நிலமும் நந்தா விளக்கொன்றினை எரிப்பதற்கு 20 பசுக்களையும் 5 சந்தி விளக்கெரிப்பதற்கு 50 தென்னைகளையும் தானமாகக் கொடுத்தான். உத்தமசோழன் மண்டபம் என்ற பெயருடைய கட்டிடமொன்று பொலநறுவையிலுள்ள கோயிலொன்றில் இருந்தது. நந்தி கிரிஞ்சதன் என்பவனுடைய கட்டளைப்படி மாதேவன் என்ற வேளைக்காரன்
39

Page 43
அதனைக் கட்டுவித்தான்."
மண்டலகிரி (மதிரிகிரி) யான நித்தவிநோத புரத்திற் பண்டிதசோழ ஈஸ்வரம் என்னும் சிவாலயமொன்று அமைந்திருந்தது. இளைய மும்முடிச்சோழ அணுக்கர் என்ற படைப்பிரி வைச் சேர்ந்த ஒருவன் தன்மகன் நாராயணன் பேரிலான தர்மமாக எரிப்பதற்கு நந்தாவிளக் கொன்றினையும் 26 பசுக்களையுந்தான்ம் பண்ணியமை பற்றி இராஜேந்திர சோழனின் காலத்துக் கல்வெட்டொன்றினால் அறிய முடிகின்றது.*
23 வானவன் மாதேவிஸ்வரம்
புலத்திநகரமான பொலநறுவை, ஜனநாத மங்கலம் என்னும் புனர்நாமம் பெற்றுத் தலைமை நிர்வாக நிலையமாக விளங்கியது. அங்கு இந்து கலாசாரத்தின் செல்வாக்கு குறிப்பிடத்தக்க அளவில் ஏற்பட்டது. தென்னிந் தியாவிலிருந்து சென்ற நிர்வாக அதிகாரிகளும், படையினரும், நானாதேசி வணிகரும், தொழில் வினைஞரும், அந்தணரும் வேறு பல சமூகப் பிரிவினரும் அங்கு வாழ்ந்தனர். அத்தகை யோரின் வழிபாட்டுத் தேவைக்கெனப் பல கோயில்கள் அமைக்கப்பட்டன. இருபதுக்கும் மேலான சபை, வைணவக் கோயில் கள் பொலநறுவையில் இருந்தமைக்கான சான்று கள் கிடைத்துள்ளன. அவற்றுட் சில சோழராட் சிக் காலத்தில் அமைக்கப்பட்டவை; ஏனைய வை பிற்காலத்தவை.
தொல்லியலாளர் இரண்டாம் சிவாலயம், ஐந்தாம் சிவாலயம், ஆறாம் சிவாலயம் என்று வர்ணித்த கட்டிடங்களிற் சோழர் காலத்துத் தொல்பொருட சின்னங்கள் கிடைத் துள்ளன. இரண்டாம் சிவாலயமான வானவன் மாதேவிஸ்வரம் அழிவுறாது இன்றும் சீரான நிலையிலுள்ளது. இலங்கையிலுள்ள, இன்று வரை நிலைபெறும் இந்துக் கோயில்களின் கட்டிடங்களிலே இதுவே மிகப் பழைமை யானதாகும். அழகும் உறுதியுங் கொண்ட கற்றளியாக அமைக்கப்பெற்றதான இக்கோ யில் சோழர் கலைப்பாணியின் சீரிய பண்பு களுக்குச் சிறந்தவோர் எடுத்துக்காட்டாக
40

விளங்குகின்றது. அதில் முதலாம் இராஜேந்திர சோழனின் சாசனங்கள் இரண்டும் அதி ராஜேந்திரன் காலத்துச் சாசனங்கள் இரண்டுங் காணப்படுகின்றன." அவற்றுள் இராஜேந்திரன் காலத்தவை மிகவுஞ் சிதைவடைந்துள்ளன. அதிராஜேந்திரனின் சாசனங்களுள் ஒன்று மெய்கீர்த்திப் பகுதியினை மட்டுமே கொண் டுள்ளது. மற்றையது, குறிப்பிடத்தக்களவு நீளமானது. அதிலே 23 வரிகள் உள்ளன. எழுத்துக்களுஞ் சொற்றொடர்களும் இடை யிடையே சிதைந்துள்ள போதும் சாசனத்தின் பெரும்பகுதி வாசித்தறிந்து கொள்ளக்கூடிய நிலையிலுள்ளது. சோழராட்சிக் காலத்துக் கோயிலொன்றின் நிறுவன அமைப்பினைப் பற்றிய விபரங்கள் சிலவற்றைப் பதிவு செய்துள்ள ஆவணம் என்ற வகையில் அது மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது.
அதிலே குறிப்பிடப்படுங்கோயில் வானவன் மாதேவி என்னும் அரசியின் பெயரினைக் கொண்ட வானவன்மாதேவிஸ்வரம் என வழங் கியது. இரண்டாம் பராந்தகனாகிய சுந்தர சோழன் (957-970), முதலாம் இராஜராஜன், முதலாம் இராஜேந்திரன் ஆகியோரின் பட்டத் தரசிகள் வானவன் மாதேவி என்னும் பெயரைக் கொண்டிருந்தனர். இம்மூவருள்ளும் சுந்தர சோழனின் தேவியும் இராஜராஜனின் தாயாரு மாகிய வானவன் மாதேவி அதிக பாராட்டினைப் பெற்றிருந்தாள். அவளுடைய படிமமொன்று மகளாகிய குந்தவைப் பிராட்டியினாலே தஞ் சைப் பெருங்கோயிலிற் பிரதிட்டை செய்யப் பெற்றிருந்தது." சுந்தரசோழனுடைய பட்டத்தர சியின் பெயராற் பொலநறுவையிலுள்ள வானவன் மாதேவிஸ்வரம் அமைக்கப்பெற்றிருத் தல் கூடும்.
அங்குள்ள அதிராஜேந்திர சோழனுடைய கல்வெட்டின் மூலம் தென்னிந்தியக் கோயில் களிற் போல இலங்கையிலுள்ள சில சைவக் கோயில்களிலும் கோயில் நிர்வாக முறை சோழரால் ஏற்படுத்தப்பட்டிருந்தது என்பது தெளிவாகின்றது. பன்மாகேஸ்வரர் என்ற சிவனடியார் கூட்டம் பற்றி அதிலே கூறப்படு கின்றது. தானதருமங்களையும் கோயில் விவகாரங்களையும் மேற்பார்வை செய்தல்

Page 44
பன்மாகேஸ்வரரின் மரபுவழியான உரிமை யாகும். பன்மாகேஸ்வரர் ரக்ஷை என்ற தொடர் கோயிற் சாசனங்களின் இறுதியிற் காணப்படு கின்றமையுங் குறிப்பிடற்குரியது.
பதிபாத மூலப் பட்டுடைப் பஞ்சாசாரிய வேதகன்மிகள் என்ற குழுவினர் வானவன் மாதேவிஸ்வரத்தில் இருந்தனர். மூலஸ்தானத் தில் ஆராதனை முதலான கருமங்களைப் புரிகின்ற அந்தணரை அவ்வாறு அழைத்தனர். கோயிற் பணிகளைச் செய்கின்ற பரிசாரகர் என்னும் பணிமக்களும் அக்கோயிலிற் கடமை புரிந்தனர். மாணிக்கம் என்னும் பட்டம் பெற்ற தேவரடியார் பலர் வானவன் மாதேவிஸ்வரத்தில் இருந்தனர். கங்கை கொண்ட சோழ மாணிக்கம், காமந்திருவியான கோதுகுல மாணிக்கம், கோவிந்தன் ஆடவல்லானான நாற்பத் தெண்ணாயிர மாணிக்கம், தேவன் காமியான இராஜேந்திர சோழ மாணிக்கம், தேவன் உய்யவந்தானான முடிகொண்ட சோழ மாணிக்கம் என்னும் தேவரடியாரை அங்குள்ள சாசனங் குறிப்பிடுகின்றது.
அக்கோயிலில் விளக்கெரிப்பதற்குச் சோழ மண்டலத்து விற்பேட்டுநாட்டு மங்கலப்பாடி வேளான் சோழ பல்லவரையன் என்னும் பிரதானி ஏற்பாடு செய்திருந்தான். அதற்கென 5 காசும் "இரு காணே நால்விரல் நீழத்துத் தாராநிலை விளக்கு" ஒன்றும் அவனால் வழங்கப்பட்டன. திருவாராதனை செய்வாரும் பரிசாரகரும் பன்மாகேஸ்வரக் கண்காணி செய்வாரும் நாட்டவரும் தேவரடியாரும் என் றென்றும் இடையறாது விளக்கெரிப்பதாகச் சம்மதித்துக் காசினைப் பொறுப்பேற்றனர்."
பொலநறுவையிற் சோழரமைத்த பிற கோயில்களின் பெயர்கள் தெரியவில்லை. அங்குள்ள 5ஆம் சிவாலயத்தின் அழிபாடு களிடையே சோழப்பிரதானிகள் சிலரின் பெயர்களைக் குறிப்பிடும் கல்வெட்டுகள் காணப்பெற்றன. அவற்றின் மூலமாக அக்கோ யிலும் சோழராட்சிக் காலத்திற்குரியது. பொல நறுவையிலிருந்த இந்துக் கோயில் களுள் அதுவே பெரியதாக விளங்கியது. அதன் அழிபாடுகளுஞ் சுற்றுப்புறங்களும் அகழ்ந்தாரா யப்பட்ட போது கல்லிற் செதுக்கப்பட்ட 8

படிமங்களும்" வெண்கலப் படிமங்களும் கண்டெடுக்கப் பெற்றன. நடராஜர், தக்ஷணா மூர்த்தி, கணேசர், விஷ்ணு, காளி, சப்தமாதர் ஆகியோரின் படிமங்களும் நாயன்மார் சிலரின் படிமங்களும் அவற்றிடையே காணப்பட்டன. "6ஆம் சிவாலயத்தின் அழிபாடுகளுக்கிடை யிலும் சோழர் கலைப்பாணியிலமைந்த நடரா ஜரின் வெண்கலப் படிமமொன்றும் அக்காலத் துக்குரிய வரிவடிவங்களிலான" பரீ ஆண் பிள்ளை பெருமாள், என்ற பெயர் பொறிக்கப் பட்ட மணியொன்றுங் கிடைத்தன.*
வடகிழக்கிலங்கையிலுங் குறிப்பாகக் கோணேஸ்வரத்திலுஞ் சோழர் மேற்கொண் டிருந்த சைவசமயந் தொடர்பான நடவடிக்கை களைப் புரிந்து கொள்வதற்கு இதுவரை கவனித்த விபரங்கள் அடிப்படையானவை.
3. சோழ இலங்கேஸ்வரனும்
கோணேஸ்வரமும்
இலங்கையின் வடகிழக்குப் பகுதியிலே, திருகோணமலை, கந்தளாய், பதவியா என்ப வற்றை உள்ளடக்கிய முக்கோணத்திலே, சோழராட்சிக் காலத்திற்குரிய தொல்பொருட் சின்னங்கள் பல கண்டெடுக்கப் பெற்றுள்ளன. இலங்கையில் இதுவரை கிடைத்துள்ள சோழர் காலத்துச் சாசனங்களிற் பெரும்பாலானவை இப்பகுதியிற் கிடைத்துள்ளன. ஈழமான மும் முடிச்சோழ மண்டலத்திலுள்ள ஆறு வளநாடு களைப் பற்றி மட்டுமே சாசனங்கள் மூலம் அறியமுடிகின்றது. அவற்றுள் நான்கு பிரிவுகள் இப்பிராந்தியத்தைச் சேர்ந்தனவாகும். கணக் கன் கோட்டியாரமான விக்கிரம சோழ வளநாடு, மாப்பிசும்பு கோட்டியாரமான இராஜராஜ வள நாடு என்னும் பிரிவுகள் கோட்டியாரம் பற்றில் இருந்தன. கந்தளாய்ப் பிரமதேயமான இராஜ ராஜ சதுர்வேதிமங்கலமும் திருகோண மலை நகரமும் இராஜேந்திர சோழ வளநாட்டில் அடங்கியிருந்தன. இராஜவிச்சாதிர வளநாடு, மும்முடிச்சோழ வளநாடு என்பன அதன் மறு பெயர்களாகும். இராஜராஜப் பெரும் பள்ளி யான வெல்காமத்து விகாரம் அமைந் திருந்த மாணாவத்துளா நாடு, அபயாஸ்ரய வளநாடு என்பதன் பிரிவாயிருந்தது. அதனை இராஜேந் திரசிங்க வளநாடு, வீரபரகேசரி வளநாடு
41

Page 45
என்னும் பெயர்களாலுங் குறிப் பிட்டனர்? அது பிற்காலத்திற் கட்டுக்குளம் பற்று என வழங்கிய பிரிவின் பகுதிகளை உள்ளடக்கி யிருந்தது.
பதவியா, திருகோணமலை, கந்தளாய் ஆகிய மூன்றும் நகரங்களாய் விளங்கின. இந்து கலாசார நிலையங்கள் அவற்றிலே குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சி பெற்றிருந் தன. அங்கு சோழர் அமைத்த படைநிலை களும், நானாதேசி வணிகர் உருவாக்கிய வணிக நிலையங்களும் பதவியா பதினோராம் நூற்றாண்டிலே நகரமாக வளர்ச்சி பெறுவதற்கு வழிவகுத்தன. அது மத்திய காலத்தில் அரண்கள் பொருந்திய நகரமாய் விளங்கிய தென்பதைத் தொல்பொருட் சின்னங்கள் மூலம் அறிய முடிகின்றது. இலங்கைத் தொல் பொருட்டிணைக்களத்தினர் பதவியாவில்'ஐந்து சிவாலயங்களின் அழிபாடுகளை அடையாளங் கண்டுள்ளனர். அவற்றுள் முதலாஞ் சிவால யத்தின் அழிபாடுகளிடையே சோழராட்சிக் காலத்திற்குரிய 5 கல்வெட்டுகள் காணப் பெற்றன. அக்கோயிலின் பெயர் இரவிகுல மாணிக்க-ஈஸ்வரம் என்று அவற்றுளொன்றிற் கூறப்பட்டுள்ளது. அதன் அத்திவாரக் கற்களில் மேல்வருஞ் சாசனங்கள் உள்ளன?
1. நாராயணன் திருச்சிற்றம்பலமுடையான்
இட்ட கல்லு.
2. ஸ்வஸ்தி முறி இக்கல்லு வருதன் திருமால் இட்டது. இக்கல்லு அழகன் வத்தரமாராஸ் வயன் இட்டது.
3. ஸ்வஸ்தி ரீ இக்கல்லு அழகன் வத்த மானான தேசியாயத் துணைச் செட்டி இட்டது.
4. ஸ்வஸ்தி பூரீஇக்கல்லு (பதியில்) வணிகன்
தனி அப்பன் இட்டது.
கோயிலுக்கு அத்திவாரக் கற்களை இட்ட வர்களின் பெயர்களை இச்சாசனங்கள் குறிப் பிடுகின்றன என்பது அவற்றின் வாசகங் களினாலே தெளிவாகின்றது. இரவிகுல மாணிக்க ஈஸ்வரத்தை அமைத்தவர்களில் நாராயணன் வருதன் திருமால், அழகன்
A2

வத்தரமாராஸ்வயன், அழகன் வத்தமான், தனி அப்பன் ஆகிய ஐவரும் பிரதானமான வர்களாவர். அவர்களில் இருவர் வணிகர். அவ்விருவருள்ளும் அழகன் வத்தமான் என் பான் நானாதேசி வணிகன். நாராயணன் சிற்றம்பலமுடையான் நிர்வாக அதிகாரிகளில் ஒருவனாதல் கூடும். இரவிகுலமாணிக்க ஈஸ்வர மானது இராஜராஜனது காலத்திலே பதவியா விலிருந்த நானாதேசி வணிகராலும் நிர்வாக அதிகாரிகளினாலும் அமைக்கப் பெற்றது என்பது அதன் அழிபாடுகளிற் காணப்படும் சாசனங்களினால் உணரப்படுகின்றது.
அவனுடைய காலத்தில் நிர்வாக அதிகாரி களும், படையினரும் நானாதேசி வணிகரும் கோயிலுக்குப் பல நன்கொடைகளை வழங்கி யிருந்தனர். தானங்கொடுத்தோருள் உடையான் என்னும் பதவிப் பெயரைக் கொண்ட பலரிருந் தனர். பாலைப்பாக்கமுடையான் பட்டமொன்றும் பொற்காசுங் கொடுத்தான். மருங்கூருடையான் கோயிலுக்குத் தானமாகப் பொன் கொடுத்தான். நானாதேசியான கொண்ணாவில் வெண்காடன் வெண்கல எறிமணி ஒன்றினையும் வெண்கல மணியொன்றினையுந் தானம் பண்ணினான். சமகாலத் தென்னிந்தியச் சாசனங்களில் வழமையாக வரும் நக்கன், தேவன், சாத்தன் என்னும் பெயர்கள் பதவியாவிலுள்ள இராஜ ராஜனின் 26 ஆம் ஆண்டுச் சாசனத்தில் உள்ளமை குறிப்பிடத்தகுந்தது.
கந்தளாயிலுந் திருகோணமலையிலும், சமய நிறுவனங்களையும் கோயில்களையும் அமைப்பதிலும் பராமரிப்பதிலுஞ் சோழர் ஈடுபட்டிருந்தனர். இற்றைக்கு 20 வருடங் களுக்கு முன் திருகோணமலை மாவட்டத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சாசனங்கள் சில ந. தம்பிராசா, செ. குணசிங்கம் என்போராற் கண்டுபிடிக்கப் பெற்றன. அவற்றுள் இரண்டு சாசனங்கள் சோழ இலங்கேஸ்வரன் என்னும் அரசனின் காலத்தவை. பதினோராம் நூற் றாண்டின் முற்பகுதியிலே சோழவம்சத்து இளவரசனொருவன் இலங்கையிலே அரசனாக முடிசூடியிருந்தான் என்பது அவற்றினால் அறியப்படுகின்றது. மானாங்கேணி, கந்தளாய் என்னுமூர்களிலுள்ள சாசனங்கள் சோழ

Page 46
இலங்கேஸ்வரனைக் கோ என்றும், உடையார் என்றும், சங்கவர்மன் என்றும் வர்ணிக்கின்றன. அத்துடன், அவனுடைய ஆட்சியாண்டுகளை யும் அவை குறிப்பிடுகின்றன. எனவே அரசருக் குரிய விருதுகளையும் பட்டப்பெயர்களையும் கொண்டிருந்த சோழ இலங்கேஸ்வரன், பாண்டி நாட்டிலிருந்த சோழ பாண்டியர்களைப் போல, ஈழநாட்டில் முதலாம் இராஜேந்திர சோழனின் காலத்திற் சோழச்சக்கரவர்த்தியின் பிரதி நிதியாகவிருந்து அதிகாரஞ் செலுத்தினான் என்பது தெளிவாகின்றது.
சோழ இலங்கேஸ்வரனின் ஆட்சியாண்டு களில் எழுதப்பெற்ற சாசனங்கள் இரண்டும் சிதைவுற்ற நிலையிலுள்ளன. மானாங்கேணிக் கல்வெட்டின் ஒரு சிறிய பகுதி மட்டுமே கிடைத்துள்ளது. அத்துடன் சாசனம் பொறிக் கப்பட்ட தூணின் இரு ஓரங்களும் வெட்டப் பட்டுள்ளன. அதனால் ஒவ்வொரு வரியிலுஞ் சராசரியாக 6 எழுத்துகள் மறைந்து விட்டன. இச்சாசனத்தை வாசித்து வெளியிட்டவரான செ. குணசிங்கம் அதன் வாசகத்தை மேல் வருமாறு எழுதியுள்ளார்."
1............ றி சோழ இல. 2.தேவற்கு யாண்டெ. 3.டி.சோழ மண்ட். 4.........ஜந்த்ர சோழ வள. 5.சோழ வளநா. 6.மலையூரீ.மச்சு. 7.முலஸ்தானமு. 8.......... வர முடையார். 9.ள மண்டலத்தி.
இச்சாசனம் தமிழும் கிரந்தமுங் கலந்த எழுத்துக்களில் அமைந்துள்ளது. ஆறாவது வரியிலுள்ள கிரந்த எழுத்துக்களை மச்சு எனக் குணசிங்கம் கொண்டமை பொருத்த மானதாகத் தோன்றவில்லை. சமஸ்கிருத மொழியில் மச்சு என்ற சொல் பொருள் குறிப்பதாக அமையாது, கிரந்த எழுத்துக் களிலுள்ள அச்சொல்லினை மத்ஸ்ய என்ற சமஸ்கிருதச் சொல்லாகக் கொள்வதே பொருத் தமானது. அச்சொல்லினைத் தொடர்ந்து ஏகாரத்தைக் குறிக்கின்றதான குறி காணப்படு வதால் மத்ஸ்யகேஸ்வரம் என்ற கோயிலின்

பெயரையே சாசனங் குறிப்பிடுகின்றது என்று கொள்ளவேண்டும். மத்ஸ்ய என்ற சொல்லுக்கு முன்பாக மலை என்னுஞ் சொல் காணப்படு கின்றமை அதனை உறுதி செய்கின்றது. மலை என்பதற்கு முன்பாக அமைந்திருந்து அழிந்து போன எழுத்துக்கள் திருகோண என்றிருத்தல் வேண்டும். ஆகவே மானாங் கேணிக் கல்வெட்டுத் திருகோணமலை மத்ஸ்ய கிேஸ்வரம் பற்றிக் குறிப்பிடுவதாய் அமைந்த தென்று கொள்வது சாலப் பொருந்தும். இத் தகைய விளக்கமானது நிலாவெளிக் கல் வெட்டில் வரும் "ரீ கோணபர்வதம் திருக் கோணமலை மத்ஸ்யகேஸ்வரமுடைய மஹ தேவர்” என்னுந் தொடரினால் ஆதாரம் பெறுகின்றது.*
இச்சாசனத்தின் 5ஆவது வரியில் வளநாடு ஒன்றின் பெயர் குறிக்கப்பெற்றுள்ளது. அதன் பெயரின் முதலாவது பகுதியில் இறுதியிலுள்ள டி என்பதைத் தவிர்ந்த எழுத்துக்கள் எல்லாம் அழிந்துவிட்டன. இங்கு நாம் கவனிக்க வேண்டியது டி என்பதை இறுதி எழுத்தாகக் கொண்டிருக்கக்கூடிய அடைமொழி யாது என்பதாகும். இதனை பற்றிச் சிந்திக்குமிடத்துக் கருத்திற் கொள்ள வேண்டியது, பொதுவாக வளநாடுகள் எல்லாஞ் சோழப்பெருமன்னர் காலத்தில் அவர்களின் பட்டப் பெயர்களாலும் விருதுப் பெயர்களாலும் வழங்கி வந்தன என்பதாகும்.
இராஜராஜத் தென்னாடான பாண்டி நாட்டில் உத்தமசோழ வளநாடு, முடிகொண்ட சோழ வளநாடு, இராஜேந்திர சோழ வளநாடு என்னும் பிரிவுகள் இருந்தன.* சோழ மண்டலம் முதலாம் இராஜராஜனின் காலத்தில் இராஜேந் திரசிங்க வளநாடு, நித்தவிநோத வளநாடு, இராஜாஸ்ரய வளநாடு, ஷத்திரிய சிகாமணி வளநாடு கேரளாந்தக வளநாடு, பாண்டிய குலாசனி வளநாடு, இராஜராஜ வளநாடு என்னும் ஒன்பது பிரிவுகளைக் கொண்டிருந் தது' தமிழகத்திலுள்ள வளநாடுகள் மூன்றின் பெயர்கள் இலங்கையிலுள்ள வளநாடுகளுக் கும் உரியனவாய் இருந்தன. சோழரின் சாசன வழக்காறுகள் பற்றிய அனுபவத்தின் அடிப்படையில் டி என்ற எழுத்தில் முடிவதாக
43

Page 47
இச்சாசனத்தில் அமைந்திருக்கக்கூடிய சொல் மும்முடி என்பதாகும். எனவே இச்சாசனத்தின் 5 ஆவது வரியிற் குறிப்பிடப்படும் வளநாட்டின் பெயர் மும்முடிசோழ வளநாடு என்றிருத்தல் வேண்டும். அது இராஜேந்திர சோழ வளநாடு எனவும் இச்சாசனத்திற் குறிப்பிடப்பட்டுள்ளது.
சோழமண்டலத்து இராஜேந்திர சிங்க வளநாடு என்பது அதன் பிரிவுகளில் ஒன்றான நாடொன்றிலுள்ள ஒருரைச் சேர்ந்த பிரதானி ஒருவனின் பெயரும் இச்சாசனத்தில் இடம் பெற்றுள்ளது. ஆயினும் கல்வெட்டின் இரு பக்கங்களின் ஓரங்கள் வெட்டப்பட்டுள்ளதாலும் உள்ள சாசனப்பகுதியில் எழுத்துக்கள் சிதை வுற்றுள்ளதாலும் பெயர்களை அனுமானித் தேனும் அறிந்து கொள்ள முடியவில்லை.
அதனைப் பற்றி இதுவரை கவனித்த வற்றை அடிப்படையாகக் கொண்டு மானாங் கேணிச் சாசனத்தின் முதற்பாகம் மேல்வருமாறு அமைந்திருந்ததென்று கொள்ளலாம்.
ரான உடையார் றி சோழ இல(ங்கேஸ்) (வர)ே தவற்கு யாண் ெ(டட்டாவது)* (மும்மு) டி சோழ மண்ட (லத்து) (இரா)ே ஐந்த்ர சோழ வளநாட்டு) (மும்மு) டி சோழ வளநாட்டு கோன) (மா) மலை பூரீ மத்ஸ்ய(ேகஸ்வ) (ரமுடையர்) மூலஸ்தானமு (ம். ஸ்வரமுடையார் கே (ாயிலும்) (சே) ஈழ மண்டலத்து (இராஜே) (ந்த்ரசி)ங்க வளநாட்டு இ (ன்னம்) (பர்) நாட்டு. ()ே வளான் கணபதி
2
சோழ இலங்கேஸ்வரனின் பத்தாவது ஆண்டுக்கு முற்பட்ட மூன்று ஆண்டுகளுள் ஏதோவொன்றிலே, ஈழமான மும்முடிச் சோழ மண்டலத்து இராஜேந்திர சோழ வளநாட்டுத் திருகோணமலை மச்சகேஸ்வரத்து மூலஸ் தானமும், அதே வளநாட்டிலுள்ள வேறொரு சிவாலயமுந் தொடர்பாகச் சோழ மண்டலத்து இராஜேந்திரசிங்க வளநாட்டு பிரதானிகள் மேற்கொண்ட நடவடிக்கைகளைப் பதிவு செய்வதாக மானாங்கேணிச் சாசனம் அமைந்த தென்பது தெளிவாயுள்ளது. மச்சகேஸ்வரத்
44

தைப் பொறுத்தவரையில் அதன் மூலஸ்தானத் தைப் புனர்நிர்மாணஞ் செய்தனர் என்று அனுமானித்துக் கொள்ளலாம். இச்சாசனம் கிடைக்கப்பெற்ற தானத்திற் புராதனமான கட்டிட அழிபாடுகள் காணப்படுவதால் அது குறிப்பிடும் இரண்டாவது சிவாலயம் அங்கு அமைந்திருந்தது என்றுங் கருதலாம்.
திருக்கோணேஸ்வரம் பற்றிய வரலாற்று மூலங்களில் நிலாவெளிக்கல்வெட்டு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். அது பத்தாம் நூற்றாண்டுக்குரிய வரிவடிவங்களிலுந் தமிழும் கிரந்தமுங் கலந்த எழுத்துக்களிலும் அமைந்துள்ளது. அதன் முதற்பகுதி வெட்டப் பட்டு அழிந்துவிட்டதால் அரசனின் பெயர் கிடைக்கவில்லை. இலங்கையிற் சோழராட்சி ஏற்பட்டதன் விளைவாகச் சாசனவழக்கில் இடம்பெற்ற வேலி என்னுஞ் சொல் காணப்படு வதாலும், வரிவடிவ அமைப்பின் காரணத் தினாலும் நிலாவெளிக் கல்வெட்டு சோழராட்சிக் காலத்தின் முற்பகுதிக்குரியதென்று கருதலாம். திருகோணமலையிலுள்ள மச்சகேஸ் வரம் என்னுங் கோயிலுக்கு நாள் வழிபாட்டுத் தேவைக்கு நிவந்தமாக நிலங் கொடுக்கப்பட் டமை பற்றிய சாசனமான அது அமைந் துள்ளது. அதன் வாசகம் மேல் வருமாறுள்ளது.
பூரீ கோணபர்வதம் திருக்கோணமலை மத்ஸ்ய கேஸ்வரமுடைய மஹாதேவர்க்கு நிச்சலழிவுக்கு நிவந்தமாக சந்திராதித்தவற் செய்த உராகிரிகாம. கிரிகண்ட கிரிகாம (த்து) நீர்நிலமும் புன் செய்யும். தேவால யமும் மேனோக்கின மரமும் கீழ்நோக்கின கிணறும் உட்பட இந்நிலத்துக்கெல்லை கிழக்குக் கழி எல்லை. தெற்கெல்லை கல்லு குடக்கு எத்தகம்பே எல்லை. வடக்கெல்லை சூலக்கல்லாகும். இவ்விசைத்த பெருநான் கெல்லையில் அகப்பட்ட நிலம் இருநூற்று ஐம்பதிற்று வேலி. இது பன்மயேசுரரசுஷ*
இச்சாசனத்திலே தலம் பற்றியும், அங்கு நிகழ்ந்த நாள்வழிபாடு பற்றியும், கோயிலுக்கு வழங்கப்பெற்ற தேவதானம் பற்றியுஞ் சொல்லப் படுகின்றது. கோயிலின் பெயர் மச்சகேஸ்வரம்

Page 48
என்பதாகும். கோகர்ணத்துச் சிவாலயமான திருக்கோணஸ்வரம் மச்சகேஸ்வரம் என்னும் பெயராலும் வழங்கியது என்று கைலாசபுராணம் முதலிய நூல்கள் கூறும். அது நாட்டார் வழக்கினாலும் உணரப்படுகின்றமை குறிப்பிடற் குரியது. மச்சகேஸ்வரமானது திருகோணமலை யில் உள்ளதென்றுஞ் சாசனங் கூறுகின்றது. திருகோணமலையினை பூறிகோணபர்வத மென்று சமஸ்கிருத மொழிப் பெயராலுஞ் சாசனத்தில் வர்ணித்துள்ளனர். திருக்கோணஸ் வரத்து மகாதேவரைக் "கோணமாமலை அமர்ந்தாரே" என்று திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார் குறிப்பிடுகின்றார். எனவே, தேவாரத் திருப்பதிகமும் நிலாவெளிக் கல்வெட்டும் ஒரே தலத்தினையே குறிப்பிடுகின்றன் என்பது தெளிவாகின்றது. கோகர்ணத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட சைவத் திருத்தலங்கள் இருந்தமை பற்றி ஐதிகமோ ஆதாரமோ இல்லை.
நிலாவெளிச் சாசனம் மச்சகேஸ்வரத்துக்கு வழங்கப்பெற்ற தேவதானம் பற்றியதாகும். அத்தேவதான நிலம் 250 வேலி அளவினைக் கொண்டது. ஒருவேலி நிலம் பெரும்பான்மையும் 2000 குழி எனக் கொள்ளப்படுவதால் இச்சாசனங் குறிப்பிடுந் தேவதானம் 1,700 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டது. உராகிரி காம, கிரிகண்ட கிரிகாம என்னுமிடங்கள் அதில் அடங்கியிருந்தன. கிழக்கிற் கடலும், தெற்கிற் கல்லும், மேற்கில் எத்தகம்பே என்னுந் தானமும், வடக்கிற் சூலக்கல்லும் தேவதானத்தின் எல்லைகளாயிருந்தன. கிழக் கிற் கடல் எல்லை எனப்படுவதால் இந்நிலம் கடலோரமாய் இருந்தது என்பதை உணர முடிகின்றது. உராகிரிகாம, கிரிகண்ட கிரிகாம என்னும் இடப்பெயர்கள் வழக்கில் இல்லை. ஆயினும் கிரிகண்ட என்பதனைப் பற்றிப் புராதனமான பெளத்த நூல்களிலுந் திரியாய்க் கல்வெட்டிலும் குறிப்புகள் காணப்படுகின்றன? கிரிகண்டபர்வதம், கிரிகண்ட எனும் பிர தேசம் ஆகியன பற்றி மகாவம்சம் குறிப் பிடுகின்றது. பாண்டுகாபயனின் மாமன்மாருள் ஒருவனாகிய கிரிகண்ட சிவ என்பவன் கிரிகண்ட என்னும் பகுதியை ஆட்சி புரிந்தான் என்று சொல்லப்படுகின்றது." கிரிகண்டமகா

விகாரம் என்பதனைப் பற்றிப் புத்தகோஷர் எழுதிய விசுத்திமக்க என்னும் நூலிலும் ஆளவம்சத்திலுங் கூறப்பட்டுள்ளது? கிரிகண்ட என்னும் மலையிலுள்ள விகாரத்தைக் கிரி கண்ட மகாவிகாரம் என்றனர். சமஸ்கிருத மொழியிலும் கிரந்த வரிவடிவங்களிலும் எட் டாம் நூற்றாண்டளவிலே எழுதப்பெற்றதான திரியாய்க் கல்வெட்டு கிரிகண்டிகசைத்தியம் என்பதைப் புகழ்மொழிகளால் வர்ணிக்கின்றது.
திரியாய்க் கல்வெட்டு திரியாய் என்னும் ஊரின் மேற்கிலே கந்தசாமி மலையிற் காணப்படுகின்றது. அதற்கு 200 அடி தூரத்திற் பெளத்தப் பெரும்பள்ளி ஒன்றின் அழிபாடுகள் உள்ளன. கிரிகண்ட பர்வதம் என்னுந் தானமே கந்தசாமி மலை என வழங்குகின்றது. எனவே கிரிகண்ட கிரிகாம என்பது திரியாயிலுள்ள கந்தசாமி மலையினை உள்ளடக்கியிருந்த ஒரு நிலப்பிரிவு என்று கொள்ள முடிகின்றது. நிலாவெளிக் கல்வெட்டுப்பதிவு செய்துள்ள தும் மச்சகேஸ்வரத்திற்கு வழங்கப்பெற்ற துமான தேவதானம் மாதோட்டமான இராஜராஜ புரத்தில் அமைக்கப்பெற்ற இராஜராஜஈஸ்வரத் திற்குத் தாழிகுமரனாற் கொடுக்கப்பெற்ற தானங்களை ஒத்திருக்கின்றது. இராஜராஜ ஈஸ்வரத்தில் நெய்வேத்தியம் செய்வதற்கும், ஆராதனை பண்ணும் பிராமணருக்கு வேதனங் கொடுப்பதற்கும், வருடந்தோறும் வைகாசி மாதத்தில் விழா எடுப்பதற்கும், மாதோட்டத் திலிருந்தும் அரசாங்கத்துக்குக் கிடைக்க வேண்டிய வருமானங்களைத் தாழிகுமரன் கோயிலுக்கு நிவந்தமாக விட்டான். மச்சகேஸ் வரத்துத் திருநீலகண்டமகாதேவர் சந்நிதியில் நித்திய நிவேதனத்துக்கு உராகிரிகாம, கிரிகண்ட கிரிகாம என்னும் இடங்களிலுள்ள 250 வேலி நிலம் வழங்கப்பட்டது. அத்தேவ தானத்தை வழங்கியோரின் பெயரினைக் குறிப் பிடும் சாசனப்பகுதி அழிந்து விட்டது. ஆயினும் நிலம் அளவில் மிகப்பெரிது என்பதால் அது குடியானவர்களினால் அன்றித் தாழிகுமரனைப் போன்ற அரசாங்க அதிகாரி ஒருவனால் அல்லது இராசப் பிரதிநிதி ஒருவனால் வழங்கப் பெற்றிருத்தல் வேண்டும்.
நிலாவெளிக் கல்வெட்டிலுள்ள வேறொரு
45

Page 49
பிரதான அம்சம் மச்சகேஸ்வரத்துப் பன்மா கேஸ்வரர் பற்றிய குறிப்பாகும். சாசனத்தின் வாசகம் பன்மாகேஸ்வரர் ரசைஷ என்ற தொடரு டன் முடிகின்றது. பொதுவாகத் தமிழ்ச்சாசன வழக்கிற் சிவாலயங்களுக்கு வழங்கப் பெற்ற தானங்கள் தொடர்பாக இம்மொழித் தொடர் பயன்படுத்தப்படுகின்றது. பன்மாகேஸ்வரர் என் பது பொதுவாக மகேஸ்வரனான சிவபெரு மானின் அடியார்களான சிவனடியார்களைக் குறிக்கும். ஆலயங்களுக்கு வழங்கப்பெற்ற நிவந்தங்களின் அறங்காவலராக அவர்கள் விளங்கினர். பன்மாகேஸ்வரர் என்னும் சொல் வழக்கு இலங்கையிற் சோழராட்சிக்காலம் முதலாகவே ஆவணங்களில் இடம்பெற்றது. அக்காலத்திலே பொலநறுவையிலுள்ள வான வன்மா தேவிஸ்வரத்திலும் கோகர்ணத்து மச்சகேஸ்வரத்திலும் ஆலய விவகாரங்களைக் கவனிக்கும் பன்மாகேஸ்வரர் இருந்தமை குறிப்பிடற்குரியது.
திருக்கோணேஸ்வரத்தின் இடிபாடு களிடையே காணப்பெற்ற சோழமன்னர் காலத்துச் சாசனப் பகுதிகளிற் சில சோழர் அக்கோயிலுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்தனர் என்பதை உணர்த்துகின்றன. முதலாம் இராஜராஜனின் மெய்க்கீர்த்தி அடங் கிய சிலாசாசனத்தின் பகுதியொன்று திரு கோணமலையிற் கடலடியிலிருந்து மீட்கப்
பெற்றது.
இப்போது அது திருக்கோணேஸ்வரத்து மண்டபத்தில் உள்ளது? இச்சிலாசாசனத்தின் முதற் பகுதியும் இறுதிப்பகுதியும் உடைந்து அழிந்துவிட்டன. இராஜராஜனது மெய்க்கீர்த் தியில் வழமையாக வரும் "இரட்டபாடியேழரை யிலக்கமும் முந்நீர்ப்பழந்தீவு பன்னிராயிரமும்" என்ற தொடர்கள் இச்சிலாசாசனத்து மெய்க் கீர்த்திப் பகுதியிற் காணப்படவில்லை. எனவே, செ. குணசிங்கம் வற்புறுத்திக் கூறியவாறு இக்கல்வெட்டு இராஜராஜ சோழனது ஆட்சி யின் ஆரம்ப காலத்திற்குரியது என்று கொள் வது பொருத்தமானதாகும். அரசனின் ஆண்டு கள் மிகுந்து செல்லச் செல்ல அவ்வாண்டு களில் நிகழுஞ் சாதனைகள் பற்றிய விபரங்கள் மெய்க்கீர்த்தியிற் சேர்த்துக் கொள்ளப்படு
46

வதால் அது நாளடைவில் வடிவத்தில் விருத்தி பெற்றது. இளவரசனாகிய மதுராந்தகன் இரட்டபாடி மீது படையெடுத்துச் செல்வதற்கும், பழந்தீவு முதலான மேற்கிலுள்ள தீவுகளைச் சோழர் கைப்பற்றுவதற்கும் முற்பட்ட காலத்து மெய்க்கீர்த்தியின் வடிவமே இராஜராஜனது கோணேஸ்வரம் கல்வெட்டில் இடம் பெற் றுள்ளது. திருக்கோணேஸ்வரத் திருப்பணிக ளையோ அக்கோயிலுக்கு வழங்கிய தானங் களையோ அச்சாசனம் பதிவு செய்திருந்தது என்று அனுமானித்துக் கொள்ளலாம்.
திருகோணமலை நகரப்பகுதியிலுள்ள சமய நிலையங்களோடு சோழர் கொண்டிருந்த தொடர்புகளுக்கு, அங்கு காணப்படும் இரா ஜேந்திர சோழனது காலத்துச் சாசனங்களுஞ் சான்றுகளாய் உள்ளன. அவனுடைய மெய்க் கீர்த்தியின் வாசகம் அடங்கிய சாசனங்கள் ஒஸ்ற்றென்பேர்க் கோட்டையிலும் பத்திரகாளி யம்மன் கோயிலிலுங் காணப்படுகின்றன. இவற்றுட் கோட்டையில் உள்ள கல்வெட்டு, காலத்தால் முற்பட்டதாகும். அது துண்டமா யுள்ளது. அதன் முதற் பகுதியும் கடைசிப் பகுதியும் உடைந்துவிட்டன. எஞ்சியுள்ள பகுதியில் அவனுடைய மெய்க் கீர்த்தியின் மேல்வரும் பகுதி காணப்படுகின்றது:
loo - - - (கொள்ளிப்) பாக்கையும் நண்ணற் கருமுரண் மண்ணைக் கடக்கமும் பொருகடல் ஈழத்தரைசர் தம்முடியும் ஆங்கவர் தேவியர் ஒங்கெழின் முடியும் முன்னவர் பக்கல் தென்னவர் வைத்த சுந்தர முடியும் இந்திரனாரமும் தெண்டிரை யிழ மண்டல முழுவதும் எறிபடைக் கேரளன் முறைமையிற் குடும் குலதனமாகிய பலர்புகழ் முடியும் செங்கதிர் மாலையும் சங்கதிர் வேலைத் தொல்பெருங் காவற் பலபழந்திவும் மாப்பொரு தண்டாற் கொண்ட
கோப்பரகேசரிவன்மரான உடையார் ரீ இராஜேந்திர சோழ
தேவர்க்குயாண்டு.* இம் மெய்க்கீர்த்திப் பகுதியிற் கங்கைப் படையெடுப்பு, கடாரப் படையெடுப்பு ஆகியன பற்றிய குறிப்புகள் இல்லை. எனவே அப்படை

Page 50
யெடுப்புகள் நடைபெறுவதற்கு முன் இராஜேந் திரனுடைய ஆட்சியின் 7 ஆவது ஆண்டளவில் இச்சாசனம் திருகோணமலை நகரப் பகுதி யிலுள்ள கோயிலொன்றிலே அமைக்கப்பெற்ற தென்று கருதலாம். திருக்கோணஸ்வரம் கோயி லை இடித்தபின்பு அக்கோயிலின் அழிபாடு களைக் கொண்ட போர்த்துக்கேயர் கோட்டை யைக் கட்டினார்கள் என்று ஐரோப்பியரின் நூல்களிற் கூறப்படுவதால் இச்சாசனமானது கோணேஸ்வரத்தில் இருந்ததென்று கருதலாம். இராஜேந்திர சோழனின் காலத்துச் சாசன மொன்று திருகோணமலைப் பத்திரகாளி அம்மன் கோயிலிற் காணப்படும் தூணொன்றில் எழுதப்பட்டுள்ளது. அத்தூணின் பக்கங்களுள் ஒன்று கட்டிடத்தோடு சேர்த்து வைக்கப்பட்டுச் சாந்தினாற் பூசப்பட்டுள்ளது. ஏனைய மூன்று பக்கங்களிலும் அரசனின் மெய்க்கீர்த்தியின் வாசகம் எழுதப்பட்டுள்ளது.* தூணைக் கட்டி டத்திலிருந்து பிரித்துப் பூச்சுகளை நீக்கிச் சாசனத்தைப் படிவமெடுத்து ஆராயின் சில முக்கியத்துவம் வாய்ந்த செய்திகள் கிடைக் கக்கூடும். திருகோணமலையிற் போர்த்துக் கேயரால் இடிக்கப்பட்ட கோயிலொன்றின் மண்டபமொன்றிலே இச்சிலாசாசனம் ஒரு காலத்திலே அமைக்கப்பட்டிருந்த தென்று கொள்வது பொருத்தமானதாகும்.
இராஜராஜ சதுர்வேதிமங்கலம்
கந்தளாயிற் காணப்படும் சோழ இலங் கேஸ்வரன் காலத்துச்சாசனம் அங்கு பதி னோராம் நூற்றாண்டில் அமைந்திருந்த சில சமய சமூக நிறுவனங்களைப் பற்றிய அரிய செய்திகளைக் குறிப்பிடுகின்றது. அதன் முதற் பகுதி வாசித்தறியக் கூடிய அளவிலே தெளி வாயுள்ளது. இரண்டாம் பகுதியிற் பல எழுத்து களுஞ் சொற்றொடர்களுஞ் சிதைந்து விட்டன. அதன் முதற்பகுதியின் வாசகம் மேல்வருமாறு அமைத்துள்ளது.
"எப்வஸ்தி ரீ கோ ரீ சங்கவர்மரான உடையார் பூரி சோழ இலங்கேஸ்வர தேவற்கு யாண்டு பத்தாவது ராஜேந்திர சோழவளநாட்டு ராஜவிச்சாதிரவளிநாட்டு ப7ரஹர் மதேசம் பூரீ ராஜராஜசி

சதுர்வேதிமங்கலத்துப் பெருங்குறி பெருமக்களோமர் இயயாட்டைக் கும்மநாயற்று பூர்வ பக்ஷத்துத்வாதளபியும் செய்வாய்க் கழமையும் பெற்ற ஆயிலியத்து நாளன்றிரவு நம்முர் தண்டுகின்ற முத்தங்கைக் கோயில் மானி. *
சாசனத்தின் சிதைவடைந்த பிற்பகுதியில் நீர்நிலம், வாசுதேவ வாய்க்கால், விக்கிரமசோழ வாய்க்கால், இரண்டாங் கண்ணாற்று மூன்றாஞ் சதிரம், மா, மூன்றாங் கண்ணாறு என்னும் மொழிகள் உள்ளன. குளத்திலிருந்து நீர் பாயும் விக்கிரம சோழ வாய்க்காலின் இரண் டாங் கண்ணாற்று மூன்றாஞ் சதுரத் திலுள்ள விளைநிலம் 3 மா தொடர்பாக மேற்கொள்ளப் பட்ட ஒரு நடவடிக்கை பற்றிச் சாசனம் வர்ணிக்கின்றது.
அதனை இராஜராஜ சதுர்வேதிமங்கலத் துப் பெருங்குறிப்பெருமக்கள் மேற்கொண்டனர். பிரம்மதேயங்களிலுள்ள சபையாரைப் பெருங் குறி மகா சபை என்றும் பெருங்குறிப் பெரு மக்கள் என்றும் வர்ணிப்பது வழக்கம்.” அத் தகைய மகாசபையின் நடவடிக்கையினை இச்சாசனம் பதிவு செய் கின்றது. பிரம்மதேய மானது இராஜராஜ சதுர்வேதி மங்கலம் என்னும் பெயரைப் பெற்றிருந்தமையுங் குறிப்பி டற்குரியது. அது இராஜேந்திர சோழ வள நாட்டின் பிரிவாய் அமைந்திருந்தது. கந்தளாய்ச் சாசனம் கோயிலொன்றின் அழிபாடுகளிடையிற் காணப்படுவதாற் கந்தளாயிற் சோழர் காலத் தில் அமைக்கப்பெற்ற ஆலயமொன்றிலே அது நிறுவப்பட்டிருத்தல் வேண்டும்.
கந்தளாயிலுள்ள சதுர்வேதிமங்கலத்துப் பெருங்குறிப் பெருமக்கள் சோழ இலங்கேஸ்வர தேவனின் 10 ஆவது ஆண்டிலே, மாசி மாதத் துப் பூர்வபக்ஷத்துத் துவாதசியான செவ்வாய்க் கிழமையும் ஆயிலிய நக்ஷத்திரமுங் கூடிய தினத்து இரவிலே கூடியிருந்து ஊர்த்தண்டு வானாகிய மானி தொடர்பாகவும், விக்கிரம சோழ வாய்க்காலின் இரண்டாங் கண்ணாற்று மூன்றாஞ் சதிரத்திலுள்ள நீர்நிலம் 3 மா குறித்தும் ஏதோ முடிபுகளை மேற்கொண்டனர். கந்தளாயிலிருந்த சிவன் கோயில் மண்டபத்
47

Page 51
திலே அவர்கள் கூட்டமாய் கூடினார்கள் என்றும், கூட்டத்தில் மேற்கொண்ட தீர்மானத் தைக் கோயிலிலிருந்த மண்டபமொன்றின் தூணிலே சிலாசாசனஞ் செய்தனரென்றும் அனுமானித்துக் கொள்ளலாம்.
இச்சாசனத்தில் வரும் நம்முர் தண்டுகின்ற முத்தங்கைக் கோயில் மானி என்னுந் தொடரானது, குறிக்கப்பெற்ற சதுர்வேதிமங் கலத்திலே அம்மன் கோயிலொன்று இருந்தன்ம யினை உணர்த்துகின்றது. துர்க்கையாரை முத்தங்கை என்று குறிப்பிடுவது சாசன வழக்காகும். பிரமச்சாரிகளான இளம் பிரா மணரை மானி என்பர். முத்தங்கை கோயிலைச் சேர்ந்த மானி ஒருவன் ஊர்த் தண்டுவானாக இருந்தமை கவனித்தற்குரியது. ஊர்ச் சபை யாருக்குச் செலுத்த வேண்டிய இறைகடமை களையும் பிறவற்றையுஞ் சேகரிப்பவனைத் தண்டுவான் என்று குறிப்பிடுவது வழக்கம்* எனவே ஊரிலுள்ள குடியார்களிடமிருந்து இறைகடமைகளைச் சேகரிப்பதற்கென இராஜ ராஜ சதுர்வேதிமங் கலத்துச் சபையார் தம் மூரிலுள்ள அம்மன் கோயிலைச் சேர்ந்த அந்தணனொருவனை நியமித்தனர் என்பது தெளிவாகின்றது. அதன் எல்லைகளுக்குள் இராஜராஜ சதுர்வேதிமங்கலத்துச் சபையார் நிர்வாக ஆதிக்கம் பெற்றிருந்தனர் என்பதும் இதனால் உணரப் படும். இப்பிரம்மதேயம் 13 ஆம் நூற்றாண்டு வரை நிலைபெற்றிருந்தது.
கந்தளாய்ச் சாசனத்தின் சிதைவுற்றுள்ள பகுதியிற் காணப்படும் வாசுதேவ வாய்க்கால், விக்கிரமசோழ வாய்க்கால், இரண்டாங் கண்ணாறு, நீர்நிலம் முதலிய சொற்களை விளக்குவதற்குத் தமிழகத்துப் பிரம்மதேயம் ஒன்றினைப் பற்றிய சாசனப்பகுதி ஒன்றினை இங்கு ஆதாரமாகக் கொள்வது மிகப் பொருத்த மானதாகும். மணி மங்கலத்திலுள்ள முதலாம் இராஜராஜனது காலத்துச் சாசனமொன்றின் பகுதி மேல்வருமாறுள்ளது:
.யாண்டு 15 ஆவது ரிஷப நாயற்று பூர்வபக்ஷத்து தசமியும் வியாழக்கிழமையும் பெற்ற அத்தத்தின் நாள் செங்காட்டுக் கோட்டத்து மாகனூர் நாட்டு பிரம்மதேயம் மணிமங்கலமாகிய உலோகமாதேவிச்
48

சதுர்வேதிமங்கலத்து மகாசபைப் பெரு மக்களோம் இற்றை நாளால் பகல் எம்மூர்.தண்ணிர்ப் பந்தலிலே தர்மம் செய்து கூட்டம் குறைவறக் கூடியிருந்து எம்மூர் திருவாய்ப்பாடி ருரீ கிருஷ்ண பெருமானுக்கு நிசதம்படி நாட் பெருமமுதும் ஒரு நுந்தா விளக்கும் முட்டாமை இத்தேவர்க்கு பூரீ கார்யம் கடைக்காணக் கடவ கரணப் பெருமக்களே முட்டாமைக் கடைக் கொண்டு குடுப்பார்களாகப் பணிப் பணியாய்ப் பணித்து. இத்தேவருடைய பூமி இவ்வூர்ப் பாதிரிக்கழனி மேலைக் காலின் கீழ் சிறகு.பெருமான் பக்கல் இத்தேவர் விலை கொண்டுடைய இறை நிலம் நூறு குழியும் பனங்காட்டேரி வதியின் மேல் சிறகு சானூர மாத்தெருமான் சோமயாஜியார் பக்கல் இத்தேவர் பெற்று டைய இறைநிலம் நூறு குழியும் இவ்வூர் தென்பிடாகை ஆத்தனஞ்சேரி கருணாகர வாயடகடகால். கண்ணாற்று கன்னர வதிக்குக் கிழக்கு மூன்றாஞ் சதிரத்து ஸாஹணை ஆதிச்சகுமார கிரமவித்தன் பக்கல் இத்தேவர் விலை கொண்டுடைய நிலம் நானூறு குழியுமாக இவ்வெண்ணுாறு குழியாலும் வந்த இறை திரவ்யம்."
மணிமங்கலத்துச் சபையார் முதலாம் இராஜராஜனின் 15ஆவது ஆண்டில் ஒருநாட் பகலிலே தண்ணிர்ப் பந்தலிற் கூடிக் கோயிற் காரியங்களை ஆராய்ந்து சில நடவடிக்கை களை மேற்கொண்டனர் என்பது இச்சாசனப் பகுதியால் உணரப்படுகின்றது. அறக்கட்டளை ஒன்றின் தொடர்பாகத்திருவாய்பாடி கிருஷ்ணப் பெருமான் கோயிலுக்குக் கொடுக்கப்பட்டிருந்த விளைநிலங்கள் சிலவற்றின் வருமானங் கொண்டு நாட்பெருவமுதும் நந்தாவிளக் கொன்றும் இடுவிக்கப்படும் பணியைக் கரணப் பெருமக்களே கண்காணிக்க வேண்டும் என்று சபையார் பணித்தனர். கரணப் பெருமக்கள் என்பது சபையாரால் அமைக்கப்படும் நிறை வேற்றுக் குழுவினரைக் குறிப்பதாகும். இத்தர் மம் தொடர்பான நிலங்களைப் பற்றிய விபரங் களிலே பாதிரிக்கழனி, கருணாகர வாய்க்கால், கண்ணாறு, கன்னரவதி மூன்றாஞ் சதிரம் என்னுஞ் சொற்கள் காணப்படுகின்றன.

Page 52
குளத்தும்பினின்றும் நீர் பாயும் வழிகளை வாய்க்காலென்றும், அவற்றின் கிளைகளைக் கண்ணாறு என்றும், கண்ணாறுகளின் இணைக்கட்டுகளை வதி என்றுங் குறிப்பிடுவது புராதன காலத்து வழமையாகும். நீர்நிலப் பகுதிகள் தொடர்பாகவே சதிரம் என்னுஞ் சொல் சாசனங்களில் வருகின்றது. இக்காலத் திற் போலவே வயல்நிலங்கள் சதுர வடிவிலும் நீள்சதுர வடிவிலும் அமைக்கப்பட்டிருந்தன. அதனாற் போலும் அவற்றைச் சதிரம் என்றனர். அவற்றை அடையாளங் காண்பதற்கும், இறை கடமைகளைக் காணியாளரிடமிருந்து பெற்றுக் கொள்வதற்கும், அந்நிலங்களைப் பற்றிய விபரங்களைப் புரவு, வரிப்பொத்தகம் என்பன போன்ற ஆவணத் தொகுதிகளிற் பதிவு செய்து வைத்திருப்பது வழமை. மணிமங் கலத்துச் சாசனத்தில் "இவ்வூர் தென்பிடாகை ஆத்தன்ஞ்சேரி கருணாகர வாய்க்கால். கண்ணாற்றுக் கன்னரவதிக்குக் கிழக்கு மூன்றாஞ் சதிரத்து ஸாஹணை ஆதிச்சகுமார கிரமவித்தர் பக்கல் இத்தேவர் விலைகொண்டு டைய பூமியில் நூறு குழியும்." என வரும் தொடர் இவ்வழமைக்கோர் உதாரணமாகும்.
சோழ இலங்கேஸ்வரன் காலத்துக் கந்தளாய்க் கல்வெட்டில் வரும் வாய்க்கர்ல், கண்ணாறு, சதிரம் என்னுஞ் சொற்களின் உபயோகத்தை மணிமங்கலச் சாசனத் தொடர் களின் மூலமாகப் புரிந்துகொள்ள முடிகின்றது. இராஜராஜ சதுர்வேதி மங்கலத்தில் நீர்ப்பாசன வசதியுள்ள வயல்நிலங்கள் இருந்தன. குளத்திலிருந்து நீர் பாயும் இரு வாய்க்கால்கள் இருந்தன. அவை விக்கிரமசோழ வாய்க்கால், வாசுதேவ வாய்க்கால் என்பனவாகும். கந்தள யிலிருந்த குளவாய்க்கால்களிற் கண்ணாறு என்னும் கிளை வாய்க்கால்கள் அமைந் திருந்தன. இச்சாசனங் குறிப்பிடும் பிரம்மதேயம் கந்தளாய்ப் பிரம்மதேயம் என்பதால் அதி லிருந்த வாய்க்கால்கள் இரண்டும் கந்தளாய்க் குளத்து வாய்க்கால்களாதல் வேண்டும். எனவே, பதினோராம் நூற்றாண்டிலே, சோழ இலங்கேஸ்வரன் இலங்கையில் அரசனாக விளங்கிய காலத்திற் கந்தளாய்க் குளமும் அதனை ஆதாரமாகக் கொண்ட நீர்ப்பாசன முறையும் சீரான நிலையில் இருந்தன என்பதற்

குக் கந்தளாய்க் கல்வெட்டு சான்றாயுள்ளது. குளவாய்க்கால்கள் வாசுதேவ வாய்க்கால் என்றும் விக்கிரமசோழ வாய்க்கால் என்றும் பெயரிடப்பட்டுள்ளமையுங் குறிப்பிடத்தகுந்தது. சோழ இலங்கேஸ்வரன் காலத்திலே குளமும் அதன் வாய்க்கால்களுந்திருத்தி அமைக்கப் பட்டிருந்தலுங்கூடும்.
இங்கே இதுவரை ஆராய்ந்த விடயங்கள் பற்றிய முடிபுகளை மேல்வருமாறு சுருக்க மாகத் தொகுத்துக் கூறலாம்:
சோழப் பெருமன்னர் காலத்திலே தென்னிந் தியாவில் ஏற்பட்ட சமய கலாசார அபிவிருத்தி களின் செல்வாக்கு ஈழமான மும்முடிச்சோழ மண்டலத்திற் குறிப்பிடத்தக்க அளவிலே காணப்பட்டது. தமிழகத்திற் போல இலங்கை யிலும் பல புதிய ஆலயங்கள் சோழப் பிரதானிகளினாலும் வணிக கணத்தவராலும் பிறராலும் உருவாக்கப்பட்டன. பொலநறுவை, பதவியா, கந்தளாய் போன்ற கேந்திர நிலையங்களில் அவை அமைக்கப்பட்டன. தமிழகத்திற் போல இலங்கையிலும் பாடல் பெற்ற தலங்களைப் புனர்நிர்மாணஞ் செய் வதிற் கவனஞ் செலுத்தப்பட்டது. திருக்கேதீஸ் வரத்திலே தாழிகுமரன் என்னும் அதிகாரி யினாற் புதிய கோயில் அமைக்கப்பெற்றது. அக்கோயிலின் தேவைகளுக்கென மாதோட்ட மான இராஜராஜபுரத்தில் நிலமும் அரசாங்கத் திற்குரிய வருமானங்களும் மானியமாக அவனால் வழங்கப் பெற்றன. இத்தகைய நட வடிக்கைகளைச் சோழப் பிரதானிகள் திருக் கோணேஸ்வரத்திலும் மேற்கொண்டனர் என்று கருதமுடிகின்றது.
கோகர்ணத்துச் சிவாலயமானது 10 ஆம், 11ஆம் நூற்றாண்டுகளில் மச்சகேஸ்வரம் என்னும் பெயரால் வழங்கியது என்பது சாசனத்தொடர்களினால் உணரப்படுகின்றது.* அங்குள்ள மூலஸ்தானம் தொடர்பான திருப் பணிகளைச் சோழப்பிரதானிகள் சிலர் செய் தனர் என்பதைச் சோழ இலங்கேஸ் வரனின் காலத்து மானாங்கேணிச் சாசனம் உணர்த்து கின்றது. அக்கோயிலுக்கு பெருமளவிலான நிலங்கள் தேவதானமாக விடப்பட்டமைக்கு நிலாவெளிச் சாசனம் சான்றாக அமைகின்றது.
49

Page 53
வானவன் மாதேவி, ஈஸ்வரத்திற் போல அங்கும் பன்மாகேசுரர் அறக்கட்டளை களை மேற்பார்வை செய்வதற்குப் பொறுப்பேற்றிருந் தனர். சோழமன்னர் மூவரின் காலத்து கல் வெட்டுகள் திருகோணமலை மாவட்டத்தில் உள்ளன. முதலாம் இராஜராஜனதும் முதலாம் இராஜேந்திரனதும் காலத்துச் சாசனங்கள் திருக்கோணேஸ்வரத்தில் இருந்தன என்று கொள்வதற்கான காரணங்கள் உள்ளமையுங் கவனித்தற்குரியது.
சோழராட்சியில் இலங்கையிலுள்ள கோயில் களிற் கிரமமாக ஆராதனைகளும் உற்சவங் களும் நடைபெறுவதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தென்னிந்தியக் கோயில்களில் உள்ளதைப் போன்ற ஆலய நிர்வாக முறையும் வழிபாட்டு முறைகளும் இலங்கையிலுள்ள கோயில்களில் ஏற்படுத்தப்பட்டன. ஆலய சேவைகள் புரிவதற்கென்று அந்தணர், கம்
குறிப்புகளும்
தி. வை. சதாசிவபண்டாரத்தார், பிற்காலச் ே 1974, பக்கம் 121.
2. மேலது, பக்கம் 108. 3. K. A. Nilakanta Sastri, The Colas, Unive
225. 4. மேலது, ப. 465; பிற்காலச் சோழர் வரல
5. (8D6og, u. 166; K. N. Nilakanta Sastri,
6. அருண்மொழித்தேவ வளநாடு, நிகரிலிச்சே வளநாடு, இராஜவித்தியாதர வளநாடா6 வளநாடான இராஜேந்திர சிங்க வளநாடு என்று சாசனங்கள் கூறும். 7. முதலாம் இராஜராஜனின் சகோதரியான கு கரம், ஜினாலயம் ஆகிய மூன்றினை கொடுத்தாள். மன்னார் கோயிலில் முதலf பெற்ற விண்ணகரம் இராஜேந்திரசோழ பிற்காலச் சோழர் வரலாறு, பக்கம். 157, th
8. பல்லவர் காலத்தின் பிற்பகுதியிற் கோயி
50
ஏற்பட்டிருந்தது. விஜயநந்தி விக்கிரமவ தேவாரப் பதிகங்களை ஒதினார்கள். தி

மாளர், வாத்தியக்காரர் போன்றோரை கோயில் வளாகத்திற்கு அண்மையிலுள்ள இடங்களிற் குடியிருத்தினார்கள். கந்தளாய்ப்பிரம்மதேயம் போன்ற புதிய அக்கிரகாரங்கள் சில அமைக்கப் பெற்றன.
இராஜேந்திர சோழனின் மகனாகிய சோழ இலங்கேஸ்வரன் இலங்கையிற் சில கால மிருந்து ஆட்சி புரிந்தான். இதுவரை கிடைத் துள்ள அவனது காலத்துச் சாசனங்கள் இரண்டும் திருகோணமலை மாவட்டத்திலுள்ள ஊர்களிலிருந்து கிடைத்துள்ளன. அவனுடைய காலத்திற் கந்தளாய்க் குளத்திலிருந்து வாய்க் கால்கள் வழியாக வயல்களுக்கு நீர்ப்பாசனஞ் செய்தனர். கந்தளாய்ப் பிரம்மதேயத்தின் எல்லைகளுக்குள் ஈஸ்வரம் ஒன்றும் அம்மன் கோயிலொன்றும் அமைந்திருந்தன என்றுங் கொள்ள முடிகின்றது.
விளக்கவுரையும்
சாழர் வரலாறு, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,
rsity of Madras, Second Edition, 1955, pp. 168,
}Toi, U. 472.
the Colas, pp. 196-7.
Fாழ வளநாடு, விக்கிரமசோழ வளநாடு, இராஜராஜ  ைஇராஜேந்திர சோழ வளநாடு, அபயாஸ்ரய ஆகியன மும்முடிச்சோழ மண்டலத்தின் பிரிவுகள்
நந்தவை இராஜராஜபுரத்திலே சிவாலயம், விண்ண யும் அமைத்து அவற்றுக்கு நிவந்தங்களைக் ாம் இராஜேந்திர சோழனின் ஆட்சியில் அமைக்கப் விண்ணகரம் என்னும் பெயரால் விளங்கியது. le Colas pp. 203, 643.
ல்களிலே தேவாரப் பதிகங்களை ஒதும் வழக்கம் ர்மன் காலத்திலே திருவல்லத்தில் ஒதுவார்கள் ருச்சிராப்பள்ளி மாவட்டத்து லால்குடி, ஆத்தூர்

Page 54
10.
11.
12.
13.
ஆகியவற்றிலுள்ள சிவாலயங்களில், முத ஆராதனை வேளைகளிற் பிராமணர் திரு
ஆலயங்களில் வாத்தியங்கள் சகிதமாகத் தப்பட்ட அறக்கட்டளைகளைப் பற்றிச் ே சாசனங்கள் கூறுகின்றன. முதலாம் இரா காணப்படும் சாசனக் குறிப்பானது, தேt பணிகளைக் கவனிப்பதற்கென அரசாங் உணர்த்துகின்றது.
வைணவக் கோயில்கள் ஆழ்வார்கள் பா ஏககாலத்தில் ஏற்பட்டதென்று கருதலா காலத்துக் கல்வெட்டொன்று திருவாய்மெn இராஜேந்திரனின் காலத்தில் உத்தரமேரூரி கோயிலில் நெய்வேத்தியமாக வைத்த த சானக்குறிப்பு உள்ளது. அங்கே நாள்தே வழங்கப்பட்டது.
திருவரங்கத்திலே திருப்பள்ளியெழுச்சிக்க குலோத்துங்க சோழனின் ஆட்சியில் ( திருவரங்கத்திலே திருவிழாக் காலத்தில் மூ
எனத்தொடங்குந் திருப்பதிகம் படிக்கப்ெ
சாசனமொன்று குறிப்பிடுகின்றது.
திருக்கோயிலூரில் ஐப்பசி, வைகாசி ஆகி திருவாய்மொழி படிப்பதற்கு அறக்கட்டை இராஜாதிராஜனின் எட்டாவது (1171) ஆ காஞ்சிபுரத்து விண்ணகரமொன்றிலே ஒது கி. பி. 1242 ஆம் ஆண்டில் எழுதப்பெற்ற ஆ லுள்ள விண்ணகரமொன்றிலே திருநெடுந்:
- UL'Lç(bög5607. The Colas, Vol. l. pt. l. Uni
South Indian Inscriptions, Vol III: No : 92 Inscriptions, Pt | Peradeniya 1970; Ceyl Epigraphia Tamilica Ed. K. Indrapala, Gunasingham, "Two Inscriptions of Col Series- No 1 Peradeniya, 1974.
இராஜேந்திர சோழனின் காலத்தில் இல அரசனைக் கைப்பற்றிக் கொண்டு போன சோ ஹம்மென்ஹில் கோட்டையிற் காணப்படும் படுகின்றமை, குறிப்பிடற்குரியது. மாதோட் பறங்கியர் பின்பு ஊர்காவற்றுறைக்கு எடுத்
South Indian Inscriptions (Sil), Vol - IV N
Si Vol IV No. 1414B.
இவற்றைக் குறிப்பிடுஞ் சாசனத்தின் வாசக உத்தம சோழ ஈஸ்வரமுடைய மாதேவ

லாம் பராந்தக சோழனது ஆட்சியில், நாள்தோறும் ப்பதிகங்களைப் படித்தனர்.
தேவாரப் பதிகங்களைப் படிப்பதற்கென ஏற்படுத் சாழ நாட்டிலும் தொண்டை நாட்டிலுமுள்ள பல ஜேந்திரன் காலத்திலே தேவாரநாயகம் பற்றிக் வாரப் பதிகங்களை ஆலயங்களில் ஒதுவாரின் பக நிறுவனமொன்று அமைந்திருந்தமையினை
ாடியருளிய திருப்பதிங்களை ஒதும் வழக்கமும் ம். உட்கலிலுள்ள முதலாம் இராஜராஜனது ாழி தேவரைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. முதலாம் லே திருப்பதியம் ஒதும் பூரீ வைஷ்ணவர்களுக்குக் நிருவமிர்து பகிர்ந்து கொடுக்கப்பட்டமை பற்றிய நாறும் திருவாய்மொழி ஒதும் மூவருக்கு நிலம்
ாலத்திலே திருவாய் மொழி ஒதுவதற்கு முதலாங் 1085) அறக்கட்டளை ஏற்படுத்தப்பட்டிருந்தது. Dன்றிரவுகளிற் குலசேகராழ்வாரின் தேட்டருந்திறல் பற்றது என்பதனை 1088 ஆம் ஆண்டுக்குரிய
ய மாதங்களில் நடைபெறும் திருவிழாக்களிலே ள ஒன்று ஏற்படுத்தப்பட்டமையினை இரண்டாம் ண்டுக்குரிய கல்வெட்டொன்று குறிப்பிடுகின்றது. வார் ஐம்பதின்மர் திருமொழி பாடினார்களென்று வணமொன்றிற் கூறப்பட்டுள்ளது. திருக்கோயிலூரி தாண்டகத்தை ஒதுவதற்கு ஏற்பாடுகள் செய்யப் versity of Madras, 1037. pp. 479-480.
!: Vol. IV: No. 1411; A Velupillai, Ceylon Tamil on Tamil Inscriptions, Pt II, Peradeniya, 1971; Pt I. Jaffna Archaeological Society, 1971; S a lankesvara Deva" Trincomalee Inscriptions
ங்கைக்குப் படையெடுத்துச் சென்று அங்குள்ள ழ சேனாதிபதியின் பெயர் ஊர்காவற்றுறையிலுள்ள
உடைந்த சாசனப்பகுதியால் மட்டுமே அறியப் உத்தில் நிறுவப்பெற்றிருந்த அந்தச் சாசனத்தைப் isi Gafsipsi" Lori. Epigraphia Tamilica, Pt.
O 1411
ம் மேல்வருமாறு உள்ளது. பூரீயாண்டு 28ஆவது ர்க்கு கல்லையில் தெலியல் பெற்றில் நிலம்
51

Page 55
14.
15.
6.
17.
18.
19.
20,
21.
22.
23.
24.
25.
26.
27.
28.
29,
30,
31.
32.
33.
52
மூவேலியும் நொந்தா விளக்கு 1க்கு பசு இராமேசனேன். சந்திவிள (க்குக்குத்) தெ
Unesco- Sri Lanka Project of the Cultural Archaeological Excavation Report, 1982
Epigraphia Tamilica, pt. I, p. 27. SI, Vol. IV: 138-1392. The Colas, pp 186-8
S. Vol IV: 1388.
Archaeological Survey of Ceylon Annual p27
ASCAR
SII, Vol, ill: No 92.
CTI, Pt, pp. 16-19
CTI, Pt. II, pp. 23-24
S. Gunasingham, "Two Inscriptions of Col Series- No. 1 Peradeniya, 1974, pp 3-6
S. Gunasingham, "A Tamil Slab inscripti Humanities Vol. I, No. 1. pp. 60-71.
Sil, Vol, XIV, Nos.
தி. வை. சதாசிவ பண்டாரத்தார். பிற்கால கழகம், 1974, ப 473-4
ஆண்டினைக் குறிக்கும் எழுத்துகள் அழி அக்ஷரங்கள் காணப்படுவதால் இச்சாசனம் ஆண்டுகளில் ஏதோவொன்றினுக்கு உரிய
"A Tamil Slab Inscription at Nilaveli"The s No. 1, pp. 60-71
மகாவம்சம் 10: 26-29, 83.
து ளவம்சம் 60; 60-61, S. Paranavitana ”T
Vol. 4, pp. 151-16O.
S. Gunasingham, "A Fragmentary S. (A.D 985 -1014.)"
Trincomalee, inscriptions Series No. 2, P
W. E. Baker and H. M. Durand, "Fascimile Prinsep inscriptions of Trincomalee," Th Caleutta, Vol. 5, pp. 554-5;S. Gunasingha
form fort - Ostenburgh, Trincomalee,"
Trincomalee Inscriptions Series, No. 2. p.

20ம் இவை நிவந்தஞ் செய்வித்தேன் அரங்கன் Big 50. Sil Vol IV, 1411.
riangle, Alahana Pirivena, Polonnaruwa, Third ; ed. P. L. Prema tilleke, p. 128
Report (ASCAR), 1891, p 12; ASCAR, 1906,
a lankesvara Deva" Trincomalee inscriptions
on at Nilaveli", The Sri Lanka Journal of the
* சோழர் வரலாறு. அண்ணாமலைப் பல்கலைக்
ந்துவிட்டன. யாண்டெ (யாண்டு+எ(எ) என்ற சோழ இலங்கேஸ்வரனின் 7ஆம், 8ஆம், 9ஆம், நாதல் வேண்டும்.
Sri Lanka Jouran of the Humanities., Vol. 1,
iriyay Rock inscription" Epigraphia Zeylanica,
lab inscription of the time of Rajaraja
'eradeniya 1979, pp. 1-5.
2s of ancient in scriptions lithographed by Jas. he Journal of the Asiatic Society of Bengal, m, "A Slab - inscription of the time of Rajendra
D. 13-23.

Page 56
34.
35.
36.
37.
38.
39.
மேலது, ப. 5-10
S. Gunasingham, Two inscriptions of Co Series - No. 1, Peradeniya, 1974, p. 11.
"சபை, மகா சபை என்ற சொற்களும் மு என்னுந் தமிழ்ச் சொற்களும் ஒரே அமைப்பி பெருங்குறி எனப்படும். அதன் உறுப்பினன - Ésus60il 5T6rbgélfi, The Colas Secon
ஊரில் வாழும் மக்கள் சபையாருக்கு கொடு சேகரிக்கும் பணிமகனை "நம்மூர் தண்டும் முடிகின்றது. "கிராம சபையார் பணித்தல் கரணத்தான், பாடிகாப்பான், தண்டுவான் ( தி.வை. சதாசிவ பண்டாரத்தார் கூறுவது வரலாறு. 1974, ப. 301
SII, Vol. IV: No.267.
திருக்கோணேஸ்வரத்தை மச்சகேஸ்வரம் எ கிழக்கிலங்கையிற் காணப்பட்டது.
கொங்கு நாடு
இன்றைய சேலம், தர்மபுரி , ஈரோடு, நாடு எனலாம். முன்பு கொங்கு நாட்டில் 24 : களைக் கொங்கு சதகம்,
வடக்குத்தலை மன
குடக்குவெள்ளிப்
கழித்தண்டவை ஆ
குழித்தண்டலைய
எனக் கூறும். இன்று மேற்கே கேரளமும், வ தெற்கே திருச்சியும் எல்லைகளாக உள்ளன.
கொங்கு என்றால் தேனென்று பொருள்.
கொங்கு நாட்டில் பாதி நிலமும் பாதி மலை
கொல்லி மலை சங்ககிரி துர்க்கம், மோரூர்
கல்வராயன் மலை, பச்சை மலை, கஞ்சமலை
காவிரி, தென்பெண்ணை, தொப்பூர், சரபங்
கமலைநல்லூர் ஆறு, சுவேதநதி, வசிட்டாநதி ே
நஞ்சையும் ஏனைய பகுதிகளில் புஞ்சையும்
(தமிழில் வட்டாரநாவல்கள் எ பற்றி டாக்டர் சு. சண்முகசுந்தரம் எழுதியு பட்டது. ஆர். சண்முகசுந்தரம் எழுதிய நா குறிப் பிடத்தக்கது.)

la lankesvara Deva" Trincomaleenscriptions
1றையே அவற்றுக்கு ஒப்பான குறி, பெருங்குறி னையே குறிப்பனவாகும். அது சில சமயங்களிற் ரக் கூட்டாகப் பெருமக்கள் என்று குறிப்பிடுவர் i Edition (revised), 1955, p. 502.
க்க வேண்டிய வரி முதலான கொடுப்பனவுகளைச் மானி” என்று சாசனங் குறிப்பிடுகிறதென்று கருத வற்றைச் செய்யும் பணிமக்கள், மத்தியஸ்தன், தண்டல்), அடிக்கீழ் நிற்பான்” ஆகியோர் என்று ம் இங்கு கவனித்தற்குரியது. பிற்காலச் சோழர்
ன்று குறிப்பிடும் வழக்கம் அண்மைக் காலம்வரைக்
கோவை, நீலகிரி மாவட்டங்களைக் கொங்கு உள்நாடுகள் இருந்தன என்பர். அதன் எல்லை
லயாம் வைகாவூர் தெற்கே பொருப்புக்குன்று-கிழக்கு கும் காவிரி நன்னாடா ளவும் கொண்டு.
டக்கே கர்நாடகமும், கிழக்கே ஆற்காடுகளும்
தேன்பொழியும் மலை வளம் அதிகம். எனவே
| யுமாக உள்ளது. திருச்செங்கோட்டு மலை,
மலை, நாமக்கல் மலை, சேர்வராயன் மலை,
, நீலகிரி போன்றவை குறிப்பிடத் தக்கவை. கம், பவானி, திருமணிமுத்தாறு, பாம்பாறு,
பான்றவை குறிக்கத்தக்கன. இப்பகுதிகளில்
பயிராகின்றன.
ன்னும் நூலில் கொங்கு வட்டார நாவல்கள் ள்ள கட்டுரையிலிருந்து இப்பகுதி எடுக்கப் கம்மாள் கொங்குவட்டார நாவல் என்பது
53

Page 57
ஆர்.சண்முகசுந்தரத்தின்
*நாக
சி.ஆர் .
நாவல் வளர்ச்சி (1989) என்னும் கட்டுரை இங்கு மீளப் பிரசுரிக்கப்படுகின்றது மணிவாசகர் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்நூலில் தமிழின் முதல் நாவலா ஐயர், மாதவையா ஆகியோரின் நாவல்கள் படைப்புகள் வரை அறுபது முக்கிய நாவ பெற்றுள்ளன. தமிழின் நாவல் வளர்ச்சின கருதப்படுகின்றது.
க.பொ.த்,(உ.த.) வகுப்பில் தமிை நாகம்மாள் எனும் நாவல் பாடநூலாக விதி மதிப்பீடுகள் வெளியிடப்படுவதன் அவசி இரவீந்திரன் அவர்களின் ஒப்புதலோடு ( கின்றோம்.
கட்டுரையாளரான திரு. சி.ஆர். இ பட்டம் பெற்றவர். பழையவானத்தின் கீழே, கவிதை, நாடகம், இலக்கிய விமரிசனம் ஆ கட்டுரையாசிரியரின் அனுமதியி எனவே அநுமதி பெற விரும்புவோர்,
3/82,G, பேரூர் ெ கோவை எனும் முகவரியில் திரு. சி.ஆர். இரவீந்: வேண்டப் படுகின்றனர்.
நாவல் இலக்கியம்
தமிழ் நாவல் இலக்கியம் ஒரு நூற் றாண்டுக் கால வரலாற்றைப் பெற்றிருக்கிறது. இதனுடைய தோற்றமும், வளர்ச்சியும் பலவித பரிமாணங்களை உள்ளடக்கியதாக இருக் கிறது. கூடுதலான எண்ணிக்கையையும் கொண்டிருக்கிறது. அதேசமயத்தில் வித்தியாச மான பரிமாணங்களுக்கு உரிய தர அம்சங் களையும் பெற்றிருக்கிறது.
வாழ்க்கையும் கலை,இலக்கிய வடிவங்களும்
மனித வாழ்க்கைக்கான எதுவுமே வாழ்க்கையிலிருந்து தான் உருவாகிறது.
54

bDIT6’ ரவீந்திரன்
நூலில் இடம்பெறும் சி.ஆர். இரவீந்திரனின் 1. 836 பக்கங்கள் கொண்ட இந்நூலை தமிழ்நாடு
சிரியர்களான வேதநாயகம்பிள்ளை, இராஜம் தொடக்கம், அண்மைக்காலத்தில் வெளியான ல்கள் பற்றிய திறனாய்வுக் கட்டுரைகள் இடம் ய மதிப்பீடு செய்யும் சிறந்த நூலாக இந்நூல்
}ழ ஒரு பாடமாகப் பயிலும் மாணவர்களுக்கு நிக்கப்பட்டுள்ளது. இந்நாவல் பற்றிய விமர்சன யம் கருதி கட்டுரையாசிரியர் திரு. சி.ஆர். இக்கட்டுரையைப் பண்பாடு இதழில் பிரசுரிக்
ரவீந்திரன் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் அங்குத் தாய் ஆகிய நாவல்களை எழுதியவர்.
ஆகிய துறைகளில் ஈடுபாடு மிக்கவர்.
ன்றி இக்கட்டுரையைப் பிரசுரித்தல் ஆகாது.
ாவைப்புதூர் ரோட்,
சட்டிப்பாளையம்,
-641010, தமிழ்நாடு. திரன் அவர்களுடன் தொடர்பு கொள்ளுமாறு
யதார்க்க வாழ்க்கைக்குக் கலைவடிவம் அமைப்பதில் பல வகையான நிலைமைகள் தொடர்ந்து இருந்து கொண்டே வருகின்றன. கற்பனையை மிகுதியாகக் கொண்ட கலை வடிவம், கற்பனையை உள்ளடக்கிய யதார்த் தம், அதிக அளவுக்கு மிகையான யதார்த்தம் போன்ற அடிப்படையில் வாழ்க்கையைக் கலை, இலக்கிய வடிவங்களுக்குள் அடக்கு வதே மரபாக இருந்து வருகிறது.
நவீனமயமாதல்
சமுதாயம், அதனுடைய வளர்ச்சிப் போக்கில் இயங்கிக் கொண்டிருக்கையில்
அதன் பல வகையான கூறுகளும் நவீனத் தன்மையை ஏற்றுக் கொண்டு வளர வேண்டி

Page 58
இருக்கிறது. நவீன மயமாவதென்பதே, விஞ் ஞானத்தைத் தம்முள் ஈர்த்துக் கொண்டு வளர் வதாகிறது. இது, தவிர்க்க முடியாத நியதியா கவும் இருந்து வருகிறது. மனித சமுதாயம் தனது வளர்ச்சிப் போக்கில் கற்பனைகளைக் களைந்து கொண்டே முன்னேறுகிறது. வாழ்க்கை பற்றிய மாயையான கருத்துக் களெல்லாம், விஞ்ஞான ஒளியில் மாறுதலுக்கு உள்ளாகின்றன.
வளர்ச்சியடைந்த நாடுகளின் கலை, இலக்கிய மரபுகள் விஞ்ஞான அறிவுக்கு நெருக்கமாக வந்து விட்டன. கற்பனையின் ஆதிக்கம் குறைந்து விட்டது. இன்றைய நவீன உலகம் பல வகையான பிரச்சினைகளைத் தனக்குள் தாங்கி இயங்கி வருகிறது. மனிதன் தனது நடை முறை பற்றிய அறிவுணர்வி லிருந்து அதிகதூரம் விலகிவிடமுடிவதில்லை. ஆகவே, இன்றைய கலை,இலக்கியம் தனது மரபு வழிப்பட்ட கற்பனை அம்சங் களைக் குறைத்துக்கொள்ள வேண்டியிருக் கிறது. நவீன விஞ்ஞான உண்மைகளுக்கு நெருக்கமாக வரவேண்டியிருக்கிறது. முழுக் கற்பனையோ, கற்பனையை அதிகமாக உள்ளடக்கிய மேலோட்டமான யதார்த்தமோ கொண்ட கலை, இலக்கியம் இன்றைய சமுதாயத்தின் பண்பாட்டுத் தேவைகளை நிறைவுசெய்ய முடியாது.
பழைய உற்பத்தி முறையின் அடிப் படையில் இயங்கிவந்த மனித உறவுகள் காரண காரியங்களுக்கு அதிக முக்கியத்துவம் தர இயலாத நிலையில் கற்பனைகளே ஆதிக்கம் செலுத்த வேண்டியதாயிருந்தது. மனு போன்ற நீதிநூல்களுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் கருத்துக்களைச் சொல்லும் கருவியாகவே கலை, இலக்கிய வடிவங்கள் உருவாக்கப்பட்டன. அந்தந்தச் சூழ்நிலை மைகளின் அரசியல், மதத் தேவைகளுக்குத் துணைபுரியும் நிலைமை அவைகளுக்கு இருந்தது. நீதியை வலியுறுத்திய பழைய மரபு காலாவதியாகிவிட்டது. நவீன உற்பத்திமுறை விஞ்ஞான அறிவை அதிகமாக உள்ளடக் கியது.
நவீன பொருளுற்பத்தி முறை, பழைய வாழ்க்கையை அதன் மந்தமான போக்கிலேயே இயங்கவைக்கும் சாத்தி யத்தை உடைத்தெறிய வேண்டியதாயிற்று.

பிரச்சினைகளுக்கான காரண,காரியங்களைச் சுயமாக ஆய்வதும் , அதன் மூலமே அவை பற்றிய உணர்வைப் பெறுவதும் இன்றைய மனிதனின் நடைமுறை யதார்த்தமாகிறது. ஆகவே நீதி நெறி உபதேசங்களைக் கலை இலக்கியங்களில் கையாளுவது காலாவதி யாகிவிட்ட மரபு அம்சத்தின் தொடர்ச்சியே. ஆகவே, யதார்த்தமான கலை, இலக்கியத்தின் தேவை சமுதாய வளர்ச்சிக்கு மிகவும் அவசிய மாகிறது.
நாகம்மாள்
இதையெல்லாம் உணர்ந்த பிரக்ஞை யாலோ அல்லது ஒரு மாறுதலுக்கென்றோ , நாகம்மாள் நாவலை 1942இல் படைத் திருக்கிறார் ஆர். ஷண்முகசுந்தரம், அரை நூற்றாண்டுக்கு முன்பே, தமிழ் இலக்கியத்தின் புதிய தடத்திற்கு வழி சமைத்திருக்கிறார்
96 ft.
இந்தியாவில், நவீனத்துவத்தின் கோடுகள் படியாத எந்த கிராமத்தையும் போன்ற ஒன்றே சிவியார்பாளையம். அதற் கான சூழலும் சூழ்நிலைமையும் இயற்கை யுடன் சம்பந்தமுடையது. ஒரு கிராமத்திற்கு இருக்கவேண்டிய குணாம்சங்களெல்லாம் இதற்கும் உண்டு. சிறிய ஆறு, குளம், கானல், விளைநிலம், பொட்டல் காடு, இட்டேறி, ஊர்வெளி இப்படிப்பட்ட தளங்களிலேயே, "நாகம்மாளின்" மனிதர்கள் இயங்குகிறார்கள். இந்த இயங்குதலுக்குள் சிதையும் ஒரு குடும் பத்தின் கதையே "நாகம்மாள்"
கதைச் சுருக்கம்
இளம் விதவையான நாகம்மாளுக்குத் தன் பெண்குழந்தையான முத்தாயாள்தான் எல்லாம். ஆனால் அவள் தாயிடம் நெருக்கம் காட்டுவதில்லை. வாணம் வெடித்து இறந்து போன தன் கணவனின் ஒரே தம்பி சின்னப் பனும், அவனுடைய மனைவி ராமாயியும் அவளோடு வாழ்கிறார்கள். கணவன் விட்டு வைத்துப் போன விளைநிலமே அவர்களின் வாழ்க்கைக்கு ஆதாரம். கிராமத்து முரடனும், நடத்தை கெட்டவனும் தீமைக் குணமுடைய வனுமான கெட்டியப்பன் மீது நாகம்மாளுக்கு
55

Page 59
அலாதியான பரிவு. அது நெருக்கமான ஈடு பாடாக வளர்கிறது. அவனது தீயகுணங் களுக்கு பலியான நாகம்மாள் தன் குடும்பத் தையே சிதைத்து விடுகிறாள். அதன் பாரம் பரியப் பெருமையையெல்லாம் தகர்த்து விடுகிறாள். அதற்குத் துணையாக நிற்பவர், பழைய வஞ்சத்தைத் தீர்த்துக்கொள்ளத் தருணம் பார்க்கும் ஊர் மணியக்காரர். நாகம் மாளின் குடும்பச் சொத்துக்களை விற்றுக் காசாக்கி கெளரவமாய் வாழத்
துடிக்கும் சின்னப்பனின் மாமியார் காளி ய்ம்மாள். இவர்களின் ஆசைகளுக்கெல்லாம் பலியாகும் சின்னப்பன். இதற்குக் காரண மாயிருக்கும் விளைநிலம். இதுதான் "நாகம் மாள்” நாவல்.
கதை மாந்தர்கள்
நாவலில் வரும் ஒவ்வொருவரும் இயல்பு மீறாத மனிதர்கள். நிகழ்ச்சிகளெல் லாம் யதார்த்தமானவை. உரைநடையும் உரையாடல்களும் யதார்த்த வாழ்க்கையோடு சம்பந்தப்பட்டவை.
சின்னப்பன் மிகவும் யதார்த்த சுபாவ முடையவன். அவனுக்கு எல்லாவகையிலும் பொருத்தமான அப்பாவி மனைவி ராமாயி. உழைப்பும், நல்லெண்ணமும், மனிதர்களிடம் நம்பிக்கையும் சின்னப்பனுக்கு முதலீடு. நாகம் மாளின் குழந்தை முத்தாயை தம் குழந்தையைப் போல நேசிப்பவர்கள் இவர்கள்.
நாகம்மாளோ இவர்களிடமிருந்து இயல்பிலேயே வித்தியாசமானவள்." கணவன் இறப்பதற்குப் பத்து வருஷத்திற்கு முன் பிருந்தே அவள் ஒரு ராணி போலவே நடந்து வந்திருக்கிறாள் என்றும், பிறருக்கு அடங்கி நடக்கும் பணிவும், பயமும், என்னவென்றே அவள் அறிய மாட்டாள் என்றும் இப்போது குறிப்பிட்டாலே போதும்.” என்று நாகம் மாளைப் பற்றி ஆரம்பத்திலேயே சொல்லி வைக்கிறார் நாவலாசிரியர். கைம்பெண் ணாகிவிட்ட நாகம்மாள் வாழ்க்கையில் ஒரு கலகக்காரியாக இயல்பிலேயே மாறிவிடு கிறாள். ஊரே வெறுக்கும் கலகக்காரனான கெட்டியப் பனோடு உறவுவைத்துத் தன் குடும்பத்தையே அழித்து விடுகிறாள்.
56

கிராமத்து மனிதர்களில் மிகவும் வித்தியாசமாகவே சிந்திக்கத் தெரிந்தவர் நாராயணசாமி முதலியார். மனிதர்களின் பக்குவமறிந்து சாமர்த்தியமாய்ப் பேசுவார்.
நியாயமறிந்து புத்தி சொல்லுகிற பெரியவர்,"உம்முதலியாரு லேசுப்பட்டவனா, எந்த முண்டச்சியோ தண்டுவனோடு கெட்டுப் போறதுக்கு பெரிய குடும்பத்தைத் தெருப் பண்ணறதுக்கு யோசனை சொல்லப்பா, சொல்லு" என்று நேருக்குநேர் சொல்லுகிறார். இவர்,ஒரு அசரீரி போல அவ்வப்போது குரல் கொடுப்பவர். இவருடைய வாக்கு நாவலில் நிறைவேறுகிறது. இன்னும் சில மனிதர்கள் வந்து போகிறார்கள்.
கிராம வாழ்க்கைச் சித்தரிப்பு
ஒரு கிராமத்திற்கே உரிய கோவில் திருவிழா, பொங்கல், ஆட்டபாட்டம், குடி, கூத்து, விருந்து என்றெல்லாம் நாவலில் வாழ்வம்சங்களைப் பிரதிபலிக்கிறார் நாவ லாசிரியர். மரம் , செடிகொடி, வாசனை எல்லாமே கிராமத்துக்குச் சொந்தமானவை. இவை கிராமத்து வாழ்க்கையோடு பிணைந்து இயங்குகின்றன.
சடங்குகள், சம்பிரதாயங்கள், உறவு களின் பிணைப்புக்கள் எல்லாமே நாவலின் இயல்பான தன்மைகளாக வெளிப்பட்டிருக் கின்றன.
நாகம்மாளையும், கெட்டியப் பனை யும் சேர்த்து வைத்து ஊரெல்லாம் பேசுவதை அமுக்கலாகச் சொல்லிவரும் நாவலாசிரியர், எங்கேயும் அவர்களுடைய நெருக்கம், தகாத பாலுறவுக்கு இட்டுச் செல்வதாய்ச் சொல்ல வில்லை. அதை ஒரு பூடகமாகவே காட்டு கிறார். கிராமத்து விளை நிலத்தில் ஏற்றம் இறைத்தல், உழவோட்டுதல்,சாலடித்தல், பால் கறத்தல், களையெடுத்தல், பருத்தி எடுத்தல் என்றெல்லாம் உற்பத்தியின் பின்னணி இயல் பாகவே கலந்து விடும்படி நாவலில் செய் திருக்கிறார்.
நாவல், நிஜமனிதர்களின் நிஜமான வாழ்க்கையையே உள்ளடக்கி இருக்கிறது. இந்த வாழ்க்கையைக் கலையாக்கும் பொழுது, நாவலாசிரியர், கயிற்றைக்கட்டிக் கிணற்றில் இறங்குபவனின் கவனத்தோடும், அக்கறை

Page 60
யோடும், நிதானத்தோடும் செயல் பட்டிருக் கிறார். காக்கை, குருவி போன்ற பறவைகள் கூட நாவலில் முக்கியத்துவம் பெற்றிருக் கின்றன.
சயனம் சொல்லும் பல்லி, வாழ்க் கையை ஒரு மூட நம்பிக்கையோடு அணுகும் கிராமத்து மக்களின் இயல்பு பொருத்தமாகச் சித்திரிக்கப்பட்டிருக்கிறது.
ஒரு சிறிய காலவரையறைக்குள், உயிரோட்டம் நிறைந்த வாழ்க்கையையும், அதன் சிதைவையும், அவற்றிற்கே உரிய தாளலயம் பிசகாமல் நாவலில் சித்திரித் திருக்கிறார் ஆர். ஷண்முகசுந்தரம். நாகம் மாளின் குடும்பச் சிதைவு, அது சார்ந்த சூழ் நிலையின் மாறுதலால் அல்ல, மனித உறவு களின் சீர்குலைவால் நிகழ்வது. இதற்கு, அடிநாத அம்சமாய் விளங்குவது "உடமை” யான விளைநிலம்.
ஆர். ஷண்முகசுந்தரம் எந்தத்தத்துவ விசாரங்களையும், நீதி நெறி முறைகளையும் சாராதவர். அவரது வாழ்க்கையும் அதன் சூழலும், அங்கு மனிதர்களின் இயல்பான இயங்குதல்களுமே இந்த நாவலின் வடிவமாக அமைந்திருக்கிறது. ஒரு கலையின் உன்னத மான வடிவத்தைத் தமது வாழ்வனுபவங்களி லிருந்து செதுக்கியிருக்கிறார் நாவலாசிரியர். மன உளைச்சல்களைக் கூட நேர்த்தியாகவும் இயல்பாகவும் வெளிப்படுத்தியிருக்கிறார்.
வடிவமைப்பு
நாவலின் வடிவமைப்புக் கூட தடட மிடும் தன்மையிலிருந்து மாறுபட்டு, குழப் பமோ, நெருடலோ இல்லாமல் இயல்பாக வெளிப்பட்டிருப்பது நாவலின் சிறப்பம்சம். நாவலின் இடையிடையே நாவலாசிரியர் தலையிடுவது வாசகனைக் குழப்பத்திலிருந்து விடுவிக்கவே. அதுவும் எல்லை மீறுவதில்லை.
நாவலின் முடிவை ஆசிரியர் மிகுந்த அருத்தத்தோடும் உருக்கத்தோடும் செய் திருக்கிறார். எங்கும் இயல்பு மீறிப் போவது சாத்தியமில்லாமலே அமைந்திருக்கிறது.

ஆர்.ஷண்முகசுந்தரத்தின் இலக்கிய மரபு
அரை நூற்றாண்டுக்கு முன்பே, தமிழில் இப்படியொரு நாவல் எழுதப்பட்டிருப்பது பெருமைக்குரியதாகிறது. இந்த இலக்கிய மரபு, பின்னவர்களால் பெருமளவில் தொடரப் படவில்லை. இதன் முக்கியத்துவம் மகத்தானது. "தமிழ் நாவல்களில் மட்டுமல்ல இந்திய நாவல்களிலும் ஆர். ஷண்முக சுந்தரத்தின்"நாகம்மா”ளுக்கு ஒரு முக்கியத் துவமுண்டு. கிராமியச் சூழ்நிலைகளை முழு வதும் உபயோகித்து பிராந்திய நாவல் என்ற துறையை முதல் முதலாக இந்தியாவில் உரு வாக்கியவர் அவர்தான் என்று சொல்லலாம்." என்ற க.நா.சு.வின் மதிப்பீடு சரியானதே.
ஆர். ஷண்முகசுந்தரத்தின் இலக்கிய மரபு தொடர்ந்து செழுமைப்படுத்தப்பட வேண் டியது. அது தமிழ் நாவல் இலக்கியத்திற்கு வளம் சேர்ப்பதோடு, தமிழர் பண் பாட்டைச் செழுமைப்படுத்தும் பணியையும் நிறைவேற் றும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.
இந்தியக் கிராமங்கள் மாறுதலுக்கு உள்ளாகி வருகின்றன. பழைய எண்ணங் களும், பண்புகளும், நவீன வாழ்க்கையால் தீண்டப்படுகின்ற இயல்பு தவிர்க்க முடியாதது. வாழ்க்கை இன்று கிராமப்புறங்களில் பல வகையான சிக்கல்களுக்கிடையிலும் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது. நவீன மாறுதல் களுக்கு உள்ளாகும் கிராமத்து வாழ்க்கையின் உயிரோட்டமுள்ள கலை , இலக்கிய வடிவங் களைத் தமிழில் உருவாக்க அடித்தளமாக அமைந்திருப்பது ஆர். ஷண்முகசுந்தரத்தின் இலக்கிய மரபு. இவரது மரபு, மிகுந்த மனித நேயத்தை உள்ளடக்கியது. ஒரு கலைஞனின் கூர்மையான பார்வையையும் , தீவிரமான ஈடுபாட்டையும் கொண்டது. இதற்கு எல்லா வகையிலும் எடுத்துக் காட்டாக அமைந் திருப்பது நாகம்மாள் நாவல்.
57

Page 61
58
தமிழ் ஆராய்ச்சியின் வளர்ச்சியும் வரலாறு திணைக்களத்தின் ஏற்பாட்டில் எதிர்வ கொழும்பில் நடைபெற உள்ளது. இக் கருத்தரங்கில் தமிழ் ஆராய்ச்சித் து என பல அமர்வுகளில் ஆய்வுகள் நை இக்கருத்தரங்கில் ஆய்வுக்கட்டுரைகள் (1) திரு. பெ. சு. மணி (2) பேராசிரியர் அ.ப (3) பேராசிரியர் கா.: (4) பேராசிரியர் சி.தி (5) பேராசிரியர் அ.ச (6) கலாநிதி எம். ஏ. நு (7) கலாநிதி க.அருண (8) கலாநிதி. துரை (9) கலாநிதி சி. மெள (10) கலாநிதி ந.வேல்
(11) திருமதி மனோன் (12) திரு.செ.யோகர
இக்கருத்தரங்கை முன்னிட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழ வரலாற்றையும் முக்கிய கரு விளக்கும் கட்டுரைகளின் இக்கையேட்டினை பெற வி நூலகங்கள், உயர் கல்வி நிலைய தொடர்பு கொள்ளுமாறு வே
விலை ரூபா 50/- ஆகும்.
 

வளர்ச்சியும் வரலாறும்
வம் எனுந் தலைப்பிலான கருத்தரங்கொன்று பரும் அக்டோபர் 4, 5, 6ம் திகதிகளில்
|றைகள், தமிழ் ஆராய்ச்சி முன்னோடிகள் ]டபெற உள்ளன.
சமர்ப்பிக்கவுள்ள அறிஞர்கள் :
(தமிழ் நாடு) ாண்டுரங்கன் (தமிழ் நாடு) சிவத்தம்பி
ல்லைநாதன்
ண்முகதாஸ்
! .ւorr6ծI
Τπεσε ουίο
மனோகரன்
‘னகுரு
(9(听色
மணி சண்முகதாஸ்
ாஜா
ஆய்வுக் கையேடு ஒன்று ாராய்ச்சியின் வளர்ச்சியையும், நத்து நிலைப் போக்குகளையும் ர் தொகுப்பாக அமையும் ரும்பும் நிறுவனங்கள், பொது ங்கள் என்பன திணைக்களத்துடன் ண்டப்படுகின்றன. கையேட்டின்
كصد=

Page 62
திணைக்களத்தில் விற்
திணைக்க
01) தமிழ் நாட்டார் வழக்காற்றியல்
- தொகுப்பாசிரியர்
02) சைவசித்தாந்த அறிவாராய்ச்சியியல்
- கலாநிதி. சோ. கிமு
03) தக்ஷணகைலாசபுராணம் பகுதி 1
- பதிப்பாசிரியர்: பேர
04) தக்ஷணகைலாசபுராணம் பகுதி II
- பதிப்பாசிரியர்: பேர
05) அந்தரேயின் கதைகள்
- தொகுப்பாசிரியர்:
06) யாழ்ப்பாண வைபவமாலை
- பதிப்பாசிரியர்: குல.
07) இந்துக் கலைக்களஞ்சியம் 1
- பேராசிரியர்: பொ.
- பதிப்பு பேராசிரியர்:
08) இலங்கையின் இந்துக்கோயில்கள் 1
- பதிப்பு பேராசிரியர்:
09) தொடர்பாடல், மொழி, நவீனத்துவம்
- பதிப்பு, எம். ஏ. நு.L
米 ae 米
(1) நாட்டுப்புற நிகழ்கலைகள்.
- டாக்டர் கே. ஏ. குே
(2) ஈழத்து வாழ்வும் வளமும்
- பேராசிரியர். க. கை
(3). வரலாற்றுப் போக்கில். தென்னக சமூகம். - சோழர் காலம் (850 - நொபொரு கராஷி

னைக்குள்ள நூல்கள்
வெளியிடுகள்
. சண்முகலிங்கம்
ஷ்ணராஜா
ாசிரியர் சி. பத்மநாதன்
ாசிரியர் சி. பத்மநாதன்
மாத்தளை சோமு
சபாநாதன்
பூலோகசிங்கம்
சி. பத்மநாதன்
சி. பத்மநாதன்
ான்
எசேகரன்
பதிப்பிள்ளை.
1300)
150.OO
25.OO
OOOO
OO.OO
25.00
35.OO
25O.OO
25O.OO
OOOO
15O.OO
45.OO
7O.OO
3/5.00
N

Page 63
New Raja TI PTiTit. CC

չlյtilէյ-Լյ -: