கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பண்பாடு 1997.08

Page 1
A PANPADLA Ua5 G.
in 7 இத
* பாரதி வரலாறு : ஒரு மறுழுதி
* தேசவழமைச் சட்டத்தின் ை
* அவள் தர்மவதி என்போம்
* சி. வை. தாமோதரம்பிள்ை
* தமிழ் இலக்கியத் திறனாய்
இதழ்
G3 gif இந்துசமய, கலாசார அலு

வ இதழ்
Journal
ழ் 2 1997 ஆவணி
3 F.
நூல் விமர்சனம்
எ பதிப்புப்பணி ஒரு மறு மதிப்பீடு
|ெ பழமையும் புதுமையும்,
أمس.
|-
-- تھا................. 1 ¬5 ܒܒܝܒܬܢܝ 置
الليبيا
با اقلیمیه، سید . தி'ட- t --
th(B:
வல்கள் திணைக்களம்

Page 2
பதிப்பு - 1997 ஆவணி
விலை - ரூபா 25/-
பதினாறாவது இதழின்
1. திரு. ந. இரவீந்திரன் பி. ஏ. y (சிற
வவுனியா கல்வியியல் கல்லூரியில் புரிகின்றார். சிறந்த இலக்கிய விட் சிறப்புக் கட்டுரைகளையும் எழுதி
2. திரு.பொ. காங்கேயன். பி. ஏ. (சி
சிறந்த கட்ட்த்தரணியும்,எழுத்தர் ஆவார் சட்டவியல் தொடர்பான கட்டுரைகளை எழுதி வருபவர்.
3. திருமதி மனோன்மணி சண்முக
யப்பான் கக்குயின் பல்கலைக்கழக புரிகின்றார். தமிழ் மொழி ( கொண்டவர். யாழ்ப்பாண விரிவுரையாளர்களில் ஒருவராகவு
4. பேராசிரியர் அ.பாண்டுரங்கன்
தமிழ் நாடு, புதுவைப் பல்கலைக்க பேராசிரியராகவும் பணிபுரிபவர். ஆங்கில மொழிகளில் பல ஆய்வுக் மொழி தொடர்பான நூல்களையு
5. டாக்டர். க. பஞ்சாங்கம்.
புதுக்சேரி,காஞ்சி மாமுனிவ விரிவுன்ர்ய்ாளராகப் பணிபுரிகின் ஆய்வுக் கட்டுரைகள் எழுதி வருகி
في .ته
பண்பாடு கூறப்பட்டு சொந்தக்
திணைக்க

85 (S6ODTITUTTf|Tf UTTJ@i
ப்பு),
சிரேஷ்ட விரிவுரையாளராகக் கடமை மர்சகர். பல ஆய்வுக் கட்டுரைகளையும் வருபவர்.
சிறப்பு) எல். எல். பி.
ர்வம் கொண்ட இலக்கிய விமர்சகரும் சமூக, உறவுகளை, தெளிவுற விளக்கும்
தாஸ் எம். ஏ.
த்ெதின் ஆய்வாளராக தற்போது கடமை தொடர்பான ஆய்வுகளில் ஈடுபாடு ப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட ம் சேவையாற்றியவர்.
ழகத்தில் தமிழ்த் துறைத் தலைவராகவும் மிகுந்த தமிழ்ப் புலமை பெற்றவர். தமிழ் கட்டுரைகளை எழுதியுள்ளதோடு, தமிழ் ம் வெளியிட்டுள்ளார்.
ர் உயர் கல்வி மையத்தின் தமிழ் றார். இலக்கியத் திறனாய்வு தொடர்பாக ன்றார்.
பருவ இதழில் பிரசுரமாகியுள்ள கட்டுரைகளில் டுள்ள கருத்துக்கள் யாவும் கட்டுரையாசிரியர்களின் கருத்துக்களாகும். இவை இவ்விதழை வெளியிடும் ளத்தின் கருத்துக்களைப் பிரதிபலிப்பனவாக,
ஆசிரியர்.

Page 3
பண்
(பதினாறா6
ಆಖ| 7 | ®g 2
ஆசிர் சாந்தி நாள்
翠
உதவி ஆ எஸ். தெய்
FN
இந்து சமய கலாசார அலு இல 98, வோ கொழுப்

LI OG
வது இதழ்)
1997 ஆவணி
*udi வுக்கரசன்
ܬܵܓܸܗ̄
Pouă வநாயகம்
யீடு : லுவல்கள் திணைக்களம் ாட் பிளேஸ்,
bL - 07.

Page 4
பொரு
* பாரதி வரலாறு : ஒரு மதிப்பீடு.
ந. இரவீந்திரன்.
to தேசவழமைச் சட்டத்தின் வளர்ச்சி.
பொ. காங்கேயன்.
* அவள் தர்மவதி என்போம் : நூல் 6
மனோன்மணி சண்முகதாஸ்.
* சி. வை. தாமோதரம்பிள்ளை பதிப்
அ. பாண்டுரங்கன்.
* தமிழ்,இலக்கியத் திறனாய்வு : பழ
டாக்ட் க்ய்ஞ்கார்கழ்

விமர்சனம்,
ப்புப்பணி ஒரு மதிப்பீடு.
மையும் புதுமையும்.
01 .
18
29
32
42

Page 5
பாரதி வரலாறு
1. முப்பெரும் பாதைகளும் பாரதியும்
பாரதி நூற்றாண்டு விழா கடந்து போய் பல ஆண்டுகளாகி விட்டன. ஆயினும், பாரதிதாசன் நூற்றாண்டு விழாவைத் தொடர்ந்து வந்த படைப்புக்கள் பாரதிதாசன் வாழ்க்கை வரலாற்றைத் தெளிவு படுத்திய அளவுக்கு பாரதியின் வாழ்க்கை வரலாறு சரியாக வரையப்படவில்லை. கவிஞர் முருகு சுந்தரம் வெளியிட்ட “பாவேந்தர் - ஒரு பல்கலைக்கழகம்" கோ. கிருட்டிணமூர்த்தியின் “பாரதிதாசன் வாழ்க்கை வரலாறு', டாக்டர். ச. சு. இளங்கோவின் “பாரதிதாசன் பார்வையில் பாரதி” முதலிய நூல்கள் பாரதிதாசன் வாழ்க்கை வரலாற்றை ஓரளவு தெளிவாகக் காட்டியுள்ளன.
ஒப்பீட்டு ரீதியில் மிக அதிக நூல்கள் பாரதி பற்றி வெளிவந்த போதிலும், பாரதி வாழ்க்கை வரலாறு தெளிவாக வரையப்பட்டுள்ளதாகக் கூற முடியாதுள்ளது. 'பாரதியின் வாழ்க்கை வரலாறு இன்னும் முற்றிலும் ஆராயப்பட்டு எழுதப்படவில்லை. விரைவில் ஒரு நல்ல ஆராய்ச்சி நூல் ஒன்று வெளிவரலாமென்று எதிர்பார்க்கிறோம்” என்று ப. கோதண்டராமன் கூறிய நிலையே இன்னமும் தொடர்கின்றது. பெரும்பாலும் அவ்வக் காலத்தில் தனது நிலைப்பாடுகள் குறித்து பாரதி எழுதிய விடயங்களைத் தொகுத்து தி. முத்துக்கிருஷ்ணன் “மகாகவி பாரதியார் வாழ்க்கைச் சித்திரம்’ எனும் நூலை தந்த போதிலும், அது பாரதியின் வாழ்க்கை நெறியை முழுமையாகக் காட்டத்தவறி விட்டது.
இதற்கான அடிப்படைக்காரணம் என்ன ? பாரதிதாசனின் வாழ்க்கைப் பாதையைத் தெளிவாக அடையாளங்காண முடிவதுபோல, பாரதி வழியைத் தடங்காண முடியாதபடி பாரதியோடு வாழ்ந்தவர்களும் ஆய்வறிஞர்களும் தடுமாறுவது ஏன் ?

I - ஒரு மறு மதிப்பீடு
ந. இரவீந்திரன்
பாரதியின் மறைவுக்குப்பின், 1925 ஆம் ஆண்டைத் தொடர்ந்து, தேசிய விடுதலைப் போராட்டத்தில் காங்கிரஸ் பிரதிநிதித்துவப்படுத்திய தேசிய முதலாளி வர்க்கத் தலைமை மட்டுமன்றி கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதித்துவப்படுத்திய பாட்டாளி வர்க்கத் தலைமையும் தனது செல்நெறியைத் தெளிவுபடுத்திக் கொண்டது. மேலும், மூன்று ஆண்டுகளின் பின், தமிழ்த்தேசிய முதலாளி வர்க்கப் பிரிவொன்று தனக்கான தனியான மார்க்கம் ஒன்றைத் தெரிவு செய்து அவ்வழியில் முன்னேறியது.
இத்தெளிந்த மூன்று அரசியல் ஓட்டங்களில் மூன்றாவது மார்க்கத்தை பிரதிநிதித்துவப்படுத்திய திராவிடர் கழகத்தைத் தனதாக வரித்துக் கொண்டு, அவ்வழியில் நீண்ட காலம் தன் தடம் பதித்த பாவேந்தரின் வாழ்க்கைப் பயணத்தை வரைவதற்குத் தடங்கல் எதுவும் இருக்கவில்லை. இவ்வாறு தொடர்ந்த வரலாற்றுப்போக்கில் பாரதி வாழ்ந்து தன் சிந்தனைப் போக்கைத் தெளிவுபடுத்தியிருப்பின் முந்திய (அவர் வாழ்ந்த) காலசிந்தனைத் தடத்தையும் இனங்கண்டு அவர் வாழ்க்கை வரலாற்றுப் போக்கை
உறுதியாக முன் வைத்திருக்கமுடியும்.
அவர் வாழ்ந்த அந்தக்காலம், பின்னால் இத்தகைய மூன்று மார்க்கங்களை பிரசவிப்பதற்கான கருக்களைத் தன்னகத்தே கொண்டிருந்த காலம். அவற்றுள் எது பாரதியில் அதிகளவில் முளை கொண்டு அவரை இயக்கியது என்பதை அறியாமல் அவருடைய வாழ்க்கை நெறியை வரையறுத்துவிட முடியாது. அவருடன் வாழ்ந்தபோதிலும் அந்த மேதைமையைப் புரியாமல், அதன் ஒவ்வொரு பகுதிகளை மட்டும் உள்வாங்கிய உறவினர்கள் நண்பர்களால் அந்த முழுமையை வெளிப்படுத்தி யிருக்கமுடியாது என்பது இயல்பானதே.
பாரதி பற்றி, பாரதிதாசன் மேல்வருமாறு கூறியிருப்பதாக பாவேந்தரின் நண்பர்

Page 6
பன்மொழிப்புலவர் அப்பாத்துரையார் காட்டியிருப்பது கவனத்திலெடுக்கப்பட வேண்டிய ஒரு அம்சமாகும்: “பாரதி பெரிய புரட்சிக்காரர், சீர்திருத்தச் செம்மல், பாரதியைப் பற்றி வைதீகச் சார்பான சில செய்திகளைப் பலர் கூறுவார்கள். அந்தக்காலத்தில் பாரதிக்கு மேல் சீர்திருத்தவாதியாக வேறு யாரும் இருந்திருக்க முடியாது. அந்தக் காலத்துச் சமுதாயச் சூழ்நிலை அதற்குமேல் இடங்கொடுக்கவில்லை. நானும் அப்போது, அப்படித்தான் இருந்தேன். பாரதியைப் போல நானும் அன்று பேராயக் கட்சிக் (Congress) காரன்; சுப்பிரமணியர் துதியமுது பாடியவன். அப்போது அவரிடத்திலும் தனித்தமிழ் இல்லை. பாரதி படிப்படியாக சீர்திருத்தவாதியாக மாறிவந்ததை நான் என் கண்ணாரக் கண்டேன். பாரதி உ யி ரே ா டி ரு ந் தி ரு ந் த ர ல் "சுயமரியாதைக்காரராக மாறியிருப்பார். என்னைப் போல்தான் பாடியிருப்பார்” ?
பாவேந்தர் இவ்வாறு கூறுவதற்கான ஆதாரமாகவும் பாரதியின் வாழ்வு அமைந்திருந்தது. இதற்கு மாறாக, இன்னொரு அணியைச் சார்ந்தவராகிய ப. ஜீவானந்தம் தனது அணிக்கருத்தினராக பாரதியை இனங்காணவும் பாரதியிடம் ஏதுக்கள் இருந்தன.
“பாரதியின் வாழ்க்கைப் பார்வையில் ஒரு புரட்சி நிகழ்ச்சி ஒரு 'யுகப்புரட்சியைக் காட்டுகிறது. 'கலி இடிபட்ட சுவர் போலே விழுகிறான். 'கிருதயுகம்' எழுகிறது.
“அவனுடைய 'பொது உடைமைப்' பார்வையில், 'உலகத்துக்கொரு புதுமை நடக்கிறது. ‘எல்லோரும் ஒர்குலம் எல்லோரும் ஓர் இனம், எல்லோரும் ஓர் விலை, எல்லோரும் ஓர் நிறை' என்ற சூழ்நிலை உருவாகிறது. அங்கு ‘எல்லோரும் மக்கள், எல்லோரும்
3 99-ی
மன்னர்களாக வாழ்கிறார்கள்” " என்றும்,
"தமிழ் நாட்டுக் கவிஞன் பாரதி 'பாரத சமுதாயம் பாட்டில் முப்பது கோடி
2

முழுமைக்கும் பொது gD 66) L G6ö6) LD கோரினான். அவனது நுண்மாண் நுழை புலத்தால் பொதுவுடைமைதான் சிறந்தது என்பதை உணர்ந்தான்” என்றும் சந்தர்ப்பம் வாய்க்கும்போதெல்லாம் வலியுறுத்துவதனூடாக பாரதி பொதுவுடைமைச் சார்பினரென ப. ஜீவானந்தம் காட்டி வந்துள்ளார். நேரடியாகக் கூறாத போதிலும் மறைமுகமாக பாரதி கம்யூனிஸ்ட் அணியை அண்மிப்பதாகவே ஜீவா காட்டுகின்றாரெனலாம்.
ஆயினும் இந்த இரு போக்குகளுக்கும் மாறாக, பாரதியை வைதீகச் சார்பினராக' இனங்காணும் போக்கே வலுப்பெற்றுக் காணப்படுகிறது. அவ்வாறு காட்டும் முயற்சிக்கு எதிராக பாரதிதாசன் தனது வாழ்நாள் பூராவும் போராடினார்; புதுவையில் பாரதிதாசன் தலைமையில் 1958 இல் நடந்த பாரதி விழாவின்போது பாரதி நண்பர் சங்கு சுப்பிரமணியம் 'பாரதி சாதியை எதிர்க்கவில்லை; அவ்வாறு எழுதவும் இல்லை, என்று பேசியபோது பொறுமையிழந்த பொது மக்களை அமைதியாக இருக்கும்படி பாரதிதாசன் வேண்டிக் கேட்டபின்னர், சங்கு சுப்பிரமணியத்தின் கருத்துக்களை ஆதாரத்துடன் மறுத்துப் பேசினார். * பாரதிதாசனின் இந்த முயற்சிகளும், பாரதி பூரண சமத்துவப் புத்துலகம் வேண்டி புரட்சிக் கவியாக கண்களை மூடியவர் என்ற ஜீவாவின் பிரச்சார முழக்கங்களும் ‘ஆன்மீகச் சிமிழுள்' பாரதியை அடைப்பதிலிருந்து அவரைக் காப்பாற்றிவிடவில்லை. அவ்வாறு ஆன்மீக அணியில் இனங்காணவும் பாரதியிடமிருந்து ஏராளமான ஆதாரங்களைக் காட்ட (Մդպմ.
தமது ஆன்மீகச் சார்புக்கு பாரதியை வலிந்தெடுப்பவர்களால் மட்டுமன்றித் தம்மைத் தீவிர புரட்சியாளர்களாக அடையாளங்காட்டும் ஆய்வாளர்களாலும் பாரதி அத்திசை நோக்கித் தள்ளப்படுவது ஒரு யதார்த்தம். 1905 ஆம் ஆண்டில் முளைவிட்ட முதலாவது தேசிய எழுச்சிப் பேரலைக் காலத்தில் அரசியல் வாழ்வில் பிரவேசித்த பாரதி அதிதீவிரவாதியாக இருந்தார். 1908ஆம் ஆண்டில் புதுவைக்குப் (Luffi தலைமறைவுவாழ்வு மேற்கொண்டதிலிருந்து ஆன்மீகத் தேடலுள் மூழ்கிப் பிற்போக்கு நிலைப்பாட்டை எடுத்துவிட்ட பாரதி, பிரிட்டிஷ் இந்தியாவினுள் 1918 இல் நுழைந்தபோது

Page 7
காந்தீய மிதவாதியாக மாறிவிடுகிறார் என்பதான ஆய்வுகள் இன்று முன்வைக்கப்பட்டுள்ளன.
புதுவையில் அடியந்தமான சிந்தனை மாற்றத்தைப் பெற்றுவிட்ட நிலையில் மீண்டும் பிரித்தானிய இந்தியாவினுள் பிரவேசித்த “பாரதியின் ஆன்மீக நோக்கும் அத்வைதப் பார்வையும் சரணாகதித் தத்துவமும் பகவத்கீதை விளக்கமும் இப்போதைய அரசியல் நிலைக்கு இயைந்து கொடுக்கின்றன. இத்தகைய நிலைப்பாடுகளை ஏற்றுக் கொண்ட காந்தியை அவர் முழுமனதாக
6
ஏற்றுக் கொள்கிறார்" என கோ. கேசவன்
கூறியிருப்பதை அவதானிக்கலாம்.
பாரதி காந்தியவாதியா ? இவ்விடயம் பாரதியியலில் தெளிவு காணப்படவேண்டிய மிகப் பிரதான அம்சமாகும்.
2. தனித்துவப் பாதைவகுத்த பாரதி
தமிழ்நாடு அரசு வெளியிட்ட “மகாகவி பாரதி நூற்றாண்டு விழா மலர் 1982 இல் “பாரதி நோக்கில் காந்தியடிகள்” எனுந்தலைப்பில் கட்டுரை எழுதிய கு. ராஜவேலு இன்னும் ஒரு படி மேலே சென்று கூறியிருக்கிறார். “சுதந்திரம் எமது பிறப்புரிமை. அதை அடைந்தே தீருவோம் என்று முழங்கியவர் லோகமான்ய பால கங்காதர திலகர். அவருடைய அருமைச்சீடர் பாரதியார். எனினும் திலகரால் இந்திய நாடு விடுதலை பெறும் என்று அவர் நம்பவில்லை. காந்தியடிகளால்தான் நாடு சுதந்திரமடையும் என்பதை அறுதியிட்டுக்கூறுகிறார்” கருத்து.
என்பது ராஜவேலுவின்
ராஜாராம் மோகன்ராய், விவேகானந்தர் முதல் காந்திவரை அனைவரையும் போற்றவேண்டிய இடத்துப்போற்றித் தவறெனக் கண்ட சந்தர்ப்பங்களில் திறந்த மனத்தோடு விமர்சிக்க பாரதி தவறியதில்லை என்றபோதிலும், அவர் எந்த ஒரு விமர்சனத்தையும் வெளிப்படையாக முன்வைக்காததோடு, பலமான அம்சங்களையெல்லாம் பற்றார்வத்துடன் பிரச்சாரப்படுத்தியது திலகர் விடயத்தில் மட்டுமே. பூரண சுயராஜ்யம் வேண்டுமெனத் துணிந்து கருத்துரைத்து, சிலவேளை சுதந்திரம் சாத்தியமாகக்

கூடுமோ என்ற ஐயந்தானும் மக்களை அண்டாத சூழலில், சுதந்திரமீட்ட மக்களைக் கிளர்ந்தெழத் தூண்டிய தலைவர் திலகர் என்றவகையில், அதே எழுச்சியைத் தமிழகத்தில் காண விரும்பிய பாரதி அதற்குக் குந்தகம் நேராதிருக்கும் பொருட்டு திலகரை வெளிப்படையாக விமர்சிக்காத நிலைப்பாட்டை எடுத்துக் கொண்டார்.
ரவீந்திரநாத தாகூர் காந்திக்கு வழங்கிய மஹாத்மா' பட்டத்தை பாரதியும் ஏற்றுப் பாட்டில் வடித்ததை வைத்துப் பலர் முதிர்ந்த காந்தீயவாதியாக பாரதியைக் கணிப்பர். அதே பாரதி, அதற்குப் பத்து ஆண்டுகளின் முன்னே திலகரைப் போற்றிப்பாடிய வரிகளை ஆழ்ந்து நோக்கினால் காந்தியை மகாத்மாவெனப் போற்றியதற்காக ஆச்சரியப்பட்டுக் கொள்ளமாட்டார்கள். 'லோகமான்ய பால கங்காதர திலகர்’ எனும் 1908 ஆம் ஆண்டு எழுதிய கவிதையில் சேரலர்க்கு நினைக்கவுந்தீயென நின்றவெங்கள் திலக முனிவர்கோன்',
துஞ்ச மட்டுமிப் பாரத நாட்டிற்கே
தொண்டி ழைக்கத் துணிந்தவர் யாவரும் அஞ்செழுத்தினைச் சைவர் மொழிதல் போல்
அன்பொடோ தும் பெயருடை யாரியன்”
எனப் பாடியிருப்பதைக் காணலாம். சைவர்க்கு 'சிவாயநம எப்படியோ அத்தகைய புனிதமிக்கது தேசியவாதிகட்கு திலகர் நாமம் என்ற பாரதியின் கூற்று மகாத்மாவுக்கும் மேலே திலகரை மதித்ததைக் காட்டும்.
புனா நகரத்தில் 1906 ஜுலை 11ம் திகதி திலகரின் 50 வது பிறந்ததினம் கொண்டாடியது பற்றி அதே மாதம் 14 ம் திகதி பாரதி எழுதிய விடயமும் இங்கு மனங்கொள்ளத்தக்கது. அத்தகைய விழா வீண் பணவிரயம் எனத்திலகர் மறுத்த போதிலும் ஆதரவாளர்கள் அதனைக்கவனியாது விழா நடத்தியது பற்றி பாரதி இவ்வாறு கூறுகிறார்:"தெய்வத்தினிடத்தில் சம்மதம் கேட்டுக்கொண்டா அதற்கு பூஜை நடத்துகின்றோம். தெய்வ பூஜையைக் காட்டிலும், இப்போது நமது நாடிருக்கும் நிலைமைக்கு வீர பூஜை அத்தியாவசியமாகும். ராமன், அர்ஜுனன், சிவாஜி, பிரதாபர் முதலிய யுத்த வீரர்களும், புத்தர், சங்கரர் முதலிய ஞான வீரர்களும் வாழ்ந்த இந்தப் புண்ணிய தேசமானது இப்போது வீர சூன்யமாய் போய்விட்டது.
3

Page 8
அந்த ஸ்திதி ஈஸ்வரக்கடாகூடித்தினால் உதித்திருக்கின்ற சாமான்ய மக்ான்களைக்கூட நாம் தக்கபடி கெளரவம் செய்யாமலிருப்போமானால் நம்மை மிகவும் இழிந்த குருடரென்று உலகத்தார் நிந்தனை புரிவார்கள்”
அவ்வாறு பாராட்டுவதை விடுத்து, திலகரை சமூக சீர்திருத்தவாதிகள் தாக்குவதைக் காணும்போது, திலகரை மாக்ஸ் முல்லர் நிகரற்ற வித்வானென்றும் மஹாஞானியென்றும் கொண்டாடியிருக்கிறார். சுரேந்திரநாத் பானர்ஜி திலகரைப் புகழ்வது கொஞ்சமல்ல, விபின சந்திரபாலர் திலகரைத் தெய்வமாகவே பாராட்டுவார். பூநீலஜ்பத்ராய் திலகரென்று நினைத்தவுடன் கைதுக்கி வணங்குகிறார், எனக்கூறும் பாரதி, வரம்புகடந்த கல்வி ஞானமும் ஜனாபிமானமும் தேசபக்தியும் மனோதிடமும் வாய்க்கப்பெற்ற திலகரைக் கண்டிக்கும்போது உதாசீன வசனங்கள் பேசாதிருக்க வேண்டாமா என வினவுகிறார்."
சமூக சீர்திருத்தக் கருத்தில் பாரதியும் திலகரோடு முரண்பட்டபோதிலும் விடுதலைப்போராட்ட அணியின் உயர்ந்த தலைவராய்த் திலகரை மதித்ததாலேயே ஞானரதத்தில் பயணித்து தர்மலோகத்தை அடைந்து தர்மராஜாவைக் காணும்போதும் அவர் முகத்தில் திலகரின் சாயலைக் காண்கிறார் பாரதி. "
சுதந்திரக் கிளர்ச்சி தொடங்கி சிலநாளே ஆயினும் அதற்குள் எல்லா மதத்தார்க்கும் பொதுவான பல புண்ணிய ஸ்தலங்கள் உருவாகிவிட்டது என 1910ஆம் ஆண்டில் எழுதுகிறார் பாரதி. திலகர் பொன்னடிகளால் புனிதம் பெற்ற ஆமதாபாத் ஸாபர்மதி சிறைச்சாலை முதல் ஆத்மசக்திசம்பூரணமாய் நிறைந்த பாரத புத்ரர்களான பூரீமான் மோ. க. காந்தி, ஜனாப் டாவூத் முஹமத், ஜனாப் அங்கிலயா, பூரீ ரஸ்தோம்ஜி ஆகியோர் போராட்டத்தால் தென்னாபிரிக்க திரான்ஸ்வால் (ஜொஹன்ஸ் பர்க் நகரம்) வரை பல புண்ணிய ஸ்தலங்கள் தோன்றிவிட்டமையை பட்டியலிட்டுத் தொடர்கையில், ஒவ்வொரு தேசபக்தரையும் அதி உயர்ந்த நிலையில் வைத்துப் போற்றி எழுதுவார் பாரதி. "
மக்கள் தலைவர்களை மதிக்கும் பாரதியின் இந்தப் பண்பை, ஈஸ்வரக் கடாக்ஷத்தினால்

உதித்திருக்கின்ற சாமான்ய மகான்களைக்கூட தக்கபடி கெளரவம் செய்ய வேண்டும் என்ற அவரது உணர்வைப் புரிந்து கொள்ளாமையினாலேயே காந்தியை மகாத்மா எனப் போற்றியதை வைத்துப் பாரதியைக் காந்தியவாதியாகக் கணிக்கும் நிலை ஏற்படுகிறது. திலகரால் விடுதலை கிடைக்கும் எனக்கூறாத பாரதி, காந்தியால் விடுதலை காண்போம் எனக்கூறியது, பலமான ஆதாரமில்லையா என்ற கேள்வி எழலாம். சுதந்திரப் போராட்ட வரலாற்றை அறிந்த எவருக்கும் இதன் உண்மை நிலை தெரியாமலிராது. திலகர் தலைமை தாங்கிய முதலாவது சுதந்திரப்போராட்ட எழுச்சிக்காலம் (1905-1908) மக்களுக்கு ஆரம்ப உணர்வை ஊட்டுவதாக மட்டுமே அமைந்தது. அன்று "விந்தைத் திலகர் அரவிந்தரோடு சிதம்பரச் செம்மலும்” வந்திலராயின் அன்னை வளநாடெங்கே வந்தேமாதரமாம்மந்திரம் எங்கே’’ என்ற கேள்விகளை மட்டுமே பாரதியால் எழுப்பமுடிந்தது. சுதந்திரப்போராட்ட பயணத்துக்கான முதலடிகளைப் பதிப்பதே அன்றைய தேசிய வீரர்களுக்கு விதிக்கப்பட்ட பணியாக இருந்தது. மகாத்மா காந்தியின் தலைமையைப் பெற்ற இரண்டாவது சுதந்திரப்போராட்ட எழுச்சிக்காலம் (1919-1921) முந்திய போராட்ட அனுபவங்களை உள்வாங்கிய தேசபக்தர்களின் அயரா உழைப்பு விஸ்தீரணமடைந்ததோடு அரசியல் ஆர்ப் பாட்டங்களுக்குள் மக்கள் பிரவேசித்து விட்டதுமான நிலையில் நிகழ்ந்தது. குறிப்பாக மகாத்மா காந்தியின் முன்மொழிவிலான ஒத்துழையாமை இயக்கம், மக்கள் இந்த அரசியல் எழுச்சியில் பங்குகொள்வதற்கான வாய்ப்பை வழங்கியிருந்தது.
முதலாவது எழுச்சிக்காலத்திலேயே, சுதந்திரம் சாத்தியமில்லை என்ற எண்ணங்கள் மேவியிருந்த அந்தக்காலத்தில்,
சுதந்திரப் பெரும்போர்ஒர்காற் தொடங்குமேற் பன்முறை தோற்கும் பான்மைத்தாயினும் இறுதியில் வெற்றியொ டிலகுதல் திண்ணம் "
என 21.11.1908 இல், எழுச்சிப் பேரலை சற்று வடிந்து செல்லத் தொடங்கியபோது பாடியவர் பாரதி. அத்தோடு அமையாது அந்த எழுச்சி அடங்கிப் போயினும் சுதந்திரம் கிடைப்பது நிச்சயம் என்ற உறுதியை வளர்க்க “ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று’ (1909 ம் ஆண்டில்) சுதந்திரப் பள்ளுப் பாடிக்களித்தவர் பாரதி.

Page 9
அத்தகையவர் ஒத்துழையாமை இயக்கத்தினால் மக்கள் எழுச்சிபெற்ற நிலையில் காண்பார் சுதந்திரம் கணப்பொழுதில் எனப்பாடியதில் ஆச்சரிய மொன்றுமில்லை. இந்தச் சந்தர்ப்பம் பற்றிய பூரண தெளிவு ஆய்வுலகில் இன்னமும் ஏற்படவில்லை. ஆய்வறிஞர் கோ. கேசவன் "ஒரு முறை நீலகண்டன் என்ற பிரமச்சாரி குறிப்பிட்டதைப் போல, தமிழகத்தில் முதன்முதலாகக் காந்தியை ஏற்றுக்கொண்டவர் பாரதி ஆவார். எனினும், சிற்சில விமர்சனக் கண்ணோட்டத்துடன் ஏற்றுக்கொண்டார். விதவை மறுமணம் குறித்த காந்தியின் பிற்போக்குத்தனத்தை பாரதி ஒப்புக்கொள்ளவில்லை. ஒத்துழையாமை இயக்கத்துக்கு பாரதி முழு அளவில் ஆதரவ. தெரிவிக்கவில்லை. பதவிகளைப் புறக்கணித்தல் சாத்தியமில்லையென்றும் அதில் குறிப்பிட்ட அளவுகூடட் பயனிராது என்றும் குறிப்பிடுகிறார். அப்போது அவர் பணியாற்றிய, ‘சுதேச மித்திரன்’ பத்திரிகை உரிமையாளர் ரங்கசாமி ஐயங்காரின் கருத்தும் இதுவாகவே இருந்தது. ஒத்துழையாமை இயக்கத்தைச் 'சந்து பொந்துகளின் வழி என உவமிக்கிறார்”16 எனத் தெளிவற்ற முறையில், இந்த இறுதிக்காலத்தில் பாரதி எழுச்சிப் போராட்டங்களை விரும்பவில்லை என்ற தொனியில் கூறிச் செல்கிறார்.
இவ்வாறு காட்டுவது கேசவனைட் பொறுத்தவரையில் அவசியமாகும். சுதேசமித்திரனில் 25.05.1916 இல் “பாரத நாட்டுக்கு உடனே சுயாட்சியைக் கொடுக்க வேண்டுமென்ற கருத்துடன் ஒரு பெரும் விண்ணப்பம் தயார் செய்து அதில் மாகாணம் தோறும் லட்சக்கணக்கான ஜனங்கள் கையெழுத்திட்டு இந்த க்கணமே பிரிட்டிஷ் பார்லிமென்டுக்கு அனுப்பவேண்டும்” என்று பாரதி எழுதியதை வைத்துச் கேசவன் “இது மிதவாதிகளின் அரசியல் நடைமுறையாகும். இது பாரதி என்ற தேசபக்த ஜனநாயக அரசியல் வாதியின் வீழ்ச்சியாகும்” என்று கணிக்க வேண்டியிருந்தது. பாரதி, இந்தியாவை இந்தியர்களும் ஏகாதிபத்தியவாதிகளும் பங்கிட்டுச் கொள்ளவேண்டும் என்ற நிலைக்கு மாறிவிட்டார் என்பதும் கேசவனின் கருத்தென்ற வகையில் அவர் அவ்வாறு பாரதி நிலைப்பாட்டை சித்திரிக்கின்றார்."
உண்மை நிலை கேசவனின் விருப்பம்போல அமையவில்லை. மிதவாதிகளின் போராட்ட வடிவப் ஒன்றைப் பயன்படுத்துவதை வைத்து பாரதியை

மிதவாதியாக இனங்காண்பது யானையை உரலாகவோ உலக்கையாகவோ சுளகாகவோ காண்பதற்கு ஒப்பானது. விண்ணப்பமுறை ஒன்றை மட்டுமே எ ல் லா ச் சந்தர் ப் பங் களி லும் , கிளர்ச் சி சாத்தியப்படும்போதும் கையாள முனைவதே மிதவாதமாகும். புரட்சி நடவடிக்கைக்காக சகல போராட்ட வடிவங்களும் காலதேச வர்த்த மானங்களுக்கேற்ப பயன்படுத்தப்பட்டாக வேண்டும். பாரதி, இங்கே எழுச்சி முற்றாக சாத்தியமில்லாத சூழலில் விண்ணப்பித்தலையும் ஒரு போராட்ட வடிவமாகக் கையாள விரும்பியதை வைத்து அவரை மிதவாதியாகக் கருதிவிட முடியாது. பிரதான அம்சம், முந்திய ஆரம்பத்தேசிய எழுச்சி அடக்குமுறைச் சட்டங்களால் நசுக்கப்பட்டு, மக்கள் விடுதலை பற்றி யோசியாதிருந்த சந்தர்ப்பத்தில், திலகர் முதலிய தலைவர்கள் தேசப்பிரஷ்டம் செய்யப்பட்டோ சிறையிலடைக்கப்பட்டோ இருந்தவேளையில், தலைமையற்றிருந்த விடுதலைப் போராட்ட அணியின் தலைமையைப் படிப்படியாக ஏற்றுக்கொண்டிருந்த மகாத்மா காந்தி பிரிட்டிஷ் அரசுக்கு நிபந்தனையற்ற முறையில் ஒத்துழைப்பவராயிருந்தார். பிரித்தானிய அரசு உலகப்போரில் ஈடுபட்டிருக்கும்போது தொந்தரவு கொடுக்கக்கூடாது எனக்கருதி சுதந்திரக் கோரிக்கையை ஒதுக்கிவைத்துவிட்டு அரசுக்கு விசுவாசம் தெரிவித்துப் போர் வீரர்களைத் திரட்டி யுத்த களத்துக்கு அனுப்பிக் கொண்டிருந்தார் காந்தி. அந்தச் சந்தர்ப்பத்தில் மேற்படி விண்ணப்பமுறையைப் பற்றிக் கூறிய பாரதி, அத்தகைய நிலையில் கிராமம் கிராமமாக விடுதலைப் பிரச்சாரம் செய்யும் இயக்கமாகவே அதைக் கருதினார்; யுத்தத்தின் பின் ஐரிஷ், போலந்து ஆகிய ஐரோப்பிய நாடுகட்கு விடுதலை வழங்கப்படுமென அறிவிக்க அது சந்தர்ப்பம் என்றால் இந்தியாவுக்கும் அந்த வாக்குறுதியை யுத்த நிலையிலேயே கோரவேண்டும் என்றும் கூறினார். "அங்கு, சுதந்திரக் கோரிக்கையைக் கைவிட்ட காந்தியின் நிலைப்பாட்டை பாரதியால் ஏற்கமுடியாதிருந்தமையையே பார்க்க முடிந்தது.
அந்தச் சந்தர்ப்பத்துக்கு ஏற்ற போராட்ட வடிவமாக விண்ணப்பித்தலை ஏற்றுக்கொண்ட பாரதி எதிரி அடித்தால் எதிர்த்து அடிக்கும் கொள்கையையே கொண்டிருந்தார். அதே சமகாலத்தில் சுதேசமித்திரனில் தராசு பகுதியில் பாரதி இவ்வாறு எழுதுகிறார்;ழரீமான்
5

Page 10
காந்தி நல்ல மனுஷர். அவர் சொல்லுகிற சத்யவிரதம், அஹிம்சை, உடைமை மறுத்தல், பயமின்மை இந்த நான்கும் உத்தம தர்மங்க்ள். இவற்றை எல்லோரும் இயன்றவரை பழகவேண்டும். ஆனால் ஒருவன் என்னை அடிக்கும்போது நான் அவனை திருப்பி அடிக்கக்கூடாது என்று சொல்லுதல் பிழை"
கேசவனைப் போன்றே பலரும் பார்க்கவிரும்பாத இந்தக் கருத்தைக்கூறிய பாரதியின் மேற்படி தராசு கட்டுரையில் காந்தியின் பதினொரு விரதங்கள் கூறப்பட்டுவரும் போது தனது மாறுபாடுகளை அவ்வப்போது பாரதி தெரிவித்துவருகிறார், நாக்கைக் கட்டும் படியான காந்தியின் விரதத்திற்கு ஏழைகள் நாக்கைக் கட்டித்தான் வைத்திருக்கிறார்கள் என்று கூறிய штUgђl, பிரமச்சரியத்தைக் காந்தி வற்புறுத்தும்போது எல்லோரும் பிரமசரியமிருப்பின் மனிதரற்றுப்போய்விடுவர் என்கிறார். இறுதியாக, தான் முன்வைக்கும் பன்னிரண்டாவது விரதமாக பாரதி கூறுகிறார் : "எப்பாடுபட்டும் பொருள்தேடு; இவ்வுலகத்திலே உயர்ந்த நிலை பெறு; இப்பன்னிரண்டாவது விரதத்தை தேசமுழுதும் அனுஷ்டிக்கவேண்டும்" *
பாரதியினுடைய இந்தப் பன்னிரண்டாவது விரதம், காந்தியுடனான மிக மிக அடிப்படையான முரண்பாடொன்றின் வெளிப்பாடு. கேசவன் சொல்வதைப்போல காந்தீயத்துடன் இாண்டாம் பட்சமான முரண்பாடுகளை மட்டும் பாரதி கொண்டிருக்கவில்லை என்பதைக் காட்டுவது; உண்மையில், அமையவேண்டிய சமூக அமைப்புத் தொடர்பாக தோன்றிய பிரதான முரண்பாட்டின் விளைவாகவே ஏனைய இரண்டாம் பட்ச முரண்பாடுகளும் கிளைத்தன. காந்தி சுதந்திர இந்தியாவை வரலாற்றின் முன்னேற்றமாகக் கருதாமல், பின்னோக்கிச் சென்று பூரணமாக நிலமான்ய உற்பத்தி உறவை மீட்டெடுக்கும், இராமராஜ்ய சமூக அமைப்பை சுதந்திர இந்தியாவில் நிர்மாணிக்க விரும்பிய போது, பாரதியோ, மேற்கே வளரும் விஞ்ஞான மேன்மை களனைத்தையும் கொணர்ந்து சந்திதெருப்பெருக்கும் சாத்திரமும் சந்திரமண்டலத்தியலும் தெளிந்து அனைவரும் உழைத்து சரிநிகர் சமானமாக வாழவல்ல, உலகுக்கு முன்னுதாரணமாய்த் திகழும் புதிய சமூகமாக சுதந்திரமடைந்த பாரத சமுதாயத்தைக் காண விரும்பினார். இந்தப் புதிய அமைப்பைக் கூடியவரை
6

சமாதான வழியில் ஈட்டிவிடமுடியும், அனைத்துமக்களும் எழுச்சிபெற்று கிளர்ந்தெழும் பட்சத்தில் சிறுபான்மையோரான ஆள்வோர் ஆட்சியை விட்டுச் செல்வர் என்ற நம்பிக்கை பாரதியிடம் இருந்தமையால் சந்துபொந்துகளற்ற நேரிய போராட்ட வழி போதும் என எண்ணினார். அதற்காக எதிரி அடித்தால் மறுகன்னத்தைக் காட்டவேண்டியதில்லை, திருப்பித்தாக்கிப்பணியவைக்கத்தக்க பெரும்பான்மைப் பலமும் வல்லமையும் மக்களிடம் உண்டென்பது பாரதிக்குத் தெளிவு.
இதற்குப்பத்து வருடங்களுக்கு முன்னரும் பாரதியிடம் இக்கருத்தே நிலவியது. முதலாவது சுதந்திரப்போராட்ட எழுச்சிக்காலத்தில், அந்நிய பொருள் பஹிஸ்காரம் போன்ற செயல்முறை எதிர்ப்பின்மூலம் மக்கள் கிளர்ந்தெழுவதால் சுதந்திரம் கிட்டும், மாறாக மக்கள் எழுச்சி கொள்ளாதபோது யுத்தம் சாத்தியப்படாதென்பதோடு ஒரு சிலரின் அதி தீவிரப்பாதை கெடுதியைத் தரும் என்றும் எழுதியிருந்தார்." அவ்வாறு சமாதான வழியில் எதிர்ப்பைக்காட்டும் மக்களை Luulu(popuģögöës கொடுங்கோன்மை முறைகளை அரசு அனுஷ்டித்தால் அது மக்களை உக்கிர வழிகளின் பால் இட்டுச் செல்லும் என்றும் வேறோர் சந்தர்ப்பத்தில் எழுதியிருந்தார்.’
மக்கள் எழுச்சி அவசியம் என்ற தொடக்ககால பாரதியின் எண்ணம் புதுவை வாழ்வுக்குப்பின் மாறிவிட்டதா ? இரண்டாவது தேசிய எழுச்சிக்கு கால்கோளமைத்த காந்தியின் ஒத்துழையாமையை ஆரம்பத்தில் பாரதி ஏன் ஆதரிக்கவில்லை ?
அரசுக்கு நிபந்தனையற்ற முறையில் ஒத்துழைத்த காந்தி ஏமாற்றத்தை உணர்ந்தபின் ஒத்துழையாமையை அறிவித்தபோது சட்டசபை - பாடசாலை - நீதிமன்ற பஹிஸ்கரிப்புகளையே முன்வைத்திருந்தார். இந்த முதற்படி நடவடிக்கையினாற் பயனேதும் ஏற்பட்டு விடப்போவதில்லை என்ற முணுமுணுப்போடு மட்டும் பாரதி அமைதி காணவில்லை. தேசாபிமானிகள் பஹிஸ்கரிக்க மற்றையோர்
அது காரணமாகாது என்பதோடு வக்கீல்களும் மாணவர்களும் பஹிஸ்கரிப்பதும் சாத்தியப்படப் போவதில்லை என்று ஒத்துழையாமையை ஏற் கா த மைக் கா ன கார ண ங் களை யும்

Page 11
தெளிவுபடுத்தினார் பாரதி. இவ்வாறு எதிர்விமர்சனத்தை முன்வைத்ததோடும் அவர் அமைதி காணவில்லை - மாற்றுத்திட்டத்தையும் முன் வைக்கிறார். “இந்த ஒத்துழையாமை முறையையே மிகவும் உக்கிரமாகவும், தீர்வை மறுத்தல் முதலிய அதன் இறுதிப் படிகளை உடனே உட்படுத்தியும் அனுஷ்டித்தால் ஒருவேளை அன்ய ராஜாங்கத்தை ஸ்தம்பிக்கச் செய்வதாகிய பயன் அதனால் விளையக்கூடும்” எனக் காரிய சாத்திய வழிமுறையைக்
காட்டினார். *
இத்தகைய இறுதிப்படி எதையும் காந்தி அறிவிக்காத போதிலும் விவசாயிப் பெருந்திரளினர் தன்னெழுச்சி பூர்வமாக வரிகொடா இயக்கத்தைத் தொடங்கிவிட்டனர். ஆரம்பத்தில் ஏற்காத அதே ஒத்துழையாமை இயக்கம் இவ்வாறு வீறுகொண்ட போராட்ட எழுச்சியாக மாறியபின் எந்தவிதத் தயக்கமுமின்றி, முன்னர் எதிர்த்தோமே இனி ஆதரித்தால் கெளரவக் குறைவில்லையா என்ற வகையான வறட்டுத் தனங்கள் ஏதுமின்றிப் பற்றார்வத்தோடு முன்வந்து பாரதி ஆதரித்தார். ரவீந்திர நாத தாகூர் போற்றிய மஹாத்மா காந்தி,
"கெடுதலின்றிநந்தாய்த்திரு நாட்டின் கிளர்ச்சி தன்னை வளர்ச்சிசெய்கின்றான்”
ஆதலால்,
மாந்தரெல்லாருஞ் சோர்வை
அச்சத்தை மறந்துவிட்டார்
காந்திசொற் கேட்டார் காண்டார்
விடுதலை கணத்தினுள்ளே”
என்று பாடிய பாரதி,
". புவியிசைத் தருமமே அரசிய லதனிலும், பிறஇயலனைத்திலும் வெற்றிதருமென வேதஞ் சொன்னதை முற்றும் பேண முற்பட்டு நின்றார், பாரத மக்கள், இதனாற் படைஞர்தஞ் செருக்கொழிந்துலகிலறந்திறம்பாத கற்றோர் தலைப்படக் காண்போம் - விரைவிலே, (வெற்றி கூறுமின் - வெண்சங் கூதுமின் !) *
(பாரத மாதா நவரத்ன மாலை)
என்றும் சொல்லி வைத்தார்.

பெருங்கொலை வழியை விடுத்து மெய்த்தொண்டர்கள் திரண்ட அறவழிப் போராட்டத்தைத் தொடுத்த காந்தியை மேலும் “மஹாத்மா காந்தி பஞ்சகம்” கவிதையில் வாழ்த்தும் போதும்,
'நெருங்கிய பயன்சேர் ஒத்துழையாமை'
நெறியினால் இந்தியாவிற்கு
வருங்கதி கண்டு பகைத்தொழில் மறந்து
வையகம் வாழ்கநல்லறத்தே”*
என்றும் வேண்டுகிறார். ஆயினும் அந்நிய அரசின் ஆணைக்குப் பணிந்த படைஞர், கற்றோர்வழி
விடுதலை விரும்புகிறாரென்று ஆங்கில அரசுக்கு உணர்த்திப் பகைத்தொழிலை அவர்கள் விட்டொழிக்க வழிசெய்யவில்லை. மாறாக செளரி செளராவில் ஊர்வலஞ்சென்ற மக்களைக் கிண்டல்செய்த பொலிசாரால் மக்களுக்கும், பொலிசாருக்குமிடையே மோதல் மூண்டு எழுச்சிக்கொந்தளிப்பில் முன்னேறித் தாக்கிய மக்களால் பொலிசார் கொல்லப்பட்டதோடு காவல் நிலையமும் தீக்கிரையானது. இதைவைத்தே அனைத்து இந்திய எழுச்சியையும் நசுக்க ஆங்கில அரசுக்கு சாட்டுக்கிடைத்தது. செளரிசெளரா விவசாயப் பிரதிநிதிகள் தூக்கிலிடப்பட்டனர்.
பாரதி எதிர்பார்த்தவாறு படைகளும் அரசும் (வையகமும்) நடக்காதது மட்டுமன்றிக் காந்தியும் பாரதியின் புகழாரத்தை ஏற்கும் நிலையில் இருக்கவில்லை. கிளர்ச்சி தன்னை வளர்ச்சி செய்பவராகவே பாரதி காந்தியைக் கணித்தார். அக்கிளர்ச்சியைக் கண்டே இருகவிதைகளையும் பாரதி புனைந்தார். காந்தியோ அந்தக் கிளர்ச்சியை வெறுத்தார். வரிகொடா இயக்கத்தை வன்மையாய்க் கண்டித்தார். பாரதி 12.09.1921 இல் கண்களை நிரந்தரமாக மூடியபின் 12.02.1922 இல் காந்தி தலைமையில் பார்தோலியில் கூடிய காங்கிரஸ் செயற்கமிட்டி ஜனக்கூட்டத்தின் சண்டாளத்தனமான நடத்தையைக் கண்டு காரியக்கமிட்டி வருந்துகிறது” எனப் பிரகடனப் படுத் தி ‘நில வரியையும் அரசாங்கத்துக்குச் செலுத்தவேண்டிய இதர வரிகளையும் செலுத்தும்படி விவசாயிகளுக்கு யோசனை கூறித் தீர்மானம் நிறைவேற்றிக் கொண்டது.* கிளர்ச்சியை அடக்குவதில் அரசுக்கு

Page 12
அதிக சிரமந்தராது காந்தியே அடக்கும் வகையில் செயற்பட நேர்ந்தது, மக்களின் கிளர்ச்சி மனப்பாங்கு காந்திக்கு உடன்பாடானதல்ல என்பதனாலாகும். இதன் பின்னர் காந்தி பக்குவப்படாத மக்களை ஒதுக்கிவிட்டுத் தேர்ந்தெடுத்த - சத்தியாக்கிரக விரதத்தை மீறாத வகையில் பயிற்சி வழங்கப்பட்டவர்களைக் கொண்ட தனிநபர் சத்தியாக்கிரகத்தை முன்மொழிந்தார்.
ஒத்துழையாமை இயக்கம் மக்களின் எழுச்சித் திசையில் முன்னேறிக் கொண்டிருந்தபோது காந்தி இயக்கத்தை வாபஸ் பெற்றதை எதிர்த்து மோதிலால் நேரு, லஜபதிபராய், வல்லபபாய்படேல் உள்ளிட்ட பெருந்தலைவர்கள் சிறையிலிருந்தபடி காந்திக்கு எழுதினர். செளரி செளராவில் வன்முறை வெடித்தால் அதைவிட்டு ஏனைய இடங்களில் மக்களின் கூட்டு முயற்சியாக ஒத்துழையாமையை முன்னெடுத்திருக்க வேண்டுமென்று மோதிலால் நேரு விரும்பினார். *
அவர்களின் வழியில் சிந்திப்பவராகக் காந்தி இருக்கவில்லை. 1920 ஆம் ஆண்டில் ஆமதாபாத் தொழிலாளர்கள் விடயத்தில் பெற்ற அனுபவத்தால் "நாம் தொழிலாளர்களைச் சீண்டிவிடக்கூடாது. தொழிற்சாலைப் பாட்டாளிகளைக் கொண்டு அரசியல் ஆதாயம் பெற முயல்வது ஆபத்தில் முடியும் ("தி டைம்ஸ்', மே, 1921) என்று எழுதிய காந்தி முன்னெச்சரிக்கை உணர்வுடனேயே சட்டசபை - நீதி
s
மன்ற - பாடசாலை பஹிஸ்கரிப்பை முன்மொழிந்தார். விவசாயி வர்க்கமுங்கூட கிளர்ந்தெழும்போது அந்நிய ஆட்சியுடன் நிலவுடைமை ஆதிக்கத்தையும் எதிர்த்தே கிளம்பும் என்ற அனுபவத்தை காந்தியத் தலைமை 1922இல் புரிந்து கொண்டதை பர்தோலித் தீர்மானம் தெளிவாகக் காட்டுகிறது என பகத்சிங் கூறியிருப்பது இங்கு கவனிக்கத்தக்கது. *
இந்த அனுபவங்கள்ை முன்மாதிரியாகக் கொண்ட காந்தி, 1930 மார்ச் - ஏப்ரல் மாதங்களில் உப்புச் சத்தியாக்கிரகத்தைத் தொடங்கிய போது தேர்ந்தெடுத்த தொண்டர்களுடனேயே தண்டிக்குச் சென்று உப்புக்காய்ச்சத்தொடங்கினார். ஆயினும் 1930இல் வெடித்தெழுந்த மூன்றாவது சுதந்திரப் பேரெழுச்சி மேலும் மக்களைக் கிளர்ந்தெழச்செய்து சில நகரங்களைக் கைப்பற்றித் தமது கட்டுப்பாட்டுக்குள் வென்றெடுப்பதுவரை முன்னேறியிருந்தது. அவ்வாறாகலாம் என்ற முன்னனுபவம் உள்ள காந்தி
8

அச்சந்தர்ப்பத்துக்கு இடதுசாரி நாட்டமுடைய ஜவகர்லால் நேருவின் தலைமை ஆபத்தானது என்பதை முன்னெச்சரிக்கையுணர்வுடன் புரிந்துகொண்டு பூரண வலதுசாரிகளிடம் முன்கூட்டியே தலைமையைக் கொடுத்தபின் உப்புச்சத்தியாக்கிரகம் தொடங்கியமை வரலாறு காட்டிய உண்மை. அப்போது காந்தியின் முன்முயற்சியால் செயற்கமிட்டியில் ஜவகர்லால் நேரு 9 UL- எந்தவொரு இடதுசாரியும் அனுமதிக்கப்படவில்லை.*
வெகுஜனக் கிளர்ச்சியை விரும்பிய பாரதி இந்தப் பாணியிலான காந்தியவாதியாக மாறிவிட்டார் என்று கூறமுடியுமா? கிளர்ச்சியை வளர்ப்பவராக பாரதி காந்தியை வாழ்த்தியபோது அதைக் காந்தி விரும்பியிருக்கவில்லை என்பது பாரதிக்குத் தெரிந்திருக்கவில்லை. அது பாரதியின் இறப்புக்குப் பின்னரே உலகுக்குத் தெரிந்த உண்மையாகும். பாரதி மறைவுக்குப்பின்னால் 1930ஆம் ஆண்டு எழுச்சி அடக்கப்பட்டபோது, வன்முறையை வெறுத்துக் காந்தியின் சத்தியாக்கிரக மார்க்கத்தை ஏற்றிருந்த நேருவே “வன்முறை கெட்டதுதான். ஆனால் அடிமைத்தனம் அதைவிட மோசமானது ” என்று காந்தியின் நிபந்தனையற்ற சாத்வீகத்தின் மீதான ஆதங்கத்தைத் தெரிவித்திருந்தார். அந்த எழுச்சிகளின் தீவிரப்போக்கை முறியடிக்கும் வகையில் காந்திசெயற்பட்டு, நீண்டகால நோக்கங்களை அசட்டைசெய்து, முக்கிய பிரச்சினைகள் அனைத்திலும் விட்டுக்கொடுத்து அரசுடன் ஒப்பந்தமும் செய்த நிலையில் மிகவும் மனமுடைந்து போன ஜவகர்லால் நேரு, அவ்வேளையில் தனது தந்தையான மோதிலால் நேரு உயிருடன் இல்லையே என மக்கள் எண்ணத் தொடங்கியதையும் தனது வருத்தத்தையும் காந்தியிடமே நேரில் கூறினார்."
தன்னளவில் வன்முறையை ஏற்காத போதிலும், எழுச்சியை மதித்து அரசும் படைகளும் விலகிச் செல்ல வேண்டுமென விருப்பம் தெரிவித்த போதிலும், நிபந்தனையற்ற சாத்வீகத்தை ஏற்கமறுத்து அடிக்கு அடிகொடுக்கும் கொள்கையைத் தனதாக வரித்துக் கிளர்ச்சியாளராகவே காந்தியைக்கண்ட் பாரதி, காந்தி அவ்வாறு இருக்கவில்லையென அறியச் சந்தர்ப்பம் பெற்றிருப்பின் கண்டிக்கத்தவறியிரார். ‘வீரியம் பெருக்கு’, ‘கொடுமையை எதிர்த்துநில், பாதகம் செய்பவரைக் கண்டால் மோதி மிதித்துவிடு' என

Page 13
முழங்கும் பாரதி, அடக்குமுறைக்கு எதிரடி கொடுப்பதை ஆதரித்தே வந்துள்ளார்.
பஞ்சாபி' பத்திரிகையின் சொந்தக்காரர் பத்திராதிபர் ஆகியோர் சிறைக்கூடம் அழைத்துச் செல்லப்படுகையில் 'வந்தே மாதரம் கோஷமெழுப்பிய மக்கள் மத்தியிலிருந்த மாணவனைச் சவுக்கால் அடித்த சுப்ரிண்டன்ரன்ற்றைக் கோபங் கொண்ட மக்கள் அடித்துக் காயப்படுத்தியதை உள்ளார்ந்த மகிழ்வோடுதான் 1907.4.20 ம் திகதிய 'இந்தியா பத்திரிகையில் பாரதி எழுதியிருந்தார்." அந்த உணர்வோடுதான் சமாதான வழியில் செல்லவிரும்பும் மக்களை உக்கிர வழியில் தள்ளுவது அரசுக்கு சேமகரமானதா என்றுங் கேட்டு வந்தார்.
இந்த வரலாற்று உண்மைகளைக் கவனத்திற் கொள்ளாதமையினாலேயே பாரதியைக் காந்திய வாதியாகக் கானுந் தவறு ஏற்படுகிறது. பாரதியைக் காந்தியவாதியெனக் காட்டிவிடும் எத்தனிப்பில் ஒரு பகுதியினர் முயன்றபோதிலும் பல ஆய்வாளர்கள் பாரதி பூரண காந்தியவாதியாக மாறிவிடவில்லை எனக்காட்டியுமுள்ளனர். “மகாகவி பாரதியார் வாழ்க்கைச் சித்திரம்” எழுதிய தி. முத்துகிருஷ்ணன் காந்திஜியின் செல்வாக்கில் பாரதி தன்னைக் கரைத்துக் கொண்டாரா ?' என்ற கேள்வி எழுப்பி, இல்லை என்பதை வலியுறுத்திச் செல்கிறார். * காந்தியிலிருந்து பாரதி வேறுபடும் அம்சங்களைக் குறிப்பிடும் ஆதவன், காந்தி பாணியிலான அஹிம்சாவாதியல்ல பாரதி என்ற பின்னர், "அவருடைய பல பாடல்களிலும் கட்டுரைகளிலும் விவேகானந்தர் UT 60of துணிவையும் ஆண்மையையுமே” காண்கிறார். *
விவேகானந்தரின் சிஷ்யை நிவேதிதா தேவியைத் தனது குருவாக வரித்துக்கொண்ட பாரதி விவேகானந்தரின் சுதந்திர விழிப்புணர்வுக்கான எழுச்சி அறைகூவலைப் பிரதிநிதித்துவப்
V படுத்தியவராயினும் L6) அம்சங்களில் விவேகானந்தரைக் கடந்து காலத்தோடு முன்னேறிச் சென்ற தீர்க்கதரிசன மேதையாகவும் திகழ்ந்தவர். இந்தத்தகுதியை அவர் புதுவையில் வாழ்ந்த காலத்தில் இழந்து பின்தங்கிச் சென்றாரா ? தனது சமூகப் பங்களிப்பை மறந்து தனிமனித ஆன்ம ஈடேற்றத் தேடல்களுக்குள் முடங்கிப்போனாரா ? 1911 ஆம்

ஆண்டில் இந்தியா, விஜயா, சூரியோதயம் ஆகிய பத்திரிகைகள் நின்றுபோன பின், தொடர்ந்து சமகால அரசியல் போக்குகளை எழுத முடியாத நிலை பாரதிக்கு ஏற்பட்டது. மீண்டும் 1915 ஆம் ஆண்டிலிருந்து சுதேசமித்திரனுக்கு எழுதத்தொடங்கினாலும் நேரடி அரசியல் எழுதுவதற்குத் தடைகள் இருந்தன. இத்தடையுடன் புதுவையில் இருந்த காலத்தில் (191 தொடக்கம் 1918 வரை) பாரதியின் மனநிலை அடியந்தமாக மாறிவிட்டதா ? அவ்வாறு மாறிவிட்டதாலேயே பிற்காலத்தில் மிதவாதியாகி காந்தீயத்துள் சரண்புகுந்தார் என்று கணித்துப் புதுவையில் வாழ்ந்த இந்தக் காலத்தை மாறுதல் காலகட்டம் என்போருமுளர். * உண்மையில் அது அடியந்தமான மாற்றத்தை ஏற்படுத்திய காலகட்டந்தானா ?
இந்தச் சந்தேகத்தை நிவர்த்தி செய்யும் வகையிலே புதுவையிலிருந்த இந்தக் காலகட்டத்தில் பாரதியின் வாழ்நிலை பற்றி ஆராய்தல் அவசியமாகிறது.
புதுவை வாழ்வின் மறுபக்கம்
“பாரதியினுடைய கண்ணன் பக்தி அரவிந்தராலேயே ஊக்கம் பெற்றதெனக் கூறுவர். புதுச்சேரியில் பாரதியாரும் ஆன்மஞானி அரவிந்தரும் வேத நூல்களைச் சேர்ந்தே பயின்றனர். புதுச்சேரிக்கு அரவிந்தர் வந்தபின் பாரதியார் வாழ்வில் இலக்கிய ஆக்கப்பணிகள் பெருகத் தொடங்கின. பாரதியினுடைய வரலாற்றினை எழுதுபவர் எவருமே, அவருக்கும் பூரீ அரவிந்தருக்கும் இருந்த தொடர்பினைக்குறியாது விட்டிலர்” என்பார் பேராசிரியர் சு. வித்தியானந்தன்.
புதுவையில் பாரதி' எனும் நூல் எழுதிய ப. கோதண்டராமன், அரவிந்த ஆசிரமத்தில் நடந்துவந்த அன்னை வழிபாட்டிலிருந்து பாரதி ஆவேச அருள் ஞானம் பெற்றமையே பாரதியின் சக்திப் பாடல்களுக்கு கால்கோளமைத்தது என்ற பேராசிரியர் சுப்பிரமணிய ஐயரின் கூற்றை மறுத்துவிட்ட பின் கூறுவார்: “ஆயினும், ஒன்று மட்டுங் கூறலாம் பூரீ அரவிந்தரின் தொடர்பு ஏற்பட்ட பின், பாரதியின் கவிதா சக்தி பன்மடங்கு பெருகுகிறது. இப்பெருக்கத்தினின்று அற்புதமான சக்திப்பாடல்கள், 'ஊழிக்கூத்து போன்ற பாடல்கள் வெளியிடப்பட்டன.”*

Page 14
இவ்வாறு அரவிந்தர் தொடர்பர்ல் பாரதியியலில் ஏற்பட்ட செழுமை போதிய அளவு வெளிக்கொணரப்பட்டதாயினும் அரவிந்தருடனான பாரதியின் உறவு எத்தகையதாயிருந்தது என்பது பற்றி பாரதியின் வாழ்வு எழுதப்படும்போது முழுமையாகச் ச்ொல்லப்படுவதில்லை. குறிப்பாக, ஆன்மீக வாழ்வுப்பக்கம் அழுத்தம்பெறும் அளவுக்கு இக்காலத்தின் மறுபக்கம் கவனம் செலுத்தப் படுவதில்லை. புதுவைக்குச் செல்லும்போது எந்த நோக்கத்துடன் பாரதி சென்றார். அங்கு அவரது தொடர்புகள் அவரது நோக்கத்துக்கு அனுசரணையாக எவ்வளவு தூரம் அமைந்திருந்தன என்பவை ஆராயப்படவேண்டும்.
முதலாவது தேசிய எழுச்சியைத் தூண்டும் எழுத்துப் பணியைத் தமிழகத்தில் முடுக்கிவிட்ட இந்தியா’ பத்திரிகை மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட போது அதன் ஆசிரியராகப் பதிவு செய்யப்பட்டிருந்த பூரீனிவாசன் என்பவரே கைது செய்யப்பட உண்மையில் ஆசிரியராக இயங்கிய பாரதி நண்பர்களின் வலியுறுத்தலினால் புதுவை சென்று விட்டார். இது பற்றி எழுதுகையில் பாரதி நண்பர்களில் ஒருவரான எஸ்.ஜி. இராமாநுஜலு நாயுடு "தம்மை நம்பிய ஒருவரை ஆபத்தில் சிக்கவைத்துவிட்டுத் தாம் தூரப்போய் விட்டமை பாரதியின் சரித்திரத்தில் ஒரு
பெரிய களங்கமேயாகும்”
' என்கிறார்.
பாரதி தன்னலம் கருதித் தப்பியோடும் எண்ணத்துடன் புதுவை செல்லவில்லை என அவருடைய நண்பர் நீலகண்ட பிரமச்சாரி சொல்வது கவனிக்கத்தக்கது. ஆரம்பத்தில் பாரதி புதுவை செல்வதை விரும்பாத போதிலும், மிதவாத அணியைச் சார்ந்த வி. கிருணஸ்வாமி ஐயர் உட்படப் பலரும் வற்புறுத்திய நிலையில் சென்றார் என இந்தியா புதுவை போனது பற்றிக் கூறுகையில் நீலகண்ட பிரமச்சாரி சொல்கிறார். *
இதுவே மிகப் பிரதான அம்சமாகும். புதுவைக்குச் சென்றது வெறும் பாரதி அல்ல, இந்தியா என்ற ஜீவநாடியுந்தான். பாரதிக்கு அன்று விதிக்கப்பட்ட பணி மக்களை விழிப்படையச் செய்வது; இமைப்பொழுதுஞ் சோராதிருந்த கவிதையூடாகவும் செய்திக் கட்டுரைகளூடாகவும் அதனைச் சாதிக்க வேண்டியிருந்தது. பிற்காலத்தில் சிறைசெல்வதும்
10

எழுச்சியைத் தூண்டும்படியான நிலை இருந்ததைப்போல அல்லாது சிறைக்காலம் பணிமுடக்கமாக இருந்த வகையில் புதுவைசென்று செயல்முனைப்போடு இயங்க முடிந்தமை பாரதியின் ஆளுமை சரியாகப் பயன்பட்ட தன்மையையே காட்டும்.
நண்பர்களின் வற்புறுத்தல் மட்டுமன்றித் தனது கடமை பற்றிய புரிந்துணர்வும் உந்தியதாலேயே அவ்வாறு சென்றார் என்பதற்கு புதுவையிலிருந்து இந்தியாவில் பாரதி எழுதிய விடயங்களும் ஆதாரமாக அமைகின்றன. 1905 இல் தோற்றம் பெற்று வளர்ந்த முதலாவது தேசிய எழுச்சி 1908ஆம் ஆண்டில் அடக்கப்பட்டாலும் மீண்டும் எழுச்சியேற்றப்படும் என்பதை வலியுறுத்த விரும்பிய பாரதி அந்த வரலாற்றைச் சுருக்கமாக எழுதிய கட்டுரைக்கு “முதற் பிரயத்தனம்" என்ற தலைப்பிட்டார். 1908.11.21 ஆம் திகதி எழுதிய அந்தக் கட்டுரையில் திலகர் நாடு கடத்தப்பட்டதுடன் எழுச்சி வரலாற்றின் முதலாவது சருக்கம் முடிவு பெற்றது என்கிறார். இனி அடுத்த எழுச்சியை எதிர்நோக்கும் காலத்து இடைப்பொழுதில் தேசாபிமானிகளின் பணி எதுவாயிருக்கும் என்பதற்கு புதிய இத்தாலியைக் கட்டியெழுப்பப் போராடிய மாஜினி நாடுகடந்து சென்று சுவிட்சர்லாந்தில் வாழ்ந்தபடி ஆற்றிய செயற்திறத்தை உதாரணமாகக் காட்டுகிறார் பாரதி.
மாஜினி அந்த நிலைபற்றிக் கூறியது சமகால இந்தியாவுக்கும் முற்றிலும் பொருந்துமெனக் காட்டிய வார்த்தைகளை பாரதியின் மொழிபெயர்ப்பிலேயே காண்பது சிறந்தது. "நான் (மாஜினி) எனது சந்தேகங்களையெல்லாம் உதறிவிட்டு அடுத்த காரியத்தை விடாது நடத்த வேண்டுமென்ற உறுதி செய்து கொண்டேன். இத்தாலியில் எங்களுடைய வேலையை இன்னும் சிறிது காலத்திற்கு நிறுத்தி வைக்கவேண்டும் என்பது தெளிவாக நின்றது. எமது ஜனங்கள் கலக்கம் தெளிவதற்கும், அரசு புரிவோர் தமது வெற்றியை உறுதியாக நம்பி, மறுபடியும் கண்ணயர்வதற்கும் சிறிது காலம் கடந்தே தீர வேண்டும். எனினும், உள்நாட்டில் எங்களுக்கேற்பட்ட நஷ்டங்களை வெளித் தேசங்களில் சென்று பிரயத்தனங்கள் புரிந்து ஒருவாறு ஈடு செய்து கொள்ள முடியும். நாம்

Page 15
இரண்டாவது முறை ஒர் எழுச்சி தொடங்கும் போது நமக்கு அன்னிய தேசத்தாரின் அனுதாபம் இருக்குமாறு செய்து கொள்ளக்கூடும்.” இந்த வார்த்தைகள் ஐரோப்பா சென்றிருக்கும் இந்திய தேசபக்தர்கள் நிலவரத்தைக் காட்டவல்லது என பாரதி கூறும் போது, அவர் தன்து பாதையைத் தெளிவாகப் புரிந்து கொண்டேதான் வகுத்திருந்தார் என்பதையும் காட்டும்.
இவ்வாறு நேரடியாகத் தன் கருத்துக்களை எழுதும் வாய்ப்பு அவர் ஆசிரியராக இருந்து வெளிவந்த பத்திரிகைகள் தடுக்கப்பட்டதால் பறிக்கப்பட்ட பின்பும், சந்தர்ப்பம் கிடைக்கும் இடங்களிலெல்லாம் சுதந்திர தாகத்தை வெகுஜன மட்டத்தில் வளர்க்கும் பணியை பாரதி கைவிடவில்லை. இந்த முடக்கத்திற்கும் மீண்டும் சுதேச மித்திரனில் எழுதத் தொடங்கு முன்னருமான இடைக்காலத்திலும், இந்தத் தேக்கம் தற்காலிகமானது மட்டுமே, மீண்டும் புதிய வீரியத்துடன் எழுச்சி தோன்றும் என்ற தனது உறுதியில் தளர்ச்சி காணாது, முப்பெரும் படைப்புக்களை பாரதி வழங்கினார். கண்ணன் பாடல்கள், குயில்பாட்டு , பாஞ்சாலி சபதம் ஆகிய முப்பெரும் படைப்புகளுள் அந்த உணர்வு, இழையோடுவதை அவதானிக்க முடியும். திரெளபதையை பாரதமாதாவின் குறியீடாக அமைத்து, பேடித்தனங்களைந்து விடுதலைக்குப் போராட அறைகூவ பாரதி எத்தனித்த காப்பிய முயற்சியே "பாஞ்சாலி சபதம்” என்பதைப் பல ஆய்வறிஞர்களும் காட்டியுள்ளனர்.
அதே சமகாலத்தில் பகவத்கீதை மொழி பெயர்ப்பைச் செய்தபோது செய்கையின்றி ஜீவன் இருக்க முடியாது, இருக்கக் கூடாது என்பதை இடித்துரைக்க்வே முயல்கின்றார். அந்த மொழி பெயர்ப்புக்கு எழுதிய புகழ்வாய்ந்த முன்னுரை இந்த உணர்வைப் பூரணமாய் வெளிக்காட்டுவது. கீதைகாட்டும் தெளிந்த உண்மையென முன்னுரையின் இறுதிப்பந்தியில் பாரதி தொகுத்துக் கூறும் கருத்து இதை உணர்த்தவல்லது. " உலகமெல்லாம் கடவுள்மயம் என்ற உண்மையான வேதாந்தத்தைக் கீதை ஆதாரமாக உடையது மாயை பொய்யில்லை. பொய் தோன்றாது பின் மாறுகிறதேயெனில், மாறுதல் மாயையின் இயற்கை. மாயை பொய்யில்லை அது கடவுளின் திருமேனி. இங்கு தீமைகள்

வென்றொழித்தற்குரியன, நன்மைகள் செய்வதற்கும் எய்துதற்கும் உரியன. சரணாகதியால் கடவுளிடம் தீராத-மாறாதபக்தியால் யோகத்தை எய்துவீர்கள். எல்லா ஜீவன்களையும் சமமாகக் கருதக் கடவீர்கள். அதனால், விடுதலையடைவீர்கள். சத்திய விரதத்தால் ஆனந்தத்தை அடைவீர்கள். இல்லறத்தூய்மையால் ஈசத்தன்மை அடைவீர்கள்.""
இங்கு, பாரதி காட்டும் சரணாகதி என்ற விடயத்தை மட்டுமே கவனத்திலெடுத்து அதை அவர் எந்த நோக்கத்துக்காக சொல்கிறார் என்பதைக் காணத்தவறுகிற ஒருவர் பாரதி நெறியைக் கணிக்க முடியாதவர் ஆவார். பாரதி, காந்தியவாதியாகியது புதுவையில் அவர் பெற்ற சரணாகதித் தத்துவத்தினாலும் என கோ. கேசவன் காட்டியிருப்பதை இங்கு மீட்டிப் பார்க்க முடியும். பாரதியின் பகவத்கீதை முன்னுரையிை முழுமையாகப் பார்த்த ஒருவர் இந்தக் குறுகிய முடிவைப் பெறமாட்டார் என்பது மட்டுமல்ல, இந்தப் பந்தியை மட்டும் பார்ப்பவர் கூட இதன் அடிப்படையை உணராதிரார்.
இந்த உலகம் கடவுளின் திருமேனி என்ற வகையில் விட்டு விலக வேண்டிய வெறும் மாயையல்ல, உள் பொருள் என்ற வகையில் இங்கு செயலாற்றித் தீமைகளை ஒழித்து நன்மையை நிலைநாட்டுதல் கடன். அந்தக்கடன் இறைபணி என்ற உணர்வில் கடவுளிடம் சரணாகதி அடைந்து இல்லறத் தூய்மையால் ஈசத்தன்மை பெற்று இயங்கக் கீதை வழிகாட்டும் என்பதே இந்தப் பந்தியின் சாரமாகும்.
அந்த முன்னுரையை முழுமையாகப் பார்ப்பவர், unt y if துறவறம் ஏற்புடையதல்ல 6T66 வலியுறுத்துகையில் சரணாகதி என்பதற்கு புதிய விளக்கத்தை வழங்குவதை அவதானிப்பார். இல்லற பந்தத்தை இழக்காமலே ஈசனைச் சரணடைந்து செயல்முனைப்போடு வாழ வழி சொல்கிறார் பாரதி என்பதைப் புரிந்து கொள்வார் . அந்த வகையிலும் மீண்டும் எழுச்சி தோன்றுவது வரலாற்று நியதி என்ற புரிந்துணர்வைக் கொண்டிருந்தமையினாலும், விட்டு விலகித் தனிமனித ஆன்ம ஈடேற்றங்களில் நாட்டங்கொள்ள மக்களைத் தூண்டுவதற்கு மாறாக, எதிர்கால விடுதலையை நாடும் செயற்பாடுகளுக்கு விதை ஊன்றுகிறார் பாரதி என்பதை உணர முடியும்.
11

Page 16
சொல்லளவில் ஜனநாயகம், சோஷலிஸம் பேசும் ஐரோப்பாவினால் செயல் முனைப்புடன் உலகம் உய்ய வழிகாட்ட முடியாது. பூரண சமத்துவக் கொள்கையை இந்தியாவினாலேயே உலகுக்கு எடுத்துக்காட்ட முடியும் என்று கூறவந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அதற்கு வேதாந்தக் கோட்பாட்டின் பயிற்சியே காரணமென பாரதி காட்டுவார். அவ்வாறு சொன்னதைத் தொடர்ந்து பாரதி கூறுவது அழுத்தம் பெற வேண்டியதொன்று. எந்தச் சரணாகதித் தத்துவமும் சுதந்திரத்தை இழந்து வாழ பாரதிக்கு வழிகாட்டியதில்லை, அல்லது பிரித்தானியருடன் பகிர்ந்து மேல் தட்டினர் அனுபவிக்கும் வகையில் சுயராஜ்யத்தைக் கோருவதற்கு பாரதியைத்துண்டியதில்லை என்பதற்கும் எடுத்துக் காட்டாக 1921ஆம் ஆண்டில் (தனது இறுதி நாட்களில்) அவர் எழுப்பிய இந்தக் குரல் அமைகிறது. எத்தனையோ நூற்றாண்டுகளாக இந்தியாவின் நெஞ்சில் வேதாந்தக் கொள்கை ஊறிக்கிடக்கிறது. "இந்த வேதாந்தம் லெளகிக அனுஷ்டானத்தில் பரிபூரணமான, ஸம்பூர்ணமான ஸ்மத்துவம் ஏற்படுத்தும்
இயல்புடையது. ஆனால் நாம் இக்கொள்கையை முற்றும் அனுஷ்டித்தல் அன்னிய ராஜ்யத்தின் கீழே
ஸாத்யப்படவில்லை. ஆதலால் நமக்கு ஸ்வராஜ்யம் இன்றியமையாதது. இந்தியா ஸ்வராஜ்யம் பெறுவதே மனித உலகம் அழியாது காக்கும் வழி" )
பாரதியின் இந்தச் சிந்தனைப் போக்கு ஒரு போதும் தடம் புரளாது முன்னேறிச் சென்ற ஒன்று. ஆரம்ப காலத்தில் அதி தீவிரவாத மார்க்கங்களைத் தேர்ந்து முன்னேறிய அரவிந்தர் அதன் தோல்வியின் பின் அரசியலில் இருந்து முற்றாக ஒதுங்கி ஆன்மீக ஆய்வில் மூழ்கிய போதிலும் பாரதியின் பாதையை மாற்றித் தன் வழியே ஈர்க்க அரவிந்தருக்கு இயலவில்லை. அரவிந்தரைச் சந்திப்பதற்கு முன் அவரை மகானாக மதித்துப் பல சந்தர்ப்பங்களில் எழுதிய பாரதி சந்திப்பின் பின்னர் அவரோடு இணைந்து வேதநூல்களைப் படித்துத்தேர்ந்த போதிலும் அவர் குறித்து அதிகம் எழுதாதது ஏன் ? புதுவை வந்தபின் அவருடன் நேரிடையாகத் தொடர்பு கொண்டு அவரிடமும் பக்தி செலுத்தி வந்தார். ஆனால் அவரது புகழைப் பாட்டில் பாடவில்லை; பாடுவதற்குரிய அவகாசமும் எழவில்லை. ஆனால், குள்ளச்சாமியைப் பற்றியும் அவரிடமிருந்து தாம் சுயானுபவமாகப்
12

பெற்றதையும் பாரதியார் ‘பாரதி அறுபத்தா றில் தெளிவாகக் கூறியுள்ளார்.” என ஆய்வாளர்கள் கூறும் நிலை ஏற்பட்டது எதனால் ?
குள்ளச்சாமியை சுயானுபவ வழிகாட்டியாகக் கூறும் போது அதே உணர்வு அரவிந்தரால் ஏற்பட்டதாகக் கூறாதுவிட்டமைக்கு அவகாசம் கிடைக்காதமையா காரணமாயிருக்கும் ? பாரதி வெறுக்கும் கொலைத் தொழிலை செம்படவன் செய்தாலும் அவன் உயிரும் என் உயிரும் ஒன்றே என்ற உணர்வுடைய பாரதிக்கு, சாதாரண மக்களுக்கு முதல் தெய்வமாகத் தெரிகிற மட்த்துக்குருவிடம் கண்டனுபவிக்காத பிரபஞ்ச உண்மைகளை செம்படவன் பாட்டிலிருந்து தெரியும் மனப்பாங்கு வாய்க்கப் பெற்றிருந்தது என்பதனால்," அது காரணமாக அமைந்திராதா ? " .
அரவிந்தரையும் பாரதி மதித்த போதிலும், குள்ளச்சாமியை மதித்த அளவுக்கு அது உயர்ந்த ஸ்தானத்துக்குரியதல்ல என்பதையே இது காட்டுகிறது. அந்த வகையில் அரவிந்தருடனான உறவின் முழுப் பரிமாணங்களையும் காண்பது அவசியமானதாகும். இதற்கு அதிகளவில் உதவக்கூடியது பாரதிதாசனின் தொடர்பாகும். பாரதியுடன் உறவு கொண்டவர்களில் அதிகம் பாரதியைப் புரிந்து கொண்டவர்கள் கணக சுப்புரத்தினம் (பாரதிதாசன்), பரலி சு. நெல்லையப்பர், வ. ரா. என மூவரை மட்டும் குறிப்பிடும் வ. ரா, "வேறு எவரினும் பாரதியின் பாவழிமரபினை நிலைநிறுத்தியவர் பாரதிதாசன் ஒருவரே பரம்பரை எனத் தொடர்ந்த கவிப்பரம்பரையொன்று பாரதிதாசனுக்கு இருந்தது போல பாரதிக்கு ஒரு பரம்பரை எனக்கூறபாரதியாலேயேசுப்பிரமணியபாரதி
’ என்கிறார். பாரதிதாசன்
கவிதா மண்டலத்தைச் சேர்ந்தவரெண்க் கூறப்பட்ட பாரதிதாசன் ஒருவரே இருந்தாரெனக் கூறுவர் ஆய்வறிஞர். *
அவ்வாறு இருந்த போதிலும், பாரதி வாழ்க்கைத் தடங்களைக்கான பாரதிதாசன் தொடர்பு அதிகம் கவனத்திலெடுக்கப்படாத நிலையே உள்ளது. பாரதிதாசன் உயிரோடிருந்த காலத்திலும் இதே போக்கு நிலவியது. UITU 5 விழாக்களுக்குத் தான் அழைக்கப்படாதது ப்ற்றி பாரதிதாசன் கூறும்போது, பார்ப்பணிய நோக்குநிலையிலிருந்து பாரதியை முளையில் கருக்க முயன்றவர்கள் அந்த முயற்சியில்

Page 17
தோற்றபின் பார்ப்பனியத்தை எதிர்த்த அவர் குரலை அமுக்கிவிட வெறும் உப்புச்சப்பற்ற விழாக்களை எடுக்கையில் பாரதியின் வழியில் தொடரும் தன்னைப் புறக்கணித்துவிடுகின்றனர் எனச் சொல்லி வந்துள்ளார்."
O
“எனக்கு இளமையிலிருந்தே அரசியலிலே ஈடுபாடு அதிகம். காரணம் பாரதியார் தொடர்புதான்” எனக்கூறும் பாரதிதாசன் 'பாரதியாருடன் நானிருந்தவரைக்கும் வெளித்தொல்லைகள் அதிகமாக இருந்தாலும் மனமகிழ்ச்சிக்கு அளவே இல்லை. காலமெல்லாம் கவிதை வாழ்க்கை, இலக்கிய ஆராய்ச்சி, அரசியல் ஆராய்ச்சி. அவரை விட்டுப்பிரிந்த பிறகு எனக்கு வெளித் தொல்லைகள் அதிகம் இல்லை. ஆனால் உள்ளத்தில் தொல்லை. இதனை நீந்திக் கரையேறுவதற்கு நீண்ட நாட்கள் வேண்டியிருந்தன”* எனக் கூறும்போது துடிப்புடன் சமூகச் செயற்பாடுகளில் இறங்கிய கனக சுப்புரத்தினம் என்ற இளங்காளையை , பாரதிதாசன் எனும் சமூகச்சார்புமிக்க கவிஞராகவும், அரசியலாளராகவும் பரிணமிக்கச் செய்த பாரதி என்ற அரசியல் ஆர்வந்தளராத தேசியக் கவியையே தரிசிக்கிறோம். வெறும் ஆன்மீக ஆய்வில் மூழ்கிய பற்றற்ற சரணாகதிவாதியைக் காண முடியவில்லை.
இந்த உணர்வுக்கு முரணற்ற வகையிலேயே அரவிந்தருடனான உறவும் அமைந்திருந்தது. புதுவைக்கு அரவிந்தர் வருகை தந்த 1914 இல் நேரடித் தொடர்பு அவருடன் பாரதிக்குத் தொடங்கிய போதிலும் 1917இல் அதிகம் சந்திக்காத அளவிற்கு உறவில் விரிசல் ஏற்பட்டு விடுகிறது. அரவிந்தரைச் சந்திப்பதற்கு 1917ஆம் ஆண்டில் பாரதியின் உதவியை நாடிய தி. வி. கபாலி சாஸ்திரியாரிடம் பாரதி, 'ஆனால் இப்பொழுதெல்லாம் அவர் மக்களைப் பார்ப்பதற்கு விரும்புவதே இல்லை. நானே முன்போல் அவரை அடிக்கடி பார்ப்பதில்லை. சரி, எப்படியும் நான் பார்க்கிறேன்” எனக்கூறி, தானே நேரில் அழைத்துச் செல்லாமல், வேறோர் ஆள் மூலமாக, அரவிந்தருக்கன்றி அரவிந்தருக்குப் பணிவிடை செய்த நாகஸ்வாமிக்கு தமக்கே உரிய நகைச்சுவையுடன் ஒரு சீட்டு எழுதிக் * அந்தச் சீட்டுக் கிடைத்திருப்பின் உள்ளுறைந்த பாரதி உணர்வைப் புரிந்துகொள்ள உதவியாக இருந்திருக்கும். இந்த விலகல் அரவிந்தர் மக்களைச் சந்திக்காததை மட்டும்
கொடுத்து அனுப்பி வைக்கிறார்.
அல்ல, பாரதி நேரில் அரவிந்தரிடம், செல்ல ஆர்வம்

காட்டவில்லையென்பதையும் தெளிவுபடுத்தி நிற்பது. இதற்கு நேரடியாக பாரதிக்கு ஏற்பட்ட அனுபவமொன்று காரணமென, அந்த நிகழ்வின் சூடாறுமுன் பாரதியை அவர் வீட்டில் சந்தித்த பாரதிதாசன் வாயிலாக அறிய முடிகிறது.
அரவிந்தரைச் சந்தித்தபின் வீடுதிரும்பிய ஒரு நாளில் பாரதி மிகவும் சோர்ந்து காணப்பட்டதை உணர்ந்த பாரதிதாசன், வாட்டத்துக்கான `காரணத்தைக்கேட்ட போது, திறந்தவெளி மனக்காரரான பாரதி, அங்கு நடந்ததைக் கூறுகிறார்; "நானும் அரவிந்தரும் உரையாடிக் கொண்டிருந்தோம். முன்பின் தெரியாத எவனோ ஒருவன் அரவிந்தர் காலில் விழுந்தான். அவரும் ஆசி வழங்கினார். பிறகு அரவிந்தர் என்னைப் பார்த்து நீரும் இவ்விதம் ஊரார் வணங்கச் சீரும் சிறப்பும் தேடலாமே! எனக் கூறினார். அரவிந்தர் உள்ளம் சமத்துவ உணர்வுடையதன்று; அது மேடுபள்ளங்கள் நிறைந்த காடு” என்று தன் விமர்சனத்தையும் இணைத்துக்கூறி மனம் ஆறினார் பாரதியார் என பாரதிதாசன் விளக்குகிறார்." விடுதலையை நேசிக்கும் பாரதி மனிதனை மனிதன் மதநம்பிக்கையின் பேரால் அடிமையாய் வழிபடத்துரண்டுவதை ஏற்காதவர் என்ற காரணத்தால் அரவிந்தரை விலகி நடக்கத் தொடங்கி விட்டார். அதன்பின் பொது இடங்களிலன்றி வீட்டில் சென்று அரவிந்தரைச் சந்திப்பதை முற்றாகவே பாரதி தவிர்த்தார் எனவும் கூறுவர்."
இவ்வாறு வெறும் ஆன்மீக விடுதலைக்கு அப்பால் பூரண சமத்துவத்தையும் விடுதலை உணர்வையும் வேண்டிய பாரதி தனது வீட்டிலும் வெளியிலும் அதே உணர்வைக் கொண்டிருந்தவர்களோடு கூடிக்குலாவிக் கருத்துப் பரிமாறிச் சுதந்திர உணர்வை வளர்ப்பதை நாளாந்தக் கருமமாகக் கொண்டு இயங்கி வந்திருக்கிறார். பாரதியுடன் பன்னிரண்டு ஆண்டுகள் தொடர்பு கொண்டிருந்த பாரதிதாசன், இருவரும் ஒரிடத்தில் உறங்கி எழுவது முதல் கூடவே பல இடங்களுக்கும் செல்லவும், பல பாடல்களின் தோற்றத்தை நேரில் காணவுமான வாய்ப்பையும் தான் பெற்றிருந்ததைக் குறிப்பிடுவார். *
இத்தகைய சந்திப்புச்சர்ச்சைகளின் போதும் தனது புரட்சிகர நிலைப்பாட்டை பாரதி வலியுறுத்திக் காட்டத் தவறியதில்லை. பாரதி, பாரதிதாசன்,
13

Page 18
வ. வே. சு. ஐயர் மற்றும் சில பாரதி நண்பர்கள் அள்வளாவிக் கொண்டிருந்த வேள்ை அவர்களின் நண்பரான முத்திலால் பேட்டை கிருஷ்ணசாமி, கையில் ஜஸ்டிஸ்' பத்திரிகையுடன் வந்தார். 9إIBjل பார்ப்பனரல்லாதாரின் அரசியல் பொருளாதார நிலை உயர உழைக்கும் ஜஸ்டிஸ் பத்திரிகை என்பதையறிந்த அய்யர், 'பிராமணரல்லாதார் முன்னேறும் போது பிராமணர் மேலும் பலபடி முன்னேறியிருப்பர் என்பதால் சமத்துவ நிலையை எட்ட முடியாது” என்றார். யாரும் இதற்குப்பதிலளிக்காத போது பாரதிதாசன் “பிராமணர் அல்லாதவன் மிகப்பலர். அவர்கள் அடிதடியில் இறங்கிவிட்டால் கதி என்ன ?” எனக் கேட்டார்.
இதற்குப் பதில் கூற முடியாத வ. வே. சு. ஐயர் வேறு விடயங்கள் பேசியிருந்துவிட்டுச் சென்று விட்டார். கிருஷ்ணசாமியும் பாரதிதாசனும் இருந்த போது அவர்களிடம் “சுப்புரத்தினம் கேட்டது சரியான கேள்வி. ஆணித்தரமான் பேச்சு, அப்படித்தான் பயப்படக்கூடாது. ஜ்னங்களின் - பெரும்பாலோரின் அபீஷ்டம், கொடிய கட்டுத் திட்டமும், சட்ட திட்டமும் தூளாகும்படி, அடிதடி சகிதம் உண்டாவதுதான் புரட்சி. அதை நிலை நிறுத்துவதுதான் மக்களின் வெற்றி” என்று கூறினார் பாரதி. S3
சமாதான வழியில் எதிர்ப்பைக் காட்டி முன்னேறும் மக்களை உக்கிர வழிக்கு அரசு இட்டுச் செல்லும் பட்சத்தில் எதிர்த்துக் கிளர்ந்தெழுந்து புரட்சியில் இறக்கி மக்கள் வெற்றியை நிலைநாட்டுவர் என்ற அறிவும் தெளிவும் பாரதியிடம் இருந்ததை, அவருடைய வெறும் எழுத்துக்களுக்கு அப்பால், கூட இருந்து உணர்வுபூர்வமாய் கண்டனுபவித்த நண்பர்கள் வாயிலாய் அறியும் உண்மைநிலை இது. பாரதியின் இந்த உணர்வே பின்னால் வரிகொடா இயக்கக் கிளர்ச்சியைக் கண்டபோது, பல விடயங்களிலும் காந்தியுடன் உடன்பாடு காணமுடியாத போதிலும் காந்தியின் கிளர்ச்சியை வளர்க்கும் ஆற்றல் கண்டு வியந்து, காந்தி தலைமை சுதந்திரத்தைக் கடிதில் வெற்றிகாணச் செய்யும் என வாழ்த்துப்பாடவும் தூண்டியது.
வெகுஜன எழுச்சி சாத்தியமற்றது போலத் தென்பட்ட புதுவை வாழ்வுக் காலத்திலும் அதே புரட்சிக் கொந்தளிப்பு பாரதியின் உள் மனதில் உறைந்து நீறுபூத்த நெருப்பாய்க் கிடந்ததைக் காட்டும் இந்தச்
14

சம்பவம், பாரதி அடியந்தமாய் மாறிப்போய் விடுபவராயல்லாது புதுவையிலும் தேச-சமூக விடுதலை அம்சங்களில் தொடர்ந்தும் முன்னேறிச் செல்பவராய்த் துலங்குகிறார் என்பதைக் காட்டுவது. இந்த வளர்ச்சியின் காரணமாயே “பாரதி படிப்படியாக, சீர்திருத்தவாதியாக மாறிவந்ததை நான் என் கண்ணாரக் கண்டேன்” என பாரதிதாசனால் கூற முடிந்தது. புதுவையில் பாரதி வாழ்ந்து காட்டிய நெறியே பழமையை உதறிப் புதுவை நாடிய பாரதிதாசனை உருவாக்கியதென்பதை “பழைமைப் போக்கிலும், செக்கு சுற்றும் கவிதைப் பாணியிலும் ஊறிப்போயிருந்த எனக்கு பாரதியாரின் அஞ்சாமையும், எவ்வளவு உயர்ந்தவையாக இருந்தாலும் காலத்துக்கு ஒவ்வாததை அலட்சியமாக உதறும் துணிச்சலும், பிறர் என்ன நினைப்பார்கள் என்பதைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் தான் நினைத்ததைச் செய்யும் உள்ள உறுதியும் மிகவும் பிடித்தன”. என்பதால் தன்னையறியாமலே பாரதி உறவ் தன்னுள் பழக்கவழக்கங்களிலும் சிந்தனையிலும் மாற்றங்களை ஏற்படுத்தி வந்ததைக் காலப்போக்கில் உணர்ந்ததாக பாரதிதாசனே கூறக் கேட்கிறோம். சமூக ஊடாட்ட உண்மை ஒளி பாரதியிடம் இல்லையேல் துணிச்சலும் இளமைத்துடிப்பும் மிக்க ஒருவரை ஒருமுகப் படுத்தியிருக்க முடியாது போயிருக்கும். *
அவ்வாறு புடம்போட்டெடுத்து, புரட்சிக் கவிதைகள் எழுதத்தமக்குக் கற்றுத்தந்து, முதன் முதலில் மனமுவந்து பாராட்டி விளம்பரப்படுத்தியதோடு ஆங்கிலத்தில் தனது கவிதையை மொழி பெயர்த்து இந்து வில் வெளிப்படுத்திய பாரதி, பார்ப்பனரல்ல என்பதோடு பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே எனக்கூறிய புரட்சியாளர் என்பதால் பாரதிதாசன் என்று தனது புனைபெயரை அமைத்தது நியாயம் என்பார் பாரதிதாசனாகப் பரிணமித்த கனக சுப்புரத்தினம். தீவிர பிராமணிய எதிர்ப்பு அணியில் ஒரு பார்ப்பனருக்கு அடிமையென சமஸ்கிருதமொழியில் சொல்லிக் கொள்வதா என புனை பெயர்தொடர்பாகத் தொடர்ந்து கேள்விக் கணைகள் தொடுக்கப்பட்ட போதிலும் தனித் தமிழியக்கங்கண்ட சுயமரியாதைக்காரரான பாரதிதாசன் இந்தக் காரணத்தினால் கேள்வி யெழுப்புவோரை அடக்கித் தொடர்ந்தும் தனது பெயரை பாரதிதாசன் என்றே வைத்திருந்தார்.

Page 19
மூடநம்பிக்கைகளைச் சாடிய'பாரதி பற்றிக் கூறுகையில், “பாரதிக்கு எல்லா மதமும் ஒன்று. கூடுமானால் மதமே இல்லையென்றாலும்
பரவாயில்லை”*
என்பார் பாரதிதாசன். பாரதியை ஏதாயினும் குறித்த ஓர் சிந்தனைக்குள் முடக்கிப் பார்க்காத தன்மையை, நேரடியாக ஊடாடிய உறவின் காரணத்தால் பாரதிதாசன் பெற்றிருக்கிறார் எனக் கருதமுடியும். பாரதி வெளிப்படுத்திய பல முனை சார்ந்த சிந்தனைப் போக்குகளால் ஒவ்வொரு துறையினரும் பாரதியை அவ்வத்துறை சார்ந்தவரென முத்திரை குத்த முனைகையில், பாரதியோ அனைத்து விலங்கிடல்களையும் களைந்து முன்னேறிச் செல்பவராகத் திகழ்கிறார். அவை பற்றி மேலும் பல தகவல்களைப் பாரதிதாசனிடமிருந்து பெற்றிருக்க முடியும். இதுவரை கிடைத்த அளவிலும் பாரதிதாசன் தொடர்புதரும் தெளிவு, பாரதி வாழ்க்கை வரலாற்றை வரைவதற்கு ஏற்ற விளக்கங்களைத் தருவதாயிருப்பதைக் காணக்கூடியதாயுள்ளது.
ஊற்றுக்களும் வெளிப்பாடும்
திலகரைச் சுதந்திர இயக்கத் தலைவராக வரித்தபோதே அவருக்கு மாறான கோட்பாடுகளான சாதி ஒழிப்பு, பெண்விடுதலை எனும் சமூக விடுதலை அம்சங்களிலும் நாட்டம் செலுத்தியவர் பாரதி. அரவிந்தருடன் ஆன்மீக ஆய்வில் இணைந்த போதும் மத ரீதியான அடிமைத்தனங்களை உடைத்தெறியும் இலட்சியத்தினால் அவரோடு முழுமையாக ஒன்றாமல் விலகிச் சென்றவர் பாரதி. காந்தியத்தின் சாரத்துடன் ஒட்டுறவில்லாதிருந்த போதிலும், கிளர்ச்சிதனை வளர்ப்பவராய்க் கண்டதும் சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் தலைவராய்க் காந்தியைத் தயக்கமின்றி ஏற்றவர் பாரதி.
இவற்றைக் கொண்டு பார்க்கும் போது பாரதியை முரண்பாடுகளுடையவர் என்பதா ? தத்துவ ரீதியாகவும் List US தன்னை அத்வைத வேதாந்தியெனக் கூறியபோதிலும் பல அம்சங்களில் அத்வைதத்திலிருந்து விலகிச் சென்றவர். பிரபஞ்ச படைப்புக் கோட்பாட்டில் அத்வைத வேதாந்தத்தைவிட சாங்கியமே சரியானதென்றவர்." அவற்றைப் பார்க்கையில் அவரே தன்னை அத்வைதியாகக் கருதினும் அத்வைத வேதாந்தியாகக் கொள்ள

முடியாதவர். அது பாரதி, அனைத்துக் கோட்பாடுகளிலும் மேலோட்டமாகக் கவனஞ் செலுத்தித் தனக்குகந்தனவற்றை ஏற்றுக் கொள்பவர் எனக் காட்டுவதா ?
தத்துவ நோக்கிலும் நடைமுறையிலும் பாரதியிடம் இத்தகைய போக்குகள் காணப்படுவது, அவர் காலத்தில் இந்திய மெய்ஞ்ஞானம் அடியந்தமான மாற்றத்துக்கு உட்படும் வரலாற்றுப் போக்குக் கொண்டிருந்தமையினாலாகும். அந்த மாற்றப்போக்கை, அதன் முன்னேற்றத் திசைவழியே, முழுமையாக வெளிப்படுத்தியதிலேயே பாரதியின் மேதைமை புலப்படுகிறது. அத்திசை வழியே இயங்கித் தத்துவத்தளத்தில் நிலைமறுப்பின் நிலைமறுப்பாளராகச் செயற்பட்ட பாரதியின் இந்த வரலாற்றுப் பாத்திரம் காரணமாகவே, பலரும் முரண்பட்ட ஒருவராக அவரைக் காணக்காரணமான குணாம்சங்கள் அவரிடம் காணப்பட்டன. மாறாக, பாரதியோ தெளிந்த தத்துவஞானச் செழுமையுடன் தனது சமூகப்பங்களிப்பை முன்னெடுத்துச் சென்றிருக்கிறார்."
சமூகத்தாக்கம், ஒவ்வொரு தனிநபரிலும் தாக்கம் செலுத்தும். அதன் காரணமாய் சமூகத்தின் உள்நாடியை வெளிப்படுத்தும் முன்னோடிகள் வழிகாட்டிகளாயும் மிளிர்வர். அந்த வகையிலும் நிலைமறுப்பின் நிலைமறுப்பாளர் என்ற வகையிலும் வேதரிஷிகள் முதல் விவேகானந்தர், நிவேதிதாதேவி, திலகர், அரவிந்தர், காந்தி வரையும், வள்ளுவர் முதல் லெனின் வரையும், இளங்கோ, கம்பர், கோபால கிருஷ்ண பாரதி, மீனாட்சி சுந்தரம்பிள்ளை முதல் ஷெல்லி, கீட்ஸ், பைரன், வால்ட்விட்மன் வரையும், வ. உ. சிதம்பரனார், சுப்பிரமணிய சிவா வ. வே. சு. ஐயர் முதல் குள்ளச்சாமி வரையும் பலரது சிந்தனைத்தடத்தில் ஏற்புடையவற்றை ஏற்று முன்னேறிய பாரதியிடமும் முன்னோடிகள் பலரது தாக்கங்கள் உள்ளது. ஆயினும், பாரதியின் ஆளுமை அவரின் தனித்துவ இயல்புகளைத் துலக்கமாகக் காட்டுவதாய் அமைந்துள்ளது. அவை தெளிவாக வரையறுக்கப்படுவது அவசியம்.
அதற்கமைவாக, தத்துவார்த்த ரீதியாக பாரதியின் மெய்ஞ்ஞானம் தெளிவாக அடையாளங் காணப்பட்டு, பாரதியின் முழுப் பரிமாணங்களையும்
15

Page 20
கவனத்திலெடுத்து பாரதி வாழ்க்கை வரலாற்றை பூரணமாக எழுதுவது மிகமிக அவசிய பணியாகும். இதற்கு பாரதிதாசன் தொடர்பு மிக அதிகளவில் பயன் நல்கவல்லது. அதே போன்றே கிடைக்கும் ஒவ்வொரு
0.
02.
03.
04.
05.
06.
O7.
08.
09.
16
உசாத்துணை
ப. கோதண்டராமன்,1990, புதுவையில் பாரதி, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை 600 014. இரண்டாம் பதிப்பு, ப. 177.
கா. அப்பாத்துரை, டிசெம்பர் 1990, “செட்டி நாட்டிலிருந்து சென்னை வரை" பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம். தொகுப்பு : கவிஞர் முருகு சுந்தரம். அன்னம் (பி) லிட், 2, சிவன் கோவில் தெற்குத் தெரு, சிவகெங்கை 623 560,ப, 277.
ப.ஜீவானந்தம், செப்டெம்பர் 1958, பாரதியின் , *தத்துவ ஞானம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,
தமிழ்நாடு கமிட்டி, சென்னை. ப. 07.
ப.ஜீவானந்தம், மூன்றாம் பதிப்பு: செப்டெம்பர் 1992 இலக்கியச்சுவை, நியு செஞ்சுரி புக் ஹவுஸ், பிரைவேட் லிமிடெட், 41பி, சிட்கோ இண்டஸ்ரியல் எஸ்டேட், சென்னை 600 098, ப. 31.
கவிஞர் சிற்பி, “பாவேந்தர்-ஒருநினைவுச்சரம்”, பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம், ப. 351.
கோ. கேசவன், டிசம்பர் 1991, பாாதியும் அரசியலும், அலைகள் வெளியீட்டகம், 36 தெற்கு சிவன் கோயில் தெரு, கோடம்பாக்கம், சென்னை 600 024, L. 175.
மகாகவி பாரதி நூற்றாண்டு விழா மலர்,1982 தமிழ்நாடு அரசு வெளியீடு, ப. 174-175.
சுப்பிரமணிய பாரதி, ஏப்பிரல் 1987, பாரதி பாடல்கள் (ஆய்வுப் பதிப்பு), தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், ப. 108-109.
சுப்பிரமணிய பாரதி, (2ம் பதிப்பு), ஆகஸ்ட் 1986, பாரதி தரிசனம் - 01. (தலையங்கம், “இந்தியா", 1906 யூலை 14), என். சி.என். பி. எச். ப. 27-8.
மேற்படி, ப. 50-51.

தகவல்களும் கவனமாகச் சீர்தூக்கி அலசப்பட்டு
தெளிவு காணப்பயன்படுத்தப்பட வேண்டும்.
முழுமைவாய்ந்த, ஆய்வடிப்படையிலான பாரதி வரலாறு விரைவில் வெளிவரும் என நம்புவோம்.
1.
t2。
甘3。
4.
15。
16。
17.
18.
20.
22.
23.
24.
25.
26.
சுப்பிரமணிய பாரதி, 1950, “ஞானரதம்", பாரதி நூல்கள் (வசனங்கள்), பாரதி பிரசுராலயம், திருவல்லிக்கேணி, சென்னை, தொகுப்பாசிரியர் ரா. அ. பத்மநாதன், ப. 81.
சுப்பிரமணிய பாரதி, டிசெம்பர் 1982, பாரதி
புதையல், வானதிபதிப்பகம், 13 தீனதயாளு தெரு, தி. நகர், சென்னை 17, ப. 420-421. S.
சுப்பிரமணிய பாரதி, 1987, பாரதிபாடல்கள் (ஆய்வுப் பதிப்பு), தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர், ப. 146.
மேற்படி, ப. 102. 魄
மேற்படி, ப. 158-160.
கோ. கேசவன் டிசெம்பர் 1991, ப. 178-179.
மேற்படி, U. 50-15
பாரதி புதையல் (12), 251 ஆ
பாரதி நூல்கள் வசனங்கள் (i), "தராசு" ப.57
GSLnġibLJL9, LI.. 557-58.
பாரதி தரிசனம் -2 (தொகுப்பு: இளசைமணியன்) என். சி. பி. எச். 1977, ப. 45-47, a
மேற்படி, ப. 148.
பாரதி தமிழ், தொகுப்பாசிரியர் : பெ. தூரன் ('சுதேச மித்திரன் பத்திரிகையும் தமிழ்நாடும்’ எனுந்தலைப்பில் 30.11.1920 இல் பாரதி எழுதிய கட்டுரை).
பாரதி ஏப்ரல் 1987, ப. 738-740.
மேற்படி, ப. 742.
ராஜனி பாமே தத் ஜனவரி 1948, இன்றைய இந்தியா - 2 (தமிழில்: எஸ். ராமகிருஸ்ணன்),

Page 21
27.
28.
29.
30.
31.
32.
33.
34.
35.
36.
37.
38.
39.
40.
41.
42.
ஜனசக்தி பிரசுராலயம். 6. டேவிட்ஸன் தெரு, சென்னை - 1 ஜனவரி 1948. ப. 283-287, ப. 317.
இ. எம். எஸ். நம்திரிபாட், மார்ச் 89, நேரு : கொள்கையும் நடைமுறையும், (தமிழில்: சு. கிருஷ்ணமூர்த்தி) சென்னை புக்ஸ், 6 தாயார் சாகிப் 2வது சந்து, சென்னை 2 ப. 20-21
மேற்படி, ப. 29.
மேற்படி, ப. 63-64.
மேற்படி, ப. 64-69.
பாரதி தரிசனம் - 2 (21) ப. 69-70.
திரு. முத்துக்கிருஸ்ணன், 1986, மகாகவி
பாரதியார் வாழ்க்கைச்சித்திரம்,என்.சி.பி.எச். U. 340.
ஆதவன் (கே. எஸ். சுந்தரம்), 1988, புழுதியில்
வீணை (நாடகம்) முன்னுரை, தாகம், 58, டி. பி. கோயில் தெரு, திருவல்லிக்கேணி, விவேகானந்தர் இல்லம், சென்னை - 5, ப. 59-61.
கோ. கேசவன் (06), ப. 133.
சு. வித்தியானந்தளன், “வரலாற்றோடு இணைந்த பெரியார்கள்” மகாகவி பாரதியார் நூற்றாண்டு விழா மலர் - 1982 ப. 133.
ப. கோதண்டராமன் (0), ப. 66–67.
எஸ்.ஜி.இராமநுஜலுநாயுடு, ஜூலை 82, பாரதியைப் பற்றி நண்பர்கள், (தொகுப்பு: ரா. அ.பத்மநாதன்), வானதி பதிப்பகம், ப. 255.
மேற்படி, ப. 58.
ப. கோதண்டராமன், 1990, ப. 15-22.
பகவத் கீதை, முன்னுரை, பூம்புகார் பிரசுரம், 2ம் பதிப்பு: 1977, ப. 50.
பாரதி புதையல் (12) ப. 500 - 501.
பு: கோதண்டராமன் (1990), ப. 152.

52.
53.
54.
55.
56.
57.
58.
59.
மேற்படி, ப. 171
க. சு. இளங்கோ, பாரதிதாசன் பார்வையில் பாரதி, ப. 08.
கோ. கிருஸ்ணமூர்த்தி, 1991. பாரதிதாசன் வாழ்க்கை வரலாறு, தமிழ்நாடு அரசியல் அறிவாய்வுக்கழகம், ப. 26.
ச. சு.இளங்கோ (44), (குயில் 69.60) புதுமை செய்தி - பாரதிவிழா. ப. 200.
முருகுகந்தரம், பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம், ப. 41.
ச. சு. இளங்கோ (44) ப. 197 - 198.
தி. வி. கபாலி சாஸ்திரியார், 1982 “பாரதியாருடன் எனது முதல் சந்திப்பு' அறிஞர்கள் பார்வையில் பாரதி (தொகுப்பு : பெ. சு. மணி), மணிவாசகர் நூலகம், 14 சுங்குராம் தெரு, பாரிமுனை, சென்னை 01, L. 53.
ச. சு. இளங்கோ (1991), ப. 97.
க. கைலாசபதி, 1982 பாரதியார் நூற்றாண்டு விழா சிறப்புரை, பலாலி ஆசிரியர் கலாசாலை, இலங்கை.
கோ. கிருஸ்ணமூர்த்தி (45), ப. 17-53.
மேற்படி, ப. 29-30.
முருகுசுந்தரம் டிசெம்பர் 1990, பாவேந்தர் ஒரு
பல்கலைக்கழகம், ப. 297
Gunfibuty, U. 69.
மேற்படி, ப. 278.
F. சு. இளங்கோ, u. 136.
பாரதி நூல்கள் (வசனங்கள்),
பதஞ்சலியோகஸுத்திரம்" ப. 16-20.
பார்க்க : ந. இரவீந்திரன் பாரதியின் மெய்ஞ்ஞானம், சவுத்ஏசியன் புக்ஸ், 6 தாயார் - சாகிப் 2வது சந்து, சென்னை 2,2ம் பதிப்பு: மார்ச் 93.
17

Page 22
- தேசவழமைச் சட்
இத் தேசவழமைச் சட்டம் தேவையா? இலங்கையில் வடபுலமாம் யாழ்ப்பாண மக்களுக்கென்று ஒரு தனிக் குணம் உண்டு.
தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா"
மலபார் வாசிகள்
யாழ்ப்பாணப் பட்டினம் என்று முன்னர் அழைக்கப்பட்டதும், தற்போது வடமாகாணம் என்று அழைக்கப்படுவதுமான நிலப்பரப்பின் நிரந்தரக்குடிமக்கள் போர்த்துக்கேயரால் மலபார் வாசிகள் என அழைக்கப்பட்டு வந்தனர். போர்த்துக்கேயர் இந்தியாவின் மேற்குக் கரையோரமான கேரள, தற்போது, கொச்சின் திருவனந்தபுரப் பிரதேசத்தை மலபார் கடற்கரையோரம் என்றும் அங்கு வாழும் மக்களை "மலபார்” என்றும் அழைத்தனர். யாழ்ப்பாணத்தைப் பின்னர் வந்தடைந்த போர்த்துக்கேயர் யாழ்ப்பாணத்தில் பேசப்பட்டு வந்த தமிழ் மொழிக்கும் மலபார் கடற்கரையோரத்தில் பேசப்பட்டு வந்த o606) T6 மொழிக்கும் உள்ள சில ஒற்றுமைப்பாடுகளையும் இரு பிரதேசங்களில் வசித்துவந்த ஆண்கள்,பெண்கள் கன்ன உச்சி பிரித்துத் தலை வாரிய தன்மையையும், பூக்களை தலைமயிரில் செருகிய விதத்தில் உள்ள ஒற்றுமையையும் அவதானித்து இவர்களையும் மலபார்கள் எனத் தவறாக எண்ணி "மலபார் குடிவாசிகள்” எனத் தவறாக விளித்தனர்.
4 புதிய சட்ட அறிக்கைகள் (4N. LR) என்ற சட்ட ஏட்டில் ஆ333 ஆம் பக்கத்தில் சேர். பொன்னம்பலம் இராமநாதன் பின்வருமாறு கூறுகிறார். "மலபார்”என்பது மலை - வாரம் (மலைப் பக்கம்) என்பதன் ஒரு கொச்சை மொழிப் பிரயோகம் ஆகும். உண்மையிலே யாழ்ப்பாணத்தில் குடியிருந்தவர்கள் இந்தியாவின் கிழக்குக் கடற்கரையோரமான சோழமண்டலக் öö60)J(3uuTJš56 (Coramendel Coast) g(bö யாழ்ப்பாணம் வந்து குடியேறினவர்கள். எனவே
18

- பொ. காங்கேயன்
சோழமண்டலக் கடற்கரையோரத்திலிருந்து வந்து இங்கு குடியேறினவர்களை"மலபார் வாசிகள்” என்று விளிப்பது n gogo (Bishop R. Caldwell) "loso)6OLT6Ti" GLOT (EuSith மக்கள் மலபார் கரையிலும், இந்தியாவின் கிழக்குக் கடற்கரையோரத்தில் வாழ்ந்த மக்கள் “தமிழ்” மொழி பேசுபவர்கள் என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளார்.
போர்த்துக்கேயர் காலத்திலிருந்த
தேசவழமைச் சட்டம்
Don. Philip Mascarenha - (GLT 6T 6ólů மஸ்கறன்கா) என்பவர் போர்த்துக்கேய அரசனது கட்டளைப்படி யாழ்ப்பாணத்தில் நீதி பரிபாலனம் செய்தபோது, அரசர் காலத்தில் யாழ்ப்பாணத்தில் வழக்கிலிருந்த தேசவழமைச் சட்டத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன.
1 பெண் ஒருவரின் திருமணத்தின் போது முன்னர் (அரசர் காலத்தில்) அப்பெண்ணின் தாயின் சீதனச் சொத்திலிருந்துமட்டும்தான் வழங்கப்பட்டது. இதில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுப்பெண் ஒருவர் தாய் தந்தை இருவரின் சொத்துக்களிலிருந்தும் சீதனம் பெறத் தொடங்கினார். இந்த மேலதிகச் சீதன முறையால் பெண்கள் சிறந்த கணவர்களை அடையக் கூடியதாக இருந்தது. பகுதி 1 சரத்து 2 - தேசவழமைச் சட்டம்
2. ஆண் சிறைக்குரியவன். வேறுஒருவருக்குரிய பெண் சிறையை தனது சிறை விவாகம் செய்ய அனுமதித்து தன் சிறைக்கு ஐந்தாறு பிள்ளைகள் இருந்தால் அவர்களில் ஒரு ஆண் பிள்ளையை மாத்திரம் பிடித்துக் கொள்வது அரசர் காலத்தில் வழக்கம். பிள்ளைகள் எல்லாம் பெண் பிள்ளைகளாயிருந்தால் எசமானனுக்கு அந்த உரிமை கிடையாது. போர்த்துக்கேயர் காலத்தில் பிதா ஒருவனுடைய சிறையாகவும் மாதா வேறு ஒருவனுடைய சிறையாகவும் இருந்தால் அப்படிப்பட்ட சிறைகளின்

Page 23
பிள்ளைகள் பெண் சிறைகளுக்கே உரித்தானவர்கள் என மாற்றம் செய்யப்பட்டது. (தேசவழமை பகுதி viii, đFtTjögül 4
டொன் கூயிறோசு என்பவர் எழுதிய "இலங்கையை வெற்றி கொள்ளுதல்’ என்ற நூலில் முன்னர் குறிப்பிட்ட இரண்டு விடயங்களை விட மேலும் போர்த்துக்கேயர் காலத்தில் வழக்கிலிருந்த பல தேசவழமைப் பழக்கங்களை அறியக் கூடியதாயிருக்கிறது.
1. தந்தை ஒருவர் விட்டுச் சென்ற சொத்துக்கள்,
அவரது ஆண் மக்களைச் சென்றடையும்.
2. பெண் பிள்ளைகள் யாவரும் சீதனம் பெற்ற பின்பு யாதாயினும் ஒரு சொத்து மீதமாயிருந்தால் அச் *சொத்தே ஆண்மக்களைச் சென்று அடையும்.
3. தந்தை ஒருவரினது சீவிய காலத்திலிருந்த ஆண் ஒருவர் அவரது குடும்பத் தொடர்பிலிருந்து விலக்கி விடுதலை செய்யப்பட்டால் குடும்பச் சொத்து முழுவதும் பிரிவிடுதல் செய்யப்பட்டு அவருக்குரிய பங்கு கையளிக்கப்படும்.
4 ஆண்மக்கள் யுத்த சேனையினால் சம்பாதித்த சொத்து (Casternese property),9661)g L1555glö(59506) வழங்கியதனால் பெற்ற சொத்து (Quasi Casternal property) குடும்பச் சொத்துப் பிரிவிடுதல் கணக்கில் எடுக்கப்படுவதில்லை. அச்சொத்து முழுவதும் சொத்தைச் சம்பாதித்த ஆணுக்கே உரியது.
5. யாராயினும் ஒருவர் ஆண் மக்களைப் பின்வைத்து வைக்காமல் இறக்க நேரிட்டால் இறந்தவரின் சொத்து இறந்தவரின் ஆண் சகோதரர்களைச் சென்றடையும். இறந்தவரின் தந்தை உயிருடன் இருப்பினும் காலம் சென்ற மகனின் சொத்தில் உரிமை பெறார்.
6. சுவீகாரம் செய்ய ஒருவர் விரும்பினால் அவர் தனது ஆண் அல்லது பெண் சகோதரங்களின் பிள்ளைகளில் ஒருவரையே தேர்ந்தெடுக்க வேண்டும்.
7. சுவீகாரம் எடுப்பவர் தான் பிள்ளை குட்டிகள் யாருமின்றி இறந்தால் சாதாரணமாகச் சொத்தில்

பங்குபெறக்கூடியவர்கள் அனைவரின் சம்மதத்தைப் பெற்றே சுவீகார வைபவம் நடத்த முடியும்.
பிற சட்டங்களின் செல்வாக்கு
இந்தியாவில் கேரளத்தில் உள்ள மருமக்கள் தாயச் சட்டம், இன்னும் அலியசந்தானச் சட்டம்,முக்குவச் சட்டம், மொகம் மிரயச் சட்டம் ஆகியவற்றின் செல்வாக்கை தேசவழமைச் சட்டத்தில் ஆங்காங்கே கவுனிக்கலாம்.
டச் மொழியில் உள்ள தேசவழமைச் சட்டத்தின் பெறுமதி
எமது நீதி மன்றத்தில் தேசவழமை முன்வாங்குரிமைச் சட்டத்தில் எழுந்த ஒரு பிணக்கு விசாரணையின் போது தேசவழமை டச் மூலப் பிரதி ஆராயப்பட்டு அதில் உள்ள விளக்கம் அங்கீகரிக்கப்பட வேண்டுமெனக் கட்சியினர் கேட்ட விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்டது. சபாபதி எதிராக சிவப்பிரகாசம் விண்ணப்ப நீதிமன்றம், யாழ்ப்பாணம் இல.2795.
யாழ்ப்பாண மாகாணம் தெற்கெல்லை பற்றிய பிணக்கு
மணவழி உரிமைகளும் உரித்தடைதல் சட்டம் 1876ஆம் ஆண்டு 150ம் இலக்கச் சட்டம் சரத்து 2பிரகாரம் தேசவழமைச் சட்டத்தினால் ஆளுமை செய்யப்படும் வட மாகாணத் தமிழர் இச் சட்டத்திலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளார்கள். மாரிமுத்து எதிராக ifsir 60T55th.S. 53 C. L. W. 98 H. Cleghon (எச். கிளேகோன்) வடமாகாணத்தின் தெற்கெல்லை புத்தளம் மன்னாருக்கிடையில் உள்ள கொக்கிளாய் ஆறு 6Tsirispirit. 9,60TT6) M.Leusekans map (எம். லெசுக்கானின் LILLb) புத்தளத்திற்கும் மன்னாருக்குமிடையில் உள்ள மதராகம் (Madragam) ஆறின் தொடக்கம் தற்போது செட்டிக்குளத்தை யாழ்ப்பாணத்திலிருந்து பிரிக்கும் கோடு யாழ்ப்பாண மாகாணத்தில் தெற்கெல்லை எனப்படுகிறது. வேலுப்பிள்ளை எதிராக சிற்றம்பலம் இராமநாதன் அறிக்கைகள் (1872-1876) பக்கம் 14ல் திருகோணமலை மட்டக்களப்பு பிரதேசங்கள் தேசவழமைச் சட்டத்தின் ஆளுமைக்குட்டபட்டவை அல்ல எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது. 1919ம் ஆண்டில் அறிக்கை சமர்ப்பித்த தேசவழமை ஆணைக் குழுவினர் T. B. De Sampayo (ரி. ஈ. டி. சாம்பயோ) கே. பாலசிங்கம், ஏ. கனகசபை, பி.
19

Page 24
அருணாசலம் ஆகியோரும் மட்டக்களப்பு, திருகோணமலை தேசவழமைப் பிரதேசங்கள் அல்ல என்பதை வலியுறுத்தினார்.
தேசவழமைச் சட்டத்தின் தன்மை e
ஸ்பென்சர் எதிராக இராஜரத்தினம் (1913) 16 புதிய சட்ட அறிக்கைகள் 321ம் பக்கத்தில் Ennis) (இனிஸ். நீதிபதி) பின்வருமாறு கூறுகிறார்.
"தேசவழமை” என்பது யாழ்ப்பாண மாகாணத்தில் குடியிருக்கும்"தமிழர்”என்று அழைக்கப்படும் ஒருமக்கள் கூட்டத்தினருடைய பழக்கவழக்கங்கள். (ஜனநாயகச் சோசலிசக் குடியரசான) இலங்கையில் குடியிருக்கும் தமிழ் மக்கள் அனைவரினதுமோ அல்லது ஒரு சமயத்தைச் சேர்ந்த ஒரு சாராருக்குச் சொந்தமான பழக்கவழக்கங்கள் என்றோ அவற்றை விளக்க முடியாது.
இதே கருத்தையே Woodrenton (வுட்றென்ரன் நீதிபதி) இதே வழக்கில் எடுத்துரைக்கும் போது தேசவழமை பிரித்தானியா இந்தியாவில் இந்துச் சட்டம், மொகமதியன் சட்டம் போன்று தனிநபர்ச் சட்டம் (Personal Law) இல்லை என்று கூறுகிறார். மேலும் ஒருவர் தேசவழமைச் சட்டத்தினால் ஆளுமை செய்யப்படுபவர் என்று வலியுறுத்த விரும்பினால் அவரே அதற்குரிய ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். ஒருவர் யாழ்ப்பாணத்தில் பிறந்தார் என்ற தகவலோ அல்லது அவரது பெற்றோர் பரம்பரையாக யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து வந்தவர்கள் என்ற ஆதாரங்களோ அவரைத் தேசவழமைச் சட்டத்தின் ஆளுமைக்குள் கொண்டு வந்திடாது. அவர் யாழ்ப்பாணத்தைத் தனது நிரந்தர வசிப்பிடமாகக் கருதி வாழ்ந்தார் என்பதற்கான சூழ்நிலை சாட்சியங்கள் சமர்ப்பிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டால் தான் அவர் தேசவழமைத் தமிழன் என்று நிறுவலாம். சிவஞானலிங்கம் எதிராக சுந்தரலிங்கம் (1988) ()Sri Lanka Law Reports 866) 6LLDITSIT600T556) p. 6ir GT g5L6. குடிவாசிகளுக்குரியது. தேசவழமைச் சட்டம் இவர்களுடைய அசைவுள்ள, அசைவற்ற ஆதனங்கள் எங்கிருந்தாலும் அவை தேசவழமைச் சட்டத்தினால்
ஆளுமை செய்யப்படும். “குடியானவர்” என்றால் நிலையகம் (Dancile) மாதிரியான நிலைமையான
இருப்பிடம். சிறிலங்கா நிலையகம் மட்டுமே பெறலாம்.
கந்தையா எதிராக சரசுவதி 54 புதிய சட்ட அறிக்கை பக்கம் 137லும் ஸ்பென்சர் எதிராக
20

இராஜரத்தினம் வழக்கிலும் இக் கருத்து வலியுறுத்தப்படுகிறது.
தர்மலிங்கம் செட்டி எதிராக அருணாசலம் செட்டி 45 புதிய சட்ட அறிக்கைகள் 414ம் பக்கத்தில் தெற்கு இந்தியாவில் இராமநாதபுரத்திலிருந்து இடம் பெயர்ந்து வந்து யாழ்ப்பாணத்தில் குடியேறியவர்களுக்கு யாழ்ப்பாணத்தில் பிறந்தவர் தேசவழமைச் சட்டத்தினால் ஆளுமை செய்யப்படுகிறார் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. நாகரத்தினம் எதிராக சுப்பையா 74 N. L. R. 54 லிலும் இது கடைப்பிடிக்கப்படுகிறது.
ஆங்கிலத்தில் தேசவழமை
எழுத்துக் கூட்டல்
"தேசவழமை"என்ற சொல் எப்படி ஆங்கிலத்தில் எழுத்துக் கூட்டப்பட வேண்டும் என்று பல கருத்துக்கள் உள்ளன.
1 Tecavalamai சென்னைத் தமிழ் அகராதி
2. Thesawalema 1806ம் ஆண்டின் 18ம் இலக்க விதி
3. Thes' awalamy ஆதி ஆங்கிலேய காலத்தில்
வெளியிடப்பட்ட அச்சு வாகனம்
ஏற்றப்பட்ட வெளியுறையின் பிரதி
4. Thesavalama 1895ம் ஆண்டின் 4ம்இலக்கச் சட்டம்
5.Tesawalamai யாழ்ப்பாணம்மணவழி உரிமைகளும்
உரித்தடைதல் சட்டம் 191ம் ஆண்டின் 1ம் இலக்கச் சட்டம்,
6. Tesawalamai இலங்கைச் சட்டக் கோவை
(C.L.E) 1923
7. Thesawalamai 1947ம் ஆண்டின் 59ம்
இலக்கச் சட்டம்
8. Te'sawalamal மறுசீரமைக்கப்பட்ட சட்டக்கோவை
1980
தேசவழமைச் சட்டத்தின் முகவுரை (Preamble) "தேசவழமை” என்பது யாழ்ப்பாண மாகாணத்தில் மலபாரிலிருந்து இடம் பெயர்ந்து குடியேறினவர்களின் பழக்கவழக்கங்கள் என்று குறிப்பிடுகிறது. இலங்கைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் அந்நியரான போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் (டச்), ஆங்கிலேயர் அறியாமையினால் கூறி வந்ததை, இனியாவது இதனை "வடமாகாணத் தமிழரின் பழக்க வழக்கங்களுக்கும் அவர்களுக்கும் அவர்கள் சொத்துக்களுக்கும் உள்ள கட்டுப்பாடுகள்" என்று விளிப்பது பொருத்தவுடமையாகும்.

Page 25
ஏன் தேசவழமைச் சட்டம் எழுத்தில்
பொறிக்கப்பட்டது? -
12. 05. 1656ல் கொழும்பு ஒல்லாந்தரிடம் சரணடைந்தது. மன்னார் தீவும் யாழ்ப்பாணக் கோட்டையும் 1658ம் ஆண்டிலேயே டச் ஆதிக்கத்திற்கு உட்பட்டன. 20, 03. 1602ல் ஐக்கிய நெதர்லாந்துத் தலைவர் வழங்கிய அதிகாரப்பத்திரம் வாயிலாக யாழ்ப்பாணப் பட்டினத்தைக் கைப்பற்றிய கிழக்கு இந்தியக் கம்பெனியாரான டச் வியாபாரிகள், வட மாகாணத்தில் நீதி பரிபாலனத்தை மேற்கொள்ளும் உரிமையை பெற்றிருந்தனர். யாழ்ப்பாணப் பட்டினம் கைப்பற்றப்பட்ட காலம் தொடக்கம் 07.05. 1661 வரை யாழ்ப்பாணப்பட்டினத்தில் நீதிபரிபாலனம் செய்து வந்த டச் கிழக்கு இந்தியக் கம்பெனியார் பின்னர், யாழ்ப்பாணப் பட்டினத்தைப் பொறுப்பேற்று நீதி பரிபாலனம் செய்ய வந்த அன்ரனி பவில்ஜோனுக்கு (Antony Pavilieon) வழிகாட்டியாகப் பின்வருவனவற்றை எழுதி வைத்தார்.
அ. டச்சின் தந்திரம்
“புதிதாகக் கைப்பற்றப்பட்ட யாழ்ப்பாணப் பட்டினத்தில் எமது அரசாங்கத்தை நாம் நடத்தத் தொடங்கிய விதம் நீவிர் அறிந்ததே’ இது குடியானவர்களினால் ஆமோதிக்கப்பட்டது. அதே மாதிரியான ஆளும் முறைகள் தொடர்ந்தும் கைப்பற்றப்படவேண்டும். குடியானவர்கள் அவர்களைச் சேர்ந்த பிரமுகர்களைக் கொண்டே ஆட்சி செய்ய வேண்டும். அது ஒரு புத்தியானதும் பாதுகாப்பானதுமான வழிவகை. கொம்பெனியின் அனுபவமற்ற, தகுதியற்ற அலுவலர்களைக் காட்டிலும் இப் பிரமுகர்களின் நீதி பரிபாலனம் வாய்ப்பானது. கொம்பெனி அலுவலர்கள் சில வேளைகளில் கொம்பெனியின் நலனைக் காட்டிலும் தமது நலனிலேயே அக்கறையுள்ளவர்களாயிருப்பார்கள்.
ஆ. Van Rhee (GITGörp5) uilast 2 (5430
VA இக்காலகட்டம் வரையும் கணக்கப்பிள்ளை, ஆராய்ச்சி போன்ற பதவிகள் வேளாளர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்ததை அவதானித்த Van Rhee (வான்றீ) இந்தியாவிலிருந்து செயற்பட்டு வந்த டச் முக்கியஸ்தர் கொழும்புக்கு வந்த இடத்தில் வாய்மூலம், குறித்த கட்டுப்பாட்டை நீக்கும் கட்டளையையிட்டுப் பின்வருமாறு கூறினார்.

“ஆயிரக் கணக்கான ஏழை மக்கள் ஏன் இந்த தற்பெருமை படைத்த வேளாளரின் அடக்கு முறையால் வேதனைப்பட வேண்டும்?”
இ. 1785ல் டச்சின் மற்றுமோர் ராஜதந்திரம்
வன்னி மக்களுக்கு நீதி பரிபாலனம் செலுத்துகையில் அடங்காத் தமிழரான இவர்களைப் புற்றி டச் காரர் பின்வருமாறு கூறுகின்றனர். “ஒரு அரசாங்கம் சமாதானமாக நடைபெறுவதற்கு ஒரு புத்தியான நீதி பரிபாலனம் தேவை. வன்னியர்களுக்கிடையில் நீதி பரிபாலனம் மிகுந்த கவனத்துடன் வழங்கப்படல் வேண்டும். இவர்கள் யாழ்ப்பாண மக்களைப் போல எமது உச்ச அதிகாரத்துக்குட்பட்டவர்கள் அல்ல. ஆகவே தேவையான சில மாறுதல்களுடன் இங்கு நீதி பரிபாலனம் செயல்பட வேண்டும்”.
FF. I–å ஆளுநர்கள் யாழ்ப்ப ா ண த் த வர் க  ைள ப் ப ற் றி க் கொண்டிருந்த கருத்து
Dissowe (டிசாவே) என்ற தற்போதைய கிராமசேவகர் போன்ற பதவியிலிருப்பவருக்கு டச் மேலதிகாரிகள் எழுதி வைத்த குறிப்பு பின்வருமாறு கூறுகிறது. “யாழ்ப்பாண மக்களின் கோழைத்தனமான, தந்திரமான தன்மைகளைப் பற்றி டிசாவே அவர்கள் நன்கறிந்திருக்க வேண்டும். அவர்களில் பலர் குறைப்பட்ட சுபாவங்ஸ் உடையவர்கள், தற்பெருமை பிடித்தவர்கள், தம்மிலும் குறைந்த சாதியினரை அருவருப்புடன் நோக்குபவர்கள். ஆகவே ஏழை மக்கள் இவர்களிடமிருந்து பாதுகாக்கப்பட வேண்டும். உ. 1697 ஸ்வார்ட் கூறுன்
1697ம் ஆண்டில் யாழ்ப்பாண மாவட்டப் பொறுப்பாளர் பதவியை வகித்த H. Zwaardccroon (எச்.ஸ்வார்ட்கூறுன்) நீதிமன்றங்களில் வாசிக சாலைகள் இல்லாததையும், சட்டப் புத்தகங்கள் ஒன்றும் இல்லாததையும் அவதானித்து நீதிமன்றத்தில் கடமைபுரியும் நீதிபதிகளுக்கும் இனிமேல் வரும் காலத்தில் பதவியேற்க இருக்கும் பிரதானிகளுக்கும் வழிகாட்டியாகச் செயல்பட யாழ்ப்பாண மக்களின் பழக்கவழக்கங்களை அடக்கிய நூல் ஒன்று வெளியிடப்பட வேண்டும் என்ற அவசியத்தை வலியுறுத்தினார். w
2

Page 26
தேசாதிபதியும் பிரதம நீதிபதியுமான டாக்டர் கோர்னெல்லிஸ் யோன் சைமன்ஸ்
1704ம் ஆண்டு ஆவணி மாதம் 11ம் திகதி தேசாதிபதியும் பிரதம நீதிபதியுமான சட்டக் கலாநிதி Gebstif G60Tóósólciu GuUTSüT 60ëFL06öTsiu (Dr. Cornelis John simans) விடுத்த பணிப்பின் போரில் முப்பத்தேழு வருடங்களாக யாழ்ப்பாண மக்களிடையே வசித்து அதன் காரணமாக அனுபவம் பெற்ற டிசாவே கிளாஸ் ஐசாக்ஸ் (Dissawe Claas Issaksz) தேசவழமைச் சட்டத்தை டச் மொழியில் 30.01707 இல் கோவை செய்து முடித்தார்.
கிளாஸ் ஐசாக்கின் கடிதம்
05.04.1707 கிளாஸ் ஐசாக்ஸ் இதனை பொறுப்பாளர் அடாம் வான்டா டீயினுக்குப் பின்வரும் குறிப்புடன் அனுப்பியிருந்தார்.
"மலபார் மொழியில் நன்கு பயிற்சியுள்ளவரான ஜான் பைரஸ் (ian Pirus)என்பவரைக் கொண்டு இதனை மொழி பெயர்த்தல் நன்மையாகும். மொழி பெயர்ப்பு நற்குணம் வாய்ந்த பன்னிரண்டு முதலியார்க்குக் காட்டப்பட்டு அவர்களின் கருத்து எடுக்கப்பட்டு நான் அல்லது அவர்கள் விட்ட பிழைகளைக் கண்டு பிடித்துத் திருத்தக்கூடிய உறுப்பினர்களின் பரிசீலனைக்கு விடப்பட வேண்டும். அதற்குப் பின் இச் சட்டக் கோவ்ை சரியென்பதற்கு அடையாளமாகப் பன்னிரண்டு முதலியார்களும் அதன் கீழ் கையொப்பமிட வேண்டும். தமிழர்கள் ஏமாற்றுப் பேர் வழிகள், காலத்துக்குக் காலம் மாறுபாடான கருத்துக்களை தெரிவிப்பார்கள் இவர்களிடமிருந்து கையெழுத்துப் பெற்றுவிட்டால் அவர்கள் தமது கூற்றிலிருந்து பின்வாங்க மாட்டார்கள்.” கிளாஸ் ஐசாக்கின் மேற்படி தெரிவிப்பு அவர் தமிழ் மொழி தெரியாதவர்; தமிழரை அற்பமாக மதிப்பவர். அந்நியனும் டச் கிழக்கு இந்தியக் கொம்பெனியின் கூலிக்காரனுமான ஒருவன் தமிழ்ச் சமூகத்தைப் பற்றி மேற்படி கருத்தைத் தெரிவித்த பின்பு அவன் எழுதிய தேசவழமைச் சட்டத்தை உண்மையென நம்பி கடந்த 300 வருடங்களாகப் பல வினோத விளக்கங்களைக் கொடுக்கும் தமிழ்ச் சமூகம் பரிதாபத்துக்குரியது.
கிளாஸ் ஐசாக்கின் விண்ணப்பத்தின்படி பன்னிரெண்டு முதலியார்களுக்கும் தேசவழமைச் சட்ட மொழிபெயர்ப்புகாட்டப்பட்டபொழுது அவர்கள் அவற்றைப் பூரணமாக ஏற்றுக் கொண்ட அதே வேளையில், ஒரு
22

குறைபாட்டை மட்டும் கூறினார்கள். குறைபாடாவது, போர்த்துக்கேய அரசாங்க காலத்திலும் இதன் பின்பு டச் அரசாங்கத் தொடக்க காலத்திலும் அடிமைகள் யாராயினும் தமது எஜமானர்களிடம் மரியாதை தவறி நடந்தால், அல்லது அடிமைகளுக்கு இடப்பட்ட கட்டளைகளை அவர்கள் நிறைவேற்றத் தவறினால் எஜமானர்களுக்கு அவர்களைத் தண்டிக்க உரிமை இருந்தது. இதனால் அடிமைகளைக் கொண்டு அவர்கள் கடமைகள் நிறைவேற்றப்பட்டு வந்தன. ஆனால் எட்டுப் பத்து வருடங்களின் போது எஜமானர்கள் அடிமைகள் விட்ட தவறுகள் காரணமாக அவர்களுக்குத் தண்டனை வழங்கியவுடன் வஞ்ச நோக்கத்துடன், அடிமைகள் தாமே தமது காதுகளையும் உடம்பின் பல பாகங்களையும் சேதப்படுத்தி எஜமானர் பற்றிப் பொய் முறைப்பாடுகளை நீதிபதிகளுக்குக் கொடுக்கிறார்கள். இவ்வகையான முறைப்பாடுகள் எஜமானர்களின் குணாதிசயங்களைக் கேள்விக் குறிக்குள்ளாக்குவதோடு அல்லாமல் அடிமைகளுக்கும் கர்வத்தைக் கொடுக்கிறது.
மேலும் அடிமைகளின் தவறுகள் காரணமாக அவர்கள் சிறையில் இடப்படும் வேளைகளில் எஜமானர்கள் ரொம்பப் பணத்தை அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டியதாகவுள்ளது. எனவே இப் பணத் தொகையை குறைத்து விடும்படி கேட்கிறோம். என முதலியார்கள் எழுத்து மூலம் விண்ணப்பம் சமர்ப்பித்து கையொப்பம் இட்டுக் கொடுத்தார்கள்.
டொன் பிலிப் வில்வராய முதலியார். டொன் அன்ரனி நாராயணன். டொன் பிரான்சிஸ்கோ ஆர்சிபமேல முதலியார். டொன் யோன் சந்திரசேகர முதலியார் டொன் மரியகோ மனாப்பொடி முதலியார்.
டொன் பிரான்ஸ்சிஸ்கோவன்னியநாராயண முதலியார்.
டொன் யோன் சியம்பநாத முதலியார். டொன் ஜோன் சூடுகயலா சேனாதிராய முதலியார்.
டொன் லொனில் பூதர். 10. டொன் பிரான்ஸ்சிஸ்கோ இராஜரத்தின முதலியார்.
தேசவழமை அங்கீகாரம் பெற்றது. முதலியார்களின் விண்ணப்பம் தள்ளுபடி
04.07. 1707 டாக்டர் கோர்னெல்லிஸ் ஜோன், கிளாஸ் ஐசாக்ஸ் எழுதிய தேசவழமைக்கு அரச அங்கீகாரம் பெற்றுக் கொடுத்தார். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களின் பழக்க வழக்கங்களின்படி முன்னர்

Page 27
விடுதலை செய்யப்பட்டு பின்னர் எஜமானர்களை மதியாமல் விடும் அடிமைகளை மறுபடியும் அடிமைப்படுத்த வேண்டுமென்ற முதலியார்களின் விண்ணப்பத்தைத் தள்ளுபடி செய்தார். ஆனால் பாட்டாளிய சட்டத்தின் 20வது சரத்தின்படி அவர்களுக்குத் தண்டனை வழங்கலாம் என்று கூறினார். மறியற் செலவு குறைப்பது பற்றிய முதலியார்களின் விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்டது.
1799ம் ஆண்டின் பறைசாற்றுதல்
டச் தோல்வியடைந்ததும் பழைய டச் சேனாதிபதி வெற்றி பெற்ற ஆங்கிலப் படைச் சேனாதிபதிக்கும் இடையில் சரணடைதல் ஒப்பந்தம் 15. 02:1796ல் கையொப்பமிடப்பட்ட பின்பு 23.09.1796ல் பிரிட்டனைச் சேர்ந்த பிரெட்றிக் நோத் (Fredrick North) முதலாவது தேசாதிபதியாகப் பதவியேற்று 1410.1799ல்நாடு எவ்வாறு டச் அரசாங்க காலத்தில் ஆட்சி செய்யப்பட்டு வந்ததோ அதே முறையில் எம்மாலும் ஆட்சி செய்யப்பட்டு , வருமெனப்பறைசாற்றினார்."இது "சட்டப்பொறுப்பாளர்" அவ்வவ்போது செய்யும் திருத்தங்களுக்கு அமைவானது.
1806 ஆண்டின் 13 ம் இலக்க விதி
1806 ஆண்டின் 13ம் இலக்கச் சட்டத்தினால் உயர்ந்த சாதியினருக்கு ஊழியம் செய்யும் கோவியர், நளவர்,பள்ளர், ஆகியோரின் பெயர்கள் அடங்கியபட்டியல் ஒன்று தயாரிக்கப்பட்டது.
1806 ஆண்டின் 18ம் இலக்க விதிகள்
பதில் பிரதம நீதிபதி சேர். அலெக்சாண்டருக்கு மதிப்புக்குரிய தமிழ்ப் பாதிரியார் சி.டேவிட் தேசவழமைச் சட்டக் கோவையின் தமிழ்ப் பிரதி ஒன்றைக் கொடுத்தார். இது ஆராயப்பட்டு முற்றுமுழுதாக ஏற்கப்பட்டது. டச் மொழிபெயர்ப்பாளர் ஒருவருடைய கரடுமுரடான ஆங்கிலப் பிரதியொன்றும் கிடைக்கப் பெற்றது. தூய ஆங்கிலத்தில் தேசவழமைச் சட்டம் எழுதப்பட்டு பின்பு எல்லா நீதி மன்றங்களுக்கும் பொதுக் காரியாலயங்களுக்கும் அனுப்பப்பட்டன.
6வது விதி
பதினான்கு விதிகளைக் கொண்ட 1806ம் ஆண்டின் 18ம் இலக்க விதிகள் 09.12.1806ல்

பறைசாற்றப்பட்டன. இதில் 6வது விதி பின்வருமாறு:- “தேசாதிபதி சைமன்சின் கட்டளைப்படி கோவை செய்யப்பட்ட தேசவழமை அல்லது யாழ்ப்பான மாகாணத்து மலபார்வாசிகளின் பழக்க வழக்கங்கள் முழுச் சக்தியுடன் அமுலில் இருப்பதாகக் கருதப்படும்.
மேற்படி 6வது விதி 1869ம் ஆண்டின் 5ம் இலக்கச் சட்டம் பிற்பாடு 2வது விதியாக எழுதப்பட்டுள்ளது. பதினான்கு விதிகள். நான்கு விதிகளாக மறுசீரமைக்கப்பட்டுள்ளன.
1842ம் ஆண்டின் 1ம் இலக்கச் சட்டம்
வட மாகாணத்தில் காணி உறுதிகள் எழுதப்படுவதற்கு முன்பு விதானையிடமிருந்து தோம்பு டாப்புகளிலிருந்து “செடூல்கள்” (Schedules) பெற வேண்டியது அவசியம். தோம்பு என்பது ஒரு போர்த்துக்கேயப் பிரயோகம். இது tomus என்ற லத்தின் சொல்லில் இருந்து வந்தது. செடுல்கள் வழங்குவதற்குக் கட்டணம் பெறுவதெனத் தீர்மானிக்கப்பட்டது. 1806ம் ஆண்டின் 18ம் இலக்கச் சட்டத்தில் 8வது விதியாகவிருந்ததும் பின் மறுசீரமைக்கப்பட்ட விதிகளில் 4வதாகக் காணப்படுவதுமான சாதிக்கேற்ற சட்டம் Prevention of Social Liabilities (seps 66 ITGOLD (E5(556) சட்டம்) காரணமாக நீக்கப்பட்டது. இச்சட்டம் கொண்டு வரப்படுவதற்குக் கூட்டணிப் பாராளுமன்ற உறுப்பினரும் திருகோணமலையைப்பிரதிநிதித்துவப்படுத்தியவருமான காலம் சென்ற திரு.இராஜவரோதயம் காரணமாயிருந்தார் என்பது கருத்தில் எடுக்கப்பட வேண்டியது.
தமிழ் அரசியல்வாதியும் வவுனியா பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் செய்தவருமான திரு. சுந்தரலிங்கம் மேற்படி சட்டமிருக்கக் கூடியதாக தேசவழமை விதிகளின் 4வது விதியை எடுத்துக்கூறி மாவிட்டபுரம், கந்தசுவாமி கோவிலுக்குள் தாழ்ந்த சாதியினர் பிரவேசிப்பதைத் தடைசெய்ய முயன்றார். திரு. சுந்தரலிங்கத்திற்கு எதிராகத் தீர்ப்பு வழங்கியது. சுந்தரலிங்கம் எதிராக ஹெரத் (1969)72 N. ட், R, 54
4ம் விதி
“உரிமைகள், வாய்ப்புகள் சம்பந்தமாக உயர் சாதியினருக்கும் முக்கியமாக வேளாளருக்கும், தாழ்ந்த
சாதியினருக்கும் முக்கியமாகக் கோவியர், நளவர்,
23

Page 28
பள்ளருக்குமிடையில் உள்ள பிணக்குகள் மாகாணத்தில் பழங்காலம் தொட்டு இருந்த வழமைகள், பாவனைகள் எனக் கருத்தில் எடுத்துத் தீர்ப்பு அளிக்கப்படும். தாழ்ந்த சாதி ஒருவர் தனது மனைவியின் சவத்தை நாய்மாட்டுப் பகுதியில் மேளத்துடன் கொண்டு போனபோது பிரேத ஊர்வலம் உயர் சாதியினரால் தடைசெய்யப்பட்டு மேளம்
உடைக்கப்பட்டது. குற்றவாளிகளாகக் காணப்பட்ட உயர் சாதியினர் சார்பில் சேர். பொன்னம்பலம் இராமநாதன் ஆஜரானார். Burnside c3 அவர்கள் குற்றவாளிகள் என உறுதிப்படுத்தினார். ராணி எதிராக அம்பலவாணர் 1 S.C. R. 27
முத்துலிங்கம் எதிராக பொலிஸ் இன்ஸ்பெக்டர் சுன்னாகம் 71 N. L. R.571 என்ற வழக்கில் குறைந்த சாதியினருக்குச் சவரம் செய்ய சலூன் 9 fooLourtsmit மறுத்த குற்றத்துக்கு வழக்கில் எதிரியாக்கப்பட்டு மல்லாகம் நீதிமன்றத்தில் குற்றவாளியாகக் காணப்பட்டார். குறித்த சலூன் "பொது" என்று குற்றப் பத்திரிகையில் விபரிக்கப்படாத காரணத்தினால் இவர் பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.
தேச வழமைச் சட்டம் ix பகுதிகளைக் கொண்டது.
யாழ்ப்பாண இளைஞன் இகழ்ச்சிக்கு ஆளாகிறான்.
1வது பகுதியில் 18 சரத்துகள் உள்ளன. இதில் 5ம் சரத்து “பெண்கள் சீதனம் மூலம் தான் கணவர்களை அடைகிறார்கள். ஆண்கள் பெண்களுக்காக அவர்களை மணப்பதில்லை. பெண்களின் சொத்துக்களை அடைய எண்ணியே அவர்களை மணக்கிறார்கள்.”
யாழ்ப்பாண ஆண் மக்களுக்குரிய கடும்
6) O
பெற்றோர் விட்டுச் சென்ற கடனை அவர்தம் புதல்வர்கள். சொத்தற்றவர்களாக இருப்பினும் எக்காலத்திலும் தீர்த்து வைக்கக் கடமைப் பட்டவராயிருப்பார்கள். இது ஒரு கொடுமை என டச் ஏற்றுக் கொண்டுள்ளனர். பகுதி 1 சரத்து 7 தற்போது புதல்வன் பெற்றோரின் சொத்தில் உரித்துக் கோரினாலேயே இக் கடமைப்பாடு எழும் எனத் தீர்ப்பு உள்ளது. பெற்றோர் உயிருடன் இருக்கும் சந்தர்ப்பத்தில் ஆண் மக்கள் சொத்துரிமை கோர முடியாது.
24

சீதனச் சொத்து யாழ்ப்பாணப் பெண்ணுக்கு சீதனம் பெற்ற பின் பங்கு இல்லை
யாழ்ப்பாணத் தமிழ்ப் பெண் பெற்றோரிடமிருந்து சீதனம் பெற்றால் பின்பு பெற்றோர் மரணசாதனம் எழுதாமல் விட்டுச் சென்ற சொத்தில் உரித்துடையார். தேசவழமை பகுதி 1சரத்து 3ன் பகுதி.
பெண்கள் சீதன உறுதியால் தமக்கு வழங்கப்பட்ட சொத்துடன் அமைதியடைதல் வேண்டும். பெற்றோருக்கு வேறு பிள்ளைகள் இல்லாதவிடத்தில் மட்டும் தான் அவர்கள் பெற்றோர் விட்டுச் சென்ற சொத்தில் உரிமைகோர முடியும். பந்தி 5 படிமனைவியின் சீதனச் சொத்தில் கணவன் உரித்தடையார் கீழ்ப் பரம்பரை (பிள்ளைகள்) இல்லாதவிடத்து சொத்து மனைவியின் சகோதரிகளை அடையும். தற்போது சீதனம் வாங்கிய பெண் பிள்ளை, அல்லது பேரப்பிள்ளை இல்லாமல் இறந்தால் அவர் விட்டுச் செல்லும் சொத்து அவரின் பெற்றோரை அடையும். பெற்றோர் உயிருடன் இல்லாத சந்தர்ப்பத்தில் சீதனம் பெற்று இறந்தவரின் சகோதரர் யாவரையும் அடையும்"
கணவன் மனைவி ஆதனங்களில் திருத்தங்கள்
ஒருவன் மனைவியின் சீதன ஆதனத்தில் வீடு கட்டிக் கிணறு வெட்டிப் பின் பயன் தரும் பல மரங்கள் உண்டு பண்ணியபின், பிள்ளை குட்டிகள் அற்று இறந்து போனான் என்றாலும் குறித்த வீடு, கிணறு, மரங்களில் அவனது வாரிசுகள் உரிமை பெறார். அது போல் மனைவியும் கணவன் சொத்தில் திருத்தம் செய்திருந்தாலும் அவர் இறந்த பின்பு அவர் வாரிசுகளும் உரித்தடையார். பகுதி 1 சரத்து 16
யாழ்ப்பாணத்தில் வாழும் கடவுள் நம்பிக்கையற்றவர்கள் (இந்துக்கள்)
யாழ்ப்பாணத்தில் இந்துக் கோவில்களில் திருவிழாக்கள் நடாத்துவது டச் தேசாதிபதி ஹென்றி p55G6).jöölfflsoTITsi (Henry Rick Wekkar) 560L செய்யப்பட்டிருந்தது. அவர்கள் எத்தனையோதரம்(Plakkal) பலகையில் ஒட்டும் விளம்பரங்கள் மூலம் உண்மையான கடவுளுக்கெதிராக நடாத்தப்படும் வெட்கம் கெட்ட திருவிழாக்களைத் தடை செய்தும் இந்துக் கோவில்களை அழிக்கும்படியும் கேட்டுள்ளார்கள். மேலும் 76 கட்டளைகள் ஆனால் பொதுவாக 72 கட்டளைகள் என அழைக்கப்படும்

Page 29
கட்டளைகள். இதன் முகப்புரையில் இது நாட்டிலே ஏற்கனவே வழங்கிவந்த சட்டங்கள் எனக் குறிப்பிட்டுள்ளது. இதன் மூன்றாவது பிரிவின்படி இந்துக் கோவில்களில் பணிவிடைகள் செய்ய முயற்சிப்பவர் பன்னிரெண்டு இறைசால் குற்றம் கட்ட வேண்டும். இச்சட்டங்களில் வரும்படிக்குழைத்தவர்கள் கையும் மெய்யுமாகப்பிடிபட்டவிடத்து விலங்கிடப்பட்டு மூன்று வருட தண்டனை அனுபவிக்ககொழும்புக்கு அனுப்பப்படுவார்கள்.
பகுதி i
மேற்படி சட்ட அமைப்பை யாழ்ப்பாணத் தமிழர்கள் மனம் விரும்பி ஏற்றுக் கொண்டார்கள் என்று கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த ரோமன் கத்தோலிக்கர், கிறிஸ்தவர்கள் அல்லாதவர்கள் "Heaths" güGugl "Pagans" அழைக்கப்பட்டு இப் Pagans என்ற “கடவுள் நம்பிக்கையற்றவர்கள்” என்பவரின் சொத்துக்கள் சம்பந்தமான தேசவழமைச் சட்டத்தை பகுதி 1 சரத்துக்கள் 17, 18ல் பொறித்தனர். இது பின்னரும் ஆங்கிலேயராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு இந்த 1996ம் ஆண்டுவரை அமுலில் உள்ளது. ஒரு சட்டம் செல்லுபடியற்றதாவதென்றால் அது தேசியப் பேரவையினால்தான் ஆகும் என்பது உயர் நீதிமன்றத் தீர்ப்பு. ஆகவே தேசவழமை புரட்டஸ்டன்சுக்கு (Proteztants) மட்டுமே உரிய சட்டம். ஆகவே இவைObsolete (காலத்தால் அழிந்தவை) அல்ல.
பகுதி i
இது சுவீகாரம் பற்றியது. முன்னைய தேசவழமைப்படி ஒருவர் தனது சகோதரன் அல்லது சகோதரியின் பிள்ளையொன்றை மட்டும் தான் தத்து எடுக்கலாம். தத்து எடுக்கும் பொழுது சொத்தில் மரண சாதனமில்லாதவிடத்து ஒருவர் இறந்தகால் சொத்தில் பங்குபெற உரிமையுடைமை பெறக் கூடிய அனைவரின் சம்மதத்தையும் பெற வேண்டும்.
பகுதி17 சரத்துக்களை உள்ளடக்கியது. இதன் 1ம் சரத்தின்படி சுவீகார வைபவத்தின் போது சலவை செய்யும் தொழில்காரர் ஒருவரும் சவரம் செய்யும் தொழிலாளி ஒருவரும் சமூகமாயிருத்தல் அவசியம். 7ம் சரத்தின்படி ஆண் ஒருவர்தாழ்ந்த அல்லது உயர்ந்தசாதிப்பிள்ளையைச் சுவீகாரம் செய்தால் பிள்ளை ஆணின் சாதியைச் சென்றடையும். ஆனால், பெண் ஒருவர் சுவீகாரத்தினால் சாதி மாற்றத்தை பிள்ளையில் ஏற்படுத்த முடியாது.

மேற்குறித்த ஏழு சுவீகார விதிகளில் ஒன்று தன்னும் யாழ்ப்பாணத் தமிழ்ச் சமூகத்தின் பாவனையிலிருந்தமை வரலாறு அறியாது. எனினும் இச் சரத்துக்கள் 1996லும் சட்டக் கோவையை அலங்கரித்த வண்ணம் உள்ளன.
பகுதி i
இதில் தோட்டம் துரவுகளைப் பற்றி நான்கு சரத்துக்கள் உள்ளன. இதில் கிளாஸ் ஐசாக்ஸ் ... யாழ்ப்பாணத்தமிழரின் குணத்தை விபரிப்பதே ஒரு அலாதி
இரண்டு அல்லது மூன்று பேர்களுக்குச் சொந்தமான இடமொன்றில் ஒருவன் தனது பங்குக்குக் கணக்கான நிலமென ஒரு பாகத்தைக் கணித்து அதில் பலன்தரும் மரங்களை நட்டுப் பயனைப் பெறப் போகின்ற நிலையில் ஏனைய சோம்பேறிப் பங்காளர்கள் இலாபத்தில் பங்கு கேட்பார்கள். யாழ்ப்பாணத் தமிழர்கள் இடையில் இக் கள்ளத்தனம், பொறாமைத்தனம், குழப்படித்தனம் அதிகமாகவுள்ளது.
குறிப்பு: உலகத்தில் உள்ள எந்த இனத்தவர்களுடைய சட்டத்திலும் அவ் இனத்தையே அவதூறாக எழுதிய தன்மை காணப்பட மாட்டாது. மேற்படி சட்டமும் இந்த 1996ம் ஆண்டு வரை அமுலில் உள்ளது.
இதன் மூன்றாவது சரத்து பகுதி பின்வருமாறு:-
"ஒருவரை ஒருவர் கொள்ளையடிப்பதற்காகவே இங்குபல சட்டங்கள் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன' வான்பயிர்கள் செய்பயிர்கள் குறுக்காலே வளர்ந்து அயலவர் ஒருவரின் காணியில் நிழல் கொடுக்கும் தறுவாயில் குறித்த மரங்கள் தரும் பயன்களின் அனுகூலம்யாது என்பதை இச் சரத்துக்கள் ஆராய்கின்றன.
பகுதிiv
இதில் நன்கொடையைப் பற்றிஐந்து சரத்துக்கள் உள்ளன.
சரத்து 1ன் படி மனைவியின் சம்மதமின்றிக் கணவன் தனது முதுசச் சொத்தில் 1/10ஐ நன்கொடையாக வழங்கலாம்.
மனைவி ஒருவர் தனது சொத்தின் எப்பாகத்தையும் கணவனின் அனுமதியின்றி ஒருவருக்கும் கொடுக்க
"கோழும்பு தமிழ்ச்சங்கம்

Page 30
01. 07. 1924க்குப் பிற்பாடு திருமணம் செய்த யாழ்ப்பாண மாவட்டம் தவிர்ந்த நாட்டின் வேறுபாகத்தில் வாழும் பெண், திருமணம் செய்த பெண்களின் சட்டம் 1923ம் ஆண்டின் 18ம் இலக்கச் சட்டம் சரத்து 7ன் படி கணவன் அனுமதி பெறாமலே சொத்தில் மாற்றம் ஏற்படுத்தலாம்.
L_u(3556 v
இது எட்டுச் சரத்துக்களை உள்ளடக்கியுள்ளது.
இது ஒற்றி ஈடு வைப்பவர் பற்றியும் அவரின் கடமைகள் பற்றியும் ஒற்றி கொடுத்தவர் அவர் தம் கடமை பற்றியும் குறிப்பிடுகிறது. இந்த ஒற்றி ஈடுப் பழக்கம் முஸ்லிம் மக்களிடமிருந்து பெறப்பட்டதா என்ற கேள்விக்குறிக்கு “இல்லை” என்ற விவாதம் உள்ளது. "அடிமைகள் ஒற்றி” என்ற 6வது சரத்து தற்போதைய பிரசுரத்தில் இல்லை.
U(55 vi
மிருகங்களை வாடகைக்கு எடுத்தல் பற்றி ஒரு சரத்தைக் கொண்டுள்ளது.
U(53 vii
இதில் மூன்று சரத்துக்கள் உள்ளன.
காணி விற்பனை பற்றிய சரத்து இது இன்னும் ஆடு, மாடு விற்பனை பற்றிய ஒரு சரத்தும் உள்ளது. தற்போது தேசவழமை முன்வாங்குரிமைச் சட்டம் (Thesawalamai Pre-emption Law) 1947.hgsioTig sit 59th இலக்கச் சட்டத்தினால் மாற்றமடைந்துள்ளது. புறச் சாதியினர் ஒரு சாதியினர் வாழும் பிரதேசத்தில் காணி கொள்முதல் செய்வதை இச்சட்டம் தடைசெய்கிறதுஎனப் பலர் கருதுகிறார்கள்.
3ம் சரத்து பிள்ளைகளை விற்றல் பற்றியது. புதிய தேசவழமையில் பிரசுரிக்கப்படவில்லை.
Luis viii
இது ஆண் பெண் சிறைகளைப் பற்றியது. இதில் மொத்தம் ஏழு சரத்துக்கள் உள்ளன.
1வது, சிறைகளின் வகைகளைப் பற்றியது.
2வது ஐகளின்ஜிஐஆற்றியது .

3வது, பிள்ளையில்லாமல் மரணிக்கும் சிறைகளின் ஆணத்தைப் பிரிவிடும் விதம் பற்றியது. 4வது, பிள்ளைகள் இருக்கும் போது ஆதனத்தைப் பிரிவிடும் விதம் பற்றியது. 5வது, விவாகம் பண்ணிய சிறைகளின் கடமை பற்றியது. 6வது, காணி முதலியவற்றையுடைய சிறைகள் விற்றல் பற்றியது. 7வது, சிறைகளை விடுதலை செய்யும் முறை பற்றியது.
W தேசவழமையில் காணப்பட்ட அடிமைச்சட்டம் ரோமன் சட்டத்தில் காணப்பட்ட அடிமைச் சட்டத்திலும் கொடுமையானது. 1844ம் ஆண்டின் 20ம் இலக்கச் சட்டமான அடிமை ஒழிப்புச் சட்டம் மூலம் இவைரத்தாகின.
Lug56 ix
கடனும் வட்டியும்பற்றியது. இதில் எழுசரத்துக்கள் உள்ளன.
அடைவுகடைச் சட்டம் இலங்கை சட்டக் கோவை 10ம் பத்திரம் 247ம் அதிகாரம், இதில் சில மாற்றங்களை செய்துள்ளது.
யாழ்ப்பாண மரபுவழி உரிமைச் சட்டத்துக்கு முரணாக தேசவழமை சொல்லாது
1911ம் ஆண்டின் 1ம் இலக்கச் சட்டம், 1947ம் ஆண்டின் 58ம் இலக்கச் சட்டம் யாழ்ப்பாண மணவழி உரிமைகளும் உரித்தடைதல்கள் சட்டத்தில் 40 சரத்துக்கள் உள்ளன. அதில் 40வது சரத்தின்படி அதில் உள்ள சரத்து விளக்கங்களுக்கு மாறாக மேற்படி ஒன்பது பாகங்களிலும் யாதாயினுமிருந்தால் தேசவழமைச் சட்டத்தில் உள்ள முரணான பகுதிகள் வலுவிழந்து போய்விடும்.
ரோமன் டச் சட்டம்
தேச வழமைச்சட்டத்தின்படி ஒரு பிணக்குக்கு விடை காணமுடியாதவிடத்து ரோமன் டச் சட்டப்படி பிணக்கை அணுகி விடை கண்டு பிடிக்க 1947ம் ஆண்டின் 58ம் இலக்கச் சட்டமான யாழ்ப்பாண மணவழி உரிமைச் சட்டம்
அனுமதிக்கிறது.
முன்வாங்குரிமைச் சட்டம்
1947ம் ஆண்டின் 59ம் இலக்கச் சட்டத்தினால்
தேசவழமை முன்வாங்குரிமைச் சட்டம் 14சரத்துக்களைக் கொண்டது.

Page 31
1947ம் ஆண்டின் 59ம் இலக்கச் சட்டத்தின் 14வது சரத்தின்படி 1895ம் ஆண்டின் 4ம் சட்டத்தில் இதற்கு முரணாகக் காணப்பட்டவை எல்லாம் ரத்துச் செய்யப்பட்டு விட்டன. 1895ம் ஆண்டின் 4ம் சட்டம் வட மாகாணத்தில் உள்ள அசைவற்ற ஆதனம் சம்பந்தமான உத்தேசிக்கப்பட்ட விற்பனைகள் பற்றியது. செடூல்கள் பெற வேண்டுமென்பதும் பறையடிக்க வேண்டுமென்பதுமான தேவை ரத்துச் செய்யப்பட்டன.
தேசவழமை முன்வாங்குரிமைச் சட்டத்தின் 5ம் சரத்தின்படி சொரியல் காணியில் பங்கு விற்க உத்தேசிக்கப்பட்டால்'விளம்பரம் செய்யப்பட வேண்டும். GLnIrely 5G Lé & Lih (Prevention of Frauds ordinance) 1840ம் ஆண்டின் 7ம் இலக்கச் சட்டம் இந்த விளம்பரம் எவ்வாறான நிபந்தனைகளைத் திருப்திப்படுத்த வேண்டுமெனக் கூறுகிறது. பிரிவிடுதல் சட்டம் 1863, பிரிவிடுதல் சட்டம் 1977 இதில் சில தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன.
தேடிய தேட்டம்
தேசவழமைப் பெண், அடக்க ஒடுக்கமாக நான்கு வேலிகளுக்குள், தேசவழமைக் கோவை செய்யப்பட்ட காலமான முந்நூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்தாள். எனவே அக்காலத்தில் பெண் ஒருவர் சம்பாதிப்பாள் என யாழ்ப்பாணத்தமிழர் நினைக்கவில்லை. மேலும்கலியாணம் ஆகாத ஆண் சம்பாதித்தால் அது அவன் பெற்றாரையே சேரும். இந்த நேரத்தில் “தேடிய தேட்டம்” என்பதற்கு வரைவிலக்கணம் திருமணமானபின் தேடப்பட்ட சொத்து என்றும், ஆண் அல்லது பெண்ணின் தனிப்பட்ட சொத்துக்களில் எழுந்த இலாபங்கள் என்றும் வரையறுக்கப்பட்டன. கணவன் மனைவி இருவரில் ஒருவர் காலமான பின்பு இச் சொத்து எவ்வாறு உரித்தானவரைச் சென்றடைகிறது என்றும்,சொத்து தேடிய தேட்டச் சொத்து என்பதை நிறுவுவது யாருடைய கடமை என்பதையும், பிரதம நீதிபதி சர்வானந்தா அண்மையில் ஒரு வழக்கில் தெளிவுபடுத்தியுள்ளார். பல ஆங்கிலச்சட்டங்கள், ஆங்கில நூல்கள் பாராளுமன்றச் சட்டங்களும் ஆவணங்கள் பற்றிய கருத்தெடுத்தல் சட்டம் போன்ற பல நுணுக்கங்கள் இவ் வழக்கில் ஆராய்ச்சிக்குரியனவாகவுள்ளன. இது பற்றிய ஆய்வு மிகவும் நீண்டதும் சிரமமானதுமாகும். ஆயினும் கெளரவ மாண்புமிகு பிரதம நீதிபதி சுருக்கமாக நிலைமையயைத் தெளிவுபடுத்தியுள்ளார். மாணிக்கவாசகர் எதிராக கந்தசாமியும் மறுபேரும் 1986 (2) Sri Lanka Law Reports 8

குறிப்பிட்ட நிலச் சட்டம்
தேசவழைமைச் சட்டம் 1844ம் ஆண்டு தொடக்கம் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த முக்குவர்களையும் கட்டுப்படுத்தியது. தமிழர், சோனகர், பறங்கியர் யார் தன்னுடைய காணியும் தேசவழமைச்சட்டத்தினால் யாழ்ப்பாண மாகாணத்திற்குள் காணியிருக்குமாயின் கட்டுப்பட்டு இருக்கும். உதாரணம். ஒற்றி ஈடு, சேவை
9 flotDLO856ir (othy martojeges servitudges)
NA
சின்னத்தம்பி எதிராக் வென்னி (1844) இராமநாதன் அறிக்கைகள் 1843-55 பக்கம் 14. 1835ல் யாழ்ப்பாண உதவிச் சுங்க அதிகாரியாகக் கடமை புரிந்த Robert Atherton (GpITU' gy' afty sit) 6T6itusuf தேசவழமைச் சட்டத்தை ஒழுங்குபடுத்தி மறுசீரமைத்துள்ளது. செல்லப்பா எதிராக கணபதி 17 N.L.R 275 GT6örp Guység) g 6JTso' GuGJDrt (Water Perera) நீதிபதியவர்கள் தேசவழமைச் சட்டம் தவறான ஒழுங்கிலும் தவறானது என்றும் தனது தீர்ப்பு ஒன்றின் புறவுரையில் கூறியுள்ளார். சேர். பொன்னம்பலம் அருணாசலம் தேசவழமைச் சட்டம் செயற்படாதவிடத்து பாவிக்கும் றோமன் டச் சட்டம் பழைய பூதங்களெனப் பாதுகாக்கப்பட்டது என்ற எள்ளி நகையாடுகிறார். இவற்றைக் கருத்தில் எடுத்துத் தேசவழமைச் சட்டத்தையும் ரோமன்டச் சட்டத்தையும் தூக்கி எறிந்து நாம் எமக்குரிய சட்டத்தை வகுப்போமாக. ரோமன்டச் சட்டம் அது பிறந்த நாடான ஒல்லாந்த தேசத்திலே 1808ல் செயல் இழந்து, நெப்போலியன் சட்டக் கோவையினால் மாற்றப்பட்டு அந்த நெப்போலியன் சட்டக் கோவையும் செயல் இழந்து, நமது இலங்கையில் ரோமன்டச் சட்டம் “பொதுச் சட்டம்” (Common Law) என்ற பெயருடன் ஒரு சில நீதிமன்றத் தீர்ப்புகளினால் ஏற்பட்ட சில திருத்தங்களுன தற்போது அமுலில் உள்ளது. இலங்கைப் பாராளுமன்றச் சட்டமும் ரோமன்டச் சட்டத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.
கோடிஸ்வரன் எதிராக அற்றோனி ஜெனரல் இலங்கை (1969)72 புதிய சட்ட அறிக்கை 342,கோமகன் நீதிமன்றத் தீர்ப்பு ரோமன்டச் சட்டத்தை (Law of the Montime Provinces) 6T6itg 960plug (p6TG). இப்பிராகிம் எதிராக அன்னம்மா 1982 (2) Sri LR633 படி தேசவழமை மெளனம் சாதிக்கும் போது ரோமன்டச் செயல்படும் எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
புகழ்ச்சியின்,பின்னணி, வெட்கத்துக்குரியது
R. Van Guens (gyf 6JTsöT en GloucöTeru) 16616ü யாழ்ப்பாண மக்கள் தமது பழைய பழக்க வழக்கங்களில்
27

Page 32
Sg8AT5LoT85 (obstinate attachment) g(556)rtisióir. தற்பெருமை பேசும் எளிய சுபாவம் உள்ள உயர்சாதியினரிடமிருந்து, ஏழை மக்கள் காப்பாற்றப்பட வேண்டும்.
1665ல் அந்தோனி பவில் ஜோன் பொறுப்பாளர் நாட்டின் சட்டம் துல்லியமானதும் நியாயமானதுமாகக் காணப்பட்ட வேளைகளில் நாட்டுச் சட்டத்தினாலும் மறு வேளைகளில் எமது தந்தை நாட்டுச் சட்டத்தினாலும் மக்கள் ஆளப்பட்டார்கள்.
சேர். அலக்சாண்டர் ஜோன்ஸ்ரன் (Sri Alexander Johnstane) பிரதம முதல் ஆங்கில நீதிபதியும் தேசவழமைத் தமிழன் தனது சட்டத்தைக் கடுமையாகக் கட்டிப் பிடிப்பவன் என்பதனையும் அதன் பிரகாரம் தீர்ப்பு வழங்கும் போது திருப்தியடைகிறான் என்பதனையும் சுட்டிக் காட்டுகிறார்.
இந்த சட்டக் கீழ்ப்படிவு என்ற புகழாரம் பிற, நாட்டவர்களான போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் தமிழ் மக்களுக்கிடையில் சாதிப் பாகுபாட்டை வளர்த்து தமது சமயங்களைப் பரப்புவதற்கும் நாட்டின் பெரும்பான்மையாளரான வேளாளர் தமக்கு எதிராகப் புரட்சி செய்து எழும்பாமல் தடை செய்வதற்கும் பயன்பட்டது எனப் பகர்வது மிகையாகாது.
04.11.1809ல் அலெக்சாண்டர் ஜோன்ஸ்ரன் தேசாதிபதி மெயிற்லன்ட் (Governor Maitland) 6T6iTu6) (1555 6TQg5u Osly p5th 04.1 1. 1809 C.N.A (இலங்கைத் தேசிய அரிச்சுவடி இலாகா) 5,79 பக்கம் 44 பின்வருமாறு:
"நான் சேகரித்த சில பழக்கவழக்கச் சட்டங்கள் நாலு மாகாணங்கள் சம்பந்தமானவை. புத்தளம், யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு இதனை அவர் மலபார் எனக் குறிப்பிடுகிறார்" அதாவது, தமிழ் மாகாணம், தேசவழமையில் ஏற்பாடுகள் இல்லாதவிடத்து இந்துச் சட்டத்தைப் பார்வையிட வேண்டுமெனவும் இவர் கூறியுள்ளார்.
தேசவழமைச் சட்டம் கோவை செய்யப்பட்டுள்ளதா?
நாடு ஒன்றின் சட்டம், சுருக்கமாகவும் ஒழுங்காகவும் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அரசின் அங்கீகாரத்துடன் வெளியிடப்பட்டால் அது கோவை செய்யப்பட்ட சட்டம் (Codified Law) எனப்படும். பாராளுமன்றம் இயற்றிய சட்டமும், நீதிபதிகள் இயற்றிய
28

சட்டமும் கோவை செய்யப்படும் போது ஒன்றிணைக்கப்படுகிறது. கோவை செய்தலின் நோக்கமாவது, எல்லையற்றதும் பெரிதுமாக வளர்ந்து பல பகுதிகளில் விளக்கம் த்ெளிவு அற்ற தன்மையும் காணப்பட்டால் ஒருமித்த சட்ட ஒழுங்கு முறையினால் அதனைத் தெளிவுபடுத்துவதே கோவை செய்யப்பட்டதென விளம்பரம் செய்யப்பட்ட தேசவழமைச் சட்டம், இத் தேவைகளைப் பூர்த்தி செய்யுமாயின் நீதிபதிகள் வேறு பழக்க வழக்கங்கள் பற்றிச் சாட்சியம் கேட்டுத் தீர்ப்பளிக்க வேண்டியதில்லை. உவால்டர் பெரேரோ நீதிபதியின் கருத்தை வைத்து நோக்கின் தேசவழமைச்சட்டம் கோவை செய்யப்படவில்லை. சட்ட அறிவில்லாத டிசாலேயின் ஒழுங்குபடுத்தலே தேசவழமைச் சட்டம்.
கோவை செய்யப்படாத பழக்க வழக்கங்கள்
1. "வாய்ச்சொல் சீதனம்" என்ற பழக்க வழக்கம் இல்லை
எனத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 06. 07.1852, வயிரவநாதன் எதிராக மாதன் வினாசி, வழக்கு இல, 5, 401. கென்றி முத்துக்கிருஷ்ணாவின் புத்தகம்-70
2. தென்னமரம்ஒன்றினை வ்ேலியோரத்திலிருந்து நாலு முழங்களுக்கு அப்பால் நட வேண்டும் என ஒரு பழக்க வழக்கம் இல்லை. வல்லிபுரம் எதிராக சந்தானம் 1 C.W.R 96,
3. ஒருவர் வேலிச்சருகுகளை அள்ள அயல் காணிக்குள் பிரவேசம் செய்யலாம் என்ற பழக்கவழக்கம் இல்லை.
4. ஒருவர் வேலியடைப்பதற்கு அயலவர் ஆதனத்துக்குள்
சின்னப்பா எதிராக கணக்கர் 13NLR157
5. மீனவர் ஒரு குறிப்பிட்ட முறையில் தான் மீன் பிடிக்க
வேண்டும்
6. அயலவர் வளவில் கொப்புவிட்ட பலா மரத்தின் கொப்புகளை அயலவர் தன் வளவில் நிழல் பரப்புகிறது என்று காரணம் காட்டி வெட்ட முடியாது. கொப்புகளில் உரிமையும் கோர முடியாது. பழ உரிமையும் கோர முடியாது. இது பெரிய கஷ்டத்துடன் வளர்க்கப்பட்ட செய்பயிர். 泰
நீர் ஊற்றிப் பாதுகாக்கப்பட்ட பயிர். கந்தசாமி எதிராக மயில் வாகனம் (1905) 3 பாலசுந்தரம் அறிக்கை64
இது ரோமன் சட்டத்திலும் கடுமையானது. இது போன்ற சட்டம் ரோமன் டச் சட்டத்தில் இல்லை.

Page 33
அவள் தர்மவதி எ
அண்மையில் பெண்மையின் பெருமையைத் தெளிவுறப் பேசும் நூல் ஒன்று வெளிவந்துள்ளது. பெண்ணியம் பற்றிய ஆய்வு இன்று உலகெங்கும் முனைப்பாக நடைபெற்று வருகிறது. மேலைத்தேயத்துப் பெண்ணடிமை பற்றிய கருத்துகளை நம்மவர் பரப்ப முற்படும் வேளையில், இந்திய, தமிழ்ப் பண்பாட்டில் பிரசித்தி பெற்ற காவிய மகளிர் எழுவர் பற்றிய மீள் நோக்கு ஒன்றை ஈழத்துச் சிறுகதை ஆசிரியரான க. தி. சம்பந்தன். வெளிக்கொணர்ந்துள்ளார். மரபுநிலையிலே எமக்கு அறிமுகமான மகளிரை இனிவரும் கணிப்பொறியுகமும் புரிந்து கொள்ளும் வகையிலே “தர்மவதிகள்” என்னும் சிறு நூல் உருவாகியுள்ளது. நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ள பேராசிரியர். கா. சிவத்தம்பி காலத்தைக் கருத்திற் கொண்டு பின்வருமாறு எழுதியுள்ளார்.
இந்தியப் பெண்கள் பற்றிய இந்த வாசிப்பு இன்று பல வினாக்களை எழுப்பும் என்பதிலே சந்தேகமில்லை"
சிறுகதை எழுதிய சம்பந்தன் காவிய மகளிரான ஊர்மிளை, மண்டோதரி, அகல்யை, மாதவி, யசோதரா, கைகேயி, திரெளபதை என்னும் எழுவரையும் பெண்மையின் பெருமையைக் காட்டும் சான்றுகளாக்கியுள்ளார். பெண்ணின் பெருமை பேச, ஒரு புதிய முயற்சியெனவும் கூறலாம். காவியங்களிலே அறிமுகப்படுத்தப்பட்ட இப்பெண்களின் வாழ்க்கைத் தர்மத்தை இன்று எல்லோரும் அறிய வேண்டுமெனச் சம்பந்தன் ஆவல் கொண்டுள்ளார். சிறுகதை வடிவிலே இனிய தமிழ் நடையிலே இந்தப் பெண்களை எல்லோரும் படிக்க வழி செய்துள்ளார்.
பெண்ணின் பிறப்பு, தர்மத்தை நிலை பெறச்செய்வதற்காக எனச் சம்பந்தன் நிறுவியுள்ளார்.

(Gair GUITrin : நூல் விமர்சனம்
மனோன்மணி சண்முகதாஸ்
^ விஞ்ஞானயகத்திலே வாழ்வார் இதை விந்தையென எள்ளிநகையாட முற்படலாம். ஆனால் தர்மவதிகளின் மறைக்கப்பட்ட பெருமையை உலகறிய வைப்பதில் சம்பந்தன் வெற்றி பெற்றுள்ளார் என்பது காலத்தால் உறுதியாக உணரப்படும். தர்மங் காக்க வந்த தலைவியரைத் தெரிவு செய்வதில் அவர் மிகவும் கவனமாகவும், நிதானமாகவும் இருந்துள்ளார். இதுவரை நிலவிய மரபான பார்வையை விடுத்து அதன் மறுபக்கத்தையும் அவர் தமது எழுத்திலே காண
வைத்துள்ளார்.
நூலமைப்பு:
இரண்டு அணிந்துரைகள்: ஒன்று நமது பாரம்பரியத்தைத் தெளிவாக எடுத்துரைக்கும் பண்பும் ஆற்றலும் கொண்ட பேராசிரியர் கா. சிவத்தம்பி வழங்கியது. மற்றது. பெண்களின் பிரதிநிதியாக சத்தியபாமா குமாரசாமி வழங்கியது. இவற்றை அடுத்து நூலின் கதையைப் பதிப்பாசிரியர் கூறுகிறார். தொடர்ந்து தர்மவதிகள் எழுவர் பற்றிய சம்பந்தன் மீள் பார்வை. எண்பத்தியேழு பக்கங்களில் அமைந்துள்ளது. இறுதியில் பின்னிணைப்பாக சம்பந்தன் பற்றிய விளக்கவுரையும், பண்டிதமணி சி. க. நினைவுக் காப்பு நிதியம் பற்றிய குறிப்புரையும், நன்றி நவிலலும் இடம் பெற்றுள்ளன.
சம்பந்தனின் மீள் பார்வை:
இவர் தெரிவு செய்த பெண்கள் எழுவர்.
அவர்களைப் பற்றிய செய்திகளை ஒரு நோக்கிலே
காண பின்வரும் அட்டவணைகளாக்கலாம்.

Page 34
(1)
பெயர் அறிமுக நூல் இருப்பு நிலை. ஊர்மிளை இராமாயணம் கணவனைப் பிரிந்திருந்தவள்.
மண்டோதரி இராமாயணம் கணவனுடன் இருந்தவள்.
அகல்யை இராமாயணம் கணவனுடன் இருந்தவள். LOITS6 சிலப்பதிகாரம் | பிறள்கணவனுடன் இருந்தவள். யசோதரா புத்தர் கதை கணவனுடன் இருந்தவள் கைகேயி இராமாயணம் கணவனுடன் இருந்தவள். திரெளபதை மகாபாரதம் கணவன்மாருடன் இருந்தவள்.
(2)
பெயர் கணவர் நிலை மனைவி நிலையான
செயற்பாடு ஊர்மிளை கடமையாளன் கணவன் கடமைக்குத் துணை
-நின்றவள் மண்டோதரி காமுகன் கணவனைத் திருத்த முற்பட்டவள். அகல்யை முனிவன் கணவனென எண்ணி
- ஏமாந்தவள். மாதவி காமுகன் மனைவியாகச்
- செயற்படமுடியாதவள். பசோதா பற்றுத் துறந்தவன் கணவன் துறவுக்குத்
- துணையானவள்.
கைகேயி முதிய அரசன் கணவன் இறக்கக்
.காரணமானவள் - ہے۔ திரெளபதை கடமையாளன் கணவர்மார் கடமைகளுக்குத்
- துணை நின்றவள்.
சம்பந்தன் காட்டும் பெண்களில் மாதவி மட்டுமே வேறுபட்டவள். குடும்ப வாழ்க்கையைப் பெறும் தகுதியற்றவள். ஏனையோர், திருமணம் செய்து மனைவி என்ற நிலையிலே இல்லற தர்மத்தைக் காக்கும் பணியை மேற்கொண்டவர்கள். ஆனால் அவர்களின் நிலையிலே வேறுபாடு உண்டு. ஊர்மிளை, மண்டோதரி, யசோதரா, கைகேயி, திரெளபதை ஆகிய ஐவரும் அரண்மனையிலே வாழ்ந்தவர்கள். அரச குடும்பத்திலே பிறந்தவர்கள். ஆனால் அகல்யையும் மாதவியும் வேறுபட்டவர்கள். அகல்யை ஆச்சிரமத்திலே வாழ்ந்தவள். மாதவி கணிகையர் குலத்திலே பிறந்து தனிமனையிலே வாழ்ந்தவள். அழகிலே எல்லோரும் ஒப்புடையர். தர்மப்பணியிலும் அவர்கள் ஒப்புடையவரெனச் சம்பந்தன் தனது நூலிலே காட்டுகிறார்.

NA
ஆண்மையின் சிறப்பிற்கும் முன்னேற் - றத்திற்கும் பெண் எவ்வாறு தன்னைத் தந்து பன்னி செய்கிறாள் என்பதை அவர் விளக்கும் முறைமை சிறப்பானது. அதனை அவர் மதிப்பீடு செய்து ஒவ்வொருவரைப் այնքlպմ எழுத்திலே பொறித்திருப்பவை இங்கு எடுத்துக்காட்டாகத் தகுந்தவை.
"ஊர்மிளை!
அனைத்தையும் எடை போடும் மனம் என்றாவது உன்பக்கம் தலைநீட்டியதை இதுவரை யாருமே கண்டதில்லை. லக்ஷ்மணன் உன் கனவன். தன் அண்ணனைத் தொட்டபடி நீங்காமலே இருந்து 607é7607 சுதர்மத்தை நிகழவிட்டான். நீயோ உன் தெய்வத்தை உன்னுள்ளே நிரந்தரமாக அமர்த்திக் கொண்டே உனக்கமைந்த கர்மங்களை நிகழவிட்டாய். உன் தொண்டு அத்தைமார் மற்றவர்கள் என்ற பேதங்களைத் தீண்டாமலே நிகழ்ந்தது.
(பக்கம்:2)
"மேலான தர்மத்தின் பக்கம் அமரத்துவத்தையும் நிலை செய்யும் இன்னமுதமாயும், அதர்மத்தின் பக்கம் சர்வ நாசத்தையே தரும் ஆலகாலமாயும் சீதை என்ற ஒருத்தியே இருந்ததைத் தெளிவாக உணர்ந்திருந்தவள் மண்டோதரி”
(பக்கம் 10)
'பிறவியாகிய பெருந்துயர் என்றும் அனுகாதவகை அருள் செய்து நின்ற கருணைக்கடலை அகல்யை இமைக்காமலே வெகுநேரம் பார்த்தபடி நின்றாள். இத்தனை காலமும் சகுன சொரூபமாக மனக்கோவிலில் பிரதிட்டை செய்து வழிபாடியற்றிய அதே இன்னமுதை, நேராகக் கண்டபின் கண்களை எடுக்க நினைவு வரவில்லை. செயலிழந்து நின்றவள், தன்னை முழுதாக மறந்த நிலையில் அடியைப் பெயர விட்டாள்.”
(பக்கம் 16)
“சதா சோகத்தில் மூழ்கிக் கிடக்கும் அந்த அபலைப் பெண்ணின் கதையை, கோவலன் முன் எடுக்க அவளுக்கு இதுவரை துணிவு வரவேயில்லை. பிறருடையது என்று தெரிந்த பின்னும் கிடைத்த விளையாட்டுப் பொருளைக்

Page 35
கைவிட முடியாத குழந்தை போலவே அஞ்சி யஞ்சி அவள் இருந்து விட்டாள். ஆனால் சந்தர்ப்பங்கள் தோறும் அந்தக் கூரிய முள் குத்திக் கிழித்து அவள் நெஞ்சை ஆழம் பார்க்காது விட்டதே இல்லை.”
(பக்கம் 22)
யசோதரா!
நீதெய்வீகம் என்ற புனிதமான தவத்திலல்லவா முளை கொண்டவள்! உன்னுள்ளே இருந்து எழுந்து பரவும் இன்ப அலைகள் உன் இதயத் தூய்மையின் அமுத நாதமே, உன்னை முழுமையாக அறியும் சக்தி எல்லோரிடமும் இல்லை. எப்படியும் நீ சாதாரணமானவளே
அல்ல."
(பக்கம் 31)
அயோத்தியாகிய களத்தில் அரண்மனையே யாககுண்டமாக, பெண்மையின் தியாகமாகிய
அக்னியில் தன் வாழ்வையே சமித்தாக்கி,
அருள் மயமான தாய்மையை உருக்கி நெய்யாக்கி மனமாதி காணங்களை சுருக்கு
சுருவமாக்கி தூய அன்பே மலராகவும்
உயிரினும் இனிய கணவனே பூரணா
குதியாகவும் தன்னையே இயற்றும் ஏவும்
கர்த்தாக்களாகவும் கொண்டுஇந்தத் தெய்வீக
யாகத்தை கைகேயி நிறைவு பெறச் செய்து
முடித்தாள்.'
(பக்கம் 50)
திரெளபதி நீசொல்லாமலே எல்லாவற்றையும் அறிந்தவள். அவ்வாறே காட்டாமலே அனைத்தையும் கண்டவள். உனக்குச் சொல்ல, காட்ட எதுவுமே இல்லை. பெண்மையின் பிரபஞ்ச ரகசியமான உன்னை இந்த உலகம் என்றுமே மறந்து விட முடியாது.”
(பக்கம் 87)
பெண்மையை மதிப்பீடு செய்யச் சம்பந்தன்
மேற்கொண்ட அளவுகோல் சிறப்பானது. வாழ்வியலில் பெண்மையின் பங்களிப்பு எப்படிப்பட்டது என்பதையும் சம்பந்தன் தெளிவாக்கியுள்ளார். ‘மனிதநேயம் என்ற அளவுகோல் கொண்டு தர்மவதிகளின் பணியை மதிப்பிட்டுக் காட்டுகின்றார். ஆண்மையின் சிறப்புக்கும் உலக வாழ்வியல் ஒழுங்கிற்கும் பெண்கள் ஆற்றும் பணி பெருமையாகப் பேசப்பட வேண்டியது. சம்பந்தன் இதற்காகவே தர்மவதிகள் ஏழுபேரைத் தெரிவு செய்துள்ளார். அவர்கள் குணநலன்களை மனிதப்பண்போடு நின்று விளக்குகிறார். இப்பெண்களே போற்றப்பட வேண்டியவர்களாகவும்

பின்பற்றப்பட வேண்டியவர்களாகவும் அமைவதைச் சம்பந்தன் காட்டும் பாங்கு இந்த நூலின் எதிர்கால இலக்காகி நிற்கிறது. பண்டைய காவியங்கள் இன்றுவரை நம்மிடையே நின்று நிலைப்பதற்கான காரணம் இதுவே. மனித வாழ்வியலை கால ஒட்டத்தோடு இணைந்து செல்ல வைக்கும் காவியங்களின் நோக்கத்தை நிறைவேற்ற தர்மவதிகளால் தான் முடியும் எனவும் சம்பந்தன் கருதுகிறார். அவரது மீள் பார்வையில் துல்லியமாக >இது தென்படுகிறது.
மாதவி பற்றிய மீள் பார்வை சம்பந்தனும் பரத்தமையை சமூக ஏற்புடைய ஒழுக்கமாகக் காட்ட முற்படுவதை உணர்த்துகிறது. பிறருடையது என்று தெரிந்த பின்னரும் மாதவி கோவலனைக் கண்ணகிபால் அனுப்பாதது தவறு. அவள் பேணும் தர்மம் எது என்பது கேள்விக்குரியதாகின்றது. சம்பந்தனின் தெரிவில் கண்ணகி விடுபட்டுப் போனது ஏன்? என்ற கேள்வியும் இங்கு எழுகின்றது. பெண்மையின் துறவுநிலையை அவர் காட்ட வேறு பெண் இல்லையா என்ற சிந்தனையும் எழுகின்றது. கணவன் பெருமை பெறப் பணிசெய்யும் பெண் இல்லற தர்மத்தையே பேணுகிறாள். மனைவி' என்ற நிலையிலே ஏனைய தர்மவதிகள் நிற்க மாதவி மட்டும் புறநடையாக நிற்கிறாள். தமிழ்க் காப்பியத்தில் சம்பந்தன்,'மாதவியும் ஒருவகையான தர்மங்காக்கவே ஆக்கப்பட்டவள்’ என எண்ணுகிறார் போலும்.
இனிவரும் நூற்றாண்டுப் பார்வை:
இருபத்தோராம் நூற்ற்ாண்டின் பெண்கள் பற்றிய ஆய்வுக்கு சம்பந்தனின் 'தர்மவதிகள் உறுதியான களமாக அமையவுள்ளது. அவரது பட்டறிவும், சிறுகதைப் படைப்பாற்றலும் காட்டிய செம்மையான தடத்திலே பெண்மையின் சிறப்பு வழி நடத்தப்படவுள்ளது. மேலைத்தேய ஆய்வாளர்கள் விதந்துரைக்கும் 'பெண்ணின் அடிமைநிலை இனிமேல்தான் தெளிவுபெறவுள்ளது. கற்பின் ஒழுங்கில் காலம் நடக்கிறது. அதை இயற்கை காட்டி நிற்கிறது. மனித வாழ்வியலும், பெண்மை பெற்றிருக்கும் பேரறிவினால் தான் சீராகவுள்ளது. தற்கொடை நிலையில் பெண்மை காட்டும் மனிதநேயத்தை உலகம் உணர வேண்டும். பெண்ணின் கற்பினால் எல்லாம் நேர்பெறும். ஆணின் கற்பு நிலையும் சீர்பெறும். சம்பந்தனின் தர்மவதிகள் இன்று இதை எல்லோரும் அறியச் செய்யும் நூல் என்பது தெளிவு. காலப்பணியால் பெண்ணுக்குரிய இறவாத புகழை எடுத்துக்காட்டிய சம்பந்தன் தர்மம் உணர்ந்தவர். நினைவுக்குரியவர்.
3

Page 36
சி. வை. தாமே
பதிப்புப் பணி :
0. தமிழ் மொழி ஆராய்ச்சி வரலாற்றில் சி. வை. தாமோதரம் பிள்ளை (1832-1901) இருண்ட வானின் ஒரு விடிவெள்ளி. தமிழ் மக்களின் பண்டை வரலாற்றைபெருமையை-புகழை-நிலைநிறுத்துவதற்குத் தேவையாக இருந்த ஆவணங்களைக் கறையான்களின் வாயிலிருந்து மீட்டெடுத்துக் கொடுத்த தனி மனிதர் சி.வை. தாமோதரம்பிள்ளை (சி.வை.தா). யாழ்ப்பாணத்திலிருந்து தமிழ் நாட்டுக்கு வந்து, அப்போதுதான் தொடங்கப்பட்ட சென்னைப்பல்கலைக் கழகத்தில் (1857) முதல் பட்டதாரியான சி.வை.தா. சென்னை அரசாங்க வரவுசெலவுக் கணக்கு அலுவலகத்தில் ஒர் அலுவலராக நுழைந்து, அத்துறையின் தலைவராகவும் உயர்ந்தார். ஒய்வுபெற்ற பிறகு, புதுக்கோட்டை அரசின் நீதிபதிகளுள் ஒருவராகவும் அவர் 3 ஆண்டுகாலம் பணியாற்றினார். புதுக்கோட்டை அரசின் மிக உயர்ந்த பதவியாகிய திவான் பதவியை அரசர் அவருக்கு விரும்பி அளித்தபோதிலும்,தம் தமிழ்ப்பணிக்கு அது இடையூறாக அமையும் என்று கருதி அதனை ஏற்க மறுத்துப் பதிப்புப் பணியில் ஈடுபட்ட தமிழ்தொண்டர் சி.வை.தா. இந்த ஆராய்ச்சிக் கட்டுரையில் சி.வை.தா. வின் பதிப்புப் பணி-சிறப்பாக, இலக்கியப் பதிப்புப் பணி-மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. சி.வை.தா. வின் பெருமையை விளக்கும் வகையில் அவருடைய பணிஉ.வே.சாமிநாதையருடைய (உ.வே.சா) பணியோடு ஒப்பிட்டுக் காட்டப்படுகின்றது. அவ்விருவரிடையே நிலவிய உறவு சிவைதா. உ.வே.சா. வுக்கு எழுதிய கடிதங்களிலிருந்து தெளிவாகின்றது.
0.1 சிவைதா.வின் பதிப்புப் பணியின் முக்கியத்துவம் அவர் வாழ்ந்த காலச் சூழலை அறிந்து கொண்டால், தெளிவாக விளங்கும். அவர் வாழ்ந்த காலம் இருண்ட காலம் அன்று. அவருடைய சம காலத்தில் மரபுவழியாகத் தமிழ்ப் புலமை பெற்றவர்களும் மேனாட்டுக் கல்வியும் தமிழ்ப் புலமையும் நிரம்பிய பலரும் இருந்தனர். சென்னையிலும் யாழ்ப்பாணத்திலும் தமிழ் நூல்கள் பதிப்புப் பணியில் முன்னோடியாகத் திகழ்ந்த ஆறுமுக நாவலர் சைவ சமய நூல்களோடு திருக்குறள், வில்லி பாரதம் என்னும் இலக்கியங்களைப் பதிப்பித்து

ாதரம்பிள்ளை : ஒரு மறு மதிப்பீடு
அ. பாண்டுரங்கன்
^ வெளியிட்டார். சைவ சமயத்தின் வழி தமிழைக் காப்பதே நாவலர் பெருமானுடைய குறிக்கோளாக இருந்தது. சென்னைக் கல்விச் சங்கத்தின் தலைமைப் புலவராக விளங்கிய தாண்டவராய முதலியார் திவாகரநிகண்டைப் பதிப்பித்ததோடு நின்றுவிட்டு, பள்ளி மாணவர்களுக்குத் 5Lfp UTL நூல்களை எழுதுவதில் தம் முழுக்கவனத்தையும் செலுத்தினார். மழவை மகாலிங்க ஐயர் தொல்காப்பிய எழுத்ததிகாரத்தை நச்சினார்க்கினியர் உரையோடு பதிப்பித்து வெளியிட்டார். களத்தூர் வேதகிரி முதலியார், திருத்தணிகை விசாகப்பெருமாள் ஐயர், திருவேங்கட முதலியார், இராசகோபாலப் பிள்ளை போன்ற பெரும் புலவர்கள் இடைக்கால நூல்களில் ஒன்று அல்லது இரண்டைப் பதிப்பித்து வெளியிட்டார்களே அல்லாமல், சங்க இலக்கிய இலக்கணங்களைப் பதிப்பித்து வெளியிட்டார் அல்லர். உ.வே.சா. சங்க இலக்கியங்களில் எதனையும் பதிப்பிப்பதற்கு முன்பே, சி.வை.தா. 1868 இல் தொல்காப்பியம் - சொல்லதிகாரம் - சேனாவரையர் உரையைப் பதிப்பித்து வெளியிட்டார். அடுத்தடுத்து வீர சோழியம் (1881), இறையனார் அகப்பொருள் உரை (1883), தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியம் பேராசிரியம் (1885) ஆகியவற்றை வெளியிட்ட பின், 1887 இல் சங்க இலக்கியங்களுள் ஒன்றான கலித்தொகையை நச்சினார்க்கினியருடைய உரையோடு முதன் முதலாக வெளியிட்டார். நமக்குத் தெரிந்த வரையில், வேறு யாரும் சங்க இலக்கியங்களில் எதையும் சி.வை.தா. வுக்கு முன்னர் வெளியிட்டார் அல்லர். கலித்தொகை வெளியீடு இந்த ஆண்டில் (1996) ஒரு நூற்றாண்டைக் கண்டுவிட்டது. சி.வை.தா. அவர்கள் கலித்தொகையை வெளியிட்ட அதே ஆண்டில் தான் (1887),உ.வே.சா.முதன் முதலாகச் சீவக சிந்தாமணியை வெளியிடுகின்றார், என்பதையும் இத்துடன் சேர்த்து எண்ணிப் பார்க்க வேண்டும். சங்க இலக்கியங்களுள் ஒன்றான பத்துப் பாட்டை ஐயர் அவர்கள் 1889 ஆம் ஆண்டில்தான் சி.வை.தா. வின் கலித்தொகைப் பதிப்பு வெளியான இரண்டு ஆண்டுகள் கழித்துத்தான் - வெளியிட்டார் என்பதையும் எண்ணும்போது, சங்க இலக்கிய இலக்கணப்

Page 37
பதிப்புகளின் முன்னோடி சி.வை.தா. தான் என்று தெளிவாக உணர முடிகின்றது.
உ.வே.சா. உடன் ஒப்பிடும்போது, சி.வை.தா. மரபு வழியான தமிழ்ப்புலமைவாய்ந்தவரா என்ற ஐயம் சிலர்க்கு எழுவது இயல்பே ஆகும். சி.வை.தா. வின் கல்வி பற்றி பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை கூறியிருப்பது இங்கு எண்ணத் தக்கது:
தாமோதரம் பிள்ளை பிரசித்தி பெற்ற சுன்னாகம் முத்துக்குமார கவிராயரிடந் தமிழும் வட்டுக்கோட்டைக் கல்லூரியில் ஆங்கிலமும் படித்தவர். 1852 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தாமோதரம் பிள்ளை தமது இருபதாம் வயதில் வட்டுக்கோட்டைக் கல்லூரியிற் படிக்கத் தக்கவையாயிருந்த. எல்லாப் பாடங்களிலும் முதல்வராகத் தேறி வெளியேறினார்(இலக்கிய வழி 1981: t29).
சி.வை.தா.வின் வாழ்க்கை வரலாற்றை எழுதியத.
இராஜரத்தினம் பிள்ளையின் நூலிலிருந்து, சி.வை.தா.
சுன்னாகம் முத்துக்குமாரக் கவியராயரிடம் கந்த புராணம் முதலிய நூல்களைக் கற்றார் என்று மனோன்மணி சண்முகதாஸ் குறிப்பிடுவதும் (1983:9), இங்கு இணைத்து நோக்கத்தக்கது. எனவே, உ.வே.சா. அவர்களைப் போன்றே சி.வை.தா. அவர்களும் தமிழ் இலக்கண இலக்கியங்களை வரன்முறையாகக் கற்றிருந்தார் எனத் தெரிகின்றது. இக் கல்வி ஐயருக்கு வாய்த்தது போன்று ஆசிரியர்-மாணவர் (குரு-சிஷ்யர்) பரம்பரையாக அவருக்கு வாய்க்கவில்லை என்றாலும், பண்டைத் தமிழ்
நூல்களைப் பதிப்பிடுவதற்குத் தேவையான அளவு
அவரிடம் தமிழ்ப்புலமை நிரம்பிக் கனிந்திருந்தது என்பது அவருடைய பதிப்புரைகளிலிருந்தே தெளிவாகின்றது.
1. சி.வை.தா. அவர்கள் 1854 முதல் 1892 ஆம் ஆண்டு முடியtநூல்களைப்பதிப்பித்துள்ளார்.இவற்றுள், 4 தொல்காப்பிய உரைப்பதிப்புகள் ; 1 கலித்தொகை , 1 முற்கால இலக்கணமான இறையனார் அகப்பொருள் ; இடைக்காலக் காப்பியமான சூளாமணி 1 ; இடைக்கால
இலக்கண நூலான வீரசோழியம் உரை 1 ; பிற்காலப்
புராண இலக்கியமான தணிகைப் புராணம் 1 ; பிற்கால
இலக்கண நூலான இலக்கண விளக்கம் 1 ;
குமரகுருபரரின் நீதி நெறி விளக்கம் 1 என்பன அடங்கியுள்ளன. 38 ஆண்டு காலத்தில் இவ் எண்ணிக்கை குறைவாகத் தோன்றலாம். ஆனால், முதன் முதலாக ஏட்டுச் சுவடியில் உள்ள நூலைப் பதிப்பிடுவதில்

உள்ள தொல்லைகளையும் வழக்கில் இல்லாமல் இருந்த பழம்பெரும் நூல்களைப் பதிப்பிடுவது குறித்துப் புலவர்களிடம் இருந்த மனப்பான்மையையும் அறியும்போது, சி.வை.தா.வின் பணி ஓர் அருஞ்சாதனை என்றே சொல்ல வேண்டும். தாம் பதிப்பித்த நூல்களின் ஏட்டுச் சுவடிகள் பற்றி, சி.வை.தா. குறிப்பிடுவது காணத் தக்கது.
மூன்று விரலைக் காட்டிக் கட்டிலிற்கால் போல் பஞ்ச பாண்டவரையும் ஆறு கோணத்தில் நிறுத்துக என்பான் தொகை விபரீதத்தோடு விரலை வாலென்றும் கட்டிலைக் கடாலென்றும் பஞ்சபாண்டவரைப்பிஞ்சுப்பாகற்காய் என்றும் மாற்றி எழுதி வைத்தால் அம்மொழியைச் சரிப்படுத்தல் இலேசாகுமா? அதுபோலவே விலாசம் பரிசர்ப்பம் விதுரதம் சமம்நர்பம் நமதுரதி பிரகமம் நிரோதம் பரியுபாசனம் வச்சிரம் புட்பம் உபநியாசம் வருணசங்காரம் இவை பயிர் முகத்தில் அங்கம் பதின்மூன்று’ என்பது பிரவாகம் விருத்தியமம் விவாசம்தாவனம் சயதுாரகம் மரிசோதம்பரியானம் பாவைச்சிரம் செல்வம் வருண சங்கரம் இவை பிரதிமுகத்திலங்கும் பதின்மூன்று’ என கிடந்த ஏட்டுப் பிரதிகளோடு பட்ட பிரயாசைக்குப் பிரயாசை யென்னுஞ் சொல் போதுமா? முதலினின்று முடிவு வரைக்கும் ஒரொருவரி ஒரோரு நொடியாகவே கொண்டு வாழ்ந்தோம். கலித்தொகைப் பதிப்புரை, 188726-7.
தம் காலத்தில் இருந்த ஏடுகளில் நிலை குறித்தும் அவர் கலித்தொகைப் பதிப்புரையில்கண்ண77ல் எழுதுகின்ற7ர்என் சிறு பிராயத்தில் எனது தந்தையார் எனக்குக் கற்பித்த சில நூல்கள் இப்போது தமிழ் நாடெங்கும் தேடியும் அகப்படவில்லை. ஒட்டித் தப்பியிருக்கும் புத்தகங்களுங் கெட்டுச் சிதைந்து கிடக்கும் நிலைமையைத் தொட்டுப் பார்த்தாலன்றோ தெரிய வரும் ! ஏடு எடுக்கும்போது ஒரஞ் சொரிகின்றது ; கட்டு அவிழ்க்கும் போது இதழ் முறிகின்றது ; ஒன்றைப்புரட்டும்போதுதுண்டாய்ப்பறக்கிறது.இனி எழுத்துகளோவென்றால் வாலுந் தலையுமின்றி நாலுபுறமும்பாணக் கலப்பை மறுத்து மறுத்து உழுது கிடக்கின்றது (மேலது 46) பழைய சுவடிகள் யாவுங் கிலமாய் ஒன்றொன்றாய் அழிந்து போகின்றன, புது ஏடுகள் சேர்த்து அவற்றை எழுதி வைப்பாரும் இலர் துரைத்தனத்தாருக்கு அதன்மேல் இலட்சியம் இல்லை. சரஸ்வதியைத் தம்பால் வகிக்கப்பெற்ற வித்துவான்களை அவள் மாமி எட்டியும்
33

Page 38
பார்க்கின்றாளில்லை. திருவுடையீர்! இந்நாட்டவரினால் பின்புதவம் புரிந்தாலும் ஒருதரம் அழிந்த தமிழ் நூல்களை மீட்டல் அரிது யானை வாய்ப்பட்ட விளாம்பழத்தைப் பின் இலண்டத்துள் எடுத்துமென்? காலத்தின் வாய்ப்பட்ட ஏடுகளைப் பின் தேடி எடுப்பினுங் கம்பையும் நாராசமுந்தான் மீரும் அரைக்காசுக் கழிந்த கற்பு ஆயிரம் பொன் கொடுத்தாலும் வாராது. எத்தனையோ திவ்விய மதுர கிரந்தங்கள் காலாந்தரத்தில் ஒன்றன்பின்x ஒன்றாய் அழிகின்றன. சீமான்களே ! இவ்வாறு இறந்தொழியும் நூல்களில் உங்களுக்குச் சற்றாவது கிருபைபிறக்கவில்லையா? ஆச்சரியம்!ஆச்சரியம்! அயலான்அழியக் காண்கினும் மனந்தளம்புகின்றதே தமிழ் மாது நுந்தாயல்லவா! இவள் அழிய நமக்கென்னென்று வாள்ா இருக்கின்றீர்களா ! தேசாபிமானம் மதாபிமானம் பாஷாபிமானம் இடையில்லாதார் பெருமையும் பெருமையா ! இதனை தயைக் கூர்ந்து சிந்திப்பீர்களா (கலித்தொகைப் பதிப்புரை, 188768-9)
சி.வை.தா. தம் தாய்மொழி மீது கொண்டிருந்த எல்லையற்ற அன்பே அவரைப் பழந்தமிழ்ப் பதிப்பு முயற்சிகளில் ஈடுபடுத்தியது என்பதற்கு இஃது ஒர் நல்ல சான்றாக அமைகின்றது.
11 சி.வை.தா. வின் பதிப்புப் பணிகளை நோக்கும் முன்பு, பதிப்புப் பணி பற்றிச் சுருக்கமாகக் காண்போம். பதிப்பாசிரியப் பணிகளில், பதிப்பின் நோக்கம் முக்கியமானதாகும். யாருக்காக, என்ன் நோக்கத்தோடு " நூல் பதிப்பிக்கப்படுகின்றது என்பதனை ஒட்டிப்பதிப்புகள் அமையும். பண்டைத் தமிழ் நூல்களை அழிவிலிருந்து காப்பாற்றுவதே சி.வை.தா. வின் முக்கிய நோக்கமாக இருந்தது. சுவடிகளைப் பிரதி செய்வது, திருத்தமான பாடத்தை முடிவு செய்வது, நூலின் அமைப்பைத் திட்டமிடுவது, முதல் பக்கம் எவ்வாறு அமைய வேண்டும் என முடிவு செய்வது, உள்ளுறை, பக்க எண், பிழையும் திருத்தமும் கொடுத்து நூலை மேலும் விளக்க முயல்வது, நிறுத்தக் குறியீடுகளைப் பயில்பவர் நலனுக்காக ஏற்ற இடங்களில் அமைப்பது, பொருளடைவுகளை அமைப்பது போன்ற பல நெறிகள் ஒரு பதிப்பில் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
நூல்களைப் பதிப்பித்து வெளியிடுபவர் பதிப்பாசிரியர். இவர் பதிப்புப் பணிகள் அனைத்துக்கும் பொறுப்பு ஏற்பவர். தம் கலித்தொகைப் பதிப்புரையில் சி.வை.தா. “பதிப்பாசிரியர் ’ என்ற சொல்லைப்
34

பயன்படுத்தியுள்ளார். மேலும், நூலாசிரியர், உரையாசிரியர், போதகாசிரியர் பரிசோதனாசிரியர், என்னும் நால்வரின் பணியை விடவும் நான்காவதாகக் கூறப்படும் பரிசோதனாசிரியரின் பணியான பதிப்புப் பணி சிரமம் உடையது என்று அவ்வுரையில் கூறுகின்றார் (மேலது : 26-7). தமிழ் நூல்களின் பதிப்புப் பணியில் முன்னோடியாக விளங்கிய ஆறுமுக நாவலர் அவர்களின் தொடர்பு காரணமாகவே, சி.வை.தா. பதிப்புப் பணியில் ஈடுபட்டார் என்று தெரிகின்றது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதல் பகுதியில் நாவலர் விட்டுச் சென்ற பதிப்புப் பணியை சி.வை. தொடர்கிறார் எனலாம். பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதி நாவலர் பதிப்புப் பணியின் காலம் என்றால், பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி சி.வை.தாவின் காலம் எனலாம். உ.வே.சா.வின் பதிப்புப் பணி அடுத்த காலகட்டத்தில் தான்-20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில்தான் - தொடங்குகின்றது. 20 ஆம் நூற்றாண்டு தொடங்கிய முதல் நாளே - ஜனவரி மாதம் முதல் நாளே-சி.வை.தா. மறைந்துவிட்டார் என்னும்போது, இக்கால வகைப்பாடு தெளிவாக மூன்று நிலைகளில் அமைவதைக் காண முடிகின்றது.
1.2 சி.வை.தா ஒரு சிறந்த பதிப்பாசிரியர் என்பதற்கு அவர் பதிப்பித்த நூல்களே சான்றுகளாக உள்ளன. அவர் 11 நூல்களைப் பதிப்பித்திருந்தாலும், தெளிவு கருதி கலித்தொகைப் பதிப்பை அடிப்படையாகக் கொண்டு அவருடைய பதிப்பு நெறி முறைகள் இங்கே எடுத்துக் கூறப்படுகின்றன. அவர் கலித்தொகையைப் பதிப்பிப்பதற்கு முன்பே 6 நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டிருந்ததால் அவருடைய அனுபவ முதிர்ச்சி கலித்தொகைப்பதிப்பில் தெளிவாகப் புலப்படுகின்றது. ஒரு நூலை ஏட்டுச் சுவடியிலிருந்து நூல் வடியில் பதிப்பிப்பதால், பதிப்பு நெறி முறைகளைச் சுவடிகளைப் பெயர்த்து எழுதுவதற்கு முன்னர், சுவடி பெயர்த்து எழுதியதற்குப்பின்னர் என இருநிலைகளில் விளக்கலாம்.
ஒரு நூலைப் பதிப்பிக்க வேண்டுமானால் அந்த நூலின் மூலச் சுவடிகளை எல்லாம் பதிப்பாசிரியர் தொகுக்க வேண்டும். ஏடுகள் பல்வேறு இடங்களில் பரவி இருக்கலாம். பதிப்பாசிரியர் நேரடியாகவோ, பிறர் வாயிலாகவோ ஏடுகளைக் கண்டு பிடித்துத் தொகுக்க வேண்டும்.
இத்துடன், அக்காலத்தில் வாழ்ந்த தமிழறிஞர்களின் மனப்பான்மையும் பழந்தமிழ் நூல்களின் பதிப்புகள் வெளிவருவதற்குத் தடையாக இருந்தது. உ.வே. சா. அவர்கள் சீவக சிந்தாமணி சென்னையில்

Page 39
அச்சாகிக்கொண்டிருந்த காலத்தில், அச்சு வேலையை மேற்பார்வையிடுவதற்காகச் சென்னை சென்றிருந்தார். ஒய்வு நேரங்களில் புலவர்களைக் கண்டு உரையாடும் பழக்கம் உள்ள உவே.சா. அக்காலத்தில் புகழ்பெற்றிருந்த புரசப்பாக்கம் (புரசவாக்கம்) அஷ்டாவதானம் சபாபதி முதலியாரைப் பார்க்கச் சென்றார். சீவக சிந்தாமணியை உரையுடன் பதிப்பிப்பதற்காகத் தாம் சென்னை வந்திருப்பதாக உ.வே.சா. கூறியவுடன், சபாபதி முதலியார் திடுக்கிட்டார்.
என்ன ஐயா? சிந்தாமணி உரையையாவது நீங்கள் பதிப்பிக்கிறதாவது? அது சுலபமான காரியமா? நீங்கள் பால்யர். சிந்தாமணிநூலுக்கும் உரைக்கும் உள்ள பெருமை என்ன? அதை முடிப்பது மிகவும் கஷ்டமாக இருக்குமே!அந்த முயற்சியை நிறுத்திக் கொள்ளுதல் மிகவும் நல்லது. ஆழந்தெரியாமல் காலை விடக்கூடாது (என் சரித்திரம் 1990; 583)
என்று கண்டிப்பாகக் கூறிவிட்டார். உ.வே.சா. அந்த நூலை வெளியிடுவதில் தமக்குள்ள உறுதியை எடுத்துக் கூறியும், நாவலர் அதனை ஏற்றுக்கொள்ளாமல் அவரை விரிவாக மறுத்துவிட்டு, இறுதியில்,
நான் சொல்லுவதைச் சொல்லிவிட்டேன். அப்பால் உங்கள் பிரியம் (மேலது. 584)
என்று வேண்டா வெறுப்போடு பேச்சை முடித்துக் கொண்டார். இம்மனப்பான்மை நமக்கு எதனைக் காட்டுகின்றது? அக்காலத்தில் தமிழ் நாட்டில் வாழ்ந்த பெரும்புலவர்கள் பலருக்குப் பண்டைய நூல்களைப் பதிப்பிப்பதில் இருந்த அச்சத்தையும் கவனக் குறைவையும் இந்நிகழ்ச்சி காட்டுவதோடு, புலவர்களின் ஆதிக்க மனப்பான்மையையும் சுட்டிக் காட்டுகின்றது. பழந்தமிழ் நூல்களுக்கெல்லாம் தாமே ஏக போக அதிகாரிகள் ; மற்றவர்கள் எவருக்கும் அவற்றைப்பதிப்பிப்பதற்கு உரிமை இல்லை என்ற அவர்களின் மனப்பாங்கும் சபாபதி நாவலரின் கூற்றில் தொனிக்கின்றது. சி. வை. தா. அவர்களுக்கும் இத்தகைய அனுபவங்கள் ஏற்பட்டிருக்கலாம். ஆனால், அவர் அவற்றை உவேசா. வைப் போன்று பதிவு செய்யவில்லை. என்றாலும், தமிழ் அறிஞர்கள் அவர் மீது பொறாமை கொண்டு அவர்தம் பதிப்புப் பணிக்கு இடையூறு செய்தார்கள் என்று எஸ். வையாபுரிப்பிள்ளை அவர்கள் பிற்காலத்தில் சி.வை.தா. வுக்கு ஏற்பட்ட நெருக்குதல்களைத் தொட்டுக் காட்டுகின்றார் :

ஆங்கிலங் கற்ற தமிழ் விற்பன்னர்கள் உதாசீனமாயிருந்தார்கள். தமிழ் கற்ற பண்டிதர்களில் சிலர் பொறாமை மிக்குப் பகை காட்டினோர்கள். ஒரு சில அறிஞர்கள் தமிழ் நூல்களை வெளியிடுவதற்குத் தங்களுக்குத் தான் தனியுரிமைப்புண்டென்று கருதினார்கள் (தமிழ்ச்சுடர் ԼՈ600fghn, 1968235)
இத்தகையோர்களின் மனப்பான்மை பழந்தமிழ் நூல்களைப் பதிப்பிப்பதில் ஊக்கக் குறைவைத் தான் Yஏற்படுத்தும் . ஆனால், சி.வை.தா. தம் மீது வீசப்பட்ட கண் டனங்களை யும் பழிச் சொற்களை யும் வசவுரைகளையும் பொருட்படுத்தாமல், தம் கருமமே கண்ணாக இருந்ததால் தான் அவர் இவ்வளவு பெரும் பணியைத் தன்னந்தனி மனிதராகச் செய்து முடிக்க முடிந்தது.
இன்னொன்றும் இங்கு நினைக்கத் தக்கது. சிவைதா. தம் காலத்திலிருந்த தாண்டவராய முதலியார், மழவை மகாலிங்கய்யர், சபாபதி நாவலர், உ. வே. சா. போன்று, முழுநேரத் தமிழ்ப் புலவர் அல்லர். மேலே குறித்தவர்களும் அவர்களைப் போன்ற பிறரும் ஆசிரியர்களாகப் பாடஞ் சொல்லியும் பிறருக்குத் தமிழ் கற்பித்தும் அதனையே தம் வாழ்க்கைத் தொழிலாகக் கொண்டிருந்தவர்கள். குறிப்பாக, உ. வே. சா. மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளையின் மாணவர்; ஆசிரிய-மாணவப் பரம்பரையில் வந்தவர் ; திருவாவடுதுறை ஆதீன வித்துவான். அப்பதவியின் காரணமாக மடத்தில் பலருக்கும் தமிழ் கற்பித்து வந்தவர். பின்னர், அரசுக் கல்லூரிப் பணியில் சேர்ந்து முழுநேரமும் தமிழாசிரியராய் விளங்கியவர். இவர்களைப் போலல்லாமல் தமிழோடு தொடர்பு எதுவும் இல்லாத பொறுப்பான அரசுப் பணிக் கடமைகளுக்கிடையில், தமிழ் மேல் தாம் கொண்டிருந்த காதலால், தம் உடல் நலத்தையும் பொருள் முட்டுப்பாட்டையும் ஒரு பொருட்டாகக் கருதாமல் சி. வை. தா. தமிழ்ப் பணி ஆற்றினார். கலித்தொகைப் பதிப்புரையில் அவர் மனம் திறந்து பேசுகின்றார்.
சி.வை.தா. தாம் கலித்தொகை ஏடுகளைப் பெறுவதற்காகப் பட்ட பாட்டைக் கலித்தொகைப்
பதிப்புரையில் கூறுகின்றார். புதுவை, திருவாவடுதுறை, தருமபுரம் ஆகிய இடங்களிலிருந்தும் மல்லாகம் வி. கனகசபைபிள்ளை,திருமணம் கேசவ சுப்பராயமுதலியார், மயிலை இராமலிங்கம் பிள்ளை ஆகியோரிடமிருந்தும் சுவடிகள் பெற்றார். இவற்றுள், திருவாவடுதுறை ஆதீனச் சுவடி தவிர ஏனையவை அரை குறையாக முல்லைக்
35

Page 40
கலியோடு முடிந்திருந்தன. இச்சுவடிகளைக் கொண்டே பதிப்புப் பணியைத் தொடங்கியிருந்த சிவைதா. தம்மிடம் இருந்த முழுமையான சுவடி ஒன்றை மாத்திரம் வைத்துப் பதிப்பை முடிக்கவில்லை. மீண்டும் ஏடுகள் தேடும் முயற்சியில் ஈடுபட்டார். புதுவையில் வாழ்ந்த சொக்கலிங்கம் பிள்ளையின் குடும்பத்தாரிடமிருந்து நெய்தற்கலி கிடைத்தது. சென்னைச் சுவடிக் காப்பகத்திலிருந்தும் நெய்தற்கலி கிடைத்தது. தனக்குக் கிடைத்த 10 சுவடிகளை அடிப்படையாகக் கொண்டே சி.வை.தா. கலித்தொகையைப் பதிப்பித்துள்ளார். சிலர் கருதுவது போன்று அவர் ஒரே ஒரு சுவடியை மட்டும் ஆதாரமாகக் கொண்டு எந்த நூலையும் பதிப்பிக்கவில்லை.
12 இவ்வாறு சுவடிகளைத் தொகுத்த பிறகு அவற்றுள் ஒன்றை அடிப்படைச் சுவடியாக வைத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் பிற சுவடிகளை ஒப்பிட்டுக் காணும்போது மூல பாடத்தை ஒருவாறு முடிவு செய்ய இயலும், மூலபாடத் திறனாய்வு எனப்படும். ஒரு நூலைப் பதிப்பிக்கப்பல சுவடிகள் வேண்டியிருந்தாலும், பதிப்புக்கு அடிப்படையாக ஒரே ஒரு சுவடியைத் தேர்ந்தெடுப்பதுதான் பதிப்பு நெறிகளில் முக்கியமானது. அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் சுவடி எவ்வளவு பழமையாக இருக்கின்றதோ அந்த அளவுக்கு அது மூல நூல் ஆசிரியனின் பிரதியோடு நெருங்கிய தொடர்புடையதாக இருக்கும். பிரதி எத்தனை பழையதோ, அத்துணை அதன் மாறுபாடு குறைவு’ என சி.வை.தா. கூறுகின்றார். திருவாவடுதுறை ஆதீனச் சுவடியை அடிப்படைச் சுவடியாகக் கொண்டு சி.வை.தா. கலித்தொகையைப் பதிப்பித்து வெளியிட்டுள்ளார்.
1.3 பழைய நூல் ஒன்றைச் சுவடியிலிருந்து அச்சுக்குக் கொண்டு வரும்போது பதிப்பாசிரியருக்குப்பல ஐயங்கள் அவ்வப்போது எழுவது இயல்பே ஆகும். சி.வை.தா. வும் இதற்கு விதி விலக்கு அல்லர், கலித்தொகைச் சுவடியைப் பெயர்த்து எழுதும் போது தனக்கு ஏற்பட்ட ஐயங்களைப் போக்கிக் கொள்ள அவர் முயன்றுள்ளார். இவ்வாறு, அவரால் தொடர்பு கொள்ளப்பட்டவர்களுள் முக்கியமானவர் உ.வே.சா. வும் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் நில்லாமல், கலித்தொகை அச்சுப்படிகள் முழுவதையும் மெய்ப்புப் பார்த்துத் தருமாறு உ. வே.சா. வை அவர் வேண்டினார். அதே காலக் கட்டத்தில், உ வே.சா. தாம் சிந்தாமணிப் பதிப்பில் முழுமையாக ஈடுபட்டிருந்த காரணத்தால், அவரால் சி.வை.தா.வுக்கு உதவ முடியவில்லை. அவர் தொடர்ந்து உ . வே. சா. வுக்கு அச்சுப் படிகளை
36

அனுப்பிக்கொண்டிருந்ததால், “தளர்ச்சி இல்லாமல் அவர் செய்த முயற்சிகளால் நான் ஈடுபட்டு அவ்வப்போது சில பகுதிகளை மட்டும் பார்த்து எனக்குத் தோன்றிய திருத்தங்களை எழுதியனுப்பினேன்" (1991605) என்றுஉ வே.சா. “என் சரித்திரத்தில்" பதிவு செய்துள்ளார். தாம் திருத்துவதுடன் தக்க அறிஞர் பிறரும் திருத்தினால், தமக்குத் தோன்றாத பிழைகள் பிறருக்குத் தோன்றலாம்; அதன் மூலம் பதிப்புதிருத்தமான பதிப்பாக அமையும் என சி.வை.தா. எண்ணியிருந்ததை இது காட்டுகின்றது.
14 ஒரு நூலைப் பதிப்பிக்கும்போது, அந்நூலின் மூலத்தை மாற்றுவதற்குப் பதிப்பாசிரியர் உள்ளிட்ட யாருக்கும் உரிமை இல்லை. பதிப்பு நெறிகளில் தலையாய நெறியாகும். இந்நெறியினைப் போற்றாவிட்டால், பதிப்பாசிரியர் தன் விருப்பப்படி மூலத்தைத் திருத்திவிட இயலும். அவ்வாறு மூல பாடத்தைத் திருத்த வேண்டுமாயின் ஏட்டுப் பிரதிகளின் சான்றுகளைக் கொண்டே திருத்த வேண்டும். கலித்தொகைக்கு முந்திய பதிப்புகளில் இப்பதிப்பு நெறியைக் கடைப்பிடித்து வந்த சி.வை.தா. கலித்தொகைப் பதிப்பிலும் சூளாமணிப் பதிப்பிலும் மூல பாடத்தைத் திருத்தியுள்ளார். ஆயினும், ஏன் அவை தம்மால் திருத்திக் கொள்ளப்பட்டன என்பதனையும் தெளிவாகவே அவர் விளக்குகின்றார்:
முன்னோர் மொழி பொருளேயன்றியவர் மொழியும் பொன்னே போற் போற்றுதல்’அவரினின்று வேறாக வழிநூல் சார்புநூல் செய்தோர்க்குங்கடனாகவே அவர் நூலையே அச்சொருபமாக எடுத்து பதிப்பிப்போர் ஒரு அசுடிரமாவது மாற்றுதல் பெருந்தவறென்பதுயார்க்கும் உடன்பாடே ஆயினும் இந்நூல் துரைத்தன வித்தியாசாலைகளிலும் பிற கல்லூரிகளிலும் பாடசாலைகளிலும் பயிலல் வேண்டுமென்னும் அவாவினாலே தற்காலம் அவையிற்றுக்கு இனங்காததோர் இழிசொல்லும் மகளிர் சிறப்பவயத்தின் இடக்கர்ப் பெயருமாகிய குஃறொடர்ந்த அன்மொழி இந்நூல் முழுகிலும் பதினோரிடத்திற் பிரயோகிக்கப்பட்டதை ஒழித்துஞ் செய்யுள் ஊனமுறாதிருத்தற் பொருட்டு அதற்குப் பதிலாக அவ்வவ்விடத்திற்கு இசைந்த பிற அவயத்தின் பெயரைச்சந்தத்திற்கு வேண்டிய அளவு விசேஷனத்தோடு புணர்த்தியும் இருக்கின்றேன். அவ்வாறு சொருகியது.இன்னஇன்ன மொழி இன்ன பாட்டில் இன்ன இன்ன அடியிலென்பதை யாவரொருவராயினும் அறிய விரும்பின் அவற்றை ஈண்டு காண்க (கலித்தொகை 188761-62)

Page 41
இடக்கர் அடக்கல் என்றும் பெண்பால் உறுப்பு என்றும் 11 சொற்களை மாற்றிப் பதிப்பித்த சி.வை.தா. நெய்தல் கலி29 ஆம் பாடலில் ஏடு எழுதுவோரால் ஏற்பட்ட பிழைகளைத் திருத்திவிடலாம் என்று அறிஞர்களில் சிலர் எடுத்துக் கூறியதை ஏற்றுக்கொள்ளாமல், மூலத்தில் இருந்தபடியே பதிப்பித்துள்ளார். தாம் அவர்கள் கருத்தை ஏன் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதையும் அவரே விளக்குகின்றார்.
அடியேன் சிற்றறிவுக்கேற்ற மட்டும் பரிசோதனை செய்து அச்சிட்டு அழயோடழிந்து போகும் பழைய நூல்களை நிலைநிறுத்துவான் புகுந்தேனாதலின் நூலைத்திருத்துவதும் பொருள் இசையச் செய்வதும் என் கடமையன்று இயன்றளவும் பூர்வரூபம் பெறச் செய்வதும் இயலாத இடத்து இருந்தபடி உலகிற்கொப்பிப்பதுமே யான் தலையிட்ட தொழிலென்பதை இன்னும்ஒருகால் உலகத்தார்முன் விண்ணப்பம் செய்து கொள்கின்றேன் (மேலது.60)
கலித்தொகைப்பதிப்பில் இத்தகைய அறிக்கைய்ை வெளியிட்டுள்ள சி.வை.தா. சூளாமணிப் பதிப்பில் இந்நெறிக்கு மாறாக மூல பாடத்தைத் திருத்தியுள்ளார். சுவடிகள் அனைத்துமே பிழையாக இருந்திராது என்றும் சமணப்பெரியோர்களின் துணையுடன் மூல பாடத்தில் தான் திருத்தங்கள் செய்வதாகவும் கூறியுள்ளார். அழிவிலிருந்து சூளாமணியைக் காப்பாற்றுவதற்காகவே தாம் இத்தகைய திருத்தங்களைச் செய்ததாயும் அவர் நேர்மையுடன் ஒப்புக்கொண்டுள்ளார். (ப. ரேணுகாம்பாள், 1991 - 150) ; திருத்தங்களைப் பட்டியலிட்டும் கொடுத்துள்ளார். திருத்துவது தவறு என்று தாம் உணர்ந்திருந்தாலும், அத்திருத்தங்களைப் பிறர் ஏற்காவிட்டாலும் தம்மை மன்னித்தருளும்படியும் அவர் வேண்டுகோள் விடுத்திருப்பது பதிப்பு நெறிகளை அவர் எவ்வளவு நேர்மையுடன் பின்பற்றினார்? எவ்வளவு வெளிப்படையாக இருந்தார்? என்பதைக் காட்டுகின்றது.
1.5 சுவடிகளைப் பெயர்த்து எழுதிய பிறகு பின்பற்றப்பட வேண்டிய பதிப்பு நெறிமுறைகளையும் சி.வை.தா. செம்மையாகப் பின்பற்றியுள்ளார். சி.வை.தா.வின் பதிப்புகளில் பெரும்பாலும் தலைப்புப் பக்கம், நூற்சிறப்பு, பதிப்புரை, அனுபந்தம், பெயரகராதி, மூலம், பக்க அமைப்பு, கட்டமைப்பு என்னும் நிலைகளில் அமைந்துள்ளன. கலித்தொகைப் பதிப்பில் நல்லந்துவனார் கலித்தொகை மதுரை-பாரத்துவாசி நச்சினார்க்கினியர் உரையோடு பூரி தொண்டைமான் புதுக்கோட்டை மகாராசாவின்

w
மந்திரியும் பிரதி காவலருமாகிய கெளரவ. அ, சேஷைய சாஸ்திரிகள் சி.எஸ்ஐ காருண்யோபகார திரவியத்தைக் கொண்டும் சி.வை.தாமோதரம் பிள்ளையால் பல தேசப் பிரதி ரூபங்களைக் கொண்டு பரிசோதித்துப்பதிப்பிக்கப்பட்டது என்று குறிக்கப்பட்டுள்ளது. பதிப்பு ஆண்டு (1887) ஆங்கில ஆண்டிலும் தமிழ் ஆண்டிலும் கொடுக்கப்பட்டுள்ளது. தலைப்புப் பக்கத்தை அடுத்து நச்சினார்க்கினியர் பற்றிய சிறப்புப்பாயிரமும் கலித்தொகை பற்றிய சிறப்புப்பாயிரமும் அமைக்கப்பட்டுள்ளன. கலித்தொகையில் பாயிரப் பகுதியை அடுத்து முதற்குறிப்பு அகராதி கொடுக்கப்பட்டுள்ளது ; இது அகர வரிசையில் அமைக்கப்பட்டுள்ளது. பாடலின் முதல் இரு சொற்கள் முதற்குறிப்பாகக் கொடுக்கப்பட்டு, அது எந்தத் திணைக்குரிய கலி என்றும், எத்தனையாவது செய்யுள் என்றும் அது எந்தப் பக்கத்தில் உள்ளது என்றும் தெரிவிக்கும் இம்முதற்குறிப்பகராதி கலித்தொகை முழுவதற்கும் அமைந்துள்ளது. பதிப்புரை அதனை அடுத்து இடம் பெறுகின்றது.
சி.வை.தா. வின் பதிப்புரைகள் அனைத்தும் ஆராய்ச்சிக்கண் கொண்டு எழுதப்பட்டுள்ள. கலித்தொகைப் பதிப்புரை 35 பக்க அளவில் நீண்டு, பல செய்திகளைக் கூறுவதாக அமைந்துள்ளது. இப்பதிப்புரையில் சி.வை.தா. தமிழின் தொன்மை, தனித்தன்மை, பற்றி ஆராய்ந்து கூறியிருப்பதோடு, பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் யெர் ஆராய்ச்சியிலும் ஈடுபட்டுள்ளார். பதிப்போடு தொடர்புடைய செய்திகள் அனைத்து நிரலே கூறப்படுகின்றன தம்முடைய ஆசிரியரான சுன்னாகம் முத்துகுமாரக் கவிராயருக்குத் தம்முடைய பதிப்புகளில் எல்லாம் வாழ்த்துக் கூறித் தம் நன்றியறிதலைப் புலப்படுத்தியுள்ளார். பிழைத் திருத்தமும் தாம் செய்த திருத்தங்களும் பட்டியலிட்டு அவரால் காட்டப்படுகின்றன. கலித்தொகை மூல பாடத்தை நச்சினார்க்கினியர் கொண்டவாறுபாலை,குறிஞ்சிமருதம், முல்லை, நெய்தல் என முறைப்படி வைத்துள்ளார். ஒவ்வொரு பக்கத்தின் அடியிலும் இலக்கணக் குறிப்புகள், இலக்கியப் பொருள் குறிப்புகள், பாட பேதம், பிரதிபேதம், மேற்கோள்கள் ஆகியவற்றை அடிகுறிப்புகளாக எழுதியுள்ளார். மேலும், சில இடங்களில் தன் கருத்தைத் தெளிவுபடுத்துவதற்கும் சி.வை.தா. அடிக்குறிப்பைப் பயன்படுத்தி உள்ளார். சூளாமணிப் பதிப்பில் சிறப்புப் பெயரகராதி ஒன்றையும் சி.வை.தா. அமைத்துள்ளார். நிறுத்தக் குறியீடுகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. சி.வை.தா. கலித்தொகைப் பதிப்பில் பின்பற்றிய பாடல் அமைப்பையே அவருக்குப்பின் வந்த எல்லாக்
37

Page 42
கலித்தொகைப் பதிப்பாசிரியர்களும் பின்பற்றியுள்ளனர். நாம் மேலே எடுத்துக் காட்டிய செய்திகளிலிருந்து சி.வை.தா. மிகச் சிறந்த பதிப்பாசிரியர்களில் ஒருவர் என்பதனைத் தெளிவாக உணர முடிகின்றது. அவருக்கு இருந்த இடர்பாடுகளை எண்ணும்போது இஃது ஒர் அருஞ்செயல் என்றே கூற வேண்டும்.
2. சிறப்பான பதிப்பாசிரியராக, சி.வை.தா. விளங்கிய போதிலும், தமிழ் நாடும் தமிழ் மக்களும் அப்பெருமகனார்க்கு அளிக்க வேண்டிய முறையான கெளரவத்தை-மதிப்பை அளிக்கவில்லை என்று இலங்கைத் தமிழ் அறிஞர்கள் பலரும் கருதுகின்றனர். பதிப்புத் துறையில் உ .வே.சா. சி.வை.தா. வுக்குப் பின்னர்தான் நுழைந்தார் என்றாலும், தமிழ் நாட்டு அறிஞர்களில் பெரும்பாலோர்சிவைதா.வின் பெருமையை மறைக்க முயன்றுள்ளார்கள் எனக் கூறுகின்றனர்:
இக்காலத்துப் பதிப்பாசிரியர்களிலே தலைசிறந்து விளங்கியவர்களாக ஆறுமுகநாவலரும் சிவைதாவும் பவானந்தம்பிள்ளையும் சாமிநாதையரும் கருதப்பட்டு வந்துள்ளனர். ஆனால் அவர்கள் எல்லேபரிலும் சாமிநாதய்யரே தற்காலப் பதிப்புத் துறையில் மேற்பட்டவராகச் சிறப்பிக்கப்படுகின்றார் குறிப்பாகத் தென்னகத் தமிழறிஞர்கள். அவரை மட்டுமே சிறந்த பதிப்பாசிரியராக எடுத்துப் போற்றுகின்ற ஒரு மரபும் நிலவிவருகின்றது (ம சண்முகதாஸ், 18343)
என, வருந்துகின்றார் அறிஞர் ம. சண்முகதாஸ்.
பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை தம் கட்டுரையொன்றில், சி.வை. தாமோதரம் பிள்ளை யாழ்ப்பாணத்திற் பிறந்த குற்றத்துக்காக அவர் சரித்திரமாகிய தமிழ்ச் சரித்திரத்தை மறைக்க முயல்வது நன்றிக் கேடு (இலக்கிய வழி, 1981:141} என வருந்தி எழுதியுள்ளார். கனக செந்தில்நாதனும் 'ஈழத்து இலக்கிய வளர்ச்சி” என்னும் நூலில் சி.வை.தா. வைத் தமிழ் நாடு மறந்து கேலி செய்தது; உண்மையை மறைத்தது என்று கூறுகின்றார் (ப. ரேணுகாம்பாள், 1991 97), இத்தகைய கூற்றுகளின் வன்மை மென்மைகளை ஆராய்வது நம் கடமை ஆகின்றது.
2.1 சி.வை.தா. வுக்கும் தமிழ் நாட்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்களுக்கும்-குறிப்பாக, சி.வை.தா.வுக்கும் உ.வே.சா.வுக்கு இடையில் நிலவிய உறவுகளை ஆராய்ந்தால், உண்மை ஒரளவுக்கு விளங்கும். சி.வை.தா. பற்றி உ.வே.சா. எழுதிய “என் சரித்திரம்” நூலில் வரும் சில பகுதிகள் சி.வை.தா. வின் பெருமையைக் குலைப்பனவாக உள்ளன என்பதில் ஐயமில்லை. ஆனால்,
38

“என் சரித்திரம்” என்ற நூல் உ.வே.சா. அவர்களின் வாழ்க்கை வரலாறு என்றாலும், அதனை அவரே எழுதியதரகக் குறிப்பு இல்லை. இது 06.01.1940 முதல் ஆனந்த விகடனில் தொடர் கட்டுரையாக வெளிவந்துள்ளது. உ.வே.சா. 1942இல் காலமாகும் வரை 122 அத்தியாயங்களே இதில் வெளிவந்துள்ளன. அவர் தம் 85 ஆம் ஆண்டில் இவ்வுரைத் தொடரை எழுதினார். ஆண்டின் முதிர்ச்சியால் அவர் சொல்லச் சொல்ல வேறு ஒருவர் எழுதிவந்தார் என்று தெரிகின்றது. எனவே"என் சரித்திரத்தில்” உள்ளவை முழுவதும் உ.வே.சா. வின் கருத்துகள் தாமா எனற ஐயம் நமக்கு ஏற்படுகின்றது. இது தொடர்பாக, பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை கூறுவது இங்கு ஒப்பு நோக்கத்தக்கது:
இப்பிற்காலத்தில் பல வசன நூல்களும் ஐயரவர்களால் வெளியிடப்பெற்றுள்ளன. இவைகள் இவர் நெடுங்காலமாகத் திரட்டி வைத்துள்ள குறிப்புகளினின்றும் எழுதப்பட்டவை. இவர் எழுதியது என நாம்நன்கறிந்துள்ள உரைநடைக்கும் இவ்வசன நூல்களிலுள்ள உரைநடைக்கும் பெரிதும் வேறுபாடு உள்ளது. ஆங்கில மணமும், இளமை எழுச்சியும் கலையுணர்ச்சியும் இவற்றில் பெரிதும் காணப்படுகின்றன. ஆனால், இவற்றிற் காணும் பொருள்கள் அனைத்தும் ஐயர்க்கே உரியன என்பதில் ஐயமில்லை (1968305)
வையாபுரிப்பிள்ளை அவர்கள் கூறுவது ஆழ்ந்து சிந்திக்கத்தக்கது. "என் சரித்திரத்தில்" சி.வை.தா. பற்றி இடம்பெற்றுள்ள செய்திகள் அனைத்தும் எந்த அளவுக்கு உண்மையானவை என்று இன்றைய நிலையில் உறுதி செய்து கொள்ள முடியவில்லை. 1883 ஆம் ஆண்டில் இறையனார் அகப்பொருள் உரையைத் தேடி சி.வை.தா. திருவாவடுதுறை ஆதீனகர்த்தருக்குக் கடிதம் எழுதினார். ஆதீனகர்த்தர் உ.வே.சா. மூலம் ஏட்டுப்பிரதிகளைத் தேடச்செய்து, சி.வை.தா. வுக்குக் அனுப்பினார். ஏட்டுப்பிரதிகள் அனுப்பப்பட்ட செய்தியை உ .வேசா, சி.வை.தா. வுக்குக் கடிதம் மூலம் எழுதினார். இக்கடிதம் “என் சரித்திரத்தில்"முழுமையாகப் பிரசுரிக்கப்பட்டுள்ளது (1990:552-3).சி.வை.தா.தனக்கு எழுதிய முதல் கடிதமாக உ.வேசா. இதனைக் குறிப்பிட்டுள்ளார். சி.வை.தா. கும்பகோணத்துக்கு வந்து வசிக்கப் போகிறார் (1885) என்று அறிந்து, உ .வே.சா. மகிழ்ந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது (மேலது.553). ஆனால், அதே சரித்திரத்தின் பின்பகுதியில் (ப570) தாம், சி.வை.தாவை திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் மேலகரம் சுப்பிரமணிய தேசிகருக்கு அறிமுகம் செய்து வைத்ததாகக்

Page 43
கூறியிருப்பது முன்னுக்குப் பின் முரணாக உள்ளது. ஆதீனகர்த்தர் 1883 ஆம் ஆண்டிலேயே உ.வே.சா. மூலம் சி.வை.தா. வுக்கு இறையனார் அகப்பொருள் உரை சுவடிகளையும் தணிகைப் புராணச் சுவடிகளையும் அனுப்பி வைத்துள்ளார். மேலும், 1881 ஆம் ஆண்டு சி.வை.தா. வால் பதிப்பித்து வெளியிடப்பட்ட வீரசோழியப் பதிப்புக்கும் தேசிகரே ஏட்டுச் சுவடிகளை வழங்கி உள்ளார். வீரசோழியப் பதிப்புரையில்,
பழம் பிரதிகளுள் பூரீல பூரீதிருவாவடுதுறைப் பெரிய சற்குருநாத சுவாமிகள் தயை கூர்ந்து கட்டளையிட்டருளியது. நெடுங்காலத்தது கைவிட்டுக் கடன்கொடுத்தகைப்பிரதிகள்திரும்பிஉடையார்பால் மீள்வதரிதாகிய இக்காலத்தில், முன் நம்மை அறியாதவர்களuபினும்நமதுபிரார்த்தனையைமாறாது கிருபைபுரிந்ததுமன்றிஆதீனத்துப்புழம்பிரதிகளுட்டல நாளாகத் தமது பரிசனத்தைக் கொண்டு தேடுவித்து எடுத்தனுப்பிய பரிபூரண கிருபைக்காக மிக்க கடமைப்பட்டிருக்கிறோம்(வீரசேழியம் 18828)
என்று புகழ்ந்துள்ளார். மேலும், சூளாமணிப் பதிப்புரையில் “நாலைந்து வருஷத்தின் முன் யான் பூரீ கைலாசப் பரம்பரைத் திருவாவடுதுறையாதீனச் சற்குரு நாத சுவாமிகள் பூரீ ல பூரீ சுப்பிரமணிய தேசிக மூர்த்திகளைத் தரிசிக்கப்போயிருந்தபோது சூளாமணிப் பதிப்பை சி.வை.தா. வெளியிட வேண்டுமென்று கட்டளையிட்டதோடு சென்னை மகாலிங்கையர் பிரதியொன்று தமது ஆதீனத்தில் இருந்ததை எடுத்துத் தன்வசம் கொடுத்தருளினார் என்றும் (சூளாமணி, 1889:97) எழுதியுள்ளார். இக்கூற்றின்படி சி.வை.தா. தேசிகரை 1884 அல்லது 1885 ஆம் ஆண்டில் சந்தித்திருக்கலாம். வீரசோழியப் பதிப்புக்கும் தேசிகரே சுவடிகள் அளித்த செய்தி அந்நூலின் பதிப்புரையில் குறிக்கப்பட்டுள்ளது. 1881 முதல் தேசிகருடன் கடிதம் மூலமாகத் தொடர்புகொண்டிருந்த சி.வை.தா.வைத் தாம் அறிமுகம் செய்து வைத்திருப்பதாக உ .வே.சா கூறியிருப்பது அவருடைய மறதியின் காரணமாக இருக்கலாம்! சி.வை.தா. கும்பகோணத்தில் தங்கியிருந்த காலத்தில் (1885) அவர் தேசிகரைச் சந்தித்தபோது உ .வே.சா. வும் உடன் இருந்திருக்கலாம். பெரும் செல்வாக்கோடு பெரும் பதவிகளையும் வகித்த சி.வை.தா.வை.பூரீல பூரீ சுப்பிரமணிய தேசிகர் அறியாமல் இருந்தார் என்பது நம்பும்படியாக இல்லை.
சிந்தாமணிப்பதிப்பு தொடர்பாக உ.வே.சா.வுக்கும் சி.வை.தா. வுக்கும் இடையில் நடைபெற்றதாக “என்

சரித்திரத்தில்" இடம்பெற்றுள்ள உரையாடல் (570-576) பகுதி சி.வை.தா. வின் புகழுக்கு இழுக்கு உண்டாக்கும் வண்ணம் உள்ளது. உ .வே.சா. சிந்தாமணியைப் பதிப்பிப்பதில் மிக்க தொல்லைகளுக்கு உட்பட்டு வருந்துவதைக் கண்டதால், பதிப்புப் பணியில் அனுபவம் மிக்க தன்னிடம் வேண்டுமானால் சிந்தாமணியைக் கொடுத்தால் தான் பதிப்பிப்பதாக சி.வை.தா. கூறியிருக்கலாம். 1887 இல் நடந்த ஒரு நிகழ்ச்சியை 1940 களில் தம் முதுமையில் ஒருவர் (85) சரியாக நினைவு கூர்ந்திருப்பார் என்று நம்ப இயலவில்லை. தம் சிந்தாமணிப் பதிப்புக்கு சி.வை.தா. இரண்டு பிரதிகள் கொடுத்திருந்ததை உ வே.சா. நினைவு கூர்கின்றார் (சீவக சிந்தாமணி, 1969:அ). மேலும், சிந்தாமணிப் பதிப்புக்குப் பொருள் இல்லாமல் 9 (3.6)16FT. சிரமப்படுவதை அறிந்த சி.வை.தா. "தமக்குத் தெரிந்த சண்முகம் செட்டியார் என்பவரிடம் காகிதம் வாங்கிக் கொள்ளலாம் என்றும் சில மாதங்கள் பொறுத்துப்பணம்கொடுக்கலாம் என்றும் எனக்கு எழுதியதோடு சென்னையிலிருந்த அக்கடைக்காரருக்கும் எழுதி எனக்கு வேண்டிய காகிதத்தைக் கொடுக்கும்படி செய்தார்” (என் சரித்திரம், 1990; 607-8) என்று உ.வே.சா எழுதுகின்றார். உ வே.சா. வின் சிந்தாமணிப் பதிப்பு வெளியாவதில் அக்கறை காட்டிய சி.வை.தா. தாம் சிந்தாமணியைப் பதிப்பிப்பதை விரும்பவில்லை என்று உ வே.சா. குற்றம் சுமத்தியிருப்பது நம்பத் தக்கதாக இல்லை. 1887 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் காகிதத்திற்கான பணத்தை அனுப்புமாறு 28.02.1887 இல் சி.வை.தா. ஒரு கடிதம் மூலம் உ.வே.சா.வை நினைவூட்டியுள்ளார். இது உ.வே.சா.வுக்கு ஒரு வேளை வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கலாம் !
22 சி.வை.தா. சிலப்பதிகாரத்தைப் பதிப்பித்து வெளியிடுமாறு உ வே.சா. வைக் கடிதம் மூலம் தூண்டி வந்தார். ஆனால், அவர் சிந்தாமணியை அடுத்து, சூளாமணியையே வெளியிட விரும்பி, அதில் கருத்தைச் செலுத்தலானார். உ.வே.சா.வின் எண்ணம் பின்வருமாறு வெளிப்படுகின்றது
இந்தநிலையில்தாமோதரம்பிள்ளைகுளமணியைப் பதிப்பிப்பதாகத் தெரிந்தது. அதனால் குளாமணியை அச்சிடும் முயற்சியை நிறுத்திக் கொண்டேன். சிலப்பதிகார . நூற்பதிப்பை உடனே மேற்கொள்வதையும் நிறுத்தினேன் (மேலது527)
இக்கூற்றும் உண்மைக்கு மாறாகத் தோன்றுகின்றது. உ .வே. சா. சிந்தாமணியைப்
39

Page 44
பதிப்பிப்பதை அறிந்து, அப்பதிப்பு முயற்சியில் ஈடுபடாது தம்மிடமிருந்த இரண்டு பிரதிகளை அவருக்குக் கொடுத்து,காகிதம்வாங்கப்பணத்துக்கும் ஏற்பாடுசெய்த சி.வை.தா, சிந்தாமணிக்கு முற்பட்டதென்று தாம் கருதிய சூளாமணியை பதிப்பிக்கத் தொடங்கினார் என்பதே உண்மை. சி.வை. தா. சூளாமணியை அச்சிடுவதை அறிந்த உ.வே.சா. தான் அதனை வெளியிடாதவாறு சி.வை.தா. தடுத்து விட்டாரே என்று வருந்தியிருப்பதாகத் தெரிகின்றது. இதனை சி. வை. தா. உ.வே. சாவுக்கு 23.02.1887 இலும் 27.01.1888 லிலும் எழுதிய
கடிதங்களிலிருந்து அறிய முடிகின்றது.
சூளாமணி முழுவதையும் ரங்கூனிலிருந்து அச்சிடுவதற்குப் பணம் கொடுத்தவர்களுக்காகப் பதிப்பிப்பதாக அக்கடிதங்களில் குறிப்பிட்டுள்ளார் சி.வை.தா. மேலும், தன் பதிப்பிலும் உ வே.சா. பதிப்பே சிறப்பாக இருக்கும் என்றும் பாராட்டியுள்ளார். சமணப் புலவர்களிடம் சூளாமணிச் சுவடிகள் இருந்தால் வாங்கி அனுப்புமாறும் உ .வே.சா.வை அவர் கேட்டுக் கொண்டுள்ளார் (ப. ரேணுகாம்பாள், 1991 கடித எண்கள் 6,7). இக்கடிதங்களிலிருந்து சி.வை.தா. தான் சூளாமணியை முதன் முதலில் பதிப்பிக்கத் தொடங்கினார் என்று தெரிகின்றது. தாம் பதிப்பிக்க வேண்டிய சூழ்நிலையை சி.வை.தா. எடுத்துக் கூறியும், உ வே.சா. மனம் மாறவில்லை. எனினும், உ.வே.சா.மீது எவ்விதமான வருத்தமும் கொள்ளாமல் நட்புப் பாராட்டி, சூளாமணிச் சுவடிகளைத் தேடித்தருமாறும் சி.வை.தா.கேட்டிருக்கிறார். உ .வே.சா. வோ சுவடிகளைப் பெற்றுத் தராததோடு, சி.வை.தா. மீது பழியையும் சுமத்த முற்பட்டுள்ளார் எனத் தெரிகின்றது.
22111892 ஆம் ஆண்டு சி.வை.தா. உ.வே.சா. வுக்கு எழுதிய கடிதத்தில் தாம் புறநானூற்றைப்பதிப்பிக்கப் போவதாகவும் தன்னிடம் உள்ள கையெழுத்துப்படியை அனுப்புமாறும் எழுதியிருந்தார். ஆனால், உ .வே.சா. இக்கடிதத்தைப்புறக்கணித்துவிட்டதாகவே தெரிகின்றது. தாம் பிரதி எதனையும் சி.வை.தா. வுக்கு அனுப்பாததோடு, தானே அதனைப் பதிப்பிக்க வேண்டும் என்று முடிவு கட்டினார். உ.வே.சா. திருவாவடுதுறை ஆதீனத்தார் சி.வை.தா.வுக்கு முன்னர் அனுப்பியிருந்த புறநானூற்றுச் சுவடியைத் தாம் நேரடியாகக் கேட்காமல், ஆதீனத்துக்குக் கடிதம் எழுதி அவர்கள் மூலம் சி.வை.தா. விடம் இருந்த ஆதீனப்பிரதியை உ.வே.சா. வாங்கியிருக்கின்றார் என்று தெரிகிறது. இவ்விவரம் 12.05.1893 இல் சி.வை.தா. உ .வே.சா.வுக்கு எழுதிய கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
40

புறநானூறு ஆதீனத்தார்பிரதியை அவ்வாதினத்தார் மூலமாக வருவியாது தாங்கள் என்னிடம் நேரே கேட்டு வாங்கினால் என் மனதிற்கு அதிக திருப்தியாகயிருக்கும். தாங்கள் கேட்டால் நான் கொடுத்தற்குப் பின்னிடுவேனென்றஞ்சினீர்களா? அப்படி அஞ்ச ஒரேதுவுங் காண்கிலேன் (ப. ரேனுகாம்பாள், 1991 கடித எண் 10)
ஆனால், சி.வை.தா.உ.வே.சா.இடம் எப்படி நடந்து ^ கொண்டிருக்கிறார்? தொடக்கத்திலிருந்து இறுதி வரை அவர் உ .வே.சா. மீது வருத்தமோ கோபமோ கொண்டதாகத் தெரியவில்லை. சி.வை.தா. பதிப்புப் பணியில் "எனக்கு அவரும் அவருக்கு நானுமே சாட்சி” என, உ.வே.சா. வைப் பாராட்டியுள்ளார். உ.வே.சா. வின் நூல்களை யாழ்ப்பாணத்தில் விற்றுக்கொடுத்திருக்கிறார். அவருடைய பதிப்புப் பணிகளுக்குத் தம் கையில் இருந்த பிரதிகளைக் கொடுத்து உதவியுள்ளார். பொருள் முட்டுப்பாடு ஏற்பட்டபோது, உ வே.சா.வுக்கு அவர் பண உதவியும் செய்து உள்ளார். இவ்வளவு தூரம் அவரை சி.வை.தா. போற்றிப்புகழ்ந்திருப்பினும், உ.வே.சா. ஏனோ அவரைப் பெருமைப்படுத்த முனையவில்லை. மாறாக, தமிழ் நூற் பதிப்பில் தமக்குப் போட்டியாக இருப்பவர் சி.வை.தா. என எண்ணி, அஞ்சினார் போலும் ! “என் சரித்திரத்தில்’ சி.வை.தா. மீது களங்கம் ஏற்படும் வண்ணம் நிகழ்ச்சிகள் புனையப்பட்டுள்ளன. சிவைதாவின் மறைவு குறித்து"என் சரித்திரம்'மெளனம் சாதிப்பது வியப்பளிக்கவில்லை !
3. பெரும்புகழுக்கும் சிறப்புக்கும் உரியவராக உவேசா, விளங்கினாலும், அவரிடத்திலும் குறைபாடுகள் இருந்தன. "வேறொருவர் வெளியிட்ட நூலைத் தான் வெளியிடுவதில்லை என்பதை ஒரு கொள்கை போலக் கடைப்பிடித்து வருவதாகக் கூறும் உவேசா, உண்மையில் அவ்வாறு நடந்துகொள்ளவில்லை என்று தெரிகின்றது. குறுந்தொகை, சிலப்பதிகாரம்,சிந்தாமணி போன்ற நூல்கள் உ .வே.சா. வுக்கு முன்பே பதிப்பிக்கப்பட்டிருந்தும் அவ்விவரங்களை அவர் மறைத்து விட்டார். ஒரு நல்ல பதிப்பாசிரியர்கடமைமுன்வந்தபதிப்புகள் பற்றித்தெரிவிக்க வேண்டியதே ஆகும். ஆனால்,உ.வே.சா.இந்த அடிப்படைக் கடமையை நிறைவேற்றவில்லை என்றே தெரிகின்றது.
பண்டை இலக்கிய இலக்கணங்களைப் பதிப்பிப்பதற்காக ஏடு தேடி வருவோர்களுக்கு ஏடுகளை ஈத்து உவக்கும் இன்பமும் உவேசாவுக்குக் கிட்டவில்லை என்கிறார் வையாபுரி பிள்ளை. தவிர்க்க முடியாத நிலையில் தான் உ வே.சா. சுவடிகளைத் தருவாராம் !

Page 45
அவ்வாறு தரும் பிரதிகளும் பயனற்றவைகளாகவே இருக்குமாம். இத்தகையமனப்பான்மை அவரிடம் இருந்தது தமிழ் மக்களது துர்ப்பாக்கியமே என்கிறார் வையாபுரிபிள்ளை. (மேலது: 298-99)
32 ஆனால், சிவைதா.வின் குணங்கள் உ.வே.சா. வின் இயல்புகளுக்கு மாறுபட்டவை. சிவைதா. பற்றிய ஒரு நல்ல சித்திரத்தை வையாபுரி பிள்ளை தம் தமிழ்ச் சுடர்மணிகளில் அழகுறத் தீட்டியுள்ளார்:
. பிள்ளையவர்கள் இக்கண்டனவுரை, வசவுரை முதலிய இடையூறுகளையெல்லாம் பொருட் படுத்தியவர்களேயல்லர்தமது அறிவொழுக்கங்களுக்கேற்ப, சிறந்த நற்குணமுடையவர்கள். அடக்கம் நிரம்பியவர்கள். எல்லாம் அறிந்த பெரும்புலவர் எனத் தம்மைக் கூறிக்கொள்ளவில்லை. தமக்குத்தெரியாதபொருள்களைப் பிறரிடங் கேட்டுணர்வதில் சிறிதும் கூச்சமற்றவர்கள். அவ்வாறு கேட்பது தமக்குச் சிறுமையாமென்று கருதியவர்களுமல்லர். தமிழன்னைக்குப் புரியும் திருத்தொண்டிற் பிற வித்துவான்களும் உழைத்துவர வேண்டுமென்ற கொள்கையையே உடையவர்கள். ஒருசிலர், தம்மைத் தவிரத் தமிழ் நூல்களைப் பதிப்பிடும் பணியில் இறங்கிய பிறருக்கெல்லாம் நரக தண்டனை விதித்துச் சபித்துவந்துள்ளார்கள். பிள்ளையவர்கள் இவ்வினத்தைச் சார்ந்தவர்கள் அல்லர். உண்மையான அன்போடு, உண்மையான தமிழ்த்தொண்டு புரிதலேபிள்ளையவர்களது வாழ்க்கையின் நோக்கமாயிருந்தது (மேலது.236)
33 சிவைதா. அவர்களையும் உ.வேசா,அவர்களையும் ஒப்பிட்டு நோக்கினோம். சி.வை.தா. வுக்குப் பின்னர் உ வே.சா. பதிப்புப்பணியில்ஈடுபட்டாராயினும் காலப்போக்கில் அவரே சிறந்த பதிப்பாசிரியர் என்று புகழ் பெற்றதற்குக் காரணங்கள் சில இருந்தன என்பதனை நாம் மறத்தல் ஆகாது. அவற்றுள் முதன்மையானது உ .வே.சா. அவ்வப்போது தன் பதிப்புகளை மறுபதிப்புச்
பதிப்பும் முந்திய பதிப்பைவிட, பலவகைகளிலும் திருத்தம் பெற்றன. சி.வை.தா. தம் நூல் எதனையும் மறுபதிப்புச்
மேற்கோள் நூல்கள்
1. கணபதி பிள்ளை, சி. பண்டிதமணி, இலக்கிய வழி 1981,
சுன்னாகம், 2. சண்முகதாஸ் மனோன்மணி, சி.வை. தாமோதரம் பிள்ளை
ஒர் ஆய்வு நோக்கு 1983, யாழ்ப்பாணம். 3. சாமிநாதையர், உ வே, என் சரித்திரம், 1990, டாக்டர் உ.வே.
சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை. 4, ................................................. சீவகசிந்தாமணி மூலமும் உரையும், 1969, சென்னை.

செய்ததாகத் தெரியவில்லை. மற்றொரு முக்கிய காரணம் ஐயரவர்கள் பதிப்பித்து வெளியிட்ட நூல்களின் முக்கியத்துவம் ஆகும். சிலப்பதிகாரம், புறநானூறு, பதிற்றுப் பத்து, பத்துப்பாட்டு போன்றவை தமிழ் நாட்டின் அரசியல் வரலாற்றை விளக்குவதற்குப் பெருந்துணை புரிந்தன. வரலாற்று ஆராய்ச்சிக்கு இந்நூல்கள் எடுத்துக் கொள்ளப்பட்டதால், இந்நூல்களின் பதிப்பாசிரியரான உ வே.சா.வின் புகழ் பல துறைகளிலும் பரவியது. சி.வை.தா. பதிப்பித்த நூல்கள் இத்தகைய வரலாற்றுச் சிறப்புகளை விளக்கவில்லை. உ.வே.சா. மக்கள் தொடர்புச் சாதனங்கள் பெருகியகாலத்திலும்-இந்தியர்கள்படிப்படியாகச் சுயஆட்சி பெற்றுக்கொண்டிருந்த காலக் கட்டத்திலும் - வாழ்ந்த காரணத்தால் அவரைப் பற்றிய செய்திகள் எல்லாருக்கும் எட்டடின சி. வை. தா. வுக்கு இந்த வாய்ப்பு கிட்டவில்லை. உ.வே.சா ஒவ்வொரு பதிப்பிலும் எல்லாரும் எளிதில் புரிந்துகொள்ளும் நடையில் நீண்ட ஆராய்ச்சி முன்னுரைகளை எழுதி வெளியிட்டார். அவரோடு ஒப்பிடும்போது, சிவைதா. வின் உரைகள் சுருக்கமானவை. உ வேசா, பதிப்புப் பணிகள் அல்லாமல் தனி நூல்களும் எழுதினார். அவை அவருக்குப் பெருந்தொகையான வாசகர்களை உண்டாக்கின. சி.வை.தா. தனிநூல்கள் எதுவும் எழுதியதாகத் தெரியவில்லை.
4. சிவைதா. பற்றி இதுவரை கிடைத்துள்ள தகவல்கள் போதுமானவை அல்ல. உ வே.சா. வுக்கு அவர் எழுதிய கடிதங்கள் போல பிறருக்கும் அவர் கடிதங்கள் s ருக்கலாம். உவேசா, உள்ளிட்ட பலர் அவருக்கு அவ்வப்போது பதில் கடிதங்கள் எழுதியிருக்கலாம். அவருடைய பதிப்புப் பணி உள்ளிட்ட அனைத்துப் பணிகள் தொடர்பான தகவல்களும் திரட்டப்பட்டு ஆராயப்பட வேண்டும். அத்தகைய ஆராய்ச்சியின் விளைவாக சிவைதா. வின் பன்முகச் சிறப்புகளை உலகம் உணர்ந்து கொள்ளும்,
காமோதிவண்டர்கடிமலர்த்தேன் கூட்டுதல்போல் நாம்ஒது செந்தமிழ்நன்னூல் பலதொகுத்த தாமோதரம்பிள்ளைசால்பு எடுத்துச் சுற்ற எவர் தாமோதரமுடையார்?தண்டமிழ்ச்செந்நாப்புலவீர்!
-விகோ குரியநாராயண சாஸ்திரிபார்
༄
5. தாமோதரம் பிள்ளை, சி.வை, நல்லந்துவனார் கலித்தொகை.
நச்சினார்க்கினியர் உரை, 1887, சென்னை. 6 டவீரசோழியம்மூலமும்பெருந்தேவனார்உரையும் 1881சென்னை 7. வையாபுரி பிள்ளை, எஸ். தமிழ்ச் சுடர்மணிகள், 1968,
பாரிநிலையம், சென்னை m 8. ரேணுகாம்பாள், ப.சி. வை. தாமோதரம்பிள்ளை பதிப்புப் பணி
ஒர் ஆய்வு, 1991, (புதுவைப் பல்கலைக்கழகம், காரைக்கால் (அச்சில் வெளியிடப்படாத எம்பில், ஆய்வேடு),
41

Page 46
தமிழ் இலக்கிய
பழமையும்
இந்நூற்றாண்டில் பெரிதும் செல்வாக்கு மிக்கவைகளாக விளங்கிய விளங்குகிற தமிழ் இலக்கியத்திறனாய்வுப் போக்குகளைச் சுருக்கமாக அடையாளப்படுத்துவதற்கு இக்கட்டுரையில் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. எனவே நூலின் பெயர், எழுத்தாளர்களின் பெயர் ஆகியவற்றிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கட்டுரை தயாரிக்கப்பட்டிருக்கிறது.
ஆங்கிலக்கல்வி, எல்லோருக்குமான பொதுக்கல்வி முறை தோட்டத் தொழில், தொழிற்சாலைகள், மக்களின் இடப்பெயர்ச்சி, அச்சுக்கலை, பத்திரிகைத் தொழில், கிறித்துவமதம், புதினம், சிறுகதை, புதுக்கவிதை ஆகிய இலக்கிய வகைமைகள், பாடத்திட்டத்தில் தமிழ் இலக்கியக்கல்வி முதலிய புதிய கூறுகளின் வருகை இந் நூற்றாண்டிற்கான தமிழ் வாழ்க்கையை வடிவமைப்பதில் பெரும்பங்கு செலுத்தின. இந்த வாழ்க்கைமுறைகள் இந்திய அளவில் தேசிய விடுதலை இயக்கத்தையும், தமிழ் நாட்டளவில் தமிழின மறுமலர்ச்சி இயக்கங்களையும் உருவாக்கின. தமிழ்நாட்டில் இம்மறுமலர்ச்சி என்பது இம்மண்ணுக்குரிய அடிப்படையில் சாதி, சமயம், இனம், மொழி; என்ற நான்கின் அடிப்படையில் வேகம் பெற்றது. இவ்வியக்கங்களின் வளர்ச்சிக்கு ஏற்ப கருத்தாக்கங்களைத் தயாரிக்கும் முயற்சிக்கு அடிப்படைக் கோட்பாட்ாக விளங்கியது தம்மேம்பாட்டுக் கொள்கை ஆகும். எனவே தங்களின் பழமையின் மேல் ஒரு புனிதம், பெருமை, பாசம் ஆகியவற்றைக் கற்பிக்கிற பார்வை பண்பாட்டுத் தளத்தில் இயங்குபவர்களிடம் மேலோங்கியது. இந்நிலையில் பழைய இலக்கியங்களை மீட்டு எடுத்து, அதற்கொரு இடத்தைப் பிடிக்கிற பணியில் மூலபாடத் திறனாய்வும், பழைய உரைமரபுத் திறனாய்வும் இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் பெரிதும் செல்வாக்குச் செலுத்தியுள்ளன.
இன்றைக்கு நமது கையில் இருக்கிற பழைய இலக்கியப் பிரதிகள், அப்பிரதிகளுக்குக் கொடுக்கப்பட்டுள்ள விளக்கங்கள் எல்லாமே, மறுமலர்ச்சி இயக்கத்தின் கருத்தாக்கங்களுக்கு ஏற்பத்
42

த் திறனாய்வு : புதுமையும்
க. பஞ்சாங்கம்
\தயாரிக்கப்பட்டவைதாம் என்ற விழிப்புணர்வு, இந்நூற்றாண்டின் இறுதியில் வாழ்கின்ற நமக்குத் தேவைப்படுகிறது. இந்த மறுமலர்ச்சிக் காலக் கருத்தாக்கங்களை உள்வாங்கிக் கொண்டு செயற்பட்டவர்களில் கல்வியாளர்கள் பெரும்பங்கு வகிக்கிறார்கள். தமிழ்ச்சமூகத்தில் புதிதாக உருவான இக்கல்வியாளர்கள் இந்நூற்றாண்டில் கருத்துக்களைப் பரப்புவதில் பெரும்பங்கு வகிக்கிறார்கள். இவர்களால் பழைய இலக்கியங்கள் சமூகத்தில் பரவலாக அறிமுகமாயின;பற்றி நூல்களும் மலிவுப் பதிப்புக்களும் குவிந்தன. கல்வி எல்லோருக்கும் என்பது போலவே இலக்கியமும் எல்லோருக்கும் என்று ஆனது முக்கியமான ஒரு நிகழ்வு ஆகும். பத்திரிகைகளின் வளர்ச்சியினால்
எங்கு பார்த்தாலும் அரசியல் சொல்லாடல்கள் பெருகியது போலவே இலக்கியம் பற்றிய சொல்லாடல்களும் நிகழத் தொடங்கின. வாசித்தல் என்பதைத் தாண்டி வாசித்ததைப் பற்றிப் பேசுதல் என்பதுக்கான அடித்தளம் இம்மறுமலர்ச்சிக்கால எழுத்தாளர்களால் போடப்பட்டுள்ளது. இவர்கள் பின்பற்றிய உரைமரபுத் திறனாய்வு, இடைக்கால உரையாசிரியர்கள் தங்கள் உரையில் மாணவர்களுக்கு நடத்துவது போல நடத்திக் காட்டும் நிகழ்த்துதல்' என்ற ஓர் உயிரான பகுதியை இழந்து நிற்பதால், இவற்றைப் பண்டிதத்தனம் என்றும், வெறும் விவரப்பட்டியல் என்றும், அனுபவதரித்திரம் மிக்கவை என்றும் மலட்டுத்தனமும் மொண்ணைத்தனமும் நிறைந்தவை என்றும் நவீனத் திறனாய்வாளர்கள் விமர்சித்துள்ளனர்.
நவீன இலக்கியத் திறனாய்வு எப்போது தோற்றம் பெறுகிறது என்றால் நவீன இலக்கியங்கள் பற்றிய சொல்லாடல்கள் பெருகும் போதுதான். தம் மேம்பாட்டுக் கொள்கை அடிப்படையில் பழைய இலக்கியப் பெருமையில் மூழ்கிக்கிடந்த கல்வியாளர்கள் நடுவே சிறுகதை, புதினம், புதுக்கவிதை ஆகிய புதிய இலக்கிய வகைகளை நிலைநாட்டும் முயற்சியில், இக்காலத் திறனாய்வு - அதாவது மேலை நாட்டுத் திறனாய்வைப் பின்பற்றும் திறனாய்வு - வலுவாக உருப்பெற்றுள்ளது. பாடு

Page 47
பொருளை மையமாக வைத்தே கல்வியாளர்கள் இலக்கியத்தை அணுகிக் கொண்டிருந்தபோது நவீன இலக்கியம் சார்ந்த இவர்கள்,அழகியல்,இலக்கியச்சுவை வடிவம், உத்தி, சோதனை என்னும் இலக்கியத்திற்குள்ளேயே நின்று பேசினார்கள், இவர்கள் பெரும்பாலும் படைப்பாளிகளாகவும் வாசகர்களாகவும் திறனாய்வாளர்களாகவும் ஒரே நேரத்தில் விளங்கினார்கள். அதனால் தான் "திருக்குறள் இலக்கியமா? என்று ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டுத் தமிழ் உலகைக் க.நா.சு. வால் அதிர்ச்சிக்குள்ளாக்கமுடிந்தது. இவர்கள் இலக்கியத்தில் தெய்வீக ஆற்றல், பேருணர்ச்சி, அனுபூதிநிலை, உன்னதம், தரிசனம், அனுபவம் முதலிய சொற்களால் இலக்கியத்தை எல்லாவற்றையும் விட மேலாகக் கொண்டாடினர். இலக்கியத்தை ஒரு தனி'உயிரியாக அடையாளம் கண்ட்னர் சார்பற்றது என்றனர். எதற்காகவும் இலக்கியத்தை விட்டுக் கொடுத்து விடக்கூடாது என்று வாதாடினர். இலக்கியத்தனம் என்ற ஒன்றிற்கான இவர்களின் வெறித்தனமான வாதம் இதுவரைத் தமிழிலக்கிய உலகம் கண்டறியாத ஒன்றாகும், வடிவ இயல் திறனாய்வாளர்கள் என்று அடையாளப்படுத்தப்படும் இவர்கள் நிறுவனங்களுக்கு வெளியே நின்று சுதந்திரமாக எழுதியதாலும் தங்களின் புதிய இலக்கிய முயற்சியைப் பாதுகாத்து நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற உந்துலாலும் பத்திரிகைகளோடு தொடர்பு கொண்டு இயங்கியதாலும் இவர்களின் இலக்கியம் பற்றிய புதிய அணுகு முறை இளைஞர்களிடையே GJEGLOTAFL" பரவியது. மற்றொன்றையும் இங்கே குறிக்க வேண்டும், இவ்வடிவ இயல் திறனாய்வாளர்கள் "தரம்' பற்றிப் பெரிதும் கவலையோடு பேசியுள்ளார்கள். "இலக்கியம் எல்லாச்சாதியினர்க்கும்" என்ற நிலை உருவாகிறபோது, தங்களின் அதிகார உயர்சாதி நிலைப்பாட்டை உறுதி செய்துகொள்ள அறிந்தோ அல்லது அறியாமலோ,இந்தத் 'தரம்” என்ற முழக்கத்தை உயர்த்திப் பிடித்துள்ளனர். அதுவும் வெளியே அரசியல் சூழல் தங்களுக்குச் சாதகமாக இல்லாத நிலையிலும், மறுமலர்ச்சி அரசியலில் இலக்கியத்திற்கும் அரசியலுக்கும் வேறுபாடற்ற ஒரு சூழல் உருவாகி விட்ட நிலையிலும் உயர்சாதி இளைஞர்கள் இத்தகைய திறனாய்வு நெறிமுறையில் வேகமாகத் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.
கோபுர அடுக்குப் போன்ற ஒரு சாதீயச்சமூகத்தில் கருத்துக்களை உருவாக்கிவிடும் ஒர் அமைப்பாகத் திரண்டு, அதையே வாழ்நெறியாகப் கொண்டியங்கும் உயர்சாதிக்காரர்கள் இவ்வடிவவியல் திறனாய்வைப்

பெரிதும் சார்ந்து இயங்கியது தற்செயலானது அல்ல இதுவும் அரசியல் தான். ஆனால் இவர்கள் இந்த அரசியலை மறைத்து, இலக்கியக் கோட்பாடாக வெளிப்படுத்த முடிந்தது. இவர்களின் ஆங்கிலப் புலமையும் தலைமைதாங்கும் அனுபவமும், தங்களுக்கான அரசியலை இலக்கியத் திறனாய்வுக் கோட்பாடுகளாக வடிவமைத்து வெளியிட வாய்ப்பாக அமைந்துள்ளன. இவர்களால் உளவியல் திறனாய்வு, புதியதிறனாய்வு சமூகவியல் திறனாய்வு பகுப்பாய்வுத் திறனாய்வு என்று பலவிதமான திறனாய்வு அணுகுமுறைகள் அறிமுகமாயின. ஐஏரிச்சர்ட்ஸ், டி.எஸ்.எலியட் முதலிய மேலை இலக்கியத் திறனாய்வாளர்களைப் பின்பற்றித் தமிழில் அறிமுகப்படுத்தினர். இங்கே ஒன்றைக் குறிப்பிட வேண்டும். உண்மையில் மறுமலர்ச்சி இயக்கத்தால் தோன்றிய இலக்கியச் சொல்லாடல்களைக் கல்வியாளர்கள் இலக்கியக் கோட்பாடுகளாக வளர்த்து எடுத்திருக்க வேண்டும் மேலை நாடுகளிலும் அரசியல் சமூக இயக்கங்கள் தாம் இலக்கியம் பற்றிய கருத்தாக்கங்களின் மாற்றங்களுக்குக் காரணமாக இருக்கின்றன. ஆனால் அங்கே இவ்வாறு அரசியல் கருத்துக்களாகவே இல்லாமல் அவற்றை இலக்கியக் கோட்பாடாக வளர்த்தெடுக்கக் கூடிய சூழல் இருக்கின்றது. தமிழில் மறுமலர்ச்சிக்காலத் திறனாய்வாளர்களிடம் இந்தத்தன்மை இல்லை! அதனால் தான் இன்றும் வெங்கட் சாமிநாதன் போன்றவர்களால் திராவிட இயக்கங்களால் ஏற்பட்ட இலக்கிய விளைச்சல்களை ஏற்றுக் கொள்ள முடியாத சூழல் நிலவுகிறது. இலக்கியக் கல்வி பிற துறை அறிவோடும் முறையியலோடும் உரசிவளர (LAty lum5Uly. தனிமைப்பட்டுக்கிடக்கிறது. தாய்மொழி வழிக் கல்வி இல்லாதபிறதுறை அறிவைத்தாய்மொழியில் பெற்றிராத எந்த இனத்திற்கும் இதுதான் கதி இலக்கியக்கல்வியில் கோட்பாடு ரீதியாக ஒரு குறிப்பிட்ட தர்க்கம், முறையியல் புலப்பட எழுதுகின்றவர்கள் தமிழ்ச் சூழலில் யாரென்று பார்த்தால், அவர்கள் விஞ்ஞானப்பாடத்தைப் படித்தவர்களாக இருப்பார்கள். அல்லது தாய்மொழிவழிக் கல்வி உள்ள இலங்கையைச் சார்ந்தவர்களாக இருப்பார்கள். வடிவஇயல்திறனாய்வாளர்களை அடுத்து வளர்ந்த மார்க்சீயத் திறனாய்வாளர்களிடம் தங்கள் அரசியல் கருத்துக்களை இலக்கியக் கோட்பாடுகளாக அறிமுகப்படுத்தும் தன்மை அதிகம் புலப்படத் தொடங்கியதைக் காண முடிகிறது.
வடிவ இயல் திறனாய்வாளர்களால் GelJEFLMTGCT வளர்ச்சிக்கு உள்ளானவர்கள் மார்க்சீயத் திறனாய்வாளர்கள் தாம். ஏற்கனவே, மார்க்சீய

Page 48
விமர்சனத்திற்கான பின்புலம், அரசியல் ரீதியாக இங்கே உருவாக்கப்பட்டிருந்தது. மாஸ்கோ பதிப்பகத்தின் மொழி பெயர்ப்புப் புத்தகங்கள் குறைந்த விலையில் படித்தவர்கள் கையில் போய்க்கிடைக்கும் படியான ஒரு சூழல் ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் வடிவ இயல்திறனாய்விற்கு எதிராக, மார்க்சீயத் திறனாய்வுக் கருத்துக்கள் முழு மூச்சுடன் முன்வைக்கப்பட்டன. உண்மையில் மார்க்சீயத் திறனாய்வுநூல்கள் தோன்றிய அளவிற்குத் தமிழில் வேறு திறனாய்வு நூல்கள் தோன்றவில்லை இதற்கு மற்றொரு காரணம் 1967ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, அதன் நடவடிக்கையில் ஏமாற்றம் கண்ட பல இளைஞர்கள் இடது சாரி அரசியல் கருத்தாக்கங்களால் கவரப்பட்டு வந்ததும் ஒரு முக்கியமான நிகழ்வு ஆகும்.
மார்க்சீயத் திறனாய்வு தமிழ்ச் சூழலில் பெரிதும் ஆற்றலுடன் செயல்பட்டு பழைய கருத்தாக்கங்கள் பலவற்றைச் சிதைத்திருக்கிறது: “ சங்க இலக்கியம் புனிதமானது அக்காலம் ஒரு பொற்காலம்” போன்ற கருத்துக்கள் தலைகீழாக மாற்றப்பட்டு, சங்ககாலச் சமூகத்தில் வர்க்க வேறுபாடு இருந்தது, பெண்ணடிமை இருந்தது; வறுமை தலை விரித்தாடியது என்றெல்லாம் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. சிலப்பதிகாரம் வணிக சமூகத்தின் எழுச்சிக்கான அடையாளம் எனக் கூறப்பட்டது. இராமன் சகோதரத்துவம் நிறைந்தவனாக முன்னிறுத்தப்-பட்டான், நந்தனார் சரிதம்பள்ளுப்பாடல் முதலியன ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக வெளிக் கொணரப்பட்டன. பக்தி இயக்கம் மக்கள் இயக்கமாக விளக்கம் பெற்றது. இவ்வாறு பழந்தமிழ் இலக்கியங்கள் மார்க்சீயத்திறனாய்வினால் புது விளக்கம் பெற்றதோடு, பொதுவாகவே இலக்கியம், அழகியல் உள்ளடக்கம், வடிவம், துன்ப இயல், கலையின் தோற்றம், கலைஞனின் சுதந்திரம், கலையின் நிரந்தரத் தன்மை, கலைக்கும் தத்துவத்திற்கும் உள்ள உறவு, கலைக்கும் உளவியலுக்கும், கலைக்கும் மானுடவியலுக்கும், கலைக்கும் அரசியலுக்கும், உள்ள உறவுகள் என்று பல தளத்தில் இலக்கியக் கல்வியை நடத்துவதற்குமார்க்சீயத் திறனாய்வு துணை போகிஉள்ளது. மேலும் யதார்த்தவாதம் சோசலிசயதார்த்தவாதம், பிரதிபலிப்புக் கொள்கை ஆகியவைகளாலும் வரலாற்றுப்பொருள் முதல் வாதம், முரண்பாடுகளின் ஒற்றுமை, அளவுமாறுபாடும் குணமாறுபாடும், நிலைமறுப்பின் நிலைமறுப்பு ஆகிய இயங்கியல் தத்துவக் கூறுகளாலும், அந்நியமாதல் என்கிற பார்வை மூலமாகவும் இலக்கியம்பற்றியும் மனித வாழ்வு பற்றியும் ஆழமான ஒரு தளத்தில் சொல்லப்படுவதற்கு மார்க்சீய விமர்சனம் தமிழ்ச்சூழலில் சிறப்பாகப் பயன்பட்டுள்ளது. ஆனாலும் கொச்சையான
44

உள்ளடக்கவாதமாக மார்க்சீயத் திறனாய்வைச் சிலர் சுருக்கித் தாங்கள் சார்ந்த நிறுவனத்திற்கு ஏற்ப எழுதிய எழுத்தானது, வடிவ இயல்திறனாய்வாளர்களின் மார்க்சீய விமர்சன எதிர்ப்பிற்கு உரம் ஊட்டுபவைகளாக அமைந்தன என்பதையும் சுட்ட வேண்டும்; இந்த நிறுவனம் சார்ந்த இறுகிப் போன அதிகாரப் போக்கு மார்க்சீய விமர்சனத்தைத்தாண்டிச் சிலர் செல்வற்கும் வழி ஏற்படுத்தியது என்பதையும் குறித்துக்கொள்ள வேண்டும்.
மார்க்சீய விமர்சனத்தில் ஈடுபட்டவர்கள் தங்களின் புரிதலுக்கு ஏற்பப்பல்வேறு தளத்தில் இயக்கம் கொண்டிருந்தார்கள். இவர்கள் எல்லோருமே வரலாற்றுப் பார்வை, சமூக நோக்கு, அழகியல் அக்கறை ஆகிய மூன்றையும் ஒன்றுக்கொன்று அனுசரணையாகவும், ஒன்றையொன்று பின்னிச் சார்ந்தனவாகவும் கொண்டு தங்களின் இலக்கிய விமர்சனத்தை நடத்தி உள்ளனர் என்றாலும், வடிவ இயல் திறனாய்வின் போதாமையை மிகச் சரியாகவே சுட்டிக்காட்டி உள்ளனர் என்றாலும், உருவம்/உள்ளடக்கம் என்று க.நா.சு. போட்ட வளையத்திற்குகுள்ளே தான் இயங்கி உள்ளார்கள் எனத் தோன்றுகிறது. தனக்கு எதிர்நிலையாக ஒன்றைப் புனைந்து கொண்டு செயல்படுகின்ற எந்தச் செயலும், அவற்றில் இருந்து மீறி வெளியே வரமுடியாமல் அவற்றிற்குள்ளேயே சிக்கிக்கொள்கிறது. ஆனாலும் மார்க்சீயத் திறனாய்வின் வளர்ச்சிக்கு முன்னால் , பல்கலைக்கழகங்கள் கூட வளைந்து கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மற்றொரு பக்கத்தில், இத்திறனாய்வின் வீச்சினால், இரண்டாம் உலகப் போருக்குப்பின் மேலைய நாட்டில் மாபெரும் இலக்கிய சாதனைகள் புரிவதற்குப் பெரிதும் காரணமாக அமைந்த நவீனத்துவம், பிற்கால நவீனத்துவம் என அடையாளப்படுத்தப்படும் இலக்கியக் கோட்பாடுகளை இங்கே அவைகளுக்கே உரிய ஆழத்தோடு அறிமுகப்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டது. தமிழ் இலக்கியத் திறனாய்வு உலகிற்கு இது மாபெரும் இழப்பு என்பதை இன்று பலர் உணர்கின்றனர்.
வடிவ இயல் திறனாய்வாளர்கள் போட்ட உருவம் உள்ளடக்கம் என்ற வளையத்திற்கு வெளியே வர முடிந்தவர்களுள் முக்கியமானவராக விளங்குபவர் தமிழவன் ஆவார். தமிழவன் தமிழ் மாநிலத்திற்கு வெளியே இருக்கிறார்; தேடல் குணம் மிக்கவர்; இறுகிய மார்க்சீயத்திற்குள் அகப்படாதவர் ஆகிய காரணங்களும் இருந்தாலும், அவரால் அவ்வாறு திமிறிக் கொண்டு வெளியேவர முடிந்தமைக்குக் காரணம், தமிழ்ச் சமூகச் சூழலில் ஏற்பட்ட மாற்றங்களாகும் திராவிட இயக்கம் ஆட்சிக்கு வந்தபோது, இடதுசாரி இயக்கத்திற்கு

Page 49
நம்பிக்கையோடு வந்த பல இளைஞர்கள் உட்படப் பலரும் இடதுசாரி இயக்கத்திலும் நம்பிக்கை இழந்து போக வேண்டிய சூழல் ஏற்பட்டது. தீவிரவாத இயக்கங்கள் உட்பட அனைத்தும் சிதறிபோயின. மேலும் நிறுவனமாக இறுகிப்போன இயக்கங்களின் சலிப்புத்தரும் நடவடிக்கைகள், போலி வேடங்கள் எல்லாம் எதிலும் நம்பிக்கை கொள்ள முடியாத சூழலை உற்பத்தி செய்தன. இந்திய மார்க்சீயத் அமைப்புக்குள்ளேயும் உலக மார்க்சியத்துக்குள்ளேயும் பல வினாக்கள் எழத்தொடங்கி விட்டன. ஏகாதிபத்தியத்தின் புதிய முகங்கள், தகவல் தொடர்புக் கருவிகளின் கொடூரமான ஆக்கிரமிப்பு எல்லாமே சிந்திப்பவனை நிலைகுலையச் செய்தன. மார்க்சீயத்திற்குள்ளேயே செயல்படும் அதிகாரம் பற்றிய விமர்சனங்கள் கூர்மையாக வெளிவரத் தொடங்கிவிட்டன. இத்தகைய நம்பிக்கையற்ற சூழலில்தான், 1982ல் அமைப்பியல் சிந்தனைகளின் வரவு எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தது. "புரியவில்லை” தமிழ்ச் சூழலுக்குப் பொருந்துமா? மார்க்சீயத்திற்குள் இச்சிந்தனை இல்லையா? மார்க்சீயத்திற்கு இது எதிர் இல்லையா? என்றெல்லாம் எல்லாவிதமான முணுமுணுப்புகளுடன் அமைப்பியல் சிந்தனைகள் இங்கே நுழைந்தன. ஆனால் தீவிர மார்க்சீயவாதிகளாக மார்க்சீயத்தை எழுத்தெண்ணிப்படித்தவர்களாகத் தங்களை முன்னிறுத்திக் கொள்ள முயன்றவர்கள், நம்முடன் மார்க்சீயம் பேசிக் கொண்டிருந்தவன், அமைப்பியலை முதலில் அறிமுகப்படுத்தி தான் பெரிய அறிவுத் தேடல் மிக்கவன் என்ற, பேரை எடுத்துவிட்டானே என்று தனிமனிதப் பார்வையில் அமைப்பியலை ஏற்கத்தயங்கியவர்கள் உட்பட அனைவரும் இன்று அமைப்பியல் சிந்தனைக்குள் வந்த விட்டனர்; எளிதாக எதையும் உள்ளே விடமறுக்கும் பல்கலைக்கழகக் கருத்தரங்கு அறையில் கூட இன்று ரோலன்பெர்த், லெவிஸ்ட்ராஸ், ழாக் தெரிதா, ழாக் லெக்கான், மிஷல்ஃபூக்கோ முதலிய பெயர்கள் ஒலிக்கத் தொடங்கி விட்டன எனலாம்.
சசூரின் மொழி பற்றிய கோட்பாடு, ஆசிரியனை மையப்படுத்தியே பிரதியை மையப்படுத்தியே பார்த்துவந்த பழைய பார்வையை உடைத்து வாசகனை மையப்படுத்திப் பார்க்கும் படி செய்துவிட்டது. ஒரு பிரதிக்குள் குத்துக் கோட்டிலும் கிடைக்கோட்டிலும் குறுக்கும் நெடுக்குமாக ஒடும் பல கூறுகளைக் கணக்கில் எடுக்கவேண்டும். ஒவ்வொரு வார்த்தையும் பிரதியும் இலக்கணக்காரர்களின் மொழிக்கான அர்த்தத்தைக்களைந்து விட்டு, வேறொரு தளத்தில் இயங்குகிறது. அதாவது அந்தப்பிரதியின் அமைப்பு

வேறொரு மொழியைத் தன் உள்தர்கமாக கொண்டுள்ளது; அந்தச் சொல்லாடலை வாசகன் தனக்கான மொழியை வைத்து அர்த்தம் கற்பித்துக் கொள்ளுகிறான். இவ்வாறு எல்லாமே வித்தியாசப்படுத்துவதன் மூலமாக தரப்படுத்துவதன் மூலமாக அர்த்தத்தளத்தை உருவாக்கிக் கொள்ளும் மொழியின் சுதந்திரம் தரமான விளையாட்டு ஆகும். அதனால்தான் அல்தூசர் "மனித சமூகத்தின் மொத்த வர்க்கப்போராட்டத்தையும் ஒருவர்த்தைக்கும் மற்றொரு வார்த்தைக்கும் நடந்த சண்டையெனச் சுருக்கிக் 5, paura" Tsirsprit. (Popular Fictions, 1986).
305 பிரதியைப் புரிந்து கொள்வது என்பது அதில் உறைந்துள்ள இடைவெளிகள், மெளனங்கள், பல குரல்கள் ஆகியவற்றைத் தேடிக் கொண்டே இருப்பதில்தான் இருக்கிறது. இத்தகைய தேடலைப் பின்பற்றித்தான் ஆண்டாளின் திருப்பாவை என்ற பிரதிக்குப் புதிய அர்த்தங்கள் இன்றைக்குக் கிடைக்கின்றன. நான் நீ; உடல்-உயிர் முதலிய எதிர் நிலைகளை முன்னிறுத்தி ஆராயும் போதும் பல முகங்களை ஒரு பிரதியில் காண நேர்கிறது. இவ்வாறு பன்முகமாக பிரதியைப் பார்க்கப் பழகுகிற வாசகன், அதிகாரத்திற்குத்துணை போகும் ஒற்றைப் பொருள் கொள்ளும் கொடுமையில் இருந்து தப்பிக்கின்றான்; ஆதிக்கங்களின் இருத்தலுக்கான தர்க்கத்தை உள்ளும் புறமும் உடைத்துக் கொண்டே இருப்பதன் மூலம் தன்னை ஒரு சுதந்திரமான உயிரியாகக் காப்பாற்றிக் கொள்ளுகிறான்; அப்பொழுது இந்தக் குறிகளின் கும்பலுக்குள் சிக்கிக் கரைந்து அடையாளம் இழந்து போகாமல், தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளக்கூடிய நிலையை அடைகிறான். தகவல் தொடர்புக் கருவிகளின் கொடூரமான ஆதிக்கப்பரவலின் காரணமாய் இன்றைய நவீன சமூகத்தில் நான் என்பதே இல்லாமல் ஆகிக் கொண்டிருக்கிறது; மனிதன் தனக்கான அடையாளம் இன்றித் தவிக்கிறான்; மனநோயாளியாய் உலாவுகிறான்; இத்தகைய சூழலில் அமைப்பியல், கட்டுடைக்கும் அமைப்பியல், பிற்கால அமைப்பியல் ஆகியன தரும் சிந்தனைகள் மனத்திற்கு இதமாக அமைக்கின்றன.
அமைப்பியலின் வருகை, இதுவரை தமிழ்ப் பண்பாட்டிலேயே ஆழமாக வேரூன்றிவிட்ட யதார்த்த வாதம், அனுபவவாதம் முதலியவற்றைத் தகர்த்தெறிந்திருக்கிறது. எல்லாமே மொழியெனும் குறிகளின் உறவு நிலையில் அர்த்தம் பெறுகின்றன. பறையன் என்ற குறி, பிராமணன் என்ற குறியோடு
45

Page 50
கொள்ளுகிற உறவில் அர்த்தம் பெறுகிறதே ஒழிய, உண்மையில் பறையன் என்ற எழுவாய் இல்லை; அதுபோலவேபிராமணன் என்ற எழுவாயும் இல்லை என்று உரக்க ஒலித்துத் தமிழ்ச்சூழலை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. கலகக்குரல் எழுவதற்கு அடிப்படை போட்டுக் கொடுத்துள்ளது. இந்நிலையில் மார்க்சீய விமர்சனத்தில், மார்க்சீயம் பற்றிய அவரவர்களின் புரிதலுக்கு ஏற்பப் பலவிதமான தளங்கள் இயங்கின போலவே, அமைப்பியல் பற்றியும் எழுதுபவர்கள் அவரவர்களின் புரிதலுக்கு ஏற்பப் பல்வேறு தளத்தில் எழுதிக் கொண்டிருக்கின்றனர். வேறு> எந்த நூலையும் படிக்காமல் மு.வ.வின் இலக்கித்திறன் நூலை மட்டும் வைத்துக் கொண்டு திறனாவுய்வுக் கட்டுரை எழுதிய அன்றைய கல்வியாளர்கள் போலவே, இன்றும் தமிழவனின் தமிழ் நூலை மட்டும் படித்துக் கொண்டு அமைப்பியல் திறனாய்வு செய்கிற கல்வியாளர்களும் உருவாகி விட்டனர்; இச்சூழலின் அமைப்பியலை ஆங்கிலம் வழிக்கற்றவர்கள், ஒருவர் மற்றொருவர் எழுத்தை அரைகுறையானது; புரியாமல் எழுதப்பட்டது (காலச்சுவடு சிறப்பிதழ் - ப. 66) என்றெல்லாம் குற்றஞ்சாட்டிக் கொள்கின்றனர். உண்மையில் இந்த வாழ்க்கையும் வாழ்க்கை தொடர்பான கருத்தாக்கங்களும் புரிதலுக்கு உட்பட்டவை அல்ல; தெளிவுக்குள் அடங்குபவை அல்ல; எல்லாவற்றிலும் தெளிவாக இருக்கிறேன், என்பவன் மனநோயாளி (அ) அதிகாரம் செலுத்துபவன். மார்க்சீய விமர்சனத்தில் இவ்வாறு எல்லாவற்றிற்கும் தெளிவான விடை கையில் இருக்கிறது என்ற பாவனையோடு எழுதிய அதிகாரக் குரல்தான், அதன் பலவீனத்திற்கு அடிப்படையானது. எதிரே இருப்பவனின் தரம் தான், தன் நடையின் தரத்தை நிர்ணயிக்கிறது என்ற நிலையில் எழுதுபவன், அதிகாரத்திற்காக எழுதுபவன், எனவே குழப்பமற்ற முழுமையான கோட்பாடுகளைத் தேடுபவர்கள் அதிகாரத்திற்கான தளத்தைத் தேடுபவர்கள். எனவே இத்தகைய புரிதல் இருக்குமானால், அமைப்பியல்வாதிகளிடையே நிகழும் ஞானப் போரைத் தவிர்த்துக் கொண்டு, ஒவ்வொருவரும் தான் புரிந்த அளவில் தமிழ் இலக்கியத்திற்கும், தமிழ் வாழ்க்கைக்கும் தங்கள் பங்களிப்பைப் பதிவு செய்யலாம்; மிகைல் பக்தினின் மொழிதல் கோட்பாட்டைத் தொல்காப்பியரின் கூற்றுக் கோட்பாடோடு இணைத்து "நிகழ்த்துதல்” என்பது இலக்கிய ஆக்கத்தில் பெறும் இடத்தை விளக்கிக் காட்டலாம்; (தமிழவன், தமிழ்க்கவிதையும், மொழிதல் கோட்பாடும்) இதை விடுத்து அரைகுறைகளால் நிரப்பி இருப்பதுதான் தமிழின் இலக்கிய வரலாறு என்பதுதான் வேதனை, (காலச்சுவடுப-60) என்றெல்லாம் வேதனையில் சுகம் காண்பது ஞான நடிப்பாகத்தான் மிஞ்சும்.
46

இன்றைய தமிழ்ச் சூழலுக்கு ஏற்ப அமைப்பியல் தந்த கருத்துக்கள் பரவுவதுபோலவே, உலகப்போருக்குப் பின்னால் தோன்றிய நவீனத்துவம், பிற்கால நவீனத்துவம் சார்ந்த கருத்துக்களும் இப்போது இங்கே பேசப்படுவது மிகவும் கவனத்துக்குரிய ஒன்றாகும். உயரிய கலைகள் எனச் சொல்லப்படுபவைகளுக்கும், சாதாரண வெகு ஜனங்களுக்கான கலைகள் எனச் சுட்டப்படுபவைகளுக்கும் இடையே காட்டப்படும் தராதர வேறுபாடுகள் ஒழிக்கப்படவேண்டும் என நவீனத்துவம் வேண்டுகிறது. வாழ்க்கையே வெறும் மாயத் தோற்றமாக விளங்கும் போது, அத்தகைய மாயைகளைத் தரும் புனை கதைகளைத் தயாரித்துக் கொண்டிருப்பதில் என்ன அர்த்தமிருக்கிறது? என்ற பொருள் பொதிந்த வினா எழுந்துள்ளது. மரபார்ந்த இலக்கிய மதிப்பீடுகள் நொறுங்கிச் சிதறுகின்றன. பன்முகப்பட்ட நிலையில், சாத்தியப்படுகின்ற எல்லாவகையிலும் கலகக் குரலை எழுப்புவதுதான் சரியான செயற்பாடு என்ற சிந்தனை பரவுகிறது. ஒரு ஆவண அறிக்கையே இலக்கியமாவதற்குத் தகுதியுடையது என்ற புதிய குரல்கள் ஒலிக்கத் தொடங்கி உள்ளன.
அமைப்பியல் சிந்தனை கொண்டு தமிழவன் சாதனை செய்துள்ளதாகவும் (ஞானி, சுபமங்களா, 1993) அப்படிச் சாதனை ஏதும் இல்லை, சத்தம்தான் அதிகம் (அமார்க்ஸ்) என்றும் அமைப்பியல் விமர்சனம் பற்றிய மதிப்பீடுகள் வந்துகொண்டிருக்கும் சூழலில், அமைப்பியல் கருத்தாக்கங்களின் பின்னணியோடு பெண்ணியம், தலித்தியம் ஆகிய விமர்சனப் பார்வைகளும் முன்வைக்கப்படுகின்றன. பிற்கால அமைப்பியல் சிந்தனையின் ஒரு கூறான தலைகீழாக மாற்றுதல் என்ற அணுமுறையின் மூலம் பெண்ணியமும் தலித்தியமும் வேகமான ஒரு வளர்ச்சிக் கட்டத்தில் நிற்கின்றன. ஒடுக்கப்பட்ட தன்மையின் அடிப்படையில் இவை இரண்டும் ஒன்று சேருகின்றன. உயிரியல் கூறு, அனுபவம். மொழி, நனவிலி மனம், சமூகம் மற்றும் பொருளாதாரச் சூழ்நிலைகள் ஆகிய ஐந்து கூறுகளினாலும் ஆண்/பெண் என்ற பால் வேறுபாட்டைக் கட்டிக் காத்து அதிகார அமைப்பை நடத்திச் செல்லும் மனித வரலாற்றை அடிப்படையிலேயே கேள்விக்குள்ளாக்குகிறது பெண்ணியம். ஃபிராய்டு மேல் லக்கான் நடத்திய மறுவாசிப்பு, பல உண்மைகளை வெளிக் கொணர்ந்துள்ளது. ஆண்/பெண் என்ற பால் வேறுபாடே மொழியின் விளையாட்டினால் விளைந்தது எனக்கூறி அதிர்ச்சிக்குள்ளாக்குகிறார். “காளியின் புன்னகை” பெண்ணியத்திற்கான அறிக்கை எனக் கொண்டாடப்படுகிறது. அந்நூலை எழுதிய ஹெலன்

Page 51
சீக்ஸி, ஆணாதிக்கம் என அறியப்படும் லிங்கமைய வாதத்தால் விளைந்த மொழியை மறுத்துப் பெண்கள் அதை மீறிச் செல்ல வேண்டும். தனக்குள்ளே இருப்பதைப் பிடிப்பதற்குத் தனக்கே உரிய மொழியைக் கண்டு பிடித்துக் கொள்வது பெண்ணின் கட்டாயத் தேவை என்கிறார். ஒரு பெண்ணின் உடம்பு, தன்னுடைய ஆயிரக்கணக்கான உணர்ச்சி வெப்பத்தை மூல நெருப்பாகக் கொண்டு பலப்பல மொழிகளை, ஒலி அதிர்வுகளை உருவாக்கிக் கொள்ளும் ஆற்றல் உடையது என்கிறார். ஆணாதிக்கம் ஒவ்வொன்றிலும் நிலவுகிறது; எனவே பெண்கள் அகதிகள் போலதப்பித்து ஓடுவதையே வாழ்க்கையாகக் கொள்ள நேர்கிறது; நீருக்குள்ளே இருக்கின்ற உடம்பாய் மெளனமாக நிற்குமாறு பெண்கள் நிர்ப்பந்திக்கப்படும் கொடுமையான பெண்ணியல் திறனாய்வு வேகமாக வெளிக் கொணர்கிறது. (நிகழ்-- சிறப்பிதழ் - 25) இந்நிலையில் இதுவரை வாழ்க்கை பற்றியும், இலக்கியம் பற்றியும் கொண்டிருந்த பார்வைகள், பெண்ணியல் சிந்தனைகளின் வரவினால் தலைகீழாக மாறுகின்றன! ஆண்/பெண் என்ற பாலியல் வேறுபாட்ே மொழியின் புனைவுதான் என்ற புரிதல் யாரைத்தான்சும்மா விடும்? இங்கே ஒன்றைச் சுட்டிக் கூற வேண்டும்; பெண்ணியம் பற்றிய சிறப்பிதழ்கள் வெளிவருகின்றன; கூட்டுக்குழுவிவாதங்கள் நடத்தப்பட்டுப்பதிவாகின்றன; ஆனால் தமிழ்ச் சூழலில் எச்சரிக்கை தேவைப்படுகிறது; வெறும் அரசியல் முழக்கங்களாகப் பெண்ணியல் சிந்தனைகள் நின்று போகாமல், அவற்றை இலக்கியக் கோட்பாடுகளாக வடிவமைத்துக் கொள்ளும் போதுதான், பெண்ணியல் திறனாய்வுப் புலமை என ஒன்று உருவாகச் சாத்தியமாகும். அத்தகைய திசையை நோக்கிப் பெண்ணியக் கலைச் சொல் விளக்கக்கையேடு வந்திருப்பது நல்ல அறிகுறி எனக் கொள்ள வேண்டும்.
அம்பேத்கரின் நூற்றாண்டு விழா இந்தியா முழுவதும் ஒரு சடங்காகக் கொண்டாடப்பட்டாலும், அதனுடைய நல்லபயன் என்று சொல்லத்தக்க ஒன்றாகத் தமிழ்ச் சூழலில் தலித்தியம் பற்றிய சொல்லாடல் ஏற்பட்டுள்ளதைக் கூறலாம். 70களிலேயே தமிழவன் தலித் இயக்கம் பற்றிப் பேசிய போது, அவரைத் கேலி செய்த பல மார்க்சீய வாதிகள், இன்று தீவிரமாகத் தலித்தியத்தில் ஈடுபட்டுச் செயல்மிக்கவர்களாக விளங்கக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. மார்க்சீய ஒளியில் அம்பேத்கர் வெளிக் கொணரப்படுகிறார். அவருடைய எழுத்துக்கள் தமிழ்மயப்பட்டுள்ளன. கலகம் செய்வதைத் தவிர தலித்துக்களுக்கு வாழ்க்கையென வேறு ஏதும் இருக்க முடியாது என்ற நிலை உணரப்படுகிறது. தலித் இலக்கியம் பற்றிய சொல்லாடலுக்குத் தேவையான

கோட்பாடுகளை உருவாக்கும் முயற்சிகள் நடக்கின்றன. கட்டுடைத்தல் விமர்சனத்தின் அடிப்படையில், தனக்கென ஒர் இடத்தில் நின்று கொண்டு பழைய பிரதிகளுக்குள் இருக்கும் ஆதிக்கக் கருத்துக்களை உடைத் து நகைக்கிற அணுகுமுறை பின்பற்றப்பட்டது. (ராஜ் கெளதமன், தலித் பண்பாடு) வன்முறையான தலையீடு உக்கிரமான கோபத்தோடு நிகழ்த்துதல் என்ற தளத்தில் நடத்திக் காட்டப்படுகிறது. மொழி என்பது தலித்திய பார்வையில் காரியமாக, நிகழ்வாக கருதப்பட்டுச் சண்டையாக மாற்றப்படுகிறது. (எம்.டி.எம். பிற்கால அமைப்பியலும் குறியியலும்) ஆனால் அதிகாரத்திற்கு எதிரான தலித்தியம், பெண்ணியம் ஆகிய இரண்டுமே, தாம் எதை எதிர்க்கின்றனவோ அவற்றையே அவாவி அவற்றுக்குள் வீழ்ந்துதாண்ட முடியாமல் போகிற அவலம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்ற விழிப்புணர்வு தேவைப்படுகிறது. ஏனென்றால் பெண்ணியல் எழுத்துக்கள் ஆணை எதிரியாக நிறுத்திக் கொண்டு தலித்திய எழுத்துக்கள் உயர் சாதிக்காரர்களை எதிரியாக நிறுத்திக் கொண்டும் இயக்கம் பெற முனைகின்றன. அதிகாரம் பற்றிய புதிய புரிதல்களைப் ஃபூக்கோ மூலமாகப் பெற்றுக் கொண்டு இயங்கினால், ஆக்கபூர்வமாகச் செயல்பட முடியும்; சமூகத்தின் அடிப்ப்டையான நெசவில் அதிகாரம் கலந்திருக்கிறது என்கிறார். எல்லாவற்றையும் அதிகாரம் கொண்டிருக்கவில்லை எல்லாவற்றிலிருந்தும் எல்லாத்திசைகளில் இருந்தும் புறப்படுகின்றது. என்கிறார்; அது நிறுவனம் அல்ல அமைப்பு அல்ல; குறிப்பிட்ட சிலரிடம் இருக்கும் சக்தி அல்ல ஒரு சிக்கலான சமூகச் செயல்பாட்டின் பெயரே அதிகாரம், ஆனால் இந்த அதிகாரம் எதிர்ப்பு இன்றி இல்லை என்பதும், இந்த எதிர்ப்பும் அதிகாரம் போலவே சமூகத்தில் எங்கும் பரவி விரவி இருக்கிறது என்பதும் உண்மை. தலித்தியம், பெண்ணியம் சார்ந்த திறனாய்வுகள் இத்தகைய உண்மைகளைப் பற்றிய விழிப்புணர்வின் மேல் எழுப்பப்பட்டால்தான் புதியவிளைவுகளை உருவாக்கி விட முடியும்.
70-கள் வரை க.நா.சு. வையே சுற்றி இயங்கிய இலக்கியத் திறனாய்வு, அமைப்பியலைத் தமிழவன் அறிமுகப்படுத்தியபிறகு,80களுக்குப்பிறகு தமிழவனைச் சுற்றியே இயங்குகிறது எனலாம். அன்று க.நா.சுவை மீறித் தமிழவன் புதிய போக்கிற்கு வழி ஏற்படுத்தியது போல, இன்று தமிழவனை மீறிப் புதிய போக்கிற்கு வழி வகுக்கக்கூடிய எழுத்துக்களாக பிரேம் எழுத்துக்கள் அமைகின்றன எனலாம். பாலியல் உறவு-குடும்பம்அதிகாரம் ஆகியவை பற்றி பிரேம் வைத்த கருத்துக்கள் முழுமையானி கலகக் குரலாக இருக்கின்றன. பாலியல்
47

Page 52
உறவில் ஆண்/பெண் உறவு ஓரினப் புணர்ச்சி, சுய புணர்ச்சி என மூன்றும் இயல்பான்துதான்; இதில் மேல்/கீழ் என்ற பார்வைக்கு இடமில்லை என்றும், குடும்பம் என்ற பாலியல் ஒடுக்கு முறை நிறுவனம் சிதையாமல், எதையும் அசைக்க முடியாது என்றும் பிரேம் வைத்த கருத்துக்களைத் தாங்க முடியாமல் கேலி செய்த பல மார்க்சீய விமர்சகர்கள்,இன்று அந்தப்பொருள்பற்றிய கருத்துக்களை நாங்கள் தாம் முதன் முதலில் முன் மொழிந்தோம் என்று முன்னோடியாக முன்னிறுத்திக் கொள்ள முந்துகிற அளவிற்கு நிலைமை மாறியுள்ளது. ஞானிகளின் கேள்விகளுக்குப்பைத்தியகாரிகளின் பதில் மூலம், எல்லாவற்றையும் சிதைப்பதென்றே செய்யத்தக்கது, என்ற கருத்து முன் வைக்கப்படுகிறது. இதையும் தீர்மானமான குரலில் அதிகாரத்துவக் குரலில் ஒழிக்காமல் இதுவும் குழப்பமாகத்தான், இருக்கிறது என்று கூறும் பொழுது, வாழ்வின் இருள்மயமான சிக்கலுக்குள் நாம் நின்று கொண்டிருப்பது தெரிந்து விடுகிறது. மையம் அமைந்துவிடாமல் எப்பொழுதும் அமைப்பைச்சிதைத்துக் கொண்டே இருக்க வேண்டும்; எந்நேரமும் ஒரப்பகுதியிலேயே வாழ வேண்டும்; இலக்கியத் திறனாய்வையும் இதுபோலவே நடத்திக்காட்ட வேண்டும்; அப்பொழுதுதான் பிரதிக்குள் ஓடுகின்ற பல்வேறு குரல்களை கேட்க முடியும். இத்தகைய
10.
11.
12.
48
துணை நூர்
தமிழவன். ஸ்ட்ரக்சுரலிசம், திருநெல்வேலி தமிழவன் கவிதையும் மொழிதல் கோட் தமிழவன் படைப்பும் படைப்பாளியும், ெ நாகார்ஜூனன். கலாசாரம்; அ-கலாசாரம்; எம். டி. முத்துக்குமாரசாமி, பிற்கால அமை தூயசவேரியர் கல்லூரி,1998 அ. மார்க்ஸ், மார்க்சீயமும் இலக்கியத்தில் மையம், 1991, ராஜ்கெளதமன், தலித் பண்பாடு, புதுச்சேரி க. பஞ்சாங்கம், தமிழ் இலக்கியத் திறனா 1990. A. Sebastian Dravyam Pillai Post-Moder lications, 1991. Peter Humu, Paul Stigant and Peter widf Newyork, Methuer 1986. ந. ம. வீ. ரவி, குறியியலும் அரங்கக் குறியீ தேவத்தா கமலி (பர்) பெண்ணியக் கலைச் மகளிர் பல்கலைக்கழகம், 1993
SM

கலகக்குரல் சாத்தியப்படாத போது, அழகியல் இலக்கியம் என்பவைகூடத் தேவையில்லை. இவ்வாறு இந்நூற்றாண்டின் இறுதியில் தமிழ்ச்சூழலில் இத்தகைய கலகக்குரலைத்தான் கேட்க முடிகிறது. இறுகிப்போய்க் கிடக்கும் மதம் சார்ந்த அரசியல் வலுப்பெற்றுக் கொண்டிருக்கிற ஒரு காலகட்டத்தில், இலக்கியத் திறனாய்வில் அதற்கு எதிரான நியாயத்தைத் தேடுகின்ற குரல்-உரக்க ஒலிப்பது வரவேற்கத்தக்க குரலாகும். ஆனால் வழக்கம் போல் நிறுவனத்திற்குள் ஓர் உறுப்பாகிவிட்ட கல்வியாளர்களுக்கு இந்தக் குரல் எல்லாம் போய்ச் சேரவேயில்லை. ஓர் ஆய்விற்குத் தயாரித்த குறிப்புகளை வைத்துக்கொண்டு, நான்கைந்து புத்தகமாக ஆக்குவதில்தான் அவர்கள் கவனமாக இருக்கிறார்கள்; மக்களுக்கும் இந்தக்கலகப் பார்வை போய்ச் சேரவில்லை. ஓர் ஆய்விற்குத் தயாரித்த குறிப்புகளை வைத்துக் கொண்டு, நான்கைந்து புத்தகமாக ஆக்குவதில்தான் அவர்கள் கவனமாக இருக்கிறார்கள்; மக்களுக்கும் இந்தக் கலகப் பார்வை போய்ச் சேரவில்லை. இதற்கு என்ன செய்வது?
நன்றி:நவீனத்தமிழும்பின்நவீனத்துவமும் (தொகுப்பாசிரியர்-தமிழவன்)
ற்பட்டியல்
பாரிவேள் பதிப்பகம், 1982 பாடும், பெங்களூர் காவ்யா, 1992 பெங்களூர் காவ்யா, 1989, எதிர்-கலாசாரம், மதுரை, கார்முகில் 1991 ப்பியலும் குறியியலும், பாளையங்கோட்டை,
நவீனத்துவமும் சென்னை, பொன்னி புத்தக
கெளரி பதிப்பகம், 1993, ய்வு வரலாறு, புதுச்சேரி, செல்வன் பதிப்பகம்,
nism-An introdution Trichy, Theresa Pub
owson (edits) Popular Fictions, London and
வியலும் மதுரை ரவி. 1992 சொல் விளக்கக் கையேடு சென்னை, தெரசா

Page 53
10.
11.
12.
13.
14.
15.
16.
17.
18.
19.
திணைக்களத்தில் விற்
நல்லதோர் வீணை
தி. முத்துக்கிருஷ்ணன் இலக்கியமும் பண்பாடும் டாக்டர். இ. சுந்தரமூர்த்தி பொருள் கோள்
ச. அரங்கராசன் மக்கள் பெயராய்வு
டாக்டர். சு. சக்திவேல். கலித்துறைப் பாட்டியல் வ. உ. சி. வாழ்க்கை வரலாறும் இல
அ. சங்கரவல்லி நாயகம் பொன்வால் நரி
பாரதியார் நவீன இலக்கியச் சிந்தனைகள்
பனைவர் ம. மதியழகன் புதுக்கவிதையில் இலக்கிய இயக்க
டாக்டர். இரா. சம்பத். அறிவியல் உருவாக்கத் தமிழ் தமிழியல் ஆய்வு வரலாறு
முனைவர் ம. மதியழகன் தற்கால இந்தியச் சிறுகதைகள்
uff5û 1 அறிவியல் அகராதி பெரியபுராணம் ஒர் ஆய்வு
பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன் கோணேசர் கல்வெட்டு இந்துக் கலைக்களஞ்சியம் பகுதி 1
(பகுதி ஒன்றின் விலை)
கதிரை மலைப்பள்ளு
ஆறுமுகநாவலர் பிரபந்ததிரட்டு திரி கோணாசல புராணம்
(மேற்படி நூல்களை திணைக்கள
9.30 மணியிலிருந்து பிப 300 மன

பனைக்குள்ள நூல்கள்
க்கியப் பணிகளும்
2, 3
விற்ப0ை7 நிலையத்தில் காலை,
1ணிவரை பெற்றுக் கொள்ளலாம்)
ரூபா.
ரூபா.
ரூபா.
ரூபா.
ரூபா.
ரூபா.
e5urt.
ரூபா.
ரூபா.
ரூபா.
eBUT.
e5LJT.
ரூபா.
ரூபா.
ரூபா.
ரூபா.
ரூபா.
50.00
40.00
68.75
30.00
50.00
120.00
12.50
87.50
150.00
32.00
100.00
125.00
312.50
420.00
60.00
250.00
150.00

Page 54
호 -
: 21
"F". --
. . . . . .
Profited by LJmia Fari

is Pvt Ltd, Colombo 13,