கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பண்பாடு 2002.07

Page 1
PANPADU LI
|LTL
|LTL
।
| L
ਘLLT
। ।
LL = }
SEGNOTT EFTIUT dS
 
 
 
 
 
 
 
 

DLD 01
||| 3:ET ELIF.J.H.ETT
LLT
5 ਸੰ
ELELTL
| || T
।
25
LP
: 5966556řT EGGOOGOOTGESTTLE

Page 2
பதிப்பு - 2002 ஆடி -/30 ரூபா כהגדfbקם
莺
ई
ལྟ་
இருபத்தாறாவது இதழி
பேராசிரியர். வி. சிவசாமி
யாழ் பல்கலைக்கழகத்தின் சமஸ்கி ஓய்வுநிலைப் பேராசிரியர். இவர் து தொடர்பாக பல நால்களையும், ஆம்
கலாநிதி மனோன்மணி சண்முகதா ஜப்பான், கக்குயின் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியங்கள் தொடர்பாக ஒ தமிழ் மொழி தொடர்பான ஆய்வுகள்
பேராசிரியை சித்திரலேகா மெளன கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மொ பெண்ணிலைவாதம் தொடர்பான பல எழுதி வருபவர்.
கலாநிதி செ. யோகராசா
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தமி வடிவங்கள் தொடர்பாக பல ஆய்வுக் இலக்கிய விமர்சன ஆய்வாளராக
கலாநிதி ப. புவர்பரட்னம்
யாழ். பல்கலைக்கழகத்தின் தொல் தொல்லியற் துறையில் ஆய்வுகளை கட்டுரைகளையும் எழுதியுள்ளன அகழ்வாய்வுகளை மேற் கொண்டு 6
திரு. க. சிவானந்தமூர்த்தி யாழ், பல்கலைக்கழகத்தின் மெய்யியற் சார்ந்த பல ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார்.
திரு. கே. கே. சோமசுந்தரம் ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளர், ! சமஸ்கிருதம் என்பவற்றிற் புலமை மி எழுதிவருபவர்.
பணிய
கூரப் சொந்த အီor:#flar

ன் கட்டுரையாசிரியர்கள்
ருேதத் துறைத் தலைவராகப் பணிபுரிந்த தமிழர் வாழ்வியல், பண்பாடு, கலைகள், வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
த்தின் வருகை விரிவுரையானா, ஜப்பானியப்பீட்டு ஆய்வுகள் மேற்கொண்டு வருபவர். fல் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.
தறி ழியியற் துறையின் தலைவர் மொழியியல், ஆய்வு நால்களையும், கட்டுரைகளையும்
ழ்த் துறைத் தலைவர். நவீன இலக்கிய கட்டுரைகளை எழுதி வருவதுடன் சிறந்த விளங்குகின்றார்.
வியற் துறை முதநிலை விரிவுரையாளர் மேற்கொண்டு பல நால்களையும் ஆய்வுக் பர். தொல் லியலி தொடர்பாக புதிய வருகின்றார்.
துறை சிரேஷ்ட விரிவுரையாளர். இத்துறை ளை எழுதி வருவதுடன், நால்களையும்
தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம்,
க்கவர். இத்துறைகளில் கட்டுரைகளையும்
ாரு பருவ இதழிஸ் பிரசுரமாகியுள்ள கட்டுரைகளில் பட்டுள்ள கருத்துக்கள் யாரம் கட்டுரை ஆசிரியர்களின் கக்கருத்துக்களாகும். இவை இண்விதழை வெளியிடும் க்காத்தினர் கருத்துக்களைப் பிரதி பண்பிப்பனனாகா,

Page 3
LeodT
(இருபத்தாறr
Լոնuir 11 / இதழ் 01
ஆசிர சாந்தி நா6
உதவி ஆ
எஸ். தெய்
GIGrī
8GDb5JesfL Dulu, ess6OrTesFrTJ Sole இல, 248 1/
Ghassigli

PIIñr வக்கரசன்
ffurfir வநாயகம்
யீடு : றுவல்கள் திணைக்களம் I, காலி வீதி,
2ւկ-04.

Page 4


Page 5
6L
இந்திய சாசனங்க
யாழ்ப்பானத்து வ
இராமாயணம் ஒன
ஈழத்தில் ஊடக 6
இலங்கைத் தமிழ
காட்டும் முருக வ
&LDuijLeogaseo 's
ஓர் ஆய்வு
கம்பராமாயணச் ெ

ாருளடக்கம்
ளில் இசை
GLIJIaffusi 6. f6JFTIf)
ாழ்வியற் கோலங்கள்
கலாநிதி. மனோன்மணி சண்முகதாஸ்
јтпогт? шєоєошгт?
பேராசிரியை சித்திரலேகா மெளனகுரு
வளர்ச்சி - ஒரு நோக்கு
கலாநிதி. செ. யோகராசா
ரின் பண்டைய நாணயங்கள் ISurtG
கலாநிதி. ப. புஷ்பரட்ணம்
அற்புதம்' எனும் எண்ணக்கரு
க. சிவானந்தமூர்த்தி
சய்யுள் ஒன்றிற்கு மாற்றுரை
கே. கே. சோமசுந்தரம்
O1
O7
16
21
30
36
44

Page 6


Page 7
இந்திய சாசன
மனித நாகரிகத்தின் பல்வேறு அமிசங்களையும் அறிவதற்கான வரலாற்று மூலகங்களில் சாசனங்களும் முக்கிய மானவை. சாசனம் எனும் பதம் மன்னருடைய ஆணை, கட்டளை முதலியனவற்றைக் குறிப்பினும், காலப்போக்கிலே மன்னருடைய ஆணையை மட்டுமன்றிக் கல்லிலும், செம்பு, வெள்ளி, பொன் போன்ற உலோகங்களிலும், மண்ணிலும், வேறு சில பொருட்களிலும், மன்னரும், மற்றும் மக்களும் பொறித்துள்ள அல்லது பொறிப்பித்து வைத்துள்ளவற்றையும் குறித்துவந்துள்ளது. இவற்றுள்ளே கல்லிலே பொறிக்கப்பட்டவை கல்வெட்டுகள் எனவும், செம்பிலே பொறிக்கப்பட்டவை செப்பேடுகள் எனவும், பொன்னிலே பொறிக்கப்பட்டவை பொன்னேடுகள் எனவும் அழைக்கப்படுபவன. இவற்றுள்ளும் கல்லிலும் செம்பிலும் பொறிக்கப்பட்டவையே பெரும்பாலும் இந்தியாவிலே கிடைத்துள்ளன. கல் வெட்டுகள், செப்பேடுகள் போன்றவற்றிலே பெரும்பாலும் சமகால நிகழ்வுகளோ அல்லது செயற்பாடுகளோ இடம் பெறுவன. இவை குறிப்பிட்டகால ഖjി வடிவத்தில் எழுதப்பட்டுள்ளமையால் இவற்றில் இடைச் செருகல்கள் எளிதில் இடம் பெறா. கல், செம்பு போன்ற பொருட்கள் எளிதிலே அழியமாட்டா. எனவே, மேற் குறிப்பிட்ட கல், செம்பு போன்றவற்றிலே பொறிக்கப்பட்டுள்ள விடயங்கள் பெருமளவு நம்பகமானவை. மனிதனுடைய பண்பாட்டுச் செயற்பாடுகளில் இசை, நடனம் போன்ற அவைக்காற்றுக் கலைகளும் நன்கு குறிப்பிடத்தக்கவை.
இந்திய மரபில் இசை -வாய்ப்பாட்டிசை, வாத்திய இசை, நடனம் ஆகிய மூன்றும் சேர்ந்ததே சங்கீதம் என்ற கருத்து நீண்டகாலமாக நிலவிவந்துள்ளது. எனினும் காலம் செல்ல வாய்ப்பாட்டிசையும், வாத்திய இசையும் இசை எனக் கொள்ளப்படலாயின; நடனம் தனிக் கலையாயிற்று.

ங்களில் இசை
Unriffuir gif. fairlf
இந்தியாவைப் பொறுத்த மட்டில் அதுவும் குறிப்பாக ஆதிகால, மத்திய கால வரலாற்றை நோக்கும் போது வரலாற்று மூலங்கள் குறைவாக மட்டுமன்றி, நம்பகத் தன்மையும் குறைந்து காணப்படுகின்றன. இத்தகைய சூழ்நிலையில் இலக்கியம் போன்ற பிற மூலங்கள் கூறுவனவற்றை உறுதிப்படுத்துவதுடன் பிற மூலங்களிலே குறிப்பிடப்படாத go முக்கிய தகவல்களையும் கொண்டிலங்கும் சாசனங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. இச்சிறு கட்டுரையில் இந்தியச் சாசனங்களில் இசை பற்றிய சில பிரதான அமிசங்கள் க்ட்டிக்காட்டப்படும். இங்கு வெவ்வேறு காலங்களில் இசையை ஆதரித்தோர், இசைக் கலைஞர், இசையிலுள்ள சில முக்கிய அமிசங்கள், இசைப் பாடல்கள், மேலும் இசை தொடர்பான சில கருத்துக்களும் சுருக்கமாக எடுத்துக் கூறப்படும். இந்தியாவிலே பல <ණු,[19]]ජී. கணக்கான சாசனங்கள் கிடைத்திருப்பினும் இசை பற்றிக் கூறுவன ஒப்பீட்டு ரீதியிலே மிகக் குறைவாகவே உள்ளன. எனினும் அவற்றின் முக்கியத்து வத்தைக் குறைத்து மதிப்பிட முடியாது. இந்திய சாஸ் திரீய இசை கி.பி. 13ஆம் நூற்றாண்டு வரை ஒரே இசையாக விளங்கி, 14ஆம் நூற்றாண்டிலே வட இந்தியாவிலே ஹிந்துஸ்தானி இசையும், தென்னிந்தி யாவிலே கர்நாடக இசையும், என இரு இசை வடிவங்களாக மலர்ச்சியுற்றது. தமிழ் நாட்டிலே நீண்ட காலமாக பண்ணிசை நிலவிவந்துள்ளது. இதன் அடிப்படையில் வேறு சில அமிசங்களும் சேர்ந்தே கர்நாடக இசை உருவாயிற்று என இசை வரலாற்றா சிரியர்கள் பொதுவாகக் கருதுகின்றனர். இசை வளர்ச்சிக்கும் பேணிப் போற்றப்ப டுதற்கும் மன்னரின் பங்களிப்புகள் மகத்தானவை.
-1-

Page 8
இசை தொடர்பான சாசனங்கள் இந்தியாவின் பலபகுதிகளிலும் கிடைத்துள்ளன. பண்டைய தமிழகத்திற்குச் சிறப்பான பண்ணிசையினை குறிப்பாகப் பரிபாடல், தேவாரங்கள், திருவாசகம் முதலியனவற்றிலே காணலாம். சைவ நாயன்மார்களின் திருப்பதிகங்களையும், வைஷ்ணவ ஆழ்வார்களின் திருப்பாசுரங் களையும் கோவில்களிலே முறைப்படி இசைப்பதற்கு இவற்றிலே தேர்ச்சியுள்ளோர் பல்லவர் -> பாண்டியர் காலப்பகுதி தொடக்கம் நியமிக்கப்பட்டிருந்தனர். மூன்றாம் நந்திவர்மனின் (கி.பி. 9ஆம் நூ.) கல்வெட்டொன்று திருவல்லம் பில் வ நாதேஸ்வரர் ஆலயத்தில் உள்ளது. இதிலே திருப்பதிகம் பாடுவதற்கு <ණුඛj6CI செய்யப்பட்டதாக அறியப்படுகின்றது. கோவிலிலே திருப்பதிகம் பாடப்பட்டமை குறித்து இன்றுவரை கிடைத்துள்ள முதலாவது கல்வெட்டு இதுவே. இதன் பின்னர்,கோவில் ஒழுங்கு முறையில் தேவாரம் ஒதுவோர் தொடர்ந்து இடம் பெற்றனர்.
தேவார இசைக் கலைஞர்கள் திருப்பதிகம் பாடுபவர் திருப்பதியம் விண்ணப்பம் செய்பவர் எனப் பலவாறு" அழைக்கப்பட்டனர். பல்லவரைத் தொடர்ந்து தமிழகத்தில் ஆட்சிபீடம் ஏறிய சோழப்பெருமன்னர் இசைக் கலையையும் நன்கு ஆதரித்தனர். கண்டராதித்யர், பராந்தகன் போன்ற மன்னர் கோவில்களிலே திருப்பதிகம் பாடுதற்கும், இசைக் கருவிகள் இசைத்தற்கும் ஒழுங்கு செய்திருந்தனர். இவர்களின் பின் முதலாம் ராஜ ராஜன் நம்பியாண்டார் நம்பியின் உதவியுடன் தேவாரங்களைத் திருமுறைகளாக (1-7 வரை) வகுப்பித்தான். "திருமுறை கண்ட சோழன்" எனும் விருதுப்பெயர் தரித்தான்; இவற்றை முறைப்படி கோவில்களில் ஒதுவதற்காக ஆவன செய்தான். தலை நகரான தஞ்சாவூரில் தான் அமைத்த இராசராசேச்சரம் ஆலயத்திலே பிடாரர் என அழைக்கப்பட்டோர் ஐம்பதின்மர் நியமிக்கப்பட்டனர். இவர்களில் 48 பேர்

பாடகர்களாகவும் இவர்களுக்குப் பக்க வாத்தியக்காரராக ஒருவர் உடுக்கையும், மற்றவர் மத்தளமும் இசைத்தனர். இவர்களுக்குப் பலவித நிலமானியங்கள் வழங்கப்பட்டன. இவ் அரசனுடைய திண்டிவனம் கல்வெட்டின்படி திண்டீஸ்வரர் கோவிலிலே தேவாரம் பாடுவதற்கும், வீணை இசைத் தற்கும் நியமிக்கப்பட்ட கலை ஞர்களுக்கு LOT 60ft Lot 55 நிலங்கள் வழங்கப்பட்டதை அறியலாம், திருவாரூரி லுள்ள தியாகேசர் கோவிலிலே பாடுதற்கும், மத்தளம், படாகம், சேகன்ைடிகை இசைத்தற்குமான ஏழு இசைக்கலைஞர் நியமிக்கப்பட்டிருந்தனர். தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக் கருவி, கஞ்சக்கருவி யாகிய நால்வகை இசைக் கருவிகள் பற்றிச் சோழர் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. இக்கால இசை நிகழ்ச்சிகள் வாய்ப்பாட்டிசை, வாத்திய இசைக் கச்சேரிகள் தனிக் கச்சேரிகளாகவும் நடை பெற்றமைக்குக் கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன.
முதலாம்ராஜராஜன் (கி.பி 10-11ஆம்நூ.) தனது பேரரசின் சில மாவட்டங்களைக் "கேய விநோதவள நாடு'களாக வகுத்து இசைக் கலைஞர்களுக்குப் பகிர்ந்தளித்தான். தஞ்சாவூரிலுள்ள கல்வெட் டொன்றின்படி அங்கு ஒரு தெரு, கந்தர்வு தெரு (இசைக் கலைஞர் தெரு) என அழைக்கப்பட்டதாக அறியப்படுகின்றது. அரசன் நிலங்கள் மட்டுமன்றி பொன் போன்ற வேறு சில பொருட்களையும் கலைஞர்களுக்கு வழங்கினான். முதலாம் குலோத்துங்க சோழனின் தளபதியான காலிங்கநாராயனின் ஆதரவில் முதன்மூன்று நாயன்மார்களின் தேவாரங்களும் செப்பேடுகளில் எழுதப் பட்டதாகப் பேராசிரியர் வெள்ளைவாரனார் கூறியுள்ளார். திருவிடை மருதூரிலுள்ள இவ் அரசனின் கல்வெட்டொன்றின்படி அங்குள்ள கோவிலில் எழுந்தருளியிருக்கும் பிரதான தெய்வத்தினைப்பாடுதற்கும் தேவதாசி களுக்கு இசைக் கற்பிக்கவும் ஓர் இசையைக் கலைஞர் நியமிக்கப்பட்டிருந்தார் என அறியலாம். சோழரைத் தொடர்ந்து ஆட்சி செய்த பாண்டியப் பெருமன்னரும் இசைக்குப்
-2-

Page 9
பேராதரவு நல்கினர். எடுத்துக் காட்டாக மாறவர்மன் சுந்தரபாண்டியனைக் குறிப்பிடலாம். தொடர்ந்து 16ஆம் நூற்றாண்டு வரை கோவில்களில் தேவாரம் பாடப்பட்டமைக்குக் கல்வெட்டுச் சான்று உண்டு.
தமிழகத்திலே கிடைத்துள்ள @Gರಾ ಆ பற்றிய காலத்தால் முந்திய இரு கல்வெட்டுகள் குறிப்பிடத்தக்கவை. இவற்றுள் ஒன்று ஈரோட்டிற்கு அண்மையிலுள்ள அரிச்சலூரில் உள்ளது. ஏறத்தாழ கி. பி. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த பிராமி வரிவடிவில் பழந்தமிழில் எழுதப்பட்டுள்ளது. இதிலே காணப்படும் சொற்கட்டுகள் - ஐதிகள், தாளம் முதலியன குறிப்பிடத் தக்கவை. இவை பாத அசைவிற்கும் பயிற்சி வகுப்புகளுக்கும் கூறப்படுகின்றன போலத் தென்படுகின்றன.
மற்றையது குடுமியா மலைக் கல்வெட்டு, இதன் காலம் முதலாம் மகேந்திர வர்மன் காலம் (கி. பி. 7ஆம் நூ.) அல்லது (கி. பி. 8ஆம் நூ.) பிற்காலப் பல்லவர் பாண்டியர் காலத்தையது எனவும் அறிஞர்கருத்து வேறுபடுகிறது. இதிலே வரும் பரிவாதினி (ஒரு வகை இசைக் கருவி) திருமய்யம் சிவன் கோவில், மலயக் கோவில், குடுமியா மலையிலுள்ள கற்பாறையில மைக்கப்பட்ட மண்டபம், சக்திகிரீஸ் வர கோவில், கோகர்னேஸ்வர கோவில் முதலியவற்றிலும் காணப்படுகிறது. திருமய்யத்திலுள்ள கல்வெட்டுப் பெரிதும் அழிந்து ரிஷப, காந்தார போன்றனவே எஞ்சியுள்ளன. மலயக் கோவில் திருகோகள்ணம் ஆகியவற்றிலுள்ள இசைக் கல்வெட்டுகள், பாறைகள் உடைக்கப்பட்டமையால் அழிந்திருக்கலாம். குடுமியாமலையிலுள்ள கல்வெட்டின் இறுதிப்பகுதியில் "பத்திற்கும் யாழிற்கும் இவை உரிய” எனத் தற்பொழுது வாசிக்கப்படுகின்றது. பரிவாதினி மேற் குறிப்பிட்ட கால் வெட்டுகளை ஒன்றோடொன்று தொடர்புபடுத்துகிறது. திருமய்யத்தில் மட்டுமே பாண்டியர் கால

பரிவாதினி வாத்தியத்துடன் சேர்ந்த பல்லியம் பற்றிய சிற்பம் உளது. எனவே இது பாண்டியர் காலத்தையது எனக் கருதப்படுகிறது.
வாகாடகர் காலத்திய (கி. பி. 4-6ஆம் நூ.) சப்தஸ் வர மூர்த்தி சிற்பம் (ஏழுஸ் வரங்களின் வடிவமான சிவபிரான் கனங்களோடும், யாழ், பரிவாதினி) போன்ற அமிசங்களுடன் காணப்படுகின்றன? குடுமியா மலைக் கல்வெட்டு ஏழு பகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றிலே பரிவாதினி பிரதான இசைக் கருவியாகும். இத்துடன் தொடர்புள்ள சிற்பம் பரிவாதினி இசைக்கச் சிவபிரான் இக்கல்வெட்டிலுள்ள ஏழு பகுதிகளையும் பாடிக் கொண்டிருக்கும் பாங்கில் அமைந்திருக்க வேண்டும். இக் கல்வெட்டுச் சமகாலத்தில் வேறுபட்ட வகையிலும் வாசிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடற்பாலது. இக் கல்வெட்டிலே கிருதி அல்லது கீர்த்தனை போன்ற இசை உருப்படி ஒன்றுள்ளதாகக் கருதப்படுகின்றது. இதிலுள்ள 22 சுருதிகளை இதற்கு முன்னரும் பின்னரும்
எவராவது பயன்படுத்தியதாகத் தெரியவில்லை. வீணையின் மூலம் அடிப்படை இசைப் பயிற்சிக்காக இது
பொறிக்கப்பட்டதாக அறிஞர்களில் ஒரு சாரார் கருதுவர். வேறுசிலர் இதிலே பலராகங்களின் சொற்றொடர்கள் இணைந்தோ அல்லது சிறிது சிறிதாகவோ அல்லது சொற்றொடர் சொற்றொடராகவோ உள்ளன எனக் கருதுகின்றனர். வேறு சிலர் இதனைப் பிறிதொருவகையில் விளக்கியுள்ளனர்.
பல்லவ e Jごテ6ormeoT முதலாம் மகேந்திரவர்மன் (கி. பி. 7ஆம் நூ.) பல திறப்பட்ட கலைத்திறன் கொண்டிருந்தான். அவனுடைய மாமண்டுர் கல்வெட்டிலே காந்தர்வ சாஸ்திரம் (சங்கீதசாஸ்திரம்) பற்றிய குறிப்பு முதன்முதலாக வருகின்றது. இசையிலே மற்றவர்கள் சாதிக்க முடியாததை இவன் சாதிக்க முயன்றான் எனவும் அதிலே கூறப்பட்டுள்ளது. வீணை போன்ற இசைக் கருவிகளாலேற்படுத்தக் கூடிய இசை ஒலியினை வாய்ப்பாட்டிசையிலேற்படுத்த விரும்பினான் "சங்கீர்ண ஜாதி" எனும்
-3-

Page 10
தாளத்தினை இவனே கண்டுபிடித்தான் எனக் கூறப்படுகிறது. தென்னிந்தியாவிலே தோன்றிய மிகச் சிறந்த சங்கீதக் கலைஞர்களிலொருவனாக மட்டுமன்றித் தாளக் கலையிலும் மிகுந்த திறமை பெற்றிருந்தான். முக்கியமான ஐந்து தாள ஐதிகளில் சங்கீர்ண ஜதியும் ஒன்றாகும். நந்திகேஸ்வரர் இயற்றிய தாள லசஷ்ணம் போன்ற பழைய நூல்கள் சங்கீர்ண ஜதி தவிர்ந்த ஏனைய நான்கினையுமே (சதுரஸ்ர, மிஸ் ர, திஸ் ர, கண்ட) குறிப்பிடுகின்றன. எனவே ஐந்தாவதான சங்கீர்ண ஜதி . இவ் அரசனுடைய கண்டுபிடிப்பு எனலாம். இவனுடைய பேரனான ராஜசிம்மனும் சிறந்த இசைக்கலைஞன் என்பது அவன் தரித்த விருதுப் பெயர்களான "ழரீ வாத்யவித்யாதர", ழரீ ஆதோத்ய தும்புரு, ழரீ வீனா நாரத போன்றவற்றால் தெளிவாகின்றது ஆதோத்ய என்பது வீணை, முரசு, புல்லாங்குழல், சல்ல
முதலிய இசைக்கருவிகளின் தொகுப்பை
குறிக்கும்.
ஆந்திரமாநிலத்திலுள்ள தாளப்பாக்கம் வாக்கேயகாரரின் (அன்னமாச்சாரியர் முதலியோர் கி. பி. 15-16ஆம் நூ.) பெருந் தொகையான சாஹித்தியங்கள் (பாடல்கள்) செப்புத் தகடுகளிலே திருப்பதியிலுள்ள வெங்கடேசர் ஆலயத்திலே பாதுகாக் கப்பட்டுள்ளன. ஆறு கற்பலகைகளிலும் அவர்களின் பாடல்களில் ஒருபகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கர்நாடக இசைக்குரிய தாள முறையினைக் கூறும் மூன்று கல்வெட்டுக்கள் மதுரையிலுள்ள மீனாகூஜி அம்மன் கோயில், திருநெல்வேலியிலுள்ள நெல்லையப்பர் கோயில் ஆகியனவற்றில் உள்ளன. மதுரையிலுள்ள முதலாவது தாளக் கல்வெட்டிலே 35 தாள முறையும், அவற்றிற்கான அங்கங்களும் குறிப்பிடப் பட்டுள்ளன. திருநெல்வேலியில் சூளாதி சப்ததாளம் பொறிக்கப்பட்டுள்ளது. தாள அங்கங்களுக்கான குறியீடுகள் இரண்டிலும் ஒரே மாதிரியுள்ளது. திருநெல்வேலிக் கல்வெட்டு 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

ஒரு நடன ஆசானால் அமைக்கப்பட்டது மதுரையிலுள்ளதிலும் பார்க்க விவரங்கள் கூடுதலாகக் கொண்டிருக்கிறது. நடுவில் உள்ளவட்டத்திலே குறியீடுகள் ஷடங்கங்களுடன் தரப்பட்டுள்ளன. அதற்கு அடுத்த வட்டத்திலே சப்ததானங்களும், அவற்றின் அங்கங்களும் இடம் பெற்றுள்ளன. துருவதாளத்திலே தொடங்கி ஐந்து தாளவகைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. மதுரையிலுள்ளது லகு ஜதிகளின்படி ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. சப்த தாளங்களிலே முதலிலே சதுரஸ் ர வகைகளும், தொடர்ந்து திஸ்ர, மிஸ்ர கண்ட, சங்கீர்ண தாளங்கள் கூறப்பட்டுள்ளன. மூன்றாவதாக மதுரையிலுள்ள பிறிதொரு கல்வெட்டு 108 தாளங்களிலொன்றான சிம்ம நந்தன தாளத்தினை விளக்குகின்றது. வைஷ்ணவ சமயச் சார்பான திருப்பாசுரங்கள் பாடுவதற்கும் கோவில்களிலே ஒழுங்குகள் செய்யப்பட்டன. ழரீரங்கத்திலுள்ள ராஜேந்திரனின் கல்வெட்டு (11ஆம் நூ.) தென்னேரியிலுள்ள குலோத்துங்கனின் கல்வெட்டுப் போன்றவை இதற்குச் சான்று UöcDth. எண்ணாயிரம், காஞ்சிக் கல்வெட்டுகளின்படி திருவாய் மொழிப் பாடல்கள் பாடுவதற்கு 58 பிராமணர் நியமிக்கப்பட்டனர் என அறியலாம். பாடுபவர்களுக்கு மட்டுமன்றி வாத்திய மிசைப்பவர்களுக்கும் பலசெல்வங்கள் வழங்கப்பட்டன, கீழுரிலுள்ள ராஜேந்திரனின் கல்வெட்டொன்றிலே சேகண்டிகை, செண்டை, கண்டை, தாளம், காளம், படாகம், மத்தளம், கரடிகை முதலிய பல இசைக் கருவிகள் பற்றிய குறிப்புகள் உள்ளன.
இசை,நடன,நிகழ்ச்சிகளுக்காக அரங்க மண்டபம், நிருத்த மண்டபம் ஆகியன அமைக்கப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. ஜயங் கொண்ட சோழனுடைய கல்வெட்டொன்றிலே இசை, நடனத்திற்கான நிருத்த மண்டபம் அமைக்கப்பட்டமை பற்றிய குறிப்பு உண்டு. இசையுடன் ழரீபலி, திருப்பள்ளியெழுச்சி நடத்துவதற்குப்பல கொடைகள் தாராளமாக வழங்கப்பட்டன.
-4-

Page 11
இசைக்கலைஞர்களும், கோவில் களுக்குத் தம் பங்களிப்புகளைச் செய்து வந்தனர். "திருப்பதியக் காணி", "திருப்பத்துக்காணி" ஆகிய பதங்கள் ஒரு கல்வெட்டிலே குறிப்பிடப்படுகின்றன. காணி என்பது ஒரு குறிப்பிட்ட தொழிலுடன் சேர்த்துக் கூறப்படும்.
சென்னை அரும் பொருட் காட்சியகத்திலுள்ள உத்தமசோழனின் கல்வெட்டிலே இசைக்கருவிகளின்
பெயர்களும், தொகையும் குறிப்பிடப்படு கின்றன.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த திருவநந்தபுரத்திலுள்ள 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டொன்று இசைக் கச்சேரிகள் பற்றிக் குறிப்பிடுகின்றது. இதிலே ஒவ்வொரு நாளும் கோயிலுக்கு மூன்று தடவை, புல் லாங்குழல் இசைப்பதற்கு ஒழுங்கு செய்துள்ளமை பற்றி அறியலாம். விஜய நகர மன்னர்களில் ஒருவரான சதா சிவராயனின் கல்வெட்டொன்றிலே தவள புரத்திலுள்ள கோவிலில் இரு நாதஸ்வரம் வாசிக்கின்ற ஒரு குழலோனுக்கும், இரு தவில் வாசிப் போருக்கும் கொடை வழங்கப்பட்டமை பற்றிக் குறிப்பி டப்படுகின்றது.
இசை தொடர்பான "பஞ்சமஹா சப்த" என்பதும் குறித்துக் கருத்து வேறுபாடுகள் உள்ளன. சிலர் இஃது இசையுடன் தொடர்பற்றது எனவும், ஒரு சிறப்புரிமை எனவும் கருதினர். அரசர், பிரதானிகள் போன்றோர் ஐந்து விதமான வாத்திய இசைக்கு அருகதையுடையவர் என அவர்கள் கொண்டனர். இடைக்காலக் வெட்டுகளில் இப்பதம் வருகின்றது. ஐந்து பெரிய இசைக்கருவிகளின் இசை எனப்பொருள்படும் இப்பதம் அரசர் போன்ற பெரிய அந்தஸ்துள்ளவர்கள் பகிரங்கமாக வெளியே வரும்போது அல்லது பவனி வரும் போது இவ்வாத்தியங்கள் இசைக்கப் படுயனதற்கு அருகதையுடை எனக் கலாநிதி என். கே. ஐயங்கார் கருதினார். சங்கீர்ன

ஐதிபோல இதுவும் இசைக்குரிய ஒருபதமே. இவ் ஐந்து வாத்தியங்களில் பெரியமேளம், தம்பட்டம் அல்லது முரசு, சங்கு, ஒருவகைக் குட முழா, சேமக்கலம் அல்லது சேகண்டி ஆகியன அடங்கும். இவ்வகையில் சாளுக்கிய அரசனாகிய ஜகதேகமல்ல என்பவனுடைய கல்வெட்டொன்று தேவரநவத் கி எனுமிடத்திலுள்ளது. மேற்குறிப்பிட்ட "பஞ்சமஹாசப்த" எனும் பதம் மன்னனுடைய விருதுப் பெயர் என்பது இதனால் உறுதிப்படுத்தப்படுகிறது. கோவிலிலே மங்களகரமான நிரந்தரமான இயல்புடைய ஐந்து பெரியவாத்தியங்களை இசைப்பதற்கு 8 மாத்தர் (குறிப்பிட்ட அளவு) நிலம் வழங்கப்பட்டதாகக் குறிப்பிடப் படுகிறது. இதைத் தொடர்ந்து பிறிதொரு கல்வெட்டிலே ஐந்து வாத்தியங்கள் இசைத்தல் முடியுமுன் சங்கு ஊதுவதற்கான ஏற்பாடு பற்றிக் குறிப்பிடப்படுகின்றது
பல கல்வெட்டுகளிலே காணப்படும் "அங்க போக," "அங்கரங்கபோக" முதலிய சொற்றொடர்களும் கவனித்தற்பாலன. இத்தகைய சேவைகள் தெய்வத்தின் திருமேனி "அங்க" (தெய்வத்திற்கான) இசை நடனம் - "ரங்க" ஆகியவற்றிற்குச் செய்யப்படுவன. அங்கரங்க போக என்பன கோயில் சேவைகளுக்கும் தெய்வத்திற்கு நாடோறும் செய்யப்படும் அபிஷேகம், ஆடை தரித்தல் முதலிய அன்றாட கிரிகைகளுக்கும் பொருத்தமானவை.
ரங்க மண்டபத்திலும், பிரதான தெய்வத்தின் திருமுன்னிலையில் வெளியேயும் இடம் பெறும் சேவைகள் ரங்க போகத்திலடங்கும். ரங்கமண்டபத்தில் இடம் பெறும் சேவைகளில் இசை, நடனம் முதலியனவும் அடங்குவன. சில வேளைகளில் பிரதான தெய்வத்திருமேனி அல்லது உத்ஸவ மூர்த்தி ரங்க மண்டபத்திற்குக் கொண்டு வரப்பட்டு, ரங்க போக சேவைகள் முதலியன அவரின் திரு முன்னிலையில் இடம் பெறும். எனவே, ரங்கமண்டபத்திலே தெய்வத்துடன் தொடர்புள்ளனவாகவும் தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்படுகின்றனவாகவும் உள்ள
-5-

Page 12
இன்பம் பயக்கும் கலை வடிவங்களையே "அங்கரங்க போக” குறிக்குமெனலாம். இவற்றிலிருந்து கோவில் சேவையில் இசை இன்றியமையாத ஓர் இடத்தினை வகித்து வந்துள்ளதெனலாம்.
இந்திய மன்னரின் இசைத்திறனுக்கு ஓர் எடுத்துக்காட்டாக கி. பி. 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜனமேஜயனின் கல்வெட் டொன்றினையும் குறிப்பிடலாம். இவ் அரசன் சபுத, சத்புத தாளங்களிலே (O8 தாளங்களில் 2 வகைகள்) மிகத் தேர்ச்சியுள்ளவனாகவும், தூய சலாக ராகங்களைப் பிரம்ம வீனையில் மீட்பவனாகவும் விளங்கினான்.
இவ்வாறு இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் நிலவி வந்துள்ள இசை பற்றிய பல்வேறு செய்திகளைச் சாசனங்கள் மூலம் அறியலாம். அவற்றுள் ஒரு சிலவே இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. ஏற்கனவே குறிப்பிட்டவாறு பெரும்பாலும் மன்னர் ஆதரவில் இசை நன்கு வளர்ந்துள்ளது. வாய்ப்பாட்டிசை, வாத்திய இசைக் கலைஞர்கள் நன்கு மதிக்கப்பட்டனர்; மானியங்களும் கொடைகளும் நன்கு பெற்றனர். இசை, இசை வளர்ச்சி பற்றி அறிவதற்கான மிக நம்பகமான மூலங்களாகச் சாசனங்கள் விளங்குகின்றன.
மேலும், இசை, வழிபாட்டிற்குரிய சிறந்த சாதனங்களில் ஒன்றாக விளங்கி வந்துள்ளது. இசை மூலம் இறைவனை வழிபாடு செய்தல் நாதோபாசனை எனச் சிறப்பித்துக்
கூறப்படும். இறைவனே இசை வடிவினனாகவும், இசையின் முடிவான பயனாகவும் விளங்குகிறான் எனும் கருத்துப்பட சுந்தரமூர்த்தி நாயனார் ஏழிசையாய் இசைப்பயனாய் எனச்
சிறப்பித்துப் பாடியுள்ளார். தியாகராஜ சுவாமிகள் சிவபெருமானைப் பற்றிப் பாடிய கீர்த்தனை ஒன்று நாதவடிவமுள்ள சிவபெருமானை என்னுடைய மனத்தாலும், தலையாலும் வணங்குகிறேன் (நாததனு மனிசம் சங்கரம் நமாமிமே சிரஸா மனஸா)

எனத் தொடங்குவது குறிப்பிடற்பாலது. மேலும் கி.பி. 13ஆம் நூற்றாண்டிலே சங்கீதம் பற்றிய பெரிய நூலான சங்கீதரத்னாகர ஆசிரியரான சாரங்க தேவர் பிரமா, விஷ்ணு, மகேஸ்வரன் ஆகிய மும்மூர்த்திகளும் நாத
6Јц26Јцогтаъ(86): விளங்குகின்றனர். நாதவழிபாடு செய்வதன் மூலமே அவர்களை உண்மையாக வழிபடலாம் 6T6
அவ்வழிபாட்டினை அழுத்திக் கூறியுள்ளார்.
இறைவழிபாட்டுநிறுவனமாகிய கோவில் சமய, பண்பாட்டு நிலைக்களனாக விளங்கிவந்துள்ளது. பண்பாட்டின் முக்கிய கூறுகளில் இரண்டான இசையும், நடனமும் கோவிலில் நன்கு வளர்ந்து வந்தமையில் வியப்பில்லை. இதற்கு அவ்வக்கால மன்னர்களின் பேராதரவு பொதுவாக இருந்து வந்துள்ளமை முற் குறிப்பிட்டனவற்றால் தெளிவாக விளங்கும்.
(தொடரும்)
சில முக்கியமான உசாத்துணை
1.2 Gowri Kuppuswamy and M. Hariharan (i) Royal Patronage of Indian Music,
New Delhi, 1984
(ii) Music in Indian Art, New Delhi, 1985
Majumdar R. C. (Ed.),
History and Culture of the Indian People
1-V, Bombay, 1953-1971.
Premlatha V.,
Music through the Ages, Delhi, 1985
Sambamurthy P.
(i) History of South Indian Music,
Madras, 1980
(ii) South Indian Music, 1-VI, Madras, 1983
-6-

Page 13
யாழ்ப்பாணத்து வாழ்
இந்து சமுத்திரத்தில் நித்திலம் போல இலங்கைத் தீவின் வடபகுதியில் யாழ்ப்பாணம் அமைந்துள்ளது. இதன் அமைவிடம் புவியியல் நிலையிலும் வரலாற்று நிலையிலும் தனித்துவமானது. யாழ்ப்பாணம்' என்ற பெயர் இன்று ஒரு நகரத்தைக் குறித்து நின்றாலும் பண்பாட்டு நிலையிலே இலங்கையின் வடபகுதிப் பிரதேசப் பண்பாட்டு நிலை முழுவதையுமே சுட்டி நிற்கிறது. யாழ்ப்பாணம் என்ற சொல் ஒரு இடத்தைக் குறிக்கின்றது. இச் சொல்லின் அமைப்பு அங்கு முன்னே வாழ்ந்த மக்களை இனங்காட்டி நிற்கிறது. யாழ்ப்பயிற்சி பெற்ற பாணர்கள் வாழ்ந்த இடம் என்ற ஒரு விளக்கத்தையும் தந்துநிற்கிறது. மிகப்பழைய இலக்கியமான சங்கப் பாடல்களின் தொகுப்பிலே பாணர்கள்பற்றியும் விளக்கமான குறிப்புகள் உண்டு. ஆற்றுப்படை நூல்களிலே பாணர்களைப் பற்றிய செய்திகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. யாழ்ப்பா னத்தின் அமைவிடத்தைப் புவியியல்கள் கொண்டு நோக்கும்போது அதன் வாழ்வியற் கோலங்களுக்கு அந்தப் புவியியல் அமைப்பு எவ்வாறு காரணியாக அமைந்தென்பதை அறிய முடிகிறது.
யாழ்ப்பாணத்து வரலாற்றுப் பதிவுகள் தெளிவாக இன்மையால் அங்கே வாழ்ந்த மக்களின் காலப்பழைமை சான்று கொண்டு நிறுவமுடியாத நிலையுள்ளது, ஆனால் யாழ்ப்பாணப் பிரதேசத்தில் இன்று காணப்படும் வரலாற்றுத் தடங்கள் பழைமை நிலையை ஓரளவு சுட்டிக் காட்டுகின்றன. முழுமையான இலங்கையின் வரலாற்றில் யாழ்ப்பாணத்து வரலாறு தனித்துவமாக இருந்ததையும் அவை தெளிவாக்குகின்றன. யாழ்ப்பான புவியியல் அமைப்பு நிலையால் அதன் வாழ்வியலும் வரலாறும் இன்று

pவியற் கோலங்கள்
öGUm萤 மனோன்மணி சண்முகதாஸ்
தெளிவுபடுத்தப்பட வேண்டியுள்ளன. இதற்கும் மேலாக யாழ்ப்பாணத்து மொழி அதன் வாழ்வியற் கோலங்களை இணைக்கும் புள்ளிகளாகத் தொழிற்பட்டதையும் காணலாம். யாழ்ப்பாணத்துப் பேச்சு மொழியின் பண்பு வாழ்வியலோடு இணைந்துள்ளது. பழந்தமிழ்ச் சொற்களின் பயன்பாட்டுநிலை இதற்குச் சான்றாகவுள்ளது. பிறமொழிச் செல்வாக்கினால் முற்றிலும் சீர் குலைந்து விடாமல் யாழ்ப்பாணத்தழிழ்' செந்தமிழ் என்னும் சிறப்புடையதாக விளங்குகிறது. மரபான வாழ்வியல் நடைமுறைகளைக் கற்பிக்கும் ஊடகமாக மொழி இன்றும் பயன்பட்டு வருகிறது.
கோல நிலைகள்:
மனித வாழ்வியலின் கோலங்களை விழியால் படம் பிடித்து நினைவுத்திரையில் மீண்டும் கண்டு மகிழ்ந்த காலம் கடந்து விட்டது. விஞ்ஞான தொழில் நுட்பத்தின் முன்னேற்றத்தால் கோலங்களை கருவிகளால் படமாக்கி சின்னத்திரையிலே போட்டுக் காண்பிக்கும் காலம் இது. இந்த வகையிலே பழைய நடைமுறைகளை நினைவுத்திரையிலிருந்து பெயர்த்தெடுத்து மீளக் காட்சிப்படுத்திக் காண்பிக்க வேண்டிய வேளை இது. ஒற்றையடி வழிப்பாதை வழியே சென்ற கார்கள் இன்று பெருந்தெருக்களில் ஓடிக் கொண்டிருக்கின்றன. ஊர்திகளின் ஆற்றலுக்கு ஏற்ப ஓட்டத்தின் விரைவு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்பாடல் கடுகதி நிலையில் தொழிற்படும் இக்காலத்தில் யாழ்ப்பாணத்து வாழ்வியற் கோலங்களை ஒரே நேரத்தில் உலகம் முழுமையும் கண்டு மகிழவும் வாய்ப்புண்டு.
கோலத்தின் வரைவுகளை இணைக்கும் புள்ளிகளின் அமைப்பு கோலத்தின் அழகுக்கு
அடிப்படையாக அமைவது. அத்தகைய
-7-

Page 14
புள்ளிகளாக அமையும் நடைமுறைகளைக் காட்டி யாழ்ப்பாணத்து வாழ்வியலை ஒருமுறை மீள் பார்வை செய்ய வேண்டியதும் காலத்தின் தேவையாகும். இன்றைய இளந்தலைமுறையினர் தேடும் பண்பாட்டு மூல வேர்களின் முடிச்சுக்களைக் காட்ட இச் செயற்பாடு துணை நிற்கும். விஞ்ஞானக் கல்வியின் வியப்பு நிலையால் புதுமையான செய்திகளைக் கேட்க விழையும் உள்ளங்களை நிறைவு செய்யவேண்டி ஒரு சிறிய சுற்றுலா. சென்ற காலத்தின் கோலங்களைக் காட்டி இன்றைய காலத்தின் நிகழ்வையும் இனிவருங்காலத்தின் போக்கையும் ஒரு பார்வையில் கானச் செய்யலாம்.
யாழ்ப்பாணம் நோக்கிய பயணம் இன்று வான்வழி, கடல் வழி என இருவழிப்பயணமாய் நடைபெறுகிறது. காற்றிடையே புகுந்து வரும் விமானம் கொழும்பிலிருந்து புறப்பட்டு ஒரு மணித்தியாலத்தில் யாழ்ப்பாணத்து பலாலி விமான நிலையத்தில் இறங்கி விடும். ஆனாற் கொழும்பிலிருந்து புறப்படும் கடல்வழிப் பயணம் தரைவழியாக திருமலைவரை வந்து அங்கிருந்து கடல்வழி இரவும் பயணஞ் செய்து வந்தால், ஏறக்குறைய 24 மணித்தியா லங்களில் யாழ்ப்பாணத்தில் தரையில் கால் பதிக்க முடியும். கடல்வழிப் பயணம் செய்த களைப்புத்திர கிணற்றடியில் நீர் பருகினால் போதும். நவீன முறையில் கிணற்றிலிருந்து நீள் பெறும் தொழில்நுட்பம் யாழ்ப்பாணத்திற்கு அறிமுகமாகாத வேளையில் நீர் பெறும் தொழில்நுட்பம் தனித்துவமானது. துலாக்கினறு' என்ற சிறப்புப் பெயர் பெற்ற கிணறுதான் யாழ்ப்பாணத்தின் வாழ்வியியற் கோலத்தில் ஒரு மையப் புள்ளி என்றால்
மிகையாகாது. "பொதுக்கினறாக’, எல்லோரும் நீர் பெறும் இடமாக கிணறு பயன்பட்டது. ජෙෆිද්‍රව්‍ය ලිඛJ6ත6II
"தோட்டக்கினறு' என பயிர்ச்செய்கைக்குநீர் வழங்கும் நீள் நிலையாகவும் பயன்பட்டது. பொருள் வளம் படைத்தோர் தனியே தமக்கென ஒரு கிணறு தோண்டிப் பயன்படுத்தும் நிலையில் 'தனிக்கிணறு' என்ற சிறப்புப் பெயரையும் பெற்றது. துலா, துலாக்கொடி, பட்டை, பட்டைக்கிடங்கு,

ஆடுகால், அச்சுலக்கை, மிதிபடி, மிதிகல், பிள்ளைக்கொடி என்ற சொற்கள் கிணற்றின் பயன்பாட்டுடன் தொடர்புடைய சொற்களாக, இன்று மறக்கப்பட்ட தமிழ்ச் சொற்களா கிவிட்டன. ஒரு கிணற்றுக்கு இரு துலா அமைத்துத் தோட்டங்களுக்கு நீர் இறைத்த காட்சி இன்று மனத் திரையில் மட்டுமே நிழலாடுகிறது. யாழ்ப்பாணத்திலே பெண்களும் துலா மிதித்து நீள் இறைப்புக்கு உதவியமை இங்கு குறிப்பிடத்தக்கது. புகையிலைத் தோட்டம் பணப்பயிர்ச் செய்கையாக யாழ்ப்பாணத்துப் பொருள்வளத்தைச் செழுமைப்படுத்தியது. செம்மண்ணின் செழுமையும் கிணற்று நீரின் தன்மையும் தோட்டப்பயிர்கள் பச்சைப் பசேலென வளரத் துணை செய்தன. இயற்கையான உரங்களைப் பயன்படுத்தி நிலத்தைப் பண்படுத்தி மக்கள் செய்த நில வேளாண்மை இன்றும் தொடர்கிறது. நெல்லும், புகையிலையும், வெங்காயமும், ஏனைய மரக்கறிகளும் யாழ்ப்பாணத் தவருடைய நில வேளாண்மை ஆற்றலைப் பறைசாற்றி நின்றன. யாழ்ப்பாணத்து மண்ணிலே மேலைத் தேசத்தவர் காலடி பதித்தபோது தெருக்கள் தோட்டவெளிகளை ஊடறுத்துச் செல்ல மக்கள் தொடர்பாடல் தொடங்கியது. சிறிய குறிச்சிகள் எல்லாம் இணைய யாழ்ப்பாணம் என்பது பரந்த பிரதேசத்தைத் தன்னுடைய நிலப்பரப்பாக்கிச் சூழ நின்ற கடலை எல்லையாக்கிற்று. அந்த எல்லைக்குள் நடந்த மக்கள் வாழ்க்கை தனித்துவ முடையதாகவும் அமைந்தது. நாளாந்த நடைமுறைகள் யாவும் நிலத்தின் இயல்பையும் நீரின் இயல்பையும் கொண்டு அமைந்தன. மக்கள் வாழ்வியல் ஒழுங்கானதான இயற்கை நிலையில் நடந்தது. பருவ மாற்றங்களையும் உட்ல் வளர்ச்சி நிலைகளையும் கருத்திற் கொண்டு மரபுகள் தோன்றின. வாழ்வியற் கோலங்கள் செம்மையான தோற்றம் பெற்றன. இறுக்கமான மரபு என்று இன்று நிலைக்கின்ற நடைமுறைகள் யாவும் மக்கள் வாழ்வியலின் செல்நெறியினை நன்கு வழிப்படுத்தி நின்றதை அறிய முடிகிறது.
-8-

Page 15
பண்பாட்டு நிலையில் இயற்கையும் பெண்மையும் நன்கு இணைந்திருந்ததை மக்கள் வாழ்வியல் நடைமுறைகள் இன்று விளக்குகின்றன. ஆணும் பெண்ணும் குடும்பமாக இணைந்து வாழும் நிலையில் இறுக்கமான நடைமுறைகள் இருந்தன. பென்னின் உடல் வளர்ச்சி நிலை பெரிதும் கண்காணிக்கப்பட்டது. அவள் பூப்பு அடையும் போது பல நடைமுறைகள் செயற்படு த்தப்பட்டன. பண்பாட்டுப் பேணலில் பெண்ணுக்கு அளிக்கப்பட்டிருந்த முதன்மைநிலை சிறப்புடையது. முதற்பூப்பு மிகவும் தனித்துவமான நடைமுறைகளால் மரபாகப் பேணப்பட்டது. பூப்பெய்திய பெண்ணைத் தனிமைப்படுத்தியபோது அவளுடைய உடல், உளநலம் எல்லோராலும் கவனிக்கப்பட்டது. வீட்டிலே மூலையிலே கரிக்கோட்டால் எல்லையிட்டு அதற்குள் சாக்கை விரித்து அவளை இருத்தும் முதியவள், வாழ்வியல் நடைமுறைகளைச் செயற்பாட்டு நிலையிற் கற்பிக்கும் நல்ல ஆசிரியையாக விளங்கினாள். பூப்படைந்த பெண்ணின் உடல்நல நிலையில் மாற்றாடை அணிவிக்கப்பட்டது. இது மருவிய நிலையில் மாறாடி என இன்றும் சில கிராமங்களில் பயன்படுத்தப்படுகிறது. வெண்ணிற ஆடையே முதற்பூப்பின் போது பயன்பட்டது. பூப்படைந்த பெண்ணின் அப்போதைய உடல் நிலையைக் கவனிப்பதற்கு அது பெரிதும் உதவியது. வெளியேறும் கழிவை மதிப்பிட்டு அவள் உணவு நிலைப் பராமரிப்பில் விசேட கண்காணிப்பை மேற் கொண்டனர். அவள் மனதிலே பயம் தோன்றா வண்னம் சில காவல் நிலைகளும் செய்ய்ப்பட்டன. இரும்பினால் ஆன பாக்குவெட்டி, சத்தகம், திறப்பு, அடவியன், வேப்பிலைக்கொத்து போன்ற பொருட்களை அவள் அருகிலே வைத்து காவல்நிலைகளுஞ் செய்யப்பட்டன. இரவிலும் அவளருகே விளக்கு ஒன்று கொளுத்தி வைக்கப்பட்டது.
முதற்பூப்பின்போது செய்யப்பட்ட நீராட்டு ‘குப்பைத் தண்ணிர் வார்வை' என அழைக்கப்பட்டது. வீட்டிற்கு பின்புறம் சிறிய குப்பைக் குவியலின் மேலே பெண்ணை

நிறுத்தி நீராட்டினர். குப்பைகளை நாளாந்தம் சேர்த்து வைக்கும் மேடான பகுதியிலே இது நடைபெற்றது. பூப்படைந்த பெண்ணை முக்காடு போட்டு அழைத்து வந்தனர். இவள் இரு கைகளிலும் இரு வெற்றிலைச் சுருள்கள் கொடுக்கப்பட்டன. இந்த வெற்றிலைச் சுருள்களின் உள்ளே ஒவ்வொரு முழுப் பாக்கு வைக்கப்படும். பின்னர் அச்சுருள் ஆடையைத் தூய்மை செய்யும் தொழிலாளிக்கு வழங்கப்படும். குப்பை மேட்டினருகே நிறைகுடம் வைத்துப் பெண்ணின் தாய் மாமனார் தேங்காயை உடைத்து முதலில் நீராட்டுவார். அவரையடுத்து அவர் மனைவி நீராட்டியபின் மாற்றாடை (வெள்ளைச் சேலை பின் கொய்யகம் வைத்து) அணிவித்து கரிக்கோட்டு எல்லையில் குந்தியிருக்கச் செய்வர். நான்கு நாட்கள் இந்த இருப்புநிலை தொடங்கும். பெண்ணின் உணவிலே கத்தரிக்காய், வெங்காயம், நல்லெண்ணெய் என்பன தனித்துவமாகச் சேர்க்கப்படும். அவளுக்கு வயிற்றுவலி ஏற்படா வண்ணம் கூட்டுச் சரக்கு ஒன்று அரைத்து திரளாக்கிக் கொடுக்கப்படும். இக்கூட்டிலே வேப்பந்துளிர், மஞ்சள், உள்ளி, பனங்கட்டி, கத்தரிக்காய்ச் சாறு என்பன சேர்ந்திருக்கும்.
ஐந்தாம் நாள் மங்கல நீராட்டு நடைபெறும். இந் நடை முறையையும் தாய் மாமனாரே முன்னின்று நீராட்டு செய்வார். ஆனால், இந்த நீராட்டு கிணற்றடியிலே நடைபெறும். தேங்காய் உடைத்து பெண்ணின் தலையிலே பால், அறுகு வைத்த பின்னரே மாமனார் முதலில் நீராட்டுவார். பின்னர் ஏனைய முதிய, திருமணமான, குழந்தைகள் பெற்ற பெண்கள் நீராட்டிப் பெண்ணுக்குப் புதிய சீலை அணிவித்து திருமணப் பெண்போல அலங்காரஞ் செய்வர். இதனைக் கிணற்றடியிலேயே வைத்துச் செய்வர். அவளை முக்காடு போட்டுக் கைகளிலே வெற்றிலைச் சுருள் கொடுத்து முன்னரே பூப்பு எய்திய தோழியர் இருவர் புடை சூழ அழைத்து வருவர். நடைமுறைகளின் அநுபவம் பெற்ற தோழியர் பூப்படைந்த பெண்ணை நன்கு வழிநடத்தவே இந்நடைமுறை செயற்படுத்தப்பட்டது. தாய்
9

Page 16
மனையின் வாசலிலே வைக்கப்பட்டுள்ள நிறைகுடம், குத்துவிளக்கை மும்முறை வலம் வந்த பின்னர் பெண்ணுக்கு ஆலாத்திகள் எடுப்பர். பெண்ணின் மாமியே இந் நடைமுறையை முன்னின்று செய்வாள். திருமணம் ஆகிக் குழந்தை பெற்ற மனைவளமுடையோரே ஆலாத்தி எடுப்பர். ஐந்து வகையான ஆலாத்திகள் எடுக்கப்படும். புட்டு, பலகாரம், பழம், தோங்காய், பூக்கள், நிறைநாழி என்னும் ஆலாத்திகள் முடிந்த பின்னர் பால் ரொட்டியும் வேப்பிலையும் வைத்து நாவுறு கழிக்கும் ஆலாத்தி நடைபெறும். பெண்ணின் எழிலான கோலத்தைக் கண்டு களித்தவர்களின் நாவுறு அவளைப் பாதிக்காமல் காவல் நிலையாக இந்த ஆலாத்தி முதிய பெண்களால் எடுக்கப்படும். அடுத்து கண்ணுாறு கழிக்கும் 'விளக்குத்திரி'ஆலாத்தி எடுக்கப்படும். அதுவரை நின்ற நிலையில் பெண் நடைமுறைகளில் செயற்படுவாள். ஆலாத்திகளை எடுக்கும்போது பெண்ணின் வலப் பக்கமாகவே சுற்ற வேண்டும். நிறைநாழியாலே ஆலாத்திய பின்னர் அதனைப் பெண்ணின் இரு கைகளாலும் பக்குவமாகப் பற்றி வைத்திருக்கும்படி செய்வார். அன்றிலிருந்து தானியப் பங்கீட்டையும் செல்வத்தையும் ஆள்கின்ற பொறுப்பு அவளிடம் கையளிக்கப்படுவதை இந்த நடைமுறை துலக்கி நிற்கின்றது. நெல்லை அளந்து கொடுக்கின்ற கொத்திலே நெல்லை நிரப்பி அதன் மேலே வெற்றிலையிலே சத்தகக் கத்தியை இணைத்து அதன் காம்பினை நெல்லிலே புதைத்து விடுவர். அதன்முன்னே நெல்லின் மேல் மஞ்சள் நிறமான எலுமிச்சம்பழத்தை வைப்பர். பழம் செல்வத்திற்கு காவல் நிலையாகக் கருதப்படுகிறது.
பூப்பு நீராட்டின் போது ஆலாத்திகள் முடிந்த பின்னர் பெண்ணுக்குத் தாய் மாமன் கழுத்துக்கு சங்கிலி அணிவிப்பார். பென் அவருடைய கால்களிலே விழுந்து வணங்கி அவர் வாழ்த்தைப் பெறுவாள். அதன் பின்னர் மாமியார் பெண்ணுக்கு வெற்றிலையிலே வைத்து பணம் கொடுப்பார். பூப்படைந்த

பெண்ணுக்குத் திருமணம் செய்து வைக்கும்
பொறுப்புத் தாய் மாமனிடமே விடப்பட்டிருந்தது. பொருத்தமான வயதிலே அவருக்கு ஆண் குழந்தையிருபின்
அவனையே மணம் முடித்து வைப்பர். பெண்ணின் வாழ்வு சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காக பூப்பு நீராட்டு விழாவிலே மங்கலமான அநுபவமுடைய பெண்களே நடைமுறைகளைச் செயற்படுத்த வேண்டும் என்ற மரபு இறுக்கமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. ஆனால், இன்று இதனை யாரும் கருத்திற் கொள்ளாத நிலை உருவாகியுள்ளது. பெண்ணின் கடமைகளும் உரிமைகளும் நன்கு பேணப்பட்டதையும் இந்த நடை முறைகளின் செயற்பாடு விளக்கி நிற்கின்றது. சொத்துக்களைப் பேணுகின்ற பொறுப்பை வீட்டில் இருக்கும் பெண்ணே ஏற்க வேண்டும். குடும்பம் என்ற கட்டமைப்பைத் தளராது பேணும் ஆற்றல் பெண்ணின் உள உறுதியிலும் செயற்பாட்டு வினைத் திறனிலுமே வெளிப்பட்டது. நிலத்து வேளாண்மையால் பெற்ற நெல்லைப் பகுத்துண்டு வாழும் பயிற்சி பூப்பு அடைந்த பெண்ணுக்கு வழங்கப்பட்டதைப் பூப்பு நீராட்டு நடைமுறைகள் விளக்கி நிற்கின்றன. பண்பாட்டுப் பேணலில் பெண்ணுக்கு மரபான வளர்ச்சிகளை அறியும் திறனும் இயற்கையால் வழங்கப்பட்டிருந்தது. குடும்ப நிலையில் பெண்ணின் ஒழுக்கமும் பூப்பு நிலையால் உணர்த்தப்பட்டது. பெண் பூப்படைந்த நாள், நேரம் என்பவற்றைக் கொண்டு அவருடைய எதிர்காலம் கணிக்கப்பட்டது. பூப்படைந்த பெண், குழந்தை பெறுவதற்குரிய தகுதி பெற்றவளாகவும் ஆற்றல் பெற்றவளாகவும் கருதப்பட்டாள். தூய்மை நிலையில் சில நாட்கள் மட்டும் வீட்டுப் பொறுப்புகளிலிருந்து விலகி வாழ நேர்ந்தது. ஆனால், அவ்வேளைகளில் ஆண் அப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டான். இதனாற். குடும்பத்தில் சமநிலை பேணப்பட்டது.
தொழில்:
யாழ்ப்பாணத்து வாழ்வியற் கோலங்களில் இன்று பூப்பு நீராட்டுவிழா
-10

Page 17
கவின் தரு காட்சியில் மட்டுமே நடத்தப்படுகிறது. அந்த நடைமுறைகளில் மனித வாழ்வின் ஒழுக்கமும் இலக்கும் வரையறை செய்யப்பட்டிருந்ததை அறியும்போது அதன் தனித்துவம் புலனாகின்றது. கடல் வேளாண்மையால் வளம் பெற்று வாழ்ந்த மக்களிடமும் இந்த பூப்பு நடைமுறைகள் பெரிதும் பேணப்பட்டன. மீன் பிடித்து வாழ்வு நடத்தும் குழுவினரிடையேயும் பெண் ஆற்றல் படைத்தவள் என்ற உணர்வு மேலோங்கி நின்றது. மீன் பிடித் தொழிலுக்கும் ஆள்பலம் இன்றியமையாதது. பூப்படைந்த பெண்ணின் உடல் வளம் பேணப்பட்டு <නේඛJග්1 பெற்றெடுக்கும் குழந்தைகளின் உடற்பலம் மதிக்கப்பட்டது, மேலும் தொழில் நிலையில் மேலதிகமாகப் பிடிபடும் மீனை வாடலாகப் பயன்படுத்தும் தொழில்நுட்பம் பெண்களிடம் மரபாகக் கையளிக்கப்பட்ட பயிற்சியாக உள்ளது. தன் குழந்தைகளுடன் கருவாட்டிற்காக மீனைப் பதம் செய்யும் தாய்மைக் கோலக் காட்சி யாழ்ப்பாணக் கடற்கரைகளிலே கண்ணுக்கு நல் விருந்தாகும். மீன்பிடித் தொழில் செய்ய முடியாத, காலநிலை தடையாக நிற்கும்போது பெண்ணின் தொழிநுட்பத்தால் பதப்பட்ட மீன் வாடல் குடும்பச் செலவுக்குப் பயன்பட்டது. இதற்கு )3Lחט6םaס யாழ்ப்பாணத்திற்கு வெளியே வணிகப் பொருளாக அது ஏற்றுமதி செய்யப்பட்டது. வாழ்வியலில் வளம் பெருக்கும் பெண்ணின் ஆற்றல் யாழ்ப்பாணத்தை பிற இடங்களோடு இணைத்தது. பிடித்த மீனைப் பச்சையாக விற்பனை செய்யும் பெண்ணின் ஆற்றலும் மதிக்கப்பட்டது. மீனைச் சுமந்து சென்று விற்கும் நிலையும் இருந்தது. பழைய சங்கப் பாடல்களில் பாண்மகள் மீன் பிடித் தொழில் செய்ததாகக் குறிப்புண்டு. இந்தப் பாண் மகளே வட்டியிலிருந்து மீன் சுமந்து சென்று விற்றாள். மீனுக்குப் பதிலாக நெல்லையே விலையாகப் பெற்றாள். அதுமட்டுமன்றி கடல் 虚放 விளை பொருளான உப்பு விளைவித்தலிலும் அவள் தேர்ச்சி பெற்றிருந்தாள். விளைவித்த உப்பை சகடத்திலே ஏற்றிச் சென்று விற்றாள். அது

போலவே அவள் தலைமுறையில் வந்த யாழ்ப்பாண மகள் மீன் விற்று வருவதை இன்றும் காணலாம். யாழ்ப்பாணம் கடலாற் குழப்பட்டிருந்ததால் கடல் வேளாண்மை செய்ய வாய்ப்பான இடமாகவும் இருந்தது.
வாழ்வியற் கோலங்களைத் தெளிவாகக் காண்பதற்கு யாழ்ப்பாணத்து நிலத்தின் இயல்பும் துணை நின்றது. மனித வாழ்வியல் நடைபெற்ற நிலத்தை தமிழிலக்கியப் பாடல்கள் வகைப்படுத்திக் காட்டியுள்ளன. மலையும் மலை சார்ந்த பிரதேசமும் குறிஞ்சி என்ற பெயர் பெற்றது. காடும் காடு சார்ந்த பகுதியும் முல்லை எனப்பட்டது. வறண்ட கள் நிலம் பாலை என்ற பெயர் கொண்ட ழைக்கப்பட்டது. வயலும் வயல் சார்ந்த பிரதேசமும் மருதம் என அழைக்கப்பட்டது. கடலும் கடல்சார்ந்த இடமும் நெய்தல் என்ற பெயர் பெற்றது. அந்தந்தப் பிரதேச மக்கள் இயற்கை நிலையோடு ஒன்றி ஏற்ற தொழில் செய்து வாழ்ந்ததைச் சங்கப்பாடல்கள் நன்கு பதிவு செய்து வைத்துள்ளன. அப்பாடல்களின் விளக்கமாக யாழ்ப்பாணத்து வாழ்வியற் கோலங்களைக் காணலாம். யாழ்ப்பாணத்தில் மலை இல்லை; ஆறு இல்லை. ஆனாலும் கீரிலை, சுதுமலை, கம்பர் மலை போன்ற சொற்கள் இடப்பெயர்களாக உள்ளன. தொண்டமனாறு, வழுக்கையாறு என்ற இரு ஆற்றுப் பெயர்கள் வழக்கிலே உள்ளன. ଅ51 - ଟ3 ଔର୬ மழைநீரைச் சேர்க்கும் கால் வாய்களே இவ்வாறு ஆற்றின் பெயர் கொண்டழைக்கப்படுகின்றது என்ற கருத்தும் உண்டு. ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்', மலை இல்லாத யாழ்ப்பாணத்திலே சுண்ணக் கற்பாறைகளே மலைகளாக விளங்கின. கீரிமலையின் தோற்றம் கீரியின் முக அமைப்பைப் பெற்றிருந்ததால் கீரிமலை என்றழைக்கப்பட்டது. மண்டபக்காடு என அழைக்கப்படும் பிரதேசம் சுண்னக் கற்பாறைகளின் படிவுகளில் நிலக்குகை அமைப்பு இருந்ததை இன்றும் புலப்படுத்தி நிற்கிறது. மாயக்குகை என்ற பிரதேசமும் இந்த அமைப்புடையதாக விளங்கி மலை நிலத்து இயல்பின் எச்சத்தை விளக்கி நிற்கிறது.
-11

Page 18
வரண்ட களர்நிலம், மணற்பாங்கான நிலம் என அமைந்த பிரதேசங்கள் பாலை நிலப் பண்பைக் காட்டி நிற்கின்றன. மணற்குண்றுகள் மலிந்த இடம் மணற்காடு என அழைக்கப்பட்டது. மருத நிலத்துப் பண்பை விளக்கும் பெயர்களும் உண்டு. 'மருதடி', 'மருதங்கேணி என்ற இடப் பெயர்கள் அதன் எச்சமாக இன்றும் வழக்கில் உண்டு. மருதமரம் நிறைந்த பிரதேசத்தில் நன்நீர் வளமுண்டு என்ற நம்பிக்கை இன்றும் மக்களிடையே நிலவுகிறது. பசிய வயல்கள் நிறைந்த பிரதேசமாக மருத நிலப் பிரதேசம் விளங்குகிறது. குளத்துநீரால் மருதநிலத்தில் வயல் செய்கை வளம் பெற்றிருந்தது. அதை விட ஆடை துலக்கும் காட்சி அந்த மக்கள் வாழ்வியலைக் காட்டி நின்றது. துலக்கிய ஆடைகளை வெயிலிலே காய விடுவதும் அழுக்காடைகளைத் தோய் கல்லிலே துவைத்து அலம்புவதும் தொழில்நுட்பத்தை விளக்கி நிற்கும். U6 bñr சேர்ந்து துவைக்கும்போது எழும் ஒலி குளத்துச் சூழல் எங்கும் பிரதிபலித்தது.
காடும் காடு சார்ந்த இடமும் இன்று வளம் குன்றிப்பற்றையாகக் காட்சி தந்தாலும் அங்கு மாடு, கன்று, ஆடு வளர்க்கும் வாழ்க்கை மரபு இன்னமும் பேணப்படுகின்றது. முன்னைய காலத்துச் சிறப்பை நினைவு படுத்துவதாக இன்றும் மாட்டுப் பொங்கல் நடைமுறை வழக்கிலுள்ளது. LρΠ(b, வழிபாட்டு நடைமுறைகளுடன் பெரிதும் தொடர்புபட்டுள்ளது. பால், தயிர், நெய், கோசலம், கோமயம் என்னும் ஐந்தும் தூய்மைப்படுத்தும் பொருட்களாக இன்றும் பயன்படுத்தப்படுகின்றன. celeo) 6
பஞ்சகெளவியம்’ என்று அழைக்கப் படுகின்றன. 'துடக்குநிலை' என்னும் தூய்மையற்ற நிலையைத் தூய்மைப்படுத்தும் நடைமுறையில் இன்றியமையாத பொருட்களாகச் சிறப்புப் பெற்றுள்ளன.
கோமயம் வீட்டின் தரையை மெழுகிச் சுத்தமாக்கப் பயன்படுத்தப்படுகிறது. ‘சாணம் கரைத்துத் தெளித்தல் என்ற நடைமுறையில் வீட்டின் சூழல் தூய்மைப்

படுத்தப்பட்டது. முள்முருக்கையிலைச் சாற்றுடன் சாணத்தைக் கலந்து தரையை மெழுகுவதால் நிலம் பசுமையான தோற்றம் பெற்றது. யாழ்ப்பாணத்து பழைய மண் வீடுகளைத் தூய்மைப் படுத்தும் போது செம்மண் பயன்பட்டது. சிறிய சுற்றுச் சுவர்களை செம்மண்ணால் தீற்றி அழகு படுத்தினர். அந்தச் செம்மண் சுவருக்குள் வரையறை செய்யப்பட்ட தரைப்பகுதி பச்சை நிறம் பெற்று வீட்டைக் கவின் பெற வைத்தது. மக்களின் வளநிலைக் கேற்ப வீட்டின் அமைப்பு சிறிது வேறுபட்டு இருந்தது. மருதநில மக்களின் வீடமைப்பு பெரும்பாலும் நாற் சார் அமைப்புப் பெற்றிருந்தது. வேளாண்மைக் கருவிகளையும், நெல்லையும் பாதுகாத்து வைப்பதற்குப் பரந்த இடம் தேவைப்பட்டதால் நாற்சார் வீடு மிகுந்த பயன் தருவதாக இருந்தது. மாடு, ஆடு, வளர்க்கும் மக்களின் வீடமைப்பு சிறிய குடில் அமைப்புடையதாக இருந்தது; பெரும்பாலும் மண்வீடாகவே அமைந்தது. கடல் வேளாண்மை செய்தோர் வாழ்விடங்கள் கடற்கரையிலே சிறிய குடிசைகளாக அமைந்தன. தொழில் நிலையில் 'குடில் என்னுஞ் சொல் மக்கள் வாழ்வியலை விளக்கும் சொல்லாக மாட்டுக்குடில், புகையி லைக் குடில் என அடைகள் பெற்றும் பயன்படுத்தப்பட்டது.
திருமணம்:
மனித வாழ்வியற் கோலங்களில் திருமணம் ஒரு முக்கியமான நிகழ்வாக இருந்தது. இன்று வரையும் அந்தத் திருமண நடைமுறைகள் செவ்வனே செய்யப் படுகின்றன. பருவம் அடைந்த ஆணையும், பெண்ணயும், இணைத்து வைப்பதில் பெரியோர் மிகுந்த கரிசனமாகச் செயற்பட்டனர். இரு பகுதியினரும் திருமண உறவைத் தெளிவாகப் பேசி முற்றுச் செய்தனர். 'பேச்சுக்கால்' என்ற நடைமுறை இன்னும் மரபாக உள்ளது. திருமணம் செய்வது என்ற தீர்க்கமான முடிவுக்கு இரு பகுதியினரும் வந்த பின்னரே 'வாய்நணைப்பு' என்ற நடைமுறை செயற்படுத்தப்படும். பேச்சு
-12

Page 19
நடந்த வீட்டிலே பால், அல்லது வேறு பானத்தை ஏற்றுப் பருகினால் பின்னர் அந்த உறவு முறிந்து விடாது. வாய்நனைத்த வீட்டைத் தவிர வேறு வீட்டில் பெண் கொள்ளவும் கூடாது என்ற மரபு இறுக்கமாகவே கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளது. பேச்சுக்கால் முற்றாகிய பின்னர் பெண் வீட்டிலிருந்து, 'வேள்வு காவுதல்' என்ற நடைமுறை செயல்படுத்தப்பட்டது. ஒரு கூட்டு மூடலில் அவித்த கொழுக்கட்டைகளைப் பரப்பி மூடி அந்த மூடலை வெள்ளைத் துணியால் மூடித் தலையில் சுமந்து ஆண் வீட்டிற்கு எடுத்துச் செல்வர். அந்தக் கொழுக்கட்டை அநுபவம் வாய்ந்த பெண்களால் செய்யப்பட்டது. புதிய பச் சரிசியை இடித்து மாவாக்கி அதை வறுத்தெடுத்த மாவினால் மேற்புறம் அமைய உள்ளுடனாக அவித்த பயறும் சர்க்கரையும் தேங்காய்ப்பூவும் வைத்து நீராவியிலே பக்குவமாக அவித்து எடுக்கப்பட்டது. மாவினால் மூடப்பட்ட வாய் விளிம்பிலே அழகான கயிற்றுத் திரிபோல் வரி செய்யப்பட்டது. கொழுக்கட்டை அவிக்கும்போது பிரிந்து விட்டால் அதைச் சகுனம் பிழையாகக் கருதுவர். இக் கொழுக்கட்டையுடன் கப்பல் வாழைப்பழம் கொண்டு செல்லப்பட்டது. அந்த வாழைப் பழத்திலே கரும்புள்ளி இருக்கக்கூடாது என்பது கவனிக்கப்பட்டது.
திருமணத்திற்கான செயற்பாடுகளில் தாலிக்குப் பொன்னுருக்கல் ஒரு முக்கிய நடைமுறையாக இருந்தது. யாழ்ப்பாணத்தில் மேலைத் தேசத்தவர் நிர்வாகம் நடந்தபோது தங்கம் அவர்களது கட்டுப்பாட்டிலேதான் பெறவேண்டியிருந்தது. எனவே, வாங்கும் பொன்னின் நிறையையும் தரத்தையும் அறிய உருக்கிய நிலையிலே பெறும் நிலை இருந்தது. இந்த நடைமுறை பின்னர் ஒரு மரபாகவே மாறிவிட்டது. பொற்கொல்லர் ஆண் வீட்டிலே வந்து பொன்னை உருக்கிக் காட்டுவர். அதனை ஒரு சிறிய வழிபாட்டு CJUT 35636 செய்வர். தாலிக்குப் பொன்னுருக்கிய பின்னர் அவரிடம் தாலிக் கொடி செய்வதற்கான முற்பணம்

கொடுக்கப்படும். அன்றைய தினமே பந்தற்கால் நடப்படும். பெண் வீட்டிலும் முதல் பந்தல்கால் என்னும் கன்னிக்கால் நாட்டப்படும். இக்கன்னிக்கால் நேரிய முள்முருக்கம் காலாக அமைந்தது. திருமணம் முடிந்த பின்னர் இம் முருக்கங்காலின் வளர்ச்சிநிலை கண்டு குடும்ப வளர்ச்சி அனுமானிக்கப்படும். பொன்னுருக்கும்போதும் கன்னிக்கால் நாட்டும் போதும் தேங்காயை உடைப்பர். அவ்வாறு உடைக்கும் தேங்காய் சரியாக அரைவாசி விட்ட அமைப்பாக உடைய வேண்டுமென்பதில் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டது. அப்படி உடைய வேண்டுமென்பதில் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டது. அப்படி உடையாவிடில் குடும்ப வாழ்வு செம்மையாக நடக்காது என்ற நம்பிக்கை வலுப்பெற்றிருந்தது. அதனால், தேங்காய் உடைப்பதற்கு அநுபவம் உடைய ஒருவரே அனுமதிக்கப்படுவர். அவர் தலையிலே தலைப்பாகை கட்டியே தேங்காயை உடைக்க வேண்டும். இப் பொறுப்பு அநேகமாகத் தாய்மாமனிடமே விடப்பட்டது. தேங்காய் உடைக்கும் போது தாய்க்கண்ணைப்பார்த்து நரம்பிலே படும்படி அடித்து உடைக்க வேண்டும் என்ற மரபு இருந்தது. இத்துடன் வெள்ளைப்பூ மல்லிகை, முல்லை, நந்தியாவட்டை, நித்தியகல்யாணி போன்ற வெண்ணிற மலர்களே பெரிதும் பயன்படுத்தப்பட்டன. மஞ்சள் மங்கலமான பொருளாக இணைக்கப்பட்டிருந்தது. வாழ்வியற் கோலத்தை அழகு செய்யும் புள்ளிகளிலே மங்கலப் பொருட்களாக மஞ்சள், பாக்கு, வெற்றிலை, வெள்ளைப்பூ, எலுமிச்சம்பழம், தேங்காய் என்பன சிறப்பாக இணைந்திருந்தன. இவை விளை பொருள் நிலையில் நாளாந்த வாழ்விலே பயன்ப டுத்தப்பட்ட நிலைக்கும் மரபான வழிபாட்டு நடைமுறையிலே பயன்படுத்தப்பட்ட சிறப்பு நிலைக்கும் வேறுபாடு உண்டு.
வழிபாடு:
மங்கல காரியம் நடைபெறும் இடத்தைக் குறிக்க வெள்ளைச் சேலையால் மேற்கட்டி
-3-

Page 20
கட்டும் மரபு இன்றுவரை பேணப்படுகிறது. முற் காலத்தில் திருமண வீடு, பூப்பு வீடு, இறப்பு வீடு எல்லாவற்றுக்கும் வெள்ளை கட்டும் மரபு இருந்தது. மங்கல காரியம் நடைபெற்ற தாய் மனையிலே நாள் வெள்ளை' கட்டப்பட்டது. ஆடை சுத்திகரிப்பாள் இதனை நாள் குறித்து நிறைநாழி வைத்துத் தொடங்குவர். மங்கல காரியங்களுக்கான பலகாரம் சுடுவதற்குத் தொடங்கும்போது நிறைகுடம் வைத்து பிள்ளையார் பூசை செய்தே தொடங்குவர். தெய்வத்தை நினைத்தே எல்லாக் கருமங்களையும் ஆற்ற வேண்டுமென்ற இறுக்கமான மரபு மக்கள் வாழ்வியற் கோலங்களின் அடிப்படையாக அமைந்துள்ளது. வழிபாட்டு நிலையிலே "பிள்ளையார் பூசை"எல்லோரும் செய்யக்கூடிய எளிமையான, மந்திரச் சொற்கள் அற்ற செயற்பாடாக இருந்தது. தூபம், தீபம், மலர், நீர், என்னும் நான்கும் இவ்வழிபாட்டிலே முக்கியமாக இருந்தன. ஐம்பூதமாக விளங்கும் நிலம், நீர், தீ, காற்று, விண் என்பவற்றின் தொடர்பை வாழ்வியலோடு இணைப்பதாக இந்த வழிபாடு அமைந்தது. அறுகம்புல் செவ்வரத்தை என்னும் இரு தாவரங்களும், மாவிலை, வாழையிலை என்னும் இரு இலை வகையும் இவ்வழிபாட்டுடன் இணைந்த சிறப்புப் பெற்றவை. வாழைப்பழமும், மாம்பழமும், பலாப்பழமும் முக்கனி என்ற நிலையில் சிறந்த மடை பொருட்களாக தெய்வத்திற்கு அளிக்கப்பட்டன. இயற்கையின் வரம்பிலா ஆற்றலால் பெற்ற விளை பொருட்களை இயற்கைக்கு முதலில் மடையிட்ட பின்னரே மக்கள் பயன்படுத்தும் மரபு இன்று வரைபேணப்படுகிறது. "வெளிமடை” என்னுஞ் சொல் யாழ்ப்பாணத்தின் வழிபாட்டு மரபினைச் சிறப்பாக விளக்கிக் காட்டும் சொல்லாக உள்ளது. இம்மடையிடும் செயற்பாட்டில் காய்மடையும், பூமடையும் இணைந்திருந்தன. பருவத்திற்கேற்ற பழவகைகளையும், பூ வகைகளையும் பரவி வழிபாடு செய்தனர். "தெய்வத்தைப் பரவுதல்” என்ற சொற்றொடரின் விளக்கத்தையும் இம்மரபு தருகின்றது. யாழ்ப்பாணத்துக் கோயில்களின் தொடக்ககால வழிபாட்டு 5606)

இதுவேயாகும். பின்னர் கிரியாபூர்வமான வழிபாட்டு நடைமுறைகள் வந்து இணைந்தன. சந்நிதிகோவிலின் பூசை முறைமையும், மடைபரவும் முறைமையும் இன்று இதனை விளக்கிநிற்கின்றன. இக்கோவிலில் சனிக்கிழமைகளில் நடைபெறும் திருமுழுக்குப் பூசை இம்மரபு மாற்றத்தைச் சுட்டி நிற்கின்றது. இங்கு பூசகர் வாயை வெள்ளைத் துணியால் கட்டி மந்திரச் சொற்களின்றி அமைதியாகத் தூபதீபங்களால் பூசை செய்கிறார். தொண்டமானாற்றிலே நீராடி ஈர ஆடையோடு வந்து வீதியிலே அங்கப்பிரதட்சணை செய்யும் ஆண்களும் பெண்களும் எளிமையான வழிபாட்டு மரபினை எடுத்துக்காட்டி நிற்கின்றனர். காவடி, பாற்செம்பு, கள்ப்பூரச்சட்டி என நேர்த்திகளை நிறைவேற்றும் மக்கள் மனதில் வழிபாட்டின் பயன்பற்றிய அசையாத நம்பிக்கை உறுதி குலையாமல் இருப்பதை அறிய முடிகிறது. மடை பொருட்களில் 63 இலைகளிலே அன்னம், கறி படைக்கப்படும் மரபு சந்நிதியில் மட்டுமே காணப்படுகிறது. இந்நடைமுறை அடியார்க்கு அமுது செய்விக்க வேண்டும் என்னும் விருந்தோம்பும் வாழ்வியல் நிலையை விளக்குவதாக உள்ளது. 63 நாயன் மார்களையும் நினைத்து இப்படையல் செய்யப்படுகிறது, என்ற ஒரு விளக்கமும் இந்நடைமுறைபற்றிக் கூறப்படுகிறது. ஆனால் படையல் செய்வதற்கு வாழையிலை பயன்படுத்தப்படுவதில்லை. ஆலம் இலைகளே பயன்படுத்தப்படுகின்றன. இப்படையல் மருந்து என்று சிறப்புப் பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது. தீராத நோயால் வருந்துபவர்கள் சந்நிதிக்கு வந்து தொண்டமனாற்றிலே நீராடி வழிபட்டு மூன்று வேளை இம்மருந்தைச் சாப்பிட்டால் நோய் குணமாகி உடல் நலம் பெறுவர் என்ற நம்பிக்கையுண்டு. அன்னதானக் கந்தன் என்றழைக்கப்படும் சந்நிதி முருகன் கோவிலிலே முன்னர் ஏறக்குறைய 40 மடங்கள் இருந்தன. அந்த மடங்களிலே நோயாளிகள் தங்கியிருந்து மருந்து உண்டுநலம் பெற்றனர். மேலும், குடும்பப் பிணக்கால் மனவேறுபாடு கொண்டோரும் சந்நிதியிலே வந்து சில நாட்கள் தங்கி மனம் தெளிந்து சென்றனர் என
-14

Page 21
யாழ்ப்பாணத்தவர் வாழ்வியற் கோலத்தில் சந்நிதி கோயில் ஒரு முற்றுப் புள்ளியாக அமைகிறது எனில் மிகையாகாது.
யாழ்ப்பாணத்து வாழ்வியற் கோலங்களை இன்று மீள்பார்வையில் நோக்கும் போது மக்கள் நிலத்தின் இயல்போடு இணைந்து வாழ்வு நடத்தியதைக் காண முடிகிறது. காலநிலை மாற்றத்தையும் இயற்கைத் தாவரங்களின் வளர்ச்சி நிலைகளையும் விளைபொருட்களையும் கணிப்பீடு செய்து தமது நடைமுறைகளைத் திட்டமிட்டுச் செயற்படுத்தி வந்துள்ளனர். மனித உடல் வளர்ச்சியினைக் கருவில் தோன்றும் காலத்திலிருந்து இறுதி மூச்சு நின்று ஊயிர்த் துடிப்பு நிற்கும் வரை திட்டமிட்டுள்ளனர். பிறப்பு, பூப்பு, திருமணம், இறப்பு என்ற நான்கு பெரும் பகுதியாக வகுத்து வாழ்வியலை நடத்தினர்.

ஒழுக்கமும் நேர்மையும் வாழ்வின் அடிப்படையாக அமைய ஏட்டுக் கல்வியோடு பட்டறிவினால் பெற்ற தெளிவையும் கொண்டு நடைமுறைகளைச் செம்மையாக வகுத்து அதற்கான பயிற்சிமுறைப் பயில் வையும் நடத்தினர். தொழில் நுட்பங்களைச் செயல் முறைப் பயிற்சியாக பின்னவரிடம் கையளிப்புச் செய்தனர். மரபான வழக்குகளைப் பேச்சுத் தமிழிலும் பேணிவந்தனர். ஒற்றைப்பனையின் நிழலிலும் கூட தங்கி வாழும் பண்புநலன் பெற்றிருந்தனர். அவர்களது வாழ்க்கைப் பாதை ஒற்றையடிப் பாதைகளும், குச் சு ஒழுங்கைகளும் வந்து இணைந்து செல்லும் பெருந்தெருவாக இன்று உலகமெங்கும் தொடர்பாடல் செய்யும் உயர்ந்த ஒரு மேம்பாலமாகிவிட்டது.
-15

Page 22
இராமாயணம்
இராமாயணம் உலகின் பேரிலக்கி யங்களுள் ஒன்றாகும். இது நீண்ட வரலாற்றைக் கொண்டது பல்வேறு நாடுகளிலும் வழங்கி வருவது. குறிப்பாகத் தென்னாசிய, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் பண்பாட்டுடன் இராமாயணம் இரண்டறக் கலந்துள்ளது.
தமிழிலும் சமஸ் கிருதத்திலும் மாத்திரமல்லாமல் இந்நாடுகளில் வழங்குகின்ற பல்வேறு பிராந்திய மொழிகளிலும் இக்கதை காணப்படுகிறது. கன்னடம், மலையாளம், தெலுங்கு, சிங்களம், குஜராத்தி, வங்காளம், மராத்தி, ஒரியா, பிராகிருதம், காஷ்மீரி போன்ற தென்னாசிய மொழிகளில் இராமாயணம் வழங்குகிறது. அத்துடன் சீனமொழி, தீபெத்தியமொழி, கம்போடியமொழி, லாவோசியமொழி, மலேசியமொழி போன்றவையும் இராமாயணம் வழங்குகின்ற மொழிகளாகும்.
இராமாயணக் கதையானது இலக்கியமாக மாத்திரமல்லாமல் வேறு கலை வடிவங்களாகவும் வழங்கி வருகிறது. குறிப்பாக நீண்டகாலமாக அளிக்கைக் at 606)ab6|TT5 (Perfoing Arts) - IBITL5Lories, கூத்தாக, கதாப்பிரசங்கமாக, இசைப் பாடல்களாக இராமாயணம் நிகழ்த்தப்ப டுகிறது. இந்த அளிக்கைக் கலைகளே இராமாயணத்தைப் பொதுமக்கள் மத்தியில் பரவலாக்கியுள்ளன. மேலும் ஒவியம், சிற்பம் ஆகியவற்றுக்கும் இராமாயணக் கதை கருவாக அமைந்து வந்துள்ளது, இராம கதையுடன் தொடர்புடைய பல்வேறு கிளைக் கதைகளும் மக்கள் மத்தியில் நெடும்பாடல்களாகவும், கதைகளாகவும் காணப்படுகின்றன. சாதாரண மொழி வழக்கில், பல பழமொழிகள், உவமைகள் ஆகியவை இராமாயணச் சம்பவங்களையும் பாத்திரங்களையுங் கொண்டு அமைந்துள்ளன.

ஒன்றா? பலவா?
பேராசிரியை சிந்திரலேகா மெளனகுரு
இராமாயணம் பற்றிய இவ்விடயங்களை இங்கு நாண் கூறுவது இவ்விலக்கியத்தின் பெருமையை நிறுவுவதற்கு அல்ல, மாறாக, நீண்ட பாரம்பரியமுள்ள ஒரு இலக்கியம் எவ்வாறு பல்வேறு விகற்பங்கள் உடையதாக மாறியும் வளர்ந்தும் வந்துள்ளது என்பதையும் அத்தகைய விகற்பங்களே அதற்குச் செழுமையையும் நிலைத்து வழங்கும் இயல்பையும் அளிக்கின்றன என்பதையும் எடுத்துக் காட்டுவதற்காகவே. ஏனெனில் தமிழில் இராமாயணம், இலக்கியக் கல்வி மூலமும், EST Tun TULU6OOI விழாக்கள், பட்டிமன்றங்கள் போன்றவை மூலமாகவுமே இன்றைய தலைமுறையினரைச் சென்றடைகிறது.
இவ்வாறு சென்றடைகின்ற இராமாயணம் குறிப்பாகக் கம்பராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டது. இராமா யணத்தின் மூலம் எடுத்துக் காட்டப்படும் தர்மம், கற்பு போன்று விழுமியங்களும் கம்பராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டே கட்டமைக்கப்படுகின்றன. தமிழில் நாட்டார் மத்தியில் வழங்கும் இராமாயணக் கதைகள் புறந்தள்ளப்பட்டு ஒரு குறிப்பிட்ட வகையாக இராமாயண மரபே அங்கீகாரம் பெற்றதாகக் கட்டமை க்கப்படுகிறது.
இராமாயணத்தின் வெவ்வேறுபட்ட மரபுகள், வழக்காறுகள், விகற்பங்கள் நீண்ட வரலாறும் பல்வேறு மரபுகளின் செழுமையும் இராமாயணத்தின் தனித்துவம் வாய்ந்த தன்மையை அதன் நீடித்த வாழ்வுக்குப் பங்களித்துள்ளன என்பதைப் பலரும் மறந்டுவிடுகின்றனர். மாறாக இராமாயணம் ஒன்றுதான், இதனுடைய பிறழ்வுகளே அல்லது திரிபுபட்ட வடிவங்களே ஏனையவை அல்லது இவை இடைச் செருகல்களாக அமைந்தவை என்று பலரும் கூறுவர்.
-16

Page 23
ஆனால், பல்வேறு மொழிகளிலும் பல்வேறு பிரதேசங்களிலும் பல்வேறு கலைவடிவங்களிலும் வழங்கும் இராம கதையானது, இராமாயணம் ஒன்றல்ல, அது பலவாகும் என்றும் இப் பல்வேறு இராமாயணங்களும் அந்தஸ்தில் சமமானவை என்றும் புலப்படுத்துகிறது.
இக்கருத்தைப் புரிந்து கொள்வது இராமாயணத்தை இலக்கியமாகக் கற்கவும்
கற்பிக்கவும் அவசியமானதாகும். நீண்டகாலமாகத் தொடர்ந்து வருகின்ற இலக்கியப் பாரம்பரியங்களின்
பன்மைத்துவமே அவற்றின் உயிர் நாடியாக அமைவது என்ற விளக்கம் கிடைக்கும்போதே அந்த இலக்கியப் பாரம்பரியங்களைச் சரியானபடி அணுக முடியும்.
நாட்டார் மட்டத்தில் இராமாயணம் பற்றி வழங்குகின்ற கதைகள் சில அதன் பன்மைப்பாடு பற்றி எடுத்துக்கூறுவனவாகும். அவற்றில் ஒன்று இந்திமொழியில் அமைந்த ஒரு கதையாகும். கதையின் சுருக்கம் பின்வருமாறு:
"ஒரு நாள் இராமனுடைய மோதிரம் கழன்று கீழே விழுந்தது. விழுந்த மோதிரம் நிலத்தில் ஒரு துளையை உண்டாக்கி அதனூடு மறைந்துவிட்டது. அந்த மோதிரத்தைத் தேடும்படி இராமன் அனுமனைக் கேட்டான். அனுமனும் மிகச் சிறியதோர் உருவம் எடுத்து மோதிரம் வீழ்ந்த துளைக்குள்ளால் நுழைந்து பாதாள உலகை அடைந்தான். பாதாள உலகில் பூததேவனின் உணவுச்சாலையில் அனுமனைக் கண்ட பணிப்பெண்கள் பூதக் கடவுளுக்குப் பிரியமாக இருக்கும் என்று எண்ணி 65ë afslauu உருவிலிருந்த அனுமனைப்பிடித்து அவரது உணவுத்தட்டில் வைத்துவிட்டனர், தனது உணவுத்தட்டில் அனுமனைப் பார்த்த பூதக்கடவுள் விபரம் கேட்டார். இராமனுடைய மோதிரத்தைத் தேடிவந்ததை அனுமன் கூறினான். பூதக் கடவுள் உடனே ஒரு தட்டை அனுமனிடம் காட்டினார். ஆயிரக்கணக்கான மோதிரங்கள் அத்தட்டில் இருந்தன. அவற்றுள்

இராமனுடைய மோதிரத்தைத் தேடி எடுக்குமாறு கூறினார். எல்லா மோதிரங்களும் ஒரே மாதிரியாக இருக்கவே அனுமன் தடுமாறினான். பூதக்கடவுள் பின்வருமாறு விளக்கம் அளித்தார்.
இந்தத் தட்டில் எத்தனை மோதிரங்கள் உள்ளனவோ அத்தனை இராமர்களும் பிறந்து இறந்திருக்கின்றனர். இராமனுடைய பிறப்பு முடிவடையும் வேளை அவரது மோதிரம் கழன்று வீழ்ந்துவிடும். அவ்வாறு வீழ்ந்த மோதிரங்களே இத்தனையும். நீ பூவுலகிற்குப் போகும்போது அங்கு இராமனைக் காணமாட்டாய் என்றார். அனுமனும் திரும்பிச் சென்றான்.
இன்னோர் நாட்டார் கதை மேலும் சுவாரசியமானது அது பின்வருமாறு,
“ခ့ဲ(É இராமாயணம் நிகழ்ந்து கொண்டிருந்தது. வனவாசம் போகவேண்டிய நேரம் வந்தபோது காட்டுக்குத் தன்னுடன் வரவேண்டாம் என இராமன் சீதையைத் தடுக்கிறான். காட்டு வாழ்க்கையின் சிரமங்களை எடுத்துக்கூறுகிறான். சீதை மறுக்கிறாள். இருவருக்கும் வாக்குவாதம் முற்றுகிறது. இறுதியாகச் சீதை இராமனிடம் பின்வருமாறு கேட்கிறாள்.'
இத்தனை இராமாயணங்கள் இதுவரை நிகழ்ந்துள்ளன: எந்த இராமாயணத்தில் சீதை இராமனுடன் காட்டுக்குச் செல்லவில்லை?
சீதையின் வினாவுக்கு விடை அளிக்க முடியாத இராமன் அவளை காட்டுக்குத் தன்னுடன் கூட்டிச் சென்றான்.
இவ்விரண்டு நாட்டார் கதைகளும் பல இராமாயணங்களில் நிகழ்ந்துள்ளன: பல இராமாயணங்கள் உள்ளன என்ற கருத்தைக் கூறுகின்றன. b
ஆனால், இன்று கல்வி நிறுவனங்களிலும் கலை, இலக்கிய நிறுவனங்களிலும் நிலைநிறுத்தப்பட்டுள்ள கருத்துஇராமாயணம்
-17

Page 24
ஒன்று என்பதாகும். குறிப்பாக வான்மீகியின் இராமாயணமே ஆதியானது, அதுவே மூலநூல், ஏனைய இராமாயணங்கள் யாவும் வான்மீகி இராமாயணத்தின் தழுவல் களாகவும், அதன் வழிவந்தவையாகவும் அமைந்தவை என்ற கருத்தே அழுத்தம் பெற்றுள்ளது. கம்பர், துளசிதாசர், பவபூதி ஆகியோர் ஆக்கிய இராமாயணங்கள் பற்றித்தான் பலர் கவனம் செலுத்துகின்றனர். இவையும் வான்மீகி இராமாயணத்தின் வழித்தோன்றல்களாகவே கருதப்படுகின்றன.
இவ்வகையில் இந்துப் பாரம்பரியத்தின் ஊடாக இராமாயணத்தை நோக்கும், விளக்கும் முயற்சிகளே அழுத்தம் பெற்று வந்துள்ளன. தென்னாசிய சமூகத்தில் நடைபெற்ற மேல்நிலையாக்கம் (Sanskritizofion) Luao6u6O)35u5F6OT 6 JT35 SQubbğDJ இராமாயண மரபுகளில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து அவற்றுக்கு அங்கீகாரம் அளித்து நிலைநிறுத்தியது. இவ்வகையில் இன்று எமக்கு இலகுவில் கிடைக்கக்கூடியதாயிருப்பது 2_uf நிலைப்பட்ட இந்து இராமாயணமேயாகும்.
சமண இராமாயணம், பெளத்த இராமாயணம், ஆந்திரநாட்டில் பிராமணப் பெண்களிடையேயும், பிராமணர் அல்லாத பெண்களிடையேயும் வழங்கும் இராமாயணம், கன்னட மொழியில் தாழ்த்தப்பட்ட மக்களிடையே வழங்கும் இராமாயணம் என இராமாயணம் பலவகைப்பட்டது. இப்பல்வேறு மரபுகளிலும் இராமர், சீதை, லக்குமணன், இராவணன், அனுமன் ஆகிய பாத்திரங்கள் உள்ளன, பாத்திரங்கள் ஒன்றேதான். ஆனால் அவை ஒரே வகையின அல்ல. அவற்றின் குணங்கள், செயல்கள் வேறுபடுகின்றன. அவற்றுக்கிடையிலான உறவுகளில் வேறுபாடுகள் உள்ளன. கதை நிகழ்வுகளிலும் மாற்றங்கள் உள்ளன.
சமண இராமாயணம் விமலசூரி என்பவரால் ஆக்கப்பட்டது. பெளமாசரிய எனப்பெயர் கொண்டது. இந்த இராமாயணம் இராவணனுடைய வம்சாவழி கூறுவதுடன்

ஆரம்பிக்கின்றது. இராவணன் அறுபத்துமூன்று சமணத் தலைவர்களுள் ஒருவனாகவே சித்திரிக்கப்படுகிறான். அவனுடைய தவ வலிமையால் அவன் மந்திர சக்திகள் பெறுகிறான். சீதையை அவன் விரும்புவது விதியின் வலிமையாலேயே என சமண இராமாயணம் கூறுகிறது. இராமனும் கூட விடுதலை அடையத் தயாராயுள்ள ஒரு சமண ஆத்மாவாகவே சித்திரிக்கப்படுகிறான். இராவணனைக் கொல்பவனாக இராமன் செயற்படவில்லை. இலக்குமணனே இராவணனைக் கொல்கிறான். இராமன் கைவல்ய (முக்தி) நிலையை அடைகிறான். இவ்வாறு சமண தத்துவ நோக்கில் பாத்திரங்களும் கதைகளில் மாறுதல்களும் அமைந்துள்ளன. அத்துடன் காரணங்களின் அடிப்படையிலேயே செயல்கள் விளக்கப் படுகின்றன.
கன்னட மொழியில் தாழ்த்தப்பட்ட மக்களிடையே வாய்மொழிப்பாடலாக வழங்கும் இராமாயணமும் இராவணன், மண்டோதரி ஆகிய பாத்திரங்களுடனேயே ஆரம்பிக்கிறது. குழந்தைப் பேறற்ற இராவணன் பல கடுமையான விரதங்களை மேற்கொள்ளுகிறான்.
சிவன் முனிவராகத் தோன்றி மாம்பழமொன்றை அவனுக்குக் கொடுக்கிறார். இராவணன் ceiba மாம்பழத்தைத் தனது மனைவிக்குக் கொடுப்பதாகக் கூறிப் பெற்றுக்கொள்கிறான். ஆனால், அவனே அதனை உண்ணுகிறான். இதனால் அவன் கர்பமடைகிறான். அவனுடைய மூக்கின் வழியாக சீதை பிறக்கிறாள். இவ்வாறு சீதையின் பிறப்பைக் கூறிய பின்னரே இராமர், இலக்குமணன் பற்றி இக்கன்னட இராமாயணம் கூறும்.
சீதையை இராவணனது புதல்வியாகக் கூறும் மரபு வான்மீகி இராமாயண மரபிலிருந்து முற்றிலும் வேறானது. இத்தகைய மரபு கன்னடம், தெலுங்கு மொழிகளில் நாட்டார் மட்டத்திலும் தென்கிழக்காசிய இராமாய னங்கள் பலவற்றிலும் காணப்படுவதாகும்.
-18

Page 25
இன்னோர் இராமாயணம் இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு மொழி பேசும் பிராமணப் பெண்களிடமும், பிராமணர் அல்லாத பெண்களிடமும் வழங்குகிறது. பிராமணப் பெண்கள் தமது வீட்டில் நடக்கும் சடங்குகளின்போது தமது இராமாயணத்தைப் பாடுகின்றனர். பிராமணர் அல்லாத பெண்கள் பெரும்பாலும் வயலில் வேலை செய்யும்போது இராமாயணப் பாடல்களைப் பாடுகின்றனர். உழைப்பின் களைப்பை மாற்றுவதற்கும் இப்பாடல்கள் உதவுகின்றன. ஆனால், அழுத்தங்கள் வேறுபடுகின்றன. பிராமணர் அல்லாத பெண்கள், சீதையின் திருமணம், அவளது சிறையிருப்பு, பிரசவம் போன்றவை பற்றி அதிகம் அழுத்தம் கொடுக்கின்றனர். இலக்குமணன் சீதையின் புத்திரர்களான லவ, குச ஆகிய இருவரையும் அன்புடன் பராமரிப்பது பற்றியும் இப்பாடல்கள் கூறுகின்றன. இவ்வாறு இந்த இராமாயணத்தில் பெண்பாத்திரமான சீதைக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம், இலக்குமணன் தனது மருமக்களைப் பராமரிப்பதற்குத் தரப்பட்டிருக்கும் அழுத்தம் ஆகியவை, இந்த இராமாயணத்தினூடாகப்
பெண்களது பார்வையும் விருப்பும், வியாக்கியானங்களும் இடம்பெற்றிருப்பதற்கு எடுத்துக் காட்டுகளாகும் 66OI ஆராய்ச்சியாளர்கள் கூறுவர்.
பெளத்த சூழலின் இரு இராமாயணக்கதை மரபுகள்
காணப்படுகின்றன, ஒன்று பெளத்த ஜாதகக் கதைகளில் ஒன்றான தசரத ஜாதகம். இது வான்மீகியின் கதையைவிடக் காலத்தால் முந்தியது என்று சில ஆராய்ச்சியாளர் கூறுவர். இது பற்றி அபிப்பிராயபேதம் உள்ளபோதிலும் மிகப்பழைய கதைகளில் இதுவும் ஒன்று என்பதில் சந்தேகமில்லை. மற்றது லாவோசிய மொழியில் அமைந்தது. தாய்லாந்தின் வட கிழக்குப் பகுதி கம்போடியாவின் தென்பகுதி ஆகியவற்றில் வழங்கும் பெளத்த ராமாயணம் பற்றிய தகவல்களை இராமாயன ஆய்வாளர்கள் திரட்டியுள்ளனர்.

இவ்வாறு உயர் இந்து மரபில் மாத்திரமன்றி வேறு பாரம்பரியங்களிலும் இராமாயணம் வழங்கி வருவதை அறிந்துகொள்வது முக்கியமானதாகும். இத்தகைய வழக்காறுகளே இராமாயணத்தை பிரபல்யம் அடைய வழிவகுத்தன. அத்துடன் இவையே பல்வேறு மொழிகளிலும் பிரதேசங்களிலும் இலக்கியமாகவும் வேறு கலை வடிவங்களாகவும் இராமாயணத்தைப் பரிணமிக்கச் செய்துள்ளன. ஆனால், உயர்மட்டத்திலும் அதிகாரமட்டத்திலும் இராமாயணம் ஒன்றே, அதன் தழுவல்களே ஏனையவை என்ற கருத்தே நிலவுகிறது.
இந்தக் கருத்தே லவன், குசன் ஆகியோரின் பிறப்பு, இராமன் சீதையைக் காட்டுக்கு அனுப்புதல் ஆகிய நிகழ்வுகளை உள்ளடக்கிய உத்தரகாண்டத்தை இடைச் செருகலாகவும் காலத்தால் பிந்தியதாக வாதிடுவதற்கும் c912jU60)L-UT35 அமைந்துள்ளது. உண்மையில் இராமாயணத்திற்கு இரண்டு வகையான கதை முடிவுகளை நாம் ஏற்றுக் கொள்ள மடியும். ஒன்று சீதையைச் சிறைமீட்டு இராமன் அயோத்திக்குத் திரும்புதல். மற்றது அயோத்திக்குத் திரும்பிய பின்னர் சீதையை காட்டுக்கு அனுப்புவதும் அங்கு லவ குசர்களின் பிறப்பும் சீதையை நிலம் பிளந்து உள்வாங்கிக் கொண்ட நிகழ்வுகளும் கொண்ட முடிவு.
இந்த முடிவைக் கொண்ட உத்தர காண்டத்தை இராமாயண "அறிஞர்கள்" பலர் ஏற்றுக்கொள்ளத் தயங்குகின்றனர். காரணம் அதில் இராமனுடைய தர்மத்துக்கு ஊறு விளைவிக்கும் tf6 கருத்துக்கள் அடங்கியுள்ளன என கருதுவதாலேயாகும்.
இன்று தொலைக்காட்சி, வானொலி ஆகிய தொடர்பூடகங்கள் ஒரே சமயத்தில் பொதுசனங்களைச் சென்றடையக் éjn_lig U6OI6)J T&5 வளர்ந்துவிட்டன. இக்காலகட்டத்தில் எத்தகைய இராமாயணம் தொடர்பூடகங்களுக்குள்ளாக மக்களைச் சென்றடைகின்றது என்பது சுவாரஸ்யமான
-19۔

Page 26
வினாவாகும். ஏற்கனவே இந்தியத் தொலைக்காட்சியான தூரதர்சனில் பல மாதங்களாக இராமாயணம் ஒலிபரப்பாகியது. இராமாயண சித்திரக்கதைப் புத்தகங்கள் பல்வேறு மொழிகளிலும் வெளியாக்கியுள்ளன. இவை நாம் ஏற்கனவே மேலே பார்த்தவாறு பன்முகத் தன்மையுள்ள இராமாயணப் பாரம்பரியங்களை அலட்சியம் செய்கின்றன. இவை ஒரேவகையான கருத்தையும் கதையையுமே வற்புறுத்துகின்றன. ஒரே வகையான கலாச்சாரம், கருத்துப்படிமம் விழுமியங்கள், கருத்து நிலை ஆகியவையே இவற்றுாடு வெளிப்படுகின்றன. பல கலாசாரச் சமூகங்களில் நிலவுகின்ற பன்மைத்துவ அம்சங்கள் மறைக்கப்படுகின்றன.

இந்நிலையில் இராமாயண கலாசாரத்தின் செழுமையையும் பன்முகப்பாட்டையும் உணரும் வகையில் இராமாயணம் ஒன்றல்ல அது பலவாகப் பரந்து கிடக்கிறது என்பதை இராமாயண ஆர்வலர்களும் இலக்கிய ஆய்வாளர்களும் புரிந்து கொள்ளுதல் அவசியமாகும். இந்தச் செழுமையையும் பன்மைப்பாட்டையும் அங்கீகரிக்கும் வகையிலேயே தலைசிறந்த தென்னாசியவியல் அறிஞரான ஏ.கே. இராமனுஜம் அவர்கள் "முந் நூறு இராமாயணங்கள்" என்று ஒரு போது குறிப்பிட்டார்.
-20

Page 27
ஈழத்தில் ஊடக வள
1. முன்னுரை:
ஈழத்தில் 19ஆம், 20ஆம் நூற்றாண்டு ஊடகவளர்ச்சி பற்றி அச்சு ஊடகம் (Print Media) 6T6) as U6ofua, 96 Lesh (Electronic Media) 616ördb e9ıçüLu6ÖDLğ56rfab அவதானிப்பது பொருத்தமானது. இவ்விருவகை ஊடக வெளிப்பாடுகள் பலவகைப்படுமாயினும் அச்சு ஊடக வெளிப்பாடுகளுள் பத்திரிகை (News Paper), சஞ்சிகை (Magazine) என்பனவும் எலெத்திரனியல் ஊடக வெளிப்பாடுகளுள் வானொலி, தொலைக்காட்சி ஆகியனவும் கவனத்திற்குட்படுத்தப்படுகின்றன.
2. 19ஆம் நூற்றாண்டு ஊடக வளர்ச்சி 21 அச்சு ஊடகம்
2.11 பத்திரிகை
2.1.1.1. அரசியல்
சமூகப்பின்னணியும் ஈழத்தில் பத்திரிகையின் தோற்றமும்
19ஆம் நூற்றாண்டிலே ஈழத்தில் ஏற்பட்ட ஆங்கிலேயரது ஆட்சியினால் உருவான மாற்றங்களும் கிறிஸ்தவ சமயத்தைப் பரப்புவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகளும் ஈழத்தில் தமிழ்ப்பத்திரிகையின் தோற்றத்திற்கு வழிவகுத்தன. அத்துடன் அச்சு வாகனப் பயன்பாட்டு நடைமுறை விதிகள் தளர்த்தப்பட்டமை (1834) அதற்குப் பக்கபலமாக அமைந்தது.
மேற்கூறிய பின்னணியில் ஈழத்தின் முதற்பத்திரிகையாக யாழ்ப்பாணத்திலிருந்து 1941 இல் 'உதயதாரகை வெளிவந்தது. கிறிஸ்தவ சமயப்பிரசாரமே இதன் முதன்மை நோக்கமென்பது தெளிவானது.

ர்ச்சி - ஒரு நோக்கு
5Gum面,Gl于。Bumö刃röm
'உதயதாரகை'யின் கிறிஸ்தவ சமயம் பரப்புதல் தொடர்பான செயற்பாடுகளும் சுதேச மதங்களுக்கெதிரான நடவடிக்கைகளும் சுதேச மதத்தினர் மத்தியில் ஏற்பட்ட விழிப்புணர்ச்சியும் காலப்போக்கில் சைவசமயத்தவரிடமி ருந்தும் (எ-டு: இந்து சாதனம் -1889) இசுலாம் சமயத்தவரிடமிருந்தும் (எ-டு: முஸ்லீம் நேசன் - 1882) பத்திரிகைகள் தோற்றம்பெற வழிவகுத்தன. கத்தோலிக்க சமயத்தினரும் தமக்கெனப் பத்திரிகைகள் ஆரம்பித்தனர். (எ-டு; சத்தியவேத பாதுகாவலன் -1876) மேற்கூறிய போக்கு 19ஆம் நூற்றாண்டு இறுதிவரை தொடர்ந்தது.
2.1.12. பத்திரிகைகளினால் ஏற்பட்ட
பெறுபேறுகள்
2.1.1.2.1. சமய நோக்குடைய பத்திரிகைகள் தோற்றம் பெறுவதற்கு முன்னர் (அச்சுவாகனப் பயன்பாட்டுத்தடை
நீங்கிய 1834 தொடக்கம்) துண்டுப்பிரசுரங்கள் 2GIL_Tど。 நிகழ்ந்த கிறிஸ்தவ,
6Oë 6uar Lourias6f6di Logël" g Jarrijë செயற்பாடுகள் பத்திரிகைகளின்
தோற்றத்தினால் LJЛ6) ЈGOп6ОI வட்டத்தினைச் சென்றடை ந்துள்ளன.
2.1.1.2.2 முற் குறிப்பிட்ட பத்திரிகைகளின் முக்கிய நோக்கம் சமயப் பிரசாரமெனினும் பொது அறிவு சார்ந்த விடயங்களைப் பிரசுரிக்கும் முயற்சியிலும் அவை ஈடுபட்டன. 'உதயதாரகை தனது நோக்கம் பற்றி பின்வருமாறு எழுதியுள்ளமை அதற்குச் சான்றாகின்றது.
-21

Page 28
"உதயதாரகை பத்திரிகையில் கற்கை சரித்திரம், பொதுவான கல்வி, பயிர்ச் செய்கை, அரசாட்சி மாற்றம் முதலானவை பற்றியும் அச்சடிக்கப்படும். கல்வியே உலக த்தின் மிகப்பெரியசெல்வமென்றும் பிரயோசனமுள்ள நூல்கள் தமிழ் மொழியிலே இல்லையென்றும் உள்ள சிலவும் பனக்காரர்களின் ஏகபோக உரிமையாக இருக்கிற தென்றும் இங்கிலீஷ் பள்ளிக் கூடங்களில் படிக்க முடியாதவர்களுக்கு இந்த அறிவைப் பெற்றுக் கொள்வது சாத்தியமில்லை யென்றும் உலகச் செய்திகளைத் தங்கள் தங்கள் வேலை முயற்சிகளோடே அறிந்து கொள்ள பொதுமக்களுக்கு வாய்ப்பில்லை யென்றும் நினைத்ததனாலும் மக்கள் பலவிதமான அறிவிலும் தேற வேண்டுமென்றும் கொண்டதனாலும் இப்படி ஒரு பத்திரிகையை வெளியிட முயன்றோம்"
2.1.1.2.5.
2.i.i.2.4。
2.1.1.2.5。
காலப்போக்கில் பொதுமக்கள் மத்தியிலே சமூக வழிப்புணர்ச்சி ஏற்படுவதற்கும் இப் பத்திரிகைகள் வழிவகுத்தன. கல்வியின் அவசியம், மதுபானத்தினால் வரும் கேடுகள் முதலிய விடயங்கள் பற்றி இவற்றில் வெளிவந்த கட்டுரைகள் அதற்குக் காரணமாயமைந்தன.
தமிழ்மொழி, தமிழ் இலக்கியம், முதலான முறைகள் வளர்ச்சி யடைவதற்கு இப்பத்திரி கைகளில் լ Գյծ։ ԱԼՈII6ՕI கட்டுரைகள் வழிவகுத்துள்ளன.
மேற்கூறிய விடயங்கள் கட்டுரை வடிவத்தினூடாகவே பெருமளவு வெளிப்பட்டன. இவ்விதத்தில் பத்திரிகைகளூடாகவே கட்டுரை இலக்கியம் ஈழத்தில் முதன் முதலாக அறிமுகமாயிற்று என்று கூறலாம்.

2.1.1.2.6。
罗。1.1.2.7。
ஈழத்திலே நவீன தமிழிலக் கியத்தின் தோற்றமும் மேற்கூறிய பத்திரிகைகளுடாகவே நிகழ்ந்தது. ஈழத்தின் முதல் நாவலான 'அன்பே சரித்திரம்' முஸ்லீம் நேசனில் தொடர் Ց56Օ) Ց5ԱIII &5 வெளிவந்தமையும், ஈழத்திலே சிறுகதை தோற்றம் பெறுவதற்கு தடயமமைத்த 'நன்னெறிக் கதாசங்கிரகம்’ உதயதாரகையில் தொடராக வெளிவந்தமையும் இதற்குச் சான்றுகளாகின்றன.
ஈழத்தில் தமிழ் 9 -6තII நடைவளர்ச்சியிலே இப் பத்திரிகைகள் முக்கிய பங்காற்றி, பொது மக்களுக்கேற்ப எளிமை
வாய்ந்த உரைநடை
உருவாக்கத்திற்கு வழி
கோலியுள்ளன.
'இந்து தேசச் சரித்திரம்'
"இந்து தேசத்தில் இமையம், மந்தரம், விந்தம் காத்தாடி என்னும் விசேஷித்த மலைகளுண்டு அவற்றுள் முதலாவது இமைய பருவதம் வட அட்சஷம் (35) பாகையில் சிந்துநதியிற்றுவங்கி, இந்து நேசத்தின் வடமேற்கந்தமாகிய காசுமீரத்துக்கு ஊடாகச் சென்று தெற்காக (OOO) மைல் தூரத்துக்கக் கப்பால், நேபாளமென்னும் தேசங்களுக்கு வடபக்கமாய் ஓடிபிரம்ம புத் திரநதிக் கப்பாலே இந்து தேசத்தின் கிழக்கந்தத்திலுள்ள அரக்கன் தேசத்தில் முடிகிறது”
2.1.1.2.3。
மேற்கூறியவாறான உரைநடை 66 காலப் போக்கில் புனைகதை இலக்கியத்திற் கேற்றவாறான உரைநடை ஈழத்தில் உருவாக வழிவகுத்தது. இவ்விதத்தில் 'தீவிபத்து' பற்றி இடம்பெற்ற செய்தியொன்றின் உரைநரைடைப் பகுதியினை இங்கு எடுத்தாள்வது பயனுடையது.
-22

Page 29
"சனிக்கிழமையிரவு பூசையாகிச் சுவாமி எழுந்தருளிப் பண்ணிகொடிமரத்துக்கு முன் நின்று தெற்கு நோக்கி உள்வீதி திருப்புஞ் சமயத்தில் குலவிளக்கில் இருந்து அக்கினி தேவன் தூங்கிய வாகுமாலை வழியாய்ப்பந்தரிலேறித் தகனஞ் செய்வெத் தனிக்கப் பகல் வத்தி வெளிச்சத்தாலும் தீவர்த்தியாலும் சற்றுநேரம் தெரியவில்லை. வெளியில் நின்றவர்கள் பந்தரில் நெருப்புப்பற்றிய தெனக்கூவ உள்ளே நின்றவர்கள் சண்டை யாகுமென வெளியேயோட வெளியே நின்றவர்கள் உள்ளேவரக் கோபுர வாயிலிற் சந்தடியாய் சனத்திரள் கூடிற்று. y
2.1.1.2.9. தவிர, மேற்குறித்த பின்னணியிலே பரவலான முறையில் பொது மக்கள் உள்ளிட்ட வாசகள் கூட்டம் பத்திரிகை வாசிப்பினால் புதிதாக
உருவாகத் தொடங்கியமை குறிப்பிடத்தக்கது.
3. 20ஆம் நூற்றாண்டு ஊடக வளர்ச்சி
3. அச்சு ஊடகம்
3.1.1 பத்திரிகை 3.1.1.1. அரசியல்
சமூகப்பின்னணியும்
பத்திரிகைத்துறை
வளர்ச்சியும்
ஈழத்துச் சுதேசிகள் மத்தியிலே
குறிப்பாக 20ஆம் நூற்றாண்டின் முதல் ஐந்து தசாப்தங்களுக்கிடைப்பட்ட காலப்பகுதியில் சுதேசிய உணர்ச்சி உருவாகிப் படிப்படியாக வளர்ச்சிபெறத்தொடங்கியது. இத்தகைய சூழலில், சுதேசிய உணர்ச்சியூட்டுதலையும் சமூக முன்னேற்றத்தையும் குறிக்கோளாகக் கொண்ட பத்திரிகைகள் முப்பதுகளிலிருந்து வெளிவரத்தொடங்கின. எ-டு: யாழ்பாணத்தி லிருந்து ஈழகேசரி (1930), கொழும்பிலிருந்து வீரகேசரி (1930), தினகரன் (1932), தேசநேசன் (1929) இத்தொடர்பில், 'ஈழகேசரி’ தனது வருகைக்கான காரணம் பற்றிப் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளமை மனங்கொள்ளற்பாலது.

"நமது நாடு அடிமைப்படுகுழியிலாழ்ந்து அன்னியர் வயப்பட்டு, அறிவிழந்து, மொழி வளங்குன்றி, சமயமிழந்து சாதிப் பேய்க்காட்டப்பட்டுச் சன் மார்க்க நெறியிழந்து, உன்மத்தராய், மாக்களாய், உண்டுறங்கி வாழ்தலே கண்ட காட்சியெனக் கொண்டாடு மிக்காலத்தில் எத்தனைபத்திரிகைகள் தோன்றினும் மிகையாகாது. 99
ஏறத்தாழ ஐம்பதுகளிலிருந்து
ஈழத்துப் பத்திரிகை வளர்ச்சியில் ஏற்பட்ட மாற்றங்களுள் பின்வருவன கவனத்திற் குரியன:
அரசியல் கட்சிகள் சார்ந்த பத்திரிகைகள் வெளிவருதல் : எ-டு: சுதந்திரன் 1947 (தமிழரசுக்கட்சி) தொழிலாளி (கம்யூனிஸ்ட் கட்சி)
பிரதேச நிலைப்பட்ட பத்திரிகைகள் வெளிவருதல் (நீண்டகாலமாக கொழும்புப் பிரதேசத்தை மையமாகக் கொண்ட பெருமளவு பத்திரிகைகள் வெளியாயிருந்தன) எ-டு: ஈழநாடு 1957
ஈழத்துப்பத்திரிகை வளர்ச்சிப்போக்கில் எண்பதுகளில் ஏற்பட்ட மாற்றங்களுள் பின்வருவன குறிப்பிடத்தக்கவை:
தமிழீழ விடுதலை இயக்கங்கள் பத்திரிகைகளை வெளியிடுதல் எ-டு: புலிகளின் குரல்
புகலிட நாடுகளிலிருந்து ஈழத்தமிழரால் பத்திரிகைகள் வெளியிடப்படுதல்: எ-டு: ஈழநாடு பாரீஸ் (1991) தொண்ணுாறுகளின் பின்னர் ஈழத்தி லிருந்து வெளிவரும் வாராந்தப் பத்திரிகைகளுள் தினமுரசு (1992), சரிநிகர் (199o) ஆகியன குறிப்பிடத்தக்கவை. இவற்றுள் "தினமுரசு" பத்திரிகையின் தனித்துவம், காத்திரமான வாசகருக்கும் பொழுது போக்கு வாசகருக்கும் ஏற்ற
-23

Page 30
பல்வேறுபட்ட விடயங்களை
பிரசுரிக்கின்றமையாகும். சரிநிகரின் முக்கியத்துவம், அரசியல், கலை, இலக்கியம், பண்பாடு, சமூகம் சார்ந்த உயர்நிலை விமர்சனங்களைக் கொண்டு வெளிவருகின்றமையாகும். "உண்மையில் இதனை வெகுசனப் பண்பாட்டு வட்டத்துளிலிருந்து வரும் பத்திரிகைக்கான ஒரு மாற்றுப் Ugsffe035UT536J (Alternative Joural) கொள்ள வேண்டும்."
31.12. பத்திரிகைகளினால் GJjö LILL
பெறுபேறுகள்
3.1.1.2.1. FFQjö 35 Usop f6ör சமூக, அரசியல்,
பண்பாடு, வரலாறு என்பவற்றை வெளிப்படுத்தும் முக்கியமான பதிவேடுகளாகப் பத்திரிகைகளே உள்ளன. குறிப்பிட்ட விடயங்கள் பெருமளவு எழுதப்படாத சூழலில் இவற்றின் முக்கியத்துவம் இருமடங்காகிறது. (19ご&h நூற்றாண்டுப் பத்திரிகைகளுக்கும் இவ்விடயம் ஏற்புடையது)
3.1.1.2.2. ஈழத்தில் நவீன இலக்கியத்தின்
தோற்றம், வளர்ச்சி என்பவற்றில்
பின்வரும் விதங்களில் இப்பத்திரிகைகள் முதன்மை இடம்பெறுகின்றன.
ஈழத்து எழுத்தாளரது பொருளாதா ரப்பிரச்சினை, விற்பனைப்பிரச்சினை முதலான காரணங்களினால் பெருமளவு நூல்கள் வெளிவரமுடியாத சூழ் நிலையில் அவர்களது முக்கியமான பிரசுர களமாகத் திகழ்தல்.
'ஈழத்து இலக்கியம் என்ற உணர்வின் முகிழ்ப்பிலும் வளர்ச்சியிலும் ஈழத்துப் பத்திரிகைகள் கணிசமான பங்காற்றியமை (எ-டு: பேராசிரியர்
கைலாசபதி பிரதம ஆசிரியராக விளங்கிய

காலத்தில் வெளியான தினகரன் [(1957 — 1eєl)]
i. ஈழத்திலே முற்போக்குச் சஞ்சிகைகள் வெளிவராத காலப்பகுதியிலே முற்போக்கு எழுத்தாளர்கள் உருவாக்கத்தில் இப்பத்திரிகைகள் (எ-டு: பேராசிரியர்கள் கைலாசபதி, சிவத்தம்பி ஆகியோரது கட்டுரைகள் 'தினகரன்' பத்திரிகையில் வெளியானமை)
iv. மேற்கூறிய ஆரோக்கியமான பத்திரிகைச் சூழலில் காத்திரமான வாசகவட்டம் பத்திரிகை ஊடாக மேற்கிளம்பி யமையால் ஈழத்தில் சிறுசஞ்சிகை
களுக்கும் பத்திரிகைகளுக்கு மிடையிலான இடைவெளி குறைந்து போனது.
V. ஈழத்து உரைநடை வளர்ச்சிப் பரினாமத்தில் (19ஆம் நூற்றாண்டு போன்று) 20 ஆம் நூற்றாண்டில் பத்திரிகை வளர்த்த உரைநடையும் முக்கிய இடம்பெற்றுள்ளமை.
3.1.2. சஞ்சிகைகள் 3.1.2.1. முன்னுரை
பொதுவாக, சஞ்சிகை வளர்ச் சியினை, பொழுதுபோக்குச் சஞ்சிகைகள், சிறப்புச் சஞ்சிகைகள் என்று இருவகைப்படுத்தி அவதானிக்க முடியுமாயினும் ஈழத்தினைப் பெறுத்தளவில் பொழுதுபோக்குச் சஞ்சிகைகள் வெளி வருவதில்லை என்பது மனங்கொள்ள த்தக்கது. சிறப்புச் சஞ்சிகைகள் பலவகைப்படுமாயினும் அவற்றுள் இலக்கியச் சஞ்சிகைகளே அதிகளவு வெளியாகியுள்ளன. இவையே விரிவான கவனிப்பை நாடிநிற்கின்றன.
-24

Page 31
3.1.22. சிறப்புச் சஞ்சிகைகள்
3.1.2.2.1. இலக்கியச் சஞ்சிகைகள்
3122.11. அரசியல்,
சமூகப்பின்னணியும் இலக்கியச் சஞ்சிகைகளின் தோற்றமும்,
மேற்குறித்தவாறான இலக்கியச் சஞ்சிகைகளின் தோற்றம் நாற்பதுகளின் பிற்கூறிலிருந்தே இடம் பெறுகின்றது. நவீன கல்விமுறைமையில் ஏற்பட்ட மாற்றம் (இலவசக் கல்வி அறிமுகமானமையினால் குறிப்பாக கிராமத்து இளைஞர் பலர் நவீன கல்விபெறும் வாய்ப்பு ஏற்பட்டது), அரசியற் கட்சிகளின் தோற்றம் (எ-டு: பாரதியார் நவீன எழுச்சியின் குறியீடாக இங்கு கருதப்பட்டமை), ஈழகேசரிப்பத்திரிகை ஏற்படுத்தியிருந்த நவீன இலக்கிய நாட்டம் (எ-டு : சோ. சிவபாதசுந்தரம்) முதலியன இத்தகைய சிறுசஞ்சிகைகளின் தோற்றத்திற்கான பின்னணியாக அமைந்தன.
மேற்குறித்த சூழலில் தோற்றம் பெற்ற இலக்கியச் சஞ்சிகைகளுள் 'மறுமலர்ச்சி' (1946) பாரதி, (1946) ஆகிய இரண்டும் குறிப்பிடத்தக்கன. யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த மறுமலர்ச்சி (1946 -1948 ஏறத்தாழ 10 இதழ்கள்) ஈழத்தில் நவீன கவிதையின் தோற்றத்திலும் ஈழத்தில் சிறுகதையின் (2ஆம் காலகட்ட) வளர்ச்சியிலும் முக்கிய இடம் பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து வெளியான 'பாரதி', ஈழத்தின் முதல் முற்போக்குச் சஞ்சிகை என்றவிதத்தில் கவனத்திற்குரியது. ஐம்பதுகளுக்கு பிற்பட்ட இலக்கியச் சஞ்சிகை வளர்ச்சியில் கலைச்செல்வி (1958), முற்போக்குச் சஞ்சிகைகளுள் புதுமை இலக்கியம் (1956), மரகதம் (96), வசந்தம் (1965), மல்லிகை (1966), மார்க்சிய எதிர்நிலைச் சஞ்சிகைகளுள் அலை (1957), பிரதேசச் சஞ்சிகைகளுள் மலர் (மட்டக்களப்பு - 1970, நந்தலாலா, தீர்த்தக்கரை (1980), (மலைநாடு), அரசியல் கட்சி சார்ந்த சஞ்சிகைகளுள் (தமிழீழ விடுதலை இயக்கங்களின் சஞ்சிகைகளான)

பாலம், நெருப்பு, சுதந்திரப்பறவை, பெண் நிலைவாதச் சஞ்சிகைகளுள் நிவேதினி, பென் (1996) புகலிடச் சஞ்சிகைகளுள் தூண்டில் (1985), சிந்தனை (1986), கவிதைக்கான சஞ்சிகைகளுள் தேன்மொழி (1955) கவிஞன், (1969) நோக்கு (1970), கவிதை (1990) முதலியன விதந்துரைக்கப்பட வேண்டியன.
3.1.222. ஆய்வுச்சஞ்சிகைகள்:
சிறப்புச் சஞ்சிகைகளுள் இலக்கியச் சஞ்சிகைகளுக்கு அடுத்ததாக வெளி
வருவனவற்றுள் இவை முக்கியமானவை.
(அ) கல்வி, கலை, இலக்கிய அமைப்பு களால் வெளியிடப்படுபவை.
(උණු) ත්‍ර (Luis ඊසෙර් ක) நிறுவனங்களால் வெளியிடப்படுபவை என இவ்வகைச் சஞ்சிகைகளை இருவகைப்படுத்தி நோக்கலாம்.
மேற்கூறியவற்றுள் முதற் பிரிவிற்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைபவை ஞாயிறு (யாழ்ப்பான ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கம் 1933) கலாநிலையம் (1941) ஊற்று (1972) ஆகியவை. இவற்றுள் முதலிரு சஞ்சிகைகளும் பண்டிதர்கள், வித்துவான்கள் ஆகியோரால் எழுதப்பட்ட கலை, இலக்கியக் கட்டுரைகளைத்தாங்கி வெளிவந்தவை. "ஊற்று" அறிவியல், மருத்துவம், இலக்கியம் முதலான பல்துறைசார்ந்த கட்டுரைகளைக் கொண்டு வெளிவந்தது.
பல்கலைக்கழகஞ் சார்ந்த ஆய்வுச் சஞ்சிகைகளுள், சிந்தனை (1976 ஆரம்பத்தில் பேராதனைப் பல்கலைக்கழகம் வெளியிட்டது. இப்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும் வெளியிடுகிறது.) குறிப்பிடத்தக்கது. தவிர, ஈழத்தின் ஒவ்வொரு பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்கமும் வெளியிட்டு வரும் ஆய்வு சஞ்சிகைகள் பல உள. இவை ஆசிரியர்கள்,
-25

Page 32
மாணவர்கள், ஆகிய இருசாராது ஆக்கங்களையும் தாங்கி வெளிவருபவை.
இத்தகையனவற்றுள் இளங் கதிர்' (பேராதனைப் ப.க.க. 1948) நீண்டகால வரலாறுடையது. பேராசிரியர்கள் கணபதிப்பிள்ளை, கைலாசபதி, சிவத்தம்பி, தில்லைநாதன், சண்முகதாஸ்,
வேலுப்பிள்ளை, இந்திரபாலா முதலான குறிப்பிடத்தக்க ஈழத்து ஆய்வாளர் பலரது படைப்புகளைத் தாங்கி வெளிவந்தது. இப்போதும் வெளிவருவது. தவிர கிழக்குப் பல்கலைக்கழகம் அன்மைக்காலமாக நெய்தல் என்ற ஆய்வேட்டினை வெளியிட்டு வருகின்றது.
அரசசார்பான நிறுவனங்கள் அவ்வப்போது வெளியிட்டு வரும் ஆய்வுச் சஞ்சிகைகள் சிலவும் கவனத்திற்குரியன. இவற்றுள் முன்னர் வெளிவந்த ழரீலங்கா (sely 5 mri as செய்திப்பிரிவு, 1948) இப்போது வெளிவரும் பண்பாடு, (இந்துசமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், 1988) <ඳී,ඊජීu J6OI குறிப்பிடத்தக்கன.
3.1.2.2.3. GGO)6OTIG)6 :
சிறப்புச் சஞ்சிகைகள் என்ற விதத்தில் சோதிடம், மருத்துவம், அறிவியல், கல்வி, கலைகள், சிறுவர் இலக்கியம், சினிமா, விளையாட்டு முதலியன தொடர்பான சஞ்சிகைகள் ஈழத்தில் மிக அருமையாகவே வெளிவருகின்றன. முற்கூறிய இலக்கியச் சஞ்சிகைகள் கூட அன்மைக்காலத்தில் மிகச் சிலவாகவே வெளியாகின்றன (எ.டுமல்லிகை, மூன்றாவது மனிதன்) நாடகக்கலை வெளிவரும் கலைமுகம் கவனத்திற்குரியன. தவிர, ஈழத்துத் தமிழ் எழுத்தாளரது ஆங்கில ஆக்கங்கள் தாங்கி கடந்த சில வருடங்களாக வெளிவரும் Third Eye சஞ்சிகையின் வரவும் முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாகும்.

3123. சிறப்புச் சஞ்சிகைகளினால் ஏற்பட்ட
பெறுபேறுகள்:
மேற்கூறியவாறு நோக்கும்போது சிறப்புச் சஞ்சிகைகளுள் முதன்மை பெற்றுள்ள இலக்கியச் சஞ்சிகைகளே கவனத்திற் கொள்ளப்பட வேண்டியனவாகும். இவ்வழி பின்வரும் விடயங்கள் அவதானிக்கப்பட வேண்டியன:
அ) ஈழத்து இலக்கியவளர்ச்சியின் தோற்றத்திலும் காத்திரமான பன்முகப்படுத்தப்பட்ட வளர்ச்சியிலும் இவை முதன்மை பெறுகின்றமை. மேலும் பத்திரிகைகளில் ஏற்பட்ட பெறுபேறுகள் பற்றிக் கூறப்பட்ட விடயங்கள் (5.1.1.2.2) இத்தகு சஞ்சிகைகளுக்கும் ஏற்புடையனவே.
ஆ) எனினும், பிரதேச எழுத்தாளர்கள் ஊக்குவிப்பு சிறந்த இளம் எழுத்தாளர்களை இனங்காணல், நவீன ஓவியம், சினிமா முதலிய ab6O)6) at 666) சிரத்தை, தரமான மொழிபெயர்ப்புகள் முதலான விடயங்களில் இவற்றின் பங்களிப்பு மிக முக்கியமானது.
இ) பெண்நிலைவாதச் சிந்தனைகள், புகலிட எழுத்தாளராது படைப்பாற்றல் என்பவற்றை வெளிப்படுத்துவனவும் இத்தகைய சஞ்சிகைகளேயாம்.
ஈ) எண்பதுகளிலிருந்து முனைப்புற்ற தமிழ்த் தேசியவாதச் சிந்தனைகளின் கலை இலக்கிய வெளிப்பாட்டிற்கு ஈழத்துத் தமிழ்ப்பத்திரிகைகள் இடமளிக்க முடியாத சூழலில் அவற்றின் பிரசுர களமாகத் திகழ்ந்தவை சஞ்சிகைகளே என்பது குறிப்பிடத்தக்கது.
2. எலெத்திரனியல் ஊடகங்கள்
2.1 வானொலி
2.1.1. வானொலி சேவைகள்
ஈழத்தில் அரசினால் நடத்தப்பட்டு வரும் இலங்கை 6. JTG)6OTT 69 ஒலிபரப்புச் சேவை 1925இல் ஆரம்பிக்கப்
-26

Page 33
பட்டாலும் குறிப்பாக தழிழ்ச் சேவை ஐம்பதுகளிளளவிலேயே கவனிப்பிற் குரியதொன்றாக வளர்ச்சியெய்திற்று எனலாம். இவ் இலங்கை வானொலி தமிழ்ப்பிரிவு இருவகைப்பட்ட, ஒலிபரப்புகளை தேசிய சேவை, வர்த்தக சேவை என்ற பெயர்களில் நடத்தி வருகின்றது. ஏறத்தாழ கடந்த ஈராண்டுகளாக தமிழ் வானொலி ஒளிபரப்புச் சேவைகள் (எ.டு சூரியன் எவ்.எம், சக்தி எப்.எம்,) தனியார் நிறுவனங்களாலும் ஆரம்பிக்கப்பட்டு நடத்தப்பட்டடு வருகின்றன. இவற்றுள் சக்தி எவ். எம் 24 மணித்தியால ஒலிபரப்பினை நடத்தி வருகின்றது. இவ்வாறே ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து ஐரோப்பா, கனடா, அவுஸ்திரேலியாவில் வாழ்கின்ற தமிழர்களாலும் வானொலி ஒளிபரப்புச் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளன. (சர்வதேச வானொலி ஒளிப்பரப்புசேவை - BC ஐரோப்பா)
2.1.2. வானொலியால் ஏற்பட்ட பெறுபேறுகள்
மேற்கூறியவாறு நோக்கும்போது பின்வரும் விடயங்கள் கவனத்திற்குரியனவாக அமையலாம் :
2.1.2.1 விவசாயம், சமயம், அறிவியல், சுகாதாரம், கல்வி, நாட்டு நடப்பு முதலான பலதுறை அறிவுசார் விடயங்கள் பொதுமக்கள் மத்தியில் இலகுவில் சென்றடைதல்.
2.1.2.2 வானொலி நாடகம் செல்வாக்குப்
பெறுதல்
2.1.2.3. இலக்கிய வளர்ச்சி என்ற விதத்தில் பின்வரும் நிகழ்ச்சிகள் குறிப்பிடத்தக் கனவாக அமைந்துள்ளன.
இலக்கிய விமர்சனம் இலக்கிய ஆய்வு என்பன இடம்பெறுதல் (எ-டு எழுபதுகளில் இடம்பெற்ற 'கலைக்கோலம்’ எண்பதுகளில் இடம் பெற்ற கலைப்பூங்கா)

வானொலிக் கவியரங்குகள் இடம்பெறுதல் (இவை ஐம்பது அறுபதுகளில் முக்கிய இடம் பெற்றிருந்தன)
மெல்லிசைப்பாடல்கள் ஒலிபரப்புச் செய்யப்படுதல் ('பொப்' இசைப் பாடல்களுக்கு மாற்றாக அறுபதுகளில் இவை உருவாக்கப்பட்டன.)
இளம் எழுத்தாள், கவிஞர் உருவாக்கம் நிகழ்தல் (எ-டு : இளைஞர் மன்றம், நாளையசந்ததி நிகழ்ச்சிகள்)
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் வெளியிடும் சஞ்சிகையான வானொலி மஞ்சரியில் குறிப்பிடத்தக்க கட்டுரைகள் இடம்பெறல்.
2.1.2.4. இலங்கை வானொலி வர்த்தக சேவை விளம்பரத்துறையில் ஐம்பதுகள், அறுபதுகளில் மிகுந்த செல்வாக்குற்ற நிலையினைப் பெற்றிருந்தது. இவ்விதத்தில் கி. பொ. மயில்வாகனன் முதலானோரின் அறிவிப்புத்திறன் காரனமாக இவ்வர்த்தக சேவை தமிழ் நாட்டிலுள்ளோரது கவனத்தையும் ஈர்த்திருந்தது.
2.1.2.5. அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட முற்குறிப்பிட்ட தனியார் வானொலி ஒலிபரப்புகள் பொதுமக்கள் மத்தியில் பாமரத்தனமான ரசனையையும் அறிவையும் வளர்த்தெடுக்கும் சக்தி வாய்ந்த ஊடகங்களாகத் திகழ்கின்றமை (எ-டு : திரைப்படப் பாடல்கள் வழிப்பட்ட புலமை வளர்ச்சி) குறிப்பிடற்பாலது.
-27

Page 34
22. தொலைக்காட்சி 2.2.1. தொலைக்காட்சி சேவை
ஈழத்தில் தொலைக்காட்சிச்சேவை எண்பதுகளிலேயே ஆரம்பமாயிற்று. எனினும், குறுகிய நேர ஒதுக்கீடு காரணமாக இத்தகையசேவையில் அதிக நிகழ்ச்சிகள் இடம்பெறவில்லை. இடம்பெற்றனவும் விதந்துரைக்கற்பாலவன்று.
ஏறத்தாழ கடந்த ஈராண்டுகளாக தனியார் தொலைக்காட்சி தமிழ் ஒளிபரப்புசேவைகள் (எ-டு : சக்தி ரி. வி.) ஆரம்பிக்கப்பட்டு பொதுமக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கைப் பெற்றுவருகின்றன.
2.22. தொலைக்காட்சியால் ஏற்பட்ட
பெறுபேறுகள் :
22.2.1. இரசனை நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளமை (தமிழ்நாட்டு நாடகங்கள், சிங்கள நாடகங்கள் என்பனவற்றை அதிகம் பார்க்கின்ற வாய்ப்பினை இத்தகைய ஒளிபரப்புகள் ஏற்படுத்தியுள்ளன)
2.2.2.2 அறிவுசார் விடயங்களை அறியும்
வாய்ப்பு L JJ6, 6\DT é Éill j6DLO (எ-டு: ரூபவாஹினி சேவையின் Discovery ஒளிபரப்பு)
3. முடிவுரை:
இதுவரை கூறப்பட்ட, ஈழத்தின் 19ஆம் 20ஆம் நூற்றாண்டு ஊடக வளர்ச்சியினை <ෙෆිර් காலகட்டத் தமிழ்நாட்டு ஊடகவளர்ச்சியுடன் ஒப்பிடும்போது கவனத்திற்குரிய தனித்துவப் பண்புகளாக பின்வருவன அமைகின்றன:
அ) பொழுதுபோக்குச் சஞ்சிகைகள் ஈழத்திலே LASë அபூர்வமாகவே வெளிவருகின்றன. (இதற்கான வியாபாரச் சூழல் இங்கு உருவாகியிருக்கவில்லை) இவ்வாறு கூறும் போது பொழுது போக்கு

வாசகர்கள் ஈழத்தில் இல்லை என்பது பொருளன்று. மாறாக, அத்தகையோரது தேவை தமிழ் நாட்டு இறக்குமதிச் சஞ்சிகைகளால் (குமுதம், ஆனந்த விகடன் முதலியன) பூர்த்தியடைகின்றது என்பது கவனத்திற்குரியது.
ஆ) சிறப்புச் சஞ்சிகைகளுள் இலக்கியச் சஞ்சிகைகள் மட்டுமே ஈழத்தில் வளர்ச்சி கண்டுள்ளன. அத்தகைய இலக்கியச் சஞ்சிகைகளின் வரவிலும் ஏழத்தாழ கடந்த ஐந்தாண்டுகளாக தேக்கநிலை ஏற்பட்டுள்ளது.
இ) ஆரோக்கியமான விதத்தில் பெண் நிலைவாதச் சிந்தனைகளை வெளிப்படுத்தும் பெண்கள் சஞ்சிகைகள் ஈழத்திலேயே வெளிவருகின்றன.
ஈ) புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தவரால் புகளட நாடுகளிலிருந்து வெளியிடப்படும் இலக்கியச் சஞ்சிகைகள் தமிழ்ச்சஞ்சிகை வரலாற்றில் ஈழத்திற்கு முக்கியமானதொரு இடத்தை வழங்கியுள்ளன.
உ) தமிழ்ச்சஞ்சிகை வரலாற்றில் ஈழத்திலிருந்து வெளிவந்த தரமான நகைச் சுவை சஞ்சிகையான 'சிரித்திரன்' பெண்கள் சஞ்சிகையான பெண் , தமிழ் எழுத்தாளரது ஆங்கிலப்படைப்புகளைத் தாங்கி வெளிவரும் Third Eye என்பனவும் தனித்துவமான இடத்தினைப் பெறத்தக் கனவாக உள்ளன.
அடிக்குறிப்புகள்
l. உதயதாரகை 2. இந்துசாதனம்,யூன் 1891, முஸ்லீம்நேசன்,
பங்குனி 1993. 3. பூதினாலங்காரி, ஏப்ரல் 1877 4. உதயதாரகை, 4.2.1841 5. இலங்கைநேசன், வைகாசி 1879. 6. சிவத்தம்பி, கார்த்திகேசு, 'தமிழ்
இலக்கியவரலாற்றில் இதழ்கள் விரிவான ஆய்விற்கான முன் குறிப்புக்கள் சில தேசிகம்.
-28

Page 35
மேற்கூறப்பட்ட விடயந்தொடர்பாக வெளிவந்துள்ள முக்கியமான நூல்களும் கட்டுரைகளும்
1. சிவநேசச் செல்வன், ஆறுமுகம், இலங்கைத் தமிழ்ப் பத்திரிகைத் துறையின் தோற்றமும் வளர்ச்சியும் - 1950 ஆம் ஆண்டுவரை, முதுமாணிப்
பட்டத்திற்கான ஆய்வேடு, பேராதனைப்பல்கலைக்கழகம் (1975) (நூலுருப்பெறவில்லை)
2. சிவகுருநாதன் இலங்கையில் தமிழ்ப் புதினப் பத்திரிகையின் வளர்ச்சி, பாரதி நிலையம், சென்னை. மு.ப. டிசம்பர் 1993,
3. சிவத்தம்பி கார்த்திகேசு, ‘தமிழ் இலக்கியச் சஞ்சிகை மரபும் சுபமங்களாவும் கலைஞர் முதல் கலாப்பிரியர் வரை (சுபமங்களா நேர்காணல்கள்) நர்மதா பதிப்பகம், யூலை 1997 பக்: 521-538.

சிவத்தம்பி கார்த்திகேசு "தொடர்பு ஊடகங்களில் தமிழ்' (முகவாசகம்) கலைக்குரல்கள் (இலங்கை வானொலியில் கலைப்பூங்கா நிகழ்ச்சியில் ஒலிபரப்பான 21 முக்கிய கட்டுரைகளின் தொகுப்பு) கொழும்பு 1999 Uės: lo — 25
சிவத்தம்பி கார்த்திகேசு தமிழ் இலக்கிய வரலாற்றில் இதழ்கள் - விரிவான ஆய்விற்கான முன்குறிப்புக்கள் சில தேசிகம், நமசிவாய தேசிகர் நினைவுமலர், யாழ்ப்பாணம் 1999 Uë : 71-79
யோகராசா, செ, இருபதாம் நூற்றாண்டு முடிவில் ஈழத்துச் சிறுசஞ்சிகை, கிழக்கொளி (25 ஆவது சிறப்பு இதழ்) மட்டக்களப்பு 1999.
சிவம், கோப்பாய், இலங்கையில் தமிழ்ப்
பத்திரிகைகள் சஞ்சிகைகள் (1841-1984) ஒரு கையேடு.
-29

Page 36
இலங்கைத் தமி நாணயங்க
(pdb5
இலங்கை மதங்களுள் இந்து மதத்திற்கு மிகத் தொன்மையான வரலாறு உண்டு. இதன் தொடக்க காலச் சான்றாகப் பெருங்கற் காலப் பண்பாட்டு (கி.மு. 800 இல் இருந்து) மட்பாண்டங்களிற் பெறப்பட்ட குறியீடுகள், சுடுமண் பாவைகள், இலிங்க வடிவங்கள், உலோகச் சின்னங்கள் விளங்குகின்றன. கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட பெளத்த மதத்தின் அறிமுகம் அம்மதம் அரச ஆதரவுடன் மிகக் குறுகிய காலத்தில் இலங்கையில் வளர்ச்சியடையக் காரணமாகியது. அதனால் இந்து மதம் தனது தனித்துவத்தை இழந்ததெனக் கூறமுடியாது. இந்து மதத்திற்கு எதிராகப் பெளத்த மத வரலாற்றை முதன்மைப்படுத்திக் கூறும் பாளி இலக்கியங்கள் கூட இக்காலத்தில் இலங்கையில் இருந்த இந்து ஆலயங்கள் பற்றியும், அம்மதத்திற்கும் தமிழ் மன்னர்களுக்கும் இடையிலான உறவு பற்றியும், பல இடங்களில் எடுத்துக் spassdrop6OI (Mahavamsam. X:102, XIX: 37, XXi: 1-21, XXII:3-4). S6ogi (Sungguh எடுத்துக்காட்டும் சான்றுகளில் ஒன்றாக இலங்கைத் தமிழ் மன்னர்களும், மற்றையோரும் வெளியிட்ட நாணயங்கள் விளங்குகின்றன.
பண்டைய கால வரலாற்றை அறிய உதவும் நம்பகரமான வரலாற்று மூலதாரங்களில் நாணயங்களும் ஒன்றாகும். இவற்றை வரலாற்றாய்வுக்குப் பயன்படுத்தும் மரபு ஐரோப்பியரிடையே பதினெட்டாம் நூற்றாண்டளவில் உணரப்பட்டாலும்,

prför LIGwörGODLuI ள் காட்டும்
வழிபாரு
கலாநிதி.ப, புஷ்பரட்னம்
இந்தியாவில் அதிலும் குறிப்பாக இலங்கையில் இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்தே ஓரளவு ஏற்பட்டதெனக் கூறலாம். இவை கல்வெட்டுக்களைப் போல் விரிவான வரலாற்றுத் தகவல்களைத் தராவிட்டாலும், அவற்றால் அறியப்படும் செய்திகள் பெருமளவுக்கு நம்பகமானவை. இலங்கைத் தமிழர்கள் கி. மு. 3ஆம் நூற்றாண்டு முதல் கி. பி. 17ஆம் நூற்றாண்டு வரை காலத்திற்குக் காலம் பலவகை நாணயங்களை வெளியிட்டு வந்துள்ளனர் என்பதற்கான சான்றுகள் அண்மைக் காலத்தில் கிடைத்துள்ளன (புஷ்பரட்ணம் 2001). இவை அவர்களது பண்டைய கால மொழி, எழுத்து, அரச உருவாக்கம், குடியிருப்பு, வர்த்தகம், அயல்நாட்டுறவு போன்ற பல அம்சங்களை அறியப் பெரிதும் உதவுகின்றன. இவற்றில் பல வகையான குறியீடுகள், சின்னங்கள், தெய்வ வடிவங்கள், தெய்வப் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இவை நாணயங்களை வெளியிட்ட மன்னர்களதும், அவர்கள் ஆட்சிக்குட்பட்ட மக்களதும் சமய நிலையையும் பிரதிபலிப்பதாக எடுத்துக்கொள்ளலாம். அவற்றுள் முருக வழிபாட்டுடன் தொடர்புடைய வாகனம், ஆயுதம், சின்னங்கள், தெய்வப் பெயர்கள் என்பன சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன. அவற்றின் அடிப்படையில் பண்டைய கால இலங்கைத் தமிழரின் முருக வழிபாடு பற்றி இக்கட்டுரையில் ஆராயப்பட்டுள்ளது.
-30

Page 37
தமிழருக்குரிய தனித்துவமான பழிபாடுகளில் ஒன்றாக முருக வழிபாட்டைக்
வருகிறது. சங்க இலக்கியத்தில் வரும் முருகு" (அகநானூறு 22-1, புறநானுறு 53 – 11. Esi 3.3: 47 – lo) "age 3 esi:" (மதுரைக் காஞ்சி 31, நற்றிணை 34, 53-3), மஞ்சையன் ருகாற்றுப்படை 210), "விரைமயில் ஸ் ஞாயிறு" (பரிபாடல் 15-25) என்ற சொற் |- @p@弓 வழிபாட்டுடன் ாடர்புடையன. இம்முருக வழிபாடு வடஇந்திய வழிபாட்டுடன் இணைந்து காலப் பாக்கில் "குமரக்" கடவுள் என்ற பெயரையும் பெற்றது.
○
高园இ.萤
ܢ
தமிழகத்தைப் போல் இலங்கையிலும் இவ்வழிபாடு மிகத் தொன்மையானது. இதன் தொடக்ககாலச் சான்றுகளாக தமிழகத்தில் ஆதிச் அ நல்லூரில் பெருங்கற்காலப் பண்பாட்டில் கிடைத்தது IŠ JT sa: இலங்கையில் பொம்பரிப்பு, அநுராதபுரம், பின் வேவ, கந்தரோடை, பூநகரி ஆகிய இடங்களில் பெறப்பட்ட வேல், சேவற் சின்னங்கள் விளங்குகின்றன. (சிற்றும்பலம் 1935:182, புஷ்பரட்னம் 1991:38.) கி. பி. 5ஆம்
நாற்றாண்டுக்கு முற்பட்ட LT இலக்கியங்களிலும், Lqהד L85%
于
ஸ்வெட்டுகளிலும் அக்காலச் சமூகத்தில் சஸ் வாக்குப் பெற்றிருந்த பலதரப்பட்ட மக்களுடைய பெயர்கள் காணப்படுகின்றன. ந்த சமுதாயத்திலும் ஆட் பெயர்கள் சில டிப்படைக் கோட்பாடுகளை வைத்தே ரிடப்படுவதாகக் கூறும் பேராசிரியர் ராயலு அப்பெயருக்கும் அவை
士、
ப்
ரதிபலிக்கும் சமய நம்பிக்கைக்கும் இடையிலான தொடர்பைச் சான்றாதாரம்
( 3:3-ਤ) , ---- இலங்கைப் கல்வெட்டுக்களில் வரும் ஆட்பெயர்களை மத அடிப்படையில் வேறுபடுத்த அவற்றை பளத்த இந்துக் కెL ఇకపTT தாடர்புபடுத்திப் பார்க்கிறார். (370:XேXII), ப்பெயர்களில் சில முருக வழிபாட்டுடன் LLਉਪਸੁ ਬੀ .
தி
ܕܫܡܝܐ
 
 

அவற்றுள் வேல் என்ற பெயர் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது (Pபாராuwihan 1970 mos) இது சங்க இலக்கியத்தில் வரும் வேலன் வழிபாட்டை நினைவுபடுத்துவதாக உள்ளது. தமிழகத்தில் எப்படி வட இந்திய வழிபாட்டுக் கலப்பால் முருகன் குமரன் என்ற பெயரில் வழிபடப்பட்ட டானோ அதேபோல் பெளத்து மதத்தின் வருகையைத் தொடர்ந்து ஏற்பட்ட இலங்கை, வட இந்தியத் தொடர்பால் முருக வழிபாட்டிலும் சில மாறுதல்கள் ஏற்பட்டதை குமர மகாசேனன், விசாக போன்ற பெயர்கள் எடுத்துக் காட்டுகின்றன. இதில் "விசாக" என்ற பெயர் வட இலங்கையில் பரியபுளியங்குளம் என்ற இடத்தில் உள்வ. மு. 2 ஆம் நூற்றாண்டுக்குரிய இரு கல்வெட்டுக்களில் தமிழ் வணிகர்களுக்குரிய ஒரு பெயராகக் குறிப்பிடப்பட்டுள்ளது (POIrano with ano 1970 : no s. 356-357). இதையொத்து பெயர் தமிழகத்தில் கொடுமணல் அகழ்வாய்வின் போது பெருங்கற்கால மட்பாண்டத்தில் பெறப்பட்டுள்ளது (Rajun 1994:82), பேராசிரியர் பரண்விதான இப்பெயருக்குரியவர்களை முருக (எம் கந்த) வழிபாட்டுடன் தொடர்புடையவர்களாகக் கருதுகிறார் (1370:CXXI) இப்பின்னணியில் நானயங்களில் வரும் முருக வழிபாட்டுடன் தொடர்புடைய சான்றுகளை நோக்கலாம்.
தென்னிலங்கையில் அக் குறுகொட என்ற இடத்தில் கிடைத்த கி. பி. ஐ ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட நாணயமொன்றின் முன்புறத்தில் மயில் சின்னமும், பின்புறத்தில் தமிழ்ப் பிராமி எழுத்தில் மகாசாத்தன் என்ற பெயரும் காணப்படுகின்றது (Bope00chchi 1999:54) (UL-2),
-1.

Page 38
வட இலங்கையில் கந்தரோடையி: கிடைத்த (Seyone 1998) இே காலப்பகுதிக்குரிய இன்னொரு நாணயத்தி முன்புறத்தில் ரீவத்ஜாவும், பின் புறத்தி மயில் சின்னத்துடன் தமிழ்ப் பிராமி எழுத்தி உதி (ஹ)பன் என்ற பெயரும் கானப்படுகிற: (Pushparatnam 2001) (ULL-s),
(படம்-2)
இவற்றில் இடம்பெற்றுள்ள பூரீவத்ஸ் மயில் சின்னங்கள் நாணயங்களை வெளியிட் தமிழர்களின் சமய நம்பிக்கையை பிரதிபலிப்பதாகக் கொள்ளலாம். இதில் வரு Lంద్ర (1755 வழிபாட்!ை நினைவுபடுத்துகிறது. பண்டுதொட் முருகனுடைய வாகனங்களில் ஒன்றாக மயி: இருந்ததற்கு புறநானூறு (65:7-8 fiL5upg5 Tipt IUSL (210), LufLITL6 (8:2é கந்தபுராணம் (4:13,375-38) போன்ற தமி இலக்கியங்களில் சான்றுகள் உள. இதனா: நாணயங்களில் இடம்பெற்றுள்ள மயில் சின்ன அவற்றை வெளியிட்டவர்கள் முரு வழிபாட்டுடன் ஈடுபாடு கொண்டிருந்தன என்பதைக் காட்டுவதாக எடுத்துக் கொள்
இடமுண்டு.
கி.மு 2க்கும் கி. பி. 5ஆம் நூற்றான டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இலங்கைக்கேயுரிய தனித்துவமான நீள்சது நாணயங்கள் புழக்கத்தில் இருந்துள்ளன இவற்றில் ஒம் என்ற வேதமந்திரம், பூரீவத்ஸ்ப் லசஷ்மி, யானை, தாமரை, சூலம், காளை E5 போன்ற 655 இடம்பெற்றுள்ளன (Parkar 1981:461-482 Peries 1919:40-67 Boedrochchi 1999
 

SitTOTnpoulom 1992: 151-158. 5fGLUFTLs 1970:2636. கிருஷ்னராஜா 1983:71-84, புஷ்பரட்னம் 2001:90-100). இவற்றிலிருந்து இக்காலத்தில் இந்துமதத்திற்கும் நானயங்களை வெளியிட்ட தமிழர்களுக்குமிடையிலான நெருக்கமான உறவு தெளிவாகத் தெரிகிறது. இந்நானயங்கள் சிலவற்றில் மயில் சின்னத்துடன் வேல், சேவல் போன்ற சின்னங்களும், இடம்பெற்றுள்ளன. சமகாலத்தில் இவ்வாறான சின்னங்களுடன் முருகனைக் குறிக்கும் பெயர்களும் இந்திய நாணயங்களில் குறிப்பாக வடஇந்திய நாணயங்களில் இடம் பெற்றுள்ளன (Gupto 1969:187). 6565 agth 3sues வெற்றிக் கடவுளான முருகனை வடிவேலன் (சிலப்பதிகாரம் 1:2, 49-50), வெல்வேலான் (கலித் தொகை மருதக்கல்லி 23:26), எனத் தமிழ் இலக்கியங்களில் அழைக்கப்பட்டதை நினைவுபடுத்துகிறது. சேவலை முருகனுடன் தொடர்புபடுத்துவது ஆரியக் கலப்பால் ஏற்பட்ட ஒன்று என்ற கருத்துக் காணப்பட்டாலும் அது பண்டு தொட்டு முருக வழிபாட்டுக்குரிய es)LLIGITUnTEL பார்க்கப்படுகிறது (காந்திதாசன் 1983:20). இதனால் மேற்குறிப்பிட்ட நாணயங்களில் வரும் இச்சின்னங்கள் முருக வழிபாட்டைக் குறித்ததெனக் கூறலாம்.
இடைக்காலத் தமிழ் நாணயங்களில் வேல், மயில் சின்னங்களுடன் முருகனின் உருவமும், முருகனைக் குறிக்கும் பெயர்களும் இடம்பெற்றிருப்பது சிறப்பான அம்சமாகும். இதற்கு கி. பி. 13ஆம் நூற்றாண்டிற்கும் கி. பி. 17ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் யாழ்ப்பாணத்தில் நல்லூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த மன்னர்கள் வெளியிட்ட நாணயங்கள் சிறந்த எடுத்துக்காட்டாகும். ஆரம்பகால நாணயங்கள் சிலவற்றின் முன்புறத்தில் மன்னன் உருவமும், பின்புறத்தில் நந்தியும், நந்திக்கு முன்னால் நந்தியைப் பார்த்த வண்ணம் சிறிய மயில் சின்னமும், நந்திக்கு கீழே தமிழில் சேது என்ற வாசகமும் காணப்படுகின்றது (படம்-3)

Page 39
இதில் நந்தி சிவனையும், மயில்
முருகனையும் குறித்து நிற்பதாகக் கொள்ளலாம். 35.5 பண்டைய
இலக்கியங்களில் சிவனுக்கும் முருகனுக்கும் இடையிலான உறவு தொடர்பாக வரும் கதைகளை நினைவுபடுத்துகின்றன. இதை உறுதிப்படுத்தும் පිප්සාජ්ජ් ෆිර් நானயங்களில் மயிலுக்கு பதிலாக நந்திக்கு : முருகனின் உருவம் கானப்படுகின்றது (படம் - 4)
(படம் -4}
சில நாணயங்களில் மயிலோடு முருகனும் காணப்படுகிறது. இதில் கானக் கூடிய இன்னொரு சிறப்பம்சம் சில சேது நாலாயங்களில் நந்திக்கு மேல் ஆலயத்தின் வடிவம் பொறிக்கப்பட்டிருப்பதாகும். இது யாழ்ப்பாடை அரசு கால ஆலயங்களின் ட்டிடக் கலைமரபைப் பிரதிபலிப்பதாக
モ எடுத்துக் கொள்ளலாம். இக்கால மன்னர்கள்
து வாசகத்துடன் முருக வழிபாட்டுடன் தொடர்புடைய "கந்" "ஆ" என்ற எழுத்துப் நானயங்களையும் வெளியிட்டுள்ளனர் என்பதற்கான சான்றுகள் அவள் மையில் எமது கள ஆய்வின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. (200:147-153). இவை பெரும்பாலும் கி. பி. 14 ஆம்
s
ご
 
 

நூற்றாண்டுக்குப் பின் வெளியிடப்பட்டது என்பதை அவற்றின் எழுத்தமைதி கொண்டு கணிப்பிடமுடிகிறது. இதில் முதலாவது வகை நானபங்களின் முன் புறத்தில் மேலே சந்திரனும், கீழே இடம் அல்லது வலப்புறம் பார்த்த நிலையில் மயிலும் காணப்படுகின்றன. அதன் வாயில் பாம்பும் சில நானயங்களில் பல்லி போன்ற உருவமும் கானப்படுகின்றது நாணயத்தின் பின்புறத்தில் வலப்புறமாக வேல் சின்னமும் மத்தியில் "கந்" என்ற பெரும் அதனுடன் இனைந்த நிலையில் மனிதனைக் குறிக்கும் காலப்பகுதியும் காணப்படுகிறது (படம் -5)
இரண்டாவது வகை நானயங்கள் முதலாவது வகை நானயங்களைப் பெருமளவு ஒத் திருந்தாலும் மயிலின் வாயிலுள்ள பாம்பு தெளிவாக இருப்பதுடன், பின்புறத்தில் "கந்" என்ற பெயருக்குப் பதிலாக "ஆ" என்ற தனி எழுத்து மட்டும் காணப்படுகிறது (படம்-3).
இதில் "கந்" "ஆ" என்ற எழுத்துக்கள் மனித உருவத்தின் தலைப் பகுதியைக் குறிக்கின்றன. இதனால் இவ்வுருவங்களை அவற்றை வெளியிட்ட மன்னர்களின் அல்லது
--

Page 40
முருகனின் உருவங்களாக எடுத்துக் கொள்ளலாம். இவ் வகை அமைப்பில் நாணயங்கள் வெளியிடும் மரபு சமகாலத்தில் தமிழகத்திலும் இருந்ததற்குப் பல சான்றுகள் உண்டு (சீதாராமன் 1996:39.97).
முருகனோடு தொடர்புடைய பாம்புடன் கூடிய மயில், வேல் என்பவற்றோடு "கந்” என்ற பெயரை நோக்கும் போது அது முருகனைக் குறிக்கும் "கந்தன்” என்ற பெயரின் சுருக்கமாகத் தெரிகிறது. தமிழகத்தில் முருகனைக் கந்தனாக வழிபடும் மரபு முதன்முறையாக கி. பி. 7ஆம் நூற்றாண்டில் ஞானசம்பந்தர் தேவாரத்தில் தான் காணப்படுகிறது (ஞானசம்பந்தர் தேவாரம் 1:19) அக்கால யாழ்ப்பான மன்னர்களிள் ஒருவன் கந்த மலையாரியர் கோனர் என்ற விருதுப் பெயரைப் பெற்றிருந்தான் (Pathmanathan 1980:409-417). @356CITeo இவ்விருதுப் பெயருக்குரிய மன்னனே "கந்” என்ற பெயர் பொறித்த நாணயத்தை வெளியிட்டான் எனக் கூறலாம். இரண்டாவது நாணயத்தில் வரும் "ஆ" என்ற எழுத்து இந்நாணயத்தை வெளியிட்ட மன்னர் தம்மை ஆரியச் சக்ரவர்த்திகள் என அழைத்துக் கொண்டதால் அவ்வம்சத்தைக் குறிக்கும் முதலெழுத்தாக எடுக்கலாம். அதேவேளை சங்ககாலம் தொட்டு முருகன் ஆறுமுகன் என அழைக்கப்பட்டு வருவதற்கும் சான்றுகள் உண்டு (காந்திதாசன் 1988:129 -131). நாணயத்தில் "ஆ" என்ற எழுத்தோடு முருகனோடு தொடர்புடைய பாம்புடன் கூடிய மயில், வேல் போன்ற சின்னங்களும் இடம் பெற்றிருப்பதால் "ஆ" என்ற எழுத்து ஆறுமுகனைக் குறிப்பதாகவும் எடுத்துக் கொள்வதே பொருத்தமாகத் தெரிகிறது.
மேற்கூறப்பட்ட நாணய ஆதாரங்களைப் பிற வரலாற்று மூலாதாரங்களுடன் ஒப்பிட்டு நோக்குகின்ற போது பண்டு தொட்டு இலங்கைத் தமிழரிடையே முருகவழிபாடு இருந்து வந்துள்ளமை தெரிகிறது. கி. பி. 15 ஆம் நூற்றாண்டில் எழுந்த அருணகிரிநாதரின் திருப்புகழில் ஈழத்து முருக தலங்கள் இருந்த இடங்களாகத் தென்னிலங்கையிலுள்ள

கதிர்காமமும் வட இலங்கையிலுள்ள யாழ்ப்பாணமும் (யாழ்ப்பாணயன்பட்டினம்)
குறிப்பிடப்பட்டுள்ளன. இவை இலங்கைத் தமிழரிடையே முருக வழிபாடு சிறப்புற்றிருந்ததற்குச் சிறந்த
எடுத்துக்காட்டாகும். தமிழ் நாட்டில் வரலாற்றுப் பழமைவாய்ந்த முருகன் ஆலயங்கள் உள்ளன. அவற்றுள் பழனி, திருச்செந்தூர் போன்ற இடங்களில் உள்ள ஆலயங்கள் கந்தமலை என இலக்கியங்களில் அழைக்கப்பட்டாலும், நடைமுறையில் முருகன் ஆலயங்கள் என அழைக்கப்படும் மரபே பெரும்பாலும் காணப்படுகிறது. ஆனால் இலங்கையில் இன்றுள்ள முருகன் ஆலயங்களில் மூன்றில் ஒரு பங்கு கந்தன் ஆலயங்கள் என்ற பெயரில் அழைக்கப்டு கின்றன (வேலுப்பிள்ளை 1985:223-240). யாழ்ப்பாண அரசின் தலைமை ஆலயமாக "கந்தன் ஆலயம்" தலைநகள் நல்லூரில் இருந்தமை பற்றி இவ்வரசுகால இலக்கியங்கள் கூறுகின்றன. அதை இக்கால மன்னர்கள் வெளியிட்ட "கந்(தன்)” பெயர் பொறித்த நாணயங்களும் உறுதிப்படு த்துகின்றன. தமிழ் நாட்டில் சங்க காலம் தொட்டு முருக வழிபாட்டுடன் தொடர்புடைய சின்னங்கள் நாணயங்களில் இடம் பெற்றிருந்தாலும் முருகனின் பெயர்களை நாணயங்களில் பொறிக்கும் மரபு கி. பி. 17ஆம் 18ஆம் நூற்றாண்டில் ஏற்பட்டதற்கே இது வரை சான்றுகள் கிடைத்துள்ளன (ஆறுமுக சீதாராமன் 1998:39). ஆனால் இலங்கை தமிழரிடையே இம்மரபு கி. பி. 14ஆ. நூற்றாண்டளவில் ஏற்பட்டதை மே கூறப்பட்ட நாணயங்களில் இருந்த
தெரியவருகிறது. மேற்கூறப்பட்ட நாணயங்களைத் தவிர மேலும் பல நாணயங்களை ஈழத் தமிழர்
வெளியிட்டதற்குச் சான்றுகள் பலவுண்டு. அவை ஆராயப்படும் போது ஈழத்தமிழரின் பண்டைய கால மதங்களின் தனித்தன்மை புது வெளிச்சம் பெறும் என்பதில் ஐயமில்லை.
-34

Page 41
Reference
Bopearachchi, O. and Wickramesinhe, \ Revisited, with the collaboration of the Arc
Celappatikaram, 1995, ed. Caminataiyar,
Gupta, P. L., 1696, Coins, National Book
Kalidos, Raju., 1976, History and Culture
Kalidos, Raju., 1999, lconography of Skan the Institute of Asian Studies, Vol.XV:27
Kantithasan, M., 1988, Muruka Worship ir
Krishnamurthy, R., 1997, Sangam Age Ta
Krishnarajh, S., 1983, Coins found in Ja University Publication, 1:71-84.
Mahavamsa, 1960, ed, Geiger, W. Coloml
Paranavitana, S., 1970, inscription of Ceyl ment of Archaeologh Ceylon, Colombo.,
Parkar, H., 1981 Ancient Ceylon, Asian Ec
Pathmanathan, S., 1980, Coins of Medie Jaffna, Spolia Zylanica, Vol. 35, part I and
Pushparatnam, P., 2001, Ancient Coins Patippakam, Jaffna.
Rajan, K. 1994, Archaeology of Tamil Nad Co, Delhi.
Seetharaman, A., 1998, God name in Tam Society, Madras
Seylon, K. N. V. 1998, Some Old Coins Fc
Sitrampala, S.K. 1995, Histroy of Hinduis Jaffna University Publication, Colombo.
S 'asamy, V., 1974, Coins of Jaffn a (in Ta
Subbarayalu, Y., 1991, Personal Names Inscriptions (unpublished Seminar Papae

O V., 1999, Brநூலஃn
haeological
U.V.V edition
rust, India, New Delhi.
of Tamil, Dingul.
da-Murukan: Flashes of Insight, Journal of 3-90.
Tamil Nadu (In Tamil), Madurai.
ni Coins, Garnet Publications, Madras.
ffna Peninsula (in Tamil) Cintanai, Jaffna
OO.
on: Early Brahminscriptions, The Depart
lucational Services New Delhi.
val Sri Lanka: The Coins of the Kings of
II: 409–417
of Sri Lankan Tamil (in Tamil), Bavani
u: (Kongu Country) Book India Publishing
Coins (in Tamil) in Coins X Madras Coins
Jund in Early Ceylon, Nawala. Sri Lanka.
m in Sri Lanka up to 500 A.D. (in Tamil)
mil) Tellippalai.
and Society (in Tamil) History and Tamil s), Tamil University Thanjavur : 41-48.
-35.

Page 42
சமயப்புலத்தில்
எண்ண
ஓர் ஆ
1.O நாளாந்த வாழ்வியலில் அற்புதம என்கின்ற கருத்தாக்கம் புழக்கத்திலிருந்து வருகிறதெனினும் சமயம், சமயம்சார்புலங்கள் அதனையோர் அடித்தளமாக ஏற்றுக் கொண்டும், பாவனையில் கொண்டும் காணப்படுகின்றன. சமகாலத்தில் இக்கருத்தாக்கத்தின் ஏற்புடமை வலுக்குன்றி வருகிறதெனினும் சமயங்களின் தொடக்க நிலைகளிலும் վ!III Ց56ԾI சமயங்களிலும் அற்புதம் தொடர்பான கருத்துக்களின் தேவைப்பாடும், பெரிதும் முக்கியத்துவமுடைய ஒன்றாகக் கருதப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. சமயச் செயல்களில் அற்புதம் என்கின்ற எண்ணக்கரு எத்துணை முதன்மை பெற்றிருக்கின்றது என்பதனையும் அறிந்துகொள்ளுதல், அற்புதம் குறித்தாய் புரிந்து கொள்ள உதவும். பொதுவாக சமயப் புலங்களில் அற்புதம் என்பது வழமைக்கு மாறான சம்பவம். இதன் நிகழ்வுக்கான காரணங்களை இயற்கையில் கண்டுகொள்ளமுடியாது. இது பெளதீகவதீத சக்தியினால் அல்லது இறைவனினால், அல்லது இறைவனின் நியமியினால் நிகழ்த்துவிக்கப்படுகின்றது என்றவாறாகக் கண்டு கொள்ளப்பட்டது. இவ்வாறான அற்புதம் தொடர்பான மர்ம இரகசியங்களை சார்ந்துள்ள வெளிப்பாடுகளே சமயங்களின் தனித்துவத்தன்மைகள் எனவும் கண்டுகொள்ளப்பட்டன. உலகெங்ங்ணுமுள்ள சமய இலக்கியங்கள், சமய நூல்கள், தத்தம் 5F LULJ தூதர்களினால் அற்புதங்கள் நிகழ்த்துவிக்கப்பட்ட வரலாறுகளினையும், நிகழ்ந்து கொண்டிருக்கும் செய்திகளையும்

அற்புதம் எனும் ாக்கரு ஆய்வு
சு. சிவானந்தமூர்த்தி
வதந்துரைப்பனவாய்க் காணப்படுகின்றன. 1
அடிமைப்படுத்தப்பட்ட பிரதேசத்தி லிருந்து 65 ITGua மக்களை மீட்கப்படுவதற்காக செங்கடலைப் பிளந்து அதனிடையே தரைப்பாதையை உருவாக்கி அதனூடாக ஆயத்தப்படுத்தப்பட்ட பூமிக்கு யூதமக்களை மோயீசன் வழியாகவே கள்த்தர் மீட்டுச் சென்றமை ஓர் மாபெரும் அற்புதமாகும், 2 சூசையுடன் மேரி உடலுறவு கொள்ளாமலே பரிசுத்த ஆவியின் ஏவுதலால் கருத்தரித்து யேசுவைப் பெற்றெடுத்தமையும் ஓர் மாபெரும் அற்புதமாகும் என இன்றுவரை கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். 3 பொதுவாக சமயங்கள் இவ்வாறு அற்புதங்களை விதந்துரைக்கையில் சாதாரன நடைமுறையில் இதனையோர் அர்த்தம் பொதிந்த கருத்துரையாக பெரிதும்
ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. 9 as சமயங்களில் ஒன்றான பெளத்தம் அற்புத நிகழ்வுகளை ஏற்பதில்லை.
2.O அற்புதம் என்கிற கருத்துரையை வரைவிலக்கணப்படுத்துதல் இலகு வானதல்ல. இறுக்கமானதோர் உணர்வில் வரையறை செய்கையில் அற்புத நிகழ்வில் இயற்கை விதிகள் முறிக்கப்பட்டு இருக்கும். அல்லது மீறப்பட்டிருக்கும் எனலாம். தளர்வானதோர் உணர்வில் வரையறை செய்கையில் வழமையற்றதோர் நிகழ்வே அற்புதம் அல்லது எதிர்பாராததோர் நிகழ்வே அற்புதம் எனலாம். மேலும் இந்த நிகழ்வில் சமயச் சார்பு அல்லது இயற்கை இகந்த
-36

Page 43
சக்கியின் செல்வாக்கு இடம்பெறும். 4 அற்புதம் குறித்த டேவிற்கியூமின் கருத்துரை இயற்கை விதிகளை மீறியவாறாய்நிகழ்வனவே அற்புதங்கள் என்னும், மேலும் வழமைக்கு மாறான நிகழ்வுகளை அற்புதங்கள் என குறிப்பிட (LoI2.UTg) என்றவாறாயும் அமைகிறது. 5 அற்புதங்கள் மிகவும் உணர்வு பூர்வமான செயற்பாடுகள் என்றும் அவை
கிரகிப்பவனது <အlဓလံ ဓလg| அற்புத செயல்களைப் பார்ப்பவனது அறிவறிகைக்கு அப்பாற்பட்டதொன் றென்றும் இது
இயற்கையில் வருவதென்றல்ல என்றும் அது பரிசுத்த சக்தியினாலேயே இயற்றப்படுகின்ற தொன் றென்றும் 'லொக்' அற்புதத்தினை வரைவிலக் கணப்படுத்துகின்றார். அற்புதம் என்கின்ற நிகழ்வு இயற்கை இகந்த அல்லது
வழமைக்குமாறான இயல்புகளைக் கொண்டவையாதலால் அவற்றினை மனிதர்கள் இனங்கண்டு
கொள்ளமுடியாதென்றும் அவை இறைவனால் அல்லது இறைதூதர்களால் நிகழ்த்துவிக்கப்
படுகின்றதென்றும் அவற்றுக்கான காரணிகளை மனிதர்கள் இனங்கண்டு கொள்ளமுடியாதென்றும் y cK3963Ö) 6
பொதுப்புத்திக்கு அப்பாற்பட்ட தென்றும் அற்புதங்களைப் பொதுவாகச் சமயங்கள் வரைவிலக்கணப்படுத்துகின்றன. 7 மேற் குறித்த வரைவிலக்கணங்களிலிருந்து அற்புதம் குறித்ததோர் முழுமைக்கருத்தினை பெற்றுக் கொள்வது கடினமாது. குறிப்பாக அற்புதங்களின் நிகழ்வுக்கு இயற்கை இகந்த சக்திகளை உடன்படுத்தியும் எதிர்ப்ப டுத்தியுமான மனோபாவங்கள் காணப் பெறுகின்றன. ஆக இவ் வெவ்வேறான மனோபாவங்களைப் பகுப்பாய்வு செய்வதன் வழியாக அற்புதம் குறித்து புரிந்து கொள்ளலாம்.
3.O நான்கு வகைப்பட்ட மனோபாவங்கள் அற்புதம் குறித்து குறிப்பிடப்படுகின்றன. இவை தவிரவும், அற்புதங்கள் குறித்து வேறுபட்ட LJ 6U மனோபாவங்கள் காணப்பெறினும் அவையாவற்றையும் இந்த நான்கு வகைகளுள் உள்ளடக்கிவிடலாம்.

3. அற்புதம் உண்மையானது. நிகழும் சம்பவம். இயற்கையின் முழுமையையும் கடந்து நிகழ்வன. இறைவனால் நிகழ்த்துவிக்கப்படுவன. அற்புத நிகழ்வுகளின் வழியாக இறைவன் உலகுடன் தொடர்பு கொள்கிறான். அவ்வாறான கருத்தாக்கத்தினை சமயங்களும் இறையியல் மெய்யியலாளர்களும் ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். அக்குவானஸ் இக்கருத்தாக்கத்திற்கு உடன்பாடானவர்.
5.2 சமயவாழ்வில் மனிதனை ஆற்றுப்படுத்த வேண்டும். சமயத்தில் மனிதனை ஆர்வம் கொள்ளச் செய்ய வேண்டும். சமய நம்பிக்கைகளோடு மனிதனை வாழச் செய்ய வேண்டுமென்ற நோக்கத்திற்காக ஏற்படுத்தபட்ட புனைக்கதைகயே அற்புதம் குறித்த கருத்தாக்கம் என்கிறார் கியூம். மேலும் அற்புதங்களைப் புரிந்து கொள்வதற்கான அறிவார்ந்த காரணங்கள் ஏதும் இல்லை என்கிறார். அற்புதங்கள் குறித்து of LO L நிலைப்பாட்டினை மறுதலிப்பதாக டேவிற்கியூம் போன்றோரின் மனோபாவம் அமைந்து காணப்பட்டது.
3.3 அற்புதங்கள் வழமைக்கு LOIT DIT 6OT 6Od 6. JULUTöö நிகழ்பவை 66 ஏற்றுக்கொண்டாலும் கூட அத்தகைய நிகழ்வுகளில் இயற்கை இகந்த சக்திகளின் பங்களிப்பு தேவையில்லை. நோவல் சிமித் போன்றவைகள் இத்தகைய மனோபாவம் உடையவர்களாகக் காணப்பட்டனர்.
3.4 அற்புதங்களின் வலிதாம் தன்மை குறித்து முக்கியத்துவம் கொடுக்காமல் அவற்றின் அர்த்தம் அதாவது பொருள் குறித்து உபயோகத் தன்மை குறித்து அக்கறைப்பாடு கொள்ள வேண்டும் என்கிறார் ரிலீச் போல்.
4.O & Louth அடிப்படையில் அக்குவானஸ் அற்புதங்களை இயல்பான நிகழ்வென்றும் இவை இறைவனால் அல்லது இறைதூதர்களினால் நிகழ்வித்து விக்கப்படுபவை எனவும் குறிப்பிடுகின்றார்.
37.

Page 44
உலகியல் பொருட்களின் ஒழுங்கு முறைகளுக்கு மாறாக அல்லது, அவற்றை மேவியவாறாக இடம்பெறுபவை அற்புதங்கள். ஆச்சரிய மனப்பாங்கோடு பார்க்கப்பட வேண்டியவை. இடம் காரியப்படும் போது இவற்றின் காரணத்தை ஊகித்துக் கூறவும் கண்டு கொள்ளவும் முடியாது. "நிகழ்வொன்று அதிசயிப்பை ஏற்படுத்தி அதன் வழி பாராட்டைப் பெறுகின்ற போது அந்நிகழ்வை அற்புதம் எனலாம்" என்கிறார் அக்குவானஸ் அற்புத நிகழ்வின் ஊற்றை தேடுபவர்களுக்கு ஒரு வித மெய்யரும்புதலை விதிர்விதிர்ப்பை கண்ணிர் ததும்புதலை உருவாக்குபவர் கடவுளாவர். சூரியன் இன்று வரை வானத்தில் பிரசன்னமாவதற்கும், பிரகாசிப்பதற்கும் நியமித்தவறாய் தொடர்ந்து சுழல்வதற்கும் இயற்கை காரணமல்ல இறைவனே காரணம் என்கிறார் அக்குவானஸ்.
4.O. அக்குவானசின் அற்புதங்கள் குறித்த வாதங்களின் வலிதாம் தன்மையை நோக்கின் அவரது வழக்குரைகள் வெறுமனவே முற் கற்பிதங்களாக முன்வைக்கப்ப ட்டவையே. இறையியல் ஏற்புடமையுடன் உலகியல் போக்கை நோக்கியதன் பேறாய் பெறப்பட்டவைகளே. அக்குவானசின் சமயவயப்பட்டதோர் மனவெழுச்சியே இயற்கையில் இனங்கண்டு கொள்ள முடியாதவற்றின் காரணிகளை இறைவனின் பால் கொண்டு சென்றுவிட்டதெனலாம். இவரிடம் உறைந்திருந்த இறையியல் குறித்த மனோபாவம் நிகழ்வொன்றினைக் குறித்து அறிவியல் ரீதியாக நோக்க இடம் அளிக்கவில்லை. அவற்றினை இறையியல் சார்ந்ததாக dBT 6ÖÖl காட்டத் தூண்டியதெனலாம். நம்பிக்கையும் அறிவும் வெவ்வேறானவை. அனைத்து மாந்தர்களினதும் அங்கிகாரத்திற்கு உடன்படவேண்டியது அறிவு. ஆனால் நம்பிக்கை தனிமனித உணர்வுகளோடு தொடர்பானது சார்ந்தது. ஆக, அற்புதங்களுக்கு உணர்வு சார்ந்ததோர் வலிதாந்தன்மையை பெற்றுக் கொடுத்ததில் அக்குவானஸ் வெற்றி கண்டார் எனலாம்.

4.2.0 இயற்கை விதிகளை மீறுவதே அற்புதம் எனக் குறிப்பிடும் கியூம் அவ்வேளை வழமைக்கு மாறான சம்பவங்களை அற்புதம் எனக்கூற முடியாதென்றார். இயற்கை விதிகள் தெய்வீகத் தன்மையினால் அல்லது புலப்படாத சக்தி ஒன்றின் குறுக்கீட்டினால் மீறப்படுமாயின் அதனை அற்புதம் எனலாம் என மேலும் குறிப்பிடுகின்றார். ஆக, அற்புதம் குறித்த கியூமினது கருத்தாக்கம் கடும்போக் குணர்வோடும், மென்போக்கு உணர்வோடும் வெளியிடப்பட்ட இரண்டுறு மொழிதல் போல் அமைகிறது. 8
4.2.1. அற்புதத்தை வரைவிலக் கணப்படுத்துகையில் நிகழ்தன்மையை ஏற்றுக் கொண்ட கியூம் அதனை பகுப்பாய்வு
செய்கையில் அற்புதத்தின் இருப்புடைமையை மறுதலித்தவாறாகவே செய்யப்பட்டார். இயற்கைவிதிகள்
ஒழுங்குபடுத்தப்பட்ட அடிப்படையிலும் மாற்றமுடியாத அனுபவ அடிப்படையிலுமாய் அமைந்துள்ளன என்கிறார். இந் நிலைப்பாடு ஒழுங்காய் அமைந்த அனுபவங்களின் முரண்பாடு வராதவாறாய் பார்த்துக் கொள்ளப் போதுமானவை. இவ்விதமாய் அனுபவங்களில் காணப்படுகிற ஒழுங்குகள் அற்புத நிகழ்வுகளில் நிகழும் தன்மைக்கும் நம்பும் தன்மைக்கும் இடம்தரமாட்டா. அற்புதங்கள் நிகழ்தகவுடையன என்றவாறாய் கூட ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் அற்புதம் குறித்த சம்பாசனைகள் எல்லாம் மிகக் குறைந்தளவிலான எண்ணிக்கையிலான மக்களிடையே அதுவும் அறிவு நிலை குறைந்தவர்களிடையே இடம்பெறுகிறது. எனவே இவை குறித்து அதிக அக்கறை தேவையே இல்லை என்கிறார். அல்லாமலும் அற்புதங்கள் குறித்த ஐயத்திற்கிடம்கெடாமல் அதனை முழுமனதோடு நம்புவர் என்றவாறாய் ஒருவரையும் கண்டு கொள்ள முடியாது என கியூம் அழுத்தமாகக் குறிப்பிடுகிறார்.
ஏற்றுக் கொள்ளப்பட்தொரு மனவெழுச்சி நிலையிலேயே அல்லது எதிர்பார்க்கப்பட்டதோர் மனநிலையிலேயே அற்புதம் குறித்த ஆச்சரியமும் அதிசயிப்பும்
-38

Page 45
பிரமிப்பும் ஏற்பட முடியும். வழமைக்கு மாறான சம்பவங்களை அற்புதம் என்றவறாய் சொல்லிக் கொள்வதிலும் மனித இனத்தக்கு ஆர்வம் உண்டு என்கிற செய்தி மிக வெளிப்படையான உண்மை ஆகும். சமய ஆர்வலர் ஒருவர் உண்மையல்லாதவற்றை உண்மையென ஏற்றுக் கொள்வதன் வழியாக சார்ந்த சமயத்தினை அதாவது அதன் ஆன்மீக தன்மையை உயர்த்தி கொள்வதற்கு வழியாக அமையும் என எதிர்ப்பார்ப்பார். எனினும் எந்தவொரு சமய ஆப்தநூல்களும் அற்புதத்தின் இருப்பினை ஐயத்திற்கப்பால் நிறுவ போதியதாய் இருந்ததுமில்லை. அற்புதங்களை ஆப்தம் என சமய நூல்கள் குறிப்பிட்டால் அற்புதங்களைப் புரிந்து கொள்ளுதலைக் காட்டிலும் அந்த ஆப்தத்தினைப் புரிந்து கொள்ளுதல் கடினமாய் அமையும். இன்நிலை சமயத்திற்கு கீர்த்தி தருதலைக் காட்டிலும் அபகீர்த்தி நிலையினையே தரும் என்கிறார் கியூம். 9
சமயங்கள் ஒன்றிலிருந்து மற்றொன்று வேறுபடுகின்றது. முரண்படுகின்றது. சமயங்கள் ஒவ்வொன்றிலும் அற்புதம் குறித்த செய்திகள் காணப்பெறுகிறது. சமயம் ஒன்று தனக்கே சொந்தம் எனக் கொண்டாடும். அற்புதம் ஒன்றினைவேறோர். சமயம் தனக்கே உரிமையானது எனக் குறிப்பிடுவதும் உண்டு. இதனால் கருத்து வேறுபாடுகள் ஏற்றுக் கொள்வதிலும் வெளிப்படுத்துவதிலும் இருக்கவே செய்யும். மனிதனால் ஆக்கப்பட்ட எந்தவொரு ஆப்தமும் அற்புதங்களை நிறுவுவதற்கான திறன் அற்றதாகவே காணப்பெறுகின்றது. மேலும் அற்புதங்களே சமயம் ஒன்றிற்கான அடிப்படையாக அமைந்துள்ளதென எந்த ஆப் தமும் குறிப்பிடவில்லை. 10
மனிதர்கள் இறைவனைக் குறித்தோ அல்லது இறையியல் குறித்தோ அறிந்து வைத் திருப்பது மிகக் குறைந்த அளவிலேயாகும். ஆக, இந்த சொற்ப அறிவின் ஆதாரத்தைக் கொண்டு அற்புதங்களை விளங்கிவிட முடியாது. அற்புதம் குறித்த கியூமின் கருத்துக்களைப் பொதுவாக

நோக்குகிற போது அற்புதங்களை நிரூபித்துவிட முடியாது. அறிவு பூர்வமாக ஏற்றுக் கொள்வதற்கு ஏதுக்கள் இல்லை எனவும் ஆனால் அவற்றை அறிவு பூர்வமானவையாகக் காட்டிக் கொள்வதற்கு சமயம் சார்ந்தோர் முயலுகிறாள்கள் எனவும் கருதுகிறார் என்பதையே பெறக்கூடியதாய் உள்ளது. சிறப்பாக கியூமின் கருத்துக்களை நோக்கின் அற்புதம் என உண்மையில் எதுவுமில்லை. அவைகுறித்த ஆய்வுகளும் அவசியமில்லை என்பதையே பெறக் கூடியதாய் உள்ளது.
4.2.2 கியூம் அற்புதம் குறித்த தனது வரைவிலக்கணத்துக்கு முரணாகவே அற்புதம் குறித்த விளக்கங்களை வியாக்கியானங்களை வெளிப்படுத்துகின்றார்.
இவ்வாறான கருத்தாக்கங்களை விளக்கங்களை அவரது அற்புதம் குறித்த வரைவிலக்கண அடிப்படையிலேயே
நிராகரித்துவிடலாம். இயற்கைவிதிகளை மீறுகிறநிகழ்வுகளே அற்புதம் எனக்குறிப்பிடும் கியூம் வழமைக்கு மாறாக இடம் பெறுபவை எல்லாம் அற்புதங்கள் அல்ல எனக் குறிப்பிடவும் தவறவில்லை. எனவே அற்புதங்களின் நிகழ்தன்மையை அதாவது இருப்பினை தெளிவுபட ஏற்றுக் கொண்டிருக்கும் கியூம் அற்புத நிகழ்வுக்கான காரணியாக இறைவனை அல்லது இயற்கை இகந்த சக்தியை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதையே கியூமினது வரைவிலக்கணத்தில் இருந்து ஊகிக்கக்கூடியதாய் உள்ளது.
இயற்கை விதிகள் குறித்ததோர் தெளிவினை கியூம் வரையறுத்துக் கூறவில்லை. நிகழ்வொன்று இயற்கை விதிகளை மீறுகின்றதா? மீறவில்லையா என்பதற்கான கட்டளைகள் எது? ஒவ்வொருவரும் இயற்கைவிதிகளைத் தெரிந்து வைத்திருக்கவேண்டும் என்கிற நிலை ஏற்படுகின்றபோது இது சாத்தியமான தொன்றோ? எனக்கு எல்லா இயற்கைவிதிகளையும் தெரியும் என்று கூறுதல் சாத்தியமோ? இயற்கை விதிகளை தெரிந்து கொண்டிருத்தல் என்பதில்
39.

Page 46
மனிதகுலம் சிறுபிள்ளைப்பராயநிலையிலேயே காணப்படுகிறது. 11 அறிந்து கொண்டவை சில. அறியாதவை பல.
விஞ்ஞானம் கூட இயற்கை விதிகளை அறிந்து கொள்ள இன்று வரை அக்கறைப்பாட்டினை காட்டிக் கொண்டவாறாகவே உள்ளது. அதிகமானவை அறியப்படவேண்டியவையாய் உள்ளன. விஞ்ஞானம் さ元LLー ceges in II6OI இயற்கைவிதிகளை இன்றுவரை அறிய முற்பட்டவாறாயே உள்ளது. ஆகவே இன்றுவரை எதுவொன்று இயற்கைவிதிக் குட்பட்டது, உட்படாதது என்றவாறாக பகுத் தாய்ந்து பார்க்க கிடைத்திருக்கும் ஆற்றல் போதாது, இயற்கைவிதிகள் குறித்து தெளிவில்லை என்கிற நிலைப்பாடு ஏற்புடையதே. எனவே இயற்கைவிதிகளை அடிப்படையாகக் கொண்டு அற்புதநிகழ்வினை மறுக்கவோ ஏற்கவோ போதிய தெளிவுநிலை இல்லை. மேலும் விஞ்ஞானவிதிகள் உறுதிப்பாடானவை என்றும் இல்லை. பொய்ப்பித்தலின் அடிப்படையிலேயே விஞ்ஞானம் வளர்கின்றது என்கிற காள்பொப்பரின் கருத்தாக்கம் இங்கு நோக்கத்தக்கது. கால ஓட்டத்தில் விஞ்ஞான விதிகளில் ஏற்பட்ட மாற்றங்கள் அதன் நிச்சயமில்லாத் தன்மையையும் வேறுவிதிகளின் இருப்பினையும் எடுத்துக்காட்டுகின்றன. ஆக, மனித அறிவாற்றல் அற்புதத்தின் இருப்பினையும் நிராகரிக்க, புரிந்த கொள்ள போதியதாய் இல்லை 6T6 இன்றுவரையிலான நிலைப்பாடுகளை அடியொற்றியவாறாய் முடிவு செய்யலாம். அறியொனாவாதியான கியூம் அற்புதத்தையும் அறிய முடியாதெனக் குறிப்பிடுவதில் வியப்பில்லை.
4.2.3. அனுபவ அடிப்படையிலேயே அறிக்கைப் பேறுகளை பெறும் கியூம் வழமைக்கு மாறான சம்பவங்கள் இடம் பெறின் அவற்றை இயற்கை விதிகளுடன் ஒப்பீடு செய்து, இயற்கை விதிகள் மீறப்பட்டிருப்பின் அவை அற்புதம் எனலாம். என வரைவிலக்கணப்படுத்தியுள்ளார்.

ஒப்பீட்டாய்வு நியாயித் தலையும் வேறுபடுத்திக் காட்டலையும் உள்ளடக்குகின்றது. அனுபவம் ஒப்பீட்டாய்வுக்குப் போதுமானது அல்ல. எடுத்துக்காட்டாக குறித்தோர் இடத்தில் சந்தர்ப்பத்தில் நிகழ்வொற்றை அனுபவ வழியால் அற்புதம் எனக் கண்டுகொண்டால் அது போன்ற நிகழ்வு பிறிதோர் இடத்தில், சந்தர்ப்பத்தில் நிகழும் போது அது இயற்கை விதிகளுக்கு உடன்பட்டதாய் இருந்தால், ஏற்கனவே அனுபவவழியில் அற்புதம் எனப் பெறப்பட்டவை குருத்து அற்றதாய்ப் போய்விடும். எனவே அனுபவ அறிவு அற்புதம் குறித்து மதிப்பீட்டிற்குப் போதியதல்ல.
இயற்கை விதிகள் மீறப்படின் அவை அற்புதம் என்கிற கியூமின் கருத்தாக்கம் ஏற்புடைய ஒன்றல்ல இயற்கைவிதிகள் சீரான, மாற்றமுடியாத அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டவை. மனித அனுபவங்கள் அத்தகையவை அல்ல. அவை மாற்றத்திற்கு உரியவை. பொதுவான அனுபவங்கள் என அறியப்பட்டவை கூட எப்போதும் ஒரு விதமான அனுபவத்தினைத் தரும் என்றும் இல்லை. விருப்பத்திற்குரியவர் அருகில் இருக்கும் போது மல்லிகை மலரின் நுகர்வு மகிழ்ச்சி அனுபவத்தைத் தருவவையும் அவ்விருப்பத்திற்குரியவர் அருகில் இல்லாத போது வெறுப்பான அனுபவத்தைத் தருவதாயும் அமையலாம். ஆகவே அற்புதம் குறித்து முடிவு செய்ய அனுபவச்சோதனைகள் போதியதல்ல.
5.o (8IbITaleò fusog5 (Nowell Smith) séugu66OIg அற்புதம் குறித்த எதிர்க்கணியப்பட்ட நிலையினைப் பொதுவாக ஏற்றுக் கொண்டிருப்பனும் அற்புதங்களின் நிகழ்தன்மை குறித்து ஐயப்படவில்லை. நோவல் சிமித் அற்புதங்கள் நிகழ்வன, இயல்புக்கு மாறான சம்பவங்கள் என்கிறார். அற்புதங்கள் நிகழ்வதனால் விஞ்ஞான விளக்கங்கள் பாதிக்கப்படுவதில்லை என்கிறார் சிமித். ஏனெனில் விஞ்ஞானம் மாற்றமுடியாத இறுக்கமான எண்ணக் கருக்களையோ, 63 fats 6061T (3 UT
-40،

Page 47
கொண்டிருப்பதில்லை. புதிய நேர்வுகளின் கண்டுபிடிப்புக்கள், புதிய விஞ்ஞானக் கருது கோள்களின் தோற்றுவிப்புக்கள், விதிகளை பொய்ப்பித்தும் மறுவாக்கம் செய்தும் திருத்தி அமைத்தும் செயற்பட்ட வண்ணமாய் உள்ளன. இவ்விதம் இயற்கை பொய்ப்பிக்கப்படுவதும் அது குறித்த விஞ்ஞான விளக்கங்கள் வலுவிழந்து செல்வதும், இயற்கையின் அதிகார தன்மை முற்றாக நொறுக்கப்பட்டு விட்டதென பொருளாகாது. இத்தகைய சந்தர்ப்பங்களில் இங்கு பெளதீகவதீத சக்திகள் செயல்படுகின்றன. என்றவறாக எடுத்துக் கொள்ள வேண்டும். தோற்றப்பாடொன்றினை எந்தவொரு விஞ்ஞானியும் சமகாலத்தில் விஞ்ஞான அடிப்படையில் விளக்க முடியாதவிடத்து அவற்றினை முறைகளினால் விளக்கப்பட முடியாதவை என்றோ அல்லது அவை விளக்கப்பட வேண்டியவை என்றோ முடிவு செய்யக்கூடாது. அவை பெளதீகவதீக சக்திகளின் செயற்பாட்டாலான விளைவுகள் என்கிறார் நோவல் சிமித். எனினும் பெதிகவதித சக்திகள் எவை, எத்தகையவை என வரையறுப்பதில் நோவல் சிமித் முரண்படுகிறார். 12 பெளதீகவதிதசக்தி இயற்கையிலிருந்து வேறான ஒன்றாயின் el@6の6CI ஒருபோதும் ஆராய்தல் சாத்தியமாகாது இயற்கை கடந்ததாக பெளதீகவதீத சக்தி 660 ஒன்று இருக்குமாயின் அது மிகத் தனித்துவம் ஆனதாயும், மாறிக் கொள்வதாயும் இருக்கும் ஒன்றென்கிறார். பெளதீகவதிதம் இயற்கையோ எனின் அதனை பெளதீகவதீதம் எனக் குறிப்பிடல் முடியாது. ஏனெனில் இயற்கையினை ஆராயும் விஞ்ஞானம் அதனையும் ஆராய்ந்து விடும். எனினும் விஞ்ஞான ஆய்வுகள் புலன் அனுபவத்திற்கு உட்பட்டவையே.
5. நோவால் சிமித்தின் அற்புதம் குறித்ததும் பெளதீகவதீதம் குறித்ததுமான கருத்துரைகள் தெளிவினை ஏற்படுத்துவதற்குப் LJgSaопаъ தெளிவின்மையை உருவாக்கிவிட்டது என்பதை உண்மையே. பெதிகவதிதம்

விஞ்ஞான ஆய்வுக்குரிய ஒன்றாயின் அது இயற்கை இகந்ததாக இருக்கமுடியாது. ஏற்கனவே கூறியது போல் விஞ்ஞான விளக்கங்கள், ஆய்வுகள், புலன் அனுபவங்களுக்குட்பட்டவையும் வரம்பிற்கு ட்டவையுமாகும். இயற்கை இகந்தவற்றினை விஞ்ஞான ஆய்வுக்குட்படுத்த முடியாது. ஆக அற்புதத்தின் புதிரை புலப்படுத்த முற்பட்ட சிமித்தின் முயற்சிகள் நல்ல முடிவினைத் தரவில்லை.
6.O திலிச்போலினைப் (Tich Poul) பொறுத்த வரையில் அற்புதம் எனும் எண்ணக்கருவை சமயமனப்பாங்கிற்கு, சமய சேவைப்பாங்கிற்கு உவப்பானவையாக அமைய வேண்டும் என்கிற முற் கற்பித உணர்வுடனே அணுகுகிறார் எனலாம். அற்புதங்கள் என ஏதும் உண்டோ? அற்புதங்கள் எனும் போது நாம் எதனைக் கருதுகின்றோம்? அற்புதத்தினை எவ்வாறு வரையறை செய்ய வேண்டும்? என்கிற கேள்விகள் எழும் போதெல்லாம் இறையியல் சார்பாய் இறையியலின் இருப்புக்கு உறுதுணையானவாறாய் பதிலினைக் கண்டு கொள்ள வேண்டும் என்கிறார் திலீச் போல் 13
அற்புதம் ஓர் நிகழ்வு என்றும் அதிசயமானது அவ்வேளையில் உள்பொருளின்
யதார்த்தத்தை அற்புதங்கள் களிப்பூட்டவல்லன. இவை மெய்மறந்த அனுபவ வழியாக பெறப்படுவதும்
கிரகிக்கப்படுவதுமானதோர் தோற்றப் பாடாகும். மெய்மறந்த தென்கிறபோது யதார்த்தத்தை மறுப்பதல்ல, வயப்பட்டதோர் அனுபவமே ஆகும். அற்புதம் அதிசயிக்கத்தக்கதாகவும், வழமைக்கு மாறானதாகவும் இருந்தாலும் அவ்வேளை உள்பொருளின் மர்மத்தை எடுத்துக்காட்டும் ஒருவிதபக்திமய உணர்வை வெளிப்படுத்தும் எனவும் எடுத்துக்காட்டுகின்றார்.
6. திலீச் சின் அற்புதம் குறித்த கருத்தாக்கம் கவர்ச்சியதாய் காணப்பெறினும் அதனையோர் தெளிவானதும் தடுமாற்றம் அற்றதுமான கருத்தாக்கமாக ஏற்க முடியாது. அற்புதத்தினை அகவயமானது, புறவயமானது
-41

Page 48
என திலீச் குறிப்பிடுகின்றார். அகவயப்பட்ட நிலையில் மனதின் சார்பாகி சுய எழுச்சி ஊட்டும். அவை புறவயப்பட்ட நிலையில் மனித இனத்தின் அறிவாந்த தன்மைக்கு எழுச்சியூட்டுவதாய் அமையும்.
ஆக்க பூர்வமான கருத்துக்கள் சிலவற்றினை திலீச் குறிப்பிட்டிருந்தும் அற்புதம் வழியாய் வெளிப்படும் உள்பொருள் எது? எத்தகையது? என்பதற்கான பதில்கள் திலீச்சிடம் இருக்கவில்லை. ஐயப்பாட்டிற்கு தொடர்ந்து இடமளிப்பதாகவே திலீச்சின் கருத்துரைகள் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக அற்புத வழி வெளிப்படும். உள்பொருள் இயல்பு விவிலிய வேதம் குறிப்பிடும் உருவுடைக்கடவுளோ, கூர் ஆன் குறிப்பிடும் உருவிலிக்கடவுனோ, சங்கரர் குறிப்பிடும் நிர்ச்குணப்பிரமமோ இவற்றில் எது என்பது தெளிவில்லை. அற்புத நிகழ்வுகள் சமய பொறையுடைமைக்கு சவாலாகவும் அமையலாம் எனலாமோ?
7.0 வ்ெவவேறுபட்ட பல நிலைப்பாடுகள் அற்புதங்கள் குறித்ததாய் இதுவரை நோக்கப்பட்டன. உடன்பாடானதும் உடன்படாததுமான கருத்தாக்கங்கள் அற்புதம் குறித்துக் காணப்படுகின்றன. அற்புதங்கள் இயல்புக்கு மாறான நிகழ்வுகள், இவ்வாறான நிகழ்வுகள் புலன்களுக்கு ஆச்சரியத்தினையும் அதிசயத்தினையும் தரவல்லன என்பவை பொதுவானவை கியூமின் கருத்தினை நிராகரிப்பதில் பின்வந்தோர் வெற்றிக்கண்டனர் என்பதும் உணரப் பெற்றது.

சமயப்புலத்தில் அற்புதம் முதன்மையிடத்தினைப் பெற்றிருக்கிறது அற்புதத்தினைக் காணும் போதெல்லாம் தத் தமது උණුගේ Lශීෂ්‍යත්‍රී தூய்மை அங்கீகரிக்கப்படுகிறது என ஒவ்வொரு இறுக்கமான சமயியின் உளப்பாங்கும் அமைந்து காணப்படுகிறது என்பதும் பெறப்பட்டது. சமயப்பின்புலத்தில் நின்றவாறாய் வாழ்வினைக் காணும் மனிதர்கள், அற்புத நிகழ்வுகள் குறித்ததாய் அக்கறைப் பாட்டுடனும் எழுச்சியுடனுமாய் எப்போதும் காணப்படுகிறார்கள். அற்புதம் குறித்த சிந்தனைகள் வாழ்க்கை வடிவத்தை செம்மைப்படுத்துகிறது.
ஏ. ஏச் ஸ்ரோங் (A. H. Strong) போன்ற வர்கள் அற்புதங்கள் விதிகளை மீறிய நிகழ்வுகள் என்றவாறாக எந்தவொரு ஆபதத்திலும் குறிப்பிடப்படவில்லை. என்று கூறினாலும் 14 கூட அற்புதம் குறித்து பொதுவான பயன், அர்த்தம் அல்லது அதனுடைய பங்களிப்பு எவ்விதத்தில் பயன்பாடாய் உள்ளது என்கிற அடிப்படையிலே நோக்க வேண்டும் என்கிற திலீச் சின் நிலைப்பாடு கூடிய வரவேற்பினைப் பெற்றுள்ளது.
நதி மூலத்தை தேடியபின்னே தான் நீராடுவோமென்று எவரும் இரார். அது போன்றே அற்புதங்களின் மூலகங்களை தேடுவதைவிட, அற்புதங்கள் மனித வாழ்வியலில் அதனை வளம்படுத்துவதற்கு வாய்ப்பாய் எவ்வகையில் எவ்வளவு தூரம் உதவுகிறது என்பதையொட்டி அதனைப் புரிந்து கொள்ளல் பிரயோசனம் தரும்.
-42

Page 49
அடிக்குறிப்பு
10)
11)
12)
13)
14)
Verman K.M.P. (Editior) Philosophy
பரிசுத்த வேதாகமம் யாத்திராகமம் அதி நடுநிலையம் திண்டிவனம் தமிழ்நாடு பக் 1
பரிசுத்த வேதாகமம் லூக்காஸ் நற்செய்தி நடுநிலையம் திண்டிவனம் தமிழ்நாடு. பக்
Thomas Mcpherson Philosophy an LOnCOn. 1974 P-86
Chappel V.C. (Editor) An inquiry c Modern Library New York P364.
Paul Edward The Encyclopedia of Co Inc Free press New York. 1969
Opcit. Thomas Mcpherson, 1974 P
Opcit. Chappel V. C. 1974 P-364
Randal Buchler, shirk Reading in Ph 1946 P-139.
Opcit. Chappel V.C. P-364
Opcit Verman K.M. PP-105
Novel Smith (Miracles in Flew and theology P-247
Opcit. Verman K.M. PP-105
Srong A H Systematic theology Pick

of Religion Page 102
காரம் 14 விவிலிய மறைக்கல்வி திருவழிபாட்டு '5.
அதிகாரம் 1. விவிலிய மறைக்கல்வி திருவழிபாட்டு 75.
d Religious belief Hutchison. Iniversity of
:oncerning Human understanding Part 1
Philosophy. Vol 6. Macmillan Publishing .348-כ
88
ilosophy Barnes and Noble inco New York
Macintynee) New Essay in Philosophyal
cerings and Inglis London 1956. P 117.
-43

Page 50
கம்பராமாயணச் ெ மாற்ற
பாலகாண்டம் கார்முகப் படலம். ஜனகனது அவைக்களம், பொன்மயமான மேருமலை போன்ற சிவதநுசை, சேவகள் பலர் சுமந்து கொண்டு வந்து அரசவையில் வைக்கின்றனர்.
அத்தருணம் விஸ்வாமித்திரன் தனது சடைமுடி துளக்கி இராமனது முகத்தினை நோக்க இராமனும் அவ்வில்லினை நோக்கியவனாய், வேள்வித்தீயில் பொழியப்படும் நெய்யின் வாய்வழி பொங்கி எழுகின்ற கொழுங்கனல் என எழுகின்றான்.
இக் கட்டத்தில், மிகக் காத்திரமான பொருள் செறிந்ததும் இலக்கிய ஆர்வலர்க்கு என்றென்றும் தெவிட்டாத உள்ளக் கிளர்ச்சியினை ஊட்டுவதுமாகிய செய்யுள் ஒன்றினைப் படைத்தளிக்கிறான் கம்பமகாகவி
'ஆடக மால்வரை அன்னது தன்னை தேடரு மாமணி சீதை எனும் பொற் குடகம் வால்வளை சூட்டிட நீட்டும் ஏடவிழ் மாலை இதென்ன எடுத்தான்
இச் செய்யுளுக்கு தொன்று தொட்டு கம்பராமாயணத்திற்கு உரை கண்ட அறிஞர்கள் (வை. மு. கிருஷ்ணமாச்சாரியார், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தினர் உட்பட) கூறிவரும் மரபு வந்த உரை பின்வருமாறு
"தேடுதற் கரிய ஸ் தீரீரத்தினம் போன்றவளும் பொன்னாலாகிய சூடக அணியினையும், ஒளிரும் வளையல்களையும் அணிந்திருக்கிறவளுமாகிய சீதைக்கு தான் (இராமன்) சூட்டுவதற்கு நீட்டுகின்ற இதழ்

சய்யுள் ஒன்றிற்கு
g60)
Gí. Mí. Firmairiúruh
விரி மாலை இது என பொன்மயமான மேருமலை போன்ற அப்பாரிய வில்லினை இராமன் கையில் எளிதாக எடுத்தான்" என்பதாம்.
இராமன் வில்லை வளைக்குமிடத்து, சீதையே மாலை சூட்டி இராமனைத் தனது கணவனாக வரிப்பாள் என்ற இந்தச் சுயம்வர மரபுக்கு மாறாக, இராமனே சீதைக்கு மாலை சூட்டிட முற்படுகிறான் என்ற விதத்தில் அமைந்த மரபுவழிவந்த இந்த உரை, எவ்வாற்றானும் பொருந்தாத தொன்றாகும். யாம் எடுத்துக் கூறும் பின்வரும் காரணங்கள் எமது வாதத்தினைநன்கு விளக்கி வலியுறுத்தி நிற்கும்.
வான்மீகத்தில், இராமர் சீதை திருமணத் தம்பதிகள் ஒருவருக்கொருவர் மாலை சூட்டுதல் இன்றியே, பாணிக் கிரகண முறைமையில் அவர்களது விவாகம் நடைபெறுகிறது.
கம்பனது இராமகாவியத்திலும், கார்முகப்படலத்திலோ, கோலங்காண் படலத்திலோ அன்றிக் கடிமணப்
படலத்திலோ இராம சீதையர் தத்தமக்கு மாலையிட்டுக் கொண்டனர் என்ற செய்தி இல்லை.
அங்ங்னமெனின், சுயம்வரவேளையில் மாலையிடும் வழக்கம் பற்றிக் கம்பன் குறிப்பிடுதற்குரிய எண்ணத்தினை எங்கிருந்து பெற்றிருக்கக்கூடும் என்ற வினா எழுகிறது.
வடமொழி மகாகவி காளிதாசனின் இரகுவம்சம் என்ற காவியத்தில் வரும் இரு
வெவ்வேறு சுலோக அடிகள், கம்பனின்
-44

Page 51
கற்பனைக்கு உந்துசக்தியாக அமைந்தன என்பதனை இக்கட்டுரையின் இறுதியில் காண்போம்.
மரபுரையில் இலக்கண வழு
முதலாவதாக மரபுவழிவந்த உரையில் இலக்கண ரீதியான வழு ஒன்றுண்டு
வால்வளை சீதைக்குக் குறித்து நிற்கும் அன்மொழித் தொகை வால்வளை சூட்டிட நீட்டும் என்பது எழுவாய்த் தொகா நிலைத் தொடர் மொழி. இந்த எழுவாய்த் தொகாநிலைத் தொடரை நான்காம் வேற்றுமைத் தொகைநிலைத் தொடராகக் கொண்டு வால்வளைக்குச் (சீதைக்கு) சூட்டிட நீட்டும் என்கிறது மரபு வழி வந்த 9-60)
தொல்காப்பியம் சொல்லதிகாரம் வேற்றுமை மயங்கியலில் சூத்திரம் 95ல்
குத் தொக வருடம் கொடை யெதிர் கிளவி என்பதற்கு உரிய விளக்க உரையில் பின்வருமாறு கூறப்படுகிறது (ஆ. சிவலிங்கனார் பதிப்பு :- உரைவளம் பக்கம் 82)
'கு'த் தொக வருடம் கொடை எதிர் கிளவி என்பதற்குக் 'கு' தொக வருவதற்குத் தகுதியுள்ள கொடை எதிர் கிளவி என்பது பொருள் ஆகும்.
'கு' தொக வருவதற்குரிய தகுதி, ‘கு’ உருபுள்ள சொல் பெயரைத் தழுவினால் மட்டுமே அமையும். உ-ம் நாகர் பலி - நாகர்க்குப் பலி ஆனால், பலி நாகர்க்குக் கொடுத்தான் என்ற இடத்திற் போல ‘கு’ உருபுள்ள சொல்லாகிய நாகர், வினையைத் தழுவினால் 'கு' தொக்கு வருவதற்குத் தகுதியுடையது ஆகாது.
இதற்கமைய வால்வினை சூட்டிட நீட்டும் என்ற இடத்து, வால்வினை என்ற சொல் வினையைத் தழுவி வருவதால் உருபு

தொக்கு நிற்பதற்குத் தகுதியுடையதன்று:
இவ்விடயம் பற்றி யாம் சில காலத்திற்கு முன்பு, அமரர் இலக்கண வித்தகர் நமசிவாய தேசிகரிடம் உசாவிய போது, கோடற் பொருளில் 4ஆம் வேற்றுமைத் தொகை வராது என்று அறிவுறுத்தி அமைந்தார் என்பதனை இங்கு குறிப்பிட விரும்புகிறோம்.
சாத்தனுக்குக் கொடுத்தான் என்ற 4ம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடரினைச் சாத்தன் கொடுத்தான் என 'கு' உருபு தொக்கு நிற்கும் வண்ணம் தொகை நிலைத் தொடராகக் கூற முடியாது. உருபு விரிந்து நின்ற இடத்து எப்பொருள் தோன்றுமோ, அப்பொருளே உருபு தொக்க நின்ற இடத்தும் தோன்ற வேண்டும் என்ற கருத்தினையும் மேலும் தெரிவித்தார்.
எனவே, வால்வளை சூட்டிட என்ற எழுவாய்த் தொடருக்கு வால்வளையல்களை அணிந்த சீதைக்குச் சூட்டிட என உரை காண்டல் இலக்கண ரீதியான தவறு மட்டுமன்றி, வலிந்து பொருள் கோடலும் ஆகும். அத்துடன், தக்கவழி கம்பனது இக் கவியினைச் செவ்வனே இலக்கிய இரசனையுடன் துய்ப்பதற்கும் இது ஊறு விளைவிக்கக் கூடியதும் என்பாம்.
<ණු,ඊසෆිඛJ யாம், மரபு 6) வந்த உரையினை மறுத்து, மாற்றுரை காணும் நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கப்படுகிறோம்.
மாற்றுரை எங்ங்னம்?
தேடுதற் கரிய ஸ்திரீரத்தினம் போன்றவளும் பொன்னாலாகிய சூடகத் தினையும், ஒளிரும் வளையல்களையும் அணிந்தவளுமாகிய சீதை (இராமனுக்குச்) சூட்டிரு முகமாக நீட்டுகின்ற இதழ்விரிமலர் மாலையாகவே மேருமலை போன்ற அவ்வில்லினை இராமன் அந்நேரம் கருதியே அதனை மிக லாகவமாகத் தூக்கினான் என்றவாறு.
-45

Page 52
அதாவது, அந்த வில்லை வில்லெனக் கருதாது, சீதை தனக்குச் சூட்டும் மாலையாகவே அத்தருணம் இராமன் கருதினான் என்பதே செய்யுளின், குறிப்புப் பொருளும் பொழிப்பும் ஆகும்.
இந்துப் பண்பாட்டு மரபு வழு
இந்துப் பண்பாட்டுக் கோலங்களில் ஒன்றாகிய, அரிவையே ஆடவனுக்கு சுயம்வர வேளையில் மாலை சூட்டி வரித்தல் ஆகிய மரபும், எமது கருத்திற்கு மேலும் அரண் செய்கிறது. ஆண்மகன் தனது பராக்கிரமப் பாங்கினை நிகழ்த்திக் காண்பிப்பதும், அங்ங்னம் நிகழ்த்திய காலை, ஆடவனை வரிக்கு முகமாக, நங்கை அவனுக்கு மாலையிடுதலும் தொன்று தொட்டு வந்த இந்து மரபு ஆகும்.
திருஷ்டாந்தமாக, கம்பனுக்குக் காலத்தால் ஏறக்குறைய 700 ஆண்டுகளுக்கு முற்பட்ட காளிதாசன் இயற்றிய இரகு வம்ச காவியத்தில் 6 ஆவது சருக்கத்தில், அஜனுக்கு இந்துமதி தனது தோழி சுநந்தை மூலம் மாலை அணிவித்து, அவனைத் தன் கணவனாக வரிக்கிறாள்.
வியாசரின் மகாபாரதத்தில் திரெளபதி பொற்றட்டில் மாலை ஏந்தியவளாய் மண்டபத்திற்கு வந்து, மச் சயந்திர இலக்கினை வீழ்த்திய அருச்சுனனுக்கு மாலை சூட்டுகிறாள். நளோபாக்கியானத்தில் தமயந்தி நளன் வடிவில் வீற்றிருந்த நான்கு இந்திராதி தேவர்களையும் தவிர்த்து விட்டு, நளனுக்கே மாலை சூட்டி வரிக்கிறாள்.
SSSS SSSSSSS S SLLL SLSS L LSSS SLL SSSSLS SSS SS SS SSSS SLLSS SLLLL SSL L SSSSS SSS SLS வயவேந்தைப் பொன்மாலை கூட்டினாள் பொன்." எனப் புகழேந்தியாரும் தமது
நளவெண்பாவில் தமயந்தி நளனுக்கு மாலை சூட்டினாள் எனக் குறிப்பிடுவார்.
කffiබර් ශෆි பாரதத்தில் திரெளபதி மாலையிட்ட சருக்கத்தில் பிராமணக் கோலத்தில் சுயம்வரத்திற்கு வந்திருந்த

அர்ச்சுனன், திட்டத்துய்மனை நோக்கி "வில்லினை வளைத்துக் குறித்த இலக்கினை எய்து வீழ்த்திடின், பிராமண இளைஞர்க்கும் திரெளபதி மாலை சூட்டுவாளோ?" என வினாவுகிறான்.
"மன் மரபிறந்து இருந்தோள் வலியால் இந்த மண் ஆளும் அவர்க்கன்றி மறைநூல் வாணா தொன் மரபில் பிறந்தோரும் இலக்கு வீழ்த்தால் / சூட்டுமோ தொடையல் இளந்தோகை" இலக்கினை எய்து வீழ்த்திய விஜயனுக்கு உடனேயே மாலை சூட்டி அவனைக் கணவனாக வரிக்கிறாள் திரெளபதி பாஞ்சாலர்பதி கன்னி இருதன் செங்கண் பங்கயத்தால் பாங்காகப் பரிந்து நோக்கி, தேஞ்சார நறுங்கழுநீர்ச் செய்ய தாமம் செம்மணிகால் அருவி எனச் சேர்த்தினாளே தாமம் - மாலை
மலையாளக் கவி 'புனம்' யாத்த இராமாயணமும் சீதையே இராமனுக்கு மாலை சூட்டினாள் எனக் குறிப்பிடும்.
இவ்வாறு, காவியங்களில் எல்லாம் நங்கையே ஆடவனுக்கு மாலை சூட்டும் மரபு
சொல்லப்படுகின்றது. கம்பனும் இம்மரபினையே பின்பற்றியிருக்கிறான் என்று கொள்வதே பொருத்தம்.
கம்பனினி மானிட இயல்பைச் சுட்டும் யதார்த்தப் பண்பு
மேலும் இச் சந்தர்ப்பத்தில் இராம காவியத்தின் தனிச் சிறப்புகளில் முக்கிய ஒன்றினைக் குறிப்பிட்டு, எமது கோட்பாட்டை மேலும் வலியுறுத்த விரும்புகிறோம்.
மானிட இயற்கையின் இயல்புகளையும், உணர்வு, உணர்ச்சி, உளப்பாங்கு ஆகியவற்றையும் பெரும் பொருளாகக் கொண்டே, இயற்பண்புரீதியில் தனது காவியத்தைக் கம்பன் படைத்திருக்கிறான். இதனாலேயே அது காலதேச
-46

Page 53
பரிமாணங்களைக் கடந்து அனைவர்க்கும் தெவிட்டாத இன்பம் நல்குகிறது.
கம்பன் போன்ற பெருங்கவிகள் தீட்டும் வர்ணனைகள் மனோபிம்பங்கள், கதாபாத்திரங்களுக்கு அவன் கொடுக்கும் அடைகள் அனைத்துமே வெறும் சொல் அலங்காரங்கள், காவிய மரபணிகள் அல்ல. மாறாக, அவை காவியக் கருப்பொருளின் முக்கிய கூறுகளைச் சுட்டி நிற்பனவுமன்றி, கதாபாத்திரங்களின் குணாம்சங்கள், உளப்பாங்கு, உணர்ச்சிக் குமுறல்கள் என்பனவற்றைக் குறிப்பால் காட்டும் தகையனவுமாம். இவை சங்ககால இலக்கியங்களிற் காணப்படும் உள்ளுறை உவமம், இறைச்சிப் பொருள் என்பனவற்றை ஒத்தன.
காவிய இரசனைக்கு இன்றியமையாத இந்த அம்சத்தினைச் சுவைஞர்கள் உணராத விடத்து, கம்பனின் உன்னத சிருஷ்டியின் பெரும் பகுதியினைத் தக்கவழி சுவைக்கத் தவறி விடுவர் என்பது திண்ணம்.
இந்த அடிப்படையில், இச் செய்யுளை மீண்டும் நோக்குவோம். சீதையும் இராமனும், வில் வளைத்தல் நிகழ முன்னமே, தத்தம் இதயம் மாறிப் புக் கெய்திய மனோலயக் காதலர்கள் (Romantic Lowers) என்பது கம்ப சித்திரம்.
வில்லினை எடுக்க விரைந்தெழுந்த இராமனின் மனத்திரையில் மனோலயக் காதல் உணர்வுகளை ஒரு கணம் கம்பன் தனது வர்ணனை மூலம் ஓடவிடுவதைப் பாருங்கள்.
தேடருமாமணி ஆகிவிடுகிறாளாம் சீதை அத்தருணம் இராமனுக்கு. பொன்னலாகிய சூடகமும் ஒளிவிடும் வளையல்களையும் அணிந்திருக்கின்ற அவளது கரங்கள் அன்றலர்ந்த பூக்களால் ஆகியமாலையினைச் சூட்டிட நீட்டுகின்றனவாம்.

SLLLLL LLLSLSL LSSLSLSLL 0LLS00LLLLSLLLSLSLSLSLS SLLLL LLLL L LLLLLL0LLS பொற் குடகம் வால்வளை சூட்டிட நீட்டும் ஏடவிழ் மாலை
செய்யுளின் மூன்றாவது இறுதியடியில் ஓசை சற்றுத் தாமதித்துச் செல்வது, சீதை கரங்களில் மாலையினை ஏந்திய வண்ணம், பெண்மைக்கே உரிய நாணத்தினால் தயக்கத்தோடு, கைகளை நீட்டி உயர்த்தும் பாங்கினைச் சூசகமாக எமக்கு (இது காட்சியின்பம்) உணர்த்தி நிற்கிறது எனலாம்.
மனோலயக்காதல் வயப்பட்டு நிற்கும் இராமன் தனது தேடரு மாமணியிடமிருந்து, அவள் தனக்கு மாலை சூட்டி நாயகனாக வரிப்பதை விழைவானா? அன்றித்தான்
சீதைக்கு Ln T6O)6) அணிவிப்பதை நினைப்பானோ? முன்னதை அல்லவா விழைந்து இறும்பூது எய்துவான்
இதுவே ஆடவனுக்குரிய யதார்த்தமான பண்பாகும்.
எனவே சீதை தனக்கு மாலை சூட்டுவாள் என்ற எண்ணத்தினால் உந்தப்பட்டே, அப்பாரிய வில்லினை வில் லெனக் கருதாது, சீதை தனக்குச் சூட்டும் மாலையாகக் கருதியவனாய் வில்லினை வாகனமாகத் தூக்கினான் என்பதே தக்க உரையாம்.
இராமனே இந்தச் சந்தர்ப்பத்தில் மாலையைச் சீதைக்குச் சூட்டுவதாகக் கொண்டால் பொற்சூடகம் வால்வளை என்ற தொடர்கள் கருத்தமைதியற்ற வெற்றுச் சொற்கள் ஆகிவிடும்.
கம்பனிடத்து அர்த்தமற்ற பதங்களைக் காண்டல் அரிதினும் அரிது.
கம்பனின் அபூர்வமான புலமை வழக்கு
கம்பன் போன்ற பெருங் கவிஞர்கள்
தமக்கு முற்பட்ட புலமையாளர்களிடமிருந்து எண்ணப்படிமங்கள், சொல்லோவியங்கள்
47

Page 54
போன்றவற்றைக் கடன் வாங்கிக் கொண்டு தாம், கூறவந்த பொருள் விளக்கத்திற்கும் சந்தர்ப்பத்திற்கும் ஏற்றவாறு, தம தாக்கி இரசவாதம் செய்து அமைவர்.
aféOG3u இராமனுக்கு மாலை சூட்டிட நீட்டும் என்று கம்பன் கூறுவதாக யாம் கருதுவதற்கு, கம்பனுடைய இந்த இரசவாதக் கவித்திறன் துணை போகிறது எங்ங்னம் ?
காளிதாசனின் இரகுவம்சத்தில் ஒரு கட்டம். அஜனுக்கு இந்துமதி மலர்மாலை அணிவித்து அவனை வரிக்கிறாள். அம் மலர் மாலையினை, மாலையெனக் கருதாது இந்துமதி தனது கரங்களாலேயே தன்னை ஆலிங்கனம் செய்வதாக அஜன் என்னி மகிழ்கிறான் எனக் கவி சொல்வான்.
taya sraja mangala puspa mayya visala vikish sthalalambiya sah/ amasta kantharpitābāhupāsām vidrabhrajavarajam varnayah //
இரகு வம்சம் சருக்கம் 6
இந்த எண்ணப்படிமத்தினால் உந்தப்பட்டே இராமன் வில்லை எடுக்கும் சந்தர்ப்பத்தில் அவ்வில்லை வில்லாக எண்ணாமல் சீதை தனக்குச் சூட்டிட நீட்டும் ஏடவிழ்மாலையாக எண்ணி வில்லை எளிதாகத் தூக்கினான் எனக் கம்பன் கூறுகிறான்.
காளிதாசன் இரகுவம்சத்தின் 1ஆவது சருக்கத்தில் இராமன் வில் வளைத்தலைப் பற்றிப் பின் வருமாறு கூறுவான்.
"பெரிய மலையின் கனத்தினை யுடையதாக விருந்தும், மன்மதன் தனது மென்மையான புஷ்பவில்லை அதிக சிரமமின்றி எடுப்பதுபோல" இராமன் அவ்வில்லை நானேற்றினான்.

saila saram api nathiyatinatah / puspa capam iva pesalam smarah//
இரகுவம்சம் சருக்கம் 11
இவ்விரண்டு சொல்லோவியங்களினால் தனது கவியுணர்வு உந்தப்பட்ஆட கம்பன் யாம் எடுத்துக் கொண்ட இச் செய்யுளைப் படைத்துத் தந்திருக்கிறான் என்பது இலக்கிய சுவைஞர்களுக்கு எளிதில் புலனாகக் கூடிய தொன்று.
தொகுத்துக் கூறின், தமிழில் நான்காம் வேற்றுமை கோடற்பொருளில் தொகைநிலை தொடராத வழங்குவதில்லை என்பதால் மரபு வழிவந்த உரைகண்டதில் இலக்கண ரீதியான வழு உண்டென்பதாலும், இந்துப் பண்பாட்டு மரபின்படி, மகளிரே ஆடவர்க்கு மாலை சூட்டி வரித்தல் முறைமை என்பதாலும், சூட்டிட சீட்டும் என்ற காட்சிப்படிமம் பெண்ணுக்கே கூடுதலாகப் பொருத்தமுடையதாலும், தேடருமாணி சூடகம் வால்வளை என்ற சொற்றொடர்கள் சீதைபால் மனோலயக் காதலுற்ற இராமனின் உளப்பாங்கினைச் சுட்டி நிற்பதாலும், இச் செய்யுளில் துலங்கும் கம்பனின் கவியுணர்விற்கு உந்து சக்தியாக விளங்கிய காளிதாசனின் எண்ணப்படிமங்கள் இரண்டும் ஆடவனின் மனோ நிலை பற்றியே பிரஸ்தாபித்தாலும், சீதையே இராமனுக்குச் சூட்டிட நீட்டும் ஏடவிழ்மாலை எனப் பொருள் காணுதலே ஏற்புடையதாம்.
இங்ங்னம், அப்பாரிய வில்லை வில் லெனக் கருதாது, தனக்குச் சீதை சூட்டவிருக்கின்ற ஏடவிழ்மாலை என, el@6の6CT எண்ணியவனாய், இராமன் அவ்வில்லைத் தூக்கினான் என்பதே தகுந்த உரை என்பாம்.
-48

Page 55


Page 56
Fridrift i EFfrif Prilir,

tribo