கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பண்பாடு 2005.09

Page 1
PANPADU LIQ
LD5ust 14 இத
(*) தம்பலகாமத்தில் ஒரு
சைவ சித்தாந்த மெய்யிய சம்பந்தர் அருளிய ய சிருஷ்டி பற்றிய இந்து தொல்காப்பியர் : தமி கடந்த கால பண்பா
பெரிய புராணத்தில் மாணி
ཁ───────இதழ்
வெளி
இந்துசமய, கலாசார அடி
 

s
நவ இதழ்
Journal
02 2005 புரட்டாதி
த கல்வெட்டு லில் ஆறுமுகநாவலரின் பங்களிப்பு ாப்பிசைப் பாடல்கள்
துக் கொள்கை ழ் மரபின் காவலர் டு பருவ இதழ்கள்
க்கவாசகர் இடம்பெறாததேன்?
- - 29
fG: வல்கள் திணைக்களம்

Page 2
பதிப்பு விலை
- புரட்டாதி 2005
- ரூபா 50.
இருபத்தொன்பதாவது இ
பேராசிரியர் சி. பத்மநாதன்
இலங்கையின் முதுபெரும் வரலாற்றுத் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறைப் தொடர்பாக பல நூல்களையும் ஆய் மாணவர்களுக்காக எழுதி வெளியிட்டுள்ள
பேராசிரியர் இரா. வை. கனகரெத் இவர் பேராதனைப் பல்கலைக்கழக பணிபுரிகின்றார். தமிழ் இலக்கியம், இ வெளியிட்டுள்ளதுடன் ஆய்வுக் கட்டுரைக
கலாநிதி கிருஷ்ணவேணி நோர்ப இவர் யாழ் பல்கலைக்கழகத்தில் அ பணிபுரிகின்றார். மெய்யியல், அழகிய எழுதியுள்ளார். மேற்படி துறை சார்ந்த கட்டுரைகள் படித்துள்ளார்.
“”مح“"ص"۔ قLeتھ6.sیع • இவர் தென்கிழக்குப் பல்கலைக்கழ்கித் பணிபுரிகின்றார். தமிழ் இலக்கியம், இ எழுதியுள்ளதுடன் ஆய்வரங்குகளிலும் கட்
திரு. எஸ். தெய்வநாயகம் இவர் இந்து சமய, கலாசார அலுவல்க பணிப்பாளராக கடமை புரிகின்றார். ஆரம்பகாலம் தொடக்கம் பணிபுரிந்து வரு
செல்வி. க. கேமலோஜினி இவர் இந்து சமய, கலாசார அலுவல்கள் கடமையாற்றுகின்றார்.

தழின் கட்டுரையாளர்கள்
துறை பேராசியர்களில் ஒருவர். பேராதனைப் பேராசிரியராக தற்போது பணிபுரிகிறார். வரலாறு வுக் கட்டுரைகளையும் உயர் கல்வி பெறும் ார்.
தினம் த்தில் இந்து நாகரீகத்துறை பேராசிரியராக ந்து சமயம் தொடர்பாக பல நூல்களை எழுதி ளையும் எழுதியுள்ளார்.
ழகியற்துறையில் சிரேஷ்ட விரிவுரையாளராகப்
பல் தொடர்பாக ஆழ்ந்த பல கட்டுரைகளை ஆய்வரங்குகளில் கலந்து கொண்டு ஆய்வுக்
yw:
தில் சிரேஷ்ட் தமிழ்த்துனிற*விரிவுரையாளராகப் இந்துசமயம் தொடர்பாக ஆய்வுக் கட்டுரைகளை டுரைகள் படித்துள்ளார்.
5ள் திணைக்களத்தில் ஆய்வுத்துறையின் உதவிப் பண்பாடு பருவ இதழின் உதவி ஆசிரியராக கின்றார்.
திணைக்களத்தில் அபிவிருத்தி உத்தியோகஸ்தராக
பண்பாடு பருவ இதழில் பிரசுரமாகியுள்ள
கட்டுரைகளில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள்
யாவும் கட்டுரை ஆசிரியர்களின் சொந்தக்
கருத்துக்களாகும். இவை இவ்விதழை
வெளியிடும் திணைக்களத்தின் கருத்துக்களைப் பிரதிபலிப்பனவாகா.
ஆசிரியர்

Page 3
u60sr
(இருபத்தொன்
Lp6uff 1 4 இதழ்
சாந்தி நான
உதவி அ எஸ் தெய்
ിഖണ് இந்துசமய கலாசார அலு
ତ୍ରିed. 248, 1/1 கொழு

UTC)
த்ாவது இதழ்)
02 2005 புரட்டாதி
uur: வுக்கரசன்
சிரியர்: வநாயகம்
56:
வல்கள் திணைக்களம்
காலி வீதி,
L-04.

Page 4


Page 5
பொருள
தம்பலகாமத்தில் ஒரு க சி.
சைவ சித்தாந்த மெய்யிய ஆறுமுக நாவலரின் பங்க இ
சம்பந்தர் அருளிய யாப்பி
66
சிருஷ்டி பற்றிய இந்துக்
ஏ.
தொல்காப்பியர் : தமிழ் ப
(55.
கடந்த கால பண்பாடு ப
66
பெரியபுராணத்தில் மாணி இடம்பெறாததேன்?
55.

ல்வெட்டு
பத்மநாதன்
ரா. வை. கனகரத்தினம்
சைப் பாடல்கள் ஸ். கே. சிவபாலன்
கொள்கை
என். கிருஷ்ணவேணி
>ரபின் காவலர்
இரகுபரன்
ருவ இதழ்கள் ஸ். தெய்வநாயகம்
க்கவாசகர்
கேமலோஜினி
01.
Os
21
24
28
48

Page 6


Page 7
தம்பலகாமத்தில் ஒ
பொலநறுவைக் காலத்துப் படைப்
முன்னாட்களில் தம்பலகாமத்தில் ஒர் அரிய வரலாற்றுமூலமான தமிழ்ச்சாசனம் இருந்தது. அதனைப் பற்றி அறிந்ததும் தொல்பொருளியல் திணைக்களத்தினர் 1930ஆம் ஆண்டிலே அதன் மைப்படியை எடுத்தனர். இச் சாசனம் திருகோணமலை மாவட்டத்து தம்பலகாமத்தில் உள்ளதென்ற அதன் பிரதியிலே குறிப்பொன்று எழுதியுள்ளனர். சாசனம் வேறொரு விவரமும் பதிவு செய்யப்படவில்லை. அதன் வாசகத்தையும் புகைப்படத்தையும் இதுவரை எவரும் வெளியிட வில்லை.
தம்பலகாமத்துச் சிலாசாசனத்தை இப்பொழுது காணமுடியவில்லை. அதனைக் கண்டதும் திணைக்களத்தினர் சாசனத்தை எடுத்துக் கொண்டு, நன்றாகப் பேணக்கூடிய, பாதுகாப்பான இடத்தில் வைத்திருக்க வேண்டும். அவர்கள் அந்தக் கடமையைச் செய்யாத காரணத்தால் இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது.
தொல்பொருள் திணைக்களத்தில் 73 வருடங் களாகக் கவனிப்பாரற்றிருந்த மைப்படியான பிரதியொன்று சென்ற வருடம் எமக்குக் கிடைத்தது. அதனை அத்திணைக்களத்திலே சாசனவியல் துறைக்குப் பொறுப்பாளரும் உதவி ஆணையாளருமாகிய கலாநிதி மாலினி டயஸ் எம்மிடம் வாசிப்பதற்கென்று ஒப்படைத்தார். அதனை ஆராய்ந்த பொழுது சாசனம் துண்டமானது என்ற எண்ணம் ஏற்பட்டது. சாசனத்தின் முடிவிலே பயனிலை காணப்பட வில்லை. அதனால் சாசனவாகத்தின் முடிவுப் பகுதி அமைந்துள்ள பாகம் உடைந்து அழிந்து ட்டதென்று கருதலாம். சாசனத்தின் ஆரம்பப் பகுதியும் இவ்விதமாக அழிந்திருத்தல் கூடும்.
சாசனம் கற்பலகையொன்றில் எழுதப்பட் டுள்ளது. எழுத்துகள் அமைந்துள்ள பகுதி 1 அடி 7 அங்குலம் நீளமானது. நேர்கோடுகளை அகலப் பாட்டில் வெட்டி, அவற்றிடையே சாசனத்தை எழுதியுள்ளனர். எழுத்துகள் அளவில் ஓரளவு பெரியவை: அவை சராசரியாக 1.5 அங்குலம் உயரமும் அகலமுங் கொண்டவை. இதிலுள்ள வரிவங்களின் வளர்ச்சிநிலை 12ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிக்குரிய தமிழ்ச் சாசனங்களில் உள்ளவற்றிலும் முன்னேற்ற மானது. எனவே இதனைப் 13ஆம் நூற்றாண்டின் முற்பகுதிக்குரிய ஆவணமாகக் கொள்ளலாம். அரசனின் பெயர் அடையாளங் காணப்படுமிடத்து

ரு தமிழ்க்கல்வெட்டு பற்று மறைந்துபோன சிலாசாசனம் - சி. பத்மநாதன்
స్థాయి" இந்தக் கருத்தை மாற்றிக் கொள்ள
நரிடலாம்.
சாசனத்திலுள்ள விவரங்கள்
துண்டமாகிவிட்ட தம்பலகாமத்துச் சாசனத் தில் எல்லாமாகப் பதினொரு (11) வரிகள் உள்ளன. முதல் நான்கு வரிகளுஞ் சொற்கள் அடையாளங் காணப்படுவதற் ஏற்றவா தெளிவாகத் எழுத்துகள் சிதைவாகி உள்ளன. இங்கும் அங்குமாகச் சில வரிவடிவங்கள் தெரிகின்றன. சாசனத்தின் மைப்படி செப்பமாகவும் எடுக்கப்படவில்லை. சாசனம் காணப்படுமிடத்து, அதனைத் தெளிவாக வாசிக்க முடியுமென்று கருத இடமுண்டு. ஐந்தாவது வரி முதலான சாசனப் பகுதி மேல்வருமாறுள்ளது.
5. உடையார் நிச்ச 6. யித்த ஜகதப்ப 7. கண்டன் தாநத்(து) 8. க்கு நிலையாக்(கித்) 9. தம்பலகாம ஊ
10. ரை நான்கெல் 11. லைக்கு தள எல்லை
இச்சாசனப் பகுதியில் மூன்று முக்கியமான விடயங்கள் ::::: முதலாவது உடையார் என்பதாகும். உடையார் என்பது சாசன வழக்கில் அரசனைக் குறிக்கும். அது பெருநிலக்கிழாரான அரசப்பிரதானிகளையுங் குறிக்கும்.
சாசனத்தின் தெளிவற்றதான பகுதியில் ಶ್ವಿ:ಕ್ತಿ దీrవన டுள்ளது என்று கொள்ளலாம். நான்காவது வரியின் முடிவிலே மாக’ என்ற சொல்லின் அடையாளம் இருப்பது போலத் தெரிகின்றது. எமது கணிப்பு சரியானதெனிற் சாசனம் மாக உடையார் செய்த ஏற்பாடொன்றினைக் குறிக்கிறதென்றாகிவிடும். இந்த விளக்கம் தற்காலிகமானது. சாசனத்தை நேரிலே பார்த்து ஆராய்ந்தால் மட்டுமே இந்தக் கருத்தை உறுதி செய்ய முடியும். அது உறுதியாகுமிடத்து தம்பலகாமத்துச் சாசனம் என்ற சிறப்பினைப் பெற்றுவிடும். அவனுடைய நிர்வாக ஏற்பாடுகள், படைநிலைகள் ஆகியன பற்றி மகாவம்சம்
O1

Page 8
மட்டக்களப்பு பூர்வசரித்திரம் என்பவற்றிலே சொல்லப்படும் குறிப்புகள் உறுதியாகிவிடும். இதனைத் தீர்மானஞ் செய்வதற்கு சாசனம் எழுதப்பட்ட கல் கிடைக்குமென்ற நம்பிக்கை யுடன் பொறுத்திருக்க வேண்டும்.
தம்பலகாமம் என்னும் பெயர்
சாசனத்திலே குறிப்பிடப்படும் விடயங்களில் இரண்டாவது முக்கியமான அம்சம் தம்பலகாம ஊர் பற்றிய குறிப்பாகும். அது தம்பலகாமம் என்னும் ஊரினைக் குறிக்கின்றது. தம்பலகாமம் என்னும் பெயர் புராதனமானது, அது ஏறக்குறைய 800 வருடங்களாக இடையறாது வழங்கி வருகின்றது என்று கொள்வதற்கு இச்சாசனம் ஆதாரமாகின்றது. திருகோணமலை, கந்தளாய் என்னும் ஊர்களின் தமிழ்ப்பெயர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக வழங்கி வருகின்றமைக்கு சாசன வழக்கு ஆதாரமானது என்பதும் இங்கு கவனித்தற்குரியது.
ஜகதப்ப கண்டன்
சாசனத்திலுள்ள மூன்றாவது பிரதானமான அம்சம் ஜகதப்ப கண்டன் தானம் என்பது பற்றிய குறிப்பாகும் அதனைச் சாசனம் எழுதப்பட்ட காலத்து அரசியல் வழக்கம், சமுதாய நிலைகள் என்பவற்றின் அடிப்படையிற் புரிந்துகொள்ளலாம். ஜகதப்ப கண்டன் தானம் என்பது ஜகதப்ப கண்டன், தானம் என்ற இருசொற்களின் கூட்டுமொழியாகும். கண்டன் என்னுஞ் சொல் தமிழ்மொழியிலும் கன்னடமொழியிலும் சாசன வழக்கிலும் மிகுதியாகக் காணப்படுவது. அது போர்வீரனைக் குறிக்குஞ் சொல்.
ஜகதப்ப என்பது ஜகதோர்ப்ப என்ற கன்னடச் சொல்லின் ஒரு தமிழ் வடிவமாகும். ஜகதப்ப கண்டன் என்பது பாண்டிய மன்னர்களின் விருதுப் பெயரான புவனேகவீரன் என்பதற்கு நிகரானது. அதனை ஒருவரின் இயற்பெயராக வன்றி விருதுப் பெயராகவே கொள்ளவேண்டும். அது கன்னட மொழிவழக்கிலுள்ள ஜகதோய்ப்ப கண்டன் என்ற பெயரின் தமிழ் வடிவமாகும். அது அரசன் ஒருவனின் சிறப்புப் பெயராக அல்லது படைப்பிரிவொன்றின் பெயராக அமைந்திருத்தல் வேண்டும்.
ஜகதப்ப கண்டன் என்பது 12ஆம் நூற்றாண் டிலே இலங்கையில் வழங்கிய விக்கிரம சலாமேகன் என்ற விருதுப் பெயரைப் போன்றது. பதினோராம், பன்னிரண்டாம் நூற்றாண்டுகளில்
O2

திருகோணமலைப் பிரதேசத்தில் விக்கிரம சலாமேகத் தெரிந்த வலங்கை வேலைக்காரர், விக்கிரம சலாமேகன் நாற்படை என வழங்கிய வேலைக்காரப் படைகள் இருந்தன. இவற்றுள் முதலாவது படை கந்தளாய்ப் பிரம்மதேயத்திலே தங்கியிருந்தது. இரண்டாவது மயிலன் குளத்தில் அமைக்கப்பட்ட விக்கிரமசாலாமேகன் பள்ளி என்னும் பெளத்தப் பள்ளியின் பாதுகாப்பிற்குப் பொறுப்பேற்றிருந்தது. அதேபோல ஜகதப்ப கண்டன் என்னும் பெயரால் வழங்கிய படையொன்று தம்பலகாமத்தில் இருந்தது என்பது இச்சாசனத்தால் அறியப்படுகின்றது.
"உடையார் நிச்சயித்த ஜகதப்பகண்டன் தானத்துக்கு நிலையாக்கி தம்பலகாம ஊரை" எனச் சாசனத்திலே சொல்லப்படுவதால் அரசனின் அதிகாரங்களைப் பெற்றிருந்த ஒருவரால் ஜகதப்ப கண்டன் தானம் உருவாக்கப் பட்டது என்பது புலனாகின்றது. அத்தானம், தம்பலகாம ஊர் என்பதும் தெளிவாகத் தெரிகின்றது. எனவே தம்பலகாமம் ஒரு படைப் பிரிவின் பொறுப்பிலுள்ள ஊராக விடப்பட்ட தென்று கருதலாம். தோப்பவையைக் கைப்பற்றிய கலிங்கனாகிய மாகோன் அதன் பகுதிகளைப் படையாட்சி வன்னியருக்கு வழங்கினான் என்று மட்டக்களப்பு பூர்வசரித்திரம் கூறும் மாகன் தனது அதிகாரத்தினுள் அடங்கிய பகுதிகளிற் படை நிலைகளை அமைத்திருந்தான் என்று சிங்கள, பாளி நூல்களிற் கூறப்படுகின்றது. கோணம், கந்தளாய், கொட்டியாரம், கட்டுக்குளம், பதி (பதவியா), மன்னார், மாதோட்டம், மானாமத்த புலச்சேரி, வேர்பட்டினம் முதலிய ஊர்களிற் படைநிலைகள் மாகனால் அமைக்கப்பட்டன என்று அந்நூல்கள் கூறுகின்றன. தம்பலகாமத்துச் சாசனம் குறிப்பிடும் ஜகதப்ப கண்டன் தானம் அத்தனாய் ஒரு படைநிலைமாதல் கூடும். அவ்வாறாகிற் பிரதேச வன்னிமையின் வரலாறு தொடர்பான ஒரு வரலாற்று ஆவணம் என்று பரிமாணத்தை இச்சாசனம் பெற்றுவிடும். திருகோணமலைப் பிரதேசத்து நான்கு வன்னிப் பிரிவுகளில் ஒன்றாகத் தம்பலகாமம் அமைந் திருந்தது. தம்பலகாமத்தில் ஆட்சி புரிந்த வன்னியரைப் பற்றித் தமிழ் நூல்களிலும் ஒல்லாந்து, பிரித்தானிய நிர்வாக அதிகாரிகளின் அறிக்கைகளிலும் குறிப்பாக காணப்படுகின்றன.
ஜகதப்ப கண்டன் தானம் ஒரு
வீரபட்டினமா?
மாசேனகாமமான தன்மசாசரப்பட்டினம் என்னும் வீரபட்டினம் பற்றிய சில விவரங்கள் விஹாரேஹீன்ன என்னும் இடத்திலுள்ள சாசனத்

Page 9
திற் பதிவாகி உள்ளன. அது மாத்தளை மாவட்டத்திலே தம்புல்லைக்குச் சமீபமான பகுதியொன்றில் உள்ளது. எறிவீரர் என்னும் படைப்பிரிவினர் அதன் காவலராய் விளங்கினர். ஒரு சமயத்தில் வீரபட்டினத்துப் பெருமக்கள் தங்கள் காவலராகிய அறிவீரரைச் சிறப்பிகச் செய்யும் வகையில் வீரபட்டினத்தை எறிவீரன் தானம் என்று பெயர் சூட்டினார்கள். ஜகதப்ப கண்டன் தானம் என்பது எறிவீரன் தானம் என்னும் பெயரை ஒத்திருக்கின்றது. எனவே அது ஒரு வீரபட்டினமாக அமைக்கப்பட்டதா? என்ற வினா எழுகின்றது. கல்வெட்டின் முடிவில் வரும் தள எல்லை என்ற தொடரும் இத்தகைய சிந்தனைக்கு மெருகூட்டுவதாய் உள்ளது.
ரபட்டினங்களை வீரதளம் என்றும் சொல்வது வழமை.
தம்பலகாம ஊர் ஜகதப்ப கண்டன் என வழங்கிய போர்வீரர் கணம் ஒன்றின் பொறுப்பில் விடப்பட்டது என்பதும் அது ஆட்சியாளர் செய்தவொரு ஏற்பாடு என்பது சாசனத்தின் மூலம் தெளிவாகின்றது. தம்பலகாமம் ஒரு வீரபட்டினமாக, வீரர்கணமொன்றின் காவலிலுள்ள வணிக நகரமாக அமைக்கப்பட்டிருத்தலுங் கூடும்.
அநுராதபுரத்தில் ஜகதொப்ப கண்டன் பெரும்பள்ளி
தம்பலகாமத்துக் கல்வெட்டை ஆராயுமிடத்து அநுராதபுரத்து றுவான்வலிசாயவிலுள்ள தமிழ்ச் சாசனமொன்றைக் கருத்திற் கொள்ள வேண்டிய நிலை உள்ளது. "ரீஜகதொப்ப கண்டன் பெரும் பள்ளி” என்று அதிலே எழுதப்பட்டுள்ளது. எச். கிருஷ்ண சாஸ்திரி பதிப்பித்த தென்னிந்திய சாசனங்கள் என்பதன் நான்காம் தொகுதியில் 1402 என்னும் இலக்கமுடைய சாசனமாக இதன் வாசகம் வெளிவந்துள்ளது. அதன் புகைப்படம் முன் எவராலும் வெளியிடப்படவில்லை. சாசனம் பற்றிய விளக்கக் குறிப்புகளும் வெளிவரவில்லை.
அநுராதபுரத்துச் சாசனத்திலுள்ள எழுத்துகள் மிகவும் தெளிவானவை. அவற்றில் இதுவரை எதுவிதமான சிதைவும் ஏற்படவில்லை. அது இப்பொழுது கலாசார முக்கோணத்து அபயகிரி சேதியப் புனராக்கத் திட்டத்திற்குரிய அருங்காட்சி யகத்து வளாகத்தில் உள்ளது. 2001ஆம் ஆண்டு திசெம்பர் மாதத்திலே அங்கு சென்ற பொழுது அதனை எம்மால் அவதானிக்க முடிந்தது. தமிழ்நாடு அரசின் தொல் பொருளியல் ணைக்களத்து முதுநிலைச் சாசனவியலாளரான நண்பர் எஸ். இராஜகோபால் சாசனத்தின் மைப்படியினையும் புகைப்படத்தையும் எடுத்தார்.

அவர் எம்மிடம் ஒப்படைத்த புகைப்படப் பிரதியே இங்கு சாசனத்தை விளக்கும் வண்ணமாக
வெளியிடப்படுகின்றது.
இச்சானத்தின் எழுத்து 13ஆம் நூற்றாண்டுக் குரியவை என்பது தமிழ்ச்சாசனத்துறையில் மிகுந்த பயிற்சி பெற்றவர்களான பேராசிரியர்கள் எ. சுப்பிராயலு, ப. சண்முகம், கலாநிதி எஸ். இராசகோபால் ஆகியோரின் கருத்தாகும். எனவே தம்பலகாமத்துக் கல்வெட்டும் அநுராதபுக் காலத்துக் கல்வெட்டும் ஏறக்குறைய ஒரே காலத்தனவென்று கொள்ளலாம். அவற்றுக்கிடை யில் 30 வருடங்களுக்கு மேற்படாத கால இடைவெளி அமைந்திருத்தல் கூடும் அநுராதபுரத்துச் சாசனத்தில் எழுத்துகள் சம்மையாகவும் அழகாகவும் வெட்டப்பட்டுள்ளன. தம்பலகாமத்துக் கல்வெட்டிலே எழுத்துகள் வனப்பற்ற வகையிலே வெட்டப்பட்டுள்ளன.
இச்சாசனங்களில் ஒன்று ஜகதொப்ப கண்டன் பெரும்பள்ளி பற்றியது. பெரும்பள்ளி என்பது இலங்கைத் தமிழ்ச் சாசனவழக்கிற் பெளத்த விகாரங்களையும் கோயில்களையும் குறிக்கும். ஜகதொப்ப கண்டன் பெரும்பள்ளி என்பது ஒரு பெளத்த நிறுவனத்தின் பெயராகும். அது ஜகதொப்ப கண்டன் என்னும் சிறப்புப் பெயர் கொண்ட மன்னன் ஒருவனின் பெயரால் அல்லது அப்பெயரைப் பெற்ற படைப்பிரிவின் பெயரால் வழங்கிய அமைப்பாதல் வேண்டும். அது விக்கிரமசலாமேகன் பெரும்பள்ளி விக்கிரம சலாமேகன் நாற்படையின் காவலில் விடப்பட் டிருந்தது. அதனை அப்படையின் நாயகனாகிய கணவதி கண்டநாதன் அமைத்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
ஜகதப்ப கண்டன் பெரும்பள்ளி நுவான்வலி சாயாவின் வளாகத்திலுள்ள விகாரம் ஒன்றைக் குறிப்பிடுகின்றதா அல்லது றுவான்வலி சாயா என்ற பிரமாணடமான சேதியத்தைக் குறிப்பிடுகின்றதா என்பதை இதுவரை கிடைத் துள்ள வரலாற்று விவரங்களின், அடிப்படையிலே நிச்சயிக்க முடியவில்லை. 12ஆம் நூற்றாண்டிலே ஒருசமயத்திலே பொலநறுவையிலுள்ள தளதாப்பெரும்பள்ளி வளஞ்செயர் என்னும் வணிகரின் வணிக நகரொன்றின் காவலரான வேளைக்காரரின் பொறுப்பில் விடப்பட்டபோது, அது வேளைக்காறன் தளதாப் பெரும்பள்ளி என்று பெயரிடப் பெற்றது. அதே போல ஏதோ காரணத்தால் றுவான்வலி சேதியம் ஜகதொப்ப கண்டன் என்னும் பெயரால் வழங்கிய படைப்பிரி வொன்றின் பொறுப்பிலே விடப்பட்ட பொழுது அது புதிய சூழ்நிலைக்கேற்ப புனர்நாமம் பெற்றிருத்தல் கூடும்.
O3

Page 10
சாசனமும் ஒரு பெயர்ப் பிரகடனமாகவும் பெயர்ப்பலகையாகவும் அமைக்கப்பட்டதென்று கருதலாம். பெளத்த நிறுவனங்களுக்கும் தமிழர் சமுதாயப் பிரிவுகளுக்கும் இடையில் ஏற்பட்டிருந்த நெருங்கிய பரஸ்பரத் தொடர்புகள் பற்றிய மேலதிகமான ஆதாரமாகவும் இச்சாசனத்தை அடையாளங் காணலாம்.
ஜகதப்ப கண்டன் தானம், ஜகதொப்ப கண்டன் பெரும்பள்ளி என்பவற்றுக்கிடையிலே ஒரு தொடர்பு உள்ளமையினை முன்னே இங்கு கூறியுள்ளவற்றால் உணர்ந்து கொள்ளலாம். அநுராதபுரத்திலுள்ள பெளத்த நிலையமொன்று ஜகதொப்ப கண்டன் பெயரால் வழங்கியது. தம்பலகாமம் என்னும் ஊரிலே அமைக்கப்பட்ட படைநிலை ஜகதப்ப கண்டன் தானம் என்று பெயரிடப்பட்டது. விக்கிரமசலாமேகன் பெயரால் வழங்கிய அமைப்புகளும் இவ்வண்ணமானவை. விக்கிரமசலாமேகன் பெரும்பள்ளி, விக்கிரம சலாமேக - ஈஸ்வரம் என்னும் கோயில்களையும் விக்கிரமசலாமேகபுரம் என்னும் வணிகர் நகரமான வீரபட்டினத்தையும் தமிழ்ச் சாசனங்கள் குறிப்பிடுகின்றன.
தில்லையும்
நாயன்மார் காலத்தில் இருந்த 'சு இருந்தவை தில்லைக் கூத்தப்பிரான் தி ஆகும். ஏனைய கோவில்கள் முதன்மை தில்லைவாழ் அந்தணர் மூவாயிரவரால் கோவில் கொண்ட முதலிடமாதலாலும், ை அம்முதன்மை கருதியே நாயன்மா செய்யப்பெற்றனவாதல் வேண்டும். பேரப் திருக்கோவிலின் பழமையும் பெருமையும் தம் உயிரினும் மேலாகப் பாதுகாத்துச் குலநாயகன் என்று கூறிக் கொண்டனர் கோவில் அப்பர் - சம்பந்தர் காலத்திற் சி அது மிக்க சிறப்புற்றது. மநுநீதிச் சோ தலங்களில் முதன்மையானது சுந்தரர் சித்தாந்த வல்லவருமாகிய திருவாரூர் சுந் புரிந்த ஊரும் அதுவே, அவர் அங்கு நாயன்மார்களையும் முற்பட்ட நாய திருத்தொண்டர்த் தொகை பாடினார். இ தேவாசிரிய மண்டபம் வேறெக் கோ சிறப்புடைக் காரணங்களால் திருவாரூர் சி
04

முடிவாகத் துண்டமான தம்பலகாமத்துத் தமிழ்ச்சாசனமும் அதனைப் பற்றிய ஆய்வுகளும் இலங்கை வரலாற்றிலும், தேசிய பாரம்பரிய நோக்கிலும் புதிய பரிமாணங்களை ஏற்படுத்து கின்றது என்பது அழுத்திக் கூற வேண்டியதாகும். அது தம்பலகாம ஊரின் பெயரைக் குறிப்பிடும் முதலாவது தமிழாவணம் என்னும் சிறப்பினைப் பெறுகின்றது. அது அங்கு அமைக்கப்பட்ட ஜகதப்ப கண்டன் தானம் என்னும் படைநிலையைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. அது அரசன் ஒருவனின் ஏற்பாட்டினால் உருவானது என்று கருதமுடிகின்றது. தமிழ்மொழி வழக்கிலே ஏற்பட்டிருந்த கன்னடமொழிச் செல்வாக்கினையும் அது பிரதிபலிக்கின்றது. பிரதேச வன்னிபையின் உற்பத்தி பற்றிய ஆய்வுகளை முன்னெடுத்துச் செல்வதற்கான ஆவணமாகவும் அது அமைந்து விடுகின்றது. எனவே இதனைத் தேடிக் கண்டு பிடிப்பது எல்லோரின் கடமையாகும். சிறப்பாக அந்தப் பொறுப்பு தம்பலகாம வாசிகளுக்குரி
தாகும்.
திருவாரூரும் மார் 325 கொவில்களிற் சிறப்புற்றவையாக ருக்கோவிலும் திருவாரூர்ப் பூங்கோவிலுமே பெறுதற்கு முன்பிருந்தே தில்லைக் கோவில் பூசிக்கப் பெற்றதாலும் கூத்தப் பெருமான் சவவுலகில் தில்லை முதலிடம் பெறலாயிற்று. ர் திருப்பதிகங்கள் அங்கு அடக்கம் பலம், சிற்றம்பலங்களைப் பெற்ற தில்லைத் உணர்ந்தே பிற்காலச் சோழர்கள் அதனைத் சிறப்பித்தனர்; தில்லைப் பெருமானைத் தம் பிற கோவில்கள் நோக்கத் திருவாரூர்க் றந்து விளங்கியதாயினும் சுந்தரர் காலத்தில் ழன் தலைநகரம் திருவாரூர், சப்த விடங்க தாயார் கெளதமி கோத்திரத்தவரும் சைவ தரர்க்குப் பாட்டனார் ஊர்; அவர் முதல் மணம் த்தான் தேவாசிரிய மண்டபத்தில் இருந்த ான்மார் திருவுருவங்களையும் பணிந்து த்தகைய தொகை பாடுதற்குக் காரணமான விலிலும் அக்காலத்தில் இருந்திலது. இச் றந்த தலமாகக் கருதப்பட்டது.
- Dr. Dr. 6Jrrafudmoufiss60Ti

Page 11
சைவசித்தாந்த ஆறுமுகநாவல
"இந்தச் சரீரம் நமக்கு வணங்கி முத்தியின்பம்
என்ற நாவலர் தம் கூற்று அவர் சமய நோக்கினையும் சித்தாந்த நோக்கினையும் வெளிப்படுத்தி நிற்கும். இந்திய தத்துவமரபில் சமயமின்றி தத்துவம் அமைவதில்லை. ஆப்தவாக்கியங்களை ஒப்புக் கொள்பவை யாவும் சமயம் என்றே கொள்ளல் வேண்டும். சமயமும் தத்துவமும் ஒரு நாணயத்தின் இரு
பக்கங்கள் எனலாம்.
நாவலரவர்களின் சைவ சித்தாந்த முயற்சிகளை ஆராய்வதற்கு முன்பாகச் சைவ சித்தாந்த தத்துவத்தின் தோற்றத்தை அல்லது உருவாக்கத்தைச் சுருக்கமாக நோக்குதல் அவசியம்.
சைவசித்தாந்தம் தமிழர் கண்ட நெறி சைவ சித்தாந்தத்தின் முதன் நூல் சிவஞான போதம் ஆகும். இம்முதல் நூல் என்னும் பதம் முதன் முதலில் எழுந்த நூல் என்னும் பொருளில் வழங்குவதில்லை. சிவஞான போதத்துக்கு காலத்தால் முற்பட்ட நூல்களாக உய்யவந்த தேவ நாயனார் இயற்றிய திருஉந்தியாரும் திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார் இயற்றிய திருக்களிற்றுப்படியாரும் விளங்கு கின்றன. திருக்களிற்றுப் படியார் திருவுந்தியாரின் வழி நூல் என்பர். இவ்விரு நூல்களிலும் சைவ சித்தாந்த கோட்பாடுகள் ஒழுங்குபடுத்தப்பட்டு பேசப்படவில்லை. முதன் முதலாக சைவ சித்தாந்த கோட்பாடுகள் ஒழுங்குபடுத்தப்பட்டு அவை பற்றிப் பேசும் முதன் நூலாக அமைவது சிவஞான போதமேயாகும். இதன் வழி நூல்களாக ஏனைய பதினொரு சைவ சித்தாந்த நூல்களும் அடங்கும். இவற்றைத் தவிர்ந்த ஏனைய சைவ சித்தாந்த நூல்கள் சார்பு நூல்களேயாகும்.
சைவ சித்தாந்த உருவாக்கத்துக்கு சோழர்கால மக்களின் சமய உணர்வும் அது பற்றிய தெளிந்த அறிவும் இருமொழிப் புலமையும் வைதிக மதங்களுக்கிடையிலான பரஸ்பர உறவும் அவைதீக மதங்களுக் கிடையிலான கருத்தப் பரிமாறல்களும்

த மெய்யியலில் ரின் பங்களிப்பு
- இரா. வை. கனகரத்தினம்
5 கிடைத்தது கடவுளை பெறும் பொருட்டேயாம்”
நாவலர் பாலபாடம் - 11
அடிப்படையாக அமைந்தன எனக் கூறலாம். பூொதுவாக இக் காலத்தில் வைதீக மதங்களிடையே, தெளிந்த தத்துவக் கோட்பாடுகள் உருப்பெற்றிருந்தன. குறிப்பாகச் சங்கர வேதாந்தத்தையும் இராமானுசரது விசிட்டாத்வைதத்தையும் குறிப்பிடலாம். மணிமேகலை, சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, வளையாபதி முதலான காப்பியங்களுக்கூடாக பெளத்த - சமணக் கோட்பாடுகள் தமிழ் மக்களிடம் செல்வாக்குப் பெற்றிருந்தன. சைவ சித்தாந்தத்துக்கு முன்னெழுந்த சமய
தத்துவங்கள் நன்கு சிந்தித்து ஒழுங்குபடுத்தப் பட்டு சமய தத்துவக் கோட்பாடுகளைக் கொண்டவையாக இருந்தன. இத்தகைய ஒரு சமய தத்துவப் பின்னணிகளும் சைவ சமயத்தில் சைவசித்தாந்தம் என்ற மெய்யியல் வளர்வதற்கு உறுதுணையான படிக்கல்லாக அமைந்தன என்பதை மறுப்பதற்கில்லை.
அத்துடன், தமிழ் நாட்டில் ஆலயங்களோடு இயைந்த ஆகம நூல் வளர்ச்சியும், அது கூறும் பொருள் மரபும் ஆலயங்களிலும் மக்களிடத்தும் திருமுறைகள் பெற்ற சிறப்பும் தனித்துவமும் சைவத்தில் சைவ சித்தாந்தக் கோட்பாடு உருவாக்கப் பெறவேண்டும் என்பதன் அவசியத்தை வற்புறுத்தி நின்றன. ஆகமங்கள் திருமுறைகள் ஆகியன தத துவக் கோட்பாடுகளில் எழும் தர்க்கங்களுக்கு விடையளிக்கக்கூடியனவையாகவும் உண்மை களை வெளிப்படுத்தக் கூடியனவாகவும் அமைந்திருந்தமையால் இவற்றை முதல் நூல்களாகக் கொண்டும் ஏனைய சமயவாதிகள் பேசும் தத்துவ ஒழுங்கு முறைகளில் தள்ள வேண்டியதைத் தள்ளி ஏற்க வேண்டியதைத் தழுவியும் சைவசித்தாந்தக் கோட்பாட்டினை உருவாக்கினார். சைவ சித்தாந்திகள் திருமுறைகளையும் ஆகமங்களையும் முதன் நூலாக கொள்வதினால் தான் திருமுறைகளின தும் ஆகமங்களினதும் சாரமாக அமைவது சைவ சித்தாந்தம் என்னும் சமய வாய்ப்பாடு சமய மரபில் இன்றும் நிலவி வருவதை யாம் அவதானிக்க முடிகின்றது.
05

Page 12
சுமார் 13ம் நூற்றாண்டளவிலே முழுவடிவம் பெற்ற சைவ சித்தாந்தம் 17ஆம் நூற்றாண்டு வரை பெரிதும் எவ்வித கண்டனங்களுக்கும் உட்படாது தெளிந்த ஓடையாக ஓடிக் கொண்டிருந்தது. 19ஆம் நூற்றாண்டில் மிஷனரிமார்களின் வருகையால் சைவ சமயம் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்ட பொழுது அதன் வளர்ச்சிக்குக் கருவியாகிய தமிழ்' விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படாது சைவத்தின் கோட்பாடாகிய சைவசித்தாந்தம் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டது. இந்த நிலையில்தான் நாவலரவர்கள் சைவத்தையும் சைவசித்தாந்தக் கோட்பாட்டினையும் வளர்க்க முற்பட்டார்.
நாவலரவர்கள் சுத்த சைவர், செல்வப் பிரபு, பல மொழி வல்லுனர், கல்விமான், தமிழறிஞர், சைவசித்தாந்தி அவர் வாழ்ந்த காலம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலம், கிறிஸ்தவம் அரசாங்க மதமாக அங்கீகரிக்கப்பட்டு அந் நுற்றாண்டுக்குரிய உத்வேகத்துடன் பல்துறைகளிலும் நுழைந்து சைவத்தமிழ் மக்களிடையே சமூக பொருளாதார, கல்வி, சமய ஊழியங்களைச் செய்து வந்தது. அதன் ஊதியம் "மதமாற்றம்” என்னும் உள்நோக்கத்தைக் கொண்டிருந்தது. எந்தச் சுதேசிய சமய நிறுவனங்களும் கிறிஸ்தவ ஊழியத்துடன் போட்டியிட்டு வெல்ல முடியாது தத்தளித்தன. ஒவ்வொரு சுதேசிய சமய நிறுவனங்களும் தமது சமயத்தையும் அதன் கோட்பாட்டையும் காப்பாற்ற வேண்டின் சமய மாற்றத்தைத் தடுத்து நிறுத்த வேண்டிய அவசியத்தை உணர்ந்து கொண்டன. அவ்வகையில் வஸ் கடுவ gசுபுதிதேரர், ஹிக்கடுவ பூரீ சுமங்கல தேரர் முதலான பெளத்த துறைவிகளினதும், உடுப்பிட்டி அ. அருளம்பல முதலியார், வல்வை குமார சுவாமி முதலியார், வண்ணார் பண்ணை வேதக்குட்டிக் குருக்கள், ஆறுமுகச் செட்டியார், க. ஆறுமுகநாவலர் முதலான சைவர்களின் பணிகளும் குறிப்பிடத்தக்கன. இவர்களுள் ஆறுமுகநாவலரின் பணிகள் வரலாற்று ஆவணங்கள் போல் அமைந்துவிட்டன. நாவலர்கள் தமது வாழ்க்கையின் இலட்சியத்தை தாம் வெளியிட்ட விஞ்ஞாபனம் ஒன்றில் பின்வருமாறு குறிப்பிடுவது அவதானிக்கத்தக்க தாகும்
"நான் ஜயD) (1834) முதலாக பிற்றர் பார்சிவலி துரையுடைய இங்கிலிஷ்
06

வித்தியாசாலையிலே இங்கிலிஷ் கற்றேன். பலவD) (1841) பார்சிவல் துரைக்குத் தமிழ்ப் பண்டிதனாயினேன். பிதிரார்ச்சிதம் நான் பெறவில்லை. என்னுடைய தமையன்மார்கள் நால்வரும் இயன்றமட்டும் பொருளும் உத்தியோகமும் உடையவர்களாக இருப்பதுவும் அவர்கள் பொருளுதவியும் நான் பெறவில்லை. இங்ங்னமாகவும் மேற்கூறப்பட்ட விருத்தியை நான் கீலகD) புரட்டாதி (1848) பரித்தியாகஞ் செய்தேன். பார்சிவல் துரை, நான் தங்களுக்கு உயர்வாகிய வேதனம் தருவேன் தாங்கள் என்னை விடலாகாது என்று பலதரம் வற்புறுத்திச் சொல்லிய வழியும், நான் அவ்விருத்தியில் விருப்பம் வைக்கவில்லை. நான் இங்கிலிஷிலே அற்ப விற்பத்தியாயினும் பெற்றிருந்தும் என்னோடு இங்கிலிஷ் கற்றவர்களும் எனக்குப் பின் இங்கிலிஷ் கற்றவர்களும் அநேகர் தங்கள் தங்கள் சத்திக்கேற்ற உத்தியோகம் பெற்று வாழ்ந்திருக்கக் கண்டும், நானும் என் சத்திக்கேற்ற உத்தியோகத்தின் பொருட்டு முயற்சி செய் யின் அது தப் பாது சித்திக்குமென்றறிந்தும், அ.தில்லாமையால் விளையும் அவமதிப்பைப் பார்த்தும் உத்தியோகத்தை விரும்வில்லை. தமிழ்க் கல்வித்துணை மாத்திரம் கொண்டு செய்யப்படும் உத்தியோகம் வலிய வாய்த்த பொழுதும் அதனையும் யான் விரும்பவில்லை.”
கன்னியை நாயகனிடத்து ஒரு துட்டாயினும் வாங்காது.வீடு விளைநிலம், தோட்டம் ஆபரணம் முதலியவற்றோடு விவாகம் செய்து கொடுக்கும் வழக்கமேயுடையது என் சென்மதேசமேயாகவும், நான் இல் வாழ்க்கையில் புகவில்லை. இவையெல்லாவற்றுக்கும் காரணம் சைவ சமயத்தையும் அதன் வளர்ச்சிக் கருவியாகிய கல்வியையும் வளர்த்தல் வேண்டுமென்னும் பேராசையேயாம்"
இவ்விஞ்ஞாபனத்தில் வரும் "சைவசமயத்தையும் அதன் வளர்ச்சிக்குக் கருவியாகிய கல்வியையும் வளர்த்தல்” என்னும் தொடர் சிந்திக்கத் தக்கதாகும். இதில் வளர்ச்சிக்குக் கருவியாகிய கல்வி என்பதற்குத் தமிழ் மொழியெனப் பொருள் கொண்டு, நாவலரவர்கள் சைவத்தையும் தமிழையும் வளர்க்க முற்பட்டார் என்றும் சைவமும் தமிழும் என்னும் கோசத்தை முன்வைத்தார் என்றும் பொருள் உரைப்பர். ஆனால் உண்மையில் சைவத்தையும் அதன் வளர்ச்சிக் கருவியாக கல்வியும் என்னும்

Page 13
தொடருக்குச் சைவத்தையும் அதன் வளர்ச்சிக் கருவியாகிய சைவ சித்தாந்தத்தையும் வளர்த்தல் என்றே பொருள் கொள்ளல் வேண்டும். சைவத்துக்குக் கருப்பொருளாக அமைவது சைவ சித்தாந்தம் என்பதை யாவரும் அறிவர் அவ்வகையில் விளக்கத்தை மறுப்பது கடினம்.
நாவலரவர்கள் சைவ சித்தாந்தம் பற்றிக் கொண்டிருந்த கருத்துக்கள் சிலவற்றைச் சுருக்கமாக நோக்கலாம்.
(1) "உலகத்திலே, சமயங்களும் அந்த அந்தச் சமய சாத்திரங்களும் அந்தச் சாத்திரங் களிலே சொல்லப்படும் பொருள்களும், ஒன்றோடொன்று ஒவ்வாது பல திறத்தனவாய் இருக்கும். இவைகள் எல்லாவற்றுள்ளும், மேலாகிய சமயம் யாதெனில் இச்சமயப் பொருள்கள் எல்லாம் இது அதுவாகும்; அது அன்று என்னும் பிணக்கின்றி தன்னிடத்தே காண நிற்பது எந்தச் சமயமோ அந்தச் சமயமே சமயம்; அந்தச் சமய சாத்திரமே சாத்திரம்; அந்தச் சாத்திரத்தில் சொல்லப் படும் பொருளே பொருள் இப்படி எல்லாச் சமயப் பொருட்களையும் தன்னிடத்தே அடக்கி நிற்கும் சற்சமயம் சைவசித்தாந்தமே யாம். ஆதலால் அந்நதச் சமயமே சமயம்; அந்த சமய சாத்திரங்களாகிய வேத சிவாகமங்களே சாத்திரம்; அந்தச் சாத்திரங்களில் சொல்லப்படும் பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள்களுமே மெய்ப் பொருள்கள்.”
(2) "முன் முன் உள்ள சமயங்கள் பின்பின் உள்ள சமயங்களால் வாதிக்கப்படும். வாதிக்கப்படுவது பூருவபக்ஷமும், வாதிப்பது சித்தாந்தமுமாம்; சைவ சித்தாந்தம் மற்ற சமயங்களையும் பூருவ பக்ஷம் பண்ணி நிற்றலானும், அதனைப் பூருவ பக்ஷம் பண்ணுதற்கு ஒரு சமயமும் இன்மையாலும் அதுவே சித்தாந்தம் எனப்படும். சித்தாந்தமே சித்தாந்தம்; அவைக்கு வேறானவை பூருவ Ludossils6it."
(3) “சைவசித்தாந்த நூல்களைப் பசுக்களாக்கிய நாம் பரதந்திரர்களாதலால் ஒன்றினையும் உள்ளவாறு உணர்தலும் அதன் வழி நிற்றலும் இயலாவாம் எனத் தெரிகின்றது. சுவதந்திரராகிய சிவனை மறவாது அவரது

திருவருஜர், முன்னிட்டு, நின்று, விதிப்படி" ந்ேதுணர்தல் வேண்டும். இவ்வாறே திருவருளை முன்னிடாது எத்துணை நூல்களைக் கற்பினும், எத்துணைத் தருமங்களைச் செய்யினும் சைவசித்தாந்தமே உண்மை நெறி என்று ஐயந்திரிபறத் துணிதலும் அந்நெறியில் வழுவாது நிற்றலும் கூடாவாம். இத்தகைய ன்னணியில் நாவலரவர்களின் சைவ சித்தாந்த முயற்சிகளைப் பின்வரும் அடிப்படையில் நோக்கலாம்.”
(1) பிரசங்கம் புராணபடனம் ஆகியனவாயிலாகச் சைவ சித்தாந்தக் கருத்துக்களை வெளிப் படுத்துதல்.
(2) சைவசித்தாந்தக் கருத்துக்களை உணர்த்தும்
வகையில் நூல்களை எழுதி வெளியிடல்.
(3) சாதனைகளையும் தத்துவங்களையும் வெளிப்படுத்தும் நூல்களுக்கு உரை யெழுதியும் பதிப்பித்தும் வெளியிடல்.
(4) சைவசித்தாந்த கோட்பாடுகளைப் பிழையாக விளங்கியும் வேண்டுமென்றும் கண்டனஞ் செய்வோர்க்கு எதிராகப் பிரதி கண்டனங்கள் சய்தும் சைவ சித்தாந்த உண்மையை நிறுவுதல்.
(5) சைவசித்தாந்தவாதிகளைத் தனது மானசீக மான குருவாகக் கொண்டு சைவ சித்தாந்தக் கோட்பாடுகளை வளர்த்தல்.
(6) தனது சிவானுபூதி நெறியினைத் தத்துவங் களோடு இணைத்து தனிப்பாடங்களாகத் தரல்.
(7) தனது மாணவ பரம்பரையினரைச் சைவ சித்தாந்த நெறியாளராக வளர்த்தெடுத்துப்
புதிய பரம்பரையை உருவாக்குதல்.
இவற்றைத் தனித்து நோக்கியோ ஒன்றிணைத்து நோக்கியோ நாவலரவர்களின் சைவசித்தாந்த நோக்கினையும் முயற்சியினை யும் மதிப்பிடலாம். மேற்கூறிய பகுப்புக்களின் பொதுவான அம்சங்களை நோக்கின்
(1) பிரசங்கம், புராணபடனம் வாயிலாக சைவசித்தாந்தக் கருத்துக்களை வெளிப்படுத்துதல்.
இச்சைவ சித்தாந்த முயற்சியினைப் பின்வரும் வகையில் பகுத்து நோக்கலாம்.
O7

Page 14
(அ) பிரசங்கம் (ஆ) புராணபடனம் (அ) பிரசங்கம்
நாவலரவர்கள் ஆற்றிய பிரசங்கப் போக்கு இரண்டு வகையில் அமைந்திருந்தது. (1) சாதனை களையும் அதனோடு இயைந்த ஒழுகலாறுகளை யும் பிரசங்கப் பொருளாக எடுத்து விளக்கல். (2) சைவ சித்தாந்தக் கோட்பாடுகளைப் பிரசங்கப் பொருளாக எடுத்துவிளக்கல். நாவலரவர்கள் பிரசங்கித்த கடவுள் வாழ்த்து உருத்திராக்ஷதாரணம், சிவதீசைஷ, சிவபக்தி என்பன சாதனையின் பாற்பட்டதாகும். மகளிரொழுக்கம், இகபர சிலாக்கியங்கள், தருமம், செய்ந்நன்றி அறிதல், பிஷையிடுதல், பசுக்காத்தல், கொல்லாமை, பேதமை, வியபிசாரம், கள்ளுண்ணல், சிவத்திரவியங்களைக் கவர்தல் முதலானவை சித்தாந்தம் சார்ந்த படித்திறன்க ளாகும்.
நாவலரவர்கள் தமிழ் நாட்டிலும் ஈழநாட்டிலும் ஆலயங்களிலும் மடாலயங்களிலும் பொதுவிடங்களிலும் பிரசங்கம் செய்த பொழுதும் ஆலயங்களிலும் மடாலயங்களிலும் செய்த பிரசங்கங்கள் சைவசித்தாந்தம் சார்ந்தனவாகவே பெரிதும் அமைந்திருந்தன. மதுரையாதீனத்தில் சொக்கலிங்கப் பெருமானின் பெருமையும் சைவ சித்தாந்த உயர்வும் பற்றிப் பேசியமையும் திருவண்ணாமலை ஆதீனத்தில் சைவசித்தாந்தத்தினது உயர்வும் அதன் வழி ஒழுகுவோர் எய்தும் பயனும் பற்றிப் பேசியமை யும் வாவடுதுறை ஆதீனத்தில் சிவாகமங் :: :ಸ್ಥೆ స్ట్ பசு, பாசங்கள் பற்றிப் பிரசங்கித்தமையும் நெடுங்குடி ஆலயத்தில் சிவபெருமானுடைய மகிமையும் சிவசின்னங்களின் வரலாறு பற்றிப் பிரசங்கித் தமையும்" தொண்டை நாட்டுப் பதிபுண்ணிய பரிபாலன சபையில் “சிவபுண்ணியப் பெருமை” பற்றி பிரசங்கித்தமையும்" வரலாற்று ஆவணங்களாக அமைந்துள்ளன. இவற்றிலே தொண்டை நாட்டுப் பதிபுண்ணிய பரிபாலன சபையில் (1867) பிரசங்கித்த “சிவபுண்ணியத்தின் பெருமை" பற்றிய பிரசங்கமே முழுமையான வடிவிலே கிடைக் கப் பெற்றுள்ளது. இப்பிரசங்கம் நாவலருக்கிருந்த சைவசித்தாந்தப் புலமையை நன்கு வெளிப்படுத்தி நிற்கின்றது. அது படிப்போரை அதன்பால் ஈர்க்கும் வல்லமை கொண்டது. கருத்தும் தத்துவப் பொருளும் மிக்கது.
"சைவ சமயத்தை அடைந்தவர் சிவபெருமானுடைய திருவடியைச் சேர்த்தற் குரிய மார்க்கம் சரியை, கிரியை, யோகம், ஞானம் என நான்கு வகைப்படும். அவைக
08

ளுள்ளே சரியையாவது புறத்தொழிலினாலே உருவத் திருமேனியை நோக்கிச் செய்யும் வழிபாடு. கிரியையாவது அகத்தொழிலாலும் புறத்தொழிலாலும் இறைவனின் அருஉருவத் திருமேனியை நோக்கிச் செய்யும் வழிபாடு யோகமாவது அகத்தொழிலினாலே அருவத் திருமேனியை நோக்கிச் செய்யும் வழிபாடு ஞானமாவ புறத்தொழில் அகத்தொழில் என்னும் இரண்டுமில்லாமல் அறிவுத் தொழின் மாத்திரத்தினாலே அம் மூன்று திருமேனிக்கும்
மேலாய் அகண்டாகார நித்தவியாபக சச்சிதானந்தப் பிழம்பாய் நிறைந்து நிற்கின்ற சிவத்தினிடத்தே செய்யும் வழிபாடு இந்த நான்கு மார்க கத தரில ழுகுவோர் களே மெய்யடியார்கள். வ்வடியார் திருமேனி அசைவுடைய தாதலாற் சங்கமம் எனப்படும்"
என்பது அப்பிரசங்கத்தின் ஒரு பகுதியாகும்." இங்கு நாவலரவர்கள் சைவசித்தாந்த மார்க்கங்கள் பற்றி உறுதியுடனும் மிகுந்த தெளிவுடன் கூறியிருப்பது அவரது ஆற்றலைப் புலப்படுத்தி நிற்கும்.
(ஆ) புராணபடனம்
புராணபடனம் என்பது சந்நிதி விரோதமின்றி, ஒருவர் வாசிக்க மற்றொருவர் பயன் சொல்கின்ற முறை," வடக்கே இறைசந்நிதியில் நடப்பதில்லை, அங்கு வித்தியா மண்டபம் புறம்பாய் உண்டு. இங்கு அவ்வாறு ல்லை, ஆயினும் சிறிய கோயில்களிலும் இறை స్ట్కో சந்நிதி விரோதம் நிகழாத வகையில் புராணபடனம் நிகழ்ந்து வருகின்றது." இம்முறை எமது நாட்டில் எவ்வாறு தோன்றிற்று என்பது ஆய்வுக்கு உரியதாக இருந்தாலும் அது ஈழநாட்டிலே தான் வளர்ந்தோங்கி வருகின்றது. கந்த புராணம், திருவாதவூரடிகள் புராணம், திருச்செந்தூர் புராணம் முதலான புராணங்கள் இங்கு புராணபடனஞ் செய்யும் சிறப்பான புராணங்களாகும்.
இப்புராணபடனம் வாசித்துப் பயன் சொல்லுதல் என்பன ஒரு வித்துவப் பாங்குக்குரிய செயற்பாடாகும். இதற்கு இசைஞானம், இலக்கிய இலக்கணப்புலமை, சைவசித்தாந்த அறிவு, வைதீக மதங்களின் கோட்பாடுகள் பற்றிய அறிவு முதலானவை இன்றியமையாதனவாகும். நாவலரவர்கள் இம்முறையை வளர்த்துச் செல்வதற்கு முன்பாக இது சில ஆலயங்களிலும் பிரபுக்கள்

Page 15
இல்லங்களிலுமேயே நடைபெற்று வந்தது. நாவலரவர்கள் இதனை சைவம், சைவசித்தாந்தம் பற்றிய அறிவை வளர்ப்பதற்கான பிரசாரக் கருவியாக மாற்றினார். நல்லூர், வண்ணை சிவன் கோயில் முதலான ஆலயங்கள் எங்கிலும் தமது மாணவ குழாத்துடன் இப்படன முறையைச் செய்து வந்தார். மேற்கூறிய புராணங்கள் ஒரு காவிய ரசனைக்குரிய இலக்கியங்களாக அமையவில்லை. அவை புறத்தோற்றத்தில் இலக்கியமாகவும் அகத்தோற்றத்தில் சித்தாந்தச் செழும் புதையல்களாகவும் அமைவன. எனவே புராணம் புறத்தோற்றத்தில் சைவமாகவும் அகத் தோற்றத்தில் சைவசித்தாந்தமாகவும் அமைந் திருக்கும். பிறிதொரு வகையில் கூறுவதானால் புராண படனம் என்பது இரசனைக்குரியதாக அமையாது சைவசித்தாந்தக் கோட்பாடுகளை விளக்கிச் செல்லும் சாதனமாக அமைகின்றது எனலாம். நாவலரவர்கள் புராணபடன முறை யினை அவ்வாறே கருதினார். தமிழ்ப் புராண அமைப்பு முறைகள் பெரிதும் அவ்வாறே அமைந்திருப்பது கவனத்துக்குரியதொன்றாகும்.
நாவலரவர்கள் ஆண்டுதோறும் புராண படனம் செய்து வந்தபொழுதும் அவரது உரைகள் பதிவுசெய்யப்படவில்லை. ஆயினும் ஆங்காங்கே சில பதிவுகள் கிடைக்கத்தான் செய்கின்றன. அவற்றிலொன்று நல்லூர் கந்தசாமி கோவிலிலே தனது மருகர் வித்துசிரோமணி ந. ச. பொன்னம்பலபிள்ளை வாசிக்க நாவலரவர்கள் உரை சொல்லிய வரலாற்று நிகழ்ச்சியாகும்.
அப்போது படனத்துக்கு எடுத்துக் கொண்ட பாடல்"
"வேதக் காட்சிக்கும் உபநிடத்துச்சியில் விரித்த போதக் காட்சிக்குங் காணலன் புதியரிற் புதியண் மூதக் கார்க்கு மூதக்கவன் முடிவிற்கு முடிவாய் ஆதிக் காதியாய் உயிர்க்குயிராப் நின்ற அமலன்”
(கந்தபுராணம் - சூரனமைச்சியற் படலம்)
இப்பாடல் சுத்தாத்துவிதத்தன்மையை விளக்கும் பாடல். சிவஞானபேதம் கூறும் அவனே தானே யாய்' என்னும் மகாவாக்கியத் தொடரை நினைவுகூருவதாகும். இப்பாடலுக்கு நாவலரவர்கள் உரை விரித்த முறைமையினைப் பண்டிதமணி சி. க. அவர்கள்
பதவுரை பொழிப்புரை நடந்ததன் மேல் விரிவுரை நடந்தது. வேதக்காட்சி

சாத்திரஞானம். அது பாசஞானம். உபநிடத்துச்சியில் விரித்த போதக் காட்சி பசு ஞானம். பசுவாகிய ஆன்மா பாசத்தை விலக்கித் தன்னைப் பிரமமயமாகக் காணும் ஞானம் அந்த ஞானம். நான் பிரமம்' என்னும் ஞானம் அது பாச, பசு ஞானங்கள் இரண்டுக்கும் இறைவன் எட்டாதவன், அவனருளாலே தான் அவனை எட்டுதல் கூடும். அவனருள் பதிஞானம்
"மூவகை ஞானத்தின் இயல்பையும், நேற்றைப் பாலனின் பிரபாவத்தையும் திருமுறைகள் சித்தாந்த சாத்திரங்கள், உபநிடதங்கள், சிவாகமங்கள் என்னும் அதிபிரபல பிரமாணங்கள் வாயிலாகவும், அநுபவ அநுபூதிமான்கள் வாயிலாகவும் விரிவுரை ஊற்றெடுத்துப் பெருகியது. நீண்டகாலதத்துவம் அணுப் பிரமாண மாய்ச் சுருங்கிக் கழிந்தது"
எனக் குறிப்பிடுவார்." இக்கூற்றின் மூலம் நாவலரவர்கள் பொது மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் சைவசித்தாந்த கோட்பாடு களையும், அதற்குப் பிரமாணமாக அமையும் நூல்களான திருமுறைகள், சிவாகமங்கள், உபநிடதங்கள் முதலான ஆப்தவாக்கிய நூல்களையும் இவற்றின் ஊடாகத் தெரியும் அநுமான உண்மைகளையும் வெளிப்படுத்தி அவர்களுக்குச் சைவசித்தாந்த உண்மைகளை அறியச் செய்ததோடு தனது புலமையின் ஆழத்தையும் அகலத்தையும் ஞானத்தையும் காட்டவும் தவறவில்லை. அதனாற்போலும் பண்டிதமணி சி. க. அவர்கள் ஈழநாட்டில் "புராண படனம் தனித்தொரு முறையில் யெளவன தசையை அடைந்து உச்ச நிலையில் விளக்க முறைச் செய்தவர் ஆறுமுகநாவலர்” எனச் சிறப்பித்துக் குறிப்பிட்டார்.
(2) சைவசித்தாந்தக் கருத்துக்களை உணர்த்தும் வகையில் நூல்களை எழுதி வெளியிடல்.
இவ்வகையில் நாவலரவர்கள் எழுதிய சைவ வினாவிடை, முதலாம் புத்தகம், சைவ வினாவிடை இரண்டாம் புத்தகம், பெரிய புராண (1884) சூசனம் முதலானவற்றைக் குறிப்பிடலாம். முதலாம் சைவ வினாவிடை நுாற்றி முப்பத்தைந்து வினாக்களையும் தோத்திரத் திரட்டினையும் கொண்டது. நூற்றி முப்பத்தைந்து வினர்க்களும் ஏழு இயல்களாகப் பிரிக்கப்பட்டு
09

Page 16
உள்ளன. கடவுள் இயல், புண்ணிய பாவ இயல், வீயூதி இயல், சிவமூல மந்திர இயல், நித்திய கரும இயல், சிவாலய தரிசன இயல், தமிழ் வேத இயல் என்பன இவ்வியல்களாகும். இவற்றுள் முதலாம் இயல் தவிர்ந்த ஏனைய இயல்கள் இயமம், நியமம் ஆகியவற்றைச் சார்ந்த மார்க்க நெறிகளை புலப்படுத்துவன. கடவுள் இயலில் இறைவனின் பரத்துவத்தை மிகவும் எளிமையான முறையிலே சிறுவர்களின் உளப்பாங்கு அறிந்து அறிமுகப்படுத்தி வைப்பதை அவதானிக்கலாம்.
சைவ வினாவிடை இரண்டாம் புத்தகம் பதினாறு இயல்களையும் தோத்திரப்பாடல் களையும் கொண்டது. இவற்றுள் பதியயில், பசுவியல், பாசவியல் ஆகிய மூன்றும் மூன்று உண்மைப் பொருள்களையும் ஏனையவை முழுமுதற் பொருட்களை அடைவதற்கான சாதனைகளைக் கூறுவதாகவும் அமைகின்றன. வேதாகமவியல், சைவபோதவியல், விபூதி யியல், உருத்திராக்ஷ வியல், சிவலிங்கவியல், நித்தியகரும வியல், சிவாலய கைங்கரிய வியல் சிவாலய தரிசனவியல் குருசங்கம சேவையியல், மகேசுரபூசையியல், விரதவியல், அன்பியல் என்பன ஏனைய இயல்களாகும்.
இறைவனின் பரத்துவம் பற்றி மிகவும் சுருக்கமாகக் கூறி நாவலரவர்கள் இந்நூல் பொருளின் தன்மைக்கேற்பவும் மாணவரின் உளப்பாங்கிற்கேற்பவும் படிமுறையாக அதனை விளக்கிச் செல்வார். உதாரணமாகக் கூறின்"
உலகத்துக்குக் கருத்தா யாவர்?
சிவபெருமான்.
சிவபெருமான் எப்படிப்பட்டவர்?
நித்தியர் (என்றும் உள்ளவர்)
சருவவியாபகர் (எங்கும் நிறைந்தவர்) அநாதிமலமுத்தர் (இயல்பாகவே பாசங் களில் நின்று நீங்கியவர்) சருவஞ்ஞர் (எல்லாம் அறிபவர்) சருவகர்த்தா (எல்லாம் செய்பவர்) நித்தியானந்தர் (என்றும் மகிழ்ச்சி உடையவர்) சுவதந்திரர் (தம்வயம் உடையவர்) சிவபெரமான் செய்யும் ஐந்தொழில்கள் யாவை?
படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்துமாம்.
10

இவ்வைந்தொழிலுஞ் சிவபெருமான்
செய்வது தம்பொருட்டோ பிறர் பொருட்டோ?
தம்பொருட்டன்று; ஆன்மாக்களாகிய பிறர்
பொருட்டே.
இவ்விடய்ங்கள் இறைவனின் தடத்த இலட்சணத்தை விளக்குவனவாகும்.
மேலும் சிறுவர்கள் மத்தியில் சைவ சித்தாந்தக் கருத்தினைப் புகட்ட வந்த நாவலரவர்கள் பொருள் உணர்ந்து தெளிவும் செறிவும் நுட்பமும் வன்மையும் மிக்க நடையைக் கையாண்டு பொருள் உரைப்பார். எடுத்துக் காட்டாகக் கூறின்"
படைத்தலாவது யாது?
ஆன்மாக்களுக்கு தனு, கரண, புவன, போகங்களை முதற் காரணத்தினின்றும்
தோற்றுவித்தல்,
காத்தலாவது யாது?
தோற்றுவிக்கப்பட்ட தனு, கரண, புவன, போகங்களை நிறுத்தல்.
அழித்தலாவது யாது? தனு, கரண, புவன, போகங்களை முதற் காரணத்தில் ஒடுக்கல். (மாயையில் ஒடுக்கல்)
மறைத்தலாவது யாது? ஆன்மாக்களை இருவினைப் பயன்களாகிய போக்கியப் பொருள்களில் ஆழ்த்துதல்.
அருளலாவது யாது? ஆன்மாக்களுக்குப் பாசத்தை நீக்கிச் சிவத்தை விளக்குதல்.
உண்மையில் நம்மில் பலர் இந்த இலக்கணத்தோடு அல்லது வரையறையோடு
இவற்றை உணர்ந்து கொள்வதில்லை என்பது வெளிப்படை.
உலகின் தோற்றத்துக்குரிய காரணத்தை நாவலர் பின்வரும் வினா விடை மூலம் விளக்குவார்.21
ஒரு காரியத்தக்குக் காரணம் எத்தனை?
முதற்காரணம், துணைக்காரணம், நிமித்த காரணம் என மூன்றாம்.

Page 17
குடமாகிய காரியத்துக்கு முதற் காரணம் மண். துணைக் காரணம் திரிகை. நிமித்தகாரணம் குயவன்.
தனு, கரண, புவன, போகம் எனப்படும் பிரபஞ்சமாகிய காரியத்துக்கு முதற்காரணம் துணைக் காரணம் நிமித்த காரணம் யாவை?
முதற்காரணம் சுத்தமாயை, அசுத்தமாயை, பிரகிருதி என மூன்று. துணைக்காரணம் சிவ சத்தி நிமித்த காரணம் சிவபெருமான்.
நாவலரவர்கள் இங்கு மறைமுகமாக சத்கரிய வாதத்தையும் "நிமித்தகாரணமாகிய முதல்வன் உலகிற்கு முதற்காரணனல்லனா யினும் முதற்காரணமாகிய மாயைக்கு ஆதார மாய் நிற்றலின் உலகம் ஆண்டொடுங்கி ஆண்டு நின்று தோன்றும்” என்னும் சைவசித்தாந்த உண்மையையும் கச்சிதமாக உணர்த்துவர்.”
சிவசக்தி பற்றிக் குறிப்பிடும் பொழுது சிவசத்தியாவது யாது? என்னும் வினாவை எழுப்பி "அக்கினியோடு சூடு போலச் சிவத்தோடு பிரிப்பின்றி உள்ளதாகிய வல்லமை” என விடை இறுப்பார்’ சிற்சத்தியே சைவ சித்தாந்தத்தில் வினைகளைக் கூட்டுவதற்குக் காரணமாக அமைவது. சிவஞான போதம் இதனை விளக்குகையில் "ஆணையென்னும் பரியாயப் பெயருடைய தனது சிற்சத்தியான் வரும் இருவினைகளான் அவை இறத்தல் பிறத்தல்களைப் புரியும் வண்ணம் அவ் வாணையிற் பிறப்பின்றி நிற்பான்” எனக் குறிப்பிடவது ஒப்புநோக்கத்தக்கதாகும்.
பசுவியல் இருபத்து மூன்று (23) வினாக்களை உடையது. ஆன்மாவின் இயல்பு, பிறப்பு, வினைகள் முத்தி பற்றிய சிந்தனை, நால்வகை மார்க்கம் ஆகியவற்றை அடிப்படை யாகக் கொண்டவை. ஆன்மாவின் இயல்பை விளக்கமுறச் செய்ய நாவலரவர்கள் பின்வரும் வினாவினை வினாவி விடையப்பார். வினாவும் வினாவிடையும் வருமாறு”
வினா : ஆன்மாக்களாவார் யாவர்?
விடை :
நித்தியமாய் வியாபகமாய், சேதனமாய்ப் பாசத்தையுடையோராய்ச், சார்ந்ததன் வண்ண மாய் ச் சரீரந்தோறும் வெவ்வேறாய், வினைகளைச் செய்து வினைப் பயன்களை
அநுபவிப்போராய்ச் சிற்றறிவுஞ் சிறுதொழிலும்

உடையோராய்த், தமக்கு ஒரு தலைவனை உடையவராய் இருப்பர்.
இவ்விடையின் மூலமாக நாவலரவர்கள் ஆன்மாவின் இலக்கணம் இயல்பு, வினை, பயன் முதலான விடயங்களை அடக்கிச் சொல்லி யுள்ளார்.
பாசவியல் பத்து வினாக்களை உள்ளடக் கியது. அவ்வினாக்கள் மூலம் ஆவணம், கன்மம், மாயை மாயேயம், திரோதாயி என்னும் ஐந்து பாசங்கள் பற்றியும் உயிர் அவற்றினின்று விடுபடும் நிலை பற்றியும் மிகவும் இரத்தினச் சுருக்கமாக எடுத்துக் கூறியுள்ளார். எடுத்துக் காட்டாக"
வினா - ஆணவமாவது யாது? விடை :
செம்பிற் களிம்புபோல ஆன்மாக்களின் அநாதியே உடன் கலந்து நிற்பதாய், ஒன்றேயாய் ஆன்மாக்கள் தோறும் வெவ்வேறாகி அவைகளுடைய அறிவையும் தொழிலையும் மறைத்து நின்றுதத்தங்கால வெல்லையிலே நீக்கும் அநேக சக்திளையுடையதாய் சடமாய் இருப்பது
இதில் ஆணவத்தின் இயல்பையும் குணங் களையும் கச்சிதமாகச் சுட்டியுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.
ஆன்மாவின் இலட்சியம் ஆணவமலத்தைப் போக்குவதேயாகும் ஆன்மா மலபந்தத்திற்குள் பட்டிருக்கும் வரை ஆன்மா இறத்தல் பிறத்தல் செய்து கொண்டே இருக்கும். இவ்விதத்தில் பிறத்தல் இல்லாதொழித்தற்கு மாயாமலத்தைப் பெருக்கி சிற்சத்தியை அதிட்டித்து முத்திப்ே பற்றை வழங்குவார் இறைவன் என்பது சைவ சித்தாந்த மரபு அம்மரபினை நாவலரவர்கள் பின்வரும் வினாவினை எழுப்பி விடையளிப் பதன் மூலம் சிறப்பாக விளக்குவார்.27
வினா
தனு கர ண முதலியவைகளும் மலமன்றோறா மலமென்பது அழுக்கறோ? ஆணவமாகிய அழுக்கை மாயாமலமாகிய அழுக்கினாலே எப்படிப் போக்கலாம்.
விடை
வண்ணான் கோடிப்புடைவையிலே சாணியை யும் உவர் மண்ணையும் பிசறி, மிகக்
11

Page 18
கறுத்தது என்னும்படி செய்து, முன்னையதாகிய அழுக்கோடு பின்னையதாகிய அழுக்கையும் போக்கி, அப்புடைவையை மிக வெண்மையுடைய தாகச் செய்வன். அது போலவே சிவபெருமான் ஆன்மாவிடத்தே மாயாமலத்தாக கூட்டி அநாதி பந்தமாகிய ஆணவமலத்தோடு ஆதிபந்தமாகிய மாயாமலத்தைப் போக்கி, அவ்வான்மாவைச் சிவமாந்தன்மைப் பெருவாழ்வுடையதாகச் செய்வார்”
ஏனைய இயல்புகள் யாவும் சாதனைஇயுல் சார்ந்தவையாகும்.
பொதுவாக நாவலரவர்கள் எழுதிய இவ்விரு வினா விடைகளும் சைவசமயம் சைவ சித்தாந்தம் ஆகியவற்றைத் தெரிந்து கொள்ள முற்படும் ஒருவருக்கு இவையோர் களஞ்சியமாக அமைகின்றது எனலாம். இதனாலேயேதான் இவ்விரு நூல்களையும் அமிர்தசனாதன சாத்திரம் எனப் போற்றினர் பெரியோர்’
பெரியபுராண சூசனம்:-
நாவலரவர்கள் பெரிய புராணத்துக்கோர் சூசனம் எழுதி அட்சய D வெளியிட்டார் என்பர். ந. சதாசிவப்பிள்ளை 1884ஆம் ஆண்டு திருத் தொண்டர் புராணப் பதிப்புடன் இச் சூசனத்தையும் பதிப்பித்து வெளிப்படுத்தியுள்ளார். பெரியபுராண சூசனம் என்பது பெரிய புராணத்தின் உட்பொருளாய் அமைந்து காணப்படும் சித்தாந்த உண்மைகளைப் பொதுமக்கள் உணரும் வண்ணம் எளிமையான முறையில் வெளிப் படுத்த எழுந்த நூல் எனலாம். நாவலரவர்கள் இந்நூலின் அமைப்பு முறையினை பெரிய புராணப் பகுப்பையோ அமைப்பு முறையினையோ யொட்டி அமைக்காது நாயன்மார் ஒவ்வொரு வரையும் ஒரு சூசனமாகக் கொண்டு அவர்களின் சிவத்தொண்டின் மூலம் பெறப்படும் சித்தாந்தக் கோட்பாடுகளைக் கருப்பொருளாகக் கொண்டு விளக்கிச் செல்வார். இந்நூலில் இடம்பெறும் "உபோற்காதம்” என்னும் பகுதி அவர் இந்நூலினை எழுதுவதற்கான நோக்கத்தின் வாயிலாக அமைகின்றது.
(1) திருத்தொண்டர் புராணத்தின் உட்பொருள் சைவசித்தாந்தக் கோட்பாடுகளை உள்ளடக்கி இருத்தல் என்பதை நிறுவுதல்.
(2) சைவசித்தாந்தக் கருத்துக்கள் உபநிடதக் கருத்துக்களோடு இயையுடையன என்பதை எடுத்துக்காட்டுதல்.
12

(3) சைவசித்தாந்த முதன் நூல்களான திருமுறைகள். அருட்பாக்கள் மக்கள் அதனால் சமய வாழ்வியலோடு போற்றி வருவதை எடுத்துக் காட்டுதல்.
(4) பிரஞ்சையில்லாத சில பிராமணர்கள் இப்பெரிய புராணத்துக்கு அப்பிராமணியம் பேச முற்படுதலைக் கண்டித்தல்.
இந்நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டே இந்நூல் எழுதப்பட்டதாகத் தெரிகின்றது. ஆயினும் இந்நூலில் முதல் மூன்றினை நன்கு விளக்குவதன் மூலம் திருத்தொண்டர்களின் அநுபூதி நெறியினையும் சாதனைகளையும் துல்லியமாக விளக்கமாக காட்டியுள்ளார். அத்தகைய ஆத்மீக சாதனையில் படிப்போரை ஈடுபடுத்தும் வகையில் இச்சூசனத்தை நடத்திச் செல்வார்.
சைவ சமயத்தில் பிறந்து நாற்பாதங்களை அநுட்டித்தே முத்தி பெற வேண்டும் என்றும், வள்விகளால் கிடைக்கும் இன்பம் முன்பசிக்கு உண்டு பின்னும் பசிப்பவனுக்கு அவ்வுண்டியால் வரும் இன்பத்தைப் போல் அமையும் என்றும், நாற் பாதங்களால் வரும் இனி பமே பதமுத்தியாகிய அவாந்தரப் பலனைத் தருமென்றும் மார்க்கங்களின் சிறப்பை அழுத்தமாகக் கூறுவதோடு சிவத்தொண்டினை நிந்திக்கும் ஸ்மார்த்தப் பிராமணர்களுக்கும் ஆதிசைவர்களுக்கும் சிவத்தொண்டின் திறனை வெளிப்படுத்துவார் நாவலரவர்கள்”
சிவதர்மம் இரண்டு வகைப்படும். அவை வல்வினை மெல்வினை என்பனவாகும். இவை சாதனைகளின் அடிப்படையில் அமைவன. மெல்வினையாவது, சைவாகமத்திலே சரியை கிரியைகளுக்கு விதித்தவழி ஒழுகும் விதிமார்க்கம். வல்வினையாவது விதிமார்க்கத்தில் வழுவாது நின்று இந்நிலை முதிர்ச்சியினாலே சிவனிடத்தில் எல்லையின்று முறுவளரும் அன்பின் பெருக்கம். உலகநெறி கடந்து ஒழுகும் பத்திமார்க்கம்” என நாவலரவர்கள் இரு தர்மங்களையும் விளக்குவதோடு அமையாது இச்சூசனத்தின் அடிப்படை நோக்கத்தை அடையவும் முயன்றார். வல்வினை மார்க்கத்தில் நின்று இறையருள் பெற முயன்ற மெய்யடியவர்களாக எறிபத்த நாயனார், கண்ணப்ப நாயனார் போன்றவரைக் குறிப்பிடுவார். மெல்வினையின் பயனாக இறையன்பைப் பெற முயன்றோராக மெய்ப் பொருள் நாயனார் இளையான்குடிமாற நாயனார் ஏனாதிநாத நாயனார் போன்றோரைக்
குறிப்பிடுவார்.

Page 19
சீவன்முத்தர் தத்துவம் சைவசித்தாந்தக் கோட்பாட்டில் முக்கிய உயர்வுடையது. இதனைப் புலப்டுத்த முடியாது. இதனை அனுபூதியால் உணர வேண்டும் அல்லது உணர்ந்தவர்களால் புலப்படுத்தப்பட வேண்டும். நாவலரவர்களும் இத்தத்துவம் பற்றிக் குறிப்பிடும் பொழுது" "சீவன் முத்தராவார் அளத்திபட்ட புற்போலச் சிவப்பிரகாசத்தினாலே போக சாதனமா யுள்ள உட்கரணங்களும் புறக்கரணங்களும் ஆகிய பசுக் கரணங்கள் எல்லாம் சிவகரணமாய் நிகழப்பெற்றுச் சகல கருவிகளோடும் கூடியிருக்கும் சாக்கிர வத்தையிலே நிருமல துரியாதத்தைப் பொருத்தினோர்களாய் பூமியின் கண்ணுள்ள ஆன்மாக்களை ஈடேற்றும் பொருட்டுச் சஞ்சரிக்கும் இயல்புடையோ ராம்.”
என வரைவிலக்கணப்படுத்துவார். அத்தோடு அமையாது இக்கோட்பாட்டினை திருநாவுக்கரச நாயனாரோடு தொடர்பு படுத்தி விளக்கிக் காட்டுவார். திருநாவுக்கரசுநாயனாரை எல்லா சித்தாந்த தத்துவமும் தம்முள் கொண்டவராக சைவசித்தாந்த வடிவமாக இச் சூசனத்தின் மூலம் காட்ட முற்பட்டுள்ளார். அதில் வெற்றியும் பெற்றுள்ளார் என்றே கூறுதல் வேண்டும்.
(3) சாதனைகளையும் தத்துவங்களையும் வெளிப்படுத்தும் நூல்களுக்கு உரையெழுதியும் பதிப்பித்தும் வெளியிடல்.
நாவலரவர்களால், வெளியிடப்பட்ட உரை நூல்களை இரண்டு வகையினுள் அடக்கலாம்.
(1) உரை நூல்கள்
(2) வசன நூல்கள்
நாவலரவர்கள் தாம் உரை எழுதுவதற்கு தேர்ந்தெடுத்த உரை நூல்களும் சாதனை நெறிகளையும் பயன் நெறிகளையும் விளக்கும் நூல்களாகவே அமைந்துள்ளன. வாக்குண்டாம், நல்வழி, நன்நெறி, கொன்றைவேந்தன் முதலானவை சைவசித்தாந்தம் கூறும் உலகியல் நெறியை வழிப்படுத்துவன. கொலை மறுத்தல் உரை, செளந்தரி, லகரி உரை, உபநிடத உரை என்னும் உரை நூல்களை நாவலரவர்கள் பதிப்பித்தார். இவற்றுள் உபநிடதவுரை சித்தாந்தக் கருத்துக்களை எடுத்துக் கூறுவதோடு சைவசித்தாந்த நெறியின் பயன் இயலைச்

சுருக்கமாக சிறப்பாக விளக்குவது.
நாவலரவர்கள் கந்தபுராணம் (அசுரகாண்டம் வரை - 1861) பெரியபுராண வசனம் (1852) திருவிளையாடற் புராணம் (1910) சிதம்பரமான்மியம் (1895) சிவாலயதரிசனவிதி (1861) முதலான நூல்களை வசனநடையில் எழுதியுள்ளார். நாவலரவர்களது வசனநடை முயற்சி சைவசித்தாந்தம் காட்டும் வாழ்வியல் நோக்கை நோக்கி சைவர்களை நெறிப்படுத்தும் பொருட்டு நாவலரவர்கள் மேற் கொண்ட சிறப்பானதொரு பணியாகும். இதன்மூலம் சைவசித்தாந்த வரலாற்றுப் போக்கில் நாவலரவர்களை புதிய திருப்புனையொன்றினை ஆரம்பித்து வைத்தார். இந்நூலின் முகவுரையில் நாவலரவர்கள்."
“பெருஞ்சிறப்பினதாகிய அந்நூலானது பத்திய ரூபமாய் இருத்தலால் நிகண்டுகற்று இலக்கியவாராய்ச்சி செய்து இலக்கண நூல்களிலே பயின்ற வித்துவான்களுக்கே யன்றி மற்றவர்களுக்குச் சிறிதும் பயன்படாமலும் அவ்வித்துவான்களுக்கும் நோய் கவலை முதலிய ஏதுக்களால் விவேகங்கினராக் காலத்துப் பயன் படாமையானும் நிறைந்த கல்வியுடைய வித்துவான்களும் குறைந்த கல்வியுடைய பிறரும் ஆகிய யாவரும் எக்காலத்தும் எளிதில் வாசித்து உணரும் பொருட்டும், கல்வி இல்லாத ஆடவர்களும் பெண்களும் பிறரைக் கொண்டு வாசிப்பித்து உணரும் பொருட்டும், நாயினுங் கடையனாகிய என்னை ஒரு பொருளாகக் கருதி ஆட்கொண்டருளிய கிருபா சமுத்திரமாகிய ரீமத் குருமூர்த்தியுடைய திருவடிகளைச் சிந்தித்து வணங்கி அவரவது திருவருளினாலே, அதனைப் பெரும்பான்மையும் இயற் சொற்களும் இறுபான்மை அவறிய மாகிய திரிசொற்கள் வடசொற்கள் பிரயோகிக்கப் படும் கத்தியரூபமாகச் செய்து வாசிப்பவர் களை எழுதில் பொருள் கொள்ளும்படி சிறுபான்மையும் சந்தி விகாரமின்றி, அச்சிற் பதிப்பித்தேன்.
என்று குறிப்பிடுவது சைவசித்தாந்தம் காட்டும் வாழ்க்கை சாதனை நெறிகளி ளொன்றாக அமைந்த சமய வாழ்க்கைப் படிநிலைக்கு மக்களை வழிபடுத்தும் திறனை எடுத்துக்காட்டும்.
மற்றும் நாவலரவர்கள் எழுதிய சிவாலய தரிசனவிதி, அநுட்டான விதி (1866) சிவபூசாவிதி,
13

Page 20
குருவாக்கியம் முதலியன சாதனைநெறி சார்ந்தவையாகும். அருட்பாக பதினொராம் திருமுறை (1869) அருணகிரிநாதர் திருவகுப்பு அருணகிரிநாதர் அந்தாதி அந்தாதி (1867), கந்தபுராணம் (1869) கந்தரலங்காரம், கந்தர் அநுபூதி, சிதம்பர மும்மணிக்கோவை (186) சிவாகவம், விநாயகர் கவசம், சக்தி கவசம் (1868) சேதுபுராணம் (1866) நால்வர் நன்மணிமாலை (பெரியநாயகி திருவிருத்தம் பெரியநாயகி கலித்துறை பிக்ஷட்ன நவமணிமாலை (1873) பட்டனத்துப் பிள்ளையார் திருவருட் பாத்திரட்டு (1873) முதலான நூல்களை நாவலரவர்கள் சைவம், சைவசித்தாந்த வளர்ச்சி யின் பொருட்டுப் பதிப்பித்துள்ளார். இவை அனைத்தும் தோத்திரங்களாகும். இவை சைவ சித்தாந்த வளர்ச்சிக்குப் போதகமாக உள்ளவை. இந்நூல்களில் நாவலரவர்கள் பதிப்பித்த அருட்பா தெரிந்தெடுக்கப்பட்ட திருமுறைகளின் தொகுப்பாக அமைவது. பதினொராம் திருமுறை திருவாலவாயுடையார் முதல் நம்பியாண்டார் நம்பி ஈறாக பன்னிருவர் பாடிய பிரபந்தங்களின் தொகுப்பாகும்.
நாவலரவர்கள் சைவத்தின் வழி சைவ சித்தாந்தத்தின் அநுபூதியைப் பெறவேண்டுமானால் அருட்பாக்களையே மாத்திரம் ஒதப்படல் வேண்டும் என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டிருந்தார். அருட்பாக்களென அவர் கொண்டவை தேவாரம் திருவாசகமும் ஏனைய திருமுறைகளையுமேயாகும். இவ்வருட்பாக்கள் பற்றிக் குறிப்பிடும் பொழுது "தேவாரம் ருவாசகம் முதலியவை பசுகரண நீங்கிச் சிவகரணம் பெற்ற நாயன்மார்களாலே அளிச் செய்யப்பட்டன வென்றும் இவைகளே சிவாலய நித்திய நைமித்தியங்களினும் சந்தியாவந்தனம் சிவபூசை முதலியவைகளிலும் ஓதத்தகுந்தன வென்றும் இவைகளே வேதத்தினும் பார்க்கத் தமக்கு அதிக பிரீதியுள்ளவைகளென்றும் எமது பதாவாகிய சிவபெருமான் தமது அருட்சத்தியும் நமது உலகமாதாவுமாகிய உமாதேவியார் கேட்கும்படி திருவாய் மலர்ந்தருளினார் சிவரகயத்தில் கூறப்பட்டிருக்கின்றன என்பர்”
மேற்கூறிய தோத்திரங்களும் புராணங்களும் சாதனைக்கு வழிகாட்டுபவை. சாதனையின் தளம் தோத்திரங்களே எனலாம். நாவலரவர்கள் இக்கருத்துப்பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுவது அவதானிக்கத்தக்கது."
14

சைவர்கள் ஒதி உணர்தற்கு அத்தியாவசிய மாய் இருக்கும் நூல்கள் தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப் பல்லாண்டு, திருத்தொண்டர் புராணம் என்பனவைகளாம். இவைகள், சிவபிரானது திருவருளினாலே பாடப்பட்டமையால், அருட்பாவென்று சொல்லப்படும். இவை களுள் முன்னைய நான்கும் பதி, பசு, பாச மென்னும் திரிபதார்த்தங்களின் இலக்கணத்தை உணர்த்துஞ் சைவ சித்தாந்த சாத்திரத்தின் அனுபவப் பயனாகிய தோத்திரமாய் இருக்கும். பின்னையாகிய திருத்தொண்டர் பெரிய புராணம் சிவாகமங்களில் உணர்த்தப்படும் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கு பாதங்களையும் அநுட்டித்து முத்தி பெற்ற மெய்யடியார்களுடைய அடிமைத் திறத்தை விளக்குவதாகிய சரித்திர ரூபமாய் இருக்கும்.
சாதனை என்பது சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கு மார்க்கங்களாகும் தோத்திரங்களும் சாத்திர நூல்களும் சரியை, கிரியை நெறிகளின் பாற்பட்டவை. தோத்திர நெறி நின்றே ஏனைய நெறிகளை அடைய ஒவ்வொரு சமயியும் முயலவேண்டும். அவ்வடிப்படையிலேதான் நாவலர்கள் திருமுறை களின் பெருமையை சைவ உலகிற்குக் காட்டினார். படிக்கும் தோறும் சமய உணர்வினைத் தூண்டி அதன் மூலம் அந்நெறிக்குள் அவனை இட்டுச் செல்லும் தகைமை சான்று நூல்களையும் அவ்வகையினுள் அடக்கிக் காட்டி அத்தன்மையோடு நூல்களை எழுதியும் பதிப்பித்தும் சைவ சித்தாந்த சாதனை நெறியினை வளர்த்துச் சென்றார்.
(4) சைவசித்தாந்தக் கோட்பாடுகளைப் பிழை யாக விளங்கியும் வேண்டுமென்று கண்டனஞ் செய்வோர்க்கும் எதிராகப் பிரகண்டனஞ் செய்து சைவசித்தாந்த உண்மையை நிறுவுதல்.
இராமலிங்க அடிகளார். வேலு முதலியார் பிறரும் சைவசித்தாந்தக் கோட்பாடுகள் பற்றிப் பிழையாக வியாக்கியானம் செய்ய முயன்ற போது அவற்றைச் சுட்டிக் காட்டுவதும், கிறிஸ்தவ மிஷனரிமார்கள் சைவத்தையும் அதன் கருவியாகிய சைவசித்தாந்தத்தையும் உணர்ந்து கொள்ளாது சைவத்தின் மீதும் சைவ சித்தாந்தத்தின் மீதும் கண்டனம் செய்த பொழுது

Page 21
நாவலரவர்கள் பிரதிகண்டனம் செய்தமையும் சுதேசிகளின் ஆகம விரோதச் செயல்களாகக் கண்டித்து வெளிப்படுத்திய பிரசுரங்களும் இதனுள் அடங்கும் பகுதிகளாகும்.
இராமலிங்க அடிகளார் நாவலரின் சம காலத்தவர். அனுபூதிமான் என் அவர் மாணாக்கர் குழாத்தால் போற்றப்பட்டவர். இன்றும் போற்றப் படுவர். அவர் பாக்கள் திருவருட்பாவென பெயர் கொடுத்து வெளிப்படுத்தப்பட்டுள்ளன. பல நூல்களின் ஆசிரியர். மனுமுறை கண்டவாசகம் (1854) ஒழிவிலொடுக்கும் (1851) தொண்ட மண்டலசதகம் (1855) முதலான நூல்களின் ஆசிரியர். அவர் ஒழிவிலொடுக்கம் என்னும் நூலைப் பதிப்பித்தவர். அதில்
"பிரளயாகலர் மும்மலங்களுள் ஒருமலநீத் தோர்” எனக் குறிப்பிட்டதை நாவலரவர்கள் வெகுவாகக் கண்டித்துள்ளார்.”
"பிரளயாகலராவார் இருமலமுடையராகிய உருத்திரர்களென்பதும், சகலராவார் மும்மலமுடையராகிய பிரமவிட்டுணு முதற் கிருமியீறாக உள்ள உயிர்கள் என்பதும் சாதாரணமாகிய தத்துவக்கட்டளைகள் வாசித்தவர்களுக்கும் தெரியுமே! அதறியாது பிரளயாகலர் மும்மலங்களுள் ஒரு மல நீத்தோர், அவர் பிரமன் முதலானோர் என்று ஒழிவிலொடுக்கவுரைப் புத்தகமுதலிலே பதிப்பித்த இராமலிங்கப்பிள்ளையா ஒதா துணர்ந்தவர்" என நாவலரவர்கள் ஆன்மாக்களின் இயல்பையும் சித்தாந்த உண்மையையும் எடுத்துக்காட்டுவார்.
இராமலிங்க அடிகளாரின் முதல் மாணாக்க ளாருளொருவர் வேலு முதலியார். அவர் திருவாவடு துறையாதீனத்திற்குப் போய் இருந்த பாழுது அங்குள்ள சைவப் பெரியோர் "சிவஞானபோதம் அதிகாரம் - இயல்பாத முதலானவைகளால் எத்துணைப் பகுப்புடையது? முதன் மூன்று சூத்திரங்கள் முறையே திரிபதார்த்தங்களில் எவற்றைச் சொல்கின்றன? விஞ்ஞான கலர் பிரளயாகலர் சகலராவார் யார்? சொல்ல வேண்டும்” என்று விண்ணப்பித்தனர்.” இவ்வானாக்களுகக்கு வேலுமுதலியார்
"சிவஞாபோதம் எட்டுப் பிரிவினையுடையது.
பெயர்யாதில்லை. முதற் சூத்திரம் சங்காரத்தைச் சொல்லிச் சிருட்டிப்பதைச்
சொல்லுமுகத்தாற் பதியுண் டென்று

சொல்லுகின்றது. அது பயனுக்குப் பயனாகக் கொள்ள வேண்டும். இரண்டாஞ் சூத்திரம் பசுவுண்டென்று சொல்கிறது. மூன்றாஞ் சூத்திரம் பாச முண்டென்று சொல்லுகின்றது. விஞ்ஞானகலர் பிருங்கி முதலாயினோர். சிலர் சதாசிவவாதிகளாச் சொல்லுவர். பிரளயாகலர் பிரமன் முதலாயினோர். சிலர் உருத்திரராதியாகச் சொல்வர். இவை மூலாகமபேதம்”
மேற்கண்டவாறு பதிலுரைத்தார்." இப்பதி லினை அப்பெரியோர் பாவச்செய்கை' என கூறி நகைத்தனர் என்பதையும் நாவலரவர்கள் எடுத்துக் காட்டுவதன் மூலம், சைவசித்தாந்தக் கோட்பாடுகளைப் பிழையாக விமர்சிப் போரையும் நகைப்பிற்குள்ளாக்கினார்.
கிறிஸ்தவர்கள் சைவத்தில் காணப்படும் பல வழிபாட்டு முறைகளையும் சிவசின்னங்களையும், சக்திக் கோட்பாடுகளையும், ஆலயக் கிரியை முறைகளையும், மூர்த்தி தத்துவங்களையும் எள்ளிநகையாடிக் கண்டித்து வந்தனர். அதன் பொருட்டு சிறு சிறு பிரசுரங்களையும் நூல்களையும் வெளியிட்டு வந்தனர். அவ் வகையில் நன்கொடை, மும்மூர்த்தி லக்ஷணம், குருட்டு வழி முதலான நூல்களைக் குறிப்பிடலாம்.
மும்மூர்த்தி லக்ஷணம் என்னும் பத்திரிகை யின் மூலம் சிவனின் பரத்துவமும் நற்கொடை என்னும் பத்திரிகை மூலம் முருகக்கடவுளின் பரத்துவமும் விமர்சனத்துக்குள்ளாக்கினர். கந்தசுவாமியிடத்திலே பதிலக்ஷணம் இல்லை யென்பதற்கு பாதிரிமார் காட்டும் நியாயம் வருமாறு:"
“கந்தபுராணத்திற் கூறப்படும் அவருடைய சரித்திரங்களுள் அவர் சரீரங் கொண்டு பிறந்தமையும் தெய்வயானையம்மையை வாகஞ் செய்தமையும், கன்னிகை யாகிய வள்ளியம்மையிடத்திற் சென்று அவளைத் தம்மோடு புணர்தற்குடன் படும்படி பிரார்த்தித்து அவளுடன்படாமை கண்டு, தமது தமையனாராகிய விநாயகக் கடவுளையழைக்க அவர் யானைவடிவங் கொண்டு வந்தமை கண்டு அஞ்சித் தம்மிடத்தே அடைக்கலம் புகுந்த அவளைப் புணர்ந்தமையுமேயாம். இம்மூன்று முடையார் பதியெனப்படுதல் கூடுமோ!”
15

Page 22
சிவனது பரத்துவம் பற்றி விமர்சிக்கும் பொழுதும் "பரமசிவன் பார்வதியைப் புணர்ந்தார் பிரிந்தார்.” ஆதலால் பரமசிவனைப் பதியெனப்படுதல் கூடுமோ” என்றனர். பாதிரிமார்கள் எழுப்பும் இவ்வினாக்களுக்கு நாவலரவர்கள் சுப்பிரபோதம் என்னும் தனது நூலில் பின்வருமாறு பதிலுரைப்பது அவதானிக்கத் தக்கது.
(1) சிவபரத்துவம் - (சிவன் + பார்வதி)
ஆண் பெண் அலி என்னும் மூன்றுமல்லாத அநாதி மலமுத்த பதி யாகிய சிவத்தையே சர்வான்மாக்களையும் தோற்றுவித்தலால் ஆண்பாற்படுத்தப் பிதாவெனவும், சூரியனுக்குக் கிரணம் போல அச்சிவத்துக்கு அபின்னமாயுள்ள சத்தியையே நிமித்தகாரணமாகிய அச்சிவம் அத்தொழிலியற்றுதற்குத் துணைக் காரணமாயிருத்தலால் பெண் ாற்படுத்துமாதா வெனவும், அச்சிவம் அச்சத்தியோடு கூடி உத்தியோகித்துச் சங்கற்பித்தலையே அவ்வான்மாக்களது தோற்றத்துக்குக் காரணத் தொழிலாகை யால், உகந்து புணர்தலெனவும் அச்சங்கற்பம் இல்லாமையையே பிரிதல் எனவும், சொல்லியதென்றறிக.
நாவலரவர்கள் கூறும் மேற்கூறிய கருத்து
ஆழ்ந்த சித்தாந்தப் புலமையோடு கூடியதாகும்"
வஞான போத உரையாசிரியர்
“உலகம் முழுவதும் ஒடுங்கிய முற்றழிப்புக் காலத்தில் (சருவ சங்கார காலத்தில் இறைவன் யாதொரு தொழிலையும் செய்யாது வாளா இருப்பான் அதுவே அவனது உண்மை நிலை (சொரூப லட்சணம்) இந்நிலையில் அவன் பரசிவம், பரமசிவன், சொரூப சிவன், சுத்தசிவன் என இவ்வாறு சொல்லப்படுவான். இந்நிலையில் அவனது சத்தி பராசத்தி எனப்பெயர் பெற்று நிற்கும். அப்பொழுது மாயை தனது உண்மை நிலையாகிய காரண நிலையில் சத்தி மாத்திரமாய் சூக்குமமாய்
99
நிற்கும்
எனக் குறிப்பிடுவதம் ஒப்பிட்டு நோக்கதக்கது"
இதனையே சிவஞானபோதம் “போக்கு வரவு புரிய வாணையின் நீக்கிமின்றி நிற்குமன்றே" (சி போ. சூ 2) எனக் குறிப்பிடும்.
6

உலக வொடுக்கத்துக்கு முதற்காரணம் - சிவன், துணைக்காரணம் சத்தி - பராசத்தி, நிமித்த காரணம் - உலகம், சங்காரத்தில் இறைவனிடத் தில் ஏனைய சத்திகள் ஒடுங்குதல் புணர்தல் எனவும் மீளத் தோன்றல் - பிரிதல் எனவும் அவாய் நிலை வழி இயைபு காட்டுதல் சித்தாந்த மரபாகும்.
(2) கந்தசுவாமிக் கடவுளின் பரத்துவம்
கந்தசுவாமி + தெய்வானை வள்ளியம்மை
அக்கினி சத்தி ஒன்றாய வழியும், கடப்படுவதும் விளக்கப்படுவதும் அடப்படு வதுமாகிய விஷயத்தில் சூடு விளக்கம் ஆடுதலாகிய தொழிலினால் பலவாதல்போல, கந்தசுவாமியினது சத்தி, ஒன்றாய வழியும் கிருந்தி பேதத்தால் இச்சா கிரியா, ஞானசக்தி என மூவகைப்படும். அவற்றுள் இச்சா சத்தியாவது ஆண் மாக் களை முத்திய டைவிக்க விரும் புதல் . ஞானசத்தியாவது அவ்வான்மாக்களுடைய கர்மங்களையும் அக்கர்மங்களுக்கீடாகிய தனுகரண புவன போகங்களை உபாதானத் திரயத்தினின்றும் தோற்றுவிக்கு முறைமை யும் அறிதல். கிரியா சத்தியாவது அவ்வான்மாக்களுக்குக் கர்மசமத்துவம் பிறப்பிக்கும் பொருட்டுக் கர்மங்களைப் பக்குவா பக்குவமறிந்து கூட்டிப் புசிப்பித்துத் தொலைப்பித்தல்; கந்த சுவாமிக்கு இம்மூன்று சத்திகளுமே புராணங்களில் முறையே வள்ளியம்மை, தெய்வானை யம்மையெனக் கூறப்பட்டன. சைவாகமங்களை ஒதியுணராதார் இவற்றின் உண்மைப் பொருளையுணராது மயங்குவார்கள்"
என கந்தசுவாமிக் கடவுளின் பரத்துவம் கூறுவதோடு’ கந்தசுவாமி சிவனுக்கு வேறாகாரென்பதையும் மூலநூல், வழிநூல், சார்புநூல் முதலானவற்றின் வாயிலாக எடுத்துக்காட்டுவார்.43 குறிப்பிாக;-
அருவமுமுருவுமாகிய நாதியாய்ப் பலவா
யான்றாய்ப் பிரமமாய் நின்றசோதிப் பிழம்பதோர் மேனியாகக் கருணைகூர் முகங்களாறுங் கரங்கள் பன்னிரண்டுங் கொண்டே யொருதிரு முருகன் வந்தாங் குதித்தன னுலகமுய்ய”
போன்ற கந்தபுராணம் - திருவவதாரப் பாடலச்செய்யுட்களை எடுத்துக்காட்டி நிறுவுவார்.

Page 23
கந்த சுவாமியினது சத்தி ஒன்றாய் வழியும் கிருத்திய பேதத்தால் இச்சத்திகள் மூவகைப்படும் என்பதை சித்தாந்த உரைநூல்கள்,
"பரமசிவன் உலகத்தை மீளத்தோற்று விக்க விரும்புவான், அவ்விருப்பத்தின் எழுச்சியே அவனது இச்சாசத்தி எனப்படு கின்றது. அங்ங்ணம் இச்சாசத்தி அவன் படைக்குமாற்றை எல்லாம் அறியுமிடத்து அவனது சத்தி ஞானசத்தி என்றும் அறிந்தவாறே படைத்தல் முதலிய வற்றைச் செய்யுமிடத்து அவனது சத்தி, கிரியா சத்தி என்றும் பெயர்பெறும்”
எனக் குறிப்பிடுவதும்" மேற்கூறிய கருத்துக்களோடு ஒப்பிட்டு நோக்கத்தக்கது. பாதிரிமார் பரமசிவன், கந்தசுவாமிக்கடவுளர் உலகியல் விளக்கங் கண்ட லையில் நாவலரவர்கள் பரமசிவன், கந்தசுவாமிக் கடவுள் சித்தாந்த : அளித்து அக்கடவுளரின் ஒருமித்த பரத்துவத்தை நிறுவியிருப்பது நாவலரவர்கள் சைவசித்தாந்தக் கோட்பாட்டில் கொண்டிருந்த அளவற்ற ஈடுபாட்டையும் சைவத்தையும் சைவ சித்தாந்தத்தை யும் வளர்த்துச் செல்லும் பாங்கையும் அறிய முடிகின்றது.
மேலும், நாவலரவர்கள் சைவவிரோதம் (1875) சைவசமயி (1875) அநாசாரம் (1875) திருக்கோயிலுந்திருவீதியிலுஞ் செய்யத்தகாத குற்றங்கள் (1875) சைவசமயம் (1875) கைவிளக்கு (1877) யாழ்ப்பாணச் சமயநிலை (1972) வண்ணார்பண்ணைக் கதிரேசன் கோயில் முதலான பிரசங்கங்கள் மூலம் சைவசமயிகளின் புறவயப்பட்ட சமய ஒழுதலாறுகளை சரியான வழிகளில் கைக் கொண்டு அவற்றின் மூலம் தம்மை அகவயப்பட்ட ஒழுகலாற்றுதலிலும் ஆன்மீகத்திலும் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டுமென்று வற்புறுத்துவார். (5) சைவசித்தாந்த வாதிகளை தனது மானசீகக் ருவாகக் கொண்டு சைவசித்தாந்தக் காட்பாட்டினை வளர்த்தல்
நாவலரவர்கள் சைவசித்தாந்தக் கோட்பாட் டினை வளர்த்துச் செல்வதற்கு இரு சித்தாந்த வாதிகளை தமக்கு முன்னோடியாகக் கொண்டார். அவற்றுள் ஒருவர் சிதம்பரம் குகைமடம் மறைஞான சம்பந்தர்; மற்றவர் சிவஞான சுவாமிகள். மறைஞான சம்பந்தர் 16ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். சிவதருமேந்திரம் (மொழிபெயர்ப்பு) சைவ சமயநெறி, மாத சிவராத்திரிகற்பம், சோமவார சிவராத்திரி கற்பம், வாக்கியவியல், உத்திராக்க வசிட்டம்,

சகலாகமசாரம், அருணகிரி புராணம் முதலான நூல்களின் ஆசிரியர்.
இவ்வகை நூல்களின் ஆசிரியரான மறையான சம்பந்தர் ஆன்மார்த்தவாதி என்று றிப்பர். ஆன்மார்த்தவாதி சைவசித்தாந்தக் காட்பாட்டின் முத்திநிலைக் கோட்பாட்டினின்று சற்று வேறுபட்டது. இவர் எழுதிய முத்திநிலைக்கு எதிராக திருவாவடுதுறையாதீனத்தைச் சார்ந்த குரு ஞானசம்பந்தர் முத்திநிச்சயம் என்ற நூலை ஏழுதியமை இங்கு நினைவு கூரத்தக்கது. நாவலரவர்கள் தமது சைவசித்தாந்தக் கோட்பாட்டிற்கு சற்று மாறுபாடான கோட்பாடான ஆன்மார்த்த வாதக்கோட்பாட்டை உடையவராக மறைஞான சம்பந்தர் விளங்கிய பொழுதும் அவருடைய நூல் பல சைவசித்தாந்த சாதன நெறிகளை வளர்த்துச் செல்வதற்குச் சாதகமாக அமையும் என்பதை பூரணமாக ਨੂੰ அவ்வகையில் நாவலரவர்கள் தரிவித்த சாதனையியல் பற்றிய கருத்துக்கள் பல மறைஞான சம்பந்தர் வழி வந்தனவாகும்.
அது மாத்திரம் அல்லாது அவருடைய நூலான சைவசமய நெறிக்கு நாவலரவர்கள் அகலவுரை கண்டார். அந்நூல் பாயிரம் உட்பட (25+372) 597 றள் வெண்பாக்களைக் கொண்டது. ஆசிரியரிலக்கணம், மாணக்க ரிலக்கணம் பொது இலக்கணம் எனும் மூன்று பகுப்புக்களை உடையது. இவ்வகலவுரையில் பல்வேறு உரை நெறிகளையும் பின்பற்றி, ஆகம சைவசித்தாந்த நூல்களைப் பிரமாணம் காட்டி சைவசித்தாந்த சாதனைகளையும் பயனையும் விளக்கி உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
நாவலர்களுக்கு மானசீகமான ருவாக விளங்கியவர் சிவஞான முனிவர். சிவஞான முனிவர் இயற்றிய நூல்களையும் பாடிய ரபந்தங்கள் முதலான பலவற்றைப் பதிப்பித்தவர் நாவலர். சிவஞானபோத மூலமும் சிவஞான முனிவர் சிற்றுரை தொல்காப்பிய சூத்திரவிருத்தி, இலக்கண விளக்கச் சூறாவழி குளத்தூர் அமிர்தாம்பிகைபிள்ளைத் தமிழ் முதலான பிரபந்தங்களையும் பதிப்பித்தவர் நாவலரவர்கள். நாவலரவர்கள் தாம் எடுத்துக் காண்ட சைவசித்தாந்தக் கோட்பாட்டினை உறுதிப் படுத்துவதற்கு சிவஞான சுவாமிகளின் உரைகளில் ருந்தே மேற்கோள்களைப் பெரிதும் காட்டுவது குறிப்பிடத்தக்க தொன்றாகும். சைவசமய நெறி என்னும் நூலினுள் வரும்
"பெறினு மபேதம் பிரமத் துலகத் துறுதியு னிச்செய்கை வினையும்”
சை. ச. நெறி பொ
17

Page 24
என்னும் செய்யுளுக்கு "பிரமத்துபேதம், ஆசாரியன் சிவத்தோடு அத்துவிதமாய் இருப்பினும் ஆன்மாக்களுக்கு உறுதியை நினைத்து கிரியையையும் விடாது அநுட்டிக்கக் கடவன்” என உரை வழங்கிய தோடு” அமையாது "அத்துவதம்" என்பதற்கு சிவஞான முனிவரின் கருத்தை அடிப்படையாகக் கொண்டு பின்வருமாறு குறிப்பிடுவது அவதானிக்கதக்க தாகும்.46
"அத்துவித நிலையாவது ஆன்மபோதமும் கண்ணொளியும் போலச் சிவமும் ஆன்மாவும் தம்முள் இரண்டற ஒற்றுமைப் பட்டு நிற்றல். பிரமமும் ஆன்மாவுமெனப் பொருளிரண்டில்லை ஒன்றேயெனக் கூறுவார் மாயாவாதிகள். சிவமும் ஆன்மாவும் வேறு பொருளெனவும் அவ்விருபொருளே இரண்டென வேற்று மைப்படாது அத்து விதமாய் ஒற்றுமைப் பட்டு ஒன்றாய் நிற்குமெனவும் கூறுவர் சைவசித்தாந்திகள். அத்து விதமென்னுஞ் சொற்கு இரண்டின்னமயெனப் பொருள் கொள்வர் மாயாவாதிகள், இரண்டன்மை எனப் பொருள் கொள்வர் சைவசித்தாந்திகள்
(6) சிவானுபூதி நெறியினைத் தத்துவங்களோடு இணைத்துத் தனிப் பாடல்களாகத் தரல்
நாவலரவர்கள் தமிழில் சிறந்த வித்துவான் பாடும் ஆற்றலும் வல்லமையும் படைத்தவர். அவ்வாறு இருந்த பொழுதும் நாவலரவர்கள் கவிதை பாடுவதை தவிர்த்துக் கொண்டார். அவ்வாறு நாவலரவர்கள் பாடமைக்கு வரலாற்று ஆசிரியர்கள் பின்வரும் கருத்துக்களை முன்வைப்பார்"
"பாட்டுக்கள் தோத்திரம் ஒன்றற்கே யல்லாமல் மற்றவைகளுக்கு அவ்வளவு சிறந்தன அல்ல என்பதும், பாட்டுவடிவ மான நூல்களாற் சாமானிய சனங்களுக் குப் பிரயோசனமில்லை என்பதும் தற்காலத்தில் இங்கிலீஷ், சமஸ்கிருதம் முதலிய பாஷைகளிலும் வசனங்களே வழங்குகின்றன என்பதும், இனித் தோத்திரத்துக்கும் தேவார திருவாசகம் முதலிய அருட்பாக்கள் இருக்கும் போது அவற்றுக்கு மேலாக நாம் என்ன தோத்திரத்தைச் செய்யப் போகிறோம் என்பதும் இவர் கருத்துக்களாகும். அதனாற்றான் பாட்டுப் பாடுவதை ஒழித்துக் கொண்டார்” என்பர்.
18

ஆயினும், தனது ஆற்றலுக்கு மிஞ்சிய செயலை செய்ய முற்படும் பொழுதும் தனது ஆற்றுமையின் எல்லையினும் இறையை நொந்து தனது இலட்சியத்தையும் மீறிக் கொண்டு தனது ஆதங்கத்தை இறைவனிடம் முறையீடு செய்யும் பொழுது அவனை கவிதை வடிவிலே பாடினார். அப்பாடல்கள் Lu 6)6605 மெய்பாடுகளை உணர்த்தி நிற்கும். அதேசமயம் தத்துவக் கருத்துக்கள் நிறைந்ததாகவும் காணப்படுகின்றன. நாவலரவர்கள் தனிப்பாடல்களை முதன் முதலில் தொகுத்தவர் சி. செல்லையாபிள்ளை அவர்கள்." அவரே நாவலர்களின் சிவாநுபூதித் தன்மையை முதன் முதலில் சைவ உலகிற்கு வெளிப் படுத்தியவர். அச்சிவாநுபூதித் தன்மையை பின்வருமாறு புலப்படுத்துவார்."
“வண்ணபுரமெனச் சொல்லப்படும் அராலியி லுள்ள சிவன் கோயிலில் நள D) சித்திரை மாதம் (1856) நடைபெற்ற விக்கினேஸ்வரப் பிரதிட்டைக்கு அக்கோயில் ஆதீனஸ்தரும் பிரதிஷ்டாசிரி யரும் அருச்சகருள் ஒருவருமாகிய பிரம்மபூரீ ச. செல்லையா குருக்கள் என வழங்கிய கங்காதரக்குருக்கள் அவர்க ளால் அழைக்கப்பட்டு நாவலர் அங்கே சென்றார். கோவிலை அடைந்தபோது வழக்கம் போற்றிட்டஞ் செய்து வைக்கப்பட்ட பட்டுவஸ்திரம் பழம் தாம்பூலமாதி நிவேதனப் பொருட்களை வேலைக்காரன் உடன் கொண்டு மறந்து போனமை தெரிந்து அவற்றை அக்கிராமத்திற் தேடுதற்கேனும் அல்லது ஏழுமைல் தூரத்திலுள்ள தமது கிராமத்தி லிருந்து தருவிக்கவேனும் கூடாமையால் "சீரேறுகருணையுருவாய" என்ற தொடக்கத்து மூன்று விருத்தங்களையும் முறையே சித்திவிநாயகர், விசவநாதசுவாமி, விசாலாட்சி அம்மையாகிய மூவர் பேரிலும் பாடிச் சூட்டி வணங்கினார். புத்திரப் பேற்றைப் பெரிதும் விரும்பியே சித்திவிநாயகரைப் பிரதிஷ்டை செய்த அவ்வாசாரியாரின் உள்ளக்கருத்தை அறியாமலே "நினதிரண்டு கழல் பணிந்
டின் மகப்பெறு முதலியனையும் கை கூடலரிதாகுமோ” எனத் தோத்திரத்தில் அமைத்தவாறே அவ்வாசாரியருக்கு ஆண்மகவு கிடைத்ததென்று இவ் வரலாற்றையும் அம்மூன்று பாக்களையும் எமது சிறுவயதில் அவ்வாசிரியர் சொல்லக் கேட்டு அறிந்தோம்"

Page 25
அப்பாடல்களுளொன்று வருமாறு”
சீரேறு கருணையுரு வாயவிசு வேசனொடு திகழ்விசாலாட்சிதந்த செல்வமேயடியவர்களினிதுண்ண வுண்ணத் தெவிட்டாத தெள்ளமுதமே பேரேறு மறிவிச்சை தொழிலென்று மதமூன்று பெருகு மானந்த வடிவே பிரணவப் பொருளேயென்னுறவேயெ னுள்ளமே பேசுமிரு கண்ணின் மணியே காரேறு நெடுமாலொ டயன்முத லியாவருங் காணரிய நினதிரண்டு கழல் பணிந் திடின்மகப் பேறுமுதலியவை யுங் கைகூடலரிதாகுமோ வாரேறு களபபரி மளமருவு முபயமுலை வலவை யுளமகிழ் கொழுநனே வண்டுமது வுண்டுலவு தண்டலை யராலி நகர் வாழ்சித்தி வேழமுகனே
இப்பாமாலை தேவாரங்களோடும் திருவாசகத் தோடும் ஒப்பு நோக்கி உணர்ந்து பரவசம் கொள்ளத்தக்கது.
செல்லையாப்பிள்ளைக்குப் பின் நாவலரவர் களின் வரலாற்றை எழுதியோர்களும் நாவலர் களின் தனிப்பாடல்கள் அவர் சிவாநுபூதி நெறியில் நின்று பாடியதாகவே காட்டிச் செல்வர். நாவலரவர்கள் பாடிய ஆறு கீர்த்தனைகளையும் காசநோய் கொண்டிருந்த விநாயக மூர்த்திச் செட்டியார் கதிர்காமத்துக்குக் கொண்டு சென்று அக்கோயில் முருகன் சந்நிதியில் பாடினா ரென்றும் அதன் மூலம் அவர் அந்நோய் நீங்கப் பெற்றாரென்று', யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை, சைவப் பிரகாச வித்தியாசாலையில் நிரந்தர வருவாய்க்காக ஒரு வர்த்தகசாலையை வாங்க விரும்பியும் பணமற்ற நிலையில் தம் உடையவரை நோக்
“மணிகொண்ட கடல்புடை கொணிந் நாட்டிலுன்சமய
வர்த்தன மிலாமை நோக்கி மகிமைபெறு நின்புகழ் வினங்குவான் சுருதியிம்
மைப்பொருட் பேறொழித்தே கணிகொண்ட வித்தியா சாலைதா பித்திவ்வூர்க்
கயவர்செயு மிடர்கள் கண்டுங் கல்லூரியதை நடாத்தப் பொருட்டுனை செயக்
கருதுவோரின்மை கண்டும் அணிகொண்ட சாலைய தொழிப்பினஃதுனையிகழு
மந்நிய மதர்தா சாலை யாமென நினைந்தெனெஞ்சற்பகற் றுயருற
வறிந்துமொரு கிறிது மருளாத் திணிகொண்ட நெஞ்சலினி நின்முன்யானுயிர்விடுத
றிணிண நீ யறியாதோ சிறியேன தன்பிலர்ச் சனைகௌழ கியதிருச்
சிற்றம் பலத் தெந்தையே’

எனும் பாடலை நொந்து பாடினார்." அதன் மறுநாள் இ. நன்னித்தம்பி முதலியார் பாடசாலையின் அபிவிருத்தியின் பொருட்டு ரூபா 400 அனுப்பி வைத்தார் என்பது வரலாறு” நாவலரவர்களின் செயலிற் துறவும், செயலில் உண்மையான பற்றும், இறை சிந்தனையும் பத்தியும் நாவலரவர்களை அநுபூதி நெறிக்கு உட்படுத்தின. இவ்வநுபூதிநெறி சைவசித்தாந்த நெறியில் மிகவுயர்ந்த ஆன்மீக நிலையாகும். முற்கூறியவாறு நாவலரவர்கள் மிகுந்த துன்ப மான நிலையில் ஆழ்ந்த இறை உணர்வை அநுபவிக்கும் பொழுது அவர் தம்மையறியாது அநுபூதிநிலைக்குத் தள்ளப்படுகின்றார். அப்பொழுது வெளிவந்த அருட்பாடல்களே நாவலர்கள் பாடிய தனிப்பாடல்களாகும். ஆனால் நாவலரவர்கள் தனது பாடல்களை அருட்பாக்க ளென்றோ திருவருட்பாவென்றோ கூறியது கிடையாது. ஆயினும், நாவலரவர்கள் பாடல் களை வெளிப்படுத்திய முறையினை நோக்கும் பொழுது நம்மை அவ்வாறே சொல்லத் தூண்டுகின்றது எனலாம்.
(7) மாணவபரம்பரையினரைச் சைவ சித்தாந்த நெறியாளராக வளர்த்துச் சென்று புதிய பரம்பரையினரை உருவாக்குதல்
நாவலரவர்கள் தமது சமய முயற்சிகளால் தமது சமய- சித்தாந்தப் பாரம்பரியத்தில் நம்பிக்கை கொண்ட மாணவ பரம்பரையினரை உருவாக்கினார். அம்மாணவ பரம்பரையினர் குருவாகிய நாவலரவர்கள் காட்டிய வழியைப் பெரிதும் பேணி அவற்றின் விருத்திக்காக உழைத்தனர். இப்பரம்பரையின் வாழ்வியல் முறைமையும் சைவசித்தாந்த மெய்யியல் நோக்கை அடிப்படையாகக் கொண்டிருந்தமை யால் அதற்கமைய புதிய முயற்சிகளில் ஈடுபட்டு உழைத்ததோடு, இம்மெய்யியலை வளர்ப்பதி லும் முன்னின்றனர் அவ்வகையில் வித்துவ சிரோமணி ந. ச. பொன்னம்பலபிள்ளை, காசிவாசி செந்திநாதையர், இணுவில் நடராசா ஐயா கோப்பாய் ச. பொன்னம்பலப்பிள்ளை, ந ச. சதாசிவப்பிள்ளை, தர்க்ககுடாதாரி வை. திருஞானசம்பந்தபிள்ளை, கொக்குவில் சபாரத்தின முதலியார் ம. க. வேற்பிள்ளை, த. கைலாசப்பிள்ளை, முதலானோர்கள் குறிப்பிடத் தக்கவர்கள். இவர்கள் சமயப் பிரசாரம் செய்தல், சித்தாந்த நூல்களைப் பதிப்பித்தல், சைவநுால் களுக்கு, சித்தாந்த மரபுகளை மனங்கொண்டு உரை எழுதுதல், புதிய சைவ நூல்களை ஆக்கல் முதலான பணிகளில் ஈடுபட்டு சைவசித்தாந்த மெய்யியலின் வளர்ச்சிக்கு உழைத்தனர்.”
19

Page 26
முடிவாக, வளமிக்கப் பிரபுத்துவ குடும்பத தில் பிறந்த நாவலரவர்கள் தாம் பெற்ற கல்வியின் மூலம் தொடர்ச்சியாகத் தம்குடும்பப் பாரம்பரியத்தைப் பேணாது நைட்டிகப் பிரமச்சாரியாக வாழத் தம்மை மாற்றிக் கொண்டு “சைவத்தையும் அதன் வளர்ச்சிக்குக் கருவியாகிய சைவசித்தாந்தத்தையும் வளர்த்தல் வேண்டும்” என்னும் ஆசையை மனத்திற் கொண்டு, சைவ உலகம் புதிய மாற்றங்களில் விருப்பு வைக்காத நிலையில், தாம் ஐரோப்பிய கல்விமுறையாலும் பாரம்பரியக் கல்வி முறையாலும் பெற்றுக் கொண்ட அறுகூலங்களைத் தமது இலட்சியத்துக்கு அடிப்படையாகக்கொண்டு, சைவ சித்தாந்தத்தின் நெறியினையும் கோட்பாடுகளையும் வளர்க்க முற்பட்டார். குறிப்பாக இறைவனின் பரத்துவம் ஆன்மா, ஆணவம், கன்மம், மாயை, சற்காரிய வாதம், நாற்பாதங்கள் வல்வினை மெல்வினை பத்திநெறி, சிவாநூபுதி கோட்பாடுகளில் உறுதியான நம்பிக்கை கொண்டு, பிரசங்கம், புராண படனஞ் செய்தல், அநுபூதி நெறியினை உணர்த்தல், திருமுறைகளுக்கு முதன்மையளித்தல்,
Fbalbolij
சிலப்பதிகாரம், மணிமேகலை, கோவில்களின் வரிசையைக் குறிக்கும் கோயிலே முதன்மை பெற்றுள்ளதைக் கா6
"பிறவா யாக்கைப் பெரியே அறுமுகச் செவ்வேள் ஆ வால்வளை மேனி வாலி நீல மேனி நெடியோன் "நுதல்விழி நாட்டத் திரை உவனச் சேவல் உயர் மேழி வலனுயர்த்த வெ கோழிச் சேவற் கொடிே "நுதல்விழி நாட்டத் திரை பதிவாழ் சதுக்கத்துப் பூ முன்னவை இரண்டும் சிறந்த சமண பின்னது பெளத்தராகிய சாத்தனார் கூற்று இங்ங்னம் சிவனுக்கு முதலிடம் தந்திருத் காலத்தில் சைவசமயம் பெற்றிருந்த மு: அப்புறச் சமயிகளது மதவேறுபாடற்ற நல் கூற்றை,
く நீரும் நிலனும் தீயும்
மாக விசும்போ டைந்து மழுவாள் நெடியோன் ! எனவரும் மதுரைக் காஞ்சி அடிகளும் ஆ
20

சைவநெறியினை மீழாய்வுக்கு உட்படுத்தல், புதிய சித்தாந்தப் பரம்பரையை உருவாக்குதல் முதலான பணிகளால் சைவசித்தாந்த மெய்யியல் வளர்ச்சிக்கு இட்டுச் சென்றார்.
நாவலரவர்கள் இலங்கையின் வட பகுதியில் பிறந்திருக்கலாம், ஆயினும் நாவல ரவர்களின் தன்னலமற்ற ஆத்மீக நெறியும் அதன் சத்தியும் உலகலாவிய சைவர்களை அவ்வாற்றலுக்குள் கொண்டுவரும் சத்தியைப் பெற்றிருந்தது. இந்த நூற்றாண்டில் சைவநெறி யும் சைவ சித்தாந்தக் கோட்பாடும் நாவலரவர்கள் தம் சுயநலத்தை ஆத்மீகம் என்னும் குண்டத்தில் இட்டு எழுந்த ஒளியினால் கிடைக்கப் பெற்றதெனலாம். சைவ சித்தாந்த மெய்யியல் மேலும் வளர வேண்டுமேயானால் நாவலரவர்களைப் போல் தம்சுயநலத்தை ஆத்மீகம் என்னும் ஒமகுண்டத்தில் போட்டு ஒளிபாய்ச்சக் கூடிய பலர் தோன்றல் வேண்டும். அதுவே சைவ சித்தாந்த மெய்யியல் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமையலாம்.
piti GLib மதுரைக் காஞ்சி என்னும் நூல்களில்
இடங்களில் எல்லாம் சிவபிரான் திருக் ணலாம்:
பான் கோயிலும் அணிதிகழ் கோயிலும் மியோன் கோயிலும்
கோயிலும்” யோன் கோயிலும் த்தோன் நியமமும் 1ள்ளை நகரமும் யோன் கோட்டமும” நயோன் முதலாப் தமீ றாக” ாத் துறவியாராகிய இளங்கோவடிகள் கூற்று. | புறச் சமயத்தவராகிய இவர்கள் இருவரும் தலைக் காணச் சிலப்பதிகார மணிமேகலை தன்மை ஒருவாறு அறியப்படும். அத்துடன், லுள்ளமும் நன்கு விளங்கும். இப்புலவர்கள்
வளியு |டன் இயற்றிய தலைவ னாக” யூதரிக்கின்றார்.
- Dr. uom. SmexIDIT6oofäbě60ITff

Page 27
சம்பந்தர் அருளிய, ய
இசை வரலாற்றில் தேவாரப் பண்களே மிகப்பழமையான உருப்படிகளாகும். தற்காலத் தில் வழங்கும் பல இராகங்களுக்கு இவைகளை ஆதி வடிவங்கள் எனலாம். உருப்படி என்பது இசையுடன் கூடித்தாளத்தில் அமைந்துள்ள பாடலாகும். சிலர் இப்பொழுது பாடப்படும் தேவாரப் பண்களின் வர்ணமெட்டுக்கள் எல்லாம் பிற்காலத்தில் அமைக்கப்பட்டவை என்பர். இந்த கருத்தை ஏற்பதற்கில்லை, அப்படியாயின் ஆனந்த பைரவி, தன்யாசி, சாவேரி போன்ற பிரசித்திபெற்ற இராகங்களிலும் அவைகள் படைக்கப்பட்டிருக்க வேண்டும். மேலும் இந்திய இசை வரலாற்றில் பாஷாங்க இராகங்கள் என்பதை முதன் முதலில் தேவாரப்பண்களில் தான் நாம் காண்கின்றோம். உதாரணம் கெளசிகம் - பைரவி, வியாழக்குறிஞ்சி - செளராஷ்டிரம் - உபாங்க இராகங்களுக்கு உதாரணம் காந்தாரபஞ்சமம் - கேதாரகெளளை, செந்துருத்தி - மத்யமாவதி போன்றவையாகும்.
சுமார் 300 வருடங்களுக்கு முன் வாழ்ந்த சேத்ரக்ஞர் தெலுங்கு மொழியில் 4000 பதங்களுக்கு மேல் இயற்றியுள்ளார். அவர் பயன் படுத்திய இராகங்களெல்லாம் 40 இராகங்களுக் குள்ளேயே அமைந்துவிட்டன. அவைகளும் இரக்தி இராகங்களேயாகும். உணர்ச்சியற்ற இராகங்கள அவர் தொடவில்லை. அவ்வாறே மனதை உருக்கும்படியான பதிகங்களைப் பாடிய நாயன்மார்களும் இரக்தி இராகங்களையே பயன்படுத்தியுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்க தாகும்.
மேலும் இசை வரலாற்றில் 1500 வருடங் களுக்கு முன் எந்த விதமான இசை மற்றைய நாடுகளில் இருந்தது என்று கூறுவதற்குப் போதுமான சான்றுகள் இல்லை எனலாம். வேதங்கள் ஆதிகாலம் தொடக்கம் பாடப்பட்டு வந்த போதிலும், அவைகள் ஒரு தாளத்தில், இராக வேறுபாட்டுடன் அமைக்கப்படவில்லை. பிற்காலத்தில் இராமாயண காவியத்தை வால்மீகி முனிவர் இராக தாளங்களில் அமைத்து லவ, குச சகோதரர்களுக்குச் சொல்லி வைத்தார் என்பது புராண வரலாறு ஆனால் இந்த இசை முறை எக்காரணத்தினாலோ நமக்குக் கிடைக்கா மல் போயிற்று.

ாப்பிசைப் பாடல்கள்
எஸ். கே. சிவபாலன்
மேலும் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் தென்னிந்தியாவில் இசை முறை எப்படி ருந்தது என்பதைத் தேவாரப் பாடல்கள் மூலமே நாம் அறிந்து கொள்ள முடியும். அக்காலத்தில் கர்நாடக சங்கீதம், இந்துஸ்தானி சங்கீதம் என்னும் பிரிவுகள் ஏற்படவில்லை. அக்காலத்தே தமிழ் இசையே தலைமை இசையாக விளங்கிற்று எனலாம். இராமாயண காலத்தில் இராகம் என்பதற்கு ஜாதி என்னும் பெயர் வழக்கில் இருந்து வந்தது பரிபாடல் என்பது சைப்பாடல் வகையைச் சார்ந்ததா யினும் அவ்விசை தொடர்பான செய்திகளும் நமக்குக் கிடைக்கவில்லை. எனவே வரலாற்று வாயிலாகப் பார்க்கும் போது தேவாரப் பண்களே பழமையான இராகங்களாக விளங்குகின்றன. மத்திய காலத்திலும், நவீன காலத்திலும் வழக்கிற்கு வந்துள்ள இராகங்கள் தேவாரத்தில் காணப்படவில்லை. பழம் பஞ்சுரம் என்னும் பண் இன்றைய சங்கராபரண இராகமாகும். இது பண்டைக் காலத்து சட்சக்கிராமத்தின் நிஷாத மூர்ச்சனையான இரஞ்சனி இராகத்திற்கு ஒப்பாக இராகமாகும். மேகராகக் குறிஞ்சி என்பது இன்றைய நீலாம்பரி இராகம் ஆகும். இந்த இராகம் நாட்டப்புறத் தாலாட்டுப்பாடல்களில் தொன்று தொட்டு வழங்கப்பட்டு வருகிறது. பண் பஞ்சமம் என்பது இன்றைய ஆ இராகமாகும். இந்த இராகம் சங்கீத சமய சாரம் போன்ற பழைய வடமொழி நூல்களில் காணப்படுகின்றது.
மேலும் இராகப்பதத்தின் தந்தையான மதங்கமுனிவர் கூறியுள்ள சுத்த, சாயாலக, சங்கீர்ண என்னும் இராக வகுப்பிற்குத் தேவாரப் பண்களே சிந்த உதாரணங்களாக விளங்கு கின்றன எனலாம். நுட்ப சுருதிகளையும், நுண்மையான கமகங்களையும் வியாழக்குறிஞ்சி, பஞ்சமம் போன்ற பண்களில் நாம் காணலாம். ஆகவே தற்காலத்திய ஆய்வுக்கு எட்டிய வகையில் பண் சுமந்த தேவரப்பாடல்களே நமக்குக் கிடைத்துள்ள ஆதி உருப்படிகள் எனலாம். 1500 ஆண்டுகளுக்கு முன் பாடப்பட்ட தேவாரத்தின் சை நமது தவப்பயனாகத் தமிழக திருக்கோயில்களில் ஒதுவாமூர்த்திகளால் இன்று வரை பாடப்பட்டும் காப்பாற்றப்பட்டும் வருகின்றது எனலாம்.
இசையுலக வரலாற்றில் இசைப் பாடல்கள் இயற்றியவர்களுள் திருஞானசம்பந்தரே வயதில்
21

Page 28
இளைஞராவார். உமையம்மை இவருக்கு ஞானப்பால் ஊட்டிய நிகழ்ச்சியை ஆதி சங்கரர் தமது செளந்தர்யலகரியில் அழகாக வர்ணித் துள்ளார். என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். சம்பந்தர் பாடியருளிய முதல் மூன்று திருமுறை களில் உள்ள 383 பதிகங்கள் இன்று 23 பண்களில் அமைந்துள்ளன. முத்தமிழ் விரகராகிய சம்பந்தரே தமிழ் மொழியில் புதிய வகையான சொல்மாலைகள் பலவற்றை யாப்பிலக்கணத்திற்கு உட்பட்டு அருளிச் செய்துள்ளார். இவ்வாறு அருளியச் செய்யப்பட்ட அத்திருப்பதிகங்கள் தமிழில் உள்ள பாடல்களுக்குக்கெல்லாம் மூல இலக்கியங் களாகத் திகழ்கின்றன. இவற்றைச் சித்திரக் கவிகள் எனவும் அழைப்பர் அவையாவன திருயமகம், நாலடிமேல்வைப்பு, மாலை மாற்று, ஏகபாதம், திரு எழுகூற்றிருக்கை, திருத்தாளசக்தி, திருவிராகம், யாழ்முறி, மொழிமாற்று, திருயிருக்குறள், ஈரடிமேல்வைப்பு, சக்கரமாற்று, கோமுத்திரிகம் முதலியனவாகும். இவற்றில் மேற்குறித்த திருயமகம் தொடங்கி யாழ்முறி வரை உள்ளப் பாடல்களை செயல்முறை விளக்கமாகப் பார்க்கலாம்.
நமக்குக் கிடைத்துள்ள தமிழ் நூல்களில் மிகவும் தொன்மை வாய்ந்தது தொல்காப்பிய மாகும். இடைச்சங்க புலவர்களாலும் கடைச் சங்க புலவர்களாலும் போற்றிப் பயிலப்பட்ட இந்நூல், தமிழ் மொழியின் இலக்கண வரம்பைப் பேணிக்காக்கும் ஆற்றல் வாய்ந்த தனி முதல் நூலாக கி.பி. 10ம் நூற்றாண்டு வரை மேற்கொள்ளப்பெற்றதென்பது தமிழிலக்கிய வரலாற்றாராய்ச்சியாளர் அனைவருக்கும் ஒப்ப முடிந்த கருத்தாகும். பண்டை தமிழியல் இலக்கண நூலாகிய தொல்காப்பிய செய்யு ளியலில் கூறப்பட்ட யாப்பியல் மரபே தேவாரத் திருப்பதிகங்களுக்குப் பொருந்தும் என்பதும் சான்றோர் கருத்தாகும். மேலும் இப்பாடல்கள் கலிப்பா வகையைச் சேர்ந்ததாகும். இதை சம்பந்தப் பெருமானே ‘கந்தண் பூங்காழியூரன் கலிக்கோவையால் சந்தமே பாடவல்ல தமிழ் ஞான சம்பந்தன்' எனக்குறிப்பதிலிருந்து அறியக்
காணலாம்.
மேலும் நாயன்மார்கள் பாடும்போது சொல்லும், யாப்பும், இசையும் ஒன்றாகவே சேர்ந்து வெளிவந்தன. இவ்வகைப் பாடல்கள் இசைப்பா வகையுள் அடங்கும். பொதுவாக யாப்பின் உறுப்புகளாவன எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என்பவாகும்.
22

எழுத்து - எழுத்துக்களால் ஆக்கப்படுவது, அசை - நான்கு ஓர் அசை, சீர் - முதல் எழுத்துடன் பொருந்தி நிற்பது, அடி - குறளடி, சிந்தடி, தொடை - எதுகை மோனை அளபெடை வற்றை அடிப்படையாகக் கொண்ட பாடல்களே யாப்பிசைப் பாடல்களாகும்.
திருயமகம்
திருயமகம் என்பது ஒரடியில் வந்த சொல்லோ, தொடரோ வேறொரு பொருள் பட மீண்டும் அதே அடியில் மடக்கி வருவது. இதனை மடக்கு எனவும் வழங்குவர்.
பண்:பழம்பஞ்சுரம் இராகம்: சங்கராபரணம் தாளம்:ஆதி
உற்றுமை சேர்வது மெய்யினையே
உணர்வது நின்னருள் மெய்யினையே கற்றவர் காய்வது காமனையே
கனல் விழி காய்வது காமனையே அற்றம் மறைப்பதும் உன் பணியே
அமரர்கள் செய்வதும் உன் பணியே பெற்றும் உகந்தது கந்தனையே
பிரமபுரத்தை உகந்தனையே.
நாலடிமேல்வைப்பு
இடரினும் தளரினும் எனவரும் பாடல் நாலடி மேல்வைப்பில் அமைந்த பாடலாகும். நான்கு அடிகளாலான பாடலின் மேலாக இரண்டு அடிகள் வைக்கப் பெற்ற அமைப்பை உடையது இப்பாடலாகும்.
பண்:காந்தார பஞ்சமம் இராகம்:கேதாரகெளளை தாளம்:ஆதி
இடரினும் தளரினும் எனதுறுநோய் தொடரினும் உனகழல் தொழுதெழுவேன் கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை மிடறினில் அடக்கிய வேதியனே இதுவோ எமையாளுமாறு ஈவதொன்றெமக்கில்லையேல் அதுவோ வுனதின்னருள் ஆவடு துறை அரனே
மாலைமாற்று
ஒரு மாலைக்கு அமைந்த இருதலைப்புகளுல் எதனை முதலாகக் கொண்டு நோக்கினாலும், அம்மாலை ஒரே தன்மை உடையதாய்த் தோன்றுமாறு பாடலை முதலிலிருந்து படித்தாலும், அல்லது இறுதியிலிருந்து படித்தாலும், அதே பாடலாக அமையும் தன்மை பெற்ற பாடல் மாலைமாற்று ஆகும். இதை முடகு,

Page 29
விகடகவி எனவும் அழைப்பர் இப்பாடலுக்கு எளிதில் பொருள் காணமுடியாது.
பண்:கெளசிகம் இராகம்: பைரவி தாளம்:ஆதி
யாமா மாநீ யாமாமா யாழிகாமா காணா கா
காணா கர்மா காழியா மாமா யாநீ மா மா யா நேரகழா மித யாசழிதா யேனனிய்ேனனி ௗாயுழிக காழியுளா ன்னயேன்னயே தாழி சயா தமிழாசுர்னே
பொருள் யாம் - ஆன்மாக்களாகிய நாம் கடவுள் என்றால்
அது பொருந்துமா? நீ நீயே கடவுள் என்றால் அது முற்றிலும் ப்ொருந்தும், வேதாந்த்த்தை மறுத்தல். மாயாழி - பேரியாழ் எனும் வீணையை
வாசிப்பவனே காமா - யாவரும் விரும்பத்தக்க அழகனே காணாகாமா - காமன் உருவை அழித்தவனே காழியா - சீர்காழிப்பதியில் இருப்பவன் மாமாயா - திருமாலாக வருபவன்
மாமாயாங் - ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று மலங்களிலிருந்து விடுவிப்பான்.
ஏகபாதம்
ஏகம் என்பது ஒன்று, பரதம் அடி, ஒரடி என்று பொருள்படும். இப்பாடலில் ஓரடி பேர்லே மற்ற் மூன்று ஆடிகளும் அமைந்திருக்கும், ஆனால் பொருள் வேறுபடும். இவ்வன்கப்பாடல் ஏகபாதம் என அழைக்கப்படும்.
பண்:வியாழக்குறிஞ்சி இராகம்:செளராஷ்டிரம் தாளம்:ஆதி
பிரமபுரத்துறை பெம்மான் எம்மான் ரமபுரத்துறை பெம்மான் எம்மான் ரமபுரத்துறை பெம்மான் எம்மான் பிரமபுரத்துறை பெம்மான் எம்மான்
பொருள்
பராசக்தியான அந்த பரிபூரணத்தை வியந்தது. மான்போன்ற விழின்ய உடையகங்கா தேவியை விரும்பித் திருமுடியில் வைத்தவன்.பிரமரூபத் ல் எண்ணப்பட்ட என்னை முத்தியிலே சேர்க்க விருப்பமுள்ளவன். _ பிரமபுர்த்தில் (சீர்காழி) வீற்றிருக்கின்ற பெரியோன் என்க்குத் தலைவன்.
திருவிராகம்
திருவிராகப் பாடல் யாப்பு அமைப்பில்
றில் எழுத்துக்களை நிரையசையாக திரும்பத்
திருபே முடுகி ஓடுகின்ற் ஓர் ஒசை அம்ைப்ப்ாகும்.
தை அராகம் எனவும் அழைப்பர்.

பண்: நட்டபாடை இராகம்: கம்பீரநாட்டை தாளம்: ஆதி (இரட்டைக்களை)
பிறைபணி படர்சடை முடியிடை பெருகிய புனலுடை அவனிறை
இறைபணி வளையினை முலையவள் இணைவன எழிலுடை இடவகை கறையணி பொழில் நிறைவயலணிகழுமலம் அமர்கனல் உருவினன் நறையணி மலர்நறு விரைபுல்கு நலமலிகழல் தொழன் மருவுமே
திருத்தாளச்சதி
* இப்பதிகம் சொற்கட்டுச் சந்தச்சுவை நிறைந்ததர்கும். நாட்டியப் ಶಿದ್ಧ್ರ மகளிர் பாடி ஆடி நடித்தற்குப் பொருந்திய தாளச் சாற்கட்டுகளுர்க இப்பதிகம் அமைந்துள்ளுமை யால் இப்பதிகம் திருத்தாளச்சதி எனப் பெயர் பெற்றது.
பண்:வியாழக்குறிஞ்சி இராகம்:செளராஷ்டிரம் தாளம்:ஆதி பந்தத்தால் வந்தெப்பால் பயின்றுநின்றவும் பரப்
பாலே சேர்வார் ஏனோர்கான் பயில் கணமுனிவர்களும் சிந்தித்தே வந்திப்பசிலம்பின் மங்கைதன்னோடும்
சேர்வார் நாள் நாள் நீள் கயிலை திகழ்தரு பரிசதெலாம் சந்தித்தே இந்தப்பார்சனங்கள் நின்றதங்கணால்
தாமே காணா வாழ்வாரத்தகவுசெய்தவன திடம் கந்தத்தால் எண் திசைக்கும் கமழ் திலங்கு சந்தன காடார் பூவார் சீர்மேவும் கழுமல வளநகரே
யாழ்முறி
இப்பாடல் இயல் அமைதியாகிய யாப்பும், இசை அமைதியாகிய பண்ணீர்மையும் இடையிடையே முறிந்து மாறும் இயல்புடைய ஆடிகளால் இயன்ற) இசைப் பா ஆதலின், இதனை முறிவரிக்குரிய சிறந்த இலக்கியமாக கொள்ளலாம். எடுத்த இயலும் இசையும் தம்முள் முறித்துப் பாடுதல் SE யனப்படுமே" என்பது அரும்பதஉரையாசிரிய்ர் காட்டிய சிலப்பதிகார உரை மேற்கோள். மேலும் குற்றெழுத்தால் குறுகிய நிடைபோல் பெற்ற அடி (இரண்டு மூன்றுமாய் நடப்பது. எனவே இப்பாடலில் வரும் எழில் பொழில், குயில் - இரை, நுரை, கரை, பொ என்று இரண்டிரண்டு சொற்களாக, இரண்டிரண்டு சொற்களாக, இரண்டிரண்டு எழுத்துக்களுக சேர்ந்து குற்றெழுத்துப் பயின்று வருவதை இதில் காணலாம்.
ug::Upps இராகம்: அடாணா தாளம்: ரூபகம்
மாதர் மடப்பீடியும் மட அன்னமும் அன்னதோர்
நபையுடை மலைமகள்துணையென மகிழ்வர் யூத இனப்படைநின்றிசை பாடவும் ஆடுவர்
அவர்படர்சடை நெடுமுடியதொர்புனலர் வேதமோடேழிசை பாடுவர் ஆழ்கடல் வெண்திரை இரை நுரை கரைபொருது விம்மி நின்றயலே தாதவிழ் புன்னை தயங்கும் மலர்ச்சிறை வண்டறை எழில் பொழில் குயில் பயில் தருமபுரம் பதியே
23

Page 30
சிருஷ்டி பற்றிய இ
இந்து மதத்தைப் பொறுத்த மட்டில் சிருஷ்டி பற்றிய கொள்கை முதன்மையான இடத்தைப் பெறுகிறது. பொதுவாக மனிதனுக்கு அடிப்படைச் சக்தியாக அமைந்த ஆன்மா, மனிதன் வாழும் உலகம், மனிதனுக்கு அப்பாற்பட்ட பரம்பொருளாகிய பிரமம் என்று மூன்று பொருட்களின் உண்மை, இயல்பு, இலட்சியம் என்பன பற்றி தத்துவம் ஆராய்கிறது. எனவே மெய்ப் பொருளாராய்ச்சி (Metaphysics) மெய்ப்பொருளை அறிவதற்குரிய அறிவாராய்ச்சி (Epistemology), ஆன்மாக்களின் உயர் குறிக்கோளான மோட்சத்தை அடைவதற்குரிய விடயங்கள் (Ethics) என்று மூன்று முக்கியமான விடங்கள் மெய்யியலில் ஆய்வுக்கு உட்படுத்தப் படுகின்றன. இவற்றை முறையே தத்துவ விசாரணை, பிரமாண விசாரணை, பிரயோஜன விசாரணை என்றும் அழைக்கலாம். ஆன்மாக்களின் உயர் இலட்சியமான மோட்சத்தின் பொருட்டே இவ்வுலகம் சிருஷ்டிக்கப்பட்டது என்பதே இந்துக் கொள்கை. இந்திய தத்துவங்களுள் வேதங்களை ஏற்றுக் கொள்ளும் வைதீக மதங்கள் யாவும் உலகத் தோற்றம், உலக சிருஷ்டி பற்றிப் பல்வேறு கருத்துக்களைக் கொண்டுள்ளன. இந்துமதத்திற்கும், இந்து தத்துவத்திற்கும் அடிப்படையாக அமைந்த நூல்கள் வேதங்கள் உபநிடதங்கள், பகவத்கீதை போன்றனவாகும். இவற்றுடன் ஒவ்வொரு சமயப் பிரிவிற்கும் றப்பாக அமைந்த ஆகமங்களும் அவ்வச் சமயத்திற்குரிய கொள்கைகள் கோட்பாடுகளை விளக்குவனவாக உள்ளன. இவற்றுடன் புராண, இதிகாசங்களும் சமய தத்துவக் கருத்துக்களைப் பல்வேறு சம்பவங்கள், கதைகளினுடாக விளக்குகின்றன. இந்நூல்கள் யாவும் சிருஷ்டி பற்றிக் குறிப்பாக உலக சிருஷ்டி பற்றியும் சிறப்பாக விளக்குகின்றன. ஆன்மா, இறைவன், உலகம் ஆகிய முப்பொருட்களிலும் உலகம் ஒன்றே சிருஷ்டிக்கப்பட்டது. அச்சிருஷ்டிக்கு ஒரு நோக்கமுண்டு. இவை பற்றி விரிவாக ஆராயுமிடத்து இந்துக்களின் சிருஷ்டி பற்றிய காள்கை இந்து தத்துவக் கொள்கைகள் அனைத்திற்கும் அடிப்படையாக இருப்பதுடன், சிருஷ்டி பற்றிய எண்ணக்கரு இந்துக்கலைக் கோட்பாடுகளின் தோற்றத்திற்கும் அடிப்படை யாக அமைகிறது. காஷ்மீர சைவ தத்துவ வியலாளரும், கலைக்கொள்கையாளரும், 856ሻ)6ኪ) விமர்சகருமாகிய அபிநவகுப்தர் ஒரு
24

இந்துக் கொள்கை
- ஏ. என். கிருஷ்ணவேணி
கலைஞனை படைப்புக் கடவுளுடன் ஒப்பிடுவது குறிப்பிடத்தக்கது.
வேத உபநிடதங்களில் சிருஷ்டி பற்றிய எண்ணக்கரு
சிருஷ்டி' என்பது ஒன்றைப் புதிதாக படைத்தல், ஆக்குதல் என்று பொருள்படும். அவ்வாறு பரம்பொருளினால் சிருஷ்டிக்கப்பட்ட பொருளாக உலகம் கூறப்படுகிறது.வேதங்கள் அனைத்திலும் காலத்தால் முற்பட்ட இருக்கு வேதத்திலே சிருஷ்டி பற்றிய கருத்துக்களும் கதைகளும் மிகுதியாக இடம்பெறுகின்றன. இருக்கு வேதம் இயற்கைச் சக்திகள் ஒவ்வொன் றிற்கும் தெய்வீகத் தன்மையைக் கொடுத்து, அவை ஒவ்வொன்றையும் ஒவ்வொரு தெய்வமாக உருவகிக்கிறது. முப்பத்துமூன்றுக்கும் மேற்பட்ட கடவுளர்கள் பற்றி வர்ணிப்பதுடன், அவற்றைப் புகழ்ந்து பாடும் பாடல்களையும் கொண்டுள்ளது. இவ்வாறு புகழ்ந்து போற்றப்படும் கடவுளர்களில் பிரஜாபதி, விஸ்வகர்மன், பிரஹஸ்பதி போன்ற சிருஷ்டிக் கடவுளர்கள் முக்கியத்துவம் பெறுகின்றனர். இருக்கு வேதம், பத்தாவது மண்டலம் தத்துவக் கருத்துக்கள் பலவற்றைக் கொண்டது. அங்கு உலக சிருஷ்டிக்குக் காரணகர்த்தா யார்? இவ்வுலகம் எவ்வாறு எதிலிருந்து எவராற் தோற்றுவிக்கப் பட்டது என்று வினாவுவதையும் அதற்கு விடையாகப் பல தெய்வங்களின் பெயர்கள் கூறப்படு வதையும் காணலாம். பிரஹ்மணஸ்பதி என்ற தெய்வம் உலக சிருஷ்டியுடன் தொடர்புபடுத்தப் படுகிறது. கொல்லன் தன் உலைக்களத்தில் நெருப்பை ஊதிப் பொருட்களை உருவாக்குவது போல் பிரஹ்மணஸ்பதியும் உலகத்தையும் உலகில் உள்ள பொருட்கள் அனைத்தையும் சிருஷ்டித்ததாகக் கூறப்பட்டுள்ளது. இத்தெய்வமே பிரஜாபதி, பிரஹஸ்பதி விஸ்வகர்மன் போன்ற பெயர்களினாலும் அழைக்கப்படுகின்றது. இருக்கு வேதப் பாடல் ஒன்று விஸ்வகர்மனே எல்லாவற்றையும் படைத்தான் என்று கூறுகிறது. விஸ்வகர்மன் என்றால் எல்லாவற்றையும் செய்ய வல்லவன் என்பது பொருள். இந்துக் கலைப் பாரம்பரியத்தில் விஸ்வகர்மன் தெய்வீகக் கலைஞனாகவும், தேவலோகங்களையும் கட்டடங்களையும் உருவாக்கிய தேவதச்சனாகவும்

Page 31
கூறப்படுகிறான். கட்டட சிற்பக்கலை பற்றி விளக்கும் சிறந்த நூல் விஸ்வகர்மீயம் எனப்படும். ஸ்தபதிகளுக்கெல்லாம் தலைவனாகப் போற்றப்படுகின்றான். பிருஹஸ்பதி எனும் தெய்வத்தின்மீது இருக்கு வேதத்தில் பதினொரு பாடல்கள் உள்ளன.
இருக்குவேதம், புருஷசூக்தம் என்ற பாடற்தொகுதியில் யாகத்தின் மூலம் உலகம் சிருஷ்டிக்கப்பட்டதாகக் குறிப்புண்டு. அதாவது யாகத்தின் மூலம் ஒரு பிரமாண்டமான புருஷனைத் தோற்றுவித்ததாகவும் அப்புருஷன் 1000 கண்கள், 1000 கால்கள் 1000 கரங்கள் உடையவன் எனவும் அப்புருஷனே இவ்வுலகம் முழுவதையும் மூடி அதற்கப்பாலும் பரந்து நின்றது, நிற்கின்றது, நிற்பது எனவும் கூறப்பட்டுள்ளது. அப்புருஷனின் காற்பங்கு உலகிலும் நாலில் மூன்று பங்கு ஆகாயத்திலும் அழிவற்று இருக்கின்றது. உலகில் உள்ள மிருகங்கள், பறவைகள் கூட இந்த யாகத்தில் இருந்தே தோன்றின என்ற றிப்பும் இங்கு காணப்படுகின்றது. 器 ஷனே சாவாமைக்குரிய தெய்வம். டம் இருந்தே வேதங்கள் தோன்றின. அப்புருஷனின் முகம், தோள், தொடை, பாதம், போன்ற உறுப்புகளில் இருந் முறையே பிராஹ்மணர், கூத்திரியர், வைசியர், சூத்திரர் என்ற நான்கு வர்ணத்தவர்களும் தோன்றினர். இவ்வாறு புருஷனே அனைத்துப் பொருட்களின் படைப்பிற்கும் காரணமான சிருஷ்டி கர்த்தா எனப் புருஷசூக்தம் கூறுவது கவனிக்கத்தக்கது.
உலகம் என்று கூறும்போது அது இயற்கைக் கூறுகள் பல ஒன்றிணைந்தது. நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்ற பஞ்சபூதங்களும் அதன் பகுதிகளும். இதில் இணைந்துள்ளன. புருஷசூக்தப்பாடல், புருஷனது வாயில் இருந்து அக்கினியும் சுவாசத்தில் இருந்து வாயுவும், செவியிலிருந்து திசைகளும் தலையிலிருந்து ஆகாயமும் பாதத்திலிருந்து பூமியும், இதயம் அல்லது மனதிலிருந்து சந்திரனும், கண்களில் இருந்து சூரியனும் தோன்றியதாகக் கூறுகிறது. உபநிடதங்களில் ஐதரேய உபநிடதத்திலும் இத்தகைய கருத்துக் காணப்படுகிறது.
உபநிடதங்கள் அனைத்திற்கும் அடிப்படை யாக உள்ள பரம் பொருளைப் பிரஹ்மம் என்று அழைக்கின்றன. பிரஹ்மம் என்பது அனைத்தின் தோற்றம், வளர்ச்சி, ஒடுக்கத்திற்குக் காரணமாக உள்ள பொருள் என்ற அர்த்தத்திற் கையாளப்பட்டுள்ளது. சதபதப் பிராமணத்தில் பிரஜாபதி பிரஹ்மத்தைப் படைத்ததாகவும், பிரஹ்மம் தேவர்களைப் படைத்து, அவர்கள் வாழ்வதற்கு இருப்பிடங் களாக உலகைச் சிருஷ்டித்ததாகவும் குறிப்புக்கள் காணப்படு

கின்றன. ஏதோ ஒரு வகையில் சிருஷ்டி பற்றிய கருத்துக்கள் மக்கள் மத்தியில் பல்வேறு எண்ணக்கருத்துக்களாக, கதைகளாக இடம் பற்றதைக் காண்கிறோம். காட்சிக்குப் புலனாகாத ஒர் அடிப்படைச் சக்தியே சிருஷ்டிக்குக் காரணம் என்று நம்பப்பட்டது. இங்கு பிரஹ்மம் என்பது ஏனைய சிருஷ்டி தெய்வங்கள் எல்லாவற்றையும் தாண்டி முதலிடத்தைப் பெறுகிறது. காலப்போக்கிற் பிரஹற்மம் படைத்தற் தெய்வம் என்ற நிலையிலிருந்து முன்னேறி அனைத்திற்கும் அடிப்படைச் சக்தி என்ற நிலையை அடைய அவன் என்று அழைக்கப்படாது, அது என்று அழைக்கப்படுவதைக் காணலாம்.
வேதங்களைப் பொது நூலாகவும், ஆகமங்களைச் சிறப்பு நூலாகவும் கொண்டது சைவசித்தாந்தம். உலக சிருஷ்டி பற்றிய தத்துவமே சைவசித்தாந்திகளது அடிப்படைக் கொள்கைகள் அனைத்தையும் ஒருங்கே தொடர்புபடுத்தி விளக்கி நிற்பது சிருஷ்டி பற்றிய எண்ணக்கருவே விக்கிரகக் கலையில் ஒப்புயர்வற்ற நடராஜ வடிவத்தின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. சைவசித்தாந்தி களின் கருத்துப்படி உலகம் சிருஷ்டிக்கப்பட்ட தொன்று. அது என்றுமுள்ள உள்பொருள். இதனை சிவஞானபோதம் 1ஆம் சூத்திரம் தெளிவாகக் கூறுகிறது. அவன் அவள் அது வெனும் அவை முவினைமையிற் தோற்றிய திதியே ஒடுங்கி மலத்துளதாம் அந்தம் ஆதி எனமனாா புலவா.
அவன் என்றும், அவள் என்றும் அது என்றும் சுட்டி அறியப்படுவதாகிய இந்த உலகம் தோற்றம், நிலைபேறு, ஒடுக்கம் எனும் முத்தொழில்களை உடைமையினால், அது ஒருவனாற் தோற்றுவிக்கப்பட்ட உள்பொருள். (தோற்றிய நிதி) உலகத்திற்கு அந்தமாக உள்ள பதியே அதன் தோற்றத்திற்கும் காரணம். ஒடுங்கிய சங்காரத்தினல்லது உற்பத்தி இல்லை. என்பது சைவசித்தாந்தக் கருத்து.
சைவசித்தாந்தத்தில் உலக சிருஷ்டியானது எவ்வாறு குயவனால் மண்ணில் இருந்து பானை வடிவமைக்கப்படுகிறதோ அவ்வாறே இறைவ னால் உலக சிருஷ்டி நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.
குசவன் திரிகையில் ஏற்றிய மண்ணைக் குசவன் மனத்துற்றதெல்லாம் வனைவன் குசவனைப் போல் எங்கள் கோன் நந்தி
வேண்டில் அசைவில் உலகம் அது இது ஆமே
என்கிறது திருமந்திரம்
25

Page 32
சிவஞான சித்தியாரும் "மண் மாயையாகத் திரிகைதன் சக்தியாக ஆரியன் குலாலனாய் நின்று ஆக்குவன் அகிலமெல்லாம்” என்று கூறுவது குறிப்பிடத்தக்கது. பானைக்கு மண் ಸ್ಥಿತಿ குயவன் என்பன முறையே தல், துணை நிமித்த காரணமாக இருப்ப பால் உலக சிருஷ்டிக்கு மாயை, றைசக்தி இறைவன் ஆகிய மூன்றும் முதல் துணை நிமித்த
காரணிகளாக அமைகின்றன. சிருஷ்டி தத்துவமும் நடராஜ வடிவமும்
உலக சிருஷ்டி பற்றிய சைவசித்தாந்தக் கொள்கையானது நடராஜ வடிவத்தின் மூலம் நன்கு ಛ&&#? சிவனுக் கமைந்த 64 ர்த்தங்களில் நடனமாடும் நிலையிற் சித்திரிக்கும். மூர்த்தமே. நடராஜ 燃 இது சைவசித்தாந்த தத்துவத்தை வளிப்டுத்து வதுடன், சிற்பக் கலை நியமங்களுக்கமைய, அழகியல் அம்சங்கள் அனைத்தும் பொருந்த வடிவமைக்கப்பட்ட ஒப்பற்ற சிற்ப விக்கிரக வடிவம் ஆகும். பிரபஞ்ச சிருஷ்டியைக் குறிக்கும் இந்நடனம் (Cosmic Dance) ஞானா காசத்தில் சிதம்பரத்தில் (சித்+அம்பலம்) நிகழ்வதாகக் கூறுவது ஐதீகம். : தலங்களில் ஆகாயஸ்தலமாக
ளங்குவது சிதம்பரம்.
இந்து விக்கிரகவியற் கொள்கைப்படி நடராஜ வடிவம் திருவாசிக்குள் வைக்கப்படுகிறது. திருவாசி ரீதியாக பிரபஞ்சத்தைக் ဖွံ့ဖြိုး நீ அதற்குள் சற்று அமிழ்ந்தும், வளிப்பட்டு நிற்ப போல்வும் தோன்றும் நடராஜ உருவம் இறைவன் பிரபஞ்சத்தோடு கலந்தும், அதற்கு அப்பாற்பட்டும் நிற்கும் நிலையைக் குறிக்கிறது. நடராஜரின் வலது பின்கரம் உடுக்கை அல்லது டமரகத்தைத் தாங்கியுள்ளது. டமரஹஸ்தம் உலக சிருஷ்டியைக் குறித்து நிற்கிறது. உலக சிருஷ்டிக்கு ஆதாரமாக இருக்கும் நாதத்தை டமரகம் குறித்து நிற்கிறது. அபயநிலையிலுள்ள வலது முன்கரம் காத்தலை யும் (ஸ்திதி) முயலகன் மேல் ஊன்றிய பாதம் ಆಲ್ಟನ್ಡರಾಯ್ಪ (திரோபவம்) குறித்து நிற்கிறது. அக்கினி ஏந்திய கரம் அழித்தலையும் வீசித்தொங்கவிட்ப்பட்ட கரம் அருளலையும் அது நிற்கிறது. நடராஜவடிவம் இவ்வாறு ஐந தத்துவத்தையே வெளிப்படுத்தி சைவசித்தாந்த சாஸ்திரங்களில் ஒன்றான உண்மை விளக்கம் நடராஜாவடிவம் உணர்த்தும் தத்துவத்தைத் தெளிவாக எடுத்துக் கூறுகிறது:
தோற்றம் துடியதனில் தோயுந் திதி அமைப்பில் சாற்றியிடும் அங்கியிலே சங்காரம் ஊற்றமாம். ஊன்று மலர்பதத்தில் உற்ற திரோதம் முத்தி
26

நான்ற மலர்ப்பதத்தே நாடு.
திருமந்திரம் 9ஆவது தந்திரம் திருக்கூத்துத்தரிசனம் என்றழைக்கப்படும். இது நடராஜ வடிவம் பற்றிய விக்கிரகவியற் பணபுகளையும அதன வததையும விளக்குகிறது. சைவசி நீந்தி ಕ್ಲಿಲ್ಲಿ; மட்டில் உலகம் உள்பொருள் மட்டுமன்றி உலக சிருஷ்டியானது குறிப்பிட்ட உயர்ந்த நோக்கத்தையும் உடையது. காமிக ஆகமம் க்கருத்தைத் தெளிவாக எடுத்துக் கூறுகிறது. "மலபரிபாகம் செய்தற்கே றைவன் ஆன்மாக்கள் அறியாதவண்ணம் மறைந்து நின்று கொண்டு கலப்பில்லாத :: (மோரின் கலப்பின்றி பால் தயிராகப் பரிணமிக்காது) என்ற நியாயத்தினால் மாயாகாரியமான தனு, கரண, புவன போகங்களின் சேர்க்கையைக் காரணமாகக் கொண்ட அநாதிகன்மானுபவரூபமான சம்காரத்தை ஆன்மாக்களுக்குக் கூட்டுவிக்கிறான். இக்கூட்டத்தினால் மலம் பரிபாகம் அடைகிறது. இதனால் ஐந்தொழில்களைச் செய்யும் இறைவன் வழிபடத்தக்கவனாகிறான்." என்கிறது காமிக
ஆகமம்,
வேத உபநிடதங்களை அடிப்படையாகக் கொண்ட சங்கரர அத்துவைதம் 'உலகம் சிருஷ்டிக்கப்பட்டதொன்றல்ல அது ஒரு தோற்றமே எனக் கூறி அதனை மாயை' என்ற பெயரினால் அழைக்கின்றது. உலகத் தோற்றம் பற்றிய சங்கரரது கொள்கை விவர்த்தவாதம் என்றழைக்கப்படும்.
இந்து மதத்தில் சிருஷ்டி பற்றிய தத்துவம் றையுண்மையை நிலைநிறுத்துவதோடு, ஆன்மாக்கள் ஈடேற்றம் பறுவதற்குரிய கருணைகூர் செயற்பாடாகவும் : றது. போன்று கலைச் சிருஷ்டி கூட படைப்பாற்றல் மிக்க ஒரு கலைஞனிடம் இருந்தே தோன்றுகிறது. பிரஜாபதியிடம் இருந்தே இவ்வுலகம் சிருஷ்டிக்கப்படுவது போன்று அற்புதமான கலைஞனிடம் இருந்து புதிய பொருட்கள் சிருஷ்டிக்கப்படுகின்றன். கலைஞன் தன் முடிவற்ற கற்பனா சக்தியின் லம் கலைத்துவமான வேலைப்பாடுகளை வளிப் படுத்துகிறான். கட்டடங்களை நிர்மாணிக்கும் றன் வாய்ந்த கட்டடக் கலைஞர்களும், சிற்பக் கலையில் தேர்ச்சிமிக்க ஸ் த பதகளும் தெய வீக அம் சம பொருந்தியவர்களாகப் போற்றப் படுகின்றனர். படைத்தற் கடவுளான பிரம்மாவின் நான்கு முகங்களில் இருந்தும் விஸ்வகர்மா, மயன், துவஷ்டா, மனு §" நால்வர் தோன்றினர் எனவும் இந்நால்வரின் புத்திரர்களே ஸ்தபதி, சூத்திரகிராகி, வர்த்தகி, தக்ஷன் எனும் நால்வர் எனவும் சிற்ப சாஸ்திர நூல்கள் கூறுகின்றனன

Page 33
மேலும் பூவுலகில் சிற்பக் கலையில் ஈடுபடுவ்ோருக்கு மேற் கூறப்பட்ட நால்வரும் மூலபுருஷர்களாக விளங்குவர் எனவும் கூறப்படுகிறது. சிருஷ்டி என்பது ஒப்புயர்வற்ற படைப்பாற்றல் மூலம் நடைபெறுவது. இதனால் கலைஞர்களும் தெய்வீகத்தன்மை உடையவர் களாகவும், ஒரு யோகியின் நிலையை ஒத்தவர்களாக சிறப்பித்துக் கூறப்படுகின்றனர். மனவொருமைப்பாடு, புலனடக்கம், ஆழ்நிலைத் தியானம் போன்ற பயிற்சிகளினால் தெய்வ மூர்த்தங்களுக்குரிய சிற்ப விக்கிரகவியற் பண்புகளையும், தியான மந்திரங்களையும் மனதில் பதிய வைத்துத் தம்மகத்தே பதிந்த அப்படத்தைப் புறத்தே பிரதியுருச் செய்கின்றனர் சிற்பக்கலைஞர்கள். கலை உருவாக்கம் என்பது தூய உளச் செயற்பாடாகும்.
தகவல்கள் சு(
“ஒரு கருத்தை எடுத்துக் ெ உனது வாழ்க்கை மயமாக்குக! ஒரு கருத்தை ஒட்டியே வாழ்ந் நரம்புகள், நாடிகள் முதலிய ஒள் கருத்தே நிறைந்து நிலவட்டு கருத்துக்களை தவிர்த்து விடுக! (
“உலகத்து மக்கள் எத் சொல்லுகிறார்கள், செய்கிற கவனிக்கப்படாமல் போகின்றது நினைவில் நிற்கின்றது. நினைவு பதிந்து வைக்கப்படுகிறது. பதிந் எஞ்சியிருக்கிறது. எஞ்சியுள்ளவ யாளருக்குத் தெரிகின்றது. தெ முறையாக எடுத்துச் செல்லப்பு கிடைத்துள்ள தகவல்கள்மிகமிக

இந்து மதக் கொள்கைப்படி உலசிருஷ்டி ஆன்ம ஈடேற்றத்தின் பொருட்டு நிகழ்த்தப்படுவது. கலை சிருஷ்டி கூட ஒரு வகையில் பார்வையாளர் ரசிகர்களது உள்ளத்தைப் பண்படுத்தி, மன ஒருமைப்பாடு, புலனடக்கத்திற்குத் துணையாகிறது. அந்த வகையில் கலை ரசனைப் பயிற்சியும் புறஉலகத் துன்பங்களில் இருந்து ஒருவனை விடுவித்து, தூய உள்ளத்துடன் உறுதியான மனத்துடன் ஆக்கத்திறனை வளர்த்தற்கும், இறை அனுபவத்தைப் பெறுவதற்கும் துணையாகிறது. எனவே, சிருஷ்டித் தத்துவம் இந்து மதக் கோட்பாடுகளில் முக்கியத்துவம் பெறுவதோடு இந்துக் கலைக் கோட்பாடுகளை விளங்கிக் கொள்வதற்கும் பெரிதும் உதவுகிறது.
நக்கமானவை
காள்க! அந்த ஒரு கருத்தையே அதையே கனவு காண்க! அந்த து வருக முளை, தசைகள், வ்வொரு பகுதியிலும் அந்த ஒரு ம். இந்த நிலையில் மற்றக் வெற்றிக்கு வழி இதுதான்”
தனையோ எண்ணுகிறார்கள், ார்கள். அதில் பெரும்பகுதி கவனித்தவைகளில் ஒருபகுதி ரில் நிற்பவைகளில் ஒரு பகுதி து வைத்தவைகளில் ஒரு பகுதி )றில் ஒரு பகுதியே ஆராய்ச்சி ரிந்தவைகளில் ஒரு பகுதியே டுகின்றது. அதாவது நமக்குக் ச் சுருக்கமானவை”
27

Page 34
தொல்காப்பியர் : த தொல்காப்பியர் பற்றிய தொன் அடிப்படையிலான
தொன்மங்கள் முற்றுமுழுதான நம்பகத் தன்மை வாய்ந்தன அல்ல; ஆயினும் முடிவு காணாத வரலாற்று ஆய்வு என்னும் பெருங்கடற் பயணத்தில், தொலைதூரத்தே தெரியும் பொட்டு வளிச்சமாக அமைவன அத் தொன்மங்களே யாம். இந்திய புராணங்களுடே பண்டைய இந்தியாவின் அரசியல், பண்பாட்டு வரலாற்று உண்மைகள் சில, குறியீட்டுப்பாங்கில் அமைந்துள்ளமையை வரலாற்றறிஞர்கள் கண்டு, காட்டியுள்ளார்கள்.
புராதன இந்தியாவின் அரசியல், பண்பாட்டு வரலாறுகள் மாத்திரமன்றி நவீனகாலத்துக்கு முந்திய இந்திய அறிஞர்கள், கலைஞர்களது வரலாறும்கூட இருள்மண்டியதாகவே உள்ளது அந்நிலையில் இடையிடையே ஒளிந்து மறையும் பொட்டு வெளிச்சங்கள் போல அவர்கள் பற்றிய கர்ணபரம்பரைக் கதைகள் சில காணப்படுகின்றன.
இந்திய அறிஞர்கள், கலைஞர்கள் பற்றிய இப்பொதுவிதிக்கு உட்பட்டவராகவே, தமிழின் (இன்றுள்ளவற்றுள்) தொன்மையான இலக்கண நூலை எழுதியவரும் உலகின் தலைசிறந்த மொழியிலறிஞர்களுள் ஒருவருமாகிய தொல் காப்பியரும் விளங்குகிறார். தொல்காப்பியரது இயற்பெயர் எது, காலம் எது என்பன முதற்கொண்டு அவர் பற்றிய செய்திகள் பலராலும் பலவாறாக முன்வைக்கப்பட்டுள்ளன தொல்காப்பியம் என்ற நூலை எழுதியவ ஒருவரல்லர்; அது பலரது கூட்டுமுயற்சி என்பது வரையில் அவர் பற்றி நிலவும் கருத்துக்கள் பலதரப்பட்டன.
தொல்காப்பியம் என்ற நூலை வைத்து கொண்டு அதன் ஆசிரியரது அறிவாளுமையை உணர்ந்து கொள்வதில் சிரமம் அதிகமில்லை நூலுக்குப் புறம்பாக அவரை அறி முனைவதில்தான் அதிகம் சிரமப்படவேண் யுள்ளது. தொல்காப்பியரது வரலாற்றை - அறி முயல்வார்க்கு அந்தகார இருளினூடே ஒ( பொட்டு வெளிச்சமாக அவர் பற்றியதா கர்ணபரம்பரைக் கதையொன்று காணப்படுகிறது தொல்காப்பியத்துக்கு (சிறப்புப்பாயிரத்துக்கு நச்சினார்க்கினியர் எழுதிய உரையிலேே

மிழ் மரபின் காவலர் )த்தை மீள்வாசிப்புச் செய்வதன்
ஒரு முன்மொழிவு
- 5 இரகுபரன்
அதிஷ்ட வசமாக அக்கதை எமக்குக் கிட்டியுள்ளது. அறிஞர்களாற் பெரிதும் பொருட்படுத்தப்படாத அக்கதையை மீள்வாசிப்புச் செய்வதன்மூலம் தொல்காப்பியரின் ஆளுமையை இனங்கண்டுகொள்ள வாய்ப்பிருப்பதாகப்படும் புலப்பாட்டினாலேயே அம்முயற்சி இங்கு மேற் கொள்ளப்படுகிறது.
தொல்காப்பியரது நூலுக்கு அவரது சகபாடியான பனம்பாரனாராற் செய்யப்பட்ட தாகக் கூறப்படும் சிறப்புப் பாயிரம் தொல் காப்பியரின் அறிவாளுமையைப் புலப்படுத்தும் (அவரது நூலுக்குப் புறம்பான) சான்றுகளுள் நம்பகத்தன்மையும் முக்கியத்துவ மும் வாய்ந்தது. மிகப் பிரசித்தமான அச்சிறப்புப் பாயிரம் வருமாறு:
வடவேங்கடம் தென்குமரி
ஆயிடைத்
தமிழ்கூறு நல்லுலகத்து வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின் எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு முந்துநூல் கண்டு, முறைப்பட எண்ணி, புலம் தொகுத்தோனே, போக்கறு பனுவல் நிலம்தரு திருவிற் பாண்டியன் அவையத்து, அறம் கரை நாவின் நான்மறை முற்றிய அதங்கோட்டு ஆசாற்கு அரில் தபத் தெரிந்து, மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி, மல்குநீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் எனத் தன்பெயர் தோற்றிப் பல்புகழ் நிறுத்த படிமையோனே.
இச்சிறப்புப் பாயிரத்தில் அதங்கோட்டாசாற்கு அரில்தபத் தெரிந்து என்று அமைந்துள்ள தொடருக்கு விளக்கம் செய்ய முற்பட்ட நிலை யிலேயே, நச்சினார்க்கினியர் தொல்காப்பியர் சம்பந்தமான கதையை முன்வைக்கிறார்.
அது வருமாறு:
"பாண்டியன் மாகீர்த்தி இருபத்துநாலாயிரம் யாண்டு வீற்றிருந்தானாதலின் அவனும் அவன்
அவையிலுள்ளோரும் அறிவுமிக்கிருந்தலின் அவர்கள் கேட்டிருப்ப அதங்கோட்டாசிரியர்

Page 35
கூறிய கடாவிற் கெல்லாங் குற்றந்தீர விடைகூறுதலின் அரிறப' என்றார்.
“அகத்தியனார் அதங்கோட்டாசிரியரை நோக்கி நீ தொல்காப்பியன் செய்த நூலைக் கேளறி க‘ வெனிறு கூறுதலானும் , தொல்காப்பியனாரும் பல்காலுஞ்சென்று யான் செய்த நூலை நீர் கேட்டல் வேண்டும்’ என்று கூறுதலானும், இவ்விருவரும் வெகுளாமல் இந்நூற்குக் குற்றங் கூறிவிடுவலெனக் கருதி அவர் கூறிய கடாவிற்கெல்லாம் விடைகூறுதலின் அரிறபத் தெரிந்து' என்றார்.
"அவர் கேளன்மினென்றற்குக் காரண மென்னையெனின், தேவரெல்லாருங்கூடி யாஞ் சேரவிருத்தலின் மேருத் தாழ்ந்து தென்றிசை உயர்ந்தது, இதற்கு அகத்தியனாரே ஆண்டிருத்தற் குரியரென்று அவரை வேண்டிக் காள்ள, அவருந்தென்றிசைக்கட் போதுகின்றவர் கங்கையாருழைச்சென்று காவிரியாரை வாங்கிக் கொண்டு, பின்னர் யமதக்கினியாருழைச்சென்று அவர் மகனார் திரணதுாமாக்கினியாரை வாங்கிக்கொண்டு, புலத்தியனாருழைச்சென்று அவருடன் பிறந்த குமரியார் உலோபா முத்திரையாரை அவர் கொடுப்ப நீரேற்று இரீஇப், பெயர்ந்து, துவராபதிப்போந்து நிலங்கடந்த நெடுமுடியண்ணல் வழிக்கண் அரசர் பதினெணி மரையும் பதினெணி கோடி வேளிருள்ளிட்டாரையும் அருவாளரையுங் கொண்டு போந்து, காடுகெடுத்து நாடாக்கிப் பொதியின் கணிருந்து, ராவணனைக் கந்தருவத்தாற் பிணித்து, இராக்கதரை ஆண்டு இயங்காமை விலக்கித் திரணதுரமாக்கினியா ராகிய தொல்காப்பியனாரை நோக்கி, நீ சென்று குமரியாரைக் கொண்டு வருக வெனக்கூற, அவரும் எம் பெருமாட்டியை எங்ங்னங் கொண்டு வருவலென்றார்க்கு முன்னாகப் பின்னாக நாற்கோல்நீளம் அகலநின்று கொண்டுவருகவென அவனும் அங்ங்னங் கொண்டு வருவழி, வையை நீர்கடுகிக் குமரியாரை ஈர்த்துக் கோண்டுபோகத், தொல்காப்பியனார் கட்டளை யிறந்துசென்று ஓர் வெதிர்ங்கோலை முறித்து நீட்ட, அதுபற்றியேறி னார்; அது குற்றமென்று அகத்தியனார் குமரியானரயுந் தொல்காப்பியனாரையுஞ் "சுவர்க்கம் புகாப்பிர்” எனச் சபித்தார்; யாங்கள் ஒருகுற்றமுஞ் செய்யாதிருக்க எங்களைச் சபித்தமையான் எம்பெருமானுஞ் சுவர்க்கம் புகாப்பிர் என அவர் அகத்தியனாரைச் சபித்தார். அதனான் அவர் வெகுண்டாராதலின் அவன் செய்த நூலைக் கேளற்க வென்றார்” (நூல் - நச். சிறப்புப்பாயிர உரை)
அகத்தியர், இடைக்காலத் தமிழின் வைதிக நூல்களிலும் அவற்றுக்குப் பிற்பட்டவனாய்

அவைதிகர்களால் ஆக்கப்பட்ட நூல்களிலும் கூட தமிழ்மொழியின் முன்னோடியாக - பிதாமஹராக - வளர்ப்புத் தந்தையாகப் போற்றப்படுகிறார். தொல் காப்பியருக்கும் ஆசிரியராக அகத்தியரே கொள்ளப்படுகிறார். இக்கதையும் அவ்வாறே கூறுகிறது. ஆயினும் இக்கதை உணர்த்தி நிற்கும் அகத்தியர் - தொல்காப்பியர் ஆகியோருக்கிடை யிலான ஆசிரிய மாணவ உறவு, பாரம்பரிய இந்தியக் கல்வி மரபுக்கு முற்றிலும் பொருந்தாத ஒரு உறவாகவே புலப்படுகிறது. தன் வித்தைக்கு ஆதாரமானது என்றுகூடப் பாராது ஆசிரியர் கேட்டுவிட்டாரே என்பதற்காக, தன் விரலையே வெட்டிக் கொடுக்கும் ஏகலைவனையும் ஆசிரியரின் தூக்கம் கலைந்துவிடக்கூடாது என்பதற்காக தாங்கொணாத வலியையும் தாங்கிநிற்கும் கன்னனையுமே இலட்சியப்படுத்தி நிற்கும் இந்தியக் கல்விமரபு வலியுறுத்துவது போல,
"இரு என இருந்து ஏடு அவிழ் என அவிழ்த்துச் சொல் எனச் சொல்லி செல் எனச் செல்லும்”
இலட்சிய மாணவனாகத் தொல்காப்பியரை இக்கதையிலே காணமுடியவில்லை. தொல் காப்பியர் அகத்தியரிடம் பாடங்கேட்க ஒருப்பட்டாராயினும் அவரது அடக்குமுறையை அங்கீகரிக்கத் தயாரானவராக இல்லை என்பதும், தொல்காப்பியரின் தனித்துவமான வளர்ச்சியில் மனம் மகிழும் நல்லாசிரியராக அகத்தியர் இல்லை என்பதும், இக்கதையால் உணரப்படும் உண்மைகள். இவற்றை உணர்ந்த நிலையில் இந்தியப் புராண மரபு அகத்தியரைச் சித்திரிக்கின்ற முறைமையையும் அதனை நவீன வரலாற்றாய்வாளர்கள் விளங்கிக் கொள்ளும் வகையினையும் அறிந்துகொள்வது பயன்மிக்க தாகலாம்.
"இதிகாசங்களிலும் புராணங்களிலும் தமிழ் இலக்கியங்களிலும் முதன்மையான இடம்பெற்றுள்ள அகத்தியர் பற்றிய பாரம்பரியக் கதைகள் எழுவதற்கு அடிப்படையாகவிருந்த வரலாற்று நிகழ்ச்சிகள் தென்னக்த்தில் ஆரியப்பண் பாடும் நாகரிகமும் பரவுவதற்காகிய பேரியக் கத்திலிருந்து எழுந்தவையாகும். அகத்திய முனிவர் ஒரு குடத்திலிருந்து (கும்பம்) தோன்றியவர் என்று இருக்கு வேதத்தில் ஒரு சிறு குறிப்புக் கூறுகின்றது; எனினும் அகத்தியர் வரலாற்றுப் புகழ் வாய்ந்த ஒரு மனிதன் ஆவார்; இவர் கவிதை இயற்றினார் எனவும், இவருக்கு மனைவியும் ஒரு சகோதரியும் இருந்தனர் எனவும் ஒரு
29

Page 36
30
மகனும்கூட இருந்திருக்கலாம் எனவும் இல்லறத்தோடு கூடிய கட்டுப்பாடான வாழ்வை இவர் மேற்கொண்டார் எனவும் பாராட்டப்படுகிறார். மகாபாரதக் கதையில் அகத்தியருக்கும் தென்னகத்திற்குமிருந்த தொடர்புவிரிவாகக் கூறப்பட்டுள்ளது. விதர்ப்பநாட்டு இளவரசி உலோபா முத்திரையை இவர் திருமணஞ் செய்தார். முறைப்படி திருமணம் செய்வதற்கு முன் அவள் தன் தந்தையாருடன் வாழ்ந்த காலத்தில் அனுபவித்த அணிகலன்களையும் உல்லாச வாழ்வையும் அகத்தியமுனிவர் தமது துறவறத்தைப் பாதிக்காத வகையில் பெற்றுத்தர வேண்டும் என்ற நிபந்தனையை விதித்தாள். எங்காவது பெருந்தொகையான நன்கொடையைப் பெற்றுத்தான் இவளுடைய விருப்பத்தை நிறைவேற்ற முடியும் என்பதை அகத்தியர் உணர்ந்தார். சூரிய அரசர்கள் மூவரை இதற்காக நாடியும் பலன்கண்டிலர்; பின் அகத்தியரும் அவ்வரசர் மூவரும் மணிமதி என்னும் நாட்டை ஆண்ட தைத்திய அரசனான 'இல்லவனிடம் சென்றனர். இல்லவன் பிராமணர்களின் வைரி. இந்திரனைப் போன்ற ஒரு
பருமகனைப் பெறுவதற்கு வரம் அருளுமாறு முன்பு ஒருகால் ஓர் அந்தணனை வேண்டி இல்லவன் ஏமாற்றம் அடைந்தான். அதனால் பிராமணர்மீது வஞ்சம் தீர்க்க முற்பட்ட இல்லவன் ஓர் அபூர்வ வழியில் தன் வஞ்சத்தைத் தீர்த்து வந்தான். தனது
ளைய சகோதரரான வாதாபியை ஆட்டுக்கடாவாக மாற்றி அவன் ஊனைப் பிராமணருக்கு வழங்கியபின் உயிர் பெற்ற்ெமும்படி அவர்களை அழைப்ப துண்டு. இல்லவன் இயமலோகத்தில் உள்ள வர்களைக்கூடத் தன் குரல்கொண்டு அழைக்கும் பேராற்றல் படைத்தவன். ஆகவே உணவாகச் சென்ற வாதாபி, அண்ணன் குரல் கேட்ட ம்ாத்திரத்திலே பிராமணருடைய வயிற்றைக் கிழித்துப் புன்முறுவல் பூத்தபடி வெளிவருவான். இவ்வாறு இரு சகோதரர்களும் பல பிராமணரின் உயிரைக் குடித்தனர். அகத்தியரும் மூன்று அரசர்களும் இல்லவனைச் சந்தித்தபோதும் இதே திருவிளையாடலைச் செய்ய முற்பட்டான். வாதாபியின் ஊன்கொண்டு விருந்து பரிமாறப்பட்டபோது அரசர்கள் கவலை யுற்றனர். ஆனால் அகத்தியரோ உணவு அனைத்தையும் உண்டருளினார். இல்லவன் வாதாபிக்கு அழைப்பு விட்டதும்

அகத்தியருடைய வயிற்றிலிருந்து காற்று மாத்திரம் வெளிவந்தது; வாதாபி அகத்தியர் வயிற்றில் ஜீரணித்து விட்டான். . .
மேற்குத் தக்கணத்தில் ஆதிச் சாளுக்கியரால் அமைக்கப்பட்ட அரண் நகரமாக வாதாபி இருந்தது. இதுவே இன்று பாதாமி என்று அழைக்கப்படும் இடமாகும். தைத்திய அரசர்களிருவரதும் ஆட்சிபீடம் இங்குதான் இருந்திருக்க வேண்டும் எனக் கொள்வ தாயின் அகத்தியர் பற்றிய இக்கதை தென்னகத்துடன் அகத்தியருக்கு ஏற்பட்ட தொடர்பின் தொடக்கத்தைக் குறிப்பதாகும். (நீலகண்டசாஸ்திரி, K.A. பக் 77, 78)
அகத்திய வருகைக்கு முன்புவரையில் வாதாபி ஆரிய ஆதிக்கத்தை எதிர்த்து நின்றது என்பதும் அகத்தியரது ஆளுமை ஆரியரல்லா தாரைத் தோல்விகாணச் செய்தது என்பதுமே இல்லவன், வாதாபி கதையால் உணரத்தக்கவை. இதுபோலவே கைலாசத்தில் சிவனின் திருமணம் காணத்திரண்ட தேவர்களதும் முனிவர்களதும் பாரத்தால் வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்ததென்றும் உலகைச் சமப்படுத்த சிவன் அகத்தியரைத் தென்திசைக்கு அனுப்பிவைத்தார் என்றும் தமிழில் வழங்கும் கதையால் தென்னாட்டின் மேன்மையும் அதைப் பொறுக்காத ஆரிய மேலாண்மையுணர்வும் புலப்படுகின்றன எனலாம். (நச்சினார்கினியார் தரும் தொல் காப்பியர் கதையில் சிவனது திருமணம் பற்றிய குறிப்பு இல்லாமல் வெறுமனே 'தேவரெல்லாருங் கூடி யாம் சேர இருத்தலின் மேருத்தாழ்ந்து தென்திசை உயர்ந்தது, இதற்கு அகத்தியனாரே ஆண்டிருத்தற்குரியர் என்று அவரை வேண்டிக் கொண்டதாக கூறப்படும் முறைமையில் தேவர்கள் - ஆரியர்கள் திட்டமிட்டு ஓர் இயக்க மாகச் செயற்பட்டார்களென்றும் அதற்குத் தலைவராக அகத்தியர் விளங்கினார் என்றும் பொருள் தொனித்தல் காணலாம்.) இருக்கு வேதத்தில் ஆரியர்களுக்கு எதிரிகளான தசியுக்களின் மேம்பட்ட வீடுகளை ஒத்ததான வீடுகள் எமக்கு வேண்டும். என்றவாறான பிரார்த்தனைகள் காணப்படுவதாக அறிஞர்கள் சுட்டிக் காட்டுவது ஈண்டு கருதத்தக்கது. தென்னாடு நோக்கி வந்த அகத்தியரை விந்தியமலை வழிமறித்தது என்றும், அகத்தியர், தம் ஆற்றலால் அதனை அடக்கினார் என்றும், அக்கதை மேலும் தொடரும். ஒரு காலத்தைய ஆரிய நாட்டின், அங்கீகரிக்கப்பட்ட தெற்கெல்லை யாக விந்தியமலைத் தொடரே விளங்கியது.

Page 37
அகத்தியரின் வருகையை விந்தியமலை தடுத்தது என்னும்போது ஆரிய ஆதிக்கத்துக்கு எதிரான இந்தியாவின் பூர்வீகப் பண்பாட்டு இனக்குழுக்களின் எதிர்ப்புணர்வே புலப்படுத்தப் படுகிறது எனலாம். அகத்தியர் கடலைக் குடித்தார் எனவும் கதை வழங்குகிறது.
"விந்தியமலைத் தொடருடனும் கடல்நீர் பருகிய நிகழ்ச்சியுடனும் அகத்தியருக்கு உள்ள தொடர்பு ஆரிய கலாசாரம் விந்தியத்துக்கும் தெற்கே சென்று கடல் கடந்து தீவுகளையும், தீபகற்பங்களையும் தாண்டி இந்தோசீனம் வரையும் வியாபித்தமை யைக் குறிக்கும் உருவகக் கதைகள் ஆகும்.
வரலாற்று நினைவுகளின் அடிப்படையிலே அகத்திய மரபுக் கதைகள் எழுந்தன என்பது தெளிவு. தென்னிந்தியாவில் போராட்டம் நிகழ்த்திய ஆதிகால ஆரிய வீரர்களுக்கு அகத்தியர் ஒரு நல்ல உதாரணமாவார் .
வேத சூத்திரங்களின் ஆசிரியரும் உலோபா முத்திராவின் கணவரும் தென்னிந்தியாவில் ஆரியமய இயக்கத்தை முன்னின்று நடத்திய வரும் ஒருவரே எனவும் இத்தகைய அகத்தியரை மையமாகக்கொண்டு காலப் போக்கில் கதைகள் பலவாகப் பெருகி அவர் தொடங்கிய இயக்கத்தின் வளர்ச்சி யைப் பிரதி பலிக்கும் வகையில் ஏனைய கதைகள் எழுந்தன எனவும் கொள்வது பொருத்தமாகும் (நீலகண்ட சாஸ்திரி K.A. 1966 Լյé. 78, 79)
அகத்தியரை ஆரியமயவாக்க இயக்கத்தின் தலைவராகக் கொண்டு மேற்படி கதைகள் கிளைத்தன என்னும்போது தொல்காப்பியர் பற்றிய கதை, ஆரியமயமாக்கலை முறியடிக்கப் போராடிய தென்னாட்டு எதிர்ப்பியக்கத்தின் தலைவராகத் தொல்காப்பியரைச் சித்திரித்தது அல்லது உருவகப்படுத்தியது எனக்கொள்வதில் தவறேதும் இருக்க முடியாது.
தொல்காப்பியர் பற்றிய கதையில், அகத்தியர், "துவராபதிப் போந்து, நிலங்கடந்த நெடுமுடியண்ணல் வழிக்கண் அரசர் பதினெண் மரையும் பதினெண்கோடி வேளிர் உள்ளிட்டாரையும் அருவாளரையும் கொண்டுபோந்து, காடுகெடுத்து நாடாக்கிப் பொதியின்கண் இருந்து, இராவணனைக் காந்தர்வத்தாற் பிணித்து, இராக்கதரை ஆண்டு இயங்காமை விலக்கியதாக வரும் பகுதிகளும்

பண்டைய இந்தியாவில் நிகழ்ந்த ஆரிய மயமாக்கலையே உணர்த்துவன. நிலங்கடந்த நெடுமுடியண்ணல் - கிருஷ்ணன்; அவன் வழியினராகக் குறிப்பிடப்படுபவர்கள் யாதவ குலத்தவர்கள்; அவர்கள்மேலதான அகத்தியரின் ஆதிக்கம் என்பது இந்தியப் பூர்வீக குடியொன்றின்மேலான ஆரிய ஆதிக்கத்தையே குறிப்பதாகும்.
"கிருஷ்ண என்றபெயர் முதன்முதற் குறிப்பிடப் படுவது இந்திரனைப் போற்றும் இருக்குவேத வாக்கிய மொன்றிலாகும். கிருஷ்ணனின் மனைவியரை இந்திரன் கொன்றொழித்ததாக அதிற் குறிப்பிடப் பட்டுள்ளது. அதன் பின்னர் 50,000 கிருஷ்ணர்களை இந்திரன் கொன்றதாகவும் கூறப்படுகிறது. அந்தக் கிருஷ்ணர்கள் இருக்கு வேதப்படி இராட்சதர்கள் ஆவார். ஆரியர்கள் இந்திரனைப் பிரியத்தோடு தம் தலைவனாகக் கொண்டாடியமையும் தங்கள் பரவலையும் ஆதிக்கத்தையும் எதிர்த்து நின்றவர்களை இராட்சதர் என்றும் அசுரர் என்றும் இழித்தொதுக்கியமையும் பரவலாக அறியப்பட்டனவாகும்.
"கிருஷ்ண வழிபாடு நிலைபெற்ற பின்னர் அவனைப் பற்றிப் பல புராணங்கள் எழுதப்பட்டன. அவற்றின்படி, கிருஷ்ணன் யாதவ வம் ஸத்தைச் சேர்ந்தவன், யாதவர்கள் மதுராபுரியில் யமுனா நதியின் மேற்குப் பக்கத்திலுள்ள பிருந்தாவனத் திலும் அதன் மறுகரையிலமைந்த கோகுலத்திலும் வாழ்ந்த ஆயர்குலத்தின ராவர.
"கிருஷ்ண என்பது, பசுவினன வழிபட்ட முக்கியத்துவம் வாய்ந்த ஒரு குழுவின ருக்கும், ஆரியர் வருவதற்கு முன்னர் இந்தியாவில் வாழ்ந்திருந்து அவர்தம் படையெடுப்பை மும்முரமாக எதிர்த்த ஒரு வம்சாவழியினருக்கும் வழங்கிய பெயரா தல் வேண்டும் என்ற கருத்து ஒதுக்க வியலாததொன்றாகவே தோன்றுகிறது. (தில்லைநாதன், சி. பக். 58, 59)
அருவாளர் என்போர் ஆந்திரராவர். அவர்கள் திராவிடர்கள்; பண்டைய ஆரிய நூல்களில் தசியுக்கள் என இழித்துரைக்கப்பட்ட வர்களுள் இவர்களும் அடங்குவர். இராவணனை அகத்தியர் வெற்றிகொண்டமையும் இராக்கதரை ஆண்டு இயங்காது விலக்கியமையும் பற்றி செய்திகளையெல்லாம் இங்கு விபிரித்தல் மிகை.
31

Page 38
தொல்காப்பியர் பற்றிய கதையில் வரும் *அவரும் (அகத்தியர்) தென்திசைக்கட் போது கின்றவர் கங்கையாருளைச் சென்று காவிரியாரை வாங்கிக் கொண்டு” என்ற பகுதியும் முக்கியத்துவ முடையதாகவே படுகிறது. உலக நாகரிகங்கள் ஆற்றுப்படுகைகளையே அடிப்படையாக் கொண் டன. அவ்வகையில் கங்கைக்கரை, காவிரிக்கரை நாகரிகங்களில் ஏற்பட்ட ஆரியமயமாக்கம் இங்கு குறியீடாக்கப்பட்டுள்ளதெனலாம்.
"பின்னர் யமதக்கினியாருழைச் சென்று அவர் மகனார் திரணதுாமாக்கினியாரை வாங்கிக் கொண்டு “என்ற பகுதியில் திரணதுரமாக்கினி எனத் தொல்காப்பியர் குறிப்பிடப்படுகிறார். புராணங்களில், யமதக் கனிமுனிவருடைய மகனாகக் குறிப்பிடப்படுபவர் பரசுராமர். தொல்காப்பியர் பற்றிய கதை அவரைப் பரசுராமராக உருவ கித்தது போலும், எதிர்ப்புணர்வுக்கும் வீரத்துக் கும் பேர் பெற்றவர் பரசுராமர். அவர் சத்திரிய வம்சத்தின் சத்திராதியாகச் சித்திரிக்கப்படுபவர். இராமாயணத்தில் இராமனால் வெல்லப்பட்ட மூவருள் ஒருவர்; மற்றைய இருவரான இராவணனும் வாலியும் வெளிப்படையாகவே திராவிடராக உணரப்படுபவர்கள். அந்தவகையில் பரசுராமரையும் ஆரியரல்லாதவராக - திராவிடராக - கொள்வதற்கு இடம் உண்டு. கர்ணபரம்பரைக் கதைகளின்படி பரசுராமர் கேரள நாட்டோடு தொடர்புறுத்திப் பேசப்படுபவர் என்ற உண்மை யும் இங்கு மனங்கொள்ளத்தக்கது. அதேவேளை, வையாபுரிப்பிள்ளை, தொல் காப்பியரை கேரளத்தைச் சார்ந்தவராக - திருவிதாங்கோட்டைச் சேர்ந்தவர் என்று - ஊகிப்பதும் மனங்கொள்ளத் தக்கதே.
“பரசுராமன், தன்தாய் இரேணுகாவைத் தன் தந்தை யமதக்கினியின் ஆணையின்பேரில் கொலை செய்தான்; இந்தப் பாவத்துக்குப் பிராயச் சித்தமாகப் பிராமணர்களின் எதிரிகளாகிய சத்திரியர்களை வேருடன் களைய வேண்டியவனானான். 21 படையெடுப்புக்கள் மூலம் தனது நோக்கத்தை நிறைவேற்றி விசுவாமித்திரர் வேண்டு கோளின் படி முழு உலகத்தையும் பிராமணர்களுக்குத் தாரைவார்த்துக் கொடுத்தான் அதன்பின் தான் வசிப்பதற்குத் தனக்கென ஓரிடமின்றித் தத்தளித்த பரசுராமன் சுப்பிரமணியக் கடவுளின் துணை வேண்டித் தவமிருந்து கடல்களுக்கெல்லாம் தெய்வமான வருணனின் கிருபையால் வசிப்பதற்குச் சிறுதுண்டு நிலம் பெற்றான். கையிலிருந்த பரசுவை (கோடரி) விட்டெறிந்து அந்நிலத்தின் பரப்பைக்
32

காட்டும் படி கேட்கப் பட்டானி , கன்னியாகுமரி தொட்டுக் கோகர்ணம்வரை கோடரி சென்றது. இப் பகுதியே கடலிலிருந்து மீட்கப்பட்ட பரசுராமன் நாட்டின் முக்கியமானது (நீலகண்ட g|Tórigif, K.A., L. 80)
பரசுராமனால் மீட்கப்பட்ட பகுதி என்பது ஆரிய ஆதிக்கத்தின் கடும்பிடியிலிருந்து ஓரளவில் காக்கப்பட்ட நிலப்பரப்பைக் குறிப்ட தகுலாம். கன்னியாகுமரி தொட்டுக் கோகர்ணம் வரை 'என்று குறிப்பிடப்படும் பகுதி, தொல் காப்பியச் சிறப்புப்பாயிரம் சுட்டும்"வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகத்துக்கு ஏறக்குறையச் சமனானது எனலாம்.
பரசுராமர் தன்மான வீரராக இருந்த போதிலும் அவரிடம் இருந்த பிராமணச் சார்பும் கருதப்பட வேண்டியதாகும். தொல்காப்பியரது நூலை நோக்கும்போதும் அவர், தமிழின் தனித்துவங்களை வலியுறுத்தும் அதேவேளை தவிர்க்கமுடியாத இடங்களில் தமிழில் ஏற்கனவே நிகழ்ந்துவிட்ட வடமொழிச் செல்வாக்கை ஏற்றுக்கொண்ட ஒருவராகவே புலப்படுகிறார். 'கடிசொல் இல்லைகாலத்துப் படினே’ (தொல் சொல். 435) என்ற நூற்பா, மொழிமாற்றங்கள் நீண்டகாலமாகத் தொடர்ந்து நிலவி, மக்களை மயப்பட்டுவிடின் அவை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியனவே என்ற மொழியியல் உண்மையை உட்கொண்டதாக அமைந்ததே - தமிழின் சொல் வகைக்குள் திசைச் சொல்லையும் வடசொல்லை யும் தொல்காப்பியர் உள்ளடக்குவதை இத்தகு மனப்பாங்கின் விரிவாகவே கொள்ளவேண்டும். மொழியளவில் மாத்திரமன்றி பண்பாட்டைப் பொறுத்த வரையிலும் காலவோட்டத்தில் தமிழ்மரபோடு தமிழ்மரபாய்க் கலந்துவிட்ட சிலமரபுகளைத் தொல்காப்பியர் ஏற்றுக்கொண்டே யுள்ளார் என்பதனை சிறப்பாகப் புறத்திணையினை நோக்கின் சிலவற்றை அறியலாம். அன்றியும் தொல்காப்பியர் தமிழ் மரபுகள் சிலவற்றை வடநாட்டு மரபுகளோடு ஒப்பிட்டும் விளக்க முயன்றுள்ளார்.
உ+ம் .
காமக்கூட்டம் காணும்காலை
மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள் துறைாமை
நல்லியாழ்த்துணைமையோர் இயல்பே.
(தொல். பொரு.கள. சூ.1)
இவற்றுக்கு மேலாக தமிழில் இன்றி வடமொழிவழியாகவே அறியத்தக்க உண்மை களையும் வெளிப்படையாகவே ஒத்துக்
கொள்கிறார்.

Page 39
உ+ம்: எல்லா எழுத்தும் வெளிப்படக் கிளத்து சொல்லிய பள்ளி எழுதரு வளியின் பிறப்பொடுவிடுவழி உறழ்ச்சி வாரத்து அகத்தெழு வளியிசை அரில்தபநாடி அளபிற்கோடல் அந்தணர் மறைத்தே அஃதிவண் நுவலாது எழுந்துபுறத்து இசைக்கும் மெய்தெரிவளியிசை அளவு நுவன்றிசினே.
(தொல், எழு. 102)
தொல்காப்பியமானது பாணிநீயம் முதலான வடமொழி இலக்கண நூல்களை அடிப்படை யாகக் கொண்டு எழுதப்பட்டது என்றவாறாகவும் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. தொல் காப்பியச் சிறப்புப்பாயிரம் தொல்காப்பியரை 'ஐந்திரம் நிறைந்தவராகக் கூறுகிறது. தொல்காப்பியர் பற்றிய கதையில் அவர் அகத்தியருக்கு மாணவராக இருந்தார் என்று கூறப்படுவதை இவை யாவற்றோடும் தொடர்புறுத்தி நோக்குதல் பொருத்தமான தாகலாம்.
தொல்காப்பியர், அகத்தியருக்கு மாணாக்க னாக இருந்தபோதிலும் அவருக்கு முற்றிலும் உடன்பாடான மாணாக்கனாக இருக்கவில்லை; மாறாக எதிர்த்து நின்ற மாணாக்கனாகவே இருந்தார் என்பது நச்சினார்க்கினியர் பதிவு செய்த கதையிற் புலப்படுவது பற்றி முன்பே கூறப்பட்டது. பேராசிரியரது உரையிலும் அகத்தியர் - தொல்காப்பியர் முரண்பாடு பற்றி அக்காலத்தில் நிலவிய கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளமை இங்கு கருதத்தக்கது. (தொல், மர. 649 பேரா. உரை) தொல்காப்பிய ருடைய உணர்வை எதிர்ப்புணர்வு என்பதைவிட (தமிழரின்) தற்காப்பு உணர்வு என்று கொள்வதே அதிகம் பொருத்தமுடையதாகலாம் . தொல்காப்பியர் போலவே அகத்தியரிடமும் அதாவது ஆரியரிடமும் அத்தகையதொரு எச்சரிக்கையுணர்வு இருந் திருத்தல் சாத்தியமே.
பண்பாட்டு ஆதிக்கங்கள் நிகழும்போது ஆதிக்கம் செலுத்த முனையும் பண்பாடு எப்பண்பாட்டின்மீது தன் ஆதிக்கத்தைச் செலுத்த விழைந்தோ, அது தன்னை அறியாமலே அப்பண்பாட்டின் ஆதிக்கத்துக்கு ஆளாய்விடுவ தும் பண்பாட்டு வரலாற்றியலில் அறியப்படுவ தோர் உண்மையாகும். இந்தியாவில் ஆரியமய மாக்கலின்போதும் இதுவே நிகழ்ந்தது. தென்னாட்டுப் பண்பாட்டின் மீது ஆதிக்கம் செலுத்த முனைந்த ஆரியர்கள் அறிந்தும் அறியாமலும் தென்னாட்டுப் பழக்கவழக்கங் களைஅதிக அளவில் உள்வாங்கிக் கொண்டார்கள் (உ+ம்: கோவிலை மையப்படுத்திய உருவ

வழிபாடு, பூசை முதலாயின); இனக்கலப்புக்கும் உள்ளானார்கள் என்பதே உண்மையாகும். ஆனால் ஆதிக்கம் செலுத்தமுனையும் இனத் தூய்மை, பண்பாட்டுத் தூய்மைவாதிகள் பிரக்ஞை பூர்வமாக இதனை எதிர்க்கவே செய்வார்கள். தொல்காப்பியர் கதையில் உலோபாமுத்திரையாரை அவர் அழைத்து வரவேண்டிய முறைமை பற்றி அகத்தியர் கூறும்போது “முன்னாகப் பின்னாக நாற்கோல் நீளம் * அகல நின்று கொண்டு வருக” என்றார் என்பதில் ஆரியத் தூய்மைவாதமே புலனாகிறது எனலாம்.
இக்கதையில் வரும் உலோபா முத்திரையை முக்கியமான ஒரு குறியீடாகக் கொள்ள இடமுண்டு. உலோபா முத்திரை விதர்ப்பநாட்டு இளவரசியாக அறியப்படுகிறாள். வரலாற்றறிஞர் நீலகண்டசாஸ்திரி கூறுவது இவ்விடத்தில் மனங் கொள்ளத்தக்கது.
"விந்திய மலைகளுக்குத் தெற்கேயுள்ள பகுதிகள் இக்காலத்தில் ஆரிய மயமாக வில்லை. தென்னகம் முழுவதும் ஆரியருக்கு முந்திய மக்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. ஆரியர்களுள் அதிக ஊக்கமும் உழைப்பும் உடையோர் பூர்விக தென்னக மக்களிடையிற் சென்ற திருமணம் செய்து கலப்புச் சந்ததியினர் தோன்றுவதற்குப் பொறுப்பாளிகளாய் இருந்திருக்கலாம். இத்தகைய கலப்புச் சந்ததியினரைக் குறைந்த சாதியினர் என்று வடக்கில் வாழ்ந்த (தூய) ஆரியர்கள் குறைத்து மதித்து வந்தனர் என்பதை விசுவாமித்திரரின் பிள்ளைகள் பற்றிய கதையைக் கொண்டு நாம் ஊகித்துக் கொள்ளலாம். இத்தகைய நிலை உருவாகியிருந்த காலம் எது என்று உறுதியாகக் கூறமுடியாத போதிலும் அக்காலம் கி. மு. 1000 வரையாகவிருக்கலாம் என்று கருதுவதற்கு இடமுண்டு. (நீலகண்ட (FITórigsif, K.A. J.75).
ஏலவே தூய்மை கெட்ட நிலையில் தென்னிந்தியாவில் நிலைபெற்றிருந்த ஆரியச் சந்ததி ஒன்றின் தூய்மை, மேலும் கெட்டுவிடக் கூடாது என்ற எண்ணப் பாங்கையே உலோபா முத்திரை பற்றிய அகத்தியரின் எச்சரிக்கையுணர்வு புலப்படுத்தி நிற்கிறது எனலாம். ஆனால் அச்சந்ததியின் விருத்தியையும் ஆதிக்கத்தையும் மொழிவழியாகவும் மற்றும் பிற வழிகளிலும் மேலும் தெற்கு நோக்கிக் கொண்டு வந்துவிட வேண்டும் என அகத்தியர் விரும்பினார் போலும். அவ்விருப்புணர்வே பொதியின்கண் இருந்து, இராவணனைக் கந்தர்வத்தாற் பிணித்து,
33

Page 40
இராக்கதரை ஆண்டு இயங்காமை விலக்கிய அகத்தியர் திரனதுமாக்கினியாராகிய தொல்காப்பிய னாரை நோக்கி, நீ சென்று குமரியாரைக் கொண்டு வருக” எனக் கூறுவதிற் புலனாகின்றது எனலாம்.
தென்னாட்டில் ஆரியமயமாக்கற் பணியை மேற்கொள்வதில் தம்முடைய மாணவர் விசுவாசமாக உதவவேண்டும் என அகத்தியர் விரும்பினார்; அல்லது உதவவேண்டும் என எதிர்பார்த்தார் போலும், ஆரிய மொழிக் கல்வியில் அல்லது ஆரியவழிக் கல்வியில் ஆரம்பத்தில் ஆர்வத்தோடு ஈடுபட்ட தொல் காப்பியர், காலப்போக்கில் ஆரிய மயமாக்கலின் அநர்த்தத்தை - ஆபத்தை உணர்ந்து கொண்டவராய் அதற்கு எதிராகச் செயற்படத் தொடங்கினாராகலாம். ஆங்கிலக் கல்வியில் ஆர்வத்தோடு ஈடுபட்டவர்களே பின்னர் விழிப் புணர்வு பெற்றவர்களாய் ஆங்கில ஆதிக்கத்துக் கும் அதன் ஒரு கூறான கிறித்தவப் பரம்பலுக்கும் எதிராக அதிதீவிரத்துடன் போராடிய அண்மைக் கால வரலாற்றை இங்கு நாம் நினைவிற் கொள்ளலாம். தொல்காப்பியரது சூழல் அத்தகையதொரு விழிப்பை அவருள் ஏற்படுத்தி யிருத்தல் கூடுவதே. அல்லது அக்காலச் சூழலுக்கு அவ்விழிப்புணர்வை ஏற்படுத்தியவரே அவராகவும் இருத்தல் சாத்தியமே. எவ்வாறாயி னும் தொல்காப்பியம் என்ற நூலின் தோற்றத்தை ஒட்டிய கால்த்தில் அத்தகையதொரு விழிப் புணர்ச்சி இருந்தமைக்கான புறச்சான்றேதும் உண்டா என்பதை நோக்குதல் வேண்டும்.
சேரர், சோழர், பாண்டியர் என்னும் முடியுடை வேந்தர்களும் பாரி முதலான குறுநில மன்னர்களும் தனித்தனிப் பிரதேசங்களைத் தனித்தனி நாடுகளாய் ஆண்டு வந்த அக்காலத்திற்கூட மொழிவழியாக தமிழ்கூறு நல்லுலகம்’ என்று அவற்றையெல்லாம் ஒன்றாகக் காணும் தன்மையே அத்தகு விழிப்புணர்ச்சி இருந்தமைக்கான தக்க சான்றாக லாம். தமிழ் மன்னர்களையே தமிழாக (புறம் 19), தமிழ்ப்பண்பாட்டைத் தமிழாக (பிரிபாடல்; 9:25) கூறுவதும், 'தண்தமிழ், வண்தமிழ் என மொழிக்குச் சிறப்புச் சேர்க்கும் அடைகளைச் சேர்த்துக் கூறுவதுமாகிய இத்தகு முறைமைகள் பிறமொழி களிற் காணப்படாத பண்பு என்றே அறிஞர்கள் கருதுகிறார்கள். இவற்றை அந்நிய மொழி ஒன்றுக்கான எதிர்ப்புணர்வின் வெளிப்பாடுகளாகக் கொள்வதே பொருத்த மானது. வெளிப்படை யாகவே ஆரியருக்கு எதிரான குரல்கள் சங்க இலக்கியங்களில் ஆங்காங்கே ஒலிக்கின்றன. இவற்றின் திரண்ட
34

நிலையையே சிலப்பதிகாரத் தில்,
'தென்தமிழாற்றல் அறியாது மலைந்த ஆரிய மன்னர் (சில, 27:5,6) தலையிலே தமிழ் மன்னன் கல்ல்ேற்றியதாகக் கூறுவதிற் காண்கிறோம். தமிழரின் மொழியுணர்வு குறித்த அறிஞர் ஒருவரின் கருத்து இங்கு கருதத்தக்கது.
"காலத்துக்கு காலம் தமிழக வரலாற்றில் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வுகள், மாற்றங்களுக் கேற்பத் தம் தாய்மொழியாம் தமிழையும் அவர்கள் பலவாறு நோக்கில் பேணி வந்துள்ளனர். இதே வேளையில் பிறமொழி நிந்தனையிலிடுபட்டிருந்தனர் என்று கூற முடியாது. ஆனால் தமிழரைப் போன்று வேறு எந்த மொழியினைப் பேசும் மக்களும் தமது தாய் மொழியினை பல அடைமொழி களாற் சிறப்பித்தோ அதனைத் தாம் வழிபடு தெய்வமாகக் கருதியோ போற்றி வந்தன ரென அறிதற்கு அருமையாயிருக்கிறது.” (சிவசமி, வி. ப. 10)
தமிழரின் இத் தனிக்குணம் தொடர்பாக மற்றொரு அறிஞரின் அவதானிப்பு இது:
"இந்தப் பண்பு காணப்படுகிறதன் காரணமாக அது எந்தெந்தக் காலங்களில் நெருக்கடிகள் வருகின்றனவோ அந்த அந்தக் காலங்களில் தன்னை அறியாமல் இந்தப் பண்பு மேலோங்கி நின்றிருக்கின்றது. இது ஒரு முக்கியமான விசயம். தமிழ் மொழிக்கு எந்தெந்தக் காலங்களில் அல்லது தமிழைப் பேசுகின்றவர்களின் இருப்புக்குச் சவால் வருகின்றதோ அந்தச் சவாலை மொழியுடன் இணைத்துப் பார்க்கின்ற தன்மை ஒன்று காணப்படுகின்றது. இது தமிழ்மொழி இந்திய உபகண்டத்தில் வகிக்கும் இடத்தின் அடியாக வருகின்றது. பொதுவாக இந்தியப் பண்பாடு என்று சொல்லுகின்ற ஒரு பண்பாடானது வடமொழியை மூல மொழியாகக் கொண்டு இயங்குகின்ற பொழுது அது பிரதேசப் பண்பாடுகளுக்கு - அவற்றின் முக்கியத்து வத்துக்கு - ஒரு பிரச்சினையை ஏற்படுத்து கிறது. (காலம்: இளவேனில் 1997, ப.47)
தமிழருக்கு அக்காலத்தில் வடமொழி ஏற்படுத்திய பிரச்சினைக்கான தமிழரின் பதிற்குறிகளே சங்க இலக்கியங்கள் முதல் லப்பதிகாரம் வரையிலானவற்றிற் சுட்டிக் காட்டப் பட்டனவாகும். தொல்காப்பியர் பற்றிய
கதையிலும் தமிழ்ச் சமூத்தின் அத்தகு எதிர்ப்

Page 41
புணர்வு குறியீடாகக் காட்டப்பட்டேயுள்ளது. "வைகைநீர் கடுகிக் குமரியாரை ஈர்த்துக் கொண்டு போனதாக வரும் பகுதியிலேயே அது புலனாகின்றது எனலாம். உலோபா முத்திரை யாரை ஆரியக்கலப்பின் உருவகமாக முன்பு கண்டோம். இனி அவர் வரவைத்தடுத்து ஈர்த்துச் சென்ற வையை குறித்து இங்கு நோக்குதல் வேண்டும்.
“தமிழ் வையை: தமிழகத்தின் ஒரு பிரிவான பாண்டி நாட்டிலுள்ள பிரதான ஆறு வையை. இதன் கரையிலேயே தமிழ் வளர்த்த பாண்டியரின் தலைநகராகிய மதுரை அமைந்துள்ளது. தமிழகத்தின் தலைநகரங்களுள்ளே மிக நெடுங்காலமாகத் தொடர்ந்து ஒரு தலைநகராய் விளங்கிய பெருமை மதுரைக்குரியது. வரலாற்றிலே நாம் அறியக்கூடிய காலம் தொட்டுத் தமிழகப் பேரரசு (இறுதியான தமிழ்ப் பேரரசு பாண்டியருடையதாகும்) சரியும் காலம் வரை (கி. பி. 14ம் நூற்றாண்டுவரை) தொடர்ந்து சிறந்து விளங்கிய நகரம் இதுவாம். இத்துணைச் சிறப்புப் பொருந்திய கூடல் (மதுரை) வையை ஆற்றங்கரை யிலமைந்திருந்தது. தமிழர் நாகரிகம் வளர்ந்த ஆற்றுப் பள்ளத்தாக்குகளிலே வையையும் சிறப்புமிக்கது. அதன் சிறப்பினைப் புலவர்கள் காலத்துக்கு காலம் பாடியுள்ளனர். அப்பெயர்ப்பட்ட பாடல் களில் ஒன்றுதான் மேற்குறிப்பிடப்பட்ட தாகும். தமிழ் மதுரை போன்று தமிழ்
வையையாம்” (சிவசாமி, வி. பக். 17,18)
சங்கம் அமைத்துத் தமிழ் வளர்த்ததாகப் போற்றப் பெறுவதும் இவ்வையைக் கரையில மைந்த மதுரையிலேயாம். இவற்றை உணரும்போது ஆரிய ஆதிக்கத்துக்கெதிரான இயக்கநிலைப்பட்ட போராட்டம் ஒன்று மதுரையை மையமாகக் கொண்டு வெற்றிகரமாக நடை பெற்றமையையே தொல்காப்பியர் கதையில் உலோபா முத்திரையை வையை அடித்துச் சென்றதாகக் கூறுவதால் உணர்த்தப்படுகிறது
எனலாம்.
ஆரியத்தை உயர்வானதாகவும் தமிழைத் தாழ்ந்ததாகவும் கட்டமைக்கும் போக்கு ஒன்று அக்காலச் சூழலில் காணப்பட்டதாதல் வேண்டும். அண்மைக்காலத்தைய ஆங்கில மாயையானது அத்தகு நிலை ஏற்பட்டமை நாம் கண்கூடாகக் கண்டதொன்றே. அதிக அளவிலான ஆரியர் வருகையும் ஓரளவில் அதற்குச் சமாந்தரமான ஆரியரல்லாத (யவனர் முதலான) பிற

அந்நியரின் வியாபாரம் முதலான நோக்கங் களால் ஏற்பட்ட வரவுகளும் அக்காலத்தே தமிழில் இலக்கண உருவாக்கம் ஒன்றின் தேவையை வலியுறித்தினவாதல் வேண்டும். தொல்காப்பியமானது தமிழறியாதவர்களை மனங்கொண்டு எழுதப்பட்டது என்ற கருத்தும் அறிஞர் மத்தியில் நிலவுகிறது. அதாவது தமிழறியாதவர்களுக்கு தமிழை - தமிழ் மரபை விளக்க முற்பட்ட நூலே தொல்காப்பியம் என்பது அவர்கள் கருத்து. சிறப்பாக, தொல்காப்பியம் மரபியலில் சுட்டப்படுகின்ற விடயங்கள் அது தமிழரல்லாதவர்களுக்கே எழுதப்பட்ட நூல் என்பதற்கான சிறந்த சான்று எனபர். "கிளவியாக்கத்திற் கூறப்பட்ட விடயங்களையும் அத்தகையனவாகக் கொள்ள
இடமுண்டு.
"தொல்காப்பியத்திற் கூறப்படும் கிளவியாக்க வாக்கியவாக்க அமைதிகள் இக்காலத்தில் நொஆம்சொம்ஸ்கியால் எடுத்துக்காட்டப் U6th Generative grammar (p60p60LDLLIL6ir எத்துணை ஒத்திருக்கின்றன என்பது ஆராய்ச்சியாளர்களுக்கு வியப்பைத் தந்துள்ளது" (சிவத்தம்பி, கா. ப. 26)
இக்காலத்தார் வியக்கத்தக்க முறையில் தொல்காப்பியர் வாக்கிய அமைதிகளை எடுத்துக் கூறும்படி அவரை நிர்ப்பந்தித்தது தமிழுக்குப் புறம்பான ஒரு சூழலாகவே இருத்தல் கூடும் என்பதே இங்கு நாம் உணர வேண்டியது. வியாபார நோக்கங்களால் அமைந்த யவனர் முதலானோர் வரவுகளும் (சமணர் வரவாகவும் இருக்கலாம்) தமிழிலக்கண உருவாக்கத்தை வலியுறுத்தின என்பதற்கு,
"எப்பொருளாயினும் அல்லதில்லெனில் அப்பொருள் அல்லாப் பிறிது பொருள்கூறல்”
(தொல், சொல். 35)
என்ற சூத்திரமும் அதனையொட்டிய சில சூத்திரங்களம் நல்ல சான்றாக வல்லன,
தமிழரல்லாதார்க்குத் தமிழைக் கற்பித்தல் என்னும் தேவை கருதித் தொல்காப்பியம் உருவாயிற்று என்பது ஏகதேசமான உண்மையே. அதைவிட அதன் உருவாக்கத்தை வற்புறுத்தி நின்றனவாக வேறுவிடயங்கள் அமைந்தன எனலாம். தமிழினதும் தமிழ் மரபினதும் தனித்துவத்தை எடுத்துரைப்பதும் அதைக் காவல் செய்வதுமான நோக்கங்களே அவை தொல் காப்பியர் கதை அந்த உண்மையையே வற்புறுத்தி நிற்கிறது. இதுதொடர்பாக தொல் காப்பியத்தின் பெரும் பிரிவுகள் மூன்றிலிருந்தும்
35

Page 42
பிரதானமான அகச்சான்று ஒவ்வொன்றினைச் காட்டக் கூடியவர்களாவோம்.
முதலாவது சான்றை அதன் முதலாவது அதிகாரமான எழுத்ததிகாரத்திற் காட்டலாம் காலவோட்டத்தில் தமிழோடு தமிழாய்க் கலந்துவிட்ட பிறமொழிச் சொற்கள் - பிரதானமாக வடசொற்கள் தமிழின் சொல்வகையுள் ஏற்கப்பட வேண்டியனவே என்ற மொழியதார்த்தப் உணர்ந்தவராகத் தொல்காப்பியர் விளங்கியபை முன்பே சுட்டிக்காட்டப்பட்டது. ஆயினும் அவற்றை ஏற்றுக் கொள்கையில் தமிழினி ஒலிமரபைக் கைவிட்டுவிடலாகாது என்ற நிபந்தனையை விதிப்பவராக,
"வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீகி எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே”
(தொல்,சொல். 401
என்ற சூத்திரத்தை யாத்தார். இதற்கான காரணம் மொழி பற்றிய அவரது இறுகிய கொள்கை அல்ல; மாறாக தமிழருடைய பேச்சுப்பழக்கம் பற்றிய . ஒலிமரபு பற்றிய விஞ்ஞானபூர்வமான பகுப்பாய்வு அறிவே காரணமாகும்.
“ஒவ்வொரு மொழியைப் பேசிவருட ஒவ்வோர் இனத்தவரும் தனிப்பட்ட இயல் களுடைய ஒலிக்கணத்தையே வழங்குவர் ஆரிய மக்கள் ஒலிக்கணம் வேறு; தமிழ் மக்கள் ஒலிகணம் வேறு; ஜெர்மானிய ஒலிக்கணம் வேறு; பிரெஞ்சுக்கார ஒலிக்கணம் வேறு; ஆங்கில மக்கள் ஒலிக்கணம் வேறு; இலக்கணத்தின் இயல் சொற்களில் ஒலி தொடர்ந்து வரு முறையில் நன்கு புலப்படும். ஹர்ஸ் (Horse என்ற ஆங்கிலச் சொல்லின் ஒலிக்கண தமிழில் வருதலில்லை. இங்ங்னமே குதிரை என்று பொருள்படும் ப்வெர்ட் (Pfred) என் ஜெர்மானியச் சொல்லின் ஒலிக்கண ஆங்கிலம், பிரெஞ்ச் முதலிய மொழ களிற்கூட வருதலில்லை ஒலிக்கணத்தில் இயல்பு இவ்வுதாரணங்களால் தெளிவாய் விளங்கும். தமிழிலுள்ள ஒலிக்கணத்தில் இயல்பு நமது மூதாதையரின் பேச் வழக்கத்தைப் (Speech habit) பொறுத்து ள்ளது. இங்ங்ணமே பிறமொழிகளின் ஒலி கணங்களின் இயல்பு, அவ்வம் மொழிக்கு உரியாரின் பேச்சு வழக்கங்களை பொறுத்த தாம். இவ்வழக்கங்க6ை நுட்பமாக ஆராய்ந்து இன்னஇன்ன ஒலிகை இறுதியில் வருவன. இன்ன ஒலிக்குப்பில் இன்ன ஒலிக்குப் பின் இன்ன ஒலிதா6
36

f
வரும் என்ற நியதியை அறிந்து இலக்கணம் வகுத்த பெருமை முற் காலத் து ஆசிரியர்களுள் தொல் காப்பியனார் ஒருவருக்கே உரியது. மொழி மரபு முதலிய இயல்களில் இவ் விஷயம் கூறப்படுகிறது. இலக்கண உலகில் சக்கரவர்த்தி என்று கூறத்தகும் பாணினி யாசிரியர்கூட இங்ங்னம் ஆராய்ந்தாரில்லை” (வையாபுரிப்பிள்ளை, எஸ். பக். 52,53)
இரண்டாவது சான்று: தொல்காப்பியர் தமது சொல்லதிகாரத்தைத் தொடங்கும்போது தமிழின் திணைப்பாகுபாட்டையே எடுத்துரைக்கிறார்.
"முதற் சூத்திரத்தில் சொல் பற்றிப் பாதுப்படக் கூறாமல் உயர்தினை, அறினை என்ற பாகுபாட்டைக் கொண்டு வந்துள்ளது. வேண்டுமென்றோ அல்லது ஒரு காரணம் பற்றியே எனக் கருதலாம்."
“தமிழ் மொழியிற் காணக்கிடக்கும் உயாதினை, அறினைப் பகுப்பும் அவற்றை யொட்டிவரும் ஒருமை பன்மைப் பகுப்பும் பின்னர் ஆண், பெண், பலர் என்ற பகுப்பும் ஒன்றன்பால் பலவின்பால் பகுப்பும் தமிழ் மொழிக்கு உரியது. அனால் இப்பகுப்பு சம்ஸ்கிருத மொழியில் இல்லாதது.”
"ஆனால் 'எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே போன்றவை எல்லா மொழி களுக்கும் உரியன. சம்ஸ்கிருத மொழிக்கும் உரிய பொதுவிதிகள். இந்த நிலையில் தமிழ் மொழிக்கே உரிய திணைப்பகுப்பினை முதற் சூத்திரமாகக் கொண்டு வந்து தமிழ்மொழியின் அமைப்பு வேறு என்பதை மிக நுட்பமாகக் காட்டியுள்ளார் தொல் காப்பியர் எனக் கருதலாம்” (அகத்தியலிங்கம், ச. பக். 8,9)
ஐந்தெழுத்தால் ஒரு பாடையுமாம் என்று அறையவும் நாணி வடமொழி மரபையே அடியொற்றி நின்ற தமிழிலக்கண நூல்களான வீரசோழியம், பிரயோகவிவேகம், இலக்கணக் கொத்து என்பவை தமிழின் திணைப் பகுப்பைக் கருத்திற்கொள்ளாது விடுத்தமை மேற்படி கருத்தை அரண் செய்வதாம்.
தொல்காப்பியர் தமிழ் மரபின் காவலராய் நின்றார் என்பதற்கான மூன்றாவது சான்று பொருளதிகாரத்திற் காணப்படுவது ஒரு வகையில் அந்த அதிகாரம் முழுவதுமே அதற்கான சான்று எனக் கொள்ளலாம். ஏனெனில் உலக மொழிகளிலேயே தமிழில்தான் பொருளாராய்ச்சியையும் மொழியிலக்கணமாகக் கொள்ளும் போக்குக் காண்பதாகக் கூறப்படுகிறது.

Page 43
அதன் உருவாக்கமே தமிழ்மரபைக் காவல் செய்யும் தொல்காப்பியரின் நோக்கத்தை உணர்த்தி நிற்பதாகலாம். ஆயினும் அதனுட் பிரதானப்படுத்திக் கூறப்படும் விடயம் தமிழின் அடையாளமாகத் துலக்கம் பெறுவதையே இங்கு சுட்டியுணர்த்த விழைகிறோம். தமிழின் அகத்திணை மரபே நாம் சுட்டும் விடயமாகும்.
"இந்த அகத்தின் இலக்கிய மரபு தமிழின் தனிச்சிறப்பு ஆகிறது. ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் கற்பிப்பான் பொருட்டுக் கபிலர் பாடியதாகக் கூறப்படுவது குறிஞ்சிப்பாட்டு - அகத்திணைக்கொத்து தமிழ் என்பது களவியலுரைகாரரும் கள வியல் கூறியதைத் தமிழ் நுதலிற்று என்பர்."
“அகமரபு தமிழ்மரபு என்பது மாத்திரமல்ல முக்கியம், தமிழ் தனது இலக்கிய வெளிப் பாட்டுக்குச் சம்ஸ்கிருத இலக்கிய மரபை உதாரணமாகக் கொண்டிருக்கவில்லை என்பதும் முக்கியம். தமிழின் இலக்கியத் தனித்துவம் வற்புறுத்தப்படுகிறது" (சிவத்தம்பி, கா. பக். 6,7) பொருளதிகாரத்தில் உள்ள ஒன்பது இயல் களில் பொருளிலக்கணம் கூற முற்பட்ட பிரதான இயல்கள் நான்கு; அவற்றில் ஒன்று புறத்திணை மரபு பற்றிப் பேச ஏனைய மூன்றையும் அக மரபுக்கே உரியனவாய்த் தொல்காப்பியர் அமைத்துக் கொண்டமை தமிழ் மரபை அடையாளப் படுத்துவதில் அவர் எடுத்துக்
கதேசச் சமூகங்களில், மேனாட்டுமயப்படுத்தலின் தீய சக்தி வட்டத்துள் வந்தவரே. ஆங்கிலக் கல்வி ஏற்படுத்திய விழ புவியியல் போன்ற பாடங்களைப் படித்ததன் பயனாகவே இ பயன்களை அறியவைத்தது. இதனாலே ஆங்கிலக்கல்வி ெ
அரசாங்கச் சக்திகளை எதிர்த்தன்ரெனலாம். (சிவதம்பி.கா. பிறைவேற்ஸிமிட்டெட்சென்னை,பக.1617)
அகத்தியலிங்கம், ச. (2001) தொல்காப்பியத்தின் தோற்றமு உலகத்தமிழாராய்ச்சிநிறுவனம் சென்னை.
காலம், இளவேனில் (1997)
சிவசாமி.வி (1998) தமிழும்தமிழரும் பூபாலசிங்கம்புத்தகச சிவத்தம்பி.கா. (1994) தமிழ்ச்சமூகம் பண்பாட்டின் மீள்கண்
தில்லைநாதன்.சி.-(2000) பண்பாட்டுச்சிந்தனைகள்,குமரன் நீலகண்டசாஸ்திரி.K.A. (1949) தென்னிந்தியவரலாறு (மொழி தொல்காப்பியம் எழுத்ததிகாரம்நச்சினார்க்கினியம் (கணேசைய
தொல்காப்பியம் சொல்லதிகாரம்சேனாவரையம் (கணேசையர்

கொண்ட அக்கறையையே காட்டுகிறது எனலாம்.
தொல்காப்பியர் பற்றிய தொன்மத்தை மறுவாசிப்புச் செய்வதன்மூலம் அவரது ஆளுமையையும் இலக்கணக் கோட்பாட்டையும் அறியும் முயற்சி மேற்கொள்ளப்பட்ட வேளையில் அம்முயற்சி மூலம் ஊகிக்கப்பட்ட உண்மைகளுக் கான அகச் சான்றுகளாகவே இம்மூன்று விடயங் களும் தொல்காப்பித்திலிருந்து அதன் அதிகாரம் மூன்றுக்கும் ஒவ்வொன்றாக எடுத்துக்காட்டப் பட்டன. ஆனால் இத்தகு சான்றுகள் வேறும் பலவாகத் தொல்காப்பித்துள்ளே உண்டு என்பது இங்கு வலியுறுத்திக் கூறவேண்டிய உண்மை யாகும். அவற்றை விரிக்கின் இக்கட்டுரை ஒரு நூலாகும் வாய்ப்பினைப் பெறும்.
கட்டுரையை நிறைவு செய்யும் இத்தருணத் தில் "கடைக்காப்பாக”க் கூறவேண்டிய விடயங்கள் இரண்டு உள. ஒன்று: இக்கட்டுரையில் தொல்காப்பியர் பற்றிய தொன்மத்தை மீள் வாசிப்புச் செய்த முறைமையில் தவறிருக்கலாம் என்பதை ஒத்துக்கொள்ளும் அதே வேளையில் அது மீள்வாசிப்புக்குரியதொன்றே என்ற நம்பிக்கையிலுள்ள எமது உறுதிப்பாட்டைத் தெரிவிப்பது இரண்டாவது: இரு பண்பாடுகள் கலந்து காலம் பல கடந்து இரண்டும் ஏறக்குறைய ஒன்றாய்விட்ட நிலையில் கணி மூடித்தனமான திராவிடத் துாயப் மை வாதத்திற்காக இக்கட்டுரை எழுதப்படவில்லை என்பதை வலியுறுத்துவது.
களை உணர்ந்திருந்தோர் ஏதோ ஒரு வகையில் அதன் செல்வாக்கு ப்புணர்வு அக்கல்வி வழியாகவந்த சமுதாய நோக்கு)சரித்திரம், ச்சமுதாய நோக்கு ஏற்பட்டது) ஆகியன மேனாட்டு ஆட்சியின் தீய பற்றவர்கள் அக்கல்வி கொடுத்த அறிவால் மேனாட்டு மயமாக்கும் (1987) ஈழத்தில் தமிழ் இலக்கியம், நியளிசெஞ்சரிபுக் ஹவுஸ் பிரை
ம் ஏற்றமும் தொல்காப்பிய இலக்கண மொழியியல் கோட்பாடுகள்,
லை.கொழும்பு. டுபிடிப்பும் நியூசெஞ்சுரிபுக்ஹவுஸ் (பி)லிமிட்டெட்சென்னை.
புத்தக இல்லம்,கொழும்பு/சென்னை பயர்ப்பு-1966) அரசாங்கபாசைப்பகுதிகொழும்பு iபதிப்பு-1937) திருமகள் அழுத்தகம் கன்னாகம்.
திப்பு-1938) திருமகள் அழுத்தகம்சுன்னாகம்.
37

Page 44
கடந்த கால “பண்பா (1991 -
பண்பாடு பருவ இதழ் 1991ஆம் ஆண்டு பங்குனி மாதம் ஆரம்ப இதழாக வெளிவந்தது. மேற்படி ஆண்டிலிருந்து 2005ஆம் ஆண்டு ஆனி மாதம் வரையில் வெளிவந்த இதழுடன் இதுவரை 28 இதழ்கள் வெளிவந்துள்ளன.
பலதரப்பட்ட விடயங்களை உள்ளடக்கிய தாக, பண்பாடு பருவ இதழ்கள் அமைந்துள்ளன. பல்கலைக்கழக மட்டத்தில் இதற்கு நல்ல வரவேற்பு உண்டு. பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், அறிஞர் களால் ஆய்வுக் கட்டுரைகள் எழுதப் பட்டுள்ளமை, இவ்விதழ்களின் தரத்திற்கு ஒரு காரணமாக அமைந்தன. பண்பாடு இதழைப் பற்றிய ஒரு தேடலே கிழக்கு பல்கலைக்கழகத்தில் நடந்துள்ளது. தமிழ் மொழி பயிலும் மாணவன் ಕ್ಲಿಲ್ಸ್: ஆய்வு சய்யப்பட்டு ஏற்றுக்
காள்ளப்பட்டுள்ளது.
1991ஆம் ஆண்டில் திணைக்களத்தில் பணிப்பாளராக கடமை புரிந்த திரு. க. சண்முகலிங்கம் அவர்கள் பண்பாடு ஆய்வு இதழை
பண்பாடு பருவ இதழ்கள்
ஆண்டு : 1991 பங்குனி
ஆசிரியர் திரு. க. சண்முகலிங்கம்
உதவி ஆசிரியர் : திரு. எஸ். தெய்வநாயகம்
மலர் :- 01, இதழ் 3-01 பொருளடக்கம் சம்பா நாட்டில் இந்துப்பண்பாடு பேராசிரியர் எஸ். தில்லைநாதன்
பள்ளுப்பிரபந்தம் - வித்துவான் எவ், எக்ஸ். சி. நடராசா
ஈழத்துத் தமிழ்க்கலைகள் - கலாநிதி சி. மெளனகுரு
காசிச்செட்டி தந்த சிலோன் கசற்றியர் பேராசிரியர் - பொ. பூலோகசிங்கம்
இலங்கை மதங்களின் சமுக வரலாற்றுப் பின்னணி - ஓர் அறிமுகம் பேராசிரியர் . வி. ஈ. எஸ். ஜே. பஸ்தியாம்பிள்ளை
குறிப்புகள் - திரு. க. சண்முகலிங்கம்
38

99 Y AA ாடு” பருவ இதழ்கள்
2005)
- எஸ். தெய்வநாயகம்
வெளிக்கொணர்ந்ததோடு தானே இதழின் ஆசிரியராகவும் இருந்தார் உதவி ஆசிரியராக உதவிப்பணிப்பாளர் திரு. எஸ். தெய்வநாயகம் பணியாற்றினார். தற்போதும் அவரே பண்பாடு இதழின் உதவி ஆசிரியராக பணியாற்றிக் கொண்டிருக்கின்றார்.
இதுவரை வெளிவந்த பண்பாடு பருவ இதழ்களின் விபரங்களை வாசகர்களின் தகவலுக்காக ஆண்டு ரீதியாக தருகின்றோம். இதில் இடம் பெற்றுள்ள கட்டுரைகளும் அதன் ஆய்வாளர்களும் ஆய்வுத் துறையில் மிகவும் தேர்ச்சி பெற்றுள்ளவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. த 数 இலக்கியம் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு பண்பாடு இதழ்களில் வெளிவந்துள்ள கட்டுரைகள் மிகவும் பயனுடையவையாக அமைவு பெறும் என எண்ணுகின்றோம்.
பதினான்கு ஆண்டுகள் இந்து சமய சலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஆய்வு இதழாக இது வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
ஆண்டு : 1991 ஆகஸ்ட்
ஆசிரியர் திரு. க. சண்முகலிங்கம்
உதவி ஆசிரியர் திரு. எஸ். தெய்வநாயகம்
மலர் :- 01, இதழ் -02
பொருளடக்கம் சிங்கள நாடகக் கலை மரபில் தமிழ் நாடகக்கலை மரபின் தாக்கம் பேராசிரியர் - ஈ. ஆர். சரத்சந்திர
மகாகவி பாரதியின் தத்துவ நோக்கும் பகவத்கீதை வியாக்கியானங்களும் சிதம்பர ரகுநாதன்
எண்பதுகளில் இலங்கையில் தமிழ் இலக்கியத் திறனாய்வு கலாநிதி எம். ஏ. நுஃமான்
விபுலானந்தர் தமிழ் திறனாய்வு முன்னோடி
சாகித்திய விழா மார்ச் - 1991 எஸ். தெய்வநாயகம்

Page 45
அடிமைச்சின்னம் - கவிதை றெஜி சிறிவர்த்தனா
பழந்தமிழ் இசையும் சுவாமி விபுலானந்த அடிகளின் யாழ் நூலும் - சில தகவல்கள்
இலங்கை பிராமிக் கல்வெட்டுக்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய தஞ்சை மாநாடு
ஆ. தேவராஜன்
குறிப்புக்கள் - மேல்நிலையாக்கம் - தென்னாசியாவின் தேசியவாதம் கடிதங்களிலிருந்து,
ஆண்டு : 1992 சித்திரை
திரு. க. சண்முகலிங்கம்
உதவி ஆசிரியர் : திரு. எஸ். தெய்வநாயகம் மலர் :- 02, &gby ;-01
பொருளடக்கம் இந்தியக் கலைமரபில் ஓவியக்கொள்கை பேராசிரியர் - சோ. கிருஷ்ணராசா
பாரதியிலுக்கு பேராசிரியர் க. கைலாசபதியின் பங்களிப்பு
பிரபுத்த பாரத வில் சுவாமி விபுலானந்தர் - பெ. சு. மணி
எண்பதுகளில் இந்தியத் திரைப்படங்கள் - சில அவதானிப்புகள் - கே. எஸ். சிவகுமாரன்
தொடர்பாடல், மொழி, நவீனத்துவம் - கலாநிதி எம். ஏ. நுஃமான்
நூல் விமர்சனம் பழந்தமிழ் ஆடலில் இசை - ரி. எஸ். பார்த்தசாரதி
சிவஞான சித்தித் திறவு கோல் - ஓர் ஆய்வுரைக் கண்ணோட்டம் - க. ந. வேலன்
வளரும் தமிழுக்கு ஒரு வளமான அகராதி - ஐராவாதம் மகாதேவன்
செய்திகள் திரைப்பட வட்டம் - அன்புச்செல்வன் புத்தகக் கழகம் ஈழத்துச்சோமு மஞ்சரி - தகவல்களும் குறிப்புகளும்

ஆண்டு : 1992 செப்டெம்பர்
ஆசிரியர் திரு. க. சண்முகலிங்கம்
உதவி ஆசிரியர் : திரு. எஸ். தெய்வநாயகம் மலர் :- 02, இதழ் :-02
பொருளடக்கம்
இலக்கணத் தூய்மையும் மொழித்துய்மையும்
- கலாநிதி எம். ஏ. நுஃமான்
இலக்கிய உருவாக்கம் - பேராசிரியர் செ. வை. சண்முகம்
நாட்டுப்புற இலக்கியம் - கலைகள் காட்டும் தமிழ்ப்பண்பாடு
பேராசிரியர் - சி. கருணாகரன் கலாநிதி - வ. ஜெயா
சமுகவியல் நோக்கில் சமயமும் சடங்குகளும் ஆங்கிலத்தில் - சோ. இ. கோல்ட்தோப் த
மிழில் க. சண்முகலிங்கம்
ஆய்வுத்திட்டம் - ஆசிரியர் நூல் ஆறிமுகம் - நூலகவியலில் பட்டியலாககம நூலாசிரியர் - 7 விமலாம்பிகை பாலசுந்தரர், இ. கிருஸ்ணகுமார்
திரைப்பட விமர்சனம் - சத்யஜித்ரேயின் "ஷட்கதி" பாலசரஸ்வதி
ஆண்டு : 1998 வைகாசி
ஆசிரியர் திரு. 5. சண்முகலிங்கம்
உதவி ஆசிரியர் : திரு. எஸ். தெய்வநாயகம் uD6oi :- 03, இதழ் :-01
பொருளடக்கம் சைவசித்தாந்த அறிவாராய்ச்சியியல் ஓர் அறிமுகம் - கலாநிதி சோ. கிருஷ்ணராஜா
தமிழ் இதழியல் வரலாற்றில் ஒரு காலகட்டம் பெ. சு. மணி
இலங்கைத் தமிழ் பண்பாடும் கலைகளும் ஓர் அறிமுகம் - பேராசிரியர் கா. சிவத்தம்பி
கோணேசர் கல்வெட்டு வழங்கும் நாட்டார் வழக்காற்றியல் செய்திகள்
39

Page 46
குறிப்புகள் - க. சண்முகலிங்கம்
வாய்மொழிமரபும் எழுத்தறிவு மரபும் சமகால தமிழ்க்கவிதை " பற்றிய முன்றாம் உலக இலக்கியக் கண்ணோட்டம் - சுரேஸ் கனகராஜா
தூய்மையும் துடக்கும் - க. சண்முகலிங்கம்
ஆண்டு : 1993 புரட்டாதி
திரு. க. சண்முகலிங்கம்
உதவி ஆசிரியர் : திரு. எஸ். தெய்வநாயகம்
LDGao :- 03, இதழ் :-02
பொருளடக்கம்
யாழ்ப்பாணத்தில் அண்ணமார் வழிபாடு - கலாநிதி. சண்முகலிங்கன்
இந்திய மெய்யியல் தந்திரம் - ஆ. சிவசுப்பிரமணியம்
திருகோணமலை தி. த. கனகசுந்தரம்பிள்ளை
- (1865-1922) - செ. யோகராசா
யாழ்ப்பாணத்தில் சிற்பக்கலை . ஏ. எஸ். கிருஷ்ணவேணி
சைவசித்தாந்த அறிவாராய்ச்சியியல் ஓர் அறிமுகம் (பகுதி2) - சோ. கிருஷ்ணராசா
நூல் அறிமுகம் - கலாநிதி எம். சுப்பிரமணியன்
குறிப்புகள் - க. சண்முகலிங்கம்
ஆண்டு : 1998 uDITriasy
ஆசிரியர் : திரு. க. சண்முகலிங்கம்
உதவி ஆசிரியர் : திரு. எஸ். தெய்வநாயகம்
மலர் :- 08, இதழ் -08
பொருளடக்கம்
தட்சிண கைலாசபுராணம் ஓர் அறிமுகம் - பேராசிரியர் - சி. பத்மநாதன்
40

திறனாய்வியலின் அடிப்படைகள் நா. சுப்பிரமணியன்
மறுபதிப்புக்கள் ஒரு குறிப்பு ஆ. இரா. வேங்கடாசலபதி
நாட்டார் வழக்காற்றியலும் அமைப்பியலில் அபூய்வுப் பொருண்மை பற்றிய சிக்கலும் - தே லூர்து
வெகுஜனத் தொடர்பாடலும்
பத்திரிகைகளும் . க. சண்முகலிங்கம்
ஐரோப்பிய நவீன நாடக அரங்கின் ஆரம்ப கர்த்தா நாடகக் கோமகன் 2ஆம் டுஜர்ஜ் பற்றிய ஒரு அறிமுகம்
- சி. மெளனகுரு
ஆண்டு 1994 வைகாசி ஆசிரியர் : திரு. க. சண்முகலிங்கம்
உதவி ஆசிரியர் : திரு. எஸ். தெய்வநாயகம் மலர் :- 04, இதழ் :-01
பொருளடக்கம் நாட்டார் இலக்கியத்தில் காதல் பாடல்கள் - கலாநிதி எம். ஏ. நுஃமான்
தட்சிண கைலாசபுராணம் ஓர் அறிமுகம்
(சென்ற இதழின் தொடர்ச்சி) பேராசிரியர் - சி. பத்மநாதன்
நூல் அறிமுகம் - க. சண்முகலிங்கம்
தமிழ் இலக்கிய விமர்சனம் அமைப்பியல் வாதமும் பிற வியாக்கியான முறைகளும் பற்றிய ஓர் மதிப்பீடு
- சுரேஷ் கனகராஜா
சுதேசமித்திரனில் பாரதியார் - பெ. சு. மணி
மத்துவரின் இருமைக்கொள்கை - டாக்டர் பி. நாகராஜன்

Page 47
ஆண்டு : 1914 uDITňrasg
ஆசிரியர் திரு. க. சண்முகலிங்கம்
உதவி ஆசிரியர் : திரு. எஸ். தெய்வநாயகம்
Doi - 04, இதழ் -02
பொருளடக்கம்
மட்டக்களப்பு மான்மியம்
- டி. சிவராம்
தமிழ் இலக்கிய விமர்சனம் அமைப்பியல் வாதமும் பிற வியாக்கியான முறைகளும் பற்றிய ஓர் மதிப்பீடு
- சுரேஷ் கனகராஜா
வடமாராட்சி வடக்கு கரையோர மக்களிடையே நிலவும் பிறப்புச் சடங்கு - அம்மன்கிளி முருகதாஸ்
மைக்கேல் பாங்ஸ் (BANKS) எழுதிய *யாழ்ப்பாணத்தில் சாதி” என்னும் கட்டுரை ஒரு விமர்சன அறிமுகம் - க. சண்முகலிங்கம்
தமிழில் மொழிபெயர்ப்பும் மொழிப்பதங்களும் - செல்வி திருச்ச்திரன்
அடித்தள மக்கள் மீதான பாலியல் வன்முறைகளும் நாட்டார் வழக்காறுகளும்
ஆ. சிவசுப்பிரமணியன்
குறிப்புகள் - க. சண்முகலிங்கம்
ஆண்டு : 1995 ஆணி
ஆசிரியர் திரு. க. சண்முகலிங்கம்
உதவி ஆசிரியர் : திரு. எஸ். தெய்வநாயகம்
Deoi :- 05, இதழ் 3-01
பொருளடக்கம் யார் இந்த கால் பொப்பர்? - பேராசிரியர் சோ. கிருஷ்ணராஜா
பூநகரியிற் சங்ககாலப் பண்பாடு తోణ్సు தொல்லியற் சான்றுகள் - ப. புஷ்பரட்ணம்

தமிழியற் கவிதை பற்றிய இலக்கண மயப்பட்ட நோக்குகளும் தமிழிலக் கரியத் தன் உள்ளார்ந்த படைப்பாற்றல் நெகிழ்வுணர்வும் - பேராசிரியர் கா. சிவத்தம்பி
ஈழத்தில் பத்தினித் தெய்வவழிபாட்டோடு தொடர்புடைய பாரம்பரியங்கள்
- செல்வி க. தங்கேஸ்வரி
அரங்கியலில் காட்சிப்படிமங்கள் - இரா. இராசு
புலம் பெயர் கலாசாரமும், புகலிட
இலக்கியங்களும் - செ. யோகராசா
ஆண்டு : 1995 புரட்டாதி
ஆசிரியர் : திரு. க. சண்முகலிங்கம்
உதவி ஆசிரியர் : திரு. எஸ். தெய்வநாயகம்
шsoir :- 05, இதழ் -02
பொருளடக்கம்
நாதஸ்வரமும் தவிலும் - வி. சிவசாமி
தென்கிழக்காசிய நாடுகளில் சைவசயம் - ப. கணேசலிங்கம்
மாணிக்கவாசகரை அறுபத்தி முன்று நாயன்மார்களுள் ஒருவராக சேக்கிழார் உள்ளடக்காதது ஏன்? - திருமதி தனபாக்கியம் குணபாலசிங்கம்
மெய்கண்ட சாத்திரங்களிற்கு முற்பட்ட 698: FOS சித்தாந்தம் சத்தியயோதி சிவாசாரியாரின் நோக்கு
- சோ. கிருஸ்ணராசா
ஈழநாட்டிலே சோழர் ஆட்சிக்காலத்தில் சைவசமய வளர்ச்சி - ஆலயங்களும் கட்டிடக்கலையும் - இரா. வை. கனகரெத்தினம்
41

Page 48
ஆண்டு : 1995 dríasp
ஆசிரியர் : திரு. க. சண்முகலிங்கம்.
உதவி ஆசிரியர் : திரு. எஸ். தெய்வநாயகம்
மலர் :- 05, இதழ் -08
பொருளடக்கம் விஞ்ஞான அறிவின் வளர்ச்சி - தோமஸ்
கூனின் சிந்தனைகள் - சோ. கிருஷ்ணராசா
திருஞானசம்பந்தரும் கலைகளும் - வி. சிவசாமி
தமிழின் இரண்டாவது பக்தியுகம் - பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி
கல்வியும் நூலக விருத்தியும் - பேராசிரியர் சோ. சந்திரசேகரன்
இலங்கையில் சமுகவியல் மானிடவியல் கல்வியும் ஆய்வும்
- சஸங்க பெரேரா
கிராம சமுகங்கள் கற்பனையும் உண்மையும் - நொபொரு கராஷிமா
குறிப்புகள் - க. சண்முகலிங்கம்
ஆண்டு : 1996 ஆவணி
திரு. க. சண்முகலிங்கம்
உதவி ஆசிரியர் : திரு. எஸ். தெய்வநாயகம்
மலர் :- 06, இதழ் :-01
பொருளடக்கம் தமிழிலக்கியத் திறனாய்வு - அன்றும் இன்றும் - க. பஞ்சாங்கம்
கலை இலக்கிய விமர்சனக் கொள்கைகள் - சோ. கிருஷ்ணராசா
திருகோணமலையிற் சோழ இலங்கேஸ்வரம் . பேராசிரியர் சி. பத்மநாதன்
ஆர். சண்முகசுந்தரத்தின் ‘நாகம்மாள்” - சி. ஆர். ரவீந்திரன்
42

G : 1996 மார்கழி
fuit : திருமதி சாந்திநாவுக்கரசன்
வி ஆசிரியர் : திரு. எஸ். தெய்வநாயகம்
r - 08, இதழ் :-02
ருளடக்கம்
சட்டம், நீதி நிர்வாகம் பற்றிய இந்துமதக் த்துக்கள்
1. ரி. தமிழ்மாறன்
M
வாராய்ச்சியல் 1. ஞானகுமாரன்
வை. தாமோதரம்பிள்ளை பதிப்புப்பணி - த மதிப்பீடு
1. பாண்டுரங்கன்
. கைலாசபிள்ளையும் விபுலானந்த டிகளாரும் ரா. வை. கனகரத்தினம்
ன்டு : 1997 ஆவணி Fነfለuñ : திருமதி சாந்தி நாவுக்கரசன்
தவி ஆசிரியர் : திரு. எஸ். தெய்வநாயகம்
ர் :- 07, இதழ் :-01
ாருளடக்கம்
ரதி வரலாறு ஒரு மதிப்பீடு . இரவீந்திரன்
O O O O. O. சவழமைச் சட்டத்தின் வளர்ச்சி பா. காங்கேயன்
வள் தர்மவதி என்போம், நூல் விமர்சனம் னோன்மணி சண்முகதாஸ்
வை. தாமோதரம்பிள்ளை பதிப்புப் பணி ரு மதிப்பீடு
2. பாண்டுரங்கன்
மிழ் இலக்கியத் திறனாய்வு பழமையும் துமையும் ாக்டர் க. பஞ்சாங்கம்

Page 49
ஆண்டு : 1997 வைகாசி
ஆசிரியர் : திருமதி சாந்தி நாவுக்கரசன் உதவி ஆசிரியர் : திரு. எஸ். தெய்வநாயகம்
மலர் :- 07, இதழ் :-02
பொருள்டக்கம்
தமிழ் ஆராய்ச்சி வரைவிலக்கணமும் ஆய்வுப் பரப்பும்
- அ பாண்டுரங்கன்
1980க்குப் பிந்திய இலங்கைத் தமிழ்ச் சிறுகதைகள் - அம்மன்கிளி முருகதாஸ்
வைணவத்தின் தோற்றமும் வளர்ச்சியும் - ஒரு நோக்கு . வி. சிவசாமி
தமிழர் பூப்புநீராட்டு நடைமுறைகள் - திருமதி மனோன்மணி சண்முகதாஸ்
ஈழத்துச் சிறுகதை வளர்ச்சியில் பித்தனின் கதைகள்
- செ. யோகராசா
தமிழர் பண்பாட்டில் இல்லறம் - திருமதி கலைவாணி இராமநாதன்
மார்க்சிச கலை இலக்கிய நோக்கு - சோ. கிருஷ்ணராசா
ஆண்டு : 1997 ஐப்பசி
ஆசிரியர் : திருமதி சாந்தி நாவுக்கரசன்
உதவி ஆசிரியர் : திரு. எஸ். தெய்வநாயகம் மலர் :- 07, இதழ் :-08
பொருளடக்கம்
தமிழில் நாட்டார் வழக்காறு பற்றிய தேடல் - கா. சிவத்தம்பி
கம்பராமாயணத்தில் சந்தப்பாக்கள் - அ. பாண்டுரங்கன்
தற்கால தமிழின் இலக்கண இயல்பு - செ. வை. சண்முகம்

அகிம்சை எனும் எண்ணக்கரு . க. சிவானந்தமூர்த்தி
நீள்கதைகள்
தமிழ்நாடகம் ஓர் ஆய்வுப்பார்வை - பால சுகுமார்
ஆண்டு : 1997 uDrňrasg
ஆசிரியர் : திருமதி சாந்தி நாவுக்கரசன்
உதவி ஆசிரியர் : திரு. எஸ். தெய்வநாயகம்
Daoi - 07, இதழ் 3-04
பொருளடக்கம் சங்க இலக்கியத்தில் குடும்பம்
- அ. பாண்டுரங்கன்
பாரதி ஆய்வுகள் - சில குறிப்புகள்
பெ. சு. மணி
புதிய தமிழ்மொழி இலக்கணம் - அதன் தேவைகளும் சிக்கல்களும் - பேராசிரியர் அ. சண்முகதாஸ்
சமுகத் தை நோக் கரி நகர் கணிற நாடகத்துறை - ஒரு புதிய பரிமாணம் - ஜே. தங்கராஜன்
யாழ்ப்பாணப் பிரதேசக் கவிதை இலக்கியம் - மு. பொன்னம்பலம்
மானுட மேம்பாட்டின் சமுகவியல் - கலாநிதி எஸ். சண்முகலிங்கன்
ஓவியம் ஒவியர் ஓர் මෑtiuක! - கலாநிதி ந. வேல்முருகு
ஆண்டு : 1998 சித்திரை
திரு. தில்லை நடராஜா
உதவி ஆசிரியர் : திரு. எஸ். தெய்வநாயகம்
மலர் :- 08, இதழ் 3-01
பொருளடக்கம் பத்தொன்பதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் வளர்ச்சி
- பேராசிரியர் பொ. பூலோகசிங்கம்
43

Page 50
ஆனந்தரங்கப்பிள்ளை - தமிழர்களின் தலைவர் - பேராசிரியர் பாண்டுரங்கன்
திருமுறை காட்டும் ஜேர்மானிய யப்பானியல் கமியும்
- மனோன்மணி சண்முகதாஸ்
இலங்கையில் சிறுவர் இலக்கிய வளர்ச்சி ஒரு
கண்ணோட்டம் - செ. யோகராசா
மட்டக்களப்பு பிரதேச தமிழ்நாவல்கள் - றுாபி வலன்ரினா பிரான்சிஸ்
சமஸ்கிருத காவியக்கலை . ஏ. எஸ். கிருஸ்ணவேணி
ந. ரவீந்திரனின் “பாரதியின் மெய்ஞ்ஞானம்”
- அன்புமணி
ஆண்டு : 1999 சித்திரை
: SG. Sebcaeo GLUngm
உதவி ஆசிரியர் : திரு. எஸ். தெய்வநாயகம் மலர் :- 09, இதழ் :-01
பொருளடக்கம் பாரதிதாசன் பரம்பரை ஒரு வரலாற்றுக் கண்ணோட்டம் - பேராசிரியர் ஆ. பாண்டுரங்கன்
அறநூல்களில் கல்வி - திருமதி றுாபி வலன்ரீனா பிரான்சிஸ்
சேர் பிரான்சிஸ் “பேக்கனின்” விஞ்ஞானம் பற்றிய சிந்தனைகள் ஒரு விமர்சனநோக்கு - இ. பிரேம்குமார்
ஈழத்தமிழர் புலம்பெயர்ந்தோர் இலக்கியம் கவிதை வடிவம் - சில சிந்தனைகள்
- சுரேஸ் கனகராஜா
வன்னிப்பிரதேச சிறுகதைகள் ஒரு
தொகுதிநிலை ஆய்வு - சுப்பிரமணியம் ஜெயச்சந்திரன்
44

லயமும் உயிர்ப்பலியும் திருமதி கலைவாணி இராமநாதன்
லங்கை இலக்கிய விமர்சனத்திற்கு
. த. வின் பங்களிப்பு மு. பொன்னம்பலம்
பூண்டு : 1999 eyş
பூசிரியர் திரு. தில்லை நடராஜா
உதவி ஆசிரியர் : திரு. எஸ். தெய்வநாயகம்
லர் :- 09, இதழ் 3-02
பாருளடக்கம்
Hருணகிரிநாதரின் சமயப்பணி பேராசிரியர் அ. பாண்டுரங்கன்
சாழர் காலத்துப் பக்தியுகம் கலாநிதி துரை மனோகரன்
கூழாங்கைத்தம்பிரான் மதிப்பீடு
இரா. வை. கனகரெத்தினம்
இந்தியக் கலையில் ரசக்கொள்கை
கை. கிருஷ்ணவேணி நோபர்ட்
ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ஒரு தனித்துவமான பண்பாடு உண்டா?
இரா. வை. கனகரெத்தினம்
தென்னாசிய நாடுகளில் இலக்கியம்
முகம்மது சமீம்
சமயச் சடங்குகள் உயிரோட்டமுள்ள வாழ்க்கைப் படிமங்கள்
இரா. வை. கனகரெத்தினம்
2ஆண்டு : 1999 மார்கழி
ஆசிரியர் : திருமதி சாந்தி நாவுக்கரசன்
உதவி ஆசிரியர் : திரு. எஸ். தெய்வநாயகம்
மலர் :- 09, இதழ் -08
பொருளடக்கம் தமிழ்மொழி பாடநூல்களில் பேச்சுத்தமிழும் எழுத்துத் தமிழும்
பேராசிரியர் எஸ். சுசீந்திரராஜா

Page 51
தமிழ்மொழி பெயர்ப்பில் சிங்கள இலக்கியம் - கலாநிதி எம். ஏ. நுஃமான்
酸
மணிமேகலையில் மாதவி - ஒரு பெண்ணிலை நோக்கு - திருமதி றுாபி வலன்ரினா பிரான்சிஸ்
புதுமைப்பித்தன் விமர்சனப்பார்வை - ஜனாப் முகம்மது சமீம்
கட்டவிழ்ப்பு வாதம் டெறிமாவின் சிந்தனைகள் - பேராசிரியர் எஸ். கிருஷ்ணராசா
யாழ்ப்பான சமுதாயத்தில் நம்பிக்கைகள் ஒரு பார்வை
- சுபதினி ரமேஸ்
ஆண்டு : 2000 பங்குனி
ஆசிரியர் : திருமதி சாந்தி நாவுக்கரசன்
உதவி ஆசிரியர் : திரு. எஸ். தெய்வநாயகம்
uDsoft - 10, இதழ் 3-01 பொருளடக்கம்
தந்திர வழிபாடும் அதன் கலையும் - சோ. கிருஷ்ணராசா
சங்க இலக்கியம் அகத்திணைப்பாக்கள் - அ. பாண்டுரங்கன்
நாயன்மார் தேவாரங்களில் ஈழத்துச் சிவாலயங்கள் - ஒரு மொழி நோக்கு - சுபதினி ரமேஸ்
தமிழக இலங்கைக் கூத்துக்களும் மட்டக்களப்பு கூத்துக்களும் - பாலகுமார்
அறநூல்களில் “பெண்கள் ஒரு நோக்கு” - றுாபி வலன்ரினா பிரான்சிஸ்
பன்னிருபாட்டியலிற் கட்டமைக்கப்பட்டுள்ள
வருணபாகுபாடும் பால் பாகுபாடும் - அம்மன்கிளி முருகதாஸ்

ஆண்டு : 2000 ട്യങ്ങ
ஆசிரியர் : திருமதி சாந்தி நாவுக்கரசன்
உதவி ஆசிரியர் : திரு. எஸ். தெய்வநாயகம்
Daoň :- 10, இதழ் :-02 பொருளடக்கம்
மட்டக்களப்பு நாட்டுக் கூத்துக்களின் சமுகத்தளம் - பேராசிரியர் சி. மெளனகுரு
wa
நாட்டுப்புறக் கதைப்பாடல்கள் - பேராசிரியர் பாண்டுரங்கன்
பள்ளு இலக் கரியத்தல் நாட்டார் இலக்கியகூறுகள் - கலாநிதி துரை மனோகரன்
இருபதாம் நூற்றாண்டு ஈழத்து சிறு சஞ்சிகைகள் ஒரு மதிப்பீடு கலாநிதி செ. யோகராசா
இலக்கியத்தமிழும் யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழும் - பால் பாகுபாடு - கலாநிதி சுபதினி ரமேஷ்
இன்றைய சமுகமும் இளைய சமுதாயமும் - செல்வி சற்சொரூபவதிநாதன்
நாட்டக் கூத்து பிரதியாக்கம் செய்தல் - திரு. பாஷையூர் தேவதாசன்
ஆண்டு : 2000 கார்த்திகை
ஆசிரியர் : திருமதி சாந்தி நாவுக்கரசன்
உதவி ஆசிரியர் : திரு. எஸ். தெய்வநாயகம்
மலர் - 10, இதழ் -08
பொருளடக்கம் தொல்காப்பியமும் தமிழர் உளப்பாங்கும் - பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி
20ம் நூற்றாண்டின் ஒழுக் கவியற்
கொள்கைகள் ஓர் அறிமுகம் - சோ. கிருஷ்ணராஜா
இணுவை சின் னத்தம் பிப் புலவரின்
பஞ்சவண்ணத்தூது ஒரு நோக்கு - துரை மனோகரன்
45

Page 52
திருக்குறள் (இலக்கிய) வரலாற்றி மீறமுடியாத தர்க்கங்கள் - கார்த்திகேசு சிவத்தம்பி
ந”றுவனம் பணி பாடு மீ Эi ab 6 வெளிப்பாடுகளும் - பூ சோதிநாதன்
தேவாரம் - ஒரு பொதுநிலை அறிமுகம் - க. இரகுபரன்
இலங்கையில் தமிழ் வாய்மொழி இலக்கியம் - அம்மன்கிளி முருகதாஸ்
ஆத்திசூடியும் ஆறுமுக நாவலரும் . இரா. வை. கனகரெத்தினம்
என். கே. ரகுநாதனின் இலக்கியதடம் - அ. முகம்மது சமீம்
ஆண்டு : 2002 egوق
ஆசிரியர் : திருமதி சாந்தி நாவுக்கரசன்
உதவி ஆசிரியர் : திரு. எஸ். தெய்வநாயகம்
மலர் :- 11, இதழ் :-01
பொருளடக்கம்
இந்திய சாசனங்களின் இசை - பேராசிரியர் வி. சிவசாமி
யாழ்ப்பாணத்து வாழ்வியற் கோலங்கள் - கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ்
இராமாயணம் ஒன்றா? பலவா?
பேராசிரியை சித்திரலேகா மெளனகுரு
ஈழத்தில் ஊடக வளர்ச்சி ஒரு நோக்கு - கலாநிதி செ. யோகராசா
இலங்கைத் தமிழரின் பணி டை நாணயங்கள் காட்டும் முருக வழிபாடு கலாநிதி ப. புஷ்பரட்ணம்
சமயபுலத்தல் அற்புதம் என்னு எண்ணக்கரு ஓர் ஆய்வு - க. சிவானந்தமூர்த்தி
கம்பராமாயணச் செய்யுள் ஒன்றிற்
மாற்றுரை - கே. கே. சோமசுந்தரம்
46

f
ஆண்டு : 2008 சித்திரை
ஆசிரியர் : திருமதி சாந்தி நாவுக்கரசன்
உதவி ஆசிரியர் : திரு. எஸ். தெய்வநாயகம்
மலர் :- 12, இதழ் :-01
பொருளடக்கம்
ஈழமும் சங்ககால முதுமக்கள் தாழிகளும் - பேராசிரியர் சி. க. சிற்றம்பலம்
18-18ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் தமிழகத்தில் இந்து நாடக மரபு - பேராசிரியர் சி. மெளனகுரு
சிவநடனம் - விஜயநகர காலத்தை முன்னிறுத்தியதோர் ஆய்வு - க. சிவானந்தமூர்த்தி
தமிழகத்தில் முருக வழிபாடு
திருமதி அம்பிகை ஆனந்தக்குமார்
தமிழக இலங்கை நுண்கலை வளர்ச்சியில் கணேச சிற்பங்கள் - வை. கா. சிவப்பிரகாசம்
இந்து கோயிற் சிற்பம் - 18ஆம் நூற்றாண்டு வரையுள்ள சித்தரிப்பு - பேராசிரியர் சோ. கிருஷ்ணராசா
ஈழத்து சாதிய நாவல்களின் பின்புறத்தில் டானியலின் நாவல்கள் - கானல், அடிமைகள் பற்றிய சில குறிப்புகள் - கலாநிதி செ. யோகராசா
காலம் தோறும் கவி மழை - க. இரகுபரன்
2004ஆம் ஆண்டு பண்பாடு இதழ்கள் வெளிவரவில்லை

Page 53
ஆண்டு 2005 ട്രങ്ങ
ஆசிரியர் : திருமதி சாந்தி நாவுக்கரசன்
உதவி ஆசிரியர் : திரு. எஸ். தெய்வநாயகம்
மலர் :- 14, இதழ் 3-01
பொருளடக்கம்
இலங்கையில் திராவிட கட்டிடக்கலை விஜயநகர கலைப்பாணி - பேராசிரியர் சி. பத்மநாதன்
நவீன கால சிந்தனையாளர்கள் - பேராசிரியர் சோ. கிருஷ்ணராஜா
ஈழத்தலெழுந்த பிள்ளைத் தமிழ் பிரபந்தங்கள் - பிள்ளைக்கவி. வ. சிவராஜசிங்கம்
மறுபிறப்பு - ஒரு விளக்கம் - திருமதி நாச்சியார் செல்வநாயகம்
தாலாட்டு - திருமதி இந்திராதேவி சதானந்தன்
ஆன்மீக சாதனமாகக் கலை - கலாநிதி கிருஷ்ணவேணி நோர்ட்
சமய நிறுவனங்களும் சமுக நிறுவனங்களும்
பதினான்கு வருடங்களிலும் சுமார் 25 ஆய்வுக்கட்டுரைகள், 29 பண்பாடு இதழ்களிலும் வெளிவந்துள்ளன.
தமிழ் இலக்கியம், இந்துசமயம் தொடர்பான அம்சங்களை உள்ளடக்கியதாக இவ் ஆய்வுச் கட்டுரைகள் அமைவுபெறுவதால், பல்கலைச் கழத்திலும், உயர் வகுப்பிலும், தமிழ் மொழி தொடர்பாக ஆய்வுகளை மேற்கொள்ளும்

ஆண்டு 2008 புரட்டாதி
ஆசிரியர் திருமதி சாந்தி நாவுக்கரசன்
உதவி ஆசிரியர் : திரு. எஸ். தெய்வநாயகம்
மலர் :- 14, இதழ் 2-02 பொருளடக்கம்
தம்பலகாமத்தில் ஒரு கல்வெட்டு - பேராசிரியர் சி. பத்மநாதன்
>சைவ சித்தாந்த மெய்யியலில் ஆறுமுக
நாவலரின் பங்களிப்பு - இரா. வை. கனகரத்தினம்
சம்பந்தர் அருளிய யாப்பிசைப் பாடல்கள் - எஸ். கே. சிவபாலன்
சிருஷ்டி பற்றிய இந்துக் கொள்கை - ஏ. என. கிருஷ்ணவேணி
தொல்காப்பியர் : தமிழ் மரபின் காவலர் - க. இரகுபரன்
கடந்த கால பண்பாடு பருவ இதழ்கள் - எஸ். தெய்வநாயகம்
பெரிய புராணத்தில் மாணிக்கவாசகர் இடம் பெறாததேன்? - க. கேமலோஜினி
மாணவர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் மிகவும் பயன்பாடு கொண்டவையாக அமையப்பெறும்.
வருங்காலத்தில் இவ்வாய்வுக் கட்டுரைகளை வகைப்படுத்தி, தனி நூல்களாக வெளிக் கொணர்ந்தால், அவைகள் மிகவும் பயனுடையவைகளாக அமையும் என்பதில் ஐயமில்லை.
47

Page 54
பெரியபுராணத்தில் இடம்பெற
சைவசமய இலக்கியங்களில் தமிழில் எழுந்த பெரியபுராணம் தனிச்சிறப்பு வாய்ந்தது. பன்னிரண்டாம் திருமுறையில் அடங்கும் பெரியபுராணம் சேக்கிழாரால் இயற்றப்பட்டது. முதல் பதினொரு திருமுறைகளும் இறைவனைப் பற்றியும், அவரது புகழ்பற்றியும் நாயன்மார்களால் பாடப்பட்டவையாக விளங்குகின்றன. ஆனால் 12ஆம் திருமுறை இறைவனைப்பாடிய நாயன்மார்களை புகழ்ந்து பாடும் திருமுறையாக விளங்குகின்றது. 2ஆம் குலோத்துங்கனின் முதல் மந்திரியாக விளங்கிய சேக்கிழாரால் மன்னனின் வேண்டுகோளுக்கிணங்கப் பெரியபுராணம் பாடப்பட்டது. சிறந்த புலமையும், கவித்துவமும், மதிநுட்பமும் நிறைந்து விளங்கிய இவர் சுந்தரமூர்த்தி நாயனாரின் திருத்தொண்டர் தொகையை முதல் நூலாகவும், நம்பியாண்டார் நம்பியின் திருத்தொண்டர் திருவந்தாதியை வழிநூலாகவும் கொண்டு திருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணத்தைப் பாடினார். இத்திருத்தொண்டர் புராணத்தில் அறுபத்துமூன்று நாயன்மார்களினதும், ஒன்பது தொகையடியார் களினதும் வரலாறுகளை சேக் கிழார் பாடியுள்ளார்.
சமயக்குரவர் நால்வர். அவர்களுள் ஒருவராக விளங்குபவர் மாணிக்கவாசக சுவாமிகள் பன்னிரு திருமுறைகளில் எட்டாம் திருமுறையில் அடங்கும் திருவாசகம், திருக் கோவையாரின் ஆசிரியராகவும் விளங்குகிறார். எனினும் அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவராக திருத்தொண்டர் தொகையில் இவர் சேர்க்கப்படவில்லை. சுந்தரரும் இவரை தனது திருத்தொண்டர் தாகையில் பாடவில்லை. ஆனால் எட்டாம் திருமுறையாக இவரது தொகுப்பு இடம் பெற்றுள்ளது. பன்னிரண்டாம் திருமுறையில் இவர் சேர்க்கப்படாதது ஆராய்ச்சிக்குரியதே.
மாணிக்கவாசக சுவாமிகள் பெரிய புராணத்தில் இடம் பெறாமைக் குரிய காரணங்களை எடுத்து நோக்கும்போது சேக்கிழார் சோழ மன்னனின் முதலமைச்சராக விளங்கியவர். மாணிக்கவாசக சுவாமிகள் பாணி டிய மன்னனின் முதலமைச்சர். காலகாலமாக தமிழ் மன்னர்களாக இருந்த
48

) மாணிக்கவாசகர் ாததேன்?
க. கேமலோஜினி
போதிலும் சேர, சோழ, பாண்டியருக்கிடையில் போட்டியும் பூசல்களும் நிகழ்ந்த வண்ணமே இருந்தன. எனவே சேக்கிழாரும், மாணிக்க வாசகரும் ஒரே காலத்தவர்கள் அற்ற போதிலும் அரசியல் ரீதியில் இருவரும் எதிர் எதிர் நாட்டினராகவே விளங்கினர். சோழ மன்னனின் வேண்டுகோளுக்கிணங்க பெரியபுராணம் பாடிய சேக்கிழார் பாண்டிய மன்னனின் அமைச்சராக இருந்த மாணிக்கவாசகரை பாடாது தவிர்த்திருக்கலாம்.
அடுத்து மாணிக்கவாசகர் சிவனைப் பாண்டியனாகவே பாவனை செய்துள்ளார். "பாண்டிநன் நாடன்.", "தென்பாண்டி நாட்டானே" தென்னாடுடைய சிவனே போற்றி", "தில்லையூர்க் கூத்தனே தென் பாண்டி நாட்டானே.” எனப் பாவனை பண்ணிப் பாடினார். எனவே சோழ மன்னர்களும் சைவத்தை வளர்த்தவர்களாகவுள்ளபோதிலும் பாண்டியர்களை மாணிக்கவாசகர் உயர்வு படுத்தியதால் மூவரையும் பெருமைப்படுத்திய சோழர்கள் பாண்டியனின் முதலமைச்சராக விளங்கிய மாணிக்கவாசகரை முதன்மைப்படுத்தாது புறக்கணித்திருக்கக்கூடும்.
இயல்பாகவே சேக்கிழாரும் மாணிக்கவாசக ரும் இருநாட்டு அமைச்சர்களாக உள்ளதாலும் சேக்கிழார் கவித்துவம், புலமைத்துவம், பாண்டித்துவம் பெற்ற ஒருவர். அவரைப் போலவே மாணிக்கவாசகரும் தென்னவன் பிரமராயன் என பாண்டிய மன்னரால் சிறப்புப் படுத்தப்பட்ட மதிநுட்பம் வாய்ந்த அமைச்சராக விளங்கியவர். எனவே இவ்விருவர்களுக்கும் தனிப்பட்ட முறையிலான போட்டி பொறாமை யினால் சேக்கிழார் மாணிக்க வாசகரைத் தவிர்த்திருக்கலாம்.
சுந்தரமூர்த்தி நாயனார் நம்பியாண்டார்நம்பி ஆகிய இருவரும் மாணிக்கவாசகரை தமது திருத்தொண்டர் திருவந்தாதிகளில் பாடாததால் அவர்களை அடியொற்றிப் பாடிய சேக்கிழார் பழைமை போற்றும் பண்டிதராக மாணிக்க வாசகரை ஓரம் கட்டியிருக்கலாம். அத்துடன் மாணிக்கவாசகர் வேதாந்திகளின் கருத்துக்களை கண்டித்தமைய்ால் இவரை வெறுத்து, பாடாது விட்டிருக்கலாம்.

Page 55
மாணிக்கவாசகரின் தாய்மொழி தெலுங்கு எனக் கருதப்படுகின்றது. திருவாசகத்திலும் அத்தன், அச்சன், அத்தெந்துவே போன்ற சொற்கள் காணப்படுவதால் இவரை மொழிக் காழ்ப்புணர்வு காரணமாக தவிர்த்திருக்கலாம்.
க் கோவையார் காமநூல் என்றும், வழிபாட்டுக்குரிய ஒரு நூல் அல்ல என்றும் கருதப்பட்டது. எனவே தொகுக்காமல் விடப்பட்ட தாகக் கருதப்படுகிறது. எனவே இதனால் மாணிக்கவாசகரை பெருமைப்படுத்தாது தவிர்த்திருக்கலாம். என கருதமுடிகிறது.
மாணிக்கவாசகர் பெரியபுராணத்தில் போற்றப்படவில்லை என்ற கருத்துக்களும் அதற்கான விளக்கங்களும் இவ்வாறு இருக்கும் போது ஒன்பது தொகையடியார்களில் ஒருவராகக் கருதப்படும் “பொய்யடிமையில்லாப் புலவர்” என்பது மாணிக்கவாசகரையே குறிக்கும் என்பதற்கு சான்றாக மாணிக்கவாசகர் திருவாசகத்தில் 17 இடங்களிலும் திருச்சதகத்தில் 11 இடங்களிலும் தன்னைப் பொய்யன் எனக் கூறுகின்றார். எனவே சுந்தரர் மாணிக்க வாசகரையே பொய்யடிமையில்லாப் புலவர் என விளித்திருக்கலாம். எனவே இக்கூற்று மூலம் ம்ாணிக்கவாசகர் சிறப்புப் படுத்தப்பட்டிருக்கலாம்.
சிவ இலங்கையில் ஐந்தாவது
"அன்பும் சிவமும் இர அன்பே சிவமாவதாரு அன்பே சிவமாவதாரு அன்பே சிவமாய் அம
ஐந்தாவது உலகச் சேக்கிழார் மாநாடு எதிர்வரு வருடம் ஆவணித்திங்கள் 24, 25, 26 ஆம் நாள் நடைபெற இருக்கின்றது. இம் மாநாட்டில் ஆ சமயத் தலைவர்களும், கல்விமான்களும், கலைஞ வேளையில் கருத்தரங்குகளும் மாலை நேரங்களி மாண்புமிகு இந்துக் கலாசார அமைச்சர் கே. என நடைபெறவுள்ள இம்மாநாட்டின் ஆரம்ப வைப ராஜபக்ஷ அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து உலகப்புகழ்பெற்ற ஆன்மீகத் தலைவரும், வன சங்கர் அவர்கள் தொடக்க உரையாற்றி மாநாட்ை
வி
- 6. தொலைபேசி : 0094-11-2391814
தொலைநகல் இல 0094-11-2394377
0.094-1-2394.382 அ
மின்னஞ்சல் : HinduconsultantGyahoo.co.in
: hinminasltnet.lk இ

அடுத்து சுந்தரர் "பத்திராய் பணிவார்", “பரமனையே பாடுவார்கள்", அப்பாலும் அடிச்சார்ந்தார்” எனும் மூன்று தொகையடியார் களை காலம், இடம் கடந்த தொண்டர்களாகப் போற்றியுள்ளார். எனவே இவ்வடிகள் மூலம் சுந்தரர் தான் வாழும் காலத்திற்கு முன்னுள்ள அடியார்களையும், பின்னே வாழப்போகின்ற அடியார்களையும் குறிப்பிட்டே இக்கூற்றைக் கூறியுள்ளார் என்றும் கருதலாம்.
எனவே எவ்வாறான கருக்கக்கள் * கூறப்படுகின்ற திே நரீவீர்களில் ஒருவராக போற்றப்படும் மாணிக்கவாசகரை சுந்தரர், நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார் ஆகிய மூவரும் ஏனைய அடியார்களுக்குக் கொடுத்த தன்மையை இவருக்கு வழங்காதது பருங்குறையே. எனினும் பாவை பாடிய வாயால் ஒரு கோவை பாடுக! என இறைவன் கேட்டதுடன் நடராஜப்பெருமானுக்கு பக்கத்தில் வீற்றிருக்கும் பெருமைக்குரியவராக விளங்கு பவர் மாணிக்கவாசகரேயாவார். எனினும் சிவனடியார்களின் பெருமை கூறும் தமிழிலக்கியமான பெரியபுராணத்தில் மாணிக்கவாசகரை பெருமைப்படுத்தாது விட்டமை பெருங்குறையே எனினும் இது மேலும்
:ேே
ه LDu lb உலகச் சேக்கிழார் மாநாடு
ண்டு என்பர் அறிவிலார் ம் அறிகிலார் நம் அறிந்தபின் ர்ந்திருப்பாரே”
திருமந்திரம் - 270) ம் 9, 10, 11 செப்ரெம்பர் 2005, நிகழும் பார்த்திய ஆகிய மூன்று தினங்களும் கொழும்பு மாநகரில் ன்மீகத் தலைவர்களும், ஆதீன முதல்வர்களும், நர்களும் கலந்து கொள்வர். ஆம் மாநாட்டில் பகல் ரில் கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற இருக்கின்றன. ர். டக்ளஸ்தேவானந்தா அவர்களின் தலைமையில் வத்தை இலங்கைப் பிரதமர் மாண்புமிகு மகிந்த சிறப்பிப்பார். 7ணக்கத்துக்குரியவருமான குருதேவர் ரீ ரீ ரவி ட தொடக்கி வைப்பார். ழா ஏற்பாட்டாளர், சல்வி. மகேஸ்வரி வேலாயுதம் தியுரைஞர், (இந்துசமய கலாசார விவகார அமைச்சு) ಕ್ಲಿಷ್ಡಿ' தூர்ந்த விற்பனை அபிவிருத்தி, கூட்டுறவு பிவிருத்தி, இந்துசமய அலுவல்கள் அமைச்சு, மற்றும், ல்வி, வாழ்க்கை தொழிற்பயிற்சிக்கு உதவும் அமைச்சு. v. 64, காலி வீதி, கொழும்பு-03.
49

Page 56
7.
10.
50
மாநாட்டின்
சிவபூம் என்றழைக்கப்படும் இ ஊட்டுதல்.
மனித நேயத்தை வளர்த்து ம பரப்புதல்.
சேக்கிழாரின் பெருமையை உலக
பக்தியால் உணரப்பட வேண்டிய பக்தி நெறியை பரப்பி சித்த நெறியாகக் கொண்டு ஒழுகுதல்
சமயம் என்பது வாதப் பிரதிவாத அதை வாழும் முறையாக, வி உணரப்படும் ஒன்றாக மாற்றியை
உள்ளும் புறமும் எங்கும் வியாட் அறிந்து உணர்ந்து அனுபவி தத்துவங்களை முதன்மைப்படு
பஞ்சாட்சர மந்திரத்தின் மகிஎ செய்தல்.
ஓரறிவிலிருந்து ஆறு அறிவுள் மன்னுயிர்களிடையே சமத்துவத்
நீதியை நிலை நாட்டி சகோதரத்
சிந்தை மகிழும் தேவார திருமு ஒதவும், அவற்றின் பலனை சை
உலகமெலாம் பரந்து வாழும் ஆத்ம சக்திமிக்க மக்களாக வா
 

நோக்கங்கள்
லங்கைத் தீவில் சைவத்திற்கு மறுமலர்ச்சி
ானுடத்தை வாழ வைக்க சைவநெறியினை
றியச் செய்தல்.
ஞானப் பரம்பொருளை உணர்ந்து உய்வதற்கு த்தை சிவமாக்கும் சைவத்தை வாழ்க்கை
தங்களுக்கான கருப்பொருளாகக் கொள்ளாமல் ாழ்க்கைக் கலையாக மாற்றி, அனுபவித்து மத்தல்.
த்து நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருளை
ப்பதற்கு ஏற்ற வழிபாட்டு முறைகளையும், த்துதல்.
மையை உலகமெல்லாம் உணர்ந்து ஒதிடச்
6T Fo ஜீவராசிகளிலும், தெய்வீகத்தையும் ந்தையும் கானுகின்ற மேன்மை கொள் சைவ துவம், சமத்துவம் ஏற்பட வழிசமைத்தல்.
றைகளை பண்ணோடு பிழையின்றி முறைப்படி வ உலகம் அடையச் செய்தல்.
சைவர்களை அவர்களின் சைவநெறியில் நின்று ழவைத்தல்.

Page 57


Page 58