கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பண்பாடு 2007.08

Page 1
Jci
PANPADU
இதழ்: 01
ம) புதிய தமிழ் இலக்கணம்
அதன் தேவையும் சிக்கல்க
ா9 பெரிய புராணச்சிறப்பு
ா) ஞானாமிர்தம் - மீள்பார்வை
9 மொழிவளர்ச்சி இலக்கணத்
மொழித் தூய்மையும்
ா) இலங்கைப் பயணம் - சில
ா) ஆலயங்கள் வளர்த்த இ.ை
ம) திருவாசகம் காட்டும் சமய பக்தி வெளிப்பாட்டு உத்தி
இதழ்
G5g5 GFLDULUI, & 56ADITEUFITUT SÐ இல.248 1/1
Gabi Cup
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

V J/
இதற் JOURNAL
g5 TL160) LDLIL b
குறிப்புக்கள்
சக்கலை
தத்துவ சிந்தனைகளும்
களும்

Page 2
பதிப்பு: ஆவணி 2007 65606): 50/=
முப்பத்தோராவது இதழ
1. பேராசிரியர் அ.சண்முகதாஸ் இவர் யாழ் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைட் தொடர்பாக பல ஆய்வுக் கட்டுரைகளை எழுத வெளியிட்டுள்ளார் 2. சித்தாந்தரத்தினம் செ.வே.சதான இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். புராண இதிக சமய அறிவும் கொண்டதால் பல ஆய வெளிக்கொணர்ந்தவர். 3. முனைவர் பழ.முத்தப்பன் இவர் புதுக்கோட்டை மேலைச்சிவபுரி கணேச தமிழ் தொடர்பான ஆற்றல் மிக்கவர். இவைச் வெளியிட்டுள்ளார். 4. கலாநிதி எம்.ஏ.நு. மான் இவர் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் தட தமிழ்மொழி தொடர்பாக ஆழ்ந்த புலமையும் பல நூல்களை எழுதியுள்ளார். சிறந்த கவிஞ 5. திரு. பே.சு.மணி தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். சிறந்த இலக்கிய என்பனவற்றில் ஆழ்ந்த புலமையும் ஆற்றலும் L எழுதியுள்ளார். பூரீமதி ஜெயந்தினி விக்னராஜா இவர் மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா அழ விரிவுரையாளராகப் பணிபுரிபவர். இசைத் மேற்கொண்டு வருபவர். முனைவர் எச். சித்திரபுத்தன் இவர் தஞ்சாவூர் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் ஆற்றல் மிக்கவர். இவைகள் தொடர்பாக ஆய் எழுதியுள்ளார்.
பண்பாடு பருவ இதழில் பிரசுரமாகியுள்ள கட்டு
அக்கட்டுரைகளை எழுதியவர்களின் சொந்தக் க திணைக்களத்தின் கருத்துக்களைப் பிரதிபலிட்

மின் கட்டுரையாளர்கள்
1 பேர78சிரியராகக் கடமை புரிந்தவர். தமிழ்மொழி யுள்ளார். இது தொடர்பாக பல நூல்களையும்
ந்தன் ாசங்களில் புலமை மிக்கவர். தமிழ் அறிவுடன் 'வுக் கட்டுரைகளை எழுதி நூல்களாக
ர் செந்தமிழ் கல்லூரியின் முதல்வர். சமயம், 5ளில் பல ஆய்வுகளைச் செய்து நூல்களை
பிழ்த்துறை தலைவராகவுள்ளார். மொழியியல், ஆற்றலும் மிக்கவர். இவைகள் தொடர்பாக 3ரும் ஆவார்.
வாதியும் ஆர்வலரும் ஆவார். தமிழ்,"சமயம் பிக்கவர். இவைகள் தொடர்பாக பல நூல்களை
轟 கியல் கற்கைகள் நிறுவனத்தில் இசைத்துறை துறையில் உயர்கல்விக்கான ஆய்வுகளை
't
துறைப் பேராசிரியர் தமிழ், சமயம் தொடர்பான வுகளை மேற்கொண்டுள்ளதுடன் நூல்களையும்
|ரைகளில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் யாவும் ருத்துக்களாகும். இவை இவ்விதழை வெளியிடும் பனவாகா. ஆசிரியர்

Page 3
LuGooi
(முப்பத்தோ
LD6) 16 இதழ்
வெ
இந்து சமய, கலாசார அ இல.248 1/
கொரு
 
 
 

LIUTG5)
NA
ராவது இதழ்)
O 2007 - ஆவணி
சிரியர்
ாவுக்கரசன்
ஆசிரியர்
வநாயகம்
p:
3
அலுவல்கள் திணைக்களம் I, காலி வீதி, publ-04

Page 4
பொருளடக்கம்
丸
புதிய தமிழ் இலக்கணம் அதன் தேவையும் சிக்கல்களும்
பெரிய புராணச் சிறப்பு
ஞானாமிர்தம் மீள்பார்வை
C.
மொழி வளர்ச்சி இலக்கணத் தூ
மொழித்தூய்மையும்
V 6
என் இலங்கைப் பயணம் - சில ( G
ஆலயங்கள் வளர்த்த இசைக்கை
திருவாசகம் காட்டும் சமய தத்து சிந்தனைகளும் பக்தி வெளிப்பா
6

பக்கம்
1
y.சண்முகதாஸ்
w 10
ச.வே.சதாநந்தன்
17 மனைவர் பழ.முத்தப்பன்
ப்மையும் 27
ம்ஏநு. .LOT607
குறிப்புகள் . 38 பே.சு.மணி
R) 42 ரீமதி ஜெயந்தினி விக்னராஜர்
46 لمي .
ாட்டு உத்திகளும் 7ச்சித்திரபுத்தன்

Page 5
புதிய தமிழ் அதன் தேவைய
அ.சண்
முன்னுரை
இலக்கணம் என்பது இலட்சணம்' அல்லது இயல்பு’ என்று கொள்ளில் தமிழ் மொழியின் இலட்சனங்களை அல்லது இயல்புகளைக் கூறுவது தமிழ்மொழி இலக்கணம் எனப்படும் ஆனால், நம்மொழியின் இலக்கண வரலாற்றை நோக்கில், தமிழ் மொழிக்கு மட்டுமன்றி, அம்மொழியிலான இலக்கியங்களுக்கும் இலக்கணம் வகுக்கும் மரபு இருந்துவந்துள்ளதை நாம் அறிவோம். 'இலக்கியங் கணிடதற் கிலக்கண மியம்பும்" போக்கு, ஐந்திலக்கணங்கள் வகுக்கும் போக்கு, இலக்கிய மொழிக்கே இலக்கணம் வகுக்கும் போக்கு ஆகியன இம்மரபின் பாற்படுவன. "தற்போது மொழியிலான இலக்கியங்களின் இயல்பு பற்றித் திறனாய்வு என்னுந்துறை விரிவாக ஆராய்கின்றது. இலக்கியங்களுக்கும் மொழிக்குமுள்ள தொடர்பு குறித்து நடையியல் என்றொரு புதியதுறை பேசுகின்றது. எனவே, இலக்கணம் என்னுஞ் சொல்லினை மொழியினுடைய இயல்புகளை மட்டும் விவரணஞ் செய்யும் முயற்சிக்கு உரியதாக வழங்குவது பொருத்தமாகும்.
1.புதிய இலக்கணத்தின் தேவை
மரபுவழிவந்த தமிழ் இலக்கண நூல் எனக் கடைசியாக வெளிவந்தது ஆறுமுகநாவலரின் இலக்கணச் சுருக்கம் என்பதாகும். இதனைத் தொடர்ந்து பல சிறு இலக்கண நூல்கள் வெளியிடப்பட்ட போதிலும் இவை எவையேனும் வளர்ச்சியடைந்த தமிழ் மொழிக்கேற்ற இலக்கண நூல்களுக்கெல்லாம் வழிகாட்டியாயமைந்த தொல்காப்பியம் வடமொழிக்கு அமைக்கப்பட்ட இலக்கண மாதிரியை தமிழ் மொழிக்கும் அமைத்துக் கொண்டது. தமிழ்மொழி சமஸ்கிருத மொழியைப் போலன்றி மொங்கோலிய, யப்பானிய மொழிகளைப் போல ஒர் ஒட்டுமொழி என்பது

இலக்கணம் பும் சிக்கல்களும் முகதாஸ்
மரபுவழி இலக்கண நூலாராலே உணரப் படவில்லை.
அவ்வாறு அவர்கள் உணர்ந்திருந்தால், திமிழ்மொழியில் இடைச்சொற்களுக்குள்ள முதன்மைப் பண்பினை அறிந்து அதற்கேற்றபடி இலக்கணம் வகுத்திருப்பர். இதனால் சங்கப் பாடல்களிலும் பிற்கால இலக்கியங்களிலும் நுணுக்கமான உணர்வுப் பொருளையும் சொற்றொடர் ஒழுங்கையும் நலர்க?ய இடைச்சொற்கள் உரைகாரர்களாலே இசை நிறைகளும் அசை நிலைகளும் எனப்பட்டன.
ஒரு செய்யுளிலே இவ்வாறு பல இசை நிறைகளும் அசை நிலைகளும் இடம்பெறுமாயின் அச் செய்யுளைப் பாடிய சங்கப் புலவனர் சொற்பஞ்சமுடையவனோ என்று எணர்ணவேண்டியுள்ளது. சமஸ்கிருத மொழி இலக்கண மாதிரியைப் பின்பற்றித் தமிழ் இலக்கணம் அமைந்ததால் இதுபோன்ற பல இடர்பாடுகள் ஏற்பட்டன.
தமிழ்மொழியின் வளர்ச்சி நிலைகளை நன்கு இனங்கண்டு, அம்மொழியின் ஒலியமைப்பு, சொல்லமைப்பு, தொடரமைப்பு ஆகியவற்றுக்கெல்லாம் இலக்கணங் கூறும் முயற்சிகளை இந்நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து நவீன மெய்யியலாளர் மேற் கொணர்டுள்ளனர். இவர்கள்கூட, தாம் தாம் ஏற்றுக்கொண்ட இலக்கண மாதிரிகளை அடிப்படையாகக் கொணர் டே விளக்கங்கள் கொடுத்தனர். மேலைத்தேய மொழிகளின் செல்வாக்கிலே உருவாகிய நவீனமொழியியற் கோட்பாடுகளைக் கற்ற நாம், தமிழ்மொழி அம்மொழிகளின்றும் வேறுபட்ட பணிபுகளுடையது என்பதை மறுத்துவிடுகிறோம். ஐரோப்பிய மொழிகளிலே இடைச்சொற்கள் முதன்மைத் பெறுவதில்லை. 9/fig. 6360), d65/injas67 "Minor Particle" என்னும் தொடராலே குறிக்கப்பட்டன. இதே தொடரைத் தமிழ் இடைச்சொற்களைக்

Page 6
குறிப்பரிடவும் உபயோகரிப்பரினர், நாம் தமிழ்மொழியின் உண்மையான அமைப்பினைத் தெளிவுற விளங்கிக் கொண்டு அம்மொழிக்கு இலக்கணம் வகுக்கின்றோம் எனக்கூற முடியாது அத்துடன் மொழியியலாளர் தத்தமக்கேற்றபடி கலைச்சொற்களை உபயோகித்து உள்ளனர். இவற்றுக்கிடையே இன்னும் ஒருமைப்பாடு காணப்படவில்லை.
தழிழ் மொழிக்கு இலக்கணம் எழுத முற்பட்ட மொழியியலாளர்களும் முழுமையான ஓர்
இலக்கண நூலை இதுவரை அமைத்தாரில்லை.
தமிழ்மொழிக்கு தற்கால அடிப்படையில் புதிய முழுமையான இலக்கணம் அமைக்கவேண்டியது சிறப்பான, கட்டாயமான தேவை என்பதை நாம் உணரும் அதேவேளை, அததகைய இலக்கணத்தை அமைப்பதிலே உள்ள பல சிக்கல்களையும் நெஞ்சிருத்த வேண்டியுள்ளது.
2. இலக்கணம் அமைப்பத7லுள்ள சிக்கலிக்ள்
21 இருவழக்குப் பண்பும் பேச்சுவழக்குகளும்
இன்றைய தமிழ்மொழிக்கு இலக்கணம் அமைப்பதெனின் இன்றைய இலக்கியங்களிலே கையாளப்படும் மொழிவழக்கு, இன்றைய தமிழ் மக்களின் பேச்சு வழக்குகள் என்பனவற்றையெல்லாம் எண்ணிப்பார்க்க வேண்டும். இவை தொடர்பாக (1) தமிழ் மொழியின் இரு வழக்குப் பண்பு' (2) தமிழ் மொழியின் பல்வேறு பேச்சு வழக்குகள் என்னும் இரு விடயங்கள் விரிவாக நோக்கப்படவேண்டும்
தமிழ் மொழியின் இருவழக்குப் பண்பு' அல்லது இருநிலை மொழி’ (சண்முகம் 1986) பண்டைக் காலந்தொட்டே தமிழ்மொழியிலே காணப்பட்டு வருவதாகும். இத்தன்மையச் சண்முகம்பிள்ளை (1960) சண்முகம் (1978), சண்முகதாஸ் (1981) விரிவாகவும் நோக்கியுள்ளனர். இன்றைய தமிழ் இலக்கியங்களெல்லாம் பேச்சு வழக்கில் மட்டுமோ, இலக்கிய வழக்கில் மட்டுமோ அமைவனவல்ல. இரு வழக்குகளுமே அவற்றில் பயின்று வருகின்றன. இலக்கிய வழக்கு ஒன்று எம்மிடம் இருப்பதால் இன்றை இவ்வழக்குக்கும்
é

இலக்கணம் அமைக்கப்படுவது இன்றியமையாததாகும்.
இனி தமிழ்ப் பேச்சு வழக்குகளை எடுத்துக் கொண்டால் பருமட்டாக இந்தியத் தமிழர் பேச்சு வழக்கு, ஈழத்தமிழர் பேச்சு வழக்கு என இரு பெரும் பிரிவுகளாகப் பாகுபாடு செய்துகொள்ள. லாம். இவ்விரு வழக்குகளுக்கு இடையேயுள்ள பல வேறுபாடுகள் பற்றி சுவாமி விபுலாநந்தர் 1946 - 1941), சுவெலெபில் (1959, 1966), சண்முகம்பிள்ளை (1962, 1968), வேலுப்பிள்ளை 1972), சுசீந்திரராஜா (1973, 1982, 1984), யேசுதாசன் (1977 1979), சண்முகதாஸ் (1983) ஆகியோர் நோக்கியுள்ளனர். இன்றைய தமிழ் இலக்கணம் அமைக்கும்போது இவ்வேறு. பாடுகளையெல்லாம் நெஞ்சிருத்தியே முயற்சிக்க வேண்டும். அவ்வாறு முயற்சி செய்யினும், ஈழத்தமிழிலே யாழ்ப்பாணப் பேச்சு வழக்கு, ம்ட்டக்களப்பு பேச்சுவழக்கு என இரு பெரும் பாகுபாடு இருப்பதையும், இந்தியத் தமிழில் பிராமணர் வழக்கு, பிராமணர் அல்லாதோர் வழக்குத் தொடக்கம் பல்வேறு வழக்குகள் இருப்பதையும் நாம் மறக்கலாகாது. எனவே, இன்றைய பேச்சுத் தமிழுக்கு இலக்கணம் எழுத முயற்சிப்பின் r
1. தமிழ்ப் பேச்சு வழக்குகளுக்கெல்லாம் பொதுப்படையாக அமையும் இயல்புகளை முதலிலே இனங்காண வேண்டும்.
2. ஒவ்வொரு பேச்சு வழக்குக்குமுள்ள சிறப்பியல்புகளை இனங்கண்டு அவற்றைப் பொதுவியல்பு ஒவ்வொன்றுடனும் தொடர்புறுத்தி நோக்கவேண்டும்.
எனவே, இவற்றையெல்லாம் அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு இலக்கண வகைமைக்கும் இலக்கணக் கூறுக்கும் பொது விதிகளை வகுக்கின்ற வேளையில், பல்வேறு பேச்சு வழக்குகளை நெஞ்சிருத்தி சிறப்பு விதிகளும் வகுக்கவேண்டிய தேவையுண்டு.
இன்றைய தமிழ் இலக்கணம் அமைக்கும்போது வேறு சில சிக்கல்களும் உண்டு தமிழில் இதுவரை எழுந்த தமிழ் இலக்கணங்கள் இனங்கணட இலக்கண வகைமைகள்

Page 7
இலக்கணக் கூறுகள் பற்றி வழங்கப்பட்டுள்6 விளக்கங்கள் பொருததமானவையா பொருந்தாவிடின் இன்றைய தமிழ்மொழியில் நிலைப்பாடுகள் என்ன? என்பன தெளிவாக்கப்ப வேண்டும். இது தொடர்பாகப் பின்வரு தலைப்புகள் நுணுகிய நோக்குக்கு உட்ப வேண்டியன.
22 உச்சரிப்பும் வரிவடிவமும்
மொழி முதலிலும் இரண்டு உயிர் ஒலிகளுக்கு இடையிலும் தன்னின வெடிப்பொலிகளுக்கு பின்பும் தன்னின முக்கொலிகளுக்குப் பின்பு இடம்பெறும் க், ச், ட், த் வெடிப்பொலிகளின் உச்சரிப்பு வேறுபாடுகள் பற்றிப் ப6 மெய்யியலாளர்கள் நோக்கியுள்ளனர். ஒே வரிவடிவம் இரண்டு அல்லது முன்று வகையான உச்சரிப்புக்களையுடையன என்னும் உண்ை வெளிக்கொணரும்படியாக விளக்கங்களே விதிகளோ அமைக்கப்படவேண்டும் /ற்/ என்னும் வரி வடிவுக்கும் உச்சரிப்புக்குமிடையேயுள்ள சிக்கலும் தெளிவுறுத்தப்பட வேணடும் தொல்காப்பியர் /ற்/ எழுத்தினுடைய பிறப்பு பற்றிக் கூறுமிடத்து.
"அணரி நுனிதா - வண்ண மொற்ற ற.கா க.கா னாயிரண்டும் பிறக்கும்”
(எழுத்ததிகாரம் கு 94
என்று கூறுகின்றார். நாவினுடைய நுன மேல்நோக்கிச் சென்று அண்ணத்தைத் தீண்ட /ற்/ , /ன்/ என்னும் ஒலிகள் பிறக்கும் என கூறப்படுகின்றது. எனவே, தொல்காப்பிய காலத்தில் கற்பு, பற, கன்று என்னும் சொற்களிலே இடம்பெறும் /ற்/ ஒலி ஆங்கில் //யினுடைய உச்சரிப்புப் போன்ற முன்னண்ண ஒலியாகவே அமைந்திருந்தது. நன்னூலாரு அதே சூத்திரத்தை அப்படியே திருப்பிக் கூறுகின்றார். ஆனால், இன்று நாம் மேல் காட்டிய மூன்று சொற்களிலும் கற்பு என்பதில் இடம்பெறு /ற்/ஒலியை மட்டும் தொல்காப்பியர், நன்னூலா குறிப்பிட்ட உச்சரிப்புக்கமைய உச்சரிக்கிறோய ஏனைய இரு சொற்களிலுமுள்ள /ற்/ஒலியை ஆடொலியாகவே உச்சரிக்கிறோம். இவ்வொலி பற்றி மரபுவழி வந்த எத்தமிழ் இலக்கண

放
5
y
நூலிலும் விளக்கம் கொடுக்கப்படவில்லை. இவ்வொலி மாற்றம் எக்காலகட்டத்திலே ஏற்பட்டது என்பது ஆராய்ந்து நோக்கப்படவேண்டிய தொன்றாகும். எனினும் இன்றைய தமிழ்மொழி இலக்கணம் இவ்வெழுத்தின் இருவேறு ஒலிக்கூறுகள் பற்றிய விள்க்கமுடையதாக அமையவேண்டியது இன்றியமைսյո955/7&img/.
wa
3
இன்றையத் தமிழ் இலக்கணம் எழுத முயற்சிப்பவர் எதிர்நோக்க வேண்டிய இன்னொரு சிக்கல் /ழ்/ழ்/ /ள்/ என்னும் எழுத்துக்கள் தொடர்பானதாகும். இன்று தமிழிலுள்ள எல்லாப் பேச்சு வழக்குகளிலுமே /ழ்//ள்/ ஆகிய இரண்டும் /ள்/ என்று உச்சரிக்கப்படுகின்றன. எனினும் எம்முடைய மொழியிலே /ழ்/ /ள்/ ஆகியன ஒலியன்களாக இடம்பெறும் குறையொலி இணைகள் பலவற்றை எடுத்துக் காட்டுக்களாகக் காட்டலாம் (வாழ், வாள், கிழவி இழை, இளை) இன்றைய பேச்சு மொழிக்கு இலக்கணம் வகுக்கும்போது /ள் என்ற ஒலி இருப்பதாகவே கூறவேண்டியுள்ளது. அப்படியாயின் /ழி/ வரிவடிவம் இடம்பெற்ற சொற்களிலே அதற்குப் பதிலாக /ள்/ வரிவடிவு இட்டுத்தான் காட்டவேண்டும். இது பொருத்தமான முறையாக அமையுமா? சிக்கல் நாம் ஆழமாக நோக்கித் திர்க்கவேண்டியதொன்று.
2.3 சார்பெழுத்துக்கள்
குறுக்கங்கள், அளபெடைகள், ஆய்தம் எனப்பட்டவற்றை உள்ளடக்கிய சார்பெழுத்துக்கள் என்னும் பாகுபாடு வேண்டப்படுவதொன றோ என்பதும் ஆராயறர் பாலது. செய்யுளுக்காக முதன்மைப்படுத்தப்பட்ட குறுக்கங்கள் பேச்சு வழக்கிலே பின்பற்றப்படுவனவாயில்லை. ஆனால், பேச்சு வழக்கிலே சிற்சில சந்தர்ப்பங்களில் நெட்டொலிகள் நீண்டொலிப்பது இயற்கையாகவே நிகழ்கின்றது. எழுத்துக்கள் அவற்றின் ஒலிகள் பற்றிக் கூறுமிடத்து இவ்வியல்பினைச் சிறப்பாகக் கூறிவிடலாம் ஆய்தம் என்றதொரு எழுத்தினை இக்காலத்தில் நாம் எவரும் உபயோகிப்பதில்லை இக்குறியீட்டை, தேவையேற்படின், மொழியின்

Page 8
ஏதாவது சிறப்புத் தேவைக்கு உபயோகித்துக் கொள்ளலாம். ஒட்டுமொத்தமாக நோக்குமிடத்து, சார்பெழுத்து என்றொரு பாகுபாடு இக்காலத் தமிழ்மொழி இலக்கண அமைப்பில் தேவையற்றதொன்றென்றே கருதவேண்டியுள்ளது. 24 சொற்பாகுபாடு
தொல்காப்பியர் தொடக்கம் எல்லா மரபுவழித் தமிழிலக்கண நூலாரும் தமிழ்ச் சொற்களை (1) பெயர், (2) வினை. (3) இடை, (4) உரி என்னும் நான்கு பிரிவாகப் பாகுபாடு செய்துள்ளனர். இன்றைய தமிழ்மொழி இலக்கண அமைப்பிலே இத்தகைய பாகுபாடு ஏற்புடையதா இல்லையா என்பதும் ஆய்வுக்குரியதாகும் சொற்பொருளை விளக்கும் பல்வேறு வகைப்பட்ட அகராதிகள் இக்காலத்திலே சொற்பொருள் தெளிவுற விளங்காச் சொற்களென ஒரு பாகுபாடு தேவையற்றதாகின்றது. பண்டைக்காலத்திலும் இடைக்காலத்திலும் இப்பாகுபாடு தேவையானதொன்றாயிருக்கலாம் சண்முகம் (1986 176 - 77) உரிச்சொல் பற்றி ஆராய்ந்து முடிவுரையிலே,
'எனவே உரியியலை, ஒரு நோக்கில சொற்பொருளியலை விளக்கும் இயலாகக் கொண்டு. இங்கு சொல் இலக்கண நோக்கில் அகராதியன் (Lexeme) பற்றியே பேசுகின்றது என்று கொள்ளலாம். அப்படியானால் முதல் குத்திரமும் கடைசி எட்டுச் சூத்திரங்களும் சொற்பொருளியல் பற்றிப் பொதுக்கருத்தாகவும் ஏனைய குததரங்கள் சொற் பொருள் உதாரணங்களாகவும் கொள்ள வேண்டும். வெளிப்பட வராத சொற்களின் பொருளினை விளக்குவதால் மேலும் இரண்டுவித நோக்கும் புலனாகிறது. இலக்கணத்தின் நோக்கம் இலக்கியக் கல்விக்கு உறுதுணையாக - இருப்பதென்பது, இது மறைமுகமாக ஒரு மொழியில் மொழி ஆராய்ச்சி தோன்றிய துவக்கக் கட்டத்தை அதாவது பழைய இலக கரியங்களை அறிந்துகொள்ள உதவுவதற்காகத்தான் மொழி ஆய்வு தோன்றியது என்பதையும் புலப்படுத்துகிறது. பயிலாத சொற்களுக்குப் பொருள் கூறுவது என்பது இலக்கியக் கல்விக்கு மொழி அளவில்

உரியியல் உ தவி செய்கின்றது என்று ஆகிவிடுகின்றது. இதனால் இலக்கியத்தின் வடிவத்தையும் உள்ளடக்கத்தையும் (பொருளையும்) கூறும் பொருளதிகாரத்தைத் தொல்காப்பியரே இயற்றியிருக்கக்கூடும் என்ற கருத்தையும் கூட குசகமாகப் புலப்படுத்து- , கின்றது.” a
என்று கூறியுள்ளமையை நோக்குமிடத்து இத்தகைய ஒரு சொற்பாகுபாடு சொற்பொருளை அடிப்படையாக வைத்து ஏற்படுத்தப்பட்டதென்பது புலனாகின்றது. எனவே இக்கால இலக்கண அமைப்புக்கு இத்தகைய பாகுபாடு தேவையற்றதாகி விடுகின்றது.
இடைச்சொல் என்னும் பாகுபாடும் இன்றைய தமிழ் இலக்கண அமைப்பிலே மீளாய்வு செய்து அமைக்கப்பட வேண்டியதொன்றாயுள்ளது. தமிழ்மொழி ஒட்டுமொழி வகையைச் சார்ந்தது. ஓர் அடிச்சொல் அல்லது வேர்ச்சொல்லுடன் பல பரினர்ன?லைகள் ஒட்டப்பட்டு ஒரு சொன்னிர்மைப்பட்டு நடக்கும் வடிவங்கள் தமிழிலே பலவுள. எடுத்துக்காட்டாக விடுவிக்கப்பட்ட என்னும் வடிவத்தினைப் பகுப்பாய்வு செய்யின்,
விடு - அடிச்சொல்
625 - பிறவினை காட்டும் ஒட்டு
கிக் - நிகழ்காலத்தை உணர்த்தும் ஒட்டு 9, - எதிர்கால வினை எச்ச ஒட்டு LI(6 - செயப்பாட்டு வினை ஒட்டு ட் - இறந்தகாலம் உணர்த்தும் ஒட்டு
9/ -- பெயரெச்ச ஒட்டு
இவ்வாறு அடிச்சொல்லுக்குப் பின்னாலே ஒன்றன்பின் ஒன்றாகப் பல பின்னிலைகளை ஒட்டிச் சொல் வடிவங்களை ஆக்கும் பண்பு ஒட்டு மொழிகளிலே காணப்படுவதொன்றாகும். ஆனால் இவ்வாறு ஒட்டப்படும் பின்னிலைகள் செய்திறன் உடையன. தொல்காப்பியர் இடைச்சொற்களைப் பின்வருமாறு பாகுபாடு செய்கிறார்,
அவைதாம் புணரியல் நிலையிடைப் பொருள்நிலைக் குதநவும் வினைசெயன் மருங்கிற் காலமொடு வருநஷம் வேற்றுமைப் பொருள்வயி னுருபா குநஷம் அசை ந?லைக் கபிளவி யாக வருநஷம்

Page 9
இசை நிறைக் கிளவியாகி வருநஷம் தத்தங் குறிப்பிற் பொருள் செய் குநஷம் ஒப்பில் வழியாற் பொருள் செய் குநஷ்மென் றப்பணி பினவே நுவலுங் காலை,
(சொல்லதிகாரம் கு 250)
இப்பாகுபாட்டினுள் திணை, பால், எண், இடம் உணர்த்தும் இடைச்சொற்கள் அடக்கப்படவில்லை. அவற்றை எப்பாகுபாட்டினுள் அடக்குவது? எனவே இக்காலப் பயன்பாட்டை நோக்கி இடைச்சொற்கள் பின்வருமாறு பாகுபடுத்தப்பட வேண்டும்.
1. திணை, பால், எண், இடம் உணர்த்துவன
(எ-டு: அன், ஆன் அள், ஆள், அ. மார்)
2 வேற்றுமை உருபுகள் (எ-டு: ஐ. கு, இன்) 3. வினைத்துணை நிலைகள் (காலங்காட்டும் இடைநிலைகள் எச்சம், பிறவினை, செயப்பாட்டுத் தன்மை ஆகியவனவற்றை உணர்த்துவன 4 சொல்லாக்கப் பின்னிலைகள்
(எ - தொழிற்பெயர் ஈறுகள்)
3. சரியைகள் (அடிச்சொல்லும் பின்னிலைகளும் சேருமிடத்து பொருள் வேறுபடாமலிருக்க அவற்றிடையே இடம்பெறும் இடைச்சொற்கள், எடுத்துக்காட்டாக பல - ஆல் என்பது பலவால் என ஆகிவிடாமல் பொருளைப் பாதுகாக்க வற்றுச் சாரியை இடையே வந்து பலவற்றால என்றாகிவிடும்)
6. ஒப்புமை உணர்த்துவன. (எ-டு: போல)
7 பேசுவோன் குறிப்பு, உணர்வு ஆகியவற்றை உணர்த்துவதுடன் தொடர்களைத் தொடுப்பனவும் முடிவு நிலையில் நிற்பனவும்
இறுதியாகக் குறிப்பிட்டுள்ள இடைச்சொற் பிரிவு பற்றிச் சிறிது விரிவாகக் க்றவேணடும். இடைச்சொற்களான ஏ, ஓ உம் தான் ஆகிய பேசுவோனுடைய வினா. தேற்றம் ஐயம் போன்ற குறிப்புகளை உணர்த்தவல்லன. இவை மரபு வழி இலக்கண நூலாராலும் குறிப்பிடப்பட்டவை. ஆனால் தொடர் அடிப்படையில் எழுவாயை முதன்மைப்படுத்துவது போன்ற பயன்பாடுகள் பற்றி அவர் குறிப்பிட்டாரில்லை. எடுத்துக் காட்டாக, பின்வரும் தொடர்களை நோக்குக.

(எடுத்துக்காட்டுகள் யாவும் ராஜம் கிருஷ்ணனின் கரிப்பு மணிகள் நாவலிலிருந்து பெறப்பட்டன. பக்க விவரம் கொடுக்கப்பட்டுள்ளது):
1. “சோறோ கஞ்சியோ போட்டு அவியளே வச்சிருக்காவ’ (ப.25)
2. நானும் அவனுமே வாரி வயப்ப்பம்’ (ப.27)
3. மூட முக்காருவாயிண்டு இங்க வாங்கி இவனுவளே மத்தவனுக்கு விக்க துரோவம் செய்யிறா" (ப28)
4 துட்டுக் குடுத்தா சொந்த பந்தத்தையே கொலை செய்யத் துணியிறா’
மேற்காட்டிய தொடர்களில் முதல் முன்றிலும் அவியளே. அவனுமே, இவனுளே என இடம்பெறும் வடிவங்களில் வரும் ‘ஏ’ கார இடைச்சொல் எழுவாயை முதன்மைப்படுத்தும் பயன்பாடுடையதாயுள்ளது. இறுதி எடுத்துக்காட்டில் தொடரின் சிறப்பு நிலையினை 'ஏ'காரம் (சொந்தபந்தத்தையே) முதன்மைப்படுத்துகின்றது. இவ்வாறு ஏ, ஓ, தான் போன்ற இடைச்சொற்களின் இக்காலப் பயன்பாடுகள் தெளிவுற இனங்காணப்படவேண்டும் இன்னும் இவ்விடைச் சொற்கள் 'உம்' தொடரில இடையில மட்டுமே இடம்பெறுவதாகும். மற்றயவை இடையிலும் இறுதியிலும் இடம்பெறுகின்றன. இவ்வாறு இடம்பெறும் இடைநிலைகள் தொடரமைப்புடன் எவ்வாறு தொடர்புபெறுகின்றன என்பதும் விரிவாக நோக்கப்பட வேண்டியதாகும்
இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல் ள்ன்னும் பாகுபாடும் இக்காலத்தில் தமிழ்மொழி இலக்கண அமைப்புக்கு வேண்டியதொன்றல்ல. இயற்சொல், திரிசொல் என்னும் வேறுபாடு செய்யுள் வழக்கை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டதாகும். அகராதி வசதியுடைய இக்காலத்திலே இப்பிரிவு தேவையற்றதாகி. விடுகின்றது. தசைச் சொல், வடசொல என்பவனவற்றையெல்லாம் பிறமொழிச் சொல் என்னும் ஒரு பகுதிக்குள் அடக்கிவிடலாம். எனவே, தமிழ்மொழிச் சொல். பிறமொழிச் சொல் என்னும் பாகுபாடு மட்டும் இன்றைய மொழி அமைப்புக்கப் போதுமானதாயமைகின்றது.

Page 10
2.5 குறிப்புச் சொல்
தமிழ்மொழியிலே மை"யிற்றுச் சொற்கள் பல
இருக்கின்றன. இம் மையிறு கொண்டமையும் போது பண்புப் பெயர்களாகவும் மையிறு கெட்ட நிலையிலே பெயர் அடையாகவும் பெயரெச்ச
மாகவும் வினையெச்சமாகவும் பயனிலைச்
சொல்லாகவும் பயன்படுகின்றன. எடுத்துக் காட்டாகப் பின்வருவனவற்றை நோக்குக.
அவன் பெருமை உடையவன் பெரு மலை
பெரிய மலை மலைபெருத்துத் தோன்றுகின்றது இந்த மலை பெரிது
முதல் வாக்கியத்திலே பெரு என்னும் அடிச்சொல் 'மை' யிறு பெற்றுப் பெயராகப் பயன்படுகின்றது. இரண்டாவது தொடரில் பெரு அடிச்சொல்லும் மலை பெயர்ச்சொல்லும் சேர்ந்து ஒரு சொன்னிர்மைப்பட்டுத் தொகையாக அமைகின்றது. இங்கு பெரு பெயரடையாகப் பணிபுரிகின்றது. மூன்றாவது தொடரிலே பெரிய என்பது பெரு அடிச்சொல்லிலிருந்து அமைந்த வடிவமாகி பெயர்ச்சொல். ஒன்றினை முடிக்குஞ் சொல்லாக எதிர்நோக்கி நிற்பது இங்கு மன்ல என்னும் பெயரினாலே முடிவடைகின்றது. இங்கு பெரிய என்னும் வடிவம் பெயரெச்சம் என்னும் இலக்கணக் கூறுக்குரிய பணி செய்கிறது. நான்காவது தொடரிலே பெருத்து என்பது வினையெச்ச வடிவமாக அமைகின்றது. இறுதித்
தொடரிலே பெரிது எனனுஞ சொலர்
பயனிலையாகப் பணிபுரிகின்றது. பெயராகவும் வினைபோலவும் அடையாகவும் முடிக்குஞ் சொல்லாகவும் ஒரே சொல் பயன்படுவதாயின்,
அத்தகைய சொற்களை பெயர்ப் பாகுபாட்டினுள்
அடக்குவதா வினைப் பாகுபாட்டினுள் அடக்குவதா என்ற சிக்கல் ஏற்படுகின்றது. இத்தகைய சொற்களை ஒரு தனிப்பாகுபாடாக அமைப்பதே பொருத்தமாகத் தோன்றுகின்றது. இக்கருத்தினை அரண் செய்யும் வகையில் Այլ 1 LIn 6077ա மொழியரில7ருந்து ஓர் எடுத்துக்காட்டைத் தருகின்றோம். யப்பானிய மொழியிலும் எம்முடைய மையற்றுச் சொற்களைப் போலப் பெருந்தொகையான சொற்களுண்டு.
6

பின்வரும் எடுத்துக்காட்டுக்களை நோக்குக.
1. kuro yama b([BDഞ്ഞബ്) 2. kuroki yama கரிய மலை 3. kuro ku miyu கருத்து மிளிரும் 4. yama kurosi ഥങ്ങബ) ക്വിക്ര/
யப்பானிய மொழியிலே kuro போன்ற சொற்கள் பெயரடையாகவும் எச்சமாகவும் முழ்க்குஞ் சொல்லாகவும் பயன்படுகின்றன. இத்தகைய சொற்களை அம்மொழியிலே பெயருக்குள்ளோ வினைக்குள்ளோ அடக்காமல் தனிப் பரிரிவாக பாகுபடுததவியுள்ளனர். தமிழ்மொழிக்கும் இத்தகையதொரு தனிப்பாகுபாடு பொருத்தமாயிருக்குமெனக் கொள்ளலாம். தமிழ் மொழியிலே குறிப்புவினை என்றொரு பிரிவினை வினையிலே இனங்காணுவதை விட, குறிப்பு வினையாகப் பயன்படும் சொற்களையும் மையிற்றுச் சொற்களையும் குறிப்பு வினைச்சொல் என்றொரு தனிப்பாகுபாட்டினுள் அமைத்தல் இன்றியமையாததாகும்.
2.6 வேற்றுமை
தமிழில் வேற்றுமையினை முதலாம் வேற்றுமை, இரண்டாம் வேற்றுமை என்று பாகுபடுத்துவதோ, ஐ’ வேற்றுமை ஒடு வேற்றுமை கு’ வேற்றுமை என்று பாகுபடுத்துவதோ பொருத்தமானதொன்றல்ல. பெயர்ச்சொல் ஒன்றுடன் வேற்றுமை உருபு சேருவதால் அப்பெயர் என்ன பொருளை உணர்த்துகின்றதோ அதனை அடிப்படையாகக் கொண்டு அது என்ன வேற்றுமை என நாம் இனங்காண வேண்டும் இன்றை தமிழ்மொழியில், வேற்றுமை அமைப்பினைப் பின்வருமாறு பாகுபடுத்தலாம்.
1. எழுவாய் வேற்றுமை பூங்குன்றன் பாடினான்.
2. செயப்படுபொருள் வேற்றுமை
அரசன் பூங்குன்றனைப் புகழ்ந்தான் 3. கருவி வேற்றுமை பூங்குன்றனால் அக்கருத்து முன்வைக்கப்பட்டது 4. உடனிலை வேற்றுமை
பூங்குன்றனுடன் உதியன் சென்றான்

Page 11
3 அடைதல் வேற்றுமை
இலக் கரியப் பரிசு பூங்குனிநனுக்கு வழங்கப்பட்டது.
6. நீங்கல் வேற்றுமை
பூங்குன்றனிடமிருந்து பாடலைப் பெற்றனர்
7 உடமை வேற்றுமை
14/5(560i/p60g/ L1660lp
8 இடவேற்றுமை
பூங்குன்றனில் நல்ல திறமையைக் கண்டனர்
9 விளி வேற்றுமை (4/BG56öWT 62/7/
ஒவ்வொரு வேற்றுமையின் தொடரியல் நிலை தெளிவாக இனங்காணப்பட்டு விளக்கம் பெறவேண்டும்
27 தொடரியல்
மரபுவழித் தமிழ் இலக்கணங்களிலே தொடர்களின் அமைப்புப் பற்றித் தெளிவாகவும் பகுப்பாய்வு முறையிலும் விளக்கம் கொடுக்கும் ஓர் இயலே அமைக்கப்படவில்லை. புதிய மொழியியலாய்வாளர்களே தமிழ் மொழியின் தொடரியலை நுணுக்கமாக ஆராய்ந்து எழுதியுள்ளார்கள். அவர்களுடைய எழுத்துக்களை எல்லாம் அடிப்படையாக வைத்துக்கொண்டு புதிய தமிழ் இலக்கணத்திலே தொடரி. யல் என்னும் பகுதி விளக்கம் பெறவேண்டும். துணை நூற்பட்டியல்
சண்முகம் செ.வை.
சண்முகதாஸ் அ.
1978
1986
1977
1978
'08 afavid 6
அண்ணாமை
சொல்லிலக்க
கழகம் அன
"ஆக்க இல அறிவியலும் வெளியீடு, ய
Lati: 5 / - 7
தமிழ்மொழி
முத்தமிழ் 6ெ (புதுக்கியது,

அடிக்குறிப்புக்கள்
1. இவை பற்றிய விளக்கங்களுக்குப் பார்க்கவும்
சண்முகதாஸ் (1689; 23 - 42)
2. எடுத்துக்காட்டாக கண், அக்கம் மகன் திங்கள் எனினும் நான்கு சொற்களிலும் /கி/ இடம் பெறுகின்றது. ஒரே வரிவடிவம் இடம் பெற்றாலும் முன்று வகையான
*உச்சரிப்புகள் இடம்பெறுகின்றன. முதலிரு சொற்களிலும் ஒலிப்பில் அடியண்ண ஒலியான (க்) ஆக ஒலிக்கின்றது. மூன்றாவது சொல்லில் ஆங்கில (h) போன்ற ஒலியும் நான்காவது சொல்லில் ஆங்கில Ig போன்ற ஒலியும் ஒலிக்கின்றது.
3. ஈழத்தமிழில் ஆடொலி பற்றிய கைமோகிராம், " பலவற்றோகிராம் மூலம் பெற்ற விவரங்களுக்குப் பார்க்கவும் தனஞ்செயராசசிங்கம் (1972) சண்முகதாஸ் (1972)
4. தமிழில் ஏ’ காரம் இவ்வாறு பயன்படுவது போல, யப்பானிய மொழியில் ya என்னும் இடைச்சொல் பயன்படுகின்றது. இவ்விரண்டினுடைய பயன்பாடுகளை இக்கட்டுரையாசிரியர் ஒப்பரிட்டு நோக்க?யுள்ளார். தகவல சண்முகதாஸ் (1991)
3. மேலும் விவரங்கள் பின்வரும் கட்டுரையிலே கொடுக்கப்பட்டுள்ளன. சண்முகதாஸ் (1987)
ழுத்தும்” மொழியியல் 23 பக். 37 - 85, லநகர் ணக் கோட்பாடு அனைத்திந்திய தமிழ்மொழியியற் ர்ணாமலைநகர்
க்கியமும் மொழியியலும்” ஆக்க இலக்கியமும் (பதிப்பாசிரியர்: அ.சண்முகதாஸ்) தமிழ்துறை ழ்ப்பான வளாகம், இலங்கைப் பல்கலைக்கழகம்
حی
இலக்கண இயல்புகள் ளியிட்டுக் கழகம் யாழ்ப்பாணம், இரண்டாம் பதிப்பு

Page 12
சண்முகம்பிள்ளை
யேசுதாசன். சி
விபுலாநந்தர், சுவாமி
வேலுப்பிள்ளை. ஆ.
DevaSundaram.N
Sanmugadas. A
Shumugampilai.M,
Suseendirarajah. S
s = s o o s s s e s s s e a o e e - - - -
1968
1979
1941
1972
1981
1972
1983
1987
1991
1962
1973
"யாழ்ப்பாணத்
LP2/60/7.
"பேச்சுத் தமிழ் மொழியியல் Lai, 6.5 - 88,
"சோழ மண்ட கலைமகள் ப
"ஈழநாட்டுத் த பாவலர் துரை
Tamil Diglossi
The Phonolog Ph.D, disserta
"Separation o Tamil Civilizat
“Ouality Worc Sixth Internatic
Lumpur.
Comparative: Transactions
in Japan NO. XXXXVI
pp. 148-150.
“A Tamil Diale
pp.90-98
Phonology of lndian Journa
pp. 171 - 179
"Indian Tani (Noun syster pp 107 - 117, Linguistics Jc

தமிழ்" இக்காலத்தமிழ், முத்துப் பதிப்பகம்.
, இலங்கையிலும் தமிழகத்திலும்”
2
அண்ணாமலை நகர்
லத் தமிழும் ஈழமண்டலத் தமிழும்” 透、2 - 90
மிழும் செட்டிநாட்டுத் தமிழும்" LLILIT Lilaitoon (26)/676rfojp7 LD6)j, Laš, 66 -72
a, Nainar Pathipakam.
y of Verbal Forms in Colloquial Ceylon Tamil, tion (Unpublished) University of Edinburgh.
f Srilanka Tanil fron Continental Tari!” ion Tamil University, Tanjavur, pp 75-82
ls in Tamil and Japanese" Paper presented to onal Conference Seminar of Tamil Studies, Kuala
study of Tamil/e/and Japan/wa/, of the International Conference of Orientalists
'991 The Institute of Eastern Culture Tokyo
act of Ceylon "Indian Linguistics 23,
Srilanka and Indian Tamil Contrasted. lof Linguistics 34,
and Srilanka Tamil. A Study in Contrast )" Indian Journal of Linguistics 11.2 Calcutta, fournal of Dravidian urnal of Dravidian Linguistics

Page 13
0 0 LLLL LSLC CS SL LSL LSLS L0 LL LLLLL LSL LSL S LSL L LLLLL LCL LL LSLLLLLLLL LLS L0L LLL LSL LLLLL LL LL LLL
LL LLLL LSL SLL LS S S SL L LSL L L L LS LSS LSL LSL L LSL LLL LLLL LL LSL LSL 0LL LSL LSL LSL LL LS LS LS
Thananjayarajasingham.s,
Vipulananda, Swamy
YeSudhaSan. C
. Zvelebil, Kamil. V
1984
1972
1940
1977
1959
1966
"Unique Kanyak Linguis
“Lexica,
Indian
Tamil C.
pp. 22 -
The Ph(
Ph.D. Di
Edinbur,
“Tanil F
'Jafna
Departm Kamara
"NOtes (
tions
"Some
Journal

Kinship Terms in the Dialect of jaffna and Imari" International Journal of Dravidian cs XI, 1, Kerala, pp. 201 - 202
Differences between Jaffna Tamil and Tanni' vilization 22 Tamil University, Tanjavur, 32
NA
nology of Nominal Forms in Jaffna Tamil ssertation (Unpublished) University of gh
honetics "Modern Review, Calcutta
Tamil and Mainland Tamil "9th Seminar,
eni of Tamil, Madurai, i University, Volume 11, pp. 300-305
on two Dialects of Ceylon Tamil "Transac of the Linguistic Circle Delhipp. 28-36
Features of Cylon Tamil" Indo - Iranian 9:2, pp. 113
நன்றி. தொடர்பாடல் மொழி நவீனத்துவம்

Page 14
பெரியபுரா செ.வே.
தெய்வச் சேக்கிழார் அருளிய திருத்தொண்டர் புராணம் எனும் சிறப்புப் பெயர் கொண்ட பெரியபுராணம் பல்வேறு வகையில் தனித்தன்மை வாய்ந்ததாய் உள்ளது.
இது சிவஞானப் பொருள்வளமும் தவஞான தனித்தமிழ்ப் பெருவளமும், சிவசாதன மணம் கமழும் பேற்றைப் பெற்றுப் பக்திச் சுவையுடன் திருவருட் காவியமெனத் திகழும் பன்னிரெண்டாம் திருமுறையாகும்.
முதலி ஏழு தவிருமுறையாசிரியர் தம் செம்மொழியும், பொருளும் கொண்டு சேக்கிழார் தம் அருள்நூலை இயற்றியுள்ளார்.
இறைவனாலர் எடுத்தருளப் பெற்ற 'உலகெலாம்’ என்னும் மெய்மொழியினை "உலகெல்லாம்” என முதற்கண்ணும், "சோதி முத்தின் சிவிகை சூழ்வந்து. அஞ்செழுத்தோதி ஏறினார் உலகம் உய்ய' என இடைக்கண்ணும், "என்றும் இன்பம் பெருகும். உலகெலாம்” என இறுதிக் கண்ணும் வைத்துப் போற்றியிருக்கின்றார்.
உலகெலாம் = உலகு + எல் + ஆம் எல் = எல்லாம்: ஆம் = விளக்கம் பெறும்:
பெரிய புராணத்தைப் படித்தால் எல்லாரும் விளக்கம் பெறுவர். உலகம் திருவருள் விளக்கம் பெறும்
திருவருளே முன்னின்றும், உள்நின்றும் உணர்த்தப்பட்டு எழுந்த அருட்கவிகள் கொண்ட நூல் பெரியபுராணம் சிவமாகிய திருவைப்பெற்று வாழ்வாங்கு வாழ்ந்த சான்றோர்களின் சத்திய சரிதநூல் பக்திச்சுவைப் பெருநூல் வாழ்வியற் பெருநூல். இறைவனுக்கு அன்பு செலுத்தும் நிலைமையத் தந்து அவனது அருளைப் பெறும்படியாகச் செய்விக்கும் தன்மையுடைய

ணச் சிறப்பு
10
தாநந்தன்
நூல் நம் ஆன்மாவை நிலையாய பேரின்பத்துள் திளைக்கச் செய்யும் நூல். இன்ப அன்பினை இடையறாது விளைவிக்கும் இன்தமிழ் மறைநூல், ஒழுக்க முறைகளைத் தெரிவித்து ஆன்ம ஞானத்தை கூட்டவல்லதாய் அமைந்துள்ள நூல் பன்னிரு சைவத்திருமுறைகளில் ஒன்றான திருத்தொண்டர் புராணம் பக்தி இலக்கியமாகப் போற்றப்பட்டாலும் அது ஒரு வாழ்வு இலக்கியமாகவும் திகழ்கிறது. தமிழ்மொழி தமிழர் பண்பாடு தமிழர் நாகரிகம் ஆகியவற்றை நிலைநிறுத்தும்
நூ7ல.
கயிலாயத்தின் உச்சியிலுள்ள இறைவனைப் பாடாமல் திருவாரூர் திருவீதியில் நடந்த அண்டர். நாயகனையும், ஐந்தொழிற் கூத்தியியற்றும் அம்பலவாணரையும் பாடினார். அரண்மனை வசித்தோரைப் பாடவில்லை. அவர்களில் அரன. டிக்கு ஆளானவரையே பாடினார். இன்பதுன்பங்களைப் பொருட்படுத்தாது வாழ்க்கைக் குறிக்கோளை அடைய இலட்சியப் பயணம் செய்த தவச்சீலர்களைத் தாம் சேக்கிழார் வாழ்த்துகின்றார்.
பெரியபுராணத்தில் மகளிர்;
சேக்கிழார் படைத்துக்காட்டும் மங்கையர் திலகங்கள் "பெண்ணிற் பெருந்தக்கயாவுள' என்ற வினாவுக்கு விளக்கம் கூறவந்த பாத்திரங்களாவர். ஆடவர் தடம் புரண்டாலும் மங்கையார் தடம் புரளாது நெறியில் நின்று ஒழுகி வாய்மை வரலாற்றை வளம்படுத்தியிருக்கின்றார்கள்.
ஆன்மீகத்துறையில் ஈடுபட பெண்களுக்கு உரிமையில்லை என்ற அக்கால நிலையை மாற்றுகிறார் சேக்கிழார். அடுப்பூதும் மங்கை ஆண்டவனைப்பாடி அவன் அருளில் கலந்த செய்தியைக் கூறுகின்றார்.

Page 15
காரைக்கால் அம்மையார் தலையால் நடந்து கயில7யஞ் சென்றபோது, இறைவன் "அம்மையே” என்று அவரை அழைத்ததாகக் கூறும் சேக்கிழார் பெண்குலத்தையே பெருமைப்படுத்துகிறார்.
இயற்பகை நாயனார் மனைவியை மெய்த்தவர் (இறைவன்) கேட்டவாறே கொடுத்தனன் என்று கூறியபோது, அம்மையார் கலங்கி மனந்தெளிந்து பின் நீர் உரைத்தது ஒன்றை நான் செயும் அத்தனையல்லால் உரிமை வேறுளதோ எனக்கு” என்று கூறி வணங்கினாள் என்றும், அவளைத் 'திருவினும் பெரியாள்' என்றும் குறிப்பிட்டு இலக்குமியைவிட பெரியவள்’ என்று அவள் கற்புத்திறத்தைச் சேக்கிழார் விளக்குகிறார். மானுடம் வென்றது:
ஏனைய சமயநெறிகள் போல உயிர்கள் இறைவனைத் தேடிக் கண்டுபிடித்து, சில பயிற்சிகளை மேற்கொண்டு அடையவேண்டும் என்று வகுத்துக் காட்டாமல் இறைவனே தன்னுடைய மனைவி, மக்கள், ஊர்த7 ஆகியவற்றுடன் உயிர்களை நாடிவந்து அவர்களையே தம் வாழ்விடமாகக் கொண்டு தங்கியிருக்குமாறு அருளியது சைவநெறி
பெரியபுராணத்தின் தொடக்கத்தே இறைவன் ஒலை தாங்கவிய அந்தணனாக வந்து திருநாவலூரரை அடிமை எனக்கூறி வாதிட்டார். அவரே திருவாரூர்த் தேவாசிரிய மண்டபத்துப் பேரவையில் அடியவர்களுக்கு அடியேன் என ஆவணச்சீட்டு எழுதிக் கொடுத்து ஆட்படுவதைக் காணலாம் அடிமை ஆக்க வந்த ஆண்டவன் அடிமை ஆனார் என்பதே வரலாறு அடியவர் பெருமையை ஒத்துக்கொண்டு அவர் தம் அடியவராகத் தம்மை எழுதிக்கொடுத்த வரி "தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்” அடிமை கொள்ள வந்தவன் அடிமையாக ஆகிறார் என்பதே திருத்தொண்டர் புராணத்தின் முன்னுரையும் முடிவுரையுமாக அமைந்துள்ளது.
பெயர்க்காரணம்:
பல்லாயிரச் செய்யுட்களைக் கொணர்ட

மகாபாரதம், இராமாயணம், கந்தபுராணம் ஆக?யவை பெரியபுராணங்கள் எனறு கூறப்படுவதில்லை. ஆனால் சுமார் நாலாயிரம் செய்யுட் கொண்ட திருத்தொண்டர் புராணம் என்ற நூல் பெரியபுராணம் எனச் சிறப்புப் பெயர் பெறுவதற்குக் காரணம் "செயற்கரிய செய்வார் பெரியர்” என்கின்ற திருத்தொண்டர்களின் அரிய செயல்களை மாக்கதையாக கூறுவதாலாகும். "மேதமில்லதொர் கற்பு’ வாய்க்கப் பெற்றவராதலின் பெரியோர் எனப்பட்டனர். வலியைக் கொடுப்பது உயர்ந்தது. கொடுக்கிறபோது வேண்டாம் என்று சொல்வது அதனினும் உயர்ந்தது. சிவன் முத்தி உலகம் தருகிறேன் என்றார். நாயன். மார்கள் வேண்டாம் என்றனர்.
"கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார் ஓடும் செம்பொனும் ஒக்கவே நோக்குவார் கூடும் அன்பினில் கும்பிட லேயன்று விடும் வேண்டா விறலின் விளங்கி”
பெரியபுராணம் வேண்டாமையிலிலே பெரியவர்.
களாகத் திகழும் அடியார்களின் வாழ்வியல்
நெறிகளை விளக்குவதாகும் வீடுபேறு பெற்ற நிலையிலும் இறையன்பிலேயே திளைத்து நிற்பது மரபு அந்த இறை அன்பு இங்கேயே கிடைக்கப்பெறுவதால், வீடுபேற்றினைவிட இறையன்பே உயர்ந்ததாகும் என்று கருதியவர்கள் நாயன். LOTfab677. இதனை விளக்கும் திருநாவுக்கரசர் புராணப்L/TL 6)
செம்பொன்னும் நவமணியும் சேன்விளங்க
V ஆங்கெவையும் உம்பர்பிரான் திருமுன்றில் உருள்பருக்கை
யுடனொக்க எம்பெருமான் வாகீசர் உழவராத் தினிலேந்தி வம்பர்மென் பூங்கமலை வாவியினுட்
புகவெறிந்தார்” பொதுவாகப் புராணங்கள் கற்பனை கலந்தே பாடப்பட்டுள்ளன. ஆனால் சேக்கிழார் தமது புராணத்தை வரலாற்று அடிப்படையில் செம்மொழிப் புராணமாக அமைத்துள்ளார்.

Page 16
புராணங்களுள் கயிலையில் தொடங்கி கயிலையில் முடியும் புராணம் இது ஆகும். தலைமை அமைச்சுப் பதவியை நித்துத் தம்மை இறைமைப் பணியில் ஈடுபடுத்திக் கொண்ட மாணிக்கவாசகரால் திருவாசகமும் சேக்கிழாரால் திருத்தொண்டர் புராணமும் தோற்றுவிக்கப்பட்டன என்பது நினைவுக்குரியதாகும்
"சேக்கிழார் பெருமானின் உள்ள ஊற்றிடைத்
தேங்கிய அன்புநீர் அருவியாய் வழிந்து ஆறாய்ப் பெருகி, பெரியபுராணம் எனும் அன்புக் கடலாயிற்று” என்கிறார் திரு. விக.
சிவனடியார்:
பல்வேறு குலப்பிரிவினரையும் "சிவனடியார்" என்ற அடிப்படையில் ஒருங்கிணைத்துக் கூறுகிறது பெரியபுராணம் மனிதநேயம் பரப்பி தன் உடமையினை ஈந்து மகிழ்ந்து இறுதியில் இறைவனால் அருள்பாலிக்கப்பட்டு அவருலகு எய்த அந்தமில் இன்பம் பெற்ற திருத்தொண்டர் அறுபத்தி முவரின் பெருவரலாற்றினை விரித்து விளக்குவது பெரியபுராணம்
இறையடியார் தம் இறைத் தொணர்டிற்கு எத்தகைய இடையூறு வரினும் அன்பு அகலாது நின்று இறைபணியைத் தொடர்வாராயின் இறையருள் நிச்சயம் என்ற உண்மையைச் சேக்கிழார் "முர்த்தி நாயனார்' வரலாறு மூலம் உணர்த்துகிறார்.
தூய அன்பினால் இறைவனைக் காண முடியும் என்ற உண்மையை கண்ணப்பநாயனார் வரலாறு மூலம் சேக்கிழார் அறிவிக்கின்றார்.
"சார்வருந் தவங்கள் செய்து முனிவரும்,
அமரர்தாமும் கார்வரை அடவி சேர்ந்தும் காணுதற்கரியார்
தம்மை ஆர்வமுன் பெருக அன்பினில் கண்டுகொண்டார்”
அரசன் கடமைகள்:
தன்னால், தன் பரிசனத்தால், ஊனமிகு பகைத்திறத்தால், கள்வரால், உயிர்கள்

தம்மாலான பயம் ஐந்தும் திர்த்து அறம் காப்பான் என்று அரசன் கடமைகளை இயம்புகிறார். இல்லறத்தின் சிறப்பு:
இல்லறத்தின் சிறப்பு 'வையகம் போற்றும் செய்கை மனை அறம்புரிந்து வாழ்வோர்” என்று திருநீலகண்டர் வரலாற்றில் விளக்குகிறார்.
"ஓங்கிய அன்புறு காதல் ஒழிவின்றி மிகப் பெருகப் பாங்கில் வரும்,மனை அறத்தின் பண்பு வழ7மையில் பயில்வார் காரைக்கால் அம்மையார்” என்று போற்றுகின்றார்.
“நின்றாலும் இருந்தாலும், கிடந்தாலும், நடந்தாலும், மென்றாலும், துயின்றாலும், விழித்தாலும் இமைத்தாலும் மன்றாடும் மலர்ப்பதம் ஒரு காலமும் மறவாமை குனர்றாத உணர்வுடையார் கொண்டராம் குணமிக்கர்’ எனப்பாராட்டுகின்றார்.
வேடுவகுலத்தோர்:
"ஆவுரித்துத் தின்றுழலும், புலையரையும்’ கொல், குத்து, வெட்டு என்று பேசும் வேடரையும் பிறரையும் உயிர்த்துடிப்புள்ள பாத்திரங்களாக கண்ணப்பநாயனார் வரலாற்றில் விளக்கியுள்ளார்.
அடியார் பெருமை:
அடியார் பெருமையைச் சுந்தரர் வரலாற்றிலே இறைவனே உணர்த்தியதாகச் சேக்கிழார் கீழ்வரும் பாடல் மூலம் அறிவிப்பது போற்றற்குரியதாகும். -
"பெருமையால் தம்மை ஒப்பார், பேணலால்
எம்மைப் பெற்றார். ஒருமையால் உலகை வெல்வார். ஊனம்மேல் ஒன்றும் இல்லார், அருமையா நிலையில் நின்றார். அன்பினால்
இன்பம் ஆர்வார், இருமையும் கடந்து நின்றார். இவரை நீ
资料 அடைவாய் என்று”
இறைவனின் இயல்புகள்:
இறைவனின் பொது இயல்பையும் சிறப்பியல்

Page 17
பையும் இரண்டு பாடல்களில் எடுத்துரைக்கின்றார்.
ஆதியாய் நடுவும் ஆகி அளவிலா அளவுமாகிச் சோதியாய் உணர்வுமாகித் தோன்றிய பொருளமாகிப்
பேதியா வேகம் ஆகிப் பெண்ணுமாய்
ஆணுமாகிப் போதியா நிற்கும் தில்லைப் பொதுநடம் போற்றி
போற்றி
350
கற்பனை கடந்த சோதி கருணையே உருவம்
ஆகி, அற்புதத் கோலநீடி அருமறைச் சிரத்தின்
(3 D6)Tib சிற்பரவியோமம் ஆகும் திருச்சிற்றம்பலத்துள்
நின்று பொற்புடன் நடம் செய்கின்ற பூங்கழல் போற்றி
போற்றி
351
ஐம்பூதங்களாய் இருப்பவன் இறைவன்
என்கிறார் சேக்கிழார்.
"வானாகி நிலனாகி அனலுமாகி மாறாதமாய் இருசுடராய் நீருமாகி, ஊறாகி உயிராகி, உணர்வுமாகி உலகங்கள் அனைத்துமாகி உலகுக்கப்பால்
ஆனாத வடிவாகி” ஆறுமுகநாவலர்
யாழ்ப்பாணம் தவத்திரு. ஆறுமுகநாவலர் அவர்கள் பெரியபுராணத்தின்மீது கொண்டிருந்த பக்தி அளவிடற்கரியது. தம் மாணாக்கர்களுக்கு முதன்முதலில் கற்பித்துக் கொடுத்த நூல் பெரியபுராணம். ஆதலால்தான் இந்த நூலை உரை நடை வடிவாக நாவலர் அமைத்தார்கள் உலகம் உய்யவும் சைவம் நின்றோங்கவும் சைவ சமயிகளுக்குப் பக்தியை விளைத்தலாகிய பயனைக் கொடுக்குமென்று இப்புராணத்தை உரைநடையில் இயற்றியதாக நாவலரவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவருடைய முத்த சகோதரர் "பெரியபுராணத்தில் உள்ள கதைகளெல்லாம் கட்டுக்கதைகள்”
1.

என்றார். இதனை நாவலர் கேட்டவுடன் கோபாவேசங் கொண்டு தம் தமையனாரை வெட்டுவதற். காகப் போனபோது பிறரால் தடுக்கப்பட்டார். அதுமுதல் கொண்டு அவர்தம் தமையனாரோடு பேசுவதை நிறுத்திவிட்டார். சைவசித்தாந்தக் கருத்துக்கள்:
சேக்கிழார் சுவாமிகள் சைசித்தாந்த சாத்திரங்கள் தோன்றுவதற்கு முன்னரே வாழ்ந்தவராயினும் பதி, பசு, பாசம், மும்மலம், சரியை, கிரியை, யோகம், ஞானம் இருவினையொப்பு - மலபரி. பாகம் சத்திநிபாதம், திருவைந்தெழுத்து என்பன போன்ற பல சைவசித்தாந்தக் குறியீட்டுச் சொற். களையும் அவற்றோடு தொடர்புடைய பலவகைக் கருத்துக்களையும் ஆங்காங்கே தமது நூலில் குறிப்பிட்டுள்ளார்கள்.
"உலககெலாம்” எனத் தொடங்கும் திருவிருத்தத்தில் அமைந்துள்ள 63 எழுத்துக்கள் 63 நாயன்மார்களை உணர்த்துகின்றன. இப்பாடலில் நான்கு சீர்களில் நான்கு வரிகளாக அமைந்திருப்பது மந்ததரம், மந்தம், தீவிரம், தீவிரவாதம் என்னும் நான்கு வகைச் சத்திநிபாத நிலைகளை. யும் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கு வகை நெறிகளையும் உணர்த்துகின்றன. சிவஞானபோதம் 12 ஆம் குத்திரத்தின் விளக்கமாக பெரியபுராணம் அமைந்துள்ளது. மேற்கண்ட விருத்தத்தில் சிவ இயல்புகள் உணர்த்தப்பட்டுள்ளன.
உலகெலாம் உணர்ந்தோதற்கு அரியவன் - சொருபசிவ இயல்பு - அருவுருவ நிலை
அலகில் சோதியன் - தடத்த இலய சிவ இயல்பு - அருவரு நிலை
நிலவு உலாவிய நிர்மலி வேனியன் - தடத்த போக சிவ இயல்பு - உருவ நிலை
அம்பலத்து ஆடுவான் - தடத்த அதிகார சிவ இயல்பு - இவைகளுக்கு அப்பாற்ப்பட்ட நிலை -
சிதாகாசத்தில் ஆடுங்கோலம் கனகசபையில் (சிதம்பரத்தில்) வலக்கால் ஊன்றி இடைக்கால உயர்ந்த7ருக்கும். வெள்ளியம்பலத்தில் (மதுரையில்) இடைக்காலை ஊன்றி வலக்கால் உயர்ந்திருக்கும் இரண்டு
3.

Page 18
காலால் நடைபெறும் கூத்து "லாஸ்யம்" என்பர். ஒற்றைக் காலால் நடைபெறும் கூத்து ஊர்த்துவ தாண்டவம் (அற்புதக் கூத்து) எனப்படும். ஆன்மாக்களுக்குச் சாந்தி தருவதால் சாந்தி கூத்து என்பர். இறைவன் செய்யும் கூத்து ஆகாசத்தின் நடுவில் நடைபெறும் திருவைந்தெழுத்து:
மக்கள் பிறவிப்பிணியைப் போக்க வேண்டு. மாயின் திருவைந்தெழுத்தை முறையாகப் பயின்று ஒதரி வரவேண்டும் என்ற சைவ சிந்தாந்தக் கருத்தைத் திருநாட்டுச் சிறப்புப் பகுதியில் கூறியுள்ளார். சிவனடியார்கள் நிரந்தர நிற்று ஒளியும்" "புரந்த அஞ்செழுத்தும்" உடையவர்கள் என்று குறிப்பிடுகிறார். உயிர்களைப் பிறவி நோயிலிருந்து காத்துவரும் மந்திரம் திருவைந்தெழுத்தாகும் புரத்தல் - காத்தல்
இருவினைக் கயிற்றால் மலக்கல்லில் கட்டுண்டு பிறவிக்கடலில் அமுங்கிக் கொண்டிருக்கும் உயிர், அந்நிலையிலே திருவைந்தெழுத்து ஒதியுணர்ந்து, இருவினைக்கயிறற்று, மலத்தின் நீங்கி பிறவிக் கடலின் கரையேறலாம் என்பர்.
இருவினைப் பாசமும் மலக்கல் ஆர்த்தலின் வருபவக் கடலில் வீழ்மாக்கள் ஏறிட அருளுமெய் அஞ்செழுத்து"
என்று த7ருநாவுக்கரசர் புராணத்தரில் உணர்த்துகின்றார். இறைபணி நிற்றல்;
திண்ணன் காளத்திமலையின்மேல் செல்லும்
தன்மையை நாணனும் அன்பும் முன்பு நளிர்வகை
யேறத்தாமும் பேணு தத்துவங்களென்றும் பெருகு சோபானம்
ஏறி ஆணையாம் சிவத்தைச்சார அணைபவர்
போல ஐயர் நீணிலை மலையையேறி நேர்படச்
செல்லும்போதில்"

என்று தெரிவிக்கும் சேக்கிழார் உலகுயிர். களைத் தாங்கி உடம்பொடு காக்கும் தத்துவங்களைத் தெரிந்து தம்மையும், பதியையும் உணர்ந்துகொண்ட அறிவினால் உயிர்கள் அத்தத்துவங்களின் நீங்கி இறைவனைச் சாருதல் வேண்டும் என்னும் மெய்கண்ட நூல் உண். மையை, இங்கு திண்ணனார் அன்பு முன்னதாக மேலேறிச் செல்ல, தத்துவப் படிகளைக் கடந்து, ஆணையாம் சிவத்தைச் சார வருகின்றார் என்னும் இயல்பான வாழ்வியலின் இலக்கியங் காட்டு. கின்றார்.
இறைவன் கண்ணப்ப நாயனாரைப் பற்றி சிவ. கோசாரியாருக்கு உணர்த்துவதாகச் சேக்கிழார் கூறுவது, "அவனே தானே ஆகிய அந்நெறி ஏகனாகி இறைபணிநிற்றல்” என்று சிவஞானபோதம்
பத்தாம் குத்திரத்தில் கூறப்பட்டுள்ள நிலையைக்
குறிக்கும்.
"அவனுடைய வடிவெல்லாம் நம்பக்கல்
அன்பென்றும் அவனுடைய அறிவெல்லாம் நமை அறியும்
- அறிவு என்றும் அவனுடைய செயல் எல்லாம் நமக்கு
இனியவாம் என்றும் அவனுடைய நிலை இவ்வாறு அறி நீ என்று அருள் செய்தார்”
350/53/760i Lodi'60LD:
தம் திருவடிகளில் விழுந்து வணங்கிய மருள் நீக்கியாருக்குத் திலகவதியார் திருநீற்றை அளித்ததால் பெருவாழ்வு வந்தது என்ற செய்தியைச் சேக்கிழார் குறிப்பிடும்போது சைவசித்தாந்தத்தில் போற்றப்படும் திருநீறு, அஞ்செழுத்து மகிமை, இறைவனின் இயல்பு
ஆகியவற்றை உணர்த்துகிறார்.
நின்மலன் பேரருள் நினைந்து - திருநீற்றை அஞ்செழுத்து ஓதிக் கொடுத்தார்
1331 திருவானன் திருநீறு திலகவதியார் அளிப்பப்

Page 19
பெருவாழ்வு வந்தது எனப் பெருந்தகையார் ..................... பணிந்தேற்று அங்கு உருவார அணிந்து'
1332
திருவேடத்தின் சிறப்பு:
தருவத?கை வfத7யரினுள் நுழைந்த திருநாவுக்கரசரின் தோற்றம் சேக் கிழார் விளக்குவது சிவஞானபோதம் 12ஆம் குத்திரம் கூறும் திருவேடத்தின் இயல்பாக் இருந்தது.
"தூயவெண்ணிறு துதைந்த பொன்மேனியும் தாழ்வடமும், நாயகன் சேவடி தைவரும் சிந்தையும், நைந்து
உருகிப் பாய்வதுபோல் அன்புநீர் பொழிகண்னும் பதிகச்
செஞ்சொல் மேய செவ்வாயும் உடையார் புகுந்தனர்
வீதியுள்ளே”
1405
வினைக்கொள்கை:
சைவசித்தாந்தத்தின் வினைக்கொள்கையைச் சேக்கிழார் சாக்கிய நாயனார் புராணத்தில் கூறியுள்ளார்.
செய்வினையும், செய்வானும், அதன்பயனும்
கொடுப்பானும் மெய்வகையால் நான்கு ஆகும் விதித்த
பொருள் எனக் கொண்டே இவ்வியல்பு சைநெறி அல்லல்வற்றுக்கு
இல்லை என உய்வகையால் பொருள் சிவன் என்று
அருளாலே உணர்ந்தறிந்தார்’
3640
வினைகளை அனுபவித்தே தரவேண்டும். கழிக்க ஒண்ணாதது என்னும் சமயவாதங்களை மறுத்து,
"வினைதிர்தல் எளிதாமே! தீவினை வந்தெம்மை தீண்டப்பெறா என்கின்றார் திருஞானசம்பந்தர்

அன்புறு சிந்தையர் அடியவர் திருத்தொண்டர்
தம் திருத்தொண்டினால் இருவினை நீங்கப்பெறுந் திறத்தை "தேசுடைய மலர்க்கமலச் சேவடியார்
திருத்தொண்டர் துரசுடைய துகள்மாக கழிப்பார்போல்
தொல்வினை ஆசுடைய மலமுன்றும் அனைவரும்
பெரும்பிறவி மாசுதனை விடக்கழித்து வருநாளில் அங்கொரு
நாள்'
என்று விளங்கக்காட்டுகின்றார் சேக்கிழார். மேலும் திருஞான சம்பந்தரால் ஆட்கொள்ளப்பட்ட பாணர்டிய மன்னனின் வலர் வினை நீங்கியதைச் சேக்கிழார் எடுத்துரைக்கின்றார்.
"தென்னவன் மாறன் தானும் சிரபுரத்தலைவன்
திண்டி பொன்நவில் கொன்றையார்தம் திருநீறு பூசப்
பெற்று முன்னைவல் வினையும் நீங்க முதல்வனை
அறியும் தன்மை துன்னினான் வினைகள் ஒத்துத்தலை என
நிற்றலாலே”
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற திருக்குறளின் தெளிவைப் பெரியபுராணத்திலே காணர்கிறோம். இறையனர் புடன் கூடியத் தவிருத தொணி டே சசிறந்தது என்பதை விளக்குவதால் தொண்டு என்னும் பண்புதான் இக்காப்பியத்தின் தலைமையைப் பெறுகிறது.
சிவனடியார்களுக்கு அன்பு செலுத்தினால் சிவனுக்கு அன்பு செய்வதாய் கருதப்படும் என்ற உண்மையை பெரியபுராணம் விளக்குகிறது. இவ்விளக்கத்தை அப்பூதியடிகள் வரலாற்றில் காணலாம். திருநாவுக்கரசு சுவாமிகளைப் பார்க்காமலே அவர்மீது அன்பு மிதூறித் தாம் செய்யும் பணிகள் அனைத்தையும் திருநாவுக்கரசர்

Page 20
பெயரிலேயே அப்பூதியடிகள் அமைத்தார்.
தன் பிள்ளைக்கும் திருநாவுக்கரசு என்ற பெயரே குட்டினார். தன் பிள்ளை பாம்பு கடித்து திடீரென இறந்தான் என்ற வருத்தத்தைட புறக்கணித்து, அவனுடைய உடலை வீட்டில் மறைத்துவிட்டு அன்று தன் இல்லத்திற்கு எழுந்தருளியுள்ள சிவனடியாரான திருநாவுக்கர சருக்கு அமுது படைப்பதே திருத்தொண்டு என்று கருதினார். திருநாவுக்கரசர் தாம் உணவு உட்கொள்வதற்கு முன்பாக அப்பூதியடிகளை வினவி அவருடைய பிள்ளையை அழைக்குமாறு கூறியபோதும் அப்பூதியடிகள் தன் பிள்ளை இறந்த செய்தபியைச் சொனர்னால திருநாவுக்கரசருக்கு அன்னம் பாலிக்கும் வாய்ப்பு இழக்கப்படுமோ எனக்கருதி தன் பிள்ளை இப்போது உதவான் என்று கூறினார் திருநாவுக்கரசு என்ற பக்த பஞ்சாட்சரத்தை ஓதியே அப்பூதியடிகள் வீடு பெற்றார் என்பது வரலாறு சிவனடியார்களை மையமாக வைத்து எழுதப்பட்ட நூல் பெரியபுராணம்
"The way to God is by the road of man Find thy far heaven in the near humanity
Love thy seen neighbour thyself- thereby
Thow lovest Him, who is All" DRIESNEF
சேக்கிழார் அருளிய புராணத்தை நாய படிக்கும்போது அவர் கூறும் இடங்களை நேரில் கண்டு அங்கு வாழும் மக்களோடு அளவளாவிப் பழகிய பின்பு தாம் பாடவந்த அடியவர்களின் நிலைமையை ஒருவாறு உய்த்து உணர்ந்து அகக்கண்ணாற் கண்டு தம் தெய்வL புலமைத்திறத்தால் நமக்கும் விளங்கும்படி அருளியுள்ளார் என்பது தெளிவுறுகின்றது என்றாலும், அம்பலக்கூத்தன் திருவருளில அத்துவித நிலைமையில் நின்று அருள்மயமான ஞானக்கண்ணாலே எல்லா உண்மைகளையும் அவனே காட்டக்கண்டு அறிந்தவாறு அருளினா என்பது பொருந்தும்
இப்புராணத்தின் நோக்கம் என்ன என்று சேக்கிழாரே கூறுகிறார்.

16
"உலகம் உய்யவும் சைவம் நின்றோங்கவும் அலகில் சிர்நம்பி ஆரூரர் பாடிய நிலவு தொண்டர்தம் கூட்டம் நிறைந்துறை குலவு தண்புனல் நாட்டணி கூறுவோம்’
திருத்தொண்டர் புராணத்தினால் பெறப்படும் பயன்:
பாயிரத்தின் இறுதிப்பாடலில் திருத்தொண்டர் புராணத்தால் அடையும் பயனர் குறிக்கப்பட்டுள்ளது.
"இங்கித னாமங்கூறி னிவ்வுலகத்து முன்னாள் தங்கிருளிரண்டின் மாக்கள் சிந்தையுட் சார்ந்து நின்ற பொங்கியவிருளை யேனைப் புறவிருள்
போக்குகின்ற செங்கதி ரவன்போனிக்கும் திருத்தொண்டர்
புராண மென்பாம்"
புற இருளைப் போக்கி உலகத்தைப் புலப்படச் செய்யும் கதிரவன் செயலை உவமையாகக் காட்டி இத்திருத்தொண்டர் புராணத்தின் பயன் மக்களின் அக இருளைப் போக்குவதாகும்.
"கருங்கடலை கைந்நீத்துக் கொளது எளிது கடற்கரை மணலை எண்ணி அளவிடலாம் கடல்மேல் வரும் அலைகளை எண்ணலாம் வானத் தாரகையை அளவிடலாம் திருத்தொண்டர் புராணத்தை அளவிடல் நம் சேக்கிழார்க்கு எளிது அது தேவர்க்கும் அரிதே' என்ற உமாபதி சிவாசாரியார் மொழியினால் திருத்தொண்டர்களது பெருமைகளை எல்லாம் அளவிட்டு கூறுவது முடியாது என அறிகிறோம்.
"lives of Greatmen, all remind us, We Can make Our lives Subline And departing, leave behind us Foot Prints on the sands of Time" Long fellow シ

Page 21
ஞானாமிர்த
P.
உலக மெயப்ப்பொருளியல் வரலாற்றில் சைவசமயம் தனியொரு இடத்தைப் பெற்றதாகு! சைவ சமயத்தின் தோற்றம் கற்பனைக்கு எட்டாததாய் முற்பட்ட காலத்திலேயே சைவசம உணர்வு மக்களிடையே பரவியிருந்தது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். இதுபோல காப்பியங்களில் பிறவா யாக்கைப் பெரியோன என்றும் (சிலம்பு கா.5 வரி 169), நுதல்வி நாட்டத்து இறைவன்' என்றும் (மணிமேக6ை கா. 1, வரி.34) சிவபெருமானி குறிக்க பெற்றிருப்பதும் சைவசமயத்தின் தொன்மையை குறிப்பதாகும்.
இத்தகைய தொன்மைசால் சைவசமயத்தின் கொள்கைகளை இன்றைக்கு வரையறுத்துத் தருவன தோத்திர நூல்களும், சாத்தி நூல்களும் ஆகும் சைவசமயக் கொள்கைக6ை, வழிபாட்டு, அடிப்படையில் தருகின்ற பண்டைத் தோத்திரங்களைப் பன்னிரு திருமுறைகள் என்று தத்துவ அடிப்படையில் தருகின்ற நூல்களை பதினான்கு சாத்திரங்கள் என்றும் சைவ உலக வகைப்படுத்திப் போற்றுகிறது. இத்தகைய தொகுப்புகள் ஒரு வரையறைக்கு உட்பட்டுத் தொகுக்கப்பட்டதாகத் தெரிந்தில கால அடிப் படையில் இவை தொகுக்கப்பட்டிருக்கின்றனவ எனின் குறிப்பிட்டு எந்த ஒரு அடிப்படையையுL காட்ட இயலவில்லை. தொகுத்தார் மனத்திற் கேற்பத் தொகுக்கப் பெற்றதாகவே தெரிகிறது
பதினான்கு சாத்திரங்களை வகைப்படுத்த முதன்முதலாக கி.பி.1860ல் மதுரைநாயக பிள்ளை எண்பார் தாம் வெளியிட்ட சாத்திர தொகுப்பில்,
"உந்தி களிறு உயர்போதம் சித்தியார் பிந்திருபா உண்மைப் பிரகாசம் - வந்தஅரு பண்பு வினா பேற்றிக்கொடி மாசிலா நெஞ்கவி 2-alap 6lögé szagittab (gölgy”
என்ற பாடலை இடம்பெறச் செய்துண்னர் அது

b
- மீள்பார்வை
முத்தப்பன்
தொட்டு இன்றுவரை பதினான்கு சாத்திரங்களாகத் திருவுந்தியார், திருக்களிற்றுப்படியார் ஆகிய இரண்டு நூல்களோடு போதம் உள்ளிட்ட பன்னிரண்டு நூல்களைச் சேர்த்துப் பதினான்கு \என்று கூறப் பெற்று வருகிறது. ஆயின் இப்பதினான்கு நூல்களோடு சாத்திர நூல்கள் நிறைவு பெற்று விடுகிறதா என்றால் - இல்லை. தருவுந்தவியார், தவிருக்களிற்றுப்படியார் நூல்களுக்கு முன்னமேயே ஞானமிர்தம்’ என்ற நூல் தமிழகத்தில் வழக்கில் இருந்திருக்கிறது. ஆனால் அதனைக் குறிப்பாகக்கூட மதுரைநாயகம் பிள்ளை காட்டவில்லை. அதற்குரிய காரணத்தைக் குறிப்பிட்டுச் சொல்ல இயலாது என்ற7லும் ஒன்று மட்டும் உறுதி மதுரைநாயகம்பிள்ளை காலத்தில் ஞானமிர்தம் வழக்கில் இல்லாமலோ அல்லது அவரால் அறிய இயலாததாகவோ இருந்திருக்க வேண்டும்.
ஞானமிர்த நூலை ஏட்டுப் பிரதிகளிலிருந்து அச்சில் முதன்முதலாகக் கொண்டுவந்த பெருமை ஒளவை துரைசாமிப் பிள்ளை அவர்களைச் சாரும் 1954ல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சித்துறை சார்பில் திருப்பனந்தான் காசிமடத்தின் நிதிஉதவியுடன் முதற்பதிப்பு வெளியாகி உள்ளது. பிள்ளையவர்கள் பெருமண்டூர்ச்சிபாலன் எழுதிய ஏடு, திருவெண்ணெய் நல்லூர் சிறுமதுரை சொக்கலிங்கம் பிள்ளை அளித்த ஏடு, ஏனாதி இராமச்சந்திரன் அளித்த ஏடு, செப்பறை ஏடு ஆகிய நான்கு ஏடுகளின் துணையோடு ஞானமிர்த நூலை வெளியிட்டுள்ளார்கள். இப்பதிப்பு ஏடுகளில் காணப்பெற்ற பழைய உரையுடன் கூடியது. பிள்ளை அவர்கள் புதிய உரை எழுதாது - தன் நுண்மாண் நுழை புலத்தால் குறிப்புரையை எழுதி வெளியிட்ட சிறந்த பதிப்பாகும் அதன்
தாரால் 1987ல் வெளியிடப்பெற்றது. அப்பதிப்பும் தற்பொழுது கிடைத்தர்கரியது. மின்னர் சைவசித்தாந்தப் பெருமன்ற வெளியீடாக அம்பை

Page 22
சங்கரன் அவர்களின் பதிப்பு வெளிவந்தது பின்னர் தற்பொழுது கட்டுரை ஆசிரியரால் எளிய உரையுடன் ஞானமிர்த நூல் 4.10.2002ல் வெளியிடப் பெற்றுள்ளது. நூல் அமைப்பு:
நூலின் தொடக்கத்தில் விநாயகரைப் போற்றும் இரு வெண்பாக்கள் காப்புச் செய்யுட்களாக அமைந்துள்ளன. பின்னர் பாயிரம் என்ற தலைப்பில் கடவுள் வாழ்த்து, விநாயகர் துதி, கலைவாணி துதி ஆசிரியர் துதி, அவையடக்கம் நூற்பெயர், மறைமுறை நான்கு எனல் என்ற தலைப்புகளில் 8 அகவற்பாக்கள் இடம்பெற்றுள்ளன. பின் சம்மிய ஞானம் என்ற பகுதி ஏழு அகவற்பாக்கள் உயிரைப் பற்றிய தத்துவக் கருத்துக்களைத் தருகிறது. பின் சம்மிய தரிசனம் என்ற தலைப்பில் இடம்பெற்றுள்ள மூன்று அகவற் பாக்கள் உயிர்பெறும் நிறைவு நிலையைச் சுட்டுகின்றன. பாசபந்தம் என்ற அடுத்த தலைப்பரில் அமைந்துள்ள ஒன்பது அகவற்பாக்கள் மலம் பற்றிய தத்துவக் கருத்துக்களையும், அடுத்த பகுதியான தேகாந்தரம் என்பதில் இடம்பெற்ற இரண்டு அகவற்பாக்கள் பிறப்பு நிலை பற்றியும் விளக்குகின்றன. அடுத்து அமைந்த பாசனாதித்துவம் என்ற தலைப்பு ஒரு பாடலையும், பாசத்தேசவியல் என்ற தலைப்பு 22 பாடல்களையும் பெற்று பாசநிலைகளை எடுத்தியம்புகின்றன. இருபத்தாறு பாடல்களைக் கொண்ட பதிநிச்சயம் என்ற பகுதி இறைத் தத்துவத்தை விவரிக் கின்றது. இறுதியில் அமைந்த பாசமோசனம் என்ற பகுதி மூன்று பாடல்களில் அணைந்தோர் தன்மை யைக் காட்டுகின்றது. இவ்வாறு 75 அகவற்பாக்கள் முழுமையாக பதி, பசு, பாச தத்துவக் கொள்கைகளை மிகத் தெளிவாகத் தருகின்றன.
பாடல்கள் சங்க இலக்கிய நடையைப் போன்று பீடு நடையில் அமைந்து கி.பி.12ஆம் நூற்றாண்டின் தமிழ்மொழி நிலையை உறுதிப்படுத்துகின்றன. பாடல்களுக்குரிய தலைப்புகள் பழைய உரையாசிரியரால் இடம்பெற்றதாகவே தெரிகி. றது. அத்தலைப்புகள் பெரும்பாலும் வடமொழிச் சார்புடையதாக அமைந்துள்ளன.
ஞானமிர்த நூலை இயற்றியவர் வாகீசமுனிவர்
எனக் கிடைத்திருக்கும் ஏடுகள் குறிப்பிடுகின்றன.
18

இவருடைய வாழ்க்கை வரலாறு ஏதும் கிடைத்தில நூலின் அகச்சான்றினைக் கொண்டு இவருடைய ஆசிரியர் பரமானந்த முனிவர் என்பது தெரிகிறது. பாயிரத்தில் துதி என்று ஒரு பாடல் இடம்பெற்றுள்ளது.
"கருணை வீணை காமுறத் தழிஇச் சாந்தக் கூர்முள் ஏந்தினன் நிறீஇத் தன் வழிக் கொண்ட சைவசிகாமணி பரமானந்தத் திருமா முனிவன் வளமலி சேவடி வழுத்தி”
என்று அப்பாடலில் பரமானந்தத் திருமா முனி என்று கூறுவதால் நூலாசிரியரின் ஞானாசிரியர் பரமானந்த முனிவர் என்பது பெறப்படுகிறது. மேலும் இப்பரமானந்த முனிவரின் இயற்பெயர் பொருள்மொழி யோகம் கிரியையிற் புணர்த்த அருண்மொழி திருமொழி போலவும்’ என்று 28ஆவது பாடலயில குறிப்பமிடுவதாலர் ஞானாசிரியரின் இயற்பெயர் அருண்மொழித்தேவர் என்பதும் பெறப்படுகிறது. தமிழ்நாவலர் சரிதை மூலமும், சில கல்வெட்டுக்கள் மூலமும் வாகிச பண்டிதர், தான் பிறந்த கோடம்பாக்கம் என்ற பகுதியிலிருந்து திருவெற்றியூர் சென்று - அங்கு கோளகி மடத்தில் இருந்துகொண்டு - அம்மடத்துச் சான்றோர்களாகிய சோமசம்பு முதலியோர் வகுத்துரைத்த ஆகம நூல்களை மக்களுக்கு அருளுபதேசமாகச் செய்து வந்தார் என்பது பெறப்படுகிறது. பின்னர் திருநெல்வேலி சென்று, திருவாலிச்சுரத்தில் திருமடத் தலைவராய்க் கொலுவிருந்து சிவாகமக் கருத்துக்களை அகவற்பா வடிவில் ஞானாமிர்தமாக நூலைப் பாடியருளினார் எனத் தெரிகிறது. அந்நூலை யாத்ததிலிருந்து வாகிச பண்டிதர், வாகிசமுனிவர் எனப் போற்றப் பெற்றார். ஞானாமிர்தம் மக்களிடம் பெற்ற செல்வாக்கால் அதுமுதல் திருவாலிச் சுரத்துத் திருமடத்தலைவர்கள் ஞானமிர்தச் சந்தானம் ' என்று அழைக்கப் பெற்றனர். வாகசமுனிவர் இரண்டாம் இராசாதிராசன் காலத்தில் வாழ்ந்தவர் என்பது கல்வெட்டுச் செய்திகளால் தெரியவருகிறது. கல்வெட்டுச் செய்திகளை அடிப்படையாகக் கொண்டு அவரின் காலத்தை கிபி 12ம் ஆண்டின் இறுதி எனக்

Page 23
குறிப்பர். இத்தகைய செய்திகளைத் தவிர வேறு செய்திகள் நூலாசிரியரைப் பற்றித் தெரிந்தில நூலின் முதன்மை:
பதினான்கு சாத்திரங்களில் தலையாயது சிவஞானபோதமாகும் மெய்கண்டர் பாடியருளிய போதம் பின்வரும் எல்லா நூல்களுக்கும் தலையாயது எனலாம். அதன் காலம் 13ஆம் நூற்றாண்டு. இந்நூற்றாணர்டிற்கு முன்னர் கி.பி. 12ஆம் நூற்றாணர்டில் தோன்றியது ஞானாமிர்தம் ஞானாமிர்தம் - சிவஞான போதமும் சைவ சமய பதி, பசு, பாசங்களின் தத்துவ உண்மைகளை வரையறுத்துக் கூறுகின்றன. இரணர்டிலும் சித்தாந்தக் கருத்துக்களில் முரண்பாடுகள் இல்லை. கூறும் முறைமையில் ஞானாமிர்தம் அகவற் பாக்களையும், சிவஞானபோதம் சூத்திர அமைப்பையும் பெற்று வடிவ அமைப்பில் வேறுபட்டுள்ளன. இவ்வமைப்பு தவிர வேறுபாடு எதுவும் இல்லை. ஆனால் காலத்தால் முற்பட்டதான ஞானாமிர்தம் தத்துவ உலகில் போதம் பெற்ற அளவிற்குப் பெருமையைப் பெறவில்லை. இருப்பினும் இரு நூல்களையும் ஒப்புநோக்கு முறையில் ஆய்வு செய்தால் ஒன்றுக்கொன்று வளர்நிலையையும், பழையன கழிதல், புதியன புகுதல் என்ற முறையையும் பெற்றிருப்தை உணரலாம் ஆய்வு முறையில் பார்க்கும்பொழுது சிவஞானபோதம் ஞானாமிர்தத்தின் கருத்துக்களை உட்கொண்டு வகைப்படுத்தித் தத்துவக் கருத்துக்களைத் தந்திடும் வழிநூலாக அமைந்துள்ளமையை உணரலாம். எனவே, சாத்தபிரநுTலகள் பதினான்கினுக்கும், ஞானாமிர்தம் காலத்தால் முற்பட்டுத் தத்துவ விளக்கம் தருவதில் முதன்மையானது எனலாம்.
ஞானாமிர்தச் செம்பொருள்:
ஞானாமிர்தம் என்பது ஞானமாகிய அமுதம் என விரிந்து நிற்கும் சிவநெறியைப் பற்றிய தெளிந்த அறிவையே ஞானம் எனலாம் சிவநெறி பதி, பசு, பாச முப்பொருளைப் பற்றிய இயல்பையும், தொடர்பையும் உடையதாகும். இத்தகைய சிவநெறியை அறிந்து - அமுதம் உண்டார் எவ்வாறு உலகில் நெடிதுநாள் வாழ்கிறார்களோ அதுபோல வாழ்வாங்கு வாழ்ந்து

சிவபரம்பொருளை அடைந்து இன்புறுவதை இந்நூல் விளக்குவதால் ஞானாமிர்தம் எனப் பெயர் பெற்றது. இந்நூலின் பெயர்க் காரணத்தை ஆறாவது பாடலில் ஆசிரியர் கீழ்வருமாறு குறிப்பிடுகிறார்.
'திருப்பாற்கடலில் வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கி பணர்டு ஒரு நாள் கடைந்ததால் அமுதம் தோன்றியது போல -
^இறைவன் அஞ்ஞானமாகிய கடலில் ஆகமத்தை
மத்தாகக் கொண்டு உபதேசத்தினை நாணாகக் கொண்டு மதியென்னும் கையாலே பூட்டிக் கடைந்தால் இந்நூலாகிய ஞானாமிர்தம் உண்டாயிற்று' என்கிறார். எனவே, நூலாசிரியர் கூற்றுப்படி இந்நூல் அவரால் இயற்றப் பெற்றதல்ல. இறைவன் அருளாணையால் எழுந்தது என்பது தெரிகிறது. எனவே இறைவனால் நுதலப் பெற்ற வேதங்களைப் போல ஞானாமிர்தமும் அக்காலத்தில் கருதப் பெறவேண்டும் என்று நூலாசிரியர் கருதியிருக்கிறார் எனத் தெரிகிறது.
கடவுள் வாழ்த்தாக அமைந்த பாடல்களில் முதற்பாடல் சிவபரம்பொருள் வாழ்த்தாகவும், அடுத்து விநாயகர் துதியாகவும். அடுத்து கலைமகள் துதியாகவும் முதல் மூன்று பாடல்கள் அமைந்துள்ளன. இப்பாடல்களில் கலைமகள் துதிப்பாடல் பிற தத்துவ நூல்களில் இடம்பெறாத தெய்வ வணக்கப் பாடலாகும் சிவன், விநாயகர், முருகன், உமையவள், எழுவகை, சக்திகள் என்றெல்லாம் வணக்கங்கள் பிற நூல்களில் அமைய - ஞானாமிர்தம் கலைமகள் துதியைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கதாகும் பிரமனின் சத்தியாகக் கூறப்பெறும் கலைவாணி இங்கு அஞ்ஞானத்தை நீக்கும் கடவுள் நிலையில் துதிக்கப்படுகிறார். ஞானாமிர்தம் என்பதால் அஞ்ஞானத்தை அகற்றும் சத்தரியாகிய கலைவாணி போற்றி வணங்கப் பெறுதல் நூலிற்குரிய ஏற்புடைக் கடவுள் வணக்காக அமைகிறது. அவையடக்கத்திலே நூலின் உட்பொருள் இறைவன் செய்த ஆகமக் பொருள் என்பதால் அதில் குற்றம் ஏற்படாது தன்னால் சொல்லப் பெற்ற எழுத்து யாப்பில் குற்றம் இருப்பின் அருளாளர் பொறுப்பர் என ஆசிரியர் குறிப்பிட்டிருப்பது அவரின் நூல் பற்றிய நம்பிக்கையையும் பணிவையும் காட்டுகிறது.

Page 24
இவ்வாறு பாயிரப் பகுதியை அமைத்த நூலாசிரியர் நூலில் முதற்பகுதியாக ஞானாபாதச் செய்திகளைத் தருகிறார். நூலைச் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கின் அடிப்படையில் எழுதத் தொடங்கி - ஞானத்தை முதலில் கூறி பின் சரியை முன்றையும் எழுதாது விடுத்தாரோ அல்லது அம்மூன்றும் இப்பொழுது கிடைத்திலவோ தெரிந்தில,
ஞானாமிர்தத்தரிலர் கூறப் பெற்றுள்ள ஞானபாதத்தில் முதலாவதாக உயிர்களின் முவகை அவத்தைகளைப் பற்றி ஆசிரியர் கூறுகிறார். காணுகின்ற உயிரை வைத்து காண இயலாக் கடவுளைக் காட்டுவது தத்துவ மரபு என்பதால் உயிர்களின் மூவகை நிலைகளாம் கேவலம், சகலம், சுத்தம் இவை பற்றிய விளக்கத்தை மிகத் தெளிவாக ஆசிரியர் தருகிறார். உயிர் மாயை, கன்மம் இவற்றோடு கூடாது ஆணவ மலத்தோடு மட்டும் இருப்பது கேவலம் கேவலம் என்பதற்குத் தனிமை என்பது பொருள். பின்னர் பிறப்பெடுக்க மாயை கண்மங்களோடு கூடிச் சகல நிலை பெறுகிறது உயிர், சகலம் என்பதற்கு கலை (மாயா காரியம்)யோடு கூடுதல் என்பது பொருள் பின்னர் மும்மலங்களும் நீங்கப் பெற்று - இறைவனோடு இரண்டறக் கலப்பது சுத்தம் இம்முன்றையும் எட்டாம் பாடலில் இலக்கண நெறியில் ஆசிரியர் கூறியிருப்பது படித்து உணரத்தக்கதாகும். இப்பாடல் உயிர் பற்றிய முழுமையான அடிப்படையான விளக்கத்தைத் தருகிறது.
அடுத்த பாடல் முதல் நூலாசிரியர் வினா. விடை அமைப்பைத் தொடங்கியுள்ளார். அடுத்துவரும் பாடல்கள் மூலம் உயிர்கள் மல சம்பந்தம் உடையவை (9), மலத்தை அனுபவித்து முத்தியைப் பெற முயல்கிறது (10), உடம்பை இயக்கும் சக்தியே ஆன்ம7, அது சேதனம் ஆகும் (11), உயிர்களின் பொருட்டால் உலகு உண்டாக்கப் பெறுகிறது (12) உடம்பு அசேதனம் நிலையாமை உடையது (73), உடம்பு வேறு - உயிர் வேறு (14), உடம்பு வேறு - ஆன்மா வேறு (15), தன்னின் வேறாகிய உடம்பில் உயிரானது நன்று ஐந்தவத்தைகளை

அனுபவிக்கிறது (16), இவ்வாறு தத்துவக் கருத்துக்களைக் கூறும்போது அடிப்படைக் கருத்துக்களை வரையறுத்துக் கூறுவதோடு பிற மதங்கள் கூறும் கருத்துக்களை மறுத்து தன்மதக் கருத்துக்களை வலியுறுத்துகிறார். இதன் வழியில்தான் சிவஞான சித்தியாரின் பரபக்கப் பகுதி அமைந்தது எனலாம். அத்தகு நிலையில் 17ஆம் பாடல் மாயாவாத சமயத்தாரை மறுத்து என்றைக்கும் ஆண்மா ஆன்மாதான், அது பரம்பொருள் ஆகாது என்று வற்புறுத்துகிறார்.
அடுத்து முன்றாவது பகுதி பாசபந்தம் என்பதாகும். இப்பகுதி உயிரைப் பிணிக்கும் பாசநிலை பற்றிக் கூறுகிறது. பாடல் 18இல் மும்மலங்கள் பற்றிய அடிப்படைத் தத்துவங்கள் தரப்பெற்றுள்ளன. பாடல் 19ல் ஆணவமலம் பற்றிய சிறப்பு விளக்கம் தரப்பெறுகிறது. இப்பாடலில்தான் "பரதந்திரியம் கரைகழிபந்தம்” என்று ஆணவமலத்தைச் சிறப்பாகச் சுட்டுகிறார் ஆசிரியர். சரிவாக மத்தபிலர் இத் தொடர் காணப்பெறுகிறது. ஆகம வல்லவரான வாகிசரும் அத்தொடரைத் தம் நூலில் கையாண்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். பரதந்திரியம் - பிறர் ஏவின வினை செய்தல் என்ற பொருளைத் தரும் இந்திரியங்கட்கு ஏவல் செய்யும் உயிர் - அதாவது ஆணவ மலத்தோடு கூடித்தான் இந்திரியங்கட்கு ஏவல் செய்கிறது என்ற பொருள் அடிப்படையில் இத்தொடரால் ஆணவமலம் குறிக்கப் பெறுகிறது. கன்ம மலம் பற்றி இருபதாவது பாடல் விளக்குகிறது. கண்மத்தின் காரணமாக நரக, சொர்க்கம், முயற்சி நலம், முயற்சித் தோல்வி உணர் டாக?னர்றன எனபதை இப் பாடல அறிவுறுத்துக?றது. மாயாமலம் பற்றி இருபத்தோராம் பாடல் வினாவிடையில் பிற மதமறுப்பு நிலையில் விளக்குகிறது. சைவ சித்தாந்தத்தின் அடிப்படைக் கொள்கையான சறர் காரியவாதம் பற்றிய செய்த7களை இருபத்திரணர்டாம் பாடல் விளக்குகிறது. இப்பாடலில் புடவை- நூல் என்ற இரண்டினைக் கொண்டு ஆசிரியர் தத்துவத்தை விளக்குவது அவரது தத்துவ ஞானச் செல்வத்தை வெளிப்படுத்துவதாகும். ஊழ்வினை நம்பிக்கையை இருபத்துமுன்றாம் பாடல் விளக்கி - மனம் வாக்கு, காயம் என்ற முன்றினால் செயல்படுத்தப்

Page 25
பெறுகின்ற பாவ - புணர்ணியங்களைக் கன்மவினை அடிப்படையில் இருபத்திநான்காம் பாடல் அறிவிக்கிறது. பாடல் இருபத்தைந்தில் கனிமவினை பந்தத்தைக் குறிப்பிட்டுக் காட்டும்பொழுது உயிரானது மன, வாக்கு காயங்களால் செய்த பாவ, புண்ணியங்களை முற்பிறப்பு வினைகளால் அனுபவிக்கும் என்பதைச் சுட்டுகிறது. ஆதிஆத்தியான்மிகம், ஆதரிபெளதரிகம், ஆதரிதை விகம் என்று சொல்லப்பெறும் மூன்று துன்ப நிலைகளை பாடல் இருபத்தாறு விளக்கிக் காட்டுகிறது.
நான்காம் பகுதி தேகாந்திரம் என்பதாம் இதில்
உயிர் கூடும் உடம்புகள் பற்றிய தத்துவக் கருத்துக்கள் விளக்கப்பெறுகின்றன. முதலில் ஆன்மா ஒர் உடலை அனுபவித்த பின் வேறு உடலைக் கூடுவதற்குப் பிரிந்து செல்லும் தன்மையை உணர்த்துகிறது. அவ்வாறு கூறும் பொழுது பிற சமயக் கருத்துக்களை மறுத்து உயிரில்லாத உடம்பு தோன்றுவது இல்லை என்ற கருத்தை இருபத்தெட்டாம் பாடல் தருகிறது. பாசங்கள் அநாதி என்பது இருபத்தொன்பதாம் பாடலிலும் பாசத்தைச் சேதம் பண்ணினால் முத்தி கிடைக்கும் என்பது 30, 31ஆம் பாடல்களிலும் குறிக்கப்பெறுகின்றன. இப்பாடல்கள் மூலம் கண்மத்தால் விளைந்த உடம்பால் கன்மம் அறுக்கப்பெற்று முத்தி விளையும் என்பதைத் தெளிவாக ஆசிரியர் விளக்குகிறார்.
சத்திநிபாதம் பற்றி விளக்கம் (8) திட்சை முறைகளால் ஞானம் பெறல் (70), நால்வகைப் பாதங்களில் (சாரியை முதலிய) ஞானபாதம் சிறந்தது (72), சிவம7ம் தன்மை எய்தும் திறம் (73), அணைந்தோர் தன்மை (74, 75) ஆகிய கருத்துக்கள் அடுத்தடுத்து விளக்கப் பெறுகின்றன. இவ்வாறு 73 அகவற்பாக்களில் சைவசித்தாந்த தததுவ உணர்மைகள் பெரும்பாலும் தக்க காணரங்களோடு, எடுத்துக்காட்டுகளோடு விளக்கப்பெறுகின்றன. பாடல்கள் அகற்பாவால் அமைந்தமையால் உட்பொருளுக்கேற்பப் பாடல்களின் வரி அளவுகள் ஒரே சீராக அமையாது குறும்பாடல், நெடும்பாடலாக அமைந்துள்ளன. பாடல்களில் இடம்பெற்றுள்ள கருத்துகள் மேலோட்டமாகவே இங்கு தரப்பெற்றுள்ளன. இவை ஆசிரியரின்

21
தத்துவ ஞானத்தைக் குறைவறக் காட்டும் என்பது உறுதியாகும். படைப்புத்திறன்:
ஞானமிர்த ஆசிரியர் வாகிசமுனிவர் சித்தாந்தத் தத்துவத்தில் நன்கு தோய்ந்தவர் என்பது நூலின் பாடு பொருளால் நன்கு தெளிவாகும் பிற சாத்திர நூல்கள் இறைவனின் தன்மையை எடுத்து இயம்பிட, ஞானாமிர்தம் மட்டுமே முதலில் உயிரின் த்ன்மையை எடுத்து இயம்புகிறது.
தத்துவக் கருத்துக்களில் இறைவனைக் குறிப்பிடும்பொழுது உயிரையும் உடம்பையும் இணைத்துத்தான் தத்துவ ஆசிரியர்கள் குறிப்பிடுவார்கள். உடம்பை உயிர் எவ்வாறு இயக்குகிறதோ அதுபோல உலகையும் உயிரையும் இறைவன் இயக்குகிறான் என்றும் உடம்பு என். கிற உயிரை நேரில் காணமுடியாது. அதுபோல உலக உயிர்களை இயக்குகின்ற இறைவனைக் காணமுடியாது என்று சிவஞானபோதம் (கு.4) குறிப்பிடுவதை இங்கு நாம் நினைவுகூறல் வேண்டும். எனவே, இறைத்தத்துவத்தை உணர உயிர் இயக்கத்தை உணரவேண்டும். இதற்கு ஏற்ப இந்நூலாசிரியர் எடுத்தவுடனேயே உயிரின் இயல்புகளைச் சம்மியஞானம், சம்மிய தரிசனம் என்ற இரண்டு பகுதிகளில் குறிப்பிடுவது அவருடைய ஞானாற்றலைப் பிரதிபலிப்பதாகும்.
உயிரானது அனாதி என்பது சைவசித்தாந்த உண்மையாகும். அந்த உயிருடன் அனாதியான மலம் எவ்வாறு தொடர்பு கொண்டது என்பது இயல்பான வினாவாகும். இதனை ஆசிரியர் குறிப்பிடும்பொழுது இந்த வினாவே வேண்டுவதில்லை என்று பாடல் 10ல் ஆய்வின் வாரா அளவைத்து’ என்கிறார். அதுபோலக் கண்மத்தைக் கழிப்பதற்காக உடம்பெடுத்த உயிர் அந்த உடம்பாலே மீண்டும் கண்மத்தை ஏற்படுத்திக் கொள்வதற்குக் காரணம் என்ன என்பதை வினவி ஆடையில் உள்ள அழுக்கைப் போக்குவதற்கு உவர்மண்ணைப் பயன்படுத்துவதை உவமையாக்கி விடைகூறுவது (பாடல் 10) மிகச் சிறப்பா. கும். ܝ
அனுமானத்தினால் உயிர் உண்டு என்பதை அறிந்து கொள்ளவேணடும் என்பதும் இவ்வாசிரியரின் துணிவாகும் இதைப்பாடல் 11ல்

Page 26
மிகச் சிறப்பாக விளக்குகின்றார் குடம் மண்ணால் செய்யப்படுவது. அந்தக் குடத்தை ஒருவன் எடுத்துச் சென்று மற்றொரு இடத்தில் வைத்தால் தான் அந்தக்குடம் இயங்கும், எடுத்துச் செல்லவில்லை என்றால் அந்தக்குடம் இருந்த இடத்தி. லேதான் இருக்கும். அதுபோலத்தான் உயிர் வேறு, உடம்பு வேறு உயிர்தானே போக்குவரவு பண்ணாது உயிர் இயங்கினால்தான் உடம்பு இயங்கும் என்று அப்பாடலில் கூறுவது எளிமை. யான விளக்கமாகும்.
பாடல் 14ல் மேலும் ஒரு விளக்கமாகத் தேரினைச் செலுத்துகின்ற தேரோட்டி போல உடம்பினை உயிர் இயக்குகிறது என்கிறார்.
'திகிரி ஊர்வோன் மையுக ஊருநர் செய்தியின் மதியே’ (16 -18) என்பது அப்பகுதி அவத்தைகளைப் பற்றிய ஆசிரியரின் விளக்கம் பின்வரும் சாத்திர நூல்களுக்குத் துணையாகும் ஐந்து அவத்தைகளையும் பற்றி விளக்க வரும்பொழுது பாடல் 16ல் உடம்பை ஒரு மண்டபமாக உருவகித்து ஆசிரியர் அவத்தைகளை விளக்கி. யிருப்பது எளிய விளக்கமாக அமைகிறது. இந்தப் பாடலின் கருத்தைப் பின்னர் வந்த சிவஞானசித்தியார் (சுப223) முழுமையாகக் கொண்டு பாடலைத் தந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மலங்களைப் பற்றிய விளக்கத்தில் சிறிதுகூட ஐயம் ஏற்படாவண்ணம் ஆசிரியர் கூறியிருப்பது அவரின் புலமையைக் காட்டுவதாகும் மாயை பற்றிக் குறிப்பிடும்பொழுது கலா தத்துவங்களுக்கு முதற்காரணமாக இருப்பது மாயை என்றும், கன்மமானது இருவினை எனப்படும் என்பதையும் ஆசிரியர் எளிமையாகச் சொல்லிக் கொள்கிறார். மாயையும் ஆணவமலமும் வேறு என்பதை விளக்க இருளும், இருளைக் கெடுக்கின்ற விளக்கும் போல என்ற உவமையின் மூலம் ஆசிரியர் விளக்கிக் காட்டியுள்ளமை மிக மிக 6767f760LDu IT60ig5/IG5lb (1 III.18)
மாயாமலம் பற்றி 21ஆம் பாடலில் தெளிவான விளக்கத்தைத் தருகிறார். பூர்வ கன்ம மலத்தைப் புசித்து, அது அறுமளவும் விதிமுறைப்படி தேகத்தை மாயாமலம் முறையாகக் கொடுப்பது ஆச்சரியத்தை உடையதாகும் என்று குறிப்பிடுவது படித்து உணரத்தக்கதாகும்
2

"கருமத்து அதிகார அந்தத்து அளவும் விதிமுறை கொடுக்கும் வியப்பிற்று அதுஅறி"
(21:5 -6)
அதேபோலப் பாடல் 24ல் மனம் வாக்கு, காயம் என்ற மூன்றினாலும் செயல்படுத்தப்படுகின்ற அறச்செயலையும் மறச்செயலையும் ஆசிரியர் பட்டியலிட்டுக் காட்டியிருப்பது உணரத்தக்க்தாகும். அத்துடன் நிறுத்தாது உடம்பிற்கு வரும் நிோய்களை எல்லாம் பாடல் 26ல் தொகுத்துச் சொல்லியிருப்பதும் உணரத்தக்கதாகும். இத்தகைய விளக்கங்களை எல்லாம் படிக்கின்றபொழுது உலக இயல்பினோடு தத்துவ விளக்கத்தைத் தரும் ஆசிரியரின் புலமை எண்ணி எண்ணிவியத்தற்குரியதாக அமைகிறது.
AD6DL:
சிவஞான போதம் சூத்திரங்களல்ல, வெண். பாக்களால் தத்துவக் கருத்துக்களைத் தர, சிவஞான சித்தியார், சிவப்பிரகாசம் உள்ளிட்டவை விருத்தப்பாக்களால் தர, உண்மை விளக்கம் உள்ளிட்டவை வெணர்பாக்களால் தத்துவ விளக்கம் தர, வாகீச முனிவர் ஞானாமிர்தத்தில் அகவற்பாக்களால் தத்துவ விளக்கத்தைத் தருகிறார். இதனை ஒட்டியே இருபா இருபதும் அகவற்பாவால் அமைந்தது போலும், சங்க இலக்கியப் பாடல்கள் சிறப்புற்று விளங்குவதைப் போல ஞானாமிர்தமும் அகவற்பாவால் சிறப்புற்று விளங்குகின்றது எனலாம் பாடல்கள் நான்கடி (பா49) முதலாக ஐம்பத்தைந்து (பா.10) வரிகள் வரை அமைந்து தத்துவ விளக்கங்களைத் தருகின்றன.
பாடல்களில் இடம் பெற்றிருக்கின்ற சொற்கள் சங்க இலக்கிய நடைபோல் வீறுகொண்ட நடையாக அமைந்திருக்கின்றன.
"இலங்கு குங்கும மார்பரும் வலம்புரி ஒருமணி யணன் திருநல மாதரும் முயக்கிடை யறியா மயக்கின் வயக்குறு துப்புருக் கன்ன பழனத் தானா முத்துருக் கன்ன வித்தார் காலை யாப்போ னின்றெனி னிக்குவ ருறையின் அதன்று (LUIT. 28:1-6)

Page 27
இது போன்ற வீறுகொண்ட நடை ஒவ்வொரு பாடலிலும் காணப்படுகின்றது.
இத்தகைய பfடுநன்)ட அமைந்ததோடு ஆசிரியரின் தனித் தன்மையாக விளங்குவது பாடலில் காணப்படுகவினர்ற வினாவிடை அமைப்பாகும்.
"காரணம் கழறல் வேண்டுவல் ஆரணம் அறிவேன் அமலன் ஆதற்கு அத்த பொறிநிர் புற்கலன் விழுமலம் புணர்தற்கு அற்றே சொற்றது அனாதி மற்றவர்க்கு எற்றெனில்’
(t III.9)
என்பன போன்ற வினாவிட்ை அமைப்பு பல பாடல்களில் காணப்பெற்றிருப்பது சிறப்புடையதாகும்.
முன்பாடலுக்கும் அடுத்த பாடலுக்கும் தொடர்பு காட்டுகின்ற நடை உத்தியும் இவ்வாசிரியரிடத்தில் காணப்படுகிறது. பாடல் 25 கன்ம பந்த நிலை. யைக் கூறுவதாகும். அதாவது உயிரானது மனம் வாக்கு, காயங்களால் செய்த பாவ, புண்ணியங். களை ஊழ் வினைகளால் அனுபவிக்கும் என்று கூறி அடுத்த 26ஆம் பாடலில் உடம்பு அனு: பவிக்கக் கூடிய மூன்று துக்கங்களை எடுத்துக் கூறுகிறார். ".
நற்கதி யார்த்தவிழ் நரலைப் புணரி மூவகைத் துக்கத்து முடியும்’
(1 III.25:14-15)
"ஆதி தைவிகம் ஆதி பெளதிகம்
ஆதி யாத்தியான் மிகமென வோதிய
துக்கம் முன்றினுள்'
(LIII. 26:1-3)
இவ்வாறு முன்பாட்டில் கூறியதைப் பின்பாடலில் விளக்கு கபினர்ற தனிமையும் நூலிற காணப்பெறுகிறது. இவ்வாறு தனக்கென ஒரு தனி நடைப்பாங்கை நூலில் வாகசமுனிவ அமைத்துக் கொண்டு தத்துவ விளக்கத்தை தருகிறார்.

ஞானாமிர்தமும் சாத்திர நூல்களும்
ஞானாமிர்தம் காலத்தால் முற்பட்டது என்பதால் பின்னர் 13ஆம் நூற்றாண்டிலும் அதன் பின்னரும் தோன்றிய சாத்திர நூல்கள் ஞானாமிர்தத்தைப் பின்பற்றியும் ஞானாமிர்தத்தில் கூறப்படாத தத்துவங்களைப் புதிதாகப் புகுத்தியும் தங்கள் பணியைச் செய்துள்ளன. எனவே, இரண்டு கோணங்களில் ஞானாமிர்தத்தையும் பிற சாத்திரங்களையும் ஒப்பிட்டுக் காணலாம். ஞானாமிர்தம் கூறிய செய்திகளை உட்கொண்டு அப்படியே கூறுவதும், பரிணாம வளர்ச்சியில் கூறுவதும் பின்னர் வந்த சாத்திரங்களில் காணப்படுகின்றன. அவற்றிற்கு ஒரு சில எடுத்துக்காட்டுகள்:
சிவஞானபோதம் குத்திர வடிவில் முப்பொருள் இயலர் பைக் கூறுகறது. முதலில் பதவி உணர்மையைக் கூறுகிறது. இந்தப் பத7 உணர்மைக்கு ஞானாமிர்தம் அடியெடுத்துக் கொடுக்கிறது. ஞானாமிர்தம் பாடல் 55இல் குணங்களை ஆசிரியர் வரையறுத்துக் கூறுகிறார்.
1. அவையே தான் அவைதானே ஆகி” என்பது ஞானாமிர்தத்தில் 56ஆம் பாடலில் பதியின் வியாபகத் தன்மையைக் கூறுகின்ற தொடராகும் இதனையே சிவஞானபோத இரணடாம் சூத்திரத்தில் "அவையே தானே ஆயிரு வினையின்” என்று மெய்கண்டர் குறிப்பிடுகின்றார். சிவஞான சித்தியாரும் 'உலகெலாம் ஆகி வேறாய் உடனுமாய் ஒளியாய் ஓங்கி” என்று இரண்டாம் குத்திரத்திரன் முதல் பாடல் குறிப்பிடுகிறது.
2. 36 தத்துவங்களுக்கும் இறைவன் அப்பாற்பட்டவன் என்பதை ஞானாமிர்தம் "முப்பது முதலா மூவிரண்டு ஒவா ஒரிஇய திப்பிய” என்று குறிப் பரிடுக?றது. இதையே அருணநித? சிவாசாரியாரும் "எய்து தத்துவங்களேயும் ஒன்று நின்று எம் இறைக்கே” என்று இரண்டாம் குத்திர 73ஆம் பாடலில் குறிப்பிடுகிறார்.
3. இறைவன் இன்பமும் துன்பமும் இல்லாதவன் என்பதை 35வது பாடலில் 11வது வரியில்
ஞானாமிர்தம் குறிப்பிடுகிறது. இதனையே சிவஞான சித்தியாரும், "வெறுப்போடு விருப்பு

Page 28
தண்பால் மேவுதல் இலாமையான்' என்று முதற்குத்திரத்து 45ஆம் பாடலில் குறிப்பிடுகிறது.
4. கேவலன் - சகலன் - இன்னியல் சுத்தன் என்று உயிர்க்குரிய மூன்று அவத்தைகளைக் கொண்டு உயிரை மூன்றாக ஞானாமிர்தம் எட்டாவது பாடலில் வரையறுக்கிறது. இதனையே சிவப்பிரகாசம் "ஓங்கிவரும் பல உயிர்கள் மூன்று அவத்தையைப் பற்றி உற்றிடும் கேவலம் சகலம் சுத்தன்” என்று 33ஆம் பாடலில் குறிப்பிடுகிறது.
5 ஆண்மா புத்திய முதல் பிருதிவி ஈறாக உள்ள தத்துவத்தை இனிதாகக் கூடிப்பந்திப்பதால் பந்திப்புடையவன் ஆகின்றான் பசு என்று முதற்பாடலில் ஞானாமிர்தம் குறிப்பிடுகிறது. இதனையே போற்றிப் பட்றொடை வெண்பா "கலை, வித்தை அந்த அராகம் அவை மூன்று தந்த தொழில் அறிவிச்சை” என்று குறிப்பிடுகிறது. (73 -75)
6. கன்மத்தின் வினையால் உயிருக்கு உடலகள் தோன்றிக் கன்மவினையை அழிக்கின்றன என்பதை,
"உடையுறு கறை கடிது அகற்றப்
பிறகறை பிடித்த பெற்றயின்"
676öp 625/76öTITLE%DÜğ5lib 10 gglib L/TL 'İlç26ö (10-11)
உவமையைக் கையாளுக?றது. இந்த
உவமையைச் சிவஞான சித்தியாரும்,
"செழுநவை அறுவை சாணி உவர் செறிவித்து அழுக்கை முழுவதும் அழிப்பான்”
என்று 2ஆம் குத்திரத்தில் 52ஆம் பாடலில்
குறிப்பிடுகிறது.
7. ஞானாமிர்தம் பசு தரிசனம் என்ற பாடலில் உயிர் பெற்றிருக்கக் கூடிய வேறுபட்ட குணங்களை வரையறுக்கின்றது. தாவா ஐவகை நிறனொடு” என்று ஐவகை நிறங்களைப் பற்றி எண்ணிக்கையில் குறிப்பிட்டு நிறங்களின் பெயர்களைக் குறிப்பிடவில்லை. இதனை “பொனபார் புனல் வெணர்மை பொங்கும் அனல்சிவப்புவண்கால் கருமை வளர் வான் தூமம்" என்று உண்மை விளக்கம் பாடல் குறிப்பிடுகின்றது.
24

9. துரியாவத்தையில் ஆன்மா பிராணவாயுவுடன் கடியிருப்பதை ஞானாமிர்தம் பாடல் 16 (45.53) வரிகளில் குறிப்பிடுகின்றது. இதனையே சிவஞான சித்தியாரும் சிவப்பிரகாசமும் துரியத்தில் இரண்டு நாபி (சித்தி - 433), "எய்திய துரியத்து ஒன்று” (சிவப்பிரகாசம் - 60) என்று குறிப்பிடுகின்றன.
10. ஆன்மாவானது இச்சா, ஞான, கிரியா சொரூபமாக இருக்கின்றது என்பதை ஞானாமிர்தம் 18ஆம் பாடலின் தொடக்கத்தில் கூறுகின்றது. இதனையே போற்றிப் பட்றொடை முன்பு தந்த தொழில் அறிவு இச்சை துணையாக எழிலுடைய முக்குணம் எய்தி” (28 - 29) என்று குறிப்பிடு. கிறது.
11. இருளும் இருளைக் கெடுக கும் விளக்கும்போல, முழுமலம் மாயை விளங்குகின்றது என்று ஆணவத்தையும் மாயையையும் ஞானாமிர்தம் பாடல் 18ல் குறிப்பிடுகிறது. இதனையே சிவஞானபோதம் 4ஆம் குத்திரத்தில் "ம7யா தனு விளக்காய்” என்றும் திருவருட்பயன் 30ஆம் பாடலிலர் 'விடி வார் அனவும் 6.56773560560601L LDT60Dus' 6760iplb (50ill 565mg/.
12. இறைவனது பராசக்தி இச்சை, ஞானம், கிரியை என்ற மூன்றாய் நிற்கும். அந்தச் சக்திகளால் இறைவன் உயிர்களுக்கு அருள் புரிவான். இதனை ஞானாமிர்தம் 18வது பாடலில் "அருள்நேர் அறிவுக்கு’ என்று குறிப்பிடுகிறது. இதனையே துகளறு போதம், கிரியை, அறிவு, இச்சை கிளர்ந்த சக்தி பெரிய பராசக்தி எனப் பேசாய்' என்று குறிப்பிடுகிறது. (பா42)
13. சிவஞானபோதத்தில் அளவை இலக்கணம் கூறப்படவில்லை. ஆனால் சிவஞானசித்தியார் சுபக்கத்தரின் முதற்பகுதியில் அளவை இலக்கணம் பற்றிய செய்திகளைத் தெளிவாகப் பல பாடல்கள் மூலம் எடுத்துக்காட்டுகிறது. போதத்தின் வழிநூலான சித்தியார் போதம் கூறாத அளவை இலக்கணத்தை ஞானாமிர்த வழி நின்றுதான் குறிப்பிடுகிறது எனலாம் ஞானாமிர்தம் 55ஆம் பாடலில் காட்சி முதலாய அளவையும் அளவறச் சேட்படை அகன்றனன் சிவன்’ என்று குறிப்பிட்டுக் காட்டுகிறது. இந்தக் காட்சி முதலிய அளவைகளைத்தான் சிவஞான சித்தியார்

Page 29
விரித்து அளவை இயலில் குறிப்பிடுகிறது.
பின்னர் வந்த சாத்திர நூல்கள் ஞானாமிர். தத்தை எடுத்தாள்வதோடு உரையாசிரயர்களும் ஞானாமிர்தத்தைக் கையாண்டுள்ளனர். சிவஞான ம7பாடியத்தில் பல இடங்களில் சிவஞான முனிவர் ஞானாமிர்தத்தை எடுத்தாண்டுள்ளார். வினை பற்றிய விளக்கங்களை இரண்டாம் குத்திரத்தின் இரண்டாம் அதிகரணத்தில் சிவஞான முனிவர் குறிப்பிடும் பொழுது "ஆணவம் முதலன்று அது போலக் கருமமும். மாயை மற்று அறி அவனே" என்று ஞானாமிர்தத்தின் வரிகளைச் சிவஞான முனிவர் கையாண்டுள்ளார்.
இவ்வாறு ஞானாமிர்தத்தில் காணப்படுகின்ற செய்திகளைப் பின்னர் வந்த சாத்திர ஆசிரியர்களும் உரையாசிரியர்களும் கையாண்டு ஞானாமிர்தத்தை உலாவரச் செய்துள்ளனர்.
ஞானாமிர்தத்தைச் சிவஞானபோத உரைநூலாகவும் கொள்ள முடிகிறது. ஏனென்றால் சிவஞானபோதத்தில் குறிப்பாகக் காட்டப்பெற்ற செய்திகளை ஞானாமிர்தம் விளக்கமாகக் கூறுகிறது. விளக்கங்கள் ஞானாமிர்தத்தில் அமைந்துவிட்டபடியால் மெய்கண்டார் அவற்றை மீண்டும் தம் நூலில் விளக்கிக் கூறாது, கூறியது கூறல் என்ற குற்றம் வராமல் குறிப்பாகக் காட்டினாற்போல் தெரிகிறது.
எடுத்துக்காட்டாக சிவஞானபோத இரண்டாம் குத்திரத்தில் "அவையே தானேஆய் இருவினை என்று' இருவினை பற்றிய தொடர் இடம்பெற்றுள்ளது. ஆனால் இருவினையினால் வரக்கூடிய நன்மை தீமை பற்றி மெய்கண்டார் விளக்கவில்லை. ஞானாமிர்தமோ இந்த இருவினையால் வரக்கூடிய அதாவது மனம் வாக்கு, உடல் இவற். றால் வரக்கூடிய அறச் செயல்களையும், மறச். செயல்களையும் 24ஆம் பாடலில் 50 ஆம் வரிகளில் குறிப்பிட்டுக் காட்டுகிறது. மேலும் பாடல் 26இல் மூவகைத் துக்கங்களால் வருகின்ற, உடம்புக்கு ஏற்படுகின்ற நோய்களைப் பற்றிய குறிப்புகளும் தெளிவாகக் காட்டப்பெற்றுள்ளன.
சிவஞான போதத்திலும் பிறசாத்திர நூல்களிலும் கண்மத்தின் தொடர்பால் உயிர் அச்சு

மாறிப் பிறக்கப்படுவது கூறப்பெற்றுள்ளது. ஆனால் எவ்வகையான உடம்புகளை உயிர்கள் பெறும் என்பதை அவை குறிப்பிடவில்லை. ஆனால் ஞானாமிர்தமோ அவை குறிப்பாகக் காட்டியதற்கு விளக்கவுரையாகப் பாடல் 28இல் அச்சுமாறிப் பிறத்தலை விரிவாகக் குறிப்பிடுகிறது.
"ஆதி தைவிகம் ஆதி பெளதிகம் ஆதி ஆத்தி ஆன்மீகம்” என்று சொல்லப்பட்ட உடம்புக்கு வரும் முன்று துக்கநிலைகளைப் பற்றி ஞானாமிர்தம் விளக்கமாகக் கூறுகின்றது. (பா.26) ஆதி ஆத்தி ஆன்மீகம் என்பது மனத்தைப் பற்றி வரும் துன்பமும் தேகத்தைப் பற்றி வரும் துன்பமும் ஆகும். ஆதி பெளதிகம் என்பது இயற்கைச் சூழலால் வரும் துன்பங்கள் ஆகும். ஆதி தைவிகம் என்பது பிறவி, முப்பு அறிவற்ற நிலை இவற்றால் வருகின்ற துன்பங்கள் ஆகும் இவை பற்றி ஞானாமிர்தம் விளக்கமாகக் குறிப்பிடுகிறது. இதனைத் திருவாசகமும், (போற்றித்திரு அகவல்) குறுந்திரட்டும் (பா.334) குறிப்புகளால காட்ட, ஞானாமிர்தம் விளக்கவுரையாக விரித்துத் தருகிறது. இவ்வாறு பின்னர் வந்த நூல்களுக்கு ஞானாமிர்தம் உரைநூலாக அமைவதும் குறிப்பிடத்தக்கதாகும்
பிறர் சாத்திரங்களில் வளர்நிலை:
ஞானாமிர்தம் காலத்தால் முற்பட்டது என்பதால் பின் எழுந்த சாத்திரநூல்கள் ஞானாமிர்தம் குறிப்பிடாத தத்துவங்களைக் குறிப்பிட்டுள்ளன. சைவசமயக் கருத்துக்கள் உலகெங்கும் பரவி. யிருக்கும் மெய்ப்பொருளியல் கருத்துக்களாகும் எனவே, காலந்தோறும் மக்களால் போற்றப்பெறும் சைவ தத்துவக் கருத்துக்களை அவ்வப்போது தோன்றிய சாத்திர நூல்கள் தரத் தவறவில்லை. அத்தகு நிலையில் ஞானாமிர்தத்தில் இடம்பெறாத பிற சாத்திர நூல்களில் இடம்பெற்ற கருத்துக்களை ஞானாமிர்தத்தின் வளர்நிலையாகக் கொள்ளலாம் அவற்றில் சில எடுத்துக்காட்டுகள்:
உயிர் எத்தன்மைத்து என்பது பற்றி சமய உலகில் பல திறப்பட்ட கருத்துக்கள் உண்டு சைவ சித்தாந்தம் பிறமதக் கருத்துக்களை மறுத்து உயிர் உணர்தல் தன்மைத்து என்று முடிவு கூறும் ஆதலால்தான் சிவஞான போதமும்

Page 30
சித்தியாரும் சிவப்பிரகாசமும் இது பற்றிய விரிந்த விளக்கத்தைத் தருகின்றன. ஆனால், ஞானாமிர்தம் உயிரின் இலக்கணத்தைத் தருகி. றதே தவிர உயிர் எது என்பது பற்றிய விவாதத்தை எடுத்துக் கொள்ளவே இல்லை. சிவஞான போதம் கூறும் "உளது இலது என்றலின்” என்று தொடங்கும் முன்றாவது குத்திரம் ஞானாமிர்தம் கூறாத ஒன்றாகும்.
அதுபோலச் சைவத்தின் தாரக மந்திரமாம்
ஐந்து எழுத்து பற்றி ஞானாமிர்தம் குறிப்பிடவில்லை. ஐந்து எழுத்தின் சிறப்பை சிவ்ஞானபோதம் ஒன்பதாம் குத்திரம் சிறப்பாக எடுத் தோதுகிறது.
"அஞ்செழுத்தால் உள்ளம் அரனுடைமை
கண்டரனை அஞ்செழுத்தால் அர்ச்சித்து இதயத்தில்
அஞ்செழுத்தால் குண்டலியற் செய்தோமங் கோதண்டஞ்
4760fiasla) அண்டனாம் சேடனாம் அங்கு”
(மூன்றாம் அதிகார உதாரணம்) என்று ஒன்பதாம் குத்திரத்தில் குறிப்பிடுகிறது. உண்மை விளக்கம் அஞ்செழுத்தை உச்சரிக்கும் முறைமையை எடுத்துச் சொல்கிறது.
ஜீவன் முத்தர்களின் இயல்பை ஞானாமிர்தம் 74ஆம் பாடலில் குறிப்பிடும்போது,
"உப்புவினை பழனத்துற்ற பொற்கோட்டு
உலவையின் அறிக மாதோ
கலை வல7ளர்நிலை புணர்பண்பே"
(22 - 24)
என்று குறிப்பிடும். அதாவது உப்பை விளைக்கும் கடலிடத்தே பட்ட அழகிய மரக்கொம்பு வேறுபடாது உப்பாயினாற்போல - ஞானவான்கள் (அணைந்தோர்)
பதித்துவம் வடிவுவேறுபடாது பெறுவர் என்று மேற்குறித்த வரிகள் குறிப்பிடுகின்றன. இதனைச் சித்தியார் வளர்நிலையில்,
இரும்பைக் காந்தம் வலித்தாற்போல் இயைந்து
அங்கு உயிரை

S
வரியிரும்பைச் செய்வதுபோல் இவனைத் தானாக்கி அரும்பித்திது இந்தனத்தை அழிப்பதுபோல்
மலத்தை அறுத்து மலம் அப்பணைந்த உப்பே போல்
அணைந்து”
(a st.32 I)
இவர் வாறு குறிப்பிடுக?றது. இதுபோல ஞானாமிர்தம் திட்சையால் ஞானம் கிடைக்கும் என்பதைப் பாடல் 70இல் திட்கை இல்லை என்றால் ஞானம் இல்லை என்கிறது.
"ஞானமும் இன்மையும் நலமிக்கு உயிர்களுக்கு உணர் அனைவகையே’
(15 - 16)
இதனை "அடிசேர் ஞானம் ஆகன் அருளால் வந்திடும் மற்று
ஒன்றாலும் வாராதாகும்” (FL.327)
என்று குறிப்பிடுவதோடு 8ஆம் சூத்திரம் அதிகரணம் இல் திட்கையின் வகைகளையும் முறைமைகளையும் கூறுவது ஞானாமிர்த வளர் நிலையாகும். இவ்வாறு ஞானாமிர்தத்தின் வழி பின்வந்த சாத்திர நூல்கள் பல்வேறு நிலையில் தத்துவக் கருத்துக்களைத் தந்துள்ளன எனலாம்
முடிவுரை:
சைவசமய சாத்திர நூல்களில் 12ஆம் நூற்றாணர்டின் பிற்பகுதியில் தோன்றிய ஞானாமிர்தம் உயரிய சித்தாந்த நூல் என்பது சைவ உலகம் உணர்ந்து பேணுதல் வேண்டும். சிவஞான போதம் வடமொழியின் மொழிபெயர்ப்பு என்ற கருத்தினைப் போக்குவதற்கு ஞானாமிர்தம் என்ற தமிழி ஆகமம் சைவர்களால உணரப்படவேண்டும். பதினான்கு சாத்திர நூல்களோடு ஞானாமிர்தமும் போற்றிக் காக்கப்படவேண்டும் சித்தாந்திகளால் வழக்கில் பயன்படுத்தப்பட வேண்டும் என்பன போன்ற கருத்திற்கு ஏற்ப இக்கட்டுரையில் ஞானாமிர்த நூலின் மீள்பார்வை தரப்பெற்றுள்ளது.

Page 31
மொழி
இலக்கணத் தூய்மைய
எம்.ஏ.
1. மொழியும் மொழிவளர்ச்சியும்
LDனிதன் பயன்படுத்தும் தொடர்பாடல் ஊடகங்களுள் மொழியே மிகவும் பிரதானமானது நமது அபிப்பிராயங்கள், உணர்வுகள், தகவல்கள் முதலியவற்றைப் பரிறர் இலகுவிலர் அறிந்துகொள்ள அல்லது புரிந்துகொள்ளச் 65ulo/65 65/IL ft IIL6) (Communication) 67607 அகராதிகள் தொடர்பாடலுக்கு வரைவிலக்கணம் கூறும் சைகைகள், அடையாளங்கள், நிறங்கள், பேச்சு, எழுத்து போன்ற பலவகையான ஊடக நகள் தொடர்பாடலுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு பரந்த பொருளில் இவையெல்லாவற்றையும் நாம் மொழி என்று கூறலாம். எனினும் இங்கு பேச்சையும் எழுத்தையுமே மொழி என்ற சொல்லால் நாம் சுட்டுகின்றோம்.
மொழி வளர்ச்சி என்பது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் ஒரு குறிப்பிட்ட சமுகத்தின் தொடர்பாடலர் தேவைகளுக்கு ஏற்ப அச்சமுகத்தின் மொழி பெறும் இணக்கப்பாட்டைக் குறிக்கும் காலம்தோறும் ஏற்படும் சமுக வளர்ச்சி அச்சமுகத்தின் தொடர்பாடல் தேவையை அதிகரிக்கின்றது. அதனை ஈடுசெய்யும் வகையில் மொழியும் வளர்ச்சியடைகிறது. கபிலரும் பரணரும் வாழிந்த சங்கால மக்களினர் தொடர்பாடலர் தேவைகளும் கம்பரும் ஒட்டக்கத்தரும் வாழ்ந்த காலத்து மக்களின் தொடர்பாடல் தேவைகளும் நமது காலத்துத் தொடர்பாடல தேவைகளும் மிகவும் வேறுபட்டவை. அவர்கள் பரிமாறிக் கொண்டவற்றைவிட மிகவும் அதிகமான, மிகவும் வேறுபட்ட தகவல்களை நாம் இன்று பரிமாறிக் கொள்கின்றோம் அதற்கு ஏற்ப நம் காலத்து மொழியும் வளர்ச்சியடைந்துள்ளது. நாம் இன்று பரிமாறிக்கொள்ளும் தகவல்களை அவர்கள்

வளர்ச்சி ம் மொழித்துாய்மையும்
நுஃமான்
காலத்து மொழியில் நம்மால் தொடர்பாட இயலாது. உதாரணமாக பின்வரும் வாக்கியங்கள் கூறும் தகவல்களை கபிலர் அல்லது கம்பர் பயன்படுத்திய தமிழில் அல்லது பரிமேலழகரும் நச்சினார்க்கினியரும் பயன்படுத்திய தமிழில் தொடர்பாடல் செய்வது முற்றிலும் சாத்தியமல்ல.
1. தனியார் மருத்துவமனையில் அவசர சத்திர சிகிச்சை நிலையம் ஒன்றை முதலமைச்சர் திறந்துவைத்தார்.
2. தோட்டத்தொழிலாளர் சம்பள உயர்வு கோரி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்தனர்.
3. குடித்தொகையைக் கட்டுப்படுத்துவதற்குக் குடும்பக்கட்டுப்பாடு முறையையே வளர்முக நாடுகள் அனைத்தும் இனறு கடைப்பிடிக்கின்றன.
4. நான் புதிதாக வாங்கிய கார் ஒரு லிட்டர் பெற்றோலில் பத்துக் கிலோ மீட்டர் ஓடும்
இன்றைய நமது சமுக வாழ்வின் பல்வேறு அம்சங்களைப் பரிரத7பலரித்து நற்கும் இத்தகவலர்களும் இத்தகவலர்களை வெளிப்படுத்தும் மொழியும் முற்றிலும் புதியவை. நமது சமூகத்தினதும் மொழியினதும் ஒரு புதிய - மிகவும் பிந்திய வளர்ச்சிக் கட்டத்தைக் குறித்து நிற்பவை. அவ்வகையில் கபிலரோ, கம்பரோ, நச்சினார்க்கினியரோ பயன்படுத்திய தமிழில் நாம் இவற்றை மொழி புெயர்த்துக் கூறுதலி இயலாது. காலம் தோறும் அவ்வக்காலத்தின் தேவைகளுக்கேற்ப மொழி வளர்ச்சி அடைகின்றது என்பதையே இது காட்டுகின்றது.

Page 32
மொழிவளர்ச்சி என்பது புதிய சொற்களின் பெருக்கத்தை மட்டுமன்றி ஒலியமைப்பு (Phonology) சொல்லமைப்பு (Morphology) வாக்கிய அமைப்பு (Syntax) முதலிய மொழியின் அனைத்து நரிலைகளிலும் 6Jsmi Lu (8 La5 மாற்றங்களையும் உள்ளடக்குகின்றது.
மாறாத எதுவும் வளர்ச்சியடைவதில்லை. மொழி இதற்கு விலக்கு அல்ல. வாழும் மொழிகள் எலர் லாம் இடையறாது மாற்றத்துக்கு உள்ளாகின்றன. அதனாலி தொடர்ந்து வளர்ச்சியடைகின்றன. மாற்றமும் வளர்ச்சியும் ஒரு நிகழ்ச்சியின் இரு அம்சங்களாகும் மொழி ஒரு சமுக சாதனம் என்ற வகையில் சமுகத்தில் ஏற்படும் மாற்றங்களும் வளர்ச்சிகளுமே மொழி மாற்றத்தையும் வளர்ச்சியையும் இறுதியாகத் தீர்மானிக்கின்றன. எனினும் முற்காலத்திலே மொழி வளர்ச்சி பெரிதும் பிரக்ஞைபூர்வமான ஒரு நிகழ்வாக இருக்கவில்லை. அதனாலேயே மொழி வளர்ச்சி பற்றிய திட்டங்களும் கொள்கைகளும் பழைய நூல்களில் காணப்படவில்லை. ஆனால் இன்றைய கைத்தொழில் நாகரீக யுகத்தில் பிற துறைகள் போல மொழி வளர்ச்சியும் பிரக்ஞை பூர்வமான ஒரு நிகழ்வாக உள்ளது. மொழி வளர்ச்சி பற்றிய பல்வேறு கொள்கைகளும் திட்டங்களும் செய்முறைகளும் பின்பற்றப். படுகின்றன. கருத்து முரண்பாடுகளும் மோதல். களும் நிகழ்கின்றன. மொழியை நவீனப்படுத்து. வதே இவற்றின் குறிக்கோள் ஆகும் மொழியை நவீனப்படுத்துதல் என்பது தற்கால சமுகத்தின் நவீன தொடர்பாடல் தேவைகளுக்கேற்ப மொழியை வளர்த்தல் அல்லது இணக்கப்படுத லேயாகும் அவ்வகையில் தற்காலச் சூழலில் மொழிவளர்ச்சி, நவினத்துவம் என்பன ஒரு
பொருளையே குறித்து நிற்கின்றன எனலாம்.
தமிழின் நவீனத்துவம் பற்றி கருணாகரன் (1978), அண்ணாமலை (1980), சண்முகம் (1983) ஆகியோர் விரிவாக எழுதியுள்ளனர். இக்காலத் தேவைகளையெல்லாம் வெளிப்படுத்துவதற்கு ஏற்ற வகையில் சொல்வளத்தைப் பெருக்குதல் பழைய வழக்குகளைத் தவிர்த்து பொதுவழக்கில்

உள்ள சொற்களையே பெரிதும் பயன்படுத்துதல், சொற்களை இலகுவில் அடையாளம் கண்டு பொருள் விளங்கத்தக்க வகையில் சந்தி பிரித்து எழுதுதல், பழைய இலக்கண விதிகளுக்குப் புறம்பாக வளர்ச்சியடைந்துள்ள உருபனியல் வாக்கியவியல் அம்சங்களுக்கு இடமளித்தல், பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைத்தல், Nண்முகப்பட்ட மொழிநடையை வளர்த்தல், நவீன தொடர்பாடல் பொறி முறைகளுக்கு ஏற்றவகையில் எழுத்துச் சீர்திருத்தத்தை மேற்கொள்ளுதல் போன்றவற்றை நவீனத்துவத்தின் அம்சங்களாக இவர்கள் எடுத்துக்காட்டியுள்ளனர்.
18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து தமிழ்மொழி இத்தகைய பண்புகளை நோக்கிப் படிப்படியாக வளர்ச்சியடைந்து வந்துள்ளதை நாம் அவதானிக்க முடியும் மதப்பிரசாரகர்களும் நவீன அறிவியல், தொழில்நுட்பவியலாளர்களும், எழுத்தாளர்களும், பத்திரிகையாளர்களும் பல்வேறு சமுக, அரசியல் இயக்கங்களைச் சார்ந்தவர்களும் வானொலி, தொலைக்காட்சி, திரைப்படத் துறையினரும் பிரக்ஞைபூர்வமாகவும் பிரக்ஞைபூர்வ மற்றும் இத்தகைய வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்துள்ளனர். இதனைத் தமிழின் நவீனத்துவம் நோக்கிய வளர்ச்சி எனலாம்.
தற்காலத் தமிழ் வளர்ச்சியிலே இதற்கு எதிரான போக்கு ஒன்றையும் நாம் காணர்கின்றோம். தமிழ்மொழி அமைப்பிலே ஏற்பட்டுவரும் புதிய மாற்றங்களை ஏற்றுக் கொள்ளாத போக்கு இது. இப்புதிய மாற்றங்கள் தமிழ் மொழியின் வரம்பை உடைத்து அதன் வனப்பையும் வளத்தையும் அழித்துவிடும் என இப்போக்கினர் கருதுகின்றனர். பண்டைய மொழிமரபுகளைப் பேணுவதன்முலமே தமிழ்மொழியை வளர்க்கமுடியும் என்பது இவர்களின் அடிப்படைவாதமாகும் மொழி வளர்ச். சியில் பழமையை வலியுறுத்தும் இப்போக்கினை மொழிப்பழமை வாதம் எனலாம். மொழிப்பழமைவாதம் ஒன்றிலிருந்து ஒன்று சற்று வேறுபட்ட இரு போக்குகளைக் கொண்டுள்ளது. ஒரு போக்கு வளர்ச்சியில் இலக்கணத் துTய்மையை

Page 33
வலியுறுத்தும் மொழி வளர்ச்சியில் இன்றுவரை செல்வாக்குச் செலுத்திவரும் இப்போக்குகளின் விளைவுகளை மதிப்பிடுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
2. இலக்கணத் தூய்மையும் மொழித் 5/Tuմ60ւքսյա5
இலக்கணத்து7ய்மை என்பது மரபுவழி வந்த இலக்கணக் கொள்கையை வழுவாது கடைப்பிடித்தலையும் மொழியமைப்பில் ஏற்படும் புதிய மாற்றங்களையும் வழக்காறுகளையும் நிராகரிப்பதையும் எழுத்து வழக்கில் பேச்சு வழக்கின் செல்வாக்கை முற்றிலும் ஒதுக்குவதோடு பேச்சு வழக்கையும் எழுத்து வழக்கை ஒட்டி அமைத்துக் கொள்ள வலியுறுத்துவதையும் குறிக்கும். இவ்வகையில் எழுத்திலும் பேச்சிலும் மரபுவழி இலக்கண நெறி பேணப்படவேண்டும் என்பதே இலக்கணத்து/ாய்மை வாதத்தின் அடிப்படை எனலாம். வேறுவகையில் சொல்வதாயின் செந்தமிழ் மரபினை அல்லது உயர் இலக்கிய மரபினை வலியுறுத்துவதே இலக்கணத் தூய்மை வாதம் எனலாம்.
மொழித்துாய்மை என்பது பொதுவாக சுயமொழிக் கூறுகளை மட்டும் பயன்படுத்துவதைக் குறிக்கும். பிறமொழிச் சொற்களைத் தவிர்த்து தனித்தமிழ்ச் சொற்களை மட்டும் பயன்படுத்த வேண்டும் என்பதே மொழித் தூய்மைவாதத்தின் சாராம்சமாகும்.
மொழித்துாய்மை வாதத்தைவிட இலக்கணத்தூய்மைவாதம் பழமையானது. தமிழில் நவீன உரைநடை முன்னோடிகளில் முதல்வராக மதிக்கப்படும் ஆறுமுகநாவலரை நவீன தமிழில் இலக்கணத்துாய்மையை வலியுறுத்தியவர்களுள் முதல்வராகவும் நாம் கருதலாம். நவீன தமிழின் முக்கிய பண்பாகிய எளிமையை முதலில் வலியுறுத்தியவரும் நாவலரே. அவ்வகையில் யாவருக்கும் எளிதில் பொருள் விளங்குவது, பெரும்பாலும் சந்தி விகாரங்கள் இன்றி இருப்பது ஆகிய மூன்று அம்சங்களை நவீன உரைநடையின் முக்கிய பண்புகளாக வலியுறுத்தியவர் அவர், (நுமான் 1988) அதேவேளை மரபுவழி இலக்கண
2.

விதிகளையும் அவர் பெரிதும் வலியுறுத்தினார். 'இலக்கண நூ7லாவது உயர்ந தோர் வழக்கத்தையும் செய்யுள் வழக்கத்தையும் அறிந்து விதிப்படி எழுதுவதற்கும் பேசுவதற்கும் கருவியாகிய நூலாம்” என தனது இலக்கணச் சுருக்கத்தில் இலக்கண நூலுக்கு அவர் வரைவிலக்கணம் கூறியுள்ளார். ஆறுமுக நாவலர் பேச்சு வழக்கும் எழுத்துவழக்கை ஒட்டி அமையவேண்டும் என்ற கருத்துடையவர் என்பதை இது காட்டுகிறது. அவ்வகையில் பேச்சு வழக்கின் செல்வாக்கினால் எழுத்துவழக்கில் ஏற்பட்டு வந்த சில புதிய மாற்றங்களை அவர் வன்மையாக நிராகரித்தார். "சுப்பிரமணிய பரிள்ளையவர்கள் குமாரனர் தம்பையா பிள்ளையவர்கள்’ என்ற தொடரில் குமாரன் என்னும் ஒருமைப் பெயரோடு அவர்கள் என்னும் பன்மைப் பெயர் புணர்ந்த தெப்படி? என தம்பையாபிள்ளை என்பவர் பாடிப் பதிப்பித்த குமாரநாயக அலங்காரம் எனற நூலைக்கண்டித்து எழுதிய கட்டுரை ஒன்றிலே நாவலர் கேள்வி எழுப்புகின்றார். இராமலிங்க சுவாமிகள் பயனபடுத்தரிய நூலகள் அறிவிக்கமாட்டாது' அவைகள் அறியாது’ ஆகிய தொடர்களில் காணப்படும் ஒருமை பன்மை இயைபின்மையை அவர் தன் "போலி அருட்பா மறுப்பு' என்னும் கட்டுரையில் கண்டித்து எழுதுகிறார். (நுமான் 1988) இவை பேச்சு வழக்கு எழுத்து வழக்கில் ஏற்படுத்திய செல்வாக்கின் விளைவாகும் ஆறுமுகநாவலரைப் பொறுத்தவரை இலக்கணத் தூய்மை என்பது பேச்சு வழக்கின் (கொடுந்தமிழ்) செல்வாக்கு எழுத்து வழக்கில் (செந்தமிழ்) ஏற்படாது பேணுவதே எனலாம். 'உரை நடையிலே அன்றாடப் பேச்சு வழக்கு வடிவங்களையும் சொற்களையும் பயன்படுத்துவதற்கு ஆறுமுகநாவலர் திட்டவட்டமாக எதிரானவர். அந்த வகையிலே இறுகிய, வளைந்து கொடுக்காத ஒரு வகையில் செயற்கையான தமிழ் உரைநடை வகை ஒன்று இன்றுவரை கூட நிலைப்பதற்கு அவரும் ஓரளவுக்குப் பொறுப்பாளியாக இருக்கிறார்” என இது தொடர்பாக கமில்கவலL6) (1973 - 259) ősgyóg5/Lib id6öILb 65/76ű6715தக்கது. ...

Page 34
ஆறுமுகநாவலரின் பின்வந்த எல்லா மரபுவழித்தமிழறிஞர்களும் பெரும்பாலும் உயர் செந்தமிழ் மரபை இறுக்கமாகப் பேணுவதிலேயே ஆர்வம்காட்டி வந்துள்ளனர். பழைய இலக்கண மரபு சான்றோர்களால் தமிழ் மொழிக்கு அமைக்கப்பட்ட வரம்பு எனவும் அம்மரபை மீறுவது தமிழ் மொழியை வளர்ப்பதற்குப் பதிலாக அதனை அழித்துவிடும் என்றும் அவர்கள் நம்பினர். இந்நம்பிக்கையின் அடிப்படையில் பெரிதும் பழமை இலக்கண விதிகளுக்கு அதிக அழுத்தம் கொடுத்தனர். பேச்சு வழக்கின் செல்வாக்கை முற்றிலும் தவிர்க்க விரும்பினர். தன் எழுத்துக்களில் இலக்கணத் தூய்மையை முற்றிலும் பேணியவர்களுள் ஒருவரான சுவாமி விபுலாநந்தர் இதுபற்றிக் கூறுவது நம் கவனத்துக்குரியது. "ஒவ்வொரு மொழிக்கும் சிற்சில சிறப்பியல்புகளுள, அவை தம்மை மாறுபடாது பாதுகாத்தல் ஆன்றோர்க்கியல்பு. மொழி முதலிலும் இறுதியிலும் நிற்றற்குரிய எழுத்து இவையாமெனவும் இன்ன இன்ன எழுத்துக்களின் முன்னர் இன்ன இன்ன எழுத்துக்கள் மயங்காவெனவும் இலக்கண நூலாசிரியர் வகுத்துக்காட்டியிருக்கிறனர். அவர் ஆராய்ந்தமைத்த விதிகளுக்கு இயைவாகச் சொற்களையாக்கிக் கொள்ளுதல் முறையாகும். வினையெஞ்சு கிளவி, பெயரெஞ்சு கிளவி, தொகை மொழி தொடர்மொழி என்பனவற்றிற்கு இலக்கண நூலாசிரியர் கூறிய வரம்பினைக் கடைப்பிடிப்பது எல்லாவற்றாலும் இன்றியமையாததேயாம்' (விபுலாநந்தர் 1973 - 153-56) 1936இல் சென்னையில் நிகழ்ந்த கலைச்சொல்லாக்க மகாநாட்டில் நிகழ்த்திய தலைமைப் பேருரையிலேயே சுவாமி விபுலாநந்தர் இவ்வாறு குறிப்பிட்டார் என்பது முக்கிய கவனத்துக்குரியது.
ஆயினும் இலக்கணத் தூய்மைவாதிகள் அனைவரும் மொழித் தூய்மைவாதிகள் அல்லர். மொழித்துய்மை வாதத்துக்கு முற்பட்டவரான ஆறுமுக நாவலர் அவர் காலத்துப் பிற ஆசிரியர்களைப் போலவே வடமொழிச் சொற்களைத் தாராளமாகக் கையாண்டவர். சமஸ்கிருதம், தமிழ் என்னும் இரணர்டு

பாஷைக்கும் முதலாசிரியர் சிவபெருமான். சமஸ்கிருதமும் தமிழும் சிவபெருமானாலும் இருடிகளாலும் அருளிச் செய்யப்பட்ட இலக்கண நூல்களை உடைமையாலும் ஆன்றோர்களாலும் தழுவப்பட்டமையாலும் தம்முள் சமத்துவம் உடையனவேயாம் என எழுத7யவர் (ஆறுமுகநாவலர் 1969 185 - 188) அதனால் வடசொற்களை கலந்து எழுதுவதில் அவருக்கு சுவி வித ஆட்சேபமும் இருக்கவிலலை. அதுபோலவே ஆங்கிலச் சொற்களையும் நாவலர் தாராளமாகக் கையாண்டுள்ளார். சமூக, அரசியல் விவகாரம் பற்றிய அவரது எழுத்துக்களில் ஆங்கிலச் சொற்கள் பல பயின்றுவரக் காணலாம்
தனித்தமிழ் இயக்கம் உச்சநிலையில் இருந்த காலத்தில் வாழ்ந்தவர் சுவாமி விபுலாநந்தர் உயர் செந்தமிழ் நடையையே பெரிதும் பயன்படுத்திய தீவிர செவ்வியல்வாதியான அவர் தனித்தமிழ் இயக்கத்துக்கு எதிரானவர் எனலாம். விஞ்ஞான திபம் என்னும் தனது நெடுங்கட்டுரையிலே ஆரிய - தமிழ் மோதலை அவர் சாடியுள்ளார். "வடமொழி தென மொழியரிரணர்டிலும் முதன்மை படைத்திருக்கும் நூல்களின் ஒப்புமையை நோக்குங்கால் . ஆரிய நன்று தமிழ் திது, தமிழ் நன்று ஆரியம் தது, தமிழ் மொழிக்கட்டலையாய ஒத்து இல்லை . ஆரிய மறைமொழி இழுக்குடையது என்று இவ்வாறெல்லாம் பக்கம் பற்றிக் கூறுவாரது உரையனைத்தும் மரபுநிலை வேற்றுமையென்பது தெளிவாகும்” என்பது அவர் கூற்று (விபுலாநந்தர் 1963 - 4I) ஆழ்ந்த ஒப்பியல் நோக்குடைய சுவாமி விபுலாநந்தர் பிறமொழி எதிர்பார்ப்பாளராக இருந்ததில்லை. "உயிருள்ள மொழியானது பிறமொழித் தொடர்பு கொண்டு தனக்குரிய சொற்களஞ்சியத்தைப் பெருக்கிக் கொள்ளுதல் வேண்டும்’ என்றும் அவர் எழுதியுள்ளார். (விபுலாநந்தர் 1973 - 156) விஞ்ஞானதிபம் என்ற தனது கட்டுரைத் தலைப்புப் பற்றிக் குறிப்பிடுகையில் 'தமிழ்மொழியில் உணர்வுச் சுடர்' என்பதிலும் பார்க்க விஞ்ஞான திபம் என்பதே பொருத்தமுடையது. அன்றியும் தமிழ் நூற்பரவையுள் வடமொழிப் பெயரெய்தப் பெற்ற

Page 35
நூல்கள் மிகப்பல என்றும் கூறுகின்றார். (விபுலாநநதர் 1963 - 49) கலைச் சொல்லாக்கத்தில் தகுந்த தமிழ்ச்சொற்கள் இலலாவிடதது வட சொறிகளைக் கையாளவேண்டும் என்பதும் அவரது கருத்து. (1963 - 102)
இத்தகைய கருத்துக்களுக்கு முற்றிலும் எதிரான மொழித் தூய்மைவாதம் அதன் தீவிர வடிவில் தனித்தமிழ் இயக்கமாக மறைமலை அடிகளால் தோற்றுவிக்கப்பட்டது. இந்த நூற்றாண்டின் முற்பகுதியில் தோன்றி இன்றுவரை தமிழ்ச் சிந்தனையில் பெரிதும் செல்வாக்குச் செலுத்திவரும் இவ்வியக்கத்தின் கருத்தியல் பற்றி அரசியல் நோக்கில் சிவத்தம்பியும் (1979) இலக்கிய நோக்கில் கைலாசபதியும் (1986) மொழியியல் நோக்கில் அண்ணமாலையும் (1979) விரிவாக ஆராய்ந்துள்ளனர். தனித்தமிழ் இயக்கம் இலக்கணத் தூய்மையோடு மொழித்தூய்மை பேணப்படவேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டது. பிறமொழிக் கலப்பால் தமிழ்மொழி அழிந்துவிடும் என்பதையே மொழித்தூய்மைவாதம் அழுத்திக் கூறுகின்றது. "வடசொற்களை இப்போதே நாம் தடை செய்யாவிடின் தமிழ் தன்னிலை கெட்டு வேறு மொழி போலாகிவிடக் கூடும். தமிழில் பிறமொழிச் சொற்களைச் சேர்ப்பதால் தமிழ் தனி இனிமையை இழந்துபோவதோடு பல தமிழ்ச் சொற்களும் வழக்கில் இல்லாது இறந்து போகின்றன” என்பது மறைமலை அடிகள் கருத்து (மேற்கோள், சோமலே 1956 - 71)
நம் தமிழ்மொழி தனித்து இயங்கும் ஆற்றல் பெற்ற மொழி எனினும் தமிழில் பிறமொழிச் சொற்களைக் கலந்து வழங்குகின்றோம். இது தவறு. பிறமொழிச் சொற்களை கலவாது பேசுதலும், எழுதுதலும் நம் தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு உதவும்' என அரச சார்பான தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் வெளியிட்டுள்ள பத்தாம் வகுப்புக்கான தமிழ் இலக்கணநூல் (1990 - 57) கூறுகின்றது. மொழி வளர

வேணடுமானால் பிறமொழிக் கலப்பைத் தவிர்க்கவேணடும் எனவும் பிறமொழிக் கலப்பினாலேயே மலையாளம், தமிழில் இருந்து பிரிந்து தனிமொழியாகியது எனவும் மொழித் தூய்மையாளர் அழுத்திக் கூறுவர். அவ்வகையில் தமிழ் மொழியை அதன், தனித் தன்மையோடு அழியாது பேணவேணடுமாயின் தமிழில் பிறமொழிக் கலப்பை முற்றாகத் தடுக்கவேண்டும் புதிய தொடர்பாடல் தேவைகளுக்கு வேண்டிய சொல்வளத்தைப் பெருக்குவதற்கு தனித்தமிழ்க் கூறுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என இவர்கள் வாதிட்டனர். இவ்வகையில் பழந்தமிழ்ச் சொற்களையும் சொற்சேர்க்கை முறைகளையும் பயன்படுத்துவது தவிர்க்க முடியாததாயிற்று. இவ்வாறு இலக்கணத் தூய்மையும் மொழித்
தூய்மையும் மொழிப் பழமை வாதத்தின் இரு
31
அம்சங்க்ளாயின. இவ்விரு போக்குகளும்
மொழிவளர்ச்சியைத் தொன்மையை நோக்கித் த7ருப்பும் நோக்குடையன. அதனால
இவர் விரணடையும் செவி வரியலாக்கம்
(Classicalisation) என வழங்கலாம். இதன்
சாதகமான விளைவுகள் சிலவற்றை குறிப்பாக
கலைச்சொல்லாக்கத்தைப் பொறுத்தவரை நாம்
இனங்காண முடியுமாயினும் நடைமுறையில் இது
எதவிர் நவனத்துவததுக் கே (Counter
MOderinization) é} 65 676ö5/aoungis.
தமிழகத்திலும் சரி, இலங்கையிலும் சரி அரசு சார்பான மொழி அமைப்புக்களிலும் கல்வி நரிறுவனங்களிலும் இலக்கணத்துTய்மை ஆகியவற்றினர் காவலர்களே முதன்மை பெற்றிருந்ததால் மொழி வளர்ச்சியில் இவர்களது கருத்தியலே அதிக செல்வாக்குச் செலுத்தியது. பாடநூல் ஆக்கம், கலைச்சொல் ஆக்கம், அரசு ஆவணங்களின் மொழி பெயர்ப்பு முதலியவற்றில் இப்போக்கின் செல்வாக்கை நாம் இன்றும் காணலாம். அடுத்துவரும் பகுத7களில் செவ்வியாக்கத்தின் நடைமுறை விளைவுகள் பற்றிச் சில உதாரணங்களை மட்டுமே
நோக்கலாம்.

Page 36
3. சொற்புணர்ச்சி
தற்காலத் தமிழின் முக்கிய பண்புகளுள்
ஒன்று சந்தி பிரித்து எழுதுவதாகும். இதனை எளிமையாக கததவினர் ஒரு அம்சமாக அண்ணாமலை (1980) விளக்குவார். சொற புணர்ச்சியிலும் வாக்கிய அமைப்பிலும் எளிமையாக்கம் வெற்றி பெற்றிருப்பதையும் அவ (1979) சுட்டிக் காட்டியுள்ளார். ஆயினும் இலக்கணத் து7ய மைவாதம் இதற்கு எதவிர்ந?லையரிலர் செயற்படுவதையே காணமுடிகின்றது. பாடநூல்களில் சொற்புணர்ச்ச அழுத்தி வலியுறுத்தப்படுகின்றது. இலங்கை பாடசாலைகளில் பயன்படுத்தப்படும் தமிழ் ! பாடநூ7ல பரின வருமாறு கூறுக?ன்றது இக்காலத்தில் செய்தித் தாள்களிலும் தரப குறைந்த அச்சுப் புத்தகங்களிலும் புணர்ச்ச விதிகள் பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டு வருதலைக் காண்கின்றோம் பல சந்தர்ப்பங்களில் பிழையாகவும் சொற்கள் புணர்த்தப்பட்டிருப்பதைக் காணலாம் மாணாக்கர் இவற்றைத் தவிர்த்தள வேணடும் ' சொற்களின் தவிருத்தமான புணர்ச்சிகளை அறிந்து தாம் எழுதும கட்டுரைகளிலே இன்றியமையாத புணர்ச்ச விதிகளைப் போற்றி எழுதுதல் வேண்டும் "பாடநூலில் இன்றியமையாத புணர்ச்சி விதிகள் எவை எனக் கூறப்படவில்லை. ஆயினும் மொத்தம் 94 புணர்ச்சி விதிகளை இப்பாடநூல் கூறுகின்றது. இவை அனைத்தும் தற்காலத் தமிழுக்கு இன்றியமையாதன என்பதே இப்பாடநூல் ஆசிரியர்களின் கருத்தாதலி வேணடும். எனினும் பாடநூ7லில
மூலம்
இருந்தால் போதும்
நாகரிகத்தில் போதிய
நடைமுறையில் கொண்டுவரும்
இயக்கும் சக்கரம்
ஒன்றும் தெரிந்து
இருக்கும் கெடுதல்
பயன்படுத்தப்பட்டுள்ள மொழிநடையில் உயிர்முை உயிர் வரும்போது உடம்படுமெய் தோன்றுவதிலு

放
b
மெய் முன் உயிர் வரும்போது உயிர் மெய்யாய்ப் புணர்வதிலும் நெகிழ்ச்சி காணப்படுகின்றது. அதேவேளை லகர ஈற்று, மகர ஈற்றுப் புணர்ச்சியிலும் வேறுபல புணர்ச்சி விதிகளிலும் இறுக்கம் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. இவை இன்றியமையாப் புணர்ச்சி என அவர்கள் கருதுவது தெளிவு.
^ ஏ.எம்.ஏ.அஸ்ரீசின் இலங்கையில் இஸ்லாம் என்னும் நூலில் இருந்து பழமை என்ற விளக்கு என்னும் கட்டுரையின் ஒரு பகுதியை இப்பாடநூலில் சேர்த்த ஆசிரியர்கள் மூல ஆசிரியர் லகர, மகர, ஈற்றுச் சொற்களைப் புணர்த்தாது எழுதியிருக்க பாடநூலில் அவற்றையெல்லாம் புணர்த்தியே பதிப்பித்துள்ளனர். இங்கு சில உதாரணங்களைப் பார்க்கலாம்.
இலங்கை கல்வி வெளியீட்டுத் திணைக்களமும் அரசகரும மொழித்திணைக்களமும் இப்புணர்ச்சி விதிகளை இறுக்கமாகக் கடைப்பிடித்து 62GT56oineol. Fisheries Department 676il - தற்கு அரச கரும மொழித்திணைக்களம் கொடுத்துள்ள தமிழ் வடிவம் கடற்றொழிற்றிணைக் களம்' என்பதாகும்.
4 வாக்கிய அமைப்பு
முன் குறிப்பிட்ட ஏ.எம்.ஏ. அஸ்சின் கட்டுரையில் இருந்து முன்றில் ஒரு பகுதியே பாடநூலில் சேர்க்கப்பட்டுள்ளது. ஆயினும் அதில் 140 திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இத்தருத்தங்கள் கிரந்த எழுத்து நீக்கம், சொற்புணர்ச்சி, பிறமொழிச் சொற்கள் நீக்கம், திருத்தம் இருந்தாற் போதும்
நாகரிகத்திற் போதிய
நடைமுறையிற் கொண்டுவரும்
இயக்குஞ் சக்கரம்
ஒன்றுந் தெரிந்து
இருக்குங் கெடுதல்
வாக்கிய அமைப்பு ஆகிய நிலைகளில் செய்யப்பட்டுள்ளன. வாக்கிய அமைப்புத்
32

Page 37
தொடர்பான ஒரு உதாரணத்தை இங்கு தரலாம். அஸ்ரீசின் கட்டுரையில் நாம் தயாராயிருக்க வேண்டும்’ என்று வரும் வாக்கியம் பாடநூலில் நாம் தயாராயிருத்தல் வேண்டும்’ எனத் திருத்தப்பட்டுள்ளது. இது செயல் வேண்டும் என்னும் கிளவி எனவரும் தொல்காப்பியச் சூத்திரத்தின் மாதிரியில் செய்யப்பட்ட திருத்தம் இது செய்ய வேண்டும், போக வேண்டும் என எழுதுவதே இக்கால மொழிமரபு. இவ்வாறு எழுதுவதே இன்று பெருவழக்காகும். பேச்சு வழக்கின் செல்வாக்கினால் எழுத்து வழக்கில் ஏற்பட்ட மாற்றமாக நாம் இதனைக் கருதலாம். இடைக் காலத் தழிழிலேயே இம்மாற்றம் தொடங்கி விட்டது. பழந்தமிழில் இவை முறையே செயல் வேண்டும், போதல் வேண்டும், நிற்றல் வேண்டும் என அமையும் இப்பழந்தமிழ் மரபையே சரியான இலக்கண விதியாகக் கருதும் இலக்கணத்துாய்மைவாதிகள் புதிய மாற்றத்தை நிராகரிப்பர். இது மொழி வளர்ச்சியுைப் பின்னோக்கி இழுத்தலாகும்.
பழந்தமிழில் அல் என்ற அடியாகப் பிறந்த எதிர்மறை வினைமுற்று திணை, பால், எண், இடம் ஆகியவற்றுக்கு ஏற்ப விகுதிபெற்று நான் அல்லேன், நாம் அல்லேம், நீ அல்லை. நீங்கள் அல்லர், அவன் அல்லன், அவள் அல்லள், அவர்கள் அல்லர், அது அன்று, அவை அல்ல, என அமையும். ஆனால் இக்காலத் தமிழில் அல்ல என்ற வடிவமே இருதிணை ஐம்பால், முவிடத்துக்கும் பொதுவானதாக அமைகின்றது. இதுவும் பேச்சு வழக்கின் செல்வாக்கினால் ஏற்பட்ட எளிமை நோக்கிய மாற்றமாகும். மு.வரதராசன் போன்ற தமிழறிஞர்களும் இந்த அமைப்பையே பயன்படுத்தியுள்ளனர். ஆயினும் இலக்கணத் துய்மை வாதம் இதனை ஏற்றுக் கொள்வதில்லை. தமிழ் நாட்டுப் பாடநூல் நிறுவனம் புதிய கல்விக் கொள்கையின் கீழ் அமைந்த பாடத்திட்டத்திற்கிணங்க எழுதி வெளியிட்டுள்ள எட்டாம் வகுப்புக்குரிய தமிழ் இலக்கணம் அவன் அல்ல, அவள் அல்ல, அவர் அல்ல, அது அல்ல என்று எழுதுவது பிழை என்றும் அவன் அல்லன், அவள் அல்லள், அவர் அல்லர், அது அன்று என எழுதுவதே சரி என்றும்

வலியுறுத்திக் கூறுகின்றது.
இலங்கை கல்வி வெளியீட்டுத் திணைக்களம் வெளியிட்டுள்ள மொழிபெயர்ப்பு நூல் ஒன்றிலே இடம்பெறும் பின்வரும் வாக்கிய அமைப்பு பண்டைய உரையாசிரியர்களின் செவ்வியல் நடையை ஒத்த7ருப்பதையும் இங்கு சுட்டிக்காட்டலாம்.
'ஒப்பற்ற மேதாவிலாசத்தைத் தாகூர் உடையராயினும் தனியொரு பிறவியாக அவரைக் கொள்ளலும் பொருந்தாது என்னை நாட்டபிமானத்தால் உந்தப்பட்டு முன்னாட் போலியரிலக கரியதத?ன தளைகளை அறுத்தெறியும் ஆசையால் ஏற்பட்டு இலக்கியம் படைத்த கவிஞரும் எழுத்தாளரும் இந்திய மொழிகள் பிறவற்றிலும் தோன்றினரன்றோ? (11600fai45f 1967, 289)
5 பிறமொழிச் சொற்களின் தமிழாக்கம்
மொழிப் பழமை வாதம் பரிறமொழிப் பெயர்களையும் சொற்களையும் தமிழ் மயப்படுத்துவதில் அதிகம் செல்வாக்குச் செலுத்தியுள்ளது. இவ்வம்சத்தின் பத்திரிகைத் தமிழ் அல்லது நாம் அன்றாடம் வழங்கும் பொதுத் தமிழுக்கும் கல்வித்துறை, அல்லது பாடநூல் தமிழுக்கும் இடையே பெரிய இடைவெளி இருப்பதைக் காணமுடியும் பொதுத் தமிழ் முடிந்த அளவு மூலமொழி உச்சரிப்பைப் பேண முயலுகின்றது. பாடநூல் தமிழ் முற்றிலும் அவற்றைத் தமிழ் மயமாக்க முயலுகின்றது.
எந்த மொழியும் பிறமொழிச் சொற்களை ஒலிச்சிதைவின்றி மூலமொழியில் உள்ளதுபோல் அப்படியே கடன் வாங்கிக் கொள்வதுமில்லை. அதுபோல் முற்றிலும் தனது ஒலி அமைப்புக்கு ஏற்ப ஒலி மாற்றம் செய்து தன்மயமிாக்கிக் கொள்வதும் இல்லை. இரண்டுமே நிகழ்கின்றன. . எல்லா மொழிகளும் பெருமளவு தமது ஒலியமைப்புக்கு ஏற்பவே பிறமொழிச் சொற்களைத் தழுவிக் கொள்கின்றன. அதேவேளை ஓரளவு பிறமொழி ஒலிகளையும் ஒலிச்சேர்க்கைகளையும் கடன்வாங்கியும் கொள்.

Page 38
கின்றன. இவ்வாறு தான் தமிழ் மொழியிலே வடமொழித் தொடர்பால் ஜ, ஸ ஷ, ஹ முதலிய எழுத்துக்களும் ஒலிகளும் கடன் வாங்கப் பெற்றன. மொழிக்கு முதல், இடை, கடை நிலை களில் வரா எனப் பழைய இலக்கண நூல்கள் குறிப்பிடும் ஒலிகள் இடம்பெறத் தொடங்கின. வடமொழித் தொடர்பால் ஏற்பட்ட இம்மாற்றங்கள் ஆங்கிலம் அரபு போன்ற பிறமொழிப் பெயர்களை எழுதுவதற்கும் வாய்ப்பாக அமைந்தன. மொழிப் பழமை வாதம் இவர் வாய்ப்பை முடிவிடுகின்றது.
இலங்கையில் பல்கலைக்கழகம் வரை தாய்மொழி மூலம் கல்வி அறிமுகப்படுத்தப் பட்டபின் கல்வி வெளியீட்டுத் திணைக்களம் ஆங்கில மொழியில் எழுதப்பட்ட இயற்கை விஞ்ஞானம் சமூக விஞ்ஞானம் கணிதம் போன்ற பலதுறை சார்ந்த பாடநூல்களையும் வேறு பல புகழ் பெற்ற நூல்களையும் தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டது. ஏ.எல்.பஷாமினி 6sluugšgöég5 46JÉgólu JIT (Wonder that wa lndia) கே.எம்.பணிக்கரின் ஆசியாவும் மேனாட்டு ஆதிக்கமும் போன்றவையும் இவற்றுள் அடங்கும் தமிழ் நாட்டில் கூட மொழிபெயர்க்கப்படவில்லை. ஆயினும் இம்மொழி பெயர்ப்புக்களில் அதீத செவ்வியல் நெறி பேணப்பட்டமையால் அவை தம் நோக்கத்தை ஈடுசெய்ய முடியாத அளவு தொடர்பாடல் தவிறன் குன்றியவையாகக் காணப்படுகின்றன. பிறமொழிப் பெயர்களின்
தமிழாக்க முறை மட்டுமன்றி வழக்கிழந்த
பழந்தமிழ்ச் சொற்கள், இலக்கணக் கூறுகள் வாக்கிய அமைப்பு போன்றவை பெருமளவில பயன்படுத்தப்படுவதும் மாணவர் இவற்றை இலகுவில் புரிந்து கொள்ள முடியாதிருப்பதாகக் கூறுகின்றனர். இங்கு பணிக்கரின் ஆசியாவும் மேனாட்டு ஆதிக்கமும் என்னும் நூலில இடம்பெற்றுள்ள தமிழ் மயமாக்கப்பட்ட சில பிறமொழிப் பெயர்களை மட்டும் உதாரணமாகத் தருகிறேன்.
இடப்பெயர்கள். அபுகானித்தான், அமித்தடாம் அலாசுக்கா, அனோய, இசுப் பெயரினர் இசுக்கொட்டிசு, இடச்சு, இரசியா, ஒசுத்திரேலியா சான்பிரான்சிக்கோ, சென் பற்றசுப்பேக்கு

திரினிடாத்து, தொக்கியோ, பலுச்சித்தான், பாக்கித்தான், பாங்கொக்கு, போனியோ, மன்செசுற்றர்.
ஆட்பெயர்கள் அட்சன் ஆடிங்கு, உறோபேட்டு, ஆட்டு, இரசல், இலாசுகி, உரூசோ, செங்சிகுத்தான், தொகற்றோவிசுக்கி யோட்சு, விற்றோரியா.
தொடர்பாடல நோக்கவில் இத்தகைய தமிழாக்கம் பயனற்றது என்பது வெளிப்படை. பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி போன்ற தொடர்பாடல் சாதனங்களில் இப்பெயர்கள் பெரிதும் அவற்றினர் மூல உச்சரிப்பை ஒட்டியதாகவே அமைகின்றன. மொழிப்பழமை வாதம் மேலோங்கியுள்ள கல்வித்துறைகளில் அவை வேறுபட்டு அமைகின்றன. அதனால் தமிழ் மயப்பட்ட புதிய வடிவங்கள் அவற்றின் தொடர்பாடல் திறனை இழந்து விடுகின்றன. இன்று தமிழ்மட்டும் அறிந்தவர்களாலும் பரவலாக அறியப்பட்ட ஜோர்ஜ் புஷ், ஜோன் மேஜர் போன்ற பெயர்களை யோட்சு Լթ, யோன் மேசர் என்றோ சோர்ச்சு புசு, சோனி மேசர் என்றோ தமிழ்மயமாக்கினால் அவர்களால் புரிந்து கொள்ள முடியாது. மொழி பிரதானமாக ஒரு தொடர்பாடல் சாதனம் என்றவகையில் மொழிமரபு நவீன தொடர்பாடலுக்கு இடையூறாக அமையும்போது அம்மரபு மாறவேண்டியிருக்கும் தவிர மரபைப் பேணுவதற்காக மொழி தன் தொடர்பாடல் திறனை இழந்துவிடாது.
பிறமொழிச் சொற்களை நீக்குதல் அல்லது அவற்றைத் தமிழ் மயமாக்குதல் தொடர்பாக இன்னும் ஒரு முக்கிய அம்சத்தையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும் மொழித்தூய்மையாளர்கள் தமிழ் ஒரு குறிப்பிட்ட சமுகப்பிரிவினருக்கு உரியதாக அன்று ஒரு பல்லின, பல் கலாசார சமுகத்துக்குரிய மொழியாக வளர்ச்சியடைந்து வந்திருக்கின்றது என்பதை மறந்து விடுகின்றார்கள். மறைமலைஅடிகள் தமிழ்மொழி வளர்ச்சியை சைவத்தோடு மட்டுமே இணைத்துப் பார்த்தார். அவரது கருத்துப்படி பண்டைக்காலம் முதல் தமிழைப் பயன்படுத்தியவர்களும் வளர்த்தவர்களும் சைவர்களே. பின்னர் வந்த பெளத்தர்களும் சமணர்களும்,

Page 39
வைஷர்ணவர்களும், கபிறரிஸ்தவர்களும், முஸ்லிம்களும் தங்கள் மதக் கொள்கைகளைப் பரப்புவதற்காக மட்டுமே தமிழைப் பயன்படுத்தினர். எந்தவித கட்டுப்பாடுமின்றி வடசொற்களையும் பரிற மொழிச் சொற்களையும் கலந்து ஆயிரக்கணக்கான தமிழ்ச் சொற்களை வழக்கில் இருந்து அழிந்து போகச் செய்ததில் இருந்தே அவர்கள் தமிழை வளர்க்க வரவில்லை என்பதை விளங்கிக் கொள்ளலாம் என்றும் தமிழ்மொழிக்கு மட்டும் உரிய சைவத் தமிழர்களே தமிழை அதன் தூய வடிவத்தில் பயன்படுத்தி அதனை வளர்த்தனர் என்றும் அவர் கருதுகின்றார். (மறைமலை அடிகள் 1972) மொழிமாற்றம் வளர்ச்சி பற்றி எவ்வித ஆழ்ந்த அறிவும் இன்றி வெறும் உணர்ச்சி நிலைநின்று மறைமலை அடிகள் பிரச்சினையை நோக்கியிருக்கிறார் என்பது. தெளிவு. எந்த மக்கள் கூட்டமும் மொழியை வளர்க்கும் நோக கல மொழியைப் பயன்படுத்துவதில்லை. பதிலாக மொழியைப் பயன்படுத்துவதன் மூலமே மொழி வளர்கின்றது. பழைய சொற்கள் வழக்கிலிருந்து மறைவதும் புதிய சொற்கள் வழக்குக்கு வருவதும் மொழி வளர்ச்சியினர் இயல்பான நிகழ்வாகும். சங்ககாலத்தில் வழங்கிய ஆயிரக்கணக்கான சொற்கள் இடைக்காலத்தில் வழக்கிறந்தன என்றால் தமிழரினர் பணிபாடு பெரிதும் மாற்றத்துக்கு உள்ளாகி விட்டது என்பதே பொருள் பல்வேறு பண்பாட்டை உடைய மக்கள் ஒரு மொழியைப் பயன்படுத்தும்போது அம்மொழி பன்முகப்பட்ட வளர்ச்சி பெறுகின்றது. ஆங்கிலம் உலகப் பெருமொழியாக இவ்வாறே வளர்ந்தது. தமிழும் அவ்வாறே வளர்ந்து வந்துள்ளது. பெளத்தர்களும், சமணர்களும், வைஷ்ணவர்களும் கிறிஸ்தவர்களும் இஸ்லாமியரும் தங்கள் தங்கள் தேவைகளுக்காக தமிழ்மொழியைப் பயன்படுத்தியபோது தமிழ் அதற்கெல்லாம் வளைந்து நெகிழ்ந்து கொடுத்து வளர்ந்துள்ளது. அதன் சொல்வளமும் பொருள் வளமும் பெருகியுள்ளன. ஒரு வாழும் மொழியின் இயல்பு இது.
மறைமலை அடிகள் கருதுவதுபோல பழந்தமிழ் மரபை சைவத்தமிழ் மரபாகக் காண்பதும் பிற

பண்பாட்டுக் கலப்பினால் தமிழ் மரபில் ஏற்படும் மாற்றத்தையும் வளர்ச்சியையும் தமிழரின் அழிவாக்க் கருதும் தூய சைவத்தமிழ் மரபு எனத் தாம் கருதுவதைப் பிற பண்பாட்டினர்மேல் திணிப்பதும் சமூகவியல் நோக்கிலும் மொழியியல் நோக்கிலும் ஆரோக்கியமற்றதாகும் கிருட்டினன் என்பதைவிட கிருஷ்ணன் என்றும் கிறித்தவர் என்பதைவிட கிறிஸ்தவர் என்றும் இசுலாமியர் என்பதை விட இஸ்லாமியர் என்றும் எழுதுவதையே அவ்வச் சமுகப்பிரிவினர் விரும்புவாராயின் மொழி மரபுக்கு விரோதமானது எனக் கூறித் தடுப்பது மொழி வளர்ச்சிக்கு எத7ரானது என்பதோடு ஒரு பல லின சமுகநோக்கில் உகந்ததல்ல என்பதையும் நாம் அழுத்திக் கூறவேண்டும்
6 பிறமொழிச் சொற் கலப்பு:
மொழித்துTuப்மை வாதம் தொடர்பாகக் கூறவேண்டிய பிறிதொரு அம்சம் சமுக வளர்ச்சிப் போக்கில பிறமொழிக் கலப்பு தவிர்க்க முடியாதது என்பதாகும். மனிதர்கள் சிற்சில குழுக்களாக பிற சமுகத்தொடர்பின்றி, பிற பணிபாட்டுத் தாக்கமின்றி தனித்து வாழ. முடியுமாயின் அவர்களின் மொழியும் பிறமொழிக் கலப்பின்றி இயங்க முடியும் மிகப் பண்டைக் காலத்திலேயே இது சாத்தியமாகவில்லை. நவீன யுகத்தில் அத்தகைய ஒரு தனித்த வாழ்வை எண்ணிப்பார்க்கவே முடியாது.
பிற பண்பாட்டுத் தொடர்பு மூலம் அப்பாணிபாட்டுக்குரியோரின் பொருட்களும் சிந்தனையும் நம்மை வந்து சேரும்போது அவற்றைக் குறிக்க அவர்கள் பயன்படுத்திய சொற்களும் நம் மொழியில் வந்து சேர்கின்றின. சைக்கிள், கார், பளப் போன்ற சொற்கள் இவ்வாறே நம்மை வந்து சேர்ந்தன. நமது அன்றாட்த் தொடர்பாடலில் இவை தவிர்க்க முடியாத சொற்களாகிவிட்டன. சைக்கிள் என்பதற்குப் பதிலாக துவிச்சக்கரவண்டி, ஈருருளி இருசில்லி மிதிவண்டி போன்ற சொற்களைப் பயன்படுத்த முயற்சி நடந்தது. ஆயினும் சைக்கிள் என்பதே நிலைகொண்டுவிட்டது. கார்
என்பதற்கு மாற்றாக நாம் ஒரு சொல்லை

Page 40
உண்டாக்க முடியவில்லை. இதனை வடிவில் ஒத்த பழந்தமிழ்ச் சொல் கார் மேகம்,கார் கால இருந்தது. இதற்குக் காரணமாய் இருக்கக்கூடு பஸ் என்பதற்குப் பதிலாக பேருந்து என்பது இன்று தமிழ்நாட்டில் வழக்கில் உண்டு ஆயினும் பளப் என்பதே இன்னும் பெருவழக்கில் உள்ளது இதனை பசு, வசு எனத் தமிழ் மயமாக்கு முயற்சிகளும் நடந்தன. இலங்கையில் லெறியு தமிழ்நாட்டில் லாறியுமே வழக்கில் உள்ளன இவற்றை உலொறி உலாறி எனப் பயன்படுத்த பத்திரிகையாளர் யாவரும் முயன்றதாகத் தெரியவில்லை.
தமிழில் பிறமொழிச் சொற்கள் பல எவ்வாறு அத்தியாவசியமாகிவிட்டன என்பது பற்றி ஒரு பத்திரிகையாளரான டி.எஸ்.சொக்கலிங்கம் ஒரு முறை கூறிய கருத்து இங்கு மனங்கொள்ளத் தக்கது. r
'டாங்கி விமானம் பெட்ரோல் மோட்டார். பீரங்கி குணர்டு, துப்பாக்கரி, தோட்டா ஆகிய வார்த்தைகளை உபயோகிக்காமல் யுத்த செய்திகளைச் சொல்லவே முடியாது. டாங்கியும் பெட்ரோலும், மோட்டாரும் ஆங்கிலம் இவற்றை எப்படி மொழிபெயர்ப்பாளர்கள். தானே இயங்கு ஊர்தி என்று ஒவ்வொரு தடவையும் மோட்டாரு க்குப் பதிலாக நீளமாக எழுதுவார்களா? விமானம் பீரங்கி குண்டு துப்பாக்கி தோட்டாவை எடுத்துக கொள்வோம். இவையெல்லாம் தமிழ்வார்த்தை களே என்று நீங்கள் நினைக்கலாம். புலவர்கள் தனித்தமிழ்க் கொள்கைப்படி இவை தமிழ் வார்த்தைகளே இல்லை. விமானம் சமஸ்கிருதம் பீரங்கி போர்ச்சுக்கேய பாஷையில் இருந்து வந்தது. குண்டு மராத்தி பாஷை, துப்பாக்க துருக்கி பாஷை, தோட்டா உருதுவில் இருந்து வந்து சேர்ந்தது. இவ்வளவையும் பிறமொழி: சொற்கள் என்று தள்ளி விட்டால் இவற்றுக்கும் பதிலாகத் தனித்தமிழில் எப்படிச் சொல்வார்கள் விமானத்துக்கு பறக்கும் வணடி என்றும் பீரங்கிக்கு உருண்டு நீண்ட குழாயுள்ள வெடி யென்றும் சொல்லுவார்களா? அப்படிச் சொன்ன76 அவை பொருத்தமாயிருக்குமா? அல்லது ஜனங்களுக்குத் தான் புரியுமா? (மேற்கோள சோமலே 1956 - 86)

தனித்தமிழ் இயக்கம் அதன் தீவிர நிலையில் மொழி வளர்ச்சிக்குப் பாதகமானது என்பதைப் பொதுவாக பலரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். நாகரிகமடைந்த ஒரு மனிதன் காட்டுமிராண்டி யாவதை ஒத்த பிற்போக்கானது என வையாபுரி பிள்ளை (1959.5) தமிழின் மறுமலர்ச்சி என்ற தனது நூலில் அதுபற்றிக் குறிப்பிட்டுள்ளார். பழந் தமிழை மீட்டு அதை சமஸ்கிருதக் கலப்பற்ற தாகப் பேணும் சுவாமி வேதாசலத்தின் முயற்சி இரு மடங்கு பிற்போக்கானது என்றும் அது ஒரு சாத்தியமற்ற காரியம் என்றும் கைலாசபதி (1986) கூறியுள்ளார். ஆயினும் தமிழில் மனம்போன போக்கிலான பிறமொழிக் கலப்பைக் கட்டுப்படுத் தியதும் தமிழின் சொல்வளத்தைப் பெருக்குவதில் அதன் உள்ளார்ந்த ஆற்றலைப் பயன்படுத்து வதற்கு வழிதிறந்துவிட்டதும் தமிழ் மொழி வளர்ச் சியில் அதன் சாதகமான செல்வாக்கு என்றே கூறவேண்டும்.
எனினும் இலக்கணத் து7ய மையும் மொழித்து7ய்மையும் ஒன்றிணைந்த செவ்வியல் மொழிநடை பேச்சு மொழியில் இருந்து வெகுதூரம் விலகிச் செல்கின்றது. சாதாரண படிப்பறிவுள்ள வாசகர் மட்டுமன்றி ஓரளவு உயர்கல்வி
பெற்றவர்கள்கூட இதனைப் புரிந்துகொள்வதில்
இடர்ப்படுகின்றனர். தற்கால வழக்கில் இல்லாத பழந்தமிழ்ச் சொற்கள், இலக்கணக் கூறுகள்
பலவற்றைக் கையாளுதல், பழைய புணர்ச்சி
விதிகளைப் பெரிதும் பேணுதல், பிறமொழிப் பெயர்களையும் சொற்களையும் முற்றிலும் தமிழ் மயமாக்குதல் போன்றவை இத்தகைய இடர்பாட்டுக்குக் காரணமாகின்றன. இதனாலேயே மொழிவளர்ச்சியைப் பொறுத்தவரை செவ்விய லாக்கம் நவீனத்துவத்துக்கு எதிர்நிலையான எனக் கொள்ளவேண்டியுள்ளது.
தமிழ் மொழியைப் போன்றே சீனமொழியும் தொண்மை வாய்ந்த இலக்கியவளம் பெற்ற ஒரு
மொழியாகும். தமிழ்போல் சீன மொழியிலும் பேச்சுக்கும் எழுத்துக்கும் இடையே பெரிய
இடைவெளியுண்டு இந்த நூற்றாண்டின் தொடக்கப் பகுதிகளில் தமிழ்மொழியை நவீனப்படுத்த முயற்சிகள் நடைபெற்றதுபோல் சீனமொழியை

Page 41
நவீனப்படுத்தும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. பணிக்கர் தன்னுடைய நூலிலே இது பற்றி விரிவாக எழுதியுள்ளார். பாங்கான மொழி. நடையில் மொழி பெயர்க்கப்பட்ட அதன் ஒரு பகுதியை இங்கு தருகின்றேன். இதில் கூறப்படும் பொருளுக்கும் அதன் மொழி நடைக்கும் இடையில் உள்ள இயைபின்மையை நாம் தெளிவாகக் காணமுடியும்.
இலக்கிய விற்பன்னரும் பொதுமக்களும் ஒரே மொழியை வழங்கச் செய்து அவ்வழி சிந்தனைச் செல்வமனத்தையும் பொது மக்களுக்குள் திறந்துவிடுவதே முதற் பணியென ஊ-சி கருதினான். இலக்கியச் சீனமொழியென்பது மக்கள் நாவிலே பயிலாத தெர்ன்றாதலின் செத்தமொழியே அதுவென அவன் வாதித்தான். "மத்தியகால ஐரோப்பாவில் இலத்தின் போன்றது அது: சாக்காட்டிலேயும் இலத்தீனிலும் பார்க்க நனிசெத்த மொழியாகும் இலத்தினைப் பேசுதலும் விளங்குதலும் கூடும். ஆயின் இலக்கிய சீன மொழியைப் பேசும்போது நன்கு பழகிய சொற்றொடர்களைப் பயன்படுத்தினாலன்றி அல்லது. பேசுவோன் சொல்லப்போவது பற்றி முன்னமே ஓரளவு தெரிந்தாலன்றி அம்மொழியை செவிப்புலனாலர் விளங்கரிக் கொள்ளல் பண்டிதர்க்கும் அரிதே! இவ்விடர்ப்பாட்டைத் தவிர்க்கும்பொருட்டு அனைவரும் புரிந்துகொள்ளத் தக்க சிந்தனைக் கருவியாக மொழி அமைதல் வேண்டுமெனும் நோக்கத்தோடும் ஊ-சி பேச்சு வழக்கையே ஆதரித்தான்.
அவன் கூறிய ஆலோசனைகள் கட்டுமட்டானவை. தொல்லருங்கால நூல்களிலிருந்து மேற்கோள் காட்டலைத் தவிர்க்க, ஒரே பெற்றித்தாக வசனமமைக்கும் முறையை விலக்குக: காலப்போக்கிலே வழக்கொழிந்த இலக்கியத் தொடர்களைத் தள்ளி, பேச்சு வழக்கினைத் தள்ளாதொழிக, இலக்கண வரம்புக்கமைய வசனமமைத்தலின் அவசியத்தை வற்புறுத்தல், சாரமற்ற சொற்றொடர்களை உபயோகிக்க வேண்டா, முந்தையோரின் நடையைப் பின்பற்றவேண்டா சுருங்கக்கூறின் விளங்கத்தக்க மொழிநடையிலே இயற்கையாக எழுதுக, ஆயினும் அவன் எடுத்துக் கூறிய
3

வாதங்களிலே விரவி நின்ற நிதானமும் அவனது புலமையுமெல்லாம் சீன இலக்கியத்துறையிலே தாராள மனப்பான்மை வந்து பாய்தற்கு வழி திறந்திருக்குமேயல்லாது அறிஞன் சென்னுடைய அரும்பணியின்றேல் அவை இலக்கியப் புரட்சிக்கு அடிகோலியிருக்குமாவென்பது சந்தேகமே. அறிஞன் சென்னே அக்கருத்துக்களை ஒரு புரட்சிக் கோட்பாடாக உயர்த்தி வைத்தவன். ஊசியின் வேண்டுகோளை ஆதரித்த சென் சீன இலக்கியத்திலே ஒரு புரட்சி உருவாதல் வேண்டுமெனக் கட்டுரைத்தான். அவன் தானே பெருமித நடையிற் கூறியவாங்கு இலக்கியப் புரட்சிக் கொடியை ஏற்றிவைத்தான்.
பேச்சு மொழியிலியன்ற கட்டுரைகளைப் பிரசுரிக்கத் தலைப்பட்டு, ஊ-சியின் ஆறு உத்திகளையும் லா யவனசே கையாளத் தொடங்கிய காலை இலக்கியப் புரட்சி ஈடேறியதோடு செயற்கைத் தன்மைமிக்க பாண்டித்திய நடையின் கட்டுப்பாடுகளைச் சீனமொழி உடைத்தெறிந்து விடுதலையும் பெற்று விட்டதெனலாம். (பணிக்கர், 1969 - 307 - 308) சீன மொழியின் நவீனத்துவம் பற்றிக் கூறும் மொழிபெயர்ப்பாளரின் நடை பெருமளவு செயற்கைத் தன்மை மிக்க பாண்டித்திய நடையே என்பது வெளிப்படை இலக்கணத் தூய்மை, மொழித்து7ய்மை ஆகியவற்றின் செல்வாக்குக்கு உட்பட்ட செவ்வியல் நடைக்கு இது நல்ல உதாரணமாகும். தமிழிலே இத்தகைய பாணர்டித்திய நடையின் கட்டுப்பாடுகளை உடைத்துக் கொண்டு தமிழ்மொழியை நவீன உலகுக்குக் கொண்டுவந்தவர்கள் பாரதியும், அவன் வழிவந்த மறுமலர்ச்சி எழுத்தாளர்களுமே ஆவர். அவர்கள் மூலம் தமிழில் பேச்சு மொழிக்கும் எழுத்துமொழிக்கும் இடையில் உள்ள இடைவெளி குறையத் தொடங்கிற்று தமிழ் பன்முகப்படுத்தப்பட்ட நடைவளம் பெற்று வளர்ந்தது. நவீன தொடர்பாடல் தேவைகளுக் கியைய நவீனத்துவம் பெற்றது. அவ்வகையில் தமிழின் எதிர்கால வளர்ச்சி அவர்கள் வழியில் செல்வதே உகந்தது.

Page 42
பன்முகப்படுத்தப்பட்ட நூல்கள்
அண்ணாமலை, இ.
ஆறுமுகநாவலர்
சிவத்தம்பி கா.
சுவாமி விபுலாநந்தர்
சுவாமி விபுலாநந்தர்
சோமலே நுமான், எம். ஏ.
நுமான், எம். ஏ.
பணிக்கர் கே.எம்.
மறைமலை அடிகள்
வையாபுரிப்பிள்ளை.எஸ்.
Annamalai. E
Kailaspathy. K
Kamil ZVelabil
Karunakaran . K
Shunmugam.S. V.
(1980)
(1969)
(1979)
(1963)
(1973)
(1956) (1988)
(1987)
(1979)
(1972)
(1989)
(1979)
(1986)
(1978)
(1978)
(1983)
'6767f760LDL மொழியிய
LT6LITLt. வித்தியா
தனித்தமி
விபுலாநந்
இலக்கிய கொழும்பு
வளரும் "19ஆம் நூ
நாவலரும்
மொழியிய
"ஆறுமுக 19வது ஆ
தமிழாசிரி
ஆசியாவு &606.j) (ଗ)
2 60JLD60
தமிழின் நூற்களஞ்
MOVene! The Case Mysore.
The Tann Literatire
The Smi
The Stu Annamal
Aspects All India

பாக்கம் புதுமையாக்கத்தின் ஒரு மறை'
ல் - 4 அண்ணாமலை நகர்.
} (நான்காம் புத்தகம்) றுபாலன அச்சகம், சென்னை
ழ் இயக்கத்தின் அரசியல் பின்னணி சென்னை
த செல்வம் கலைமகள் வெளியீடு, சென்னை.
பக் கட்டுரைகள் கல்வி வெளியீட்டுத் திணைக்களம்,
தமிழ் பாரி நிலையம், சென்னை
நூற்றாண்டின் நவீன உரைநடை இயக்கமும் ஆறுமுக
י,
பல் தொகுதி 11 இதழ் 1-4
நாவலரின் இலக்கணத் தூய்மை வாதம்”
பூய்வுக் கோவை அகில இந்திய பல்கலைக்கழகத்
யர் சங்கம்,அண்ணாமலை நகர்.
ம் மேனாட்டு ஆதிக்கமும் வளியீட்டுத் திணைக்களம், கொழும்பு
ரிக் கோவை சென்னை
மறுமலர்ச்சி நீசியம், தொகுதி - 2, சென்னை
it for Linguistric Purism: ! of Tamil in Language Movements in India CIL
il Purist Movement: a Re-evaluation in on Art and
NCBH Madras
e of Murugan, Leiden
dies in Tamil Sciolinguistics Malar Pathippu, ai Nagar -
of Language Development in Tamil, -inguistics Association, Annamalai Nagar
நன்றி. தொடர்பாடல் மொழி நவீனத்துவம்
38

Page 43
O O ܫ என் இலங்கைப் பயண .பே.சு روا இலங்கை அரசு இந்து சமய கலாசாரத் திணைக்களம் - கொழும்பு, இலங்கை இராமகிருஷ்ணமிஷன், கொழும்பு தேசிய கலை இலக்கியப் பேரவை, கொழும்பு முதலான அமைப்புகளின் அழைப்புகளை ஏற்று 1992, 1994 1996ஆம் ஆண்டுகளில் யாழ்ப்பாணம் தவிர பிற பிரதேசங்களில் சுற்றுப்பயணம் செய்துள்ளேன்.
நானகாவது முறையாக இலங்கை, மட்டக்களப்பு, பூறிஇராமகிருவுர்ண மிஷன் அழைப்பிற்கிணங்க 25.07.2006 முதல் 02.08.2006வரையில் இலங்கைப் பயணத்தை மேற்கொண்டேன். கொழும்பு பூரிஇராமகிருஷ்ண மிஷன் பவளவிழா தொடர்பான இருநாள் ஆய்வரங்கு மட்டக்களப்பில் நடைபெற்றது. இதில் பங்கேற்க இலங்கை சென்றேன்.
சென்னை, மயிலாப்பூர் பூரீஇராமகிருஷ்ண மிஷனில் இருந்து மிஷன் மேலாளர் சுவாமி அபிராமானந்தஜி அவர்களுடன் புறப்பட்டேன். மிஷன் தலைவர் சுவாமி கெளதமானந்தாஜி மகராஜ் அவர்கள் புறப்படுவதற்கு முன் நல்லாசி அருளியபொழுது சுவாமி அபிரானந்தாஜி மகராஜ் அவர்களிடம் "பெசுமணி சற்று உணர்ச்சிவசப்படுபவர், அவரை ஜாக்கிரதையாக அழைத்துச் சென்று வரவும்” என்று குறிப்பிட்டார். அவர் என்னிடம் வெளிப்படுத்திய அன்பும் பரிவும் என்னை மிகவும் நெகிழ வைத்தது.
சுவாமி கெளதானந்தாஜி குறிப்புரைக்கு ஏற்ப சுவாமி அபிராமானந்தாஜி மகராஜ் தாயினும் சாலப் பரிந்து பயணம் முழுவத?லும் அரவணைத்து எவ்வித சிரமமும் எனக்கு ஏற்படாமல் பார்த்துக் கொண்டது என்றும் என் பசுமை நினைவுகளில் ஒன்றாகப் பதிவாகியது. 25ஆம் தேதி பிற்பகல் 1245 மணி அளவில் புறப்பட்ட ஜெட் ஏர்லைன்ஸ்' விமானம் ஒரு மணி நேரத்தில் கொழும்பு பண்டாரநாயக்கா விமான நிலையத்தில் தரை இறங்கியது. "தெய்வக்களி துலங்கும் நகை' முகங்காட்டி இன்சொல் இயம்பி கொழும்பு பூரீஇராமகிருஷ்ண மிஷன் துறவி சுவாமி ராஜேஸ்வரானந்தாஜி மகராஜ அவர்கள் எங்களை வரவேற்றார். ஒரு மணி நேர ஊர்திப்

ாம் - சில குறிப்புகள் D600f
பயணத்திற்குப் பிறகு கொழும்பு வெள்ளவத். தையை வந்தடைந்தோம் தமிழர்கள் கூடுதலாக வாழுமிடம் வெள்ளவத்தை. இங்கு கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் இலங்கைக் கிளையுள்ளது. இதன் துணைத் தலைவர் சுவாமி ஆத்மகனானந்தாஜி மகராஜ் அவர்கள்
இவர் என்னுடைய இலங்கைப் பயணங்கள் அனைத்திற்கும் அடித்தளம் அமைத்து நிகழ்ச்சி. கள் பலவற்றையும் ஒழுங்கு செய்து வருபவர். எளிமைப் பண்பு வடிவெடுத்து வந்ததோ எனும் வியப்புரைக்கு விளக்கமாகத் திகழ்ந்து வருபவர். இவரும் இவரையொத்த பண்புகளைக் கொண்ட சுவாமி ரிதமயானந்தாஜி மகராஜ் அவர்களும் எங்களை வரவேற்றனர். சமையல் அறை பொறுப்பாளர்களான திரு.முருகன், திரு.தமிழ்ச்செல்வன் எனும் இளைஞர்கள் சுவாமி ஆத்மகனானந்தா குறிப்பறிந்து எங்களுக்கு மணங்கமழும் சிற்றுண்டி பரிமாறினர்.
எங்கள் இருவருக்கும் தங்கும் அறைகள் ஏற்பாடு செய்யப்பெற்றன. பார்வைக்கு மிக அரு. கில் உள்ள கடற்கரையையொட்டி எனக்கு விருந் தினர் விடுதியில் ஓர் அறை ஒதுக்கப்பட்டது. சுவாமி அபிராமானந்தாஜி மகராஜ் அவர்களுக்கு மிஷன் வளாகத்திலேயே துறவியர் தங்கும் அறை ஏற்பாடு செய்யப்பெற்றது.
மிஷனின் கோயிலில் மாலை நேரத்திற்குப் பிறகு குருதேவர் பரமஹம்சருக்குரிய ஆரத்தி வழிபாட்டில் கலந்துகொண்டு தியானத்தில் ஈடுபட்டோம்
26.07.2006இல் கொழும்பு அரசு தொலைக். காட்சியில் எங்கள் இருவரையும் பேட்டி கண்டு நேரடி ஒளிபரப்பு செய்யப்பெற்றது. அன்றிரவே புகையிரத வண்டியில் (ரயிலில்) சுவாமி ஆத்மகனானந்தாஜி சுவாமி அபிராமானந்தாஜி இருவருடன் நானும் மிஷன் பக்தர் திரு. கார்த்தி. கேயனுடன் மட்டக்களப்புக்குப் பயணித்தோம்.
27ஆம் திகதி விடியற்காலை 5 மணி அளவில் மட்டக்களப்பு வந்தோம் அங்கு மட்டக்களப்பு பூரீஇராமகிருஷ்ண மிஷன் தலைவர் சுவாமி

Page 44
அஜராத்மானந்தாஜி மகராஜ் அவர்கள் எங்களை வரவேற்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார் அவருடைய சகோதரத் துறவிகளான சுவாமி ஞானமயானந்தாஜி மகராஜ, சுவாம தத்பாஸானந்தாஜி மகராஜ் இருவரும் எங்களை அன்புடன் வரவேற்றனர்.
சுவாமி விபுலானந்தர்
27ஆம் திகதியன்று நாங்கள் தரிசித்துட் பரவசமான இடம் சிவபுரி ஆகும். இது சுவாமி விபுலானந்தரின் இருப்பிடம் சமய, கல்வி கலாசார இயக்கங்கள் வாயிலாக சுவாமி விபுலானந்தர் மட்டக்களப்பு பிரதேசத்தில் நிகழ்த்திய சாதனை கள் தனி ஆய்விற்குரியது. (பார்க்க, 'இலங் கையில் இராமகிருஷ்னர் இயக்கம் -பெ.சு.மணி 1997-கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் வெளியீடு,
சிவபுரி ஆச்சிரமத்தில் என்னைப் பரவசப்படுத் தியது சுவாமி விபுலானந்தரால் வைக்கப். பெற்றிருந்த பாரதியார் படம் அண்மைக்காலமாக பாரதியின் முதல் திறனாய்வாளர் சுவாமி விபுலானந்தர் எனும் என் கருத்தை எழுத்திலும் பேச்சிலும் வலியுறுத்தி வருகின்றேன். பாரதியியல் அறிஞர்களும் ஏற்றுக்கொள்ளத் தொடங்கி. யுள்ளனர்.
கல்லடி உப்போடையில் உள்ள சிவானந்த வித்தியாலயம் வளாகத்தில் சிவபுரி ஆச்சிரமம் உள்ளது. இந்த ஆச்சிரமத்தில் சுவாமி விபுலானந் தர் பாரதி விழா, பாரதி வகுப்பு முதலானவற்றை நடத்தியுள்ளார். இவ்விடத்தில் சுவாமி விபுலா னந்தர் பாரதி புகழ் பரப்பியதில் முன் னோடியாகத் தொண்டாற்றியதை மிகச் சுருக்கமாக அறிய வேண்டும்.
சுவாமி விபுலானந்தர் பாரதியார் பாடல்களைப் பொருள் நோக்கில், "பாரத மாதா, கண்ணன், பராசக்தி பரத விரன், பரத மக்கள், குமரவேள்' எனும் ஆறு வகைப்பாடுகளில் விரிந்த அளவில் பாரதியார் கவிதைகளை முதன்முதலில் திற னாய்வு செய்தார். இந்த ஆய்வு "பாரதி பாடல் எனும் தலைப்பில் அவர் ஆசிரியராகவிருந்த கொழும்பு விவேகானந்தன்” இதழில் 1926 இல் வெளிவந்தது. இதைக் கண்டெடுத்து முதன் முதலில் என்னுடைய "அறிஞர்கள் பார்வையில் பாரதி” எனும் நூலில் (1982) வெளியிட்டேன்

1935 - 36 களில் தமிழகத்தில் “பாரதியார் மகாகவியா? இல்லையா? ’ எனும் பொதுவான நோக்கில் இலக்கிய விவாதம் நடைபெற்றதை பாரதி அன்பர்கள் அறிவார்கள். ஆனால் சுவாமி விபுலானந்தர் 1927 ஜூலை 16இல் யாழ்ப்பாணம் திராவிட பாஷா விருத்திச் சங்கத்தில் "மகாகவி சுப்பிரமணிய பாரதியார்’ எனும் தலைப்பில் பேருரை நிகழ்த்தினார்.
1930இல் மட்டக்களப்பில் "பாரதியார் வகுப்பு” நடத்தியுள்ளார். 1932இல் அண்ணாமலைப் L/635606 as apagig,76) “BHARATI STUDY CFCLE” எனும் பாரதி ஆய்வு வட்டத்தை அமைத்து மாணவர்களிடையே பாரதி புகழ் பரப்பினார்.
1932இல் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஜர்னல்’ ஒன்றில் 'தமிழரின் சமய சிந்தனை வளர்ச்சி” எனும் தலைப்பில் வெளிவந்த ஆங்கி லக் கட்டுரையில் "பாரதி பார்வையில் உலகத்தைப் பாருங்கள்” என்று வலியுறுத்தியுள்ளார். இராமகிருஷ்ண மிஷன் கல்வி நிறுவனங்களில் முதலாவது வகுப்பில் இருந்து எட்டாம் வகுப்பு வரையில் பாரதியார் பாடல்களை பாடத்திட்டத்தில் சேர்த்தார்.
இளங்கோவடிகள், கம்பர் என்னும் மலர்களைத் தந்த தெய்வத்தரு ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர் வாராது வந்த செல்வத்தைப் போல பாரதியாரென்னும் மலரையளித்திருக்கிறது" என்றும் சாற்றியவர் சுவாமி விபுலானந்தர் (மேலும் விபரமறிய இக்கட்டுரையாளரின் "சுவாமி விபுலானந்தர் -1992) தழிழ்ப் புலவர் மரபும் பாரதி மரபும் -1996" "பெசுமணியின் கட்டுரைக் கொத்து -2005” எனும் நூல்களைப் பார்க்கவும்)
28.07.2006 இல் மட்டக்களப்பு சுவாமி விபுலானந்த மணிமண்டபத்தில் "கிழக்கிலங்கை சமயப் பண்பாட்டு வரலாற்றில் பறிஇராமகிருஷ்ண மிஷனின் செல்வாக்கு” எனும் தலைப்பில் ஆய்வரங்கம் நிகழ்ந்தது முதல் அமர்வில் கவாமி ஆத்மகனானந்தாஜி மகராஜ் பிரதம விருந்தினர் உரையாக 1றிஇராமகிருஷ்ண சங்கத்தின் குறிக் கோளும் செயற்பாடுகளும்” எனும் தலைப்பில் பேசினார். சிறப்பு விருந்தினர் உரையாக நான்

Page 45
"இலங்கையில் இராமகிருஷ்ண மிஷன்” எனும் தலைப்பில் ஆய்வுக் கட்டுரை படித்தேன். பிற மூன்று அமர்வுகளில் தலைமையுரைகளும் ஆய்வாளர்கள் கட்டுரைகள் ஏழும் படிக்கப் பெற்றன.
29.07.2006 இல் இரண்டாம் நாள் ஆய்வரங்கு நடந்தது. "கிழக்கிலங்கைச் சமய பாரம்பரியச் சிந்தனை மரபுகளும் சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகளும்’ எனும் தலைப்பில் நான்கு அமர்வுகளில் ஆய்வரங்கு நடைபெற்றது. முதல் அமர்வில் சுவாமி ஆத்மகனானந்தாஜி மகராஜ் தலைமையில் சுவாமி அபிராமனந்தாஜி மகராஜ் "அத்வைத தத்துவம்' எனும் தலைப்பில் உரையாற்றினார். நான்காம் அமர்வில் பேராசிரியர் சிமெளனகுரு தலைமையில் நான் "இந்து மரபுச் சிந்தனைகளும் சுவாமி விவேகனாந்தர் சிந்தனைகளும்’ எனும் தலைப்பில் ஆய்வுக் கட்டுரை படித்தேன்.
மட்டக்களப்பில் நான் சந்தித்த அறிஞர்களில் ஆரையூர் அருள்' எனும் புனைபெயர் பூண்ட திரு.முத்ததம்பி அருளம்பலம் என்பவர் ஒருவராவார். மட்டக்களப்பில் அம்மன் வழிபாடுகள் புகழ் பெற்றனவாகும் நாட்டுப்புற பாடல் வகைகளின் செல்வாக்கும் மிகுதியாகும் அறிஞர் ஆரையூர், அருள்வாக்கும் நாட்டார் பாடல்கள், நாடகங்கள், சிறுகதைகள், கும்மி, சிந்து, தாலாட்டு, காவடிப் பாடல்கள் போன்ற கலைப் படைப்புகளின் வாயிலாகப் புகழ்பெற்றுள்ளார். கற்பரசி கண்ணகி அம்பாள் பாடல்கள், பூறி பத்திரகாளி அம்பாள் பாடல்கள், பூரீ பேச்சி அம்பாள் பாடல்கள் எனும் தமது படைப்புக்களையும் இரு குறுந்தகடுகளையும் அன்பளிப்பாக எனக்கு வழங்கினார். மற்றொரு நண்பர் ஹரிதாஸ் கல்லடி, உப்போடை பூரீ பேச்சி அம்மன் திருவிழாவை மிகச் சிறப்பாக நடத்திக் கொண்டிருந்தார். இவர் வேண்டு. கோளுக்கிணங்க சுவாமி ஆத்மகனானந்தாவுடன் நானும் பூரீ பேச்சியம்மன் திருவிழாவில் பாரதியின் பக்திப்பாடல்களைப் பாடி விளக்கினேன்.
மட்டக்களப்பு கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நுணர் கலைத் துறையும் தமிழ்த்துறையும் 27072006 இல் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் பேராசிரியர் சி.மெளனகுரு, தலைவர் நுண்கலைத்துறை தலைமையில் "மகாகவி பாரதியார் பார்வையில் வெர்ஹேரன், விட்மல் நீட்ஸ்ே” எனும் தலைப்பில் உரையாற்றினேன்.

துணைவேந்தர் பேராசிரியர் எஸ். ரவீந்திரநாத், தமிழ்த் துறைத் தலைவர் கலாநிதி செ.யோகராஜா மற்றும் பிற பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் திரண்டிருந்தனர். இதே பல்கலைக்கழகத்தில் 25.02.1999 இல் கார்ல் மார்க்சும் சுவாமி விபுலானந்தரும்’ எனும் தலைப்பில் உரையாற்றியுள்ளேன்.
29.07.2006 இரவு மட்டக்களப்பில் இருந்து புறப்பட்டு நண்பர் கார்த்திகேயன் அவர்களுடன் கொழும்பு நகரில் 20ஆம் திகதி காலை வந்து சேர்ந்தேன். அன்று சமய விவகார அமைச்சு, இந்து கலாசார அலுவல்கள் திணைக்களம் ஏற்பாடு செய்த இந்து சமயப் பேருரை நிகழ்ச்சியில் சுவாமி விவேகானந்தர், மகாகவி பாரதியார் பார்வையில் சக்தி வழிபாடு’ எனும் தலைப்பில் பேசினேன். கொழும்பு காலி வீதியில் உள்ள திணைக்களக் கேட்போர் கூடத்தில் கூட்டம் நடைபெற்றது. பணிப்பாளர் சாந்தி தவிருநாவுக்கரசு, உதவிப் பணிப்பாளர் எம்.எஸ்.ழறிதயாளன், கலாசார உத்தியோகஸ்தர் திருமதி நிர்மலா கருணானந்தராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
31.07.2006, 01.06.2006 தேதிகளில் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆறு பாடசாலைகளில் நான் உரையாற்ற ஏற்பாடு செய்தது. கலாசார உத்தியோகத்தர் திருமதி நிர்மலா கருணானந்தராஜா உடன் வந்திருந்து ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்தார்.
கொழும்பில் எழுத்தாள நண்பர்கள் பலரைச் சந்தரித்தேன். வவுனியா ந.இரவிந்திரன், க.சண்முகலிங்கம், அந்தனி ஜீவா, நாவலப்பிட்டி பொன்னுத்துரை. பூபாலசிங்கம் புத்தகக் கடை உரிமையாளர் திரு. பூரதர்சிங் மற்றும் சிலர் நூல்கள் சிலவற்றை வழங்கினர்.
0208.2006 இல் சுவாமி ஆத்மகனானந்தாஜி மகராஜ் அவர்கள் விமான நிலையம் வரை வந்து அன்புடன் வழியனுப்ப பிரியா விடை பெற்று நானும் சுவாமி அபிராமானாந்தாஜி மகராஜ் அவர்களும் மாலை 4 மணி அளவில் சென்னை வந்தோம் சுவாமி அபிராமானந்தாஜி மகராஜ் அவர்கள் என்னை வீட்டில் விட்டு சில நிமிடங்கள் தங்கி என்னையும் என் மனைவியையும் வாழ்த்தினார்.

Page 46
ஆலயங்கள் வள
ஜெயந்தின்
ஆலயங்கள் வளர்த்த கலைகளுள் இசைக் கலையும் ஒன்றாகும். இசைக்கலை ஒலி பற்றியதாகும். இதனை ஒலிக்கலை என்றும் கூறலாம். திருத்தலங்களில் பண்ணிசையும் மங்கள இசையும் இன்றும் சிறப்புடன் இசைக்கப் பட்டு வருகின்றன. பண்ணிசையைத் திருமுறை கள் மூலமும் மங்கள இசையை நாகசுரம் தவில் போன்ற இசைக்கருவிகளின் வாயிலாகவும் நிகழ்த்தி வருகின்றனர்.
. இராசராச சோழன் தஞ்சைப் பெருவுடையார் திருக்கோயிலில் திருமுறை விண்ணப்பம் செய்ய பிடாரர்களை நியமனம் செய்தமையைக் கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. தேவாரம் இசைப்பவர்களை பிடாரர் என்றும், தேவாரம் இசைத்தலை விண்ணப்பித்தல் என்றும் குறிப்பிடுகிறன. இராசராசசோழன் காலத்திற்கு முன்பும் திருமுறை விண்ணப்பிக்கப்பட்ட செய்தபியைக கல வெட்டுக்கள் மூலம் அறியமுடிகின்றது. தேவார முதலிகள், பக்திட் பாடல்களின் மூலம் இசையெழுச்சியைத திருத்தலங்களில் ஏற்படுத்தினர்.
மூவர் பாடல்களில் இசை
இசைக்கலைக்கு ஆதரவு தராத பெளத்த சமண, சமயங்களை எதிர்த்துப் போராடிய இவர்கள் இசையின் மூலம் மக்களை எழுச்ச பெறச் செய்தனர். இதில் திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் பெரும் பங்கு ஆற்றினாலும் முன்னவர் அரிய பணியைச் செய்துள்ளார் திருஞானசம்பந்தர் பாடல்களில் இசை என்ற சொல் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது
இசைகளைப் பாடிய "இசைக்கற்று வல்லவர் 'இசைக்குதவுமாறு வல்லார்’ என்று இசையை

ர்த்த இசைக்கலை
f
விக்னராஜா
பக்தரியுடனர் பாட வேணடும் என்பதைத் திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார்.
"இசை பக்தி மையாற் பாடுதலும் ^ இசைக்கிளவி'
இசைப்பாடல் பக்தியுணர்வு ஊட்டவல்லது
என்பதைத் திருஞானசம்பந்தர் பல இடங்களில்
விளங்கியுள்ளார்.
'இசைபாடு பக்தர் இசையால் உரைசெய்வார்” என்றும் குறிப்பிடுகின்றார்.
இசையை இறைவன் விரும்புவான் என்பதையும் திருத்தலப் பதிகங்கள் கூறுகின்றன.
திடங்கொள் நாவின் இசைத் தொண்டர் பாடும் பண்ணிய நடத்தொடிசை பாடும் அடியார்கள் இனமலிந் திசைபாட வல்லார்கள்’
என்னும் தொடர், தொண்டர்கள் இசைபாடி இறைவனை வணங்குவர் என்பதனைக் குறிப்பிடுகின்றது.
“தொண்டர் இசை பாடியும் கூடிக்கண்ட துதிசெய்
முறை முறையாய் இசைபாடு வாரடிமுன் தொண்டர்கள்’
திருநாவுக்கரசு நாயனார் தமிழோடு இசைபாடல் மறந்தறியேன்” என்று குறிப்பிடுகின்றார். சுந்தரர் இறைவனை ஏழிசை வடிவமுடையவனாகக் காண்கிறார்.
திருநாவுக்கரசர் இசைப்பற்று உடையவராக விளங்குபவர் என்பதனை

Page 47
"பாடுவார் பணிவார் பல்லாண்டிசை கூறு பக்தர்கள்” என உறுதிபடக் கூறுகிறார்.
"பாட்டினான் தன் பொன்னடிக் கின்னிசை”
இறைவன் திருவடிக்குப் பாடலால் வழிபாடு செய்தமையைத் திருநாவுக்கரசர் ப்ெருமையாகக் கருதுகிறார்.
இறை வழிபாட்டில் இசை
இறைவனை இசையால் வழிபடும் முறை பரிபாடலிற் காணப்படுகின்றது. தென்னக இசையின் தாயாக விளங்கும் காரைக்கால் அம்மையார் இயற்றிய பண்களும் பதிகங்களும் பாடல்களால் இறைவனை வழிபடும் முறையைக் காட்டுகின்றன. நல்லிசைப் பர்ைனுடைய பாடலுக்கு இறைவன் உரிமை உடையவன் என்பதைத் திருஞானசம்பந்தர்
"பண்ணுலாவும் மறை பாடலினான்’ 6160isulf,
"பண்ணார் இசைகளது கொண்டு பலரும் ஏத்தும் பழையனுர்’
"பண்ணிசையால் மொழியாற் பலர் பாட” என்று சுந்தரரும் கூறுகிறார்.
இம்மரபு திருமுறைகளிலும் திவ்வியப்பிரபந்தங் களிலும் தொடர்ந்தன. இதனடிப்படையில் முத்துத்தாண்டவர், தில்லைவிடங்கன், மாரிமுத தாப்பிள்ளை, சீர்காழி அருணாசலக்கவிராய கோபாலகிருஷ்ணபாரதியார், வையைச்சே, ஆனைஐயா, மாயூரம் வேதநாயகம்பிள்ளை குணங்குடி மஸ்தான் சாகிப், நீலகண்ட சிவL இராமசாமி சிவம் போன்றோர் பாடியுள்ளனர்.
அருணகிரியாரின் திருப்புகழும், வள்ளலாரி திருவருட்பாவும், தியாகராசரின் கீர்த்தனைகளு இறைவழிபாட்டிற்குரிய சிறந்த சாதனமா

இசையைக் கருதின. இம்மரபு இன்றும் தொடர்கிறது.
திருமுறை விண்ணப்பம்
தேவாரம் எனச் சைவ சமயத்தாரார் போற்றும் மூவர் திருப்பதிகங்களைப் பல்லவர் காலம் தொட்டுத் திருக்கோயில்களில் விண்ணப்பிக்கும் ம்ரபு தமிழகத்திற்கே உரிய சிறப்பாகும். இப்பனுவல்களை இறைவன் முன்பு பாடிவந்த பெருமக்களைத் 'திருப்பதியம் விண்ணப்பம் செய்வார்” என்றும் திருப்பாட்டு ஒதுவார்” என்றும் பிற பெயர்களாலும் குறிப்பிடப்பட்ட பல்வேறு செய்திகளை மன்னர்களின் கல்வெட்டுக்கள் மூலம் அறியமுடிக?ன்றது. - தேவாரத திருப்பதிகங்களை இன்று பாடுபவர்கள் ஓதுவார் பரம்பரையினராவர். ஆனால் இன்றைக்கு ஓராயிரம் ஆண்டுகளுக்கு முன் தேவாரப் பாடல்களைத் தஞ்சாவூர் கோயிலில் பண்ணிசைத்துப் பாடியோர்
"பிடாரர்” என்றும் அழைக்கப்பட்டனர்.
திருக்கோயில் வழிபாட்டில் இன்றும் திருமுறை
விண்ணப்பித்தல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. திருமுறைகளை முற்றோதுதலும் திருத்தலப் பதவிகங்களைப் பாடுதலும் மரபாகப் பின்பற்றப்படுகின்றன. திருத்தலங்களில் திருமுறை விண்ணப்பித்தவர்களில் வேலாயுத ஓதுவார் திசுப்பையா தேசிகர், க.ஆவுடையப்ப தேசிகர், மு.நடராச தேசிகர், விநாயக முதலியார், மணிதேசிகர், சிவஞானசம்பந்த ஒதுவார் போன்றோர் ஈடுபட்டனர்.
மங்கள இசை வழிபாடு
கருவி இசை வகையைச் சார்ந்ததாக மங்கள இசை விளங்குகின்றது. நாகசுரம் தவில், தாளம் சுருதி என்ற நான்கின் ஒருமைப்பாடாக இம்மங்கல இசை விளங்கும் திருக்கோயில்களில் இன்று வாழ்ந்து வரும் இசையாக இது இருந்து வருகின்றது. ஆலய வழிபாட்டில் இதனை

Page 48
"மேளம்” என்றும் "பெரிய மேளம்” என்றும் "கொட்டுமேளம்” என்றும் அழைப்பர். தமிழர் கண்ட இசைக்கருவிகளாகவும், தமிழிசைச் சிறப்பினை எடுத்துரைக்கும் இசையாகவும் இவை விளங்கு கரின்றன. தவிருக கோயில்களில நாள்தோறும் இசையும் கீர்த்தனைகளும் முக்கிய பங்கு பெறுகின்றன.
அடையாள இசை
த7ருகி கோயரிலிகளிலர் மங்கல இசை வழிபாட்டால், கோயில்களில் நடைபெறும் வழிபாட்டுக் காலம், திருவுலா வரும் இடம், வழிபாட்டுச் செயலிகள் போன்றவற்றை இவ்வடையாள இசை மூலம் அறிய முடிகின்றது.
அடையாள இசை (செயல்)
திருக்கோயில் மரபில் மல்லாரி அடையாள் இ எழுந்தருளும் போது இவ்விசை இசைக்கப்படுகில் திருக்கோயில் வழிபாட்டில் உள்ள செயல் நி6ை குறிப்பிடுகின்றார்.
பெரிய மல்லாரி - இறைவன் ரிஷ
சிறிய மல்லாரி - ஏனைய நாட்க திரத்த மல்லாரி - நீராட்ட திருமe
தணிகை மல்லாரி நிவேதனம் எடு
கும்ப மல்லாரி - பூர்ண கும்பம்
தேர் மல்லாரி சுவாமி திருத்ே
புறப்பாட்டு மல்லாரி - சுவாமி புறப்பn
பஞ்சரத்ன மல்லாரி - நாட்டை, கெள்
இசைக்கப்படும்
பள்ளியறை மல்லாரி - இறைவன் பள்
திருபுடைதாள மல்லாரி- இறைவன் தே
இசைக்கப்படும்

அடையாள இசை (இடம்)
இடத்திற்கு ஏற்ற வகையில் சில மரபுகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. இறைவன் வீதியுலா வரும்போது சிவத்தலங்களில் இன்ன இடத்தில் இன்னராகம் இன்ன கீர்த்தனை பாடவேண்டும் என்ற மரபு பின்பற்றப்பட்டு வருகின்றது.
^திருவாரூரில் தேர்மிது இறைவன் எழுந்தருளும் போது விமோசனப் பந்தல்வரை பரசுராகமும் கீழே
கோபுரம் வரை மல்லாரியும், சந்தன ஆலயம்
முதல் மீண்டும் பரசும், நான்குகால் மண்டபம் வரை பைரவியும் தென்கிழக்கு முலையில் தன்யாசியும், கிழ விதியில் புன்னாகவராளியும் இசைக்கப்படும் மரபு இன்றும் வழக்கத்தில்
உள்ளதாக பி.எம்.சுந்தரம் குறிப்பிடுகின்றார்.
இசையாக உள்ளது. இறைவன் திருவிதியுலாவிற்கு விறது. இதில் பல வகைகள் உள்ளன என்றும் இது
0க்கு ஏற்ப அமையும் என சண்முக செல்வகணபதி
ப வாகனத்தில் எழுந்தருளும் போது இசைக்கப்படும்
ளில் இசைக்கப்படும்
ந்சனம் எடுத்து வரும்போது இசைக்கப்படும்
த்து வரும்போது இசைக்கப்படும்
எடுக்கும்போது இசைக்கப்படும்
தரில் எழுந்தருளும்போது இசைக்கப்படும்
ட்டின்போது இசைக்கப்படும்
ளை, ஆரபி, வராளி, பூறி என்ற ஐந்து இராகங்களில்
ளியறைக்கு எழுந்தருளும்போது இசைக்கப்படும்
நிலையை அடைந்தபோது இம்மல்லாரி
44

Page 49
இதுபோல வழிபாட்டின் முக்கிய நிலையில் சுெ மரபாக பின்பற்றப்பட்டு வருகின்றன.
கால இசை
உஷா காலம் - 5/7606
பூபாளம், பெளளி மலையமாருதம், வலஜி தே
காலசந்தி ሪ፵5//6Ö96፯)
தன்யாசி சாவேரி, ஆரபி தேவகாந்தாரி, தேவ
உச்சிக்காலம் - நண்பகல்
சுத்தபங்களா, பூர்ணசந்திரிகா, கோபிகா, திலக
giTuTL 605 - O76D6) பூர்வி கல்யாணி பந்துவராளி வசந்தா, வலிதா,
இரண்டாங்காலம் -- இரவு 7
சங்கராபரணம், பைரவி கரகரப்பிரியா, பைரவம்,
அர்த்தசாமம் - இரவு 8
காம்போதி சண்முகப்பிரியா, தோடி, நடபைரவி
இசைக்கலையானது இறைவழிபாட்டுக் கலையா வழிபடும் முறை தொன்றுதொட்டு நிலவி வருகின்றது ஏற்பாடு செய்தமையும், இசை வழிபாட்டை இை பதிகங்கள் உரைக்கின்றன. இவ்வாறு பல்வேறான வளர்த்து வருகின்றன.
துணை நூல்கள்
ஆலய வழிபாட்டில் இசை
திருக்கோயில்களில் மங்கள இசை வழிபாடு
தமிழகக் கலைச்செல்வங்கள்

ட்டிமேளம் கொட்டுவதும், தட்டிச்சுற்றி வருவதும்
5 LD6oof?
வகாந்தாரி, தேவமனோகரி
8 1ᏰᏍᏇf7
மனோகரி
5 12 LO60of
ம், முகாரி கொடைமல்லாரி
5 மணி
TT3,6215. கல்யாணி போகவசந்தம் ஹம்சப்பரமளி
LD600f
நாராயணி ஹம்சத்வனி கெளளை, இரத்னாம்பரி
LD60f
அரிகாம்போதி, கமாசு, அதிர்தவசந்தம், பூரஞ்சனி
五 இருந்து வருகின்றது. இசையால் இறைவனை பல்வேறு திருக்கோயில்களில் இசைவழிபாட்டிற்கு ரவன் விரும்பி ஏற்பார் என்பதையும் திருத்தலப் 7 நிலைகளில் திருத்தலங்கள் இசைக்கலையை
பி.எம்.சுந்தரம்
சண்முக, செல்வகணபதி
துளசி இராமசாமி

Page 50
திருவாசகம் காட்டும் சம
பக்தி வெளிப்பா
எச்.சித் தமிழ்மொழி அதன் வளர்ச்சியில் பலவகையான இலக்கியங்களைப் பெற்றுள்ளது. இவ்வகைப்பாடு இலக்கிய அமைப்பிலும் பாடுபொருளிலும் மொழிநடையரிலும் அமைந்துள்ளதைக் காணமுடியும். மேறர் கானும் கூறுகளினர் அடிப்படையில் காப்பியக்காலம் தற்காலம் எனப் பலவகைப்படும் பக்தி இலக்கிய கால நூல்களில் குறிப்பிடத்தக்கன திருமுறைகளாகும். பல்வேறு சூழல்களில் நாயன்மார்கள் சிவனைக் குறித்துப் பாடியுள்ள தவிருமுறைகளில் எட்டாவது திருமுறையாக விளங்குவது திருவாதவூரர் என்று அழைக்கப் பெறும் மாணிக்கவாசகராலர் இயற்றப் பெற்ற திருவாசகமாகும். முவர் தேவாரங்களில் காணப்படாத சில சிறப்புகள் திருவாசகத்திற்கு உண்டு இறைவனிடத்துள்ள பக்தியை வெளிக்காட்டும் நிலையில் மற்றைய திருமுறைகளிலிருந்து திருவாசகம் பல தனிப்பண்புகளைப் பெற்று மாறுபட்டு நிற்கின்றது. இந்நூல் திருவாசகத்தேன்’ திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்’ அல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்குவது' எனப் பலவாறு
போற்றப்படுகின்றது.
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்’ எனும் திருவாசகக் கூற்றிற்கு ஏற்ப இந்நூலில் சொற்களிலும் சொற்றொடர்களிலும் பொருள்வளம் பொதிந்து காணப்படுகின்றது. இந்நூலிலுள்ள ஒவ்வொரு சொல்லும் கருத்தும் பழுத்த மனத்து மாணிக்கவாசகரின் உள்ளத்திலிருந்து வெளிப்பட்டதாகும். திருவாசகப் பாடல்கள் பாடும் நாவிற்குச் சுவையாகவும் பிறவிப் பிணிக்கு மருந்தாகவும் உள்ளது என்று குறிப்பிடுவர் சைவசித்தாந்தக் கருத்துக்கள் தத்துவமொழியில் அல்லாமல் எளிய, குறிப்பாக அன்றாடம் வழக்கிலுள்ள கருத்துக்களின் அடிப்படையில் விளக்கப்பட்டிருப்பது இந்நூலின் தரத்தை மேலும் உயர்த்துவதாக அமைந்துள்எது அவரவர் சித்தாந்த அறிவிற்கும் அனுபவத்திற்கும் ஏற்பவே திருவாசகத்தின் உண்மைப்

ய தத்துவ சிந்தனைகளும்
ட்டு உத்திகளும்
நிரபுத்தன்
பொருளை விளங்கிக் கொள்ள இயலும் இச்.
சிறப்பு திருவாசகத்தை ஆராய்ந்து கற்பவருக்கே எளிதில் புலப்படும்
திருவாசகத்தின் பொருள் விளக்கம் குறித்த சுவாமி சித்பவானந்தர் அவர்களின் கூற்று இவண் நோக்கத்தக்கது.
இதுகாறும் திருவாசகத்துக்கு விளக்கம் வழங்கியவர்களின் பெரும்பான்மையோர் சொல் அழகிலே கருத்தைச் செலுத்தியிருக்கிறார்கள் ஆனால், ஆத்ம சாதனத்தில் ஈடுபடுகிறவர்கள் சொல் அழகில் திருப்தியடைந்திருக்க மாட்டார். கள். நாவறண்டு போய்த் தாகத்தால் தவித்துக் கொண்டிருப்பவர்கள் தணிணிரைப் பற்றிய அழகான வர்ணனையில் திருப்திடைய மாட்டார். கள் பருகுவதற்குச் சேற்றுத் தண்ணிராவது சிறிது கிடைத்தால் போதுமென்று அவர்கள் இங்குமங்கும் தேடித்திரிவார்கள். அதேவிதத்தில் அருள். நாட்டம் கொண்டிருப்பவர்களுக்கு அருள் தாகத்தை வளர்க்கும் தன்மையாய்த் திருவாசகம் அமைந்திருக்கிறது. (25056)JT3. L1, 10)
திருவாசகத்தின் இனிமை குறித்து வைத்தியநாதன் பின்வருமாறு கூறுவார்.
"பலகாலும் பயின்று பயின்று அழுந்தியறிந்து ஆனந்தப் பரவசத்தால் தோய்ந்த அனுபவத்தால் கற்றாரையும் கேட்போரையும் பிணிக்கும் பெருமை பெற்றுச் சொல்நடையும் பொருள்நடையும் அப்படி அப்படியே பின்னிப் பிணைந்து பல ஆயிரம் உள்ளங்களைக் கரைத்துக் கண்ணிர் பெருக்கும் கணிவை உடையது இத்திருவாசகம்’
பிற நாயன்மார்களைப் போலன்றி அழுது அழுது அடி அடைந்தவர் என்று போற்றப்படுபவர் மாணிக்கவாசகர். அழுதால் இறைவனைப் பெறலாம் என்பது மாணிக்கவாசகரின் பழுத்த அனுபவக்கருத்தாகும் மாணிக்கவாசகர் தமது பக்தியை இறைவனுக்குக் காட்டி அவன் அருளைப் பெறப் பாடல்களில் பல உத்திகளைக்

Page 51
கையாண்டுள்ளார். அவற்றுள் குறிப்பிடத்தக்கன பின்வருவன.
1. இறைவன் அருமை, பெருமைகளைக் கூறி அருள் வேண்டுதல்
2 பிற தெய்வங்களுடன் ஒப்பிட்டு இறைவனை ஏத்தி அருள்வேண்டுதல்.
3. தனினைத் தாழிதத இறைவன்ை இரங்கவைத்தல்
4. தவறுக்கு வருந்திப் பொறுத்தருள வேண்டும்
5. மனம், வாக்கு செயலால் வேண்டுதல்
6. மிரட்டி மனமிளக வைத்தல்
என்பன அவற்றுள் இன்றியமையாதனவாகும்
மேற்காணும் வெளிப்பாட்டு உத்திகளை விளக்குவதற்கு முன் திருவாசகத்தின் நூல் அமைப்பையும் பதிகங்களின் சிறப்பையும் பதிகங்களின் கருத்து வெளிப்பாட்டுத்திறன் மேம்படும் தன்மையையும் காண்போம்.
திருவாசக நூலமைப்பு
திருவாசகம் ஐம்பத்தொரு திருப்பதிகங்களையும் 656 பாடல்களையும் கொணர்டது. திருவாசகத்தின் அமைப்பை ஓர் உயர்ந்த மலைத்தொடரின் மீது நடந்து போவதோடு ஒப்பிடலாம் என்பார் சித்பவானந்தர் (ப.6) திருவாச. கத்திலுள்ள சிவபுராணம் மகாமேரு போன்று ஒரே செங்குத்தாய் இருக்கிறது. கிட்டத்தட்ட அதே உயரத்தில் மற்ற மூன்று அகவல்களும் இருக்கின்றன. பின்பு மலைத்தொடர் படிப்படியாகக் கீழே இறங்கி வருகிறது. மேலே ஏறுவதும் இறங்குவதும் மாறிமாறி நிகழ்கின்றன. திருவாசகத்தின் இறுதிப்பகுதி திரும்பவும் மேல்நோக்கிப் போகிறது.
பதிகங்களிலும் அவற்றின் தலைப்பிலும் பல சிறப்புகள் அடங்கியுள்ளன. முதல் நான்கு பதிகங்களும் அகவல்கள். திருச்சதகத்தில் பத்து உள்தலைப்புகள் உள்ளன. தலைப்புகளும் உள்தலைப்புகளும் பாடல்களின் கருப்பொருளை உள்ளடக்குவனவாக உள்ளன. உள்தலைப்பு மாணிக்கவாசகரால் தரப்பட்டது என்பதற்கு

ஆதாரம் எதுவும் இல்லை. இவை பன்னெடுங்காலமாகத் திருவாசகத்தில் இடம்பெற்றுள்ளன. இவை பத்து எனும் தலைப்புடன் மிளிருகின்றன.
குயிற்பத்து, திருத்தசாங்கம், செத்திலாப்பத்து, அன்னைப்பத்து, அடைக்கலப்பத்து, ஆசைப்பத்து, அதிசயப்பத்து, புணர்ச்சிப்பத்து, வாழாப்பத்து, அருள்பத்து, கண்டப்பத்து, பிரார்த்தனைப்பத்து, உயிருண்ணிப்பத்து, பிடித்தபத்து, குலாப்பத்து, அற்புதப்பத்து, சென்னிப்பத்து, யாத்திரைப்பத்து என்பனவும் இவற்றைத் தவிர திருப்பள்ளியெழுச்சி கோயில் முத்த திருப்பதிகம், கோயில் திருப்பதிகம், திருப்பாண்டிப்பதிகம், திருஏசுறவு, திருவார்த்தை என்பன பத்து பாடல்களைக் கொண்டன. திருவெம்பாவை, திருஅம்மானை, திருப்பொற்சுணர்ணம், திருக் கோத்தும்பி, திருத்தெள்ளேனம், திருச்சாழல், திருப்பூவல்லி, திருவுந்தியார் எனும் பதிகங்கள் இருபது
பாடல்களைக் கொண்டன. மீதமுள்ள பதிகங்கள்
47
இரண்டு முதல் ஒன்பது பாடல்கள் வரை பெற்றுள்.
676.
அன்றாடம் வழக்கத்திலுள்ள விளையாட்டுக்கள் மூலம் மகளிர் இறைவனை வேண்டிக்கொள்வது போன்று பல பதிகங்கள் அமைந்துள்ளன. அவற்றுள் சில பின்வருவன.
திருத்தெள்ளேனம் திருச்சாழல், திருப்பூவல்லி திருவுந்தியார், திருத்தோனோக்கம், திருப்பொன்னுரசல், என்பன மகளிர் விளையாட்டுக்களாகும்.
தும்பியைத் தூதுவிடுவது போன்று அமைந்தது திருக்கோத்தும்பி இறைவனிடத்துத் தலைவி துTது விடுவது போன்று பாடலகள் அமைந்துள்ளன. இப்பதிகம் தூது இலக்கிய வகையை அடிப்படையாகக் கொணர்டது. இதைப்போன்றே குயிற்பத்து எனும் பதிகமும் அமைந்துள்ளது. பத்து எனும் சொல்லில் முடியும் பதவிகங்கள் ஒவ வொரு கருத்தையும் அடிப்படையாகக் கொண்டு ஆக்கப்பெற்றுள்ளன.
சிவபுராணம், கிர்த்தித்திருவகவல், திருவண்டப்பகுதி, போற்றித் திருவகவல், திருச்சதகம், திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி கோயில்முத்த திருப்பதிகம், கோயில் திருப்பதிகம்,

Page 52
திருக்கழுக்குன்றப் பதிகம் திருப்பாண்டிய பதிகம் போன்றவற்றில் இறைமைக் கருத்துக்கள் நிரம்பியுள்ளன.
திருப்படையெழுச்சி, திருப்படை ஆட்சி எனும் பதிகங்கள் ஆணவம், கன்மம், மாயை என்பன. வற்றை அழிப்பதற்காகப் பாடப்பெற்றவையாகும். திருவாசகம் முழுமையும் இறைவன் புகழ்சேர்க்கும் பாடல்கள் நிரம்பியிருப்பினும் இறைவன் அருளைப்பெற மாணிக்கவாசகர் பல்வேறு முறைகளைக் கையாண்டு பாடல்களை யாத்துள்ளார். அவற்றை ஒன்றன்பின் ஒன்றாகக் காண். போம்.
இறைவன் அருமை பெருமைகளைக் கூறி அருள்வேண்டல்
இறைவனின் அருள், பெருமை, திருவிளையாடல்கள், பண்புகள், குணங்களைக் கூறி அவர் அருளை வேண்டுதல் திருமுறைகளுக்குரிய பொதுப் பண்பாகும். எனினும் திருவாசகத்தில் சில தனிப்பண்புகளைக் காணஇயலும்
இறைவனின் எங்கும் நிறைந்திருக்கும் தன்மையைக் குறிப்பிடும் மாணிக்கவாசகர் சொல்பதம் கடந்த தொல்லோன்’ என்று கூறி விண் நிறைந்து மணிநிறைந்து மிக்காய் விளங்கு
ஒளியாய் எண் இறந்து எல்லை இலாதானே .
(1-23, 24)
என்றும் சூரியனுக்கு ஒளி, சந்திரனுக்குக் குளிர்ச்சி நெருப்பிலே வெப்பம், ஆகாயத்தில் வியாபகம் காற்றில் விரைந்தடித்தல் என்பவற்றை இறைவனே கொடுத்துள்ளதாகக் கூறுவார்.
அருக்கனில் சோதி அமைத்தோன் திருத்தகு மதியில் தண்மை வைத்தோன் திணிதிறல் தியில் வெம்மை செய்தோன் பொய்தீர் வானில் கலப்பு வைத்தோன் மேதகு காலின் ஊக்கம் கண்டோன்.
(3-20, 24)
எங்கும் நிறைந்துள்ள இறைவனைப் பின்வரும் சிறப்புமிக்கப் பாடல்முலம் குறிப்பிடுவார்.
வான் ஆகி மண் ஆகி

வளி ஆகி ஒளி ஆகி ஊன் ஆகி உயிர் ஆகி
உண்மையும் ஆய் இன்மையும் ஆய்க் கோன் ஆகி யான் எனது என்று
அவர் அவரைக் கூத்தாட்டு வான் ஆகி நின்றாயை.
(5-15)
இறைவன் மண், விண், காற்று, நெருப்பு ஆகிய ழ்தங்களில் இருப்பவன். (நீர் விடப்பெற்றுள்ளது?) உயிரும் உடலும் இறைவனாகும் எல்லாவற்றுக்கும் ஈசனாய் இறைவனாய் இருப்பவன்.
யார் யார் எத்தகைய பெருமை, வல்லமை, தனியியல்பு படைத்தவர்களாயிருக்கிறார்களோ அப்பண்புகள் இறைவனிடத்திலிருந்து வந்தது என்பார் மாணிக்கவாசகர்.
எப்பெரும் தன்மையும் எவ்எவர் திறமும் அப்பரிசு அதனால் ஆண்டு கொண்டருளி
(2-126)
நரிலர் இன சுவையையும் மணி னரில திண்மையையும் வைத்தவன் இறைவனாகும்.
(3-25, 26)
இறைவன் அணுபோன்று நுணர்ணியவன். அணுத்தருந் தன்மையில் ஐயோன்’ (345), ஏட்டுக் கல்விக்கு எட்டாதவன் நூல் உணர்வு உணரா நுண்ணியோன் காண்க' (3-49) என்று போற்றுவார்.
முக்கடவுள்களையும் படைத்து வணங்கும் தன்மையை மாற்றி மாணிக்கவாசகர், படைப்பவன், காப்பவன், துடைப்பவன் என்று இறைவனை வழிபடுகின்றார்.
படைப்பாய், காப்பாய், துடைப்பாய் போற்றி
(4-100) இறைவன் அனேகன், அற்புதன் பலகோடி வடிவங்களைக் கொண்டவன் என்றும்,
எனைப் பலகோடி எனைப் பிற பிறவும்
ン (3-25)
என்றும் இறைணின் பெருமையைச் சொல்லமுடியாது என்பது மாணிக்கவாசகரின் கருத்தாகும்.

Page 53
சொல்லற்கு அரியாணை சொல்லித் திருவடிகிழ்
- (1-92) இறைவன் நான்கு வேதங்களையும் அறிந்தோன் என்பதை,
நான்மறையோனாய்
(2-21)
என்று குறிப்பிடுவார். எணணிக்கையில் அடங்காத உருவங்களையும் எண்ணிக்கையில் அடங்காத இயல்புகளையும் உடையவனர் இறைவன் இயற்கைப் பொருளாய் வந்தவன் இறைவன்.
வேறு வேறு உருவும் வேறு வேறு
இயற்கையும் நூறு நூறு ஆயிரம் இயல்பினது ஆகி
(2-23, 24)
என்பது அவர் கூற்று.
பல்வேறு திருத்தலங்களில் உறையும் இறைவனையும் அவர் நடத்திய திருவிளையாடல்களையும் அற்புதங்களையும் எடுத்தியம்பி அருள்தேடல் திருவாசகத்தில் காணப்பெறும் மற்றொரு உத்தியாகும் திருவாசகத்தில் நூற்றுக்கணக்கான தவிருப்பெயர்கள் குறிக்கப்பெற்றுள்ளன. அவற்றுள் சில பின்வருவன.
தில்லையும் திருக்கழுக்குன்றமும் தனியாகப் பதிகங்களைப் பெற்றுள்ளன.
தில்லைமுதுர், திருப்பெருந்துறை, திருக்கழுக்குன்றம் திருவாரூர், திருவையாறு, அண்ணாமலை மதுரை, உத்தரகோசமங்கை, வாதவூர், திருவாஞ்சியம், திருக்குற்றாலம், வேலம்புத்தூர், சாந்தம்புத்தூர், வெண்காடு, பட்டமங்கை, ஓரியூர், பாணர்டூர், இடைமருது, ஏகம்பம், கடம்பூர், ஈங்கோய், மகேந்திரம். என்பன சிலவாகும்
இறைவனைப் பல்வேறு பெயர்களில் குறிப்பிட்டு அருள்வேண்டுவது மற்றொரு உத்தியாகும். பின்வரும் பெயர்கள் இறைவனைக் குறிப்பிடப் பயன்படுத்தப் பெற்றுள்ளன. இறைவனின் பல்வேறு குணங்களையும் செயல்களையும் தன்மைகளையும் அடிப்படையாகக் கொண்டு இப்பெயர்கள் ஆக்கப்பெற்றுள்ளன.

தேசன், நிமலன், தத்துவன், மாசற்றசோதி, ஆரியன், பெம்மான், புண்ணியன், காவலன், தேற்றன், அரன், நாதன், தில்லையுட்கூத்தன். வெற்பன், முன்னோன், முழுதோன், கருணையன், அற்புதன், அனேகன், நம்பன், வல்லோன், பெரியோன், திர்த்தன், காதலன், பரமன், பழமையோன், ஜோதி என்பன இதற்குச் சில எடுத்துக்காட்டுகள் ஆகும்.
இறைவனின் பெருமையைக் கூறும்பொழுது சொற்களை எதிர்மறையாகவும் உடன்பாடாகவும் வழங்கும் தன்மையைத் திருவாசகத்தில் அதிகம் காணமுடியும் அவ்வகைப் பயன்பாட்டிற்குச் சில சான்றுகள்.
ஏகன் அனேகன் (1-5) ஆக்குவாய் அழிப்பாய் (1-42) வெய்யாய் தணியாய் (1-36) போக்குவாய் புகுவிப்பாய் (1-43) சேயாய் நணரியாயப் (1-44) இன்பமும் துன்பமும் (1-70) யாவையும் ஆம் அல்லையும் ஆம் (I-71) சோதியானே துன்னிருளே (1-72) போக்கும் வரவும் (1-77) தோற்றியும் அழித்தும் (2.5) மேலோடு கிழாய் (3-50) அந்தமும் ஆதியும் (3-51) நிற்பதும் செல்வதும் (4-153) அழிவதும் ஆவதும் (4-133) அருவமும் உருவமும் (4-193) வாழ்கின்றாய் வாழாத (5-20) ஆழ்கின்றாய் ஆழாமல் (5-20) கண்டும் கண்டிலேன் (5-42) பெருக்கிச் சுருக்கும் (6-23)
இன்பமும் துன்பமும் இல்லானே (7-70) அந்தமும் ஆதியும் அகன்றோன் (3-51) விண் நிறைந்து மண் நிறைந்து (1-23) அழிவதும் ஆவதும் கடந்தாய் (4-133)
இறைவன் எல்லாப் பொருள்களிலும் எல்லாச் செயல்களிலும் நீக்கமற அமைந்திருப்பதால் உடன்பாடாகவும் எதிர்மறையாகவும் சொற்களை அமைத்துச் சொற்சுவை தருகின்றார்.
பிற தெய்வங்களுடன் ஒப்பிட்டு ஏத்தி அருள் வேண்டுதல்

Page 54
இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட மாணிக்க
வாசகர் சிவனைத் தவிரப் பிற தெய்வங்களைக் கனவிலும் நரினைக்காமல இருந்ததோடு மட்டுமில்லாமல் பல பாடல்களில் தனது கருத்தை வெளிப்படையாகவும் காட்டிச் செல்கிறார். சிவன அடியார் மட்டுமில்லாமல் பிற அடியாரையும் நட்பாய்க் கொள்ளேன் என்று பாடிச் செல்கிறார் சிவனை நினைந்து மனமுவந்து அடைய வராதவர்கள் திக்கு இரையாவதற்கு நிகராக அழிந்துபோவர்.
கொள்ளேன் புரந்தரன் மால் அயன் வாழ்வுகுடி கெடினும் நள்ளேன் நினது அடியாரொடு அல்லால் நரகம் புகினும்
உள்ளேன் பிறதெய்வம்
(5-2)
உள்ளேன் பிறதெய்வம் உன்னை அல்லா எங்கள் உத்தமனே
(5-2)
தொழுவனோ? பிறரைத் துதிப்பனோ
(4-5)
அரியொடு பிரமற்கு அளவு அறியாதவன்
(2-116
நான்முகன் முதலான் பிற வானவர்கள் சிவனைத் தொழுதெழுவர் என்பார் மாணிக்க 6т/тағаьf.
நான்முகன் முதலா வானவர் தொழுது எழ
(a-l)
பிறசமயங்களைப் பற்றிக் கூறும் மாணிக்க 6ffarablf
இரு முச்சமயத்தொரு பேய்த் தேரினை நீர்நசை தரவரும் நெடும்கண் மான்கணம்
(3-79, 80)
என்று மான் கட்டங்களின் உதவியால விளக்குகின்றார். .
பெரிய கண்களையுடைய மான் கூட்டம் கானல்

நீரை நீர் என்றெண்ணி அதை நாடிச் சென்று தாக சாந்தியடையாது தவித்தது. அதுபோன்று புறச்சமயம் ஆறினுள் புகுந்து கடுந்தவம் புரிந்தவர் பலர் பரமனது அருளுக்குப் பாத்திரமாகாது அல்லல்பட்டனர். பிற சமயங்களைக் கானல்நீர் என்று குறிப்பிட்டிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. சிவனிடத்துப் பக்தியில்லாதாரோடு பழகுதல் ஒவ்வாது என்பார் மாணிக்கவாசகர்
மற்றும் ஓர் தெய்வம் தன்னை உண்டு என நினைந்து எம்பொம்மான் சுற்றிலாதவரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே
(25-sル
LLLLLLL LLLLLLLL0LLLLYYLLLLLL0LL0LL0LLLLLSLLLLLSLLLLLLLS அயலவர்கூடி
நாத்திகம் பேசி நாத்தழும்பு ஏறினர்
(a-46.4Z)
அன்பினரும் மற்றவர்களும் கூடிக் கடவுளே இல்லை என்று நாவில் தழும்பு ஏறும் வரையில் வாதம் செய்கின்றனர். சமயவாதிகள் தம்தம் மதங்களே சிறந்ததாக விண்பெருமை காட்டினர் என்பதை மாணிக்கவாசகரின் பின்வரும் பாடல் தெரிவிக்கின்றது.
சமயவாதிகள் தம் மதங்களே அமைவது ஆக அரற்றி மலைந்தனர்
(4-52, 53)
இவ்வாதம் குழப்பத்தை உண்டுபண்ண வல்லது என்றும் குறிப்பிடுவார்.
uóøñiguu LOTULUIT 6 DITABLð 676øgp/Lib சண்ட ம7ருதம் கழித்து அடித்து ஆஅர்த்து
(4-52,53)
பிரம்மனும் திருமாலும் சிவனை முற்றிலும் அறியமாட்டார்கள் எனப் பல இடங்களில் சுட்டிக்காட்டுகின்றார்.
பிரமன் கால் காணாப் பெரியோன் காண்க
(3-38) மூவரும் முப்பத்துமுவரும் மற்று ஒழிந்த தேவரும் காணாச் சிவபெருமான்
(47-9)

Page 55
மும்மூர்த்திகள் பதினொரு உருத்திரர்கள், பன்னிரெண்டு ஆதித்தியர்கள், எட்டு வசுக்கள், இரண்டு அச்வினி தேவர் ஆக முப்பத்துமுவரும் சிவனை வணங்குவர்.
தனினைத் தாழித்தரி இறைவனை இரங்கவைத்தல்
திருவாசகத்தில் பல இடங்களில் மாணிக்கவாசகர் தன்னைத் தாழ்த்தி இறையருள் வேண்டு. கின்றார். இதற்கு அவர் இரண்டு உத்திகளைக் கையாளுகின்றார்.
1. தன் நிலையைக் கீழ்நிலைக்குக் கொண்டு செல்லுதல்
2. சிற்றின்பம், உலக இன்பங்களில் ஈடுபட்டுத் தாழ்தல்
திருவாசகத்தில் பல இடங்களில் மாணிக்கவாசகர் இறைவன் அருள் பெறத் தன்னை பலவாறு இழித்துரைக்கின்றார். தான் இறைவன் அருள் பெறக் கொஞ்சமும் தகுதி அற்றவன் என்றும் இறைவன் அருளுக்கு ஏங்கி நிற்பதாகவும் கூறுகின்றார். மாணிக்கவாசகர் பயன்படுத்தியுள்ள சொற்களில் பின்வருவன.
நாய்' என்னும் சொல்லைப் பல இடங்களில் கையாண்டுள்ளார். நாயேன், அடிநாயேன், அறியா நாயேன், ஊர்நாய், கடைநாயேன், சிறுநாயேன், பொல்லா நாயேன், நாய் அடியேன், அற்பன், ஊத்தையேன், சிறியேன், புலையனேன், பேயனேன், மூர்க்கனேன். நீசனேன், வம்பனேன், வஞ்சனேன், ஞானம் இல்லாதவன், கல்லா மனத்தேன்.
நாயேற்கு அருளினை (4-144) நாயேன் அடியேன் (4-185) அறியா நாயேன் (4-219) நாய் அடியேன் (5-13) நாயினுக்குத் தவிசு இட்டு (5-28) அடிநாயேன் (5-34) நாயில் ஆகிய குலத்தினும் கடைப்படும் என்னை
(5-39) நாயேனைத் தாய் போல (8-4) கல்லா மனத்துக் கடைப்பட்ட நாயேனை
(8-5)
நாய் சிவிகை ஏற்றுவித்த (10-8)

பொன் தவிசு நாய்க்கு இட்டு (38-3)
நைஞ்சேன் நாயேன் (25-10) கல்லாத புல் அறிவின் கடைப்பட்ட நாயேனை (31-4)
சாதி குலம் பிறப்பு என்னும்
கழிப்பட்டுத் தடுமாறும் ஆதம் இனி நாயேனை அல்லல் (31-3)
wa நாயைவிட 'கடையனாகரிய தனக்குப் பொன்சிவிகை தந்து அருள் புரிந்தான் என்று தனக்கு அருள் கிடைத்த தன்மையைக் கூறுவார்.
மாணிக்கவாசகர் தான் சிற்றின்பத்தில் ஈடுபட்டுக் காலத்தைச் செலவிட்டு விட்டதாகவும் தற்பொழுது அதை உணர்ந்துள்ளதாகவும் தனக்கு அருள் தருமாறும் கேட்டுக்கொள்கிறார். பல பாடல்களில் தான் உலக இன்பத்தைத் துய்த்த பாவி
யாகியிருந்தாலும் இறைவன் அருள்பாலித்ததாகக்
கூறுகின்றார். தன்னை இறைவன் ஆட்கொண்டதாகப் பரவசமுறுகின்றார். அற்புதப்பத்துப் பதிகத்தில் பல பாடல்கள் இக்கருத்தைக் கொண்டுள்ளன.
மண்ணில் பிறந்து இறந்து மண் ஆவதற்கு ஒருமைப்படுகின்றவன் தான் என்றும் செல்வத்தைச் சுவர் புழு பொதிந்து உளுத்து அசும்பு ஒழுகிய கூரையைக் கொண்ட உடல் என்று மனித உடலின் நிலையைக் கூறிச் செல்கின்றார்.
சீ வார்ந்து ஈ மொய்த்து அழுக்கொடு திரியும் சிறுகுடில் இது −
(25-3)
உடல் மலம் ஒழுகிக் கொண்டிருக்கிற வீடு என்றும் அது ஒன்பது வாயில்களைக் கொண்டது என்றும் விளக்குவார்.
மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலைப்புலன் ஐந்தும் வஞ்சனை செய்ய ம7ணிக்கவாசகர் தான் உலக இன்பத்தரில் கட்டுணர்டதைப் பல பாடல்களில் விளக்கிச் சொல்கின்றார்.
துணை எதுவும் கிடைக்கப்பெறாத பிறவிப் பெருங்கடலில் நான் தத்தளிக்கிறேன், துன்பம் என்னும் பேரலை வந்து மோதுகிறது. மாதர் மயக்கம் என்னும் காற்று வீசி என் மனதைக் கலக்குகிறது. ஆசை என்னும் சுறா மீன் என்னை

Page 56
விழுங்க வருகிறது. இனி உய்யும் வகையாது என்று பலவாறு எண்ணுகிறேன்” என்பார்
.நேர் துவர் வாயார் என்னும் காலால் கலக்குண்டு காம வான் சுறவின் வாய்ப்பட்டு
(5-27)
பலாப்பழத்தை ஈ நாடுவது போன்று மான் போன்று பார்வையுடைய மாதர் சிற்றின்பத்தை விரும்புகிறேன். (6-46)
பிறவிப் பெருங்கடலில் தத்தளிக்கிறேன். துன்பம் என்னும் பேரலை வந்து மோதுகின்றது. மாதர் மயக்கம் எனும் காற்று கலக்குகின்றது என்று L/70B62/777.
பொய் எல்லாம் மெய் என்று புணர் முலையார் போகத்தே (51-3) முதலைச் செவ் வாய்ச்சியர் வேட்கை வெந் நீரில் கடிப்ப மூழ்கி
சிதலைச் செய் காயம் பொறேன் (6-41
குரவுவார் குழலார் திறத்தே நின்று குடிகெடுகின்றேனை (26-5)
பக்தர்களோடு கூடிடவோ பூக்கொணர்டு போற்றவோ நான் செய்யவில்லை. காமநோயில் தோய்ந்தவன் நான் என்று பாடுகின்றார்.
மன்மத பாணத்திற்கும் காமத்திற்கும் வசப்பட்டு மனதே நீ பாழாய்ப் போகின்றாய். மாதருடன் கலந்து சிற்றின்பம் துய்த்து அழிந்து போகும் அறிவிலியாகிய என்னைக் காப்பாற்றமாட்டாயா! என்று ஏங்குகின்றார்.
கொழும் மணி ஏர் நகையார் கொங்கைக் குன்றிடைச் சென்று குன்றி விழும் அடியேனை விடுதிகண்டாயப் (6-27, இவ்விடத்துச் சுவாமி சித்பவானந்தரின் கூற்றை நோக்குவது சிறப்பளிக்கும்
"மகாபாதகங்கள் பல பண்ணிவிட்டதாகச் சில இடங்களில் மாணிக்கவாசகர் சித்தரிக்கிறார் ஆனால் வாதவூரது வாழ்க்கை அத்தகைய கீழ்நிலைக்குப் போனதற்கு ஆதாரம் எங்குமே இல்லை. பிறந்தது முதற்கொண்டு அவர் தூய வாழ்வில் திளைத்திருந்தார். பின்பு உலகில் ஜூவர்களிடத்த7ருக க?ற கழிந?லைகள்

தம்மிடத்துமிருந்ததாக வைத்துக்கொண்டு அவர் விமோசனம் தேடினார். முயலுகின்ற கடைப்பட்ட மாந்தரும் உய்வு அடையலாம் என்பது திருவாசகத்தினின்று தெளிவாகிறது"
(g556)/Taif, L/9) மனம் - வாக்கு - செயலால் வேண்டுதல்
சைவசித்தாந்தம் நான்கு வகையான வழிபாட்டு முறைகளைக் குறிப்பிடுகின்றது. அவை சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பனவாகும். இதையே மாணிக்கவாசகர் சீலம் நோன்பு செறிவு அறிவு என்று குறிப்பிடுவார். மேற்கூறியன மனத்தால் வழிபடுதல், வாக்கினால் வழிபடுதல், செயலினால் வழிபடுதல், அறிவினால் வழிபடுதல் என்பனவற்றிற்கு ஒப்பாகும். இதையே அகம் குழைதல், அன்புருகுதல், ஏத்தலும் புகழ்தலும், மெழுகுதலும் கூத்தாடுதலும் என வரிகைப்படுத்தலாம். மேற்கணிட நான்கு முறைகளிலும் மாணிக்கவாசகர் இறைவனை வழிபடுகின்றார்.
மனத்தால் வழிபடுதல்
சிந்தனை நின் தனக்கு ஆக்கி. (5-26) நெக்கு நெக்கு உள் உருகி உருகி
(27-8) ஆற்றகிலேன் அடியேன் அரசே (27.2) .நினைதொறும் நினைதொறும் (3-33) சிந்தனை செய்து அடியோங்கள் (43-4)
சொல்லாலி வழிபடுதல்
வந்தனையும் அம் மலர்க்கே ஆக்கி வாக்கு உடன் . -
மணிவார்த்தைக்கு ஆக்கி சொல்லால் வழிபடுதல் என்பது பாடுதல், இறைவன் புகழ் கூறுதல் என்பதைக் குறிக்கும்.
பேசுவதும் திருவாயால் மறை (12-1) பாடுவன நல்வேதம் (5-17) சொல் பதம் கடந்த தொல்லோன் (3-40)
என்பதால இறைவன சொலிலுக்கு அப்பாற்பட்டவன் என்று கூறும் மாணிக்கவாசகர் இறைவன் அருள் பெற உருகி உருகிப் List(656,ointff.

Page 57
- a as என் தன் வாயால் அரற்றி
YLLLLLLLLLLLLLYLLLL LLL LLL LLL LLLLLLLLLLL ஆசைப்பட்டேன் (25-8) உரைதடுமாறி உரோமம் சிலிர்ப்ப (4-85) நாத நாத என்று அழுது அரற்றி (2-22)
போற்றித்திரு அகவல் எனும் பதிகத்தில் இடம்பெறும் பாடல்களில் சொல் பயன்பாட்டிற்கு முக்கியத்துவம் தரப்பெற்றுள்ளது. இப்பாடல் வரிகள் போற்றி எனும் சொல்லுடன் முடிகின்றன.
கல்நார் உரித்த கனியே போற்றி (4-9Z) கடையோன் அடிமை கண்டாயப் போற்றி (4-11) போற்றி போற்றி சயசய போற்றி
இருநூற்று இருபத்தைந்து பாடல் அடிகளில் போற்றி எனும் சொல் வழங்கப் பெற்றுள்ளது. இதைப்போல் திருவண்டப் பகுதியில் காண்க எனும் சொல் பயன்படுத்தப் பெற்றுள்ளது.
பரமன் காண்க மழையோன் காண்க (3-37) அற்புதன் காண்க அநேகன் காண்க (3-39) பத்தி வலையில் படுவோன் காண்க (3-42)
நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க (I-I) அச்சம் தவிர்த்த சேவகன் வாழ்க (3-98)
நித்தல் விண்ணப்பத்தில் விட்டிடுதிகண்டாயப் எனும் சொல்லும் இதைப்போன்று கோத்தும்பீ தெள்ளேனம் கொட்டாமோ, பூவல்லி கொய்யாமோ, பொன்னுரசல் ஆடாமோ, பெருந்துறை மேவிய சிவனே, கண்டாய் அம்மானே (ஆசை), அதிசயம் கண்டாமே (அதி), சிக்கெனப் பிடித்தேன் எங்கு எழுந்தருளுவது இனியே, அச்சோவே என்பன இதற்குச் சில எடுத்துக்காட்டுகள் ஆகும். திருப்புலம்பல் எனும் பதிகம் சொல்வழி தொழுதலைக் குறிக்கின்றது.
திருப்படையெழுச்சிப் பதிகத்தில் இடம்பெறும் பாடல்கள் சொல் பயன்பாட்டில் மிளிர்கின்றன.
தொண்டர்காள் தூசி செல்லர் புத்தர் காள் குழப் போகிர் ஒண் திறல் யோகிகளே பேர் அணி உந்திர்கள்
கடைக்கூழை செல்மின்கள் (46.2)

செயலால் வணங்குதல் (புறவழிபாடு)
பக்தி நிலையில் ஏற்படும் செயல்குறித்துப் பல பாடல்கள் உள்ளன. அவற்றுள் சிலவற்றைக் காண்போம்.
கையால் தொழுது உன் கழல் சேவடிகள் LLLLLL LL0SLLLLLLLLLL0SLL LL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLLLLLLLSLLLL GG தழுவிக் கொண்டு (25-8)
தலையினால் நடந்தேன் . (23-3) தொழுத கையினர் ஆகித்துாய் மலர் புரள்வார் தொழுவார் புகழ்வார் (45-10)
நின்றும் இருந்தும் இடந்தும் எழுந்தும்
நக்கும் அழுதும் தொழுதும் வாழ்த்தி நானா விதத்தால் கூத்து நவிற்றி (27-8)
இறைவன் நாமத்தை எல்லோரும் கேட்கும்படி வாய்விட்டுச் சொல்லி மலர்தூவி வணங்குதலை மாணிக்கவாசகர் பின்வருமாறு குறிப்பிடுவார்.
S0SLLLL0SLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL வாய்விட்டு அலறியும் க்ால் விசைத்து ஓடிக் கடல்புகமண்டி நாதா நாதா என்று அழுது அரற்றி
w (2-134-136) அலைபோன்று நான் தலைகீழாக வீழ்ந்து புரண்டு கத்துகின்றேன் (3-152)
நான்கு முறைகளிலும் வழிபடுதலைப் பின்வரும் பாடல்கள் சுட்டுகின்றன.
சிந்தனை நின்தனக்கு ஆக்கி நாயினேன் தன் கண்ணிணை நின் திருப்பாதம் போதுக்கு ஆக்கி வந்தனையும் அம் மலர்க்கே ஆக்கி வாக்கு உடன் மணிவார்த்தைக்கு ஆக்கி .
(5-26) ஒருத்தனே உன்னை ஒலம் இட்டு அலறி உலகு எலாம் தேடியும் காணேன்
(29-2) கை தான் தலை வைத்துக் கண்ணிர் ததும்பி வெதும்பி
(5-lル
சொல் மற்றும் செயலால் இறைவனைப் பரவி அருள்தர வேண்டுதல் இயல்பு. ஆனால் மாணிக்கவாசகர் இத7லும் ஒரு புதரிய உத்தியைக் கையாண்டுள்ளார்.
அடியார் மலர்தூவினேன், பாடினேன், தவம் செய்தேன், கைதொழுதேன், ஆலயம் வந்தேன், போற்றினேன் எனக்கு அருள் தரவேண்டும் என்று

Page 58
வேண்டுவர். ஆனால் மாணிக்கவாசகர் இதற்கு மாறாகப் பல பாடல்களைப் பாடியுள்ளார். அவற்றில் எதிர்மறை உத்தி கையாளப்பெற்றுள்ளது.
அகம் குழையேன் அன்பு உருகேன் பூமாலை புனைந்து ஏத்தேன் புகழ்ந்து உரையேன். துாகேன் மெழுகேன் கூத்து ஆடேன் (5-14) நான் பாடேன் நின்று ஆடேன் அந்தோ அலறிடேன் உலறிடேன் ஆவி சோரேன் முடிவு அறியேன் (5-22)
இப்பிறவியில் இணைமலர் கொய்து நான் இயல்பொடு அஞ்சு எழுத்து ஓதித் தப்பு இலாது பொன் கழல்களுக்கு இடாது நான் தடமுலையார் தங்கள் மைப்பு உலாம் கண்ணால் ஏறுண்டு
கிடந்தேன் என்பார்.
இறைவனின் பக்தர்களோடு சேரவில்லை என்பதைப் பின்வருமாறு கூறுவார்.
நீதி ஆவன யாவையும் நினைக்கிலேன்
நினைப்பரொடும் கூடேன் (26-2) பரவுவார் அவர் பாடு சென்று அணுகிலேன் பல் மலர் பறித்து ஏத்தேன் (26-5)
என்னிடம் பக்தி இல்லை. பணிவு இல்லை, அருள் இல்லை உன்னைப் போற்றுகிற பாங்கு இல்லை என்றும் (44) உன்னைக் காணவில்லை, புேணவில்லை என்றும் கூறிச் செல்கின்றார். (4-5 کے )
கற்று அறியேன் கலை ஞானம்
கசிந்து உருகேன் ஆயிடினும் (38-5) நன்மலர் புனையேன் ஏத்தேன் நாத்தழும்பு ஏற (5-13)
மேலும் தான் நாத்தழும்பு ஏற இறைவனை ஏத்தவில்லை நறுமலர் கொண்டு வணங்கவில்லை என்று கூறுகின்றார்.
ஏய்ந்த மாமலர் இட்டு முட்டாது ஓர் இயல்பொடும் வணங்காதே. (41-2) சீலம் இன்றி நோன்பு இன்றிச் செறிவே இன்றி அறிவு இன்றித் தோலின் பாவைக் கூத்தாட்டு ஆய்ச் சுழன்று விழுந்து கிடப்பேனை மாலும் காட்டி வழிகாட்டி

YLLLLSY0LLLLLLSYSLLL0LYLL0LL0L0YLL0LLYLLLL0z0L0LYYLLLLLL
கோலம் காட்டி ஆண்டானை (50-3) மிரட்டி மளமிளக வைத்தல்
பல்வேறு வழிகளில் இறைவனை வழிபடும் மாணிக்கவாசகர் கடைசியாக இறைவனை மிரட்டியாவது தனது குறிக்கோளை நிறைவேற்ற முனைகின்றார். இறைவனை வன்மையாகப் பேசுவது போன்று பல பாடல்கள் உயர்வுநவிற்சி அணியாக உள்ளன. இதைப் பின்வரும் சில எடுத்துக்காட்டுக்களில் காணலாம்.
a a a as a வன்செவியோ நின் செவி (7-1)
நான் பிழை செய்தவன் என்று நீ என்னை வெறுத்துப் புறக்கணித்தால் உன் செயல் சரியலல என்று ஊரார் சரிரிக்கும் படி செய்துவிடுவேன். பின்னும் என்னை நீ தள்ளிவிட்டாய் ஆயின் நீ யானைத்தோலைப் போர்த்த பித்தன், புலித்தோலை உடுத்த பித்தன், நஞ்சுண்ட பித்தன், ஊர்ச்சுடுகாட்டுத்தியில் விளையாடும் பித்தன் என்னை ஆட்கொண்டு பிறகு புறக்கணித்த பித்தன் என்று பழிக்கு ஆளாக்குவேன் என்கிறார்.
சிரிப்பிப்பின் சிறும் பிழைப்பைத் தொழும்பையும் ஈசற்கு என்று விரிப்பிப்பன் என்னை விடுதி கண்டாய் விடின் வெம் கரியன் உரிப்பிச்சன் தோல் உடைப் பிச்சன் நஞ்சு ஊண் பிச்சன் ஊர்ச்சுடுகாட்டு எரிப்பிச்சன் என்னையும் ஆளுடைப்பிச்சன்
என்று ஏசுவேனே
54
> Q» 4O QX «A 4O O -AI நஞ்சு உன் மழைதரு கண்டன் குணம் இலி (6-49) மானிடன்தேய் மதியன்
பழைதரு மா பரன் * (6-46) ஏசினும் யான் உன்னை ஏத்தினும் என் பிழைக்கே குழைந்து (6-50)
நான் உன்னை வைதாலும் வாழ்த்தினாலும் என் குற்றத்தின் பொருட்டு வருந்துகிற என்னை நீ ஒதுக்கித் தள்ளிவிட வேண்டாம்
மேலும் நீ பலன் அளிக்காததால், நீ"

Page 59
அருள்தராவிட்டால் நான் இறந்து படுவேன் அப்பழி உன்னை வந்தடையும் எனும் பொருளில் பல பாடல்களைப் பாடியுள்ளார்.
முகம் தான் தாராவிடின் முடிவேன் (21-3) upň6mm/7(5 LITZ 6ý6Ů,
• • « AV «v A av a ar a» 2607 தெருள் ஆர் கூட்டம் காட்டாயேல் செத்தேபோனால் சிரியாரோ (21-8)
என்றும்
w a Av இன்னும் செத்திலேன் (23-1) ஆ ஆ செத்தேன் (3-167)
என்றும் பாடினார். தன் உள்ள வேட்கையை வெளிப்படுத்தியுள்ளார்.
தரியேன் நான் ஆம் ஆறு என் சாவேன் நான் சாவேன்
635/6/76õigy LJ6) L/TL 6ö4560)65 356)/7555தில் காணமுடிகின்றது. மொழிநடை
திருவாசகத்தேன்’ என்றழைக்க்கப்படும் திருவாசகத்தின் மொழிநடை தனியே ஆய்ந்து நோக்கத்தக்கது. திருவாசகத்தில் மாணிக்கவாசகர் எளிய நடையைப் பல இடங்களில் கையாண்டுள்ளார். பேச்சுவழக்கு போன்ற பல சொற்களும் தொடர்களும் உரையாடல்களும் பல இடங்களில் இடம்பெற்றுள்ளன. பழமொழிகள் பயன்படுத்தப்பெற்றுள்ளன. உவமைகள் அதிகம் இடம்பெற்றுள்ளன.
சொற்களைக் குறிப்பாக வினையெச்சங்களை. யும் வினைமுற்றுக்களையும் அடுக்கிச் சொல்லும் முறை சிறப்புடையது.
» « v v v «v o «a நெக்கு நெக்கு (27-8) நாடி நாடி வந்து (13-5) கூடிக்கூடி உன் அடியார் (32-11) வாடி வாடி வழி அற்றேன் (32-11) ஊடி ஊடி உடையாயொடு (32-11) உருகி உருகி (27-8)
ஆர்மின் ஆர்மின் .
ஆர்த்து ஆர்த்து .

ஆடியும் அலறியும் பாடியும் பரவியும் அடியார் அடியார் அடியேம் (3-151)
பல தொடர்களில் பயனிலையைத் தொடர்ந்து எழுவாய் பயன்படுத்தப் பெற்றுள்ள நிலையைக் &Ո6007(ԼԶւԶեւյլն.
கூவின பூங்குயில் கூவின கோழி குருகுகள் இயம்பின இயம்பின சங்கம் (20-3) பரவுவார் இமையோர்கள் பாடுவன நல்வேதம் (5/6/6)IIf (51p6) LDL6)/T677 வளைந்தது வில்லை வளைந்தது பூசல் சிரிப்பார் களிப்பார் தேனிப்பார் திரண்டு திரண்டு உன் திருவார்த்தை விரிப்பார் கேட்பார் மெச்சுவார் (21-9)
சில இடங்களில் பேச்சுநடை போன்ற பயன்பாடு அமைந்துள்ளது.
ஆஆ திருமால் . (14-6) ஆற்றுகிலேன் அடியேன் - சீ சி இவையும் சிலவோ விளையாடி (7-2) அன்னவரே எம் கணவர் (7-9)
பொற்சுண்ணப்பதிகத்தில் சுண்ணம் இடித்தலை பேச்சுநடையாய் அழகாக அமைத்துள்ளார்.
. வண்டு இனம் ஆட ஆட
A சிவனொடும் ஆட ஆட
p p p pp e கண்பனி ஆட ஆட . எம்பிரானொடும் ஆட ஆட
O P P O P O P பிறறொடும் ஆட ஆட
கருணையொடு ஆட ஆட
8 or se pos பொற்சுண்ணம் இடத்தும் நாமே (9-10)
கடலினுள் நாய் நக்கியாங்கு (6-13) ஆனை வெம்போரில் குறும்தூறு (6-21) செழிகின்ற திப் புகுவிட்டிலின் (6-5) எறும்பிடை நாங்கூழ். (6-25) அரிப்புண்டு பெருநீர் அறச்சிறுமீன் துவண்டு (626) மத்துஉறு தண் தயிரின் (6-30)
பொதும்புஉறு திப்போல (6-36)

Page 60
பழமொழி
பசுமரத்தாணி அறைந்தாற்போல் (4-6 இருதலை கொள்ளியின் (6-9) தடம் கையின் நெல்லிக்கனி (3-16.
என்று பல பழமொழிகள் பயன்படுத்தட பெற்றுள்ளன. யாப்பைப் பொறுத்தமட்டில் மோனை, அந்தாதி என்பன பயின்று வருகின்றன
எட்டாம் திருமுறை எனப் போற்றப்படு திருவாசகம் பிற திருமுறைகளுக்கு இணையாக பேசப்படும் சிறப்பு வாய்ந்தது. பொதுநிலையி: சிவனை வழிபடுதல் எனும் பொருளை: கொண்டிருப்பினும் கூறப்படும் முறையிலு கருத்துக்களை வெளிக்காட்டும் நிலையிலு திருமுறைகளுக்கிடையே வேறுபாடு காணப்படு கின்றது. மாணிக்கவாசகர் இறைவன் கருணை யைப் பெறவும் இறைவன் கவனத்தைத் தன்வச

படுத்தவும் பல உத்திகளைக் கையாண்டுள்ளார். வேண்டிக் கொள்ளுதல் முதல் மிரட்டிக் காரியத்தைச் சாதகமாக்குதல் ஈறாகப் பல உத்திகள் இவர் பாடலில் கையாளப் பெற்றுள்ளன. இவ்வகை உத்திகளை விரிவாக ஆராயின் திருவாச. கத்தின் புகழ் மேலும் வளம்பெறும் என்பதில் ஐயமில்லை. துணைநூல் பட்டியல்
w
தண்டபாணி தேசிகர், ச. 1964, திருவாசகம், திருவாவடுதுறை ஆதீன வெளியீடு மறைமலையடிகள், 1968 திருவாசக விரிவுரை, கழக வெளியீடு வைத்தியநாதன், கு. 1992, திருவாசகத்தில் சைவசித்தாந்தம், திருவாவடுதுறை ஆதீன சைவசித்தாந்த நேர்முகப் பயிற்சி மையம், திருவிடைமருதூர்

Page 61


Page 62


Page 63
uLeoeorL GALL 68ulofésediteny LillflooofLerný (uĵleo8eaJL

I) elválu 6LLL. 65T.8Lu : 2449688