கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பண்பாடு 2008.04

Page 1
PANPAD)
-
ாழ் அருணகிரிநாதரும் சைவ
ா) பகவத்கீதை காட்டும் வாழ்
ப) ஒளவையாரின் ஞானக்குற
ா) இந்து மதத் தத்துவங்களும்
இதழ்
35 FDL, EEGITFT e
இல243 1/
 

LITC)
ܕ ܢ .
325 OURNAL
சித்தாந்தமும்
ழ்வியல் - தத்துவச் சிந்தனைகள்
)ளில் சைவ சித்தாந்தக்கொள்கை
* பெரிய புராணமும்
616раь6і 560,6-005556 காலி விதி DL-04

Page 2
பதிப்பு: சித்திரை 2008 விலை: 50/ன
முப்பத்துமூன்றாவது இ
முனைவர் திருமதி திலகவதி சண்முக
இவர் கோயம்புத்துாரில் உள்ள கோ விரியுரையாளராக கடமையாற்றுகின்றார். த புலமை மிக்கவர் இது தொடர்பாக ஆய்வுக்
முனைவர் திருமதி கு.ர. சரளா
இவர் தஞ்சைப் பல்கலைக்கழகத்தி மேற்கொண்டு வருகிறார் சைவ சித்தந்தம் எழுதி ஆய்வரங்குகளிலும் கலந்து கொண்டு
முனைவர் சிவ மங்கயற்கரசி
இவர் தருமபரம் ஞானாம்பிகை அரசில்
கடமையாற்றுகின்றார். தமிழ், தமிழ் இலக் எழுதியதுடன், ஆய்வரங்குகளிலும் கலந்து
பண்பாடு பருவ இதழில் பிரசுரமாகியுள்ள கட் அக்கட்டுரைகளை எழுதியவர்களின் சொந்தக் திணைக்களத்தின் கருத்துக்களைப் பிரதிபலி

தழின் கட்டுரையாளர்கள்
கசுந்தரம்
ப்ரேசன் உயர் பாடசாலையில் பட்ட படிப்புகள் மிழ் இலக்கியம் ஆகியவற்றில் சைவசித்தாந்த கட்டுரைகளையும் நூல்களையும் எழுதியுள்ளார்.
ஸ் அகராதி துறையில் கலாநிதி பட்டப்படிப்பை தமிழ் துறைகளில் பல ஆய்வுக் கட்டுரைகளை 6,767IITii.
னர் மகளிர் கல்லூரியில் தமிழ்துறைத்தலைவராக கியம் தொடர்பாக் பல ஆய்வுக்கட்டுரைகளை கொண்டு சிறந்த கட்டுரைகளை வாசித்துள்ளார்
டுரைகளில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் யாவும் கருத்துக்களாகும். இவை இவ்விதழை வெளியிடும் ப்பனவாகா. - ஆசிரியர்

Page 3
O
(முப்பத்துமூன்
LD6): 17 இதழ்
ஆசி சாந்தி நா
உதவி சீ.தெய்வ
இதழ்
வெளி 55 &LDu, assT&Ty is இல, 248 1/1
கொழும்
 

றாவது இதழ்)
O1 2008 - சித்திரை
வுக்கரசன்
fluffGB: லுவல்கள் திணைக்களம் , காலி விதி,
DL - 04

Page 4
பொருளடக்கம்
* அருணகிரிநாதரும் சைவ சித்தாந்த
முனைவர் தி
* பகவத்கீதை காட்டும் வாழ்வியல்
கு. ர. சரளா
* ஒளவையாரின் ஞானக்குறளில் சை
முனைவர் சி
* இந்து மதத் தத்துவங்களும் பெரிய

பக்கம்
மும் 1 ருமதி திலகவதி சண்முக சுந்தரம்
தத்துவச் சிந்தனைகள் 25
வசித்தாந்தக் கொள்கை 35
வ. மங்கையற்கரசி
pirsæGyptb 52

Page 5
அருணகிரிநாதரும்
“சைவத்தின் மேல் சமயம் வேறில்லை அ தெய்வத்தின் மேல் தெய்வம் இல் எனும்
மை வைத்த சீர்த்திருத்தேவாரமும் திருவ உய்வைத் தரச் செய்த நால்வர் பொற்றா
சைவசித்தாந்தம்
சிவபெருமானை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடும் சமயம் சைவம் எனப்படும். அச் சைவத்தின் கொள்கையே சைவ சித்தாந்தம். சைவம் - சிவசம்பந்தம் உடையது. சைவம் என்ற சொல் சிவம் என்னும் செந்தமிழ்ச்சொல் அடியாகப் பிறந்தது. சிவனோடு தொடர்புடைமை என்னும் பொருளில் வழங்குவது. சிவனைப் பற்றிய நிலையையும் சிவனைப் பற்றிய நூல்களையும் சிவனடி சேர்தற்குரிய நெறியையும் இச்சொல் குறிக்கின்றது. சித்தம் + அந்தம் = சித்தாந்தம். சித்தம் என்றால் உண்மை; அந்தம் என்றால் முடிவு சித்தாந்தம் என்பது உண்மைகளின் முடிவு. தத்துவம் என்ற வட சொல்லுக்கு உண்மை என்று பொருள். தத் - உள்ள, துவம்-உண்மை; உள்ளதாம் தன்மை உண்மை. எல்லாத்தத்துவங்களின் முடிந்த முடிவாக இருப்பதால் சித்தாந்தம். எனவே சித்தாந்தம் என்பது “முடிந்த முடிவு” ஆகும். இது சைவ சமயத்துக்கே உரியது. ஆதலாலி சைவ சித் தாந்தம் எனப் போற்றப்பெறுகிறது.
சைவ நூல்களின் முடிந்த முடிவைக் கூறும் நூல்களைச் சைவ சித்தாந்தம் என்பர். முழுமுதற் கடவுளாம் சிவபெருமானை எளிதில் எய்துவதற்குரிய

சைவசித்தாந்தமும்
Dனைவர் திலகவதி சண்முகசுந்தரம்
தில் சார் சிவமாம் நான்மறைச் செம்பொருள் வாய் fGF(!pib ர் எம் உயிர்த் துணையே”
திருவருணைக்கலம்பகம்
நெறி இது எனக் காட்டுவன இந்நூல்கள். கடவுளை நாடிச் செல்லும் பல நெறிகளில் இந்நெறியே தலைசிறந்ததாக இருத்தலின் இதனை “முதற் சைவ நெறி” என்பார் சேக்கிழார். முதல்வனோடு கலத்தலாகிய திருவை அளிக்க வல்லது ஆகலின் "திருநெறி” என்று திருமூலர் போற்றுவார். முதன் முதலில் சைவு சித்தாந்தம் என்ற சொல்லைத் தம் திருமந்திரத்தில் எடுத்தாண்டவரே திருமூலர் தான்.
கற்கத் தகுந்த நல்லகலைகளைக் கற்று, சிவயோகம் பயின்று பத முத்தி அடைவதற்குரிய ஞானம் பெற்றுத் தம்மையும் தலைவனையும் உணர்ந்தவரே சைவசித்தாந்தர் என்கிறார் திருமூலர்.
“கற்பன கற்றுக் கலை மன்னும் மெய்யோக முற்பத ஞானம் முறை முறை நாடியே தொற்பதம் மேவித் துரிசற்று மேலான தற்பரம் கண்டுளோர் சைவசித்தாந்தரே”
என்பதே அப்பாடல்.
சைவத்தால் தமிழும் தமிழால் சைவமும்
வளர்ந்தது. சைவ சமயத்தின் தோற்றம் கற்பனைக்கு எட்டாததாக உள்ளது. ஆரியர் வருகைக்கு முற்பட்ட

Page 6
சிந்துவெளி நாகரிகத்தில் சிவ வழிபாே சிறந்திருந்தது. மொகஞ்சதாரோ, ஹரப்பா ஆகி இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வார ய்ச்சிகளில் கிடைத்த சிவத்திருமேனிகள் மூல சிவவழிபாடு பற்றிய செய்திகள் கிடைக்க பெறுகிறோம் . உலகில் மிகப் பழை உயிரோட்டமுள்ள &LDu Ith 6086) &LDu (8uD 616ði. சர் ஜான் மார்ஷல் கூறுகிறார்.
இமயம் முதல் குமரி வரை உள்ள இந்தி நாடு முழுமையும் இச்சமயம் பரவியுள்ளது. சை சமயத்தின் கொள்கை எனப்படும் சைவ சித்தாந்த தமிழ் நாட்டிற்கே உரிய தனிச்சிறப்பாகும்.
"தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
என்ற மாணிக்கவாசகரின் கூற்று எண்ணி பார்க்கத்தக்கது.
சிவன் தென்னாட்டிற்கே உரியவன், கிழக்கு மேற்கு, வடக்கு திசைகளில் அவர் கருத்து செல்வதில்லை.
“தென்னை குடபாலின் வடபாலின் குணப்பா சேராத சிந்தையான்” என்று சுந்தரரும் கூறுகிறார் நம் தமிழ்நாட்டிற்கே உரியது என்று பெருமித கொள்ளும் அதே வேள்ையில், இந்த உலக இந்து கருத்தரங்கை நடாத்திய இலங்கைக்கும் உரியது எனக்கூறிப் பெருமைப்படலாம். யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலர் என்று பெயர் பெற்ற பெரியவ சைவம் வளர்த்ததும் இங்குதான். இலங்கைப்பூ சிவ பூமி.
சைவ சமயக் குரவர்களாலும் சந்தா6 குரவர்களாலும் அவர் தம் வழி வந்த சான்றோ பலராலும் பரப்பி வ்ளர்க்கப்பெற்றது சை சித்தாந்தம். இச் சைவசித்தாந்தம் வேதாகமங்களின் வழி வந்தது. உலகாயதம் முதலாகச் சொல்லப்படு பல்வேறு மதங்கள் கூறும் கொள்கைகளையெல்லா

5,
is
கடந்து வேதத் தலை தரு பொருளாய் விளங்குவது.
“சிவாகமங்களின் ஞானபாதம் என்பது வேதத்தின்
ஞானகாண்டப் பொருளைத் தெளிவுற விளக்குவது. அந்த விளக்கமே சைவசித்தாந்தம். வேதத்தின் ஞானகாண்டம் வேதாந்தம் எனப்படுதலால் ஞானகாண்டத்தின் தெளிபொருளாகிய சைவ சித்தாந்தம் வேதாந்தத்தின் தெளிவாகிறது. அதாவது வேதத்தின் ஞானகாண்டத்தில் குறிப்பாகச் சொல்லப்பட்ட தத்துவக் கொள்கைகளைத் தெளிவுபெற விரித்து விளக்குவது சைவசித்தாந்தம்’
“புறச்சமயத்தவர்க்கு இருளாய் அகச்சமயத்து
* ஒளியாய்ப் புகல் அளவைக்கு அளவாகிப் பொற்பணிபோல்
அபேதப் பிறப்பிலதாய்,இருள் ஒளிபோல் பேதமும் சொற்
பொருள் போல் பேதாபேதமும் இன்றிப் பெருநூல் சொன்ன அறத்தினால், விளைவதாய் உடல் உயிர் கண்
அருக்கன் அறிவொளிபோல் பிறிவரும் அத்துவிதமாகும் சிறப்பினதாய் வேதாந்தத் தெளிவாம் சைவ சித்தாந்தத் திறன் இங்குத் தெரிக்கலுற்றாம்"
என்பது சிவப்பிரகாசப்பாடல்.
சைவ சித்தாந்தமானது புறச்சமயத்தவர்க்கு இருளாய், அகச்சமயத்தவர்க்கு ஒளியாய் விளங்கும். அளவை நெறிக்கு அளவையாய்த் திகழும். இறைவனையும் உயிர்களையும் பொன்னும் பணியும் போல் அபேதம், இருளும் ஒளியும்போல் பேதம், சொல்லும் பொருளும் போல் பேதாபேதம் என்று கூறும் பிற சமயங்கள் போலல்லாமல் இறைவன் உயிர்களுடன் உடலும் உயிரும் போல் ஒன்றாகவும், கண்ணும் சூரியனும் போல் வேறாகவும், கண் ஒளியும் உயிரறிவும் போல் உடனாகவும் இயைந்து நிற்றலை இனிது உணர்த்தும் வேதாந்த நூல்களின் பிழிவாகவும்
தெளிவாகவும் திகழும் என்கிறார்.

Page 7
பண்டாரமும் மணிக்கோவை நூலில் நால்வகை வாக்குகளும் சுத்த மாயையின் காரிய ஆகையால் வேதம் சுத்தமாயையின் காரியமாம் எனவே சுத்தமான்யயை நிலமாகவும் வேதத்ை அதில் தோன்றிய மரமாகவும் உருவகித்து பாடுகிறார் குமரகுருபர அடிகள். மரத்தில் இலை தளிர், அரும்பு, மலர், பிஞ்சு, காய், கனி இருக்குப் அதுபோல வேதத்தில் பல தெய்வ வழிபாடுகள் வழிபாட்டு முறைகள், உயர்ந்த வேள்விகள், தாழ்ந் வேள்விகள், ஆக்கத்தைச் செய்யும் மந்திரங்கள் அழிவை செய்யும் மந்திரங்கள், தத்துவ கொள்கைகள் என்று எல்லாம் உள்ளன. அவரவ தம் பக்குவத்திற்கேற்ப இவற்றுள் ஏதேனும் ஒன்ை கைக் கொள்கின்றனர். ஞானகாண்டமாகிய வேதாந்தமே கனி. இக்கனி வேதமாகிய மரத்தில் உச்சியில் பழுத்திருக்கிறது. இக் கனியைப் பறித்து பிழிந்தெடுத்த சாரமே சைவ சித்தாந்தம்.
“பல்லுயிர்த்தொகுதியும் பயன்கொண்டு உய்த என குடிலை என்னும் தடவயல் நாப்பண் அருள் வித்திட்டுக் கருணை நீர்பாய்ச்சி வேதம் என்னும் பாதவம் வளர்த்தனை பாதவம் அதனில் படுபயன்பலவே”
அவற்றுள்
இலை கொண்டு வந்தனர் பலரேஇலை ஒரீஇத் தளிர் கொண்டு வந்தனர் பலரேதளிர் ஒரிஇ அரும் பொடுமலர் பிஞ்சு அருங்காய் என்று இவை விரும்பினர் கொண்டு கொண்டு வந்தனர் பலரே
திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் என்னு தமிழ் வேதம் பசுவாகவும், திருமூலர் அருளி திருமந்திரம் என்னும் தமிழ் ஆக்மம் அப்பசுவின் பாலாகவும், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் சுந்தரர், மாணிக்கவாசகர் என்னும் சமt ஆசிரியர்கள் பாடிய திருமுறைகளே அப்பாலி நெய்யாகவும், மெய்கண்டார், அருள்நந்திசிவப் மறைஞானசம்பந்தர் உமாபுதிசிவம் என்னும் சந்தா6

“ጨመsff®ሠD፤4Š"ሣ'ህ** * ̈ ̆
සී. fig).5D ஆசிரியர்க்ள் பாடிய நூல்களே அந்நெய்யின் சுவையாகவும் அமையச் சிறந்து விளங்குவது சைவசித்தாந்தம். இவர்கள்ால் உயிர்காக்கப் பெற்றதே சைவசித்தாந்தம்.
வேதம் பசு, அதன் பால் மெய் ஆகமம் நால்வர் ஒதும் தமிழ் அதனில் உள்ளுறும் நெய் போதமிகு o w 40 啤 t நீள் o o ର i a செய்த தமிழ் நூலின் திறம்.
என்றொரு தனிப்பாடல் இயம்புகிறது.
“சைவசித்தாந்த நெறியானது உலகளாவிய உயர்ந்தநெறி எந்த ஒருசமயத்தையும் இகழ்ந்து ஒதுக்காதது, பிணக்கும் பூசலும் இன்றி எல்லாச்
சமயங்களையும் தழுவிப்போற்றுவது நடைமுறை வாழ்க்கைக்கு இயைந்தது சமயம் வேறு வாழ்க்கை வேறு என்றில்லாமல் சமயமே வாழ்க்கை, வாழ்க்கையே சமயம் என்ற தன்மையில் பிரிவின்றி ஒன்றி நிற்பது”
“ஒழுக்கம், அன்பு, அருள், ஆசாரம், உபசாரம், உறவு, சீலம், வாய்மை, அழுக்கிலாத்துறவு, அடக்கம், அறிவொடு அர்ச்சித்தல் உடையது”. முற்போக்குச் சிந்தனைகளையும், சீர்திருத்தச் செயல்களையும் கொண்ட பெருநோக்கம் உடையது.
“தொன்மையவ்ாம் எனும் எவையும் நன்றாகா,
இன்று
தோன்றுவன எனும் எவையும் திதாகா”
என்று உமாபதிசிவம் தம்முடைய சிவப்பிரகாசம் என்ற நூலில் கூறியுள்ளார்.
‘எந்த நிலையில் நின்றாலும் எக்கோலம்
கொண்டாலும் மன்னியசீர்ச்சங்கரன் தாள் மறவாமை
பொருள் என்று' சேக் கிழார் தம்முடைய பெரியபுராணத்தில் கூறியுள்ளார். இவை போல வரும் சான்றோரின் கூற்றுகள் சைவசித்தாந்த நெறியின் இனிமையையும், எளிமையையும் புலப்படுத்து

Page 8
வனவாம். சைவ சித்தாந்தம் பதி, பசு, பாசம் என்ற முப்பொருள் உண்மையைக் கூறுவது.
முப்பொருள்
பதி,பசு, பாசம் என்று மூன்று பொருளைக் கூறுவது சைவசித்தாந்தம். பதியாவது இறைவன் அல்லது கடவுள். பரமான்மா என்றும் சொல்லப்படும். பசுவாவது உயிர் அல்லது ஆன்மா, சீவான்மா என்றும் சொல்லப்படும். பாசமாவது உயிர்களை அல்லது சீவான்மாக்களைக் கட்டியிருக்கும் கட்டு. பதி, பசு, பாசம் என்னும் மூன்றும் தமிழில் இறை, உயிர், தளை என்று முறையே சொல்லப்படும்.
இவை மூன்றும் தனித்தனிப்பொருள்களே. இவைகளில் எந்தப்பொருளும், எந்தப் பொருளின் காரியமும் அன்று. இவை மூன்றிற்கும் எந்நாளிலும் தோற்றமும் இல்லை; முடிவும் இல்லை, அநாதியே இருப்பன. தோற்ற, நாசங்கள் அற்ற பொருள் அநாதி. அதாவது ஆதி இல்லாதது எனப்படும் ஆதி இல்லை எனவே அந்தமும் இல்லை.
பதி, பசு, பாசம் எனப் பகர் மூன்றில் பதியினைப் போல் பசு பாசம் அநாதி என்று திருமூலர் திருமந்திரத்தில் தெளிவாகக் கூறுகிறார். பதியாகிய கடவுள் என்று உண்டோ அன்றே பசுவாகிய உயிரும் உணி டு. அன்றே அவ்வுயிர்களைப் பிணித்துள்ள பாசமும் உண்டு என்பது சைவசித்தாந்தத்தின் கொள்கை.
பதி
பதி ஒன்றே (இறைவன் ஒருவனே). பதி என்பதற்கு கர்த்தா எனவும் கடவுள் எனவும் முழுமுதல் எனவும் சிவம் எனவும் பொருள்கூறலாம். இக் கடவுளே உலகிற்குக் கர்தி தா, உயிர்களுக்குத்தலைவன், படைத்தல், காத்தல் அழித் தலி , மறைத் தல , அருளலி ஆகிய ஐந்தொழில்களையும் இவரே நடத்துகிறார். இத்தொழில்களை நடத்த இச்சை, கிரியை, ஞானம்

என்ற மூன்று வகையான சக்திகள்
துணைபுரிகின்றன. இந்தச் சக்தியிலிருந்து சிவம் பிரிக்கமுடியாதபடி கலந்திருக்கின்றது. சக்தியோடு கலந்த சிவமே ஆலயங்களில் காணப்படும் சிவலிங்கமாகும்.
சைவம் உள்ளது போகாது; இல்லது வார்து என்னும் சற்காரியவாதமாகும். ஒவ்வொரு காரியத்துக்கும் முதற்காரணம், துணைக்காரணம், நிமித்தகாரணம் என்ற மூன்று காரணங்கள் உண்டு. ஒரு குடத்தை உண்டாக்க மண் வேண்டும். அந்த மண்ணைக் குடமாக்க ஒரு தொழிலாளி வேண்டும். அதைச் செய்ய அவனுக்கு கருவிகள் வேண்டும். எனவே குடத்திற்கு முதற் காரணம் மணி : தண்டச்சக்கரம் முதலியன துணைக்காரணம்; செய்யும் குயவன் நிமித்த காரணம். அதுபோல இவ்வுலக உற்பத்திக்கு மாயை முதற்காரணம்; சக்தி துணைக்காரணம், இறைவன் நிமித்தகாரணம் இறைவனுக்குச் சொரூப நிலை, தடத்தநிலை என்ற இரு பெருநிலைகள் உள்ளன. இறைவனை சச்சிதானந்தம் என்பர். சத் - அழியாதது. சித் - அறிவுடையது. ஆனந்தம் - இன்பமயமானது. இறைவன் எல்லாம் வல்லவன். தானே தானாய் நிற்பவர். பிறப்பு, இறப்பு அற்றவர், பரிசுத்தமானவர், அருளையே உருவாகக் கொணி டிவர், தன்வயத்தனாதல், தூய உடம்பினன் ஆதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின்று நீங்குதல், பேரருள் 2.60L60)LD, முடிவில் ஆற்றல் உடைமை, வரம்பில் இன்பம் உடைமை, என்ற எண் குணங்களை உடையவன். கடவுள் சுயநலம் இல்லாதவர்.
பசுக்கள் பல. இதனை உயிர் எனவும் ஆன்மா எனவும் கூறுவர். எண்ணிலாத உயிர்கள் உள்ளன. அவை என்றும் உள்ளவை. அறிவு, விருப்பம்; செயல் இம்மூன்றும் உடைய பொருள் எதுவோ அதுவே உயிர் எனப்படும். புல்லுக்கும்

Page 9
உயிர் உண்டு. உயிர், ஆன்மா என்ற இரு சொற்களும் ஒரே பொருளையே குறித்தாலும் அறிவு விளக்கம் பெற்ற உயிர்கள் ஆன்மா எனப்படுகின்றன. உயிர் அறிவிக்க அறியும் தன்மை உடையது. ஒவ்வொன்றாக அறியும் சார்ந்ததன் வண்ணமாகும். செம்பிலே களிம்பு போல இயல்பாகவே உயிரில் பாசம் இருக்கிறது. உயிர் கடவுளைச் சார்ந்து விட்டால் பாசம் விலகிப்போகும். உலகத்தைச் சார்ந்து நின்றால் இப்பாசம் அதைப் பற்றிக் கொண்டு நிற்கும். இந்த இரண்டு தன்மையும் உயிருக்கு இருப்பதால் உயிரைச் சதசத்து என்பர். சத்+அசத்து= சதசத்து.
சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம், என்ற ஐந்து அவத்தைகட்கும் உட்பட்ட ஆன்மாக்கள் விஞ்ஞானகலர், பிரளயாகலர், சகலர் என்று மூவகைப்படும். ஆணவம் என்ற ஒரு D6Db உடையவர் விஞ்ஞானகலர். ஆணவம், கன்மம் என்ற இரு மலம் உடையவர் பிரளயாகலர். ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலம் உடையவர் சகலர். ஆன்மா இருள் மலத்தில் அழுந்திக்கிடக்கிறது. அதனால் நல்வினை, தீவினைகளை அது இயற்றுகின்றது. வினைக்கு ஈடாகப் பிறப்பு இறப்புக்களை அனுபவிக்கின்றது. உயிர்களுக்கு உணர்மை இயல் பு (சொரூபலட்சணம்), பொது இயல்பு என்று இருநிலைகள் உள்ளன. உண்மை இயல்பு சார்ந்ததன் வண்ணமாதல்; பொது இயல்பு இயல்பாகவே பாசத்தில் கட்டுண்டு கிடத்தல். சத்துவம், இராசதம், தாமதம் என்ற மூன்று குணங்கள் உயிருக்கு உண்டு. உயிர்கள்
சுயநலமுடையன.
LUFTFLb
பசுக்களைப் பிணித்துள்ளவை பாசம். பாசம்
என்றால் கட்டுவது. பாசங்கள் மூன்று. அவை ஆணவம், கன்மம், மாயை என்பன. இவை

மும்மலங்கள் என வழங்கப்பெறும். கடவுளை அடையவிடாமல் பசுவாகிய உயிர்களைக் கட்டிநின்று தடுப்பதால் தடை அல்லது பாசம் எனப்படும்.
“சான்றவர் ஆய்ந்திடத் தக்கவாம் பொருள் மூன்றுள மறையெலாம் மொழிய நின்றன ஆன்ற தொல்பதி ஆருயிர்த் தொகை வான்திகழ் தளையென வகுப்பர் அன்னவே”
(கந்தபுராணம்)
மும்மலம் நெல்லினுக்கு முளையொடு தவிடு
உமிப்போல் மம்மர் செய்து அணுவின் உண்மை வடிவினை
மறைத்துநின்று பொய்மை செய் போக பந்த போத்திருத்துவங்கள்
பண்ணும்
என்பது சிவஞான சித்தியார் பாடல்.
நெல்லிலிருந்து தோன்றும் முளையைப் போல கன்மமலம் அரிசியைப்பொருந்தி நிற்கும் தவிடுபோல மாயாமலம் உமியைப் போல ஆணவமலம்,
ஆணவமலம்
செம் பிற் களிம்பு போல அநாதியே உயிர்களுக்கு இயற்கைக்குற்றமாய் அமைந்து உள்ளது. செம்பு என்று உண்டோ அன்றே அதற்குக் களிம்பு இருப்பது போல ஆன்மா என்று உண்டோ அன்றே அதற்கு ஆணவம் உண்டு என்றவாறு ஆணவம் ஒன்றே அதன் சக்திகள் பல. ஆணவத்திற்கு உண்மை இயல்பும் பொது இயல்பும் உண்டு அறியாமையை அல்லது அஞ்ஞானத்தைச் செய்வதே (மறைக்கும் ஆற்றல்) ஆணவத்தின் உண்மை இயல்பு அதனால் ஆன்மாக்களின் அறிவு, இச்சை, செயல் இவற்றை நிகழவொட்டாது தடுத்து ஆன்மா என்பதொன்று உண்டு என்பதே தோன்றாதவாறு அவைகளை மறைத் துத்

Page 10
தாணேயாய் நிற்கும். கன்ம மலமும் மாயாமலமும் பொருந்திய போது உறவைப் பகையென்றும் பகையை உறவென்றும் இவ்லூாறே பிறவற்றையும் மாறி உணருமாறு விபரீத ஞானத்தை அதாவது திரிபுணர்வை உண்டாக்குவதே (கீழ்நோக்கிச் செலுத்தும் ஆற்றல்) ஆணவத்தினது பொது இயல்பாகும். ஆணவத்தின் மறைப்பாற்றலால் உயிர் தன்னையும் அறியாது சிவத்தையும் அறியாது - ஆணவத்தையும் அறியாது ஏனைய மலங்கட்கு மூலமாக லினி 'மூலமலம்’ என்றும் இயற்கையாகவுள்ள குற்றம் ஆதலால் “சகசமலம்' என்றும் அறியாமையே வடிவாக நிற்றலின் 'இருள் மலம்' என்றும் சொல்லப்படும். புறஇருள் பிற பொருளைக் காட்டாமல் மறைத்தாலும் தன்னை மறைக்காமல் காட்டி நிற்கும். ஆனால் இருளாகிய ஆணவ மலம் பிற பொருளைக் காட்டாமல் மறைப்பதோடு தன்னையும் காட்டாது மறைத்து நிற்கும்.
“ஒரு பொருளும் காட்டாது இருள் உருவம் காட்டும்
இரு பொருளும் காட்டாது இது”
என்பார் உமாபதி சிவாச்சாரியார்.
அறியாமை உடையவனுக்கு அவ்வறியாமை அறிவாய்த்தோன்றுதலன்றி அறியாமையாய்த் தோன்றாது. அதனால் அவனுக்கு அறிவு கொளுத்தலும் இயலாது! “அறியாமை நீங்குதற்குரிய காலம் வரும் வரை அவை நீங்கா. அக்காலம் வந்தால் நீங்கும்”
கன்மமலம்
கன்மம் என்பது தமிழில் வினை எனப்படும். ஆணவ மலத்தை நீக்குதற் பொருட்டே கன்ம மலமும் மாயா மலமும் உயிர்களுக்கு உளவாயின. எனவே இவை இரண்டும் ஆகந்துகமலம் - பின்பு வந்தமலம் எனப்படும். ஆணவ மலம் நீங்கும் காலத்து இவையும் நீங்கும். மனிதனுடைய

செயல்கள் யாவும் கன்மமே.
“முயற்சிஎடுத்துச் செய்தாலும் சில கருமங்கள் ஆவதில்லை. அப்படி ஆகாமைக்குக் காரணம் எதுவோ அதுவே வினையாகும்”
நல்ல செயல்கள் செய்தால் நல்வினை; தீய கெயல்கள் செய்தால் தீவினை. நல்வினையால் வருவது புண்ணியம்; தீய வினையால் வருவது பாவம். புண்ணியம் இன்பத்தைத் தரும். பாவம் துன்பத்தைத் தரும். புண்ணிய பாவங்களே பிறவிக்குக் காரணம்.
ஆன்மா முன் செய்த வினைப்பயனை அனுபவிக்கும் பொருட்டு பல பிறவிகள் எடுக்கின்றது. இக்கன்மம் சஞ்சிதம், பிராரப்தம், ஆகாமியம் என மூவகைப்படும். ஆன்மா பிறவிகள் தோறும் செய்த வினைகளின் நிலைக்களம் சஞ்சிதம். இப்பிறவியில் அனுபவித்தற்பொருட்டுக் கொடுக்கும் இன்ப துன்பங்கள் பிராரப்தம். மேல் பிறவிகளில் அனுபவிக்க ஈட்டும் வினைகள் ஆகாமியம்.
DTumudsolb
'மா' என்பது ஒடுங்குதல், 'யா' என்பது தோன்றுதல். எல்லாப்பொருட்களும் ஒடுங்குதற்கும் தோன்றுதற்கும் காரணமானது எதுவோ அதுவே மாயை எனப்படும். ஆன்மாவை மயங்கச் செய்வதால் மாயை எனப்பட்டது. உயிர்களுக்குரிய தனு, கரணம், புவனம், போகம் என்பன மாயையிலிருந்தே தோன்றுகின்றன என்பது சைவசித்தாந்தம். மாயை ஜடப்பொருள் ஆதலால் இதனை இயக்க ஒரு சக்தி வேண்டும் அச்சக்தியே கடவுள்.
தத்துவங்கள்
சங்கார காலத்தில் யாவும் மாயையில் ஒடுங்குகின்றன. சுத்தமாயை, அசுத்தமாயை என மாயை இரண்டு வகைப்படும். சுத்தமாயை நாதம்,

Page 11
விந்து, சாதாக்கியம், மகேசுவரம், சுத்தவித்தை என ஐந்தாகும். அசுத்தமாயையிலிருந்து கால நியதி, கலை, வித்தை, அராகம், புருடன், மாை என்ற வித்யா தத்துவங்கள். ஏழும் ஆன் தத்துவங்கள் இருபத்து நான்கும் தோன்று மாயையிலிருந்து தொண்ணுற்றாறு தத்துவங்களு தோன்றும் எனக் கூறுவர். உயிரானது ஊனக்கை பாசம் உணராப் பதியை ஞானக் கண்ணினி சிந்தைநாடி, மூர்த்தி, தலம், தீர்த்தம் முறையாக தொழுது சற்குரு நாதரை அடைந்து, ஐந்தெழுத்து உபதேசம் பெற்று அயராத அன்பொடு இடைவிடா ஒதியும், இறைப்பணி செய்தும், இறைவ6ை வணங்கியும், இறைவனின் செம்மையான மல பாதங்களைச் சேரவிடாத மும்மலங்களைக் கழுவி மாலற நேயம் மலிந்தவர் வேடத்தையும் ஆலயத்தையும் இறைவன் என்றே கண்டு கொண் வணங்க வேண்டும். இறைவன் திருவருளைப் பெற்று அவன் திருவடியில் இருக்க வேண்டும். இதுவன்றே மண்ணினில் பிறந்தார் பெறும் பயன்.
அவ்வண்ணம் நாம் வணங்கினால் இறைவ6 நம் மாயைதனை உதறி, வல்வினையைச் சுட்டு மலம்சாயஅமுக்கி, அருள்தான் எடுத்து நேயத்தால் நம்மை ஆனந்த வாரிதியில் அழுத்துவன்.
சைவசித்தாந்தம் கூறும் இக்கொள்கையின்ப இறைவன் முருகப்பெருமானின் திருவருளை பெற்றவர் அருணகிரிநாதர். இவர் தம் பாடல்களில் கூறியுள்ள சைவசித்தாந்தக் கருத்துகளை காண்போம்.
அருணகிரிநாதர்
உலக பசு பாச தொந்தத்தை நீக்கு சிவபாலனின் அருள் பெற்றுத் திருப்புகழ் பா உய்ந்த தவராஜயோகி அருணகிரியார். முருக பெருமானாலேயே நாதன்' என்று அழைக்கப்பெற்று அருணகிரிநாதர் ஆனவர். திருமுருகனின் அருள் பெற்றவர் மூவர். இறைவன் சிவபெருமான், முனிவ

t
9
y
அகத்தியர், மனிதர் அருணகிரியார் சந்தப்பாக்க
-ளுக்கு ஆதிகர்த்தாவான இவர் திருவண்ணாமலையில் கி.பி 1450ஆம் ஆண்டில் இருந்த பிரபுட்தேவ மகாராஜன் காலத்தில் வாழ்ந்தவர்.
இளமையிலேயே இவர் தேவாரம் , திருமந்திரம், திருமுருகாற்றுப்படை, திருக்குறள்
போன்ற தமிழ் நூல்களில் பழக்கம் உள்ளவர்.
உலா, கலம்பகம், கோவை, தூது, பரணி, மடல், மாலை முதலிய நூல் வகைகளிற் பயின்றவர். காமசாஸ்திர நூல்களை ஆய்ந்தவர்; புலமை வாய்ந்தவர். ஆசுகவி, சித்ரகவி, மதுரகவி, வித்தாரகவி, எனக் கவி பாடும் திறம் உடையவர். முருகப்பெருமானது "வழிவழி அடிமை” என்பன போன்ற செய்திகள் இவரது பாடல்களின் மூலம் நமக்குக் கிடைக்கின்றன.
விதிவயத்தால் பரத்தையர் வயப்பட்டுப் பொருளெல்லாம் இழந்து வறுமைப்பட்டு, பிணிகளாலும் துன்பப்பட்டு வருந்தினார். இவர் முன்செய்த தவ வலிமையால் அருணாசலேசுரரே போன்ற ஒரு தவப்பெரியார் இவர் முன் தோன்றி "அன்பனே! நீ தவநிலையில் இருந்து ஆறுமுகக் கடவுளை இடைவிடாது தியானிப்பாயாக’ என்று உபதேசித்தார்.
"அமுதமொழி கொடு தவநிலை அருளிய பெரிய குணதரர் உரைசெய்த மொழிவகை அடைவு நடைபடி பயிலவும் முயலவும் அறியாத அசடன், அறிவிலி, இழிகுலன், இவன் என இனமும் மனிதருள் அனைவரும் உரைசெய் அடியன்
இதுபடஅரிது’
என்பார் அருணகிரிப் பெருமான்.
உபதேசித்ததன் படி நடவாமையால
மனையவள் நகைத்தாள்; தாய், தமர், குலத்தில்
யாவரும் நகைத்தனர்; ஊரின் அனைவரும் நகைத்தும், இழித்தும் ஏசினர்.

Page 12
முருகவேளுக்கு இவர் வழிவழி யடிமையாதலால் முன்செய்த புண்ணியப் கைகூடும் வேளை வந்தது. இவரது மனநிலையும் மாறியது. அவனருளால் தானே அவனை வணங்க முடியும் தவறுக்கு வருந்தி பெம்மான், முருகனை பலவாறு வேண்டித் திருவண்ணாமலையில் பெரிய கோபுரத்து வடக்கு வாசலில் தவநிலையில அமர்ந்து ஆறுமுக நாமத்தை மொழிந்து மொழிந்து தியானித்தனர். பன்னாள் தவமிருந்து மூவாசைகளும் நீர்ப்பாசி போல கூடுவதும் விலகுவதுமாக இருந்தன
"மகமாயை களைந்திட வல்ல பிரான் முகம் ஆறும் மொழிந்தும் ஒழிந்திலனே அகம் ஆடை மடந்தையர் என்று அயரும் சகமாயையுள் நின்று தயங்குவதே"
என்ற மாயையின் வன்மையைப் போக்கி ஆட்கொள்ள வேண்டி அருணைத் திருக்கோயிலின் கோபுரத்திலேறித் தமது உயிரை மாய்க்கக் குதித்தார்.
“கண்ணப்பரை சிவபெருமான் நில்லு கண்ணப்ப நில்லு கண்ணப்ப என்று தம் கரத்தால் அவரது கையைப் பிடித்துத் தடுத்து நிறுத்தி ஆட்கொண்டது போல சிவகுமாரரும் தம் அன்பன் அருணகிரியாருக்கு எவ்விதச் குறையும் வராமல் தமது திருக்கரத்தால் பிடித்துத் தாங்கி 'அஞ்சற்க’ என அபயம் அளித்து மண் மீது நிறுத்திக் காத்தார். "சும்மா இரு சொல்லற என்ற மெளன உப்தேசத்தை உரைத்தருளினார்.
சிவபெருமான் திருமூலருக்கு ‘நாதன் எனினும் பட்டத்தை அளித்ததுபோல மருள்நீக்கியாரைத் ‘திருநாவுக்கரசு’ என்று பெயரிட்டு அழைத்ததுபோல, “மாணிக்க வாசக என மாணிக்கவாசகரை அழைத்ததுபோல முருகப்பெருழான் அருணகிரியாருக்கு 'நாதன் என்ற பட்டத்தை அளித்து அருணகிரிநாதா என்றழைத்தார். இத்திருவருளை “அருணகிரிநாத

எனும் அப்பனே போற்றி” என்று அருணகிரிநாதர் பாடுகிறார். குருவருள் பெற்று அருணகிரிநாதர் பலகாலம் தவநிலையில் நின்று சித்திபெற்றார்.
ஒருநாள் முருகவேள் பச்சைமயிலில் அவர் முன் தோன்றி, நம் திருப்புகழைப்பாடு' என்று புணித்தார். வேதாகமங்கட்கும் எட்டாத நின்னை கல்வியறிவு சிறிதும் இல்லாத சிறியேன் எப்படிப் பாடுவேன்? என்று அருணகிரியார் வேண்ட ‘முக்தி
எனத் தொடங்கிப் பாடு என்று கூறி, சகல கலா
ஞானங்களையும் முருகப்பெருமான் வழங்கி
அருளினார். உடனே ‘முத்தைத் தரு’ எனத் தொடங்கும் திருப்புகழைப் பாடினார் அருணகிரியார். பல அடியார்களும் இறைவனைப் பாடி அருள் பெற்றார்கள். ஆனால் அருணகிரியார் முருகனின் அருள்பெற்றுப் பாடினார். அதனால் தான் அவர் பாடிய பாடல் திருப்புகழ் ஆயிற்றோ? மீண்டும் தியானத்தில் அமர்ந்துவிட்ட அருணகிரியாரை
'வயலூருக்கு வா’ என்று அழைத்தருளினார்
இறைவன்.
இறைவன் கட்டளைப்படி வயலூர் முதலிய தலங்களுக்குச் சென்று பாடினார். பழனியில் ஜெபமாலை பெற்றார். திருச்செந்தூரில் திருநடன தரிசனம் பெற்றார். இன்றும் திருச்செந்தூரில் பெரிய விழாக்களில் ஏழாம் நாளன்று சண்முகர் புறப்பாட்டில் பின்புறம் நடராஜர் அலங்காரம் செய்து காட்டுகின்றனர். திருவேரகத்தில் பிரணவ உபகேசம் பெற்றார்.
சனியூரில் வில்லிபுத்தூரரோடு வாதிட்டு கந்தரந்தாதி'பாடி வென்றார். திருவண்ணாமலையில் சம்பந்தாண்டானை வாதில் வென்று உலகம் அறிய முருகப் பெருமானை வரவழைத்துக் காட்சி பெறச்
6
*செய்தார் இதனைத் திருப்புகழில்
‘சயிலும் எறிந்த கை வேற்கொடு மயில்மிசை வந்தெனை ஆட்கொளல் சகமறியும் படி காட்டிய குருநாதா

Page 13
என்று பாடுகிறார். திருத்தணிகையிலும் நடன தரிசனம் பெற்றார். காசி முதலிய பல தலங்கள் சென்று பாடினார். இலங்கையில் திருகோணமலை, கதிர்காமம், முதலிய தலங்களையும் கண்டு பாடினார். இவரது பாடலில ஒரு பாதி வேண்டுதலாகவும் மறுபாதி முருகனின் புகழாகவும் அமைந்திருக்கும்.
பிரபுடதேவமாராஜன் கண் ஒளிபெற வேண்டும் என்பதற்காக, அருணையில் மேற்புறத்தில் உள்ள பேய்க் கோபுரத்தில் தனது திருமேனியை வைத்துக் கிளியுருவம் கொண்டு விண்ணுலகம் சென்று பாரிஜாத மலரைக் கொணி டு வந்தார் திருவண் ணாமலையில் கிளியுருவத்துடன் வந்தமர்ந்த கோபுரம் இன்றும் கிளிக்கோபுரம் என்று வழங்கப் பெற்று வருகிறது. சம்பந்தாண்டான் அவரது மேனியை எடுத்து புதைத்துவிட்ட இடத்தில் கண்ணொளி பெற்ற பிரபுடதேவமாராஜன் ஒரு மண்டபம் கட்டித் தன் பூச்சரக் குடையை நாட்டினான். முருகப் பெருமான் திருத்தோளில் கிளி உருவில் அமர்ந்து இருந்த அருணகிரியார் கந்தரந்தாதி பாடிக் கந்தவேளைத் தெர்முதார் இத்தகைய அருணகிரிநாதரை தாயுமான சுவாமிகள் சிதம்பர சுவாமிகள், அந்தகக்கவி வீரராகவ முதலியார்,வரகவி மார்க்கசகாய தேவர் தொட்டிக்கலை சுப்பிரமணிய முனிவர், சிதம்பர முனிவர், கந்தப்ப தேசிகள், இராமலிங்க சுவாமிகள் பாம்பன் சுவாமிகள் முதலிய ஆன்றோர்கள் துதி செய்து அருள்பெற்றார்கள்.
"ஐயா! அருணகிரியப்பா உன்னைப் போல் மெய்யான ஓர் சொல் விளம்பினார் யார்? என்றும் கந்தனருள் பெற்றுக் கந்தர் அனுபூதி சொன்ன எந்தை அருள் நாடி இருக்கும் நாள் எந்நாளோ? என்று தாயுமானசுவாமிகள் அருணகிரியாரைட் போற்றுவார். முருகன் அடியார்கள் அருணகிரிட் பெருமானை வணங்கினால் முருகனருள் தானே வந்து சேரும்.

சிவயோக நெறியில் பெருஞ்சித்தி பெற்ற இவர் திருமுருகன் ஒருவனையே பாடும் நியமங்கொண்டு பரமபதி விரத நிலை இதுவே என உலகுக்குஉணர்த்தியவர். “வாக்கிற்குஅருணகிரி’ என்ற சிறப்புப்பெற்ற இவர் திருப்புகழ், திருவகுப்பு, கந்தர்அந்தாதி, கந்தர் அலங்காரம், கிந்தர் அனுபூதி, வேல் விருத்தம், மயில் விருத்தம், சேவல் விருத்தம், என்ற நூல்களைப் பாடியுள்ளார். இவரது பாடல்களில் சைவ சித்தாந்தக் கொள்கைகள் பொருந்தியிருக்கும் தன்மையைக் காண்பதே இக்கட்டுரையின் நோக்கம்.
ஐந்தும் ஆறும் ஒன்றே
அதற்கு முன் சிவபெருமான் வேறு, முருகப்பெருமான் வேறு என்று கொள்ளாமல் இருவரும் ஒருவரே எனக் கொணி டவர் அருணகிரிநாதர் என்பதை நம் உள்ளத்தில் கொள்ள வேண்டும். இவர் பதினாயிரம் பாடல்களைப் பாடியிருந்த போதிலும், தற்போது நமக்குக் கிடைத்துள்ள 1324 பாடல்களில் பல இடங்களில் முருகப்பெருமானை சிவபிரான் என்றும் அவர் நாமத்தை சிவாயநம, அரகர, சிவசிவ என்றும் தம்மை ஆட்கொண்டவர் சிவபிரான் என்றும் பாடியுள்ளார். திருநீற்றை அருளிச் சிவபெருமான் தன்னை ஆட்கொண்டதை
"சந்தித்து அரகர சிவசிவ சரண்என கும்பிட்டு இணையடி அவையென தலைமிசை தங்கப் புளசிதம் எழஇருவிழி புனல்”
"கமழ்மா இதழ்சடையார் அடியேன்துய்ர் தீர்ந்திட வெண்தழல்மா பொடி அருள்வோர்’
என்று பாடியுள்ளார்.
“எனை அடிமை கொண்டசுவாமி சதாசிவக் கடவுள்ளந்தையர்’ “எந்தன் ஆவிக்கு உதவும் சந்த்ர சேர்வைச்
சடையார்’

Page 14
என்றும் "அமுதமதை அருள் எமை ஆளும் எந்தை” என்றும் “கந்தச் சடைமுடி கனல்வடிவு அடலணி எந்தை
என்றும் பல பாடல்களில் கூறியுள்ளார்.
சிவபெருமானாகவே முருகப் பெருமானை கொண்டு ஒரு பாடல் முழுவதிலும் இவர் கூறு கருத்துக்களைக் காண்போம். மேலான குருநாதனா விளங்கிக் கருணையுடன் உபதேசிப்பவனே! என் ஒரு பாடலில் கூறுகிறார். இதற்குப் பொருளாக சிவபெருமான், சனகாதி முனிவர்க்கு சொல்லாம சொல்லி உபதேசித்ததையும் கொள்ளலாம். முருக பெருமான் சிவபெருமானுக்கு உபதேசித்ததையு கொள்ளலாம் என்றாலும் இங்கு சிவபெருமானைே அருணகிரிநாதர் கூறுகின்றார் என்பதைக் கீே வரும்செய்திகள் உறுதிப்படுத்துகின்றன எனலாம்
அருட்பதவிகளாகிய சாலோக, சாமீப, சாரூட சாயுச்சியப் பதவிகளைத் தருகின் ஞானப்பெருமாள் நீதான், இரவு பகல் அற்றதால் ஞான ஒளிவீசும் சிதாகாசப் பெருவெளியில் மேன்மையான உண்மைப் பொருள்களை விளக்கி சொல்லவல்ல அதிகாரம் கொண்டுள்ள பெருமான நீதான், முக்திச் செல்வத்தை வளர்க்கின்ற நீதியே அழிவில்லாத அழகுத் தன்மை உடையவனே ஆதிப்பொருளே! பூவுலகச் சக்கரவர்த்திகளையு ஆள்கின்ற அந்தப் பெருமாள் நீதான்; விண்ணு மணி னும் பொருந் தினவைகளாக ஐந்து பூதங்களிலும் கலந்து விளங்கித் தரிசனம் தரு “சிவாய' என்னும் முத்திப் பஞ்சாட்சரத்தி பொருளாய் விளங்கும் பெருமாள் நீதான் தனிப்பொருளாக விளங்கி இடப வாகனத்தில் ஏறுகின்ற பெருமாள் நீதான்; பார்வதியின் மணாளனாகிய பெருமாளும் நீதான், யுகம் முடிவ காலம், இறுதிகள் என்பவற்றைக் கடந்த பெருமா6 நீதான்; உறுதிநிலைபெற்ற சிவானுபூதி பெருமாளும் நீதான், யுக முடிவு காலத்திற்கு

s
9
முடிவில்லாததான நிலைபெற்ற சிவானுபூதியைத் தந்துதவும் பெருமாள் நீதான்; கருக்குழியில் இருக்கும்போதே ஊறி வருகின்ற கொடிய வினைகள் அழியும்படி, அந்தக் கொடிய வினைகளின் புணர்ச்சி வாராத வகையில் காக்கும் உண்மைப் பெருமாள் நீதான், அதாவது கருவினிலேயே தொடரும் அருவினைகள் அழிய, என்னை மாயப் பிரபஞ்ச சம்பந்தத்தில் புகுத்தாத உண்மைப்
பொருள் நீதான்; சிதம்பரமாகிய பொன்னம்பலத்தில்
பொருந்தியிருந்து எப்போதும் திருநடனம் செய்கின்ற கடவுளாகிய ஜெகஜோதிப் பெருமாளே! என்று ஒரு பாடல் முழுவதும் சிவபெருமானைப் பற்றியே பாடியுள்ளார். அப்பாடலை முழுமையும் இங்கு குறிப்பது மிகவும் பொருத்தமாக இருக்கும் என்பதால் இங்கே குறிப்பிடுகின்றேன்.
'பரம குருநாத கருணை உபதேச
பதவி தரு ஞானப் பெருமாள்காண் பகல் இரவில்லாத ஒளி வெளியில் மேன்மை
பகரும் அதிகாரப் பெருமாள்காண் திருவளரும் நீதி தினமானொக ராதி
செகபதியை ஆளப் பெருமாள்காண் செகதலமும் வானும் மருவை அவ் ஐ பூத
தெரிசன சிவாயப் பெருமாள்காணி ஒருபொருள் அதாகி அருவிடையை யூரும்
உமைதன் மணவாளப் பெருமாள்காணர் உகம்முடிவு காலம் இறுதிகள் இலாத
உறுதி அனுபூதிப் பெருமாள்காணி
கருவு தனில் ஊறும் மிகுவினைகள் மாய
கலவி புகுதா மெய்ப் பெருமாள்காண கனகசபை மேவி அனவரதம் ஆடும்
கடவுள் செகசோதிப் பெருமாளே”
இப்பாடலில் சைவசித்தாந்தக் கருத்துக்கள் முழுமையும் பொதிந்து விளங்குவதைக் காணமுடிகிறது. ஐந்தெழுத்து மந்திரத்தை மாறி மாறிச் செபித்து சிவவாக்கியக் கடலமுதைக் குடியேனோ என்று ஏங்கும் பாடலும் இக்கருத்துக்கு
10

Page 15
மேலும் அரணாக அமைகிறது. பாதிப்பாடலை மட்டும் இங்கே காண்போம்.
செய செய அருணாத் திரி சிவயநம
செய செய அருணாத் திரி மசிவயந செய செய அருணாத் திரி நமசிவய
திருமூல செய செய அருணாத் திரி யநமசிவ
செய செய அருணாத் திரி வயநமசி செய செய அருணாத் திரி சிவய நமஸ்த்து
எனமாற செய செய அருணாத் திரி தனில் விழிவைத்து
அரகர சரணாத்திரி என உருகி செய செய குரு பாக்கியம் என மருவிச்
சுடர்தாளை சிவசிவ சர ணாத் திரி செய செயெனச்
சரண் மிசைத் தொழுதேத்திய சுவை பெருகத்
திருவடி சிவ வாக்கிய கடல் அமுதைக்
குடியேனே
என்று திருவண்ணாமலைத் திருப்புகழில் பாடுகிறார்
செய செய அருணாச்சலா 'சிவயநம’; செய செய அருணாச் சலா ‘மசிவயந’; செய செய அருணாச்சலா நமசிவய'; அழகிய மூலப்பொருளே செய செய அருணாச்சலா “யநமசிவ ; செய செய அருணாச் சலா ‘வயநமசி’; செய செய அருணாச்சலா சிவய நமஸ்த்து என்று மாறிமாறி ஜெபித்து, செய செய என்று கூறி அருணாச்சலத்தில் மனத்தை வைத்து அரக திருவடிமலையே, சிவமலையே என்று தியானித்து D 661TD உருகி, செய செய என்ற ஒப்பற்ற இந்த மந்திரம் எங்கள் குரு தந்த பாக்கியட் என்று உள்ளம் பொருந்தி, இறைவனது ஒளிவீசுட் திருவடியை, சிவசிவ திருவடிமலையே சிவமலையே செயசெய எனப் புகழ்ந்து திருவடியின் மீது வீழ்ந்து தொழுது போற்றிய இன்பம் பெருக்கெடுக்க, அந்தத் திருவடியின

சிவமந்திரத்தால் பெறுகின்ற கடலமுதம் போன்ற இனிமையான அமுதத்தைப் பருகி மகிழேனோ! என்று முருகப் பெருமானை, சிவபெருமானாகவே கருதி அருணகிரிநாதர் வழிபடுகிறார். இன்னும் பல பாடல்களிலும் இவ்வாறே கூறிப் பாடுவதால் அருணகிரிநாதர் சிவபெருமானையும் முருகப் பெருமானையும் ஒன்றாகவே கருதி வழிபடுகிறார் என்பது தெற்றென விளங்குகிறது. அஞ்செழுத்தால் ஆன அரன் உருவை அவ்வெஞ்செழுத்தை ஒதி வழிபட்டுப் பாசம் நீங்கிப் பதியை அடையலாம். என்ற சித்தாந்தத்தைப் பொழிந்துள்ளார்.
அருவம் உருவமும் ஆகி அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய் பிரம்மமாய் நின்றசோதிப் பிழம்பு அதுஓர்மேனியாகிக்
கருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள்
பன்னிரண்டும் கொண்டே ஒருதிருமுருகன் வந்து ஆங்கு உதித்தனன் உலகம் Փ -սյա
என்ற கந்தபுராணப்பாடல் இறைவனே
முருகனாய் அவதாரம் செய்தான் என்பதைக் குறிக்கின்றது
சூரபன் மனிடம் துன்புற்ற தேவர்கள் சிவபெருமானிடம் அடைக்கலம் புகுந்தனர். சூரனுக்கு சிவபெருமான் நம் சக்தி ஒன்றல்லாது உங்களை யாராலும் வெல்ல முடியாது’ என்று
முன்பு அருளியதை நினைவில் கொண்டு அவரிடம்
11
வரம் கேட்டனர். இறைவா!
ஆதியும் நடுவும் ஈறும் அருவமும் உருவமும் ஒப்பும் எதுவும் வரவும் போக்கும்இன்பமும் துன்பமும்இன்றி வேதமும் கடந்து நின்ற விமல, ஓர் குமரன் தன்னைநீதரல் வேண்டும் நின்பால், நின்னையே நிகர்க்க
(கந்தபுராணம்)
என்றனர் கொழும்பு தமிழ்ச் சங்கம்

Page 16
கருணை கொண்ட சிவபெருமானும் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, புந்திக்குள் இடர் செய்யற்க, புதல்வனைத் தருதும் என்றருளினார். ஈசானம், தற்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் என்ற ஐந்து முகங்களோடு அறிஞராயோர் சிந்திக்கும் தனது தொல்லைத் (பழமையான) திருமுகமாகிய அதோமுகத்தோடு கூடி ஆறு முகங்களைக் கொண்டு ஒரு திருமுருகனாகி உலகம் உய்ய உதித்தனன். ‘ஐந்து முகத்தோடு அதோடு முகம் தந்து திருமுகங்கள் ஆறாகி என்று கந்தர் கலிவெண்பா கூறும்.
மறைகளின் முடிவால் வாக்கால் மனத்தினால்
அளக்கொணாமல் நிறைவுடன் யாண்டுமாகி நின்றிடும் நிமல மூர்த்தி அறுமுக உருவாய்த் தோன்றி அருளொடு
சரவணத்தில் வெறிகமழ் கமலப் போதில் விற்றிருந் தருளினான்.
என்று கந்தபுராணத்தில் கச்சியப்பர் கூறுகிறார்.
'அருபரத் தொருவன் அவனியில் வந்து குருபரனாகி அருளிய பெருமையும்
என்பார் மாணிக்கவாசர்.
ஆமே பிரான் முகம் ஐந்தொடும் ஆருயிர் ஆமே பிரானுக்கு அதோமுகம் ஆறுளது
என்கிறார் திருமூலர்.
இறைவி - உமையிடம், இறைவனே கூறுகின்ற கந்தபுராணப் பாடல்கள் சிறந்த அகச்சான்றுகளாக அமைகின்றன.
"நன்முகம் இருமூன்று உணர்டால நமக்கு அவைதாமே கந்தன் தன்முகம் ஆகிஉற்ற தாரகப் பிரம்மமாக முன் மொழிகன்ற நந்தம் மூவிரண்டெழுத்தும் ஒன்றாய் உன்மகன் நாமத்து

ஓராறு எழுத்தென உற்ற அன்றே". "ஆதலின் நமதுசக்தி அறுமுகன், அவனும் யாமும் பேதகம் அன்றால் நம்போல் பிரிவிலன் யாண்டும் நின்றான்”
ஆக பரஞ்சுடர் முதல்வனையே கங்கைதன் புதல்வன் என்றும், கார்த்திகை மைந்தன் என்றும், *செங்கண்மால்மருகன் என்றும், சேனையின் செல்வன் என்றும் கூறுகின்றோம் என்பதால் ஐமுகச் சிவமே அறுமுகச் சிவமாகியது என்பது பெறப்படுகின்றது. “சிவாயநம என்று நீறணிந்தேன்’ என்றும் “ஆறுமுகம் என்று ஆறுமுறை சொல்லி விபூதி அணிந்தேன்’ என்றும் ஆன்றோர்கள் உரைத்திருப்பதும் இது கருதியே எனலாம்.
அருணகிரிநாதரைப் பின்பற்றியே பாம்பன் சுவாமிகளும், சிவபெருமானும் முருகப்பெருமானும் ஒருவரே எனக் கொண்டு வழிபடுவார். அவர்தம் வழிபாட்டை ஏக தெய்வ வழிபாடு என்பார். “ஒரே தெய்வ வழிபாடு அந்த ஒரே தெய்வம் முருகப் பெருமான். முருகப் பெருமானும் சிவபெருமானும் வேறல்லர் ஒருவரே” என்பதே அவரது கொள்கை. “சருவ அண்ட பிண்டசராசங்கட்கும் ஆதி பிதாவாய் வயங்கும் ஈசன் ஒருவன் என்றும் நித்தியனாய் உளன். அவன் அனாதி எனப்படுவன், ப்ரிசுத்தம் உடையவன், பரிசுத்த ஞானம் உடையவன், வேத ஆகமாதி நூல்களால் துதிக்கப்பட்டவன், சமானரகிதன் சத்து சித்து ஆனந்தம் எனும் மூன்றையும் ஒருங்கே பொருந்தி நாம ரூப பேதங்களாயுள்ள சமத்த சராசரங்களிலும் சச்சிதானந்த சொரூபம் என நிறைந்த பொருளும் அவனே. அவனே பரமசிவம் என்னும் பரமான்மா பிரமம் அவனே பதி. அவனே குகன்’ என்றும்
“பிரம்மா விஷ்ணு உருத்திரன் மகேசுவரன் முதலிய நான்கு மேனியும் உருவம் எனவும் சதாசிவமேனி உருவமும் அருவமும் எனவும் இவ்வைந்திற்கும் மேலதாயுள்ள குடிலைப்பரம் அருவம் எனவும் விளம்பப்படும். அருவம்
12

Page 17
இரகசியமாம். இந்த ஆறும் பிரசன்னமாக நிற்கும் மூர்த்தியை அறுமுகச் சிவன் எனவும் அருவம் அருவமேயாக மற்ற ஐந்தோடும் பிரசன்னமாய் நிற்கும் மூர்த்தியை ஐமுகச் சிவன் எனவும் கூறலாம். ஒருவனுக்கு விழிகள் இரண்டாயினும் அவை காண் தொழிலின் உடங்கியைந்து ஒன்றாய்க் கண் எனவே நிற்குமாறு போல அவ்விரு மூர்த்திகளும் ஒரு சிவன் எனவே நிற்றல் ஈங்கு உணரக் கிடக்கும் உண்மை என்க ’ என்றும் தம்முடைய சிவஞான தீபம் என்ற நூலில் பாம்பன் சுவாமிகள் கூறியுள்ளார்.
'திருமால் அயன் எண்திசை நின்றுளரும் செருவானவரும் சிவ சங்கரனார் உருவென்று உணர்வோர் அறிவாய் ஒளிரும் ஒருகந்தபிரான் உயிர்நாயகனே'
என்ற பாடலும் இதற்கு அரணாக அமைகிறது.
பிற மதத்தினர் ஒரு தெய்வ வழிபாட்டு நெறியில் நிற்றல் போல இந்துக்களும் பரம்பொருளாம் குமாரபரமேஸ்வரன் ஒருவனையே தொழும் நெறியாகிய ஏக தெய்வ வழிபாட்டு’ முறையைக் கைக் கொண்டு பல தெய்வ வழிபாட்டினை விட்டொழிக்க வேண்டும் என்பதே பாம்பன் சுவாமிகளின் சித்தாந்தம். ஆதலால் தமது பாடல்களில் இக் கருத்தையே பொதிந்து வைத்துள்ளதோடு, முருகனை சிவனாகவே அழைத்தும் பாடியுள்ளார்.
经兹
.பரதெய்வமே! அருணகிரிபுகழ் அண்ணலே! அளிசெறிந்து அறை வளம் பெருகு திருமலை மிசை அமர்ந்த சிவகுக சம்புவே”
சிவமயமான குகப்பெருமானே! என்று தமது 'திருமலை’ பற்றிய பாடல்களில் ஒவ்வொரு பாடலிலும் ஈற்றடியாக வைத்து அழைக்கிறார். ‘ஒருவனே தேவன்’ என்ற பாடலும் இங்கே நினைவிற்கு வருகிறது.
சிவசம்பந்தம் உட்ையது சைவம். இதன்

கொள்கை சைவசித்தாந்தம் என்பதை முன்பே அறிந்தோம். இங்கே முருகன் பற்றிப் பாடியுள்ள அருணகிரிநாதரின் TL 65 களில 60 F 6 சித்தாந்தத்தை எப்படிக் காணமுடியும் முருகன் நெறி கெளமார நெறியாயிற்றே என்றொருவர் வினவலாம். இவ்வினாவிற்கு விடை காண்பது மிகவும் இன்றியமையாதது. பாம்பன் சுவாமிகளின் திருவேரகப் பாடல் இங்கே தக்க விடையாகவும் சான்றாகவும் அமைகிறது.
"பலநிறக் கோக்களின் பால்கள் எல்லாம் நிறப்
பண்பினில் ஏகமாகப் பார்க்கின்றது ஏய்ப்ப நல்சைவத்தன் மூர்த்திகள்
பலர் உளார் எனினும் உண்மை கலையா ஓர் நீர்மையை உணர்ந்தும் உன்
கிருபையைக்கெளமார சமயம் என்னாக் கழறுவார் பேதப்படுத்தி இங்கு அப்படிக் களறினூஉம் என்ன சைவ நிலைகுறையுமோ ஐந்தும் ஆறு(ம்) ஒன்று
என்றுஉள்ள நேர்குறையுமோ சொன்னவா நிஜநிலையில் என்னை வாழ்விக்க வருதெய்வமே
நிபிடஇன்பப் பிழம்பே மெலியாத தத்வ சிவ ஞானிகள் அகம்தோறும்
மிளிர் பரம்ஜோதி வடிவே வீரம்உள தேவர் தவமே உறுவர் தொழுததிரு
ஏரகம் அமர்ந்த வேளே’
(நிஜநிலை ஆனந்த நிலை நிபிடஇன்பம் - செறிந்து கட்டி போன்று இறுகியுள்ள பேரின்பம்) (முதல் மண்டலம் திருவேரகம் பற்றிய எட்டாவது பாடல்)
பல வண்ணநிறமுடைய பசுக்கள் தரும் பால் அனைத்தும் வெண்மை நிறம் என்ற அளவில் ஒரே தன்மை தானே. அதுபோல நல்ல சைவ சமயக் கோட்பாட்டின்படி வடிவுடன் விளங்கும் தெய்வங்கள் பலவாக இருந்தாலும் அவ்வடிவங்கள் அனைத்திலும் சிதையாமல் குறையாமல் பூரணமாக
13

Page 18
விளங்கும் உனது தனித்தன்மையை உணர்ந்திருந்தும் ஒருசிலர் உனது கருணைச் செயலைக் கருதித் தனியே கெளமார சமயம் என்று பேதப்படுத்துகின்றனரே! இதனால் சைவத்தின் நிலை குறையுமோ? ஐந்தும் ஆறும் ஒன்று என்ற ஒழுங்குதான் குறையுமோ? குறையாது. பேரானந்த நிலையில் என்னை வாழ்விக்க வரும் தெய்வமே! மெலியாத தத்துவ சிவஞானிகளின் அகம்தோறும் மிளிர்கின்ற பரஞ்சோதி வடிவே திருவேரகம் அமர்ந்த செவ்வேளே! என்று ரீமத் பாம்பன் சுவாமிகள் நல்லதொரு விளக்கத்தைத் தந்து நிறுவுகிறார். சிவனும் முருகனும் ஒன்றே என்று கொண்டமையால் தான் அருணகிரியாரின் பாடல்கள் முழுவதிலும் சைவ சித்தாந்தக் கருத்துகள் பரந்து காணக் கிடைக்கின்றன.
அருணகிரிநாதரினி பாடலி களில சைவசித்தாந்தம்
அருணகிரியாரின் பாடல்களில் ஒருசில பாடல்களே சைவ சித்தாந்தக் கருத்து இல்லாத பாடல்கள். மற்றெல்லாவற்றிலும் சைவ சித்தாந்தக் கருத்துகளைப் காணலாம். இன்னும் சொல்லப் போனால் குறைந்த வரிகள் கொண்ட சிறிய பாடலிலோ நிறைந்த வரிகள் கொண்ட பெரிய பாடலிலோ எதுவாயினும் சரியே. அதில் குறைந்தது ஒரே ஒரு சொல்லிலாவது சைவ சித்தாந்தக் கருத்தைக் கூறிவிடுவார்.
"பசுபதி சிவாக்யம் அருள்வோனே’ என்பது போலப் பல இடங்களில் இவ்வாறு வருவனவற்றைக்
காணலாம். பரந்து கிடக்கின்ற அனைத்தையும்
இங்கே கூறிவிட இயலாது. எனவே கடலுள் நாய் நக்கியாங்கு மிகச் சிலவற்றையே இங்குக்
காண்போம்.
பிறப்பு இறப்பு அற்றவன்
இறைவன் பிறப்பு இறப்பு இல்லாதவன்
4,

என்பது சைவசித்தாந்தக் கொள்கை. இறைவன் சிவபெருமான் பிறப்பு இறப்பு இல்லாதவர் என்பதைப் பல இடங்களில் அருணகிரி கூறுகிறார். எடுத்துக் காட்டாக ஒன்றைக் காணலாம்.
"கடற்செகத் தடக்கி' என்ற திருப்புகழ் பாடலில்.
'பிறப்பிலிக்கு உணர்த்து சித்த உற்ற நெல்
பெருக்குவைப் பெருக்கும் மெய்த் திருத்தணிப் பெருமாளே”
சிவபெருமான் பிறப்பில்லாதவர் என்று கூறுகிறார். பிறப்பு இல்லாதபோது இறப்பும் இல்லை. இறைவன் என்றும் உள்ள பொருள்.
பதி பசு பாசம் எனப்பகர் மூன்றில் பதியைப் போல் பசு பாசம் அநாதி
என்பது திருமந்திரம்.
எல்லா பிறப்பும் 'இறப்பும் இயற் பாவலர்தம் சொல்லால் தெளிந்தேம் நம் சோணேசர் - இல்லிற் பிறந்த கதையும் கேளேம் பேருலகில் வாழ்ந்து உண்டு இறந்த கதையும் கேட்டிலேம்
என்று அருணகிரி அந்தாதிப் பாடல் கூறுகிறது.
"பிறவா யாக்கைப் பெரியோன்’
என்று சிலப்பதிகாரம் கூறும்.
"பெம்மான் முருகன் பிறவான் இறவான்"
என்பது கந்தரனுபூதி,
"யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வமாகி
ஆங்கே மாதொரு பாகனார்தாம் வருவர் மற்றத் தெய்வங்கள் வேதனைப்படும் இறக்கும் பிறக்கும் மேல்வினையும் 6)Ժսմայլք ஆதனான் இவை இலாதான் அறிந்து
அருள்செய்வனன்றே" என்பது சித்தியார் பாடல்.

Page 19
“நான்கு வகையான யோனியுள்(அண்டசப் சுவேதசம் உற்பிச்சம் சராயுசம்) ஒரு. யோனி வாய்ப்பட்டுப் பிறப்பன யாவையோ அவையெல்லாப் உயிர்வர்க்கம்.அவ்வாறு பிறத்தல் இல்லது எதுவே அதுவே பதிப் பொருள் - என்ற இந்த ஒன்றேமற்ற செயல்களால் வேற்றுமை அறியவராத அந்த இரண்டிற்கும் தம்முள் வேற்றுமை அறிய நிற்பதாகலின் மற்ற தேவரெல்லாம் அங்ங்ணப பிறந்து இறத்தல் கேட்கப்படுதலானும் சிவனுக்கு அஃது உணர் G என்பது யாணி டானும கேட்கப்படாமையானும் சிவன் ஒருவனே வினைவயத்தன் ஆதலன்றி அந்தந்த தேவரிடமாக நின்று உயிர்கட்கு அவற்றை அறிந்து கூட்ட்வல்லன் ஏனைத்தேவர் அது செய்யமாட்டார் என்பது தானே போதரும்'
என்று சிவஞானமுனிவர் தமது உரையில் இறைவன் பிறப்பு இறப்பு இல்லாதவன் என்று தெளிவுபெறச் கூறுகிறார்.
"பிறப்பில் பெருமானைப் பின்தாழ் சடையானை
மறப்பில்லார் கண்டீர் மையல் தீர்வாரே'
என்று திருஞானசம்பந்தரும் கூறுவார். "ஆதியு அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதி” என்பா மாணிக்கவாசகர்.
சிவருபம்
ஒரு நாமம் ஓர் உருவம் இல்லாதவன் இறைவன் அத்தகைய இறைவனுக்கு உருவத்தை கூறுகிறார் அருணகிரியார். "உடலினூடு போய்மீளும் உயிரினூடு மாயாத * உணர்வினூடு வானூடு முதுதியூடு உலவையூடு நீருடு புவியினூடு வாதாடும்
ஒருவரோடும் மேவாத தனிஞானச் சுடரினுாடு நால்வேத முடியினூடும் ஊடாடு
துரிய வாபுலாதித சிவரூபம்’
உடலினுள்ளும் உயிரினுள்ளும் உணர்சசயுள்ளு

ஆகாயம், தீ, காற்று, நீர், நிலம் ஆகியவற்றுள்ளும் ஒளியினுள்ளும் நால்வேதத்தின் உச்சியுள்ளும் யோகியருள்ளும் துன்பங்கடந்த நிலையில் உள்ளதுமான சிவச்சொரூபம். இதை நானடைய வழி சொல் என்று வேண்டுகிறார். இறைவனுக்குப் பொது இயல்பு, சிறப்பியல்பு என இரண்டு இயல்புகளைக் கூறுவர். சிறப்பியல்பு - சச்சிதானந்தமாக நிற்றல். சத்து + சித்து+ ஆனந்தம். இதனை சிவாகமங்கள் 'எண்குணம் என்று கூறுகின்றன.
எண் குணமாவன
1.தன்வய்த்தனாதல்
2.தூய உடம்பினன் ஆதல்
3.இயல்பாகவே பாசம் இன்மை சத்து 4.முடிவில்லாத ஆற்றல் உடைமை 5.இயற்கை உணர்வு உடைமை
6.முற்றுணர்வு 96.06) D சித்து
7.பேரருள் உடைமை
8.வரம்பில் இன்பம் உட்டைமை ஆனந்தம்
இவற்றுள் முதல் நான்கும் - சத்து அடுத்த
மூன்று - சித்து இறுதியாக உள்ள ஒன்று ஆனந்தம்
இவ்வாறிருத்தல் இறைவனது சிறப்பியல்பு.
பொதுவியல்பு
பொதுவியல்பாவது இரண்டு விதமாக
உள்ளது. ஒன்று - தன் அருளையே திருமேனியாகக்
கொண்டு பல்வேறு வடிவங்களைக் கொள்வது. மற்றொன்று. உயிர்களோடும் உலகோடும் (உயிர் ஐம்பூதம் சூரியன் சந்திரன்) ஒன்றாயும் வேறாயும் உடனாயும் ஒரே நேரத்தில் நிற்றல். இறைவன் இவ்வாறு பொது இயல்பில் நிற்கக் காரணம் உயிர்கள் மலநீக்கம் பெற்று இறை இயல்பைப் பெறவேண்டும் என்னும் பேரருளே ஆகும்.
ஒன்றாய் நிற்றல்
உடலும் உயிரும் போல இறைவன் ஒன்றாய்
நிற்கிறான். உயிர் உடலோடு கலந்து ஒன்றாய்
1S

Page 20
நின்றால் அன்றி உடல் நிலைபெறாது. அதுபோல இறைவன் உயிரோடு கலந்து நின்றாலன்றி உயிர் நிலைபெறாது. எனவே உயிர் நிலைபெறும் பொருட்டு இறைவன் உயிரோடு ஒன்றாய்க் கலந்து நிற்கின்றான். தனது வியாபகப் பெருவெளியில் உயிர்கள் தங்கும் பொருட்டு அவற்றிற்கு இடம் கொடுத்து நிற்பதாகும். ஒரு தாய் தன் குழந்தைக்கு மடியில் இடங்கொடுத்திருப்பதைப் போன்றது. இப்படிக் கலந்திருப்பது இறைவன் ஒருவனாலேயே (ՄMգԱյլb.
வேறாய் நிற்றல்
கண்ணும் சூரியனும் போல இறைவன வேறாய் நிற்கின்றான். பொருளின் தன்மையால் கண்ணும் சூரியனும் வேறு வேறு பொருள்கள். அவ்வாறே இறைவனும் உயிரும் வேறு வேறு. ஆயினும் சூரியனின் உதவியின்றிக் கண் எதையும் காண முடியாது போல இறைவனின் உதவியின்றி உயிர் எதனையும் அறிய முடியாது. எனவே உயிரினின்றும் வேறாக இறைவன் இருக்கிறான்.
இறைவன் உயிரோடு ஒன்றாய் மட்டும் நின்றால் உயிர்கள் இறைவனின் முழுநிறைவில் கட்டுற்றே நிற்கும். அதனால் உயிருக்கு எந்த ஒரு பயனும் இல்லை.
அறிவிக்க அறியும் இயல்புடைய உயிருக்கு அறிவிக்கும் பொருட்டு இறைவன் உயிர்களினின்றும் வேறாக நிற்க வேண்டுவது இன்றியமையாதது
உடனாய் நிற்றல்
கண் ஒளியும் ஆன்மபோதமும் போல இறைவன் s உயிர்களோடு உடனாயும் அத்துவிதமாய்ப் பிரிப்பின்றி நிற்கின்றான். பொருள்களைக் காணும் திறன் கண்ணுக்கு இயல்பாகவே உள்ளது. என்றாலும் உயிரின் அறிவு அக்கண்ணுடன் கூடிநின்று அக்கண்ணைச் செலுத்தினாலன்றி கண எதனையும் காண முடியாது. அவ்வாறே உயிருக்கு
1

எதையும் அறியும் அறிவு இயல்பாகவே உள்ளது. எதையும் விரும்பும் விருப்பம் இயல்பாகவே உள்ளது. எதையும் செய்யும் ஆற்றல் இயல்பாகவே உள்ளது. ஆனாலும் இறைவன் உயிருடன் கூடி நின்று உயிரைச் செலுத்தினாலன்றி உயிரின் அறிவும் விருப்பமும் செயலும் தொழிற்படாக
எனவே கணஒளயும் ஆன்மபோதமும் போல உயிருக்கு உயிராதல் தன்மையால் இறைவன் உயிர்களோடு உடனாயும் அத்துவிதமாய்ப் பிரிப்பின்றி நிற்கின்றான். -
அறிவிக்க அறியும் உயிர்களின் அறிவு விருப்பம் செயல்களுக்கேற்ப இறைவன் அவற்றை இயக்கினாலன்றி தாமே இயங்கும் திறன் உயிர்க்கு இல்லை. எனவே இறைவன் உடனாய் நின்றாலன்றி உயிர் எதையும் அனுபவிக்க முடியாது.
இது ஒரு மாணவன் எண்ணிக்கையை அறிந்துகொள்ள வேண்டி ஆசிரியர் தானும் விரல் விட்டு எண்ணிக் காட்டி மாணவனை எண்ணும்படி செய்வது போல் ஆகும்.
மூன்றுமாய் நிற்றல்
ஆக ஒன்றாய் நிற்றல் உயிர்களும் உலகமும் நிலைத்து நிற்கும் பொருட்டும் வேறாய் நிற்றல் - உயிர்களுக்கு அறிவிக்கும் பொருட்டும் உலகத்தை இயக்கும் பொருட்டும் உடனாய் நிற்றல் உயிர்களின் அறிவு இச்சை செயல்களைக் கொண்டு அவை விரும்பியவாறே அனுபவிக்கும் பொருட்டும் உலகம் இயங்கும் பொருட்டும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு மூன்றுமாய் நிற்றலன்றி ஒன்றாய் மட்டுமோ வேறாய் மட்டுமோ உடனாய் மட்டுமோ இறைவன் நிற்பானாயின் உயிருக்கு யாதொரு பயனும் இல்லை. இதுவே சைவ சித்தாந்தத்தின் அத்துவிதக்
கொள்கையாம்.
இறைவன் உயிர்களுக்கு இவ்வாறு நின்று

Page 21
உதவி வரும் பெருங்கருணைத் திறத்தை சிவஞான சுவாமிகள் பதின்மூன்று உவமைகளைக் காட்ப ஓர் உரைப்பாயிரம் அருளியிருக்கின்றார்.
“பண்-இசை வெம்பரிதி மதி தில . தயிலம்
தி. இநம்பு பாணி - உப்பு விண் - அநிலம் உடல் - உயிர் நீர் - நிழல்
உச்சிப் - பளிங்கு பகல் - விளக்கு பால் - நீ கண் - இரவி உணர்வு - ஒளிபோல்
பிரிவரிய அத்துவிதக் கலவி காட்டித் தண்ணளி வைத்து எனை ஆண்டதுறைசை நமச்சிவாய குரு சரணம் போற்றி"
என்பதே அப்பாடல்.
அருணகிரிநாதர் மேலும் ஒரு திருப்புகழிலி இறைவனுக்குச் சொரூபம் கூறுகிறார்.
“ஐம்பூதமும் அறுசமயமும் மந்திரமுப் வேதமும் புராணங்களும் கலைகளும் ஐம்பத்தொரு விதமான அட்சரங்களும் பல உருவங்களை உடைய தேவர்கள் முதலானவர்களும் இயங்கு பொருள் இயங்காத பொருள் ஆனவையும் பிரமனு திருமாலும் உருத்திரனும் சந்திரனும் சூரியனு அசபை என்னும் அம்ச மந்திரமும் விந்துவும் நாதமும் இவையெல்லாம் கலந்த ஒன்றாய வடிவே அந்தப் பரம்பொருளின் சொரூபம் எனப் பாவித்து இருத்தலே சிவயோகம்’
மும்மலங்களும் நீங்கப்பெற்று குருவழியாய உபதேசம் பெற்று அதன்படி பொருந்தும் நெறியை பெறுவேனோ! என்று பாடுகிறார். அசபா மந்திரம் அவன் நான் எனப்படும் சோகம், சோகம் பாவனை என்பது சீவான்மாவும் பரமான்மாவும் ஒன்று என்று பாவித்தல். வாதினை அடர்ந்த என்னும் திருப்புக! பாடலில் “அம்ச சோகமது தந்து என்னை ஆள்வாய்” என்று பாடுகிறார். குரு உபதேச பெற்றே அவர் உபதேசப்படி நின்று உய்வு பெற6 வேண்டும்.

b
D
குருவடிவாகித் திருவடி சூட்டல்
"ஜம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்தெனத்
தம்முதல் குருவுமாய் தவத்தினில் உணர்த்தவிட்டு
அந்நியம் இன்மையின் அரண்கழல் செலுமே”
என்பது சிவஞானபோதத்தின் எட்டாம் சூத்திரம்,
ஐம்புல வேடர் பற்றி
"வேடரென நின்ற ஐம்புலன்
நாலு கரணங்களின் தொழில் வேறுபட நின்று உணர்ந்து
அருள் பெறுமாறென் வேடை கெட வந்து சிந்தனை
மாயை அற வென்று துன்றிய வேதமுடிவின் பரம்பொருள் அருள்வாயே" (வேடை - ஆசை) என்றும்
“யான் என்பதும் எனது என்பது அற்றால்
திருவடிநீழல் தான். அற்றது பற்றெனில் உற்றது. வீடு. பாசவிடும் சிவப்பேறும் அடைதலே மனிதப் பிறவியின் பயன்.
"பொதி காய்க் குடிலிடை ஓரைந்து வேடர்
ஐம்புல அடவியில் ஓடும் துர்ஆசை வஞ்சகர் கொடியவர் மா பஞ்ச பாதகம் செய அதனாலே சுருதி புராணங்கள் ஆகமம் பகர் சரியை கிரியா
அண்டர் பூஜை வந்தனை துதியோடு நாடும் தியானம் ஒன்றையும் முயலாதே, கபடமதாய் வம்புமால் கொளுந்திய திமிரரொடே பந்தமாய்: வருந்திய துரிசற ஆனந்த வீடு கண்டிட அருள்வாயே” என்றும் கூறுகிறார். "ஆடைகூர் பக்தன் என்மனோபத்மமான பூவைத்து"
என்ற பாடலில் ஒன்பதாம் சூத்திரம் கூறும்
ஞானபூசை (அகவழிபாடு) பற்றிக் கூறியுள்ளார்.
குரு லிங்க சங்கம வழிபாடே சைவ
சித்தாந்த நெறி. அருபரத்தொருவன் ஆகிய இறைவனே அவனியில் வந்து மானுடச்
17

Page 22
சட்டைதாங்கி குருவாகி வந்து அருள்கின்றான்.
உயிர்கள் அறிவுள்ள சித்துப்பொருள். இறைவனை அறிவுள்ள அவ்வுயிர்கள் தான் விளக்கம் காண இயலும், ஆனால் அறிவுள்ள உயிர்கள் அறிவற்ற உடலில் இருப்பதால் உடலையே தான் என்று கருதிக்கொண்டு ஐம்புலன்கள் என்ற வேடர் சேரியிலே இருந்து உழல்கின்றன. உயிர்களின் இந்த வருத்தத்தைப் போக்குவதற்கு இறைவன் திருவருள்குருவடிவில் வந்து விளக்கிக் கூறி அவ்வேடரிடத்திலிருந்து பிரித்துத் தானாக்கி பேணி பாச நாசம் செய்கிறார்.
。 இறைவனுக்கு ஓர் உருவமும் இல்லை. ஓர்
நாமமும் இல்லை.ஒரு நாமம் ஓர் உருவம் ஒன்றும் இல்லார்க்கு ஆயிரம் திருநாமம் பாடி வழிபடுகிறோம். உருவம் இல்லாப் பொருளை உயிர்கள் மனதால் நினைக்கவும் இயலாது. எனவே அவ்வுயிர்கள் தன்னை நினைந்தும் வாழ்த்தியும் வணங்கியும் உய்ய வேண்டும் என்ற கருணையால் இறைவன் பல்வேறு திருமேனிகளைக் கொள்கிறான். தானே தன் சக்தியால் தனது இச்சைப்படி உருவம்
கொள்வான். உருவமும் அருவமும் அருவுருவமும்
என்று மூவகை திருமேனிகள் இறைவனுக்கு உள்ளன என்பர். மேற்கூறிய ஐந்து பூதம் முதலானவாகவும் இறைவன் விளங்குகின்றான்.
| . "புவிமுதல் ஐம்பூதமாய்ப் புலன் ஐந்தாய்:
நிலன் ஐந்தாய்க் கரணம் நான்காய் அவையவை சேர் பயனுருவாய் அல்லவுரு
வாய் நின்றான்."
Slössl Lib
"ஈறாய் முதல் ஒன்றாய் இருபெண் ஆண் குண்ம் மூன்றாய் மாறா மறை நான்காய் வருபூதம் அவை ஐந்தாய் ஆறாய் சுவை ஏழோசையோடு எட்டுச்சுவை தானாய் வேறாய் உடன் ஆனான்"
என்றும் திருஞானசம்பந்தர் சுறுகிறார்.
 
 

"இருநிலனாய்த் தியாகி நீரும் ஆகி
இயமானனாய் எறியும் காற்றும் ஆ=
அருநிலைய திங்களாய் ஞாயிறாகி
ஆகாசமாய் அட்டமூர்த்தி ஆகிப்
பெருநலமும் குற்றமும் பெண்ணும் ஆணும் பிறர் உருவும் தம் உருவும் தாமே நெருநலையாய் இன்றாகி நாளை ஆகி
நிமிர்புன்சபை அடிகள் நின்றவ
என்பார் அப்பர் சுவாமிகள்.
"பூதங்கள் ஐந்தாகி புலனாகிப் பொரு
பேதங்கள் அனைத்தும் ஆப் பேதமின்
பெருவ
"வானகி மண்ணாகி வளியாகி ஒளி ஊனாகி உயிராகி விளங்குபவன்"
என்றும் மாணிக்கவாசகள் கூறுகிறார்.
உலகம் ஒருநெறியில வழுவ நடந்தாலன்றி உயிர்கள் தமது வாழ்க்கை இனிது நடத்த இயலாது. ஆதலால் ஒவ்=ெ அணுவிலும் கலந்து நின்று அவை உயிர்களு= பயனளித்து நிற்குமாறு செய்பவன் இறை உயிர்களுக்குத் துணை செய்யும் உ கரணமும் ஒய்ந்து அயரும் போது உடனி வேண்டும் அறிவினை உதவியருளுவன் சிவ
"உரைசேரும் எண்பத்து நான்கு
யோனிபேதம் நிரைசேரப் படைத்து அவ உயிருக்குயிராய் அங்கங்கே நின்றான்" இறை
6n
"இருவினை அஞ்ச வருவினை கெ இருள்பிணி துஞ்ச மலமாய
எனதிடர் மங்க உனதருள் பொங்க
இசைகொடு துங்கப் புகழ்க
திருமுக சந்த்ர முருக கடம்ப
8

Page 23
சிவசுக கந்த குகவேல சிவசிவ என்று தெளிவுறு நெஞ்சு
திகழ நடம்செய் கழல்தாராய்"
பெரிய எனது பழைய வினையாகிய சிதவினையும் பிரார்த்தவினையும் ப்படும்படியும் வந்து இனிதாக்க வேண்டிய காமிய வினையும் நாங்கள் வரவில்லை என்று தாடி விலகவும் இருண்ட நோய்வகைகள்
து மடியவும் ஆணவம், கன்மம், மாயை ன்னும் மும்மலங்களும் அழிந்தொழியவும் என் த்தமெல்லாம் குறையவும் உன் திருவருள் ம்பட்டுப் பெருகவும் குளிர்ந்த சந்திரன் போன்ற கிய முகத்தை உடையவனே! முருகா! கடம்பா மாரா கந்தா குகா வேலா! சிவசிவ என்று உன் திருப்புகழை ஓதி அதனால் தெளிவு பற்ற எனது நெஞ்சு பொலிவு பெற நடனம் புரியும் னது திருவடிகளை எனக்குத் தந்தருளுக ள்கின்றார் அருணகிரிப்பெருமான்.
நலவினை தீவினைகள் துTலமாகச் யல்படும் போது ஆகாமிய வினை என்றும் க்குமமாய் நிலைபெற்று நிற்கும் போது ஆசிதவினை என்றும் இன்ப துன்பங்களாய் வந்து
சஞ்சிதவினை- பழவினையுள் அனுபவித்தது க எஞ்சி நிற்பது. இது குருவின் திருநோக்கால் ழிந்து போகும். பிரார்த்தம் - இம்மையில் னளிக்கும் பழவினை தனுவினெடுக்கும் பிரார்த்தம் று விநாயகபுராணம் கூறும். ஆகாமியம் இனி றுப்பிறப்பில் வரும் புண்ணிய பாவங்கள்
ல்வரும் ஆகாமியமும் எனத் திருக்காளத்திப்
தம் எல்லாம் ஞானத்தழல்
சுட்டுவெண்ணிறாக்கும்
ஞ்சில் ஆகாமியந்தான் கிட்டாமல்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விட்டுப்போகும் விஞ்சின பிராரத்வத்தின் வினை அனுபவித்துத்
திரும்"
என்பது கைவல்யநவநீதம்
'அல்லல் எண்செய்யும் அருவினை என்செய்யும்
தொல்லை வல்வினைத் தொந்தந் தர்ன் எண்செய்யும் தில்லை மாநகர் சிற்றம்பலவனார்க்கே எல்லை இல்லதோர் அடிமை பூண்டேனுக்கே"
என்று திருநாவுக்கரசர் பாடுகிறார்.
அல்லல் என்பது ஆகாமியம் என்பதையும் அருவினை என்பது பிரார்த்தம் என்பதையும் தொல்லை வல்வினை என்பது சஞ்சிதம் என்பதையும் குறிக்கின்றது.
தில்லை மாநகர்ச் சிற்றம்பலத்திலே எழுந்தருளியிருக்கும் எம் பெருமான் மேல் எல்லையில்லாக் காதல் கொண்ட அடியவருக்கு மேற்கண்ட மூவினைகளால் வரும் துன்பங்கள் என்ன செய்து விடமுடியும்? ஏதும் செய்யாது என்பது பொருள். -
இருவினைப் பிறவிக் கடலில்மூழ்கி இடர்கள் பட்டு அலையாத வாழ்வு திருவருட் கருணையால் மட்டுமே கிடைக்கும்' 'என்னுடைய திறத்தினால் இறப்பதற்கும் பிறப்பதற்கும் என் திறத்தினால் நான் துதிப்பதற்கும் என் கண் கொண்டு ஒருவரைப் பார்த்து நான் அழைப்பதற்கும் என் கால் கொண்டு நான் நடப்பதற்கும் என் திறம் கொண்டு நான் ஓரிடத்தில் இருப்பதற்கும் போகங்களை நான் அனுபவித்துச் சுகிப்பதற்கும் இதுவேண்டும் அது
வேண்டும் என்று நான் ஆசைப்படுவதற்கும் கிடைக்காதபோது துன்பப்பட்டு மெலிவதற்கும்
அல்லது பட்ட துன்பம் இது போதும் என அலுத்துக் கொள்வதற்கும், வாத, பித்த சிலேட்டுமங்கள் ஒன்றோடொன்று பிணைந்திருப்பதால் வருகின்ற நோய்களை அல்லது வினைச்சேர்க்கையால் வரும்

Page 24
நோய்களை நான் எரித்துத் தள்ளுவதற்கும் ப நினைவுகளை நான் நினைப்பதற்கும் இன் துன்பங்களை நான் தாங்கிக் கொள்வதற்கும் இங் நான் ஆர்? எனக்கு என்ன சுதந்திரம் இருக்கிறது ஒன்றுமில்லை. எல்லாமே ஈசனே உன் செய6 அல்லவா?’ அதனால் எனக் கடிமையா இருந்துவிட்டால் எனக்கொரு துன்பம் இல்லை நன்றே செய்வான். பிழை செய்வான்? அடியார்க்கு இரங்கி அருள்புரியும் பெருமானல்லவா?
“வெய்யவினை என்இச்சையோ அருணை ஈசா
படைத்தளிக்கும் உன்இச்சையன்றோ உரை
என்பது அருணகிரியந்தாதி பாடல்
"ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே - காண்பார்ஆ
கண்ணுதலாய் காட்டாக் காலே” என்பார் அப்பர் சுவாமிகள்.
“ஊட்டுவிப்பானும் உறக்குவிப்பானும் இங்கு ஒன்றோடொன்ை மூட்டுவிப்பானும் முயங்குவிப்பானும்
முயன்றவின்ை காட்டுவிப்பானும் இருவினைப் பாசக்
கயிற்றின்வழ ஆட்டுவிப்பானும் ஒருவன் உண்டே தில்லை அம்பலத்தே
என்பார் பட்டினத்து சுவாமிகள்.
"நானார் ஒடுங்க நானார் வணங்க
நானார் மகிழ்ந்து உனைஒத நானார் இரங்க நானார் உணங்க
நானார் நடந்து விழ’
என்று மற்றொரு திருப்புகழில் அருணகிரிநாதரு கூறுவர்.
"நான்யார் என் உள்ளம் ஆர் ஞானங்கள் யார்
என்னை யார் அறிவார்? வானோர் பிரான் என்னை, ஆண்டிலனேல்’

என்று மாணிக்கவாசகசுவாமிகளும் திருவாசகத்தில் பாடுகிறார். ஆக இறைவன் அருளால் தான் எல்லாமே செயல்படுகிறது. அவனருளாலேதான் அவனை வணங்க முடியும் அதனால்தான் “என்செயலாவது யாதொன்றுமில்லை
இனித்தெய்வமே உன் செயலே என்று உணரப் பெற்றேன் இந்த
ஊனெடுத்த பின்செய்த தீவினை யாதொன்றும் இல்லை
பிறப்பதற்கு முன்செய்த தீவினையோ இங்ங்னே வந்து
மூண்டதுவே"
என்று பட்டினத்து சுவாமிகளும் பாடியுள்ளார்.
இறுகும் வகை பரமசுகம்
இறைவன் திருவடியைப் பெற்றால் இருவினைகளும் அதனால் வரும் சஞ்சிதம், பிராரத்தம், ஆகாமியம் ஆகிய வினைகளும் மும்மலங்களும் கெட்டொழியும் நெஞ்சம் வலிவொடு பொலிவுளளறும். அதற்கு நாம் இறைவனது திருவைந்தெழுத்தை இடைவிடாமல் ஓதுதல் வேண்டும். ஒதினால் இறப்பும் பிறப்பும் அற்று சிவயோக நிலை பூண்டு, ஞானக்கண் முனையைத் திறந்து, விளக்கமுற்று இறைவனோடு கலந்து, பேதம் இல்லை என்று சொல்லும்படி சீவாத்மாவும் பரமாத்மாவும் கலந்திருக்கும் தன்மையை 960)Luj6).Th.
"இருவினை புனைந்து ஞானவிழி முனைதிறந்து
நோயின் இருவினை இடைந்து போக LD6Cup. இருளற விளங்கி ஆறுமுகமொடு கலந்து பேதம் இலைஎன இரண்டு பேரும் அழகான
பரிமள சுகந்தவித மயமென மகிழ்ந்து” (முதலில் உள்ள இருவினை - பெருஞ்செயலாகிய சிவயோகம் அடுத்துள்ள இருவினை - புண்ணிய பாவ கன்மங்கள்) என்றும்
20

Page 25
"இருவினை மும்மலமும் அற இறவியொடு பிறவியற
ஏகபோகமாய் நீயும் நானுமாய் இறுகும் வகை பரமசுகம் அதனை அருள்”
என்று அறுகுநுனி’ என்ற பாடலிலும் கூறுகிறார்.
நீயான ஞானவிநோதந்தனை என்று நீ அருள்வாய்? என்றும்
“போக்கும் வரவும் இரவும் பகலும் புறம்பும் உள்ளும் வாக்கும் வடிவும் முடிவும் இல்லாதொன்று
வந்துவந்து தாக்கும் மனோலயம் தானே தரும் எனைத்
தன்வசத்தே ஆக்கும் அறுமுகவா சொல்லொணாது இந்த
ஆனந்தமே” என்றும் கந்தரலங்காரத்திலே கூறுகிறார்.
“யானாகிய என்னை விழுங்கி வெறும் தானாய் நிலைநின்றது தற்பரமே”
என்றும்
“பிறிவொன்று அறநின்ற பிரான் அலையோ?”
என்றும் கந்தரநுபூதியிலே கூறுகிறார்.
“இருநோய் மலத்தை சிவ ஒளியால் மிரட்டி எனை
இனிதா அழைத்து எனது முடிமேலே இணைதாள் அளித்து உனது மயில்மேல் இருத்தி ஒளிர்
இயல்வேல் அளித்து மகிழ் இருவோரும்
ஒருவாக எனக் கயிலை இறையோன் அளித்தருளும் ஒளிர்வேத கற்பக நல் இளையோனே”
என்ற பாடலில் பிறப்பு இறப்பு என்ற நோயையும் மும்மலங்களையும் சிவ ஒளியால் மிரட்டி உன் திருவடிகளை என் தலைமேல் சூட்டி நாம் இருவரும் ஒன்றுபடுவோமாக என்று கூறி அருளர்யோ? என்கிறார்.
நீ வேறெனாதிருக்க, நான் வேறெனாதிருக்க அருள்வாயே’ என்றெல்லாம் பாடி ஜீவாத்மா

பரமாத்மாவோடு கலந்திருக்க வேண்டுகிறார். சீவன் சிவச் சொரூபமாக வேண்டுமெனில் அஞ்செழுத்தை ஓதுதல் வேண்டும். ஏகன் ஆகி இறைபணி நின்றால் மலமாயை தன்னோடு வல்வினையும் இல்லாமல்
போய்விடும். மும்மலங்களும் எரிய நகை புரிந்து
இருவினை பொரிந்து சாம்பலாக நீயும் நானும் ஒன்றுபட்டுக் கலந்து பொருந்த வேண்டும். திரிபுரத்தை இறைவன் எரித்தான் என்பது நமது மூன்று மலங்களையும் எரித்து அருளினான் என்பதாம். முப்புரமாவது மும்மலகாரியம் என்று திருமந்திரம் கூறும்.
'சிவம் - அருள் ஊற நம்மை பிடித்த தீமைகளும் வினைகளும் பொடித்து விழ சீவன்
சிவச் சொரூபம் என்றுணர்ந்து நான் என்ற
அகங்காரம் தொலைந்து உயிர் உடம்பு என்ற
உணர்வும் அற்று பரவெளி ஒளியாம் பரப்பிரம்ம ஒளியிடத்தே ஞானம் சுரப்ப மகிழ் ஆனந்த சித்தியை அடைந்து எந்நாளும் களிக்கப்பதம் அருள்வாயே'.
'சீவன் எனச் சிவன் என்ன வேறில்லை’ என்பார் திருமூலர். “கருவெலாம் ஆயவன்' என்று திருஞானசம்பந்தரும் கூறுவார்.
ஊனக் கண்பாசம் உணராப்பதியை ஞானக் கண்ணினில் சிந்தை நாடி உராத்துனைத் தேர்த்தெனப் பாசம் ஒருவத் தண் நிழலாம் பதி விதி எண்ணும் அஞ்செழுத்தே
என்பது சிவஞானபோதம் ஒன்பதாம் சூத்திரம்.
பதியை அடைய வேண்டின் பசு ஐந்தெழுத்தை ஓதவேண்டும்.
'அஞ்செழுத்தால் உள்ளம் அரனுடைமை கண்டு
அரணை
அஞ்செழுத்தால் அர்ச்சித்து இதயத்தில்
அஞ்செழுத்தால் குண்டலியிற் செய்து ஓமம் கோதண்டம் சானிக்கில்
அண்டனாம் சேடனாம் அங்கு
21

Page 26
சிவலோகம் பாவனை செய்யின் இறைவன விளங்கித் தோன்றுவான்.
வினைப் பயனைப் புசித்துத் தான் கழிக்க வேண்டும் வழிபாட்டின் மூலம் அவனை இடையறாது நினைந்து ஓதி இருப்பினும் ஆணவ மலம் மட்டுப் அழியாது. ஆனால் அதன் வலிமை குன்றி அடங்கியிருக்கும். செம்பிலே களிம்பு போல.
திரோதானம்
"அராநுகர வாதையுறு தேரை கதி நாடும்
அறிவாகி உள மால்கொண் டதனாலே சிவாய எனும் நாமம் ஒருகாலும் நினையாத
திமிராகரனை வாவென்று அருள்வாயே திரோத மலமாறும் அடியார்கள் அருமாதவர்
தியானமுறு பாதம் தருவாயே”
என்ற பாடலில் திரோதான சக்தி பற்றிக் குறிக்கிறார்.
“ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களோடு மாயேயம் திரோதானம் என்ற இரு மலங்களையும் சேர்த்து பாசங்களாகிய மலங்கள் ஐந்து என்று நூல்கள் கூறும். கால தத்துவம் முதலி பிருதவி ஈறான தத்துவங்களும் புவனங்களும் புவனத்துப் பொருட்களும் மாயேயம் எனப்படும். இதனை “புவன போகச் செயல். ஆகும் மாமாயைத் திரட்சி என்று உமாபதி சிவம் கூறுகிறார். மாயை என்பது உயிரின் அறிவை மயக்கும். மாயேயம் அம்மயக்கத்திற்கு முன்னிலைப் பொருளாய் இருக்கும்.
“திரோதாயி ஆன்மாவை தனு கரண புவன போகங்களில் அழுந்திக் கிடக்கும்படி செய்யும்”. “திரோதாயி என்பது ஆணவம் கன்மம் மாயை என்னும் மூன்று மலங்களையும் செலுத்தி உயிரின் அறிவு இச்சை செயல்களை மறைக்கும்படி செய்வது. “ஏயம் மும்மலங்கள் தத்தம் தொழிலை இயற்ற ஏவும் தூயவன் தனதோர் சக்தி திராதான கரியது” என்றவாறு இறைவன் திருவருளாகிய

சக்தியும் கட்டுநிலையில் உயிர் அறிவை மயக்கும். அதனால் இது மறைப்பாற்றல் (திரோதானசக்தி) என்று வழங்கப் பெறும்.
மலம் பக்குவம் எய்திய நிலையில்
இம்மறைப்பாற்றலே அருளாற்றலாக மாறி நலம்
விளைவிக்கும். இதனாலேயே “பாகம் மிக உதவு
திரோதாயி” என்றும் "முற்சினம் மருவு திரோதாயி
கருணையாகித் திருந்திய சத்திநிபாதம் நிகழும்” என்றும் உமாபதி சிவம் குறிப்பிடுவர்.
உயிர்கள் சரியை, கிரியை, யோகத்தால் ஞானத்தைப் பெறவேண்டும். ஞானம் ஒன்றே வீடுபேற்றிற்குச் சாதனம். மலபரிபாகத்தால் சத்திநிபாதம் வரும். இந்த சத்திநிபாதம் உயிர்களை இயல்பாகவே பற்றியுள்ள ஆணவமலம். ஏனை மாயை கண்மங்களால் தேய்ந்து தேய்ந்து நீங்கும். பரிபாகத்தை அடைந்தவழி வரும். சரியை கிரியை யோகத்தால் ஞானசாதனம் அடைந்தவழி அது வீடுபேற்றிற்குச் சாதனமாகிறது.
உயிர் தனு, கரண, புவன போகங்களில் அழுந் திக் கிடக்கும்போது இறைவனை அறியவொட்டாது மறைத் தலைச் செய்த திரோதாயி, உயிர் பக்குவம் பெற்ற காலத்து அருளாற்றலாக மாறி வீடுபேற்றை அடையக் கூடிய ஞானத்தைக் காட்டுகிறது.
அதனால அருணகிரியார் இங் கே “அடியார்களும் அருமாதவர்களும் சரியை, கிரியையோகங்களால் தனுகரணபுவனபோகங்களில் அழுந்திக் கிடக்கும் நிலை மாறி ஞானத்தைப் பெற்று உன்னைத் தியானித்து உன் பதத்தை அடைகிறார்களே! அதைப் போன்ற நிலை எனக்கும் வேண்டும். உயிர் சார்ந்ததன் வண்ணம் ஆகும் தன்மை உடையது. என் உயிரும் சிவாயநம என்று சிந்திக்காததால் பாம்பின் வாய்ப்பட்ட தேரை போல இவ்வுலக பசு பாச தொந்தத்தில் கிடந்தழுந்தித் துன்புறுகிறது. இந்நிலை நீக்கி அஞ்செழுத்தை
22

Page 27
இடைவிடாது ஓதி உன்னை அடையும் வழியை எனக்குத் தருவாயாக’ என்று வேண்டுகிறார்.
“மாயையின் காரியத்தை மாயேய மலமதென்றும் ஏயும் மும்மலங்கள் தத்தம் தொழிலினை இயற்ற ஏவும் தூயவன்தனது ஓர் சக்தி தரோதான கரிய தென்றும் ஆய்வர் இம்மலங்கள் ஐந்தும் அணுக்களை அணைந்து நிற்கும்”
“சுகதுக்க விளைவுகட்கெல்லாம் இடமாய் நின்று வியாபகமாகிய ஆன்மாவின் அறிவு இச்சை செயல்களை ஏகதேசப்படுத்துவது என மேற்சொன்ன மாயாகாரியமும் அவ்வம்மலங்களை அவ்வத் தொழிலிற் படுத் திப் பாகம் வருவிக்கும் சிவசக்தியுமாம். அவற்றுள் மாயா காரியம் மாயையில் அடங்குமாயினும் பந்தித்தற்கண்படும் வேற்றுமைபற்றி மாயேய மலமென வேறுவைத்து எண்ணப்படும். அம்மலங்கட்கு அனுகூலமாய் நின்று செய்யும் சிவசக்தி பராசக்தியின் அடங்குமாயினும் தொழில் வேற்றுமை பற்றி உபசாரத்தால் திரோதாயியென வேறுவைத்து எண்ணப்படும்”
என்று சிவஞானசுவாமிகள் தம் உரையில் குறிப்பிடுகின்றார். ஆக ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதாயி, ஆகிய ஐந்து மலங்களும் பிறப்பு இறப்புக்கள் எல்லாவற்றிற்கும் காரணமாகும். (திரோதான கரி - திரோதானத்தைச் செய்வதும்)
“மலம் மாயை கண்மம் மாயேயம். திரோதாயி மன்னிச்சலமாரும் பிறப்பு இறப்பில் தங்கி இத்தரைகீழ் மேலும் நிலையாத கொள்ளி வட்டம் கறங்கென நிமிடத்தின்கண் அலமாரும் இறைவன் ஆணையால் உயிர் நடக்குமன்றே”
என்பது சித்தியார் பாடல்.
(Euferub
“இறைவனது பாதார விந்தத்தையே
நினைந்து இருபத்தெட்டு வகையானவையும் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு பாதங்கள்

பொருந்தியுள்ளவையுமான ஆகமநூல்களில் கூறப்பட்டுள்ள ஞானமுக்தி நெறியே நான்
அனுட்டிக்கும் நெறியாகவும் நீ வேறெனாதிருக்க நான் வேறெனாதிருக்க நேராக வாழ்வதற்கு உன் அருள் பெருகி ஆறாதாரம் கடந்த நிலையிலே பராபரப் பொருளைக் காணி பாயாக என்று அருள்வாயாக’
மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அனா கதம், விசுக் த, ஆக்ஞை, என்ற ஆறாதாரங்களின் மேற்பட்டு விளங்கும் துவாத சாந்தப்பெருவெளியில் இறைவனைக் காணுதல் வேண்டும். உச்சிக்கு மேல் பன்னிரண்டு அங்குலத்தில் உள்ளதாகக் கருதப்படும் யோகஸ்தானமே துவாத சாந்தம்.
“ஆறாறையும் நித்து அதன் மேல்நிலையைப்
பேறா அடியேன் பெறுமாறுளதோ'
முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்து அவைகட்கு அப்பாலுள்ள அனுபூதியாகிய சாயுச்சியநிலையை அடியேன் எப்போது பெறுவேனோ என்று கந்தரனுபூதியில் கூறுகிறார். ஆன்மதத்துவம் 24, வித்யாதத்துவம் 7, சிவ தத்துவம் 5 என்று 36 தத்துவங்களையும் கடந்து அப்பால் பெறுவது பரமுத்தி ''ஆறாறுமீதில் ஞானோபதேசம் அருள்வாயே’ என்று திருப்புகழில் பாடுகிறார்.
"பூதமும் கரணம் பொறிகளையும் புலனும் பொருந்திய குணங்கள் ஓர் மூன்றும் நாதமும் கடந்த வெளியிலே நீயும் நானுமாய்
நிற்கும் நாள் உளதோ'
என்பார் பட்டினத்தார்.
"ஆறாறின் தன்மை அறியாது இருந்தேனுக்கு
ஆறாறின் தன்மை அறிவித்தான் பேர்நந்தி ஆறாறின் தன்மை அருளால் அறிந்தபின் ஆறாறுக்கு அப்புறம் ஆகி நின்றானே”
என்று திருமந்திரம் கூறும். 23

Page 28
"அவத்தைத் தத்துவம் அழிபட இருளறை
விலக்குவித்து ஒரு சுடரொளி பரவ நல்
அருள் புகட்டி உன் அடியினை அருளுவது
ஒருநாளே”
ஒளிவீசும் இடத்தைப் பொருந்தி பிராணவாயு செல்லும் இடகலை பிங் கலை வழிகள் அடைபடும்படி ஒட்டி சிவநெறியில் நின்று சிவத்தைக்கூடி "மண்ணாசையும் அஞ்ஞானமும் ஒழிந்து ஆகாசபரம அறிவுச் சோதியான பராசக்தியை அடைந்து நினைப்பை விட்டு முப்பத்தாறு தத்துவங்களுக்கும் மேற்பட்டதாய் துரியாதீத நிலையினதாய் மெய்யாம் தன்மையுடைய சோதியாய் உருவம் அற்றதாய் ஒப்பில்லாததாய் மாற்றம் இல் லாததான சுக வெள்ள நிலைப்பொருளாம் சிவத்துடன் என்று சேர்வன்’ என்றொரு பாடலில் பாடுகிறார்.
'துரியநிலை - ஆன்மா உந்திப் பிரதேசத்தில் பிராணனொடு லயித்து நிற்க தன்னையே விஷயீகரிக்கும் நான்காம் ஆன்மநிலை. யோகியர் தன்மதமாய் நிற்கும் உயர்நிலை. துரியாதீதம் - மூலாதாரத்தில் ஆன்மா தங்கி அவிச்சை மாத்திரையை விஷயீகரிக்கும் ஐந்தாம் ஆன்மநிலை என்பர். இதுவே ஆன்மா மிகத் தூய்மையாய் நிற்கும் நிலை”
உயிர்கள் உடம்பெடுத்து வாழும் நிலையில் சாக்கிரம் சொப்பனம் சுழுத்தி துரியம் துரியாதீதம் (இவை முறையே விழிப்பு, கனவு, உறக்கம், பேருறக்கம், உயிர்ப்பு, அடங்கல்) என்னும் ஐந்து நிலைகளை உடையனவாய் இருக்கும். இவற்றை விடுத்துச் சிவத்தை நாடுதல் வேண்டும்.

“உயிரானது புருவ நடுவில் நின்று சகல சாக்கிரம் முதலியவைகளை அனுபவித்தல் என்பது ஓர் அரசன் அமைச்சர், படைத் தலைவர் முதலியவரோடு அத்தாணி மண்டபத்தில் வீற்றிருந்து அரசு புரிவது போன்றதாகும் . . உயிர் கழாலவத்தையில் இறங்கி இறுதியில மூலாதாரத்தில் செல்வது என்பது அரசன் அத்தாணி மண்டபத்தை விட்டுப் பல இடங்களைக் கடந்து அந்தப்புரத்தில் செல்வது போன்றதாகும். இங்ங்ணம் இவ்விருவகை ஐந்தவத்தைகளையும் விடுத்துச் சிவத்தை நாடுதல் என்பது அரசன் தன் ஆட்சியை முற்றிலும் விடுத்து ஓய்வு கொள்ளுதல் போன்றதாகும்". உயிரானது இறைவன் திருவடிப் பேரானந்தத்தில் திளைத்திருக்கும் என்பதாகும்.
தோற்றமும் முடிவுமற்ற பேரின்பமே நாம் வேண்டுவது என்று முருகப் பெருமானிடம் வேண்டுகிறார் அருணகிரிநாதர். “அன்புருகி உணதருள் பரவுவகைவரின், விரகு ஒழியில்; உயிர் புணர் இரு - வினை அளறு அதுபோக உதறில் எனது எனது எனும் மலம் அறில் அறிவினில் எளிது பெறல் என மறைபறை அறைவதொரு உதய மரணமில் பொருளினை அருளுவது ஒருநாளே” என்ற பாடலில் பேரின்பம் பெறவேண்டி மரணமில்லா பெருவாழ்வை வேண்டி பாடுகிறார். அதைப் பெற எவ்வெவை கெட வேண்டும் என்று வரிசைப்படுத்திக் கூறியுள்ளார்.
இறைவன் தன் கருணையால் நம்மிடமுள்ள மேற்கண்ட தீமைகளை விலக்கி பாச நீக்கம் பண்ணி அருள் தானெடுத்து ஆனந்த வாரியில் அழுத்துவான். அதுவே பேரின்ப வாழ்வு இதுவே சைவ சித்தாந்தம். இதைத்தான் அருணகிரிநாதரும் வேண்டுகிறார்.
24

Page 29
பகவத்கீதை காட்டும்
சிந்தன
முனைவர்
இந்து மதம் மிகவும் பழமையானது. பஞ்சாபின் வடமேற்பகுதியில் உள்ள சிந்துவில் வாழ்ந்த மக்கள் “இந்து என்று அழைக்கப்பட்டனர். இந்து என்ற சொல் சிந்து என்ற சொல்லிலிருந்து உருமாறிய சொல் என்று கூறலாம். சிந்து சமவெளியில் வாழ்ந்த மக்களின் நம்பிக்கைகளும் அனுபவங்களுமே இந்து மதமாக மாறி இந்தியா முழுவதிற்கும் பரவியது. இந்து மதத்தை ஒரு மதம் என்று கூறுவதைவிட அது ஒரு வாழ்க்கைமுறை என்று கூறுவது சாலச்சிறந்ததாகும் என்று டாக்டர் இராதாகிருஷ்ணன் இந்து மதத்திற்கு விளக்கமளித்துள்ளார். அனுபவத்தின் அடிப்படையிலேயே இறையுணர்வை உணர்ந்து பிறர்க்கு உணர்த்திப் பின் காலப்போக்கில் பல தத்துவச் சிந்தனைகளையும் நம்பிக்கைகளையும் சடங்குகளையும் கொண்ட மதமாக இன்று சிகரம் போல் உருவெடுத்து உயர்ந்து பரந்து உள்ளது.
இந்து மதத்தின் சிறப்பான பண்பு என்பது அதன் சகப் புத் தன்மையாகும். எலி லா மதக்கருத்துகளையும் ஏற்றுக்கொள்ளும் தன்மை சிறப்பானது. இந்தியாவில் பலவேறு பண்பாட்டுப் படையெடுப்புகள் நிகழ்ந்திருப்பினும் இந்துமதம் அதன் தன்மையை இழக்கவில் லை. lf மதங்களால் ஏற்றுக்கொள்ளும் பல கொள்கைகள் இம்மத்தில் இடம்பெற்றுள்ளன. இம்மதம் தனிப்பட்ட எவராலும் தோற்றுவிக்கப் படவில் லை உண்மையைத் தேடி உணரவேண்டும் என்ற உயரிய நோக்கத்திலும் தாக்கத்திலும் பிறந்தது தான் இந்துமதம். அது வெறும் கொள்கையின்

வாழ்வியல் - தத்துவச் Ꭰ60ᎢéᏏ6iᎢ
கு.ர.சரள.
தொகுப்பு அல்ல. ஒருவன் தனி வாழ்க்கையிலும் எவ்வாறு நடக்க வேண்டும் என்று இந்துமதம் கூறுகிறது.
இந்து மதத்தில் பரந்த பண்பாடும் தத்துவ நெறிகளும் உள்ளடங்கி உள்ளன. இந்துப் பண்பாடு பல புனித நூல்களை உள்ளடக்கியது. இந்து மதத்தின் வேர்களாக ஸ்ருதிகள், ஸ்மிருதிகள், இதிகாசங்கள், புராணங்கள், ஆகமங்கள் , தரிசனங்கள் போன்றவை அமைகின்றன.
வால்மீகி எழுதிய இராமாயணமும் வியாசர் எழுதிய மகாபாரதமும் இருபெரும் இதிகாசங்களாகத் திகழ்கின்றன. இவை இந்திய மக்களின் செயற்பாடுகளையும் வாழ்க் கையையும் பிரதிபலிக்கும் மாபெரும் காவியங்களாக திகழ்கின்றன. மகாபாரதம் இந்துமதத்தின் முக்கிய சாராம்சமான பகவத்கீதையை உள்ளடக்கி இருக்கின்றது.
இந்துமதம் தத்துவம் அடிப்படைக் கருத்துகளான பிரம்மம், தர்மம், அழிவற்ற ஆன்மா ஆகியவற்றை விளக்குகிறது. பிரமம் என்பது எங்கும் நிலைத்திருக்கின்ற எல்லையில்லாப் பரம் பொருளை அடிப்படையாகக் கொண்டு அழைக் கண் றது. ஸ ருதரிகள் , ஸ மிருதிகள் புராணங்களில இருந்து பெறப்பட்ட நீதிக்கொள்கைகள், ஒழுக்க நெறிமுறைகள் ஆகியவற்றை உள்ளடக்கி அமைந்துள்ளது தர்மம், இந்துமத சட்ட வல்லுநரான யாஞ்யவால்கியர்
25

Page 30
கூறியபடி தர்மம் வர்ணதர்மம், ஆஸ்ரதர்மம் வாணாஸ்வரதர்மம், குணதர்மம், நிமித்ததர்மம் சாதாரணதர்மம் என ஆறுவகைப்படும் ஆன்மாக் கோட்பாடும் கள்மகோட்பாடும் இந்துமத தத்துவத்தின் சிறப்பம்சம். பிறப்பு, மறுபிறப்பு என்பது ஆன்மாவிற்கு அழிவில்லை என்ற அடிப்படையில் உருவானது ஆன்மாக் கோட்பாடு. கர்மம் என்பது கடந்தகால, நிகழ் கால, எதிர் காலச் செயல்களைப் பற்றியதாகும். நிகழ்காலம் கடந்தகாலச் செயல்களின் அடிப்படையில் உருவாகுகின்றது என்று கர்மக் கோட்பாடு வலியுறுத்துகிறது. ஒவ்வொரு தனிமனிதனும் கடைப்பிடித்து உணர வேண்டிய கொள்கைகளைப் பற்றியும் அவற்றை வாழ்க் கையின் இலட்சியங்களாகக் கொள்ள வேண்டும் என்றும் இந்துமதத் தத்துவம் கூறுகிறது.
தனிமனித வாழ்க்கைக்கு ஒளிவிளக்காக விளங்குவது பகவத்கீதையின் தத்துவச் சிந்தனைகளாகும். இனி றைய இயந்திர வாழ்க்கையையும் வெடிகுண்டு கலாசாரத்தையும் மாற்றி அமைக் கக் கூடிய வகையில் பகவத்கீதையின் தத்துவச் சிந்தனைகள் அமைகின்றன. அது மனிதன் வாழ்க்கையில் கடைப்பிடிக்கவேண்டிய ஒழுக்கநெறிகளையும் வகைப்படுத்தி விளக்கியுள்ளது. மானிட வாழ்க்கை மேம்படப் பகவத்கீதையில் கூறப்பட்டுள்ள தத் துவச் சிந்தனைகளைச் சுருக்கமாக வெளிப்படுத்துவது இக்கட்டுரையின் நோக்கமாக அமைகிறது.
இக்கட்டுரை பூரீஜயதயால் சோயந்தகாவின் ‘றுரீமத்பகவத்கீதா தத்வவிவேசனி - தமிழ் விரிவுரை என்ற நூலை முதன்மை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது.
பகவத்கீதையின் அமைப்பு
பகவத்கீதை' என்ற சொல்லுக்குத்

‘தெய்வப்பாடல்' என்பது பொருள். குருசேத்திரப் போர்க்களத்தில் செய்வதறியாது திகைத்துத் தேரிலிருந்த விசயன் கேட்க கண்ணபிரான் அருளிய மெய்ப்பொருளைத் தொகுத்து வியாசமுனிவர் பகவத்கீதையாக அருளினார். பகவத்கீதை எழுநூறு குறள் வாக்கியங்கள் அடங்கிய் தருமகாவியமாக திகழ்கிறது. இலட்சம் சுலோகத்தோடு கூடிய மகாபாரதம் என்னும் இதிகாசத்தின் மத்தியில் வீடுமபர்வத்தில் 25-ஆம் அத்தியாயத்திலிருந்து 42-ஆம் அத்தியாயம் வரையில் பகவத்கீதை இடம் பெற்றுள்ளது.
மொழி அமைப்பிலும் கருத்தமைப்பிலும் கீதை பாரதத்தை ஒத்துள்ளது. உபநிடதங்களில் அடங்கியுள்ள கருத்துகளையெல்லாம் தெளிவுபட விளக்குவதாக அமைகிறது. உபநிடதங்களைப் பசுக்கள் எனக் கொண்டால் கீதையைப் பாலெனப் பகரலாம். இவற்றில் மெய்பொருள் விளக்கம் முறையாக அமைந்துள்ளது. கீதை பதினெட்டு அத்தியாயங்களைக் கொணி டு மூன்று சுருக்கங்களாகப் (மூவாறு அத்தியாயங்கள்) பகுக்கப்பட்டு முறையே கர்மம், பக்தி, ஞானம் என்னும் மூன்று காண்டங்களைக் கொண்டுள்ளது. பதினெட்டு அத்தியாயங்களில் கருமயோகம், இராசயோகம், பக்தியோகம், ஞானயோகம் என்ற நான்கு யோகங்கள் பேசப்படுகின்றன. தொடக்கநிலையில் இருக்கும் கருமயோகம் பிறகு - இராசயோகமாக் பரிணமித்து அதனின்று பக்தியோகம் நீங்கி இறுதியில் ஞானமாக முற்றுப் பெறுகின்ற நிலையைக் காணமுடிகின்றது.
கருமத்தோடு ஞானத்தை இணைத்தல், பக்தியையும் ஞானத்தையும் ஒரே பாங்கில் பொருள்படுத்துதல், யோகத்தையும் பக்தியையும் மற்றோரிடத்தில் ஒன்றுபடுத்துதல், எந்த யோகமும் ஒன்றையொன்று சிறந்ததுமில்லை, தாழ்ந்ததுமில்லை என்று காட்டுவது கீதையின் சிறப்பு ஒரே காலத்தில் சேர்ந்து, தனுஜிடிக்
26 கொழும்!! pāg回
நூலகம்

Page 31
கின்றபொழுது வாழ்க்கையின் குறிக்கோள் நிறைவேறுவதாகக் காட்டுகிறது. கீதையில சொல்லப்பட்ட கருத்துக்கள் அனைவருக்கும் பொதுவாகும். வாழ்க்கைக்கான திறவுகோலாகவும் அமைகின்றன.
மனம், மொழி, செயல் மூன்றையும் இறைவனிடம் ஒப்படைப்பதால் ஆத்மநிலை எய்தலாம். உடலாலும் மனத்தாலும் கருமம் செய்வதால் கருமத்தால் ஏற்படும் பலனைத் துறப்பதால் அனைத்துச் செயல்களையும் இறைவனது திருவடிகளில் ஒப்படைப்பதாலும் ஆத்மநிலை அடையலாம் என்று கீதை பகள்கின்றது. மனிதனை நிலையான நிலைக்குக் க்ொண்டு சேர்ப்பது உறுதியான உடலும் உயர்ந்த உள்ளமும் தெளிந்த அறிவுமாகும், ஆத்மசொரூபத்தில் எல்லாவற்றையும் உள்ளடக்கிக் கொண்டு வாழ் என்று உயிர்கள் யோகிகளாகும்படி கீதை உபதேசிக்கிறது.
கீதையின் பெருமை
கீதை உயர்ந்த ஆன்மீக தத்துவங்கள் பொதிந்த நூல். எளிமையான அமைப்பையும் அழகையும் கொணி L - ġibl . கருதி தாழம் மிக்கவையாகவும் உட்பொருள் பொதிந்தவையாக உள்ளது. ஒருவர் வாழ்க்கை முழுவதும் படித்துப் பின்பற்றவல்ல ஒரு நூல் என்ற பெருமையினை உடையது.
கதையில் எல்லா சாத்திரங்களும் அடங்கியுள்ள்ன. சாத்திரங்களின் கருவூலம் என்று கூறுமளவு சாத்திரக் கருத்துகளின் சாரம் நிறைந்திருக்கின்றது. கீதையின் பெருமையை வேதவியாஸர் கூறும்பொழுது
கீதா ஸிகிதா கர்தவ்யா கமநயை: ஸாஸ்த்ரஸங்கரஹை யா ஸ்வயம் பத்மநாபஸ்ய முக,பத்விநி: ஸ்ருதா (மஹா பீஷ்ம431)

கீதையை நல்லமுறையில் கேட்கவேண்டும், பாடவேண்டும், படிக்கவேண்டும், கற்பிக்கவேண்டும், மனனம் செய்யவேண்டும், மனதில் தரிக்கவேண்டும் கீதை பகவான் பத்மநாபனின் முகத்தாமரையி லிருந்து வெளிவந்தது. எனவே, கீதையைச் செவ்வனே ஓதுதல் வேண்டும். பிற சாத்திர நூல் எதற்கு? வாழ்க்கை என்னும் கடலைக் கடக்கத் துடுப்பாக விளங்குகிறது கீதை. கீதையைப் பின்பற்றுபவன் தானும் கரையேறிப் பிறரையும் கரையேற்றுவான்.
கீதையின் பெருமையை கிருஷ்ணனே கூறும்பொழுது,
கீ3தா ஸ்ரயேஹம் திஸ்2டாமி கீ3தா மே கோத்தமம் க்ருஹம் கீ3தா ஜஞா நமுபாஸ்ரித்ய த்ரீ லோகாந்
பாலீயாம்யஹம்
(வராஹ புராணம்)
கீதையை அண்டி நான் வாழ்கிறேன். கீதைதான் என்னுடைய சிறந்த வீடு. கீதையின் ஞானத்தைக் கைக்கொண்டு நான் மூவுலகங்களையும் காக்கிறேன் என்று கிருஷ்ணனே கூறுவதாக அமைகின்றது.
இக்கீதையினால் பயன் என்ன என்பதை விளக்கும்பொழுது இந்தக் கீதை என்ற ஆணையை நிறைவேற்றுபவர் ஐயமின்றி முக்திபெற்று (3:31) என்னையே அடைவர் என்று பகவானே கூறுவது கீதையின் பெருமைகளில் குறிப் பிட்டுச் சொல்லக்கூடிய சிறப்பாகும்.
மனித வாழ்வியல் சிந்தனைகள்
பகவத் கீதை மனித சமூகத்திற்குத் தேவையான பல வேறு சிந்தனைகளை உள்ளடக்கியுள்ளது. அவற்றின் அடிப்படையான சிந்தனைகளைப் பின்வருமாறு வகைப்படுத்திக் காணமுடியும். அவை
27

Page 32
1. தர்மத்தை நிலைநாட்டப்படுதல்
2.
வாழ்வியல் சிந்தனைக் கூறுகள் 2.1. ஆன்மா கோட்பாடு 22. பிறவிக் கோட்பாடு 23. கர்மா கோட்பாடு 3. மானிடனின் வெற்றிக்குரிய உபதேசங்க
3.1. இன்பதுன்பங்களை ஒன்றாக பாவித்தல்
32. ஆசை கோபம் தவிர்த்தல்
33. சுயநலம் விடுதல்
34. புலனடக்கம்
35. உயிர்களிடத்தில் அன்பு கொள்ளுதல் 4. கடமையைச் செய்தல்
4.1 பற்றில்லாது கடமையாற்றுதல் 42. கடமையில் உரிமை கொண்டாடுதல் 43. மரணத்தைவிடக் கொடியது இழுக்கு
மானிடன் தன் வாழ்க்கையில் இச்சிந்தனைகளை பின்பற்றி நடப்பானேயானால் நாட்டில் நிலவுகின் பல்வேறு பிரச்சினைகள், போராட்டங்க ஒழிந்துவிடும். கீதை வாழ்க்கையின் உண்மையா நிலையினை மிகவும் எளியமுறையில் தெளிவா விளக்கக்கூடிய யோக சாத்திரமாக அமைகின்ற இச் சிந்தனைகளை விரித்தே இக்கட்டுை செல்கின்றது.
தர்மத்தை நிலைநாட்டப்படுதல்
குருசேத்திரப் போர்க்களத்தில் அருச்சுன கூடியிருந்த உறவினர்களின் கூட்டத்தைப் பார்த் போர் புரியாமல் கிருஷ்ணனிடம் “என் அங்கங்க சோர்வடைகின்றன. என் உடலில் நடுக்கமு ஏற்படுகின்றது. கையிலிருந்து காண்டீப வில் நழுவி கொண்டிருக்கின்றது” என்று கூறுகிறார். இதற்கு கிருஷ்ணன், “துக்கப்படத்தகாத மனிதர்களி பொருட்டு வருந்துவதை ஒழித்து போரில் ஈடுப சத்ரியனுக்கு தர்ம 教 சம்பந்தமானப் போரை காட்டிலும் வேறு ஒரு மேன்மை தரும் கடை கிடையாது. தர்மத்தோடு கூடிய யுத்தத்தை செய்யவில்லையென்றால் அப்போது ஸ் எ

தர்மத்தையும் புகழையும் இழந்து பாவத்தை அடைவாய்” (2:33) என்று கூறுகிறார். இவ்வாறு கூறுவதால் கீதை கொலைக்கு தூண்டுவதையே தனிநோக்கமாக உடைய நூலென்று சிலர் வாதிடுவர். கொலைசெய்யச் சொல்லவந்த இடத்தே சித்தாந்த கருத்துகளும் சத்வருணம் பற்றிய விளக்கமும் துக்கநிவர்த்தியும் சாகாதிருக்க வழியும் பேசப்படுவதின் நோக்கமென்ன என்பதை அவர்கள் கருதவில்லை.
தர்மம் நிலைக்கவேண்டும் அதர் LDtf அழியவேண்டும் என்ற கருத்தினை வலியுறுத்தும் பொழுது,
நல்லன காக்கத் தீமை அழிவுற அறத்தைக் காக்க யுகந்தோறும் வடிவம் கொள்வேன
அதர்மம் எப்பொழுது தலைதுாக்குகிறதோ அப்பொழுது அவதரிப்பேன். என்று பகவான் கூறியிருக்கிறார். குறளில்
செயற் பாலதோறும் அறனே ஒருவற்கு உயிற்பால தோறும் பழி
(குறள், 40)
ஒருவனுக்குச் செய்தற் பான்மையது நல்வினையே. அறத்தினைச் செய்து தர்மநெறிப்படி வாழவேண்டும் என்று கூறுவதைக் காணலாம் . கதை அறத்திலிருந்து மீறுபவர்களைத்தான் தண்டிக்கச் சொல்கிறது. குற்றம் யார் செய்திருப்பினும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவன் தந்தையே என்றாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்ற கருத்தையே நிலைநாட்டுகிறது கீதை. தர்மத்தை நிலைநாட்ட வேண்டும் என்ற கொள்கையை வலியுறுத்த எழுந்ததே கீதை.
வாழ்வியல் சிந்தனைக்கூறுகள்
கதையரின் ஆனி மாக் கோட்பாடு, பிறவிக்கோட்பாடு, கர்மா கோட்பாடு என்ற
28

Page 33
மூன்றுவகையான கோட்பாட்டுச் சிந்தனைகள் விளக்கப்பட்டுள்ளன.
ஆன்மாக் கோட்பாடு
இந்துமத தத்துவத்தில் ஆத்மா அழியாதது என்ற நம்பிக்கை தீவிரமாகவும் ஆழ்ந்தும் பரவியுள்ளது. இறக்கும் பொழுது ஆத்மா உடலைவிட்டுப் பிரிந்து வேறு புதிய உடலை எடுத்து வாழ்கின்றது. ஆதி மா என றும் அழிவதுமில்லை, அழிக்கப்படுவதுமில்லை. “இந்த ஆத்மா ஒருபொழுதும் இறப்பதும் இல்லை அன்றியும் இறப்பதுமில்லை. அவ்வாறே முன் உண்டாகிப் பிறகு ஏற்படக்கூடியது என்பதும் இல்லை. ஏனெனில் இந்த ஆத்மா பிறப்பற்றவன், நித்யமானவன். எக்காலத்திலும் உள்ளவன், பழமையானவன். உடல் கொல்லப்படும்பொழுது இந்த ஆத்மா கொல்லப்படுவதில்லை”.(2:20)
உடல் அழிந்து போகிறதே தவிர ஆத்மா அழிவதில்லை. எல்லோருடைய உடலிலும் எப்பொழுதும் கொல்லப்பட (pņuITg566. 666) உயிரினங்களிலும் பிறப்பிற்கு முன் தென்படாதவையாக இருக்கின்றன. இறப்பிற்குப் பின்னும் தென்படுவதில்லை. இந்நிலையில் ஆத்மாவின் அழிவிற்கு ஏன் வருத்தப்பட வேண்டும் என்ற கொள்கையை கீதை முன்வைக்கிறது.
பிறவிக் கோட்பாடு
அருச்சுனன் துரியோதர்கள் மீது அம்பு விட மறுத்தபொழுது பிறவி பற்றிய விளக்கம் கிருஷ்ணனால் கூறப்படுகின்றது. − சான்றோர்கள் உயிர் போனவர் களுக் காகவும் உயிர் போகாதவர்களுக்காகவும் வருந்துவதில்லை. நீயும் இருந்ததில்லை, இந்த அரசர்களும் இருந்ததில்லை, நீ ஏன் வருந்துகிறாய் என்று கூறி பிறவியின் தத்துவத்தைப் பின்வருமாறு

விளக்குகிறார். “எப்படி மனிதன் நைந்துபோன பழைய துணிகளை நீக்கிவிட்டு வேறு துணிகளை" எடுத்துக் கொள்கிறானோ, அவ்வாறே ஜீவாத்மா நைந்துபோன பழைய உடல்களை நீக்கிவிட்டு வேறு புதிய உடல்களை அடைகிறார்” (2:22). பிறந்தவனுக்குச் சாவு நிச்சயமானது. ஆகவே, தவிர்க்கமுடியாத விஷயத்தில் துக்கப்படுவது உரியது அல்ல என்று விசயனிடம் கிருஷ்ணன் பிறவிச் சிந்தனையை வெளிப்படுத்துகிறார். இப்பிறவிச் சிந்தனையைக் குறளில்
உறங்குவதுபோலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு
h− (குறள், 339) இறப்பு ஒருவனுக்கு உறக்கம் வருதலைப் போன்றது. பிறப்பு எனப்படுவது உறக்கம் நீங்கி விழித்துக் கொள்வதைப் போன்றது என்று அமைகின்றது.
கர்மா கோட்பாடு
இறைவழிபாடு, தவம் , வேள் வி, தீர்த்தயாத்திரை, தானம் முதலிய செயல்களில் பயன் கருதாது ஈடுபடுவதே இக்கோட்பாடாகும்." கர்மத்தினால் உண்டாகும் பயனைத் தியாகம் செய்து பிறப்பு என்ற பந்தத்திலிருந்து விடுபட வேண்டும். கர்மத்தின் பயனைச் சார்ந்திராமல் செய்யவேண்டிய கர்மத்தைச் செய்கிறவன் யோகியாக மதிக்கப்படுவான் என்று கீதை கூறுகிறது. “வேள்வி, தானம், தவம் என்ற கள்மங்களும், அப்படியே மேலும் செய்ய வேணடிய கடமைகளையும் பற்றையும் பயன்களையும் தியாகம் செய்து கட்டாயமாகச் செய்யப்பட வேண்டியன என்பது என்னுடைய தீர்மானிக்கப்பட்ட உயர்ந்த கொள்கை” (11:6) என்று கர் மத்தின் செயல்பாடுகளைக் கிருஷ்ணன் விளக்குகிறர்ர்.
சாஸ்திரங்களால் விதிக்கப்பட்ட கர்மங்களைச் செய்யவேண்டும். கர்மங்களைச்
29

Page 34
செய்வது சாலச்சிறந்தது. நான் கர்மங்களை செய்யாமல் விட்டால் இம்மனிதர்கள் அனைவரு சீகுலைந்து போவார்கள். மேலும் நான் சீகுலை செய்கிறவனாகவும் இம்மாந்தர் அனைவரையு அழிப்பவனாகவும் ஆவேன்.(3:24). ஆகவே கர் மங்களைச் செய்யவேணி டும் என் வலியுறுத்துகிறது கீதை, இக்கோட்பாடுக மனிதப்பிறவியின் விளக்காகத் திகழ்கிறது ஆத்மாவிற்கு என்றும் அழிவில்லை. பிறப்பு என்ப; நிச்சயம் என்றால் இறப்பு என்பது தீர்மானிக்கப்பட் ஒன்று. அதற்கேன் அழுது புலம்ப வேண்டு கர்மத்தைச் செய். அதன் பலனை அடை நினையாதே. அது தானாக வந்தடையும் ତାଥୈ। வாழ்வின் ரகசியங்களை விளக்குகிறது கீதை
மானிடனின் வெற்றிக்குரிய உபதேசங்கள்
மானிடனின் வெற்றிக் குப் பல்வே சிந்தனைகள் கீதையில் பொதிந்துள்ளன. ᎥᏝ60fh வாழ்க்கை சிறக்க பின்வரும் நெறிகள் துணை புரியும்.
இன்பதுன்பங்களை ஒன்றாகப் பாவித்தல்
இன்ப.துன்பங்கள் மனிதவாழ்க்கையில் தொடர் பயணம் போல வருகின்றன. இந் இரண்டுமே நிலையற்றவை. இன்பத்தை நினைத் நொடிக்குள் துன்பம் வந்தடைகின்றது. இந் இரண்டையும் ஒன்றாகப் பார்க்கத் தெரியாததால்தா: இன்று தற்கொலைகள் அதிகமாகி வருகின்றன “துன்பங்கள் நேர்கையில் எவனுடைய மன கலங்குவதில்லையோ, சுகங்கள் அடையும் பொழு அவற்றில் சிறிது கூட ஆசை கொள்வதில்லையே எவனுக்கு விருப்பு, பயம், கோபம் இவை (pí33 அற்றுப் போயினவோ அத்தகைய முனிவ6 ஸ்திதப்ரக்ஞன் என்று கூறப்படுகின்றான்.(2:56)
மனிதனுக்கு அமையவேண்டிய மூன் குணங்கள் இங்கு கூறப்படுகின்றன. துன்பம் சூழ்ந்

ச் போதிலும் அவன் துடிப்பதில்லை. இன்பம் ம் ஏற்படும்போதும் மகிழ்வதில்லை. மகிழ்ச்சி வு -போய்விடக்கூடாது என்று பேராசைப்படுவதில்லை. b மூன்றாவது அவன் தனது ஆத்மாவின் , சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் தளைகளை அறுத்து று விடுகிறான்.
நல்லது நடக்கும் பொழுது ஆர்ப்பாட்டம் செய்து மகிழும் பொழுது பின் மிகுதியாக Sg
t
நேரிடும் என்று வள்ளுவர் எச்சரிக்கின்றார்.
நன்றாங்கால் நல்லவாக் காண்பவன்
அன்றாங்கால் அல்லற் படுவ தெவன்
(குறள்,379) இன்பத்தில் அதிகம் திளைக்காமலும் துன்பத்தில் துவண்டு போகாமலும் இரண்டையும் சரிசமமாகப் பாவித்துச் சமநிலையுடன் ஒருவன் று இருப்பானேயானால் அவன் வாழ்வில் எந்த
த
துன்பநிலையையும் அடையமாட்டான்.
ஆசை கோபம் தவிர்த்தல்
எந்த மனிதன் அனைத்து விருப்பங்களையும் துறந்துவிட்டு மமதை இலலாதவனாக, அகங்காரமற்றவனாக, சிறிதளவு ஆசையும் இல்லாதவனாக சஞ்சரிக்கிறானோ அவனே அமைதியை அடைகிறான். அவனே சாந்தியைப் பெறுகிறான். (271). இதையே புத்தர் ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்று கூறுகிறார். ஆசை 1. என்பது மனிதனைப் பித்தனாக்கி நரகத்தின் வாயிலுக்கே அழைத்துவரக்கூடியது. இந்த ஆசையென்பது மண், பொன், பெண் என்ற மூன்று
நிலைகளில் பிறக்கின்றது. நாட்டில் பிரச்சனைகளும்,
ம் கலவரங்களும் தோன்றுவதற்கு ஆசையே
ர் பிரதானமாக அமைகின்றது. ஆசைகொண்ட
மனிதன் நன்றாக வாழ்ந்ததில்லை.
BJ ஒரு லட்சிய மனிதன் உள்ளத்தில் புலன்
த இன்பங்களின் மீது ஆசை பிரவேசித்தாலும் அவன்
30

Page 35
மாறுபடுவதில்லை. அவன் சலனமடையாமல அமைதியில் ஆழ்ந்திருக்கிறான். இதற்கு எதிரிடையாக புலன்கள் தரும் இன்பத்தைத் தேடி செல்பவன் என்றும் அமைதி அல்லது திருப்த அடைவதில்லை.
காமம், கோபம், பேராசை ஆகிய மூன்று வகையான நரகத்தின் நுழைவாயில் ஆத்மாவை நாசம் செய்யக்கூடியது. அதாவது இழிந்த நிலையில் தள்ளக் கூடியது. ஆகவே இம்மூன்றையும் விட்டுவிடவேண்டும். (2:21)
ஒருவனின் கோபம் அவன் அழிவிற்குக் காரணமாக ஆகிவிடும். இதனை,
ஒன்றாமை ஒன்றியார் கண்படின் எஞ்ஞான்றுப்
பொன்றாமை ஒன்றல் அரிது
(குறள்,886 என்ற குறளில் காணமுடியும்.
சுயநலம் தவிர்த்தல்
‘நான் ’, ‘என்னுடையது என்ற
பெயரெல்லாம் சுயநலத்தின் முத்திரைகளாகும். இவற்றை நீக்கினால் மனதில் நிச்சயம் பூரண அமைதியை ஒருவனது ஆத்மா கண்டிடும். "நான்' ‘என்னுடையது' என்பதெல்லாம் ஒருவனது அகங்காரத்தை வளர்க்கக்கூடியவை. இந்த எண்ணங்கள் இருத்தல் கூடாது. அது இருப்பின் தன்னைத்தானே அழித்துவிடும். இதனை கீதை மனைவி, மக்கள், வீடு, செல்வம் இவற்றில் பற்றின்மை தன்னுடையது என்ற எண்ணமின்மை மமகாரமின்மை; அவ்வாறே வேண்டியன வேண்டாதவற்றை அடையும்போது எப்போதுமே உள்ளம் ஒரே மாதிரியாக இருதி தல ஸமபாவனையுடன் இருத்தல் (13:9). நான், எனது என்பதை ஒழித்தால் எல்லாம் நம்மைத் தேடிவரும் என்று வலியுறுத்துகிறது.
பெருமையையும் சிறுமையையும் சமமென

நினைத்து நண்பர் பக்கலிலும் பகைவர் பக்கலிலும் சமநோக்குக்கொண்டவன், செயல்களனைத்திலும் ‘நான் செய்கிறேன்’ தான் கர்த்தா என்ற மனப்பான்மையை விட்டவன் (14:25) சிறந்த மனிதனாகக் கருதப்படுவான். சுயநலம் என்ற ஒன்றினால் தான் கருத்து முரணி பாடுகள் ம்னிதர்களிடையே தோன்றுகின்றன. இதை ஒழித்தால் மக்கள் நலம்பெற முடியும்.
புலனடக்கம்
புலன் நுகர்ச்சியால் மனிதனுக்குப் பற்று ஏற்படுகிறது. பற்றுதலிலிருந்து ஆசை பிறக்கின்றது.
ஆசைப்பட்டது நிறைவேறவில்லையென்றால்
கோபம் உண்டாகிறது. கோபம் அறிவை மயக்கி
நினைவு தடுமாற்றத்தை ஏற்படுத்திவிடும். விவேகம் அழிந்து இறுதியில் மனிதனே அழிகிறான். “ஆமை எல்லாப் பக்கங்களிலிருந்தும் தனது உறுப்புக்களை உள்ளிழுத்துக் கொள்வது போல எப்பொழுது இந்த மனிதன் புலன் நுகர் பொருட்களிலிருந்து புலன்களை முற்றிலும் இழுத்துக் கொள்கிறானோ அப்போது அவனுடைய புத்தி ஸ்திரமானது என்று புரிந்து கொள்ள வேண்டும். (2:58) இச்சிந்தனை,
ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப்புடைத்து
(குறள்.126) குறளில் இடம்பெற்றுள்ளதைக் காணமுடிகின்றது. புலன்களும் புலன்நுகர் பொருட்களும் ஒன்றுசேரும்போது ஏற்படும் போகங்கள் அனைத்தும் உலகப் பற்றுடையவர்களுக்குச்
சுகமாய்த் தோன்றினாலும் அவை நிச்சயமாக
31
துக்கத்திற்குக் காரணமாகவே உள்ளன.
மனம் எப்பொழுதும் எதையாவது பிடித்துக் கொண்டிருக்க விழைகிறது. புலண் களை அடக்கியாள்வது என்பது பல்வேறு முயற்சியின் விளைவால் ஏற்படக்கூடியது. மனத்தில் புலனாசை

Page 36
தேங்கக்கூடாது. சிறிதளவு ஆசை ஒரு து விஷம்போல், தீயவிளைவுகளை உண்டாக்கிவிடு
அஞ்சும் அடக்கு அடக்கு என்பர். அஞ்சும் அடக்கும் அமரரும் ஆங்கிலை அஞ்சும் அடக்கில் ஆசேதனமாம் என்றிட் அஞ்சும் அடக்கா அறிவறிந்தனே
(திருமந்திரம் 203
திருமூலர் கூறுவதுபோல் அவற்ை ஞானத்தறிகளில் பூட்டிவிடவேண்டும். எவனுடை இன்பம் நீடித்து நிற்கிறது என்பதை கீதை “காமம், குரோதம் முதலியவைகளைத் தவிர்த் தன்வசப்படுத்தப்பட்ட புலன்களால் மிதமா இன்பத்தை அனுபவித்து, அவைகளின் எஜமானாக விளங்குபவன் உள்ளத்தெளிை அடைகிறான். இதனால் அவனுடைய துன்பங்க அழிந்துவிடுகின்றன. அவனது அறிவு மகிழ்ச்சியுட6 இறைவனில் லயிக்கிறது. (2:64-65) புல6 இன்பங்களை மிதமாக, அறநெறி தவறாம6 அனுபவிக்கலாம் என்று கூறுகிறது.
புலன்களின் செயல்பாடு
புலன்கள் உலக இன்பத்த்ை துரத்துகின்றன மனம் புலன்களின் பின்னால் ஓடுகிறது. மனத்திற்கு பின்னால் அறிவு ஓடுகிறது. காற்று படை இழுத்துச் செல்வதைப்போல், புலன்களின் போ6 இன்பங்களில் லயிக்கும் மனது மனிதனது அறிை இழுத்துச் சென்று அலைக்கழிக்கும்.(2:67)
மனமெனும் தோணிபற்றி மதியெனும் கோலை
ஊன்றி சினமெனும் சரக்கையேற்றிச் செறிகடல் ஒடும்போ மதனெனும் பாறைதாக்கி மறியும் போதறிய
வொண்ணா
அப்பர் இவ்வாறு வருந்திப் பாடுகிறார். இன்ப தேடுவது புலன்களின் சுபாவம். இை

B
s
9
:
மாற்றவது எளிதல்ல. ஆதலால் மனதையும் புலன்களையும் வெற்றி கொள்ளாதவனுக்கு நிச்சயமான புத்தி இருக்காது. உறுதியான புத்தியற்றவனுக்கு மனதில் பாவனையும் தோன்றாது. அவ்வாறே பாவனையற்றவனுக்கு அமைதியும் கிடைக்காது. (2:66)
புலன்களை அடக்கி வாழ்பவனே சிறந்த நிலையினை அடைய முடியும். ஒவ்வொரு மனிதனுக்கும் புலனடக்கம் இருப்பின் வாழ்க்கை சிறக்கும். இதனையே கீதை எடுத்தியம்புகிறது.
உயிர்களிடத்தில் அன்பு கொள்ளுதல்
அனைத்து உயிர்களிடத்தும் அன்பு
செய்தல் வேண்டும் என்று இந்துமதத் தத்துவம்
கூறுகிறது. “மனம், மொழி, மெய் இவற்றால் எவர்க்கும் எவ்விதமான தீங்கும் இழையாமை; உள்ளம் அறிந்த உண்மையை இனிமையாக எடுத்துரைத்தல்; தனக்கு தீங்கிழைத்தவரிடமும் கூடக் கோபமின்மை, கர்மங்களைச் செய்வதில் நான் கர்த்தா என்ற அபிமானமின்மை; அந்தக் கரணங்களில் ஓய்வு, அதாவது அவை அலையாமல் அமைதியாக இருத்தல்; ஒருவரையும் குறை பழி முதலியன கூறாமை; உயிரினங்களிடத்தில் இயல்பாகத் தோன்றும் பரிவு; புலன்களின் நுகர்பொருள் வந்து சேர்ந்தாலும் அவற்றில் பற்றின்றி இருத்தல்; மென்மை; உலகியல் அறநெறி இவற்றிற்குப் புறம்பான செயல்களில் வெட்கம்; வீணான செயல்களைப் புரியாதிருத்தல். (16:2) பொறுமை, உறுதி, எவரிடமும் பகைமை பாராட்டாமை, தற்பெருமை கொள்ளாமை, இவையெல்லாம் மனிதன் கடைபிடிக்கவேண்டிய சிறந்த ஒழுக்கங்களாகக் கீதை கூறுகிறது.
கடமையைச் செய்தல்
கீதையின் கருப்பொருளாகக் ‘கடமை' என்பது அமைகின்றது. கடமையைச் செய். அதன்
32

Page 37
606060 எதிர்பார்க்காதே என்ற தார்மீ மந்திரத்தை உள்ளடக்கியதாகக் கிை அமைகின்றது. பற்றில்லாது கடமையாற்றுதலி கடமையில் மட்டும் உரிமை கொண்டிருத்த போன்ற சிந்தனைகளைக் கொண்டுள்ளது கீை
பற்றில்லாது கடமையாற்றுதல்
பாசம் தமிழில் தளை என்று வழங்கப்படுகிறது. இதுவே வடமொழில் நிகளL
என்று கூறப்படுகிறது. தளை பேச்சுவழக்கில் தை என்று கையாளப்படுகிறது.
அறியாமை என்பது அறிதல் என்பத எதிர்மறையாய் அறிவாக நிற்கும் தொழிலை குறிக்கும் பெயர். ஆயினும் அது ஆகுபெயரா அறிவை அறிய வொட் டாமல் தடுக்கு பொருளையே குறிப்பிடுகின்றது. அப்பொரு பேதமை, மடமை என்னும் பெயர்களாகவு குறிக்கப்பெறும் தடை என்பது சைவசித்தாந்தத்தி ஆணவம் என்றும் பாசம் என்றும் அல்ல மலம் என்றும் கூறப்படுகின்றது. ஒரு பொரு மீது பற்று வைக்கும்பொழுது அது எவ்வள உயர்ந்ததாயினும், துன்ப விளைவை ஏற்படுத் விடுகிறது. செய்யும் கர்மங்களின் மீது பற்றுவைக்கக்கூடாது. “யார் எவ்விடத்திலு குறிப்பான பற்றில்லாதவனாய் நல்லது - கெட்ட எது நேரினும் மகிழ்ச்சியோ - வெறுப்ே அடைவதிலி லையோ அவனது அறி நிலைபெற்றதாகக் கருதப்படும். (2:57)
லட்சிய மனிதன் எந்த இடத்திலும் சந்தர்ப்பத்திலும் சூழ்நிலையிலும் விசேஷமா பற்றுடையவனாக இருக்கமாட்டான், ஐம்புலன்களி இயக்கத்தைத் தடுக்க முடியாது என்பதை அவ அறிவான். ஆனால், அவற்றை நல்வழிப்படுத் எப்பொருளை நோக்கி மட்டும் அவைகளை செலுத்தலாம் என்பதையும் அறிவான அருச்சுனனிடம் கடமையாற்றுதலைப் பற்

6
:
t
கிருஷ்ணன் கூறும் பொழுது, “உனக்குக
கள்மங்களை ஆற்றுவதில்தான் பொறுப்பு உண்டு. அவற்றின் பயன்களில் ஒருகாலும் உரிமையில்லை. ஆகவே, கர்மங்களின் பயன் களைக்
கோருவதற்குக் காரணமாக ஆகாதே. மேலும் உனக்குக் கர்மங்களை ஆற்றாமல் இருப்பதிலும் பற்று இருக்கக்கூடாது. (2:47) பற்றுதலைத் துறந்து மேலும் கைகூடுவது, கைகூடாமலிருப்பது என்பதில் சமநோக்குடையவனாக இருந்து யோகத்தில் நிலைபெற்றுச் செய்யவேண்டிய கடமைகளைச் செய் (248) என்றும், எந்த ஒரு கடமையிலும் பொருளிலும் பற்றில்லாது செய்தல் வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார். கடமையில்
பற்று, ஆசை இவற்றை ஒழித்தால் துன்பம்
வந்தடையாது என்ற சிந்தனைகளை வலியுறுத்துகின்றது கீதை.
கடமையில் உரிமை கொண்டாடுதல்
செய்கின்ற கள்மங்களில் பற்றும் உரிமையும் இருத்தல் கூடாது. “உனக்குக் கர்மங்களை ஆற்றுவதில் தான் பொறுப்பு உண்டு. அவற்றின் பயன்களில் ஒருகாலும் உரிமையில்லை. ஆகவே, நீ கர்மங்களின் பயன்களைக் கோருவதற்குக் காரணமாக ஆகாதே. மேலும், உனக்குக் கர்மங்களை ஆற்றாமல் இருப்பதிலும் பற்று இருக்கக்கூடாது (2:47) என்று கீதை கடமையில் மட்டும் உரிமையுடன் இரு என்ற சிந்தனையை வலியுறுத்துகிறது. கடமையைச செய். அதன் பலன் தானாகவே வந்தடையும் என்கிறது கீதை.
மரணத்தினும் கொடியது இழுக்கு
மரணத்தைவிட கெர்டியது இழுக்கு என்று கிருஷ்ணன் விசயனிடம் கூறுகிறார். "தர்மத்தோடு கூடிய யுத்தத்தை நீ செய்யவில்லையானால்
அப்போது ஸ்வர்மத்தையும் புகழையும் இழந்து
பாவத்தை அடைவாய். (233) மேலும், அனைவரும் உன்னுடைய நீண்டகாலம் இருக்கக்கூடிய
33

Page 38
இகழ்ச்சியைப் பற்றிக்கூட பேசுவார்கள். மேலும், கெளரவம் உடையவனுக்கு இகழ்ச்சி மரணத்தைக் காட்டிலும் அதிகமாக துன்பத்தைக் கொடுக்கக்கூடியது.(2:34) வெற்றி-தோல்விகளையும் லாபநஷடங்களையும் சுக துக்கங்களையும் சமமாகக் கருதி அதற்குப் பின் யுத்தத்திற்கு தயாராவாயாக என்று கிருஷ்ணன் இழுக்கின் தன்மைப் பற்றி விளக்குகிறார்.
முடிவுரை
1.கீதை உலகின் நிலையாமையை
வலியுறுத்துகின்றது
2ராசஸம், சாத்வீகம், தாமஸம் என்ற மூன்று வகையான குணங்களை விளக்கி மனிதன் இந்த குணத்தில் வாழவேண்டும் என்று கூறுகின்றது.

3.கீதை மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வை அகற்றி மனித இனத்தின் முன்னேற்றமே குறிக்கோளாக கொண்டு அமைகிறது.
4.கீதை மக்களின் மனதைச் செம்மைப்படுத்துவதைத்
தன் கடமையாகக் கொண்டது.
5.எவரையும் காட்டிற்குச் சென்று துறவுபூண்டு நல்லறம் செய் என்று வலியுறுத்தவில்லை. இல்லறத்தில் இருந்துகொண்டு தூய்மையான மனதுடன் கடமையைச் செய் என்று வலியுறுத்துகிறது.
6.தர்மத்தை நிலைநாட்டுதல் என்பது கீதையின்
அடிப்படை நோக்கமாகும். தர்மத்தின்படி நடந்து வாழ்க்கையில’மனிதன் முன்னேற அனைத்து வகையான உபாயங்களையும் கூறுகிறது.

Page 39
ஒளவையாரின் ஞானக்குறளி
முனைவர். சி
சிவாய நமவென்று சி அபாயம் ஒருநாளும் இ இதுவே மதியாகும் அ விதியே மதியாய் வி
பூலோக சரஸ்வதி என்று அன்று தொட் இன்றுவரை தமிழகம் போற்றி வழிபட்டு வருகின் மூதாட்டி ஒளவை. நரை மூதாட்டியாய், கூனு கோலும் கொண்டவராய் அறிவுரை வழங்கு பொருட்டு அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந் ஒரு உருவத்தை ஒளவை என மக்கள் மனத்திரையில் வரைந்துள்ளனர்.
ஒளவை சொல் விளக்கம்
சூடாமணி நிகண்டு நோற்பவர் பெயர்களின் ஒன்றாக ஒளவை என்பதைக் குறிக்கின்றது. துறவு பூணி ட பெண் க்ள் ஒளவை எ6 அழைக்கப்பெற்றனர் என்பதை திருத்தக்கதேவர்
அணியிருங் கூந்தல் அவ்வை மார்கள்தாம் பணிவிலர் பறித்தனர் பரமன் சொன்னநூல் துணிபொருள் சிந்தியாத் துறத்தல் மேயின
என வரும் வரிகளில் குறிப்பிட்டுள்ளார்.
“மணம் செய்து கொள்ளாதFருந்: பருவத்தால் முதிர்ச்சி பெற்றுத் தவக்கோல தாங்கிக் கல்வி கேள்விகளில் மேம்பட்டு விளங்கி பெண்டிரை இயற்பெயர் சூட்டாது 'அவ்வை' என் முன்னோர் வழங்கினர் போலும். இத்தகைய பெண்டி பலர் இலக்கியம் வல்லவர்களாகக் காலந்தோறு இருந்திருக்கிறார்கள் என மு.அருணாச்சல குறிப்பிடுவர்.

ல்
சைவ சித்தாந்தக்கொள்கை
வ. மங்கையக்கரசி
ந்தித்து இருப்போர்க்கு
6)6O6 - 9 LTUUD
Iல்லாத எல்லாம் டும்
நல்வழி.15
டு ஒளவை - யார்?
ஒளவை ஒருவரா? இருவரா? இல்லை பலரா? b என்னும் வின இலக்கிய வரலாற்றில் அவ்வப்போது , எழுந்துள்ளது. ஏறத்தாழ முப்பத்தைந்து நூல்களில் ஒளவை பற்றிய செய்திகள் பேசப்பட்டுள்ளன.
it .
'ஒளவையார்’ எனப் புகழ்பெற்ற சிலர் தமிழ் வரலாற்றில் இடம்பெற்றுள்ளனர்.
மு. அருணாச்சலம் ஒளவையார் என்னும் பெயர் கொண்ட ஆறு பெண் பாற்புலவர்கள் இருந்தனர் என்று குறிப்பிட்டுள்ளார். தமிழ்க் கலைக்களஞ்சியம் ஒளவையார் இருவர் என்னும் கருத்தைத் தந்துள்ளது. கா.சுப்பிரமணிய பிள்ளை, துரைசாமிபிள்ளை போன்றோர் ஒளவையார் இருவர் என்றே குறித்துள்ளனர். புலவர் புராணப்பாடலும் ஒளவையார் இருவர் என்றே குறித்துள்ளது. மு.கோவிந்தசாமி, சாலை இளந்திரையன், பெ.நா அப்புஸ்வாமி போன்றோர் ஒளவையார் மூவர் என்றே குறிப்பிட்டுள்ளனர். ஒளவையார் என்னும் பெயருடையவர்கள் மூவர் பெரும்புலவர்களாக இருந்ததாகத் தெரியவருகிறது.
" ", சங்ககாலப் பெண் பாற் புலவர்களுள்
ஒருவரான ஒளவையார் நல்லிசைப் புலமை
பெற்றவர். தமிழ் மூதாட்டி எனத் தமிழகத்து மக்களால் அழைக்கப்பட்டவர். அதிகமானிடம் அன்பு
35

Page 40
கொண்டவர். அவனுக்காகத் தொண்டைமானிய தூது சென்றவர். இவர் புறநானூற்றில் முப்பத் மூன்று பாடல்களும் அகநானூற்றில் நான் பாடல்களும் நற்றிணையில் ஏழு பாடல்களு குறுந்தொகையில் பதினேழு பாடல்களு பாடியுள்ளார். இவருடைய பாக்கள் எளிமை, செறி பொருள்நுணுக்கம், உள்ளப்பிணைப்பு ஆகியவற்ற சிறந்து காணப்படும். இவரைச் சங்க காலத் ஒளவை அல்லது முதல் ஒளவை என்று குறிப்பிடலாம். சங்க காலத்து ஒளவையாரிட இலக்கியப் படைப்பாளி என்னும் தன்மைே மேலோங்கி நிற்கிறது.
இடைக்காலத்தில் கம்பர் காலத்தி ஒளவையார் ஒருவர் இருந்துள்ளார். இவருடை பாடல்கள் தனிப்பாடல் திரட்டு முதல் தொகுதியி இடம் பெற்றுள்ளன. இவர் ஒளவைக்குறள், விநாயக அகவல் முதலிய சமயப் பாடல்களையு பாடியுள்ளார். இவரைச் சமயகாலத்து ஒளை அல்லது இரண்டாவது ஒளவை எனக் குறிப்பிடலாம் இவர் இக்காலத்து பாடிய பாக்கள் தத்துவ கருத்துக்களைக் கொண்டிருப்பதால் 'தத்துவஞானி என்றும் அழைக்கப்பட்டார். இடைக்காலத்தில் ப6 ஒளவையார்களையும் தமிழிலக்கிய வரலாறு காட்சிப்படுத்த தவறவில்லை. மக்கள் கவிஞர் என்று மதிக்கத்தக்கப் புலவராக வாழ்ந்த ஒப்பற் பெண்மணி ஒளவை என்று கூறலாம். s
அதிவீரராம பாணி டியன் காலத்தில் ஒளவையார் ஒருவர் இருந்துள்ளார். இவர் ஆத்திசூடி கொனி றைவேந் தனி , மூதுரை, நல வழி அசதிக்கோவை, பந்தனந்தாதி போன்ற நீதி நூல்களைப் பாடியுள்ளார். ஆகவே, இவரை நீதிநூ ஒளவை எனக் குறிப்பிடலாம். நீதிநூல்கள் யாத் ஒளவையாரிடம் அறிவுரையாளர் என்ற தன்மைே உயர்ந்து காணப்படுகிறது.

l,
l)
36
ஒளவையாரின் படைப்புகள்
சங்ககால ஒளவை இடைக்கால ஒளவை நீதிநூல் ஒளவை புறநானூறு 33 தனிப்பாடல் திரட்டு ஆத்திசூடி அகநானூறு 4 முதல்தொகுதி -73 கொன்றைவேந்த
ற்றிணை -7 இரண்டாம்தொகுதி -5 நல்வழி நறுந்தொகை -17 ஒளவைக்குறள் மூதுரை
விநாயகர் அகவல் அசதிக்கோவை
பந்தனந்தாதி
ஒளவையார் ஒருவரா? பலரா? என்பதும் அவரது வாழ்க்கை வரலாறு தெளிந்த நிலையில் நிறுவ முடியவில்லை. எனவே, ஒளவைக்குறள் எந்த ஒளவையாரால் செய்யப்பெற்றது என்று
ஆராயப் வதரில் உழலாது அதில் என்ன
சொல்லியுள்ளார் என்பதையும், அது சைவ
சாத்திரங்களோடு எவ்வாறு ஒற்றுமைப்பட்டுள்ளது அல்லது வேறுபட்டுள்ளது என்பதைக் கண்டாய்வகே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
ஒளவைக்குறள்
“ஒளவைக் குறள் , ஒளவையாரால சொல்லப்பெற்ற குறள் வடிவிலான தத்துவ நூலாகும். திருக்குறளுக்கு ஒளவை அளித்த பாயிரம் குறளாகவே அமைந்துள்ளது. அதேபோல் ஒளவையாரும், தாம் கண்ட தத்துவ ஞானத்தைக் குறட்பாக்களாகவே பாடியுள்ளார். வெண்பா மூன்று தலைமையான பொருண்மைகளை எடுத்துக் காட்டும். அவையாவன. 1. பழங்கதை கூறல்
2. அறமுரைத்தல் 3. சமயநெறி விளக்குதல் ஒளவையின் குறள் வெண்பா சமயநெறியின் விளக்கமாக அமைந்துள்ளது. ஒளவையாரின் ஒளவைக் குறள் வள்ளுவத்தால் சொல்லி விளக்கப்படாத "வீடு' என்னும் பகுதியை மிக விரிவாகக் கூறுகின்றது. இதனால் வள்ளுவரின் குறள் கற்ற அறிஞர்கள் அதன் தொடர்ச்சியாக ஒளவைக் குறளைக் கற்க வேண்டும் என்பது தெளிவாகிறது. வள்ளுவர் குறளை அறம், பொருள்,

Page 41
இன் பம் என மூன்று பால களாக 13 அதிகாரங்களைப் பகுத்து ஒவ்வொன்றிற்கும் பத் குறட்பாக்கள் வீதம் 1330 பாக்களாகப் பாடியுள்ள போல் ஒளவையாரும் தம் நூலில் வீட்டு நெறிப்பா6
ஒள
வீட்டுநெறிப்பால்-10 g பிறப்பின் நிலைமை
உடம்பின் பயன்
உள்ளுடம்பின் நிலைமை G
நாடி தாரணை &
வாயு தாரணை
அங்கிதாரணை (l
அமுத தாரணை உ
அர்ச்சனை tí
உள்ளுணர்தல்
பக்தியுடைமை &
சைவசித்தாந்தக் கொள்கை
சிவனை முழுமுதல் கடவுளாகக் கொண் சமயம் சைவம் சைவ சித்தாந்தம் என்பது சைவம் சித்தம்+ அந்தம் எனப் பகுத்தாராய வல்லதாகு சைவம் சிவசம்பந்தத்தையும் சித்தம் முடிவா உண்மை என்பதையும் அந்தம் முடிவு என்பதையு சுட்டும். எனவே, சைவத்தின் முடிந்த முடிை

3 திருவருட்பால், தன்பால் என மூன்று பால்களாக
து 31 அதிகாரங்களாகப் பிரித்து ஒவ்வொன்றுக்கும்
து பத்துக் குறள் வீதம் 310 பாக்களாகப் பாடியுள்ளார்.
üb,
வைக்குறள்
திருவருட்பால்-10 தன்பால்-11
அருள்பெருதல் குருவழி
ணைப்புறுதல் அங்கியிற்பஞ்சு
தரிந்த தெளிதல் மெய்யகம்
லைஞானம் கண்ணாடி
உருவொன்றி நிற்றல் சூனியகாலம்அறிதல்
ழத்திகாண்டல் சிவயோகநிலை
உருபாதிதம் ஞானநிலை
றப்பு அறுத்தல் ஞானம்பிரியாமை
ாயஒளிகாண்டல் மெய்ந்நெறி
தாசிவம் துரிய தரிசனம்
எடுத்தாளும் வகையில் பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள் உண்மையாய் சைவசித்தாந்தம் D. உள்ளது. சைவ சித்தாந்தம் என்ற சொல்லை * முதன் முதலில திருமூலரே தமிழில |D எடுத்தாண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
37

Page 42
சைவ சித்தாந்தம் முப்பொருள்களை அநாதி நித்தியம் என்று சொல்கிறது. பரமசிவமாகிய பரம்பொருளே பதி, உலகிலுள்ள உயிர்கள் பசு அந்தப் பசுவைக் கட்டிப் போட்டு பிறப்பு இறப்புகளைப் பெறச்செய்து உயிர் யாத்திை நடத்தக் காரணமாக இருப்பது பாசம்.
முப்பொருள் உண்மை
பதி இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்கி உயிர்க் கூட்டத்தின் மேல் கொண்ட திருவருள் காரணமாகப் படைத்தல், காத்தல், அழித்தல் மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழில்களையும் செய்வது சிவபரம்பொருள். எல்லாவற்றுக்கும் மேலாக்வும், எல்லாவற்றிக்கும் அப்பாற்பட்டும் எல்லாவற்றிற்கும் ஆதாரமாகவும் சிவபரம்பொருள் 660 ஒன்று உண்டு. இதை
"ஒருவனோ டொருத்தி யொன்றென்
றுரைத்திடு முலக மெல்லாம் வருமுறை வந்து நின்று
போவது மாத லாலே தருபவ னொருவன் வேண்டும் தான்முத 6lindi LDIT5l மருவிடு மநாதி மூத்த
சித்துரு மன்னிநின்றே” என்று சிவஞான சித்தியார் இறை உண்மையை எடுத்துரைத்துள்ளது.
உடல் , கருவி, உலகம் முதலிய அனைத்தும் பானை, கட்டிடம் முதலானவற்றைப் போல் காரியப் பொருள்களாகும். இவை (உடல் முதலானவை) எல்லாவற்றையும் ஒருங்கே உணரவல்ல ஞான சக்தியும் எல்லாவற்றையும் ஒருங்கே செய்ய வல்ல கிரியாசக்தியும் உடைய சிவப்பரம்பொருளால் உருவாக்கப்பட்டனவாக அனுமானத்தால் உணரப்பட்டன. இறைவன் மந்திரமயமான சரீரம் தாங்கிப் படைப்பு முதலான தொழில்களில் ஈடுபட்டுள்ளான்.

உடல், கருவி, உலகம் முதலானவை காரியப்பொருள் என்றும் அவற்றிற்கு கருத்தா இறைவன் என்றும் கூறப்பட்டது. இறைவன் வரம்பில் இன்பம் உடையவன். ஆதலால் எப்பொழுதுமே நிறையுணர்வு உடைய இறைவனுக்கு உடல், கருவி, உலகம் முதலியவற்றால் ஒரு பயனும் இல்லை. உடல் முதலானவை ஜடப் பொருட்கள். எனவே, அவை தம்மைத் தாமே பயன்படுத்திக் கொள்ள முடியாது. அவற்றைப் பயன்படத்தக்கூடிய அல்லது அவற்றால் பயன்பெறக்கூடிய பொருள் ஒன்று தனியே இருக்க வேண்டும். உடல் முதலானவற்றை இறைவன் அலகிலா விளையாட்டு என்ற முறையில் படைக்கிறான். பேரறிவு வடிவாக விளங்கும் அவன் தனக்குப் பயன்படாத, தன்னையும் பயன்படுத்திக் கொள்ளத் தெரியாத பொருள்களைப் படைக்கமாட்டான். எனவே, உலகம் (பாசம்) என்பது இறைவன். அல்லாத வேறோர் அறிவுடைப் பொருளின் பொருட்டு உருவாக்கப்பட்டது. அந்த அறிவுடைய பொருளே உயிர்.
உயிர் உடலெடுத்துப் பிறந்து தனது வினைக்கேற்ற பலன்களை அனுபவித்து மாயை, 856, Dib, ஆணவம் என்னும் மும்மலங்களிலிருந்து விடுபடுவதற்காக உலகம் நிலைபெற்றுள்ளது. மாயை, கனிமம் , ஆணவம் என்பவையே பாசங்களாகும்.
சாதனங்கள்
உயரிர் கள் தம் மைக் கட்டியுள்ள பாசத்திலிருந்து நீங்கிப் பதியினைச் சென்றடைதலை குறிக்கோளாகக் கொண்டிருத்தல் வேண்டும். உயிர்கள் இறைவன் திருவருளை இரு முறைகளில் அடையலாம். ஒன்று தன்திறத்தால் சென்றடைவது, மற்றொன்று இறைவனால் கொடுக்கப்பெறுவது. உயிர்கள் இயற்கை குறைபாடு உடையவை. ஆகையால் பயிற்சித் திறத்தாலே சென்றடையும் உரிமை உடையனவே அன்றி இறைவன் கொடுக்க
38

Page 43
ஏற்றுக் கொள்ளும் தகுதி பெற்றவை அல்ல. சை6 சமயத்தில் உயிர்கள் முயற்சியால் இறைவன் திருவருளை அடையும் வழிகள் சாதனங்கள் எனப்படும். அவை சரியை, கிரியை, யோகம் ஞானம் என நான்காகும். இவை முறையே அடிமைநெறி, மகன்மைநெறி, தோழமைநெறி காதன்மை நெறி என்றும் அழைக்கப்பெறு இவற்றுள் சரியை முதலிய மூன்றும் ஞானத்திற்கு வழி. ஞானம் முத்திக்கு வழியாகும். இதனை,
“விரும்பிய சளியை முதல் மெய்ஞ்ஞானம் நான்கு அரும்பு மலர்காய் கனிபோல் அன்றோ பராபரமே
எனத் தாயுமானவர் குறித்துள்ளார். சரியை கிரியை, யோகம் என்னும் மூன்று நிலைகளுட வினைமறையின் வளர்ச்சிப் படிகள் எனலாம். இவை உபாயநிலை, உணர்மைநிலை என இரு பகுப்புகளுக்கு உட்படும்.
சரியை, இது இறைவனின் உருவத் திருமேனியை நோக்கிச் செய்யும் புறவழிபாடு இச்சரியை நெறியில் நின்றார் சாலோகப் பதவியை அடைவர். கிரியை; இறைவனின் அருவுருவத் திருமேனியை நோக்கிச் செய்யப்படும். புறவழிபாடுப் அகவழிபாடும் கிரியை எனப்படும். இந்நெறி நின்றோர் gst fu பதவியை அடைவர். யோகம்; இது இறைவனின் அருவத்திருமேனியை நோக்கிச் செய்யப்படும் ஒன்றிய வழிபாடு, மனத்தளவில் மட்டுப் செய்யப்படுவதாகும். பஞ்சேந்திரியங்களின் வழியிலே மனத்தைச் செல்லவொட்டாமல் ஒருவழிப்படுத்தி நிஷடை கூடியிருப்பதே யோகமாகும்.
இவ் யோகநெறி சரியை, கிளியை ஆகியவைகளை விடத் தீவிரமானதாய் மனத்தின் பக்குவ நிலையை வளர்த்துக் கொள்வதை உள்ளடக்கியது. இங்கு உடலும் உள்ளமும் முறையான பக்குவ நிலைக்குட்பட சிவனை அருவத்திருமேனி நிலையில் வழிபடுதலைக் குறிக்கும். அட்டாங்க யோகத்தால் (இயமம், நியமம்

ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாக்கரம், தாரணை, தியானம், சமாதி) நம் பிராணனைக் குண்டலினி என்னும் சக்தியோடு எழுப்பி, மேலே உள்ள உச்சியில் விளங்கும் கடவுளோடு சேரத் தியானித்து அதற்கு மேல் அதாவது சிரத்துக்கு மேல் பன்னிரண்டு அங்குல அளவில் விளங்கும் உருவமற்ற ஒளிப்பிழம்பாகிய பரசிவத்தோடு ஒன்ற வைப்பதே யோகமாகும். யோகம் ஞானத்திற்கு வாயிலாகும். யோக வழிபாடு பற்றிய விளக்கம் சிவஞானசித்தியாரில் உள்ளது. இந்நெறி நின்றார் சாரூப பதவியை அடைவர். ஞானம் இது புறத்தொழில், அகத்தொழில் இரண்டுமின்றி அறிவுத்தொழில் மாத்திரையால் அம்மூன்றுக்கும் மேலாய் நிற்கும் சச்சிதானந்தப் பிழம்பான சிவனுக்குச் செய்யும் வழிபாடு. அறிவே வடிவாய் விளங்கும் இறைவனது உண்மை அறிந்து அன்பு செய்யும் அறிவுவழிபாடே ஞானம். இந்நெறி நின்றார் சாயுச்சிய பதவியை அடைவர். இந்நான்கு சாதனங்களால் அடையும் பயன் இரண்டு, ஒன்று பாசநீக்கம், மற்றொன்று சிவப்பேறு.
“சரியை தேகத்தால் வழிபடல் கிரியை சாருமிந்திரியத்தால் சிவனைப் பிரியமாய்ப் பேணல் யோகமோ கானப் பிரிபடா தரனடி ஒன்றல் உரிய மெய்ஞ்ஞானச் சீவனைச் சிவன் உணவெனக் கொடுத்த லிங்கினைத் தெரியகில்லார் தம்வாய் வலிகொண்டு சீரிழந் துரைப்பார் திமொழியே”
என சிவதர்மவிசாரம் இந்நான்கு நெறிகளின் தன்மைகளை விளக்கியுள்ளது.
சரியை முதலான நான்கு படிநிலைகளிலும் தனித் தனியே முப் பொருளைப் பற்றிப் பேசப்பட்டுள்ளது. சரியை என்பது முக்கியமாக ஆலய வழிபாட்டைக் கூறுவது. வழிபாடு செய்யப்படுபவராய்ப் பதியும், வழிபாடு செய்வதாய் பசுவும், வழிபாட்டுக்குச் சாதனங்களாகவும்.
39

Page 44
இறைவன் திருவடியில் அர்ப் பணிக்க தகுந்தவையாகவும் விளங்குதல் பற்றிப் பாசமு ஆராயப்பட்டுள்ளது.
கிரியையில் முக்கியமாகக் கூறப்படுவ தீட்சை என்பது. தீட்சை என்னும் கிரியையி அனுகிரகம் புரியும் கருத்தாவாக விளங்குதல் பற்றி பதியும், திருவருளைப் பெறுவதற்கு தகுதியுடையதாக விளங்குதல் பற்றிப் பசுவு ஆன்மாவினால் நீக்கத்தக்கவை என்பது பற்றி பாசமும் கிரியையில் ஆராயப்பட்டுள்ளத.
யோகத்தில் முக்கியமாக இடம்பெறுவ தியானம்' என்பது. தியானிக்கப்படும் பொருளா இருத்தல் பற்றிப் பதியும், தியானிக்கும் கருத்தாவா இருத்தல் பற்றி பசுவும், தியானத்தால் மறக்க தகுந்தவையாக விளங்குதல் பற்றிப் பாசமு யோகத்தில் ஆராயப்பட்டுள்ளத.
ஞானத்தில் பதி, பசு, பாசங்கள் நிரூபண செய்யப்பட்டுள்ளன. பல நூல்களையும் ஆராய்ந் பதி, பசு, ஞானம் என்னும் மூன்று தத்துவ்ங்களி இலக்கணங்களைத் தெளிந்து, பண்டை வினையி பயனாக வந்த சிற்றறிவு முற்றும் நீங்க பேரறிவாகிய சிவஞானம் விரிந்து தோன்று மனத்தைப் பெறுதலேயாகும்.
இறைவன் இன்பப்பொருள், இன்பஉரு இறைவனோடு என்றும் இணைந்திருப்பதே பேரின்ப இதனைக் கூறுவது தான் யோக நெறி. இடைவிடா தியானம் யோகநெறி. யோகநெறி நிற்பார்க்கு மரண இல்லை, மூப்பில்லை, நரை, திரையில்லை என் குறிப்பிட்டுள்ளார் யோகியாகிய் திருமூலர். ஆகே தியான யோகத்தில் நிற்பவர்கள் மறுமையி எல்லாவுலகிற்குமேலாய வீட்டு நிலத்திலு! இம்மையில் இந்நிலத்து நீண்டகாலமும் வாழ்வு என்பர். அத்தகைய யோகநெறியைப் பற்றிக்கூறு ஒளவைக்குறளைச் சித்தாந்தத்தோடு இணைத் எண்ணுவோம்.

:
சமயமும், தத்துவமும் இடைக்கால இலக்கியங்களின் சாரமாக இலங்கியது. எனவே
" தான் இடைக்காலத்தில் வாழ்ந்த ஒளவையார்
தத்துவ யோகஞான நூலான ஒளவைக்குறளை பாடியுள்ளர். இவர் வாழ்ந்த காலத்தில் தான் சித்தர் இலக்கியங்கள் பிரபலமாய் இருந்தன. அதை
அடுத்து தான் ஒளவையார் ஞானக்குறளைப்
பாடினார் என்று நம்ப இடம் உள்ளது. ஒளவைக் குறளிலே யோகத்தைப் பற்றியும், ஞானத்தை பற்றியும் தான் கூறப்பட்டுள்ளன. யோக மார்க்கத்தில் நின்று வெற்றி பெற்றவர்கள், சித்தி பெற்றவர்கள், சித்தர்கள் என்று பெயர் பெற்றனர். இவர்கள் சாகாநிலையைப் பெற்றவர்கள், உடம்பை அழிந்து போகாமல் பாதுகாக்கும் வழியை அறிந்தவர்கள், தம்முடைய உடம்பை விட்டு மற்றோர் உடம்பிலே புகுந்து நடமாடும் சக்தி படைத்தவர்கள், இதற்குக் கூடுவிட்டு கூடு பாய்தல் என்று பெயர் சித்தர்களுக்கு வானமார்க்கமாகச் செல்லும், சக்தியும் உண்டு, முக்காலங்களை அறியும் ஞானமும் உண்டு
பலவித அற்பகங்களைச் செய்யும் ஆற்றலும் உண்டு.
இணைபபு எனற பொருளுடைய யோகம் என்ற பதம் யுஜ்' என்னும் சொல்லிருந்து எடுக்கப்பட் டது. ஆங்கிலச் சொல்லான யோக்(yoke) என்னும் சொல்லின் பொருளுடையது. முடிவான உள்பொருளோடு ஒன்றாக இணைவதற்கு வழி என அதற்குப் பொருள் கூறப்பட்டுள்ளது." யோகத்தில் எட்டு உறுப்புக்கள் உள்ளன. அவையாவன இமயம் (விலக்கவேண்டுபவை) நியமம் (கைக்கொள்ள வேண்டுபவை)ஆசனம் (உட்கார ைேண்டிய முறை) பிராணாயாமம் (CypėFa#Läbbg56ö) பிரத்தியாகாரம் (பலன்களை அவை. விரும்பும் பொருள்களின் மேல் செல்ல வொட்டாமல் செய்தல்) தாரணை (கவனத்தை ஒருமுகப்படுத்தல்) தியானம் (ஆழ்ந்த சிந்தனை) சமாதி (மனத்தை ஒருமுகப்படுத்தல்) என்பன. இவ்வெண்வகைப்
40

Page 45
படிநிலைப் பயிற்சிகள் அறிவுநிலை போன்ற அசாதாரண சக்திகளையோ அல்லது ' முழுமை பெற்ற இயல்புகளையே விளைவிக்கும். இவைகள் அட்டமாசித்திகள் ஆகும். அவையாவன அணிமா (சிறு உரு பெற்று உலவல்) மகிமா (பெரிய உருபெற்று நிற்றல்) லகிமா(உடலை லேசாக்கும் வல்லமை பெறல்) பிராத்தி(நினைத்தவற்றை அடையும் வல்லமைபெறல)பிராகாயியம் (நினைப்பாற்றலால் பொருளை படைக்கும் சக்தி) தத்துவம்(தெய்வத்தன்மை பெறல்) வசித்துவம் (வசப்படுத்தும் தன்மை பெறல்) கரிமா(இன்ப துன்பங்களுடன் சம்பந்தப்படாம்ல் இருத்தல்). இவ்வெண்வகை சித்திகளையும் பெற்றோர் சித்தர் எனப்படுவர். சித்-அறிவு சித்தை உடையவர்கள் சித்தர்கள். சித்தர்கள் என்றால் அறிவு படைத்தவர்கள், அறிஞர்கள், மேதைகள்,பேரறிவு படைத்தவர்கள், நுண்ணறிவு பெற்றவர்கள், விஞ்ஞானிகள், மெய்ஞ்ஞானிகள் என்று பொருள் கொள்ளலாம்.
திருமூலர் திருமந்திரம், ஒளவையார் ஞானக்குறள், ஞானவெட்டியான் முதலிய நூல்களைச் சித்தர்களின் கருத்தடங்கிய நூல்களாகவே கொள்ளவேண்டும். மதம், சமுதாயம் இவைகள் பற்றிய சித்தர்களின் கொள்கைகளைச் சித்தர் பாடல்களிலே காணலாம்.
இவ்வுடம்பு பஞ்ச பூதங்களால் ஆகியது. இறைவன் நம்மிடமே தான் இருக்கிறான். அவனைக் கண்டறிவதே ஞானம், யோக சித்தியால் உடலை வலுவாக வைத்துக் கொள்ள முடியும் என்ற கருத்துக்களைத்தான் ஒளவைக்குறளில் காணலாம். அது சித்தர்கள் கண்டறிந்த உண்மையாகும்.
பிறப்பின் நிலைமை
இறைவனின் கருணையாலே உயிருக்குப்
பிறப்பு என்பது ஏற்படுகின்றது. தான் பெற்ற பூத உடலைக் கொண்டு உயிர் பல வினைகளைச்

செய்கிறது. இந்த வினைகளுக்கேற்ப மீண்டும் மீண்டும் பிறந்தும் இறந்தும் உழலுகின்றது. பிறவியை ஒழித்து விட்டின்பத்தை உயிர் நாட முயல வேண்டுமானால் முதலில் பிறப்பின் தன்மையை உணர வேண்டும் என்ற எண்ணத்தால் தான் ஒளவையார் வீட்டு நெறிப்பால் என்ற பாலில் முதல் அதிகாரமாகப் பிறப்பின் நிலைமை பற்றி
எடுத்துரைத்துள்ளார்.
"ஆதியாய் நின்ற அறிவு முதலெழுதது
ஒதிய நூலின் பயன்’
என்ற முதல் அதிகாரத்து முதல் குறட்பாவில் இந்த
நூலின் பயனாவது அனைத்துக்கும் ஆதியாய் நின்ற
அறிவினது முதலில் எழுந்ததான படைப்பினது
நிலையைச் சொல்வதாகும். 'ஆதியாய்' என்றது உலகத் தோற்றங்களுக்கும் முற்பட்ட அநாதி காலத்தைக் குறிக்கும் நின்றதானாகவே விளங்கி நிலை பெற்றிருந்த அறிவு, பரவடிவான இறை.
முதல் எழுத்து அகரமாகிய ஆதி ஒலி ஆதி ஒலியைப் பிரணவமாக 'ஓம்' என்பர்.நம்முள் அறிவாக நிற்பது சிவத்தின் கூறு. அதனை
"ஆணவமலம்' மறைத்து நிற்பதனாலே தான்
பற்றுகள் (3LDGITs எழுந்து நம்மை வினையில் வீழ்த் கின் ன. இந் ஆணவ ம் நீங்க 'ஆதியாய் நின்ற அறிவினைப் பற்றி வீட்டு நெறியையே
வாழ்க்கை நெறியாகக் கொள்ள வேண்டும். இக்கருத்தை
“முத்தி முதற்கொடிக்கே மோகக் கொடிபடர்ந் தத்தி பழுத்த தருளென்னும்கத்தியினான் மோகக் கொடியறுக்க முத்திப் பழம்பழுக்கு மேகக் கொடியெழுங்கானின்று'
எனற திருக்களிற்றுப்பாடியார் பாடல நினைவூட்டுகிறது.
ஒளவையார் இரண்டாவது அதிகாரத்தில்

Page 46
அன்னமயகோசம்' எனப்படும் இந்த உடலின உயிருக்கு ஏற்படுகின்ற பயன்களைக் கூறியுள்ள இந்த மனித உடலைப் பெற்றதன் பயனெல்ல இந்த உடம்பிலேயே இருக்கின்ற உத்தமனாகி ஈசனைக் காண்பது தான். சீவான்மாக்களாகிய ர உடலினுள்ளேயும் பரமான்மா வியாபித்துள்ளா அவனை உடலின் உள்ளே காண்பது தா உடம்பின் மிகச் சிறந்த பயனாகும்.
இதை,
"உள்ளம் பெருங்கோவில் ஊனுடம்பு ஆலய வள்ளாற் பிரானார்க்கு வாய்கோபுரவாயில்
தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம் கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே
என வரும் திருமுல்ர்வாக்குடன் ஒ
நோக்கத்தக்கது. முதற் குறளில் உடம்பி உத்தமனைக் காண்க என்றவர் மூன்றாவது குறளி சங்கரனைச் சார் என்று மீண்டும் அதை வற்புறுத்திறுள்ளார்.
"ஒருபயன் ஆவது உடம்பின் பயனே
தருபயனாம் சங்கரனைச் சார்” m என்ற குறளில் உடல் தருகின்ற பயனா 'சங்கரனை இவ்வுடம்பினுள்ளே கண்டு அவனை ஆன்மா துணையாகக் கொள்ள வேண்டும் என் கூறியுள்ளார். ஒளவையார் ஈசனை உறுதியா கண்டே தீர்வது என்ற வைராக்கிய மனத்துட தேடச் சொல்லியுள்ளார்.
உள்ளுடம்பின் நிலை
"அன்னசரீரம்’ ஆகிய இதனுள் க்கு உயிரானது. தனக்கு இன்னொரு நுட்பமf சரீரத்தையும் கொண்டதாகவே உள்ளது. அந்நு சரீரம் உள்ளுடம்பு என்னும் பெயரோடு இ உடம்பின் உள்ளேயே உள்ளது. உடலை வி செல்லும் உயிர், அந்த உள்ளுடம்போடுத போகிறது. இவ்வுள்ளுடம்பு உலகத்திற்கு பெ

.
TLib
ய
நம்
Lub
கும்
ான
ட்ப
ந்த
ான் ibb
பிறவிக்கு உதவியும், இதைவிட்டுச் சில சமயம் விலகியும் இருவகையாக இயங்கும் தன்மை உள்ளது. மனவளர்ச்சி என்பதே உள்ளுடம்பின் வளர்ச்சிதான். உள்ளுடல் என்பது ஒளி வீசிக்கொண்டிருக்கும் ஓர் ஒளியுடல். ஞானக் க்ண் பார்வை என்பது இந்த உள்ளுடம்பின் பார்வைதான். உள்ளுடம்பின் ஆற்றல் பெருகப் பெருக, அதன்மூலம் ஆன்மா அரிய செயல்களைச் சாதிக்க முடியும். மனோவசியத்திலும், சூக்கும உணர்வு ஞானத்திலும் இவ்வுள்ளுடம்பே துணையாக நின்று செயல் புரியும். உள்ளுடம்பில் வாழ்வனவாகிய
ஒன்பது துவாரங்களும் உயிர்களுக்கு கள்ள உடம்பாகி விடுதலும் கூடும். உடலிலுள்ள ஒன்பது துவாரங்களையும் அடைத்து விட்டால் அன்பாய்
விளங்கும் சிவனைச் சேர்தலும் ஆன்மாவுக்கு வாய்க்கும்.
நாடிதாரணை
உடலின் இயக்கத்துக்கு நாடிகள்’ என்னும் நரம்புகள் மிகவும் பயன்படுவன. இவை மொத்தம்
72000 என்பார்கள். இவற்றுள் பத்துநாடிகள் மிகவும்
சிறப்பானவை. அவையாவன. இடகலை, பிங்கலை,
சுழுமுனை, சிகுவை, புருடன், காந்தாரி, அத்தி,
அலம்படை, சங்கிலி, குரு.
சிவனை அடைய உதவுவதால்தான் இதனை நாடி என்றழைப்பள். நாட்டத்திற்கு உதவும் நரம்புப் பொருள் என்பது பொருள். பிறவியின் நாட்டமே பிறவியற்ற பெரியோனைக் காண்பது. அந்த நாட்டத்தை நிறைவேற்றுவதும் நாடிதான். நாடிகளின் இயக்க மரபுகளை அறிந்து அவ்வழியில்
செறிவாக நின்று ஆசைகளுக்கும் ஆங்காரங்களு
க்கும் இடம் தராமல் அடங்கி உள்ளத்தினுள்ளேயே
அறிவானது பேரொளியாகிய சிவபரஞ்சுடரைக்
காணலாம். ஏனெனில்
'அறிந்தடங்கி நிற்கும் அந்நாடி தோறும்
42

Page 47
செறிந்தடங்கி நிற்கும் சிவம்"
என்று கூறியுள்ளார் ஒளவையார்.
வாயுதாரணை
காற்றினை இயக்கும் முறையோடு செல்லுமாறு இயக்குவதன்மூலம் உடலுனுள் ஒடுங்கியிருக்கும் குண்டலினி சக்தியை எழுப்பி அதன் மூலம் முத்தி காண முயல வது வாயுதாரணையாகும். வாயுக்கள், தசவாயுக்கள் என்று கூறப்பெறும். முன் சொன்ன தச நாடிகளிலும் நின்று இயங்குபவை இவை. யேர்கம் செய்வோர் மிகவும் கவனித்து இயக்க வேணி டியது வாயுவைத்தான். இதில் பிராணாயாமம் என்றும் மூச்சுப் பற்றிய மரபுகளை ஒளவையார் கூறியுள்ளார். இடது மூக்குத்துவாரம் வழியாகவும், 6695) மூக்குத்துவாரம் வழியாகவும், உள்மூச்சு, வெளிமூச்சு, மூச்சடக் கல் முதலியவற்றை முறையாகச் செய்தால் அரனின் அருளை அடையலாம் என்றுரைத்துள்ளார் ஒளவையார்.
அங்கிதாரணை
மூலாதாரத்தில் எழும் மூலக் கனலையே அங்கி என்றழைப்பர். மூலாதார மூலக்கணல் அக்கினியை எழுப்பித் தரிசிக்கும்போது தேகமே சுடரிட்டுப் பிரகாசிக்கும்.
அமுதத்தாரணை
அமுதத் தை அருந்துதல் அமுத தாரணையாகும். ஒளவையார்
“ஈரெண் கலையின் நிறைந்த அமுதுண்ணல் பூரண மாகும் பொலிந்து”
என்ற குறளில் பதினாறு கலைகளிலும் நிறைந்திருக்கும் அமுதத்தை உண்டால் ஆன்மா அழகு பெற்று பரிபூரணத் தன்மை அடையும் என்று கூறியுள்ளார்.

“ஞான ஒளி விளக்கால் நல்ல அமுதுண்ணால் ஆன சிவயோகி யாம்”
என்ற குறளில் ஒளவையார் மெய்ஞ்ஞானம் என்னும் ஒளிவிளக்கின் உதவியால் நல்ல அமுதத்தை உணர் டால் சிவயோகியாக விளங் கலாம் என்றுரைத்துள்ளார்.
அர்ச்சனை
தெய்வத்தைத் துதித்துப் போற்றுதல் அர்ச்சனை, உள்ளத்திலே யோகிகள் சிவனை வணங்கும் ‘உள்முக வழிபாடு' தான் அர்ச்சனை. மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை என்ற ஒவ்வொன்றிலும் நினைவை நிறுத்தி “குண்டலினி சக்தியை எழுப்பிச் சிறு வடிவங்களை அர்ச்சித்தல் வேண்டும் என்று கூறியுள்ளார் ஒளவையார்.”
உள்ளுணர்வு
இது உள்ளத்தில் பொருந்தி இருக்கும் ஞான உணர்வைக் குறிக்கும். இதனை,
“எண்ணற்கரிய அருந்தவத்தால் அன்றே
நண்ணப்படும் உணர்வு தான்”
என்ற குறள் மூலம் எடுத்துக் காட்டியுள்ளார் ஒளவையார்.
பக்தியுடைமை
வீட்டு நெறிய்ை அடையும் நெறிகளுள் ஒன்று பக்தி நெறி. இது எளிமையானது. ஒளவையார் காட்டும் பக்தி உள்ளத்தே கொள்ளும் பக்தி தான். வெளியே செய்யும் ஆடம்பரப் பூசை முறைகள் அல்ல. மானச பூசை போன்ற வழிபாட்டு மரபு அது.
"பக்தியால் உள்ளே பரிந்தரனை நோக்கினால் முத்திக்கும் மூலம் அது"
43

Page 48
என்ற குறளில் ஒளவையார் பத்திமையோடு உள்ளத்தினுள்ளே விருப்பத்தை வலுவாக்க அரனைத் தரிசித்துப் போற்றினால் அதுவே முத்திக்கு வித்தாகும் என்றுரைத்துள்ளார்.
இறைவனடியாரையும் இறைவனாகவே கருத அவர்க்குத் தாம் அடியவரெனக் கொண்டு மனட கசிந்து தொண்டு செய்தல் பக்தியின் சிறந்த தன்மையாகும். தம்மை அடியார்க்கு அடியராய்ச கருதுவது மிகவும் பண்பட்ட பக்தித்தன்மையாகும் இதற்கு இலக்கியமாய் இலங்குபவர் திருத்தொண்டர்த்தொகை பாடிய சுந்தரர். செம்மல நோன்றாள் சேரலொட்டா அம்மலங்கழிஇ LDIT6) நேயம் மலிந்தவர் வேடமும். அரனெனத தொழுமே” என்ற சிவஞான போத நூற்பாவும் ஈண்( நினைவு கூரத்தக்கது.
அருள் பெறுதல்
இரண்டாம் பாலாகிய திருவருட்பாலின் முத அதிகாரத்தில் ஒளவையார் இறைவனின திருவருளைப் பெறும் முறையையும் அதனால் ஏற்படும் எல்லையற்ற பயன்களையும் கூறியுள்ளார்
“வாய்மையால் பொய்யா மனத்தினால் மாசற் தூய்மையால் ஈசன் அருள்”
என்ற குறள் சிவனருள் பெறும் முறையை
கூறியுள்ளது.
“ஒவாச் சிவனருள் பெற்றால் வரையின்றி தாவா இன்பம் தரும்
எனச் சிவனருள் பெற்றால் நீங்காத சிவானந்த
பெறலாம். அது சொல்லிக் காட்ட முடியா பேரின்பம் என்று ஒளவையார் குறித்துள்ளார்.
நினைப்புறுதல்
நினைப்பிலே அரணை நிறுத்தி ஆராதிக்கு சிறப்பை இவ்வதிகாரத்தில் ஒளவையா எடுத்துரைத்துள்ளார்.

“குண்டலினியின் உள்ளே குறித்தரனைச்
சிந்தித்து மண்டலங்கள் மேலாகப் பார்”
என்ற குறளில் குண்டலினியின் உள்ளாக நினைவைச் செலுத்தி சிவனைச் சிந்தித்து ஆறு மண்டலங்களுக்கும் மேலான சகஸ்ராரத்தில் சிவனைப் பாத்தல் வேண்டும் என்றுரைத்துள்ளார். இந்தக் குறளை
“காண்கின்ற தோர்பொருளைக் காண்கின்ற
யோகிகளே காண்கின்றார் காட்சியறக் கண்ணுதலை
* காண்கின்றார் காண்பானும் காணப்படும் பொருளும் அன்றியே
காண்கையினால் கண்டனரே காண்”
என்ற திருக்களிற்றுப்பாடியார் பாடலோடு ஒப்பு நோக்கல் வேண்டும்.
குண்டலினியாவது ஆறு ஆதாரங்களையும் கடந்து ச்ெல்லும்போது அங்கே பரநாதமாகிய ஒலியினைக் கேட்டு இன்புற்று நிற்கும். இதனைச் சிலம்பொலி போல்வது என்றும் சக்தி தரிசனம் என்றும் திருக்களிற்றுப்பாடியாரில் கூறப்பட்டுள்ளது. இந்த ஒசையைப் பற்றிச் செல்ல சிவதரிசனம் காணலாம். அதை ஒளவையார்,
“ஓசை உணர்ந் தங்கே உணர்வைப்பெறும் பரிசால் ஈசன் கருத்தாய் இரு”
என்ற குறளில் கூறியுள்ளார்.
தெரிந்து தெளிதல்
சிவத்தை உள்ளத்தே தெரிவது சித்தியாகும் போது உள்ளம் தெளிவாகின்றது. மனம் செம்மையாகும் போது மலத்தொடர்புகள் விலகும். இந்த நிலையில் திளைக்கும் போது இறை உண்மையை எல்லாப் பொருளிலும் கண்டு தெளிவது வாய்க்கும். சிவத்தைத் தெரிவது
44.

Page 49
பற்றியும், தெரிந்த பின் உள்ளம் ஒன்றித் தெளிவ: பற்றியும் இவ்வதிகாரத்தில் கூறியுள்ளா ஒளவையார்.
கலைஞானம்
கலை என்பது கற்றறியப்படும் எல்ல ஞானங்களுக்கும் பொதுப் பெயர் என்றாலும் ஆன்ட ஞான நூல்களில் நாசி வழியாக இயங்குட காற்றினை முறைப்படுத்தும் அறிவுக்கே பெயராய உள்ளது. இடது நாசி வழியாகச் சென்று வரும் மூச்சுக்காற்றை சந்திரகலை என்பார்கள். வலது நாசி வழியாகச் சென்று வரும் மூச்சுகாற்றைக் சூரியகலை என்பார்கள். சந்திரகலையைச் சக்தியாகவும், சூரியகலையைச் சிவமாகவும் கொண்டு பயில்வது நெறி. அந்த நெறியினை இந்த அதிகாரத்தில் ஒளவையார் விளக்கியுள்ளார்.
“சத்தியமாம் சந்திரனைச் செங்கதிரோன் ஊடுருவில் முத்தியாம் மூலம் அது"
என்ற குறளில் ஒளவையார் சக்தி வடிவான சந்திரனைச் செங்கதிரோன் ஊடுருவிக் கலந்ததால் அந்தக் கலப்பு முத்தியைப் பெறுதற்கரிய மூலமாக அமையும். சந்திர கலையை சூரியகலையானது ஒன்று கூடிக் கலப்பதே முத்திக்கு மூலம், சுழிமுனையில் இரண்டையும் கூட்டிக் கும்பிக்கும் மூச்சுப் பயிற்சி இது. இப்படிக் கும்பிக்கும் போது சிவசொரூபம் தோன்றும்.
உருவொன்றி நிற்றல்
ஈசன் எவ்வாறு நம்முடன் உட்கலந்துள்ளான் என்பதைக் கூறுவதாகும் உருவொன்றிநிற்றல் உருவிலியான சிவன் நம்முன்னே கலந்து நிற்கும் சிறப்புகளை இவ்வதிகாரத்தில் ஒளவையார் விளக்கியுள்ளார். அப்பர் பெருமானும் பண்ணில் ஓசைபோலவும் பழத்தினில் சுவைபோலும் பாலில் படுநெய் போலவும், கண்ணின் மணிபோலும் கலந்துள்ளான் இறைவன் என்று கூறியுள்ார்.

"அச்சம் ஆங்காரம் அகத்தடக்கினால் பின்னை
நிச்சயமாம் ஈசம் நிலை” என்ற குறளில் அச்சத்தையும் ஆங்காரத்தையும் எழாமல் அடக்கி நிற்பான் என்பது உறுதி என்றுரைத்துள்ளார் ஒளவையார்.
மேலும்
“நினைப்பவர்க்கு நெஞ்சத்துள் நின்மலனாய் நிற்கும் அனைத்துப்பிர்க்கும் தானாம் அவன்”
என்று கூறிள்ளார் ஒளவையார் பட்டினத்தடிகளும்
“நினைமின் மனனே நினைமின் மனனே சிவபெருமானை செம்பொன் அம்பலவனை நினைமின் மனனே நினைமின் மனனே" என அறிவுறுத்தியுள்ளார். ‘நினைப்பவர் நெஞ்சில் நிறைபவன் ஈசன்' என்பதனால் ஒளவையாரும் இக் குறளில் இறைவனை நினைத் தலை வலியுறுத்தியுள்ளார்.
முத்தி காண்டல்
முத்தி காண்டல் என்றால் ஆன்மா முத்தியை அடைதல் என்று பொருள் என்பர்.
"கண்ணும் கருத்தும் கடந்ததொரு பேறேயும் கண்ணும் கருத்தும் களிகூர - நண்ணி வடமடக்கி நிற்கும் வடவித்தே போல உடனடக்கி நிற்பர்கா னுற்று'
எனத் திருக்களிற்றுப்பாடியாரிலும்முத்தியை அடைதல் பற்றிக் கூறப்பட்டுள்ளது நோக்கத்தக்கது.
உருபாதிதம்
உருவத்தை ஒட்டி உணர்வுகள் இயங்கும். இந்த நிலையிலே உருவபேதங்களும் பற்றுகளும் ஆன்மாவுக்கு ஏற்பட்டு ஆன்மா அவற்றினால்
சிந்தன்ை பேதங்களை அடைகின்றது. இந்த பேதங்கள் நீங்கி ஆன்மா மெய்யுணர்வு பெற்று
45

Page 50
ஈசனை அடைவதற்கு முன் உருவநினைவை முழுவதுமாக அகற்றிவிடவேண்டும் என்பதை இவ்வதிகாரத்தில் ஒளவையார் குறிப்பிட்டுள்ளார்.
“உருவங்கள் எல்லாம் அறுத்து உறமாற்றில்
கருவேதும் இல்லை தனக்கு”
என்ற குறளில் ஒளவையார் உருவங்கள் பற்றிய நினைவெல்லாம் அறுத்து நினைவெல்லாம் ஈசனிடத்தே சென்று பொருந்துமாறு மாற்றிவிட்டால் அத்தகைய ஆன்மாவுக்கு அதன் பின் கருவிலே சென்று பிறக் கும் நிலைமை எதுவும் இல் லையாகிவிடும் என் றுரைத் துள் ளார் திருக்களிற்றுப்பாடியார் பாடல்
"பற்றினும் பற்றைத் துடைப்பதொரு பற்றறிந்து பற்றிப் பரிந்திருந்து பார்க்கின்ற - பற்றதனைப் பற்றுவிடில் அந்நிலையே தானே பரமாகும் அற்றமிது சொன்னேன் அறி”
இக்கருத்தையே. நினைவூட்டுகிறது.
பிறப்பறுத்தல்
ஆன்மா உடலில் இருக்கும் போது உடலின் உணர்வுகளையே தன் உணர்வுகளாக எண்ணி மயங்குகிறது. இதை நீங்கி ஆன்மா தன்னை உணரும் அறிவைப் பெற வேண்டும். தன்னை உணரும்போது தன்குறைகளை நீக்கி நிறைவு காண அதற்கு ஊக்கம் பிறக்கும். வீடுபேற்றின்
முதற்படியாவது தன்னை அறிதலே என்ற கருத்தை இவ்வதிகாரத்தில் ஒளவையார் வற்புறுத்தியுள்ளார்.
"எல்லா ரறிவுகளின் தாற்பரிய மென்னறிவு செல்லு மிடத்தளவும் சென்றறிந்தேன்-வல்லபடி வாதனையை மாற்றும் வகையிதுவே மற்றவற்றுள் ஏதமதக் கண்ட திது"
என்ற திருக்களிற்றப்பாடியார் பாடல் பிற
அறிவுகளின் தன்மையையும் தன்னறிவின் எல்லையையும் அறிந்தால் பிறப்பாகிய வாதனை

உயிர்களைத் தீண்டாது என்றுரைத்துள்ளார். இதையே ஒளவையார்,
"தன்னை அறியும் அறிவுதனைப் பெறல் பின்னை பிறப்பில்லை வீடு”
என்ற குறளில் கூறியுள்ளார்.
NA . தூயவொளி கண்டல்
தூய ஒளி என்பது பரவொளி எனப்படும். இதனை ஈசன் என்பார்கள். சொல்லிறந்து நிற்கும் அந்தப் பரஞ்சோதியையே ‘தூய ஒளி' என ஒளவையார் சுட்டிக் காட்டியுள்ளார். ஆறு ஆதாரங்களையும் கடந்து மேலேறி சுடர் ஒளியைக் கண்டு களிக்கும் முறையே அது. அதனை அருட்பெருஞ்சோதி என்றுர்ைத்தலும் உண்டு.
சதாசிவம்
சதாசிவ தரிசனம் பராசக்தி பரசிவ ஐக்கியத்தைப் பிரம்ம கபாலத்தில் தரிசிக்க வழிகோலுவதாகும். இதன் சிறப்பை இவ்வதிகாரத்தில் ஒளவையார் கூறியுள்ளார். சிவனின் சர்வ வியாகத்தன்மை இவ்வதிகாரத்தில் பேசப்பட்டுள்ளது.
'ஆகமும் சீவனும் ஆசையும் தானாகி
ஏகமாகி நிற்கும் சிவன்”
என்று ஒளவையார் கூறும் கருத்தையே
"அவனே அவனி முதலாயி னாறு மவனே யறிவாய்நின்றானு மவனேகா ணாணாகிப் பெண்ணாகி யலியாகி நின்றானுல் காணாமை நின்றனும் கண்டு”
என்ற திருக்களிற்றுப்பாடியார் பாடல் உரைக்கிறது.
தன்பால்
இப்பால் ஒவ்வொருவரும் தம்மைப்பற்றி
அறியவும் தாம் பேணி நடத்துதற்கேதுவான
46

Page 51
செய்திகளையும் ஒளவையார் இப் பாலில் தொகுத்துரைத்துள்ளார்.
குருவழி
வலையில் அகப்பட்ட மான் அதைவிட்டுச் செல்ல முடியாமல் தவிப்பது போல குருவின் அருள்பெறாது யோகநெறி நிற்பாரும் தவிப்பர் என்றுரைத்துள்ளார், ஒளவையார் சிவத்தை அறிய நூலறிவு மட்டும் போதாது. குரு உபதேசமும் பயிற்சியும் மிகமிகத் தேவையாகும் என்பர் ஒளவையார்.
அங்கியில் பஞ்சு
நெருப்பில் பட்ட பஞ்சானது தியால் உண்ணப்படுவது உறுதியுடையதும் விரைவில் நிகழ்வதும் ஆகும். அதேபோல் சிதாகாசப் பெருவெளியியே சிவநினைவை நிறுத்திய சான்றோர்களும் ‘சிவானந்த நிலை விரைவில் கிட்டுவதும் உறுதியானதுமாகும். இதையே,
"அங்கியிற் பஞ்சுபோல் ஆகாயத்தே நினைந்தால் சங்கிக்க வேண்டாம் சிவம்'
என்ற ஒளவைக் குறள் குறித்துள்ளது.
“நல்ல சிவதன்மத்தால் நல்ல சிவயோகத்தால் நல்ல சிவஞானத்தால் நானழியும்- வல்லதனால் ஆரேனும் அன்புசெயின் அங்கே தலைப்படுங்காண் ஆரேனுங் காணா அரன்'
என்ற திருக்களிற்றுப்பாடியார் பாடல் ஈண்டு சிந்திக்கற்பாலனது.
மெய்யகம்
அந்த உடம்பினுள்ளே சிவவொளியைக் கணி டு அதனால் பெறும் பயன் களை இவ்வதிகாரத்தில் ஒளவையார் குறித்துள்ளார். எல்லையற்ற செல்வமான சிவனைக் காணும்
á

காலத்திலே பேச்சிழந்து போவதுதான் அன்பரின் உணர்வாகும் என்பர் ஒளவையார்.
கண்ணாடி
கண்ணாடியில் ஒலி தானாகப் புகுந்து நின்று அதனை ஒளிரச் செய்யும். அதுபோல் உடம்பினுள் உள்தான உள்ளமும் கண்ணாடியைத் தூய்மை பெற்றால் சிவவொளியும் தானே புகுந்து அதில் நிறையும். ஆன்ம நலம் பெறுவதனை நோக்கமாகக் கொண்டு உந்திக்கமலத்திலே நோக்கினைச் செலுத்தினால், இந்த சாரீரம் சாவை அடையாது. இது யோக சாதனையின் ஒரு பகுதி. மூலாதாரத்தினின்றும் எழுப்புகின்ற சக்தி சுவாதிஷ் டானத்தைக் கடந்து மேலேறி உந்திதானத்தை அடைகிறது.”
சூனியகாலம் அறிதல்
உணர்வும் நினைவும் ஒடுங்கிய பின்னர் மனம் சுத்த சூனியமான பரவெளியில் திளைத்திருக்கும் காலம் அது. இந்த நிலையிலே மனம் செயலற்றுப் போகிறது. இதை மனவெறுமை நிலை என்பர் யோகிகள். மனப்பாழ் எனத் தத்துவநூல்கள் சொல்லுவதும் இந்த மனச் செயலற்ற நிலையைத்தான்.
“புருவத்திடையிருந்து புண்ணியனைக் காணல் உருவற்று நிற்கும் உடம்பு’
என்ற குறளில் புருவத்திடையாகிய சுழிமுனையிலே இருந்து கொண்டு பரசிவத்தைத் தரிசித்தல் இந்த உடம்பானது சூக்கும நிலையைப்பெறும் என்று குறித்துள்ளார் ஒளவையார்.
சிவயோகம் நிலை
இது ஒருவகையான யோகப் பயிற்சி நெறியாகும்.
"அம்மையிலும் இம்மையிலும் மச்சர் தவிர்த்தடி
17

Page 52
யா ரெம்மையுமா யெங்கு யங்குறலான் மெய்ம்மை சிவயோக மேயோ மல்லாத யோக அவயோக மென்றே அறி”
எனத்திருக்களிற்றுப்பாடியார் பாடல் சிவயோகத்தி: சிறப்பை எடுத்துரைத்துள்ளது. மூலாதாரத்தி மூண்டெழு, கனலைக் காலால் எழுப்பும் பயிற்சிே இது. மூச்சினை உள்ளிழுத்தல், வெளியிடலி உள்ளடக்கல் ஆகிய மூன்று இயக்கங்களையு செய்யும் முறையையும், அதற்குரிய கா அளவுகளையும் இவ்வதிகாரத்தில் எடுத் உரைத்துள்ளார் ஒளவையார்.
ஞானநிலை
திருவைந்தெழுத்தை ஓதுதல் இறைவை அடைதற்குரிய வழியாகும். தனிமையிலிருந் பஞ்சாட்சரத்தைத் தியானம் செய்யவேண்டும்.
“அஞ்செழுத்து மேஆம்மை அப்பர் தமைக்
காட்டுதலா அஞ்செழுத்தை ஆநாகப் பெற்றிந்தே
அஞ்செழுத்ை ஒதப்புக் குள்ள மதியும் கெடில் உமைகோன் கேதமற வந்தளிக்கும் கேள்
எனத் திருக் களிற்றுப் Լ! T լգ Ա III (15 அஞ்செழுத்தின் மேன்மையைக் குறித்துள்ளது தற்புருடம் என்னும் உயர்வான இடத்திலே தனியா இருந்து கொண்டு பஞ்சாட்சரத்தைத் தியான செய்யும்படிக் கூறியுள்ளார் ஒளவையார்.
ஞானம்பிரியாமை
ஞானம் ஈசன் அவனைச் சேர்ந்த சீவ என்றும் அவனைப் பிரியாதிருப்பதே இயல்பு.
“பிறந்திடம் மால்டம் பேராதிருக்கன் இறந்திடம் வன்னி யிடம்”
என்ற குறள் பிறந்த இடம், இறந்த இட

35
5
Lb
th
பற்றிக் கூறுகிறது. பிறந்த இடம் உந்தியிடம்.
உந்தியிடம் மணிபூரகம். இங்கே திருமால்
இருப்பதாகக் கருதுவது யோக மரபு. அதுபற்றி இதனை மாலிடம் என்றுரைத்தனர். இதை ‘மால்' எனப்படும் காம மயக்கத்திடையே எனவும் கூறலாம். நீங்காதிருக்குமானால் இறந்த இடம் அக்கினி இடமாகும். வன்னி அக் கினியிடம் இது ஆக்ஞாசக்கரத்திறகுரிய புருவமத்தியாகும். இறந்த இடம் நெருப்பினிடத்தை எனவும் கூறலாம். இக்குறள் உடலின் தோற்றமும் இறுதியும் கூறியுள்ள தெனலாம். மோன நிலை தேவை என்பார் ஒளவையார். இக்கருத்தை,
“பேசாமை பெற்றதனில் பேசாமை கண்டனரைப் பேசாமை செய்யும் பெரும்பெருமாள். பேசாதே எண்ணொன்றும் வண்ணம் இருக்கின்ற யோகிகள் பால்உண்ணின்றும் போகான் உளன்”
எனத் திருக்களிற்றுப்பாடியார் பாடலும உரைத்துள்ளது.
மெய்ந்நெறி
மெய்ப்பொருள் சிவம் ஒன்றுதான். அதனைச் சென்று சீவன் கலப்பதற்கான ஆறுகளைக் கூறுவதால் மெய்ந்நெறி என்றனர்.
"மெய்’ என்பது உடம்பு உடம்பினைப் பயன்படுத்தி உத்தமனை உள்ளத்தே காணும் நெறி என்றும் உரைக்கலாம்
துரியதரிசனம்
துரியம் நிட்டை நிலையாகும். இதைப் பேருறக்க நிலை என்றும் கூறுவர் மூச்சின் இயக்கம் மூலாதாரத்திலிருந்து எழுந்து மேற்செல்வதும், மீளவும் மூலாதாரத்தை அடைவதுமாகும் இயக்கத்தை இது கூறுகிறது. மெய்யறிவு காட்சியுடையார்க்கு எல்லாம் ஒன்றே. நிட்டை நிலையிலே சூரிய, சந்திர கலைகளையும் மூலக்கணலையும் முறைப் படக்கையாளும் மரபை
48

Page 53
இவ்வதிகாரம் எடுத்துரைத்துள்ளது.
உயர்ஞான தரிசனம்
ஈசனை அறிந்து அவனோடு சீவனைக் கலந்து விடச் செய்வது தான் உயர்ஞான தரிசனமாகும். பரஞானத்தோடு சிவத்தை ஒன்றுபடுத்திச் சிவஞானமே பரஞானமாக விளங்கும்படிச் செய்து உயர்வது. இங்கு சோம, சூரிய, அக்கினி என்ற மூன்று மண்டலங்கள் உள்ளன. இந்த மூன்றில் அக்கினி மண்டலத்தைப் பிண்டமும் ஊழியும் என்றும் பிரியாது. அக்கினி எப்போதும் தேவை. அதுவே எதையும் நிலைக்கவைப்பது. எந்தெந்த கிழமைகளில் காலசரம் (காலத்தொடு பொருந்தி நடக்கும் மூச்சு) எவ்வாறு நடைபெற வேண்டும் என்பதை ஒளவையார் இவ்வதிக்ாரத்தில் குறித்துள்ளார். உள்ளத்தே ஈசனைக் கண்டு, திருவருள் பெற வேண்டும். ஆன்மா திருவருளும் காணும் இடமே குரு பீடம். அதில் வீற்றிருக்கும் ஈசனே குருநாதன்.
"உடம்புடைய யோகிகள்தா முற்ற சிற்றின்ப மடங்கத்தம் பேரின்பத் தாக்கத் தொடங்கி முளைப்பதுமொன்றில்லை முடிவது மொன்றில்லை யிளைப்பதுமொன் றில்லை யாவர்”.
என்ற திருக்களிற்றுப்பாடியார் பாடல் யோகிகள் பேரின் ப நிலையை எயப் துமாற் றை எடுத்துரைத்துள்ளது. ஒளவைக் குறள் கூறும் யோகமார்க்கத்தைச் சிவஞானசித்தியார் -
“சகமார்க்கம் புலனெடுக்கித் தடுத்து வளியிரண்டும் சலிப்பற்று முச்சதுர முதலாதாரங்கள் அகமார்க்க மறிந்த வற்றி னரும்பொருள்க ளுணர்ந்தங் கணைந்து போய் மேலேறி அலர்மதிமண்டலத்தின் முகமார்க்க அமுதுடலம் முட்டத் தேக்கி முழுச் சோதி நினைந்திருத்தல் முதலாக வினைகள் உகமார்க்க அட்டாங்க யோகமுற்றும் உழத்துலுந் தவர்சிவன்ற னுருவத்தைப் பெறுவர்”

66 ஒரே நூற்பாவில் எடுத்தோதியுள்ளார்.
துகறுபோதம் சகமார்க்கம் பற்றி
'சன்மார்க்கம் ஈதாம் சகமார்க்கம் சாற்றுங்கால் பன்மார்க்கம் வாயுப்பகர் கருவி தன்மார்க்கம் சால ஒடுக்கித் தடுத்து வளியிரண்டும் மாலறவே நிற்கை மகிழ்ந்து”
என்றும்
"அந்த மலத்தாலே ஆதாரம் ஆறினையும் சந்தித் ததற்பொருள்கள் தான்அறிந்திட் டிந்துவிலே ஒவா ஒளியைத் துருகும்அமு துள் நிறைக்கில் ஒவா ஒளியாம் உரு”
என்றும்
“நின்ற ஒளியுருவின் நீங்காமல் நிற்கவே
என்றும் அழியாமல் இன்புற்றுக் கொன்றையந்தார்த் தானுவுருப் போலேபின் சாருப்பியத்திலே மாணவக வாழ்வாய் காண் மற்று”
என்றும் மூன்று வெணி பாக்களில் யோக மார்க்கத்தைப் பற்றி எடுத்துரைத்துள்ளர். இக் கருத்துகளையே ஒளவையார் விரிவாக முந்நூற்று பத்து குறட்பாக்களாக முப்பாலில் கூறியுள்ளார்.
திருக்களிற்றுப்படியாகும் திருவுந்தியாகும் பொதுநிலையில் யோக நெறி பற்றி விளக்கமாகக் கூறியுள்ளன. இறைவனை அடைதற்குரிய நெறிகளில் யோகநெறி என்பது ஒன்று. அது ஆதார யோகம் நிராதார யோகம் என இரண்டு வகைப்படும் எனத் திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார் நூல்கள் கூறியுள்ளன. ஒளவைக்குறளில் யோகத்தில் இரண்டு வகைகள் குறிப்பிடப்படவில்லை. திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார் இரண்டும் கூறும் ஆதாரயோகம் பற்றித் தான் ஒளவைக்குறள் விரிவாகப் பேசியுள்ளது. திருமந்திரம் மூன்றாம் தந்திரம் முழுமையும் யோக முறைபற்றிக் கூறியுள்ளது. திருமந்திரத்தின் ஐந்தாம் தந்திரத்திலும் யோகமார்க்கம் பற்றிக்
49

Page 54
குறிப்பிடப்பட்டுள்ளது.
மனித குல மேம்பாட்டிற்குப் பாடுபட் சான்றோர்களுள் ஒளவையாரும் ஒருவர். மனித வாழ்வாங்கு வ்ாழ வேண்டிய நெறிகை காலந்தோறும் ஒளவையார் குறிப்பிட்டுள்ளா சங்ககால ஒளவை, சமயகால ஒள6ை நீதியிலக்கிய ஒளவை என ஒளவையார் மூல இருந்துள்ளனர். இடைக்காலத்தில் சைவ சித்தாந்த கொள்கைகள் சிறப்புப் பெற்றிருந்தன. பதி, ப பாசம் என்ற முப்பொருள் உண்மையானவை. அை நித்தியமானவை, பாசங்களின் நீங்கி பசு பதிை சென்றடையும் பிறப்பின்மை தோன்றும் என்பை அடிப்படையாகக் கொண்டது சைவ சித்தாந்த இறைவனை உயிர் சென்றடைதற்குரி சாதனங்களாக சரியை, கிரியை, யோகம், ஞான

SO
என நான்கு மார்க்கங்கள் சைவசித்தாந்தத்தில் கூறப்பட்டுள்ளன. அந்நால்வகை மார்க்கங்களில் யோக மார்க்கம் எனபது ஒன்று உடல், மூளை, மனம் ஆகிய மூன்றையும் ஒருமைப்படுத்தும் மார்க்கம் இம் மார்க்கம். அந்நெறியை மிக விரிவாக ஒளவையார் ஞானக்குறள் எடுத்துரைத்துள்ளது. மூலாதாரத்தில் உறங்கும் குண்டலினியை மேலெழும்பச் செய்து ஆறு ஆதாரங்களைக் கடந்து உள்நாக்கு வாசல் வழியே புருவ மைய வாசலைக் கடக்கச் செய்து சகஸ்ராரத்தில் ஐக்கியமாவதை மனதினை ஒருமுகப்படுத்தி உணர்வுநிலையில் அறிந்து உணரலாம். அவ்வுணர்வினை அடைவர் ஜீவன் முத்தர் என்றழைக்கப்படுவர். உடலிலே உத்தமனைக் கணி டு தன்னையுணர்ந்த தவத்தோர்களின் நெஞ்சில் அரன் தானே விரும்பி வீற்றிருப்பான்.

Page 55
ஆக்ஞ
2. சுவாதிஷ்டான 6
5. விசுத்தம்
1.மூலாதாரம்
51
 

ரங்கள்
ம் 3. மணிபூரகம் 4 அநாகதம் ாசக்கரம் 7. சஹஸ்ராரம்

Page 56
இந்து மதத் தத்துவங்
உலகில் இன்று வழக்கில் இருந்துவரும் மிக முக்கியமான சமயங்களுள் ஒன்று இந்து மதம் சநாதன தர்மம் என்று அழைக்கப்பெறும் இதுவே மிகவும் தொன்மையானதாகும். இந்து மதம் ஒருவகையில் சமய ஆராயப் சி சிக் குத் தேவையானவை அனைத்தையுமே வழங்குகிறது. இந்து மதம் எந்நிலைக்கும் பொருந்துகின்ற எல்லாவற்றையும் தன்னகத்தே கொண்ட மிகப் பரந்த ஒரு பொது மதம் எனச்சொல்ல முடியும். இது ஒரு வரலாற்றுச் சமயமன்று. வரலாற்றுச் சமயங்களின் உண்மைகளும், கோட்பாடுகளும் அவற்றை நிறுவிய மகான்கள் கண்டு கொண்டு எடுத்துரைத்த உண்மைகளை அடிப்படையாகக் கொண்டனவாகும். ஆனால் இந்து மதமோ, எஞ்ஞான்றும் இருந்துவரும் நித்தியமான வேதங்களை ஆதாரமாகக் கொண்டிருக்கின்றது. வேதம் கடவுளின் சொல்லே ஆகும். எனவே அது அழிவில்லாதது.
இந்து மதம் என்பது அயல் நாட்டினர் அளித்த பெயர். அது தெளிவில்லாதது. பழைய மதம் என்னும் பெயரே சிறந்தது.
இந்துமதம் ஒரு வாழ்க்கையின் தத்துவம் மட்டுமல்ல. அது ஒரு வாழ்க்கை முறையுமாகும். வேதங்களின் அறிவு அனைத்தும் பிரணவம் அல்லது ஓம் என்பதில் அடங்கியுள்ளது. மிகச்சீரிய குறிக்கோள் மோட்சம் அல்லது பிரம்மத்தை அறிதல் என்பதே ஆகும். எனவே அது பிரம்மவித்தை எனப்படுகின்றது. இவை உரிமைகளையும் சலுகைைைளயும் விடக் கடமைகளையும் ஒழுக் கங்களையும் up3 pih (8u 6 60 إليه குறிப்பிடுகின்றன.
நாயன் மார்களின் LJIL 65 86 (6buff ஆழ்வார்களின் பாசுரங்களும் கடவுளின் மீட்புக் கருணையை வேண்டிச் சிறப்பாகப் போற்றிப் பாடப் பெற்றவையாகும்.
வேதங்கள், இதிகாசங்கள், புராணங்கள்,

களும்,பெரிய புராணமும்
ஆகமங்கள், ஆழ்வார்கள், மற்றும் நாயன்மார்கள் ஆகியோரின் அனுபவங்கள் அவற்றைப் படித்தால் சமயத்தின் உள்ளுண்மையை அதாவது மனிதனை தெய்வீக நிலைக்கு உயர்த்தல் பொருட்டு, கடவுள்
மனிதனின் நிலைக்குப் படிப்படியாக இறங்கி வருவதைக் காண முடிகிறது.
இந்து சமய நூல்கள் எல்லாவற்றிலும் வெவ்வேறு வகை நிலைகளுக்கும், ஆட்களுக்கும், தக்கபடி இருக்கும் ஒர் ஆன்மீக நோக்கத்தின் ஒருமையைக் காணமுடிகிறது.
தரிசனங்கள் எனப்படும் மெய்விளக்கக் கோட்பாடுகள் அல்லது தத்துவவியற் கொள்கைகள், ஆறும் ஒரே குறிக்கோளுடன் அதாவது வாழ்வின் துயர்களை நீக்கி மோட்சம் அல்லது வீடு பெற வேண்டும் என்னும் ஒரே நோக்கத்துடன் இயற்றப்பட்டதாகும்.
இம்மெய் விளக்கக் கோட்பாடுகளுள் ஒவ்வொன்றும் முறையே, பிரம்மத்தை அடைவதற்கு இன்றியமையாத நிலைகளான அறிவுக் கூர்மை (விவேகம்), பற்றின் மை (வைராக்கியம்), அறத்தூய்மை ஆகியவற்றைப் பெறுதலில் உதவிபுரிகிறது.
தரிசனம் என்றும் ஓர் சொல் இந்து சமயத்தைக் குறிக்கும் போது அது அனைத்தையும் உள்ளடக்கிய ஒன்றாக ஆகிறது. இந்து மதம் விஞ்ஞானம் (அறிவியலி) தத்துவம் (மெய்ப்பொருளியல்) அறிவுபூர்வமான கடவுளியல் ஆகியவை மூன்றுக்கும் இடமளித்து, இவற்றை ஒருமைப்படுத்தி இணைக்கிறது. கடவுள் இருக்கிறார் என்பதற்கான மிகச் சிறந்த இறை அனுபவமே என்று அது கூறுகிறது.
ஆனால் கடவுளுக்குத் தனது நோக்கத்தை நிறைவேற்றுவதில் மனிதனின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது என்றும் மேலைநாட்டுக் கருத்தை 2

Page 57
அது கூறியதில்லை.
இந்து மதம் தர்க்க பூர்வமானது அல்லது முரண்பாடு இல்லாதது ஒருமைப்பாடுள்ளது, எந்நிலைக்கும் பொருந்துவது. சமரச இயல்புள்ளது. ஆகும்.
இந்து மதத்தினன் கடவுளைத் தனது உருவிலேயே அமைத்துக் கொள்கிறான். கற்கள், மரங்கள், மிருகங்கள், இறந்தோரின் ஆவிகள் ஆகியவற்றை அவனி வழிபடுகின்றான். உயர்ந்தபட்சம் கடவுள் என்பவர் மிக உயர்ந்த நிலையை எய்தியுள்ள ஒரு மனிதனே என்பதாகும், இக் கருத்து முற்றும் தவறானது என்பது வெளிப்படை மனிதன் போற்றி வணங்குவது இயற்கையை அல்ல அதனுள் காணப்படும் கடவுள் தன்மையையே.
இந்து மதத்தினன் பல கடவுளைத் தெய்வங்களாக வழிபடும் பல கடவுட் கொள்கையினன் எனக் கூறுவது தவறு இறைவன் அல்லது ஈசுவரன் எல்லாத் தெய்வங்களுக்கும் அவற்றை ஆளுபவராக இருக்கிறார். எனவே பிரம்மம் இரண்டாவதில்லை ஒன்றே என்று வலியுறுத்தும் ஒரு கொள்கை உடையதே ஆகும்.
அனைத்தும் கடவுள், கடவுள் எல்லாம் எனக் கருதுவதால் உலகத்தினின்றும் தனிப்பட்ட அல்லது இயற்கைக்குப் புறம்பான கடவுள் என்றும் எதுவும் கிடையாது என்னும் கொள்கையை உடையது என எண்ணுவதாகும். இறைவன் அல்லது ஈசுவரன் எல்லாவற்றினுள்ளும் அவற்றை ஆளுபவராக இருக்கிறாரேயன்றி, அவற்றுக்கே சமமானவராக ஆகிவிடுவதில்லை. கடவுள் கறையோ, குறையோ இல்லாத தூயவர். நிறைவு உடையவர்.
இந்து மதத்தில் கடவுள் எனப்படுவது மனத்தினால் ஏற்படுத்தப்பட்ட உரு வெறும் கருத்தே என்றோ அல்லது ஒன்றுமின்மை என்றோ கூடச் சொல்கின்றனர்.
சமயம் என்பது தனிப்பட்ட தெய்வம் ஒன்றின்பால் வைக்கப்பட்டிருக்கும் நம்பிக்கையே. மெய்ப்பொருளறிஞரின் மிக உயர்ந்த பொருள்

அல்லது கூறு அதுவே என்பதால் எவருக்கும் உடன்பாடு உண்டு.
கடவுளின் ஐந்து அம்சங்கள் 1) பிரம்மம் 2) ஈசுவரன் 3) அந்தர்யாமி 4) அவதாரம் 5) அர்ச்சை என்பதாகும்.
LîgbLDb
உலகத்திற்கு அப்பாலுள்ளது. முழுமையாக விளக்க முடியாதது. சத்தியம் அல்லது வாய்மை. ஞானம் அல்லது அறிவு, ஆனந்தம் அல்லது களிப்பு என்பதாகும். பிரம்மம் என்பது ‘ஸத்’ அல்லது மெய்ம்மை உண்மை அல்லது நிரந்தரமானது. எவ் வகைக் குறையுமில்லாத அமலமான பொருள் இயல்பாகவே ஆனந்தமானது, உயர்வானது, உலகம் அனைத்தும் அதனிடத்தில் அடக்கம். நம் வாழ்வின் உயர்ந்த குறிக்கோள் பிரம்மம் ஆகும்.
ஈசுவரன்
பிரம்மம் உலகம் அல்லது அகிலத்துடன்
தொடர்புறும் போது ஈசுவரன் உலகத்தைப்
படைப்பவரும், காப்பவரும், அழிப்பவரும் ஆவார்.
ஈசுவரனே, பிரம்மா, விஷ்ணு, சிவன் என்னும் உருவங்களில் அதைச் செய்கிறார். உலகம்
ஜூவன்களினாலும் பிரகிருதியாலும் ஆனது, ஆனால் அவை நிரந்தரமானவை. மரமாவதற்கு முன்
இருக்கும் விதையின் நிலையைப் போல், அவை
படைப்பதற்கு முன் உள்ளுறை நிலையில்
இருக்கின்றன. படைப்பின் போது அவற்றின்
முன்வினைக்கேற்ப அவைகளுக்குப் புதிய உயிர்களைத் தருகிறது. விடுதலையும் நிறைவையும் பெறுவதற்காக வாய்ப்புக்க்ள் அவற்றுக்குக்
கிடைக்கின்றன. பிறகு உலகம் முழுவதும்
தீமையிலும் தீவினையிலும் மூழ்கிக்கிடக்கும் ஒரு நிலை ஏற்படுகின்றது. அந்நிலையில் இவன் அதைத் தற்காலிகமாக அழிக்கிறான். இம்முன்றுத்
தொழில்களுக்கும் ஒரே ஈசுவரன் பரிவும் இனிமையும் நிறைந்த அவரது இச்சையினாலேயே
செய்யப்படுகின்றது.
அந்தர்யாமி
பிரம்மம் உலகத்தைப் படைத்த பின் அதன்

Page 58
அக ஆன்மாவாக, அந்தர்யாமீயாக அதனுெ புகுந்து கொள்கிறது. அவற்றின் இதயங்களில் அது வசிப்பதன் முக்கிய நோக்கம் என்னவெனில அவற்றின் தீவினையிலிருந்து விடுவித்து தனி உருவத்தை ஒத்ததாக அவற்றை ஆக்குவதே ஆகும்.
கடவுள் அன்பே உருவானவர் சீவன தெய்வத்தன்மை பொருந்தியிருக்க வேண்டு என்பதற்காக அவர் சீவனுள் இருக்கிறார்.
அவதாரம்
தர்மம் அல்லது அறம் நலிவடைந்து அதர்மத்தினால் அல்லது மறத்தினால் அது அழிக்கப்பட விருக்கும் நிலையில் கடவுள் உலகில் அவதரிக்கிறார். அவதாரத்தின் உண்மையான நோக்கம் தீமை புரிந்தவனைக் கூட அவனது பால வழிகளிலிருந்து மீட்பதும், பக்தனுக்கு அல்லது அடியவனுக்குத் தமது கருணை மயமான வடிவை காட்டி அவனுக்கு அருளுவதுமே ஆகும். அவதார என்பது உயர் வானதோர் இடத்திலிருந்து தாழ்வானதோர் இடத்திற்கு இறங்குவதன்று கடவுளின் அளவிலா அன்பின் காரணமாகவு! மானிட அல்லது மனிதனுக்குக் கீழ்ப்பட் நிலைகளுக்கு ஆன்மீக முறையில் இறங்குவே அவதாரம் ஆகும் . அவதாரம் என்பது சர்வலோகரட்சகன் அல்லது அனைத்தையு மீட்டருளுபவர் என்று புகழப்படுகிறது.
அர்ச்சை
கல், மரம் அல்லது செம்பிலான மூர்த்தப் அல்லது விக் கிரகம் என்றும் உருவில் இறையருளின் நிரந்தர வடிவமாகக் கடவு6ை வழிபடுவது. ஆன்மீகக் கண்ணுடைய பக்தனுக் உயிர்த்தன்மையையும் அன்பையும் வழங்கு பேரெழிலார் நீத பேசும் தெய்வமாக காட்சியளிக்கிறது. பக்தன் அன்பினால் நெக்குருக கடவுளுடன் கலக்கும் களிப்பில் தன்னைே இழந்து விடுகிறான்.
தத்துவங்கள்
நாம் இந்து சமயத்தில் தத்துவம் என்ப

t
எப்பொருளில் எடுத்தாளப்படுகிறது. என்று தெளிவது சிறப்பானதாகும்.
தத்துவத்திரயம்
தத்துவத்திரயம் என்பது மூவகைத் தத்துவம். அது ஆத்மதத்துவம், சிவதத்துவம், வித்தியாதத்துவம் எனப்படும்.
தத்துவம்
அதிகாரம் உணி மை, சுபாவம் , தத்துவத்திரயம், பலம், புத்தி, பூத்தியம் பூதியம்.
தத்தவம்
பூதம் ஐந்து, தன் மாத்திரை ஐந்து, ஞானேந்திரியம் ஐந்து, கன்மேந்திரியம் ஐந்து, மனம், அகங்காரம், புத்தி, குணம், பிரகிருதி இவை ஐந்து ஆகத் தத்துவம் இரு பைத் தைந்தும் அசுவாத்தாத்துவா இருபத்தாறும் தத்துவம்.
அராகம் அதற்கு மேலே கலாதத்துவம், அதற்குமேல் நியதிதத்துவம் அதற்கு மேலே காலதத்துவம், அராகம் முதல் காலதத்துவமிறாகிய ஐந்தும் மிச்சிராத்துவா, இவை முப்பதும் ஆன்மாக்களுக்குத் தனித்தனியே சூக்கும தேசங்களாகும். அதற்கு மேல் மாயாத்துவம் அதற்குமேல் சுத்தவித்யாத்துவம் அதற்குமேல் ஈசுவரத்தத்துவம் அதற்குமேல் சதாசிவத்துவம் அதற்குமேல் சத்துதத்துவம், அதற்குமேல் சிவதத்துவம் இவைகளே முப்பத் தாறு தத்துவங்களெனப்படும். சிவத்தத்துவம் நாதம் என்றும் சத்ததத்துவம் விந்து என்றும் சொல்லப்படும்.
அவை கீழ் கண்ட வரிசைப்படியும் எண்ணிக்கையையும் கூறப்பட்டுள்ளன.
சிவதத்துவம் நுசு(36) சத்திதத்துவம் நரு (35) சதாசிவதத்துவம் (நுச)34 ஈசரதத்துவம் (நுங்)33 சுத்தவித்யாதத்துவம்(ங்உ)32 மாயாதத்துவம் - நியதிதத்துவம்(உகூ29) காலதத்துவம் -(உஅ)28 வித்தியாதத்துவம்(உள)27
54

Page 59
ராகதத்துவம்(உசா)26 ருஷதத்துவம், பிரகிருதிதத்துவம் சித்தும்(உரு)25 குணதத்துவம் உச(24)புத்திதத்துவம்உங் (23) அகங்கார தத்துவம் சாத்து விகாங்காரம் உஉ(22) மனமும் ஞானேந்திரியமும் ராஜஸாகங்காரம் ரு(5) கன்மேந்திரியம் ரு (5)
தாமஸாங்காரம் ரு (5) தன்மாத்திரை பூதம் ரு (5)
இது சிவாத்துவ திபிகையிலே கூறப்பட்ட தோற்றக்கிரமம் ஆகும்.
சைவசித்தாந்திகள் சுத்தசிவமாகிய பிரம்மமும், ஆன்மாவும், மாயையும் நித்தியப் பொருள் களென் பர் . சுத்த சிவத்துக் குச் சிவதத்துவமும் சக்தியும் சதாசிவமும் திரு மேனியாகும். சிவதத்துவத்திலே சுத்த சிவகலை தூலமாக சக்திகலை சூக்குமமாக நிற்கும். சத்திதத்துவத்திலே சிவகலை ஆதியுமாயிருக்கும். அதிலே சதாசிவம் சூக்குமமாகும். சதாசிவத்திலே சிவகலை காலும், சக்திகலை முக்காலுமாக விளங்கும். சிவதத்துவத்திலே ஆன்மாவும் சத்திதத்துவத்திலே மாயையும் அந்தர்க்கதமாய் நிற்கும். ஈசுவர தத்துவத்திலே சிவகலை சைதந்யரூபமாகச் சக்திகலை மேம்பட்டு நிற்கும். சுத்தவித்யா தத்துவத்திலே சைதந்ய மும்மாயையும் சமப்பட்டு நிற்கச் சத்தியோங்கி நிற்கும். அந்தச் சுத்தவித்தையிலே அதே பாகத்திலுள்ள மாயையைச் சத்தி நோக்கி நிற்க மாயை வேறாகப் பிரியும். சிவதத்துவம் முதலிய ஐந்தும் பிரேகரமாக மாயை முதலிய ஏழும் ஆண் மாவுக்கு யோகக்காண்டமாம். அவற்றில் கீழுள்ள இருபத்து நான்கும் போக்யிமாம்.
அவற்றுள் சிவதத்துவம் 1) சுத்தவித்தை 2)ஈச்சரம் 3)சாதாக்கியம் 4)சத்தி 5)சிவம் எனப் பகுக்கப்படுகின்றது. y
சுத்தவித்தை ஞானம் ஏறிக் கிரியை குறைந்தது
சுத்தவித்தை ஈச்சரம் ஞானம் குன்றிக் கிரியை உயர்ந்தது சாதாக்கியம்: ஞானம் கிரியை ஒத்தது சதாக்கியம் சக்தி கிரியை நாடல் சத்தி
சிவம் ஞானம் என்றால் சிவம்

இவற்றுள் சுத்தவித்தையும் சிவமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகும். ஈச்சரமும் சத்தியும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகும்.
பெரியபுராணம் என வழங்கப்பெறும் திருத்தொண்டர் புராணத்தை அருளிச் செய்தவர் சென்னையை அடுத்த குன்றத்தூரில் பிறந்த சேக்கிழார் பெருமாள் ஆவார். இவர் மாபெரும் கவிஞராக, புலவராக, அறிஞராக இருந்ததோடு மட்டுமல்லாமல் சோழப்பேரரசின் தலைமை அமைச்சராகவும் பல்லாண்டு காலம் பணிபுரிந்தார். சோழப் பேரரசின் 2ஆம் குலோத்துங்கனுடைய காலத்தில் அவனுக்குத் தலைமை அமைச்சராக இருந்து பணியாற்றிய பெருமை சேக்கிழாருக்கு உண்டு. அவர் அருளிய பெரிய புராணத்தில் சிவ தத்துவங்கள் சிலவற்றைப் பொருத்திப் பார்க்கும் விழைவில் இக்கட்டுரை விரிகிறது.
சிவதத்துவத்தில் சுத்தவித்தை என்பது ஞானம் ஏறிக் கிரியை குறைந்து காணப்படுவது என்பதாகும். இந்த வகையில் திருத் தொண்டர் புராணத்தில் வருகின்ற தில்லை வாழ் அந்தணர்களைக் கூறலாம். அறுபத்து மூவருள் ஒருவராகிய சுந்தரமூர்த்தி சுவாமிகள் தமது திருத்தொண்டர்த்தொகை என்ற பதிகத்துள் இவ்வறுபத்து மூவரோடு ஒன்பது தொகையுள்ள கூட்டங்களையும் பாடியுள்ளார். அவர்களுள் தில்லை வாழ் அந்தணர்களும் அடங்குவர். இவர்களைப் பற்றி பாடும் பொழுது
ஞானமே முதலா நான்கும்
நவை அறத் தெரிந்து மக்கார்
தானமும் தவமும் வல்லார்
தகுதியின் பகுதி சார்ந்தார்.
என்று கூறப்படுகிறது. இப்பாடல் வரிகளில் நான்கும் என்று கூறுவதன் பொருள் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பதாகும். எனவே இவர்கள் சுத் தவித்தை என்ற சிவதத் துவத்தின் பாற்பட்டவர்கள். இறைவனையே நினைந்து அவனையே பாடி வேறு கிரியைகள் இன்றி சிவ ஞானத்தைத் தேடுபவர்களாக இருந்தனர்.

Page 60
சுந்தரமூர்த்தி சுவாமிகள்:-
இவரையும் சுத்தவித்தை என்னும் தத்துவத்துக்கு நாம் எடுத்தக் காட்டலாம். காரணம் சுந்தர மூர்த்தி சுவாமிகள் பல பகுதிக்கும் சென்று இறைவனைப் பாடியவர். இறைவன் இவருக்காகத் தூது சென்றது குறிப்பிடத்தக்கது. தம் பதிகங்களால் இறைவனைத் தன் வயப்படுத்தியவர். இறைவன் இவருக்காகத் பரவையார், சங்கிலியார் ஆகியோரிடம் தூது சென்றது குறிப்பிடத்தக்கது. சங்கிலி நாச்சியாருக்கு செய்து தந்த சத்தியத்தை மீறியதற்காக இவரது கண் பார்வை போக மீண்டும் இறைவனையே நினைந்து நெஞ்சுருகிப் பாடி கண்களைப் பெறுகிறார்.
"சங்கிலிக்காக என் கண்கொண்ட பண்ப' என்று பாடுகிறார்.
‘எம்மானைக் காணக் கணிணடியேன் பெற்றவாறே
என்று தொழுதேத்தினார். இவையெல்லாம் ஞான மேலிட்டால் இறைவனையே நினைந்து, நினைந்து நெகிழ்ந்து, மனமுவந்து பாடியதால் பெற்ற பெரும் பேறாகும். அதனால் சுத்தவித்தை என்னும் தத்துவத்துக்கு இச் சுந்தரமூர்த்தி சுவாமிகளின் வரலாறு மிகச் சிறந்த விளக்கமாகும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
திருமூலநாயனார்
திருக்கையிலாயித்திலே நந்தியெம் பெருமான் திருவருள் பெற்ற சிவயோகிகள் பலர் இருக்கின்றார்கள். அவர்களுள் ஒருவர் அணிமா முதலிய சித் திகளில் வல்லவர். அவர் அகத்தியருடன் சில நாள் தங்க வேண்டும் என்று வந்தார். அப்படி வரும் வழியில் மூலன் என்னும் ஓர் இடையன் இறந்து விட்டதையும் அவனைச் சுற்றி பசுக் கூட்டங்கள் கண்ணிர் சிந்த நிற்பதையும் கண்டு இரக்கமுற்று, அவனை உயிர்ப்பிக்க எண்ணினார். கூடு விட்டு கூடு பாயும் ஆற்றல் பெற்ற அவர் மூலனின் உடலுக்குள் தான் புகுந்து கொண்டு, தன்னுடலை மட்டும் ஓரிடத்திலி பாதுகாத்து வைத்தார். மூலன் உயிருடன் எழுந்ததைக் கண்டதும் பசுக் கூட்டங்கள் மகிழ்ந்தன மூலனின் மனைவி வெகு நேரம் ஆகியும்

D
56
கணவர் வீடு திரும்பாததால் அவனைக் காணச் சென்றாள். அவர் ஓரிடத்தில் நின்று கொண்டிருந்தார். அவரை மூலனின் மனைவி தீண்டப்போனாள். உடனே சிவயோகியார் என்னைத் தீண்டாதே, உனக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இனி இல்லை என்று கூறினார். மனங்கலங்கிய அப்பெண் ஊர்ப் பெரியவர்களிடம் இதைக் கூற, அவர்களும் இவர் சித்தம் சிவயோகத்தில் ஈடுபட்டிருக்கிறது. இனி இவர் சுற்றத்துடன் சேர்ந்து வாழார் என்றனர். பின்பு திருமூலர் பசுக்களோடு சென்று தன் உடலை தேடினார். அது அவ்விடத்தில் காணப்பெறவில்லை. சிவாகமத்தின் பொருளைத் தன் வாயிலாக வெளியிட வேண்டி உடலை மறைத்தது சிவபிரான் திருவருள் என்பதை ஞான உணர்வினால் திருமூலர் தெரிந்தார் . திருவாவடுதுறை சேர்ந்து, திருக்கோயிலுள் நுழைந்தார். மேற்புறத்திலுள்ள அரச மரத்தில் அமர்ந்து திருமந்திரத்தை அருளிச் செய்தார். இதுவும் ஞான மேலீட்டினால் வேறு கிரியை இன்றி நடந்ததுவே ஆகும். எனவே இதனையும் சுத்தவித்தை என்னும் நிலைக்கு விளக்கமாக்கலாம்.
5b
ஞானம் குன்றி கிரியை உயாந்தது ஈச்சுரம் ஆகும்.
இத்தத்துவத்துக்கு நலம் கண்ணப்பர் மெய்ப்பொருள் நாயனார், திருநாளைப்போவார், அப்பூதிஅடிகள் போன்றோரின் வரலாற்றினை விளக்கமாகக் கொள்ளலாம்.
கண்ணப்பர்
வேடர் குலத்தில் தோன்றி வேட்டுவ குலத்தலைவனாகி வேட்டையாடச் சென்றவர் முன் வினைப்பயன் முந்துற, இறைவனைக் காணும் வேட்கை மேலிட, மலைக் கோயிலுக்குச் சென்று, இறைவனைக் கண்ணுற்று, அன்பின் மிகுதியில் இறைவனை நீங்கவும் மனமின்றி காட்டினில் இருந்து காவல் காத்து, இறைவனுக்கு உணவாகப் பன்றி மாமிசத்தைப் பக்குவப்படுத்தி குடலையில் எடுத்துக் கொண்டு தன் வாயில் நீர் முகந்து சென்று, தன் தலையில் மலர் களைச் சூடிச் சென்று இறைவனுக்குச் சூட்டி மனம் நெகிழ்ந்து நின்றவர். இறைவனின் கண்களில் குருதி வழிந்ததும் தன்

Page 61
கண்ணையே எடுத்து அப்பியவர். இறைவனின் மறு கண்ணில் குருதியைக் கண்டபோது எனக்கு இதைத் தடுக்க வழி தெரியும் என்று மகிழ்ந்து தனது இன்னொரு கண்ணையும் எடுத்து வைக்க முனைந்தவள். தன்னுடைய உன்னதமான அன்புச் செய்கையால் ஆண்டவனின் அருளைப் பெற்றவர். அவரின் வரலாறு ஈச்சுரம் என்னும் தத்துவத்துக்கு சிறந்ததோர் எடுத்துக்காட்டாகும்.
ஏனாதி நாதநாயனார்.
சோழ நாட்டிலுள்ள எயின்னூரில் தோன்றிய ஈழகுலச் சான்றோராவார். அவர் திருநீற்றினிடத்தில் பேரன்பு வாய்ந்தவர். அரசர்களுக்கு வாள்வித்தை பயிற்றுவிப்பது அவள் தம் தொழிலாகும்
இக்காலத்தில் ஆதி சூரன் என்னும் மற்றொரு வாள்வீரன் இருந்தான். அவன் ஏனாதிநாதநாயனார் மீது போட்டியும், பொறாமையும் கொண்டான். அவரை வலிய போருக்கு அழைத்து வெல்ல முடியாமல் தோற்று வஞ்சகத்தால் வெல்ல நினைத்து, நெற்றியில் திருநீறு பூசிக்கொண்டு தன் கேடயத்தால் அதனை மறைத்துக் கொண்டு அவரிடம் போருக்குச் சென்றான். ஏனாதி நாதநாயனார் போருக்கு வரும் வேளையில் தன் கேடயத்தை அகற்றி முகத்தைக் காட்ட, இவர் நெற்றியில் திருநீறு பொலிகிறது, இவர் சிவபிரான் தொண்டராயினார் என்று நினைத்து தன் கேடயத்தை விட்டெறிய கருதியவர், பின்பு நிராயுதனைக் கொன்றார் என்னும் பழி இவரை அடர்க்கும் என்று அஞ்சி வாளையும் கேடயத்தையும் நீக்காது போரிடுவார் போல நடித்தார். அப்பொழுது அவர் முன் நின்ற பாதகன், தன் கருத்தை முற்றுவித்தான். இறைவன் ஏனாதி நாதநாயனார் முன் எழுந்தருளித் தம்மை என்றும் பிரியா பெருவாழ்வை அவருக்கு அளித்து மறைந்தருளினார். இதனால் ஈச்சுரம் என்னும் தத்துவத்துக்கு சிறந்த விளக்கமாக இவ்வரலாறு அமைகிறது.
மெய்ப்பொருள் நாயனார்.
சேதி நாட்டில் திருக்கோவலூரில்
மலையமான் வழி வந்தவர் மெய்ப்பொருள் நாயனார். இவர்

தேடிய மாடு நீடு
செல்வமும் தில்லை மன்றுள ஆடிய பெருமான் அன்பர்க்கு
ஆவன ஆகும் என்று நாடிய மனத்தி னோடு
நாயன்மார் அணைந்த போது கூடியே மகிழ்ச்சி பொங்கக்
குறைவு அறக் கொடுத்து உவந்தார்.
இந்நிலையில் இவர் வாழும் வேளையில் முதத நாதன் என்பவர் இவரை நேருக்கு நேர் நின்று வெல்ல இயலாதவனாய் அடியவர் வேடம் பூண்டு , இவரை வெல்ல எண்ணி சிவனடியார் வேடம் பூண்டு அவரின் அரண்மனை அந்தப்புரத்திற்குச் சென்று வேத ஆகமங்களைக் கூற வந்திருப்பதாகக் கூறி, மெய்ப்பொருள் நாயனார் அவருடன் தனித்திருக்கும் வேளையில் அவரை கத்தியால் குத்தி விடுகிறான். அதைக் கண்ட காவலன் அவனைப் பற்றும் வேளை மெய்ப்பொருள் நாயனார் ‘தத்தா நமர் என்று கூறி தடுத்து அவன் பாதுகாப்பாகவும் செல்ல ஏற்பாடு செய்கின்றார். தன் உயிர் போகும் வேளையில் எதிரில் இருப்பவன் கொலையாளியாயிருந்தும் அவன் சிவனடியார் வேடத்தில் இருந்த காரணத்திற்காக அவனை விடுவித்தமையால் இவரது வரலாற்றினையும் நாம் ஈச்சுரம் என்னும் தத்துவ விளக்கமாகக் கொள்ளலாம்.
வாழ்வில் உச்சகட்ட நிலையாக இந்துமதம் ஞானத்தைத்தான் குறிப்பிடுகின்றது. மானிடப் பிறவியை பயனற்றதாகச் செய்து விடக் கூடாது என்கிற நிலையில், இந்து மதம் வெகு கவனமாக இருக்கிறது.
பிறப்புக்கு நோக்கமுண்டு. ஒவ்வொரு பிறப்புக்கும் அதற்குரிய தனித்தனிக் கடமைகள் உண்டு. இந்தக் கடமைகளை செவ்வனே நிறைவேற்றுவதே வாழ்க்கையின் பயனாகும். வாழ்க்கையை விட்டு ஒதுங்காமல், வாழ்க்கையின் சுகத்தை அனுபவித்துக் கொண்டே, வாழ்க்கையின் குறிக்கோளை அடையும் மார்க்கத்தை, அருமையாக எடுத்துச் சொல்வது இந்துமதம்.
இந்து மதம் ஒரு பல்கலைக்கழகம். இந்தப் பல்கலைக்கழகத்தினுள் பயில வந்த எவரும் ஞானம் பெறாமல் வெளியேறியது இல்லை.
7

Page 62
இந்து மதம் ஒரு ஞான விருட்சம். இதன் நிழலில் அமர்ந்தவர்கள் யாரும் ஞான சுகத்தை அனுபவிக்காமல் இருக்க முடியாது.
ஆம் பரம்பொருளின் விரிவுரையாகவே தன்னை ஆக்கிக் கொண்டுள்ள ஒரு மதத்துக்கு ஆரம்பம் ஏது, முடிவு ஏது, அழிவுதான் ஏது?
இந்து சமயம் அகிலம் அனைத்தும் அளாவிய ஒரு மதம். ஏன் எனில் உலகத்திற்கும் அப்பாலுள்ள ஒருவராகக் கடவுள் இருக்கின்றார் என்பதை மட்டுமன்றி, எல்லா உயிர்களிடத்தும் உள்ளுறை அன்பாகவும் அவர் விளங்குகின்றார் என்பதையும் அது உறுதிப்படுத்துகின்றது. இறைவன் சத்தியமே உருவானவன். அமலன் அதாவது

தூயவன். எனவே சாத்வீகமான முறைகளை கடைப்பிடிப்பவர்களும், உள்ளத்தில் தூய்மையுடன் விளங்குபவர்களுமான உத்தமர்களே இறைவனை 960)Lu (pigub.
இந்து சமயம் அதன் சமரசப் பான்மைக்கும், சகிப்புதன்மைக்கும் பெயர் போனதாகும். கருத்து வேறுபாடுகளும், வழிபாட்டு வேறுபாடுகளும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.
எவ்வகையிலும் அடிப்படைக்கருத்துகளை விட்டுவிடாமல் தற்க்ால தேவைக்கேற்ப இந்து சமயத்தை விரிவுபடுத்தலே இன்றைய உடனடித் தேவையாகும். தரங்கள் எடுத்து விளக்கும் இலட்சியங்களை வாழ்க்கையில் கடைப் பிடிப்பவர்களாக இருந்தால் எதையும் சாதிக்கலாம்.
58

Page 63


Page 64
தினக்குரல் பப்ளிக்கேஷன் (பிரைவே

ட்) லிமிட்டெட். தொ.பே : 2522555