கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: திரிகடுகம்

Page 1
se
திரி க
ལ་བས་སོ།
盘
(உரை
“
,
 
 
 
 
 
 

క్రైస్త్రాల్లోత్తర్తోల్లోల్డ్
ニー間0ーニ*間ーニ。島に二ー間
டு கம்
にニ。三。
யுடன்)
பமுகநாவலர்
காக

Page 2

டெ கணபதி துணை. நல்லாதனரால் செய்யப்பட்டுச்
சங்கமருவிய நீதிநூலாகிய 勒 தி ரி க டு க ம்.
安
இ அது திருக்கோட்டியூர் இ ரா மா அது சா சா ரியர் : செய்த உரையுடன் 彗 யா ழ் ப் பா ன த் துடு ல் லூ ர் ஆஅமுக நாவலர வர்கள் சிதம்பரசைவப்பிரகாச விக் தியாசாலைத் தருமபரிபாலகர்பொருட்டு சென்னை ஹைக்கோர்ட் “ரசீவர்’ திரு. கா. சுப்பிரமணியபிள்ளை எம், ஏ, எம், எல். அவர்களால் சென்னபட்டணம் வித்தியா துபாலனயந்திரசாலையில் அச்சிற்பதிப்பிக்கப்பட்டது. எட்டாம் பதிப்பு. 1934。
இதன்விலை அணு - ச. பூரீமுகடு பங்குனிமீ”.

Page 3

6.
கணபதி துணை. தி ரி க டு க வ  ைர.
& II ւն ւյ.
கண்ணகன் ஞால மளந்ததூஉங் காமருசீர்க் தண்ணறும் பூங்குருந்தஞ் சாய்த்ததூஉ-நண்ணிய மாயச் சகட முதைத்ததூஉ மிம்மூன்றும் பூவைப்பூ வண்ண னடி.
இதன்பொருள். கண் அகல் ஞாலம் அளந்ததூஉம் - இடம கன்ற பூமியை அளந்ததும்-காமரு சீர்த் தண் டூறும் பூங் குருந் தம் சாய்த்ததுTஉம் - விரும்பப்பட்ட சிறப்பையுடைய குளிர்ச்சி யும் மணமும் பொருந்திய மலர்களையுடைய குருந்த மரத்தை முறித்ததும்-நண்ணிய மாயச் சகடம் உதைத்ததூஉம் - (கஞ் சஞலேவப்பட்டுத் தன்னை வருத்தும்படி) கிட்டிவந்த வஞ்சக மான சகடத்தை உதைத்ததும்-இம் மூன்றும் பூவைப்பூ வண் ணன் அடி - ஆகிய இம்மூன்றுஞ் செய்தவை காயாமலர்போலும் நிறத்தையுடைய திருமாலினது திருவடிகளாம். என்றவாறு.
எடுத்துக்கொண்ட நூல் இனிது முடிதற்பொருட்டுக் கட வுள் வணக்கஞ் செய்யப்பட்டது. செய்தவை யென்பது சொல் லெச்சம். இந்நூலுட் பாட்டுத்தோறும் மும்மூன்று பொருள் கள் கூட்டிச் சொல்லப்படுகின்றமை தோன்ற இவ்வணக்கப் பாட்டினும் அப்படியே சொன்னர்.
--¶--

Page 4
9. திரிகடுகஷரை.
T 6). அருந்ததிக் கற்பினர் தோளுந் திருந்திய தொல்குடியின் மாண்டார் தொடர்ச்சியுஞ்-சொல்லி னரிலகற்றுங் கேள்வியார் நட்புமிம் மூன்றுங் திரிகடுகம் போலு மருந்து,
இ - ள். அருந்ததிக் கற்பினர் தோளும் - அருந்ததிபோ லுங் கற்பினையுடைய மகளிரது தோளும்-திருந்திய தொல் குடியின் மாண்டார் தொடர்ச்சியும் - குற்றமற்ற பழைய குடிப் பிறப்பில் வந்து பெருமை பெற்றவரோடு கொள்ளுமுறவும்சொல்லின் அரில் அகற்றும் கேள்வியார் நட்பும் - கற்கப்படும் நூலிடத்தே குற்றங்களை நீக்க வல்ல கேள்வியையுடையவரோடு செய்யப்படும் நட்பும்-இம்மூன்றும் திரிகடுகம் போலும் மருந்துஆகிய இம்மூன்றும் ஒருவனுக்குத் திரிகடுகம்போலும் மருந்து களாம். எ - று. ve
கற்பு - நற்குண நற்செய்கைகளோடு தன்கணவனை வழி படுதல், மாட்சிமை - பெருமை. சொல்லென்றது நூலுக்கு ஆகு பெயர். அரில் - குற்றம்; அதாவது சந்தேகவிபரீதம், திரிகடு கம் சுக்குத் திப்பிலி மிளகு என்னும் இம்மூன்றுங் கூடியது. 'திரிகடு கஞ்சுக் கோடு திப்பிலி மிளகு மாகும்? என்பது குடா மணிநிகண்டு. சுக்கு முதலிய மூன்றும்போல அத்தோள் முத லிய மூன்றும் ஒருவனுக்குத் துன்பங்க்கி இன்பஞ்செய்தலால், இவற்றிற்கு அவை உவமானமாயின. இம்முதற்பாட்டிற் சொல் லப்பட்ட திரிகடுகமென்னுஞ் சொல்லே சிறப்புப்பற்றி இந்நூ லுக்கும் பெயராகக் கொள்ளப்பட்டது. (5)
தன்குணங் குன்றத் தகைமையுந் தாவில்சீ ரின்குணத்தா ரேவின செய்தலு-நன்குணர்வி குன்மறை யாளர் வழிச்செலவு மிம்மூன்று மேன்முறை யாளர் தொழில்,

திரிகடுகஷரை. 屁。
இ - ள். தன் குணம் குன்ருத்தகைமையும் - தனது குடிப் பிறப்பின் குணம் குறைவுபடாமைக்கு ஏதுவாகிய ஒழுக்கமும்தா இல் சீர் இன் குணத்தார் ஏவின செய்தலும் - அழிவில்லாத கீர்த்தியைத் தருகின்ற இனிய குணத்தையுடையோர் ஏவிய தொழில்களைச் செய்தலும்-நன்கு உணர்வின் நான்மறையா ளர் வழிச் செலவும் - தருமவியல்பை அறியுமறிவையுடைய பிராமணர் கற்பித்த வழியிலே நடத்தலும்-இம் மூன்றும் மேல் முறையாளர் தொழில் - ஆகிய இம்மூன்றும் மேலாகிய முறை யினையுடையவரது தொழில்களாம். எ - று.
நான்மறை இருக்கு, யசுர், சாமம், அதர்வம். (e-) கல்லார்க் கினணு யொழுகலுங் காழ்கொண்ட வில்லாளைக் கோலாற் புடைத்தலு-மில்லஞ் சிறியாரைக் கொண்டு புகலுமிம் மூன்று மறியாமை யான்வருங் கேடு.
இ - ள், கல்லார்க்கு இனன் ஆய் ஒழுகலும் - கற்றறியாத வர்க்கு உறவினனுய் நடத்தலும்-காழ்கொண்ட இல்லாளைக் கோலால் புடைத்தலும் - மனவுறுதி கொண்ட மனைவியைக் கோலாலடித்தலும்-இல்லம் சிறியாாைக் கொண்டு புகலும் - தம் வீட்டிடத்துச் சிற்றறிவாளரை உடன் கொண்டு புகுத லும்-இம்மூன்றும் அறியாமையான் வரும் கேடு - ஆகிய இம் மூன்றும் தம்மறியாமையினலே தமக்கு வருங் கேட்டை விளைப் Lu60Tauritu o. 67 - gau.
மனவுறுதி கற்பு. காழ் வித்துக்கும் பெயராதலால், சூல் கொண்டவெனினுமாம். கேடு செய்வனவற்றைக் கேடென்ருரர்.
பகைமுன்னர் வாழ்க்கை செயலுந் தொகைநின்ற பெற்றத்துட் கோலின்றிச் சேறலு-முற்றன்னைக் காய்வானைக் கைவாங்கிக் கோடலு மிம்மூன்றுஞ் சாவ வுறுவான் முெழில்.

Page 5
திரிகடுகஷரை.
இ - ள். பகை முன்னிர் வாழ்க்கை செயலும் - தன்பகை வர்முன்னே பெருஞ்செல்வத்தோடு வாழ்தல் செய்தலும்தொகை நின்ற பெற்றத்துள் கோல் இன்றிச் சேறலும் - கூட் டமாய் நின்ற பசுக்களினடுவே கையிற் கோலில்லாது செல்லு தலும்-முன் தன்னைக் காய்வானைக் கை வாங்கிக் கோடலும் - முன்னே நின்று தன்னை வருத்துவோனைத் தனக்கு உறவாக்கிக் கொள்ளுதலும்-இம்மூன்றும் சாவ உறுவான் தொழில் - ஆகிய இம்மூன்றும் சாவ வேண்டுவானுடைய செய்கைகளாம். எ - று.
வழங்காத் துறையிழிந்து நீர்ப்போக்கு மொப்ப விழைவிலாப் பெண்டீர்தோள் சேர்வு-முழந்து விருந்தினணுய் வேற்றார் புகலு மிம்மூன்று மருந்துயரங் காட்டு நெறி.
இ - ள். வழங்காத் துறை இழிந்து நீர்ப் போக்கும் - யாவ ரும் நடவாத துறையிலிழிந்து நீரிலே போகுதலும்-ஒப்ப விழைவு இலாப் பெண்டீர் தோள் சேர்வும் - தனக்கு ஒப்பாக அன்பில்லாத பெண்டீர் தோளைச் சேர்தலும்-உழந்து விருந்தி னன் ஆய் வேறு ஊர் புகலும் - வருந்திப் பிறர்க்கு விருந்தாளி யாய் அயலூரிற் புகுதலும்-இம்மூன்றும் அரும் துயரம் காட் ம்ெ நெறி - ஆகிய இம்மூன்றும் ஒருவனுக்கு அரிய துன்பத்தைக் காட்டும் வழிகளாம். எ - ற்.
விழைவிலாப்பெண்டீர் வேசையர். (டு) பிறர்தன்னைப் பேணுங்கா ஞணலும் பேணுர் திறன்வேறு கூறிற் பொறையு-மறவினையைக் காராண்மை போல வொழுகலு மிம்மூன்று மூராண்மை யென்னுஞ் செருக்கு.
இ - ள், பிறர் தன்னைப் பேணுங்கால் நாணலும் - பிறர் தன்னை உபசரித்துச் சொல்லுமிடத்துத் தான் நாணுதலும்

திரிகடுகஷரை. டு
பேணுர் திறன் வேறு கூறின் பொறையும் - உபசரியாதவராய்த் தனது தகுதி வேறுபடச் சொல்லுமிடத்து அதனைப் பொறுத்த லும்-அறவினையைக் கார் ஆண்மை போல ஒழுகலும் - உபகா மிச்செய்கையை மேகம் ஆளுதல்போல ஆளுதல் செய்து நடத்த லும்-இம்மூன்றும் ஊர் ஆண்மை என்னும் செருக்கு - ஆகிய இம்மூன்றும் பிறரின் மேற்பட்டுச் செல்லுகின்ற ஆண்மையென் னுஞ் செல்வங்களாம். எ - று.
மேகமானது பிரதியுபகாரம் வேண்டாது உபகரித்து வரு தலின் உவமானமாயிற்று. செருக்கைத்தருஞ் செல்வத்தைச் செருக்கெனலால், ஆகுபெயர். (37)
வாளைமீனுள்ள றலைப்படலு மாளல்லான் செல்வக் குடியுட் பிறத்தலும்-பல்லவையு ளிஞ்சுவான் கற்ற வருநூலு மிம்மூன்றுங் அஞ்சூமன் கண்ட கணு.
இ - ள். வாளைமீன் உள்ளல் தலைப்படலும் - வாளைமீனை யெடுக்க உள்ளானென்னும் பறவை முயற்சிசெய்தலும்-ஆள் அல்லான் செல்வக் குடியுள் பிறத்தலும் - ஆளமாட்டாதவன் செல்வமுடைய குடியின்கட்பிறந்து அதனை ஆள நினைத்தலும்பல் அவையுள் அஞ்சுவான் கற்ற அருநூலும் - பலர் கூடிய சபையிலே சென்று அஞ்சுகின்றவன் கற்ற அருமையாகிய நூலு ணர்ச்சியும்-இம்மூன்றும் துஞ்சு ஊமன் கண்ட கன - ஆகிய இம்மூன்றும் உறங்காநின்ற ஊமையானவன் கண்ட கணுப் போல்வனவாம். எ - று.
எப்படி ஊமன் கண்ட கனவானது அவனுள்ளே தோன் றிப் பயன்படாது போமோ அப்படியே தலைப்படல் முதலாகிய மூன்றும் தோன்றிய அந்தந்தப் பொருளிடத்தே பயன்படாது போமென்பதாம். பிறத்தலும் நூலும் ஆகுபெயர்கள். (எ)

Page 6
vir திரிகடுகஷரை.
தொல்லவையுட் டோன்றுங் குடிமையுங் தொக்கிருந்த நல்லவையுண் மேம்பட்ட கல்வியும்-வெல்சமத்து வேந்துவப்ப வட்டார்த்த வென்றியு மிம்மூன்றுங் தாந்தம்மைக் கூறப் பொருள்.
இ - ள். தொல் அவையுள் தோன்றும் குடிமையும் - பழை யோர் கூடியிருக்கின்ற சபையினிடத்தே தானக விளங்கித் தோன்றுங் தமது குடிப்பிறப்பும்-தொக்கு இருந்த நல் அவை யுள் மேம்பட்ட கல்வியும் - பலவகை நூலோருங் கூடியிருந்த நல்ல சபையிடத்தே தம்மிடத்துத் தானக மேம்பட்ட கல்வி யும்-வெல் சமத்து வேந்து உவப்ப அட்டு ஆர்த்த வென்றியும் - வெல்லும் போரிடத்தே தம்மையாண்ட வேந்தன் மகிழப் பகை வரைக் கொன்று நிறைத்த வெற்றியும்-இம்மூன்றும் தாம் தம் மைக் கூருப்பொருள் - ஆகிய இம்மூன்றும் இவற்றைபுடை யோர் தம்மைக் குறித்து வியந்து சொல்லப்படாத பொருள்க ளாம். எ - று. )و(
பெருமை யுடையா ரினத்தி னகற அலுரிமையில் பெண்டீரைக் காமுற்று-வாழ்தல் விழுமிய வல்ல துணிதலிம் மூன்று
முழுமக்கள் காத லவை.
இ - ள். பெருமை உடையார் இனத்தின் அகறல் - பெருங் தன்மையுடையாருடைய இனத்தினிங்குதலும்-உரியை இல் பெண்டீரைக் காமுற்று வாழ்தல் - தமக்கென உரிமையில்லாத பெண்டீரை இச்சித்து நடத்தலும்-விழுமிய அல்ல துணிதல் - சிறப்புடையவல்லாத காரியங்களைச் செய்யத் துணிதலும்-இம், மூன்றும் முழுமக்கள் காதலவை - ஆகிய இம்மூன்றும் அறிவு நுழைய ஒருபுரையில்லாத மூடர் இச்சிப்பவையாம். எ - று.
‘முழுமகன் சிதட னிழுதை மூடன்’ என்பது திவாகரம்.

கிரிகடுகஷரை. @s
கணக்காயரில்லாத வூரும் பிணக்கறுக்கு மூத்தோரை யில்லா வவைக்களனும்-பாத்துண்ணுங் தன்மையி லாள ரயலிருப்பு மிம்மூன்று நன்மை பயத்த லில.
இ - ள். கணக்காயர் இல்லாத ஊரும் - ஒதுவிப்பாரை இல்லாத ஊரும்-பிணக்கு அறுக்கும் மூத்தோரை இல்லா அவைக்களனும் - பிணக்கினைக் கெடுக்கும் அறிவுடையோரை இல்லாத சபையும்-பாத்து உண்ணும் தன்மையிலாளர் அயல் இருப்பும் - பகுத்துக் கொடுத்துண்ணுங் குணமில்லாதவர் பக் கத்திலிருப்பும்-இம்மூன்றும் நன்மை பயத்தல் இல - ஆகிய இம்மூன்றும் ஒருவனுக்கு நன்மை தருவனவல்லவாம். எ - று.
பிணக்கு ஒருபொருளைப் பற்றி இருவர்க்கு உளதாமாறு பாடு. பகுத்தல் பிதிரர், தேவர், விருந்தினர், உறவினர், தான் இவர்க்குப் பங்கிடல். (so)
விளியாதான் கூத்தாட்டுக் காண்டலும் வீழக் களியாதான் காவா துரையுங்-தெளியாதான் கூரையுட் பல்காலுஞ் சேறலு மிம்மூன்று மூரெல்லா நோவ துடைத்து.
இ - ள். விளியாதான் கூடத்தாட்டுக் காண்டலும் - தன்னை அழையாதவன் ஆட்டுவிக்குங் கூடத்தைத் தான் சென்று காணு தலும்-வீழக் களியாதான் காவாது உரையும் - தளர்ந்து வீழும் படி கள்ளுண்டு களியாதவனுயிருந்துந் தன்னைக்காத்தல் செய் யாது பிறரோடு வழுப்படச் சொல்லுதலும்-தெளியாதான் கூரையுள் பல்காலும் சேறலும் - தன்னை நம்பாதவன் வீட் டிலே பலகாலும் போகுதலும்-இம்மூன்றும் ஊர் எல்லாம் நோவது உடைத்து - ஆகிய இம்மூன்றும் ஊரிலுள்ளோரெல் லாம் அவனை நோவத்தக்க குற்றத்தையுடையதாம். எ - று.

Page 7
திரிகடுகஷரை.
இம்மூன்றும் உடைத்தென்றது கண்ணிரண்டுஞ் சிவந்த தென்பதுபோலப் பன்மை ஒருமையோடு முடிந்தவழுவமைதி. ()
தாளாள னென்பான் கடன்படா வாழ்பவன் வேளாள னென்பான் விருந்திருக்க-வுண்ணுதான் கோளாள னென்பான் மறவாதா னிம்மூவர்
கேளாக வாழ்த லினிது.
இ - ள். தாளாளன் என்பான் கடன்படா வாழ்பவன் - முயற்சியுடையனென்று சொல்லப்படுகின்றவன் பிறனிடத்திற் கடன்படாது வாழ்கின்றவன்-வேளாளன் என்பான் விருந்து இருக்க உண்ணுதான் - உபகாரியென்று சொல்லப்படுகின்றவன் விருந்தினரை விட்டுத் தான் புசியாதவன்-கோளாளன் என் பான் மறவாதான் - பிறரறிவித்த காரியங்களை மனத்திற்கொள் ளுதல் வல்லவனென்று சொல்லப்படுகின்றவன் பின்பு அவற்றை மறவாதவன்-இம்மூவர் கேள் ஆக வாழ்தல் இனிது - இம்மூவ ரையும் தனக்கு நட்பாளராகச் செய்துதொண்டு வாழ்வது ஒரு வனுக்கு இன்பத்தைத் தருவதாகும். எ - று.
தாள் முயற்சி. வேளாண்மை உபகாரம், கேள் நட்பு. (க2)
சில மறிவா னிளங்கிளை சாலக் குடியோம்பல் வல்லா னரசன்-வடுவின்றி மாண்ட குணத்தான் றவசியென் றிம்மூவர் யாண்டும் பெறற் கரியார்.
இ - ள். சீலம் அறிவான் இளங்கிளை - பிறருடைய குணத் தையறிந்து அதற்கேற்ப நடக்க வல்லவன் இளமை தொட்டு வந்த சுற்றத்தானவான்-சாலக் குடி ஒம்பல் வல்லான் அரசன் - நிறைவுற்ற குடிகளைக் காப்பாற்றவல்லவன் அரசனவான்-வடு இன்றி மாண்ட குணத்தான் தவசி - குற்றமில்லாமல் மாட்சி

திரிகடுகஷரை. djöስ ,
மைப்பட்ட குணத்தையுடையவன் தவசியாவான்-இம்மூவர் யாண்டும் பெறற்கு அரியார் - இம்மூவரும் எவ்விடத்தும் பெறு தற்கரியராவர். எ - று. என்று அசை, (5万)
இழுக்க லியல்பிற் றிளமை பழித்தவை சொல்லுதல் வற்றகும் பேதைமை-யாண்டுஞ் செறுவோடு நிற்குஞ் சிறுமை யிம்மூன்றுங் குறுகா ரறிவுடை யார்.
இ - ள். இழுக்கல் இயல்பிற்று இளமை - வழுவுதலை இயல் பாகவுடையவர் இளையவர்-பழித்தவை சொல்லுதல் வற்று ஆகும் பேதைமை - அறிவுடையோமால் விலக்கப்பட்டவைக ளைச் சொல்ல வல்லவர் பேதையர்-யாண்டும் செறுவோடு நிற் கும் சிறுமை - எக்காலத்தும் கோபகாரியத்தோடு நிற்பவர் சிறி யவர்-இம்மூன்றும் அறிவு உடையார் குறுகார் - ஆதலால், இம்மூவகையோரையும் விவேகமுடையவர் கிட்டார். எ - று.
இளமை, பேதைமை, சிறுமை என்னும் இம்மூன்றுகுணச் சொற்களும், அவற்றையுடையோர்க்கு ஆகுதலால், ஆகுபெயர் கள். இழித்தல்பற்றி உயர்திணையை அங்ஙனம் அஃறிணையாக்கிக் கூறினரெனினும் அமையும். (கச)
பொய்வழங்கி வாழும் பொறியறையுங் கைதிரிந்து தாழ்விடத்து நேர்கருதுந் தட்டையு-மூழின லொட்டி வினைநலம் பார்ப்பானு மிம்மூவர் நட்கப் படாஅ தவர்.
இ - ள். பொய் வழங்கி வாழும் பொறி அறையும் - பொய் சொல்லி வாழுகின்ற திருவில்லாதவனும்-கை திரிந்து தாழ்வு இடத்து நேர்கருதும் தட்டையும் - தன்னின் மிக்கவன் முன் னைப் பதத்தினின்றும் வேறுபட்டுத் தாழ்ந்தவிடத்து அவனைத் தனக்கு நேராக நினைக்கின்ற மூங்கில்போலும் புாைபட்ட மனத்

Page 8
SO திரிகடுகஷரை.
தவனும்-ஊழினல் ஒட்டி வினை நலம்பார்ப்பானும் - ஒருவ னைச் சேருமுறைமையாற் சேர்ந்து அவன் காரியத்திலே தனக் குப் பயன் பார்க்கின்றவனும்-இம்மூவர் நட்கப்படாதவர் - ஆகிய இம்மூவரும் யாவராலும் நட்புக் கொள்ளம்படாதவர். எ - று.
பொறி-இலக்குமி. தட்டை - மூங்கில். ஊழ்-முறைமை. () மண்ணின்மேல் வான்புகழ் நட்டானு மாசில்சீர்ப் பெண்ணினுட் கற்புடையாட் பெற்றனு-முண்ணுரீர் கூவல் குறைவின்றித் தொட்டானு மிம்மூவர் சாவா வுடம்பெய்தி னர்.
இ - ள். மண்ணின்மேல் வான் புகழ் நட்டானும் - மண் ணுலகத்திற் பெருமை பொருந்திய புகழை நிறுத்தினவனும்பெண்ணினுள் மாசு இல் சீர்க் கற்பு உடையாள் பெற்ருனும் பெண்களுட் குற்றமற்ற கீர்த்தியையுங் கற்பையுமுடையவ்ளைத் தனக்கு மனைவியாகப் பெற்றவனும்-உண்ணும் நீர் குறைவு இன்றிக் கூவல் தொட்டானும் - உண்ணப்படுகின்ற நீர் குறைவு படாதபடி கிணறுகளைத் தோண்டி வைத்தவனும்-இம்மூவர் சாவா உடம்பு எய்தினர் - ஆகிய இவர் மூவரும் எக்காலத்தும் இறவாத தேவசரீரம் பெற்றவராவர். எ - று.
பெண்ணினுளென்றது சாதியொருமை. தொடுதல்-தோண் தெல், துணிவுபற்றி இறந்தகாலத்தாற் கூறினர். (5)
மூப்பின்க ணன்மைக் ககன்ருனுங் கற்புடையாட் பூப்பின்கட் சாராத் தலைமகனும்-வாய்ப்பகையுட் சொல்வென்றி வேண்டு மிலிங்கியு மிம்மூவர் கல்விப் புணைகைவிட் டார்.
இ - ள். மூப்பின்கண் நன்மைக்கு அகன்ருனும் - மூப்பு வந்தவிடத்துத் துறவறத்திற்கு அஞ்சி நீங்கினவனும்-கற்பு

திரிகடுகவரை. ۔ 535:گ
உடையாள் பூப்பின்கண் சாராத் தலைமகனும்-கற்புடைய மனைவி பூத்து நீராடியவிடத்து அவளைச் சேராத கணவனும்-வாய்ப் பகையுள் சொல் வென்றி வேண்டும் இலிங்கியும் - வாயாற் பகைப்பவருட்சென்று சொல்வெற்றி பெற விரும்புங் தவவேடத் தானும்-இம்மூவர் கல்விப் புணை கைவிட்டார் - ஆகிய இம் மூவரும் பிறவியாகிய கடலைக் கடத்தும் ஞானமாகிய தோணி
யைக் கைவிட்டவராவர். எ - று.
நன்மை, பகை ஆகுபெயர்கள். பூப்பு மகளிர் சூதகம். ($ଗ)
ஒருதலையான் வந்துறுTஉ மூப்பும் புணர்ந்தார்க் கிருதலையு மின்னப் பிரிவு -முருவினை யுள்ளுருக்கித் தின்னும் பெரும்பிணியு மிம்மூன்றுங் கள்வரி னஞ்சப் படும்.
இ - ள். ஒருதலையான் வந்து உறூஉம் மூப்பும் - நிச்சய மாக வந்தடையும் கிழப்பருவமும்-புணர்ந்தார்க்கு இருதலையும் இன்னப் பிரிவும் - தம்முட் கூடினரிருவரிடத்துக்கும் துன்பஞ் செய்கின்ற பிரிவும்-உருவினை உள் உருக்கித் தின்னும் பெரும் பிணியும் - உடம்பினை உள்ளுருகச் செய்து தின்னுகின்ற பெரு வியாதியும்-இம்மூன்றும் கள்வரின் அஞ்சப் படும் - ஆகிய இம்மூன்றும் திருடர்போல் ஒருவரால் அஞ்சப்படுமவையாம்.
எ சு லு,
புணர்ந்தார் தம்முளொத்த அன்பினராய்க் கூடி வாழும் கணவனும் மனைவியும். அன்றி, நட்பாளருக்குமாம். )5 ےy(,
கொல்யானைக் கோடுங் குணமிலியு மெல்லிற் பிறன்கடை நின்முெழுகு வானு-மறந்தெரியா தாடும்பாம் பாட்டு மறிவிலியு மிம்மூவர்
நாடுங்காற் றுாங்கு பவர்.

Page 9
在9_ திரிகடுகவுரை.
இ - ள். கொல் யானைக்கு ஒடும் குணம் இலியும் - கொலை செய்வதாகிய மதயானைக்கு முன்னேடுகின்ற குணமில்லாதவ னும்-எல்லில் பிறன் கடை நின்று ஒழுகுவானும் - இரவிலே பிறன் வீட்டு வாயிலிற் சென்று அவன் மனையாளை இச்சித்து நின்று நடக்கின்றவனும்-மறம் தெரியாது ஆடும் பாம்பு ஆட் டும் அறிவு இலியும் - கொலைசெய்யுமென்பதை அறியாது ஆடும் பாம்பினை ஆட்டும் அறிவில்லாதவனும்-இம்மூவர் நாடுங்கால் அாங்குபவர் - ஆகிய இம்மூவரும் ஆராய்ந்து பார்க்குமிடத்து அவற்ருல் இறப்பவராவர். எ - று.
மனையாளென்பது வருவிக்கப்பட்டது. மறம் - கொ?ல. (கக)
ஆசை பிறன்கட் படுதலும் பாசம் பசிப்ப மடியைக் கொளலுங்-கதித்தொருவன் கல்லானென் றெள்ளப் படுதலு மிம்மூன்று மெல்லார்க்கு மின்ன தன.
இ - ள். பிறன்கண் ஆசைப் படுதலும் - பிறனெருவனிடத் துள்ள பொருளுக்கு ஆசைப் படுதலும்-பாசம் பசிப்ப மடி யைக் கொளலும் - தன்சுற்றம் பசித்திருக்கத் தான் சோம்பலைக் கொள்ளுதலும்-கதித்து ஒருவன் கல்லான் என்று எள்ளப்படு தலும் - கோபித்து ஒருவனுற் கற்றிலனென்று இகழப்படுத லும் - இம்மூன்றும் எல்லார்க்கும் இன்னதன - ஆகிய இம்மூன் றும் எல்லார்க்கும் இன்பங் தராதவையாம். எ - று.
மடி - சோம்பு. கதித்தல் - கோபித்தல். பொருள் அவாய் நிலையால் வருவிக்கப்பட்டது. (a_0)
வருவாயுட் கால்வழங்கி வாழ்தல் செருவாய்ப்பச் செய்தவை நாடாச் சிறப்புடைமை-யெய்தப் பலநாடி நல்லவை கற்ற விம்மூன்று நலமாட்சி நல்லவர் கோள்.

திரிகடுகஷரை. 安 舜_
இ - ள். வருவாயுள் கால் வழங்கி வாழ்தல் - தமக்கு வரும் பொருள்களிலே நாலிலொருபங்கு தருமத்திற் செலவுசெய்து வாழ்தலும்-செரு வாய்ப்பச் செய்தவை நாடாச் சிறப்பு உடைமை - போரினிடத்து வெற்றிகிடைக்கத் தான்செய்த காரியங்கள் ஆராயாதபடி யாவர்க்கும் விளங்கித் தோன்றுஞ் சிறப்புடையனதலும்-எய்தப் பல நாடி நல்லவை கற்றல் - நிரம்பப் பலவற்றையும் ஆராய்ந்து அவற்றுள் நல்லவைகளைக் கற்றலும்-இம்மூன்றும் நலமாட்சி ஈல்லவர் கோள் - ஆகிய இம்மூன்றும் நற்குண நற்செய்கைகளாற் பெருமை பெற்ற நல்ல வருடைய கொள்கைகளாம். எ - அறு.
தன்னநுபவத்திற்கு இரண்டு பங்கும், ஆஸ்திக்கு ஒருபங் கும், அறத்திற்கு ஒரு பங்குமாகப் பங்கிட்டு வைக்கவேண்டு மென்று பொருணுரலிலே சொல்லுதலால், அறத்துக்கு நாலி லொருபங்கு சொல்லப்பட்டது. (உக)
பற்றென்னும் பாசத் தளையும் பலவழியும் பற்றரு தோடு மவாத்தேருங்-தெற்றெனப் பொய்த்துரை யென்னும் பகையிருளு மிம்மூன்றும் வித்தற விடும் பிறப்பு.
இ - ள். பற்று என்னும் பாசத் தளையும் - பற்றென்று சொல்லப்படுகின்ற கயிற்று விலங்கும்-பல வழியும் பற்று அருது ஒடும் அவாத் தேரும் - பலபொருள்களினும் பிடிப்பு நீங் காமல் ஒடும் ஆசையாகிய தேரும்-தெற்றெனப் பொய்த்து உரை என்னும் பகை இருளும் - தெளிவாகப் பிறர்க்குப் பொய்த் துச் சொல்லுஞ் சொல்லாகிய பகைக்கின்ற அந்தகாரமும்இம்மூன்றும் வித்து அறப் பிறப்பு வீடும் - ஆகிய இம்மூன்றும் பிறவிக்கு வித்து; அவை கெடப் பிறப்பு ஒழியும். எ - அறு.
பற்ருவன நான், எனது என்பன. (e.E.)

Page 10
‹$óዎ” திரிகடுகவுரை.
தானங் கொடுக்குந் தகைமையு மானத்தார் குற்றங் கடிந்த வொழுக்கமுந்-தெற்றெனப் பல்பொரு ணீங்கிய சிந்தையு மிம்மூன்று நல்வினை யார்க்குங் கயிறு.
இ - ள். தானம் கொடுக்கும் தகைமையும் - பிறர்க்குத் தானமாகப் பொருள் கொடுக்குங் குணமும்-மானத்தார் குற் றம் கடிந்த ஒழுக்கமும் - மானமுடையாரது குற்றத்தை நீக்கிய ஒழுக்கமும்-தெற்றெனப் பல் பொருள் நீங்கிய சிந்தையும் - தெளியப் பலபொருள்களிலுஞ் செல்லுதலொழிந்த நினைவும்இம்மூன்றும் நல்வினை ஆர்க்கும் கயிறு - ஆகிய இம்மூன்றும் ஒருவனுக்கு நல்வினை தன்னைவிட்டகலாதிருக்கும்படிக்குக் கட்டு கின்ற கயிரும், எ - று.
தெற்றெனல் தெளிவாதல். (உh)
காண்டகு மென்ருேட் கணிகைவா யின்சொல்லுங்
தூண்டிலினுட்பொதிந்த தேரையு-மாண்டசிர்க்
காழ்த்த பகைவர் வணக்கமு மிம்மூன்று
மாழ்ச்சிப் படுக்கு மளறு.
இ - ள். காண் தகு மெல் தோள் கணிகை வாய் இன்சொல்
லும் - காணத்தக்க மெல்லிய தோள்களையுடைய வேசையினு, டைய வாயிற்பிறக்கின்ற இனிய சொல்லும்-தூண்டிலினுள் பொதிந்த தேரையும் - தாண்டிலினிடத்தே மீனுக்கு இரையாக அதன்முள்ளை மறைத்து வைக்கப்பட்ட தேரையும்-காழ்த்த பகைவர் மாண்டசிர் வணக்கமும் - வைரம்பற்றிய சத்துருக்க ளுடைய மாட்சிமைப்பட்ட சீரையுடைய வணக்கமும்-இம் மூன்றும் ஆழ்ச்சிப்படுக்கும் அளறு - ஆகிய இம்மூன்றும் உயிர் களைத் தம்முள்ளே அழுந்தப் பண்ணுகின்ற நாகங்கள் போல் auaotaint p at - 2.

திரிகடுகஷரை. கடு
பொதிதல் - மூடுதல். காழ்த்தல் - வைரமுறுதல். (உச)
செருக்கினல் வாழுஞ் சிறியவனும் பைத்தகன்ற
வல்குல் விலைபகரு மாய்தொடியு-நல்லவர்க்கு
வைத்த வறப்புறங் கொன்ருனு மிம்மூவர்
கைத்துண்ணுர் கற்றறிந் தார்.
இ - ள், செருக்கினல் வாழும் சிறியவனும் - உள்ளக்களிப்
பால் முறை கெடச்செய்து வாழுகின்ற அற்பனும்-பைத்து அகன்ற அல்குல் விலை பகரும் ஆய் தொடியும் - படம்போன்று
அகன்ற அல்குலை விலைக்கு விற்கின்ற வேசையும்-நல்லவர் க்கு வைத்த அறப்புறம் கொன்ருனும் - நல்ல அருந்தவர்க்கு வைத்த அறச்சாலையை அழித்தவனும்-இம்மூவர் கைத்து உண் ஞர் கற்று அறிந்தார் - ஆகிய இம்மூவருடைய பொருள்களைக் கொண்டு சீவனஞ்செய்யார் அறநூலைக் கற்று அதன்பொருளை அறிந்தவர். எ - அறு.
ஆய்தொடி ஆராய்ந்த வளையலையுடையாள். கைத்து - பொருள். (உடு)
ஒல்வ தறியும் விருந்தினனு மாருயிரைக் கொல்வ திடைக்ேகி வாழ்வானும்-வல்லிதிற் சில மினிதுடைய வாசானு மிம்மூவர் ஞால மெனப்படு வார்.
இ - ள். ஒல்வது அறியும் விருந்தினனும் - ஒருவனுக்கு
இயன்றதனை அறிந்து பெற்றதனுல் இன்பத்தையடையும் அதிதி
யும்-ஆர் உயிரைக் கொல்வது இடைநீக்கி வாழ்வானும் - அரிய
சிவனைப் பிறர் கொல்வதனை நடுவே நீக்கி வாழ்பவனும்-வல்லி
தின் சீலம் இனிது உடைய ஆசானும் - உறுதியாக மேற்
கொண்ட ஒழுக்கத்தினை இனிதாகவுடைய ஆசாரியனும்-இம்
2.

Page 11
Ꮿ5 ᏐᎦ7 திரிகடுகஷரை.
மூவர் ஞாலம் எனப்படுவார் - ஆகிய இம்மூவரும் உயர்ந்தோ
ரென்று சொல்லப்படுவர். எ - று.
*உலக மென்ப துயர்ந்தோர் மாட்டே? என்பது திவாகர
மாதலின், ஞாலமென்பது உயர்ந்தோரெனப்பட்டது. (உசு)
உண்பொழுது ரோடி யுண்டலு மென்பெறினும் பால்பற்றிச் சொல்லா விடுதலுங்-தோல்வற்றிச் சாயினுஞ் சான்ருண்மை குன்முமை யிம்மூன்றுங் தூஉய மென்பார் தொழில்.
இ - ள். உண்பொழுது நீர் ஆடி உண்டலும் - உண்ணும் பொழுது ஸ்நானம்பண்ணி உண்ணுதலும்-என் பெறினும் பால்பற்றிச் சொல்லா விடுதலும் - யாது பயன் பெறுவதாயினும் ஒரு பக்ஷத்தைப் பற்றிச் சொல்லாதிருத்தலும்-தோல் வற்றிச் சாயினும் சான்ருண்மை குன்முமை - பசியால் உடம்பு வுற்றி யிறத்தல் சமீபித்தவிடத்தும் தன்பெருமை குறையாமல் நடத்த லும்-இம்மூன்றும் தாயம் என்பார் தொழில் - ஆகிய இம்மூன் றும் மனமொழிமெய்களால் யாம் பரிசுத்தராகக் கடவோமென்று நினைப்பவருடைய செய்கைகளாம். எ - று. (உஎ)
வெல்வது வேண்டி வெகுண்டுரைக்கு நோன்பிலியு மில்லது காமுற் றிருப்பானுங்-கல்வி செவிக்குற்றம் பார்த்திருப் பானுமிம் மூவ ருமிக்குத்திக் கைவருந்து வார்.
இ - ள், வெல்வது வேண்டி வெகுண்டு உரைக்கும் நோன்பு இலியும் - சொல்வெற்றியை விரும்பிப் பிறனேடு கோபித்துச் சொல்கின்ற தவமில்லாதவனும்-இல்லது காமுற்று இருப் பானும் - தனக்குக் கிடைத்தற்கரிய பொருளைப் பெற ஆசைப் பட்டிருக்கின்றவனும்-கல்வி செவிக்குற்றம் பார்த்து இருப் பானும் - பிறன் கற்ற கல்வியைச் செவியினலே குற்றம்பார்த்

திரிகடுகஷரை. 35@丁
திருக்கின்றவனும்-இம்மூவர் உமிக் குத்திக் கைவருந்துவார் - ஆகிய இம்மூவரும் உமியைக் குத்திக் கைவருந்துகின்றவரோ டொப்பாவார். எ - று.
செவி - கேள்வி. சிறிதும் பயனடையாது துன்பப்படுவ ரென்பது கருத்து. )eہوئے ہ(
பெண்விழைந்து பின்செலினுந் தன்செலவிற் குன்முமை கண்விழைந்து கையுறினுங் காதல்-பொருட்கின்மை மண்விழைந்து வாழ்நாண் மதியாமை யிம்மூன்று நுண்விழைந்த நூலவர் நோக்கு.
இ - ள். பெண் விழைந்து பின் செலினும் தன் செலவில் குன்முமை - ஒரு பெண் தன்னை விரும்பிப் பின்சென்ருலும் தன்னடக்கையிற் குறையாமையும்-கண் விழைந்து கை உறி னும் பொருட்குக் காதல் இன்மை - தன்னிடந்தேடி வந்து கைப்பட்டாலும் அப்பொருளிடத்தே ஆசையில்லாமையும்மண் விழைந்து வாழ் நாள் மதியாமை - மண்ணுட்சியை விரும்பி வாழ்நாள் நேரிட்டவிடத்து அதனை மதியாமையும்-இம்மூன் றும் நுண் விழைந்த நூலவர் நோக்கு - ஆகிய இம்மூன்றும் நுட்பமான பொருளை விரும்பிய நூலறிவுடையவர் கருத்தாம். எ - று.
பெண் பொன் மண் மூன்ருரசையும் முத்தியை விரும்பின வர் கொள்ளாரென்பது. (e- ཆ)
தன்னச்சிச் சென்றரை யெள்ளா வொருவனு மன்னிய செல்வத்துப் பொச்சாப்பு-நீத்தானு மென்று மழுக்கா றிகந்தானு மிம்மூவர் கின்ற புகழுடை யார்.
இ- ள். தன் நச்சிச் சென்றரை எள்ளா ஒருவனும்-தன்னை விரும்பி அடைந்த இாவலரை இகழாத ஒப்பற்ற வனும்-மன்

Page 12
கி.அ திரிகடுகவரை.
னிய செல்வத்துப் பொச்சாப்பு நீத்தானும் - நிலையான செல்வம் பெற்ற காலத்து மறதியை விட்டவனும்-என்றும் அழுக்காறு இகந்தானும் - எப்போதும் பிறர் செல்வங்கண்டு பொருமை நீங்கினவனும்-இம்மூவர் நின்ற புகழ் உடையார் - ஆகிய இம் மூவரும் நிலைபெற்ற புகழையுடையராவர். எ - று. நச்சல் - விரும்பல். (IHO).
பல்லவையு ணல்லவை கற்றலும் பாத்துண்டாங் இல்லற முட்டா தியற்றலும்-வல்லிதிற் ഗ്രങി னுெருபொருளாக்கலு மிம்மூன்றுங் கேள்வியு ளெல்லாந் தலை,
இ - ள். பல் அவையுள் நல்லவை கற்றலும் - பல ச்பைக. ளுள்ளும் நல்லனவென்று சொல்லப்படுமவைகளைக் கற்ற லும்-பாத்து உண்டு ஆங்கு இல் அறம் முட்டாது இயற்றலும் - பகுத்துண்டு இல்லறத்தைக் குறையுருமல் நடத்துதலும்வல்லிதின் தாளின் ஒருபொருள் ஆக்கலும் - தன்வல்லமையா லும் முயற்சியினலும் யாதானுமொருபொருளை உண்டாக்கு, தலும்-இம்மூன்றும் கேள்வியுள் எல்லாம் தலை - ஆகிய இம் மூன்றும் கேட்கப்பட்ட செயல் பலவினும் தலைமையாகிய செயல்களாம். எ - அ.
ஆங்கு அசை, முட்டு - தடை. பொருள் - விஷயம். (டக).
நுண்மொழி நோக்கிப் பொருள்கொளலு நூற்கேலா வெண்மொழி வேண்டினுஞ் சொல்லாமை.--நன்மொழியைச் ஒற்றின மல்லார்கட் சொல்லலு மிம்மூன்றுங் கற்றறிந்தார் பூண்ட கடன்.
இ - ள். மொழி நோக்கி நுண் பொருள் கொளலும் - நூல்களிலே பதங்களை ஆராய்ந்து நுட்பமாகிய பொருள்களைக் கொள்ளுதலும்-நூற்கு ஏலா வெண் மொழி வேண்டினும்

திரிகடுகஷரை. sé
சொல்லாமை - நூல்களுக்குத் தகாத வெளிப்படையாகிய சொல்லைப் பிறர் வேண்டினலும் சொல்லாதொழிதலும்-நல் மொழியைச் சிற்றினம் அல்லார்கண் சொல்லலும் - உயிர்க்கு உறுதியைத் தரும் நல்ல சொற்களைக் கீழ்க்குலமாகாதவரிடத் அச் சொல்லுதலும்-இம்மூன்றும் கற்று அறிந்தார் பூண்ட கடன் - ஆகிய இம்மூன்றும் பலநூல்களையுங் கற்றறிந்தார் பூண்ட கடமையாம். எ - அறு.
சிறுமை - கீழ்மை. இனம் - குலம். (E_e)
கோலஞ்சி வாழுங் குடியுங் குடிகழீஇ யாலம்வீழ் போலு மமைச்சனும்-வேலின் கடைமணிபோற் றிண்ணியான் காப்புமிம் மூன்றும் படைவேந்தன் பற்று விடல்.
இ - ள். கோல் அஞ்சி வாழும் குடியும் - தன் செங்கோ லுக்குப் பயந்து வாழாகின்ற குடியும்-குடி தழீஇ ஆலம் வீழ் போலும் அமைச்சனும் - குடிகளைத் தழுவி ஆலம் விழுதுபோ லத் தாங்க வல்ல மந்திரியும்-வேலின் கடை மணிபோல் திண் பணியான் காப்பும் - வேலினிடத்துப் பூண்போலத் திட்பமுடை யவனது காவலும்-இம்மூன்றும் படைவேந்தன் பற்று விடல் - ஆகிய இம்மூன்றையும் சேனையையுடைய அரசன் பற்றுவிடா தொழிகுக. எ - று. (க.க)
மூன்று கடன்கழித்த பார்ப்பானு மோர்ந்து முறைநிலை கோடா வரசுஞ்-சிறைகின் றலவலை யில்லாக் குடியுமிம் மூவ ருலக மெனப்படு வார்.
இ - ள். மூன்று கடன் கழித்த பார்ப்பானும் - மூன்று வகைப்பட்ட கடன்களையுந்தீர்த்த பிராமணனும்-ஒர்ந்துமுறை சி?ல கோடா அரசும் - தருமநாலை ஆராய்ந்து நீதிநிலையின்

Page 13
SO திரிகடுகவுரை,
மாறுபடாத அரசனும்-சிறை நின்று அலவலை இல்லாக் குடி, யும் - அவ்வரசனற் செய்யப்பட்ட சிறையினுட்பட்டுப் புலம்புத லில்லாத குடியும்-இம்மூவர் உலகம் எனப்படுவார் - ஆகிய இம்மூவரும் உயர்ந்தோரென்று சொல்லப்படுவார். எ - று.
மூன்றுவகைப்பட்ட கடனவன தேவர் முனிவர் தென்புலத் தார் ஆகிய மூவர்க்கும் முறையே செய்யப்படும் வேள்வியும், வேதமோதலும், மகப்பெறுதலுமாம். அலவலை - புலம்பல். உலகம் - உயர்ந்தோர். (உச)
முந்நீர்த் திரையி னெழுந்தியங்கா மேதையு நுண்ணுாற் பெருங்கேள்வி நூற்கரை-கண்டானு மைந்நீர்மை யின்றி மயலறுப்பா னிம்மூவர் மெய்ந்நீர்மை மேனிற் பவர்.
இ - ள். முந்நீர்த் திரையின் எழுந்து இயங்கா மேதையும் - சமுத்திரத்தின் அலைபோல் எழுந்து மனமலையாத அறிவைய்டை யவனும்-நுண் நூல் பெரும் கேள்வி நூல் கரை கண்டா னும் - நுட்பமாகிய சிந்தனைகளாலும் மிகுதியாகிய கேள்விகளி குலும் நூல்களின் முடிவைக் கண்டவனும்-மைந்நீர்மை இன்றி மயல் அறுப்பான் - குற்றமாகிய குணத்தன்மையில்லாத படி ஆசாபாசத்தை அறுப்பவனும்-இம்மூவர் மெய்ந்நீர்மை மேல் நிற்பவர் - ஆகிய இம்மூவரும் மெய்ம்மைக் குணத்தை யுடைய மோக்ஷத்திலே நிற்பவராவர். எ - று.
நூல் - சிந்தனை. குற்றம், காமம் வெகுளி மயக்கம். எண் ணும்மை அறுப்பானென்பதனேடுங் கூட்டப்பட்டது. (கூடு)
ஊனுண் டுயிர்கட் கருளுடையே மென்பானுந் தானுடன்பா டின்றி வினையாக்கு-மென்பானுங் காமுறு வேள்வியிற் கொல்வானு மிம்மூவர்
தாமறிவர் தாங்கண்ட வாறு,

திரிகடுகவுரை. 9-35
இ - ள். ஊன் உண்டு உயிர்கட்கு அருள் உடையேம் என் பானும் - ஒன்றினது மாமிசத்தைத் தின்றுவைத்து உயிர்களினி டத்து அருளுடையோமென்கின்றவனும்-தான் உடன்பாடு இன்றி வினை ஆக்கும் என்பானும் - தான் யாதொரு காரிய முயற் சிக்கும் உடன்படாமல் எல்லாம் ஊழ் செய்யுமென்கின்றவ னும்-காமுறு வேள்வியில் கொல்வானும் - காமியத்தைத் தரு வதாகிய யாகத்தில் ஒரு பிராணியைக் கொல்லுகின்றவனும்இம்மூவர் தாம் கண்டவாறு தாம் அறிவர் - ஆகிய இம்மூவரும் தாங்களறிந்தபடியே தாங்கள் அறிவார்கள். எ - று.
பெரியோர் நூலின் கருத்தையறியாரென்பதாயிற்று. (கூசு) குறளையுணட்பளவு தோன்று முறலினிய சால்பினிற் ருேன்றுங் குடிமையும்-பால்போலுந் தூய்மையுட் டோன்றும் பிரமாண மிம்மூன்றும் வாய்மை யுடையார் வழக்கு.
இ - ள். குறளையுள் நட்பு அளவு தோன்றும் - ஒருவனுக்கு வந்த செல்வச்சுருக்கத்தினல் சினேகிதனுடைய சினேகத்தின் மிகுதியானது காணப்படும்-உறல் இனிய சால்பினில் குடிமை தோன்றும் - சேர்தற்கு இனிதாகிய நற்குணங்களினது நிறை விஞலே குடிப்பிறப்பானது காணப்படும்-பால்போலும் தூய் மையுள் பிரமாணம் தோன்றும் - பால்போலும் பரிசுத்தகுண முடைமையினலே ஒருவனது நிலையானது காணப்படும்-இம் மூன்றும் வாய்மை உடையார் வழக்கு - இந்நட்பளவு முதலாகிய மூன்றும் மெய்ம்மையுடையாரது ஒழுக்கங்களாம். எ - று.
உள்ளென்பன விரண்டும் உருபுமயக்கம். உம்மை அசைநிலை. தன்னை வியந்து தருக்கலுந் தாழ்வின்றிக் கொன்னே வெகுளி பெருக்கலு-முன்னிய பல்பொருள் வெஃகுஞ் சிறுமையு மிம்மூன்றுஞ்
செல்வ முடைக்கும் படை.

Page 14
a 2- திரிகடுகவுரை.
இ - ள். தன்னை வியந்து தருக்கலும் - தன்னைத் தானே மெச்சிக்கொண்டு அகங்கரித்தலும்-தாழ்வு இன்றிக் கொன்னே வெகுளி பெருக்கலும் - அடக்கமில்லாமல் வீணுகக் கோபத்தை வளர்த்தலும்-முன்னிய பல்பொருள் வெஃகும் சிறுமையும் - முற்பட்ட பிறருடைய பலவகைப்பொருள்களையும் இச்சிக்கின்ற அற்பகுணமும்-இம்மூன்றும் செல்வம் உடைக்கும் படை - ஆகிய இம்மூன்றும் ஒருவனுக்குச் செல்வத்தை அழிக்கின்ற ஆயுதங்களாம். எ - று.
தருக்கு - அகங்காரம், முன்னியவென்றது முன்னென்னு மிடைச்சொலடியாகப் பிறந்த பெயரெச்சம். (டஅ)
புலைமயக்கம் வேண்டிப் பொருட்பெண்டீர்த் தோய்தல் கலைமயக்கங் கள்ளுண்டு வாழ்தல்-சொலைமுனிந்து பொய்மயக் கஞ்சூதின் கட்டங்க விம்மூன்று நன்மையிலாளர் தொழில்.
இ - ள். புலை மயக்கம் பொருட் பெண்டீர் வேண்டித் தோய்தல் - சேத்தன்மையோடு கலத்தலாவது வேசையரை விரும்பிக் கூடுதலாம்-கலமயக்கம் கள் உண்டு வாழ்தல் - பிறரெச்சிற்கலத்தோடு கலத்தலாவது கள்ளுண்டு வாழ்த லாம்-சொ?ல முனிந்து பொய்ம்மயக்கம் குதின்கண் தங்கல் - பெரியோர் சொல்?லக் கடந்து பொய்யோடு கலத்தலாவது குதாடுமிடங்களிலே பலகாலும் தங்குதலாம்-இம்மூன்றும் நன்மையிலாளர் தொழில் - இம்மூன்றும் நன்மையில்லாதார் தொழில்களாம். எ - அறு.
நன்மை - அறம். இங்கே வாழ்தலென்றது குறிப்பாற் கெடுதலையுணர்த்திநின்றது. (க.க)

திரிகடுகஷரை. ei
வெகுளி நுணுக்கும் விறலு மகளிர்கட் கொத்த வொழுக்க முடைமையும்-பாத்துண்ணு நல்லறி வாண்மை தலைப்படலு மிம்மூன்றுங் தொல்லறி வாளர் தொழில்.
இ - ள். வெகுளி நுணுக்கும் விறலும் - மனசிலுண்டா கிய கோபத்தைச் சுருக்கும் வல்லமையும்-மகளிர்கட்கு ஒத்த ஒழுக்கம் உடைமையும் - பெண்டீர்களுக்குப் பொருந்துமொழுக் கமுடையனதலும்-பாத்து உண்ணும் நல் அறிவாண்மை தலைப் படலும் - பகுத்துண்ணும் நல்லறிவுடைமையைக் கூடுதலும்இம்மூன்றும் தொல் அறிவாளர் தொழில் - ஆகிய இம்மூன்றும் இயற்கையறிவினையுடையவரது தொழில்களாம். எ - று. (ச0)
அலந்தார்க்கொன் மீந்த புகழுந் துளங்கினுக் தன்குடிமை குன்றத் தகைமையு-மன்போடி நாணுளு நட்டார்ப் பெருக்கலு மிம்மூன்றுங் கேள்வியு யெல்லாங் தலை.
இ - ள். அல்ந்தார்க்கு ஒன்று ஈந்த புகழும் - வறுமையி ஞலே துன்பப்பட்டு இாந்தவர்களுக்கு அவர் விரும்பிய ஒன் றைக் கொடுத்தலாலுண்டாகிய புகழும்-துளங்கினும் தன் குடிமை குன்ருத தகைமையும் - வறுமை முதலியவற்ருரல் வருக் நினலும் தன் குடிப்பிறப்புக்குத் தக்க ஒழுக்கங் குன்முதபடி நடந்துகொள்ளும் பெருமையும்-அன்பு ஒடி நாள் நாளும் நட்டார்ப் பெருக்கலும் - அன்பு வளர்ந்து நாடோறுஞ் சினே கித்தவரை ஒங்கச் செய்தலும்-இம்மூன்றும் கேள்வியுள் எல் லாம் தலே - ஆகிய இம்மூன்றும் பெரியோரிடத்துத் தான் கேட் கப்படும் அறங்கள் பலவினும் தலைமையான அறங்களாம். எ-று. கேள்வி - ஆகுபெயர். (சக)

Page 15
2. Fu திரிகடுகஷரை,
கழகத்தால் வந்த பொருள்கா முழுமை பழகினும் பார்ப்பாரைத் தீப்போ-லொழுக அலுழவின்கட் காமுற்று வாழ்தலிம் மூன்று மழகென்ப வேளாண் குடிக்கு
இ - ள். கழகத்தால் வந்த பொருள் காமுருமை - சூதாட் டத்தினல் வருகின்ற பொருளை இச்சியாமையும்-பழகினும் பார்ப்பாரைத் தீப்போல் ஒழுகல் - பலகாலும் பழகினலும் பிராமணரை அக்கினிக்குச் சமானராக நினைத்து அஞ்சி நடந்து கொள்ளுதலும்-உழவின்கண் காமுற்று வாழ்தல் - பயிர் செய் தலில் ஆசையுற்று வாழ்தலும்-இம்மூன்றும் வேளாண் குடிக்கு அழகு என்ப - ஆகிய இம்மூன்றும் வேளாண்மையையுடைய குலத்துக்கு அழகென்று சொல்வார் பெரியோர். எ - று.
எண்ணும்மை விகாரத்தாற்ருெக்கன. கழகமென்னுஞ் சூதாடிடத்தின் பெயர் சூதுக்கு ஆகுதலால் ஆகுபெயர். (சஉ)
வாயி னடங்குதறுப்புரவா மாசற்ற செய்கை யடங்குதறிப்பியமாம்-பொய்யின்றி நெஞ்ச மடங்குதல் வீடாகு மிம்மூன்றும் வஞ்சத்திற் றீர்ந்த பொருள்.
இ - ள். வாயின் அட்ங்குதல் துப்புரவு ஆம் - வாக்கினல் அடங்குதல் இகத்திலே செல்வத்தைத் தருவதாகும்-செய்கை அடங்குதல் மாசு அற்ற திப்பியம் ஆம் - சரீரத்தொழிலால் அடங் குதல் மறுமையிலே குற்றமற்ற தெய்வப்பிறப்பைத் தருவதா கும்-பொய் இன்றி நெஞ்சம் அடங்குதல் வீடு ஆகும் - பொய் இல்லாமல் மனத்தால் அடங்குதல் முடிவிலே முத்தியைத் தருவ தாகும்-இம்மூன்றும் வஞ்சத்தின் தீர்ந்த பொருள் - இம்மூன் றும் பொய்யினின்றும் நீங்கிய நற்பொருள்களாம். எ - று.
துப்புரவு அநுபவிக்கப்படுவது. (சங்)

திரிகடுகவரை. 9 (6.
விருந்தின்றி யுண்ட பகலுந் திருந்திழையார் புல்லப் புடைபெயராக் கங்குலு-மில்லார்க்கொன் மீயா தொழிந்தகன்ற காலையு மிம்மூன்றும் நோயே யுரனுடையார்க் கு.
இ - ள். விருந்து இன்றி உண்ட பகலும் - விருந்தில்லை யாகப் புசிக்கக் கழிந்த பகலும்-திருந்து இழையார் புல்லப் புடை பெயராக் கங்குலும் - திருந்திய ஆபரணங்களையுடைய பெண்களை அநுபவிக்கக் கழியாத இராத்திரியும்-இல்லார்க்கு ஒன்று ஈயாது ஒழிந்து அகன்றகாலையும் - தரித்திார்க்கு ஒன் றைக் கொடாதிருக்கக் கழிந்த நாளும்-இம்மூன்றும் உான் உடையார்க்கு நோயே - ஆகிய இவை மூன்றும் அறிவுடை யார்க்கு நினைக்குந்தோறும் நோய்களாம். எ - று.
உான்-அறிவு. *உானே காட்சியுணர்வே யுண்மை-புலனே ஞான மறிவெனப் புகல்வர்” என்பது திவாகரம். (சச)
ஆற்ருரனே யாற்றென் றலைப்பானு மன்பின்றி யேற்றர்க் கியைவ காப்பானுங்-கூற்றம் வரவுண்மை சிந்தியா தானுமிம் மூவர் கிரயத்துச் சென்றுவீழ் வார்.
இ - ள். ஆற்ருனை ஆற்று என்று அலைப்பானும் - ஒருகாரி யஞ் செய்தற்குச் சத்தியில்லாதவனை அதைச் செய்யச் சொல்லி வருத்துகின்றவனும்-ஏற்ருர்க்கு அன்பு இன்றி இயைவ காப் பானும் - யாசித்தவர்களிடத்தில் அன்பில்லாது தனக்கிசைந்த பொருள்களைக் கொடாது ஒளிக்கின்றவனும்-கூற்றம் வரவு உண்மை சிந்தியாதானும் - யமன் வருவது உண்மையென்று சினையாதவனும்-இம்மூவர் நிரயத்துச்சென்று வீழ்வார் - ஆகிய இம்மூவரும் Fாகத்திற்போய் விழுவார். எ - று. (சடு)

Page 16
*:2 -ᏜᏂ திரிகடுகவுரை,
காறாய்மை யில்லாக் கலிமாவுங் காழ்கடிந்து மேறாய்மை யில்லாத வெல்களிறுஞ்-சீறிக் கறுவி வெகுண்டுரைப்பான் பள்ளியிம் மூன்றுங் குறுகா ரறிவுடை யார்.
இ - ள். கால் தூய்மை இல்லாக் கலிமாவும் - நடையிலே நன்மையில்லாத செழிய குதிரையும்-காழ் கடிந்து மேல் அாய்மை இல்லாத வெல் களிறும் - கட்டுத்தறியை முறிக்கும் வலிமையுடைத்தாயும் மேலிருப்பதற்கு ஏற்ற நன்மையில்லாத வெற்றியையுடைய யானையும்-றிேக் கறுவி வெகுண்டு உரைப் பான் பள்ளி - சீறி உள்வைாங்கொண்டு கோபிப்பவனுடைய கல்விச்சாலையும்-இம்மூன்றும் குறுகார் அறிவு உடையார் - ஆகிய இம்மூன்றனையும் விவேகமுடையவர் சோார். எ - று. கால், காழ் ஆகுபெயர்கள். (சசு)
சில்சொற் பெருந்தோண் மகளிரும் பல்வகையுங் தாளினற் றந்த விழுநிதியு-நாடோறு நாத்தளிர்ப்ப வாக்கிய வுண்டியு மிம்மூன்றுங் காப்பிகழ லாகாப் பொருள்.
இ - ள். சில் சொல் பெரும் தோள் மகளிரும் - மெல்லிய சொல்லையும் பெரிய தோள்களையுமுடைய பெண்டீரும்-பல் வகையும் தாளினல் தந்த விழுநிதியும் - பலவகையாலும் முயற் சியாற் றேடிய சிறந்த பொருளும்-நாடோறும் நாத்தளிர்ப்ப ஆக்கிய உண்டியும் - எப்போதும் நாவானது மகிழும்படி சமை த்த உணவும்-இம்மூன்றும் காப்பு இகழல் ஆகாப்பொருள் - ஆகிய இம்மூன்றும் காத்தலைத் தள்ளக்கூடாத பொருள்களாம். ol - g).
தாள் - முயற்சி. மிகுதிபற்றி உயர்திணை அஃறிணையாக முடிந்தது. காப்பாற்ருவிடிற் பழுதுபடுமென்பதாம். (சஎ)

திரிகடுகவுரை, е от
வைததனை யின்சொல்லாக் கொள்வானு நெய்பெய்த சோறென்று கூழை மதிப்பானு-முறிய கைப்பதனைக் கட்டியென் றுண்பானு மிம்மூவர் மெய்ப்பொருள் கண்டுவாழ் வார்.
இ - ள். வைததனை இன் சொல்லாக் கொள்வானும் - ஒரு வன் வைத வசைகளை இனியசொல்லாகக் கொள்கின்றவனும்செய் பெய்த சோறு என்று கூழை மதிப்பானும் - நெய்வார்த்த சோறென்று தான் பெற்ற கூழை மதிக்கின்றவனும்-ஊறிய கைப்பதனைக் கட்டி என்று உண்பானும் - மிகுந்த கைப்புடைய தாகிய ஒருணவைவெல்லமென்று உண்கின்றவனும்-இம்மூவர் மெய்ப்பொருள் கண்டு வாழ்வார் - ஆகிய இம்மூவரும் தத்துவப் பொருளை அறிந்து வாழப்பெறுவார். எ - று.
கட்டி - வெல்லம். மெய்ப்பொருள் - கடவுள். கூழ் - மாவி ஞற் சமைக்கப்பட்டது. (சஅ)
ஏவாது மாற்று மிளங்கிளையுங் காவாது வைதெள்ளிச் சொல்லுந் தலைமகனும்-பொய்தெள்ளி யம்மனை தேய்க்கு மனையாளு மிம்மூவ
ரிம்மைக் குறுதியில் லார்.
இ - ள். ஏவாதும் ஆற்றும் இளங்கிளையும் - ஏவாத காரி யத்தையும் செய்கின்ற தன்னிளஞ்சுற்றத்தானும் - காவாது வைது எள்ளிச் சொல்லும் தலைமகனும் - மனைவியைப் பாது காவாது வைது இகழ்ந்து பேசுகின்ற தலைவனும்-பொய் தெள்ளி அம்மனை தேய்க்கும் மனையாளும் - பொய்யையே தெளிந்து தான் வாழ்கின்ற வீட்டிலுள்ள பொருளை அழிக்கும் மனைவியும்-இம்மூவர் இம்மைக்கு உறுதி இல்லார் - ஆகிய இம்மூவரும் இப்பிறப்பில் ஒருவற்கு உறுதியில்லாதவராவார்.
(J - d.

Page 17
உஅ திரிகடுகவுரை.
எச்சவும்மையால் ஏவியதைச் செய்யாமையேயன்றி யெனப் பொருள் கொள்க. உறுதி - நன்மை. (சக)
கொள்பொருள் வெஃகிக் குடியலைக்கும் வேந்தனு முள்பொருள் சொல்லாச் சலமொழி மாந்தரு மில்லிருந் தெல்லை கடப்பாளு மிம்மூவர் வல்லே மழையருக்குங் கோள்.
இ - ள், கொள் பொருள் வெஃகிக் குடி அலைக்கும் வேங் தனும் - தான் கொள்ளும் பொருளை விரும்பிக் குடிகளை வருத் துகின்ற அரசனும்-உள் பொருள் சொல்லாச் சலம் மொழி மாந்தரும் - உற்ருரோடு உண்மைப்பொருளைச் சொல்லாது பொய் சொல்கின்ற மனிதரும்-இல் இருந்து எல்லை கடப் பாளும் - வீட்டின்கணிருந்து தன் வரம்பு கடந்து நடக்கும் மளையாளும்--இம்மூவர் வல்லே மழை அருக்கும் கோள் - ஆகிய இம்மூவரும் விரைந்து மழையைக் குறைக்கின்ற கிரீகங்க
ளாவர். எ - று.
சலம் - பொய். இம்மூவருமுள்ள நாட்டின் மழை பெய்யா தென்பது கருத்து. (டுo)
தூர்ந்தொழுகிக் கண்ணுங் துணைக டுணைகளே சார்ந்தொழுகிக் கண்ணுஞ் சலவர்-சலவரே யிர்ந்தகல் லின்னுக் கயவ ரிவர்மூவர் தேர்ந்தக்காற் ருேன்றும் பொருள்.
இ - ள். அார்ந்து ஒழுகிக்கண்ணும் துணைகள் துணைகளே - வருவாய் அடைபட்டு ஒருவன் வருத்தப்பட்டுக்கொண்டிருக்கிற விடத்தும் சுற்றத்தார் சுற்றத்தாரேயாவர்-சார்ந்து ஒழுகிக் கண்ணும் சலவர் சலவரே - மனங்கலந்தொழுகிய விடத்தும் பகைவர் பகைவரேயாவர்-ஈர்ந்த கல் இன்னுக் கயவர் - பிளக் கப்பட்ட கல்லுப்போல்வார் இன்னத கீழ்மக்களேயாவர்

திரிகடுகஷரை. 2 - és
இவர் மூவர் தேர்ந்தக்கால் தோன்றும் பொருள் - இவர் மூவ ரும் அறிவுடையார் ஆராயுமிடத்துக் காணப்படும் பொருள்க artanti. at - gal.
ஒழுகியக்கண்ணுமென்பன இரண்டும் இடைக்குறைவிகார மாயின. தேர்ந்தக்காற் முேன்றும் பொருளெனவே, ஆரா யாவிடத்து இப்படிப்பட்டவரென்று அறியப்படாரென்பது தோன்றுகின்றது. (டுக)
கண்ணுக் கணிகலங் கண்ணுேட்டங் காமுற்ற பெண்ணுக் கணிகல நாணுடைமை-நண்ணு மறுமைக் கணிகலங் கல்வியிம் மூன்றுங் குறியுடையார் கண்ணே யுள.
இ - ள். கண்ணுக்கு அணிகலம் கண்ணேட்டம் - கண் அணுக்கு ஆபரணமாவது தாக்ஷிணியமுடைமையாம்-காமுற்ற பெண்ணுக்கு அணிகலம் நாண் உடைமை - கணவனுல் விரும் பப்பட்ட பெண்ணுக்கு ஆபரணமாவது வெட்கமுடைமையாம்சண்ணும் மறுமைக்கு அணிகலம் கல்வி - தானே வருகின்ற மறுபிறப்பிற்கு ஆபரணமாவது வித்தையாகும்-இம்மூன்றும் குறி உடையார்கண்ணே உள - இம்மூன்றும் இயற்கையறிவுடை யாரிடத்தே உளவாம். எ - று.
ஒருவன் இம்மையிற் கற்ற கல்வியானது அவனை நல்வழிப்
படுத்தி மறுமையில் இன்பம் பயத்தலால் மறு மைக்கணிகவி மென்முர். (டுஉ)
குருடன் மனையா ளழகு மிருடீரக் கற்றறி வில்லான் கதழ்ந்துரையும்-பற்றிய பண்ணிற் றெரியாதான் யாழ்கேட்பு மிம்மூன்று மெண்ணிற் றெரியாப் பொருள்.

Page 18
AO திரிகடுகஷரை.
இ - ள். குருடன் மனையாள் அழகும் - குருடனுடைய மனையாளினது அழகும்-இருள் தீரக் கற்று அறிவு இல்லான் கதழ்ந்து உரையும் - மயக்கந்தீர உண்மை நூலைக் கற்று அதன் பொருளை அறிதலில்லாதவன் விரைந்து சொல்லுஞ்சொல் லும்-பற்றிய பண்ணில் தெரியாதான் யாழ் கேட்பும் - விரும். பப்பட்ட இசைநூலிற் பயிற்சியில்லாதவன் வீணையினேசை யைக் கேட்டலும்-இம்மூன்றும் எண்ணில்தெரியாப் பொருள் - ஆகிய இம்மூன்றும் ஆராயுமிடத்து அம்மூவர்க்கும் முறையே தெரியாத பொருள்களாம். எ - று.
கதழ்வு - விரைவு. (டுங்)
தன் பயந் தூக்காரைச் சார்தலுங் தாம்பயவா
நன்பயங் காய்வின்கட் கூறலும்-பின்பயவாக் குற்றம் பிறர்மேலுரைத்தலு மிம்மூன்றுங்
கெற்றென வில்லார் தொழில்,
இ - ள். தன் பயம் அளக்காரைச் சார்தலும் - தனக்கு
வரும் பயனை ஆராய்ந்து அதற்கு உதவிசெய்யாதவரை அடுத்த லும்-காய்வின்கண் தாம் பயவா நன் பயம் கூறலும் - ஒரு வன் கோபஞ்செய்கின்றவிடத்துத் தாம் பயன்படாமற் போவன வாகிய சில உறுதிகள் சொல்லுதலும்-பின் பயவாக் குற்றம் பிறர் மேல் உரைத்தலும் - அப்போது பயன்படினும் பின்னே பயன்படுதலில்லாத குற்றங்களைப் பிறர்மேற் சொல்லுதலும்இம்மூன்றும் தெற்றெனவு இல்லார் தொழில் - ஆகிய இம்மூன் றும் தெளிவில்லாதாருடைய செய்கைகளாம். எ - று. (டுச)
அருமறை காவாத நட்பும் பெருமையை வேண்டாது விட்டொழிந்த பெண்பாலும்-யாண்டானுஞ் செற்றங்கொண் டாடுஞ் சிறுதொழும்பு மிம்மூவ ரொற்ரு ளெனப்படு வார்.

திரிகடுகஷரை. säS
இ - ள். அரு மறை காவாத நட்பும் - வெளிப்படுத்தக் கூடாத ரகசியப்பொருளைக் காப்பாற்ருத நட்பாளனும்-பெரு மயை வேண்டாது விட்டு ஒழிந்த பெண்பாலும் - பெருமைக் குணத்தை விரும்பாது விட்டு நீங்கிய பெண்ணும்-யாண்டா றும் செற்றம் கொண்டாடும் சிறு தொழும்பும் - எப்பொழுதும் வைாங்கொண்டாடுங் குற்றேவலாளனும்-இம் மூவர் ஒற்ருள் எனப்படுவார் - ஆகிய இம் மூவரும் ஒற்ருள்களென்று சொல் லப்படுவார். எ - று.
பெருமைக்குணம் கற்பு முதலியன. ஆன் சாரியை. செற். றம் - வைரம். ஒற்ருள் - ஒருவரிடத்துள்ள குற்றத்தை அறிந்து போய்ப் பிறர்க்கு அறிவிப்பவன். (டுடு)
முந்தை யெழுத்தின் வரவுணர்ந்து பிற்பாடு தந்தையுந் தாயும் வழிபட்டு-வந்த வொழுக்கம் பெருநெறி சேர்தலிம் மூன்றும் விழுப்ப நெறிது ரா வாறு.
இ - ள். முந்தை எழுத்தின் வரவு - ஒருவனுக்கு இளமைப் பருவத்திலே கல்வியறிவுண்டாதலும்-பிற்பாடு உணர்ந்து தந் தையும் தாயும் வழிபட்டு வந்த ஒழுக்கம் - அதன்பின்பு அக்கல் விப்பொருளை உணர்ந்து தந்தையையுந் தாயையும் பூசித்து வந்த ஒழுக்கமுடைமையும்-பெரு நெறி சேர்தல் - பின்பு பெரியோ ாது வழியைச் சேர்தலும்-இம்மூன்றும் விழுப்ப நெறி அாரா ஆறு - ஆகிய இம்மூன்றும் உயர்வைத்தரும் வழியைத் தளராத விதங்களாம். எ - று.
எழுத்தென்பது கல்விக்கு ஆகுபெயர். விழுப்பம் - உயர்வு,
கல்வியறிவிற்குப் பயன் தந்தை தாய்களை வழிபடுதலும், அவ்
வழிபாட்டிற்குப் பயன் பெரியோர் வழியைச் சேர்தலுமாத
லின், இம்முறை வைத்தார். (டுசு)
fil

Page 19
is 9- திரிகடுகவுரை.
கொட்டி யளந்தமையாப் பாடலுங் தட்டித்துப் பிச்சைபுக் குண்பான் பிளிற்றலுங்-துச்சிருந்தா ளுைங் கலங்கா முறுதலு மிம்மூன்றுங் கேள்வியு ளின்னு தன.
இ - ள். கொட்டி அளந்து அமையாப் பாடலும் - தாள வோசையை அளந்து அதற்குத் தகும்படி பாடாத பாடலும்தட்டித்துப் பிச்சை புக்கு உண்பான் பிளிற்றலும் - கைதட்டிச் சோற்றுப்பிச்சைக்குப் போய் வாங்கி உண்பவனுடைய ஆரவா ரித்தலும்-துச்சு இருந்தான் ஆளும் கலம் காமுறுதலும் - ஒதுக் குக்குடியிருந்தவன் அவ்வில்லத்தானுடைய ஆளும் பாத்திரங் களை இச்சித்தலும்-இம்மூன்றும் கேள்வியுள் இன்னதன - ஆகிய இம்மூன்றும் கேட்கப்படுமவைகளுள் இனிமையாகாதன 6)!Tւ0. օT - g).
கொட்டி - தாளம். து - புசிப்பு. துச்சிருத்தல் - ஒதுக்குக் குடியிருத்தல். (டுஎ)
பழமையை நோக்கி யளித்தல் கிழமையால் கேளி ருவப்பத் தழுவுதல்-கேளீராய்த் துன்னிய சொல்லா லினந்திரட்ட விம்மூன்று மன்னற் கிளையான் முெழில்.
இ - ள். பழமையை நோக்கி அளித்தல் - நெடுங்காலமா கப் பழகிவருந் தொடர்ச்சியை நோக்கி அத்தொடர்ச்சியுடையா ரைக் காப்பாற்றுதலும்-கிழமையால் கேளிர் உவப்பத் தழுவு தல் - செய்யும் உரிமையாற் சுற்றத்தார் மகிழும்படி அவரைத் தழுவுதலும்--கேளீராய்த் துன்னிய சொல்லால் இனம் திரட் டல் - தனக்கு நட்பாளராய்ச் சூழும்படி இனிய சொல்லினல் நல்லினத்தைச் சேர்த்தலும்-இம்மூன்றும் மன்னற்கு இளை யான் தொழில் - ஆகிய இம்மூன்றும் இளவரசனது தொழில்
களாம். எ - று.

திரிகடுகவுர்ை. 阪_版_
மன்னற்கிளையானை அமைச்சனென்பாருமுளர். கழுவுதல் வரவணைத்தல், துன்னியவென்பது செய்யியவென்னும் வினை யெச்சம். (திஅ)
கிளைஞர்க் குதவாதான் செல்வமும் பைங்கூழ் விளைவின்கட் போற்ற னுழவு-மிளையணுய்க் கள்ளுண்டு வாழ்வான் குடிமையு மிம்மூன்று முள்ளன போலக் கெடும்.
இ - ள். கிளைஞர்க்கு உதவாதான் செல்வமும் - சுற்றத் நார்க்கு உதவாதவனுடைய செல்வமும்-பைங்கூழ் விளைவின் அரண் போற்ருன் உழவும் - பசிய பயிர் தனக்குப் பயன் கொடுக் குங்காலத்துப் பாதுகாக்கமாட்டாதவனுடைய உழவு தொழி லும்-இளையனுய்க் கள் உண்டு வாழ்வான் குடிமையும் - இளைய ஞயிருந்துவைத்துக் கள்ளுண்டு வாழ்கின்றவனுடைய குடிப் பிறப்பும்-இம்மூன்றும் உள்ளனபோலக் கெடும் - ஆகிய இம் மூன்றும் நிலைநிற்பனபோலத் தோன்றிக்கெடும். எ - று, பைங் கூழ் - பயிர். (டுக)
பேஎய்ப் பிறப்பிற் பெரும்பசியும் பாஅய் விலங்கின் பிறப்பின் வெருவும்-புலந்தெரியா மக்கட் பிறப்பி னிரப்பிடும்பை யிம்மூன்றுங் துக்கப் பிறப்பாய் விடும்.
இ - ள். பேய்ப் பிறப்பில் பெரும் பசியும் - பேயினது பிறப்பிலே பெரிய பசியால் வருந்துன்பமும்-பாய் விலங் இன் பிறப்பின் வெருவும் - பாய்கின்ற மிருகத்தின் பிறப்பிலே அச்சத்தால் வருந்துன்பமும்-மக்கள் பிறப்பில் புலம் தெரியா நிரப்பு இடும்பை - மனிதப்பிறப்பிலே அறிவை மழுங்கச்செய் கின்ற வறுமையால் வருந்துன்பமும் உண்டாகின்றன-இம் மூன்றும் துக்கப் பிறப்பாய்விடும் - ஆதலால் இம்மூன்றும் ரன்பவநுபவத்திற்கு ஏதுவாகிய பிறப்புக்களாய்விடும். எ - று.

Page 20
p திரிகடுகஷரை.
இடும்பையென்பது மற்றைப் பசி வெருவல்களோடுங் கட்டப்பட்டது. செல்வருந் தம்மின் மிக்க செல்வரை நோக் கித் தம்மை வறியராகக் கருதலால், மக்கட்பிறப்புக்குப் பொதுப் பட நிரப்பிடும்பை சொல்லப்பட்டது. (за о),
ஐயறிவுங் தம்மை யடைய வொழுகுத லெய்துவ தெய்தாமை முற்காத்தல்-வைகலு மாறேற்கு மன்னர் நிலையறித லிம்மூன்றுஞ் ேேரற்ற பேரமைச்சர் கோள்,
இ - ள். ஐ அறிவும் தம்மை அடைய ஒழுகுதல் - ஐம் பொறியறிவுகளும் தமக்கு வசப்பட்டு நிற்க நடத்தலும்-எம் துவது எய்தாமை முன் காத்தல் - அரசனுக்கு வருவதாகிய ஆபத்தை வாராதபடி முன்னறிந்து காத்தலும்--வைகலும் மாறு ஏற்கும் மன்னர் நிலை அறிதல் - எப்போதும் பகைமையை மேற்கொள்ளுகின்ற அரசர்களுடைய நிலையை அறிதலும்-இம். மூன்றும் சீர் ஏற்ற பேர் அமைச்சர் கோள் - ஆகிய இம்மூன்றும் ஓர்த்தியை மேற்கொண்ட பெரிய மந்திரிகளாலே கொள்ளப்படு மவைகளாம். எ - று. (சுக)
நன்றிப் பயன்அாக்கா நாணிலியுஞ் சான்றேர்முன் மன்றிற் கொடும்பா டுரைப்பானு-நன்றின்றி வைத்த வடைக்கலங் கொள்வானு மிம்மூவ ரெச்ச மிழந்துவாழ் வார்.
இ - ள். நன்றிப் பயன் துரக்கா நாண் இலியும் - ஒருவன் தனக்குச் செய்த நன்றியின் பய?ன அளந்தறியாத நாணில்லாத வனும்-சான்ருேரர் முன் மன்றில் கொடும்பாடு உரைப்பானும் - பெரியோர்முன்னே சபையிலே நின்று கொடிய சொற்களைச் சொல்லுகின்றவனும்-நன்று இன்றி வைத்த அடைக்கலம் கொள்வானும் - நற்செய்கையிலனகி ஒருவன்வைத்த அடைக்க லத்தை அபகரிக்கின்றவனும்-இம்மூவர் எச்சம் இழந்து வாழ்

திரிகடுகவுரை. கூடு
வார் - ஆகிய இம்மூவரும் தமக்குப் பின் சந்தானத்தை இழந்து வாழ்வார்கள். 6T - A2.
வாழ்வாரென்றது குறிப்பால் கெடுவாரென்பதை உணர்த் திற்று. எஞ்சிநிற்பது எச்சமாதலால் அது கீர்த்திக்குமாம். (சுஉ)
நோவஞ்சா தாரோடு நட்பும் விருந்தஞ்சு மீர்வளையை யில்லத் திருத்தலுஞ்-சீர்பயவாத் தன்மையிலாள ரயலிருப்பு மிம்மூன்று நன்மை பயத்த லில.
இ - ள். நோ அஞ்சாதாரோடு நட்பும் - தமக்கு வரும் வருத்தத்துக்கு அஞ்சி வாராமற் காவாதவரோடு கொள்ளப் பட்ட நேசமும்-விருந்து அஞ்சும் ஈர் வளையை இல்லத்து இருத் தலும் - விருந்தாளிக்கு இதெற்கு அஞ்சுகின்ற மனைவியை வீட்டில் வைத்துக்கொண்டு வாழ்தலும்-சீர் பயவாத் தன்மை இலாளர் அயல் இருப்பும் - சிறப்பைத் தாராத குணத்தையு டைய இல்வாழ்வோருக்கு அயலிலே குடியிருப்பும்-இம்மூன் றும் நன்மை பயத்தல் இல - ஆகிய இம்மூன்றும் ஒருவனுக்கு நன்மையை உண்டாக்குதலுடையவல்லவாம். எ - அறு.
ஈர்வளை அரிந்தெடுக்கப்பட்ட சங்க வளைய?லயுடையவள். () நல்விருந் தோம்பலி னட்டாளாம் வைகலு மில்புறஞ் செய்தலி னின்றதாய்-தொல்குடியின் மக்கட் பெறலின் மனைக்கிழத்தி யிம்மூன்றுங் கற்புடையாள் பூண்ட கடன்.
இ - ள். நல் விருந்து ஒம்பலின் நட்டாள் ஆம் - நல்ல விருந்துகளைப் பாதுகாத்தலினலே தனக்குச் சினேகிதையாம்வைகலும் இல் புறஞ்செய்தலின் ஈன்ற தாய் - எப்போதும் தன் மனையறத்தைக் காப்பாற்றலினலே பெற்ற தாயாம்தொல் குடியின் மக்கள் பெறலின் மனைக் கிழத்தி - தன் பழைய

Page 21
版_安 திரிகடுகஷரை.
குடிக்குத் தகுந்த புதல்வரைப் பெறுதலினலே மனைவியாம்இம்மூன்றும் கற்பு உடையாள் பூண்ட கடன் - இம்மூன்றும் பதிவிாதாதருமத்தையுடையவள் மேற்கொண்ட கடமைகளாம். ©T - g
ஆமென்பதை மற்றையிரண்டனேடுங் கூட்டுக. (சு ச)
அச்ச மலைகடலிற் முேன்றலு மார்வுற்ற விட்டகல கில்லாத வேட்கையுங்-கட்டிய மெய்ந்நிலை காணு வெகுளியு மிம்மூன்றுங் தங்நெய்யிற் மும்பொரியு மாறு.
இ - ள். அ?ல கடலில் அச்சம் தோன்றலும் - அலைகடல் போல் அளவில்லாத பயமானது தன்மனசிலே தோன்றுத லும்-ஆர்வுற்ற விட்டு அகலகில்லாத வேட்கையும் - அநுபவித் தவைகளைப் பின்னும் விட்டு நீங்கமாட்டாத விருப்பமும்-- கட்டிய மெய் நிலை காணு வெகுளியும் - பெரியோரால் உறுதி யாகத் தழுவப்பட்ட மெய்யினது நிலைமையைக் காணவொட் டாத கோபமும்-இம்மூன்றும் தம் நெய்யில் தாம் பொரியு மாறு - ஆகிய இம்மூன்றும் ஆடு முதலானவை தம்மிடத்திற் பிறந்த நெய்யிலே தாம் பொரியுமாறுபோலத் தம்மிடத்துப் பிறந்து தம்மை வேவச்செய்வனவாம். எ - று.
ஆர்தல் - அநுபவித்தல். (சுடு) கொழுநன யில்லாள் கறையும் வழிகிற்குஞ் சிற்ருளில் லாதான்கைம் மோதிரமும்-பற்றிய கோல்கோடி வாழு மரசனு மிம்மூன்றுஞ் சால்போடு பட்ட தில.
இ - ள். கொழுநனை இல்லாள் கறையும் - கணவனையில் லாதவளது மாச ருதுவும்-வழி நிற்கும் சிற்ருள் இல்லாதான் கைம் மோதிரமும் - தன்னேவல்வழி நிற்கின்ற சிற்முளையில்லா

திரிகடுகஷரை. @ IT
தவனது கையிலிடப்பட்ட மோதிரமும்-பற்றிய கோல் கோடி வாழும் அரசனும் - தான் பற்றிய கோல் கோடி வாழும் அர சனும் -இம்மூன்றும் சால்போடு பட்டதில - ஆகிய இம்மூன்றும் நிறையோடு பொருந்திய சிறப்பையுடையவல்லவாம். எ - று.
சிற்முளில்லாதவன் அவன் கையாற் செய்விக்கப்படுங் தொழிலைத் தன்கையாற் செய்யவேண்டுதலின், அம்மோதிரத் திற்குச் சிறப்பில்லையாயிற்று. மிகுதிபற்றி உயர்திணை அஃறிணை யோடு முடிந்தது. (சுசு)
எதிர்கிற்கும் பெண்ணு மியல்பி முெழும்புஞ் செயிர்நிற்குஞ் சுற்றமு மாகி-மயிர்நாைப்ப முந்தைப் பழவினையாய்த் தின்னு மிவைமூன்று நொந்தார் செயக்கிடந்த கில்.
இ - ள். எதிர் நிற்கும் பெண்ணும் - தான் கோபித்தால் தன்னெதிர் நின்று பேசும் மனையாளும்-இயல்ப் இல் தொழும் பும் - ஒழுக்கமில்லாத ஏவலாளும்-செயிர் நிற்கும் சுற்றமும் ஆகி - மனத்திலே வைரம் போகாதே நிற்குஞ் சுற்றமும் எனப் பெயர் கொண்டு-முந்தைப் பழவினை ஆய் மயிர்நரைப்பத் தின் னும் இவை மூன்றும் - முற்காலத்திலே செயப்பட்ட பழவினைப் பயனுய்த் தன்மயிர் நாைக்குமளவும் ஒருவனைத் தின்னுகின்ற இவை மூன்றுக்கும்-நொந்தார் செயக்கிடந்தது இல் - மன நொந்தார் செய்யக் கிடந்ததொரு பரிகாரம் இல்லை. எ - று. தொழும்பு ஆகுபெயர். (சுஎ)
இல்லார்க்கொன் நீயு முடைமையு மிவ்வுலகி னில்லாமை யுள்ளு நெறிப்பாடு-மெல்வுயிர்க்குங் துன்புறுவ செய்யாத தூய்மையு மிம்மூன்று நன்றறியு மாந்தர்க் குள.
இ - ள். இல்லார்க்கு ஒன்று ஈயும் உடைமையும் - தரித் திரர்க்கு ஒன்றைக் கொடுக்கும் செல்வமும்-இவ்வுலகின் நில்

Page 22
கடஅ திரிகடுகஷரை.
லாமை உள்ளும் நெறிப்பாடும் - இவ்வுலகத்தில் உண்டான பொருள்களினுடைய நிலையாமையை விசாரித்தறியும் வழியிலே செல்லுதலும்-எவ்வுயிர்க்கும் துன்பு உறுவ செய்யாத தூய்மை யும் - எவ்வகைப்பட்ட உயிர்களிடத்தும் துன்பமடைவனவற் றைச் செய்யாத பரிசுத்தகுணமும்-இம்மூன்றும் நன்று அறி யும் மாந்தர்க்கு உள - ஆகிய இம்மூன்றும் அறத்தின்வழியை அறியும் மனிதர்களுக்கு உண்டாம். எ - அறு. (சு அ)
அருந்தொழி லாற்றும் பகடுங் கிருந்திய மெய்நிறைந்து நீடிருந்த கன்னியு நொந்து நெறிமாறி வந்த விருந்துமிம் மூன்றும் பெறுமா றரிய பொருள்.
இ - ள். அரும் தொழில் ஆற்றும் பகடும் - அரிய தொழில் களைச் செய்ய வல்ல கடாவும்-திருந்திய மெய் நிறைந்து நீடு இருந்த கன்னியும் - திருந்திய மெய் நிரம்பி நெடுங்காலம் மண மில்லாதிருந்த கன்னிகையும்-நொந்து நெறி மாறிவந்த விருந் அம் - அன்புற்று வழி தப்பிவந்த விருந்தும்-இம்மூன்றும் பெறுமாறு அரிய பொருள் - ஆகிய இம்மூன்றும் பெறுதற்கரிய பொருள்களாம். எ - று.
அரிய தொழில் பெரும்பாரங்கொண்ட பண்டியை ஈர்த் துச் செல்லுகை முதலியவை. இங்கே மெய்யென்றது பெண் ணிற்குச் சிறந்த அவயவங்களைக் காட்டுகின்றது. (சுக)
காவோ டறக்குளங் தொட்டானு நாவினல் வேதங் கரைகண்ட பார்ப்பானுந்-தீதிகங் தொல்வது பாத் துண்ணு மொருவனு மிம்மூவர் செல்வ ரெனப்படு வார்.
இ - ள். காவோடு அறக்குளம் தொட்டானும் - சோலை யைவைத்து அறத்திற்குரிய குளத்தினைத் தோண்டினவனும்நாவினல் வேதம் கரை கண்ட பார்ப்பானும் - நாவினலோதி

திரிகடுகவுரை. t-მi_ ტვიშია.
வேதங்களினெல்லையைக் கண்ட பிராமணனும்-தீது இகந்து ஒல்வது பாத்து உண்ணும் ஒருவனும் - தீயவழியைக் கடந்து தனக்கு இசைவதனைப் பகுத்துண்ணு நின்ற ஒருவனும்--இம் மூவர் செல்வர் எனப் படுவார் - ஆகிய இம்மூவரும் செல்வத்தை யுடையவரென்று சொல்லப்படுவார். எ - று.
காவென்றதற்கேற்ப வைத்தென்பது வருவிக்கப்பட்டது. தோண்டுவித்தவனைத் தோண்டினனென உபசரித்தார். (எ0)
உடுத்தாடை யில்லாதார் நீராட்டும் பெண்டீர் தொடுத்தாண்ட வைப்போர் புகலுங்-கொடுத்தளிக்கு மாண்மை யுடையவர் நல்குரவு மிம்மூன்றுங் காண வரியவென் கண்.
இ - ள். உடுத்த ஆடை இல்லாதார் நீர் ஆட்டும் - உடுக்கப் பட்ட் ஆடையில்லாதவராகி நீராடுதலும்-பெண்டீர் தொடுத்து ஆண்டு அவைப் போர் புகலும் - பெண்கள் பிறரோடு வழக் குத் தொடுத்துச் சபையின்கண்ணே போர் செய்வதற்குப் புகு தலும்-கொடுத்து அளிக்கும் ஆண்மை உடையவர் நல்குர வும் - பிறர்க்குக் கொடுத்துக் காப்பாற்றுகின்ற ஆண்மையையு டையவரது வறுமையும்-இம்மூன்றும் என் கண் காண அரிய - ஆகிய இம்மூன்றும் என் கண்கள் பார்க்கத் தகுவனவல்லவாம்.
45 - று.
ஆண்டு அசை, இங்கே அருமை தகாமை குறித்து நின்றது. நிறைநெஞ் சுடையான நல்குர வஞ்சு மறனை நினைப்பான யல்பொரு ளஞ்சு மறவனை யெவ்வுயிரு மஞ்சுமிம் மூன்றுங் திறவதிற் றீர்ந்த பொருள்.
இ - ள். நிறை நெஞ்சு உடையானை நல்குரவு அஞ்சும் - புலன்கண்மேற் போகாது நிறுத்தப்படும் நெஞ்சினையுடைய

Page 23
&PO திரிகடுகவரை.
வனுக்கு வறுமை அஞ்சும்-அறனை நினைப்பானை அல்பொருள் அஞ்சும் - தருமத்தையே சிந்திக்கின்றவனுக்குப் பாவம் அஞ் சும்-மறவனை எவ்வுயிரும் அஞ்சும் - கொ?லத்தொழில் செய் வோனுக்கு எல்லாவுயிரும் அஞ்சும்-இம்மூன்றும் திறவதில் தீர்ந்த பொருள் - ஆதலால் இம்மூன்றச்சமும் வேறுபாட்டி னிங்கி ஒத்த பொருள்களாம். எ - று.
அறனென்றமையால் அல்பொருளென்றதற்குப் பாவமெ. னப் பொருள் கூறப்பட்டது. (எஉ) இரந்துகொண் டொண்பொருள் செய்வலென் பானும் பரந்தொழுகும் பெண்பாலைப் பாசமென் பானும் விரிகட லூடுசெல் வானுமிம் மூவ மரிய துணிந்துவாழ் வார்.
இ - ள். இாந்து கொண்டு ஒண் பொருள் செய்வல் என்பா னும் - பிறரை இரந்து அவரிடும்பிச்சையை வாங்கி ஒள்ளிய செல்வப்பொருளைச் சம்பாதிப்பேனென்று சொல்லுகின்றவ னும்-பரந்து ஒழுகும் பெண்பா?லப் பாசம் என்பானும் - பல ரிடத்தும் வியாபித்துச் செல்லுகின்ற வேசையைத் தன்மேல் அன்புடையளென்கின்றவனும்-விரி கடல் ஊடு செல்வானும் - விரிந்த கடலிடத்துப் பொருள் சம்பாதித்தற்குப் போகின்றவ அம்-இம்மூவர் அரிய துணிந்து வாழ்வார் - ஆகிய இம்மூவ ரும் தமக்கு முடியாத காரியங்களைச் செய்யத்துணிந்து வாழ் கின்றவராவார். எ - று, பாசம் ஆகுபெயர். (எB)
கொலைகின்று தின்முெழுகு வானும் பெரியவர் புல்லுங்காற் முன்புல்லும் பேதையு-மில்லெனக்கொன் நீகென் பவனை நகுவானு மிம்மூவர் யாதுங் கடைப்பிடியா தார்.
இ - ள். கொலை நின்று தின்று ஒழுகுவானும் - கொ?ல செய்வதின்கண்ணே நின்று ஒருயிரை வதைத்து அதனிறைச்சி

திரிகடுகஷரை. ቇ"&E Š
யைத் தின்பவனும்-பெரியவர் புல்லுங்கால் தான் புல்லும் பேதையும்-தன்னிற் பெரியோர் தன்னைத் தழுவும்போது தானும் அவரை எதிரே தழுவுகின்ற அறிவில்லாதவனும்-எனக்கு ஒன்று இல் ஈக என்பவனை நகுவானும் - எனக்கு ஒருபொருள் இல்லை நீ கொடு என்று யாசிக்கின்றவனைப் பரிகாசஞ்செய்பவ னும்-இம்மூவர் யாதும் கடைப்பிடியாதார்-ஆகிய இம்மூவரும் யாதோரறத்தையும் கடைப்பிடிக்கமாட்டாதவராவர். எ - று.
கடைப்பிடி - கருமம் முடிக்குங் துணிவு. (எச) வள்ளன்மை பூண்டான்கட் செல்வமு முள்ளத் துணர்வுடையா ைேதிய நூலும்-புணர்வின்கட் டக்க தறியுந் தலைமகனு மிம்மூவர் பொத்தின்றிக் காழ்த்த மரம். * இ - ள், வள்ளன்மை பூண்டான்கண் செல்வமும் - வரை யாது கொடுத்தலையே ஆபரணமாகக் கொண்டவனிடத்துக் கூடிய செல்வமும்-உள்ளத்து உணர்வு உடையான் ஒதிய நூலும் - உள்ளத்திலே அறிவுடையான் கற்ற கல்வியும்-புணர் வின்கண் தக்கது அறியும் தலைமகனும் - பிறர் தன்னைச் சார்ந்த விடத்து அவர்க்குச் செய்யத்தக்க காரியத்தை அறியுந் தலைவ னும்-இம்மூவர் பொத்து இன்றிக் காழ்த்த மரம் - ஆகிய இம் மூவரும் பொந்தில்லாமல் வயிரம் பற்றிய மரம்போல் யாவரா? லும் விரும்பப்படுவர். எ - அறு.
பொந்து பொத்தெனத்தொடை நோக்கி வலித்தல் விகா ாமாயிற்று. (எடு)
மாரிநாள் வந்த விருந்து மனம்பிறிதாய்க் காரியத்திற் குன்றக் கணிகையும்-வீரியத்து மாற்ற மறுத்துரைக்குஞ் சேவகனு மிம்மூவர் போற்றற் கரியார் புரிந்து,

Page 24
FP. திரிகடுகஷரை.
இ - ள். மாரி நாள் வந்த விருந்தும் - மழைக்காலத்தில் வந்த விருந்தினரும்-மனம் பிறிது ஆய்க் காரியத்தில் குன்றக் கணிகையும் - தன்மனம் வேறுபட்டு நிற்கத் தன்காரியஞ் செய் தலிற் குறைவுபடாத வேசையும்-வீரியத்து மாற்றம் மறுத்து உரைக்கும் சேவகனும் - வீரியஞ்செய்யும் போர்வந்தால் நாயகன் சொன்னதை மறுத்துச் சொல்லுகின்ற சேவகனும்-இம்மூவர் புரிந்து போற்றற்கு அரியார் - ஆகிய இம்மூவரும் விரும்பிப் பாதுகாத்தற்கு அரியராவார். எ - று.
மாற்றம் - சொல். நாயகன் - தலைவன். (எசு) கயவரைக் கையிகந்து வாழ்த னயவரை நள்ளிருளுங் கைவிடா நட்டொழுக-றெள்ளி வடுவான வாராமற் காத்தலிம் மூன்றுங் குடிமாசி லார்க்கே யுள.
இ - ள். கயவரைக் கையிகந்து வாழ்தல் - கீழ்மக்களைக் கைவிட்டு வாழ்தலும்-நியவரை நல் இருளும் கைவிடா நட்டு ஒழுகல் - அன்புடையவரைப் பாதியிாவிலும் கைவிடாது நேசித் அக்கொண்டு நடத்தலும்-தெள்ளி வடு ஆன வாராமல் காத்தல்ஆராய்ந்து தனக்குப் பழிப்பான காரியங்கள் வரவொட்டாமற் காத்துக்கொள்ளலும்-இம்மூன்றும் குடி மாசு இலார்க்கே உளஆகிய இம்மூன்றும் குடிப்பிறப்பிலே குற்றமில்லாதவர்க்கே உண்டாம். எ - று. (எஎ)
தூய்மை யுடைமை துணிவாங் தொழிலகற்றும் வாய்மை யுடைமை வனப்பாகுந்-தீமை மனத்தினும் வாயினுஞ் சொல்லாமை மூன்றும்" தீவத்திற் றருக்கினர் கோள்.
இ - ள். தாய்மை உடைமை - பரிசுத்தமுடையணுயிருக் கையும்-துணிவாம் தொழில் அகற்றும் வாய்மை உடைமை - பெரியோாாலே துணியப்பட்ட நற்செய்கையை விரிக்கின்ற

திரிகடுகஷரை.
சத்தியமுடையவனுயிருக்கையும்-வனப்பு ஆகும் தீமை மனத் தினும் வாயினும் சொல்லாமை - அழகாகிய தீமையை மனத் தானினைத்தல் வாயாற்சொல்லல் இவை செய்யாமையும்-மூன் றும் தவத்தில் தருக்கினர் கோள் - ஆகிய இம் மூன்றும் தவத் திலே செருக்கி நின்றவர்களுடைய கொள்கையாம். எ - று.
அகற்றல் - விரித்தல். மனத்தினுமென்றதற்கேற்க நினை யாமை வருவிக்கப்பட்டது. வனப்பாகுமென்றதை இவைசெய் யாமையென்பதனேடு கூட்டுக. (எ.அ).
பழியஞ்சான் வாழும் பசுவு மழிவினுற் கொண்ட வருந்தவம் விட்டானுங்-கொண்டிருந் தில்லஞ்சி வாழு மெருது மிவர்மூவர் நெல்லுண்ட னெஞ்சிற்கோர் நோய்.
இ - ள். பழி அஞ்சான் வாழும் பசுவும் - உலகம் பழிக் கும் பழிக்குப் பயப்படாது நடந்துகொள்ளும் பசுப்போல்வா னும்-அழிவினுல் கொண்ட அரும் தவம் விட்டானும் - செல் வக்கெடுதி வந்தபோது தனக்குரித்தாகக் கொண்ட அரிய தவத் தினை விட்டவனும்-கொண்டிருந்து இல் அஞ்சிவாழும் எரு தும் - தனக்கு உட்பட்டவளாகக் கொண்டிருந்தும் மனைவியை அஞ்சி நடக்கின்ற எருதுபோல்வானும்-இவர் மூவர் நெல் உண் டல் நெஞ்சிற்கு ஒர் நோய் - ஆகிய இவர் மூவரும் மக்கள் உண் ணக்கடவதாகிய சோற்றையுண்ணுதல் அறிவுடையோர் நெஞ்சி னுக்கு ஒருநோயாம். எ - று.
நெல் இருமடியாகுபெயர். (ଗtଥs) ·
முறைசெய்யான் பெற்ற தலைமையு நெஞ்சி னிறையிலான் கொண்ட தவமு-நிறையொழுக்கர் தேற்றதான் பெற்ற வனப்பு மிவைமூன்றுங் தூற்றின்கட் விேய வித்து.

Page 25
ஆட்சி திரிகடுகஷரை.
இ - ள். முறை செய்யான் பெற்ற தலைமையும் - முறை யறிந்து செய்யமாட்டாதவன் பெற்ற எசமானத்துவமும்நெஞ்சில் நிறை இலான் கொண்ட தவமும்-நெஞ்சத்தைப் புலன் களிலே செலுத்தாது நிறுத்துதலையில்லாதவன் மேற்கொண்ட தவமும்-நிறை ஒழுக்கம் தேற்ருதான் பெற்றவனப்பும் - குறை வற்ற வேதவொழுக்கத்தைத் தெளிந்து நடவாதவன் பெற்ற அழகும்-இவை மூன்றும் அாற்றின்கண் தாவிய வித்து - ஆகிய இவை மூன்றும் புதலில் விதைத்த விதையோடொக்கும். எ-று. தேருதானென்பது தேற்ருதானென விகாரமாயிற்று. (அ0) தோள்வழங்கி வாழுந் துறைபோற் கணிகையு நாள்கழகம் பார்க்கு நயமிலாச் சூதனும் வாசிகொண் டொண்பொருள் செய்வானு மிம்மூவ ராசைக் கடலுளாழ் வார்.
இ - ள். துறை போல் தோள் வழங்கி வாழும் கணிகை யும் - பலர்க்கும் பொதுவாய் நின்று தன்னிடத்து நீரைக் கொடுக்குந் துறைபோலப் பலர்க்கும் பொதுவாய் நின்று தனது தோளைக் கொடுத்து வாழ்கின்ற வேசையும்-நாள் கழ கம் பார்க்கும் நயம் இலாச் சூதனும் - நாடோறும் சூதாமிெடம் பார்த்துச் செல்லுகின்ற நீதியற்ற சூதனும்-வாசி கொண்டு ஒள் பொருள் செய்வானும் - வட்டம் வாங்கிக்கொண்டு திரவியத் தைத் தேடுவானும்-இம்மூவர் ஆசைக் கடலுள் ஆழ்வார் - ஆகிய இம்மூவரும் ஆசையாகிய சமுத்திரத்தில் அழுந்துவார். எ - அறு.
நயம்-நீதி. வாசி-வட்டம். அன்றி வட்டியெனினுமாம். (அக)
சான்ருருட் சான்ற னெனப்படுத லெஞ்ஞான்றுங் தோய்ந்தாருட் டோய்ந்தா னெனப்படுதல்-பாய்ந்தெழுந்து கொள்ளாருட் கொள்ளாத கூருமை யிம்மூன்று நல்லாள் வழங்கு நெறி.

திரிகடுகவுாை. சடு
இ - ள். சான்முருள் சான்ருன் எனப்படுதல் - நற்குணங்க ளாலே நிறைந்தோருள் நற்குணங்களாலே நிறைந்தோனென்று சொல்லப்படுதலும்-எஞ்ஞான்றும் தோய்ந்தாருள் தோய்ந் தான் எனப்படுதல் - எந்நாளும் நண்பு கொண்டு கலந்தவ ருள் நண்பு கொண்டு கலந்தவனென்று சொல்லப்படுதலும்பாய்ந்து எழுந்து கொள்ளாருள் கொள்ளாத கூடருமை - தம் மேலே பாய்ந்தெழுந்து தஞ்சொல்லே அங்கீகாரஞ் செய்யாதவ ரிடத்து அவர் அங்கீகரியாதவைகளைச் சொல்லாமையும்-இம் மூன்றும் நல் ஆள் வழங்கும் நெறி - ஆகிய இம்மூன்றும் நன் மையை ஆள்வோன் செல்லும் வழிகளாம். எ - று. )ئےye(
உப்பின் பெருங்குப்பை சீர்படியி னில்லாகு நட்பின் கொழுமுளை பொய்வழங்கி னில்லாகுஞ் செப்ப முடையார் மழையனைய ரிம்மூன்றுஞ் செப்ப நெறிது ரா வாறு.
இ - ள். உப்பின் பெரும் குப்பை நீர் படியின் இல்லாகும் - உப்பினது பெரிய குவியலானது தன்னிடத்து நீர் படியுமா யின் இல்லாமற்போம்-நட்பின் கொழு முளை பொய் வழங் கின் இல்லாகும் - சினேகத்தினது செழித்த ஆரம்பமானது பொய் சொன்னல் இல்லாமற்போம்-செப்பம் உடையார் மழை அனையர் - நடுவுநிலைமையையுடையவர் எல்லார்க்கும் மழை போல் உபகரிப்பர்-இம்மூன்றும் செப்ப நெறி அாரா ஆறு - அங்கீர் படியாமையும் பொய் சொல்லாமையும் மழைபோலுப கரித்தலும் ஆகிய இம்மூன்று செய்கைகளும் செவ்விய வழி யைத் தாராமைக்குச் சாதனங்களாம். எ - று. )ئےy)6(
வாய்நன் கமையாக் குளலும் வயிறாக் தாய்முலை யுண்ணுக் குழவியுஞ்-சேய்மரபிற் கல்விமாண் பில்லாத மாந்தரு மிம்மூவர் நல்குரவு சேரப்பட் டார்.

Page 26
SF”Šና” திரிகடுகஷரை,
இ - ள். வாய் நன்கு அமையாக் குளலும் - நீர் வருவ நன்முக அமைந்திராத தடாகமும்-வயிறு ஆரத் தாய்முலை உ ணுக் குழவியும் - தன் வயிறு நிறையத் தாயின் முலைப்பாலு ணுத குழந்தையும்--சேய் மரபில் கல்வி மாண்பு இல்லாத ப தரும் - இளமைப்பருவத்திற் கல்வி மாட்சிமையைப்பெருத ம தரும்-இம்மூவர் நல்குரவு சேரப்பட்டார் - ஆகிய இம்மூவ
வறுமையால் அடையப்பட்டவராவர். எ - று.
வாய் - வழி. சேய்மரபென்றதற்கு வமிசபரம்பரையினிட யெனினுமாம். இம்மூவகையோர்க்கும் வறுமையுண்டாத ஐயமில்லாமையால் அத்துணிவுபற்றி அடையப்பட்டாமெ இறந்தகாலத்தாற் கூறினர். )ہوئے
எள்ளப் படுமரபிற் முகலு முள்பொருளைக் கேட்டு மறவாத கூர்மையு முட்டின்றி யுள்பொருள் சொல்லு முணர்ச்சியு மிம்மூன்று மொள்ளிய வொற்ருட் குணம்.
இ - ள். எள்ளப்படு மரபிற்று ஆகலும் - தனது செய்வு பகைவரால் நன்குமதிக்கப்படாத முறைமையையுடைத்த லும்-உள் பொருளைக் கேட்டு மறவாத கூர்மையும் - கருத் அவரிடத்து நிகழ்ந்துள்ள பொருளைக் கேட்டுப் பின் மறவ கூர்மையையுடைத்தாதலும்-முட்டு இன்றி உள் பொரு சொல்லும் உணர்ச்சியும் - வாக்குக் கருத்திலே வைக்கப்பட் அப்பொருளைத் தடைபடாமல் தன்னாசற்குச் சொல்லு தெளிவுடைத்தாதலும்-இம்மூன்றும் ஒள்ளிய ஒற்று ஆ குணம் - ஆகிய இம்மூன்றும் அறிவுடைய ஒற்ருளின் குணக
ளாம். எ-று.
முட்டு - தடை, ஒற்ருள் - வேவுகாான். )ھےy)

s
திரிகடுகஷரை. F6
அற்புப் பெருந்தளை யாப்பு நெகிழ்ந்தொழிதல் கற்புப் பெரும்புணே காதலிற் கைவிடுத னட்பி னயர்ேமை நீங்க லிவைமூன்றுங் குற்றந் தரூஉம் பகை.
இ - ள். அற்புப் பெரும் தளை யாப்பு நெகிழ்ந்து ஒழிதல் - உயிர்களிடத்துத் தனக்குள்ள அன்பாகிய பெரிய விலங்கு கட் த்ெ தளர்ந்து நீங்கலும்-கற்புப் பெரும் புணை காதலிற் கைவிடு தல் - கல்வியாகிய பெரிய தெப்பத்தைப் பொருள் முதலியவற் றின்மேலுள்ள ஆசையாற் கைவிடுதலும்-நட்பின் நயநீர்மை நீங்கல் - ஒருவனிடத்து வைத்த நேசத்தால் நீதித்தன்மையி னிங்குதலும்-இவை மூன்றும் குற்றம் தரூஉம் பகை - ஆகிய இம்மூன்றும் ஒருவனுக்குக் குற்றத்தைத் தருகின்ற பகைக
ளாம். எ - று.
அன்பு அற்பு எனத் திரிந்தது. (அசு)
கொல்வது தானஞ்சான் வேண்டலுங் கல்விக் ககன்ற வினம்புகு வானு மிருந்து விழுநிதி குன்றுவிப் பானுமிம் மூவர்
முழுமக்க ளாகற்பா லார்.
இ - ள். கொல்வது தான் அஞ்சான் வேண்டலும் - ஒருயி ரைக் கொல்லுதற்குத் தான் அஞ்சானகி அதனைச் செய்ய விரும் பலும்-கல்விக்கு அகன்ற இனம் புகுவானும் - கல்விக்குத் தூர மாகிய கூட்டத்திலே பிரவேசிக்கின்றவனும்--இருந்து விழு நிதி குன்றுவிப்பானும் - ஒருமுயற்சியுஞ் செய்யாதிருந்து முன்புள்ள மிக்க திரவியத்தைக் குன்றச்செய்பவனும்-இம்மூவர் முழுமக் கள் ஆகற்பாலார் - ஆகிய இம்மூவரும் அறிவு நுழையப் புரையில் லாத முழுமக்களாகுந் தன்மையையுடையாாவர். எ - அறு. (அஎ)

Page 27
சஅ திரிகடுகஷரை.
பிணிதன்னைத் தின்னுங்காற் முன்வருந்து மாறுந் தணிவில் பெருங்கூற் றுயிருண்ணு மாறும் பிணைசெல்வ மாண்பின் றியங்க விவைமூன்றும் புணையி னிலைகலக்கு மாறு.
இ - ள். பிணி தன்னைத் தின்னுங்கால் தான் வருந்தும் ஆறும் - வியாதியானது தன்னைத் தின்னும் பொழுது தான் அதற்குத் துன்புற்று வருந்தும் விதமும்-தணிவு இல் பெரும் கூற்று உயிர் உண்ணும் ஆறும் - தாழ்வில்லாத பெரிய யமனன வன் உயிரைக் கொண்டுபோக வருத்தும் விதமும்-பிணை செல் வம் மாண்பு இன்றி இயங்கல் - விரும்பப்படுகின்ற செல்வமா னது நிலையில்லாதபடி நீங்கும் விதமும்-இவைமுன்றும் புணை யின் நிலை கலக்கும் ஆறு - ஆகிய இம்மூன்றும் ஒருவனுக்குப் பிறவிப்பெருங்கடற்குப் புணையாயுள்ள மனநிலையைக் கலக்கு கின்ற கருவிகளாம். 6T -- 22{ ه
மாண்பு இங்கே நிலையைக்குறிப்பித்து நின்றது. இயங்கல் - நீங்கல். ஆறென்பது இயங்கலோடுங் கூடட்டப்பட்டது. (அஅ)
அருளினை நெஞ்சத் தடைகொடா தானும் பொருளினைத் துவ்வான் புதைத்துவைப் பானு மிறந்தின்ன சொல்லகிற் பானுமிம் மூவர் பிறந்தும் பிறந்திலா தார்.
இ - ள். அருளினை நெஞ்சத்து அடை கொடாதானும் - தயையை மனசினிடத்து நிறைத்துவையாதவனும்-பொருளி ?னத் துவ்வான் புதைத்து வைப்பானும் - திரவியத்தைப் பிறர்க் குங்கொடாது தானும் அநுபவியாது புதைத்து வைக்கின்றவ னும்-இறந்து இன்ன சொல்லகிற்பானும் - தன்னிலை கடந்து பிறர்க்குத் துன்பக்தருகின்ற சொற்களைச் சொல்ல வல்லவ னும்-இம்மூவர் பிறந்தும் பிறந்திலாதார் - ஆகிய இம்மூவரும் மனிதப்பிறவியிற் பிறந்திருந்தும் பிறவாதவராவர். எ - று.

கிரிகடுகஷரை. ቇ"ë
பிறந்தார்க்கு முக்கியமாகவேண்டும் இவற்றைப் பெருமை யாற் பிறந்திலாதாரென்ருரர். துவ்வல்-அநுபவித்தல். இறத்தல்* கடத்தல். (அக)
ஈதற்குச் செய்க பொருளை யறநெறி சேர்தற்குச் செய்க பெருநூலை யாது மருள்புரிந்து சொல்லுக சொல்லையிம் மூன்று மிருளுலகஞ் சேராத வாறு.
இ - ள். ஈதற்குப் பொருளைச் செய்க - பிறர்க்குக் கொடுக் கும்பொருட்டுத் திரவியத்தைத் தேடக்கடவன்-அறநெறி சேர்தற்குப் பெரு நூலைச் செய்க - தருமமார்க்கத்தைச் சம்பா தித்தற்பொருட்டுப் பெரிய நூல்களைக் கற்கக்கடவன்-யாதும் சொல்?ல அருள் புரிந்து சொல்லுக - யாதாயினும் ஒருசொல் லைச் சொல்லின் அருளை விரும்பிச் சொல்லக்கடவன்-இம்மூன் றும் இருள் உலகம் சேராத ஆறு - இம்மூன்று செய்கைகளும் 6ரகத்தைச் சோவொட்டாத வழிகளாம். எ - று. இருளுலகம் - நரகம், (கO)
பெறுகிக்கட் பொச்சாங் துரைத்த லுயிரை யிறுதிக்கண் யாமிழந்தே மென்றன்-மறுவந்து தன்னுடம்பு கன்றுங்கா னணுத லிம்மூன்று மன்ன வுடம்பின் குறி.
இ - ள். பெறுதிக்கண் பொச்சாந்து உரைத்தல் - தாய் தந்தை முதலிய பிராணிகளை உளராகப் பெற்றவிடத்து அவர் தமக்குச் செய்த உதவியையும் அவர்க்குத் தாம் செய்யவேண் ம்ெ உதவியையும் மறந்து இகழ்ந்து சொல்லலும்-உயிரை இறுதிக்கண் யாம் இழந்தேம் என்றல் - அவர்கள் மாணத்தை யடைந்தவிடத்து இவரை யாமிழந்தோமென்றிரங்குதலும்மறு வந்து தன் உடம்பு கன்றுங்கால் நாணுதல் - நோயடைந்து

Page 28
டுo திரிகடுகவுரை,
தன்னுடம்பு வாடுமிடத்து முன்பு அறஞ்செய்யப் பெற்றிலோ மென்று நாணுதலும்-இம்மூன்றும் மன்ன உடம்பின் குறி - ஆகிய இம்மூன்றும் நிலையாத உடம்புடையவனது செய்கை களாம. எ - று.
உயிரென்றது தாய் தந்தை முதலியோரை. மறு, குறி ஆகு பெயர்கள். இழிவுபற்றி உடம்புடையான உடம்பென்ருரர். (கக)
விழுத்திணைத் தோன்ரு தவனு மெழுத்தினை யொன்று முணராத வேழையு-மென்று மிறந்துரை காமுறு வானுமிம் மூவர் பிறந்தும் பிறவாதவர்.
இ - ள். விழுத் திணைத் தோன்முதவனும் - அறவொழுக்கங் களைப் பெறுதற்குரிய சீரிய குலத்திலே பிறவாதவனும்-எழுத் தினை ஒன்றும் உணராத ஏழையும் - இலக்கண நூலை எவ்வள வேனும் அறியாத பேதையும்-என்றும் இறந்த உரை காமுறு வானும் - எப்பொழுதும் முறை தப்பிச் சொல்லுஞ் சொல்லை இச்சிக்கின்றவனும்-இம்மூவர் பிறந்தும் பிறவாதவர் - ஆகிய இம்மூவரும் மக்கட்பிறப்பிற் பிறந்துவைத்தும் பிறவாதவராவர். எ - அறு. எழுத்தென்றது ஆகுபெயர். (கூஉ)
இருளாய்க் கழியு முலகமும் யாதுங் தெரியா துரைக்கும் வெகுள்வும்-பொருளல்ல காதற் படுக்கும் விழைவு மிவைமுன்றும் பேதைமை வாழு முயிர்க்கு.
இ - ள். இருளாய்க் கழியும் உலகமும் - அறிவில்லாதவர் களுக்கு இடமாய் அதனல் அந்தகாரமாய் நாள் கழிகின்றதேச மும்-யாதும் தெரியாது உரைக்கும் வெகுள்வும் - நன்மை தீமைகளில் ஒன்றுந் தெரியாது சொல்லுகின்ற கோபிப்பும்பொருள் அல்ல காதல் படுக்கும் விழைவும் - நற்பொருளல்லா

திரிகடுகஷரை. டுக
தவைகளில் ஆசையை உண்டாக்கும் வேட்கையும்-இவை மூன் தும் வாழும் உயிர்க்குப் பேதைமை - ஆகிய இவைமூன்றும் வாழுகின்ற மக்களுயிருக்கு அறியாமையைத் தருவனவாம். எ - று. (கங்)
நண்பிலார் மாட்டு நசைக்கிழமை செய்வானும் பெண்பாலைக் காப்பிகழும் பேதையும்-பண்பி விழுக்கான சொல்லாடு வானுமிம் மூவ ரொழுக்கங் கடைப்பிடியா தார்.
இ - ள். நண்பு இலார் மாட்டு நசைக் கிழமை செய்வா னும் - சினேககுணமில்லாதவரிடத்தில் அன்புரிமையைச் செய் கின்றவனும்-பெண்பாலைக் காப்பு இகழும் பேதையும் - மனை வியைக் காப்பதனை இகழாநின்ற அறிவில்லாதவனும்-பண்பு இல் இழுக்கு ஆன சொல் ஆடுவானும் - குணமில்லாத வழுவுத லான சொற்களைச் சொல்லுகின்றவனும்-இம்மூவர் ஒழுக்கம் கடைப்பிடியாதார் - ஆகிய இம்மூவரும் தமக்குரிய ஒழுக்கத் தினை உறுதியாகப் பிடியாதவர்கள். எ - று.
அன்புரிமையாவது தன்னட்பினர் செயக்கிடந்ததை அவ ரைக் கேளாதே செய்தல், (கச)
அறிவழுங்கத் தின்னும் பசிநோயு மாந்தர் செறிவழுங்கத் தோன்றும் விழைவுஞ்-செறுநரின் வெவ்வுரை நோணு வெகுள்வு மிவைமுன்று நல்வினை நீக்கும் படை
இ - ள். அறிவு அழுங்கத் தின்னும் பசி நோயும் - தன்ன றிவு கெடும்படி அதனைத் தின்னுகின்ற பசியாகிய வியாதியும்செறிவு அழுங்கத் தோன்றும் விழைவும் - மனிதர்கள் தன்னைச் சேராதிருக்கும்படி உண்டாகின்ற பேராசையும்-செறுநரின் வெவ் உரை நோன வெகுள்வும் - பகைவர்களுடைய கொடிய

Page 29
டுஉ திரிகடுகவுை T
சொற்களைப் பொருத கோபமும்-இவை மூன்றும் நல்வின்ை நீக் கும் படை - ஆகிய இம்மூன்றும் ஒருவன் கொண்ட கருமத்தைக் கெடுக்கின்ற ஆயுதங்களாம். எ - று,
ேோனமை - பொருமை. (கடு)
கொண்டான் குறிப்பறிவாள் பெண்டாட்டி கொண்டன
செய்வகை செய்வான் றவசி கொடிதொரீஇ
நல்லவை செய்வான ரச னிவர்மூவர்
பெய்யெனப் பெய்யு மழை.
இ - ள். கொண்டான் குறிப்பு அறிவாள் பெண்டாட்டி -
தன்னைக் கொண்ட கணவனுடைய குறிப்பறிந்து நடக்கின்ற வள் பெண்டாட்டியாவாள்-கொண்ட்ன செய்வகை செய் வான் தவசி - தான் மேற்கொண்ட விரதங்க%ளச் செய்யத்தக்க முறைப்படி செய்கின்றவன் தவசியாவான்-கொடிது ஒரீஇ நல்லவை செய்வான் அரசன் - தீங்கினை நீக்கி உயிர்களுக்கு இத மானவைகளைச் செய்கின்றவன் அரசனவான்-இவர் மூவர் பெய் என மழை பெய்யும் - இம்மூவரும் பெய்யென்று சொல் லவே மழை பெய்யும். எ - று.
செய்வகை ஐம்பொறியடக்கன் முதலியவை. (கசு)
ஐங்குரவ ராணை மறுத்தலு மார்வுற்ற வெஞ்சாத நட்பினுட் பொய்வழக்கு-நெஞ்சமர்ந்த கற்புடை யாளைத் துறத்தலு மிம்மூன்று கற்புடையிலாளர் தொழில்.
இ - ள். ஐங்குரவர் ஆணைமறுத்தலும் - அரசன்' உபாத்தி யாயன் பிதா தமையன் ஆசாரியன் என்று சொல்லப்பட்ட ஐந்து குரவர்களுடைய ஆக்கினையைத் தடுத்து நடத்தலும்-ஆர் வுற்ற எஞ்சாத நட்பினுள் பொய் வழக்கும் - விரும்பப்பட்ட வைகளிலே குறைவுபடாமற் பெறுதற்குரிய சினேகிதரிடத்துப்

திரிகடுகஷரை. டுக.
பொய் பேசுதலும்-நெஞ்சு அமர்ந்த கற்பு உடையாளைத் துறத் தலும் - தன்மனத்தால் விரும்பப்பட்ட கற்பினையுடைய மனை * யாளை விடுதலும்-இம்மூன்றும் நற்புடையிலாளர் தொழில் - ஆகிய இம்மூன்றும் அறத்தின் வகையில்லாதவாது தொழில்க
67 fft D. 67 - gny.
குரவர் வழிபடத்தக்கவர். பொய்வழக்கு - பொய்யாகத் தொடுக்கப்பட்ட விவகாரமெனினுமாம். (கள்)
செந்தீ முதல்வ ரறநினைந்து வாழ்தலும் வெஞ்சின வேந்தன் முறைநெறியிற் சேர்தலும் பெண்பால் கொழுநன் வழிச்செலவு மிம்மூன்றுங் திங்கண்மும் மாரிக்கு வித்து.
இ - ள். செந்தீ முதல்வர் அறம் நினைந்து வாழ்தலும் - வேள்விச்செந்தீயை வளர்க்கின்ற மறைமுதல்வராகிய பிராம ணர்கள் தருமத்தை மறவாது நினைந்துகொண்டு வாழ்தலும்வெம் சின வேந்தன் முறை நெறியில் சேர்தலும் - வெவ்விதா கிய கோபத்தினையுடைய அரசனனவன் முறை நடாத்துகின்ற விதிவழியிலே சேர்ந்தொழுகுதலும்-பெண்பால் கொழுநன் வழிச் செலவும் - பெண்ணனவள் தன் கணவன் மனசுக்குத் தகுந்தவழியே நடத்தலும்-இம்மூன்றும் திங்கள் மும்மாரிக்கு வித்து - ஆகிய இம்மூன்றும் மாசந்தோறும் பெய்யவேண்டிய மூன்று மழைக்குங் காரணங்களாம். எ - று. (கஅ}
கற்றரைக் கைவிட்டு வாழ்தலுங் காமுற்ற பெட்டாங்கு செய்தொழுகும் பேதையு-முட்டின்றி யல்லவை செய்யு மலவலையு மிம்மூவர் நல்லுலகஞ் சேரா தவர்.
இ - ள். கற்ருரைக் கைவிட்டு வாழ்தலும் - கற்றவரை விட்டு நீங்கி வாழ்தலும்-காமுற்ற பெட்டாங்கு செய்து ஒழு

Page 30
டுச திரிகடுகஷரை.
கும் பேதையும் - தான் விரும்பியவைகளை இச்சித்தபடியே செய்து நடக்கின்ற அறிவில்லாதவனும்-முட்டு இன்றி அல் லவை செய்யும் அலவலையும் - தடையின்றித் தீங்குகளைச்செய்யும் பேச்சுக்காரனும்-இம்மூவர் நல் உலகம் சேராதவர் - ஆகிய இம்மூவரும் நல்லவுலகங்களிலே சேராதவர். எ - று.
அலவலே பேச்சுக்காரன். பெட்டவாங்கு பெட்டாங்கென நின்றது. (கக)
பத்திமை சான்ற படையும் பலர்தொகினு மெத்துணையு மஞ்சா வெயிலரணும்-வைத்தமைந்த வெண்ணி னுலவா விழுநிதியு மிம்மூன்று மண்ணுளும் வேந்தர்க் குறுப்பு.
இ - ள். பத்திமை சான்ற படையும் - தன்மேல் அன்பு நிறைந்த சேனையும்-பலர் தொகினும் எத்துணையும் அஞ்சா எயில் அரணும் - சத்துருக்கள் பலர் சேர்ந்து வந்தாலும் எவ்வ ளவும் பயப்படவேண்டாத மதிலரணும்-எண்ணின் உலவா வைத்து அமைந்த விழு நிதியும்-எண்ணிக்கையில் அகப்படாத படி வைக்கப்பட்டு நிறைந்த சீரிய திரவியமும்-இம்மூன்றும் மண் ஆளும் வேந்தர்க்கு உறுப்பு - ஆகிய இம்மூன்றும் பூமியை ஆளுகின்ற அரசர்க்கு அவயவங்களாம். எ - று. (soo) திரிகடுகவுரை முற்றிற்று.
-loop
www.thaiaham."


Page 31
Sly 35L6GT
கந்தபுராண்வேசனம் ஆப்பவுன்
நடுநர் திருவள்ளுவர் பரிமேலழகருவி நன்னூங்காண்டின்க்யுர்ை ஆப் 西伯 நன்னுரல் விருத்தியுரை கிருக்கோவையாருை அருட்டா-இது ஆகத்தியர் கிருவாசகமும் திருவின் விாண்டும் பெரியபுரான அடங்கியது. இக்கணக்கொத்துரை, நிதர் விருத்தி இலக்கணவிளக் சைனுசய:ேறிபுாை கிருவாசகம்-முரண்க்கவாச கோ:றுத்தல்ாதி-இது சுெ
கியச்சுசும், வைராக்கிய பார் அடங்கியது. சிதம்பரமான்மியம் சிதம்பரமும்மண்ணிக்கோவை' வித்தியதருமதிே நீகிறிேவிளக்கம் மூலம் நீதிரெதிவிளக்கம்'பைடன் இருக்குறள் மூலம் கிருக்குறள் சுருக்கம் நால்வர்ரன்னியா: அருணகிரியத்தாகி
。卤、 'வித்
நெ300;

பத்திரம்
Bri,
*
பவுண்டு பிகோ
தேவாரத்திரட்டும் சப்பாவும் கிருப்பல் சி நிரப்புட்டிரட்டும்
Fல்காப்பியக் குத்திர
குழுவளி
品 சரித்திர த்துடன் ) ாற்ேறுத்தல், வை ராக்
தீபம்,ஆவிசோகவுந்தி
நீ ஆறுமுகநாவலரவர்கள் நியாதுபாலன அச்சகம், திங்கசரபேக்தெரு, சென்ள்ே1.