கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1967.09.17

Page 1
++十++ +++十++十十+
+ + + + + + + + + + + + + + + +
H-H -- —+ H HH
+ + +
+十、十
|- 十++ + + + + + + + + + + + + + + + + -- 中
H. H.
+
-- +
-
H. H.
十+
H. H.
E HH
HH
+ =
++ -
++-
++、
H. H.
H. H.
十十、
|-
H. H.
+ +
H +
- +
HH
-- HH
HHHH
---
HH
H'--
H +
+ --
+ H +++++++++十++十+++ + + + –+- -+r : HH பூரீ -+= H= H= LIE6) iTT ՃմT சத
+ + H+ + H+ i + - F - H. H. - - + + + + + + + + + + + + + +, +, +, + + H+ i + - H -
 

+ + + + + + + + + + + + + + 土土++十十十十+十十十十
+ + + H -- + + + + +
+ + + + t f
H. H. H. : O -- + -- + + F. +"+十
+ + + + + + + + + + + + + + +
-H + + + + + + + + + + + + + + + - H
十十 十 திய சாயிபாபா : + + +r H +++++++++十+十 + + + + + + + + + + + + + + + ++ + + + + + + + + + +
՞ :
-

Page 2
ལྷ་
l
ஒர் ஆத்மீக மாத வெளியீடு. எல்லா உலகிற்கும் இறைவன் ஒருவன் எல்லா உடலும் இறைவன் ஆலயமே. - சுத்தானந்தர்
ஜோதி 19 பிலவங்க ளு புரட்டாதிமீ" 1 வட (17-9-67) சுடர் 11 ஹர
ஓம
) t $Ꮳ,
பொருளடக்கம் நந்த்
சாயி பஜனை 3 7 அே
அருளுடதேசம் 3 18 ՄԼԸ ( பகவான் பூரீ சத்தியசாயிபாபா பர்ப்பும் பக்திமார்க்கம் 319 விடையும் மதியும் 325 கச்சியப்பர் கண்ட காட்சி - 6 33 1 உருக்காலைப் பெரு நகரம் 334 அப்ரமத்தேன வேதத்வ்யம் 3.38 பிறவிப் பெருங்கடல் 342 பழமையும் புதுமையும் 345
O 酸 O கலி
ஆத்மஜோதி சந்தா விபரம்
நா
ஆயுள் சந்தா 100.09 6Эш
வருடச் சந்தா 3.00 D :
தனிப்பிரதி சதம் 30 சர்
கெளரவ ஆசிரியர் திரு. க. இராமச்சந்திரா
பதிப்பாசிரியர் திரு. நா. முத்தையா
ஆத்மஜோதி நிலையம், நாவலப்பிட்டி, போன்: 353
 
 

3- T un பஜனை
கவான் ஓ பகவான் ஓ பகவான் சாயிபாபா பகவான்
st 9 சத்யசாயி 罗 舞 9Frru9?pJrrr uD و و
9 y y சாயிகிருஷ்ண y - சிவசாயி
數 章 சாயிதத்த
"பகவான் ஹர பகவான் ஹர பகவான் ஹரஹர பகவான் , , ஓம் , , ஒம் , தத்சத் , ரம ,, ஜோதி , , ஆத்ம , , பரமாத்ம , , த , ஆனந்த , , நித்தியானந்த , , பிரம்மானந்த , , யாத்யா , , துவாரக , , ஷிர்டி ,, பூஞரீபர்த்தி , மு , ரம்மு , ரம்மு , , இடுரம்மு sy ' ధk ராமனும் கிருஷ்ணனும் சாயிராமா ஹரியும் ஹரனும் சாயிராமா அன்பும் அருளும் dFrrusgn Lert அன்னையும் பிதாவும் சாயிராமா உடலும் உயிரும் dyntuflurt Lent வீரடி சாயி Frtu Sigtupnit பூgசத்யசாயி &Frru?gt TLDrt
யுக அவதாரீ பூரீசத்யசாயி சுபகாரீ மகிருஷ்ண சிவசாயீ ஷாதி ரூபதாரி பர்த்தி விஹாரி சாப விமோசன காரி நாரத ஹிருதய விஹாரி ாம மனுேஹர ராசவிஹாரி கம்ச தர்பஹாரி கிருஷ்ணு ன மனேகர சிவசுபகாரி அருளுசல சஞ்சாரி வ சராசரி பவபயஹாரி யுகேயுகே அவதாரி

Page 3
318 ஆத்ம ஜோதி பகவான் பூணீ சத்திய சாயி பாபாஜியின்
அருளுபதேசம்
அழுகையில் ஆரம்பிக்கிற வாழ்க்கை புன்னகையில் முடிய வேண்டும். நீங்கள் சிறிய குழந்தையாக இருந்த பொழுது அழுது கொண்டிருந்தாலும், உங்களைச் சுற்றி எல் லோரும் புன்னகை புரிந்தனர். ஆஞல் நீங்கள் இறக்கிற பொழுது உங்களை இழந்ததற்காக உங்களைச் சுற்றி எல் லோரும் அழுது கொண்டிருக்கும் போது நீங்கள் அமைதி யான முடிவை அடைந்ததற்காக புன்னகை புரிய வேண் டும். போகானந்தம் முடிவில் யோகானந்தமாக மாற்றிய மைக்கப்பட வேண்டும். புலனின்பங்களை யெல்லாம் நாளடைவில் படிப்படியாக விட்டு விடவேண்டும். உங்கள். சொந்த சக்தியின் அருவியிலிருந்து பெறும் மே லா ன, அதிகமான, நிலையான ஆனந்தத்தின் சுவையை அபிவி, ருத்தி செய்ய வேண்டும். அந்த யோகத்திற்காகப் பக்தி தலையும் மகுடமும் போன்று தலையாய வ ஸ் து வா கும். சாந்தியும் சந்தோஷமும் மற்ற முக்கியமானவை.
பண்படுத்தும் குணங்கள் பதிஞறு 1- பக்தி நிறைந்திருப்பது. 2- துன்பத்திலும் இன்பங்கொள் ள த் த யாரா யி
ருப்பது. 3- கடவுளுக்குச் சேவை செய்ய ஆவல்கொள்வது. 4- நிலையற்றவைகளின் மேல் கொள்ளும் பந்தங்களி
லிருந்து விடுதலையடைவது. 5- சரியான குணத்தைப் பெறுவது. 6- ஈகை கொள்வது. * 7. அசைக்க முடியாத நன்மதிப்பைப் பெற்றிருப்பது. 8- தன்னுடைய குணத்தில் மாசுபடியாமலிருப்பது. 9- நிறைந்த திருப்தி கொள்வது. 10. எல்லா நல்லொழுக்கங்களையும் கடைப் பிடிப்பது. 11- கற்றுக் கொண்டதின் பலனுல் ஆயத்தமாக
ருப்பது. 12- அறிவில் முதிர்ச்சி பெற்றிருப்பது, 13- தன்னையே கட்டுப்படுத்தி வைப்பது. 14- புகழத்தக்க சமூக சேவைகளினுல் அழகு செய்வது. 15- மனிதத் தன்மையுடன் நடந்து கொள்வது. 16- முழுவதும் கடவுளுக்கு அர்ப்பணித்து விடுவது.

ஆத்மஜோதி 319
பகவான் பூனி சத்திய சாயிபாபா பரப்பும் பக்தி மார்க்கம்
ஆசிரியர்.
எல்லா யுகங்களிலும் மனித வாழ்க்கையின் குறிக்கோள் ஆண்டவனே அடைதல் ஒன்றே" என்ற கொள்கை மாழுது வந்துள்ளது. வழிக்ள் யுக்ம்தோறும் வித்தியாசம் அடைந் துள்ளன. காலத்திற்குக் காலம் இடைவிடாது பல அவதாரங் கள் நிகழ்ந்துள்ளதைப் பார்க்கின்முேம், அவதார புருஷர் களும் தாம் அவதரித்த காலத்திற்கேற்க தமது வழிகளைப் புதிய துறைகளில் கொண்டுள்ளனர்.
தாம் செய்யும் வேலைக்கு உடனே கூலி கிடைக்க வேண்டுமென்றே பெரும் பகுதியான மக்கள் விரும்புகின் ருர்கள். மாத வேதனம் பெற்ற மக்கள் மாதம் இருமுறை, வாரம் ஒருமுறை சம்பளம் கிடைக்க வேண்டும் என்று போராடுவதைப் பார்க்கின்ருேம்.
இறைவனிடம் பக்தி செய்யும் மக்களில் பெரும்பாலா னேர் காமிய பக்தி உள்ளவர்களாகவே காணப்படுகின்ற னர். தாம் செய்யும் வேலைக்கு உடனே கூலி கிடைக்க வேண்டும் என்று விரும்புவதுபோல, தாம் செய்யும் பக் திக்கும் பலன் உடனே கிடைக்க வேண்டும் என்பதையே விரும்புகின்றனர். நிஷ்காம்ய கர்மம் ஆற்றுபவர்களையும் நிஷ்காம்ய பக்தி செய்பவர்களையும் உலகில் விரல் மடித்து எண்ணி விடலாம். கோயிலில் உடைபடும் தேங்காய்களும், அர்ச்சனைகளும், அபிஷேகங்களும் காம்ய பக்தியையே எம க்கு விளங்க வைக்கின்றன. பக்திக்காகப் பக்தி செய்யும் நிலை ஏற்படும்வரை காம் ய பக்தி நிகழ்ந்து கொண்டேதான் இருக்க வேண்டும். அதுவும் நின்று விட்டால் மனிதனுக்கு ஆதாரமே இல்லாது போய்விடும்.
இன்றைய உலகில் மனித உள்ளங்களில் பக்தியும், நம் பிக்கையும் குறைவாகவே காணப்படுகின்றன. லட்சக்கண க்கான மக்கள் ஏன் கோடிக் கணக்கான மக்களே கோயில்
செல்கின்ரூர்களே! பக்தி இல்லை என்று சொல்ல முடியுமய?

Page 4
320 ஆத் மஜோதி
பழக்கத்தினலே கோயில் செல்கின்ருர்கள். உள்ளம் கசிந் துருகி ஆண்டவனிடம் ஈடுபடவில்லை. பக்தி உள்ள உள் ளத்திலேதான் தன்னைப் போன்று மற்றவனைப் பார்க்கும் பண்பாடு ஏற்படும். இந்தப் பக்தி காலத்திற்குக் காலம் வெவ்வேறு மகான்களால் வெவ்வேறு வழிகளில் பரப்பப் பட்டு வந்துள்ளது.
இன்றைய உலகப் போக்கில் மனிதன் பணத்தை நம்பு கின்ற அளவுக்கு பரமனை நம்புகின்ருனில்லை; பதவியை நம்புகின்ற அளவுக்குப் பரமனை நம்புகின்றனில்லை; பட்டத் தை நம்புகின்ற அளவுக்குப் பரமேஸ்வரனை நம்புகின்ரு னில்லை. பட்டம், பதவி, பணம் இவற்றின் பிடிப்பிலிருந்து மனிதனை இறைவன் பக்கம் திருப்ப வேண்டும் அதற்கு இவற்றிலும மேலான ஒரு வழி ஏற்பட வேண்டும். அந்த முறையைத் தான் ஷிரடி சாயிபாபாவின் மறு அவதார புருஷரான ரீ சத்திய சாயிபாபா அவர்கள் செய்கின்ருர்
பூனி சத்திய சாயிபாபா அவர்கள் பிறக்கும்போதே சித்த புருஷராகத் தோன்றியவர்கள், குழந்தைப் பருவத்திலேயே அவர்கள் பல சித்துக்களைச் செய்தார்கள். சித்துக்களை மற் றவர்களுக்குத் தான் காட்ட வேண்டுமென்று அவர் செய்ய வில்லை. அவரையும் அறியாமலே நிகழ்ந்தன. அச் சித்துக் களைப் பார்க்கும்போது பட்டம், பதவி, பணம், புகழ் இவ றறிலும் பார்க்கக் கூடிய சக்தி ஒன்று இருக்கிறது என்ற உணர்வு மக்களிடம் ஏற்படுகின்றது. அந்த நம்பிக்கை இறைபக்தியை அதிகரிக்கச் செய்கின்றது. நம்பிக்கை கூடு கின்ற அளவுக்கு மனிதன் இறைவனுக்குக் கிட்டச் செல் கி ன் ரு ன், மக் களி பட த் து ம கா ன் க ஞ க்கு ஏற்பட்ட கருணையே சித்துகளாக வெளிப்பட்டன. சம்பந் தர் எலும்பைப் பெண் ஆக்கினர்; சுந்தரர் முதலை உண்ட பாலனை அழைத்தார் என்ருல் அது அவர்களின் கருணையின் வெளிப்பாடு என்றே கருத வேண்டும்.
இன்று, புட்டபர்த்தி என்ற கிராமத்தின் மத்தியிலே பிரசாந்தி நிலையத்தை அமைத்து, அங்கிருந்து கொண்டே உலகம் முழுவதையும் காந்தமென ஈர்க்கும் பூரீ சத்திய சாயி பாபா அவர்கள் தம்மை நோக்கி வருகிறவர்களுடைய உள்ளப் பாங்கிற்கமைய நம்பிக்கையை நிலைநாட்டி பக்தியில்
ஒருபடி முன்னேறச் செய்து அனுப்புகின்ருர், பிரசாந்தி

ஆத்மஜோதி 321
நிலையத்தின் முற்றத்திலே தாமரை வடிவம் ஒன்று அமைந் துள்ளது "பக்தா களே! உங்கள் இதயக் கமலங்களையே பிரசாந்தி நிலையம் விரும்புகின்றது" என்று அது கூருது கூறிக் கொண்டே இருக்கின்றது. இதற்கு அநுசரணையாக பிரசாந்தி நிலையத்தின் முகப்பிலே இங்கு வருபவர்கள் மாலையோ, பழமோ, பணமோ எதுவும் கொண்டுவரக் கூடாது. பக்தி ஒன்றையே பகவான் விரும்புகிருர்" என்று எழுதப்பட்டுள்ளது.
பூgரீ சத்யசாயிபாபாவிடம் மக்கள் என்னென்ன விருப் பத்தைப் பூர்த்தி செய்ய வேண்டுமென்று செல கி ன் ரு ர் களோ பகவான் அவர்கள் குறைகளை நிறைவேற்றி வைப் பதோடு பக்தியையும் சேர்த்துக் கொடுத்து விடுகின்ருர் . இதுவே பகவான் பூரீ சத்திய சாயிபாபா செய்யும் இந்திர சாலமாகும். நோயினுல் மெலிந்த நோயாளி வைத்தியணி டம் சென்றல் வைத்தியன் நோயை மாற்றிய பின்பே உடல் மெலிவைப் போக்கும் உணவைக் கொடுக்கின்றன். அதேபோல் பகவான் பூரீ சத்தியபாபாவிடம் உடல்நோயி ஞல் வருத்தமுறுபவர்கள் சென்ருல் அந்நோயை நீக்கிய பின் பக்தியாகிய அமிர்தத்தைக் கொடுத்து விடுகின்றர். வறுமையினுல் வாடியவன் சென்ருல் அவன் வறுமையை நீக்கி பக்தியையும் கொடுத்து விடுகின் ருர், உள்ளத்திலே சாந்தியில்லாது செல்பவர்கள் அவரது தரிசனத்தைப் பெற்ற உடனேயே சாந்தி டெறுகிருர்கள். பசவ னுடைய திருப் பாதங்களில் தனது தலையைத் தாழ்த்தி வணங்குவதஞ லோ, அன்றி அவரது திருக்கரங்களை உயர்த்தித் தலையிலே தொட்டு ஆசீர்வாதத்தைப் பெறுவதஞலோ, ஒருவன் பண் டைய சம்ஸ்காரங்கள் எல்லாம் தீர்ந்து புனிதன் ஆகின் முன.
உலகின் நாலா பக்கங்களிலிருந்தும் தினமும் நூற்றுக் கணக்கானவர்கள் பிரசாந்தி நிலையத்தை நோக்கி வருவ தும் போவதுமாக இருக்கின்றர்கள். சிலருக்கு வந்த உட னேயே தரிசனம் கிடைப்பதோடு குறைகளும் நீங்கிவிடு கின்றன. சிலர் வாரக் கணக்காகக் காத்திருந்தே குறை யைப் போக்கிக் கொள்ளுகின்றனர். மாசக் கணக்காகக் காத்திருந்தும் பகவானுடைய சந்திப்பு ஏற்படாமல் திருப்பு பவர்களும் உண்டு. அவர்கள் தமது வினையை நொந்து சந்தோஷமாகவே செல்வர். பிரசாந்தி நிலையத்திற்கு வந்து திரும்பும் ஒவ்வொருவனும் பகவானுடைய தரிசனமோ,

Page 5
322 ஆத்ம ஜோதி
சந்திப்போ கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் தன்ன
ளவில் உயர்ந்த உள்ளத்துடனேயே செல்வதை அனுபவத் தில் உணரலாம்.
இந்தியாவில் திருத்தல யாத்திரை செய்தபோது எம் முடன் மூன்று வாரங்கள் மோட்டாரில் வந்தவர் இராஜ கோபால் என்னும் சாரதியாவார். நாங்கள் கல்லுவைத்த கோயில் எல்லாம் சென்று சென்று வணங்குவோம். அவ ரோ மோட்டாரை விட்டு இறங்கவே மாட்டார். நாம் வந்து ஏறும் போதும் இறங்கும் போதும் கதவைத் திற ந்து, மூடி எமக்கு வேண்டிய உதவிகளை எல்லாம் மனம் கோணுமல் செய்தவர் திரு. இராஜகோபால். எம்மிடம் வைத்த நம்பிக்கையோ மரியாதையோ கோயிலில் வைக்க வில்லை என்பதை உணர்ந்தோம். பகவான் பூரீ சத்திய சாயிபாபாவிடம் தரிசனைக்காக நாம் சென்றபோது இராஜ கோபால் தாமும் சுவாமிகளைத் தரிசிக்க வேண்டும் என்று விரும்பினுர். அவர் விருப்பப்படியே சுவாமிகளுடைய தரி சனை கிடைத்ததோடு சுவாமிகளின் சந்திப்பை வலிந்தே ஏற்படுத்தியும் கொண்டார். முதற் சந்திப்பிலேயே சுவாமி கள் அவரைப் பார்த்து **நீர் உள்ளத்திலே பக்தன்; ஆனல் கோயில் கும்பிடாத பக்தன்' என்று கூறினர்கள். இந்த வார்த்தைகள் இராஜகோபாலை பகவான் பூணி சத்தியபாபா ஜீயிடம் பூரண சரணுகதி அடையச் செய்து விட்டது.
இதன்பின் நாங்கள் தரிசித்த ஆலயங்கள் எல்லாவற் றுக்குமே தவருது இராஜகோபாலும் வந்து தரிசித்தார். பலருடைய பிரசங்கத்தினுலும் பல நூலறிவினுலும் சாதி க்க முடியாத ஒன்றைப் பகவானுடைய வார்த்தை ஒன்று மாற்றி விட்டதென்ருல் அவரை நாடிச் செல்வோர் அடை யும் மாற்றத்திற்கு வேறு அத்தாட்சியே வேண்டியதில்லை.
பகவானைப் படத்திலோ நேரிலோ தரிசிக்காதவர்கள் பகவானுடைய அருளைப் பெற்ற சந்தர்ப்பங்கள் அநேகம். விபூதி கேட்பவர்களுக்குத் தமது கையை அசைத்தல் மூலம் விபூதியை வரவழைத்துக் கொடுக்கின்றர். உருத்திராக்க மாலை விரும்பிய எத்தனையோ பேருக்கும் அப்படியே செய் துள்ளார். இவை எல்லாம் பகவானின் கருணையை மக்க ளுக்கு அறிவிப்பதாகவே அமைந்துள்ளன. இச் செயல்கள் எல்லாம் இறைவனின் கருணை வெள்ளத்தில் சிதறிய சில

ஆத்மஜோதி 323
f
நீர்த் திவலைகள் என்று உணரும்போது யாரால்தான் பக்தி
செய்ய முடியாமல் இருக்கும்? ... "
சாயிபக்தர்கள் தமது பக்தியைத் தாமே சோதித்துக் கொள்வதற்கும் பகவான் அருளியுள்ளார். பகவான் பூரீ சத்திய சாயிபாபாவிடம் நீங்காத பக்தி உள்ளவர்கள் பக வானுடைய திருவருட் சக்தியைத் தாமும் பெற்றுக் கொள்ள முடிந்தது என்று கூறுகின்ருர்கள் பக்தியோடு பஜனை நடைபெறும் இடங்களில் படங்களில் விபூதியும், தீர்த்தமும், தேனும் கிடைத்தாகப் பக்தர்கள் கூறுகின்ருர் கள். இவை இந்திரசாலம் அல்ல; இறைவன் திருவருள் கிடைத்தால் இவைகள் நிகழ்வது ஆச்சரியம் அல்ல.
பகவானுடைய நடைமுறைகளையும், சாயிபக்தர்களு டைய அநுபவங்களையும் பார்க்கும்போது பகவான் பூரீ சாயி சத்தியபாபாஜி மூலம் இறைவன் பக்தியை மனித உள்ளங் களில் துளிர்விடச் செய்துள்ளார் என்றே சொல்லத் தோ ன்றுகின்றது.
பூரீ கிருஷ்ண பரமாத்மாவினுடைய காலத்திலே அவ ரது தெய்வீகத்தை உணர முடியாத துரியோதனதியர் வாழ்ந்ததை அறிகின்ருேம். பிரகலாதனனல் கண்ணனை உணர்ந்த அளவு அவன் தந்தையால் உணர்ந்து கொள்ள முடியவில்லை. இதேபோல பகவான் பூரீ சத்தியசாயிபாபா ஜியினுடைய காலத்திலேயும் அவரை உணர்ந்து கொள்ள வலியற்றவர்கள் பலர் இருப்பதை அவரது சூழலிலேயே காணலாம். இதற்கு மாருக ஆயிரக் கணக்கான மைல் தூரத்திலிருந்து பெருந்தொகைப் பணம் செலவு செய்தும் நேரம் செலவு செய்தும் வந்து கொண்டிருக்கும் பக்தர் கூட்டத்தையும் காண முடிகிறது.
பகவான் பூரீ சாயி சத்தியபாபா அவர்கள் பக்தர்களு டைய வேண்டுகோளை மறுக்க முடியாமல் சில ஊர்களுக் குச் சென்று தரிசனை கொடுக்கின்றர்சள். அவர் வருகை யின்போது லட்சக்கணக்கான மக்கள் தரிசனை பெற்றுச் சாந்தி அடைகின்ருர்கள்.
பக்வானுடைய தரிசனையை ஒரு முறைக்கு மேற்பெற் றவர்கள் தாம் தரிசனை பெற்ற ஒவ்வொரு முறையிலும் ஒவ்வொரு புதிய அனுபவத்தையும் பெற்றதாக கூறுகின்

Page 6
324 . . . . . ஆத்ம ஜோதி
முர்கள். விஞ்ஞான உலகம், சினிமா உலகம், அணு உலகம் என்று சொல்லிக் கொள்வது போல் ஆத்மீக உலகிலே இ ன் று ச த் திய சா யி டா பா வின் உ ல க ம் ாேன்று சொல்லத் தகுந்த அளவுக்கு பகவான் பூரீ சத்திய சாயி பாபா அவர்கள் பக்தர்களுடைய உள்ளத்திலே இடம் பெற்றுள்ளார்கள். w
நம்பிக்கை அற்றவர்களும் பக்தி அற்றவர்களும் உண் மைப் பொருளை அறிவதற்கும் வழி ஒன்று உண்டு. எமக்கு விருப்பம் இல்லாத எத்தனையோ கருமங்களை நாள்தோறும் ாம்மையும் அறியாமலே ஆற்றிக்கொண்டிருக் கி ன் ருே ம். அதேபோல ஒரு சில நாளைக்காயினும் நம்பிக்கை இல்லா மல் பாவனை செய்தாலும் அவனுல் கூட பக்தியை உணர முடிகிறது. நம்பிக்கையின் துளிகளைப் பெற முடிகிறது. ஆகவே நாமும் சாயி பக்தர்களுடன் கூடி அவன் புகழ்பா டுவோம்; பக்தி செய்வோம் பக்தர்களுடன் சேர்வதஞல் அவர்கள் பக்தியாவது எமக்கும் தொற்றிக் கொள்ளும் அல் 6ù6)Jrt ? » .
*சாயி மாதா சத்ய சாயி மாதா
ஞானப்பால் ஊட்டும் சாயி பிதா சாயிபிதா சத்ய சாயி பிதா பக்தி குருவசம் சேர்க்கும் சாயிபிதா'
என்று சாயிநாமம் பாடுவோம்.
AWA
SAqALALAMLAqLLLAALLLLLAALLA LLALALAALLLLLALLLL LALLA ALALALLLMLALALAq ALAAAAALLAAAAALAAAAALLALMLL LMSMAeAMLiALLeALAMMALALAqAMMAM
மனிதன் எக்கணமும் நினைவிற் கொள்ள வேண்டிய வை இரண்டு விஷயங்கள்; உடனே மறக்க வேண்டியவை இரண்டு விஷயங்களாகும். நினைவிற் கொள்ள வேண்டிய வை பரமாத்மா, மரணம் என்னும் இரண்டாகும். உடனே மறக்க வேண்டியவை நீ பிறருக்குச் செய்த உபகாரம், பிறர் உனக்குச் செய்த அபகாரம் என்பவைகளாகும்.
பூரீ சத்திய சாயிபாபா.

: ,
ஆதமஜோதி 32s
O O. விடையும் மதியும் (கி வா. ஜகந்நாதன்)
*தோடுடைய செவியன் என்று தொடங்கும் கொஞ்சும் தமிழில் அடுத்து வருவது விடையேறி என்னும் திருநாமம். எம்பெருமானை அடையாளம் காட்டிச் சொல்கின்ற பிள் ளையார் அவன் தம்மை ஆட்கொள்ள வந்தபோது விடை யேறிப் பிறைசூடி வந்த கோலத்தை நினைக்கிருர், அந் தக் கோலத்துடன் சிவபெருமான் எழுந்தருளிஞர் என்ப தைச் சேக்கிழார் பின்வருமாறு குறிப்பிட்டார்.
"அந்நிலையில் திருத்தோணி வீற்றிருந்தார் அருள்-நோக்கால் முன்னிலைமைத் திருத்தொண்டு முன்னியவர்க் கருள்-புரிவான் பொன்மலைவல் லியும்தாமும் பொருவிடைமேல் எழுந் -தருளிச் சென்னியினம் பிறைதிகழச்செழும்பொய்கைமருங்கணைந்-தார்"
இறைவனுக்கு இடபவாகனமாக வரும் பழழெற்றவர் இருவர். எப்போதும் தருமதேவதையே அந்தப் பெருமா னுக்கு ஊர்தியாக விளங்கும். முப்புரம் எரித்த போது திருமால் விடையாக நின்று தாங்கினன். இந்த இரண்டு விடைகளில் என்றும் மாருமல் நின்று தாங்கும் அறமா கிய விடை வெண்ணிறம் உடையது. ஆண்டவன் அறத்தை என்றும் தாங்கிக் கொண்டிருக்கிருன். அதற்கு எதிராகக் கைமாறு காட்டுவது போலத் தருமதேவதையே விடையாக நின்று சிவபெருமான தாங்குகின்றது. இறைவன் அடியார் ளுக்கு அருள் செய்ய வரும்போது விடைமேல் எழுந்தரு வது வழக்கம். பொறிபுலன்களுக்கு அப்பால் நிற்கும் எம் பருமான் தன்னுடைய திருவருளால் உலகத்து ஆருயிர்கள் உய்ய வேண்டும் என்று கருதுகிருன், தான்உள்ளஇடத்துக்கு உயிர்ச் சட்டங்கள் வருவதென்பது எளிதன்று. நுண்ணிய தினும் நுண்ணிதாய் உள்ள பரம் பொருள் அவன். நுட்ப மான பொருளைச் சொல்லும் மறைகூடக் கண்டறியாதவன் அவன் என்று சொல்வார்கள். உயர்ந்ததினும் உயர்ந்த

Page 7
326 ஆத்மஜோதி
தாகிய பரம்பொருளை மிக மக உயர்ந்து சென்று அடைய வேண்டும். அது எல்லா உயிர்க்கும் எளிதான செயல் அல்ல. அப்படியானுல் உயிர்க் கூட்டங்கள் உய்ய வழி இல்லையா?உயிர்க்கூட்டங்களின் அன்பை உணர்ந்து அவற்றின் பலவீனத்தைச்சரிக்கட்டுவதற்குரியகருணையைமேற்கொண்டு இறைவன் அவற்றை நோக்கி எழுந்தருளுகிமுன், நோயா ளிகள் உள்ள இடத்திற்குச் சென்று மருந்து கொடுக்கும் மருத்துவர்கள் வேகமாக செல்லும் கார்களை வைத்திருப் பார்கள். நோயாளிகளின் துன்பத்தை மிக விரை வில் சென்று நீக்க வேண்டும் என்னும் கருணையே அதற் குக் காரணம். அவ்வாறே இறைவனும் வாகனத்தை உடைய வனுக இருக்கிருண். அவன் வாகனமுடையவனுக இருத் தல் உயிர்க் கூட்டங்களுக்கு அருள் செய்யும் பொரு ட் டு விரைவில் எழுந்தருளும் கருணையையுடையவன் என்பதைக் குறிக்கிறது. அடியார் இருக்குமிடம் தேடிச் சென்று அருள் செய்வது அவன் இயல்பு. . .
சம்பந்தப்பெருமான் குழந்தைத் தன்மையால் 'அம்மா அப்பா" என்று அழுதாரேயன்றி இறைவனை எண்ணி அழ வில்லை. ஆயினும் இறைவன் கருணை கூர்ந்து அவர் இருக்
கும் இடத்துக்கு எழுந்தருளினன். அதற்கு உத வியது விடையாகிய வாகனம். இறைவன் கருணை வேகத்
தினுல் ஆருயிர்களுக்கு அருள் முந்தும் தகைமையைக் காட் டும் அடையாளமே அவனுடைய ஊர்தி. S SS L
இறைவன் திருக்கோயில்களில் மூலமூர்த்தியாகச் சிவ லிங்கப் பெருமானை எழுந்தருளப் பண்ணியிருப்பார்கள். உற்சவமூர்த்திகளை வாகனத்தில் அமைத்துத் திருவீதிகளில் எழுந்தருளச் செய்வது வழக்கம். தன்னுடைய இடமாகிய திருக்கோயிலுக்கு வராமல், தன்னை நினைந்து உருகாமல் உள்ள மக்களையும் வழிப்படுத்துவதற்காக வாகனத்தில் ஏறி இறைவன் அவர்கள் வாழும் வீதியை நோக்கி, வீட்டை
நோக்கி எழுந்தருளுகிருன்.
"நையாத உளத்தினரை நைய்விப்பான் இத்தெருவ்ே ஐயாநீ உலாப்போந்த அன்றுமுதல்" • • 5 • . .

ஆத்மஜோதி 。3双
? مجلہ '****۔ بخ; ۔ " :: என்பது திருவிசைப்பா. இறைவன் தான் எழுந்தருளி இருக், கும் கோயிலுக்கு அன்பினுல் வந்து வழிபட்டு "உய்யும் மக்கள்ை உருகச் செய்வதற்காக உற்சவ மூர்த்தியாகத் திருவீதியில் எழுந்தருளுகிருர் என்ற உண்மையை இந்தப் பாட்டு நன்கு தெரிவிக்கிறது. திருவிழாக்களில் இறை வ னுக்குப் பல்வேறு வாகனங்கள் அமைத்து எ முந் தருளச் செய்விக்கும் நோக்கம் இதுதான். சிவபெருமானுக்குரிய ஊர்திகளில் பலவற்றிலும் சிறந்தது விடை அல்லது ரிஷபம்,
நம்முடைய நாட்டில் பசுவுக்கு சிறப்பான நிலையுண்டு, வேளாண்மையையே தலைமைத் தொழிலாகக் கொண்டு வாழுகின்ற மக்கள் நிரப் பியது இந்த நாடு. வேளாண் மைக்கு இன்றியமையாதது நிலம். அதில் உழவு செய்வ தற்கும் பயிர் விளைவிப்பதற்கும் இன்றியமையாதது நீர். நீர்வளமும் நிலவளமும் இருந்தாலும் அவற்றைப் பயன்ப டுத்துவதற்கு உதவியாக நிற்பது ஏர். உழும் கருவியாகிய கலப்பையும் அதில் பூட்டும் மாடுகளும் சேர்ந்தே ஏர் என வழங்கப்படும். கலப்பையில் பூட்டும் எருதுகள் வேளாண் மையைப் பயனுடையதாக்கும் கருவிகளாக உதவுகின்றன. ஆதலின் அவற்றைச் சிறப்பாகப் போற்றும் வழக்கம் இந்த தாட்டினருக்கு வந்தது. இறைவனுக்கு வாகனமாக அமை ந்தது விடை என்று எருதுக் கூட்டங்களையெல்லாம் தெய் வீக நிலையில் போற்றிப் பாராட்டுவது நம்மவர் வழக்கம். நெல்லும் கரும்பும் விளைந்து நலம் தந்த பொலிவைப் பாராட்டிச் சந்திரனையும் சூரியனையும் வழிபட்டுத் தைமா தம் முதல் நாளில் பொங்கலிட்டு மகிழ்வது இந்த நாட்டு வழக்கம். அதற்கு மறுநாள் இந்த நிறைவைப் பெறுவத ற்குக் கருவியாக உள்ள மாடுகளைப் போற்றிப் பூசை செய்து நலம் செய்வது மற்ருெரு வழக்கம். இவற்றல் மாடுகளை மிகச் சிறந்த நிலையில் வைத்துப் போற்றும் தகைமை தொன்று தொட்டே இந்த நாட்டில் இருந்து வருவதை உணரலாம. . . . .
மக்களுக்கு உதவும் விடையை இறைவன் பலருக்கும் உபகாரம் செய்கின்ற தகைமை நோக்கி வாகனமாக மேற் கொண்டான், தரும தேவதையே அப்படி வந்தாலும் ஆது இடபத்தின் உருவத்தில் வந்தது அந்த விடையின்
பெருமையை உணர்ந்ததஞல் தான். .
விடைக்கு மற்றெரு பெருமை உண்டு. நிலத்தில்

Page 8
328i ஆத்மஜோதி
பயிர் செய்வார் முதலில் உழுவதற்கும் பரம்படிப்ப்தற்கும் காளை மாட்டையே துணையாகக் கொள்கிருர்கள். பின்பு அறுவடை ஆகின்றது. கதிர் அறுத்துக் களத்தில் அடித்த பின்பு, தாநில் எஞ்சியிருக்கும் நெல்லைப் பெறுவதற்குக் கடா விடுகிருர்கள். அப்போதும் எருதுகள் பயன்படுகின் றன. இவ்வாறு தொகுத்த நெல்லை வண்டிகளில் இல்லத் துக்குக் கொண்டு வருவதற்கும் எருதுகள் உதவுகின்றன. உழுவது முதல் நெல் இல்லத்தை வந்து அடைவது வரைக் கும் பலபலவகையில்பயன்படும்மாட்டுக்குவேளாளன் எதைக் கொடுக்கிறன்? விளைந்து வந்த நெல்லைத் தனக்கு உண வாக வைத்துக் கொண்டு எஞ்சிய வைக்கோலைத்தான்கடா விற்கு உணவாகத் தருகிறன். நல்லனவற்றை யெல்லாம் பிறருக்கு உதவி எஞ்சியதைத் தான் உண்ணும் பெரிய தியாகியைப் போல விளங்குகிறது காளை மாடு.
"உழுதநோன் பகடு அழுதின் ருங்கு" என்று புறநா னுாறு இந்தச் சிறப்பைச் சொல்கிறது. பாற்கடலில் விளை ந்த அமுதத்தைத் தேவர் எல்லாம் பருகத் தந்து எவரும் வேண்டாம் என்று ஒதுக்கிய ஆலகாலத்தை இறைவன் உண்ட செயலை ஒப்பது இது. இந்த வகையிலும் சிறப் பாக நிற்பது எருது. உழைப்பிலும் உணவு தருவதிலும் தியாகத்திலும் பாரம் தாங்குவதிலும் சிறந்து நிற்கும் விடையை இறைவன் மேற்கொண்டு எழுந்தருளுகிருரன். எல்லோருக்கும் நலம் செய்யும் தருமதேவதை தன்னலத்தை மறந்து பிறர் நலத்துக்காகவே உழைக்கும் விடையாக உரு வெடுத்துநிற்பது பொருத்தந்தானே?
தம்முடைய திருப்பாடல் ஏறுவதற்குரியதிருச்செவியைச் சிறப்பித்த சம்பந்தர் தம்மை நாடி இறைவன் எழுந்தரு ளிய விடையை அடுத்தபடி சிறப்பித்தார். அடுத்தபடி யாக அப் பெருமான் சந்திர சேகரனுக இருப்பதை நினைக் கிருர், −
V. "தூவெண் மதி சூடி"
இறைவன் திருமுடியில் உள்ளது பிறை. அது வெண் மையாக இருக்கிறது. உயிர்களிடத்தில் உள்ள கருனையி னுல் விடைமீது ஏறி எழுந்தருளுபவன் இறைவன் என்பதை நினைந்த பிள்ளையார் அந்தக் கருணையின் சிறப்பை எடுத் துக் காட்டும் வகையில் அவன் அணிந்த மதியைச் சிறப் பிக்கின்றர்.

ஆத்மஜோதி 329
சந்திரன் குருத்துரோகமும் சிவத்துரோகமும் செய்த வன். குருவின் மனைவியை விரும்பியவன். தான் மணந்த இருபத்தேழு மனைவியரில் ரோகிணி ஒருத்தியிடம் மட்டும் அன்பு வைத்து மற்றவர்களைப் புறக்கணித்ததனல் “தேய் த்து வளர்வாயாக" என்று தக்கன் கொடுத்த சாபத்தைப் பெற்றவன். எல்லாத் தேவர்களையும் அழைத்து வேண்டு மென்றே சிவபிரானை அழைக்காமல் வேள்வி செய்தான் தக்கன். சிவபிரான அவமதித்துச் செய்யும் வேள்வியர் யிற்றே என்பதை எண்ணுமல் அங்கே சென்று தக்கன்தரும் அவிர்ப்பாகத்துக்காகக் காத்திருந்தான் சந்திரன், இதனல் சிவாபராதத்துக்கு ஆளாஞன்.
இத்தனை பாவம் செய்து தீமை நிறைந்த சந்திரனுக்கு ஓர் அரிய பேறு கிடைத்தது. தக்கயாக சங்காரம் செய்ய வந்த இறைவன் அங்கே வந்திருந்த தேவர்களுக்கு வெவ் வேறு வகையில் தண்டனை அளித்தான். சந்திரனத் தன் திருவடியால் தேய்த்தான். தண்டனை யானலும் இறைவ னுடைய திருவடியின் தொடர்பு கிடைத்ததஞல் அவனுக்கு உயர்வு கிடைத்தது. கோபத்தினுல் மலரை வீசி எறிந்தா லும் மலர் மலர்தானே? அது கல்லாகாதே! அவ்வாறே சினத்தினல் இறைவன் தண்டனை கொடுக்க முற்பட்டாலும் அந்தத் தண்டனையே சந்திரனுக்குப் பெறற்கரும் பேறு ஆகி விட்டது. அவனது திருவடியின் பரிசம் கிடைத்தது. அதன் பயனக அவன் அப் பெருமான் தலையின் மேல் ஏறிக் கொண்டான். ‘என் திருவடியை அடைபவர்கள் உயர்ந்த நிலையை அடைவார்கள்" என்று இறைவன் திருவாய் மலர் ந்தருளியிருக்கிறன். அபய வரத கரங்களால் அந்தக் குறிப் ஸ்ப்க் காட்டுகிருன். ஆகவே சந்திரனுக வந்து தாளை அடை யாவிட்டாலும் இறைவனே அவனைத் தாள் கீழ் வைத் தான். எப்படியானலும் சந்திரன் அடிக்கீழ் வந்தவுடன் அவனுடைய பாவங்கள் நீங்கித் தூயவனுகி விட்டான்' குறையெலாம் நீங்கும் நிலைபெற்றன். இது அவன் தன் தகுதியாற் பெற்ற நிலையன்று; இறைவன் கருணையினுல் கிடைத்த பேறு. தன்னை அவமதித்தவரேயானுலும் அடி ய்டைந்தால் பாதுகாக்கும் பெருங் கருணையுட்ையவன் சிவ்
பெருமான் என்பதை இச் செயல் காட்டுகிறது.
இறைவன் முடியில் உள்ள மதி தூய மதியாகி விட் டது. தூய்மையே வடிவாகிய வகையோடு உறவு கொள் ளும் வாய்ப்பு அதற்குக் கிடைத்திருக்கிறது. தேய்ந்து

Page 9
330 ஆத்மஜோதி
வளரும் நில்ைமாறி என்றும் தேயாமல் வளராமல் பிறை யாகவே விளங்கும் வாழ்வைப் பெற்றது. என்றும் இள மையோடு இருக்கும் வரத்தைப் பெற்ற மார்க்கண்டேய ருக்குக் கிடைத்த சிறப்புப் போன்றதல்லவா இது?
முழுமதி வெண்மையாக இருந்தாலும் அதில் களங்கம் இருக்கும். இறைவன் திருமுடியில் உள்ளது பிறை. அத ற்குக் களங்கம் இல்லை. ஆதலின் தூவெண் மதி என்ற சிறப்புக்கு உரியதாயிற்று. இறைவன் திருவடித் தொடர் பினுல் குணத்தில் உற்ற களங்கமும், உடலில் உற்ற களங் கமும் தீர்ந்து மிகமிக உயர்ந்த இடத்தில் வைகும் நிலை யைப் பெற்றிருக்கிறது இந்த இளமதி.
விடையை நினைக்கும்போது அன்பருக்கருளும் ஆர்வமு டையவன் இறைவன் என்ற உண்மை தோற்றுகின்றது. வெண் மதியை நினைக்கும் போது பொல்லாதவராயினும் தன் அடியடைந்தாரை முன்னை நிலைநினைந்து மறுக்காமல் அருள் புரியும் கருணுநிதி என்ற கருத்துப் புலணுகி ģio
நமக்கு உள்ள குற்றங்களை இறைவன் எண்ணித் தண் டனை கொடுப்பதாய் இருந்தால் நாம் எந்த நாளும் உய்ய முடியாது. அவன் நம் குற்றங்களை ஆராய்வதில்லை. நம்மி டம் குணம் கண்டால் அதைப் பெரிதாகக் கொண்டு கரு ணைபாலிக்கிருன். நாம் ஒரளவு அவனிடம் அன்பு கொண்டு நின்ருல் அவன் கோடி மடங்கு நம்மிடம் அருள் கொண்டு நலம் புரியவருகிருன், அவனை நோக்கி நாம் ஓரடி எடுத்து வைப்பதன் முன் அவன் ஆவலாய் ஆயிரம் அடி எடுத்து வைத்து ஓடிவருகிருன். இந்தக் கருணேச் சிறப்பை எண்ணி அடியார்கள் உருகுவார்கள். தூவெண் மதிகுடி என்ற போது அவனுடைய சீரியகருணைப் பெருக்கே நினை விக்கு வருகிறது. : -
அவன் தானே வலிய வந்து அருள் செய்பவன், தவறு செய்தாலும் மன்னித்து அருள் புரிபவன் என்ற பண்புகளை, விடையேறுஞ் செயலும் மதியணியும் செயலும் காட்டுகின் றன. "தோடுடைய செவியன் விடையேறி ஓர் தூவெண்மதி சூடி". ஓர் என்பது ஒப்பற்ற என்ற பொருளுடையது. அதை மதிக்கும் அடையாக்கலாம்; மதி சூடிக்கும் அடையாக்கலாம்.

ஆத்மஜோதி 331 கச்சியப்பர் கண்ட காட்சி - 6 ஏழாலை சிற்றம்பலம் முருகவேள்
இடம்
கந்தபுராணத்தில் இரு பேரறிஞர்கள் வருகிறர்கள். ஒருவர் காசிபர் என்ற ஆசாரியர் மற்றவர் சுக்கிராசaf diari. மாயையும் இடையில் ஒருத்தி. - . . . .
கடவுள் என்றும் உயிர் என்றும் கட்டு என்றும் பாவம் புண்ணியம் தருமம் அதருமம் என்றும் காசிபர் உபதேசித்த 'இபதேசம் சூரபன்மாவுக்குப் புரியவில்லை; பிடிக்கவுமில்லை. புரியவும் பிடிக்கவும் மாயையாகிய தாய் விடவில்லை. காசி பர் கூறியவற்றுள் தவத்தின் மகிமை மாத்திரம் சூரபன்மா வின் உளத்தில் ஆழப்பதிந்துவிட்டது. விடவே, பெரும் முனிசிரேட்டர்களே வெட்கும்படி, தவம்செய்து, சிவபெரு மானிடம் எல்லையில் வரங்கள் பெற்றன் சூரபன்மா. பெற் ததும், அவன்முதலிற் சென்றது பிதாவாகிய காசிபரிடம். ஆர்வள் போக்கினை நன்றே அறிந்து கொண்ட அம்முனிசிரேட் "உனது குரு சுக்கிராசாரியர். நீ அவரிடம் போ என்று சொல்லிவிட்டார். சுக்கிராசாரியர் நீயே பிரமம் *ன்று ஆரம்பித்து, அதிலிருந்து தர்க்க ரீதியாகப் பெறக் ஆடிய விரிவுப்பாடுகள் அனைத்தையும் மிக விரிவாக, அழகாக *தேசம் செய்தார். இவ்வுபதேசங்கள் எல்லாம் சூரபன் தீர்வுக்கு நன்ருகப் பிடித்துவிட்டன. பிடித்ததும் பரமேசு னிடமிருந்து தனக்குக் கிடைத்த பேறுகளே நினைத்துப் பார்த்தான். நினைக்கவே முடியவில்லை. அவ்வளவு வளப்ப திடயவை அவை. ஆண்டவனிடமிருந்து கிடைத்த பேறு திர அவனுக்கு விரித்து விளக்க வேண்டிய நிலை ஏற்பட்டது ரியாருக்கு. அவர் விளக்குகையில், அவன் விளங்குகை இருபேரும் ஆண்டவனை மறந்தேவிட்டார்கள்.
சாரியர் அசுரேந்திரன் பெற்ற அண்டங்களின் அக த விளக்கத் தொடங்கிஞர். .
மூலப் பிரகிருதிக்கு மேலே உள்ள தத்துவங்கள் அசுத்த தாயை சுத்த மாயை. இவற்றிலிருந்து கிண் விறந்த அண்டங்கள் தோன்றுவன. இவை தவிர, மூலப்

Page 10
332 ஆத்மஜோதி பிரகிருதியினின்றும் கீழே, ஒன்றன் பின் ஒன்முக, 'ஒன்றிலி ருந்து ஒன்ருக, புத்தி தத்துவம் முதலிய தத்துவங்கள் தோன். றும். இத்தத்துவம் ஒவ்வொன்றினின்றும் எண்ணிறந்த அண்டங்கள் தோன்றும். பிருதிவி தத்துவத்துக்கு உரிய ஆயிரம் கோடி அண்டங்களில், சூரபன்மனே, நீ பெற்ற அண்டங்கள் ஆயிரத்தெட்டு. அவற்றில் ஒன்றன் அகலத்
தை இயற்கையை சொல்கிறேன் கேள்:-
என்று பீடிகை போட்டு, இக்கால விஞ்ஞானிகளுக்கு இளைக் காத் முறையில் பொருளை அளப்பதற்கு முதலில் அள வையினை பின்வருமாறு வகுக்கிருர், சுக்கிராச்சாரியார் என்ற
ப்ரந்த காட்சிய்லர்
கதிரெழுதுகள் 24 கொண்டது ஒரு மயிர் நுனி, மயிர் நுனி 8 கொண்டது ஓர் ஈர்: ஈர் 8 கொண்டது ஒரு பேன்; பேன் 8 கொண்டது ஒர் அங்குலம்; அங்குலம் 24 கொண் டது ஒரு முழம்; முழம் 4 கொண்டது ஒரு தனு; தனு 2 கொண்டது ஒரு தண்டம் தண்டம் 2000 கொண்டது ஒரு
குரோசம்; குரோசம் 4. கொண்டது ஒரு யோசனை.
பின்னர் அண்டத்தின் அகற்சியினையும் இயல்பையும் விபரிக்கிருர் அசுரகுரு. - -
முட்டைபோன்ற வடிவினதாகிய அண்டம் 100 கோடி யோசனை உயர்ச்சியினை உடையது; 100 கோடி யோசன்ை அகலத்தினை உடையது. . '
கீழே, அண்டகடாகத்தின் எல்லையில் பதினுயிர கோடி யோசனை உயர்ச்சியினையுடைய திருமேனியுடன் காலாக்கினி உருத்திரர் தன் பரிசனங்களுடன் வீற்றிருப்பார். ஆதிகர் மம் அவரை வாழ்த்திக் கொண்டு அப்புவனத்தில் வீற்றிருக் கும். அதற்கு மேலே 28 கோடி நரகங்கள் அடுக்குறு நிலைய னவாக இருக்கும். இந்நரகங்களுக்கும் மேலே சப்தபாத்லங் கள் உள. இவற்றின் மேலே ஒரு கோடியே இருபதிலக்கம் யோசனை ஒரே வெளி. இதன் மேலே உள்ளது, எட்டு யானை களாலும் எண் பெரும் பாம்புகளாலும் ஆதி சேட்னுலும் தாங்கப்படும் பூமி. அதன் வளர்ச்சி 80 லட்சம் யோசனை. பூமியின் விரிவையும் அங்கே உள்ளனவற்றையும் சொல் வேன். சூரப்ன்மாவிே, கேட்பாய், என்று தொடர்கிருர் ஆசாரியார். S S S S S SDSSS SSS SSASS ,

ஆத்மஜோதி 333
பூமியானது சம்புத்தீவு, முதலிய 7 தீவுகளால் ஆயது. உவர்க்கடல் முதலிய கடல்களால் இத்தீவுகள் முறையே குழப்பட்டிருக்கின்றன. இவ்வேழு தீவுகளுக்கும் ஏழு கடல் களுக்கும் உள்ள பரப்பு 2 கோடியே 54 லட்சம் யோசனைக ளாகும். இவற்றைச் சூழ்ந்து சக்கரவாளகிரியும் புறவாழி யும் இருட்படலமும் இருப்பன.
சம்புத்தீவின் நடுவில் பூமிக்கு மேலும் கீழுமாக நீண்டு, அகற்சியுடையதாய், தாமரை மொட்டுப் போல விளங்குகி றது மேருமலை. அதன் சிகரங்களிலும் மலைகளிலும் பிரமா முதலிய தேவர்கள் தத்தமக்குரிய மனுேவதி முதலிய உல கங்களில் வீற்றிருப்பர்.
இச்சம்புத் தீவு நவகண்டங்களாக அமைந்துள்ளது.
ந்நவ கண்டங்களுள் குமரிக் கண்டம் தனிச்சிறப்புடையது.
இங்குதான் கங்கை முதலிய புண்ணிய நதிகளும் மகேந்திரம் முதலிய மலைகளும் காஞ்சி முதலிய முத்தி நகரங்களும் அனந் தம் சிவஸ்தலங்களும் அமைந்து விளங்குகின்றன. வேதா சார ஒழுக்கமும் மெய்நெறியும் சேர்ந்திருப்பது இக் குமரிக் கண்ட மொன்றுமே.
இப்பூமிக்கு மேலே சூரிய லோகம் தொடங்கி, சனி உல கம் வரைக்கும் உள்ள உலகங்கள் பல.
வேதாகமங்களும் அவற்றின் சார்பு நூல்களும் அண்டத் தினயற்கையினை வெவ்வேருகச் சொல்லுகின்றன. சிருட்டி பேதம் பலவாம் ஆதலால், அவை முரணுமாறில்லை என்ப தன, சூரபன்மாவே, நீ அறிந்துகொள் என்று முடித்தார் விஞ்ஞானிகளுக்கெல்லாம் தலைமை பூண்டு விளங்கும் தகுதி வாய்ந்த சுக்கிராசாரியார்.
本
சுக்கிராசாரியார் இவ்வாறு, ஒருவாறு, ஒருஅண்டத்தின் இயல்பினை விளக்கி வைத்தார் சூரபன்மாவுக்கு. சூரபன்மா பரமேசுவரனிடமிருந்து ஆட்சிக்குப் பெற்றது, இது போல ஆயிரத்தெட்டு அண்டங்கள். இவ்வண்டங்களும், இன்னும் ஏனைய எண்ணற்ற அண்டங்களும் பொதுவானதொரு முறை யில் கச்சியப்ப சுவாமிகளின் காட்சிக்கு நிலைக்களமாக அமை கின்றன. அவ்வாறு சொல்வதிலும் பார்க்க இவையனைத் தையும் அவர் காட்சி உள்ளடக்கி விளங்குகின்றது என்று கூறுகல் பொருந்தும். எனினும், அவர் காட்சிக்குட்பட்டு துல்லியமாக விளங்கும் இடங்கள் கைலேயும் இமயமும் கந்த வெற்பும் விந்தமும் காஞ்சியும் சீர்காழியும், வானகமும் மாகேந்திரமும் திருச்செந்தூரும் ஆகும்.

Page 11
334 ஆத்மஜோதி
பிரயாணக் கட்டுரை
உருக்காலைப் பெரு நகரம்
(மு. சிவராசா)
வேகமாக ஓடிக்கொண்டிருந்த யன்னலின் வழியாக வெயிலின் வெப்பத்தைத் தாங்கிக் கொண்டு வந்த காற்று எங்களைக் கடூரமாகத் தாக்கியது. காற்று வராதபடி யன் னலை மூடிவிட்டாலோ, நீற்றறையில் இடப்பட்டவர்கள் போல வெந்தோம். பொழுதுபடும் வரையில் தாகம் தாகம்; ஒரே தாகம்!
"மரண தாகம் இப்படித்தான் இருக்குமோ என்ருர் ஒருவர். "சே, சே. அந்த அவஸ்தை இவ்வளவு நேரம் நீடிக்காது". இது மற்ருெருவர்.
வேதனையிலும் ஹாஸ்யத்தை மறவாது பிரயாணஞ் செய்தோம். பொழுதுபட்டதும் ஓரளவு ஆறுதல். வெப் பத்தின் கொடுமை குறைந்தது. இரவுகழிய, காலே பத் தரை மணிக்கு ‘நாக்பூர்" என்ற சந்தியை அடைந்தோம். இது சென்னையிலிருந்து 685 மைல். இங்கே நாம் வண்டி மாற வேண்டும்.
நாக்பூர் இந்தியாவின் போக்குவரத்துப் பாதைகளில் முக்கியமானதொரு சந்தி. வடக்குத் தெற்காக டில்லிக்கும் சென்னைக்குமிடையில் போய்வரும் புகைவண்டிகளும், கிழ க்கு மேற்காக கல்கத்தாவுக்கும் பம்பாய்க்குமிடையில் போய் வரும் புகைவண்டிகளும் சந்திக்கும் நிலையம். புகையிரதப் பாதை மட்டுமன்றி, பிரதான நகரங்களை இணைக்கும் தெரு வீதிகளும் இங்கு சந்திக்கின்றன. இதேபோல் விமானசேவை யிலும் இவ்வூர் முக்கியமான சந்தியாக விளங்குகிறது.
பம்பாயிலிருந்து கல்கத்தா போகும் மெயில் வண்டி அன்று முற்பகல் 11, 50க்கு நாக்பூரை விட்டுப் புறப்பட்ட போது எங்களையும் ஏற்றிக் கொண்டது. இங்கிருந்து பிலாய் 150 மைல். போகும் வழியின் இருபுறமும் வெட்ட வெளியும் பற்றைக் காடும்தான். ஆங்காங்கே சில இடங்க

ஆத்மஜோதி 335
ளேப் பண்படுத்தி விளைநிலங்களாக்கியுள்ளனர். பிலாய்க்குச் சமீபமாயுள்ள பெரிய புகையிரத நிலையம் 'துர்க் மாலை ஐந்து மணிக்கு நாம் அங்கு இறங்கிய பொழுது உருக்கா லையைச் சேர்ந்த பூனி ஜெல்ரி இன்னும் சில அன்பர்களோடு எம்மை எதிர்கொண்டழைத்து ஜீப் வண்டியில் நாலு மைல் தூரத்திலுள்ள பிலாய் நகருக்குக் கூட்டிச் சென்ருர், அங்கே பதினெட்டு விடுதிகள் கொண்ட மூன்றடுக்குக் கட்டடம் ஒன்றை இலங்கையிலிருந்து பயிற்சிபெற வரும் எங்களுக் கென ஒதுக்கியிருந்தனர். ஏனைய நண்பர்களும் வந்து சேர்ந்தபின் உருக்காலைத் தலைமை அதிகாரி பூரீ இந்திர ஜித் சிங் அவர்களையும் பயிற்சிப் பொறுப்பாளர் பூரீ. வை.
பூரி அவர்களையும் சந்தித்தோம். பின்னர் சிலநாட்கள் ஊரையும் உருக்காலை வேலை முறையையும் பார்ப்பதில் கழித்தோம்.
பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பு நெல்வயலும், குடி சைகளும் உழவர்களுமாய்க் காட்சியளித்தன இருபத்தாறு கிராமங்கள். 1955ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் உருக் காலை அமைப்பதற்கு இவையிருந்த இடத்தைத் தேர்ந்தெ டுத்தது. அதனுல் இந்த இடம் இப்போது பிரமாண்ட மான ஆலைகளையும், ராக்ஷஸ யந்திரங்களையும், பலமாடிக் கட்டடங்களையும் வீடுகளையும் கொண்ட தொழில் நகரமாக மாறியுள்ளது. இதுவே இன்றைய பிலாய் உருக்காலைப் பெருநகரம். நகர அமைப்பு மிகவும் மெச்சத் தகுந்த வகை யில் உளது. தெருக்கள் பெரும்பாலும் நேர்கோடுகள் போல் அமைந்துள்ளன. அநேக வீதிகளுக்குப் பெயரே இல்லை. அவற்றை இலக்கங்களாலேயே குறிப்பிடுகின்றனர்? நகர் முழுவதும் பத்து வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டுள் ளன. இவை தவிர "ஆஸ்பத்திரி வட்டாரம்’ ‘சிவிக் சென் டர்' எனவும் இரண்டு உள. ஒவ்வொரு வட்டாரத்துக் கும் கடைத்தெரு, பாடசாலை முதலியன தனித் தனியே உண்டு, நகருக்குப் பொதுவான பெரிய வியாபார நிலையம் "சிவிக் சென்டர் பக்கத்திலேயே நவீன வசதிகள் கொண்ட *சித்திரா மந்திர்" என்ற படமாளிகை. சகல செளகரியங் களும் கொண்ட வைத்தியமனை இருக்குமிடம்தான் ஆஸ் பத்திரி வட்டாரம் நகரின் வடக்கெல்லையில் “ஞாயிறு சந்தை'யும், தென்கிழக்கில் குடிநீர்த் தேக்கம், மைத்திரி

Page 12
336 ஆத்மஜோதி
ப"க்" என்ற பூங்கா ஆகியனவும் மக்களுக்குப் பெரிதும் உதவு கின்றன.
இங்குள்ள உருக்காலையில் வருடம் ஒன்றுக்கு 25 லட்
சம் தொன் உருக்குப் பொருட்கள் செய்யப்படுகின்றன. 50,000 தொழிலாளிகள் வேலை செய்யும் இதன் வருட வருமானம் சுமார் 200 கோடி ரூபா. உருக்குப் பொருட்
களே ஆக்குதற்கு வேண்டிய மூலப் பொருட்கள் பலவேறு
இடங்களிலிருந்து இங்கு வருகின்றன. உலோகமண் (Iron
Ore) 56 மைல் தூரத்திலுள்ள ராஜ்ஹாரா என்ற ஊரி
லிருந்து வருகிறது. அங்கு இது மலையாய்க் கிடக்கிறது.
மலையில் ஆங்காங்கே குழிதோண்டி, அதில் வெடிமருந்து வைத்து வெடிக்கச் செய்வார்கள். அப்போது சிதறிவரும் பெருந் துண்டங்களை இயந்திரத்திலிட்டு உருளை களால் நெரித்து அளவான சிறு துண்டுகளாக்கிப் புகையி
ரதம் மூலம் பிலாய்க்கு அனுப்புவர். இரண்டாவது மூலப்
பொருளான நிலக்கரி, கார்காளி, ஜரியாராணிகஞ்ச் ஆகிய
தூர இடங்களிலிருந்து வருகின்றது. கரியைச் சுரங்கத்தி
லிருந்து எடுத்துச் சுத்தம் செய்து, தரம்பிரித்து இங்கு
அனுப்புவர். மூன்ருவதான முருகைக் கல் 15 மைல் தொ லைவிலுள்ள நந்தினி என்ற ஊரிலிருந்தும், ஏனைய மூலப் பொருட்களான டொலமைற் ஹிர்ரியிலிருந்தும், மங்கனிஸ் பலகாட் மாவட்டத்திலிருந்தும், தண்ணிர் முப்பது மைல் தூரத்தேயுள்ள தண்டுலா, கொண்ட்லி நீர்த்தேக்கங்களி ருந்தும், மின்சக்தி கோர்பா மின்சார நிலையத்திலிருந்தும் கிடைக்கின்றன. ஆலையிலும் ஒரு மின்சார நிலையம் இரு ந்து உதவுகிறது.
முதலில் நிலக்கரியை ஒரடுப்பில் ஏற்றி, வாயுக்களின் உத வியால் சூடேற்றி(coke)ஆக்குவர். இப்படிச் செய்வதால்கரியி லுள்ள சாம்பர் குறைகிறது. சூடேற்றும் போது கரியிலி ருந்து வெளிப்படும் பலவித வாயுக்களிலிருந்து தார், நெப் தவீன் ரசாயன உரம் முதலிய பல உப பொருட்களை எடுக்கிருர்கள். சில வாயுக்கள் எரிபொருளாய் உதவுகின் றன.
எரிந்த கரி (coke) உலோக மண், முருகைக் கல் ஆகிய வற்றுடன் ஏனைய மூலப் பொருட்களையும் அளவாகக் கல ந்து உலையில் இட்டு 1700 டிகிரிக்குச் சூடேற்ற இவை யாவும் உருகிக் குழம்பாகும். இரும்பு கீழே தங்

ஆத்மஜோதி - 337
கிக் கொதிக்க, ஏனைய கழிவுப் பொருட்கள் உருகி மேலே நிற்கும். மேலே நிற்பதை முதலில் வடிகால் மூலம்வெளியேற் றிய பின் அடியிலுள்ள இரும்பைத் தனியாக எடுப்பர். இது அக்கினிக் குழம்பாகக் காணப்படும். இதன் ஒரு பகு தியை இறுகச் செய்து பட்டடை இரும்பு (Pig iron) ஆக் குவர். மீதிக் குழம்பை மீண்டும் இன்னுேர் உலையிலிட்டுக் காய்ச்சி மேலும் தூய்மைப் படுத்தியபின் சுமார் ஒன்றரை அடி நீளம், ஒன்றரை அடி அகலம், ஆறடி உயரம் கொண்ட பாவாங்களாக்குவர். இவை இன்கொற் (Ingot) என்றழைக் கப்படும். இவற்றை வேருேர் உலையேற்றிச் சூடாக்கி உரு ளைகளிடையே நசுக்கி மெல்லிய 6-8 அங்குலச் சதுரமும் 10-12 அடி நீளமும் கொண்ட (Blooms) துண்டுகளாக்கு வர். அவற்றைப் பின்னும் சிறிதாக்கி இருப்புப் பாதைக ளாகவும் கட்டட வேலைக்குரிய உருக்குப் பொருட்களாக வும் செய்வர்.
கல்லாயும், கரியாயும் தோற்றமளித்த பொருள்கள், இருப்புப் பாளங்களாகவும் தண்டவாளங்களாகவும் மாறும் விநோதம் இங்கு நடக்கிறது. கரிக்கட்டி இரும்புத் துண் டுகளாய்க் காட்சியளிப்பதையும், உருகிய இரும்பு அக்கினி ஆருகப் பாய்வதையும், ஒன்றரை அடிச் சதுர இரும்புத் துண்டுகள் முக்கால் நிமிட நேரத்தில் 8 அங்குலச் சதுரப் பாளங்களாய், வாழைப்பழம் கத்தியால் வெட்டப்படுவது போல, கணப் பொழுதில் வெட்டப்படுவதையும் கண்டு நாம் வியந்தோம். இவ்வாலையிலுள்ள சில புகை போக் கிகள் இந்தியாவிலேயே மிக உயர்ந்த கட்டடமான குதுப் மினரைக் காட்டிலும் உயரமானவை.
இரண்டு வாரங்கள் இவற்றையெல்லாம் பார்த்த பின் காலையில் வகுப்பறையில் போதனையும் பிற்பகலில் வேறு வேறு தொழிற் கூடங்களில் நேர்மூக விளக்கமும் ஒழுங்கு செய்யப்பட்டன. நாளாக நாளாக வெயிலின் உக்கிரம் வளர்ந்து கொண்டே போயிற்று. 'பிலாயில் சிலகாலங்க ளில் வீட்டு முற்றத்தில் இரும்புத் துண்டைப் போட்டால் அது வெயிலில் உருகி ஒடும்” என்று இலங்கையில் நண்பர் ஒருவர் கூறியிருந்தார். 'அவ் வார்த்தை உண்மையாகும் நாள் வெகுதூரத்தில் இல்லைப் போலும் என்ருர் சகபாடி யான நண்பர் ஒருவர்.

Page 13
338 ஆத்மஜோதி
அப்ரமத்தேன வேதத்வ்யம்
-ழரீ ஸ்வாமி ராமானந்தா, - " சிவானந்தநகர், இமயமலை.
ஒரு சமயம் தேவேந்திரனுக்கு துர்வாச முனிவர் மதி ப்பு மிக்கதொரு புஷ்பமாலையை அளித்தார். இந்திரன் அதைத் தனது யானையாகிய ஐராவதத்தின் தலையின் மீது வைத்து விட்டு அதைச் சூடிக் கொள்வதற்காகத் தனது சிகையை அலங்கரிக்கத் தொடங்கினன். அந்தப் புஷ்ப மாலையிலிருந்து ஒரு மகோன்னதமான திவ்ய கந்தம் கிளம் பவே, பல ஈக்கள் அதில் வந்து மொய்க்க ஆரம்பித்தன. அந்த ஈக்களின் தொந்தரவு தாங்க முடியாமல் யானை தனது துதிக்கையால் அந்த மாலையை எடுத்துக் கீழே போட்டுக் காலால் மிதித்து நாசமாக்கிவிட்டது. இதைப் பார்த்த முனிவருக்கு மிகுந்த கோபம் ஏற்பட்டு விட்டது. உடனே அவர் இந்திரனைப் பார்த்து "ஒ இந்திரா, மூவுலக அதிபனே! ஒரு முனிவர் மிக்க மகிழ்ச்சியோடு உனக்கு ஒரு மாலையைக் கொடுத்தார். ஆனல், அதை உனது யானை தனது காலால் மிதித்து நாசமாக்கி விட்டது. நீ அதைக் கவனிக்கக் கூட இல்லை. நீ இவ்வளவு அஜாக்கி ரதையாக இருந்தால் எப்படி மூன்று லோகங்களையும் ஆட்சி செய்வாய்? ஓ விழிப்பற்ற இந்திரா, நீயும் உனது தேவர் களும் வயோதிகத்தினல் அவஸ்தைப்படுவீர்களாக. உங் கள் எல்லோரையும் நரையும், திரையும் அலங்கரிக்கட்டும்" என்று சபித்து விட்டார்.
இங்கு ரிஷி, முனிவர்களின் சாபங்கள், ஆசிகள் ஆகிய வற்றைப்பற்றி ஒருசில வார்த்தைகள் கூறுவது உசிதம். யாரும் எந்த ஒருவருக்கும் இன்பத்தையோ, துன்பத்தை யோ கொடுப்பதற்கு 'சாமர்க்கியமுடையவரல்லர். ஒருவர் என்ன கர்மங்களைச் செய்திருக்கிருரோ அந்தக் கர்மங்களின் பலன்களை அவரே அனுபவித்துத் தீர்க் தாக வேண்டும். எப்படி ஒரு பசுங்கன்று லக்ஷக் கணக்கான பசுக்களுக்கிடை

ஆத்மஜோதி 339
யில் இருந்தாலும் தனது தாய்ப்பசுவைக் கண்டு பிடித்து அதனிடத்தில் சென்று பாலைக் குடிக்கிறதோ, அதேபோல ஜீவனுடைய கர்மங்கள் அவனைப் பின் தொடர்ந்து அவற் றின் பலன்களை அனுபவிக்கும் படி செய்கின்றன. இங்கு, திரிகால ஞானிகளான ரிஷி, முனிவர்கள் இனி இயற்கை யாக நடக்கப் போகும் ஈம்பவங்களைக் குறித்து முன்னறி விப்புச் செய்கின்றர்கள். அவ்வளவுதான். இந்த உண் மையை அவர்கள் அறிந்திருப்பதால், அவர்கள் மற்றவர்க ளைச் சபித்தாலும் ஆசீர்வதித்தாலும் தங்கள் சக்தியை இழப்பது கிடையாது.
இந்தப் பிரமாதமானது அதாவது சிறுபிழையானது இந்திரனுக்கும் அவனுடைய பிரஜைகளுக்கும் எல்லையிலாத் துன்பத்தைக் கொடுத்து விட்டது. இதிலிருந்து விடுதலை பெற அவர்கள் வழக்கம்போல் பகவான் விஷ்ணுவிடம் சென்று முறையிட்டார்கள் எம்பெருமான் ஆணையைச் சிரமேற் கொண்டு, அவர்கள் பாற்கடலைக் கடைந்து அமிர் தத்தைப் பெற்று மீண்டும் தங்களுடைய அமரநிலையை அடைந்தனர். ஆனல், அமிர்தகலசம் தோன்றியவுடனே அதை அசுரர்கள் கைப்பற்றிக் கொண்டு விட்டனர். மீண் டும் தேவர்கள் விஷ்ணுவைச் சரணடைய வேண்டியதாயி ற்று. அவர் மோஹினி வடிவம் தாங்கி மூட அசுரர்களை மயக்கி அதன்பிறகு தேவர்களுக்குத் தனது கரங்களாலேயே அமிர்தத்தைப் பகிர்ந்தளித்தார்.
இங்கு இந்திரன் ஜீவாத்மாவைக் குறிக்கிறது. ஒவ் வொரு நாடியிலும் துடிக்கும் சைதன்ய சக்திதான் தேவர் கள். தேவர்கள் தவறு செய்த பொழுது பகவான் விஷ்ணு விடத்தில் சரண் புகும்படி செய்த துர்வாச முனிவர் சாத் வீக புத்தியைக் குறிக்கிறது. பாற்கடல் என்பது மனம். கடைதல் என்பது தற்சோதனை செய்தலாகும். பாற்கட லைக் கடையும் பொழுது முதலில் வெளிவந்த ஆலகால விஷம் என்பது அடிமனத்தில் உள்ள தீய வாஸனைகளாகும். சிவபெருமானுல்தான் அந்த விஷத்தை அடக்க முடிந்தது. து ஆக்ம பலத்தினுல்தான் தீய வாஸனைகளோடு போ ரிட்டு வெற்றிபெற முடியும் என்பதைக் காட்டுகிறது. பர மாத்மாவை எப்பேர்ப்பட்ட விஷமோ அல்லது தீமையோ ஒரு சிறிதும் பாதிக்காது. கற்பகவிருகூடிம் போன்ற பல சுப வாஸ்னேகள் வெளிவந்தன. கடைசியாக ஆத்மானு

Page 14
34) ஆத்மஜோதி
பூதியாகிய அமிர்தம் வெளிப்பட்டது. அசுரர்கள் அமிர் தத்தை அபகரித்துக் கொண்டனர் என்பது, கைக்குக் கிட் டியது வாய்க்குக் கிட்டாமல் போவதைப் போல, ஆத்மா னுபூதி ஏற்படக் கூடிய தருவாயிலுங்கூடத் தவறுகின்ற சுபாவம் (பிரமத்ததா) பல இடையூறுகளை உண்டாக்கும். இங்கும் பகவான் விஷ்ணுவாகிய பரப8ாத்மாவைச் சரண டைவதுதான் வெற்றி பெறுவதற்குள்ள ஒரே வழியாகும். அவருடைய கருணையால், கடத்தற்கரிதான இந்த பவ சாகரத்தை எளிதில் கடந்து விடலாம். ஆகவே கடைசி வரையிலும் சாதகர் தவறுதலுக்கு இடம் கொடுத்துவிடக் கூடாது. அவர் சதா சர்வகாலமும் விழிப்புடன் இருத் தல் வேண்டும். அப்பொழுதுதான் வெற்றி சாத்தியமா கும். பூரீ சங்கர பகவத் பாதாச்சாரியாளும் "தஸ்மாத் ஜாக் ரத, ஜாக்ரத" (ஆகவே விழித்திரு, விழித்திரு) என்று எச்
சரிக்கின்ருர்கள்.
"உத்திஷ்டத ஜாக்ரத ப்ராப்ய வரஈந்நியோதத கஷ் சரஸ்ய தாரா நிஷிதா துரதியயா துர்கம்
பதஸ் தத்கவயோ வதந்தி//
கனவிலிருந்தும், அஞ்ஞானத் தூக்கத்திலிருந்தும் விழித் தெழு. தூக்கத்தை முழுதும் விட்டுவிடு. எழுந்திரு. பெரிய குருமார்களைப் போய் அணுகு, அவர்களிடமிருந்து சரியா கத் தெரிந்து கொள்ள வேண்டியதான இந்த எல்லையற்ற பவ சாகரத்திலிருந்து கரைசேரும் மார்க்கத்தைத் தெரிந்து கொள். ஆன்மீக வழியைக் கடந்து வந்தவர்களான அந்த முனிவர்கள், இந்தப் பாதையானது கத்திமுனையைப்போ லக் கூர்மையானது, கடப்பதற்கு மிகவும் கடினமானது
என்று சொல்கின்ருர்கள்.
(- கடோபநிஷத் - i 14
கிருஷ்ண பகவான் அவதார தினமாகிய ஜன்மாஷ்டமி யன்று நடுநிசி வரைக்கும் சிவராத்திரியன்று இரவு முழுவ தும், மற்றும் பல சமயங்களில் பலவிதமாகவும் தூக்கம் விழித் திருக்குமாறு சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஆணுல் நாம் தூங்காமல் விழித்திருந்து விட்டால் மட்டும் போதுமா? போதாது. பிரார்த்தனை. கீர்த்தனை, வழிபாடு, ஜபம், தியானம், ஸ்வாத்யாயம் முதலியவைகளையும் செய்யும் படி அவைகள் நமக்குக் கூறுகின்றன. அப்பொழுதுதான் விழித்

ஆத்மஜோதி 341
திருத்தலும், எழுந்திருத்தலும் இணைந்து செல்லும். நமது முயற்சிகள் வெற்றி பெறும். நாம் ஆன்மீகப் பாதையைக் கடந்து வந்தவரான சுரோத்திரீய பிரம்ம நிஷ்டரான, அதாவது சாஸ்திரங்களை நன்கு கற்று உணர்ந்தவராகவும், பிரம்ம நிஷ்டை கைவரப் பெற்றவராகவும் உள்ள குருவை அடைதல் வேண்டும். இதற்கும் பகவான் கீதையில் வழி காட்டியிருக்கிறார். ‘தத்வித்தி ப்ரணிபாதேன பரிப்ரஸ் னேன ஸேவயா ?. நாம் அவர்களுடைய திருவடிகளில் பரி பூரணமாகச் சரணமடைந்து அவர்களுக்குச் சேவை புரிந்து பரம்பொருளைப் பற்றி மீண்டும் மீண்டும் கேட்டு அதைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். சிஷ்யர்களுடைய சேவை குருவிற்கு அவசியமில்லை. இருப்பினும் சிஷ்யர்கள் உள்ளத் தூய்மை அடைவதற்காகவும், அவர்களுடைய சம்ஸ்காரங்கள் எப்படி வேலை செய்கின்றன என்பதை குரு கவனித்து அதற்குத் தக்கபடி உபதேசங்கள் செய்யவும் வாய்ப்பை உண்டாக்குவதற்காக இந்த முறை சொல்லப் பட*டிருக்கிறது. பிறகு உண்மையைக் கண்ட அந்த ஞானி கள் இந்த பவசாகரத்தைக் கடக்கும் மார்க்கத்தை உப தேசிப்பார்கள். இறைவனுடைய கருணையால் எல்லோரும் ஆன்மீகப் பாதையில் தவறு இழைக்காமலும், விழிப்புட னும் இருந்து சுலபமாக வெற்றி பெற்றுப் பேரானந்த சாகரத்தில் சதா சர்வ காலமும் மூழ்கித் திளைத்திருப்போ
forts,
ஹரி ஓம் தத் ஸ்த்.
நீங்கள் ராதே ஸ்யாமி என்று ஸ்மரணம் செய்யும் பொழுது அந்த நாமத்தின் முக்கியத்துவத்துள் வாசம் செய்ய வேண்டும். அந்த வார்த்தையின் அரிய செயல்கள் உங்கள் மனக் கண்ணின் முன் இருக்க வேண்டும். அப் பொழுது நாமஸ்மரணம் விரைவான பலனைக் கொடுக்கும்.
ஆம்! நீங்கள் போராட வேண்டும். ஒருவித முயற்சி யுமின்றி உச்சிக்குப் போக முடியாது. முடிவான வெற்றி யில் நம்பிக்கை கொள்ளுங்கள். அஞ்சாமையையும் நம்பிக் கையையும் அவைகள் எங்கிருந்து கிடைத்தாலும் ஒன்று சேர்த்துக் கொள்ளுங்கள். சந்தேகம், பயம் ஆகிய விதை
களை விதைப்பவர்களுடன் தொடர்பு கொள்ளாதீர்கள்.
- சத்திய சாயிபாபா.

Page 15
3集2 ஆத்மஜோதி
பிறவிப் பெருங்கடல்
- செல்வி: சுந்தரேஸ்வரி சுப்பையா --
பிறப்புக்களுக்கு அளவில்லை. அவைகள் எண்ணற்றவை. ஆணுய், பெண்ணுய், அலியாய், விலங்காய், பறவையாய், ஊர்வனவாய், மரம் செடிகொடிகளாய் இன்னும், ஏட்டிலே அடங்காத எண்ணற்ற பிறப்புத்கள் இவ்வுலகிலே தோன்றி யுள்ளன. பிறவிகளிலே, மானிடப்பிறவி கிடைப்பதரிது என சான்ருேர் மொழிந்துள்ளனர். அதை யாமறிவோம். அந்த மானிடப்பிறவியும் நன்மையானதா? நல்லதொன்ரு? அப்படியாயின் மானிடப்பிறவி எடுத்தவர்க்கு துன்பமில்லை யா? இவ்வினுக்களுக்கு விடை, ‘இருக்கிறது" என்பதாம். எல்லாப் பிறப்பும் வியாகுலம் நிறைந்தவையே. எனவே தான் நம் தெய்வப்புலவர், திருவள்ளுவநாயனுர் பிறவியை பெருங்கடலுக்கு ஒப்பிட்டுள்ளார்.
நால்வரில், தல்முத்தென விளங்கிய மணிவாசகப் பெரு மான் எம்பெருமானை நோக்கிப் பாடும்பொழுது, "இறை வனே உன்னைப் பாடுவதற்குக்கூட தகுதியற்றவன் நான்", **பொல்லா வினையேன் புகழுமாருென்றறியேன்" என்று பாடியுள்ளார். பிறவிகளிற் சிறந்த மானிடப்பிறவியெடுத் திருந்தும் கூட இறைவனைப் போற்றிப்பாட தகுதியற்றவர் களாய் இருக்கிருேம், என்பதை திருவாதவூரர் தெற்றென விளக்கியுள்ளார்.
மக்களாய் பிறந்த நாம் ஆசிாபாசங்கட்கு ஆளாகிவிடு கிருேம். ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலமும் எம் மிடம் நகத்திடை தசைபோல் ஒட்டியுள்ளன. நான், எனது என்ற அகங்காரமும், கொலை, களவு, பொய், போன்ற குணங்களும், எதிலும் மயங்கித் தவிக்கும் சிறு தன்மையும் எம்மிடையே தொன்று தொட்டு இருந்து வருகிறது. திரு வருளை நினைத்துப் பார்க்கக் கூட நேரமின்றி மென்மேலும், பிறப்புகளை தேடிக்கொள்ள எத்தனிக்கிருேம் பாற்கடலி லேயுள்ள மீன்கள் பாலை அருந்தாது, ஆங்கு படிந்துள்ள புழு தியையும், பாசான்களையும் உண்ணுகின்றன. அதுபோல் திருவருளாகிய பாற்கடல் எம்மை சுற்றி இருந்தும், ஆன்

ஆத்மஜோதி 343
மாக்களாகிய யாம் அத்திருவருளையணுகாது, புழுதி, பாசா னெனும் மாயையை அணுகி, லயிக்கின்ருேம். திருவருள் எனும், பாலின் சுவையறியாது, மாயா மலத்தின் சுவையை
விரும்பி உண்கிருேம்.
அழிந்து போகும் நம்முடலுக்கு நோவேற்பட்டால், உட னேயே வைத்தியனை நாடுகிருேம். ஆனல் பிறவிப்பிணிக்கு வைத்தியம் பார்க்க துணிவேது? அந்நோய்க்கு மருந்துதான் என்ன? வைத்தியன் யார்? எம்மைப் படைத்து, காத்து, அருள் செயும், விண்ணுேர்க்கெலாம், மூப்பாய் மூவர் முத லாய் நின்ற முதல்வணுகிய வைத்திய நாதன் தான் பிறவி நோயை தீர்க்கும் மருத்துவன். திருவருளே அவனளிக்கும் மருந்து, 海
தாதாய் மூவேழுலகுக்கும்
தாயே நாயேன் றனையாண்ட பேதாய் பிறவிப் பிணிக்கோர் மருந்தே பெருந்தேன் பில்க எப்போது மேதாமணியே யென்றென் றேத்தி
இரவும் பகலும் எழிலார் பாதப் போதாய்த் தணைவதென்று கொல்லோவென்
பொல்லா மணியைப் புணர்ந்தே.
என்று கூறுகிறது, தொல்லை இரும்பிறவிச் சூழும் தளைநீக்கி, அல்லலறுத்து ஆனந்தமாகிய சிவபுராணம்.
பிறவி ஒரு பெருங்கடல். இறைவனை கனவிலும் நினை யாமல், அவன் திருத்தாள் பணியாதிருப்போருக்கு பிறவிக் கடலை நீந்த முடியாது.
புல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகிப் பல்விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய் பேயாய்க் கணங்களாய்
கணக்கற்ற பிறப்புகளைப் பெற்று, போதும் போதுமென் ருகிவிட்டது. "அப்பனே, இனி எனக்கு வேறெந்தப் பிறப் பும் வேண்டாம். உன் பொன்னடிகளை வந்தடையும் ஒரு பிறப்புத்தான் வேண்டும் என நாமும் உள்ளததிலே ஓங்கார

Page 16
344 ஆத்மஜோதி
மாய் நிற்கும் விமலனை உளமுருகப் பாடினுல் பிறவியெனும் கடலை கடந்து விடுவோம்.
அன்பருடனே கூடி, அனுதினம் துதி பாடினுல்தான் இன்பசாகரமாகிய முத்தியின்பத்தை அடையலாம். பஞ்சப் புலனயடக்கி, நெஞ்சை ஒடுக்கி, நெறி பிறழாது நீதிவழியே நடந்தால் அதுவே பிறவிப்பெரும் கடல் கடக்க ஏதுவாகின் றது. ஆன்மாக்களாகிய நாம், இல்லறமாம் நல்லறத்தை மேற்கொண்டாலும், பஞ்சமாபாதகங்களையகற்றி, தில்லை. யுட்கூத்தனை இடைவிடாது வழிபட்டு வந்தால், பிறவாழி கடப்பதெளிது. துன்பம் வந்தபோது மட்டுமல்லாது, இன் பமுடன் இருக்கும் வேளையிலும் சல மற்ற சங்கரன் திருவடி எண்ண வேண்டும். அதுவே உய்யும் வழி.
மனமெனும் அடுப்பில், வாசனைகளாகிய விறகை எரிய விடும்பொழுது, கவலை மகிழ்ச்சி ஆகிய நெருப்பு எரிகிறது. விறகை எடுத்துவிட்டால் நெருப்பு அணைந்து விடுகிறது. வாசனைகளை, உணர்ச்சிகளின் வேகத்தை, தூண்டுதலை, விரைவுபடுத்துவதை எடுத்து விடுங்கள். அப்பொழுது நீங் களே உங்கள் தலைவன் ஆகிறீர்கள்.
பலவிதமான உடல் தத்துவம், மனத்தத்துவம் ஆகிய பயிற்சிகளினுல் இவை யோகத்தின் மூலம் உண்டாக்கப்பட்டு இருக்கின்றன. ஆணுல் இந்த முடிவுக்குப் பக்தி சுலபமான வழி. நாமஸ்மரணமே போதுமானது. திரேதாயுகத்தில் சீதாராமா என்று சொல்லப்பட்டது. துவாபரயுகத்தில் ராதே ஸ்யாமா என்று சொல்லப்பட்டது. கலியுகத்தில் எல்லா நாமங்களும் அந்தச் சக்தியுள்ளவை என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
-சத்திய சாயிபாபா.

ஆத்மஜோதி 345
பழமையும் புதுமையும்
திருப்புகழ் தவமணி கே. வி. தியாகராஜன், மதுரை.
இந்த உலகமானது வெகு வேகமாக மாறுதல் பெற்று வருகின்றது. முன்பு இருந்த பல ஊர்கள் இப்பொழுது கடல் கொண்டுவிட்டது. ஆதி தமிழ்ச் சங்கம் இருந்த காலத் தில் கன்யாகுமரி பக்கம் பக்குறுளி ஆறு என்று ஒரு ஆறு இருந்ததாக இலக்கியங்கள் பேசுகின்றன. இன்றைக்கு நம் முடைய சகாப்தத்தில் கண்டோம் தனுஷ்கோடி என்ற நிலப்பகுதி நீர்ப்பகுதியானது. ஆகவே இறைவனுடைய திருவருள் இயற்கை மூலமாக பல மாறுதல்களைப் பெற்று வருகின்றது. ஒருநாள் அப்பர் சுவாமிகள் சாலை வழியே வருகின்ருர். அங்கு ஒரு ஆலமரத்தைக் கண்டார். ஆல மரம் எப்பொழுதுமே புனிதம் நிறைந்த மரம். ஏனென் முல் சிவபெருமான் சனகாதி மூனிவர்களுக்கு உபதேசம் புரிந்தது கல்லால விருட்சத்தின் கீழ்,
ஆல மரத்தைக் கண்டதும் நமக்கேல்லாம் என்ன சித் தனை தோன்றும்? ஆலும் வேலும் பல்லுக்குறுதி. ஆகவே ஒரு குச்சியை ஒடித்து பல் துலக்கினல் பல் உறுதியாய் இருக்குமே என்றுதான் எண்ணுவோம். ஆனல் அப்பர் சுவாமிகள் ஆலமரத்தைக் கண்டதும் அதைச் சிவபெரு மாளுகப் பாவித்து விட்டார். மரங்களிலே நீண்டகாலம் உயிரோடு வாழ்வது ஆலமரம். ஏனைய மரங்களுக்கில்லாத ஒரு தனித்தன்மை ஆலமரத்திற்கு உண்டு. எல்லா மரங் களுடைய கிளைகளும் மேல் நோக்கி வளரும். அல்லது பக் சுங்களிலே வளரும். ஆனல் ஆலமரம் ஒன்று மட்டும் தன் னுடைய விழுதுகளைக் கீழ்நோக்கி வளரச் செய்கின்றது. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் ஆலமரம் வளர்ந்து முதிர்கின்ற பொழுது இந்த விழுதுகள் அந்த மரமானது கீழே விழு ந்து விடாதபடி ஆதரவாக நிற்கிறது. மிகப் பழமையாக அப்பர் சுவாமிகள் கண்ட ஆலமரம் வைரம் பாய்ந்திருந் தது. அதே தருணத்தில் அந்த வைரம் பாய்ந்த தன்மை அந்த மரத்தினுடைய பழமையைக் காட்டுவதாக இருந் தது. அந்த வைரத்தைக் கண்டவுடனே மரத்தின் பழமை யை நினைக்கின்றர். அதே சமயம் வைரம் பாய்ந்த அந்த மரத்தில் ஒரு புதிய கொழுந்து முளைப்பதையும் கண்டார். இந்த இரண்டையும் கண்டவுடனே அவருக்குச் சிவபெரு

Page 17
346 ஆத்மஜோதி
மான் ஞாபகம் வந்து விட்டது. சிவபெருமான் மிகப் பழ மையானவர். ஆணுல் அவர் புதுமைக்கும் புதுமையாக இருக்கின்ஞர். ஆலமரத்தின் வைரம் போல் அவர் பழமை யும், ஆலமரத்தில் முளைக்கின்ற சிறிய கொழுந்து அவரது புதுமையையும் நினைவுறுத்தியது. இந்தக் கருத்துக்களெல் லாம் நிரம்பி அவர் வாக்கிலே தேவாரமாக வெளிவந்தது. இந்தக் கருத்தை மாணிக்கவாசக சுவாமிகள் சிவபெருமா னைப் பற்றிப் பாடும் போது "மூதக் கார்க்கும் மூதக்கவன். பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியனே' என உள்ளம் உருகிப் பாடுகின்றர். அப்பர் சுவாமிகள் கூறும் கருத்தை நோக்குங்கள். இந்தத் தேவாரத்தைச் சிந்தனை செய்யுங்கள். குருகாம், வயிரமாம், கொள்ளும் கிழமை யாம், கோளேதானும், பழத்தில் இரதமாம், பாலில் நெய் யாம், பாட்டில் பண்ணும், உள் நின்ற நாவிற்கு உரை யாடியாம். திருக்கரு காவூர் எந்தை தானே.
குருகு என்பது கொழுந்து. வைரம் மரத்தின் பழமை. ஒரு வயது முதிர்ந்தவர்க்குத் தூக்கம் வரவில்லை. அடிக் கடி தன் பேரன்னப் பார்த்துத் 'தம்பி மணி என்ன, மணி என்ன" என்று நச்சரித்துக் கொண்டேயிருந்தார். அந்தப் பையனுக்குப் பொறுமை எல்லை மீறியது. அந்தப் பையன் "தாத்தா இந்தக் கடிகாரத்தை நீங்களே வைத்துக் கொள் ளுங்கள்" என்பது போல இருக்கிறது இத் தேவாரம். இந்த உலகத்தில் எத்தனை கிழமைகள் தோன்றுகிறதோ, எத்தனை மணிகள் தோன்றுகிறதோ, எத்தனை நிமிடங்கள் தோன்று கிறதோ, எத்தனை விநாடிகள் தோன்றுகிறதோ அதற்கெல் லாம் ஆதாரம் சிவபெருமான். இது வருடம், இது இன்ன மாதம், இன்ன தேதி, என்று வரையறுப்பது ஒன்பது கோள் கள். அப்பர் சுவாமிகள் சொல்கின்ருர் அந்த கோள்களே இறைவன் என்று. சுவாமி கடவுள் எப்படியிருக்கிருர் என்று கேட்கின்ற மாணவனுக்கு பதில் கூறுவது போல் அப் பா! நன்கு பழுத்து உதிர்கின்ற பருவத்திலுள்ள மாங்கனி எப்படி தித்திக்குமோ அப்படி உள்ளத்தில் தித்திக்கிறவன் சிவபெருமான் என்கிரூர். அது மட்டுமல்ல. ஒரு படி பசும் பாலை அரைக்கால் படியாகக் காய்ச்சி அதில் நல்ல கற்கண்டு, குங்குமப்பூ, பாதாம் பருப்பு, பிஸ்தாப் பருப்பு இவைகளை யெல்லாம் கரைத்துக் குடித்தால் என்ன சுவையாக இருக்கு மோ? அச்சுவைகளுக்கெல்லாம் மேலானவன் சிவபெருமான் என்கிருர், இன்னும் விளக்குகிருர் நாடகம் நடிக்கின்ற போது கதாபாத்திரங்கள் தான் சொல்லவேண்டிய வசனங்

ஆத்மஜோதி 347
களை நாடகத்திரைக்குப் பின்னுல் இருந்து ஒருவர் வசனங்க
ளைப் படிப்பார். அவரை ஆங்கிலத்திலே “Promptor என்று
கூறுவர். சேக்ஷ்பியர் முதலிய நாடகங்களிலே "Promptor
பற்றிய வர்ணனைகள் காணலாம். அப்பா! நாணு தேவா
ரம் பாடுகிறேன். ஒலி ஒரு மனிதனுடைய வாக்கிலிருந்து
வருவதற்கு முன்னுல் ஐந்து இடங்களைக் கடந்து வருகிறது.
அதனை சைவ சித்தாந்த சாஸ்திரத்தில் சூக்குமை, பைஸந்தி,
வைகரி, ஸ்தூல வைகரி, சூட்சும வைகரி, என்று 5 ஸ்தானங்
களில் பட்டு வருகிறது. அக உள்ளத்தில் தோன்றுகின்ற
ஓர் எண்ணமானது வாக்கிலே வருவதற்குள் எத்தனையோ
மாறுதல் பெறுகின்றது. உதாரணமாக ஒரு ஏழை உதவி செய்யுங்கள் என்று கேட்கின்ருன், இரண்டு வாழைப்பழங் கள் கொடுக்கலாம் என்று தோன்றுகிறது. அது வாக்குத்
தன்மை வருகின்றபொழுது ஒன்று கொடுத்தால் போதும்
என்று நினைப்பது இயற்கை தானே. ஆகவே தோன்றிய எண்ணங்கள் எல்லாம் அப்படியே நாவில் வந்துவிடுகிறது
என்று கூறமுடியாது என்பது புலணுகிறது. ஆனல் அப்பர்
சுவாமிகள் பாடிய பாடல்களிலெல்லாம் மூலாதாரத்தில்
எந்த இடத்தில் எண்ணங்கள் கருவுற்று தோன்றுகிறதோ
அந்த இடத்தில் சிவபெருமான் பாடினர்.
அது எதுபோல என்ருல் திரைக்குப் பின்னல் Promptor கூறும் வசனங்கள் போல் . Promptor என்ற சொல்லுக்கு மொழி பெயர்ப்பு, உரையாடி என்று பொருள். நமக்கு இரண்டு நாக்கள் இருக்கின்றன, ஒன்று உள் நா. மற் ருென்று வெளி நா. ஆகவே சிவபெருமான் அப்பர் சுவாமி களுக்கு உள் நின்ற நாவில் உரையாடியாக இருந்தான். அவன் யார்? நான் தாய் வயிற்றில் கருவாகியிருந்த போது என்ஃன்க் காத்த தந்தையும், தாயுமாகிய அம்மையப்பணு கிய சிவபெருமான். திருக்கருக்காவூர் கேஷத்திரத்திலுள்ள அம்பிகையின் பெயர் கருக் காத்த நாயகி என்பது. அதனை வடமொழியில் கர்ப்பரட்சாம்பிகை என்று கூறுவார்கள். இத்தனை கருத்துக்களை அடக்கி அப்பர் சுவாமிகளுடைய பாடல் தேன் தேனுக இனிக்கிறது.
அருணகிரிநாதரும் இக் கருத்தைத் தழுவிக் கந்தரலங் காாத்தில் பாடும் பாடல் உள்ளத்தில் தேன் தேனுகத் தித் திப்பதைக் காணலாம். அப்பர் பெருமானுக்குச் சிவபெரு மான் உரையாடியாக விளங்கியது போல் அருணகிரிநாத ருக்கு முருகப் பெருமான் உள் நின்ற நாவாகிய உள்ளத்

Page 18
348 ஆத்மஜோ!
தின் அடிவயிற்றில் பாத முத்திரை வைத்தார். திருப் கழ் பாக்களை அருணகிரியாரது உள்ளமாகிய அடி நாவி பேசினுன் கந்தன். அம் முத்திரை அலங்காரமாக பிரவ கமாக அருணகிரியாரது நாவில் கரை புரண்டு ஓடியது அக் கந்தரலங்காரம் ஒன்று போதுமே நம் உள்ளத்ை வள்ளி மணளனைச் சிந்தனை செய்ய, சிந்திக்கச் சிந்திக்க தேன் ஊறும்.
"தாவடி யோட்டு மயிலிலுந் தேவர் தலையிலு மென் பாவடி யேட்டிலும் பட்டதன்றே படி மாவலி பால் மூவடி கேட்டன்று மூதண்ட கூட முகடு முட்டச் சேவடி நீட்டும் பெருமான் மருகன்றன் சிற்றடியே.
பரமாத்மா கடல்; ஜீவன் அதன் அலைகள். அலையி எல்லாச் சுவையும், வேகமும், ஆரவாரமும் கடலிலிருந் பேறப்படுகின்றன. அவைகள் கடலிலேயே மறைந்து வி கின்றன. அலையின் உருவம் மறைவதும் அதன் பெயரு மோகrம் என்று சொல்லப்படுகிறது. அதாவது கடலி குந்து வேறுபட்டதாகத் தோன்றும் அலை கடலிலே இரண்டறக் கலந்து விடுகிறது. வேறு வார்த்தைகள் சொன்னல் தன்னலத்தை அகற்றுவதுதான் மோக்ஷம்.
...'
- சத்திய சாயிபா

மா லயன் பற்பொடி
பற்களுக்கு வெண்மை தந்து பல் வியாதிகளைக் குணப்படுத்துகிறது.
இமாலயன் பற்பொடி
பல் வலி, பல் அரணை பல்லில் இரத்தம் வடிதல்
முதலியவற்றை நீக்கி, தந்த வாய்வு, பல்லில் குழி விழுதல்,
வாய்நாற்றம் ஆகியவற்றை அறவே போக்கி, முத்துப் * போன்ற வெண்மையையும் மோகனத் தோற்றத்தையும்
தருகிறது.
5ம்
ನ இமாலயன்
பற்பொடி נס
ᏧᏓᏗ Ꮧ fல்
பா ஆத்மஜோதி நிலையம்,
காவலப்பிட்டி.
ரின் ஒன்று விலை ரூபா 1. தபாற் செலவு 50 சதம்.

Page 19
Registered at the G.P.O. as
சந்தா நே
இறைவன் திருவருள் ஆண்டுகள் பூர்த்தியாகி 1 பதினுேராவது இதழும் ெ தாநேயர்களுடைய ஆதர தோறும் சுடர் விட்டுப் பி கிறது. வழக்கம்போல் அ வாண்டுச் சந்தாவை அனு டன் வேண்டுகின்ருேம். சந்தா இலக்கங்களைக் கொள்கின்ருேம்.
இந்தியாவில் גם :biחותם זה זH
வழக்க
R. வீரசம்பு, சப் அரிசிப்பாளேயம்
என்ற விலாசத்திற்
இவ்விடமும்
கேட்டுக்ெ காள்ள
ஆத்மஜோ
காவலப்பிட்டி
after
அச்சிடுவிப்போர்: ஆத் tp: அச்சிடுவோர்; ஹி ஆத்ய வெளியிட்ட திகதி 17-9.

a Newspaper M. L. 59300
யர்களுக்கு
ால் ஆத்மஜோதிக்கு 18 ' 19வதுஆண்டு ஆரம்பமாகி
வெளிவந்துள்ளது. பல சந் விஞலேயே ஜோதி மாதநீர் 上 l ரகாசித்துக் கொண்டிருக்" s |ன்பர்கள் அனைவரும் இவ் பப்பி வைக்குமாறு அன்பு சந்தா நேயர்கள் தமது குறிப்பிடுமாறு கேட்டுக்
கள் தங்கள் சந் தாவை
լք (3լIII հն`
ம்பு இன்டஸ்ரீஸ்,
சே'ஸ் ம் - 9 .
கு அனுப்பி வைத்து
அறியத்தருமாறு Tப்படுகின்ரூர்கள்.
தி நிலையம்,
, (இலங்கை)
*LFFF" நஆாழ
ஜோதி நிலையத்தினர்
ஜோதி அச்சகத்தினர்
-67,
Α.
-