கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ப்ரிய நிலா 1991.02-05

Page 1
sẽ잃 器韶 通||- 历} 四翻! 활
|- ||- | |
... . . . .
 
 
 


Page 2
BF, Pfers FroFF
A RADHA NA TEXTILES
Wo. 30. Main Street, BALANGOLOA.
எம்மிடம் சகாய விலையில்
"rی கைக்கடிகாரங்களைபம், வாசனைப் பொருட்களையும்
பெற்றுக்கொள்ளலாம்.
SL S SLSLS S S SLS S
With the Best Compliments of
JAYAANIKA
STE ETT FRANC REFS Pealers in Ĝenerrr ! řHartfina re's Electrica 7 4 popliturces, Po V. C. Pippe’ 5. Fīrririigis, & Paints Erc:.
I 19, Gaille Road, Φeήίμναία. ΓNorth) ፲T P. 72ó078
With the Best Complinents of
Tr? JST SCCFMFMFMCA TOISES Local dari ed il DE) Telephorie Calliw,
Teler ald Fa. Service If 2. JAA feIAI STREET COLOMEO 3.
RW IL-WIKI.
Tal է 54 1994 54 I (155
TIC : 22926 TH,4 WIS (CE
凸、 $苹凸从奥
-- m SSSMSSSLSSSLSLS LSLSLS
 

life's E31'
R W
பன்: சுவை இலக்கிய இதழ்.
- 1 ப 11 - 1
இதழ் !
黄
IIII -
'f','"') P ii' 27 FL
Forrific r
| ||
செப்ான்ரி - பே
ஆசிரிர்: உயன்வத் ாம்:Tள்
* ارتة يق. 1 في
ஜெtா ம்-க்
தொடர்பு
he Eiff Priya Fila I93, Ulyar ia II, (Eranga, Sri - LCIJkvr.
இலக்கிய நெஞ்சங்களே!
'ப நிா' ஆப் வ் ரா ம் ஆண் டு ம ையும் தங்கு துண்டயின்றி வெய் நிகர மாக வெளிக்கெனர்ந்ததன் மூiம் 'சீப் சிடி வெளியிட்டானர் வரிசையில் (புத் திரை குத்திக்கொண்டுவிட்டர்கள்' என்து பல இலக்கி நெஞ் ங் கள் பன்னா !
ழ்த்தி التي تنمية أن ா கட்பு புள் வாேெதுப் பார்க் கும்போது நிச்சயமாகவே ப்ரியதில் இக் நீரோட்ட த்தோடு اتir ....... frقl& 18ت_دہ بiluو) கலந்து விட்டது அங்கே சித்து விட்டனர்.
என்று பண்ணத்தோன்றுகிறது.
இவ்வருடம் இலக்கியவாதிகளுக்குகுறிப் I 7"-st, f. č. 15 SIL', loji போ டு காதல் |
கருக்கு சிநப்டானதோர் ஆவர். tTئi, 5 تہai
விட்ட பூங்!ே வேண்டும்.
ப்ரிய நிலா த டி து இரண்டாவது ஆண்டு பலரின் கூட "இந்:ாட்டிக் கிெ து 31 : வ்
பி புர் ஆய்வு பி. பள் அபிவிருத்
IF. I.- If
الشه إلا أنا أن ان ، زي ر و و.
திக்கும் iழ்ப் بانيا க்கும் ! I ட் படுகின் பு ை ஆன ெ இலக்கி பத்துரையில் ஈடுபாடு சுெ : .பெர்கள்
அக்கண் புய்
பற்றிய எவ்வித காட்டப்படவில்லை' பன் ஈட்டிக்கட் தி:டெடுத்தப் பட்ட9: து பகத்துக்குகொண்டுவருவது பொதிந்து என எண்ணுகிறேன். எனவே அக்கிப்பி உணர்ந்தது போன்று கடந்த மார்ச் 7: : திகதி பு:லிம் சமய பண்பட்ட வ்ஜ்கள் அவச்சினால் ஆல்ஹாஜ் 4 1.
அரு முயற்சியா இ ந் நா ட் டு காெ நீரோட்டத்தோடு கலக்கப்பட்டு இலக்கியப் பணிபுரிந்த இருபத்தி எட்டு கள்: களுக்கு விருதும், பொற்கிளியும் பத்திரமும் வழங்கி கெளரவிக்கப் பட்டமை சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததோர் நிகழ்ச்சியாக
ஆள்வர் அமைச்சர் அ h i . எரி ன் பெரும்
ஆகிவிட்டது. இதுவரை காறும் இத்தகைய

Page 3
ப்ரிய நிலா نشأة
தோர் நிகழ்ச்சியை முஸ்லிம் கலைஞர்கள் காணவில்லை என் பதும் உண்மைச் சம்பவமாகும்.
இதேபோன்று நம் நாட்டில் தமிழ்க் கலை, கலாச்சாா வளர்ச்சியில் மிக முக்கிய கவனம் செலுத்திவரும் இந்து கலாச் சார தமிழ் மொழி அலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு பி. பி. தேவராஜ் அவர்களின் அரும் பெரும் முயற்சியால் கடந்த மார்ச் 29, 30, 31 ம் திகதிகளில் சாகித்திய விழாவொன்றை ஏற்பாடு செய்து எழுத்தாளர்கள் . கலைஞர்கள், இலக்கிய படைப்பாளர் கள் பலரை கெளரவித்து பட்டங்களும் பரிசுகளும் வழங்கப்பட் டன. அண்மையில் விவேகானந்தாக் கல்லூரியின் பழைய மான வர்கள் கெளரவிக்கப்பட்டமையும் இவைகளின் தாக்கபே
இத்தகைய முயற்சிகள் இலக்கிய தாகம் கொண்ட சகலருக் கும் பெருத்த ஆறுதலையும், மகிழ்ச்சியையும் அளிக்கின்ற தென்றே கூறவேண்டும். இவை பின்பற்றக்கூடிய முன்மாதிரி †,3ffT (5,1f
பெரும் L1 மல் பை இனத்தவர்களிடை யில் பட்டுமே இருந்த இந்தப் போக்கு, இன்று சிறுபான்மையினரான தமிழ், முஸ்லீம்
களுக்கிடையிலும் ஆரம்பித்துவிட்டாய பால், நாட்டின் .:
பகுதிகளிலும் எழுத்துலகை உயிர்ப்பித்துக் கொண்டிருக்கின்ற ஏனையவர்களும் இத்தகைய பாராட்டுதல்களுக்கும் கெளரவிட் புக்களுக்கும் தேடப்படும்பொழுது, எழுத்தாளர்களையும், கலை ஞர்களையும் உருவாக்கும் பணியில் உள்ள பத்திரிகையாசிரியர் கள், சிறு ச ஞ சி கை வெளியீட்டாளர் போன்றோர்களும் பொறுப்பு வாய்ந்தவர்கள் கண்களுக்குப் பட வேண்டும் என் . தையும் கூறாமல் இருக்க முடியாது.
இன்று சமூகப்பணியில் பல துறைகளிலும் சாதனை படைத்தவர்கள் நிறைய உள்ளனர். எனவே இத்தகையோரை இனங்கண்டு பொறுப்பு வாய்ந்த ஸ்தாபனங்கள், இயக்கங்கள் மாகாண சபைகள் , பிரதேச சபைகள் மூலம் மாவட்ட ரீதி யாக இத்தகைய உற்சாகமூட்டும் முயற்சிகளில் ஈடுபட கெளரவ அமைச்சர்கள் காட்டிய முன்மாதிரியை கருத்திற்கொண்டு செயல்பட்டால் நிச்சயமாக பிரதிவருடமும் பல கலைஞர்கள் வாழ்வில் ஒளிமயம் ஏற்படவும், அவர்களின் பங்களிப்பை பயன் படுத்திக்கொள்ளவும் நிச்சயமாக வழி பிறக்கும் என்ற கருத்தை சிந்தனைக்கு விருந்தாக்கி வைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
நன்றி ஆசிரியர்
மற்றவர்களின் துயரத்தில் இன்பம் கான முனையாதீர்.
 

ப்ரிய நிலா ن
அன்பின் பெருக்கை அருள்! CCCCCCCCCCCCCCCCCCCs
- கவிஞர் ஏ, யூ. எம். 6 கரீம்
ஆதியிறை அன்பே அகிலமாளும் நாயகனே சோதியே எந்தன் கவர்ணவாழ்வே - மேதினியை
காத்து இரட்சிக்கும் கண்ணிய மாகடலே நே த் தி ரத்தை அன்பால் நிரப்பு.
演 ★ ★ அண்ட சராசரங்கள் அத்தனையும் ஆக்கிவிடு: விண்டிடவே ஒண்ணா வியப்புடையாய் - மண்டலமே கண்டிடா (த1 மாபெரும் காட்சியெல்லாம் நின்னுடைய சண்டா ருதச் சக்தியே தான்.
★ ★ எறும்பு பெருயானை எண் 60ருப் போ!' விரும்பும் படைப்புகள் வேகமு ஹத் - தே(ப்) அடிப்படையா முன்றன் அரும்புகளைச் செப்பிட துடித்திடு முன்னடிடை நான்
★ ★ எண்டிசையும் தோன்றி ஒளிர்ந்து எழில் கூட்டும் அண்டகோள 10 த்தனையும் கண்டவரார்-ஆண்டவாநின் சக்திக்கே சாட்சியாம் அற்புதங்கள் சாற்றிடவே யுக்திக்கே எட்டா தெமக்கு
责 责 என்றன் உள்ளத்தில் எழுந்திடும் எண்ணங்களை உன்றன் புகழ்பாடி ஊக்கிடுவேன் - என்றென்றும் துன்பம் துடைத்துத் துணிவுடன் தொண்டியற்ற அன்பின் பெருக்கை அருள்!
° .°ܚ- ܡܫܝܚܒ̈ܫܝܚܿܪܝ 7 ܐ¬
எழுதுகோலைக் கொண்டு கற்பித்தவன் இறைவன்

Page 4
LCCLESYSEELSLTLkkSMMSSSLSSSMSLLSLLLLLYSLSSSLLSSLSLLLSLSkkkSYLLLLLLSSSSSLLLL SSS
முரண்கள்
ஆழைப்பு விழுதுகளால் முன்னேற்றப் பூமியை முத்தமிட முனைகிறேன்
உன் முயற்சி சிரமம் முதலாளித்துவ சமூகத்
தால் சுரண்டப்பட்டுவிடும்' என எச்சரிக்கிறான் சோஷலிசவாதி. о
‘உழைப்பால் உயர்ந்தவர் உளர் பலர் உன்னால் இயலும், சந்தர்ப்பம் கடவுளுக்கு மறுபெயர் சாதித்துவிடு வலது காலை எடுத்து வைத்து வா!' முயற்சியால் உயர்ந்தவ
அலுபவ அழைப்பு.
* கனிமீது வீழ்ந்தோர்கள் ஐ.ண்ணுங்கள். கடல்மீது வீழ்ந்தோர்கள் நீந்துங்கள்’’ கண்ணதாசனின் கவிதைக் குரல்
ட்ரிய நிலா
- கலாவிஸ்வநாதன்
இதயத்தின் எதிரொலி
பTப் எதிர்க்கும்
கிரகங்களின் நியதியான சுழற்சி உயிர்களில் அவை படியும் விதிப்படியே எல்லாம் இயங்கும்; இருக்கும். எதற்கும் ஒரு காலம்
உண்டு
பொறுத்திரு மகனே’’ ஜோதிட பெரியாரின் ஆறுதல் ஆராய்ச்சி மொழி
* இயற்கையான பூ
சுத்தமான நீர், காற்று
சூரிய சூடு, ஒளி
சுதந்திரமாய் அதில்
nனங்களி
(பூ - விழி!
களித்திரு!!
பரந்த வெளியில்
பறந்திடு
என்கிறான்
என் கவிதைத் தோழன் ,
நற்கவிஞர்கள் எல்லாம் இறைவனின் சீடர்கள் (அல் ஹதீஸ்)

ப்ரிய நிலா 3
CCC88CCCCC88CC88CCCC88C : நாலாம் தகப்பன் 3c8cccccccccc8c8c8c8c8c8c8c808
அல் அஸ்"9மத்
ஒரு நட்டநடு மாலையில், எங்கள் இரத்த நாட்டின் எரிமலை மீண்டும் கனன்றது,
குன்னானின் வங்கியை எப்படிப் பிச்சையடிப்பது என்ற புர்கானிஸ்த்தில் நானென் எதிர்காலத்தைக் கடைந்துகொண் டிருந்தேன். என் ஆடை எதிர்வந்து வெடித்தாள் - வாயில், ‘பாத்தீங்களா இந்தப்பய செஞ்சிருக்கிற வேலய' என்ற கொதிப்போடும் கைகளில், பதினாறு பதினெட்டுக் கிலோகிரா மின் பித்தளை லாவாக்களோடும் ,
மூன்றரைக் சிலோகிராமும் இரண்டு கிலோ கிராமுமான பித்தளைப் பல்சக்கரங்கள் இரண்டும் ஐந்து கிலோ கிராமுள்ள பல்வெட்டப்படாத சக்கரம் ஒன்றும், ஐந்தரைக் கிலோகிறா முள்ள மூன்றங்குல விட்டத்தின் பித்தளை உருளைத்துண்டு ஒன்றும், கயமை பாசானித்த நாடாரின் லாச்சில்கூட, இந்தத் தங்கத்தின் விலை அப்போது கிலோ நாற்பதைம்பது ரூபர்.
நான் பெற்ற நாலாவது தகப்பன் ஹனிபாவின் காபிரிஸம் எனக்கு ஏற்கனவே ஸ்கொலர்ஷிப் ஆனபடியால், மாம்பழத்தி லேற்பட்ட கூனலோடு, பூமிக்குக்கீழே கிடந்த சாக்குத் தொட் டிவில் வில்லாகச் சம்மணித்தேன் -
என் பிம்பமான ஆடையில் உள்ளத்தை அண்ணார்ந்து பார்த்தேன். நான்தான் அவள்; இரண்டாயிரத்தைக் கடந்த வயது அங்கே கபனிட்டிருந்தது.
‘எங்க இருந்திச்சி' என்றது என் அடிவாரம்
* "ஹனிபாவுட்டுப் பொட்டிக்குள்ளதான் . . .
நேத்து அந்திக்கு என்னமோ பார்ஸ்லக் கொண்டாந்து ஒளிச் சொளிச்சு வைக்கயிலேயே எனக்கு சந்தேகம் . . . இப்பத்தானே தொறந்து பார்த்தேன்! ரெண்டு துண்ட இன்னைக்கித்தாங் கொண்டாந்திருப்பான் போல! எங்கிருந்தப்பா இதுகலக் கள வெடுத்திருப்பான்?
கவிதையில் இரத்தினச் சுருக்கமான பேரறிவுகள் உள்ளன. (அல் ஹதீஸ்)

Page 5
ப்ரிய நிலா
ச்சீ, ஏனிந்த மிருகப்பிறப்பாக எனக்கும் இருகால் வைத் தான்? ஊர்ந்து திரியும் அப்பாவிச் சிங்கம், புலிகளாகவோ பறந்து பால் குடிக்கும் மாடாடுகளாகவோ கிளைபரப்பி விழு
திறக்கி வணங்கிக் களிக்கும் அருகம் புல்லாகவோ படைத்திருக் கக் கூடாதா!.
‘எங்க களவெடுக்கிறது; எல்லாம் வேலசெய்ற இடத்ல தான்' என்றது என் மானக்கடன்.
'இவ்வளவு பாரத்த எப்படிக் கொண்டாந்திருப்பான்?'
என்று, பித்தளைகளில் இவன் தாஜ்மஹாலைக் கண்டான்.
ஹனிபா எழுத்தெண் விளையாடப்போன காலத்திலிருந்தே மேடுபள்ள மூக்கன்தான். அந்தக் காலத்தில் அவனுடைய பிரம் புச் சிஷ்யர்கள் மாதமொரு அறிக்கை அனுப்பத்தயங்குவதில்லை. மேசைமேலிருந்த நிதிமந்திரி கடத்தப்பட்டார், லாச்சிலிருந்த றெனோல்ட் கம்பெனி கடத்தப்பட்டது என்றவாறு கின்னஸ் க்ளெப்டோமேனியாக்கள், இட்லி இரும்பையாவும் வாரமொரு தரம் வந்து ஹனிபாவின் தர்மச்சாப்பாடு சம்பந்தமாக வசூலிக் துப் போவார். இவனைக் காலால் அணைத்துப் பார்த்தேன்: 56рд5шт6і» போதித்துப் பார்த்தேன்; நாவால் உதைத்தும் பார்த் தேன். அவனென் நாலாம் ஜாதித் தகப்பனாகவே தான் இருந் 5 frait
இவனது பன்னிரண்டாவது பிரசவத்தின் பிறகும், தண் ணிரிலிருக்கும் ஐந்து கண்டங்களை மட்டும்தான் நம்பியிருந் தேனே தவிர, நெருப்பிலிருக்கும் இவனது ஆறாக் கண்டத்தை நினைத்துமிருக்கவில்லை நான். எங்களின் அரைமாத பட்ஜட் டொன்று அப்படியே அவனோ டு தேசியமயமாகிப் போன தோடுதான், ஜெக்பொட் எத்தனை நோட்டுக்களையும் விழுங் கும் என்பதையும் தாய்நாட்டின் எந்தப் பகுதியிலும் எவரும் மறையலாம் என்ற அரசியலையும் கண்டவாரியாக நான் கண்டு கொண்டது. - a
தாய்ப்பால் கொடுப்பதால் இழமை -9IԱ) (35 கெடுவதில்லை.

ப்ரிய நிலா
'திருடனுக்கா திருடச் சொல்லிக் குடுக்கணும்?. எல் லாம் நாஞ்செஞ்ச பாவம், தலவிதி! இப்ப அந்த இடத்தில யும் ஏம் மானம் போச்சி! மிஸ்ட்ட ஜோஜூக்கு இது தெரிய வராமயா போகும்? . ’’
‘இதென்னப்பா இது, இவனத் திருத்தவே ஏலாது போலருக்கே? இப்ப என்னாப்பா செய்றது?...'
நானென்ன செய்தேன்? இரண்டு மூன்று வாரங்களாகப் பத்திருபது கண்களோடு தேடிப்பார்த்தேன். வியாதிகளுக்கெல் லாம் அறிவித்துப் பார்த்தேன். இலங்கா புரி என்ன புதிய தீவா அநுமானம் கண்டுபிடித்துவர? ஹனிபா, கப்பம் மறுத்த கலீபா வாகிவிட்டான் முக்கால் கலண்டருக்குப் பிறகுதான் ஒரு பதி னைந்து வயதுக் கிழவன் வந்து சொன்னான், ஹனிபா குருநா கலையில் துருவக் க ட ல் களை ஊட்டிக்கொண்டிருப்பதாக நானுமென் மூத்த தகப்பனும் குள்ளநாட்டு இரும்புத் துண்டி லேறிக் குறி வை க் தோ ம், "ருப்பியலாய் ருப்பியலாய்! " என்ற சந்தையோடு, என்னை மாற்றாந் தாயாக்கிக்கொண்டு ஹனிபா நின்றிருந்தான். அவனது ஒட்டப் போட்டியில், எங் களின் தரிசனம் துவக்குச் சூடாக இருந்தது! பிறகவன் எங்கள் வீட்டை ‘கோலாக்கி வந்தடைய மேலும் நானுாறு கரியன்கள் எரியவேண்டியிருந்தது.
என்ன செய்வது இனி?. ஆடையும் என்னையடுத்தே அமிழ்ந்த 1 : . என்ன செய்வது?
காந்தி எனக்குள் செத்துப்போக வேண்டும் ஹிட்லர் எழும்ப வேண்டும்!.
'மிஸ்டர் ஜோஜ்கிட்ட போய்ட்டு உண்மைய சொல்ல வேண் டியதுதான்!' என்றபோது, என் மேலுதட்டின் மேல் உரோமம் வளர்ந்தது. இந்தப் பயணமாவது இவனப் போலீஸ்ல புடிச்சிக் குடுக்க வேண்டியதுதான்! .' - -
女 y 大 女 ஆறேழு நுாறு சூரிய அடுப்புக்குப் பிறகு ஹனிபா திரும்பி விட்டான் ஆபிரிக்காவிலிருந்து இவனை ஆபிரகாம் லிங்கன் அனுப்பிவைத்த மாதிரி. என் ஆடையின் அன்றைய மூளைச் சலவை, அவனுடையகண்களிலிருந்து அழுக்கை வெளியேற்றியது.
தாய்ப்பால் கொடுப்பதால் பெண்களுக்கு மார்பு புற்றுநோய்
வருவதில்லை. • ܚ ܀

Page 6
s
பரிய நிலா
நானும் பக்கத்து குடாப்புக்கு ஓடிப்போய்க் கொழுத்த தக் காலிச் சிறகுகள் இரண்டு வாங்கிவந்து குர்பான்செய்தேன். இரத்த நாடு அன்றிரவு கவிச்சியாக ஜீரணித்து மகிழ்ந்தது.
காலையிலோ ஜீரணத்தின் உருவம் வேறாக இருந்தது. இவனுக்காக வீட்டுக்குள் எப்படியினியோர் இலங்கையை நான் உருவாக்குவது? அறிவுதேட அனுப்பியும் பலனில்லை. காட்டி லிருந்து வந்த மரம் அடுப்படியில் கிடந்தால் கரியாகும்: வெயில், மழை, பட்டால் இற்றுப்போகும். பணம்தேட அனுப் பினாலும் ஊருளை கொதிக்கும்.
★ ★ 女 ★ என் இரு கைகளுமே முடங்கியபோதுதான், மிஸ்டர் ஜோர்ஜ் என் இடுப்புத் துணியைக் கட்டிவிட்டார்.
"ஆமாப்பா, அதத்தாஞ் செய்யனும்! இவெந் திருந்தப் போறதில்ல; அது சும்மாப் பொய்வேல! அவருகிட்ட நடந்த தச் சொல்லிட்டு, இவன வேலயவுட்டு நிப்பாட்டுங்க! இதோட போகட்டும்; நாளைக்கி இதஷடப் பெருசா நடந்தா என்னா பண்றது! "
‘'இப்ப எங்க போய்ருக்கிறான்?' "அந்தா பிட்டணியில போல அடிக்கிறான்! ரெண்டு மணிக்கே வந்துட்டானே! '
'அந்த ராஸ்க்கல இங்க கூப்புடுங்க!'
大 玄 པ་དང་། a உள்ளே கூப்பிட்டார் மிஸ்டர் ஜோர்ஜ் ஹனிபாவின் சகல விஷயங்களையும் அவரிடம் சேமித்தேன்.
**இந்நிலையில் அவனை நான் பாடசாலைக்கு அனுப்பு வதும் உசிதமில்லை, தொழிலுக்கனுப்பினாலும் உலகம் என் னைத்தான் குறை சொல்லும். ஆகவே, உங்க ளு டை ய தொழிற்சாலையில் ஏதாவதொரு பிரிவில் இவனைப் போட்டுத் தொழில் பழக்குவீர்களானால் மிகுந்த நன்றியுடையவனாக இருப்பேன். சம்பளம் வேண்டாம்! அவனை ஒரு தொழிலாளி யாக்கினால் போதும்!'
மிஸ்டர் ஜோர்ஜ் ஓர் இரக்கப் பிசாசானபடியால் என் கண்களை ஈடு வாங்கினார். என் முடமாகிய கைகள் அவரை உயர்த்திவிட்டன. அவரது என்ஜினியரிங் செக்ஷ னில் நாலு பேர்கள். ஹனிபா ஐந்தாமனாக அழுக்குடுக்கத்தொடங்கினான். தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளை நோய் எதுவும் எளிதில் அநுகாது.

ப்ரிய நிலா
அசுரத்தனமாக ஹனிபா இரும்படக்கி வருவதாக மிஸ் டர் ஜோர்ஜ"ம், லேத் மெஷினை விடக் கறாரான மெஷின் இவனென இவனது பூர்வீகம் தெரியாத நால்வருமாக மாறி மாறி என்னிடம் கண்ணுரறு காட்டி இரண்டு நிலவுகள் காட்சி யாகின. ஹனிபாவின் அந்த மீட்சி, எனக்கும் இவனுக்குமிடை யில் எங்களது ஏழாவது தகப்பனை பிரஹ்மித்திருந்தது.
ஆனால் கரு கறுக்கும்படியான ஓர் அழைப்பைத் திடீ ரென்றோர் அமாவாசையில் விடுத்திருந்தார் மிஸ்டர் ஜோர்ஜ்.
女 大 女 ★ அபாண்டமாக அறைக்குள் புகுந்த ஹனிபா, ஆகாயத் தில் மிதந்த பித்தளை நோட்டுக்களைக் கண்டதுமே கம்பியெண் ணத் தொடங்கினான்.
‘இதெல்லாம் என்னடா?’’
*' என்னடாது'? ‘சத்தம் போடாம மெதுவா கேளுங்க! அடுத்தவீட்டுக் குத் தெரிஞ்சா வெக்கக்கேடு!..”*
‘'இதெல்லாம் ஏதுடா ஒனக்கு?’’ 'இது இதெல்லாம் அங்க வீஸ்றது!' “ரெண்டு மூணாய்றம் ரூவா சாமானத்த வீஸ்றாங்களா? ஒனக்கா அவுங்களுக்கா பைத்தியம்? '
‘இதெல்லாம் வீசித்தாங் கெடக்கும்!’ அறஞ்சேன்னா பல்லு போய்ரும் றாஸ்க்கல்! வீசிக் கெடந்தா நீயேண்டா கொண்டாறனும்? முனிசிப்பல் லொறியா 虚3・'
* *
**இத நீ களவெடுக்கல்லியா?’’ **இல்ல!" 'ஜோஜ் மாத்தயாகிட்ட இப்ப போய் கேக்கவா?* *ம், கேளுங்க! . 39 y அவனது மம்பட்டிகளுக்கு மாறாக அந்தப் பித்தளைப் பற்களை இடம் மாற்றும் பொஸ்ப்பறஸ் எனக்குள் திரவித்தது.
大 ★ 大 "நாங்கள் பன்னிரண்டு வருஷங்களாக இந்த என்ஜினி யரிங் செக்ஷனை நடத்தி வருகிறோம். இதுவரை ஓர் ஆணி நம் உடலில் மூன்றில் இரண்டு பங்கு நீர் உண்டு.

Page 7
0 ப்ரிய நிலா
யாவது காணாமற் போனதில்லை. கடந்த வாரம்தான் ஒரு ஸ்பெனர் ஸெட் காணாமற் போயிருக்கிறது!’ என்றார் ஜோஜ் மாத்தியா,
எனக்குள் ஆணிகள் நிறைந்தன. *நீர் வருந்தாதீர். ஹனிபா இன்னும் சிவப்புக்கையன் ஆகாததால் அவனுக்கும் இது தெரியவேண்டாம்! .'
"நோ ஸர்! இந்த முறையாவது அவனை நான் மக் கொனைக்கு அனுப்ப உதவுங்கள்!'
‘நோ! ஒரு பிள்ளையின் வாழ்வாக இருப்பதால் நாம் போலீஸாகிவிடக் கூடாது ஆயுதப் பெட்டிக்கு இப் போ து ஹனிபாதான் பொறுப்பு. இவன் எடுத்ததாக நாம் சந்தேகிப் பது இவனுக்குத் தெரியவே கூடாது. யூ ஃபலோ மீ?. யாரோ களவெடுப்பதாகவும் கள்ளனைப் பிடிக்க நாங்கள் இரகசியமாக ஒற்றர்களை நியமித்திருப்பதாகவும் இவன் தன் க ட மை யில் கவனமாக இருந்து கள்ளனைப்பிடிக்கவும் உதவ வேண்டுமென் றும் நான் கூறியதாக நீர் அவனிடம் கூறும் அருமையான வேலைக்காரன்; திருந்தி வி டு வா ன். இந்த மாதத்திலிருந்து தினசரிக்கு ஐம்பது ரூபா சம்பளம் போட்டுக் கொடுக்கிறேன்; இதுவரையில் இவனுக்குச் சம்பளம் கொடாமல் விட்டது என் தவறுதான். அவனுக்குச் செலவுகள் இல்லை என்று மட்டிட நமக்கென்ன உரிமை இருக்கிறது? உழைப்பை வாங்குபவன் பெறுமதியைக் கொடுத்திருக்க வேண்டும்! என் பிழை தான் நீர் வருந்த வேண்டாம் .'
கழுவப்பட்ட கண்களோடு திரும்பினேன்.
ஆனால் பத்து நாட்களுக்குள் இதோ என் கண்களையே இவன் களவெடுத்து விட்டானே! .
பஞ்சமா பாதகங்களுள் மூன்று அவனிடமிருந்தன. ஒன்று என்னிடம் வரும்போல் தெரிந்தது. அதைச் செய்வதற்குள் அவனை அப்புறப்படுத்த வேண்டியிருந்தது.
‘சரி இனிமே நீ அங்க வேலைக்கும் போக வாணாம்: ஒரு மைருக்கும் போக வாணாம்! ஒண்ட இஷ்டம்போல எங்க யாவது எப்புடியாவது போய்த்தொல! போயும் போயும் அந்த மனுஷனுக்குத் துரோகஞ் செஞ்சியேடா! எனக்கு வந்து எருமை யாப் பொறந்தவனே, போ அங்கிட்டு!"
திருடர்கள் விட்டால் அகப்படமாட்டார்கள், (க. க. தாஸன்)

ப்ரிய நிலா
'உண்மய சொல்லு ஹனிபா, இதுகளக் களவெடுத்தியா?*
9
LSL SLL S LLLL LSL 0LLL S SSLLLLL LL0 LLS S LLLLL LLL LLLL S SLLLSL LSL L SLLLL LLL LLS LL LLLLL L LLL
''G. Frt Gig) LIT!'
“அதுதான் அவன்ட முழியே சொல்லுதே, நீங்க என்னமோ இப்பத்தான் உருகுறீங்க! போ போ! ஏம் முன்னுக்கு நிக்காத!'
நானும் புறப்பட்டேன். “ஜோஜி மாத்தயா கிட்டயா போறிங்க?*
““வேற எங்க! . போய் சொல்லீட்டுப் பெத்த கொடு மைக்காக மன்னிப்புங் கேட்டுட்டு வருவோம்! தெரிஞ்சிகிட்டே இவன இனி அங்க அனுப்பேலுமா?"
**சைக்கில்லயா போப்போரீங்க?" 'அப்பறம் நடந்தா போகேலும்?’’ ** பெற்றலடிக்க சல்லி?* 'பஜூல் கிட்ட கேட்டுப்பார்ப்போம்!' ‘பஸ்ல போய்ட்டு வாங்களேன்!'
‘ச்ச, யைத்தியமா ஒங்களுக்கு! அங்கிட்டு ஒரு கட்ட நடக்கனுமே! இதயுந் தூக்கிக்கிட்டு என்னால சாகேலுமா?’’
女 ★ 女 大 பஜூலின் புதைகுழி மூடப்பட்டு ஒரு வளையமும் சாத் தப்பட்டிருந்தது. அவர்களெல்லாரும் காலையிலேயே வாப்பா வீட்டுக்குச் செத்துப்போய் வி ட்ட தா க ப் பக்கத்துச் சுடுகாடு கூறியது.
இருபது கிலோ மீட்டருக்கும் தண்ணிர் வார்க்க லீட்ட ருக்கு முப்பது ரூபாவாவது வேண்டும். தொடையிலிருந்தது பத்தேதான்.
மரக்கறி தேவதாஸிடம் போனால் அவ ன் கசாப்புக் கடைக்குப் போனானாம். சிறிசேனையை யாரோ டபல் ஆர்’ போத்தலுக்குள் அடைத்திருந்தார்கள் இன்னும் .
வேண்டாம்; நடுத்தர வங்கிகளிலெல்லாம் நாளாந்தக் கொள்ளைகள்தான் ,
நாடாரின் தோலுக்குள் அமீர் காக்கா நின்றிருந்தார் பஜார்க் குடிசையில். அவரிடம் போய்ப் பித்தளைகளை மதித் தேன். நரகத் தராசு பதினாரைக் காட்டியது. பித்தளைகளை மறுபடியும் சணலுக்குள் போட்டபோது,
அறிஞர்கள் அகப்பட்டால் விடமாட்டார்கள்.
"-"قعاعتAwww.ham

Page 8
2 ப்ரிய நிலா
** என்னாய், விக்கல்லியா?" என்று பதறினார் அமீர் காக்கா. 'நம்மட த ரா ஸி ல சின் னொ ரு மிஸ்டேக்கீக்கி தொரைக்கெல்லாம் அப்படிச் செய்ய மாட்டேந்தானே! பதி னெட்டுண்டு போடுவம் !’’
திடீரென்று . . .
*" கிலோ எவ்வளவு?’ என்றேன் பஜூலிடம். * முப்பை போடுவம் !" என்றான் சிறிசேன.
* கிழிஞ்சு போச்சி தேவதாஸ்! அம்பது போடுங்க;’’ * 'இல்ல தொர, நாப்பை போட்டுறன்! " அந்த நீண்ட உருளைச் சத்தியத்தை மட்டும் உருவி மீஸானில் வைத்தபோது என் வக்கீல் அங்கியின் மீது ஏற்பட்ட நடுக்கம் ஐந்தரைக் கிலோவாக இருந்தது.
இருநூற்றிருபது ரூபா அரசியலோடு இரும்புத் துண்டி லேறி இறபர் மரங்களைத் தேய்த்தவாறே நான் ஏதுமறியாச் சிலுவையை நோக்கிப் போனபோது, நாலாவது தகப்பன் மறு படியும் இந்த மகனை விட்டுப் போயிருந்தான் இரத்தநாட்டில்.
வெள்ளிக்கிழமை
* உலக மக்களின் உள்ளங்களிலேயெல்லாம் ஆழப்
பதிந்துவிட்ட நாள் வெள்ளிக்கிழமை.
* ‘ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தையும் கொடு” என்று ஏறுபோல் முழங்கிய ஏசுபிரானை மரணக்கோலத்தில் கண்ட நாள் வெள்ளிக்கிழமை.
* ‘நான் யா ரை யும் அடிமைப்படுத்த மாட்டேன். யாருக்கும் எஜமானாகவும் மாட்டேன்" என்று முழங்கிய ஏப்ரகாம்லிங்கன் ஜான்வில் கிஸ் பூத் என்ற அற்பனால்சுடப்பட்ட நாள்வெள்ளிக்கிழமை
* “சுதந்திரம் எனது பிறப்புரிமை இதை வழங்கிய வன் இறைவன். என்னை அடிமையாக்க ஒருவருக் கும் உரிமை இல்லை என்ற மகாத்மா காந்தி யின் உயிரைக் குடிக்க அனுமதித்த நாள் வெள் விரிக்கிழமை, நன்றி
நம் உடலில் 1 பவுண்ட் குறைய 34 மைல் நடக்கவேண்டும்,

ப்ரிய நிலா 3
ஒரு சமூக சேவையாளர்
அறிமுகமாகின்றார்.
சமூக சேவையென்பது புனிதமானதோர் பணியாகும். சிலருக்குச் சேமூக சவையில் ஈடு பாடுகொள்ள ஆர்வம் இருந்தா லுங்கூட, காலநேரம் பற்றாக் குறையால் அவ்வார்வம் தன்னை யறியாமலேயே வி டு பட் டு ப் போய் விடுகின்றது.
இன்னும் சிலருக்கு எத் தகைய வேலைப்பளுக்கள் இருந்த போதிலும், தானும் சமூகத்தின் அங்கத்தவன், சமூகத்துக்கான பங்களிப் பை அளிப் ப தி ல் - தனக்கும் ஒரு பங்குண்டு, என்று எண்ணுவோரும் நம்மிடையே இல்லாமலில்லை.
அத்தகையவர்களுள் ஒருவரைக் கண்டுபிடித்து 'ப்ரிய நிலா" இதழ் பதின்மூன்றின் ஊடாக அறிமுகம்செய்து வைக்கப்படு வதன் மூலம் இளைய தலைமுறையினருக்கு பயனளிக்கும் என்று எண்ணுகிறேன்.
சமூகசேவை ஒரு கண்ணியமான பணி. சந்தர்ப்ப சூழ் நிலைகள், வாய்ப்புக்கள் என்று கருதாது, தான் பிறந்த, வாழ் கின்ற கிராமத்துக்கு, நாட்டுக்கு, சமூகத்துக்குத் த ன் னா ல் இயன்ற பணிகளைச் செய்வது கடமையாகுமென்று அடிக்கடி கூறிக்கொள்ளும் தி ஹா ரிய கலகெடிஹேனயைச் சே ர் ந் த அல்ஹாஜ் செய்யது அமானுல்லாஹ் மெளலானா அவர்கள் இனியவர்; பொறுப்புணர்ச்சி உடையவர் ; நேர்ம்ை போனவர்.
எல்லோரும் நீதியை விரும்புகிறார்கள். ஆனால் தங்கள் விஷயத்தில் இல்லை.

Page 9
4 ப்ரிய நிலா
திஹாரிய Y. M. M. A. இயக்கத்தின் ஸ்தாபக அங்கத்தவர் களுள் ஒருவரும், கடந்த நான்கு வருடங்களாக இவ்வியக்கத் தின் தலைவராகவும் இருந்து அரிய பல சேவைகளைச் செய்து வருகின்றார்.
எப்பொழுதும் மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித் தும், ஆரோக்கியமான ஆலோசனைகளைக்கேட்டு உடனுக்குடன் செயல்படுத்த முற்படும் தன்டையைக் கொண்ட இவ்விளைஞரின் தலைமைத்துவத்தால், இன்று திஹாரிய Y. M. M. A. பல முற்போக்குத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றது.
அஷ்ஷெய்க் ஸி. அய்யூப் அலி அவர்களின் ஆலோசனைப் படி, வட்டியில்லா வங்கி ஒன்றையும் அமைத்து அதன் மூல மாக சில்லரைக் கடையொன்றையும் நடாத்தி வருவதோடு, இவற்றின் நிர்வாகத்தை இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்களுள் ஒருவரான டாக்டர் M. M. மன்சூர் (செயலாளர்) அவர்களின் பொறுப்பிலும், கல்விப்பணியில், பாலர் பாடசாலை, ஆங்கிலம், சிங்களம் போன்ற வகுப்புக்களைப் பொறுப்பேற்று நிர்வகிக்க ஒய்வுபெற்ற உள8ர் ஹஸன் (புவாத்) அவர்களிடம் ஒப்படைத்து திறமையான முறையில் நிர்வகித்து வரும் தலைவாான ஜனாப் மெளலானா அவர்கள் தி ஹா ரிய ‘ஸ் காத் கமிட்டியின் பொருளாளராகவும் உள்ளார்.
இளைஞர்களின் பொழுதுபோக்குக்காக, நூல் நிலையம் , கராட்டி வகுப்புக்கள், உள்ளரங்க, வெளியரங்க விளையாட்டுக் களுக்கான வசதிகளையும் செய்து கொடுத்துள்ளதோடு சுய தொழில் வாய்ப்புக்கான பயிற்சிகளையும் (Y. M. M. A. மூலம்) அளிப்பதிலும் அக்கரை கொண்டுள்ள இவ்விளம், சமூக சேவையா ளர் அல்ஹாஜ் மெளலானா அவர்கள் நாற்பது வயதையுடைய துடிப்புமிக்க ஒரு வர்த்தகராவார். இவர்களிடம் இ வ. ரு க் கு தனது தொழிலோடு சம்பந்தப்பட்ட வேலைப்பளுக்கள் இருந்த போதிலும், சமூகசேவையில் காட்டி வரும் ஆர்வம் வளர்ந்து வரும் புதுத் தலைமுறையினருக்கு முன்மாதிரியாக அமையவேண் டுமென்பதே இவரின் நோக்கமாகும். "இளைஞர்கள் பொறுப் ளவர்களாக முன்வந்து நல்ல முயற்சிகளில் ஈடுபட வேண்டும். நாம் நி த மும் அவர்களுக்குக் கைகொடுக்கத் தயாராக உள் ளோம்' என்று மனம் விட்டுச்சொல்லும் அல்ஹாஜ் மெளலானா அவர்களின் முன்மாதிரி இன்றைய இளைஞர்களுக்கு வரப்பிர சாதமாக அமையட்டும் (ஆசிரியர்)
அனாதைகளை விரட்டாதீர்கள்.

ப்ரிய நிலா I
历
ஆங்கில இலக்கியம் (விஷேட கட்டுரை]
வில்லியம் சேக்ஸ்பியர்
( 564 . . 616)
ஆங்கில இலக்கிய வானில் விரிகதிரோன்
- எம். வை. எம். மீஆத்
இன்று அகில உலகிலும் அனையா ஜோதியாய் விளங் கும் ஆங்கில மொ ழி யை ஊடகமாகக்கொண்டு இலக்கியம் படைத்து, மறைந்த மாபெரும் படைப்பாளி வில்லியம் சேக்ஸ் பியர் ஏப்ரல் மாதம் 1564 ல் பிறந்தார். இந்த மகா ஆங்கி லக் கவிஞர் இங்கிலாந்தில் ஸ்டரட் போட் ஒன் அவொன் (Sta rad Ford - on - Avon 665T68) b. QL 536o pi55, 956) உலகுக்கே உரிய ஒருவராகத் திகழ்ந்தார். அவரது பிறந்த திகதி கூட இது வரை சரியாகத் தெரியவில்லை அ வ ர து தந்தை ஜோன் சேக்ஸ்பியர் ஒரு சாதாரண வர்த்தகர். தனது சொந்த ஊரிலேயே ஆரம்பக் கல்வி பெற்று இடையில் தனது தந்தையின் தொழில் வீழ்ச்சி காரணமாக இலக்கணப் பள்ளியி லிருந்து விலகி, தொழிலில் ஈடுபட நிர்ப்பந்திக்கப்பட்டார்.
சேக்ஸ்பியர் தான் இலக்கணப் பள்ளியில் கற்ற ஆங்கில மொழி அறிவுடன், சிறிது லத்தீனும், மிகக் குறைவான கிரேக் கமும் பயின்று, பின்பு, அவற்றின் அடிப்படையில் சுய முயற்சி காரணமாக, பரந்த அனுபவக் கல்வியை ஈட்டிக்கொண்டார். அவரது மொழி அறிவு வளத்தை ஆய்வு செய்த ஆய்வாளர் கருத்துப்படி, சேக்ஸ்பியர் சுமார் 25000 சொற்களை மிக இலகு வாகப் பயன்படுத்தி ஆங்கில மொழி வளத்தில் மிக மேம்பட்டு விளங்கினார் என்பது புலனாகிறது.
சமகாலத்தில் தோன்றிய படைப்பாளிகள் அனைவரையும் விட, ஆங்கில மொழியைக் கையாள்வதில் மிகத் தேர்ச்சி பெற் றவராக விளங்கினார் என்பதை தனது இலக்கியப் படைப்பு களைக் கையாண்டுள்ள முறையின் மூலம் நிரூபித்துள்ளார்.
யாசிப்போர் முகத்தில் சீரி விழாதீர்கள்.

Page 10
6 ப்ரிய நிலா
சேக்ஸ்பியர் தனது பதினெட்டாவது வயதில் ‘அன்னி ஹதாவே" என்னும் மாதை மணந்தார். அவர்களுக்கு ஸ்"ஸானா , ஹம்னட், ஜூடித் ஆகிய மூன்று பிள்ளைகள் பிறந்தனர். 1592ல் சேக்ஸ்பியர் லண்டன் நகருக்கு குடிபெயர்ந்து சென்று, அங்கேயே தொழில் புரியலானார். ஒரு நாடகத் தியேட்டரில், நடிகராக வும், பின்னர் நாடக ஆசிரியராகவும் பிரபல்யமானார். இக்கட் டத்திலேயே சேக்ஸ்பியர் தனது இலக்கியத் திறனை வெளிக் காட்டினார். குறிப்பாக அரங்கேற்றப்படும் நாடகங்களில் மேடை யமைப்பு, நடிகர் இயல்பு போன்றவற்றிற்கு இணங்க கதை வசனங்களைத் திருத்தியமைக்கும் பணியை சேக்ஸ்பியரே மிக நுணுக்கமாகச் செய்து வந்தார். இவ் வா று இவரது அபார திறமையை இனங்கண்டுகொண்ட நாடகக் கம்பனியார், சேக்ஸ் பியரையே நாடகங்களை உறுவாக்குமாறு வேண்டினர். இதனால் ஊக்குவிக்கப்பட்ட சேக்ஸ்பியர், ஆரம்பத்தில் சமகால நாடக ஆசிரியர்களின் நாடகங்களைப் பயன்படுத்தி மக்கள் விரும்பும் சிறந்த நாடகங்களை அரங்கேற்றினார். இவ்வாறு இயங்கிய சேக்ஸ்பியரை ரொபட் கிரீன் போன்றோர் கடுமையாக விமர் சித்தபோதிலும், அவர் தனது முயற்சியால் சிறிது காலத்திற் குள், அவர் ஒர் உன்னத நாடக ஆசிரியராகவும், கவிஞராகவும் மாறினார்.
இவரது ‘ஸொனட்" 14 அடிகளைக் கொண்ட பாக்கல் மிகவும் அற்புதமானவை. “ஹென்றி ரியோ தெஸ்மி என்னும் பிரபுக்காக இயற்றிய 154 ‘ஸொனட்’ பாடல்கள் அற்புத படைப்புகளாயின. இக்கவிதைகள் காதல், கவலை, அதிருப்தி, பொறாமை போன்ற இன்னோரன்ன கருக்களை பொதிந்தவை யாக விளங்கின.
1599 ல் சேக்ஸ்பியரும், அவரது கம்பனியாரும் "குளோப்" (Globe) என்னும் பாரிய தியேட்டரை நிர்மாணித்தனர். இத் தியேட்டர் மூலமே சேக்ஸ்பியர் உலகமே வியக்கத்தக்க வரலாற் றுக் கதைகளை நாடகங்களாக உருவாக்கி அரங்கேற்றி அகிலம் புகழும் எழுத்தாளராக, கவிஞராக, நாடக ஆசிரியராக திகழ்ந் தார். ‘ஸ்ட்ரட் போட் அவொனில் ஒரு சாதாரண இளைஞ ராக வாழ்ந்த ஒருவர் இவ்வாறு அற்பு த மா க அரண்மனை வாழ்க்கை முறையை யதார்த்த பூர்வமாக படம் பிடித்துக் காட்டினார். இதேபோன்று அ வ ர து சக ல பாத்திரங்களும் யதார்த்தமாகவே அமைந்தன. என்பது ஆச்சரியப்படத்தக்க ஒரு விடயமாகும்.
பெற்றோர் மீது கருணை காட்டுங்கள்.

ப்ரிய நிலா 7
*நான்காம் ஹென்றி' என்ற நாடகத்தைப் பார்த்த மகாராணி சேக்ஸ்பியரிடம் காதலை மையமாகக்கொண்ட மற்றுமொறு நாடகத்தைத் தயாரிக்குமாறு வேண்ட, "வின்ட் Gar Tingst LDS payol Lutiful Triassir' (The Merry Wives of Windsor) என்ற நகைச்சுவை நாடகத்தை அரங்கேற்றினார். சேக்ஸ்பியர் இவ்வாறு உயர்வகுப்பினரைத் திருப்திப்படுத்தும் வகையில் தனது படைப்பிலக்கியத்தில் மகிழ்வூட்டல் நோக்கினையும், கற்பனைப் படைப்புத் திறனின் பயனையும் ஒன்றிணைத்தார்.
சேக்ஸ்பியர் ஆங்கில இலக்கியத்தில் ஒர் ஆழ்ந்த போக் குடைய நாடக ஆசிரியராக விளங்கியதோடு, கதாபாத்திரங் களைப் படைப்பதில் வல்லுனராகத் திகழ்ந்தார். ஹம்லெட், ஒதெல்லோ, லியர், மக்பெத், கிளியொ பட்ரா போன்ற கதா பாத்திரங்கள், உயிரோட்டமுடையவர்கள், இன்றும் நம்மத்தி யில் வாழ்கின்றனர் போல நாடகங்களில் நடமாடுகின்றனர்.
அவரது கவித்திறனே இந்நாடகங்களுக்கு உயிரூட்டியது எனலாம்.
வில்லியம் சேக்ஸ்பியர் 37 சிறந்த நாடகங்களையும், பல ‘ஸொனட் கவிதைகளையும் ஆக்கி பெரும் புகழீட்டியமை ஈண்டு, நினைவுகூறத் தக்கது அவரது நாடகங்கள், நசைச்சுவை, துண் டியல், வரலாறு என முப்பிரிவுகளில் அடங்கும். அவை எலிஸ் பெத் காலப்பகுதியில் தோன்றிய பெரும் பகுதியான இலக்கி யப் படைப்புகளை உட்படுத்தின. ஹம்லெட் (Hamlet) என் னும், சோகத்துக்கு இலக்கான டென்மார்க் இளவரசனின் கதை அவரது மிக ப் பிரபல்யமான நாடகமாகும். அதேபோன்று வெனிஸ் நகர வணிகன் (Merchant of Venice) என்னும் செல் வந்த யூத னின் கதை பிரசித்தமானது "ஜூலியஸ் சீசர்' என்பது அவரது சிறந்த வரலாற்று நாடகமாகும். பேராசிரியர், அஷ்லி ஹல்பே அவர்களின் கருத்துப்படி, அன்டணியும் கிளியோபட்ரா வும் என்ற வாலாற்று துண்டியல் நாடகம் சிறந்த கலையம்சம் பொருத்தியதொன்றாகும். இவ்வாறு இவரது சிறந்த நாடகங் கள் மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு படைக்கப்பட்டபோதி லும், அவை சேக்ஸ்பியரின் இலக்கியப் படைப்புகள் எக்காலத் துக்கும் ஏற்றவையாக மிளிர்கின்றன எனலாம்.
நல்லவைகளை வரவேற்க பின்வாங்காதீர்கள்.

Page 11
18 ப்ரிய நிலா
1610 ல் சேக்ஸ்பியர் தனது பிறந்தகத்துக்குத் திரும்பி மீண்டும் அங்கு நிரந்தரமாக வசிக்கத் தொடங்கினார். ஆனால் அங்கிருந்து கொண்டும் தொடர்ந்து எழுத்தாக்கங்களை வழங் கினார். இறுதியாக 1616. 4, 23 ந் திகதி மரணமடைந்தார். அவ ரது உடல் "ஸ்ட்ரட்போட் ஒன் அவொனில் அடக்கம் செய்யப்பட் டது. அவர் மறைந்தாலும் அவரின் இறவாத இலக்கியங்கள் இன்றும் அவரைப்பற்றி நினைவலைகளை இலக்கிய நெஞ்சங் களில் வீசச் செய்கின்றன.
பிரிக்கப்பட்ட உறைகள்
* அன்பு ஆசிரியருக்கு
திக்வெல்லை கமால் மூலம் 'ப்ரிய நிலா 3 ம் ஆண்டு மல ரைப் பெற்றுக்கொண்டேன். நான் பார்த்த முதலாவது ப்ரிய நிலாவும் அதுவே. அதில் அடங்கியுள்ள அம்சங்கள் 'ப்ரியநிலா" வின் வளர்ச்சியை காட்டுகிறது. இதயங்களைத் தொடும் என் பதில் சந்தேகமே இல்லை. பணி தொடரட்டும்.
சில் மியா காதர் - அட்டுலுகம.
* ஆசிரியருக்கு,
'ப்ரிய நிலா தரமான சஞ்சிகையாக வெளிவருவதாக
அறிந்தேன். எமக்கும் பிரதிகளை அனுப்பிவையுங்கள். உதவத்
தயாராக உள்ளோம். M. A. அமீர் - கல்முனை.
* அன்பின் ஆசிரியர் அவர்களுக்கு,
"ப்ரியநிலா" மூலம் கிடைத்த அறிமுகம் பல இலக்கியச் சஞ்சிகைகளைக் கண்டுகொள்ளக் கிடைத்தது. உங்களின் உற் சாக வார்த்தைகள் எமது இலக்கியப் பயணத்திற்கு ஊன்று கோலாக உள்ளன. நன்றி
ஸம்ஸ்"ன்னிஸா அபூபக்கர் - அறனாயக்க, * ஆசிரியரே,
மூன்றாம் ஆண்டு மலரை முற்றாகப் படித்துவிட்டேன்.
அடுத்த இதழைக் கானத் துடிக்கிறேன். தொடர்ந்து படிக்க ஆசைப்படுகிறேன். M. J. M. fபாஹிம் - உக்குவல
நியாயத்தை ஒப்புக்கொள்ள வெட்கப்படாதீர்கள்.

ப்ரிய நிலா 9
-x ப்ரியநிலாவே!
'ப்ரிய நிலா தாங்கிவந்த உடையார் பரம்பரையினர் பற்றிய அல்ஹாஜ் M. M. மகீன் அவர்களின் கட்டுரையைப் பலரும் பாராட்டியுள்ளனர். தினகரன் குறிப்பு கிடைக்கப் றோம். தயாரிப்பாளர்கள், 4. P. W. கோமஸ் , நுஸ்லா சுபைர், காலி நஜ"முல் ஹ"சைன், கண்டி தாரிக் அவர்களுள் சிலராவர்.
* ஆசிரியருக்கு,
'ப்ரியநிலா"வின் குளிர் ஏஸி, மனித இதயங்களை புனிதப் படுத்தட்டும். சமூக வளர்ச்சியை தன்னொலி ஈயட்டும். இலக் கியம் செழிக்க உழைக்கும் உங்கள் முயற்சி உயர்வடைய தூய நல்வாழ்த்துக்கள். கலாவிஸ்வநாதன் - ம. க. சங்கம்
* 'ப்ரியநிலா ஆசிரியருக்கு,
ஆண்டு மலர் படித்தேன். அனைத்து அம்சங்களும் அறி வுக்கு விருந்தூட்டின. ஸ்மீனா ஹாசீம் - அக்குரனை.
* ப்ரிய ஆசிரியருக்கு,
'ப்ரியநிலா மூன்றாவது ஆண்டு ம ல ரை யும் வெளிக்
கொணர்ந்தது சாதனைதான். பணி தொடர எனது வாழ்த்
துக்கள். A. P. மன்சூர் (ஆசிரியர் - கெசூனு கொல்ல)
* சோதர ஆசிரியரே,
குறைந்த விலையில், எளிய நடையில், இனிய இதழில், பரந்த நோக்குடன் 'ப்ரியநிலா'வை தொடர்ந்து நடத்தும் உங்களுக்கு வாழ்த்துக்கள். தாஜ பன்னிஸா ஸ்ரூக்,
ரிஸானா ஸ்ரூக் வெலம்பட
* ஆசிரியரே,
மேலும் 'ப்ரியநிலாவுக்கு அமுதூட்டினால் இ ன் னும் அதிகமான வாசகர்களை அரவணைத்துக் கொள்ளலாம்.
M. T. P. சிஹாரா - கம்பளை,
(அடுத்த இதழில் ஏனையவர் கருத்துக்கள் இடம்பெறும்.)
தவறுகளைச் சுட்டிக்காட்ட அஞ்சாதீர்கள்,

Page 12
20 ப்ரிய நிலா
அ ட்டைப் படம்
மலையக மூத்த எழுத்தாளர்களுள் ஒருவர், சிறந்த பேச்சாளர், கவிஞர், ஒய்வு பெற்ற அதிபர் திரு. A. V. P. கோமஸ் அவர்களை அறிமுகம் செய்து வைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
- புண்ணிய பூமியான் -
எவருக்கும் பிடித்தவர், பழகுவதற்கு இனிமை யானவர். இளையவர்கள், மூத்தவர்கள் என்ற பாகு பாடு பாராதவரும், 'பழமையில் இருந்தே புதுமை கள் உருவாகின்றன’’ என்ற கருத்துக்களைக்கொண்ட கல்விமான், எழுத்தாளர் கவிஞரும் கூட. கடந்த கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக இலக்கியத் துறையில் ஈடு பட்டு வருகிறார். எழுத்தாளர்களை உறுவாக்குவதில் ஆர்வம் கொண்டவர். சமூக, ச ம ய, கலாச்சார நிகழ்ச்சிகளில் கலந்து சிறப்பிப்பதில் தம்மை ஈடுபடுத் திக்கொள்வதில் மிகுந்த அக்கரை கொண்டவர்.
திரு ஏ. பி. வி. கோ ம ஸ் அவர்கள், பொரளை புனிதர் கல்லூரி, புனித ஜோஸ்ப், கொட்டாஞ்சேனை, கோட்டை கிறிஸ்தவ கல்லூரி ஆகிய கல்லூரிகளில் கல்வி பயின்றவர். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் B. A. ஆங்கில டிப்லோமா பட்டத்தையும் பெற்றுள்ளார்.
திரு ஏ. பி. கோமஸ் ஜெயம்பால் பெர்னான் டோவுக்கு மகனாகப் பிறந்த திரு கோமஸ் அவர்களுக்கு ஒரு சகோதரரும் இரு சகோதரிகளும் உள்ளனர். மனைவி, இரண்டு ஆண், இரு பெண் மக்களைக் கொண்ட சிறு குடும்பத்தைக் கொண்ட இவர் நூற் றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், ஆயிரத்துக்கு மேற்பட்ட கட்டுரைகளையும், நானுற்றைம்பதுக்கு மேற்பட்ட கவிதைகளையும், ‘ஜெயம்’ ‘அழகரசன்’

ப்ரிய நிலா 2 I
மாத்தளை கோமஸ், என்ற பெயர்களில் தினசரிகளில், சஞ்சிகைகளில், எழுதி வருகிறார். நாடகத்துறையிலும் நல்ல அனுபவம் இவருக்குண்டு. நாடகங்களிலும் நடித் துள்ளார்.
நாட்டின் பல பாகங்களுக்கும் சென்று, இலக் கிய சொற்பொழிவுகள் நிகழ்த்தியும் கவியரங்கு, கருத் தரங்கு, வெளியீட்டு விழாக்கள், போன்ற நிகழ்ச்சி களில் தலைமையும் வகித்து வருகின்றாா 'பழமை யிலிருந்தே புதுமை பிறப்பதால்’’ ப ழ மை யை யு ம் புதுமையையும் போற்றவேண்டும். மரபுக் கவிதையும் புதுக்கவிதையும் ஒன்றே. கரு வேறு, உ ரு வேறு எண்ணமொன்றே ஆனால் இரண்டும் உணர்ச்சிகளின் வெளிப்பாடே என்றும், தேசிய பத்திரிகைகளும், சிற் றேடுகளும், இலக்கியத் தொன் டில் ஒன்றே செய் கின்றன. இரண்டையும் வளர்க்க வேண்டும் என்று கூறிக் கொள்பவர்.
கேகாலை மாவட்டத்தில் முதலில் எழுத்தாளர் சங்கமொன்றை ஆரம்பித்து வைத்த பெறுமை இவ ருக்கே உண்டு. இவர் கலாச்சார அமைச்சால், ஐயா யிரம் ரூபாய் பொற்கிளி வழங்கி கெளரவிக்கப்பட்ட தோடு, 1970 ல் சாகித்திய விழாவின் போது, கவி யரங்கில் பங்குபற்றியதோடு தேசிய ரீதியில் நடத்தப் பட்ட போட்டிகளில் பங்குபற்றி பல பரிசில்களைத் தட்டிக்கொண்டவர். அண்மையில் அங்கமெல்லாம் நெரஞ்சமச்சான் என்ற நாட்டார் பாடலை நூலுறுவில் வெளிக்கொணர்ந்தார். ஆங் கி லத் தினசரிகளிலும் கதை, கவிதைகளையும் எழுதி வரும் இவர் 'ப்ரிய நிலா வின் ஆரம்ப இதழிலிருந்து இன்றுவரை ‘வள ரும் எழுத்தாளருக்கு’’ என்ற தொடர் கட்டுரையை வழங்கி ஏராளமான ஆரம்ப எழுத்தாளர்களுக்கு வழி காட்டியாக இருந்து வரும் மூத்த எழுத்தாளர் திரு. A. P. W. கோமஸ் அவர்கள் அண்மையில் மத்திய மாகாண கல்வி, கால்நடை, கைத்தொழில், உள்ளூ ராட்சி அமைச்சர் S. K. இராமநாதனின் அந்தரங்கச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இ வ ர் க ள து இலக்கியப் பங்களிப்பு தொடர வாழ்த்துக்கள்.
(ஆசிரியர்)

Page 13
22 ப்ரிய நிலா
ငွ:ööööööööööထေ့ထေ့ထ့:::တ္ထိ
88CCCCCCCCCCCCCCCCCCCCC
கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக . நம் தாய்நாட்டு பாட் டாளி வர்க்கத்திற்காக இரவு பகலின்றி, இ ன, ம த வேறு பாடின்றி உழைத்த ஒரு மாமணி தன் ஏ. அஸிஸின் பெயரால் இன்று த லை ந க ரி ல் மன்ற மொன்றை அமைத்து பணிபல செய்துகொண்டிருக்கும் அஸிஸ் மன்றத்தை அறிமுகம் செய்து வைப்பதில் ம கி ழ் ச் சி யடை கிறேன். (よ塾十庁ル
இன்று நாம் எண்ணற்ற அரசியல் தலைவர்களை சமூக சேவையாளர்களை, மார்க்க மேதைகளை, அறிஞர்களைப் பற் றிக் கேள்விப் படுகிறோம். அவரவர் வாழும் காலத்தில், சமூக மேம்பாட்டுக்காக, நாட்டின் முன்னேற்றத்திற்காக, பலதரப் பட்ட நிலையில் உழைத்துள்ளார்கள். ஆனால் அவர்களுள் விரல் விட்டு எண்ணக்கூடிய சிலரைப் பற்றித்தான் அடிக்கடி நினைவு படுத்திப் பார்க்கிறோம்.
தன்னலங் கருதாது பிறர் மகிழ்ச்சியே தன் மகிழ்ச்சி யென்றும், அவர்கள் இன்பமாக வாழ்வதைக் கண்டு மனங்குளி ரும் மாமணிகள் ஒரு சிலரையே நாம் காணக்கூடியதாக உள் ளது. அந்த வகையில் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக பாட்டாளி வர்க்கத்தின் ஏக தலைவராக வாழ்ந்து, சகலரின தும் உள்ளத்தில் இடம் பிடித்துக்கொண்ட கால ஞ் சென் ற மர் ஹூம் அப்துல் அஸிஸ் அவர்கள் வாழும் கா லத் தி ல் மனதில் கொண்டிருந்த நற்பணிகளை இன, மத, நிற வேறு பாடின்றி, நிறைவு செய்யப்பட வேண்டுமென்ற நல்நோக்கோடு இம்மன்றம் கொழும்பு புதிய சோனகத் தெருவில், 17ம் இலக் கத்தில் அமைந்துள்ளது.
உரிமைக்கு போராட அவசரப்படாதீர்கள்.
 

ப்ரிய நிலா 28
தான் கண்ட கனவை, நனவாக்குவதற்கு முன்பே இறை வன் தன்னை அழைத்துக்கொண்ட போதிலும் தூரதிருஷ்டிப் பார்வையோடு ஆரம்பித்த பணி க ள் தடைபடா வண்ணம் தொடர வழிவகைகள் செய்யப்பட்டிருந்தமையால், மர்ஹூம் அவர்களின் கனவுகளை நிறைவேற்ற மன்றத்தின் த லை வர் ஜனாப் அஷ்ரப் அஸிஸ் அவர்களின் வழிகாட்டலில், இன்று ஒரு அணியே திரண்டுள்ளதைப் பார்க்கின்றோம்.
இன்று கலை, கலாச்சார நிகழ்ச்சிகள், பொதுப்பணிகள் எங்கு நடந்தாலும் அங்கே மன்றத்தின் தலைவரைக் காணக் கூடியதாக உள்ளது. குறிப்பாக பாட்டாளி வர்க்கத்தின் மத்தி யில் அறிவொளியைப் பெருக்கவும் கலை நிகழ்ச்சிகள் போன்ற துறைகளில் அவர்களையும் பங்குகொள்ளச் செய்யவும், விழிப் புணர்வை ஏற்படுத்தவும், சமூகசேவையில் ஊக்கமுள்ளவர்களை ஊக்குவிக்கவும், இம்மன்றம் முழு மூச்சாக ஈடுபட்டுவருவதன் மூலம் நிச்சயமாக எதிர்காலத்தில் ஜனாப் அஷ்ரப் அஸிஸின் தலைமையில் திரண்டிருக்கும் அணியினர் காலஞ்சென்ற அந்த மாமனிதனின் அபிலாஷைகளை நிறைவேற்றி வைக்கவும், இம் மன்றத்தின் மூலம் மனித சமூகம் நற்பயனைப் பெற்றுக்கொள் ளவும், அதன் வளர்ச்சிக்குச் சகல வகையிலும் கை கொடுக்க முயல்வதன் மூலம் சிறந்ததோர் முன்மாதிரியாக திகழும் என் பது கண்கூடு. அஸிஸ் மன்றம் மலைபோன்ற தொண்டுகளைச் செய்யக்கூடிய ஒரு மன்றமாகத் திகழப் பிரார்த்திப்போமாக. இ வளரும் பயிர்
இதயத்தின் சில வரிகள்
கவிதை எழுத கற்கண் ரொன்றிடம் போய் நிறக சிரித்து என்னைச் சீ என்றார் ஒருவர் சித்தரித்து வருத்தினார் மற்றொருவர். கவிதா உலகில் நான் கற்துண்டொன்று மட்டும் தான் கவிதையில் பார்போற்றும் கயவன். உண்மைக் கவிஞன் உலகில் வரும் வேளை கவசம் போட்டிருக்கும் கயவர்கள் காட்டுக்குள் எடுப்பர் ஓட்டம் ,
- உயன்வத்தை நஸிம் -

Page 14
வளரும் பயிர்
இன்றைய இளைஞன்
-H - பி. வி. நித்தியானத்தன் - இன்னறய தன்னிச்சைப் போக்கிற்கு நவீன புவனே போடப்பட்ட t இரும்பு விளங்குகள் ானிட இனத்தின் ★ ஒர் விசித்திரமான நாகரிகமென பிதற்றியே புதிய பிறவி அநாகரிகத்தின் எனது உலகம் தத்துப் பிள்ளை பாய் வெறும் சுனாக்களால் படித்த மூடனாய் நிரம்பிக் கிடக்கும் விதியில் அலைகிறாய் மாயப் பிரபஞ்சம் 大 大 ஒன்று புரிகிறது நீ நிஜத்தை - நீ வாழ்வுப் பாதையிலிருந்து நிராகரித்து விட்டவன் தடம் மாறிப் போகிறாய் இல்லாவிடில் புரிந்துகொள் h:Ii F_dir 331oհr வாழ்க்கை தமக்காக திர ாகரித் துவி ட்டதா? அல்ல : பந்தமும், 3.நவிகளும் வாழ்க்கைக்காகவே நாம்
உன்னைப் பொறுத்தவரை
ப்ரியநிலா பற்றிய ஒரு வாசக நெஞ்சத்தின் கருத்து.
மூன்றாம் ஆண்டு மலர் முத்தாகச் சிந்திய சத்தான ஆக்கங் கள் சிந்தைக்கு விருந்தே இலக்கியக் கட்டுரை, சிறுகதை, அரிவையர் அரங்கம், கவி மலர்கள் அனைத்துமே தேன் சுவை தந்தன. குறிப்பாக மலையக மக்களின் உள் ள க் குமுரவாக வளர்ந்த முகவுரை என்ற கவிதை தெ (ஞ்சை த் தொட்டது. மேலும் மேலும் ப்ரியநிலா ப்ரியமுடன் இலக்கிய உலகில் இம யத்தைத் தோட தங்கை இவன் நல்லாசிகள் என்றும் உண்டு.
பாசங்களுடன் வால்பிகா ஜெமால்டீன் - கல்ஹின்னன.
அரசியல் ஒரு சூதாட்டம்.

'ப்ரிய நிலா'வுக்கு
எமது வாழ்த்துக்கள்.
அவ8ஸ் மன்றம் இல 17, புதிய சோனகத் தெரு, கொழும்பு 12.
责
AZZZ FDL.S.D AT THON
17. Ne kfor Sirtei
C} LČ)|Mf EČ) :
凸áng:苹芷
2.jዕ]ú(]

Page 15
=、
With The Bé,5 T | of
GMPUTER
RAINING
©Ꮉ←ᏫᏪᏡ " El CoAFTA sistülü AT) D.
}{}{), Galle_Rigrid, Cglö"thơ ô –
M. J. M. Printe
 
 
 
 
 
 
 
 
 
 
 

550
岛r芷g配凸 * effre: