கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பண்பாடு 1993.09

Page 1
ΟΛΟ)
sー/>へつ/=/>sつ(ノ
பாழ்ப்பானத்தில் அ
இந்திய மெய்யியலில்
தி. த. கனகசுந்தரம்பி
(:) யாழ்ப்பாடைத்தில் சி
)ே சைவசித்தாந்த அறிவு
நூல் அறிமுகம்
ெ
以Jigpu, ba) II -
 
 
 
 
 
 
 
 
 
 
 

ண்னமார் வழிபாடு
தந்திர
iள்ளை (1863-1922)
பக்கலை
ாராய்ச்சியியல் ஓர் அறிமுகம் (பகுதி - 2)
எரிபபீடு
லுவல்கள் திணைக்களம்

Page 2
பதிப்பு: 1993 புரட்டாதி விலை ரூபா. 25
பண்பாடு பருவ இ கூறப்பட்டுள்ள க களின் சொந்தக் க( வெளியிடும் தினை
பலிப்பனவாகா,
வெளியீடு:
இந்துசமய, கலாசார அலுவல்கள் தி: *" காப்புறுதி இல்லம்"
9 வது மாடி,
21, வொக்ஷோல் வீதி,
கொழும்பு. 02,

தழில் பிரசுரமாகியுள்ள கட்டுரைகளில் ருத்துக்கள் யாவும் கட்டுரையாசிரியர் ருத்துக்களேயாகும் அவை இவ்விதழை னக்களத்தின் கருத்துக்களைப் பிரதி
- ஆசிரியர்
னைக்களம்,

Page 3
L 1600
(பரு
மலர் 3 இதழ் 2
உதவி எஸ். ெ
ଓଟରା இந்துசமய, கலாசார அ

1993
பூசிரியர் முகலிங்கம்
ஆசிரியர் தய்வநாயகம்
|ளியீடு:
புரட்டாதி
லுவல்கள் திணைக்களம்

Page 4
பொருள
யாழ்ப்பாணத்தில் அண்ணமார் வழி
இந்திய மெய்யியலில் தந்திரம்
தி. த. கனகசுந்தரம்பிள்ளை (1863
திருகோணமலை
யாழ்ப்பாணத்தில் சிற்பக்கலை
சைவசித்தாந்த அறிவாராய்ச்சியில்
(பகுதி -
நூல் அறிமுகம்
குறிப்புகள்

டக்கம்
பாடு
என். சண்முகலிங்கன்
월, • சிவசுப்பிரமணியன்
- 1922)
செ. யோகராசா
ஏ. என். கிருஷ்ணவேணி
ஒர் அறிமுகம் 2) சோ. கிருஷ்ணராஜா
க. சண்முகலிங்கம்
- 01.
8
3.
48
53

Page 5
யாழ்ப்பாணத்தில் அ
என். சண்மு
1. அண்ணமார், பொல்லுக் கிழவன், சிவகுடும்பன் எ னு ம் பெயர்களில் யாழ்ப்பாணத்தின் கிராம குறிச்சிக ளிடையே வணங்கப்பட்டுவரும் அண் ணமார் வழிபாடு பற்றியதாக இந்த ஆய்வு அமைகிறது. குறிப்பாக சமூக அடுக்கமைவில் அடிநிலை மதிப்பினைப் பெறும் பள்ளர் சாதியினரின் குல தெய்வமாக இவ்வழிபாடு அவதானிக்
கப்படும்.
ஒரு கல் அல்லது பொல்லு அண்ண மாரின் குறியீடாக விளங்குகிறது. சாமியாடலும், உயிர்ப்பலி கொடுத்த லும் பிரதான வழிபாட்டு முறைகள் ஆக, புராதன சமயப் பண்புகளையும் f5T LL-ITri. Flpu Il I பண்புகளையும் கொண்டதாக, அதிகளவு மாற்ற மின்றி இந்தத் தொன்மையான வழி பாடு தொடருவதைக் காண்கிறோம்"
ஐம்பதுகளைத் தொடர்ந்து மிகச்சிறிய
அளவில் சமஸ்கிருத மயமாக்க முயற் சிகள் நிகழ்ந்த போதிலும், ஏனைய நாட்டார் வழிபாடுகளைப் போல அதிகம் மாற்றம் காணாதது அண்ண மார் வழிபாடு. உயிர்ப்பலி தொடர் பான சட்டங்களும் நடைமுறைகளும் உயிர்ப்பலிகளின் அளவினைக் குறைத்த போதும் அண்ணமார் வழிபாட்டின் தீவிரத் தன்மை தொடர்வது அவ தானிக்கலாம்.
புதிய சமூக அமைவு-கல்வி - விழுமிய மாற்றங்களிடையே சாதிக்குறியீடாக அண்ணமார் அமைதலை விரும்பாத எழுச்சிகளிடையே இன்று அண்ண மாரை சமஸ்கிருத மயமாக்கும் ஆவல்

ண்ணமார் வழிபாடு
கலிங்கன்
l.
l
2
. 3
அதிகரித்துள்ளபோதும் அண்ணமாரின்
அசைவு இலகுவாய் நிகழமுடியாத தொன்றாய் அமைந்துள்ளது.
சமயம் என்பது சமூகத்தின் தேவை களின் அடியாக சமூகத்திலிருந்தே தோற்றம் பெறுவது. (Ourheim, E. 1961) சமூக உற்பத்தி உறவுகளை பேணி அதனைப் பிரதிபலிக்கிறது. (Marx, K. 1844) எனும் சமூகவியல் அறிஞர் கருத்துக்களின் அ டி யாக அண்ணமார் வழிபாட்டு மரபிற்கும் சமூக அமைப்பினுக்கும் இடையிலான உறவினை விளக்குவதையே, பிரதான நோக்காக இந்த ஆய்வு கொண் டிருக்கும்.
நாட்டார் வழக்குகளை விஞ்ஞான முறையியலின்வழி ஆராய்கின்றபோது அது தவிர்க்க முடியாதபடி சமூகவியல் ஆய்வாகி விடுகின்றமையையும் இந்த ஆய்வு உறுதி செய்யும். கூடவே, நாட்டார் வழிபாட்டு மரபுகள், பழங்குடி மக்களின் இனக்குழு வாழ்வி னின்றும் தோன்றி உற்பத்தி முறை களின் மாற்றத்தினால் வளர்ச்சியடை வன (லூர்து 1986) எனும் நிலையில் அண்ணமார் வழிபாட்டின் புராதன நாட்டார் இ ய ல் புக  ைள விளங்கிக் கொள்வதில் சமூக மானிடவியல் ஆய்வு அனுபவங்களும், இங்கு பயன்படும். பண்பாடு என்கின்ற ஒரே ஆய்வுப் புலத் தினுள் அடங்குவதால் இந்தத் துறை களின் இணைவு இயல்பானதாயும் இன்றியமையாததாயும் அமைகிறது. எங்கள் பண்பாட்டுப் புலங்களில் இவ் வாறான ஆய்வுகள் மிகச் சிறிய அளவி லேயே, அதுவும் மிக அண்மைக் காலங் களிலேயே கவனத்திற் கொள்ளப்பட் டன. அண்ணமாரைப் பொறுத்தவரை,
1.

Page 6
இதுவே முதல் முயற்சியாகும். இந்
நிலையில் தமிழகத்துப் பேராசிரியர்
ag) போன்றோரும் 6TG) 60ft புராதன - நாட்டார் புல ங் களின் ஆய்வுகளைக் கண்ட நாட்டார் வழக் கியல் சமூக மானிடவியல் அறிஞர்
களும் இந்த ஆய்வின் முன்னோடிக 67Trto).1 fr.
ஆய்வு முறையியல்
யாழ்ப்பாணத்து அண்ணமார் வழி பாட்டு மையங்கள் பற்றிய பூர்வாங்க மான அவதானங்களைத் தொடர்ந்து, அடுக்கமைவு மாதிரி எடுத்தலின் வழி குறிப்பான ஆலயங்களும் ஆலய வழி பாட்டு முறைகளும் ஆழமான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
வழிபாட்டுக் குறியீடு களின் தன்மை, ஆலய அமைப்பு, இட அமை வில் கிராம - நகரத் தன்மை, உற் பத்தி - தொழில், சாதிய உறவு நிலை வேறுபாடுகள், தோன்றிய காலம் என்பன, அடுக்கமைவு மாதிரி எடுத்த அம்சங்களாக கவனத்தில் கொள்ளப்
ill-60.
இந்த வகையில்,
ஆலயவமைப்பு, உருவம் ஆகியன இன்றி மிகப் புராதன கந்தழி வழி பாட்டு மரபினை ஒத்ததாய் அல்லது சேர்க்கை இனங்காணும் குலமரபு வழிபாட்டு சின்னத்தினை ஒத்ததாய் இன்றும் மரபுவழி வழிபாட்டின் தீவிரத்தை வெளிக்க 1ா ட் டும் இட மான நீர்வேலி - ப ன் ன T  ைல க் குறிச்சி அண்ணமார் .
தொன்மையானதும் பல அண்ண மார் கோவில்களின் பரவுகைக்கு காரணமானதும் இன்னமும் மரபு வழிபாட்டு முறைகளைப் பேணு கின்றதுமான வடமராட்சிப் பகுதி - கிருச்சியால் அண்ணமார்.
தொன்மையான அதேவேளை ஆலய அமைப்பில், வழிபாட்டில் மாற்றங் கள் காணும் வலிகாமப் பகுதி தெல்

;
லிப்பளை - கோவிற்புலம் அண்ை to tri. .
4. தொன்மையானதும் ஒன்றுக்கு மேற் பட்ட சாதிக்குழுக்கள் தொடர்பு படுகின்ற ஒரே இட அமைவில் உள்
ளதுமான, கச்சாயில் அண்ணமார்.
5. மிக அண்மையில் சமஸ்கிருதமய மாக்கப்பட்ட நகரையண்டிய திரு நெல்வேலி - (பல்கலைக்கழகத்தினை அண்டிய) ஆத்திசூடி வீதி அண்ண
Dfrf
ஆகிய ஐந்து ஆலயங்களும் தொடர்ச் சியான அவதானங்களுக்கு உட்படுத்தப் பட்டன. ஏனைய செயல்படக்கூடிய நிலை யிலுள்ள அனைத்து ஆலயங்களின் பிர தான நிகழ்வுகளும் பதிவு செய்யப்பட்டன.
- பங்கும் பெறும் அவதானம்
- பங்கு பெறா அவதானம் எனும் இரு நிலைகளிலும் ஆய்வு நிகழ்த்தப்பட்டது.
பூசாரிகள், வழிபடுவோர்கள் உடனான நேர் காண ல் வழியும் தரவுகள் பெறப்பட்டன. மேலே குறித்த ஆல யங்களில் பால், வயது, கல்வி,தொழில் அடிப்படைகளில் அடுக்கமைவுமாதிரி எடுத்தலின் வழி கிட்டத்தட்ட ஐநூறு வழிபடுவோரிடம் அண்ணமார் பற்றிய ஐதிகங்கள், வழிபாட்டு மரபுகள், ஈடு பாடுகள் பற்றி க் கேட்கப்பட்டது. சடங்குகளில் முக்கியத்துவம், பக்தர் களின் எண்ணிக்கையின் அடியாக சில வற்றில் 100 க்கு அதிகமாயும் சிலவற் றில் குறைவாகவும் நேர்காணல் நிகழ்ந் தது. முல்லைத்தீவுப் பகுதிக்குரிய அண்ணமார் சிந்து ஒன்றும், பிட்டி யோலை அண்ணமார் கதை ஏடு ஒன் றும், மீசாலை அண்ணமார் மந்திர ஏடு ஒன்றும் ஆராயப்பட்டது.
3. ஆய்வுப்புலத்தில் சந்தித்த ஐந்நூறு நேர்காணல்களில் 16% வீதமானோர்

Page 7
3, 1
மட்டுமே அண்ணமார் தொடர்பான ஐதீகங்களை சொல்லும் நிலையிலிருந் தனர். ஏனைய தேடல்களிலும் மிகச் சிறிய அளவிலேயே அண்ணமார் பற் றிய பதிவுகளைக் காணமுடிந்தது.
நேர்காணலுக்குட்பட்ட 40% வீதத் தினர் சிவனின் கா வ ல் தெய்வம் அண்ணமார் என்பதற்கு மேல் எதை பும் கூறும் நிலையிலில்லை. அண்ணமார் தொடர்பாக பதியப் பட்ட நான்கு வேறுபட்ட ஐதீகங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
இணுவில் இளந்தாரி அண்ணமார்
கதை.
யாழ்ப்பாணத்து வலிகாமம் பிரிவி லுள்ள இணுவில் கிராமப் பகுதியில் பதியப்பட்டுள்ளது. அயலிலுள்ள கிரா மங்களிலும் இது சிறிய அளவில் அறி யப்படுகின்றது. இணு வி ல் தெற்கி லுள்ள இளந்தாரி, அண்ணமார் முடி வுகள் இக்கதை தொடர்பாகப் பதியப் பட்டுள்ளது.
'இளந்தாரி கைலாயநாத துரைமீது பஞ்சவண்ண தூது" என்ற பெயரில் இணுவில் சின்னத்தம்பிப் புலவர் பாடிய பாடல் ஏடு ஒன்றும் பதியப் பட்டுள்ளது. இணு வில் தெற்கைச் சேர்ந்த வெள்ளாளர் சாதி இளந்தாரி மார் இருவர், சகோதரர்கள்; இவர் களோடு குடிமை உறவு பூண்ட பள் ளர் சாதி இளைஞன் ஒருவன்; மூவ ருமே கதையின் முக்கிய பாத்திரங்கள் குளிப்பதற்கு கிணறு மறுக்கப்பட்ட தாய்க்காக இரவோடிரவாக கிணறு ஒன்றினை வெட்டி, அயல் கிராமமான ஏழா  ைல யி லி ரு ந் து துலாவும் கொணர்ந்து தண்ணிர் வசதி செய்த இந்த இளந்தாரிகளை 'பயிர்க் கண்டு களுக்கு தண்ணி வைக்காததிற்காக தகப்பன் ஏசி அடிக்க ரெண்டுபேரும் ஒரு புளியில் ஏறி மறைஞ்சு போச்சி னம்' இந்த இளந்தாரிமாரின் சந்ததி யில் வந்தவர்கள் எனக் குறிப்பிடும்
இன்றைய இளந்தாரிமார் கோவில்

I
3,
உரிமையாளர் மிகுந்த பெருமை யோடும் ஒருவித பக்தி உணர்வோடும் இப்படிக் குறிப்பிடுவார்.
வெள்ளாள இளந்தாரிமார் இரு வரும் புளியில் ஏறும்போது, இவர்கள் குடிமை உறவான பள்ளர் சாதி இளை ஞன்தானும் உடன்வரக் கேட்டபோது அவர்கள், அருகில் (கிட்டத்தட்ட 150 யார்) நின்ற பனையில் அவனை ஏறுமாறு கேட்டதாகவும் அவ்வண் ணமே அவனும் ஏறியதாகவும் ஈற்றில் புளியிலே எறிய இளந்தாரிமார் உடல் மேலே சென்று ம  ைற ய பனையில் ஏறியவன் உடல்மட்டும் கீழே விழுந்த் தாகவும் சொல்லப்படும்.
இதே கதையின் முடிவு வேறுவிதமாக குடிமையான இளைஞனின் குறிச்சி யைச் சேர்ந்த இன்றைய அண்ணமார் கோயில் ஆ ர ம் ப பரம்பரையைச் சேர்ந்த முதியவர்களினால் சொல்லப் படும் (குழந்தையர் - 82 வயது) பனை யில் ஏறிய குடிமை இளைஞன் உட லும் மேலேயே சென்று மறைந்தது. அது கீழே விழவேயில்லை என்பது உறுதியான கதைமுடிவாக சொல்லப் படும். பனையில் ஏறிய இளைஞனே அண்ணாமாராக தனது சாதியின ரால் வணங்கப்படுகிறான். இளந்தாரி மார் ஏறிய புளி யை மூலவராகக் கொண்ட ஆலயத்திற்கு அரு கில் குறித்த பனையைச் சூழ வளர்ந்துள்ள தாக கருதப்படும் ஒரு ஆலமரம் அண் ணமார் வழிபாட்டு மையமாக விளங்கு கின்றது.
வன்னிச்சிமார் 54 பேருடன் தற் கொலை செய்து கொண்ட வீர குடும் பனை தலைவனாகக் கொண்ட 60 பள்ளர்கள் அண்ணமாரான கதை.
வன்னியுடன் தொடர்பான கதை.
1984 ல் முல்லைத்தீவில் நடந்த உல கத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கருத் தரங்குகளில் பெரிதும் கேட்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இக்கட்டுரையாளர்
3

Page 8
3.3
களஆய்வு செய்த வேளை இருவர் மட் டும் இதை அறிந்து இருந்தமை அவதா னிக்கப்பட்டது.
யாழ்பாண வரலாறு கூறும் மரபுவழி இலக்கியங்களில் ஒன்றான 'வையா' என்னும் யாழ்நாட்டு வளப்பத்தில் இக்கதை விரி வாக ப் பதிவுபெற் றுள்ளது.
(1921 - பக்கம் 10) வன்னிப் பிர தேசக் காடுகளில் துன்பம் தந்த ராட் சத அசுரனை ஒழிக்கவென மதுரை யிலிருந்து வன்னிக்கு இலங்கை அரசன் அழைப்பின்பேரில் வந்த வன்னியர்கள் இங்கு நிகழ்ந்த சமரில் உயிர்விட்ட தாகவும் இவர்களுக்கு நேர்ந்த முடி வினை அறியாது மதுரையிலிருந்து இந்த வன்னியரின் மனைவியாளர் வன் னிச்சிமார் அறுபது பேரும் வீர குடும் பன் என்ற பள்ளர் தலைவருடன் 60 பள்ளர்கள் துணையுடன் இலங்கைக்கு புறப்பட்டதாயும் வழியிலே தம் கண வர்மார் இற ந் த செய்தி கேட்டு,
'இந்த வன்னிமார் 54 பேருடைய பெண்சாதிமாரும் செல்லிச்சி வாய்க் காலிலே தீயில் விழுந்து மரணித்துப் போனார்கள். அப்போ அவர்களுக்கு நாச்சிமார் என்ற பேராச்சிது. அவர் களுக்கு குதி  ைர கொண்டுவந்த பள்ளர், வீரகுடும்பன் முகனையாக ஆரியக் குடும்பன் ஈறாக 60 பள் ளரும் வன்னிச்சிமாருடனே தீயில் விழுந்து இறந்துபோனார்கள். அப் பொழுது அவர்களுக்கு அண்ணமார் என்ற போராச்சுது' என வையா என்னும் யாழ்ப்பாண நாட்டு வளப் பம் கூறும். (1921)
புராண கதைகளுடான அண்ணமார் கதைகள், வலிகாமம், தென்மராட்சி ஆகிய பகுதிகளில் அறியப்பட்ட கதை, குறிப்பாக அண்ணமார் கோவில் பூசாரி களிடமிருந்தே கேட்கப்பட்டவை.
1. தக்கன் யாகம் அழிக்க அண்ண மார் வந்தகதை தக்கன் யாகத்துடன்

அண்ணமாரை தொடர்புபடுத்தும் இந்த ஐதீகம். யாகத்தைக் குழப்ப வீரபத்திரர் அண்னமாரை தோற்று வித்து அனுப்பியதாயும் அவர் தக் கன் கொடுத்த பலாப் பழத் தி ல் திளைத்திருந்து விட்டதாகவும் ஈற் றில் வீரபத்திரர் தாமே களத்திற்கு வந்தபோது அவரது கோபத்திற்கு பயந்து அவர் முன்னர் அனுப்பிய ஏனைய தெய்வங்கள் ஒழித்துக் கொண்டதாயும் அப்படி ஒழிக்கை; யில் கமத்துள் ஒழித்தவர்தான் அண் ணமார் என்று இந்தக் கதை கூறு கின்றது. " " கமத்தில் வேலை செய்து கொண்டிருந்த எங்கட ஆட்களிட்ட தலைப்பாகை வாங்கிக்கட்டி, கலப் பையையும் வாங்கி உழுதுகொண்டு நிக்க, வீரபத்திரர் யாரோ கமக் காரன் என்டு பேசாமல் போட் டான். பிறகு அண்ணமார் எங்கட ஆக்களை ஆதரிக்கச் சொல்லி கேக்க அவயளும் அப்படியே செய்ததாக முந்தின ஆக்கள் சொல்லுவினம்’’.
(வல்லிசின்னையன் - 74, ஆத்திசூடி வீதி அண்ணமார் பூசாரி) இவ்வாறாக பத்திரகாளி தச்சரிடம் ஒழித்தல் பெரிய தம்பிரான் வண்ணாரிடம் ஒழித்தல் என சாதிக்கான கடவுளர் பற்றியதாக இந்தக் கதை பல உருவங்களில் வழங்கப்படுகிறது
1.1 சூரன் கொடுமைக்குப் பயந்து இயன குட்டானுள் அண்ணமார் ஒழித்த கதை I கமக்காரனாகி ஒழித்த கதை.
'அழியா வரம் பெற்ற சூரன் தேவர் களுக்கெல்லாம் கொடுமைசெய்யத் தொடங்கிவிட்டான். இதைத் தாங்க ஏலாமல் எல்லோரும் ஒடி ஒழிக்கத் தொடங்கிவிட்டினம். பயந்து ஓடின அண்ணமார், எங்க ட பகுதிக்குள் வந்து ஒழிச்சிற்றார். பிறகு எங்கட ஆக்கள் அவரைப் பாதுகாத்தாலை,
கமத்துக்குரிய ஆள ஈ க வே இருந்து எங்களைக் காக்கிறார்.
(மாணிக்கம் - 68; நாச்சியம் புலம் - மயிலனி அண்ணமார்) இதனை ஒத்த்

Page 9
3.4
தாக சூரனுக்குப் பயந்து கமத்திே வேலை செய்து கொண்டிருந்த தம் மவர்களுக்குள் ஒழித்து பின் தம்மால் ஆதரிக்கப்பட்டவராக மற்றொரு கதையும் உள்ளது.
(தம்பு - 90 - வயந்தபுரம்)
தமிழகத்தில் கொங் கு நாட்டிலும் இலங்கை மலையகத்திலும் வழக்கி லுள்ள அண்ணமார் சுவாமி கதை பொன்னர் சங்கர் கதை சிறப்பாக தென்னிந்தியாவின் கொங்கு நாட்டி லும் (கோயம்புத்தூர் பகுதி) ஏனைய இடங்களிலும் இலங்கையின் மலையகப் பகு தி களி லு ம் வழங்கப்படுகின்ற பொன்னர் - சங்கர் என்ற சகோத ரர்கள் பற்றிய கதை யாழ்ப்பாணத் தில் மிகச்சிறிய அளவிலேயே அறியப் படுகின்றது. அது வும் அண்மையில் வெளியான கருணாநிதியின் தொடர் நவீன த் தி ல் வழிபெறப்பட்டது. (கருணாநிதி - மு, 1992) அண்ணமார் சுவாமி என்ற பெயரிலும் பொன்னர் " சங்கர் கதை அல்லது கள்ளழகர் அம் மானை என்ற பெயரிலும் இலங்கை மலையகத்தில் கூத்து வடிவில் இக்கதை
இன்றும் வழக்கிலுள்ளது.
கதைப் பாடல்கள் பற்றிய தமிழக நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகள். (Arunacha lam, M - 1976) G&T (ing), நாடு தொடர்பான மானுடவியல் Beck Brenda-E, F 1972) guilaja; Gigi இக் கதை ஆழ ஆராயப்பட்டுள்ளது.
'கொங்கு நாட்டைச் சேர்ந்த இரு வேறு குலங்களுக்கி  ைட யி லா ன முரண்பாட்டின் சித்திரிப்பாக அமை கிறது இக்கதை. தகுந்த வெள்ளா ளர் குலத்தில் பிறந்த பொன்னர் - சங்கர் சகோதரர்களின் வீரப் பிர தாபங்களும் அவர் கள் குலத்துக் கான அக முரண்பாடுகளின் போது எதிர்க் குழுவினர் வேட்டுவர் துணை பெற்று சண்டையிடுவதும் கதையில் பெரும் பகுதியாகும். இறு தி யில்

பொன்னர் - சங்கரும் இவர்களுக்குத் துணை நின்ற சாம்புவான் என்ற பறையர்சாதி இளைஞனும் உயிர் துறக்க நேரிடு கிற து. இவர்கள் தங்கை அருங்காணி நாச்சியார், பெரியகாண்டி அம்மன் துணையுடன் இறந்தவர்களை மீள எழுப்பி கயிலாயம் சென்றதாயும் இவர்களே பின் அண்ணமார் சுவாமிகளாக கொங்கு நாட்டிலும் ஏனைய பகு திகளிலும் வழிபடப்படுவதாகவும் இக்கதை கூறும்.
(மலையசக் கூத்து ஏட்டுப் பதிவுகளி
லிருந்து)
3.5 அண்ணமார் தொடர்பான ஏட்டுப்
பிரதிகள்.
1. அண்ணமார் சிந்து
முல்லைத்தீவுப் பிரதேசத்தில் கொக்கி 6Titul பகுதிக்குரியது (மற்றாஸ் மெயில் - 1980) யாழ்ப்பாணத்திலும் இந்த பாடல்கள் சாவகச்சேரி, அல் வாய் பகுதிகளிலுள்ள அண்ணமார் கோ யி ல் பூசாரிகளுடனான நேர் காணல்களிலிருந்து பெறப்பட்டது.
ஐயனார் முதலான தெய்வங்களு டன் தொடர்புடைய காவல் தெய்வ மாக இந்தச் சிந்து, அண்ணமாரைப் பாடிப்போற்றுகிறது.
'ஐயனார் தன்னுடைய திருவருளி னாலும்
அலங்கார வைகாளி அ ப் ப ன் அரு ளாலும் மெய்யாக வெற்றி தரும் மெய்கிட்ண ராலும்
மிக்க நல்ல நயினார் பணிக்கனா ராலும் ஐயா வெனப் பெரிய வாளலகெடுத்து
அகல நின் உயிர்காக்கும் அ ண் ண மார்க்கபயம்'

Page 10
11. அண்ணமார் கதை
காரைநகர் பிட்டி ஒலை கணக்கர் மாதர் எ ன் பரி டம் பெறப்பட்டது.
(சுந்தரம் பிள்ளை - செ, 1992) சிவன் திருமால் முதலிய தெய்வங் களுக்கான திருவிளையாடல்களை
அண்ணமாருக்குரியனவாகப் பாடும். இந்தப் பா ட ல் க என் அண்னமாரை சங்கரனார் புத்திரர் என்றும் ஆங் காங்கே குறிப்பிடும், இக்கதையில் சமஸ்கிருத மயமாக்கப்பட்ட விபரங் களுடன் கிராமிய மனித நிலையிலான அண்ணமார்பற்றிய வர்ணனைகளை யும் புராதன நாட்டார் வழிபாட்டு மரபுகளையும் காண முடியும் ,
'மீசை அழகுமிக்க அண்ணமாரே மெச்சும்படி வருவாய் அண்னமாரே கோரைப் பல்லுக்கடித்து அண்ண மாரே குவலயத்தில் வருவாய் அண்னமாரே'
என வர்ணிக்கப்படும் அண்ணமா ருக்கு முட்டை, இறைச்சி. நண்டு, கண வாய் பொரியல்களும். முருங்கைக்காய் தீயலும் கள்ளும் படைத்து வணங்கப்படும்.
முட்டைப் பொரியலல்லோ அண் ணமாரே - உனக்கு முருங்கைக்காய் தீயலல்லோ அண் ணமாரே. இறைச்சிப் பொரிய லல்லோ அண் ணமாரே - உனக்கு இனிதாக நாம் படைப்போம் அண் ணமாரே. கணவாய் பொரியலல்லோ அண் ணமாரே காதலுடன் நாம் படைப் போ ம் அண்ணமாரே. கள்ளுப் படைத்திடுவோம் அண் னமாரே காதலுடன் நாம் தொழுவோம் அண்ணமாரே. உளரை நினைக்கவேனும் அண்ண lost Gig

உலகத்தைக் காக்கவேணும் அண்ண lett (3g ... ..
(அண்ணமார் கதை - காரைதீவு பிட்டி ஒலை ஏடு)
i. கோணேசர் கல்வெட்டு என வழங்கும்
கோணேசர் சாசனப் பாடல்கள்.
(is grity gir - 7, 1993)
கண்டருளு மாலவனே திருக்குள நின் காவலெனக் கரியோன் சொல்வான் எண்புலங்கள் புகழ்ந்தருளுமிபமுகனு மெழின்மு னியு மறைமேழு மண்டுதிறன் மங்கலரும் புத்தியரும் வதனரொடு வீரனையன் அண்டர் புகழ் வயிரவரு மிலங்கைச் சந்தி காவலனு மண்ண மாரும் எட்டிசைமன் வெட் டி க் கொ ன் டேழரைச்சுற் றாமரத்தை யினிதா வெட்டித் தட்டியொரு காலாலே ஏற்றியது வீழமுன்னந் தரணி மீதில் ஒட்டியொரு குளஞ்சமைத் தா ங் குறுநீரும் கொண்டருளை யுற்ற வீரன் அட்டத்திற்கும் புகழ்ந்தருளு நீலா சோதை யன்படையு மரசர் மாரும் அண்ணமார் வாலாய மந்திரங்கள்(ஆத்திசூடி, அறியாலை அண்ண மார் கே T வி ல் களி ல் பதியப் பட்டவை) ஓம் அரிகஹ புத்திராய றியோம் மூர்த்தியே கொலுகலு குடும்பன் கறுப்புக் குடும்பன் கார்சோடிக் குடும்பன் சீரார் சிவாய நம திரி சூல குடும்பன் வங்க வங்க ரிங்க மறை வில்லு குடும்பன் துய்ய குடும்பன் பரமேஸ்வரி வாசலிலே பத்திரகாளி குடும்பன்
(வல்லி சின்னையன் ஏடு - 74, ஆத்திசூடி வீதி)

Page 11
மூலமந்திரம்
ஓம் மா சாத்திய குடும்பாய நம ஓம் திரிபுர குடும்பாய நம ஓம் சிவ குடும்பாய நம ஓம் உக்கிர குடும்பாய நம ஓம் வங்க வங்கா குடும்பா மகா குடும்பா, மயான குடும்பா அட்ட குடும்பாய நம
(மாதன் சின்னையா ஏடு - 77, அரியாலை) ܀-
41. யாழ்ப்பாணத்து அ ண் ன ம T ர் கோயில்களில் அண்ணமாரைக் குறிக் கும் புனிதப் பொருட்களை பின்வரும் வகைப் பாட்டினுள் அ ட க் கல ம். இவை காணப்படும் கோயில்களுக் கான உதாரணங்களுடன் தரப்படு கின்றன.
1. ஒரு கல் (நாவலடி அண்ணமார்)
2. ஒரு பொல்லு (பன்னாலை அண்
GOT DIT fi)
3. கல்லும் பொல்லும் (இலகடி
அண்ணமார்)
4. சூலம் (சாமணந்துறை அண்ண
LDITri)
5. சூலமும் பொல்லும் (சாத்தனா
வத்தை அண்ணமார்)
6. விக்கிரகம் (சீமேந்து-கோயிற்புலம்
அண்ணமார், கருக்கல் -
மயிலனி அண்ண மகேஸ்வரர்' தாமிரம் - ஆத்திசூடி வீதி சிவகுடும்பு அண்ணமார்)
இவற்றினைவிட அண்ணமாரின் வெவ்வேறு கலைகளைக் குறிக்கவென பல குலங்கள் ஒரு தொகுதியாக வைக்கப் படுவதுண்டு.
4.2 கோயில் அமைப்பு
கோயில் இல்லாமல் மூன்று சிறிய பொல்லுகளை துப்பரவு செய்யப்பட்ட

ஒரு இடத்தில் வைத்து வணங்கும் வழக்கே ஆதியானது. இருந்தாலும் இப்பொழுது பின்வரும் ஆலய வகை களுக்குள் அடக்கப்படக் கூடியதாக அவதானங்கள் அமையும், வகை மாதி ரியான உதாரணங்கள் உடன் தரப்
படுகின்றன.
ஒரு மர நிழல் (பன்னாலை அண் ணமார் - பனை)
மரத்துடன் சிறிய கொட்டில் (கொப் பளாவத்தை அண்ணமார்)
மரத்தின் கீழ் சிறிய க ட் டி டம் (இலகடி அண்ணமார்)
மரத்தின் கீழ் அண்ணமார், வைரவர் அம்மன் தனித்தனி கட்டிடங்களில்
(நாவலடி அண்ணமார்)
43 கோயில் இட அமைவு பற்றிய வகைப்
(b) חj_ו
பள்ளர் குறிச்சியின் மைய இடமொன் றில் பன ங் கூட லு ள் (இலகடி அண்ணமார்)
கிராம எல்லைப் புறங்களில் (நாவலடி அண்ணமார்)
3. வெள்ளாளர், இடைநிலைச் சாதி
4.4
களின் குடியிருப்புகள் - தோட்டங் களிடை (மிகச் சிறிய அளவில் கோப்பாப் பகுதியில் அண்மைக் காலங்களில் இவ்வாறான வழிபாட்டு இடங்கள் தோற்றம் பெறுவதைக் காணலாம்)
கோயில் பூசகர் பற்றிய வகைப்பாடு
எல்லாக் கோயில்களிலுமே பள்ளர் சாதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் அல்லது அவரின் ஆண்வழி உரிமை யாளர் பூசாரியாக அமைவர். நீண்ட பாரம்பரியத்தின் வழி மருத்துவம், சோதிடம், சூனியம் ஆகிய வற்றில் தேர்ந்தவர்களாக முதிய பூசாரிகள் அமைய, இளையவர்களில் பெரும் பாலானவர்கள் வெறுமனே தீபம்
7.

Page 12
4.5
சாட்டும் நிலையிலேயே இருக்கி றார்கள். பெரும்பாலான பூசகர்கள் பூசைவேளை 'கலை வரும் பூசாரி சுளாகவும் " " கட்டு' சொல்பவர்க ளாகவும் இருக்கின்றனர்.
சடங்குகளும் வழிபாட்டு முறைகளும்
வருடத்தில் ஒரு நாள் பொங்க லிட்டு, மடை பரவி வேள்வியிலே பெருந் தொகையான ஆடு, கோழி பலியிடல் அண்ண பாருக்குச் சிறப் பான வழிபாடு.
இந்தச் சடங்கிடைகலையாடலும் கட்டுச் சொல்லுதலும் வழிபடு வோரை பீடித்த ஆவிகளைக் கலைத் தலும், சூனியங்களை வெட்டுதலும் என முக்கிய அம்சங்கள் அவதா னிக்கப்படும்.
தமது தொழில் விளைவுகளில் அண் ணமாருக்கென பங்கு தேர்ந்து வழி படுவதும், முக்கியமாக அவதானிக் கப்படும். பனம்பாத்தியில் பங்கு, முதல் மரவள்ளி தடியில் பங்கு முதல்சீவும் பனையில் கள்ளுப் பங்கு, அண்ணமாருக்கெனவே நேர் ந் து விட்ட வாழை ய டி களி லி ரு ந் து தொடர்ந்து வாழையடி வாழையாக வாழைக்குலைப் பங்கு, இன்னும் தானிய விளைவுகளைக் கொண்டு மோதகம் மற்றும் பலகாரங்களை அவ்வப் ப யி ர் களின் விளைவுக் காலங்களின் போது படைத்தல், என இவை அமையும்.
முன்னர் வருடம் ஒருதடவை மட் டுமே திறக்கப்படும் அல்லது சடங் குக்காக கூடும் அண்ணமார் கோவில் களில், இப்பொழுது வாரம் ஒரு தடவை அல்லது இரண்டு தடவை விளக்கு ஏற்றி தீபம் காட்டி வழி படலும் நிகழும். பிற வழிபாட்டு, மரபுகளின் செல்வாக்கினால் பிர தான சைவ விழாக்களான சிவராத் திரி, நவராத்திரி போன்றனவும் இன்று கொண்டாடக் காணலாம்.

இன்று பெரும்பாலான அம் ம ன் ஆலயங்களில் மட்டுமன்றி ஏனைய ஆலயங்களிலும் கூட பிரபலமாகி யுள்ள திருவிளக்குப் பூ  ைச வரை, இந்தப் புதிய மாற்றங்களை ஆங் காங்கே காணமுடியும். எனினும் வருடாந்த வே ள் வி, வழுந்துப் பொங்கல் தினமே, பெருமளவில் பக்தர்கள் கூடும் உயிர்ப்பான பெரு விழாவாக அண்ணமார் ஆலய இருப்பினை எல்லோருக்கும் தெரி யப்படுத்துவதாக அ  ைம வ  ைத க் காணலாம்,
4.6 சடங்கின் விபரணம்:-
அண்ணமாருக்கே சிறப்பான வழுந்துப் பொங்கலும் வேள்வியும்:- பெரிய வெள்ளாளர் பரம்பரையைச் சேர்ந்த குறித்த (பெருமளவு நிலம், குடிமை களைக் கொண்டிருந்த) ஒரு குடும்பத் தலைவர் வழுந்தினையும் (பொங்கல் பானை) மடைப் பண்டங்களையும் அவரது வீடு அல்லது வளவில் வைத் துக் கொடுக்க , அண்ணமார் பூசாரி தலைமையில் கோயிலைச் சேர்ந்த வர்கள் அதனைப் பெற்று ஊர்வல மாகக் கொண்டுவந்து கோயிலின் முன் வைத்துப் பொங்கல் நடத்துவர்.
வெள்ளாள நில உ ட  ைம ய ரா ள ரி
டையே முரண்பாடு அல்லது பலர்செல்
வாக்கு கொண்டிருக்கும் இடங்களில்,
ஒன்றுக்கு மேற்பட்ட வழுந்துகள்
கொடுக்கப்படுவதுண்டு.
(உதாரணம்-கோப்பாய், இலகடி அண்ணமார்).
வெள்ளாளர் தொடர்பு குறைந்துள்ள அல்லது விரும்பாத இட ங் களில் கோயிலுக்குச் சற்றுத் தூரவுள்ள ஒரு புளிய மரத்தடி தேர்ந்தெடுக்கப்பட்டு அதனையண்டி வழுந்து. மடைப் பண் டங்கள் வைக்கப்பட்டு அங்கிருந்து பறை முழங்க அவை கோவில் முன்ற லுக்கு எடுத்துவரப்படுகின்றது.

Page 13
இது போலவே நேர்த்திக்குரிய ஆடு களும் மாலைகள், சந்தன குங்குமப் பொட்டுகளிட்டு கிராமத்து ஒழுங்கை யூடாக - பறை முழங்க கோயிலுக்கு அழைத்து வரப்படும். பின்னர் இவை பலியிடப்படும்.
பொங்கல் அதிகாலையில் நிகழும். இரவிரவாகப் பலவித பலகாரங்கள் கோயில் முன்றலில் வைத்து செய்யப் படுகின்றன. நிறையப் பழவகைகள், சிறப்பாக அண்ணமாருக்குப் பிடித்த பலாப் பழம் பெருமளவில் படைக்கப் படும். மரவள்ளிக் கிழங்கிலிருந்து மச்ச மாமிசம், குடிவகைகள்வரை, நிறைய மடையிலே வைக்கப்படுவது வழக்கம். காரைதீவு பிட்டியோலை ஏடு குறிப் பிடுவது போல் அண்ணமாருக்கு விருப்பமான கள்ளுடன் சிறந்த பொரியல் வகைகளாக முட்டைப் பொரி ய ல். கணவாய்ப் பொரியல், இறைச்சிப் பொரியல், நண்டுப் பொரியல் என்பனவும் படைக்கப் படும்.
இந்தப் பண்டங்களின் நடுவே, முழு மையாய் கோழியொன்றினைத் தீயில் சுட்டு, ஒரு கம்பத்தில் குத்தி, நிலைக் குத்தாய் நாட்டுவதும் வழக்கமாகும். ஆட்டுத் தலையை வெட்டி நிலைக் குத்தாய் நாட்டுவதும் நடைமுறை. சமஸ்கிருத ம ய மாக்க அலைகளுக் குள்ளான கோவில்களில் மச்ச மாமிசம் படைப்பது பெரிதும் தவிர்க்கப்படும். அல்லது கோயில் சூழல்களில் வைத்து சமைக்காமல் வீடுகளில் சமைத்துவந்து படைக்கப்படுகின்றது. அண்ணமாரின் கலைகள் பதினெட்டு என்ற கருத்தில் பதினெட்டு கற்கள் வைத்து வாழை யிலைகள் போட்டு அவற்றின்மேல் பனையோலை விரித்து அதன் மீதே மடை பரவப்படும்.
மடைபரவுதலுடன் பறை முழக்கம் அதிகரிக்கின்றது. பறையுடன் பூசா ரிக்கு கலை ஏற்படுகின்றது. இதனை அவரது உடலசைவுகள் காட்டும்.

அண்ணமார் கலைகளில் முதலாவது கலை பொல்லுக்காரன், பின் கத்திக் காரன், தொடர்வது கதைக்காரன் (கதைக்காரன் விடாமல் கதைத்துக் கொண்டே இருக்கின்ற கலை என்று விளக்கமும் தருவார். ஆத்திசூடி வீதி அண்ணமார் கோயிலைச் சேர்ந்த சின் ன்ையா பூசாரி) என க  ைல கள் தொடரும். ஒவ்வொரு கலைக்கும் சிறப்பான ஆயுதங்கள் இருக்கின்றன. அந்த அந்தக் கலை வரும்போது அதற் கான ஆயுதங்களை எடுத்துப் பூசாரி ஆடுவதை பழைமையான ஆலயங்களில் காணமுடியும். இன்று அறியப்படாத கலைகளுக்கான ஆயுதங்கள் வேறு வேறு அளவுகளில் உள்ள சூலங்களைக் கொண்டு பி ர தி யிடப்படும். 924 H தங்கள் ஏதுமின்றி தனியே பொல்லு மட்டும் கையில்கொண்டு பாவனை களின் வழி க  ைல வேறுபாடுகளை புலப்படுத்துவதும் சில இடங்களில் அவதானிக்கப்பட்டது.
அண்ணமாரைவிட ஏனைய தெய் வங்களின் கலைகளும், அண்ணமார் பூசாரிகளுக்குத் தோன்றுவதுண்டு. ருறிப்பாக வைரவர், நரசிங்கர், அனு மான், காளி என இவை அமையும். கலை மாறுகின்ற போது ஆயுதங்கள் மட்டுமன்றி அவற்றிற்கான ஆடை அணிகளையும் அணிந்துவரும் பழக்க மும் உண்டு. பிட்டி ஒலை அண்ண மார் கோவிலில் அம்மன் கலைவேளை சிறிய சேலைத் துண்டை தாவணி யாகப் போட்டுவந்து கலையாடல் நிகழ்த்தப்படும்.
(கந்தரம்பிள்ளை - செ. 1992)
ஆழமான "கலை"நிலையில் கோவி வில் வரிசையில் நிற்பவர்கள் சிலரை அழைத்து அவர்கள் பிரச்சனை களைச்சொல்லும் "கட்டு சொல்லுதல் நிகழும். பெரும்பாலும் சூனியபயம் அதன் விளைவான நோய்கள் என்பன வாக இவை அமையும், நோயாளரைப் பூமரம் என்று குறிப்பிடுவதுமுண்டு

Page 14
பக்தரில் ஒருவர் அல்லது நோயாளி யின் பெற்றோர் இப் பூமரத்தினைப் பிடித்த தெய்வம் எதுவெனக் கேட்க, பதிலாக "இன்ன தெய்வம்" அல்லது "பிசாசு" என பதில் கிடைக்கும். சில சமயங்களில் இ ன் ன - திக்கிலுள்ள வைத்தியரிடம் செல்' என்று கூறப் படுவதுமுண்டு.
(சுந்தரம்பிள்ளை - செ. 1992)
**கட்டுச் சொல்லுதலின்போது ஒரு வர் அல்லது இருவர் சடங்கில் முழு மனதாக ஈடுபடாமைக்காக கண்டிக் கப்படுவதும் அநேகமாக எல்லா இடங் களிலும் அவதானிக்கப்படக் கூடிய ஒரு நிகழ்வு.
தெய்வங்கள் கட்டுச் சொல்லுதல் முடிய, அண்ணமார் பக்கத்தில் வைக் கப்பட்டிருக்கும் வளைந்த கூரிய் கத் தியை எடுத்துச் சென்று பலிவெட்டு தல் நிகழும். இப்போது பெரும்பா லும் பூசாரி வெட்டாமல் இகற்கென உள்ள மற்றொருவரிடம் கத்தியைக் கொடுக்க, அவர் மு த லி ல் ஒரு கோழியை வயிரவருக்குப் பலியாக்கி பின் அண்ணமாருக்கு ஆட்டுப்பலியைத் தருவார். சடங்கு நிலையில் வெள்ளா ளப் பூசாரியும் அண்ணமார் பூசாரியும் ஒரே பந்தலின் கீழ்உள்ள கோயில்களில் மேலே விபரித்த நிகழ்வுகளில் சில வேறுபாடுகளை அவதானிக்கலாம், மிக மிக அரிதான இந்த இணைவு தென்மராட்சிப் பகு தி யிலுள் ள கோயில் ஒன்றில் பதியப்படும்.
இங்கு பிள்ளையார் பூசையுடன் தொடங்கும் , சடங்கில், ஐயனாருக்கே பொங்கல் முதலில் படைக்கப்படும். அதனைத் தொடர்ந்து பலியை வெட்டு வதற்கான கத்தி, ஐயனார் பூசாரியினால் ஐயனார் பக்கத்திலிருந்து எடுத்து வரப் பட்டு, அண்ணாமார் பூசாரியிட்ம் கை யளிக்கப்படுகிறது. அவர் அண்ணமாருக்கு தீபம் காட்டுவதுபோல் கத்தியால்பாவனை செய்த பின் கோயில்வீதிக்கு வந்ததும் பறை முழக்கம் உச்சமாகும். இப்பொழுது இரண்டு
10

பூசாரிகளும் இணைந்து கலையாடல் நிகழும். கலையாட்டத்தினிடை அந்தத் தெய்வங்களுக்கு கிட்ட தம் பிரச்சனை களை முறையிட நிற்பவர்கள் சிலருக்கு. அவர்களைப் பிடித்த ஆவிகள், சூனியங்கள் பற்றிச் சொல்லப்படும். அதனைத் தொர்ந்து அண்ணமார் பூசாரி பலிகளை வெட்டுவார்.
ஆடு பலியிடல் முடிய கோயிலைச் சூழ அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் பெருமள வான இளநீர்களை பூசாரி இர ண் டு துண்டுகளாக வெட்டிச் செல்வார். அப்படிச் செல்லும்போது, இர த் தம் கலந்த சோறினை தம் தோழுக்கு மேலாக விசிறிச் செல்வார். அங்குள்ள மக்களைப் பீடித் திருந்த ஆவிகள் இப்போது இறங்கிவிட்ட தாக கருதப்படும் கெட்ட ஆவிகளையும் தெய்வங்களையும், இந்த இரத்தச் சோற் றினைப் போட்டுப் போட்டு ஒரு சந்திவரை கூட்டிச் செல்வதாக பூசாரி அறிவிக்கிறார். சந்தியில், மிகுந்த இரத் த ச் சோறும் தேங்காய்களும் போடப்படுகின்றது. ஆவிகள் அவற்றின் மீது வந்து விழுந்து முடிவில் தாம் பீடித்திருந்தவர்களிடம் மீளச்செல்வதற்கான வழியை அறியாது குழம்பிவிடும் என்பது நம்பிக்கை.
இதனைத் தொடர்ந்து படையல் பங்கிப்டபடும். இவ்வாறான பங்கிடலிலும் ஐயனாரும் அண்ணமாரும் உடனிருக்கும் கோயில்களில் குறிப்பிடத்தக்க ஒரு நிலமை அவதானிக்கப்பட்டது. இங்குஐயனாருக்குப் படைக்கப்பட்டவை வெள்ளாளருக்கும், அண்ணமார் மற்றும் ஆவிகளுக்குப் படைக் கப்பட்டவை அண்ணமார் பூசாரிக்கும் பறையடித்தவர்களுக்கும் கொடுக்கப்படுகி றது. அண்ணமாருக்கே உரிய இந்தச் சிறப் பான பலியிடல், சட்டங்கள், சமூகக் கட்டு பாடுகளின் வழியும்,சமூக ம்திப்பீட்டு மாற்றங்களின் வழியும் இன்று அருகிய நிலையில் ஆங்காங்கே குறியீட்டு நிலையில் சேவலின் பூவினை அறுத்த்ல், மடையின் மீது ஆட்டுத்தலையொன்றினையேனும் குத்திவைத்தல் அல்லது உயிர்ப்புலிக்குக் குறியீடாக பூசணிக்காய் வெட்டுதல் என

Page 15
அமையும். கோ யி லில் வெட்டாத போதிலும் ஆடு, கோழிகளை கோயிலுக் காய் நேர்ந்து கொடுக்கிற வழமை தொடருகின்றது.
உயிர்ப்பலி - வேள்வி நிறுத்தப்பட்ட விடயம் பெ ரு ம் பா லா ன பூசாரிகள். அண்ணமார் பக்தர்கள் மத்தியில் பெரு மளவில் தா க் க ம |ா ன உணர்வினை விளைவித்திருந்தமையை களஆய்வுப் பதிவுகள் காட்டுகிறது ஆகம , கும்பாபிஷேக அலைகள் எட்டாத அண்ணமார் களங் களில் தாம் அனுபவிக்கும் துன்பங்கள் அனைத்திற்கும் உயிர்ப்பலி நிறுத்தமே முக்கிய காரணம் என நம்பப்படுவதை குறிப்பிட முடியும்.
'முந்தியென்டால் வேள்விமுடிய மழை, இப்படி நாங்கள் அவலப்பட்ட தில்லை, ஒடித்திருஞ்சதில்லை, தோட்ட மில்லாமல் வயிறு காய்ஞ்சதில்லை, என்பது நீர்வேலி பன்னாலைக் குறிச்சி காத்தானின் (54) நம்பிக்கை.
த டை களிடையே யும் மூன்று ஆடுகளை பூசாரியொருவர் உச்சக் கலை யில், நேர்ந்துவிட்ட வீட்டுக்கே சென்று, வாயினால் குதறி வந்த சம்பவம், மிகுந்த பக்தி உணர்வுடன் ஆய்வுக்களம் ஒன்றில் சொல்லப்படும். இன்றும் நிலைபெறும்
அண்ணமார் வழிபாட்டின் மரபுவழி தீவிரத் தன்மையை இச்சம்பவம் எதிரொ லிக்கும். ஆகம - சமஸ்கிருதமயமாக்க
அலைகளின் செல்வாக்குகளிடை மச்சமடை வேள்வி நிறுத்தப்பட்ட சில இடங்களில் மீண்டும் அவற்றை தொடங்குதல் பற்றிய உணர்வுநிலை அதிகரித்துள்ளமையும் அவதானிக்கப்படும். கிருச்சியால் அண்ண மார் பூசாரி மனைவி, தன் குழந்தைக்கு ஏற்பட்ட ஒரு வி பத்  ைத யும் அதன் விளைவாக இரத்த இழப்பையும் அண்ண மார் பலிதராமையை உணர்த்திய அற்பு தமாக வர்ணிப்பார். இந்த ஆண்டில் எப்படியும் மீள இவற்றை தொடங்குவது என்ற தீவிரம் அவரில் தெரியும்.
பூசாரியின் தன்மை - சமயச் சூழல் . ஏனைய பண்பாட்டுச் செல்வாக்குகளின்

வழி ஆகம - சமஸ்கிருதமயமாக்கல் நிக ழாத சில கோயில்களிலும் கூட மச்ச - மாமிச மடையும் வேள்வியும் தவிர்க்கப் பட்டதுண்டு.
நாங்கள் மனிசரே மச்சமாமிசம் தின்னாமல் பிழையெண்டு விடயிக்கை தெய்வத்துக்கு எப்படி குடுக்கிறது, என்பது பூசாரி சின்னையர் உட்பட
இவர்களது நியாயமாக முன்வைக்கப் படும் .
இவ்வாறாக  ைச வம் படைக்கப் பட்டு வேள்வி நிறுத்தப்பட்ட கோயில் களிலும் கூட, கலையாடல் தொடரும். தம்மவரான பூசாரிகளின் கலையாடலை, மதிப்புகுறைந்த நி  ைல யாக கருதுவது மட்டுமன்றி, அண்ணமாரையும் கூட தங்கள் சாதிநிலையை காட்டிக் கொடுப்பவ ராக இனம்கண்டு, மாற்றிவிட வேண்டு மென்றும், ஆகம - சமஸ்கிருதமயமாக்க கடவுளாக பிராமணர் பூசையைக் காண வே டு ன்  ெம ன் று ம் அழுத் தங்க ள் குறிப்பான சில இடங்களில் அதிகரிக்கின் றமை அவதானிக்கப்படும். இவ்வாறான அழுத்த அதி க ரிப் டன் விளைவாக, மயிலினி அண்ணமார் அண்ணகேஸ்வரராக சமஸ்கிருதமயமாக்கப்பட்டு, மூன்று ஆண்டு களாகினறன. ஆத்திசூடி அண்ணமாரை மாற்றவென கடந்த ஏழு ஆண்டுகளாக பிடுங்கி பக்கத்தில் நாட்டப்பட்ட அண்ண மார் சூலம், எ ன் ன வ |ா க மாற்றப்பட வேண்டுமென்ற இழுபறியிலிருந்து இந்த ஆனியில்தானசிவகுடும்ப அண்ணமாராதல் நிகழ்நதது. கோப்பாயிலுள்ள கைவினைஞர் சாதியினர் தரிக்கும் அண்ணமாரை சமஸ் கிருதமயமாக்கி ஐயர் பூசைகாண விரும் பிய பக்தர்களும், அண்ணமாரை முடிவை பிரதியீடு செய்வது என்ற தேடலில் அவை காண முடியாத நிலை உள்ளது.
அனேகமாக க ல் வி, தொழில்ரீதி யான இடஅசைவு, வெளிநாட்டுப் பண வரவு ஆகியன அதிகமாகவுள்ள இடங் களில் இளைஞர் மத்தியிலேயே இவ்வா றான மாற்ற உணர்வின் தீவிரம் உள்ளது. கோப்பாயில் மேலே குறிப்
11

Page 16
பிட்ட அண்னமாரை சமஸ்கிருதம படமாக் கீலுக்கென, வெளிநாட்டுக்குச் சென்ற அந்தக்குறிச்சி இ ைள ஞ ரினால் 11ணம் அனுப்பி வைக்கப்பட்டு இரண்டு வருடங்க ளாகியும் எப்படி மாற்றுவது என்ற பிரச்சி யால் மாற்றம் திTமிதாகும். இங்கு ஆய் வாளரை ஒத்த நிலையில், ' egy Görgöor Lorii, என்ற பன்மைநிலை அறிவுடன் தேடிய விடத்து, பிராமணக் குருக்கள் ஒருவர், அண்ணமார் என்பது பிள்ளையார் . கந்த சாமியார் இருவரையும் தான் குறிப்பது எனத் தந்த விளக்கத்தில் திருப்திகாணாமை அவ தா னிக் கப்படும். 'நீங்களாவது கண்டுபிடித்துச் சொல்லுங்கள், என்பது ஆய்வாளரிடத்தான, இவர்களது ஆர்வ மான கோரிக்கையாக இருக்கிறது.
5 தொகுப்பும் பகுப்பாய்வும்:
இதுவரை கண்ட களப்பதிவுகளை தொகுத்து நோக்குகையில், யாழ்ப் பான சமூக அமைப்பின் பிரதிபலிப் 4ாக, குறிப்பாக சாதியடிப்படையி லான சமூக உறவு நிலைகளையும் அதனடியான உப பண்பா ட் டு க் கோலங்களையும் அண்ணமார் வழி பாடு பிரதிபலிக்கக் காணலாம்.
9. ஐதீகங்களை நோ க்கும் போது
பள்ளர் குலத்துக்கு சொந்தமான வராகவே அண்ணமார் விளங்கக் கானலாம்.
I. யாழ்ப்பாணத்தை 60) и ширгтв, з, கொண்ட இளந்தாரிகளில், அண்ண மாரானது ஒரு பள்ள இளைஞன்.
s
2. வன்னிச்சியரோடு தற்கொலை செய்த வீர குடும்பன் முகனையான 60 பேரும், பள்ளர்களே.
3. பொன்னர் - சங்கர் அண்ணமா ரான கொங்குநாட்டுக் கதை யாழ் பாணத்தில் பெரிதும் அறியப்படாத போதும், இவற்றிடை தொடர்பு *ாணும் என் ஆய்வுதேடலில் மரபு வழி வரலாற்று மூலங்கள் தரும் செய்திகள், சில ஆர்வமான தொடர்
12

புகளை இனம்காட்டும். குறிப்பாக வையா பாடல் பினாங் பதிப்பின் சிவானந்தன் முகவுரை வன்னியர்கெளண்டர் - பள்ளர் தொடர்பினை பின்வருமாறு குறிப்பிகிறது.
இந்தியாவில் வன்னியச் சாதி, குடி штати பிள்ளைகளிலொன்றாய் மதிக்கப்பட்டாலும் கள்ளர், மறவர் கணக்கர், அகம்பாடியராகிய குடி யானப்பிள்ளைகளிலும் பார் க் க கீழ்ப்பட்ட சாதியாரென்று மதிக்கப் படுகிறார்கள். ஏனெனில் இவர்கள் பள்ளர் சாதியிலிருந்து தோன்றின ஒர் பிரிவேயாம். இது கார ண ம் பற்றியே, 'பள்ளி முற்றிப் படை யாட்சி, படையாட்சி முற்றி வன் னியர், வன்னியர் முற்றி கவுண்டர் ஆனார் காண், , என்னும் பண்டை வாக்கு இந்தா ளிலும் இந்தியாவிலுள்ள எல்லாச் சாதியாராலும், வழங்கப்படுகிறது (நடராசா, 1980) மேற் சொன்ன கருத்தின்படி இன்றைய கெளண்ட வேளாளரின் மூல மாக பள்ளர் சாதியினரைக் காணமுடிகிறது. (எனினும், மேலும் இது வரலாற்று ஆய்வுகளால் உறுதிப்படுத்தப்பட வேண்டியது)
அராண நிகழ்வோடு இணைந்த அண்ணமார் க  ைத க ள் அண்ண மாரை பள்ளர் குறிச்சிகளில் அந்தச் சாதிமக்களின் தயவில் பிழைத்துக் கொண்டவராகவே சித்தரிப்பன. அ வர் க ள து தொ ழி ல் சூழல் கற்பனை எல்லைக்குள்ளேயே இக் கதைகள் பின்னப்பட்டுள்ளன. சூரன் கொடுமைக்குப் பயந்து வந்து அண் ணமார் ஒழித்த இடம், பள்ளர் கமம்செய்புலமாக அல்லது அவர்கள் கள்ளுச் சீவும் பாளைக்கத்தி வைக் கும் இ ய ன க் குட்டா னா க வே வர்ணிக்கப்படுகின்றது.

Page 17
5.2 சமூக அமைப்பின், உற்பத்தி உற வுகளின் யதார்த்த நிலைமைகளை உறுதிப்படுத்துவனவாகவும், இந்த ஐ தி க ங் க ள் அமையக்காணலாம் அடுக்கமைவு நிலையில் வெள்ளாரின் குடிமக்களாக அவர்களது கமங்களில் அடிமைத் தொழில் (இன்று கூலி) செய்பவர் பள்ளர். அவர் க ள து வாழ்வு, எஜமானர்களான வெள்ளா ருக்கானது. அவர்களது விசுவாசம் ஆழமானதும், உற்பத்தி மேம்பாட் டுக்கு அவசியமானதும்கூட, இந்த விசுவாசத்தை உறுதிப்படுத்துவன வாக ஐதீகங்கள் அமையக்காணலாம்.
1 , இளந்தாரி அண்ணமார் ஐதீகத் தில் இளந்தாரிகள் புளியில் ஏறும் போது, பள்ளர் பனையில் ஏறுவ தாய் வரும். இங்கே அவனை ஒரே மரத்தில் ஏற அனுமதிக்காமை மூலம், சமூக இ  ைட வெளியும் பேணப்படும். கூட வே இந்தக் கதையின் முடிவு தொடர்பாக வெள்ளாளர் ஐதீகத்தில், அண் ணமார் இளைஞன் கீழே விழுவ தாக வெள்ளாளர்களால் சொல் லப்படும். அவர்கள்தம் குடிமக னுக்கு தம்மவரை ஒத்த தகுதி ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும் முயற்சி இது என்பதும் வெளிப் படையானது. (எனது களஆய்வின் போது குறித்த பள்ளர் குறிச்சிக்கு நான் செல்வதனை இவர் கள் அதிகம் விரும்பாத நிலையையும் இங்கு குறிப்பிடலாம்)
2. வன்னிச்சியருடன் த ர் கொலை செய்த கதையிலும் பள்ளர்களின் விசுவாசமும் கடமையுணர்வும் சிறப்பாக எடுத்துகாட்டப்படும். அவர்கள் தெய்வமாக, அவர்களின்
எஜமான் சுவாசத்தின் வழி யான தற்கொலையே காரன மாகிறது.
3. புராண கதைகளுடன் இணைந்த அணணமார் கதைகளிலும் சிவ

னின் காவல் தெய்வங்களுக்குப் பயந்த ஏவலாளியாகவே அண் ணமாரின் சித்திரிப்பு, ஐயனாரின் தளபதியாக அ ண், ன மா  ைரக் காணும் நிலைகளும் வெள்ளாளர் - பள்ளர் படிநிலையினை பிரதி பலிப்பதாகவே. அமையும்கோனே சர் கல்வெட்டுக் குறிப்பிலுங்கூட, குளக்கோட்ட அரசன் பெரு மையை சுட்டுமிடத்து மண்வெட்டி ஏவலாளராகவே அண் ண மார் சித்தரிக்கப்படுவதையும் கவனிக்க Φυ πιό . (நடராசன் - பி. 1993) அண்ணமாருக்கான மந்திரத்தில் சிவகுடும்பன் என அண்ணமாரை சிவனின் அம்சமாக சித்திரிக்கும் போதும் தவிர்க்கமுடியாதபடி மதுரை மாவட்ட பள்ளர்களின் குடும்பத் தலைவனான 'குடும் பன்" என்ற பெயரை (மதுரைத் தமிழ் பேரகராதி - 1956) சிவனு டன் இணைந்ததாக சாதியடை யாளத் துடனேயே மந்திரங்களும் யந்திரங்களும் அண்ணமாருக்கு வாய்க்கும்.
5.3 இனி, ச ட ங் கு க ள் வழிபாட்டு முறைகளை நோக்கும்போது, பள் ளர்களே முழுமையான சடங்கீடு பாட்டினையும் வழிபாட்டினையும் கொண்டிருக்கிறார்கள் வழு ந் துப் பானை கொடுத்தலில் வெள்ளாளர் சம்பந்தப்படுகின்ற போதிலும் இது வும் அவர் க ளது நில உடமை மேலாண்மையை உணர்த்தும் நிகழ் வாகவே அமைவது குறிப்பிடத்தக் கது. கோயிலுக்கு வராமல் சடங் குகளில் நேரடியாக கலந்துகொள்ளா மல் விடுவதிலிருந்தும், பழைய குடிமை உறவுமுறை பேணப்படாத இடங்களில் வழு ந் துப் ப ா  ைன கொடுக்கும் பாத்திரத்தை இவர்கள் இழந்ததிலிருந்தும் இதனை அவதா னிக்கலாம். ஒன்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வழு ந் துப் பானை கொடுப்பதன் மூலம் சமூக முதன்மை காண முற்படும் நடைமுறை பற்றிய
13

Page 18
5.4
அவதானங்களும் வழுந்துப்பானை கொடுத்தலின் சமூகமுக்கியத்துவத் தினையே சுட்டிநிற்கும்.
வெள்ளாளரும் பள்ளரும் இணை யும் ஐயனார் - அண் ண மார் கோயில் களத்திடையும் படையல் களை பகிரும்போது, ஐயனாருக்குப் படைத்தவை வெள்ளாளருக்கு மட்டு மாக, அண்ணமாருக்குப் படைத்த இரத்தச் சோறும் ஏனையவையும் அண்ணமார் பூசாரிக்கும் பறை அடிப் பவர்களுக்குமே வழங்கப்படுவதும், இதன்வழி கலையாடல் சடங்குக ளின்போது நோயாளர்களிலிருந்து இறக்கப்பட்ட தீய ஆவிகள் கலந்த உணவினை அடிநிலை மக்கள் உண்டு ஏனையோருக்கு நலம் தருவதாக கருதப்படுவதும் இங்கு கருத்தில்
கொள்ளப்பட வேண்டியவை Ամfr (3;ւb.
அத்துடன் வெள்ளாளப் பூசாரியும் அண்ணமார் பூசாரியும் S-2 i til í போதிலும், ஆடு வெட்டுதல் அண்ண மார் பூசாரியின் வேலையாகவே அமையும். சமூகவியலாய்வுகள் சுட் டுவதுபோல் தூய்மையற்ற வேலை தூய்மை அற்றவருக்கு என, சடங் கிலும் வேலைப்பிரிவாக அவதா னிக்கப்படும். சில இடங்களில் இன்று அண்ணமார் பூசாரிகளும் கூட தம் பலியை வெட்டுவதற்கு பதிலாக இதற்கென ஒருவரை நியமித்து தமது சடங்குப் புனிதத்தை பேணு கின்ற தன்மையும் இங்கு குறிப் பிடத்தக்கது. சடங்கு நிலையில் மட்டுமன்றி சாதாரண உணவுத்
தேவையிலும் கூட கோழி உரித்தல்
ஆடு அறுத்தல் போன்ற தீட்டான அல்லது அசுத் த மா ன இத்தகு வேலைகள் அடிமை குடிமைகளுக்கே உரியனவாக அமைவதனையும் இங்கு கருத்தில் கொள்ளலாம்.
அண்ணமார் வழிபாட்டின் தொடர்ச்
சியும் மாற்றங்களும்;
4

யாழ்பாணத்துச் சமய வரலாற்றில், தெய்வங்கள் தொடர்பான அடுக்க %ᏡᎥ ᎠᎧ11Ꮒ வழிபாட்டு முறைகளிடை ஏற்றத்தாழ்வுகளும் உறுதிப்படுத்தப் பட்ட நாவலர் காலத்தினை (1822 - 79) தொடர்ந்து அடிநிலை வழி பாட்டு மரபுகள் சமஸ்கிருதமயமாக் கப்படல் இன்றுவரை தொடரும் நடைமுறை. ஒப்பீட்டு ரீதியில் நோக் குகையில், ஏனைய வெள்ளாளர் வழிபடும் தெய்வங்கள் கண்ட அள விற்கு அண்ணமார் வழிபாட்டில் மாற்றம் நிகழாமை, அல்லது சில குறித்த இடங்களில் மட்டும் மாற் றங்கள் நேர் வது ம் சமூக சமய உறவுகளின் பிரதிபலிப்பாக விளங் கக்கூடியது. விவசாயப் புலங்களில் பயிர்களைக்காக்கவும், தொழிலுக்கு உதவவும் அண்ணமாரின் காவலும் அருளும் தேவைப்படும் சமூக நிலை யில் பெரிய மாற்றமில்லை. நிலமா னிய உற்பத்திமுறை, புதிய குத்தகை - ஒற்றி என மாற்ற ங் க  ைளக் கண்ட போதிலும்கூட, இவற்றில் கூட மரபு வழி குடிமை உறவுகளின் தன்மைகள் இணைந்திருக்கின்றன. கூலிக்காக உழைப்பு, எனும் மாற் றம் நிகழ்ந்த பின்பும் சாதி அடுக் கமைவில் அடியிலுள்ள பள்ளர்களி டமிருந்தே பெரும்பாலான விவசா யக் கூலிகள் பெறப்படுகின்றமையை அண்மைய யாழ்பாண விவசாயக் SMITIT un guiu Gayés Git (Shanmugalingan N - 1988) உறுதிசெய்யும். இவ்வா றான மரபுவழி சமூக உறவுநிலமை களும் உற்பத்தி நிலைகளும் தொட ரும் இடங்களில் வழிபாட்டு மரபும் அதிக மாற் ற மின் றி தொடரக் காணலாம். வழு ந் துப் பா  ைன கொடுத்தல், வேள்வி ஏற்பாடுகளை ஊக்குவித்தல் என்பவற்றின் மூலம் வெள்ளாள நிலவுடைமையாளர் தம் சமூக முதன்மையை, சடங்கு முதன் மைவழி உறுதிப்படுத்திக் கொள் கின்றமை ஒரு புறமும், இதேபோல பள்ளர் சமூகத்தினரும் தம் சமய

Page 19
- சடங்கு முக்கியத்துவத்தினை நிலை நாட்டிக்கொள்ள அண்ணமார் வழி பாட்டு மரபுகளை பேணியே ஆக வேண்டிய நிலைமை மறுபுறமுமாக இந்த வழிபாட்டின் மரபுநிலைத் தொடர்ச்சி பேணப்படும்.
புதிய மாற்றங்களோ அன்றி ஆலய பிரவேச சட்டங்களோ வாழ்க்கை யில் மேம்பாடு எதனையும் தராத அனுபவங்களும், அண்ணமார் மாற்ற மடையாமையின் அடிப்படைக்கா ரணங்களில் ஒன்றாக இனங்காணப் படும். எடுத்துக்காட்டாக, முதன் முதலில் 50 களின் முற்கூறில் சாம ணந்துறையில் நிகழ்ந்த சமஸ்கிருத மயமாக்கலிடை மூலவராக பிள்ள்ை யார் இடம் பிடிக்க, அண்ணமார் சூலம் அதனை வழிபடுவோரை ஒத்த நிலையில் வெளி வீதிக்கு தள் ளப்பட்ட து போன்ற நிலமைகள் மாற்றம் தொடர்பான தயக்கமான தேக்கமான ஒரு தன்மையை விளை வித்தது.
மிக அண்மையில் அண்ணமார் மாற் றம் கண்ட, மயிலனி, ஆத்திசூடிவீதி ஆகிய இடங்களில் கல்வி வழியான சமூக தொழில் அசைவும், அதன் வழியான விழுமிய மாற்றங்களும் பிரதான காரணி களாக அமைகின்றமையும் இங்கு கவனம் பெறும். குறிப்பாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு தந்த பொருள் வளமும், தொழில் நிலையில் தங்கியிராத் தன்மையும் இந்தக் குறிச்சிகளின் சிறப்பான தன்மைகளாக இனங்காணப்படும். இந்தப் புதிய பொரு ளாதார சமூக மாற்றங்களின் விளைவாக குறிப்பாக இளைஞர்களிடை, அனைத்து சமூக நிலை களி லும் சமத்துவத்தினை காணும் தாகம் அதிகரித்ததின் விளைவா கவே மாற்றம் துரிதம் பெறும், இந்த இளைஞர்களோடு, ஏனைய பகுதிக் கோவில்களின் தர்மகர்த்தா முகாமை முதன்மைகளைக் காணவும், தங்கள் கோவில்களில் பிராமண பூசகர்களையும் திருவிழாக்களையும் காணவும் ஆர்வம் கொண்டு, ஏனையோரும் இணைகின்ற

நிலைமையும் இந்தப் பகுதிகளில் மேற் கொள்ளப்பட்ட ஆழமான அவதானங்க ளால் உறுதிபெறும். கூடவே, இவர்கள் கோவில்களின் பூசகராக சைவ குருமாருக்கு மேல் பெறமுடியாத நிலையும், சமஸ் சிருதமயமாக்கலின் பின்னரும் இவர்களே வழிபடுவோராக தொடரும் நிலையும் குறிப்பான கவனம் பெறும்.
இவர்களது மாற்ற முயற்சிகளுக்கெல் லாம் அண்ணமாரின் சாதிமூலமும், வழி பாட்டின் புராதன தன்மைகளும் தடை கற்களாக அமைகின்ற இந்நிலைமையுடன் அண்ணமார் என்பது ஒருமையா பன் மையா என்ற வினாவுக்கு விடைகாண்ப திலுள்ள முரண்பாடுகளும், அண்ணமார் தோற்றம் தொடர்பான ஐதீகங்களிடை ஒருமைப்பாடு காண்பதிலுள்ள சிக்கல்களும் சேர்ந்து மாற்றத்தை மேலும் 5TLD5 மாக்குகின்றமையும் இங்கு முக்கியமாக அவதானிக்கப்படும், எடுத்துக்காட்டாக, மிக அண்மையில் சமஸ்கிருத சமயமாக்கப் பட்ட ஆத்திசூடிவீதி அண்ணமாரை என்ன வாகமாற்றுவது என்ற இழுபறியில் ஏழு ஆண்டுகள் சென்றதும், இறுதியில் சாதி அடையாளத்துடனேயே சில ‘குடும்ப" அண்ணமாராகவே மாற்ற முடிந்ததும் இங்கு சிறப்பாக நோக்கக்கூடியது.
அதே நேரத்தில் மாற்றங்களைப் பற் றிய சிந்தையே இல்லாது, ஆழ வேர்விட்ட இந்த மரபின் தீவிரத்தை வெளிப்படுத்தும் நீர்வேலி அண்ணமார், மானுடவியல் ஆய்வுகள் காட்டும் குலமரபுச்சின்ன குழு உணர்வுப் பயன்பாட்டின் தொடர்ச்சியாக கருதப்படக் கூடியது. இன்றைய அகதி வாழ்வு அசைவுகள், ஆபத்துக்கள் இடை யேயும் பிரச்சனையின் எல்லையிலுள்ள அந்தக் கோயில் புலம் அண்ணமார் கோயில் வருடாந்தம் பொங்கலுக்கென பல ஊரி லிருந்து கூடிய மக்கள் ,காட்சி - இந்தக் குழு இணைவு மையமாக அண்ணமார் விளங்குதலை, உறு தி செய்யும். இந்த ஆண்டு பொங்கல் வேளை என் நேர்காண லிடை நடுத்தரவயது பக்தர் ஒருவர் மிகத் தெளிவாக **தம்பி அண்ணமார் எங்களை
15

Page 20
அடையாளம் காட்ட அந்தக் காலத்திலை. நிலமானிய அமைப்பில் வெள்ளார் தந்த பொல்லுதான்; இருந்தாலும் நாங்களும் எங்கட எண்டு உரிமையோ ட கும்பிடவும் கூடவும் அவரைவிட வேறு யார்? “ என்று கூறும் பதிலிடையில் அண்ணமார் வழி பாட்டின்சாரம் தெரிகிறது.
வைற் கெற் குறிப்பிடுவது போல சயமசமூக சமத்துவத்தினை வெளிப்படுத்தும் அமைதியான எதிர்ப்பாகவும் இந்த வழி பாடு தொடரும். அவர்களின் சகோதர உணர்வின் வெளிப்பாடாக அந்த உறவுத் தொடரே அவர்கள் கடவுள் பெயருமாகி
யது எனவும் கருதமுடியும் .
Arunachalem, M.
Beck, Brenda E. F.
Durheim, Emile
Marx, Karx
Pfaffenberger. Bryan –
Shanmugalingan, N —
இரகுபதி, GuIT
கோபாலகிருஷ்ணக் கோன்,
16
உசாத்துை
Ballad poetry,
Peasamt Societ Columbia press.
The Elementar Collior Books, N
Economic at Phi Translated by M Publishjng House
Caste in Tamil foundation of Vikas publishing
Agrarian Chang of a Jaffna Will
Un -published : M University of Jaf
கோவும் மடைப்படி
திருமதி. இ. அப்பு
வித்தியாலயம், க1
மதுரை தமிழ் பேர இ. மா (பதிப்பாசி

யாழ்ப்பாணத்தில் ஆதி சமய மூலங் களை இனங்காட்டும் அண்ணமார் வழி பாட்டின் ஆழமான தரிசனங்களிடையே யாழ்ப்பாண ச மூ க வரலாற்றின் ஆதிக் கோலங்களையும் தெளிவாகக் öf了峦 முடியும்.
இன்றைய தொல்லியல் காட்டும் திரி சூல வடிவான கோவிற்கும் (இரகுபதி பொ, 1983) முந் தி ய கடவுளாக, டொல்லுக் கிழவனாக அல்லது கல்லு வடி வினனாக அண்ணமார் வழிபாடு, எங்கள் பண்பாட்டின் தொல்நிலை வழிபாடாக மட்டுமன்றி, இ ன்  ைற ய மானுடவியல் தேடும் ஆதி வழிபாட்டின் தொடர்ச்சியா கவும் நாட்டார் வழிபாடாக விளங்கக் காணலாம்.
னகள்
Gandi Vidyalayam, Tanjavur Dist , 1976
ty in Konku, University of British
1972
y froms of the Religious Life
ew York, 1961
losophic Manuscripts - 1884, artin Milligan, Foreign languages , Moscow, 1961
Culture - The religious Sudra Domination in Tamil Sri Lanka House Pvt Ltd., 1982
Ie and Social Structure: Case Stud Іage у
, A. Dissertation. fna. Thirunelvely. Jaffna, 1988.
றையும், பாரதி சிறப்பு மலர் பதிப்பாசிரியர் துரை, மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா rங்கேசன்துறை 1983
கராதி மதுரை (2-ம் பதிப்பு)
fauri") 1956 Lussub -

Page 21
சுந்தரம்பிள்ளை, செ. -- வட இலங்கை நா
1992 (அச்சேற
நடராசா க. செ. - வையா பாடல், (பதிப்பாரியர்) 1980
நடராஜன், பி. - கவிராசனின் கோே பதிப்பாசிரியர்) ܗܝ அமரர் வேலுப்பி
Ranau V 6 Tuuo
தம்பு செல்லைய
மற்றாஸ் மெயில் செ. - வன்னிவள நாட்( (பதிப்பாசிரியர்) முல்லை இலக்கி
லூர்து தே - நாடார் வழக்காற்
களஆய்வு, பாரிே
பொருள்சா
பண்பாட்டினைப் பொருள்சார் பண்ப 57 gosti Ligi ustG (Non-material culture, மக்கள் அவர்களின் தேவைகளுக்காகச் செ பொருள்களும் பொருள்சார் பண்பாட்டில் மரச்சாமான்கள், வீட்டுப்பொருள்கள், உ போக்குவரத்துச் சாதனங்கள், சாலைகள் அழகுப்பொருள்கள், போர்க்கருவிகள் போ சார் பண்பாட்டைச் சேர்ந்தவை. ஒரு ட கென்ற பொருளையும் (Meaning) பயன் பண்பாட்டில் நிலைபெற்றிருக்கும், மக்களி படுத்தப்பட்டதால் அத்தேவைகள் பண் பொருள்களும் அப்பண்பாட்டில் இருக்கும். குறிப்பிட்ட தேவைகள் அற்றுப்போகுமான போகும். ஆகவ்ே ஒரு பண்பாட்டைச் கொண்டு அம்மக்களின் பண்பாட்டைப் ெ பண்பாட்டுப் பகுப்பாய்வில் பொருள்சார் மாகிறது. பொருள்சார் பண்பாட்டில் மக் மட்டுமே இடம் பெற்றிருப்பதால் அவை அல்லது பொருள் வடிவங்கள் (Artifacts)
நன்றி. பண்பா

ட்டார் அரங்கு, கலாநிதிப்பட்ட ஆய்வேடு, ாதது)
கொழும்புத் தமிழ்ச் சங்க வெளியீடு
ணேசர் கல்வெட்டு, பகுதி - ஒன்று 1ள்ளை பூவிலிங்கம் நினைவு வெளியீடு, 199 ாட்டு வளப்பம், அமரர் வைத்திய நாதர் ா நினைவு வெளியீடு, 1993
டுப் பாடல்கள், ப வட்டம், ஒட்டிச்சுட்டான், 1980,
றியல் வள் பதிப்பகம், திருநெல்வேலி, 1986.
ர் பண்பாடு
HrGS) (Material culture) 6r Görpılıb, G|Lu|TC5%ir என்றும், இருவகைகளாகப் பிரிக்கலாம். Fய்து கொள்ளும் அனைத்து வகையான அடங்கும், இயந்திரங்கள், கருவிகள், டைகள், அணிகலன்கள், கட்டடங்கள், ா, வேளாண் நிலங்கள், எழுதுகோல், ான்ற எண்ணற்ற பொருள்கள் பொருள் பண்பாட்டைச் சேர்ந்த பொருள்கள் அதற் பாட்டையும் நிலையாகக் கொண்டு அப் ரின் தேவைகளுக்காகப் பொருள்கள் ஏற் பாட்டில் நிலைபெற்றுள்ளவரை அப் பண்பாட்டு மாற்றம் ஏற்பட்டுச் சில ால் அவற்றிற்குரிய பொருள்களும் மறைந்து சேர்ந்த அனைத்துப் பொருள்களையும் பருமளவு அறியமுடியும். அதனாலேயே பண்பாட்டை அறிய வேண்டியது அவசிய க்களால் செய்யப்பட்ட செய்பொருள்கள் மானிடவியல் வழக்கில் கலை வடிவங்கள்
என்றும் கூறப்பெறும்.
ாட்டு மானிடவியல் பக்கம் 175-176 ஆசிரியர் சீ பக்தவத்சல பாரதி
17

Page 22
இந்திய மெய்யி
ஆ. சிவசுட்
இந்தியத் தத்துவங்களையும், பாரம் பரியங்களையும் ‘வேத நெறி சார்ந்தவை என்றும் "வேதமறுப்பு நெறி சார்ந்தவை என்றும் இரு வகையாகப் பகுக்கலாம். இவற்றுள் வேதநெறி தொடர்பான கருத் துக்களும் சிந்தனைகளுமே இந்தியாவில் முதன்மை செலுத்தி வந்தன. (வருகின்றன). ஆனாலும் வேதநெறி சாராத வேதமறுப் புச் சிந்தனைகள் அடங்கிய தத்துவங்களும் இந்தியாவில் தோன்றி வளர்ந்துள்ளன. அவ்வாறு உருவான சிந்தனைப் போக்கு களில் ஒன்றே தந்திரம் அல்லது தாந்திரி கம் ஆகும். r
நம்மைச் சுற்றியுள்ள புற உலகை அறி யும் முயற்சியில் நம் முன்னோர்கள் உரு வாக்கிய வாழ்க்கை நெறிகளுள் ஒன்றாக, தாந்திரீகம் அமைந்தது. கற்பனையினை அடிப்படையாகக் கொள்ளாது, அன்றாட வாழ்க்கையினையும், பொருள்களின் இயக் கத்தையும் உற்று நோக்கியதன் அடிப் படையிலேயே தாந்திரீகம் உருவ !ெ : ளது மேலும் வேத நெறிக்கு மாறான ஒரு நெறியாக இதனை உருவாக்க சாதி, தொழில் என்ற இரு நி  ைல களி லும் மேலாண்மை பெறாத சிந்தனையாளர்கள் முயன்றுள்ளனர்.
அதே நேரத்தில் தாந்திரீகம் என்பது மது மாது ஆகியவற்றுடன் தொடர்பு டைய ஒழுக்கக் கேடான நெறி என்றும் சிலர் கூறுவர். இன்னும் சிலர் யோகம், எந்திரம், மந்திரம் ஆகியவற்றை அடிப் படையாகக் கொண்டதே தாந்திரீகம் என் றும் விளக்கமளிப்பர். இந்தியாவில் உரு வான பல்வேறு பொருள் முதல் வாதக் கருத்துக்களைப் போன்றே தாந்திரீகமும் அவதூறுக்கு ஆளாகி உள்ளது.
8

யலில் தந்திரம்
பிரமணியன்
மேலும் இந்து - புத்த - சமண - சைவ - வைணவ சமயங்களிலும் தாந்திரீகத்தில் செல்வாக்கு குறிப்பிடத்தக் 5 அளவு இடம் பெற்றுள்ளது. இந்து தாந்திரீகம்’ ‘புத்த தாந்திரீகம்" என்று கூட தாந்திரீகத்தைப் பாகுபாடு செய்துள்ளனர். பிற்காலத் தாந்திரீகர்கள் சில ர் தாந்திரீகத்தின் அடிப்படை நெறிக்கு மாறாக, அதனை வேதத்துடன் தொடர்புபடுத்தியுள்ளனர்.
இதன் காரணமாகத் தான் ஆண்ட்ரி u ft nr G ( Andre Padoux, 1987: 272) என்பவர் *தாந்திரீகம்" என்ற தலைப்பில் அமைந்த தனது கட்டுரையினை , "தாந்தி ரீகம் குறித்து, தொலை நோக்குடனும் அறிவியல் முறையிலானதுமான ஒரு மதிப் பீட்டைச் செய்வதென்பது எளிதல்ல. ஏனெனில் தாந்திரீகமானது கருத்து மாறு பாட்டிற்கும் குழப்பத்திற்கும் உரிய ஒன் றாகும்" என்று தொடங்குகிறார்.
மேற்கூறிய செய்திகள் அனைத்தையும் இச்சிறு கட்டுரையில் ஆராய்வது இயலா தென்பதால் தாந்திரீகம் குறித்த சுருக்க மான அறிமுகமாக மட்டுமே இக் கட்டுர்ை அமைந்துள்ளது.
மீமாம் சா பாரம்பரியத்தின்படி தாந் திரீகம் ஒரு செயல்முறை - ஏ தே னு ம் ஒன்றை உருவாக்கும் அல்லது செய்யும் வழி முறையாகும். மஹாபாஸ்யத்தில் அறிவுத்துறையைக் குறிக்கும் சொல்லாக தாத்திரீகம் இடம் பெற்றுள்ளது.
அதே நேரத்தில் ஆன்மீக அறிவின் குறியீடாக அமைந்த வேத நெறியுடன்

Page 23
இது மாறுபட்டிருந்தது. புனிதமாகக் கரு தப்பட்ட வேதமானது. உயர் வர்க்கத் தினரின் உடைமையாக மாற்றப்பட்டி ருந்தது. உபநயனம் என்ற சடங்கு குறிப் பிட்ட சிலருக்கு மட்டுமே உரியது என்ற நிலை ஏற்பட்ட பிறகு வேத நெறியினைப் பெறுவது குறித்து அடி த் தள மக்கள் நினைத்துக் கூடப் பார்க்க முடியாதிருந் தது. வேதத்தைக் கற்கும் சூத்திரன் மரண தண்டனைக்கு ஆளாகும் நிலை இருந்தது.
இத்தகைய வரலாற்றுச் சூழலில் வேத நெறிக்கு இணையான ஒரு நெறியாக உரு வானதே தாந்திரீக தெறியாகும். எனவே வேத எதிர்ப்பு இயல்பாகவே தாந்திரீகத் தில் இடம் பெற்றது. வேத மரபானது ஆண்மைக் கோட்பாட்டை அடிப்படையா கக் கொண்டிருந்தது. வருணாச்சிரம முறையினைப் பாதுகாப்பதை வேத நெறி வலியுறுத்த அதற்கு எதிரிடையான நிலை யினை தாந்திரீகம் மேற்கொண்டிருந்தது.
இதன் காரணமாகவே வேத நெறி சார்ந்தவர்கள் தாந்திரீகத்தை இழித்தும், பழித்தும் கூறியுள்ளனர். வேதங்கள். தாந் திரீக நெறியை ஆதரிக்கவில்லையென்றும் , தாழ்ந்த சாதி மக்களிடையேதான் தாந் திரீகம் வழக்கத்திலுள்ளது என்று ம், யாமுனாச்சாரி என்பவர் 'ஆகம் பிரா மணியா’ என்ற நூலில் குறிப்பிட்டுள் ளார். வேத சடங்குகளிலிருந்து பிறழ்ந்த வர்களுக்கும், வேத நோன்புகளுக்கு அஞ் சுபவர்களுக்கும் உரியதுதான் தாந்திரீக மாகும் என்று "சாம்ப புராணம்" கூறுகி றது. தாந்திரீக நெறியைப் பின்பற்றுபவர் களை சமூக ப் புறக்கணிப்புச் செய்ய வேண்டுமென்றும், அவர்களோடு சமூக உறவு கொண்டவர்கள் அதற்காகப் பிரா யச்சித்தச் சடங்குகளை செய்ய வேண்டும் என்றும் ஸ்மிரிதிகள் சில குறிப்பிடுகின்றன. (பட்டாச்சார்யா, 1982 : 3).
இவ்வாறு வேத நெறிக்கு மாறுபாடான நெறியாக அமைந்த தாந்திரீகமானது சாதி நிலையில் கீழானவர்களாகக் கருதப்பட்ட வர்களின் நெறியாக அமைந்தது. தாந்திரீக ஆசான்களிலும் பலர் தொழிலாலும், சாதி

யாலும் கீழ் நிலையானவர்களாகவே உள் ளனர். குதிரை இலாயத்தை சுத்தம் செப் பவர், தோல் வேலை செய்பவர், வண் ணார், மரம் வெட்டி, கொல்லர், பறவை பிடிப்பவர், தையற்காரர், செரு ப் புத் தைப்பவர், மீன் பி டிப் பவர், வீட்டு வேலைக்காரர், என பல்வேறு தொழில் களைச் செய்தோர் தாந்திரீக நூல்களின் ஆசிரியர்களாக அமைந்துள்ளனர். தாந்திரீக ஆசிரியர்களுள் தலை சிறந்தவர்களாகப் போற்றப்படும் ஆதி சித்தர்கள் ஐவரும் சமூகத்தின் அடிமட்டத்திலிருந்து வந்தவர் களே ஆவர்.
மேல் நிலையினருக்கு மட்டும் உரித்த தாயிருந்த வேத நெறிக்கு ஈடாக, தமக் கென ஒரு வாழ்க்கை நெறியை உருவாக் கும் முயற்சியில் தோற்றியதே தாந்திரிகம் என்பதை மேற்கூறிய செய்திகள் உணரித்து கின்றன. இனி தாந்திரீகத்தில் முக்கிய இடம் பெற்றுள்ள
1. பிரகிருதி
2, தேகத் தத்துவம்
3. IntLorray Tgth
4. பஞ்சமகரம்
ஆகியன குறித்து சுருக்க மாக ஆராய்
{36մ: ւA .
பிரகிருதி (பெண்மைக் கோட்பாடு)
தாந்திரீகர்களின் கருத்துப்படி உலகப் ப  ைட ப் பின் ஆதி மூலமாக அமைவது *பிரகிருதி" எனப்படும் பெண்மைக் கோட் பாடாகும். சக்தி" என்றும் இ த  ைள அழைப்பர். நிலம், நீர், நெருப்பு. காற்று: விண் என்ற சேர்க்கையால் உருவாக்கப் பட்டதே இவ்வுலகமாகும். இதன் குறி யீடாகவே தாய்த் தெய்வமான "சக்தி, அமைகிறாள்.
உலகப் படைப்பிற்கு முன் பிரகிருதி மட்டுமே இருந்தது என்றும் இதிலிருந்தே உலகிலுள்ள அனைத்துப் பொருட்களும் உற்பத்தியாயின சான்றும் தாந்திரிகம்
19

Page 24
கூறும். இதன் அடிப்படையிலேயே தாந்தி ரீக வழிபாட்டிலும் சடங்குகளிலும் பெண் களுக்கு முக்கியத்துவம் உள்ளது. பெண் குறியும், பூப்புக் குருதியும் தாந்திரீகச் சடங்குகளில் முக் கி ய இடத்தை வகிக் கின்றன.
தேக தத்துவம்
மனித உடலை "மெய்" என்று அங்கீ கரித்து ஆன்மீக மற்றும் சமய அனுபவங் களின் இருப்பிடமாக உடலைக் கருதுவதே தேகதத்துவமாகும்.
பிரபஞ்சம் என்ற பேரமைப்பின் ஒரு துகளே மனித உடலாகும். எனவே பிர பஞ்சமானது உடலிலும் உறைகின்றது. ஆகையால் உடலை அறிவதன் மூலம் பிர பஞ்சத்தை அறிய முடியும், அதனை வயப் படுத்துவதன் வாயிலாக பிரபஞ்சத்தையும் கட்டுப்படுத்த முடியும். இதுவே மனித உடல் தொடர்பான தாந்திரீகர்களின் கருத் தாகும். (முத்து மோகன் 1990, 146). இதன் காரணமாகவே உடலைப் பேணும் பல்வேறு யோக நெறிகளையும் தாந்திரீ கம் வலியுறுத்துகிறது.
வாமாச்சாரம்
ஆன்மீகப் பேறினை அடையும் வழி முறைகளாக ஆசாரங்கள் கூறப்படுகின் றன. இவ ற் றை, “தட்சிணாச்சாரம்' *வாமாச்சாரம்" என இருபெரும் பிரிவு களாகப் பகுப்பர். இவ்வாமாச்சாரங்களின் இயல்புகள் குறித்தும், அவற்றை வகைப் படுத்துதல் குறித்தும் கரு த் து வேறு பாடுகள் பல உண்டு. இவை அனைத்தை யும் இங்கு விவாதிக்காமல் தாந்திரீகத்தில் முக்கிய இடம் பெறும் வாமாச்சாரம் குறித்து மட்டும் ஆராய்வோம்.
வாமா + ஆச்சாரம் எ ன்ற இரு சொற்களும் இ ைண ந் து உருவானதே "வாமாச்சாரம்" ஆகும். "வாமா" என்பது பெண் அல்லது இணைவிழைச்சு வேட்கை யைக் குறிக்கும். "ஆச்சாரம்" என்பது செய் முறையைக் (இங்கு சடங்கியல் செய்முறை)
20

குறிக்கும். எனவே வாமாச்சாரம் என்பது பெண் மற்றும் இணை விழைச்சு தொடர் பான சடங்கியல் செய்முறைகளைக் குறிப் பதாகும் (சட்டோபாத்தியாயா, 1978: 278). இதன்படி குறிப்பிட்ட காலங்களில் வரை முறையற்ற பாலுறவில் (Promiscuity) தாந்திரீகரி சடுபடுவர்.
வாமாச்சாரத்தைப் பின்பற்றுபவர்கள் பெண் தெய்வங்களை, பாரம்பரியமான முறையில் பகற்பொழுதில் வழிபடுபவர். இரவில் பஞ்சமகரங்களின் துணையுடன் தாந்திரீக முறையில் வழிபடுவர். வேதச் சடங்கு நெறிகளை அவர்கள் கைவிடுவ தோடு, திருமாலின் பெயரை உச்சரிக் கவோ, துளசி இலையைத் தீண்டவோ கூடாது. மேலும் பிராமணர்களைத் தவிர அனைத்து சாதியினருக்கும் 'வாமாச்சாரம் உரியதாகும். வேத நெறி யி னின் றும் பிறந்த - வெளிப்படையாக வேத நெறியை விட்டு விலகிய பிராமணர்கள் மட்டிலுமே வாமாச்சாரத்தைப் பின்பற்ற முடியும். தாழ்ந்த வருணத்திற்கான ஆச்சாரமா கவே வாமாச்சாரம் விளங்கியது. (பட் LITogontrioul fr: 1982, 343).
இனி வாமச்சாரத்தின் உள்ளார்ந்த பொருள் என்ன என்பதனை ஆராய்வோம் வக்கிரமான பா லுணர் வு நோக்கில் வாமாச்சாரம் தோற்றமளித்தாலும் உண் மையில் வேளாண்மைச் சமுதாயத்தின் உற்பத்தித் திறமை அதிகரிக்கச் செய்யும் சடங்கியல் தன்மையே வாமாச்சாரத்தில் மேலோங்கியுள்ளதாக சட்டோ பா த் தி யாயா (1978 272 - 286) கருதுகிறார்: இச்சடங்கியல் தொடர்பான செய்திகளை ஆராய்ந்தால் தொல் அறிவியல் (Proto Science) கூறுகள் பலவற்றை நாம் கண் டறிய முடியும்,
பஞ்சமகரங்கள்
தாந்திரீகர்களின் ஐந்து சடங்குகளே பஞ்சமகரங்கள் எனப்படுகின்றன. இவற் றைக் குறிக்கும் சொற்கள் "ம" என்ற எழுத்தில் தொடங்குவதால் இவ்வாறு பெயர் பெற்றுள்ளன. மத்யா (மது),

Page 25
மாமிசம், மைதுனம் (உடலுறவு), மூத்ரா (வறுத்த தானியம்), மச்சம், (மீன்) என்ற ஐந்தும் பஞ்சமகரத்தில் இட ம் பெறு கின்றன.
இவை ஐந்திற்கும் உள்ளார்ந்த விளக் கத்தை, தாந்திரீக நூல்கள் சில அளிக் கின்றன. "குலார்வைதந்திரம்” என்ற நூலில் குலாகுண்டலினி சக்தியின் தலை யிலுள்ள தாமரை மலரிலிருந்து வடியும் அமிர்தத்திற்கு ஈடாக மது குறிப்பிடப்பட் டுள்ளது. அறிவு என்ற வாளால் தன்னகங் காரத்தை விரட்டுவதே மாமிசம் ஆகும். உடலுறவு உயர்ந்த சக்தியுடன் "தான், இணைவதன் குறியீடாகும்.
தமிழ் நாட்டில் தாந்திரீகம்
தாந்திரிக நெறியானது தமிழ் நாட்டி லும் வழக்கில் இருந்துள்ளது தாந்திரிக மரபில் வழி நின்றவர்களாக தமிழ்நாட்டுச் சித்தர்களைக் குறிப்பிடலாம். சாதி வேற் றுமைக்கு எதிரான குரல் - வேத மற்றும் பிராமணிய எதிர்ப்பு - போலி ஆசாரங் களைப் பகடி செய்தல் - உடலோம்பலை வலியுறுத்தல் - போன்ற தாந்திரிகக் கருத் துக்களின் செல்வாக்கை இவர்கள் பாடல் களில் பரக்கக் காணலாம். வழிபாடு நெறி யுடன் தொடர்புடைய சிற்பங்களும் தமி ழகக் கோவில்கள் சிலவற்றில் காணப்படு கின்றன. மேலும் தமிழ் நாட்டின் கிராமப் புறங்களில் நடைபெறும் வேளாண்மைச் சடங்குகளிலும் தாந்திரீக மரபின் எச்சங் களை காணலாம்.
துணைநூற் பட்டியல்
Andre padoux Tantrism. The E 1987 Eliade, Macmillan
Bhattacharyya, History of the Narendranath Service, Delhi,
1982
Chatto Padhaya, Lokayata, Peopl Debi Prasad 1978
Muthu Mohan A Discussion of
1990 Siddha Literature,
Ed. Veera mani, S M. K., University,

முடிவுரை
இதுவரை நாம் அறிந்து கொண்ட செய்திகளின் அடிப்படையில் "தாந்திரீகம்" தொடர்பான அடிப்படை உண்மைகளை இவ்வாறு தொகுத்துரைக்கலாம். 1. இந்தியாவின் பாரம்பரியமான, தத் துவ - வாழ்க்கை நெறிகளுள் தாந்தி
ரீகம் ஒன்று. 2. பெண் தெய்வ வழிபாடு. மந்திரத்து ட ன் இணைந்த வேளாண்மைச்
சடங்குகள் ஆகியவற்றுடன்தாந்திரீகம் நெருங்கியதொடர்பு கொண்டிருந்தது 3. இவ்வுலகமும் உடலும் உண்மை என் பதை ஏற்றுக் கொண்டது. எனவே, வாழ்க்கை மறுப்பை வலியுறுத்தாது வாழ்க்கை உகப்பை வலியுறுத்தியது. 4. வேத நெறியுடன் முரண்பட்டும், சாதி மேலாண்மையை எதிர்த்தும் நின்றது, 5. இத்தன்மையினால் தாழ்ந்த சாதியி
ரின் நெறியாக அமைந்தது. 6. தொல் அறிவியல் கூறுகளையும் தன்ன
கத்தே கொண்டிருந்தது. தாந்திரீகமானது அது தோன்றிய கா லத் தி ல் முற்போக்கான கூறுகளைத் த ன் ன க த் தே கொண்டிருந்தமையை மேற்கூறியனவற்றிலிருந்து உய்த்துணர லாம். சார்வாகம், சாங்கியம், குஃ - பியி சம் போன்ற பல்வேறு முற்போக்கான சிந்தனைகளின் உருவாக்கத்திலும் தாத் திரீகத்தின் பங்களிப்பு உண்டு. காலப் போக்கில் பல்வேறு மதங்களின் பாதிப் பினால் தாந்திரீகமானது தன் வடிவங் களை மாற்றிக் கொண்டுள்ளது. இது விரி வான ஆய்விற்குரியதாகும்.
ncyclopedia of Religion Ed. Mirce n Publishing Co.
Tantric Religion, Manohar Book
le's Publishing House, New Delhi
the lodea of Social Justice in Tami
SOCAL JUSTICE IN TAMIL NADU chool of Historical Studies, , Madurai-21.
2.

Page 26
தி.த.கனகசுந்தரம்
(திருகோ
- செ.
1. காலப் பின்னணி
சென்ற நூற்றாண்டு தொடக்கம் இலங்கையிலும் இந்தியாவிலும் மேலைத் தேயத்தவரின் வருகையினாலும் ஆட்சி யினாலும் அரசியல், சமூகம், சமயம், கல்வி, பண்பாடு, கலை, இலக்கியம் ஆகிய துறை களில் பெருமாற்றங்கள் ஏற்படத் தொடங் கின. இன்னும் சற்று விரிவாக நோக்கி னால் கிறிஸ்தவ சமயப் பிரச்சாரங்கள் துடிப்புடன் நிகழ்கின்றன; அச்சுயந்திரங்கள் வந்துசேர்கின்றன. பத்திரிகைகள் வெளியாகின்றன. கல்விமுறை மாற்ற மெய்துகிறது. செய்யுள் தளர்ச்சியுற உரை நடை செல்வாக்குற்று வீறுடன் செயற் படுகிறது மதம் பரப்ப வந்த குரவர் தமிழ்ப்பணி ஆற்றுகின்றனர். தத்துவ போதக சுவாமிகள், வீரமாமுனிவர், சீகன் பால்கு ஐயர், கால்ட்வெல்ட் ஐயர் முத லானோர் இத்தகு முயற்சியின் முன்னோடி களாகின்றனர்,
நவீன கல்விமுறை பரவுவதற்கு முன்னர் தமிழ் நாட்டில் மடங்களும் ஆதீனங் களுமே கல்வி புகட்டும் பணியினை மேற் கொண்டு வந்தன. இந்நிறுவனங்கள் தமிழி லுள்ள சமண, பெளத்த இலக்கியங்கள் மட்டுமன்றி பழந்தமிழ் இலக்கியங்கள் கூட கற்பிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. இத்தகைய ஆரோக்கியமற்றநிலை யில் ஏற்பட்ட மாற்றம் பற்றி
* 18 ஆம் நூற்றாண்டின் இடைப் பகுதியிலே சாமிநாத தேசிகர், சிவ ஞான சுவாமிகள் காலம் முதல் ஒரு நூற்றாண்டு காலம் வரையும் இருந்து வந்த சகல நூல்களையும் பெளத்த சமய காவியங்களையும் க ற் ற ல்
22

பிள்ளை (1863 - 1922)
1ணமலை)
யோகராசா
கூடாது என்னும் வழக்கத்தைச் சேலம் இராமசுவாமி முதலியார் அவர்கள் உ. வே. சாமிநாதையரைக் கொண்டு தகர்த்தெறிந்தனர். அக் கொள்கையை மாற்ற வேண்டும் என்ற எண்ணத் துடன் அவர் செய்யவில்லை. தற் செயலாக நிகழ்ந்த நிகழ்ச்சி இது. ஆயினும், தமிழ்மொழியின் பழைய இலக்கிய நூல்கள் வாழ்வதற்கு ஏற்ற நற்செயலாக முடிந்தது".
என்று மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள் குறிப்பிடுவது மனங்கொள்ளத்தக்கது. உ. வே. சாமிநாதையருட்பட உ. வே. சாமிநாதையருக்கு முன்பே பதிப்புப் பணி யில் ஈடுபடத் தொடங்கிய ஆறுமுக நாவலர், சி. வை. தாமோதரம்பிள்ளை ஆகிய மூவரும் பதிப்புத்துறை முயற்சியின் மதிப்பிற்குரிய தந்தையர்களாகின்றனர். இம்மூவருக்கும் சற்று முன் பின்னாக வாழ்ந்தவரான தி.த.கனகசுந்தரம்பிள்ளை (இனி"தி. த. க." என அழைக்கப்படுவார்) உ. வே. சா. வுடனும், சி. வை. தா. வுட னும் தொடர்பு கொண்டிருந்தார் இவர் பதிப்பு முயற்சியில் ஈடுபட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் நூல்கள் பதிப்பிக்கப்பட்டமை யால் ஏற்பட்ட பயன் அவை அழிந்து போகாமல் பாதுகாக்கப்பட்டமை மட்டு மன்றி தமிழியல் ஆய்வு புதியதொரு தடத் திலும் செல்லத் தொடங்குகிறது. அது வரை காலமும் மாக்ஸ்முல்லர் போன்ற மேனாட்டாய்வாளர் முன்வைத்த ஆரிய மேன்மைக்கருத்துச் சிதறத் தொடங்கியது. இன்னொரு விதமாகக் கூறின் கி. பி. 9ம் நூற்றாண்டின் முன் தமிழ் இலக்கியங்கள் இல்லை என்ற மேனாட்டாரின் அபிப்பிரா யம் ஆட்டங்காணத் தொடங்கியது.

Page 27
தி. த. க. பதிப்பாசிரியராக மட்டுமன்றி தமிழியல் ஆய்வாளராகவும் விளங்கியவர் ஆதலின், தமிழியல் ஆய்வு வளர்ச்சிப்போக் குப் பற்றியும் சற்று விரிவாக கவனிப்பது அவசியமாகிறது.
ஏறத்தாழ 1850 களிலிருந்து ஆரம் பித்த தமிழியலாய்வு வளர்ச் சி யி னை நான்கு காலகட்டங்களாக வகுத்துரைத் தல் சாலும் , முதற் காலகட்டம் கால்ட் வெல்ட் ஐயரின் திராவிட மொழிகளின் ஒப்பியல் இலக்கணம் (1856) என்ற நூலின் வருகையுடன் ஆரம்பிக்கிறது. இரண் டாவது காலகட்டம் ஆரம்பமாகின்றபோது (1880) அவ்வேளை தி. த. க. வின் பெய ரும் இடம்பெறுகின்றமை மனங்கொள்ளத் தக்கது.
'.இக் காலத்தில் பி. சுந்தரம்பிள்ளை, வி. கனகசபைப்பிள்ளை, வி. கோ. சூரியநாராயணசாஸ்திரி, டி. சவரிராய பிள்ளை போன்ற அறிஞரும் இந்த நூற் றாண்டின் தொடக்கத்தில் மதுரையில் பாண்டித்துரை தேவர் என்ற பிரபுவால் நிறுவப்பெற்ற தமிழ்ச் சங்கத்தைச் சேர்ந்த வித்துவான்களாய் இருந்த ரா. இராக வய்யங்கார், அரசன் சண்முகனார், மு. ரா. சுப்பிரமணிய கவிராயர், (p. இராகவய்யங்கார்,திரு.நாராயணய்யங்கார் போன்ற பண்டிதர்களும் ஈழநாட்டுப் புலவர்
6TIT60 அ. குமாரசுவாமிப்பிள்ளை, ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை,த. கனகசுந்தரம் பிள்  ைள, நா. கதிரவேற்பிள்ளை
சுவாமி நாத பண்டிதர் போன்றவரும் மதுரையிலிருந்து வெளிவந்த செந்தமிழ் பத்திரிகையில் கட்டுரைகள் எழுதிய பிற ரும் இன்னும் பலரும் தமிழ் ஆராய்ச்சியில் ஆர்வத்துடன் முனைந்து எத்தனையோ கட்டுரைகளையும் நூல்களையும் அகராதி களையும் நூற்பதிப்புக்களையும் வெளியிட் L——лтгT&5ат ------ ” ”
என்பது ஏ. வி. சுப்பிரமணிய ஐயரின் கணிப்பீடாகும். மூன்றாம் காலகட்டத் தில் (1910) சிறப்பிடம் பெறும் அறிஞர் களுள் ஒருவர் தமிழரின் சரித்திரம் (History of Tamils) எழுதிய கே. எஸ். சீனிவாச

பிள்ளை ஆவார். அந்நூலில் குறைகள் கண்டவராகவும் ஐயங்கள் எழுப்பியவராக வும் விளங்கினார் தி, த. க. (இதுபற்றிப் பின்னர் கூறப்படும்). நான்காம் காலகட் டத்தில் (1940) விதந்துரைக்கப்படுபவர் ஆராய்ச்சி அறிஞர் எஸ் வையாபுரிப் பிள்ளை. அன்னாருடன் பதிப்பு முயற்சி தொடர்பாக நெருங்கிய உறவுகொண் டிருந்தார் தி. த. க., அது மட்டுமன்று பதிப்பு முயற்சி தொடர்பாக அவரது பாராட்டுதல்களையும் பெற்றவர் தி. த. க.
2. பதிப்பாசிரியர்
2. 1. தி, த. க. வின் பதிப்பு முயற்சி களுள் பின்வருவன குறிப்பிடத்தக்கவை.
(1) தொல் எழுத்த தி கா ரம் - நச்சினார்க்கினியம் (2) தொல் சொல்ல திகாரம் சேனாவரையும் (இம்முயற்சி பற் றித் திட்ட-வட்டமாகக் கூறுவதற்கில்லை) (3) கம்பராமாயணம் - பாலகாண்டம் (4) தமிழ் நாவலர் சரிதை.
மேற்கூறிய பதிப்பு முயற்சிகள் பற்றி அறிவதற்கு முன்னர் பதிப்பு முயற்சி எதிர் கொள்ளும் பிரச்சினைகள் பற்றி நினைவு கூர்வது அவசியமாகின்றது. (அவ்வாறு அறியமுற்படும்போதுதான் பதிப்புப்பணி யில் ஈடுபட்டோரது தன்னலமற்ற தியா கம்பற்றி உணர முடியும்). இவ்விதத்தில் சி. வை, தா. வின் பதிப்பு முன்னுரைகளும் உ. வே. சா. வின் (என்சரித்திரம்) என்ற நூலும் பேருதவி புரிவன. இவற்றை அடிப் படையாகக் கொண்டு பின்வரும் விடயங் களை இனங்கான முடிகின்றது. (அ) பல இடங்களிலும் தேடி அலைந்து ஏடுகளைப் பெற்றுக்கொள்வதிலுள்ள சிரமங்கள் (சி. வை. தா. வின் சலித்தொகை முன்னுரை) (ஆ) ஏடுகளின் பழமையும் அவற்றின் அழிந்தொழியும் நிலையும் (சி. வை. தா. வின் கலித்தொகை முன்னுரையும் வீர சோழிய முன்னுரையும்) (இ) ஏடுகளில் இடம்பெறும் வழுக்கள் (வீரசோழியப் பதிப் புரை) (ஈ) சரியான பாடம்பற்றிய ஐயங் களைத் தெளிவுபெறமுடியாத நிலை (சி. வை. தா. வின் தொல்பொருளதிகார பதிப்
23

Page 28
புரை) (உ) குறைகாணும் பிறரது மனோ பாவம் (ஊ) பிரசுரச் செலவு (எ) போதிய விற்பனை இல்லாமை. பதிப்புத்துறை முன் னோடிகள் எதிர்கொண்ட இவ்விடர்களை தி. த. க. வும் எதிர்கொண்டார் என்பது மனங்கொள்ளப்படவேண்டியது.
இவ்விடத்தில் பதிப்புத்துறையின் தொடர்புபட்ட மூல பாடத்திறனாய்வு பற்றியும் சற்றுச் சிந்திக்க வேண்டியுள்ளது. கிடைக்கும்பல பிரதிகளையும் தொகுத்து, வகுத்து, பாட பேதங்களை நுணிகி ஆராய்ந்து, காரண அடிப்படையிலே சரி யான மூல பாடத்தைத் தேர்ந்தெடுக்கும் முறையே மூல பாடத்திறனாய்வு (Textual Critisism) என்பது. இது நான்கு படி முறைகள் கொண்டது.(ர்) பிரதிகளைக் கால அடைவில் வைத்து நோக்கல் (ii) தேர்ந் தெடுத்தல் (ii) பிரதிகளை ஆராய்ந்து நம்ப கத்தன்மை அடிப்படையில் தேர்ந்தெடுத் தல் (iv) உயிர்நிலைத் திறனாய்வு என்ப னவே அவை. மூலபாடத் திறனாய்விற்குரிய இத்தகைய அம்சங்களை தி. த. க. முற்று முழுதாக கடை ப்பிடித்துள்ளார் என்று கூற முடியாது; எதிர்பார்க்கவுமியலாது ஆயினும், இயன்ற வரையில் இத்தியாதி அம்சங்களைப் பேண முயன்றுள்ளார் என்று கூறுவதில் தவறில்லை. இதற்கு முரணாக அமைகிறது தி.த.க.வின் கம்பரா மாயண - பாலகாண்டப் பதிப்பு முகவுரை.
* 'இப்போது இவ்விராமாயணம் பல வித வழுக்களும் பாடபேதங்களும் விரவி வழங்கி வருவதை நாம் அநு மானித்து இயன்ற வரையிற் சுத்த மாக எண்ணிப் பழைய ஏடுகள் பல வருவித்துப் பரிசோதித்தோம். பரி சோதித்தபோது முன்னர் அச்சிட்டுள்ள பாலகாண்டத்திலே பலவித வழுக் களும் பல பாடபேதங்களும், புதியன வாகப் புகுத்திய சில சில கவிகளும் தோன்றின. மணி நுரைக்கொடி’ என்பது ‘மணியுடைக்கொடி" எனவும் "மறிவிழியாயர் மாதர்' என்பது "மறி யுடையாயர் மாதர்" எனவும். . . . பிழைபட்டிருந்தன. இவ்வாறு பிழை பட்டிருந்த பாடங்களையும் பாடங்கள்
24

Left வேறுபட்டவிடத்துத்தக் கனவாகக் காணப்படாத LunT L-i) களையும் எழுத்து சொல் வழுக்களை யும் நீக்கி இயன்ற வரையிற் சுத்த மாக்கிப் பாலகாண்டத்தை அச்சிட்ட 6υτιb .
மேற்கூறிய பாலகாண்டப் பதிப்புப் பற்றி எஸ். வையாபுரிப்பிள்ளை இவ்வாறு குறிப் 19GSlairpiri:
" . ஆறு காண்டங்களுள் சுன்னாகம் குமாரசுவாமிப் பிள்ளையும் தி. த. கனக சுந்தரம்பிள்ளையும் பதிப்பித்த "பாலகாண்டம் ஒன்றே இன்றுவரை சுத்தப்பதிப்பாக வெளிவந்துள்ளது’’
இது வசிட்டர் வாயிலிருந்து வந்த கூற் றன்றோ !
இங்கு, தொல் எழுத்ததிகாரம் - நச்சி னார்க்கினியம் நூலின் முகப்புரை, 'மதுரை யாசிரியர் பாரத்துவாசி நச்சினார்கினி யனுரையுடனும் திருகோணமலை த. கனக சுந்தரம்பிள்ளை பி ஏ. யவர்கள் பல ஏட் டுச் சுவடிகளைக் கொண்டு செய்து வைத் திருந்த திருத்தங்களுடனும்" என்று குறிப் பிடுவது கவனிக்கத் தக்கது.
எனினும், மேற்கூறிய இரு நூற்பதிப்பு களிலும் காணப்படும் குறையொன்றுள் ளது. பிரதி பேதங்கள், பாடபேதங்கள் பற்றிய விவரக்குறிப்புகள் தரப்படா மையே அதுவாகும். (அவ்வாறு தரப்படும் போதுதான் மூலபாடத்திறனாய்வென்பது முழுமையெய்தும் என்பர்). ஆயினும், இத் தகைய குறைபாடு தி. த. க. வின் தமிழ் நாவலர் சரிதைப் பதிப்பில் தவிர்க்கப்பட் டுள்ளமை குறிப்பிடத்தக்கதாம்.
தமிழ் நாவலர் சரிதை பிற்காலத்தது எழுதியவர் பெயரும் காலமும் அறியு மாறில்லை. "தமிழில் முதற் தடவையாக பல்வேறு தமிழ்ப் புலவர்களின் வாழ்க்கை வரலாற்றினை எடுத்துக்கூறும் நூல் தமிழ் நாவலர் சரிதை' என்பர் பேராசிரியர் கா. சிவத்தம்பி. எனினும், இந்நூலின் முக்கியத்துவம் பலராலும் அறியப்பட

Page 29
வில்லை. (அதுபற்றி விளக்க ஏற்ற இடம் இதுவன்று).
அது எவ்வாறாயினும் தமிழ் நாவலர் சரிதையை அடிப்படையாகக் கொண்டு தி த. க. பற்றி நோக்கும்போது தி.த.க. வின் சில சிறப்புக்கள் வெளிக்கொணரப் படுகின்றன. அவையாவன:
(i) தமிழ் நாவலர் சரிதை பதிப்பிக்கப்
பட்ட முறை
(அ) பாடபேதங்கள் தரப்பட்டுள்
(ஆ) பாட்டுகள் பலவற்றிற்கு குறிப் புகள் எழுதப்பட்டுள்ளமை இவற்றின் மூலம் பாட்டுக் களில் குறிக்கப்படும் இடங் களையும் மக்களையும் பாட் (5) e Tigul புலவரிருந்த காலத்தையும் அறிய முடியும்.
(ii) தமிழ்ப்புலவரின் வரலாறு பேணப் படுவதன் - எழுதப்படுவதன் - அவ சியம்பற்றி தி. த. க. பிரக்ஞை பூர்வ மாக உணர்ந்து செயற்பட்டுள்ளமை.
(i) தி. த. க. வின் திறனாய்வு நோக் கும், தமிழ் இலக்கிய வரலாறு, புல வர் வரலாறு, வரலாறு என்பன பற்றிய தெளிவும் வெளிப்படுகின் றமை (சான்று: தமிழ் நாவலர் சரிதை முன்னுரை)
2.1.2 தமிழ் அகராதி (Tamil Lexicon)
மேலைத் தேயத்தவரின் வருகையின் பின்னரே தமிழில் அகராதி முயற்சி இடம் பெறத் தொடங்கியது. இம்முயற்சியில் இலங்கை தமிழ் நாட்டிற்கு முன்னோடி யாயுள்ளது. 1842ல் மானிப்பாய் அகராதி யும் 1862 ல் உலின்சுலே அகராதியும் 1904 ல் தமிழ்ச்சொல் அகராதியும் யாழ்ப் பாணத்தில் உருவாகியிருந்தன. தமிழ் நாட்டில் வண. J. S. சாண்டலர் தலை மையில் தமிழகராதி முயற்சியொன்று

1913 ல் ஆரம்பமாகியது. நீண்டகாலம் நிகழ்ந்த இம்முயற்சியின்போது உதவிப் பதிப்பாசிரியராக தி. த. க. விளங்கியமை குறிப்பிடத்தக்கது. அவரது மும்மொழிப் புலமை (தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம்) இதற்குக் காரணமெனலாம்.
2. 2. பிறரது பதிப்பு முயற்சிகளுக்குதவுதல்
தி. த. க. தமது சமகாலத்தில் பதிப்பு முயற்சிகளில் ஈடுபட்டு வந்த பலருக்கும், பல இடர்கள் மத்தியில் தாம் தேடி வைத் திருந்த அரிய ஏடுகள் பலவற்றையும் கொடுத்து பேருதவி புரிந்துள்ளார். இவ் விதத்தில் ஏடுகள் பெற்றோர் பற்றிய பின்வரும் பட்டியல் நம் கவனத்திற்குரிய தாகிறது,
குறுந்தொகை vn
உ. வே. சாமிநாதையர்
பதிற்றுப்பத்து --Mr.
உ. வே. சாமிநாதையர்
புறநானூறுபொருள் வெண்பா மாலை
உ. வே. சாமிநாதையர்
புறத்திரட்டு
எஸ். வையாபுரிப்பிள்ளை நான்மணிக்கடிகை
எஸ். வையாபுரிப்பிள்ளை கயாதரம் -
எஸ். வையாபுரிப்பிள்ளை ஆசாரக்கோவை ·
ரி. செல்வக்கேசவராய முதலியார்
நற்றிணை uwwwwwM
அ. நாராயணசாமி ஐயர்
அகநானூறு -
இராகவையங்கார்
களநாற்பது nnnnnn
கா. ர. கோவிந்தராச முதலியார்
கலித்தொகை --
சி. வை. தாமோதரம்பிள்ளை
ஏடுகள் வைத்திருந்தோர் பலரும் கரு மிகளாக விளங்கிய சூழலில் தி, த. க. வின் பரோபகாரசிந்தை வியப்பையும் மதிப்பை யும் அளிக்கக்கூடியதே.
அது மட்டுமன்று பிறபதிப்பாளருக்கு ஏடுகள் கிடைக்குமிடங்கள் பற்றிக்கூறி அவர்களை ஊக்கப்படுத்தியுமுள்ளார்;
25

Page 30
சி. வை. தா. ஒரிடத்தில் பின்வருமாறு எழுதுகின்றார்:
'திருகோணமலை பரீ, த, கனக சுந்தரம்பிள்ளையவர்கள் சென்னைப் பிரசீன கிரந்த மண்டபத்தில்தான் நெய்தற்கலி பார்த்ததென்று உறுதி யாகச் சொன்னமையால் மீளவும் அங்குச் சென்று முன்யான் நீக்கி வைத்த ஏடுகளே இப்போது எனக்கு வேண்டிய நெய்தற் கலியுடையவா யிருத்தல் கண்டு அளவற்ற சந்தோஷ மடைந்தேன். அஃதல்லாமற் பின்னும் ஒரு நெய்தற்கலி 23 ஆம் செய்யுள் வரைக்கும் அம் மண்டபத்தே அகப் பட்டது. உடனே பிள்ளையவர்களும் யானுமாக இருந்து என் பிரதியோடு ஒத்துப் பார்த்துவிட்டு ஆங்காங்கு கண்ட பாடபேதங்களைக் குறித்துக் கொண்டோம்.' r"
பதிப்பு முயற்சிகளில் ஈடுபடுவோர் பிறரது கண்டனங்களால் மனந்தளரும்போது அவர்களைப் பாராட்டி ஊக்கப்படுத்தி யுள்ளார் (சான்று: உ. வே. சா. வின் கூற்று)
3. ஆய்வாளர் 3.1 கட்டுரைகள்
குறிப்பிடத்தக்கதொரு ஆய்வாளராக தி. த. க. வை இனங்காட்டும் தி. த. க. வின் கட்டுரைகளை (இதுவரை எமது பார் வைக்குக் கிடைத்த கட்டுரைகளை அடிப் படையாகக் கொண்டு) பொருள் நோக் இல் இருவகைப் படுத்தலாம். (1) பதிப்பு முயற்சிகளுடன் தொடர்புபட்டவை. (ii) தமிழ் இலக்கிய வரலாற்றுடன் தொடர்பு பட்டவை.
பதிப்பு முயற்சிகளுடன் தொடர்புபட் டவை:- எடுத்துக் காட்டாக, யாப்பிலக் கணம் என்ற கட்டுரையின் ஒரு பகுதி:
"நூலாராய்ச்சிக்கு யாப்பிலக்கண அறிவு இன்றியமையாதது. பழந்தமிழ் நூல்கள் பலவும் இன்றும் அச்சில் வராது ஏட்டிலேயே இருக்கின்றன. ஏட்டிலெழுத்துப் புள்ளியிட்டெழுதப்
26

படாதது. அவ்வெழுத்திலுள்ள பாக் களின் உண்மைப் பாடங்களைக் கண்டு கொள்வதற்கு யாப்பிலக்கண உணர்ச்சி ஒருதலையாக வேண்டும். அச்சில் வந்த நூல்களிலும் பலவற்றில் பாடல்கள் பிழைபடப் படித்து வழங்கப்பட்டு வருகின்றன. நெடுங்காலமாக தமிழ் நாடெங்கும் அன்போடு படித்து ஆல யங்களிலும் ஒதப்பட்டுவரும் தேவாரம் முதலிய திருப்பாடல்களுள்ளேயே இவ்வகைப் பிழைகள் காணப்படு மாயின், வழக்கு வீழ்ந்து கிடந்த எஞ் சிய பழந்தமிழ் நூல்களின் நிலைமை யைச் சொல்லுவதேன்? இப் பிழை களுள் இரண்டொன்று காட்டுதும்.' தமிழ் இலக்கிய வ ர லா ற் று டன் தொடர்புபட்டவை:
இவ் வி த த் தி ல் புலவர் காலம், வாழ்க்கை நூல்களின் காலம், தமிழக இடங்கள் பற்றிய ஆய்வுகள் கவனிப்புக் குரியன. நூல்களின் காலம் பற்றியன என்ற விதத்தில், திருவள்ளுவமாலை, தொல்காப்பியம், வான்மீகி இராமாயணம், வியாசர் விருந்து ஆகியவற்றின் காலம் பற்றிய ஆய்வுகள் விதந்துரைக்கப்பட வேண்டியன.
திருவள்ளுவ மாலையின் முக்கியத் துவம் பலராலும் அறியப்படாதது. "பண் டைத் தமிழ் இலக்கியங்களில் காணப் பெறும் ஒரே விமரிசன ரத்தின மாலை தான் திருவள்ளுவ மாலை' என்று ஏ. வி. சுப்பிரமணிய ஐயர் கூறுவதிலிருந்து இதன் முக்கியத்துவம் புலனாகும். ஐயர் கருத்து திருவள்ளுவமாலை கடைச்சங்க காலத்திற் குரியதென்பது. அது கடைச்சங்க காலத் தது அல்ல என்று டி. வி. சதாசிவ பண் டாரத்தார், வ. உ. சி. முதலானோர் கருதுவர். தி த. க. வும் இக்கருத்துடைய வராய் இதனை நிறுவ முற்படுகின்றார். நூலின் காலம் எதுவாயினும் தி. த. க. அது தொடர்பாகக் கூறும் கருத்துகள் சில, நம் கவனத்திற்குரியவை. ஓரிடத்தில் அவர் குறிப்பிடுகின்றார்; :

Page 31
'. இந்தப் பாட்டு (திருத்தகு தெய் வத்திருவள்ளுவரோ'-ஆ-ர்) மதுரை யில் தெய்வத்தன்மை பொருந்திய சங் கப்பலகை ஒன்றிருந்ததென்பதைக் குறித்தலினாலும், அந்தப் பலகையில் திருவள்ளுவரோடொக்கவிருத்தந் கு உருத்திரன்மரே ஏற்றவர் என்பதால் குறளரங்கேற்றிய காலத்தில் சங்கப் புலவர் நாற்பத்தெண்மரும் திருவள் ளுவரோடொக்கவிருக்கத் தகுதியற் றவராய் பொற்றாமரை வாவியுள் வீழ்ந்து முழுகினரென்னும் கதைக்குத் தோற்றுமிடமாயிருத்தலினாலும் இது குறள் தோன்றி வெகு காலத்திற்குப் பின் இயற்றப்பட்டிருத்தல் வேண்டு மென்பது தோற்றம். சங்கப்பலகையி லேற்றிய இந்தக் கதை கட்டுக்கதை. இது போன்றதொரு கதை சடகோப ரியற்றிய திருவாய்மொழி பற்றியும் வழங்குகிறது"
(கீழ்க்கோடு கட்டுரையாளரால் இடப்பட் -து)
சங்கப்பலகையிலேற்றிய கதை முத லான கதைகள் பலவும் இன்றுகூட தமி ழறிஞர்கள் பலரால் ஐயமின்றி ஏற்கப் படும் நிலையில் அது கட்டுக்கதையென்று அன்றே புறக்கணித்திருந்த தி. த. க. வின் ஆளுமையும் அறிவும் துணிச்சலும் பாராட் டப்பட வேண்டியன அல்லவா?
"இராமாயணம்’ என்ற இன்னொரு கட்டுரை வான்மீகி ராமாயணத்தின் காலம் பற்றி ஆராய்கிறது. இங்கு தி. த. க. எடுத்தாளும் ஆதாரங்கள் பலதுறை சார்ந் தனவாக - புத்த ஜாதகக் கதை, கிரேக் கத் தொடர்பு, வரலாறு என்பனவாக - அமைந்துள்ளமை விதந்துரைக்கத் தக்கது. மேலும், வான்மீகிராமாயணம், மகாபார தத்திற்கு முந்தியது என பண்டித நடேச சாஸ்திரியார் கூறியிருந்த கருத்துக்களுக்கு மாறாக தி. த. க, ஆணித்தரமான கருத் துக்களை முன் வைத்துள்ளார்.
"மகாபாரதம்' என்ற மற்றொரு கட் டுரையும் கவனிக் க ப் பட வே ண் டி ய

தொன்று; கர்ண பரம்பரைக் கதை காலப் போக்கில் உண்மைச் சம்பவமாக மாறி "மகாபாரதம் ஆனமைபற்றி தி. த. சிதெளிவுபடுத்துகின்றார். மகாபாரதம் உட் பட சீவக சிந்தாமணி, பெரிய புராணம் ஆகிய நூல்களில் இடம்பெற்றுள்ள இடை-ச் செருகல்கள் பற்றி ஆராய முற்படுகின் றார். பெரிய புராண இடைச் செருகல் களுக்குக் காரணமானவரென்று கருதப் படும் வெள்ளியம்பலத்தம்பிரான் தி. த. க" வினால் ஓரிடத்தில் பின்வருமாறு கண்டிக் கப்படுகின்றார்.
'இவ் வெள்ளியம்பலத் தம்பிரான் போன்ற நாணிலிகளாகிய புலவர்க ளால் நம் சமஸ்கிருத, தமிழ் நூல்கள் தம் சிறப்பும் மதிப்பும் கெட்டுக் கிடக்கின்றவற்றிற் களவில்லை’
மேற்கூறிய கட்டுரைகளை விட தஞ்சை சீனிவாசபிள்ளை - தமிழ் வரலாற் றின் ஆராய்ச்சி’ என்ற தி. த. க. வின் கட் டுரை மிக முக்கியமானது. தஞ்சை சீனி வாசபிள்ளை, டாக்டர். மு. வரதராச னார் வார்த்தைகளில் கூறுவதாயின் "தமிழ் வரலாறு என்ற பெயரால் நூல் களைக் கால முறைப்படி ஆராய்ந்து நல்ல இலக்கிய வரலாற்று நூல் எழுதியவர்" இத்தகைய அறிஞர் எழுதிய நூலின் மீது தவறுகள் காண்கின்றார் தி. த. க. குமரி யாறு என ஒன்றில்லை’ ‘தமிழ்ச் சங்கம் தொன்மையானதன்று" என்பன அத்தகை யனவற்றுள் சிலவாம். தி. த. க. வின் கருத் துக்கள் எவ்வளவு தூரம் சரியானவை என் பதல்ல கேள்வி: சான்றாதாரங்களுடன் தர்க்கரீதியான முறையிலே கருத்துக்களை முன்வைக்கின்றார் என்பதே கவனிக்கத் தக்கது.
மேற்கூறியவை தவிர, கவனத்திற் கெடுக்கப்படவேண்டிய வேறுகட்டுரைகளு முள்ளன. விரிவஞ்சி அவை இங்கு நோக் கப்படவில்லை. 3.2 கடிதங்கள்
தி. த. க. வின் ஆய்வறிவுத் திறனை வெளிப்படுத்துவன, கட்டுரைகள் மட்டு
27

Page 32
மல்ல, கடிதங்களுமாகும். பதிப்பு முறை மைபற்றி பிற பதிப்பாசிரியர்களுக்கு தி. த. க. அவ்வப்போது பல கடிதங்கள் எழுதி வந்துள்ளார். (அத்தகைய பல கடி தங்கள் மூலருபத்தில் யாழ்ப்பாணப் பல் கலைக் கழக தமிழ்த்துறை சிரேட்ட விரி வுரையாளர் திரு. க. சிவலிங்கராசா அவர் களிடமுள்ளன). அவையும் ஆய்விற்கெடுக் கப்படும்போதுதான் தி. த. க. பற்றி முழு மையாக அறிந்துகொள்ளவியலும் பாட பேதங்கள் பற்றிய ஐயம் எழுப்புகின்றன வாகவோ ஐயம் போக்குவனவாகவோ தாம் அவற்றின் பலவும் அமைந்துள்ளன.
நூலின் காலம், நூலாசிரியரின் காலம் பற்றிக் கவனஞ் செலுத்துமாறு எழுதப்பட்ட கடிதங்கள் சிலவுமுள்ளன. தி, த. க. வின் இலக்கிய வரலாறு பற்றிய நோக்கையும் திறனாய்வு நோக்கையும் ஒரளவு வெளிப்படுத்துகின்றது என்ற விதத் தில், அத்தகைய ஒரு கடிதத்தின் ஒரு பகுதி இங்கு எடுத்தாளத் தக்கது. தி.த.க. எழுதுகின்றார்.
“ ‘புலவர் வரலாறு எல்லாம் ஒரே மாதிரியிராமல் வசனநடையைச் சிறிது வேறுபட எழுதினால் நன்றாயிருக்கும். காளமேகப் புலவர், அவ்வையார் இரு வருடைய சரித்திரத்தைப் பற்றிய குறிப்பைச் சற்றுக் கவனிக்க புத்த யுத் திக்குப் பொருந்தாதவற்றை விலக்கி விடுதல் நன்று. காலமும் ஏறக் குறையச் சரிவர இருத்தல் வேண்டும். புலவர் காலத்தைப் பற்றிய அறிவு நமக்குச் சரிவர இருக்குமாயின் பின் னர் எத்தனையோ விஷயங்கள் நன் றாய்ப் புலப்படும். ஆதலால், காலக் குறிப்பைச் சற்றே விசாரித்துக் குறிக்க முத்துத் தம்பிப் பிள்ளையைப் போல் ஆதாரம் யாதுமின்றி காளமேகம் காலம் அறுநூறு வருஷத்துக்கு முற் பட்டதென்று எழுதற்க. தக்க ஆதா ரம் கிடைக்கவில்லையாயின் காலம் செவ்வனே தெரியவில்லையென்று சொல்லவிடலாம்.
28

4. உரையாசிரியர்
உரை எழுதிய நூல்கள்: அகப்பொருள் விளக்கம் கம்பராமாயணம்-பாலகாண்டம் (சுன்னாகம் அ. குமாரசுவாமிப் பிள்ளை யுடன் இணைந்து எழுதியவை.)
செய்யுள்களுக்கான உரை, (வேண்டிய விடத்து) தெளிவுரை, அரும்பதவுரை விளக்கவுரை என்றவாறு எழுதப்பட்டுள் ளது. இவ்வுரையாளர்களது உரைத்திறன் எத்தகையதென்று இனங்காண்பதற்கு பின் வரும் பகுதி உதவுகின்றது.
(**வைத வைவின்’ என்ற பாடலுக் கானது);
தெளிவுரை: (அறவோர் சபித்த சாப மொழிபோன்ற அம்பினால் மராமரமேழுந் துளைபட எய்த இராமன் பொருட்டு தெய் விகச் செயலாற் சம்பவித்த பெருங்கதை யைக் காவியமாகச் செய்த வான்மீகி முனி வருடைய (வலிய) சொற்கள் வழங்கி நிலை பெற்ற இடத்திலே நொய்யதிலும் நொய்த லாகிய சொற்களால் ஒரு நூல் செய்யத் தொடங்கினேன். என்னறிவு இருந்தவா றென்னை?
விளக்கவுரை: நொய்யசொல் - உள்ளி டில்லாத மெல்லிய சொல். நூற்கல் - இயற்றல். வைவுசாப வார்த்தை வைண முநிவர் சொல் வளைய வாளிகள் (அதி காயன் - க ங் உ} எனப் பின்னுங் கூறுவர் வான்மீகி முனிவர் தமசையாற்றங் கரை யிலே அன்றிற் பறவை ஒன்றினை க் கொன்ற வேடனை நோக்கிக் கூறிய வாக் கியமே ஒரு சுலோகமாய்ப் பின் ஆராய வழி இராமசரிதமாய் அமைந்தமைபற்றி * எய்திய மாக்கதை’ என்றார்,
5. கல்விப்பணி
நீண்ட காலமாக இலங்கை அறிஞர்கள், பெரியார்கள் பலரும் தமிழகம் சென்று பல்வேறு பணிகளாற்றி வந்துள்ளனர். எடுத்துக்காட்டாக, வித்தியாசாலைகள் நிறுவினர் (எ-டு: நாவலர், காசிவாசி

Page 33
செந்திநாதையர்). சொந்தமாக அச்சுக் கூடங்கள் நிறுவி நூல்கள் வெளியிட்டனர் (எ-டு; நாவலர், காசிவாசி செந்திநாதை யர், வண்ணை சுவாமிநாத பண்டிதர்); பத்திரிகைகள் நடத்தினர் (எ-டு: சி. வை. தாமோதரம்பிள்ளை, G. P. சவுந்தரநாய கம்பிள்ளை, தென்கோவை ச. கந்தையா பிள்ளை), சைவப் பிரசங்கங்கள் நிகழ்த்தி னர் (எ-டு: நாவலர், நீர்வேலி சிவசங்கர பண்டிதர்) நீதிபதிகளாகவும் (எ-டு; சி. வை. தாமோதரம்பிள்ளை) அஞ்சல் அதி காரிகளாகவும் (எ-டு: மல்லாகம் கண்க சபைப்பிள்ளை) கடமை புரிந்தனர். கல் லூரி ஆசிரியராகவும், கல்வி அதிகாரிக ளாகவும் பணிபுரிந்துள்ளனர் என்ற விதத் தில் தி த. க. வும் இந்நீண்ட வரிசையாள ரில் ஒருவராகத் திகழ்கின்றார் எனலாம்.
சென்னை கிறிஸ்தவ கல்லூரியிலும் சென்னை பச்சையப்பன் கல்லூரியிலும் தி. த.க. தமிழாசிரியராகப் பணிபுரிந்துள் ளார். சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற் சிக் கல்லூரியில் சிலகாலம் ஆங்கில ஆசிரி யராகவும் விளங்கினாரென்றும் அறிய முடி கிறது. ஒய்வு வேளைகளில் மாணவருக்கு வீட்டிலும் கற்பித்து வந்ததாகக் கூறுவர் தி. த. க, வின் மாணவர்களுள் கந்தசாமி முதலியார் (பச்சையப்பன் கல்லூரி தமி ழாசிரியர்) மணி திருநாவுக்கரசு முதலி யார் (பச்சையப்பன் கல்லூரி தமிழாசிரி யர்) சுப்பிரமணிய சிவா (கிறிஸ்தவக் கல் லூரி தமிழ்ப்பண்டிதர்.) எதிராஜ் நாயுடு முதலானோர் குறிப்பிடத்தக்கவராவர். புலோலி நா. கதிரைவேற்பிள்ளையும் தி. த. க. விடம் தமிழ் இலக்கண, இலக்கியம் கற்றதாக அறியப்படுகிறது.
மேலும், சென்னை பல்கலைக்கழக பரீட்சகராகவும், பரீட்சைக் குழுத் தலைவ ராகவும் தி. த. க. கடமையாற்றியுள்ளார்.
6. தமிழ்நாட்டில் பிறபணிகள்
வெளியுலகம் நன்கறியாத விதத்தில் தி. த. க. ஆற்றிவந்த பணிகளுமுள்ளன.
எடுத்துக்காட்டாக, இலங்கை அறிஞர் களது நூல்கள் - குறிப்பாக, அ. குமார

சுவாமி புலவரது நூல்கள் - தமிழ்நாட்டில் பாடப் புத்தகங்களாவதற்கு வழிவகுத் தார்; இலங்கை அறிஞர்களது நூல்கள் தமிழ்நாட்டில் பிரசுரமாவதற்கும் விற் பனையாவதற்கும் ஒத்தாசைகள் புரிந்துள் ளார். அவை மறுபதிப்புகளாக வெளி வருவதற்கும் காரணராக இருந்துள்ளார்.
7. சமகால அறிஞர், புலவர் தொட்ர்பு
தி. த. க. சமகால தமிழக, இலங்கை அறிஞர்கள், புலவர்கள் பலருடன் நெருங் கிய தொடர்பு கொண்டிருந்தார். அத் தகையோர் பலரும் பதிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தோராவர். இலங்கையர் களுள் அ. குமாரசுவாமிப் புலவருடன் தி. த. க. கொண்டிருந்த தொடர்பு மிக முக்கியமானது. இருவருமிணைந்து நூல்கள் பதிப்பித்துள்ளனர்; உரை எழுதியுள்ளனர். அ. குமாரசுவாமிப் புலவர் மரபு வழிக் கல்வி கற்ற அறிஞராவார். அத்தகைய புலவர் மூலபாடத் திறனாய்வு நோக்கிற் கேற்ப நூல்களைப் பதிப்பிப்பதற்கும் அக ராதி முயற்சிகளில் ஈடுபடுவதற்கும் தி.த.க. முக்கிய காரணராக விளங்கினார் என்பர், குமார சுவாமிப் புலவர் பற்றிய ஆய்விலே தோய்ந்தவரான திரு.எஸ். சிவலிங்கராசா.
அறிஞர்களுடனான இலக்கிய உற
வின்ை கடிதத் தொடர்பு வலுப்பெறச் செய்திருந்தாலுங்கூட அவர்களது இலக் கிய முயற்சிகளில் தவறுகள் காணப்படு மாயின் அத்தகையோருக்கு "நல்லறிவுச் சுடர் கொளுத்துபவராக விளங்கியவர் தி. த. க ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை, சி. வை. தாமோதரம்பிள்ளை, தி. செல்வ கேசவராய முதலியார், எஸ். சீனிவாச பிள்ளை உட்பட தி. த. க. வின் கண்டனத் திற்குள்ளானவர் பலர். ஒரு தடவை அ. குமாரசுவாமிப் புலவருக்கு எழுதியிருந்த கடிதத்தின் ஒரு பகுதி இவ்விதத்தில் இங்கு எடுத்தாளத்தக்கது.
'திருவவதாரப் படலம் 22ம் பாட் டில் நிசரதம் என்பதை வடமொழி யாகக்கொண்டு, நி+சரதம் எனப் பிரித்து சரதம் என்பதற்கு மெய்
29

Page 34
என்று பொருள் கொண்டிருக்கிறீர்கள். சரத்ம் வடமொழியாகக் காண வில்லை. வடமொழி அகராதிகளில் அச்சொல் காணப்படவில்லை. இதற் குச் சமாதானம் என்னை.?’
விரிவான ஆய்வின் அவசியம்:
தி. த. க.வின் பணிகள்பற்றிய சுருக்க மான ஆய்வுகூட முதன்முறையாக இது வாகத்தான் அமைகின்றது. விரிவாக இனி மேற்றான் ஆய்வு நிகழவேண்டும். தி.த.க. பின் பணிகள் சில ஒளிபெறவேண்டியுள் ளன. எப். எக்ஸ். ஸி. நடராசா அவர்கள் கூறுவதுபோன்று, தி. த. க. தொல் சொல்லதிகாரம் சேனாவரையம் பதிப்பித் தமை பற்றிச் சரியாக அறிய முடியாதுள் ளது. திருமலை நவம் கூறுவதுபோன்று தி த. க. மோகனாங்கி பதிப்பித்துள்ளாரா என்பது பற்றியும் அறிய முடியாதுள்ளது. இவற்றைவிட, தொகுக்கப்படவேண்டிய தி. த. க. வின் கட்டுரைகளும் கடிதங்களும் பல உள்ளன. இதன்பின்பே தி. த. க. பற் றிய பூரண ஆய்வு உருப்பெற இயலும்.
விழுமி
ஒரு பண்பாட்டைச் சேர்ந்தோரின் வா (parodigih (Behaviour pattern) stoph அவையே அப்பண்பாட்டினரின் விழுமியங்
கூட்டாகச் சேர்ந்து வாழ முற்படும்போது
எனக் கருதப்படுகிறதோ அவை "பண்பாட படும் எடுத்துக்காட்டாக, "அனைவருக்கு என்பது நம் சமுதாயத்தில் ஓர் இன்றிய6 பண்பாட்டுவிழுமியங்கள் தனிமனிதரின் வி மனிதரின் விழுமியமானது அவரின் வா நடத்தை முறைக்கு அவர் கூறும் அர்த்த அதிகாரம், தகுதி போன்றவை தனிமனித பண்பாட்டு விழுமியங்கள் தனிமனிதரைச் சமுதாயத்திற்கும் பொருந்தக்கூடியவையா நடத்தைமுறைகளை மதிப்பிட்டுக் கூறு அர்த்தத்தை வெளிப்படுத்துவதாக இருக்கு படுதல், அறம் செய்து வாழ்தல், வாய பிறன்மனை நோக்காமை, நல்லது செய்யி தினை அறுப்பான், உப்புத் தின்றவன் தt விழுமியங்கள் தமிழரின் வாழ்வில் இடம் ெ வாழ்விற்கு இன்றியமையாதவை என மதி
நன்றி:
ஆசிரியர் :
30

இவை எதுவும் இதுவரை நிகழாதபடி யாலேதான் தி.த.க. மற்க்கப்பட்டுவிட்ட ஒருவராக காணப்படுகின்றார். தமிழ் இலக்கிய வரலாறு எழுதும் சில Gugurmtif யர்கள்கூட தி. த. க. பற்றி சரியாக அறி யாதவரே. மு. வரதராசனார் தமது தமிழ் இலக்கிய் வரலாற்று நூலில் இவ்வ்ாறு
ள்முதுகின்றார்.
స్థా அளித்த வழக்கறிஞர்க ளுள்தி, க. கனக்சன்ப்ப்பிள்ளை (கி.பி. 1863-1922) என்பவரும் குறிப்பிடத் தக்க இலக்கியத்தொண்டு புரிந்தவர். வடமொழி வான்மீகி ராமாயணத்தின் கிஷ்கிந்தா காண்டத்தையும் சுந்தர காண்டத்தையும் தமிழில் மொழி பெயர்த்தார். கம்ப்ராமாயணத்தின் பாலகர்ண்டத்திற்கு ' உரை" எழுதி Sðrfrír" ' - . . : i: , - " ...
மேற்குறித்த பகுதியிலே ஒன்றுக்கு மேற்பட்ட தவறுகள் உள்ள்ன. அவ்வா றெனில், தி. த. க. பற்றிய ஆய்வு அவ சியமானது மட்டுமன்று, அவசரமானது
மல்லவோ?
பங்கள்
ாழ்வியலுக்கும், செயல்களுக்கும், நடத்தை எவை அவசியமென்று கருதப்படுகிறதோ கள் (Vaules) ஆகும். மக்கள் அனைவரும் : எவை எவை எல்லாம் இன்றியமையாதது :
G. eggpliaurias air (Cultural vaiues) start th FLD6hittivity (Equality of opportunity) மையாத விழுமியமாகக் கருதப்படுகிறது. ழமியங்களிலிருந்து மாறுபட்டவை. தனி ழ்விற்கு எவை அவசியமானவை, அவரின் ங்கள் ஆகியவற்ற்ைச் சார்ந்தது. பணம், ரின் விழுமியங்களாக இருக்கலாம். ஆனால், * சாராமல் அவர் சார்ந்த குழுவிற்கும் க இருக்கும் அவை சமுதாயத்தில் நிகழும் வதாக இருக்கும் அல்லது அதற்கான நம். எடுத்துக்காட்டாக, நீதிக்குக் கட்டுப் மையே பேசுதல், வாய்மை வெல்லும், ன் நல்லது விளையும், தினை விதைத்தவன் ண்ணிர் குடிப்பான் போன்ற எண்ணற்ற பற்றுள்ளன. இவை அனைத்தும் சமுதாய க்கப்படுகிறது. ண்பாட்டு மானிடவியல் பக்கம் - 169 - சீ. பக்தவத்சல பாரதி.

Page 35
யாழ்ப்பாணத்தி
ஏ. என். கிரு
இந்துமதத்தில் விக்கிரக வழிபாடு முதன்மையான இடத்தைப் பெறுகிறது. இதனைவிட கோயில்களில் கோபுரங்கள், விமானங்கள் ஆகியவற்றிலும், கடவுளர் களதும், தேவர்களதும் உருவச்சிலைகள் கருங்கல்லினாலும், சீ மெ ந் துனா லும் செய்து கோவில் கட்டிடங்களை அழகு படுத்தும் முறை இலங்கையில் வளர்ச்சி பெற்று வருகின்றது.கோயில்களைச் சார்ந்து வளரும் சிற்பக்கலை மதக்கோட்பாடு களுக்கேற்பவும் சிற்பக்கலை நியமங்களுக்கு ஏற்பவும் அமைக்கப்படுகின்றன. இக்கட் டுரையில் யாழ்ப்பாணத்தில் தற்காலத்தில் நிலவும் சிற்பக்கலை மரபு பற்றி ஆராயப் படுகின்றது. இந்த மரபினை யாழ்ப் பாணத்தின் வரலாற்றோடும் பொதுவாக இலங்கையின் வரலாற்றோடும் தொடர்பு படுத்தி ஆராய்வது அவசியம். எனினும் வரலாற்று ரீதியான வளர்ச்சியை ஆராய் வதற்குரிய சான்றாதாரங்கள் போதியளவு வரலாற்று ஆய்வாளர்களால் திரட்டப்பட வில்லை. க, இந்திரபால, வி. சிவதஈழி, ஆகியோர் ஆரியசக்கரவர்த்தியினர் காலத் தில் நிலவிய சிற்பக்கலை முறையை விளக் கும் கட்டுரைகள் சிலவற்றை எழுதியுள்ள னர். அண்மையில் யாழ்ப்பாணப் பல் கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட யாழ்ப் பாண இராச்சியம் என்னும் நூலிலும் யாழ்ப்பாணத்தின் சிற்பக்கலை வர லாற்றை அறிந்து கொள்வதற்கான பய னுடைய தகவல்கள் தரப்பட்டுள்ளன.
இன்று யாழ்ப்பாணத்தில் புகழ் பெற் றனவாக விளங்கும் இந்து ஆலயங்களில் சில நீண்டகால வரலாற்றை உடையவை. இவற்றுள் நல்லூர் கந்தசுவாமி கோயில், மாவட்டபுரம் கந்தசுவாமி கோயில், கீரி மலைச் சிவன்கோயில், ஆகியன புகழ்பெற் றவை. இவற்றைவிட உரும்பிராய் கரு ணாகரப்பிள்ளையார் கோயில், அச்சுவேலி

ல் சிற்பக்கலை
அரசகேசரி பிள்ளையார் கோயில், சட்ட நாதர் கோயில் ஆகியனவும் குறிப்பிடக் கூடியவை. ஒவ்வொரு கிராமத்திலும் விநாயகர், சிவன், முருகன் ஆகிய தெய்வங் களுக்கான கோயில்களில் ஏதோ ஒன்றாவது பல நூற்றாண்டுகளாக இருந்து வந்துள்ள தைக் காணலாம். இத்தகைய பின்னணி யில் சமயத்தையும் கோவில்களையும் சார்ந்த வளர்ந்த கலைகளில் ஒன்றாகிய சிற்பக்கலை யாழ்ப்பாணத்தில் பல நூற் றாண்டுகள் தொடர்ச்சியுடைய வரலாற் றைக் கொண்டிருந்தது என்பது தெளிவு.
யாழ்ப்பாணத்தின் இந்துசமய வரலாற் றில் போத்துக்கேயர் வரவு முக்கிய திருப்பு முனையாக அமைந்தது. பல கலைக்கரு வூலங்களும், வரலாற்றுச்சான்றுகளும் போத்துக்கேயர் ஆட்சிக்காலத்தின்போது அழிக்கப்பட்டன. யாழ்ப்பாண வைபவ் மாலையில் இந்த அழிவைப்பற்றி பின்வரு
மாறு கூறப்படுகின்றது.
'பரராசசிங்க முதலி இறந்தபின் பதன் கிக்காரர் தாம் இடிக்காம்ல் விட்டிருந்த ஆலயமெல்லாவற்றையும். இடித்தார்க்ள். அப்பொழுது பரதபஈண் என்னும் பிரா மணன் கீரிமலைச் சாரலிலுள்ள தேவா லயங்களின் தட்டுமுட்டுச் சாமான்களை யும் விக்கிரகங்களையும் கிணற்றில் போட்டு மூடிவைத்தான். கந்தசுவாமி கோயிலில் பணிவிடைக்காரனாக இருந்த பண்டாரம் அத்திசையில் ஆலயங்களின் சம்பவங்களைக் கொண்ட செப்புப் பட்ட யூத்தி னை எடுத்துக்கொண்டு மட்டக் களப்புக்கு ஓடினான்"
யாழ்ப்பாண வைபவமாலை பக்கம் 80-81 மேற்கூறிய கூற்றில் இருந்து ஓர் உண்மை புலனாகிறது.யாழ்ப்பாணத்தில் கோயிலைச் சார்ந்த சிற்பக்கலை போத் துக்கீசர்
31.

Page 36
ஆட்சியின்போது நலிவடைந்த தென்று கொள்ளவேண்டும். இந்நூற்றாண்டின் மீண்டும் வளர்ச்சி பெற்றுவரும் சிற்பக் கலையினை முன்னைய வரலாற்றோடு இணைத்துப்பார்ப்பதற்கான ஆதாரங்கள் போதியளவு இல்லை. இக்கட்டுரை தற் காலத்தில் யாழ்ப்பாணத்தில் நிலவும் சிற் பக்கலை பற்றிய ஒரு விவரணையாகவுே அமைந்துள்ளது. 3},
சிற்பங்களைச் செய்வதற்கு மரம், மண், சுதை, கல் உலோகம் போன்ற பொருட்கள் பயன்படுத்தப்படு கின்றன. யாழ்ப்பாணத்தைப் பொறுத்த மட்டில் இந்நூற்றாண்டின் ஆரம்பகாலங் களில் சிற்பங்களைச் செதுக்குவதற்குரிய திறமைவாய்ந்த ஸ்தபதிகள் இருக்கவில்லை இதனாற் பெரும்பாலும் தென்னிந்தியாவில் இருந்தே சிற்பக்கலை வல்லோர் வரவழைக்கப்பட்டனர். யாழ்ப்பாணத் தில் இருந்த சிற்பிகளும் இவர்களுடன் இணைந்து இத்தொழிலைத் திறம்படச் செய்தனர், இற்றைவரை இத்தொழிலைச் செய்வோர். பரம்பரை பரம்பரையாகத் தமது குலத் தொழிலாக இதனைச்செய்து வருவதனைக் காணலாம்.
சிற்பக்கலைவல்ல ஸ்தபதிகள் பலர் அராலி. மாவிட்டபுரம், வண்ணார் பண்ணை, திரு நெ ல் வே லி, வட்டுக் கோட்டை, தென்மராட்சி, யாழ்ப்பாணம், நிராவியடி, மாதனை போன்ற இடங்களில் பரம்பரைபரம்பரையாக இத்தொழில் புரிந்து வருகின்றனர், இச்சிற்பிகள் பலருடன் கலந்துரையாடியதன் பயனாக ஈழத்துச் சிற்பக்கலை மரபுபற்றிய சில விடயங்களை அறிந்து கொள்ள முடிந்தது.
சிற்பங்களைச் செய்வதற்குப் போதிய அளவு சிற்பநூலறிவு அவசியம். ஆனால் இங்குள்ள கலைஞர்களது கருத்துப்படி அவர்கள் பெற்றிருக்கும் சிற்பநூலறிவை விட, பயிற்சியின் விளைவாக வந்த அனு பவமே அழகிய சிற்பங்களை அமைப்பதற் குக் காரணமாக உள்ளது. இந்தியாவில் இருந்து வந்த திறமை வாய்ந்த ஸ்தபதி
32

களின் கீழ், எமது சிற்பிகள் பெற்ற உயர்ந்த அனுபவமே, அவர்கள் நாட்டிற்குத் திரும் பிய பின்னரும் திறம்பட சிற்பங்களை அமைப்பதற்குக் காரணமாக உள்ளது என்ற கருத்தை மனங்கொள்ளல் வேண்டும்.
சிற்பநூல்கள் தரும் விளக்கத்தின்அடிப் படையில், நோக்கும் போது ஸ்தபதிகள் வடமொழி அறிவு பெற்றவர்களாக வும், தியானஸ்லோகங்களை மனனஞ் செய்து அதில் இடம்பெறும் உருவத்தை மனதில் பதித்து, மனதிற்பதிந்த அவ்வுரு வங்களுக்குப் புறத்தே கல்லிலோ, மரத் திலோ வடிவம் கொடுப்பவர்களாகவும் காணப்படுகின்றனர். ஆனால் யாழ்ப் பாணத்துச் சிற்பிகள் சமஸ்கிருத நூலறிவு அற்றவர்களாயினும், சிற்பநூல்களிற் கூறப் படும் அளவைப்பிரமாணம், இலட்சன விதி போன்றவற்றைக் கடைப்பிடித்து சிற் பங்களை அமைக்கின்றனர். மேலும் வெறும் சிற்ப நியமங்களுடன் நின்றுவிடாது, தமது கற்பனாசக்தி, ஆக்கத்திறனுக்கேற்றவகை யில் அலங்கார வேலைப்பாடுகள், ஆடை, அணிகலன்கள், தலைஒப்பனை போன்ற வற்றை அமைப்பதாகக் கூறுகின்றனர், ஆண்பெண் வேறுபாடுகளைக் காட்டும் வகையிலும், பாவங்க்ளைப் புலப்படுத்தும் வகையிலும் சிற்பங்களை அமைத்துள்ள னர். யாழ்ப்பர்ண்த்துச் சிற்பிகளில் நீரா, வியடி பிறவுண் றோட்டைச் சேர்ந்த சுப்பிரமணிய பாஸ்கரன் என்பவர் திருவுரு வச்சிலைகள் செய்வதில் மிகுந்த தேர்ச்சி பெற்றவர். க்ற்சிலை செதுக்குவதையும், விக்கிர வ்ார்ப்புகளை உருவாக்குவதையும் தமது பரம்பரைத் தொழிலாகக் கொண்ட வர். ஒரு தொழில் நிறுவனத்தையே வைத் துள்ளார். இவர் தமது தொழிலைத் திருப்பணிக் கடனாகவும், சமூகத்தில் உயர்ந்த தொழிலாகவும் கருதுகிறார். இவரது கலைப்படைப்புகளுக்கு அடிப் படையானவை ஆகமங்கள், சிற்பநூல்கள்,
திவ்வியபிரபந்தங்கள், புராணங்களே.
பல்கலைக்கழகப் பரமேஸ்வரன் ஆல ர் "வேடிவம், கல்வியங்காடு
- wersauer
யப் பிள்ளையார்

Page 37
வீரபத்திரர் ஆலய கெளரி அம்மன், துர்க்கை அம்மன், கொக்குவில் மணியங்காடு, கந்த சுவாமி கோயிலில் ஆறுமுகசுவாமி வடிவம், தாவடி உப்புமடம் பிள்ளையார் கோயில்
இலக்குமி வடிவ்ம், இணுவில் பரராசசேகரப் பிள்ளையார் கோயிலில் துர்க்கை, தெட்
ஷிணாமூர்த்தி, பிள்ளையார் வடிவங்கள், கொக்குவிலில் மஞ்சவனப்பதிப் பிள்ளை யார் வடிவங்கள், கச்சேரி நல்லூர் வீதி யில் உள்ள மனோன்மணி அம்மன் கோயிற் பிள்ளையார், அம்மன் சிலைகள் போன்ற வற்றைத் திறம்படச் செய்துள்ளார்.
கோண்டாவில் மேற்கைச் சேர்ந்த சோமசுந்தரம் ஸ்தபதி ஆலய நிர்மானம் கற்சிற்பம், வார்ப்பு விக்கிரகம், ஆலயங் களுக்கு படம் வரைந்து கொடுத்தல் போன்ற தொழில் களைச் செய்து வருகி றார். இவர் 1945 ல் இருந்து இத்தொழி லில் ஈடுபட்டு வருகிறார், சிற்பங்கள், கோபுர அமைப்பு போன்றவற்றினை நூல் களிற் கூறப்பட்ட விதிமுறைகளின்படி அமைக்கிறார். காசியபம், மானசாரம், சகளTதிகாரம், ஆகிய நூல்களை இவர் அளவைப் பிராமணமாகக் கொள்கிறார் அளவைப் பிரமாணங்களுக்கமைய இவர் சிற்பங்களைச் செய்வதுடன் அவ்வாறுதான் செய்யப்பட வேண்டும் என்ற கொள்கை யும் உடையவர். ஏழாலைப் பிள்ளையார் கோயில் நடராஜர், விநாயகர் வடிவம், நயினாதீவு ராஜகோபுரம், புன்னாலைக் கட்டுவன் நாகதம்பிரான் கோயில் சரஸ் வதி வடிவம், நாவற்குழி தச்சன் தோப்பு முருகன் கோயில் சுப்பிரமணியர் வள்ளி தெய்வானையுடன் போன்ற வடிவங்களைச் செய்துள்ளார்.
இணுவில் பரராசசேகரப்பிள்ளையார் கோயிற் கோபுரத்தில் இந்திய முறைப்படி சதையுருவம் செய்துள்ளார். நல்லுரர் தெற்கு கோபுரத்தை இவரது தம்பி யாரான நாகலிங்கம் என்பவர் செய்துள் 6T Ti,
அராலியைச் சேர்ந்த அமரசிங்கம், திருநெல்வேலியைச் சேர்ந்த கனகசபை செல்வராசா, பத்மநாதன் சுரேந்திரன்,

செல்வராசா கந்தசுவாமி, சத்தியநாதன் இராசரத்தினம், ஆறுமுகம் தம்பித்துரை, ஆறுமுகம் சீவரத்தினம், வட்டுக்கோட்டை சினனத்தம்பி நாகராசா, தென்மராட்சி கிருஷ்ணபிள்ளை கலாமோகன் போன் றோர் மரச்சிற்ப வேலைகள் கல், உலோக வேலைகளிற் தேர்ச்சி பெற்றவர்களாகக் காணப்படுகின்றனர்.
விக்கிரகக்கலை
யாழ்ப்பான ப் பி ர தே ச த் தை ப் பொறுத்தவரை இக்கலை பூரண வளர்ச்சி பெறவில்லை. பெரும்பாலும் சிலைகள் தென்னிந்தியாவில் இருந்தே கொண்டு வரப்பட்டது. நீராவியடியைச் சேர்ந்த பாஸ்கரன், கோண்டாவிலில் சோமசுந்தரம் ஸ்தபதி அராலியைச் சேர்ந்த சின்னராசா, கந்தசாமி போன்றோர் விக்கிர வளர்ப் புக் கலையில் தேர்ச்சிப் பெற்றவர்களாகக் காணப்படுகின்றனர்.
வார்ப்பு விக்கிரகங்கள் செய்யும் போது ஐம்பொன் சேர்க்கப்படும். வெள்ளி, பித் தளை, நாகம், இரும்பு ஆகிய பஞ்சலோகங் களின் அளவு வீதங்களை சிற்பாசாரியார் தீர்மானிப்பார். ஒரு உருவத்தை வடிப்ப தற்கு முன், அதன் வடிவத்தை முதலில் மெழுகில் செய்கின்றனர். தேன்மெழுகு, குங்கிலியம், சிறிதளவு தே ங் கா ய் எண்ணெய் என்பவற்றின் 55 g) as லேயே முதலில் உருவம் செய்வர். இது தேன் மெழுக்கு முறை எனப்படும். முதலாவ தாக உருவாக்க இருக்கும் திருமேனியின் அச்சைத் தேன்மெழுக்கில் செய்து வைத் துக்கொள்ள வேண்டும். அடுத்த படியாக அந்த அச்சின் மேல் புற்றுமண்ணுடன், உமிக்கரி, சின்னஞ்சிறு பஞ்சுத்துண்டுகள், உப்பு இவைகளைச் சேர்த்து நன்றாக அரைத்த கலவையைப் பூச வேண்டும். இதே போன்று 2 நாட்களுக்கொருமுறை, 3 தடவைகள் பூசி நிழலில் உலரவிட வேண்டும். கடைசியாகப் பூசப்படும் புற்று மண் கலவை மிகுதியாக இருக்க வேண்டும். அ ச் சி ன் நடு வி லும் தலைப்பக்கத் திலும், அடிப்பக்கத்திலும் துளைகள் இருக்க வேண்டும். செம்பு, தங்கம், வெள்ளி,
33

Page 38
பித்தளை, வெண்கலம் ஆகியவை சிலை வடிக்க உபயோகப்படுத்தப்படுகின்றன. சிலைகள் வடிப்பதற்குப் பெரும் பகுதி செம் பாயிருக்க வேண்டும், அச்சின் நிறையைப் பொறுத்தே உலோகங்களின் எடை நிர்ண யிக்கப்படுகிறது. பித்தளையும், செம்பும் அச்சைக் காட்டியும் 8 மடங்கு நிறையுட னும் வெள்ளி 12 மடங்கும் இருக்க வேண் டும். மண்கலவை பூசப்பட்ட மெழுகு அச் சுக்கு தீமூட்டி உள்ளிருக்கும் மெழுகு உருகி வெளியே வடிந்து விடச் செய்ய வேண் டும். உலோகம் கூழாகக் காச்சப்பட்டு அச்சின் நடுவில் உள்ள துளையில் ஊற்றப் படவேண்டும். இது கருக்கட்டல் நிலை எனப்படும். அச்சு முழுவதும் கூழ் நிரம்பி விட்டதை தலைப்பாகத்திலும் அடிப்பாகத் திலும் உள்ள ஒட்டைகள் வழியே அறிந்து. தீயை அணைத்து அச்சைக் குளிரவிட வேண்டும். நன்றாக குளிர்ந்த பின் சுட்ட மண் அச்சை உடைத்துச் சிலையை அகற்றி, சிற்றுளி கொண்டு செப்புத் திருமேனியை அழகுபடுத்தல் வேண்டும். தேன் மெழுகு முறை மூலம் விக்கிரங்கள் வார்க்கப்படும் கலை யாழ்ப்பாணத்தில் இடம் பெறு கிறது. இவ்வாறு வெண்கலத்தில் வார்க் கப்பட்ட விக்கிரகம் ஒன்றில் மிகத் துல் லியமான கோடுகளையும், நெழிவு சுழிவு களையும் செதுக்கி பார்ப்போரது மனதில் பக்தி உணர்வையும், ரசிப்புத்தன்மையை யும் உண்டுபண்ணும் வகையில் எழிலுற அமைக்கின்றனர்.
34

இன்று இடம் பெறும் அரசியல் பொரு ளாதாரச் சூழ்நிலைகள் காரணமாக இக் கலைஞர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கும் முகங்கொடுக்க வேண் டிய வர் க ளா க க் காணப்படுகின்றனர். சிற் ப விக்கிரசுத் தொழிலுக்கு வேண்டிய மூலப்பொருட்கள் கிடைப்டதும் அதனை ஓரிடத்தில் இருந்து இன்னோர் இடத்திற்கு எடுத்துச் செல்வதும் சிரமமாகவே உள்ளது. மின்சாரமின்மையும் இவர்களது தொழில் முறைகளுக்குத் தடை யாகவே உள்ளது. என்றே கூறவேண்டும்
சிற்பக்கலை நூல்கள் தரும் தகவல்கள் யாழ்ப்பாணத்து ஸ்தபதிகளுடன் நடத்திய செய்திகளின் அடிப்படையில் மேற்கூறப்பட் டுள்ள கருத்துக்களைத் தொகுத்து நோக் கின் யாழ்ப்பாணத்து ஸ்தபதிகள். சிற்பி களின் கைவண்ணத்தில் உருவான சிற்ப விக்கிரகங்கள் தென்னாட்டுச் சிற்பங்களை ஒத்த அழகும் கலைவனப்பும் மிக்கவை யாகவே காணப்படுகின்றன. சிற்பசாஸ்த் திரங்கள் கூறுவது போல ஸ்தபதிகள் அனைவரும் வடமொழிஅறிவு, சிற்பநுா லறிவு அற்றவராயினும் காலங்காலமாகத் தாம் பெற்ற பயிற்சி அனுபவம் ஆகி யவற்றினால் ஈழத்திற்கெனத் தனித்துவ மானதொரு சிற்பக்கலை மரபை இற்றை வரை பேணி வளர்த் து வருகின்றனர் என்றே கூறவேண்டும்.

Page 39
(சென்ற இதழ் தொடர்ச்சி)
சைவசித்தாந்த ஆ ஒர் அறிமு
சோ. கிரு
பதி, பசு, பாசம் அல்லது மாயை என்ற முப்பொருள்களையும் , சிவதத்துவம் வித்தி யாதத்துவம், ஆன்மதத்துவம் என்கிற முப் பெரும் பிரிவில் உள்ளடங்கும் 36 தத்து வங்களின் தொடர்பினடியாக விளக்குகிற சைவ சித்தாந்த அறிவுக் கொள்கையின் பெளதீகவதீத அடிப்படைகள், உளவியல டிப்படைகள் என்பன பற்றி சென்ற கட்டுரையில் கூறப்பட்டது, சைவசித்தாந்த மெய்யியற் கொள்கைக்கு அறிவார்ந்த நிலைப்பாட்டைத் தரும் அளவை முறை களும் முறையியலடிப்படைகளும் பற்றி இக்கட்டுரை ஆராய்கிறது.
6 (m வை ஐஸ்
சென்ற கட்டுரையில் ஆன்மாவின் அறிவு பரஞானம், அபரஞானம் என்று இருவகைப்படுமென்றும், பரஞான நிலை யில் சித்தியார் குறிப்பிடுவதுபோல 'சீவ னும் ஞானக்கிரியையால் சிவனை ஒப்பன்' எனக் குறிப்பிடப்பட்டது. மலமறைப்பி னால் பீடிக்கப்பட்ட ஆன்மா தன் சுவரூபம் மறைந்து வினைமுதற் காரகமான கலை யினால் தொழிற்படுதற்கு உதவியாக இருப் பது அபரஞானமாகும், பரஞானநிலையில் வியாபக அறிவைக்கொண்டிருந்த ஆன்மா அபரஞானநிலையில் சுட்டறிவு அல்லது ஏகதேச அறிவைக் கொண்டு விளங்குகிறது பெயரிட்டு வழங்கக்கூடிய பொருட்களை விடயமாகக் கொண்ட சுட்டறிவிற்கு சிற் சக்தியே ஆதாரமாயிருக்கிறதென்று சென்ற கட்டுரையில் குறிப்பிட்டேன். சிற்சக்தி சித்தின்சக்தி என்றும், அறியுமாற்றல் என் றும் விளக்கப்படலாம். சிவஞானசுவாமிகள் சிற்சக்தியை "ஞானசக்தி' என குறிப் பிடுவர் சிவாக்கிரகயோகிகளோ சிற்சக் தியையே ஏசப்பிரமாணமாக தனது சைவ

அறிவாராய்ச்சியியல் கம் (பகுதி 2)
ஷ்ணராஜா
பரிபாசை என்ற நூலில் குறிப்பிடுகிறார். எவ்வாறாயினும் சுட்டறிவு நிலையில் ஆன் மாவின் ஞானசக்தி; ஞானேந்திரியங்கள் வாயிலாகவும், கிரியா சக்தி, கன்மேந்திரி யங்கள் வாயிலாகவும் நிகழுகின்றன என் பதில் கருத்துவேறுபாடுகளிற்கு இட மில்லை. ஞானமும், செயலும் ஒரு நாண யத்தின் இருபக்கங்களைப் போல ஆன் மாவின் அறிதற் செயற்பாட்டில் இணைந்து நிற்கின்றன.
அறிவைப் பெறுதற்கு ஆதாரமாயிருப் பவை பிரமாணம் அல்லது அளவை எனப் படும். அறிவு பிரமை எனவும், அறிவைப் பெறுபவனாகிய ஆன்மா பிரமாதா என வும் அறிதற்தொழிலைச் செய்யும் சிற்சக்தி பிரமிதி எனவும் கூறப்படும். ஆன்மா தன் சிற்சத்தியால் சொற்பிரபஞ்சத்தையும் பொருட்பிரபஞ்சத்தையும் அறிதற்கு அள வைகளாக உள்ளனவே பிரமாணங்கள் எனப்படும். இந்திய தரிசன வரலாற்றில் பிரமாணம் என்ற சொல் சில சந்தர்ப் பங்களில், மெய்யான அறிவை பெறுதற் கான வழிமுறை எனவும், வேறு சில சந் தர்ப்பங்களில் அறிக்கையின் வழிமுறை (அதாவது மெய்யான அறிவை பெறுதல் என்ற கட்டாயமில்லாது) எனவும் பயன் படுத்தப்படுகிறது. இது சித்தாந்த சாஸ் திர நூல்களிற்கும் பொருந்தும், சிவஞான சித்தியார் காட்சியை இந்திரியக்காட்சி, மானதக்காட்சி, தன்வேதனைக் காட்சி, யோகக் காட்சி என நான்கு வகையாக வகுத்துக்கூற, தத்துவப் பிரகாச சுவாமிகள் இயற்றிய தத்துவப்பிரகாசம் என்ற நூலோ ஐயக்காட்சி, திரிபுக்காட்சி, விகற் பக்காட்சி, மான தக்காட்சி, தன்வேதனைக் காட்சி, யோகக் காட்சி என காட்சி ஏழு
35

Page 40
வகைப்படுமென குறிப்பிடுகிறது. அதா வது அருணந்தி சிவாச்சாரியார் அளவை யானது மெய்யான அறிவைப்பெறும் வாயி லேனக்கொள்ள, தத்துவப்பிரகாச சுவாமி களோ அறிகையின் வாயிலாகவே (Means of Cognition) 626765 h 5(56)657 sort si.
ஏலவே ஞானம் என்ற சொல்லிற்கு நிச்சயமானதும், உண்மையானதுமான அறிவு என்ற வரைவிலக்க ம்ை தந்தோம். அதற்சேற்ட அளவை என்பதற்கு நிச்சய மானதும் உண்மையானதுமான அறிவைப் பெறுதற்கான சாதனம் என்ற வரைவிலக் கனத்தைத் தருவோம், நிச்சயமானதும், உண்மையானதுமான அறிவு ஐயம் திரிபு என்ற குற்றங்கள் இல்லாததாயிருத்தல் வேண்டும்.
நிச்சயமற்ற அறிவு ஐயம் எனப்படும் அறிபொருளைப் பரஸ்பரம் முரண்பாடு டைய பண்புகளுடையதாக காண்டது ஐயம், உரையாசிரியர்கள் ஐயத்திற்கு குற்றியோ மகனோ எனத் தீர்மானிக்கமுடியாத நிலை யேயென விளக்கம் தருவர். இவ் உதார ணம் புலக்காட்சி நிலையிலெழுகிற ஐய நிலையை மட்டுமே சுட்டுகிறது. காட்சிப் புலனின் குறைபாடு, காட்சிப் பொருளிற் கும் சூழ்நிலை என்பன காரணமாக இவ் வையம் நிகழ்கிறது. ஐயம் சிந்தனை நிலை யிலும் நிகழலாம் காட்சிநிலை ஐயத்தி லிருந்து இது வேறுபட்டது. தவறான ஸ்மிருதிஞானம், தவறான ஞாபகம் சிந் தனையில் ஐயத்தை ஏற்படுத்துகிறது. உண்மையென உறுதிசெய்ய முடியாத நிலையே ஐயமாகும்.
சிப்பியை வெள்ளியாகக் காண்பது திரிபென உரையாசிரியர்கள் விளக்குவர் புலக்குறைபாடு, தவறான ஸ்மிருதி ஞானம் என்பவற்றால் ஒன்றை இன்னொன்றாக அறிவது திரிபுக்காட்சியாம். புலக்காட்சி நிலையிலும் சிந்தனை நிலையிலும் இது நிக ழலாம். திரிபு ஐயத்திலிருந்து வேறுபட்டது, ஐயம் உறுதி செய்யமுடியாத நிலை. **இதுவோ அதுவோ' என்ற இரட்டை நிலை ஐயத்திலேற்பட, திரிபிலோ ஒன் றைப் பிறிதொன்றாக காணும் தவறான
36

அறிவுநிலை காணப்படுகிறது. சிவஞான பாடியத்தில் திரிபினால் ஏற்படுகிற தவ றான அறிவு பின்வருமாறு விளக்கப்படு கிறது.
'பிறவிக்குருடர் பலர் குழிக்கொண்டு வேழங்காண்டல் விருப்பான் அது நின்றுNச் சென்று கையினால் ஒவ்வொருறுப் பிணைத் தைவ்ந்து, வேழமாவது முறம் போல்வதென்றும், உரல் போல்வதென்றும், உலக்கை போல்வதென்றும், மலைபோல்வ தென்றும் தம்முள் மாறுகொண்டு ஒருவரை யொருவர் மறுத்துக் கலகம் விளைத்தல் போலச் சித்தாந்த சைவ நெறி நின்று ஆசான் திருவருள் பெறாதார் தத்தம் உணர்விற்கேற்பச் சமயநூல்களில் ஒவ் வொன்றினை ஆராய்ந்து அவற்றிற் கூறும் ஏகதேசப் பொருளே பற்றிக் கூறி ஒரு வரை ஒருவர் மறுத்துத் தம்முள் மாறு கொண்டு கலகம் விளைவிப்பர்.'
ஸ"ப்ர பேதாகமம் ஐயம், திரிபு என் பனவற்றிலின்றும் நீங்கிய மெய்யிறிவானது பிரத்தியட்சம் அனுமானம், சப்தம், உவ மானம், அர்த்தாபத்தி, அபாவம் என்ற ஆறு பிரமாணங்களால் பெறப்படும் என குறிப்பிடுகிறது. பெளஷ்கர ஆகமம் பிரத்தி யட்சம், அனுமானம், சப்தம் அர்தாபத்தி என நால்வகைப் பிரமாணங்களை மட் டுமே ஏற்றுக்கொள்கிறது. ஆனால் சிவ ஞானசித்தியா ரே காட்சி, அனுமானம், சப்தம் என்ற மூவகைப் பிரமாணங்களை மட்டுமே அங்கீகரித்து ஏனைய அளவைகள் அனைத்தையும் இம்மூன்றிலும் உள்ளடங்கு மெனக் கூறுகிறது.
7. காட்சியளவை
சைவசித்தாந்தத்தில் பிரத்தியட்சம் அதாவது காட்சி ஏற்புடைய அறிவின் வாயிலாக கருதப்படுவதால் ஐயம், திரிபு என்பனவற்றுடன் கூடிய போலிக்காட்சி இங்கு விலக்கப்படுகிறது. புறப்பொருளை நேரடியாக அறிவது காட்சி. அதாவது ஐம்புலன்களாலும் அறிவது. பொரு ளொன்றின் இருப்பு மட்டுமே அறியப்படும்

Page 41
முண்டக்காட்சி நிர்விகல்ப ஞானம் எனப் படும். அறியப்பட்டபொருள் இன்ன தென்று அதன் பெயரும், அது இன்ன வகுப்பை சார்ந்ததென்று அதன் பயன், செயல் கிரியைகளையும் சேர்த்தறிவது சவிகற்ப ஞானம் எனப்படும். 'பதார்த்த சம்பந்தத்தாற் வஸ்துவின் ஸ்வரூப மாத் திரமாயுள்ள ஞானமானது நிர்விகல்பமென் றும், சவிகற்பம் நாமம் ஜாதி, குணக் கிரியைகளோடு கூடியிருக்கும் ஞானமென் றும்" பெளஷ்கரம் கூறும், சவிகற்பக் காட்சி மேலும் இந்திரியக்காட்சி, மான தக்காட்சி, தன்வேதனைக்காட்சி, யோகக் காட்சி என நான்கு வகையினதாக பிரிக் கப்படும்.
காலம் வெளி என்ற கட்டுப்பாடு இல் லாது அனைத்திடப்பொருட்களையும் அறி தல் யோகக்காட்சி எனப்படும். 'ஆன் மாவின் அறிவைத் தடைசெய்து நின்ற மலசக்திகளை இமயநியம முதலிய அட் டாங்கயோக சமாதியான் வாட்டி ஓரிடத்து ஒருகாலத்திலிருந்து ஓரிடத்து முக்காலத் துப் பொருட்களையுங் காண்கிற காட் சியே யோகக்காட்சி' என சிவஞானமுனி வர் விளக்குவார். இவ்விளக்கப்படி பார்த் தால் யோகக்காட்சி வியாபக அறிவு நிலைக்குரிய காட்சி என்றே கொள்ளுதல் வேண்டும். ஞானப்பிரகாசமுனிவர் சுவசம் வேத்தியம் (பசுஞானம்) சுவசம் வேதனம் (பதிஞானம்) என இரண்டாக யோகக் காட்சியை வகைப்படுத்திக் கூறுவர். சிவாக்ரமகாபாடியமும் மேற்படி ஞானப் பிரகாசரின் பாகுபாட்டை ஏற்றுக்கொள் கிறது, சிவநெறிப் பிரகாசம் என்ற நூல்
“புறக்கருவி தனை நீங்கியிட் கருவியான புத்திமன மாங்காரம் பொருந்த லின்றிச்
சிறப்புடை யோகத்தா லாணவத்தை
நீங்கித்
திரிகாலத் தியல்யுணர்தல்.
என யோகக்காட்சியின் இயல்பை வெளிப் படையாகவே உணர்த்துகிறது.
போகத்திலீடுபட்ட பெத்தான்மாவின் தன்வேதனையால் வருவதே இன்பதுன்ப அனுபவங்கள். அழுந்தியறிதல் இங்கு

முதன்மைபெறும் அம்சமாகும் , திருத் தாண்டகத்தில் வருகிற செய்யுள் ஒன்று தன் வேதனைக் காட்சி பற்றிய விளக்கத் திற்கு மிகவும் பொருத்தமானது, மிகவும்
சுவையானதும் கூட,
'முன்னம் அவனுடைய நாமம்
கேட்டாள் மூர்த்தி அவனிருக்கும் வண்ணம்
கேட்டாள் பின்னை அவனுடைய வாரூர்
கேட்டாள்
பெயர்த்தும் அவனுக்கே பிச்சியானாள் அன்னையையும் அத்தனையும் அன்றே
நீத்தாள் அகன்றாள் அகலிடத்தார்
ஆசாரத்தை தன்னை மறந்தாள் தன்னாமங்
கெட்டாள் தலைப்பட்டாள் நங்கை தலைவன்
தாளே "
சைவசித்தாந்தம் குறிப்பிடும் இந்திரி யக்காட்சி, மான தக்காட்சி என்ற இரண் டினதும் இயல்பென்னவென்பதில் சித்தி யார் உரையாசிரியர்களிடையே கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. சிவ ஞானசுவாமிகள் ஞானப்பிரகாசமுனிவர் ஆகியோர் இந்திரியக்காட்சி நிர்விகற்பக் காட்சியே என்று விளக்கம் தர சிவாக்ர யோகிகளோ இந்திரியக்காட்சி சவிகற்பக் காட்சியே என்று விளக்கம் தருகின்றார். செய்யுளுக்கு பொருள் கொள்ளும் முறை யியல் வேறுபாடே இவ்வுரையாசிரியர் களின் விளக்க வேறுபாட்டிற்கு காரண மாயிற்று எனலாம். பாடல் பின்வருமாறு
*உயிரினோடுணர்வு வாயிலொளியுரு வாதி பற்றிச்
செயிரோடு விகற்பமின்றித் தெரிவ
திந்திரியக்காட்சி'
சிவாக்ரயோகிகள் இவ்விரண்டாம் வரி யில் வருகிற "செயிரோடு விகற்பமின்றி' என்ற வரிக்கு "செயிரின்றி விகற்பமொடு' என பாடம் கொண்டு இந்திரியக்காட்சி
37

Page 42
சவிகற்பக்காட்சியே என்ற முடிவிற்கு வரு கிறார், ஆனால் சிவஞானசுவாமிகளும் ஞானப்பிரகாசமுனிவரும் நேர்ப்பொருள் கொண்டு இந்திரியக்காட்சியை நிர்விகற்பக் காட்சியே என்ற முடிவிற்கு வருகின்றனர், இந்திரியக்காட்சியை நிர்விகற்பக் காட்சி யென விளக்கிய உரையாசிரியர்கள் இரு வரும் ஐயவிபரீதங்கள் இன்றி பெயர் சாதி முதலிய விகற்பங்களோடு கூடிய சவிகற்பக் காட்சியே மாணதப் பிரத்தியட்சம் என்று தெரிவிக்கின்றனர். ஆனால் சிவாக்ரக யோதிகளோ புத்திதத்துவத்தினால் உறுதி செய்யப்பட்ட நிலையுடையதே மானதக் காட்சி என்கிறார். உரையாசிரியர்களிற் கிடையிலான வேறுபாடுகள் எவ்வாறாயி னும், சித்தியார் கூறும் நால்வகைக் காட்சி சளும், காட்சியின் நால்வகைப்படிநிலை களே என்பது பெறப்படும்.
S, அனுமான அளவை
தருக்க நூற்சிந்தனைக்கு ஆதரமாயி ருப்பது அனுமானம் என்ற அளவையாகும். நியாயகுத்திரம் (கி.மு. 150) என்ற நூலே முதன்முதலிற் அனுமானம் பற்றிய பூரண மான கொள்கையொன்றை இந்தியமரபில் முன்மொழிந்தது. சைவ சித்தாந்தம் உட் பட இந்திய தத்துவங்கள் அனைத்தும் தருக்க சிந்தனையை நியாய சூத்திரத்தின் வழியிலேயே விளக்கியமை கவனிக்கத் தக்கது. சைவசித்தாந்த ஆய்விற்கு உபகார மாக சிவஞானசுவாமிகளால் மொழி பெயர்க்கப்பட்ட அன்னம்பட்டரின் தருக்க சங்கிரகம், மதுரைச்சிவப்பிரகாசரால் மொழிபெயர்க்கப்பட்ட கேசவ மிஸ்ரரின் தருக்கபாசை, தெல்லிப்பழை சிவானந் ததையரால் மொழி பெயர்க்கப்பட்ட பத கிருத்தியம், நீலகண்டியம், நியாயபோதினி என்பவையும் §u Tuu சூத்திரத்தின் வழிவந்த நவ நியாயக்கொள்கையினரின் ஆக்கங்களேயாகும். சைவசித்தாந்தத் திற்கு நியாய திரிசனத்தின் தருக்கமே ஏற் புடையதென சிவஞானசுவாமிகள் தனது பாடியத்தில் குறிப்பிடுவதும் இங்கு நினைவு கூரத்தக்கது. அனுமானத்திற்கு சைவ சித்தாந்தம் கொடுக்கும் முக்கியத்துவத்தை சிவஞான போதத்தின் 12 சூத்திரங்களிற்
38

கும் 39 அதிகரணங்கள் உள்ளன. இவ்வதி கரணங்கள் ஒவ்வொன்றும் தனித்தனியாக மேற்கோள், ஏது, உதாரணம் என அனு: மான முறையினாலேயே நிறுவப்பட்டுள்
ତtf ତxt .
முன்மொழியப்பட்ட எடுகூற்று ஒன்றை ஏது, நியாயம், சான்று என்பனவற்றி னால் நிறுவுதலே அனுமானம் எனப்படும், மேற்கோள் ஒன்றை மூன்று வழிகளில் நிறு வும் முறை எமது மரபில் காணப்படுகிறது. இவை முறையே வா த ம், ஐ ல் பம், விதண்டை எனப்படும். எதிர் கருத்தைக் கொண்ட இருவர் வெற்றி பெறுவதை இலக்காகக் கொண்டு விவாதிப்பது ஜல்பம் எனப்படும் . எதிராளியின் கருத்துக்கள் எதனையும் செவிமடுக்காது தனது கருத்தே சரியென விவாதிப்பது விதண்டை எனப் படும். உண்மையை அறியுமுகமாக ஒரே அறிவுத்தரத்திலுள்ள இரு வர் அல்லது குருவும் சீடனும் , தம்மிடயே விவாதிப்பது வாதம் எனப்படும் , ஜல்பத்திலும் விதண் டையிலும் வெற்றி பெறுவதே விவாதிப் பதன் முக்கிய நோக்கமாதலினால் எதி ரியை மடக்குவற்கான சூழ்ச்சிகளும் அங்கு கையாளப்படும், உண்மையை அறியும் அவாவினால் உந்தப்பட்டவர்களிடையே இடம்பெறும் வாதத்தில் சூழ்ச்சிகள் அனு மதிக்கப்படுவதில்லை. அனுமானம் உண் மையை அறிவதற்கானதொரு வாதமுறை யாகும். இவ்வாத முறையானது காரண காரியத் தொடர்பை அடிப்படையாகக் கொண்டது, கொள் ள |ா த து என இரு வகைப்படும் .
தர்மா-தர்மி அனுமானம் காரிய அனு மானம் காரண அனுமானம், ஆகம அணு மானம் என நால்வகை அனுமான முறை பற்றி மதங்க பரமேஸ்வர ஆகமம் கூறுகி றது. அருள்நந்தி சிவாச்சாரியார் மேற்கு றித்த நால்வகை அனுமானங்களையும் பூர் வக் காட்சி அனுமானம், கருதலனுமானம், ஆகம அனுமானம் என்ற முப்பிரிப்புத் திட்ட மொன்றில் உள்ளடக்கிக் கூறுகிறார், அனுமானத்தை திருஷ்ட, அதிருஷ்ட என இருவகையாகப் பெளவுகர ஆகமம் L Siflë,

Page 43
கிறது. உமாபதி சிவாச்சாரியார் தனது பெளத்கர ஆகம விருத்தியில் திருஷ்ட அனுமானத்தை விஷேச திருஷ்டா’’ என்றும் அதிருஷ்ட அனுமானத்தை சாமா னிய திருஷ்டா என்றும் குறிப்பிடுகின்றார். புகையிலிருந்து நெருப்பை நாம் நேரடியா கவே அனுமானிக்கிறோம். இது விஷேச திரு ஷ்ட அனுமானமாகும். அதாவது நேரடி யாகக் காணும் ஒரூ ஏதுவிலிருந்து அதன் காாணத்தை அனுமானிப்பதாகும். ஒருவன் தனது செயலால் நிலையிடங்களை மாற் றுவது போல கிரகங்களும் வானத்தில் தம் நிலையிடங்களை மாற்றிக் கொள்கின்றன. எனவே அவை பெயர்ச்சியுடையவை என அனுமானிக்கலாம். இது 4F τι ρίτ 6υθμι திருஷ்ட அனுமானத்திற்குத் தரப்படும் உதாரணமாகும்.
சைவ சித்தாந்த நூற்பரப்பில் அணு
மானமானது மேற்படி பலவாறாகக் பிரித் தாராயப்பட்டாலும், அவையனைத்தும் காரண காரியக் கோட்பாட்டை அடிப்ப டையாகக் கொண்டது. தருமா - தருமி தொடர்பை அடிப்படையாகக்கொண்டது ஆகமத்தை ஆதாரமாகக்கொண்டது, என்ற மூன்று பிரிவில் உள்ளடக்கப்படலாம். எனவே அறியப்பட்ட உண்மையான தரவு களிலிருந்து மேலதிகமாக, புதிய உண்மைத் தரவுகளை அறியும் முயற்சிக்கு உபகார மாக இருப்பதென அனுமானம் என்ற சொல்லிற்கு வரைவிலக்கணம் தரலாம். அறியப்பட்ட தரவுகளிற்கும் அறியப்படாத ஆனால் அறியவிரும்புகிற புதிய தரவுக ளிற்கு மிடையே இருக்கும் நியமத் தொடர் பால் இது சாத்தியமாகிறது. அனுமானம் இவ்வறிவைப் பெறுதற்கான முறையிய லாகும்.
அருள்நந்தி சிவாச்சாரியார் அனுமா னத்தை தன்பொருட்டனுமானம் , பிறர் பொருட்டனுமானம் என இருவகையாகப் பாகுபடுத்துகின்றார். இத்தகைய பாகுபாடு பெளஷ்கர ஆகமத்தில் காணப்படவில்லை. எவ்வாறாயினும் அருள் நந்திசிவாச்சாரியா ரின் மேற்படி பாகுபாடு மிகவும் முக்கிய மானதொன்றாகும். ஒருவன் தான் அறிந்

"ததையே மற்றவர்களிற்கு உபதேசிக்கவேண் டும். எனவே முதலில் தன் பொருட்ட-ணு மாத்தைப் பயன்படுத்தி அறிவைப் பெறு தல் வேண்டும். பின்பு அறிந்ததை மற்றவர்க ளிற்கு அறிவுறுத்தும் பொருட்டு பிறர் பொருட்டனுமானத்தைப் பயன்படுத்திச் சொல்லுதல் வேண்டும்.
அனுமானமென்பது ஐந்து அவயவங்களை கொண்ட வாக்கியம் என அழைக்கப்படும். அவை முறையே மேற்கோள், ஏது, திட் டாந்தம், உபநயம், நிகமனம் என்ற பெயர் ளைப் பெற்றுள்ளன. நிறுவப்படவேண்டிய தெதுவோ அதனை மேற்கோள் முன்
மொழிகிறது. நிறுவப்படவேண்டியதை சாத்தியம் என்பர், சாத்தியத்தின் நிலை யிடம் பக்கம் எனப்படும். திட்டாந்
தத்தின் உதவியுடன் நிறுவப்படவேண்டி யதை ஏது நிறுவுவதால் அது சாதனம் எனவும் அழைக்கப்படும். திட்டாந்தமோ விதிவாக்கியமாகவும் மறைவாக்கியமாக வும் இருக்கும். விதிவாக்கியம் சாதன்மிய திட்டாந்தம் என்றும், அதனுடன் கூடி வரும் உதாரணம் சபக்கம் என்றும் அழைக் கப்படும். மறைவாக்கியம் வ ைதன்மிய திட்டாந்தம் எனவும் அதனுடன் கூடிவரும் உதாரணம் விபக்கம் எனவும் அழைக்கப் படும், சாதனம் சாத்தியத்துடன் கொண் டுள்ள நியமத்தொடர்பு சபக்கத்தால் எடுத்துக்காட்டப்பட்டு விதிவாக்கியமாகத் தரப்படுகிறது. சாத்திய-சாதனம் இல்லா விடத்து நியமத்தொடர்பு எதுவுமில்லை யென விபக்கம் எடுத்துக்காட்டி மறை வாக்கியவடிவத்தில் அதனை உறுதிப் படுத்துகிறது. நி யம த் தொடர் பு 'வியாத்தி' எனப்படும். அதாவது ஏது வுக்கும் சாத்தியத்திற்குமிடையிலான நிய மத்தொடர்பே வியாத்தி. வியாத்தி லிங் கப்பராமரிசம் எனவும் அளவையாசிரியர் களால் அழைக்கப்படும்.
ஒரு அனுமானத்தில் சாத்தியத்துடன் ஏது கொண்டுள்ள தொடர்பு சரியானதென பின்வரும் பப்புகளால் தீர்மானிக்கலா மெனச் சித்தியார் கூறுகிறது.
39

Page 44
1. ஏது துணிபொருள் இருக்குமிட மான பக்கத்தில் காணப்பட வேண்டும்.
2. துணிந்த பொருளிற்கிடமான உவ மையில் அதாவது சபக்கத்தில் ஏது காணப் பட வேண்டும்.
3. துணிபொருள் சென்றடையாத விபக்க உவமையில் ஏது காணப்படல் கூடாது. மேற்படி விதிகள் வலிதான அனு மானத்திற்குரிய வியாத்தி விதிகள் எனப் படும். தின்னாகர் என்ற பெளத்த அளவை யியலாளரே முதன்முதலில் வியாத்தி விதி களை எடுத்துக்காட்டியவர். தின்னாகர் எடுத்துக்காட்டிய மே ற் படி வியாத்தி விதிகள் சைவசித்தாந்தத்திற்கும் உடன் LIT Lirgor G g5.
இந்திய தருக்கத்திற்கு பெளத்தத்தின் பிறிதொரு பங்களிப்பு ஐந்து அவயவ“அனு மானத்திற்குப் பதிலாக மூன்று அவை யவங்களோடு கூடிய அனுமான வடிவத்தை எடுத்துக்காட்டியமையாகும். உரையாசிரி யர்கள் அனைவரும் ஐந்து அவயவங்க ளோடு கூடிய அனுமானத்தையே பின் வரும் சித்தியார் அளவைச் செய்யுள் வரிக்கு விளக்கமாக எடுத்துக் காட்டியுள்ள
TT.
'தொகையார் உறுப்பு ஐந்தொடும்
கூடச் சொல்வாரும் உளர் துணிந்தே"
அனுமானத்தின் உறுப்புக்களை ஐந் தாகத் துணிந்து கூட்டிச்சொல்லுவாரும் உளர் என்பதே இப்பாடலின் தாற்பரியம். உரையாசிரியர்கள் என்ன காரணம் பற்றி பக்கம், ஏது திட்டாந்தம் என்று மூன்று உறுப்புக்களைக் கொண்ட அனுமானத்தை உபநயம், நிகமனம் என்ற இரண்டையும் சேர்த்து ஐந்தெனக் கொண்டார்களெனத் தெரியவில்லை. த த் து வ ப் பி ர கா ச சுவாமிகள் தமது தத்துவப் பிரகாசம்என்ற நூலிலே உபநயமும், நிகமனமும் பக்கம், ஏது திட்டாந்தம், என்ற மூன்றிலடங்கு மெனக் கூறுவது இங்கு அவதானிக்கத்தக் கது. உரையாசிரியர்கள் ஐந்துறுப்புக்
40

களைக்கொண்ட அனுமானவடிவத்தை சித்தியார் அனுமான விளக்கமாகக் கொண் டதற்குரிய காரணம் இவர்களது காலத் தில் நியாய தரிசனத்தின் தருக்கக் கொள் கையே சைவசித்தாந்திகளால் பயிலப்பட்டு வந்தமையாகுமென ஊகிக்கலாம். தருக்க சங்கிரகமும், தர்க்க பாசையுமே சைவ சித்தாந்த மரபில் பெரும்பான்மை பயிலப் பட்டுவந்த அளவை நூல்கள். இவை யிரண்டும் நியாய தரிசன நூல்களாகும். ஐந்து அங்கங்களைக் கொண்ட அனுமான முறை பற்றியே இந்நூல்கள் விளக்குகின் றன.
பெளத்த தருக்கம் போல, அருள்நந்தி சிவாச்சாரியாரும், மேற்கோள் ஏது திட் டாந்தம் என்ற மூன்று உறுப்புக்களைக் கொண்ட அனுமான வடிவத்தையே ஏற் றுக்கொண்டனர் என்றும், இவ்வகை அனு மானம் சைவசித்தாந்தத்திற்கு உடன் பாடானதே என்றும் நாம் கூறலாம். அனு மானம் ஒரு முக்கிய பிரமாணம் என்ற வகையில் உபநயம், நிகமனம் என்ற தேவை யற்ற இரு உறுப்புக்களையும் சேர்த்து கொள்வதால் 'அதிவியாதி' என்ற பிர மாணதோஷம் ஏற்படும். எனவே இவற்றை விலக்குதலே ஏற்புடையது.
பக்கம், ஏது, திட்டாந்தம் என்ற மூன்று உறுப்புக்களையும் கொண்ட அனு மானம் நிச்சயமானதும், உண்மையானது மான அறிவைத் தரவேண்டின் இவ்வுறுப் புக்கள் மூன்றும் குறைபாடற்றவையாக இருத்தல் வேண்டும். பக்கம், ஏது, திட் டாந்தம் என்ற இந்த மூன்று உறுப்புக் களும் குறைபாடுடையனவாயின் அவை நிச்சயமான அறிவைத் தரமாட்டாது. குறைபாடுடைய உறுப்புக்களால் அனுமா னப்போலி ஏற்படும் அனுமானப் போலிகள் மூன்று பிரதான பிரிவுகளைக் கொண்டவை அவையாவன 1. பக்கப்போலி 2. ஏதுப் போலி 3. திட்டாந்தப்போலி எனப்படும். சித்தியாரின்படி பக்கப்போலிகள் நான்கு வகைப்படும். ஏதுப்போலிகள் மூன்று வகை யாக 21 உப பிரிவுகளைக் கொண்டது. திட்டாந்தப்போலியோ 18 வகைப்படும்"

Page 45
அனுமானம் விவாதமுறைக்குரிய சாதனம் என ஏலவே குறிப்பிட்டேன். நாயன்மார்கள் பிற சமயத் தவரோடு வாதம் புரிந்தனர். சிவஞான சித்தியாரின் பரபக்கம் பிறசமயக் கொள்கைகளை விவா தித்து நிராகரிக்கிறது. உமாபதி சிவாச்சாரி யாரின் சங்கற்பநிராகரணம், சத்தியஜோதி சிவாச்சாரியாரின் பரமோஷ நிராசகாரிகை ஆகியன பரசமயக்கருத்துக்களை விவா தித்து நிராகரிப்பனவே. எனவே விவாதிப் பவர் தனது சமயக்கருத்துக்களை அறிந்தி ருப்பது மட்டும் போதியதல்ல. விவாதிக்கும் முறைகளையும் நன்கறிந்திருத்தல் வேண் டும். எதிராளி விடக்கூடிய தவறுகளையும் உடனே கண்டு பிடிக்கத்தக்கவராக இருத் தல் வேண்டும். இவற்றை தோல்வித் தானம் என அழைப்பர் (நிக்கிரகத்தானம்) விவாதித்தலில் 22 வகையான தோல்வித் தானங்கள் ஏற்படலாமென சித்தியார்
குறிப்பிடுகிறது.
9. ք նմ}} til hifճմ) 67/
காட்சியினாலும் அலு: சனத்தினா லும் அறியப்படமுடியாதிருக்கும் விட யங்கள் பற்றிய அறிவைப் பெறுவதற்கு உரையளவை பயன்படுகிறது நவீன விஞ் ஞானம் உட்பட சகல ஆய்வுத் துறைகளி லும் அதிகாரத்தின்மூலம் அறிவைப் பெறு 5i (Authority) giùLGO) – U 1 (Lp 60) pu Téb அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சிறப்புத்தேர்ச்சி முதன்மை பெற்றுள்ள இந்நாளில் பிரச்சி னைகள் பலவற்றைத் தீர்ப்பதற்கு பல் துறை அறிவு இன்றியமையாதது. ஒருவரே எல்லாவற்றையும் அறிவதென்பது இயலாத காரியம், துறைபோகிய அறிஞர்களின் கருத் துக்களை ஏற்றுக் கொள்கிறோம். ஆலயக் கிரியை முறைகளில் கருத்து வேறுபாடு எழுந்தால் பத்ததிகளைப் பார்த்துப் பிரச் சினையைத் தீர்ப்போம். அதுவும் திருப்தி யழிக்காத விடத்து ஆகமங்களின் கிரியா பாதங்களை பார்த்து முடிவு செய்வோம். இலக்கணத்தில் ச ந் தே கம் வ ரின் நன் நூ  ைல யோ, தொல்காப்பியத்தையோ பார்த்து முடிவு செய்வோம். இம்முறையில் சந்தேகம் தெளிவதை அல்லதுஅறிவு

பெறுவதை மெய்யியற் பரிபாசையில் உரையளவை என்போம்.
உரையளவை வாக்கியப் பொருளுணர்ச் சியின் கருவியாகும் என்றும், பதம் ஆற் றலால் பொருளை உணர்த்துகிற எழுத் தொலி என்றும், ஆற்றலாவது 'ஆ' என்னும் சத்தத்திற்கு 'ஆ' த்தன்மை Ա46ճ)ւ- Ա / பொருளோடுளதாய கற்பித சம்பந்தம் என்றும் , அவ்வாற்றல் இப்பதத் தால் இப்பொருளுணர்த்துக' என்னும் நியமத்தால் ஆகியதென்றும் சித்தாந்த சைவசங்கிரகம் என்ற நூல் கூறுகிறது.
உரையளவை வாக்கிய வடிவத்தில் இருக்கும். வாக்கியத்தைக் கூறுபவர் ஆப் தன், பிராந்தன், வஞ்சகன் என மூன்று பிரிவினராகும். மயக்கத்தாற் பொருளை விபரீதமாக உணர்ந்து கூறுபவன் பிராந் தன். வஞ்சகன் தானறிந்த பொருளை காம வெகுளிகளாக விபரீதமாகக் கூறு வான். இவ்விரு பிரிவினரும் கூறும் வாக்கி யம் ஆப்தம் என்ற உரையளவையாகாது. இவ்விருவர் கூற்றும் உரையளவைப்போலி என்று கூறப்படும். தன் கண்மயக்கமில் லாது, பொருள்களை உ ஸ் ௗ வ்ா று உணர்ந்து காமவெகுளியில்லாது உள்ள வாறே கூறுபவன் ஆப் தன் எனப்படுவான். அவன் கூறும் வ்ாக்கியம் ஆப்தம் எனப் படும், குருவின் வாக்கியம் சீடனுக்கு ஆப்தமாகும். நிச்சயமாயிருக்கிற அர்த் தத்தை யாதொருவன் சொல்லுகின் றானோ அவன் ஆப்தன் என பெளஷ்கரம் கூறுகிறது. சிவன் பரமாப் தன் என்பது சைவசித்தாந்த நிலைப்பாடு. ஆகமங்கள் சிவனால் கூறப்பட்ட வ்ாக்கியங்கள் என்ப தால் அவை ஆப் தவாக்கியங்களாகின்றன. ஆகமம், உரை, சுருதி என்பன ஒரு சொற் கிழவிகள்.
சிவஞானசித்தியார் ஆப்தவாக்கியத்தை, தந்திர உரை, மந்திர உரை, உபதேச உரை என மூன்றாக வகுத்துக் கூறுகிறது. ஆகமங் களின் சரியா, கிரியா, பாதங்கள் தந்திர, உரை எனப்படும். யோக பாதம் மந்திர உரை எனப்படும். ஞானபாதம் உபதேச
d

Page 46
உரை என அழைக்கப்படும். ஞானபிரகாச முனிவர் தந்திர, மந்திர, உபதேச உரை களிற்கு சிறிது வேறுபட்ட விளக்கம் தரு கிறார். இவரது அபிப்பிராயப்படி சத்த சாமத்தியம், அர்த்த சாமத்தியம், வஸ்து சாமத்தியம் என்பனவற்றால் eg,35LD விரோதமின்றி சரியா, கிரியா, கிருத்தயம் போதிப்பது தந்திர உரை, மனமடங்கி யோகத்திலிருந்து வழிபாடு செய்தல் பற்றியது மந்திர உரை, பதி, பசு, பாச இலக்கணங்களைப் போதிப்பது உபதேச உரை எனப்படும்.
10. முறையியலடிப்படைகள்
சைவசித்தாந்தம் வெறும் நம்பிக்கை களைத் தொகுத்து வெளிப்படுத்தும் கூற்றுக் களின் கலவை அல்ல. அது ஒரு சாமாநிய மான ஊக தத்துவமும் அல்ல (Conjectural Philosophy) முப்பொருட்கள் வெளிப்படை உண்மைகளாக (Axioms) ஏற்றுக்கொண்டு நியாயித்தலில் வழி பெறப்பட்டதொரு
மேய்யியலாகும், சைவசித்தாந்தத்தின் அறிவா ர் ந் த நிலை ப் பா ட்  ைட விளங்கிக் கொள்வதற்கும், விளக்கு
வதற்கும் சித்தாந்தத்தின் அளவைகள் பற்றிய அறிவு மட்டும் போதியதல்ல. முறையியலடிப்படைகள் பற்றிய அறிவும் இன்றியமையாதது. முப்பொருள் உண்
ᎧᎠt fᎦ ᎧᎼ0 ᎿᎥ Ꭵ உள்பொருளியலடிப்படையில் (Ontological) நிறுவுவதற்கு காரணப் பன்மை, சத்காரியவாதம் உவமானம்
மற்றும் உவமானத்தை ஆதாரமாகக் கொண்ட நியாயங்களும் சைவசித்தாந்தம் பயன்படுத்துகிற முறையியலடிப்படையாக விளங்குகிறதுரு சாஸ்திரங்களில் கூறப்பட் டுள்ள அறி  ைவ விளக்கு வ த நீற்கு இலக்கணம் மற்றும் இரட்டுறமொழிதல் முதல்ான உத்திகளை உள்ளடக்கிய பொருள் கொள்முறைகளும் சைவசித்தாந் திகளால் விருத்தி செய்யப்பட்டுள்ளது. பரசமயவேறுபாடுகளும், உமாபதி சிவாச் சாரீயாருக்குப் பிற்பட்ட உரையாசியர் களிடையே காணப்படும் முரண்பாடுகளும் பெரும்பாலும் சித்தாந்த முறையியலடிப்
42

படைகள் சிலவற்றை தவறாக விளங்கிக்
கொண்டமையாலேயே ஏற்பட்டதென கருதுவதில் நியாயமுண்டு. ஒரு சில உதாரணங்களை இங்கு எடுத்துக் காட்டலாம்.
சிவஞான சுவாமிகள் தனது பாடியத் தில் அகோரசிவாச்சாரியாரின் பத்ததிகளை கண்டித்து சோமசம் பத்ததியே சரியான தெனக் கூறுவதும் பின்னாளில் சபாபதி நாவலர் யாழ்பாணத்திற்கு வந்தபொழுது அகோர சிவாச்சாரியார் பத்ததியைக் கண்டித்து ஆறுமுகநாவலரிடம் '' வாங்கிக் கட்டியதும் அனைவரும் அறிந்ததே சிவாக் கிரகயோகிசளின் உரையை சைவசித்தாந்த அறிஞர் சிலர் ஏற்பதில்லை. இக்கருத்து வேறுபாடுகள் சைவசித்தாந்தம் ஏற்றுக் கொள்ளுகிற சரியான விளக்கம் ஏதுவென் பதில் ஏற்பட்ட விளைவே கருத்து வேறு பாடுகளின் விளக்க வேறுபாடுகளிற்கு ஏது வாயிருப்பது முறையியல் வேறுபாடுகளே யாகும். எல்லாவற்றிற்கும் மே லா க ஞானபிரகாசமுனிவர் தமது சித்தியார் உரையில் சிவசம வாதத்தை முற்றாகக் கண்டித்திருப்பதையும் பொருட்படுத்தாது, அவரை சிவசம வாதி என சிவஞான சுவாமிகள் குற் ற ம் சுமத்துவதும் 'உண்மைப் பொருள் பற்றிய ஆய்வில்' இவ்விருவரிடையே காணப்படும் முறை யியல் வேறுபாட்டால் எழுந்த பிரச்சினை யேயாம். பெளஷ்கர ஆகமத்தில் வருகிற சில கருத்துக்கள் சைவசித்தாந்ததிற்கு உடன்பாடானதல்லவென க லா நிதி பொன்னையா கண்டிப்பது முறையியல் வேறுபாட்டால் எழுந்த பிறிதோர் பிரச்சி னையே. சிவஞானசித்தியார் ஒன்பதாக் குத்திர உரையில் ஞானப்பிரகாச முனிவர் சிவப்பிரகாச முதலான சிவசாஸ்த்திரங் களிலே 'திரிமலமுமகல உயிர் அருள் சேர்முத்தி" என்பது முதலான வசனங் களிற்கு சொற்பொருளிருத்தபடி பொருளு ரைத்தால் பாசுபதிமுதலானோர் மதமாகு மென்றும். அது சித்தாந்தமல்லவென்றுக் இலக்கணத்தாலே பொருள் இப்படித்

Page 47
தான் என்று கூறுதல் வேண்டுமென உமாபதி சிவாச்சாரியாரை கண்டிப்பதும் முறையியல் முரண்பாடுகளால் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளேயெ ன்பதை அவதானிக்க வேண்டும்.
சைவசித்தாந்த முறையியல் ஆய்வில் முதலிடம் பெறுவது கா ர ன கா ரியக் கொள்கை பற்றிய விளக்கமாகும். காரண காரியத் தொடர்பில் காரணத்தை கார ணப்பன்மை வாதமாகவும், காரியத்தை சத்காரியவாதமாகவும் சைவசித்தாந்தம் எடுத்துக் காட்டுகிறது. மேலும் காரிய மின்றிக் காரணமுண்டாகமாட்டாது என்று விளக்குகையில் காரியம் பற்றிய அறிவி லிருந்து காரணம் பற்றிய அறிவைப் பெற வேண்டுமென்பதும் எடுத்துக்காட்டப்படு கிறது. ஒரு காரியத்திற்கு நிமித் தகாரணம் துணைக் காரணம், முதற் காரணமென மூன்று காரணங்கள் இருப்பதாக தத்துவப் பிரகாசிகை கூறுகிறது. காரியரூபமான உலகிற்கு பதி நிமித்த காரணமாகவும், சக்தி துணைக் காரணமாகவும், பாசம் எனப்படும் மாயை முதற் :ா இனமாகவும், இருக்கிறதென்பது பராக்கிய ஆகம வாக்கு.
'காரிய காரணங்கள் முதல்துணை
நிமித்தம் கண்டாம் பாரின் மண்திரிகை பண்ணும் அவன்
முதல்துணை நிமித்தம் தேரின் மண் மாயை ஆகத்திரிகை
தன் சக்தியாக சூரியன் குலாலன் ஆய்நின்று ஆக்குவன்
அகிலன் எல்லாம்" என்பது சித்தியார் செய்யுள்.
சைவ சித்தாந்தப்படி பதி, பசு, பாசம் என்ற முப்பொருளும் நித்தியமானவை. பிரபஞ்ச தோற்றத்தின் முன்னரும், ஒடுக் கத்தின் பின்னரும் இவை மீந்திருக்கின்றன வென்ற கருத்தை வெளிப்படையுண்மை யாக ஏற்றுக்கொண்டு காரியத்திலிருந்து காரணத்தை தேடும் பாங்கில் இவற்றின் இருப்பு நிறுவப்படுகிறது. 'உலகம் அவயவப்பகுப்புடன் கூடியிருத்தல் பற்றி அவசியம் காரியரூபமாமிருத்தல் வேண்டும்.

வேண்டவே அக்காரியத்திற்கே கருத்தா வாய் ஈஸ்வரன் ஒருவன் உண்டென்பது சித்தித்தது' என காரியத்திலிருந்து கார ணம் சத்தியயோதி சிவாச்சாரியரால் நிறுவப்படுகிறது.
'அவன் அவள் அதுவெனும் அவை
மூவினைமையின் தோற்றிய திதியே ஒடுங்கி மலத்து
gp —6)T,5 Tub அந்தம் ஆதி என்மனார் புலவர்' என்ற சிவஞானபோத செய்யுள் காரியத் திலிருந்தும் காரணத்தை தேடும் பாங்கில் பதியினதும், பாசத்தினதும் இருப்பை நிறுவுகிறது.
சில ஞானபோதத்தின் மூன்றாவது சூத் திரம் ஆன்மாவின் இருப்பை காரியகாரண தொடர்படிப்படையில் பின் வ ரு மாறு நிறுவுகிறது.
'உளது இலது என்றலின் எனதுடல்
என்றலின்
ஐம்புலன் ஒ டு க் க ம் அறிதலின்
கண்படின்
உண்டிவினை இன்மையின் உணர்த்த
உணர்தலின்
மாயா இயந்திரத் தனுவினுள் ஆன்மா'
பதி, பசு, பாசம் என்ற முப்பொருள் களை அனுமான விதிப்படி காரண காரி யத் தொடர்படிப்படையில் நிறுவியதன் பின்னர்; பதியும், பசுவும் ஞானக்கிரியா ரூபமுடையதனால் அவை மாயையிலிருந்து வேறுபட்டதென்பது எடுத்துக்காட்டப் பட்டு உலகம் காரிய ரூபமானது; மாயை அதற்கு முதற் காரணமானதென்பது நிறு வப்படுகிறது. மாயை நித்தியப் பொரு ளாதலால் 'பரமகாரணமானதென தத்து வப் பிரகாசிகை குறிப் பி டு கிற து மாயையை பரமகாரணமல்லவெனக்கொள் ருதல் வரைவிலக்கணப்படி தவறாகும் : மாயையை அணித்தியமெனக் கொண் டால் அதற்குக் காரணம் வேண்டுமென் றாகி அதுவும் அணித்தியமெனக் கோள் ளப்பட்டு வரம் பின்றியோடுதல் என்ற
43

Page 48
குற்றம் வந்துசேரும். இவ்வாறு மாயை நித் தியமான தென்றும், அதுவே உலகிற்கு முதற் காரணமென்பதும் நிறுவப்பட்டது.
சத்திதத்துவம், சாதாக்கிய தத்துவம், ஈஸ்வரதத்துவம் சுத்தவித்தியா தத்துவம் ஆகிய நான்கும் காரியங்களாகும். இவற் றிற்கு முதற்காரணம் நாத தத்துவமாகும். நாத தத்துவத்தை முதற்காரணமாகக் கொள்ளாதுவிட்டால் வரம்பின்றியோடு தல் என்ற குற்றம் இங்கு ம் நிகழும். ஆகவே நாத தத்துவம் பரமகாரணமாகும். இவ்வாறே அசுத்த தத்துவங்களான காலம்,
நியதி, கலை வித்தை, அராகம், புருடன் என்ற ஆறு வித்யா தத்துவங்களும் காரி யங்களாகும். அசுத்த மாயை இவற்றிற்கு முதற் காரணமாகும். ‘சுத்த தத்துவத் திற்கு முதற் காரணம் சிவ தத்துவம் என் றும், அசுத்த தத்துவங்களிற்கு முதற் காரணம் அசுத்த மாயை என்றும் தத்து வப் பிரகாசிகை குறிப்பிடுகிறது. ஆன்ம தத்துவங்கள் 24 ன்கிற்கும் பிரகிருதி மாயை முதற் கா ர ன ம |ா கவு ம் , பூதங் களிற்கு தன்மாத்திரைகள் முதற்காரண மாகவும் இருக்கிறதென்பது சைவசித் தாந்த நிலைப்பாடு.
உலகிற்கு மாயை முதற்காரணமென நிறுவப்பட்டாலும் எவ்வாறு முதற் காரண மான மாயை உலகாக பரிணமிக்கிறதென்ப தென்ற வினாவிற்கு சைவசித்தாந்தம் சத் காரியமென்ற விளக்கத்தை முன்வைக்கிறது. இருபா இருபஃது என்ற மெய்கண்ட சாஸ்திரம்
'உள்ளது போகாது இல்லது வாராது
உள்ளதே உள்ளது . .' என சத் காரியவாதத்திற்கு விளக்கம் தருகிறது. சத்காரியவாதம் சாங்கிய தரிசனத்தினா லும் அங்கீகரிக்கப்பட்டதொரு கொள்கை யாகும். ஆனால் சாங்கியம் நிமித்த கார னத்தை ஏற்பதில்லை. ஆனால் சைவசித் தாந்தமோ பதியாகிய நிமித்த காரண மும், சத்தியாகிய உபாதான காரணமும் இணைந்து மாயையைப் பரிணமிக்கச் செய்கிறதென்றே முடிபிற்கு வருகிறது. உபாதான காரணம் கர்திரு சக்தி எ ஐ.
44

றும் , கருவிக்காரணமென்றும் அழைக்கப் படும்.
உபாதான காரணம் பற்றிய விளக்கம் இலக்கணத்திலிருந்து பெறப்படுகிறது. பெ ய ரு க் கும் வினைக்குமிடையிலான தொடர்பு வேற்றுமையால் குறிப்பிடப் படும்பொழுது அதனைக் காரகம் என இலக்கண ஆசிரியர்கள் குறிப்பிடுவர். பிர யோக விவேகத்தில் இதற்குரிய விளக்கத் தைக் காணலாம் பெயரும் வினையும் என்ற தொடர்பில் பெயர் வினையாற்று வதற்கான கருவி ஒன்று வேண்டும். வினை பாற்றும் கருவி காரகக் கருவி எனப்பட் டது, ஒரு செயலைச் செய்வதற்கு கருவி யாக இருக்கிறதெதுவோ அது காரகம். இங்கு இலக்கணம் பற்றிய ஆய்விலிருந்து உபாதான காரணத்திற்கு விள க் கம் கொடுக்கப்படுகிறது. சொற்பிரபஞ்சக் காட்டுருவிலிருந்து (Model) பொருட்பிர பஞ்சக் காட்டுரு விளக்கப்படுகிறது. இலக் கனத்திலிருந்து உள்பொருட்களிற் கிடையி லான உபாதான காரணத்தொடர்பு விளக் கப்படுகிறது உள்பொருள் ஆய்வில் உபா தான காரணம் பதியின் சக்தி எனப்படும். இது சங்கற்ப ரூடையானது கிரியாரூபமான தல்ல. பதியினதும் முத்தான்மாவினதும் சக்தி சங்கற்பளூ பையாகவே செயற்படுவ தென்றும், பெத்தான்மநிலையில் பசுக்க ளின் சக்தி கிரியைரூபமாகவே செயற்படுவ தென்றும் , சென்ற கட்டுரையில் கூறப்பட் டது. பதியாகிய நிமித்த காரணமும், சத்தியாகிய உபாதான கா ர ண மும் இணைந்து முதற்காரணமான மாயையைப் பரிணமிக்கச் செய்கிறது. பதியும், பசுவும் பரிணாமமடைவதில்லை, மாயை மட்டுமே பரிணாமமடைகிறதென்பது சைவசித்தாந் தத்தின் நிலைப்பாடு. ‘சிவனும் உயிர் களும் மாறுதல் என்னும் பரிணாமம் அற்ற வர்களென்றும்; மாயா தத்துவமே மாறு தல் என்ற பரிணாமத்தோடு கூடியதென் றும், தத்துவத் திரயநிர்ணயம் குறிப்பிடு கிறது. சைவசித்தாந்தம் மாயைக்கு மட் டும் பரிணாமம் கூறி பதிக்கும் பசுவிற்குவ அது கிடையாதென்ற முடிவிற்கு வரும் தற்கு வர ஏதுவாயிருப்பதெது? சைவசித்

Page 49
தாந்தத்தின்படி பதியும் பசுவும் அறிவே சொரூபமானவை. அறிவு விகாரியாவதற்கு அதிகாரமில்லை. அது உண்மையானது, மாறாதது. எனவே வரைவிலக்கணப்படி பதியும், பசுவும் மாற்றமுறாததாயிருத்தல் வேண்டும். ஆனால் மாயையோ அறிவற் நிறது. சடத்துவமானது, சடம் மாறுத ஆலுக்குட்படுவது. சடமான மாயை உலகாக பரிணமித்தாலும் சக்திருபமாக அக்காரியப் பொருளில் இருக்கிறது. அதுபோல் காரி யப்பொருளான உலகு சக்திகுபமாய் மாயையில் இருக்கிறதென சைவசித்தாந் தம் ஏற்றுக்கொள்கிறது. காரியமான உலகு சக்திருபமாக மாயையில் இருத்தல் பற் றியே சத்காரியவாதம் என்ற பெயர் வந் திது.
சைவசித்தாந்தம் உவமையை தனிச் சிறப்பியல்பானதொரு அளவையாக ஏற் றுக்கொள்ளாத பொழுதும் அதனைப் பரவலாகப் பயன்படுத்துகிறது. செம்பிற் களிம்புபோல, நீரோடுசேர்ந்த உப்புப் போல, அகர உயிர்போல எனப் பல வாறான உவமைகளும்; அந்த கஜ நியா யம் (குருடர் யானை பார்த்ததுபோல) வேட்டுவனாம் புளுப்போல, தூலாருந்ததி நியாயம், மற்கட கிசோர நியாயம் (குரங்கு குட்டியை அணைப்பதுபோல) போன்ற உவமைகளை ஆதாரமாகக் கொண்ட நியா யங்களும் கையாளப்பட்டு சித்தாந்த விளக் கம் தரப்படுகிறது. சித்தாந்த நூல்களி லும், உரைவிளக்கங்களிலும் சித்தாந்த உண்மைகளை விளக்கும் பாங்கிலே உவ மைகள், நியாயங்கள் பரவலாகக் கையா
ளப்படுவது அனைவரும் அறிந்ததே.
உவமைகளும், உவமை கிளை ஆதார மாகக் கொண்ட நியாயங்களும் முறையிய லாய்வில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் பெறுவன. சைவசித்தாந்தம் அரூபப் பொருட்கள் பற்றியும், அரூபத் தொடர் புகள் பற்றியும் விளக்க முயற்சிக்கையில் உவமை கிளைப் பயன்படுத்துகிறது. இலக் தியங்களிற் பயன்படுகிற உவமை, உருவங் களிலிருந்து சித்தாந்தப் பயன்பாடு வேறு பட்டது. அழகியல் நோக்கு நிலையால்

இலக்கியத்தில் உணர்ச்கியம்சமே மேலோங் கிக் காணப்படும். ஆனால் சித்தாந்தம் உவமையின் அறி  ைக யம் ச த் தி ற் கே முதன்மை கொடுக்கிறது. ஏனைய பிற வழிகளால் விளக்க முடியாத விடத் தும், விளக்கமொன்றை அழுத்திக் கூறுவ தற்கும் உவமை சிறப்பானதொரு சாதன மாகப் பயன்படவல்லது. உவமை சமூக பண்பாட்டுத் தொடர் பி லே யே தன் விளக்கவாற்றலைப் பெறுகிறதென்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
உவமை முற்றுவமை என்றும் ஏகதேச உவமை என்றும் இருவகைப்படும். சைவ சித்தாந்தம் முற்றுவமையை ஏற்பதில்லை. இருபொருட்களிடையே முற்றுவமை இருப் பதாக கூறினால் அக் கூற்றில் எ து வி த பயனும் இருக்கமுடியாது. தெரிந்த அல்லது அறியப்பட்ட ஒன்  ைற ஆதாரமாகக் கொண்டு தெரியாத அல்லது அறியப் படாத ஒன்றை விளக்குவதற்கே உவமை தேவைப்படுகிறதெனக் கொண்டால் முற் றுவமை பயனற்றது. எனினும் முற்றுவமை வரைவிலக்கணப் பயன்பாட்டை கொண்ட தென்பதையும் மறப்பதற்கில்லை, ஒரு வகையில் முற்றுவமையை 'கூறியது கூற லாகவும் " விளக்கலாம், சைவசித்தாந்தம் ஏக தேச உவமையையே ஏற்றுக்கொள்கி றது. உவமைகளெல்லாம் வினை, பயன், வடிவு, நிறம் என்னும் நான்கினுள் ஒவ் வொன்று பற்றியே கூறப்படுமென சர்வ ஞானனோத்திர விருத்தி குறிப்பிடுகிறது. வழு நோக்கலால் ஏற்பட்ட சில தவறான உவமைகளும் சித்தாந்த உரையாசிரியர் களால் கையாளப்பட்டுள்ளன. "வேட்டு வப்புழு,' " நெய்யின் ஒரு பாகம் புழு வாய்ப் பரிணமித்தல்' ஆகிய உவமைகள் வழு நோக்கலிற்கு உதாரணங்களாகும்.
இலக்கணமும் மற்றும் பொருள் கொள் முறைபற்றிய உத்திகளும் சைவசித்தாந்த உரையாசிரியர்களால் அடிக்கடி ւմ եւ165r படுத்தப்படுகிற பிற முறையியலடிப்படை களாகும். -
1. ஒரு செய்யுளில் வருகிற வாக்கி யங்கள் அனைத்தும் ஒருசேர இணைத்தல்
45

Page 50
லாது தனித்து விளக்குவது முரண்படும் நிலையை தோற்றுவிக்குமாயின், அ  ைவ யனைத்தையும் இணைத்தே பொருள் கொள்ளுதல் வேண்டும்.
2. ஒரு தனி வாக்கியத்தின் பொருள் தனித்து விளக்கப்படக் கூடுமாயின் அதனை பிறவாக்கியங்களுடன் இ  ைண த் துப் பொருள் கொள்ளலாகாது.
3. கருத்தை உணர்த்துவதில் ஒரு வாக் கியம் பொருத்தமான சொற்களைக் கொண்டிராது விட்டால் தொடர்ந்துவரும் வாக்கியத்திலிருந்து பெறப்பட்ட சொற் களை அங்கு பயன்படுத்துதல் வேண்டும்.
மெய்கண்ட சாஸ்திர நூல்களையும் ஆகம வாக்கியங்களையும் விளக்கியுரைக்கு மிடத்து இம் மூன்று விதிமுறைகளையும் கையாழுதல் வேண்டும். உமாபதி சிவாச் சாரியாரின் பெளஷ்கர ஆமக விருத் தி யிலும், சத்தியயோதி சிவாச்சாரியாரின் கெளரவ ஆகம விருத்தியிலும் மேற்படி முறையியற் தத்துவங்கள் பயன்படுத்தப் பட்ட பல சந்தர்ப்பங்கள் உண்டு. சிவஞான முனிவர் தனது மாபாடியத்தில் பொருள் கொள் முறைக்கேற்ப மேற்படி தத்துவங் களுடன் வேறு சிலவற்றையும் சேர்த்துக் கூறுவார். 'பொருளியையுபற்றி செய்யுள் பிரித்தாராயப்படலாம்' எனக்கூறும் சிவ ஞானசுவாமிகள் அது 'கூறியது கூறலாக இருத்தலாகாதென்று' எச்சரிக்கையும் செய்கிறார். 'பொருள்கள் முரணியவழி வலியவற்றால் மெ லி ய  ைவ கண்டிக்கப் படும்,' "மாறுகோள் இல்லாக் கூற்றில் எல்லாம் பிரமாணமேயாம்', 'சோபான முறையால் உபதேசித்தது மாறுபடின்மை யாம்', பொதுவிதி ஆயிரம் கூறினும் விதந் தோத்தும் சிறப்புவிதி ஒன்றானே விலக்கப் படும்' , வருவித்து உரைத்துகொள்ளுதல் வேண்டும் எ ன் பன போன்ற பொருள் கொள்ளும் விதிமுறைகளை எடுத்துக் காட்டுகின்றார். ஒரு வாக் கி ய த் தி ற் கு பொருள் கொள்ளும் காலத்து 'முன் னோடுபின் மு ர ண |ா து கொள்ளுதல் வேண்டும். முன்னோடு பின் முரண் படுவது போலக் காணப்படின் முன்னே,
46

சொன்னதின் தாற்பாரியம் இது, பின்னே சொன்னதின் த ர ற் பரிய ம் இதுவென ஊகித்து முரணின்மையை அறிய வேண் டும். இவ்விடத்தில்தான் உத்தியின் செயல் உபயோகம், நூலோடு பொருந்தாத உத்த குயுத்தி" என்ற சர்வஞானத்திர விருத்தி யுரை வாக்கியங்களை இங்கு மனங்கொள் ளுதல் வேண்டும் ஒரு கூற்றை இருவிதங் களில் விளக்குவது இரட்டுற மொழிதல் எனப்படும். கூறும் இலக்கியத்திலேயே சொல்ல வே ண் டி ய  ைத உய்த்துணர வைக்கை உடம்பொடு யுணர்த்தல் உத்தி யாம். மூலத்திற் சொல்லாதவற்றை உரை யிற் செர்ல்வது தந்திரவுத்தி. ஒரு சூத்தி ரத்திற் கூறப்பட்ட விதியை பிற சூத்திரங் கட்கும் இணைத்துக்கொள்வது மாட்டே றிதல் எனப்படும். உத் தி க ளி ன் வகை தொகை நன்நூலில் எடுத்துக் கூறப்பட் பட்டுள்ளது. உத்திகளின் பரவலான பயன் பாட்டிற்கு சிவஞானபாடியம் ஒரு சிறந்த உதாரணமாகும்.
புணர்ச்சி, விகாரம் அவாய்நிலை என இலக்கண்முகத்தான் பொருள் கொள்ளும் முறைபற்றி விருத்தியுரைகளில் காணலாம். இலக்கணத்தால் வேறுபாடில்லாத வழி இலக்கியம் பல வா த ல் செல்லாதென்ற விதியே இக்கண ரீதியாக பொருள் கொள் ளும் முறையின் ஆதார சுருதியாகும்.
சிறப்பு - பொது எ ன் ற தத்துவமும் சைவசித்தாந்த அறிவாய்விலே இ ட ம் பெறும் முக்கிய முறையிற் தத்துவமாகும். சைவசித்தாந்த பொருள் நிச்சயத்திற்கு மேற்படி தத்துவத்தின் பயன்பாட்டை" தேவ்யா மத குத்திரம் பின்வருமாறு எடுத் துக் காட்டும். 'வேத புராணங்களிற்கிடை யில் முரண் ஏற்படும் பொழுது புராணம் உபாதேயமல்ல, ஆகமங்களுடன் முரண் ஏற்படும் பொழுது வேத வாக்கியங்கள் உபாதேயமல்ல, புராணங்களைக் காட்டி லும் வேதம் உயர்ந்தது. வேதங்களைக் காட்டிலும் ஆகமம் உயர்தது.' ஆகமங் களிற்கிடையே முரண் ஏற்படும் பொழுது

Page 51
சர்வஞானோத்திரம், தேவிகாலோத்திரம் என்பனவற்றிற்கியையவே பொருள் கொள்ளுதல் வேண்டுமென சிவஞான சுவாமிகள் குறிப்பிடுவர். சிறப்பு நூல்கள் உண்மையெனவும் ஏனையவை பொது நூல்களாகுமெனவும் சைவசித்தாந்தம் கூறுகிறது. இதனால்தான் ஞானாமிர்தம் முதலியன பொது நூலெனவும் சித்தாந்த சாஸ்திரங்கள் உண்மை நூல்கள் எனவும் சிவஞான சுவாமிகள் கூறுவர்.
இதுவரை கூறிய அளவைகளாலும், முறையியலடிப்படைகளாலும் அறிவைப் பெறும் பொழுது, அதனை உத்தேசம், இலக்கணம் பரீட்  ைச என்பவற்றால் சோதித்து அறிந்துகொள்ளுதல் வேண்டு மென்பது சைவசித்தாந்தத்தின் நிலைப் பாடு. அறியப்பட வேண்டிய பொருளொன் றின் பெயரை இனங்க ண் டு அறிந்து கொள்வது உத்தேசம் எனப்படும். உத்தே சத்தால் அறியப்பட்டதை முதலிற் பொது வகையால் அறிந்து. பின்னர் சிறப்புவகை யால் உணர்ந்து கொள்வதற்கு உதவுவது இலக்கணம், பொதுவியல்பு அளவை முகத் தாலும் இலக்கணத்தாலும் கூறப்பட்டு: கேட்டல், சிந்தித்தல் என்னும் இருதிறத் தான் உணரப்படுமென்னும், சிறப்பியல்பு; சாதனமுகத்தாலும், பயன்முகத்தாலும் கூறப்பட்டு கேட்டல் சிந்தித்தல் தெளி தல், நிட்டை என்னும் நான்கு வகையால் உணரப்படும் என்றும் சிவஞான சுவாமிகள் குறிப்பிடுவது மனங்கொள்ளத்தக்கது. அறி

வனைத்தும் பொது, சிறப்பு என்ற இவ் விரண்டு பிரிவிலும் உள்ளடங்கிவிடுமென் பதை சித்தியார் வாக்கு பின்வருமாறு குறிப்பிடுகிறது.
"அன்னிய சாதியும் தன்சாதியும் அகன்று நிற்றல் தன்னியல்பு அன்னியத்தைத் தவிர்த்து தன் சாதிக்கு ஒத்தல் துன்னிய பொது இயற்கை சொன்னன இவ்விரண்டின் உள்ளே மன்னிய பொருட்கள் யாவும் அடங்கி விடும் ம்ானம் உற்றால்’’
இலக்கணத்திற்கு இலக்கியம் பொருந்திடு மோவென ஆராய்தல் பரீட்சை எனப்படும். பொருந்திடில் அது மெய்யான அறிவா கிறது.
இறுதியாக இக்கட்டுரை தொடரில் சைவசித்தாந்த அறிஞர்களான வாசகர் களிற்குத் தெரிந்த பல கருத்துக்கள் விடப் பட்டிருக்கலாம். உங்கள் வினாக்களையும், விமர்சனங்களையும் நான் மிகவும் நன்றி யுடன் வரவேற்பேன். விமர்சனத்திற் அப் பாற்பட்டவரென எவருமில்லை. விமரி சனத்தை வரவேற்பதன்மூலம் அறியாமையி லிருந்து எம்மை விலக்கி கொள்வோம், விமர்சனத்தை வரவேற்பதே அறியா மையை அகற்றுவதற்கு எமக்கிருக்கும் ஒரேவழி. இருளில் இரு ந்து ஒளிக்கும் அறியாமையிலிருந்து அறிவிற்கும் விமர் சனம் மட்டுமே எம்மை இட்டுச் செல்லும்.
(முற்றும்)
T

Page 52
நூல் அறிமுகம்
இந்தியச் சிந்தனை மரபு
நா. சுப்பிரமணியன் கெளசல்யா சுப்பிரமணியன்
("இந்தியச் சிந்தனை மரபு (1993) என் னும் நூலிற்கு டாக்டர் பொற்கோவழங் கிய சிறப்புரை இங்கே தரப்பட்டுள்ளது. டாக்டர் பொற்கோ சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரிய ராவர். இலங்கையைச் சேர்ந்தவர்களான கலாநிதி நா. சுப்பிரமணியன், கெளசல்யா சுப்பிரமணியன் ஆகிய இருவர் இணைந்து எழுதிய இந்நூலை சென்னை சவுத் ஏசியன் புக்ஸ் வெளியிட்டுள்ளது.)
இந்தியச் சிந்தனை மரபு என்ற தலைப்பில் டாக்டர். நா. சுப்பிரமணியன்
அவர்களும் அவருடைய துணைவியார் திருமதி கெளசல்யா அவர்களும் உருவாக்கி யுள்ள இந்த நூல் பெரிதும் வரவேற்கத் தக்க ஒரு நன்முயற்சி. அவர்களே கூறு வது போல், “இந்நூல் இந்தியச் சிந்தனை மரபைத் தொகுத்து நோக்கும் ஒரு முயற் சியே அன்றித் தத்துவ ஆய்வு முயற்சி அன்று'. வரலாற்று நோக்கில் இந்தியச் சிந்தனை வளர்ச்சியை முறையாகப் புரிந்து கொண்டால்தான் இந்தியப் பண்பாடு களையும் இந்திய மக்களின் மனப்பாங்கு களையும் சரியாகப் புரிந்து கொள்ள முடி யும். அந்தவகையில் இத்தகைய நூல்கள் பெரிதும் உதவும் என்பதில் ஐயமில்லை.
வேதநெறிச் சிந்தனைகளும் அதனை மறுத்து அக்காலத்தில் நிலவிய சிந்தனை களும் முதல் இயலில் விளக்கப்படுகின்றன. இரண்டாவது இயலில் பகவத்கீதையும் திருக்குறளும் ஆராயப்படுகின்றன. பக்தி இயக்கத்தின் வளர்ச்சியும் அதனை ஒட்டிய விளைவுகளும் மூன்றாவது இயலில் விளக் கப்படுகின்றன. பதின்மூன்றாம் நூற்றாண் டுக்குப் பிறகு வளர்ந்த சிந்தனைமரபுகள் நான்காவது இயலில் விளக்கப்படுகின்றன: நிறைவுரை நோக்கில் இறுதியில் இன்றைய செல்நெறிகள் சுட்டிக் காட்டப்படுகின்றன.
AS

இத்தகைய ஒரு நூலை உருவாக்க வரலாற்று உணர்ச்சியும் இலக்கியப் புலமை யும் அறிவியல் நோக்கும் பெரிதும் தேவை யென்பது சொல்லாமலே விளங்கும். இந்த நூலின் ஆசிரியர்கள் மிகுந்த உழைப்பின் பய னாக இந்த நூலை உருவாக்கியுள்ளார்கள். இந்தியச் சிந்தனையோட்டங்களைத் தொகுத்து ஒருசேரக் காணும் வாய்ப்பு இந்த நூலில் உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்ச்சியோடு குறிப்பிட வேண்டும்.
இந்த நூலாசியர்கள் நிறைவுப் பகுதி யில், 'எல்லாச் சிந்தனைகளிலும் நலன் பயப்பவற்றை ஒன்றுதிரட்டி ம னி த ன் செயற்பட வேண்டியுள்ளது'. என்று குறிப்பிடுவதை நினைவில் கொண்டு இந்திய மக்கள் எல்லோருக்கும் தேவையானதும் ஏற்புடையதும் பயனளிப்பதுமான சிந் தனையோட்டத்தை உருவாக்க இத்தகைய நூல்கள் உதவவேண்டும்.
இந்திய வரலாற்றில் வேதநெறியாளர் களுக்கும் வேத மறுப்பு நெறியாளர்களுக்கு மான போராட்டம் தொடர்ந்து நடந்து வந்திருக்கிறது. வேதநெறி யாள ர் க ள் குறிப்பிடும் தர்மங்கள் எல்லாம் வருணா சிரம தர்மத்தை மையமிட்டனவாகவே இருக்கின்றன. வேத மறுப்பு நெறியாளர்கள் குறிப்பிடும் அறமும், ஒழுக்கமும் பொது நிலையில் மனித நல்வாழ்வை மைய மிட்டனவாக இருந்திருக்கின்றன.
இந்தியாவில் வேதநெறியின் செல் வாக்கு தொடர்ந்து வளர்ந்து வந்திருப்பது உண்மைதான் என்றாலும் வேதமறுப்பு நெறி எந்தக் காலத்திலும் செயலிழந்து போய்விடவில்லை.
உழவுத் தொழிலை மனுதர்மம் ஒரு இழிவான தொழிலாகக் கருதுகிறது. ஆனால் வேதமறுப்புநெறி உழவு த் தொழிலை உயர்ந்த தொழிலாகப் போற்று கின்றது.

Page 53
வேதநெறி வேள்விக்குத் தலைமை யிடம் கொடுத்துப் போற்றுகிறது. ஆனால் வேத மறுப்புநெறி வேள்வியை எதிர்ப்ப தோடு கொல்லாமையையும் இன்னா செய்யாமையையும் போற்றுகிறது.
இருநெறிகளுக்கும் உள்ள முரண்பட்ட நிலைப்பாடுகளுக்கு இப்படிப் பல சான் றுகள் புலப்படுகின்றன. வேதங்களுக்கு முந்தைய சிந்தனையோட்ட நிலையையும் வளர்ச்சி வரலாற்றையும் உணர்த்தக்கூடிய கூறுகளை இன்று நாம் சமுதாயம் தழுவிய பெளத்த சமண வரலாற்றிலும், பக்தி இயக்க வரலாற்றிலும், சித்தர் மரபுச் சிந் தனைகளிலும், மக்கள் வழக்கிலுள்ள பழ மொழிகளிலும், மரபு வழிக் கதைகளிலும் ஆங்காங்கே நுட்பமாகக் காணமுடிகிறது. இவற்றின் துணை கொண்டு வேதங்களுக்கு முந்தைய சிந்தனை மரபு வரலாற்றையும் இன்றுவரை அந்த மரபு வளர்ந்து வரும் பாங்கினையும் விரிவாக ஆராய வேண்டி :பது நம்முடைய தலையாய கடமைகளுள்
ஒன்று.
இந்தியச் சிந்தனை மரபு பற்றித் தொடர்ந்து நிகழ வேண்டிய ஆய்வுக்கு டாக்டர் நா. சுப்பிரமணியன் அவர்களும் அவரது துணைவியாரும் உருவாக்கியுள்ள இந்த நூல் மிக நல்ல அளவுக்கு உதவும் என்று உறுதியாக நம்புகிறேன். இத்த கைய நூல்களை மேலும் தொடர்ந்து உரு வாக்கி வழங்கும் வகையில் தமிழ் வழங்கு நல்லுலகம் இவர்களுக்கு ஊக்கமும் ஆக்க மும் அளிக்கும் என்று நம்புகிறேன்.
s டாக்டர் பொற்கோ பேராசிரியர், தலைவர், தமிழிலக்கியத்துறை, சென்னைப், பல்கலைக்கழகம் நூலின் பெயர்: இந்தியச் சிந்தனை மரபு ஆசிரியர்: கலாநிதி நா. சுப்பிரமணியன்
கெளசல்யா சுப்பிரமணியன் வெளியீடு; சவுத் ஏசியன் புக்ஸ்
6/1 , தாயார் சாகிப் 2-வது சந்து சென்னை 600 002
விலை: இந்திய ரூபாய் 45/-

வ. வே. சு. ஐயர் அரசியல் - -
இலக்கியப் பணிகள்
ஆசிரியர்; பெ. சு. மணி
வெளியீடு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சென்னை 1993 பக். XIV, 264
வ. வே. சு. ஐயர் என்று சுருக்கமாகச் சுட்டப்படும் வரகனேரி வேங்கடேச சுப்ரமண்ய ஐவரவர்கள்(1881-1925)இந்த நூற்றாண்டின் முதற்கால பகுதியில் இந்திய மண்ணின் அரசியல், சமூக-பண்பாட்டுத் துறைகளில் வீறார்ந்த நிலையிற் செயற் பட்டு நின்றவர். விடுதலைப் போராட்ட அரசியலில் தீவிரவாதியாகச் செயற்படத் தொடங்கி, பின்னாளில் காந்தியத்தில் அடிபதித்த அவர் இந்திய மண்ணின் பண் பாட்டு விழுமியங்கள் காலத்துக்கேற்ற வகையில் "மறுமலர்ச்சி" எய்தவேண்டும் என விரும்பியவர்; அவ்வகையில் தமிழின் நவீனத்துவத்துக்குப் பாதை சமைப்பதில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பணி களை ஆற்றியவர்: குறிப்பாக தமிழின் சிறுகதை, திறனாய்வியல் ஆகிய துறை களின் வளர்ச்சிக்கு முக்கிய - முதற்கட்டப்பணிகள் புரிந்த ஒருவராகக் கணிக்கப் பெறுபவர். இவ்வாறு பொதுநிலையில் அறியப்பட்டுள்ள இவரின் ஆளுமை தொடர்பான முழுநிலையிலான - சிறப்பு நிலையிலான - விளக்கமாகவும் மதிப்பீடாக வும் அமையும் நூலாக்கம் இது.
இந்நூலின் ஆசிரியரான திரு. பெ. சு. மணி அவர்கள் தமிழியல் ஆய்வுத்துறை களிலே-குறிப்பாக, சமூக - பண்பாட்டாய் விலே அயரா ஊக்கத்துடன் செயற்படுபவர். இவ்வகையில் பெருந்தொகையான நூல் களும் கட்டுரைகளும் எழுதியதன் மூலம் சமகாலத் தமிழியல் ஆய்வாளருள் முதல் வரிசைத் தகுதியை எய்தியுள்ளவர்; ஆய் வுத் திறத்தால் பேராசிரியர் க. கைலாசபதி முதலிய பே ர றி ஞர் க ள து மதிப்பை யும் பாராட்டையும் பெற்ற சால்பினர். இவரால் சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் "கப்பலோட்டிய தமிழர்
49

Page 54
வ. உ. சிதம்பரனார் அறக்கட்டளை சார் பில் நிகழ்த்தப்பட்ட சொற்பொழிவின் (8, 9 - 3 - 1993) விரிநிலை இந்நூல்.
வ. வே. சு. ஐயர் என்ற வரலாற்றுப் பாத்திரத்தின் ஆளுமையின் அடிநாதமான கூறு இந்திய மண்ணினதும் அதன் ஒரு கூறான தமிழ் நாட்டினதும் ‘சமூக-பண் பாட்டு மறுமலர்ச்சியுணர்வு ஆகும். அந் நியரான ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை விரட்டியடிக்கும் நோக்கில் அது விடுதலை அரசியலாகவும், சுயபண்பாட்டுப் பாரம் பரியங்களிற் படிந்திருந்த மாசுகளைத் துடைத்து அவற்றுக்கு நவீன யுகத்துக்கு ஏற்ற வகையில் வளர்த்துப் பேணிக் கொள்ளும் நிலையில் அது சமூக-பண் பாட்டு நடவடிக்கைகளாகவும் கோலம் கொண்டது. மேற்படி இருநிலைச் செயற் பாடுகளையும் இந்நூல் விரிவாக எடுத் துரைக்கின்றது.
இந்நூலின் எட்டு இயல்களில் முதல் நான்கில் ஐயரவர்களின் வாழ் க் கை க் குறிப்பு, அவரது சமகால அரசியல்-விடு தலைப் போராட்ட சூழல், அதில் அவர் வகித்த பாத்திரம், அவரது சமூக-பண் பாட்டுச் செயற்பாடான 'தமிழ்க்குருகுல முயற்சி என்பன தொடர்பான செய்திகள் தரப்பட்டுள்ளன. இவை தொடர்பான சமகால விமர்சனங்களும் ஆங்காங்கே எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. இறுதி நான்கு இயல்கள் அவரது மொழி - இலக் கியச் செயற்பாடுகளின் விவரணங்களாக வும் மதிப்பீடுகளாகவும் அமைந்துள்ளன.
1881இல் பிறந்த ஐயரவர்கள் கலை, சட்டம் ஆகியவற்றில் பட்டங்கள் பெற்று சட்டத்துறையில் பணியாற்றிய பின்னர் உயர்கல்வி பெற இங்கிலாந்து சென்ற வேளை - 1907 ஆம் ஆண்டில் அங்கு வீர சாவர்க்கர் தொடர்பால் அரசியல் வாழ் வில் அடியெடுத்து வைக்கிறார். அதுமுதல் அவர் தமது 44 வது வயதில் (1925 இல்) பாபநாசம் அருவியில் விபத்துமரணம் எய் தும்வரை அவரது அரசியல் வாழ்க்கை தொடர்கிறது. இவ்வாறான அரசியல்
50

வாழ்க்கையின் ஒருசார் செயற்பாடுக ளாகவே அவரது மொழி இலக்கியச் செயற் பாடுகளும் தமிழ்க் குருகுல முயற்சியும் அமைந்தன. ஐயரவர்களின் வாழ்க்கை பற்றிய பொதுக் குறிப்பு இது. அவரின் அரசியல் பிரவேசத்துக்குப் பகைப்புலமாக விளங்கிய விடுதலைப் போராட்ட சூழல் தொடர்பான தரவுகள் என்ற வகையில் அக்காலப்பகுதியில் இங்கிலாந்து, பிரான்க, ஜெர்மனி, அமெரிக்கா ஆகிய நாடுகளில் இயங்கிய இந்திய விடுதலைப் புரட்சிக் குழுக்கள் பற்றிய தகவல்கள் இந்நூலின் இரண்டாம் இயலில் தொகுத்துத் தரப் பட்டுள்ளன.
இங்கிலாந்தில் இந்திய விடுதலைப் புரட்சித் தளமாகத் திகழ்ந்த 'இந்தியா ஹவுஸில் வீரசாவர்க்கரின் கூட்டுறவில் விடுதலை அரசியலில் கால்பதித்த ஐயர வர்கள் தொடக்கத்தில் ஆயுதமேந்திய தனி நபர் தியாகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண் டிருந்தமை, மதன்லால் திங்ரா, வாஞ்சி நாதன் ஆகியோரின் அவ்வகை முயற்சி களுக்குத் துணையாகவும் துரண்டுகோலாக வும், பிந்ாைாளில் காந்தியநெறியில் தம்மை இணைத்துக் கொண்டமை முதலிய பல செய்திகன் அரசியல் பணிகள் என்ற தலைப்பில் விரிவாகத் தரப்பட்டுள்ளன.
ஐயரவர்களால் சேர மா தே வி யி ல் தோற்றுவிக்கப்பட்ட தமிழ்க் குருகுல மானது தமிழ்மொழி மூலம் அனைத்துக் கலைஞானங்களையும் கற்பிக்கும் உயர்ந்த குறிக்கோளுடன் தொடங்கப்பட்டதாகும். “தனது இணையற்ற பேராற்றல் குலைந்து போயிருக்கிற தமிழுக்கு அதன் இயற்கை யான முதன்மை ஸ்தானத்தைத் தந்து, புராதன கலைகளைப் போலவே, இக் காலத்துக் கலைகளுக்கும் அதைப் பெரிய தோர் நிலையமாக ஆக்க வேண்டும். .”* (ப-87) என்ற ஆர்வத்தின் வெளிப்பாடு அது. ஆனால் அக்குருகுல முயற்சி அற்ப ஆயுளில் மறைந்துவிட்டமை ஒரு சோக வரலாறு ஆகும். இதற்குக் காரணமாக அமைந்த நிகழ்ச்சி அக்குருகுலத்தில் பிரா மண மாணவர்கள் இருவருக்கு உணவருந்

Page 55
துவதில் தனிப்பந்தி அமைத்தமை என்ற சாதிஆசாரத்தளத்திலான செயற்பாடா கும். இது ஐயரவர்களின் சமூக நோக்கின் மீது ஐயத்தை விளைவித்தது. அன்றைய தமிழகத்தின் பிராமணர்-பிராமணரல்லா தார்’ என்ற பாகுபாட்டுணர்வடிப்படை யிலான அரசியல் தளத்தில் விஸ்வரூப மெடுத்தது; ஐயரவர்களின் ஒட்டுமொத்த ஆளுமை மீது கரிபூசும் வகையில் கண்ட னங்கள் வெளிப்பட்டன. "தமிழ்க் குருகுலத் தைத் தாக்கிய அரசியல் புயல் என்ற
தலைப்பிலான நா ன் கா ம் இயலில் இவற்றை விரிவாக எடுத்துக்காட்டும் பெ. சு. மணி அவர்கள், ஐயரவர்கள்
தன்னளவில் சாதிவேற்றுமை பாராட்டாத சமநோக்கினர் என்பதைத் தெளிவுபடுத்து கிறார்; குருகுலம் அமைந்த சூழலின் நிர்ப் பந்தத்தாலும் துணைவரான தி. ரா. மகா தேவஐயர் என்பாரின் தூண்டுதலாலுமே அவர் இவ்வாறு செயற்பட நேர்ந்தது என் பதை எடுத்துக்காட்டுகிறார்: அரசியலில் தீவிர நெஞ்சுரத்துடன் செயற்பட்டுநின்ற ஐயரவர்கள் சமூகச்சீர்திருத்த நோக்கில் மிதவாதியாகச் செயற்பட்டுவிட்டார் என் றும் ‘குஞ்சரநடையழகர்’ எனப் பாராட் டப்பட்ட வ. வே. சு. ஐயர் என்ற யானை அடிசறுக்கிய இடம் இது என்றும் மதிப் பிடுகிறார். இதனைப் பூதாகாரமாகப் பெருப்பிப்பதன்மூலம் வரலாற்றில் ஐய ரவர்களுக்கு உரிய இடத்தைக் குறைத்து மதிப்பிடுவதோ அன்றேல் இருட்டடிப்புச் செய்வதோ ஆய்வுநெறியாகாது எனத் தமது தீர்ப்பை வழங்குகிறார்.
மொழி - இலக்கியம் என்பன தொடர் பாக ஐயரவர்கள் மேற்கொண்ட செயற் பாடுகள் தமிழின் பண்பாட்டுவிழுமியங்க ளிலும் அவற்றை உள்ளடக்கிய அனைத் திந்திய பண்பாட்டு விழுமியங்களிலும் அவற்றின் வரலாற்றுப் பெருமைகளாகக் கருதப்படும் செய்திகளிலும் மிகுந்த ஈடு பாடு கொண்டிருந்த ஒரு கலையுள்ளத்தின் உணர்வெழுச்சிகளாகும் என்பதை நூலாசிரி யரவர்கள், "தமிழ்மொழி - இலக்கியச் சிந்தனைகள்’ என்ற ஐந்தாம் இயலில் உணர்த்தியுள்ளார். தமிழில் சங்கப் பாடல்

முதல் சமகாலப் பாரதி பாடல் வரை கற்றுச் சுவைத்து நின்ற ஐயரவர்கள் வட மொழி, ஆங்கிலம், இலத்தீன் முதலிய வற்றின் இலக்கியப் பரப்பையும் தரிசித் தவர். இவற்றால் தெளிவு பெற்றிருந்த அவரது உள்ளம் தமிழே தமிழரின் ‘கல்வி மொழியாகத் திகழ வேண்டும் என விரும் பியது. ஆங்கிலம் முதலிய பிறமொழி களைக் கற்றோர் தமிழுக்கு அவற்றின் வளத்தைச் சேர்க்க வேண்டும் என்றும், தமிழ் மரபு சார்ந்த அறிஞர்கள் தமிழை * மரபுசார் வரம்புகளுக்குள் முடக்கிவிடா மல் நவீன உலகுக்கு ஈடுகொடுக்கத்தக்க வகையில் அதை நெகிழ்த்த இடமளிக்க வேண்டுமென்றும் அவர் விழைந்தார். இவ் வாறான விபரங்கள் இவ்வியலிலே சான்று களுடன் முன்வைக்கப்பட்டுள்ளன. முக்கிய மாகப் பிரயோக இலக்கணம், சந்தி இலக் கணம் என்பன தொடர்பாக அவர் சிந்தித் துள்ளமை, எழுதியுள்ளமை என்பன இப் பகுதியில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. இவ்வாறான சிந்தனை, செயற்பாடுகள் என்பனவற்றின் மூலம் தமிழுக்கு "மறு மலர்ச்சி யை நாடிநின்றவர் அவர் என்ப தனை ஆசிரியர் பொருத்தமுற நிறுவு கிறார். 'மறுமலர்ச்சி' என்ற சொல்லே ஐயரவர்களால்தான் தமிழில் முதலில் வழக்கிற்கு வந்திருக்க வேண்டும் - அதாவது அச்சொல்லாக்கம் ஐயரவர்களாலேயே பட்ைக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற ஊகத்தைப் பேராசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளையின் மேற்கோள் துணை கொண்டு முன்வைத்துள்ளார். (ப. 118)
ஐயரவர்களின் இவ்வாறான - தமிழை நவீனப்படுத்தி அதன் பெருமையை உல கறியச் செய்ய வேண்டும் என்ற வகையி லான - நோக்கு நிலையின் பன்முக செயற் பாடுகளாகவே அவரது மொழிபெயர்ப்பு முயற்சிகள், புத் திலக்கிய - சிறுகதை - முயற்சிகள், திறனாய்வுப்பணி, இதழி யல்பணி முதலியன அமைந்தன. இவை பற்றி இறுதிமூன்று இயல்களில் ஆசிரியர் விரிவாக விளக்கியுள்ளார். திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த g? In 1J" வர்கள் பிறமொழியாக்கங்கள் பலவற்றைத்
51

Page 56
தமிழுக்கு இட்டுவந்தவர். இவர் மொழி பெயர்ப்புத் தொடர்பாகக் கொண்டிருந்த கொள்கைகள் விரிவானதொரு தனி ஆய்வை வேண்டி நிற்பன என்பதை ஆறாம் இயலில் ஆசிரியர் உணர்த்தியுள்ளார்.
தமிழ்ச்சிறுகதை வரலாற்றில் வ. வே. சு. ஐயரையே முன்னோடியாக - தந்தை யாக - கருதுவது பொது மரபு. மாறாக திருமணம் செல்வக்கேசவராய முதலியார், மகாகவி பாரதியார் ஆகியோருடைய கதை களை எடுத்துக்காட்டி அவர்களே முன் னோடிகள் எனக் கூறுவோரும் உளர். இந்நூலிலே ஏழாம் இயலில் ஐயரவர்களின் குளத்தங்கரை அரசமரம்‘ என்ற கதையே சிறுகதைக்குரிய "ரீதியில் அமைந்த முதல் தமிழ்ச்சிறுகதை என்பதை ஆசிரி யர் தெளிவுபடுத்தியுள்ளார். மேலும், இக் கதை ரவீந்திரநாத்தாகூரின் படித்துறை யின் கதை" யின் உருவ - உள்ளடக்கச் செல் வாக்கிற்குட்பட்ட ஒன்று என்பதையும் சுட்டியுள்ளார்.
Study of Kampan GT687go 560)ovú9áj ஐயரவர்கள் எழுதிய நூல் அவரது திற னாய்வுச் செயற்பாட்டின் தலையாய சான்றாகும். கம்பனை அனைத்துலகக் கவிவல்லாரோடு பொருத்தி நோக்கி ஐய ரவர்கள் முன்வைத்த திறனாய்வுக் குறிப் புக்களை எட்டாம் இயல் விரிவாக விளக்கி நிற்கிறது. முடிவுரை என்ற பகுதியிலே ஐயரவர்களின் இதழியல்பணி-தேசபக்தன், பாலபாரதி ஆகிய இதழ்களின் ஆசிரியராக ஆற்றியபணி - பற்றிய விபரங்கள் எடுத் துரைக்கப்படுகின்றன. ஐயரவர்கள் பற்றிய பொது மதிப்பீடும் இடம்பெறுகின்றது.
நூல் முழுவதையும் வாசித்து முடிக் கும்போது பாரதியாரும் வ. வே. சு. ஐய ரும் வாழ்ந்த காலகட்டத்துக்கு நாம் ஒரு முறை போய் வந்த உணர்வு ஏற்படுகின் றது. ஐயரவர்களின் ஆளுமை தொடர் பாக இதுவரை வெளிப்படாத சில கூறுகள் திரைவிலகுவதை அவதானிக்க முடி கிறது. தமிழை நவீனப்படுத்துவதில் பாரதியாரோடு ஏறத்தாழச் சமநிலையில் நின்று சிந்தித்துச் செயற்பட்ட ஒரு வர
52

லாற்றுப் பாத்திரம் உரிய கவனத்தைப் பெறத் தவறி விட்டதே என்ற ஆதங்கம் ஏற்படுகின்றன. ஒருவர் எவ்வளவுதான் சிறப்பான சாதனைகள் புரிந்திருந்தாலும் பொதுவாழ்வில் அவர் புரிந்திருக்கக்கூடிய சில தவறுகள் அவரது வரலாற்று முக்கி பத்துவத்தைப் பாதித்துவிடவல்லன என்ற உண்மை புலனாகின்றது. த மி பூழி ன் மேன்மை, தமிழர் சால்பின் திறன் என்பன பற்றியெல்லாம் இன்று பேசியும் எழுதியும் வரும் பலருக்கு - அவர்கள் அறியாத நிலை பில்கூட வ. வே. சு. ஐயரவர்கள் முன்னோடி L | Tejs ġ5 திகழ்ந்துள்ளார் என்பதனை ஆசிரியர் இந்நூல்மூலம் அழுத்தம் பெறும் வண்ணம் உணர்த்தியுள்ளார். இவ்வகையில் நூலின் முடிவில் பி. பூரீ ஆசார்யா என் பாரின் மேற்கோளாக முன்வைக்கப்பட் டுள்ள மதிப்பீட்டுக் குறிப்பு சுட்டிக்காட் டத்தக்கது.
'பாரதியார் தம் உள்ளொளியால்,
தேசிய ஆவேசத்தால் வளர்த்த தமிழை ஆசிரியர்
வ. வே. சு. ஐயர் தம்பெரும் புலமைத்திறத்தால், தம் அறிவுப்
பரப்பால் வளர்த்தார்."
(u. 258)
வ. வே. சு. ஐயர் பற்றி ஏற்கெனவே டாக்டர் டி. எஸ். ராஜன், கவியோகி. சுத்தாநந்தபாரதி, திரு. ரா. சு. பத்மநாபன் முதலியோர் நூல்கள் எழுதியுள்ளனர். பெ. சு. மணி அவர்களின் இந்நூல் மேற் சுட்டியவர்களின் ஆக்கங்களில் இடம் பெறாத விரிவான தகவல்கள் பலவற்றை உள்ளடக்கியது என்ற வகையிலும் ஒரு வரலாற்றுப் பாத்திரத்தை விமர்சன நிலை யில் தரிசிக்க வைத்துள்ளது என்ற வகை யிலும் தனித்தன்மை வாய்ந்ததாக - வேறு பட்ட பரிமாணம் கொண்டதாக - த் திகழ் கின்றது.
மதிப்புரையாளர்;
கலாநிதி. நா. சுப்பிரமணியன்

Page 57
குறிப்புகள்
தமிழில் மானிடவியலும்
பிரான்சு தேசத்தவரும், புகழ்பெற்ற சமூக மானிடவியலாளருமான லூயிதுர மோன்ட் 1979ம் ஆண்டில் ஒர் நேர்முகத் தின்போது பின்வருமாறு கூறியிருக்கிறார். * தமிழகத்தின் பல்கலைக்கழகங்களில் முழு மையான ஆழமான ஆய்வுக்கு இடம் 5(54h DT Gof L-62u.j Gij (Anthropology)35/65) sp, இல்லையே என்ற மனக்குறை எனக்கு உண்டு. 1968ம் ஆண்டில் (அல்லது 1967) தமிழ் ஆராய்ச்சி மாநாடு சென்னையில் நிகழ்ந்தபோது நான் ஒரு வாழ்த்துச் செய் தியை அனுப்பினேன். அச்செய்தி அச் சிட்டு விநியோகிக்கப்பட்டது. அதில் மானிடவியல்துறையொன்றை அமைப்ப தன் தேவையைப் பற்றிக் குறிப்பிட்டேன். என் நண்பரும் மதிப்பிற்குரிய மானிட வியலாளருமான ஏ. ஐயப்பன் அவர்களை துறையின் தலைவராக நியமித்தால் அதனை ஆரம்பித்து நானும் இரண்டோ மூன்றோ ஆண்டுகள் பணியாற்றவும் விருப் பம் தெரிவித்தேன். மானிடவியல் ஆய் வுக்குரிய விடயங்கள் பல தமிழகத்தில் உள்ளன. அவ்வாய்வை மேற்கொள்ளும் அறிவாற்றல் வாய்ந்தவர்களும் தமிழகத் தில் உள்ளனர். ஒரு துரண்டுதல் விசைதான் அவசியம் என்று வற்புறுத்தினேன். என் னோடு சேர்ந்து தமிழகம் வந்து பணியாற் றத் தயார் என்றார் ஸ்டான்லி தம்பையா. இதை அவர் எனக்குத் தனிப் படக் கூறினார். ஏதோ விசேட காரணங் களால் எனது இந்த யோசனை ஆராயப் படாது கைவிடப்பட்டது எனப் பின்னர் அறிந்தேன். இந்த விடயம் பற்றி எது வும் நடக்கவில்லை (பார்க்க Way of Life -Essays in Honour of Louis Dumont. Ed. T. N. Madan).
இலங்கையரான ஸ்டான்லி தம்பையா உலகப்புகழ்பெற்ற மானிடவியலாளர் தூ மொன்ட், தம்பையா, ஐயப்பன் ஆகி யோரின் சேவைகளைப் பெறும் வாய்ப்பை தமிழ் உலகம் இழந்தது துரதிஷ்டமே.

நாட்டார் வழக்காற்றியலும்
இலங்கையில் மானிடவியல் கல்விக் கான துறை பல்கலைக் கழகங்களில் இல்லை. சமூகவியல் கற்பிக்கப்படுகின்ற தாயினும் தமிழ் மாணவர்களுக்கு இது கற்பிக்கப்படுவதற்கான வசதிகள் பெருக வில்லை. மானிடவியலோ அதனோடு இணைந்த துறைகளோ வளர்ச்சியடையும் வாய்ப்பும் எதிர்காலத்தில் இல்லை. தமிழ்ப் பண்பாடு பற்றிய ஆய்வு வளர்ச்சிக்கு இது முக்கிய தடையாக உள்ளதென்பதும் வெளிப்படை.
தமிழகத்தைப் பொறுத் த வ  ைர துரமொன்ட் கூறிய ஆலோசனை கருத்தில் கொள்ளப்படாதபோதும் ஏறக்குறைய 30 ஆண்டுகாலமாக நாட்டார் வழக்காற்றி யல் குறிப்பிடக்கூடிய வளர்ச்சியை அடைந் துள்ளது, "தமிழில் நாட்டுப்புற இயல் ஆய்வின் வளர்ச்சியும் வரலாறும்’ என்னும் கட்டுரையில் பேராசிரியர் சு. சக்திவேல் தமிழில் நாட்டார் வழக்காற்றியல் வளர்ச் சியை மூன்று, பிரிவுகளாக வகுத்துக் கூறியுள்ளார் அவையாவன:-
1. சேகரிப்புக்காலம் (1871 - 1959) 2. ஆய்வின்தொடக்கம் (1960-1969) 3. ஆய்வின் வளர்ச்சிக்காலம் (1970 - )
சக்திவேல் குறிப்பிடும் ஆய்வின் தொடக்க காலமான பத்தாண்டுகளும் அதற்குப் பிந்திய 20 ஆண்டுகளிலும் மானிடவியல் அணுகுமுறைகள் நாட்டார் வழக்காற்றியல் ஊடாக தமிழில் புகுந் துள்ளன. இந்நிலை மேற்கு நாடுகளில் நா ட் டார் வழக்காற்றியல் வளர்ச்சி யடைந்த முறையினின்றும் சிறிது மாறு பட்டது. அங்கு மானிடவியல் ஆய்வுகள் நாட்டார் வழக்காற்றியல் வளரத்துணை செய்தன. தமிழில் நாட்டார் வழக்காற் றியல் மீதான ஈடுபாடு மானிடவியல் கல்வி மீது அக்கறையை உண்டாக்கியுள்ளது. உதாரணமாக பாளையங்கோட்டை தூய
S3

Page 58
சவேரியார் கல்லூரியில் நாட்டார் வழக் காற்றியல் எம் ஏ. பாடவகுப்பில் பண் u ITL "G) DIT Goffi Gí?uuổi) (Cultural Anthropology) ஒரு பாடமாகக் கற்பிக்கப்படுகிறது. மானிடவியல் கல்விக்கான தேவை தமி ழகத்தின் பல்கலைக்கழகங்களில் உருவாக் கப்பட்டிருப்பதன் நல்விளைவே 9}. பக்தவத்சல பாரதியின் * பண்பாட்டு மானிடவியல்" என்னும் நூல், ‘இந்த நூல் தமிழகத்திற்கு கிடைத்த ஒரு நன்கொடை. ஆய்வாளர்கள் படித்துப் பயன்படவேண் டிய ஒரு களஞ்சியம்’’ (தே. லூர்து) என்று பாராட்டப்பட்டுள்ளது. (இந்நூல் பற்றிய குறிப்புகளும் விளம்பரமும் "பண்பாடு” இதழின் முன்னைய இதழ்களில் வெளிவந்
ததை வாசகர்களுக்கு நினைவுபடுத்த
விரும்புகிறோம்).
சக்திவேல் தமது கட்டுரையில் 1970ன் பின் ஏற்பட்ட மாற்றங்களைப் பின்வரு மாறு குறிப்பிடுகிறார்.
**நாட்டுப்புறப் பாடல்களே நாட்டுப் புறவியல் ஆய்வு என்ற நிலை மாறி கலை, நம்பிக்கை பழக்கவழக்கங்கள், சடங்குகள். நாட்டுப்புறத்தெய்வம், என்பன பற்றி (ஆய்வாளர்) ஆராயத் தலைப்பட்டனர். பல்துறை இணைப்பு ஆய்வாகவும் கோட் பாட்டு ஆய்வாகவும் (இது) மலரத்தொடங் கியது. சக்திவேல் தம் கட்டுரையில் குறிப்பிடும் மாற்றங்களுள் மூன்றினை நாம் அழுத்திச் சொல்லுதல் அவசியம்.
1, நாட்டுப்பாடல் தான் நாட்டார் வழக்காற்றியல் என்றநிலை மாறி யது. அதாவது நாட்டார் வழக் காறுகள் பற்றிக் கவனம் திரும் பியது,
2. பல்துற்ை இணைப்பு (Inter -
discipinary) ஆய்வாக மாறியது.
3. கோட்பாட்டு ஆய்வாக மலர்ந்தது.
1993 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்
கொழும்பில் நிகழ்ந்த கருத்தரங்கு திட்ட மிடப்பட்டபொழுது தமிழில் நாட்டார்
வழக்காற்றியல் பற்றிய இந்த வளர்ச்சிகள்
யாவும் கருத்தில் கொள்ளப்பட்டன. திட்ட
54

அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டது. பல் துறை இணைப்பு நோக்கிலும் கோட் பாட்டு முறையிலும் அமைந்த தலைப் புக்கள் ஆய்வாளர்களுக்கு வழங்கப்பட்டன. இன்று வரையான ஆய்வுகளினை தொகுத் துக் கூறும் கையேடாக "நாட்டார் வழக் ாற்றியல் ஆய்வுத்தொகுதி" ஒன்றும் தொகுக்கப்பட்டது. பொருத்தமான ஆய் வாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தமி - ழகத்தின் வளர்ச்சிகளை நாம் தெரிந்து கொள்வதற்கும் தமிழகத் தொடர்புகளால் பயன்பெறவும் வழி செ ய் யப்பட்டது. பேராசிரியர்கள் லூர்து, பாண்டுரங்கன் ஆகியோர் தலைமையிலான ஆய்வாளர் தழுவின் வருகை கருத்தரங்கின் தரத்தை உயர்த்தி அதற் கு பெ ரு  ைம  ைய வழங்கியது.
நாட்டார் வழக்காறுகள் (Folklore) ான்றும் கருத்தாக்கத்தை உ ண ர் ந் து கொண்ட போதுதான் தமிழில் நாட்டார் வழக்காற்றியல் பற்றிய முறைப்படியான ஆய்வுகள் வெளிவரத்தொடங்கின. இக்கட் டத்தையே (1970க்குப் பிந்திய) ஆய்வுக ரின் வளர்ச்சிக்காலம் என்கிறார் சக்திவேல். எந்தவொரு அறிவு த் து  ைறயும் அத னுடைய ஆய்வுக்குரிய பாடப்பொருளை Subject Matter) or 60ptu piggigi Garfoil வது மிகவும் இன்றியமையாததாகும்." இன்றைய மானிடவியலின் மையக்கருத் தாக்கம் பண்பாடு (Culture) என்பதாகும். இதைப் போன்றே நாட்டார் வழக்காற்றி பலின் மையக்கருத்தாக்கம் நாட்டார் வழக்காறுகள், இந்த இரு இயல்களும் ஒன்றையொன்று தழுவிச் செல்வன. நாட் டார் வழக்காறுகள் என்ற கருத்தாக்கம் தான் தமிழ் நாட்டார் வழக்காற்றியலை அதன் கிணற்றுத்தவளை வாழ்வில் இருந்து விடுவித்தது. இந்த விடுவித்தல் அதனைக் குறுகிய தமிழ்த்துறை நோக்குகளில் இருந்து விடுவிப்பதாகவும் அமைந்தது. இவ்விடு விப்புக்கட்டத்தின்போது பல குறைகளும் வெளிப்பட்டன என்பது உண்மையே.
நாட்டார் வழக்காற்றியல் பல்துறை இணைப்பு ஆய்வாகவும் கோட்பாட்டு

Page 59
முறையினதாகவும் மாற்றிய இந்தக் கட் டத்தினைப் பற்றிய விமர்சனத்தினை பேராசிரியர் தே. லூர்துவின் வார்த்தை களிலேயே குறிப்பிடுவோம்.
* தமிழிலக்கிய ஆய்வுகள் போலவே இன்று நாட்டார் வழக்காற்றியலிலும் ஆய் வுகள் செய்யப்படுகின்றன. சில பாடல் களைத் தொகுத்து அவற்றிற்குப் பொழிப் புரை எழுதிச் சில தலைப்புக்களில் பிரித் துப் போட்டுவிட்டால் ஆய்வாகி விடு கிறது. கள ஆய்வு செய்து நாட்டார் வழக்காறுகளைச் சேகரிக்கும் முறையையும், சேகரித்தவற்றைக் கையாளும் முறையை யும் அறியாமையே இதற்குரிய காரணங்க ளாகும். தமிழிலக்கிய ஆய்வாளன் உள் ளடக்கங்களைப் பட்டியலிட்டு ஆய்வு செய் தவன் பெரும்பாலும் தமிழ் இலக்கிய மாணவர்களே இத்துறையில் ஈடுபடுகின்ற னர். ஆதலின் வெறும் பாடங்களை (Texts) சேகரித்தால் போதும் என்றும் எண்ணி விடுகின்றனர்.
நாட்டார் வழக்காற்றியல் கோட் பாடுகள் குறித்தும், அவை குறித்த விவா தங்கள் பற்றியும் தமிழ் ஆய்வாளன் அறி யாது ஆய்வில் நுழைகிறான் . நாட் டார் வழக்காற்றியலை ஒரு தனித்துறை யாக நாம் கருதுவதில்லை. மானுடவியல் சமூகவியல், உளவியல், மொழியியல், குறிப்பனியல், அமைப்பியல் போன்ற துறைகள் நாட்டார் வழக்காற்றியலுக்கு அளித்த கருத்தாக்கங்களையும் நாட்டார் வழக்காற்றியல் பிற துறைகளுக்குச் செய்த பங்களிப்பையும் பற்றி நாம் கவனம் செலுத்தவில்லை."
("நாட்டார் வழக்காற்றியல் கள ஆய்வு" என்னும் நூல் முன்னுரையில்) மானிடவியல் ஆய்வினை நாடியோரும் ஏதேனும் ஒரு தலைப்பை எடுத்து அத னோடு ஒரு மானிடவியல் அணுகுமுறை அல்லது ஒரு மானிடவியல் பார்வை என்று குறிப்பிட்டனரே அன்றி முழுமையான மானிடவியல் கோட்பாடுகளை பயன் படுத்தி ஆய்வுகளைச் செய்யவில்லை என வும் லூர்து இன்னோரிடத்தில் குறிப்பிடு கிறார். ۔۔۔۔

பாளையங்கோட்டை தூயசவேரியர் கல்லூரி நாட்டார் வழக்காற்றியலில் எம். ஏ. பாட நெறியினை நடத்திவருகிறது. அத்தோடு நாட்டார் வழக்காற்றியல் ஆய் வுக்கழகம் ஒன்றும் பாளையங்கோட்டை யில் செயற்பட்டு வருகிறது.
* நா ட் டா ர் வழக்காறுகளைத்
தொகுத்து வெளியிடல். நாட்டார் வழக்காற்றியல் இதழ் நடத்துதல். ஆய்வு நூல்கள் வெளியிடல். ஆண்டுக்கொரு கருத்தரங்கு நடத் துதல்.
சுவடிப்புலம் (Archives) 363r றினை நடத்துதல்.
大
உறுப்பினர் சளிடைக் கள ஆய்வு குறித்தும் ஆய்வு குறித் தும் தொடர்பு ஏற்படுத்துதல்.
ஆகிய நோக்கங்களைக் கொண்டு இக் கழகம் செயற்பட்டுவருகிறது. "நாட்டார் வழக்காற்றியல்" என்னும் பெயரில் ஆய் விதழ் ஒன்றையும் வெளியிட்டு வருகின்றது. இதன் இரண்டாவது இதழ் மானிடவிய லாளர் லெவிஸ்டிராஸ் சிறப்பிதழாக மலர்ந் தது. மூன்றாவது இதழ் 200 பக்கங்களை உடையதாய் மானிடவியல் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. இச் சிறப் பி த பூழி ல் "மானிடவியலும் நாட்டார் வழக்காற்றி யலும்’ என்னும் தலைப்பில் (ஆ. செல்ல பெருமாள்) சிந்தனையைத் துரண்டும் கட் டுரையொன்றும் உள்ளது.
கொழும்பில் நிகழ்ந்த கருத்தரங்கில் சமயச் சடங்குகள், தெய்வங்கள், நம்பிக் கைகள் பற்றிப் பல கட்டுரைகள் படிக்கப் பட்டன. மரபு வழி அரங்கக்கலைகள் பற்றி மூன்று கட்டுரைகளும் நாட்டார் இலக்கியம் தொடர்பான நான்கு கட்டுரை களும் படிக்கப்பட்டன. பேராசிரியர் கா. சிவத்தம்பி நாட்டார் என்னும் கருத் தாக்சம் தமிழில் பயிலப்படும் பொழுது ஏற்படும் கருத்து நிலைப் பிரச்சினைகளை ஆராயும் கட்டுரையொன்றைப் படித்தார்.
S5

Page 60
"நாட்டார் வழக்காற்றியல் கோட்பாடுகள்" என்னும் தலைப்பில் பேராசிரியர் லூர்து சமர்ப்பித்த கட்டுரை கருத்தரங்கில் அலசப்பட்ட பல்வேறு விடயங்களின் கோட் பாட்டுப் பின்னணியை விளக்குவதாய் அமைந்தது. ரணஜித்குஹா என்னும் வரலாற்றாசிரியரால் இந் தி யா வி ல் பிரபலப்படுத்தப்பட்டுள்ள அடி த் த ள Loji 35 sit (Subaltern Classes) GT Görgy h 55(53 தாக்கத்தை அடிப்படையாகக் கொண்ட நீண்ட கட்டுரையை ஆ. சிவசுப்பிரமணியன் சமர்ப்பித்தார். கருத்தரங்கு பயனுடைய தாய் அமைந்தது.
காற்றிலே மிதந்த கவிதை” என்றும்
‘நாட்டார் கவியமுதம்‘ என்றும் புனை
இவ்விதழின் கட்டு
திரு. என். சண்முகலிங்கன் எ! சமூகவியல், பொருளியியல்துறை சிே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
திரு. ஆ. சிவசுப்பிரமணியன் தமிழ்த்துறை வ. உ. சிதம்பரம் கல், தூத்துக்குடி, தமிழ்நாடு.
திரு. செ. யோகராசா எம். ஏ.
சிரேஷ்ட விரிவுரையாளர் கிழக்குப் பல்கலைக்கழகம் மட்டக்கe
திருமதி. ஏ. என். கிருஷ்ணவே பி. ஏ. (சிறப்பு) எம். பில். (சென்ை விரிவுரையாளர் நுண்கலைத்துறை,
கலாநிதி சோ. கிருஷ்ணராஜா தலைவர், மெய்யியல்துறை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
டாக்டர். பொற்கோ
பேராசிரியர், தலைவர். தமிழிலக்கி சென்னைப் பல்கலைக்கழகம்.
கலாநிதி நா. சுப்பிரமணியன்
முதுநிலை விரிவுரையாளர், தமிழ்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்,
Avai

வியல் பாங்கில் நோக்கப்பட்ட இலக்கிய நயப்பு அணுகுமுறை மாறி வரலாறு சமூக வியல், மானிடவியல் என்னும் பல்துறை இணைப்பு நோக்கில் "நாட்டார் வழக் காறுகளை ஆய்வு செய்யும் வளர்ச்சி நிலை கருத்தரங்கில் வெளிப்பட்டது.
இக்கருத்தரங்கில் படிக்கப்பட்ட கட் டுரைகளில் ஒன்றான “யாழ்ப்பாணத்தில் அண்ணமார் வழிபாடு' என்னும் கட்டுரை இவ்விதழில் முதலாவது கட்டுரையாகப் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
க. சண்முகலிங்கம்
ரையாசிரியர்கள்
p. 6. ரஷ்ட விரிவுரையாளர்
ாப்பு.
ன) பாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
பத்துறை
ாம். ஏ. பிஎச். டி.
றை
56

Page 61
ரது
※
இந்துசமய, கலாசார அது
விற்பனைக்கு
இந்துக் கலைக்களஞ்சியம்
தொகுதி ஒன்று (அ-ஈ)
தொகுதி இரண்டு (உ-ஒ
தொடர்பாடல் மொழி நவீ
பதிப்பாசிரியர் எம். ஏ. நு 1992, மே 7, 8, 9 ஆம் தி கொழும்பில் நடைபெற்ற
தமிழ் மொழியியல் மாநா
கோணேசர் கல்வெட்டு
பேராசிரியர் சி. பத்மநாத
முன்னுரை பதிப்பாசிரியர் வித்து வான்
தமிழ் சாகித்திய விழா - 199
LLSLLLLSLSSLSSLSYST0SSLeYSTLSSLSSTLSLSBTSLLSSLSLLLSLSLLTSLS LSLMSSSLSLSSSMSSSLA SLMTLSLS LSLSSLLYYLYLLSLLSLLL0SLLLSYLSL LYeSLLLLL
Printed by RAJAN PR

LTzMSzeMYMSieseSeiiTeMeYSeseMeSseS TSzTeSeTTeMTTMeSeeMSTSLSMML MeY MYYeTSLeMTSTSeAeeSSTSTMLMMMSeSMTLTMeTYeSeTLSSSLSS LSS
லுவல்கள் திணைக்களத்தில்
ள்ள நூல்கள்
விலை ரூ.
வி) விலை ரூ.
னத்துவம்
ஃமான் விலை ரூ.
கதிகளில் பிராந்திய ட்டு நிகழ்வுகள்
னின்
"யுடன் கூடியது , சைவப்புலவர்
இ. வடிவேல் விலை ரூபா,
)3 சிறப்புமலர் விலை ரூபா.
250.00
250. OO
15 OOO
60.00
70. OO
摩
INTERS - COLOMBO - 2.

Page 62
-
----

http:AA www.harntzham, net