கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பண்பாடு 1995.12

Page 1
ΟΛΟ)
弓今^2=/esつ(イ
விஞ்ஞான அறிவின்
திருஞா  ைசம்பந்தரு
தமிழின் இரண்டா
கல்வியு ம் நூலக வி
இலங்கையில் சமூக
கல்வியும் ஆய்வும்
கிராம சமூகங்கள்:
ஜ்
குறிப்புகள்
 
 
 
 
 
 
 
 

வளர்ச்சி
ம் கலைகளும்
பது பக்தி யுகம்
பிருத்தியும்
-- م= bij Ljubll LDPT 33.TL5)TL || GL
கற்பனையும் உண்மையும்
எரிபபீடு
திணைக்களம்
5305oailloboi

Page 2
பதிப்பு - 1995 மார்கழி
விலை - ரூபா 25
பன்னிரண்டாவது இதழின் ச
கலாநிதி. சோ. கிருஷ்ணராஜா யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மெய்யியல் மெய்யியல், இந்துநாகரிகம், கலைகள், வரலாறு எழுதியுள்ளார்.
பேராசிரியர் வி. சிவசாமி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருத மெய்யியல் தொடர்பான பல நூல்களையும், ஆ
பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி எம். ஏ யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை கலாநிதி. சோ. சந்திரசேகரன் கொழும்பு பல்கலைக்கழகத்தில் கல்வித்துறையின் கல்வியியல் தொடர்பான பல நூல்களை எ ஆய்வுக்கட்டுரைகளை தொடராக எழுதி வருகிற
ஸசங்க பெரோரா கொழும்பு பல்கலைக்கழகத்தின் சமூகவியற் து அமெரிக்காவின் கலிபோர்னியப் பல்கலைக்கழக பி. எச். டீ. ஆகிய பட்டங்களைப் பெற்றவர். தொடர்பான பல ஆய்வுக்கட்டுரைகளை எழுதி அண்மையில் வெளிவந்துள்ளது.
பேராசிரியர் நொபொரு கராவர்மா
ஜப்பானியரான பேராசிரியர் நொபொரு கராஷிமா, தகைமைப் பேராசிரியராகவும், தயிஷோ பல்கலைச் உள்ளார். சோழர் காலக் கல்வெட்டுக்களையும் விஜ புலமாகக் கொண்டு தென்னக சமூகம் பற்றிய பல ஆய்வுநூல்கள் ஜப்பானிய, ஆங்கில மொழிகளி
வரலாற்றுப்போக்கில் தென்னக சமூகம்-சோழர் காலம் பல்கலைக்கழகத்தின் எ. சுப்பராயலு தலைமையி:
பண்பாடு பருவ கூறப்பட்டுள்ள
சொந்தக் கருத்து திணைக்களத்தி

கட்டுரையாசிரியர்கள்
துறையின் தலைவராகப் பணிபுரிகின்றார். தொடர்பான பல ஆய்வுக் கட்டுரைகளை
3த்துறைத் தலைவராகப் பணிபுரிகின்றார். ய்வுக்கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
ா. பி. எச். டி.
}ப் பேராசிரியர்.
சிரேஷ்ட விரிவுரையாளராகப் பணிபுரிகின்றார். ழுதி வெளியிட்டுள்ளார். கல்வி பற்றிய Tİ.
1றை முதுநிலை விரிவுரையாளர். ஐக்கிய கத்தில் மானிடவியற் துறையில் எம். ஏ. இலங்கையின் சமூகவியல், மானிடவியல் யுள்ளார். இவரது ஆங்கில நூலொன்றும்
நற்போது டோக்கியோ பல்கலைக்கழகத்தில் 5கழகத்தில் இந்தியவியல் பேராசிரியராகவும் ஜயநகரக் கல்வெட்டுக்களையும் சிறப்பாய்வுப் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். இவரது ல் வெளிவந்துள்ளன.
(850-1300) எனும் இவரது நூலை தஞ்சைப் லான குழுவினர் தமிழாக்கம் செய்துள்ளனர்.
غذ
இதழில் பிரசுரமாகியுள்ள கட்டுரைகளில் கருத்துக்கள் யாவும் கட்டுரையாசிரியர்களின் துக்களேயாகும். இவை இவ்விதழை வெளியிடும் ன் கருத்துக்களைப் பிரதிபலிப்பனவாகா,
- ஆசிரியர்

Page 3
(பன்னிரண்
மலர் 5 — ә, ә.
垒。岛历G
எஸ். ெ
LD. g's
டு
இந்துசமய, கலாசார அ
இல, 98,
கொ

ANTHONY JEEVA 57 MAHINDA PLẠcă
Cମ୍ଫoଥ୍ସ-&.
III (6
ாடாவது இதழ்)
Friul ur† ாமுகலிங்கம்
ரீ ஆசிரியர்கள் தய்வநாயகம்
முகநாதன்
ー★ー
பளியீடு:
புலுவல்கள் திணைக்களம். வோட் பிளேஸ், ழம்பு - 8ெ.

Page 4
பொருளட
விஞ்ஞான அறிவின் வளர்ச்சி
- தோமஸ் கூணின் சிந்தனைகள்
திருஞானசம்பந்தரும் ഔ
தமிழின் இரண்டாவது பக்தி யுகம்
கல்வியும் நூலக விருத்தியும்
இலங்கையில் சமூகவியல் மானிடவிய
கிராம சமூகங்கள்: கற்பனையும் உ
குறிப்புகள்

க்கம்
சோ. கிருஷ்ணராஜா
வி. சிவசாமி
கார்த்திகேசு சிவத்தம்பி
சோ. சந்திரசேகரன்
ல் கல்வியும் ஆய்வும்
ஸசங்க பெரேரா
ண்மையும்
நொபொரு கராஷிமா
O
O8
13
25
28
41
54

Page 5
விஞ்ஞான அ தோமஸ் கூனின் (TH சோ. கியூ
வி ஞ்ஞானப்புரட்சிகளின் அமைப்பு (The Structure of Scientific Revolutions) 6T66 B BJT6) மூலம் இந்த நூற்றாண்டின் பின்னரைக் கூறில் புகழ்பெற்ற சிந்தனையாளர்களில் ஒருவரென்ற கணிப்பை தோமஸ் கூன் பெறுகிறார். 1962ல் முதன் முதலாக வெளிவந்த இந்நூலானது 1970ல் விரிவாக்கப்பட்ட பதிப்பாக வெளியிடப்பட்டது. இவ்விரண்டாம் பதிப்பில் பல்வேறு தரப்புகளில் இருந்தும் தெரிவிக்கப் பட்ட விமரிசனங்களிற்கான விளக்கங்கள் இடம் பெற்றுள்ளதுடன் பல மீள் பதிப்பு களையும் இந்நூல் கண்டது.
அறிவின் வளர்ச்சி பற்றிப் பொதுவாகவும், விஞ்ஞான அறிவின் வளர்ச்சி பற்றிக் குறிப்பாகவும் ஆராய்ந்த தோமஸ் கூன், தன்னாய்விற்குரிய பொருளாக இயற்கை விஞ்ஞானத்தின் வரலாற்றை எடுத்துக் கொண்டு அவ்வாய்விலிருந்து அறிவின் வளர்ச்சி பற்றிய பொதுத் தத்துவமொன்றை உருவாக்கினார். இத்தத்துவம் காலப்போக்கில் இயற்கை விஞ்ஞான அறிவின் வளர்ச்சி பற்றிய கோட் பாடாக மட்டுமல்லாது, சமூகவியல், பொரு ளியல் போன்ற சமூக விஞ்ஞானங்களினதும், பண்பாடு, கலை வரலாறு, அழகியல் போன்ற ஆய்வுத்துறைகளினது அறிவுவளர்ச்சி பற்றிய பொதுத்தத்துவமாகவும் விஸ்தரிக்கபட்டது.
இருபதாம் நூற்றாண்டின் பொருளாதார விஞ்ஞானத்தில் தோமஸ் கூனின் சிந்தனைகள் புலனறிவாதத்திற்கு (Positivism) பிற்பட்ட முறையியலாகவும், சமூகவியலில் "சமூக வியலின் சமூகவியல்” பற்றிய ஆய்வாகவும், கலைவரலாற்றினதும் அழகியலினதும் ஆய்விற்குரிய அடிப்படைத் தத்துவமாகவும் (Meta-theory) அவ்வத்துறை சார் அறிஞர் களினால் சிற்சில மாற்றங்களுடன் பயன் படுத்தப்படுகிறது. இவ்வாறு, தோமஸ் கூனின் சிந்தனைகள் செல்வாக்குப் பெற்றிருப்பதானது இவரது கருத்துக்களின் முக்கியத்துவத்தை

றிவின் வளர்ச்சி
MAS KUN) சிந்தனைகள்
வத்ணராஜா
யாவர்க்கும் புலப்படுத்தும் போதிய நியாயமாகுமெனலாம்.
விஞ்ஞானத்தின் வரலாற்றை எத்தகைய முற்சாய்வுகளுமின்றி ஆராய்வோமாயின், விஞ்ஞானம் பற்றிய எமது பொதுமனப்பதிவில் ஓர் அடிப்படையான மாற்றமேற்படுமென்ற அவதானிப்புடன் விஞ்ஞானப் புரட்சிகளின் அமைப்பு என்ற நூல் ஆரம்பமாகிறது. விஞ்ஞானம் என அழைக்கப்படும் அறிவுத் தொகுதியானது விஞ்ஞானிகள் சமூகத்தினால் உருவாக்கப்பட்டதென்றும், விஞ்ஞானிகளின் சமூகம் தமக்கேயுரிய சிறப்பான தொழில் நுட்பத்தையும், தமக்கேயுரிய முறையி யலையும் விருத்தி செய்துள்ளதென்றும், விஞ்ஞான ஆராய்ச்சியில் ஈடுபட விரும்பு மொருவர் இத்தொழில் நுட்பங்களையும் முறையியலையும் பயன்படுத்தி தமது ஆய்வு களைச் செய்யலாமென்றும், ஒவ்வோர் ஆய்வும் ஒவ்வோர் கண்டுபிடிப்பும் உண்மையைத் தேடும் பாதையின் மைற்கற்களாக விளங்குகின்றன வென்றும் விஞ்ஞானம் பற்றிய பொதுவான கருத்தொன்றுண்டு. இது மிகவும் தவறான மனப்பதிவாகுமென்று கூறுகிற தோமஸ் கூன், இவ்வபிப்பிராயத்தை உருவாக்குவதில் பாடநூல்கள். (Text books) பெரும்பங்கு வகிக்கின்றனவென்று வாதிடுகிறார்.
விஞ்ஞானப் பாடநூல்கள் தாமெழுந்த காலத்துக் கொள்கைகளையும், தொழில் நுட்பங்களையும், முறையியலையுமே விஞ்ஞானத்தின் இயல்பாக எடுத்துக்காட்டு கின்றன. விஞ்ஞானம் பற்றிய இத்தகைய மனப்பதிவானது ஒரு நாட்டின் பண்பாடு பற்றி உல்லாசப்பயணிகளிற்குத் தரப்படும் குறிப்பு களிற் காணப்படுவதை ஒத்த மேலோட்டமான கருத்தோட்டமேயாகுமென கூன் வாதிடுகிறார் பாடநூல்கள் தாமெடுத்துக் கொண்ட விடயத்திற்கான விதிகள், கோட்பாடுகள், அவற்றிற்குரிய பரிசோதனைகள் ஆகியவற்றை அவற்றிற்கேயுரிய சிறப்பான உதாரணங்

Page 6
களுடன் விளக்கிச் செல்லும். இவை பிரதானமாக விஞ்ஞானிகள் சமூகத்தில் இணையத் தயாராகும் இளைய தலை முறையினர்க்கான கல்விசார் நோக்கத்தைக் கொண்டிருந்தாலும், விஞ்ஞானத்தின் வரலாறு புகட்டிய பாடங்கள் எதனையும் இந்நூல்களிற் காணமுடியா திருட்பது முக்கிய குறைபாடாகும். இப்பாட நூலாசிரியர்களின் அபிப்பிராயப்படி விஞ்ஞானத்தின் வரலாறென்பது நிராகரிக் கப்பட்ட கொள்கைகளின் வரலாறேயாகும். விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் பற்றி இந்நூல்கள் குறிப்பிட்டாலும், அக்கண்டு பிடிப்புகளிற்காக விஞ்ஞானிகள் நடாத்திய போராட்டங்கள், அவர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள் என எதுவும் இந்நூல்களில் தகுந்த முக்கியத்துவம் பெறுவதில்லை. இப்பாட நூல்கள் எவ்வாறு தமதாய்வுத் துறையில் கடந்த காலத்தில் காணப்பட்ட குழப்பநிலைகள் பற்றி எதுவும் பேசுவதில்லையோ, அவ்வாறே அவ்வாய்வுத் துறையில் நிகழ்காலத்திற் காணப்படும் குழப்பநிலைகள் பற்றியும் குறிப்பிடுவதில்லை. இதனால் மாணவர்களும் மற்றவர்களும் விஞ்ஞானம் பற்றி மிகத் தவறான கற்பிதத்தைக் கொண்டிருக்கின்றனர். விஞ்ஞானம் படிப்படி யாகத் திரண்டு வளருகின்றதென்ற அபிப்பிரா யத்தை அவை தருகின்றன. விஞ்ஞான ஆய்விலேற்பட்ட முக்கிய திருப்பங்கள் அது படிப்படியாக திரண்டு பெற்ற வளர்ச்சியினால் ஏற்பட்டதொன்றல்ல. மாறாக, விஞ்ஞான ஆய்விலேற்பட்ட புரட்சிகளே அத்தகைய மாற்றங்களிற்கு காலாயமைந்தனவென்று கூன் வாதிடுகிறார்.
விஞ்ஞானத்தின் வரலாற்றினுடாக அறிவின் வளர்ச்சி பற்றி ஆராய முயன்ற தோமஸ் கூண் , அவ் வளர்ச்சியை இருவேறு காலகட்டங்களாகப் பிரித்துப் பார்க்கிறார். அவை முறையே, விஞ்ஞானிகளின் சமூக உருவாக்கத்திற்கு முற்பட்ட காலம்,விஞ்ஞானி களின் சமூக உருவாக்கத்திற்குப் பிற்பட்ட காலம் எனப்படும்.
விஞ்ஞானிகளின் சமூக உருவாக்கத்திற்கு முற்பட்ட காலத்தில் இயற்கை பற்றி ஒன்றிற் கொன்று முரண்பாடான கொள்கைகள்
2

நிலவின. இக்காலத்தில் விஞ்ஞான நோக்கல் பற்றியும், அதற்கான முறைகள் பற்றியும் மாறுபட்ட அபிப்பிராயங்களைக் கொண்ட வர்களாக விஞ்ஞானிகள் காணப்பட்டனர். ஒன்றிற்கொன்று ஒத்திசையாத உலக நோக்கினைக் கொண்டிருந்ததால் அவர் களிடையே உடன்பாடு காண முடியவில்லை. பிரபஞ்சம் எத்தகைய பொருட்களால் ஆனது? அவை எவ்வாறு ஒன்றுடன் ஒன்று தாக்கம் புரிகின்றன? இத்தகைய பொருட்கள் பற்றி எத்தகைய கேள்விகளை வினவலாம்? இவை பற்றிய ஆய்வில் எத்தகைய முறையியலை/ தொழில்நுட்பங்களை நாம் பயன்படுத்தலாம்? என்பன போன்ற வினாக்களிற்கு எல்லோர்க்கும் ஏற்புடைய விடைகளைக் கண்டுபிடித்து ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்தே விஞ்ஞானி கள் சமூகம் உருவாகிறது. இது இரண்டாவது காலகட்டமாகும். வெவ்வேறு ஆய்வுத்துறை களிலும் இப்பொது உடன்பாடு வெவ்வேறு காலகட்டத்தில் ஏற்படுகிறது. விஞ்ஞானிகள் சமூகம் ஏற்றுக் கொண்ட பொது உடன்பாட்டை கட்டளைப்படிமம்' என தோமஸ் கூன் அழைக்கிறார். விஞ்ஞானத்தின் ஆய்வுப் பொருள் குறித்ததொரு அடிப்படையான படிமமென கட்டளைப்படிமத்தை நாம் விளங்கிக் கொள்ளலாம். விஞ்ஞானிகளின் சமூகத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொதுவான நம்பிக்கைகள், விழுமியங்கள், உத்திமுறைகள் ஆகியவற்றின் முழுமையான மொத்த வடிவமே கட்டளைப்படிமமென அழைக்கப்படுகிறது.
விஞ்ஞானிகளிடையே காணப்படும் பொது உடன்பாடு அவர்களை ஒரு சமூகமாக இயங்க வைப்பதுடன், அச்சமூகத்தில் இணைய விரும்பும் இளைய தலைமுறையினர்க்கான பாடநூல்களின் தோற்றத்திற்கும் வழியமைக் கிறது. இவ்வாறு விஞ்ஞானத்தின் வரலாற்றை இருவேறு காலகட்டங்களாக வகுத்ததுடன், விஞ்ஞானிகள் ஒரு சமூகமாக எப்பொழுது இயங்கத் தொடங்குகிறார்களென்பதையும் தோமஸ் கூன் விளக்குகிறார். விஞ்ஞானிகள் சமூகத்தின் உருவாக்கம் விஞ்ஞானத்தில் விரைவான வளர்ச்சியை ஏற்படுத்துகிறது. விஞ்ஞானத்தின் வரலாற்று ரீதியான

Page 7
வளர்ச்சியை ஆராய்ந்த பொழுது அவ் வளர்ச்சியிலும் சாதாரணகாலம், புரட்சிக்காலம் என இரு கூறுகள் உள்ளடங்கியிருப்பதாக தோமஸ் கூன் எடுத்துக்காட்டுகிறார். சாதாரண காலத்தில் விஞ்ஞானம் கிடைவெட்டாக வளர்ச்சியடைகிறது. இக்காலத்தில் அது தன் ஆளுகைப்பரப்பை விசாலித்துச் செல்கிறது. புரட்சிக் காலத்தில் விஞ்ஞானம் குத்துவெட்டாக வளர்கிறது. இக்காலகட்ட அறிவு வளர்ச்சியை "மேனோக்கிய பாய்ச்சல்” எனலாம். அறிவு வளர்ச்சியின் மேனோக்கிய பாய்ச்சலினால் கட்டளைப்படிமத்தில் மாற்ற மேற்படுகிறது. விஞ்ஞானத்தின் வரலாற்றில் கட்டளைப் படிமமாற்றங்கள் பல நிகழ்ந் துள்ளன. உதாரணமாக, பெளதீகம் தொடர்பான இன்றைய பாடநூல்களில் ஒளியானது போட்டோன்கள் (Photons) என விளக்கப்படுகிறது. அதாவது "குவாண்டம் மெக்கானிக்ஸ்” (சக்திச்சொட்டுக்கொள்கை) பொருளாக, அலைப்பண்புடைய துகள்களாக பெளதீகம் ஒளியை விளக்குகிறது. இந்த விளக்கம் கடந்த அரை நூற்றாண்டுக் குள்ளாகவே முன்மொழியப்பட்டது. இது மக்ஸ் பிளாங், ஐன்ஸ்ரைன் ஆகியோரின் ஆய்வின் பேறாக ஏற்பட்ட கட்டளைப்படிம மாற்றமாகும். ஆனால் 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஒளி பற்றி பிறிதொரு விளக்கம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. யுங், பிறிஸ்நெல் ஆகியோரின் ஆய்வுகளினால் பெறப்பட்ட ஒளி பற்றிய அலைக்கொள்கையே அக் காலத்திய விளக்கமாக இருந்தது. ஒளி பற்றிய அலைக்கொள்கை என்ற கட்டளைப் படிமத்தில் இருந்து அலைகளாகச் செல்லும் துகள்கள் என்ற கட்டளைப் படிமத்திற்கு பெளதீக விஞ்ஞானம் குத்துவெட்டான வளர்ச்சியை இருபதாம் நூற்றாண்டிலேயே பெற்றது.
17ம் நூற்றாண்டின் முடிவுவரை ஒளி பற்றிய அனைவராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய பொதுக்கொள்கை ஒன்றிருக்கவில்லை. எப்பிக்கூறியன் கொள்கை, அரிஸ்டோட்டலின் கொள்கை, அல்லது பிளேட்டோனியக் கொள்கை என ஒன்றிற்கொன்று முரண்பாடான பல கொள்கைகள் அக்காலத்திற் காணப்

பட்டன. ஒவ்வொரு கொள்கையினரும் தம் பக்கத்திற்கு வலுவூட்டக் கூடிய பெளதீகவதிதக் கருத்துக்களை தத்தம் பக்கத்து நியாயங் களாக எடுத்துக்காட்டினர். இக்காலப் பகுதியில் பெளதீக விஞ்ஞானம் ஒளியியல் பற்றி தனக்கென்றதொரு கட்டளைப்படிமமொன்றை உருவாக்காத, ஏற்காத காலமாகும். 18ம் நூற்றாண்டிலேயே (நியூட்டன் தனது "6suuj6)" (Optics) 6T6 (3 JT6bcp6), b) ஒளியானது சடப்பொருள் கூறுகளான துணிக்கைகள் என்ற முதற் கட்டளைப்படிமம் தோன்றியது.
ஒரு கட்டளைப்படிமத்திலிருந்து பிறிதொரு கட்டளைப்படிமத்திற்கு மாறுவதென்பது சடுதியாக நிகழ்வதில்லை. ஒரு நீண்ட செயல்முறைக்கூடாகவே இம் மாற்றம் நிகழுகிறது. இதனைப் பின்வருமாறு விளக்கலாம்.
கட்டளைப்படிமம் -டி சாதாரணகாலம் -> அசாதாரண தோற்றப்பாடுகள் -> நெருக்கடி
-> புரட்சி-> கட்டளைப்படிமம்
கட்டளைப் படிமம் ஒன்றிலிருந்து பிறிதொன்றிற்கு மாறுவதை புரட்சிக் காலமென்றும், இரண்டு கட்டளைப்படிமங் களிற்கிடைப்பட்ட காலத்தை சாதாரண கரலமென்றும் தோமஸ் கூன் அழைக்கிறார்.
எந்தவொரு விஞ்ஞான ஆராய்ச்சிக்கும் தரவுகளைத் தெரிவு செய்தல், மதிப்பிடல், விமர்சித்தல் ஆகிய செயற்பாடுகள் மிகவும் இன்றியமைய்ாதவையாகும். இதற்கு ஆதாரமாக யாதேனுமொரு கோட்பாடும், அதற்கானதொரு முறையியல் அணுகு முறையும் தேவைப்படுகிறது. விஞ்ஞானிகள் சமூகம் எப்பொழுது ஒரு விஞ்ஞானக் கொள்கையையும், அதற்கான முறையிய லொன்றையும் ஏற்றுக்கொள்கிறதோ அக்கணத் திலிருந்து, அக்கொள்கையும் முறையியலும் ஒரு கட்டளைப் படிமமாக ஏற்றுக்கொள்ளப் படுகிறதெனலாம். இவ்வாறு தோற்றம் பெற்ற கட்டளைப்படிமம் காலப்போக்கில் விஞ்ஞான ஆராய்ச்சியையும், அதன் செல்நெறிகளையுமே கட்டுப்படுத்துமளவிற்குப் பலம் பெற்று
3

Page 8
விடுகிறது. ஒரு கட்டளைப் படிமம் எத்துறை சார்ந்ததோ அத்துறை சார்ந்த எண்ணக் கருக்களிற்கு இறுக்கமானதும், புதியதுமான வரைவிலக்கணங்கள் விஞ்ஞானிகளால் தரப்படுகின்றன. விஞ்ஞானிகள் கழகங்களும், சிறப்புத்துறைசார் சஞ்சிகைகளும் ஆரம்பிக் கப்பட்டு பரஸ்பரம் தம் ஆய்வனுபவங்களைப் பரிமாறிக்கொள்ளும் வாய்ப்புக்களும் கிட்டு கிறது. இதனால் ஒரு கட்டளைப்படிமத்தை ஏற்றுக்கொண்ட விஞ்ஞானிக்கு எல்லாவற் றையும் முதலிலிருந்தே ஆரம்பிக்க வேண்டிய அவசியமில்லாது போய்விடுகிறது. சகபாடி களால் அறிமுகப்படுத்தப்பட்டதும், பயன்படுத் தப்பட்டதுமானவற்றைப் பயன்படுத்தி தன்னாய் வைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் வாய்ப்பும் ஏற்படுகிறது. இதனைப் பின்வரும் உதாரணத்தால் விளக்கலாம். r 16ம் நூற்றாண்டிலிருந்து மின்னியல் பற்றி விஞ்ஞானிகள் அறிந்திருந்தாலும், 18ம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை, இத்துறையில் உழைத்து வந்த விஞ்ஞானிகள் மத்தியில் அனைவருக்கும் உடன்பாடானதொரு கட்டளைப்படிமம் இருக்கவில்லை. 1740க்கும் 1780க்கும் இடைப்பட்டதொரு காலப் பகுதியிலேயே மின்னியலின் பொதுவான அடிப்படைகள் பற்றிய கருத்துடன்பாடு எட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து வந்த காலப் பகுதியில் இதுவரை காலமும் மின்னியலாளர்கள் எதிர்நோக்கிய பல பரிரச்சினைகள் வெற்றிகரமாகத் தீர்க்கப்பட்டதுடன், பல புதிய கண்டு பிடிப்புகளும் இடம்பெறலாயின. இத் துறைசார் விஞ்ஞானிகள் தாமறிந்த தகவல்களை சஞ்சிகைகளினூடாக தமது சகபாடிகளிற்கு அறியத் தந்ததுடன், சக பாடிகளின் ஆய்வுகளையும் தாமறிந்து பயன் பெறக் கூடியதாயிருந்தது. அவர்கள் ஏற்றுக்கொண்ட கட்டளைப்படிமம் அவர்களனைவரையும் ஒரு சமூகமாக இயங்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது.
ஒரு கட்டளைப்படிமத்தைத் தொடர்ந்து வருகிற காலம் விஞ்ஞான அறிவு வளர்ச்சியில் சாதாரணகாலம் என தோமஸ் கூனினால்
4.

அழைக்கப்பட்டது. இக்காலத்தில் விஞ்ஞானம் தன் ஆளுகைப் பரப்பை கிடைவெட்டாக விசாலித்துக் கொண்டு செல்கிறது. விஞ்ஞானிகள் புதியபுதிய துறைகளில் தாமேற்றுக்கொண்ட கட்டளைப்படிமத்தைப் பிரயோகித்துப் பார்ப்பதையே பிரதான இலட்சியமாகக் கொண்டு இக்காலப்பகுதியில் செயற்படுகின்றனர். "புதிர்களை விடுவித்தல்” என்ற முறையிலேயே இக்கால விஞ்ஞானிகள் செயற்படுகின்றனரென்று தோமஸ் கூன் குறிப்பிடுகிறார்.
ஒரு கட்டளைப்படிமத்தை ஏற்றுக்கொண்ட விஞ்ஞானிகள் சமூகம், சாதாரண காலத்தில் தமதாய்வுத் துறையில் நிலவும் பிரச்சினை களை அக்கட்டளைப்படிமத்தை ஆதாரமாகக் கொண்டே வரையறுத்துக் கொள்வர். பிரச்சினைகளிற்கான தீர்வையும் அக்கட்டளைப் படிமமே கொண்டிருக்கிறதென அனுமானித்துக் கொண்டு. அவற்றினைக் கண்டுபிடிக்க முயலுவர். இதனையே தோமஸ் கூன் புதிர்களை விடுவிக்கும் செயல்முறை எனக் குறிப்பிடுகிறார். இக்கால விஞ்ஞானிகள் தமது கட்டளைப் படிமத்தின் எல்லைகளிற்கு உட்படாத பிரச்சினைகளைப் பொறுத்த வரையில், ஒன்றில் அதனை பெளதீகவதிதப் பிரச்சினை எனக் கூறி நிராகரிக்க முயலுவர். அல்லது, தம்மாய்வுத்துறைகளிற்கு அப்பாற் பட்டவையெனக் கருதி அவற்றை தட்டிக் கழித்து விடுவர். இதனால் சாதாரண காலத்து விஞ்ஞான ஆராய்ச்சிகளை கட்டளைப்படிமமே வழி நடாத்துகிறதென்று கூன் வாதிடுகிறார்.
சாதாரண காலத்தில் விஞ்ஞானம் புதிர்களை விடுவிக்கும் முறையிற் செயற்படுவதனால், இக்காலத்தில் பெறப்படும் விஞ்ஞான அறிவு திட்டமும், நுட்பமும் வாய்ந்த வகையிற் காணப்படுகிறது. முற்றிலும் புதிய தகவல்களையும் (நேர்வுகளையும்), கோட்பாடு களையும் இலக்காகக் கொண்டு விஞ்ஞானிகள் இக்காலத்திற் செயற் படுவதில்லை. அவ்வாறில்லாது அசாதாரண மாக யாதேனும் இருப்பினுங் கூட எவரும் அதனைக் “கண்டு கொள்வதில்லை". ஆனால் கிடைவெட்டான வளர்ச்சி ஒரெல்லைக்கப்பால் தேக்கமடையவே

Page 9
செய்யும். தேக்கமடையத் தொடங்குதல் ஒரு கட்டளைப் படிமம் பலவீன மடைந்து வருகிறதென்பதையே சுட்டும். ஒரு கட்டளைப்படிமம் பலவீனமடைந்த நிலையில் இதுவரை அசாதாரண தோற்றப்பாடுகளாகக் கருதி புறக்கணிக்கப்பட்டவைகள் பால் விஞ்ஞானிகள் நாட்டம் கொள்வர். இதனால் பெறப்படும் புதிய தகவல்களிற்கு ஏற்ப கட்டளைப் படிமத்தைத் திருத்தியமைக்க முற்படுவர். அல்லது பெறப்பட்ட தகவல் களையும், அவதானிக்கப்பட்ட நேர்வுகளையும் முற்றிலும் புதிய பார்வையில் அணுக முற்படுவர். இந்நிலைமை ஏலவே ஏற்றுக் கொள்ளப்பட்ட கட்டளைப் படிமத்தில் நெருக்கடிகளைத் தோற்றுவிக்கும். ஒரு கட்டளைப்படிமத்தில் எழுகின்ற நெருக்கடி நிலைமை அக்கட்டளைப்படிமத்தில் பாரிய மாற்றங்கள் ஏற்பட வழியமைக்கும். பலவிதமான ஊகங்களும், புதிய கொள்கை களும் விஞ்ஞானிகளால் வெளியிடப்படும். இவ்வாறு ஒரு கட்டளைப் படிமத்தில் படிப் படியாக நிகழுகின்ற அசாதாரண தோற்றப் பாடுகள் தீவிர நெருக்கடி நிலையைத் தோற்றுவித்து ஈற்றில் ஒரு புதிய கட்டளைப் படிமத்தின் எழுச்சிக்கு வழியமைக்கும். ஒட்சிசனின் கண்டுபிடிப்பு புளேயிஸ்தன் கொள்கையில் ஏற்படுத்திய நெருக்கடியை இங்கு உதாரணமாக எடுத்துக்காட்டலாம். வெப்பவியக்கவியல் (Thermodynamics) என்ற கட்டளைப்படிமம், 19ம் நூற்றாண்டில் பெளதீக விஞ்ஞானத்தில் காணப்பட்ட விஞ்ஞானக் கொள்கைகள் இரண்டு தம்முள் முரண்பட்டுக் கொண்டதைத் தொடர்ந்தே உருவாக்கப்பட்டது. கதிர்வீச்சு, ஒளிமின் விளைவு என்பன தொடர்பாக விஞ்ஞானிகள் எதிர்கொண்ட பிரச்சினைகளே சக்திச்சொட்டுக்கொள்கை என்ற புதிய கட்டளைப் படிமத்தின் தோற்றத்திற்கு காலாயிருந்த தெண் பதையும் இங்கு மனங்கொள்ளுதல் தகும். இவ்வாறு அசாதாரண தோற்றப் பாடுகள் ஒரு கட்டளைப்படிமத்தில் பாரிய மாற்றங்களை வேண் டி நிற்பதுடன் ஏலவேயுள்ள அறிவுத்தொகுதியை ஐயுற வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்தும். முந்திய

நம்பிக்கைகளையும், செயற் பாடுகளையும் நிராகரித்து பிறிதொரு அறிவின் தளத்திற்கு ஆய்வுகள் நகரும். கொப்பநிக்கஸ், நியூட்டன், ஐய்ன்ஸ்ரைன் ஆகியோர் நிகழ்த்திய சாதனைகள் விஞ்ஞானத்தின் வரலாற்றில் ஏற்பட்ட புரட்சிகர நகர்வுகளிற்கு சிறந்த உதாரணங்களாகும்.
சாதாரண காலத்து விஞ்ஞான அணுகு முறை புதிய கொள்கையின் எழுச்சியினால் மாற்றப்பட வேண்டியதாகிறது. புதிர்களை விடுவிக்க முடியாத நிலையில், ஏலவே பின்பற்றப்பட்டு வந்த விஞ்ஞான விதிகளிற்குப் பதிலாக புதிய விதிகளைத் தேடும் நோக்கில் ஆய்வுகள் நிகழும். புவிமையக்கொள்கை என்ற தொலமியின் கட்டளைப்படிமத்திலிருந்து சூரியமையக்கொள்கை என்ற கொப்ப நிக்கஸின் கட்டளைப்படிமத்திற்கு வானியல் பெற்ற நகள்ச்சியை இங்கு உதாரணத்திற்கு எடுத்துக்காட்டலாம். கட்டளைப்படிமத்தின் மாற்ற காலத்தில் தொலமியின் கட்டளைப் படிமம் எதிர்நோக்கிய நெருக்கடி நிலையை பதின்மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஐந்தாம் அல்போன்ஸோ, பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த கொப்பநிக்கஸின் சகபாடியான டொமினிக்கோ டி நொவாரா ஆகியோரின் கூற்றுக்கள் நன்கு புலப்படுத்தும். "பிரபஞ் சத்தைப் படைப்பதற்கு முன்பு இறைவன் என்னைக் கலந்தாலோசித்திருப்பாராயின் அவருக்கு நல்ல பல ஆலோசனை கள் கிடைத்திருக்கும்” என அல்போன்ஸோ குறிப்பிட்டார். தொலமியின் வானியற் கருத்துக்கள் தவறானவையென டொமினிக்கோ நொவாரா எழுதினார். இவ்வாறு பதினாறாம் நூற்றாண்டு வரை வானியலில் நிலவிய நெருக்கடி நிலைமைகளே புதியதொரு கட்டளைப்படிமத்தைத் தேட வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியது. அதனைக் கண்டுபிடிப்பதில் கொப்பநிக்கஸ் வெற்றி பெற்றார்.
கட்டளைப்படிமம் எதுவுமற்ற நிலையில் விஞ்ஞான ஆராய்ச்சிக்கு இடமில்லை யென்பதால் புதியதொரு கட்டளைப்படிமத்தின் துணையின்றி ஏலவேயுள்ள கட்டளைப்

Page 10
படிமத்தை நிராகரிப்பதென்பது விஞ்ஞான ஆராய்ச்சியையே நிராகரிப்பதை ஒக்கும். புதியதொரு கட்டளைப்படிமத்தின் கண்டு பிடிப்பைத் தொடர்ந்தே பழைய கட்டளைப் படிமம் நிராகரிக்கப்படுமென்கிறார் தோமஸ் கூன். இவரது அபிப்பிராயப்படி ஒருபொழுதும் நிராகரிக்கப்பட முடியாத கட்டளைப்படிமமென ஒன்றிருக்க முடியாது.
ஒரு விஞ்ஞான ஆராய்ச்சித் துறையில் எழுகிற எல்லாப்பிரச்சினைகளையும் ஒரு கட்டளைப்படிமம் தீர்த்துவிடமுடியாது. அவ்வாறில்லாது, ஒரு ஆய்வுத்துறை சார்ந்த எல்லாப் பிரச்சினைகளையும் ஒரு கட்டளைப் படிமம் தீர்க்கிறதெனக்கொண்டால், அத்தகைய கட்டளைப்படிமம் மிக விரைவிலேயே பிற விஞ்ஞான ஆய்வுத்துறைகளிற்கான கருவியாக மாற்றப்பெற்றுவிடுமெனக் குறிப்பிடுகிறார். உதாரணமாக, ஒரு காலத்தில் ஒளியியல் சார்ந்த பிரச்சினைகளிற்குத் தீர்வாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கேத்திரகணித 96flulu si (Geometric optics)96örgi Guruu is துறையின் கருவியாகப் பயன்படுவதை எடுத்துக் காட்டலாம்.
ஒரு கட்டளைப்படிமத்தில் எழுகின்ற நெருக்கடிநிலை அக்கட்டளைப்படிமத்தின் சாதாரணகால வளர்ச்சியை தேக்கமடையச் செய்கிறதென்றும், இத்தேக்கநிலை புதிய கட்டளைப் படிமத்தின் எழுச்சியுடன் நீங்குகிறதென்றும் ஏலவே குறிப்பிட்டோம். புதிய கட்டளைப்படிமத்தின் எழுச்சி, பழைய மரபுகளை உடைத்தெறிவதுடன், புதிய விதிகளையும், புதிய மரபுகளையும் முன்மொழிகிறது. இவ்வாறு புதிய கட்டளைப் படிமத்தின் தோற்றமும் புரட்சியுடன் ஆரம்பமாகிறதென்கிறார் தோமஸ் கூன்.
அறிவு வளர்ச்சியில் நிகழும் புரட்சி, தன்னியலபில் அரசியலில் நிகழும் புரட்சிகர மாற்றங்களை ஒத்ததென்பது இவரின் நிலைப்பாடு. ஒரு அரசியல் நிறுவனம் சமூக மாற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் குந்தகமாக இருக்கும் பட்சத்தில் சமூக அங்கத்தினரி டையே அதிருப்தியைத் தோற்றுவித்து காலப்போக்கில் எவ்வாறு சமுதாய
6

மீளமைப்பிற்கும், அரசியல் மாற்றங்களிற்கும் இட்டுச் செல்கிறதோ, அவ்வாறேதான் விஞ்ஞான அறிவு வளர்ச்சியிலும் நிகழுகிற தென்கிறார் தோமஸ் கூன். எவ்வாறு அரசியலில் மாற்றத்தை விரும்பாத பழமைவாதிகள் காணப்படுவரோ அவ்வாறே, விஞ்ஞான அறிவு வளர்ச்சியிலும் அடிப்படை மாற்றத்தை விரும்பாத பழமைவாதிகள் காணப்படுவர். அரசியலில் மாற்றத்தை புதிய தலைமுறை யினர் முன்னெடுத்துச் செல்வது போலவே விஞ்ஞானத்திலும் கட்டளைப்படிம மாற்றத்தை இளைய தலைமுறையினரான விஞ்ஞானிகளே முன்னெடுத்துச் செல்கின்றனர்.
கட்டளைப்படிமத்தில் ஏற்படுகிற மாற்றம் விஞ்ஞானிகள் உலக நோக்கிலும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இதுவரை காலமும் ஏற்புடையதென அங்கீகரிக்கப்பட்ட விஞ்ஞான அறிவனைத்தும் புதிய உலகநோக்கினடிப் படையில் மீள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு "புதிய ஒழுங்கு" ஸ்தாபிதமாகிறது. புதிய ஒழுங்கொன்றின் ஸ்தாபிதத்தைத் தொடர்ந்து பழைய பாடநூல்கள் காலாவதியாகிவிட, அவற்றின் இடத்தைப் புதிய நூல்கள் நிரப்புகின்றன. விஞ்ஞானப் புரட்சியின் அறுவடையாகவே இவை மீண்டும் எழுதப்பட வேண்டியனவாயுள்ளனவென தோமஸ் கூன் வாதிடுகிறார். புதிய கட்டளைப்படிமத்தை ஆதாரமாகக் கொண்டு எழுதப்படும் இப்பாடநூல்கள் தொடர்ந்து வருகிற சாதாரண காலத்து விஞ்ஞான வளர்ச்சிக்கு முற்றிலும் புதிய அடிப்படைகளைத் தருகின்றன.
இவ்வாறு கட்டளைப் படிமங்களின் மாற்றங்களினூடாக வளர்ச்சி பெற்று வருகிற அறிவின் வளர்ச்சியையே விஞ்ஞான அறிவின் பரிணாம வளர்ச்சியாக தோமஸ் கூன் விளக்குகிறார். அறிவின் இப்பரிணாமம், நோக்குக் கொள்கை (Teleological)யினடிப் படையில் பெறப்படும் வளர்ச்சியல்ல. இது இயற்கையின் தெரிவு என்ற விதியினடிப் படையிலமைந்த டார்வினின் பரிணாமக் கொள்கையை ஒத்தது. டார்வினுக்கு முன்னரேயே லாமார்க், ஸ்பென்ஸர் மற்றும் ஜேர்மனியச் சிந்தனையாளர்கள் பரிணாமம்

Page 11
பற்றிச் சிந்தித்துள்ளனர். எனினும், இவர்களது கொள்கைகளனைத்தும், நோக்க இயற்திட்டம் ஒன்றினடிப்படையிலேயே விபரிக்கப்பட்டன. மனிதனும் ஏனைய உயிர்களும் ஏதோவொரு நோக்கத்தை நிறைவு செய்யும் வண்ணமே பரிணாமமுறுகின்றனவென்று இவர்கள் கருதினார்கள்.
ஆனால் உயிர்கள், இறைவனோ அல்லது இயற்கையோ கற்பித்த நோக்கத்தை நிறைவு செய்யும் வகையிற் பரிணாமமுறுவதில்லை. மாறாக, சூழலிற்கேற்ப தன்னை இசைவாக்கும் இயற்கையின் தேர்வினாலேயே பரிணாம
LLS SSSSSSMSSSSSSS LSLSSS LLSLLSS SSSLSSS SSS SLSSS SLCSS S SSSSSSMSSSMSSL S LSSLSLSLSSS SLSLSSSLSCCSS SSLLLLLL
நா. வா. வி
"தமிழ் ஆராய்ச்சியில் பல துறை த வளப்படுத்தியது "ஆராய்ச்சி" இதழேயாகு Guitab" "(36uT(35(TLiebsff", "Tamil Culture', இலக்கியம், வரலாறு, பண்பாடு ஆகியவற்றுக் இடம் அளித்தன. “தாமரை", "செம்மலர் முற்போக்குக் கலை இலக்கிய விமர்சனத் "கணையாழி" முதலிய இதழ்கள் தமிழில் ஆனால் 1960-களில் முழு வேகத்துடன் அதனுடன் தொடர்புடைய மானிடவியல், ஆய்வுக்களங்களை நம்முன் நிறுத்தின. ந பற்றிய படிப்பும் தலைதுாக்கத் தொடா அணுகுமுறை ஒரு பாதிப்பை ஏற்படுத்தத் ெ சிவத்தம்பி, ரகுநாதன் ஆகியோரின் முக்கியத்துவத்தை உணர்த்தின. அறிவி கூடியதும் பலதுறை அறிவுடன் இணைந்தது தளம் தேவைப்பட்டது. அந்தத் தளமாக மார்க்சிய அறிஞர் பேராசிரியர் நா. வா. அதன் நாட்டம் கொண்ட பலரும் அவருக்கு உத சூலையில் தொடங்கியது. காலாண்டு இத எனக்கு 25 இதழ்களே கிடைத்தன. சுமார் இலக்கியம்-57, சமுதாயவியல், வரலாறு-3 இலக்கணம், மொழியியல்-10, தத்துவம்-10, போயிற்று. பிறகு, சில ஆண்டுகளுக்குப் பின் ஆகியோர் முயற்சியில் "ஆராய்ச்சி” இதழ்" வந்து கொண்டிருக்கிறது. "

முறுவதாக டார்வின் குறிப்பிட்டார். இவ்வாறே அறிவின் வளர்ச்சியும் விஞ்ஞானப் புரட்சி களினூடாக பரிணாமமுறுகிறது.
டார்வின் கூறியதுபோல, உயிரியின் பரிணாமம் எத்தகைய நோக்கங்களுமின்றி எவ்வாறு நடைபெறுகிறதோ, அவ்வாறே எத்தகைய இலக்கையும் நோக்கி விஞ்ஞான அறிவு நகர்ந்து செல்வதில்லை. சென்ற காலத்திலும் பார்க்க மனிதனின் அறிவு இன்று உண்மைக்கு அண்மித்துள்ளதென்று மட்டும் கூறலாமென்பது தோமஸ் கூனின்
நிலைப்பாடாகும்.
ண் ஆராய்ச்சி
(g6lu gJTüšá60u (Interdisciplinary approach) ம். "செந்தமிழ்" "செந்தமிழ்ச்செல்வி", "தமிழ்ப் "Tamilian Antiquary' (upg565u 335856ft 35LÖlp த முதலிடம் தந்து பலவாதப் பிரதிவாதங்களுக்கு ', "சரஸ்வதி", "சாந்தி" முதலிய இதழ்கள் துக்கு முன்னுரிமை நல்கின. "எழுத்து" "தீபம்" இலக்கிய விமர்சனம் வளரத் துணைபுரிந்தன.
தமிழகத்தில் நுழைந்த மொழியியல் படிப்பும்,
சமுதாயவியல், உளவியல் அறிவும் புதிய ாட்டார் வழக்காற்றியலும், இனக்குழு மக்கள் வ்கின. ஆய்வு நெறிமுறைகளில் மார்க்சீய தாடங்கியிருந்தது. ஜீவா, நா. வா., கைலாசபதி, ஆய்வுரைகள் மார்க்சீய அணுகுமுறையின் யல் வழிப்பட்டதும், சமுதாய உணர்வோடு மான ஓர் ஆய்வு முறையைச் செயல்படுத்தும் ஆராய்ச்சி” அமைந்தது. தமிழகம் நன்கறிந்த ஆசிரியரானார். உண்மையான அறிவாராய்ச்சியில் வினர். "ஆராய்ச்சி” தனது பயணத்தை 1969 ழ், 1982 வரை வெளிவந்ததாகத் தெரிகிறது. 2000 பக்கங்கள். அவற்றுள் 155 கட்டுரைகள், 7. மானிடவியல், நாட்டார் வழக்காற்றியல்-34, பொது-7, பேராசிரியரின் மறைவால் இதழ் நின்று சிவசுப்பிரமணியன், தோத்தாத்ரி, பொன்னீலன் ாவாவின் ஆராய்ச்சி" என்ற பெயரில் தற்போது
-இராம. சுந்தரம்("முற்போக்கு இலக்கியத்திறன்",
1995 என்னும் கட்டுரைத் தொகுதியிலிருந்து

Page 12
திருஞானசம்பந்த
பொது
திமிழகச் சைவமரபிலே மிகப்பிரபல்யமாக விளங்கியவர்களில் திருஞான சம்பந்தர் தேவாரமுதலிகளில் முதல்வராகப் போற்றப் படுகின்றார். இவர் கி. பி ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதியிலே வாழ்ந்தவள். பக்திச்சுவை பொருந்திய இசைப் பாடல்களினாலே சிவபெருமானை வழிபட்டுச் சிறப்புற்றவர். அவற்றின் மூலம் ஏனையவர்களும் இறைவனின் ஈடற்ற அன்பினையும், அருட் பிரவாகத்தினையும் உணர்ந்து ஆன்ம ஈடேற்றம் பெற வழிவகுத்தவர். அவருடைய வாழ்நாள் பதினாறேயாயினும் அவருடைய சமய ஆன்மீக, பண்பாட்டுப் பணிகள் அளவிடற்கரியன. அவள் ஓர் அபூர்வமான மேதாவி, அவர் அருளிச்செய்த தேவாரங்களில் இன்று சுமார் 4000 மட்டுமே (383 பதிகங்கள்) கிடைத்துள்ளன. ஏனையவை கால வெள்ளத்தால் அழிந்துவிட்டமை துரதிர்ஷ்டமே. எனினும் இவரின் தேவாரங் களிலே தமிழின் சிறப்பும், சிவபக்தியின் மேன்மையும் ஒன்றிணைந்தே காணப் படுகின்றன. இவர் வாழ்ந்த பல்லவர் . பாண்டியர் காலப் பக்திப்பாடல்களிலே நிலம் (தமிழகம்) இறைவன் (சிவன்), மொழி (தமிழ்),கலைகள் ஆகியன பிரிக்கமுடியாத வகையில் முரணின்றி ஒன்றிணைந்தே விளங்குகின்றன. இப்பாங்கிற்கு இவருடைய தேவாரங்கள் சிறந்த எடுத்துக்காட்டுக்கள். மேலும் இயல், இசை, நாடகமாகிய முத் தமிழிலும் வல்லுனரான இவர் "முத்தமிழ்விரகள்” எனவும் அழைக்கப்பட்டார். இறைவனை வழிபடுவதற்கான சிறந்த சாதனங்களாகக் கலைகளும் விளங்கி வந்துள்ளன. சிந்து சமவெளி நாகரிகம், குறிப்பாக இருக்கு வேதகாலம் தொடக்கம் இசையும், நடனமும் இறை வழிபாட்டிற்கான சாதனங்களாக விளங்கி வந்தமைக்கான சான்றுகள் பல உள்ளன. இச்சிறு கட்டுரையிலே திருஞான சம்பந்தரின் தேவாரங்களிலே பொதுவாகக் கலைகள்
8

ரும் கலைகளும்
சாமி
பற்றியும் சிறப்பாக, இசை, நடனம் பற்றியுமான சில கருத்துக்கள் எடுத்துக் கூறப்படும். திருஞான சம்பந்தர் இயல்பாகவே இசை, நடனம் ஆகியவற்றிலே மிக்க ஈடுபாடும், தேர்ச்சியுங் கொண்டிருந்தார். தாம் இயற்றிய தேவாரங்களைத் தாளத்திற்கேற்பப் பாடு தற்கான இறைவனிடமே தாளம் பெற்றார் என்று கூறப்படுகிறது. மேலும், சிறப்பாக இவருடைய தேவாரங்களைப் பண்ணிற்கேற்பத் திரு நீலகண்ட யாழ்ப்பாணரும், அவருடைய மனைவியாகிய மதங்கசூளாமணியும் யாழினை மீட்டு அவருக்குத் தொடர்ந்து உதவி செய்தனர். மேலும் "மாதர் மடப்பிடியும்” எனத் தொடங்கும் யாழ்முரித் திருப்பதிகத்தின் மூலம் திருப்பதிக இசை குறிப்பிட்ட இசை வாத்திய-இங்கு யாழ்-அளவிலடங்காது என்பதும் புலப்படுப்படுத்தப்பட்டுள்ளது. தேவாரங்களின் தொகை :-
இவர் அருளிச் செய்துள்ள தேவாரங்களில் 383 பதிகங்கள் கிடைத்துள்ளன. அவை 22 பண்களிலே அவ்வவற்றிற்கான கட்டளை களுடன் அமைந்துள்ளன. இவரின் தேவாரங்கள் சைவத்திருமுறைகளிலே முதலிடம் பெற்று முதல் மூன்றாக வகுக்கப்பட்டுள்ளன. இவை இயற்கை அழகுச் சிறப்புடன் சமய ஆன்மீக சிந்தனைகளும் கவிநயமும் கொண்டவை. 219 சிவத்தலங்கள் பற்றியவை.
தமிழ் :-
இத்திருப்பாடல்களிலே தமிழின் இனிமை, சிறப்பு, தெய்வத்தன்மை, செழுமை முதலி யனவும் ஆசிரியரின் திடமான தமிழ்ப் பற்றும் தெளிவாகப் புலப்படுகின்றன. எடுத்துக் காட்டுக்களாக “செந்தமிழ்: "அருந்தமிழ், "இன்தமிழ்", ஒண்டமிழ், "கலைமலிதமிழ்", "சங்கமலி செந்தமிழ்", "சந்தமலி செந்தமிழ்", "தண்டமிழ்", "ஞானத்தமிழ்", "திருநெறியதமிழ்" "நற்றமிழ்” “பண்ணாருந்தமிழ்”, “பண்ணுலாம்

Page 13
அருந்தமிழ்", "முடிவிலின் தமிழ்” போன்ற வற்றினைச் சுட்டிக்காட்டலாம். மேற்குறிப்பிட்ட சொற்றொடர்களிலே "கலைமலிதமிழ்”, "பண்ணுலாம் தமிழ்” போன்றவை கலைத் தொடர்புகளையும் சுட்டுவன. மேலும் சம்பந்தர் தம்மைப்பற்றிக்கூறும் பதிக முடிவுச் செய்யுட் களிலே (முத்திரைச் செய்யுட்களிலே) தமிழ் ஞானசம்பந்தன், தமிழ்விரகன் எனவும் தம்மைக் குறிப்பிடுவதிலிருந்தும் இவரின் தமிழ்ப் பற்றுத் தெளிவாகின்றது. இவரின் தமிழ்ப்பற்றுப் பற்றிக் கட்டுரையாசிரியர் எழுதியுள்ள தமிழும் தமிழரும் எனும் நூலிலும் பார்க்கலாம்.
கலைகள்:-
இவரது திருப்பதிகங்களில் கலைபற்றிய சில பொதுக்குறிப்புக்கள் வந்துள்ளன. "அகலமலிசகலகலை”, “ஆய்ந்தகலை", "எண்ணமர் பல்கலை”, “செழுநற்கலை”, "சுருதரிகள் பல நல முதற் கலை", "பாமருவுகலை, "மறைசேர் அருங்கலை” எனும் பலதிறப்பட்ட சிறப்புள்ள அடைமொழிகளுடன் கலை வந்துள்ளமை குறிப்பிடற்பாலது. மேலும் கலைகள் 64 என்பது “எட்டெட்டுக் கலைத் துறை, "கலையெட்டெட்டு" போன்ற குறிப்புக் களிலே புலப்படும். இவர் கலையினை குறிப் பிட்ட அறிவியலாக-சாஸ்திரமாகக் கருதினார் என்பது "கலைநூல்" "கலைமலிதமிழ்நூல்" “பல்கலைநூல்” போன்ற சொற்றொடர்களால் அறியப்படும். இறைவன் கலைவடிவினன்; கலையன் பன் என்பது கலை யவன் , கலையினன், "கலைநிலாவிய நாவினர்" போன்ற சொற்றொடர்களாலே நன்கு புலப்படும். இசை, நடனம் போன்ற கலைகளின் ஒலி (நாதம்) பற்றியும் அவள் கூறத் தவறிலர். எடுத்துக் காட்டாக "கலையினொலி மங்கையர் பாடலொலியாடல்” போன்ற தேவாரப் பகுதியினைக் குறிப்பிடலாம்.
இசை:-
தமிழகத்தில், இசையும், நடனமும், திருஞானசம்பந்தருக்கு முன் ஏற்கனவே நன்னிலையிலிருந்தன என்பது சங்கநூல் களாலும், சிலப்பதிகாரம், மணிமேகலை, காரைக்காலம்மையாரின் திருப்பாடல்கள்

முதலியவற்றாலும் அறியக் கூடியதாக உள்ளது. இசையென்னும் போது வாய்ப்பாட்டு மட்டுமன்றி வாத்திய இசையும் நன்கு கவனித் தற்பாலது. மேலும் இங்கு வாய்ப்பாட்டிசை எனும்போது பண்ணிசை தான் பெரிதும் கவனத்திற்குரியது. அக்காலகட்டத்திலே கர்நாடக இசை தோன்றவில்லை. தமது காலத்திலே வாய்ப்பாட்டிசை, இசைக்கருவிகள் பற்றிச் சம்பந்தருக்கு முற்பட்ட காரைக் காலம்மையார் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
அதாவது,
"துத்தம் க்ைகிளை விளரிதாரம்
உழை இளி ஓசை பண் கெழுமப்பாடி சச்சரி கொக்கரை தக்கையொடு
தகுனிதம் துந்துபி தாளம் வீணை மத்தளம், கண்டிகை, வன்கைமென்றோல்
தமருகங் குடமுழா மொத்தை வாசித்தத்தனை விரவினோடாடும் எங்கள்
-அப்பன் இடந்திரு ஆலங்காடே." (திருவாலங்காட்டு மூத்ததிருப்பதிகம் 1- 9)
என்பதாம்.
இதிலே முதல் வரியிலே ஏழு சுரங்கள் பற்றியும் கூறப்பட்டுள்ளன. திருஞான சம்பந்தருடைய தேவாரங்களிலே மேற் குறிப்பிட்ட இசைக்கருவிகளில் ஒரு தொகுதி பற்றிய குறிப்புகள் வந்துள்ளன. இவ்விசைக் கருவிகள் அக்காலத்திலே பண்ணிசைக்கே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வந்தன. எடுத்துக்காட்டுகளாக "பண்ணில் யாழ்", "பண்ணமர வீணை", "பண்ணுலாம் பாடல் வீணை", பாடல்வீணை, முழவம் குழல், மொந்தை பண்ணாகவே" முதலியன சம்பந்தர் தேவாரங்களிலே வந்துள்ளமையினைக் குறிப்பிடலாம்.
பழந் தமிழர் இசையாகவே, பணி சங்ககாலம் தொட்டு நிலவி வந்துள்ளது. ஐவகை நிலங்களுக்குமுரிய உலகியல் இசையாகவே பெரிதும் விளங்கிப்பின் "திருநெறிய தெய்வீக இசையாக” மலர்ச்சி பெற்றது. ஏற்கனவே குறிப்பிட்டவாறு இவற்றுக்கான கட்டளையும் கவனிக்க வேண்டியவை. சம்பந்தர் பல்வேறு பண்களையும் பயன்படுத்தியுள்ளார். நட்டபாடை
9

Page 14
(22), தக்கராகம் (24), பழந்தக்கராகம் (16), தக்கேசி (12), குறிஞ்சி (29), வியாழக்குறிஞ்சி (25), மேகராகக்குறிஞ்சி (07), யாழ்முரி (01), இந்தளம் (39), சீகாமரம் (14), காந்தாரம் (29), பியந்தைக்காந்தாரம் (14), நட்டராகம் (16), செவ்வழி (10), காந்தாரபஞ்சமம் (23), கொல்லி (18), கொல்லிக்கெளவானம் (01), கெளசிகம் (13), பஞ்சமம் (11), சாதாரி (33), பழம் பஞ்சுரம் (08), புறநீர்மை (06), அந்தாளிக்குறிஞ்சி (01) முதலிய 22 பண்களைப் பயன்படுத்தித் தமிழையும், இசையையும் வளம் படுத்தியுள்ளார். இவற்றுள்ளே, இந்தளம், சாதாரி, குறிஞ்சி, காந்தாரம், வியாழக்குறிஞ்சி, தக்கராகம், காந்தார பஞ்சமம், நட்டபாடை ஆகியன கூடுதலாகவும், யாழ்முரி, கொல்லிக் கெளவாணம், அந்தாளிக் குறிஞ்சி, ஆகியன மிகக்குறைவாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளன. யாழ்முரிப்பண்பற்றிய மரபுவழிக் கதை யினையும் அதில் அமைந்துள்ள தேவாரத் தொகையினையும் நோக்கும்போது அது ஒரு பரிசோதனை முறையிலான புதிய பண்போலக் காணப்படுகிறது.
இறைவன், பாடலிலும் ஆடலிலும் மிகப் பற்றுள்ளவன். அதேவேளையில் தானே கலைகளின் வடிவமாகவும், இலக்காகவும் பேராசானாகவும் விளங்குகின்றான். ஆடலும், பாடலும் சில இடங்களில் ஒன்று சேர்த்தும் வேறு சில இடங்களிலே தனித்தனியாகவும் கூறப்பட்டுள்ளன. இசை பற்றிய சில தனியான குறிப்புக்களுக்கு ஸ்டுத்துக்காட்டுக்களாக, "இசை கூடும் வகைபாடுவார்", இசை கூறவந்தவணம் ஏத்துமவர்" "இசைபாடலின் நவில்பவர்", "இசை பத்திமையாற்பாடுதலும்", "ஏழிசை", "ஏழின்னிசை, "இசையொடு பாடல், "இசைவல்ல்ார்”, “கீதத்தை மிகப்பாடும் அடியார்கள்" "செந்தமிழ்க்கிதம், "தமிழின்னிசை, பல்லிசை, தொண்டர் இசைபாடியும் முதலியனவற்றினைக் குறிப்பிடலாம். இங்கு இசை ஒரு செந்நெறிக் கலையாக, இனிய தமிழிசையாக, இறைவழிபாட்டிற்கான சாதன மாகக் குறிப்பிடப்படுகிறது.
O

வாத்திய இசை பற்றிய சில குறிப்புகளை "இசை கொள் கருவி", "இசையாழி", "இசைவீணை", "கீதமுனிசைதரக்கிளரும் வீணை", "ஒலிமல்கு வீணை", கூடரவமொந்தை குழல் “யாழ் முழவினோடும் இசை செய்ய', "பண்ணுலாம் பாடல் வீணை", குழல், யாழ் முரலத் துன்னிய இசை”, “மொந்தை பண்ணாகவே" முதலியவற்றிலே காணலாம். வாய்ப்பாட்டிற்குப் பொருத்தமான இசைக்கருவிகள் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன.
ஆடலும் பாடலும்
"பாடலொடாலறாத வண்ணத்தார்", "சொக்கமதாடியும் பாடியும்", "பண்ணிசை பாடநின்றாடினானும், "பண்ணிலாவிய பாடலோடாடலர்", "பண்ணின்மிசை நின்று பல பாணிபட" ஆடவலபான்மதியினான்" முதலிய குறிப்புகளிலே பாடலும், ஆடலும் ஒருமித்துக் கூறப்பட்டுள்ளன. இதிற் கூறப்படும் ஆடல் பண்ணிசைக்கேற்ப அமைந்துள்ளது. அக்கால பரதத்திற்கான சாஹித்தியங்களிலே தேவாரம் சிறப்பிடம் பெற்றிருந்தமையும் இவற்றாலே தெளிவாகின்றது. மேலும் பணிணிசையின் சிறப்பும் , வளமும் புலனாகின்றன.
ஆடலும், பாடலும் இறைவழிபாட்டிற்கு இன்றியமையாத சாதனங்களாக கோவில் களிலே நடைபெறும் நித்திய, நைமித்தியக் கிரியைகளிலே பாடுதற்கும் ஆடுதற்கும் தேவரடியார்கள் நியமிக்கப்பட்டனர். இவர் களுக்கு அரசர் நிலமானியங்களும், பிற உதவிகளும் செய்து வந்தனர். இவ்வாறு இசைக்கும், நடனத்திற்கும், தம்மை அர்ப்பணித்துவந்த கலைஞர் கூட்டத்தினைக் காணலாம். திருஞான சம்பந்தரும் இவர்களைப் பற்றித் தேவாரங்களிலே "வலம் வந்த மடவார்கள் நடமாட முழவதிர" என்றும், "கலையினொலி மங்கையர்பாடல் ஒலிஆடல்" எனவும், குறிப்பிட்டுள்ளார்.
ஆடல்
மேலும் சிறப்பாகச் சிவபிரானின் நடனக்
கோலங்கள் பலவாறு அழகாகப் பல இடங்களில் இடம்பெற்றுள்ளன. இவற்றுடன்

Page 15
நடன நுணுக்கங்கள் அழகியல் அம்சங்கள் ஆடலின் நோக்கங்கள், சிவனின் நடனம் இடம்பெறும் இடங்கள் முதலியனவும் குறிப்பிடப்பட்டுள்ளன. இறைவனின் ஆடல் திறன், ஆடல் நுட்ப அறிவு ஆகியனவும் சில இடங்களிலே இறைவன் ஆடிய (108) கரணங்கள் பற்றிய குறிப்பும் உள்ளன. இவ்வகையில், "ஆடினைக்கரணம்” எனும் சொற்றொடர் குறிப்பிடற்பபாலது. மேலும் சிவபிரான் ஆடிய சிறப்பான நடனங்களில் சொக்கம், பாண்டரங்கம், (பண்டரங்கம்) பற்றிய குறிப்புகள் உள்ளன. எடுத்துக்காட்டுக்களாக "சொக்கமதாடியும் பாடியும்” “பண்டரங்கள்” போன்றவற்றினைச் சுட்டிக்காட்டலாம். இந் நடனங்கள் பற்றிய குறிப்புகள் ஏற்கனவே சிலப்பதிகாரம் மாதவியின் நடனங்கள் பற்றிக் கூறுவதிலே வந்துள்ளன.
இறைவன் மிகச் சிறந்த பெரிய நடனக்காரனாக, நடராஜனாக வருணிக்கப் படுகிறார். எடுத்துக்காட்டுகளாக, "ஒப்பில் மாநடனமாடவல்ல விகிர்தத்துருக் கொள் விமலன்”, “அருநடமாடினார் உலகிடை, "ஆடலார் மாநடத்தீர்", நீடுமாநடமாடி விருப்பனே", "மாநடனமதாடி" மாநடம் ஆடும் வித்தகனார்” போன்றவற்றினைக் குறிப்பிடலாம்.
தலைசிறந்த நடனக்காரராகிய சிவபெரு மானின் நடனவிருப்பம், நடனத்திறன் அழகியல், முதலியவும் கூறப்படுகின்றன. "ஆடல் நெறிநின்றான்”, “ஆடல் (பாடல்) பேணrை, கொட்டிசைந்த ஆடல்", "நட்டம் பயின்றாடும் நல்லூர்ப்பெருமானை", "நடம் பயில்கின்ற நம்பன்", "ஆடல் பேணி" போன்றவை இறைவனின் திருநடம் தக்கவாறு சாஸ்திரரீதி யானவை என்பதை நன்கு சுட்டிக்காட்டுவன. அக்கால நடனக்கலை எந்தளவிற்கு சாஸ்திர ரீதியானது என்பது வெள்ளிடைமலை,
இறைவனின் நடனத்திலிடம் பெறும் அழகியல் அம்சங்கள் "அண்ணலார் ஆடுகின்ற அலங்காரமே", "நடகுறையா அழகன்", "கணம் ஏத்த ஆடிய அழகன்" போன்றவற்றினாலும், நடனத்தில் இவருக்குரிய விருப்பத்தினை "நீடுமா நடனமாடவிருப்பனே”“ஆடலையுகந்த எம்மடிகள்”, “ஆடலையுகந்த" மன்னு

மாநடமாடியுகப்பன்", "நடனமாடியுகப்பன்” "கூத்தாடுங் குணமுடையோன்” போன்ற வற்றினாலும் அறியலாம்.
நடனத்திலிடம் பெறும் சில நுட்பத்திறன், நுட்பவியல்களை, "அடிவிண்னொடு மண்ணு மெல்லாம் புடைபட ஆடவல்லான்”, “ஆடலிலை யம் உடையார், நடஞ்செய்நாதத் தொலியர்”, “சரியின் முன்கை நன்மாதர் சதிபட நடமாடி", சீரோடும் பாடலாடல் இலயஞ்சிதையாத கொள்கை” "நடம் சதிவழிவருதொர் சதிருடையீர்", "ஒத்தறமிதித்து நட்டமிட்ட ஒருவர்” போன்றவற்றிலே காணலாம். லயம், "சதி, சதிர் முதலிய பதங்கள் இங்கு நன்கு ஆராயத்தக்கவை. குறிப்பாக சதிர் எனும் பதம் இங்கு வந்துள்ளமை உற்று நோக்கற்பாலது. இது பிறமொழிச் சொல் என அறிஞர்களிலொரு சாரார் வாதித்து வருவது மீளாய் விற்குரியதாகும். இதுபற்றிக் கட்டுரையாசிரியர் விரிவாக எழுதவுள்ளார்.
சிவபிரானின் நடனம் குறிப்பிட்ட நோக்கத்தினைக் கொண்டதாகும். ஆடலின் கருத்தினையும் காரணத்தினையும் இறைவனை உணர்ந்தவரே நன்கு புரிந்து கொள்வர். இதனை "ஆடும் எனவும் . கேட்டிராகில் நாடுந்திறத்தார்க்கருனல்லது நாட்டலாமே” "ஆடும் திறமே தெரிந்துணர்வர்”, “காந்தளாரும் விரலேழையோடாடிய காரணம் ஆய்ந்து கொண்டாங்கறிய நிறைந்தாராவரார் கொலோ" போன்றவற்றினாலே சுட்டிக் காட்டலாம்.
அவர் என்றும் ஆடிக் கொண்டிருப்ப வராயினும் குறிப்பாக அந்தி, சந்தி, நள்ளிரவு, பகல் என பலகால நேரங்களில் ஆடுவதைச் சம்பந்தர் குறிப்பிடுகிறார். அவர் ஆடுமிடம் சுடுகாடு மட்டுமன்றி, வேறிடங்களுமாகும். அவர் தம் சக்தியாகிய பார்வதி காண ஆடுகிறார். பூதங்கள் புடைசூழவும் ஆடுகிறார். அவர் ஆடும் போது அவர் அணிந்திருக்கும் பாம்புகளும் அசைகின்றன. அவருடைய திருநடனம் பற்றிய பல்வேறு விபரங்களும் சம்பந்தரின் தேவாரப்பதிகங்களிலே விரவி வந்துள்ளன.
11

Page 16
மேலும் தேவரடியார்கள் கோவில்களின் உள்ளே மட்டுமன்றித் தேரோடும் வீதிகளிலும் ஆடிவந்தனர் என்பது, "காரோடிவிசும்பளந்து கடிநாறும் பொழிலணைந்த கமழ்தார்வீதித், தேரோடும் அரக்கேறிச் சேயிழையார் நடம் பயிலும் திருவையாறே" போன்ற குறிப்புக் களாலும் அறியப்படுகின்றது.
இறைவனின் ஆடல் பண்ணார்ந்த பாடல்களுக்கு மட்டுமன்றி வேதங்கள் கூறும் பொருளுக்கு ஏற்பவும் அமைந்துள்ளது ன்னபது “ஆடினார் கானகத்தரு மறையின் பொருள்” என்பதாலும் புலப்படும். சம்பந்தர் தமிழிலுள்ள சைவமரபுகளில் மட்டுமன்றி வேதங்கள் கூறும் மரபுகளிலும் நன்கு தோய்ந்தவர் என்பது அவருடைய தேவாரங்கள் காட்டும் அகச்சான்று களாலும் நன்கு புலப்படும். கூத்து எனும் பதத்திலும் பார்க்க ஆடல், நடனம் ஆகிய பதங்களையே கூடுதலாக இவர் பயன் படுத்தியுள்ளார்.
நாடகம்:
நாடகம் பற்றிய சிலகுறிப்புகளும் இவரின் பதிகங்களிலே வந்துள்ளன. நாடகம் எனும் பதம் நடனத்தையும் குறிக்குமாயினும் இதனை
உசாத்து
* திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச் செய்த
* சிங்காரவேலன் சொ., திருஞானசம்பந்தவரலாற்
* செங்கல்வராயபிள்ளை வ. சு., தேவாரஒளி ெ
* சிவசாமி வி. தமிழும் தமிழரும் (விரைவில் (
தேவாரங்கள்
திருஞானசம்பந்தரின் தேவாரங்கள், திருப்பதிகங்
வேறுபட்டும் காணப்படுகிறது.
12

இங்கு ஒரு தனிப்பட்ட கலை வடிவமாகக் கொள்ளலாம். மேலும் பழைய காலத்தில் நாடகம் முற்றிலுமோ அல்லது பகுதியாகவோ ஆடப்பட்டும் வந்துள்ளது என்பதும் ஈண்டு மனங் கொள்ளற்பாலது. எடுத்துக்காட்டாக, நாடகமாக ஆடிமடவார்கள் பாடும் நறையூர்", "நாடகமாடுநர் நள்ளாறுடைய நம் பெருமான்” போன்றவற்றினைக் குறிப்பிடலாம்.
எனவே, திருஞானசம்பந்தரின் தேவாரப் பதிகங்கள் தரும் சான்றுகளை நன்கு கூர்ந்து நோக்கும் போது, அவருக்குக் கலைகளிலே குறிப்பாக இசை, நடனமாகியவற்றிலிருந்த மிக்க ஈடுபாடும், தேர்ச்சியும் நன்கு புலப்படும். முன்னர் குறிப்பிட்டவாறு, அவர் ஒரு பால மேதாவியே. அவருடைய இசை, நடன அறிவு மிகவும் அபாரமானது. ஏற்கனவே இவருக்கு முன்னர் சங்க இலக்கிய நூல்களிலும், சிலப்பதிகாரம், மணிமேகலை, காரைக் காலம்மையார் திருப்பாடல்கள் ஆகியவற்றிலும் தமிழக இசை, நடனமரபுகள் நன்கு நிலவினாலும் இவருடைய தேவாரங்களிலே தான் இவை மேலும் நன்கு மலர்ச்சி பெற்றுத் "திருநெறிய தெய்வீக" இசை, நடனமாக மேலும் நன்கு மிளிரலாயின எனலாம்.
ሻ)96ዐ0LÍ :
தேவாரப் பதிகங்கள் - பூரீவைகுண்டம், 1961.
ற்றாராய்ச்சியும் தேவாரத்திறனாய்வும். -
திருநெல்வேலி, 1969. நறி (சம்பந்தர்) சென்னை, 1963
வெளிவரவுள்ளது)
களின் தொகை சில பதிப்புகளிலே சிறிது

Page 17
தமிழின் இரண்ட கார்த்திகே
திருமுறைத் தொகுப்புக்கு
நூற்றாண்டுக்குரியனவும இலக்கியங்கள் சிலபற்றிய
இந்திய வட்டத்தினு: குறிப்பிட்ட ஒரு மக்கட் கூட்டத்தினரால், தொடர்ந்தும் தாய்மொழியாகப் பேசப்பட்டு வரும் மொழிகளுள் தமிழே மிகத் தொன்மையானதும் தனக்கேயுரிய இலக்கியப் பண்புகளை உடையதுமாகும். இத்தன்மை காரணமாக இந்த மொழி தரும் இலக்கிய அனுபவமி, மக்களின் வாழ்க்கை உணர்ச் சித் தளத்திலிருந்து விடுபடாத தொடர்ச்சியைப் பேணி வருவதாக உள்ளது. இத்தகைய அனுபவ நிலைப்பாடு காரணமாகவே இந்தியாவினுள் முதல் தடவையாக பக்தி எனும் அனுபவத்தை, முதன் முதலில் தாய்மொழி அனுபவமாக வெளிக்கொணர முடிந்தது (ராமானுஜன் 1980). இதன் காரணமாகத் தமிழ் அனைத்திந்தியப் பண்பாட்டுக்கு ஒரு முக்கிய பங்களிப்பினைச் செய்துள்ளது.
இந்த பக்தி இலக்கியத்தினை நாம் தேவாரம், திருவாசகம், (சைவநாயன்மார்கள்) திருப்பாசுரம் (வைஷ்ணவ ஆழ்வார்கள்) ஆகியனவற்றிலே காணலாம். இவற்றின் அடித் தளமாக அமைவது கடவுளை உணர்ச்சிபூர்வமாக வழிபடும் முறைமையாகும்.
'மனிதர்கள். தாம் தெய்வமெனக் கொள்வது சம்பந்தமாகத் தமது தனித்த ஏகாந்தநிலையில் கொள்ளும் உணர்ச்சிகள், நடவடிக்கைகள், அனுபவங்கள் தான் மதம்' எனின் (வில்லியம் ஜேம்ஸ்), அந்தத் தெய்வத்துடன் தாம் கொண்ட உறவை ஆள்நிலை (Personalise) ப்படுத்தி - இணைப்புறுத்திக் கொள்ளும் பொழுது "பக்தி” தோன்றுகிறது எனலாம். (பக்தி-பஜ்இணைத்துக்கொள்ளல்)

ாவது பக்தி யுகம்
சு சிவத்தம்பி
குப் பிந்தியனவும் 15-16ம்
ன சைவமரபுப் பக்தி
ஓர் அறிமுக ஆய்வு.
இப்பக்தியுணர்வு மனதைக் கவர்வதற்கும், உணர்விறுக்கத்தை ஏற்படுத்துவதற்கும்
காரணம், அந்த ஆள்நிலைப்பாடு சமூக
நிலை நிற்பதாகும். அதாவது மனித உணர்வுகள் என்பன மனிதர்களின் சமூக உறவுகளின் அடியாகவே எழுகின்றன. குறிப்பிட்ட சமூக உறவுகளுக்குள்ள பண்பாட்டுவலு, அச்சமூக உறவுகள் பற்றிப் பேசப்படும் பொழுது வெளிவரும். இந்தச் சமூக உறவுகளுக்கு அற, பண்பாட்டு அங்கீகாரம் உண்டு. இதனால் அந்த உறவுகள் சொல்வழியாகப் புலப்படும் பொழுது அவை மனதைக் கவள்வனவாகவும், கேட்போரும் அந்த நிலைக்குத் தம்மை இயைபுபடுத்திப்
பார்ப்பதற்கு உதவுவன வாகவும் அமை
கின்றன. தமிழ்ப் பக்தி இலக்கியங்கள் இப்பண்பை மிக உன்னதமாக எடுத்துக்காட்டி நிற்கின்றன.
. தமிழில் இச்சொல்வழி வெளிப்பாடு முதன் முதலில் 5ம், 6ம் நூற்றாண்டுகளில் தோன்றியது. இதன் பின்னர் 9ம், 10ம் நூற்றாண்டு வரையுள்ள நான்கு, ஐந்து நூற்றாண்டு இடைவெளிக்குள் இது முக்கியத்துவம் மிக்க ஒரு வெளிப்பாட்டு முறையாகத் தன்னை நிறுவிக்கொண்டது. ஆகவே இதற்கு முற்பட்ட காலத்தில் பக்தி இலக்கியம், வரன்முறையான இலக்கிய வெளிப்பாடாகக் கருதப்படவில்லை. பிற்பட்ட காலத்தில் பக்தி இலக்கியத்தை பல்லவர், சோழர் காலப் பிரிவுகளுக்குரியனவாக எடுத்துக் கொள்ளும் வழக்கு ஏற்பட்டது. எவ்வித மிருப்பினும் இப்பொழுது பக்தி இலக்கியமென நாம் கொள்ளும் இலக்கியத் தொகுதி, அது தோன்றிய காலத்தில் அங்கீகாரம் உடையதாக இருக்கவில்லை. சங்ககாலத்தில் தோன்றிய
13

Page 18
இலக்கியங்களை அடிப்படையாகக் கொண்ட அகத்துறை இலக்கியப் பாரம்பரியம் ஒன்று வளர்ச்சி பெற்றது. இப்பாரம்பரியத்துடன் பக்திமரபை இணைப்பதற்கான முயற்சி, திருக்கோவை யாரிலும் திருக்கைலாய ஞான உலாவிலும் காணப்படுவதை நோக்குதல் வேண்டும். தமிழ் இலக்கியத்தில் அகத்திணை, புறத்திணை மரபுகளின் தொழிற்பாட்டை நாம் காணலாம். குறிப்பாக, புறத்திணை மரபின் மேலாண்மையான செல்வாக்குத் தெரிகிறது. இருந்தபோதும் அவற்றை வரன்முறையான இலக்கிய மரபுடன் இணைத்து நோக்கும் முறைமை காணப்பட வில்லை என்றே கூறவேண்டும்.
தேவாரம் , திருப்பாசுரம் குறிப்பாகத் தேவாரம் - தொகுக்கப்பட்டமைக்கான காரணத்தை நாம் கோயில் நிர்வாகத் தேவை களோடு தொடர்புடைய ஒன்றாகவே கவனித்தல் வேண்டும். முதலில் தேவாரங்களே தொகுக்கப் பெற்றுப் பின்னரே மற்றையவை திருமுறைத் தொகுதிக்குள்ளே கொண்டு வரப்பட்டிருத்தல் வேண்டும். கோயிலில் திருப்பதிகம் பாடும் மரபு நிலவிவந்துள்ளது. சுந்தரர் காலம் முதலே சைவ எழுச்சியின் வளர்ச்சியைத் தொகுத்துப் பார்க்கும் மரபும், (திருத்தொண்டத் தொகை) தேவையும் ஏற்பட்டுவிட்டன எனலாம். தொகுக்கப்பட்ட பாடல்கள் கோயில்களிற் சடங்காசாரமாகப் பாடப்பட்டவையாகவே இருத்தல் வேண்டும்.
இந்தத் "தொகை” மரபு பெருங்கோயிற் பண்பாட்டின் உச்சக்கட்டமாகிய பிற்காலச் சோழராட்சிக் காலத்துடன் -பெரியபுராணம் எழுதப்படுவதுடன் நிறைவெய்துகிறது. பெரிய புராணம் அடியார் வழிபாட்டை நிலை நிறுத்துகின்றது.
"பக்தி இலக்கியம்" என்ற தொடர் கொண்டு அதற்குப் பின்வரும் பாடல்களைச் சுட்டும் மரபு இல்லையென்னும் அளவுக்குக் குறைந்தே காணப்படுகின்றது எனலாம். இதனால் பக்தி என்று குறிப்பிடப்பெறும் தெய்வவழிபாட்டு முறைமை காரணமாக திருமுறைத் தொகுப் புக்குப் பின்னர் தோன்றிய இலக்கியங்கள்,
14

கி.பி. 700-900க் காலத்தில் தோன்றிய பக்தி இலக்கியங்களுடன் எவ்வாறு ஒன்றுபட்டும், வேறுபட்டும் நிற்கின்றன என்பதை ஆய்வு முறையாகப் பார்க்காது விட்டுவிடுகின்ற பண்பாட்டு நிர்ப்பந்தம் ஒன்று நம்மிடையே நிலவுகின்றது என்பது உண்மையே.
இவ்வாய்வு முயற்சி கி. பி. 700-900க்குப் பின்னர் தோன்றியனவும் நமது மத-இலக்கியப் பண்பாட்டு மரபில் முக்கியம் வகிப்பனவும் முதலிற்றோன்றிய பக்தி இலக்கியங்களிருந்து பின்புலத்திலும், வெளிப்பாட்டு முறையிலும் வேறுபட்டு நிற்பனவுமான சில பக்தி இலக்கியங்களின் இலக்கிய இயல்புகளை ஓரளவேனும் கண்டறிந்து கொள்வதை நோக்கமாகக் கொண்டது.
இத்தகைய ஒரு நோக்கு, தமிழின் பக்தி இலக்கியங்கள் இன்று பெறும் சர்வதேசப் புலமைச் சிரத்தை காரணமாக அவசிய மாகின்றது. மத அனுபவங்களின் இலக்கியச் சித்தரிப்புக்கள் என்ற அடிப்படையிலும், பக்தி இலக்கிய மரபின் எடுத்துக்காட்டுக்கள் என்ற வகையிலும் தமிழின் பக்தி இலக்கியங்களின் மரபு பற்றிய நுண்ணாய்வுகள் பல குறிப்பாக அமெரிக்காவில் மேற்கொள்ளப்படுகின்றன. ஜோஜ் ஹாற் நோமன் கற்லர், காமில் ஸ்வெலபில், கிளென்யோக்கம் டேவிட் ஷால்மன், கதறின் யங், வசுதா நாராயணன், இந்திரா பீற்றர்சன் முதலிய ஆய்வாளர்கள் இத்துறையில் இன்று முக்கிய பங்களிப் புக்களைச் செய்துள்ளனர்.
கி.பி. 5-18ம் நூற்றாண்டுக் காலப்பகுதியைச் சேர்ந்த நான்கு முக்கிய பக்தியாளர்களின் ஆக்கங்களையும், பெயர் தெரியாத இருவரது ஆக்கங்களையும் மையமாகக் கொண்டு இக்கால கட்டத்திலே தோன்றிய பக்தி இலக்கியப் பண்பை விளக்க முனைகின்றேன்.
இவ்வாய்வில் அருணகிரிநாதர் (15ம் நூற்றாண்டு) , குமரகுருபரர் (17ம் நூற்றாண்டு), அபிராமிபட்டர் (18ம் நூற்றாண்டு), தாயுமானவர் (18ம் நூற்றாண்டு) முதலிய பக்தியாளர்களின் ஆக்கங்களையும் நடராஜப்பத்து காமாட்சி யம்மை விருத்தம் ஆகிய பாடல்களையும் எடுத்துக்காட்டாகக் கொள்ளவுள்ளேன்.

Page 19
திருமுறைத்தொகுப்பின் பின்னர் வரும் மேற்கூறிய பக்தி இலக்கிய மரபு பற்றி ஆராயப் புகுமுன் , இரு விடயங்கள் தெளிவுபடுத்தப்படல் அவசியம். முதலாவது திருமுறைத்தொகுப்பினுள் பாடல்களுட் காணப் படும் வரலாற்று நிலைப்பட்ட கட்டங்கள் பற்றியதாகும். இரண்டாவது பக்தி இலக்கி யங்கள் படிப்படியாகப் பெறும் இலக்கியமயப் UTB (literariness) (g5b.
பன்னிரண்டு திருமுறைகளில் வரும் பாடல்களையும் வரலாற்று நோக்கிற் பார்க்கும் பொழுது அவற்றினுTடே காணப்படும் பக்திநிலை வேறுபாடுகளை அவதானித்துக் கொள்ளல் முக்கியமாகும். காலச்சூழல் பக்தியுணர்வின் தன்மை ஆகியனவற்றைக் கொண்டு நோக்கும் பொழுது சைவபக்தி இலக்கியத்திலே கீழே சுட்டப்பெறும் கட்டங்கள் வகுக்கப்பட்டலாம். முதற்கட்டம் காரைக்காலம்மையர் இரண்டாம் கட்டம் சம்பந்தர், அப்பர் மூன்றாம் கட்டம் சுந்தரர் நான்காம் கட்டம் மாணிக்கவாசகர்
ஐந்தாம் கட்டம் திருவிசைப்பா
இந்தப் போக்கினை நிறைவுபடுத்துவதாகப் பெரியபுராணம் அமைகின்றது. சுந்தரர் காலத்திலே தொடங்கும் பக்தி இயக்க வரலாற்றுணர்வு (திருத்தொண்டத்தொகை) பெரியபுராணத்திலே நிறைவு செய்யப்படு கின்றது. மேலும் இதனை முற்றிலும் ஒரு இலக்கிய வரன்முறையாக நோக்காது கோயில் வழிபாட்டு மரபுகளுடன் இணைத்து நோக்கி அடியார் வணக்கம் எவ்வாறு கோயில்களில் அறுபத்து மூவர் வணக்கத்துடன் இணைந் துள்ளது என்பதையும் நோக்கல் வேண்டும்.
காரைக்காலம்மையாருக்கு முந்தியதும் பரிபாடலிற் சுட்டப் பெறுவதுமான பக்தி இலக்கிய வெளிப்பாடு பற்றி இக்கட்டத்தில் அவதானித்தல் அவசியமாகும். பரிபாடலில் வரும் பாடல்களை நோக்கும் பொழுது நாம் அவதானிக்கும் முதற்பண்பு காரைக்காலம்மை யார் முதல் நாம் காணும் தன்மை நிலைப்

பக்தியுணர்வு வெளிப்பாடு காணப்படாது குழுமநிலை வெளிப்பாடாகவே காணப்படு கின்றமையாகும். அதாவது பலர் சேர்ந்து நின்று வழிபாட்டில் ஈடுபடும் ஒரு நிலைப்பாட்டை அவதானிக்கலாம்.
2. --th ; usurLs -5
SCLCCLCCSLCCLSLLLLLLSLLSL LLSL0LL0LLLL0Lயா ஆம் இரப்பதை பொன்னும் பொருளும் போகமும் அல்ல
நின்பால் அருளும் அன்பும் அறனும் மூன்றும் உருளிணர்க்கடம் பின் ஒலி தாராயோ
பரி - 17
மணிநிற மஞ்சை ஓங்கிய புட்கொடிப் பிணிமுகம் ஊர்த்த வெல்போர் இறைவ! பணியொரீஇ நின்புகழ் ஏத்தி அணிநெடுக்குன்றம் பாடுதும். தொழுதும் அவை யாவும் எம் சுற்றமும் பரவுதும் ஏமவைகல் பெறுக யாம் என்றே.
இங்கு வழிபாடு குழும நிலைப்படவுள்ள தாகவே காணப்படுகின்றது. வழிபாட்டுத் தலங்களைப் புகழ்ந்து பாடும் மரபினைப் பரிபாடல் 8, 11, 16, 18 ஆகிய பாடல்களிற் காணலாம்.
இதனாலேயே காமில் ஸ்வெலபில் போன்ற அறிஞர்கள் பக்தி இலக்கியத்தின் தொடக் கத்தைப் பரிபாடல், திருமுருகாற்றுப் படையிற் காண்பர். வையை பற்றிய பாடல்கள் உண்மையில் ஆற்று வழிபாட்டினடியாகவே தோன்றியிருத்தல் வேண்டுமென்பதும் அவற்றை அகத்திணை மரபுக்குரியனவாகக் கொள்ளக் கூடாதென்பதும் ஏற்கனவே வலியுறுத்தப் பட்டுள்ளது (சிவத்தம்பி. 1981).
பரிபாடல் தரும் தகவல்களை அடிப்படை யாகக் கொண்டு மேற்கூறிய பக்தி இலக்கியங்களை மீள நோக்கும் பொழுது குழுமநிலை வழிபாட்டிலிருந்து படிப்படியாகத் தனியொருவரின் தன்மைநிலை வெளிப்பாடு மேற்கிளம்புவதை நாம் அவதானிக்கலாம்.
பக்தி இலக்கியங்களின் படிப்படியான
15

Page 20
இலக்கிய மயப்பாடு பற்றி நோக்குதல் அவசியமாகிறது. தனிமனிதத் தன்மை நிலை வெளிப்பாடாக தேவாரத்திருவாசகங்கள் பெரும்பாலும் அமைய அவற்றைத் தொடர்ந்து வரும் பாடல்கள் பலவற்றில் தன்மை நிலைக்கு முக்கியத்துவம் கொடுப்பதிலும் பார்க்க இலக்கியமயவாக்க நடைமுறைகளுக்குமி, உத்திகளுக்கும் அதிக இடம்கொடுக்கும் ஒரு நிலையை நாம் அவதானித்தல் வேண்டும். பதினோராம் திருமுறையில் வரும் பாடல்கள் சிலவற்றை நோக்கும் பொழுது இவ்வுண்மை புலப்படும்.
திருவாரூர் மும்மணிக்கோவை
திருக்கைலாய ஞானஉலா
கார் எட்டு
திருக்கண்ணப்பதேவர் திருமறம்
போன்ற படைப்புக்களை நோக்கும்.
பொழுது அவை, தேவாரங்கள் போன்றோ காரைக்காலம்மையார் பாடல்கள் போன்றே தன்மை நிலை வெளிப்பாடுகளாகக் காணப் படாமல், இலக்கிய மரபில் வரும் சில மரபு களை அமைப்பு ரீதியாக மேற்கொள்ளும் தன்மையினைக் காணலாம்.
இக்கட்டத்தில் தேவார, திருவாசகங் களிலும், திருப்பாசுரங்களிலும் காணப்படும் நாயகன்-நாயகி பாவப் பாடல்களைப் பற்றி ஒரு குறிப்பினைக் கூறல்வேண்டும். அப்பாடல் களில், அம்மனோநிலை ஏற்கப்படல் தன்மை நிலை வெளிப்பாட்டை மேலும் உணர்ச்சி பூர்வமானதாக்குவதற்கேயாகும். அவை மற்றொருவரின் ஆளுமையிற் புகுந்து கற்பனையாக அவரின் அனுபவத்தை அனுபவித்தல்’ எனும் p. 67 6su u 6ů (typ 6DDB 60) u u lë (empathy) சார்ந்ததாகும். முன்பு உதாரணந்தரப்பட்ட பாடல்கள் அவற்றுக்கு மேலே போய் இலக்கியத்தின் உருவ, உள்ளடக்க மரபுகளை மனங்கொண்டு விதிமுறையாக, வடிவ உணர்ச்சி மேலோங்கி நிற்க எழுதப் பெற்றவை யாகும்.
இந்த இலக்கிய மயப்பாடு படிப்படியாக மேற்கிளம்புவது தவிர்க்க முடியாத ஒன்றாகும். ஆரம்ப காலத்திலிருந்தது போல பக்திப்
16

பாடல்கள் இசை நிலைப்பட்ட பாடல்களாக விருந்த நிலை மாறி, இலக்கியப் பிரக்ஞை மேலோங்கும் ஒரு நிலையில, இத்தகைய இலக்கிய மரபுப் படைப்புக்கள் தவிர்க்கப்பட முடியாதனவாகும். இத்தகைய இலக்கிய மயப்பாடு அதிகமுள்ள பாடல்களில் படர்க்கை நிலைப் பரவல் (மூன்றாம் மனிதர் நிலையில் நின்று கூறுதல்) போன்ற பண்புகளைக் காணலாம்.
இத்தகைய இலக்கியங்களின் வளர்ச்சி காரணமாக பக்தி உணர்வு வெளிப்பாட்டில் பன்முகப்பட்ட நிலைமை ஏற்படுவதைக் காணலாம்.
III
அருணகிரிநாதர் 15ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். இவரது படைப்புக்கள், திருப்புகழ், கந்தரநுபூதி, கந்தரலங்காரம், கந்தரந்தாதி, திருவகுப்பு, வேல்விருத்தம், மயில்விருத்தம், சேவல்விருத்தம் என்பன.
முருகனைத் தமது இஷ்ட தெய்வமாகக் கொண்டவர். முருகனையே அநுபூதி தரும் முழுமுதற் கடவுளாகக் கொண்டவர். இவருடைய ஆக்கங்கள் யாவும் முருக பக்தர்களால் பாராயணப் பாடல்களாக ஒதப்படுபவை.
திருப்புகழ், கந்தரலங்காரம், கந்தரநுபூதி ஆகிய ஆக்கங்களைக் கொண்டு, அவரது பாடல் முறைமை பற்றிய சில குறிப்புக்களை இங்கு காணலாம்.
சந்தத்தையே பிரதான அம்சமாகக் கொண்ட திருப்புகழ்ப் பாடல்களில் சந்த வேறுபாடுகள் முக்கியமானவையாகும். ஒவ்வொரு பத்துப் பாடல்களை எடுத்து நோக்கும் பொழுது குறைந்தது 6,7 சந்த விகற்பங்களை அவதானிக்கலாம்.
திருப்புகழின் யாப்பினை நோக்கும் பொழுது அவை சந்த அமைப்புக் காரணமாக பிரித்து அச்சிற் பதிக்கப்படுகின்றனவெனினும் அப்பாடல்கள் அடிப்படையில் நான்கு அடிகளைக் கொண்டவையே என்பது தெரியவரும். யாப்புக்கும் பொருளமைதிக்கும்

Page 21
உள்ள இயைபினை நோக்கும் பொழுது பெரும்பாலும் முதலிரண்டு அடிகளும் ஒரு வேண்டுகோளையோ அன்றேல் ஒரு கருத்தினையோ கொண்டனவாகவும் இறுதி இரண்டும் முருகனை விளித்து முடிவனவாகவும் அமைதலைக் காணலாம்.
இவருடைய பாடல்களை உற்று நோக்கும் பொழுது பின்வரும் விடயங்கள் முக்கியப்பட்டு நிற்றலைக் காணலாம்.
1. யமபயம், முதுமை பற்றிய பயம், கழிவிரக்கம். 2. கழிவிரக்கத்தில் பிரதான இடம்பெறுவது பெண் மோகம் பற்றிய குறிப்பாகும். பாலியல் வாழ்க்கையில் தான் திளைத்துப் போயிருந்த மையை மிக முக்கியமான ஒரம்சமாக எடுத்துக் கூறுகிறார். இந்த நிலையிலிருந்த தனக்கு விடுதலை வேண்டுமென்ற ஒரு வேணவா இப்பாடல் களிற் காணப்படுகின்றது. 3. முருகவழிபாட்டினை உயர்ந்த நிலையில் வைத்துக் கூறுதல். சிவனுக்கும் மேலாக முருகனை வைத்திருத்தல். முருகனைச் சிவகுருவாகக் குறிப்பிடுகின்றமை ஒரு பொதுப்பண்பாகும். 4. சித்துத்திறன்-யோகம் பற்றிய குறிப்புக்கள்
திருப்புகழிலே நிறைய உண்டு. வாசித்துக்காணொ னாதது பூசித்துக் கூடொணாதது வாய்விட்டுப் பேசொணதது
-நெஞ்சினாலே மாசர்க்குத்தோணொணாது நேசர்க்குப் பேரொணாதது மாயைக்குச் சூழொணாதது
-விந்துநாத
ஒசைக்குத் தூரமானது மாகத்துக் கீறதானது லோகத்துக்காதியானது
-கண்டுவோயென

யோகத்தைச் செருமாறுமெய்ஞ் ஞானத்தைப் போதியாயினி யூனத்தைப் போடிடாததும யங்கலாமோ
sus-eas p
{341) முருகன் பாடல்கள் பக்.717
யோகம் பற்றிய குறிப்புக்கள் திருப்புகழில் விரவிக் காணப்படுகின்றன. தாயுமானவரில் முக்கிய இடம்பெறும் இப்பண்பு இக்காலத்தில் வாழ்ந்த பக்தியாளர்கள் பலரிடத்தும் காணப்படுகின்றன. (5) முருகனை விதந்து பாடும் பொழுது
அவனை மால் மருகண் எனப் போற்றுவது.
இக் குறிப்பினை நோக்கும் பொழுது அக்காலத்தில் நிலவியதாகக் கூறப்படும் சைவவைஷ்ணவப் போராட்டம் எல்லா மட்டங்களிலும் உக்கிரமாகத் தொழிற் பட்டதென்று கொள்ள முடியாதுள்ளது. ராமவதாரம் பற்றிய அருணகிரி யாரின் குறிப்புக்கள் அவர் அவ்வவதாரத்தை எத்துணை பக்தியீடுபாட்டுடன் கொண்டாடினார் என்பதைக் காட்டும். (6) வறுமை மிடிமையிலிருந்து விடுபடுதல்
பற்றிய குறிப்புக்கள் மிக முக்கியமானவை.
சாகைக்கும் ஈண்டு பிறக்கைகுமன்றித்
தளர்ந்தவர்க்கொன்று ஈகைக்கென விதித்தாயிலை
லங்காபுரிக்குப் போகைக்கு நீ வழிகாட்டென்று
போய்க்கடல் தீக்கொளுர்த்த வாகைச்சிலை வளைத்தோன் மருதா
மயில்வாகனனே
(7)அத்தியந்த உணர்வுகளை மிகத்தெளிவாக எடுத்துக்கூறும் பாங்கு மிகச் சிறந்ததாகும்.
பசிதனையறிந்து முலையமுது தந்து முதுகு
தடவிய தாயார்
(8) முருகனிடத்து இவர் கொண்டிருந்த ஈடுபாட்டினை முருகன் பற்றிய இவரது சித்திரிப்புக்களிற் கண்டுகொள்ளலாம். இது
இரண்டு வகையாகத் தொழிற்படுகின்றது.
17

Page 22
1. முருகனது தோற்றப் பொலிவினை ரசித்துத்
திளைத்தல்.
11. முருகனைக் கருத்துருவ நிலையில்
வைத்துப் போற்றுதல்.
முருக தோற்றத்தில் ஈடுபடும் பக்தி ஞானத்தை அருணகிரியார் விரும்புகிறார் என்று கூறலாம். முருகன் பற்றிய சித்தரிப்புக்கள் புலனுணர்வு ஈடுபாட்டையும் ஒர் அன்னியோன்னியத் தன்மையையும் காட்டுவனவாகவுள்ளன.
(9)அருணகிரியாரின் பாடல்களிற் காணப்படும் மிதமிஞ்சிய பாலியல் திளைப்பு எனும் அமிசமும் அவரை விளங்கிக் கொள்வதற்கு முக்கியமான ஒன்றாகும். தனது பாலியற்றிளைப்பினை தானே கண்டிக்கும் அவர், முருகன் வள்ளி உறவில் பாலியல் இன்பத்தைச் சுட்டும் வகையிற் பாடியிருப்பதை நோக்கல் வேண்டும். சிற்றின்பம், பேரின்பம் என்ற கருத்தினை உதவிக்கழைப்பதால் இச்சிக்கலைத் தீர்த்து விடமுடியாது. ஏனெனில் வள்ளியைப் பற்றிய பல விவரணங்கள் உடலழகு பற்றியும், அவளுக்கும் முருகனுக்குமுள்ள அன்னி யோன்னிய உறவின் நெருக்கம் பற்றியும் வருவனவாகவுள்ளன.
அருணகிரியாரின் மிதமிஞ்சிய பாலியல் திளைப்பு அமிசத்தை விட்டு நோக்கினால் அருணகிரியார் மிகச் சாதாரண வாழ்க்கை நிலையிலுள்ள மக்களின் மனவுணர்ச்சிகளுக்கு நெருங்கியவராக, அவற்றை வெளியிடுபவராக காணப்படுகின்றமை ஒரு முக்கிய அமிசமாகும்.
வாழ்க்கையின் துன்பங்களினூடே மதம் தரும் அமைதியைப் பெற விரும்புகிற வர்களுக்கு அருணகிரியாரின் மனக்கிலே சங்கள், வாழ்க்கைத் துன்பங்கள், மிகக்கிட்டிய ஓர் உணர்வு நிலையாக அமைகின்றமையை அவதானிக்கத் தவறக்கூடாது. அருணகிரி யாரின் பாடற் கவர்ச்சிக்கு இது ஒரு முக்கிய காரணியாகும்.
திருமலை நாயக்கர் (1623-1659) காலத்தைச் சார்ந்தவரான குமரகுருபரர் பாடியுள்ளவை பிற்காலப் பக்தி இலக்கியங்
8

களில் காணப்படும் இலக்கிய உருவச் சிரத்தைக்கு உதாரணமாக அமைகின்றன. கந்தர் கலிவெண்பா, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், மதுரைக் கலம்பகம், நீதிநெறி விளக்கம், திருவாரூர் நான்மணிமாலை, முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ், சிதம்பரச் செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை, பண்டார மும்மணிக்கோவை; காசிக்கலம்பகம், சகலகலாவல்லி மாலை, மதுரை மீனாட்சி யம்மை இரட்டை மணிமாலை, மதுரை மீனாட்சியம்மை குறம், தில்லைச் சிவகாமி யம்மை இரட்டை மணிமாலை என்பனவற்றுள் நீதி நெறிவிளக்கம், சிதம்பரச் செய்யுட் கோவை ஆகியவற்றையும் கலம்பகங் களையும், பண்டார மும்மணிக் கோவை, மீனாட்சியம் மை குறத்தையும் விட்டு மீதியாகவுள்ளனவற்றையே பக்தி இலக்கியங் களாக நோக்கவேண்டிய இலக்கிய நிர்ப்பந்தம் ஏற்படும். தமது பக்தியுணர்வைத் தன்மை நிலையில் நின்று வெளிப்படுத்தும் பாடல்களுள் அந்த வெளிப்பாட்டுக்கு இயைபாகவுள்ளவை கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை, மீனாட்சியம் மை இரட்டைமணிமாலை ஆகியனவே. வரன்முறையான இலக்கிய உருவமொன்றின் மூலம் இறைவன் புகழைப் பாடுவதையும் பக்தி இலக்கியமாகக் கொள்ள முனையும் பொழுது, இலக்கிய இடர்ப்பாடுகள் ஏற்பட இடமுண்டு. இதனாலேயே தன்மை நிலையில் நின்று பாடும் பக்தி இலக்கியங்கள் முக்கிய இடத்தைப் பெறுகின்றன.
குமரகுருபரரைப் பொறுத்த வரையிலும் அவர் தன்மை நிலையில் நின்று பாடுவன வற்றுக்கும், பிற நிலைகளில் நின்று பாடு வதற்கும் நிறைய வேறுபாடுண்டு. சகலகலா வல்லிமாலையையும் கலம்பகங்களையும் ஒப்பு நோக்கி இதனைப் புரிந்து கொள்ளலாம்.
முருகன், அம்மனைப் பாடும் பொழுது ஓர் அன்னியோன்னியத் தன்மை, அதாவது முருகன் அருகே நிற்கிறான் அம்மன் அருகே நிற்கிறாள் என்ற மனப்பதிவு பாடல்களிலே தெரிகிறது. அந்தச் சித்தரிப்பு கட்புலச் சித்தரிப்பாக அமையும் தன்மை நன்கு புலப்படுகின்றது. கண்முன்னே உள்ள நின்ற

Page 23
ஒன்றைச் சித்தரிக்கும் மனப்பதிவே மேலோங்கி நிற்கிறது. கோயில்களிற் பூசையின் பொழுது அலங்காரம் செய்யப்பட்டிருக்கும் முருகன், அம்மன் சிலைகள் வழியாக இந்தப் புலப்பதிப்பு ஏற்பட்டிருக்கலாமென்று கருதமுடிகிறது.
அம்மனைத் தாயாகவும், குழந்தையாகவும், முருகனைக் குழந்தையாகவும் பார்க்கும் பொழுது பக்தியின் பரிமாணம் மேலும் விரிவடைகிறது. வைஷ்ணவத்திற் கண்ண னைக் குழந்தையாகப் பார்க்கும் மரபு உண்டு. இப்பொழுது அது அம்மனுக்கு விஸ்தரிக்கப் படுகிறது.
கார்க்கோல நீலக் கருங்களத்தோடொருவர்
செங்களத்தேற்றலுமர்க் கட்கணை துரக்கும் கரும்புருவவில்லொடொரு
கைவில் குளித்துநிற்க போர்க்கோலமே திருமணக்கோலமான பெண் பொன்னூசலாடியருளே
புழுகுநெய்ச்சொக்கள் திருவழகினுக்கொத்தகொடி
பொன்னூசலாடியருளே
என்று அம்மனை மணப்பெண்ணாகக் காணும் பொழுது அதில் ஓர் அழகியற் கவர்ச்சி இருக்கின்றது.
முருகன் பற்றிய பிள்ளைத் தமிழ் நூல்களிலும் இவ்வுண்மையைக் காணலாம். முருகனைப் பழையோள் குழவியாகவே காணும் மரபு உண்டெனினும் கந்தபுராண ஐதீகங்களின் பின், முருகன் என்னும் சூரசங் காரனை, வள்ளி கணவனை, தேவயானை நேசனைக் குழந்தையாகக் காணும் பொழுது பல்லவர் காலத்துப் பக்தி மரபிற் காணப்படாத ஒரு பரிமாணம் விரிகின்றது.
குமரகுருபரர் ஆசிரிய விருத்தத்தின் நெகிழ்ச்சியினைப் பக்தியுணர்வு வெளிப் பாட்டுக்கு நன்கு பயன்படுத்தியுள்ளார்.
அருணகிரிநாதர் முதற் காணப்படுகின்ற தென எடுத்துக் கூறப்பட்டுள்ள அந்நியோந்நிய நெருக்கநிலை அபிராமப்பட்டரிற் மிகச் சிறப்பாகக் காணப்படுகிறது. அம்மனை மிக அருகில் நின்று பார்ப்பது போன்ற உணர்வும்,

ஸ்பரிச உணர்வுக்கு முதன்மையளிக்கும் ஒரு புலனுகர்வுப் பார்வையும் பட்டர் பாடல்களிலே கொப்பளிக்கின்றன.
சென்னியது உன்பொற்றிரு வடித் தாமரை, சிந்தனையுள்ளே மன்னியது உன்திரு மந்திரம்
சிந்துர வண்ணப் பெண்ணே முன்னிய நின் அடியாருடன்
கூடி முறை முறையே பன்னியது என்றும் உன்
பரம ஆகம பத்ததியே
சின்னஞ்சிறிய மருங்கினில் சாத்திய செய்யபட்டும் பென்னம்பெரிய முலையும்
முத்தாரமும் பிச்சி மொய்த்த கன்னங்கரிய குழலும்
கண்மூன்றும் கருத்தில் வைத்து தன்னந்தனி இருப்போர்க்கு
இதுபோலும் தவமிலையே
சொல்லும் பொருளும் என
நடமாடும் துணைவருடன் புல்லும் பரிமளப்பூங்கொடியே நின்புது மலர்த்தாள் அல்லும் பகலும் தொழும் அவர்க்கே
அழியா அரசும் செல்லும் தவநெறியும் சிவ
லோகமும் சித்திக்குமே
புலனுகர்வும், சிற்ப அழகு நுகர்வும், கருணை நெருக்கமும் இப் பக்தியின் தளமாகின்றன. இந்தப் பக்தியின் தன்மையை அவரே விவரிக்கிறார்.
கண்ணியது உண்புகழ், கற்பதுஉன்
நாமம்; கசிந்துபக்தி பண்ணியது உன் இரு பாதாம் புயத்தில்: பகல் இரவா நண்ணியது உன்னை நயந்தோர்
அவையத்து; நான் முன் செய்த புண்ணியம்-எது என்அம்மே புவி
ஏழையும் பூ த்தவளே.
19

Page 24
நாம் இதுவரை பார்த்த பக்திப் புலப்பதிவு புலனுணர்வுத் தன்மையதாய்த், அத்தியந்த உணர்வு ஈடுபாட்டினதாய் இருக்க தாயுமான வரது பாடல்கள் தமிழின் பக்தி இலக்கியப் போக்கில் ஒரு முக்கியமான திசைத் திருப்பமாக அமைகின்றன.
இவர் பற்றி டேவிட் ஷல்மன் கூறுவதனை அப்படியே தந்துவிடுவதே போதுமானது.
ஒருவகையில் தாயுமானவரே தமிழில் யோகம் பற்றிப் பாடிய மிகச் சிறந்த புலவராவார். இந்த யோகம் யோகம், தாந்திரிகம், சைவசித்தாந்தம் ஆகியவற்றின் இணைவு ஆகும். இவருடைய கவிதைகளிலே யோகமும் பக்தியும் இணைந்துள்ள முறைமை ஒரு புதிய போக்கினைச் சுட்டி நிற்கிறது.
யோகசிந்தனையில் அரூபமானதாக விருக்கும் ஒளியை, பக்திப் பண்பாட்டின் மையமான உறவுநிலையை ஏற்படுத்துவதன் மூலம், வடிவுடைத் தெய்வமாகச் சித்தரிப்பது தமிழில் உணர்வுச் சித்தரிப்பு ஆழத்தை வலுப்படுத்துகின்றது எனலாம்.
திரையில்லாக் கடல் போலச் சலனம் தீர்ந்து
தெளிந்துருகும் பொன் போலச் செகத்தை
எல்லாம் கரையவே கனிந்திருக்கு முகத்திலே நீ
கனிந்த பரமானந்தம் காட்டி இந்நாள் வரையிலே வரக்காணேன் என்னாற் கட்டி வார்த்தை சொன்னால் சுகம் வருமோ
sing Gawanaw இறையிலேயிருத்தி நிருவிகற்பமான இன்பநிஷ்டை கொடுப்பதையா எந்த நானோ?
(பன்மயில்)
குறைவிலா நிறைவாய் ஞானக்
கோகிலானந்த வெள்ளத் துறையிலே படிந்த மூழ்கித்
துணைந்து நான் தோன்றாவானுள் ளுறையிலே யுணர்த்திமோன
ஒண்சுடர் வைவான் தந்த இறைவனே உனைப்பிரிந்திங்கு
இருக்கிலேன் இருக்கிலேனே.
20

பக்தியின் மாணிக்கவாசகப் பாரம்பரியம் இங்கு யோகமுறைமையுடன் இணைகின்றது.
தாயுமானவர் சித்தமரபினராலும், சித்தாந்த மரபினராலும் தம்மவராகக் கொள்ளப்படுகிறார்.
இக்கட்டத்திலே, தமிழ்நாட்டில் 15-18ம் நூற்றாண்டுக் காலப்பிரிவில் முக்கிய இடம் வகித்த சித்தர் மரபுக்கும், பக்தி மரபுக்குமுள்ள தொடர்பு பற்றிக்குறிப்பிடல் அவசியமாகும்.
சித்தர் பாடல்கள் எனத்தரப்பட்டிருக்கும் தொகுதிக்குள் வரும் பாடல்கள் எல்லாம் ஒரு மரபுக்குரியனவெனக் கொள்ளுதல் முடியாது. என்பதை அறிஞர் வற்புறுத்துவர் (ஸ்வெலபில்). சித்தர் பாடல்களை அக்காலத்து நிலவிய கோயில் பண்பாட்டுக் கெதிரான ஒன்றெனவே கொள்ளல் வேண்டும். இச்சித்தர் மரபினர் பக்தி இயக்கத்தின் தளமாகிய கோயிற் பண்பாட்டை நிராகரிக்கின்றனர். இறைவன் சமூக உறவின் விளக்கத்துக்குள்ளே கொண்டு வரப்பட முடியாதவன் என்பது அவர்களது எடுகோள்களில் ஒன்று. அத்துடன் சித்தர் மரபு மறைஞானச் சிந்தனை மரபுடன் இணைந்த ஒன்றாகும். இதனால் பக்தி முறைமையின் மாறிய போக்குகள் பற்றி ஆராயப் பெறும் இக்கட்டுரையில் சித்தர் பாடல்கள் பற்றிய ஆய்வு இடம்பெற முடியாதென்றே கொள்ளல் வேண்டும்.
மேற்கூறிய அமிசங்களைக் கொண்ட பக்தி பற்றிய நோக்கானது முற்றிலும் உயர்நிலை சார்ந்த ஒன்று அன்று என்பதும் அது சாதாரண மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளைக் கணக்கெடுத்துக் கொண்டது என்பதும் தெரிய வருகிறது.
அதாவது சாதாரண மக்கள் நிலையில் நின்று பார்க்கப்படும் பக்தி நிலைப்பாடல்களாக இருந்தது. "நடராஜப்பத்து" அதற்கு நல்ல உதாரணமாகும். அதில் வரும் பாடல்கள் சாதாரண மக்களின் வாழ்க்கையில் எதிர்ப்படும் சுகதுக்கங்கள் பற்றிக் கூறுகின்றது. காயாமுன் மரமீது பூ பிஞ்சறுத்தனோ
கன்னியர்கள் பதிகொண்டனோ
கடனென்று பொருள் பறித்தே
வறிறேரீத்தனோ கினை வழியில் முள்ளிட்டனோ

Page 25
தாயாருடன் பிறவிக் கென்னவினை செய்தனோ
தந்தபொருள் இலையென்றனோ தானென்று கர்வித்து கொலைகளவு
செய்தனோ தவசிகளை ஏசினேனோ,
வாயாரப் பொய்சொல்லி வீண்பொருள்
பழித்தனோ வானவரைப் பழித்திட்டனோ வடிவு போலே பிறரை சேர்க்காதடித்தனோ வந்தபின் என்செய்தனோ
ஈயாத லோபியென்றே பெயர் எடுத்தனோ
எல்லாம் பொறுத்தருள்வாய் ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.
நடராஜப்பத்திற் காணப்படும் இப்பண்பினை
காமாட்சியம்மை விருத்தம் போன்ற
பாடல்களிலும் காணலாம்.
IV
மேலோட்டமாகத் தரப்பட்ட உதாரணங் களும், எடுத்துக் கொண்ட ஆசிரியர்களும், பக்தி இலக்கியத்தில் ஏற்பட்டுக் கொண்டிருந்த மாற்றங்களை அறிய உதவுகின்றன.
கி. பி. 600-900க் காலப்பகுதியில் வளர்த்தெடுக்கப்பட்ட பக்தி முறைமையோடு இக்காலகட்டத்தினை ஒப்புநோக்கும் பொழுது சைவ வரலாற்றில் முக்கியமானதாய்ப் படுவது இக்காலத்தில் மேற்கிளம்பிய இஷட தெய்வ வழிபாடேயாகும். அம்மன் வணக்கமும் முருகன் வணக்கமும் இக்காலத்தில் முதனிலைப் படுவதை அவதானிக்கலாம். கெளமாரம், காணாபத்தியம், சாக்தம் என வரும் அறுவகை வழிபாட்டு மரபு பிற்காலத்திலேயே சனரஞ்சகப் படத் தொடங்குகிறது. அதற்குள் இஷ்ட தெய்வப்பாங்கு தொனிப்பதை அவதானிக் கலாம்.
இந்த வளர்ச்சி காரணமாக குலதெய்வம், குடும்பத்தெய்வம், இஷட தேவதை போன்ற சமூகவியல் ரீதியில் முக்கியமான வழிபாட்டு மரபுகள் மேற்கிளம்புகின்றன. முருகன், அம்மன் இஷடதெய்வங்களாக வழிபடப்படுவது பிற்காலப் பண்பாகும்.

தேவார திருவாசகங்களுடன் ஒப்புநோக்கும் பொழுது இக்காலத்தில் தெய்வம் பற்றிய புலப்பதிவிலும் (perception) ஒரு மாற்றம் ஏற்படுவதைக் காணலாம். வழிபடுதெய்வம் மிக அண்மையிலுள்ளது போன்ற ஒரு மனப்பதிவு மேற்கிளம்புகின்றது. கோயில்களில் மாத்திரமல்லாமல் வீடு போன்ற பிற வழிபடு இடங்களிலும் தெய்வ உருவங்கள் வைத்து வழிபடப்பட்டிருத்தல் வேண்டும்.
இந்தப் புலப்பதிவு மாற்றம் காரணமாக தெய்வத்தைக் குழந்தையாகப் போற்றும் மரபு இப்பொழுது முக்கியமாகின்றது.
பக்திப் பாடல்களின் யாப்பும், மொழியும், கவனிக்கப்படத்தக்க மாற்றத்தைப் பெறு கின்றன. சந்தம், அருணகிரியாரது சிறப்பமிசமாகப் போற்றப்பட்டாலும் அப்பண்பு குமரகுருபரரிடத்தும் தாயுமானவரிடத்துங் கூடக்காணப்படுகிறது என்பதை வற்புறுத்தல் அவசியம். கவிதையின் அழகியல் அமிசங்களில் ஒலியும் ஒன்று என்ற கருத்து (phono-aesthetic character) 3ds35sTGodsgjds கவிதைக் கொள்கைகளிலே இடம்பெற்றுள்ள மையை யாப்பிலக்கண நூல்களிற் காணலாம். மொழியிலும், வடமொழியும் தமிழும் இணைந்த ஒரு செழுமையை அவதானிக்கலாம். சந்த ஒசைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் பொழுது வடமொழிச் சொற்களின் ஒலியோசை மிகுந்து வருவது இயல்பானதே.
இக்காலப் பக்தி இலக்கியங்களின் மிக முக்கியமான அமிசம் இப்பாடல்களிற் காணப்படும் மெய்யியற் கருத்துக்களாகும். கி. பி. 900-1400க்கு இடைப்பட்ட காலத்தில் தமிழ்நாட்டில் மதம் பற்றிய மெய்யியற் சிந்தனைகள் தத்துவ தரிசனங்களாக உருவாக்கப்பட்டமை நமக்குத் தெரிந்ததே. விசிஷ்டாத்வைதம், சைவசித்தாந்தம் ஆகிய கோட்பாடுகள் இக்காலத்திலேயே தரிசனங் களாக எடுத்தோதப்பட்டன.
15ம் நூற்றாண்டுக்குப்பின் தோன்றும் பக்தி இலக்கியங்கள் இந்தத்தத்துவ (மெய்யியல்) நோக்குகளை உள்வாங்கியவையாகவே காணப்படுகின்றன. சிந்தனைகள் தரிசனங்
21

Page 26
களாக்கப்பட்ட நிலைமை காரணமாக மொழிப் பயன் பாட்டில் மெய்யியற் பதங்களே வரத் தொடங்குகின்றன. மேலும் இக்காலத்திற் சிந்தனைப் போராட்ட மரபு ஒன்றும் (சித்தர் பாடல்கள்) காணப்படுகின்றது. இதன் காரணமாக இக்காலத்துப் பக்தி இலக்கியங் களிலே தெய்வங்களைக் கோட்பாட்டு (6T60ir 600Ti,505) 5606 oust) (Conceptual) விவரிக்கும் பண்பு காணப்படுகின்றது. இப்பண்பு ஒவ்வொரு முக்கிய பக்தியாளரிடமும் காணப்படுகின்றது.
இறுதியாக முதலில் கூறிய'நெருக்கநிலைச் சித்திரிப்புப் பற்றிய ஒரு குறிப்பினைக் கூறல் அவசியம். தெய்வங்கள் பற்றிய சித்திரிப் புக்கள், அவர்களுக்கு மிக அண்மையிலிருந்து பாடப்பட்டது போன்ற ஒரு மனப்பதிவை ஏற்படுத்துகின்றன. அங்க அழகு ஆபரண அழகு பற்றிய விவரணங்களைப் பார்க்கும் பொழுது இந்த வர்ணனை மரபு சிலாருபங் களைத் தளமாகக் கொண்டு பெறப்பட்டிருக்க வேண்டும் போலத் தோன்றுகின்றது.
விஜயநகர காலத்துச் சிற்ப மரபு அலங்கார வேலைப்பாடுகள் நிறைந்ததாகக் காணப்பட்டது எனும் கூற்றை நோக்கும் பொழுது, இக்காலத்துப் பக்தி இலக்கியங்களின் "வர்ணனைகளில் மிதமிஞ்சிய அலங்காரம் காணப்படுவதை நாம் காணலாம்.
பத்துவிரல் மோதிரம் எத்தனை பிரகாசமது
பாடகம் தண்டை கொலுசும் பச்சை வைடூரிய மிச்சையாய் இசைத்திட்ட பாதச் சிலம்பினொலியும் முத்துமூக்குத்தியும் ரத்தினப் பதக்கமும்
மோகன மாலையழகும் முழுதும் வைடூரியம் புஷ்பராகத்தினால் முடித்திட்ட தாலியழகும்
சுத்தமாயிருக்கின்ற காதினிற் கம்மலும்
செங்கையிற் பொன்கங்கணம் செகமெலாம் விலைபெற்ற நிலமெலாம் ஒளிவுற்ற சிறுகாதுகொப்பினழகும் அத்திவரதன் தக்கை சத்தி சிறுரூபத்தை அடியனாற் சொல்ல திறமோ அழகான காஞ்சியில் புகழாக வாழந்திடும்
அம்மை காமாட்சி உமையே
(காமாட்சியம்மை விருத்தம்)
22

இந்தப் பாடல் நாம் இதுவரை கூறியவற்றிற்கான கவர்ச் சிமிக்க உதாரணமாகும்.
V
இந்த மாற்றங்களை அவற்றின் சமூகவரலாற்றுப் பின்புலத்தில் வைத்து நோக்க வேண்டுவது அவசியமாகும்.
இக்காலகட்டத்திலே தமிழ்நாட்டில் ஏற்பட்ட ஒரு முக்கியமான வரலாற்று மாற்றமே இந்தப் புலப்பதிவு மாற்றங்களுக்கும் சித்திரிப்பு மாற்றங்களுக்கும் அச்சாணியாகக் கிடந்தது.
15ம் -18ம் நூற்றாண்டு காலம் விஜயநகர ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெற்ற காலம். அதிலும் இக்காலத்தில் மதுரை தஞ்சையி லுள்ள (பின்னர், திருச்சி) நாயக்கத்தானங்கள் தமது அதிகாரத்திலும், ஆட்சியிலும் வலுவும் வளமும் பெற்றிருந்த காலம்.
இக்காலகட்டத்தில் தென்தமிழ்நாடு (மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி) முக்கிய பண்பாட்டு மையமாகத் திகழ்ந்தது. பக்திப் பாடல்களிலும் இந்தப் பிரதேசங்கள் தேவார காலத்திற் பெறாத முக்கியத்துவத்தை பெறுவதை நாம் காணலாம்.
நாயக்க ஆட்சியின் தன்மை காரணமாக ஆட்சியதிகாரம் துண்டாடப்பட்டிருந்தது. பிரதேசமுதல்வர்கள் பலர் ஆட்சி செலுத்தினர். சோழர் காலத்து நிலவியது போன்ற உள்ளுராட்சி முறைமை இக்காலத்தில் நிலவவில்லை. இது காரணமாகப் பன்முகப் படுத்தப்பட்ட ஆட்சி மையங்கள் காணப்பட்டன.
இக்காலத்திற்கோயில் நிர்வாக முறைமை பெரிதும் மாறியிருந்தது. விஜயநகரப் பிரதானிகளுக்கான அதிகார நியாயப்பாட்டைக் கோயில்கள் வழங்கின. ஆட்சியாளருக்கும் கோயில்களுக்குமிருந்த உறவு காரணமாக, அவை முன்னர் பெற்றிருந்த சமூக முக்கியத்துவத்தை இப்பொழுது இழந்து ஆட்சியாளருக்கான "அரசியற்கருவி" களாயின. கோயில், சில குழுமங்களுக்கான மையங் களாகின. இதனால் பிரதேசத்து மக்களிடத்து

Page 27
இவை முன்பு பெற்றிருந்த முக்கியத்துவத்தை இழக்கத் தொடங்கின.
இதன் பிரதிபலிப்பாக காவல் தெய்வ வழிபாடு அதிகரித்தது. இது பெரும்பாலும் பெண் தெய்வ வழிபாடேயாகும். காவல் தேவதைகள் அம்மன் நிலைக்கு உயர்த் தப்பட்டு அம்மனுக்கெனத் தனிக் கோயில்கள் கட்டப்படலாயின.
இக்காலத்துக் கோயில் வளர்ச்சி பற்றிய தரவுகள் முக்கியமானவையாகும். 1450-1750 ஆண்டுகளுக்கிடைப்பட்ட காலப் பிரிவில் அம்மன் கோவில்களும் விஷ்ணு கோயில்களும் அதிகம் கட்டப் பட்டுள்ளன என்பதை பெற்றன் ஸ்ரைன் நிறுவியுள்ளார்.
சைவமரபுசார்ந்த பக்தி இலக்கியங்களை நாம் இங்கு பார்ப்பதால், வைஷ்ணவம் இக்காலத்தில் தமிழ்நாட்டில் பெற்ற சமூக முக்கியத்துவத்தை நாம் இங்கு ஆராய வில்லை.
தென்தமிழ்நாட்டில் ஏற்பட்ட தெலுங்குக் குடியேற்றங்கள் காரணமாகவும் (இது கரிசல் நிலத்தில் முக்கியமாக நடந்தேறியது) நிர்வாகத்தில் தெலுங்கரினது முதன்மை காரணமாகவும் தமிழ்நிலைப்பட்ட தனித்துவத்தை வெளியிட முருக வணக்கம் உதவிற்று எனலாம். முருகனைத் தமிழோடு சேர்த்துப் பாடுவதற்கு இதுவே காரணமாகும்.
"முத்தமிழால் வைதாரையும் வாழ வைப்பான்” எனவரும் சிந்தனைப்போக்கு உற்று அவதானிக்கப்படவேண்டியது. வழிப்பயணத்

துக்குத் தெய்வ உதவியை நாடும் குறிப்புக்கள் இக்காலத்து நிலவிய கள்ளர் பயம், பயணக் கஷ்டம் ஆதியன பற்றி அறிய உதவும்.
தென் தமிழ்நாட்டில் ஏற்பட்ட தெலுங்குக் குடியேற்ற வளர்ச்சிகள் காரணமாக விவசாய உழைப்பாளிகளான அடிநிலை மக்கள் முக்கியமடையும் ஒரு நிலையும் ஏற்படுகிறது. இதனாலே அடிநிலைத் தெய்வங்கள் பற்றிய குறிப்புக்களும் இக்காலத்திலே படிப்படியாக மேற்கிளம்புவதை நாம் அவதானிக்கலாம்.
இம்மாற்றங்கள் காரணமாக ஏற்ப்ட்ட "இருக்கைநிலை மாற்றங்கள்" மத அனுபவங் களாக மாறும் பொழுது இப் புதிய பக்தி மரபு தோன்றுகின்றதெனலாம். மாறும் இந்தப் பக்தி மரபு காலத்தின் தன்மை காரணமாக ஒரு இயக்கமாகப் பரிணமிக்கவில்லை யெனினும் நிச்சயமாக ஒரு சமூகத்தளத்தைக் கொண்டிருந்தது என்பது புலனாகும்.
தமிழ்நாட்டின் சைவமரபு வழிவந்த மக்களது சமூக மத அனுபவங்களில் ஏற்பட்ட இம்மாற்றம் இலக்கிய வரலாற்றாசிரியர்களாற் புறக்கணிக்கப்படுவது விசனத்துக்குரிய செயலாகும்.
தெய்வத்தை நோக்கும் முறைமையில் ஏற்பட்ட இந்த மாற்றங்கள் இராமலிங்கரையும் பாரதியையும் வந்தடையும் பொழுது, பக்திப் பாடலின் மெய்யியல் அமிசங்களும், உறவு நிலை அமைப்புக்களும் புதிய பரிமாணங்களை அடைகின்றன.
23

Page 28
O.
.
2.
இக்கட்டுரையாக்கத்து
முருகன் பாடல்கள் -கொழும்பு -1994.
குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத்திரட்டு-திருப்ப
தாயுமானவர் பாடல்கள் -சம்பந்த முதலியார்
பலபாட்டுச் சில்லறைக் கோவை இரத்தினநா
அபிராமி அந்தாதி - சி. குமாரசு6
Poets for Drowning, A. K. Ramanujan-Princetol
The Culture and History of the Tamils-K. A. Nil;
Poets of power-kamil Zvelabil-London,
Peasant State and Society, B. Stein, New York-l
The New Cambridge History of India, 1:2 Vija
Religion, Politics and History in India L. Du Mol
David Shulman- The Yoga's Human self, Thaum 199
13. Sivathamby K. Drama in Ancient Tamil Society,
இக்கட்டுரையாக்கத்தின் பொழுது உரையாடியுதவி பிரதித் தயாரிப்பில் உதவிய திருமதி. ஏ. ஏன். கிருஷ்ணே அனற் இராஜதுரைக்கும் செல்லி யாமளகந்தரி திருஞ
24

க்கு உதவிய நால்கள்
னந்தாள் காசி மடம். 1947
பதிப்பு-1891
யக்கர் ஸன்ஸ் -1953
வாமி நினைவு வெளியீடு யாழ்ப்பாணம். -1994
n University- 1980
akanda Sastri, culcutta- 1964
989
yanagar B. Stein, Cambridge. - 1989
nt. Holland-1970
anavar in Tamil, Mystical Tradition, in Religion
Madras-1981.
விய எனது மாணவர் திரு.க. இரகுவரனுக்கும்.
வணிக்கும், இதனைத் தட்டச்சுப்படுத்திய செல்வி.
ான சம்பந்தபிள்ளைக்கும் நன்றி.

Page 29
கல்வியும் நு
க்ல்வி வளர்ச்சியில் நூலகங்கள் எவ்வாறு செயலாற்ற முடியும் என்னும் கேள்விக்கான விடைபற்றி சிந்திக்கும்போது கல்வியின் எதிர்காலவியல் நோக்கு யாது என்பதைச் கருத்திற் கொள்ள வேண்டியுள்ளது.
முன்னைய காலங்களைப் போலன்றி இன்று உலகம் அறிவுமைய சமூகமாக உருவாகிக் கொண்டு வருகின்றது. 21ஆம் நூற்றாண்டு தகவல்களை மையமாகக் கொண்ட யுகமாக மாற உள்ளது என்று கூறப்படுகின்றது. இந்நூற்றாண்டின் இறுதிக்கூறு உலகெங்கும் அறிவுவெள்ளம் பிரவாகம் எடுத்து ஓங்குவதைக் குறிக்கின்றது விஞ்ஞானம், தொழில்நுட்பம், மனிதப்பண்பியல் சமூக அறிவியல் எனும் பற்பல துறைகளில் புதிய ஆராய்ச்சிகளும், அறிவும் பல்கிப்பெருகி வருகின்ற ஒரு காலப்பகுதி இதுவாகும். வரப்போகும் அறிவுமைய தகவல்-மைய நுாற் றாணி டில் பொருந்தி வாழவும் அந்நூற்றாண்டின் புதிய நிலைமைகளையும், தேவைகளையும், அறைகூவல்களையும் எதிர்கொள்ளவும் இளந்தலைமுறையினர் இவ்வறிவுப் பெருக்கத்தின் சில அம்சங் களிலாவது தேர்ச்சி பெறவேண்டும்.
அறிவுக்கும், கல்வி தேர்ச்சிக்கும் முதலிடம் வழங்கும் காலப்பகுதியிலே நாம் வாழ்கிறோம். பண்டைக்காலத்தில் சரீர பலம் உள்ளவன் சமூகத்தில் அதிகாரம் செலுத்தினான். மானியமுறை சமூகத்தில் நில உடைமை யாளர்களும், முதலாளித்துவ சமூகத்தில் மூலதன உடைமையாளர்களும் அதிகாரமும் செல்வாக்கும் செலுத்தினர். இன்று உருவா கியுள்ள நவீன சமூகத்தில் உயர்தரமான சிறப்புத்தேர்ச்சியும் கல்விப்புலமையும் மிக்கோர் அதிகாரத்தையும் செல்வாக்கையும் செலுத்து கின்ற, ஒரு புதிய விரும்பத்தக்க செல்நெறியைக் காண முடிகின்றது. மக்கள் ஆதரவினால் அதிகாரத்தைப் பெறுகின்ற

ாலக விருத்தியும்
சந்திரசேகரன்
நாட்டு தலைமைப் பீடத்துக்கும் உயர்கல்வித் தேர்ச்சி உடை யோரின் ஆலோசனைகள் தேவைப்படுகின்றது. நவீன உலகில் கல்வித்
6 g)6)in GiróOLDub (authority and power)
எல்லையற்றது. இதனை "திறன் மிக்கோர் ஆட்சி" (Meritocracy) என்றுங் கூறுவர்.
இன்றைய சமூக, பொருளாதார வாழ்விலும் ) தேசிய அபிவிருத்தியிலும், பண்பாட்டு வளர்ச்சியிலும் பெருமுக்கியத்துவம் பெறும் கல்விவளர்ச்சி எவ்வாறு ஏற்படுகின்றது? பாடசாலைகள் இன்று கல்வியை வழங்கும் } ஒரு முக்கிய நிறுவனமாகும். சமூக, பண்பாட்டு மாற்றங்களுக்கு சமூகம் பயன்படுத்தி வந்த பல்வேறு நிறுவனங்களில் இன்று அக்கடமை
யைச் செய்வதில் எஞ்சிநிற்பது பாடசாலை களே. சமய நிறுவனங்களும், சிறு கிராம சமூகங்களும் இப்பணியைச் செய்வதில் இன்று வலுவற்றனவாக உள்ளன. குடும்ப உறுப்பினர்களான பெற்றோர்கள் இருவருமே வேலைவாய்ப்பினை நாடுவதால் பிள்ளை வளர்ப்பில் அவர்களுடைய முக்கியத்துவமும் குறைந்து வருகின்றது. இந்நிலையில் பாடசாலைக்கல்வியின் முக்கியத்துவம் உறுதியானதாயினும், பாடசாலைகள் பிள்ளை களைப் பொறுத்தவரையில் செய்யும் அடிப்படையான பணி பராமரிப்புடனும் (custodian function) 6T6örglub si6 sist65dsgjds கல்வித் தகுதிகளை வழங்கி, சமூக பொருளாதார அமைப்பில் அக்கல்வித் தகுதிகளின் அடிப்படையில் பல்வேறு தொழில்களுக்கு அவர்கள் தெரிவு Gafufu JUL(Selective function)6. Gyu கின்றது என்றும் கூறப்படுகின்றது. பாடசாலையில் நீண்டகாலம் பெறும் கல்வியும் அங்கு பெறுகின்ற கல்வித்தகுதிகளும் அவர்களைப் பரந்த அறிவுள்ளவர்களாக்கி விடுவதில்லை, மனிதனுக்குப் பயனுள்ள பொது அறிவையும் உலக அறிவையும் பாடசாலைக் கல்வி வழங்கிவிடாது. ப்ரந்த அறிவுத்
25

Page 30
  

Page 31
வனங்களும், ஆசிரியர்களும், பல்கலைக்கழக பேராசிரியர் களும், ஆய்வாளர்களும் இன்று அப்பணியைச் செவ்வனே ஆற்ற நூல் நிலையங்களிலேயே தங்கியிருக்க வேண்டி யுள்ளது. அபிவிருத்தி, ஆராய்ச்சியினூடாக உருவாக்கப்பட வேண்டும் என்று தீவிரமாக நம்பப்படுகின்ற காலப் பகுதியிலேயே நாம் வாழுகின்றோம். சிறந்த நூலகங்களின்றி ஆராய்ச்சிகளைச் செய்வது சாத்தியமன்று.
பல்கலைக்கழக கல்வியின் மையம் ஆசிரியர் மட்டுமன்று. நூலகங்களும் அதற்கு அச்சாணி போன்றவை. நூலகத்தலைவர்கள் பல்கலைக்கழகப் பேராசிரியர்களுக்குரிய கல்வித்தகுதிகளையும் அந்தஸ்தையும் உடையவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவையாவும் கல்விச் செயற்பாட்டில் நூலகங்களுக்குரிய பங்கின் முக்கியத்து வத்தையும் அவை பெறுகின்ற அந்தஸ்தையும் நன்கு விளக்கும்.
(20-11-95ம் திகதி தமிழ் மகா வித்தியாலய கொண்ட கூட்டமொன்று வெள்ளவத்தை இந்துசமய கலாசாரத் திணைக்களம் இந்நிக நூற்தொகுதிகளையும் அன்பளிப்புச் செய்தது. ஆற்றிய உரை)
- - - - - - - - - - - - - - - - - - - - سم
இந்து சமய கலாசார அலுவல்கள் திை விமர்சனம் -இன்றைய போக்குகள் என்ற
மாதம் 24, 25ம் திகதிகளில் கொழும்பு இர
இக்கருத்தரங்கில், பேராசிரியர் கா. திரு. மு. பொன்னம்பலம், திரு. கே. எள கலந்து கொண்டு ஆய்வுக்கட்டுரைகள் கட்டுரையொன்றும் வாசிக்கப்பட்டது.

இன்று பல்வேறு துறைகளில் விற்பன்னர்களாக விளங்கும் அறிஞர்களின் கலி வி வாழ்க்கையினை நுணுகி நோக்கினால், அவர்களுடைய வாசிப்புப் பழக்கமும் நூல்களைப் பயன்படுத்தும் உளப்பாங்கும் அவர்களுடைய மேம்பாட்டுக்கு உதவிய தென்பதை அறிய முடியும்.
உயர் தொழில் வல்லுனர்களான மருத்துவர்களும், வழக்கறிஞர்களும் அவ்வாறு அழைக்கப்படக் காரணம் அவர்கள் முறையே மனித சமூகத்திற்கு இன்றியமையாத உடல் நலம், மனித நீதி என்பவற்றைத் தொழில் ரீதியாகப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மையாகும். நூலகர்களும் மனித சமூகத்துக்கு இன்றியமையாத கல்வி மேம்பாட்டுக்குப் பங்களிப்புச் செய்வதால் அவர்களும் உயர் தொழில் வல்லுனர்கள் என்றே பெயர் பெற
வேண்டும்.
நூலகங்கள், பொது நூலகங்களின் பிரதிநிதிகளைக் இராமகிருஷ்ணமிஷன் மண்டபத்தில் நடைபெற்றது. ழ்ச்சியை ஒழுங்குசெய்திருந்ததோடு- நூலகங்களுக்கு இக்கூட்டத்தில் கலாநிதி சோ. சந்திரசேகரன் அவர்கள்
I prvku.
tongaps
aæm
«жня
ang
x_images
to a
r
annu
una
nor
༄༽
க்கிய விமர்சனம் ப போக்குகள்
ணக்களம் ஏற்பாடு செய்திருந்த தமிழ் இலக்கிய தலைப்பிலான கருத்தரங்கொன்று கடந்த நவம்பர் மகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடைபெற்றது.
சிவத்தம்பி, கலாநிதி எம். ஏ. நுஃமான், சிவகுமாரன் திரு. எல். ஜோதிகுமார் ஆகியோர் சமர்ப்பித்தனர். கலாநிதி சோ. கிருஷ்ணராஜாவின்
27

Page 32
இலங்கையில் சமூகள் கல்வியும் ,
ஸ்சங்க ெ
அறிமுகம்
இலங்கையில் சமூகவியல், மானிட வியல், கல்வி மரபை ஆராய்வதே இக் கட்டுரையின் நோக்கம். முதலில் அத்தகைய மரபு ஒன்று இருக்கிறதா என்னும் கேள்வி எழுகிறது. மரபு ஒன்று இருந்தால்தான் அது பற்றி அறிந்து கொள்ளுதல் இயலும், இத்தகைய மரபு இல்லாவிடில் அதற்குரிய காரணங்களை நாம் அடையாளம் காணுதல் வேண்டும். இக்கட்டுரையை எழுதும் போது இரு சம்பவங்கள் என்னுடைய மனதில் உறுத்தும் வகையில் ஞாபகத்திற்கு வரு கின்றன. இவை பற்றிப் பின்னர் குறிப்பிடுவேன். முதலில் மானிடவியலுக்கும் சமூகவியலுக்கு மிடையிலான தொடர்பை இலங்கைச் சூழ்நிலை யில் வரையறை செய்து கொள்ளுதல் அவசியம். பெற்றில் (Beteile) என்னும் இந்திய சமூகவியலாளர் சமூகவியலுக்கும், சமூக மானிடவியலுக்கும் உள்ள தொடர்பை பின்வருமாறு விளக்குகிறார்.
ஒருவர் இவ்விரு துறைகளுக்கு மிடையிலான அடிப்படை ஒற்றுமையை எடுத்துக்காட்டும் வகையில் ஒரு வரைவிலக் கணத்தைத் தேர்ந்து கொள்ளலாம். அவ் வரைவிலக்கணம் சமூக மானிடவியலும், சமூகவியலும் ஒரே தன்மையானவை என்ற கருத்தை உறுதிப்படுத்தும். இதற்கு மாறாக இன்னொருவர் வேறு ஓர் வரைவிலக்கணத்தைக் கூற முனையலாம். அப்போது மானிட வியலுக்கும் சமூகவியலுக்கும் இடையிலுள்ள ஒற்றுமைகள் அல்ல வேற்றுமைகளே முக்கியப்படுத்தப்படும்.
பெற்றில் தனது கட்டுரையில் கூற முனைவது யாதெனில் சமூகவியல் எத்தன்மையது? மானிடவியல் எத்தன்மையது?

வியல் மானிடவியல் ஆய்வும்
ரே
என்னும் கேள்விகள், அவை ஒவ்வொன்றும் வளர்ச்சியுற்ற வரலாற்றுப்பின்னணி, தேசிய சூழல், அவை தேர்ந்தெடுத்த ஆய்வு, குறிக்கோள்கள் ஆகியவற்றைப் பொறுத்தே அமைந்தன என்பதே. ஆகவே இன்று இந்தத் துறைகள் பற்றிய எமது கணிப்பு அதை எப்படி பார்க்க முனைகிறோம் என்பதை பொறுத்தே இருக்கிறது. இவ்விரண்டுக்குமான ஒற்றுமை வேற்றுமை பற்றி இலங்கையில் அதிகம் விவாதிக்கப்படவில்லை. ஆனால் இலங்கைக் கல்வித்துறையில் மானிடவி யலாளர்கள், சமூக மானிடவியலில் காட்டிய அக்கறை காரணமாக இவ்விரு துறைகளும் ஒருங்கிணையும் போக்கினைக் காணலாம். இலங்கையின் ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக் கழகத்தில் சமூகவியல், மானிடவியல் என்ற பெயரில் ஒரு துறை உள்ளது. வேறு எந்த பல்கலைக்கழகத்திலும் இவ்விதமான தனித்துறை கிடையாது. கிழக்குப் பல்கலைக் கழகத்தில் சமூக விஞ்ஞானத்துறை என்ற பெயரில் சமூக விஞ்ஞானங்கள் என்று சொல்லப்படக்கூடிய யாவற்றையும் இணைத்து ஒரு துறையை ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஏனைய பல்கலைக்கழகங்களில் சமூகவியல் என்ற துறை உள்ளது. ஆனால் இப் பல்கலைக்கழகங்களின் பாடவிதானங்களை எடுத்து ஆராய்ந்தால், அமெரிக்காவில் சமூக மானிடவியல் அல்லது பண்பாட்டு மானிடவியல் என்ற வகைக்குள் எதை அடக்குகிறார்களோ அவை மட்டுமே கற்பிக்கப்படுகின்றது என்பது தெரியவரும். தொல்பொருளியல், மொழியியல், பெளதீக மானிடவியல் போன்ற மானிடவியலின் ஏனைய துறைகள் இங்கு கவனம் செலுத்தப் படுவதில்லை. இதனால் சமூகவியல், மானிடவியல் என்ற இரண்டினதும் ஒருங் கிணைவு இங்கு ஏற்படுகின்றது. ஆகவே மானிடவியல், சமூகவியல் என்ற இரண்டுக்கும் இடையிலான வேறுபாடுகள் இலங்கை கல்விச்
28

Page 33
சூழலில் வெளிப்படுவது இல்லை. இவை இரண்டும் பல சந்தர்ப்பங்களில் ஒன்றுக்கு பதில் ஒன்று மாற்றி உபயோகிக்கப்படுகின்றது. ஆகவே இலங்கைச் சூழலில் இரண்டையும் வேறுபடுத்தி நோக்குவதில் அர்த்தமில்லை.
இலங்கையின் மரபு
அண்மையில் நடைபெற்ற ஒரு கருத் 5JÉleß6ö 6600ffg5T6rd (Veena Das), S6m}6rd நந்தி (Ashis Nandy) ஆகிய இரு இந்திய அறிஞர்கள் பங்கு பற்றினர். இந்திய மானிடவியல் சொல்லாடல் என்பது பற்றி வீணாதாளில் பேசினார். அதற்கு எதிர் வினையாக கருத்துரை வழங்கும்படி நான் அழைக்கப்பட்டேன். அப்பொழுது இலங்கையில் மானிடவியல் சொல்லாடல் (Discourse) என்று எதைக் குறிப்பிடலாம் என்ற பிரச்சினை எனக்கு ஏற்பட்டது.
இலங்கையைப் பற்றி எழுதப்பட்ட மானிடவியல் ஆய்வுகள் ஏறக்குறைய முழுமையும் இலங்கையரல்லாத அந்நியர் களால் அல்லது வட அமெரிக்காவிலும், அவுஸ்திரேலியாவிலும் இடம் பெயர்ந்து வாழுகின்ற இலங்கையரான மானிடவியலாளர் களால் எழுதப்பட்டனவே.
அதாவது இலங்கைக்கு என ஒரு சொல்லாடல் இருக்கிறதா? என்பது சிந்திக்கப்பட வேண்டியது. இன்னொரு சம்பவத்தையும் குறிப்பிடுகிறேன். ஒருமுறை எனது சக கல்வியாளர் ஒருவர், இலங்கையில் மானிடவியல் கல்வி மரபு என்பது பற்றி சொற்பொழிவு நிகழ்த்துமாறு என்னைக் கேட்டார். அப்பொழுது அந்த மரபு யாது என்பதையும் அதன் முன்னோடிகள் யாவர் என்பது பற்றியும் அவரிடமே திருப்பிக் கேட்டேன். அவருடைய பதில் இலங்கை மானிடவியல் தொடர்பான முக்கிய நூல்களையும் பிரதிகளையும் நிரல் படுத்துவதாயும் அதன் முன்னோடிகளாக றையன், (Ryan) ஒபயசேகரா, தம்பையா என்ற பெயர்களைக் கூறுவதாகவும் அமைந்தது. இவர்கள் யாவரும் அந்நியர்கள். இலங்கை யராகப் பிறந்திருந்தும் அந்நிய சூழ்நிலையில்

செயற்படுபவர்கள். ஆதலால் இலங்கையில் சமூகவியல், மானிடவியல் மரபு ஒன்று உருவாகவில்லை. இலங்கையைப் பற்றிய நூல்கள் இருப்பது வேறு. இலங்கையில் ஒரு மரபு உருவாகுவது வேறு. ஆதலால் இலங்கைக்கு ஒரு மானிடவியல் சமூகவியல் கல்வி மரபு கிடையாது என்பதே எனது வாதம். இத்தகைய ஒரு மரபு இல்லாமல் போனது பற்றிய காரணங்களை நாம் அடையாளம் காண வேண்டும்.
ஒரு குறித்த துறை தொடர்பான கல்வி மரபு என நாம் கருதுவது யாது? தொடர்ச்சியான ஆய்வு முயற்சிகள் பயனுறுதி வாய்ந்த கற்பித்தல், ஒழுங்காகத் தடையின்றி நடைபெறும் விவாதங்கள், ஆரோக்கியமான விமர்சனம், சுதேச மொழிகளில் நூல்களை வெளியிடுதல், புலமைத்துறை எல்லைகளைத் தாண்டி சமூக அரசியல் மட்டத்தில் ஏற்படும் தொடர்பு ஆகிய யாவற்றினதும் ஒன்றிணைந்த விளைவாகவே இலங்கைக்கான மானிடவியல் சமூகவியல் கல்வி மரபு உருவாக முடியும். மேலும் அத்தகைய மரபு உலகளாவிய மானிடவியல் சமூகவியல் கல்வி மரபின் எல்லைக்குள் தனக்கெனவோர் இலங்கை என்ற அடையாளமுடைய கட்டளைப்படிம மொன்றையும் (Paradigm) உருவாக்கிக் கொள்ளுதல் வேண்டும். அதேவேளை அம்மரபு குறுகிய எல்லைக்குள் தன்னை முடக்கிக் கொள்ளாமல் உலகளாவிய அறிவுத்துறை விருத்தியுடன் பிணைத்துக் கொண்டதாகவும் இருத்தல் வேண்டும். ஒரு பல்கலைக்கழக ஆசிரியர் என்ற முறையிலும் மானிடவியலாளர் என்ற முறையிலும் இலங்கைக்குரிய மரபு ஒன்று இருப்பதாகவோ மேற் குறித்த அடையாளங்கள் இங்கே புலப்படுவதாகவோ நான் கூற மாட்டேன்.
ஏன் இந்த நிலை ஏற்பட்டது? இதற்கு பல காரனங்கள் உள்ளன. 1950களிலும் 1960களிலும் மானிடவியல் சமூகவியல் மரபு ஒன்று இலங்கையில் தளிர் விட்டது. ரால்ப் பிரிஸ், ஒபயசேகரா, தம்பையா ஆகியோர் அப்போது இலங்கையில் வாழ்ந்தனர். கற்பித்தலிலும், ஆராய்ச்சியிலும், கோட்பாட்டு
29

Page 34
உருவாக்கத்திலும் விவாதங்களை முன்னெடுப் பதிலும் அவர்கள் அக்கறையோடு தொழில் பட்டனர். உண்மையில் இலங்கை மரபு ஒன்று உருவாகுவதற்கான சூழ்நிலை அன்று இருந்தது. ஆனால் இந்தப் பயிர் முளை யிலேயே கருகி விட்டது. இவர்கள் நாட்டை விட்டு வெளியேறினர். இதற்குப் பல காரணங்கள் இருந்தன. இவர்கள் இங்கிருந்த காலம் ஒரு பொற்காலமாகக் கருதப்பட்டு இன்னும் நினைவு கூரப்படுகின்றது.
மேற்குறித்தவர்கள் நாட்டைவிட்டு வேறு இடங்களுக்குச் சென்றபொழுதும், இலங்கை தொடர்பான பிரச்சினைகளை ஆராய்வதில் தொடர்ந்து அக்கறை காட்டினர். இவர்களோடு வெலன்டைன் டானியல், மைக்கல் றொபர்ட்ஸ், செனவிரத்ன ஆகிய இலங்கையரும் வெளிநாடுகளில் இருந்தவாறே தொடர்ந்து இலங்கைப் பிரச்சினைகள் பற்றி எழுதி வந்தனர்.
1993ல் எலிபெத்நிசான் என்பவர் ஒரு கட்டுரையில் இவர்களுடைய பணிகள் பற்றி a JT155(555.Tit. The work of Anthropologists from Sri-Lanka 6T66 ug. 3455" (860) Ju 56i தலைப்பு. இதில் விபரிக்கப்பட்ட எழுத்தாளர் களைவிட இலங்கையைப் பற்றிய மானிட வியல் ஆய்வில் அக்கறை செலுத்திய பல ஆய்வாளர்கள் உள்ளனர். ஸ்ரிறாட், ஸ்பென்சர், ஸ்கொட், மக்ஜில்வரி ஆகியோர் இவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள். இலங்கையில் நிலை கொண்டிருந்த சில ஆய்வாளர்களும் குறிப்பிடக் கூடிய ஆய்வுகளை வெளியிட்டனர். கொழும்பு பல்கலைக்கழகத்தின் ரீஹெற்றிகே, பேராதனைப்பல்கலைக்கழகத்தின் ரியுடர் சில்வா ஆகிய இருவரும் இலங்கையில் நிலை கொண்டிருப்பவர்களில் குறிப்பிடத்தக்க வர்கள். இவர்களது உழைப்பு நல்ல பயனைத் தந்துள்ளது. குறிப்பாக, வெளிநாட்டவர்களும் வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்களும் செய்துள்ள பணிகள், இலங்கையின் சமூகவியல் மானிடவியல் கல்வியை பெரிதும் பாதித்துள்ளன. இதனை விட தென்னாசிய கல்வி மரபிலும் இந்த ஆய்வுகள் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. ஆனால் இலங்கைக்கென
30

ஒரு சமூகவியல் மரபை இவை உருவாக்கினவா என்பது கேள்விக்குரியதே.
ஆங்கில மொழி அறிவு
மேலே குறிப்பிட்ட ஆய்வுகளின் தரத்தைப் பற்றி (சில விதிவிலக்குகள் தவிர) எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் இவை பற்றியுள்ள பிரச்சினை யாதெனில் இந்த ஆய்வுகள் யாவும் ஆங்கிலம் பேசும் சூழலில் ஐரோப்பா, வட அமெரிக்கா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் எழுந்தன. இவ்வாறு ஆங்கிலத்தில் வளரும் இந்த மரபு இலங்கையையும், இலங்கைச் சூழலையும் பாதிக்கவில்லை.
மானிடவியல், உலகம் தழுவிய புலமைத்துறையாகும். இதனால் அது பற்றிய நூல்கள் உலகமொழி ஒன்றில் எழுதப்பட்டால் தான் பரவலான அறிஞர் வட்டத்தைப் போய்ச்சேரும். மேலும் அங்கீகாரம், கணிப்பு ஆகியவற்றைப் பெறுவதற்கும் இதுவே ஒரு வழி. ஆனால் சிங்களமும் தமிழும் மட்டும் தெரிந்த சுதேசக் கல்விச் சூழலில் இந்த ஆங்கில எழுத்துக்கள் மொழியடிப்படையில் அமையும் கல்வித்துறை ஏகாதிபத்தியம் ஒன்றை உருவாக்குகின்றன. இலங்கையில் இத்துறைகளில் கற்பிப்பவர்களுக்கோ கல்வி கற்பவர்களுக்கோ ஆங்கிலத்திலே எழுதும் இவ்வெழுத்துக்கள் பற்றி அதிகம் தெரியாது. இதனால் இலங்கை மரபு ஒன்றின் உருவாக்கத்திற்கு இவ்வெழுத்துக்கள் உதவவில்லை. மேலே குறித்த எந்த ஆய்வாளர்களும் இலங்கையிலே தமிழ் சிங்கள் கல்வியாளர்களிடமும், எமது கல்வி, பண்பாட்டு சூழலிலும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆதலால் மொழி ஒரு முக்கிய தடையாக அமைகின்றது. ஒரு கல்வி மரபின் உருவாக்கத்திற்கு கற்பித்தல், ஆராய்ச்சி, விவாதம் ஆகியன மிகவும் முக்கியமானவை. ஒன்றோடொன்று தொடர்புபட்ட இச்செயல் முறைகள் இலங்கையில் உருவாகக்கூடிய வாய்ப்பு இல்லை. மேற்குறித்த ஆய்வாளர் களை சுதேசமொழிகளில் எழுதும்படி நாம் வற்புறுத்த முடியாது. ஆனால் பிரதான நூல்களையாவது மொழிபெயர்க்க வேண்டும்.

Page 35
பல்கலைக்கழகங்களிலே 40 ஆண்டுகள் சமூகவியல் கற்பித்த பின்னரும் முக்கிய மொழி பெயர்ப்புகள் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பல்கலைக்கழகத்தில் கல்வி கற்பதற்கு செல்லுகின்ற மாணவர்களும் இந்நூல்களைப் படித்துப் புரிந்து கொள்ளுகின்ற அளவுக்கு ஆங்கில அறிவு இல்லாதவர்களாகவுள்ளனர். ஆகக் குறைந்தது இவற்றைப் புரிந்து கொள்ளக்கூடிய ஆசிரியர்களாவது இருத்தல் வேண்டும். ஆனால் இளம் தலைமுறை ஆசிரியர்களிடமும் ஆங்கில அறிவு இல்லை. தமது ஆசிரியர்கள் மூலம் தாம் கேள்விப்பட்ட விடயங்களை வைத்துக்கொண்டு மானிடவியல் சமூகவியல் நூல்களில் உள்ள செய்தி களையும் துணுக்குகளையும் இவர்கள் தமது மாணவர்களுக்கு எடுத்துரைக்கின்றனர். பரம்பரை பரம்பரையாக மாணவர்கள் எழுதி வருகின்ற "நோட்ஸ்களில்” தவறுகளும் பிழைகளும் மலிந்து விட்டன. இந்த நோட்ஸ்களின் தரமும், மூலமும் சந்தேகத்திற் குரியவை. நோட்ஸ், பண்பாடு கிளிப்பிள்ளை அறிவு மரபொன்றையே உருவாக்கி வருகிறது. இன்று எமது நாட்டில் பெறப்படும் கல்வி, பண்டைக்காலத்தில் தோன்றிய வாய்மொழி அறிவு மரபுக்கு ஒப்பானது. வாய்மொழி இலக்கியம் என்ற கருத்து மானிடவியலாளர் களுக்கு மிகவும் பரிச்சயமான ஒன்றுதான். ஒவ்வொரு சந்ததியும் தாம் வாய்மூலம் பெற்றதுடன் புதிதாக சிலவற்றை சேர்த்துக் கொள்வதும் சில பகுதிகளை நீக்குவதும், வாய்மொழி மரபின் முக்கிய இயல்பு.
பிறநாடுகளில் மானிடவியல், சமூகவியல் துறைகளில் நடைபெறும் விவாதங்கள் இலங்கையில் ஒரு சிறு சலனத்தைக்கூட உண்டாக்குவதில்லை. சிலர் இன்னும் பறேற்றோவைத் (Pareto) தாண்டி வரவில்லை. துணிவு மிக்க சிலர் லெவிஸ்ரோர்ஸ் பற்றிப் பேசுவதுண்டு. பூக்கோ, தெரிதா ஆகியவர்களின் கருத்துக்கள் தப்பித்தவறி அடுத்த நூற் றாண்டின் மத்தியில் எம்மை வந்தடைதல் கூடும். அவ்வேளை அவர்களுடைய கோட்பாடுகளின் பயன் புதிதாகத் தோன்றிய

கோட்பாடுகளால் வலுவற்றுப் போகலாம். நூல்கள் பெறுவதிலுள்ள கஷ்டம் இன்னொரு பிரச்சினை. இலங்கையைப் பற்றிய மானிடவியல், சமூகவியல் நூல்களை ஆங்கிலம் கற்றவர்களால் கூட இலகுவில் பெற்றுக் கொள்ளுதல் முடியாது. இவற்றின் விலை மிக உயர்வானவை. இவ்விதமாக பொருளியல் காரணிகளும், மொழி தெரியாமை என்ற காரணியும் அறிவு விருத்திக்குத் தடையாக அமைந்துள்ளன.
தவறான விளக்கங்கள்
இப்பின்னணியில் சுதேச மொழிகளில் எழுதப்படும் நூல்களில் தரப்படும் விளக்கங்கள் தரக்குறைவாக அமைந்துவிடும் நிலையில் உள்ளன. இத்தரக்குறைவான நூல்களை மாணவர்கள் படிக்கிறார்கள். அவர்கள் உருவாக்கிக் கொள்ளும் கருத்துக்களும் விவாதத்திற்குரிய விடயங்களும் இந்த நூல்களை ஆதாரமாகக் கொண்டே அமைகின்றன. இந்த விவாதங்கள் புலமை நெறி சாராதனவாய் - பயனற்ற விவாதங்களாக அமைகின்றன. சில உதாரணங்களை மட்டும் நான் குறிப்பிட விரும்புகின்றேன். நூர்யல்மன் 6i6öLjG)Jff 'Under the BO Tree' (seyJJ8FLDU நிழலில்) என்ற நூலை 1971ம் ஆண்டு எழுதியுள்ளார். இதனைப் பற்றி சிங்களத்தில் எழுதியுள்ள பேராசிரியர் ஒருவர் பின்வருமாறு எழுதுகிறார்.
இலங்கையின் நாட்டார் சமயம் பற்றி ஆய்வு செய்து 'அரசமர நிழலில் என்னும் தலைப்பில் நூர்யல்மன் நூலொன்றை எழுதியுள்ளார். இந்நூல் சமூகவியல் நோக்கில் எழுதப்பட்டுள்ள போதிலும் சிங்களவர்களின் சமயம் பற்றியும் சமூகம் பற்றியும் விளக்க முறையில் ஆராய்கிறது.
இவ்விதம் எழுதியிருப்பவர் சமூகவியல் துறைப் பேராசிரியராவர். யல்மன் தனது நூலில் சமயத்தைப் பற்றியோ பெளத்தம் பற்றியோ குறிப்பிடக் கூடியளவு விளக்கமாக எழுதவில்லை. அவர் எழுதிய அரசமர நிழலில் என்ற நூல் இலங்கையின் நாட்டார் சமயம் பற்றியது அல்ல. அது இலங்கையின் சாதி,
31

Page 36
உறவுமுறை, திருமணம் ஆகியன பற்றி ஆழமாக ஆய்வு செய்கிறது. ஆனால் நூலின் பொருள் இப்படித்தான் இருக்கும் என்ற ஊகத்தில் பேராசிரியர் பிழையாக எழுதியிருக் கிறார். யல்மனின் நூலின் சில பக்கங்களை யாவது தட்டிப்பார்த்திருந்தால் அதன் உள்ளடக்கம் வேறுபட்டது என்பதை கண்டு கொள்ள முடியும். இதேபோல் அண்மையில் "திவயின’ பத்திரிகையில் "மாறுதலுற்ற Gugiggs afLDub" (Buddhism Transformed) எனும் தலைப்பில் ஒபயசேகராவும் ஹொம்பிரிட்ஜ் என்பவரும் எழுதியுள்ள நூல் பற்றி எழுதும் இன்னொருவர், இந்நூல் மார்க்சீய விளக்கத்தைத் தருகிறது என்கிறார். ஒபயசேகரவிற்கும், ஹொம்பிரிட்ஜ்ஜுக்கும் மார்க்சீயத்திற்கும் முடிச்சுப் போடுவது எப்படி? கட்டுரையாளர் இவர்களை மார்க்ஸியவாதிகள் என்று கூறுவது விசித்திரமானது. இதே கட்டுரையாளர் தம்பையாவின் நூலைப் பற்றி விமர்சித்துப் பேசும்போது கூறியதையும் எடுத்துக்காட்டாக கூறலாம். தம்பையா இலங்கை பெளத்த சமயத்தின் மறுமலர்ச்சி பற்றி எழுதியுள்ளார். அச்சமய மறுமலர்ச்சி ஏற்பட்ட காலத்தில் வாழ்ந்த அனுபவம் இல்லாத ஒருவர் அதைப் பற்றி எப்படி எழுதலாம் என்ற கேள்வி எழுப்புகிறார் இவர். இது எவ்வளவு விசித்திரமான கேள்வி. இதன் பொருளி, கடந்த காலத்தைப் பற்றி, நாம் வாழ்ந்திராத காலம் பற்றி - ஆராய்வது சாத்தியமில்லை. ஆக, ஒரேயொரு வழிதான் உண்டு. கடந்த காலத்தில் வாழ்ந்த இலங்கைப் பிரஜைகளின் நினைவுக் குறிப்புகளை வைத்துதான் வரலாறு எழுத வேண்டும். அப்படியானால் துட்டகைமுனு, தேவநம்பிய தீசன் ஆகியோர் காலம்பற்றி எழுதுவது எப்படி? மறுபிறவி எடுத்தவர்களின் ஞாபகங் களையும் வாக்குமூலங்களையும் வைத்துத் தான் மானிடவியலும் வரலாறும் எழுத வேண்டுமா? தம்பையா பற்றி விமர்சித்தவர் ஒரு வரலாற்றுப் பேராசிரியர். இவர் மானிடவியல் சமகால சமூகம் பற்றியதென்றும், மானிடவி யலாளர் ஒருவருக்கு வரலாறு பற்றி எழுதுவதற்கு உரிமை கிடையாது என்றும் கூறியிருக்கிறார். பல அருமையான மானிட
32

வியல், சமூகவியல் நூல்கள் வரலாற்று முறையில் அமைந்துள்ளன. ஏனெனில் வரலாற்று மானிடவியல், வரலாற்று சமூகவியல் என்பன கடந்த காலத்தைப் பற்றியவையே. இந்த வாதத்தின் படி அந்நூல்களுக்கு மானிடவியலிலும் , சமூகவியலிலும் இடமில்லை. அவற்றின் ஆசிரியர்களுக்கும் இடம் இல்லை.
இந்த விளக்கங்களைப் படிப்பவர்களுள் பெரும்பான்மையினோர் சிங்களம் மட்டும் தெரிந்தவர்கள். அவர்கள் ஆங்கிலத்தில் உள்ள மூல நூல்களை நேரடியாகப் படிக்கும் ஆற்றல் அற்றவர்கள். யல்மன், ஒபயசேகர, ஹொம்பிரிட்ஜ் ஆகியோரை ஆங்கில மூலம் நேரடியாக அறிய முடியாதவர்கள் சமூகவியல், மானிடவியல் பற்றிய தரமான நூல்கள் சிங்களத்திலோ தமிழிலோ இல்லை. ஆனால் மேலே குறிப்பிட்ட கண்டனங்கள் சிங்களப் பத்திரிகைகளில் வெளிவந்தன. நூல்கள் சிங்களத்தில் எழுதப்பட்டன. இவை பரவலாகக் கிடைக்கக் கூடியன. குறிப்பாக மாணவர்களிற்கு போய்ச் சேரக்கூடியன. இதனால் மாணவர்களும் பல்கலைக்கழகங்களில் படிப்போரும் இவற்றை நம்பியே தமது விவாதங்களை நடத்துகின்றனர். இந்தத் தரக்குறைவான விளக்கங்களைப் பின்பற்றி எழும் விவாதங்கள் பயனற்றவையாக அமைகின்றன. தம்பையாவின் நூலைப் பற்றி எழுந்த விவாதம் இதனைத் தெளிவாக நிரூபித்துள்ளது. இந்தச் சூழ்நிலையில் இலங்கைக்கென ஒரு மானிடவியல், சமூகவியல் மரபை உருவாக்குவது எப்படி?
விரிவுரையாளர் நியமனம் - சிக்கல்
இலங்கைப் பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளர்களை நியமிப் பதில் கடைப்பிடிக்கப்படும் முறைகள் மானிடவியல், சமூகவியல் துறையின் வளர்ச்சிக்கு உகநீததாகவோ, அத் துறைகளில் புலமைத்துவ மரபு செழிப்பதற்கு உதவுவதா கவோ அமையவில்லை. விரிவுரையாளர்களை சேர்க்கும் பொழுது இளங்கலைமாணி (பி. ஏ.) பட்டம் பெற்றவர்கள் சேர்த்துக் கொள்ளப்படு கிறார்கள். இத்தகைய ஆட்சேர்ப்புமுறை எமது நாட்டிலும் சிறந்த தகுதிகளைப் பெற்ற

Page 37
பட்டதாரிகள் உருவாகிக்கொண்டிருந்த காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது. எமது பல்கலைக்கழகங்களில் புலமைத்துவப் பண்பாட்டை வளர்ப்பதற்கு ஏற்றதாக இந்த ஆட்சேர்ப்பு முறை இன்று அமையவில்லை. உயர் பட்டப்படிப்புக்கான பாடநெறிகளை கற்பிப்பதற்கும், ஆய்வுத்திட்டங்களை மேற் பார்வை செய்யவும், மாணவர்களுக்கு முன் மாதிரியையும் ஊக்கத்தையும் வழங்கவுங் கூடிய புலமைத் தகுதியுடையவர்கள் இம் முறையில் தெரிவு செய்யப்படும் வாய்ப்பு இல்லை. அறிவுத்துறை முதிர்ச்சி இளம் விரிவுரையாளர்களிடம் இல்லை; போதிய பயிற்சியும் அவர்களுக்கில்லை. அதற்குரிய காரணம் அவர்களது ஆங்கிலப் பயிற்சியின்மை தான். தம்துறை சார்ந்த பொருத்தமான நூல்களை இவர்கள் படிப்பதில்லை. அவை பற்றிய பரிச்சியம் இவர்களுக்கில்லை. ஆதலால் இத்தகைய இளங்கலைப்பட்ட தாரிகள் தாம் தெரிவு செய்த துறையில் தேடல் முயற்சியில் ஈடுபடவும், தமது அறிவு எல்லைகளை விருத்தி செய்யவும் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமாதலால் விரிவுரையாளர் களை சேர்க்கும் பொழுது ஆகக் குறைந்தது எம். ஏ பட்டம் பெற்றவர்களை சேர்த்துக் கொள்வதுதான் பொருத்தமானது. அதன் மூலம் பயிற்சியும், தகுதியும் உடையவர்களை விரிவுரையாளர்களாகத் தேர்ந்து கொள்ளலாம்.
பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் தத்தம் பல்கலைக்கழகங்களிற் பயின்றவர் களையே விரிவுரையாளர் பதவிகளில் சேர்த்துக் கொள்ளுகின்றன. இந் நடைமுறை யும் தவறானது. உதாரணமாக, கொழும்பு பல்கலைக்கழகம் விரிவுரையாளர்களை நியமிக்கும் பொழுது பேராதனையில் அல்லது பூரீ ஜயவர்த்தன புரவில் படித்தவர்களை சேர்ப்பதில்லை. இது குறைகளுக்கு இடமளிக் கின்றது. முதலாவதாக, மாணவர்களுடைய ஆயப் வு அக் கறைகள் அவர்களுக்கு கற்பிக்கின்ற ஆசிரியர்களது ஆய்வு அக்கறைகளைச் சுற்றியே சுழலுகிறது. இதனால், ஆசிரியர் மாணவர் பரம்பரையில் ஆய்வு நோக்குகள், அக்கறைகள் ஓரினத் தன்மை கொண்டனவாக அமைகின்றன. இளம்

விரிவுரையாளர்கள், ஒரே பல்கலைக்கழகத்தின் ஒரே துறையிலிருந்து தெரிவு செய்யப்படுவதால் ஆய்வுகளில் பன்முகத்தன்மை இடம் பெறும் வாய்ப்பு இல்லை. இளம் விரிவுரையாளர்களின் ஆய்வுத் திறன்கள், கோட்பாட்டு நெறிகள் விரிவடைவதற்குச் சந்தர்ப்பம் இல் லை அமெரிக்கப்பல்கலைக்கழகங்களில் விரிவுரை யாளர்களை சேர்த்துக் கொள்ளும் பொழுது தமது மாணவர்களை விடுத்து பிற பல்கலைக்கழகங்களில் படித்தவர்களை சேர்த்துக் கொள்கிறார்கள். இலங்கையில் கடைப்பிடிப்பது போன்ற முறையில் காணப்படும் குறைகளை தவிர்ப்பதற்காகவே இதனை அவர்கள் செய்கிறார்கள். சில பல்கலைக் கழகங்களில் சொந்த மாணவர்களைச் சேர்த்துக் கொள்வதற்கு தடை விதிக்கப் படுகின்றது.
சொந்த மாணவர்களை சேர்த்துக் கொள்வதில் மிகப் பெரிய ஆபத்து யாதெனில் "sguist Gaftsb6gs ff" (Yes Sir syndrome) என்ற மனப்பான்மை வளர்வதுதான். ஒரே துறையில் பணியாற்றுகின்ற முதுநிலை விரிவுரையாளர்களுக்கும், பேராசிரியர் களுக்கும், இளம் விரிவுரையாளர்க்குமிடை யேயுள்ள தொடர்பில் பெரிய சிக்கல் உருவாகறது. எமது சமூகத் தரில் செயற்பாட்டிலுள்ள சமூகமயமாக்கம் (Socialisation) 56ó6. El606upues6ñ. பல்கலைக்கழகங்களில் மாணவர்களிடம் புகுத் தப்படும் உறவுமுறை பற்றிய மனப்பாங்குகள், பல்கலைக்கழக ஆசிரியர் களிடமும் புகுந்து விடுகிறது. குருவுக்கும் சீடனுக்கும் இடையிலுள்ள இடைவெளி நல்லதோர் விழுமியமாகப் போற்றப்படுகிறது. இதனால் ஆசிரியர்களை மாணவர்கள் விமர்சித்தல் இயலாது. பல்கலைக்கழகங் களின் கல்வித்துறைகளுக்குள்ளே படிமுறை அமைப்பு (Hierarchy) செயற்படுகிறது. இம்முறையில் விவாதம், ஆக்கபூர்வமான விமர்சனம் என்பன இடம் பெறுவதில்லை இளம் விரிவுரையாளர்கள் முதியோரை விமர்சிப்பது கிடையாது. இது மட்டுமல்ல இப்பழக்கம் பல்கலைக்கழக மாணவர் மத்தியிலும் புகுத்தப்படுகிறது. பல்கலைக்
33

Page 38
கழகங்களில் வகுப்பு நேரத்தில் மாணவர்கள் அமைதியாக இருப்பது இதற்கு சிறந்த அடையாளமாகக் கொள்ளலாம். கேள்வி கேட்பதோ, ஆசிரியர்களின் கருத்துக்களை புலன் மை ரீதியாக முரணித்து தர்க்கிப்பதோ கிைேடயாது. அதனை ஆசிரியர் களே மறைமுகமாக ஆதரித்தும் தூண்டியும் 5 வருகின்றனர். சிலர் நேரடியாகவே இதனை வெளிப்படுத்துவதுண்டு. தனிநபர்களின் மனப்பாங்குகளைவிட அமைப்பு ரீதியான இயல்புகளே பிரதான இடத்தைப் பெறுகின்றன என்பது கவனிக்கப்படல் வேண்டும்.
நிறுவனங்களுக்கிடையே தொடர்பு
நாட்டிலுள்ள வெவ்வேறு பல்கலைக்கழ கங்கள், ஆய்வு நிறுவனங்கள் என்பனவற்றிற் கிடையே தொடர்புகள் இன்மை இன்னொரு தடையாகும். உதாரணம், கொழும்புப் பல்கலைக்கழகத்தின் மானிடவியலாளர்களும், சமூகவியலாளர்களும் பேராதனைப் பல்கலைக்கழகத்திலுள்ள தமது துறை சார்ந்தவர்களை முறைசார், முறைசாரா வழிகளில் ஒழுங்காகச் சந்திப்பது கிடையாது.
இங்கே இரு இடங்களுக்குமுள்ள இடைத் தூரம் பிரச்சினையாக உள்ளது. இலங்கை யரிடம் தீவு மனப்பான்மை ஒன்று நிலவுகிறது. 35 கி. மீற்றருக்கு மேற்பட்ட தொலைவில் உள்ள இடத்தை தூரவிடமாகவே கொள்ளு கிறோம். கூட்டமொன்று நடந்தால் அவ்வளவு தூரம் பிரயாணம் செய்வதற்கு விரும்பு வதில்லை. மேலும் அறிவுச் செருக்கு காரண மாக சிலர் பூரீ ஜயவர்த்தனபுர, களனி ஆகிய பல்கலைக்கழகங்களை கவனத்தில் எடுத்துக் கொள்வதில்லை. அவற்றை அறிவுத்துறைப் பாலைவனங்களாகவே இவர்கள் கருதுவர். தனியார் துறை ஆய்வு நிறுவனங்களோடு பல்கலைக்கழகங்களுக்கு குறிப்பிடக்கூடியளவு தொடர்பு கிடையாது. இலங்கையில் ஆய்வு மாநாடுகள், கருத்தரங்குகள் ஒழுங்காக நடைபெறுவதில்லை. இதனால் கருத்துப் பரிமாற்றமும் விவாதமும் இடம்பெறுவதில்லை. அவ்விதம் மாநாடுகள் நிகழும்போது இளந் தலைமுறை விரிவுரையாளர்கள் இவற்றில் பங்குபற்றுவது குறைவு. காரணம்
34

பெரும்பாலான மாநாடுகள் ஆங்கில மொழியில் நடைபெறுவதேயாகும். ஆங்கில மொழிப் பயிற்சியின்மையால் இளம் விரிவுரையாளர்கள் சர்வதேச மாநாடுகளிலும் பங்குபற்றுவதில்லை. முதுநிலை விரிவுரையாளர்கள் பேராசிரியர் கள்கூட மாநாடுகளில் பங்குபற்றுவதற்கு நிர்வாக ரீதியான தடைகள் பல உள்ளன. நிர்வாகத் தடைகளைத் தாண்டி ஒருவர் வெளிநாடொன்றில் நிகழும் மாநாடொன்றில் பங்கு பற்றுவதற்கு 30 நாட்களுக்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும். இந்தக்கால எல்லைக்குள் விண்ணப்பித்து பங்குபற்றுனர் போய்ச் சேரும்வரை மாநாடு காத்திருப்பது இல்லை. இலங்கையின் நிர்வாக ஒழுங்கு முறைகள் பல்கலைக்கழக ஆய்வறிவாளர் களின் சுதந்திரத்தை கட்டுப்படுத்துவன வாகவும், அவர்களது புலமைசார் நடவடிக்கை களில் தலையிடுவனவாகவும் அமைகின்றன. இதன் விளைவாக புலமைசார் நடவடிக்கைகள் தேக்கமடைகின்றன. தொண்டர் ஸ்தாபனங்கள், (N.G. O.) தனியார் நிதியைக் கொண்டியங்கும் ஆய்வு நிறுவனங்கள் இது போன்ற மாநாடுகளையும் கருத்தரங்குகளையும் ஒழுங்கு செய்யலாம். இங்கு நடைபெறும் கருத்தரங்குகளிற்கூட பங்கு பற்றுதல் குறைவாக உள்ளது. காரணம், ஆங்கிலமொழி தடையாக அமைவதாகும். மத்திய தர வர்க்க அறிவாளிகள் ஒரு சிலரே இக் கருத்தரங்கு களில் பங்கு பற்றுகிறார்கள். இதனால் கொழும்பில் நிகழும் கருத்தரங்குகளில் எல்லாச் சந்தர்ப்பத்திலும் ஒரு குறுகிய வட்டத்தினரே மீண்டும் சந்தித்துக் கொள்கின்றனர். இந்நிலை, ஒரு வகையான ஆய்வறிவுத் துறை ஏகாதிபத்தியத்தை உருவாக்கியுள்ளது. இதனால் நாம் பேசும் கல்விப்பாரம்பரியம் ஒன்று உருவாவதற்கு இடமில்லாது போகிறது. மத்தியதர வர்க்கத்தினர் ஒன்று கூடும் அரங்குகளாகவே இவை மாறிவிட்டன; இது நன்றாக வேரூன்றி விட்டது.
சமூகவியல், மானிடவியல் துறையில் தரமான பருவ இதழ்கள் (Journals) ஒழுங்காக வெளியிடப்படுவதில்லை. இது இன்னொரு பெரிய குறைபாடாகும். சமூக விஞ்ஞானத்

Page 39
துறைப் பருவ இதழ்களாக இரண்டைக் கூறலாம். ஒன்று நரெசா (Naesa) நிறுவனம் வெளியிடுகிறது. மற்றது, பேராதனைப் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்படுகிறது. இவற்றில் பல முக்கிய ஆய்வுக் கட்டுரைகள் கடந்த காலத்தில் வெளிவந்துள்ளன. மானிட வியல், சமூகவியல் துறையில் இவ்வாய்வுக் கட்டுரைகள் சிலவற்றின் தாக்கம் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியதாகும். இவ்விதழ்கள் ஒழுங்காக வெளியிடப்படுவதில்லை. இவற்றின் விநியோகம் திருப்தியற்றதாக உள்ளது. நிதித் தட்டுப்பாடும், ஆய்வறிவாளர்கள் பங்களிப்பு குறைவாக இருத்தலும் இவ்விதழ்கள் எதிர் நோக்கும் முக்கிய பிரச்சினைகள், கொழும்பு 4 soa5606)&Epsib University of Colombo Review என்ற பருவ இதழை வெளியிடுகிறது. அது எப்பொழுது வெளிவரும் என்பது கணிப்பிட்டுக் கூறக்கூடிய ஒரு விடயமல்ல. தரமும் திருப்தியற்றது. மார்க நிறுவனத்தின் Marga பருவ இதழும் உள்ளடக்கத்தில் படிப்படியாகத் தரம் தாழ்ந்து போயுள்ளது. எம் நாட்டின் நிலையை இந்தியாவோடு ஒப்பிடும்போது எவ்வளவு வேறுபாடு வெவ்வேறு இரு துறைகளில் இருந்து ஒவ்வோர் உதாரணங்களை மட்டும் குறிப்பிடுவோம்.
Contributions to Indian Sociology, Economic & Political weekly 6T60 u607 உயர்தரத்தை பேணுகின்றன; ஒழுங்காக வெளிவருகின்றன. விநியோகமும் பரந்த வட்டத்தைச் சென்றடைகின்றது. இவற்றின் சிறப்புக்குக் காரணம் இவற்றின் பதிப்பா சிரியர்களும், வெளியிட்டாளரும் காட்டிவரும் அக்கறை யேயாகும். அத்தோடு இம் முயற்சிகளுக்கு இந்தியாவுக்குள் இருந்தே வளங்களைத் தேடிக் கொள்ளக்கூடிய வாய்பபுக்கள் உள்ளன. அரசாங்கமும் ஆதரவை வழங்குகிறது. இந்திய சமூகவியல் மானிடவியல் தொடர்பான மிக முக்கியமான விவாதங்கள் பலவற்றிற்கு Contributionst IndianSociologyஇதழ் அரங்காக அமைந்தது
நிதிப்பற்றாக் குறை
மானிடவியல் சமூகவியல் துரை ஆய்வுக்கான போதிய நிதி கிடைப்பதில்லை

இலங்கையின் ஆய்வுத்துறையில் ஒரு அதிகாரக் கட்டமைப்பு நிலவுகிறது. சமூக விஞ்ஞானத் துறைகள் இவ்வதிகாரக் கட்டமைப்பின் கீழ்ப்படியில் அமைந்திருப்பதும், ஏனைய துறைகள் ஆதிக்கம் செலுத்துவதும் நிதிப் பங்கீட்டில் முக்கிய காரணிகளாக விளங்கு கின்றன. பல்கலைக்கழகங்களில் இருந்து ஆய்வுக்கான போதிய நிதி கிடைப்பதில்லை. இத்தேவைக்காக ஒருவர் வெளிநாட்டு நிதி உதவியை எதிர்பார்க்கும் நிலையுள்ளது. இதனால் ஆய்வாளர்கள் தங்களது ஆய்வுக்குரிய விடயங்களை வெளிநாட்டவரின் தேவைகளுக்கேற்றபடி தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாய நிலையுள்ளது. உதாரண மாக, ஒரு மானிடவியலாளர் அரசியல் வன்முறைபற்றி ஆராய விருப்பம் கொண்டவராக இருக்கலாம். ஆனால் நிதி வழங்கும் நிறுவனம் , சுகாதாரத்தோடு சம்பந்தப்பட்ட ஒரு விடயம் பற்றி ஆய்வு செய்ய வேண்டும் என விதிக்கலாம். யுனெஸ்கோ போன்ற நிறுவனங்கள் தமது ஆய்வுத் தேவைகளுக் கேற்பவே ஆய்வாளர்களைத் தேடிக் கொள்ளுகின்றன. இதனால் நிதி எத்துறை ஆய்வுக்கு ஒதுக்கப்படுகிறதோ அத்துறையைத் தான் ஆய்வாளர் நாடுவர். ஆய்வாளரின் உண்மையான அக்கறைகள் கவனிக்கப்படு வதில்லை. ஆசிய நாடுகளில் சமூக விஞ்ஞான ஆராய்ச்சிக்கான பல நிறுவனங்கள் இருக் கின்றன. இவை சமூகவியல், மானிடவியல் துறைகளுக்கும் ஏனைய சமூக விஞ்ஞானத் துறைகளுக்கும் முதன்மை அளித்து வருகின்றன. புதிதாக தொழில் விருத்தி அடைந்துவரும் நாடுகள் (NIC) என்ற தகுதியை எதிர்பார்க்கும் இலங்கையில் இவ்வாறான சமூக விஞ்ஞானத்துறை ஆய்வ நிறுவனங்கள் இல்லாதிருப்பது வருந்தத் தக்கது. இலங்கையில் கிடைக்கக் கூடிய குறைந்தளவு நிதிவசதியுங் கூட Naresa போன்ற நிறுவனங்களால் கட்டுப்படுத்தட் படுகின்றன. சமூக விஞ்ஞானங் கள் பற்றிய விளக்கம், அவற்றின் தேவைகள், சமூக விஞ்ஞானங்கள் நாட்டின் அபிவிருத்திக்கு ஆற்றக்கூடிய பணி ஆகியன பற்றிய அறிவு
35

Page 40
மிக்கவர்கள் இந்நிறுவனங்களில் இல்லை. இந் நிறுவனங்களில் சமூக விஞ்ஞான ஆய்வுக்காக ஒதுக்கப்படும் சிறியளவு நிதிகூட, நோய்க்கிருமிகள் பற்றிய ஆய்வு நிபுணத்துவம் உடையவர்கள் இரசாயனவியலாளர். மருத்து வர்கள் போன்றவர்களால் நிருவகிக்கப்ப டுகின்றது.
சமூக விஞ்ஞானிகள் அல்லாத பிறரால் விஞ்ஞானத்துறைக்கான ஆய்வு நிதி கட்டுப்படுத்தப்படுவது ஏன்? என்ற கேள்வி எழுகிறது. எமது புலமைத்துறை சார்ந்த அதிகாரக் கட்டமைப்பில் சமூக விஞ்ஞானங்கள் கீழான ஒரு நிலையைப் பெற்றிருப்பதே இதற்கான காரணம் என்பது வெளிப்படை. சுதந்திரத்திற்குப்பிற்பட்ட காலத்தில் பதவிக்கு வந்த அரசாங்கங்களும் சமுகவிஞ்ஞானங் களின் முக்கியத்துவத்தைப் பற்றி சரியான புரிந்துணர்வைக் கொண்டிருக்கவில்லை. இதனால் சமூக விஞ்ஞானத்துறை ஆய்வுகளை ஏனைய துறையினர் வழி நடத்துவதை அரசாங்கங்களும் அனுமதித்தன. மானிட வியலாளர்களும் சமூக விஞ்ஞானிகளும் கையைக் கட்டிக் கொண்டு வாளாவிருந்தனர். அவர்களது ஊக்கமின்மையும், செயலற்ற நிலையும் இத்துறைகளின் சீரழிவிற்குக் காரணமாயின. உதாரணமாக, இலங்கைச் சமூகவியல் சங்கம் என்னும் பெயரில் ஒரு ஸ்தாபனம் உள்ளது. இதில் பெருந்தொகை யான அங்கத்தவர்கள் இருக்கிறார்கள். ஆனால் இந்த ஸ்தாபனம் பெயரளவில்தான் உள்ளது. நடைமுறையில் இது என்றோ இறந்துவிட்டது என்றே கொள்ளலாம். கருத்தரங்குகள், மாநாடுகள் என்பனவற்றை இவ்வமைப்பு நடத்துவதில்லை. பருவ இதழ் எதனையும் வெளியிட இது முயற்சிக்கவில்லை. ஒரு (caug 6' 60-55. Tgjib (News Letter) gg. வெளியிடவில்லை. இவ்வமைப் பின் உறுப்பினர்களது தொழில்சார் பிரச்சினை களைக்கூட விவாதிப்பதற்கான கூட்டங்கள் நடத்தப்படவில்லை. இவை எடுத்துக் காட்டுவது யாதெனில், வீரியமுள்ள சமூக விஞ்ஞானத் துறைப் பாரம்பரியம் எமது நாட்டில் இல்லை என்பதே. தனது உரிமைகளுக்காக வாதிடக் கூடிய அமைப்புக்கள் இங்கு இல்லை. இதனால்
36

ஆய்வுத்துறை வளர்ச்சியும் அதற்கென ஒரு பாரம்பரியம் உருவாகுவதும் இங்கு சாத்திய மில்லாது போயிற்று.
ஆய்வுகளின் பொருத்தப்பாடும் இயைபும்
இன்றுவரை எழுதப்பட்ட நூல்களையும், நாட்டின் மானிடவியலாளர்களதும் சமூக வியலாளர்களதும் ஆய்வு அக்கறைகளையும் கவனிக்கும் பொழுது சில முடிவுகளுக்கு நாம் வரலாம். சாதி, சமயம் (குறிப்பாக பெளத்தம்), கமத்துறை உற்பத்தி உறவுகள், (Agrarian Production, Relations) FLsfugessit, அரசியல் வன்முறை என்ற விடயங்கள் ஆய்வாளர்களின் கவனம் பெற்ற துறைகளாக விளங்கின. இத்துறைகளில் செலுத்தப்பட்ட கவனம் காரணமாக வேறு சில முக்கிய துறைகள் ஒதுக்கப்பட்டுவிட்டன. நகரத்துறை, தோட்டத்துறை என்பனவும் முஸ்லிம்கள் காபிர்கள், சீனர்கள் போன்ற மிகச்சிறிய சிறுபான்மைக்குழுக்களும், பெளத்தம் சாராத சமய மரபுகளும் ஒதுக்கப்பட்ட துறைகளுக்கு உதாரணங்களாகும். இவைபற்றி போதிய ஆய்வுகள் வெளிவரவில்லை. அரசியல் வன்முறைபற்றி வெளிவந்த ஆய்வுகள் அரசியல் வன்முறையின் இயல்பு பற்றியே ஆராய்ந்தன. மக்கள் அரசியல் வன்முறைக்கும் பயங்கரவாதத்திற்கும் எவ்விதம் ஈடுகொடுத்து வாழ முனைந்தார்கள் என்பது பற்றி இவை ஆராயவில்லை.
பத்திரிகைகளும் தொடர்பு சாதனங்களும் சனரஞ்சக எழுத்தாளர்களுக்கு அரங்கமாக அமைந்தன. இந்த சனரஞ்சக எழுத்துக் களிற்கும், புலமைத்துறை ஆய்வுகள் என்று கூறப்படுவனவற்றிற்கும் இடையே அடிப்படையான வேறுபாடுகள் காணப்பட வில்லை.
பெரும்பாலான ஆய்வாளர்கள் வெளிநாடு களில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களது ஆய்வு அக்கறைகள், செயல்திட்டங்கள், இவர்கள் வாழும் சூழலால் நிர்ணயிக்கப்படு கின்றன. இவர்கள் சார்ந்துள்ள நிறுவனங் களினதும் நிதி வழங்கும் ஸ்தாபனங்களினதும் தேவைகள் முதன்மை பெறுகின்றன.

Page 41
இக்காரணத்தினால் மானிடவியல் சமூகவியல் தொடர்பாக எழுதப்பட்ட நூல்களின் உள்ளடக் கம் -ஆய்வுப் பொருள்- தேர்வு இலங்கைக்கு வெளியிலேயே நிர்ணயிக்கப்பட்டது. இதனால், இலங்கைக்கென மானிடவியல் சமூகவியல் பாரம்பரியம் உருவாகுதல் இயலாது. நாமே எமது ஆய்வு செயற்திட்டத்தை வகுத்துக் கொள்ளும் நிலை உருவாக வேண்டும். இது இலகுவில் சாதித்துக் கொள்ளக்கூடிய ஒரு விடயமல்ல. இருப்பினும் இதனை எமது முதன்மைப் பிரச்சினையாக கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.
எமது பல்கலைக்கழகங்களின் பாடத் திட்டங்களும் தெளிவாக வரையறை செய்யப்படாதவையாக அமைந்துள்ளன. இதனால் எதிர்பார்க்கப்படும் பெறுபேறுகள் கிடைப்பதில்லை. உதாரணமாக, கொழும்பு பல்கலைக்கழகத்தில் கிராமிய சமூகவியல் (Rural Sociology), bab JäFFF plab6ólu j6id (Urban Sociology) விருத்திச் சமூகவியல், பண்பாடும் ஆளுமையும் என்ற தலைப்புகளில் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. இவற்றைத் தெளிவான வரையறையுள்ள பாடநெறிகள் என்று கூறுதல் இயலாது. உண்மையில் மானிடவியலினதும் சமூகவியலினதும் உப பிரிவுகளாகவே இவை கருதப்படத்தக்கன. மேலும் இத்துறைகள் இலங்கையினதும் தென்னாசியாவினதும் மக்கள் குழுக்களினது வாழ்க்கையினை அடிப்படையாகக் கொண்டு கற்பிக்கப்படு வதில்லை. அவ் வாழ்க்கையோடு தொடர்புபட்ட தகவல்கள், ஆதாரங்கள் என்பவற்றின் துணைகொண்டு இவை விளக்கப்படுவதில்லை. விதிவிலக்காக, சில ஆசிரியர்கள் ஆக்க பூர்வமான முறையில் பாடம் சொல்வ துண்டு. இது ஆசிரியரின் தனிப்பட்ட தகமையை யும் ஆங்கிலத்தில் அவருக்குள்ள பயிற்சியை யும், தொடர்புபட்ட நூல்களைத் தேடிப்பெற்று தகவல்களை தொகுக்கும் அவரது தனிப்பட்ட ஆர்வத்தையும் பொறுத்து அமைகிறது. சமூகவியல், மானிடவியல் துறையில் கல்வி கற்று பட்டதாரியாக ஒருவர் வெளியேறலாம். ஆனால் அவரிடம் இலங்கையின் மனிதவியல் (BJT6b56ir ubplu (Ethnographical Material) விடய அறிவு சிறிதும் இருக்காது. அதே

போல், சமூக அரசியல் துறையில் இந்த நாடும் இது சார்ந்துள்ள பிராந்தியமும் எதிர் நோக்குகின்ற முக்கிய பிரச்சினைகளைப் பற்றி மானிடவியல் சமூகவியல் சார்ந்த நோக்கும் புரிதலும் இப்பட்டதாரியிடம்
HET6537 (pLq?! LUTgöl.
இந்தியாவின் நிலை வித்தியாசமானது. அங்கே பல்கலைக்கழகங்களின் பாடநெறிகள் இந்திய சமூக-பொருளியல் யதார்த்தத்தில் நிலை கொண்டுள்ளன. இந்தியா தொடர்பான மனிதவியல் தரவுகள் பாடநெறிகளுக்கு ஆதாரமாகவுள்ளன. கோட்பாட்டு ரீதியான விவாதங்களும் இந்த அடிப்படையிலேயே விவாதிக்கப்படுகின்றன. இந்தியப் பல்கலைக் கழகங்கள், குறித்த வரையறை செய்யப்பட்ட விடயங்கள் பற்றிய பாடநெறிகளை நடத்து கின்றன. வடஇந்தியாவில் சாதியும் வர்க்கமும் 'துணைக்கண்டத்தில் சமயமும் அரசியல் வன்முறையும் என்பன டோன்ற தலைப்புகளை உதாரணமாகக் குறிப்பிடலாம். இவ்விதம் பாடநெறிகள் வரையறை செய்யப்படுகின்றன. இலங்கைப் பல்கலைக்கழகங்களின் பாட நெறிகளும் இதனைப் போன்றே அமைய வேண்டும் என்பதே என் கருத்து. "இலங்கை யிலும் தென்னாசியப்பிராந்தியத்திலும் அரசியல் வன்முறை” “தென்னாசியாவில் இனத்துவமும் தேசிய வாதமும்", "இலங்கை யில் சமூக மாற்றத்தின் செயல்முறைகள்" போன்ற தலைப்புகளை நாம் தேர்ந்து கொள்ளலாம். இதேபோல் "தென்னாசியாவின் D60fig6.juj6)" (South Asian Ethnography) "இப்பிராந்தியத்தின் குறைவிருத்திப் பிரச்சினை கள்" விருத்தியும் தொண்டர் நிறுவனங்களும்", “சமூகப் பொருளியல் மாற்றத்திற்கும் சமயத் திற்கு மிடையிலான தொடர்பு" போன்ற விடயங்களையும் நாம் தேர்ந்து கொள்ளலாம். மாறும் தேவைகளுக்கேற்பப் பாடநெறிகளை மாற்றக் கூடிய சுதந்திரமும் இருத்தல் வேண்டும். சமூக அரசியல் மாற்றங்கள் நாட்டில் நிகழ்ந்துகொண்டிருக்கும் வேளையில், பாடநெறிகள் அவற்றிற்கு இயைபு அற்றதாய் நெகிழ்வுத்தன்மையற்று பின்னடைந்து விடும். இதனால் சமூகவியல் மானிடவியல் கல்வியின்
37

Page 42
தரம் பாதிக்கப்படுகின்றது. எமக்கென வளமான ஒரு பாரம்பரியம் உருவாதல் முடியாது.
இலங்கை போன்ற நாடுகளில் அரசியல், பொருளியல் உறுதிப்பாடின்மை நிலவுகின்றது. இது எமது இயல்பு வாழ்க்கையின் ஒரம்சமாகி விட்டது. இச்சூழலில் ஆய்வாளர்கள் தந்தக் கோபுரங்களில் ஏறி அமர்ந்து கொண்டு தமது விடுப்பு ஆர்வத்தை (Curiosity) மட்டும் திருப்தி செய்யும் ஆய்வு முயற்சிகளில் ஈடுபடுதல் இயலாது. வாழ்க்கைக்கு நடைமுறைப்பயன் தருவதான ஆய்வுகள் தேவை. நாம் இன்று எதிர்நோக்கும் சமூக அரசியல் பிரச்சினைகளை முகம் கொடுப்பனவாயும், அவை பற்றிய சரியான புரிந்துணர்வை வழங்குவனவாயும், அப்பிரச்சினைகள் பற்றிய விவாதங்களைத் தொடக்குவனவாயும் ஆய்வுகள் அமைதல் வேண்டும். இதன் பொருள், நாம் இதுவரை செய்து வந்த ஆய்வுக்குரிய விடயங்களை திரும்பியும் பார்க்கக்கூடாது என்பதல்ல. அவ்விதம் செய்தல் பொருத்தமற்றது. தவறானாலும் கூட, நான் கூற விரும்புவது யாதெனில் எமது ஆய்வுத் திட்டங்களில் முன்னுரிமை ஒழுங்கு ஒன்று (Prioritization) அவசியமானது. இலங்கை சார்ந்த கட்டளைப்படிமம் (Paradigm) ஒன்றின் கீழ் இம்முன்னுரிமைப்படுத்தல் நிகழுமாயின் எமக்கென ஒரு பாரம்பரியம் உருவாகும்.
முடிவுரை
இலங்கைக்கென ஒரு பாரம்பரியத்தை நாம் உருவாக்க முடியுமா? இது 50 ஆண்டு நீண்ட இடைவெளியைக் கொண்ட கால எல்லையில் சாத்தியமாகலாம். ஆனால் முதலில் எமது பிரச்சினைகளை இப்போதே சரியாகப் புரிந்து செயலாற்றத் தொடங்க வேண்டும். இதன் முதற்படி, ஆங்கிலத்தில் உள்ள முக் கரியமான நூல் களைச் சிங்களத்திலும், தமிழிலும் மொழிபெயர்த்தல் ஆகும். எந்தவொரு நாட்டிலாவது சமூக விஞ்ஞானப் பாரம்பரியமொன்று நிலவுகின்றது என்று சொன்னால், அப்பாரம்பரியத்துக்கு அடித்தளமான நூல்கள் சுதேச மொழிகளில் இருத்தல் வேண்டும். ஐக்கிய அமெரிக்காவும் பிரித்தானியாவும் இதற்குத் தகுந்த
38

உதாரணங்கள். நூல்களின் முக்கியத்து வத்தை இலங்கையின் பின்னணியில் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். இதனை ஒரு உதாரணத்தால் விளக்குவோம். "சமூகவியலின் அடிப்படைகள்” என்ற தலைப்பில் நந்தசேன ரட்ணபாலா சிங்களத்தில் நூலொன்றை எழுதியுள்ளார். இது 1986ல் வெளியிடப்பட்டது. அண்மைக் காலத்தில் சமூகவியல் மானிடவியல் கல்வி கற்ற சிங் கள மாணவர்களிடையே ஒபயசேகரா, தம்பையா, ஸ்பென்சர் ஆகிய சமூகவியலாளர்களின் தாக்கத்தினை விட ரட்ணபாலா கூடிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். இச்சிங்கள மாணவர்களுக்கு ரட்னபாலாவைத்தான் தெரியும் அவரைத் தான் மேற்கோள் காட்டுவார்கள். ரட்னபாலாவின் நூல்கள் ஊடாகத்தான் ஒபயசேகராவை பற்றித் தெரிந்து கொண்டார்கள். பல்மன் பற்றி அறிந்ததும் ரட்ணபாலா மூலம்தான் (நான் முன்னர் கூறிய யல்மனைப் பற்றிய தவறான கருத்தை தந்தவரும் இவர்தான்.) ரட்ணபாலா "இலங்கையின் பிச்சைக்காரர் சமூகம்” (THe Beggar in Sri Lanka) “3LJT60Dg5'E (GJIT(b6f3g5 அடிமையாதல்- ஒரு சிங்களக் கிராமத்தின் நிலை" என்ற விடயங்களில் நூல்களை ஆங்கிலத்தில் எழுதினார். இவை போன்ற ஆங்கில நூல்கள் சிங்கள மாணவர்களைப் பாதித்ததாக நான் குறிப்பிடவில்லை. மாறாக, சமூகவியலை அறிமுகப்படுத்தும் வகையில் அவர் சிங்களத்தில் எழுதிய நூல்களே பிரசித்தி பெற்றன. அவர் சிங்களத்தில் எழுத முன்வந்தது அவர் தேடிக் கொண்ட மதிப்புக்குக் காரணமாயிற்று. தன்னுடைய ஆய்வு முடிவுகளை யாவரும் எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் சிங்களத்தில் இலகு நடையில் அவர் எழுதினார். பிற ஆய்வாளர்களது நூல்களையும், நூல்களின் கருத்துக்களையும் சிங்களத்தில் இவர் சுருக்கமாக எடுத்துக் கூற முயன்றார். பத்திரிகைகளிலும் அடிக்கடி எழுதினார். இதனால் மாணவர்களால் அறியப்பட்ட சமூகவியலாளர் என்ற சிறப்பைப் பெற்றார். இவருடைய நூல்களில் தவறுகளும், பிரச்சினைக்குரிய விடயங்களும் உள்ளன.

Page 43
ஆனால் அவர் தேடிக்கொண்ட மதிப்பை நாம் புறக்கணிக்க முடியாது.
மானிடவியல், சமூகவியல், நூல்களை தமிழிலும் சிங்களத்திலும் எழுதி வெளியிடும் வேலை பெரியதொரு பிரச்சினை. நாம் இவ்விடயத்தில் 50 வருடம் பின்தங்கிவிட்டோம். அத்தோடு இது முடிவில்லாது தொடரவேண்டிய பணி. ஏனெனில் நமது நாட்டு மொழிகளல்லாத மேற்கத்திய மொழிகளில் எழுதப்பட்டுள்ள பிரதான கோட்பாட்டு விளக்க நூல்களை முழுமையாகத் தமிழிலும் சிங்களத்திலும் கொண்டு வருதல் சாத்தியமில்லை. ஆகையால் மாணவர்கள் பட்டப்படிப்பினை இத்துறைகளில் தொடர்வதற்கு ஆங்கிலத்தில் செயல்முறை அறிவு பெறுதல் அவசியம். தற்போது நடத்தப்படும் ஆங்கிலப்பயிற்சி வகுப்புகளால் பயன் இல்லை. பெரும்பாலான மாணவர்கள் இவற்றைச் சலிப்பூட்டும் விடயமாகக் கருதுகின்றார்கள். ஆங்கிலத்தில் போதுமான மொழியறிவை விருத்தி செய்வதை நோக்க மாகக் கொள்ளாது ஒரு குறித்த பயில்நெறியின் தேவைகளை மனதில் கொண்டு ஆங்கிலத் தைப் பயிற்றுவித்தல் வேண்டும். மாணவர் களுக்கு மட்டுமல்லாது ஆசிரியர்களுக்கும் இவ்விதம் கற்பித்தல் வேண்டும்.
ஆங்கிலம் தாய்மொழியாக இல்லாத மூன்றாம் உலக சூழலில் மானிடவியலையும், சமூகவியலையும் ஆங்கிலத்தில் சிறந்த முறையில் கற்பிப்பதற்கு இரு உதாரணங் களைக் குறிப்பிடலாம். டெல்லி பல்கலைக்கழ கமும், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகமும் இப்பாடங்களை எம். ஏ. வகுப்புக் களிலும் அதற்கு மேற்பட்ட பாடநெறிகளிலும் ஆங்கிலத்தில் போதித்து வருகின்றன. இவை உயர்தரக் கல்வியை அளிக்கின்றன. முதற் பட்ட படிப்பில் ஆங்கிலத்திலேயே படித்தவர் களும் மேற்படிப்புக்களை ஆங்கிலத்தில் தொடர்கின்றனர். அதேவேளை, தாய் மொழியில் முதற் பட்ட படிப்பை படித்தவர் களும் புதிய சூழ்நிலைக்குத் தம்மை தயார் செய்து கொண்டு முன்னேறுகின்றனர்.
எமது நாட்டில் சுதேச மொழிகளில் ஆய்வு மாநாடுகள் நடாத்தப்படவேண்டும்.

கருத்துக்கள் பரிமாறப்படல் வேண்டும். முறைசார்ந்ததும் , முறைசாராததுமான கூட்டங்களில் பல்வேறு பல்கலைக்கழ கங்களின் துறைகளையும், நிறுவனங்களையும் சேர்ந்த ஆசிரியர்களும் மாணவர்களும் ஒன்று கூடுதல் வேண்டும். மானிடவியல், சமூகவியல் துறைகளை மட்டும் நான் இங்கு குறிப்பிட வில்லை. மனிதப்பண்பியல் சமூகவிஞ்ஞானங் கள் சார்ந்த துறைகளைச் சேர்ந்த யாவரும் ஒன்று கூடுவதாக இக்கூட்டங்கள் அமைதல் வேண்டும். இயற்கை விஞ்ஞானத்துறைகளைச் சேர்ந்தவர்களும் கூட தேவையேற்படும்போது சேர்த்துக் கொள்ளப்படல் வேண்டும் , உதாரணமாக, இயற்கைச் சூழலுக்கு ஏற்ப மனித இயைபாக்கம் எவ்விதம் நிகழ்கிறது? பண்பாட்டின் உற்பத்திக்கும்'ஜீன்கள் வழியாக உயிர் பாரம்பரியம் கடத்தப்படுவதற்கும் உள்ள தொடர்பு என்ன? என்பன போன்ற விடயங்களில் உயிரியலும் விலங்கியலும் பயனுள்ள தகவல்களை வழங்க முடியும். இதனை விட ஓரிரண்டு முக்கியமான பருவ இதழ்கள் ஆங்கிலத்திலும் சுதேச மொழிகளிலும் ஒழுங்காக வெளிவருதல் வேண்டும். (ஆங்கில பருவ இதழ்கள் உள்நாட்டிலும், சர்வதேச ரீதியிலும் கருத்துப் பரிவர்த்தனைக்கு இடம் தரும்.) இவ்விதழ்கள் மானிடவியல், சமூகவியல் என்பனவற்றிற்கு என மட்டுப் படுத்தப்படாது சமூகவிஞ்ஞானங்கள் யாவற்றிற் கும் பொதுவானவையாக இருத்தல் வேண்டும். பல்கலைக்கழகங்களும், ஆராய்ச்சி நிறுவனங் களும் இவற்றை நடத்த முன்வருதல் வேண்டும். சமூகவிஞ்ஞான ஆய்வுக்கு நிதி ஒதுக்கீட்டை யும் அதிகரித்தல் வேண்டும். அவ்வித நிதி ஒதுக்கீட்டுக்கு சமூகவிஞ்ஞானிகளே பொறுப் பாகவிருத்தல் வேண்டும். எதிர்காலத்தில் சமூகவிஞ்ஞான ஆய்வுச் சபை ஒன்று உருவாக வேண்டும். அதனிடம் நிதிப்பொறுப்பைக் கொடுக்கலாம். இயற்கை விஞ்ஞானத்துறை யினர் மேலாதிக்கம் செலுத்தும் நிலை மாறவேண்டும்.
மானிடவியல் சமூகவியல் துறைகளுக்கு விரிவுரையாளர்களைச் சேர்க்கும் பொழுது இளங்கலைமானி (பி.ஏ.) பட்டத்துடன் சேர்த்தல்
39

Page 44
கூடாது. முதுகலைமாணி (எம். ஏ.) பட்டத்துடனேயே விரிவுரையாளர்களைச் சேர்த்தல் வேண்டும். இதனால் முதிர்ச்சியும் பயிற்சியும் உள்ளவர்கள் சேர்த்துக்கொள்ளப் படுவதோடு ஆராய்ச்சி, கற்பித்தல் ஆகிய வற்றில் முன்னேற்றமும் ஏற்படும். திறமையுள்ள பட்டதாரிகள் குறுகியகாலத்துக்குள் உயர் பட்டங்களை பெறுவதற்கு ஏற்ற வகையில் புலமைப்பரிசில் வழங்கி ஊக்குவித்தல் வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட இந்தியப் பல்கலைக் கழகங்களில் முதுகலைமாணி பட்டம் பெறுவதற்கு மாணவர்களை அனுப்பலாம். நிதியைப் பொறுத்த வரையில் இந்தியாவில் படித்தல் சிக்கனமானது. ஆனால் ஆங்கில அறிவை மாணவர்கள் விருத்தி செய்யாமல் இந்த வழி சாத்தியமில்லை. முது கலைமாணி பட்டத்துடன் செயல்முறை ஆங்கிலத்தையும் கட்டாயத் தேவையர்க விதிக்கலாம். விரிவுரையாளர்களை முதலில் சேர்த்துக் கொள்ளும் போது தற்காலிக அடிப்படையில் நியமித்தல் அவசியம், கட்டுரை வகுப்புக்களை நடத்துதல், முதல் நிலை வகுப்புகளுக்கு பாடம் நடத்துதல், விடைத் தாள்களைத் திருத்துதல் போன்ற குறிப்பிட்ட பணிகளை இவர்களுக்கு முதலில் வழங்கலாம். ஆய்வுக்கட்டுரைகளை மேற்பார்வை செய்யும் பொறுப்பை இவர்களுக்கு வழங்கக் கூடாது. தேவைகளைக் குறிப்பிட்டு வரையறை செய்து
துறைகிரத Beteille , Andre 1982. Six Essays in Compa Press.
Divayina, 1995 (January 8). Colombo: Upali Nissan, Elizabeth. 1993. The work of Anthrop Colombo: Studies in Society and Culture Perera, Sasanka. 1995, Living with Torturers : CES.
1992. "Messengers of Peace or C the Sri tankan Ethnic Conflict". Pravada, Vo Publications.
Ratnapala Nandasena. 1986. Samaja Vidyav
Yalman, Nur 1971. Under the Bo Tree: Stud Interior of Ceylon Barkeley: University of Cali
40

வழங்குவதால் இரண்டு மூன்று வருடங்களுக்கு இடையில் உயர்பட்டங்களை அவர்கள் பெற்றுக்கொள்ளத் தூண்டப்படலாம், குரு சீட வழிபாட்டு முறையை ஒழித்தல் வேண்டும். பல்கலைக்கழகத்திற்கு வெளியில் இருந்து ஆட்களை சேர்க்கும் முறை கடைப் பிடிக்கப்படவேண்டும். பல்கலைக்கழகங்களின் பாடவிதானம் சர்வதேச மட்டத்தில் சமூக வியலும், மானிடவியலும் அடைந்துள்ள வளர்ச்சிக்கு ஏற்றதாக அமைதல் அவசியம்.
இலங்கையில் மானிடவியல் சமூகவியல் பாரம்பரியமொன்று இன்னும் உருவாகவில்லை. இப்போது அதைப் பற்றிப் பேசுவதில் அர்த்தமில்லை. இக்கல்வியை விருத்தி செய்வதற்கு நாம் உழைத்தல் வேண்டும். இத்துறைகள் தொடர்பான கல்விப் பிரச்சினை களை நான் மேலே சுட்டிக் காட்டியுள்ளேன். இவற்றைத் தீர்ப்பதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும். மானிடவியல் சமூகவியல் பாரம்பரியம் ஒன்றை உருவாக்கு வது எதிர்காலத்திற்குரிய பணியாகும். கடந்த காலத்தைப் பற்றியும், குறுகிய ஒரு காலப் பகுதியின் புகழ் பற்றியும் பேசுவதை விடுத்து எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திப்போமாக.
நன்றி பிரவாத தொகுதி 4 இல. 3
செப்டம்பர்Vஒக்டோபர் 1995
ஆங்கிலத்திலிருந்து தமிழில் க. சண்முகலிங்கம்.
ால்கர்
arative Sociology Delhi: Oxford University
Newspapers Ltd. ologists from Sri Lanka: A Review in 1987,
and Other Essays of Intervention. Colombo
2reators of Chaos: The Role of Teachers in .# and Vol.1, #2. Colombo: Pravada
ve Muladharma. Colombo : Lake House,
les in Caste, Kinship and Marriage in the fornia Press.

Page 45
கிராம ச கற்பனையு
நொடெ
(நொபொரு கராஷிமாவின் வரலாற்றுப் போக்கி நூலின் ஆறாம் அதிகாரமாக விளங்குவது பிரச்சினையை சோழர்காலச் சான்றுகளைக் ெ வசதிகளையும் தன்னுள் கொண்டனவாய் தன்னி மெட்காவு (Metcalfe) என்பவர் இக்கருத்தை கொடுத்தார். உழவுத் தொழிலும் கைவினைகளு பற்றி மார்க்ஸ் குறிப்பிடுகிறார். ஆயினும் சோழர் தோற்றத்தைத் தருகின்றன. மக்களின் அன்றாட கிராமங்களுக்கும் மேலான ஒரு பெரிய நிலப்பரப் வேண்டும் என்று உய்த்துணர வைக்கின்றன. இ பிரச்சினையை ஆராய்கிறது.)
தென்னிந்திய வரலாற்று நூல்களில் “கிராம சமூகம்” என்ற சொற்றொடர் அடிக்கடி பயன்படுத்தப்பட்டுள்ளது. கிருஷ்ணசுவாமி அய்யங்கார், நீலகண்ட சாஸ்திரி மற்றும் பலர் எழுதிய நூல்களில் இதனைக் காணலாம். பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஆங்கிலேய ஆட்சியாளர்கள் வரிவசூல் தொடர்பாக இச்சொற்றொடரினை முதன் முதலில் பயன்படுத்தினர். குறிப்பாக, நில வரியை யாரிடமிருந்து வசூலிக்க வேண்டுமென தீர்மானிக்குங்கால் "கிராம சமூகம்" என்ற அமைப்பு வழக்கத்தில் இருப்பதைக் கண்டு பிடித்தனர். இதற்குப் பின் இந்திய வரலாற்று ஆய்வுநிலை அல்லது பயன்படுத்துவோர் நோக்கங்களுக்கு ஏற்பச் சில குறிப்பு மாற்றத் துடன் இத்தொடர் இந்தியச் சமூகத்தை விளக்கும் பொருட்டு அடிக்கடி கையாளப்பட்டு வருகிறது.
தலைமை ஆளுநராகத் தற்காலிகப் பொறுப்பு ஏற்றிருந்த சர். சார்லஸ் டி. மெட் காவு என்பவரின் இந்தியக் கிராம சமூகம் குறித்த விளக்கம் தான் அடிக்கடி மேற்கோளா கக் காட்டப்படுவதாகும்.

மூகங்கள் : ம் உண்மையும் ாரு கராவழிமா
ல் தென்னக சமூகம்-சோழர்காலம் (850-1300) என்ற இக்கட்டுரை. தென்னகத்தில் கிராம சமூகம் பற்றிய கொண்டு ஆராய்கிறது. இந்தியக் கிராமங்கள் எல்லா றைவு பெற்ற ஓரிடமாக விளங்கியதா என்பது கேள்வி.
முதலில் வெளியிட்டார். மார்க்ஸ் அதற்கு அழுத்தம் நம் பின்னிப் பிணைந்த தன்னிறைவுக் கிராமங்களைப் கல்வெட்டுகள் கிராமங்களைப்பற்றி வேறு வகையான
வாழ்க்கை கிராமங்களுக்குள் முடங்கியிருக்கவில்லை. பே சமூகத்தின் அடிப்படை நில அலகாக இருந்திருக்க க்கட்டுரை கிராம சமூகங்கள் பற்றிய இக்கோட்பாட்டுப்
’கிராம சமூகங்கள் குட்டிக் குடியரசுகள், தேவையான அனைத்தையும் தங்களுக்குள் பெற்றிருந்தன. இங்கு அயலார் தலையீடு பெரும்பாலும் இல்லை. இவை மற்ற நிறுவனங் கள் வீழ்ச்சியுற்ற போதும் நிலை பெற்று நின்றுள்ளன. அரசகுல மரபுகள் பல வீழ்ச்சியுறு கின்றன: புரட்சிக்குப் பின்னர் புரட்சி தோன்று கின்றது. ஆயினும், கிராம சமூகம் மட்டும் அதுவாகவே நிலை பெற்றுள்ளது.
1830இல் மெட்காவு மேற்கிந்தியாவில் ரயத்துவாரி முறையைப் புகுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்குமுகத்தான் இக்கருத்து களை வெளியிட்டார். மேலும் கிராம சமூகங் கள் பண்டு முதல் இந்திய மக்களை ஊட்டி வளர்த்தன என்றும் புகழ்பாடியுள்ளார்.
கிராம சமூகங்களின் பங்களிப்பு பற்றிப் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் காரல் மார்க்சு, என்றி மெயின் ஆகியோர் எதிரான கருத்துக்களை வழங்கினர். இவை இந்தியாவில் தேக்க நிலை உருவாவதற்கு தலையாய காரணம் என்றனர். நீண்ட காலமாக, பல ஆய்வாளர்கள் ஏற்றுப் பயன்படுத்தி வரும் இக்கருத்தோட்டத்தில் இரு மையக் கருத்துக்கள் உள்ளன:
41

Page 46
(1) கிராமங்களில் நிலவிய சமூக நில உடைமை; (2) பொருளாதார மற்றும் சமூகத்தன்மை அல்லது கிராமத் தன்னிறைவு. உழவர்களோடு பிற தொழில் வகுப்பார் கிராமத்தில் தங்களை இணைத்துக் கொண்ட தும் அவர்களிடம் இருந்த தொழிற் பகிர்வும் கிராமத் தன்னிறைவை ஏற்படுத்தித்தந்தன.?
இவற்றில் முதல் கருத்தை பேடன் பாவெல் மறுக்கின்றார். இவரால் வெளியிடப்பட்ட ஆங்கிலேய இந்தியாவின் நிலவுடைமை முறைகள் பற்றிய சிறந்த நூலில் அதற்கான காரணங்களைத் தருகின்றார். இந்தியாவில் நீண்ட காலமாக நிலவி வரும் தனியார் நில உடைமையைச் சுட்டிக் காட்டி அவற்றின் வரலாற்று முக்கியத்துவத்தையும் வலியுறுத் தினார். இவரது கருத்துக்களை நாம் முழுமையாக ஏற்க இயலாது. எனினும் சமூக நில உடைமை இந்தியக்கிராமங்களில் மிகப் பழங்காலத்திலிருந்து பத்தொன்பதாம் நூற் றாண்டு வரை நிலவி வந்தது என்ற கருத்து இவர் திரட்டிய சான்றுகளால் பொய்ப்பிக் கப்பட்டுவிட்டது.
இரண்டாவது கருத்தான, கிராமத் தன்னி றைவு பற்றிச் சில திறனாய்வுகளே இதுகாறும் வெளிவந்துள்ளன. இவற்றுள் உருப்படியான முதல் திறனாய்வு சமூக மானிடவியலரால் தரப்பட்டது. வட இந்தியக் கிராமங்களில் “எஜமானி” என்ற முறை இருந்ததை 1930 களில் W.H. வைசர் என்பவர் கண்டறிந்தார். இது சாதிப் பாகுபாட்டினை அடிப்படையாகக் கொண்டு, உள்ளுர் மக்கள் சமூக, பொருளா தாரக் கூட்டுச் சார்புத் தன்மை பெறும் முறை யாகும். கிராம எல்லைகளைக் கடந்தும் இம்முறை இயங்கியது. இந்தியாவின் பல்வேறு கிராமங்களில், 1950 களில் நடத்தப்பெற்ற கள ஆய்வுகள் பல ஊர்கள், இந்தப் பொருளாதார சமூகத் தன்னிறைவு பெறுவ தற்குத் தேவையான அனைத்து சாதிப் பிரிவுகளையும் பெற்றிருக்கவில்லை என்பதைத் தெளிவாக்கியது. பல ஊர்கள் அடங்கிய வட்டாரங்கள் அளவிலேயே பல சாதிகளிடை யே தொழிற் பகிர்வு நிகழமுடிந்தது. அதாவது ஒவ்வொரு கிராமமும் ஒரு குட்டிக் குடியரசு
42

என்ற நம்பிக்கை பொய்த்துப் போனது."
1960 களில் அலிகார் மற்றும் தில்லியைச் சார்ந்த மகலாய வரலாற்று ஆய்வாளர்களால், இரண்டாவது திறனாய்வு உருவானது. ஊரை விடப் பெரிய ஒரு நிலப்பரட்யின் முக்கியத்துவம் இங்கு வலியுறுத்தப்பட்டது. இப்பெரு நிலப்பரப்பு ஏறக்குறைய ஒரு தயாதிக் கூட்டத்தின் நிலப்பரப்பாகும். மேற்கண்ட கருத்தையே பர்டன் ஸ்டெயின் வலியுறுத்தினார். இவர் பண்டைய தென்னிந்திய உழவர் சமூக அமைப்பின் தன்மைகளைப் புரிந்து கொள்ள முயற்சிகள் மேற்கொண்டாலும் கிராம சமூகம் பற்றிய முழுமையான ஓராய்வை மேற்கொள்ள வில்லை. பல்லவ-சோழர் தமிழ்க் கல்வெட்டுக் களின் அடிப்படையில் கிருஷ்ணசுவாமி அய்யங்கார் முதலிய பலர் கிராம சமூகம் குறித்து விரிவான ஆய்வுகள் மேற்கொண்டனர்.” எனினும், இவ்வாய்வுகள் தேக்கநிலை சமூகக் கொள்கையினைக் குறித்து ஒத்த கருத்தினை யோ, எதிர்ப்பையோ தெரிவிக்க முற்பட வில்லை. மாறாக, பரம்பரையாக வரும் சமூக அமைப்பினைப் புகழ்ந்திடும் நோக்கில் பிரம தேய ஊர்களில் குடியாட்சி முறை நிலவியது என நிறுவ முற்பட்டனர்.
ஆகவே, மேற்குறிப்பிட்ட இரண்டு கருத்துக் களும் பழங்காலத் தென்னிந்தியக் கிராம நிலமைகளுக்குப் பொருந்தி இருந்தனவா என்பதைக் காண இதுவரை எந்த ஆய்வும் நடத்தப் பெறவில்லை. இவ்விரு கருத்துக்களில் இரண்டாவது கருத்தான பொருளாதார சமூகத் தன்னாட்சி அல்லது தன்னிறைவு பெற்ற கிராமங்கள் பற்றிய ஆய்வு, சோழர் காலக்கல் வெட்டுக்களின் அடிப்படையில் இங்கு மேற் கொள்ளப்படுகிறது. இதற்கு தஞ்சைப் பெரிய கோயிலின் இரண்டு பெரிய கல்வெட்டுக்களும் (தெக.l, எண்கள்:4,5)' கங்கை கொண்ட சோழபுரத்துக் கோயிலின் ஒரு கல்வெட்டும் (தெக. V எண் கள524} அடிப்படை ஆதாரமாகும். இம்மூன்று கல்வெட்டுக்களும் நீண்ட கல்வெட்டுக்கள். மூன்றாவது மிகவும் சிதைந்துள்ளது.
அரச ஆணையுடன் தொடங்கும் தஞ்சா வூர்க் கல்வெட்டுக்கள் முதலாம் இராஜராஜனின்

Page 47
~ | ~ | ~ | ~^ — ^__^ { \_/ | \_/ | \„o\ /\)/\_/ | \_/ | \__)*「」而 @ |C)----ocoș@gmoso | ► | OC) | | OC)O喇劑。 O||O|| ||O||O||O|TÕTTŌTŌO || @ | O | O | O || OO||O||O|日取嫩自七引| 66 | 66 #001 |001 || 001 || 001 | l4 | .9 || 001 || & | 66 || 001 || 86 | 66 | g6 || .01 soos || ç5 || 55 || Ooh sotsirssssssssssss . Z | I || I | Z'0|| Z’0 | Z | C | G | & | & | I | Z | Z | zoo į soo | g | ç’0 | zoo || 0 | ► | 6hņdriņotsR司制여 09 | 9 i | 9 | | Ş | 61 | Zo | 9ţ | 18 | & | 9 | 1ç | 6ç | Zç | 9 || L | #ç s oz | g | I || I || #çıhņaenரயான oo | #o | 93 | $4] wo | & | & | 12 | 61 | 81 | l1 | 91 || SJ || vs || 2 || ZI | | | | 01 || 6 | z | I || NoFuセ日* se@戦|
| 1,9ccorto-Inteữ
J

9)3PערדרJalu3Pת)
gusg母ヒ引6
色巨999|
(OO O
O
O
Ο
O
읽희티헌이
O
O)
mursos uso
OO||O|| ||O|| ||O)
463 :
OOO .
OOGO
(OOGO
OO (O)O
Ο
(O)
O IOOO
aus@}
Ɔ| வீடு
us3 油或片
DO
O
@un #16)
-
O
)O
Ugo:) surolongio
43

Page 48
----\_/ | \_/')'• U • 99C) i C)|| || Ouseo oči: || $ !! | O |○○○UJos) enrollongio홍 OZ | |Õ61 || OO | O | O | O | O | Oự £8 #0ĵoon | E. Çç C)的目的与写电划一 0 | | |. | C)6 | C)C)(C) | Oஒ0ஐபிழந%脚 63||s_|C)||C)||C)|O|C||O|的|TOTROTR-DTTR-DT정의TTTCgn城城g u뒤和 & | 6Z # 80 || 9 || || 9 || || 8; i + g・Z3|001 66 6|・0 g8・96 96一66|00 001nsɑsuĝậnsis Ł ł ţ Ț ț | Z | 9 | } | l°08 | Ç į Ç | # *()Z°0 | 1:0 || ţ Ț ț¢’0 | Ç | G'O I Ç’0hŋŋŋŋɔsɩsɩ ɖɩsɩɣnajos 49 | &# | 2,9 || ?? | Çg | #9 || &8% || CS | | | | | | Ķ Ķ Ķ | 9Z || || Z | | | | Çg || || || Nozhŋŋŋ ŋŋŋsɛ * g|58|| 313|80z|3Oz|OO3|261||431||101||m&T공T공T헌T헌T헌T헌vo | Co | Zo | io || 0£ | 67FBは セHas qi dhốiuos, osg@%
岛电|-ıı,çe199Ġ | 1,90(9,9 TTiGo
44

0 £
01
O
យឺត្រ
OO
טפuררפעaת)
91与9唱七引
† Z
6 I
94999
| Z
9 I
OO
ભૂnિus :)
8 |
OG)
闪
OO Oi O
murtssy9uo
守一
| |
fuq & 3?
6Z
T~ || MO | ur | Lab i had
OOõÕO (O) (OOO
OOOOO
OOOOO
Z?
(OO
CO
OO
(OO) OO
on uso@
)

Page 49
29வது ஆட்சியாண்டில் வெளியிடப்பட்டவை. இவ்வரசன் தஞ்சைக் கோயிலுக்கு தேவதான மாக வழங்கிய ஊர்களிலிருந்து வசூலிக்கப்பட வேண்டிய நிலவருவாயான காணிக்கடன் குறித்த விவரங்களைத் தெரிவிக்கும் இக் கல்வெட்டுக்களைக் கோயில் சுவர்களில் பொறிக்க ஆணையிட்டதை இவை பதிவு செய்கின்றன. இவற்றில் கீழ்க்கண்ட விவரங்கள் தரப்பட்டுள்ளன: (அ) ஊரின் பரப்பளவு; (ஆ) இறையிலியாகக் கழிக்கப்பட வேண்டிய நிலங்களின் விவரங்கள் மற்றும் அவற்றின் பரப்பளவு: (இ) நிலவரி செலுத்த வேண்டிய எஞ்சிய பகுதிகளின் பரப்பளவு:(ஈ) நிலவரியாகச் செலுத்தவேண்டிய நெல் அல்லது பணத்தின் அளவு. இவ்வரசாணையைத் தொடர்ந்து சோழ மண்டலத்திலிருந்து கொடையாக அளிக்கப் பட்ட 40 ஊர்கள் பற்றிய விவரங்கள் மேற் குறிப்பிட்ட வரிசையில் தரப்பட்டுள்ளன.
கங்கைகொண்ட சோழபுரத்துக் கல்வெட்டு (இனிமேல் க. சோழபுரம்) ஏழு பகுதிகளைக் கொண்டிருக்கலாம். ஒவ்வொருபகுதியும் வீரரா ஜேந்திரனின் மெய்க்கீர்த்தியுடன் தொடங்கு கிறது. இவனாலும் இவனது முன்னோர் களாலும் அளிக்கப்பட்ட தேவதான ஊர்களைப் பற்றி விவரிக்கிறது. கல்வெட்டு மிகவும் சிதைந்துள்ளதால் எத்தனை ஊர்கள் இக்கல் வெட்டில் விவரிக்கப்பட்டுள்ளன என்பதை அறிய இயலவில்லை. மேலும் சில கொடைகள் எவ்விதத்தில் கங்கை கொண்ட சோழபுரத்துக் கோயிலுடன் தொடர்புடையவை என்பதையும் தெரிந்து கொள்ள இயலவில்லை. எனினும் க. சோழபுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஊர்கள் பற்றிய விவரங்கள் யாவும் தஞ்சைக் கல்வெட்டு வரிசையிலேயே உள்ளன. எனினும் க. சோழபுரத்தில் பலவகை இறையிலி நிலங்களின் பரபப்பளவுகள், பயிர்களின் தன்மைக்கு ஏற்ப இறை நிலங்களை வகைப்படுத்தியமை ஆகிய வை விளக்கமாகத் தரப்பட்டுள்ளன.
ஊரின் மொத்தப் பரப்பபளவிலிருந்து கழிக்கப்படவேண்டிய இறையிலி நிலங்களைக் குறிப்பிடும் பகுதியில் தான் கிராமப் பொருளா தார மற்றும் சமூகத் தன்னிறைவு பற்றிய முக்கிய விவரங்கள் அடங்கியுள்ளன. தஞ்சைக்

கல்வெட்டு அரச ஆணையில் கீழ்க்கண்ட நிலங்கள் தரப்பட்டுள்ளன: ஊர் நத்தம் (ஊராரின் குடியிருப்புப் பகுதி)" பரீ கோயில்கள், குளங்கள், ஊடறுத்துப்போன வாய்க்கால்கள், பறைச்சேரி, கம்மாணச்சேரி மற்றும் சுடுகாடு. ஆயினும் அரச ஆணையில் தரப்பட்டுள்ள அனைத்து இறையிலி நிலங்களும் ஒவ்வொரு ஊரிலும் உள்ளதாகச் சொல்லப்படும் இறையிலி நிலங்களும் மாறுபடுகின்றன. அதா வது அரசாணையில் தரப்படும் எல்லாவகை இறையிலி நிலங்களும் தனித்தனி ஊர்களில் சொல்லப்படும் இறையிலி நிலங்களில் காணப்படவில்லை. மேலும் பல கிராமப் பதி வுகளில் வேறு சில வகையான நிலங்களைப் பற்றிய செய்திகள் தரப்பட்டுள்ளன. எல்லா ஊர்களிலும் விவரிக்கப் பட்ட இறையிலி நில விவரங்கள் குறித்துக் கீழ்வரும் அட்டவணை யின் துணையோடு ஊன்றிப் பார்க்கலாம். இவ் அட்டவணையில் தஞ்சைக் கல்வெட்டு ஊர்களில் 40 இல், ஒரு 7 ஊர்கள் தவிர்த்து எஞ்சிய 33 ஊர்களும் க. சோழபுரத்தில் 7 ஊர்களும் சேர்த்து 40 ஊர்கள் பற்றிய விவரங்கள் பகுத்துத் தரப்பட்டுள்ளன.
ஊர்வகைகளும் பரப்பளவும்
அரச ஆணையில் "ஊர்” என்ற பொதுச்சொல்லே பயன்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் தஞ்சைக் கல்வெட்டில் கூறப்பட்டுள்ள 33 ஊர்களில் மூன்று ஊர்கள் (எண்கள்:12, 33, 40)" நகரம் என்ற வகையாகும் வணிக ஊர்களே "நகரம்" எனப்பட்டன. இவற்றுடன் ஐந்து ஊர்கள் (34-38) ஒரு நகரத்துடன் (33) இணைக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டுள்ளது. எனவே, இவ்வைந்து ஊர்களையும் நகரங்களாகக் கொள்ளலாம். க. சோழபுரத்தில் கூறப்பட்டுள்ள 7 2ஊர்களில் "நகரம்” எவையும் இல்லை. மேலே குறிக்கப் பட்டுள்ள நகரங்களைத் தவிர தஞ்சைக் கல் வெட்டில் இரண்டு வகை ஊர்கள் சொல்லப் பட்டுள்ளன. அவற்றில் ஒன்று (39)சாலபோ கமாகும். (அறச்சாலைகளுக்கு கொடையாகத் தரப்பட்ட ஊர்); மற்றொன்று (16) பள்ளிச்சந்த (பெளத்த அல்லது சமணப் பள்ளிகளுக்கு மானியமாக அளிக் கப்பட்ட ஊர்)
45

Page 50
வகையிலிருந்து விடுவிக்கப் பட்டதாகும். இவை தவிர உள்ள பிற ஊர்களின் வகை பற்றிய குறிப்பு இல்லை. எனவே அவைகளை இயல் பான ஊர்களாகக் கருத வேண்டும். அதாவது அவை வெள்ளான் வகை ஊர்களாகும்' இத் தரவுகள் எவையும் பிரமதேய ஊர்களைக் குறிப்பிடவில்லை என்பது இங்கு நோக்கத் தக்கது.
அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள 40 ஊர்களுள் 37 ஊர்களுக்குப் பரப்பளவு கிடைக்கிறது. அவற்றின் பகுப்பு கீழுள்ள அட்டவணையில் காட்டப்படுகிறது.
அட்டவணை 2
நிலப்பரப்பு (வேலிகளில்) |ஊர்களின் எண்ணிக்கை
9
1-10
11-20
2-30
31-40
41-50
51-60
61-70
8-90
11-120
31-140
151-160
மொத்தம்
3
7
அட்டவணைப்படி 100 வேலிகளுக்கும் மேற்பட்டதாகச் சில ஊர்கள் விளங்கினாலும் பெரும்பான்மையான ஊர்கள் 60 வேலிக்கும் குறைவான பரப்பு உடையன என்பது உறுதி' எனினும் இவற்றுள்ளும் மிகுந்த வேறுபாடுகள் உள்ளன என்பதைக் கவனிக்கவேண்டும். இறையிலி நிலங்களில் பரப்பளவுகளும் பெரி தும் வேறுபட்டுள்ளன.
ஊரிருக்கைப் பகுதி
கீழ்க்கண்ட மூன்றுவகை ஊரிருக்கைப் பகுதிகளை அரச ஆணை குறிப்பிடுகிறது: ஊர் நத்தம், பறைச்சேரி (பறையர் குடியிருப்பப் பகுதி), கம்மாணச்சேரி (கம்மாளர் குடியிருப்புப் பகுதி). இருப்பினும் தனித்தனி ஊர்களை விவரிக்கையில் வேறு சிலவகைக் குடியிருப்புப் பகுதிகளும் சொல்லப்பட்டுள்ளன. அவையா வன: குடியிருக்கை (குடிகள் வாழும் பகுதி),
46

ஈழச்சேரி (கள் இறக்குவோர் வாழும் பகுதி), தீண்டாச்சேரி (தீண்டத் தகாதவர் என்போர் வாழும் பகுதி), தலைவாய்ச்சேரி (நீர்செல்லும் தலைவாய்களைக் கட்டுப்படுத்துவோர் வாழும் பகுதி), தளிச்சேரி (கோயில் குடியிருப்பு). இறுதியில் கூறப்பட்ட மூன்று குடியிருப்புப் பகுதிகளும் சில ஊர்களில் மட்டுமே காணப்படு வதால் அட்டவணையில் பிற என்ற தலைப்பில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் 8ஆம் எண்ணுடைய ஊர்ச் செய்திகள் கல்வெட்டில் சிதைந்துள்ளமையால் அட்டவணையில் சேர்க் கப்படவில்லை. இவ்வூரில் வண்ணாரச் சேரி (வெளுப்போர் குடியிருப்பு) இடம் பெற்றுள்ளது. எனவே அரசாணையில் கூறப்பட்டுள்ள மூன்று குடியிருப்பு வளாகங்களைத் தவிர, பிறவகைக் குடியிருப்புப் பகுதிகள் பலவும் ஊரில் இருந்துள்ளமை தெளிவு.
அரச ஆணையில் பறைச்சேரி சொல்லப் பட்டிருந்தாலும் தஞ்சையின் 33 ஊர்களில் 19 ஊர்களில் மட்டும் பறைச்சேரிகள் இருந்துள் ளன. ஆனால் க. சோழபுரத்தில் 7 2ளர்களில் ஒரு ஊரில் மட்டுமே பறைச்சேரி காணப்படு கிறது. தஞ்சையில் 7 ஊர்களில் மட்டுமே கம் மாணச்சேரி இருந்துள்ளது. க. சோழபுரத்தில் ஒரு ஊரில் கூட இது இல்லை. மூன்றில் இரு பங்கு ஊர்களில் ஊர் நத்தமும் மற்றவற்றில் ஊரிருக்கையும் காணப்படுகின்றன. தஞ்சைக் கல்வெட்டில் ஓர் ஊரில் (எண்: 23) இவ்விரு சொற்களும் சேர்க்கப்பட்டு ஊரிருக்கை நத்தம் என்ற சொல்லால் அப்பகுதி குறிக்கப் பட்டுள்ளது. இவ்விரண்டு சொற்களுக்கும் உள்ள முக்கியப் பொருள் மாறுபாடு தெளிவாக இல்லை." என்றாலும் இவ்விரு பகுதிகளையும் ஊராரின் குடியிருப்புப் பகுதிகளாகக் கொள்ள லாம். எனினும், தஞ்சையில் இரண்டு ஊர்களில் ஊர் நத்தமோ ஊரிருக்கைடோ அல்லது வேறுவகைக் குடியிருப்போ காணப்படவில்லை. இவ்விரண்டு ஊர்களின் பரப்பளவும் மிகக் குறைவானதாக (முறையே 6.3 வேலிகள்) உள்ளதும் இதற்குக் காரணமாகலாம். மேலும் இவ்வூர்கள் வேறொரு ஊரின் பிடாகையாக இருக்கலாம். அப்பெரிய ஊரில் ஊர் நத்தம் அல்லது ஊரிருக்கை இருந்திருக்கலாம்.

Page 51
தஞ்சையில் மூன்று ஊர்களில் "குடியிருக்கை” காணப்படுகிறது. "குடி” என்ற சொல்லுக்கு உழுகுடி, ஒரு குடும்பம் அல்லது மக்கள் தொகுதி என்று பலவகையில் பொருள் கொள்ளலாம். மேற்கூறப்பட்ட மூன்று ஊர்களில் குடியிருக்கையுடன் ஊர் நத்தமும் பறைச் சேரியும் இருந்துள்ளன. எனவே, இவ்விடத்தில் குடி என்பது குத்தகைதாரராக உள்ள உழு குடிகளைக் குறிப்பிடலாம். இவர்கள் பொருள தார, சமூக நிலைகளில் ஊராரிலிருந்தும் பறையர்களிலிருந்தும் வேறான வர்கள்.
சோதிடர்களுக்கு அளிக்கப்பட்ட "கணிமுற் றுாட்டு” என்ற பகுதி ஊர்க் குடியிருப்பு வளா கத்தில் எப்பகுதியில் இருந்தது? என்று கல்வெட்டில் குறிப்பிடவில்லை. எனினும் ஊர்ப் பரப்பில் இது உள்ளடங்கியதாக தஞ்சை ஊர் எண்:1 தெரிவிக்கிறது. இதேபோன்று ஊர் எண்: 2இல் மருத்துவர்களுக்கு அளிக் கப்பட்ட மருத்துவப்பேறு என்ற பகுதி இருந்தது. இதிலிருந்து சோதிடர், மருத்துவர் ஆகியோர் அவ்வூர்களில் வசித்தனர் என்றாலும் அவர் களுக்கெனத் தனிக் குடியிருப்பு வளாகங்கள் இல்லை என அறியலாம்.
ஊர் எண் : 28இல் பறைச் சேரி "உழப்பறையரிருக்கும் கீழைச்சேரி என்றும் உழப்பறையரிருக்கும் மேலைப் பறைச்சேரி என்றும் குறிப்பிடப்படுகிறது. அவ்வூரில் வாழ்ந்த பறையர்கள் உழுதொழிலில் ஈடுபட்டிருந்தனர் என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது.
நீர்ப்பாசனவசதிகள்
தஞ்சை அரச ஆணையில் குளம், வாய்க்கால் என்ற இரு சொற்கள் நீாப்பாசன வசதிகளுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் ஊர்க் குடியிருப்புப் பகுதிகளைப் போன்று இச்சொற்களும் அனைத்து ஊர் களிலும் காணப்படவில்லை. தஞ்சையின் 22 ஊர்களிலும், க. சோழபுரத்தில் 7 ஊர்களிலும் குளம் இருந்துள்ளது. மேலும் சில ஊர்களில் உள்ள நீர் நிலைகள் சில அடைகளோடு விவரிக்கப்பட்டுள்ளன: புலத்திற்குளம் (உழு நிலங்களின் நடுவில் உள்ள குளம்): கழனிக் குளம் (நெல் பயிரிடப்பட்ட நிலத்தில் உள்ள

குளம்): ஊருணிக் குளம் (ஊருக்குப் பொது வாக அமைந்த குடிநீர்க் குளம்): திருமஞ்சனக் குளம் (புனிதக் குளம்): பறைக்குளக் குழி (பறையர்கள் பயன்படுத்தும் நீர்க்குட்டை?) எனவே தேவையான அடை மொழி இல்லாத "குளம்" வேளாண்மைக்காகவா அல்லது குடி நீருக்காகவா அல்லது பிற வசதிகளுக்கானதா என்பது குறித்துத் தெளிவாகக் கூற முடியாது. எனினும் 23, 28 எண்ணுடைய ஊர்களில் குடிநீர்க் குளம் மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஊர் எண் 22 இல் ஒரு கோயில் குளம் கூறப் பட்டுள்ளது. இந்த மூன்று ஊர்களிலும் பாசனக் குளங்கள் குறித்து ஒன்றும் சொல்லப் படவில்லையாதலால் அதனைக் காட்ட அட்ட வணையில் முக்கோணக் குறியீடு இடப் பட்டுள்ளது.
"கரை” என்ற சொல் 11 ஊர்களில் காணப்படுகிறது. இச்சொல் 9 இடங்களில் "குளம்” என்பதையடுத்து வந்துள்ளது. எனவே இங்குக்கரை என்பது குளக்கரையைக் குறிப் பிடலாம். பிற இடங்களில் இச்சொல் வாய்க்கால் அல்லது ஆற்றின் கரை எனக் கொள்ளலாம்.
அரச ஆணையில் வாய்க்கால்களைப் பற்றிய சொற்றொடரில் ஊடறுத்துப்போன வாய்க்கால்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளன. எனினும், ஊர்கள் பகுதியில் வாய்க் கால்களைக் குறிப்பிடும் பொழுது, இவ்வூர் நிலத்தை ஊடறுத்துப் புற ஊர்களுக்கு நீர் பாயப்போன வாய்க்கால் என விவரிக்கப் பட்டுள்ளது. 16 ஆம் எண்ணுடைய ஊரில், கீழ் நாட்டுக்கு நீர் பாயப்போன, என்று விவரிக்கப்பட்டுள்ளது. மற்றவகை நீர் வழிகள் ஆறு, வாய், நீரோடு கால் என்பனவாகும். மூன்று ஊர்களில் (தஞ்சை எண்: 16, 26, க. சோழபுரம் 212) ஆறு பற்றியும், இரண்டு ஊர்களில் (தஞ்சை எண்கள் 10, 21), வாய் (பெரிய வாய்க்கால்) பற்றியும், ஒரு ஊரில் (தஞ்சை எண் 27), "நிரோடு கால்” (சிறிய வாய்க்கால்) பற்றியும் கூறப்பட்டுள்ளன. மேற் கூறப்பட்ட இந்த ஆறு ஊர்களில் இரண்டில் வாய்க்கால் பற்றிக் கூறப்படவில்லை. இது அட்டவணையில் முக்கோணம் இட்டுக் காட்டப்பட்டுள்ளது. மீதமுள்ள நான்கு ஊர்
47

Page 52
d
ss
20
கிலோ மீட்டர்
சோழர் ஆட்சியில்
48
 

Хел- محسیح sz“ vor قصیحیح R Ta 5
tarny Ա)
SK .
ഴ്ച கங்கைகொண்ட சோழபுரம் / 空
நிலவரித் தீர்வை

Page 53
களில், குறைந்தது ஒரு வாய்க்காலாவது உள்ள ஊர்கள் வட்டம் மற்றும் கத்திக் குறியுடன் அட்டவணையில் காட்டப்பட்டுள்ளன. பெரிய பரப்பளவு கொண்ட மற்றொரு ஊரில் கிணறும் தொட்டியும் கூறப்பட்டுள்ளன.
கோயில்கள்
அரச ஆணையில் இவை பொதுவாக "றிகோயில்கள்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளன. எனினும் ஒவ்வொரு ஊரிலும் இப்பகுதியில் மூலவர் பற்றியும் விளக்கமாகக் கூறப் பட்டுள்ளது. அவற்றுள் சொல்லப்பட்ட தெய்வங் களாவன மகாதேவர், பிடாரி, காளா பிடாரி, அய்யன், காடுகாள், துர்க்கையார் மற்றும் சேட்டை அட்டவணையில் கோயில்கள் என்ற தலைப்பில் அனைத்துக்கோயில்களும் சேர்க் கப்பட்டுள்ளன. கீழே உள்ள பட்டியலில் கோயில்களின் பகுப்பு தரப்பட்டுள்ளது.'
அட்டவணை 3
கோயில் ஊர்களின் எண்ணிக்கை
பூரீகோயில் 1丑十 மகாதேவர் பூரீ கோயில் 4 காளாபிடாரி ரீ கோயில் 2 பிடாரி ரீ கோயில் 2பிடாரி கோயில் S அய்யன் கோயில் 5+ காடுகாள் கோயில் 2 துர்க்கையார் கோயில் 1 சேட்டைக் கோயில் 1
22 ஊர்களில் குறைந்தபட்சம் ஒரு கோயி லாவது உள்ளது. இவற்றுள் 14 ஊர் களில் ஒன்றுக்கு மேற்பட்ட கோயில்கள் உள்ளன. எட்டு ஊர்களில் பூரீ கோயில் அல்லது ரீ கோயில்கள் என்று மட்டும் காணப்படுகிறது. (தஞ்சையில் மூன்றும் க. சோழபுரத்தில் ஐந்தும்). மற்ற 14 ஊர்களில் பூரி கோயில் என்ற சொல் நான்கு ஊர்களில் இடம் பெறவில்லை. பத்து ஊர்களில் பிற கோயில் களுடன் அல்லது பிற கடவுளர்களுடன் இணைத்துக் கூறப்பட்டுள்ளது.
பத்து ஊர்களில் பிடாரி பூரீ கோயில் அல்லது பிடாரி கோயில் காணப்படுகிறது.

இரண்டு ஊர்களில் பிடாரி கோயில் மட்டுமே சொல்லப்பட்டுள்ளது. மேலும் மூன்று பிடாரி கோயில்கள் ஒரே ஊரில் இருந்துள்ளன (எண் 31). ஐந்து ஊர்களில் அய்யன் கோயில்கள் இருந்துள்ளன. எல்லா இடங்களிலும் இக் கோயில் பிற கோயில்களுடன் இணைத்தே சொல்லப்பட்டுள்ளது. காளாபிடாரி பூரீ கோயிலும், காடுகாள் கோயிலும் இரண்டிரண்டு ஊர்களில் இருந்துள்ளன. துர்க்கையார் கோயிலும் சேட்டைக் கோயிலும் ஓர் ஊரில் மட்டுமே இருந்துள்ளன.
பல ஊர்களில் கோயிலோடு சோத்துத் திருமுற்றம் (கோயிலின் முன் உள்ள திறந்த வெளி) குறிப்பிடப்பட்டுள்ளது. இது இறையிலி நிலமாகும்.
சுடுகாடு
தஞ்சையின் 19 ஊர்களிலும் க. சோழ புரத்தின் 5 ஊர்களிலும் ஒன்று அல்லது இரண்டு சுடுகாடுகள் இருந்துள்ளன. எனவே மொத்தம் 40 ஊர்களில் 24 ஊர்கள் மட்டுமே சுடுகாடுகளைப் பெற்றிருந்தன. இச்சுடுகாடுகள் ஊரின் பரப்பளவு வீதத்தைப் பொறுத்து அமைந்திருந்தனவாகத் தெரியவில்லை. ஏனெனில் 2, 5 எண் ஊர்கள் 51 வேலிக்கும் அதிக நிலப்பரப்பை உடையன. எனினும், சுடுகாடுகள் அவ்வூர்களில் இல்லை. ஆனால் 10, 30 எண் ஊர்கள் 10 வேலிக்கும் குறைவான பரப்புடைய சிற்றுார்கள். இவை சுடுகாடுகளைப் பெற்றிருந்தன.
சுடுகாடுகளைக் கொண்ட 24 ஊர்களில் 8 ஊர்களில் வேளாளருக்கும், பறையருக்கும் தனித்தனியான சுடுகாடுகள் சொல்லப் பட்டுள்ளன. இதனால், அவ்வூர்ச் சமூகத்தில் வேளாளரும் பறையரும் ஒதுங்கி வாழ்ந்தனர் என்பதைக் காட்டுகிறது. இந்த எட்டு ஊர்களும் முக்கோணம் இட்டுக் காட்டப்பட்டுள்ளன.
பறைச்சேரியினைக் கொண்டிருந்த எல்லா ஊர்களிலும் பறைச் சுடுகாடு இருந்ததாக நம்மால் கூற இயலவில்லை. திண்டாச்சேரி இருந்த இரண்டு ஊர்களிலும் ஈழச் சேரி இருந்த ஆறு ஊர்களிலும் அவர்களுக்கெனத்
49

Page 54
தனிச் சுடுகாடுகள் இருந்தன என்று கல்வெட்டு கூறவில்லை.7 ஊர்களில் கம்மாளர்கள் குடி யிருப்பு உள்ளதைக் குறித்து அரச ஆணையில் குறிக்கப்பட்டாலும் எந்த ஊரிலும் அவர் களுக்குத் தனியாகச் சுடுகாடு இருந்தமை பற்றிக் குறிப்பு இல்லை.
பிறவகை இறையிலி நிலங்கள்
மேலே ஆய்வு செய்யப்பட்டவைகளுடன் கீழ்க்கண்டவைகளும் இறையிலியாக அவ்வக் கிராமப் பகுதியில் கூறப்பட்டுள்ளன. இவ் விவரங்கள் அரச ஆணையில் கூறாது விடப் பட்டுள்ளன. அவையாவன: ஐந்து ஊர்களில் ஊர்க் களம் (தானியம் அடிக்கும் களம், ஊர் எண்கள்: 21, 26, 27, 29, 32) : நான்கு ஊர்களில் கொட்டகாரம் (தானியக் களஞ்சியம், எண்கள்: 23, 25, 30, 32); ஓர் ஊரில் கன்று மேய் பாழாய்க் கிடந்த நிலம் (மேய்ச்சல் நிலம், எண் 28): இரண்டு ஊர்களில் வழி (எண் :15, 28); மூன்று ஊர்களில் திருநந்தவனம் (எண்கள் 17, 29, 39); மற்றும் ஓர் ஊரில் இருந்த கற்கிடை (கற்களின் குவியல், எண் 21).
தரவுகளின் நம்பகத்தன்மை
மேற்கூறப்பட்ட அனைத்துச் சான்று களையும் பகுப்பாய்வு செய்வதற்கு முன் இவற்றின் நம்பகத் தன்மையைக் கண்டறிய வேண்டும். மேலும் முடிவுகளை எவ்வளவு தூரம் பொதுமைப்படுத்தலாம் என்பதையும் கருத வேண்டும்.
முதலில் அரச ஆணை, தனித்தனி ஊர் விவரணை ஆகியவற்றுக்கிடையே உள்ள முரண்பாடுபற்றிக் கவனிக்க வேண்டும். ஏழு வகையான இறையிலி நிலங்களை அரசாணை தெரிவிக்கின்றது. ஆயினும், இவை அனைத் தும் ஒவ்வொரு ஊரினையும் பற்றிக் குறிப்பிடும் பகுதியில் இடம் பெறவில்லை. எடுத்துக் காட்டாக மொத்தம் 40 ஊர்களில் 6 ஊர்களில் மட்டுமே கம்மாணச்சேரி கூறப்பட்டுள்ளது. இதற்கு மாறாக, அரச ஆணையில் தெரிவிக் கப்புட்ட ஏழுவகை இறையிலி நிலங்கள் அல்லாத பிற வகை இறையிலி நிலங்களும்
50

ஊர்களின் விளக்கப் பகுதியில் சொல்லப் பட்டுள்ளன. எனவே அரசாணையில் குறிப் பிடப்பட்ட இறையிலி நிலங்கள் எடுத்துக் காட்டாகச் சொல்லப்பட்டன என்று தெரிகிறது. மேலும் ஒவ்வொரு ஊரிலும் இறையிலி நிலங் கள் குறித்துத்தரப்படும் விவரங்கள் அவ்வவ் வூரில் நிலவிய உண்மை நிலைமைகளைப் பிரதிபலிப்பதாகக் கொள்ள வேண்டும் என்றா கிறது.
இறையிலி நிலங்கள் பற்றிய விவரங்கள் ஊருக்கு ஊர் மாறுபடுகின்றன என்ற உண்மை யையும் இங்கே குறிப்பிட வேண்டும்.
இதுவரை நாம் கண்ட முடிவுகளை எந்த அளவு பொதுமைப்படுத்த முடியும்? இக் கேள்விக்கு விடைகாண வேண்டின் அந்த 40 ஊர்களின் வருவாய்த்தீர்வை மற்றும் அவ்வூர் களின் இடப்பரவல் ஆகியவற்றை இங்கு ஆய்வு செய்ய வேண்டும். தஞ்சையின் 26 ஊர்களில் நிலவரி அல்லது காணிக்கடன் வேலிக்கு' 95-100 கலம் என்ற குறுகிய விகித எல்லைக்குள் உள்ளது. ஓர் ஊரில் மட்டுமே அத்தீர்வை 1 வேலிக்கு 77கலம் நெல்லாக விதிக்கப்பட்டுள்ளது. எனினும் க. சோழபுரத்தில் கூறப்பட்ட7 ஊர்களில் காணிக் கடன் தீர்வை வேலிக்கு 16கலத்திலிருந்து 52 கலம் வரை மாறுபடுகிறது. தஞ்சையின் ஊர்களையும் க. சோழபுரத்தின் ஊர்களையும் கூர்ந்து நோக்கினால் வேலிக்கு 95 கல நெல்லுக்கு மேல் விதிக்கப்பட்ட ஊர் நிலங்கள் யாவும் நெல் விளையும் இரு பூ (இரு போகம்) நிலங்களாகும். ஒரு வேலிக்கு சுமார் 50 கலம் வசூலிக்கப்படும். க. சோழபுரத்தின் இரண்டு ஊர்களில் ஒரு பூமற்றும் இரு பூ நிலங்கள் கலந்து கிடந்தன. 30 கலத்துக்குக் கீழ்ப்பட்ட தீர்வை வழங்கிய 5 ஊர்களில் வரகு விளைச்சல் இருந்தது. இதிலிருந்து க. சோழ புரத்தின் 7 ஊர்களின் இயற்கைச் சூழலும் தஞ்சை ஊர்களின் சூழலும் வேறுபட்டவை என்று தெரிகிறது.
முப்பத்து மூன்று ஊர்களின் இடப்பரவல் நிலப்படம் 3இல் காட்டப்பட்டுள்ளது. இப் படத்தில் தஞ்சைக் கல்வெட்டில் கூறப்பட்டுள்ள 26 ஊர்கள் 1, த2, த3, த*, த6, என்றும் க.

Page 55
சோழபுரத்தின் 7 ஊர்கள் க 3, அ. க? என்றும் காட்டப்பட்டுள்ளன.
மீதமுள்ள தஞ்சையின் 8 ஊர்களில் நெல்லுக்கு மாறாகப் பொன்னாக வரி விதிக்கப் பட்டுள்ளது. இதில் மூன்று ஊர்கள் நகரங் களாகும். மற்றவை இம்மூன்று நகரங்களில் ஒன்றுடன் இணைந்த ஊர்களாகும். இங்கு வரிவீதம் 1 வேலிக்கு 5.32 கழஞ்சு பொன்னிலிருந்து 9.97 கழஞ்சு பொன் வரை உள்ளது. இந்த 8ஊர்களும் நிலப்படத்தில் த1, த*, த5, என்ற பகுதிகளாகக் காட்டப் பட்டுள்ளன. இவ்வூர்களின் அமைவிடம் மூலமே இவ்வூர்களின் நிலத்தன்மையை ஊகிக்க (լքIգեւյb.
மேற்கூறப்பட்ட 40 ஊர்களும் கீழ்க்கண்ட மூன்று வகைகளில் வேறுபட்டுள்ளன: (1) தஞ்சைக் கல்வெட்டு ஊர்கள் பெரும்பாலும் சமமான செழிப்புத் தன்மை கொண்டவை எனினும் மாறுபட்ட இயற்கைச் சூழல் கொண்ட ஊர்களைக் கொண்டிருந்தன. (2) இவ்வூர்களின் சோழ மண்டலத்தில் நன்கு பரவிக் கிடந்தன. (3) இவ்வூர்களின் பரப்பளவு ஒன்றுக் கொன்று வேறுபட்டுள்ளன. எனவே இங்கு முடிவுகள் சோழமண்டல ஊர்களை, குறிப்பாக சோழமண்டலத்து மையப்பகுதி ஊர்களைப் பிரதிபலிப்பதாகக் கொள்ளலாம். எப்படியும் இத் தரவுகளில் ஒரு சார்புத் தன்மை இல்லை எனலாம். பிரமதேய ஊர்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை என்பதைக் குறிக்க வேண்டும். அரசரின் கொடைகளால் ஏற்படுத்தப்பட்ட இவை சிறப்புச் சலுகைகளைப் பெற்ற ஊர்கள், பொருளாதார வளர்ச்சி மிக்க பகுதியுமாகும். எனவே, பிரமதேயங்களை இவ் ஆய்விலிருந்து விலக்கியதால் ஆய்வு முடிவுகளில் குறைபாடு ஏதும் ஏற்படாது. மாறாக, அக்கால இயல்பான ஊர்களின் நிலைமைகளை அறிய முற்படும் இவ் ஆய்விற்கு கூடுதல் வலிவு கிடைக்கும்.
test Aufha
பல ஊர்களில் பல்வேறு குடியிருப்புப்
பகுதிகள் இருந்தமையை நாம் காண்கிறோம். அரசாணையில் தரப்பட்ட குடியிருப்புப் பகுதி

கள் ஊர்நத்தம் (ஊரிருக்கை), கம்மாணச்சேரி, மற்றும் பறைச்சேரி என்பன. வண்ணாரச்சுேரி, ஈழச்சேரி, தீண்டாச்சேரி தலைவாய்ச்சேரி மற்றும் தளிச்சேரி ஆகிய குடியிருப்புப் பகுதிகளும் அமைந்திருப்பதிலிருந்து அவ்வவ் ஊரில் பல வகுப்பார் உண்மையாகவே வாழ்ந்திருந்தனர் என்று அறியலாம். மேற்கண்ட வகுப்பாரது பெயர்களிலிருந்து இவர்கள் பல்வேறு தொழில் களில் ஈடுபட்டிருந்தனர் என்பதும் தெளிவு. அதாவது வேளாண்மை, கருவிகள் செய்தல், வெளுத்தல், கள் இறக்குதல் மற்றும் இது போன்ற பல்வேறு தொழில்களில் ஈடுபட்டிருந் தனர். சிற் சில வகுப்பார் சேர்ந்து வாழ்ந்த இவ்வூர்களில் சாதி அடிப்படையில் தொழில் பகிர்வு இருந்தது என்பது இதிலிருந்து விளங்கும். ஒரு வகையில் இச்சான்றுகள் இந்திய ஊர்கள் குட்டிக்குடியரசுகளாக இருந்தன. அவற்றுள் வேளாண்மையும் கை வினைத்தொழிலும் பிணைந்து சமூக உற்பத்திக்கு வழிவகுத் தன என்ற கொள்கைக்கு உரமூட்டுகின்றன.
ஊரில் அனைத்து வகையான குடியிருப்பு வளாகங்களும் அமைந்திருக்கவில்லை என்னும் முக்கிய உண்மை ஈண்டு நோக்கத் தக்கது. எடுத்துக்காட்டாக, கம்மாணச்சேரி சில ஊர்களில் மட்டுமே இருந்துள்ளது. இவ்வாறே பறைச்சேரியும்; ஆராய்ந்த 40 ஊர் களில் பாதி ஊர்களில் மட்டுமே இருந்துள்ளது. மாறாக, ஊர் நத்தம் அல்லது ஊரிருக்கை தான் பல ஊர்களில் இருந்த ஒரே குடியிருப்புப் பகுதியாகும்.
கோயில்கள், சுடுகாடுகளில் பரவல் தன்மை யும் மேலே கண்ட கருத்தையே நமக்குத் தெளிவுறுத்துகின்றது. பல ஊர்களில் வாழ்ந்த மக்கள் வேறு ஒரு ஊரிலிருந்த கோயிலிலோ அல்லது சுடுகாடுகளிலோ கூடி முறையே நன்மை தீமைச் சடங்குகளைச் செய்திருக்க வேண்டும்.
மேற்சென்ற கருதல் நம்மைக் கீழ்க் கண்டவாறு சொல்லத் தூண்டுகிறது. சமூகப் பெருக்கம் நிலை பெற்ற முதன்மை மையங் களாக கிராமங்கள் விளங்கவில்லை. மேலும் அவற்றுக்குள்ளேயே கிராம மக்களின் இயக்கம்
51

Page 56
முடங்கியிருக்கவில்லை: கிராமத்தைவிட ஒரு பெரிய நிலக் கூறிலேயே சமூகப் பெருக்கம் நடை பெற்றிருக்கக் கூடும்.
மற்றுமொரு கருதல் நீர்ப் பயன்பாடு ஆகும். மழை நீரைத்தேக்கி வைக்க உயர்ந்த கரைகள் கொண்ட குளங்கள் பெரும்பாலான ஊர்களில் இருந்துள்ளமை, வேளாண்மை ஊர்கள் எனினும் குளங்கள் பற்றிய தகவல்களைக் கூர்ந்து நோக்கும்பொழுது இக்குளங்களில் சில வ்ெறும் குடிநீர் அல்லது நீராடும் குளங்களாகவே இருந்தன: பாசனத்துக்குப் பயன்படவில்லை எனத் தெரி கிறது. மேலும் பாதி ஊர்களில் அவற்றினூடே சென்ற வாய்க்கால்கள் பிற ஊர்களுக்குப் பாசனத்தைக் கொடுத்தன. கீழுள்ள வேறு நாட்டுக்குக் கூட அவை பாய்ந்தன. ஆகவே நீர்ப்பங்கீட்டின் பொருட்டு ஒரு ஊரின் மக்கள் பிறிதொரு ஊர் மக்களோடு மட்டுமன்றி, பக்கத்து நாட்டு மக்களுடனும் இணைந்து செயல்பட்டிருக்க வேண்டும்.
ஆய்ந்தவற்றில் பாதி ஊர்களில் மட்டுமே ஆறு அல்லது வாய்க்கால்கள் ஊரின் குறுக்கே
குறிப்
1. இச்சொற்றொடரின் பயன்பாட்டு வரலாற்றிை community" From munro to Maine" in his R.
pp 112-32.
2. Sir Charles T. metcalfe, "Minute on the
November 1830.
3. கிராம சமூகத்தின் அரசியல் தன்மையைய எனினும் மார்க்சு, மெயின் உட்பட்ட பிற
கையாண்டுள்ளனர்.
4. B. H. Baden Powell, The Origin and Growth
5. W. H. Wiser, The Hindu Jajmani System,
6. M. N. Srinivas and A. M. shah, "The myt Economic Weekly, No. 12 (1960), pp. 137
7. B. R. Grover,"Nature of land-Right in mug
Review, Vol. 1 (1963), pp. 1-23.
8. Burton stein, peasant state and Society in
9. Krishnaswamy Aiyangar, Evolution of Hir Madras, 1931, and K. A. Nilakanta sastr
Madras, 1932.
52

செல்கின்றன. இதனால் பிற ஊர்களில் எவ்வித நீர்வழிகளும் இல்லை என்று கூற இயலாது. ஊர்களின் அல்லது நாடுகளின் எல்லைகளாக விளங்கும் வாய்க்கால்களோ அல்லது ஆறுகளோ பொதுவாக வரிவிலக் களிக்கப்படுவதில்லை. ஆகவே, நீர்ப்பயன் பாட்டு முறைகள் ஊரைவிடப் பெரிய நிலப்பரப்பில் வாழ்ந்த மக்களின் கூட்டுறவினால் வேளாண்மை உற்பத்தி மேற்கொள்ளப்பட்டது எனக் காட்டும். அதாவது சமூகப் பெருக்கம் ஊரைவிட பரந்துபட்ட நிலப்பகுதியில் நடை பெற்றது என்பது உறுதியாகிறது.
முடிவாக, நிர்வாக அலகு என்ற வகையில் கிராமத்தின் முக்கியத்துவத்தைப் புறக்கணிக்க முடியாது" ஆயினும் சமூகப் பெருக்கத்தைப் பொறுத்தவரை மெயினும், மார்க்சும் இவர்கள் வழி வந்த வரலாற்றாசிரியரும் கருதியதற்கு மாறாக சோழராட்சியின் இடைப்பகுதியில் சோழமண்டலத்திலிருந்த கிராமங்கள் தன்னி றைவு பெற்றுத் தனித்தியங்கவில்லை என்பது மேற்கண்ட நாற்பது ஊர்கள் பற்றிய உண்மை களிலிருந்து போதரும்.
புகள்
60T stu stood as:Louis Dumont, "The Village eligion, politics and History in India, paris, 1970,
Settlement in the Western province', dated 7
ம் மூன்றாவது கருத்தாக இங்கு சேர்க்கலாம். ஆய்வாளர்கள் தெளிவில்லாமல் இதனைக்
of Village Communities in india, London, 1899.
lucknow, 1936 n of the self-sufficiency of the Indian village', 3-8 na india", Indian Economic and Social History
medieval south India New Delhi, 1980.
du Administrative Institutions in South India, studies in Chola History and Administration,

Page 57
0.
11.
12.
13.
14.
15.
16.
17.
இரண்டாவது கல்வெட்டின் தொடர்ச்சி மூ பெற்றுள்ளது. இதில் சோழர் ஆட்சிக்குட்ட நிலங்கள் சொல்லப்பட்டுள்ளன. இம்மூன் கிராமங்களின் விவரங்கள் சிலவே. எனே தரவில்லை. ஊரார் எனப்படுவோர், வேளாளர் மற்றும் சாதிகளாகலாம். அட்டவனை 4இல் தஞ்சையின் 40 ஊர்களு எண்கள் தரப்பட்டுள்ளன. இந்த அட்ட6 விடுபட்டுள்ளன. இவ்வூர்களைப் பற்றிய கல் இவை அட்டவணையில் சேர்க்கப்படவில்ை யான குறிப்புகள் உள்ளன. எனவே இந்த வரி எண்ணால் அட்டவணையில் குறிக்கட் தன்மையில் வெள்ளான் வகை ஊர்கள், சோழர் கல்வெட்டுகள் காட்டுகின்றன. வெ ஊர்களாகும்: அவ்வூர்களின் மீது 9IU கல்வெட்டில் ஊர் எண் 18இல் தேவதானம், வகை எனக் கூறப்பட்டுள்ளன. வேலி, என்னும் பேர் இக்கல்வெட்டில் பய அளவு, வேலி தான் என்பதில் எவ்வகை ஐ ஏக்கருக்குச் சமமானது என்று வில்சனின் ெ ஏக்கர் பரப்பளவைக் கொண்டது என்று கு அளவு இவ்வளவு என்று நம்மால் அறுதிய நத்தம், குடியிருப்புப் பகுதி என்றாலு உள்ளடக்கியிருக்கலாம். மாறாக, இருக்ை இடமாகலாம் என்று திரு K. G.கிருஷ்ண கருத்து தெரிவித்தார். ஒன்றுக்கு மேற்பட்ட ஒரே வகைக் கோ காட்டப்பட்டுள்ளது. பார்க்க: நொபரு கராசிமா, வரலாற்றுப்போக்
அதிகாரம் 9. தஞ்சையில் ஒரு எட்டு ஊர்கள் பணத்தீர்ை சரியாகத் தெரியவில்லை. இவ்வூர்களில் ப தீர்வை, நிலத்தின் அடிப்படையிலேயே வா பிற ஊர்களிலிருந்து அதிகமாக வேறுபட6

ன்றாவது ஒரு கல்வெட்டில் (தெக. 1192) இடம் ட்ட பிற பகுதிகளில் கொடையாக அளிக்கப்பட்ட றாவது கல்வெட்டில் கொடையாகத் தரப்பட்ட ப இவ்வாய்வுக்குரிய செய்திகளை அக்கல்வெட்டு
அவர்களை ஒத்த பிற வலிய வேளாண்மைச்
நக்கு கல்வெட்டில் இடம் பெற்றுள்ள வரிசையில் பனையில் 7 ஊர்கள் (எண்கள் 3-8ம், 20ம்) வெட்டுப் பகுதிகள் பெரிதும் சிதைந்துள்ளமையால் ல. க.சோழபுரத்தில் 7 ஊர்களுக்கு மட்டும் தேவை 7 ஊர்கள் அவ் விவரங்கள் தொடங்கப் பெறும் பட்டுள்ளன. பிரமதேய ஊர்களுக்கு மாறுபட்டவை எனச் சில ள்ளான் வகை ஊர்கள் என்பது பெரும்பான்மை சாங்கம் வரித்தீர்வையை விதித்தது. தஞ்சைக் சாலா போகம் தவிர்ந்த பிற பகுதிகள் வெள்ளான்
பன்படுத்தப்படவில்லை.ஆயினும் அடிப்படை நில யமுமில்லை. ஒரு வேலி இன்றைய அளவில் 6.6 சொல்லடைவு குறிக்கிறது. தமிழ்ப் பேரகராதி 6.74 நறிக்கும். ஆனால் சோழர் காலத்தில் வேலியின் பிட்டுக் கூற முடியவில்லை.
ம் மக்கள் குடியேறாத நிலப்பகுதிகளையும் )க என்பது மக்கள் உள்ளபடியே குடியேறிய ண் (முன்னாள் முதன்மைக் கல்வெட்டாய்வாளர்)
பில்கள் கொண்ட ஊர் + (கூட்டல்) குறியால்
கில் தென்னக சமூகம் (சோழர்காலம் 850-1300)
6 செலுத்திய நகரங்கள். அவ்வூர் மக்கள் பற்றி லர் வணிகத்தில் ஈடுபட்டிருக்கக் கூடும். ஆயினும்
ங்கப்பட்டது. எனவே இக்கால வணிக நகரங்கள் வில்லையெனலாம்.
53

Page 58
குறிப்
தேக்கநிலைச் சமூகம்
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்திய சமூகம் தேக்கநிலை பெற்றிருந்தது என்னும் கருத்து இந்தியவியலாளரிடம் நிலவிவந்தது. (35disaspoo)60&scpsib (Stagnant Society) என்னும் இக்கருத்து இந்திய சமூகம் பற்றிய இன்னும் சில முக்கிய கருத்தாக்கங்களுடன் இணைந்ததாக உருவாக்கப்பட்டது. அவை
LT660:-
1. say IFID sepsiusof (Village Communities)
ஒன்றோடொன்று தொடர்பற்றனவாய் சுயத்துவம் கொண்டியங்கிய கிராமிய சமூ கங்கள் இந்தியாவின் தேக்கநிலைக்குக் காரணமாய் அமைந்தன. ஒரு கிராமத்தின் எல்லைக்குள்ளேயே பொருளியல், சமூகநட வடிக்கைகள் உள்ளடங்கியிருந்தன. கிராமங் கள் சுயநிறைவுடையனவாக (Self sufficient) 9)(555607.
2. sobgobgéogoa" 6u6è6a) Arafo (Oriental Despotism)
தேக்கமுற்ற, சலனமற்ற கிராமங்களுக்கு மேலாக ஓர் ஒருமையை உருவாக்கிய வல்லாட்சி அரசு நிலவியது. நீர்ப்பாசனம், தெருக்கள் போன்ற பொதுவேலைகளை நிறை வேற்றுவதும், வரியை அறவிடுவதும் இந்த அரசின் பணிகளாக அமைந்தன.
3. நிலம் தனிச்சொத்துரிமையாக இருக்கவில்லை.
நிலம் சமூகத்தின் பொதுச்சொத்தாக இருந்தது. சில வரலாற்றாசிரியர்கள் சமூகச் சொத்து என்னும் கருத்திற்குப் பதிலாக நிலம் அரசின் உடமையாக இருந்தது; மக்கள் அரசின் நிலத்தில் பயிரிடும் உரிமையைப் பெற்றிருந்தனர் என்று கூறினர்.
4. as a buggyp6O) (Asiatic mode of production)
தேக்கமுற்ற இந்திய சமூகம் அடிமை முறை நிலப்பிரபுத்துவம், முதலாளித்துவம் என்ற படிநிலைகளைத் தாண்டி வளரவில்லை. அங்கு ஆசிய உற்பத்திமுறை என்னும்
54

866
விஷேட சமூகமுறை நிலவியது. இக்கருத்தைக் கூறியவர் கார்ல் மார்க்ஸ், தேக்கநிலைச் சமூகம் என்னும் கருத்தும் அதனைச் சார்ந்த பிற முடிபுகளும் ஐரோப்பாதான் நாகரிகத்தின் sououlb (Euro-Centrism) stsdig st60ö60056og5 ஆதாரமாகக் கொண்டவை.
கிராம சமூகங்கள் கற்பனையும் உண்மையும் என்னும் கட்டுரை இவ்விதழில் இடம்பெறுகிறது. இந்திய வரலாற்றாய்வாளர்களான டி. டி. கோசாம்பி, ஆர். எஸ். சர்மா, இர்பான் ஹபீப் ஆகியோரின் எழுத்துக்களில் மேற்கூறிய கோட்பாடுகள் இந்திய வரலாற்றுக்குத் தேவையும், பொருத்தமும் உடையனவா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. தென்னிந்திய வரலாற் றாய்வில் இக்கோட்பாடுகளின் பொருத்தப்பாடு பற்றிப் பரிசீலனை செய்ய முயன்றவர்களில் நொபரு கராசிமா குறிப்பிடத்தக்கவர். 'வரலாற்றுப் போக்கில் தென்னக சமூகம் என்ற தலைப்பில் சோழர் காலம் (850-1300) பற்றி இவர் எழுதிய பதினொரு கட்டுரைகள் தொகுக்கப்பட்டு தமிழில் ஒரு நூலாக வெளியிடப்பட்டுள்ளது. இதனைத் தஞ்சாவூர் "தமிழகத் தொல்லியல் கழகம்” வெளி யிட்டுள்ளது. எ. சுப்பராயலு, ப. சண்முகம் ஆகியோர் தலைமையிலான ஆய்வாளர்கள் மொழிபெயர்த்துள்ளனர். இதேபோல் "நாயக்கர் காலம்” பற்றிய நூல் இரண்டாம் பாகமாக வெளிவரவுள்ளது. நுழைவாயில் - குறிக்கோளும் அணுகுமுறையும் என்ற தலைப்பில் ஓர் அறிமுகக்கட்டுரை இந்நூலில் உள்ளது. இத்துறையில் பரிச்சயம் இல்லாதவர்களும் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் அரிய தகவல்களைக் கொண்டதாக இவ்வறிமுகம் விளங்குகிறது. தென்னக வரலாற்று ஆய்வுப் பின்னணியையும் தமது நோக்கத்தையும் நொபரு கராசிமா பின்வருமாறு எடுத்துரைக் கிறார்.
இந்த நூலின் முக்கிய நோக்கம் தென்னிந்தியச் சமூகத்தில் ஏற்பட்ட வரலாற்று வளர்ச்சி அல்லது மாற்றத்தை ஆய்ந்தறிதல் ஆகும். சென்ற நூற்றாண்டில் என்றி மெயின்

Page 59
காரல் மார்க்ஸ் போன்ற ஐரோப்பிய அறிஞர்கள், பண்டைய இந்தியச் சமூகம் தன்னிறைவுக் கிராம சமூகத்தை அடிப்படையாகக் கொண்டிருந்ததால் தேக்க நிலையிலேயே இருந்தது: மேற்கத்திய நாடுகள் போல் வரலாற்றியல் வளர்ச்சியை இந்தியாவில் காணல் அரிது என்று விவாதித்துச் சென்றனர். அவர்கள் பெரும்பாலும் காலத்தால் பிந்திய ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனியின் அலுவலர் உண்டாக்கிய ஆவணங்களை அடிப்படைச் சான்றுகளாகக் கொண்டனர். மாறாக, என் ஆய்வுகளில் சமகால ஆவணங்களான கல்வெட்டுக்கள் தரும் சான்றுகளின் அடிப் படையில் தேக்கநிலைச் சமூகம் பற்றிய கொள்கையை மறு ஆய்வு செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். (பக்-3)
தென்னிந்திய வரலாற்றாய்வின் பின்னணி பற்றி அவர் கூறியிருப்பவை:
வடஇந்திய வரலாற்றாய்வுகளில் ஊடாடிய மேற்சொன்ன விவாதங்கள் 1960களில்தான் தென்னிந்திய வரலாற்றைத் தாக்கின. அதற்கு முன் கிருஷ்ணசுவாமி அய்யங்கார், நீலகண்ட சாஸ்திரியார் முதலிய முன்னோடி வரலாற்றா சிரியர்கள், சோழர் முதலிய தென்னக குல மரபு ஆட்சிகளைப் பற்றி ஆய்ந்து எழுதியபோது சமூக, பொருளியல் நிலைமைகளைப் பற்றியும் ஓரளவு அக்கறை செலுத்தினார்கள். இருப்பினும் சமூக பொருளியல் மாற்றம். அல்லது வளர்ச்சி பற்றிய ஆய்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இந்த நிலையை மாற்று வதைக் குறிக்கோளாகக் கொண்டு சோழர்காலக் கல்வெட்டுக்களை ஆய்ந்து இரு பிரச்சினை களைத் தெளிவாக்க முயன்றுள்ளேன். (பக்-4)
தென்னிந்திய வரலாற்றில் தம் கவனத் தைக் கவரும் பிரச்சினைகள் பற்றி அவர்
கூறுவன:
உழவர்களின் நிலவுடைமை பற்றியது முதல் பிரச்சினை. ஆங்கிலேய அரசு ஆவணங்கள் தென்னிந்தியக் கிராமங்களில் சமூகவுடைமை

நிலவியதாகக் குறிப்பிடுகின்றன. 1819 ஆம் நூற்றாண்டுகளில் இருந்த இந்த நிலவுடைமை முறை சோழர் காலத்திலும் இருந்ததா என்ற கேள்வியெழல் இயல்பு; எனினும் இந்த இரு வேறு காலகட்டங்களில் நிலவிய சமூகவுடைமை முறைகள் ஒரே தன்மையுடையனவாக இருக்க முடியுமா? அண்மைக்காலம் வரை சமூகப் பெருக்கத்துக்கான உற்பத்தி முறை நிலவுடை மையை மையமாக வைத்தே இருந்தது. ஆகவே நிலவுடைமை முறையில் ஏற்பட்ட வளர்ச்சி அல்லது மாற்றங்களை ஆய்வதின் மூலம்சமூக வளர்ச்சி பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
ஆயினும் நிலவுடைமை முறையின் தன்மை ஒன்றே சமூகத்தின் தன்மை அல்லது அதன் வளர்ச்சியை நிர்ணயித்தது என்பது வெகுளித் தனமான கருத்தாகும். சமூகத்தைப் பற்றி முழுமையாகப் புரிந்து கொள்ளச் சமூக ஒருங்கிணைப்பு பற்றிப் புரிந்துகொள்ள வேண்டும் அரச அதிகார அமைப்பு எப்படியிருந் தது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். வேறு வகையாகச் சொன்னால், ஆளும் வர்க்கம் உழவர் மற்றும் பிற உற்பத்தி செய்வாரிட மிருந்து கூடுதல் உற்பத்தியைக் கறக்க எப்படிப்பட்ட அதிகார பலத்தைப் பயன்படுத் தியது என்பதை ஆராய வேண்டும். இது இந்த நூலில் எடுத்துக் கொண்ட இரண்டாவது பிரச்சினையாகும். (பக்-4)
நொபரு கராசிமாவின் புலமை ஆளு1ை0 யைப் பண்பாடு வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் நோக்குடன் கிராம சமூகங்கள்கற்பனையும் உண்மையும் என்ற கட்டுரை இவ்விதழில் வெளியிடப்படுகிறது. தமிழகத் தொல்லியல் கழகத்தின் முயற்சி போற்றிப் பாராட்டத்தக்கது. இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனு சரணையுடன் இயங்கும் இந்துகலாசார நிதியம் நடத்திவரும் புத்தக விற்பனை நிலையம் இந்நூலில் 35 பிரதிகளை இறக்குமதி செய்து விற்பனை செய்து வருகிறது. நூலின் இலங்கை விலை ஒருபிரதி ரூ. 250/= ஆகும். ஆர்வமுடை யோர் இந்நூலை பெற்றுப்படித்துப் பயன் பெறலாம்.
55

Page 60
பிற ஆய்வாளர்கள்
இத்துறையில் ஈடுபட்டுள்ள பிற ஆய்வாளர் யார்? என்பதைப்பற்றிய பயனுள்ள குறிப்பையும் கராசிமாவின் அறிமுகத்தில் காணலாம்.
மேலே குறிப்பிட்டதைப்போல் 1960கள் வரை தென்னிந்தியச் சமூகத்தில் வளர்ச்சி அல்லது மாற்றம் பற்றிய ஆய்வு பெரும்பாலும் இல்லை. ஆனால், அண்மைக் காலத்தில் அந்த நோக்கில் சில ஆய்வுகள் வெளியாகியுள்ளன. அவற்றில் பர்டன் ஸ்டெயின் மற்றும் கத்லின் கோ நீண்டகால நோக்கில் சமூக மாற்றங்கள் பற்றி எழுதியவையும், M.G. S நாராயணன், சுப்ப ராயலு, சம்பகலகூழ்மி D, N ஜா, இந்திரபாலா, கென்னத் ஹால், ஜார்ஜ் ஸ்பென்சர் A. L. அலயேவ் முதலியோர் குறுகிய கால கட்டங்களை அல்லது தனித்தனி பிரச்சினைகளை மையமாக வைத்து எழுதியுள்ளமையும் அடங்கும். இங்கு ஸ்டெயின், கோ ஆகியோரின் ஆய்வுப்படைப்பு கள் திறனாய்வுக்கு எடுத்துக் கொள்ளப் படுகின்றன. (பக்-9)
இங்கு குறிப்பிடப்படும் ஆய்வாளர்களின் நூல்களையும் கட்டுரைகளையும் பற்றிய விபரங்களை நூலின் பின்னிணைப்பாக உள்ள நோக்கு நூற்பட்டியலில் காணலாம். பர்டன் 6tQLulsi (Burton Stein) isg,656 (35T (Kathleen Gough) ஆகிய இருவரும் முக்கிய ஆய்வாளர்கள். இவர்களுடன் கராசிமாவையும் சேர்த்து மூவரின் நூல்கள் கணிப்புக்குரியன. இவையாவும் தமிழில் பெயர்க்கப்படுதல் அவசியம்.
பர்டன் ஸ்டெயினும் கத்லின் கோவும்
பர்டன் ஸ்டெயின் தென்னிந்திய சமூகம் பற்றி ஆராய்ந்து கூறாக்கநிலை அரசு (Segmentary State) 6T6tgjib (885Tl'UT'60) எடுத்துரைத்தார். அவரின் ஆங்கில நூல் Peasant State and Society in Medieval india (டெல்லி 1980) என்பதாகும். இடைக்காலத் தென்னிந்தியாவில் உழவர் அரசும் சமூகமும் என்பதே இதன் பொருள். கத்லின்கோ ஒரு LUT60slugfuj6)T6tti. "Mode of production in Southern India" (i980)6T6örg as (6609 ub
56

Rural Society in South East India (1981) என்ற நூலும் இவரது முக்கிய பங்களிப்பு களாகும்.
கூறாக்க நிலை அரசு
கூறாக்க நிலை அரசு என்னும் ஸ்டெயினின் கோட்பாடு பற்றி நொபரு கராசிமா தரும் பயனுள்ள குறிப்புக்கள் கீழே தரப்படுகின்றன.
ஸ்டெயின் தன் நூலில் சோழர்காலப் பிரச்சி னைகளை முதன்மையாகவும் விஜயநகர காலத்தைப் பற்றி ஓரளவும் ஆராய்ந்துள்ளார். அவர் நூலின் நடுநாயகக் கோட்பாடு கூறாக்க 60s) sigs, (Segmentary State) 9(5th. கிழக்கு ஆஃபிரிக்கச் சமூகத்தை ஆய்ந்த சவுதால் என்ற மானிடவியல் அறிஞரின் நூலிலிருந்து இக்கோட்பாட்டை எடுத்து தென்னிந்தியாவுக்கு பொருத்திப் பார்த்தார். இக்கோட்பாட்டின்படி, சோழர் காலத் தென்னிந்திய சமூகம் சடங்கு நிலையிலேயே அரசு என்ற உருவைப் பெற்றது. அரசியல் நோக்கில் பார்த்தால் அச்சமூகம் நன்கு வரையறுக்கப்பெற்ற நீடித்த இனமரபு வட்டாரங்களாலான பல தனித்தனிக் கூறுகளைக் கொண்டதாக விளங்கியது. சோழர் கல்வெட்டுக் களில் இனமரபு வட்டாரங்கள். நாடு என்று வழங்கப்பட்டன. இக்கூறுகளின் எல்லைக்குள் இருந்த குடிகள் அரசின் ஆதிக்கத்துக்கு உட்படவில்லை. அதாவது, சோழ அரசில் அரசு நிர்வாகம் அல்லது அரசு அலுவலர் தொகுதி இருந்தது என்பதை ஸ்டெயின் ஏற்கவில்லை. நீலகண்ட சாஸ்திரியார் ராஜராஜனின் ஆட்சியை 63)6. Friu 9 J5 ics, (Byzantine royalty) ஒப்பிடுவதை ஸ்டெயின் கடுமையாக மறுக்கிறார்.
இடைக்காலத் தென்னிந்திய அரசுகள் கூறாக்க நிலை அரசுகள் என்பதை நிறுவ ஸ்டெயின் தன்காலம் வரை வெளியான தென்னிந்திய வரலாற்று நூல்கள் யாவற்றையும் அலசிப் பார்த்துள்ளார். தொடர்புடைய கல் வெட்டுச் சான்றுகள் யாவற்றையும் ஆண்டறிக் கைகள் மூலம் பார்த்துள்ளார். பிரமதேயங்களின் பரவல் தன்மையையும், தென்னிந்தியக் கோயில்களின் வகைப்பாடுகள் பற்றியும்.

Page 61
இடங்கை வலங்கைச் சமூகப்பூ சல் பற்றியும் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளார். ஆகவே, ஸ்டெயினின் படைப்பை நீலகண்ட சாஸ்திரி யாரின் சோழர் மற்றும் தென்னிந்திய வரலாறு ஆகிய இரு நூல்களுக்குப் பின் வந்த சிறந்த நூல்களில் ஒன்று என்று கருத வேண்டும். இருந்த போதிலும், அவர் நூலைப் படிக்கையில் அவருடைய விளக்கங்கள் பல வெறும் ஊகமாகத் தென்படுகின்றன. ஒரு வேளை தென்னிந்தியச் சமூகத்தைப்புரிந்து கொள்ள, கொள்கைச் சட்டம் ஒன்றைக் கொடுத்தல் அந்த நூலின் நோக்கம் ஆனமை இந்த ஊக உணர்வை ஏற்படுத்தி யுள்ளது எனலாம். மாறாக, இந்த நூல் சில குறிப்பிட்ட பிரச்சினைகளைத் தெளிவுபடுத்து வதையே நோக்கமாகக் கொண்டுள்ளது; ஒரு கொள்கைச் சட்டத்தை அளிப்பது நோக்க மில்லை. இருப்பினும் கூட ஸ்டெயின் கருத்துக் களின் மீதான என் திறனாய்வு இந்நூலைப் படிப் போருக்குப் பயன்படும் என நம்புகிறேன்
தமிழ் ஆராய்ச்சி
"தமிழ் ஆராய்ச்சி" என்பதில் நிறுவனம் ஆராய்ச்சிகள் என இருபிரிவு உண்டு. எம். லிட் பிரிவில் சேரும். இப்பிரிவில் ஏறத்தாழ 2000 ஆ கடந்த 50 ஆண்டுகளில் வந்தவை ஆகும். ச பாரதியார் படைப்புகள் அதிக அளவில் ஆய்
பி. எச். பு சங்க இலக்கியம் 00 இக்கால இலக்கியம் 220
ஒப்பாய்வு ()
புதுக்கவிதை, சிறுகதை, நாவல், நாட்டார் வழ உரைநூல்கள் பற்றிய ஆய்வுகளும் கணிசமா? ஆய்வு, வரலாற்று முறை ஆய்வு, ஒப்பியல் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பட்டத்துக்கான ஆய்வுகளேயன்றி, பலி
நாட்டுப்புறவியல் 90
ஆய்வுக்கட்டுரைகளும் இந்த அரை நூற்றாண்

தென்னிந்தியா பற்றியும், தமிழகம் பற்றியும் தமிழில் இதுவரை வெளிவந்துள்ள நூல்கள் வெறும் தரவுகளையும், விபரங்களையும் தந்து விபரிப்பனவாகவே அமைந்தன. கோட்பாட்டு ஆய்வுகளுக்கும், விவாதங்களுக்கும் ஆதாரமான அறிமுகக் குறிப்புகளைத் தானும் தந்து இத்துறை ஆர்வத்தைத் தூண்டும் நூல்கள் தமிழில் இல்லை.
பர்டன் ஸ்டெயினின் விளக்கங்கள் வெறும் ஊகங்கள் என்று கராசிமா கூறியபோதும் அந்நூலின் சிறப்புப் பற்றி அவர் பாராட்டிப் பேசுகிறார். தென்னிந்திய சமூகத்தைப் புரிந்து கொள்வதற்கு ஏற்ற கோட்பாட்டு விளக்கங் களின் பின்னணியை எடுத்துக்கூறும் நூல் தமிழில் இன்றுவரை எழுதப்படவில்லை. கராசி மாவின் கட்டுரைகளின் தமிழ்மொழி பெயர்ப்பு தமிழிற்கோர் புதுவரவு ஆகும்.
- க. சண்முகலிங்கம்.
சார்ந்த ஆராய்ச்சிகள், நிறுவனம் சாரா ; எம்ஃபில், பி. எச். டி பட்ட ஆய்வுகள் முதல் ய்வேடுகள் வெளிவந்துள்ளன. இவற்றுள் 95% ங்க இலக்கியம், திருக்குறள், சிலப்பதிகாரம், வு செய்யப்பட்டுள்ளன.
எம். ஃபில்.
50 266 (பாரதியார் -30) 270
30
)க்காற்றியல், காப்பியங்கள், சிற்றிலக்கியங்கள், ன எண்ணிக்கையில் உள்ளன. அமைப்பியல் ஆய்வு எனப் பல நிலைகளில் ஆய்வுகள்
வேறு கருத்தரங்குகளில் படிக்கப்பெற்ற டில் ஆயிரக்கணக்கில் வெளியாகி உள்ளன.
- இராம. சுந்தரம் - "முற்போக்கு இலக்கியத்திறன்” (1995)
என்னும் கட்டுரைத் தொகுதியிலிருந்து لر
SLS S S SSSSSSMSSSMSSSSSSS LeSGGSMSS MeSkSS SS SS SS SS SSLSS SLSLSLSLSSS SLLLLLLSLLLLLLkkSSkLSS LLSLLSCLSS SS S SLSLSLS S SLSLSSSMSSSS

Page 62
திணைக்களத்தில் விர்
1) மொழியாய்வுக் கட்டுரைகள்
- டாக்டர். தி. முருக! 2) நடையியல் சிந்தனைகள்
முனைவர் இ.சுந்தர 3) அறிவியல் உருவாக்கத்தமிழ்
- கட்டுரைத்தொகுப்பு 4) மொழி வளர்ச்சியும் மொழி உை
- டாக்டர் செ. வை.
5) மொழி வளர்ச்சி
- டாக்டர் கி. கருனா 6) தொடர்பாடல், மொழி நவீனத்து - பதிப்பாசிரியர் டாக் (இந்துசமய திணை 7) வ. சுப. மானிக்கனாரின் சொ6 - டாக்டர் பழ. முத்து 8) இலக்கண உருவாக்கம்
- டாக்டர் செ. வை.
1) கோனார் தமிழ்க் கையகராதி
வித்துவான் திரு. ஐ 2) தமிழ் மொழியகராதி
- நா. கதிரவேற்பிள்ை 3) தமிழ்-தமிழ் அகரமுதலி
- தொகுப்பாசிரியர் மு 4) தமிழ்-ஆங்கில அகராதி
- எம். வின்சுலோ
5) தமிழ்-ஆங்கில அகராதி
- எம். விஸ்வநாதபிள்
58
 

பனைக்குள்ள நூல்கள்
ல் நரல்கள்
த்னம்
மூர்த்தி
ணர்வும்
சண்முகம்
கரன்
|b
டர் எம். ஏ. நுஃமான் க்கள வெளியீடு)
ல்லாக்கம்
வீரப்பன்
:யன் பெருமாள் கோனார்
6
சண்முகம்பிள்ளை
(5
eb
ტ[b
40.00
42.50
32.00
100.00
37.50
15OOO
25.00
90.00
134. 75
662.50
25OOO
662.50
987.50

Page 63
தினைக்களத்தில் விற்ப
1) அந்தரேயின் கதைகள்
- மாத்தளை ே
2) சைவசித்தாந்த அறிவாராய்ச்சிய - கலாநிதி சோ
3) இலங்கையின் இந்துக்கோவில்
4) தட்சணகைலாச புராணம் பகுதி
5) “பண்பாடு’ இதழ்கள் (9,10,11 - (ஒவ்வொரு (
யாழ் பல்கலைக்க
1) யாழ்ப்பாணம் தொன்மை வரல
- கலாநிதி சி.
2) பூநகரி தொல்பொருளாய்வு
- ப. புஷ்பரட்ன
3) யாழ்ப்பான இராச்சியம்
- கலாநிதி - சி
Agicë
இந்தியாவிலுள்ள சரசுவதி மஹால் நூ சிறந்த நூல்களைப் பதிப்பித்து வெ விற்பனைக் கெனக் கொள்வனவு பொதுநூலகங்களும், சித்தவைத்திய இந்நூல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
Printed By: SERENE OFFSET

னைக்குள்ள நூல்கள்
Fாமு (MD). 25/-
பியல்
கிருஷ்ணராஜா eb. 25/-
கள் - பகுதி - 1 (b. 100/-
- I ღ15. 100/-
)
இதழும்) eb. 25/-
I
க. சிற்றம்பலம் ღh. 800/-
TLb ტTb. 450/-
க. சிற்றம்பலம் eb. 450/-
வ நூல்கள்
ல்நிலையம், சித்தமருத்துவம் தொடர்பான ரியிட்டுள்ளது. இந்நூல்களில் பலவற்றை செய்து இருப்பில் வைத்துள்ளோம். சங்கங்களும், எம்முடன் தொடர்புகொண்டு
Colombo -8, Phone : 687800

Page 64

http:M Anywii. Chañizham. net