கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மாருதம் (வவுனியா) 2008.04-10

Page 1


Page 2
இரசாயன உரங்கள், கிருமி நாசினிகள் விற்பனையாளர். Ga): 27, LufInitGigi, GuGedurT.
 

பாருதம் 9 - 2008 சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிவக
நண்பர்களுக்குமட்டும்
அட்டைப்பட அறிஞர்பற்றி. 3 பேராசிரியர் கலாநிதி நா.சுப்பிரமணியம் 5 கவிதை - யன்னல் 8 என்ரை அப்பாவும் என்னோட. 9 பாவனை பண்ணுதல் 15 ஒயுதல் செய்யோம் தலைசாயுதல் செய்யோம் பெண்ணே நீ அடிமையாகாதே 17 உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம்
திரை இசைப் பாடல்களுக்கு . 18 ஆசிரியர் குழு மனதில் உறுதி வேண்டும் 23
sess s
s எளிமை ஓர் அறம் 24 கந்தையா யூனிகணேசன் ems «" 8 உதவி: ஏன் இப்படிச் செய்தாய் 25 பதர்மினி பாரதி 29 த.பிரதாபன் கவிஞர் அகளங்கனின் கவிதைகள் 3O அச்சு: தோல்வி 31 மல்ரிவிஷன் அச்சுக்கலையகம் 箭 éði allséE&s 32 77, 1ம் குறுக்குத்தெரு, வவுனியா. * தொ.பே: 024 : 2223669 பதிவுகள் 1 36 ணேஷ் உன்னைக் காணவில்லை 46 s: 5, s ബ് .സ്ടേ சுமங்கலி - சிறுகதை Af இலச்சினை: பசிவகுண்பு s
66JOGADů: NghymrodFuET ஒரு பாவை 52 தொடர்புகட்கு: புரியவில்லை - கவிதை 56 (1) 39%; “பொதிகை”, பதிவுகள் 2 57 அலைகரை வீதி, உயிர்ப்பு நாடக விமர்சனம் S9 இறம்பைக்குளம், 8 象 வவுனியா, நல்லாசான்களே. 62 தொபே : 024 2221310 நட்பிற்குள் ஏன் வேலி 63 s அளவே அழகு 64. (2) 99, திருநாவற் குளம் ed
வவுனியா, நாடக கலைஞர் - நோகாணல 65 024 2221676 வட்டத்தின் விருது பெறும் கலைஞர்கள் 69 வெளியீடு: பத்தாண்டு நிறைவு நிகழ்வு 73
வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம்
Published by : Circle of Arts and Literary Friends. Vavuniya, SriLanke. Editors :Ahalangan 8, Kandiah Shriganeshan email: kshriganeshanOyahoo.com

Page 3
மாருதம் 9 - 2008 அமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
2 fileña Lleó.......
வவுனியா மண்ணின் புதல்வர், தனித் தமிழறிஞர் வ.சு.இராஜ ஐயனாரின் நிழற்படம் தாங்கி வெளிவரும் ஒன்பதாவது மாருதம் இதழுடன் வாசகர்களை சந்திப்பதில் திருப்திதான் ஆனால் சமகாலம் தொடர் நிதும் மக்களைப் பல வேறு நெருக்கடிகளுக்குள் ஆழ்த்திக் கொண்டு தான் நகருகிறது. மனித அவலம் எங்கும் தொடர்கிறது. எமது உணர்வுகள் குன்றி விதேசியப் பண்பாட்டிலும்-வாழ்வியல் முறைகளிலும் நாட்டம் கொள்ளும் எம்மவர் எமக்குரிய வாழ்வைத் தொலைத்து விட்டுச் செல்கிறார்கள் என்பது வருந்தத்தக்கது. இருட்டைப் போக்குவதற்கு ஒளி தான் தீர்வே தவிர இருட்டு இருட்டு என்று கூக்குரல் இடுவது தீர்வாகாது.
. . . . . . a 92 d இக்கட்டத்தில் 'மாருதம ஊடாக எம்மையும் எம் உணர்வுகளையும் உயிர்ப்பிக்கும் கட்டாயத்தில் நாம்
உள்ளோம். இப்பணி தொடர உங்களையும் அழைக்கின்றோம்.
புதிய எழுத்தாளர்களின் ஆக்கங்களைத் தாங்கி வரும் இந்த இதழ் புதிய மணம் வீசும்.
- ஆசிரியர்கள் -

மாருதம் 9 - 2008 சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
அட்டைப்பட அறிஞர் பற்றி.
சித்தாந்தன்
மாண்ட அறிவிற்கு விளக்குரழாலை மற்றதற்கு பூண்ட துரைத்தனத்தாள் விளக் - காண்டுமிக மின்னும் சிறுவர் விளக்காம் அவருக்கு கன்னித் தமிழ் விளக்காம் விளக்கு
இப்பாடல் வ.சு. இராஜஐயனார் அவர்களால் அவர் அதிபராக இருந்த யாழ் ஏழாலை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலைமீது பாடப்பட்டது. இவரின் வழிபடுதெய்வம் ஐயனார். தனித்தமிழ்ப்பற்றுடையவர். சுவாமி வேதாசலம் எனப்படும் மறைமலை அடிகளின் (1876 - 1950) அன்புக்குப் பாத்திரமானவர்.தமிழ்நாட்டிலே அடிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு கூட்டத்திலே குறிப்பிட்ட நேரம் வரையும் தனித்தமிழில் பேசி விட்டு “நமஸ்காரம்" என்று கூறி இறங்கிவந்த அறிஞர். தமிழ், ஆங்கிலம், வடமொழிப் புலமையாளர். இவர்தான் மாருதம் அட்டையினைச் சிறப்பிக்கும் அறிஞர் பெருமகன்.
இவர் வவுனியாவின் தொன்மைமிகு கிராமமான இராசேந்திரன்குளத்திலே 1899 ஆம் ஆண்டு சுப்பிரமணியம் தம்பதியினர்க்கு மகனாகப் பிறந்தார். ஐயனார் தமது ஆரம்பக்கல்வியை ஊரிலுள்ள பாடசாலையிலும் இடைநிலைக் கல்வியை யாழ்.சென்பற்றிக்ஸ் கல்லூரியிலும் கற்றிருக்கிறார். 1917 - 1921 காலப்பகுதியிலே பிற்காலத்தில் புலவர் மணி என்ற பட்டத்தையும் பெற்ற இலக்கிய கலாநிதி.ஏ.பெரியதம்பிப்பிள்ளை (1899 - 1978) அவர்களுடன் ஒன்றாகச் சுவாமி விபுலாநந்தரிடம் கற்று மதுரைத் தமிழ்ச்சங்க பண்டித பரீட்சையில் சித்தி பெற்றார். சுவாமி விபுலாநந்தர் (1892 - 1947) அவர்களை அடுத்து மதுரைத்தமிழ்ச்சங்கப் பரீட்சையில் சித்திபெற்ற இரண்டாவது இலங்கையர் வவுனியாவைச் சேர்ந்த இராஜஐயனார் அவர்களே. இவர் ஒரு பயிற்றப்பட்ட ஆசிரியர். யாழ்.சென் பற்றிக்ஸ்கல்லூரி, யாழ் பரமேஸ்வராக் கல்லூரி என்பவற்றிலே ஆசிரியராகப் பணிபுரிந்தவர்.
1928 ஆம் ஆண்டு சைவவித்தியாவிருத்திச் சங்கத்தினால் (Hindu Board of Education) திருநெல்வேலியில் ஆரம்பிக்கப்பட்ட சைவாசிரிய கலாசாலையில் தமிழ் விரிவுரையாளராக நியமனம் பெற்று இரண்டாண்டுகள் பணிபுரிந்தார். இதன் பின்னர் யாழ் ஏழாலை மகாவித்தியாலயத்திற்கு அதிபராகச் சென்று ஏழு ஆண்டுகள் (1929 - 1936) அங்கே பணியாற்றினார். இக்காலத்திலே ஈழகேசரி நா.பொன்னையா அவர்களுடன் நெருக்கமான தொடர்பினைக் கொண்டு சைவத்துக்கும் தமிழுக்கும் அளப்பரிய பணிகளை ஆற்றினார். அமரர்களான பண்டிதர் வீசெ.இராசையா, ஏழாலை - மல்லாகம் கிராமசபையின் முன்னைநாள் தலைவர் திரு.க.சிவகுரு (1918 - 1987) முதலானோர் இவருடைய மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- 3 -

Page 4
மாருதம் 9 - 2008, சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
1936ஆம் ஆண்டு கோப்பாய் அரசினர் ஆசிரியர்கலாசாலையில் விரிவுரையாளராக நியமனம் பெற்று அங்கே பல்லாண்டுகள் பணிபுரிந்தார். இங்கு பணிபுரியுங்காலத்திலே இல. 326, காங்கேசன்துறை வீதி, வண்ணார் பண்ணை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிவபக்தியிற் சிறந்த முத்துவேற் செட்டியார் அவர்களுடைய மகளான கமலாம்பாள் என்பவரைத் திருமணம் செய்தார். பிள்ளைகள் இல்லை, கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் இருந்து பூண்டுலோயாவில் உள்ள பாடசாலைக்கு அதிபராகச் சென்று பணியாற்றுகின்ற காலத்திலே நீரிழிவு நோயினால் பீடிக்கப்பட்டு 1954 ஆம் ஆண்டு சிவபதமெய்தினார்.
பண்டிதரின் எழுத்தாக்கம் என்ற வகையில் சிறுகதை அமைப்பிலான சில கதைகளும் பல கட்டுரைகளும் எமக்குக் கிடைத்திருக்கின்றன. இவை மாயக்குதிரையும் இலக்கியக் கட்டுரைகளும் (மார்ச் 2008) எனும் தலைப்பில் தொகுக்கப்பட்டு நூலாக வெளிவந்துள்ளன. வவுனியா விஞ்சு வெளியீட்டகமும் வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டமும் இந்த நூலை வெளியீடு செய்தன. இந்த நூல் வ.சு.இராஜஐயனார் நூல்வரிசையில் முதலாவது ஆகும். தொடர்ந்தும் அவரால் எழுதப்பட்ட கதைகள், கட்டுரைகள், கவிதைகள் என்பன தேடிக் கண்டுபிடிக்கப்பட்டு நூலுருவில் வரவேண்டும். கலாநிதி முல்லைமணி வே.சுப்பிரமணியம் அவர்கள் தமது வன்னியியற் சிந்தனை (2001) எனும் நூலில் 'தனித்தமிழ் வல்ல பண்டிதர் வ.சு இராசஜயனார்’ என்ற தலைப்பில் எழுதியுள்ளார். இது போன்ற பல ஆக்கங்களைத் தகவல் பெறுவோர் எழுதவேண்டும். அவற்றின் மூலம் தான் இராஜஐயனாரின் ஆளுமையைத் தரிசிக்கமுடியும்.
திரு.அருணா செல்லத்துரை அவர்களுக்கு எமது நன்றிகள்.
ஈழத்தின் பிரபல சஞ்சிகைகளின் ஆண்டு மலர்கள்
MACAPAZ, 4
 
 
 

மாருதம் 9 - 2008 சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
பேராசிரியர் கலாநிதி நா.சுப்பிரமணியன்
முருகேசு கெளரிகாந்தன், விரிவுரையாளர், ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரி
வன்னிப் பிரதேசத்திலே பல்கலைக்கழக அறிஞர் வரிசையில் பேராசிரியர் கலாநிதி பொ.பூலோகசிங்கம் அவர்களை அடுத்து சிறப்பிடம் பெறுபவர் பேராசிரியர் கலாநிதி நா.சுப்பிரமணியன் அவர்களாவர். இவரின் சொந்த ஊரான முள்ளியவளை புகழ்பெற்ற தமிழறிஞர் பலரைத்தந்த பெருமையுடையது. தனது ஆசிரியரான கலாநிதி முல்லைமணி வே.சுப்பிரமணியம் அவர்களுடன் ஆரம்பத்திலே முல்லை இலக்கிய வட்டத்தின் மூலமாகத் தமிழ்ப்பணியாற்றினார்.
நாகராஜ ஐயர் நீலாயதாட்சி தம்பதிகளுக்கு இரண்டாவது புத்திரராக 1942 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் நாள் பிறந்த அவர் தமது ஆரம்பக்கல்வியை முள்ளியவளை சைவப்பிரகாச வித்தியாசாலையில் பயின்றார். பின்னர் எஸ்.எஸ்.சி வரை முள்ளியவளை வித்தியானந்தக் கல்லூரியில் கற்றார். அமரர்களான நவாலி அப்பச்சி மகாலிங்கம், மாவிட்டபுரம் வித்துவான் செல்லத்துரை, வித்துவான் குமாரசாமி ஆகியோர் இவரின் பள்ளி ஆசிரியர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். முள்ளியவளை பொது நூலகம் வித்தியானந்தா நூலகம் என்பவை தேடிக்கற்கும் ஆர்வத்தைத் தூண்டின. H.S.C. பரீட்சையில் சுயமாகக் கற்றுத்தேறி 1965 ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டு தமிழ் சிறப்புக்கலைப்பட்டதாரியானார். பேராசிரியர் சு.வித்தியானந்தன் (1924 - 1989), கலாநிதி ஆவேலுப்பிள்ளை, கலாநிதி க.கைலாசபதி, (1933-1982) சி.தில்லைநாதன், அ.சண்முகதாஸ் என்போர் இவரின் பல்கலைக்கழக ஆசான்கள். பேராதனைப்பல்கலைக்கழகத்திலே ஓராண்டு உதவி விரிவுரையாளராக இருந்தார். இலங்கைப்பல்கலைக்கழக பேராதனை வளாகத்திலே பேராசிரியர் சு.வித்தியானந்தன் அவர்களின் மேற்பார்வையில் ‘ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் தொடர்பாக ஆய்வு செய்து முது கலைமாணிப்பட்டம் பெற்றார். (1970-1972). இதே பேராசிரியரின் மேற்பார்வையில் யாழ்ப்பாணப்பல்கலைக் கழகத்திலே ‘தமிழ் யாப்பு வளர்ச்சி' எனும் தலைப்பில் ஆய்வு செய்து 1985ம் ஆண்டு கலாநிதி பட்டம் பெற்றார். யாழ்ப்பான வளாகத்திலே துணை நூலகராக ஆரம்பத்தில் பதவி வகித்தவர். பின்னர் யாழ்பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் துணைவிரிவுரையாளர், விரிவுரையாளர், முதுநிலை விரிவுரையாளர் தமிழ்ப்பேராசிரியர் தமிழ்த்துறைத் தலைவர் ஆகிய பதவிகளை வகித்து 2002ஆம் ஆண்டு இந்தியா சென்றார் அங்கிருந்து கனடா தேசம் சென்று அங்குள்ள டொரண்டோ மாநிலத்தில் வாழ்ந்து தமிழ்ப்பணி புரிந்து வருகின்றார்.
இவர் ‘ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் (யூன் 1978) தமிழ் ஆய்வியலில்
-5 re

Page 5
மாருதம் 9 - 2008, சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
கலாநிதி க.கைலாசபதி (1998), ‘நால்வர் வாழ்வும் வாக்கும்' (2002) ‘கந்தபுராணம் ஒரு பண்பாட்டுக்களஞ்சியம் (2002) எனும் நூல்களை எழுதியுள்ளார் தமது துணைவியார் கெளசல்யா அவர்களுடன் இணைந்து ‘இந்தியச் சிந்தனை மரபு (ஜின் 1993 ஆகஸ்ட் 1996) எனும் நூலையும் எழுதியுள்ளார். கலாநிதி நா.சுப்பிரமணியனின் ‘ஆய்வுகள், பார்வைகள் பதிவுகள் (சனவரி 2005) இரண்டு தொகுதிகளாக வெளிவந்துள்ளன. இவரின் படைப்புக்கள், நேர்காணல்கள் நூல்சார்பதிவுகள் மற்றும் அவரைப் பற்றிய கணிப்புகள் என்பன காலத்தின் குரல்’ (மார்ச் 2005) எனும் தலைப்பில் வெளிவந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இறுதி மூன்று நூல்களையும் கெளசல்யா சுப்பிரமணியன் அவர்களே பதிப்பித்துள்ளார்.
கலாநிதி சுப்பிரமணியனின் ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் எனும் நூலில் (இவருடைய முதுகலைமாணிப்பட்ட ஆய்வை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டது.) 1885இல் வெளிவந்த அறிஞர் சித்திலெப்பையின் அசன்பேயுடைய சரித்திரம் முதல் 1977 இல் வெளிவந்த ஞான ரதனின் புதிய பூமிவரை ஏறக்குறைய நானுாற்றைம்பது நாவல்கள் வரை நாவலின் நோக்கம் சூழ்நிலை கதைப்பண்பு எனும் அடிப்படையில் ஆராயப்பட்டுள்ளன.
“கந்தபுராணம் ஒரு பண்பாட்டுக்களஞ்சியம்' என்ற நூல் திறனாய்வுப்பார்வை அடிப்படையில் எழுதப்பட்டது. கந்தபுராணம் காட்டும். வாழ்வியல் அம்சங்கள் இதில் சிறப்பாக எடுத்துக் கூறப்பட்டுள்ளன. "இந்தியச் சிந்தனை மரபு எனும் நூல் வேதகாலம் தொடக்கம் அண்மைக்காலம் வரையான சமயம், அறம், ஒழுக்கம் சார்ந்த சிந்தனைகளை வரலாற்றுமுறையில் ஒழுங்குபடுத்திக் கூறும் வகையில் அமைந்துள்ளது.
மேலும் பக்திப்பனுவல்கள், கவிதை, சிறுகதைகள், ஆய்வுக்கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். பக்திப்பனுவல்கள் என்ற வகையில் முள்ளியவளைக் காட்டுவிநாயகள் திருவூஞ்சல் பதிகம் பேராதனைத் திருமுருகன் ஆற்றுப்படை, கனடா - டொரண்டோ - மார்க்கம்வழி பிரம்மராம்பிகா சமேத சந்திர மெளிஸ்வரப் பெருமான் திருவூஞ்சல் பாடல்கள் என்பன வெளிவந்துள்ளன.
“பலவீனம்" (வீரகேசரி 28.3.1966) “பொய்யாதொழுகின் (இலக்கிய இதழ் மட்டக்களப்பு 1971 மார்ச்) பரிதாபத்திற்குரிய (தரிசனங்கள் . 1974) எனும் சிறுகதைகள் திலீபன் எனும்புனைபெயரில் எழுதப்பட்டவை.
இவரால் எழுதப்பட்ட நூற்றுக்கணக்கான கட்டுரைகள் ஆய்வுபூர்வமானவை. எல்லோராலும் விரும்பிப் படிக்கக்கூடிய ஆற்றல் பொருந்திய மொழிநடையினைக் கையாண்டுள்ளமை இவரின் கட்டுரைகளின் தனிச்சிறப்பு எனலாம். இக்கட்டுரைகள் சமயம், வரலாறு, தத்துவம், திறனாய்வு, இலக்கியம், இலக்கணம் என்ற வகையில் அமைந்து காணப்படுகின்றன.
நூல்கள் கட்டுரைகள் முதலானவை எழுதிய தோடமையாது, தமது
ー6ー

மாருதம் 9 - 2008 சமூக, கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
பிரதேசத்தைச் சேர்ந்தவர்களுடைய ஆக்கங்களுக்கு அணிந்துரைகள் வழங்கியும் ஊக்குவித்தமையினையும் மறக்கவியலாது. இவ்வகையில் தமிழ்மணி அகளங்கன் அவர்களுடைய இலக்கியத்தேறல் (1988) பூாலுக்குவழங்கிய அணிந்துரையினையும் முல்லைமணி அவர்களின் பண்டார வன்னியன் (2006) வரலாற்று நாடக நூலுக்கு வழங்கிய வாழ்த்துக்கவியினையும் குறிப்பிடலாம். ஈழத்து இலக்கிய திறனாய்வாளர் வரிசையில் மிகவும் காத்திரமான பணியை மேற்கொண்டிருந்தார் பேராசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி - பேராசிரியரின் சகோதரி ரீமதி ஹேமா சர்மா (கட்டுரையாசிரியர் பேராசிரியரின் மாணவர்)
பேராசிரியர் சுப்பிரமணியரின் நூல்கள்

Page 6
[] 9 - 2008 8ਪੁE 85.E 8E5 56। 8E565
சோ.ப.வின் மொழிபெயர்ப்பில் மலையாளக்
கவிதை ஒன்று
ஒரு யன்னலை மட்டும் திறக்கிறேன் நான். வெண்புறாவைப் போல் வந்து சட்டத்தில் குந்துகிறது
தூக்கத்திலிருந்து விழித்த குழுந்தை போல
நான. ஒன்றன்பின் ஒன்றாக பொருள்களைக் கேட்டபடி பத்திரிகை நிலத்தில் விழுகிறது.
பால்காரன் கதவு மணியை அடிக்கிறான்.
பாடசாலை பஸ் ஹோர்ண் அடிக்கிறது.
“கோடை முழுதும் பாடினால் மாரி முழுதும் நடனமாடவேண்டும்’ நாள் வருகிறது வெண்புறாவைப்போல,
ஒரு யன்னலை மட்டும் திறக்கிறேன் நான்.
நம்பிக்கை விம்மும் ஆற்றைப்போல தெருவழியே பாய்கிறது. ஆலடி மேட்டையும் கோயிலையும் மூன்று மனிதரும் ஒருகைவண்டியும் கடந்து போகின்றன. ஒரு மாணவன் பாடநூல்களோடு விரைகிறான். கதாச்சட்டைதரித்த லட்சியவாதி முன்னே செல்கிறார், விம்மும் ஆற்றைப்போல.
ஒரு யன்னலை மட்டும் திறக்கிறேன் நான்.
யன்னல்
ஒளி நைந்து போன நட்பைப்போல மேற்கு நோக்கி நகள்கிறது. LITIL60)6OT (ELIT6) கால்களை நீட்டியபடி என் பதகளிப்பின் மீது அது கவிகிறது.
புள்ளிமைனா மதிலின் மேலாக அயல்வீட்டுக்குப் பறக்கிறது. ஒரு நிழலைப்போல ஒரு வாழ்த்து நீள்கிறது. ஒரு கோப்பை உடைகிறது; ஒரு கதவு மூடுகிறது.
எல்லாயன்னல்களையும் திறக்கிறேன் நான்.
என் கண்கள் இருட்படிகளில் ஏறுகின்றன. நள்ளிரவுப் பூப்போல் ஒரு விளக்கு ஏற்றப்படுகிறது; ஓர் ஒளி பிரகாசிக்கிறது.
மூலம் சாவித்திரி ரஜீவன் ஆங்கிலத்தில் ஐயப்பப் பணிக்கள்

D(blub 9 - 2oo8, eppe6, 6bbibblo EBUbu 5ibuéau ef(Ebdu66
சிறுகதை
என்ரை அப்பாவும் என்னோட.
- மு.நந்தகுமார் -
குழந்தை அபிராமிக்குத் தூக்கமே வரவில்லை. கட்டிலில் அவள் இப்படியும் அப்படியுமாகப் புரண்டு புரண்டு படுத்துப்பார்த்தாள். எந்தப்பயனும் அவளுக்குக் கிடைக்கவில்லை. அவள் நித்திரையின்றிய நிலையில் பல்வேறு சிந்தனைகளில் மூழ்கிவிட்டிருந்தாள்.
தனக்குட்பக்கத்தில் படுத்திருந்த தன்னுடைய அம்மாவை அவள் தடவிப்பார்த்தாள் அதற்கு அவள் எந்த பதிலளிப்பும், செய்கையையும் செய்யவில்லை. மறுபுறம் அவளுடைய தந்தை படுக்கும் இடம் வெறுமையாகக் கிடந்தது. அபிராமி தன்னுடைய அப்பாவுக்கும் அம்மாவுக்குமிடையில் ஒரு மகாராணிபோல வழமையாகப் படுப்பாள். ஆனால் இன்றோ தனது அம்மாவுக்குப் பக்கத்தில் அதுவும். மறுபுறம் முகத்தைத்திருப்பிக் கொண்டு படுத்திருக்கும் அம்மாவுக்குப் பக்கத்தில் படுத்திருந்தாள். அம்மாவுக்குத் தன்மேலும் ஏதேனும் கோபம் இருக்குமோ என்று அவள் எண்ணினாள்.
“ஏன்தான் இந்த அப்பாவும் அம்மாவும் சண்டை பிடிக்கினமோ - அவையள் சண்டை பிடிக்காமை இருக்கேக்கை எவ்வளவு நல்லாயிருக்கும்.” அம்மாவைப் பார்த்துக்கொண்டு படுத்திருந்தா அப்பா சொல்லுவார், “அபிக்குட்டி என்ரை பக்கம் பாக்கேல்லை எண்டு” உடனே அபிராமி அப்பாவின் பக்கமாகப் படுத்துக்கொள்வாள் பிறகு அம்மாவின் பக்கமாகத் திரும்பி ‘அம்மா கோவமா’ என்று கேட்பாள் அதற்கு அவளுடைய அம்மா “ஐயோ என்ரை பிள்ளையோடை நான் கோவிப்பனோ’ என்று சொல்லிக் கொஞ்சுவாள். அபிராமியும் சிரித்தபடி அப்பாவின் பக்கமாகத் திரும்பிப் படுப்பாள். அப்பாவும் சும்மா இருக்கமாட்டார். கன்னத்தில் கன்னம் வைத்து உரசுவார். அப்போது அவருடைய மீசை மயிர்களும் தாடிமயிர்களும் குத்தி அவளுக்குக் கூச்சத்தை ஏற்படுத்தும். அவள் சிரித்தவாறே “அப்பா கூசுது’ என்று சொல்லுவாள் அவள் அவ்வாறு சொல்லவேண்டும் என்பதற்காகவே அவர் திரும்பத்திரும்ப கன்னத்தில் உரசுவார்.
இதன்பின் அவளுடைய அம்மா சொல்லுவாள், "சரிசரி குழந்தை நித்திரை கொள்ளட்டும்” இதற்குப்பின் தன்னுடைய விளையாட்டை அப்பா நிறுத்திக்கொள்ளுவார். அவள் அவருடைய கன்னத்தைத் தடவிப்பார்ப்பாள் ஆனால் அங்கு மயிர் ஏதும் அவளுடைய கையில் தட்டுப்படாது.
“அம்மாவும் அப்பாவும் ஒற்றுமையாய்த்தான் இருக்கிறவை. ஆனால் இந்த காந்தன் மாமா வந்திட்டுப்போனாத்தான் அவைக்குள்ளை பிரச்சினை வந்திடும். காந்தன்
-9 -

Page 7
மாருதம் 9 - 2008 சமூக, கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
மாமா இஞ்சை வரவே கூடாது. இனிமேல் நானே அவரை வரவேண்டாம் எண்டு சொன்னால் என்ன? சீச்சீ. அப்பிடிச் சொல்லக்கூடாது. அவர் ஒவ்வொரு முறை வரேக்கையும் பெரிய கண்டோஸ் பெட்டியோடை வாறவர். நானில்லாட்டியும் அம்மாட்டைக் குடுத்திட்டுப்போவார். அவர் வாங்கியாற கண்டோஸ் எல்லாம் நல்ல ருசியாயிருக்கும்.
அப்பாவுக்கு அவரைப்பிடிக்காது எண்டதாலயே அவர் அப்பா இல்லாத நேரத்திலைதான் பூனை மாதிரி வருவார். அட்ப பெரிய வேலையா வீட்டை விட்டுப்போனா அவர் வருவார். அவர் வந்தா கனநேரம் அம்மாவோடை கதைச்சுக் கொண்டே இருப்பார். அம்மாவும் அவருக்கு சாப்பாடு, தேத்தண்ணியெல்லாம் குடுப்பா எண்டாலும் அப்பா திரும்பி வாறதுக்கிடையில அவர் போயிடுவார்.
அப்பா வந்ததும் என்னைக் கூப்பிட்டுக்கேப்பார், “காந்தன் இண்டைக்கு வந்தவனா” எண்டு நான் “ஓம்’ எண்டு சொல்லிப்போட்டால் பெரிய சண்டை வந்திடும். அதுக்காகவே இப்ப நான் “இல்லை” எண்டு பொய் சொல்லுறனான். இல்லாட்டி “நான் காணேல்லை” எண்டோ “எனக்குத் தெரியாது” எண்டோ சொல்லிப்போடுவன்.
காந்தன் மாமா வாங்கித்தந்த கண்டோஸின்ரை வெளிக்கடதாசியையெல்லாம் குப்பைக்குள்ளை கொண்டே எறிஞ்சுபோடுவன். இல்லாட்டி அதை வச்சே காந்தன் மாமா வந்ததை அப்பா கண்டுபிடிச்சிடுவார். நான் இப்படி நடக்கிறது அம்மாவுக்கும் நல்ல சந்தோஷம்.
அப்பாவுக்கும் அம்மாவுக்கும் இடையில் சண்டை வந்தா ரெண்டுபேரும் பெரிய குரலிலை ஏசுப்படுவினம். அப்ப எல்லாம் அவையள் கதைக்கிறதுகள் எனக்கு விளங்குறேல்லை. எனக்கு என்ன செய்யிறதெண்டே தெரியிறேல்லை.
அப்பா சிலவேளை கையை ஓங்கிக்கொண்டு அடிக்கப்போவார். அந்தநேரம் நான் குழறுவன். அதோடை சிலவேளை அந்தச் சண்டை நிண்டிடும். அப்பா ஏதோ சொல்லிப்போட்டு வீட்டை விட்டுப்போயிடுவார். மூண்டு நாலு நாளைக்குப்பிறகு தான் கோவம் குறைஞ்சு வீட்டுக்கு வருவார். அந்த மூண்டு நாலு நாளும் அப்பம்மா வீட்டிலைபோய் நிண்டிடுவார்.
அப்பம்மாவிண்டை வீடு கொக்குவில்லிலை இருக்குது. வழமையாச் சண்டை நடந்தா மூண்டு நாலு நாளைக்கிடையிலை வாற அப்பா, இந்தமுறை மட்டும் ரெண்டு கிழமையாகியும் இன்னும் வரேல்லை.
எனக்கு அவரைப்பாக்க வேணும் போல கிடக்கு. ஆனா அப்பம்மாவிண்டை வீடு இஞ்சையிருந்து கனதூரத்திலை இருக்கு. பஸ்ஸிலைதான் போகவேணும். எனக்கு பஸ்ஸிலை தனியப் போகத் தெரியாது. எப்படி அப்பாவைப் பார்க்கிறதென்று அபிராமி சிந்தித்துக் கொண்டிருந்தாள்.
ー10ー

மாருதம் 9 - 2008 சமூக, கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
‘சாமியைக் கும்பிட்டுப் படுத்தா கூடாத எண்ணம் கனவெல்லாம் வராதெண்டு அப்பம்மா சொல்லுறவா’ என்று எண்ணியவுடன் அபிராமி கட்டிலில் இருந்து எழுந்து சாமி அறைக்குள் போனாள். சாமி அறை விளக்கை எரியச்செய்து அங்கு இருந்த விபூதியை நெற்றியில் பூசிவிட்டு சுவாமிப்படங்களைப் பார்த்தாள். சிவபெருமான் குடும்ப சமேதராய் இருக்கும்படம் அவள் கவனத்தை ஈர்த்தது. அப்படத்திலிருக்கும் பிள்ளையாரையும் முருகனையும் பார்த்து “நீங்க ரெண்டுபேரும் அப்பாவோடையும் அம்மாவோடையும் சந்தோசமா இருக்கிறீங்கள் ஆனா எனக்கப்பிடி இல்லை. என்ரை அப்பா கெதியிலை திரும்பி வரவேணும்” என்று கூறியபோது அந்தக் குழந்தையின் கண்களிலிருந்து கண்ணிர் வழிந்தது. வழிந்த கண்ணிரை தனது சட்டையால் துடைத்தபடி சாமி அறை விளக்கை அனைத்துவிட்டு படுக்கை அறைக்கு வந்து மீண்டும் கட்டிலில் படுத்துக்கொண்டாள்.
அபிராமியின் தந்தையான சிவராசாவும் தன்னுடைய தாயாரின் வீட்டிலிருந்து பல்வேறு சிந்தனைகளில் மூழ்கியிருந்தான். அவனுக்கும் தூக்கம் வரவில்லை. மறுநாள் அவனுடைய தாயாரான மனோன்மணி இப்படிச் சொன்னாள்,
“சிவா என்ன இருந்தாலும் நீ வீட்டைபோ. அந்தக் குழந்தை பாவம்’ ‘அம்மா அது இனி நடக்காது’ என்று கூறிய சிவராசா ஒரு தீர்மானத்தோடு எழுந்தான்.
பிறகு தனது தாயாரைப் பார்த்து, “நான் அவளை விவாகரத்துச் செய்யப்போறன்’ என்று கூறிவிட்டு வேகமாக வெளியேறினான்.
நேராக அவன் தன்னுடைய நண்பனான அனந்தசயனனின் வீட்டுக்குச் சென்று அவனிடம் விடயத்தைக்கூறினான். அதற்கு அனந்தசயன் சொன்னான் “சிவம் எனக்கு அவை இரண்டு பேரையும் படிக்கிற காலத்திலிருந்து தெரியும். சகோதரர் போல பழகி வந்ததுகள் எண்டாலும் காந்தன் உன்ரை வீட்டுக்கு வாறது உனக்குப் பிடிக்காட்டி சகுந்தலா அதைச் செய்யக்கூடாது. நீயும் அவை ரெண்டுபேரைப்பற்றியும் தேவையில்லாமைக் கற்பனை செய்யாதை.”
“நானொண்டும் கற்பனை செய்யேல்லை அவையின்டை நடத்தை பிழை அதாலை இதுக்கு ஒரே வழி விவாகரத்துத்தான்.”
“விவாகரத்து எண்டு சொல்லுறது ஒரு அவயவத்தை துண்டிக்கிறது மாதிரி, ஆத்மாவை உலுக்கிற அனுபவத்தை சம்பந்தப்பட்டவைக்குக் குடுக்கிற ஒண்டு. பெற்றோரிண்டை பல உடைஞ்ச கனவுகளுக்கும் விருப்பங்களுக்கும் ஒரு முடிவா இது அமையுது. பிள்ளைகளுக்கோ இது உலகத்தின் முடிவாகத் தோன்றலாம்.
இப்படி டொக்டர் ஹெய்ம் ஜி.ஜினோட் என்ற அறிஞர் சொல்லியிருக்கிறார். நீங்க ரெண்டுபேரும் கதைச்சுப்பேசி உங்கடை பிரச்சினையைச் சுமுகமாகத் தீர்க்கிறது தான் நல்லது. நீங்க இரண்டு பேரும் பிரிஞ்சா அந்தக் குழந்தை அபிராமியின்டை நிலையை யோசிச்சுப்பார். அது எப்படித்தவிச்சுப்போயிடும்.”
- 1 -

Page 8
மாருதம் 9 2008 சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
“நீ சொல்றது சரியாயிருந்தாலும் இனிமேல் நடைமுறைப்படுத்தேலாத அளவுக்கு விஷயம் முத்திப்போச்சுது எண்டு நான் நினைக்கிறன்.”
என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான் சிவராசா.
இரண்டு நாட்களின் பின் ஒரு காலைப்பொழுது துயரமாக விடிந்தது. அன்று சிவராசா காலையில் தாய் மனோன்மணி காய்ச்சிய கஞ்சியைக் குடித்துவிட்டு அவளிடம் சொன்னான்.
“நான் உதிலை ஒருக்கா திருநெல்வேலிச் சந்தி மட்டும் போயிட்டு வாறன்.”
அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அவனுக்கும் வேலை இல்லை. அவன் தன்னுடைய மோட்டார்சைக்கிளில் திருநெல்வேலிச்சந்தியை நோக்கிச் சென்றான். இடையில் அனந்தசயனின் வீட்டுக்கு முன்னால் சனக்கூட்டம் திரண்டிருந்தது. அவன் என்ன விடயம் என்று எட்டிப்பார்த்தான். அங்கு அனந்தசயனனின் மனைவி சுலோசனா அழுது புலம்பிக்கொண்டிருந்தாள். நந்தாவில் அம்மன் வீதியில் தனது கணவன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது இன்னொரு மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் சுட்டதில் அனந்தசயனன் ஸ்தலத்திலேயே வீழ்ந்து இறந்ததாகக் கூறினாள்.
சிவராசாவுக்கு அதிர்ச்சியில் கண்ணை இருட்டிக்கொண்டு வந்தது. உடனடியாக அங்கிருந்த நாற்காலியொன்றில் அமர்ந்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான். சுலோசனாவுக்கு எப்படி ஆறுதல் கூறுவதென்றே அவனுக்குப் புரியவில்லை. தன்னுடைய பிரிய சிநேகிதனான அனந்தசயனனை யார் சுட்டார்கள், எதற்காகச் சுட்டார்கள் என்று எண்ணினான். அவனுக்கு எந்த விடையும் கிடைக்கவில்லை.
இப்போது யாழ் குடாநாட்டில் சராசரியாக ஒரு நாளைக்கு மூன்றுபேர் கொல்லப்படுகின்றார்கள். இவர்கள் யாருக்கு என்ன கெடுதல் செய்தார்களோ? இவர்கள் இவ்வாறு சுட்டுக்கொல்லப்படுவதற்குரிய காரணத்தை சுடுபவர்களோ அல்லது சுடப்படுபவர்களோ அறிந்திருப்பார்களா என்று சிவராசா தன்னையே கேட்டுக்கொண்டான். தவறுதலாக வேறுயாரோ என எண்ணி சுட்டுவிட்டார்கள் எனவும் கதை அடிபட்டது.
அன்றுமாலை அனந்தசயனனின் உடல் வைத்தியசாலையிலிருந்து வீட்டுக்குக் கொண்டுவரப்பட்டது. சிவராசா அனந்தசயனனைப் பற்றிய எண்ணங்களில் மூழ்கியிருந்தான். அனந்தசயனனுக்கு ஏதேனும் கொலை அச்சுறுத்தல்கள் இருந்திருக்குமா? அப்படி ஏதும் இருந்திருந்தால் இப்போது பலர் உயிர்ப்பாதுகாப்புத்தேடி நீதிமன்றத்தில் தஞ்சம் புகுவதுபோல இவனையும் தஞ்சம் புகவைத்திருப்பேனே. இப்படித் தஞ்சம் புகுந்தவர்களை சிறைச் சாலையில் வைத் திருந்து பாதுகாப்பு வழங்குவது இவனுக்குப் பிடிக்கவில்லையோ..!
அது மூடிய சிறைச்சாலை. இந்தக்குடாநாடு திறந்த வெளிச்சிறைச்சாலை. இரவு ஏழுமணிக்கு வீடுகளுக்குள் முடங்கிவிடவேண்டும். அதிகாலை ஐந்து மணிக்குச்
- 12

மாருதம் 9 - 2008 சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
சிறைக்கதவுகள் திறக்கப்படுவதுபோல ஊரடங்குச் சட்டம் நீக்கப்படும்.
சிறைச்சாலையின் எல்லைகளாக கொடிகாமமும் கடலையண்டிய ஏனைய பிரதேசங்களும். ஏன் எமக்கு இத்தனை துன்பங்கள்? இந்தத்துன்பங்களையெல்லாம் சகித்துக்கொண்டு வாழ்பவர்களுக்கு இறுதியில் கிடைப்பது மரணதண்டனையா. இப்படிப் பல கேள்விகள். விடை தெரியாத விடைகாணமுடியாத கேள்விகள் அவனுடைய உள்ளத்திலே எழுந்து கொண்டேயிருந்தன.
அவனுடைய சிந்தனையோட்டத்தை அங்கு நடந்த சம்பவமொன்று இடைநிறுத்தியது. சுலோசனா தனது தாலியைக்கழற்றி அனந்தசயனனின் காலடியில் வைத்துக்கதறிக்கதறியழுதாள். அது அங்கிருந்தோரின் உள்ளங்களையும் உருக்கிக் கண்ணிராக ஒடச்செய்தது. இடையிடையே அனந்தசயனனின் ஒரே பிள்ளையான மூன்று வயது நிரம்பிய நர்மதா அனந்தசயனின் கையைப்பிடித்து, அப்பா எழும்புங்கோ என்று சொல்லி அடம்பிடித்தது. அவ்வாறு அடம்பிடித்த குழந்தையைப்பார்த்து சுலோசனா மேலும் மேலும் துக்கமடைந்தாள். பின்னர் யாரோ உறவினர்கள் ஓடிவந்து குழுந்தையைத் தூக்கிச்சென்று சமாதானப்படுத்தினார்கள்.
இறுதியாக சவப்பெட்டியை மூடி அதனைப்பிரேத வண்டிக்குள் ஏற்றி மயானத்துக்கு எடுத்துச் செல்லும்போது சுலோசனாவின் கதறல் ஊரையே உலுக்கியது. நர்மதா, “அப்பா நானும் வாறன்’ என்று சொல்லி அழுதாள். அவள் தனது தாயாரிடம் “அம்மா! அப்பாவை எங்கை கொண்டுபோயினம்? ஏன் நீங்க அழுகுறீங்க?’ என்று கேட்டு அவளை மேலும் மேலும் அழச்செய்தாள்.
அன்று இரவு சிவராசா சிலைபோல செய்வதறியாது நாற்காலியில் அமரத்திருந்தான். பிறகு தாயாரின் வற்புறுத்தலினால் இரண்டு இடியப்பம் சாப்பிட்டான். பிறகு போய்ட்படுத்தான். தூக்கம் வரவில்லை. விடியவிடிய பல்வேறு எண்ணங்களால் மனம் அலைக்கழிந்தது. அவன் எல்லாத்துயர எண்ணங்களிலிருந்தும் விடுபட முயன்றான். எனினும் இரண்டு சம்பவங்கள் அவனுடைய நெஞ்சைப்பிளப்பதுபோல அவனுடைய கண்முன்னே தோன்றிக்கொண்டேயிருந்தன. சுலோசனா தாலியைக்கழற்றிய சம்பவமும் நர்மதா அனந்தசயனனின் கையைப்பிடித்து ‘அப்பா எழும்புங்கோ’ என்று சொல்லி அடம்பிடித்தசம்பவமும்தான் அப்படி அவனை ஆட்கொண்டிருந்தது. அவன் மனங்கூறியது மனைவியின் நட்பு களங்கமற்றது என அவன் நேரத்தைப்பார்த்தான். அது நான்கை எட்டிக்கொண்டிருந்தது. இன்னும் ஒரு மணிதான். ஒரேயொரு மணிதான் இருக்கிறது. இப்போது அமுலிலிருக்கும் ஊரடங்குச்சட்டம் ஐந்து மணிக்கு நீக்கப்பட்டுவிடும்.
அவன் எழுந்து முகம்கால் கழுவி திருநீற்றை நெற்றியில் பூசிக்கொண்டான். ஐந்துமணிக்கு தனது தாயாரிடம் தனது வீட்டுக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றான். மனோன்மணி அவனை அதிசயமாகப்பார்க்கவில்லை. ஆனந்தம் அடைந்தாள். திருநெல்வேலி காயாரோகணசுவாமி கோவில் மணி காதில் விழுந்துகொண்டிருந்தது. அபிராமி தனது தந்தையின் மடியிலிருந்து ஏதோ சிரித்துப்பேசிக்கொண்டிருந்தாள். பின்னர் அவள் தன்னுடைய விளையாட்டுச் சாமானை எடுத்துவருவதற்காக எழுந்து உள்ளே
- 13 -

Page 9
மாருதம் 9 - 2008 சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
போனாள். சகுந்தலா சிவராசாவுக்குத் தேநீர் கொண்டுவந்து கொடுத்தாள். சிவராசா அதனை வாங்கும்போது அவனுடைய கையில் சகுந்தலாவின் கண்ணில் இருந்து வழிந்த கண்ணிர்த்துளியொன்று விழுந்தது. அவன் எழுந்து சகுந்தலாவின் கண்ணிரைத்துடைத்துவிட்டான். அப்படி அவன் துடைத்தது அவளுடைய கண்ணிரை மட்டுமல்ல தன்னுடைய சந்தேகத்தையுந்தான்.
உள்ளேபோன அபிராமியின் கண்களில் சிவபெருமான் குடும்ப சமேதராக இருக்கும்படம் தென்பட்டது. அவள் பிள்ளையாரையும் முருகனையும் பார்த்துச் சொன்னாள்
“என்ரை அப்பாவும் என்னோடை இருக்கிறார்.”
JJ
வவுனியாவில் வெளிவந்த சஞ்சிகைகள்
S.I).У. О вароз аеiful lifa.
- A -
 

மாருதம் 9 - 2008 சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
பாவனை பண்ணுதல்
எனக்கு ஏடுதொடக்கி எழுத்தறிவித்த என்னை ஈர்த்த difluupitup80of செல்லையா வாத்தியார் அன்னார்.
எனது பள்ளிப்பருவம் பகிர்வேன்.
6Հ/Ա 15]
எட்டென 6T60óT600T6)(Tib. என்னோடொத்த இளஞ்சிறார்களை நாடகம்
நடிக்க கால்கோள் இட்டார். விபரீதமறியா வேதியனும், வேடன் பொறியில் வீழ்ந்த சிங்கமும், குயுக்திகொண்ட குள்ள நரியும் அங்கமாய்க்கொண்ட
நாடகமதனை நமக்குப் பழக்கினார். நாடக அரங்கு நி0து வகுப்பறையாக, நாம்
அதனுள்
எஸ்.ரி.அரசு (ஒரு நாடறிந்த நாடகக்கலைஞர்)
96T6) Teb
நடிக்க;
சிங்கப் பொறியின் கீழ்த்தளம்: அதனை
சிறிய வெண்கட்டியால் கோடிட்டுத் தரையில்; வரவும்
போகவும் வாயிலும்; கூட்டின் பக்கங்கள் நாலாபுறமும் மூடியவிதானமும்; இரும்புக்கம்பி சூழவுள்ளதாய் போய்வரும் வாயில் திறக்கவும் (pL6)|D உளதென கற்பனை மூலம்
UT660)6OT பண்ணென்றார். சிங்கமாய் நடிப்பவர் அங்கங்களடக்கி கூட்டின் 2) L'Lys}LD குந்தவும் அறியா வேதியன் அவ்வழி வந்தான்.
- 15 -
கூட்டினுள் சிங்கம் அடைபட்டிருக்கும் காட்சி
கண்டான். கருணை கொண்டான். கூட்டின்
அருகை அண்டிய வேதியன்
“政
ஏன அடைபட்டிருகிறாய்” என வினவ, “திறந்திருந்த dinLL96) தெரியாத்தனமாய் உள்ளே வந்தேன்; வாயிற்கதவு வலிய
COLQUIdol. g5TCBLDITU இருக்கிறது. தண்ணிர்
குடிக்க தயவு செய்து கதவைத் திறந்திடும். கேட்டது. விபரீதம்
அறியா வேதியன் தாளை
விலக்கி கதவைத்

Page 10
மாருதம் 9 - 2008 சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
திறந்தான். சிங்கம் தருணம் தனக்கென ஆனதுகண்டு எட்டிப் UTurbbl, “இரைதேடி நீர்தேடி
இனி
நான்
96O)6] (Uplqu JT35). நான் உன்னைத்தான் உண்பேன்’ வேதியன் செய்வது அறியாது சிங்கத்தை நோக்கி “நான் செய்தது g5 LDub;
6i60Ꭰ6ᏈI
呜
உணபது அதர்மம்
நீதி கேட்போம் நாலுபேரிடம் நீதி
d 60
UâbâbüD என்றால்
哈
6]6Ꮘl6Ꮫ060I உண்ணலாம். சிங்க மகராசா! நீதிமானே! சிறியேன் மனுவை பரிசீலிப்பீர்”
bu_JLDITUJğb
கேட்க சிங்கராசா சரியென இசைந்து நீதி கேட்க ஆளைத்தேடினர். எங்கெங்கோ அலைந்துபின் எதிரே வந்தார் குயுக்தி கொண்ட குள்ளநரியார். வருவோரிருவரின்
வரும் நிலையுணர்ந்தார்.
வழிமறித்தனர் வழக்காளிகள்; “எமக்கோர் பிணக்கு இதனைத்தீர்த்திடும்" என்று இரந்தார். வேதியர் பெருமான் விபரமாய் வழக்கை விளம்பினர் நரியிடம். நிலைமையுணர்ந்த குள்ள நரியார் “விரைவோம் நாம் வினைவிளைவிடத்தே." மூவரும் அடைந்தனர் காட்சிப்பாடுகள் கனகச்சிதமாக கேள்வியாய் கூடுஎங்கேயென விரைந்துசென்று கூட்டைக் காட்டினர் சிங்கராசா! “血 எங்கே இருந்தீர்” “சரி நீர் எங்கே இருந்தீர்?" “நான் கூட்டின் உள்ளே”
- 6 -
616][0]
சிங்கராஜா உள்ளே சென்று தான் படுத்திருந்த இடத்தில் படுத்துக்கொண்டது “வேதியரே நீர் எங்கே இருந்தீர்” ‘நான் இவ்வழியால் வந்து கொண்டிருந்தவன்” “சரி நீர்போய் வந்துகொண்டிரும்” “நீர் வரும் போது கூடு எப்படியிருந்தது? “மூடியிருந்தது” வேதியன் கூற “எப்படிமுடியிருந்தது?" வேதியன் கதவை மூடி தாழிட்டுக்காட்டினன். தாழிட்டதும் “சரி நீர் இனி உம்வழி செல்லும்; நான் என்வழி செல்வேன்' என இருவரும் அவ்விடம் விட்டகன்றனர். இல்லாத ஒன்றை இருப்பதாய்
நினைத்து
UT660)6
பண்ணி
நடிப்பது
926TDD.
நவீன
866)
நாடக
Зр 60(Q5
நமக்குப்
புகட்டிடும்.
அவ்வேளை செல்லையாவாத்தியார் சின்னவயதில் கற்றுத்தந்த சிங்கக்கூடு - என் சிந்தனைகிளறும்.

மாருதம் 9 - 2008, சமூக, கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
பெண்ணே நீ அடிமையாகாதே
பெண்ணே நீ மென்மையானவள் தான். ஆனால் வன்மையாக மாறவேண்டிய இடத்தில்
6)]6ös60}{DUJTab மாறத்தவறாதே!
பாவையே உன்னிடம் பணிவு இருக்க வேண்டும் தான் அதற்காக எல்லாவற்றுக்கும் பணிந்து போகாதே!
எழில் கொஞ்சும் பூங்கொடியே நீ! மலருக்கு உவமிக்கப்பட்டவள் தான். முள்ளாக வேண்டிய இடத்தில் முள்ளாகித் தீண்டவும் தயங்காதே!
காரிகையே நீ!
தென்றல் தான். புயலாக மாறவேண்டிய இடத்தில் புயலாக மாறத் தவறாதே! பூகம்பமாய் வெடிக்கவும் தவறாதே!
வான்மதியே நீ! இன் சொல்லே பேசவேண்டும் தான். வன்சொல் பேச வேண்டிய இடத்தில் வன் சொல்லைக் கொட்ட அஞ்சாதே!
வனிதையே! உன்னிடம் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு அவசியம் இருக்க வேண்டும் தான். ஆனால் அவற்றுக்கே அடிமையாகிவிடாதே!
- வெலிகம ரிம்ஸா முஹம்மத்
-17

Page 11
மாருதம் 9 - 2008 சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
திரை இசைப் பாடல்களுக்கு அடியெடுத்துக் கொடுத்த திருக்குறட் பாக்கள்
- ந.பார்த்திபன் -
வாழ்க்கைக்கு உறுதுணையாக உள்ள ஒழுக்க நெறிகளைக் கூறும் நூல்கள் பல உளவெனினும் திருக்குறளைப் போலச் சொற்சுருக்கமும் பொருட்செறிவும் உள்ள நூல் வேறொன்றும் இல்லை எனலாம். “குறட் பாக்களைப் போல் கற்றோரும் கல்லாதோரும் மனங்கொண்டு கற்கக்கூடிய முறையில் அறிவுரைகளைக் கவிச்சுவையுடன் கலந்து கூறும் நூல் வேறில்லை” என்றும் இதனைப் படிப்போர் மனத்திலெல்லாம் இது ஒரு சிறந்த நீதிநூல் என்ற எண்ணம் நிலவுகின்றதன்றி நடையழகில் ஒப்புயர்வற்ற இந்நூல் ஒரு கவிதைக் களஞ்சியம் என்ற எண்ணம் உண்டாவதில்லை. என்றும் கூறும் பேராசிரியர் வி.செல்வநாயகம் உண்மையில் ஒவ்வொரு குறளும் ஒவ்வொரு சொல்லோவியமாகக் காட்சியளிப்பதாகக் கூறுகிறார். வள்ளுவரையும் வான்மறையையும் வானளாவப் புகழ்ந்து கூறும் போக்கு அன்றும் இன்றும் என்றும் இந்நூலுக்கும் இந்நூலாசிரியருக்கும் உண்டு மக்கள் மனத்தில் எண்ணுவன யாவற்றையும் அளந்தறிந்து அவற்றையெல்லாம் வண்ணமும் வனப்பும் உவமை முதலிய அணிச்சிறப்பும் உணர்ச்சியனுபவமும் கற்பனைச் சிறப்பும் நிரம்ப கவிச்சுவையுடன் தருவது இந்நூல்.
'ஒதற் கெளித7 யுணர்தற் கரிதாகி வேதப் பொரு5/ாய் மிகவிளங்கித் - திதற்றோ ருள்ளுதோ றுள்ளுதோ றுள்ள முருக்குமே வள்ளுவர் வாய்மொழி மாண்பு'
என்று திருக்குறளைப் படித்து அனுபவித்த பெரும் புலவர்கள் கூறுவர். ஆனால் இன்றைய பாப்பிரியர்கள் மிகவும் எளிமைப்படுத்தப்பட்டு நேரடியாகப் பொருள் கொடுக்கும் சினிமாப் பாடல்களையே பெரிதும் விரும்புகின்றனர். இதன் காரணமாகத் திருக்குறட் கருத்துக்களையும் எளிமைப்படுத்தும் நிலைக்குச் சினிமாக்கவிஞர்கள் தள்ளப்படுகின்றனர். ஆயினும் அ.து அவர்களுக்குச் சுலபமான செயற்பாடாக அமையாத நிலையில் திருக்குறளின் கருத்தை அதன் அர்த்தச் செறிவை உள்வாங்கி சினிமாப் பாடல்களை இயற்றுகின்றனர்.
இன்றைய கவிஞர்கள் செய்யும் முயற்சியும் நோக்கமும் வேறாயினும் பயன்கருதி வரவேற்க வேண்டியதே. இந்த வகையில் குறிப்பாகத் திரைப்படப் பாடலாசிரியர்கள் திருக்குறளை நன்கு பயன்படுத்தி அவர்கள் பயன் அடைவது மாத்திரமன்றி பாமர ரசிகர்களையும் பயனடையச் செய்திருப்பது குறிப்பிடக்கூடியது. ஆழமான வாசிப்பும் ஆர்வமான தேடலும் இல்லாத மேலோட்டமான சொற்களின் சேர்க்கையில்
- 18

மாருதம் 9 - 2008 சமூக, கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
உருவாக்கப்பட்ட இன்றைய திரையிசைப் பாடல்கள் ரசிகர்களுக்குத் தாங்கள் மேற்கொள்ளாத தவத்தினால் கிடைத்திருக்கின்ற வரம் போல் திகழ்கின்றன.
இனி சில திருக்குறள்களையும் அதனை எளிமைப்படுத்தி இசையுடன் பாடக்கூடிய பாடல்களையும் எடுத்து நோக்குவோம்.
“உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில்’
இது அனைவரும் மகிழும்படியாகக் கூடிப் பழகி, இனி என்று காண்போம் என நினையுமாறு பிரிதல் கற்றறிந்தவரது தொழில் எனப் பொருளாகின்றது. இதனை
“எந்த ஊரில் எந்த நாட்டில் எங்கு காண்போமோ?. பசுமை நிறைந்த நினைவுகளே என்ற அருமையான பாடல் மூலம் திரையிசைப் பாடல் எளிமைப்படுத்துகின்றது.
அடுத்து, இடுக்கண் வருங்கால் நகுக அதனை அடுத்தூர்வது அ.து ஒப்பஇல்’
அதாவது துன்பம் வரும்போது கலங்காமல் மகிழ வேண்டும். துன்பத்தை எதிர்த்து வெல்ல மகிழ்ச்சியைப் போன்றது எதுவுமில்லை என்று பொருள் கூறப்படுகின்றது.
இதனை, “துன்பம் வரும் வேளையிலே சிரிங்க - என்று சொல்லி வைத்தார் வள்ளுவரு சரிங்க” என ராஜபாட் ரங்கதுரை என்ற படத்தில் துன்பமான செய்தியைக் கேட்ட நாயகன் தொடர்ந்து நடிக்க வேண்டிய இக்கட்டான கட்டத்தில் மகிழ்ச்சியை வெளிக்காட்டிப் பாடுவதாகக் காட்டிய போது அது மக்கள் மனத்தில் பதிந்து கொண்டது.
இன்னுமோர் திருக்குறள் இப்படிக் காணப்படுகிறது. “வாள்போல பகைவரை அஞ்சற்க அஞ்சுக கேள்போல் பகைவர் தொடர்பு”
இது வாள்போல் வெளிப்பட்டு நிற்கும் பகைவர்க்கு அஞ்ச வேண்டாம், உறவினர் போல் மறைந்து நிற்கும் பகைவர் நட்பிற்கு அஞ்ச வேண்டும் எனக் கூறுகிறது.
இதனை எளிமைப்படுத்திய திரையிசைப் பாடலொன்று “பகைவர்களை நானும் வெல்வேன் அறிவினாலே - ஆனால் நண்பரிடம் தோற்றுவிட்டேன் பாசத்தாலே" என்று அமைகின்றது. இவ்வாறான ஒரு கருத்தை வழுவழுத்த நட்பிலும் பார்க்க வஞ்சம் தீர்க்கும் பகை மேல் என்ற பழமொழி ஒன்றும் எடுத்துக் காட்டுகின்றது. மேலும் ஒரு திரைப்படப் பாடல்
“யார் யாரோ நண்பன் என்று ஏமாந்த உள்ளமொன்று
-19

Page 12
மாருதம் 9 - 2008 சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
பால்போலக் கள்ளும் உண்டு நிறத்தாலே ரெண்டும் ஒன்று”
எனப் பாடப்படுகிறது. இன்றைய கவிஞர்கள் திருக்குறளை உள்வாங்கி திரைக்காக எளிமைப்படுத்துகின்றார்கள்.
அந்தக்கால பெண்களின் இயல்பை நன்குணர்ந்த வள்ளுவர்
“யான் நோக்கும் காலை நிலன் நோக்கும் நோக்காக்கால் தான் நோக்கி மெல்ல நகும்” என எழுதினார்.
இக்குறளை ஒரு திரைப்பாடல் எழுதும் கவிஞன் கலைத்துவமாக “உன்னை நான் பார்க்கும் போது மண்ணை நீ பார்க்கின்றாயே
விண்ணை நான் பார்க்கும் போது என்னை நீ பார்க்கின்றாயே’
என நெஞ்சை விட்டகலாத கவித்துவ வரிகளால் எழுதினான். மேற்கூறிய குறளிலும் ஓரளவு எளிமை இருந்தது. ஆயினும் பெண்ணின் இயல்புதான் பெரிதும் இன்று மாறிவிட்டது.
நிலையாமை வாழ்க்கை பற்றிய தெளிவின்மை போன்றனவற்றை வள்ளுவர் வான்மறை காட்டுவதைப் பார்ப்போம்.
“ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப கோடியும் அல்ல பல”
இது ஒரு நாள் பொழுதும் வாழ்வது நிலையானது அல்ல என்பதை அறியாதோர் அளவில்லாத எண்ணங்களை எண்ணுபவர் எனப் பொருள் தருகின்றது. இதனை,
“நிலைமாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில் வாழும் மனித ஜாதி இதில் வாழ்வதில்லை நீதி’
என எளிமையாக்கப்பட்ட தத்துவப் பாடலாயும் “ஆடி அடங்கும் வாழ்க்கையடா ஆறடி நிலமே சொந்தமடா” என்ற தத்துவப் பாடலாயும் இன்னும் பல பாடல்களாய் உருமாறியுள்ளன. உள்ளடக்கம் மாறவில்லை.
உயிரின் இயல்பு, உடம்பின் நிலை என்பவற்றைப் பலரும் பல விதமாகச் சொல்வதுண்டு. வள்ளுவரும் இதனை
“குடம்பை தனித்து ஒழியப் புள்பறந்தற்றே
- 20

மாருதம் 9 - 2008, சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
உடம்போடு உயிரிடை நட்பு'
என்று மிக இறுக்கமாகக் குறிப்பிட்டுள்ளார். இதற்கு, பருவம் வந்ததும் முட்டை தனியே இருக்க அதனுள் இருந்த பறவை பறந்து போவதைப் போன்றதே உயிருக்கும் உடலுக்கும் உள்ள தொடர்பு எனப் பரிமேலழகள் பொருள் கூறுகிறார். இக் குறள் எமது பாடலாசிரியர்களின் சொற்களில்
“காட்டு மனமிருந்தால் கவலை வளர்ந்துவிடும் கூட்டைத் திறந்து விட்டால் அந்தக் குருவி பறந்து விடும்”
என்ற பாடலாக மாறுகிறது. இன்னும் எத்தனையோ திரைப்படப் பாடல்கள் இக்கருத்தை உள்வாங்கி உருவாகியுள்ளன.
திருக்குறளுக்கு உரை எழுதியோரும் ஏனைய படித்துச் சுவைத்தோரும் உவமை அன்றி உணர்ச்சி அனுபவம் கற்பனைச் சிறப்பு என்பன அறத்துப்பால், பொருட்பால், என்பவற்றை விட காமத்துப் பாலிலே தான் அதிகம் உள்ளன வென்பார்கள் இதனாலோ என்னவோ எமது சினிமாக் கவிஞர்களும் காமத்துப் பாலிலே அதிகம் குடித்து விட்டு காமரசம் ததும்பும் பாடல்களை அதிகமாக எழுதிக் குவித்துள்ளார்கள்.
“ஒருநாள் எழுநாள் போற் செல்லும் சேட் சென்றார் வருநாள் வைத்து ஏங்குபவர்க்கு”
இத் திருக்குறட்பாவை வைத்துப் பல பாடல்கள் அதாவது காதலன் வருகைக்காக அல்லது தலைவன் வரவுக்காக காத்திருக்கின்ற காதலிக்கு அல்லது தலைவிக்கு ஒரு நாள் பல நாள்கள் போல நெடிதாகத் தோன்றுமாம் காலம் வேகமாக ஓடுவதால் போலும். இன்றைய பெண்களுக்கு நிமிடங்கள் வருடங்களாகத் தோற்றுகின்றதாம். ஒரு கவிஞன் பாடுகின்றான் காத்திருக்கும் பெண்ணின் குரலாய்:
“வருஷங்களெல்லாம் நிமிஷங்களாகும் நீ என்பக்கம் நின்றாலே நிமிஷங்கள் ஒவ்வொன்றும் வருஷங்கள் ஆகும் நீ என்னை நீங்கிச் சென்றாலே”
மேலும் ஒரு குறள்
“உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பு அறியேன் ஒள்அமர்க் கண்ணாள் குணம்”
இது, ஒளி பொருந்திய போர் செய்யும் கண்களையுடைய இவன் குறைகளை யான் மறத்தல் அறியேன். ஆகையால் நினைத்தலையும் நான் அறியேன் என்ற பொருளாகத் தருகின்றது.
- 2 -

Page 13
மாருதம் 9 - 2008 சமூக, கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
இதனை “மறந்தாத்தானே நினைக்கணும் மாமா.” என்றொரு பெண் பாடுவதாகக் காட்டுகிறார்கள்.
இவ்வாறு அன்றைய திரைப்படப் பாடல்களும் இன்றைய சினிமாப் பாடல்களும் ஏனைய பழைய இலக்கியங்களிலிருந்து கடன் பெற்றதை விடத் திருக்குறளிலிருந்து தான் அதிக கடன் பட்டுள்ளன எனக் கூறமுடியும் வேறு எந்தப் புலவனும் காதலை, காமத்தை, வீரத்தை, அறத்தைக், கல்வியை, சோகத்தை. என ஏதோ ஒன்றை அல்லது ஒரு சிலவற்றைப் பாடுவான் ஆனால் இவை அனைத்தையும் பாடியவர் எனக் குறிப்பிடுவதாயின் அது பொய்யாமொழிப் புலவன் வள்ளுவப் பெருந்தகைதான்.
சங்க மருவிய காலத்தெழுந்த சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற பெருங்காப்பியங்களே திருக்குறளைத் தழுவி, அதிலிருந்து மேற்கோள்கள் தத்துவங்கள், போன்றவற்றைத் எடுத்துப் பயன்படுத்திய நிலையில் அதன் பிற்பட்ட காலத்தில் உருவாக்கப்பட்ட அனைத்து இலக்கியங்கள் மட்டுமல்ல தற்காலச் சினிமாப் பாடலாசிரியர்கள், கூட திருக்குறளை பயன்படுத்துவதில் சளைக்கவில்லை என்றே கூறவேண்டும்.
குறளுருக்கொண்ட திருமால் மூவுலகையும் ஈரடியால் அளந்தறிந்தது போல் வள்ளுவரும் மக்கள் மனத்தில் எண்ணுவதை யாவற்றையும் அளந்தறிந்து கூறியுள்ள நிலையில் யாவரும் பின்பற்றக் கூடிய சிறப்புக் கொண்ட நிலையில் திரைப்படப் பாடலாசிரியர்களுக்கும் அதிகம் உதவியுள்ளது.
“கடுகைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்’
என்று புலவர் இடைக்காடரும் “அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக் குறுக்கத் தறித்த குறள்’ என்று ஒளவைப் பாட்டியும் சிறப்பித்திருக்கும் குறள் “வாழ்வுக்கு உரிய அன்பு நெறியைக் கூறும் உயர்ந்த நூல்” என்றும் “உயர்ந்த ஞானத்தைப் புகட்டும் செம் மொழிகளின் தொகுப்பு இது போல் உலக இலக்கியத்தில் வேறு எங்கும் இல்லை ” என்றும் ஜேர்மனிய தத்துவ ஞானியும் பல்துறைப் பேராசிரியருமான ஆல்பாாட் ஸ்வைட்சர் குறிப்பிட்டுள்ளதைப் பார்க்கும் போதும் உலகம் போற்றும் உத்தம நூலாகித் தமிழிலக்கியங்களுள் தலைமை பெற்று நிற்கும் நிலையில் எமது திரையிசைப் பாடல்கள் அவற்றை எளிமைப்படுத்தி மென்மேலும் கவித்துவமும் கற்பனைச் சிறப்பும் பெற்று இலக்கியத்தரத்துடன் வருவதே திருக்குறளுக்கும் திருவள்ளுவருக்கும் செய்யும் கைமாறு எனலாம். என்றென்றும் திருக்குறள் அழியா வரம் பெற்று நிலைக்க ஒவ்வொருவரும் ஒவ்வோர் வகையில் பங்களிப்புச் செய்கிறார்கள் என்பதே முக்கியத்துவமானது. இந்தவகையில் திரையிசைப் பாடல்களுக்கும் அடியெடுத்துக் கொடுத்துள்ளது. திருக்குறள் எனக் கூறலாம்.
- 22

மாருதம் 9 - 2008 சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
மனதில் உறுதி வேண்டும்
- என்.சுவேதன்துப்பாக்கிகளுக்கு துதிபாடும் துர்ப்பாக்கிய நிலைகண்டு தூக்குமேடைக்கடியில் சுகமாய் துயில் கொள்ளும் நீதி தேவதையும் மண்தட்டில் அமுதம் தள்ளி பொன்தட்டில் விஷம் பருகி தினம் கனவில் தத்தளிக்கும். மேதாவித்தனம் காட்டும் முகங்களும் சிறகுகள் சுமையென்று அறுத்தெறித்து சுதந்திரமாய் பறக்கவழியின்றி பாதியிலே நிற்கும் பாமரத் தனங்களும் விஷ பாம்புகளுக்கு பல் தீட்டும் வேசமிட்ட நேசங்களும் செல்போனுக்குள் செருகப்பட்ட பாசங்களும் தொலைக்காட்சிக்குள் தொலைக்கப்பட்ட நேரங்களும் பிணங்களுக்குப் புகழ் பாடி பணம் தேடும் உறவுகளும் இனியும் வேண்டாம் இம்மண்ணில்
வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி வெளியிட்ட சஞ்சிகைகள்
வித்தியா தீழ்
2.லக ஆசிரியர் தின வெளியீடு seks stools siara
: preficsslom tkut
: Resukia, is whe
ather prefestory
í
WANYANATIONAL COLLEGE OF Eptation 2008
一23ー

Page 14
மாருதம் 9 - 2008 சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
எளிமை ஓர் அறம்
த.மோகனப்பிரியா
கடவுள் நெறியில் ஆர்வம் மிகுந்தவர்கள் சிலர் கடுமையான துறவறம் மேற்கொண்டனர். குடும்பம், செல்வம், வீடு என்பவற்றை அடியோடு துறந்து தமக்கென ஒரு பொருளும் இல்லாதவராய் திரிந்தனர். இப்படிப்பட்ட உண்மைத்துறவிகள் இருக்கிறார்கள்.
அவர்களைப் போல் எல்லோரும் துறவிகளாக வேண்டியதில்லை. குடும்பத்திலிருந்தே செல்வத்திடையே பற்றுக் குறைந்தவராக வாழலாம். இப்படி வாழ்ந்த சான்றோர் பலர் உண்டு. இவர்களும் துறவிகள் போன்ற சிறப்புடையவர்களே, உடை முதலிய எல்லாவற்றிலும் எளிமையே போற்றி உதவுவார்கள் தவிர வீண்செலவு, பெருமை, புகழ் ஆடம்பரம் என வாழமாட்டார்கள்.
எளிமையும் சிக்கனமும் தொடர்புடையவை. ஆடம்பரமும் திருட்டும் உறவு உடையவை. துறவைப் பற்றி தனியே எழுதிய திருவள்ளுவர் பெருமான் கள்ளாமையில் சில குறள் மணிகளிலே சிக்கனத்தைப் பற்றிக் கூறுகிறார்.
காந்தியடிகள் மிக எளிமையாக வாழ்ந்தவர் என்பது உலகறிந்த உண்மை. விரும்பியிருந்தால் அரசவாழ்வும் வாழ்த்திருக்கலாம் ஆடம்பரத்தை பாவம் எனக்கருதி தேய்ந்து போன பென்சிலும் சிறுகாகிதமும் வீணாக்காமல் எளிமையை அறமாகக் கருதி வாழ்ந்தார். இன்சொல் ஈகைப்படி எளிமை சிக்கனத்தையும் போற்ற வேண்டும். அதற்கு நாம் அறக்காப்பாளர், தர்மகர்த்தா என்று எண்ணும்படி அறிவுரை கூறியவர் காந்தியடிகள். சுவாமி விவேகானந்தரையும் மேலாடையை நீக்கி எளிமையாக வாழ்ந்த காந்தியடிகளையும் சிறப்பாக இங்கு கூறலாம்.
உண்மையான கடவுள் நெறி உடையவனாக இருந்தாலும் உண்மையான சமுதாயக் கொள்கை உடையவனாக இருந்தாலும் ஒருவன் ஆடம்பரத்தை நாடவே மாட்டான். ஒவ்வொருவரும் அவரவரால் இயன்றளவு உலகிற்கு நல்வழியில் தொண்டு செய்ய வேண்டும் என்பதே நீதி.
“வேண்டின் உண்டாக துறக்க” என்கிறார் திருவள்ளுவர். செல்வம் உள்ள போதே துறக்க வேண்டும் என்கிறார். அந்தளவிற்கு போகாவிட்டாலும் அறமாகிய எளிமையைப் போற்ற வேண்டும். புகழும் உள்ள போது அடக்கமாய் வாழ்வதும் தமக்கு மேல்நிலையில் உள்ளவரைப் பற்றி கவலைப்படாத மனநிலையும் எளிமை தரும். “செல்வம் என்பது சிந்தையின் நிறைவே” என்கிறார் பழங்காலத் தமிழ்ப்புலவர். ஆடம்பரமற்ற மனநிறைவே எளிமையான உயர் செல்வமாகும்.
எளிமையில் செம்மையும் மகிழ்ச்சியுமே ஒங்கும், உயரப்பறந்தாலும் வானம் எட்டாததாய் நிற்பது போல் ஆடம்பரத்தில் இன்பமும் இல்லை. அது எட்டுவதும் இல்லை. ஆசைக்கு ஓர் அளவில்லை என்கிறார் தாயுமானவர். ஆனால் “எளிமை அமைதியான புல்தரை போன்றது அது எப்போதும் நம் எல்லைக்குள் நிற்பதாகும். போதும் என்ற மனத்தை எளிமையில் தான் பெற முடியும். “போதும் என்ற மனமே பொன்செய்யும் மருந்து" என்ற பழமொழி எவ்வளவு பெரிய உண்மையை விளக்குகிறது.
ー24ー

மாருதம் 9 - 2008, சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
ஏன் இப்படிச் செய்தாய்
சிவதர்ஷினி
'சித்திரா ஏய் சித்திரா எழுந்திரு சூரியன் உதயமாகி இரண்டு நாழிகை ஆகிவிட்டன. எல்லோரும் எழுந்துவிட்டாங்கள். நீயும் எழுந்து வந்து உன்னுடைய வேலைகளைச் செய்' என அம்மா கூக்குரல் இட்டதைக் கூட கவனிக்காமல் சித்திரா தன்னை மறந்து துங்கிக்கொண்டிருந்தாள்.
அவள் இவ் வாழ்க்கையை மறந்து இன் பலோகத்திலே மிதந்து கொண்டிருக்கையில் கடவுள் வந்தால் கூட அவளை எழுப்ப முடியாது. தன் மகள் தூங்கும் அழகை அருகில் இருந்து ரசித்துக் கொண்டிருந்த சாரதா தன்னை மறந்து இரு சொட்டுக் கண்ணிர் வடித்தாள். அதற்கான காரணம் அவளுக்கே புரியவில்லை.
இவ்வளவு நேரம் எழுப்பியும் தன் மகள் எழும்பாததைக் கண்ட அத்தாய் என்ன செய்வது என புரியாது பதைத்தாள். உணர்ச்சியற்ற உடலை தன்மடியிலே போட்டு மகளே எழுந்திரு என வாயிலும் வயிற்றிலும் அடித்து ‘என் அருமை மகளே என்னைவிட்டு எதற்காகச் சென்றாய்? நான் உனக்கு என்ன செய்தேன் உன்னைப் பெற்றெடுத்து வளர்த்தது உன் உயிரை காவுகொடுக்கவா என் செல்வமே எழுந்திரு உனக்காக நான் காத்திருக்கிறேன். என்னை ஏன் விட்டுச் சென்றாய் இந்த பாழ்பட்ட சமூகத்தில் இனியும் நான் என்னத்தை அனுபவிக்கப் போகின்றேன். ஆண்டவா? என் உயிரையும் எடுத்துவிடு.
தாய் புலம்புகிறாளே இவளுக்கு ஆறுதல் சொல்ல எவருமே இல்லையே என் மகள் இருந்திருந்தாள் இப்படி என்னை புலம்பவிட்டிருக்கமாட்டாளே. இதற்கு எல்லாம் யார் காரணம்.
அன்று நடந்தது என் மனதிலே நீங்காத நினைவலையாய் இன்றும் என் உள்ளத்தை உறுத்துகிறது. அன்று என்மகளுக்கு இப்பூமியே அவளுக்காகவே படைக்கப்பட்டது என்ற சந்தோசத்தில் துள்ளிக்குதிக்கும் போது என் தாய் மனம் எவ்வளவு சந்தோசப்பட்டிருக்கும் அந்நாளுக்காய் காத்திருந்தது அவளது திருமணம். சித்திராவுக்கு திருமணம் என்றால் அந்த ஊருக்கே கொண்டாட்டம். அப்படி இருக்கும் போது அவளது அன்புநிறைந்த உள்ளத்தில் எத்தனை எத்தனை கனவுக்கோட்டைகள் கட்டியிருப்பாள். திருமணம் என்றால் வீடு அல்லோல கல்லோலப்பட்டு வீட்டை இரண்டாக்கி விட்டுவிடுவார்கள் அக்குடும்பத்தினர். திருமணம் என்றால் சுலபமான வேலையா? இல்லையே முதல்நாள் பந்தல் போடவேண்டும், வாழைக்குலை கட்டவேண்டும் இதை எல்லாம் நான் ஒருவன் தனியாகவா செய்யவேண்டும் என சித்திராவின் தந்தை சுரேஸ்
- 25 -

Page 15
மாருதம் 9 - 2008 சமூக, கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
புலம்பிக் கொண்டிருக்கையில், கொஞ்சம் பொறுங்கள் என்னுடைய நண்பர்கள் எல்லோரும் இப்பொழுது வந்து விடுவார்கள் அதன்பிறகு இவற்றைச் செய்யலாம். என சித்திராவின் தம்பி மகேஷ் சந்தோசத்தில் தந்தையிடம் சொல்லிவிட்டு தன்பாட்டில் சென்றுவிட்டான். அதன் பிறகு சுரேஸ் அமைதியுடன் தங்கள் வீட்டுக்கு வந்த உறவினர்களிடம் ஊர்க்கதை கேட்க ஆரம்பித்துவிட்டான்.
இவ்வாறு திருமணவீட்டின் முதல்நாள் சித்திராவின் குடும்பம் சந்தோசத்தில் மிதக்க அவள் மட்டும் சிலம்பு ஏந்திய கண்ணகிபோல கடும் கோபத்திலும் துக்கத்திலும் வாய்பொத்தி அழுது கொண்டிருந்தாள். அவளுக்கு என்ன நடந்தது என யாருக்கும் தெரியாது. ஆனால் சித்திராவோ மனவேதனையுடன் அடக்கமுடியாது வாய்விட்டு பிதற்ற ஆரம்பிக்கவும் அவளது வாழ்வும் பிதற்றல் நிலையில் இருந்து பிறழ்வான நிலைக்கு கொஞ்சம் கொஞ்சமாக சென்றுகொண்டிருந்தது.
இதற்கு எல்லாம் யார் காரணம் தன் மகளை மனநோய் உள்ள நோயாளியாகப்பார்க்க எந்த பெற்றதாய்தான் ஆசைப்படுவாள். அப்படியிருக்க அந்ததிருமணத்தின் முதல் நாள் என்ன நடந்தது. அவளது மனநோய்க்கு யார் காரணம் என் பிள்ளை ஏன் இப்படி ஆனாள் என தனக்குள் புலம்பிக்கொண்டிருந்த தாய்க்கு அன்றுதான் உண்மைகள் எல்லாம் புலனாகின.
அவளது திருமணப் பொன்நாளிலே அன்புடனும் ஆசையுடனும் அவளை பதினைந்து வருடமாகக் காதலித்த அவளது ஆசைக் காதலன் சொன்ன ஒரே ஒரு வார்த்தை அவளது வாழ்க்கையினை இப்படி மாற்றிவிட்டது. ‘என் அன்புக்காதலியே என வாயால் புகழ்ந்தவன் ‘அன்புக்கு எதிரியே' என ஏசுகின்றான். அப்படி அன்புள்ள நாதன் மாறுவதற்கு யார் காரணம் நான் ஏதேனும் பிழை செய்துவிட்டேனோ என சித்திரா எண்ணும் அளவுக்கு அவள் எந்தவித தப்பும் செய்துவிடவில்லை.
அவள் செய்த ஒரேயொரு தப்பு அந்த அயோக்கியனை காதலித்ததும் காதலுக்காக திருமணத்திற்கு ஒப்புக்கொண்டதும். ஆண் இனமே இப்படித்தானா பெண்கள் மனதை எந்நேரமும் காயப்படுத்தி அவர்களை வாழ்நாள் முழுவதும் அழவைப்பதா ஏன் இப்படி இன்றைய ஆண்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு பெண்களிடம் இருந்து என்ன வேண்டுமோ அதை கேட்டு வாங்கிக் கொள்ளலாம்.
ஆனால் அப்படிச் செய்யவில்லையே அவர்கள் பெண்சமுதாயத்தையே கெடுத்துவிட்டார்கள். இவர்களால் எந்தப் பெண்ணாலும் நிம்மதியாக வாழமுடியாது. இது எல்லாம் யார் செய்த வினை. பெண்கள் வாழ்க்கை இவர்கள் விளையாடும் விளையாட்டு மைதானமா, பெண்கள் இளக்காரமானவர்களா? அவளுக்கு வாழ்க்கையில் அன்பு, உணர்ச்சி, பற்று, பாசம் எதுவும் இல்லையா! ஏன் இந்த ஆண்கள் பெண்களின் உணர்ச்சியை புரிந்து கொள்ள முடியாத ஜடமாக இருக்கிறார்கள். தாங்கள் செய்வது மட்டும் நியாயம். தாங்கள் சொல்வது தான் உண்மை இதை நியாயப்படுத்துவார்கள். பெண்களின் மனதையும், ஆசையையும் ஏன் புரிந்துகொள்ளவில்லை. அவன் அப்படி
ー26ー

மாருதம் 9 - 2008 சமூக, கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
என்ன அவளிடம் கேட்டுவிட்டான். இதற்காக அவள் தன் உயிரையே இழக்க முற்படுவதா “போங்கடா போங்கள் உங்கள் வேலையை பார்த்துக் கொண்டு” என நினைப்பதைவிட்டு பயந்தாங் கோழி போல் தன் மனதை கஸ்ரப்டடுத்துவதா ‘சித்திரா எழுந்திரு எழுந்திரு என தாய்புலம்பியது கூட இந்த உயிரற்ற ஜடத்திற்கு விளங்க வில்லையா?
‘அம்மா ஏன் இப்படிச்செய்தாய்? நான் உனக்கு என்ன குறைவைத்துவிட்டேன் அவன் சொன்ன ஒரு வார்த்தைக்காக என்னைவிட்டுச் செல்ல உனக்கு எப்படி மனசு வந்தது. “வா மகளே வா வந்து என் முகத்தை ஒரு தரம் பாரம்மா” உன்னை விட்டால் எனக்கு யார் இருக்கிறார்கள். அந்தப்பாவிமகன் என் மகளை உயிருடன் சமாதி கட்டிவிட்டானே.
அவள் என்ன பாவம் செய்தாள். எவ்வுயிர்களுக்கும் தீங்கு நினைக்காத என்மகளுக்கு இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையா? யாரும் அவளுக்கு வேண்டாம். நான் இருக்கிறேன். எனக்காக ஒருதரம் என்னை பாரம்மா. உன்னை சுமந்து பெற்ற என்னை விட அவன் உனக்கு மேலானவனாக வந்துவிட்டானா?
அப்படி அவன் என்னத்தை உன்னிடம் கேட்டுவிட்டான் “நீ ஏன் இவ்வளவு அசிங்கமாய் இருக்கிறாய் உன்னை என்னால் திருமணம் செய்து கொள்ள முடியாது.” இதைத்தான் அவன் சொன்னானா? அவன் வாழ்க்கையில் முதன் முதலில் உன்னை சந்தித்த போதே இதைசொல்லி இருக்கலாமே. அப்போது உன் அழகுக்கு மயங்கி யவன் இப்பொழுது உன்னை பார்த்து ஏன் வெறுத்தான். அவன் அழகைத்தான் திருமணம் செய்ய நினைத்தான் என்பதை முதலே நீ அறிந்திருந்தால் இத்தகைய நிலைக்கு நீ ஆளாகியிருக்கமாட்டாயே. உன் அழகுகெட காரணமாக இருந்த அவனே உன்னை வெறுக்கும் போது யார் உன்னை திருமணம் செய்து கொள்வார்கள் என எண்ணி உன்மனதை குழப்பிவிட்டாயா?
இதற்கும் நான் காரணமாகிவிட்டேனே உன்னை சமைக்க சமையல் அறைக்கு அனுப்பாமல் விட்டிருந்தால் அன்று சுடுதண்ணி ஊற்றி உன் முகம் அவியாது இருந்திருக்குமே இதை எண்ணி உன் மனதை சிறகடிக்கவிட்டுவிட்டாயா? என் அருமைமகளே உனக்காக ஒரு ஜீவன் வாழ்கிறது என எண்ணாமல் இப்படி உன் வாழ்க்கையினை அழித்துவிட்டாயே! நான் இனியாருக்காக வாழ்வேன். எதற்காக வாழ்வேன் எனக்கு என்று யார் இருக்கிறார்கள். நானும் உன்னுடன் வந்துவிடுகிறேன். என்னையும் அழைத்துச் செல். என் அருமை மகளே! இன்றைய உலகம் இப்படிமாறி விட்டது. அழகுள்ளவர்களுக்கு மட்டுமா வாழ்க்கை. அவர்கள் மட்டுமா சந்தோசமாக வாழவேண்டும். மற்றவர்கள் எல்லாம் ஒவ்வொருநாளும் அசிங்கப்பட்டு வீட்டுக்குள் ஒழிந்திருந்து அழுவதா இது கடவுள் பாவப்பட்ட மனிதர்களுக்குச் செய்த கொடுமையா?
என்னவாழ்க்கை இனியும் இந்த உலகத்தில் வாழவேண்டுமா. அம்மா நான்
உன்னோடு வாழ்ந்த காலங்கள் குறைந்தகாலம் என்றாலும் உனக்காக ஏங்கித்தவிக்கிறேன்
என்னை மன்னித்துவிடு. நான் இந்த முகத்தோடு உலகில் வாழமுடியாது. வாழ்ந்தேனாயின்
- 27

Page 16
மாருதம் 9 - 2008 சமூக, கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
இந்த உலகம் என்னை குத்தி குத்தி புண்ணாக்கிவிடும்.
இன்றைய காலத்தில் என்னை மாதிரியான பெண்கள் ஒவ்வொரு நாளும் ஆண்களால் அவமானப்பட்டு வெளியே சொல்லமுடியாது புலம்புகிறார்கள். இது எல்லாம் யார் செய்த கொடுமை. இப்படிப்பட்ட பெண்களின் நிலை என்னை மாதிரி ஒருகாலமும் ஆகக் கூடாது. தாயே எல்லாப் பெண்களையும் ஆண்கள் சமனாக மதிக்கும் வரை என்னைப் போல மனநோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் நிச்சயம் உருவாகுவார்கள். அதனை என்னால் தடுக்கமுடியுமா?
என் மகள் போன்ற நிலைக்கு யாருமே செல்லக்கூடாது. அன்பே இவ் உலகத்தை திருந்தவைக்க நீ இப்படிச் செய்தாயா. உன்னை எண்ணி எண்ணி என் வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாய் அழிந்து கொண்டிருக்கிறது. நான் உன்வரவுக்காய் எதிர்பார்த்திருக்கிறேன். சீக்கிரம் நீ என்னை தேடி வராவிட்டால் நான் உன்னுடனே வந்துவிடுவேன் என்னை ஏமாற்றாதே. வருகிறேன்.
வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி வெளியிட் சஞ்சிகைகள்
შiშლედმ * rä ei 90 ...
ಕ್ಲಬ್ಗ 99.83333333 ity {{|ိုးင်္ဂီနှီပ္ပါး'၊ *ჭ! ** %
勒
s
(
() )
i
(እ
品
.
Published by English literary Association Vavuniya National College of Education. Wavuriya.
- 28
 
 
 

மாருதம் 9 - 2008 சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
பாரதி
இன்றைய அவசர உலகில் நசுங்கிப் போன மொழியோடு - சண்டை பிடித்து சான்றிதழ் பெற்று காசிற்காய் பேனையோடும் “பென்றைவ்” வோடும் சொந்தமாய் டொல்பின் கொண்டு ஒடோ ஓடென்று ஓடி பெபியூம்
35ifu TLD6)
இருக்க முதல தடவையாய கடவுளிடம் வேண்டி தொழில் செய்யும் அறிவாளிகளின் பொய்முகங்கள் கிழித்து
S. 6060) UTU ... விசுவாசமாய்.
தமிழ் கற்போம் நாடகக்குழுவினர்
தொழில் செய் என்று தொண்டை கிழிய கத்திச் சொன்ன - நீ உண்மையில் - நீ நீ போட்ட விதை விழுதெறிந்து விருட்ஷமாகி விட்டதனால் - நியாய் கவிவடித்து கிறுக்கிப்போட்ட அத்தனை முத்துக்களும் சிப்பிக்குள் பத்திரமாய் இன்றும். காலம் கடந்து 6)196TB)
தேயட்டும்; நாமிருக்கும் வரை அழியாது 926ör BTLDLİb; ஒழியாது உன் பேச்சு.
சுதர்ஷரிகா
ー29ー

Page 17
மாருதம் 9 - 2008, சமூக, கல்லி கலை இலக்கிய சஞ்சிகை
கவிஞர் அகளங்கனின் கவிதைகள் ஏழு
கல்விப் போர் அவர்கள் என்ன போருக்கா போகிறார்கள் புத்தகப்பைகளை ஆயுதப்பைகளாக முதுகில் சுமந்து கொண்டு கல்விப் போரை சமாதானத்துக்கான போராக்கி உலக சமாதானத்தை உருவாக்க முடியுமென்று எந்த முட்டாள்க் கல்வியியலாளன் கூறினான்.
இழகு
எங்கள் நாட்டின் மலையும் கடலும் மதியும் வானும் மலரும் கதிரும் மரமும் மண்ணும் அழகாய்த்தான் இருந்தன எங்கள் இரத்தம் அவற்றில் படும் முன்பு.
கூனல் மானுடத்தின் கூனை நிமிர்த்த பாடசாலைக்குச் சென்றவனின் முதுகு கூனலாகிப் போனது புத்தகப் பை சுமந்து.
IDIT θε மாயவனுக்குப் பிடித்த மாதம் மார்கழியாம்
மாயவன் என்ன மாதச் சம்பள காரனா மாசியைப் பிடிப்பதற்கு.
சுதந்திரம் இந்தியா சுதந்திரத்தை இரவிலே வாங்கியதாம். இலங்கை
சுதந்திரத்தை இரவலாய்த்தான் வாங்கியதோ?
35 60 on இந்திய முன்னாள் ஜனாதிபதி அணுவிஞ்ஞானி selligbj6) 856) TLD இளைஞர்களைக் கனவு காணச் சொன்னார். இளைஞர்கள் கனவு கண்டார்கள் அசினை, திரிசாவை நயன் தாராவை கோபிகாவை.
குழந்தை
S|LíbuDT !
நீ ஏழைத் தாயாக இருந்ததால் தான்.
d 60 LT606) எனக்கு ஊட்டி வளர்த்தாய். நானும் ஆரோக்கியமாக வளர்ந்தேன். தாய்ப் பாலுக்கு நிகர் வேறொன்றும் இல்லை என்பது அப்போது உனக்கும் தெரியாது எனக்கும் தெரியாது. உனக்கும் எனக்கும் தெரிந்த தெல்லாம் வேறு பாலுக்கு வழியில்லை என்பதுதான்.
-3O -

மாருதம் 9 - 2008 சமூக, கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
தோல்வி
தோல்வி என்பது தூக்கம் தான் LDJ600TLD606). தோல்வி என்பது ஒன்றும் விஷக்கடியல்ல. நெருப்புக்கடிதான் புறக்கணி.
தோல்வி என்பது வீழ்ச்சியல்ல. பலவீனத்தைச் சரிசெய்ய ஒரு சந்தர்ப்பம். தோல்வி என்பது (upl96ll6Ꮝ6Ꭰ. இடைவேளை.
தோல்வியின் கையில்தான் வெற்றியின் பேனாக்கள்; தோல்வியின் வீட்டில் தான் வெற்றியின் விருந்து;
வவுனியாவில் வெளிவந்த நூல்கள்
தந்தையா கந்தைேள்
தோல்வியே அடையாத ஒருவன் இதுவரை இருந்ததில்லை; தோல்விகளோடு மட்டுமே ஒருவன் இதுவரை இருந்ததில்லை.
தோல்வி என்பது நம்பிக்கையின்மையால் வரும்: அதீத நம்பிக்கையாலும் வரும்: ஆணவமான நடத்தையிலும் தோல்வி வரும்.
தோல்வி என்பதனால் வீழ்ந்து கிட்ப்பவன் தோற்றவனாகிறான். தோல்வி வந்த பின் தெளிந்து நிற்பவன் கற்றவனாகிறான். தோல்வி அடைந்ததும் எழுந்து நிற்பவன் வென்றவனாகி விடுகின்றான்.
நா. சரோஜா

Page 18
மாருதம் 9 2008, சமூக, கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
ரீச்சர் வாங்கோ
தி.காயத்திரி
"ரீச்சர் இஞ்சை வாங்கோ .ரீச்சர் இஞ்சை வாங்கோவன். என்ன பாத்துக்கொண்டு பேசாமல் போறியள். வந்து சும்மா பாத்திட்டுப்போங்கோ. நிறைய சாறி எல்லாம் வந்திருக்கு’ என்று அந்தநீளத்துக்கு கடைக்காரங்கள் எல்லோரும் அவளைக்கூப்பிட்டுக் கொண்டிருந்தாங்கள் அவள் ஒரு சின்னச்சிரிப்புடன் பேசாமல் போனாள்.
பொதுவாக கடைக்காரங்கள் அக்கா, தங்கச்சி, அம்மா எண்டுதானே எல்லாரையும் கூப்பிடுவாங்கள் ஆனா அவளை ரீச்சர் எண்டே கூப்பிட்டாங்கள். அவள் ரீச்சர் எண்டு எப்படி அவங்களுக்குத் தெரியும்? என நினைத்தவளுக்கு ரண்டு வருசங்களாக அவளை அடையாளப்படுத்திய மஞ்சள் நிறச்சாறி அது தான் கொலிச் யூனிபோம். அதைக் கட்டிக் கொண்டு வவுனியா முழுக்க சுத்தி வந்து கொண்டிருந்தாள் தானே. அவளை ரீச்சர் எண்டு மற்றவையள் கூப்பிட ஞாயமிருக்குத்தானே. கொலிச்சில் அவள் வாழ்ந்த காலம் அதை ஒரு தவம் எண்டே அவள் கருதினாள்.
கொலிச்சுக்கு படிக்கவந்தது அவளுக்கு விருப்பமே இல்லை தெரியுமா? தான் நினைச்சது எதுவும் நடக்கவேயில்லை நான் எவ்வளவு கஸ்ரப்பட்டு படிச்சன் ஆனால் எனக்கு ஏன் கம்பஸ் கிடைக்கவில்லை எண்டு சொல்லி எத்தனை தரம் என்கிட்ட அழுதிருக்கிறாள்.
பாவம் அவள் நான் அறிஞ்சு நல்லாத்தான் படித்தாள். உயிர்குடுத்து படிக்கிறது எண்டு சொல்லுவினமே அப்படி படிச்சாள். அது எனக்கும் அவளுக்கும் மட்டும் தான் தெரியும். ஆனால் விதி ஏதோ விளையாடிவிட்டுது என்று தான் நினைக்கோணும். சரி எல்லாம் விதிவிட்ட வழி என்று கொலிச்சுக்கு வந்திட்டாள் அங்கை வந்ததும் அந்தப்பரபரப்பான முழுநேரப்பயிற்சிக்கு அவளல் ஈடுகொடுக்க முடியேல்லை.
விடிய ஐஞ்சு மணிக்கு எழும்போனும் பொட்டம், ரீசேட், சப்பாத்து போட்டுக்கொண்டு கொதிக்கிற தேத்தண்ணியை வாயில் விட்டுக்கொண்டு விட்டு கிறவுண்டுக்குபோய் உடற்பயிற்சி செய்து கிறவுண்டை சுத்தி ரண்டு ரவுண்டு ஓடுகிறது அவளால் முடியல்ல. பிறகு அவசரமா வந்து சாப்பிட்டுவிட்டு குளிச்சிட்டு சாறிகட்டி கொண்டை போட்டு வகுப்பிற்கு போகோணும் சொன்னா வெக்கக்கேடு. அவளுக்கு சாறி கட்டத்தெரியாது. பிறகு அந்த ரூமிலை இருக்கிற பெட்டையள் கட்டுறத்துக்கு உதவி செய்தவையாம். சரியெண்டு வகுப்புக்குள்ளை போய் இருந்தா அவளின்ரை கொண்டை கழண்டு விழுமாம். அந்த வகுப்பிலை எத்தினை பெடியங்கள், பெட்டையள் அதுகளுக்கு முன்னால கொண்டை கழன்று விழுந்தா கூச்சமாய்தானே இருக்கும். பிறகு பக்கத்தில இருக்கிற பெட்டை கொண்டையை போட்டு விட்டாளாம். சாறி கூட
- 32

மாருதம் 9 - 2008 சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
இடுப்பில ஒழுங்கா நிக்குது இல்லையாம். நடக்க நடக்க காலுக்குள்ள மிதிபடுதாம். ரண்டு மூண்டு தரம் தடக்கி விழுந்தும் போட்டாளம். வகுப்புப் பெடியங்கள் சிரிச்சுப் (8 JIT LITISIS6 TTLs.
அவங்கள் ஆம்பிளைப் பெடியங்களாம். அவங்களுக்கு என்ன தெரியும் இவளின்ரை கஸ்ரத்தைப்பற்றி. அவள் வீட்டில இருந்து போகுமட்டும் சாறி கட்டினது இல்லை. சாறியோடை வகுப்புக்குள்ள போயிருந்தா அப்படியே ஒரு இடத்திலேயே இருப்பாள் படிப்பிக்கிற வாத்திமார் ஏதாவது கேட்டு எழும்ப வேண்டியிருந்தா இவளுக்கு ஜென்ம கலக்கமாக இருக்கும்.
எப்படி எழும்பிறது சாறி ஒழுங்காகக் கட்டேல்லை எங்கையாவது தடக்கி விழுந்திட்டா தலையைக்கூட அப்படி இப்படி திரும்பமாட்டாள் கொண்டை அவிழ்ந்திடுமென்று.
இவள் இப்படி இருக்கிறதைப்பார்த்து சில பெடியங்கள் அவளை திமிர்பிடிச்ச பெட்டை எண்டு சொல்லிச்சினமாம். சாறிகட்டுறதாலை இவளும் வெக்கப்பட்டுக்கொண்டு ஒருத்தரோடையும் பெரிசாக் கதைக்கிறதில்லை.
ரண்டு மூன்று தரம் இவளின்ரை சினேகிதப் பெட்டையள் இவளிட்ட வந்து என்னடி உது சாறிக்கட்டு? என்ரை ரூமுக்கு வா கட்டிப் பழக்கிறன் எண்டு சொன்னாங்களாம் தன்ரை இயலாமையை நினைச்சு அவளுக்கு சரியான கவலை வாய்விட்டு மட்டும் தான் அழேல்லை.
இப்படி ஒவ்வொரு நாளும் போய்க்கொண்டு இருந்தா ஒவ்வொரு நாளும் நாலுமணி எட்ப வரும் எண்டு காத்திருப்பாள் ஏனெண்டா நாலுமணிக்குப் பிறகு சாறிகட்டத் தேவையில்லை.
பொட்டம் ரீசேட் போட்டுக் கொண்டு தான் கிறவுண்டுக்கு இல்லாட்டி தமிழ் மன்றம், அழகியல்மன்றம் என்று மன்றங்களுக்குப் போறது. அப்படிப்போகேக்குள்ளை அவள் கூச்சமில்லாமல் சாதாரணமாகப் போவாள்.
பொதுவாகவே அவள் எந்த வேலையைச் செய்தாலும் அதிலை சுணக்கம் தான். உடுப்புத்தோய்க்கிறது குளிக்கிறது எல்லாமே. அதனாலை மற்றப்பெட்டையளோட ஈடுகொடுக்கேலாம இருந்திச்சு. படிப்பிக்கிற வாத்திமார் சொல்லுகிற ஒப்படை வேலைகளையும் செய்யுறத்திற்கு நேரங் காணம அவஸ்தைப்பட்டாள்.
ஒருநாள் எனக்குக் கிட்ட வந்து “என்னால் இஞ்சை இருக்க ஏலாது நான்
வீட்டை போகப்போறன் எனக்கு கொலிச் பிடிக்கேல்லை என்வாழ்க்கையே துலைஞ்சு
போயிட்டுது போல இருக்கு நான் என் இலட்சியத்தில தோத்திட்டன். இனி நான்
வாழ்ந்து என்னத்துக்கு?’ ஒருத்தருடைய ஆசை மாறலாம் இலட்சியம் மாறக்கூடாது
ஒன்பது வருஷத்திற்கு முதல் நெஞ்சிலை விதைச்சு வந்த விதை இண்டைக்கு பெரிய -33 -

Page 19
LDruhájub 9 - 2008. afelpet, 66üsl" assunbu E6pábéu d'Ebd's Dais
விருட்சமாகிட்டுது. அதை வேரோடை புடுங்க என்றால் எப்பிடியடி? ஏதோவொரு வேகத்தில நினைச்சது கிடைக்கேல்லை எண்டா கிடைச்சதை நினைக்கவேண்டியது தான் என்று இஞ்சை வந்திட்டன். ஆனால் என்னால் இயல்பா இருக்கேலாமக்கிடக்கு எனக்கு சொந்தமான ஒண்டை நான் பாத்துக்கொண்டிருக்கிறபோதே யாரோ வந்து பறிச்சுக் கொண்டு போனமாதிரி ஒரு வலி. கான்சர் மாதிரி அரிச்சுக்கொண்டே இருக்கடி, நான் கொஞ்சம் வசதியாப் பிறந்திருந்தால். பிறைவேற்றாப் படிச்சு ஆவது என்ர இலட்சியத்தை அடைஞ்சிருப்பேன் தானே. அந்தக்கடவுள். அவர் இருக்கிறாரா? விதி ஏன் இப்படி என் வாழ்க்கையில விளையாடுது.
நான் கொஞ்சம் கூட கற்பனை செய்து பார்க்காத துறை ரீச்சிங் கடைசியில. அதுக்குள்ளேயே நான் வந்து. அதுக்கு மேலை சொல்ல முடியாமல் அழுதாள். எனக் கெண்டா என்ன செய்வது என்று தெரியல. எனக்கும் கண்கலங்கிட்டுது. இரு வாறன் எண்டுட்டு அங்காலை போய் கண்ணை துடைச்சிட்டு ஏனெண்டா நான் அழுததை அவளுக்கு காட்டிக் கொடுக்கக்கூடாது தானே!
அவளோட பழகினதால எனக்கும் கொஞ்சங் கொஞ்ச விஷயங்கள் தெரியும். அவள் முந்திக்கூட இலட்சியம் இலட்சியம் என்று சொல்லிக்கொண்டே இருப்பாள். தான் வாழ்க்கையிலை தோத்தாலும் இலட்சியத்தில தோக்கக்கூடாது எண்டும் சொல்லுவாள். தண்ணியை எடுத்து இதைக்குடி எண்டு குடுத்திட்டு என்ர பங்குக்கு நானும் கொஞ்சத்தை அவளுக்கு சொன்னன்.
இஞ்சைபார் நீ சொல்லுறது எல்லாம் சரிதான் ஆனா தேவையில்லாம உன்ரை மனசைப் போட்டு குழப்பாதை. வாழ்க்கையிலை ஆயிரம் கஷ்டங்கள் வரும் அதை எல்லாத்தையும் தாங்கத்தான் வேண்டும். உனக்குள்ளை நீ தேவையில்லாம ஒரு தாழ்வுச்சிக்கலை கொண்டிருக்கிறாய்.
நீ நினைச்சது நடக்கேல்லை உன்ரை இலட்சியம் நிறைவேறேல்லை எண்டு ஒண்டை நினைவிலை வைச்சுக்கொள்ளு. எல்லோருக்கும் எல்லாம் உடனேயே கிடைக்கிறதில்லை. சிலதுக்கு காலம் கொஞ்சம் எடுக்கலாம். உனக்கு நான் புத்தி சொல்ல வேண்டியதில்லையடி நீ படிச்சனி தானே! உன் இலட்சியத்தை நான் மதிக்கிறேன் அது நிச்சயமா நிறைவேறும் நீ அதையே நினைச்சுக் கொண்டிருந்தா எந்தப்பிரயோசனமும் இல்லை. நாளைய நாளை நினைச்சு இண்டைக்கு கவலைப்பட்டா இண்டைய சந்தோஷம் போயிடும்.
நீ முதலின கொலிச்சைமுடி. ரீச்சர் எண்ட பதவியோட சம்பளத்தை எடுத்துக்கொண்டு உன் இலட்சியத்திற்காகப் போராடு என்று சொன்னன். அவளும் அப்படியே பேசாமல் எழும்பிப் போட்டாள். அவள் முட்டாள் இல்லைத்தானே கொஞ்சம் கொஞ்சமா அவள் தன்னை மாத்திட்டாள்.
பிறகு கொலிச்சிலை அவள் கொஞ்சம் இசைவாக்கம் அடைஞ்சிட்டாள் போல.
- 34 m

மாருதம் 9 - 2008 சமூக, கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
ஒரு நாள் என்னட்டை வந்து சொன்னாள் தான் ஒரு நாள் பின்னேரம் உடுப்பு எல்லாவற்றையும் ஊறவைச்சிட்டனாம் தொட்டியிலை தண்ணி வரலையாம் அடுத்தநாள் போடுறத்திற்கு உடுப்பு இல்லையாம். தனக்கு என்ன செய்யுறதெண்டு தெரியேல்லையாம் பக்கத்து கொஸ்டலுக்கு தண்ணிவந்ததாம். அங்கை போய் தோய்க்கிற தெண்டால் அதுக்கு பொறுப்பான பெட்டை அவளை தோய்க்க விடேல்லையாம். இவள் என்ன செய்யுறதெண்டு தெரியாம முழுசிக்கொண்டிருந்தாளாம்.
உடனே பக்கத்து கொஸ்டலில இருக்கிற இவளின்ற சினேகிதப் பெட்டை ஒருத்தி இவளின்ர உடுப்பைத் ஒருத்தருக்கும் தெரியாம எடுத்துக்கொண்டு போய் தோய்ச்சுப் போட்டு தன்ர ரூமில போட்டுட்டாள். அவளின்ரை பாசத்தை அதுதான் அந்த சினேகிதப் பெட்டையின்ர பாசத்தை கண்ணிர பனிக்க என்னட்டை வந்து சொன்னாள். இப்படியும் சினேகிதமா? என்று நான் கொஞ்சம் ஆச்சரியப்படடிட்டன்.
இப்ப அவள் கொலிச் படிச்சு முடிச்சிட்டாள். பிறகு ஒரு நாள் என்னட்டவந்தவள் வந்து கொண்டிருக்கேக்க சொன்னாள் அப்பாடா! வழியிலை விடவே மாட்டன் என்கிதுகள் என்று சொன்னாள் என்ன? ஆரடி உன்னை விடேல்லை என்டன். கடைக்காரங்களில இருந்து நான் படிப்பிக்கிற பிள்ளையஸ் வரை ‘ரீச்சர் வாங்கோ ரீச்சர் வாங்கோ’ என்று கூப்பிடுதுகள் சந்தோஷமாக இருக்கடி என்று சொன்னவளை அப்படியே திகைச்சுப்போய்ப் பார்த்தன். அவளுக்கு அது விளங்கிட்டுது போல கிடக்கு. நீ ஏன் இப்படிப்பார்க்கிறாய் என்று எனக்குத் தெரியும். கொலிச்சில படிக்கேக்க அதைவிட்டு ஒடப் போறன் எண்டு சொல்லி விட்டு இப்பிடிச் சொல்லுறன் எண்டு தானே பார்க்கிறாய். உண்மை தான். நான் இப்ப எங்கை போனாலும் ரீச்சர் என்ற ஒரு மரியாதை கெளரவம் கிடைக்குது. அது கொலிச்சால தான். இப்ப ஒரு கவலையும் இல்லை. இந்த சந்தோஷம் வேறெங்கேயும் இல்லை.
O O O வவுனியாவில் வெளிவந்த நூல்
-35 -

Page 20
மாருதம் 9 - 2008 சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
பதிவுகள்-1
01.06.2008 நிகழ்வு 116
கவிதைப் பயில் அரங்கம்
வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டமும், சமூக அபிவிருத்தி இளையோர் நிறுவனமும் (SDYO) இணைந்து 2008 யூன் மாதம் 1ம் திகதியன்று வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்கமண்டபத்தில் கவிதைப் பயிலரங்கம் ஒன்றை நடாத்தின.
இந்நிகழ்வு தமிழ்மணி அகளங்கள் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. பழமொழிகளை அடிப்படையாகக் கொண்டு இப்பயில் அரங்கம் ஆரம்பமாகியது. பன்னிரெண்டு பயிலுனர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
கவிதை எழுதுவது பற்றியும் எழுதிய கவிதைகளைச் சமர்ப்பிப்பது பற்றியும் பயிற்சி இடம் பெற்றது. பயிற்சியின் நிறைவில் கவியரங்கு நிகழ்வில் எவ்வாறு பங்கு கொள்வது என்பது தொடர்பான பயிற்சியும் இடம்பெற்றது.
பங்கு பற்றியவர்களினால் இப்பயில் அரங்கமானது மிகுந்த பயனைத் தந்ததாக தமது அபிப்பிராயங்களை முன்வைத்தனர். இதுபோன்ற பயிற்சிகள் மேலும் தொடரவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.
தொடர்ந்து இரண்டாம் கட்டமாக கவியரங்க போட்டியொன்றும் தமிழ்மணி அகளங்கன் தலைமையில் நடைபெற்றது. போட்டியில் றாஜேஸ், தர்மினி, நந்தா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். இவர்களுக்கான பரிசினை வவிபுலானந்தா கல்லூரியின் முன்னாள் அதிபர் திரு.வீ.பேரம்பலம் அவர்கள் வழங்கி கெளரவித்தார்.
திருமண வரவேற்பு
வவுனியா கலை இலக்கிய வட்ட நண்பர்களான திரு.ப.முரளிதரனும் செல்வி.சி.சிவாஜினியும் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டமையை வரவேற்று வட்ட நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வு 18.10.2008 அன்று சுத்தானந்த இ.இ.கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது. தம்பதியினருக்கு மாருதத்தின் வாழ்த்துக்கள்.
-36 -
 

மாருதம் 9 - 2008 சமூக, கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
18.06.2008 நிகழ்வு 117
கண்டாவளைக் கவிராயரின் கரைச்சிப்பள்ளு
வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் 116வது நிகழ்வு 1806.2008 காலை 10.45 மணியளவில் வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க கலாசார மண்டபத்தில் தமிழ்மணி அகளங்கன் அவர்களின் தலைமையில் ஆரம்பமானது. அன்றைய நிகழ்வில் கண்டாவளைப்பிரதேசத்தை பிறப்பிடமாகக் கொண்டவரும் ஒய்வு பெற்ற கிராம சேவை அதிகாரியுமான கண்டாவளைக் கவிராயர் என்னும் புனை பெயரைக் கொண்ட சித்தர்குமாரவேலு இராசையா அவர்களின் “கரைச்சிப்பள்ளு” என்ற நூல் வெளியீடு இடம் பெற்றது. வவுனியா பண்டாரிகுளம் விபுலானந்தா கல்லூரி முன்னாள் அதிபர் பேரம்பலம் அவர்களின் மங்கள விளக்கேற்றலுடன். வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவன் செல்வன் ஞா.வசந் தின் தமிழ் வணக்கப் பாடல் இடம் பெற்றது. தமிழாலும் சைவத்தாலும் சமூகத்திற்கு அரும்பெரும் பணியாற்றி சர்வதேசமும் அறிந்த பெருமைக்குரிய துர்க்கா துரந்தரி கலாநிதி சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களையும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வானொலி நாடகத்தில் முத்திரை பதித்துக் கொண்ட ஜோர்ச்சந்திரசேகரன் அவர்களையும் நினைவுகூர்ந்து மெளன அஞ்சலியும் இடம் பெற்றது. நிகழ்வின் வரவேற்புரையினை திரு.த.பிரதாபன் (உப செயலாளர் வ/க.இ.ந.வட்டம்) அவர்களும் நன்றி உரையினை திரு.மா.ஜெகன் அவர்களும் வழங்கியிருந்தனர்.
நூலினை வவுனியா விபுலானந்தாக் கல்லூரியின் முன்னாள் அதிபர் திரு.வீ.பேரம்பலம் அவர்கள் வெளியிட, கண்டாவளை சமாதான நீதவான் திரு.கா.பஞ்சாட்சரம் அவர்கள் பெற்றுக் கொண்டார் சிறப்புப் பிரதிகளை ஒய்வு பெற்ற காணி உத்தியோகத்தர் திரு.ஐ.நடராஜா அவர்களும், அதிபர் வவுனியா மகாறம்பைக்குளம் அ.த.க.பாடசாலையைச் சேர்ந்த திரு.S.இராஜநாயகம் அவர்களும் பெற்று ஆசிரியரின் பணியைக் கெளரவித்தனர்.
“இது ஒரு விழா அல்ல, நிகழ்வு. இன்று மங்கள விளக்கேற்றும் போது இந்த மண்டபத்தை சுற்றி அடித்த சுழல் காற்றுக்கு சுவாலைகள் சுழல்வது போல் தான் எமது நிலைமையும். பெருமளவு ஆர்வலர்களை இணைத்து கூட்டி விழாவாக செய்ய முடியாத நிலைமையில் ந:ம் இப்போ உள்ளோம்.” என கடந்தகால வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் செயற்பாடுகள் பற்றி மீள நினைவு படுத்தினார் தமிழ்மணி அகளங்கன் அவர்கள். உண்மையில் அன்றைய காலங்களில் வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தில் பயன்பெற்ற பயனாளிகள் அதிகம். கல்வித்துறையினர் மாணவர்கள், படைப்பாளிகள் என்று பெற்ற அனுபவங்களும், பலன்களும், பயன்களும் அதிகம். மண்டபம் வெறும் பார்வைக்குரியதாகவன்றி பங்குகொள்வதற்குரியதாகவே செயல் கொள்ளும். கவிதைகள், சிறுகதைகள், கருத்தாடல்கள், நடனங்கள், நாடகங்கள், கவிதாநிகழ்வுகள் இசைக்கச்சேரிகள், நூல் வெளியீடு என்று மண்டபம் நிரம்பப் பெற்றிருக்கும். இவ்வாறு “ஒரு பயனுள்ள கருத்தாடல்
- 37

Page 21
மாருதம் 9 - 2008 சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
களமாகவும் நாம் இன்றைய நாளை பகிர்ந்து கொள்ள முடியும். ஏனெனில் பள்ளுப்பிரபந்தம் பற்றிய கற்பிதம் இங்கு அமைந்திருந்தது. பள்ளு இலக்கியம் பற்றி ஒரு சிறந்த கற்றல் தெளிவை பெறக்கூடிய சந்தர்ப்பமாக இந்தக் களம் அமைந்திருந்தது” எனலாம்.
சுழன்றும் ஏர்ப்பின்னது, உலகம், அதனால், உழந்தும் உழவே தலை.
இன்றைய உலகம் ஏர்க்குப் பின்னால் சுழலவில்லை. அதனால் தான் இன்று பட்டினி அதிகரிக்கின்றது எனக் கூறும் தமிழ்மணி அகளங்கன் அவர்கள் பள்ளுப்பிரபந்தத்தில் பள்ளனும் அவனது இரு மனைவியர்களான மூத்தபள்ளி இளையபள்ளி ஆகியோரும் பண்ணையராகிய ஆண்டையும் முக்கிய பாத்திரங்கள். பள்ள நிலத்தில் விவசாயம் செய்ததால் பள்ளன் எனக் காரணப் பெயர் பெற்ற விவசாயி பிற்காலத்தில் தாழ்த்தப்பட்ட இனத்தவனாக மாற்றப்பட்டது மிகக் கொடுமையானது வேதனைக்குரியது. பள்ளுப்பிரபந்தத்தில் நாட்டு வளம் கூறும் பகுதி மிகவும் முக்கியமானது. இந்நூலாசிரியர் இப்பள்ளுப்பிரபந்தத்தை பாடியதே இதற்குத் தான் என்று சொல்லும் வண்ணம் அமைந்துள்ளது இப்பிரபந்தம், கரைச்சிப்பிரதேச வளங்களையும், கோணகுளக் கற்பகபிள்ளையாரின் பெருமைகளையும் பாடுவதாக இப்பிரபந்தம் அமைந்துள்ளது. என்றார்.
வவுனியா வளாக விரிவுரையாளர் திரு.கந்தையா யூரிகணேசன் அவர்கள் தனது வெளியீட்டுரையினை மிகவும் சுருக்கமாகவும் வேகமாகவும் நிகழ்த்தியிருந்தார். இன்றைய எமது வெடிகுண்டுச் சூழலையும், எம்மையும் பற்றி சிந்திக்க வேண்டியவர்களாக இருப்பதனால் வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் உயர்வேகம் இப்போ சில காலங்கள் சுருக்கங்கண்டுள்ளமை பற்றியும் ஆதங்கம் கொண்டார். வவுனியா கல்வியிற் கல்லூரி விரிவுரையாளர் திரு.P.சத்தியநாதன் அவர்கள் தனது நூல் அறிமுக உரையில் குறிப்பிடும் போது “இழந்த காலங்களை செயல்களை மீட்டிப்பார்த்து நினைவு படுத்த வேண்டியவர்களாக நாம் இருக்கின்றோம். அது தான் கரைச்சிப் பள்ளு. இந்த நூலினை தன் பிரதேசம் பற்றி, தான் வாழ்ந்த காலம் பற்றிய அனுபவத் தொகுப்பாக ஆசிரியர் தந்துள்ளார். கண்டாவளை விநாயகரை மையமாக வைத்து வாழ்வை கருத்தில் கொண்டு இந்நூலைப்படைத்துள்ளார். சின்னத்தம்பிப் புலவர் சோமசுந்தரப்புலவர் ஆகியோர் கலந்த கலவை போல், நீண்ட வாசிப்புக்குரிய புலவராக இவர் தெளிவுபடுகின்றார் எனலாம். எமது அண்மைக்காலப் பிரச்சனைகளை பள்ளுவடிவமாக கொடுக்க முடியும் என்பதற்கு இந் நூல் உதாரணமாகும். மாணவர்கள் புதுக்கவிதை என்று மரபையும் விட்டு புதுக்கவிதையையும் விட்டு ஏதோ எழுதி வருகின்றனர். மரபு இலக்கணத்தை தூக்கி எறிந்து விடுகின்றனர். மாணவர்களிற்கு வாசிப்பு மிக தேவை. பாரம்பரிய இலக்கியம் பற்றிய பரிச்சயம் தெளிவு அவசியம், அது பற்றிய அக்கறை கொள்ள வேண்டிய தேவையும் உள்ளது. மாணவர்களின் வாசிப்பை அதிகரிப்பதன் ஊடாக புதிய வடிவங்களை மரபுகளினூடாக கொண்டு வர முடியும்” என்றார்.
நூலின் முன் அட்டைப்படம் பச்சைப்பசேல் என்ற வயலில் மாடுகள் பூட்டி நிலம் உழுவதனையும், பெண்கள் சேற்றுவயலில் நாற்று நடுவதனையும்,
-38 -

மாருதம் 9 - 2008 சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
எடுத்துக்காட்டுவதுடன் தூரத்தே நீலவானம் வயலின் தொலைவில் பனையும், அடர்ந்தகாடும் இயற்கை அழகே ஆங்காங்கே ஆண் தொழிலாளிகள் சிலரையும் அந்தப்படம் உள்வாங்கிக் கொண்டு உள்ளது 60 பக்கங்களைக் கொண்ட இந்நூல்பற்றி மிகவும் ஆழமாகவும் விரிவாகவும் ஆரம்பம் தொட்டு இன்று வரையான பள்ளுப்பிரபந்தம் பற்றிய பெரும் கற்பித்தலையே நடாத்தி முடித்தார் நூல் ஆய்வாளர் பண்டிதை செல்வி யோகலஷசுமி சோமசுந்தரம் அவர்கள்.
பெருக்கெடுக்கும் காட்டாற்றை அப்படியே விட்டால் எந்தப்பிரயோசனமு மில்லை அதைக் கட்டுத்திட்டத்திற்குட்படுத்தி வாய்க்கால் மூலம் விட்டால் நாட்டுக்கு, மக்களுக்கு பயன் உண்டு. அதே போல் இலக்கியம் என்ற பேராற்றை மக்கள் பக்கம் விடுவதற்கு படைப்புக்களை முன்வைக்கின்றனர். முன்வைக்க வேண்டிய தேவை உள்ளது எனக்குறிப்பிட்டார் நூலாசிரியர்.
6.08.2008 நிகழ்வு 118
o
முல்லைமணியின் கவிதைகள்’ நூல் வெளியீடு
முல்லைமணி வே.சுப்ரமணியம் அவர்களின் “முல்லைமணியின் கவிதைகள்” நூல் வெளியீட்டு விழா தமிழ்மணி அகளங்கன் அவர்களின் தலைமையில், வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்வின் பிரதம விருந்தினராக வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி.V.R.A. ஒஸ்வேல்ட் அவர்கள் கலந்து உரையாற்றும் போது வெளியிட்டிருந்தார்.
இன்றைய மாணவர்களின் செயற்பாடுகள் மாணவ உலகம் பிழையான பாதையில் தறிகெட்டுப் போவதை அவதானிக்க முடிகின்றது. இந்தநிலை மாற்றப்பட வேண்டும். இப்போது உள்ள மாணவர்களுக்கு கொன்றை வேந்தன், ஆத்திசூடி தெரியாது. புத்தகம் படிப்பதில்லை. பார்ப்பதுமில்லை ரியூசன் Class, Personal Class போகினம். என்று கடைசி O/L.A/L PaSS வீதம் குறைவு பிள்ளைகள் எங்க என்று பார்த்தால் Computer Centerகளில் தான் அவர்களின் நேரம் கடத்தப்படுகின்றது.
இது தான் இப்ப உள்ள நிலை மாணவர்களை தட்டி எடுத்து நிறுத்த கலை இலக்கியம் முக்கியம் கவிதை இலக்கியம் எல்லாருக்கும் வராது. அவர்களின் ஆற்றல் திறன் மாணவர்களிடம் கண்டுபிடிக்கபட்டு ஊக்குவிக்கப்பட வேண்டும் தள்ளாத வயதிலும் முன்னின்று உழைத்து வரும் முல்லைமணி அவர்களை எம் மாணவர்கள் உதாரணமாகக் கொண்டு செயற்பட வேண்டும். அதைப் பின்பற்ற வேண்டும் எழுத்தாளர்களை ஊக்குவிக்க எமது வலயத்தினுடாக ஒரு திட்டத்தை முன்வைத்துள்ளேன். வெளியீடு செய்யும் எழுத்தாளர்களின் நூல்கள் 80 கொள்வனவு செய்து அவை எமது வலயத்தை சேர்ந்த 80 பாடசாலைகளிற்கும் கொடுக்க முடியும். எழுத்தாளர்கள் உரிய முறையில்
-39 -

Page 22
மாருதம் 9 - 2008 சமூக, கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
வலயப்பணிமனையுடன் தொடர்பு கொள்ள முடியும். என்ற திட்டத்தை வெளிப்படுத்தினார் வலய கல்விப் பணிப்பாளர் திருமதி.VR.A.ஒஸ்வேல்ட் அவர்கள்.
எழுத்தாளர்களிற்கு இச் செய்தி நல்லதொரு வரப்பிரசாதம் என்றே கூறவேண்டும். எழுத்துலகப் பணி என்பது அவ்வளவு இலகுவான காரியமல்ல. அதனை ஊக்குவிக்கவும் பலம் கொடுக்கவும் அதற்கென ஒரு சமூகம் இருக்கும் போது அந்த நம்பிக்கையுடன் காரியம் ஆற்ற முடியும் அப்படியான தொரு பலம் கொண்ட செய்தியே எழுத்தாள்களுக்குக் கிடைத்துள்ளது.
அரசியல், சமூகம், கல்வி, போன்ற சூழல்கள் யாவும் இப்போ எமக்கு ஏமாற்ற சூழலாக உள்ளது. எம்மை நாமே விற்றுக் கொண்டிருப்பவர்களாக இருக்கின்றோம். வெளிநாட்டு வாழ்க்கை எவ்வளவு ஏமாற்றமானது என்று தெரிந்தும் அதை நோக்கி ஒடுகின்றோம் எம் இலக்கியப் படைப்புக்களை யார் வாங்குகின்றார்கள்? எம் உணர்வுகளை எழுதியவர்கள் எங்கே? நாம் இவ்வளவு காலமும் வளர்த்து விட்டவை எங்கே போகப் போகின்றது? எம் சிந்தனையில் வந்தவையெல்லாம் என்னவாகும்? இதை இன்னொரு சந்ததி பயன்படுத்துமா? என்ற கேள்வி வருகின்றது. இந்த மண்ணை விட்டு ஓடுகின்றார்கள். அழுகின்றார்கள். ஆனால் கூடியிருந்து கதைக்க ஆட்கள் இல்லை. வாய்ப்பில்லை நல்ல சினிமா பார்க்க முடிகின்றதா? மனம் விட்டுக் கதைக்க முடிகின்றதா? நாம் நச்சு சூழலில் தான் இலக்கியப் பணி புரிகின்றோம். ஆனாலும் நம்பிக்கை இருக்கு கீற்று ஒளி வீசும் எனத் தன் ஆதங்கம் நிறைந்த கருத்தை முன்வைத்தார் வெளியீட்டுரைவழங்கிய விரிவுரையாளர் திரு.ழரீகணேசன் அவர்கள்.
ஓய்வு பெற்ற அதிபர் திரு.மு.தில்லையம்பலம் அவர்கள் தனது வாழ்த்துரையில் குறிப்பிடுகையில். “முல்லை மணியின் கவிதைகளைப் படிப்பதாயின் சங்கத்தமிழ் படித்திருக்க வேண்டும். அந்த செய்யுளின் பெருமை விளங்கியவர்களினால் தான் இந்த கவிதையின் பெருமையும் புரியும்’ என்றார்.
நயவுரையை ஆற்றிய திரு.கெளரிகாந்தன் குறிப்பிடுகையில் “முல்லைமணியின் கவிதைகள்’ படித்துப் பார்க்க இனிமையானது. இவரிற்கு கவிதை உள்ளம் எப்படி வந்தது என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். முல்லை நகரின் சூழல் இவரைக்கவர்ந்துள்ளது என்றே சொல்ல முடியும். எனக் குறிப்பிட்ட இவர் நூல் பற்றிய ஆரம்பம் முதல் முடிவுவரை சகல விடயங்கள் பற்றியும் மேலோட்டமான கருத்துக்களை முன்வைத்துச் சென்றார்.
மேலும் இந்நிகழ்வின் காரணகர்த்தாவாகிய “சுருதிபேதமடைகின்றது” நூலின் ஆசிரியர் திரு.இரா.உதயணன் அவர்களை பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து கெளரவித்தனர் அத்துடன் நிகழ்வின் கதாநாயகர் திரு.திருமதி.முல்லைமணி அவர்களின் 75வது ஆண்டு பவளவிழா கெளரவிப்பும் சிறப்பு நிகழ்வாக இடம்பெற்றது.
வாழ்த்துரையினை கல்விப்பணிமனையைச் சேர்ந்த திரு.கி.உதயகுமார்
- կ0 -

மாருதம் 9 . 2008 சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
அவர்களும், ஒய்வு பெற்ற அதிபர் தில்லையம்பலம் அவர்களும் நிகழ்த்தியிருந்தார்கள். நூலிற்கான பதிலுரையினை நூலாசிரியர் சார்பில் அவரது மகள் திருமதி சுபா அவர்கள் நிகழ்த்தினார். நிகழ்வின் இறுதியில் வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் அரங்கியற்குழுவினரின் “தமிழ் வளர்ப்போமா?” என்ற நாடகமும் இடம் பெற்றது.
* “தமிழ் வளர்ப்போமா?’நாடகம் பற்றிய குறிப்புரைகள்.
1)
2)
3)
4)
திருமதி.மாணிக்கவாசகம் (பிரதிக் கல்விப் பணிப்பாளர்) நல்ல தமிழ், ஒன்றிணைந்தகாட்சி, மேடைப்பிரயோகம், உணர்ச்சி வெளிப்பாடு பொருத்தமான சந்தர்ப்பத்தில் கண்டுகொள்ள முடிந்தது. இரு பாத்திரங்களினூடாக கருத்து வெளிப்பட்டமையைக் காணமுடிந்தது.
திருமதி.பு.ஐயம்பிள்ளை சிறப்பானது, உண்மை பொதிந்தது, அவர்கள் அப்படித்தான் குழப்புவார்கள் என்று குழப்புவதற்கு ஒரு பின்னணி உண்டு என்பதை ஒரு பாத்திரம் ஊடாக பலதைக் காட்டியது.
திரு.இராஜேஸ்வரன் முதலாம் தலைமுறையின் வழிப்படுத்தலில் இன்று முத்தாய்ப்பாய் அமைந்த விடயம் இது. 5 நிமிடம் கொடுத்து தலைப்பு கொடுத்தால் உடன் நாடகம் செய்யக் கூடியவர்கள் தவயோகனும் வினோத்தும் அவர்களின் நடிப்புத் திறமைக்கு நன்றி.
வரதன் - நூல் வெளியீட்டு விழாவில் நாடகம் அரங்கேறுவது மகிழ்ச்சி தருகிறது. நாடகம் அரங்கேறுவது கடின காரியம். அவர்களின் ஒத்துழைப்பு எமக்கு சில விடயங்களை ஆழமாக சொல்லிப் போகிறது. தமிழ் என்றால் அதுபற்றி ஆழமாகத் தேட வேண்டிய காலமாகி, அதே போல் எமது இனத்தையும் தேட வேண்டிய கட்டம், தேவாரம் திருவாசகம், மறந்தநிலை. தமிழ் நூல் தேடிப் படித்தல் குறைவு. ஒளவை திருவள்ளுவர் ஆகியோரை மறந்து விடுவோமோ? என்ற எண்ணப்பாட்டில் இந்த விழாவில் இது அரங்கேற்றப்படுவது மகிழ்ச்சியான விடயம். இரு பாத்திரம் ஊடாக பேசப்பட்ட விடயம் எம்மை உணர்வூட்டியது எனலாம். நாம் திரண்டு செல்ல வேண்டிய காலம் ஒரு புறம், அணி திரள் வேண்டிய காலத்தில் இன்னொருபுறமாக உள்ளோம்.
*நாடக மாந்தர்கள் :- சி.கலெக்சன், சி.கோகிலன், பா.நவநீதன், மா.லியத், சடயானா, சஜிவிதா, ஜெகள்ஹினி, மா.தர்வழிகன், ததஜிவன், ஜீ.சஞ்ஜீத்குமார் பே.இராகுலன், த.குணசீலன், சு.வினோத், பா.பாலேந்திரா, த.தவயோகன், பா.கேதீஸ்வரன் (இசை) அ.நிருசன்
(இசை).
ー4退ー

Page 23
மாருதம் 9 . 2008 சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
4.10.2008 நிகழ்வு 19
தமிழ்மணி அகளங்கன் எழுதிய பத்தினித் தெய்வம் (நாட்டிய நாடகங்கள்) நூல் வெளியீடு
வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டமும், நிருத்திய நிகேதன நுண்கலைக் கல்லூரியும் இணைந்து நடாத்திய தமிழ்மணி அகளங்கன் அவர்களின் “பத்தினித் தெய்வம்’ நாட்டிய நாடகங்கள் நூல் வெளியீடும், நாட்டிய நாடக நிகழ்வும் கடந்த 14-10-2008 (செவ்வாய்) அன்று காலை 9.30 மணியளவில் வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க நடராஜர் மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்வினை கலாநிதி கந்தையா ழரீககேணசன் அவர்கள் தலைமை தாங்கி நெறிப்படுத்தினார். பிரதம விருந்தினராக வவுனியா தெற்கு வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி VR.A.ஒஸ்வேல்ட் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக வவுனியா தமிழ் மத்தியமகா வித்தியாலய அதிபர் திரு.சி.உலகநாதன் அவர்களும், வ/நகரசபை செயலாளர், திரு.த.ஜெயராஜா அவர்களும், வ/தெற்கு (அழகியல்) உதவிப்பணிப்பாளர் செல்வி.க.கந்தையா அவர்களும், பிரதேசசடை செயலாளர் திரு.இதிருமேனி அவர்களும்,விசேட விருந்தினர்களாக தலைவர் சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத் தலைவர் திரு.நா.சேனாதிராஜா அவர்களும், பொதுமுகாமையாளர் வ/ப.நோ.கூசங்கம் திரு.அ.சபாரதி ஆனந்தம் அவர்களும், கெளரவ விருந்தினர்களாக முல்லைமணி வே.சுப்பிரமணியம் அவர்களும், திரு.சு.சண்முகவடிவேல் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
கலாநிதி கந்தையா றூர்கணேசன் அவர்கள் தமது தலைமை உரையில் இன்று பொன்னான நாள். எல்லோரும் கலைகள் என்று பேசும் நாள். சங்கீதம், நடனம், நாடகம் சிற்பம், தொலைக்காட்சி என பேசும் நாள் சாப்பாடும் நித்திரையும் போக வசதியாய் இருந்தால் போதும் என்கின்ற மனோபாவம், விட வேண்டும். இன்று நாம் வாழும் சூழல், கல்விச்சூழலாய் கலைச்சூழலாய் வரவேண்டும் வந்து கொண்டிருக்கின்றது. கலைஞர்களுக்கு ஊக்குவிப்பு அவசியம். இன்று எழுத்தாளர்கள், நடனக்கலைஞர்கள், பாடசாலைச் சமூகம் என்று அனைவரும் சங்கமிக்கும் களம் இது. இங்கு எழுத்தாளனின் சிறப்பைக் கவனிக்க வேண்டும். வீரமணிஜயர் நாட்டியம், பாடல், ராகம், தாளம், பாடல் இயற்றுதல் எனபல்வகை ஆற்றல் கொண்ட கலைஞன். இங்கு தமிழ்மணி அகளங்கனும் ஈடுபடாத துறைகளே இல்லை என்று தான் சொல்லலாம். இந்த வெளியீடுகள் அவருக்கானதல்ல. பின்வரும் சந்ததிக்கானது. அகளங்கனின் வாலி நூல் பல்கலைக்கழக மட்டத்தில் ஆய்வாக இன்று உள்ளது. மறுபுறத்தில் நாம் சினிமாக்களைப்பாடி பரிசு பெற்று அதற்கு ஆடுபவர்களாக மாறிவிட்டோம் அதுவல்ல முக்கியம், கலைத்துவத்தின் நுகர்வு எப்படிப்பட்டது? எப்படி அமையப் போகிறது? நல்ல கலையை சமூகத்துக்கு அறிமுகப்படுத்தவேண்டும். ஆழமான சமுதாயம் வாழவேண்டும். அப்படி ஒரு சமுதாயம் இருப்பதனால் தான் இப்படிப்பட்ட விடயத்தை இந்தளவு. நிலைக்குள்ளும் செய்யமுடிகின்றது. கவிதை, சிறுகதை, சிறுவர்பாடல், நாட்டிய நாடகங்கள் பாரம்பரிய இலக்கிய தன்மை கெட்டுவிடாமல் பழைய விடயம் ஊடாக புதிய சமூகச் செய்திகளை
一车2一
 
 

மாருதம் 9 - 2008 சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
சொல்கின்றோம். திரும்பவும் பழைய விடயங்களை சொல்ல வேண்டிய தேவை வந்துள்ளது. நாட்டிய நாடகம் வருகின்றது சூரியயாழினி ஆசிரியையின் படைப்பில் வித்தியாச சுவை உண்டு. அதைக் கொடுக்க வேண்டிய தேவையும் எமக்குண்டு. சிறுவருக்குரிய எண்ணங்கள், சிந்தனைகளுக்குரிய கலைப்படைப்பில் அவர்கள் பங்கு கொள்ள வேண்டும். பிள்ளைகளுக்கு சாப்பாட்டைக் கொடுங்கள், பொறுப்பையும் கொடுங்கள், அத்துடன் கலை நிகழ்வுகளையும் காட்டுங்கள் இவையாவும் சமூகத்திற்கு போய்ச் சேரவேண்டும் எனவும் கோரிக்கையும் விட்டிருந்தார், தலைவர் அவர்கள்.
வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி.V.R.A. ஒஸ்வேல்ட் அவர்கள் குறிப்பிடுகையில் எமது வலயம் தேசிய மட்டத்தில் பல இடங்களில் முன் வந்துள்ளது எங்கள் மாணவர்களின் ஆடலை பார்க்க மனம் பூரிக்கின்றது. இச் செயற்பாடுகள் இன்னும் கூட வேண்டும். இது எமது சொத்து. அடுத்த பரம்பரைக்கு நாம் கொண்டு செல்ல வேண்டும். எனவே அதிபர் இந்த படைப்பை CDயாக வெளிக்கொணர வேண்டும் எனக்கூறி கலைஞர்களுக்கு தன் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.
எம் மண்ணில் இருந்து கவிதை, சிறுகதை, நாடகம், வருகின்றன. ஆனால் நாட்டிய நாடகம் வரவில்லை இன்று வீரமணி ஐயாவுக்கு பின் வருவது இந் நூல். மாவட்டமட்டம், மாகாணமட்டம் எனத் தாண்டி கடும் போட்டிகளையும் சூது வாதுகளையும் தாண்டி முதலாம் இடத்தைப் பெற்றுள்ளது. இந்தப்படைப்பு ஒன்றிணைந்த கலைப்படைப்பாக “பத்தினித் தெய்வம்” வெளிவருகிறது. சிலப்பதிகாரத்தை ஆசிரியர் அகளங்கன் இலகு தமிழில் தந்துள்ளார். சமகாலத்துடன் ஒப்பிடுகையில் ஆறுதல் தருவதாக உள்ளது எனக்கூறினார். ஆசிரியர் கதிர்காம சேகரன் அவர்கள், தமது வெளியிட்டுரையில், தொடர்ந்து நாட்டிய எழில் சூரியயாழினி வீரசிங்கம் அவர்களின் நெறியாள்கையில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவர்கள் பங்குபற்றிய பத்தினித் தெய்வம் நாட்டிய நாடகம் ஒருமணி 5நிமிடங்கள் வரை நடைபெற்றது. ஆசிரியை தேவமனோகரி நாகேஸ்வரன் அவர்களின் இசையமைப்பில், ஆசிரியை பேபி.ஜோசப்பின் கருணாகரன் அவர்கள் பாடியுள்ளார், மிருதங்க இசையினை திரு.கந்தையா கனகேஸ்வரன் அவர்களும், வயலின் இசையினை திருமதி.மனோரஞ்சினி கனகரட்ணம் அவர்களும் இசைத்திருந்தனர், வடமாகாணம் வரை போட்டியிட்டு 1ம் பரிசு பெற்ற நாட்டிய நாடகம் பத்தினித் தெய்வம் என்பதும் சிறப்பாக குறிப்பிடத்தக்கது.
கோவலனின் அநியாய கொலைக்கு கண்ணகி நீதிகேட்கின்றாள். நாம் கேட்க முடியாதவர்களாக, கதறி அழ முடியாத வர்களாக இருகின்றோம். இங்கு முழுப்பங்கும் நடனம், இசையமைப்பாளர்களிலேயே உள்ளது. சிறப்பாக இசையமைத்துள்ளார் ஆசிரியை. கலை இலக்கிய நண்பர்கள் வட்டம் வெற்றி பெற்ற படைப்புக்கள் மட்டுமன்றி பரிசு பெறாத படைப்புக்களையும் பல தடவை மேடையேற்றினோம். பார்வையாளர்களையும் தயார்படுத்த வேண்டியதும் உண்டு. இன்று பார்த்தவர்கள் இனியும் பார்ப்பார்கள் என்பதும் தெளிவு. எனவே வெற்றிப்படைப்புக்களையும் வெளியில் காட்ட வேண்டும் என்பதால் இந்த நிகழ்வை நடாத்தினோம் என்றார் ஆசிரியர் அகளங்கன் அவர்கள். நூலில் ‘கற்பின் கனலி என்ற நாட்டிய நாடகமும் இடம்பெற்றுள்ளது. இந் நாட்டிய நாடகமும் தேசிய மட்டத்தில் முதலாவது பரிசு பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
- 3 -

Page 24
மாருதம் 9 - 2008 சமூக, கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
துணைவேந்தருடன் சந்திப்பு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் என்.சண்முகலிங்கன், அவர்களை வரவேற்று 10-11-2008 அன்று மாலை 5.00 மணியளவில் வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தில் ஒரு சந்திப்பினை வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தினர் ஒழுங்கு செய்திருந்தனர்.
இச் சந்திப்பின் முக்கிய அம்சமாக யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் இசை, நடன பாடநெறிகள் உட்பட கலைத்துறைப் பாடங்களை ஆரம்பிக்க கோரி துணை வேந்தரிடம் மகஜர் கையளிப்பு நடைபெற்றது இந் நிகழ்வினை வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தினருடன் வவுனியா ஆங்கில மன்றம், வவுனியா இந்து மாமன்றம், வவுனியா சுத்தானந்த இ.இ.சங்கம் ஆகியன ஏற்பாடு செய்திருந்தன.
12.11.2008 நிகழ்வு 120
வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தினால் மாதந்தோறும் நடாத்தப்படும் பெளர்ணமி தின கருத்தாடல் நிகழ்வு இம்மாதம் (12-11-2008) வவுனியா சுத்தானந்த இந்துஇளைஞர் சங்க கலாசார மண்டபத்தில் காலை 11.00 மணியளவில் ஆரம்பமானது. அந் நிகழ்வில் எதிர்கால நடவடிக்கைகள் பற்றி கலந்துரையாடப்பட்டன. முக்கிய தீர்மானங்களாக.
1. மாருதம் சஞ்சிகை 9 வெளியீடு 2. கலைஞர் கெளரவிப்பு PAC ஆனந்தராஜா,
திரு.அருணா செல்லத்துரை 3. SDYO அனுசரணையில் மாணவர்களுக்கான
சித்திரக்கண்காட்சியும், அவர்களுக்கான சான்றிதழ் வழங்குதலும் கவியரங்க பயிற்சியாளர்களுக்கான சான்றிதழ் வழங்குதலும். ஈழத்து நூல்களின் கண்காட்சி எந்தையும் தாயும் நாடகம் - அளிக்கை செய்தல் பத்தி எழுத்துக்கள் - நூல் வெளியீடு
5L60TLD நாட்டிய நாடகம் இசை இளவரசர் திருஜெயந்தனுக்கு வரவேற்பு
一车车一
 

மாருதம் 9 - 2008 சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
போன்ற நிகழ்ச்சிகள் தொடர்பாக கலந்துரையாடலும் தீர்மானம் எடுத்தலும் நடைபெற்றது. நிகழ்வில் ஆசிரியர் அகளங்கன், கலாநிதி பூரிகணேசன், விரிவுரையாளர் கெளரிகாந்தன், விரிவுரையாளர் பார்த்தீபன், ஆசிரியர் பூரீகந்தவேள், திரு.சூடாமணி கண்ணையா, பிரதாபன், ஜெகன், தர்மினி, நந்தா, பாலா ஆகியோர் பங்கு கொண்டனர்.
கலை இலக்கிய விழா - 2008
கலாசார அலுவல்கள் திணைக்களம் வவுனியாமாவட்டச் செயலகம், மாவட்ட கலாசார பேரவையும் இணைந்து 30.08.2008 அன்று வவுனியா நகரசபை அரங்கில் நடாத்திய கலை இலக்கிய விழா 2008ல் தமிழ்மணி அகளங்கன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற கவியரங்க நிகழ்வினை படத்தில் காணலாம். நிகழ்வில் வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தினைச் சேர்ந்த றாஜேஸ், நந்தா, தள்மினி, ஜெகன், சிவா, பிரதாபன், பேனாட் ஆகியோர் பங்கு கொண்டனர்.
தொகுப்பு : யாழவள்
- կ5 -

Page 25
மாருதம் 9 . 2008 சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
உன்னைக் காணவில்லை
நிலவொளி புத்தம் புதிய கலை எழுதும் தெறித்ததா? கதை இதுதான் தண்ணிரலை வந்து செந்தமிழ்ப் பாட்டின் மோதிற்றா? நயம் இது தான். உன் முகத்தில் சித்திரமே கிராமன் பார்த்தானா? சுந்தரமே
நீ பூத்தாய்! சுந்தர வீரமே. நீ செந்தாமரையா? நலிந்த இழவின் செழுந்தமிழா? வனப்பு இதுவே! உன்னால் முடியும் உயிர் நாற்றின் தெறிப்பு செழிப்பாய் வாழ! அன்பே வா தலைவன் வரவில்லை; கங்குல் கரைஞ்சு போச்சு தண்ணீர் விழுது விழவில்லை; நிலவொளி வெளுத்திருச்சு உன் கூந்தல் முடியின் உன்னைக் காணவில்லை ஈரக் காற்றிதுவே இன்னமும் என் அன்பு மனசின் காரிருள் விடியவில்லை. தாகத்திற்கு விடை எதுவோ? ೨.GUIನ್ದ
வவுனியாவில் வெளிவந்த நூல்கள்
ー46ー
 

மாருதம் 9 - 2008, சமூக, கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
சிறுகதை
சுமங்கலி
சுதர்சிக்கா
யன்னல்ப் பக்கமாய் முகத்தைத் திருப்பி பார்வையை வெளியே விட்டபடி ‘பஸ் சில் அமர்ந்திருந்தாள் நிந்து அவளுக்கு அப்படியிருக்க கஷ்டமாய்த்தான் இருந்தது. கழுத்து வேறு வலித்தது. ஆனாலும் பிடிவாதமாய் அப்படியே இருந்தாள்.
கட்டடங்கள், வீடுகள், மரங்களென போட்டி போட்டுக் கொண்டு நகர்ந்து கொண்டிருந்தன. இயற்கைக்கும் அவளுக்கும் உறவுகள் நிறைய. மழைநாட்களில் மழைத்துளி போடும் குமிழிகளை எண்ணிக் கொள்வது பணிநேர விடியலில் அது உமிழ்ந்து விட்டுப் போன பனித்துளிகளில் நனைவது இவ்வாறன இயற்கையோடான விளையாட்டுக்கள் எல்லாம் அவளது பிடித்தமான செயல்கள்.
ஆனால் இன்று இவற்றையெல்லாம் ரசிக்கும் நிலையில் அவள் இல்லை. மரங்களை விலத்தி சூரியனைப் பார்க்கின்றாள். கொஞ்சம் உயர்ந்து ஒளி கூடியிருந்தது. உற்றுப் பார்த்துக் கொண்டே வந்தாள். கண்கள் கறுப்பாகி சூரியன் மறைந்து போய் கணவன் முகம் வந்து நின்றது. தனக்குள் சிரித்துக் கொண்டாள்.
“இங்கேயும் என்னை விடப்போறதில்லையா..?”
என்று முறையிடுவது போல தானே கூறிக் கொண்டவள் நினைவைக் கலைக்க தலையை ஆட்டினாள். தலைதான் வலித்தது. தலையைக் கையில் தாங்கிப் பிடித்தபடி குனிந்து அமர்ந்திருந்தாள்.
கணவனை நினைக்க அவளுக்கு அழுகையும் ஆத்திரமும் தான் வந்தது.
“சீ. எப்படி.இவ்வளவு கல்லாய் போயிற்று.மனம்.” “ஒரு பெண் அதுவும் தன் மனைவியை இரவு என்றுகூடப் பாராமல். வெளியே தள்ளி விட்டு கதவைப் பூட்ட.?” “நல்ல வேளை எனக்கெண்டு ஒரு பிள்ளை இல்லாமல்ப் போயிற்று இருந்திருந்தா. இக்கதி பரம்பரையாய்ப் போயிருக்கும்.”
இப்படியாய் நினைத்துக் கொண்டிருந்தது அவளது மனம், அம்மா இல்லாத அவளை அப்பாவும் சித்தியுமாய் சேர்ந்து ஆளாக்கினார்கள்தான் ஆனாலும் அம்மாவின் இடம் நிரப்பப்படாமலேயே இருந்தது.
“இறைவா நல்ல வாழ்க்கை கொடு என் மகளுக்கு” என்று சாமியறையில் நின்று மனம்விட்டு வேண்டிக் கொள்ளும் அந்த கண்டிப்பான அப்பாவை அவள் அந்தக் கணங்களில் மட்டும் தான் நேசித்திருக்கிறாள்.
ー47ー

Page 26
மாருதம் 9 - 2008, சமூக, கல்லி கலை இலக்கிய சஞ்சிகை
ஏனோ தெரியாது எப்போது அவள் அம்மா செத்துப்போனது தற்கொலை செய்துதான் என்று பாட்டி சொல்லி அறிந்தாளோ அன்றிலிருந்து அவளுக்குத் தந்தை மேல் வெறுப்புத்தான்.
“கட்டின புருஷன் துணையிருந்தால் ஏன் மனைவி தற்கொலை செய்து கொள்ளப் போகிறான்.” என்பது அவளின் நியாயமான கோபம், அப்பா கண்டிப்புக் காட்டும் போதெல்லாம் அம்மாவிற்காக மானசீகமாய் அனுதாபப் படுவாள்.
தந்தை அவளுக்கு மாப்பிள்ளை பார்க்க அவள் எடுத்துக் கொண்ட அக்கறை கூட எரிச்சலைத்தான் ஊட்டியது இருந்தாலும்,
“பரவாயில்லையப்பா உங்களை மாதிரியே ஒரு கணவனைத் தேடித்தாருங்கள் நானும் அம்மாவைமாதிரி செத்துப் போகிறேன்.” என்று மனதிற்குள் புழுங்கிக் கொள்வதோடு சரி. அட அது கூட இன்று எவ்வளவுக்குச் சாத்தியப்படப் போகிறது என்று எண்ணியவள் ஏதோ திடீரென பொறிதட்ட விறைப்பாக நிமிர்ந்தாள்.
“இல்லையில்லை நான் தற்கொலை செய்து கொள்ளப்போவதில்லை.” என்று நினைத்து மறுப்பாய் தலையசைத்தும் கொண்டாள்.
தற்கொலை என்றதும் மீண்டும் கணவன் ஞாபகமே வந்தது.
அப்பா வரன் தேடிக் கொண்டிருக்க அவளை எங்கேயோ கண்டதாகக் கூறிப் பெண்கேட்டு வந்தவன் தான் திலீப். அவனுக்கும் அம்மா இல்லையென்றதும் மனமிளகிப் போய் திருமணமும் முடித்தாயிற்று.
ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் எல்லாமாகத் தொண்ணுாறு நாட்களில் வெளுத்துப் போயிற்று அவனது சாயம். அவனது ஒபிசில் வேலை செய்யிற ஒரு பெண் அவனுக்கு தொடர்பாம். கொஞ்சநாளாய் அவனது போக்கு சரியில்லை தான். ஆரம்பத்தில் திரும்பிக் கேக்க பயம். பின்பு நாளாக ஆக தலைக்கு மேல் வெள்ளம் போயிற்று.
எவ்வளவுதான் மனசில் வைராக்கியம் இருந்தாலும் அவளுக்கு எதிர்த்துப் பேசத்துணிவில்லை. தினம், குடி, அடி என்று அக்கம் பக்கத்திற்குத் தெரியாமல் இருந்த சமாசாரங்கள் அன்றைய இரவோடு அம்பலமாயிற்று.
வழமையை விட லேட்டா வந்த கணவன் குடித்து விட்டு வருகிறான் என்பது தெரியாமல்
“என்னங்க. என்னத் தனிய விட்டுட்டு. அதவிட உங்களுக்கு ஏதோ என்று பயந்து போய்ட்டன்.”
- 48

மாருதம் 9 - 2008 சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
என்று தனிய இருந்த ஆதங்கத்தில் கேட்டுவிட்டாள். அது, அவள் அவனை எதிர்த்துக் கதைத்த முதல்வார்த்தை,
ஆனால் அது மோசமான நிலைமையையே தந்திருக்கிறது. இதற்காக அவன் கூறிய வார்த்தைகள்; வெளியில் தள்ளிப் பூட்டிவிட்டுப் போனது; யன்னல் திறந்தும் திறவாததுமாய் எட்டிப்பார்த்து அசிங்கப் படுத்திய சுற்றம். என்று எல்லாமே அவளுக்கு அவமானத்தையும் கோபத்தையுமே தந்தது.
விடியும் வரை ஒரு பொட்டுக் கண்ணும் மூடாமல் சிந்தித்து எடுத்த முடிவு இலட்சியத்திசையில் இப்போது மாறிப் போயிருந்தது.
அதற்குப் பிறகு ஒரு நிமிடம் கூட அவளால் ‘பஸ் சில் இருக்க முடியவில்லை. அவளது அவசரத்திற்கு பஸ் உதவி செய்வது போல அடுத்த தரிப்பிடத்தை வெகு விரைவிலேயே போய்ச் சேர்ந்தது.
அவசரமாக இறங்கியவள் நேராக கடைக்குப் போய் இரண்டு வெள்ளைச் சாறிகள் வாங்கிக் கொண்டாள். அவளது ஊருக்கு ‘பஸ் எடுத்தாள். போய்ச் சேர்ந்தும் விட்டாள். இனிப் போகவேண்டியது அவளது வீட்டிற்கல்ல. முதியோர் இல்லம் ஒன்றிற்கு.
ஆம் அவளைப் பொறுத்தவரை இது கணவனுக்குக் கற்பிக்கப் போகும் படிப்பினை.
அவளால் முடிந்த ஒரு போராட்டம்.
வாழ்க்கையில் பங்கு போடக்கூடாத உறவு கணவன் மனைவி உறவுதான். அது இல்லையென்று ஆனபிறகு எத்தனை தடவை கூசிப்போயிருப்பாள். எத்தனை தடவை அருவருத்திருப்பாள். இனியும் எவ்வளவு காலங்கள் தான் மனசுக்குள் மறுகுவது?
அன்றைய இரவு நடந்த சம்பவம் அவளுக்குக்கடைசிப் பரீட்சை.
“அம்மா உன்னை மாதிரி தற்கொலை செய்து கொள்ள நான் ஒன்றும் கோழையில்ல. வாழ்ந்து காட்டுறன் பார் எனது, உனது புருஷன் மார் வேண்டுமானால் செத்துப் போகட்டும்” என்று கறுவிக் கொண்டு முதியோர் இல்லம் போனாள்.
அங்கே அந்த முதியோர் இல்லத்தை அவளது தோழி நடத்திவந்ததால் அவளது திட்டமும் இலகுவாயிற்று. அவள் அங்கு பணியாற்றத் தொடங்கி ஒரு மாதம் ஆயிற்று. மனசில ஒரு ஆவல் ‘என்னைத் தேடி எங்கையெல்லாம் போயிருப்பார் என்னை நினைத்து எவ்வளவு கவலைப் பட்டிருப்பார்.” என்று.
திலீப் அந்தப் பெண்ணையே திருமணம் செய்து விட்டான் என்பதும் திடீரென
- 49

Page 27
மாருதம் 9 - 2008 சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
ஏதோ அதிஸ்டலாபச் சீட்டு விழுந்தது என்பதும் அந்தக்காசில நிந்துவுக்கு சீதனமாகக் கொடுத்த வீட்டைப் புதுப்பிக்கிறான் என்பதும் அவளாக விசாரித்து அறிந்து கொண்டது.
அவளுக்கு அந்த வீடு எல்லாம் தேவையில்லைத் தான் என்றாலும் சின்னப் பொறாமை எட்டிப்பார்க்கத்தான் செய்தது.
சட்டரீதியாக அவள் இன்னும் விவாகரத்துப் பெறவில்லை. இதனை வைத்துக்கொண்டு பழிவாங்கலாமா? என்று நினைத்தாள் “வேண்டாம் இன்னும் வாழ்க்கையிருக்கு. எனக்கு நிச்சயமாய் வரத்தான் போகிறது.’ என்று நம்பிக்கையோடு காத்திருந்தாள்.
அவளது நம்பிக்கை வீண் போகவில்லை. சும்மா ஒரு வெள்ளிக்கிழமை கோயிலுக்குப் போய் வந்தவளின் காதில் விழுந்த செய்தி இது.
“புருஷன் குத்துக்கல்லாட்டம் இருக்க விதவை மாதிரி திரிஞ்சா அவனுக்கு வருத்தம் வராமலா..? பின்ன.”
இது ஒரு குரல்.
“பொம்பிளை ஒழுங்கா இருந்தா புருஷன் ஏன் வேற இடம் போறான்.?
இது வேறு குரல்.
நிந்துவுக்கு “சுள்’ என்றிருந்தது. சாட்டையடி வாங்கியவளாய் நிமிர்ந்தாள் ஆனாலும் திரும்பிப் பார்க்க வில்லை.
“விழுந்து கிடக்கேக்க தூக்கிவிடாத சுற்றம் என்னவெல்லாம் கதைக்கும். இன்னும் எத்தின கதைக்கப் போகுது?” எண்ணிக் கொண்டாள்.
மனதைத்தேற்றிக் கொண்டு போய்விட்டாள். இரவு சாப்பிடப் பிடிக்கவில்லை. பழிவாங்க வேண்டுமென்று நினைத்தாளே தவிர நேரம் நெருங்க மனசுக்கு கஷ்டமாயிருந்தது நிறைய நேரம் அழுது விட்டாள். விடிய எழும்ப நேரம் ஆகிவிட்டிருந்தது காலைக்கடன் முடித்துத் தேனீர் குடிக்க அமர்ந்தவள் கையில் தபால் ஒன்றை கொண்டு வந்து வைத்து கையை மெல்ல அழுத்திவிட்டுப் போனாள் தோழி.
தெரியாத முகவரியோடு ஒரு தந்தி.
அவளின் கணவன் நுரையீரல் நோய் காரணமாக இயற்கை எய்தியுள்ளானாம். உரிமையுள்ள மனைவி என்ற வகையில் அவளது கணக்கில் இருந்து மரண வீட்டுச் செலவிற்காக பணம் எடுக்க உத்தேசித்துள்ளார்களாம். அதற்கு ஆவன செய்யுங்கள் என்று எழுதி உரிமையாய் உறவுமுறை போட்டு முடித்திருந்தாள் அந்தப் பெண்ணின் சகோதரி.
அவளுக்கு ஒரு கணம் திக் என்றிருந்தது வீங்கிப் போயிருந்த கண்கள் கண்ணி பட்டு எரிந்தது.
- 50 -

மாருதம் 9 - 2008 சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
தடுமாறியவாறு எழுந்தாள். ஆனால் திடமான முடிவோடு கணவனை அதே ஊரில் வைத்துக் கொண்டு விதவைக் கோலம் போட்டவளுக்கு இது ஒன்றும் கடினமாய்த் தோன்றவில்லை.
நேராகத் தோழியிடம் போய் இரண்டு நாள் விடுமுறை கேட்டுக் கொண்டாள். பூவைத்துப் பொட்டிட்டு பட்டுக்கலந்த சேலையுடுத்தாள் பொட்டுப் பூவோடு தந்தை வீடு செல்ல பஸ்ஸிற்காக காத்திருக்கிறாள்.
இது தந்தைக்குத் தாயினால் வழங்கப்படும் தண்டனையாக இருக்கட்டும் என்று மனதுக்குள் நினைத்துக் கொள்கிறாள்.
திலீப் இன் இறுதி ஊர்வலம் அவளைக் கடக்கிறது. நிமிர்ந்து நேரே அவனைப் பார்க்கத் தைரியமில்லை. அவளால் இப்போது அவனை அந்தக் கோலத்தில் காணமுடியாது என்பது தெரியும். சமூகத்திற்காய் இந்த ஆண் வர்க்கத்திற்காய் போட்ட வேஷம்.
மெல்லக் குனிந்து வழிந்த கண்ணிரை விரலால் சுண்டி விடுகிறாள். மனதில் தாயை நினைத்து எனக்காக இல்லாவிட்டாலும் உனக்காக என் அப்பாவிற்காக இப்படி
யெல்லாம் நடந்து கொள்கிறேன் அம்மா!
என்னோடு சேர்ந்து இனியாவது இந்த சமூகம் மாற வேண்டும் என்று வேண்டிக் கொள் என்று நினைத்தவள் நிமிர தூரத்தில் அவளின் பஸ்சும் வந்து கொண்டிருந்தது.
O
வவுனியாவில் வெளிவந்த ஆங்கில நூல்
Edited by: Kandiah Shriganeshan
English Association of Vavuniye, Sri Lanka. " - i

Page 28
மாருதம் 9 - 2008 சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
ஒரு பார்வை
கவிமைந்தன்
வவுனியாவில், வன்னியின் முதல் பாவேடாக வெளிவந்திருக்கும்
கவிச்சரங்கள் 1,2,3 பற்றியதோர் பார்வை
கவிச்சரம் 1
கவிஞர் தமிழ்மணி
இது வன்னியின் முதல் கவிச்சரம் (பாவேடு) இது கவிதைப் பூக்களால் வன்னித் தாயின் கழுத்தில் சூட்டும் கவிச்சரம் (மாலை) இது
வன்னித் தாயின் இலக்கியச் சுவாசத்தின் கவிச்சரம் (மூச்சு).
அகளங்கன் அவர்களின் மேற்படி கவிவரிகளை முகப்பில்
தாங்கி வெளிவந்திருக்கிறது “கவிச்சரம்” ஏட்டின் முதற் சரம். கவிதைக் கென்றே வன்னியின் முதல் பாவேடாக தை - 1998இல் இது வெளிவந்திருக்கிறது.
கவிச்சரத்தின் கெளரவ ஆசிரியரான கவிஞர் தமிழ்மணி அகளங்கன் அவர்களின் வழிகாட்டலில் வவுனியன் சுரேஸ் இதழாசிரியராக இருந்து வவுனியாவில் முதற் சரம்
தொடுக்கப் பட்டிருக்கிறது.
முதற் சரத்தில் இடம்பிடித்துள்ள கவிதைகளுள் பதச்சோறாக “நான்’ எனுந் தலைப்பில் இதழாசிரியர் வவுனியன் சுரேஸ்
- - - - - மனச் சாட்சியும்
நானும்
மல்லுக் கட்டியதில்
மனச்சாட்சி பாவம் மாண்டு போனது.
“2000 க்குள் ஒரு நினைவு’ எனுந்தலைப்பில் பாலகமலன் - - - - - - - பாரதி திரும்பிவந்து
தன் மீசையை
- 52

மாருதம் 9 . 2008 சமூக, கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
எடுத்துவிடுவான் மாதருக்கு “மீசை” முளைத்த மகிழ்ச்சியில்.
கவிஞர் தமிழ்மணி அகளங்கன் அவர்கள் “குந்திகளாகட்டும்’ எனுந் தலைப்பில் தந்திருக்கும் கவிதையானது.
கள்ணனைக் குந்தி இத்தோடு கவசகுண்டலங்களோடு elp60)6T1 g)6)6CITLD6) பெற்றெடுத்தாளாம். முதுகெலும்பில்லாமல் பேசும் பாரதம். பெற்றால் இந்தப் இனிமேலும் புனித பூமியில் பெறுபவர்கள் எல்லாம் வாழ்ந்து முடிக்கலாம் குந்திகளாகட்டும். சமாதானம் வரும்வரை இருப்பினும் பெறுபவர்கள் எல்லாம் இதுவும் போதாது. குந்திகளாகட்டும்.
அடையாள அட்டை வதிவிட அனுமதிப்பத்திரம் இவற்றைச் சேர்த்துப் பெறட்டும்.
என்று தனக்கே உரிய கவித்துவத்தோடு கவிச்சரத்தினை மேலும் அழகுபடுத்தியிருக்கிறார்.
முதற் கவிச்சரமானது பன்னிரெண்டு பக்கங்களைத் தாங்கி பதின்நான்கு பேரின் கவிதைகளுடன் வெளிவந்துள்ளது அவை அம்மா - அ.டக்ளஸ் ஜெயசேகரன், நான் - வவுனியன் சுரேஸ், 2000 க்குள் ஒரு நினைவு - பாலகமலன், பசி - சுப்ரம் சுரேஸ், பிரசவம் - நயினை ஆனந்தன், குந்திகளாகட்டும் - கவிஞர் அகளங்கன், சமாதானம் - எம்.எஸ்.றம்ஸின் நினைவுகள் - கோ.கணேஸ், ஏக்கங்கள் - கவியெழில் எஸ்.அப்துல் சமட் மனிதம் இன்னும் மரணிக்க வில்லை - அ.யெகான் தர்மேந்திரா, மறதி - வெ.சுப்பிரமணியம், அவஸ்தை - சுரேஸ், பொங்கற் பாட்டு - வளவன், தமிழ் - மருதன் ஆகியோரின் கவிதைகள் இடம்பெற்றுள்ளன.
கவிச்சரம் - 2 இரண்டாவது கவிச்சரமானது சித்திரை - 1998இல்
முதற்சரம் துளைத்த விழுப்புண் தாங்கி இரண்டாம் சரத்தை ஏவி இருக்கிறோம்.
- 53 -

Page 29
மாருதம் 9 - 2008, சமூக, கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
என்று கவிஞர் தமிழ்மணி அகளங்கன் அவர்களின் முகப்புக் கவிதையைத் தாங்கி வெளிவந்திருக்கிறது. இதழாசிரியர் வவுனியன் சுரேஸ் அவர்கள் ‘சொல்லக்கூடாதவை எனும் தலைப்பில்
- - - - - - - - - - - தாய் மொழியை
நாங்களே
தள்ளிவைத்துக் கொண்டோம்.
தவறுதலாய் உதடுகள்
தமிழை உச்சரித்தாலும்
தலைக்கு விலை பேசும்
தரகள்கள் ஏராளம்.
“ஆதலினால்” எனுந்தலைப்பில் வளவன் தந்திருக்கும் கவிதையானது.
- - - - - - - - - கல்வி கற்றால் - - - - - - a
உயர் பதவி வகித்து தனக்குக் கீழே உடன் பிறந்தோரை உள்ளவன் செய்தால் அடக்கி வேலை நிறுத்தம் செய்து அதிகாரஞ் செய்யலாம். LDép61)Tib ............ .மேலதிகாரியின் . பாதங்களை நக்கிப் கல்வித் தரங்கள் பல்லுக் காட்டிப் 2 u IJ 9D u JJ பதவி உயரலாம். அற்பத்தனங்களை
உயர்த்திக் கொள்ளலாம். ‘ஆதலால் கல்விகற்பீர் மானிடரே என்கிறார். இரண்டாவது கவிச்சரமானது பன்னிரெண்டு பக்கங்களைத்தாங்கி பதினொரு பேரின் கவிதைகளுடன் வெளிவந்திருக்கிறது.
முகப்பில் கவிஞர் தமிழ்மணி அகளங்கன் அவர்களின் வாழ்த்துக் கவிதையும், சொல்லக் கூடாதவை, ஆயுதம் - வவுனின் சுரேஸ், கோரவிளையாட்டு - கவியெழில் கண்ணையா, மாற்றங்கள் எப்போது - நயினை ஆனந்தன், தெருவினில் எம் தமிழினம் - தேவகி நடராஜா, வலி, சிதறல் - கோ.கணேஸ், ஆதலினால் - வளவன், அவர்களின் முயற்சி - இரணையூர் பா.சுகி, புதுசு - ப.கவிதா, நீ என்ன விதிவிலக்கா - மங்களராணி சுப்பிரமணியம், உணர்ச்சிகள் - அ.டக்ளஸ் ஜெயசேகரன் , புத்தாண்டே - கவிஞர் தமிழ்மணி அகளங்கன் ஆகியோள்களின் கவிதைகளைத் தாங்கி இரண்டாவது சரம் தொடுக்கப்பட்டிருக்கிறது.
கவிச்சரம் - 3
கவிச்சரத்தின் இதழாசிரியரான வவுனியன் சுரேஸ் வெளிநாடு சென்றதால் கவிச்சரம் வெளிவருவது தடைப்பட்டுவிட்டது. மீண்டும் ஒன்பது ஆண்டுகளின் பின்னர் இதழாசிரியராக திரு.த.பிரதாபன் பொறுப்பேற்று சித்திரை - 2007 இல் மூன்றாவது கவிச்சரமும் வெளிவந்திருக்கிறது கெளரவ ஆசிரியர் கவிஞர் தமிழ்மணி அகளங்கன் அவர்கள், தனது முகப்புக் கவிதையில்
- 54 -

மாருதம் 9 - 2008 சமூக கல்லி கலை இலக்கிய சஞ்சிகை
இரண்டு சரங்களை
ஏவிய பின்பு
இடைவெளி ஒன்பது
ஆண்டுகள் கடந்தன.
மீண்டும் கவிச்சரம்
வேண்டும் என்றே
பிரதாபன் பெரிதும்
பிரயாசைப் பட்டார்.
எனக் குறிப்பிடுகிறார். மூன்றாவது கவிச்சரமானது சித்திரை 2007 இல் பன்னிரெண்டு பக்கங்களைக் கொண்டு, பத்தொன்பதுபேரின் கவிதை களைத்தாங்கி வெளிவந்திருக்கிறது.
முகப்புக்கவிதையையும், கல்விப்போர் கூனல், கறை, அழகு எனும் தலைப்புக்களிலும் கவிதைகளைத் தந்திருக்கிறார் கவிஞர் தமிழ்மணி அகளங்கன் அவர்கள்.
ஏன் எறிந்தாய், ஏன் இந்தநாட்டம் - தேன்மொழி, வவுனியா - எஸ்.ஜேந்தன், காத்திருப்பு, நிலவு, கற்பனை - மருக்காரை மாவிதன், அனுபவம், கருணை காட்டு - சுதர்சினி, சிகரட் - அனோ, வெற்றி, சந்திப்பு, ஏராளம் ஆசைகள் - அணு திருநாவற்குளம், விடியலுக்காய் - சுபானு, இந்தநிலை மாறவேண்டும் - பல்லவன், கல்லூரிவாசல் - ரி.சுமிதா, வெள்ளம், கற்பனை - சஞ்சை கோவில்க்குளம், வாழ்வியல் - சி.அருணன் வலை வேண்டாம் - இளையநம்பி, யார்மனம் கல்லானது - அ.பேனாட் இதுவா மனித நேயம் - பட்டாபி, நினைவூட்டும் - மாணிக்கம் ஜெகன், போதுமடா சாமி - சகாதேவன், இயற்கை எழில் - சீ.ஏ.இராமஸ்வாமி, காலம் இனிதாய் மலராதோ - நாகலிங்கம் தியாகராசா ஆகியோர்களது கவிதைகளைக் கொண்டு மூன்றாவது சரமும் வெளியிடப்பட்டிருக்கின்றது.
தற்காலச் சூழ்நிலைகளினால் கவிச்சரத்தினை வெளியிடும் பணிகள் தாமதமடைந்தாலும் அவ்வப்போது வெளிவரும் என நம்புகிறோம்.
O
வவுனியாவைச்சேர்ந்த கந்தப்பு ஜெயந்தனர் சக்தரி ர" வரி நடாத்திய இசை இளவரசர் போட்டியில் முதல் பரிசை பெற்றுக்கொண்டார் இவர் வட்டத்தின் வெளியீடாகிய வன ன? ஊற்று (2003) இறுவட்டில பாடியவர். வாழ்த்துக்கள்
-55

Page 30
மாருதம் 9 - 2008 சமூக, கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
புரியவில்லை!
ளைய நம்பி உலகின் வெப்பம் இளைய நம்பி உயர்ந்து செல்கிறதாம்
அது ஈழத் தாய்மாரின் பற்றி எரியும் அடிவயிற்றுத் தீயினாலா?
அலை கடல் நீர் மட்டமும் உயர்ந்து செல்கிறதாம் அதுவும் என்ன ஈழத் தாய்மார் அழுது வடிக்கும் கண்ணிரத் துளிகளாலா?
வவுனியா தேசிய
 

uாருதம் 3 . 2008 சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
பதிவு : 2
தொலைக்காட்சி குறும்படம் - படிப்பு
வவுனியா கலை நிகழ்வுகள்
வவுனியா பொன்மீடியா கலையகத்தின் தயாரிப்பில் S.சுபாஸ்சிங்கம் (சுடாஸ்) அவர்களின் இயக்கத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. “படிப்பு” குறும்படம். இதற்கான கதை வசனம் நெறியாள்கை ஒளி, ஒலிபரப்பு, ஆகிய அனைத்து விடயங்களிலும் சுபாஸ் கவனம் செலுத்தியுள்ளார். அவரின் சொந்த முயற்சியில் உருவான இப்படைப்பில் மதன், றாஜேஸ்வரி, கவீன், வசி , அணு ஆகிய நடிகர்கள் பங்கு கொண்டுள்ளனர். 25 நிமிட குறும்படமாக வவுனியாவின் முருகனுர் என்ற கிராமத்தை களமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
படிப்பு கல்வி சமூகம் மட்டுமன்றி தமிழ்சமூகமும் பார்க்க வேண்டிய ஒருபடைப்பு அவலம் நிறைந்த வாழ்வுக்குள் அழுந்திக் கொண்டிருக்கும் நாம் எந்த தடை வரினும் எமது பாரம்பரிய சொத்தான கல்வியை இழக்க முடியாது என்பதையே உறுதியாக கூறி நிற்கின்றது. சிறுவர்கள் சிறுவர் உரிமைகள் என்று பேசப்படுமிடத்து இங்கு சிறுவர் உரிமைகள் எவ்வாறு மீறப்படுகின்றன என்பது தொனியாகும்.
வரதனின் எதுவரை நூல் வெளியீடு
வவுனியா பண்டாரிகுளம் விபுலானந்தாக் கல்லூரியின் மண்டபம் நிறைந்த
சபையின் மத்தியில் மின்னாமல் முழங்காமல் பிரசவிக்கப்பட்டது சுவரதனின் “எதுவரை” என்ற நூல் தமிழ்நாடகங்களின் விமர்சனங்களையும் குறும்படங்களின் விமர்சனங்களையும் தாங்கி சண்முகலிங்கம் கல்வியியல் அரங்கின் வெளியீடாக “எதுவரை" அமைந்துள்ளது. ஆசிரிய ஆலோசகர் கி.உதயகுமார் அவர்களின் தலைமையில் ஆரம்பமான நிகழ்வில் வரவேற்பினை SDYO நிர்வாகி Tபிரதாபன் வழங்கினார். நூலின் விமர்சன உரையினை கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர் ந.பார்த்தீபன் அவர்கள் வழங்கினார். பிரதம விருந்தினராக வவுனியா வளாக முதல்வர் பேராசிரியர் S.இராஜதுரை அவர்கள் கலந்து சிறப்பித்தார். நூல் வெளியீட்டிற்கு SDYO நிறுவனத்தின் கலை இலக்கிய பிரிவு அனுசரணை வழங்கியது.
நூல் வெளியீடுகளில் துறைசார்ந்தோர் உற்றம் சுற்றம் நண்பர் என பலரும் பங்குகொள்ளும் விழாவாகவும் அமையும். சமூகத்தின் பணி படைப்பாளியின் கரங்களில் மட்டுமல்ல உயிரில், உணர்வில் தங்கியுள்ளது. அவற்றிற்கு முழுமை கொடுப்பவர்களாகப் பலர் உள்ளனர். ஊடகங்களுக்கு இந்த பணிமிகவும் உள்ளது.
ஆயினும் படைப்பாளியின் வெற்றிக்கு தோள் கொடுத்து நின்ற அட்டைப்பட
-S7

Page 31
மாருதம் 9 - 2008 சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
ஒவியர் ரதீஸ், புகைப்பட கலைஞர் (பொன் வீடியோ) S.சுபாஸ்சிங்கம், பாலேந்திரன், ஒன்லைன் பதிப்பக உரிமையாளர் பாலா ஆகியோர் நூலாசிரியர் சு.வரதனால் கெளரவிக்கப்பட்டமை சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது ஆகும்.
நிகழ்வின் முடிவில் வவுனியா பண்டாரிகுளம் விபுலானந்தாக்கல்லூரி மாணவர்களின் பங்கு பற்றுதலில் ஆசிரியர் கந்தையா றிகந்தவேள் அவர்களின் நெறியாள்கையில் உருவான “உயிர்ப்பு” என்ற சமூக நாடகமும் அரங்கேற்றப்பட்டது. இந் நாடகம் வவுனியா வலயத் தமிழ்த்தினப் போட்டியில் 2ம் இடம் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
ஆடல் வல்லான் சுயேந்திராவின் பரத நாட்டிய அரங்கேற்றம்
கலை கலாச்சார இலக்கியங்களின் மையமாக இன்று வவுனியா மாவட்டம் பெரு வளர்ச்சி அடைந்து வருகிறது எனறால் அது மிகையல்ல. வவுனியா மண்ணில் நடாத்தப்பட்ட 12ற்கு மேற்பட்ட பரத நாட்டிய அரங்கேற்றங்களில் நாட்டிய எழில் திருமதி சூரியயாழினி வீரசிங்கம் அவர்களினால் நடாத்தப்படும் 8வது அரங்கேற்றம் செல்வன் சுயேந்திரா அருந்தவநாயகத்தினுடையது ஆகும். அதிலும் குறிப்பாக ஓர் ஆண் மகனின் அரங்கேற்றம் என்பதில் செல்வன் சுயேந்திரா முதல் மாணவனாக சிறப்புப் பெறுகின்றார். விவசாயப் போதனாசிரியராகப் பணி புரியும் இவர் ஓர் இளங்கலைஞன். சிறுவயதில் இருந்தே நடனத்தில் உதய சூரியனாக விளங்கியதுடன் தமிழ்த்திறன் போட்டிகளிலும், இளைஞர் சேவைகள் மன்றம், ரூபவாகினி, சுவர்ணவாகினி, சக்தி ரிவி (திமிதகதா) போன்ற நிகழ்வுகளில் பங்குபற்றி மாவட்ட, மாகாண, தேசிய ரீதியில் பல பரிசில்களைப் பெற்றதுடன் பல கலை நிகழ்வுகள், திருவிழாக்கள், இலக்கிய கலாச்சார விழாக்கள் போன்றவற்றிலும் தன் திறமையை வெளிப்படுத்தி பலரினதும் அமோக பாராட்டுக்களைப் பெற்றுள்ளார். இவரது நெறியாள்கையில் உருவாக்கம் பெற்ற) 'தாருகாவனத்து முனிவர்கள்' , 'வள்ளி திருமணம்’ நாட்டிய நாடகம் என்பன சிறப்பாகக் குறிப்படத்தக்கன.
நிருத்திய நிகேதன நுண்கலைக் கல்லூரியின் மாணவத்தலைவனான இவரின் ஆடல்கள் அரங்கை வியக்கவைத்தது என்றால் மிகையல்ல. கம்பீரமும் ஆடல் செருக்கும் நிறைந்த இவரது ஆடல்களுள் 'தாண்டவம்' விசேடமாகக் குறிப்பிட வேண்டியது. அரங்கில் பார்வையாளர்களின் கவனக்கலைப்புகளுக்கு இடமின்றி இசை முழக்கம் நடனத்துடன் போரிட்டது. என்றே சொல்லலாம். வாய்ப்பாட்டினை இசைக்குயில் வதனி ழரீதரனும் இசைஎழில் திருமதி தேவமனோகரி நாகேஸ்வரன் அவர்களுடன் செல்விகள் கீர்த்தனா முறிதரன், உசேனி பூரீதரன் ஆகியோர் இசைக்க மிருதங்க இசையினை வித்துவான் க.கனகேஸ்வரன் அவர்களும், வயலின் இசையினை கலாபூசணம் திருமதி விமலலோஜினி கனகேஸ்வரன் அவர்களும் இசைத்திருந்தனர். புல்லாங்குழல் இசையினை செல்வி தர்மிளா மயில்வாகனமும், உடுக்கு, முகர்சிங் இசையினை செல்வன் இபிரபாகரன் ஆகியோரும் வழங்தியிருந்தனர். இசையின் பக்தியும், உணர்வும் அரங்க பூஜையின் பின்னணியில் ஒலிக்க அரங்க பூஜையினை நிகழ்த்தினார்கள்.
-58 -

UDT(I ibôibLíb 9 - 2008, ésFP p. 8#55ö)6, 8Eb6U)bu) 85abubéibéğ'LLu éş(6jéfʼ5J)éqEi
தமிழ்மணி அகளங்கன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ் அரங்கேற்ற நிகழ்வின் ஆடல் வடிவம் பெற்ற விநாயகர் ஸ்துதி, தாண்டவம் என்பற்றிற்கான பாடல்களையும் தமிழ்மணி அகளங்கன் அவர்களே எழுதியுள்ளார். பாடல்களிற்கு பாடலினையும் இசையமைப்பினை இசை எழில் தேவமனோகரி நாகேஸ்வரன் அவர்கள் அமைத்துள்ளார்.
பெண்களைப்போன்று நளினத்தன்மையில் ஊறிக் கொள்ளாமல் ஆண்களுக்குரிய மிடுக்கில், கம்பீர வேகத்தில், அங்க சுத்திகளுடன் சிறந்ததொரு அரங்கேற்றமாக சுயேந்திராவின் நடன அரங்கேற்றம் 14.09.2008 அன்று வவுனியா றோயல்பாாக் மண்டபத்தில் கலை உள்ளங்களின் நடுவில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
உயிர்ப்பு நாடக விமர்சனம்
எழுத்துருவாக்கம் நெறியாள்கை திரு.கந்தையா யூனிகந்தவேள் ஆசிரியர், வ/பண்டாரிகுளம் விபுலானந்தாக் கல்லூரி.
அரங்கில் பேரிசை முழங்குகின்றது. திரை அகல்கின்றது. இளம் பெண் ஒருத்தி தற்கொலைக்கு தயாராகின்ற1ள். தடுக்கின்றது அவள் மனம் அவளைக் குழப்பும் சக்திகளும் வேறு. அவள் இவ்வுலகில் வாழவிருப்பின்றித் தற்கொலைக்கு தயாராகக் காரணம் என்ன? சொந்தநிலப் போராட்டத்தின் இடப் பெயர்வுகள், புது இடங்கள், தொழிலை நம்பி கடலுக்கு செல்லும் தந்தை மீள வரவில்லை. அவரின் வள்ளமும் பிடித்த மீனும் மட்டும் இரத்தக் கறையுடன் கரையொதுங்குகின்றது. பசி தாங்க முடியாத சாந்தி அடுப்பில் உலை வைத்து விட்டு சுகந்தியையும் அழைத்துக் கொண்டு காட்டுக்குப் பேகின்றாள். அங்கே சுகந்தி மட்டும் வீறிட்ட படி மீள வருகின்றாள். வசந்திக்கு படிப்பை நிறுத்தி வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு திருமணம் முற்றாகின்றது. அவள் விருப்பின்றி வீட்டு நிலைமைகளை காரணம் காட்டி திருமணத்தை நிர்ப்பந்திக்கின்றனர். அவள் எதிர்க்கின்றாள். படிக்க வேண்டிய சிறுவயதில் உழைப்புக்குப் போகின்றான் கடைசித் தம்பி. இந்த நிலைமைகளுக்குள்ளும் சாந்தியைக் காணாத ஏக்கத்தில் மனச் சிக்கலுக்குள்ளாகி பிரமைபிடித்தவளாகின்றாள் சுகந்தி. எல்லாம் சேர்ந்த இறுக்கமும், வேதனையும் வலியும், ஏக்கமும் வசந்தியைத் தவிக்க வைக்கின்றது இதனால் தற்கொலை செய்வதே விடுதலை என உணர்கின்றாள். அவள் அவ்வேளை காட்டுக்குள் காணாமல் போன சாந்தி கையில் குழந்தையுடன் சபையினுடே அரங்கிற்கு வருகின்றாள். சாந்தியைக் கண்ட சந்தோசம் அனைவருக்குள்ளும் தற்கொலைக்கு தயாரான வசந்தியை பார்த்து வினா தொடுக்கின்றாள் சாந்தி. “இவ்வளவுக்குள்ளும் நான் வாழும் போது உனக்கு என்ன?’ என்று கேட்கின்றாள் சாந்தி முடிவில் தற்கொலை மனதை விடுத்து கறுப்பு கயிற்றை தீயில் எரிப்பதாக முடிகின்றது ஆற்றுகை.
இங்கு வசந்தியின் மீள் வருகை என்பது சற்றுக் குழப்பத்தை தந்துள்ளது.
-59

Page 32
மாருதம் 9 - 2008 சமூக, கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
அவள் குழந்தையுடன் வருகின்றாள். காட்டுக்குள் சென்ற போது தனக்கு தெரிந்தவனுடன் குடும்பத்திற்கு தெரியாமல் சென்றாளா? அல்லது வற்புறுத்தி ஒருவனுடன் போனாளா? அல்லது கடத்தப்பட்டாளா? என்ற தெளிவற்ற நிலைமைகள் தோன்றுகின்றன. இன்றைய எம் சமூக யதார்த்தத்துடன் ஒப்பிடுகையில் கடத்தப்பட்டு அல்லது காணாமல் போன பெண்கள் குழந்தையுடன் மீள்கின்றனரா? மீண்டவள் ஏமாற்றப்பட்டு வருகின்றாளா? வசந்தியின் களநிலைமைக்கான காரணம் சரியாக வெளிக்காட்டப்பட்டதாக புரியவில்லை ஆயினும் ஒரு பெண்ணின் எதிர்காலக் கனவுகள் கற்பனைகள் இன்னொரு பெண்ணால் காப்பாற்றப்படுகின்றது. தன் அவலம் எது என்பதை புரிய வைக்காவிடினும் நான் வாழும் போது நீ வாழ்வதில் என்ன கஷடம் இருக்கு? என்பது நியாயமானது தான். அந்த நியாயமே அவளை காப்பாற்றுகின்றது. பெண்களும் இதை சற்று விளங்க வேண்டும். எம் சமூகமும் எம் குடும்பமும் வாழ்வும் எம் கையில் இருக்கும் போது எந்த இடரிலும் சவால்களை சாதித்தே வாழ வேண்டிய நிர்ப்பந்தம் பெண்கள் மீது சுமையாகவே உள்ளது. வாழ்ந்து காட்டுவது தான் வாழ்வே தவிர ஒதுங்கிப் போவதில் அர்த்தமில்லை.
வெளிநாட்டு மாப்பிள்ளை, அவன் யார்? எவன்? எப்படிப்பட்டவன் எதுவுமே அறியாது விலை பேசப்படும் பெண்களின் வாழ்வியல் இன்று யுத்த நிலவரங்களையும் காரணம் காட்டி மோசம் செய்யப்படுகின்றது அன்று குறிப்பிட்ட சில காலங்களாக லண்டன் மாப்பிள்ளைக்கு இருந்த மவுசு கடவுளுக்கு கூட இருக்கவில்லை. ஏனெனில் அது தான் அன்று கெளரவம் படித்தவள் உத்தியோகம் என்றாலும் சீதனம் 15 லட்சம் மேல், ஊரில் காணி வீடு கட்டாயம். நாட்டு நிலைமை சரிவந்தால் வரும் போது தேவை நகைகள் என்று மனச்சாட்சியை பூட்டி விட்டு ஸ்பொன்ஸர் மாப்பிள்ளை படலம் தேடப்பட்டது, இப்போ சில காலமாக அவள் படித்தாளோ இல்லையோ சீதனமும் வேண்டாம் பொம்பிளை வந்தால் சரி ஏஜன்சிக்கு நான் காசு கட்டுறன். ஒரு பிள்ளை பிறந்திட்டால் பிள்ளையை வைச்சு Card எடுத்திடலாம் பிறகு பிரச்சனை இல்லை. இப்ப இதுதான் நிலைமை. பலருக்கு PRCard இல்லை, தத்தம் வசதிக்கு எப்படி பெண்ணை தூண்டில் போடுகின்றது எமது சமூகம். லண்டன் முடிந்து இப்போ பலர் கனடா தான் பாடம். அதனால் தான் ஆற்றுகையிலும் கனடா மாப்பிள்ளை நல்லம் அங்க பயமில்லாமல் வாழலாம் என்கிறார் எதில் பயமில்லை? வாழ்க்கையிலா? அரசியலிலா? இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை தான். எல்லாம் தெரிந்தும் அற்ப நினைவுகளுடன் அலைகின்றது எம் வாழ்வு என்றால் அது மிகையல்ல.
ஆற்றுகையில் இசையின் பிரயோகம் அதிகம் அரங்கப் பாடலின் நகள்வு எந்த பதட்டமும் இன்றி நகர்ந்தது. இடையிடையே மகிழ்வான மனோநிலையை கடலிசை தந்தது ஆயினும் உயிர்ப்பு அவலம் அதிகம் தாங்கியுள்ளது. இசையின் துடிப்பு வேகத்துடன் ஆரம்பமானது அரங்கு. அரிக்கன் விளக்கு, மண்குந்து, மரக்குற்றி இருக்கை வலை, தடி, ரம்ளர், செம்பு என அரங்கப் பொருட்கள் சிலவும் இன்னும் வேட உடை ஒப்பனைகளில் அதிகம் கவனம் செலுத்தப்பட இடமுண்டு. நிறங்கள், உடைகள், என இயல்புகளை இன்னும் தர வேண்டும். அரங்க ஒளியை விடுத்து ஆற்றுகைக்குரிய ஒளியைத் தரும் போது ஆற்றுகையின் வெற்றிக்கு இன்னும் துளிர்ப்பு அதிகமாகும்.
- 50 -

மாருதம் 9 - 2008 சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
அவலத்தில் ஆரம்பிக்கப்பட்டு சந்தோஷத்தில் முடிவதால் இறுதியில் உணர்வுகள் உயிர்ப்பாக உயிர்பெறஇடமுண்டு. பாடகரின் தரல்வளம், கவிதை வரிகள் அனைத்திலும் இரசனையை தருவதாயினும் ஆற்றுகையில் சந்தோஷ உணர்வை தரவேண்டிய கடப்பாடும் உண்டு. ஏனெனில் அவலத்துள் வாழும் நாம் அவலத்தையே நுகர்ந்தபடி இருக்க எம்மால் முடியாது. விரும்பியோ விரும்பாமலே அரங்கை விட்டகல நுகர்வுகள் ஏதோ ஒரு விடுதலையை தரவேண்டும். எம் தேவைகளும் அதுவே.
அவலத்துக்குள் அமிழ்ந்தவர்களாய்
சுடுகாட்டுச் சாம்பலுக்கு
சொந்தமாகிப் போவோமா?
எம் வாழ்வில்.
இழந்தவையாவும்
ஆவணங்களாகட்டும்
உயிர்ப்புடன் புதிய பிறப்புக்காக
U6OLu 165686)JTub.
மீட்சியின் வாசல் நோக்கி
அரங்கில் பயணிப்போம்.
எழுத்தும் தொகுப்பும் யாழ். தர்மினி பத்மநாதன்
வவுனியாவில் வெளிவந்த இறுவட்டும் குறும்படமும்
ԼԱԶւմւ| Lö எழுத்து, ஒளித்தொகுப்பு, இயக்கம்
சுபாஸ்)
E.
it 魏、 R. E. R 器、

Page 33
மாருதம் 9 - 2008, சமூக, கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
மாணவரை
தானவரை மக்குப் பக்குவமாய்
சாதனைகள் போதனைகள் சோதனைகளில் வேதனைகள்
கல்வியை கண்கன்ட கலியுகக் கேட்டதைச்
பாட்டில்
கல்வியில் சொல்லிய பள்ளியில் தெள்ளிய
DIT GOOT6JÍ UITLDGCOTb உருகி இருள்
நல்லாசிரியர் எல்லாரிதயத்திலும் இன்றைய
என்றும்
நல்லாசான்களே (2008ம் ஆண்டு ஆசிரியர் தினத்துக்காக எழுதப்பட்டது)
மனிதராக்கி தன்மகவாய் பிள்ளைக்கும் பாடம் புகட்டும்
நாங்கள் செய்யும் நாங்கள் தீர்க்கும்
எமக்காக
GibsTe0) L சொல்லிக்
புகழும் மேலேசெல்ல துறைகளில் எமை முகம் பார்க்கும் அறிவூட்டும்
LDIT did STi. பரப்பும் எரியும்
போக்க
(J606]]
என்றுமே உலகில்
தவறாது
மனமகிழ்ச்சி தண்ணளி மனமுவந்து பண்பாளரும்
சாத்தியமாய் பெருமகன்கள் சோர்ந்துவிடாமல் வித்தகர்களும்
கனிவாய் வள்ளல்கள் கொடுக்கும்
காமதேனுக்களும் கால்வைக்கும் ஏற்றிவிடும்ஏணிகள் பளிங்கு
அறிவுப்
மறுப்பில்லாது ஊதுபத்திகள்! கற்பூரங்கள்! ஒளிதரும்
நானடுக்காய் இருக்கும் இணையில்லா எழுகின்ற
- 62 -
காண்பீர் - மனதார செய்வீர் - வகுப்பிலே அருகமர்ந்து
நீவீரே!
செய்வதற்கு - நற் நீங்கள் - ஆண்டு நாம்படும் நீங்களே!
அள்ளித்தரும் - நீங்கள் - களைப்பின்றி கற்பகதருக்களும் நீங்களே புராணப்
[$js&&ଶା. படிக்கற்கள் நீங்கள் நீங்கள் கண்ணாடிகள் நீங்கள் பொக்கிஷங்கள் நீங்களே!
கல்வி
எமக்காய் அறியாமை மெழுகுவர்த்திகள்.
சொல்லவும் வேண்டுமோ ஏஞ்சல்களே - எண்ணில் கதாநாயகர்களே - வானில் எழுகதிர்களே.
நா.தியாகராசா

மாருதம் 9 - 2008 சமூக கல்வி கல0ல இலக்கிய சஞ்சிகை
சு.சிவதர்ஷனினியின் கவிதைகள்
நட்பிற்குள் ஏன் வேலி
மூன்றெழுத்தில் முடித்து விட நட்பென்ன நாடகமா? இல்லையென்றால் ஆயுள் வரை தொடர்கின்ற காவியமா?
ஆண் என்றும் பெண் என்றும் நட்பிற்குள்
ஏன் வேலி..? ஆராய்ச்சி செய்திங்கு பேசாதீர்
வீண் கேலி,
ஆணுக்கும் பெண்ணுக்கும் ஆயிரமாய் உறவிருக்கும் ஆனாலும்
நட்பிற்குள் நம்பிக்கை இருக்கும்
பெண்ணோடு ஆணொருவன் நட்பாகப் பழகிவிட்டால் காதல் என்று கதை கட்டி கரைகின்றன
காகங்கள்.
என்னவென்று சொல்வது சமூகத்தின் பதிவேட்டை சிந்தித்துப் பார்த்திடுவீர் dj Gabl L.
உலகமிதை.
- 63 -
காதல் செய்
ஒளியாக நீ மிளிர ஆளாக்கி உனை வளர்த்த பெற்றோரைக் காதல் செய். ஆயுள் வரை துணையிருந்து ஆனவரை பணிகள் செய்.
உடன் பிறந்த உறவுகளை உரிமையுடன் காதல் செய். உலகத்தார் போற்றும் படி உனை நீ மாற்றம் செய்.
நாள் தோறும் நீ வளர ஆண்டவனைக் காதல் செய். கல்வி தந்து உனை வளர்த்த ஆசானை போற்றல் செய்.
நம்மோடு கூடி வரும் நண்பர்களை காதல் செய். எல்லோரும் நலம் வாழ எப்போதும் ஊக்கம் செய்.
கடந்து விட்டால் கிடைக்காத காலமதை காதல் செய். பொன்னான நேரமதை பொறுப்புடனே நெஞ்சில்வை.
நீ பிறந்த மண் மீது முடிந்த வரை நேசம் செய். நீயாக நீ வாழ நின்னையே காதல் செய்.

Page 34
பாருதம் 9 - 2008 சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
அளவே அழகு
முரளிதரன் சிவாஜினி
“அளவுடன் இருந்தால் அனைத்தும் அழகு” அளவு மீறினால் அது ஆபத்து. அது ஆனந்தத்தைத் தராது எதிர் மறையில் செயல்பட்டு மன அமைதியைக் கொன்று விடும். அதனால் தான் இறைவனே “அளவுடன்’ இருக்க வேண்டும் என்று நினைக்கின்றான். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தம் கூட நஞ்சாகும் என்பது பழமொழி.
“அளவறிந்து வாழாதான் வாழ்க்கை சீரழிந்து விடும்” என்பது உலகம் கற்றுக்கொண்ட உண்மை! மனிதனது ஆசையாக இருந்தாலும் அது அளவுடன் இருக்க வேண்டும். அளவு மீறினால் ஆபத்து கட்டாயம் உண்டு என்பதை உணரவேண்டும்.
அளவான உடற்பயிற்சி ஆரோக்கியத்தைத் தரும். ஆரோக்கியம் கிடைக்கும் என்பதற்காக நாள் முழுவதும் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தால் மற்ற பணிகளை யார் செய்வது? வெறும் உடற்பயிற்சி வேண்டிய அனைத்தும் தந்துவிடாது!
கோவிலுக்குச் சென்று இறைவனைத் தரிசித்தால் மனநிம்மதியும். மகிழ்ச்சியும் கிட்டும். இதற்காக வாழ்நாள் முழுவதும் கோவிலில் தவம் கிடந்தால் வாழ்வாங்கு வாழ்வு நடத்திட இயலாது.
தர்மம் செய்வதைக் கூட அளவுடன் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தவே ஆற்றில் போட்டாலும் அளந்து போட வேண்டும் என்பார்கள். சினிமாவுக்குச் செல்கின்றோம். ஓரிரு மணிநேரம் நாம் கவலையை மறந்து மகிழ்ச்சியுடன் இருக்கின்றோம்.
அதே சினிமாவே வாழ்க்கை ஆகிவிடாது சற்று அளவு மீறினாலும் “அலுப்பாகி விடும் மனிதன் அவசர உலகத்தில் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கின்றான். அளவுடன் செயல்பட்டு ஆனந்தமடையவே ஆசைப்படுகின்றான். அளவுடன் வாழ்வது ஆனந்தத்தைத் தன் வாழ்வில் இணைத்துக் கொண்டு வாழ்வதாகும்.
தேசிய கல்வியியற் கல்லூரி வெளியிட்ட நூல்
வவுனியாவில் வெளிவந்த நூல்
உயிரளித்தவனி (சிறுகதைத் தொகுப்பு
சூதுசானி
வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி
வெளியீடு தமிழ் மன்றம் வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி.
-64 -
 

மாருதம் 9 - 2008 சமூக, கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
நேர்காணல்
நாடகக் கலைஞர் சந்தியா யோசை அந்தோனிப்பிள்ளை
தங்களது ஊர் மற்றும் ஆரம்பகால வாழ்க்கை பற்றி சொல்லுங்கள்? முல்லைத்தீவு மாவட்டத்தில் கடற்கரையை அடுத்துள்ள மணற்குடியிருப்பு எங்களது ஊராகும். சென் பீற்றஸ் தேவாலயத்தின் அயலில் எமது வீடு உள்ளது. 1932ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18ம் திகதி சந்தியா யோசை (தந்தை) மற்றும் யோவான் அன்னம்மா (தாய்) ஆகியோரின் ஏழாவது புதல்வராக ஐந்து பெண்களுடனும் மூன்று ஆண்களுடனும் பிறந்து வளர்ந்தேன்.
உங்களுக்கு நாடகத்துறையில் ஒரு பெரும் ஈடுபாடு வரக்காரணம் என்ன?
எமது கிராமம் ஒரு கூத்துக்கிராமம். வட்டக்களரியில் ஆட்டக்கூத்து ஆடுபவர் எம் ஊரவர். எமது அம்மாவின் தந்தை மூத்தவி யோவான், ஒரு கூத்துக்கலைஞர். கூத்துக்குரிய உடுப்புகள், உபகரணங்கள் செய்வதில் வல்லவர். இதனால் எனது மூன்று, நான்கு வயதிலேயே கூத்துப்பற்றிய ஆர்வம் ஏற்பட்டது. மாமாவும் எனது தாயாரும் அம்மப்பாவின் பணியைத் தொடர்ந்தார்கள். மேடை நாடகங்களுக்குரிய காட்சித்தட்டிகள், நாடக உடுப்புகள், தயாரித்துக் கொடுப்பார்கள்.
நீங்கள் பாடுவதிலும் ஹார்மோனியம் வாசிப்பதிலும் வல்லவர். அதற்கான பின்னணி என்ன?
எனது மூத்தசகோதரர் அருளப்பு முறைப்படி ஹார்மோனியம் பழகியவர். இதனால் எனது 13வது வயதில் கேள்விஞானம் மூலம் பாடசாலை நாடகங்களுக்கு இசையமைக்கத் தொடங்கினேன். தொடர்ந்து அண்ணரின் வழியில் வட்டக்களரி வடமோடி ஆட்டக்கூத்துகளுக்கு நானும் ஹார்மோனியம வாசிகக்த்தொடங்கினேன்.
நீங்கள் கூறும் ஆட்டக்கூத்துகள் பற்றி விபரமாகக்கூறுங்களேன்? வற்றாப்பளை அம்மன் கோயில் முன்றலில் பங்குனித்திங்கள் அன்று கோவலன்
கண்ணகி கதையை ‘கோவலன் கூத்தாக ஆடுவார்கள். சம தரையிலேயே இவ்வட்டக்களரி ஏற்படுத்தப்படும்.
- 65 -

Page 35
மாருதம் 9 - 2008 சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
எமது காலத்தில் முள்ளியவளை கதிரித்தம்பிப்பிள்ளை, முத்தையா, நல்லையா, சுந்தரம், வெற்றிவேலு ஆகியோர் இணைந்து பழகி கோயிலில் ஆடினோம். பின்னர் எஸ்.என்.மணியம் பாண்டியன் வேடம் ஏற்றார். தட்டான் பாத்திரத்தை நல்லையா, சுந்தரம் மற்றும் வெற்றிவேல் ஆகியோர் ஆடினர். தட்டான் பாத்திர ஆட்டம் விசேடமானது, கஷ்டமானதும்கூட. அதனால் மூன்று பேர் தட்டானுக்கு ஆடுவது வழக்கம். இவர்களுக்கான உடை, ஒப்பனை விடயங்களில் அம்மாவுடன் சேர்ந்து நானும் பழகி உதவினேன். இதனையே ஆய்வாளர்கள் முல்லை மோடி என்று கூறவிழைந்தனர். கோவலன் கூத்தில் பலவகைப்பாடல் மெட்டுக்கள், ஆட்டக்கோலங்களின் தீவிரம் என்பன எல்லாம் கூத்துக்கலையின் சிறப்பை என்றும் நிலைநாட்டுவன. இது எமது பெரும் பொக்கிஷம் இதனை நாம் தொடர்ந்து வளர்க்க வேண்டும்.
தங்களது நடிப்பு முயற்சிகள் பற்றி கூறுங்கள்?
பாடசாலையில் (13வயதில்) 'அக்கினேஸ்' என்ற சரித்திர சமய நாடகத்தில் அரசனாக நானும், அக்கினேஸ் ஆக எனது சகோதரியும் “ஞானசவுந்தரி நாடகத்தில் ஞானசவுந்தரியாக நானும் அண்ணர் மற்றும் ஊரவர்களுடன் இணைந்து நடித்தேன்.
கண்டி அரசன் நாடகத்தயாரிப்பிலும் நான் பங்களித்தேன். பூசணியாள் ஆக எமது அண்ணர் அருளப்புவும் கண்டியரசனாக திரு.வீரகத்தியும், நாடகத்தில் நானும் நடித்தேன். வேட உடுப்பு ஒப்பனைகளிலும் நான் எனது பங்கைச் செலுத்தினேன்.
தங்களது பிற கலை முயற்சிகள் பற்றிக் கூறுங்கள்? எனது 30 வயதுகளில் S.P அருள் நடனக் குழுவில் ஹர்மோனியம் வாசிப்போராகவும், ஒப்பனை புனைபவராகவும் கடமையாற்றினேன். அத்தோடு முள்ளியவளை கலைமகள் இன்னிசைக் குழுவில் ஹர்மோனியக் கலைஞனாகவும் பாடகனாகவும் பங்கு கொண்டேன். அமரர்.சு.தனபாலசிங்கம் வில்லடித்து பாடி கதைசொல்வார். அவரது தம்பி சு.ஜெயவீரசிங்கம் டொல்கி வாசிப்போராகவும், திரு.க.இரத்தினம் நகைச்சுவை மற்றும் பக்கப்பாட்டுப் பாடுவோராகவும், திருவெற்றிவேலு பாடகராகவும் இணைந்து இயங்கினோம். அருணகிரிநாதர், பட்டினத்தார், ழரீவள்ளி போன்ற பல வில்லுப்பாட்டுக் கதைகளுடன் கிறிஸ்தவனான எனக்கு ஈடுபாடு மிக அதிகம்.
காத்தான் கூத்தில் தங்களது ஈடுபாடு பற்றி அறிந்தோம். அதுபற்றிக் கூறுங்கள்?
முல்லைத்தீவில் நடைபெற்ற காத்தான் கூத்துக்கு வேட உடுப்புகள், ஒப்பனை, மற்றும் காட்சித்தட்டிகள், மேடை அமைப்பு என்பன செய்ததோடு இசை வழங்கியும் பணிபுரிந்துள்ளேன். இதனால் அவர்களது தயாரிப்பிலும் எனது பங்களிப்பை வழங்கக் கூடியதாக இருந்தது. அத்தோடு எமது ஊரில் நடைபெறும் இசை நாடகங்களான
-66 -

மாருதம் 9 - 2008 சமூக, கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
'அரிச்சந்திர மயான காண்டம்’, ‘ழரீவள்ளி' என்பவற்றுடன் எனக்கு பரிச்சயம் அதிகம், அல்வாய் விவேகானந்தன் தயாரித்த 'அரிச்சந்திரன்’ நாடகத்திற்கு ஹர்மோனியம் இசை பயன்படுத்த சந்தர்ப்பம் கிடைத்தது.
தங்களது இடப்பெயர்வு வாழ்விலும் தங்களது கலைப்பணியைச் செய்கின்றீர்களே, அந்த அனுபவம் பற்றி கூறுங்கள்? 1990ல் முல்லைத்தீவிலிருந்து புதுக்குடியிருப்பிற்கு இடம் பெயர வேண்டியதாயிற்று. சகலதையும் இழந்துவிட்டுத் தான் அங்கே வந்தோம். பின்னர் புதிதாக வேட உடுப்புக்களும், இசைக் கருவிகளும் வாங்க வேண்டியதாயிற்று.
1997ல் வவுனியாவுக்கு இடம் பெயர்ந்த போதும் பாடசாலைத் தேவைகளுக்காக நாடகங்கள் தயாரிக்கும்போதும் புதிதாகவே நாடகப் பொருட்கள் வாங்க வேண்டிய தேவை ஏற்பட்டது. வ/இறம்பைக்குளம் ம.கல்லூரி, பட்டாணிச்சியூர் முஸ்லீம் மகாவித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கு வேட உடைகளை தயாரித்துக்
கொடுத்தேன். பூந்தோட்டம் மகாவித்தியாலயத்தில் திருமதி நவரட்ணம் ஆசிரியை தயாரித்த ‘காத்தான் கூத்து, வ/தரணிக்குளம் வித்தியாசாலை தயாரித்த 'அரிச்சந்திரன் இசை நாடகம் என்பவற்றிற்கும், வேட உடுப்பு தயாரிப்பில் ஈடுபட்டேன்.
அவை முதலிடங்களைப் பெற்ற நாடகங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வ/கல்மடு பாடசாலை ஆசிரியை மேரியின் தயாரிப்பில் ‘கோலியாத்' எனும் நாட்டுக்கூத்திற்கும் 2000ல் S.1 நாதன் தயாரித்த வ/இறம்பைக்குளம் ம.கல்லூரி நாடகமான ‘கோலியாத் நாட்டுக்கூத்திற்கும் வேட உடுப்புகளை நான் தயாரித்தேன். S. நாதனின் நாடகம் இலங்கையின் பல்வேறு இடங்களில் மேடையேற்றப்பட்டது.
தங்களது மறக்க முடியாத நிகழ்வுகள் பற்றிக் கூறுங்கள்? 18 வயதில் ஞானசவுந்தரிப் பாத்திரத்தில் நடித்தபோது 3வது காட்சியிலேயே காய்ச்சல் பிடித்து விட்டது. ஆனால் விடாப்பிடியாக நாடகம் முடியும் வரை சிறப்பாக நடித்து முடித்தேன். மேலும் முல்லைத்தீவு றோமன் கத்தோலிக்க பாடசாலை (இன்று புனித பத்திரிசியார் மகாவித்தியாலயம்) வட்டுவாகல் பாடசாலைகளில் நடனம் பழக்கியதும் எனது பிள்ளைகள் வளர்ந்து பாடசாலை நாடகங்களில் பங்கு பற்றியமையும் குறிப்பிடத்தக்க நினைவுகள். மூத்த மகள் கண்ணகியாகவும், அரசனாகவும் நடித்திருந்தார். எனது இசைப்பயணத்தின் தொடர்ச்சியை கன்னியாஸ்திரியாக விளங்கும் எனது மகள் தொடர்கின்றார்.
மேலும் உங்கள் செயற்பாடுகள் பற்றி.
வவுனியாவில் அமரர் செபமாலையின் ‘எங்கள் தாய் நாட்டுக் கூத்திற்கும், திருமறைக்
கலாமன்றம் தயாரித்த தமிழ்மணி அகளங்கனின் ‘புத்திரசோகம் நாடகத்திற்கும்
(நெறியாள்கை கந்தையா ரீகணேசன்) சாயி சமித்தி குழுவின் சிறுவர்கள் நாடகத்தின்
மிருக ஒப்பனைகளையும் செய்தவை முக்கியமானவை. அத்தோடு தவசிகுளம்,
- 67

Page 36
மாருதம் 9 - 2008 சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
இராசேந்திரன்குளம் கிராமங்களில் காத்தான்கூத்து மேடையேற்றங்களுக்கும் இசை மற்றும் ஒப்பனைகளை வழங்கியிருந்தேன். தோணிக்கல்லில் திரு.பாலசிங்கம் தயாரித்த காத்தான் கூத்திற்கும் இசையும் வேடஉடை ஒப்பைனயும் செய்திருந்தேன்.
மேலும் வவுனியா கல்வியியற் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வவுனியா வளாகம் போன்ற கல்வி நிலைய மாணவர்களுக்கு நாடக வேடஉடுப்பு புனைவில் ஈடுபட்டுள்ளேன்.
இன்றைய நாடகம், கூத்து என்பவற்றின் தரம் பற்றிக் கூறுங்கள்? கலையின் தரத்தில் தொன்மை குறைவாக உள்ளது. வரலாறுகளை திரிவுபடுத்துவது கவலைக்குரியது. தாளலயம் இல்லாமல் ஒரே இராகத்தில் பாடுகின்றார்கள். பல்வேறு மோடிகளையும் கலந்து பாடுகிறார்கள். ஒப்பனைக் கலையை வேட உடுப்புக்கலையை கலை உணர்வோடு பழகுவதும் செய்வதும் மிகக் குறைவாகவே உள்ளது. ஆயினும் கலைநாட்டமும் ஆர்வமும் குறையவில்லை. இந்த அடிப்படையில் மேலும் மக்கள் மத்தியில் எமது கலைகளை வளர்க்க அறிஞர்கள் முன்வரவேண்டும் இளைஞர்களை ஆற்றுப்படுத்தவேண்டும்
JJ
 

மாருதம் 9 - 2008 சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
வட்டத்தின் விருது பெறும் கலைஞர்கள் நாடகக் கலைச் செல்வர்
திரு.பி.ஏ.சி. ஆனந்தராசா
1935ம் ஆண்டு மார்ச் 21ம் திகதி வவுனியா இறம்பைக்குளத்தில் பிறந்து வளர்ந்த திரு.பி.ஏ.சீ.ஆனந்தராசா ஒரு நாடகக் கலைஞராகவும், உளவளத் துணையாளராகவும் தம்மை உருவாக்கிக் கொண்டவர். இவரது பாட்டனார் வேந்தர்கோன் முதலியார் ஒரு கூத்தராகவும் பாடகராகவும் திகழ்ந்தவர். அவரது தாக்கம் சிறுவயது முதல் தனக்கு உண்டு என்று கூறும் திரு.ஆனந்தராசா பாடசாலைக் காலங்களில் இறம்பைக்குளம் றேன் கத்தோலிக்கப் பாடசாலையில் நடைபெற்ற நாடகங்களும் தன்னை நன்றாக ஈர்த்தன என்டார்.
தனது தந்தையாரின் உத்தியோக இடமாற்றம் காரணமாக இரண்டாம் நிலைக் கல்வியை மட்டக்களப்பில் தொடர்ந்த போது நாடகத்துடனான அவரது பிணைப்பு மேலும் அதிகரித்தது. நண்பர்களுடன் சேர்ந்து வீடுகளில் நாடகம் எழுதி நடிக்கும் பழக்கம் பனைவடலிகளில் தொடங்கி மேடைகள் வரை நீடித்தது. பனை மூரி மட்டைகள் தான் வாட்களாகவும், 1ங்குகள் முடிகளாகவும் ஆகின. அமரர் யோசப் பரராஜசிங்கம் (பா.உ) இவரது நாடக கூட்டாளி ஆவார்.
இளவயதில் தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா பாடிய (பக்தமிரா, வசந்தகோகிலம்) படப் பாடல்கள் பாடும் பழக்கமும் காந்திய தத்துவத்தில் ஈடுபாடும் அவரை ஆட் கொண்டது.
திரு.ஆனந்தராஜாவின் கட்டிளமைப்பருவம் அனுராதபுர சென்.யோசப் கல்லூரியிலும், தமிழ்ச் சங்கத்திலும், கந்தசாமி கோயிலிலும், விவேகானந்தா வித்தியாசாலையிலும் வளர்க்கப்பட்டது. ஒரு “சின்ன யாழ்ப்பாணம்' என அறியப்பட்ட அவ்வூரில் பிரபல நாடகக் கலைஞர் அநு.வை.நாகராஜன் இவரது சகபாடியாக விளங்கினார். சேக்ஸ்பியரின் ஆங்கில நாடகங்களில் நடித்து பரிசில்கள் பல பெற்றார். அத்தோடு தமிழ் ஆசிரிய குழாத்தின் வழிகாட்டலில் தமிழ் நாடகங்களிலும் நடித்தும் எட்வேட் மாஸ்ரரின் வழிகாட்டலில் நாடக எழுத்திலும் பயிற்சி பெற்றும் அரச இலக்கிய நாடகங்களில் பரிசில்களும் பெற்றார்.
1958-1962 வரையான காலப்பகுதியில் இந்தியாவில் விஞ்ஞான பட்டதாரிப் படிப்பை மேற்கொள்ளும் போது சேக்ஸ்பியர், பேர்னாட்சோ எழுதிய பல நாடகங்களை வாசித்ததோடு நடிப்பிலும், நாடகம் எழுதுதலிலும் மதகுருக்களின் உதவியுடன் சிறப்பான பயிற்சி பெற்றார். அத்தோடு நாடகம், நாடகத்தயாரிப்பு, போன்றவற்றிலும் ஒப்பனை,
- 69

Page 37
மாருதம் 9 - 2008 சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
ஒலியமைப்பு, உடையமைப்பு என்பவற்றிலும் முறையான பயிற்சி பெற்றார். நடிகள் அசோகன், டி.கே.எஸ் சகோதரர்கள், சகஸ்ரநாமம் ஆகியோரின் நாடகங்களை பார்ப்பதும், அவை பற்றி அறிதலிலும் ஈடுபாடு காட்டினார். திராவிட கழகத்தினரது நாடகங்களையும் அவர் தவறவிடவில்லை. அறிஞர் அண்ணாத்துரையின் ஓர் இரவு, கலைஞர் கருணாநிதியின் தூக்குமேடை, எம்.ஆர்.ராதாவின் இரத்த கண்ணிர் என்பன முக்கியமானவை.
1963ல் இலங்கைக்கு வந்து இளவாலை சென் ஹென்றீஸ் கல்லூரியின் ஆசிரியராக பணியாற்றிய போது தனது நாடக முயற்சியை கைவிடவில்லை. அரச, சமூக நாடகங்களை மேடையேற்றி பாடசாலை மட்டப் போட்டிகளில் பாடசாலை மாணவர்களை பங்குபற்றச் செய்தார். 1969ல் கலையரசு சொர்ணலிங்கமும், பேராசிரியர் வித்தியானந்தனும் தலைமை தாங்கிய கலைக் கழக நாடகப் போட்டிக்கு நாடகங்கள் பழக்கினார். நட்புக்கோர் நடுகல் எனும் பாரி, கபிலரின் கதையை நாடகமாக்கி இரண்டாம் பரிசு பெற்றார்.
சினிமா பாணி இலக்கிய சமூக நாடகங்களையே தயாரித்து வந்த ஆனந்தராஜா நாடகக்கலைஞர் தார்சியஸ் ஐ 1977ல் சந்தித்த போது தனக்கொரு புதிய பாதை, கிடைத்தது என்கிறார். என்.சுந்தரலிங்கம் இயக்கிய ஆர்.சிவானந்தனின் “விழிப்பு நாடகம் வித்தியாசமான உணர்வை இவருக்கு வழங்கியது. தொடர்ந்து நாடக அரங்கக் கல்லூரியில் இணைந்து சண்முகலிங்கம், போராசிரியர் சிவத்தம்பி, காரை சுந்தரம் பிள்ளை மற்றும் தேவன் ஆகியோர் நடாத்திய நாடக எழுத்துப் பட்டறையில் கலந்து கொண்டு புதிய மோடி நாடகங்களை எழுதினார். அந்த வகையில் 1980ல் எழுதப்பட்ட ‘இருட்டினுள் குருட்டாட்டம்' எனும் நாடகம் சிறப்பிடம் பெறுகின்றது.
“யாழ்ப்பாண சேக்ஸ்பியர் என 1970 களில் அழைக்கப்பட்ட கே.கே.சோமசுந்தரம் (ஆங்கில விரிவுரையாளர்) அவர்களால் உந்தப்பெற்று ‘மக்பத்', 'ஒத்தெல்லோ', ‘யூலியசீசர்’, ‘காம்லட்' போன்ற நாடகங்களை தமிழில் சுருக்கி எழுதி தயாரித்து பல தேசிய விருதுளைப் பெற்றுக் கொண்டார். 1982 ல் பூந்தான் யோசப்பின் உதவியுடன் ”கருங்குயில் குன்றத்து கொலை” எனும் நாடகத்தை அரங்கேற்றினார். இவரது சமய மற்றும் சிறுவர் நாடகம் கொண்ட தொகுதி "இருட்டினுள் குருட்டாட்டம்” எனும் நூலாகவும், ”அன்புக் கரங்கள்” எனும் உளவியல் அனுபவ எழுத்துக்கள் இன்னொரு நூலாகவும் வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தால் வெளியிடப்பட்டுள்ளன. 1988ல் ஆசிரியப் பணியிலிருந்து ஓய்வு பெற்று ஒரு உளவளத்துணையாளராக, வணபிதா செல்வரத்தினம் அடிகளார் வழிகாட்டலில் சாந்தியகத்திலிருந்து பணி புரிந்துவந்தார். 1995ல் வவுனியாவில் ‘மனோசாந்தி' எனும் அமைப்பை திரு.மு.நந்தகுமார் (உதவிப் பதிவாளர்) உடன் சேர்ந்து உருவாக்கி அப்பணியை தொடர்ந்தார். "உளவளத்துணை' LD BOLD set,356) isg56) Psycho Social care for children 61 gub b|T60)6)ub வெளியிட்டுள்ளார். பல வெளிநாடுகளில் பயிற்சிகளைப் பெற்றும் உள்நாட்டு நிறுவனங்களுடனும் இணைந்து இப்பணியை இன்றுவரை தொடர்ந்து வருகிறார்.
இத்தகைய சிறந்த நாடகக் கலைஞரை, சமூகசேவையாளனை 'நாடகக் கலைச் செல்வர்” என்னும் விருதினை வழங்கி எமது வட்டம் பெருமை கொள்கிறது.
مس۔ 70-۔

மாருதம் 9 - 2008 சமூக, கல்வி கலை இலக்கிய 65 bunei,
நாடகக் கலைச் செல்வர்
அருணா செல்லத்துரை
1947 செப்ரெம்பன் 09ல் முள்ளியவளையில் பிறந்த திரு அருணா.செல்லத்துரை முள்ளியவளை சைவ பாடசாலை, வற்றாப்பளை ரோமன் கத்தோலிக்கப் பாடசாலை, வித்தியானந்தாக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றவர். 1960களில் முள்ளியவளை இயல் இசை நாடக மன்றம், பாரதி இலக்கிய இளைஞர் மன்றம் என்பவற்றில் இயங்கி பல நாடகங்களை எழுதி நடித்து நெறியாள்கை செய்தார். அத்தோடு சுருக்கெழுத்து, தட்டெழுத்து, கணக்குப் பதிவு போன்ற துறைகளை பருத்தித்துறை மற்றும் நெல்லியடியிலும் வவுனியாவில் கூட்டுறவு பயிற்சியையும், கிளிநொச்சியில் விவசாயப் பாடசாலையிலும் பயிற்சிகளைப் பெற்றார்.
முள்ளியவளை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தில் பொது முகாமையாளராக கடமையாற்றி தனது 23வது வயதில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நிகழ்ச்சி உதவித்தயாரிப்பாளராக இணைந்தார். நாடகங்கள், உரைச்சித்திரங்கள், விளம்பர நிகழ்ச்சிகள் என்பனவற்றை தயாரித்து நிகழ்ச்சித் தயாரிப்பாளராக தன்னை உயர்த்திக் கொண்டார்.
1981ல் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்புப் பயிற்சியை ஜேர்மனியிலும், 1984ல் தொலைக்காட்சி செய்தி பரிவர்த்தனைப் பயிற்சியை மலேசியா, சிங்கப்பூர் நாடுகளிலுல் பெற்று இலங்கையின் தொலைக்காட்சித் துறையின் ஆரம்பகால தொலைக்காட்சி ஊடகவியலாளராக மிளிர்ந்தார். "ஆயகலைகள் எனும் நுண்கலைத் தொடரையும், "ஒளித்தென்றல்" என்ற மெல்லிசைப் பாடல் நிகழ்ச்சியையும் "புதிய கீதம்” எனும் மெல்லிசைக் கலைஞள் அறிமுக நிகழ்ச்சியையும் தயாரித்து வழங்கினார்.
பல மெல்லிசைப் பாடல்களை எழுதியதோடு ‘திருப்பங்கள்', 'வீடு போன்ற தொலைக்காட்சி நாடகங்களை எழுதி தயாரித்தார். "வீடு' ஒரு நூலாக வெளிவந்து
பல பரிசில்களை வென்றது.
தொடர்ந்து 1999ல் சக்தி தொலைக்காட்சியில் பணிப்பாளராக கடமையாற்றி இன்று வரை ஆலோசகராக கடமை புரிகின்றார்.
1978ல் திருமணம் முடித்து இரு பிள்ளைகளைப் பெற்று அவர்களையும் தனது தொடர்பியற்துறையில் ஈடுபடுத்தி வருகிறார். மகள் பத்திரிகைத் துறையில்
-71 -

Page 38
மாருதம் 9 - 2008 சமூக, கல்வி, கலை இலக்கிய சஞ்சிகை
பட்டதாரியாகி சக்தி தொலைக்காட்சியில் முதல் பெண் செய்தியாளராகவும், இன்று தீபம் தொலைக்காட்சியின் தயாரிப்பாளராகவும் பணிபுரிகின்றார். அவரது மகனும் தொடர்பியலில் பட்டம் பெற்று இன்று சந்தை தொழிநுட்ப கல்வியைக் கற்கிறார்.
”வீடு' நாடக நூலைத் தொடர்ந்து மெல்லிசைப் பாடல்கள் (1994) நந்தியுடையார் (1996 - சாகித்திய மண்டல பரிசு), இலங்கையில் தொலைக்காட்சி (1997 - வடக்கு கிழக்கு மாகாண பரிசு), வன்னிப் பிராந்திய கூத்துக்கள் (2000), அகதிமுகாம் (2001) அடங்காப்பற்று வன்னிவரலாறு (2002) பண்டாரவன்னியன் குருவிச்சிநாச்சியார் (2003), அடங்காப்பற்று வன்னி வரலாறு (பாகம் 2) 2002 (பண்டாரவன்னியன்), பாகம் 1 - கிறிஸ்துவுக்கு முன், கி.பி(2004), பாகம் 3 - சுதேசத்தலைமைகள் (2005), பாகம் 4 - மாப்பாணவன்னியர் - மடப்பள்ளி வன்னியர் (2007), தொலைக்காட்சி செய்திகள் (2008) எனப் பல நூல்களை வெளியிட்டுள்ளாள். வடக்கு மாகாண கல்வி கலாசார அமைச்சுக்காக ‘ஒருநாள்' எனும் வீடியோ குறும்படத்தை (2008) இயக்கியிருந்தார் ஏற்கனவே யாழ்தேவி (எழுத்துஅகளங்கன்) 'தண்டன்ை’ எனும் குறும்படங்களை இயக்கியதோடு ஒலித்தென்றல் (ஒலிப்பேழை) வேழப்படுத்த வீராங்கனை (ஒளிப்பேழை) ‘நந்தியுடையார் (ஒலிப்பேழை & ஒளிப்பேழை) என்பவற்றையும் வெளியிட்டுள்ளார். பல நூல்களை வெளியிட்டு பல பட்டங்களையும் பெற்றுள்ளார். வடக்கு கிழக்கு மாகாண ஆளுநர்விருது, கலாவிநோதன் (1992), தொடர்பியல் வித்தகர் (1994) என பல விருதுகள் பெற்ற திரு.அருணா செல்லத்துரை உண்டா அபிநந்தன எனும் தங்கவிருதை சிறந்த வானொலிநாடகப் பிரதிக்காக (நந்தி உடையார்) 1996ல் பெற்றுக்கொண்டார். இவ்வளவு சிறப்புக்கள் பொருந்திய அருணா செல்லத்துரை அவர்களை வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தினராகிய நாங்கள் நாடகக் கலைச் செல்வர் எனும் விருதை வழங்கி கெளரவிப்பதில் மகிழ்வடைகிறோம்.
வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி வெளியிட்ட இசை இறுவட்டு
Pr:Amed Py:
na tumaana Vatwa Afya V. 5.
-72 -
 

uoாருதம் 9 2008 சமூக, கல்வி கால இலக்கிய சஞ்சிகை
பதிவு : 3
பத்தாண்டு நிறைவு நிகழ்வு
முரளிதரன் சிவாஜினி
வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் 2007ம் ஆண்டிற்கான பத்தாண்டு நிறைவு நிகழ்வு கடந்த 21.03.2008 காலை 9.30 மணிக்கு தமிழ்மணி அகளங்கன் தலைமையில் மண்டபம் நிறைந்த இலக்கிய ஆர்வலர்களுடன் ஆரம்பமானது.
பிரதம மற்றும் கெளரவ விருந்தினர்களான அரசஅதிபர் திரு.சி.சண்முகம், வவுனியா வளாக முதல்வர் பேராசிரியர் சு.இராஜதுரை, பிரதேசசெயலாளர் செல்வி. த.துரைச்சாமி, வவுனியா கல்வியியற்கல்லூரி பீடாதிபதி திரு.க.பேர்னாட் அவர்களும் மங்கல விளக்கேற்றி விழா ஆரம்பிக்கப்பட்டது. திரு.த.தனசிலன் அவர்கள் வரவேற்புரையை ஆற்றி இலக்கிய நண்பர்களை வரவேற்றார். வவுனியா நிருத்திய நிகேதன நுண்கலைக்கல்லூரி மாணவர்களின் வரவேற்பு நடனத்தை தொடர்ந்து தலைவர் திரு.அகளங்கன் தலைமையுரை ஆற்றினார்.
மாருதம் சஞ்சிகை இதழ் 8 பிரதேச செயலாளரினால் வெளியிட்டு வைக்கப்பட்டது. அறிமுக உரையினை திரு.கபேர்ணாட் அவர்கள் ஆற்றினார். மாருதம் சஞ்சிகையின் முதற்பிரதியை வவுனியா சுத்தானந்த இ.இ.ச.செயலாளர் க.தர்மதேவன் பெற்றுக் கொண்டார்.
தலைமையுரையில் தமிழ்மணி அகளங்கன் பத்தாண்டுகால கலைஇலக்கிய பயணத்தையும் அதன் சாதனைகளையும் கூறி அப்பணி மேலும் தொடர தனது ஆசியை வழங்கினார். இதன் பின்பு பார்வையாளர்களின் கைகளிலும் “மாருதம்’ தவழ்ந்தது.
சஞ்சிகையோடு மட்டும் நின்று விடாது இரண்டு நூல் வெளியீடுகளையும் வட்டத்தினர் நிகழ்த்தினர். இளங்கவிஞர் திரு.அ.பேனாட் எழுதிய “மூங்கில் காற்று” எனும் கவிதை தொகுப்பு வவுனியா நகரசபை செயலாளர் திரு.ரி.ஜெயராஜ் அவர்களால் வெளியிட்டு வைக்கப்பட்டது. முதற்பிரதியை வவுனியா இந்துமாமன்ற செயலாளர் திரு.சி.ஏ.இராமஸ்வாமி அவர்கள் பெற்றுக் கொண்டார். அறிமுக உரையை வவுனியா தேசியகல்வியியற் கல்லூரி விரிவுரையாளர் திரு.ந.பார்த்தீபன் நிகழ்த்தினார்.
இரண்டாவதாக பண்டிதர் ரீமத்.வ.சு.ராஜஐயனார் எழுதிய மாயக்குதிரையும் இலக்கியக் கட்டுரைகளும் எனும் நூலை வவுனியா வடக்கு வலயக்கல்விப் பணிப்பாளர் திரு.த.மேகநாதன் அவர்கள் வெளியிட்டு வைத்தார். முதற்பிரதியை திருமதி சுசீலாதேவி குமாரசுந்தரம் பெற்றுக் கொண்டார். நூல் தொகுப்புரையை வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி விரிவுரையாளர் திரு.மு.கெளரிகாந்தனும் அறிமுக உரையை இளைப்பாறிய
-73 -

Page 39
uDrhēth 9 - 2008. sep6, 6sb5 efEUGU Ssuébeful &thegnet
ஆசிரிய ஆலோசகள் பண்டிதை யோகலட்சுமி சோமசுந்தரம் அவர்களும் நிகழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து கலைஞர் கெளரவிப்பும், விருது வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது. சிற்பக்கலைஞர் கலாபூஷணம் சு.சண்முகவடிவேல் அவர்களுக்கு “சிற்பக்கலைச் செல்வர்” விருதும் சங்கீதவித்துவான் கலாபூஷணம் திரு.கே.ஆர்.சிவசோதி அவர்களுக்கு “இசைச் செல்வர்” விருதும் வழங்கி கெளரவிக்கப்பட்டது. கெளரவிப்பு உரையை யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாக ஆங்கில மொழித்துறைத் தலைவர் திரு.கந்தையா ழிகணேசன் அவர்கள் நிகழ்த்தினார். அவ்வுரையில் விருது வழங்கிய இருவரதும் கலைப்பயணம் பற்றிய ஒரு அறிமுகத்தை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
மேலும் வவுனியா வளாக முதல்வர் பேராசிரியர் சு.இராஜதுரை விருது வழங்கி உரையாற்றினார். வவுனியா நகரசபை செயலாளர் திரு.ரி.ஜெயராஜ் மாலை அணிவித்தார். அரசஅதிபர் திரு.சி.சண்முகம் பொன்னாடை அணிவித்து கெளரவித்தாள். பிரதம விருந்தினர் தமதுரையில் 1990 இடம்பெற்ற இடம்பெயர்வு காரணமாக வடக்கில் இருந்து வந்த அதிகமான கலைஞர்கள் வவுனியா மாவட்டத்தின் பெயரைக்கூறக்கூடிய அளவிற்கு வளர்ந்து வருகின்றனர். மிகக்குறைந்த சனத்தொகையான கல்விமான்களும், கலாரசனையுள்ள கலைஞர்களும் கொண்ட வவுனியா மாவட்டம் மிகவும் துரிதமாக வளர்ந்து வருவதற்கு கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் முயற்சி மிகவும் வரவேற்கத்தக்கது. என்றார். இவ்வாறு எழுத்தாளருக்கு கலைத்துறையின் தனித்துவத்தை பேணி திறமைகளை வளர்ப்பதற்கு இது போன்ற முயற்சிகள் இன்றியமையாதது என்று தமதுரையில் குறிப்பிட்டார்.
அடுத்து கலைநிகழ்ச்சிகள் ஆரம்பமானது செல்விசஷ்மீரா ரீகணேசன், செல்வன் ச.திருக்குமரன் ஆகியோரின் இசைப்பாடல்கள் சபையோரை மகிழ்ச்சிட்படுத்தின கலைஞர் திரு.எம்.தைரியநாதன் வழங்கிய இசை நாடகப் பாடல்கள் அபிநயத்துடன், நளினமாக பாடப்பட்டன. இந்நிகழ்வு சபையோரின் அபிமானத்தை பெற்றது.
வவுனியா வளாகக் கலை கலாசார மன்றம் வழங்கிய பாலபேராதரனின் மருத நிலத்தேள் கதாநிகழ்வு இடம்பெற்றது. வவுனியா வாளாக மாணவர்களின் யதார்த்தமான நடிப்பில் தொடர்ந்து வவுனியா நிருத்திய நிவேதன நுண்கலைக் கல்லூரி மாணவர்களின் நடனவிருந்து இடம்பெற்றது. சினிமாபாடல்களுக்கு நவீன ஆடை உடுத்தி பரதநாட்டிய அபிநயங்களும் கலந்து ஒரு புதிய படைப்பாக சLையோரின் காத்திரமான இரசனைக்கு பாத்திரமானது.
வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரி மாணவ ஆசிரியர்கள் வழங்கிய இசையும் அசைவும் நிகழ்வு தற்கால சீரழிவுகளையும் யதார்த்தமாக பிரச்சனைகளையும் படம்பிடித்துக்காட்டும் புதுமையான நிகழ்வாக இருந்தது. வவுனியா தமிழ் மத்தியமகா வித்தியாலய மாணவரின் கவிதா நிகழ்வும் பார்வையாளர்களை பரவசப்படுத்தியது. சிறந்த கவிதைகளுக்கு அபிநயங்களை நாடகபாணியில் வெளிப்படுத்தி இருந்தமை புதிய முயற்சியாய் அமைந்தது. விபுலம் அரங்கியற் கலைக்கழகம் வழங்கிய நாடகம்
-7կ -

மாருதம் 9 - 2008 சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
(நெறியாள்கை கந்தையா பூரீகந்தவேள்) மற்றும் வவுனியா பிரதேச செயலகப் பெண்கள் பாராளுமன்றத்தினர் வழங்கிய குழந்தை ம.சண்முகலிங்கம் எழுதிய தாயுமாய் நாயுமானார் நாடகம் (கந்தையா றிகணேசனின் நெறியாள்கையில்) மேடைஏற்றப்பட்டிருந்தன. வயது வித்தியாசம் இன்றி பல கிராமங்களைச் சேர்ந்த பெண்களும் மிகத்துணிவாக மேடையேறி தமதுபாத்திரங்களை திறம்பட செய்திருந்தனர். முழுக்கமுழுக்க பெண்களால் நடிக்கப்பட்ட நாடகம் ஆணாதிக்க சமுதாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்வாக அமைந்திருந்தது.
நன்றியுரையை உப செயலாளர் திரு.மாணிக்கம் ஜெகன் வழங்க செல்வி. அபிராமி சண்முகவடிவேல் பாடிய வாழ்த்துப் பாடலுடன் நிகழ்வு இனிதே நடந்தேறியது. வவுனியா நகரசபை ஊழியர்களின் ஆதரவுடனும் கலை இலக்கிய ஆர்வலர்களின் ஊக்குவிப்புடனும் கண்களுக்கும், அறிவிற்கும் விருந்து படைத்த இந்நிகழ்வு வட்டத்தினரின் காத்திரமான கலை இலக்கியப்பணியை எடுத்தியம்பியது.
OOO
பத்தாண்டு நிறைவு நிகழ்வில் விருது பெற்ற சிற்பக்கலைச் செல்வர் சண்முகவடிவேல், இசைச்செல்வர் சிவசோதி மற்றும் வட்டத்தினர்.
॥ ॐ ह्रथ्यः

Page 40
மாருதம் 9 - 2008 சமூக, கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம் நடாத்தும் பதினோராண்டு நிறைவு விழா
நிகழ்வு 121
காலம் 12-12-2008 காலை 9.30 மணி இடம் சுத்தானந்த இந்து இளைஞர் சங்க
கலாசார மண்டபம், வவுனியா. தலைமை : தமிழ்மணி அகளங்கன்
மாருதம் சஞ்சிகை இதழ் 9 வெளியீடு
நூல் வெளியீடு கந்தையா நீகணேசன் எழுதிய'நா ற்று மேடை’ சான்றோர் விருது வழங்கும் வைபவம் நாடகக் கலைச்செல்வர் திரு.அருணா செல்லத்துரை (நாடகவியலாளர்) நாடகக் கலைச்செல்வர் திரு.பி.ஏ.சி. ஆனந்தராஜா (நாடகவியலாளர்) கலைநிகழ்ச்சிகள் இசை விருந்து இசை நாடகப் பாடல்கள் கலைஞர் திரு.எம்.தைரியநாதன் கலைஞர் திரு.ச.ஜோ. அந்தோனிப்பிள்ளை
நடன விருந்து வவுனியா நிருத்திய நிகேதன நுண்கலைக்கல்லாரி மாணவிகள் நட்டுவாங்கம் : நிருத்தியவாணி திருமதி சூரியயாழினி வீரசிங்கம்
நாடக விருந்து யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாக கலை கலாசார மன்றம் வழங்கும் முன்னுரிமை பி.ஏ.சி.ஆனந்தராசா ரூ சங்கரன்செல்வி
எழுத்தும் நெறியாள்கையும் கந்தையா பூீகணேசன் எழுதிய கைகளுண்டு கால்களுண்டு வவுனியா சத்தியசாயி சிறுவர் இல்லம்
குழந்தை.ம.சண்முகலிங்கம் எழுதிய “எந்தையும் தாயும்’
நெறியாள்கை கந்தையா பூீகந்தவேள் -76 -

மாருதம் 9 2008, சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
sørılığspog, hạQuập
공홍(黃道GDrmT법道的)등部omp약n &m城南高城g)Timw986長老長的정(國長법편0m정 정德定U長安定的制的 觀(9長治)TTTTNTM宮島)름長s SDN980 홍명(南道民C%城n &등병&U道宣長安dR 홍용병道邑당니극(高9 長明SUn長906 없는m양f之明道들용南宮守 李宮明편明道86 STINO영6 :Qu長安國民LOEqu的 思R&DPU986 長田家동원 정혼9田道岩石L병 YYT MLKYYYYYKKKLl KLL Tl TlLLs 0KKl TYKKKKKlL 0000L00KLLK TmLLL SLLK
Ķī£1||10. – 800z முகிலுரி - 80oa 瓦%。-8003 số009 – 800z ரிஷயர - Looa முதிரn - L003
plosstoo - Gooz ĶoņIIGI - yooz 908奥姆u9-7008
每%。-7008 ĶoņIGI – 2002 Upnri홍 - Sooz sięIJG1 - 100æ ரிழைய0 - 1002 ouosýsýų jo – 100z spriņã3 – tooz gắtoo – IOOē sỹ ĐỊ01 – 8661 928讽喻49-466T
ouosýųo - 1661 gg
副蝴哥B (90BUD函潮n qmítos@7ī£ 'qilms@99sp 長田原明,「트面m당니트高 6g9q9®
$წ(Q9ყ9ფ
的Cal정的
宿Bu图@
(Ceg໘
$999 运9999灵的运99@89 q@postosos poq@@@@@IÐ posso-Tugi 199ș@@@@@@-Ugi (9[9ມມ໌
$999
9ே99
9ே99
闽999
長田OC&SDT的 1991,093), o șlooŋgʊ
Útgoff
(Úcorso 800z q\opop-TIJGĦư9 Z661) 1999ersusrų,9
spolooɓoĝĪ LITÉtooĝo டிர்ேபஐழிப999ரி 恒9退后95 녀(后3「校)不可
1ựxoşi,
니트民主義)大司 1øúságoạmỗ0'Loo) புறபழுேதி ഢI്ഢഴ്വഴ്ഴ്ച ៣ឃ្ល9F fiព្រះp២ 118||ség|100%ē>\s*[9] IỀUsắgjisoissoņu posso@o@ smotos@jo QUE (LGĶ) um(9090960 Q9பகிலகிப989 -809長9田
Ismoyo||J.
-809民田 痘L的增30匈白 த903:N பாகி09gற
||Tsolklos
-109GỌsĩĩgOē g宗高)田0k&G)T的 思m용道Q3G3 gmUC3%的 思mug6I gp鼠0姆W通圈n8s 름高U田 美學的편d%{ { 运900%国逗后9迅点巨取四9! ශිෂුග්‍රාණ m|ඝශ්‍රී ||9|9GI
!!?|[Nos注T
q|Qo]] posmos đùófiségioƐs qĂossos@@& 10091||ITIŴļ9@@ZI 99迫9倒马命。II
199!!0!!??hl%@OȚ QT다르「TT&D的)家長9당니을D德60 痘由u函恩h垣函過反9函函80 运999@增LOptT9LO 运助逾yon习的喇BBCUBun90 sốolmỗ đư90 #ĝĜ90 199ợfiņĝğı sırfi70 浔巨99009999Ɛ0 白為m的diéqdD圈過反%逗ZO
[O
@@@@ poiligi ĝiĝis ĝiwòITIŴum
등m그8 %승독교 GDIN9영8
LLLL LLLL SKCLLLL 0TLLL 00SLLLYSLLL LLL LLLL LLLLYLYLLL LLLLL

Page 41
மாருதும் 9 . 2008 சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
N.S.RATNAM & BROS
Dealers in all hinds of electronic items and spares
HERO A H O N DA
No.6., 1st Cross Street, Vavuniya.
Tes/Fax. 024 - 222 1237
CARVALHO OPTICALS
EAS
R.RANJTʻ.
No 13, Bus Stand Complex, Vavuniya. T.P: O24 22226449 Prop: Ranji
-78 -
 

மாருதம் 9 - 2008 சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
இராசையா மருந்துக்கடை
கோயில் அபிஷேகப்பொருட்கள், வாசனைத் திரவியங்கள், இந்தியா ஒளதுபத்திகள், மொத்தமாகவும் சில்லறையாகவும் பெற்றுக் கொள்ளலாம்.
久
○二)
53 நவீன சந்தை வவுனியா இல: 202, பஜார் வீதி, வவுனியா.
நியூ விஜயா ஸ்ரோர்ஸ்
கொறவப்பொத்தான வீதி, வவுனியா.
-79 -

Page 42
LLLL 0S 0000 S LLLLS TttS TLLL TTT TtuT
வெங்கடேஸ்வரா
பல்பொருள் வாணிப நிலையம்
இல:15, பஸார்வீதி
வவுனியா
தொ.பே. இல : 024 2222418
கனகேஸ் றேடேர்ஸ்
இல.23, 24, சூசைப்பிள்ளையார் குளம், வவுனியா.
024 2221227
-80 -

METO TRADERS
Dealers in Electrical Goods & Plumbing Items
35A, Bus Stand Shopping Complex, Station Road,
Vavuniya. Phome 024 - 2222572
WESTERN | (R)
Authorised Agent
UNION
AMBALAGENCY
(Adjoining Ambal Cafe)
No.09, Horowapothana Road,
Vavuniya. TP/Fax: 024 - 2222421 Office Time: 6.00 a.m. - 9.00 p.m.

Page 43