கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 2009.02

Page 1
Es
ருந்து
பெப்ர
90 حب جية
O9.
 
 

முகிழ்ந்தெழுந்தவர்
விலை-30/-

Page 2
22.
23. 24. 25. 26. 27. 28.
29. 30. 3. 32. 33. 34. 35. | 36.
క
لأفريقيا كيرتديه يتمها
மல்லிகைப் பந்தல் வெளியிட்டுள்ள நூல்கள் எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்
டொமினிக் ஜீவாவின் வாழ்க்கை வரலாறு (இரண்டாம் பதிப்பு) எழுதப்பட்ட அத்தியாயங்கள் : சாந்தன் கார்ட்டூன் ஓவிய உலகில் நான் சிரித்திரன் சுந்தர் மண்ணின் மலர்கள் (13 யாழ் - பல்கலைக்கழக மாணவ - மாணவியரது சிறுகதைகள்) கிழக்கிலங்கைக் கிராமியம் (கட்டுரை) ரமீஸ் அப்துல்லாஹற் முப்பெரும் தலைநகரங்களில் 30 நாட்கள் : டொமினிக் ஜீவா(பிரயாணக் கட்டுரை) முனியப்பதாசன் கதைகள் (சிறுகதை) முனியப்பதாசன் ஈழத்திலிருந்து ஒர் இலக்கியக் குரல் டொமினிக் ஜீவா இப்படியும் ஒருவன் (சிறுகதை) மா. பாலசிங்கம் அட்டைப் படங்கள் சேலை (சிறுகதை) முல்லையூரான் மல்லிகை சிறுகதைகள் : செங்கை ஆழியான் (முதலாம் தொகுதி) மல்லிகைச் சிறுகதைகள் (இரண்டாம் தொகுதி) செங்கை ஆழியான் நிலக்கிளி (நாவல்) : பாலமனோகரன் அநுபவ முத்திரைகள் : டொமினிக் ஜீவா நெஞ்சில் நிலைத்திருக்கும் சில இதழ்கள் டொமினிக் ஜிவா கருத்துக் கோவை (கட்டுரை) பட்டம் மறுதலிப்பும் பல்வேறு சர்ச்சைகளும் (கட்டுரை) முன்னுரைகள் சில பதிப்புரைகள் டொமினிக் ஜீவா தரை மின்கள் (சிறுகதை) முருகானந்தன் கூடில்லாத நத்தைகளும் ஓடில்லாத ஆமைகளும் (சிறுகதைகள்): செங்கை ஆழியான்
நாம் பயணித்த புகைவ60ர்பு (சிறு.ாது,) ஆப்டீன் அப்புறமெ6ன்ன (கவிதை) குறிஞ்சி இார்,தென்றல் அப்பா (வரலாற்று நூல்) தில்லை நடராஜா ஒரு டாக்டரின் டயரியில் இருந்து. டாக்டர் எம். கே. முருகானந்தன்
சிங்களச் சிறுகதைகள் 25 தொகுத்தவர் செங்கை ஆழியான் டொமினிக் ஜிவா சிறுகதைகள் - 50 இரண்டாம் பதிப்பு
Jindrawn Portrait for Unwritten Poetry - டொமினிக் ஜிவா சுயவரலாறு (ஆங்கிலம்) தலைப் பூக்கள் (மல்லிகைத் தலையங்கள்) அக்சுத்தாளின் ஊடாக ஒர் அநுபவப் பயணம் மல்லிகை ஜிவா மனப் பதிவுகள் - திக்குவல்லை கமால் மல்லிகை முகங்கள் டொமினிக் ஜீவா பத்ரே பிரசூத்திய - சிங்களச் சிறுகதைகள் - டொமினிக் ஜீவா எங்கள் நினைவுகளில் கைலாசபதி தொகுத்தவர் - டொமினிக் ஜீவா நினைவின் அலைகள் எஸ். வீ தம்பையா முன் முகங்கள் (53 மல்லிகை அட்டைப்படக் குறிப்புகள்)
250/- 1 40/- 75/-.
11 () f. 100/-
... 11 () --
150/-. 135/- 15()/. 175/- 150/-. =س=/275 تست/ 350 140/- 180/- 50/-
80/- 100/= 20/=
150/-
75/- 50/- 120/= 120/- 1 40/-. 150/- بیبی/350
200/= 120/- 200/= 150/= 150/- 20/=
90/=
60/-
200/=

༽
o.
á
லி
60)
'ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி ஆதியினைய கலைகளில் உள்ளம்
ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர் ஈன நிலை கண்டு துள்ளுவர்
உலகப் பாராளுமன்ற வரலாற்றிலேயே, இலங்கை நாடாளுமன்றத்தில் மாத் திரம்தான் ஒர் இலக்கியச் சஞ்சிகை விதந்து பாராட்டப்பெற்ற பெறுமதி மிக்க சம்பவம் இடம்பெற்றுள்ளது. அங்கு பாராட்டப்பட்ட சஞ்சிகை மல்லிகை. இதனை நாடாளுமன்றப் பதிவேடான ஹன்ஸார்ட் (04, 7, 2001) பதிவு செய்த துடன் எதிர்காலச் சந்ததியினருக்காக ஆவணப்படுத்தியுமுள்ளது.
50 -வது ஆண்டை நோக்கி. பெப்ரவரி 56C
് 'ഠർt' ീറ്റ്ര W @ർnർഗ്ഗ ©ർഗ്ഗdരe மல்லிகை அர்ப்பணிப்பு உணர்வுடன் வெளிவரும் தொடர் சிற்றேடு மாத்திர மல்ல - அது ஒர் ஆரோக்கியமான இலக்கிய இயக்க முமாகும்.
201 /4, Sri Kathiresan St, Colombo - 13. Tel: 2320721
mallikaijeeva@yahoo.com
44-வது ஆண்டு மலர் வெளியீடு பற்றிய
ஒரு கணிப்பீடு
சமீபத்தில் மல்லிகையின் 44-வது ஆண்டு மலரை வெளியிட்டு வைத்தோம். தொடர்ந்து பல இலக்கிய நண்பர்களின் வேண்டுகோளை ஏற்று 24.01.2009 அன்று கொழும்பு ஐந்து லாம்புச் சந்திக்கரு காமையில் உள்ள பழைய நகர மண்டபத் தில் அதன் அறிமுக விழாவையும் வெற்றி கரமாக நடத்தி முடித்தோம்.
நமக்கு மனங்கொள்ளத்தக்க
நிறைவு. அதில்.
Luso LD sofras so 6 g,6cioTLT 6ioTL-ma5 வெளியிட்டு வந்துள்ளோம். அறிமுக விழாக் களையும் நடத்தியிருக்கின்றோம். மன நிறைவு அடைந்துமிருக்கின்றோம்.
இந்த 44வது ஆண்டு மலரின் வரவு, எம்மைத் தலை நிமிர வைத்துள்ளது. வானொலி, தொலைக்காட்சிகள் மிக மிகப் பிரதான இடமளித்து, இந்த மலரைப் பற்றி வெகு விமரிசையாகத் தமது கருத்துக் களை வெளியிட்டிருந்தன. நாளோடுகளும் சிலாகித்து விரிவாக எழுதியிருந்தன.
இதில் முக்கியமாகக் குறிப்பிடக்கூடிய தகவல் என்னவென்றால் நாடு பூராவு மிருந்து மல்லிகை மலரை விரும்பிக் கேட்டு எம்முடன் தொடர்பு கொண்டு வரு கின்றனர், பலர்.
மேலைநாடுகளில் இருந்தும், அவுஸ் திரேலியா, கனடா, பிரான்ஸ், தமிழகத்தி

Page 3
லிருந்தும் பலர் மலரை விரும்பிக் கேட்டு, எம்முடன் தொடர்பு கொள்ளுகின்றனர்.
இது இப்படி இருக்க.
இந்த 44வது ஆண்டு மலரின் அறி முக விழாவை கொழும்பு மத்தியில் உள்ள பழைய நகர மண்டபத்தில் நடத்தி விடுவது என முடிவெடுத்தோம்.
இது ஒரு பரிசோதனை முயற்சிதான்!
'மல்லிகை வெளிவருவது மூவினத்து உழைக்கும் மக்கள் வாழ்ந்து வரும் கொச்சிக்கடைப் பக்கமிருந்துதான். ஏன் அதன் விழாக்களை வெள்ளவத்தையில் மாத்திரம் நடத்துகின்றீர்கள்?' என்றொரு குற்றச்சாட்டு, எம்மீது சமீப காலமாகச் சுமத் தப்பட்டு வருகின்றது.
சிலர் தொலைபேசியிலும் வினா எழுப்பினர்.
நாம் வாழும் பகுதி மக்கள் தொகு தியை எந்தக் காலத்திலுமே புறக்கணித்து வாழப் பழகியவர்களல்ல. எந்த மக்களி டையே தினசரி உலவி, வாழ்ந்து வருகின் றோமோ அவர்களை விட்டு விட்டு நாம் வசதி வாய்ப்புத் தேடி, ஒதுங்கிப் போய்
விடக் கூடியவர்களுமல்ல.
அதைக் காரணமாக வைத்தே, இம்
முறை ஆண்டு மலரின் அறிமுகக் கூட்
டத்தைக் கொழும்பு மத்தியில் நடாத்த விரும்பினோம்.
இப்படியான இடங்களுக்கு வந்து போகச் சில சிரமங்கள் உண்டு என்பது எமக்குத் தெரியாததல்ல. அதேசமயம் நமது பகுதிக் கலைஞர்களும், எழுத்தாளர் களும் ஆண்டாண்டாக வெள்ளவத்தைப்
பகுதிக்கு இத்தனை சிரமங்களையும் உள் வாங்கிக் கொண்டு வந்து போயுள்ளனர் என்பதையும், வசதி கருதிச் சாட்டுச் சொல்ப வர்கள் புரிந்து கொள்வது நல்லது.
இதில் நமக்கொரு நல்ல படிப்பினை யும் உண்டு. யார் யார், எவர் எவர் எங்கே எங்கே நிற்கின்றனர் என்பதைத் தெரிந்து, தெளிந்து கொள்ளலாம் அல்லவா? அதுவே ஒரு பெரிய படிப்பினைதானே?
இன்னுமொன்றையும் இங்கு குறிப் பிட்டுக் கூற வேண்டும்.
அரை நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டங்களில் நம்மை நாமே மறுபரிசீலனை செய்து கொள்வது நல்லது போலப் படுகின்றது.
தனிமனித உழைப்பு, நெருக்கமான இலக்கிய நட்புறவு, புதுப் புதுப் பிரதேசங் களில் வாழ்ந்து வரும் புதிய புதிய எழுத் தாளர்களைக் கண்டுபிடித்து, அவர்களை ஊக்கப்படுத்தி வளர்த்தெடுப்பது என்பதே நமது தலையாய குறிக்கோளாக இருந்து வந்துள்ளது. அந்த நமது அடிப்படைக் குறிக் கோளை ஒரளவு நிறைவேற்றி விட்டோம் என்றே இன்று மனப்பூர்வமாக நம்புகின் றோம். மனநிறைவு கொள்ளுகின்றோம்.
அடுத்த காலகட்டத்தை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். நின்று
நிதானிக்கின்றோம். செயற்படவேண்டும்.
அதற்கான வேலைத் திட்டத்தின் அத்திபாரத்தை அமைத்தெடுக்க ஆவன செய்துள்ளோம் என்ற மகிழ்ச்சியான செய்தியை மாத்திரம் இப்போதைக்கு உங்கள் நெஞ்சங்களில் விதைத்து வைக்
கின்றோம். தொடர்ந்து முன்னேறுவோம்.
- ஆசிரியர்

V தமிழ்நூளேடுகளும் -
ட்) இந்த நாட்டுக் கலை இலக்கியத்தின் எதிர்காலமும்,
நினைக்க நினைக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. யோசிக்க யோசிக்கப் பெருமை யாகவும், பூரிப்பாகவும் இருக்கிறது. மனநிறைவைத் தருகின்றது
நமது நாட்டுத் தமிழ்த் தினசரிப் பத்திரிகைகள் இந்த மண்ணின் கலை - இலக்கிய வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும், வெகுசனப் பரம்பலுக்கும் ஆற்றிவரும் ஆக்கபூர்வ மான வெகுசனத் தொண்டை நினைத்து நினைத்து நாம் அளவில்லா மகிழ்ச்சியடை கின்றோம் - பேருவகை கொள்ளுகின்றோம்! - மனந்திறந்து பாராட்டுகின்றோம்
முன்னரும் இதே பகுதியில் இந்த நாட்டுத் தினசரிப் பேப்பர்கள் இந்த மண்ணில் வாழும் கலைஞர்களுக்கும், கலை இலக்கியத்திற்கும் ஆற்றிவரும் மகத்தான பங்களிப்பைப் பற்றிப் பதிவு செய்ததையும் இங்கு மீண்டும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
தமிழக நாளேடுகள் அடிக்கடி மலையாள, கன்னட, ஆந்திர, வட இந்தியச் சினிமாச் சிங்காரிகளுக்குத்தான் வண்ண வண்ணப் படம் போட்டு, அவர்களின் சினிமா மார்க்கட்டை உயர்த்திப் பிடிக்கத் தொடர்ந்தும் தமிழ்ச் சேவை செய்து வருகின்றன. இதுதான் அவர் களின் கலைச்சேவை
மாறாக, அங்கு கலை இலக்கிய வளர்ச்சிக்காகத் தமது வாழ்க்கையையே அர்ப்பணித்து உழைத்து வரும் வாழும் கலைஞர்களைப் பற்றி, மூச்சுக்கூட விடுவதில்லை. அதேசமயம் பாரதியையும், புதுமைப்பித்தனையும் அடிக்கடி உச்சாடனம் பண்ணிக்
கொண்டேயிருப்பார்கள்.
மாறாக, இத்தனை உக்கிர உள்நாட்டு யுத்த நெருக்கடிகள் மத்தியிலும், நமது நாளேடுகள், தேசமெங்கும் நடைபெறும் கலை இலக்கிய நிகழ்வுகளை விரிவாகப் பதிவு செய்வதுடன், தனித்தனியாகவும் கலை இலக்கியவாதிகளின் கருத்துக்களையும், நினைவு தினங்களையும், புத்தக வெளியீடுகளையும் அடிக்கடி வெளியிட்டு, இந்த மண்ணைப் புளகாங்கிதப்படுத்தி வருவதை மெய்யாகவே கருத்தூன்றிப் படித்து, நெஞ்ச நிறைவு கொள்ளுகின்றோம். கலைஞர்கள் இதையிட்டுப் பெருமிதமடைகின்றனர்.
இன்று இவைகள் சிறிய செய்திப் பதிவுகளாகச் சாதாரணரின் கண்களுக்குத் தென்படலாம். அலட்சியமாகக்கூட அவர்கள் இருக்கலாம். இந்தச் சின்னச் சின்னத் தகவல் பதிவுகளே நாளை வரலாறாகப் பேசப்படும்.
இது மாத்திரம் சர்வ நிச்சயம்

Page 4
அட்டைப்படம் :
இற்புதப் படைப்பாவி இாைலுல்லா இடிக்இலங்கையின் இதயத் துடிப்பு
- திக்குவல்லை கமால்
இப்பொழுது "வரால் மீன்களைப் பற்றித்தான் இலக்கியப் பிரியர்கள் அதிகமாகக் கதைக்கிறார்கள். எம்.எஸ்.அமானுல்லா மிகப் பிரபலமான எழுத்தாளராக அறியப்பட்ட ஒருவரல்ல. இருந்தும் இலங்கை சாஹித்திய மண்டலப் பரிசு, இலங்கை இலக்கியப் பேரவைப் பரிசு, கிழக்கு மாகாண இலக்கிய விருது என்பவற்றை ஒரே நேரத்தில் இந்நூல் பெற்றுக்கொண்டது.
'வரால் மீன்கள் பற்றி பரிசுத் தேர்வுக் குழுவினர் சாஹித்திய விருது விழா மலரில் இவ்வாறு பதிவு செய்துள்ளனர்.
'சிறுகதை நுட்பங்க்ள பேணப்படுவதும், கதைகள் படம் பிடிக்கும் பலவித பகைப்புலங்களும், கதை முன்வைப்பதில் பன்மைத்துவமும், வாசகர்களை ஈர்க்கக் கூடிய நடையும், அன்றாடம் காணும் பாத்திரங்களை கதையில் வலிமையாகக் கொண்டு வருகின்ற தன்மையும், இந்தச் சிறுகதைத் தொகுப்பைச் சிறந்ததாகத் தெரிவு செய்யக் காரணமாயின."
அன்று தோணி மூலம் மூதூரைப் பற்றி இலக்கிய உலகில் பேசவைத்தார் வ.அ.இராசரத்தினம். இன்று வரால் மீன்கள் மூலம் அதனைத் தொடர வைத்துள்ளார் எம்.எஸ்.அமானுல்லா.
இந்நூலில் மொத்தமாக எட்டுக் கதைகளே இடம்பெற்றுள்ளன. இந்த எட்டுக் கதைகளுமே பல்வேறு போட்டிகளில் பரிசு பெற்ற கதைகளே. பரிசுக் கதைத்
மல்லிகை பெப்ரவரி 2009 * 4

தொகுதிகளை ஏலவே சில இலக்கிய அமைப்புக்கள் வெளியிட்டுள்ளன. குறிப் பிட்டதொரு போட்டியில், பரிசு பெற்ற வெவ்வேறு எழுத்தாளர்களின் கதைகளே அவற்றுள் அடக்கம். அமானுல்லா என்ற படைப்பாளி வெவ்வேறு போட்டிகளில் பரிசு பெற்ற கதைகளே இத்தொகை நூலில் இடம்பெற்றுள்ளன. நான் அறிந்தவரையில் ஒரே எழுத்தாளின் பரிசு பெற்ற கதை களின் முதற்தொகுப்பு இதுவே தான்!
இவர் இதுவரை வெவ்வேறு நிறு வனங்கள் நடாத்திய பதினெட்டு சிறு கதைப் போட்டிகளில் பரிசு பெற்றுள்ளார். இன்னொரு பரிசுக் கதைத் தொகுதி யையும் உடனடியாக வெளியிடக்கூடிய சாத்தியம் இவர் வசமுள்ளது.
இவரை பரிசுக்காக எழுதும் எழுத் தாளரென்று நான் சொல்லமாட்டேன். போட்டி விபரம் அறிவிக்கப்பட்டதும், யார் நடாத்துகிறார்கள்? எதற்காக நடாத்து கிறார்கள்? அவர்தம் நோக்கமென்ன? என்று மோப்பம் பிடித்து, அதற்கேற்ற பாணியில் இவர் எழுதுவதில்லை. எழுத வேண்டுமென்ற உந்துதல் எப்போதாவது ஏற்படும்போது, ஒரு கதையை எழுதி ஃபைலில் போட்டு விடுவார். போட்டி அறிவிக்கப்படும்போது அதிலொன்றை அனுப்பி விடுவார்.
எப்படிப் பார்த்தாலும் அமானுல்லா வின் அறுபத்திரண்டு வருட வாழ்வில் இருபத்தைந்து சிறுகதைகள்கூட எழுத வில்லை. இவரது முதலாவது சிறுகதை யாழ்ப்பாணம் இணுவிலிருந்து வெளிவந்த 'உதய சூரியன் பத்திரிகையில் இரு
துளிக் கண்ணிர்' என்ற மகுடத்தில் வெளி வந்தது. அப்போது இவரது வயது பதினைந்து. ஐம்பது வயது வரை ஆக ஐந்தாறு கதைகளே எழுதியுள்ளார். தினபதி, தினகரன், மல்லிகை, ஞானம் என்று ஒரு சில கதைகள் பிரசுரம் பெற்றுள்ளன. பிரசுரத்திற்காக எழுதி யனுப்புகின்ற பழக்கமும் இவரிடமில்லை.
பதின்மூன்று வயதில் ஆரம்பித்த வாசிப்புப் பழக்கம், இன்றுவரை நீடிக் கின்றது. இந்த வாசிப்புத்தான் இவரது படைப்புச் செழுமைக்கு முக்கிய காரண மெனலாம். குறிப்பிடத்தக்க வசதி வளத் தோடு இவரது இளமை பயணிக்க அன்றாட உழைப்பாளி ஒருவரின் மைந்தன் இவர். ஒரு சராசரி மனிதனாக வாழ்வின் சகல சுமை களையும் எதிர்கொண்டு வென்று நிற்பவர். இந்த அனுபவங்களும் படைப்பாக்கத்திற்கு உயிரூட்டியிருக்கும்.
வில்லை.
மூதூர் மத்திய கல்லூரியில் கல்வி கற்ற அமானுல்லா, விஞ்ஞான ஆசிரிய ராக, ஆசிரிய ஆலோசகராக, முதலாம்தர அதிபராக கடமையாற்றிவிட்டு, முப்பத் தைந்து வருட கல்விச் சேவையின் பின்னர் ஒய்வு பெற்றுள்ளார். இருந்தும், பாட சாலைக் கல்வியை முடித்துக் கொண்ட இளைஞர் யுவதிகளுக்கு தொழிற் பயிற்சி வழங்கும் அரச சார்பற்ற நிறுவன மொன்றில் இணைந்து, தனது வாழ் புலத்திற்கு தொடர்ந்து பணி செய்து கொண்டிருக்கிறார். கூடவே, மூதூர் இலக்கிய வட்டத் தலைவராகவும் செயற் படுகின்றார்.
மல்லிகை பெப்ரவரி 2009 5

Page 5
எம்.எஸ்.அமானுல்லாவின் சிறுகதை கள் பல தொகுப்பு நூல்களில் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. நீதி அமைச்சின் மும்மொழிச் சிறுகதைத் தொகுப்பில் "மனித இனம், துரைவியின் பரிசுக் கதைத் தொகுப்பில் ’சுங்கான் மீன், லண்டன் பூபாளராகம் பரிசுச் சிறுகதைத் தொகுப்பில் ஒற்றை மாட்டு வண்டில்’, கனக செந்திநாதன் கதா விருதுத் தொகுப்பில் 'கருவேலங் காடுகள், மூதூர் பிரதேச இலக்கியத் தொகுப்பில் ‘தலை முறைகள் ஆகிய சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன.
அவ்வப்போது சில விசேட மலர் களுக்கும் பொறுப்பாசிரியராகவிருந்து செயற்பட்டிருக்கிறார். முன்னாள் பிரதி யமைச்சர் ஏ.எல்.அப்துல் மஜித் அவர் களால் நடாத்தப்பட்ட இஸ்லாமிய கலாசார sign Ldsoft 'situsort' - 1972, LusortsS) ஆசிரிய கலாசாலை வருடாந்த வெளியீடு "யாழ் பிறை' - 1975, மூதூர் மத்திய கல்லூரிப் பொன்விழா மலர் 'அன்னை - 1972, கல்விமான் எம்.எம்.கே.முகம்மது (அதிபர்) ஞாபகார்த்த மலர் இதய மலர் - 2008 என்பன குறிப்பிடத்தக்க சில சிறப்பு மலர்களாகும்.
தினபதி தினம் ஒரு சிறுகதைத் திட் டத்தின் மூலம் எனக்கு அமானுல்லாவின் "எழுத்து' அறிமுகமானதாக ஞாபகம். மூதூர் முகைதீனை சந்தித்த போது, நான் இவர் பற்றி விசாரித்துத் தெளிவு பெற்றேன். அடுத்த வருடமே அமானுல்லா பயிற்சி ஆசிரியராக பலாலிக்கு வந்தபோது நேரடிப் பழக்கமேற்பட்டது. அந்த உறவு முப்பது வருடத்திற்கும் மேலாக நீடிக்கிறது.
‘நிம்மியின் பூந்தோட்டம்' என்ற சிறுவர் நாவல் விரைவில் வெளிவரவிருப்ப தாக அறியக் கிடைக்கிறது.
கிழக்கு மண்ணின் வாழ்வும் வளமும் ஆக்க இலக்கியம் மூலம் வெளிப்பட் டுள்ளது உண்மைதான். எண்பதுகளின் பின்னர் ஏற்பட்ட யுத்தச் சூழல், இன முறுகல், இடப்பெயர்வு, இயற்கை அனர்த்தம் என்பன இதுவரை கவிதையில் பரவலாகவும், ஒரளவு சிறுகதையிலும்
{ւp (Լք 60» ԼD பொருந்திய நாவலாக வெளிப்படவில்லை. துரதிர்ஷ்டவசமாக மேற்குறித்த அனைத் திற்கும் மூதூர் குவிமையமாகவும் அமைந்துவிட்டது. இதையெல்லாம்
கையாளப்பட்டதே தவிர,
உள்வாங்கி ஒரு அற்புதமான படைப்பாகத் தரப்போவது யாரென்ற கேள்விக்கு சரியான விடையாக, அமானுல்லாவே வந்து முன்னால் நிற்கிறார்.
அறுபது கடந்த வாழ்க்கைச் சுழற்சி, சமூகத் செயற்பாட்டாளராக அனுபவப் பார்வை, இயல்பான தெளிவு. அமைதி. நிதானம், கடந்த வருடம் ஹஜ் கடமையை நிறைவு செய்த ஆன்மீக முழுமை, எல்லா வற்றுக்கும் மேலாக படைப்பாளியென்ற வகையில் கிடைத்துள்ள உச்ச அங்கீ காரம், இவை எல்லாமே அமானுல்லாவின் தகுதிப்பாட்டை உறுதிப்படுத்துகின்றன.
இந்த எதிர்பார்ப்பை அமானுல்லா நிறைவு செய்யும் பட்சத்தில், அது சமகால தமிழிலக்கியத்திற்குச் செய்யும் மிகப் பெரிய கைங்கரியமாக அமையு மென்பது உறுதி.
இலங்கைத்
மல்லிகை பெப்ரவரி 2009 游 t

வழமைக்கு மாறாக மோட்டார் சைக்கிளை பிரதான வாயிலுக்கு அருகிலுள்ள நிழல் பரப்பிய பெரிய மரத்தின் கீழ் நிறுத்தவில்லை. பெரிய வாயிலிலிருந்து சிறிது தூரத்தில் இருந்த சிறிய வாயிலுக்கு அருகே தகிக்கும் வெயிலில் நிறுத்தி வைத்துக்கொண்டே, அவளை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தேன்.
பாடசாலைப் பிள்ளைகள் கூட்டமாக வெளியேறிக் கொண்டிருந்தார்கள். திரண்டு நடக்கும் அவர்களின் காலடிகளிலிருந்து கிளம்பிவரும் உஷ்ணமான புழுதி எரிச்சலைத் தந்துகொண்டிருந்தது. தலையில் சுடும் உச்சி வெயில் உதிரத்தில் கொதி யேற்றிக் கொண்டிருந்தது. மனம் நமைச்சல்பட்டுக் கொண்டிருந்தது.
வழமையாக அந்தப் பெரிய மரநிழலில் காஞ்சனாவின் ஆறாம் வகுப்பு ‘மொனிட்டர் பிள்ளையின் குறுகுறுத்த பார்வையையும், இரட்டைக் குஞ்சங் களையும் ரசித்துப் பார்க்க முடியவில்லை.
"ரீச்சர் வாரா. இந்தாங்க பாக்'." என்று அந்தப் பிள்ளை என்னிடம் திணித்துவிட்டுப் போன காஞ்சனாவின் 'ஹாண்ட் பாக்"கினை கைப்பிடியில் தொங்க விட்டுக் கொண்டு பிஷ்டத்தை தகிக்க வைத்த "சீற்றில் அமர்ந்து கொண்டு எரிச்சலை ஒன்று கூட்டி உதைத்து 'ஸ்ராட் செய்துகொண்டு, பின்னே வந்து அமர்ந்த அவளின் முகத்தை, எப்போதும் அவளின் முகத்தை பார்ப்பதற்கென்றே குறிவைத்துச் சரித்து விடப்பட்ட இடதுபுறக் கண்ணாடியினுள் ஊடுருவிப் பார்த்தேன்.
சர்வ சாதாரணமாய், எல்லாவித வாளிப்புகளையும் இழந்து இருண்டு போயி ருந்தது அவளின் முகம். சிரிப்புச் செத்துப்போன அவளின் முகத்தைப் பார்த்தவுடன் இதய அறையினுள் ஏதோ வெடித்துச் சிதறி உடம்பெல்லாம் சன்னமாய்ப் பரவுவது போல.
ھ
"இஞ்சருங்கோ. ஏன் தொப்பி போடயில்லை. தலை அனலாய்க் گ صص
கொதிக்குது.” صص
"வெயில் சுட்டு முகம் இருண்டு போய்க்கிடக்கு, سمع صے
ஏன்.???
ص ノイ "கன நேரமே வந்து..? காவல் து நிக்க வச்சிட்டன் போலை." っイ مسکوتسن
لأكوي) كمصدر
ص
வதிரி.இ. இராஜேஸ்கண்ணன் - ص
மல்லிகை பெப்ரவரி 2009 & 7

Page 6
'கையெழுத்துப் போட்டிட்டு வெளிக்கிடவும் பார்வதி ரீச்சர் ஒரு கதை கேட்கச் சொன்னா. அதுதான் பிந்திப் போச்சு."
என மிக அக்கறை உள்ளவளாய் இப்படி ஏதோ ஒரு சமாதானத்தைச் சொல்லிக்கொண்டே எனது வலதுபுறத் தோளினை இறுகப் பற்றிக்கொண்டு, பின்னே ஸ்பரிசம் தந்து அமர்ந்து கொள்பவள். இடதுபுறக் கண்ணாடியில் என் முகத்தைப் பார்த்தவாறே இடது புறக் காதோரம் சரிந்து அன்றைய நாளின் பாடசாலைப் புதினங்களை நளினமாகக் கதைத்துக் கொண்டு வருபவள், இன்று இறுகிப்போய்.
நான் அவள் முகத்தையும், அவள் என் முகத்தையும் பார்க்க சரித்து விடப்பட்ட கண்ணாடியில் இன்று நான் மட்டுமே அவளை அடிக்கடி பார்த்துக் கொண்டு வருகின்றேன்.
'இந்த மூஞ்சையோடைதான் இண்டு முழுக்க பாடசாலையில் நிண்டா ளாக்கும். இன்னும் கோபம் குறை யேல்லைப் போலை, சரியான பிடிவாதக் காரி, !
காஞ்சனாவின் மெளனம் மனதை அரித்து, எனக்குள் என்னைப் பிய்த்துத் தின்று கொண்டிருந்தது.
'கண்ணாடி வேறை. இடை நடுவிலை. அவளின்ரை முகத்தைப் பார்க்காமல் அதைத் திருப்பிவிட்டால் என்ன...? வேண்டாம். பிறகு அதுவும் பிரளயமாகி..."
என் முதுகோரத்து ஸ்பரிசத்துக்கே தடை விதிக்கும் அளவுக்கு வெளிப் பட்ட அவளின் கோபத்தைக் கடந்து விட்ட இரண்டு வருடங்களில் இன்று தான் முழுமையாக நான் அறிந்திருக் கின்றேன்.
இப்போது வரை, அவள் என் முகத்தை நேரே பார்க்காது விட்டு, இருபத்து நான்கு மணித்தியாலங்கள் நத்தையாய் நகர்ந்து சென்றுவிட்டன.
திருமணத்தின் பின்னர்தான் அவளுக்கு வேலை கிடைத்தது. அவளை பஸ் ஏறி இறங்கி அலையவிட எனக்கு விருப்பமில்லை. அவளோடு நானும் மாற்றம் எடுத்துக்கொண்டு அவ ளோடு வந்து ஒரு வாடகை வீட்டில் குடியிருக்கிறோம்.
எங்களுக்கு கலியாணமாகி இரண்டு வருடங்களும் இரண்டு மாதமும் ஆகி விட்டன. ஒருநாட் கூட நான் அவ ளோடு அப்படிக் கதைத்தது கிடையாது.
வழமையாக அதிகாலையில் எழுந்து சாப்பாடு தயாரித்து எடுத்து, இருவருக்கும் இரண்டு "பார்ஷல்க'கள் கட்டிவைத்து, முதனாள் போட்ட தன் னுடையதும், என்னுடையதுமான உடை களை துவைத்து, உலரப் போட்டு பாட சாலைக்குப் புறப்படுவதில் அவளுக்கு அலாதித் திருப்தி.
நான் படுக்கையிலிருந்து எழுந்து வரும்போது முகம் கழுவி, தலைவாரி, நெற்றியில் விபூதிப் பூச்சு ஜொலிக்க, குங்குமப் பொட்டுடன் பிரகாசிக்கும் அவளின் தேஜஸ் என்னுள் அந்த
மல்லிகை பெப்ரவரி 2009 ஜ் 8

நாளின் இயக்கத்துக்கான சக்தியாக ஊற்றெடுக்கும்.
இன்று காலையில் அவள் எதையும் செய்யவில்லை. அவ்வளவு வெப்பி
அவளுக்கு. போகும் வழியில் ஆளுக்கு மூன்று தோசைகளை பார்சல் கட்டி எடுத்து அவளின் ‘ஹாண்ட் பாக்"கில் நிர்ப் பந்தமாக ஒரு 'பார்சலை” திணித்து விட்டேன்.
சாரம், பாடசாலைக்குப்
ஷிப் பூட்டப்படாத இடைவெளி ஊடாக பிரித்தே பார்க்காது திருப்பிக் கொண்டுவரும் அந்தப் பார்சல் என் கண்ணில் படுகின்றது.
அவ்வளவு நடப்பு அவவுக்கு...! முப்பது ரூபா குடுத்து வாங்கின சாப் LI TG65) . . . வாங்கிக் குடுத்ததையும் கோபத்திலை தின்னாமல் கொண்டு வாறா. கொழுப்
தானுஞ் செய்யமாட்டா.
புக் கூடிப்போச்சு..."
என் மனதில் சினம் எழுந்துவர, எனக்குள் நானே கறுவிக் கொண்டேன்.
எவ்வளவு களைத்துப் போயிருப்பாள். காலையில் தேத்தண்ணி
'பாவம்.
கூடக் குடிக்காமல் போனவள்."
காலையில் அவள் அவசர அவசர
மாக தேநீர் வைத்து ஒரு குவளைத் தேநீரை என்முன் "தொப்'பென்று வைத்துவிட்டு விசுக்கெனத் திரும்பிய வேகம். அவளும் தேநீர் குடிக்கிறாளா என்பதை அவள் அறியாமலே நோட்ட மிட்டேன். அவள் குடிக்கவேயில்லை. என் முன்னே அவள் வைத்துவிட்டுப் போன தேநீரிலிருந்து பறந்து கொண்டி
ருந்த ஆவி அவளின் மனக்கொதிப்பின்
வடிவமாக.
அநேகமான காலைகளில் மேசை மீது தேநீரை வைத்துவிட்டு, நான் தேநீர் பருக தானும் பருகிக்கொண்டே தான் படித்த ஏதாவது ஒரு புதுக் கவிதையின் அற்புதத்தை ரசனையோடு அவள் கூறக் கேட்பதில் ஒரு இனிய சுகம்.
‘ச்சே. எவ்வளவு பெரிய பிழையை விட்டிட்டன் காலையிலை அவளை வில்லங்கமாகத் தன்னும் "ரீ
குடிக்க வைச்சிருக்கலாம்."
கண்ணாடியில் அவளைப் பார்க் கின்றேன், அப்படியே இறுகிப் போன படிதான். எப்படி அவளால் இவ்வளவு நேரமும் தொடர்ந்து முகத்தை அப் படியே வைத்திருக்க முடிகிறது? வைராக் கியம் என்பதன் வடிவங்களில் இதுவும் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும்.
அவளின் வைராக்கியத்தில் நியா யம் இருப்பது போலத்தான் தெரிகிறது. நானும் ஒரு அவசரக் குடுக்கையன்’. எதுக்கெடுத்தாலும் அவசரப்பட்டு வார்த்தைகளை விட்டுவிட்டு, பின்னர் அவஸ்தைப்படும் பேர்வழிகளில் நானும் ஒருவன்.
உண்மையில் காஞ்சனா நேற்று வாங்கி வந்த 'சாறிகள் இரண்டும் அழ காகத்தான் இருந்தன. நான்காயிரம் ரூபா கொடுத்தாலும் இவை இரண்டும் தரத் தில் உயர்ந்தவைதான். ஆனால், நான் கூறிய வார்த்தைகள் காற்றடைத்த பலூனில் ஊசி பாய்ந்தது போல அவளி டமிருந்த உயிர்ப்பை உறிஞ்சி எடுத்து
மல்லிகை பெப்ரவரி 2009 率 9

Page 7
அவளைச் சப்பளித்துவிட்டன. நான் சரியான சுயநலக்காரன். என்னுடைய நோக்கம் நிறைவேறாததற்காக அவளின் மனதை ரணப்படுத்தி விட்டேன்.
'இப்ப என்னத்துக்கு உந்தச் சாறி.? உது உதவாத சாறியாக் கிடக் குது. உதுக்குப் போய் நாலாயிரம் குடுத் திட்டு வாறாய். சம்பளம் எடுத்தால் காசை வீட்டுக்கு கொண்டு வாறதைா விட்டிட்டுச் சும்மா அளவுக்கு மிஞ்சின வேலை பாக்கிறது."
என்னுடைய இந்த வார்த்தைகள் போல, கொடிய வார்த்தைகளை இந்த இரண்டு வருடங்களில் அவள் கேட்ட தில்லை.
எதிர்பார்ப்புகள் பொய்க்கும் போது ஏமாற்றங்கள் உருக்கொள்வது வழமை
தானே.
“பள்ளிக்கூடத்திலை ஒரு ரீச்சர்
இந்தியா போய் வந்தவா. அவ
என்னை நினைச்சுக் கொண்டு
வந்தவா. நான் என்ன செய்யிறது..? வாங்கினால் தானே மரியாதை."
அவளின் சிணுங்கிய வார்த்தை களை இப்போது எண்ணும்போது எனக்குள் கழிவிரக்கம் பெருகியது.
"நான் உன்ரை சம்பளத்திலை கொஞ்சம் காசு வாங்கி என்ரை சம்பளத் தோடை சேர்த்துச் செய்ய நினைச்சது. எல்லாம் வீண். விண் வேலை பார்க் கிறதுதான் உனக்கு வேலை."
i
i
நான்தான். கொதித்த வார்த்தை களை அவள்மீது சிந்தினேன். அவள் துடித்துப் போனாள் என்பதைக் கண்கள்
பனித்துக் காட்டின.
“என்ன செய்ய நினைச்சியள்.?"
அவளின் வார்த்தைகள் பதுங்கின.
"உனக்கென்னத்துக்கு அது..? ஊதாரித்தனம் பண்ணிப் போட்டு. முட்டைக் கண்ணிர் வேறை."
அப்போது இறுகிப் போனவள்தான் இப்போதுவரை என் முகத்தைத் தானும் பார்க்கவேயில்லை.
அன்பு, அக்கறை, அரவணைப்பு இவை - பேரம்பேசலுக்கு அப்பாற் பட்டவை என்பதைப் புரியாதவனா, நான்? அவளுடன் இப்படி நடந்து அவளைப் புண்படுத்தி விட்டேனே!
முன்னே விதியை திடீரெனக் கடந்த "பிரேக்" போட்டேன். அந்தரித்துப் போய் என் தோளினை இறுகப் பிடித்துக்கொண் டாள். கண்ணாடியில் அவள் முகத்தில் ஒரு மெல்லி அதிர்வு. "கவனம்" என்று எனக்குக் கூறுவது போல. அனாயாச
ஒரு பாதசாரியைக் கண்டு
மாக தோளினைப் பற்றிய கையை எடுத்துக் கொண்டாள்.
வீட்டினுள் நுழைந்ததும், 'ஹாண்ட் பாக்கில் உள்ளேயிருந்த பார்சலை எடுத்து நான் பார்க்கும்படியாக மேசை யில் வைத்துவிட்டு, உடைகளைக் களை வதற்காக அறையினுள் சென்றவள் எதற் காகவோ வெளியே வருவதை தாமதப் படுத்திக் கொண்டிருந்தாள்.
மல்லிகை பெப்ரவரி 2009 * 10

என் உண்மையான அன்பை அவ ளிடம் காட்டுவதற்கு ஏற்ற சந்தர்ப் பத்தைத் தரமறுத்து விடுவாளோ என்ற ஏக்கம் என்னுள்.
அறையினுள் நுழைந்து வெகு இயல்பாக அவளின் கைகளைப் பற்றி அதுவரை என் காற்சட்டை பையி லிருந்த அந்தச் சிறிய பெட்டியை கை யில் திணித்துவிட்டு, சட்டென்று வெளியே வந்து மேசையின் முன் அமர் கின்றேன். மனம் என் புத்தியிலும் வேக மாக பறப்பது போல.
அவள் வைத்த பார்சலை அவிழ்த் துப் பார்க்கின்றேன். அதனுள் நான்
எப்போதும் விரும்பிச் சாப்பிடும்
கடலைமா "போளி ஒன்று. அவளின் பாடசாலை 'கன்ரீனில் ” வாங்கி
யிருப்பாள்.
கொண்டுபோன தோசையை அவள்
சாப்பிட்டிருக்கிறாள் என்ற வகையில்
என்னுள் ஒரு திருப்தி.
இது எனக்காக.
போளியை பிய்த்து வாயினுள் திணித்துக் கொண்டிருந்தேன்.
என் பின்புறத்தே முதுகோரம் அவளின் "ஸ்பரிசம்". எனது கையைப் பற்றி அந்தச் சிறு பெட்டியைத் தந்து 'நீங்களே போட்டு விடுங்கோ!' என்றாள்.
அந்த எண்கோண வடிவச் சிறிய நகைப் பெட்டியிலிருந்த சங்கிலியை எடுத்து வாஞ்சையோடு அவளின் கழுத்தில் சூட்டி விடுகின்றேன். நான் எதிர்பார்த்த பிரமாணத்தில் அவளின் கழுத்தோரத்தில் அது பளபளத்து உருண்டது.
"இதைத்தான் செய்ய நினைச் சியளாக்கும்..?"
அணிவித்து விட்ட என் கைகளில் ஒற்றைப் பூவால் நுள்ளியது போலக் கிள்ளினாள்.
அவள் சிணுங்கிச் சிரிக்கும்போது கண்களிலிருந்து ஒரிரு மணிகளும் உதிர்ந்தன.
Dhinu' அவர்களுக்கும், செல்வி. உடிைாந்தன அவர்களுக்கும் 24.01.2009 அன்று கொழும்பில் வெகு சிறப்பாகத் திருமணம் நடைபெற்றது. மல்லிகை ஆசிரியர் உட்பட பலர் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தி மகிழ்ந்தனர். மல்லிகையும் மணமக்களை மனதார வாழ்த்தி மகிழ்கின்றது.
வாழ்த்துகின்றோம் மல்லிகையின் நீண்ட நெடுங்கால அபிமானியும், "Happy Digital Centre isô sílso|msgpsis ஊழியனுமாகிய செல்வன். பழமுதிர்ச்செல்வன்
א.
ஆசிரியர்)
மல்லிகை பெப்ரவரி 2009 & 11

Page 8
எஸ்.ஐ.ந02.2கிலின்
ஆழ்கடலில் ஒரு சப்தம்"
மேடை நாடக விமரிசனம்
- ஏ.எஸ்.எம். நவாஸ்
தமது தமிழ் நாடகத் துறைக்கு மோட்சம் கிட்டுமா? இது மெல்ல மேலேழுமா? என ஒவ்வொரு நாடக ரசிகனும் ஏங்கிக் கொண்டிருக்கும் வேளைகளில் அத்தி பூத்தாற் போல் ஒன்று, இரண்டு என ஆர்வமுடைய தமிழ் நாடகக் கலைஞர்களால் நாடகங்கள்
அவ்வப்போது மேடை காணு
வதுண்டுகாஅங்ணிாறுதிமேண்டலில் ஒரு சப்தம்' என்ற மேடை
நாடகத்தின் ஒரு காட்சி. காட்சியிலே தோன்றுபவர்கள் யேறும் நாடகங்கள் அனைத்
செல்வி, அனுஷ்கா, ஏ.வீரபுஷ்பநாதன்.
தும் வெற்றி காண்பதும் இல்லை. ஆனபோதிலும், 'சிலோன் யுனைட்டட் ஆர்ட் ஸ்டேஜ்" மேடையேற்றும் நாடகங்கள் சோடை போனதில்லை என்ற கருத்துடன்பாடும் உண்டு. (அது என்னைப்
போன்றவர்களிடையே)
தலைநகரின் மேடை நாடகக் களத்தில் கடந்த 35 வருடங்களில் - 35 நாடகங்களை மேடையேற்றி முடித்துள்ள 'சிலோன் யுனைட்டட் ஆர்ட் ஸ்டேஜின் நாடகப் பணிகள் குறித்து நாம் பாராட்டாமல் இருக்க முடியாது. அம்மன்றத்தின் 35வது நாடகமாக அண்மையில் பொரளை நாமல் மாலினி மினி அரங்கில் மேடை கண்ட நாடகம்தான், நமது எழுத்தாளர் எஸ்.ஐ.நாகூர்கனி எழுதிய 'ஆழ்கடலில் ஒரு சப்தம்'. இந்நாடகத்திற்கு கதை, வசனம் எழுதியுள்ளதுடன் அந்நாடகத்தின் காட்சிகள் முடிவில் ஒலித்த பாடல்களையும் கூட அவரே புனைந்துள்ளார். இந்நாடகத்தினை மேடைக்காக இயக்கியிருந்தவர் கே.செல்வராஜன். இவரும் ஒரு பாடலாசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.
மல்லிகை பெப்ரவரி 2009 : 1.
 

திரை விலகுகிறது. வெள்ளை நிற சேலையில் கருணையே வடிவமாக காணப்படும் சுபத்திராவின் கதை, கலைஞர் எஸ்.கந்தையா மூலம் நமக்கு அறிமுகப்படுத்தி வைக்கப்படுகிறது. செல்வத்தின் சிகரத்தில் சிம்மாசனம் போட்டிருந்த முன்னோக்கி நகர்கிறது.
சுபத்திராவின் கதை
மனநலம் குறைந்த பதினெட்டும் பூக்காத பருவப் பதுமை வர்லா. அவளின் தாய் சுபத்திரா, வேலைக்காரன் கருப் பையா, குடும்ப டாக்டர் சரவணன் மற்றும் வக்கீல், நீதிபதி என பட்டியல் அதிகம் நீளாத அளவான கதாபாத்திரங்கள் நாட கத்தை ஆட்கொள்கின்றன.
கதையின் கரு கடுகுதான். மனநல மற்ற மகள் வர்லாகை வாழ்வின் கரைக்கு எவ்வாறு கொண்டு செல்வது என ஏங்கும் ஒரு தாயின் தாகங்கள் இந்நாடகம் மூல மாக சொல்லப்பட்டுள்ளது. தன் மகளை ஆணினத்தின் அசிங்கமான செயல்பாட்டி லிருந்து எவ்வாறு விடுவிக்கிறாள், அதன் காரணமாய் அந்தத் தாய் எடுக்கும் விபரீத மான சில முடிவுகளை முடிச்சுப் போடு கிறது இந்நாடகம்,
சின்னச் சின்னத் தழுவல்கள் செய்து வfலாவை நெருங்கி விளையாடும் வேலைக்காரன் கருப்பையாவின் அசிங்க மான காட்சிகளை கண்ட பின்பு, அவனைத் தண்டிக்க முயலும் அந்தத் தாய் மனம் எதிர்காலத்தில் தனது மகளுக்கு, இவ்வாறான பிரச்சினைகள் வரக்கூடுமே என அஞ்சி அப்படி ஒரு
சூழலில் தனது மகள் வழிலா கர்ப்பமுற்றால் கதி என்னாவது எனச் சிந்தனை வயப்படும் அத்தாய் மகளின் கர்ப்பப்பையை அகற்றிட எடுக்கும் முயற்சியை மருத்துவமும், சட்டமும் நிராகரிக்கின்றது. சட்டத்தின் வேலியைத் தாண்ட முயலும், அந்தத் தாய்மைக்குப் பல சோதனைகளும் ஏற்படு கின்றன. கருப்பையா என்ற வேலைக் காரனையே சுற்றிச் சுற்றி வில்லனாகக் காட்டி கதை புனைந்த நாகூர்கனிநம்மைக் கொஞ்சம் ஏமாற்றி விட்டார். ஒரு காட்சியில் கருப்பையாவை வேலையை விட்டு நீக்கு கிறாள் தாய் சுபத்திரா. கருப்பையா வெளி யேறினால் பிரச்சினையும் முடிந்தது என நாடகத்தை ரசித்தவர்களும் நினைத்திருக் கலாம். ஒரு வேலைக்காரன் போனால் என்ன? இன்னொரு வேலைக்காரி கூடவா செல்வச் சீமாட்டியான சுபத்திராவுக்கு
கிடைத்திருக்க மாட்டாள்.?
"கூரை மீது சோற்றுப் பருக்கைகளை வீசினால் எத்தனையோ காகங்கள் வருவது போல, காசை வீசினால் வேலை செய்ய ஆயிரம் பேர் வருவர். வேலைக்கு ஆள் வருவார்கள். வேலி தாண்டாத வேந்தர்கள் வருவார்களா?" இவ்வாறு தாயின் மனக்குரல் ஒரு காட்சியில் ஒலிக் கிறது. அதேநேரம் அந்தத் தாய்க்கு தன் மகளைப் பராமரிக்க மீண்டும் ஒரு ஆண் வேந்தனையே எதிர்பார்ப்பதும் ஏன்.? அக்கா ஸ்தானத்தில் இருந்து பராமரிக்க ஒரு பெண் வேலைக்காரியையாவது இந்த சுபத்ரா நினைக்காமல் விட்டது ஏன்.? மகளின் கர்ப்பப்பையை அகற்றினாலே போதும் என எண்ணும் சுபத்திரா இவ்வாறு அகற்றிய பின் மகள் கெட்டாலும் பரவா
மல்லிகை பெப்ரவரி 2009 ஜ் 13

Page 9
யில்லை என நோக்குகிறதோ அப் பாத்திரம்? ஆழ் கடலில் ஆழம் இந்த இடத்தில் குறைந்து விட்டது என நாடக ரசிகர்களின் கணிப்பு. அது பிழை யில்லையே!
இவ்வாறான குறைகள் கதையில் இருந்த போதும், நாடகத்தில் வந்த கதை மாந்தர்களின் நடிப்பிலே குறை சொல்வ தற்கில்லை. சுபத்ராவாக தோன்றிய நெய்ரஹிம் சஹீத் நன்றாகவே சோபிக் கிறார். அவரது சோகமயமான நடிப்பு தமிழகத்தின் திரைநடிகை மறைந்த சாவித்திரியை நினைவூட்டுகிறது. ஆனா லும் அவர் வசனம் பேசுவதில் சில தடங் கல்கள், தாமதங்கள். இயக்குநர் பக்கம் நீட்டுகிறோம் இக்குறையை மட்டும்.
வேலைக்காரன் கருப்பையாவாக பாத்திரத்தின் இருப்பாகவே மாறிவிடுகிறார் அப்பாத்திரத்தில் தோன்றி நடித்த ஏ.வீர புஸ்பநாதன். இவரது நடிப்பில் பல மேடை நாடகங்களை நான் கண்ணுற்ற போது, ஆளுமை மிகுந்த நடிகராகத் தென்படு கிறார். இந்நாடகத்திலும் அவரை நன்றா கத் தேற்றியுள்ளார் இயக்குநர் கே.செல்வ ராஜன். இந்நாடகத்தின் கதையின் கரு வாகவும், உயிர் தரும் உரமாகவும், நடிப் பின் உச்சத்தை தொட்டிருக்கிறார் இலங்கைத் தமிழ் நாடகத்துறைக்கு புது வரவான செல்வி. அனுஷ்கா மோகன் குமார். மனவளம் குன்றிய வர்லாவை நம் கண்முன் கொண்டு வந்து 'கமராவுக்கும் கூட தகுதியான நடிகை என நிரூபித் துள்ளார். இவர் "தென்றலே என்ற குறும் படத்திலும் தனி முத்திரை பதித்தவர்
என்பது குறிப்பிடத்தக்கது. நாடகத்துறை யில் இவருக்கு நல்ல எதிர்காலம் உண்டு என மல்லிகையில் நான் இங்கு எழுதி வைப்பதில் மனமகிழ் வடைகிறேன்.
இந்நாடகத்தில் வக்கீலாகவும், நீதிபதி யாகவும் இருவேறு பாத்திரங்களில் தோன்றிய எஸ்.கந்தையாவின் நடிப்பும் குறைகூறுவதற்கில்லை. டாக்டராக ஒரு சில நிமிடங்களே வந்தாலும் நமது மன மேடையில் இருப்புக் கொள்கிறார், நடிகர் வி.டி.போல்ராஜ், மறைந்த நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் சாயல்கள் அவரது நடிப்புணர்வில் தவிர்க்க முடியவில்லை தான்! அனுபவ ஆற்றல்மிகு இயக்கத்தால் அலை அடித்த 'ஆழ்கடலில் ஒரு சப்தம்' நாடகத்திற்கு பொருத்தமாக இசை வழங்கிய எஸ்.ரவிச்சந்தர், மற்றும் காட்சி களை தனது ஒளி வெள்ளத்தால் ஜாலம் காட்டிய கலைஞர் கே.மோகன்குமார் ஆகி யோர் கூட இந்நாடகத்தின் நிமிர்வின் பங்காளிகளே!
'திருடனுக்கு பலநாள் சந்தர்ப்பம் காவலனுக்கு ஒருநாள் சந்தர்ப்பம்"
பன்முக எழுத்தாளர் நாகூர்கனியின் கூர்மை மிகு வசனங்கள் நாடகத்தின் நகர்வுக்கு கைகொடுத்து உதவியுள்ளது. நாடகத்தின் இறுதி முடிவு மனவளர்ச்சி குன்றியோர் நிலையத்துக்கு அதிகாரியாக சுபத்ரா நியமிக்கப்பட்டு மனவளர்ச்சியற்ற வர்லா போன்ற பல வழிலாக்களை ஆதரிப்ப தாகக் காண்பிக்கப்படுகிறது.
மல்லிகை பெப்ரவரி 2009 ஜ் 14

44-2து ஆண்ரு மலரைப் எாது கருத்து لم%%u
- எஸ்.ராமேஸ்வரன்
இந்த ஆண்டு வெளிவந்த 44-வது ஆண்டு மலரை வெகு சாவதானமாக முழுவதும் படித்துப் பார்த்தேன்.
கடந்த காலங்களில் 10-வது ஆண்டு மலரில் இருந்து நான் மல்லிகை மலர்கள்
ஒவ்வொன்றையும் படித்து வருகின்றேன்.
யாழ்ப்பாணத்திலிருந்து மல்லிகை வெளிவந்த காலங்களில் மலர்கள் யாவற்றையும் நான் ஒழுங்காகச் சேமித்து வைத்திருப்பதுடன், இடையிடையே அவற்றில் சிலதை எடுத்துப் படித்துப் பார்ப்பது வழக்கம்.
ஏனெனில் இந்த இதழ்கள் வருங்காலத்தில் ஒருங்குசேர, நூல் வடிவில் வெளிவர வேண்டும் என்பதே எனது பெரு விருப்பம்!
இந்த ஆண்டு மலரில் எடுத்தவுடனேயே கண்ணைக் கவருவது, அதன் முன் அட்டைப் படமாகும். இதுவரை காலமும் மல்லிகை ஆண்டு மலர்கள் இத்தகைய வண்ணம் சிறப்புடன் வெளிவந்தவை அல்ல. இந்த ஆண்டு மலர் அட்டை தயாரிப்பதில் நீங்கள் கூடிய கவனம் செலுத்தியிருப்பது போல, என் மனதிற்குப் பட்டது. அதை இங்கே சொல்லி வைக்கின்றேன்.
ஆனால், எனக்கொரு சந்தேகம், சிற்றேடுகளுக்கு இத்தனை சிரமமெடுத்து அட்டைப்படம் தயாரிக்க வேண்டுமா, என்ன?
அதே சமயம், உள்ளடக்கத் தலைப்புகளுக்கு நீங்கள் மல்லிகையின் ஆரம்பகால எளிமையைத்தான் கையாண்டுள்ளிர்கள். அது தன்னைச் சிற்றேடென்று சொல்வதற்கு சாட்சியமாக இருக்கின்றன.
மல்லிகை பெப்ரவரி 2009 ஜ் 15

Page 10
சமீபத்தில் வெளிவந்த 44-வது ஆண்டு
மலரைப் பாராட்டி ஆங்கிலப் பத்திரிகையான 28.01.2009 தினசரியில் திரு. கே.எஸ்.சிவகுமாரன் வெகு விரிவாக
ஒரு பரந்துபட்ட விமரிசனம் ஒன்றை எழுதியுள்ளார். சிற்றிலக்கிய ஏடொன்றிற்கு, ஆங்கில மொழியில் கிடைத்துள்ள இந்த அங்கீகாரம் இலக்கிய உலகில் கவனத்திற்குரிய ஒன்றாகும்.
- ஆசிரியர்.
கதைகள் அதிகம். மலர்களில் சிறு கதைகளைக் குறைத்து, ஆய்வுக் கட்டுரை களைச் சேர்த்திருக்கலாம். வழமை போல, உங்களது இரு கட்டுரைகளும் இன்றைய நமது தேவைக்ளைக் கணித்து எழுதப் பட்டவையாகவே இருக்கின்றன.
சும்மா நாம் வார்த்தைகளில் அள்ளி எறிந்து கருத்துக்களைச் சொல்லி விட்டுப் போய்விடலாம். அதேசமயம், இந்த 152 பக்க ஆண்டு மலரைத் தயாரிக்க நீங்கள் பட்ட பாரிய சிரமங்களை மெதுவாக எனக்குள் நினைத்துப் பார்த்து மலைத்துப் போய் விடுகின்றேன்.
அடுத்து, இம்மலரைப் பற்றித் தொலைக்காட்சியில் மேமன்கவி, அந்தனி ஜீவா போன்றோர்களின் அபிப்பிராயங் களையும் பார்த்து, மனதிற்குள் பெருமை கொண்டேன்.
தொலைக்காட்சி நேரத்தையும் கடந்து, மல்லிகைக்கு அவர்கள் நேர மொதுக்கியது வியப்பாக இருக்கிறது. மலர் வந்த அந்த வாரமே முற்பகுதியிலேயே வார இதழ் ஒன்றில் தினக்குரல் அரைப்பக்கம் ஒதுக்கி, மிக மிக விரிவாக ஒரு விமர்
சனத்தை வெளியிட்டது. அந்தப் பக்கத் தின் விளம்பர மதிப்பே, பல இலட்சம் ரூபா வாக இருக்கும்.
மல்லிகையின் ஒவ்வொரு அசைவு களையும் என்னைப் போன்றவர்கள் வெகு துல்லியமாக அவதானித்து வருகின்றோம். மல்லிகை ஆசிரியர் வெறும் தனிமனித னல்ல. அவர் ஓர் இயக்கம். அதன் பிரதி நிதி, அவர். அவரது நீண்ட கால இலக்கிய உழைப்பின் பெறுமதி இன்றைய தலை முறையினருக்குச் சட்டென்று விளங்காது. ஊர் விட்டு ஊர் பெயர்ந்தும் - இந்த யுத்த நெருக்கடி காலத்திலும் - தனது இலக் கியக் கொள்கைக்காக அயராது உழைத்து வருவது, தமிழகத்திலும், நடைபெற்றிருக் காத ஒரு சங்கதியாகும்.
இலக்கிய உலகில் பல உட்பகை
கோள் மூட்டுதல்கள், கருத்து மோதல்கள், கோப தாபங்கள், சிண்டு
கள்,
முடிப்புகள் போன்றவை எமக்குத் தெரியாத வையல்ல. இவை அனைத்தையும் சீரணித்துக் கொண்டு, ஒரு தனிமனிதன் சாதனை செய்து வருவதே நமது இலக்கிய உலகத்திற்குத் தனிப்பெரும் பெருமை.
மல்லிகை பெப்ரவரி 2009 ஜ் 16
 

முஹம்மது றபீகின் கனா முறிந்த பகலி பற்றிய இரசனைக் குறிப்புகள்
- நாச்சியாவு பர்வீன்
உன்னைச் சற்று உற்று நோக்கு, என்னையும் கொஞ்சங் கவனித்துக் கொள்.
இருவரின் வெறியும் ஒன்றுதான்.
உறுதியானதொரு முறையீடு என்பதை இன்னொரு தடவை உன்னிடம் சரிபார்த்துக் கொள்கிறேன். ஏனெனில் நாமிருவரும் இப்போது உடன்பாடானவர்கள்தான்.
'எனது வாயை எனது கரங்களினால் பொத்துவதில் உனக்குள் விடுதலை முளைக்கு மென நினைக்காதே. ஏனென்றால் நீயும் நானும் முரண்பாடானவர்களல்ல' என்ற பின் அட்டையின் வாசகங்களே முஹம்மது றபீக்கின் கவிதை பற்றிய ஆளுமைகளை கட்டியங் கூறி நிற்கின்றது.
இன்றைய இலக்கியப் பரப்பிலே மனங்களின் அதிர்வுகளை வெளிப்படுத்தும் ஓர் அரிய சாதனமாக, தவிர்க்க முடியாத கூறாக கவிதை கருதப்படுகின்றது. கவிதை என்றால் என்ன என்று வரைவிலக்கணப்படுத்துவது மிக மிக சிக்கலான விடயமாகும். கவிதை பற்றிய வெவ்வேறு வகையான கருதுகோள்கள், விமர்சகர்கள் மத்தியிலுள்ளது எனலாம். இந்த வகையில் அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரியர் கலாசாலையின் கலை கலாசார மன்றத்தின் வெளியீடான முஹம்மது றபீக்கின் "கனா முறிந்த பகல் கவிதை நூலும் ஈழத்து கவிதைப் பரப்பில் நுழைந்துள்ளது.
கவிதை என்றால் என்ன? என்பதை வரையறுத்துக் கூற என்னால் முடியாது. ஏனெனில் அவ்வாறு செய்வது கவிதைக்கு கடிவாளம் இடுவதற்கு ஒப்பாகும். அதற்கு சுதந்திரமளிக்க வேண்டும். உணர்வுகள் சுதந்திரமானவை. அவற்றின் பரிமாணம் வெவ் வேறானவை. அவற்றை அடைத்து வைப்பது எந்த வகையிலும் நியாயமல்ல என்ற பீடிகை யோடு தமது கவிதை பற்றிய எண்ணக் கருக்களை பதித்துள்ளார் முஹம்மது றபீக்.
தனதும், தான் சார்ந்த சமூகத்தினதும் உணர்வுகளையும், உள்வாங்கல்களையும்
தனது கவிதை முகத்துக்கூடாக துக்கமாய், சந்தோஷமாய், தனது "கனா முறிந்த பகல்"
கவிதை தொகுதிக்கூடாக அழகாகப் புடம்போட்டுக் காட்டியுள்ளார். இந்தக் கவிஞரின் சுமார்
முப்பதற்கும் மேற்பட்ட கவிதைகள் இந்தத் தொகுதியில் இடம்பிடித்துள்ளன. எல்லாக் மல்லிகை பெப்ரவரி 2009 ஜ் 17

Page 11
கவிதைகளும், வெவ்வேறு முகங்களோடு வெவ்வேறு தளங்கள் பற்றி நம்மோடு கதை பேசுகின்றன.
இன்றைய கவிஞர்களில் அனேக மானவர்களின் கவிதைத் தலைப்பு மிகவும் ஆழமும், அர்த்தமும் நிறைந்ததாகும். அந்தவகையில் றபீக்கின் கனா முறிந்த பகல் சுமந்திருக்கும் கவிதைத் தலைப்புக் களும், அதன் கருக்களும் வாசகனின் மனதில் எண்ணற்ற கற்பனைகளை உரு வாக்கி, ஆசுவாசப்படுத்த வல்லவை
6T60,T6NoT Lb.
எல்லாக் கவிஞர்களைப் போலவே, முஹம்மது றபீக்கும் காதல் கவிதை களுடன்தான் தனது கவிதை பற்றிய அத்தி பாரத்தை உருவாக்கியுள்ளார். ‘தழும்புகள் என்ற இவரது இத்தொகுதியிலுள்ள முதலா வது கவிதையே காதலின் மெல்லிய உணர்வுகளை சோகமாய் சொல்லி நிற்கின்றது.
நிலாக்காரியே! வாசிக்கப்படாத வார்த்தைகளுக்குள் நான் புதையுண்டு போனாலும் என் விதியின் கீறல்களுடன் தினமும் உன்னை(ச்) சுவாசித்துக் கொண்டே இருப்பேன் என்ற இறுதி வரிகளின் மூலம், தனது ஆழ மான காதலின் நினைவுகளை இரை மீட்டிக் காட்டுகிறார், முஹம்மது றபீக்.
இந்தத் தொகுதியில் இன்னுமொரு கவிதை ‘என் கிடுகுக் கிராமம்' என்ற தலைப்பில் வாசித்து முடிந்த பிற்பாடும், மனதில் நின்று ஆலாபனை செய்து கொண்டிருக்கின்றது.
மழைக்காலம் காற்றுத் தன் வெறுப்பில் கிடுகு வீசப்பட்டு கம்புகள் கறுப்பு நிறத்தில் தெரியும் வீடு அது எனது வீடாக இருக்கும் கறுத்த புகைக் கூட்டம் ஈர்க்குகள் தெரியும் கிடுகு ஓட்டைகளில் நுழைவெடுத்து வெளியாகி ஓய்வெடுத்துச் செல்லும் காகமும் குருவிகளும் பாய்ந்து எச்சமழத்து வெடுக்கென்று தூரத்தே பறக்கும். -
லாம்பெண்ணெய் விளக்கின் நெடுத்த வளைந்து செல்லும் புகைக் குடுமியில் தாள் நீட்டிக் கறுப்புப் பூசி கைவிரல்களும் சுடுபடும் ஆயினும் வண்டுகளும் பூச்சிகளும் அதுதன் சரணாலயமென்றெண்ணி இரவைக் கழிக்கும்.
ஒரு கிராமத்தின் ஏழைக் குடும்பத் தினரின் வாழ்க்கை, மழை காலப் பொழு தொன்றில் கழியும் விதம் பற்றி அப்பட்ட மாய் சொல்லி நிற்கின்றது, இந்தக் கவிதை. மழை நாள் ஒன்றில் தானும் தனது குடும்ப மும் அனுபவித்த அல்லது தான் உள் வாங்கிய அனுபவங்களை அனுபவப் பகிர்
வுடன் ஒரு படிமமாக வாசகர்களுக்கு
கவிதைச் சாளரத்துக்கூடாக படம் பிடித்துக் காட்டியுள்ளார் முஹம்மது றபீக்,
மல்லிகை பெப்ரவரி 2009 ஜ் 18

இவ்வாறே, ஒரு சொட்டுப் பிரிவு, விழித்துப் பார்க்கிறேன், நான் - பின் - நீ சில்லிட்ட ஒரு நொடி உணர்வு, எல்லைத் துயர், ஒரு துளி உயிர், சுயராகம் மறந்து, நிலாப் பூத்த மரம், கனா முறிந்த பகல், ஆயிரம் பவுர்ணமி, விடியாத இருளொன்று, வானம் துப்பி, புல் மூன் காதல், உன் மெளனம், மூன்றாந் தவணைக் காலம் போன்ற கவிதைகள் வாசகர்களின் மெய் யுணர்ச்சிகளைத் தூண்டி நம்மைச் சொக்க வைக்கின்றது.
தனது மெய்யான ஆதங்கங்களை, சமூகம் பற்றிய அக்கறையை, தான் வாழும் சமூகத்தின் உணர்வுகளை, மவுனங் களாகக் கடந்து கொண்டிருக்கும் கனவு களை தனதான கவியாற்றல் மூலமாக மொழிபெயர்த்து, நமக்கான படையலாகத் தந்துள்ளார்.
பள்ளி வாழ்க்கையின் பல்வேறு பரி மாணங்களில் கடைசி வருடத்தின் கடைசி நாள் பற்றிய நினைவுகள் ஒவ்வொரு வரினதும், மனதில் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கும். அந்த நிமிஷங்கள், பிரியமானவர்களைப் பிரிகின்ற அவஸ்தை நிறைந்த நிமிஷங்களாகும் அந்த மெய் யான அவஸ்தையை அப்படியே, அழகியல் பாடத்து மாணவன் வரையும் அழகிய ஒவியம் போல, சிதைவடையாத கவிதைச் சித்திரமாய் முஹம்மது றபீக் தீட்டியுள்ளார்.
கடைசி வருடம் முதல் காலைப் பொழுது அலரிப் பூக்கள் விழுந்த மரத்தடி நிழல் கல்லூரியின் கழிந்த நாட்கள் புரட்டி நீளப்படுத்துகின்றன.
பக்கத்து வகுப்புப் பெண்களின் கனிர்ச் சிரிப்பொலி புதிய உணர்வுகளை அபிவிருத்தி செய்யும் கைக்குட்டைக்குள் துள்ளித்திரியும்
ஆட்டோக்கிராப் இல்லாத அன்பையும், காதலையும் சிவப்பு மற்றும் பச்சைப் பக்களில் சுமந்து கொள்ளும்.
கல்லூரி
எல்லாக் கனவுகளோடும் சிரித்துக் கொண்டு
வழியனுப்பும்
வகுப்புக்களும்
கரும்பலகைகளும் கைகட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும் எனும் கவிதையின் மூலம் வாசகனையும், பள்ளிப் பருவத்துக்கு அழைத்துச் செல் கிறார் முஹம்மது றபீக்.
தனது கனா முறிந்த பகல் என்ற கவிதையின் மூலம் தனதான சொந்த உணர்வுகளை வடிகட்டி வயலுக்குப் பாய்ச்சும் நீராக வாசகனின் மனதுக்குள்
பாய வைக்கின்றார்.
முதல் பருவத்தை குத்திக் காட்டிய அலை - நீர்
கோழியிட்ட முட்டை வினாடிகளைச் சூடுபடுத்தி
மல்லிகை பெப்ரவரி 2009 8 19

Page 12
திரும்பிப் பார்க்க வைத்த வீட்டு முற்றம்
ஞாபகங்கள் ஓடியதில் மரணமென்பதானது முக்காலங்களும் என்னை உண்மைப்படுத்திய
தாயின் இறப்பு
நினைவை என்ன சொல்ல, இரவுகள் கோழிகள் கூவும் நேரம் வரை தொட்டில் போடும் கனா முறிந்த பகவில் ஒருநாள் கழியும்.
தான் அனுபவித்த ஓய்ந்த சோகங் களை மட்டுமே இங்கே பேசுகிறார் கவிஞர்,
றபீக். தனது தாயின் இறப்பும், சுனாமி யினால் தனது கிராமம் அனுபவித்த அவலத்தையும், இன்னும் எத்தனையோ மொழிபெயர்க்கப்படாத சோகங்களையும் இந்தக் கவிதை முழுவதிலும் விரவ விட்டு, வாசகனையும் தனது அனுபவப் பகிர்வின் மூலம் ஆட்கொள்கிறார், முஹம்மது றபீக். முறம்மது றபீக்கின் வரவோடு கிழக் கிலங்கை இன்னுமொரு நல்ல கவிஞனை இனங்கண்டுள்ளது எனலாம்.
தேவையற்ற வார்த்தைச் சொருகலும், மேலதிக அலட்டலும் இல்லாத ஒரு நல்லக் கவிதைத் தொகுதிக்கான எல்லா அம்சங் களையும் றபீக்கின் கவிதைகள் கொண் கனா முறிந்த பகல் ஒரு அழகியல் சித்திரம் எனலாம்.
டுள்ளன.
༽SSSSSSSASqqSLLSSSSqqqqqSSSS SSSSSSSSSSJSSSSJSSSSS པ་ར་ག་ . مه
மல்லிகை ஆண்டுச் சந்தT
ஆண்டுச் சந்தா 450/- தனிப்பிரதி 80/- ஆண்டு மலர் 200/-
(மலருக்கான தபாற் செலவு 65/= ரூபா) வங்கித் தொடர்புகளுக்கு: Dominic Jeeva 530501 4- Hatton national Bank Sea Street,Colombo - 11. 44வது ஆண்டு மலர் தரமான தயாரிப்பு. விரும்பியோர் தொடர்பு கொள்ளவும்.காசோலை அனுப்புபவர்கள் 100minie Jeeva எனக் குறிப்பிடவும்.காசுக்கட்டளை அனுப்புபவர்கள் 100minie Jeeva. K0tahena, P.O. எனக் குறிப்பிட்டு அனுப்பவும். தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : 201/4, முரீகதிரேசன் வீதி, கொழும்பு 13.
தொலைபேசி : 2320721 لد
كس --- --س ----- - ܀- -- - ܆-܀ -- -----܀ ܀ - -- ------- - ܀ - -܀ - ܀--
மல்லிகை பெப்ரவரி 2009 & 20
 

6)6OL
நாளை தீபாவளி
குருதி பெருக்கெடுத்தோடும் எனது தேசத்தில் முகங்களற்ற மனிதர்களுக்கு விழாக்களே இல்லை.
கடல்களற்றுக் காய்ந்துபோன தேசத்தில் ~ அடைக்கலம் தேடி வந்தாலும் தீபாவளிக்கு வடையாவது சுட வேண்டும்,
ჭ6% 6. $க / uհ6ն முள்முருக்கு / பூவரசம் இலையில் 警 గ్
வடை தட்டினால்..? s s முள்ளந்தண்டில் K குண்டூசியேற்றும் 6S குளிரில் இறங்கி இலை தேடுகிறேன்.
ஊரிலேயே முள்முருக்கு இல்லை அழித்து விட்டோம் மழை தொடங்கியிருக்கும் என்பதால் முற்றத்துப் பூவரசில் பூவிருக்காது இலைகள் மட்டும்தான்.
இங்கு குளிர்காலம் ஒரு மரத்திலும் இலைகளில்லை. பழுத்து விழுந்திருக்கிறது ஒற்றை ஒலிவ் இலை.
மல்லிகை பெப்ரவரி 2009 & 21

Page 13
62/60L 45LL பாவிக்கலாம் தான்.
எங்கிருந்தாவது ஒரு வெண்புறா வந்து தூக்கிச் செல்லலாம் என் ஊருக்கு
வடை சுடாமல்
புறாவுக்காக நான்// (BelaruSல் தங்கியிருந்த போது தீபாவளிக்கு முதல்நாள் எழுதியது.)
8 - O சிறு சந்திப்பு
காய்ந்து போன கைகளுடனும் குளிரில் விறைத்துப் போன மனதுடனும் மனிதப் பதர்களுக்கு நடுவில் ஆழ்மனது போராடும் ஓர் அதிகாலை,
கண்விழித்த போது வீற்றிருந்தாய் தலைமாட்டில் கண்னனிடம் வரம் பெறவந்த துரியோதனன் போல,
மூன்று இரவு மூன்று பகலில் அர்ச்சுனன் யார்? கண்ணன் யார்? என
எழுந்தது வினா,
ஓர் இரவுணவின் பின் இருளில் மறைந்து விட்டாய் நாரதரின் துணைகொண்டு
நாரதனுக்கும் பாரதத்துக்கும் கலியுகத்தில் தொடர்பிருக்கலாம்.
உன் ஒற்றைக் கடைசிக் குரல் குளிரையும் மீறி அண்ணா!" என்றது அது போதும்
இராவனாதியர் துரியோதனாதியருக்கும் பதில் உண்டு
என்னிடம்,
காற்றுச் சுமந்து வரும் செவிகளுக்குக் கேட்காமல் பேசுவோம் நேற்றுவரை நாமிழந்த இழவுகளின் விஸ்தீரனம் பற்றி
நீ புறப்பட்ட போது இரவாயிருக்கலாம் சேருமிடத்தில் சூரியன் மறையக் கூடாது//
(ஐரோப்பாவினுள் திருட்டுத்தனமாக நுழையக் காத்திருந்த இளைஞனுடனான சந்திப்பு. போலந்தின் எல்லைப்புற நகர மொன்றில்.)
மல்லிகை பெப்ரவரி 2009 & 22

அமிர்தலிங்கம் அவசரமாய் சைக்கிளில் வந்திறங்கினார். அவரின் பதற்றத்தில் சைக்கிள் சரிந்து படாரென்று விழுந்தது. மூச்சு வாங்கியபடி தூக்கக் குனிய, சகுந்தலாவும் அனுசாவும் பதறியோடி வந்தனர்.
"என்னப்பா என்ன..? என்ன..?" சகுந்தலா ஆதரவாக அவரைப் பற்றினாள். அனுசா வீழ்ந்த சைக்கிளை நிமிர்த்தி நிறுத்த அமிர்தலிங்கம் பெருமூச்சு விட்டவாறு கதிரையில் வீழ்ந்தார்.
“என்னப்பா. என்ன செய்யுது உங்களுக்கு.? தலையைச் சுத்துதா? இல்லை பலவீனமாயிருக்கா..? சொல்லுங்கோ..?"
“எனக்கொன்றுமில்லை. தண்ணி கொஞ்சம் குடிக்கத் தா போதும்..!"
"ஒன்றுமில்லாமலே சைக்கிளைப் போட்டனீங்கள்..? வயது போனா, கொஞ்சம் நாங்கள் சொல்லுறதையும் கேட்க வேணும். இருபது வயதுப் பெடியள் போல சைக்கிள் உழக்கித் திரிய முடியுமே..?" சகுந்தலா தொடர, அமிர்தலிங்கம் எரிச்ச லுடன் நிமிர்ந்தார்.
(ിന്റെ மலரும் போது.
- கந்தர்மடம் தி.மயூரன்
“என்ன பார்க்கிறீங்கள்...? உண்மையைத்தானே சொல்லுறன். பிறசர், டைய பிட்டிக் இருக்கு. அதோ தண்ணியடி வேற. அப்ப உடம்பு பலவீனப்படாமல் என்ன செய்யும்.?" அனுசா கொண்டு வந்த தண்ணீரை குடித்து மூச்சு வாங்கினார்.
'யூரின் செக் பண்ணுறதுமில்லை. சுகர் நல்லா கூடீற்றுது போல..?" அனுசாவும் தொடங்க, அமிர்தலிங்கம் மீண்டும் கதிரையில் சாய்ந்துகொள்ள, சகுந்தலா கத்தினாள்.
“என்ன செய்யுதென்று சொல்லுங்கோ. இவரை இப்படியே விடேலாது. அனுசா.! நீ போய் ஒட்டோ ஒன்று பிடி. ஆஸ்பத்திரிக்கு கொண்டு போவம்..!" சகுந்தலா சொல்ல, அனுசா புறப்பட,
"சும்மா தொண தொணக்காமல் கொஞ்ச நேரம் இருங்கடியப்பா. எனக் கொன்றும் இல்லை.!" அமிர்தலிங்கம் சொன்னதைப் பொருட்படுத்தாமல், அனுசா
போக.
மல்லிகை பெப்ரவரி 2009 & 23

Page 14
“என்ன செய்யுதென்று சொல்லுங் கோவன்..!" சகுந்தலா கேட்க,
"தலையைச் சுத்துது. அவ்வளவு தான்...!"
"ஏன் தலையைச் சுத்த வேணும்?"
கேட்ட சகுந்தலாவை உற்றுப் பார்த் தார். திரும்பி தூரத்தை வெறித்தார்.
"உன்ர செல்லப் புத்திரன் மாதேஸ் லண்டனில ஒரு வெள்ளக்காரியை கலியாணம் செய்திட்டானாம். இதைக் கேள்விப்பட்டால் எந்தத் தகப்பனுக்குத் தான் தலை சுத்தாது? ஹாட் அற்றாக்தான் வரவேணும்."
உண்மையில
“என்ன கதையிது..? யார் சொன் னது. ? எங்கட பிள்ளை ஒருநாளும் இந்த மாதிரிச் செய்யாது. எரிச்சலில சொல்லியிருப்பாங்கள்." சகுந்தலா உள்ளுக்குள் அதிர்ந்தாலும் வெளிக்காட்டவில்லை.
un (STT
“சரோவின் மூத்தவன் லண்டனால வந்திட்டான். அடுத்த கிழமை அவ னுக்கு கலியாணம். சந்தையால வாற வழியில கண்டவன். சத்தியம் பண்ணிச் சொல்லுறான். அங்க இதெல்லாம் சகஜ மாம்.
வேண்டாமென்று எனக்கு அறிவுரை
சொல்லுறான். எல்லாம் என்ர நேரம்."
"நீங்கள் வீணா யோசிக்க வேண் விசாரிச்சு உண்மையை அறிய வேணும். அதுக்குப்
டாம். முதலில் வடிவாய்
பிறகுதான் மாதே ஸோட கதைக்க வேணும்."
இதைப் பெரிசாய் எடுக்க
“என்னத்தை இனியும் விசாரிக் கிறது? இது வெளியில தெரிஞ்சா மானம் மரியாதை போயிடும். பொருந்தி யிருக்கிற அனுசாவின்ர கலியாணமும் குழம்பிப் போயிடும்.”
'நீங்க
யோசிக்க தொடங்கிருவியள். என்ன
உடன கடுமையாய்
உண்மையென்று அறிய வேணும். என்ன மாதிரியான பொறுப்பான பிள்ளை. எங்கட குடும்பத்தையே இந்த நல்ல நிலைக்கு கொண்டுவந்தவன். யாரின்ரையும் விசர்க்கதையைக் கேட்டு அவனைக் குழப்பக் கூடாது."
“மாதேஸ் நல்லவன்தான். யார் இல்லையென்றது? ஆனா இந்தக் கலி யாணம்தான் கூடாத வேலை. இது வரையும் செய்த நன்மையெல்லாம் வீணாக்கி, ஒரு நிமிசத்தில கெட்டவனா
யிட்டானே?"
“ஏன் உலகத்தில நடக்காததே? ஏதோ ஆசைப்பட்டு வெள்ளக்காரியை கட்டிட்டான். இப்ப என்ன அதுக்கு? ஏதோ கொலை செய்திட்ட மாதிரி யெல்லே குழம்பிறீங்கள்?’ அனுசா சொல்ல, அமிர்தலிங்கம் திரும்பிக் கத்தினார்.
"ஒமடி கொலைதான் செய்திட் டான். இந்த கதையை மாப்பிள்ளை வீட்டார் கேள்விப்பட்டால், உன்ர கலியாணம் அதோ கதிதான். நீ உப் பிடியே இருக்க வேண்டியதுதான்."
"போனாப் போகுது. இந்த மாப் பிள்ளை இல்லாவிட்டால் இன்னொருத் தன். சீதனத்தை தூக்கியெறிஞ்சா
மல்லிகை பெப்ரவரி 2009 & 24

எத்தினை பேர் வருவாங்க. ஏதோ இவர் ஒருத்தர்தான் மாப்பிள்ளை. இவரை
விட்டா வேற கிடைக்க மாட்டதென்ற
மாதிரியெல்லே கதைக் கிறீங்கள்'
அனுசா சர்வ சாதாரணமாய் சொல்ல, அதிர்ந்து போய் அவளைப் பார்த்துக் கத்தினார்.
அமிர்தலிங்கம்
'அடிப்பாவி! ஒரு நல்ல பொம் பிளையின்ர வாயில வாற வார்த்தைகளா இது? கலியாணத்துக்கு முன்னமே மாப் பிள்ளையை மட்டுமரியாதையில்லாமல் பேசுறாய். நல்ல பழக்கவழக்கம். போடியுள்ள."
"பின்னயென்ன அப்பா? என்ர அண்ணையாலதான் எனக்கு இப்பிடி ஒரு டொக்டர் மாப்பிள்ளை கிடைக் குது. அதுக்கு நான் மாதேஸஅக்கு நன்றி யுள்ளவளாய் இருக்க வேணும். யாருக் காகவும் அவனை விட்டுக்குடுக்க மாட் தன் ர வாழ்க்கையைப் பற்றி யோசிக்காம
டேன். பாவம் அவன்... !
இருக்கிறானே என்று கவலைப்பட்ட னான். இந்தக் கதையை கேட்டவுடன் எவ்வளவு சந்தோஷமாய் இருக்கு, தெரியுமா?’ அனுசா கலங்கிய கண் களுடன் சொன்னாள்.
"சரி. நீ உன்ர அண்ணனுக்கு நன்றி யோட இருக்கிறாய். நல்லது. ஆனா, அவன் பெத்த தாய் தகப்பனுக்கு நன்றி யோட இல்லையே? எங்களுக்கும் ஒரே யொரு பெடியன். எப்பிடிக் கலியாணம் செய்ய வைக்க வேணுமென்ற ஆவல் இருக்கும். இப்ப. அவன்தான் விரும் பினவளை இழுத்திட்டான். இங்கத்த பெட்டையென்றாலும் பரவாயில்லை.
இது வேற நாடு. வேற மதம், வேற கலாசாரம். வெளியில சொல்லவே வெட்கமாயிருக்கு."
“முதலில மாதேஸோட கதைச் சிட்டுத்தான் நான் எந்த முடிவுக்கும் வருவன். யாருடைய கதையையும் நம்ப அனுசா சொல்லிக் கொண்டே, உள்ளே போய்விட்டாள்.
மாட் டன். '
சொன்னபடியே இரவு வீட்டிலி ருந்து சற்றுத் தூரத்திலிருந்த தொலைத் தொடர்பு நிலையத்திலிருந்து மாதேஸஜூ டன் பேசினார்கள். வயோதிபர்களும், இளம் பெண்களும் தொலைபேசி அழைப்புகளுக்காகக் காத்திருந்தார்கள்.
தொலைபேசியெடுக்க நீண்ட நேரம். மறுமுனையில் பதிலில்லை. அனுசாவும், சகுந்தலாவும் நீண்டநேரம்
காத்திருந்த பின்பே அழைப்பு வந்தது.
‘என்னம்மா புதுமை யாய் இன்றைக்கு நீயே கோல் எடுக்கிறாய்? என்ன விசயம்? இப்பத்தான் வேலை யால வந்து படுத்தனான். அதுதான் லேட்." மாதேஸின் குரலைக் கேட்ட தும், சகுந்தலா உடைந்து அழத்தொடங் கினாள்.
‘'என்னம்மா... என்ன? ஏன்
அழுறாய்..?’ மறுமுனையில் மாதேஸ் பதறினான்.
'அழாதையம்மா. எல்லாரும் எங்களைத்தான் பார்க்கினம். சுற்றிப்
அனுசா, சகுந்தலாவின் இடுப்பில் இடித்தாள்.
பார்த்துக் கொண்டே
மல்லிகை பெப்ரவரி 2009 率 25

Page 15
"மாதேஸ் சரோவின்ர பெடியன் பூசிவிட்டாயே?" பெருங்குரலில் அழத்
வண்டனிலயிருந்து வந்திருக்கிறான். நீ உங்க வெள்ளக்காரியை கலியாணம் செய்திட்டியாம். அதைக் கேட்ட நேரம்
தொடங்கி அப்பா பைத்தியம் பிடிச்ச
ଜT ବର୍ତt ଜ୪r L– |T
மாதிரி இருக்கிறார்.
உண்மையே..?"
á ó yy
“சொல்லுடா. நீ பேசாமலிருக்க எனக்கு நெஞ்சு பதறுது, உண்மையைச் சொல்லுடா."
A yy
LI sjö sól எவ்வளவோ கனவு காணுறம். அப்பா உன்னில உயிரையே வைச்சிருக்கிறார். எங்கட குடும்ப முன்னேற்றத்துக்கு நீ தான் ஒரே காரணம். உனக்கு எப்படிப் பட்ட வாழ்க்கைத் துணையைத் தேடித் தர வேண்டுமென்று ஆவலில் இருந்தம். நீ ஏன்டா இப்படிச் செய்தனி?' சகுந் தலா சேலைத் தலைப்பால் மூக்கைச் சீறினாள். வெளியே இருளத் தொடங்கி யிருந்தது.
'நாங்கள் உன்னைப்
'உண்மைதானம் மா. ஆனா, எனக்கு வேற வழியில்லாமல்தான் இப் பிடிச் செய்தனான். உங்கட எல்லாரின்ட யும் நன்மைக்காத்தானே ஒழிய, என்ர சுயநலத்திற்காக இல்லை."
‘'என்னடா நன்மை ? என்ன நன்மை? நீ வெள்ளக்காரியை கட்டி எங்களுக்கு அதால வேண்டுமே? அப்பிடியொரு நன்மை எங்களுக்குத் தேவையில்லை. உன்னை
நம்பியிருந்ததுக்கு. இப்படிக் கரியை
நன்மை வர
i i
|
தொடங்க, அனுசா தொலைபேசியைப்
பறித்தாள்.
"அண்ணா. நீ நிச்சயம் எதோ ஒரு
அர்த்தத்தோடதான் செய்திருப்பாய்.
கவலைப்படாதை!'
'அனுசா உங்களுக்குச் சொல்லா மல் செய்தது பிழைதான். உண்மையில வேற வழியில்லாமல்தான் செய்தனான். ஸ்டுடன்ட் விசாவில வந்த எனக்கு இங் கத்தய பெண்ணை கலியாணம் செய் தால் ஈஸியாய் சிற்றிசன் எடுக்கலாம் என்றவுடன் செய்திட்டன். இதாலதான் உங்களுக்கு காசு கூட அனுப்பக்கூடிய தாய் இருந்தது.'
'விளங்குது அண்ணா! நீ செய்தது நல்லது. நீ திரும்பி வந்திருந்தா, எங்கட குடும்பம் என்ன பாடுபட்டிருக்கும்?"
'நீதான் அனுசா அப்பாக்கும் அம்மாக்கும் விளங்கப்படுத்த வேணும், லண்டன் போனவுடன் நீங்கள் என்னை அனுப்ப வேண்டின கடனையெல்லாம் கேட்டவுடன, எனக்கும் உழைக்கிற வழி தெரியேல்லை. இங்கத்த வழக்கம் போல கிறடிட் காட்டுல காசடிச்சு பிடி பட்டு, பொலிசில மாட்டிட்டன். அந்த நேரம் அவள்தான் எனக்கு உதவி செய்து வெளியில எடுத்தவள். அவ ளின்ர பேக்கரியில வேலையும் போட் டுக் கொடுத்தாள். இங்க காசு உழைக்க நாங்க படுற கஷ்டம் உங்க யாருக்குப் புரியப் போகுது? இதை எப்பிடி உங்களுக்குச் சொல்ல முடியும்? அப்பா அம்மாவைக் கவனிச்சுக் கொள்!"
மல்லிகை பெப்ரவரி 2009 & 26

"நீ யோசிக்காதை, நான் சமாளிக்
கிறன். இந்த மனிசி அழுது ஆர்ப் பாட்டம் பண்ணுது. எங்களைத்தான் பார்க்கிறாங்கள். நீ இரவு என்ர கான்போனுக்கு எடு” பணத் தைக் கொடுத்துவிட்டு, சகுந்தலாவைக் கூட்டிக்கொண்டு புறப்பட்டாள்.
அன்றிரவு வீடு பூரண அமைதியில் மூழ்கியிருந்தது. ஒருவரும் சாப்பிட வில்லை. இரவு பத்துமணி நெருங்க, அனுசா கூடத்துக்கு வந்தாள்.
"ஏன் இன்றைக்கு எல்லாரும் விரதமா? கெதியாய் எழும்பி சாப் பிடுங்கோ’ அனுசா கேட்க சொகுசு நாற்காலியில் படுத்திருந்த அமிர்த லிங்கம் கண் விழித்தார். சகுந்தலா கையை மடக்கி தலைக்குக் கொடுத்து, விழித்துக்கொண்டே படுத்திருந்தாள்.
மீண்டும் ஏதோ சொல்ல வாய் திறக்க அவளின் கைத்தொலைபேசி அலறியது.
'மாதே ஸ்தான் எடுக்கிறான். ஹலோ சொல்லு, இரவு பத்துமணி யாச்சு, இன்னமும் ஒருத்தரும் சாப்பிட வில்லை. செத்த வீடு மாதிரி அழுது கொண்டு படுத்திருக்கினம். இந்தா, நீயே கதை' கையை நெற்றிக்கு கொடுத்து படுத்திருந்த அமிர்தலிங் கத்தை தட்டி கைத்தொலைபேசியை
அவரிடம் நீட்ட, அவர் வாங்க மறுத்தார். அனுசா வற்புறுத்திக் கொடுக்க வாங்கி நீண்ட நேரம்
காதுக்குள் பொருத்தி வைச்சிருந்தார்.
எல்லோரும்
“சரிடா. நீ செய்தது எல்லாம் சரி! இந்த குடும்பத்துக்காக நீ எத்தினையோ கஷ்ரப்பட்டிருக்கிறாய். கடைசியில உன்ர வாழ்க்கையையே அடகு வைச் சிட்டாய். வேற என்னத்தைச் சொல் லுறது?" அமிர்தலிங்கம் வேதனையுடன் சொல்லிக்கொண்டே,
பொங்கிய
சகுந்தலாவிடம் கொடுத்தார்.
"நான் அழவில்லை சொல்லு, இனி அழுது என்ன ஆகப்போகுது? அனுசா வுக்கு கலியாணம் ஆவணிக்கு நாள் வைச்சிருக்கு, பெடியன் இங்க - பெரிய ஆஸ்பத்திரிக்கு மர்றி வந்திட்டுது. கட் டாயம் இரண்டு வருசம் இங்கேயே வேலை செய்ய வேணுமாம். அதுக்குப் பிறகு கொழும்புக்கு போவினம் போல. கலியாணத்தை இங்கேயே தாய் தகப்பன் விரும்பினம்.'
6. A yy
"உடனடியாக உன்ர மனிசியின்ர படத்தை அனுப்பு. எங்கட வெள்ளக் கார மருமகள் எப்பிடியிருப்பாள், வேணுமென்ற ஆசை
பார்க்க
யிருக்காதா?"
'என்ன அப்பிடி ஒரு பட மில்லையா, அனுப்பிறதுக்கு? எல்லாம் சரி. நீ கலியாணத்துக்கு வந்தே தீர வேணும். உன்ர மனிசியையும் கூட்டிக் கொண்டு வா. அவளைப் பார்க்க
வேணும்.'
yy A 8 A P a v P at
மல்லிகை பெப்ரவரி 2009 & 27

Page 16
“லிவு கிடைக்காது, அது இதென்று சாட்டுப்போக்கு சொல்ல வேண்டாம். கூட்டிக்கொண்டு வாறாய், அவ்வளவு தான்."
அனுசாவின் திருமணத்திற்கு மாதேஸஅம் லாராவும் வந்திறங்கிய
வுடன் ஆரவாரம் கூடிற்று.
“லாரா சாப்பிடவில்லையா? லாரா வுக்கு உறைப்புக் கூடாது. நித்திரை கொள்ளுறாள், சத்தம் போட வேண்டாம். குளிக்கிறதுக்கு சுடுதண்ணி வைக்கிறன்’ என மாதேஸின் வீட்டார் அன்பில் லாரா திக்கு முக்காடிப் போனாள். மொழி புரியாவிடிலும் அன்புமொழி அவர்களை இணைத்தது. மாதேஸ்தான் எதிலும் அதிகம் ஈடுபாடு காட்டாமல் மெளனமாயிருந்தான்.
லாரா
அனுசாவின் திருமணம் வெகு விமரிசையாக நடந்தது. லாராவும் அதில் கலந்துகொண்டாள். பல வேலைகளை இழுத்துக் போட்டுக்கொண்டு செய் தாள். எல்லோரும் பூரித்துப் போயினர்.
அன்று மாதேஸ9ம் லாராவும் மீண்டும் புறப்பட்டனர். எல்லோரிடமும் விடைபெற்று, அவர்களை வழியனுப்ப அனுசாவும் மாப்பிள்ளையும் கூடப் போயினர்.
ஒட்டோவில் ஏறினர்.
நெரு க் கி ய டி த் து க் கொண் டு அமர்ந்தார்கள்.
"ஆனாலும் அண்ணா, நீ எங் களின்ர குடும்பத்துக்கு ஏற்ற நல்ல பெண்ணாய்த்தான் செலக்ற் பண்ணி யிருக்கிறாய். ஆரம்பத்தில வெள்ளக் காரியை நீ கட்டிட்டாய் என்றதை கேள்விப்பட்டதும் அழுது குழறிய அப்பா அம்மா இன்றைக்கு லாராவைப் பிரிய மனமில்லாமல் அழுகினம். இது தான் காலமென்கிறது." அனுசா மகிழ்
வுடன் சொல்ல, மாதேஸ் அவளை
உற்றுப்பார்த்துவிட்டு அவளின்
காதுக்குள் சொன்னான்,
'ஒருத்தருக்கும் சொல்லிப்
போடாதை, லாரா என்ர மனிசி
யில்லை. என்ர மனிசியின்ர மூத்த மகள்" அவன் வெகு சாதாரணமாய்ச்
சொல்ல அனுசா திகைத்துப் போனாள்.
ܢܠ
O O N hulle திரு. ଗର୍ଗୀ.s). لیالباره فارn ജൂഖണ്ഡൂ 7உது ♔്(
ஆாபகார்த்த ܩܶܗ மல்லிகையின் ஆரம்ப காலகட்டங்களில் ரொம்பவும் சிரமப்பட்ட வேளைகளில் சகல மட்டங்களிலும் உதவி புரிந்த நண்பர் தம்பையா அவர்கள் மறைந்த 7வது ஆண்டு ஞாபகார்த்த நினைவுக்கு அஞ்சலி செலுத்துகின்றோம்.
07.01.2009 அன்று அவரது குடும்பத்தினரும் நண்பர்களும் ஒருங்கு கூடி அஞ்சலி செலுத்தியதும் குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர்)
மல்லிகை பெப்ரவரி 2009 & 28
 
 

உடுக்டு$_છe) 6JR
ஓர் இரசனைக் குறில்
- கட்டாரிலிருந்து லறினா ஏ.ஹக்
ஒளி பரவுகிறது (1995), நச்சுமரமும் நறுமலர்களும் (1998), பாதை தெரியாத ப:பனம் (2000), உதயக் கதிர்கள் (2006) முதலான நாவல்களைத் தந்த திக்குவல்லை கமாலின் மற்றுமொரு நாவல் 'ஊருக்கு நாலு பேர். மேமன்கவியின் அட்டைப்பட வடிவமைப்பு (இன்னொரு கவிதையாய்) வாசகரை முதற் பார்வையிலேயே நூலின் 1க்கம் ஈர்க்கிறது. எப்போதும் போல் நறுக்குத் தெறித்தாற் போன்ற சுருக்கமான முன்னுரையைத் திறவுகோலாகக் கொண்டு எளிமை அழகு மிளிர்ந்த நாவலின் பின் அட்டையில் ஜனாப் முகம்மது சரீபு றம்ஸின் அவர்களின் ஆசிரியர் பற்றிய குறிப்புரை பொருத்தமான முத்தாய்ப்புடன் நிறைவுறுகிறது.
'ஊருக்கு நாலு பேர் வல்லையூரைக் களமாகக் கொண்டு மண்வாசனை கமழும் வகையில் அமைந்த நல்லதொரு சமூக நாவல். கையில் எடுத்தவுடன் கீழே வைக்க மனமின்றி கதையோடு வாசகரை ஒன்றிவிடுமாறு கட்டிப்போடும் ஆற்றொழுக்கான நடை இந்நூலின் சிறப்புக்கு முக்கியமானதொரு காரணம் என்பேன். வட்டார மொழி வழக்கு நாவலின் உயிரோட்டத்துக்கு உரம் சேர்க்கிறது.
'அடுப்பூதும் பெண்களுக்கு ஏடும் எழுத்தாணியும் எதற்கு? என்னும் பிற்போக்கு வாதம் பெருமளவு குறைந்து விட்டாலும், பெண்கள் தமது திறன்களை சமூக மேம் பாட்டுக்காக அர்ப்பணிப்பதை முழுமனதோடு ஏற்றுக்கொள்ளும் நிலை எமது சமூகத்தில் தோன்றி விட்டதா என்பது இன்னமும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. பொதுப் பணிகளை, சமூக சீர்திருத்தங்களை எவர் வீட்டுப் பெண்களேனும் செய்தால் பரவா யில்லை. தம் வீட்டுப் பெண்கள் பத்திரமாக வீட்டுக்குள் இருக்கவேண்டும்' என்கின்ற சுயநலப் பேய் பலரையும் பிடித்தாட்டுகின்றது. சமூக மேம்பாடு பற்றி எவ்விதப் பிரக்ஞையுமற்று ஒட்டுக்குள் நத்தையாய்த் தன்னைச் சுருக்கிக் கொண்டு இருட்டுக்குள் இருப்பதற்கு அடம்பிடிக்கும் ஒர் ஊரில், புது விடியல் காணத்துடிக்கும் பெண்கள் நால்வரை மையமாகக் கொண்டு நாவலின் கதை பின்னப்பட்டுள்ளது. கதையின் கருவைச் சொல்லாமற் சொல்லி நிற்கிறது, நாவலின் தலைப்பு.
பொதுநலப் பணிகளில் ஈடுபட முனையும் பெண்கள் எவ்வாறான பிரச்சினைகளை, சவால்களை எதிர்கொள்ள நேர்கிறது என்பதை எவ்விதமான செயற்கைத்தனமுமின்றி பிட்டுப்பிட்டு வைக்கிறார், ஆசிரியர். பல்வேறு வகையிலும் பின்தங்கிய ஒரு கிராமத்தின் இயல்பு நிலையையும், அப்பின்னடைவு நிலையை மாற்றியே தீர்வது என்ற இலட்சியத்
மல்லிகை பெப்ரவரி 2009 ஜ் 29

Page 17
துடன் அயராது போராடும் புதுமைப் பெண்களின் துடிப்பையும் துணிச்சலையும் சமநிலை தளம்பாமல் மிக யதார்த்த மாகச் சித்திரித்து கதையை நகர்த்திச் செல் வதில் ஆசிரியர் வெற் றரி கண்டுள்ளார்.
(சமூர்த்தி) மரீனா, றம்ஸியா, அம்ரிதா டீச்சர், (கெம்பஸ்) ட்பர்வீனா என்பன நாவ லின் பிரதான கதாபாத்திரங்கள். தன்னம் பிக்கை, நேர்மை, சமூகப் பற்று, துணிவு எனும் குணாம்சங்களுடன் வாழும் இவள் போன்ற மரீனாக்கள் தாம் இன்றைய சமூ கத்தின் தேவை என்பதை உணர்த்தும் வகையில் கதையின் நாயகியும் அவளுக்கு உறுதுணையாய் வலம் வரும் தோழி றம்ஸியாவும் கம்பீரமாய் மனதில் நிற்கிறார்கள். இளங்கன்று பயமறியாது என்று 'ஊருக்கு நல்லது செய்யப் புறப் பட்ட இளம் பெண்களைத் தனது திறமை யான ஆளுமையால் வழி நடாத்துவ தோடு, இடையில் ஏற்படும் எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சாது, நிமிர்ந்த ஞானச் செருக்கோடு நிமிர்ந்து நின்ற அம்ரிதா டீச்சர், உன்னத சமூகமொன்றைக் கட்டி யெழுப்புவதில் ஆசிரியர்களால் கற்பித் தலுக்கு அப்பாலும் செயற்பட முடியும் என்பதற்கு எடுத்துக் காட்டாய்ப் படைக்கப் பட்டுள்ளார். அவ்வாறே, என்னதான் பட்டப் படிப்புப் படித்து விட்டு வந்து சமூகப்பற்று, சமுதாய விடுதலை என்ற கனவுகளுடன் சிறகடித்தாலும், தன்னுடைய சொந்த வாழ்க்கை என்று வரும்போது பேசிய இலட்சியங்களைக் காற்றில் பறக்க விட்டு விட்டு மூலைக்குள் முடங்கிவிடும் "எமது சமூக யதார்த்தமாய் ஒரு 'பர்வினா. பாடசாலை அதிபர், பெரிய மத்திசம் மம்ம சாதிக், மற்ற மத்திசம்மார், எடுபிடி ஜெஸாயிர், அப்பாஸ் போன்ற எதிர்நிலைக்
கதாபாத்திரங்கள், ஊரில் தாம் வைத்தது தான் சட்டமென்று சமூக மேலாதிக்கத் தைத் தமது கைக்குள் வைத்துக்கொண்டு சமூகத்தை ஆட்டிப் படைக்கும் சுயநலத் தலைமைகள், அவற்றுக்கு வால்பிடித்துத் தூபம் போடும் பரிவாரம், அவர்களின் காழ்ப்புணர்வுகள், கீழ்த்தரமான எதிர்ப்பு நடவடிக்கைகள் என்பனவற்றைத் தோலு ரித்துக் காட்டும் வகையில் படைக்கப்பட் டுள்ளமை நாவலின் உயிரோட்டத்துக்கு இன்னும் பலம் சேர்க்கிறது எனலாம். இவை தவிர நாவலில் வந்து போகும் பிற கதாபாத்திரங்களின் வார்ப்பும் கதை யின் தொய்வற்ற நகர்வுக்குத் துணை செய்கின்றன என்றால் மிகையன்று.
தென்னிலங்கை முஸ்லிம் பேச்சுத் தமிழோடு அறிமுகமற்ற புதியவர்களுக்கு நாவலில் இடம்பெற்றுள்ள உரையாடல் களைச் சட்டென்று புரிந்துகொள்வதில் சிறியதோர் இடர்ப்பாடு இருக்கலாம்தான். எனினும், மல்லிகையிலும் பிற படைப்புகள் (நாவல்கள், சிறுகதைகள்) மூலமும் ஆசிரி யரின் எழுத்துக்களைத் தொடர்ந்து வாசித்து வருவோருக்கு இந்த நாவலைச் சுவைப்பதில் தடையேதுமில்லை. கலை சமூகத்துக்காகவே என்பதை நிரூபிக்கும் வகையிலும், எமது பெண்களாலும் சாதிக்க முடியும் என்று உந்துதல் தரும் வகை யிலும் படைக்கப்பட்டுள்ள இத்தகைய தொரு நல்ல நூலுக்கு அனுசரணை வழங் கிய மத்திய கலாசார நிதியம், கலாசார அலுவல்கள் அமைச்சு என்பனவற்றை எவ் வளவு பாராட்டினாலும் தகும். அவர்களின் பணி இனிது தொடர நாமும் வாழ்த்துவோம்.
ஆக மொத்தத்தில், மீண்டும் மீண்டும் படிக்கத் துண்டும் அருமையான நம் நாட்டு நாவலை (ஜீவா அடிக்கடி சொல்வது போல - காசுகொடுத்து) வாங்கிய மனநிறைவை நான் அனுபவிக்கிறேன். நீங்களும்?
மல்லிகை பெப்ரவரி 2009 & 30

உடைந்த கண்ணாடியில் உடைந்த என் விம்பங்கள் صیر” துண்டு துண்டாய் ۷گه
முழுதும் சிதைந்து
முழுமை அடியோடற்று کسی
தனித் தனியாய் २८
சோடிக் கண்கள் கூடத் തൃ - இ. இராஜேஸ்கண்ணன்
தமக்கொரு துண்டாய்
முகம் சிதைந்து ഗ്ല്
காதுகள் இரண்டும் %
நாசித் துளைகள் மட்டுமல்ல நாறிக் கிடக்கின்ற ஒற்றை வாய்தானும் போதி நிழற் பரப்பும் நான்கைந்து துண்டங்களாய். நடுநிசியில் சந்திரனைக்
காவுகொள்ளும் சூறையரும் விதியிலே துகிலுரித்து
விடப்பட்ட மாந்தர்களும்,
கண்கள் ஒன்றை ஒன்று சந்தேகம் கொண்டு பார்க்க, காதொன்று கேட்பதை மறுகாது மறுதலிக்க, நாசித் துளைகள் முரண்
நாளொன்றுக் கொன்றாய் நாம் கொடுக்கும்
முத்தி மூச்சிழக்க, விலைச்சுமையும். வாய் சொன்ன தத்துவங்கள் கண்ணாடித் துண்டங்களில் வகைக் கொன்றாய் சிதறுண்டு என்முகம் வரிஞ்சு கட்ட. பாளம் பிளந்து.
சுயம்
மாக்ஸிஸம் மாவோயிஸம் O றியலிஸம் ஐ டியலிஸம் பல்லிளித்த தெனைப் பார்த்து! போஸ்ட் மொடேண் இஸங்களெல்லாம் உடைப்பெடுத்து
கியூபிஸ்மாய் கிளர்கையிலே!
மல்லிகை பெப்ரவரி 2009 ஜ் 31

Page 18
வாழும் நினைவுகள் - 09
விரகேசரிராஜகோபால்
- திக்குவல்லை கமால்
பெண்கள் பெரிய பிள்ளையாகும் வரையில் படித்தால் போதும், அதற்கு மேல் படிப்பு என்ற பெயரில் வெளியே செல்வது ஒழுக்கமானதல்ல" என்ற மரபில் வாழ்ந்த எங்கள் கிராமத்தில், படித்து அரசாங்க உத்தியோகத்திற்குச் சென்ற முதல் பெண்மணி எனது மூத்த சகோதரிதான்.
இவருக்கு 1961இல் ஆசிரிய நியமனம் கிடைத்தது. இச்செய்தி படத்தோடு பத்திரிகையில் வெளிவந்திருந்த போதுதான், எனக்கு வீரகேசரி அறிமுகமானது.
அப்போது எனக்குப் பத்து வயதிருக்கும். இதற்கு சுமார் ஏழெட்டு வருங்களுக்குப் பின்புதான், எழுத்தாளன் என்ற வகையில் வீரகேசரியோடு எனக்குத் தொடர்பேற்பட்டது. எதையாவது எழுதுவதற்கு களம் தேடியலைந்த காலம். அதற்கு வெள்ளி தோறும் வெளிவந்த முஸ்லிம் சுடர்' என்ற பகுதி வாய்ப்பாகியது. இஸ்லாமிய கட்டுரைகளோடு இரண் டொரு கவிதைகளும் தவறாமல் வெளிவரும். எனது ஆக்கங்ளும் அதில் அவ்வப்போது வெளியாகின. இப்பக்கத்தை எம்.ரி.எம்.அளுஹர்தீன் நடாத்தினார்.
இவரைச் சந்திக்கும் வாய்ப்பு காலம் கடந்தே எனக்கேற்பட்டது. அப்போது அவர் பத்திரிகைத் துறையிலிருந்து ஒய்வு பெற்றிருந்தார்.
அதற்கு சில காலங்களுக்குப் பின்புதான் சிறுகதை எழுதத் தொடங்கினேன். சிறுகதை யென்றால் வீரகேசரிதான் என்றொரு காலகட்டம் இருந்தது. தங்கள் சிறுகதைகள் வீரகேசரி யில் இடம்பெறுவதை பெரும் அங்கீகாரமாக எழுத்தாளர்கள் கருதினர். அதற்கு நான் விதி விலக்காக முடியுமா, என்ன?
வித்தியாசமான பகைப்புல, கலாசார, பேச்சுவழக்கு சிறுகதைகள் இடம்பெற வேண்டு மென்ற ஞாயிறு இதழ் பொறுப்பாசிரியரின் நோக்கமே, என் கதைகளுக்கு வாய்ப்பாக அமைந்ததைப் பின்னர் அறிந்துகொண்டேன்.
அந்த வகையான கண்ணோட்டத்துடன் செயற்படும் வீரகேசரி வார வெளியீட்டாசிரியர் பொன் ராஜகோபால் பற்றி இலக்கிய இலகில் விதந்து பேசப்படுவதை அடிக்கடி கேட்டேன்.
மல்லிகை பெப்ரவரி 2009 & 32

அவரை ஒருமுறை சந்திக்க வேண்டு மென்ற ஆவல் மேலிட்டது. ஒரு சில சிறு கதைகள் எழுதி வெளிவந்தமைக்காக இப்படியொரு ஆளுமையை நான் போய்ச் சந்திக்கலாமா? என்று எனக்குள்ளேயே
அச்சப்பட்டேன்.
நீண்ட காலத்துக்குப் பிறகே அது சாத்தியமாயிற்று. மிகுந்த மரியாதையோடு ஓர் எழுத்தாளனென்ற அந்தஸ்தைத் தந்து தனது ஆசனத்திலிருந்து எழுந்து, கைதந்து, வரவேற்கும் பண்பை அவரில்தான் கண்டேன்.
பழகினார்.
தொண்ணுாறுகளுக்குப் பிறகு ஒரு நாள் அலுவலகத்தில் அவரைச் சந்தித்த போது, 'இப்பொழுதெல்லாம் உங்கள் கதைகளை வீரகேசரியில் வெளிவந்த பின்பே நான் வாசிக்கிறேன்' என்றார். என்ன சொல்கிறாரென்று எனக்கு விளங்க வில்லை. பிறகுதான் சிரித்துக்கொண்டே விளக்கம் சொன்னார். தனது எதிர்பார்ப்புக் கேற்ப கதைத் தெரிவை மேற்கொள்ளும் திறமை வாய்ந்த ஒருவரைக் கண்டுபிடித்து விட்டேன் என்பதுதான் அதன் இரகசியம். அது வேறுயாருமல்ல தேவகெளரிதான்.
சிலகாலம் நண்பர் லெ. முருகபூபதி வீரகேசரியில் கடமையாற்றினார். அப்போது அடிக்கடி அங்கு செல்வதுண்டு. சில்லையூர் செல்வராசன், செ.கதிர்காமநாதன் போன்ற படைப்பாளிகள் வீரகேசரியில் கடமை யாற்றியிருக்கிறார்கள். அன்னலட்சுமி ராஜ துரை தற்போதும் கடமையாற்றுகிறார்.
வீரகேசரியின் சகோதரப் பத்திரிகை யான மித்திரன் முன்பு மாலை நாளிதலாக வெளிவந்தது. சிலகாலம் தினமொரு சிறு கதை பிரசுரித்து வந்தது. அது எனது எழுத்
துலக ஆரம்ப கட்டமென்பதால் நானும் நிறையச் சிறுகதைகள் எழுதலானேன்.
தேசியப் பத்திரிகை என்ற வகையில் வீரகேசரி மூத்த பத்திரிகை. எனது இலக் கியப் பாதையில் கைகொடுத்த பத்திரிகை களில் வீரகேசரி குறிப்பிடத்தக்கது. என்னைப் பொறுத்தவரையில் பொன் ராஜகோபால் மறக்க முடியாத மனிதர்.
பத்திரிகையாளர் என்ற பதாகையைப் பயன்படுத்தி, முதன்மைபெற முயற்சிக்காததொரு பெருந் தகை அவர். விழாக்களில் முகம் காட்ட
ஏனைய விடயங்களில்
அவர் விரும்புவதேயில்லை. தவிர்க்க முடியாத நிலையில் கலந்துகொண்டாலும் மிகுந்த கூச்சத்துடனேயே காணப்படுவார்.
வீரகேசரியிலிருந்து விலகி, தினக் குரலில் கடமையாற்றிக் கொண்டிருந்த ஆரம்ப கட்டத்திலேயே அவரது இழப்பு நேர்ந்தது.
பொன் ராஜகோபாலின் ஆற்றலும் அத னுாடாக அவர் செய்த இலக்கிய அறுவடை யும் என்றும் மறக்க முடியாதவையே.
வாழும் நினைவுகள் - 10
புதுக் கவிதைகள்
எழுபதுகளின் ஆரம்பத்தில் இலங்கை பத்திரிகை, புதுக் கவிதைகள் படிப்படியாக இடம்பிடிக்க லாயின. "வானம்பாடி போன்ற கவிதைச்
சஞ்சிகைகளில்
சஞ்சிகைகளின் வெளிப்பாடும், அக்கவிதை களில் தூக்கலாகத் தெரிந்த மானுட நேய சமூக விமர்சனப் பாங்கும் எமது கவிதை களிலும் பிரதிபலிக்கலாயின. மல்லிகை,
மல்லிகை பெப்ரவரி 2009 * 33

Page 19
சிரித்திரன், வீரகேசரி முதலான இதழ்களி லேயே இத்தகைய கவிதைகள் முதலில்
இடம்பிடித்தன.
அப்பொழுதுதான் பலாலி ஆசிரிய கலாசாலையில் பயிற்சியாசிரியராகவிருந் தேன். என்னோடு கலை இலக்கிய தொடர் புடைய பலர் பயிற்சி பெற்றுவந்தனர். கலை வாதி கலீல், ரைத்தலாவளை அளிஸ், ரமணி, அன்பு ஜவஹர்ஷா, ஜவாத் மரைக் கார், மூதூர் முகைதீன், வல்வை ந.அனந்த ராஜ், எம்.எஸ்.அமானுல்லா இப்படிப் பலர். இவர்களில் சிலர் புதுக்கவிதை எழுதினர்.
இக்காலகட்டத்தில் பல இலக்கிய நெஞ்சங்களோடு பரஸ்பரம் தொடர்பு ஏற் பட்டது. அவர்களுள் லோகேந்திரலிங்கம், ராதேயன், பூநகரி மரியதாஸ், சசி கிருஷ்ண மூர்த்தி, பாலகிரி, கோப்பாய் சிவம், பள்ளி மாணவர்களான சேரன், ஆதவன் போன்ற வர்கள் புதுக் கவிதைப் பிரவாகத்தில் இணைந்து கொண்டனர்.
அப்போது நிறையவே கவிதைகள் நான் எழுதினேன். கணையாழி, வானம் பாடி போன்ற தமிழக இதழ்களிலும் எனது கவிதைகள் வெளிவந்தன. எனது கவிதை கள் சிலவற்றைத் தொகுத்து ஒரு சிறு பிரசுர மாக வெளியிட்டால் என்னவென்று நண் பர்கள் அபிப்பிராயப்பட்டனர். அப்போது எனக்கும் அது சரியாகவே பட்டது.
அன்பு ஜவஹர்ஷா அதைச் செயற் படுத்த களத்தில் இறங்கி விட்டார். பதினாறு பக்கங்களில் எலிக்கூடு' தெல்லிப்பளை குகன் அச்சகத்தின் மூலம் அச்சேறியது.
இதன் வெளியீட்டு விழா திக்குவல்லை மின்ஹாத் கனிஷ்ட வித்தியாலயத்தில்
நிகழ்ந்தது. அப்போது அங்கே ஆசிரியர் களாகக் கடமையாற்றிய ஆ.மகாதேவன், எஸ்.எம்.ஜே.பைஸ்தீன் ஆகியேர் விமர்சன உரை நிகழ்த்தினர்.
இலங்கை வானொலியில் கலைக் கோலம் இலக்கிய நிகழ்ச்சி நடாத்திய பேராசிரியர் க.கைலாசபதி விமர்சன ஒலி பரப்புக்கு ஏற்பாடு செய்தார். வெளியீட்டு விழாச் செய்திகளும், கருத்துரைகளும் பத்திரிகைகளில் வெளிவந்தன. யாழ்ப் பாணம், அநுராதபுரம் போன்ற இடங்களில் அறிமுகக் கூட்டங்கள் நடந்தன. மினுவாங் கொட கொரஸ்ஸ ரத்னவன்ஸ் தேரர் எலிக் கூட்டை சிங்களத்தில் மொழிபெயர்த்துள்ள தாக பத்திரிகைக்குத் தகவல் கொடுத்தார். அப்போது தேசாபிமானி'யில் இயங்கிய த.கனகரட்னம் "தேமதுரத் தமிழோசை சிங்களத்தில் கேட்கிறது' என்று கொட்டை எழுத்தில் செய்தி வெளியிட்டார்.
இந்தத் தடல் புடல்களால் எங்கள் பிரதேசத்திலும் புதுக்கவிதை தொடர்பான கவர்ச்சியும் எழுச்சியும் ஏற்பட்டது.
நீள்கரை நம்பி, செந்தீரன் ஸத்தார் ஆகியோர் இணைந்து 'க-வி-தை' என்ற சஞ்சிகை
பெயரில் புதுக் கவிதைச்
யொன்றை ஆரம்பித்தனர்.
பின்னர் திக்குவல்லை எழுத்தாளர் சங்கம், செந்திரனின் ‘விடிவு புதுக்கவிதைத் தொகுதியை வெளியிட்டது.
புதுக்கவிதை தொடர்பான கலந்துரை யாடலொன்று சுடச்சுட ஏற்பாடாகியது. அங்கு கடமையாற்றிய தணிகாசலம் பிள்ளை உரையாற்றி நெறிப்படுத்தினார்.
மல்லிகை பெப்ரவரி 2009 辜 34

கைலாசபதி, இளங்கீரன் போன்ற வர்கள் கவிதைகள் தொடர்பான அபிப் பிராயங்களை கடிதம் மூலமாக அனுப்பி, ஊக்கமூட்டினர்.
'தீபம்' சஞ்சிகைக்கு இலங்கைக் கடிதம் எழுதிய யாழ்வாசி (சிற்பி) திக்கு வல்லை இலக்கியச் செய்திகளை உடனுக்
குடன் சேர்த்துக் கொண்டார்.
சமகாலத்தில் வல்லிக் கண்ணன் எழுதிய ‘புதுகவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் தீபத்தில் தொடராக வெளி வந்தது. பின்னர், அது நூலாக வெளி வந்தது. திக்குவல்லைப் புதுக்கவிதை முயற்சிகள் அதில் பதிவாகியிருந்தன.
இலங்கையில் புதுக்கவிதை முயற்சி
பரவலாக நடைபெறும்போது திக்கு வல்லையை மாத்திரம் விதந்துரைப்பது
சரியானதா?’ என்று சிலர் சர்ச்சையைக்
கிளப்பினர்.
எழுத்தாளன் இலக்கிய முயற்சிகள் தொடர்பான தகவல்களை உரிய இடத் திற்கு சென்றடைவதற்கான முயற்சிகளை சமகாலத்திலேயே மேற்கொள்ள வேண் டும். இலக்கிய உறவுகளைப் பேணவும் வேண்டும். இதில் அசட்டையாக இருந்து விட்டு எங்களது ஆக்கங்களைப் பதிவு செய்யவில்லை. எங்களைக் கண்ணியப் படுத்தவில்லையென்று சத்தமிடுவது ஆரோக்கியமானதல்ல. ஒப்புக்கொள்ளக் கூடியதுமல்ல!
எமது ஆரம்பகாலப் புதுக்கவிதைகள் இன்றைய பார்வையில் ஆரோக்கியமற்ற தாக இருக்கலாம். எனினும் அப்படியொரு ஆரம்பமில்லா விட்டால், இப்படியொரு வளர்ச்சி ஏற்பட்டிருக்க முடியாதென்பதை மறக்காமலிருந்தால் சரி.
இவ்வாண்டு இந்திய 60வது சுதந்திர தின அறிவிப்பில் பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களுக்கு இந்திய அரசாங்கத்தின் சார்பாக ஜனாதிபதி 'பத்ம பூஷண் விருது கொடுத்துக்
மகத்தான இந்தத் தமிழ்ப் படைப்பாளிக்குக் கிடைத்துள்ள இந்த அகில இந்திய அங்கீகாரத்தை எண்ணி மல்லிகை பேரானந்தம் அடைகின்றது.
நண்பர் ஜெயகாந்தனை மல்லிகை மனநிறைவுடன்
கெளரவித்துள்ளார்.
வாழ்த்தி மகிழ்கின்றது.
- ஆசிரியர்
ار
மல்லிகை பெப்ரவரி 2009 & 35

Page 20
్యు9? o' ി நாட்களாகவே மனதுக்குள் .نویاتی لأنه
நிலைகொண்டிருந்த பவுன அமுக்கம், o' இன்று சூறாவளியாகி வெளிக்கொண்டது.
இத்தனை நாட்கள் பொறுத்துப் பொறுத்து, உ* பொறுமையின் எல்லைக்கே வந்துவிட்டாள் பிரேமினி.
"பிரிந்து போகத்தான் வேண்டும்!"
* சம்பாத்தியத்தைக் கொடுத்து, சமைத்துப் போட்டு, சுகத்தைக் கொடுத்து,
அடிமையாக வாழ்வதுதான் இல்லறமா? பெண்ணுக்கும் மனம் ஒன்று இருப்பதை ஏற்றுக்கொள்ளாமல், பணம் ஒன்றுதான் குறி என்று நினைத்துச் செயற்படும் கோகுலுடன் இனியும் சேர்ந்து வாழ்வதில் அர்த்தமில்லை என அவளுக்குத் தோன் றியது. குடும்ப கெளரவத்திற்காக சமூகம் சேற்றை வாரி இறைக்கும் என்பதற்காக, தினமும் நரகத்தில் இருந்துகொண்டு, விதியை நொந்துகொண்டு, விரும்பமில்லாத வாழ்க்கையைத் தொடர முடியுமா?
நான்கு வருட தாம்பத்திய வாழ்வில் முதல் நான்கு மாதங்கள் போல் பிரேமினி மகிழ்ச்சியாக இருந்ததில்லை. வாழ்வை பற்றிய வண்ணக்கனவுகள் எல்லாம் மின் மினியாய் ஒளிர்ந்து பின்னர் மறைந்த வானவில்லைப் போல், ஒவ்வொன்றாய் சிதைய, அவள் உடைந்து போனாள்.
திருமண வாழ்வின் மூலம் இமாலய உச்சத்தை எட்டிப் பிடிக்கும் எண்ணம், எண்ணையில்லா விளக்குப் போல மெல்ல மெல்ல மங்கி ஒளியிழந்து, ஏதோ ஒரு சூனிய இருளில் தனியே அஞ்ஞாதவாசம் செய்வது போல் கடந்த சில நாட்களாக உணர்ந்தாள்.
கோகுலனைச் சந்தித்து பழகிய நாட்களில், ஆரம்பத்தில் பருவ ஈர்ப்பு என்ற முகமூடியை உணராது, அவனோடு வாழப்போவதில் கிடைக்கப் போகின்ற எதிர்கால சுபீட்சம் பல நிறக் கனவுகளாய், மனதில் வண்ணத்துப் பூச்சிகளாய் சிறகடிக்க, எண்ணிக்கையில்லா சின்னச் சின்ன ஆசைகள் எல்லாம் இனி நிறைவேறும் என்ற
மல்லிகை பெப்ரவரி 2009 * 36

உறுதியான நம்பிக்கையுடன் அவனது காதலுக்குப் பச்சைக்கொடி காட்டினாள்.
அவள் பொறுப்பு வைத்தியராக பதவி பெற்று சென்ற மருத்துவமனை யில், உதவி வைத்தியராக பணியாற்றிக் கொண்டிருந்த அவளிலும் பார்க்க ஐந்தே வயது அதிகமான கோகுலனின் அதிர்ந்து பேசாத, அமைதியான சுபாவ மும், மருத்துவத்துறையில் அவனுக் கிருந்த துல்லியமான அறிவும், கை ராசியும், அதனால் மக்கள் மத்தியிலும், பணிபுரியும் ஊழியர்கள் மத்தியிலும் அவனுக்கிருந்த புகழும், பெரு மதிப்பும் அவன் மீது ஒருவித பிடிப்பை ஏற் படுத்தி விட்டது.
பெண்களைக் கண்டு சலனப்படாத அவனது போக்கும், பெண்களை மதிக் கும் பாங்கும் அவன் மீது ஏற்பட்ட பிடிப்பை தூண்டிவிட, அவனது விம் பம், அவள் மனதில் சுடர்விட்டு பிரகா சிக்கத் தொடங்கியது.
கடந்துபோன கால்நூற்றாண்டு, பெற்றோருடன் வாழ்ந்த சிறை வாழக் கையைத் தகர்த்து, ஒரு சுதந்திரப் பறவை போல் அவனோடு வானில் இணையாகச் சிறகடித்துப் பறப்பது போல பிரேமினி உணர்ந்தாள்.
அப்பாவின் கட்டுப்பாட்டிற்குள் ளும், அம்மாவின் பண்பாட்டுப் போலி களின் தாக்கங்கள் தகர்த்தெறியப்பட வேண்டிய சிறை வைப்புக்குள்ளும் இருந்து இனி விடுதலை கிடைத்துவிடும் என்றும், பாரதி கண்ட புதுமைப் பெண் போல் சுதந்திர வாழ்வில் காலடி எடுத்து வைக்கப் போவதாகவும், சாதனைகள்
அவற்றிற் கெல்லாம் தூண்டியாக இருக்கக்கூடிய ஒரு யுகபுருஷனைத் தரிசித்து விட்ட தாகவும், கோகுலனின் அறிமுகத்தில் உணர்ந்தாள், பிரேமினி.
படைக்கப் போவதாகவும்,
கனவுகளில் வாழ்ந்து, மெளனச் சிறகடிப்புகளுடனும், வெறும் எதிர்பார்ப் புகளுடனும் மட்டுமே இமைகள் சோர்ந்து, இதயம் ஏங்கிய காலங்களுக்கு இனி முடிவு காலம் வந்துவிட்டதாகவும், தூரத்துப் பச்சைகளாய் காட்சியளித்த எதிர்கால விருட்சங்களெல்லாம் எட்டும் தூரத்திற்குள் வந்துவிட்டதாகவும், அவ ளது இதயக் கூட்டுக்குள்ளே தென்றல் விசியது.
அவளது எதிர்பார்ப்புக்களை நியா யப்படுத்தும் அவனது பெண்ணியக் பெண் விடுதலை சிறு கதைகளும், ஆழமான பெண்ணடிமை
கவிதைகளும்,
விலங்கொடிக்கும் கட்டுரைகளும், அவள் நினைப்பு, கட்டியம் கூறி நின்றன.
நிதர்சனமானதுதான் எனக்
முகமறியா ஒரு எழுத்தாளனாக மட்டும் அறிந்திருந்த கோகுலன், இதோ அவளோடு பணிபுரிகிறான் என்ற யதார்த் தம் ஏற்படுத்திய பெருமகிழ்வில் அவள் மெல்ல மெல்லத் தன் மனதில் அவனைக் குடியேற்றினாள்.
எப்போதாவது சில கவிதைகளை எழுதுகின்ற பிரேமினி, இனி தானும் ஒரு சிறந்த படைப்பாளியாக உருவாகிட இவனது ஒத்துழைப்பும், எதிர்காலத்தில் கிடைக்கும் என்ற எண்
ஊக்கியும்
ணத்தில், தன்னைத் தாமரைச் செல்வியாக வும், கோகிலா மகேந்திரனாகவும்
உணர்ந்தாள்.
மல்லிகை பெப்ரவரி 2009 & 37

Page 21
அவள் அவனது மேலதிகாரியென்ற
ஒரு இனிய நட்பாக அவர்களது உறவு மாறிய போது,
நிலைகளையும் தாண்டி,
அவளைப் போலவே அவனும் மிகவும் மகிழ்ந்தான். அந்த நட்பு காதலான போது, அதை வெளிக்காட்டுவதில் இருவரும் தயங்கி நின்றனர்.
அவனது தகைமையும், ஊதியமும், பதவியும், ஏன் குடும்ப அந்தஸ்தும் கூட அவளைவிட ஒருபடி குறைந்தது என்ப தால், அவனுக்கிருந்த தயக்கத்தை பிரேமினி புரிந்துகொண்டாள். எனவே, மனதுக்கு மிகவும் பிடித்துப் போய் விட்ட அவனில் ஏற்பட்டு விட்ட காதலை அவள்தான் முதலில் வார்த்தை களில் வடித்தாள். அவன் சிறிது தயக்கத்துடனேயே சம்மதித்தான்.
அவனது மனதிலே இருந்த தாழ்வுச் சிக்கலை அவள் தனது ஆழமான அன்பு வெளிப்படுத்தலால் தகர்த்தெறிந்தாள்.
“பிரேமினி நான் தகுதியில், அந் தஸ்தில், சாதியில், எதிலுமே உங்களுக் குப் பொருத்தம் இல்லாதவன்.” என்று அவன் தயங்கி தயங்கிக் கூறினான்.
'கோகுலன், ஏன் உங்களைப் பற்றி குறைவாக நினைக்கிறீர்கள்...? நீங்களும் படித்தவர், பண்பானவர், செயல்திறன் மிக்கவர். எனக்கு கோகுலன் என்ற இளைஞனைப் பிடித்திருக்கிறது. அவ னது எழுத்துக்களைப் பிடித்திருக்கிறது. உங்களது எண்ணங்கள், குறிப்பாகப் பெண்கள் பற்றி நீங்கள் வைத்திருக் கின்ற சமூகச் சிந்தனைகள் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. இதற்கு மேல்
உங்களிடம் வேறு என்ன தகுதியை ஒரு பெண் எதிர்பார்க்கப் போகிறாள்? பொய்யான போலிக் கெளரவங்களை யும், சுயநல எண்ணங்களையும் விட மெய்யான, தேவைகளான உரிமை களும், புரிந்துணர்வுகளும் உங்களிடம் இருக்கிறது. மனித நேயம் மிக்க ஒரு மனித இதயத்தின் முன்னே மற்றவை யாவும் தூசியே!” என அவள் அழுத்தம் திருத்தமாக கூறியபோது ஒரு மெற்றிக் தொன் மகிழ்வில் அவனும் மிதந்தான்.
அப்படித் தொடங்கிய உறவுக்கு இப்படி ஒரு சிதைவு இவ்வளவு குறுகிய காலத்தில் வருமென அவள் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. ஒரு மனிதனின் எழுத்துக்கும், வாழ்க் கைக்கும் இடையே உள்ள இடைவெளி இவ்வளவு அகன்றதாக இருக்கின்ற யதார்த்தத்தைத் தரிசித்தபோது, அவள் மெல்ல மெல்ல உடைந்து, முற்றாக நொருங்கிப் போனாள். செட்டை கழற் றிய பாம்பாக, ஒரு சாதாரண ஆணா திக்க கணவனாக அவனைக் கண்ட போது, கடந்தகால இளவேனில் கனவு கள் மின்சாரம் இழந்த மின்குமிழ் களாகின.
அவளது உணர்வுகளுக்கு மதிப் பளிக்கவோ, நியாயங்களைச் செவிமடுக் கவோ தயாரில்லாத, அவளை ஒரு சாதா ரணமாக மட்டும் நோக்கும் அவனது போகப் பார்வையில் எரிந்து சாம்ப லானாள் பிரேமினி, விடியலின் தேட லில் ஆரம்பித்த அவனது இல்வாழ்வு, விடிவெள்ளியைத் தரையில் தேடிய கதையாய் அர்த்தமற்று அறுந்து குற்றுயி ரானது. ஈன்ற பொழுது முதல் விலங்
மல்லிகை பெப்ரவரி 2009 & 38

கிடப்படாத சிறையிடப்பட்டதாய், ஈரத்
தினுள்ளே இருந்துவிட்ட இருளாக கடந்த காலத்தைவிட, நிகழ்காலத்தில்
இன்னமும் காரிருள் சூழ்ந்தது.
பிரேமினியின் வீட்டில் இந்தக்
காதல் விவகாரம் தெரிந்த நாட்களில், வீட்டில் உள்ள அனைவரும் ருத்திர அவளுக்கு மறுப்புக் கொடி காட்டினர். "உனது அழகுக்கும், படிப்புக்கும், பதவிக்கும் எத்தனையோ
தாண்டவமாடி,
மாப்பிளைகளை விலைகொடுத்து வாங் கக் கூடிய நிலையில் அப்பா இருக்கும் போது, இவனில் எதைக்கண்டு மயங் கினாய்?" என்று அம்மா பிடிவாதமாக மறுத்து நின்ற போதும், இறுதியில் இவளது அழுகையும், கண்ணிரும், வீம்புந்தான் அவர்களைத் தகர்த்தது. அவர்களைச் சமாதானப்படுத்தி சம்மதம் வாங்கித் தந்தது.
இவ்வளவு பிடிவாதமாக நின்று தான் விரும்பிய வாழ்வைத் தேடிக் கொண்டவள், இன்று எந்த முகத்துடன் அவர்கள் முன்போய் நிற்பது?
சீதனம் வாங்காத காதல் திருமணம் என்ற வெறும் பெயர் மட்டுந்தான். அவளது பெயரில் வங்கி இருப்பாக
இருப்பது போக, அவள் ஒரே மகள்
என்பதால் ஏனைய சொத்துக்கள் கூட
அவளுக்குத்தான். திருமண செலவு முதல், கொழும்பில் சொந்த வீடு, கார், முழுமையான தளபாட, மின்சார மற்றும் உபகரணங்கள் வாங்கியதெல் லாம் அவளது பெற்றோரின் பொறுப்
புத்தான்.
s
i
அவனும் கூட, ஒரளவு வசதியான குடும்பத்தில் பிறந்திருந்த போதும், அவளிடம் வரும்போது வெறும் கை யோடுதான் வந்தான். அவனது வங்கி இருப்புக்கூட திருமணத்திற்கு ஒரு வாரம் முன்னர்தான் காலியாகியிருந்தது. எனினும், அவள் எதையுமே எதிர்பார்க்க வில்லை. அவனிடம் இருந்து எதிர் பார்த்ததெல்லாம் பூரணமான அன்பை
யும், புரிந்துணர்வையும், விட்டுக் கொடுப்பையும்தான்.
ஆனால், அவை ஏதும் இன்று
இல்லை என்று தெரிய வருகின்றபோது, விமானத் தாக்குதலுக்கு உள்ளான பென் ரகன் கட்டிடமாய், அவள் கட்டிய கோட்டைகள் எல்லாம் இடிந்து சரிந்தன.
ஆரம்பத் தேனிலவு எல்லாம் இனிப்பாய்த்தான் இருந்தது. எல்லாம் இன்பமயம் என்ற மாயை தகர்ந்து போக, மாதங்கள்தான்
ஒரு சில
தேவைப்பட்டன.
அடுத்த மாதம் வழக்கம் போல் சம்பளம் எடுத்துக்கொண்டு வீட்டுக்குள் வந்ததும், "சம்பளக் காசைத் தா" என்று அவன் கறாறாகக் கேட்டபோது, அவனது சுயரூபம் நிதர்சனமாக ஆரம்பித்தது.
அவன் தனது சம்பளத்தையும் அவளிடமே கொண்டுவந்து தருவான் என்று எதிர்பார்த்த அவளுக்கு, அவனது நேர் எதிரான செயல் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் அளித்தாலும், மறுபேச் சின்றி அவனிடம் சம்பளப் பணம் முழுவதையும் கொடுத்தாள். அவனோ
மல்லிகை பெப்ரவரி 2009 3தி 39

Page 22
“என்ன, காசு குறைகிறதே?’ என்று கேட்ட போது, அவமானத்தால் குன்றிப் போனாள். மறுத்தால் வீணாக முரண்பட நேரிடலாம் என்று அவள் கருதியதால் அவள் பொறுமையைக் கடைப் பிடித்தாள்.
அவள் தனது சிறு சிறு தேவை களுக்குக்கூட அவனிடம் கேட்டுப் பெற
வேண்டி இருந்தது. அதுகூடப் பரவா
யில்லை. அதற்கெல்லாம் அவனுக்கு
காரணம் சொல்ல வேண்டியிருந்தது. அவன் எல்லாப் பணத்தையும் என்ன செய்கிறான்? என்று அவளிடம் கூறுவ தில்லை. அவனோடு வாழ ஆரம்பித்த பின்னர்தான் இந்த உலகமே சுயநலம் என்ற அச்சாணியில் சுழல்வதை பிரேமினி உணர்ந்தாள்.
சிறப்பாக வாழவேண்டிய ஒரு இனிய இல்வாழ்வை கோகுலனுடைய நடவடிக்கைகள் அகலபாதாளத்திற்குள் தள்ளியது.
வாழ்நாள் முழுவதும் ஒரு பூப் போல உன்னைப் பூசிப்பேன் என்று அவருடன் காதல் வசனம் பேசிய கோகுலன்தான், இப்போது அவளது அபிலாசைகளையெல்லாம் அரும் பிலேயே கிள்ளி எறிகிறான்.
குழந்தை ஒன்று கிடைத்துவிட் டால், அவன் திருந்தி பாசமுள்ள குடும்பத் தலைவனாகி விடுவான் என்ற அவளது எதிர்பார்ப்பும், பொய்த்துப் போயிற்று. அவளுக்கு மட்டுமல்ல அவளது குழந்தைக்கும் கூட எதிர்காலம் கானல் நீரானது.
|
i
இத்தனைக்கும் வேடிக்கை என்ன வென்றால் அவன் இன்னமும் கதைகள் எழுதிக் கொண்டு இருப்பதுதான். கதையில் வரும் வார்ப்புக்களில் பெண் களைப் போற்றி, பெண்ணியம் சிறப்புற எழுதிக்கொண்டிருக்கிறான்.
அவள் தானும் எழுத வேண்டும் என்று நினைத்த போதெல்லாம், அதை மழுங்கடிக்குமாப் போல் 'எழுதி மினைக்கெடுகிறதை விட்டுட்டு வீட்டு வேலைகளைக் கவனி”, “பிள்ளையைப் பார்." என்று பூச்சாண்டி காட்டுவான்.
வீட்டு
அவளுக்கு உதவியாக இருப்பதில்லை. வெளி வேலைகள் கூட சொல்லி வற்
வேலைகள் எதிலுமே
புறுத்தினால்தான் வேண்டா வெறுப்பா கச் செய்வான். அவளும் வேலைக்குப் போய் வருவதால் வீட்டிலிருக்கும் வேளைகளில், வேலைகள் மலை போல் குவிந்திருக்கும். அவனது உடுப்புகளைக் கூட அவள்தான் தோய்க்க வேண்டும். வேலை செய்யும் போது குழந்தை அழுதால்கூட தேற்ற மாட்டான். ஏதாவது எழுதிக்கொண்டு அல்லது ஏதாவது ஒரு புத்தகமே கதியென்று உட்கார்ந்திருப் பான். குடும்பப் பொறுப்பு துளிகூட
கிடையாது.
இரவு படுக்கையறையில் மட்டும் அவள் நித்தம் வேண்டும். ஆரம்பத்தில் பரஸ்பர தேவை காரணமாக ரசித்தவள் பின்னர் தனது கடமை என்று சகித்துக் கொண்டாள். அவனோ அவளது மன துக்கு ஒத்தடம் ஏதும் கொடுக்காமல் அவ ளது உடலே குறியாக எப்போதும் அணு கும் போது அவளுக்கு தாம்பத்திய வாழ்வில்கூட வெறுப்பு ஏற்பட்டது.
மல்லிகை பெப்ரவரி 2009 辜 40

கடந்த சில நாட்களாக எதற்கெடுத் தாலும் சிடுசிடுப்புதான். சின்னச் சின்ன விடயங்களை எல்லாம் தூக்கிப் பிடிப் பான். அவள் ஏதாவது சொன்னால் கூட,
"உனக்கு வாய்க்கொழுப்படி. ஆம்
பிளை என்ற மட்டு மரியாதை இல்லை. உனக்கு என்னில அன் பில்லையடி, நீ பெரிசு என்கிற எண் ணம்." என்று குதர்க்கமாய் பேசுவான்.
அண்மையிலே பத்திரிகை ஒன்றின்
சிறுகதைப் போட்டிக்கு அவள் தனது :
முதலாவது சிறுகதையை எழுதி, அனுப்புவதற்கு முன்னதாக அவனிடம் காட்டி அபிப்பிராயம் கேட்டாள். அவனோ அந்தக் கதையை ஒப்புக்குப் பார்ப்பது போல் பார்த்துவிட்டு, 'நிறைய திருத்தங்கள் செய்ய வேண்
என்பது அவளுக்குப் புரிந்தமையினால், மிகவும் கவனத்துடன் செயற்பட்டாள். எனினும் பயனற்றுப் போகவே
நொடிந்து போனாள், பிரேமினி.
மனத்தில் அமைதி, நிம்மதி தேவை யென்றால், அது கணவனிடம் இருந்து தான் கிடைக்க வேண்டும் என்று எதிர் பார்ப்பதில் அர்த்தமில்லை என்று அவள் உணர்ந்தாள். தனக்குப் பிடித்த விடயங் களில் அக்கறை செலுத்தி அமைதியைத் தேட முயன்றாள். தனது பணியிலும்,
தாயக விடுதலைப் போராட்டத்திற்கு
டும்” என்று கூறினான். எனினும் அவள்
கேட்டும், அவன் அதைத் திருத்திட முன்வரவில்லை. இது பிரேமினிக்கு அதிக ஏமாற்றத்தைக் கொடுத்தது. எனினும் அனுப்பினாள்.
சிறுகதைப் போட்டியின் முடிவு வெளியான போது, அவள் சற்றும் எதிர்
பாராதவாறு அவளது சிறுகதை முதற் பரிசைப் பெற்றிருந்தது. எல்லையில்லா மகிழ்வுடன் அதைப் பகிர்ந்து கொள்ள அவள் அவனிடம் வந்த போது, அவன்
ஒரு வார்த்தைதானும் பாராட்டாதது :
அவளுக்கு மிகுந்த ஏமாற்றத்தையே
அளித்தது. அவனது ஒவ்வொரு கதை யையும் விமர்சிக்கும் அவளுக்கு இது ஏமாற்றமளித்தது.
அவனது முரண்பாடுகளுக்கு எல்லாம் காரணம் தாழ்வுச் சிக்கல்தான்
உதவுவதிலும், சமூகுப் பணியிலுமாக தன்னை ஈடுபடுத்தி ஆறுதல் காண முயன்றாள்.
அவள் ஒன்று நினைக்க, கோகுலன் வேறாக நினைத்தான். அவளது பணி களில் கிடைத்த புகழ் அவனது மனத்தை உறுத்தியது.
மனமுடைந்த பிரேமினி அம்மா விடம் சென்று தனது மனக்குறையைச் சொல்லி ஆறுதல் பெற முயன்றாள்.
அம்மாவோ, "நீயும் சில சமயங் களில் எதிர்த்துப் பேசுவதாக கூறுகிறாய். அது தவறு. என்ன இருந்தாலும் அவர் ஆண், நாம்தான் பொறுத்துப் போக வேண்டும். முழுநேரமும் அன்பாய்ப் பழகு. அன்புக்கு அடிபணியாதவர் கிடையாது. காலப்போக்கில் உன்னைப் புரிந்துகொள்வார்.” என்று ஆணாதிக்க சிந்தனையின் பாற்பட்டவளாக பதி லளிக்கவே பிரேமினிக்கு ஏமாற்றமாகிப் போய்விட்டது.
மல்லிகை பெப்ரவரி 2009 辜 41

Page 23
எனினும் அம்மாவின் ஆலோசனை களை எடுத்தெறியாமல், அவனது வதைகளையும் சகித்துக்கொண்டு அன்பைப் புரிய வைக்க முயன்று அதிலும் தோற்றுப் போனாள்.
தனது குடும்ப விபரங்கள் வெளி யுலகிற்கு தெரியக்கூடாது என்பதால், நான்கு சுவர்களுக்குள்ளாகவே எதையும் பேசித்தீர்த்துக் கொள்ள முயன்ற அவளது நினைப்பும் கூட இன்று தகர்ந்தது. எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டாள். இன்று புதிதாக அவள் மீது சந்தேகச் சேற்றை வாரி இறைத்த போது துடிதுடித்துப் போனாள். இதுவே எரிமலை வெடித்ததற்கான காரணம்.
இதனை அடுத்து ஏற்பட்ட வாய்த் தர்க்கம் சண்டையாகி, அடிதடியில் முடிந்தபோது அது அயல் வீட்டில் உள்ளவர்களுக்கும் தெரிந்து போயிற்று.
வீங்கிய முகத்துடனும், அழுத கண் களுடனும் அன்றைய பொழுது கடந் தது. மாலையில் அடுத்த வீட்டுக்காரியும், இவளது நல்ல தோழியுமான தாட் சாயினி வந்திருந்தாள். அவளைக் கண்ட தும் மனத்திலிருந்தவை எல்லாம் வெடித்துக் கிளம்பின. மன ஆறுதல் தேடி அனைத்தையும் கொட்டித் தீர்த்தாள், பிரேமினி.
தாட்சாயினி அன்போடு அவளை நோக்கினாள். "வீட்டுக்கு வீடு வாசற் படிதான். உன் கணவர் ஒரளவுக்குப் பரவாயில்லை. எங்கள் வீட்டுக்கு எவ் வளவோ மேல்." பிரேமினி வியப் போடு நிமிர்ந்து பார்த்தாள். தாட்சாயினி தான் தொடர்ந்து கூறினாள்.
''G36)... மாதிரி ஆணாதிக்க சிந்தனைகளை ஒரே நாளில் இவ்வுலகிலிருந்து அழித்துவிட முடியாது. மெல்ல மெல்லத்தான் உலகம்
நாங்க நினைக்கிற
மாறவேண்டும்."
'அப்படியானால் பெண்கள் பணிந்து போக வேண்டும் என்ற அம்மா கூறியதைத்தான் நீயும் கூற வருகிறாயா
தாட்சா?"
“பிரேமினி இது ஒரு தனிநபர் பிரச் சினையல்ல. இன்றைய சமூகப் பிரச் சினையும்கூடத்தான். காலம் காலமாகத் தொடர்ந்து வருகின்ற ஆணின் ஆதிக்க சிந்தனையின் தாக்கங்கள் தரும் வேத னைகளை நாம் கொஞ்சம் பொறுத்துப் போகாதுவிட்டால் குடும்பங்களில் உடைவுதான் ஏற்படும்.'
"குட்டக் குட்டக் குனிய வேண்டும் என்பது எமது தலையெழுத்தா?" சற்று கோபம் பிரேமினியின் குரலில் எட்டிப் ப்ார்த்தது.
"நான் அப்படிச் சொல்லவில்லை. ஆண்களின் கோபம் தணிந்திருக்கும் வேளைகளில் நாங்கள் குரலை உயர்த் தலாம். கடிக்கும் பாம்பாகவோ, அடங் கிப் போகும் மண்புழுவாகவோ பெண் கள் இருக்கக்கூடாது."
"தாட்சா. நீ இப்போது என்ன சொல்ல வருகிறாய்?" பிரேமினி குறுக் கிடவே, புன்னகையுடன் பதிலளித்தாள் தாட்சாயினி.
"பெண்கள் சமயங்களில் சீறிப் பாயும் பாம்பு போல் இருக்க வேண்டும்.
மல்லிகை பெப்ரவரி 2009 率 42

கடித்து விசத்தைக் கக்கிவிடக் கூடாது. கடித்துவிடும் என்ற பயமுறுத்தலால் ஆண்களின் மூர்க்கத்தனத்தை கட்டுப் படுத்த வேண்டும். கட்டுப்படுத்த முடி யும் என்றே நம்புகிறேன்."
"தாட்சா நீ சொல்வது எல்லா ஆண் களிடமும் பலிக்குமா? எனக்கென்றால் நம்பிக்கையில்லை."
"அப்படிச் சொல்லாதே பிரேமி. உன் கணவர் வெளியுலகுக்குத் தங்க மானவர். எனது கணிப்பீட்டிலும் நல்ல வர்தான். சில ஆண்களைப் போல் குடி, கூத்தி, சின்னவீடு என்று அலைபவ ரல்ல. எனவே வழிக்குக் கொண்டு வரக் கூடியவர் என்று நம்புகிறேன். சந்தேகிப் பதுகூட அதிக காதலினால்தான்."
தாட்சாயினி எடுத்துச் சொல்லச் சொல்ல பிரேமினியின் மனது லேசாகி ஏதோ புரிவது போலிருந்தது. “அவள் மீது காதல் கொண்டு கைபிடித்த வனல்லவா? போட்டி போடாமல் அன் பினால் புரிய வைக்க முடியும். இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்நயம் செய்திடலல்லவா’ என யோசித்தாள்.
முள்ளை முள்ளால்தான் எடுப் எனினும் விறைப்பு ஊசி போட்டு நோகாமல் எடுப்போம் என எண்ணிக்கொண்டாள் பிரேமினி,
போம்.
விடுதலை என்பது பிரிதல் அல்ல; புரிதல்தான் என்று பிரேமினிக்கு விளங்கியது. அவள் புதிய நம்பிக்கை யோடு கணவனை எதிர்கொள்ளத் தயாராக இருந்தாள்.
NNNN్సNNNNNN ༄ a. Happy ị Photo è } S
S. Excellent & Yw N S Photographers S
ܘܢ
או - - : NModern ComputerizecI N S N Photography Nè
For
Wedding Fortraits & Child 5ittings
Photo Copies of Šldentity Cards (NIC), șè Passport & oх Driving Licences Within 15 Minutes
X
N
ܢܠܢܕ
SN
3DD, Modera Street, Bulomb0-15, Tel : 2526345
e
NSNSNS
மல்லிகை பெப்ரவரி 2009 ஜ் 43

Page 24
நாதியற்றுச் செத்தான் ஒரு மனிதன்
- ச.முருகானந்தன்
ஒளி ஓங்கி வெயில் எறிக்கும் ஒரு சோழகப் புழுதி எறியும் பகலில் ஒன்றுமறியாத ஒரு மனிதனை இழுத்துச் சென்று கொண்டிருக்கிறார்கள் துப்பாக்கிகளைக் குறிபார்த்தபடி இன அடையாளமென்ற ஒரே காரணத்தால்!
பசியின் கொடுரத்தில் கொதிக்கும் வயிறு இதற்காயும் கொதிக்கிறது அடங்காமல் வலியின் ரணத்தில் தோய்ந்தமிழ்ந்து வேதனை வேரோடிய பயணங்களில் மீதமாய் ஏதும் இருக்கவில்லை - சிதிலமான சோகத்தின் சுவடுகளைத் தவிர.
காணாமல் போனவன் பற்றி - சாட்சி சொல்ல யாரும் முன்வரவில்லை கதிரவனும் கண்ணை மூடிக்கொள்கிறான், கார்முகில்களின் கலகங்களிடையே
ஒரு பிடி சோற்றுக்காய் நாதியற்று ஒரு வழி தேடி அலைந்து கொண்டிருக்கும் தெருப்பிச்சைக்காரன் போலானது தொடர்ந்து துயர்நிறுத்தும் அகதி வாழ்வு
தொடரணி வண்டிகளில் தானும் தொலைக்காட்சிகளில் நிவாரணப் பொருட்களை
மல்லிகை பெப்ரவரி 2009 ஜ் 44

கண்டு மனதாற மின்சாரமுமில்லாமல் சாரமற்றுத் தொடர்கிறது இடர் வாழ்வு.
அயலவர் அனுப்பிய நிவாரணப் பொருட்கள் அங்குமிங்குமாய்த் தேங்கிக் கிடக்கிறது பகிர்ந்தளிப்பதிலும் இழுபறி தொடர்கிறது பாராமுகமாய் இருக்கின்றது, அயலவர் ஆட்சி!
அவமதிப்புக்கள், அடாவடித்தனங்கள் இழுபறிகளிடையே இடராய்த் தொடரும் உயிர் வாழ்வை உதறி எங்கேதான் ஓடினாலும் துரத்தி வந்து குண்டு வீசும் விமானங்கள்!
நாட்பட்டுப் புழுத்த புண்ணின் மீது இலையான்கள் வந்து மொய்ப்பது போல ஷெல் சன்னங்கள் வீழ்ந்து வெடிக்கின்றன சொல்லாமல் கொள்ளாமல், அகதி முகாங்கள் மீது.
எல்லாவற்றிலும் மீண்டு தப்பிப் பிழைத்தென்ன? நாதியற்றுச் செத்தான் ஒரு மனிதனென நாளை சொல்லப் போகிறது இவ்வுலகம், நான் பட்டினியில் செத்து மடியும்போது.
வாழ்த்துகின்றுேம்
பிரபல முற்போக்கு எழுத்தாளர் தெணியான்' தம்பதியின் கனிஷ்ட புத்திரன் திருநிறைச் செல்வன் துஷ்Vந்தன் அவர்களுக்கும், திரு. மு. ஜெயபகிரதன் தம்பதியின் ஏக புத்திரி திருநிறைச் செல்வி அனோஜா அவர்களுக்கும் கரவெட்டி, நெல்லியடியிலுள்ள மணமகள் இல்லத்தில் 31.01.2009 அன்று வெகு சிறப்பாகத் திருமணம் நடைபெற்றது.
இலக்கிய நண்பர்கள் பலரும் இந்த மணவிழாவில் கலந்து கொண்டு,
மணமக்களை வாழ்த்திச் சிறப்பித்தனர்.
புதுமணத் தம்பதியை மல்லிகையும் மனதார வாழ்த்தி மகிழ்கின்றது.
n - in-— - - -- البرس ۔۔۔۔۔
மல்லிகை பெப்ரவரி 2009 露 45

Page 25
தhமுறை 39 ۱ اوtض
- அ. முத்துலிங்கம்
இன்னும் இரண்டு வாரத்தில் aon ir திரும்பி ൈ ஒரு அனுபவக் கட்டுரை அனுப்பியிருக்
என் வாழ்க்கையில் நான் பல பருவங்களைக் கடந்து வந்திருக்கிறேன். பருவங்கள் என்றால் கார், கூதிர், முன்பனி, பின்பணி, இளவேனில், முதுவேனில் என்று நீங்கள் நினைக் கலாம். அல்லது மேல்நாடுகள் போல இலையுதிர், பனி, இலை துளிர், கோடை என்றும் எண்ணலாம். நான் சொல்வது வயதுப் பருவம். ஒவ்வொரு பருவத்துக்கும் ஒரு காதல் எனக்கு இருந்தது. ஒரு பருவத்தில் திடீரென்று என்னை இசை மோகம் பிடித்து ஆட்டியது. அதற்குக் காரணம் என் நண்பரும் குருவுமான வேலுச்சாமி என்றே நினைக்கிறேன்.
வேலுச்சாமிக்கு வயது 20 இருக்கும். என்னிலும் ஐந்து வயது கூடியவன். பல்கலைக் கழகத்தில் பொறியியல் படித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு வீணை வாசிக்கத் தெரியும். மிருதங்கம் அடிப்பான். வாய்ப்பாட்டும் பாடுவான். இறுதி ஆண்டை நெருங்கியபோது, படிப்பை முற்றிலும் துறந்துவிட்டு இசையில் ஆழமாக ஈடுபாடு கொள்ளத் தொடங்கினான். அந்த நேரம் பார்த்து எங்கள் நட்பம் வலுவடைந்தது.
இப்பொழுது நினைத்துப் பார்த்தாலும் வேலுச்சாமியின் முகம் எனக்கு ஞாபகம் வருவ தில்லை. நினைவில் இருப்பதெல்லாம் அவனுடைய துரைத்தனமான நடைதான். எங்கே இசைக் கச்சேரி நடந்தாலும் அந்த விசயம் வேலுச்சாமியின் காதுகளுக்கு முதலில் எட்டி விடும். அவன் அங்கே நிற்பான். சபையிலே உட்கார்ந்து கேட்பது அவனுக்குப் பிடிக்காது. வெளியிலே தென்னை மரத்தில் கட்டியிருக்கும் குழாய் வழியாக வரும் சங்கீதத்தை கீழே நின்றுகொண்டு ரசிப்பான். ராக ஆலாபனைகளின் போது, அரைக்கண் மூடி 'ஆஹா' என்பான். மெல்லக் கண்களைத் திறந்து நுட்பம் விளங்குகிறதா? என்பதுபோல என்னையும்
பார்ப்பான்.
மல்லிகை பெப்ரவரி 2009 : 46
 

ஒருமுறை வேடிக் சின்ன மெளலானா கொழும்புக்கு வந்திருந்தார். அவர் வாசித்த வாத்தியம் என்றால் நான் முன்பின் பார்த் திராதது. அதைக் கிளாரினட் என்று சொன் னார்கள். ஒரு மேற்கத்தைய வாத்தியத்தில் முதன்முறையாக கர்நாடக இசையை வாசிப்பதால் அந்தக் காலத்தில் பலர் இதை வியந்தார்கள். இவரைப் பார்ப்பதற்காக ஒரு நாள் வேலுச்சாமி வெகுதூரம் போய்விட்டு வந்து அதை விவரித்தான். அவர் அதிகம் பேசமாட்டாராம். அவருடைய வாத்தியத் தில் துளைகள் மட்டுமல்ல, விசைகளும் இருந்தன என்றெல்லாம் சொன்னான். இவன் ஒரு கேள்வி கேட்டிருக்கிறான். 'ஐயா இந்த வாத்தியம் புதுசாக இருக் கிறதே, இதை ஊதுவதற்கு சுவாசப்பை நிறைய வேலை செய்ய வேண்டி வருமா?" அதற்கு அவர் போதாது, உனக்குள்ளேயும் ஏதாவது
'சுவா சப்பை மட்டும்
இருக்க வேண்டும். அப்போதுதான் அதை ஊதித்தள்ளலாம்’ என்று சொன்னாராம், இதிலே எவ்வளவு உண்மை, எவ்வளவு பொய் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால், அவ்வளவு புத்திசாலித்தனமான பதிலை வேலுச்சாமியினால் தயாரித் திருக்க முடியாது.
என் அண்ணரிடம் ஒர் ஒலிப்பதிவுக் கருவி அந்தக் காலத்திலேயே இருந்தது. அவர் அப்போது மணமுடிக்கவில்லையாத லால், ஒரு நண்பருடைய வீட்டில் தங்கி யிருந்தார். அண்ணரிடம் இருந்த கருவியை எல்லோரும் நூதனமாகப் பார்ப்பார்கள். அந் தக் காலத்தில் அது தங்கத்திற்கு 5LDT60Tib. அதைத் தொட ஒருவரையும் அனுமதிக்க மாட்டார். பாட்டுக் கேட்பதாயிருந்தாலும் ஒரு மூன்றடி தூரம் தள்ளி இருந்துதான் கேட்க வேண்டும். அதன் விசைகளை
யாரும் எசகு பிசகாக திருகி சேதம் விளை வித்து விடுவார்களோ? என்று பயந்தார்.
இப்பொழுது காணப்படும் கருவிகள் போல அது கைக்கு அடக்கமாக இராது. இரண்டு பேர் பிடித்துத் தூக்க வேண்டும். ஏழு அங்குலம் அகலமான இரண்டு ஸ்பூல் கள் இருக்கும். ஒன்றிலிருந்து ஒன்றுக்கு நாடா மாறும் போது இசையெழும்பும். அந் தக் கருவியின் தொழில் நுட்பங்கள் அண் ணருக்குப் புரியாது. ஒலிநாடா மூன்று வேகங்களில் ஒடக்கூடியது. என்ன வேகத் தில் ஒலி பதிவு செய்யப்பட்டதோ, அதே வேகத்தில் ஒடவிட்டுப் பாடலைக் கேட்க வேண்டும். அந்தச் சூட்சுமம் அண்ணருக்கு பிடிபடாது. அவர் பாட்டு வைக்கும்போது வெளிநாட்டுப் பறவைகள் ஒன்று சேர்ந்து கலகம் செய்வதுபோல சத்தம் வரும், கே.பி.சுந்தராம்பாள் வந்தபோது தன்னு டைய விதிமுறைகளைத் தளர்த்தி, ஒலிப் பதிவு கருவியை என்னிடம் ஒப்படைத்து, எப்படியும் அவர் குரலைப் பதிவு செய்து தரும்படி கெஞ்சிக் கேட்டுக்கொண்டார்.
ஒலிப்பதிவு செய்வதற்கு இரண்டு தடைகள் இருந்தன. ஒன்று கோயில்காரர், மற்றது பாடகர். பாடும்போது ஏதாவது தவறு ஏற்பட்டால் அதுவும் பதிவாகி விடும். பின் னர் அந்தப் பாட்டை எத்தனை தடவை கேட்கிறோமோ அத்தனை தடவை அந்தத் தவறையும் கேட்போம். ஒரு கட்டத்தில் அப்படி தவறாகப் பாடுவதுதான் சரிபோல வும் தோன்றிவிடும்.
வேலுச்சாமி இந்த விசயத்தில் கெட் டிக்காரன், விடாப்பிடியானவன். எப்படியோ முக்கியமானவர்களுடன் பேசி ஒலிப்பதி விற்கு சம்மதம் வாங்கி விடுவான். செல்வரத்
மல்லிகை பெப்ரவரி 2009 辜 47

Page 26
தினம் என்று எனக்கு ஒர் உதவியாளன் இருந்தான். என் வயதுதான் அவனுக்கும். என்றாலும் அவன் உடம்பு வாட்டசாட்டமாக இருக்கும். இரண்டு பேர் தூக்க வேண்டிய ஒலிப்பதிவுக் கருவியை அவன் ஒருவனா கவே தூக்கி விடுவான். மேடையில் ஒலி வாங்கியை வைப்பது, வயர்களைப் பூட்டு வது போன்ற காரியங்களை அவன் பார்க்க, உயர் தொழில்நுட்ப விசயங்களை நான் கவனித்துக் கொள்வேன். மிகப் பிர தானமான கல்பனாஸ்வரம் வரும் நேரத் தில் சரி கணக்காக நாடா முடிந்துவிடும். உடனே கருவியை நிறுத்தி, நாடாவை இடம் மாற்ற வேண்டும். அதற்கிடையில் ஸ்வரம் முடிந்து பாடகர் அடுத்த பாடலை ஆரம்பித்திருப்பார். எனினும் நாங்கள் பதிவு செய்த அத்தனையுமே பொக்கிசம்தான். அந்த வருடம் வேறு ஒருவருக்கும் இந்த அரிய வாய்ப்பு கிடைக்கவில்லை. கே. பி.சுந்தராம்பாள் இந்தியா திரும்பிய பிறகும் அவர் குரல் எங்களுடனேயே தங்கிவிட்டது. அண்ணர் வசித்த வீட்டில் சுந்தராம்பாளு டைய குரல் காலை, மாலை, இரவு என்று ஒலித்தபடி இருக்கும். அண்ணர் உரத்த சத்தத்தில் பாட்டை வைப்பார், அயல்வீட்டுச் சனங்கள் எல்லாம் கேட்டு மகிழ வேண்டும் என்ற கருணையில். கே.பி.சுந்தராம்பாளின் இசையை வர்ணித்து அவர் எட்டுப் பக்கம் கடிதம் அவருக்கு எழுதினார். அதற்குப் பதில் வரவில்லை. அது போய்ச் சேர்ந்ததோ என்றும் தெரியாது.
காரைகுறிச்சி அருணாசலம் கொழும்பு வரப்போவதாக செய்தி வந்ததுமே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவர் மற்றவர்கள் போல ஒலிப்பதிவு செய்வதை எதிர்ப்பவ ரல்ல. எவ்வளவு வேண்டுமென்றாலும் பதிவு செய்யலாம். அருமையான மனிதர். அதை
விட அருமையான வாசிப்பு. ஆறு மணித்தி யாலம் தொடர்ந்து வாசிப்பார். அவ்வளவை யும் நான் ஒலிப்பதிவு செய்வேன். அவர் சுருதி சேர்ப்பது, சபையின் ஆராவாரம், கை தட்டல் எல்லாமே பதிவாகும். எப்பொழுது அந்த இசையைத் திருப்பிப் போட்டுக் கேட் டாலும் ஒரு சபையில் இருந்து ரசிப்பது போன்ற உணர்வை அது கொடுக்கும்.
காரைக்குறிச்சி தங்கிய அத்தனை நாட்களும் அவர் எங்கே கச்சேரி என்று போனாலும் நானும் வேலுச்சாமியும் செல்வ ரத்தினமும் அவருடன் போனோம். எங் களைப் போல ஒரு பெண்ணும் அவரைப் பின் தொடர்ந்தாள். சபையிலே ஒரே இடத்தை தேர்வு செய்து அங்கே உட்கார்ந் திருப்பாள். அந்தக் காலத்தில் ஆண்கள் ஒரு பக்கத்தில் சப்பாணி கட்டி உட்கார்ந் திருப்பார்கள். மறுபக்கத்தில் பெண்கள் அமர்ந்திருப்பார்கள். இந்தப் பெண் இரண்டு கால்களையும் ஒரு பக்கம் மடித்து வைத்து அதற்கு மேல் உட்கார்ந்திருப்பாள். கச்சேரி முழுக்க அசையமாட்டாள். அவளுடைய முதுகு கம்பு போல நேராக இருக்கும். பின் னல் தலையில் நீளத்துக்கு மல்லிகைப்பூ வைத்திருப்பாள். முகம் மட்டும் அழுது வடிந்த முகம். அவள் நின்றதையோ நடந்த தையோ ஒருவரும் கண்டது கிடையாது. எப்பொழுதும் ஒரேமாதிரித்தான் உட்கார்ந் திருப்பாள். செல்வரத்தினம் அந்தப் பெண் ணின் மேல் காதல் கொண்டிருந்தான். காரைக்குறிச்சி என்னதான் பிரயத்தனப் பட்டு நாதஸ்வரத்தை உயர்த்தியும், தாழ்த்தியும், பக்கவாட்டில் அசைத்தும் வாசித்தாலும் இவள் முகத்தில் உணர்ச்சி பேதம் கிடையாது. தாமரை பூத்த தடாகம்’ நாதஸ்வரத்தில் வந்தால் அவள் முகம் பளிச்சென்று பூத்துக் குலுங்கும்.
மல்லிகை பெப்ரவரி 2009 & 48

இதை எப்படியோ அவதானித்த செல்வரத்தினம் தாமரை பூத்த தடாகம் என்று துண்டுகள் எழுதி காரைக்குறிச்சிக்கு அனுப்பத் தொடங்கினான். சிலவேளை களில் ஒலிவாங்கியை தள்ளிவைக்கும் சாக்கில் துண்டைக் கொடுத்துவிட்டு வரு வான். கச்சேரி முடிவதற்கிடையில் நிறைய துண்டுகள் போய்ச் சேர்ந்துவிடும். இரவு ஒரு மணி, இரண்டு மணி என்று கச்சேரி நீளும், சில நாட்களில் கோயில் குளத்தில் உண்மையான தாமரை பூத்துவிடும். ஆனால், தாமரை பூத்த தடாகம்' வராது. பெண்ணின் முகம் இன்னும் அழுது வடி யும். செல்வரத்தினம் சோகமே உருவான வனாக மாறிவிடுவான். ஒலிப்பதிவு கருவி யை என் அறைக்கு தூக்கி வருவதற்கு நான் வேறு ஆள் பார்க்க வேண்டிவரும்.
காரைக்குறிச்சி வாசிக்கும் போது அவருடைய கழுத்து, படம் எடுக்கும் பாம்பி னுடையது போல உப்பிப் பெருக்கும். ஒரு திகில் நாவல் போல அடுத்து என்ன வரப் போகிறது என்ற எதிர்பார்ப்பு இருக்கும். தவில் வாசிக்கும் தட்சிணாமூர்த்திக்குக் கூட அவர் என்ன வாசிப்பார் என்பது தெரி யாது. என்னுடைய இசைப் பயிற்சியை வேலுச்சாமி அங்கேதான் நடத்துவான். ஒரு ராகம் தொடங்கியவுடனேயே அது என்ன ராகம் என்பதை அடையாளம் கண்டு பிடித்து விடுவான். சில ராகம் அவனை திற ணடித்து விடும். தமிழ் சினிமாவில் காலைக் காட்டி, கையைக் காட்டி, முதுகைக் காட்டி இறுதியில் கதாநாயகியைக் காட்டுவது போல காரைக்குறிச்சி மெல்ல மெல்ல ராகத்தை வெளியே விடுவார். வேலுச்சாமி சிலவேளைகளில் இது என்ன ராகம் என்று சொல்லி அது முடிவுக்கு வரும் தறுவாயில்
மனதை மாற்றி வேறு ஒரு ராகத்தின் பெயரைச் சொல்வான். அவனுக்கே சிலது பிடிபடுவதில்லை. இது எனக்கு வேடிக்கை யாக இருக்கும்.
ஒருமுறை காரைக்குறிச்சி சீவாளியை எடுத்து சுத்தம் செய்து “பீப்பி என்று ஊதி சரிபார்த்தார். நான் பதிவு செய்வதை நிறுத்தி விட்டேன். திடீரென்று ‘தாமரை பூத்த தடாகம்' என்று ஆராம்பித்தார். இந்தப் பெண்ணின் முகம் இதற்காகவே வருடக் கணக்கில் காத்திருந்தது போல மலர்ந்தது. அவள் உடம்பு மலர்ந்தது. பார்த்தால் அங்கு கூடியிருந்த அத்தனை பெண்களின் முகங் களும் பூத்துக் கிடந்தன. அந்தக் காட்சியை பார்த்து மெய்மறந்து நின்ற நான் பதிவு பட்டனை அழுத்த மறந்துவிட்டேன். நான் என் வாழ்க்கையிலே பதிவு செய்யத் தவறிய தலைசிறந்த பாட்டு அதுதான்.
கச்சேரி முடிந்ததும் பாராட்டுகளும், பரிசுகளும் கிடைக்கும். பொன்னாடை போர்த்துவார்கள். நாதஸ்வரத்தில் கட்டித் தொங்க விடுவதற்கு தங்கப் பதக்கம் கொடுப்பார்கள். ஒருமுறை மரத்தில் செதுக் கிய சின்ன நாதஸ்வரம் ஒன்றுகூட பரிசளித் தார்கள். இப்பொழுது பிரபல எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனிடம் போய்ச் சேர்ந் திருக்கும் சந்தன நாதஸ்வரம் கூட அப்போது கொடுத்ததாக இருக்கலாம்.
ஒருநாள் வேலுச்சாமிக்கு ரேடியோ வில் பாட வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவன் பொறியியல் இறுதிப் பரீட்சையில் தோல்வியடைந்திருந்ததால், மறுபடியும் படித்துக் கொண்டிருந்தான். வானொலி வாய்ப்பு வந்ததும் பரீட்சையை விட்டுவிட்டு அதற்குத் தயாரானான். நான் கேட்ட போது,
மல்லிகை பெப்ரவரி 2009 & 49

Page 27
பரீட்சை எப்பவும் எழுதிப் பாஸ்ாகலாம், இப்படியான சந்தர்ப்பம் இனிமேல் கிட்டாது என்றான்.
ரேடியோவில் பாடுவதென்றால் கச் சேரியல்ல. இவனைப் போல இன்னும் நாலு இளைஞர்களும் ஒருவர் பின் ஒருவராகப் பாடுவதற்கு வந்திருந்தார்கள். வேலுச்சாமி என்னையும் வரச்சொன்னதால் நானும் போயிருந்தேன். இதனிலும் முக்கியமான வேலை எனக்கு என்ன இருக்கிறது? சங் கீதத்தை இவ்வளவு நுட்பமாக தெரிந்து வைத்திருந்த வேலுச்சாமிக்கு, மற்றவர்கள் பாடுவதைக் கூறுகூறாகப் பகுத்தாயும் அவ ணுக்கு, சுத்தமாகப் பாடவே வராது. அவ னுடைய பாட்டைப் பதிவு செய்து திருப்பிப் போட்டுக் காட்டினாலும் அவனுக்குத் தான் செய்யும் தவறுகள் தெரிவதில்லை. கருதி யோடு எங்கே இணைந்து விடுவோமோ? என்று பயந்தது போல விலகியே பாடுவான். இது அவனுக்குச் சீடனாக இருக்கும் பேறு பெற்ற எனக்கே தெரிந்திருந்தது. அவனுக்குத் தெரியவில்லை.
ரேடியோ நிலையம் போனதும்தான் என்ன ஒரு பொறியில் மாட்டிக் கொண்டிருக் கிறோம் என்பது எனக்குப் புரிந்தது. வேலுச் சாமி சுருதிப் பெட்டியையும் கொண்டு வந்திருந்தான். ஆனால், அதை இயக்கு வதற்கு ஆள் இல்லை. என்னைப் போடச் சொன்னான். நான் அதைப் பார்த்திருக் கிறேனே ஒழிய, அதை முன்னே பின்னே இயக்கியதில்லை. ஈசி, இப்படிப் போடலாம்" என்று காட்டித் தந்தான். பெரிய தானம் வழங்க முடிவெடுத்த கனவான் போல, நடந்துவந்து ஒலிவாங்கியின் முன்னே நின்று பாடினான். தனக்குப் பக்கத்தில் ஒருத்தன் நின்று மினக்கெட்டு சுருதிப்
பெட்டியை இந்த அமத்து அமத்துகிறானே, இவனுடன் கொஞ்சம் ஒத்துப் போவோமே, என்றெல்லாம் வேலுச் சாமி நினைக்க வில்லை. அவன் தன் பாட்டுக்குப் பாடி னான். நான் என் பாட்டுக்கு சுருதிப் பெட்டி யைப் போட்டேன். அன்று வானொலியில் பாடியபோது அவன் பாட்டுக்கு பக்கத்து பக்கத்தில் தனியாக ஒலித்த சுருதி நான் உண்டாக்கியதுதான். வானொலியில் அவ னுடைய பாடல் போய்ச் சேர்ந்த அத்தனை வீடுகளுக்கும் என்னுடைய சுருதியும் போய்ச் சேர்ந்தது.
என்னுடைய அறைவாசிக்கு, வேலுச் சாமிக்கும் எனக்கும் தெரிந்த சங்கீதத்தின் கூட்டுத்தொகையிலும் பார்க்க அதிகம் தெரியும். அறைக்குத் திரும்பியதும் நான் வாயைத் திறக்க முன்னரே, அவர் இண்டைக்குச் சுருதிப் பெட்டியைப் போட்ட வன் துப்பரவாய்ச் சரியில்லை" என்றார். ஏதோ பக்கத்தில் நின்று பார்த்தது போல பேசினார். எத்தனையோ மைல் தூரத்தில் ரேடியோ நிலையம் இருந்தது. இவருக்கு இந்தச் சங்கதி எப்படித் தெரிந்தது? கருதி போட்டவர் புது ஆள் என்பதை கண்டு பிடித்து விட்டாரே! நான் அவரிடம் அன்று சுருதி போட்டது நான்தான் என்பதை சொல்லவில்லை. தலையைக் குனிந்தபடி, suftuij (3ug-rTLD6) gd siTC36T (3uft(8601 65T.
அதன் பிறகு எப்படியோ செய்தி பரவி, ஒருவரும் என்னை சுருதி போட அழைக்க வில்லை. நானும் அதை பெரிய இழப்பாக கருதவில்லை. ஏனென்றால் நான் அப்பொழுது இசைப் பருவத்தைத் தாண்டி இன்னொரு பருவத்துக்குள் நுழைந்து கொண்டிருந்தேன்.
மல்லிகை பெப்ரவரி 2009 : 50

ஏஜே  ேஅவர் இருந்தது ஒரு காலத்தின் தேவை!
- டொமினிக் ஜீவா
ஐம்பதுகளின் பிற்பகுதியில் நான் தொட ராகச் சரஸ்வதியில் சிறுகதைகள் எழுதிக் கொண்டிருந்த காலம்.
சென்னையிலிருந்து விஜயபாஸ்கரன் என் பவர், "சரஸ்வதி என்ற மாசிகையைத் தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டிருந்தார்.
அந்தச் சரஸ்வதி சஞ்சிகை அன்றைய காலகட்டத்தில் இலக்கிய உலகில் விதந்து பேசப்பட்டுக் கொண்டிருந்த சமயம், இலங்கையிலும் அதற்குத் தரமான வாசகர் வட்ட மொன்று நாடு தழுவிய ரீதியில் இருந்தது.
விந்தனின் 'மனிதன்’ இதழ் நின்று போய்விட்டது, அன்று பிரபலமாகப் பேசப்பட்டுக் கொண்டிருந்த ரகுநாதனை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்து கொண்டிருந்த 'சாந்தி மாத இலக்கிய சஞ்சிகையும் இடைநிறுத்தப்பட்டு விட்டது.
இந்தக் காலகட்டத்தில்தான் "சரஸ்வதி வெளிவந்து கொண்டிருந்தது. ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, டி.செல்வராஜ் போன்றோர் சரஸ்வதியில் எழுதிக் கொண்டிருந்தனர்.
இந்த அருட்டுணர்வின் பெறுபேறாக, நானும் தொடர்ந்து சரஸ்வதியில் சிறுகதைகள் எழுதிக் கொண்டிருந்தேன்.
எனது உருவப் படத்தை அட்டையில் தாங்கி சரஸ்வதி மாத இதழ் வெளிவந்த
காலமது.
ஒருநாள் சாயங்காலம் சென். பற்றிக்ஸில் படிப்பிக்கும் செல்வரத்தினம் ஆசிரியர் - அவர் அப்பொழுது சிறுபான்மைத் தமிழர் மகா சபையின் செயலாளர்களில் ஒருவராகக் கடமையாற்றிக் கொண்டிருந்தார். என்னைத் தேடி, நான் தொழில் செய்யும் கஸ்தூரியார் வீதிக் கடைக்கு வந்தார்.
'உன்னையடாப்பா, ஒருவர் அவசரம் சந்திக்க வேண்டுமெண்டு பெரிதும் ஆசைப் படுகிறார். என்னுடன் படிப்பிக்கிறவர்தான், அவர், பெயர் கனகரட்னா. உன்னுடைய மல்லிகை பெப்ரவரி 2009 率 51

Page 28
"ஞானம்' என்ற கதையைச் சரஸ்வதியில் படித்துப் பார்த்தவராம். அவசியம் உன்னை ஒருதடவை நேரில் சந்திக்க விரும்புகிறார். எப்ப, வரச் சொல்ல?" என என்னை அவர் சந்திக்கக் சந்தர்ப்பத்தைக் கேட்டறிந்தார்.
Ցոլգա
அது ஒரு புதன் கிழமை.
'வருகிற சனிக்கிழமை காலையிலே அவரை வரச்சொல்லுங்கோவன். நாங்கள் ஆறுதலாக இருந்து கதைக்கலாம்!"
'நான் அண்டைக்கு வரமாட்டன். அவர்தான் நேரிலை உன்னை வந்து பார்த்துப் பேசுவார்!" என்றார், அவர்.
சொல்லி வைத்தது போல, அடுத்த சனிக்கிழமை காலை பத்து மணி போல் என்னைப் பார்க்க வந்திருந்தார், கனக ரட்னா. பெயர் யாழ்ப்பாணத் தமிழன் பெய ராக எனக்குப் புலப்படவில்லை.
எனக்கு அவரது பெயரே விசித்திரமாக இருந்தது. சிங்கள வழித்தோன்றலோ என்று கூட, ஐயப்பட்டேன்.
அவரது பூர்வீகம் திருகோணமலை. கனகரட்னா முதலி பரம்பரையைச் சேர்ந்த வர் என்பதால், பின்னால் முதலி வால் விடு பட்டு கனகரட்னா என்ற பெயரே குடும்பப் பெயராக நின்று நிலைத்து விட்டது.
பிற்காலத்தில் தனது பெயருக்கு விளக்கம் சொல்லும்போது ஏஜே எனக்குச் சொன்ன தகவல்கள் இவை.
அவரது பெயர் ஜெயராஜ். குடும்பப் பெயர் கனகரட்னா.
அவரது வீடு யாழ்ப்பாணம் மூன்றாம்
குறுக்குத் தெருவில் கடலை அண்டிய பகுதியில் இருந்தது. பூர்வீக இல்லம்.
அவர் மாணவனாகச் சென். பற்றிக்ஸ் கல்லூரியில்தான் படிப்பை ஆரம்பித்தவர். பின்னர் பேராதனைப் பல்கலைக்கழகத்திற் குச் சென்று பட்டப் படிப்பை நிறைவு செய்த வர். அவர் மாணவனாகக் கல்வி கற்ற காலத்தில் கரையூர் வீதி வழியாகத்தான் கல்லூரிக்குப் போய் வந்தவர். அந்த வளர் இளம்பருவத்தில் யாருமே அவரைக் கணக் கெடுத்துக் கொண்டதில்லை. அப்புறம் பல்கலைக்கழகத்திற்குச் சென்று பட்டதாரி யானார். அந்தச் சமயத்தில் பிற்காலத்தில் பிரபலம் பெற்றுத் திகழ்ந்த இலக்கியவாதி கள் கூட, இவரைப் பற்றி, இவரது இலக்கிய ஆற்றல்களைப் பற்றிக் கொஞ்சம் கூடக் கவனத்தில் கொண்டதில்லை.
செல்வரத்தினம் மாஸ்டரின் அறி முகத்தின் மூலம் என்னிடம் இலக்கிய நட்புக் கொண்டு, கலந்துரையாடி, பலரை நேரடியாக அறிமுகம் செய்து கொண்ட பின் னர்தான், நண்பர் ஏஜேயின் பெயர் மெல்ல மெல்லப் பிரபலமாகத் தொடங்கியது.
நாங்கள் இருவரும் யாழ்ப்பாணம் பிரதான வீதியிலமைந்துள்ள "பிரிமியர் கபேயில்தான் தினசரி சந்தித்துக் கலந்து (3uilds assos)(36 stub.
பிரிமியர் கபே ஏஜேயின் மாமா வினுடைய பேக்கரி, அந்தக் காலத்தில் பிரபலமாகப் பேசப்பட்ட பேதுருப்பிள்ளை ரொட்டி சாய்ப்' எனப் பாமர மக்களால் பெயர் சொல்லி நிலைக்கப்பட்ட ஒரு நிறுவனம்.
நான் தினசரி அலுவகம் சென்று வரும் 'கொட்டின் ஹோல்' என்ற சைக்கிளில் சாயங்காலம் பிரதான வீதியில் அமைந்
மல்லிகை பெப்ரவரி 2009 率 52

துள்ள பிரிமியர் கபே'க்குப் போய்ச் சேர்ந்து விடுவேன். அங்கு தென்கிழக்கு மூலையி லுள்ள ஆசனத்தில் ஏஜே வெகு சிக்காரா கக் குந்தியிருப்பார். சில நாட்களில் அவருக் குத் தெரிந்த சில நண்பர்களும் கூட இருப் பர். அப்பொழுது பிரபல ஆங்கில எழுத் தாளர் அழகு சுப்பிரமணியம் லண்டனி லிருந்து யாழ்ப்பாணம் வந்திருந்தார். அவ ரும் இடைக்கிடையே கலந்து கொள்வார்.
எங்கள் சம்பாஷணை தொடர்ந்து கொண்டேயிருக்கும். எங்களது அடிப் படைச் சம்பாஷணையே இலக்கியம் பற்றி யதாகவே அமைந்திருக்கும். பெரும்பாலும் ஈழத்து இலக்கியம் பற்றியதாகவே தொடர்ந் திருக்கும்.
கபே எட்டு மணிக்கு மூடி விடுவார்கள்.
நாங்கள் இருவரும் அப்படியே மெல்ல மெல்ல நடந்து கடற்கரை வீதியிலமைந் துள்ள 'கிறாண் ஹோட்டலுக்கு நடையை எட்டிப் போடுவோம்.
ஏஜே இயற்கையிலேயே சவ்கோஜி. ஒதுங்கி ஒதுங்கிப் போவார். அது
Ο ΕB
அவரது இயல்பான சுபாவம்.
நான் விடுவதாயில்லை. முற்போக்கு எழுத்தாளர் சங்க யாழ் கிளைச் செயலாள ராகக் கடமையாற்றிக் கொண்டிருந்தேன்.
யாழ் மத்திய கல்லூரி மண்டபத்தில் தான் எமது இலக்கியக் கூட்டங்கள் அனைத்தும் இடம்பெறும்.
ஏஜேயின் வீடு கூப்பிடு தூரம்.
எனவே, நான் வலிந்து இழுத்துக் கொண்டு அவரை இக்கூட்டங்களில் கலந்து கொள்ள வைப்பேன். அவரும் மெல்ல
மெல்ல, பல இலக்கிய நண்பர்களைச் சந்தித்து பழக்கத்தை வலுப்படுத்திக் கொண்டார்.
அந்தக் காலகட்டத்தில்தான் ஜெய காந்தன் போர்வை' என்றொரு சிறுகதை யைச் சரஸ்வதியில் எழுதியிருந்தார்.
எனது வற்புறுத்தலின் பேரில் அந்தப் போர்வை என்ற கதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். அந்த மொழிபெயர்ப்புக் கதையை உபகுறிப்பு வைத்து, நண்பர் ஜெயகாந்தனுக்கு அனுப்பி வைத்தேன்.
அக்கதை பின்னர் இல்லர் ஸ்ரட் வீக்கிலியில் வெளிவந்தது. அது சம்பந்த மாக ஜெயகாந்தனின் பாராட்டுக் கடிதத்தை நண்பர் ஏஜேக்கு வாசிக்கக் கொடுத்தேன்.
அந்தக் காலத்திலேதான் 'மெளனி வழிபாடு' என்ற கட்டுரையைச் சரஸ்வதி யில் ஏஜே எழுதினார்.
இந்தக் கட்டுரை அந்தக் காலத் திலேயே தமிழக இலக்கிய வட்டாரத்தில் பெரிதும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இங்கு மாத்திரமல்ல, தமிழகத்திலும் இலக்கிய வட்டாரத்தால் நன்கு கவனிக்கப் பட்டவர்தான், ஏஜே.
கல்லூரியில் மாத்திரமல்ல, பல் கலைக்கழகத்திலும் ஓர் இலக்கிய மெளனி யாக ஒதுங்கிப் போய்த் தானும் தன் பாடு மாக இருந்தவரை, வலுக்கட்டாயமாக இழுத்தெடுத்து, ஏனைய இலக்கிய நண்பர் களுடன் சகஜமாகப் பழக வைத்ததற்கு நான் கொடுத்த விலையை இன்று மெளன மாக இருந்து எண்ணிப் பார்க்கின்றேன்.
மல்லிகை பெப்ரவரி 2009 ஜ் 53

Page 29
அன்னாரது மரணத்திற்குப் பின்னர் ஏஜேயைப் பற்றி, தமிழில் மட்டுமல்ல, ஆங்கிலத்திலும் புத்தகங்கள், கட்டுரைகள் வெளிவந்துள்ளதைப் பார்த்து, நான் மனசுக் குள் புளகாங்கிதம் அடைந்துள்ளேன்.
அதேசமயம் அந்த 'மெளனசாமியை வெளியுலகிற்குக் கொண்டு வந்து, உலகில் பலரும் மெச்ச உருவாக்கித் தந்ததற்கான அடிப்படை உண்மைகள் தெளிவாகத் தெரிந்திருந்தும், வேண்டுமென்றே மறைத் துக் கதை பண்ணுவதைக் காணும் போது தான், இந்த இலக்கிய உலகின் வேடிக் கையை ஒதுங்கி நின்று பார்த்து ரசிக்கத் தோன்றுகின்றது.
நண்பர் ஏஜேக்கும் எனக்குமிருந்த ஆழ்மனப் புரிந்துணர்வு யாருமே சொல்லித் தான் தெரிய வேண்டுமென்பதில்லை. அதற்குப் பல எழுத்துப் பதிவு ஆதாரங்கள் என்னிடம் உண்டு.
சமீபத்தில் ஏஜே பற்றி ஆங்கிலத்தில் நூலொன்று லண்டனிலிருந்து வெளி வந்துள்ளது. அந்தப் புத்தகம் எனக்கும் subgcobsg). AJ : The Rooted Cosmopolitan என்பது அந்நூலின் பெயர். செல்வா கனகநாயகம் அதைத் தொகுத் திருந்தார்.
இதில் வேடிக்கையென்னவென்றால் இந்த ஏஜே என்பவர் திடீரெனச் சொர்க்கத் திலிருந்து தங்க நூல் ஏணியில் இந்தப் பூமிக்கு இறங்கி வந்தவர் போலச் சித்திரிக் கப்பட்டுள்ளார்.
அவரது இலக்கிய வளர் பருவம், ஆரம்ப கால இலக்கிய முயற்சிகள், அதற்குப் பின் புலமாக இருந்து இயங்கியவர்கள், அவரது வளர்ச்சிக் காலகட்ட யாழ்ப்பாணத்து இலக் கிய நண்பர்களின் இடையறாத தொடர்புகள்,
குறிப்பாக அவரது இயங்கு தளமாக விளங் கிய பிரிமியர் கபே நட்புத் தொடர்புகள் பற்றி ஒருவிதமான தகவலும் சேர்க்கப்பட்டிருக்க வில்லை, அந்த ஆங்கில நூலில்.
தமிழ் மேல் தட்டு வர்க்க ஆங்கில
மேட்டுக்குடிப் புத்திஜீவிகளின் ஓர் இலக் கியக் கிளித்தட்டு விளையாட்டாகவே எனக்கு அந்நூலின் வருகை மிகத் தெளி
வாகத் தென்பட்டது.
ஏஜேயின் உருவப் படத்தை மல்லிகை யின் அட்டையில் ஜூலை 1971இல் வெளி யிட்டிருந்தேன். அதற்கான குறிப்புகளைச் “செம்பியன் செல்வன்' எழுதியிருந்தார். பின் னர் அவரது மறைவையொட்டி அன்னாராது உருவப்படத்தை அட்டைப்படமாக மல்லி கையில் வெளியிட்டு, நானே குறிப்புரைகள் தீட்டியிருந்தேன்.
ஒருவரது உருவப் படம் இரண்டு தடவைகள் மல்லிகையில் அட்டைப்படமாக வெளிவந்தது ஏஜே அவர்களுக்கு மட்டும் தான். இது இங்கு குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
ஏஜேயின் இறுதிப் பிரியாவிடை கொழும்பில் நடந்தது. அவரது குடும்ப உறுப் பினர் அனைவரும் ஒன்று கலந்து பேசி, நான் தான் அன்னாரது இறுதிப் பேச் சுரையை முதன் முதலில் ஆரம்பித்து வைக்க வேண்டுமென கேட்டுக் கொண் L-60T f. எனக்கு அன்று தந்த அந்தக் கெளரவத்தை இன்று நினைக்கும் வேளையிலும் மெய்யா
ஏஜேயின் குடும்ப உறுப்பினர்கள்
கவே நான் மெய்சிலிர்த்துப்போய் விடுகின் (3psit.
அந்தக் கெளரவம் ஒன்றே போதும், எனக்கு அது ஏஜே தந்த இறுதிக் கெளரவம்.
மல்லிகை பெப்ரவரி 2009 ஜ் 54

memonkavi @ ya
இணையத்தளங்களில் பல்வேறு வெளிப்பாடுகளைக் காணலாம். பத்திரிகைகள், சஞ்சிகைகள் எனப் பல்வகையான வெளிப்பாடுகளைக் காணலாம்.
அந்த வகையில் இலங்கையைத் தளமாகக் கொண்ட இணையத்தள வானொலியான WWW.strfm24.com எனும் இணையத்தள வானொலி நண்பர்கள் அந்தனி ஜீவா மல்லிகை 44வது ஆண்டு மலரைப் பற்றி கூறிய பதிவு இது.
*రాయా66ణం25 442-yes 276zècoreb> U076Ayff
- அந்தனி ஜீவா
Fழத்து தமிழ் இலக்கிய வளர்ச்சியில் மறுமலர்ச்சி முதல் மல்லிகை வரை, பெரும் பங்களிப்பு செய் துள்ளன. நம் நாட்டில் பல பிரதேசங்களிலுமிருந்து சஞ்சிகைகள் வெளிவந்துள்ளன. சிறு சஞ்சிகை களுக்கு அற்ப ஆயுள் என்பது எழுதப்படாத சட்ட
மல்லிகை பெப்ரவரி 2009 率 55
s

Page 30
மாகும். ஆனால், 'மல்லிகை" என்ற இதழ் முதலில் யாழ்ப்பாணத்திலிருந்தும், தற்போது கொழும்பிலிருந்தும் வெளிவந்து, புத்தாண் டில் ஜனவரியில் - 2009இல் 44ஆம் ஆண்டு மலரை வெளியிட்டுள்ளது.
எழில் கொஞ்சும் அட்டைப்படத்துடன், காத்திரமான படைப்புகளுடன் சிறப்பான மல ராக மலர்ந்துள்ள அட்டைப்பட வடிவமைப்பு மேமன்கவி என்பது தெரியவருகிறது.
"முகமூடி அணிந்திடா இலக்கியக் என்ற மகுடத்தில் மல்லிகையின் உச்ச நோக்கம், அதனது ஐம்பதாவது ஆண்டு. இந்த உச்ச நோக்கம் நடைமுறையில் நிறைவேற, இன்னமும் ஐந்தே ஐந்து ஆண்டுகள்தான் இடையில் உள்ளன. மல்லிகையின் தாரக மந்திரமே
கருத்துக்கள் சில...'
ஐம்பது வருஷங்கள். இப்படி தன் மனப் பதிவுகளை பதிவு செய்திருக்கிறார் மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா.
அது மாத்திரமல்ல.
'இன்று நமது தாய்மொழி சர்வதேச பாஷை என்ற அளவிற்கு வளர்ந்து, அத் தோடு நிமிர்ந்து கிளை பரப்பி நிற்கின்றது. புலம்பெயர்ந்த நம்மவர்கள் தாம் புதிதாக குடி புகுந்த நாடுகளில் நம் தமிழைத் தமக்குரிய தகைமைக்கேற்ப பல வழிகளிலும் வளர்த் தெடுத்து வருகின்றனர்.
இது உலக வரலாற்றில் தமிழ் மொழிக்கு இன்று கிடைத்திருக்கும் ஓர் அரிய சந்தர்ப்பம், சும்மா குண்டு சட்டிக்குள் தமிழ் குதிரையை ஒட்டி வந்த பழம் பண்டிதர் களுக்கு இது ஒரு புதிய தகவலாகக் கூடத் தெரியலாம்.
'யார் விரும்பினாலும் சரி, விரும்பாது போனாலும் சரி, நமது தமிழ்மொழி நாளை
சர்வதேச அந்தஸ்தைப் பெற்றே தீரும் என்பது உறுதி' இவ்வாறு ஆசிரியர் டொமினிக் ஜீவா எழுதியுள்ளார்.
புலம்பெயர்ந்து போயிருக்கும் நம்மவர் கள் ஊடகங்களின் மூலமாக சாதனை படைத்து வருகிறார்கள். தேமதுரத் தமிழைப் பாரதியின் கனவை, நனவாக்கி வரு
கிறார்கள்.
மல்லிகை ஆண்டு மலரில் சிறுகதை, கவிதை, கட்டுரை என்று மலரில் மலர்ந் துள்ளது.
ஏன் எழுத வேண்டும்? என்ற தலைப்பில் ந. இரவீந்திரன் எழுதியுள்ள கட்டுரை ஆழமானது. அதனை ஒரு தடவைக்கு மேல் படிக்க வேண்டும். அப் பொழுதுதான் அதன் கருத்தியலைப் புரிந்து கொள்ள முடியும், காத்திரமான கட்டுரை.
“எனது இலக்கியத் தொகுப்புகள்' என்ற செங்கை ஆழியான் எழுதிய கட்டுரை பல இலக்கியத் தகவல்களைத் தருகிறது.
"ஈழத்தின் பிரபல எழுத்தாளர் எஸ்.பொன்னுத்துரை என் மூலம் இரண்டு தொகுப்புகளை தனது தமிழக மித்ரா வெளியீடாக வெளியிட இருக்கிறார். இந்த இரண்டு தொகுதிகளும் மிகப் பாரிய தொகுப்புகளாகும். அவை இந்த ஆண்டு வெளிவர இருக்கின்றன. ஒன்று ஈழத்து சிறுகதைகள் அனைத்தும் ஒரு நூலாகவும், இரண்டு தரமான ஈழத்தின் குறுநாவல் களும் இன்னொரு தொகுப்பாகவும் வெளிவர இருக்கின்றன" என்று எழுத்தாளர் செங்கை ஆழியான் எழுதுகிறார்.
"தொலைபேசி மான்மியம்' என்ற தலைப்பில் அவுஸ்திரேலியாவில் வாழும் எழுத்தாளர் முருகபூபதி 'எனக்கு நீண்ட
மல்லிகை uெப்ரவரி 2009 56

காலக் கனவு ஒன்றுண்டு. அவுஸ்திரேலியா வில் கடந்த எட்டு ஆண்டு காலமாக தங்கு தடையின்றி சீராக நாம் நடத்தி வரும் எழுத் தாளர் விழாவைப் போன்று பூமிப் பந்தெங்கும் சிதறுண்டு போயுள்ள எங்கள் எழுத்தாளர் களையெல்லாம் முடிந்த வரையில் ஒன்று திரட்டி, இலங்கையில் உலகத் தமிழ் எழுத் தாளர் விழாவை ஒருவார காலத்திற்கு நடத்த வேண்டும் என்பதுதான் அந்தக் கனவு. அதற்கு காலம் கனியுமா? கனவு நன வாகுமா? பொறுத்திருந்துதான் பார்ப்போம்" என்கிறார் எழுத்தாளர் லெமுருகபூபதி.
மூன்று ஆண்டுகளுக்கு முன்னாள் இந்தக் கருத்தை என்னிடம் தெரிவித்தார், மல்லிகை ஆசிரியர். அதேவேளை நான் தமி ழகம் சென்ற பொழுது தமிழக எழுத்தாளர் களிடம் உலகத் தமிழ் எழுத்தாளர் ஒன்று கூடல் ஒன்றினை இலங்கையில் நடத்த விருப் பம் கொண்டிருப்பதாக தெரிவித்த பொழுது, 'தீராநதி", "புதிய பார்வை' போன்ற சஞ்சிகைகள் இந்தத் தகவலை வெளியிட் டன. நண்பர் முருகபூபதியின் கனவை இந்த ஆண்டிலாவது நன வாக்க வேண்டும். இதற்கு புலம்பெயர்ந்து வாழும் நம்மவர்கள்
ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
மல்லிகை மலரில் அன்புமணி, சட்ட நாதன், சுதாராஜ், கம்பவாரிதி இ.ஜெயராஜ், வை.சாரங்கன், பத்மா சோமகாந்தன், அன்ன லட்சுமி ராஜதுரை, வசந்தி தயாபரன், பா.இரகுவரன், செ.யோகராசா, கெக்கிராவ ஸ்ஹானா, தெளிவத்தை ஜோசப், எம்.வளிம் அக்ரம், யோகேஸ்வரி சிவப்பிரகாசம், மு.பவர், கே. எஸ்.சுதாகர், ஆனந்தி, முறிரஞ்சனி, பாலகிருஷ்ணன் சிவகரன், பிரகலாத ஆனந்த், இப்னு அஸ்மைத், தெணியான், ப. ஆப்டீன் என்று பழைய பரம்பரையும், புதிய தலைமுறையும் மலரில் எழுதியுள்ளனர். படித்துப் பாதுகாக்க வேண்டிய மலர்,
இலங்கை தமிழோசை வானொலியில் மல்லிகை ஆண்டு மலர் பற்றிய அறிமுகம் 18.01.2009 இடம் பெற்றது. ஞாயிறு தோறும் ‘தமிழோசை இளைய வானொலியில் மாலை 4 மணி முதல் 5 மணி வரை ஞாயிறு இலக்கிய மஞ்சரியில் எழுதி தயாரித்து வழங்குகிறார் அந்தனி ஜீவா. (WWW.STR FM 24.COM)
9606Tu
s-------
மனநிறைவுடன் வாழ்த்துகின்றோம்
இந்திய சாஹறித்திய அகடமி விருது பெற்ற தமிழக முற்போக்கு எழுத்தாளர் தோழர். மேலாண்மை பொன்னுச்சாமி அவர்களை மல்லிகை மனநிறைவுடன் வாழ்த்தி, மகிழ்கின்றது.
\--------------------------/
- ஆசிரியர்
மல்லிகை பெப்ரவரி 2009 & 57

Page 31
அஞ்சலி
стъгъстооби ரீச்சரம்மா
- முருகபூபதி
பDல்லிகையின் நீண்ட கால வாசகர் திருமதி மரியம்மா திருச்செல்வம் கடந்த 16-01-2009ஆம் திகதி கனடாவில் காலமானார்.
மல்லிகை 1971ஆம் ஆண்டு வெளியிட்ட நீர்கொழும்பு பிரதேச சிறப்பிதழை படிக்கத் தொடங்கிய காலம் முதல் அவர் மல்லிகையின் வாசகர். அந்தச் சிறப்பிதழின் வெளியீட்டு நிகழ்வு மிகவும் அமைதியாகவும் எளிமையாகவும் எங்கள் சூரியா வீதி இல்லத்தில் நடந்தபொழுது தனது கணவருடன் வந்து கலந்துகொண்டவர். அன்று முதல் மல்லிகையின் வாசகரானவர்.
திருமதி. திருச்செல்வம், நீர்கொழும்பில் 1954ஆம் ஆண்டு தோன்றிய விவேகானந்தா வித்தியாலயத்தில் பாலர் வகுப்புக்கு ஆசிரியராக பணியாற்ற வந்தவர். தொடர்ச்சியாக 25 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கேயே பணியாற்றி இளைப்பாறியவர். அந்த பாடசாலையின் (இன்றைய விஜயரத்தினம் இந்து மத்திய கல்லுாரி) வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் ஆக்கபூர்வமாக பங்களித்தவர். இலக்கிய ஆர்வலர்.
எனக்கு அரிச்சுவடி சொல்லித் தந்த ஆசிரியை. எங்கள் ஊரில் பெரிய ரீச்சர் என்றால் அது திருமதி. திருச்செல்வம்தான். நீர்கொழும்பில் தமிழ் மாணவ சமுதாயத்துக்கு ஆசிரியையாக மாத்திரமில்லாமல் ஒரு தாயாகவே விளங்கியவர்.
நீர்கொழும்பில் மல்லிகை ஆசிரியர் கலந்துகொண்ட பல இலக்கிய நிகழ்வுகளுக்கெல்லாம் தவறாது வந்து கலந்துகொள்பவர்.
1999 ஆம் ஆண்டு நீர்கொழும்பூர் முத்துலிங்கம் சுகவீனமுற்று ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளையில், நானும் நீர்கொழும்புக்கு வந்திருந்தேன். அவரைப் பார்ப்பதற்காக ஜீவா கொழும்பிலிருந்து நண்பர் வன்னியகுலமுடன் வந்திருந்தார். நாங்கள் மூவரும் நீர்கொழும்பூர் முத்துலிங்கத்தை ஆஸ்பத்திரியில் பார்க்கச் செல்லுமுன்னர் தனது வீட்டுக்கு வந்து மதியபோசனம் அருந்துமாறு
மல்லிகை பெப்ரவரி 2009 & 58
 

அன்பு வேண்டுகோளை விடுத்தார். நாங்கள் மூவரும் திருமதி. திருச் செல்வம் அவர்களின் அன்பான உபசரிப்பில் அன்று திழைத்தோம்.
நீர்கொழும்பூர் முத்துலிங்கம், செ.செல்வரத்தினம், சந்திரமோகன், ந. தருமலிங்கம், தேவா உட்பட பல எழுத் தாளர்கள் திருமதி திருச்செல்வத்தின் முன்னாள் மாணவர்களே.
மல்லிகை 1999 ஜூலை இதழில் எனது உருவப்படத்தை பிரசுரித்த பொழுது, நீர்கொழும்பில் ஜீவாவை நேரில் சந்தித்து குறிப்பிட்ட மல்லிகை பிரதியை வாங்கி அதன் முகப்பை முத்தமிட்டதாக அறிந்து நெகிழ்ந்தேன்.
எனது கடிதங்கள நுாலை (2000) திருமதி. திருச்செல்வம் அவர்களுக்கே
சமர்ப்பித்திருக்கின்றேன். இறுதியாக அவரை கனடாவில் கடந்த 2007 டிசம்பரில் சந்தித்தேன். கடந்த தைப் பொங்கல் தினமன்று அவருக்கு வாழ்த்துத் தெரிவிக்க முயன்றேன், ஆனால் அவரால் பேச முடியவில்லை. மரணப்படுக்கையில் இருப்பதாக அறிந் தேன். இரண்டு நாட்களில் அவர் நிரந் தரமாக கண்களை மூடிக்கொண்டார்.
கனடாவில் அவரது இறுதிச சடங்கில் அவரது பழைய மாணவர்கள், முன்னாள் ஆசிரியர்கள் திரளாகக் கலந்து கொண்டார்கள்.
நீர்கொழும்பிலும் அவர் முன்பு பணியாற்றிய பாடசாலையில் அதிபர் திரு.ந.கணேசலிங்கம் தலைமையில்
அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.
{*********్మష్ణ தை
;s:*&;" :. غ؟
R¥
'ሎ AM ܢ
X
மல்லிகை பெப்ரவரி 2009 ஜ் 59
வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் சமீபத்தில் வெளி யிட்ட வடந்தை 3வது இதழ் கிடைக்கப் பெற்றோம். வட
மாகாணத்தில் நடைபெற்றுள்ள பல இலக்கியத் தகவல்களையும்,
வட மாகாண மாவட்ட இலக்கியச் செய்திகளையும், 88ம் ஆண்டுக் கான ஆளுநர் விருது பெற்றவர் களின் பெயர்களையும் மிக விரி வாக வெளியிட்டுள்ளது இச் சஞ்சிகை. தொடர்ந்து வடந்தை வெளிவர வேண்டுமென ஆசிக் கின்றோம்.
ஆசிரியா

Page 32
மல்லிகை 44ஆம் 86šrob bouř அறிமுக நிகழ்வு
கடந்த 24.01.2009 அன்று மாலை 5.00 மணிக்கு கொழும்பு
ஐந்து லாம்படிச் சந்தியில் அமைந்துள்ள பழைய நகர மண்டபத்தில் 'மல்லிகை 44ஆம் ஆண்டு மலரின் அறிமுக நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு திக்குவல்லை கமால் அவர்கள் தலைமை வகித்தார். இவர் தனது தலைமையுரையில் -
'கடந்த காலங்களில் தோன்றிய பல சிறு சஞ்சிகைகள் குறுகிய காலத்திற்குள் மறைந்து விட்டன. தொடர்ந்து 44 ஆண்டு காலமாக மல்லிகை வெளிவருவது என்றால், அதற்கு ஜிவா அவர்களுடைய அயராத முயற்சியும், விடாபிடித் தன்மையும்தான் அடிப் படைக் காரணமாக இருக்கிறது. நம் மத்தியில் தமிழில் பல சிறு சஞ்சிகைகள் மறைந்த பின் - இன்று அச்சஞ்சிகைகளின் தொகுப்புக்கள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. தமிழகத்தில் சுபமங்களா, கணையாழி, மணிக்கொடி என பல சஞ்சிகைகளின் தொகுப்புக் கள் வெளிவந்துள்ளன. இலங்கையில், அவ்வாறாக வெளிவந்தது என்றால் குமரன் தொகுப் பைக் கூறலாம். ஆனால், ஈழகேசரி, சுதந்திரன், மறுமலர்ச்சி போன்ற சஞ்சிகைகளில் பத்திரிகைகளிலும் வெளிவந்த படைப்புக்கள் தொகுப்புக்களாக வெளிவரத் தொடங்கி இருக்கின்றன. ஆனால், மல்லிகை வெளிவந்து கொண்டிருக்கும் காலகட்டத்திலே அதில் வெளிவந்த கவிதைகள், சிறுகதைகள் தொகுப்புக்களாக வெளிவந்துள்ளன என்பதும் குறிப் பிடத்தக்கது. இன்று, மல்லிகை ஒரு ஸ்தாபன வடிவம் பெற்றுவிட்டது. இனி, அதன் எதிர்கால வளர்ச்சியிட்ட கருத்துப் பரிமாறல்களே அதன் வளர்ச்சிக்கு உதவக்கூடியதாக இருக்கும்” என்றார்.
வரவேற்புரை நிகழ்த்திய மேமன்கவிமல்லிகைச் சிறுகதைகள், கவிதைகள் நூலுருப் பெற்றது போல், கட்டுரைகளும் நூல் உருவம் பெறவேண்டி உள்ளது என்றார்.
இந்த நிகழ்வில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அம்சம் என்னவென்றால், கடந்த 20 வருட காலமாக சுவிஸில் புலம்பெயர்ந்து வாழும் யாழ் வடமராட்சியைச் சேர்ந்த மல்லிகை யின் அபிமானி வையாபுரி அவர்கள் மல்லிகையின் 44ம் ஆண்டு மலர் அறிமுக விழா நிகழ்வைப் பற்றிய செய்தியினை படித்து, தனது உடல்நிலை குறைவுக்கு மத்தியிலும் நீர்கொழும்பிலிருந்து வருகை தந்திருந்தமை மல்லிகையின் மீதான அவரது அபி
மானத்தை எடுத்துக் காட்டியது.
மல்லிகை பெப்ரவரி 2009 霹 60
 

அவர் தனது உரையில் - "நாங்கள் எல்லோரும் மல்லிகை மீது வெறிகொண்ட வாசகர்கள். இன்றும் அந்த வெறி குறைந்து விடவில்லை. புலம் பெயர்ந்து வந்ததும், மல்லிகையைத் தேடி படித்துக்கொண்டு தான் இருக்கிறோம். புலம்பெயர்ந்து வரும் தமிழ் மக்களிடம் தொடர்ந்து அதனை அறிமுகம் செய்து கொண்டிருக்கிறோம்" என்றார்.
ஞானம் ஆசிரிரியர் டாக்டர் தி.ஞான சேகரன் தனது உரையின் பொழுது -
"10 வருட காலமாக ஞானம் இதழை நடத்தி செல்வதற்கான தைரியத்தையும், உத்வேகத்தையும் நான் ஜீவா அவர்களின் வழியாகத்தான் பெற்றுக்கொண்டேன். இன்றும் அவரது பணிகள் சிறக்க எனது ஆதரவையும் தொடர்ந்து வழங்கி வரு கிறேன்' என்றார்.
ஆய்வாளர் எஸ்.ரவீந்திரன் அவர்கள், "இன்று வரலாறு மாறிக்கொண்டிருக்கும் காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக் கிறோம். அத்தகைய காலகட்டத்தில் மல்லிகை பற்றி நாம் பேசவேண்டி இருக் கிறது" எனக்கூறி ஆழமான, விரிவான பல விடயங்களை முன்வைத்தார்.
கலாநிதி கருணாநிதி அவர்கள் தனது உரையில் - "இன்றைய ஈழத்து கலை, இலக்கியப் பரப்பில் மல்லிகையின் பங்கு ஆழமாக ஆராயத்தக்க ஒன்றாகும். இன் றைய சமூக மாற்றங்களை, ஏற்ற இறக்கங் களை, பல்வேறான தன்மைகளைக் கொண்ட படைப்புகளை நம் மத்தியில் கொண்டு வந்துள்ளன. இந்த வகையில் மல்லிகையின் பங்கும் குறிப்பிடத்தக்கது' என்றார்.
மல்லிகை மீது மிகுந்த அபிமானம் கொண்ட குலேந்திரன் அவர்கள் - "ஜீவா அவர்கள் இந்தக் கூட்டத்தைக் கொழும்பு மத்திய பகுதியில் வைத்திருப்பதற்கு காரணம் இருக்கிறது. மல்லிகை அபிமானி களைச் சோதிப்பதற்கே இந்த நிகழ்வை இந்த பகுதியில் வைத்திருக்கிறார் போலும்!" என்றார்.
வதிரி சி.ரவீந்திரன் தனது உரையில் - "நான் சிறுவயது முதல் மல்லிகையை பயின்று வருகிறேன். ஜீவா அவர்களின் மல்லிகைக்கான உழைப்பின் மகிமையை தொடர்ந்து நான் கனம் பண்ணி வந் துள்ளேன்’ என்றார்.
திரு. மு.தயாபரன் அவர்கள் - இன்று ஆங்கில இலக்கிய வளர்ச்சி பற்றி நாம் அறிந்து கொள்வதற்கு சந்தர்ப்பம் நிறைய இருக்கிறது. ஆனால், தமிழ் இலக்கிய உலகைப் பொறுத்தவரை அரைத்த LO66 அரைத்துக் கொண்டிருக்கிறோம். ஆங்கில இலக்கியத் தரத்திற்கு தமிழ் இலக்கியம் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். அதற்கு மல்லிகை தனது பங்களிப்பை நல்க வேண்டும்" என்றார்.
சிறிய அளவே கூட்டம் என்றாலும், புரவலர் ஹாசிம் உமர், உட்பட பல மல்லிகை அபிமானிகள் கலந்துகொண்ட இந்த நிகழ்வு, மல்லிகை போன்ற சிறு சஞ்சிகைகளுக்கு இத்தகைய உரை யாடல் நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் அமைந்திருந்தது.
ஆசிரியர் டொமினிக் ஜீவா அவர்கள் ஏற்புரை நிகழ்த்தினார். திரு. பஅயூப்டீன் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வு
நிறைவு பெற்றது.
மல்லிகை பெப்ரவரி 2009 ஜ் 61

Page 33
(EGIUdboo இணுகுேறுருேம்
- ரஞ்சனி
"ஆம்பிளை என்றால் கோபம் வரத்தான் வேண்டும். கோபம் வராவிட்டால் அவன் ஆம்பிளை இல்லை. பொம்பிளை என்றால் எதற்கும் பொறுத்துத்தான் போக வேண்டும்.” இப்படிப் பல ஏட்டில் எழுதப்படாத, கல்லில் பொறிக்கப்படாத ஆனால், பழகிப் போன பல வாசகங்களை நாம் இன்னும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். இவை நம் கலாச்சாரத்துக்கு மட்டும் அல்ல, அனைத்து கலாச்சாரங் களுக்கும் சொந்தமானவையாகத்தான் இன்றும் இருக்கின்றன. கடந்துபோன மனித வரலாற்றினைப் பார்த்தோமானால் அனைத்து சமூகங்களிலும் அது வீடாக இருந்தால் என்ன அல்லது வேலைத்தளமாக இருந்தால் என்ன, ஒரு காலத்தில் ஆண்தான் அதிகாரத்தின் பிரதிநிதியாக அங்கீகரிக்கப்பட்டு இருந்திருக்கின்றான். இதனால் பெண்கள் தமது நியாயப்படுத்தப்படக் கூடிய கோபத்தைக் கூட தகுந்த வழியில் வெளிப்படுத்த முடியாமல் ஆண் மையப்படுத்தப்பட்ட சமூக அமைப்பிற்கு பழக்கப்பட்டிருந்தார்கள்.
இன்று நிலைமை மாறி பெண்ணும் ஆணுக்கு சமமாக அறிவைப் பெற்று, தொழில் செய்தாலும் கூட பழைய பண்பாட்டுக் கோலங்கள் மீண்டும் அவளைத் தன் வட்டத்துக்குள் வலோற்காரமாக இழுக்கின்றன. இச் செயற்பாடு சமூகத்தில் பெரும் முரண்பாடுகள் வளரக் காரணமாகின்றது. ஏதோ ஒரு வகையில் பெண் ஆணில் தங்கி வாழும் நிலையிருந்தால் அவளுக்கு அதனுடன் இழுபட வேண்டிய கட்டாயமும் உண்டு. அப்படி இல்லாவிடின் வாழ்க்கை போராட்டம் தான்.
அண்மையில் ஒரு தமிழ் வானொலிக் கலந்துரையாடலின் போது கேட்ட "கோபம் வராவிட்டால் ஆம்பிளை இல்லை” என்ற அசட்டுக் கருத்துப் பற்றி ஒரு இலக்கியச் சந்திப்பில் நான் குறிப்பிட்ட போது, "நமது தமிழ் இலக்கியம் பெண்களின் கோபம் பற்றி அல்லவா அதிகமாகக் கதைக்கிறது. கண்ணகிக்கு, பாஞ்சாலிக்கு வந்த கோபம் பற்றி.” எனச் சில ஆண்கள் குறிப்பிட்டுக் காட்டி
மல்லிகை பெப்ரவரி 2009 ஜ் 62

னார்கள். அப்படிப் பார்க்கும் போது நமது முன்னோர் பெண் களின கோபத்தை ஏற்றிருக்கிறார்கள். அன்று
பெண்ணுக்கு கோபம் வரக்கூடாது என
எங்கும் சொல்லி வைக்கவில்லை. காலப்போக்கில் கோபம் ஆண்களின்
குண இயல்பாக எப்படியோ திரி !
| 160DL bibl
விட்டது. பெரும்பாலான
ஆண்கள் கோபத்தை தமது வாழ்க்கை !
யின் ஒரு பகுதியாக நினைக்கிறார்கள். சில பெண்கள் அதற்கு ஒத்து உளது கிறார்கள்.
கோபம் கொண்ட மனிதன் தன் கோபத்தின் அளவைப் பல வேறுபட்ட
பரிமாணங்களில் வெளிப்படுத்துகின்
றான். அது பெரும்பாலும் அமைதியான
புறக்கணிப்பாகவோ அல்லது விலங்கு
கள் போல பலத்த சத்தம் எழுப்பி, பல்லை நெருமி, உறுமலைக் காட்டும் பயமுறுத்தலாகவோ அல்லது பலாத்
காரத்தின வெளிப்பாடான உடைத்தல், !
அடித்தல், துன்புறுத்தலாகவோ இருக் கிறது. கோபம் பழிவாங்கும் கட்டத்துக் குப் போனால் பலாத்காரத்தின் உச்ச
ம ைகொலையாக முடிகிறது. இவை
யாவும் ஏற்றுக்கொள்ள முடியாத சம்பந்தப்பட் அனைவரையும் மிகவும் ! பாதிக்கும் வெளிப்பாடுகள் ஆகும்.
ஆராய்சிகளின் படி பெண்களைவிட
g)Ilgab violent behavior "," II (BI 16) ÜB56řT
ஆண்கள். அைே1,110 |ெ lண்கள் மனதுக்குள் கேI த்தை, வைத்து (குIை) கின்றார்கள்.
கோபம் வருவது வித இயல்பு. ஆனால் தமிழ் வானொலி ஒன்றில் ஒலி
பரப்பான ஒரு தமிழ் நாடகத்தில்
வந்தது போல் ஆம்பிளை என்றால் அப் படித்தான் என்று பலாத்காரத்தைப் பொறுத்துக் கொண்டு அடி வாங்கிய பின்பும் உடலுறவில் ஈடுபட்டு, நீ அப்படிச் செய்ததால் தானே உன்னை அடித்தேன் என ஆண் தனது நடத் தைக்கு தான் பொறுப்பேற்காமல், அது வும் பெண்ணின் பிழையே என குற்றம் சாட்ட அதையும் கூட பெண் நம்புவது மிகவும் வேதனைக்குரியது. சில பெண்கள் அப்படியான கதைகளைக் கேட்டுக் கேட்டு அதை நம்பி விடுகிறார் கள். அந்த நம்பிக்கையால் அவர்கள் மனத் தகைப்புக்குள்ளாகி மனநோயாளி யா கண் றனர் . அல்லது தமது கோபத்தை வெளிக்காட்ட முடியாமல் தம் மனத்துக்குள் மூட்டை கட்டிக் கட்டி மனநோயாளியாகின்றனர். இன்னும சிலர் தமது ஆற்றாமையை தமது பிள்ளைகளின் மேல் காட்டி பிள்ளை களின் மனதைப் பாழடிக்கின்றனர். அல்லது பிள்ளைகளின் நடத்தைச் சீர்கேடுகளுக்கு காரணமாகிறார்கள். பின்னர் பிள்ளைகளை வீணாக நோகடித்த guilty உணர்வில் தம்மைத் தாமே தண்டித்துக் கொள்கிறார்கள். அத்தோடு கோபத்தை மனதில் வைத்துக் கொண்டு, பலாத்காரத்தின் வலியை உணர்ந்து கொணி டு உடலுறவில் ஈடுபடுவது மிகப்பெரிய மனத்தகைப்பு என்பது வேறுவிடயம்.
கோபத்தால் வரும் மனவலி சம்பந் தப்பட்ட அனைவரையும் பாதிக்கும் உடல் சித்திரவதையோ உறவை
மல்லிகை பெப்ரவரி 2009 密 63

Page 34
விட்டுத் தூர ஓட வைக்கும். இப்படியான சூழலில் உள்ள பிள்ளைகள் பெற்றோர் களை வெறுக்கின்றார்கள். ஆனால் வழியின்றி அடக்குமுறைக்கு அடங்கிப் போகின்றார்கள். ஆனால் தருணம் பார்த்து குடும்ப அமைப்பை உடைத் தெறிந்து விலகி ஓடத் தவிக்கும் பல சிறுவர்களை நான் அறிவேன். சில வேளைகளில் பிள்ளை வளர்ப்பில் வன்முறையை பாவிக்கும் பெற்றோர் தாம் வளர்த்த முறை அது, பிள்ளை ஒழுங்காக வளர உதவும் முறை அது என நம்புகிறார்கள். ஆனால் அது தமது கோபத்தால் ஏற்பட்ட மன வலியின் பிரதிபலிப்பு என உணர்வதில்லை.
இதற்கு கோபம் வருவது பிழை யல்ல. நியாயமான கோபம் குழந்தை களுக்கு கூட வரலாம் என்ற விளக்க மும், அதை எப்படி யாரும் ஏற்கக்கூடிய, மனம் புண்படாத வழியில், வெளிப் படுத்தலாம் என்ற அறிவும் தேவை. தேகப்பியாசம் செய்தல், காலாற நடத்தல், சிநேகிதருடன் மனம் விட்டு கதைத்தல், உணரும் உணர்ச்சிகளை ஒரு கடதாசியில் எழுதல் என்பன அந்த நேரக் கோபத்துக்கு ஒரு ஆறுதலைப் பெற உதவும். ஆனால் பின்னர் பாதித்த நிகழ்வு அல்லது செயற்பாடு பற்றி குற்றம் கூறும் தொனியில் கதையாமல் அது குறிப்பிட்டவரை, குறிப்பிட்ட உறவைப் பாதிக்காமல் இருப்பதற்கான முயற்சி என்ற தொனியில் சம்பந்தப் பட்டவருடன் மனம் விட்டுக் கதைப்பது அவசியம். அப்படிக் கதைக்க முடியாத கட்டத்துக்கு இருவரும் வந்தால் counseling மிகவும் உதவி செய்யும்.
அல்லது அது வடிகால் தேடி வேறு உறவுகளின் சேர்க்கை அல்லது தற்கொலை, கொலை என வேறு பல தரப்பட்ட அழிவுகளில் வளர்தோரில் முடிவடைய பிள்ளைகள் போதைப் பொருள், மது, குழு வன்முறை என தம்மைத் தாமே அழிக்கும் துர்ப்பாக்கிய நிலை வரும். எனவே குடும்பத்தில் உள்ள ஒருவரின் கோபம் குடும்பத்தில் ஏதோ ஒரு வகையில் அழிவை அல்லது சூழ இருப்போரில் குழப்பத்தை உள்ளாக்கினால் அதற்கென பயிற்சி பெற்றவர்களின் உதவியை நாட வேண்டும்.
அதற்காக பெண்கள் அதீத கோபம் கொண்டு வன்முறையில் ஈடுபடு வது இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால் ஒப்பீட்டளவில் குறைவு என்றே சொல்ல வேண்டும். எங்கள் சமுதாயத் திலேயே நடக்கும் பல விபரீதங்கள் அனைவருக்கும் தெரிந்ததுதான். பிரச் சினை இல்லாதவர் என யாருமில்லை. அதை எப்படிக் கையாளுவது என்பதும் கையாள முடியாவிட்டால் அதிலிருந்து எப்படி மீள்வது என்பதும் தான் முக்கியம்.
அத்துடன் தமிழ் ஊடகங்கள் பொறுப்புணர்வுடன் நடத்தலும் மிக இன்றியமையாதது. ஊரில் அரைத்த மாவை மீண்டும் அதே வழியில் இங்கும் அரைப்பது மேலும் அனர்த்தங்களுக்கே வழி கோலும். எனவே பெண், ஆண் எனப் பாகுபாடு பாராது அனைவரும் மனிதர் எனப் பார்த்தல் உறவுகளின் செம்மைக்கு மிகமிக அவசியம்.
மல்லிகை பெப்ரவரி 2009 率 64

எங்களது பல்கலைக்கழகம்!
- வதிரி .சி.ரவீந்திரன்
எல்லோரும் பெரிய படிப்புக்காக பெரிய பள்ளிக்கூடங்கள் மாறுகையில் நாங்கள் எங்கள் பள்ளிக்கூடத்தில் தரித்து நின்றுவிட்டோம். அப்போ, எங்களுக்கு வழிகாட்டிகள் யாரும் இல்லைத்தான்! பத்தாம் வகுப்பு வரை பாடம் சொல்லி தந்ததால் கல்லூரி அந்தஸ்தும் கிடைத்தது. கிராமத்துப் பிள்ளைகள் நாங்கள், பள்ளிக்கூடம் என்றே அன்பாய் அழைப்போம்! எங்கள் பள்ளிக்கூடம் - சிறிதாய்த் தோன்றி பெரிதானதே ஒரு தனிக்கதை! ஆரம்பம் - வளர்ச்சி பல பங்களிப்புகள் இன்று ஒரு நெடுமரம். இப்பள்ளிக்கூடம் கிராமத்தில் இருந்தாலும் இதைக் கடந்து வேறு பள்ளிக்கூடம் சென்றவர்களும்; ஒதுக்கி வைத்து கிண்டல் பண்ணியவர்களும்- - - பலர் கல்வி - கலை, இலக்கியம் வழிநடத்தப்பட்டது. வாசிப்பு - தேடல் வளர்ந்தது. பரிசளிப்பு விழாக்கள் கூட பட்டினத்து பாடசாலைகள் போல நடந்தது. கல்வி வளர்ச்சி காண்கையில் 'சமூகம்’ என்று வாழ்த்துக்கள் கிடைத்தன. ஒதுக்கி வைத்து தூரச் சென்றோர் எமது பள்ளிக்கூடம் என்று புகழ்ந்து கொள்ளுகின்றனர். பல்கலைக்கழகம் சென்று படிக்கா எமக்கு - எங்கள் பள்ளிக்கூடம்தான் பல்கலைக்கழகம்தான், பல்துறையை எமக்குப் படிப்பித்துத் தந்தது!
மல்லிகை பெப்ரவரி 2009 & 65

Page 35
இன்றைய காலகட்டத்தில் அறிவியல்வாதிகள் தமக்கும் கலை இலக்கியங் களுக்கும் எதுவித சம்பந்ததும் இல்லை என்பது போல் இருக்கிறார்கள். அதுபோலவே, கலைஞர்களும் அறிவியல் விஞ்ஞானம் தமக்கு அப்பாற்பட்டதென்று நினைக்கிறார்கள். எனினும் கலையும் அறிவியலும் ஒன்றித்த சில படைப்பாளிகளை அபூர்வமாக காண முடிகிறது. ஈழத்தில் நந்தி, இந்திரபாலா, சதாசிவம், ஞானசேகரன், எம்.கே.முருகானந்தன், பேராசிரியன், நஜிமுதீன், ஐங்கரநேசன், ஜின்னா ஷெரிப்புதீன், ச.முருகானந்தன் போன்ற சில அறிவியல் மருத்துவ துறை சார்ந்தவர்கள் அறிவியல் ஆக்கங்களையும், ஆக்க இலக் கியங்களையும் படைக்கின்றனர். அவ்வாறே தத்துவார்த்தமான கட்டுரைகளை வரையும் பால வைரவநாதன் போன்றோரும் அவ்வப்போது நவீன கலை இலக்கியப் படைப்புகளை ஆக்குகின்றனர். எனினும் வரலாற்றில் கலையும், அறிவியலும் அபூர்வமாகவே ஒரிடத்தில் பிரசன்னமாவதைக் காண்கிறோம். இதன் பொருள் கலையும் அறிவியலும் இருவேறு துருவங்கள் என்பதல்ல. உண்மையில் கலையும் தத்துவமும், அறிவியலும் ஒன்றோடு ஒன்று தொடர்புபட்டவைதான். கலைக்கும் அறிவியலுக்கும் இடையில் பயணித்து இரண்டையும் இணைப்பதே சிந்தனை என்பது.
கல்ையும் குத்துவடும் அறிவியலும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை
- பிரகலாத ஆனந்த்
கலை வடிவங்களான சிற்பம், ஒவியம், இலக்கியம் என்பனவும் அறிவியல், கணிதம், தத்துவம் என்பனவும் எல்லாமாக கலைத்துப் போட்டபடி கிடக்கின்றன. சிந்தனையாளர் களின் எண்ணங்களோடும், கற்பனைகளோடும் இவை யாவும் இணைந்தும், பிரிந்தும் செல்கின்றன. சில இடங்களில் ஒன்றை ஒன்று பின்தொடர்ந்து செல்கின்றன. கலையும் அறிவியலம், தத்துவமும் ஒன்றையொன்று தொடர்வது என்பது இன்று நேன்று ஏற்பட்ட விடயமல்ல. அவை காலம் காலமாக நடந்துகொண்டுதான் இருக்கின்றன. சில காலங் களில் இலக்கியம் தத்துவத்தைப் பின்தொடர்வது போல் தோன்றும். வேறு சில காலங் களில் அறிவியல் கலையைப் பின்தொடர்வது போல் தோன்றும். தற்போது கலை இலக் கியங்கள் அறிவியலைப் பின்தொடர்வதாகத் தோன்றுகின்றது. ஆனாலும், இது வெறும் மாயத்தோற்றம். காலத்துக்குக் காலம் இது மாறுபடலாம். தனி மனிதர் ஆக்கங்களிலும் வேறுபடலாம். ஏக காலத்தில் ஒன்றை ஒன்று மாறி பின்தொடர்வதையும் காணலாம். மு.வரதராஜன் படைப்புகளிலும், பின்னர் மார்க்சியவாதிகளின் படைப்புகளிலும் தத்துவ
மல்லிகை பெப்ரவரி 2009 & 66

மும், கலையும் ஒன்றையொன்று பின் தொடர்வதைக் காண்கிறோம். தற்போது பின்நவீனத்துவப் படைப்புகளில் மூன்றும் ஒன்றிணைவதையும், ஒன்றையொன்று பின்தொடர்வதையும் சமகாலத்திலேயே தரிசிக்க முடிகிறது. உண்மையில் கலை இல்லையேல் அறிவியல் இல்லை. கலை அறிவியலை பின்தொடர்கின்ற வரலாறாக, தொழில் புரட்சி கொண்டு வந்த மாற்றங் களை கிரகித்த கலை, அதேநேரம் அதன் எதிர்காலப் பிரச்சினைகளையும் உணர்ந்த வரலாறாக கலை இலக்கியப் படைப்புக் கள் பரிணமிக்கின்றன. இன்று எமது தேச இலக்கியத்தை எடுத்துக்கொண்டால் நவீன இயற்பியல் போரின் பக்கம் சாய்ந் திருப்பதை பலரது படைப்புகள் பறைசாற்றி நிற்கின்றன. இன்றிருக்கும் இந்த நிலை மாற்றம் காண்பது காவ்வாறு என்பதை காலம்தான் பதில் சொல்ல வேண்டும். இலக்கியம் மற்றும் அறிவியல் இடையே யான உறவும், விலகலும் வரலாற்றில் மாறி மாறி ஏற்பட்டதைப் போல, இனியும் மாற்றங்கள் ஏற்படலாம். இலக்கியத்தில் இயங்கியல் என்பது இதைச் சாத்தியமாக்க வல்லது. இவ்வகையில் அமைப்பியல் வாதம் தொடக்கி வைத்த போக்கின் பிரபல மான ஒரு முகம் மொழியின் மூலமாக இலக்கியத்தில் ஒன்றிக்கின்றது.
இன்று அறிவியலுக்கும், மானுடவிய லுக்கும் இடையில் உள்ள தொடர்வு வழி கள் சிக்கலான வலைப்பின்னலாக இருக் கின்ற போதிலும், ஒன்றை ஒன்று சார்ந் தும், ஒட்டியும் ஒட்டாமலும் இருப்பதாக உணரப் படுகிறது. அறிவியலின் கை ஓங்கி இருக்கின்ற இன்றைய தொழில் நுட்ப யுகத்தில், கலையும் அறிவியலும்
மின்னல் போன்றவை. இவை ஒன்றோ டொன்று இணங்கி நிற்பினும் எப்போதும் புலப்படும் என்றில்லை.
படைப்பாளி, வாசகன் என்னும் இரு தளங்களில் படைப்புகள் பயணிக்கும் போது அவற்றின் தாற்பரியங்கள் பன்முகப் பார்வை கொண்டவையாக அவதானிக்கப் படுகின்றன. படைப்பாளியின் கருத்தும் நோக்கமும் வாசக மனங்களில் புரிதலுடன் இயங்கியல் மாற்றங்களை ஏற்படுத்தாத சந் தர்ப்பங்களும் உண்டு. சில சமயங்களில் படைப்பாளி சொல்ல வந்த கருத்துக்கு மேலதிகமாகவும் வாசகனின் புரிதல் இருப்பதுண்டு. இது வாசகனின் வாசிப்பு மற்றும் கிரகித்தல் அனுபவங்களோடு தொடர்புடையது.
இலக்கியவாதிகள்தான் விஞ்ஞானி களுக்கும், தத்துவஞானிகளுக்கும் வழி சொல்பவர்களாக இருக்கின்றனர் என்ற கருத்துநிலை சிலரிடம் இருக்கின்றது. குறிப்பாக அறிவியலாளர்கள் கலை இலக் கியவாதிகளாக இருக்கும் பட்சத்தில், அவர் களது கண்டுபிடிப்புகளும் மனிதாபிமான செயற்பாடு மிக்கவையாக, ஆக்கபூர்வமான வையாக இருக்கும் வாய்ப்பு அதிகம். உல
கின் இயற்கை சூழ்நிலை பேணப்படவும்,
சூழல் மாசுபடாதிருக்கவும் இது உதவும். அதாவது, அறிவியலாளர்களின் ஒருமுகச் சிந்தனையை மாற்றி, வாழ்வியலின் சகல அம்சங்களுடன் அவர்கள் பயணிக்க கலை இலக்கியங்கள் பெரிதும் உதவக் கூடியன. உதாரணமாக, விஞ்ஞானிகள்ட விவசாய உற்பத்தியைப் பெருக்குவதற் காக இரசாயன உர வகைகளையும், பீடை நாசினிகளையும் கண்டுபிடிக்கிறார்கள்.
மல்லிகை பெப்ரவரி 2009 & 67

Page 36
பொருளியல் ரீதியிலான சிந்தனைக்கு அப்பால் இவர்களிடம் புவியின் யதார்த்த நிலையைச் சிந்திக்கும் தன்மை இல்லாது போனதால் தான், இன்று விவசாய நிலங்கள் பாழடைந்து விவசாயத்தை மேற் கொள்ள முடியாத நிலை காலவோட்டத் தில் ஏற்பட்டுள்ளது.
எமது கல்வி வெறும் படித்ததை ஒப்பு வித்தல் என்கிற நிலையிலிருந்து மாற்றம் காணவேண்டும். இதன் மூலமே ஆரோக் கியமான எதிர்கால சமுதாயம் உரு வாகும். கலை இலக்கிய வரட்சியற்ற மாணவ சமுதாயம் உருவாதலுக்கு, பரந்து
பட்ட வாசிப்பு பழக்கமே பெரிதும் உதவும்.
இன்று நாம் மேலைநாட்டு விஞ் ஞானத்தால் மூளைச் சலவை செய்யப் பட்டு, இயற்கையை இழந்து வருகிறோம். தொழில் நுட்பத்துடன் தயாரிக்கப்படும் உணவு வகைகளையும், போத்தல் நீரையும் உன்னதமானவை என தப்புக் கணக்கு போட்டுள்ளோம். ஆக, இலக்கிய வரட்சி என்பது எமது வாழ்வை வரட்சி யாக்கி விடும். இயந்திரமயப்பட்டு போன எமது வாழ்வில் ஒய்வும் ஆனந்தமும் அவசியம். இதற்குக் கலை இலக்கியம் பெரிதும் உறுதுணை செய்யும்.
- லுணுகலை முரீ
நற்சிறந்த நாள்கண்டு, நல்ல சுயவேளை தெரிந்து, சுற்றம் சிலசேர்த்து, பொற்புடைய உந்தன்தாய் நேற்றெந்தன்
முற்றம்வந் தாள்; பத்துத் தீங்கள்தன் உந்திதாங்கிய உன்னை அற்பம் ஒருமுப்பது லகரங்களுக்கு விற்கவே!
கொடுக்கென பார்வை கொண்ட அடம்பன்கொழ இடைக்காரி, வெடுக்கென வார்த்தை வீசியஉன் சோதரியிடம் போய்ச்சொல்; இடுக்கண்னன் றால்நடு வைக்க எந்தன் இடுதங்கம் உன்னை எடுத்து இனிநடுத் தெருக்கு புறப்படவேண் டாம்என்றே!
இருப்பினும் கூடவே இதையும் நின்நுமர் நினைவில் விை நிறுத்தி, லகரங்கள் ஆகட்டும்; சவரன்கள் ஆகட்டும், கறுப்பின்றி, சொட்டேனும் கலப்பின்றி, வெறும் முப்பதின்றி இருக்கிறதுஇருநூற்றி நாற்பத்தேழு என்னிடத்தே!
மல்லிகை பெப்ரவரி 2009 ஜ் 68

ܘܐܶܝܟܼ[ܐܰܗܶܗ%
- டொகிேக் ஜீவா
* நீங்கள் பெரிதும் மதிக்கும் குமிழகத்த மிகாம் எழுத்தாளர் யார் எனத் தெரிந்து GhabJT 6 GI GDJT DJ ?
დyāსeჯეlā. க.சிவநேசன்
> மேலாண்மை பொன்னுச்சாமி. இந்த ஆண்டு இந்திய சாஹித்திய அகடமிப் பரிசு பெற்றவர், இவர். இவரது 'மின்சாரப் பூக்கள் கான்ற சிறுகதைத் தொகுதிக்காகத்தான் இப்பரிசு இவருக்குக் கிடைத்துள்ளது. வெறும் பாமர விவசாயி. இவரது எழுத்து அடிப்படைக் கிராமத்து மண்ணின் உயிர்த்துடிப்பு. இவரை நான் இரண்டு தடவைகள் தமிழகத்தில் நேரில் சந்தித்துள்ளேன். இரண்டு இலக்கிய விழாக்களில்தான் இச்சந்திப்பு இடம்பெற்றது. எனது மகிழ்ச்சியையும், பாராட்டையும் நேரில் இவருக்குச் சொல்லிப் பெருமைப் பட்டுள்ளேன். இத்துாண்டில் பகுதியிலும் கடந்த காலத்தில் பெயர் சொல்லிப் பாராட்டியதாக ஒரு நினைவு.
<2- கடந்த அரை நூற்றாண்டுக்காலமாகத் தனி ஒரு மனிதனாக நிலைத்துநின்றுமல்லிகையை வெளியிட்டுவருக்ன்றீர்களே, இதன் அடுத்தகாலகட்டம் எப்படி இருக்கும் என்பதை ஏன் போன்ற மல்லிகை அபிமான வாசகர்களுக்குத் தெரிவிக்கலாமல்லவா?
புத்தல்ை, எஸ்.தவச்செல்வன்
நீங்கள் மாத்திரமல்ல, பல மல்லிகை அபிமானிகள் கடந்த காலங்களில் இதே خز கேள்வியைக் கேட்டு வருகின்றனர். நண்பர்கள் செங்கை ஆழியான், முறிதரசிங் போன்றவர்களும் இதே கேள்வியைக் கேட்கின்றனர்.
மல்லிகை பெப்ரவரி 2009 & 69

Page 37
சில நாட்களுக்கு முன்னர் சில நண்பர்களுடன் தேநீர் அருந்திக் கொண்டி ருந்த சமயம், மகன் திலீபனும் பக்கத்தே அமர்ந்திருந்தார். நமது பேச்சு மல்லிகை யின் எதிர்காலத்தைப் பற்றித் தொடர்ந்தது. மகனிடமே நேரடியாக அந்த நண்பர்கள் கேட்டனர்.
அதற்கு அவர் 'அப்பா இன்று இவ் வளவு சுகதேகியாகவும், ஆரோக்கியமான வராகவும் காட்சி தருவதற்குக் காரணம் மல்லிகைக்காக அவர் தினசரி உழைத்து வருவதுதான். அது தடைப்பட்டால், அவர் படுக்கையில் விழுந்து விடுவார் என்பது எனக்குத் நல்லாத் தெரியும். நான் மல்லிகையை எந்தக் கட்டத்திலும் முழுப் பொறுப்பேற்றுக்கொண்டு நடத்தத் தயார். சமீபத்தில்தான் பலகோடி ரூபாக்களை முதலீடு செய்து ஜப்பானிலிருந்து நவீன டிஜிட்டல் அச்சுச் சாதனத்தை இறக்குமதி செய்துள்ளேன். அப்பா ஒரு மாதமாக மாரடிக்கும் அச்சக வேலைகளை நான் இரண்டொரு நாட்களில் செய்து முடித்து விடுவேன். என்னதான் பட்டுப் பீதாம் பரங்கள் இந்திய நாட்டில் இன்று உடு புடவையாகப் பவனி வந்துள்ள போதிலும், அந்தக் காந்திய கதர் உடைக்கு ஒர் அடையாளம் உண்டல்லவா? அதுபோல், அப்பா காலத்து மல்லிகை இதழ்கள் உழைப்புச் சுதந்திரத்தின் நேரடி அறு வடைகள். அவை சரித்திரப் பதிவுகளாகத் திகழும். அதுமாத்திரம் நிச்சயம்.
நான் மல்லிகையைப் பொறுப்பேற்றுக் கொண்டால், அது நவீன அச்சமைப்பு, அழகிய கட்டமைப்பில்தான் வெளிவரும். அப்பா அதில் தலையிடவே கூடாது. அடிக்
கடி ஆலோசனைகளைப் பெற்றுக் கொள் வேன். அவ்வளவுதான். ஆனந்த விகடன் மாதிரி மல்லிகையும் மூன்றாவது தலை முறையிலும் வெளிவரும். இதுமாத்திரம் சர்வ நிச்சயம்' என்றார் மகன் திலீபன்.
<> நான் இலங்கையின் ஒரு கோடியில் - மாத்தனையில் வசிக்கின்றேன். எனக்கு இலக் கிய ஆர்வமும் அக்கறையும் நிறையவுண்டு. மல்லிகை போன்ற இலக்கியச் சஞ்சிகைகளை இந்தப் பகுதியில் கண்களாலும் காணக் கிடைப்பதில்லை. எனக்கு மல்லிகை ஒழுங் காகக் கிடைப்பதற்கு என்ன வழி செய்யலாம்?
ந்ைதைை. எல்.நூர்மூவறல்லது
> மல்லிகை ஆரம்பித்து 43 ஆண்டுகள் இடையில் ஒடிப்போய்விட்டன. இலக்கிய ஆர்வலர் எனக் கூறிக்கொள்ளும் உங் களுக்கு இப்பொழுதுதான் மல்லிகையின் முகவரி கிடைத்ததா, என்ன? பலர் இப்படியே கடிதம் எழுதுகின்றனர். இதற்கு ஒரேயொரு வழிதான் உண்டு. மல்லிகை வியாபாரச் சஞ்சிகையல்ல. அதைத் தொடர்ந்து பெறுவதற்கு அதன் சந்தாதாரர் ஆகுவதே ஒரே வழி. முனைந்து
பாருங்கள்.
<> இத்தனை ஆண்டுக் காலமாக மல்லிகையை வெளியிட்டுக் கொண்டு
வருகிறீர்களே, உங்களுக்கு இதில் அலுப்பே
தோன்றுவதில்லையா?
கல்முனை. க.தேவதாசன்
> சொன்னால் நம்ம மாட்டீர்கள்.
மல்லிகை பெப்ரவரி 2009 * 70

இந்த அர்ப்பணிப்புப் பணியில் தினசரி நான் என்னை நானே புதுப்பித்துக் கொண்டு வருகின்றேன். ஒரு முழுநேர எழுத்தாளனுக்கு இதைவிடச் சிறந்த பொழுதுபோக்கு உலகில் வேறொன்றுமே இருக்க முடியாது.
<> படைப்பாளிகளுக்கு மரணம் என்பதே !
கிடையாதா?
புத்தல்ை. ஆர்.சிவகுரு
> கிடையவே கிடையாது. கார்க்கி, டால்ஸ்டாய், செகாவ், மாப்பஸான், பாரதி, தாகூர், சரத்சந்திரர், ஏன் நமது புதுமைப் பித்தன், விந்தன், வரதர், டானியல், கைலாசபதி போன்றோர் இன்றும்கூட, மக்களினது மனங்களில் வாழ்ந்துகொண்டு தானே இருக்கின்றனர்
* சிறுவயதில் நீங்கள் வரிய குறும்புக்கார ராக இருந்துள்ளீர்களா?
o
நீர்கொழும்பு. எம்.ராமநாதன்
X> நிறைய. நிறைய. வ6ாரும் பயிரை முளையிலேயே தெரியுமாமே!
* இந்த ஆண்டுக்கான
கலண்டர் கொழும்பில் வெளிவந்துள்ளதாகக்
கேள்விப்பட்டேன். சிற்றேயொன்று ஆண்டுக் கலண்டர் ஒன்றை வெளியிடுவது ஒரு புதுமை தான். வவுனியா போன்ற பிரதேசங்கரில்
வசிக்கும் எம்மைப் போன்ற ரசிகர்களுக்கும்"
இக்கலண்டர் ஒன்று கிடைக்கவசத்க்'டுமா?
DSeNuch. உதவவேந்தன்
மல்லிகைக்
> முன்னர் ஒருதடவை யாழ்ப்பாணத் திலும் மல்லிகைக் கலண்டர் வெளிவந் தது. இங்கும் சென்ற வருடமும் இவ்வாண் டும் மல்லிகைக் கலண்டரை வெளியிட்டுள் ளோம். சிற்றிலக்கிய ஏடு ஒன்று கலண்டர் வெளியிடுவதே ஒரு புதுமை. இந்தத் தக வல் வரலாற்றில் பதியப்பட வேண்டும் என் பதற்காகவே, இந்த முயற்சி. இக்கலண்டர் திகதி பார்ப்பதற்காக மட்டுமல்ல, வருங் காலத்தில் இது ஒர் ஆவணமாகப் பதியப் பட வேண்டுமென்பதே நமது மனஅவா. கிடைத்தவர்கள் ஆண்டு முடிந்த பின்ன ரும் இக்கலண்டரைப் பாதுகாப்பாக வைத் திருக்க வேண்டியது மிகவும் முக்கியம். தேடித் தேடிப் புதுமைகள் செய்ய வேண்டு மென்பதே எனது இந்த வயது ஆசை.
* இன்று நீங்கள் இளந்தலைமுறையைச் சேர்ந்தவர் அல்ல. உங்களுக்கும் வியதாகிக் கொண்டு வருகின்றது. மல்லிகையின் எதிர் காலத்திட்டமென்ன?
கொக்குவில். எம்.தருஸ்லேன்
s இத்தகைய எதிர்கால மல்லிகையின் தொடர் வருகையைப் பற்றிப் பலரும் இன்று நேரில் என்னைக் கேட்கின்றனர். இதே கேள்விக்கு இதே பகுதியில் நான் விரிவாகப் பதில் சொல்லியிருக்கின்றேன்.
<> நீங்கள் உங்களது இளம்வயதுக் காலத்தில் யாருடைய நாவல்களை விரும்பிப் படித்துள்ளீர்கள்?
புத்தல்ை, sa. Upkopedā
மல்லிகை பெப்ரவரி 2009 ஜ் 71

Page 38
> வங்கத்து நாவலாசிரியர் சரத்சந்திரர், மராட்டிய எழுத்தாளர் காண்டேகர், தமிழ் எழுத்தாளர் அரு.ராமநாதன் ஆகியோரு டைய நாவல்களை எழுத்தெண்ணிப் படித் திருக்கின்றேன். இந்த நாவலாசிரியர்களில் காண்டேகரின் எழுத்துப் பாதிப்பு என் இளம்வயசு நெஞ்சில் அப்படியே பதிந்து போய் இருந்துள்ளது. அதன் அடையாள மாகவே எனது ஒரே மகனுக்கு அவரது நாவலில் வரும் திலீபன் என்ற பாத்திரத் தின் பெயரையே வைத்துள்ளேன்.
<> உங்களது உண்மையான பொழுது போக்கென்ன?
தெவறிவிைை.
> மல்லிகைக்காகத் தினசரி உழைப்
ஆர்.ராேைதவன்
பது. மல்லிகையின் எதிர்காலத்தைப் பற்றிச் சிந்தித்துச் சிந்தித்துத் திட்டம் போடுவது.
<> உங்களது இளம் வயதில் நல்ல நண்பர்களைத் தேடிக்கொண்டதுண்டா?
நல்லு.ை க.நவநீதன்
எனது இளமைப் பருவத்தில் த.இராஜ கோபலன் என்பவரைச் சந்தித்தேன். சாவ கச்சேரியைச் சேர்ந்தவர். அவர் படித்து விட்டு, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேரக் காத்துக்கொண்டிருந்தார். இவர் பலரைத் தேடித் தேடி எனக்கு அறிமுகப் படுத்தி வைத்தார். இவர்தான் பொன்னுத்
துரையையும் எனக்கு அறிமுகப்படுத்தி யவர். தொடர்ந்து செ.கணேசலிங்கன், பூபாலசிங்கம் போன்றோர்கள் எனக்கு அறிமுகமானார்கள். அந்தக் காலகட்டத் திலேதான் கே.கணேஷ், அ.ந.கந்தசாமி, மஹாகவி, வரதர் போன்றோரின் நட்பும் கிடைத்தது. இவர்களினது உறவும் நட்பும் கிடைத்திராது போனால், நான் இலக்கிய உலகிற்கு வந்திருக்கக்கூடிய சாத்தியப் பாடே இருந்திருக்காது.
* நான் சுன்னாகம் ஸ்கந்தவரோகுயக் கல்லூரி மாணவனாக இருந்த காலகட்டத்தில் - சுமார் அரை நூற்றாண்டு காலத்திற்கு முன்னர் - நீங்கள் அங்கு மாணவர்கள் மத்தியில்உரையாற்ற வந்திருந்தீர்கள். நீங்கள் முதன் முதலில் சாஹித்திய மண்டலப் பரிசு பெற்ற காலகட்டமது.
அன்று உங்களது மேடைப் பேச்சை ரசீத்துக் கேட்டேன். சமீப காலமாக வெள்ள வத்தையில் உங்களது மேடைப் பேச்சுக்களை யும் நேரில் கேட்டு வருகின்றேன். ரொம்பவும் மெருகேற் மனதைத் தொடுகிறது உங்களது பேச்சு. இதை வேறு யாராவது குறிப்பிட்டச் சொல்லியுள்ளனரா?
வெள்வைத்தை. ஆர்.இவபாலன்
> அநுபவம், வயது, நட்புத் தொடர்பு, மல்லிகையின் ஆசிரிய ஆளுமை, தொடர் படிப்பு இத்தனையையும் சேர்த்துப் பாருங்கள். இதனது அறுவடைதான் இந்த முதிர்ச்சி. வளர்ச்சி.
201/4, முரீகதிரேசன் வீதி, கொழும்பு 13 முகவரியில் வசிப்பவரும், மல்லிகை ஆசிரியரும், வெளியீட்டாளருமான டொமினிக் ஜீவா அவர்களுக்காக, கொழும்பு விவேகானந்த மேடு, 103A, இலக்கத்திலுள்ள Lakshmi Printers அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப் பெற்றது.

உமாதேவி ஒலிவலர்ஸ்
மல்லிகைuரின் இலக்கிய வளர்ச்சி வவிர்காலத்திலும் மருத்தான வெற்றி பெற இதuம் நிறைந்த வாழ்த்துக்கள்
6IIö, 65IIIbub 274, செEடிI விதி
65IIgiplbII - II. 65IIa)606Lief : 2,3,3,017
|-

Page 39

February 2009
ital Cente
LPRE55。
5a MaWäi Colombo=12| | | |
|-|-|.| | | |E|
eraill:info@ happyright:1.2em;