கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நவீன தமிழ் இலக்கியம்: புனைகதை ஓரு முன்னுரை(ஏ.ஜே. கனகரத்னா நினைவுரை 01)

Page 1
g). GE3, 6607


Page 2


Page 3

ஏஜே பற்றி.
ஏஜே ஒருக்காலுமே எவரிலுமே வன்மம் சாதிக்காதவர். கோட்பாடுகளை எக்காலமுமே போதிக்காதவர். ஆனால் கோட்பாடு களுடன் வாழ்ந்தவர் வாழ்க்கையின் ஆரம்பத்தில் கத்தோலிக்கத் திருக்கோயிலின் அதிகார நலன்களாக இருந்தாலும்சரி, பத்திரிகை முதலாளிகளின் நியாயமற்ற கோரிக்கைகளாக இருந் தாலும்சரி
அவற்றை எதிர்த்தவர்.
- நர்ஷா குணவர்த்தனா.
உலகக் குடிமகனுக்குரிய கலாசாரமும், சர்வதேசப் பிரக்ஞை யுடைய ஏ.ஜே. யாழ்ப்பாண மண்ணிலும், அதன் வாழ்விலும்,
அனுபவத்திலும், மொழியிலும் ஆழவேரூன்றி உள்ளார்.
-றெஜி சிறிவர்த்தனா
அவரை எழுதச்சொல்ல முடியாது. விரும்பினால் பேசும், எழுதும் சித்தர் மனம் கொண்டார். அதனால்த்தான் அவருடைய எழுத்துக்கள் கையடக்கமான இரண்டு நூல்கள். அவை அவரை எந்தவிதத்திலும் பிரதிநிதித்துவப்படுத்தப்போதாதவை.
- செல்வம்
எளிமையான, தன்முனைப்பற்ற, மென்மையாகப் பேசும், முட்டக்குடிக்கும் ஆனால் ரிஷிபோன்ற, நீண்டகாலப்பிரமச்சாரியான, நீண்ட தாடியுடைய ஒருவரின் மனப்படம் எனக்கு அவரைப்பற்றி இருக்கிறது.
- எஸ்.சிவநாயகம்.
கம்பர் இராமனை சிறியன சிந்தியான் என்று ஏத்தும் அழகிய வரியின் ஆழ்ந்த நயத்தினை ஏ.ஜே என்ற பெருமகனில் நான் கண்டேன். நடேசன்
"மத்து" "செங்காவலர் தலைவர் யேசுநாதர்" என்ற இரு நூல்களிலும் இடம்பெறும் கட்டுரைகளை வாசித்த போது ஏ.ஜே கனகரத்னா எப்படியான திறமையுடன் அறிவுப் பரப்பில் இலக்கியப்
பணியை ஆற்றியிருக்கிறார் என்று நான் வியந்தேன்.
-சுரேஷ் கனகராஜா

Page 4
அவருடைய ஆளுமையை ஒருவரியில் சொல்வதானால் எந்தச் சிறுமைகளுமற்றவர் அவர் என்று சொல்லமுடியும். அற்பகுணம், காப்ழ்புணர்ச்சி, மனம் நோகச்செய்யும் குணம் ஆகியவை அவர் இயல்பில் இல்லை. முரணணி, நகைச்சுவை ஆகிய உணர்வுகள் உள்ளவர்.அதேவேளை நேர்மையையும் கைவிடாதவர்.
- 6aroi s
கடந்த ஐம்பது ஆண்டுகளில் மொழிபெயர்ப்புகளாகவும் தழுவல்களாகவும் தமிழுக்கு நிறையப் புதுச் சிந்தனைகளை அறிமுகப்படுத்தியிருக்கிறார் ஏ.ஜே. அவ்வகையில் அண்மைக் காலத்தில் தமிழ் இலக்கிய உலகுக்கு வெளியில் இருந்து வெளிச் சத்தைக் கொண்டு வந்தவர்களில் ஏ.ஜேக்கு முக்கிய இடம் உண்டு. அதேவேளை பின் நவீனத்துவ வெள்ளத்தில் அடிபட்டுச் செல்லாமல் தன்னைத் தற்காத்துக் கொண்டவராகவும் இந்த அதிநவீன மோஸ்தர் களை நிதானமான விமர்சனத்திற்கு உட்படுத்துபவராகவும் அவர் நம்முடன் இருக்கிறார் என்பது நமக்கு ஆறுதலும் தெம்பும் தருகிறது.
- எம்.ஏ.து.மான்
ஏ.ஜே. தனது ஆங்கிலப் புலமையைத் தமிழில் செழுமைப் படுத்தும் பணியிலே திசைதிருப்பி உள்ளமை நமது இலக்கியப் படைப்பாளியின் பேறாக முற்றியது.
-orofo.6 ar.
Unassuming, infinitely, humble, helpful, modest, dependable. A.J.'s roots reached deep into our soil. He will continue to inspire
youngwriters and readers as he used to, overaperiod offive decades.
-S. Pathmanathan
அவர் ஒரு நூலை எடுத்தால் முதலிலிருந்து கடைசிவரை படித்து, அதன் திட்ப நுட்பங்களை அளவிட்டு அதனைத் தம் உள்ளத்திலுள்ள கோணுதல் இல்லாத அளவு கோலினால் அளந்து வைத்துக் கொள்வார். தாம்பேசத் தகுந்த ரசிகர்களுடன், அவர்கள் கேட்டால்மட்டும் தன் இன்ப அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வார்.
-ஆ.சபாரத்தினம்.

நவீன குமிழ் இல்க்கியம் :
புனைகதை ஒடு டுன்னுரை
க.சமேததன்
இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டு வரலாற்றையும் வளத்தையும் கலை அழகையும் கொண்டது - நமது மொழியும் இலக்கியமும்.
நமது இலக்கியப் பரப்பில் சங்ககாலம் மிகவும் முக்கியமான காலப்பகுதியாகும். சங்கப் பாடல்களில் நாம் காண்பது நேரடியான மொழிதல்முறை சொற்களின் துல்லியம்மிகைப்படுத்தலோ அலங்கார லகரியோ இல்லாத வடிவ முழுமை ; இயற்கையும் காதலும் காமமும் புணர்ச்சி கொள்ளும் அழகு எனப் பலவாகும். இப்பண்புகள் முழுமையான அழகி யலையும் கவித்துவ வீச்சையும் தத்துவப் பின்னணி யையும் அக்கவிதைகளுக்குத் தந்துவிடுகின்றன.
பின்னர் தோன்றிய சிலப்பதிகாரமும் மணிமேகலையும் கவிநயம் மிக்கவையாக இருப்பதோடு - அறக் கருத்துக்களை அழுத்தியபோதும் - சங்கப் பண்புகளின் தொடர்ச்சியைத் தொட்டு, பெண்களை முதன்மைப் பாத்திரங்களாக ஸ்தாபிதம் செய்து, தொடர்வதைக் காணக்கூடியதாக உள்ளது. கண்ணகி, மாதவி, மணிமேகலை ஆகியோர் - வகை மாதிரிப் பாத்திரங்களாக இயங்கு நிலை கொண்டு விளங்குவது, நமது இலக்கியத்துக்கும் மொழிக்கும் மிகுந்த பலம் என்றே நாம் கருதலாம்.
03

Page 5
சோழப் பேரரசர்களது காலத்துத் தோன்றிய காவியங் களும் - நமது மொழிக்கு, வலிவும் வளமும் சேர்த்தவை என்பது நாம் அறிந்த ஒன்றுதான். இக் காவியங்களுள் தனித்து நிற்பவை கம்பனின் இராமாயணமும் திருத்தக்க தேவரின் சீவக சிந்தாமணியுமாகும்.
இக்காவியங்கள் நடைமுறை வாழ்க்கையை, இயல்பான சம்பவங்களை, நிகழ்ச்சிகளைத் தவிர்த்து - அதாவது அவற்றை உள்ளிடாகக் கொள்ளாது - ஒரு வாழ்வுப் பின்புலத்தை உருவாக்கித் தந்துள்ளன. அவதார புருஷர்களும் பெண்டிரும் அரசர்களும் உயர்குலத்தோன்றல்களும் இக்காவியங்களில் இலட்சிய மயப்படுத்தப்பட்டு-தலைமைப் பாத்திரங்களை ஏற்பதோடு - குறித்த சில அறநெறிகளையும் சமூக நியதி களையும் நீதிகளையும் உணர்த்தும் குறியீடுகளாகவும் வருகிறார்கள்.
தமிழ்ப்புலத்தில் வடமொழியின் செல்வாக்கே இத்தகைய காவியங்கள் தோன்றுவதற்குக் காரணமாக அமைந் துள்ளது. இருந்தபோதும் - கம்பனிடத்தும் தேவரிடத்தும் கனிந்துவரும் கவிநயமும் சொற்செப்பமும் பிறமொழிக் காவியங்களுக்கு இவை சளைத்தவை அல்ல என்பதையே
நமக்கு உணர்த்துகின்றன.
சோழப் பேரரசர் காலத்திலும் சற்றுமுன்னதாகவும் தோன்றிய பக்தி இயக்க இலக்கியங்களும் தமிழ்மொழிக்கு வளம் சேர்ப்பதில் பின்நிற்கவில்லை. குறிப்பாக நாவுக்கரசர், மாணிக்கவாசகர், ஆழ்வார்கள், ஆண்டாள் ஆகியோரது ப்னி குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவையே. இவர்கள் மிகுந்த
கவிவல்லபம் உடையவர்கள்.
04

பின்னர் தோன்றிய குறவஞ்சி, பள்ளு என்பனவும் நாட்டார் வழக்கியலைச் சார்ந்தெழுந்த இலக்கியங்களாகும். சமூகத்தின் விளிம்பு நிலை மாந்தர்கள் மையங்கொள்ளும் இலக்கியமென்ற அளவில் இவ்வகைப் பனுவல்களும் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்ப்பவையே. குற்றாலக்குறவஞ்சி, முக்கூடற்பள்ளு என்பன இவ்வகையில் விதந்து பாராட்டப்
படக்கூடியன.
இவ்விடத்தில் வள்ளுவரது திருக்குறள் பற்றிச் சொல்ல வேண்டும். இந்நூல் சங்கம் மருவிய காலத்தது என்பது ஆய்வாளர் முடிவு மாறுபாடான கருத்துக்களும் உண்டு. நவீன இலக்கியவாதிகள் பலரும் இந்நூலை ஓர் அறநூலாகவே பார்க்கிறார்கள். எனது அபிப்பிராயம் ஒரளவு வித்தியா சமானதாகும். குறிப்பாகக் குறளின் காமத்துப்பால் இலக்கிய ரசிப்புக்குரிய பல பாக்களைத்தன்னகத்தே கொண்டுளது. உதாரணத்துக்கு ஒன்று - குறிப்பு அறிவுறுத்தல் என்ற அதிகாரத்தில் இருந்து: -
"முகை மொக்குள் உள்ளது நாற்றம் போல் பேதை
நகை மொக்குள் உள்ளது ஒன்று உண்டு
இக்குறளுக்கு விளக்கம் வேண்டுமா? தேவையில்லை என்றே நினைக்கிறேன். அவரவர் ரசனை விகCப்புக்கு ஏற்ப, ரசிப்பதற்கு இக்கவிதையில் நிரம்ப விஷயம் இருக்கிறது என்றே நான் நினைக்கிறேன்.
இந்த மரபுசார் இலக்கியப் பின்புலத்தில், நவீனத்துவம் அல்லது நவீன இலக்கியமென்றால் என்ன என்பதை ஒரளவு சர்வதேசப் பின்புலத்தில் பார்த்து, பின்னர், தமிழுக்கு வரலாம் என நினைக்கிறேன்.
05

Page 6
19ஆம் நூற்றாண்டின் கடைக்கூறுகளிலும் 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் மேற்கில் நவீனத்துவத்திற்கு அடியாதாரமாக-அதன் கூறுகளாகப் புதுக் கோட்பாடுகள் தோன்றின; அவற்றுள் முக்கியமானவைகள் சில:
இம்ப்ரெஷனிஸம் -Impressionism எக்ஸ்பிரஷனிஸம் -Expressionism க்யூபிஸம் - Cubism டாடாயிஸம் -Dadaism
சேர்ரியலிஸம் -- Surrealism
இமேஜிஸம் - Imagism ஃப்யூச்சரிஸம் - Futurism இருத்தலியல் - Existentialism
இக்கோட்பாடுகள் உலக அளவில் - நவீனத்துவத்தைப் பொறுத்தவரையில், பெருந்தாக்கத்தினை ஏற்படுத்தின. தமிழிலும் இச் சிந்தனைகள் உள்வாங்கப்பட்டமை பற்றி நாம் அறிவோம்.
இந்தக் கோட்பாடுகளினால் ஆரம்பத்தில் கவரப்பட்ட வர்கள் நவீன ஒவியர்களாக இருந்த போதும் - காலக் கனிவுடன் ஏனைய கலைஞர்களும் உள்வாங்கப்பட்டார்கள். இதனால் சிற்பக்கலை, கட்டடக்கலை, நாடகம், சினிமா மற்றும் புனைவிலக்கியங்களும் புதுமையும் நவீனமும் தழுவிய நிலையில் பொலிவுபெற்றன.
இந்தக் கோட்பாடுகளில் டாடாயிஸம், சேர்ரியலிஸ்ம், எக்ஸ்பிரஷனிஷம், Existentialism என்பன காலக்கிரமத்தில் தன் நிலை இழந்த போதும் Cubism தனது இருப்பை ஒருவகைச் சிரஞ்சீவித்தனத்துடன் காப்பாற்றி வருகிறது. அதன் கருத்து நிலைச்செழுமை இதற்குக் காரணமாக இருக்கக்கூடும்.
06

இடையில் ஒரு தகவல் - Cubism எனும் கோட் பாட்டைப் பயன்படுத்தி - எம்.ஜி. சுரேஷ் அவர்கள் அட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சிலருடன் எனும் நாவலை எழுதியுள்ளார். சுந்தரராமசாமியின் ஜே.ஜே.சிலகுறிப்புகள், இந்திரா பார்த்தசாரதியின் தந்திரபூமி ஆகிய நாவல்கள் இருதலியற் பண்புகளைக் கொண்டவையாகும். இன்னும் சில இருக்கலாம்.
ஆங்கில மொழியில் நவீனத்துவச் சார்புடைய U66L'UIT6fly,6T Avant garde Writers 6T60Td Jill L'U(6 கிறார்கள். இந்தச் சொல்லின் மூலவேர் பிரெஞ்சு மொழியைச் சேர்ந்ததாகும்.
இத்தகைய படைப்பாளிகள் - வழிவழி வந்த மரபிலிருந்து மாறுபட்டவர்களாகவும் புதுமையின் லகரியை வலிமையுடன் புணர்ந்து நிற்பவர்களாகவும் காணப்படுகி றார்கள். அவர்களது படைப்பு நுணுக்கங்களும் உத்திகளும் புத்தம் புதியவையாகவும் நுண்முனைப்பும் துல்லியம் மிக்கவை யாகவும் மாற்றத்துக்கான வழிகளைக் காட்டுபவையாகவும் விளங்குகின்றன. இப்பண்புகள் தமிழ் மொழிமூலப் படைப்பு களுக்கும் ஏனைய மொழியாக்கங்களுக்கும் பொதுவானவை
தாம்.
நவீன எழுத்தின் அழகியல் விதிகளை, 'கச்சிதமான வடிவம் - உட்குறிப்பு மூலம் மட்டுமே தொடர்புறுத்தும் தன்மை, உணர்ச்சி கலவாத நடை, வெளிப்பாடு மீது ஆசிரியரின் முழுமையான கட்டுப்பாடு, என எழுத்தாளர் ஜெயமோகன் வரையறை செய்துள்ளார்.
07

Page 7
பொதுவாக இந்த நவீன கலை இலக்கியக் கூறுகளை மேற்கிலிருந்துதான் நாம் பெற்றுக்கொண்டோம். மேற்குலகப் பாதிப்பிலிருந்து நமது எழுத்தும் கலைகளும் - எந்த முயற்சியுமே, நவீனத்துவத்தைப் பொறுத்தவரை - அந்த ஈர்ப்பு மையத்துள் இருந்து வெளிவந்தவைதாம். சுத்த சுயம்புவாக தமிழில் அவைதோற்றம் கொண்டுவிடவில்லை. ஆனால், பின்னர் அது தமிழில் சுயத்தன்மையுடன் ஸ்தாபிதமானது இயல்பான விஷயம்.
மரபுசார் இலக்கியத்தின் வளமான தொடர்ச்சி நமக்கு இருந்த போதும்-இதுபற்றி ஆரம்பத்தில் குறிப்பிட்டுள்ளேன். அதன் உட்சொரிவுகளை நமது நவீன படைப்பாளிகள் உள்வாங்கிக் கொள்ளவில்லை என்பதை, நமது ஆரப்ப காலப் படைப்புகள், பல்லிளித்தபடி காட்டி நிற்கின்றன. அப்படை புகள் - புனைகதைகள் உட்பட - சாயமிழந்த, சாயல் அழிந்த படைப்புகளாகவே வந்துள்ளன.
நவீனத்துவம் வீச்சுடன் தமிழ் மயமானது பின்னர்தான். அதாவது மேலைத்தேய கலை மரபின்சாரத்திலிருந்து, அழகியல் ரசவாதங்களில் இருந்து நமக்கேயான கலை வாழ்வை வீச்சுடன் வசப்படுத்திக் கொண்டவர்களாக - புதுமைப்பித்தன், சுந்தரராமசாமி, மெளனி, அசோகமித்திரன், ஜெயகாந்தன் ஆகியோரைக் குறிப்பிடலாம். இன்னும் ஜெயமோகனையும் சேர்த்துக்கொள்ள முடியும்.
தமது படைப்பிலக்கியங்களால் மட்டுமல்ல, நவீன
விமர்சகர் என்ற அளவில் க.நா.சுப்ரமணியமும் முக்கியமானவர்.
இவர்களுக்கு முன்னதாக இத்தடத்தில் சென்றவர்கள் என, பாரதியையும் வ.வெ.சு. ஐயரையும் குறிப்பிடலாம். பாரதியே
08

நவீன கவிதை வளர்ச்சிக்கு அடிஎடுத்துக் கொடுத்த சிறப்பான ஆளுமையாகும்.
இச் சந்தர்ப்பத்தில் - உலக இலக்கியப் பரப்பில் நவீன சாதனையாளர்கள் என இனங்காணப்பட்ட சிலரைத் தொட்டுக் காட்டிவிட்டு, தமிழ்ப் படைபுகள் - படைப்பாளிகள் பற்றிச் சிறிது விரிவாகவே கூறலாம் என நினைக்கிறேன்.
நூற்றாண்டு கால சோவித் ரஷ்ய வாழ்வனுபவத்தை ஓர் ஆன்மீக அடிக்கோடிட்டு - தனது புனைவுகள் மூலம் உலகுக்குத் தந்த லியோதல்ஸ்தோய், வாழ்வின் உள் முடிச்சுகளையும், இறுக்கங்களையும், தாபங்களையும் துயரயங்களையும் அபத்தங்களையும் காட்டுவதன் மூலம் வாசக மனதை அதிர்ச்சிக்குள்ளாக்கிய தஸ்தயேவ்ஸ்கி, மனிதர்களைமனிதர்களாக, இயல்பு தப்பாமல் மிகுந்த பரிவுடன் சித்திரமாக்கிய அன்ரன் செக்கோவ், காதலையும் அகநெகிழும் உணர்ச்சிகளையும் உளவியற் சிக்கல்களையும் கவிதை மொழியில் வடித்த இவான் துர்கேனெவ், கீர்கிஸியாவை, அதன் மக்களின் வாழ்வனுபவத்தை, நாடோடித் தன்மையை, சிக்கல் ஏதுமில்லாத மொழியில் தந்த சிங்கிஸ் ஐத்மாத்தவ், வர்க்க முரண்களையும் அதனடியான உணர்வுகளையும் வரலாற்ற றிவுடன் வரைந்த மாக்ஸிம்கோர்க்கி, மிக எளிமையாகவும் நேரடியாகவும் தெளிவாகவும் கதை சொல்வதோடு, சமூகத்தின் பல்வேறு நிலையில் உள்ள மாந்தரைப் பற்றி, அநாயாசமாகப் பதிவு செய்த மாப்பசான், ஏகாதிபத்தியம் நிலப்பிரபுத்துவம் முதலாளித்துவம் ஆகியவற்றுக்கு எதிராகத் தனது பேனாவை முனை மழுங்கா ஆயுதமாகப் பயன்படுத்திய லூ சுன், நிலப்பிரபுத்துவ வாழ்வின் முரண்களையும் சிதைவுகளையும் மையப்படுத்தி எழுதிய பால்சாக் (balzac) இயற்பண்பு வாதத்தை (Naturalism) இலக்கிய மொழியாகக் கொண்டு, விளிம்பு நிலை
09

Page 8
மனிதர்களது அவலத்தையும் நிலப் பிரபுத்துவத்தின் நசிவு நிலையையும் காமத்தின் பச்சைத் தனத்தையும் தோலுரித்துக் காட்டிய எமிலிஸோலா, அந்நியமாதலை அழுத்தமாகவே தமது சிறுகதைகளிலும் நாவல்களிலும் சிறைப்பிடித்த அல்பேர்ட் காம்யு, ஜின் போல் சார்த்தர், மாய யதார்த்தத்தை (Magical Realism) முன் மொழிந்த காப்பிரியல் கார்ஸியா மார்க்வெஸ், அதிகார மையங்களால் - அது எத்தகைய வடிவினதாயினும் - அவலமுறும், நெருக்குதலுக்கு உட்படும் தனி மனிதனின் இருத்தல் பற்றிப் பேசிய காஃப்கா, இன்னும் வங்கத்தின் மண் மணக்க எழுதிய ரவீந்திரநாத்தாகூர், விபூதிபூஷண்பந்த்யோ பாத்யாய, சரச்சந்திரர், சமூக மாற்றத்தையும் புதிய வர்க்கங் களின் வளர்ச்சியையும் கலையாக்கிய கேசவதேவ், தகழி சிவசங்கரபிள்ளை, மண்ணும் மனிதரும் எனும் அருமந்த நாவலைத் தந்த சிவராமகரந்த் என்று-நவீன எழுத்துக்களையும் எழுத்தாளர்களையும் பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம். gNGörgọJúd William Faulkner, Henry James , John Steinbeck, Earnest Hemingway D.H. Lawrence, Chinua Achebe, JackLondon , பிரேம்சந்த், M.T. வாசுதேவன்நாயர், வைக்கம் முஹம்மதுபவர் என இங்கு பட்டியலிடப்படும் எழுத்தாளர்கள் அனைவரும் நவீன இலக்கியத்துக்கு வளமும் வனப்பும் சேர்ந்தவர்கள் ஆவர்.
ஏலவே சொல்லியதற்கு அமைவாக - இனி, தமிழ்ப்
படைப்பாளிகள் பற்றிப்பார்ப்போம்.
முதலில் புதுமைப்பித்தன். நவீன தமிழ்ப் படைப் பாளிகளில் இவர் முதன்மையானவர். இவர் யதார்த்தத்தை வரித்துக் கொண்ட போதும் இவருடைய யதார்த்தம் - மரபிலிருந்து முரணித்த ஒன்றாகும். அதே சமயம் விமர்சனப்
10

பாங்கானது கூட (Critical Realism). இதனாற்றான் பண்டிதர்கள் - அதாவது மரபுவாதிகளிடம் இவர் அதிக முகச் சுழிப்பையும் நிந்தனையையும் பெற்றுக் கொண்டார். ஆனாலும் அவரது வருகை படைப்புலகத்தில் - தமிழ்ப்புனைவிலக் கியத்துக்கு உயர் அந்தஸ்தையும் பெரும் புகழையும் ஈட்டித் தந்துள்ளது. அவரது கதைகள் மனிதனை அவனது இயல்பான புலத்தில் வைத்துப் பார்க்கின்றன. அவனது துயரம், மகிழ்ச்சி, பலம், பலவீனம், வக்கிரம், இழப்பு ஆசாடபூதித்தனம் என அனைத்தையும் அலசுகின்றன.
அவர் யதார்த்த வாதியாக இருந்த போதும் அவரது சில கதைகள் யதார்த்தமும் மிகு யதார்த்தமும் (Fantasy) இணைந்து உருவாகி உள்ளமையை நாம் அறிவோம். உ+ம் கபாடபுரம். அவர் b66TGoingol - g5Saouun - The Stream of Consciousness - 3a) கதைகளில் திறம்படப் பயன்படுத்தியுள்ளார்.
ஆஸ்திரிய (Austria) தேசத்துக் கவிஞரான Hugo Von HofmanStha1 (ஹியூ கோ வொன் ஹாஃப்மன்ஸ்தால்) நவீனத்துவம் என்றால் என்ன என்பது பற்றிப் பெரிய விளக்கம் ஒன்றைத் தந்துள்ளார். அதில் ஒரு பகுதி நவீனம் என்பது ஒரு மனநிலை, பெருமூச்சை, மனச் சாட்சியின் குத்தலைப் பகுத்துப்
பார்த்தல்.
புதுமைப் பித்தனின் கதைகளில் இத்தகைய மனோநிலையைப் பல இடங்களில் காணலாம். காலனும் கிழவியும் கதையில் ஓர் இடம்: " போருக்கு முதல்வனையும் ஊருக்கு மூத்தவரையும் நான் அழைத்துப் போக வேண்டும்." என்று கூறியபடி, பாசக் கயிற்றுடன் வந்த யமதர்மராஜாவிடம் கிழவி, "ஒன் தொழிலே ஒனக்குச் செய்யத் தெரியலியே! அதெத் தெரிஞ்சுகிட்டு என்கிட்டவா!" என்று கூறுவாள். யமன்
11

Page 9
கிழவியின் வார்த்தை கேட்டு அல்லாடுகிறான். கிழவி தொடர்ந்து பேசுகிறாள். "உன்னாலே என் உசரெத்தானே எடுத்துக்கிட்டுப் போவ முடியும்? இந்த உடலைக் கூடத் தூக்கிக்கிட்டுப் போவ உனக்குத் தெறமை இருக்கா? யோசிச்சுப் பாரு, ஒன்னெ வேறயா மாத்த முடியும், உன்னாலே அழிக்க முடியுமா! அடியோட இல்லாமே ஆக்க முடியுமா? அதை உன்னைப் படைச்ச கடவுளாலேயே செய்யமுடியாதே! அப்புற மில்ல உனக்கு. பழசுன்னா அவ்வளவு கிள்ளுக்கீரென்னா நெனச்சே". பேசிய தோடமையாது கிழவி பொக்கை வாயைத் திறந்து காட்டிச் சிரிக்கவும் செய்கிறாள். அதைத் தாங்கிக் கொள்ள முடியாது, தோல்வியுற்றவனாய் - கைகளைப் பிசைந்தபடி, வந்த வேலையைவிட்டுவிட்டு, வெளியேறுகிறான் தர்மராஜா.
மனிதனால் - பக்தி, பவித்திரம் அமானுஷ்யம் எனக் கொண்டாடப்படும் பல விஷயங்களைக் கேள்விக்கு உட்படுத்திவிட்டு ஒதுக்கமாய் நின்று சிரிப்பதற்குப் புதுமைப் பித்தனால் மட்டுமே முடிகிறது. இதனை அவரது மனக்குகை ஒவியங்கள் என்ற கதையில் பல கோணங்களில் பார்க்கலாம். கதையின் ஒரு சம்பவம் மட்டும் இங்கு தரப்படுகிறது. சிவபிரானும் தவ்வலான பசலைக் குழந்தையும் தான் இங்கு அரங்காடுபவர்கள்.
எக்களிப்புடன் சிவபிரான் - அழித்தல் தொழிலில் ஈடுபட்டிருந்த வேளை - சர்வ நாசங்களையும், குழப்பங் களையும் மீறி ஒரு சிறு குழந்தை இறைவனது காலடியை நோக்கி ஓடிவருகிறது. வந்து, அவனது தோலாடையைத் தனது தளிர்விரல்களாற்பற்றி இழுக்கிறது.
பிரான்குனிந்து பார்க்கிறான் புன்சிரிப்போடு.
12

"அழிப்பதற்குச் சர்வவல்லமை இருக்கிற தெம்பில் வந்தபூரிப்போஇது" என்றதுகுழந்தை.
"சந்தேகமா!நீதான் பார்க்கிறாயே!" என்கிறான் பரமன்.
"உமக்கு எல்லாவற்றையும் அழிக்க முடியும். உம்மை அழித்துக் கொள்ள முடியுமா? நீர் மட்டும் மிஞ்சுவதுதான் சூன்யம் என்று அர்த்தமா? உம்மையும் அழித்துக்கொள்ளும்படி நீர் தொழிலை நன்றாகக் கற்று வந்த பின்பு நெஞ்சைத் தட்டிப் பார்த்துக்கொள்ளும்"
என்று சொல்லிக் கொண்டே கருகி நசிந்தது அக் குழந்தை.
இன்னுமொரு காட்சி, "சாபவிமோசனம் கதையில் - அகலிகையும் சீதையும் சந்தித்த பொழுது - சீதை பலதும் பத்தும் பேசி அக்கினிப் பிரவேசம் பற்றியும் கூறுகிறாள். அதிர்ந்த அகலிகை:
"அவர் கேட்டாரா? நீ என்ன செய்தாய்" என்று கேட்டாள்.
"அவர் கேட்டார் நான்செய்தேன்" என்றாள் சீதை அமைதியாக.
"அவன் கேட்டானா?" என்று கத்தினாள் அகலிகை. இங்கு அவர் அவனாகிறது. அவளது மனசில் கண்ணகி வெறி தாண்டமாடியது- என்பார் புதுமைப்பித்தன்.
இந்த இராமாயண உப கதை புதுமைப்பித்தனின் கையில் நவீன பெண்ணியச்சிந்தனையாக மலர்கிறது.
ދކގެ ;.";ޓީ"
13

Page 10
இதைப்போலப் பலதை அவர் கதைகளில் பார்க்க
(Լpւգ-պմ).
புதுமைப்பித்தன் ஆக்க இலக்கியகாரர் என்ற அளவில் உரைநடையின் உச்சங்களைத் தொட்டவர். இவர் உருவ அமைதி யுடைய சில சிறுகதைகளையும் உருவ வழுவுடைய பல கதைகளையும் எழுதியுள்ளார். ஒரு படைப்பாளியாக அவர் நவீனத்துவத்தின் கூறுகளில் ஒன்றாகிய வடிவ அமைதியைத் தமது கதைகளிற் பெரிய அளவில் பேணுபவராகவோ அன்றி அதனை அடைய முயற்சித்தவராகவோ தம்மை எப்பொழுதும் காட்டிக் கொண்டதில்லை. இருப்பினும் அவரது கதைகளான கட்டில் பேசுகிறது. , கவந்தனும் காமனும், கோபாலப்யங்காரின் மனைவி, கல்யாணி, ஒருநாள் கழிந்தது, மனிதயந்திரம், காலனும் கிழவியும், சாபவிமோசனம், கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும், புதிய கூண்டு, செல்லம்மாள், சுப்பையாப்பிள்ளையின் காதல்கள், மகாமசானம் ஆகிய கதைகளில் பித்தனின் நவீனத்துவக் கூறுகளைத் தரிசிக்க முடியும்.
குறைந்த பட்ச எதிர்பார்ப்புக் கொண்ட மக்களுக்குக் கூட, கூடிவராத வாழ்க்கைதான் புதுமைப் பித்தனைப் பெரிய அளவில் சங்கடப் படுத்தியிருக்கிறது. சாதாரண வாழ்க்கையைச் சென்றடைய முடியாத சாதாரண மக்கள் என்ற தலைப்புக்குள் அவரது பெரும்பான்மையான கதாபாத்திரங்களை அடக்கிவிடலாம். என்பார் சுந்தரராமசாமி. இந்த சாதாரணர்கள், பலவீனர்கள் - இச்சைகளும் அச்சங்களும் நிரம்பியவர்கள்; வாழ்க்கையுடன் முட்டிமோதி நொருங்கிப்போகக் கூடியவர்கள். இவர்கள்தான் மனித வாழ்வை, அதன் நகர்வை, சாசுவதப் படுத்துபவர்களும்கூட. இவர்களுக்கு மனித வாழ்வின் நல்லியல் புகள் நம்பிக்கைக்கு உரியவை அல்ல. இது நவீனத்து வத்தின் கூறு. இத்தன்மையை அநாயாசமாகத் தனது கதை மாந்தர் மூலம்
14

இழையவிடுகின்றார் புதுமைப்பித்தன். இச்சந்தர்ப் பத்தில் பொருத்தம் கருதி நான் மனிதனில் நம்பிக்கையற்றவன்' என்று அல்பேர்ட் காம்யு கூறுவதையும் 'மனிதன், அவனை ஆக்கிய சக்திகளால் கைவிடப்பட்ட மிருகம்" என சார்த்தர் கூறுவதையும் மனம் கொள்ளலாம் என நினைக்கிறேன்.
புதுமைப்பித்தனுடன் சமகாலத்தில் வாழ்ந்த படைப்பாளி கு.ப.ரா. - புதுமைப்பித்தனைப்போல இவரும் நவீன சிறுகதைகள் படைத்த முன்னோடிகளில் ஒருவர். நவீனத்துவ வெளிப்பாட்டுக்குரிய கச்சிதமான வடிவ போதத்தை இவரைவிடச் சாதனையளவில் எட்டியவர்கள் இல்லை என்றே கூறலாம். இவரது கதைகள் மிகவும் எளிமையானவை, சிக்கலேதுமற்றவை, நேரடித்தன்மை கொண்டவை. இவரது குரல், படைப்பில் உயர்ந்து ஒலிப்பதில்லை. இவர் ஆண், பெண் உறவு நிலையை மையப்படுத்தி எழுதிய கதைகள் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியன. இந்த வகையில், கு.ப.ராவின் வாரிசாக தி.ஜானகிராமனைக் கூறலாம். இவர் மனித மனங்களை நன்கு புரிந்து கொண்ட கலைஞர். தஞ்சை மண்ணின் மணம் இவர் எழுத்தில் கலையாகிறது. மனிதர்களை - அவர்தம் இயக்கத்தை, பலத்தை, பலவீனத்தை, பால் உணர்வின் தவிப்பை நவீன தமிழில் அழுத்தமாக இவர் படைப்பாக்கி உள்ளார். இவரது மோகமுள் நாவல் பல விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப் பட்ட ஒன்றாகும். இன்னும் சில நவீனத்துவப் படைப் பாளிகளாக சி.சு. செல்லப்பா, ல.சா.ரா, எம்.வி. வெங்கட்ராம், கு.அழகிரிசாமி, இந்திரா பார்த்தசாரதி, ப.சிங்காரம், கிருஷ்ணன் நம்பி, கி.ராஜநாராயணன், சா. கந்தசாமி போன்றவர்களைக் கூறலாம். இவர்களுள் சா.கந்தசாமியின் ஆரம்ப காலப் படைப்பான "சாயாவனம் முற்றிலும் நவீனத்துவ அழகியலைக் கொண்ட முன்னுதாரணப் படைப்பு எனப் பலராலும்
பாராட்டப்பட்டுள்ளது.
15

Page 11
சா.கந்தசாமிக்குச் சற்று முன்னதாக எழுதத் தொடங்கிய அசோகமித்திரன் அற்புதமான கலைஞர். நவீனத்துவம் வகுத்த எல்லைக் கோட்டுக்குள் நின்று இலக்கியம் படைத்தவர், படைப்பவர். நகர்ப்புற மத்தியதரவர்க்கத்தினரின் வாழ்க்கை யைச் சித்தரித்த இவர், அவர்கள் உள்ளுக்குள் அழுந்திக் குமைவதை, சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் வாழும் வாழ்க்கையை ஒரு புகைப்பட நிபுணரின் லாவகத்துடன் பதிவு செய்கிறார். அவரது எழுத்தில் லேசான கண்டனக் குரல் ஒலித்துக் கொண்டிருப்பதையும் விரக்தியின் ஆழமான கீறல்கள் அழுத்தமாகவே பதிவு கொண்டிருப்பதையும் நாம் இனம்காண
லாம்.
"அசோகமித்திரனது படைப்புலகம் ஏறத்தாழ முழுமை கொண்டது. மனநிறைவுதருவது.நீண்டகாலம் ஒருவர் கலையின் சாத்தியங்களைப் பயன்படுத்தும்போது உருவாகும் பலவிதமான, நுட்பமான வண்ண வேறுபாடுகளும் அழகுகளும் கொண்டது. நவீன தமிழ் குறித்து நாம் பெருமிதம் கொள்ளச் செய்யும் படைப்பாளி அசோக மித்திரன்" இது அசோகமித்திரனைப் பற்றிய ஜெயமோகனது மதிப்பீடு.
ஏலவே கூறிய படைப்பாளிகள் காட்டிய வாழ்க்கைத் தளத்திற்கு மாறாக - வித்தியாசமான போக்கை மெளனியிடம் மட்டுமே நாம் காணமுடியும். ‘வார்த்தைக்குள் அடைபட மறுக்கும் வாழ்வனுபவங்களைச் சிறுகதையாக்க மெளனியால் மட்டுமே சாத்தியமாகி இருக்கிறது. அவர் மானுடக் காதலுக்கும் ஒரு தெய்வீகத் தன்மை தந்து, வேதாந்தத்துடனும் சங்கீதத் துடனும் இணைத்து, அதனை ஒரு மேல் நிலைக்கு எடுத்துக் செல்கிறார் இது மெளனி பற்றிய சுராவின் கருத்து.
சுந்தரராமசாமி அவர்களின் கூற்று மெளனியின் மனோரதியமான, நெகிழ்ச்சியான நடையை உவப்பது போலப்
16

படுகிறது. உண்மையில் மெளனியுடைய இந்த நடையே அவரது படைப்புக்களின் நவீனத்துவச் சாயலை மறைப்பதாக ஜெயமோகன் போன்ற விமர்சகர்கள் கருதுகிறார்கள். இவரது இந்த நடைக்கோலங்களை விலக்கி விட்டு அவரது பார்வையின் அடிப்படைகளைக் கவனித்தால் அது அவரது சமகால - நவீனத்துவ - இருத்தலியற் கருத்துக்கள் என்பதை எளிதாகக் காண முடியும். தனிமனிதன் - காலம் - உறவுகளின் நிலையின்மை- மரணம் என்ற நவீனத்துவக் கருத்தியலினுள் பொருந்தி வரக்கூடிய கதைகளையும், வராத கதைகளையும் மெளனி எழுதியுள்ளார். மெளனியின் கதைகளில் வரும் கதை மாந்தர் பேசும் பேச்சுக்களிலும் இருத்தலியலின் சாயலைப் பெரிதும் பார்க்கலாம். எனது இந்தக் கருத்துக்களின் சாரத்தை ஜெயமோகனிடம் இருந்துதான் பெற்றுக்கொண்டேன். ww
தமிழில் நவீனத்துவ எழுத்து அறிமுகமாவதற்கு முன்பாகவே மெளனி தனது கதைகளை எழுதத் தொடங்கி விட்டார் என்பது விஷேசமாக அவருக்குப் பெருமை சேர்க்கக் கூடிய ஒன்றுதான்.
ஐம்பதுகளில் தோன்றிய மிக முக்கிய படைப்பாளிக ளென சுந்தரராமசாமியையும் ஜெயகாந்தனையும் கூறலாம். முதலில் சுந்தரராமசாமி பற்றி:
சு.ரா.அவர்கள் ஒரு முற்போக்கு எழுத்தாளராகத்தான் தனது படைப்புப் பணியை ஆரம்பித்தார். மார்க்சிய மனிதாபி மானமே அவரது எழுத்தின் அடிச்சரடாக அப்பொழுது இருந் தது. முற்போக்கு அழகியலின் கச்சிதமான வடிவம் நோக்கிய நகர்வை அவரது ஆரம்பச் சிறுகதைத் தொகுதிகளான அக்கரைச் சீமையிலே' 'பிரசாதம்' ஆகியவற்றில் நாம் காண முடியும். சிறுகதை வடிவ நேர்த்தியில் அதிகம் அக்கறை மிகுந்த
17

Page 12
சு.ரா. அவர்கள் பின்னர் ஒரு நவீனத்துவப் படைப்பாளியாக மலர்ச்சியடைந்தது ஒரு இயல்பான நிகழ்ச்சியே. அவரது கதைகள் பொதுவாக, கச்சிதமான வடிவழகும் ஓரளவு உணர்ச்சி கலவாத நடையும் உட்குறிப்பின் மூலமே கதையை நகர்த்தும் பாங்கும் பொருந்தியவையாக விளங்குகின்றன. இத்தன்மைகள் அவரை அச்சொட்டாக நவீன படைப்பாளி யாக நமக்கு இனம் காட்டுகிறது. அவருடைய இக்காலகட்டக் கதைகளுள் சிறப்பானவை என பல்லக்குத் தூக்கிகள் கொந்தளிப்பு ஆகியவற்றைக் கூறலாம். சு.ரா. அவர்கள் நவீனத்துவத்தின் இறுக்கமான கூறுமுறையைக் கொண்ட கதைகளை எழுதி வந்த போதும் மனிதாபிமானச் செறிவுள்ள - சரளமும் எளிமையும் மிக்க கதைகளையும் எழுதினார். அத்தகைய கதைகளில் ரத்தினாபாயின் ஆங்கிலம், பக்கத்தில் வந்த அப்பா, ஆத்மாராம் சோயித்ராம் ஆகியன தமிழின் சிறந்த கதைகளின் வரிசையில் இடம்பெறக் கூடியவை. அவரது ஆரம்பகாலக் கதைகளில் கோவில்காளையும் உழவுமாடும், பிரசாதம், திரைகள் ஆயிரம், வாழ்வும் வசந்தமும் சிறப்பானவை.
சு.ரா. மூன்று நாவல்களை எழுதியுள்ளார். அவரது முதல் நாவல் ஒரு புளியமரத்தின் கதை நல்ல நாவல் என - பல விமர்சகர்களின் அங்கீகாரம் இதற்குக் கிடைத்துள்ளது. இந்நாவல் சுதந்திர இந்தியாவின் சமூக நெருக்கடிகளையும் அதனடியான சமூக மாற்றத்தையும் காட்டுவதோடு, சிதில மடைந்துவிட்ட மனிதனின் தார்மீகச் சரிவையும் சித்தரிக் கின்றது. அத்துடன் இயற்கைக்கும் மனிதனுக்குமிடையிலான இசைவின்மையையும் கூறுகிறது. தாமோதர ஆசான் எனும் அற்புதமான மரபுசார் மனிதனை ஒரு கதை சொல்லியாக இது நமக்கு அறிமுகம் செய்கிறது.
18

அவரது இரண்டாவது நாவல் ஜே.ஜே.சிலகுறிப்புகள் இந்நாவல் வழமையான சொல்லுமுறையைக் கொண்ட ஒன்றல்ல, முன்பின்னாக மாற்றிப் போடப்பட்ட அமைப்பு முறையைக் கொண்டது. மிகப் பரவலான கவனிப்பைப் பெற்ற இந்நாவல், சாதக பாதகமான விமர்சனங்களுக்கு உட்பட் டுள்ளது. இந்நாவலின் உருவாக்கம் மரபு ரீதியான முன்னைய சித்தரிப்புமுறையைப் பின்பற்றாது, வாழ்க்கை வரலாறு, டயறிக் குறிப்புகள் ஆகியன இணைந்து உருவான ஒரு வடிவப் பொலிவைப் பெற்றுள்ளது. நாவலில் ஜே.ஜே. என்ற ஜோசஃப் ஜேம்ஸ் என்ற பாத்திரம் மிகுந்த நம்பகத் தன்மையுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நாவல் இருத்தலியற் கூறுகளைக் கொண்டநாவல் என்பதை ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன்.
குழந்தைகள் பெண்கள் ஆண்கள் சு.ரா.வின் கடைசி நாவலாகும். இந்நாவல் அவரது முன்னைய நாவல்களின் தரத்தைத் தொடாத போதும், சோடை போன படைப்பல்ல; பாராட்டக்கூடிய படைப்புக் கூறுகள் பலவற்றைக் கொண் டுள்ளது. இந்நாவல் அவரது வாழ்வையே அடியொற்றிச் செல்லும் சுயசரிதைப் பாங்கான ஒன்றாகும். சுதந்திரத்துக்கு முன்னான முப்பதுகளின் பிற்கூற்றைப் பின்புலமாகக் கொண்டு எழுதப்பட்ட இந்நாவல், அக்கால அரசியலையும் காந்தியக் கருத்துக்களையும் தொட்டுச் செல்கிறது. குடும்ப உறவின் ஆழம், நெகிழ்ச்சி, நண்பர்களின் ஈடுபாடு , விலகல் எனப்பல விஷயங் களைப் பதிவுசெய்கிறது.
அடுத்து ஜெயகாந்தன். ஜெயகாந்தன் புதுமைப்பித்தன் வழிவந்த எழுத்தாளர். புதுமைப்பித்தனைப்போல இவரும் பல விஷயங்களைத் தொட்டெழுதியவர். மனித வாழ்வின் ஓரங்களை விண்டு காட்டிய மேதைமை இவருக்கு உண்டு என்பது எனது அபிப்பிராயம். மார்க்சிய ஈடுபாடுடைய இவர் முன்முடிபுகளோடு எழுதுவதால் இவரது எழுத்து அனுபவச்
19

Page 13
செழுமை மிக்கவையாக இருந்த போதும் - உருவ வழுவுடையவை எனும் கருத்து, சு.ரா. போன்றவர்கள் மத்தியில் உண்டு.
நவீனம் என்பது ஒரு மனநிலை, பெருமூச்சை , மனச்சாட்சியின் குத்தலைப் பகுத்துப் பார்த்தல் எனும் கருத்தை ஆரம்பத்தில் கூறினேன். இத்தகைய மனோ பாவத்தை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களை புதுமைப்பித்தனைப் போல ஜெயகாந்தனும் உருவாக்கியுள்ளார். இதனை அவரது சிறுகதைகள், குறுநாவல்கள் மற்றும் நாவல்களில் பரவலாகக் காணலாம்.
புதிய வார்ப்புகள் கதையில் வரும் இந்துவின் தாய் குஞ்சம்மாவினது மரபை மீறிய நடத்தை புதுமையானது. இந்துவை அவள் விரும்பியவனுடன் - குடும்பத்தினரது எதிர்ப்பையும் பொருட்படுத்தாது ஆசீர்வதித்து அனுப்புகிறாள். பிராமண தர்மங்களுடன் ஒத்தோட முடியாத - மந்திரங்களைத் தப்பும் தவறுமாக ஒதும் - லெளகீகப் பிடிமானங்களுடன் அல்லாடும் கணபதி சாஸ்திரிகள் - பூணுாலை அறுத் தெறிந்துவிட்டு, தன்னிலை விளக்கமாக, கடிதமொன்றை மகனுக்கும் மருமகளுக்கும் எழுதி வைத்துவிட்டு, வீட்டிலிருந்து வெளியானாய் (Outsider) விலகும் மனோ தர்மத்தைக் காட்டும் சுய தரிசனம். இளம் விதவையான கீதா, ஹித்திப் பண்டிதரான ராமச்சந்திரனை பதிவுத்திருமணம் செய்து கொள்வதற்கு மனதளவில் எடுத்த முடிவை - குடும்பத்தினர் வெறுத்த போதும் ஆதரித்து நிற்கும் கெளரிப் பாட்டியும் - அவள் தனது பேர்த்திக்காக மகனிடம் வாதாடும் வல்லமையும் புதிய மனோபாவத்துடன் பதிவாகும் யுகசந்தி. இன்னும் அந்தரங்கம் புனிதமானது கதையில் வரும் பேராசிரியர் சுந்தரம், அவரது மனைவி, மூத்த மகன் வேணு ஆகியோருக்கு இடையிலான முரணை ஒரு அபூர்வமான புதுத் தோரணையில் பார்க்கும் கதை
20

சொல்லியின் பார்வை. பல்வேறு முரண்பாடுகள் பல லட்சணங் கள் வாய்க்கப்பெற்ற ஒரு வினோத வார்ப்பு பிரளயம் குறுநாவலில் வரும் செல்வம். அவனுடனான நீண்ட நாள் தொடுப்பை திருமணமானதும் துண்டித்துக் கொள்ள விரும்பும் பாப்பாத்தி - தமிழ் புனைவிலக்கியப் பரப்பில் புத்தம் புதியவள். இன்னும் பிரமோபதேசம் குறு நாவலில் வரும் சங்கரசர்மா, அவரது மகள் மைத்திரேயி, அவளைவிரும்பும் கொம்யூனிஸ் டான சேஷாத்திரி என்று எல்லாருமே விரித்துக் காட்டும் உலகம் நவீனமும் முற்போக்குத் தனமும் மிக்கதாகும். இலக்கணம் மீறிய கவிதையில் வரும் சரளாவும் கோகிலா என்ன செய்து விட்டாளில் வரும் கோகிலாவும் வெவ்வேறு நியாயங்களுக்கும் தர்மங்களுக்கும் கட்டுப்பட்டு நின்று ஒளிர்பவர்கள்.
அவரது நாவல்களில் முக்கிய மானவை என பாரீஸுக் குப் போ ! ஒரு மனிதன் ஒரு உலகம் ஒரு வீடு ஆகியவற்றைக் கூறலாம். பாரீஸஸுக்குப் போ!நாவலில் வரும் லலிதா, மகாலிங்கம், சாரங்கன் புதிய தடங்களில் நகர்ந்து புதிய வெளிகளைத் தொடுபவர்கள். 'ஒரு மனிதன், ஒரு உலகம் ஒருவீடு' நாவலின் தனித்தன்மை யாதெனில் அதில் வரும் சகல கதாமாந்தரும் நல்லவர்கள், தீயதின் சாயல் படியாதவர்கள். குறிப்பாக ஹென்றி நல்லதின் பூரண அம்சம். ஒரு ரிஷியின் குறியீடு. இப்பண்பு தமிழுக்குப் புதியது. −
ஜெயகாந்தனது மனிதர்கள் அதிக சிந்தனைப் பளுவும் அதிகம் உரையாடுபவர்களாகவும் காணப்படுகிறார்கள். இதனைப் பெரும்குறையாகவே பல விமர்சகர்கள் கருதுகி
றார்கள்.
21

Page 14
"இளமையிலேயே அனுபவ வாயிலாகப் பெற்ற மார்க்சியப் பார்வை, பிற்காலத்தில் பாரதி, காந்தியடிகள், விவேகானந்தர் வழியே பெற்ற செயற்பிடிப்புள்ள அத்வைத வேதாந்தப் பார்வை-இரண்டையும் இணைக்க முயலும் வழியில் பாரதியடன் நடக்கிறார்." என விமர்சகர் ஆர்.கே. கண்ணன் இவரை மதிப்பிடுகிறார். வேதாந்தத்தின் மீதான பிரியமும் பிரேமையும்தான் இவரை ஜய ஜய சங்கர நாவலையும் இவரது மிகச் சிறந்த குறுநாவலான விழுது களையும் எழுதத் தூண்டியிருக்க வேண்டும்.
ஜெயகாந்தன் ஆரம்ப காலத்தில் - அதாவது மார்க்சியப் பார்வையுடன் சென்ற தடத்தில், தமது படைப்பாற்றலை வெளிக்காட்டியவர்களாக டி.செல்வராஜ், பொன்னிலன், கு.சின்னப்பா பாரதி, செயப்பிரகாசம், சு.சமுத்திரம், மேலாண் மை பொன்னுச்சாமி, பாமா, பூமணி என்று இன்னும் சிலரையும் கூறலாம். சில வேறுபாடுகள் இருந்த போதும் இவ்வகையில் சிறப்பித்துக் கூறக்கூடியவர் எனச் சிலுவை ராஜ் சரித்திரம் , காலச்சுமை ஆகிய சுயசரிதைப் பாங்கான நாவல்களைத் தந்த ராஜ் கெளதமனைக் குறிப்பிடலாம்.
புதுமைப் பித்தன் முதல் ஜெயகாந்தன் வரையிலான நவீனத்துவாதிகளின் படைப்பாக்க முயற்சியின் தொடர்ச்சியை வண்ணநிலவன், வண்ணதாசன் அஸ்வகோஸ், அம்பை, பிரபஞ்சன், தமிழ்ச்செல்வன், கெளதமசித்தார்த்தன், நாஞ்சில் நாடன், பாவண்ணன், தோப்பில் முஹம்மது மீரான், இமயம் ஆகியோரிடம் காணலாம். ஆனால் புதுமைப் பித்தனுக்கும் ஜெயகாந்தனுக்கும் இணையாக ஒரே தரத்தில் வைத்து மதிக்கக் கூடிய-அழுத்தமான வீச்சுடனும் வீரியத்துடனும் தமிழ் புனை விலக்கியச் சூழலை பாதித்தவர் ஜெயமோகன். அந்தவகையில் அவரது எழுத்தும் இலக்கியமும் முக்கியத்துவம் பெறவே
22

செய்கின்றன. அவரது சிறுகதைகளான மாடன் மோட்சம், திசை களின் நடுவே என்பன பல நவீனக் கூறுகளைத் தன்னகத்தே கொண்ட நல்ல கதைகள். பத்மவியூகம் , டார்த்தீனியம் என்பன சிறப்பான குறுநாவல்கள். அவரது நாவல்களில் சாதனை என விஷ்ணுபுரத்தையும் ஏழாம் உலகத்தையும் குறிப்பிடலாம்.
ஜெயமோகன் தீவிரமான பரிசோதனைப் பிரியராக இருந்தபோதும் - பிற நாட்டு இலக்கிய ஆளுமைகளை உள் வாங்கி, ஒரளவு யதார்த்தப் பிடிமானத்துடனும் வடிவ நெகிழ்ச்சி யுடனும் தமிழ் மண்ணுக்கே உரிய வாசனையுடனும் கதை சொல்லுகிறார்.
ஜெயமோகனுடன் சமகாலத்தில் எழுதும் எழுத்தாளர் களும் பரிசோதனைப் பிரியர்களாகவே இருக்கிறார்கள். அவர்களில் கோணங்கியும் ராமகிருஷ்ணனும் முக்கியமான வர்கள். இவர்களது எழுத்தில் யதார்த்தப் பண்புகள் தளர்ந்து, மிகுகற்பனை (Fantasy) மாய யதார்த்தப் பண்புகள் (Magical realism) மேலோங்கியிருப்பதை அவதானிக்கலாம். இவர்களில் கோணங்கியின் எழுத்து, தேர்ந்த வாசகனைக் கூட - புரிந்து கொள்ளமுடியாத வகையில் திகைப்படைய வைக்கிறது. ராமகிருஷ்ணன் மிக முக்கிய படைப்பாளி; அவருடைய நெடுங்குருதி தமிழில் வந்த நல்ல நாவல்களிலொன்று.
இவ்விடத்தில் ஈழத்து நவீன எழுத்தாளர் பற்றியும் நான் கூற வேண்டும். தமது படைப்புகள் மூலம் எனது மனதைத் தொட்டவர்களென இலங்கையர்கோன், அ.செ.மு., எஸ்.போ., மு.த. சண்மும் சிவலிங்கம், நந்தினி சேவியர், ரஞ்சகுமார் உமாவரதராஜன், அ.முத்துலிங்கம், பூனிதரன் மு.பொ., வ.அ. இராசரத்தினம், தேவகாந்தன், மருதூர்க்கொத்தன், தெளிவத்தை ஜோசெவ், என்.எஸ்.எம். இராமையா, எம்.எல்.எம்.மன்சூர், செ.யோகநாதன், அ.யேசுராசா, குப்பிளான் ஐ.சண்முகன்,
23

Page 15
சாந்தன், செங்கையாழியான், கவியுவன், குந்தவை தாமரைச்செல்வி ஆகியோரைக் கூறலாம். w
நம்பிக்கை தரும் இளம் படைப்பாளிகளாக ஒட்ட மாவடி அரபாத், நஸ்ருத்தீன், தாட்சாயினி, இராகவன், திசேரா ஆகியோரைக் குறிப்பிடலாம்.
ஈழத்தில் பரிசோதனை ரீதியான நவீன பாணிக் கதைகளும் எழுதப்படுகின்றன. உமாவரதராஜனின் அரசனின் வருகை , ரஞ்சகுமாரின் கோளறு பதிகம், செய்கையாழியானின் கஞ்சிப் பொழுது, சண்முகம் சிவலிங்கம் அவர்களது காலடி, மு.பொவின் கடலும் கரையும், எஸ்.நஸிருத்தீனின் இருக்கும் இடத்தை விட்டு, திசேராவின் கபாலபதி, வி.கெளரிபாலனின் ஒப்பனை நிழல், சட்டநாதனின் சின்னத்தேவதைகள் என்பன
அந்தவகையில் பாராட்டப்படக்கூடியன.
A
24


Page 16


Page 17
க.சட்டநாதன்
ஈழத்திலும், வெளிநாடுகளி கணிப்பையும் பெற்ற சமகால ஒருவர். இதுவரை சுமார் நாற்பு நாவலையும் படைத்துள்ளார்.இ "உலா" (1992) வுக்கு யாழ் இல சுதந்திர இலக்கிய அமைப்பு வட இலக்கிய அமைப்பு இலங்கைச் பரிசில்களை வழங்கிக் கெளரவித்து
இவரது படைப்புகள் மல்லிகை, ! திசை, வெளிச்சம், வீரகேசரி, ந போன்ற இதழ்களில் வெளிவந்துள்ள கனகநாயகம் ஆகியோரால் தமிழ EE5C05E5St Journal of South Asi
A Sri Lankan Mosaic Eggub SL
“மென்மையான உணர்வுகளை வதில் வெற்றிபெறுவதால் ஈழத் தனித்துவத்தை நிலைநாட்டியுள்ள இவரைப் பற்றி குறிப்பிடுகிறார்.
ஏ. ஜேயின் நெருங்கிய நண்பர்கள்
பட்டதாரி ஆசிரியராவார். ஏ. ஜே. நினைவுரையை இவர் வழங்க மு5
இரா. சிவசந்திரன்

லும், தனிக்கவனத்தையும், எழுத்தாளர்களில் சட்டநாதனும் து சிறுகதைகளையும் ஒருதனு வேரது சிறுகதைத்தொகுப்பான 0க்கிய வட்டம், அகில இலங்கை கீழ் மாகான அரசின் சாகித்திய சாகித்திய மண்டலம் ஆகியன |ள்ளன.
அஞ்சலி, பூரணி, அலை. நங்கை, ாங்கூரம், மூன்றாவது மனிதன் ான. ஏ. ஜே. கனகரத்னா, செல்வா ாக்கம் செய்யப்பட்ட இவரது இரு an Literature Wol - 22 Egub ம் பெற்றுள்ளன.
க் கலைநயத்தோடு வெளிப்படுத்து
It' EET gs, ஜே. கனகரத்னா
fல் ஒருவரான இவர் ஓய்வுபெற்ற கனகரத்னா முதலாம் ஆண்டு ன்வந்தமை மகிழ்ச்சிக்குரியதே.
i