கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: எங்கும் நிறைந்த இறைவா

Page 1
எங்கும் நிறை இறைவா
த.மனோகரன்
திருவருள் வெளியீடு
12-7-97
கணனி அச்சுப் பதிப்பு: ச 31/21, டோசன் வீதி, ெ தொலைபேசி : 331439.

நலர்டொட்ஸ் நிறுவனம், கொழும்பு - 2

Page 2
நூலின் பெயர்: "எங்கும் நிறைந்த இறைவா"
ஆசிரியர் : த. மனோகரன்
முதற்பதிப்பு : ஆனி 1997 (12-7-1997)
அச்சிட்டோர் : கலர்டொட்ஸ் நிறுவனம்

ஆசியுரை
சுவாமி ஆத்மகனாநந்தாஜி அவர்கள் ( கொழும்பு இராமகிருஷ்ண மிசன் - தலைவர் )
திரு. த. மனோகரன் அவர்கள், எழுதியுள்ள எங்கும் நிறைந்த இறைவா! என்னும் இக்கவிதைத் தொகுப்பு நூலுக்கு வாழ்த்துரை வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
திரு. த. மனோகரன் இதற்கு முன்னரும் " இறைவா உன்னைத் தான் ” என்னும் தலைப்பில் ஒரு கவிதைத் தொகுப்பு நூலை வெளியிட்டுள்ளார்.
இந்நூல் அவரது இரண்டாவது வெளியீடு. அவரது முந்தைய நூலைப் போல இந்நூலிலும், இலங்கைத் திருத்தலங்கள் பலவற்றில் அமர்ந்து அருள்புரியும் இறைவனைப் போற்றிப் புகழ்ந்துள்ள பாடல்கள் அடங்கியுள்ளன.
எங்கும் நிறைந்துள்ள இறைவனை மற்ற ஜீவராசிகளிலும் கண்டு, எல்லா உயிர்களுக்கும் அன்பு செலுத்துவதே சமயத்தின் உன்னத நிலை.
திரு. மனோகரன் அவுர்களக கன்முயற்சியைப் பாராட்டி வாழ்த்துகிறோம்.

Page 3
அறிமுகவுரை
திரு. கந்தையா நீலகண்டன் (சட்டத்தரணி)
பொதுச் செயலாளர் - அகில இலங்கை இந்து மாமன்றம். சொல்லும் பொருளும் போல் இணைந்திருக்கும் ரீசிவகாமி சமேத ரீ நடராஜப் பெருமானின் அருளை முதற்கண் வேண்டி நிற்கின்றோம். இந்த நாட்டின் இந்துமத நிறுவனங்களின் கூட்டமைப்பான - ஒன்றியமான - அகில இலங்கை இந்து மாமன்றத்தின் துணைச் செயலாளர் தம்பி த. மனோகரன் ஆக்கிய இந்நூலினைப்பற்றி என் உள்ளத்தில் எழுந்த சில கருத்துகளை முன்வைக்கிறேன். தம்பி மனோகரன் மாமன்றத் துணைச்செயலாளர் மட்டுமல்ல, அனைத்திலங்கை இந்து வாலிபர் சங்கச் செயலாளரு மாகப் பல ஆண்டுகள் பணிபுரிகின்ற ஆர்வமும் உணர்ச்சியும் மிக்க இளந்தொண்டர். நாட்டின் பலபகுதிகளிலும் உள்ள திருத் தலங்களைக் கவிதைகளினால் வணக்கம் செய்திருக்கின்றார்.
வழங்கிவரும் திருமறைகள் காட்டும் வழி நல்லவழி என்பதை நாம் உணர்ந்துவிட்டால் பழியேது பாவமேது இப்புவியில் பகையொழித்துப் பக்குவமாய் வாழலாமே " என்று நல்வழி எடுத்துரைக்கும், கவிஞர் மனோகரன்
திருநீறு பூசிவிட்டால் போதுமல்ல திருவேடுபகரும் வழிநடத்தல் வேண்டும் மனமதிலே உண்மையொளி ஏற்றிவிட்டால் மதியெமக்கு நல்லவழி காட்டிநிற்கும்" என்று சுட்டிக்காட்டவும் தவறவில்லை.
நாட்டினிலே நல்லாட்சி எந்நாளும் நிலைத்துவிட ஆட்டிப் படைக்கின்ற அரக்கநிலையும் தானழிய சித்தாண்டி வேலவனை வேண்டியும்,
சங்கடங்கள் தீர்த்தருளும் திருக்கோயிலான திருக் கோயிலூர் முருகனைப் புகழ்ந்தும், 4.

இருள் தரும் துன்பநிலை இல்லாதொழித்திட புத்தளம் அமர்ஜோதியைப் பணிந்தும்,
ஏங்கி நிற்கும் எங்களுக்கு துணையாய் வருமாறு மாமாங்கப் பிள்ளையாரை அழைத்தும்,
மங்கிவிட்ட எம்வாழ்வு மகிழ்ச்சியுற கொழும்பு ஜயந்திநகர் முருகன் அருள்கோரியும்,
தீவகம் முழுவதும் தீமைகள் ஒழித்துவிட குருநாகல் ரீ கதிர்வேலாயுத சுவாமியின் திருப்பாதம் போற்றியும்,
அலைமோதும் மனங்களில் ஆறுதலைத்தர மலை சூழ்ந்த மாநிலக்குன்றினிலே எழுந்தருளியிருக்கும் அட்டன் மாணிக்கப் பிள்ளையாரைத் துதித்தும்,
கிழக்கிலங்கை எழுந்தருளி கிலேசமதனையறுக்கும் திருகோணமலையமர் பத்திரகாளி திருக்கடாட்சத்தை நாடியும், மன்னார் தீவகத்தில் மாண்புற வீற்றிருக்கும் சித்தி விநாயகன் புகழ் பாடியும்,
நாடுமுழுவதும் கவிதைகளில் உலாவிவரும் மனோகரன் "போர்க்களமாய் உன்பதியும் இருப்பதேன் முருகா" என செல்வச்சந்நிதி முருகனை மனமுருகி வினவி நிற்கின்றார்.
தன் சொந்த இடமான கொழும்புத்துறை நற்பதியில் கோயில் கொண்ட மன்றுளாடும் விநாயகரையும் போற்றி,
மலைத்துநிற்போர் மனக்கவலை போக்கிடும் மாத்தளை முத்துமாரியம்மன் புகழ் பாடியும்,
தெகிவளையில் கோயில் கொண்டு திக்கெல்லாம் அருளும் வெங்கடேசுவரப் பெருமாளைப்பாடி சுதுமலையில் எழுந்தருளி பசியகற்றி உயிரளிக்கும் புவனேஸ்வரி அம்மனுக்கு தோத்திரம் செய்து,
கல்லான மனங்களையும் கரையவைக்கும் காலி மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு கவிபாடி,
பொல்லாவினைகளை அறுத்தெறியும் நல்லூர்க் கந்தனைப் போற்றி,
மலைத்துநிற்கும் எங்களுக்கு மலைசூழ்ந்த திரு விடமாம் கண்டியில் வழித்துணையாய் இருக்கும் கட்டுகலைப் பிள்ளையாரையும் தரிசித்து, w
5

Page 4
கொக்குவிலில் மஞ்சவனப்பதியமர்ந்த மாமணி முருகனையும் போற்றி,
இராமபிரான் பூசையினால் பெருமை கொண்ட முனிஸ்வரம் அமர் ஈஸ்வரனையும் வணங்கி,
வண்ணை நற்பதியினில் வீற்றிருக்கும் வரதராஜப் பெருமாளையும் வலம் வந்து,
கொழும்பு முகத்துவாரத்தில் ஓங்கார ஒலி எழுப்பும் பத்திரகாளியம்மனை வணங்கி,
பாடல்கள் பல பாடி தொகுத்து இந்நூலை வெளியிடும் துணிச்சல் மிக்க மனோகரனின் தெய்வீகப் பணி தொடர வேண்டும். அதற்கு நாம் எல்லோரும் ஆதரவு வழங்கி நிற்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.
என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறே.
என்ற திருமூலர் வாக்கில் வளர்ந்துவரும் தம்பியின் சேவை உண்மையில் நல்லதொரு மகேஸ்வரன் பூசை,
எல்லோர்க்கும் ஒரே இறைவன் என்ற பரந்த நோக்கில் அகிலமெங்கும் நிறைந்த இறைவனை ஒரு பாடலில் காணும் மனோகரன் எச்சமயம் காட்டும்வழி நல்வழியென்று இயம்பி எம்மிடையே சண்டை வேண்டாம் என்று சமரசமும் கூறியிருக்கிறார்.
விதி வகுத்த வழிநடத்தும் நவநாயகர்களையும் மறவாது துதித்து நிற்கின்றார் இந்நூல் ஆசிரியர். சோதனைகளும் வேதனைகளும் மிகுந்த காலத்தில் வாழ்கின்ற எங்களுக்கு நவக்கிரக துதியை நற்றமிழில் இயற்றித்தந்திருக்கின்றார் அவர்.
மனோகரனின் உள்ளக்கிடக்கையில் இருந்து எழுந்த இத் தெய்வீகக் கவிதைகளை வாசித்துக்கொண்டிருக்கும் வேளையில் அன்று பாடசாலையில் படித்த சில வரிகள் - கவிமணி தேசிய விநாயகம்பிள்ளையின் அந்த செந்தமிழ் பாடல்தான் என் எண்ண அலைகளுல் திரண்டுவந்தன. அப்பெருங் கவிஞர் கூறியிருந்தார்:- 6

"உள்ளத் துள்ளது கவிதை - இன்பம் உருவெடுப்பது கவிதை
தெள்ளத் தெளிந்த தமிழில் - உண்மை தெரிந்துரைப்பது கவிதை."
கவிதை எழுதும் திறமையில் இரண்டு வகையுண்டு என்று கூறலாம். இயற்கையாகவே ஒருவருக்கு உடன் பிறந்துள்ள கவிதாசக்தி. மற்றொன்று செயற்கையாகவே பயிற்சி செய்து கொண்ட திறமை. இதுபற்றி ஆராயுமிடத்து நாமக்கல் கவிஞர் இராமலிங்கம்பிள்ளை கூறினார்:-
"உடன் பிறந்த கவித்திறன் தெய்வீகமானது. இயற்கை கவிஞனுடைய் கவிதாசக்தியின் ஆவேசத்தினால்உருவாகும். அவை தாமாகவே இலக்கணத்துக்குப் பொருந்தும்."
இந்த எண்ண அலைகளை, இந்நூலின் அடுத்த பக்கங்களைப் புரட்டும் வாசகர்களின் மனதில், எழுப்பிக்கொண்டு, இந்நூலில் உள்ள கவிதைகளைப் படித்து முடிக்கும் போது இந்து இளைஞர்களின் செயலரின் படைப்புகள் தெய்வீகமானதா இல்லையா என்ற தீர்வை வாசகர்களாகிய உங்களிடம் விட்டுவைக்கிறேன்.
தீர்ப்பு வழங்கி எனக்குப் பழக்கமில்லை. என் தொழில் பாங்கில் நல்லதொரு வழக்கை வாசகர்களாகிய நீதிபதிகளிடம் விட்டுவைக்கிறேன் என்ற திருப்தியுடன் நிறைவு செய்துகொண்டு தம்பி மனோகரனுக்கு அகில இலங்கை இந்து மாமன்றத்தின் சார்பில் மனம் நிறைந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் *கூறிக்கொள்கிறேன்.

Page 5
வாழ்த்துரை
கலாநிதி பரமநாதன் வரதராஜன்
கணிதத்துறை - வடகரோலினா ராஜாங்க பல்கலைக்கழகம் கிறீன்ஸ்பரோ N.C.27410, ஐக்கிய அமெரிக்கா.
வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட புராண, இதிகாச காலங்களிலேயே இலங்கைத்தீவில் இந்துசமயம் சிறப்புற விளங்கியதென்பதற்குப் பல ஆதாரங்கள் உள்ளன. அதனைக் கருத்திற் கொண்டு போலும் திருமூலநாயனார் இலங்கையைச் சிவபூமி என்றார்.
இந்துசமயம் சிறப்புற விளங்கிய பழம் பெருமை கொண்ட இலங்கையின் சகல பாகங்களிலும் இந்துக் கோயில்கள் நிறைந்துள்ளன. இறைவன் எழுந்தருளி அருள் பாலிக்கும் திருக்கோயில்கள் சிலவற்றின் மீது பாடப்பட்டுள்ள இந்நூலில் உள்ள பாடல்கள் இறைவன் அருளை வேண்டித் துதிக்கும் பக்திநிறை பாடல்கள் என்றால் மிகையல்ல.
பாடல்களுடன் அக்கோயில்கள் பற்றிய குறிப்புகளும், படங்களும் சேர்க்கப்பட்டிருப்பது பயன்தரும் நன்முயற்சி எனலாம்.
இவ்வாறான நூல்கள் வெளிவருவது இந்துசமய வளர்ச்சிக்கும், சிறப்புக்கும் பேருதவியாக இருப்பதுடன் பல பாகங்களிலுமுள்ள திருக்கோயில்கள் பற்றிய அறிவைப் பரப்புவதாகவும் அமையும்.
இந்நூல் உலகின் பல பாகங்களிலுமுள்ள இந்து பெருமக்கள் கரங்களைச் சென்றடைய வேண்டும் என்ற எனது விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்வதுடன் நூலாசிரியர் திரு.த மனோகரனின் நன் முயற்சியை வாழ்த்தி வரவேற்பதில் பெருமை கொள்கின்றேன்.
8

வாழ்த்துரை
மு.மு.மு. மஹற்றுாப் கரீம்.
“அருளகம்" காத்தான்குடி.
"யாவருக்கும் இறையருளும், சாந்தியும், சமாதானமும் உண்டாவதாக."
ஓர் இலக்கை, இலட்சியத்தை அடிப்படையாகக் கொண்டு எழுந்தவையே இலக்கியங்களாகும். இதில் இசையுடன் இணைந்து பாடக்கூடியதாக என்றும் நினைவில் உருப்போடக் கூடியதாக இருக்கும் இலக்கிய வகைகளுள் கீர்த்தனையும் ஒன்றாகும்.
"உள்ளத்துணர்வே இலக்கியமாம்
ஊறும் இன்ப ஊற்றதுவாம் கள்ளம் துடைத்த கண்ணாடி
காட்டும், உருவிற் தெளிவுண்டாம் பள்ளம் பாயும் நீர்போல
பற்றி மனதைத் தன்பாலே அள்ளி இழுக்கும் இலக்கியத்தின்
அடிக்கல் மனித வாழ்வாகும்" என்று நாமக்கல் கவிஞர் கூறுவது போன்று உள்ளத்து உணர்வாக, ஊறும் இன்ப ஊற்றாக எழும் இலக்கியங்கள் காலத்தைக் காட்டும் கண்ணாடியாகவும் இருக்கின்றன. பள்ளம் பாயும் நீர்போல மக்கள் மனதைத் தன்பாலே அள்ளி இழுக்கும் இலக்கியங்களில் ஒன்றாக இசையுடன் பாடக்கூடிய கீர்த்தனைப் பாடல்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன என்று கூறினால் அது மிகையாகாது.
இசையுடன் மனம் கனிந்துருகிப் பாடக்கூடிய இக் கீர்த்தனைப் பாடல்கள் எளிமையான சொற்களில், பக்தி மணம்கமழக் கூடியதாக, பல இராகங்களில் பாடக்கூடியதாக அமைந்துள்ளமை பாராட்டப்பட வேண்டியதாகும். இப்பாடல்கள் என்றும் எமது நினைவில் நிலைத்து நிற்கக் கூடியவை.

Page 6
இப்பாடல்களில் சொற்சுவை, பொருட்சுவை, கற்பனைச் சுவை மாத்திரமன்றி எதுகை, மோனை, சந்தம். அத்தனையும் இணைந்து காணப்படுவது சிறப்புக்குரியதாகும்.
ஒரு காலத்தில் கீர்த்தனை என்றால் தெலுங்குப் பாடல்கள்தான் என்றிருந்த நிலையை மாற்றி தமிழிலும் பாடமுடியும் என்று இப்பாடல்கள் முத்திரை பதித்துவிட்டன.
மறையளித்த இறையோனின் மாண்பு உயர் கீர்த்திகளை கீர்த்தனையாய் யாத்தளித்து மன நிறைவாய்த் தந்து எம்மை மகிழ்வித்த மனோகரனின் அறம் வளர்க,-உயர் திறம் வளர்க.
1 Ο

வாழ்த்துரை
திரு.வெ.ஜே.ஆதர் அப்புஹாமி J.P
அதிபர்-சிலா/புனித பெர்ணதேத் தமிழ் மகாவித்தியாலயம். ( இலங்கை ஆசிரிய சங்கத் தலைவர் - சிலாபம்)
இறைவன் காலத்துக்குக் காலம் சமயங்களை இருவழி களுக்கும், ஞானிகளுக்கும் வழங்கி வந்துள்ளான். சமயங்கள் யாவும் இறைவன் ஒருவனே என்று கூறுவதை எல்லோரும் அறிந்திருந்தாலும் காலங்காலமாக ஏற்பட்டுவரும் ஏட்டியும் போட்டியும் மக்களிடையே பேதமையை வளர்த்து வேற்றுமைக்கு வித்திட்டுள்ளதையும் அறிகின்றோம். இதனால் கடவுள் ஒருவர் என்பதை மக்கள் மறந்து தம் வாழ்வை அழித்துக் கொண்டு பிறவிப்பயனை இழந்துவிடுவதைக் காணும் கற்றறிந்த நெஞ்சங்கள் யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் "என்ற உன்னத நோக்குடன் சமூகத்துக்கு நல்வழிகாட்டுகின்றன.
அந்தவரிசையில் அகில இலங்கை இந்துமாமன்றத் துணைச்செயலாளர் திரு. த. மனோகரன் அவர்களின் பரந்த மனப்பாங்கினை அன்னார் புனைந்துள்ள “எங்கும் நிறைந்த இற்ைவா" என்னும் கவிதைத் தொகுதியில் நாம் காண்கின்றோம். படிப்பவர் தம்முள்ளங்களில் படியும் படிக்குப் பக்குவமாகத் தெள்ளியதமிழ்நடையில் கவிதைகள் உருப்பெற்றிருப்பதை உளமாரப் போற்றலாம். அதுமட்டுமன்றி நம் நாட்டிற்கு தற்காலத் துக்கும் . சீர்தூக்கிப் பார்க்கின் எக்காலத்துக்கும் உகந்த நற்போதனைகள் நயத்துடன் வழங்கப்பட்டிருக்கின்றன. திரு. மனோகரன் அவர்களுடன் பழகக்கிடைத்த அரிய வாய்ப்பினைப் பெரும் பேறு எனக் கொள்கிறோம். கானகத்திடையிருந்து வந்து கமலமது உண்ணும் வண்டுபோல் யாமும் கவிதை மலர்களில் கருத்துக் கள்ளுண்டு மகிழ்ந்தோம்
இதனால், எல்லோரும் இன்புற்றிருக்க இக்கவிதைகளில் காட்டப்படும் கருத்துக்களைக் கவனத்திற் கொள்ளவேண்டுவது
ll

Page 7
எமது கடமையாகும். தம்மிலும் தவத்தில் மிஞ்சினாரைக் கண்டு அவரிடம் சென்று தர்மத்தையும் கேட்டு அதற்கியைய நடக்கும் நல்குரவர் வரிசையில் இருக்கும் கவிதையாசிரியரை நல்ல உள்ளங்கள் போற்றுகின்றன.
நாடளாவிய திருத்தலங்களின் பெருமையை அன்னார் வகுத்துள்ள கவிதைகளில் காண்கிறோம். தேவேந்திரமுனை முதல் பருத்தித்துறை வரையும், கொழும்பு முதல் மட்டக்களப்பு வரையும் பரந்து, தீவுப்பகுதிகளிலும் கோயில் கொண்டெழுந் 'தருளியுள்ள தெய்வங்களிடம் அவர் இறைஞ்சுவதும் இன்று சகலரும் தேடிநிற்கும் சமாதானம், சுபீட்சம், என்னும் விழுமிய தேவைகளையே என்பதால். அதற்குவழிகாட்டும் அவரது கவிதா ஞானத்தைப் போற்றி, வளர்க அவர் திருப்பணி என்றும் ஆசித்துத் தமிழுலகம் நலம் பெறவேண்டி நிற்கிறோம்.
2

அணிந்துரை
கலாகீர்த்தி, பேராசிரியர் GuT6öI. 1436uTabál Blabb, D. Phil. (Oxon.)
எல்லாம் வல்ல இறை சக்தியைப் பணிந்து போற்றித் துதித்த திருப்பாடல்கள், பக்தி இயக்க காலத்திலே தோன்றிய பின்பு, அவை தோத்திரமாக சிறந்து நின்றன. அவற்றையே அருட்பாடல்கள் என அனுமதிக்கும் வைராக்கியம் கூட உருவானது. இத்திருப் பாடல்கள்ன் தோற்றத்திற்கு முன்பு தோத்திரம் எவ்வாறு அமைந்திருந்தது?
திருமுருகாற்றுப் படையையும், பரிபாடல்களையும் நுணுகி நோக்கும்போது, முன்னைய தோத்திர மரபு அமைந்திருந்த வாற்றை ஒரளவு அனுமானிக்கமுடியும். அதுவும் பரிபாட்டுகளிலே சில இறைவனை முன்னிறுத்தி, சிறுசிறு தொடர்களால், வாஞ்சையுடன் போற்றிப் புகழ்வதை மறக்க முடியாது.
பஞ்சபுராண மரபு செல்வாக்கு அடைந்த பின்பு அதுவே சைவ பாரம்பரியத்திலே தனியிடம் பெற்றது. பத்தொன்பதாம் நூற்றாண்டிலே தமிழிசை இயக்கம் வீறுநடை போட்டபோது, அந்த இயக்கம் தோற்றுவித்த தமிழிசைப் பாடல்களிலே பல இறை பக்தியை உணர்த்துவனவாக அமைந்தன. இறை பக்தியை உணர்த்த புதிய தொரு வடிகாலை ஆனந்தத்தாண்டவர், முத்துத்தாண்டவர், கோபாலகிருஷ்ண பாரதியார் போன்றோர் முன்வைத்தனர். ஆன்மார்த்த வழிபாடுகளிலே இவை குறிப்பிடத்தக்க இடத்தினை வகிக்கத் தொடங்கின. இம்மரபினை பங்களுர் ரமணியம்மாள், பித்துக்குளி முருகதாஸ் சுவாமிகள் போன்றோர் ஜனரஞ்சகப்படுத்தினர்.
இப்பாடல்களிலே உள்ளமும் உணர்வும் கலந்து நின்று புதிய வேகமொன்றினை அளிப்பதை அவதானிக்கலாம். வடிவத்திற்குரிய முக்கியத்துவம் ஒசைக்கட்டினால் தானாகவே 13

Page 8
வந்து விழும் பண்பினை இவற்றிலே காணலாம். கனமான கருத்துகள் எளிய லாவகத்துடன் படிமானங்களை ஏற்படுத்தி விடுகின்ற அதிசயம் இங்கு வியக்கத்தக்கது.
மனோகரன் பாடல்கள் முன்பு கூறிய லட்சணங்களுக்கு நல்ல மேற்கோள். அவருடைய முதலாவது தொகுதியான "இறைவா உன்னைத்தான் . ” என்பதிலும் இந்த இரண்டாவது தொகுதி கனதிமிக்க ஆக்கங்களை உள்ளடக்கிச் சிறப் படைகின்றது. அவருடைய சிறப்பியல்பான சமூகக் கண்ணோட்டம் இங்கு முன்னையிலும் அழுத்தமாகப் படிந்திருக்கின்றது. ஆனால், ஆவேசமும் ஆத்திரமும் அடங்கி நிதானமும் தெளிவும் மேலோங்கி முதிர்ச்சியை முன் நிறுத்துகின்றன.
மனோகரன் தொடர்ந்து செல்லும் தடத்திலே மேன்மேலும் நறுமண மலர்கள் பூத்துக் குலுங்கட்டும் என்று முன்பு வாழ்த்தியிருந்தோம். ஆம்! அப்பண்பு இத்தொகுதிப் பாடல்களில் காணப்படுவதை நோக்கும் போது பெருமையடைகின்றோம்.
எல்லாம் வல்ல இறைவன் அவர் செல்லும் தடத்திலே மேன்மேலும் உந்து சக்தியாக நின்று வழி காட்ட வேண்டும்.
l4

முன்னுரை
மனித வாழ்வு மாண்புற இருநம்பிக்கைகள் வேண்டும். ஒன்று இறை நம்பிக்கை, மற்றது தன்னம்பிக்கை. இறை நம்பிக்கை இருந்தால் மட்டுமே தன்னம்பிக்கை ஏற்படும். நம்மைவிட மேலான சக்தி நமக்கு வழிகாட்டி, அருள் வழங்கி, காத்து வருகின்றது, அச்சக்தியின் துணை என்றும் எமக்கு உண்டு என்று அந்த மேலான இறைசக்தி மீது நம்பிக்கை கொண்டால் இந்த வையகத்தில் நல்லபடி வாழலாம் என்ற தன்னம்பிக்கை ஏற்பட்டுவிடும்.
இந்த நம்பிக்கை நம்மனங்களில் நிறைய வேண்டு மென்றால் அறியாமை என்கின்ற கொடுநிலை அகல வேண்டும். பல நூல்களைக்கற்றுப் பெற்ற அறிவால் கடவுளை அறிய முடியாது. ஆத்மீக சக்தியாலேயே இறைவனை அறியலாம் என்றார் யோகி அரவிந்தர்.
இன்று பெரும்பாலோர் பிறப்பால் தாம் சார்ந்த அல்லது புதிதாகச் சார்ந்த சமய சம்பந்தமான சில நூல்களைக் கற்று சமய வேறுபாடுகளைத் தூக்கிப்பிடித்துத் தர்க்கிப்பதிலேயே தம் காலத்தைப் போக்குகின்றனர். தமது சமயமே மெய்ச்சமயம் என்று வாதிப்பதிலேயே வாழ்நாளை இழந்து விடுகின்றனர். சமயம் காட்டும் பாதையில் நடந்து ஆத்மீக ஈடேற்றம் காணமுயல்பவர்கள் மிகச்சிலரே.
ஒரு குறிப்பிட்ட காலம் இம்மண்ணில் வாழ்ந்து மண்ணோடு மண்ணாகப்போகப் போகும் நாம் நம்மைப்படைத்து, காத்து, அளித்து, அருளி, மறைக்கும் ஆதியும், அந்தமுமில்லா அந்த அருளாளனை பல பெயர்கள் கொண்டுவழிபடுகின்றோம். பல வழிமுறைகளில் வழிபடுகின்றோம். எதற்காக? அவனது திருவருளால் எமது ஆன்மா நிம்மதியடைய வேண்டு மென்பதற்காக அல்லவா? இறைவனை அழைக்கும் பெயர்கள் பலவாகலாம். ஆனால், இறைவன் எல்லோருக்கும் ஒருவனே என்பதுதான் ஆழ்ந்து அறிந்த ஆன்மீக ஞானிகளின் முடிவாயிருக்கும்.
15

Page 9
ஒரு பெண்ணின் நிலையை எடுத்துக்காட்டாகக் கொண்டால் அவள் ஒருவருக்கு மகளாக, ஒருவருக்கு மனைவியாக, இன்னுமொருவருக்கு மருமகளாக, இருப்பதுடன் வேறு பலருக்கு தாயாக, சகோதரியாக, பேத்தியாக, பாட்டியாக, மச்சாளாக, பெரியம்மாவாக, சித்தியாக, மாமியாராக, இப்படிப்பல உறவு முறைகளைக் கொண்டவளாக இருக்கின்றாள். அது மட்டுமா மாணவியாக, ஆசிரியையாக, வழிகாட்டும் தலைவியாகக்கூட இருக்கின்றாள். இந்த நிலையிலே உறவு நிலை ஒரே பெண்ணைப்பல தரங்களிலே, பல பெயர்களிலே சித்தரிக்கின்றது.
இந்துக்கள் உலகைப் படைத்து, உறவைப் படைத்த இறைவனையும் தம்மைப்போன்றே உறவுமுறை வைத்துப் படைத்துப் பாவித்து தமது வாழ்வின் நிகழ்வுகள் போன்றே இறை வாழ்வும் இருக்கும் என்ற நம்பிக்கையுடன் சடங்குகள் செய்து மகிழும் பான்மை கொண்டவர்கள். எங்கும் நிறைந்த, எல்லாம் வல்ல, இறைவன் எம்முடனே எம்மத்தியிலே இருக் கின்றான். அந்தப் பேரருளான் எங்கும் நீக்கமற நிறைந்திருக் கின்றான்.
எங்கும் நிறைந்தவனே எம்வெருமான் என்பது இந்து சமய தத்துவம் மட்டுமல்ல இஸ்லாமிய தத்துவமும்கூட. எங்கும் நிறைந்தவனே அல்லாஹ என்று இஸ்லாம் கூறுகிறது.
எனவே எங்கும் நிறைந்த அந்த மாபெரும் சக்தி கோயில் கொண்ட திருக்கோயில்கள் சிலவற்றில் எழுந்தருளி அருள் வழங்கும் தெய்வங்களின் அருள் நாடி யாத்த இந்நூலிலுள்ள சில பாடல்கள் படிப்போர் மனங்களில் இறையருளை நிறைத்துவிடும் என்ற நம்பிக்கை உடையேன்.
கனியன் பூங்குன்றனார் கூற்றான "யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்பதையும் திருமூலர் கூற்றான "ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்பதையும் நாம் சிந்தையில் கொண்டால் சீர்மையுறலாம்.
இந்து சமயத்தவராகப் பிறந்து உலகம் போற்ற வாழ்ந்த இராமகிருஷ்ண பரமஹம்சரும், சுவாமி விவேகானந்தரும், மகாத்மா காந்தி அடிகளும் இராமலிங்க வள்ளலாரும் நமது 16

நாட்டினரான கொழும்புத்துறையில் வாழ்ந்த ஞானி யோகர் சுவாமிகளும் பகவான் சத்தியசாயிபாபாவும் பூங்குன்றனாரதும், திருமூலரதும் கருத்தினை அடியொற்றி சமயவேற்றுமை கடந்து சமரச சன்மார்க்கமான இந்து சமய அடிப்படைத் தத்துவத்தை நிலை நிறுத்திய உத்தம சீலர்களாவார்கள்.
அவர்கள் காட்டிய வழியே அறவழி, அன்புவழி, அருள்வழி, அவ்வழியே நம்மை உய்விக்கும் உலகை உயர்த்தும், என்பதை நாளும், பொழுதும் சிந்தித்துச் செயல்படுவோம்.
இந்நூலிலுள்ள பாடல்கள் யாப்பு, இலக்கண வரம்பின் பாற்பட்டவை அல்ல என்பதை அறிவேன். என்னை வழிநடத்தும் இறைவன், நான் நம்பிக்கையுடன் வழிபடும் இறைவன் தந்த தன்னம்பிக்கையால் எழுதிவிட்டேன். அதை உங்கள் திருக்கரங்களில் சேர்க்கவும் அருள்கூடிவிட்டது இப்பாடல்கள் கூறும் திருத்தலங்களின் அருளாட்சி உங்களை ஆட்கொள்ள எல்லாம் வல்ல எம்பெருமான் திருவடியைத் துதித்து நிற்கின்றேன். எனக்கு வழிகாட்டி நெறிப்படுத்தி இன்று இறைவன் திருவடியை அடைந்துவிட்ட எனது அன்புக்கும், மதிப்புக்கும் உரிய ஆசிரியப் பெருந்தகைகளான டானியல் பெர்னாண்டோ, மரியம்மா தம்பதியினரையும் ஜே.ஏ.எம். ஹசைன் அவர்களையும் உள்ளன்போடு வணங்கி நிற்கின்றேன்.
அத்துடன் இந்நூலுக்கு ஆசியுரை, அறிமுகவுரை, வாழ்த்துரை, அணிந்துரை வழங்கிய பெருந்தகைகளுக்கும், அச்சிட்ட கலர்டொட் நிறுவனத்திற்கும், நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். -
த . மனோகரன், "DTug" கொழும்புத்துறை வீதி, யாழ்ப்பாணம்.

Page 10

எல்லோர்க்கும் ஒரே இறைவன்
அகிலமெங்கும் நிறைந்தவனே இறைவன் அந்த அருளாளன் கருணை எங்கும் நிறையவேண்டும் ஆதியந்தம் இல்லாத அருட்கடலாம் இறைவன் ஆட்கொண்டு நற்கருணைப் பேறு வழங்குவான்
நதிகள் பல ஒடிச்சென்று சங்கமிப்பது நாற்புறமும் சூழ்ந்து நிற்கும் ஆழ்கடலிலே மனிதகுலம் பலசமய வழி நடந்தாலும் மாமணியாம் அவனடியில் ஒன்றுகூடுது
செந்தமிழில் சிவனென்று செப்பிடும் போதும் அரபுதனில் அல்லாஹற்வென்று அழைத்திடும்போதும் அருளளித்து, அரவணைத்துக் காப்பவனவனே அறியாது திசைமாறி மாறுபடலாமோ
புத்தன் வழிபுனித வழி என்று கொண்டாலும் புனித யேசுகாட்டும்வழி புண்ணியமென்றாலும் நற்கருணை காட்டும் வழி எல்லாமல்லவோ நன்குணர்ந்து கொண்டால் இங்குவேற்றுமையேது
எச்சமயம் காட்டும் வழி நல்லவழியென்று எம்மிடையே சண்டைகளும் வந்திடலாமோ வாழும் வழிகாட்டிச் சென்ற நன்குணர்ந்தோர்கள் வகுத்தவழி சென்றவனைத் தொழுது நிற்போமே
19

Page 11
சிவ தோத்திரம்
அறநெறியாளனே ஆறுதலளிப்பாய் இனிய நல் வாழ்வை ஈந்திட வருவாய் உமையவள் நாதா ஊற்றிடு கருணையை எத்திக்கும் ஐயனே ஏற்றிடு ஒளியை நீ ஐங்கரன் தந்தையே ஒருபொழுதெமைப்பார் ஓங்கார விளக்கமே ஒளடதமாகிடு. கருணைக் கடலே காட்சி கொடுத்திடு கிருபை வேண்டும் கீதம் நாடியே குகனைப் பெற்றாய் கூற்றுவன் தடுத்தாய் கெதியில் வருவாய் கேடுகள் களைவாய் கைலை வாசியே கொடுமைகள் துரத்திடு கோமகனே எம்மைக் கெளவிப் பிடித்திடு. சத்தியம் நீயே சாட்சியும் நீயே சித்தர்கள் போற்றிடும் சீலனும் நீயே சுகங்கள் தருவாய் சூதுகள் களைவாய் சென்னியில் திருவடி சேர்த்தே அருள்வாய் சைனியம் நடத்திடும் சொற் பெரு நாதா சோதியாயிருக்கும் செளமிய மூர்த்தியே. பரம் பொருள் நீயே பாடல் பெற்றோனே பிரம்படி பட்டாய் பீடமமர்ந்தாய் புண்ணியர் போற்றிடும் பூமகள் நாதா பெருமனம் கொண்டோய் பேதமை அகற்று பையவே வந்து பொன் மனம் தந்திடு போற்றுவோம் உன்னை நாம் பெளதிக மூலமே. தந்தையும் நீயே தாயுமாயுள்ளாய் திக்குகளெங்கும் தீமைகள் களைவாய் துன்பங்கள் போக்கித் தூய்மையைத் தருவாய் தெளிந்த நல்வாழ்வைத் தேடிடும் எமக்கு தைரியம் தந்து நீ தொல்லைகள் போக்கிடு தோத்திரம் உனக்கு தெளலமாயிருந்திடு
2O

சிவனே சரணம்
பிறப்புண்டு, வாழ்வுண்டு, இறப்புமுண்டு பேரருளோன் வள்ளல் எம் சிவபிரானின் திருக்கருணைக் கடாட்சம்எமைத் தீண்டிவிட்டால் திண்ணம் அது நற்பேறு அடைவதுண்மை
வழங்கிவரும் திருமறைகள் காட்டும்வழி நல்லவழி என்பதைநாம் உணர்ந்துவிட்டால் பழியேது, பாவமேது இப்புவியில் பகையொழித்துப் பக்குவமாய் வாழலாமே
திருநீறு பூசிவிட்டால் போதுமல்ல திருவேடு பகரும்வழி நடத்தல்வேண்டும் மனமதிலே உண்மையொளி ஏற்றிவிட்டால் மதியெமக்கு நல்லவழி காட்டிநிற்கும்.
சதிநாச மோசமெம்மை என்றும்திண்டா சித்தியத்தின் வழிநின்று வாழும்போது பதியான எங்கள்சிவன் பார்த்தருள்வான் பரிதவித்து இனியும்மணம் பதறவேண்டாம்
விதியென்றுஒன்றுண்டு, வினைப்பயனும் தானுண்டு விட்டவழி சிவன்வழியே என்றுவிட்டால் கிட்டவரும் துயரநிலை ஒட்டிவிட்டு எட்டிவந்து எமைக்காப்பான் சிவபிரானே
ஓம்என்ற ஒலியினிலே உறையும்அண்ணல் ஓங்கார நாதமாக ஒலித்திருப்பான் எங்கும் நிறைந்திருக்கும் எங்கள் ஈசன் எதற்கும்அவன் திருவடியைப் பற்றிநிற்போம்.
2.

Page 12
கொழும்புத்துறை மன்றுளாடும் விநாயகர்
கொழும்புத்துறை நற்பதியில் கோயில் கொண்டகணபதியே கொடுமைகளைந் தெம்மை ஆட்சிகொள்வாய் பெருநிதியே அல்லல் அகற்றியெமக்கருள் நல்கும் கணபதியே அறநெறியே நிலைத்துவிட அருள்செய்வாய் அருள்மதியே
இலந்தைக்குளமருகில் இருந்தருளும் கணபதியே இலக்கின்றித் தவிக்குமெம்மை வழிநடத்து பெருநிதியே அறிவுதந்து, ஆற்றல் தந்து அரவணைக்கும் கணபதியே அருகிருந்து காவல்செய்து அணைத்தருள்வாய் அருள்மதியே
யோகர் என்னும் சித்தர் வாழ்ந்தபதி அமர்ந்தருளும் கணபதியே யோக்கியமாய் நாம்வாழ விதிசெய்வாய் பெருநிதியே துன்பம் களைபவனே துயர்போக்கும் கணபதியே துயவள வாழ்வுவாழ துணைவருவாய் அருள்மதியே
மன்றுளாடும் பெருமான் என்ற நாமம் கொண்ட கணபதியே மலரடியைப்போற்றி நிற்போம் நாயகனே பெருநிதியே கல்விச்செல்வம் வழங்குமகம் அருகு கொண்ட கணபதியே காத்து அருள் செய்து எம்மை மீட்சிகொள்வாய் அருள்மதியே
உன்னருளால் உலகமெல்லாம் உய்ய வேண்டும் கணபதியே உற்றவரும் ஊரவரும் உயர்ந்திடச்செய் பெருநிதியே நற்கருணைப் பேரருளே நலங்கள் செய்யும் கணபதியே நாடியுந்தன் அடிபணிந்தோம் காவல் செய்வாய் அருள்மதியே
தேரேறிப் பவனிவரும் திருமகனே கணபதியே தேசமெல்லாம் உன்கருணை நிறைய வேண்டும் பெருநிதியே பாடிப்பணிந்துன்னை நாம் போற்றுகின்றோம் கணபதியே பாரினிலே எமக்கு நல்ல வாழ்வளிப்பாய் அருள்மதியே.
22

கண்டி கட்டுக்கலைப் பிள்ளையார்
கண்டி மாநகர்தனிலே கோயில்கொண்ட கணபதியே கண்ணின் மணியானவனே காத்தருள வந்திடய்யா கட்டுக்கலை தனிலமர்ந்து திருக் காட்சி தருபவனே கந்தனுக்கு மூத்தவனே உன் கருணை வேண்டுமய்யா.
வரும் வினைகள் துரத்திவிடும் வல்ல கணபதியே வந்த வினை போக்கிடவே விரைந்து வந்திடய்யா வலுவிழந்து நிற்கும் மக்கள் வளமுற்று வாழ உந்தன் வல்ல அருளன்றோ வகை செய்ய வேண்டுவது.
தந்தை தாய் பெரியரென்று தரணிக்குச் சொன்னவனே தறி கெட்டுத் திரிகின்ற மக்களை நீ திருத்திடய்யா தண்மதியைத் தலையின் மேல் கொண்டவனாம் உன்தந்தை தரணிக்கு அன்னவனின் கருணையை நீ சேர்த்து விடு.
சக்தியம்மை திருமகனே, சங்கரனின் மூத்தவனே சங்கடங்கள் வரும் வேளை தடை செய்து விட்டிடய்யா சண்முகனாம் உன் தம்பி வேல் கொண்டு வந்திருந்து சக்தியற்ற மக்களுக்குத் துணையிருக்கச் செய்து விடு.
மலை சூழ்ந்த திருவிடத்தில் மாசறுக்க அமர்ந்தவனே மலைத்து நிற்கும் எங்களுக்கு வழித்துணையாய் இருந்திடய்யா மன்னவனே, திருமகனே, மங்களத்தின் உறைவிடமே மதமறுத்து, அருளளித்து மாட்சி பெறக் கருணை செய்வாய்.
23

Page 13
அட்டன் மாணிக்கப் பிள்ளையார்
எட்டுத்திக்கும் அருள் பரப்பி ஏற்றிடய்யா கருணைஒளி மட்டில்லா பேருவகை வழங்குகின்ற தலைமகனே ஒட்டிவிடு தீமைகளை ஒளிரச் செய்வாய் நன்மைகளை அட்டன் மாநகரமர்ந்த மாணிக்கப்பிள்ளையாரே
மலை சூழ்ந்த மாநிலத்தில் குன்றினிலே குடிகொண்டாய் அலைமோதும் மனங்களிலே ஆறுதலைத் தருவோனே நிலைகுலையா நிம்மதிக்கு உன் துணையே வேண்டுமய்யா தலை தாழ்த்தி வணங்குகின்றோம் மாணிக்கப்பிள்ளையாரே
எழில் சூழ்ந்த மலையகத்தின் மத்தியிலே அமர்ந்தவனே வழித்துணையாயிருந்தெமக்கு நல்லவழி காட்டிடய்யா இழி நிலையைப் போக்கிவிடு இன்பநிலைதந்துவிடு விழி மலர்ந்து நிற்பவனே மாணிக்கப்பிள்ளையாரே
சலித்து நிற்போர் மனங்களிலே நம்பிக்கை ஒளிநீயே
கிலி கொண்டு துவண்டு நிற்போர் துயர் போக்கிஅருள்வோனே
வலிந்து வரும் துன்பநிலை அகற்றிவழிகாட்டிடுவாய் நலிவில்லா நலமளிக்கும் மாணிக்கப்பிள்ளையாரே
நன்மைகள் பெருகிடவும் நானிலத்தோர் மகிழ்ந்திடவும் உண்மையெங்கும் ஓங்கிடவும் ஊரெல்லாம் செழித்திடவும் மென்மையுள்ளம் கொண்டவனே அடிபணிந்தோம் உந்தனையே அன்பை பெருக்கியெமை ஆட்கொள்ளும் மாணிக்கப்பிள்ளையாரே
வீதிவலம் வந்து நலம் அருளுகின்ற திருமகனே நாதியில்லை என்றநிலை எமக்கென்றும் இல்லையைய்யா ஆதிசிவன் பெற்றமகன் அருகினிலே நீயிருக்க கதி நீயே கருணை செய்து ஆட்கொள்வாய் மாணிக்கப்பிள்ளையாரே
24.

மாமாங்கப் பிள்ளையார்
மட்டுமாநகர்தனிலே கோயில் கொண்டமாமணியே ஆட்டிநிற்பாய் உலகினையே ஆட்கொள்வாய் எங்களையே எட்டுத்திக்கும் திருவருளை ஏற்றிவிடும் தலைமகனே மட்டில்லா நன்மை தரும் மாமாங்கப் பிள்ளையாரே
எங்கும் இன்பம் நிறைந்துவிட தந்திடய்யா உன்னருளை ஏங்கி நிற்கும் எங்களுக்கு துணையாவாய் நீ யன்றோ கங்கையம்மை முடிகொண்டு காத்தருளும் சிவன்மகனே எங்கள் நலம் காத்திடவே துணைநீயே பிள்ளையாரே
தம்பி திருமுருகன் வேல் கொண்டு எமக்கருள தும்பிக்கை கொண்டவனே, தேவனே அருளிடய்யா நம்பிக்கை உன்னடியே நலம் எமக்குத் தந்திடுவாய் எம்மிதயம் கோயில் கொண்ட மாமாங்கப் பிள்ளையாரே
பெருவயிறு கொண்ட உந்தன் பேரருளை நாடுகின்றோம் வரும்தீமை விலக்கிவிட வல்லமையை அருளிவிடு அருகினிலே நீயிருக்க அச்ச்மெமக்கில்லையய்யா கருத்தினிலே நீயிருப்பாய் மாமாங்கப் பிள்ளையாரே
கிழக்கிலங்கை கோயில் கொண்டபார்வதியின் புத்திரனே அழகுமிகு திருநகரின் ஆட்சிநிலை உன்னதன்றோ ஈழ நல்ல நாட்டினிலே அமைதியெங்கும் நிறைந்துவிட வாழ்வளித்து, வழி வகுப்பாய் மாமாங்கப் பிள்ளையாரே
நன்மையெங்கும் நிறைந்துவிட நாமெல்லாம் நலமடைய இன்னல், பகை, கொடுமை இல்லாது மறைந்துவிட தென்னை தரும் கனியாம் தேங்காய் மிக விரும்பும் அண்ண்லே சரணடைந்தோம் மாமாங்கப் பிள்ளையாரே
25

Page 14
மன்னார் சித்தி விநாயகப் பெருமான்
சித்திகள் வழங்குமெங்கள் செல்வக் கணபதியே சத்தியத் திருவுருவே சங்கடந் தீர்ப்பவனே நத்தியடி பணிவோர் நலங்களின் காவலனே முத்தி தரவென்று மன்னார் அமர், மாமணியே
அண்டிவரும் அடியார்க் காறுதல் நீயல்லவோ ஆண்டியாய் நின்றிருந்த அழகனுக்கு மூத்தவனே வேண்டுவதுன் வரமே வேதனை நீங்கிவிட மண்டியிட்டே துதித்தோம் மன்னார் கணபதியே
மன்னார் தீவகத்தில் மாண்புற வீற்றிருந்து இன்னல் களைந்தெம்மை இனிதாய் வாழவைப்பாய் உன்னால் எம்வாழ்வு ஏற்றமடைந்திடவே மன்னனே மனமிரங்கி அருள்தர வந்திடய்யா
தும்பிக்கை கொண்டவனே துணையையே தந்திடுவாய் நம்பிக்கை கொண்ட எம்மை நாதனே கள்த்திடுவாய் வம்பு, வதை செய்து நம் வாழ்வைச் சிதைப்போரை நெம்பி அகற்றிவிட்டு நிம்மதியைத் தந்திடய்யா
மன்னார் திருப்பதியில் திரு விளக்காய் அமர்ந்தவனே உன்னாலே நாமென்றும் உயர்ந்து, உய்திபெற இன்பமே நிலைத்து எங்கும் உண்மையும் சேர்ந்துவிட ஈன்று விடு பெருங்கருணை சித்தி விநாயகனே
26

முன்னேஸ்வரப் பெருமான்
தில்லையிலே ஆடுகின்ற பேரருளே சிவனே திருவருளை நாடுகின்றோம் அருள் தருவாய் ஐயா வல்வினைகள் போக்கியெமைக் காத்தருளும் சிவனே வரந் தந்து எங்களுக்கு வாழ்வளிப்பாய் ஐயா
நாடி வந்து உன்பாதம் சரணடைந்தோம் சிவனே நல்லருளை வழங்கியெமைக் காத்தருள்வாய் ஐயா பாடித் துதித்துன்னை நாம் போற்றுகின்றோம் சிவனே பார்த்து அருள் வழங்கியெமை ஆதரிப்பாய் ஐயா
பூவுலகில் எமக்குத் துணை நீயன்றோ சிவனே பூமகளின் மைந்தரெமை அணைத்தருள்வாய் ஐயா மூவுலகும் ஆளுகின்ற மூத்தவனே சிவனே மூண்டு வரும் துன்பங்களைத் துடைத்தெறிவாய் ஐயா
வேதங்கள் போற்றுகின்ற மெய்ப் பொருளே சிவனே வேதனைகள் களைந்திடவே வந்திடுவாய் ஐயா பேதலித்து நிற்பவர்க்கு வழிகாட்டும் சிவனே பேதமைகள் போக்கியெமைக் காத்தருள்வாய் ஐயா
இராமபிரான் பூசையினால் பெருமை கொண்ட சிவனே இரவு பகல் துணையிருந்து பார்த்தருள்வாய் ஐயா அறம் காத்து மறம் அழித்து அருளுகின்ற சிவனே அச்சமில்லா நிம்மதியைத் தந்திடுவாய் ஐயா
முன்னேஸ்வரப் பதியில் கோயில் கொண்ட சிவனே
முத்தி தரும் வழியெமக்குக் காட்டிடுவாய் ஐயா சிந்தையிலே உனையிருத்திப் போற்றுகின்றோம் சிவனே
சிறந்த நல்ல வாழ்வதனைத் தந்திடுவாய் ஐயா.
27

Page 15
காலி மீனாட்சி சுந்தரேஸ்வரர்
அலைகடலின் கரையிருந்து அருள் வழங்கும் சிவனே அருளளித்து, அரவணைத்துக் காத்திடவே வருவாய்
மலைமகளின் அருளுடனே வாழ்வளிக்கும் கோவே மலரடியைப் போற்றுகின்றோம் வந்திடுவாய் ஐயா.
தென்னிலங்கைக் கரையினிலே கோயில் கொண்ட சிவனே திக்கெல்லாம் உன்னருளைப் பரப்பிடவே வருவாய்
கல்லான மனங்களையும் கரைய வைக்கும் கோவே
காலி மாநகரிருந்து கருணை செய்வாய் ஐயா.
சுடலையிலே ஆடுகின்ற திருவருளே சிவனே சித்தமெல்லாம் சீரடையும் பெருமையை நீ தருவாய் உறுகுணையில் குடியிருக்கும் உத்தமனே கோவே உறுதிதந்து வாழ்வளிக்க வந்திடுவாய் ஐயா.
பாண்டியனின் இலச்சினையைக் கொண்டி எங்கள் சிவனே பாசமுடன் உன்னடியைப் பணியுமெம்மைக் காப்பாய் வானவர்கள் போற்றுகின்ற மாசறுக்கும் கோவே வந்தணைத்து அருளிடவே விரைந்திடுவாய் ஐயா,
மீனாட்சி சுந்தரரெனப் பெயர் கொண்ட சிவனே மீட்சி பெற்றுநாம் வாழ நின்னருளைத் தருவாய் கதிர்காமக் கந்தனைத் தந்திட்ட கோவே காவல் செய்து எமக்குத் துணை இருந்திடுவாய் ஐயா.
28

புத்தளம் அமர்ந்த ஜோதி
புத்தளம் நகரின் எல்லை பூமியைத் தாங்கும் அன்னை சித்திகள் வழங்க வென்று சீர்மையாய் கோயில் கொண்டாய் எத்திக்கும் உந்தன் அன்பு ஏற்றிடும் தெய்வ ஜோதி சத்தியம் அதுவேயுண்மை தாயே முத்துமாரியம்மா
வெற்றிகள் வந்துசேர வேதனை அகன்று ஒட நற்றுணையாவாய் அம்மா நாடியே இறைஞ்சுகின்றோம் ஆற்றலைத் தந்தெமக்கு ஆறுதல் தருவாய் தேவி போற்றியே அடிபணிந்தோம் தாயே முத்துமாரியம்மா
முன்புறம் திருக்குளமும், பின்புறம் உப்பளமும் அன்புரு கொண்ட உந்தன் ஆலய எல்லைகளே இன்புற இனியவழி ஈந்திட வருவாய் அம்மா உன்னடி சரணடைந்தோம் தாயே முத்துமாரியம்மா
நவராத்திரி நாட்களிலே நல்லருள் பரப்பி நின்று நகர் வலம் வந்தெமது நன்மைகள் காப்பவளே நலமே எமக்கருளும் உனைநாடியே நிற்கும் எங்கள் நாடியின் உயிர்த்துடிப்பே தாயே முத்துமாரியம்மா
பெருமைகள் கொண்ட அம்மா பேதமை போக்கிடுவாய் அருள்வெள்ளம் பெருக்கியெம்மை ஆள நீ கருணைகொள்வாய் இருள்தரும் துன்பநிலை இல்லா தொழித்திடுவாய் ஊரெங்கும் உந்தன் மாட்சி ஒளிரட்டும் தாயே முத்துமாரியம்மா
சத்தியம் நிலைத்து நிற்க சாதனைகள் மேலோங்கி வெல்ல இத்தலம் கோயில் கொண்ட இணையில்லா பேரருளே நித்தியசீர்மை வாழ்வு நிம்மதியோ டெமக்கருளும் புத்தளம் அமர்ந்த ஜோதி தாயே முத்துமாரியம்மா
29

Page 16
சுதுமலை புவனேஸ்வரி அம்மன்
சுதுமலையில் கோயில் கொண்ட ஈஸ்வரியே சுற்றமெல்லாம் நலம் பெறவே துணையிரம்மா மாசற்ற அன்பு நிறை மலை மகளே மாண்புடனே வாழ வழி தந்திடம்மா
புண்ணியர்கள் போற்றுகின்ற ஈஸ்வரியே
புவனமெங்கும் காவல் செய்ய வந்திடம்மா பாசமுடன் அணைத்தருளும் மலை மகளே பாதகங்கள் போக்கியெமைக் காத்திடம்மா
எங்கும் நிறை இணையில்லா ஈஸ்வரியே எங்களுக்கு வளமளிக்க வந்திடம்மா ஆதரித்து அரவணைக்கும் அலைமகளே ஆட்சி செய்யக் கருணையுடன் வந்திடம்மா
பசியகற்றி உயிரளிக்கும் ஈஸ்வரியே, பாதையினைச் சீராக்க வந்திடம்மா செல்வங்களை அருளுகின்ற அலை மகளே செம்மை மிகு நன்னிலையைத் தந்திடம்மா
கல்விக்கதிபதியான ஈஸ்வரியே கண்திறந்து பார்த்தருள வந்திடம்மா அறிவளித்து வழி நடத்தும் கலை மகளே அச்சமின்றி வாழ வழி தந்திடம்மா
அழியாத கல்வி தரும் ஈஸ்வரியே அருள் வெள்ளம் பொங்கிடவே அருளிடம்மா அறிவருவி பெருக்கி விடும் கலை மகளே அறநெறியின் வழியினையே நிறுவிடம்மா.
3O

திருகோணமலை பத்திரகாளியம்மன்.
திருகோணமலையமர்ந்து திருவருளைத் தருபவளே
திசையெங்கும் உன் கருணை நீக்கமற நிறைந்திடவே
பார் போற்றும் தாயவளே தாள் பணிந்து துதிக்கின்றோம் பார்வையினை எம்மீது செலுத்திடுவாய் பத்திரகாளியம்மாவே
கிழக்கிலங்கை எழுந்தருளி கிலேசமதை அறுப்பவளே கிட்டி வரும் வேதனைகள் எட்டிஎமை விலகிடவே நத்தியுந்தன் அடி பணிந்து நாளெல்லாம் இறைஞ்சுகிறோம் நாயகியே எம்மீது கருணை கொள்வாய் பத்திரகாளியம்மாவே
ஞாலமெல்லாம் நன்மை பெற அருளுகின்ற பேரருளே ஞானம் நிறை நல்லறிவு புவியெங்கும் நிறைந்திடவே தாயாக இருந்து எம்மை வழிநடத்த அழைக்கின்றோம் தரணியெங்கும் அமைதியுற வரமருள்வாய் பத்திரகாளியம்மாவே
அன்பு நிறை பேரருளே அணைத்தருளும் திருமகளே அல்லல் களைந்தெமது அமைதி நிலை நிலைத்திடவே வல்லமை தந்தருளும் மாசில்லா அடி பணிகின்றோம் வந்தெமது துயர் போக்கி வளமளிப்பாய் பத்திரகாளியம்மாவே
செழுமைமிகு திருமலையின் கடல் மருங்கில் அமர்ந்தவளே செம்மைதரும் நல்வாழ்வு சீர்மை பெற்று நிலவிடவே கருணை கொண்டு காட்சி தரவாவென்றே கூவுகின்றோம் காலமெல்லாம் நல்லவழி காட்டியருள் பத்திரகாளியம்மாவே.
3.

Page 17
மாத்தளை முத்துமாரியம்மன்
அருள் தந்து, ஆற்றல் தந்து ஆதரிக்கும் தாயே அன்பு கொண்டோர் மனங்களிலே குடியிருப்பாய் நீயே மாத்தளையில் கோயில் கொண்ட தலைமகளே தாயே மருள்போக்கி நலமளித்து கருணைசெய்வாய் நீயே
தீமைகளைத் துடைத் தெறியத் துணையிருக்கும் தாயே தீயபகை கொடுமைகளைக் களைந்திடுவாய் நீயே - பாடித்துதித்துன் பாதம் பற்றுகின்றோம் தாயே பாரினிலே நிம்மதியை நிறுவிடுவாய் நியே
வாழநல்ல வழிகாட்டி வளமளிக்கும் தாயே வாழ்விற்கு ஒளியேற்றி நன்மைசெய்வாய் நீயே மலைசூழ்ந்த நன்னகரில் இருந்தருளும் தாயே மலைத்து நிற்போர் மனக்கவலைபோக்கிடுவாய் நீயே
உயர்ந்த நகர் குடியிருந்து அருளளிக்கும் தாயே உரியநல்ல நேர்வழியைக் காட்டிடுவாய் நீயே நேர்மை மிகு பெருவாழ்வு வாழவேண்டும் தாயே நேர்வழியைக் காட்டியெமை ஆட்கொள்வாய் நீயே
மாரியம்மா என்ற்ழைக்க வந்தருளும் தாயே மீட்சிதந்து ஆட்சிசெய்து அரவணைப்பாய் நீயே உன் பாதம் சரணடைந்தோம் காத்திடுவாய் தாயே உயர்வளித்து உறுதுணையாய் இருந்திடுவாய் நீயே.
32

முகத்துவாரம் பத்திரகாளியம்மன்
ஓங்கார ஒலியெழுப்பி ஓடி வருகின்றாள் அன்னை உலகத்தையே காவல் செய்யப் பாடி வருகின்றாள் ஆடிவருகின்றாள், அன்னை அசைந்தாடி வருகின்றாள் அல்லல்களை ஒட்டிவிட நாடி வருகின்றாள்
நாடிச் சென்று அவளடியைப் பற்றிடுவோமே நல்லருளைப் பெற்றிடவே விரைந்திடுவோமே கூடியாடிப் பாடிச் சென்று குதுகலிப்போமே அன்னை குவலயத்தைக் காத்திடவே வந்துவிட்டாளே
துன்பமில்லை துயரமில்லை என்று சொல்லுவோமே துணையிருக்க அன்னையவள் வந்து விட்டாளே இன்பம் நிறை வாழ்வையினி வாழ்ந்திடுவோமே இனியெமக்கு அன்னையன்றோ துணையிருக்கின்றாள்
ஆர்ப்பரிக்கும் கடல் மருங்கில் முகத்துவாரத்தில் ஆறுதலை அளிக்க அன்னை எழுந்து விட்டாளே கொலை வெறியும், கொடு பகையும் அன்னை முன்னாலே செயலிழந்து நிற்பதை நாம் கண்டிடுவோமே
வந்தனை செய்தடி பணிந்து வாழ்த்துகின்றோமே மாமருந்தாம், பேரொளியாம் பத்திரகாளியம்மனை வெந்து துடித்தரற்றுகின்ற வாழ்வு ஏனிங்கே-அன்னை மீட்சி பெற வழியெமக்குக் காட்டிடும் போது.
33

Page 18
செல்வச் சந்நிதிமுருகன்
சூரனை அடக்கி அருள் தந்த முருகா வீர வேல் துணையெமக்கு என்றுமே ஐயா கரங்கள் பன்னிரெண்டு கொண்டு அருளுகின்ற முருகா இரங்கிவந்து எமக்குத்துணை செய்திடுவாய் ஐயா
வட இலங்கைக் கரையினிலே குடிகொண்டமுருகா ஓடவிட்டு வேடிக்கை பார்ப்பதேன் ஐயா வேடுவன் திருமகளை மணந்தவனே முருகா நாடெங்கும் நல்லமைதி காத்திடுவாய் ஐயா
செல்வமிகு சந்நிதியில் கோயில் கொண்டமுருகா நல்லருளை எமக்களிக்கத் தயங்குவதேன் ஐயா வல்லமையைத் தந்திடவே வந்திடுவாய் முருகா அல்லல் அகற்றிடவே துணைபுரிவாய் ஐயா
போர்க்களமாய் உன்பதியும் இருப்பதேன் முருகா பார்போற்றும் இளங்குமரா சொல்லிடுவாய் ஐயா நார் நாராய் உன்னடியார் சிதைவதேன் முருகா
தேர் ஏறிப் பவனிவரத் தயங்கி வரும் ஐயா.
சண்முகனே, சரவணனே சரணம் நீ முருகா மண்ணில் இனி குருதி சிந்தும் கொடுமைதீர் ஐயா உண்மையெங்கும் நிறைந்திடவே உறுதிசெய்வாய் முருகா எண்ணமெல்லாம் உன்பெருமை நிறைந்திடட்டும் ஐயா.
ஆறுபடை வீடு கொண்ட முத்தமிழே முருகா ஆறுதலை எமக்களிக்க ஓடிவா ஐயா
மாறுபட்டு அழியும் நிலை போக்கிடுவாய் முருகா வீறு கொண்டு உயர்த்திடவே கருணை தரும் ஐயா.
3է

மஞ்சவனப்பதி முருகன்
மஞ்சவனப் பதியமர்ந்த மாமணியே தஞ்சமென்றுன்னடியே சரணடைந்தோம் வஞ்சமனக் கொடுமைகளைக் களைந்தெறிய நெஞ்சம் நிறை உன்னருளே வேண்டுமய்யா
குஞ்சரத்தின் முகம் கொண்டோன் இளையவனே அஞ்ச வரும் தீமைகளை அகற்றிடுவாய் மிஞ்சவரும் உன்னருளால் வேலவனே நெஞ்சமதில் நிம்மதியை நிறைத்திடய்யா
வாஞ்சையுடன் உன்னடியைப் போற்றுகின்றோம் சஞ்சலங்கள் போக்கிட நீ வந்திடுவாய் வெஞ்சமரின் கொடுமைகளை அழித்தொழித்து நெஞ்சமதில் அமைதியையே இருத்திடய்யா
கொக்குவிலில் குடி கொண்ட கோமகனே திக்கெங்கும் உன்னருளைப் பரப்பிடுவாய் நெக்குருகி உன்னடியைப் பணிந்து நிற்கும் நெஞ்சங்களில் கருணை மழை பொழிந்திடய்யா
தெய்வானைத் திருமகளை மணந்தவனே மெய்யடியார் துயர் போக்க வந்திடுவாய் உய்ய வழி உன் வழியே என்று நம்பும் உள்ளங்களில் கோயில் கொண்டு அருளிடய்யா.
35

Page 19
நல்லூர்க் கந்தன்
நல்லூர்ப் பதியமர்ந்த நாயகனே நல்லோர் மனங்குளிர அருள் தருவாய் பொல்லா வினைகளை அறுத் தெறிந்து பொன்னான வாழ்வை நீ தந்திடுவாய்
குறமகள் வள்ளியை மணந்தவனே குற்றங்கள் பொறுத்து நம் குறை தீர்ப்பாய் வள்ளலே உன் பெருங் கருணையினால் வளமான பெருவாழ்வு கிட்டவே
மயிலேறி அறங் காக்க வருவோனே மாசில்லா வாழ்வுக்குத் துணை வருவாய் பாரினிலே உன்னருளைப் பரப்பி விடு பாவங்களெல்லாமே தொலைந்திடவே
வேல்தாங்கி அருளிட வருவோனே ? வேதனைகள் களைந்திடவே வந்திடுவாய் அருளுடனே ஆட்சியை நீ நிறுவி விடு ஆணவங்களெல்லாமே அழிந்திடவே
துள்ளு தமிழ் கேட்டிட மகிழ்வோனே துன்ப நிலை அகற்றிட வந்திடுவாய் நம்பியே உன்னடி சரணடைந்தோம் நல்லூர்க் கந்தனே காட்சி கொடு.
36

குருநாகலை பூரீ கதிர் வேலாயுத சுவாமி
கதிரொளி பாய்ச்சி யெங்கும் அருளொளி பரப்பும் ஐயா விதி வழி நின்று எம்மை நல்வழி நடத்தல் வேண்டும் மதிதனில் நீயிருந்து மருட்சியைப் போக்கிவிட்டால் துதி செய்துன்னடி பணிவோர் துன்பங்கள் நீங்கிடுமே
நெல் வயல், தென்னை ஈறாய் நிறைந்த நன்னிலந்தனிலே நல்வழி காட்டவென்று அமர்ந்தருள் செய்யும் ஐயா அல்லல் அகன்றிடவே அருளிட வந்திடய்யா தில்லையில் ஆடுகின்ற சிவபிரான் இளமகனே
வடமேற்கு மாநிலத்தின் தலைநகரான நல்லூர் திடமாக நின்றருளும் திருமகள் மருமகனே இடர் போக்கியெம்மைக் காக்க கருணை நீ செய்திடய்யா பாடலால் உனைத் துதித்தோம் குருநாகல் அமர்ந்தவேலா
வேல் தாங்கி வந்தெமது வேதனைகளையும் நல்லோய் வெல்லவே நல்லவர்கள் வீணர்கள் அடங்கி விட வல்லவுன் கருணை வெள்ளம் பெருகியே ஓடவேண்டும் நல்லருள் நல்கிவிட விரைந்து வா திருக்குமரா
தீவகம் முழுவதுமே தீமைகள் ஒழிந்து விட பாவங்கள் யாவையுமே உன் பார்வையால் நீங்கிவிட நவமணிமாலை சூடும் நாயகா அருளிடுவாய் சிவவழி நின்றுன் பாதம் சேவிப்போம் திருமுருகா
குருநாகல் நன்நகரில் கோயில் கொண்ட சிவன் மகனே அருகினிலே நீயிருந்து ஆறுதல் தந்து விட்டால் திருவருள் நிறைந்து விடும், தீமைகள் மறைந்து விடும் தருமமே மலர்ந்து நலம் பொங்கிடும் சுவாமிநாதா
37

Page 20
சித்தாண்டி வேலவன்
வேலவனே விநாயகனுக்கு இளையோனே உலகினையே ஆடவைக்கும் சிவனார்மைந்தா காலவெள்ளம் அள்ளிவரும் வேதனைகள் மறைத்துவிட நலம்தந்து காத்தருள்வாய் சித்தாண்டி வேலவனே
நாட்டினிலே நல்லாட்சி நாளும் நிலைத்துவிட
ஆட்டிப் படைக்கின்ற அரக்கநிலை தான்அழிய போட்டி பொறாமைகள் பூண்டோடு மறைந்துவிட
காட்டிடுவாய் உன்திறனைச் சித்தாண்டி வேலவனே
எட்டுத்திசை பாலகர்கள் இனிதெம்மைக் காத்துவிட முட்டவரும் கொடுவினைகள் எட்டியே விலகிவிட சட்டவிதி முறைகள் சமத்துவத்தை நிறுவிவிட வாட்டம் நீங்கிவிட வழிதருவாய் சித்தாண்டி வேலவனே
மருதநிலச் சூழலிலே மயிலேறிவருவோனே மட்டுமா நிலத்தினிலே குடியிருக்கும் கோமகனே வேதனைகள் சுமந்துநிற்கும் எங்கள்தமிழ் மக்களையே விரைந்துவந்து காத்தருள்வாய் சித்தாண்டி வேலவனே
உன்னப்பன் சிவனெங்கே, அன்னையவள் உமையெங்கே காக்கும் கடைமைகொண்ட மாமன்தான் எங்குசென்றான் கூட்டிவந்து காட்டிவிடு, கொடுமைகளை நீக்கிவிடு பாடியுந்தன் அடிபணிந்தேன் சித்தாண்டி வேலவனே.
38

திருக்கோயிலுறை முருகன்
செங்கமலத் திருப்பாதம் பதிந்தஇடம் சீறிவந்த வேல்தரித்து நின்றஇடம் சங்கடங்கள் தீர்த்தருளும் புனிதஇடம் சங்கரனார் திருமகனார் உறையும்கோயில்
தென்கிழக்குத் திசையிருந்து அருளும்இடம் தென்னாடு கொண்டசிவன் மைந்தன்இடம் வலுதந்து துடிப்பேற்றும் திவ்வியஇடம் வாழநல்ல வழிகாட்டும் குமரன்கோயில்
உமையவளின் இளமகனார் உறையும்இடம் உத்தமர்கள் போற்றிநிற்கும் இனியஇடம் இன்னல் களைந்து நலம் நல்கும் கருணைஇடம் இறைவன்எம் திருமுருகன் உள்ளகோயில்
நல்லவர்கள் நாடிவந்து பணியும்இடம் நலங்கள்பல தந்தெம்மைக் காக்கும்இடம் மறம்களைந்து அறம்நிலவி நிற்கும்இடம் மலர்ப்பாதன் கந்தவேள் அமர்ந்தகோயில்
மயிலமர்ந்து மதிதருவோன் உள்ளஇடம் மாநிலத்தில் கருணையொளி பாய்ச்சும்இடம் விண்ணவரும் போற்றிநிற்கும் புண்ணியஇடம் வீரவேல் கொண்டஎங்கள் வேலன்கோயில்
மழுவரசன் திருப்பணிகள் செய்தஇடம் மாசகற்றும் வள்ளி மணவாளன்இடம் பண்டுமுதல் நிலைத்திருந்து அருளும்இடம் பழம்பெருமை கொள்அழகன் திருக்கோயில்.
39

Page 21
டொரிங்டன் திருமுருகன்
மங்கள நாயகன் மால்மருகன் மனம் மகிழ்ந்திங்கு எழுந்துவிட்டான் தங்கத் திருவுரு கொண்ட குகன் தரணியைக் காக்க வந்துவிட்டான்
கொழும்பு ஏழில் குடி கொண்டான் கொடுபகை களைய மனங்கொண்டு நம்மை நாடி வந்து விட்டான் நம்பிக்கையுடனே வழிபடுவோம்
உமையாள் இளமகன் சரவணனே உண்மை நிலைக்கவே உளங்கொண்டான் கிடைத்தற்கரிய அருள் நமக்கு கிட்டிட வேலவன் தாள் பணிவோம்.
வினைகள் தீர்க்கும் கந்தனவன் விரைந்தே எம்மை ஆட்கொள்ள தேடியே இங்கு வந்து விட்டான் தேவனின் அடிபணிந் தருள்பெறுவோம்.
டொறிங்டன் நற்பதி தனிலிருந்து தொல்லைகள் யாவுமே வேரறுப்பான் கும்பம் வைத்தே பூசிப்போம்-நம் குலமது வாழ அருள்தருவான்.
4O

ஜயந்தி நகர் முருகன்
ஜயந்தி நகர் எழுந்தருளி நலம்வழங்கும் வேலவனே உயர்ந்திடவே நம் வாழ்வு உறுதுணையாய் இருப்போனே பயங்கள் தரும் தீவினைகள் அகற்றிடவே வருவோனே மயங்கி நிற்கும் உன்னடியார் இதயமதில் எழுந்தருள்வாய்
போற்றி நிற்கும் அடியவர்கள் துணையிருக்கும் பேரருளே ஏற்றியுந்தன் தாள் பணியும் இதயமதில் நிறைந்தோனே
ஆற்றல் தந்து அரவணைத்து, அருளளித்துக் காப்போனே பற்றி நிற்கும் பக்தர்களின் குறைகளைய எழுந்தருள்வாய்
திக்கெங்கும் அருள் பரப்பி தீவினைகள் களைவோனே எத்திக்கும் கருணை செய்து காவல் செய்யும் அழகோனே முத்தமிழின் காவலனாய், மூலமுமாய் இருப்போனே காத்து வளமளிப்பாய் கருணை செய்வாய் எழுந்தருள்வாய்
அழகு மயில் ஏறி வந்து அன்பு செய்யும் சிவன் மகனே பழனிமலை அமர்ந்திருந்து பக்குவமாய் அருள்வோனே மழலை முகம் கொண்டவனே, அன்னை உமை இளமகனே பாழடையும் நிலை நீங்கி மீட்சி பெற எழுந்தருள்வாய்
முருகா என்றழைத்தால் முந்தி வந்து அருள்வோனே அருகிருந்து நன்மை செய்து ஆறுதலை அளிப்போனே மருங்கிருக்கும் அன்னையரின் ஆசியையும் தருவோனே உருகியுந்தன் தாள் பணியும் எமக்கருள எழுந்தருள்வாய்
கொழும்பு மாநகரிருந்து கோலோச்சும் இளங்குமரா மழுங்கிவிட்ட எம் வாழ்வு மலர்ச்சியுறக் கருணைசெய்வாய் நழுவிச் செல்லும் நன்மையெல்லாம் நமைவந்து சேர்ந்திடவே பொழுதும் உந்தன் அடி பணியும் எமக்கருள எழுந்தருள்வாய்
4-l

Page 22
வண்ணை வரதராஜப் பெருமாள்
யாழ்ப்பாண நன் நகரில் கோயில் கொண்ட பெருமாளே வாழ்வுக்கு உறுதுணையாய் இருந்தெமக்கு அருள்வாயே தாழ்ந்து நிற்கும் எம் நிலையை உயர்த்திவிடப் பெருமாளே ஆழ்துயிலை விட்டெழுந்து வந்தெமக்கு அருள்வாயே
உயர்ந்த பெருங்கோபுரத்தை உடையவனே பெருமாளே துயர்களையக் கருணைவெள்ளம் பாய்ச்சியெமக் அருள்வாயே பயங்கள் தரும் துன்ப நிலை போக்கிவிடும் பெருமாளே ஆயனாயிருந்தெமக்கு வழிகாட்டி அருள்வாயே
சங்கு, சக்கரம் கொண்டு நிற்கும் தயாளனே பெருமாளே எங்கும் இன்பம் நிலவிட ஆசிதந்து அருள்வாயே பங்கமில்லா வாழ்வுக்குத் துணை செய்யும் பெருமாளே ஏங்கி நிற்கும் எமக்கருள விரைந்து வந்து அருள்வாயே
அன்னை மகாலட்சுமியை அருகில் கொண்ட பெருமாளே மின்னல் ஒளி போலே விரைந்து நலம் அருள்வாயே உன்னடியைச் சரணடைந்தால் வளமுண்டு பெருமாளே நன்மையெங்கும் நிறைந்து விட கருணை செய்து அருள்வாயே
வண்ணை நற்பதியினிலே வீற்றிருக்கும் பெருமாளே கண்ணின் மணியாயிருந்து வழிகாட்டி அருள்வாயே மண்ணிலே மன்னுயிர்கள் காத்தருளும் பெருமாளே அண்மிவந்து வளம் பெருக்கி உவகைதந்து அருள்வாயே
42

தெகிவளை வெங்கடேசுவரப் பெருமாள்
மாதவனே, மாமணியே, மலர் மகளின் துணையவனே
மாநிலத்தில் நல்லருளைப் பரப்பிடுவாய் பெருமாளே
உத்தமனே உன் கருணை உலகினையே காத்து விட உறுதுணையாயிருந்திடய்யா உலகாளும் திருமாலே
கருணை மிகு பேரருளே, காத்தருளும் வல்லோனே கந்தனவன் அம்மானே காத்தருள்வாய் பெருமாளே வந்த வினை போக்கி விட வரும் வினைகள் தடுத்துவிட சிந்தையைத் திருப்பி விடு செம்மை தரும் திருமாலே
பாற்கடலில் துயிலுகின்ற பார் போற்றும் உத்தமனே பாரினிலே காவல் செய்யத் தயக்கமென்ன பெருமாளே நத்தி வரும் உன்னடியார் நல்ல நிலை பெற்று விட நாயகனே, அன்புருவே வழி காட்டு திருமாலே
அதர்மங்கள் அழிந்தொழிக்க அவதரிக்கும் மேலோனே அருளளித்து, ஆதரித்து அரவணைப்பாய் பெருமாளே வெஞ்சினத்தின் கொடுமைகளை வேரோடு அகற்றி விட வெற்றித் திருமகனே வந்திடுவாய் திருமாலே
தெகிவளையில் கோயில் கொண்டு திக்கெல்லாம் அருள்வோனே தேம்பியழும் உன்னடியார் துயர்களைவாய் பெருமாளே நெடுமாலே, நேர்மையனே துயர்களைய வந்திடுவாய் நெடிதுயர்ந்த உன்னருளால் நெஞ்சமெல்லாம் நிறைந்திடட்டும்.
43

Page 23
நவக்கிரக துதி
'விதிவகுத்து வழிநடத்தும் நவ நாயகர்களே
வாழ்வில் நலம் சேர்த்திடுவீர் வணங்கிநிற்கின்றோம் மதிநலமாய் மாண்புற நாம் வாழ்க்கை நடத்திட
OTU இருள்போக்கி நல்ல வழி சமையுங்கள் கிரகங்கள் நாயகனே சூரியபகவானே பாரில் நலம் பல்கிவிட அருள் அளிப்பாயே குறைகள் களைந்தருள் வழங்கும் சந்திரபகவானே குற்றமில்லா வாழ்வை எமக்களித்தருள்வாயே அவதிகளைந் தவனி காக்கும் செவ்வாய் பகவானே அச்சம் நீங்கி அமைதிநிலவ அருள் அளிப்பாயே இன்பவாழ்வு தந்தருளும் புதபகவானே இப்புவியில் நன்மையோங்க அருள்தருவாயே வளமுறவாழ வழிவகுத்திடும் வியாழபகவானே வையகமே குதுகலிக்க அருளளிப்பாயே வேற்றுமை போக்கி வெற்றிகள் தந்திடும் வெள்ளிபகவானே வேதனை நீங்க நிம்மதி தந்து அருள்தருவாயே சங்கடம் போக்கி சத்திய நிலை தரும் சனிபகவானே சச்சரவின்றி சமரசம் நிலவிட அருளளிப்பாயே துன்பம் போக்கி துரோகம் களையும் ராகுபகவானே தூயவாழ்வின் துணையாயிருந்து அருள்தருவாயே கேடுகள் நீக்கி கீர்த்திகள் தந்திடும் கேதுபகவானே கெடுமதியாளர் மனங்களில் நன்மதிமலர்ந்திட அருள்வாயே நாளும் உங்கள் நல்லருளாலே இப்பதியெங்கும் நன்மைகள் பெருகி திருவருள் பொழிந்திட நவநாயகர்களே துதித்து வழிபடும் நம் நிலை நலம் பெற நிம்மதிகொண்டு வாழ்ந்து மகிழ்ந்திட கருணை வழங்கி காத்திடுவீரே.
44

கொழும்புத்துறை - விநாயகப் பெருமான் கோயில்
யாழ்ப்பாணநகரில் கொழும்புத்துறை மேற்கில் அமைந்துள்ள இவ்விநாயகர் கோயில் மிகப்பழமைவாய்ந்ததும், வரலாற்றுச் சிறப்புமிக்கதுமாகும். இக்கோயிலைச் சூழ இலந்தைக் குளமென்னும் குளமும், இந்து மகாவித்தியாலயமும், யோகர்சுவாமிகள் வாழ்ந்த ஆச்சிரமும் உள்ளன. இதே கோயில் வளவில் பழனியாண்டவர் கோயில் தனியாகவுள்ளது.
நல்லூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட யாழ்ப்பாணத் தமிழ் அரசர்களின் ஆட்சியின் போது இக்கோயல் மிகவும் சிறப்பாக விளங்கியுள்ளது.
இக்கோயிலின் மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் விநாயகப் பெருமான் வதிரிபீட மன்றுளாடும் விநாயகப் பெருமான் என்ற திருநாமத்துடன் தன்னை நம்பியோருக்கு அருளளித்துக் காத்து வருகின்றார்.
கண்டி கட்டுக்கலை பிள்ளையார் கோயில்
மத்திய மாகாணத்தின் தலைநகரான கண்டி மாநகரின் மத்தியிலே உள்ள இக்கோயிலின் மூலமூர்த்தி சோமசுந்தரேஸ்வரர் என்றதிருநாமம் கொண்ட சிவனேயாயினும் பிள்ளையார் கோயில் என்றே அழைக்கப்படுகின்றத. பஞ்சரதபவனிவரும் தேர்திருவிழா மிகச் சிறப்பாக அமைகின்றது. இன, மத, பேதமற்ற முறையில் அடியார்கள் இறையருள் நாடி இக்கோயிலில் கூடி வழிபடுவர்.
பண்டைப்பெருமையும் சிறப்பும் மிக்க இக்கோயில் கண்டியரசர் காலம் முதல் தலதாமாளிகையின் பெருமையுடன் தொடர்பு கொண்டு விளங்குகின்றது. எல்லாச்சிறப்புமிகுசமய நிகழ்வுகளும் இடம் பெறும் இக்கோயில் மலையகத்தின் இந்துசமய தொன்மைக்கோர் சான்றாகவும் திகழ்கின்றது. . . . . . . . "و يحي
45

Page 24
அட்டன் மாணிக்கப் பிள்ளையார் கோயில்
நுவரேலியா மாவட்டத்திலுள்ள அட்டன் நகரில் அமைந் துள்ளது மாணிக்கப்பிள்ளையார் கோயில். குன்றின் உச்சியிலே உள்ள இக்கோயிலில் சித்திராபெளர்ணமியன்று வருடாந்தப் பெருவிழா நடைபெறுகின்றது. படிகளேறிச் சென்று மலை உச்சியில் கோயில் கொண்ட விநாயகரைத் தரிசிப்பது மனதிற்கு மிக மகிழ்ச்சியைக் கொடுக்கின்றது.
மாமாங்கப் பிள்ளையார் கோயில்
மட்டக்களப்பு நகரில் உள்ள மாமாங்கப் பிள்ளையார் கோயில் வரலாற்றுச்சிறப்புகள் பல கொண்டதுடன் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமைந்ததலமாகும். இத்திருக்கோயிலிலேயுள்ள சிவலிங்கம் இராமபிரானால் ஆக்கப்பட்டு பூசிக்கப்பட்டதென ஐதீகம் உள்ளது. வருடாந்த திருவிழா ஒன்பது நாட்கள் நடைபெற்று ஆடிஅமாவாசைத் தினத்தன்று தீர்தோற்சவம் நடைபெறும்.
மன்னார் சித்தி விநாயகர் கோயில்
மன்னார்த் தீவிலே மாண்புறவீற்றிருந்து அருள் நல்கும் சித்திவிநாயகர் கோயில் மன்னார் நகர் வாழ் இந்துப் பெருமக்களின் முக்கிய வழிபாட்டிடமாக விளங்குகின்றது. இக்கோயிலில் நித்திய பூசைகளுடன் சகல விசேட தினங்களிலும் சிறப்புவழிபாடுகளும் இடம் பெறுகின்றன.
46

சிலாபம் - முன்னேஸ்வரம் கோயில்
இராமாயண காலத்திற்கும் முற்பட்ட அதாவது ஆறாயிரம் ஆண்டு களுக்கும் முற்பட்ட வரலாற்றுச்சிறப்பு மிக்க இச் சிவாலயம் சிலாபம் நகரிலிருந்து ஒருமைல் தொலைவில் அமைந்துள்ளது. இக்கோயிலில் முன்னை நாதப் பெருமான் வடிவாம்பிகா தேவியுடன் இருந்து அருள் பாலிக்கின்றார். இக்கோயிலுக்கு அண்மையில் பத்திரகாளி அம்மன் கோவிலும், ஐயனார், விநாயகர், திருமால் கோயில்களும் உள்ளன. முன்னேஸ்வரம் தொடர்பான கல்வெட்டுச் சாசனங்களும் உள்ளன.
காலி மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோயில்
இலங்கையின் தென்மாகாணத்தின் தலைநகரான காலி மாநகரில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சிவாலயம் இதுவாகும். பாண்டியமன்னர்களால் திருப்பணி செய்யப்பட்டமைக்கு ஆதாரமாக பாண்டியரின் மீன் இலச்சினை இக்கோயிலில் பொறிக்கப்பட்டுள்ளது.
கலையம்சம் நிரம்பிய இக்கோயில் உயர்ந்த கோபுரத்தைக் கொண்டது. தென்னிலங்கையில் சிவவழிபாட்டின் பழமையை எடுத்துக் காட்டும் இக்கோயில் காலி மாநகரின் பெருமைக்குப் பெருமை சேர்க்கின்றது.
புத்தளம் முத்து மாரியம்மன் கோயில்
இலங்கையின் வடமேல்மாகாணத்தின் புத்தளம் நகரின் எல்லையில் கோயில் கொண்டு அருளாட்சி செய்யும் முத்து மாரியம்மன் பல சிறப்புக்களைக் கொண்ட தாயாக விளங்குகின்றாள். இக்கோயிலில் நவராத்திரி விழா மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருவதுடன் நவராத்திரி இறுதி நாளில் அம்மன் தேரேறி நகர்வலம் வந்து அடியார்க்குக் காட்சி தந்து அருளுகின்றாள்.
47

Page 25
சுதுமலை புவனேஸ்வரி அம்மன் கோவில்
யாழ்ப்பாண மாவட்டத்தில் சுதுமலையில் அருள்மிகு புவனேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. ஆனைக்கோட்டை, மானிப்பாய், தாவடி முதலிய ஊர்களுக்கு மத்தியிலே உள்ள இக்கோயில் பழமைமிகக் கொண்டது. வீரம், செல்வம், கல்விக்கதிபதியான அன்னையின் அருட் பார்வைகிட்டின் அறமோங்க வழிபிறக்கும் என்று அடியவர்கள் நம்பிக்கையுடன் வழிபடுகின்றனர் நித்திய பூசைகளுடன் விசேட தினங்களில் சிறப்புப் பூசைகளும் அன்னைக்கு இடம் பெறுகின்றன.
திருகோணமலை பத்திரகாளியம்மன் கோயில்
திருகோணமலை நகரில் உள்ள இத்திருக்கோயில் அண்டி வருவோர் குறைதீர்த்து நலம் வழங்கும் அம்மன் கோயிலாகும். அழகிய வேலைப் பாடுக்ளுடன் கண்ணுக்கும், கருத்துக்கும் விருந் தளிக்கும் பக்திமயமான சூழலில் இங்கு அன்னையை வணங்கி அருள்பெற நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் கூடுகின்றனர். கேதாரகெளரி விரதம் இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.
மாத்தளை முத்து மாரியம்மன் கோயில்
மாத்தளை மாநகரில் கோயில் கொண்டுள்ள அருள் மிகு முத்துமாரியம்மனுக்கு ஆண்டு தோறும் நடைபெறும் தேர்திருவிழா பிரசித்தமானது. மாசி மகத்தன்று அன்னை நகர்வலம் வந்து அடியார்க்கு அருள் அளித்து ஆறுதல் அளிக்கின்றாள். இலங்கை யிலுள்ள இந்துப் பெருங் கோயில்களில் இக்கோயிலும் முக்கிய இடம் பெறுகின்றது.
48

முகத்துவாரம் - பத்திரகாளியம்மன் கோயில்
கொழும்பு முகத்துவாரத்தில் கோயில் கொண்டுள்ள பத்திரகாளியம்மனைத் தரிசித்து அருள் நாடி இன, சமய வேறு பாடுகளின்றி மக்கள் கூடுகின்றனர். நம்பிக்கையுடன் தன்னைச் சரணடைந்தவர்கள் குறையைத் தப்பாது தீர்த்தருள்வாள் பத்திர காளியம்மன் என்ற நம்பிக்கை மக்கள் உள்ளங்களில் ஆழப் பதிந்துள்ளது.
செல்வச்சந்நிதி - முருகன் கோயில்
இலங்கையின் வடமுனையில் தொண்டமானாற்றில் கோயில் கொண்டுள்ள செல்வச்சந்நிதி முருகன் மிகவும் பெருமையானவனும், பொறுமையானவனும் கூட, அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலை நிறுத்த காலத்திற்கு காலம் எழுந்தருளும் முருகன் பவனிவர வென்று பக்தர்களால் அமைக்கப்பட்ட அழகுமிகுதேர் நீறுஆகிய வரலாறும் உண்டு. எத்தனை துன்பங்கள் துயரங்கள் துரத்தி வந்தபோதும் செல்வச்சந்நிதியான் திருப்பாதத்தை இறுகப்பற்றியவர்கள் காக்கப்படுவர் என்ற நம்பிக்கை எங்கும் வேரூன்றியுள்ளமை குறிப்பிடதக்கது. அழித்தாலும் அழியாத கோயில் கொண்டசந்நிதி முருகன் தன் அடியவரையும் அவ்வாறே காத்துவருவான் இக்கோயில் வட இலங்கையின் கதிர்காமம் எனக் கொள்ளப்படுகின்றது.
மஞ்சவனப்பதி - முருகன் கோயில்
யாழ்மாவட்டத்திலே கொக்குவிலில் உள்ளது மஞ்சவனப்பதி முருகன் கோயில். ஆவணி மாதத்தில் தேர், தீர்த்தம், பூங்காவனம் ஆகியவை நடைபெறுகின்றன. பிரமாண்டமான சித்திரவேலைப்பாடுகள் நிறைந்த தேரைக் கொண்டது இக்கோயில். சகல சமய விழாக்களும் இங்குசிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
49

Page 26
நல்லூர் - கந்தசுவாமி கோயில்
யாழ்ப்பாண மாநகரில் நல்லூரில் உள்ள இக்கோயில் வரலாற்றுச் சிறப்புவாய்ந்தது. அழகிய, வனப்பு மிகு சூழலில் கோயில் கொண்டுள்ள முருகப்பெருமான் அதர்மம் மேலோங்கும் போதெல்லாம் அவதாரம் எடுத்துவந்து தர்மத்தைக் காப்பார் என்ற நம்பிக்கையுடன் மக்கள் நாளும், பொழுதும் அவனடி வணங்கிநிற்கின்றனர். இலங்கையி லுள்ள மிகப் பெரும் இந்துக் கோயிலாக இதனைக் கொள்ளலாம்.
குருணாகல் - கதிர்வேலாயுத சுவாமி கோயில்
வடமேல் மாகாணத்தின் தலை நகரான குருனாகல் நகரில் அமைந்துள்ள இம் முருகன் கோயில் சகல இன மக்களினதும் வழிபாட்டிற்குரிய பெருமை கொண்டது.
இங்கு நடைபெறும் நித்திய பூசைகளிலும், விசேட தினங்களில் நடைபெறும் திருப்பூசைகளிலும் பங்கு பற்றி கதிர் வேலாயுத சுவாமியின் திருவருளைக் குருனாகல் மக்கள் பெறுகின்றனர்.
சித்தாண்டி - சித்திர வேலாயுத சுவாமி கோயில்
மட்டக்களப்பு நகருக்கு வடக்கே பதின்மூன்று மைல் தொலைவில் உள்ள உயரிய கோபுரத்தையுடைய இக்கோயில் பழமையும், பெருமையும் கொண்டது. இக்கோயிலின் பெருமை கூறும் நூல்களும், காவியங்களும், பாடல்களும் உள்ளன. அற்புதங்கள் பல நிகழ்ந்துள்ள இக்கோயிலின் மூலஸ்தானத்தில் முருகனின் வேல் இருந்து வினைதீர்க்கின்றது.
50

திருகோயில் - முருகன் ஆலயம்
இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணத்தின் தென்பகுதியான அம்பாறைமாவட்டத்தில் திருக்கோயில் என்ற ஊரில் கடற்கரையை அண்டி அமைந்துள்ளது திருக்கோயில் என்ற இம்முருகன் கோயில். வரலாற்றுச் சிறப்பும், அற்புதங்களும் நிறைந்த இக்கோயில் கிழக்கு இலங்கையின் தேசக் கோயில் என்ற பெயரையும் பெற்றுள்ளது.
கி.மு. 301ம் ஆண்டு அப்பகுதியை ஆண்ட மழுஎன்கின்ற தமிழ் அரசன் திருச்சோழன் என்ற சோழநாட்டுமன்னனின் ஒத்துழைப்புடன் இக்கோயில் குடமுழுக்கு செய்தான் என வரலாறு கூறுகின்றது. கி.மு.103ல் சோழநாட்டு மன்னர் ஒருவர் திருக்கோயிலில் திருப்பணி செய்வித்தார் என்று மட்டக்களப்பு மான்மியம் கூறுகின்றது.
வடக்கு முகமாக இருந்த வேல் கிழக்கு முகமாகத் திரும்பியதனால் "திருக்கோயில்" என்ற பெயர் ஏற்பட்டதென்று கோயிற்பதிகமொன்று கூறுகின்றது.
டொறிங்டன் - அருள்மிகு திருமுருகன் கோயில்
கொழும்பு மாநகரில் டொறிங்டன் அவெனியுவில் அமைந்துள்ள இக்கோயிலில் இருந்து அழகன் திருமுருகன் அருளளித்து வருகின்றான். 1996ம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடைபெற்ற இக்கோயில் கொழும்பு-7 இல் உள்ள ஒரே இந்துக் கோயிலாக விளங்குகின்றது.
ஜிந்துப்பிட்டி - ஹிர்சிவசுப்பிரமணிய சுவாமி கோயில்
கொழும்பு மாநகரில் அழகிய கோபுரங்களுடன், மண்டபங் களும் கொண்டுவிளங்கும் இக்கோயிலில் நித்திய பூசைகளுடன் சகல சமய விசேட தினங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்துள்ள இக்கோயிலில் குடிகொண்டு
5.

Page 27
உள்ள முருகப்பெருமான் திருக்கோயில் கொழும்பில் இந்துக்களின் பெருமை மிகு வழிபாட்டுத் தலமாகும்.
யாழ்ப்பாணம் - றிவெங்கடேஸ்வர வரதராஜப் பெருமாள் கோயில்
இக்கோயில் வழிபாடுகள் திருப்பதி வெங்கடேசர் கோயிலில் நடை பெறும்" முறையில் நடைபெறுகின்றது. உயர்ந்த இராஜ கோபுரத்தையுடைய இக்கோயிலில் கிருஷ்ணஜயந்தி, புரட்டாதிச்சனி, ஏகாதசி தினங்கள் சிறப்பான தினங்களாகும்.
தெஹிவளை - வெங்கடேஸ்வரப் பெருமாள் கோயில்
கொழும்பு மாநகரை அடுத்த தெஹிவளையில் அன்டர்சன் வீதிக்கண்மையில் கோயில் கொண்டுள்ள வெங்கடேஸ்வரப் பெருமாளின் அருட்கடாட்சம் நாடி இன, மதவேறு பாடின்றி மக்கள் சென்று வழிபடுகின்றனர். இக்கோயிலில் திருப்பூசைகளுடன் மகேசுவர பூசையும் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. காக்கும் கடவுளான திருமாலின் கருணை வேண்டி பிரதி ஞாயிறு தினங்களிலும் பக்தர்கள் அவர் சந்நிதியில் ஆயிரக் கணக்கில் வந்து கூடி வணங்குவர். திருமாலுக்குரிய விசேடதினங்களில் சிறப்பு வழிபாடுகள் இங்கு நடைபெறுகின்றன.
52

யாழ்ப்பாணம் யூரீ வெங்கடேஸ்வர வரதராஜப் பெருமாள் கோயில்
53

Page 28
-- 3.
w
பத்திரகாளிய ம்மன் கோவில்
தி
க்
CE
ண
d
ᎦᏆ1
8ኒ]
 
 
 
 
 

சிலாபம் - முன்னேஸ்வரம் கோவில்

Page 29