கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மில்க்வைற் அதிபர் க. கனகராசா

Page 1
மில்க்வைற் அதிபர்
திரு. க. கனகர
வெளியீடு:
 
 

ழை மகாஜனக் கல்லூரி ணவர் மன்றம்

Page 2

மில்க்வைற் அதிபர் VM Á5G25. d5. d56ordsJr TJFr, J.P.
மகாஜனு விடுதி மாணவர் மன்றம்
வெளியீடு : மகாஜனக் கல்லூரி தெல்லிப்பழை 1978-2-9

Page 3
A Concise Life Sketch of
MR. K. KAN AG ARAJAH, J. P. Proprietor, Milk White Soap Industries, Jafna.
Published by:
THE MAHAJA NA COLLEGE HOSTEL- STUDENTS UNION
Mahajana College, Tellippalai.
1978 - 2-9
Thirumakal Press, Chunnakam.

பதிப்புரை
எமது விடுதியின் வெள்ளி விழாவும், புதிய கட்டிடத் திறப்பு விழாவும் 9-2-78 வியாழக் கிழமை சிறப்பாகக் கொண்டாடப்பட்டன. அவ்வமையம் மில்க்வைற் தொழிலதிபரும், உரிமையாளருமான திரு. க. கனகராசா, J. P. அவர்கள் நமக்குக் கட்டிக்கொடுத்த வெள்ளி விழா நினைவு மண்டபத் திறப்பு விழாவை யொட்டி வெளியிடப்பட்ட ம க ரா ஜ ன ன் வெள்ளிவிழா மலரில் மில்க்வைற் அதிபரின் வாழ்க்கைச் சரிதத்தைப் புலவர் நா. சிவபாத சுந்தரஞர் எழுதியுள்ளார். அதனை நாம் மீண்டும் சிறுநூல் வெளியீடாக வெளியிடுவ தில் மனம் மகிழ்கின்ருேம்.
இங்ங்ணம் க. செல்வகுணச்சந்திரன் ச. பூநீகெளரிபாலா
விடுதிப் பொறுப்பாசிரியர் ā。 சிவராஜன்
மகாஜனக் கல்லூரி விடுதி தெல்லிப்பழை 13-2-78.

Page 4

மில்க்வைற் தம்பதிகள்
தருங்கையும் தடாத கையும்
நாளிலும், பொழுதிலும் நாட்டுக்கு நல்லன செய்வதற்கு உறுதுணையாகவும், தூண்டுகோலாகவும் இருக்கும்
தொழிலதிபரின் இல் லக் கிழத்தியார் திருமதி நாகம்மா அவர்களுடன் திரு. க. கனகராசா அவர்கள்.

Page 5
மில்க் ைவற்
தொழிலகமும் இல்லமும்
 

மில்க்வைற் தொழிலதிபர் திரு. க. கனகராசா அவர்கள் வரலாற்றுச் சுருக்கம்
குடும்பத் தோற்றம்:
1927ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்து வண்ணுர்பண்ணையில் "ஆள்வினையே ஆடவர்க்கு உயிர் ' என்ற பழந்தமிழ்க் கருத் திற்கேற்ப திரு. வீ. மு. கந்தையா என்பவர் மிகச் சொற்ப மூலதனத்துடன் சவர்க்காரத் தொழிலை மேற்கொண்டார். இவரது தொழிலகம் சிறுகுடிசையாக இருந்து, பின் தகரக் கொட்டகைகளாக மாறிப் பின்பு மேல்மாடிக் கட்டிடங்களுடன் உயர்ந்து விளங்கும் நிலைமைக்குத் திரு. வீ. மு. கந்தையாவின் விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும், கட்டுப்பாடுமே காரண மாகும். திரு. வீ. மு. கந்தையா என்பவர் திருமணம் பெறும் காலம் அமைந்ததும் அவரின் தந்தையாராகிய வீ. முருகேசம் பிள்ளை என்பவர் யாழ்ப்பாணத்துக் கொட்ட டி என்னும் ஊரில் வாழ்ந்த செல்லர்ப்பிள்ளையின் மகளாம் மீனுட்சிப்பிள்ளை என்ப வரை மனைவியாக்கி மனைமாட்சியுறச் செய்தார். திரு. வீ. மு. கந்தையா அவர்கள் மங்கல வாழ்வின் நன்கலனுக ஐந்து ஆண் மகவும் இரு பெண் மகவும் பெற்றெடுத்தார். ஆண் மக்களில் மூன்ருவதாக அமைந்தவரே நம் இன்றைய மதிப்பிற்கும். பாராட்டுக்குமுரிய மில்க்வைற் தொழிலதிபர் திரு. க. கண்க ராசா, ஜே. பி. அவர்கள். திரு. வீ. மு. கந்தையா அவர்கள் போதிய வசதிகள் அற்ற நிலையில், விற்பனைச் சந்தையிற் பெரிய பெரிய அந்நியர் உற்பத்தி ஸ்தாபனங்களுடன் போட்டி போட்டுத் தம் சவர்க்காரத்தைத் தொடர்ந்து விற்பனை செய்து கொண்டிருந்தமையால் இவரை எல்லோரும் சவர்க்காரக் கந்தையா என்பார்கள். முஸ்லீம் சகோதரர் மத்தியில் இவ ருக்கு நல்ல மதிப்பிருந்தது. அவர்கள் எல்லோரும் இவரை "கந்தையா அண்ணை’ என்று அன்பாக அழைப்பார்கள். தன்னுக்கமான சவர்க்காரத்திற்குச் சோதிடவாசான் அமரர் இராசலிங்கம் அவர்கள் ஆலோசனை வழங்கியதன் மூலம் "மில்க் வைற் சோப்" எனப் பெயரிட்டு நீலம் கலந்த விஞ்ஞான சோப் விற்பனையாளராக வியாபார உலகில் திரு. வீ. மு. கந்தையா பிள்ளை விளங்கினர்.

Page 6
- 6 -
கல்வியும் கன்னித்தொழிலும்:
திரு. வீ. மு. கந்தையா அவர்களுக்கு மூன்ருவது குழந்தை யாக முளைத்தெழுந்த திரு. க. கனகராசா அவர்கள் "கில்னர்' கல்லூரியில் கல்வி கற்றபின் கம்பளைக்குச் சென்று வியாபாரத் தொழில் பழகினர். அதன்பின் கினித்தேனையில் உள்ள அரச லாக்கந்தையில் உயர்பதவி வகித்துவந்த இ வ ரின் மூத்த சகோதரன் திரு. க. இரத்தினகோபால் அழைப்பின்பேரில் அத் தோட்டத்திற்குச் சென்று ஆசிரியராகவும், இறப்பர் மேக்க ராகவும், கணக்குப் பதிவாளராகவும் வேலைபார்த்திருந்தார் இவ்வாறு இருக்கையில் திரு. வீ. மு. க. அவர்களின் மில்க் வைற் தொழிலிற் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டது. ஏற்பட்டதும் தனயஞன திரு. க. கனகராசாவைத் தனக்கு உதவியாக அழைத்துத் தன் தொழிலைப் பயின்றும், மேற்பார்வை செய்தும் மேலும் முன்னேற்றும்படி கூறினர். தந்தையின் சொற்படி திரு. க. கனகராசாவும் நடந்துகொண்டார்.
** சிறுகக்கட்டிப் பெருகவாழ் ** என்ற முதுமொழிக்கேற்ப திரு. கனகராசாவின் நல்லுர்ழ் நயம்பெற இதனல் கருக்கொண்டு விட்டது எனலாம். இடவசதியோ-இயந்திரக் கருவி வசதியோஆள் வசதியோ - சந்தை வசதியோ இல்லாத போதிலும் தந்தையும் தனயனுமாக இணைந்து மேற்கொண்ட இடைவிடாத முயற்சியின் பேறே இன்றைய "மில்க் வைற்" தொழிலகத்தின் தோற்றம் என்க.
மில்க்வைற் தோற்றமும், வளர்ச்சியும் :
திரு. வீ. மு. கந்தையா மில்க்வைற் தொடங்கிய ஆண்டி லேயே திரு. க. கனகராசா அவர்கள் பிறந்தார்கள். எனவே கனகராசா செல்வச்சீமானக விளங்கும் நற்கன்மத்தின் மூலப் பொருளும் அவர் தந்தையாரிடம் ஆண்டவனல் அமைக்கப் பட்டதெனலாம். ஓர் ஆன்மாவின் தனு, கரண, புவன போகங்கள் இவ்வாறே இறைவனுல் இவ்வுலகில் அருளப்படுகின் றன என்க. -
சின்னஞ்சிறிய நிலப்பரப்பிலே மேல் மாடியோடு ** திரு வாலவாய்" என்னும் பெயர்கொண்டு விளங்கும் மனையிலே மேல்மாடி ஒரு கலைக்கூடமாகக் கவினுற, திரு. க. கனகராசா தன் மனையாள் நாகம்மாவோடு நல்லறம் நடாத்தும் இல்ல மாக அமைந்துள்ளது. கீழ்மாடியோ, மிக்க அமைதியான சூழலில் மில்க் வைற் சோப் தொழிற்சாலை நடைபெறுகின்றது. அத் தொழிலகம் அலுவலகம், தொழிற்சாலை, மண்டபம்,

- 7 -
பொதியறை, களஞ்சிய அறை என்ற பல பகுதிகளை உடையதாக அமைந்துள்ளது; இப் பல பகுதிகளும் வெறும் பொருளுக்குரிய அகங்களாக அமையாது, பொருளோடு பொருந்திய அறிவு பெறுமிடமாய் விளங்க நற்சிந்தனை, நல்லொழுக்கம், நீதி வாக்கியம், திருக்குறள் ஆகியவை கூறும் மட்டைகள், பலகை கள், நிரைநிரையாக ஆங்காங்கே தொங்கி அழகு பொலிவன வாகவு முள்ளன. யன்னற் கம்பிகள், வாயிற் கதவுகள் எங்கும் சிவலிங்க உருவம் திரிபுண்டரத் திருநீற்றுப் பொலிவுடன் திகழ் கின்றது. இதனுல் தொழிலாளர் உழைப்போடு உயர் எண்ணத் தையும் பெற்று உத்தமர்களாக நிலைக்கும் வாய்ப்புப் பெறு கின்றனர் எனலாம். இவ்வாறு மில்க் வைற் தொழிலகம் நூறு பேரைத் தன்னகங் கொண்டு 1977ஆம் ஆண்டு நவம்பர் மாதத் தில் பொன்விழாவைக் கண்டு வளர்ச்சிப் பாதையில் பொலிவு பெற்றுள்ளது.
மில்க்வைற் தொழிலக அதிபராதல்:
தந்தை வீ. மு. கந்தையாபிள்ளையின் தலைமையிற் சவர்க்கா ரத் தொழில் பயின்ற சிவநெறிப்புரவலர், காலப்போக்கில் எழுது வினைஞர், கணக்குப் பதி வோர், தட்டச்சாளர் முதலான துணைப்பணியாளர்களின் மத்தியில் காலத்தைப் பெறுமதி யாக்கிக்கொண்டு இன்று தலைமைப் பணியாளராக - தொழிலக அதிபராகத் திகழ்கின்ருர். தன் பணமும், தன் பதவியும், தன் ஞணையும் மேலோங்கவேண்டும் என்ற முனைப்பற்று, மற்றை யோரின் உழைப்புச் சத்திக்கு இதமளித்து, அடக்கமும் எளிமையும் அன்பும் பூண்டு நிற்றலே தொழிலகத்தின் காவலா கும் என்ற துணிபுற்ற அதிபராகத் திரு. க. கனகராசா அமைந் துள்ளார். இவர் தன் முதலின் பயனன நயத்தில் முழு உரிமை கொள்ளாது, சமூகத்திற்கும், நாட்டுக்கும் அஃது உரியதாகும் என்ற உள்ளுணர்வோடு ஈதல், இசைபட வாழ்தல் என்பதற் கேற்ப வழங்கும் கொடைத்தனத்தை உடையராயினர். இதனை அறிந்த இலங்கை அரசாங்கமும் அவருக்குச் சமாதான நீதவான் (ஜே. பி.) பட்டம் அளித்துச் சிறப்புச் செய்தது. இதற்கு முன்பே மக்கள் சமூகமும் “பூலோக கற்பகதரு நாயகர்”, “தால காவலர்”, “திருக்குறட் காவலர்’ முதலாம் பட்டங்களை இன்ப அன்பு மீதூரச் சூட்டியுள்ளது. இங்ங்ணமே நம் ஈழவளநாட்டுச் சைவ ஆதீனங்கள், தமிழகத்திலுள்ள ஆதீனங்கள் இவரின் தமிழும், சைவமும் வளர்க்கும் சிறப்பினை அறிந்து “ சிவதர்ம வள்ளல்", " சிவநெறிப் புரவலர்”, “செந்தமிழ்ச் செல்வர் ?? முதலிய பட்டங்களை அளித்துள்ளன. உலகத் தமிழாராய்ச்சி மகாநாட்டாரும் “தொண்டுள்ளம்” என்று பாராட்டி இவருக்குச்

Page 7
akaw 8
சான்றிதழ் அளித்த மையும் நோக்கற்பா லதாகும். இவ்வாறு இந்து மதத்திற்கு மட்டுமல்ல, கிறிஸ்தவ-இஸ்லாமிய-பெளத்த மக்களுக்கும் பல கொடைகளைக் கொடுத்துத் தன் சமயப் பொறைக் கோட்பாட்டையும் வெளிப்படுத்தியுள்ளார்கள் திரு. க. கனகராசா அவர்கள். பண்பாட்டுப் பணிகள் :
இலங்கை மக்கள் அன்னிய பொருள்களில் மிக்க மோகங் கொண்டு சுதேசிப் பொருட்பற்று அற்று இருந்தார்கள். இந்தச் செம்மையற்ற மனப் போக்கை மாற்றவேண்டும் என்பதைத் தம் தொழில் அநுபவத்தால் தேர்ந்துகொண்ட திரு. கனக ராசா அவர்கள் உடற்துரய்மை, உள்ளத்தூய்மை என்ற எண் ணத்தில் முதிர்வுகொண்டார். உடலு க் கு ச் சவர்க்காரம் அமைதல் போல உள்ளத்திற்கும் அறிவுதரும் கருத்து நூல்கள் வெளியிடுவது மேலான கடனுக அமையுமென்று சிறுநூல் வெளி யீடுகளை இலவசமாக வெளியிட முனைந்து வெற்றியும் கண்டார்"
JLDU G5 à saü :
மில்க் வைற் தொழிலதிபர்  ைச வ ச ம யப் பற்றுள்ளவர். சைவசமயக் குரவர் நால்வரிடமும் நிரம்பிய பற்றுள்ளவர். திருமுறைகளில் பக்தியும், அன்பும் கொண்டவர். சந்தியாவந் தனம், அநுட்டானம், பிராணுயாமம், தியானம் இவற்றில் அசையாத நம்பிக்கையுள்ளவர். தீட்சை, திருநீறு, உருத்திராக் கத்தை விரும்புபவர். தம்மைப் போலச் சைவ சமயத்தவரும் ஒழுகுதல் வேண்டும் என்று கருதுபவர். பண்டிதமணி சி. கணபதிப் பிள்ளை ஐயா, வித்துவான் ந. சுப்பையாபிள்ளை அவர்கள், பிரம்மபூரீ சீதாராம சாஸ்திரிகள், பட்டுச்சாமி ஒதுவார் அவர்கள், கயப்பாக்கம் சோமசுந்தரம் செட்டியார் அவர்கள் எழுதிய தொகுத்த சைவசமய நூல்களை ஆயிரக்கணக்காக அச்சிட்டு வழங்கியவர்.
திருவள்ளுவர். காந்தியடிகள், சிவானந்தர் , முதலான பெரியார்களின் பொன்மொழிகளைக் காலந்தோறும் அச்சிட்டுப் பரப்பியுள்ளார். சுவாமி சுத்தானந்த பாரதியார், அரவிந்த மகான் முதலானேரின் மணிவார்த்தைகளையும், யோகர் சுவாமிகளின் குருவாசகங்களையும் அச்சிட்டுப் பரப்பியுள்ளார். ஆறுமுகநாவலரவர்களின் பாலபாட வசனங்களை அச்சிட்டு எல்லோருக்கும் கிடைக்கும்படி செய்துள்ளார். குழந்தைகள் ஏடு தொடங்கும்போது உபயோகமாகும் வண்ணம் பனையோலை யில் நவீனமாக அச்சுப் பொறித்த உயிர்மெய் எழுத்துக்கள் கொண்ட ஏடுகளை ஆயிரக்கணக்கில் ஆண்டுதோறும் உபகரித்து வருகிருர்,

all 9 an
தேவாரம், திருவாசகம், பெரிய புராணம், கந்தரலங்காரம், கந்தரநுபூதி, அபிராமியந்தாதி மு த லிய நூல்களிலிருந்து பாடல்கள் பலவ்ற்றை வர்ணத் தகடுகளில் சித்திர வேலைப் பர்ட்டுடன் எழுதுவித்துக் கோவிற் சுவர்களிலும் மண்டபத் தாண்களிலும் பதிக் துள்ளார்கள் நின்றும் இருந்தும் எங்கும் கெய்வீகப் பாடல்களைப் படிக்கவும், பாடமாக்கவும், நினைக்கவும் இவை நல்விருந்தாய் வசதியாய் உள்ளன.
கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று காஞ்சிப் பெரியார் கூறிய வாக்கியத்தை வர்ணத்துணியில் எழுதுவித்துத் கிருக்கோபுரத்தையும் வரைவித்துப் புனிதமான இடங்களில் தொங்கும் வண்ணம் செய்துள்ளார். கோயில்கள் பலவற்றுக்கு வசந் கமண்டபத் திரைச்சீலைகளை வர்ணப் படம் வரைந்து வழங்கியுள்ளார். திருமுறையோதுவோர், பாதயாத்திரை செய் வோருக்குக் குமிழ் தாளங்கள் வேண்டிய இடங்களில் வழங்கி யுள்ளார்.
சிறைச்சாலை, ன்வத் கியசாலை, அநாதரில்லம், மடங்கள் (மகலான இடங்களில் நிலையான சமயப்பணிகள் மில்க் வைற் தொழிலதிபரின் சைவப்பணியைக் காட்டி நிற்பன. இவை அவருக்கு மன்றங்கள் ஆதீனங்கள் மகிழ்ந்தளித்த சிவத்கமிழ்ச் செல்வர், சிவநெறிப்புரவலர், சிவதர்ம வள்ளல் முதலாய பட்டங்க ளுக்குச் சான்று பகருகின்றன.
விவசாய நோக்கில் :
விவசாயப் பணியில் மில்க் வைற் அதிபர் பனைவள விருத்தியே கண்ணுகக்கொண்டு நிற்கின்ருர் இப் பெருவிருப்பின் விளைவாக தம் காரிலும், தொழிலக வாகனங்கள் அனைத்திலும் பனை பொறித்த மஞ்சள் நிறக் கொடியைப் பறக்கவிட்டிருக்கிருர், இவர்கள் வருடந்தோறும் பனை விதைகளைச் சேகரித்துக் (519. யேற்றத் கிட்டப் பகுதிகளுக்குப் பகிர்ந்தளித்து அவற்றை வளர்க்கச் செய்கின் ருர், "பனையைக் கறிக்காதீர் பயனைக் குறைக் காதீர்” என்ற வாக்கிய அட்டைகளைத் தயாரித்தும். “பனைமர சோபனம்", "பனையில் பயன்”, “தாலவிலாசம்”, “பனைவளம்", * நவீனமுறையில் பனவெல்லம்" என்பன போ ன் ற சிறு வெளியீடுகளை அச்சிடுவித்தும் விவசாயப்பணியிற் பனைவள விருத்தியைக் கவர்ச்சிகரமான பணியாக மில்க் வைற் அதிபர் செய்துள்ளார். இவை “பூலோக கற்பகதரு நாயகர் ’, ‘தால காவலர் ” என்ற விருதுப் பட்டங்களை மக்கள் மனமுவந்து அளித் துள்ளமைக்குச் சான் ருக உள்ளன.

Page 8
- O -
பனைவளத்தின் பின்னணியாகவே "முருங்கை’, *வேம்பு? "துளசி”, “குரக்கன்", "பப்பாசி" போன்றவற்றையும் விருத்தி செய்யச் சிறுநூல்களை விவசாயப்பணி வெளியீடாக்கியுள்ளார். நமது மூதாதையர்கள் இவ் விவசாயப் பணி யி ல் ஈடுபட்டு முதிர்ந்த இனிய இயல்பை இன்றைய தமிழ் மக்களாகிய நாமும் பெறவேண்டும் என்ற அவாவினல் அவர்களின் விவசாயப் பழ மொழிகளும், விடுகதைகளும் * அடங்கிய சிறு நூல் ஒன்றைத் தமது பொறுப்பில் வெளிப்படுத்தியுள்ளார். வே ற் ற வ ர் பதிப்பான “நாட்டிற்கு நயம் தருவன " என்ற ஒரு பெருநூலைப் பணங்கொடுத்து வாங்கி இளம் விவசாயிகள் கழகங்களுக்கும்" பிறர்க்கும் விவசாயத்தில் எழுச்சியுற அன்பளிப்புச் செய்துள் ளார். பயிர்த் தொழிலில் நீரை மிகுதியாகப் பயன்படுத்துவ தால் யாழ்ப்பாணத்து நன்னீர் உப்பு நீராக மாறும் என்ற விஞ்ஞானிகளின் அச்சக்குரலை அனைவரும் அறிந்துகொள்வதற் காக “யாழ் குடாநாடும், நீர்வளமும்”, “நீரைப் பாதுகாப்போம்” என்ற சிறுநூல்களை வெளிப்படுத்தியுள்ளார். விவசாயிகளுக்கு உதவும்வண்ணம் நாட்டிலுள்ள கழிவுப் பொருள்களைச் சேகரித் துக் கூட்டுரமான பசளையைத் தயாரிக்கும் முறை பற்றிய நூலும் இவரால் வெளியிடப்பட்டுள்ளது. குடியேற்றப் பகுதிகளுக்கு அடிக்கடி சென்று “பூமி திருத்தி உண்”, “காட்டை வெட்டிக் கழனியாக்குவோம்” போன்ற வாக்கிய அட்டைகளை அம் மக்களுக்கு அளித்து அவர் சளை உற்சாகமளித்து வருவதும் குறிப் பிடத்தக்கத. 'தாவரங்களை வெட்டாதே ”, “தண்ணிரை விளுக் காதே’, ‘சோலையும். மலையும் மழைக்குக் காரணம்” என்ற வாக் கிய அட்டைகளைப் பரப்பிப் பயிர்வகை, மரவகை, நீர்நிலை இயல்வகை என்ற முறையில் விவசாயப்பணி எம் அதிபரால் விரிவுறும் தொண்டினை நாம் ஈண்டு நன்கு தெளியலாம்.
சமூக நோக்கில் :
சமூகப்பணியில் கல்வி, பெரியோர் நினைவு, மக்களின் சுக வாழ்வு என்பன அடங்கும். கல்விப்பணியில் அநாதர், வறி யோர் ஆகியோரது பிள்ளைகளுக்குப் படிக்கும் நூல்களை வாங் கிக் கொடுத்தும் ; சில பள்ளிகளில் பிரார்த்தனை மண்டபம் குடிநீர்த்தேக்கத் தொட்டிகள் அமைத்தும், கற்றவர்கள் எழுதிய பல நல்ல நூல்களைப் பணம் கொடுத்து வாங்கி இலவசமாக வழங்கியும், ஆத்திசூடி, கொன்றைவேந்தன் முதலான நீதி அடங்கிய "நீதிநூற் கொத்து” என்ற சிறந்த நூலை அச்சடித்துக் கொடுத்தும் வந்துள்ளார்,

- 11 -
பெரியோர்ப் பேணலாகத் திருவள்ளுவர், ஒளவையார், மகாத்மா காந்தி என்பவர்களின் உருவச்சிலையைத் தம் பொறுப்பில் சமைத்து யாழ்நகர் வீதிகளில் * தமிழ்” நினைவாக நாட்டி வைத்தும், இவர்களின் திருநாட்களில் இவர்களின் படங்களை யும் இவர்களது அமுத வாக்கியங்களையும் இலவசமாக அச் சிட்டு வழங்கியும் உள்ளார். இப் பெரியார்களின் நினைவுநாட் போட்டிகளில் பரிசு அளிக்கும் வாய்ப்பு அமையும்போது அதனை நிறைவேற்றியும் உள்ளார்.
சிறப்பாகக் காந்தியடிகள், ஒளவையார், திருவள்ளுவர் போன் றவர்களின் சிறு சிலைகளைச் செய்தளித்ததும், காந்தியாரின் நீதிக் குரங்கு உருவங்களை ஆக்கிக் கொடுத்ததும் இவரின் அன்புச் செய்கைகளாகும்.
சமூக நலம் நிமித்தம் வீதிகளில் பேருந்து வண்டிகள் நிற் கும் இடங்களில் மக்கள் மழை, வெயில் ஆகியவற்ருல் அவதியுரு வண்ணம் பேருந்து தரிப்பு நிலையங்களை அமைத்துள்ளார். திரு நெல்வேலி, க ந் த ரோ டை, கொழும்புத்துறை, நந்தாவில், சங்கரத்தை போன்ற ஊர்களில் செயல்திட்ட மாணவர்கள் குளங்களை அகழ்விக்கும் பணியில் ஈடுபட்டபோது அவர்களுக்குத் தேவையான உபகரணங்களை அளித்து அப்பணியில் முன்னுேடி யாய் நின்ருர், தருமபுரம் போன்ற விடங்களில் கிணறுகள் வெட்டுவித்து அவர்களின் நீர்ப் பற்ருக்குறையைப் போக்கி யுள்ளார். ஊர்களில் இளம்பிள்ளை வாதம் போன்ற நோய்கள் பரவும் காலங்களில் அந்நோய்களை விளக்கும் துண்டுப் பிரசுரங் களை வெளிப்படுத்தியுள்ளார். இத்துடன் யோகப்பயிற்சியையும் பரப்பி அதுதொடர்பான நூலையும், அப்பயிற்சியை விளக்கும் படங்களையும் நமக்கு அளித்துள்ளார். நம் மில்க்வைற் அதிபர் அவர்கள் இவ் யோகக்கலையில் நன்கு பயின்றவர் என்பதனை மிக்க மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்ருேம்.
இன்னும் சமூகப்பணிக்கு முத்திரை யிட்டாற்போல * மில்க் வைற் செய்தி" என்ற பத்திரிகை பல்கலைப் புலவர் திரு. க. சி. குலரத்தினம் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவருவதை நாம் ஈண்டு குறிப்பிடுதல் வேண்டும். இவ் வெளியீடு தமிழர் பண்பாட்டை வளர்க்கும்-விளக்கும் வகையில் முளைத்து சமூகத் தொண்டு சிறக்க வழிகாட்டும் சால்பில் எழுந்திருக்கின்றது. இன்றைய கதையுலகின் கதவைத் தாழிட்டு, தெய்வசிந்தனையை யும், மனித அறிவில் மலர்ந்த அறவுரைகளையும், நெறிகளையும் வெளிப்படுத்தும் களஞ்சிய இதழாக அவ்விதழ் இனிக்கின்ற தெனலாம்.
3

Page 9
- 12 -
பல்கல் நோக்கில் :
ஈழவள நாட்டின் இனித்தெழுகின்ற கலைவளர்ச்சியில் திரு. க. கனகராசா அவர்களுக்கு மிகுந்த ஈடுபாடுண்டு. பண்டிதர், வித்துவான், புலவர், போன்ற இயற்றமிழ்க் கலைஞர்களையும், திரு. பெனடிக்ற் போன்ற ஒவியக் கலைஞர்களையும், திரு. வீ. ஆ. நாகலிங்கம் போன்ற சிற்பக் கலைஞர்களையும் கெளரவித்து ஆக்கமும், ஊக்கமும் அளித்து தம் கலையார்வத்தைத் தணித் துக் கொள்வார். அத்தோடு சிறு கைத்தொழில் வல்லுநர்களின் அழகிய ஆக்கப்பொருள்களைக் கண்ணுறின் அவைகளைக் கைப் பொருள் கொடுத்துப் பெற்றுக்கொள்வார். இதனலே அவ ருடைய இல்லம் கலைப்பொருள் மலிந்த இல்லமாக மிளிர்கின் றது. இவ் வில்லத்தில் இதற்கென்றே ஒரு மணிமண்டபம் பொன்விழாக் காலத்தில் அமைத்து உள்ளமையும் நாம் ஈண்டு குறிப்பிடத்தக்கது.
நிறைவுரை:
சிவநெறிப் புரவலர் திரு.க. கனகராசா அவர்கள்'இம்மைக் கும் மறுமைக்கும் இனிய பயன் செய்யும் பணிகளை மேற்கொண் டிருக்கும் கால் பொதுமக்கள் சிறப்பாகத் தேவைப்படும் தேவை களை நேரே கண்டு கேட்கும் கருத்துடையவர்களாய் முனைந்து நின்றனர். இவ் வேண்டுகோள்களில் நாட்டுக்கும் - இனத்திற் கும் - சிறு சமூகத்திற்கும் உரியதான பொதுமைமிகும் வேண்டு கோளுக்கே திரு. க. கனகராசா அவர்கள் செவிசாய்த்து தம் செல்வத்தின் ஒரு பகுதியை வழங்கி வருகின்றர். அவ்வகையிலே தெல்லியூர் மகாஜனக் கல்லூரியில், நம் விடுதிச்சாலையில் அரை குறையாய் இருந்த கட்டிடப் பகுதியைப் பூர்த்தியாக்கும்படி சிவதர்ம வள்ளலைக் கேட்டபொழுது ஓ ! இது ஞானதானமாயிற்றே என்று எண்ணியும் நமது கல்லூரியின் அருமை பெருமையான வரலாற்றைத் தெரிந்து நின்ற நீர்மையினுலும் நம் வேண்டு கோளுக்கு உதவ முன்வந்துள்ளார். அழியும் செல்வத்தை அழி யாச் செல்வமாக மாற்றும் வித்தையாம் தானமாம் தவத்தைத் தலைமேற் கொண்ட கனகத்தின் இராசா அவர்களையும், அவரின் இன்ப அன்புக்குரிய பாரியார் நாகம்மா அவர்களையும் வாழ்க ! வெல்க !! என்று நாம் வழுத்துவதல்லால் வேறென்ன செய்ய Փւգպւծ»
ஆக்கம் புலவர் நா. சிவபாதசுந்தரஞர்

6. சிவமயம்
மில்க்வைற் அதிபர் திரு. க. கனகராசா, J. P. அவர்கள்
சீரிய வண்ணநகர் சேர்ந்த முருகேசர்
நேரியஇல் வாழ்வின் நிறைவாகப் - பேரியலும்
கந்தைய பிள்ளைக் கனவானத் தன்னருமை மைந்தரெனப் பெற்ருர் மகிழ்ந்து.
ஊக்கம் மனவுறுதி யுள்ளகந் தையபிள்ளை ஆக்கம் தருந்தொழிலென் ருராய்ந்து - நோக்கிச் சவர்க்காரம் ஆக்கினர் தம்மைச்சார்ந் துள்ளா ரவர்க்கும் தொழிலுதவி ஞர். 3
இல்லத் துணைவி யெனக்கொட் டடிநகரின் செல்விமீ ஞட்சி யெனும் திருவை - நல்லவண்ணம் ஏற்றினிது வாழ்ந்தார் இலங்குமெழு நன்மக்கட் பேற்றினையும் உற்ருர் பெரிது. 3.
மைந்தரைவ ருள்ளே நடுநா யகமணியாய் வந்துதித்த மன்கனக ராசவள்ளல் - முந்துகில்னர் கல்லூரி யிற்கற்றுக் கம்பளையில் வேறிடத்தில் பல்தொழிலும் பார்த்தார் பயின்று. 4
தந்தையார் வேண்டத் தன்யர் கனகர் யாழ் வந்துமில்க் வைற்சோப் தொழிலகத்தைச் - சிந்தை சிறக்கப் பொறுப்பேற்றுச் செப்பமுற வைத்தார் திறத்திற் ருெழிலினைச் செய்து. s
நூதன யந்திரங்கள் நுட்பபுத்தி கொண்டரிய சாதனை யாய்த்தொழிற் சாலையினை - மேதினியில் நல்ல பிரசித்தம் நண்ணும் விதமாகப் பல்க உழைத்தார் பரிந்து. 6
இல்லத் துணைவி யெனவாய்த்த நாகம்மா செல்வத் திருவந்து சேர்ந்ததுபோல் - பல்விதமாய்த் தொட்டதெல்லாம் பொன்னுய்ச் சொலிக்கும் நிலையெய்தி திட்பமுறு வாழ்வெய் தினர். 7

Page 10
- 4 -
தொழிலைப் பெருப்பித்துத் தோற்றமிகும் நல்ல எழில்மாட கூடம் இயற்றி - வளமார் திருவால வாயென்று சீரியபே ரிட்டுப் பெருவாழ்வு பெற்றுள்ள னர்.
செல்வத்தை ஈட்டித் திருப்பணிக்கும் மக்களுக்கும்
நல்லன எல்லாம் நயப்பதற்கும் - பல்விதமாய்
வாரி வழங்கும் கனகருக்கு மாரியும் பாரியுமொப் பாகப் படும்.
சிவதர்ம வள்ளல் சிவநெறிக்காப் பாளர் நவகற் பகம்தால நாதர் - தவயோகி நேயர் சமாதான நீதிபதி யென்றுபல வாயபட்ட முற்ருர் அவர்.
சைவம் வளரத் தமிழ்வளரத் தாரணியில் மெய்யும் அறமும் மிகவளரப் - பொய்யும் புலையு மொழியப் புனிதத்தொண் டாற்றும் கலைஞர் கனகரலால் யார்.
இன்பமே சூழஇங் கெல்லோரும் வாழநிதம் நன்மை செயுங்கனக ராசரின்ப - அன்புத் துணைவியொடும் நீடு சுகம்பெற ஈசன் இணைமலர்த்தாள் ஏத்துவோ மே.
ஆக்கம்: அருட்புலவர் பண்டிதர் அ. ஆறுமுகம் அவர்கள்
10Ꮙ
t
12


Page 11
திருமகள் அழுத்தகம், சுன்னுச