கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கைலாசபதியும் நானும்

Page 1


Page 2

கைலாசபதியும் நானும்
கே. எஸ். சிவகுமாரன் B. A.

Page 3
KALASAPATH YuM NAANUM A CRITICAL ASSESSMENT by K. S. SIVAKUMARAN, B. A.
All Rights Reserved
FIRST PUBLISHED IN JANUARY, 1990
FIFTY FOURTH PUBLICATION OF : THAMIL MANRAM GALHINNA, KANDY, SRI LANKA.
Office Address: THAMIL MANRAM, No. 10, FOURTH LANE, KOSWATTA ROAD,
RAUAGRYA.
அச்சு: Printed at:
Fry tot iesyrfai Chamara Printers 22/A, மல்லிகா லேன், 22/A, Mallika Lane,
கொழும்பு 8. Colombo 6.

செய்யாமற் செய்த உதவி.
அறிவுடைய நல்லவர்கள், என்றுமே செய்நன்றி மறப் பவர்களல்லர். அதுவும், எதிர்பாராத நிலையில் எமக்கு ஒரு வர் நல்லன செய்தால், வாழ்நாள் முழுவதிலும் அதனை நினைத்துக்கொண்டிருப்பதே எமக்குத் தனி மகிழ்ச்சியைத் தருவதாகி விடுகிறது.
தான் முன்பு ஓர் உதவியும் செய்யாமலிருந்தும், பிறர் தனக்குச் செய்த உதவிக்கு நாம் என்ன செய்தல் வேண்டும்? அறிவிலிகளெனில்,"இவர் என்ன பெரிதாகச்செய்துவிட்டார்" என்ற நினைப்பில் மற்றவர் செய்த நலனை மறந்துவிடுவார்கள் அத்துடன் நிற்காமல், சில தீயவர்கள் நன்மை செய்தவருக் குத் தீங்கு செய்யவும் தயங்கமாட்டார்கள். ஆனல், அறிவு டையோர் நிலை வேறு, முற்றிலும் வேறு. அவர்களின் நிலை பற்றி, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே திருவள்ளுவர் என்ன கூறியிருக்கிருர் தெரியுமா?
செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்ற லரிது -- முன்பு எதுவித உதவியும் செய்யாமலிருந்தும், தனக்கு உதவி செய்தவருக்கு, மண்ணுலகையும் வானுலகையும் கைம்மாருகக் கொடுத்தாலும், அது போதுமானதாகாது என்று திருவள்ளுவர் கூறியுள்ளார். அந்த அடிப்படையில், நன்றி உணர்வுடன் எழுதப்பட்டுள்ளது தான், இந்நூல். ' இலங்கையின் இலக்கிய வானில் சுடர் விட்டொளிர்ந்த தொரு, மங்காப் புகழ்பெற்ற தாரகை பேராசிரியர் கைலாச பதி. அவர், பேராதனையில் 1952ஆம் ஆண்டிலிருந்து பல்கலைக் கழகப்படிப்பை மேற்கொண்டு, தமிழில் முதல் தரத்தில் சிறப் புப் பட்டம் பெற்றவர். பட்டதாரியான பின், பொதுசனத் தொடர்புத்துறையில் பிரவேசித்தார். 1960 ஆம் ஆண்டில், 'தினகரன்' ஆசிரியராஞர். இத்துறையில் மிளிர்ந்து கொண்டிருந்த போதிலும், அவருக்கு மனத்திருப்தி ஏற்பட வில்லை. எனவே, மீண்டும் பேராதனை திரும்பினர். இம்முறை, தமிழ் விரிவுரையாளராக, பின்னர், இங்கிலாந்து சென்று, கலாநிதிப்பட்டம் பெற்றர் யாழ்ப்பாணத்தில் இலங்கைப்பல் கலைக்கழக வளாகம் நிறுவப்பட்டபொழுது அதன் தலைவரா ர், அங்கு, தமிழ்ப் பேராசிரியராகவும் கடமை புரிந்தார்: * சாதனைகளின் பின்னரும் தெரிந்தவர்களைக் கண்ட சமயம், புன்னகை புரிந்து வரவேற்று, இனிமையாகப் பழகி வந்தார். மனிதாபிமானம், அவரிடத்தில் உச்ச நிலையைக் கண்டது. . . . *: , ۔,, ... ? ۔۔۔ .*,

Page 4
பேராதனையில் பல்கலைக்கழக மாணவனுயிருந்த காலத்தி லேயே அவர் எனக்கு அறிமுகமானர். தான், ஒராண்டு முன்பு, பல்கலைக்கழகத்தில் சேர்ந்திருந்தேன். பின்னர், 1958 ஆம் ஆண்டில், தான் 'தினகரன்'துணையாசிரியராகப் பதவி யேற்ற சமயம், அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிட்டியது. தனக்குத் தெரிந்த வகையில், மற்றவர்களை நல்வழி நடத்துவதில் அவர் மிக வல்லவராயிருந்தார்.
கலாநிதி கைலாசபதி, 'தினகரன்' ஆசிரியராக இருந்த பொழுதுதான் திரு. கே. எஸ். சிவகுமாரன், அவரை, தின கரன் அலுவலகத்தில் சந்தித்திருக்கிருர். திரு.சிவகுமாரனின் வாழ்க்கையில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்திவிட்ட கைலாச பதி அவர்களுக்குத் தனது நன்றியைத் தெரிவிக்கும் விதத்தில் அவர்களுக்கிடையில் ஏற்பட்ட நிலையான உறவுகள் பற்றி யும், திரு. கைலாசபதி காட்டிய பாதையில் தான் சென்று வெற்றி கண்டுள்ளது பற்றியும், திரு. சிவகுமாரன் இந்நூலில் எடுத்துக்கூறியுள்ளார். மிகவும் பணிவான பேராசிரியர் கை லாசபதி, தமிழுலகனைத்திலும் பிரபல்யமானவர். அவர் காட் டிய நல்ல வழியில் நன்மை பெற்றதற்கான நன்றிக்கடனைச் செலுத்தியிருக்கும். திரு. சிவகுமாரன், உயரிய பண்பினர்.எவ் விதப் பலனும் எதிர்பாராமல், நல்ல ஆலோசனை கூறித் தன்னை வழிப்படுத்திய கலாநிதி கைலாசபதி பற்றி, நன்றியு ணர்வுடன் இந்நூலில் திரு.சிவகுமாரன் எழுதியிருப்பது ஒன் றே அவரின் உயரிய பண்பிற்குப் போதிய சான்று. ஏழாண்டு காலத்திற்கு மேலாக, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாப னத்தின் செய்திப் பகுதியில் நான் கடமை புரிந்த சமயம். அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பும் எனக்கு இருந்தது.
இவ்வாரூக, நன்கு அறிமுகமான இருவரின் தொடர்பு
டைய இந்நூலினை, தமிழ் மன்றப் பிரசுரமாக வெளியிடுவ தில் பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன்.
இல, 10, நாலாவது லேன், எஸ். எம். ஹனிபா கொஸ்வத்த ரோட், நிர்வாகச் செயலாளர் ராஜகிரிய. - - - - தமிழ் மன்றம்
1990 مس-01-10

கைலாசபதியும் நூலாசிரியரும்
மறைந்த பேராசிரியர் கைலாசபதி அவர்கள் பற்பல துறைகளில் ஈடுபட்டுப் பெரும் பணி செய்துள்ளார் என் பது நாம் அறிந்தசுே. ஓர் எழுத்தாளஞக, ஒரு பத்திரிகை ஆசிரியனுசு, ஒரு கல்விம" ஞக, ஒரு திறனய்வாளஞக, ஒர் ஆய்வறிவாளரூக அவர் ஆற்றிய பணிகள் நமது நாட்டி ற் கும், தமிழியலுக்கும், மனுக்குலத்திற்கும் பயனளித்துள்ளன' வெகுஜனத் தொடர்புச் சாதனங்களை அவர் பயன்படுத்திய முறையும் பர:ட்டத்தக்கது. நல்ல பேச்சாளஞக, ஒலிப ரப்பாளனுக, எழுத்தாளஞக, மொழிபெயர்ப்பாளனுக, நுலாசிரியனுக, போதனுசிரியனுக விளங்கிய அவரிடத்து ஒரு காந்த சக்தி காணப்பட்டது. "செய்வன திருந்தச் செய்" என்பதில் அசையாத நம்பிக்கையுடையவர் கைலாஸ் அவ ரை அணுகியவர் எவரையும் இதய சுத்தியுடன் ஆதரித்து, குறை நிறைகளைச் சுட்டிக் காட்டி, அன்பு செலுத்தி, ஆதரவான முறையில் வழிநடத்திவந்துள்ளார். அவ்விதம் பயனடைந்த பலரில் இந்தூலாசிரியன் ஒருவன். -
1954 இல் அவரை முதன் முதலில் இலங்கை வானெலிக் கலையகம் ஒன்றிலே கண்டேன். பழக்கம் ஏற்படவில்லை. வெள்ளவத்தை 40 ஆம் ஒழுங்கையில் எனது பெற்ருேரு டன் வசித்தவேளை அவர் 42 ஆம் ஒழுங்கையில் தமது மாமனர் குடும்பத்துடன் வ்சித்து வந்தார். அப்பொழுதும் தொடர்பு ஏற்படவில்லை. . صمہ ۔"",,, x.تم .*

Page 5
'தினகரன்” ஆசிரியராக அவர் பதவியேற்ற பின்னரே, நான் அவரிடம் சென்று என்னை அறிமுகப்படுத்திக்கொண் டேன். இந்த அறிமுகம், சுமுகமாக அமையச் சூழ்நிலை உதவிற்று. அச்சமயம், இன்றைய பெரும் ப்த்திரிகை ஆசிரி யர்களும், நாடறிந்தவர்களும், சட்டத்தரணிகளுமான ஆர். சிவகுருநாதன் அவர்களும். க. சிவப்பிரகாசம் அவர்க ளும் 'தினகரன்' ஆசிரியர் குழுவில் பணியாற்றி இந்தனர். இவர்கள் ஏற்கனவே என்ன அறிந்தவர்கள் எனவே, தமது சக ஆசிரியர்களுக்குப் பரிச்சயமாயிருந்த என்னை ஒருவித மரியாதையுடன் அணுகிச் சம்பாஷிக்கத் தொடங்கினர், அமரர் கைலாஸ். அவருடன் உரையாடுவதே ஒரு தனியின் பம்: பயனுள்ள கருமம்.
அந்நாட்களில் ஆங்கிலம் மாத்திரம் பேசுவது, ஆங்கில இலக்கியத்தைப் பற்றி வானளாவப் புகழ்வது, மேலைக் சலையுலகம் பற்றிப் பிரஸ்தாபிப்பது போன்ற தமிழிற் சிந் திக்காத ஒருவனுக நான் சஞ்சரித்து வந்தேன். இந்தக் குறைபாட்டை இனங்கண்டுகொண்டதஞலோ என்னவோ கைலாஸ் என்னைச் சரியான வழியில் திசைதிருப்ப எண்ணங் கொண்டார் போலும். தமிழிற் சிந்தித்து தமிழிலக்கியம் பற்றி எழுதும்படி பணித்தார்.
அக்காலத்தில் சிறுகதை, புதுக்கவிதை, திரைப்படப் பாட்டுக்கள் போன்றவற்றில் நான் பிரிதி கொண்டிருந் தேன். இருந்தபோதிலும், ஆங்கிலத்திலே கலை, இலக்கிய விமர்சன நூல்களைப் படித்தும் வந்தேன் எனது "நெகட்டிவ்" (Negative) இயல்புகளைப் "பொசிட்டிவ்' (Positive) ஆக்கும் எண்ணத்துடன் அவர் கூறிஞர்; "நீர் ஒன்றில் ஆக்க இலக்கியகாரணுகி இருக்கவேண்டும். அல்லது விமர்சகளுக வளர வேண்டும், ஆக்க இலக்கியம் படைக்கப் பலர் நம்மி டையே இருக்கிருர்கள். உமது உலக இலக்கிய அறிவு, தமி ழுக்குச் செழுமையூட்ட வேண்டுtாயின், நீர் நமது தமிழ் இலக்கியங்களைப் ப்டித்து விமர்சனங்கள் எழுதினுல் என்ன? அது உமக்கும் நல்லது. ஈழத்துத் தமிழ் இலக்கியத்துக்கும்
6

உதவிரூலும் உதவும்" என்ருர், நான் ஆச்சரியப்பட் டேன். விமர்சகனக நானும் மாறலாம் என்ற தைரியத் தையும் உற்சாகத்தையும் வழிகாட்டலையும் தந்த அந்தப் பேராசானுக்கு, நான் பணிவுடையேன்.
அவர், ப்ளக்கனேவின் நூல் ஒன்றைத் தந்து அதனைப் படிக்குமாறு கூறினர். 1959 ஆம் ஆண்டு ஜனவரியில் “கழுத்து" என்ற விமர்சன ஏடு தமிழ் நாட்டில் முதல் தடவையாகப் பிரசுரமானபோது, அதனை எனக்கு அறிமு கப்படுத்தியவரும் கைலாஸே. நம்பினுல் நம்புங்க்ள், சமகா லத் தமிழ் இலக்கியம் பற்றி ஒன்றுமே அறிந்திராத எனக்கு நுழைவாயில் அமைத்துத் தந்தவர் கைலாஸ். பின்னர் பேராசிரியர் சிவத்தம்பி, எம். எஸ். எம். இக்பால், சில்லையூர் செல்வராசன், பி. ராமநாதன், (ஜவாஹர்) கனசரத்தினம் இவர்கள் மூலமே புதுமைப்பித்தன் முதல் ஜெயகாந்தன் வரையிலுமான, சிதம்பர ரகுநாதன் முதல் வல்லிக் சண்ணன் வரையிலுமான, விந்தன் முதல் ஜானகிராமன் வரையிலு மான, கு. ப. ரா. முதல் ந. பிச்சமூர்த்தி வரையிலுமான, சிட்டி முதல் க. நா. சு. வரையிலுமான பல தமிழ் நாட்டு இலக்கியக் கர்த்தாக்கள் பற்றியும், விமர்சகர்கள் பற்றியும் அறிய நேர்ந்தது. இது ஐம்பதுகளின் கடைக்கூறில் திகழ்ந்தது
'நாவலாசிரியர் வரிசையில் வரதராசனரின் இடம்’ "நான் விரும்பும் நாவலாசிரியர்” போன்ற தொடர்களில் எழுதும்படி என்னைப் பணித்து, எமது பெரிய எழுத்தா ளர்கள் மத்தியில் எனக்கும் இடமளித்து, எனது கட்டு ரைகளை வெளியிட்டார். “பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும்" என்பது போல நானும் ஓரளவு பிரபல்யம் பெறத் தொடங்கினேன். இதற்கிடையில் ‘எழுத்து", "சரஸ் வதி” போன்ற பத்திரிகைகளிலும் எனது கட்டுரைகள் வெளியாயின.
எனது வழிகளில் கலை, இலக்கியங்களை அணுக அவர் தடையாக இருக்கவில்லை. ஆயினும், சமூகவியல் அடிப்படை
7

Page 6
யில் நோக்குவ்தே பொருத்தமுடையது என்று அடிக்கடி வவியுறுத்தி வந்தார். இ கற்கிடையில், கைலாஸ் அவர்களை அறியுமுன் நமது நாட்டு மற்ருெரு தலைசிறந்த ஆய்வறிவா ளரான பேராசிரியர் கா. சிவத்தம்பியை அறிமுகஞ்செய்து கொண்டிருந்தேன். அவர் கொழும்பு ஸாஹிராக் கல்லூரி யில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். நான் படித்து வந்த கொழும்பு அர்ச், ஜோசப் கல்லுரித் தமிழ் மன்றமும் அவருடைய கல்லூரித் தமிழ் மன்ற மும் ஏதோ விவாதம் நடத்திய போது, நானும் பங்கு கொண்டேன். அப்பொ ழுதுதான் ‘சிவா’ அவர்களுடன் அறிமுகமாகினேன்.
கைலாஸும், சிவாவும் எனது பலவீனங்களை நன்கு அறிந்திருந்தும் உற்சாகமூட்டி விமர்சனத் துறையில் கவ னஞ்செலுத்த வழிகாட்டினர்.
கைலாசபதி அவர்களுடன் கலந்தாலோசிக்கத் தொடங் கிய பொழுதுதான், எனது பல குறைபாடுகள் தெரிய வந்தன. முதலில் "டொக்மட்டிக்" (Dogmatic) ஆக இருக்க வேண்டாம் என்ருர். மேலைத்தேய விமர்சனப் பார்வைகள் மாத்திரமே முற்று முழுதாசுச் சரியானவை என்று கருத வே ண்டாம் என்ருர், உயர்ந்த கருத்துக்களையும் எளிமையான, இலகுவான முறையில் தெரிவிக்க வேண்டும் என்ருர், பத்தி எழுத்தின் மூலம், பொதுவாக விமர்சகர்களுக்குப் பயன ளிக்கும் தொண்டைச் செய்கிறேன் என்று என்னை உற்சா கப்படுத்திர்ை. எனது பத்திரிகை எழுத்துக்கள் நூல் வடி வம் பெறவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி வந்தார். எனது முதல் நூல் ஆங்கிலத்திலே வெளி வந்த பொழுது அதற்கு அணிந்துரை வழங்கினர். பட்டப் படிப்பையும், ஆராய்ச்சிகளையும் நான் மேற்கொள்ள வேண்டும் என்று கூறி வந்தார். கலை இலக்கியங்கள் மாத்திரமன்றி, பல துறைகளைப் பற்றியும் ஈடுபாடு கொண்டு அவற்றின் செய் திகளைத் தமிழில் தரவேண்டும் என்ருர். அவர் தெரிவித்த ஆலோசனையின் பேரிலேயே, திகனரன் வாரமஞ்சரியிலே "அறிவியல் வளர்ச்சி' என்ற கட்டுரைத் தொடரை எழுதினேன்.
8

ானது நூல்கள் ஆங்கிலத்திலே அதிகம் வரவேண்டும் என்ருர். நானும் ஓர் ஆங்கில இலக்கியப் பட்டதாரி என் பதை நானே மறந்துவிடும் போதெல்லாம், அதனை நினை ஆட்டி, என்னிடமே மேலை இலக்கியங்கள் பற்றிய சில பல தகவல்களைக் கேட்டறிவார். உண்க்மையிலேயே நமது நாட் டுத் தமிழ் எழுத்தாளர்களிலே (ஆங்கில இலக்கியத்தை ஒரு பாடமாகப் பயின்ற பட்டதாரிகளான ஏ. ஜே கண்க ரத்ன, சி. வி. இராஜசுத் தரம், மஹ்ரூப், நிர்மலா நித்தியா னந்தன்,சுரேஷ், செ. கனகநாயகம் போன்றவர்கள் உட்பட) பேராசிரியர் கைலாசபதியைப் போன்று சமகால ஆங்கில விமர்சன நூல்களைப் படித்தவர் எவருமிருந்திரார் என நான் துணிந்து கூறுவேன். அவர் மூலமாகவே நான் சில நூல்களைப் படித்துத் தேற முடிந்தது. உதாரணமாக மார்க் சிய விமர்சகர் கோல்ட்வெல் , "த கிரிட்டிக்கல் இடியம்’ (The Critical Idiom) என்ற ஆங்கில நூல்வரிசை ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
வானெலியில் செய்தியாளனுகவும், ஒலிபரப்பாளனுக வும் நான் பணி புரிந்த வேளை, எனது முயற்சிகளைப் பாராட்டி வாழ்த்தினர்.
ஆங்கில வாசகர்களுக்கும், நேயர்களுக்கும் நமது கலை இலக்கிய முயற்சிகளை அறிமுகப்படுத்தி வருவதை மாத்திரம் பலர் பாராட்டுவதுடன் நின்றுவிடும் பொழுது, கைலாஸ் அவர்கள், அது எனது பணிகளில் ஓர் அம்சமே என்றும் அடிப்படையில் நமது நாட்டு முன்னணித் தமிழ் விமர்ச கர்களில் ஒரு வணுக என்னைக் கருதிக் கொள்ள வேண்டும் என்றும் "பத்தி எழுத்துடன் நின்று விடாது, பரந்து விரிந்த ஆழமான முயற்சிகளைத் தான் எதிர்பார்ப்பதாகவும் வலியுறுத்தி வந்தார்.
கைலாஸின் உற்சாகமான வரவ்ேற்பையும், ஆதரவை பும், அன்பையும், மதிப்பளித்து விவாதித்து, தன்வழிக் கருத்துக்கள் பொருத்தமுடைமை என்று நிலை நாட்டும் பண்பையும், சுவையான ஆய்வறிவுப் பரிவர்த்தனையை யும் பெற்று வந்தேன்.

Page 7
கைலாசபதி தன்னை ஒரு சமூகவியல் ஆய்வ்றிவாள ணுகவே இனங் காட்டிக்கொண்டார். அவருடைய கருத் துப்படி, "இக்காலத்தில் இலக்கிய கர்த்தா ஒருவர் விவேகத் துடனும் ஆற்றலுடனும் செயற்பட வேண்டுமாயின் கணிச மான உலகியல் அறிவும் அனுபவமும் பெற்றிருக்க வேண்டு வதன்றி, சமுதாயத்தின் இயக்கவியல் பற்றிய ஞானமும் வாய்க்கப் பெற்றிருத்தல் அவசியமாகும். திறனுய்வு மனித வாழ்க்கையை விவரித்து விளக்கங் கூறும் அறிவுத்துறைகள் பலவற்றைச் சார்ந்து நிற்கிறது மனிதப் பண்பியல் துறை களான வரலாற்றியல், தொல்பொருளியல், மெய்யியல், அழகியல், மொழியியல் முதலியனவற்றுடன், சமூக விஞ் ஞானத் துறைகளான மானிடவியல், சமூகவியல், உளவி யல், அரசியல், பொருளியல், மக்கட் பண்பாட்டியல் என் பனவும் இலக்கிய ஆய்வுக்கு இன்று இன்றியமையாதன. தனித்தும் சார்ந்தும் இயங்கும் இப்பண்பே நவீன இலக்கி யத் திறனய்வை முற்கால இலக்கிய ஆய்வுகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது, (முன்னுரை “சமூகவியலும் இலக்கியமும்’ 1979. சென்னை என். சி. பி. எச்.)
பல்நெறி சார்ந்த (multi - disciplinary) ஆய்வும், அணுகுமுறையும் தமிழிற்கு அறிமுகமாகிப் பரவலாகி வரு வது கைலாசபதி மூலமே என்பது மிகையல்ல. அது மாத்தி ரம் போதாதா, பெயர் நீடித்து நிற்க? இந்த நூற்ருண் டிலே, ஈழம் உலகுக்கு அளித்த தமிழ் ஆய்வறிவாளர் கைலாசபதி என்பதை, அடுத்த சில தசாப்தங்கள் நிருபிக் கத்தான் போகின்றன.
10

கைலாசபதியின்
அணுகுமுறை
பேராசிரியர் கனகசபாபதி கைலாசபதி கலை, இலக்கிய, சமூக அரசியல் துறைகளிலே பரிமாணங் கொண்ட ,60 با هم பங்களிப்பினைச் செய்து விட்டு மறைந்த ஓர் ஆய்வறிவா ார். “இன்டலெக்சுவல்" (Intellectual) என்ற ஆங்கிலப் பதத்திற்குச்சமமாக'ஆய்வறிவாளர்' என்ற பிரயோகத்தைப் பிரபல்யப்படுத்திய முதல்வர்களில் அவர் முக்கியமானவர்.
سمسمہ
இந்த ஆய்வறிவாளர், விமர்சகர் அல்லது திறனுய் வாளராகவும் கணிக்கப்படுகிருர், ஏனைய திறனுய்வாளர் போன்று கைலாசபதியை மதிப்பிட முடியாதிருக்கிறது. இதற்குத் காரணம், இவர் இலக்கிய வரலாற்ருசிரியனுக நின்றே தமது திறனுய்வைச் செய்திருக்கிருர். அதாவது, ஒரு மதிப்புரையாளனுகக் குறிப்பிட்ட ஒர் ஆக்கத்தைப் பற்றியோ, ஆசிரியனைப் பற்றியோ இவர் எழுதியவை எண்ணிக்கையில் அதிகமில்லை. ஒரு சில நூல்களுக்கு முன் னுரை எழுதும் பொழுதுகூட பொதுப்படையான அடிப்ப டைச் சிந்தனைகளேத்தான் தொட்டுச் சென்று வலியுறுத்த வேண்டியவற்றை வலியுறுத்தி இருக்கிருர்,
புறநடையாகக் காவலூர் ஜெகநாதன், சாந்தன் ஆகி யோரின் சிறுகதைத் தொகுப்புகளுக்கு எழுதிய முன்னுரை as 26T 'llpritag-disé Rifl 1956m)th (Practical Criticism) 60) as லாசபதியின் வாக்கியத்தில் கூறுவதானல், புறநிலைக் கொள் கை என்ற வகையில் அடக்கலாம். ஆக, கைலாசபதி மதிப்பு ரைகளை எழுதுவதை விட தனி இயக்கங்கள், போக்குகள்
1.

Page 8
தனியாட்கள் ப்ோன்றவற்றைப் பற்றிய அறிவாராய்ச்சிக் குறிப்புகளையும் திறனய்வுக் கட்டுரைகளையும் எழுதி இருக் கிருர், அதாவது அவர் இலக்கிய வரலாற்றைப் புதிய முறையில் அணுகி, இலககிய வரலாற்ருசிரியர்களுக்குக் குறிப் பாகவும், இலக்கிய மாணவர்களுக்குப் பொதுவா சவும் எழு தும் ஒர் ஆய்வறிவாளர். என் வேதான் கைலாசபதியை ஒரு சாமான்ய விமர்சகராகக் கருத முடியாதிருக்கிறது.
அவகுடைய ஆரம்ப நூல்களில் ஒன்ருன 'பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும்" என்ற நூலை எடுத்துக் கொண்டால், சங்ககாலம் சங்கமருவிய காலம், பல்லவர் காலம், சோழர் காலம் ஆகிய காலங்களில் எழுந்த தமிழ் இலக்கியங்களை வ 1 க்க அடிப்படையில் அணுகிப் புதிய கருத்துக்களை அவர் தெரிவித்திருப்பதை நாம் காண்கிருேம். கைலாசபதி தெரிவித்துள்ள கருத்துக்களை ஆதாரமாகக் கொண்டு, தமிழ்நாட்டு தமிழ் இலக்கிய நவீன ஆய்வாளர் களில் ஒருவராகிய கோ. கேசவன் ‘மண்ணும் மனித உறவு களும்' என்ற நூலை எழுதி இருப்பதை அவதானிக்கிருேம். இது போன்றே, நாவல், ஒப்பியல், 19 ஆம் நுற்ருண்டுத் தமிழ் இலக்கியப் புதுப் புனைவாளர்கள், சிந்தனையாளர்கள் போன்ற விஷயங்கள் குறித்து, தமிழ் இலக்கிய வரலா *ருகவே கைலாசபதி எழுதுவதை தாம் கண்கிருேம்.
கைலாசபதி ஒர் இலக்கிய வரலாற்ருசிரியன் என்ற முறையில் முழுமையான கணிப்பை மேற்கொள்ள நூல் வடிவம் பெருத பல கட்டுரைகள் இருக்கின்றன. அவை அனைத்தும் நூல் வடிவம் பெற்ருல்தான், கைலாசபதியின் ஆளுமையை ஒரளவு கணிக்க முடியும்.
இலக்கியத் திறனுப்வு தொடர்பாக, குறிப்பாக ஈழத்து இலக்கிய விமர்சனம் தொடர்பாகக் கைலாசபதி பின்பற்றிய அணுகுமுறையை விளக்கிக் காட்டுவதே இவ்விடத்தில் எனது நோக்கம். இந்த முயற்சிக்கு ஆதாரமாகக் கைலாச பதியின் மூன்று பிரசுரங்களை எடுத்துக்கொள்வோம். அவை யாவன: "இலக்கியமும் திறனய்வும்’ (1973 - 1976),
2

冷
இலக்கியச் சிந்தினைகள்' (1983) (இந்நூவில் இடம்பெற் றுள்ள ‘தமிழும் விமர்சன இலக்கியமும்' என்ற கட்டுரை விசேடமாகக் குறிப்பிடத்தக்கது), ‘ஈழத்தில் இலக்கியத். நிறனுய்வு' (இக்கட்டுரை இந்தியாவில் வெளியாகிய "சுடர் மலர்' என்ற ஏட்டில் இடம்பெற்றது).
முதலிலே, ‘ஈழத்தில் இலக்கியத் திறனுய்வு' என்ற கட்டுரை பில் கைலாசபதி தெரிவிக்கும் கருத்துக்களைப் பார்ப்போம்.
திறனுய்வு’ என்பது இக்காலத்தில் எதனைக் குறிக்கும்? இதற்கு ஓரளவு நிறைவான பதிலைப் பேராசிரியர் தருகி
rf:
"அழகைச் சுவைப்பதுடன், அதனேடு பிரிக்க இயலாத வாறு பிணைக்கப்பட்டி: க்கும் செய்திகளையும் சிந்தனைகளை யும் கருத்துருவங்களையும் கண்டுகொள்வதும் அவற்றை மதிப்பிடுவதும் அவற்றுக்கு விளக்கம் உரைப்பதும் திறனுய் வின் பண்பும் பயனும் ஆகும். இன்றையத் திறனுய்வு, விவ ரித்து விளக்கும் முறையைப் பற்றுக்கோடாய்க் கொண் டது என்பதில் தவறில்லை",
உரையாசிரியர்கள் மரபு போன்று, திறனுய்வு மரபு இலங்கையில் உண்டா? ஆம். இடைக்கால உரையாசிரியர் மரபு நமது நாட்டிலும் செழித்து வளர்ந்து வந்திருப்ப தாகக் கைலாசபதி தெரிவிக்கிருர், இதற்கு ஆதாரமாக மா. "பீதாம்பரன் எழுதிய ‘ஈழநாட்டு உரையாசிரியர்கள் (கணேச ஐயர் நினைவு பலர் 1960) என்ற கட்டுரையைக் குறிப்பி டுகிருரி, ‘சித்தியாருக்கு உரைகண்ட ஞானப்பிரகாச முனி வரிலிருந்து சங்க நூற் செல்வர் க. அருளம்பலஞர் வரை இம்மரபு குறிப்பிடத்தக்க விதத்தில் ஈழத்தில் நீடித்துள் ளது” என்பது கைலாசபதியின் அவதானிப்பு. “பண்டித முறைத் திறனுய்வு', 'மரபுவழித் திறனுய்வு' என்று இம்மு றையைக் கைல. சபதி விபரிப்பார். இந்தப் பண்புள்ளோர் சிலரில் சி. கணேச ஐயர், வ மு. இரத்தினேஸ்வர ஐயர், விபுலானந்த அடிகள், பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை,
13

Page 9
LLLSTTL LGLGr kTTTSS LLLS TT LSLTLESL S ETTtttLL LLLLLL பெயர்களைக் கைலாசபதி குறிப்பிட்டிருக், ரு,
இரசனை முறைத் திறனுய்வு" அல்லது "சுவையுணரும் நோக்குத் திறனய்வு' என்ற வகையில் விபுலானந்த அடிகள், ப்ண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை ஆகியோரும், க, ச, LTTTTTTTSTS TTTTT TTLLLLS LS L TTTTTaEEcELLL LLLLLS LLLLLLS பீதாம்பரன், கனக செந்திநாதன், பண்டிதர் பெn . கிருஷ் ணபிள்ளை, பண்டிதர் க. பொ. இரத்தினம் போன்ருேரும் ப்ங்களிப்புச் செய்திருப்பதாகக் கைலாசபதி குறிப்பிடுகிருt.
முதலிரு பிரிவினருக்கும் இலக்கியத்தின் பயன், இலக் கியத்தில் இடம்பெறக்கூடிய பொருள், இலக்கிய ஆசிரியt கள் கையாள வேண்டிய மொழி நடை என்பன பற்றிக்
கருத்து வேறுபாடு இருக்கவில்லை" என்று கைலாசபதி திட் டவட்டமாகத் தெரிவிக்கிறர்.
ஈழத்து நவீன திறஞய்வாளர்களின் முன்குேடியாக இலங்கையர்கோன், சி. வைத்திலிங்கம், சோ. விவபாதகம் தரம் ஆகியோரைக் கைலாசபதி குறிப்பிட்டுள்ளார். கலப் புலவர் க. நவரத்தினம், பேராசிரியர் க. கணபதிப்பிள்கின 畿 இராமலிங்கம் ஆகியோர் பங்களிப்பையும் பதிவு செய்
დgf*.
"தனிப்பட்ட இலக்கியப் படைப்புகள் பற்றி மட்டு மன்றிப் பொதுவாக இலக்கியம் தொடர்பான பல்வேறு செய்திகள் குறித்தும் கொள்கை அடிப்படையிலும் உண் மை விளக்கம் தரும் நோக்கிலும் சிலர் எழுதினர். சுே கணேஷ், அ. ந. கந்தசாமி ஆகியோர் இத்தொடர்பில் விதந்துரைக்கப்பட வேண்டியவர்கள்”என்கிருர் கைலாசபதி,
ஐம்பதுகளின் இறுதியிலிருந்து க. கைலாசபதி, கா. சிவத்தம்பி, ஏ. ஜே. கனகரத்ன, சி. முருகையன், சில்லெயூர் செல்வராசன் ஆகியோர் தீவிரமாகச் செயற்பட்டு வரு பவர்கள் என்று குறிப்பிடும் பேராசிரியர், 'ஈழத்து இலக்
14

கியங்கள் மட்டுமன்றிப் பொதுவாகத் தமிழ் இலக்கியத் திறனுய்வும் ஆழ அகலம்பெற இவர்கள் பங்களித்துள்ளமை நன்கு தெரிந்த செய்தியாகும்" எனவும் சுட்டிக்காட்டி இருக்கிருர்,
தமது கட்டுரையிலே, பேராசிரியர் கைலாசபதி தொ டர்ந்து கூறியிருப்பதாவது:
"இவ்ர்களுக்கு (முற்கூறப்பட்டவர்கள்) காலத்தால் சிறிது பின்னதாக கே. எஸ் சிவகுமாரன், ஆ. சிவநேசச் செல்வன், சபா ஜெயராசா, சித்திரலேகா மெளனகுரு, எம். ஏ. நுஹ்மான், செ. யோகராசா, க. நவசோதி முதலி யோர் திறனய்வுத் துறையில் ஆர்வத்துடன் உழைத்து வருகின்றனர். இலக்கிய உலகின் வளர்ச்சியினுல், பல்கலைக் கழகத் தமிழ்த் துறைகளும் திறனுய்வுக்கு உரிய இடத்தை அளிக்கத் தொடங்கியுள்ளன. முற்கூறிய சிலருடன், சி. தில்லைநாதன், பொ. பூலோகசிங்கம் ஆகிய இருவரும் இலக் கிய ஆய்வில் ஈடுபட்டுவந்துள்ளனர். குறிப்பாகக் கடந்த நூற்றண்டுகளில் ஈழத்தில் எழுதப்பெற்ற இலக்கிய ரச னைத் திறனய்வு செய்யும் முயற்சிகள் இப்பொழுது ஆழ மான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’
"சுடர் மலர்' (1978) என்ற தில்லி ஏட்டில் வெளியா கிய கட்டுரையில் இடம் பெற்ற சில குறிப்புகளை மேலே பார்த்தோம். இக்குறிப்புகளிலிருந்து பேராசிரியர் கைலாச பதியின் அணுகுமுறை எவ்வாறு செயற்பட்டுள்ளது என்ப தை ஒருவாறு நாம் மனங்கொள்ளக் கூடியதாக இருக்கிறது. அவருடைய அணுகுமுறையைத் தெளிவாக விளங்கிக் கொள்ள இலக்கியச் சிந்தனைகள்" (1983) என்ற நூலில் இடம்பெற்ற கட்டுரையை எடுத்துக் கொள்வோம். இந்த நூலைத் தொகுத்துப் பதிப்பித்திருப்பவர், பிரபல படைப் பாளியும் மார்க்சிய கலை இலக்கிய விமர்சகருமான செ. கணேசலிங்கன் என்பதை ஞாபகத்தில் வைத்திருக்க வேண் டும், ரனெனில், இத்தொகுப்பில் இடம்பெற்ற கட்டுரை
5

Page 10
கள், பேராசிரியர் கைலாசபதியின் சமூகவியல் அழுத்தம் பெற்ற சிந்தனைகளைத் தழுவியதாய் இருப்பதுதான். சமூக வியல் பார்வை தவிர்க்க முடியாமல் மார்க்சியஞ் சார்ந் ததுதான் என்பதை வாசகர்கள் அறிவார்கள்.
தமிழில் நவீன இலக்கிய விமர்சனம் தோற்றுவதற்கு ரிய முன்னிடுகள் பற்றிப் பேராசிரியர் கைலாசபதி எடுத் துக் கூறும்பொழுது, ஆய்வறிவு முறை, மரபு எதிர்ப்பு உணர்வு, புதிது புனையும் ஆர்வம் ஆகிய அடிப்படை முதல் தேவைகளைச் சுட்டிக்காட்டுகிறர். சி. வை. தாமோதரம்பிள் ளையை மூலபாடத் திறனுய்வு முன்ஞேடியாக இனங்காணும் பேராசிரியர், பிள்ளையவர்களிடம் முனைப்பான விமர்சன வீச்சு காணப்பட்டதையும் சுட்டிக்காட்டுகிருர்,
நவீன இலக்கிய விமர்சன அணுகு முறைபற்றிப் பேசும் பொழுது, விமர்சன இலக்கியம் தன்னளவிலே செழித்து வளர்ந்துவிட இயலாது. மொழி, இலக்கியம், பண்பாடு, வரலாறு, மெய்யியல், சமயம் முதலிய ஏனைய துறைகளில் நிகழும் ஆய்வுகளுக்கியைந்த முறையிலேயே இலக்கிய விமர் சனமும் இடம்பெறும் என்ற பண்பையும் திறனுய்வாளர் கைலாசபதி வலியுறுத்தியிருக்கிருர், இதனையே தமது 'சமூ கவியலும் இலக்கியமும்’ (1979) என்ற நூலின் முன்னுரை யிலே அழுத்தந்திருத்தமாகக் குறிப்பிடுகிறார். அவருடைய அணுகுமுறை என்ன என்பதையும் நாம் அறிந்துகொள்ள முடிகிறது. 63 &லாசபதி கூறுகிறர்:
*திறஞய்வுத் துறையில் முக்கிய கவனஞ் செலுத்தத் தொடங்கிய காலமுதல் கலை, இலக்கியம் முதலியவற்றை அவற்றுக்குரிய வரலாற்றுப் பின்னணியிலும் சமுதாயச் சூழலிலும் வைத்தே ஆராய்ந்து வைத்திருககிறேன். மார்க்சி யத்தைத் தழுவிக் கொண்ட நாள்முதலாக அதனை முனைப் பான கூறுகளில் ஒன்ருகிய சமூகவியலை எனது பல்வேறு ஆய்வுகளுக்கும் பற்றுக் கோடாகக் கொண்டுவந்துள்ளேன். சமூகவியலில் உண்டாகிய ஈடுபாடே ஒப்பியல் ஆய்விற்கு
16

ான்னே இட்டுச் சென்றது. இவற்றின் பயணுக இலக்கியத் தை அறிவியல் அடிப்படையிலே அணுகக் கற்றுக் கொண் டேன்",
கைலாசபதி மேலும் கூறுவார். ‘நவீன காலத்திலே திறய்ைவு, தனிப்பட்ட ஒர் ஆய்வுப் பிரிவாக இயங்கி வரு கிறது. நோக்கம், ஆய்வு முறை, பண்பு, பயன்பாடு இவற் றில் தனக்கெனச் சில சிறப்பியல்புகளைக் கொண்டுள்ளது. இலக்கண விதிகளை மட்டும் அது பிரமாணமாகக் கொள் வதில்லை. மனித வாழ்க்கையை விவரித்து விளக்கங் கூறும் அறிவுத் துறைகள் பலவற்றை அது ச3ர்ந்துநிற்கிறது மணி தப் பண்பியல் துறைகளான வரலாற்றியல், தொல்பொரு னியல், மெய்யியல், அழகியல், மொழியியல் முதலியவற்று டன் சமூக விஞ்ஞானத் துறைகளான மரனினவியல், சமூக வியல், உளவியல், அரசியல், பொரு al மக்கப் Lí 6öĩ LiT பட்டியல் என்பனவும் இலக்கிய ஆய்வுக்கு இஃறு, இன்றிய மையாதன. தனித்தும், "சார்ந்தும் "இய்ங்கும் திறஞ்ப்வை முற்கால இலக்கிய ஆய்வுகளிலிருந்து வேறுபடுத்திக் க்ாட்டு கிறது’.
பேராசிரியர் கைலாசபதி ‘தமிழும் விமர்சன இலக்கிய மும்' என்ற தமது கட்டுரையிலே (இலக்கியச் சிந்தனைகள்’ சான்ற நூலில் இடம்பெற்றது), பண்டிதத்திறனய்வு புதுமை மோகத் திறனுய்வு என்ற இரு போக்குகள் பற்றியும் விளக் கிக் காட்டுகிறர். இத்தகைய இருமுனைப்பட்ட விமர்சன அணுகுமுறைக்கு மாற்று மருந்தாக்வும், உண்மையான நவீன விமர்சனத்துக்கு எடுத்துக்காட்டாகவும் விளங்குவது சமூகவியல் அணுகு முறையாகும். இது கணிசமான அளவுக்கு மார்க்சியத்தினுல் நெறிப்படுத்தப்படுவதொன்று எனக் கொள்ளலாம். இவ்வாறு தமது அணுகுமுறையை நியாயப் படுத்தும் கைலாசபதி, இந்த அணுகு முறையின் சிறப்பி யல்புகளையும் எடுத்துரைக்கிருர்,
"இலக்கியத்தை அடிப்படையில் சமூக விளைபொரு ளாகக் கொண்டு, அதனை உரிய வரலாற்றுச் சூழலில்
17

Page 11
வைத்து நோக்கி, அதன் உயிராற்றல் காலத்துக்குக் கட்டுப் பட்டும், காலத்தை வென்றும் நிற்கும் தன்மையை விளக்கு வதே சமூகவியல் அணுகுமுறையின் பிரதான அம்சங்க ளாகும்".
வ்ரலாற்றுப் பார்வை, வர்க்க ஆய்வு, அழகியல் அக் கறை ஆகிய மூன்றையும் இணைத்து விமர்சிக்கும் பார்வை கைலாசபதியுடையது. பொதுவுடைமைக் கோட்பாட்டில் தம்பிக்கை கொண்ட கைலாசபதி, சிவத்தம்பி, முருகை யன், கே. சண்முகலிங்கம், என். சண்முகரத்தினம், எம். ஏ. நுஃமான், சி. மெளனகுரு இளைய பத்மகுபன் முதலியோர் அண்மைக்காலத்திலே, ‘விமர்சனத்திலே ஆழமான பார் வையையும் நுட்பமான திறன்முறைகளையும் புகுத்தியவரா வார்’ என்கிருர் பேராசிரியர், விமர்சன இலக்கியம் ஆற் றலும் ஆழமும் பெற வேண்டுமாயின் "அது உலகத்தை மாற்றியமைப்பதற்கும் உழைக்கும் வர்க்கமும் அதன் நேச சக்திகளும் ஒயாது பயன்படுத்தும் அறிவாயுதமாகவும் இருத் தல் வேண்டும்' என்கிருர் கைலாசபதி, அவ்வாறு பார்க்கும் பொழுது செ. கணேசலிங்கன், சி. சிவசேகரம் என்ற இரு தீவிர மார்க்சிய விமர்சகர்களின் பெயர்களைக் குறிப்பிடா மல் விட்டுவிட்டாரென்பதையும் குறிப்பிட வேண்டும்.
இறுதியாக இலக்கியமும் திறனய்வும்" என்ற நூலிலே பேராசிரியர் கைலாசபதி தெரிவித்திருக்கும் கருத்துக்களைத் தொகுத்து நோக்குவோம். W
*செய்முறைத் திறனுய்வு எமது இலக்கிய உலகிற் காணப்படும். 'அநுபூதி நெறி ரசனை’ என்ற தீங்கினைத் தவிர் க்கும் மாற்று முறையாக அமைய முடியும். ஆரம்ப் நிலையில் அது இன்றியமையாததாகும். இல்லாவிடில் பகுத்தாய்வுக் கும் உறுப்பாய்வுக்கும் இடத்தராத மூடுமந்திரமாகவே கவி தை இருக்கும். செய்முறைத் திறனுய்வு மூலமாகவே, கவிதை ஆய்வானது அகநிலைப்பட்டதாயன்றிப் புறநிலை சார்ந்த தாய் அமையும் வாய்ப்பைப் பெறுகிறது. விதி முறையா
18

லன்றி விவரண முறையாலும், விளக்க முறையாலும் இலக் கியத்தைச் சுவைக்கும் நெறி வளர்ச்சிபெற முடியும்".
பேராசிரியர் கைலாசபதியின் கருத்துக்களைத் தொகுத்து நோக்கும்போது ஈழத்திலே பல நெறிகளையும் உள்ளடக்கிய சமூக வரலாற்றுப் பின்னணியில் இலக்கியத்தை மதிப்பிடும் போக்கு வளர்ந்து வருவதை அவர் விரும்பி வலியுறுத்தினுர் ான்பது தெரியவருகிறது, சமூகவியல் பார்வை கைலாச பதியினுடையது. அதில் மார்க்சியம் கலந்திருப்பதையும் அவதானிக்கலாம். அதே சமயம், வரட்டு மார்க்சிய சுலோ கங்களை உச்சரிக்காமலே, கல்விமான் என்ற முறையிலே, பரவலாகவும் ஆழமாகவும் அவர் இலக்கியத்தை விமர்சித் தார். இன்றைய இலக்கியப் போக்குகளின் கலாசார வேர் கள் 19ஆம் நூற்ருண்டிலிருப்பதை அவர் கோடிட்டுக் காட் டிஞர். 19ஆம் நூற்ருண்டுத் தமிழ் அறிஞர்கள் பற்றிய புணர் மதிப்பீடுகள் கைலாசபதியின் தனியான சிந்தனைகள்.
9

Page 12
கைலாசபதியின் திறனுய்வும் குறையும்
சமகாலத் தமிழ் இலக்கியப் போக்கில் ஈழத்தவர் ஆற் றிவரும் பங்கு முக்கியமானதாகவும் முன்னேடியாகவும் அ:ை1 வதைத் தமிழ் பேசும் நல்லுலக இலக்கிய மா. வர் மாத்திரமன்றி, தமிழியல்,தமிழ் இலக்கியம் போன்ற துறைக ளில் ஈடுபட்டுள்ள பிறமொழியினரும் அறிவர். அத்தகை யோர் ஆற்றிவரும் பங்குகள் அனைத்தையும் பற்றியோ, அத்தனைபேரின் பெயர்ப் பட்டியலையோ தருவது உசிதமன்று எனவே, இத்துறையில் பங்காற்றி வரும் ஈழத்தவர்களில், விமர்சனம் அல்லது திறனுய்வுத் துறை சம்பந்தமாகச் சில முக்கிய பணியைச் செய்து மறைந்த ஒருவர் பற்றி, அவர் எழுதியுள்ள நூல்களைக் கொண்டு பாத்திரம் (நூல் வடிவில் இடம் பெரு த அத்தனை கட்டுரைகள், விரிவுரைகள், பேச் சுக்கள் போன்றவற்றைக் கணக்கெடுக்கவில்லை)இங்கு ஆராய் வோம். -
பேராசிரியர் கனகசபாபதி கைலாசபதி பற்றியே இங்கு கணிப்புக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. இவர் பல்கலைக் கழக ஆசிரியராக மட்டுமன்றி, பத்திராதிபராகவும் திறனுய் வாளராகவும் நின்று ஈழத்துச் சமகால இலக்கியத்துக்கும், தமிழ் இலக்கியம், ஒப்பியல் இலக்கியம் ஆகிய துறைகளுக்கு மாகப் பல்வேறு நிலைகளில் நின்று புத்தாக்கம் பயக்கும் புது மை நெறிகளைச்சுட்டியும், வழிகாட்டியும் தொழிற்பட்டார்.
நூலாசிரியணுக அவர் திறனுய்வுத் துறைக்காற்றிய பண்பு நெறிகளே இங்கு உணர்த்தப்படுகின்றன.
20

கைலாசபதி கடந்த கால் நூற்றண்டுக்கும் மேலாகத் தமிழிலும், ஆங்கிலத்திலும் விமர்சனக் கட்டுரைகளை எழுதி வந்தார். இவருடைய கட்டுரைகள் அடங்கிய நூல்கள்
mw AonTipy:
இரு மகா கவிகள், பண்டைத் தமிழர் வாழ்வும் வழி பாடும் , தமிழ் நாவல் இலக்கியம், ஒப்பியல் இலக்கியம், கவிதை நயம் (முருகையனுடன் இணைந்து எழுதியது), Tamil Heroic Poetry, g) vả; $ìgưQupth 9039 tửa, th, Lurr trậì thirảo ரு b பாடபேத ஆராய்ச்சியும், திறனுய்வுப் பிரச்சினைகள், மக்கள் சீனம் - காட்சியும் கருத்தும், சமூகவியலும் இலக்கிய மும், நவீன இலக்கியத்தின் அடிப்படைகள், இலக்கியச் சிந் க%னகள். (வேறு சில நூல்கள் தமிழ் நாட்டில் வெளியாகி யிருப்ப நாக அறிகிருேம்).
இந்நூல்கள் அனைத்தும் பற்றிய அறிமுக ரீதியிலான ஆய்வு வேண்டற்படாததாகையால், இவற்றுள் முக்கியமான சில நூல்களை மாத்திரம் கணிப்புக்கு எடுத்துக் கொள்
அதற்கு முன்னர், கைலாசபதியின் இலக்கியக் கோட் பாடுகள் பற்றி அண்மைக்காலமாகப் பலரும் விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக, இந்தியாவில் வெங்கட் சாமிநா தடி , 'படிகள்” என்ற சிற்றேட்டினர், 'அலை" என்ற ஈழத் துச் சிற்றேட்டினர், மற்றும் சிலர் கைலாசபதிக்குரிய இடத் தைச் சந்தேகிக்காவிட்டாலும், அவருடைய தீவிர இலக்கியக் கோட்பாடுகள், மாறிவரும் போக்குகளில் செல்லாக் காசா கின்றன என்று சுட்டிக் காட்டியுள்ளனர்.
கைலாசபதியின் இலக்கியக் கோட்பாடுதான் என்ன? அவரே கூறுகிறர்: “கடந்த இருபத்தைந்து வருடங் சாளுக்கும் மேலாக நான் எழுதி வெளியிட்டிருப்பவற்றைப் பார்க்கும் பொழுது, அவையெல்லாம் ஏதோ ஒரு வகையில் சமுதாயத் தொடர்பமைவு உள்ளனவாய் இருக்கக் ாண்கிறேன்." (முன்னுரை-சமூகவியலும் இலக்கியமும்,1979
2

Page 13
gavai sugair felps 65ugyi (5 (Sociological Aspect in Literature) முக்கியத்துவம் அளிக்கும் ஒரு விமர்சகரா கவும், மார்க்சியத்தைத் தழுவியவராகவும் கைலாசபதி தன்னை இனங்காட்டிக் கொள்கிருர், எனவே, இலக்கியக் கொள்கைகள் பலவற்றில் ஒன்முகிய சமுதாயக்கொள்கை யைக் கைலாசபதி அனுஷ்டிக்கிறர் என்பது தெளிவாகிறது.
ஆகவே, கைலாசபதியின் இலக்கியக் கொள்கையை முற்ருக ஏற்றுக்கொள்ளாதோர், அவருடைய விமர்சன முறையை ஆட்சேபிப்பதில் ஆச்சரியமில்லை. எனினும், அவ் வாறு எதிர்ப்பவர்கள் காரணமின்றி எதிர்க்கவுமில்லை. மார்க் சிய விமர்சன முறை, இன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட விமர்சன அணுகுமுறைகளில் ஒன்று. ஆனல் அது மாத்திர மே ஒரேயொரு சரியான பார்வையுடைய விமர்சன முறையு மன்று. கைலாசபதி என்ன செய்கிருர் என்ருல், சமுதாயப் பார்வையை எதிர்ப்பவர்களாக ஏனைய பார்வையுடைய வர்களை ஒதுக்கிவிடுகிறர். உதாரணமாக, அழகியலும் இலக் கியத்துடன் இணைந்ததுதான் என்று கூறுபவர்கள், சமுதா யப் பார்வைக்கு எதிரானவர்கள் என்று கைலாசபதி தப்பா கக் கணிக்கிருர். இங்குதான் அவருடைய பலவீனம் தெரி கிறது.
உதாரண்மாக, லக்சியமும் திறஞய்வும் (இரண்டாம் பதிப்பு, 1976) என்ற தமது நூலிலே அவர் இவ்வாறு எழுதுகிருர், "தூய அழகியல்வாதத்துக்கு எதிர் விளைவா கவே சமுதாயக் கொள்கை நடைமுறையிற் செயற்படு கிறது எனலாம்". இவ்வாறு கூறும் கைலாசபதி நான்கு விதமான திறய்ைவுக் கொள்கைகளை விவரித்துவிட்டு, "தற் காலத் தமிழிலக்கியத் திறனுய்வுப் போக்குகள்" என்ற பிற்சேர்க்கையில் வருமாறு எழுதுகிருர்;
"அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய, மிகக் குறைந்த அளவு திறஞய்வும் நோக்கும் போக்கும் தமிழில் இன்னும் கெட்டியாக உருப்பெறவில்லை. இது, நமது கவனத்துக்கும்
22

சிந்தனைக்கும் உரிய செய்தியாகும்”. (பக்கம்:134 - இலக்கிய மும் திறனய்வும்).
இத்தகைய தாராள (Liberal) மனப்பாங்குகொண்ட பேராசிரியர் / திறனுய்வாளர் கைலாசபதி சமுதாயக் கொள் கைக்கு அழுத்தங் கொடுத்து (அழுத்தங் கொடுப்பது சரி, மற்றக் கொள்கையாளர் எல்லோரையுமே ஒரே வார்ப்பில் "அழகியல்வாதிகள்’ என்று கூறுவதுதான் சரியில்லை) விமர்சிப்பதுதான் சற்று முரணுகத் தென்படுகிறது.
திறனுய்வாளர் கைலாசபதியின் முரண்கள் எவ்வாறி குப்பினும், அவருடைய ஆங்கில, கிரேக்க இலக்கியப் புல மை, தமிழ் விமர்சனத்திற்குச் செழுமையூட்டியிருப்பதையும் வெறும் ‘நயங்காணல்" அல்லது “ரசனை வெளிப்பாடு" போன்ற ஆரம்ப நின்யில் இருந்த தமிழ்த் திறனுய்வைச் சுமார் இருபது இருபத்தைந்து வருஷங்களுக்குள் அவர் சாஸ் திரிய ரீதியாக நெறிப்படுத்தியிருப்பதையும் மறுக்க முடி யாது. இவருடன், பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பியும் குறிப்பிடத்தக்கவராவர்.
மார்க்சியக் கொள்கைகளை ஏற்றுக்கொள்கிருேமோ இல்லையோ, இந்த இரு மார்க்சிய விமர்சகர்களையும் தள்ளி விட்டு ஈழத்து இலக்கிய விமர்சனமோ பொதுவான தமிழ் இலக்கிய விமர்சனமோ வளர முடியாது,
பெங்களூரிலிருந்த வெளியாகிய "படிகள்’ என்ற இலக் கியச் சிற்றேடு பேராசிரியர் கைலாசபதி பற்றி, பெப்ரவரி 1981 இதழில் கூறியிருப்பது ஒரு முக்கியமான அவதானிப் பாகும்.
*வெறும் அபிப்பிராயங்கள் தமிழகத்தில் விமர்சனமாக இருந்த சூழலில் ஓர் உலுக்கு உலுக்கி விமர்சனம் விஞ்ஞான அடிப்படைகளில் செய்யப்பட வேண்டும் என்றும் அபிப் பிராயங்களாக இருந்த விவர்சனம் சமூகவியல் குணங்கள்
23

Page 14
கொள்ள வேண்டும் என்றும் மிக வலிமையாக ஓங்கிப் பேசிய கவர்ச்சியான குரல் கைலாசபதியினுடையது'.
பேராசிரியர் கைலாசபதி சமகால இலக்கியப் போக்கில் ஆற்றிவரும் பங்கைக் கணிப்பது போன்று, பேராசிரியர் சி.கி மறைமலை எழுதிய “இலக்கியத் திறஞய்வு - ஓர் அறிமுகம்” (1979) என்ற நூலில் எழுதிய வாசகம் அமைந்துள்ளது, "கைலாசபதியின பல்துறை அறிவும், பரந்த கல்வியும், அவ ரது திறனய்வுக்குத் தனி மெருகு அளிக்கின்றன. கைலாச பதியின் கருத்தை ஏற்க மறுப்போரும் அவரது தருக்கவியல் அணுகு முறையை, செய்திகளைக் கோர்வைப்படுத்தி, அவற்றின் நிறை குறைகளை ஆய்ந்து, கொள்வன கொண்டு கொள்ளாதன தள்ளி, திட்டவட்டமான ஒரு முடிவு உரைக் கும் அறிவியற் பாங்கான வழி முறையைப் பாராட்டவே செய்வர்”.
ஒப்பியல் இலக்கிய ஆய்வுத் துறைக்குக் காள்கோல் நாட்டிய பெருமையொன்றே கைலாசபதியின் முக்கியத் துவத்தை உணரவைக்கும். பல்லவர் கால இலக்கியம் பற்றி பும் அகல்வியை பற்றியும், பாரதி பற்றியும், க. நா. சு. பற் றியும், கவிதை பற்றியும், நாவல் பற்றியும் புதுமையான கருத்துக்களைக் கைலாசபதி தெரிவித்திருக்கிருர். இவை ஆராயத்தக்கனவாயினும், விமர்சகரின் தற்புனைவான சிந்த னைகளைப் பாராட்டாமல் இருக்க முடியாது. 'புத்திலக்கிய விமர்சகர்கள் பலருக்கும் அவர் ஆகர்சமாக விளங்குகிருர்" என்பதில் ஐயமில்லை. சங்க இலக்கியம் முதல் புதுக் கவிதை வரை, செல்வக்கேசவராய முதலியார் முதல் சிவகுமாரன் வரை, வ. வே. சு ஐயர் முதல் இன்றைய சிறுகதையாசிரி யர்கள் வரை, பிரதாப முதலியார் சரித்திரம் முதல் இன் றைய நாவல்கள் வரை, மஞேன்மணியம் முதல் இன்றைய முற்போக்கு நாடகங்கள் வரை, அவர் பாவலாக யாவற் றையும் பண்டித மேதாவித்தனத்துடனும், நவீனத்துவ மார்க்சியப் பார்வையுடனும் விமா சித்திருக்கிருர்.
கலாநிதி தி. சு. நடராஜன் (தமிழ் இலக்கிய விமர்ச கர்கள் - கட்டுரைத் தொகுப்பு-1979) கூறியிருப்பது போல
24

"கைலாசபதி கல்வி நெறி மரபின் ஆய்வறிவாளராகவும், அதே நேரத்தில் விமர்சனப் பாங்குடையவராகவும் விளங்கு 6მცეკr†'”.
சமகாலத் தமிழ் இலக்கியமும், கைலாசபதியின் திறனுய் வும் பிரிக்க முடியாதவை. அதே சமயத்தில், கைலாசபதி யின் குறைகள் (இலக்கியத் திறனுய்வு அடிப்படையிலே) பற்றியும் இங்கு சிறிது பார்த்தல் அவசியம்.
பேராசிரியர் க. கைலாசபதி 'தமிழ் நாவல் இலக்கி
யம்" என்ற ஒரு நூலை எழுதி வ்ெளியிட்டார். அந்த நூல் சமூகவியல் அடிப்படையில் எழுதப்பட்டதனல், க. நா. சு. குழுவைச் சேர்ந்திருந்த வெங்கட் சாமிநாதன் 'மார்சஸின் கலலறையிலிருந்து ஒரு குரல்’ என்றழைத்து அந்த நூலை விமர்சித்தார். அதற்கு மறைமுகமாகப் பதிலளிக்கும் வகை யில், க. நா. சுவையே கைலாசபதி விமர்சித்து "மல்லிகை" யில் எழுதினர். அக்கட்டுரைகளே புத்தக வடிவில் வெளி வந்திருக்கின்றன. இலக்கிய விமர்சன முயற்சிகளில் மேற் சொன்ன அப்பியாசங்களும் இடம்பெறுவது தவிர்க்க முடி யாததாயினும், இவை பொதுவாக நல்ல ரசனையைத் தருவன அலல.
பேராசிரியர் கைலாசபதி, எழுத்தாளர் / விமர்சகர் க. நா. சுப்பிரமணியம் பற்றி என்ன கூறுகிருரி என்று பார்ப் போம். “க. நா. சுவை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட போதிலும், நமது இலக்கிய உலகில் நிலவும் ஒரு திறஞய் வுப் போக்கைத் திறஞய்வு செய்வது" தனது நூலின் நோக்கம் என்று கூறும் ஆசிரியர், "க. நா. சு. தற்சமயம் முழு மூச்சாகப் போர்க்களத்தில் யுத்த சன்னத்தனய் நிற் கவில்லையாயினும், அவரது சீடர்கள் ஆங்காங்கு குரல் எழுப்பிய வண்ணமுள்ளனர்" என்றும் குறிப்பிடுகிறர்.
வர்க்க முரண்பாட்டிற்கு முக்கியத்துவம் சொடுக்கும் இந்தச் சமூகவியலாளர், 'திறனுய்வு என்பது எப்பொழுது மே வாதப் பிரதிவாதங்களின் அடிப்படையிலும் வர்கக
25.

Page 15
முரண்பாடுகளின் அடிப்படையிலும் தோன்றும் தத்துவப் போராட்டங்களின் வெளிப்பாடாகவுமே அமைந்து வந் துள்ளது' என்கிருர்,
*திறனுய்வு” என்ற சொல் 'விமர்சனம்" என்று பழகி விட்ட பதம் கொடுக்கும் அர்த்தத்தைத் தருவதல்ல. அதே வேளையில், பேராசிரியர் கைலாசபதி, தில்லித் தமிழ்ச் சங்கத்தின் கடல் கடந்த தமிழ் மலர், "கடர் (1978)இல் எழுதிய 'ஈழத்தில் இலக்கியத் திறனுய்வு' என்ற கட்டுரை யில் பின்வருமாறு குறிப்பிடுகிறர்:
நவீன காலத்திலே'திறனய்வு'என்னுஞ் சொல் குறிப்பதையே முற்காலத்திலும் இலக்கண நூல்கள் குறித்தன என்பதற் கில்லை. பண்டைக் காலத்தில் அணியிலக்கணம் திறனுய்வின் ஒரு பகுதியையே சிறப்பாக ஆராய்ந்தது, உவமை, உருவகம் முதலியன செய்யுளுக்கு அழகு செய்வனவாய், மெருகூட்டு வனவாய் அமைவன என்பதே அணியிலக்கணத்தின் அடிப் படைக் கருத்தாகும். அதற்கியைய அணிகளை நுணுக்கமாக வகுத் தமைத்தனர் அணியிலக்கண நூலாசிரியர்கள். ஆனல் இன்று நாம் திறனுய்வு எனக் கருது &து அணியிலக்கணத்தை மட்டுமன்று. அழகைச் சுலைப்பதுடன் அதனுேடு பிரிக்க இயலாதவாறு பிணைக்கப்பட்டிருக்கும் செய்திகளையும், சிந் தனைகளையும், கருத்துருவங்களையும் கண்டு கொள்வதும். அவற்றை மதிப்பிடுவதும் அவற்றுக்கு விளக்கம் உரைப்ப தும் திறனுய்வின் பண்பும் பயனும் ஆகும். முற்காலத்தில் அணியிலக்கணம் விதிமுறையில் அமைந்தது எனக் கொண் டால், இன்றையத் திறனுய்வு விவரித து விளக்கும் முறை யைப் பற்றுக்கோடாய்க் கொண்டது என்பதில் தவறில்லை".
இவ்வாறு கூறிச் செல்லும் கைலாசபதி, விமர்சனத்தை ஒர் ஆய்வறிவு சார்ந்த துறைக்கு உள்ளேயே வகுக்க முற் படுகிருர், உண்மையில் நமது நாட்டு முன்னணி விமர்சகர் களைக் குறிப்பாகப் பல்கலைக் கழகங்களில் பணியாற்றும் ஆசிரியர்களை விமர்சகர்கள் என அழைப்பதைவிட ஆய்வறி
26

வாளர் (Intellectuals) என விவரிப்பதே பொருந்தும். (இன்டலெக்ஷ"வலுக்குப் ‘புத்திஜீவி' என்பது எவ்வளவு பொருத்தமில்லையோ, அதே போல "கிரிட்டிஸிஸம்" என்பதற் குத் திறஞய்வு என்ற சொல் பொருத்தமில்லை. விமர்சனம் என்பதே உரிய சொல் எனக்கருதுகிறேன்).
பல்கலைக்கழக மட்ட விமர்சகர்களை ஆய்வறிவாளர்கள் என நான் கருதுவதற்குக் காரணமாக இருப்பதே பேராசிரி யர் கைலாசபதியின் ஒரு கூற்ருகும்.
"இன்று திறனுய்வுக்கலை ஈழத்தில் முக்கியமான ஒரு சட்டத்தை வந்தடைந்துள்ளது தாய்பொழி மூலம் உயர் கல்வி நடைபெறும் சூழ்நிலையில் பலதுறைக் கல்விப் பயிற்சி பெற்றவர்கள் இலக்கியத்துறையில் எழுத்தாளராகவும், திற னய்வாளராகவும், வாசகராகவும் நுழைகின்றனர். தமிழ் கற் ருேரின் தனிப்பட்ட உரிமையாக, இலக்கியம இனி இருத் தல் இயலாது. இந்நிலை, புதிய எதிர்ப்பு ஆற்றலையும், புதிய வாய்ப்புகளையும் இலக்கிய ஆசிரியர்களுக்குக் கொடுக்கிறது. இதேவேளையில், புதிய புதிய அரசியல் பொருளாதாரப் பிரச் சினைகளையும் நாட்டவரை எதிர்நோக்குகின்றன. தமிழு ணர்ச்சியோ, இலக்கிய இன்பமோ மட்டும் இலக்கியத்துச்குப் போதுமானவையல்ல. இவை யாவற்றுக்கும் ஈடுகொடுக்கும் வகையில், அதே வேளையில் உலக இலக்கியத்தின் உயர்ந்த குறிக்கோள்களைத் தழுவியும் இலக்கிய ஆக்கம் நடைபெற வேண்டிய நிலை இன்றுள்ளது. இதற்கும் திறனய்வுக்கல் பக் கத் துணையாவும் சில வேளைகளில் வழிகாட்டியாகவும் பணி புரிய வேண்டியிருக்கிறது".
பத்திரிகை ரக விமர்சகன் பல்கலைக்கழக மட்ட பல்து றையறிவு பெற்றிருப்பான் என்று கூற முடியா திருப்பத னல் பத்திரிகை ரக விமர்சகன் என்றும் ஆய்வாளன் என்றும் பிரிப்பது நமது வசதிக்கு உகந்ததாக இருக்கிறது.
ஆய்வறிவாளர் கைலாசபதி மேற்கண்ட மேற்கோளில், *உலக இலக்கியத்தின் உயர்ந்த குறிக்கோள்களைத் தழுவி
27,

Page 16
யும். இதற்கும் திறனய்வுக்கலை பக்கதுணையாயும் சில வேளைகளில் வழிகாட்டியாயும் பணிபுரிய வேண்டியிருக்கிறது எனக் கூறியிருப்பதையும் அவதானிக்கவும். சமூகவியல் அடிப்படையில் கலே இலக்கியத்தை நோக்கும் ஆய்வறிவா ளர் கைலாசபதி, க. தா. சு. வைக் கண்டிக்கும் பொழுது ஜேம்ஸ் ஜோய்ஸ் என்ற ஐரிஷ்காரரைக் குருநாதராகக் கொண்டார் எனக் குறிப்பிட்டுள்ளார். இதில் வேடிக்கை என்னவென்றல், இதே கைலாசபதி ‘நான் விரும்பும் நாவ லாசிரியர்" என ஜேம்ஸ் ஜோய்ஸைத் தானே குறிப்பிட்டது தான். பிரபல ஆங்கில இலக்கிய மார்க்சிய விமர்சகர்க ளான ரேமண்ட் உவில்லியம்ஸ்,ஆர்ணல்ட் கெட்டில் போன்ற வர்கள் ஜேம்ஸ் ஜோய்ஸ் பற்றி விதந்துரைப்பதும் அவதா னிக்கத்தக்கது.
எனவே, க. நா. சு. வைக் கண்டிக்க கைலாசபதி உப யோகித்த ஓர் அஸ்திரம் பயனற்றதாகிவிட்டது. ஓர் ஆய் வறிவாளர் என்ற முறையில் விமர்சனத்தை விமர்சனம் பண்ணும் முயற்சியில் இவர் ஈடுபட்டுவந்துள்ளார். 'சமர்" என்ற ஏட்டிற்கு எழுதிய கட்டுரைகளில் பிரச்சினைக்குரிய சில கருத்துக்களைப் பேராசிரியர் தெரிவித்திருத்தார். இவற் றிற்குப் பதில் எழுதும் முறையில் 'அலை" சில கட்டுரைகளை வெளியிட்டது.
க. நா. சு. பற்றி கைலாசபதியின் மதிப்பீடு என்ன வென்முல், க. நா. சு. ஒரு ரசிக விமர்சகர், கலை கலைக்காக வ்ே என்ற கொள்கையுடையவர். ‘வேதாந்தத்தில் புகலி டம் தேடிய பின்னர் விமர்சனம் அவரைப் பொறுத்தவரை யில் செத்து விட்டது என்றே கூறவேண்டும், என்கிருர் கைலா சபதி.
வேதாந்தத்தில் தஞ்சம் புகுவதும்,விமர்சனப்பாங்கற்ற விதத்தில் மார்க்சியத்தில் தஞ்சம் புகுவதும் அநேகமாக ஒன்றுதான். விமர்சகன் ஏதோவொரு தத்துவ அடிப்படை யில் தொழிற்படுகிருள். ஆனல் ஆய்வறிவாளணுே குறிப் பிட்ட தத்துவங்களைக்கடந்து, பல் தத்துவங்களேயும் கூட்டு
28.

மொத்தமாகப் பார்த்து, சார்பற்ற முறையில் வழிகாட்டு வது அவசியமாகிறது.
க. ந. சு. வை ஒரு தரமான இலக்கிய விமர்சகர் என்று இப்பொழுது கூறமுடியா விட்டாலும் அவர் ஒரு கால கட் டத்தில், தன்னளவில் செலுத்திய பங்கைக் குறைவாக மதிப்பிடமுடியாது. தவிரவும், க. நா. சு. ஒரு தரமான புனை கதை எழுத்தாளர். அவருடைய 'பொய்த்தேவு”, “ஒருநாள் ‘அசுரகணம்' ஆகிய நாவல்கள் தமிழுக்கு அழகூட்டின. அவர் ஆங்கிலத்தில் எழுதியுள்ள "டொஸான் ஸ்கிநோவி’ என்ற சிறுகதையும் அவருடைய ஆளுமையைக் காட்டி நிற்கின்றது.
நமக்கு, க. நா. சுவும் கைலாசபதியும் இல்லாவிட்டால் இந்தப் பிரச்சினைகளே ஏற்பட்டிருக்கா. திறனய்வுப் பிரச்சி னைகளை இனங்கண்டு கொண்டால்தான் வளர்ச்சிக்கு ஆவன செய்யலாம். எனவே, க. நா. சு. வும் கைலாசபதியும் தத் தம் நிலைகளில் நின்று தமது பணிகளைச் செய்துள்ளார்கள் எனக் கூறலாம்,
29

Page 17
அழகியலும் சமூகப் பண்பும்
அழகியல்(Aestheticism)பற்றிய முடிவுரு விவாதங்கள் மீண்டும் ஆரம்பித்திருப்பது ஒரு நல்ல அறிகுறி மேலும் தெளி வு பெறவும், நமது எழுத்தாளர்கள் எந்த அணியைச் சேர்ந் தாலும், படைப்பாளிகள் என்ற முறையில் பொதுவான இலக்கியப் பண்புகள் பற்றி அறிந்து கொள்ளவும் இத்தகைய விவாதங்கள் உதவுகின்றன.
டானியல் அன்ரனியை ஆசிரியராகக் கொண்டு 'சமர்' என்ற பெயரில் ஒரு கலை இலக்கிய விமர்சன வெளியீடு தர மான கட்டுரைகளையும் ஆக்கங்களையும் கொண்டு வெளி வந்தது.
"ஆரோக்கியமான சூழ்நிலையில் விவாதங்களையும் விமர்சனங்களையும் வழி நடத்தல், திறந்த மனங்கொண்ட விசாரணைகளையும், சுய பரிசீலனைகளையும் வரவேற்றல், அறி வார்ந்த தளத்தில் நின்று விமர்சன பூர்வமாகத் தங்கள்
Lurr ni Goponu 60au முன் வைத்தல், விரும்புவோர் கலை, இலக்கிய முயற்சிகளை அரசியற் தளத்திற்குக் கலாபூர்வ மாக நகர்த்திச் செல்லல்.” போன்ற நோக்கங்கண்க்
கொண்டது "சமர்'. இந்த வெளியீட்டில் பேராசிரியர் க. கைலாசபதி, சித்திரலேகா மெளனகுரு ஆகியோர் எழுதிய அழகியல் சம்பந்தமான இரு கட்டுரைகள் அவதானிப்புக் குரியவை.
30

சித்திரலேகாவின் பின்வரும் அவதானிப்புகள் யாவராலும் ஏற்றுக்கொள்ளத்தக்கவை.
1 இலக்கியப் பொருளுக்கு முதன்மையும் முக்கியத் துவமும் அளித்தபோது یH 60 ارت) sumar பட்ட விதம், அல்லது அணுகப்பட்ட விதம் தொடர்பான ஆய்வுகள் அதிகளவு 566)- பெறவில்லை. இதனுல் கலைப்படைப்பின் அழகி யல் அம்சங்கள் பற்றிய உணர்வு எழுத்தாளர்களி டையே சரிவரச் செயற்ப்டவில்லை. உண்மையில் படைப்பின் அழகியலும், உள்ளடக்கமும் வேறு வேறல்ல. அழகியல்பற்றிப் பேசுவோர் பிற் போக்கானவர் என்ற (தவறன) கருத்தும் வளர்ந்து வந்துள்ளது.இன்று இலக்கியத்துடன் அரசியல் நிலைப் பாட்டையும் சமூகப்பாட்டையும் வற்புறுத்துபவர் பலர் இலக்கிய அழகியல் பற்றியும் கவனம் கொண் டுள்ளனர்.
2 தனிப்பட்ட படைப்பாளிகள் எவரும் ஆழமான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதில்லை. இதனுல் இளம் எழுத்தாளர்களும் இலக்கிய மா > வர்களும் தெளி வான ஒரு பின்னணியில் காலூன்ற முடியாத நிலை தோன்றியுள்ளது. இது மட்டுமன்றி எழுத்தாளர்களே தங்கள் பலம் பலவீனம் குறை நிறை ஆகியவற்றையும் உணர்ந்து மேலும் முயற்சி செய்ய முனையாமைக்கு இலக்கியம் பற்றிய முறையான ஆய்வின்மையும் எழுத்தாளர்களிடயே காணப்படும் மனப்பான்மையும் பலத்த காரணிகளாயுள்ளன.
ச சமூகப் பயன்பாட்டுணர்வு இலக்கிய அரங்கில் நிலை பேறடைந்து விட்ட இக்கட்டத்தில் எமது குறைகளை யும் மணந்நிறந்து பேசுவதும் விவாதிப்பதும் புதிய நிலை மைகளுக்குத தயார்ப்படுத்தும் என்பதில் சந்தேகமே யில்லை,
3.

Page 18
(4) இலக்கியமானது முதல்நிலையில் மனித அனுபவ வெளிப்பாட்டுடன் சம்பந்தப்பட்டது. அனுபவ ங்களை உரைகல்லாகக் கொன்டு தத்துவங்க ளைத்தேடுவது எத்தகைய உன்னத கருத்துக்களா யினும் வாழ்க்கையின் நிரூபணங்களாக வெளிப்ப டுத்தாவிடத்து இலக்கியமாகவன்றி வெறும் கருத் தளவிலேயே நின்றுவிடும். எனவேதான், கருத்து க்களை விடவும் வடிவங்களை இலக்கியத்தில் கொ ண்டு வரவேண்டியள்ளது.
அதே இதழில் பேராசிரியர் கைலாசபதி அழகியல் பற் றிப் பேசுவோரை வன்மையாகக் கண்டிக்கிருர், ஆய்வறிவு ரீதியாக அவர் இந்தப் பிரச்சினை பற்றித் தெளிவாகச் சில கருத்துக்களைத் தெரிவித்த போதிலும், அவை பிரச்சினையை மிகமிக இலகுபடுத்துவதிலும் எதிரும் புதிருமாகக் காட்டுவ தாகவும் அமைந்திருக்கின்றனவேயன்றி ஆக்க பூர்வமாக அமையவில்லை. உண்மையில் எதிரும் புதிருமான முரண்பாடுக ளின் இணைப்பில் புதிய வளர்ச்சியைக் காண முடியுமல்லவா? பேராசிரியர் கைலாசபதியே இதனை வேறு ஓரிடத்தில் அழு த்தந்திருத்தமாக ஒப்புக் கொள்கிருர், "தமிழ் நாவலிலக் கிய உலகம் இரு துருவங்களாகப் பிளவுபடுகிறது. அதீத தனிமனித நாவல்கள் ஒருபுறம், வேகம் பெற்றுவரும் சமுதா யச் சக்திகளைக் கூட்டாக எடுத்துக் காட்டும் நாவல்கள் மறுபுறம். இவை ஒன்றுக்கொன்று முரண்படுவனவே. ஆயினும் நாவலிலக்கியம் தனி மனிதரையும் சமூக இயக்கங்களையும் இணைக்கவல்லது." (முன்னுரை , "தமிழ் நாவல்களில் மனித உரிமையும் மக்கள் போராட்டமும்". பதிப்பாசிரி யர்: (பாக்கியமுத்து கிறிஸ்தவ இலக்கியச் சங்கம்). இதே முன்னுரையில் கைலாசபதி மேலும் கூறுகிருர்: 'நம் காலத் துக்கு உகந்த அழகியலையும் சிருஷ்டிக்கும் மாபெரும் பொறு ப்பு, எழுத்தாளர்களுக்கு இருக்கிறது. மனித உரிமைகளின் தன்மையையும் போராட்டங்களின் ஊற்றுக்களையும் எவ்வ ளவு தூரம் உள் நின்று உணர்ந்து கொள்கின்றனர் என்ப தைப் பொறுத்தே அவற்றை அழகியல் அடிப்படையில் ஆக்
32,

கும் சக்தியும் அவர்களுக்கு வந்து அமையும் அப்பொழுது தான் உலக நாவல் இலக்கிய வரிசையில் தமிழ் நாவல்களுக் கும் உரிய இடம் கிடைக்கும்"
இவ்வாறு ஓரளவு "தாராளக் கொள்கையை” கடைப் பிடிக்கும் கைலாஸ், ஏன் சில சந்தர்ப்பங்களில் வெட்டொன்று துண்டு இரண்டு என்ற போக்கில் இரு துருவங்களைச்சட் டென்று இனங்கண்டு ஒதுக்கி விடுகிருர் என்பதுதான் புரிய வில்லை. மேலே குறிப்பிட்ட தொகுப்பிலேயே "இனியவன்', தி. க. சிவசங்கரன் போன்ற மார்க்சியப் பார்வை கொண்ட விமர்சகர்களுக்குமிடையிலுள்ள வித்தியாசம் கவனிக்கத்தக் " . لكن تلك
"'கலைத்துவம் என்னும் கோட்பாடும் அதனைப் பயன் படுத்துவோருடைய வர்க்க நலன், அக்கறை, பிரமை முதலி யவற்றுக்கு இயைய வெவ்வேறு பொருள் குறிப்பதாய் அமை யும்’ என்று பேராசிரியர் கைலாசபதி கூறும் பொழுது, உண்மையான இலக்கிய மாணவர்களின் பயிற்சியையும், நேர் மையையும் விமர்சன ஆற்றலையுமே சந்தேகித்து ஒதுக்குகிருர், இது சரியான பண்பு அல்ல.
பேராசிரியர் கைலாசபதி "சமர்' ஏட்டில் எழுதிய கட்டுரையில் பிரச்சினைக்குரிய பகுதிகள் இருப்பதுபோல நியாயமான, தருக்க ரீதியான கருத்துக்கள் இருப்பதையும் குறிப்பிட்டேயாக வேண்டும்.
"இலக்கியத்தில் கலையழகு" பற்றிக் கூறுபவர்களின் கருத்து எவை என்று அனுமானமாகக் கட்டுரை ஆசிரியர் ஏழு அம்சங்களை நிரற்படுத்தியுள்ளார். அவற்றில் உண்மை கள் காணப்படுகின்றனவென்றலும், அவை முற்று முழுதான உண்மைகளல்ல என்பதை நிதானமாகப் படித்தால் புரியும். உதாரணமாக, "உளவியல் பிரச்சினைகளே நவீன இலக்கியத் திற்கு ஏற்றவை' என்று அழகியல்வாதிகள் வலியுறுத்துவ தாகக் கட்டுரை ஆசிரியர் கூறுகிருர். நவீன எழுத்தாளன் சமுதாயத்தை - புற உலகை - புறக்கணித்து அக உலகு
33

Page 19
பற்றி மாத்திரம் எழுதுவதே கடினம். ஆனல் ஜெயகாந்தன் போன்று கலைநயமாக இரண்டையும் சேர்த்து, இணைத்து எழு தலாந்தானே? இந்திரா பார்த்தசாரதி, ராஜம் கிருஷ்ணன் போன்றவர்களும் தத்தமது மட்டங்களில் நின்று சமுதாயத் தைச் சித்திரிக்கின்றனர்தானே? காந்தியவாதம் விமர்சக ருக்கு ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இல்லை என்பதற்காக அத் தத்துவக் கதைகளை வரவேற்காமல் விடலாமா? விஷயம் என்னவென்முல், அத்தகைய நாவல்களிற் காணப்படும் கலை நயத்தை, பொதுவுடைமைக் கருத்து நாவல்களிற் காணமுடி யாதிருப்பதுதான். புதிய உள்ளடக்கத்துக்குப் பொருத்த மான புதிய உருவம் அமைவது இயல்புதான். விமர்சன நோக்கும் வேறுபடுத்தான். ஆனல் 'புதுக் கவிதை" என்ற பெயரில் வெளிவரும் சுலோகங்கள் 'கவிதையாக” இல்லா மல் "படிமங்களாக" மட்டும் இருப்பதை நாம் பார்க்கிருேம். புதிய விமர்சனத்திலும் கூட புதிய உள்ளடக்கம் என்ற போர் வையில் புதிய உருவமான 'புதுக் கவிதை"யை நியாயப் படுத்த முடியாதிருக்கிறது. இந்த நிலையில், உப்புச்சப்பு இல் லாதவற்றை, குப்பையிற்ருன் போட வேண்டும். வெறும் கருத்துக்காகப் பாராட்டுவதென்ருல், கட்டுரைகள் தேவை யில்லை. நாடகத்திற்குப்பதிலாக Magic Shows போதும். "கலை" என்பது தனியுடைமைச் சமுதாயத்திலுஞ் சரி பொது வுடைமைச் சமுதாயத்திலுஞ் சரி அழகியல் சார்ந்ததே. "அழகியல்' என்ற சொல்லே கோளாறுக்குக் காரணம். "செம்மை" அல்லது “செய்வன திருந்தச் செய்யும்' பண் பையே வடிவம் அல்லது அழகு என்று நான் கருதுகிறேன்.
நமக்கு வேண்டியவை சமூகப் பண்பும் செம்மைப் பொலி வும் இணைந்தவை. நமக்குள்ள வேறுபாடுகளைக் கூர்மைப் படுத்த இரு துருவங்களாக நம்மையே பிரித்துக்கொள்ள இந்த "அழகியல் பிரச்சினை" உதவுகிறதேயன்றி, வேற்றுமையிலும் ஒற்றுமை காண உதவவில்லை. இவ்விதமான சமரசம் முற்ரு கத் தோற்றுவிட்டது என்றும் கூறுவதற்கில்லை.
இவ்வளவுங் கூறுவதனல், பேராசிரியர் கைலாசபதியின் ஆளுமையைக் குறைவாக மதிப்பிடுவதோ, அவர் பெருமை
34

யை மறைப்பதோ அல்ல. நமது நாடு பெருமைப்படத்தக்க இந்நூற்ருண்டின் சிறந்த ஆய்வறிவாளர்களுள் அவர் முன்னணியில் நிற்கிருர். ஆணுல், அவருடைய கருத்துக்கள் சில வளர்ச்சிக்குத் தடையாக, அநாவசியமான முட்டுக்கட் டைகளைப்போட்டன என்பதே எனது முறையீடு.
'கலை இலக்கியத்தைப் போல, இயற்கையையும், மனித னையும், சமூக நிலைகளையும் பற்றிய மனிதனின் புரிதல்களையே இயற்கை விஞ்ஞானங்களும், சமூக விஞ்ஞானங்களும் வெளி ப்படுத்திய போதிலும் இவற்றினுல் பதிலியாக்கப்பட முடி யாத வேறு ஏதோவொன்றிருப்பதஞலேயே நாம் இலக்கி யத்தையும் கலையையும் மேலதிகமாகக் கோருகிருேம். பதிவி யாக்கப்பட முடியாத அந்த அம்சம் கலைத்துவமும், அது தரும் உணர்வுப் பாதிப்புந்தான். அனுபவப் பாதிப்பு, அத னின் வெளிப்பாடாக வரும் விஷயம், தேர்வு, அழுத்தம், உத்தி,மொழி நடை. பிரக்ஞை என்பன இக்கலையம்சத்தைச் சாத்தியமாக்கும் கூறுகளாம்". (அலை - 13 ஆவது இதழ்)
> உள்ளடக்கச் சிறப்புக்காகப் பாராட்டப்பட்ட நமது முன்னணி எழுத்தாளர்களின் தமிழ்ச் சொல் வறுமையை யேசுராசா இந்த இதழில் உதாரணங்களுடன் விளக்கியிருப் பதும் வரவேற்கத்தக்கது.
மு. புஷ்பராஜன், பேராசிரியர் வெவ்வேறு இடங்களில் தெரிவித்த கருத்துக்களைத் தொகுத்துக் கூறித் தனது எதிர்ப் பைத் தெரிவிக்கிருர், புஷ்பராஜன், கைலாசபதியை தனிப் பட்ட முறையில் தாக்கி எழுதியிருப்பது வரவேற்கத்தக்க தேயல்ல. அதே வேளையில், கலைநயம் கெட்டுப்போன ஆக்கப் படைப்புகளை அவர் சரியாக உதாரணங் காட்டியிருப்பது வரவேற்கத்தக்கது. மு. தளையசிங்கம் ஏன் மதிக்கப்படுகிறர் என்பதற்கான விளக்கமும் பெரும்பாலுஞ்சரி. 'புதுக் கவி தை" பற்றி வானமாமலை, கைலாசபதி, முருகையன் ஆகி யோர் தெரிவித்துள்ள கருத்துக்களில் நிற்கும் உண்மையைத் தட்டிக்கழிக்க முடியாது. அதே வேளையில், "தோணி வருகி றது" முன்னுரையில் கைலாசபதி, மகாகவி பற்றிக் குறிப்பி டாததும் விசனிக்கத்தக்கது.
மற்றும்
35

Page 20
கைலாசபதி பற்றி
பேராசிரியர் கைலாசபதி மறைந்தார் என்ற துயரச் செய்தி, தமிழ் உலகையே கவலைக் கடலில் மூழ்கச் செய்தது. கண்ணிர் சிந்தாத தமிழ் நெஞ்சமே இல்லை. கடைக்கண் ணில் நீர் இன்னமும் காயவில்லை. ஆனல் ஒரு மாதகாலம் உருண்டோடிவிட்டது.
நாட்டின் பல பகுதிகளிலும் அஞ்சலிக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. பேராசிரியர் ஒரு யுக புருஷர். தமிழ் இலக்கியம் என்ற பெரும் நாவாயைத் திசைதிருப் பிய மாலுமி. எமது நாட்டிலே தேசிய இலக்கியம் தோன்ற வழிவகுத்த பிதாமகன். நவீன ஈழத் தமிழ் இலக்கியம் இயல்பான மண்வாசனையுடன் உருவெடுத்துவரும் இவ் வேளையிலே, வழிகாட்டியாகத் திகழ்ந்த பேராசிரியர் திடீ ரென மறைந்ததால் எழுந்த துன்ப சாகரத்திலிருந்து இன்னமும் நாம் வெளியே வரவில்லை.
ஆர். சிவகுருநாதன் பிரதம ஆசிரியர், தினகரன்
ப்ேராசிரியர் கைலாசபதி எம் சிந்தனைகளையும் இத யங்களையும் கவர்ந்தவர். அவரது திடீர் மரணம் எம் நெஞ் சங்களைப் பாரமாக்கியது. சிந்தனையை மழுப்பி கண்களில் நீரை நிரப்பிவிட்டது . கலை, இலக்கிய விமர்சனம் அவரது கைவந்த கலை , 'விமர்சனம் என்பது உலகை விபரிப்பது மாத்திரமன்று, அது உலகத்தை மாற்றி அமைப் பதற்கு உழைக்கும் வர்க்கமும் அதன் நேச சக்திகளும் ஓயாது பயன் படுத்தும் அறிவாயுதமாயும் இருத்தல் வேண் டும்” என்று (போரசிரியர் கைலாசபதி) குறிப்பிட்டுள்ளார். இவ் விஞ்ஞானக்கருத்தே அவரது கோட்பாடாகவும் சித்தாந்தமாகவும் இறுதிவரை நிலவியது.
காலத்துக்கு முந்திய தீர்க்கமான சிந்தனை முடிவுகள் அவரது எழுத்தில் புதைந்துள்ளன.
செ. கணேசலிங்கன்
ஆசிரியர், குமரன்
(இலக்கியச் சிந்தனைகள் எனும் நூலின் முதலுரை, பதிப்புரையிலிருந்து. பேராசிரியர் மறைந்த 31ம் நாள் நினைவாக இந்நூல் 1983ம் ஆண்டு ஜனவரி மாதம் பிர சுரமானது.)


Page 21
கே. எஸ். சிவகுமாரன் { தொலைக்காட்சி ஆகிய வெகுச மூலம் கலை, இலக்கியப் பரிவர்
தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு பவர், ஒரு கலைப்பட்டதாரி.
Tamil Writing in Sri L கதைகள்’ (1982)'கலே இலக்கி மூன்று நூல்களை எழுதிய இ கம் 'கைலாசபதியும் நானும்,
இவர், உள்ளூராட்சிச் சேை (தமிழ் மொழிபெயர்ப்பாளர்), டுத்தாபனம், (பகுதிநேர த தமிழ் / ஆங்கில செய்தி வாசி யர், தமிழ்ச்செய்திப் பிரிவுப் கிய தமிழ், ஆங்கில விமர்ச வெளிநாட்டுச்செய்தி விமர்சன கத் தூதரகத்தகவற் பிரிவு யாளர்) ஆகிய நிறுவனங்கள் Gurroup 3 ''The Island' G1 Deputy Features Editor பொறுப்பான இணை ஆசிரிய அப்பத்திரிகையின் °Culture" எழுதித் தயாரித்து வெளியிட என்ற தலைப்பிலும் இவர் பத்
கே. எஸ். சிவகுமாரன்,
தில் பகுதி நேர பத்திரிகைத்து கலாசார அலுவல்கள் அமைச் இலக்கியத் தேர்வுக்குழுவின்
அமைப்பின் இலங்கைக் கிளைய வராகவும் தொழிற்பட்டிருக்கி கோ' இலங்கைக் கிளையின் நீ பெற்றிருக்கிருர், திரைப்பட குழுக்கள் பலவற்றில் இவர் இ ஹினியில் 'ஊர்க்கோலம்’ களின் தொகுப்பையும் ஒளிப
பரீட்சைத் திணைக்களத்தி யாளராகப் பணிபுரியும் புஷ் ளார். இவர்களுக்கு ரகுராம், கள் இருக்கிருர்கள்.
Chamara Printers Colombo

(53) பத்திரிகை, வானெலி, னத் தொடர்பு சாதனங்கள் த்தனைகளைச் செய்து வருகிருர்.
5 மொழிகளையும் பியன்படுத்து'
10ka" (1974) 'சிவகுமாரன் யத் திறஞய்வு" (1989) ஆகிய வருடைய நான் சாவது புத்த
வ அதிகாரசபை அலுவலகம், இலங்கை ஒலிபரப்புக் கூட் மிழ்/ஆங்கில அறிவிப்பாளர், ப்பாளர், செய்தி உதவி ஆசிரி பெர்றுபபாசிரியர், கலை இல்க் கர், செய்தியின் பின்னணி, ா ஒலிபரப்பாளர்), அமெரிக் (ஆங்கில தகவற்றுறை உதவி ரில் பணியாற்றிவிட்டு, இப் ான்ற ஆங்கிலத் தினசரியின் =塾5 (சிறப்பம்சங்களுக்குப் ராக) கடமை புரிவதுடன் என்ற வாராந்தப் பக்கத்தை G 6 (56)(?rf. “Gleanings” தி ஒன்றை எழுதிவருகிறர்.
கொழும்புப பல்கலைக் கழகத் துறை விரிவுரையாளராகவும், சின் கலைக்கழகத்தின் ஆங்கில
உறுப்பினராகவும், PEN பின் துணைத்தலைவர்களில் ஒரு ருர், இப்பொழுது ’யுனெஸ் ர்வாக சபையில் இவர் இடம் -, நாடக விழாத்தேர்வுக் இடம்பெற்றிருக்கிருர், ரூபவா என்ற கலை, இலக்கிய நிகழ்ச்சி ாப்பிவருகிருர்,
ல் உதவிப் பரீட்சை ஆணை பா சிவகுமாரனை மணந்துள் அநீந்தராம் என்ற புதல்வர்
6. Price Rs. 121