கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கோணமாமலையைச் சூழ்ந்துள்ள கொடுமைகள் பாரீர் துடித்தெழுந்து துன்பம் துடைக்க வாரீர்

Page 1
Ej5ITHDTIDITID50)5U60)
கொடுமைகள் பாரீர் து துடைக்க து இன்ே
ஒப்பற்ற திருகோணமலையை
நிலை உருவாகும். எம் வ
வசைபாட வரலாறு பழிசு போகிறே
IDт. Зѣ- HFЦ. பொதுச் ெ தமிழீழ விடுத
 

pfk
பச் சூழ்ந்துள்ள டித்தெழுந்து துன்பம் | SIrfi
誓=
T351)
■
இழந்து ஒப்பாரி விைக்கும் ழித்தோன்றல்கள் எம்மீது மத்த இடம் கொருக்கப்
BTLIT?
வேந்தன் FLT தலை அணி

Page 2

கோணமாமலையைச் துழிந்துள்ள கொடுமைகள் பாரீர் துடித்தெழுந்து துன்பம் துடைக்க வாரீர் இன்றேல்
ஒப்பற்ற திருகோணமலையை இழந்து ஒப்பாரி வைக்கும் நிலை
உருவாகும். எம் வழித்தோன்றல்கள் எம்மீது வசைபாட வரலாறு பழிசுமத்த இழ்துெடித்தப்.இபாகிறோமா?
"ஈழத்தில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்று திருக்கோணேஸ்வரம் ஒரு காலத்தில் மான்கள் துள்ளித் திரிந்த இடம் அது. இன்று ஊனம் அடைந்து கிடக்கிறது. ஆலய எல்லைக்குள் படையினர் முகாமிட்டுள்ளனர். ஆலயத்துக்குச் செல்லும் பக்தர்கள் எத்தனையோ கட்டுப்பாடுகளைத் தாண்டிச் செல்ல வேண்டும். கேள்வி மேல் கேள்வி கேட்டு படையினர் குடைந்து எடுத்து விடுவார்கள். w·
“தூர இடங்களில் இருந்து வரும் பக்தர்கள் தமது வாகனங்களுடன் ஆலய எல்லைக்குள் நுழைய முடியாது அதற்கென நியமிக்கப்பட்டுள்ள சட்டத்தரணியிடம் முன்கூட்டியே தெரிவித்து தம்மைப் பதிவு செய்து கொண்டு அனுமதி பெறவேண்டும். அதன் பின்புதான் வாகனத்துடன் செல்ல முடியும்” என்று திரு. எஸ். எஸ். ஆர் எழுதியுள்ள கட்டுரையை 7-10-2001 வெளிவந்த “சுடர் ஒளி”யில் படித்த போது எம்மை மீறிக் கண்கள் கலங்கின. எம்முள்ளே செங்குருதி ஒட மறுத்தது உடல் உறைந்து போனதோ என்ற உணர்வு ஏற்பட்டது. காரணம் கட்டுரையாளர் தன் கட்டுரையில் எதையும் மிகைப்படுத்திக் கூறவில்லை. மாறாக அவர் கூறியது நூற்றிற்கு நூறு உண்மை என்பதை உணர்கிறேன். அண்மையில் யான் திருமலை சென்று பல்வேறு மட்ட மக்களுடனும் பல்வேறு
அறிஞர்களுடன் பல்வேறு அனாதை இல்லங்களுடனும் உரையாடி உறவு பூண்ட
போது எம் உள்ளம் ஏற்கத் தயங்கும் பல கசப்பான உண்மைகளைக் கேட்டறிந்தேன். அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்துள்ள ஒவ்வொரு சிங்கள அரசும் 'குடிதனை நெருக்கி பெருக்கமாய்த் தோன்றும் திருகோணமலை' என்று 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ் ஞானசம்பந்தர் கூற்றினை முறியடிக்கின்ற முறையில் திருகோணமலையில் இன்று தமிழ் மக்கள் நெருங்கி வாழ்வதற்குப் பதில் இன்று நெருக்கப்பட்டு வெளியேற்றப்படுகின்ற கண்ணிரை வருவிக்கின்ற காட்சியை நாம் காணுகின்றோம். அன்பரசனும், அறிவரசனும், கயல்விழியும், மலர்விழியும், யாழினியும், எழிலினியும் வெளியேற்றப்பட்ட நிலையில் புஞ்சி மெனிக்காவும், பொடிமெனிக்காவும், புஞ்சி அப்பஹாமியும், பொடி அப்பஹாமியும் குடியேறுவதைக் கண்டு எம் நெஞ்சம் வேதனையில் வெம்புகின்றது. "கோணமலை காணாத கண் என்ன கண்ணே, கும்பிட்டு நில்லாத கை என்ன கையே" என்று கூறிக்கொண்டு கோணேசா. அருள்நேசா, என்று ஓங்கிக் குரல் எழுப்பி நாம் வழிபடமுடியாத நிலையில் கோணேசர் கோட்டைக்குள் “புத்தம் சரணம் கச்சாமி தர்மம் சரணம் கச்சாமி சங்கம் சரணம் கச்சாமி தமிழன் மரணம் கச்சாமி” என்ற குரல்தான் ஓங்கி ஒலிக்கும் குரலாக விளங்குகின்றது.

Page 3
O2
எம் கோணேசர் கோயில் எம் முன்னோன். எம் மூதாதை எம் முடியரசன் குளக்கோட்டனால் ஆயிரங்கால் மண்டபமாகக்கட்டப்பட்டு கம்பீரமாகக் காட்சியளித்த வரலாறு முன்பு இருந்தது.
பின்பு போர்த்துக்கேயனும், ஒல்லாந்தனும் மாறி மாறிக் கைப்பற்றி சீர்குலைத்தனர். எப்ப்டியும் இக்கோவிலை மீட்டெடுக்க நாம் முயற்சி செய்கின்ற போது குறுக்கே வந்து கொடுமைகள் பலவற்றை செய்ய அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த சிங்கள அரசுக் சதித்திட்டத்தோடு செயற்படுகின்றன.
எங்கள் தமிழ் மண்ணில் எழுந்துள்ள இக் கோயிலைக் கட்டியவன் தமிழ் மன்னன். அக்கோயிலில் காணப்படும் கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை அனைத்தும் தமிழனின் பெருமையை பறைசாற்றும். ஆனால் இக்கோயிலை நாம் வழிபடச் செல்கின்ற போது அடையாள அட்டையைக் காட்டு, சட்டத்தரணியிடம் இசைவு பெற்று வந்தாயா, என்று எம்மை அவமதித்து அலைக்கழிக்கும் கேள்விகளை அங்குள்ள காவல் துறையினர் கேட்பது எம்மை வெட்கித் தலை குனிய வைக்கும் செயலாகும் ஆனால் இக் கோயிலுக்கு புத்த குருமாரும், சிங்கள மக்களும் படையெடுத்து வரும்போது தட்டிக்கேட்க எவரும் இல்லை. தமிழ் மண்ணில் தமிழர் கட்டிய கோயிலை வழிபட எமக்கு இத்தனை தடைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. சிங்கள மண்ணில் உள்ள பெளத்த கோயில்களில் நாம் வழிபடச்செல்லும் போது இத்தகைய தடைகள் விதிக்கப்படின் அதற்குரிய காரணம் எம்மால் புரிய முடியும். சிறீ லங்கா வேறு தமிழீழம் வேறு ஆகவே சிறீ லங்காவில் எமது உரிமைகளுக்குத் தடை விதிக்கப்படின் நாம் அதனை பெரிதும் பொருட்படுத்த மாட்டோம். ஆனால் எங்கள் மண்ணில் எங்கள் கோயிலில் இந்த நிலை எமக்குத் தேவைதானா?
வரலாறு திரிக்கப்படுகிறது வளமான மண் பறிபோகிறது
சுருங்கக் கூறின் பட்டிப்பளை பாய்ந்தோடி பசுமையூட்டிய கிழக்கின் முக்கிய பகுதிகளை பறித்து "கல் ஓயா” என்று பெயர் சூட்டிய வஞ்சம் நிறைந்த சிங்கள அரசு, மூதூரை முற்றுகையிட்டு பழந்தமிழ் கிராமங்களாகிய குமரன் கடவையை "கோமரங்கடவ' என ஆக்கி வெண்டரசன் குளத்தை "வெண்டரச குளமா” என்றாக்கி வரலாறு என்ற பெயரில் கட்டுக்கதைகளையும் வரையத் தொடங்கியுள்ளது. அது மட்டுமல்ல வடக்கின் எல்லையாம் வயல் செறிந்த வவுனியாவையும் பறித்து எம் எல்லையிலும் தொல்லை தருகிறது சிங்கள அரசு. எம் தமிழகத்தின் ஐந்திணையில் ஒன்றாகிய முல்லையை நினைவு படுத்தும் முல்லைத்தீவினிற்குள்ளும் தன் மூக்கினை நுழைக்க முனைகிறது வெறிகொண்ட சிங்கள அரசு மணலாற்றை “வெலிஓயாவாக" மாற்றிய வெறி கொண்ட சிங்கள அரசு தன் படையை நிறுத்தி வைத்து எம் நெல் வளம் செறிந்த மண்ணையும் மீன்பிடித் தொழிலினால் வளம் தருகின்ற கடலையும் பறிக்கும் முயற்சியில் சிங்கள அரசு முயல்கிறது. அதனை முறியடிக்க எம் வேங்கைள் வீராவேசத்தோடு நடத்துகின்ற போராட்டத்தைக் கண்டு உலகமே வியக்கின்றது. வடக்கையும், கிழக்கையும் இணைத்து இயற்கைத் துறைமுகத்தை தன்னுள் அடக்கி எம் வாயிலும் மனத்திலும் மருவிநின்று அகலாத மாண்பினனாகிய “எம் தாயினும் நல்ல தலைவனாம் கோணேசர் குடிகொண்டிருக்கும் கோணமாமலையையும் விழுங்கி தன் அடங்காப்பசியை தீர்க்க முயல்கிறது. நாளும் பொழுதும் மணித்தியாலத்திற்கு

03
மணித்தியாலம், நிமிடத்துக்கு நிமிடம் உம் உயிரனைய திருமலை மண்ணை திட்டமிட்டு பறித்தெடுக்க அரசு எடுக்கும் முயற்சிகளை எண்ணிப்பார்க்கின்ற போது எம் உள்ளத்தில் ஏற்படும் ஏக்க உணர்ச்சிக்கு எல்லையே இல்லை. முதலிக் குளத்தை “மொரவெவ' ஆக்கி செல்வநாயகபுரத்திற்கு போட்டியாக சிறிமாவோ புரத்தை தோற்றுவித்து எம் தமிழ் மண் கற்பழிக்கப்படுவதைக் காணும் போது எம்மை மீறி எம் கண்களில் செங்குருதி கண்ணீராகப் பெருக்கெடுக்கிறது.
(3.5G63 (336.60) us'' இராசிங்கக் கோட்டையா?
திருகோணமலையை தம் வல்லாண்மை வெறிகொண்டு தட்டிப்பறிக்க முயல்கின்ற சிங்கள அரசும், சிங்கள வெறியர்களும் வரலாற்றைத் திரித்து வரலாற்றுக்கே இழுக்குத் தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. கோணேசர் கோட்டையை, இராசசிங்க கோட்டை என்று அழைக்க முனைந்துள்ள சிங்கள வெறியர்கள் அதற்குக் காரணம் காட்ட முனைந்துள்ளனர். ஆனால் இவர்களின் பொருளற்ற பொருந்தாக்கூற்றுக்கு பிதற்றலுக்கு 23.09.1968 இல் வெளிவந்த "டெயிலி நியூசில்' திரு. கே. சி. கே. பின்வுருமாறு நல் முறையில் சவுக்கடி கொடுக்கிறார். “The Talk of Rajasingha fort and the Sinhala claim to Koneswaram temple is baseless nonsense and wanton interference of human rights, privileges and a miscarriage of justice, unless of course the so called claimants would go a step forward and shamelesly and wantontly declare that the Sinhala race is the Standing monument of Chola adultery.” (G335 (3600T&ft (335|T60)Luu (SJTgfiles (885.T.60L 6166tg கூறுவதும் கோணேசர் கோயில் தங்களுக்குரியதென்றும் சிங்கள மக்கள் கோரிககை எழுப்பவதும் அடிப்படையற்ற பிதற்றலோடு மனிதவுரிமைகளில் தேவையற்று தலையிட்டு நீதியை அநீதி வழிக்குச் செலுத்தும் முறைகேடான செயலாகும். அல்லாவிடில் இக்குரல் எழுப்பவோர் முறை தவறிய சோழரின் செயலின் நினைவுச்சின்னம் தான் இன்றைய சிங்கள இனம் என்று வெட்கம் இன்றி ஏற்றால் தான் கோணேசர் கோட்டையை இராஜசிங்க கோட்டை என்று கூறுவதற்கு உரிமையுடையவர்களாவர்”)
வலப்பொல இராகுல வரைந்துள்ள கருத்து.
இனி வரலாற்றுக் கண் கொண்டு கோணேசர் கோயில் வரலாற்றையும், கோணமாமலையின் வரலாற்றையும் சுருக்கி ஆராய்வோம். வரலாற்று உணர்ச்சி உரிமைக்கு வித்து என்பதை எம்மவர் நினைவில் வைத்தல் நலம்.
இலங்கையில் "பெளத்த வரலாறு” என்ற நூலை எழுதிய வணக்கத்துக்குரிய வலப்பொல இராகுல என்பவர் தன் நூலில் பக்கம் 44இல் “கி. மு. 5ம் நூற்றாண்டில் சிங்களவரின் முன்னோர் என்று கருதப்படும் விஜயன் வருவதற்கு முன்பேயே இங்கு சைவம் தழைத்தோங்கி இருந்தது என்று கூறியுள்ளார். புத்த மதம் இந்து மதத்திலிருந்து தோன்றியதேயன்றி இந்து மதம் புத்த மதத்திலிருந்து தோன்றவில்லை என்பது எவராலும் மறுக்க முடியாத உண்மையாகும். இந்த அடிப்படையில் பார்க்கையில் ஈழத்தின் மூத்த குடிமக்கள் இந்து மதம் தழுவிய தமிழர்கள் தான் என்பது வாய்வியல் நிலையில் ஏற்கத்தக்க வரலாற்று உண்மையாகும்.

Page 4
04
போல் பிறிஸ் பொலிந்த கருத்து
இவ் வரலாற்று ஆசியரியன் கருத்துக்கு வழிமொழி கூறும் முறையில் சேர் போல் பிறீஸ் தனது போர்துக்கேய வரலாறு தொகுதி (2) என்ற நூலில் பின்வருமாறு Jing failprit.” “Long before the arrival of vijaja (543 BC) there were in Lanka Five recogisied Isuvarams of Siva which claimed and received the adoration of all India. These were Thirukethiswaram near mahatittha, muneswaram domiminating Salawatta and the pearl fishery. Thondeswaram near mantota. Thirukoneswaram opposite the great bay ofkoddiyar and Nakuleswaram near Kankesanthurai. Their Situation close to these ports cannot be the result of accidents or caprice and was probably determined by the concourse of a wealthy mercantile population, whose religious wants called for attention' (6ildu6 (S6loisigo)35d(g 6J) fill u60) puu காலத்துக்கு முன்பேயே (கி. மு. 534) இலங்கையில் பெயர் பெற்ற 5 சிவன் கோயில்கள் இருந்தன. இவை இந்தியா முழுவதையும் கவர்ந்திழுத்த கோயில்களாக விளங்கின. இவையாவன மகாரிற்றாவிற்கு அருகாமையுள்ள திருக்கேதீசுவரமும், சல்வத்தாவிலும், முத்துக்குளிக்கும் பகுதிகளிலும் முக்கியத்துவம் பெற்று விளங்கிய முன்னிசுவரமும் மாதோட்டத்துக்கு அருகாமையில் உள்ள தொண்டீசுவரமும் கொட்டியாக் குடாவுக்கு எதிரேயுள்ள திருக்கோணேசுவரமும் காங்கேயன் துறைக்கு அருகில் உள்ள நகுலேசுவரமும் ஆகும். துறைமுகங்களுக்கு அருகே இக்கோயில்கள் கட்டப்பட்டிருப்பது தற்செயலாக இருக்க முடியாது. இக்கோயில்கள் இப்பகுதிகளில் வசித்த பணம் படைத்த வணிகர்களின் தேவையை நிறைவு செய்வதற்காகவே இவை உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்? இங்கு குறிக்கப்பட்டிருக்கும் Mercantile population” (வணிக மக்கள்) என்பது தமிழரையே குறிக்கும் என்பது நினைவில் பதித்தற் குரியது.
மேற்குறித்த வல்பொல ராகுலாவும், சேர். போல் பிறிசும் தெரிவித்துள்ள கருத்துக்கள் வரலாற்று உண்மைகளாக இருப்பதனால் இவர்களைச் சிங்களவர் அல்லர் என்று இன்ற காளான் முளைப்பது போல் முளைக்கும் சிங்கள வரலாற்று ஆசிரியர்கள் கூறமாட்டார்கள் என்று எதிர்ப்போமாக.
இந்துக்களின் உரோமாபுரி
திருகோணமலை மிகத் தொன்மை வாய்ந்த காலத்திலேயே இந்துமதம் தழுவிய தமிழரின் வழிபாட்டுத் தலமாக விளங்கியதென்பதை திருகோணமலையை நேரில் பார்வையிட்டதுாய (பரிசுத்த) பிரான்சிஸ் சவேரியார் இவ்விடத்தை "கீழைத்தேய் Ló(3605 gfaii g (3y TLDTurf (The Rome of the Heathens of the East.) 66örg Jölusion rit. (History of the catholic church vol I by father Ganapiragasar) Gigirp (BIT656) 3616 கொள்க. இதில் அவர் எம்மை “மிலேச்சர்” என்று அழைத்திருப்பினும் "திருகோணமலை கீழைத்தேய உரோமாபுரி” என்று கூறியமைக்கு நன்றி நவில்வ்ோமாக.

05
ரெனண்ட் தெரிவித்த பேருண்மை
மற்றும் Tenant (ரெனண்ட்) பேரறிஞர் திருகோணமலை மரபுவழியாகத் தமிழர் தாயகம் என்பதைப் பின்வருமாறு சுவைபட மொழிந்துள்ளார். “Trincomalee though a place of great antiquity derived its ancient renown less from political than from religious associations. The malabar invaders appear to have adopted it as the site of one of their most celebrated Shrines and a pagoda which stood upon the lofty cliff now known as the Swamy rock and included within the fortification of fort Frederick was the resort of pilgrims from all parts of India with this edifice which is still spoken of as the temple of a thousand columns is connected with one of the most graceful of the Tamil legends” (5c)(335|T600TLD606) fably ugp60)LD . வாய்ந்த இடமெனினும் அரசியலை விட சமயத் தொடர்புகளையே தன் பழம் பெருமையாய்ப் பெற்றுள்ளது. படையெடுத்த மலபார் இனத்தவர்கள் தமது வழிபாட்டுக்குரிய பெயர் பெற்ற தலங்களுள் ஒன்றாக இதனைக் கருதுகின்றனர். இன்று சுவாமிமலை என்று கூறப்படும் உச்சப் பகுதியில் ஒரு பெரும் கோபுரம் இருந்தது. அத்துடன் இந்தியாவில் எல்லாப் பகுதிகளிலிருந்து வந்த யாத்திரியர்கள் . தங்குவதற்கு ஏற்ற ஒரு மடமும் இன்றைய பிரெடிக் கோட்டையில் இருந்து. இக்கோட்டையில் புகழ் பெற்ற ஆயிரங்கால் மண்டபமும் இருந்தது. இதையொட்டி மிகச் சுவையான மரபுக் கதைகளும் உண்டு. இக்கோயில் பற்றி Tamil legends உண்டு என்று கூறினாரேயன்றி ‘Singala Legends” பற்றி யாதும் கூறவில்லை என்பது ஈண்டு எம்மனதில் பதியத்தக்கது.
Z பிரித்தானிய கலைக்களவிகழுத்தமிழ்தர்ஜஒன்மை
அத்துடன் தமிழர் ஆதியில் குடியேறிய இடங்களில் திருகோணமலையும் ஒன்று என்பதற்கு பிரித்தானிய கலைக்களஞ்சியம் (Encyclopedia of Britanica) தொகுதி 22 இல் பக்கம் 477 இல் திருகோணமலை பற்றிக் கூறப்படும் பின்வரும் &ngibol & T6 BTS 960LD&pg). The town was one of the First Tamil Settlements in Ceylon” (இலங்கையில் தமிழர் முதலில் குடியேறிய பட்டணங்களுள் திருகோணமலையும் ஒன்றாகும்) ஏறக்குறைய இதே கருத்து அமெரிக்க கலைக்களஞ்சியம் தொகுதியில் 22 இல் பக்கம் 65இல் காணப்படுகிறது.
பாங்குடன் விளங்கிய பழைய கோயிலின் அமைப்பு
கோணேசர் கோயில் தமிழரின் தனியுடமை என்பதை மேலும் நிலைநாட்டத் துணைபுரியும் நிலையில் திரு. சி. இ. பிரீஸ் அவர்கள் தனது "Portuguese in Ceylon” என்னும் நூலில் தொகுதி II இல் அத்தியாயம் 9இல் பக்கங்கள் 168-169 இல் கூறிய பின்வரும் பந்தியில் கொன்ஸ்ரன்றிடிசா - (Constant desa) கோணேஸ்வரர் கோயிலை இடிக்கும் முன் அக்கோயிலின் கட்டட அமைப்பைப் பற்றி கூறியவை எம்மையெல்லாம் வியப்பில் ஆழ்த்தும் முறையில் அமைந்துள்ளது.

Page 5
06
“It was the summer of 1624” when de sa started on this enterprise, The site selected was the lofty headland of konesar malai, which was connected with the main land by an isthumus where the town lay. Three temples occupied the promontory one at the base, and one halfway up while the summit, rising 400 feet above the sea, was crowned by the most renowned of all as one of the five Isparam or residences of Siva. this was a centre of graat veneration even beyound what its magnificience and wealth entitled it to. And this was destroyed to make way for a triangular Fort of stone and mortar which commanded the entrance to the bay”
இவ்விதம் மிகத் தெளிவாக கோணேசர் கோயிலின் அமைப்பு கூறப்பட்டிருக்கையில் இங்கே “கொக்கன்ன விகாரை” இருந்ததென்று பொய்யைக் கூட பொருந்தக்கூற முடியாது தத்தளிப்போர் பற்றி யாம் கூறுவதற்கு என்ன உண்டு?
சித்திரவேல் செப்பிய சிறப்புமிகு கருத்து
இன்றுள்ள கோணேசர் கோட்ட்ை எல்லைப்பரப்புத்தான் கோணேசுவரர் கோயிலுக்கு உரியது என்ற அடிப்படையில் இப்பகுதியைப் புனித நகராகப் பிரகடனம் செய்யும்படி இந்துக்கள் கோரிக்கையிட்டபடியிருக்கிறார்கள். ஆனால் இப் பெருமைமிக்க கோயிலின் வரலாறு இன்றுள்ள கோணேசுவரர் கோட்டையையும் தாண்டியளவில் கோயிலின் நிலப்பரப்பில் இருந்தது என்பதற்கு இக்கோயிலின் அறங்காவலராக விளங்கிய காலம் சென்ற மருத்துவர் சித்திரவேல் அவர்கள் 1968ல் "ஈழநாடு” செய்தி இதழுக்கு ஆய்வுள்ளதோடு வெளியிட்ட அறிக்கை சான்றாக விளங்குகின்றது. இதோ அப்பகுதி!
"கோணேசுவரர் ஆலயப் பகுதி இந்துக்களுக்கே உரியது என்பது சரித்திர நிறுவனமானதொரு விஷயம். இது போர்த்துக்கேயர் காலம் பற்றி டாக்டர் "போல் பீறிஸ்” எழுதிய புத்தகத்தில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. டச்சுக்காரர்களுளம் தமது தாய் நாட்டுக்கு அனுப்பி வைத்த தஸ்தா ஏடுகளில் 1000 தூண்களைக் கொண்ட மூன்று ஆலயங்கள் பற்றியும் பாவநாச ஊற்றைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்கள். இந்த ஆலயங்கள் 3600 அடி நீளத்தையும் 320அடி அகலப்பரப்பினையும் கொண்டு அமைந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்போதுள் கோணேசுவரர் ஆலய வாயிலிருந்து பிரடரிக் கோட்டை வாயில் வரையுள்ள தூரம் 3,100 அடிகள் மட்டுமே. எனவே பிரடரிக் கோட்டையிலிருந்து 500 அடி வரயைான தூரத்திலுள்ள நிலமும் இந்த ஆலயத்திற்குச் சேர்ந்த ஆதனமே என்பது குறிப்பிடத்தக்கது. 1624ஆம் ஆண்டில போர்த்துக்கேய காப்டன் கொன்ஸ்டண்டைன்டிசா இந்த ஆலயத்தை இடித்து இந்த ஆலயம் கட்ட உபயோகிக்கப்பட்ட கற்களை கோட்டை கட்ட பயன்படுத்தினான்.

O7
புள்ளி விபரம் புட்டுக்காட்டும் உண்மை
இது மட்டுமல்ல இன்று திருகோணமலை சிங்கள மக்களின் படையெடுப்பினரில் பெருமளவு பாதிக்கப்பட்டிருப்பினும் தொடக்க காலம் தொட்டு தமிழர்தான் திருகோணமலையில் குடியேறி வாழ்ந்தனர் என்பதற்கு மிகப் பழைய காலம் தொட்டு இன்றுவரை எடுக்கப்பட்ட குடிமக்கள் தொகை (census) அறிக்கை சான்றாய் இருக்கும். இதனை நிலைநாட்டி "Timesfo Ceylon” 2009.1968 இல் வெளிவந்த கட்டுரையின் முக்கிய பகுதி அப்படியே இங்கு தமிழில் எடுத்தாளப்பட்டுள்ளது.
மொத்த கீழ்நாட்டுச் கண்டியச் மக்கட்தொகை சிங்களவர்கள் சிங்களவர்கள்
1881 22, 197 935 ..... 1891 25,745 1,109 r 1901 28,441 532 671 1911 29,755 383 755 1921 34,112 768 733 1946 75,926 11,191 4,515 1953 83,917 10,262 5,034 1963 138,553 22,002 17,923 1971 191,989 29,008 26,300
1898 இல்
1898இல் திருகோணமலையில் அரச அதவி முகவராய் இருந்த திரு சி. எம். லுசிங்கரன் “இலங்கைக்கு வரும் ஒருவர் ஒரு ஆண்டுக்கு ஒரு சிங்கள மனிதனைச் சந்திக்காது இலங்கையில் எந்தப் பகுதியிலாவது இருக்க முடியுமா என்பது நம்பமுடியாத ஒன்றாகும். ஆனால் திருகோணமலை வரும் பார்வையாளருக்கு இந்நிலை ஏற்படலாம். இங்கு வாழும் சிங்கள மக்கள் காசிங்ஸ் அல்லது ஸ்காவொராவில் வாழும் பிரெஞ்சு மக்கள் அல்லது சேர்மன் மக்களிலும் பார்க்க எண்ணிக்கையில் குறையுடையவர்களாகவே இருக்கின்றார்கள். அத்தோடு மேலும் இலங்கையில் உள்ள 6ಣ್ಣೆà 69(5 பட்டணத்திலாவது சிங்கள மொழி பேசும் ஒருவரையாவது காணாமல் இருப்பது நம்பமுடியாத நிகழ்ச்சி எனினும் திருகோணமலையைப் பொறுத்தவரை இது உண்மையாகும்.

Page 6
08
1901 இல்
1901 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட குடிமக்கள் மதிப்பீட்டில் திருமலையில் மொத்த எண்ணிக்கையான 28441 மக்களில் 532 பேர் கீழ்நாட்டுச் சிங்களவராகவும், 671 பேர் கண்டியச் சிங்களவராகவும் இருந்தனர். அப்போது இலங்கை இந்தியத் தமிழர் ஒன்றாகக் கருதப்பட்டு அவர்களது எண்ணிக்கை 17069 ஆகவும், முஸ்லிம் மக்களின் எண்ணிக்கை 8,258 ஆகவும் அமைந்து இரண்டாவது பெரும் குழுவாக விளங்கினர்.
1911 இல்
1911 ஆம் ஆண்டு குடிமதிப்பீட்டின் போது கீழ் நாட்டுச் சிங்களவரின் எண்ணிக்கை உண்மையில் 383 ஆக வீழ்ச்சியுற கண்டியச் சிங்களவரின் எண்ணிக்கை 755ஆக உயர்ச்சியுற்றது. தமிழரின் எண்ணிக்கை 1% உயர்வுற்றது.
1921 இல்
குடிமதிப்பீட்டின்போது எல். ஜே. ரி.ரேணர் குடிமக்கள் தொகை கணிப்பீட்டிற்கு முந்திய இடைக்காலப் பகுதியில் 1890 ஆம் ஆண்டில் திருமலையில் புகையிலை உற்பத்தியில் ஏற்பட்ட அதிகரிப்பு காரணமாக யாழ்ப்பாணத்தில் இருந்து மக்கள் வந்ததினால் தமிழரின் எண்ணிக்கை மேலும் கூடியது. ஆனால் 1891 - 1901 காலப்பகுதியில் முன்னைய பத்தாண்டுக் காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் ஒரு வீழ்ச்சி காணப்பட்டது. காரணம் புகையிலைப் பயிரிடுகையில் ஏற்பட்ட வீழ்ச்சியேயாகும். மேலும் 1905இல் கடற்படைத்தளம் மூடப்பட்டதினால் 1901-1911 காலப்பகுதியிலும் ஒரு வீழ்ச்சி ஏற்பட்டது. ஆனால் புகையிரதப் பாதை திருமலைக்கு தொடக்கப்பட்டதைத் தொடர்ந்து மக்கள் தொகை மேலும் கூடியது.
இந்நூற்றாண்டின் முதல் அரைப்பகுதி முடியும் வரை தமிழர்களே திருகோணமலையில் மிகக் கூடிய எண்ணிக்கையுடையவராக இருந்தனர்.
1946 இல்
சேர். ஆதர் ரணசிங்க தனது 1946இல் குடிமக்கள் அறிக்கையில் 1921 புள்ளி விபரங்களொடு 1941 புள்ளி விபரங்களை ஒப்பிட்டு இலங்கைத் தமிழர் இம் மாவட்டத்தில் இன்னும் எண்ணிக்கையில் அதிகமாக விளங்கினாலும் அவர்களின் எண்ணிக்கைப் பெருக்கு வீழ்ந்து விட்டது என்றும், 1921இல் 53.2% 40.1% மாக 1946இல் வீழ்ந்து விட்டனர் என்றும் கூறியுள்ளார். அத்தோடு அவர் 1921இல் 2.7% விளங்கிய கரைநாட்டுச் சிங்களவர் 16.7% ஆகவும் கண்டியச் சிங்களவர் 2.1% லிருந்து 6% அதிகரித்துள்ளனர் என்றும் எடுத்துக்காட்டி திருமலைப் பட்டணத்தைப் பொறுத்தவரையில் சிங்களவர்களே இரண்டாம் இடத்தை வகிக்கின்றனர் என்றும் திருமலை மாவட்டத்தைப் பொறுத்தவரை முஸ்லிம்களே இரண்டாம் இடத்தைப் பெறுகின்றனர் என்று கூறியுள்ளார்.

09
1953 இல்
1953 இல் திரு. எச். இ, பீரிஸ் நடத்திய மக்கட் தொகை மதிப்பீட்டிலும் தமிழ் மக்களே தனிப்பட்ட பெரும் பிரிவினராகக் காணப்பட்டனர். எனினும் மொத்த மக்கட் தொகையுடன் ஒப்பிடும் போது அவர்கள் பெருக்கத்தைக் காட்டவில்லை என்பது தெரிய வருகிறது. அதே வேளையில் கரையோரச் சிங்களவர்களினதும், கண்டியச்சிங்களவர்களினதும், முஸ்லிம்கள். பறங்கியர். யுரேசியர், ஆகியோர்களினதும் எண்ணிக்கையில் ஏற்றம் காணப்பட்டிருந்தது.
1963....
திருமலையில் தமிழரின் எண்ணிக்கைக்கும், சிங்களவரினதும் இடையேயுள்ள இடைவெளி சிங்களவர் குடியேற்றத்தினால் சுருங்கிவிட்டது. 1963 ஆம் ஆண்டின் குடிமக்கட் தொகையின் படி மொத்தம் இலங்கைத் தமிழரின் தொகை 51,060 ஆகும். கீழ்நாட்டும் சிங்களவர், கண்டிச் சிங்களவர் ஆகியோரின் தொகை 39,950 ஆகும்.
எனினும் இலங்கை முஸ்லிம்களின் தொகை இரண்டாம் இடத்தை வகிக்கும் முறையில் 41,950 ஆக விளங்கியது.
1971 இல்.
குடித் தொகையின் படி கீழ்நாட்டு கண்டிச் சிங்களவரின் கூட்டு எண்ணிக்கை 53, 308 ஆகும். இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை 67, 516 ஆகவும் இந்திய மரபுவழித் தமிழர்களின் எண்ணிக்கை 5,739 ஆகவும் விளங்கியது. எனவே தமிழர்களின் கூட்டுத் தொகை 73,255 ஆக விளங்கியது. அத்துடன் முஸ்லிம்களின் எண்ணிக்கை 60,698 ஆகவும் விளங்கியது என்பது குறிப்பிடத்தக்கத்; எம் ஆய்வுத் தேவையின் படி பார்க்கையில் தமிழர்களுக்கும், சிங்களவாகளுக்கும் உள்ள எண்ணிக்கை வேறுபாடு மிகச் சிறிய தொகையாகிய 17,974 என்பது மிக்க ஆழ்ந்த கவலையுடன் குறிப்பிடத்தக்கது. நோய் முற்றிவிட்ட தன்மையை மேற்குறித்த குடித்தொகை மதிப்பீடு புட்டுக்காட்டுகிறது. &
1981 இல்.
1981 இல் எடுக்கப்பட்ட குடிமக்கள் தொகை ஏற்ற முறையில் அமைந்துள்ளதோ நாம் அறியோம். பல தில்லுமுல்லுக்கள் இக்குடித்தொகை மதிப்பீட்டில் இடம் பெற்றதாக அறியப்படுகிறது.எனினும் எமக்குக் கிடைத்துள்ள Dais85 தொகை மதிப்பீடு எமக்கு ஏற்பட இருக்கும் பெரும் பேராபத்தை அச்சுறுத்திய படி இருக்கின்றது.
1981 இன் குடித்தொகையின்படி மொத்த மக்கட் தொகை 2,55.948, இலங்கைத் தமிழரின் எண்ணிக்கை 87,760, சிங்களவரின் எண்ணிக்கை 85.503, முஸ்லிம் மக்களின் எண்ணிக்கை 75.039. இந்தியத் தமிழரின் எண்ணிக்கை 5,372, பறங்கியரின் எண்ணிக்கை 1,169, மலே முஸ்லிம்களின் எண்ணிக்கை 831,

Page 7
10
ஏனையோரின் எண்ணிக்கை 274. விழுக்காட்டின் அடிப்படையில் பார்க்கையில் இலங்கைத் தமிழர் - 343%, சிங்களவர் - 33.4%, இந்தியத் தமிழர் - 2.1%, முஸ்லிம்கள் - 29.3%, பறங்கியர் - 0.5%, ழலேமக்கள் - 0.3% ஏனையோர் - 0.1%, ஆக விளங்குவது தெரிய வருகின்றது.
1991 - 2001
இலங்கையில் நிலவும் அரசியல் நெருக்கடி காரணமாக் 1991இல் குடித்தொகை மதிப்பீடு எடுக்கப்படவில்லை. 2001இல் மக்கட் தொகை கணக்கு எடுக்கப்பட்ட முயற்சி, நிலவும் அரசியல் நெருக்கடி காரணமாக கைவிடப்பட்டுள்ளது என்று குடித்தொகைத் திணைக்களம் அறிவித்துள்ளது. தமிழ் மக்கள் பெருமளவு தம் தாயக்கத்திலிருந்து குடிபெயர்ந்த நிலையில் வெளியேற்றப்பட்ட நிலையில் எடுக்கப்டும் மதிப்பீடு நிலமையைக் குழப்புமேயன்றி தெளிவை ஏற்படுத்தாது. ஆனால் திருமலையில் தமிழ் மக்களின் எண்ணிக்கை படு வீழ்ச்சி உற்று வருவதை நாம் உணராமல் இருக்க முடியாது.
ஒரு மணித்துளியாவது நாம் தூங்காது விழிப்போடு இருந்தால் தான் திருகோணமலையை காப்பாற்ற முடியும் என்பதை நாம் உணர்ந்தே ஆக வேண்டும்.
வடமேற்கை இழந்து விட்டோம், வடக்குக் கிழக்கையாவது காப்பாற்றுவோம்.
தமிழர் மரபுவழித் தாயகம் வடக்கையும் கிழக்கையும், சிலாபத்துறை வரை இணைத்து பரந்து கிடந்ததற்கு வரலாற்றுச் சான்றுகள் ஏராளம், ஏராளம் 1.1.1803 இல் அரோசிமித் அவர்களின் அலுவலக அறிக்கையாக வெள்யிடப்பட்ட இலங்கைத் தீவின் படத்தினைப் பார்ப்போர் இவ் உண்மையை உணர்வர். இங்கனம் எமது வரலாறு இருந்த போதிலும் ஈழத்தமிழ் நிலத்தில் இழக்கக் கூடாத எத்தனையோ பகுதிகளை இன்று இழந்து விட்டோம். நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் ஈழத்தின் வடமேற்கை நாம்இழந்து விட்டோம். ஈழத் தமிழகத்தின் கிழக்குப் பகுதியை குறிப்பாக எம் உயிரணைய திருமலையை அடுத்தடுத்து ஆட்சி பீடம் ஏறும் ஒவ்வொரு சிங்கள அரசும் விழுங்கி ஏப்பமிட வஞ்சனை தோய்ந்த சூழ்ச்சிகளை உருவாக்கியபடியிருக்கின்றன என்பதை அறிவுடைய எந்தத் தமிழனும் மறக்க முடியாது - மறுக்க முடியாது.
மறைந்தும் மறையாத நம் சிந்தனைச் சிற்பி திரு. சி. கதிரவேற்பிள்ளை அவர்கள் தனக்கேயுரிய ஆழ்ந்த சிந்தனைத் தெளிவோடு பின்வரும் பொருள் பொதித்த கூற்றினை மொழிந்துள்ளார். “கொழும்பை இழ திருகோணமலையைப் Qug' (Lose Colombo and gain Trinco) 66ig Jingsluicesiu605 (96iloo T(h தமிழனும் சிந்தித்துச் செயல் வடிவம் கொடுக்க வேண்டும்.

11
திருமலை எம் உயிர் மூச்சு
தமிழன் தமிழனாக ஈழத்தமிழகத்தில் வாழ வேண்டின் - உலகவர் முன் யாமும் மானிடர்தான் என்று மதிக்கப்பட வேண்டின் “ man who holds Trincomalee holds the key to the Indian Ocean. (66.67 g5(50335|T600TLD606060)u வைத்திருக்கிறானோ அவன் இந்துமாப் பெருங்கடலின் திறவு கோலை வைத்திருக்கின்றான்) என்று 19 ஆம் நூற்றாண்டில் பிரித்தானியா பேரரசின் தலைமை அமைச்சராக விளங்கிய (Lord Welington) பெருந்தகை வெலிங்டன் கூறிய கூற்று உலகை கடலால் ஆண்ட பிரித்தானியா பேரரசின் கூற்று எனவும் நாம் கொள்வோமாக.
எனினும் கிழக்கின் குறிப்பாக திருகோணமலை மாவட்டித்தின் தமிழ்க் குடிமக்கள் இன்னும் இவற்றை உணராமல் இருப்பது எமக்கு வியப்பைத் தருகின்றது. வடமாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டம் 6337 போராளிகளையும், வன்னிமாவட்டம் 2462 போராளிகளையும், முல்லைத்தீவு மாவட்டம் 1252 போராளிகளையும், மன்னார் மாவட்டம் 1015 போராளிகளையும், என அமாத்தமாக 11064 போராளிகள் விடுதலைக்கு வித்தாக்கியுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்கள் 4418 போராளிகளை களத்தில் இழந்திருக்கின்றன. தமிழ் ஈழத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் திருகோணமலை முன்னிலை வகிக்கின்றது. இந்த இழப்புக்கள் எமக்கு இடித்துரைக்கும் உண்மைகள் என்ன? ஒரு இனம் எதனையும் இழக்கலாம், மீண்டும் வாழ்வு பெறலாம். ஆனால் ஒரு இனம் தன் தாயகத்தை இழந்துவிட்டால் அந்த இனம் வேரோடு மண்ணோடு சாய்க்கப்படும். எம்மண்ணைக் காக்க நாம் போராளிகளைப் புதைக்கவில்லை. மாறாகப் போராளிகளை விதைத்துள்ளோம். இதை நாம் உணர மறுப்பின் வரலாறு எம்மீது வசை பாடும்.
தங்கத் தமிழீழம் தமிழனுக்கே
பூக்கப் போகும் தமிழீழத்தின் அரசவைப் பாவலனாக இருப்பவர் நம் உணர்ச்சிக் கவிஞர் காசி. ஆனந்தன். தமிழீழத்தை, அதன் மண்ணை எப்படிக் காப்பாற்ற வேண்டும் என்பதை பின்வருமாறு பாடுகிறார். நாமும் அவருடன் சேர்ந்து
“எங்கள் அருந்தமிழ் மண்ணில் இராவணனார் பொன் மண்ணில் அங்குலமும் இனி நாங்கள்! அயல் வெறியர் ஆள விடோம்! கங்குல் விலகின காண்.1 எங்கள் தமிழ் மேல் ஆணை தங்கத் தமிழ் ஈழம் தமிழனுக்கே. தமிழனுக்கே.

Page 8
12
என்று முழங்கி எம் தமிழீழம் தொடர்ந்து எம் தமிழீழமாக விளங்க திருகோணமலை அதன் தலைநகராக விளங்க இன்றே உட்றுதி பூணுவோமாக!
"பூத்ததடா தமிழ் ஈழம்! புலர்ந்ததடா தமிழன் வாழ்வு" என அப்பொழுது தான் ஐ. நா. மன்ற்த்தின் 188 ஆவது நாடாக தமிழ் ஈழம் அங்கம் வகிக்க முடியும்; தமிழ் ஈழம் ஐ. நா. மன்றத்தில் அங்கம் வகிக்கும் போது அதன் கொடி பட்டொளி வீசிப் பறப்பது உறுதி. நாமும் “எம் தாயின் மணிக்கொடி பாரீர்! அதைத் தாழ்ந்து பணிந்திட வாரீர்!” என்று உலகலாவிய தமிழரை ஒன்று கூட்டி உலகின் தேசப்படத்தை மாற்றி அமைப்போமாக! வரலாற்றை நாம் மாற்றுகின்றபோது வரலாற்றில் நாம் இடம் பெறுவது உறுதி.
வெற்றி நமதே! நாளை நமதே!
வணக்கம்
மா. க. ஈழவேந்தன் பொதுச் செயலாளர் தமிழீழ விடுதலை அணி
இவ்வெளியீடு திருகோணமலை சுங்க வீதி, 56ம் எண்ணைச் சார்ந்த ந. சிறீகாந்தா அவர்களால் பூg கணேசு அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது


Page 9
| - /
|