கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மகாகவி இக்பால்

Page 1


Page 2

மகாகவி இக்பால்
கல்ஹின்னை கவியரசு எம். எச். எம். ஹலீம்தீன்

Page 3
MAHAKAVI IQBAL
3. short biography (Tamil)
by GALHINNA, KAVARASU M. H. M. HALEEM DEEN
Author of :
TIYAGACH CHU DAR KAALATHIN KOALAN GA IT HAYA MALAR BLOSSOMS (English)
ROSES (English)
O All rights reserved, First Published in June 1987.
Thirty Second Publication of : TAM IL MANRAM, GALHIN NA KANDY. Sri Lanka: - W
Distributors ISĽÄMic, Book“ TRUSŤ 144, Jayantha Wéerasekera Mawatha, Colombo 1 O.
Cover by : M.S. M. Nassar
Printed at :
ROYAL PRENTS 42, Beira Road, Colombo 12.

கல்ஹின்னை அல் - மனர் முஸ்லிம் மகாவித்தியாலய அதிபர் எஸ். எவ், எம். ஹனிபா பீ. ஏ. (சிறப்பு) அவர்கள் மனமுவந்து வழங்கிய
அணிந்துரை
2-லகம் புகழும் மாமேதைகளின் வரலாறுகளை எழுதுவதும், படிப்பதும் பயனுள்ளதாகவே அமையும். இவ்வடிப்படையில் கவியரசு - கல்ஹின்னை எம். எச். எம். ஹலீம்தீன் அவர்கள் எழுதி யுள்ள "மகாகவி இக்பால்’ என்னும் சிறிய நூலை அச்சேற முன் படி த்துச் சுவைக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததையிட்டு பெரிதும் மகிழ்கிறேன். −
மகாகவி இக்பால் பத்தொன்பதாம் நூற்றண்டு இறுதியில் தோன்றி, இருபதாம் நூற்றுண்டுத் தொடக்கத்தில் இப்புவியிற் புகழ் பெற்ற பெரியார்களுள் ஒருவர். அவர் பல துறைகளிலும் மேம்பட்டு சிறந்தவொரு மேதையாக விளங்கினர். அவர் பார்புக ழும் கவிஞணுக மட்டும் விளங்கவில்லை, பெருந் தத்துவஞானியாய், சமுதாயச் சிற்பியாய், முன்மாதிரியான முஸ்லிமாய், முன்னில்லாத தனி முஸ்லிம் நாடொன்று உருவாகுவதற்குக் கரு இட்ட காரண கர்த்தாவாய் விளங்கினர்.
இத்தகைய ஒரு பெரியாரைப் பற்றி அறிவது மிகப் பயன் தருவதாகும். உலக மகாகவி இக்பாலைப் பற்றி ஏராளமான நூல்கள் பல மொழிகளிலும் வெளிவந்துள்ளன. தமிழிலும் சில நூல்கள் எழுதப்பட்டுள்ளன. எனினும் பள்ளி மாணவர்களுக்குப் பயன்தரக் கூடிய முறையில் நூலொன்று இதுவரை எழுதப்பட வில்லை. இக் குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு, கவியரசு ஹலீம்தீன் எடுத்துள்ள அரிய முயற்சி மெச்கத்தக்கது.
தமிழ், ஆங்கிலம் - ஆகிய இரு மொழிகளிலும் கவிதை இயற்றும் ஆற்றல் கொண்ட பிரபலமான கவிஞர் ஹலீம்தீன் தமக்கு இனிய தமிழ் வசன நடையிலும் வல்லமையுண்டு என்பதை இங்கு நிரூபிக்கிருர் . அனேக காலம் ஆசிரியராய்ப் பணி புரிந்த அனுபவமுடைய இவர், மாணவர்கனின் சுவைக்
3

Page 4
கேற்பச் சுருக்கமாகவும் வாசிப்பதற்கு விறு விறுப்பான நடை யிலும், இக்பாலின் பல்வேறு பட்ட சிறப்பியல்புகளையும் வாழ்க் கையையும் எழுதியுள்ளார்.
பாடசாலை மாணவர்கள் மட்டுமின்றி பெரியவர்களும் வாசித்து மகிழலாம் "மகாகவி இக்பால்’ என்ற இந்தூலை. கடுகு சிறுத்தாலும் காரம் பெரிதாகவே தெரிகிறது. இந்நூலில் இக்பால் பற்றிச் சிலர் எழுதியுள்ள சிறந்த கட்டுரைகளும் கவிதைகளும் இணைக்கப்பட்டுள்ளமை, மகாகவி இக்பாலுக்கு மேலும் மெருகூட்டுகிறது. அத்துடன் கவியரசு ஹலீம்தீனின் ஆங்கிலக் கவிதையும் இந்நூலுக்குப் புதுப் பொலிவைத் தருகிறது" சுருக்கமாகச் சொல்லின் - மாபெரும் கவிஞர் இக்பாலைப் பற்றி இலகுவில் அறிவதற்கு இந்நூல் ஒரு சிறந்த திறவு கோலாய் அமையுமென்பது எனது திடமான நம்பிக்கை. பள்ளி மாணவர்கள் மட்டுமல்ல, படித்தவர்கள் கூட மேதை இக்பாலை மறந்து வரும் இக்கால கட்டத்தில், அவரை நினைவு கூரும் விதத்தில் இவ் வரும் முயற்சியை மேற்கொண்ட கல்ஹின்னை தந்த க்வியரசு, எம். எச். எம். ஹலீம்தீன் அவர்கள் உண்மையில் பாராட்டுக்குரியவரே. . . . . . . . . . . . . . . . ...,
மேலும் கல்ஹின்னை பில் தமிழ் மன்றம் அமைத்து தாம் பிறந்த ஊருக்கும் தாய் மொழியாம் தமிழுக்கும் தம் இலக்கியப் பணியைப் புரிந்து' 'இலக்கிய உலா வரும் எங்கள் அன்புக்கும் மதிப்புக்குமுரிய 'எஸ். எம்." அவர்களே இந்நூலை வெளியிடும் செய்தி மிக மிக இனிமையானது. ஏனையோர்க்கும் முன்மாதிரி шпт60тgöl. コ . . . .
எழுத்துப் பணியால் எங்களூரின் பெயரும், புகழும் பரவத் தம்மாலியன்ற பணியைத் தொடர்ந்து செய்து வரும் கவியரசு ஹலீம்தீன் அவர்களின் ஆக்கங்களுக்கு அனைவரும் ஊக்கம் நல்குவோமாக. வல்ல நாயன் அவரின் எழுத்தாற்றலை மேலும் மிகைப் படச் செய்வாளுகை,
எஸ். எல். எம். ஹனிபா. கண்டி ரோட் . . . கல்ஹின்னை, 12. 3. 1987
4

என்னுரை
தன்னினம் மட்டுமில்லை, இந்தத்
தாரணியும் செழிக்க வேண்டும் மனிதாபிமானம் எங்கும் மலரவேண்டும்,
மகிழ்ந்தனைவரும் வாழ வேண்டும் Y.
என்ற இலட்சிய நோக்கோடு எண்ணற்ற எழுச்சிக் கவிதை களைத் தத்துவ முத்துக்களை இவ்வுலகிற்குத் தந்தார்.
சுறு சுறுப்போடு செயலாற்றத் தூண்டிய இன்கவி அல்லாமா இக்பால். இதனல், அவரை உலக மகாகவி என்றும் உரிமையோடு அழைக்கின்றனர். அவரைப் பற்றி - அவரின் கவியமுதம் பற்றி அருந்தமிழில் - ஆங்கிலத்தில் ஏனைய மொழிகளில் நூல்கள் ஏராளமுண்டு, எனினும் அவரின் வாழ்க்கை வரலாற்றை இலகுவில் பள்ளி மாணவர்கள் படித்தறியும் விதத்தில் எடுத்தி யம்பும் சிறு நூலொன்றை மகாகவி இக்பால் என்ற மகுடத்தில் எழுதித் தருமாறு முஸ்லிம் தேசிய எழுத்தாளர் கவுன்ஸிலின் பொதுச் செயலாளரான எனது அன்பினிய நண்பரும் நாவலாசி ரியரும், கவிஞருமான ஜனப் எஸ். ஐ. நாகூர் கனி அன்போடு வேண்டினர். பல தமிழ் ஆங்கில நூல்களை உசாத் துணையாகக் கொண்டு, சில தினங்களில் இதை எழுதி முடித்தேன். பார்புக ழும் பாவேந்தர் இக்பாலின் பரந்த விரிந்த ஆழமான வர லாற்று ஆழியிலே கொஞ்சம் அள்ளி எடுத்த வரலாற்றுச் சுருக்கம் அல்லது ஒர் அறிமுகமே 'மகாகவி இக்பால்.** எனினும், இக்பால் என்ருல் யார்? என்ற வினவுக்கு விடை தெரியாது தவிக்கின்ற அதிகமான பள்ளி மாணவர்களுக்கு ஒரளவு இச்சிறு நூலின் மூலம் விளக்கம் சிடைக்கும் என நம்புகிறேன், அத்தோடு பயன் கருதி சட்டத்தரணி அல்ஹாஜ் எஸ். எம். ஹனிபா, ஆசிரியை திருமதி ஜெமீலா ஹலீம்தீன் ஆகியோரின் கட்டுரைகளை யும் கவிஞர் திலகம் மர்ஹ"ம் அப்துல் காதர் லெப்பை அவர்கள் இயற்றிய 'இக்பால் இதயம்’ என்ற நூலிலிருந்த இளைஞர் களுக்கு ப் பயன் தரும் சில கவிதைகளையும் இந் நூலின்
5

Page 5
பிற்பகுதியில் இணைத்துள்ளேன் எழுத்துப் பணிக்கு ஈந்துவப் பதுவே என் நிறைவு என்ற நோக்கோடு பணி புரியும் கல்ஹி ன்னை தமிழ் மன்ற நிர்வாகி எஸ். எம். அவர்கள் இந்நூலை அச்சில் மலர்ச் செய்வதற்கான அத்தனை முயற்சிகளையும் மேற் கொண்டு ள்ளார். கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் அதிபராயிருந்த இக்பால் அபிமானி அறிஞர் மர்ஹ"ம் அல்ஹாஜ், எ. எம். ஏ. அஸிஸ் அவர்களின் மாணவரும், தற்பொழுது கல்ஹின்னை அல்மஞர் மகா வித்தியாலயத்தின் அதிபருமான ஜனப் எஸ். எல். எம். ஹனிபா B.A. அழகிய அணிந்துரை வழங்கியுள்ளார். அச்சுக்காகப் பிரதிபண்ணுவதில் மகள் பாத்திமா பளtல உதவினர். அட்டையை எம்- எஸ். எம். நஸார் அழகு படுத்தினர். ரோயல் பிரின்ட்ஸ் அச்சகத்தார் அரும்பணி ஆற்றியுள்ளனர் ஆதலால் கூட்டு மொத்தமாய் அனைவருக்கும் என் அன்பு கனிந்த நன்றியை சமர்பித்து அகம் நிறைகிறேன். அல்ஹம்துலில்லாஹ் 'தாருல்ஹஜர்
வாப்புக் கண்டு காடின்ஸ், கல்ஹின்னை. 15, 6. 1987. எம். எச். எம். ஹவீம்தின்

அல்ஹம்துலில்லாஹ்
எவரும் எதையும் சொல்லட்டும்
எப்படியும் என்னை எடைபோடட்டும்
கவலை கொள்ளேன் என்றலும்
கருணை யாளனிறை அருளால்
துவளா தென்றும் என்பேனு
தொடரும் எழுத்துப் பணியையே
நவில்வேன்' இதனுல்நித்தமுமே
நிறைவாய் அல்ஹம்து லில்லாவை

Page 6

மகாகவி இக்பால்
தோற்றமும் பரம்பரையும்
அன்று ஒன்றிணைந்த நாடாக விளங்கியது இந்தியா. அதன் ஓர் அங்கமாக இருந்தது பஞ்சாப் என்னும் மாகாணம். அதை பாஞ்சால நாடு என்றும் அழைப்பர். அதன் எல்லையிலே அமைந்திருப்பதே சியால்கோட் என்னும் நகரம். இன்று உலக மகா கவியாக மதிக்கப்படுகின்ற ஸேர் அல்லாமா இக்பால் அவர்களின் பிறந்தகம்தான், சீர்மிகும் இச் சியால்கோட். (1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட்டு மாதம் 14ஆம் திகதி “பாகிஸ்தான் என்ற இஸ்லாமியத் தனி நாடு உருவாக்கப்பட்ட பின்னர், பஞ்சாப் பின் மேற்குப் பகுதியும் பாகிஸ்தானேடு இணைக்கப்பட்டுள்ளது) இன்று நேற்றல்ல, சுமார் 114 ஆண்டுகளுக்கு முன்பே. . . . . . ஆம்! 1873 ம் வருடம் பெப்ரவரி மாதம் 22 ம் நாள் ஆச்சரியம் தரும் சம்பவம் ஒன்று நடந்தது. சியால்கோட்டில் சிறப்போடு விளங்கினர் ஷேக் நூர் முஹம்மது என்ற பெரியார். அவர் மார்க்கப் பற்று மிக்கவர். அப்பெரியார் ஒர் அருமையான கனவு காணுகிருர்,
ஆகாய வீதியிலே அழகிய வெண்புருவொன்று அங்குமிங்கும் வட்டமிட்டுப் பறத்து கொண்டிருக்கிறது. கண் சிமிட்டாது இந்த வண்ணக்காட்சியை அண்ணுந்து பார்த்துக் கொண்டிருக்கிருர், என்ன அதிசயம்? அடுத்த கணம் அவ்வெண்புரு மெதுவாக அவர் மடியிலே வந்து அமர்கிறது. மறுகணம் இக்கனவு கண்டு விழித்த அவரின் மடியிலே
9

Page 7
"குவா குவா’ என்று அழுகுரல். எழுப்பிய ஒர் ஆண் குழந்த்ையைக் கொண்டு வந்து வைக்கிருள் ஒரு மருத்துவ மாது. இவ்வரும் குழந்தைதான் முஹம்மது இக்பால். தமது இளைய மகன் எதிர் காலத்தில் பெரிய அறிஞராகவும் புகழ் பூத்த கவிஞராகவும் திகழ்வார் என எண்ணியோ... , என்னவோ..தமது அன்புச் செல்வத்துக்கு முஹம்மது இக்பால் எனப் பெயர் சூட்டினர் தந்தை. ‘இக்பால்’ என்ருல் புகழ் என்பது பொருளாகும். கவிஞர் இக்பாலின் மூதாதையர் எழில் கொழிக்கும் கஷ்மீரைச் சேர்ந்தவர்கள். இவர்கள் பிராமண குடும்பத்தில் பிறந்தவர்கள். ஏறத்தாழ இருநூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு சூபி (முஸ்லிம் ஆத்மஞானி) யின் போதனையால் அவர்கஜ் வற்புறுத்தலெதுவுமின்றி விரும்பி இஸ்லாத்தைத் தழுவினர். சன்மார்க்க நெறிகளைக் கடுகளவும் கைவிடாது பின் பற்றி வந்தனர். இந்தப் பரம்பரையில் ஐந்தாவது தலைமுறை தான் கவிஞர் இச்பால் அவர்கள். இன்று கூட இவரின் குடும்பத்தினர் பலரும் ஆழ்ந்த மார்க்கப் பற்று உடையவர்களாகவே இருக்கின்றனர்.
பாலகன் - இக்ப ால்
வளரும் பயிரை முளையிலே தெரியும் என்பது போல் பாலகன் இக்பால் எதிர் காலத்தில் பார் போற்றும் பாவலனுய் வருவான் என்பதற்கான அறிகுறிகள் தென்பட்டன.
சுறு சுறுப்பும், துடிதுடிப்பும் படிப்பில் ஆர்வமும் உள்ள சிறுவனுய் இக்பால் விளங்கினர். அருமைப் பெற்ருேரும் அன்பு மகனின் அறிவுத் திறனை உணர்ந்தனர். ஏனைய பஞ்சாப் சிறுவர்களைப் போல் திடகாத்திரமான தேக வலிமை இக்பாலுக்குமிருந்தது. சிறுவயதிலேயே நல்லொழுக்கம், நன்னடத்தை, பொய் பேசாமை, போன்ற நல்ல இயல்புகள் இவரிடத்தில் காணப்பட்டன. எதையும் நன்கு ஆராயும் ஆய்வூக்கம் இவரிடம் இருந்தது. 1
10

ஒரு முஸ்லிம் ஞானியின் உபதேசத்தால், தாமாகவே இஸ். லாத்தைத் தழுவினர் இவரின் மூதாதையொருவர். அவர் 9Cl5 காஷ்மீர்ப் பிராமணப் பண்டிதர். இக்பால் அலாதியான அறிவுத் திறன் உடையவராக விளங்குவதற்கு இவருடைய பிராமண பரம்பரை ஒரு காரணமாகும். பிற்காலத்தில் இதைப் பற்றி இக்பாலே பல முறை குறிப்பிட்டுள்ளார்.
முதன் முதலாக இவர் மதரஸாவில் சேர்ந்து குர்ஆனை முழுமையாக ஓதி முடித்தார். பின்னர் இக்பால் ஓர் ஆரம்பப் பள்ளியில் சேர்ந்தார். அதையடுத்து ஒரு நடுநிலைப் பாடசாலையில் தமது படிப்பைத் தொடர்ந்தார். பரீட்சைகளில் திறமையான சித்தி அடைந்ததினுல் இவருக்கு புலமைப்பரிசில் (ஸ்கொலர்சிப்) வழங்கப்பட்டது.
பள்ளி மாணவன்
இப்பொழுது பன்னிரண்டு வயதுப் பள்ளிமாணவன் இக்பால் புலமைப் பரிசில் பெற்று உயர்தரப் பள்ளியில் படிக்கும் காலம். எப்பொழுதும் நேரந்தவருமல் பாடசாலைக்கு வரும் மாணவன் இக்பால், அன்று மட்டும், சிறிது தாமதித்து வந்து விட்டார். இதை அவதானித்த அவரின் ஆசிரியர் 'ஏன் இக்பால் இத்தனை தாமதம்? என்று வினவினர்.
* இக்பால் தாமதமாகத் தானே வரும்’ என்ருர், அரும்பும் அறிவு மலர் இக்பால். "புகழ்" என்ற பொருளைத் தரும் வார்த்தையைப் பொருத்தமான முறையில் தம் மாணவன் பிரயோகித்ததைக் கண்டு ஆசிரியர் பிரமித்தார். ஏனென்ருல், "இக்பால்" (புகழ்) தாமதமாகித்தானே வரும்.
அவர் கல்வியில் கண்ணுங் கருத்துமாயிருந்தார். வெறும் புத்தகப் பூச்சியாய் இருக்க விரும்பவில்லை. அறிவு மலர, மலர ஆக்கங்களும் உருவாக வேண்டும். சீர் சுல்வியைக் கற்ற பின்னர் அதைச் செயலிலும் காட்ட வேண்டும் என்ற உயர்ந்த இலட்சியம் அவருடைய பிஞ்சு நெஞ்சத்திலே வேரூன்றியிருந்தது.

Page 8
அதிகமாக அறிவு நூல்களையே வாசிப்பார். 'நல்ல நூல்களே நலமானுக்கரின் நண்பர்கள்’ என்பதற்கிணங்க நடந்து கொண்டார். வாசிப்பதன் மூலமும் இலகுவில் வளமான அறிவைப் பெறலாம் என்ற இரகசியத்தை அறிந்து வைத்திருந்தார். கெட்ட மாணவர்களுடன் சேர்ந்து அலைந்து திரிய மாட்டார். தாம் படித்தவைகளை, வாசித்தவைகளை சக மாணவர்கடளுன் பகிர்ந்து கொள்வார். சளைக்காது உரையாற்றுவதிலும் வாதாடுவதிலும் வல்லவர் என இக்பால் மதிக்கப்பட்டார்.
பட்டதாரி
அள்ளிப் பருகப் பருக வெள்ளம் போல் பெருகி வரும் அறிவு, பள்ளி மாணவனுன இக்பாலுக்கு அமிர்தமாக இனித்தது. மென்மேலும் அறிவு ஞானம் பெற வேண்டும் என்ற தணியாத தாகம் அவரை விவேகமுள்ள பாணவனுக ஆச்கியது.
பள்ளிப் படிப்பில் மட்டும் இவர் திறமை பெற்றுத் திகழ வில்லை. விளையாட்டு மல்யுத்தம் போன்ற ஏனைய கலைகளிலும் சிறந்து விளங்கினர்.
கல்லூரி நுழைவுத் தேர்வில் முதல் தரமாகத் தேறினர். இதனுல் சியால்கோட்டிலுள்ள ஸ்கொடிஷ்மிசன் சல்லூரியில் இலகுவில் சேர்ந்து, கல்வி கற்பதற்கு அனுமதி கிடைத்தது. அங்கும் தம் மத கலாச்சார ஒழுக்க நெறிகளில் அணுவும் மாறு படாது நடந்து கொண்டார்.
இங்கு கல்வி பயிலும் போதுதான் அரபி ஞான வல்லு னரான மீர் ஹஸனின் தொடர்பு இளைஞர் இச்பாலுக்கு ஏற்பட்டது. இக்பாலின் மதி நுட்பத்தைக் கண்ட மீர் ஹஸன் அவரைத் தமது அபிமான மாணவன் என்பதை விட மதிப்புகுரிய ஒரு சினேகிதனுகவே மதித்தார். இஸ்லாமிய கலாசாரம் இலக்கியம் இவைகளில் அதிக ஆர்வம் இக்பாலுக்கு ஏற்படுவதற்கு இவர் தான் முக்கிய காரணமாயிருந்தவர்.
சியால்கோட்-டில் சீரான கல்வியைப் பெற்ற இக்பால் உயர்
2

படிப்புக்காக லாகூர் சென்ருர், லாகூர் அரசினர் கல்லூரியில் மாண வராகச் சேர்ந்தார். தமது அபார திறமையினல் பி. எ. பரீட்சையில் முதன்மையாகத் தேறினர். தங்கப் பதக்கமும் பெற்ருர், இங் கும் ஆங்கில அறிஞர் ஒருவருடன் தொடர்பு கொள்ளும் அதிர்ஷ்டம் இக்பாலுச் குக் கிடைத்தது. இவர்தான் பேராசிரியர் டி. டபி. ள்யூ ஆர்னல்டு என்பவர். அலிகார் சர்வகலாசாலையில் ஆசிரியராக இருந்தவர். இஸ்லாத்தைப் பற்றி நன்கு ஆராய்ந்தவர். இஸ்லாம் உலகத்தில் பரவிய விதத்தைப் பற்றி விரிவான நூல் எழுதியவர். இவரும் இக்பாலை ஒரு மாணவனுகக் கருதவில்லை. உற்ற நண்பனுய் எண்ணிப் பழகினர். அறிஞர் ஆர்னல்ட்டுவின் அன்னியோன்னியத் தொடர்பு தத்துவசாஸ்திரத்தில் இக்பால் அதிக அக்கறையும் ஊக்கமும் கொள்ளுவதற்கு உதவியது. தத்துவ சாஸ்த்திரத்தை விசேஷமாகப் பயின்ருர்,
பல்கலைக் கழகப் படிப்பின் உச்சகட்டமான எம். ஏ. பரீட்சையிலும் 1899 ம் வருடம் விசேட சித்தியடைந்தார். முதன்மையாகத் தேறியமைக்காகப் பரிசும் தங்கப் பதக்கமும் பெற்ருர் .
ஆசிரியர் இக்பால்
கல்வியறிவு என்பது, கரை இல்லாதது, அது கடலை விடவும் பரந்தது; விரிந்தது; ஆழமானது. அத்தகைய அரும் பெரும் அறிவு நீரை ஓரளவு அள்ளிப் பருகினர் இக்பால்.
இப்பொழுது இருபத்தியேழு வயது நிரம்பிய எம். ஏ. பட்பட்டதாரி இக்பால். இவரின் கல்வித் தகைமையையும் திறமையையும் பலரும் பாராட்டினர்.
அல்லாஹ் அருளால், லாகூர் ஒரியண்டல் கல்லூரியில் சரித்திரம், தத்துவசாஸ்திரம் ஆகியவற்றில் விரிவுரையாளராகப் பதவி ஏற்ருர், பின்னர் லாகூர் அரசினர் கல்லூரியில் ஆங்சிலம் தத்துவ சாஸ்திரம் - இவைகளுக்கு உதவிப் பேராசிரியராகவும் பணியாற்றினர்.
ஆசிரியப் பணி புனிதமானது. பொறுப்பு வாய்ந்தது. அறிவு
13

Page 9
புகட்டுவது பெரும் சேவைக்கு ஒப்பானது, இவற்றை நன்கு உணர்ந்த ஆசிரியர் இக்பால் தாம் பெற்ற அறிவை தம் மாணக்களுக்கும் நல்ல முறையில் போதித்தார். இதனுல் - அனைவரும் நல்லாசான் இக்பாலின் பணியை நயந்து போற்றிளர்; பாராட்டிப் புகழ்ந்தனர்.
மேலைநாட்டில் மேதை இக்பால் கல்வியின் எல்லையைக் காணுது தவித்தார் இக்பால், இன்" னுமின்னும் கல்வி கற்க வேண்டும் என்ற ஊக்கம் அவரின் உள்ளத்தில் நிமிர்ந்து நின்றது.
தமது தணியாத ஆவலைத் தம் சகோதரர் அதா முஹம்மதிடம் தெரிவித்தார். அவரின் உதவியும் ஒத்துழைப்பும் கிடை
தன. ۔۔۔۔۔
ஆறு வருடங்கள் ஆசிரியத் தொழில் புரிந்த இக்பால். 1905ம் ஆண்டு மேற்படிப்புக்காக இங்கிலாந்து சென்ருர், அங்குள்ள கேம்பிறிட்ஜ் சர்வகலாசாலையில் மாணவனுகச் சேர்ந்து தமது அறிவியல் ஆராய்ச்சிகளை நடத்தினர் அங்கு மிக உயர்ந்த பட்டம் (பிஎச். டி.) பெற்ருர் . பின்னர் ஜெர்மனிக்குச் சென்றர். அங்குள்ள மியுனிச் சர்வகலாசாலையில் “பாரசீகத்தில் தத்துவ சாஸ்த்திர வளர்ச்சி’ என்ற தலைப்பில் ஆங்கில மொழியில் தாம் எழுதிய தத்துவ ஆராய்ச்சி நூலைச் சமர்ப்பித்தார். அறிஞர் இக்பாலின் அற்புதமான ஆற்றலைப் பாராட்டி அவருக்கு அங்கு கலாநிதி (டாக்டர்) பட்டம் வழங்கப்பட்டது.
மீண்டும் அவர் இலண்டன் திரும்பினர். 'லிங்கன்ஸ் இன்" என்ற சட்டக் கல்லூரியில் சேர்ந்து படித்து பரிஸ்டர் (வழக் கறிஞர்) பட்டம் பெற்ருர், இலண்டன் சர்வகலாசாலையில், அவரின் ஆசிரியர் - பேராசிரியர் ஆர்னல்ட்டுவின் ஸ்தானத்தில் மூன்று மாதங்கள் அரபு மொழியின் பிரதான பேராசிரியராகக் கடமையாற்றினர்.
இக்பால் இலண்டனில் இருக்கும் போது இஸ்லாமிய மார்க்கப் பணியிலும் ஈடுபட்டார். ஏனைய முஸ்லிம் நாடுகளைச்
14

சேர்ந்த இஸ்லாமியச் சோதரர்சளுடன் ஒன்றிணைந்து, இஸ்லாமிய சமய முன்னேற்றத்துக்கான தொண்டுகள் புரிந்தார். இஸ்லாத்தில் சில அம்சங்கள் என்ற தலைப்பில் அவர் அரிய சொற்பொழிவொன்றும் ஆற்றிஞர். ஆங்கிலேயர் அனைவரையும் இது வெகுவாகக் கவர்ந்தது.
இலண்டனிலுள்ள டைப்ஸ், டெய்லி நியூஸ், ஸ்டான்டர்ட் டெய்லிமிரர், மோனிங் போஸ்ட் ஆகிய பிரபல பத்திரிகைகள் இவரின் சொற்பொழிவுகள் முழுவதையும் பிரசுரித்தன. இச்சம்பவத்தின் பின்னர் இங்கிலாந்தில் மட்டுமல்லை ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் அறிஞர் இக்பாலின் புகழ் பரவியது.
மேல் நாட்டில் மூன்று வருடங்களைக் கழித்தார், மேதை இக்பால், ஐரோப்பாக் கண்டத்திலுள்ள பல நாடுகளுக்குச் சென்ருர் . சர்வகலாசாலைகள், கல்வி நிலையங்கள், நூல் நிலை. யங்கள் ஆகியவற்றுக்கும் சென்ருர், அங்குள்ள அறிவு நூல்களைப் பயன்படுத்தித் தம் அறிவை மேலும் விருத்தி செய்து கொண்டார். பிரபல ஆசிரியர்களின், அறிஞர்களின், ஆராய்ச்சியாளர்களின் நெருங்கிய தொடர்பையும் நேசத்தையும் இக்பால் பெற்ருர், இதனுல் இவரின் அறிவு மென்மேலும் வளர்ந்தது, ஆற்றலும்
பெருகியது.
இந்தியாவில்.
மூன்ருண்டுகளின் பின் (1908ம் ஆண்டு) இக்பால் முதிர்ந்த அறிவோடு மேல் நாட்டிலிருந்து இந்தியா திரும்பிஞர்.
மேல் நாட்டில் பெற்ற பரந்த அறிவும் பெருத்த அனுபவங்களும் இக்பாலை நல்ல முறையில் சேவை செய்யத் தூண்டின, இவர் இலண்டனிலிருந்து இந்தியா திரும்பியதும், லாகூரில் வழக்கறிஞர் தொழிலை ஆரம்பித்தார். ஏனைய வக்கீல்களை விட வாய்மையும் நேர்மையும் உள்ளவராக இக் கால் விளங் கினர், என்றலும் மூன்று வருடங்கள் மட்டுமே வழக்கறிஞர் தொழில் பார்த்தார்.
1922ம் ஆண்டு பிரிட்டிஷ்அரசாங்கம் இவரின் இலக்கியத்
I5

Page 10
திறமையையும், தொண்டு உணர்வையும் கண்டு இவருக்கு ஸேர் பட்டம் வழங்கி கெளரவித்தது. ஆயினும் இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வீரர் இக்பால் இதைப் பெரிதாகக் கருதவில்லை, தேசப்பற்றும் தேசத்தின் விடுதலையுமே அவரின் மூச்சாக இருந்தன. -
1926ம் ஆண்டு இக்பால் பஞ்சாப் சட்ட சபை அங்கத்தவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், விவசாயிகளின் உரிமைகளைப் பெறுவதற்காக தயங்காது போராடினர்.
1928 ம் ஆண்டு இக்பால் சென்னை வந்தார். இஸ்லாமிய இளைஞர்களுக்கு பயன் படும்வகையில் ஆறு சொற்பொழிவுகளை நிகழ்த்தினர். பின்னர், 1929 ம் ஆண்டு பங்களுர், மைசூர், ஹைதராபாத், அலிகார் ஆகிய இடங்களுக்கு விஜயம் செய்தார். தமது பேச்சாற்றல் மூலம் பல்லாயிரக்கணக்கான மக்களின் பாராட்டைப் பெற்ருர்,
1930ம் ஆண்டு அகில இந்திய முஸ்லிம் லீக் தலைவராகவும், முஸ்லிம் மகாநாட்டுத் தலைவராகவும் இக்பால் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதே ஆண்டில், அலஹாபாத்தில் முஸ்லிம் லீக் மகாநாடு நடைபெற்றது. அப்பொழுது, அல்லாமா இக்பால் ஆற்றிய சொற்பொழிவு அனைவரையும் சிந்திக்சச் செய்தது.
‘முஸ்லிம்கள் பெரும் பான்மையாக உள்ள வட மேற்கு மாகாணங்கள் ஒரு தனி நாடாக ஆக்கப்பட வேண்டும்' என்ற நல்ல கருத்தை இக்பால்தான் முதன் முதலில் வெளியிட்டார். அவர் கண்ட அந்த ஆசைக் கனவைத்தான் காயிதே ஆஸம் முஹம்மதலி ஜின்னஹ் கணிய வைத்தார். அதுவே இன்று சுமார் பத்துக் கோடி முஸ்லிம்களை கொண்ட தனி இஸ்லாமிய நாடாகப் பாகிஸ்தான் என்ற பெயரோடு விளங்குகிறது. அரசியல் துறையிலும் இக்பால் வல்லவராய் விளங்கினர். I931 ஆண்டு இலண்டனில் நடைபெற்ற வட்டமேஜை மகாநாட்டிற்கு, இவரும் ஒரு பிரதிநிதியாகச் சென் ரு ர் இலண்டன் செல்லும் வழியில் பைத் துல் முகத்திஸ் சென்ருர்
6

1931ம் ஆண்டு இலண்டனில் நடைபெற்ற வட்டமேசை மகாநாட்டிற்கு இவரும் ஒரு பிரதிநிதியாகச் சென்ருர், இலண்டன் செல்லும் வழியில் பைத்துல் முகத்திஸ் சென்ருர். பலஸ்தீன இஸ்லாமிய மகாநாட்டிலும் கலந்து கொண்டார். வட்ட மேசை மகாநாட்டின் போது ஆகாகான், முஹம்மதலி ஜின்ன ஆகியோருடன் அடிக்கடி முஸ்லிம்களின் எதிர்காலம் பற்றியும், இந்திய விடுதலே பற்றியும் கலந்துரையாடினர். அரும் ஆலோசனைகளையும் கூறினர்.
அண்மை நாடான ஆப்கானிஸ்தானுக்கு 1933ம் ஆண்டு இவர் சென்ருர், சர்வகலாசாலைக் கல்வியில் சீர்திருத்தங்கள் செய்வதற்கு ஆலோசனை பெறுவதற்காகவே ஆப்கானிய அரசாங்கம் அறிஞர் இக்பால் அவர்களை வரவழைத்தது.
அருந்தந்தை இக்பால்
இளைஞர் இக்பால் முறையே மூன்று மனைவியரைத் திருமணம் செய்தார். முதல் மனைவிக்கு அப்தாப் இக்பால் என்ற ஒர் ஆணும், ஒரு பெண் மகளும் பிறந்தனர். தமது முதல் மனைவி காலமான பின்னர், இரண்டாவது திருமணம் செய்தார். ஜாவீத் இக்பாலும், முனீரா பானுவும் இரண்டாம் மனைவியின் குழந்தைகள். மூன்ருவது மனைவிக்கு குழந்தைப் பேறு இல்லை. திரு. மணமாகி ஐந்து ஆண்டுகளில் இவர் இறந்து விட்டார்.
இக்பாலின் இரண்டாவது மனைவி 1935ம் ஆண்டு காலமாஞர். அப்பொழுது ஐாவீதுக்கு வயது பதினென்று, முனீராவுக்கு வயது ஐந்து.
தாயற்ற குழந்தைகளைப் பராமரிப்பதற்கு ஒரு ஜெர்மனியத் தாதியை ஏற்பாடு செய்தார். தமது குழந்தைகளிடத்தில் அளவற்ற அன்பும் பாசமும் வைத்திருந்தார். இளையமகன் ஐாவீதுக்கு அடிக்கடி அறிவுரைகள் வழங்குவார். பயனுள்ள புத்திமதிகள் கூறுவார். அருமை மகள் முனீராவிடம் அளவு கடந்த அன்பு காட்டினர். உலகில் எனக்குள்ள ஒரே நண்பன் முனிராதான் என்று அடிக்கடி கூறுவார்.
17

Page 11
இஸ்லாமிய வீரர்களின் வரலாறுகளையும், மார்க்கக் கடமைகளையும் தம் பிள்ளைகளுக்குக் கூறிக் கொண்டே இருப்பார். மகன் ஐாவீது அழுவதைக் கண்டால் 'நீ ஒரு ஆண் மகன், ஆண் மகன் அழமாட்டான் என்பதை நீ ஞாபகப் படுத்திக்கொள்' எனத் தைரியமூட்டுவார், அருந்தந்தை இக்பால்,
இனிய பண்புகள்
சிறு வயதிலேயே இக்பால் சிறந்த ஒழுக்க நெறிகளைப் பின்" பற்றினர். இஸ்லாமிய வழி முறைகளை நன்கு மதித்தார். மிகவும் எளிய வாழ்க்கையையே நடத்தினர். தொழுகையில்’ மிகவும் பேணுதலாயிருந்தார். பிற்காலத்தில் தஹஜ்ஜத் (இரவு) தொழுகையையும் தவருது நிறைவேற்றி வந்தார் இன் கவி இக்பால்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது அளவில்லா அன்பும் பற்றும் வைத்திருந்தார். அவரின் ஒவ்வொரு கருத்திலும் குர் ஆணின் குரல் ஒலிக்கும். 'உன் அறிவை நூல்களின் தாயால் . (குர் ஆன்) நிரப்பு’’ எனத் திருகுர் ஆனைப் பற்றி உயர்வாகக் கூறுவார் மனநிறைவோடு. கண்களிலே நீர் மல்கத் தினமும் திருக்குர் ஆனை ஓதுவது இவரின் பழக்கமாகும். எதையிட்டும் பெருமை அடையமாட்டார். தம்மை ஒரு முஸ்லிம் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்வார்.
இவர் ஆடம்பரத்தை வெறுத்தார். விளம்பரத்தையும் வெறுத்தார், அகங்காரம் கொண்டலைபவர்கள் எவராயிருந்தாலும் சரி, ஏளனமாய் வெறுத்து ஒதுக்கினர்.
இக்பால் ஓர் ஒப்பற்ற கவிஞர்; சியால்கோட் தந்த சிந்தனைச் சிற்பி, மேலை நாடே போற்றிய மேதை, அறிவு முதிர்ந்த தத்துவ ஞானி. இருந்தாலும் இவரிடம் தலைக்கணம் இம்மியளவும் இருக்கவில்லை அடிக்கடி தம்மை ஒரு 'பக்கீர்’ என்றே மிகவும் தாழ்வாகக் கூறிக் கொள்வார்,
18

அலீ பக்ஷ் என்பவர் இக்பாலின் அன்புக்குரிய பணியாள். எவ்வித பேதமும் காட்டமாட்டார். தம் குடும்பத்தில் ஒருவரா. கவே மகாகவி அவரை மதித்தார்.
மாங்கனி என்ருல் மகாக விக்கு மிக மிக விருப்பம் மாம்பழத்தை பிரியத்தோடு சாப்பிடுவார். சிலவேளைகளில் சினேகிகர்களை அழைத்து மாம்பழ விருந்து கொடுத்து மகிழ்வார்.
வசதியிருந்தும் வாய்ப்பிருந்தும் இக்பால் சாதாரண வாழ்க்கையில் தான் இன்பம் கண்டார். ஆடை அணிகலன்களில் மட்டுமல்ல, உணவில் கூட அவர் சாதாரண முறையையே விரும்பினர்.
* "தந்தை மிக, மிக எளிய வாழ்க்கையே வாழ்ந்தார். ஒரு சட்டை, ஒரு வேஷ்டி, தலையை மூடிக் கொள்ள ஒரு துவாலை ஆண்டவனைத் தொழும்போது இதுதான் அவரின் உடை" என மகாகவி இக்பாலின் அன்பு மகன் ஐாவீது இக்பாலே கூறுகிருஜர் .
மேல் நாட்டில் அறிவு மிஞ்சிய கால் நாகரிகமும் மிஞ்சியது. ஆனல் கிழக்கில் அன்புதான் மேலோங்கி நிற்கிறது என்று கூறிய இக்பால், மேல் நாட்டு வாழ்க்கை முறைகளை கடுமையாகக் கண்டித்தார். மேல் நாட்டில் கல்வி பயின்ருலும் கடுகளவும் ஐரோப்பிய வாழ்க்கை முறைக்கு அவர் என்றும் அடிமையாக வில்லை. ‘அன்புதான் வாழ்வின் ஜீவ ஊற்று' என்ற அடிப்படையில் இஸ்லாமியன் என்ற தனித்துவத்தோடு வாழ்ந்தார். இவர் தமது தந்தையிடத்தில் மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்திருந்தார். அவரின் ஒவ்வொரு நல்லுபதேசத்தையும் நல்ல முறையில் ஏற்று நடந்தார். அன்னை என்ருல் அருங்கவி இக்பாலுக்கு உயிரிலும் மேலானதாகும், இவரின் தாய் காலமானதும், அதிக வேதனை அடைந்தார். ஏதோ இழக்க முடி
யாத ஒன்றை இழந்தது போன்று துன்பமும், துயரமும் அடைந் தார். கருணையும், கரையில்லாத அன்பும் பூண்டு அன்புத் தாயை எண்ணிப் பார்க்கிருர் . உலகில் மனிதனுய் வாழ்வதற்குமாபெரும் கவிஞனய் மாறுவதற்கு பாலமுதம் ஊட்டும் போதே வழி அமைத்த ஆருயிர்த் தாயை நினைத்து நினைத்து நெஞ்சம்
19

Page 12
கலங்குகிருர், அவர் பாடிய இரங்கற்பா மூலம் அதை இலகுவில்
அறியலாம்.
‘அம்மா நீ தந்த பயிற்சியல்லவா, இன்று நான் புகழ்பெற உதவிற்று; என்முன்னேர் குடும்பம் யாவரும் அறிவதாயிற்று; என் வாழ்க்கை என்னும் ஏட்டிலே நீ ஒரு பொன் ஒலையாக மிளிர்கிருய்; அந்த ஒலை, நெடுகிலும் எனக்கு மதத்தையும் உலகவாழ்க்கையையும் போதித்தது.”*
மகாகவி இக்பால்
உலகத்தில் கவிஞர்கள் தோன்ருத நாடோ சமூகமோ இல்லை; கவிஞர்கள் மக்களின் வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டுகின்றனர். சமூகத்திலுள்ள குற்றம் குறைகள் அதர்மம் அநீதி போன்றவற்றைப் போக்குவதற்குப் பாடு படுகின்றனர். மக்களைப் பாடல்களின் மூலம் தட்டி எழுப்புகின்றனர்.
சுவிஞன் உருவாக்கப்படுவதில்லை, அவன் பிறக்கிருன். இறைவன் தான் கவி இயற்றும் ஆற்றலை அவனுக்குக் கருவி. லேயே கொடுத்து விடுகிருன். இதனல் தான் "கருவிலேயே திருப் பெற்றவன் கவிஞன்” எனக் கூறுகிருேம்.
பாரத நாடு என அழைக்கப்பட்ட இந்தியாவிலும் அக். காலத்தில் தமிழ் மொழி, தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் இவைகளின் வளர்ச்சிக்காகத் தொண்டு புரிந்த கவிஞர்கள் அனேகர் வாழ்ந்தனர். திருவள்ளுவர், கம்பர், இளங்கோ புகழேந்தி, ஒளவையார், உமறுப்புலவர் போன்ற பல புலவர்கள் இருந்தனர்.
இருபதாம் நூற்ருண்டில் இந்தியாவின் தென் பகுதியில் (தமிழ் நாட்டில்) புரட்சிக் கவிஞர் பாரதி தோன்றினர். வங்க நாட்டில் ரவீந்திரநாத் தாகூர் தோன்றினர், வட நாட்டில் மகாகவி இக்பால் தோன்றினர்.
20

பள்ளி மாணவனுய் இருக்கும் போதே இவர் கவி பாட ஆரம்பித்தார். முதன் முதலில் தமது பதினேழாவது வயதில் கவி மழை பொழிந்தார். அவரின் கன்னிப் பாடல், தாய் மொழியசிம் உருதுவில்தான் அமைந்தது. அதையடுத்து வளமிக்க பாரசீகமொழி பஞ்சாபி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் கவி. தைகள் இயற்றினர். கட்டுரைகள் எழுதினர். அரபு, ஜெர்மன், லத்தீன் போன்ற மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்று விளங்கிஞர்.
ஆரம்ப காலங்களில் வேதனை உணர்வு தரும் கவிதைகளைப் பாடினர். பலரையும் இப்பாடல்கள் கவர்ந்தன. காலம் செல்லச் செல்ல மக்களை எழுச்சியுறச் செய்யும் பாக்களைப் பாடினர்.
'கோழைகள் பெருவீரராவார்; குணமற்முேர் நற்சீலராவார்; ஏழைகள் அருட் செல்வராவார்; இக்பாலின் கீதங்கள் கேட்ட பின்' : என கவிஞர் இக்பாலின் கவிதைகளின் சிறப்பை ஓர் அறிஞர் குறிப்பிட்டார். இவரின் கவிதைகளில் நாட்டுப்பற்று, விடுதலை வேட்கை, இஸ்லாமிய ஏகத்துவக் கொள்கை, முனிதாபிமானம் இவைகள் நிறைந்து காணப்படுகின்றன.
இவருடைய கவிதை ஆற்றலை ஊக்குவித்தவர்கள் ஸேர் அப்துல் காதர், ஸேர் தோமஸ் ஆர்ணுல்டு ஆகியோர்களே.
பாரசீக நாட்டின் பேரறிஞர், தக்துவ மேதை ஜலாலுத் தீன் றுாமி அவர்களேயே, இக்பால் தமது ஞான குருவாகக் கொண்டிருந்தார், ஆனல் குருவையும் மிஞ்சிய சிஷ்யனுய் இக்பால் கவிதை வானில் சிறகடித்துப் பறந்தார்.
கவிதைகள் எழுதுவதற்காக அவர் சிரமப் படவில்லை, சுயமா கவே கவிதை அவரின் உள்ளத்தில் ஊற்றெடுக்கும். நள்ளிரவில் கவிதை வெள்ளம் அவரின் இதயத்தில் பெருக்கெடுத்து ஒடும், அவற்றின் முதலடிகளைக் குறித்துக் கொள்வதற்காக எப்பொழுதும் தலையணைக்குக் கீழே பென்சிலும் தாளும் வைத்திருப்பார்.
2

Page 13
சில வேளைகளில் இரவு முழுதும் விழித்திருந்து கவிதை எழுதுவார். ஓர் இரவில் சாதாரணமாக முந்நூறு செய்யுட்கள் வரை எழுதி முடிப்பாராம்.
கவிஞர் இக்பால் ஹாஸ்ய உணர்வுடன் கவிதைகள் எழுவ. திலும் கை தேர்ந்தவர். ஒருமுறை ஆண்களின் வீரமற்ற நிலையை விளக்க விரும்பிய கவிஞர், ‘இனி எதற்காகப் பெண்கள் முகத்திரை இட வேண்டும்? ஆண்கள் தான் பெண்களாகி விட்டார். களே என்று எழுதினர்.
"நீ வெற்றி அடைய நேர்ந்தால் உன் கல்வியை இஸ்லாத்துக்காகவே பயன் படுத்து' என இக்பாலின் அருமைத் தந்தை அவர் கல்லூரியில் பயில்வதற்காய்ச் செல்லு முன் புத்திமதி புகட்டினர்.
அந்த அறிவுரை இக்பாலின் இளம் இதயத்தில் நன்கு பதிந்துவிட்டது. அதனுல்தான் அவரின் ஒவ்வொரு பேச்சும், மூச்சும், கவிதையும், கருத்தும் இஸ்லாமிய மணம் கலந்ததாய் இருந்தன. ‘நான் இஸ்லாத்துக்காகவே சேவை செய்து வருகிறேன்’ என்று பின்பு ஒரு முறை தம் தந்தையிடம் கூறினர். கவிதை இயற்றும் ஆற்றலோடு கவிதையை இசையோடு பாடும் இனிய குரலையும் இறைவன் இக்பாலுக்கு அளித்திருந்தான். பொது மேடைகள், கவி அரங்கங்கள், கலையரங்குகள் அனைத்திலும் கவிஞர் இக்பாலின் கவியோசையைக் கேட்கலாம், ஆயிரமாயிரம் இரசிகர்கள் அபிமானிகள், அன்பர்கள், அவரின் கவிதை ஆக்கத்துக்கு வலுவூட்டினர்.
இஸ்லாமிய சமூகத்துக்காக மட்டும் அவர் பாடவில்லை. உலக மக்கள் எல்லோருக்காகவும் பாடினர். பல மொழிகளிலும் பாடினர். அல்லாமா இக்பாலின் கவிதைகள் கிழக்கில் மட்டுமல்ல, மத்திய கிழக்கு நாடுக்ளிலும், ஐரோப்பிய நாடுகளிலும் புகழ் பெற்றன.
1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் திகதி இந்தியா சுதந்திரம் அடைந்த போது, முதன் முதலாக இந்தியப் பாராளுமன்றத்தில் கவிஞர் இக்பாலின் தேசிய கீதமே ஒலித்தது.
22

இவர் ஏராளமான கவிதை நூல்களையும், தத்துவ சாஸ்த்திர நூல்களையும் பல மொழிகளிலும் எழுதியுள்ளார்.
தமிழ், ஆங்கிலம், அரபி, ஜெர்மன், துருக்கி, இந்தோனேஷிய, பர்ஸி (பாரசீகம்) ஆகிய மொழிகளில் இக்பால் அவர்களின் அரிய நூல்கள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
உலக மகாகவியாய் உயர்ந்த இக்பால் அவர்களே தமது கவிதைகளில் அனேகமானவற்றை பாரசீக மொழியிலும், ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்துள்ளார்.
உருது மொழியில் மூன்று பாகங்களாக வெளிவந்த பாங்கே தரா (பாலைவன மணியோசை), ஷிக்வா - வ - ஜவாபெ ஷிக்வா (முறையீடும் முறையீட்டின் பதிலும்) அஸ்ராரே தீகு (இதயத்தின் இரகசியம்), ஐாவீது நாமா
இவைகள் பெருங்கவிஞர் இக்பால் இயற்றிய சில முக்கியமான நூல்களாகும். ஜாவீது நாமா தமது அருமை மகனின் பெயரைத் தாங்கி பாரசீக மொழியில் எழுதப்பட்டுள்ளது. இளைஞர்களே நல்வழிப்படுத்தித் தட்டி எழுப்பும் அறிவுரைகள் இதிலே நிறைந்துள்ளன. இந்நூல் உலகெங்கிலும் பிரபல்யம் பெற்றுள்ளேது.
மறைவு
அல்லாஹ் தமக்கு அருளிய அபார அறிவாற்றல், பேச்சாற்றல், தத்துவ விளக்க வல்லமை கவிதைப் பொழிவு ஆகிய சகல திறமைகளின் துணைகொண்டு உலகமெங்கும் பிரபல்யம் அடைந்தார் உலக மகாகவி இக்பகல் அவர்கள்.
இக்பால் தமது இறுதிக் காலத்தை "ஐ" வீது மன்ஸில் என்ற தமது வீட்டிலேயே கழித்தார். திடகாத்திரமான உடம்பும், வயது செல்லச் செல்ல நோய் கண்டது. பல வித வைத்தியங்கள் செய்தும் பலன் போதியளவு கிட்டவில்லை.
23

Page 14
அவர் கடைசி நேரத்தில் கூடச் சிறிதும் மனம் தளரவில்லை * "நான் மரணத்தைக் கண்டு பயப்படவில்லே, நான் அதை மகிழ்ச்சியோடு வரவேற்கின்றேன்’ எனக் கூறினர், அவர்.
'உண்மை விசுவாசியின் அடையாளத்தை நான் சொல்கிறேன் மரணம் வரும் காலையில் அவன் வதனம் மலர்ச்சியுற்றிருக்கும். * எனத் தாம் புனைந்த பாடல் ஒன்றிலிருந்து இவ்வடிகளை எடுத்துக் கூறினர். ܵ
அவரின் மரணத்துக்கு சில நாட்களுக்கு முன்பு, பின்னர் இந்தியாவின் பிரதம மந்திரியாயிருந்த ஜவஹர்லால் நேரு உட்பட பல பிரமுகர்கள், மேதை இக்பாலைச் சந்தித்துக் கதைத்தனர்.
மாமேதை இக்பால் மரணமாவதற்கு முன்னரே அவர் வாழும் காலத்திலேயே அவரின் அரிய சேவையைப் பாராட்டுவதன் அவசியத்தைப் பலரும் உணர்ந்தனர். 'கல்லூரி முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் இதற்கு முன் வந்தது. 1938ம் ஆண்டு ஜனவரி மாதம் 9ம் திகதி பெருமகன் இக்பாலுக்குப் பெருவிழா எடுத்து அவரைப் பாராட்டியது. இதுவே முதன் முதலாக நடை பெற்ற இக்பால் தினமாகும்.
மகாகவி இக்பால் 1938ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22ம் திகதி அதிகாலை இறை நாமத்தை உச்சரித்தபடி உயிர்நீத்தார். (இன்னலில்லாஹி... . . . . . )
புன்னகை பூத்த அவரின் மலர் முசுத்தைப் பார்க்க ஏறத்தாழ எழுபதினுயிரம் மக்கள் குழுமியிருந்தார்களாம். அறுபத்தி ஐந்தாவது வயதில் இறையடி சேர்ந்த அறிவுக் கடல் - கவிதைக் களஞ்சியம் லாஹ7ர் பாத் ஷாஹி மஸ்ஜிதிலுள்ள கப்றுக்குள் சங்கமமாகியது.
வசந்தத்தைப் பாடிய வண்ணக்குயில் வீரவரலாறு கூறிய வித்துக வேந்தர் அசந்திருந்த மக்களைச் செயலாற்றத்தூண்டிய அருட்கவிஞர்
24

நான்கு காரியங்கள் அழகானவை. மேலும், நான்கு காரியங்கள், அவையினும் அழகானவை. நாணம் ஆண்களுக்கு அழகானது, ஆனல் அது பெண்களுக்கு அதியழகு! ஒவ்வொரு மனிதனுக்கும் நீதம் அழகு. ஆயினும் அது தலைவர்களுக்கு பேரழகு! பாவமன்னிப்புக் கோருதல் (தெளபா) வயோதிகர்களுக்கு. அழகு, ஆயினும் அது வாலிபர்களுக்கு மிக மிக அழகு! கொடை செல்வர்களுக்கு அழகு, ஆயினும் அது ஏழைகளுக்கு வெகு அழகு!
தித்திக்கும் கருத்துக்களைத் தந்த தத்துவஞானி திக்கெட்டும் புகழ் பரப்பிய அறிவு மேதை வாழ்க்கையின் நோக்கத்தை உணர்த்திய அறக் கவிஞர் பல மொழிகளிலும் பாட்டிசைத்த ‘புல் புல்” புத்துலகு காணவிழைந்த புரட்சிக் கவிஞர் மனிதாபிமானத்துக்குப் மதிப்பளித்த மாகவிஞர் இஸ்லாமிய தத்துவங்களுக்கு உயிரூட்டிய இலட்சியக் கவிஞர். ஸேர் அல்லாமா இக்பால் அவர்கள் தமது கப்ரின் (கல்லறையில்) மீது பொறிப்பதற்காய் தாமே இயற்றிய கவிதை இதுதான்:
இவ்வுலகிலிருந்து செல்ல யான் மூட்டை கட்டிய போது, 'அவரை நன்கு தெரியும்’ என எல்லோரும் சொன்னர்கள். ஆனல், இந்த யாத்திரீகனை உண்மையில் யாருக்கும் தெரியாது
எங்கிருந்து வந்தா ன் என்ன சொன்னன் - என்று
எவருக்குமே தெரியாது’’
- நபிகள் திலகம் (ஸல்)

Page 15
இக்பால் விரும்பும் இளைஞர்
ஒரு சமுதாயத்தின் உயர்வுக்கும் தாழ்வுக்கும் பொறுப்பாய் இருப்பவர் இளைஞர்கள். வருங்கால சமுதாயத்தை உருவாக்கும் உயர்ந்த கைங்கரியமே இளைஞர்களின் கையில் தான் தங்கியுள்ளது. எனவே, இளைஞர்கள், தம் பொறுப்பை உணர்ந்து கொள்ள வேண்டும். நேரான பாதையிற் சென்று கருமங்களைச் சீராய்ச் செய்ய வேண்டும். இத்தகைய இளைஞர்களையே அமரகவி அல்லாமா இக்பால் வரவேற்கின்றர். 'ஜாவீது நாமா' என்ற அமரகாவியத்தையே அவர் இளைஞர்கட்குப் புத்திமதி கூறிப் பொறுப்பை உணர்த்தி இயற்றியுள்ளார்.
இன்றைய இளைஞர்களின் நிலையைக் கண்ட இன்கவி இக்பால் நெஞ்சம் வெதும்புகின்றர். உற்சாகமும், உழைக்க வேண்டும் என்ற ஆர்வமும் அவர்களிடத்திலில்லை என்று குறை கூறுகின்ருர் . அன்னியர்களின் நாகரிகத்தில் மூழ்கித் தம் பழக்க வழக்கங்களைப் பண்பாட்டை மறந்து, கண்டதே காட்சி, கொண்டதே கொள்கை என்று வாழும் இளைஞர்களைக் குற்றம் சாட்டுகின்றர். இஸ்லாமிய இளைஞர்கள் வீரத்தின் சின்னமாய் விளங்க வேண்டும்; எக்காரியத்தையும் தயங்காது, செய்யும் மனேதிடம் படைத்த வீரக்காளைகளாகத் திதழ வேண்டும் அவர்கள், என்பதுதான் இக்பாலின் இதய அவா.
'பஞ்சணை மெத்தையில் ஒய்வு எடுத்துக்கொள்ள விரும்பாதீர்கள் நீங்கள் பறந்து செல்லும் இராஜாளிப் பறவைகள்; மலை உச்சியிலே உங்கள் கூடுகளைக் கட்டிக் கொள்ளுங்கள்' என்று, அவர் முயலும்படி வற்புறுத்துகின்ருர்,
நேரத்தை வீணுக்கிச் சோம்பேறிகளாய் அங்குமிங்கும்
அலைந்து திரியும் ஒரு சில இளைஞர்கட்கு இது ஒரு சாட்டை
அடியாய் இருக்கின்றது எனலாம். அதே நேரத்தில், 'சிங்கத்தின் வாலாய் இருப்பதை விடச் சிற்றெறும்பின் தலையாய் இருப்பது மேல்' என்ற காயிதே ஆஸம் ஜின்னவின் மணியான கருத்தும் நினைவிற்கு வருகின்றது.

'உன்னைத் திருத்து உலகம் திருந்தும், 'தன்னை அறிந்தவன் தன் நாயன அறிவான்; உன் சொல்லிலே, செயலிலே, நீதி, நியாயம், பரிணமிக்கட்டும், உண்மையை நிலை நாட்டுவதில் பின் வாங்காதே; பிரபுக்களையும், பணக்காரர்களையும் கண்டு பயப்படாதே. வாழ்க்கை என்ற கடும்போராட்டத்தில் இன்னல்கள் குறுக்கிடலாம்; இடர்கள் விளையலாம்; திடீர்த்தாக்குதல்கள் தலைதூக்கலாம்; எதிர்ப்புகள் எக்காளமிடலாம்; வஞ்சகர்களின் சதித்திட்டங்கள் உருவாகலாம்; எனினும், எதையும் கண்டு இதயம் கலங்காதே! துணிந்து செயலாற்று, உற்சாகமும், உயிர் துடிப்புமுள்ள சமுதாயத்தை உருவாக்கும் இளைஞனகத் திகழ முயற்சி செய். ஆம்! உன் செயல்களில் உண்மை ஒளி வீசட்டும்; பிரபுக்களையும், பணக்காரர்களையும் கண்டஞ்சாதே! நியாயத்தை எப்பொழுதுமே கைவிடாதே! வாழ்க்கை என்பது போராட்டமே இப்படி அல்லாமா இக்பால் இளஞ் சமுதாயத்தைத் தட்டி எழுப்புகின்ருர்,
மேலும், இளைஞர்களின் இதயத்திலே அன்பும் அருளும் சுரக்க வேண்டும், இறையருள் பிறக்க வேண்டும், எதையும் சிந்தித்துச் செயலாற்ற வேண்டும். எவரையும் இழிவாகப் பேசக்கூடாது, மிதமாக உண்ண வேண்டும்; சுருக்கமாகப் பேச. வேண்டும்; குறைவாகத் தூங்கவேண்டும்; என்ற இன்கவி இச். பாலின் கூற்றை இளைஞர் ஒவ்வொருவரும் உணர்ந்து நடக்க வேண்டும்.
இவ்வுலக ஆசாபாசங்களில், குறிப்பாக மேல்நாட்டு நாகரிகத்தில் கருத்தைப் பறிகொடுத்து, நெஞ்சக்திலே கருனையும், காரியத்திலே நேர்மையும் அற்று வாழும் வாலிபர்கட்கும்; எதிர்காலத்தைப் பற்றி எள்ளளவேனும் சிந்தியாது நாஸ்திகத்திலே மூழ்கி, வல்ல நாயன் வகுத்த சீரான பாகையிற் செல்லாது தத்தளிக்கும் நவயுக இளைஞர்கட்கும் இச் பாலின் போதனை அறிவூட்டவேண்டும்.
சமுதாயத்தின் ஜீவநாடியாய் விளங்கும் இஃாஞர்கள் உயர்வு காணம் முறையில் கல்வி ஊட்டப்படவேண்டும், மதக்கல்விக்.
27

Page 16
குப் பிரதான இடம் கொடுக்க வேண்டும், சமுதாயத்தின் எழுச்சியும், வீழ்ச்சியும், இளைஞர்கள் கையில்தான் தங்கியுள்ளன - எனவே, அவர்கட்கு உகந்த முறையில் இஸ்லாமிய அடிப்படையில், காலத்துக்கும், நாட்டுக்கும் பொருத்தமான பாடத்திட்டம் வகுத்துக் கல்வி புகட்டப்பட வேண்டும். புதுமுற்ைக்கல்விதான் இளைஞர்கட்குப் புத்துணர்வை அளிக்கும். அத்துடன், அறவழி தவறி அறிவுப் பாதையை நோக்கிச் சென்று கொண்டுருக்கும் எம் இஸ்லாமிய சமுதாயத்தை நேர்பாதையிற் செலுத்தும் திறனையும், ஆற்றலையும் கொடுக்கும் என்கின்ருர் அமர. சவி இக்பால். ஆனல் இன்று கல்வி கற்கும் வாலிபர்களிடத்தில் அவ்வளவாகப் புத்துணர்வும் புதுப்பொலிவும் சுறுசுறுப்பும் காணப்படுவதில்லை. மற்றவர்களின் தயவிலும், தாட்சண்ணியத்லும் தான் வாழ விரும்புகின்ருர்கள் என்பதை அறிந்தோ என்னவோ, 'இன்றைய கல்லூரி இளைஞன் உயிருடன் இருப்பதைப்போல் தோன்றினலும் அவன் இறந்தவனே, அவனது மூச்சு அவனுக்குரிடதல்ல, அது ஐரோப்பியனிடமிருந்து கடன் பெற்றது தான்' என்கிருர் இக்பால்,
இத்தகைய இளைஞர்களைக் கொண்ட சமுதாயம் என்றுமே முன்னேற முடியாது. சிறந்து திகழ இயலாது. எனவே, இளைஞர்கள் வீரர்களாகத் தீரர்களாக விளங்க எத்தளிக்க வேண்டும்" வாலிபர்கள் உள்ளத்தில் உறுதியும், இதயவறுவும் உள்ளவர்களாக வாழ வேண்டும் என்பதை அறிவுறுத்துவான் வேண்டித்தான் 'எந்த இனத்தில் இளைஞர்களின் இதயம் எஃகைப் போல் உறுதியாக இருக்கின்றதோ, அந்த இனத்திற்கு வாள் தேவையில்லை’ என்று கூறுகின்ருர் கவிஞர்.
ஆதலால், எம் இஸ்லாமிய இளைஞர் சமுதாயம் இச்பால் கரட்டும் சிறந்த வழிகளைக் கடைப்பிடித்து ஒழுகினல் உண்மையாகவே ஒரு உன்னத சமுதாயமாய், உயிர் துடுப்யுள்ள சமுதாயமாய்த் திகழும். 'சதா செயலாற்றிக் கொண்டே இருக்கவேண்டும், சோம்பிக்கிடக்கக் கூடாது" என்ற அல்லாமா இக்பாலின் கொள். கையைக் கருத்தில் கொண்டு கடந்த காலத்தை மறந்து, எதிர்
28

காலத்தை எழிலுடன் ஏற்றமுடன் நடத்த இளைஞர்கள் திடசங்கற்பம் செய்ய வேண்டும். அப்படியென்முல், எம் இஸ்லாமிய சமுதாயத்தின் தற்போதைய இழிநிலை மாறி, பழியும் பாவமும் குறைந்து சிறந்த ஒரு சகாப்தம் பிறக்கும் என்று எதிர்பார்க்கலாம். ( நன்றி : மலைமதி - 1980, } 、
கண்டி முஸ்லிம் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை மலர்')
大 大 大 大 大 大
பேசேல் இழிவாய் யாரையுமே
பிறப்பில் முஸ்லிம் காபிரெலர்ம் ஈசன் படைப்பே யாமாகும்,
இன்னும் உண்டு கேட்பர்யே ஆசை உணவிற் கொள்ளாதே
அதிலே மிதமே இதமாகும்; பேசும் வார்த்தை நீட்டாதே,
பெரிதும் தூக்கம் கொள்ளாதே,
ஒரு மனிதனுடிைய பேச்சு அதிகரிக்கும்போது, அவனது பிழை அதிகரிக் கும். பிழை அதிகரிக்கும் போது, அவனது வெட்கம் குறையும், வெட்கம குறையும் போது, அவனது இறைபக்தி குறையும்.இறைப்க்தி குறையும் போது , அவனது உள்ளம் இறந்து விடுகிறது . எவனது உள்ளம் இறந்துவிட்டதோ, அவன் நுழையும்” இடம் நரகமே.
- அலி (ரலி) அவர்கள்
29

Page 17
இக்பால் கண்ட பெண்கள்
ஒரு சமுதாயத்தின் உயர்வுக்கும் தாழ்வுக்கும் பொறுப்பாக இருப்பவர்கள் பெண்கள். பெண்கள்தான் உலகின் கண்கள் எனப்போற்றிப் புகழப்படுபவர்கள். இப்பெண்மணிகள் ஒரு காலத்தில் சமுதாயத்தின் புண்கள் என அரேபியர்களால் கருதப்பட்டவர்கள். ஆயினும், ஆரணங்குகளின் பெருமையை அரேபியர்கட்கு மட்டுமன்றி அகிலத்து மக்சுட்கெல்லாம் உணர்த்தியவர், எடுத்தியம்பியவர் எம்பெருமாள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களாகும். "பெண்கள் ஆண்களின் மறு பாதியாவர்" என்று கூறிய அவர்களே, அதானும் (பாங்கு) மலர்களும், மங்கையர்களும்தான் நான் மதிப்புடன் கருதுபவை' என்று கூறி. ஞர் தள். -
இப்பெண்மணிகளையே அமரகவி இக்பாலும் நோக்குகின்ருர், சமுதாயத்தின் ஆணிவேரrய்த் திகழும் பெண்களின் கடமைகள் என்னென்னவாயிருக்க வேண்டும்? அவர்கள் சீருடனும் சிறப்புடனும் வாழ்ந்தாற்ருன் சமுதாயம் தழைக்கும். அவர்கள் சீர்கெட்டு நேர்மை தவறி, இறைநெறி மறந்து, நிறை காக்கும் பெண்களாக இன்றி, நவநாகரீக நாமணிகளாக வாழ முனைந்தால் நிச்சயம் நம் சமுதாயம் தாழ்வுறும் என்பதை ஆணித் தரமாக விளங்குகின்ருர், அல்லாமா இக்பால்.
பெண்களும் அறிவை அள்ளிப்பருக வேண்டும்; வாழ்வில் உயர வேண்டும்; அன்பையும், அரும்பண்பையும் வளர்க்க வேண்டும். கல்வி கற்றுவிட்டால் கண்மூடித்தனமாக, இஸ்லாமியப் பெண்களின் இலட்சணங்களைப் புறக்கணித்துப் புதிய ஒரு நாகரிகத்தைக் கண்டவர்கள் போல் தலைக்கணம் பிடித்தவர்களாய் இஸ்லாமிய கலை மணம் சிறிதும் அற்றவர்களாய் வாழக்கூடாது என விழைந்தார்.
*அவள் அருளற்ற முகமும், அன்பற்ற அகமும், கருணையற்ற கண்களும், ஈரமற்ற பேச்சும், இனிமையற்ற தன்மையும் நாணமற்ற நிலையும், வளர்ச்சியற்ற மார்பகமும் கொண்டவள்’’
3በ

என ஒரு நவயுக நங்கையைப் பற்றி வர்ணித்த வளமார் கவிஞர் **கண்ணுடி உடையும், முகப்பவுடரும், உதட்டுச் சாயமும் உயரிய பெண்களே ஆக்க முடியாது. கணவனைத்தான் இஷ்டப்பட்டால் ஒதுக்கவோ, ஏற்கவோ செய்யலாம் என்று எண்ணுபவள் பெண்ணல்லள்" என்று பட்டவர்த்கனமாகக் கூறுகின்ஞர். "ஆண்மைத் தந்தியில் நாதமெழுப்புவது பெண்மை அவள்தான், ஆணின் மானங்காக்கும் ஆடை ' எனப் பெண்களைப் பற்றிப் பெருமையாகக் கூறுகின்றனர் பெருங்கவி இச்பால். ஆஞல், அவர்களின் இன்றைய நிலைமையைக் கண்டு இதயம் கலங்குகிரு?ர். எனிலும் பரிவுடன் பழம்புகழை நினைவு படுக்திப் புத்திபுத்திமதி புகட்டுகின்றர். 'முஸ்லிம் பெண்ணே ! உனது திரையானது எங்கள் கெளரவத்தின் கோட்டையாகும். மணிகவர்க்க்மென்னும் தீபஐோதிக்கு நீகான் பிரகாசத்கை அளித்து வருகின்ருர்1. . . . . . . . தீனுடைய ஆவேசம் உனது உயிருக்குள்ளேதான் உறைந்து கிடக்கின்றது. ஆணுல் நவீன காலம் கேக சுகத்தையே இலட்சியமாகக் கொண்டுள்ளது; தேகத்தை விற்றுவிடவும் துணிவு கொண்டுள்ளது; சூழ்ச்சி நிறைந்த காலமானது விலையுயர்ந்த ஒழுக்கத்தை அப்டியே ஜீரணித்துக் கொண்டிருக்கிறது. . . . . அகப்பார்வை இழந்த பெண்களின் செயல்களில் அச்சமில்லை! சுச்சமில்லை! அன்னிய ஆடவர்களுடன் உராய்ந்து பழகுமாறு அறிவிழந்த பெண்களைச் செய்துவிட்டது. மகளே! காலத்தின் கொள்ளைப்பிடுங்கலில் சிக்கி விடாதே, கவனமாக ஒதுங்கி வாழ்வாயாக."
ஆமாம்! அகத்திலே அணுவளவேனும் இறைபக்தியோ, ஆத்ம ஈடேற்றம் பற்றிய எண்ண:ோஇன்றி, உடலுறவில் தான் உயர்வுண்டு என நினைத்து வாழும் பெண்களுக்கு இது ஒரு நல்ல பாடமாகும். நங்கையர்கள் இதையறிந்தாவது திருந்த வேண்டும். உள்ளம் வருத்தி உற்ற வழியில் செல்ல வேண்டும். சமுகாயத்தின் சக்திகள் மாதர்களில் தான் மறைந்து கிடக்சின்mன என்ற இக்பாலின் கூற்றைச் செயல்படுத்த வேண்டும்.

Page 18
வாழ்க்கையின் மர்மங்கள் வெளியாவது மெல்லியலாள் அவள் மூலமும் நாம் உணர்ச்சியும், செயலாற்றும் தன்மையும் பெறுகின்ருேம். அவள் நம் உள்ளமெனும் வாவியில் அலையும் குமிழியும் நெளியும் நீர்பரப்பும் எழுப்ப வல்லவள்’ என்பதற்கு எடுத்துக்காட்டாக நம் மாதர்கள் திகழ வேண்டும்.
பெண்கள் கடமையை உணர்ந்து நடக்க வேண்டும். உயிர்.
த்துடிப்புள்ள சமுதாயத்தை உருவாக்க வேண்டும் தாய்க்குலம் செழித்தால் இத்தரணி செழித்திடும். அவர்கள் எப்பொழுது வழிகவறினர்களோ, அன்று சமுதாயத்துக்கே ஒரு சாபக்கேடு. சங்கிலித்தொடர் போன்று முன்னேற வேண்டிய சமுதாயத்துக்(கச் சாவுமனி-அடிப்ப்தாகத் தான் அமையும். சமுகாயமெனும் கோட்டைக்கு அரணுக விளங்கும் ஆரணங்குகள் அதற்கேற்றவாறு நட்க்க் வேண்டும். எனவே 'தாய்மை என்ற சுவர்க்கத்தில் சந்ததி என்ற பூக்கள் மலர்கின்றன. - தீட்சண்யமான பார்வையுள்ளவளே ஒரு சமுதாயத்தின் செல்வம், பணமோ, பொன். வெள்ளியோ அல்ல தேகதிடமும் மன பலமுங் கொண். மக்களே. தாய்மார்கள்தரன் சமுதாய வளர்ச்சியை ஆக்குபவர்கள்; தூண் போன்றவர்கள்' எனத் தாய்மையின் மேன்மையை விளக்குகின்றர். கவிஞர் பெருமான்.
எத்தனையோ நங்கையர்களை எச்சரித்துக் கண்டிக்கிழுர், பெண்க்ளைப்பற்றிப் புகழ்ந்து கூறிய, பெருங்கவி இக்பால், தம் அன்புத் தழுவலிலே, அரவணைப்பிலே வாழ வேண்டிய ‘சுவன மலர்'களாகிய பாலர்களை தாதிமார்களின் தயவில், பராமரிப்பில் விட்டு விட்டு ஆறுதல் பெற விரும்பும் அன்னையர்களைத்தான் குறை கூறுகின்ரு?ர். அதன் பிரதிபலிப்புதான். 'பிற்காலச் சந்ததியினர்கள் ஹோட்டல்களில் வாழ்ந்து, ஆஸ்பத்திரிகளில் இறக்கும் நிலை' ஏற்படும் என இன்கவி இக்பால், எச்சரிக்கிறர்.
வருங்கால சமுதாயத்தை நிர்மாணிக்கும் வாலிபர்களை, ஈடு இணையற்ற தியாகி ஹ"ஸைன் (ரலி) போன்ற தீரர்களைத் தாய்மார்கள் உருவாக்க வேண்டும், இன்றைய இளைஞர்கள் நாஸ்திகர்களாய், - தவ. நாகரீகத்தில் மனதை பறிகொடுத்து.
32

அலை பவர்களாய் ஆகக் காரணம், அன்னையர்களின் கவனழ குறைவுதான் 'மகளே முஸ்லிம் வாலிபர்கள் தங்களது சிறகுகள் நன்ருக விரிந்து வலிமை பெறுமுன்னரே பறக்க முயன்றநன் காரணமாக, அவர்களது கூடுகளை விட்டும் வெகு தொலைவில்போய் விழுந்து கிடக்கின்றனர். வாலிபர்களின் அவலநிலைக்குப் பெண்ணே உனது கவனக்குறைவுதான் காரணம். உன்ன. கத்கே உயரிய சிந்தனையுண்டு. நபிமணியின் அருந்தவப் புதல்வி பாத்திமா நாயகியின் வாழ்க்கையை மறந்து விடாதே. உன் கிளையிலிருந்தும் ஒரு ஹ"ஸைன் குதித்தெழட்டும். அவன் பூங்ாவின் வசந்தத்தை மீட்டு வரட்டும்" என விளக்குகின்ருர் கவிஞர் சிரோன்மணி. -
இஸ்லாமியப் பெண்கள் எழுச்சி பெறவேண்டும், ஏற்றமிகு சமுதாயத்தை உருவாக்க உதவ வேண்டும்; வாழ்க்கையில் வளம் காண வேண்டும். ஒவ்வெர்ருவரும் இஸ்லாமியக் கலைமணிகளாய் இயங்க வேண்டும், என விழைத்தார் கவிமணி இக்பால். அவர் கண். இஸ்லாமிய இலட்சியப் பெண்மணி மாநபியின் மங்கையl திலகம் பாத்திமா நாயகிதன.
"பாத்திமா பணிவென்ற வயலின் பொற்கதிர் 36rouriகளுக்கெல்லாம் முன்மா கிரியானவர். வறியவர் ஒருவருக்காகத் தன் கம்பளியையே, யூகனுக்கு விற்ற மங்கையர்க்கரசி. நெருப்பும் வெளிச்சமும் அவர் கட்டளைக்குப் பணிந்தன. அவர் கணவரின் இஷ்டமே அவர் இஷ்டமும், அவர் வளர்ந்ததே பொறுமையோடும், பணிவோடும் தான். கோதுமை அரைத்த போது குர்ஆன் திருவசனங்கள் அவர் நாவில் நிலவின. அவர் கண்ணிர் தலையணையில் விழுந்ததில்லை, அவர் தொழுகை விரிப்பிலே அந்தக்கண்ணீர் முத்துக்கள் உதிர்ந்தன. ’ அந்த மங்கையர்க்கரசியின் முன்மாதிரிகளைத்தான் எம் முஸ்லிம் பெண்மணிகள் பின்பற்ற வேண்டும் என்கிருர் கவிஞர் திலகம் இக்பால். 'தெய்வீக நியதியை தன்னகத்தே கொண்டவளே! உன் ப| 1 1ளிப்பு எங்கள் நடத்தையைச் சமைக்கிறது. அது எங்கள் சி. தயைப் பேச்சை செயல்களை உருவாக்குகிறது. உயர் வாழ்அக்கான பாதையைச் செப்பனிடுகிறது. உன் உயிர்ப்பிலே தெய்
38

Page 19
வீகம் (வீசுகின்றது. நீயே சமுதாயத்தைப் பாதுகாப்பவள் என்று பெண்களைப் பார்த்து விழிக்கும் இக்பாலின் உயரிய கருத்துக்களை, அறிவுரைகளை மனதிற் கொண்டு எம் முஸ்லிம் மாதர். கள் செயலாற்ற வேண்டும். அப்போதுதான், முஸ்லிம் சமுதாயம் மட்டுமல்ல, இவ்வுலக சமுதாயமே வரண்ட பாலைவனமாக அல்லாமல் வளம் கொழிக்கும் தீங்கணித் தோட்டமாக மாறும்! மாதர் சமுதாயம் மகோன்னத நிலையை அடையும்!
(நன்றி: இலட்சியக் கவிஞர் இக்பால் மலர், 1962)
★ ★ ★ ★ ★ ★
அஞ்சா நிற்பாய் அரசனயும்
அவனைச் சேர்ந்த பிரபுவையும். எஞ்சும் வாழ்க்கை முழுவதிலும் ஏந்தி நிற்பாய் நீதியையே, பஞ்சாய் நிற்கும் வாழ்க்கையிலே
பாய்ந்து நிற்பது போராட்டம், அஞ்சேல், வீடு களமல்ல
அதற்காம் இடத்தைத் தெரிவாய்!
செய்க் என்கிறீர்கள், முல்லா என்கிறீர்கள்; உங்களுக்குள்ளேயே வகுப்பாகவும் - பிரிவாகவும் பிரிந்து நிற்கிறீர்கள். நீங்கள் எல்லோரும் உண்மையில் முஸ்லிம்கள்தானு என்பதைச் சொல் லுங்கள் பார்ப்போம்?
- அல்லாமா இக்பால் -
34

இஸ்லாமிய மேதை இக்பால்
சட்டத்தரணி எஸ். எம். ஹனிபா
அரும்பெரும் பணிகள் பலவற்றை, சில மனிதர் பலரின் தன்மைக்காகச் செய்து வருகின்றனர். மனிதனின் சிறப்பிற்காகவும், சீரான வாழ்க்கை நடத்துவதற்குத் தேவைப்படுகின்ற பல வழிகளைக் காண்பதற்காகவும் மேற்கொள்ளப்படுகின்ற பலவிதமான சேவைகளில் இலக்கியப் பணியும் ஒன்று. இலக்கியத்தின் வாயிலாக மனித சமுதாயத்தின் மேம்பாட்டுக்காக அரும்பணிபுரிந்த பெரியார்களுள், மகாகவி டாக்டர் ஸேர் முஹம்மது இக்பால், தனியிடம் பெற்ற மேதை என்பது மிகைዘ }Gኒ)6ስ) .
முதன் முதலில் தாய்மொழியான உருதுவில் அவர் பல கவிதைகளைப் பாடினர். பின்பு, பாரசீக மொழியிலும், ஆங்கிலத்திலும் சிறந்த சிந்தனைக் கருவூலங்களை ஆக்கிய பெருமை அவருக்குண்டு. 'அஸ்ராரே குதி" என்ற நூலில் அவரின் சிறந்த
தத்துவார்த்தம் வெளிப்படுகிறது.
ஆயிரம் ஆண்டுகளில் ரோம் சாம்ராஜ்யம் அடைந்த உயர்ந்த நிலையை, சில காலத்திற்குள் பக்திருபது ஆண்டுகளில் இஸ்லாம் அடைந்த போதிலும், தனது காலத்திய இஸ்லாமியர்கள் அடைந்திருந்த தாழ்வான நிலைமை அவரைப் பெரிதும் வருத்தியது. கிரேக்கத் தத்துவஞானிகளின் கொள்கைகளில் அதிக ஆர்வம் கொண்டதனுல்தான் முஸ்லிம்கள் இந்நிலைக்குள்ளா. கினர் என்பதை எடுத்துக்காட்டி, நல்வழி காண்பதற்கான முறையைக் கவிஞர் இந்நூலில் காட்டியுள்ளார்.
தவ்ஹீத் என்ற ஏகதெய்வக் கொள்கையையே தாரகமந்திரமாகக் கொண்டு, அரும்பெரும் வீரர்களையும் உருவாக்கி, அதிசயிக்கத்தக்க சாதனைகளையும் நிலநாட்டிய முன்னைய முஸ்லிம்களின் வாரிசுகள் இருபதாம் நூற்றண்டில் அடைந்திருந்த நிலைகண்டு கவிஞர் மனம் வெதும்பியதன் பயனுகவே இந்நூல் எழுதப்பட்டதென்பதை, "அஸ்ராரே குதி" (இதயத்தின் இர
35

Page 20
கசியம்) எமக்குத் தெளிவ்ாகக் காட்டுகிறது. நாம் நேர்வழி: பெறுவதற்கு அல்லாஹ்வின் திருவேதமான திருக்குர்ஆனும் அந்தப் பெரியோனின் திருத்தூதரான முஹம்மது நபி(ஸல்) அவர்களின் வழிமுறைகளும் இருக்கையில், கிரேக்கத் த்த்துவார்த்தக் கருத்துக்களைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றிச் சீர. ழிய வேண்டியதில்லை என்பதை கவிஞர் அஸ்ராரே குதியில் காட்டுவதை நாம் காணலாம். இம்மையில் வாழப் பிறந்த மனிதனின் மனநிலை, சாகத்தான் பிறந்தோம் என்ற தோரணையில் அமைந்திருந்ததைக் கண்டு, கவிஞர் இக்பால் வேதனைப்படுகிருர் எனவும் இந்நூலில் காணமுடிகிறது.
அஸ்ராரே குதியில் கவிஞர் இக்பால் காட்டும் வழி என்ன? வாழ்க்கையில் மனிதனுக்கு ஒரு நோக்கம் இருக்க வேண்டும். அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு அவன் விருப்டம் கொள்ளல் மிக அவசியம். நோக்கம் இருந்துவிட்டால் மட்டும் போதுமா? அதனை அடைவதற்கான விருப்பமும் மனதில் எழுந்து உற்சாகமூட்ட வேண்டுமே. அப்போதுதான், மனிதன் சோம்பலை விட்டுச் செயலிலிறங்குவான். விருப்பத்துடன் நின்றுவிடலாகாது, நோக்கத்தை அடைவதற்கு முயற்சி செய்தல் வேண்டும். முயற்சியால்தான் விருப்பத்தைப் பெற முடியும். இதுதான் இன்றைய இளைஞர் சமுதாயத்திற்கு இக்பால் விடுத்துள்ள வேண்டுகோள். அவர் அதனைக் கூறும் முறையில் ஒரு தனிப் பாங்கு இருக்கிறது.
செயலற்றிருப்பதே வாழ்க்கை இரகசியம் என்று மலையிலிருந்து ஒரு குரல் வந்தது சிற்றெறும்பு சொல்லிற்று. சுறுசுறுப்பின் இன்பமே தனி என்று.
அதாவது, மலையிலிருந்து ஒரு சத்தம் கேட்கிறது.

அது என்ன சப்தம் தெரியுமா? மலை ஆடுமா? அசையுமா? ஒரு செயலும் இல்லாமல்தானே இருக்கிறது. அது கூறுகிறதாம்: 7ெ வற்று இருப்பதுதான் வ்ாழ்க்கையிலுள்ள இன்பம் என்று. டு , ர், சப்தத்தைக் கேட்டுவிட்டது, சிற்றெறும்பு. பெரிய மலைข้า ல்ை கான் என்ன, சொல்வது கவருணுல் அதைத் தவறு தானே வலியுறுத்த வேண்டும். மலேயிடம் சிற்றெறும்பு 6 கேகொடுக்கிறது."என்ன சொல்கிறது? செயலற்றிருப்பதில் ள் 'ன இன்பம்; சுறுசுறுப்பாகச் செயல்புரிவதில்தான். இன்பம் Kirr65asr 5) "r tíb என்று பெரிய மலையிடம், சிறிய எறும்பு கூறுகிறTh. "இளைஞனே சோம்பேறியாய் இராதே’ என்று நேரில் சொல்லி, இளைஞனே இழிவுப்படுத்துதல் நல்லதல்ல் என்று கருதிய விஞர், இன்றைய இளைஞனின் மனதிலுள்ள சோம்பல் விருப்Luh GTM,95 ம%லயிலிருந்து வரும் குரல் என்று கூறுகிருர் . முயற்சி செய்ய வேண்டும் என்று இளைஞன் தானுகவே எண்ணுதல் சிற்றெறும்புகூட இளைஞன் முயற்சி செய்யாமலிருப்பதைக் கண்டிக்கிறது எனும் தோரணையில், சுறுu , ' 9 Janin sir pijsh 3) iki''' 1:h இருக்கிறது என்பதை சிற்றெறும்பு ல்லும்படி அமைத்துள்ளார் கவிஞர். இதனுல், இளைஞனுக்குத் த, மானம் ஏற்பட்டு, நல்ல முயற்சியில் இறங்குவான் என்பது அ.ரின் நோக்கம். சோம்பேறியாயிராது, செயலாற்றுங்கள்; செயலாற்றுங்கள் என்பதினையே கவிஞர் இக்பால் வலியுறுத்திuqasir GartTrř. . !ა 2:’ ’’ ஈத் பெருநாள் நெருங்கி வருகிற சமயம், கவிஞர் இக்பால் ஈகின் இளம்பிறையைப் பார்த்து முஸ்லிம்களின் பரிதாபமான தி பெற்றி முறையிடுகிருர், அந்தப் பரிதாட நிலைக்குக் காரணம் ான்ன என்பதையும் அவர் சுட்டிக்காட்டி:ள்ளார். கவிதையைக் கேளுங்கள். ... '
முஸ்லிம் வழி முறை ஃப் பின்பற்றி முன்னேறி வரும் அன் கிையர்களையும் இஸ்லாமிய வழிசஃப் புறக்கணித்த முஸ்லிம்கள், உே பூக்லி கண்டே
37

Page 21
வதைத்து வஞ்சம் தீர்க்கும் இழிய முறையையும் untri .
இளம்பிறையான ஈத் பிறையிடம் கவிஞர் தனது மனக்கவலையைக் கூறுகிருர், அதாவது, முஸ்லிமல்லாதார், முஸ்லிம் களுக்கு இஸ்லாம் காட்டியுள்ள சிறந்த முறைகளைக் கையாண்டு முன்னேறிச் செல்கின்ருர்கள். முஸ்லிம்கள் அந்தச் சிறந்த வழிகளைக் கைவிட்டுவிட்டார்கள். அது மாத்திரமா? தனது சகோதரனையே துன்பப்படுத்துகிறர்கள். எதற்காக? வஞ்சம் தீர்த்துத்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காகத்தான். அதுவும் இலேசான துன்பமா? வேதனேயால் வதைக்கிருர், இது இழிவானமுறை. பெருமானுர் நபி (ஸல்) அவர்கள் காட்டிய சீரிய முறைக்கு எதிர்மாருன செயல் என்பதைத்தான் கவிஞர் முஸ்லிம்களுக்கு இடித்துக் கூறுகிருர்,
வட இந்தியாவில், அப்பொழுது பஞ்சாப் மாகாணம் என்ற ழைக்கப்பட்ட பகுதியிலுள்ள சியால்கோட் எனுமிடத்தில், இக்பால் 1873ம் ஆண்டில் பிறந்தார். தற்பொழுது, சியால்கோட், பாகிஸ்தான் பிரதேசத்தில்தான் இருக்கிறது. உள்ளூரிலேயே ஆரம்ப கல்வியைப் பெற்று வந்த இக்பால், சம்சுல் உலமா மீர் ஹஸன் எனும் பேரறிஞரிடமும் கல்வி பயின்ருர், 1895ம் ஆண்டில் அவர் லாகூருக்கு மேற்படிப்புக்காகப் போனபொழுது ஸேர் தோமஸ் ஆர்னல்ட் என்ற மற்ருெரு சிறந்த அறிஞருடன் தெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. ஸேர் தோமஸ் ஆர்னல்ட்தான், இக்பாலுக்கு மேற்கத்திய தத்துவார்த்தம் பற்றிய சிந்தனையை ஏற்படுத்தினுர். அவர் கூறிய ஆலோசனையின் பேரில், 1905ம் ஆண்டில் இக்பால் ஐரோப்பாவுக்குச் சென்று மேற் படிப்பில் ஈடுபட்டார். மூன்ருண்டுக் காலத்தில் அங்கு மேற்கத்தியத் தத்துவார்த்தக் கொள்கைகள் பற்றி ஆழமான அறிவு பெற்றதோடல்லாமல், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று பாரிஸ்டர் எனும் வழக்கறிஞர் துறையிப் பயிற்சியையும் முடித்துக் கொண்டார் . ஜெர்மனியிலுள்ள மியுனிச் பல்கலைக்கழகத்தில் கலாநிதி (doctorate) பட்டமும்
38

பெற்ற பின்னர், 1908ம் ஆண்டில் லண்டன் பல்கலைக் கழகத்தில் ஆறு மாத காலம் அரபு மொழிப் பேராசிரியராகக் கடமையாற்றி விட்டு, லாகூர் திரும்பினர். சிறிது காலம் சுமார் மூன்ருண்டுகள் வழக்கறிஞர் தொழில் பார்த்துவிட்டு அதன் பின் தனது முழு நேரத்தையும் இலக்கியப் பணிக்கே அர்ப்பணம் செய்தார். பாரசீக மொழியில் அவர் எழுதிய பாடல்களின் தொகுதி 'பயாமே - மஷ்ரிக்’, 'ஸபூரே அஐம்’ எனும் பெயர்களில் வெளியிடப்பட்டன. அர்முகானே ஹிஜாஸ் என்ற மற்ருெரு பாடற் தொகுதியில் உர்துப் பாடல்களுடன் பாரசீகப் பாடல்களும் உள்ளன. அவரின் "அஸ்ராரே குதி' 'ரமூஸி யேகுதி" (தானற்ற தன்மையின் மர்மங்கள்) ஆகிய இரண்டு நூல்களும் தத்துவார்த்த அடிப்படையில் அமைந்துள்ளன. "பஸ் - சாய் பாயத் - கர்த்' என்பதும் இவருடைய பாரசீகப் பாடல்களில் ஒன்wகும். 'ஜாளித் நாமா” என்ற மகா காவியத்தையும் மகா கவி இக்பால் எழுதியுள்ளார். பாரசீகப் பேரறிஞர், மெளலான ஜலாலுத்தீன் ரூமியுடன் விண்ணுலகம் சுற்றி, பலரையும் சந்திக்கின்ற பிரயாண நூலொன்றுபோல் அமைந்திருக்கும் 'ஜா விது நாமா' வில் புதுமைகள் நிறைய உள்ளன. கீழைத் தேயங்களுக்கு நல்ல காலம் பிறக்கப்போகிறது என்பதை இக்பால் இந்த நூலில் அறிவித்திருக்கிருர்,
இக்பால் எழுதிய உர்துப் பாடல்களின் தொகுதிகள் பாங்கே தாரா, பாலெ ஜிப்ரீல், ஸர்யே கலீம் என்ற பெயர்களில் வெளிவந்துள்ளன. அவருடைய வாழ்நாளிலேயே இந்த த் தொகுதிகள் அவரால் வெளியிடப்பட்டன. அர்முகானே ஹிஜாஸ் என்ற தொகுதியில், ஒரு பகுதி உர்துப் பாடல்களும், 4ற்றப் பகுதி பாரசீகமொழிப் பாடல்களும் அடங்கியுள்ளன. ஷிக்வா, ஐவாபே ஷிக்வா (முறையீடும் பதிலும்) எனும் புகழ் பெற்ற உர்து நூலொன்றையும் இக்பால் எழுதினர்.
அவர் ஆங்கிலத்தில் எழுதிய இரு நூல்கள் பிரசித்த மடைந்துள்ளன. அவர் கலாநிதிப்பட்டம் (Ph, D.) பெறுவதற்wra, groupSuu 2 tilay giftá. The Development of Metaphysics
39

Page 22
in Persia (பாரசீகத்தில் தத்துவ ஞான வளர்ச்சி) என்பதாகும். The Reconstruction of Religious Thought in Islam 36i. லாத்தின் கருத்தை புனரமைப்புச் செய்தல் என்பது அவர் சென்னையில் ஆற்றிய சொற்பொழிவுகளின் தொகுப்பு. இதில் சிறந்த சிந்தனைக்கான கருத்துக்கள் அடங்கியுள்ளன.
இக்பாலின் பல நூல்சள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. ஆர். ஏ. நிகல்சன் என்ற அறிஞர், 1940ம் ஆண்டில் அஸ்ராரே குதி எனும் நூலை Secrets of the self எனும் பெயரில் மொழிபெயர்த்தார். ஏ. ஜே. ஆர்பரி என்பவர், கவிஞரின் பாரசீகப் பாடல்கள் பலவற்றை மொழிபெயர்த்துள்ளார். இவர்கள். தவிர, வேறு பலரும் இக்பாலின் நூல்களை மொழிபெயர்த்ததோடு, அவரின் தத்துவங்கள் பற்றியும், அவரின் சிந்தனை பற்றியும் lia நூல்களே, எழுதியுள்ளனர். ஆங்கிலம், தமிழ் மொழிகளில் கவிஞர் இச்ப ஃப் பற்றி :விண் 60 ற்) நூல்கள் வெளிவந்துள்ளன. −
இத்தகைய அரும்ப ணிபுரிந்த இஸ்லாமியப் பெருங்கவிஞரான டாக்ட்ர் ஸேர் முஹம்மது இக்பால், ஹிஜ்ரி 1857ல், அதாவது 1938ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் திகதி அதிகாலை : கூரில் காலமானர். லாகூரிலிலுள்ள பாத்ஷாஹி எனும் பெயர் கொண்ட மிகப் பெரிய் பள்ளிவாசல் முன்றலில் அவரின் அடக்கஸ்தலம் அமைந்துள்ளது. 'அல்லாஹ்'' என்ற இறுதியான சொல் அவர் வாயிலிருந்து வெளியாகும் பொழுது உயிர் நீத்த கவிஞரின் உதடுகளில், புன்னகை தவழ்ந்தது, அவரின் கவிதையொன்றில் மூமினின் அடையாளத்தை நான்" சொல்கிறேன். உயிர்நீத்த பின்னர் அவரின் உதடுகளின் புன்னகை தோன்றும் என்று இக்பாலே எழுதியிருந்தார். . . . . . -
இலங்கை ஒலிப்பரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் ஒலிப்பரப்பான பேச்சு,
40

பண்புக்கொரு பாவாணர் திருமதி. ஜெமீலா ஹலீம்தீன்
நிலைக் கண்ணுடியின் முன் நின்று கலைந்திருக்கும் நம் ஆடைகளைச் சரிப்படுத்திக் கொள்கின்ருேம். அழகு வதனங்களின் எழிலே மேலும் கூட்டிக்கொள்ள பளிங்குக் கண்ணுடியில் பார்த்து ஒப்பனை செய்து கொள்கின்ருேம். இவையெல்லாம் புற அழகில் மோகங்கொண்டலையும் நம்மவர்களின் ‘அலங்கார* முயற்சியே.
எனினும் நம் அக அழகையோ, வாழ்க்கை யெனும் பென்னம் பெரிய காவியக்கோர்வையின் உரு அழகையோ, அற நெறி நடந்துயரும் பெரு வழியையோ, வெறும் முலாம் பூசிய கண்ணுடியைப் பார்த்துக் திருத்திக்கொள்ள, திறம்பட அமைத்துக் கொள்ள இயலாது. திருவேதமும், திருநபியின் அழகிய முன்மாதிரிகளும் தாம் நம் வாழ்வெனும் நதியை வற்ருத ஜீவ நதியாக, வளம் கொழிக்கும் பூஞ்சோலையாக அமைக்க உதவுகின்றன. அதையடுத்து, பெரியோர்களின், அறிஞர்களின், பெருங்கவிஞர்களின் வாழ்க்கை முன் மாதிரிகளை அறிவதன் மூலமும், கடைப்பிடித்தலின் மூலமும் பயன் பெறுகின்ருேம். பண்பட்ட வாழ்வுக்கு மாறுகின்ருேம்.
காவியத் தென்றல் கமழும் பெருங்கவி இக்பாலின் வாழ்வுப் பூங்காவில் நுழைந்தால், நாம் அடியொற்றி நடக்கக் கூடிய அரிய முன்மாதிரிகள் அனேகம் இருப்பதைக் காணலாம்.
உயர் தத்துவம் கூறும், புது உத்வேகத்தையும், உயர்வு காண அயராது உழைக்க வேண்டுமென்ற உணர்ச்சியையும் காட்டும் அவரின் கவிதைகளை நாளாந்தம் நாம் படித்துச் சுவைக்கிழுேம். நயந்து விய6து பாராட்டுகின்ருேம் , "புரட்சிக் கவி இலட்சியக்கவி' என்றெல்லாம் அது நடையில், பழகு மொழியில் படி வி',ான அடைமொழிகஃயெல்லம் கொடுத்து அவரைப் போற்று:ன்ருேம். புகழ்கின்ருேம், எனினும், இத்தனை சிறந்த கவ.,1 மணியான கருத்துக்களை, எமக்கீந்த உலகு
.dll

Page 23
மகாகவியின் வாழ்க்கையில் அனிை செய்த நற்பண்புகளை நாம் உற்று நோக்குகின்ருேமில்ல. அவைகளைப் பின்பற்ற முயலுகின்ருேமில்லை.
இன்கவி இக்பால் சின்னஞ்சிறு வயதிலேயே ஒழுக்கமும் , நற்பழக்க வழக்கமும் உள்ளவராகத் திகழ்ந்தார். பாலப் பரு. வத்திலேயே மதப்பற்று மிக்கவராக இருந்தார். நாத்திகவாடை அவர் வாழ்வில் கலக்கவேயில்லை. குறைய இறைபக்தியும், பெருமானரிடத்தில் நிறை அபிமானமும் கொண்டிருந்தார். இவை அவரின் கவிதைகளில் கூடப் பரிணமிப்பதைக் காண்கின்ருேம். −
இன்னல் இடுக்கண் வரும்போது வீணே விதியை நொந்து அவர் காலம் கழிக்கவில்லை. அல்லாஹ்வின் அருளைத்தான் ஐவேளையும் வேண்டிநின்ருர், "வாழ்க்கை என்பது போராட்டமே** என்பதை உணர்ந்த அவர், எதற்கும் எவர்க்கும் அஞ்ச வில்லை. அல்லாஹ் ஒருவனுக்கே அஞ்சினர். அவரின் கவிதையிலும் அது நர்த்தனம் புரிவதைக் காணலாம். ஈழத்துப் பிரபல கவிஞர் அப்துல் காதர் லெப்பை அதைப் புதுப் பாணியில் இங்கு இதோ விளக்குவதைப் பாருங்கள்.
அன்பு நெருப்பால் எரி அச்சம் அல்லாவுக்கே அஞ்சிடு நீ துன்பம் அணுகா தேருவாய்!
துலங்கும் ஈமான் இதயத்தில். வன்பாம் அச்சம் இதயத்தில்
வணங்கச் சிலையை ஆக்கிடுமே! அன்பே துயிலும் சக்தி நீ
அறிந்தே எழுவாய், எழுவாயே! மேலும், தினமும் அவர் திருகுர்ஆன் ஓதத் தவறுவதேயில்லை, கவிஞர், திருவசனங்களின் கருத்தை, மகிமையை உணர்ந்து, புரிந்து ஒதும் போது கண்ணீர் பெருக்கெடுத்து ஒடுமாம். நாளாந்தம் தான் இல்லாவிட்டாலும், புனித ரமலான் மாதத் திலாவது திருமறையை ஒதும் உளப்பாங்கு இல்லாத வெறும் *会3

தத்துவம் பேசி நேரத்தைப் போச்குபவர்கள், இதை அறிந் தாவது நற்கிரியைகளில் நாட்டத்தை ஒட்ட வேட்டும்.
மக்கள் கவியாக இலங்கிய இக்பால் புகழைக் கிஞ்சித்தும் விரும்பவேயில்லை. தன்னை ஏனையோர் 'கவிஞன்' என்று அழைப்பதைக்கூட் விரும்பாத அவரின் எளியதன்மை வியப்பதற்குரியதன்ருே! பட்டம், பதவி பெற்றுவிட்டால் "பண வேட்டை'யில் உயர்ந்து விட்டால் அந்தஸ்தும், அதி "மதிப்பும்" தேடியலையும் நம்மவர்கட்கு இது அரியவொரு எடுத்துகாட்டாகும்.
'ஏழ்மையே என் பெருமை’ என்ற பெருமாஞரின் பொன் மொழிக்கேற்ப வாழ்ந்தார் வளமார் கவிஞர்.
மக்கள் முன்னேற வேண்டும், மகோன்னத சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் எழுந்த அவரின் கவிதைகளில் புரட்சிக்கனல் வீசுவதை அறிகிருேம். ஆணுல், அவரின் உள்ளமோ சாந்தமும், சால்பும் உடையதாய்த்தானிருந்தது. 'அன்பொன்றே அகிலத்தை ஆள வல்லது”* என்ற அத்தி வாரத்தில் வாழ்ந்தார். எவர்க்கும் துன்பம் இழைப்பதையோ, சத்தியத்துக்கு முரணுக நடப்பதையோ எள்ளளவும் ஆதரிக்கவில்லை அவர். அவரின் உயர்குணநலப் பண்புகள் உள்ளத்திலிருந்து ஊற்றெடுத்துப் பாய்ந்த கவிதை முத்துக்களில் பிரதிபலிப்பதைப் பார்க்கலாம்.
எவரையும் அலட்சியக்கண் கொண்டு பார்க்காத இலட்சியக் கவிஞர், நகைச்சுவையிலும் சிறந்து விளங்கினர். ஆளுல் அவர் தொடுத்த ஹாஸ்யங்கள் அடுத்தவர்களின் மனதை உறுத்துவதாய், ஊறுபடுத்துவதாய் அமையவில்லை. அவைகளில் கூட உயர் தத்துவங்கள், ஆழிய கருத்துக்கள் பொதிந்திருந்தன. பள்ளிச் சிறுவனுய் இருந்த இக்பால், ஒரு நாள் சிறிது தாமதித்துப் பாடசாலைக்கு வரவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இதைக் கண்ட வகுப்பாசிரியர் "இக்பால் காலதாமதம் ஏன்?" எனக் கேட்டார், "இக்பால்" (அதாவது புகழ்) எப்பொழுதும் காலதாமதமாகித்தான் வரும்’ எனப் படக்கென்று பதில் 43

Page 24
பகன்ருர், மேலும், ஆண்சள், விர மின்றிச் செயலற்ற கோழை. களாய், சோம்பேறிச வி. ய, இருப்பன் சக் சண்ட சவிஞர் இக்பால் இனி எதற்காசப் டெண் சள் முகத்திரை இட்டுக் கொள்ள
வேண்டும். ஆண்கள்தான் டெண்களாகி விட்டார்களே’ னே நகைச்சுவை ததும்பக் கூறுகிருர், '.
அமரசவி அல்லா மா இச் பால், "நீ வெற்றி அடைய
நேர்ந்தால், உன் சல்வியை இஸ்லாததுக்காகப் பயன்படுத்து’’ என்ற அவரின் அன் டத் தந்தையி ன் உடதேசத்துக்கு இலக்கணமாகவே செயல் புரிந்தார்.
'உண்மை விசுவாசியின் அடையாளத்தை நான் சொல் கின்றேன். மரணம் வருங்காலை அவன் வதனம் மலர்ச்சியுற்றிரு க்கும்’ என்ற அவரின் கருத்துக்குக் சருவாகவே, 'அல்லாஹ்" என்று கூறி அலர்ந்த புனன்சையுடன் உயிர் நீத்தார்.
நாமும் நல் வாழ்வு வாழ்ந்து நலம் பெற திகழ வேண்டுமென்ருல் இவ்வாறன சிறந்த முன் மாதிரிகளை நடைமுறையில் கொண்டு வாழ எத்தனிக்க வேன்டும். பெருங்கவிக்குப் பெருவிழ்ா எடுப்பதைவிட, நானிலமறிய வந்ார்த்தை முழக்கம் செய்வதை விட, சிறந்த முறை இதுவாகும்.
(நன்றி. இலட்சியக் கவிஞர் இக்பால் மலர், 1962)
சுவிஞர். இக்பாலின் அந்திமகாலம், நோய்வாய்ப்பட்டு படுக்கையில் கிடக்கிருர், கவிஞருக்கு வெறும் ஆரவாாம் பிடிக்காது என்பதால், அன்றிரவு வீட்டில் பிறர் எவருமில்லை. அயர்ந்து துரங்கிய மகன் தாவீதுவை பணியாள் அதிகாலை எழுப்பி, 'உன் தந்தையை வந்து பார்' என்றர் உடளே ஜாவீது எழுந்து சென்று தந்தையின் அறையில் பார்த்தபோது அங்கே கவிஞர் இக்பாலை வெள்ளைப் புடைவையால் மூடி கிடந்தது, ஜாவீதுக்கு விஷயம் புரிந்துவிடவே, "ஒ"வென கத்தி அழவேண்டும் போலிருந்தது அப்போது எவரோ அவனது தோளைத் தொட்டு உசுப்பி "மகனே....நீ ஆண்மகன் ஆண்கள் அழக் கூடாது' எனக் கூறுவதுபோல பிரமை தட்டியது.
ஜாவீது கண்களைத் துடைத்துக் கொண்டான். அதன் பின் என்றுமே ஜாவீது இக்பால் அழவேயில்லை.
தாய் இறந்துபோன போது ஜாவீது அழுததைக் கண்டு, கவிஞர் கூறிய புத்திமதிதான் அது. . . .
44

52(5
மானிட
கவிஞன்
எழுதுகோல் என்பது சமுதாயத்தின் பழுதுகளைப் போக்க பயன்பட வேண்டுமே தவிர, வெறும் பொழுதுகளை போக்க மாத்திரமல்ல என்ற சருத்தின் வழி தவழுது, கவிதா வீதிகளில் எழுதுகோல் ஏந்தி, ஒரு சமுதாய விடியலைக் காண விழைந்த வ்ராய் எழுத்துப் பயணம் புரியும் ஒரு கவிநெஞ்சம் தான், என் எழுத்துலகின் உடன்பிறப்பாம் கல்ஹின்னை தந்த கலைமணி கவியரசு எம். எச். எம். ஹலீம்தீன்,
சமுதாயத் தெருக்களில் நடந்து செல்லும் கவியரசு அவர்க ளின் விழிக் கெமரா வில் பட்டுவிடும் குறைகளை எல்லாம், தன் எழுதுகோல் மூலம் குத்திக் கிளறி, காலத்தின் (அலங்)கோலங் களுக்கு இலக்கிய வர்ணந்தீட்டிக் காட்டுவதில் மரபு மீருத ஒரு மாக்கவிஞன் இந்த ஹலீம்தீன் என்ருல், அஃது மிகையன்று.
* அன்புக்காக ரங்கும் ஒரு மனிதாபிமான நெஞ்சம் என்பதற் கேற்ப, இந்தப் பாட்டுடைத்தலைவனின் கவிதா வரிகளின்

Page 25
அடிநாதமே, மானுடநேயந்தான் என்பதற்கு, இவர் எழுதி வெளி யிட்டுள்ள தியாகச்சுடர், சாலத்தின் கோலங்கள் (இலங்கை இலக் கியப் பேரவைப் பரிசு பெற்ற நூல்) இதயமலர்,மலர்ச்சி (Blossom) ரோஜாக்கள் (Roses) என்ற நூல்கள் காலத்தை வென்று சமுதாயச் சந்திகளில் உரத்துப் பேசப்படும் இலக்கிய குறிப்புக் 956.
தாய்மொழி தமிழிலும், தாரணி தழுவிய ஆங்கிலத்திலும் துறைபோகக் கற்ற இருமொழிப் புலமைகளும், இந்தக் கவிஞன் இலக்கிய நதிமீது வழித்துச் செல்லும் கவிதைப்படகின் இருபச்கத் துடுப்புகள். முன்ஞள் ஆங்கில ஆசாளுகிய இவர், தமிழில் நல்லதோர் சொல்லேருழவர்.
பிஞ்சு நெஞ்சங்களோடு சொஞ்சி மகிழும் இந்தக் கவிஞனின்
நெஞ்சம், மாணவ நெஞ்சங்களோடு சதாவும் கைகலுக்கும். சமகால இளைய தலைமுறை மாணவர்களுக்கு மகாகவி இக்பாலை அறிமுசஞ் செய்யும் கவிஞனின் பங்களிப்பே, இப்போது உங்களது பொன்னிகர் கரங்களில் மின்னும் இந்நூல்.
நாளைய சமுதாய விடியலின் ஓரங்களில் இந்தக் கவிஞ்ணின் கவிவரிகள் ஜரிகையாய் ஒளிரும் என்பது நிச்சயம்.
என்றும் இனிய வ்ாழ்த்துக்கள்.
எஸ். ஐ. நாகூர்கனி 42, பேரா வீதி, பொதுச்செயலாளர்
கொழும்பு 12. முஸ்லிம் எழுத்தாளர் தேசிய கவுன்ஸில் 15. 6. 1987


Page 26
L L L LLLLL LL LL LLL L LLLLLLLLL LL LL LLL LLL LLL L LLLLLS Eventhough his thirst for Vast knowledge Accorded him every opportunity to judge The boast of westerii culture/*
Foneer he was indeed ofme creation OfPakiston thereputed Muslim nation Ever ond evermay his dearest ideals Twinkle in the heart of our Muslim yo
-Kovarasu- Goihinna - M. H. M. Háløéîndeen
 
 
 

los ih sia kõTāTTGTGGTGTETTEQuietly the 'Nightingale' made his humbleimage :
· Bloomingwell over the whole world
Alongwith his mighty poetic pen so bold L-iberal and saturated philosophic thought
Thegreat renowned philosopher of the East He Sir Allama Mohamed Iqbal the Mystic Poe,
Eschewed and hushed hisdestiny the wild beas? Glitter and glamour of the 'civilized westo ,
R?... :~~~• • • • • • • • ~~~~ ----a a- - - - ~~