கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மயிலணி அந்தாதி

Page 1
! !! !! ) ■
■■■ ! !!!!!!!!!!!!!!!!!!!!
----
■ !
sae
●
●
 


Page 2

6சிவமயம்
மயிலனி அந்தாதி
சுன்னுகம் கு. முத்துக்குமாரசுவாமிப்பிள்ளே இயற்றியது
புலவரகம் Duala சுன்னுகம்
உரிமையுடையது 1966 (வில் சதம் 50

Page 3
புலவரக வெளியீடு : 14
முதற் பதிப்பு: 1966
பூரீ சண்முகநாத அச்சகம்
யாழ்ப்பாணம்

תוכ60ן(56{Upc)
மயிலனி அந்தாதி என்னும் இந்நூல் யாழ்ப்பாணத் துச் சுன்னகத்தின் வடபாலுள்ள மயிலனி என வழங்கும் திவ்விய தலத்திற் கோயில் கொண்டெழுந்தருளியிருக்கும் முருகக் கடவுள்மீது அந்தாதித் தொடையமையக் கட்ட ளைக் கலித்துறை யாப்பினல் எம்மால் இயற்றப் பெற்றுள் ளது. மயிலனி, மடங்களுக்கும், ஆலயங்களுக்கும், பள்ளிக் கூடங்களுக்கும் உறைவிடமாக விளங்கிய ஓர் பழமை வாய்ந்த இடமாகும்.
அந்தாதி என்னும் நூல் தொண்ணுாற்றறு வகைப் பிரபந்தங்களிலொன்று. அது சிறு காப்பிய வகையைச் சார்ந்தது. அந்தாதியாவது ஒரு செய்யுளின் ஈற்றிலுள்ள எழுத்தாவது, அசையாவது, சீராவது, அடியாவது, அடுத்த செய்யுளின் முதலில் வரப் பாடப்படுவது. ஈற்றுச் செய்யு ளின் அந்தமே முதற் செய்யுளின் முதலாகவும் அமைதல் வேண்டும். "அந்தமுதலாத் தொடுப்பதந்தாதி என்பது யாப்பருங்கலக்காரிகை ஆசிரியர் கூற்று.
இந்நூலைப் படிப்பவர்களுக்கு உபயோகமாகுமாறு செய்யுட்களில் வரும் அருஞ் சொற்களுக்குப் பொருள் கூறப்பட்டுள்ளது.
இந்நூலைப் பார்வையிட்டுத் திருத்தங்கள் செய் துதவிய எமது நண்பரும் நுண்மாணுழைபுலமிக்க பண் டிதருமாகிய திரு. சி. கதிரிப்பிள்ளை அவர்களுக்கு எமது அன்பும் நன்றியும் உரியதாகுக.
சுன்னுகம் கு. முத்துக்குமாரசுவாமிப்பிள்ளே
1-6-66

Page 4

மயிலனி அந்தாதி
கசப்பு
குயிலினங் கூவுதண் சோலைசள் மல்கிக் குதூகலங்கொள் மயிலினம் மன்னிய மாண்பதி வாழ்ந்து வரமளிக்கும் அயிலினர்க் கோர்தமிழ் அந்தாதி பாடுதற் கார்கயிலை எயிலினன் ஈன்றருள் ஏரம்பன் இன் கழல் ஏத்துவமே.
நூல்
வாவியுங் காவியும் மாண்புசெய் சுன்னே மயிலனிவாழ் தேவியுங் காமுறு தேசிக ஞய்வரு சீக்குமர ! ஆவியுங் காயமும் ஆக்கமும் ஈந்துநல் ஆர்வமொடு மேவியுன் காலிணை வேண்டுவன் நாளும் மிகப்பணிந்தே,
பண்டே அறந்தனை நால்வருக் கோதிய பாண்டரங்கன் தொண்டே அளித்துநற் சுன்னையிற் றேன்றிடுந் தோழிறு தீங் கண்டே அனையநங் காங்கேயன் தூய கழல்சிரமேற் கொண்டே அவன்சொலக் கேட்டனன் கோதில் குடிலையையே
குடிலை யறியாக் குரவன் தலைமிசை குட்டினை,தொல் படியவ லந்தரு பள்ளையைப் பற்றிணை, பாரதனில் கொடியவனுஞ்சிங்கன் கொன்னுயிர் மாயக் குமைத்தனை, மெய் அடியவர் உன்புகழ் ஆய்ந்திடு வாரோ அருநிலத்தே 3.
4. எயில் - நகரம். 9. பாண்டரங்கன் - சிவன். 10. தோம் - குற்றம். 12. குடிலை - பிரணவம் 14. பள்ளே - ஆடு, 15. கொன் - பயனின்மை

Page 5
2 மயிலனி அந்தாதி
அரும்பு மலர்பறித் தர்ச்சனை ஆர்வமொ டாற்றகிலா இரும்பு மனத்தினன் எவ்வா றிறையருள் எய்திடுவேன் சுரும்பு மருவிடுஞ் சோலைகள் சூழ்தருஞ் சுன்னைதனில் விரும்பு மறியிவர் வேலா விரைந்தருள் வீட்டினையே. 4.
வீட்டை அகன்றுயர் விண்ணினை மேவிடும் வேட்கையொடு காட்டை அடைந்து கடிமணம் ஆளுங் கடுந்தவத்தீர் ஆட்டை அருவா கனமாக் கிடுஞ்சுன்னை ஆறுமுகன் பாட்டை அசைத்துநற் பத்தி ை5 கூடுவிர் பாரினிலே 5.
பாரினை யேமிகப் பாழ்த்திடும் பண்பிலப் பாதகனும் சூரினை யேவென்று சொர்க்கத்தைப் போற்றிடத் தோல்வியறு போரினை யேபுரி வேலவன் பொற்றலம் பூதலத்தில் பேரினை யேநணரி பெற்றிடுஞ் சுன்னைப் பெருந்தலமே. 6.
பெருகி அணிபெறுஞ் சுன்னை மயிலனிப் பேர்த்தலத்தின் அருகில் அமருமெய் அன்பர்கள் அண்டிநல் ஆர்வமுடன் உருகி அடல்மிகும் ஊழ்வினை ஒவி உயரமிர்தம் பருகி அமர பதந்தனைப் பற்றுவர் பண்புடனே. 7.
பல்லுங் கழன்றுகட் பார்வையும் அற்றுப் பலங்குறைந்து பொல்லுங் கரமுறப் போக்கியம் போகப் பொலிவிழந்து சொல்லுங் கரந்திடச் சோபையும் மங்கச் சுடுநிலந்தான் செல்லுங் கதியிலி சித்தியைச் சேர்ந்திடச் செய்குவையே. 8.
செப்போதும் பூட்கை புரந்திடுஞ் சீதரன் தென்மருகற்(கு) அப்போதும் பூணு நல் ஆரமும் பூண்டுநல் அன்புடனே
முப்போதும் பூசை முறைதவ ருதுசெய் மூதறிஞர்
இப்போதும் பூஞ்சுன்னை ஈண்டுவர் இன்புற எங்கணுமே.
4. மறி - ஆடு. 15. ஒவி - நீக்கி. 18. போக்கியம் - பொருள். 19. சுடுநிலம் - சுடலை, 20. சித்தி - முத்தி. 21. பூட்கை - யானை,
31. சீதரன் - விட்டுணு, தென் - அழகு.

மயிலனி அந்தாதி 3
ாழில்பல பாவிடுஞ் சுன்னையில் வாழ்வுசெய் எங்குகனை
மொழிபல பாடிக்கும் முத்தமிழ் மூழ்கிய மூதறிஞர்
பொழிபல பாடலைப் போற்றிப் புகன்று புரையுளவாம் பழிபல பாற்றிப் பரன்தாள் பரவுவர் பாங்குடனே. 10.
பாவார மாகிய பைந்தமிழ் மாமறைப் பாணிமிகு தேவார மாதிய தோத்திரப் பாக்களைத் தேற்றமுற நாவார மாலற ஓதிடும் ஞானிகள் நானிலத்தில்
தேவார மாற்றவொண் சேவடி சேருவர் சிலமொடே. 11.
சில மிகுதொண்டர் சீருடன் சுன்னைத் திருத்தலத்தில் நீல மிகுத்தொளிர் மஞ்ஞை இவர்ந்திடும் நிர்மலர்க்குக் கோல மிகுநல் விழவினை யேசெய்து கோமளஞ்சேர் ஞால மிகுபுகழ் நாட்டித் துதிப்பர் நலம்பெறவே. 鱼2。
நலமுறை வந்தனை நாடிப் புரிந்துயர் நானிலத்திற் குலமுறை வண்ணிக்குங் கோதையர் நித்தமுங் கூடிமகிழ் தலமுறை வன்பொழில் தாவளஞ் சார்ந்திடுஞ் சண்முகனை வலமுறை வந்து வரம்பல வேண்டுவர் மண்ணகத்தே. 13.
மண்ணும் பரவும் மயிலனி வாழரன் மாமகற்குப் பண்ணும் பயனும் பழுத்த புராணத்தைப் பாவலர்கள் எண்ணும் பரிசுடன் ஏமமொ டோதி எழில்பொலிய நண்ணும் பரமத்தை நாட்டுவ ரேயிந்த நானிலத்திே 14,
நிறையருள் வேட்கை நிலவுநல் நெஞ்சுடன் நித்தியமும் பிறையருள் வேணியன் பெற்றருள் பாலகன் பீடுறுமெய் இறையருள் வேலவன் இன் கழல் எய்திட ஏத்திடுவோர் பொறையருள் வேடம் பொலிந்து பொருந்துவர் பொற்றலத்தே
1. பாவிடும் - பரக்கும். 2. பாடிக்கும் - பேசும்.
4. பாற்றி - நீக்கி. 5. வாரம் - கடல்.
8. தே + வாரம்+ஆற்ற = கடவுளிடத்தில் அன்பு மிக. 15. தாவளம் - இடம்.

Page 6
4 மயிலனி அக்தாதி
தேருத வல்லரக் கன் தனைத் தேற்றிய சேயினையே பாருத வல்லிசை பண்ணுெடு பாடிப் பணிந்திடுவோர் மீருத வல்வினை வேதனை வீட்டியம் மேலுலகில் மாருத வல்லபத் தோடின்பம் எய்துவர் மன்தலத்தே. 16:
மன்னு மகிதல வாழ்வினி லேயுயர் மாண்பிழந்த என்னு மயம்மிகு யாக்கையை எற்றிவிட் டே குதற்கு முன்னு மலத்தெழு மும்மல மாசதன் மொய்ம்பகற்றி பொன்னு மலகம் நிகர்த்திடச் செய்சுன்னைப் புண்ணியனே!
புண்ணிய மேமிகு பூம்பதி புக்குப் பொலிந்துநிதம் எண்ணிய மேடம் இவர்ந்திடுஞ் சேயை இராப்பகலாய்த் திண்ணிய மேலவர் தேற்றும் மயிலணரிச் சீர்த்தலத்தில் நண்ணிய மேதையர் நல்லருள் நாடுவர் ஞாலத்திலே. 18.
ஞாலம் நவிலுமெய் அன்புடைக் கண்ணப்ப நல்லடியார் போலம் பலவனைப் போற்ற எ மைத்தான் புகல்மறலி காலம் கடுகக் கயிறெறிந் தாவி கவருமுனம் வேலம் பிகைசேய் வினைதவிர்த் தோழ்ப விரைகுவனே. 19.
விருந்து விரைந்து மிகுத்திடும் சுன்னை விசாகனையே திருந்து முறையில் தியான சமாதியிற் சீருடனே இருந்துன் திருவடி எனணகத் தேவைத் திரும்பிறவிப் பெருந்துன் பிணைநணரி போக்கிடும் பண்பினைப் பெற்றிலனே'.
பெற்றேன் அளவில் பிறவிகள், பெற்றுப் பெருந்துயரை உற்றேன், அவனியில் ஒன்ரு தொழுக உபாயநணரி கற்றேன், அடியிணை அன்றி எதையுங் கனவிலும்நான் பற்றேன், அடைவதற் கொன்றிலை வேல! இப் பாரிடத்தே.
6 ஆமயம் - கோய். 7. மொய்ம்பு - வவி. 8. ஆமலகம் - பளிங்கு. 10. மேடம் - ஆடு, 16. சேய் - புதல்வன், கந்தன்.

மயிலனி அந்தாதி 5
தேய்மை அகற்றிடுந் தேசார் மயிலனித் தென்பதிசார் படய்கரம அடக்கிய பைந்தமிழ் வேலவன் பாதமலர் வாய்மை அகத்தொடு வாழ்த்தி வணங்கி வழுவிலவாந் துய்மை அதிமிளிர் தொண்டர்கள் என்றிடத் தோன்றுமினே.
தோரண மும்மலர்த் தொங்கலுந் தோமறத் தொங்கவிட்டு
ஆரண முஞ்சொலும் பூரண கும்பம் அமைத்தொளிரும் வாரண முஞ்செறி மாதவன் மாண்புசெய் வான் குகன் றன் பூரண மும்பொலி பூங்கழல் போற்றுவிர் பொற்புறவே. 25.
பொன்னிடம் பெண்ணிடம் மண்ணிடம் பூண்டிடும் பொற்பிலிச்சை உன்னிடம் பெட்டுநர் உள்ளன்பிற் கூறினை உய்க்குமென்றே என்னிடம் பெய்திடும் ஐயமென் நெஞ்சினை ஈர்க்கின்றதால் மன்னிடம் பெற்றிடும் வான்சுன்னை வாழரன் மாமகனே!
மகமா தனைப்பெறும் வச்சிர பாணி வணங்குசுன்னை முகமா றுடைய முருகக் கடவுளை முன்னிநிதஞ் சு கமா யுறழ்வில் சுவர்க்கத்தை யேபெறச் சூக்குமமாஞ் சகமா யையறச் சமாதிகை கூடுவர் சற்சனரே. 25.
சற்றும் பலனின்றித் தாரணி தன்னிற்பல் சாத்திரங்கள் கற்றும் பழிசேர் கடையேன் கதிதனைக் காண்தலந்தான் மற்றும் பதிகளுள் மாண்புகள் வாய்ந்து மகிதலத்தில் முற்றும் பழமர மோங்குதண் சுன்னை முதுதலமே. 26. முதுமறை வாழ்த்தும் முதல்வனும் முன்னுள் முறைதவறிப் பொதுமறை வாகப் புலவனைப் போற்ருது போகவவன் புதுமறை வாசம் புகுத்தி நலியப் புடைத்துதைக்க மதுமறை வாக மடுத்திடும் மாப்போல் மயங்கினனே. 27.
1. மை - பாவம். 3. மை - ஆடு.
7. வாரணம் - சங்கு. 10. பெட்டுநர் - விருப்பமுள்ளவர். 10. அன்பிற்கு + ஊறு ஊறு - இடையூறு. 13. மா - பெருமை, வச்சிரபாணி - இந்திரன். 15. உறழ்வு - மாறுபாடு. 21. முதல்வன் - பிரமா. 22. பொது - சபை, 33. மறை - சிறை.

Page 7
6 மயிலனி அந்தாதி
மனமுறு வாதனை மாற்றிடும் மாண்புறு மாதலமாம் புனமுறு வான்சுன்னை பொற்புற வாழ்வுசெய் புங்கவன்றன் வனமுறு வார்கழல் வாழ்த் தி ஒருவுவன் மாசுதருந் தினமுறு வாழ்க்கையில் திவினை தேக்குஞ் சினத்தினையே.
சினக்கே டுறுமடி யார்மனத் தேநிதஞ் சேர்ந்திடுவெவ் வணக்கே டுறுக்கும் வயமா வளர்சிவை மைந்தவினி உனக்கே டுடைமலர் மாலையை நித்தம் உவந்தளிக்க எனக்கே டுறுமந் திரம்நனC ஈக இறையவனே ! 29.
இறையவர் மாசில் குடிலையை வேண்டிட ஈந்தருளும் பொறையவர் மாலினைப் போக்கிடுஞ் சுன்னையிற் புங் கவனும் நறையலர் மாலையை நான்றிடச் சாத்தி நலம்பெறவே மறையவர் மாண்புசெய் மால்மரு கோனடி வந்திப்பனே.
வருமா முகில்தவழ் வான் தோய் மலையம் வதிந்துறையும் ஒருமா முனிவனுக் கொண்தமிழ் ஓதிய ஒப்புயர்வில் திருமா முருகனைச் சுன்னைத் திருத்தலத் தேயடைந்து கருமா முறைகெடக் காதலித் தேத்து கதிபெறவே. 5f.
கதியினை யேதரும் நல்லை மயிலனிக் காப்பொலிசந் நிதியினை யேசார் நிமல முருகனை நேர்ந்துபல
நிதியினை யேபெற்று நீள்புகழ் ஈட்டி நிலவுதற்கு மதியினை யேநணி வாய்த்தில னேயிந்த மானிலத்தே 32
மாலும் வரனும் வணங்குதண் சுன்னையில் மால்மருகன் வேலும் வழங்கிவெவ் வெற்பினைத் தூள்செய்து விண்ணவரை ஆலும் வரமயில் ஏறி அளித்தனன் அன்னவர்க்குப்
பாலும் வடிமது வுந்தினை மாவும் படைக்குவனே. 33
6. வயமா - சிங்கம். சிவை - உமாதேவி. 10. பொறை - பூமி. 11. கான்றிட - துரங்க. 13. மலயம் - பொதியமலை. 16. முறை - ஊழ். 24. வடி - தெளிவு.

மயிலனி அந்தாதி 7
பண்ராசரி வயங்குநற் பாக்களைப் பாங்குறப் பாடிடுவோர்
கா. ”ர் வளமுள கூபங்க ளோங்குமிவ் வெண்தலத்தில் மகா 'ர் வளிவெளி வன்னியென் றே நின்று மண்புசெய்யும் புண் 600ரீர் வடிவேற் புலவனைப் போற்றுவர் பூதலத்தே 34.
பூதலம் நீடிய பூஞ்சுன்னை மேவிய பொற்புளவாந் தாதலர் நீபநற் ருரினைத் தாங்கிடுந் தண்கடல்சூழ் மா தலம் நீல மணியணி மார்பன்றன் மாண்புநிறை காதலம் நீவிக் கழலிணை ஏத்து கருமணமே ! 55,
கரும்பு மலிவுறுங் காப்பொலி சுன்னைக் கவின் தலத்தில் இரும்பு மனமுடைச் சூரனை ஈறுசெய் எம்மிறைவன்
அரும்பு மலர்கொண் டருச்சிக்கும் ஆர்வம் அகத்துடையீர் விரும்பு மருவரம் வேலோ னிடம் நனி வேண்டுமினே. 36.
மின்போ லிடைவள்ளி தெய்வானை விள்ளும் விசாகனையே பொன்போ லிலங்கும் உணதருள் பெற்றுப் புவியினிலே என்போ லியரும் எழில்வாழ் வடைந்திட இவ்வுலகில் உன்போ லிணையறு தெய்வமும் உண்டுகொல்? ஒதுதற்கே.
ஒடுந் திருவை உலப்புடைத் தாமென ஒர்ந்து நிதந் தேடுந் திருத்தான் சிவனுர் அருளிய சிற்பரணுய் ஆடுந் திருவுடைத் தோகையின் மீதமர்ந் தன் பருளங் கூடுந் திருமைக் குகனவன் என்றுகை கூப்புதுமே, 58.
புதுமைக் குடிநிறை பொற்பார் மயிலனிப் பூம்பதிசார் பொதுமை குலவிடும் போந்தார் தலத்தினிற் புண்ணியஞ்சேர். பதுமை குறவள்ளி தெய்வானை பண்புசெய் பண்ணவனை மதுமை குறைத்திட மாண்பொடு நித்தமும் வாழ்த்துவமே.
1. நீர் - தன்மை, 3. வன்னி - அக்கினி.
4. புலவன் - முருகன். .ே பேம் - கடம்பு. 13. விள்ளும் - தழுவும். 17. உலப்பு - அழிவு. 20. மை - ஆடு. 22. போந்து - பனே,
24. மது - மயக்கம். மை - பாவம்.

Page 8
8 மயிலனி அந்தாதி
வாடி அலைந்துன் வடிவுடை மேணியென் வன்மனத்தே தேடி அறிந்திலன், தேயங்கள் யாங்கணும் தேம்பலுடன் ஒடி அலுத்ததும் ஒர்ந்திலை; சண்முக ! உன் கழலைக் கூடி அணை குவ தென்றுகொ லோவென்று கூறுதியே. 40
கூறு முகமா றுடையதண் சுன்னைக் குமரனையே பேறு முடைய பெருஞ்செல்வ மென்றுநற் பீடுடனே தேறு முகம்பெறு வாய்சுரர் தந்துயர் தீர்த்தளித்த ஆறு முகனல தில்லையென் றென்றே அறைகுமினே. 41.
அல்லும் பகலும் அறுமுக வேலவன் அட்சரத்தை வெல்லும் பரிசில் முறைபட வேயதை வேட்கையொடு சொல்லும் பணியினில் துன்னுவர் வானுயர் தூம்பனசெந் நெல்லும் பலித்திடுஞ் சுன்னைக் குகனடி நேசமொடே. 42.
நேச மனமொடு நித்தமுஞ் சுன்னை நிலவுமுரு கேசற்குச் செய்யுநற் பூசனை சேர்ந்திடுங் கீர்த்திசெறி கோச மதிற்றிகழ் தீவளி அப்புக் குவலயமா காச மெனவொளிர் கங்கைமைந் தன் கவின் காலினையே.
காலன் றருக்கிக் கயிறெறிந் தாவி கவுருமுனம் நீலன் றருகுற வள்ளிதெய் வானையை நீவிவரும் ஆலன் றருந்தி அமரரைக் காத்திடும் ஜம்மு க்ன்றன் பாலன் றகவொடு பாலித் தருளுவன் பண்புடனே. 44.
பண்டு மறிதரு பண்புடை வள்ளியைப் பாங்குடனே கண்டு மயங்கிக் கடுவிழை வுற்ற கவின் முருகன் மிண்டு மசுரரை வீட்டியங் கேகய மீதமர்ந்தென் மண்டு மலத்தெழு வாதனை நீக்குவன் மண்ணினிலே, 45,
11. தூம்பு - மூங்கில். 15. கோசம் - மதிலுறுப்பு. 18. லேன் - விட்டுணு, நீவுதல் - கோதுதல், தடவுதல். 19. ஆல் - கஞ்சு, 21. மறி - மான்
22. வீட்டி - கொன்று. விழைவு - விருப்பம். 28. கேகயம் - மயில். 24. மண்டு - நெருங்கிய.

மயிலனி அக்தாதி 9
மந்தாரை மல்லிகை செந்தா மரையிரு வாட்சிநிறை நந்தா நலமிகு சுன்னையை நாடிடும் நன்முருகா! எந்தாயும் எந்தையு மாயெமக் கின்னருள் ஈந்திடுபொற் சிந்தா மணிக்கொரந் தாதியைச் செப்புவன் தென்மிகவே.
தென்பால் அமர்திருக் கேதிச் சரன்பெறு சேயினையே அன்பால் அடியிணை ஆர்வமொ டர்ச்சித் தவர்தமக்கு இன்பால் அமுதம் இனிதளித் திம்மையில் எக்கணமும் என்பால் அரும்பும் மலத்தினை நீப்பன் எழுமையுமே. 47.
எல்லார் வளமுற ஏந்தி இரங்கிடும் எம்மிறையின் நல்லார் வனச மலரடி நாடிடும் நல்லடியார் சொல்லார் வமுடன் துதிக்கவி சோர்வறச் சொல்வதன்றிக் கல்லார் வடுவுடைக் காவியம் ஒன்றையுங் காதலொடே. 48.
காமரம் விம்முறப் பாடும் பிரமரங் காமுறுநன் மாமரம் விஞ்சுதண் சோலை வளஞ்சால் மயிலனியில் தோமரம் வில்வாள் அரவிந்தம் ஆதிய தோன்றிடவே பூமரம் விள்ளிடப் பொற்புற வாழ்வுசெய் புண்ணியனே !
புள்ளும் வருடையும் மேவு மயிலனிப் பொற்றலம்வாழ் கள்ளும் வழியுங் கடம்பணி வேலவன் காத்தெமையாட் கொள்ளும் வரையவன் கோலக் குரைகழல் கொண்டுநிதம் உள்ளும் வகைபெற ஒவா தவன்புகழ் ஓதுதுமே. 50
ஒதும் இறைவன் ஒளிநெறி யேநின் ருெழுகுமன்பர் சூதும் இடர்தரு வாதுந் துடைத்துத் துகளிலவாம் போதும் இலையும் புனலுமிட் டேநிதம் பூசைசெய்வோர் ஏதும் இடும்பையும் எய்தலுண் டோ? எம் இறையவனே!
9. எல்லார் - தேவர். 13. காமரம் - இசைப்பாட்டு. 13. பிரமரம் - வண்டு. 14. விஞ்சு - மிகும்.
15. அரவிந்தம் - தாமரை. 18. விள்ளிட - மலர. 20. ஒவாது - இடையருது. -

Page 9
10 மயிலனி அக்தாதி
இறையவன் பாணியை யாங்கணும் ஓங்க எடுத்துரைக்கும் மறையவன் பாடுற வான்சிறை வைத்திடும் மாமுருகன் நிறையவன் பாலின் நிமல னெனவைகி நித்தியமும் உறையவன் பாடி எனtளிர் தண்சுன்னை ஒப்பிலதே. 52.
ஒப்புயர் வில்பல உத்தமர் வாழ்ந்துநல் ஊக்கமொடு தப்புக ளில்லாத் தகைபெறு நூல்களைத் தந்ததனுற் செப்பும் புலவர் திகழ்பதி என்றித் திருநகரை இப்புவிச் சான்றேர் இசைபட என்றும் இயம்புவரே. 53.
இயம்பல வேங்கும் விழவினைச் செய்யுநர் இன்புறவே நயம்பல வேதரும் நல்வரங் கள்தனை நன்களித்துச் சயம்பல வேபெறு சூரரைச் சாய்த்திடுஞ் சண்முகன்தான் கயம்பல வேயொளிர் காப்பொலி சுன்னையின் காவலனே.
காவலர் சேவைசெய் காப்புடைச் சுன்னைக் கவின் தலத்திற் பாவலர் சேறுகொள் கந்த புராண படனமதில் நாவலர் சேடுறக் கூறுரை கேட்டு நயப்புடனே சேவலர்ச் சேயடி செவ்விதிற் கண்டு தெளிகுவரே. (55)
தெண்ணிர்ச் செறுவளச் சுன்னை மயிலனிச் சீர்த்தலத்திற் பண்ணிர் செறிபதிப் பாடலைப் பண்ணுெடு பாடிமகிழ் கண்ணிர்ச் செயிரியர் காதலித் தேத்திடுங் கண்ணியரே ! நண்ணிர் செயிருடை மார்க்கங்கள் ஒன்றையும் நன்னிலத்தே.
நன்றே ஒளிவளர் சுன்னையில் மேவிடும் நற்றளிவாழ் குன்றே ஒளித்திடுஞ் சூரனைக் கொன்ற குமரனுக்கு ஒன்றே ஒருமொழி ஊழ்வினை ஒட்ட உளமதனில் நின்றே ஒருவா தருள்தனை நீட்டுவை நீணிலத்தே. 57.
1. பாணி - அழகு. 2. LittG - Gas G.
3. வன்பால் - குறிஞ்சி. 4 பாடி - ஊர். .ெ இயம் - வாத்தியம். ஏங்குதல் - ஒலித்தல் 11. சயம் - வெற்றி, 12. கயம் - குளம். 14. சேறு - விழா 15. சேடு - அழகு. 17. செறு - வயல்.
20. செயிர் - குற்றம். 84. ஒருவாது - நீங்காது. நீட்டுவை - கொடுப்பாய்.

மயிலனி அந்தாதி 1 I
நீடு மயிலனி நீப நிழலினில் நித்தியமும் ஆடு மயிலினில் ஆர்வமொ டேறி அழகுறவே பீடு மணியும் பெறுவே லவன் புகழ் பேசிடுவோர் வீடு மடைய விரைவினில் ஏகுவர் விண்ணுலகே. 58.
விண்ணவர் எய்திடும் வெந்துயர் நீங்க விரைவினிலே பண்ணவ னென்னுநற் பாண்டரங் கன்தரு பாலனையே மண்ணவர் என்றென்றும் மாண்பொடு சுன்னை மயிலனியிற் புண் ணியம் எண்ணிப் புரிகுவர் பொற்புறு பூசனையே. 59.
பூசனை யேயுரி பொல்லா வரம்பெறு புன்மைமிகு நீசனை யேமுன் நிலைகுலைத் தாண்டருள் நின்மலஞம் தேசனை யேதினஞ் சேவைசெய் திவ்விய சேத்திரந்தான் வாசனை யேமிகு சுன்னை மயிலனி வண்தலமே. 60.
வஞ்சம் புரிந்திடும் மானிடர் வாழ்ந்திந்த மானிலத்தில் நஞ்சம் புதைந்த நலமறு சொற்களை நாணமின்றி நெஞ்சம் புரைபடக் கூறுவர் சுன்னை நிமலனது கஞ்சம் புரையடி காதலொ டெண்ணுர் கனவிலுமே. 61.
கரணம் நனிசுத்தி எய்திக் கருது கதிபெறவே அரணம் நசித்த அரன்மக னைச்சுன்னை ஆலயத்திற் சரணம் நயந்து சகமாயை நீத்துச் சகத்தினிலே மரணம் நணுகுமுன் மாணடி சேர்குவர் மண்ணினிலே,
மண்ணிய பாவ மனைத்துங் குவிந்த மனத்தகத்தே நண்ணிய பாவகம் யாவையும் நீக்கி நலந்தருவாய் தண்ணியற் பாணி தயங்கு மயில6ணி சார்தலத்திற் புண்ணியம் பாரிக்கும் பூசுரர் போற்றிடும் புண்ணியனே.
6. பண்ணவர் - தேவர். 15. புரை - குற்றம்.
16. புரை - பெருமை. 17. கரணம் - இந்திரியம். 18. அரணம் - கோட்டை. 21. மண்ணிய - செய்த. 22. பாவகம் - கினேவு. 23. பாணி - அழகு.
23. தயங்கு - விளங்குகின்ற. 24. பாரித்தல் - பரப்புதல்.

Page 10
12 மயிலனி அந்தாதி
புரந்தான் எரித்த புராந்தகன் பொன்னடி போற்றிலனுய்ப் பரந்தான் எனமுனர்ப் பன்னிச் செருக்கு பகவனது சிரந்தான் எறிந்த சிவஞர் அருளுஞ் சிலம்பனையே கரந்தான் எடுத்துக் குவித்து வணங்கிடக் கற்பியுமே. 64.
கற்பக லாதநற் கன்னியர் சூழுங் கவின்தலமாம் பொற்பக லாததண் சுன்னையில் வாழ்ந்துயர் பூதலத்தில் வெற்பக லாதவெஞ் சூரனை வீட்டிய வேலனுக்கே அற்பக லாதநல் அர்ச்சனை ஆற்றுவர் ஆவலொடே. 65.
ஆளுந் திறனில் அவுணனை வீட்டி அமரர்தமை வாழும் படியருள் மாலோன் மருகனை மாண்புடனே பாழும் மனனே! பணிகிலை மேற்கதி பற்றுதற்குத் தாழும் சிரத்துட னேதுதி சுன்னைத் தலத்தினிலே, 66.
தக்கவன் பாலின் கடவுள ராகுந் தகுகுகன்வாழ் பக்கவன் பாலினில் ஒங்கு மயிலனிப் பைந்தலத்தில் மிக்கவன் பாலினர் மாலையை ஏந்திநல் வேட்கையொடு புக்கவன் பாதத்தைப் போற்றிவெம்,மாயையைப் போக்குமினே
போக்கும் வரவும் புகாத அறுமுகப் புங் கவனைத் தேக்கும் வளஞ்செறி சீர்சால் மயிலனித் தென்தலத்தில் தாக்கும் வலியுடைத் தாபத்தைப் போக்கித் தகைமைபெறக் காக்கும் வரையவன் காலிணை ஏத்து கவியுடனே. 68.
கவிநணரி உட்கொளுங் கற்றவர் போற்றுங் கவினுறுநல் திவிநணரி உட்குந் திருவார் மயிலனித் தீந்தலத்திற் சவிநணி உற்றிடுஞ் சண்முகன் சாற்றினிற் சார்ந்துநிதம் அவிநணரி உண்டுநல் ஆக்கத்தை அண்முவர் ஆசையொடே.
8. அற்பு - அன்பு. 14. பால் - இடம். 15. மிக்க + அன்பால். 18. தென் - அழகு. 19. தாபம் - துன்பம். 23. உட்கும் - காணும்.
திவி - தேவுலகம். 23. சாறு - விழா,

மயிலனி அந்தாதி 13
ஆயாமற் போகம் அனைத்தையும் அன்புடை அண்டர்தமக்(கு) ஈயாமற் போக்கிடும் ஏழைமை யேமிகும் ஈனரையே ஓயாமற் போற்றிடும் ஒல்லாமை ஒவியில் வொண்புவியில் வீயாமற் போதம் விளைக்குதி சுன்னையில் வேலவனே ! 70,
வேலா! சரணம்; விசா கா! சரணம்; விமலனருள் பாலா! சரணம்; பரனே ! சரணம்; பவனிவரு சீலா ! சரணம்; சிலம்பா ! சரணம்; சிகண்டியுயர் காலா ! சரணம்; கடம்பா ! சரணம்; கவின்தலத்தே. 71.
தேம்பா மலர்க்கொடை சேடுறக் கட்டுந் திவிமகளைக் கூம்பா மலைப்பரங் குன்றினில் வேட்ட குமரனுக்குத் தீம்பா மலிந்திடுஞ் செந்தமிழ் நூல்களைச் செய்துநிதம் ஒம்பா மனிதரை எவ்வா றுரைப்பன் உலகினிலே 72
உலவாத பேரின்பம் ஒன்றிட வேண்டிடில் ஊழ்வினைதான் கலவாத பேரருள் கைவரப் பெற்றுக் கரும்புலன்கள் நிலவாத பேற்றினைப் பெற்றுயர் சண்முகன் நீள்கழலைப் பலவாத பேதத்தைப் பண்ணு தடைகுவிர் பாரினிலே. 73.
பாரிணி லேகொடும் பாவ மலத்தினைப் பாற்றிலனுய்த் தூரினி லேவிழுந தோன்தனைப் போலுந் துணையிலிக்கு நேரினி லேயுன் தன் நீள்கழல் காட்டி நிறையருள்செய் ஏரிணி லேமிகு சுன்னையில் வாழ்வுசெய் எம்வரனே! 74.
வடமொழி யான்றவர் தென்மொழி நாவலர் வாழ்ந்துநிதம் இடமொழி யாததண் சுன்னையில் ஈண்டிய எம்புலவன் மடமொழி யாவல் லசுரஃ0 மாய்த்து மகிதலத்தில் அடமொழி யாவண் டரைநணரி காத்தனன் அன்புடனே.
1. அண்டர் - தேவர். 2. ஏழைமை - அறியாமை.
3. ஒல்லாமை - இகழ்ச்சி. சி. வீயாமல் - க்ேகாமல், 9. தேம்பா - வாடாத, சேடு - அழகு. 13. உலவாத - குறையாத 15. வாதம் - தருக்கம். 18. தூர் - சேறு. 19. மீட்டி - கொடுத்து.

Page 11
14 மயிலனி அந்தாதி
புறந்தனை யேமொழி புன்மையைப் போக்கியிப் பூதலத்தில் அறந்தனை யேவிளை ஆறக் கரத்தை அகத்திருத்தி மறந்தனை யேதவிர் மாசறு மானந்த வாழ்வுதருந் திறந்தனை யேநிதம் சேர்த்திடு வாய்சுன்னைத் தெய்வதமே!
மேன்மை மிகுசைவ மெய்நெறி யேநிதம் மேம்படச்செய் பான்மை மிகுபண் ணவர்தமைக் காத்துப் பகர்சுவர்க்கக் கோன்மை மிகுத்திடக் கோபதிக் கீந்த குமரனையே யான்மை மிகவிட ஏத்த இசைகுவன் இம்மையிலே. 77.
இம்மை இருவினைப் போகம் புசித்தே இளைத்துநிற்கும் எம்மை இரும்பிற விக்கடல் நீந்த இசைந்திரங்கி அம்மை இருளகல் ஆனந்த வாழ்வினை அண்மிமலச் சும்மை இரும்பொறை நீக்கிடு வாய்சுன்னைத் தூமணியே!
தூய மறைதனைச் சொற்றிடுந் தோமறு தொண்டரினங் காய மனமொழி ஆதிய வற்றினைக் காணிக்கையாய் நேய மரபுடன் அர்ப்பணித் தேயவன் நீள்கழலை மாய மலமறுத் தேயுளத் தேத்துவர் மாண்புடனே. 79.
மாண்ட மயிலணரி மாதலத் தேவலம் வந்துவரம் வேண்ட மயல்தொலை வேலவன் மென்பதம் வேட்கையொடு பூண்ட மனிதர் புகல்சென்ம சாகரம் பூரணமாய்த் தாண்ட மதிவலி தந்திடு வாயித் தலத்தினிலே, 80.
தற்பதி யாகிய சுன்னை மயிலணி சார்தலமாம் புற்பதி ஓங்கிடும் பூம்பொழில் சூழ்ந்து பொலிந்தொளிரும் பொற்பதி வாழ்ந்திடும் பூர்விக வேலனைப் பூசைசெயும். அற்பதி றந்திகழ் எம்மையும் ஆளுவன் அன்புடனே, 81.
8. பண்ணவர் - தேவர். 12. சும்மை - சுமை. 17. மாண்ட - மாட்சிமைப்பட்ட, 2. புற்பதி - பனே.

மயிலனி அந்தாதி 15
அன்பே உருவுகொள் ஆன்றவர் வாழ்ந்துநல் ஆர்வமுடன் இன்பே உதவும் உடல்பொருள் ஆவியை ஈந்துபெருந் துன்பே உறைந்திடுந் துட்டப் புலன்களின் துப்பறுத்து முன்பே உளவினை முற்றையும் நீக்க முயலுவனே. 82.
முயலகன் என்றிடும் பூதன் முன்னர் முதுகொடித்து மயலகன் றென்றும் வணங்கிடச் செய்யு மரன்மகனும் அயிலகல் எற்கண் குறவள்ளி காந்தன் அடிமருவ வயலகல் எட்டி வழிபடு மின்கள் வரமுறவே. 83,
முத்தித் திறம்பெற முட்டில்லை நெஞ்சே! முருகனுக்குப் பத்தித் திரமுடன் பால்பழம் வெற்றிலை பாக்குடனே தித்தித் திடுஞ்செந் தினையிடி தேனுெடு தேக்கியருள் சித்தித் திடும்வரை சேவடி யைத்தினம் சிந்தியுமே. 84.
சிந்தனை அற்றிரு திட்டியும் அற்றுச் செவிடுபடும் மந்தனை அண்டி மரணம் வருந்தறு வாயினிலே வந்தனை அன்பொடு மாலற வாற்றி மலத்திலெழு பந்தனை அற்றிடப் பண்ணுக சுன்னைப் பரதெய்வமே 1 85.
தென்னை மரமுயர் தீம்பொழில் தேங்கிடுஞ் சீர்த்தலம்வாழ் சுன்னை மயிலணரிச் சுப்பிர மண்ய சுவாமியையே முன்னை மலவினை முற்றும் மொசித்துயர் முத்திபெற என்னை மயலற நோக்கியென் நெஞ்சில் இருத்துவனே. 86.
இருவினைப் புண்ணிய பாவத்துக் கூடாய் இனிப்பிறவிக் கருவினைப் புக்கவக் காயம் எடாது கவினுறுநல் திருவினைப் புல்லுந் திருவடி யைத்தினஞ் சேர்ந்திருந்தால் வருவினைப் புன்கண் வருத்திடு மோசுன்னை வாழ்குகனே!
3. துப்பு - வலி, 7. எல் - ஒளி. 11. இடி - மா. 13. திட்டி - கண். 15. Dirai - Loudidstb. 16. பந்தனை - கட்டு. 19. மொசித்து - புசித்து.
22. புக்கு + அவ+ காயம். 24. புன்கண் - வருத்தம்.

Page 12
16 மயிலனி அந்தாதி
குகனே! சரணம்; குமரா சரணம்:வெங் கூற்றுதைத்தோன் மகனே! சரணம்; உமைசேய்! சரணம்; வலவன்மரு மகனே! சரணம; வனவள்ளி தெய்வானை மால்கொளறு முகனே! சரணம்; சரணந்தண் சுன்னை முருகையனே! 88.
முருகா! வடமலை மாமகள் மைந்தா! முராரியினன் மருகா! வடிமலர் வான்சுன்னை மன்னிய மாமணியைப் பெருகா வலொடு பிறவிப் பிணக்கதன் பீழைதுடைத்(து) அருகா வனந்த சுகத்தினை அண்முவர் அன்பர்களே. 89,
அஞ்சம் புகுந்திடும் அன்பர்கள் சூழ்தரும் ஆலயத்தில் நஞ்சம் புசித்து ஞயம்படத் தேவரை நன்களித்து பஞ்சம் புரந்திடுஞ் சுன்னைப் பதிசூர்ப் பகைவனையே தஞ்சம் புகுந்தனன் தாள்பெற வேயித் தரணியிலே, 90.
தரமோங்கு மாடங்கள் சார்ந்திடுஞ் சுன்னைத் தளியினிலே மரமோங்கு மாதலம் வாழ்ந்திடும் நஞ்சுடை மாசுணத்தின் குரலோங்கு மாவொலி கேட்டுக் கதறும் குருகினங்கள்
சிரமோங்கு மாறுநின் றேங்கிப் பயந்து திகைத்தனவே 91.
வேண்டும் வரங்களை மெத்த வழங்கிடும் வேலனையே மீண்டும் வழிபட்டு வெம்பவங் கூர்பிற விக்கடலைத் தாண்டும் வகையினைத் தானறிந் தன்னவன் தாளினையைப் பூண்டும் வணங்குமின் புண்ணியம் பூரித்துப் பொங்கிடவே.
வேதங் களைத்தான் விளங்குதல் வேண்டி விரைவினெடு பாதங் களைத்துதி பாண்டரங் கன்தரு பாலகன்தான் பூதங் களைக்கொடு சூரனைப் போக்கிப் புலவர்தமக்(கு) ஏதங் களைக்களைந் தேந்திப் புரந்தனன் ஏமுறவே. 93.
2. வலவன் - விட்டுணு, 5. வடமலை - இமயம், 9. அஞ்சம் - துறவு. 10. ஞயம் - கயம். 11. குர்ப்பகை - குமரன். 18. தளி - கோவில்,
24. ரமுறல் - மகிழ்வுறல்.

மயிலனி அந்தாதி 17
வேதிய ராய்ந்திடும் வேதங்கள் நான்கும் விரைந்தளித்த ஆதிய ராயொளிர் ஆயிரநாமன் அருள்குகனைப் பூதிய ராய்நிதம் பூசித்துப் போற்றிடும் பூரியரும் ஒதிய ராகி ஒளிருவ ராமென ஒருமினே. 94.
ஒரூரும் ஒர்குல முந்தா னிலான் தரும் ஒண்புதல்வன் தேரூரும் ஓவியச் சீரினைக் காண்குபு செல்லுமுயர் பாரூரும் ஒதியர் பாங்குடன் சேர்தலம் பாரினிலே காரூரும் ஓடைகள் காமுற ஒங்குங் கவின் தலமே. 95,
மேகத்தை யேநிகர் மென்குழ லேயுடை மெல்லியலார் போகத்தை யேநிதம் போற்றி அலைந்திடும் புல்லியர்கள் சோகத்தை யேநணி துன்னுவர் அம்மைச் சுகந்தருநல் ஏகத்தை யேயினி தெய்தில ரேயிறை எண்ணுதற்கே 96.
எல்லா மனிதரும் என்றுங் குமரனை ஏத்திநணரி சொல்லா மறைநெறி சோர்வறத் துன்னித் துகளுளவாம் பொல்லா மறவிஃன போக்கித் திவிதலம் போவதற்கு வல்லார் மதித்திடும் வான்பதி தான்சுன்னை வண்பதியே.
பத்தித் திறஞ்சேர் பழமுனிக் கேமுனர்ப் பைந்தமிழைத் தித்தித் திடச்சொலுஞ் செவ்வயிற் சேந்தனைச் சேமமுறு முத்தித் திரத்தை முடிக்குமும் மாசினை முன்பகற்றிச் சித்தித் திடும்வரை சேத்திரத் தேசென்று சேவியுமே. 98.
2. ஆயிரகாமன் - சிவன் . 8. பூரியர் - கீழ்மக்கள். 4. ஓ தி - ஞானம். 11. அம்மை - வருபிறப்பு. 12. ஏகம் - தனிமை. 15. திவிதலம் - தேவலோகம்.
17. பழமுனி - அகத்தியர். 19. முடிக்கும் - அழிக்கும்.

Page 13
18 மயிலனி அந்தாதி
சேவற் பெருங்கொடி யுஞ்சிகி ஊர்தியுஞ் செவ்வயிலுந் தேவப் பெதும்பையுஞ் சேல்விழி வள்ளியுஞ் சேர்ந்துணக்கு ஏவல் பெரிதயர் ஏரினைக் காணுற எந்தனுக்கு ஆவல் பெரிதுண்டு சுன்னையில் வாழும் அறுமுகனே! 99 .
கரங்கள் எடுத்துக் குவித்து வணங்கிக் கணப்பொழுதிற் புரங்கள் எரித்த புராந்தகன் பெற்ற புலவனையே மரங்கள் எழில்செய் மயிலனிப் பேருடை மாதலத்தில் வரங்கள் எமையடையும்வகை வேண்டுவன் வாழ்க்கையிலே.
முற்றும்
1. சில் மயில், ஊர்தி - வாகனம். 2. பெரம்பை - இளம்பெண். 8. அயர் - செய்தல்.

இந்நூலாசிரியர் இயற்றிய நூல்கள் காசியாற்றுப்படை
"1957-ம் ஆண்டு காசி யாத்திரை செய்து வந்த இந் நூலாசிரியர் தாம் கண்ட காட்சிகளையும், தரிசித்துவந்த தலங்களையும், பெற்ற அநுபவங்களையுந் திரட்டிக் காசி யாற்றுப்படை நூலாக இயற்றியிருக்கின்றர்கள். இந் நூலகத்தே தொன்மைக்கால வரலாறும் பிறவும் பின்னிப் பிணிக்கப்பட்டிருக்கும் வனப்பு இக்காலப் பிற நூல்களுட் காணப்படாததொன்று. (வானுெலி) விலை சதம் 35. மயிலனி முருகவேள் மும்மணிக்கோவை
இது சுன்னகம் மயிலனி என்னுந் தலத்திற் கோயில் கொண்டெழுந்தருளியிருக்கும் முருகக் கடவுளின்மீது பாடப் பட்ட சிறந்த நூலாகும். பாக்கள் பக்திச் சுவையோடு கூடிப் படிப்பவர்களுக்கு இன்பம் பயக்க வல்லன.
விலை சதம் 25. சந்திரசேகரப் பிள்ளையார் இரட்டை மணிமாலை
இது சுன்னுகம் சந்திரசேகரப்பிள்ளையார் மீது பாடப் பட்ட ஒரு செய்யுள் நூல். விலை சதம் 15. சிவசம்புப்புலவர் சரித்திரம்
இது உடுப்பிட்டி வாசியாகிய சிவசம்புப் புலவர் சரித் திரத்தைக் கூறுவது. விலை சதம் 30. மயிலனி அந்தாதி விலை சதம் 50.
கந்தையபிள்ளை நினைவுப் பாமாலை வில சதம் 10.
இந்நூலாசிரியர் பதிப்பித்தன
தமிழ்ப்புலவர் சரித்திரம் (இரண்டாம் பதிப்பு)
இது சுன்னகம் குமாரசுவாமிப் புலவர் இயற்றியது. இதன்கண் தமிழ் மொழிக்கணுள்ள இலக்கியவிலக்கணங் களைக் கலக்கமறக் கற்றுணர்ந்த மெய்யுணர்வும் பிரபந்தஞ் செய்யும் பெருவலியுமுடைய இருநூற்றுக்கு மேற்பட்ட புல

Page 14
வர்களின் சரித்திரங்கள் அடங்கியுள்ளது. இலக்கியங் கற்கப் புகும் மாணவர்களுக்கு இது மிகவும் உபயோகமானது.
விலை ரூபா 5-00.
முருகேசபண்டிதர் பிரபந்தத் திரட்டு
இது சுன்னுகத்தில் மகாபண்டிதராக விளங்கிய முரு கேச பண்டிதரவர்கள் இயற்றிய செய்யுள் நூல்கள் எல்லா வற்றையும் திரட்டி அச்சிடப்பட்டுள்ளது.
of&o elu T 1-50
முத்துக்குமார கவிராயர் பிரபந்தத்திரட்டு
இது சுன்னகம் வரகவி முத்துக்குமார கவிராயர் இயற் றிய செய்யுள் நூல்களும், தனிநிலைக் கவிகளும் சேர்த்து அச் சிடப்பட்டுள்ளது. விலை ரூபா 1-00. தோத்திரமஞ்சரி
இதில் தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப் பல்லாண்டு, திருமந்திரம், திவ்வியப்பிரபந்தம், திருப் புகழ், கந்தரலங்காரம், கந்தரனுபூதி, பட்டினத்தடிகள் பாடல், தாயுமானவர்பாடல் புராணம், நமச் விவாய மாலை, சரஸ்வதி தோத்திரம் முதலிய பல தோத்திர நூல் களிலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட 500 பாக்கள் உள்ளன. இது பாராயணஞ் செய்வதற்குச் சிறந்த நூல்.
விகில ரூபா 1-25. முருகன் திருப்புகழ்மாலை
இதில் திருமுருகாற்றுப்படையும், கந்தரலங்காரம், கந்தரனுபூதி, திருப்புகழ், திருவிசைப்பா, புராணம், பிள் ளைத் தமிழ், திருவருட்பா முதலிய முருகன் தோத்திர நூல் களிலிருந்து திரட்டப்பட்ட பாடல்களும் அடங்கியுள்ளன.
விலை ரூபா 1-00. மாவைப்பதிகம் மாவையிரட்டைமணிமாலை
குமாரசுவாமிப் புலவர் இயற்றியது. விலை சதம் 12. கிடைக்குமிடம் :
கு முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை புலவரகம் மயிலனி, சுன்னுகம், P. O. (புத்தகசாலைகளிலும் பெற்றுக்கொள்ளலாம்.)


Page 15
குமாரசுவாமிப்
தி
தமிழ்ப்புலவர் சரித்திரம் சிசுபால சரித்திரம் இரகுவமிச சரிதா மிர்தம் மேகதூதக்காரிகை இராமோதக்கம் ஞானக்கும்மி யேசுமதபரி ஆசைச் சிலேடை வெண்
கண்ணகி கதை
கிடைக்குமிடம் :
கு. முத்துக்கு
சுன்னுகம்

புலவர் இயற்றிய
ரல்கள்
EFFE,
凸曹
நமாரசுவாமிப்பிள்ளே
வைரசும் மயிலுணி
P. 0. (இலங்கை)
శ్రాక్స్- శ్,
.
-