கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நொறுங்குண்டஇருதயம் கதையும் கதைப் பண்பும்

Page 1
S.
தின் முதலாவது நாவலாசிரியை மங்களநாயகம் தம்பையா
நொறுங்குண்ட இரு கதையும் கதைப் ப
ஆ. சிவநேசச்செல்வன், பி. ஏ. ஆ தமிழ் விரிவுரையாளர் யாழ்ப்பாணக் கல்லூரி
வட்டுக்கோட்டை
பாவலர் துரையப்பாபிள்ளே
நூற்றண்டு விழா மலர் மறுபிரசுரம் பகுதி 1 பக்.73-80
.
தெல்விப்பழை 라 7 = |  ܼܝ ݂ ܓ .
 
 
 
 


Page 2


Page 3
துரையப்பாபிள்ளை நூற்றண்டு விழா மலர் - ம
ஈழத்தின் முதலாவது நாவலாசிரியை மங்களநாயகம் தம்பையா
நொறுங்குண்ட இருதய கதையும் கதைப் பண்பு
தமிழ் நாவல் இலக்கிய வளர்ச்சியின் ஒரு பிரிவாக ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கிய வளர்ச்சி தனியாக ஆய்வு செய்ய வேண்டியவொரு துறையாகும். 1891ஆம் ஆண்டு வெளிவந்த ஈழத்தின் முதலாவது நாவலான உசோன் பாலந்தைக் கதை முதல் இன்றுவரை ஈழத்து நாவலாசிரியர்கள் நின்று நிலைக்கக்கூடிய நல்ல நாவல்களைப் படைத்துள்ளனர். இதன் வரலாறு சமூக பொருளாதார அரசியற் பின்னணியை யொட்டி விரிவாக ஆராயப்படவேண்டிய தொன்ருகும். தமிழ் நாவல் வளர்ச்சியில் ஈழத்தின் பங்கு என்ன என்பதனை நிர்ண யிப்பதற்கும், ஈழத்து நாவலாசிரியர்களின் போக்தினை மதிப்பீடு செய்வதற்கும் முன்னேடியாகக் காலத்துக்குக் காலம் வெளிவந்த நாவல்கள் பற்றிய தொகுட் பினையும் நாவலாசிரியர்கள் பற்றிய செய்தி களையும் புனராய்வு செய்யவேண்டும்.
ஈழத்துத் தமிழ் நாவலிலக்கியவளர்ச்சி பற்றி விரிவான ஆய்வுகள் முழுமையா இற்றைவரை வெளியாகவில்லை. உதி யாகப் பல ஆய்வுகளும் நாவல் அறிமுக! களும் ஆங்காங்கே நடத்தப்பட்டுள்ளன இத்துறையிற் சில்லையூர்ச் செல்வராசனின் பணியும், கனக. செந்திநாதனின் பணியுட
1. "மல்லிகை" - மே, ஜூன் 1972 இத இங்கு விரிவுபடுத்தப்பட்டுப் பிரசுரிக்கப்படுகின்

றுபிரசுரம்
போற்றற்குரியன: சில்லையூர்ச் செல்வ ராசனின் ஈழத்து நாவல் இலக்கியம் தொகுப்பு முயற்சியாக அமைந்திருப்பினும் ஆங்காங்கு நூல்களைப் பற்றி அளித்துள்ள குறிப்புக்கள் மிகவும் பயனுடையவை. கலாநிதி க. கைலாசபதி தமது தமிழ் நாவலிலக்கியம் என்ற நூலில், சுதந்திரம் பெற்றபின்னர் ஈழத்தில் ஏற்பட்ட நாவ லிலக்கிய வளர்ச்சியின் போக்குகளைப் பண் பாய்வு செய்துள்ளார். கனக. செந்திநாத னுடைய அறிமுகக் கட்டுரைகளும் குறிப் பிடக்கூடியவை. இக்கட்டுரைகளையும் நூல் களையும் புனராய்வு செய்யும்போது பல பழைய நாவல்களும் முக்கியமான நாவ லாசிரியர்களும் இணைக்கப்பட்டு ஆய்வு செய்யவேண்டிய தேவை உருவாகின்றது.
சில்லையூர்ச் செல்வராசன், GGOT 55 செந்திநாதன் ஆகியோருடைய நூல்களில் முதலாவது ஈழத்துத் தமிழ் நாவலாசிரியை தோன்றிய காலம் 1920க்கும் 1930க்கும் இடைப்பட்ட காலமாகக் குறிக்கப்பட் டுள்ளது. செல்வராசன் தமது 'ஈழத்து நாவலிலக்கிய வளர்ச்சி" என்ற நூலில்,
"செ. செல்லம்மாள் எழு தி ய இராசதுரை என்னும் நாவல் 1924இல் வெளியானது. துணிந்தெழுதிய முதல்
Nல் முதன்முதலாக வெளிவந்த இக்கட்டுரைக்கொடர்
• 7گے0

Page 4
- 2
நாவலாசிரியை என்றபடியாலும், தொகை யில்லாவிட்டாலும் கதைத் தன்மையிற் பொதுமை காண முடியு மென்பதாலும் தமிழ்நாட்டுக் கோதை நாயகியாருடன் இந்த அம்மையாரை ஒப்பிடுவது தவிர வேறெதுவும் சொல் வதற்கில்லை'2 என்று குறிப்பிடுகிருர்,
மங்களநாயகம் தம்பையா எழுதிய நொறுங்குண்ட இருதயம் என்ற நாவல் இதற்கு முன்னரே 1914இல் வெளியாகி யுள்ளது. கதையமைப்பிலும் நோக்கத்தி லும் சூழ்நிலைச் சித்திரிப்பிலும் தனக் கெனவுரிய பாணியைக் கொண்டு, யாழ்ப் பாண மண்வாசனை வீச எழுதப்பட்ட இந்த நாவலின் ஆசிரியை, அக்காலத்திற் பிரபல நியாயதுரந்தரராகவும் அறிஞராக வும் விளங்கிய கலாநிதி ஐசக் தம்பையா அவர்களுடைய மனைவியாராவர். ஆங்கி லத்திலும் தமிழிலும் பூரண அறிவு நிரம்பி யவரும், பதிவிரதை விலாசம் முதலிய பல சிறந்த நூல்களை எழுதியவருமாகிய ரி. டபிள்யூ. பி. குமாரகுலசிங்க முதலியாரின் கனிஷ்ட புத்திரியான இவர் ‘நொறுங் குண்ட இருதயம்’ நாவலைத் தவிர அரிய D6)f என்ற நாவலையும், அனுபவக் களஞ்சியம் என்ற கட்டுரைத் தொகுப்பை யும் எழுதி வெளியிட்டுள்ளார்.4 அனுபவக் J56T655ub Taste and See 6T6irp Log, L-d துடன் கலாநிதி ஐசக் தம்பையா அவர்க ளால் ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப் பட்டு வெளியிடப்பட்டுள்ளது. நாவலின் பொதுப் போக்கினைக் கிடைத்த பகுதியின் மூலம் ஒரளவுக்கு உணரமுடிகிறது. முகவுரையோ நாவலின் முடிவோ கிடைக்க வில்லை. ' அனுபவக் களஞ்சியம் " என்ற நூலின் அட்டையில் நொறுங்குண்ட இருதயம்', 'அரியமலர்" ஆகிய சரித்திரங் களின் ஆசிரியை மங்களநாயகம் தம்பையா
2. செல்வராசன் சில்லையூர் - ஈழத்தில் தமிழ் நா 3. இந் நாவலின் பிரதியொன்று யாழ்ப்பாணக் கல்லு 4. அரியமலர் என்ற நாவலின் குறிப்பிட்ட நூறு பக்க
ஆகிய நூல்களையும் தெல்லிப்பழையில் வசிக்கும் Quévy uin ijpt tuft 5331ás a Gögyrflü Luangpu - a 4 5. C. L. S. Society, Madras (1914)

என்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. "Taste and See GT Görpg5T65) gör L96áv gyl 60– யில் உள்ள விளம்பரத்தில் ‘நொறுங்குண்ட இருதயத்தின் இரண்டாம் பதிப்பு வெளி யான செய்தியும் குறிக்கப்பட்டுள்ளது.
ம ங் கள நாயகம் தம்பையாவின் வாழ்க்கை வரலாறு எதிலும் குறிப்பிடப் படவில்லை. கலாநிதி ஐசக் தம்பையாவின் வாழ்க்கை வரலாறுகளிலும் நூல்களிலும் கூட எவ்வித குறிப்பும் காணப்படவில்லை. இவர் குடும்பத்தில் முக்கியமானவராக இன்று வாழ்ந்துவரும் திருமதி கனகசுந் தரம்பிள்ளையவர்கள் தந்த குறிப்புக்கள் மிக முக்கியமானவை. மங்களநாயகம் தம் பையா ஆங்கிலத்திலும் தமிழிலும் மிகுந்த பயிற்சியுடையவர். எப் பள்ளிக்கூடத்தி லும் சேர்ந்து கற்காத இவர் மிசனரிமா ரின் தொடர்பினலும், குடும்பத்தினரின் கல்விப் பின்னணியாலும், செல்வாக்கின லும் இல்லத்திலேயே கல்வி பயின் முர். இளமை தொடக்கம் தந்தையார் உதவி யுடனும் மற்றையோருதவியுடனும் பெற்ற கல்வியும் வாழ்ந்த கல்விச் சூழலும் காரண மாக நூல்களில் ஆர்வங்கொண்டு படித்து அறிவுவளம் பெற்ருர், நிரம்பிய கல்வி யறிவும் புகழும் வாய்ந்த கலாநிதி ஐசக் தம்பையாவைக் கணவராகப் பெற்றது இவருக்குப் பெரும் வாய்ப்பை ஏற்படுத் தியது.
இத்தகைய வாய்ப்புக்களைப் பெற்ற பின்னரே இவர் எழுதிய நொறுங்குண்ட இருதயம் வெளியாகியது. சென்னைக் கிறித்துவ இலக்கிய சங்க ஆதரவில் இந் நூல் வெளியிடப்பட்டது. தொடர்ந்து வெளிவந்த "அரியமலர்' என்ற நாவலும், ‘அனுபவக் களஞ்சியம் என்ற நூலும் மலே யாவிற் கணவருடன் வாழ்ந்த காலத்தில் எழுதப்பட்டுப் பினங்கு பிரிட்டிஷ் அச்சகத்
வல் வளர்ச்சி {முதற்பதிப்பு '67) பக். 21.
ாரி நூல் நிலையத்திற் காணப்படுகின்றது.
5 šis &T qub Jepu u náš, 36 GMT659uulub “Taste and See” கிருமதி கனகசுந்தரம்பிள்ளையிடம் இக் கட்டுரையாசிரியர் உப்பகுதியில் ஒப்புவித்துள்ளோர்.

Page 5
தில் 1921 டிசம்பரில் அச்சிட்டு வெளியிட பட்டவை. Taste and See" என்ற ஆங்கி மொழிபெயர்ப்பு 1922ஆம் ஆண்டி மலேயாவில் வெளியிடப்பட்டுள்ளது. கல நிதி ஐசக் தம்பையாவின் வாழ்க்கை பின்னணிஅம்மையாரின் எழுத்தார்வத்ை வளர்த்திருக்கவேண்டும். வழிமுறையா புலமைக் குடும்பத்திலே தோன்றியை யால் பாடல்களும் புனைந்துள்ளார். தா அவ்வப்போது எழுதிவைத்த " அம்மானை' பாடல்களையும் "அனுபவக் களஞ்சியப் என்ற நூலின் இறுதியிற் சேர்த்துள்ளார்.
ஈழத்தின் முதலாவது நாவலாசிரிை யாக அமையும் இவ்வம்மையாரின் இ நாவல்களும் கட்டுரைத் தொகுப்பும் அ காலக் கிறித்துவப் பின்னணியின் சமூக பிரச்சினைகளையும் போக்குகளையும் உண வாய்ப்பளிக்கின்றன. அம்மை யாரி 6 வாழ்க்கைப் பின்னணியையும் அனுபவ களையும் அவரது ‘அனுபவக் களஞ்சியத்தி 6 மூலம் உணர்ந்துகொண்டு "நொறுங்குண் இருதய"த்தையும் 'அரிய மலர்' என்ற நா லின் உதிரிப்பாகங்களையும் படிக்கும்போ! அம்மையாரின் நாவல் வெற்றியை உண முடிகிறது.
கல்விக் குடும்பப் பின்னணியும் கிறி, துவ நம்பிக்கையும் கொண்ட அம்மைய ரின் நூல்களிற் கிறித்துவ பிரச்சார பண்பும் போதனை மனேநிலையும் தெளி வாகக் காணப்படுகின்றன. யாழ்ப்ப ணத்துச் சூழலின் சித்திரிப்பும் கை நிகழுமிடமாகிய தெல்லிப்பழை, கீரிமை ஆகிய இடங்களின் வருணனையும் ஆசிரிை யின் சிறந்த எழுத்து நடையினூடே இை யோடிச் செல்வதை உணரலாம்.
'நொறுங்குண்ட இருதயத்தின் கதைை யும் கதைப் பண்பையும் நோக்கமுன்னர் அம்மையார் எழுதிய முகவுரையையும் பதிப்பாளரின் குறிப்புக்களையும் நோக்( வது சாலவும் பொருத்தமானது.
** சன்மார்க்க சீவியத்தின் மாட் மையை உபதேசத்தால் விளக்குவதிலு உதாரணங்களாலுணர்த்துவது மிகவு!
6. மங்களாாயகம் தம்பையா, நொறுங்குண்ட

- 3 -
:
நன்மை பயத்தற் கேதுவாகும் என் றெண்ணி இக் கதையை எழுதத் துணிந் தேன். யாதேனும் ஒரு விடயத்தை உவமைகளாலும் ஒப் பனை களாலும் மனதிற் பதியப்பண்ணுதல் இலகுவென் றது யாவருங் கை கண்ட நல்வழியாகை யால் சில காரியங்களைப் போதனையாக வும் புத்திமதியாகவும் இச் சிறுபுத்தகத்தி லடக்க மனமேவப்பட்டேன். இக்கதை களிற் காணுங் குற்றங் குறைகளைச் சிறியனவா யெண் ணி யாதாயினும் நன்மைப் பகுதியிருக்குமாயின் அதனைப் பெரிதாய் நினைந்து மெச்சிக்கொள்ளு மாறு அதிக தாழ்மையுடன் வேண்டி நிற்கின்றேன். இக் கதையை வாசிப்பதால் ஒரு ஆத்மாவுக்குத்தானும் அருட்சியுண் டாகுமாயின் அதன் மகிமை கருணை நிறைந்த எம்பெருமானுக்கே உரியது.”8
மேலுள்ள முகவுரைப் பகுதியில் தடிப் பெழுத்துக்கள் மாத்திரம் எம்மாலிடப் பட்டவை. முக்கிய வாசகங்களை முழுமை
யாகவே தந்துள்ளேன்.
கிறித்துவ மதத்தில் ஆழ்ந்த விசுவாச முடைய கல்விக் குடும்பத்திலே தோன்றி யவர் மங்களநாயகம் தம்பையா. இவ ரது "அனுபவக் களஞ்சியம்’ என்ற நூல் கிறித்துவ மார்க்கத்திற் பலரையும் ஈடுபடுத்தவேண்டும் என்ற நோக்கில் எழுந்தது. போதனையாகவும்புத்திமதியாக வும் என ‘நொறுங்குண்ட இருதய'த்தின் முகவுரையிற் கூறும் கருத்தின் முழுமையை "அனுபவக் களஞ்சிய" முகவுரையில் மேலும் தெளிவாக உணரலாம்.
** "அனுபவக் களஞ்சியம்’ என்னும் இச் சிறியபுத்தகத்தின் முழுநோக்கமும், நம் சகோதரிகள் கிறிஸ்துவின் அன்பில் வளர்ச்சியடையத் தெண்டிக்கவேண்டும் என்பதுவும் தம் நாட்டிற்கும் தமக்கும் நன்மை பயக்கும் நோக்கங்கொண்டு தேவ பக்தியை வளர்க்கும் காரியங்களில் தம் மனத்தைப் பதியவைக்கவேண்டு மென்பதுவுமே. நம் சிறந்த நாட்டில் நன்கு வாசித்தும் கற்றும் உலக காவியம்
இருதயம் முகவுரை (1914) பக். 3

Page 6
சீர்திருத்தம் முதலியவற்றில் செவ்வனே தேர்ந்த அநேக சீமாட்டிக ளிருக்கின் றனர். அவர்கள் தாம் கற்றவாறும் அறிந்தவாறும் கிறித்து மார்க்க வளர்ச்சிக் குரிய காரியங்களில் மற்றேருக்கு உபயோக மாயிருக்க முன்னேறிவரத் தெண்டிக்க வேண்டு மென்பதே நம் வாஞ்சை. இவ் வாஞ்சை சித்தியாகவும் இப் புத்தகம் அநேகருக்குப் பிரயோசனமாயிருக்கவும் கருணுநிதியாகிய எம்பெருமான் இதனை ஆசீர்வதிப்பார்."
ஆசிரியையின் மனுேநிலையையும் நோக் கத்தையும் உணர்ந்துகொள்ள மேற்காட் டிய முகவுரைப் பகுதிகளே போதுமானவை யாகும். ஆசிரியையின் முதன்மையான நோக்கம் சன்மார்க்க சீவியத்தின் மாட்சி மையைத் தெளிவாக உணர்த்த வேண்டு மென்பதேயாகும். கதையை வாசிப்பதன் மூலம் ஓர் ஆத்மாவுக்காயினும் அருட்சி யேற்படுத்துவதையே விரும்பியுள்ளார். மிசனரிமாரின் போதனைநெறி வழியில் ஆசிரியையும் தமது கருத்து வெளிப் பாட்டுக்கு நாவலிலக்கியத்தினைக் கருவி யாகக் கொள்ள முயன்றுள்ளார்.
நாவலின் முற்பகுதி கதையோட்டம் நிறைந்ததாகவும் பிற்பகுதி தத்துவ விசா ரம் நிறைந்ததாகவும் காணப்படுகின்றது. ராஜமையரின் கமலாம்பாள் சரித்திரத்தின் முற்பாதி நாவலாகவும், பிற்பாதி கன வாகவும் விளங்குவது போல இந் நாவலும் அமைந்திருப்பதைக் காணலாம். இந் நாவ லில் வரும் 'கண்மணி" என்ற பாத்திரத்திற் குத் தொடர்ந்து வரும் துன்பங்களை ஊடக மாகக் கொண்டு ஆசிரியை தத்துவ விசாரம் செய்துள்ளார். உதாரணமாகப் பின்வரும் பகுதியைக் காட்டலாம்:
* அன்பும் தயையும் கருணையும் நிறைந்த அருமைப் பரமபிதாவே ! தாயி னுங் கருணை நிறைந்த கருணைக் கடலே உம்மிடத்தில் அடைக்கலம்புகுந்த என்னை நீர் கைவிட்டுவிட்டால் நான் என்ன செய்வேன், எனக்கொரு கதியுமில்லையே
7. மங்கள நாயசம் தம்பையா, நொறுங்குண்ட g
7.அ. மே, கு. நூ. - நூற்பிரயோகம் - பக். 5 t_j|
அவதானிக்கத்தக்கது. நூற்பதிப்பாசிரியரும் Point Pedro.

4 -
என் ஆபத்து வேளையில் எனக்கு நீர் சகாயஞ் செய்யாவிட்டால் நான் எங்கே போவேன்? என்னுடைய கவலையை ஆர்க்குரைத்தாறுவேன்? ஆரிடமிருந்து சகாயம் பெறுவேன்? இவ்விக்கட்டி லிருந்து என்னை நீர் விடுவிக்காதுவிட்டால் நான் எங்கே ஒடி ஒளிப்பேன் ? என் மேற் சுமத்திய குற்றத்திற்கு நான் பாத்திரவாளியல்ல வென்பதை என் புருஷன் அறிந்துகொள்ளச் செய்யும்படி உம்முடைய பாதாரவிந்தத்தில் விழுந்து கெஞ்சுகின்றேன் "'."
கதையிற் பின்னணியாக வரும் சமூக மாந்தரின் தீய மனேநிலை ஆசிரியையின் கண் டிப்புக்குள்ளாகின்றது. ஆத்மீக வாழ்க்கை யின் மூலம் மனவமைதி யடைவது பல்வே றிடங்களிலும் வெளியாகின்றது. பல்வேறு வாழ்க்கைச் சிக்கல்களையும் உணர்த்தும் ஆசிரியை சமூகப் பிரச்சினையை ஆழமாக நோக்கி எளிமையாகப் பிரதிபலித்துள்ள மையும் தமது கருத்து வெளிப்பாட்டுக்கு நாவலிலக்கியத்தைக் கையாண்டுள்ளமை யும் மனங்கொள்ள வேண்டியவை.
இந்நூலின் பதிப்பாசிரியர் ஜே. ரி. அப்பாபிள்ளை அவர்கள் தமது உரையிற் கூறியவையும் ஆசிரியையின் நோக்கை யும் நாவலின் போக்கையும் தெளியவைக்க உதவுவதாகும்:
"" தம்முடைய அரிய உதரக் கணிக ளாகிய பெண்மக்களைத் தெய்வ பயமற்ற துட்டர் கையில் மனைவியாகக் கொடுக் கும்படி பெரும்பாலு மேவிவிடுகின்ற பொருளாசையெனும் கொடிய நோய் வாய்ப்பட்டு வருந்துந் தந்தை தாயரது நிலைமையைக் கண்டு பரிதவித்து அரிய சற்போதமாகிய மருந்தை இனிய சரித்திர ரூபத்துட் பொதிந்து ஆசிரியர் கொடுத்திருக்கின்றர். இதனுல் அநேகர் இம்மை மறுமை யென்னும் இருமைக்கு முரிய பெரும் பயனடைவார்களென்பது நமது நம்பிக்கை ****
}ருதயம் - பக். 209. திப்புரை நூற்பிரயோகம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது Gafuyuh J. T. Appapillai, May, 24th 1914,

Page 7
சமூகத்திலே பொருளாசை அந்தஸ்து என்ற போலி உணர்வுகளாற் பெண்கள் மன விருப்பிற்கு மாருகத் திருமணம் செய்துவைக்கப்பட்டு வாழ்க்கையில் நிறை வையும் அமைதியையும் இழந்து தவிப் பதைக் குறிப்பாகப் பாத்திரவாயிலாக ஆசிரியை விளக்குகிருர், மனமுறிவுற்ற பெண்களுக்குக் கதி சன்மார்க்க சீவியம் என்பதை நிறுவிச் சமூகப் பின்னணியில் புதிய ஒளியைப் பாய்ச்ச ஆசிரியை மிகவும் முயன்றுள்ளார். ალფ-e
. நொறுங்குண்ட இருதயம்" என்ற நாவ லின் பெயரும் அக்காலத்து நாவல்களுக் கிடப்பட் பெயர் மரபில் ஒரு புதுபை யாகும். புதுமைக் களை வீச இடப்பட்ட இட் பெயர் இவரது ‘அனுபவக் களஞ்சிய நூலில் உள்ள அம்மானை நடைப் பாடலில் ஓரி அடியாக வருவதையும் அவதானிக்கலாம்
* அடிமைக் குனையன்றி
ஆதரவு இல்லையென்றுன் அடியின் துணைதழுவி
அண்ணலே யுன்னண்டை வந்தேன்நான் பொய்யாத
வையகத்து வேதனையால் நொந்து மிகவாடி
நொறுங்குண்ட பாவியெனின்' என " இறைவனைக் கெஞ்சுதல் " என்ற பகுதியிற் கூறுகின்றர். ஆசிரியை, நொறுங் குண்ட இருதயமாகக் கதைப்பின்னணியிற் காட்டும் பாத்திரம் மீட்சியடைய ஆத்மீக வெற்றி வேண்டும் என்ற உணர்வு கொண் டுள்ளார். அவர் இட்ட பெயர், புதுமைட பெயராக மட்டுமன்றி-அவரது மனதில் ஆழமாகப் பதிந்த பெயராகவும் உள்ளது அவதானிக்க வேண்டியதாகும்.
ஆசிரியை இள  ைம யி ல் வாழ்ந்த தெல்லிப்பழை என்ற கிராமத்தின் கிறி: துவப் பின்னணியும் கல்விச் சூழலும் அ6 ரது நாவல்களிலே தெரிகின்றன. நொறு குண்ட இருதய 'த்தின் கதையமைப்ை யும் பாத்திரப் படைப்பையும், நடை உத்தி என்பவற்றையும் நோக்குவதற்
8. மங்கள6ாயகம் தம்பையா, அனுபவக் களஞ்
9. Federal Rubber Stamp Co. Book Sel

5一
:
முன்னேடியாகக் கூறியவை வழித்துணை விளக்கமாக அமையுமென நினைக்கின்றேன். ஆசிரியையின் " அரியமலர் " என்னும் இரண் டாவது நாவல் ‘பெடரல் ரப்பர் ஸ்ராம்ப் கொம்பணி புத்தக விற்பனையாளர், பினங், கோலாலம்பூர் 9 என்ற பதிப்பகத்தினரால் வெளியிடப்பட்டுள்ளது. " அரியமலர் "நாவ லுடன் * நொறுங்குண்ட இருதய " நாவலை யும் முழுமையாகப் பெற்று ஒப்பியலாய்வு செய்வது பயனுள்ளதாகும்.
மங்களநாயகம் தம்பையா ஈழத்து நாவல் இலக்கிய வளர்ச்சியில் மிக முக்கிய மானவர். பெண் எழுத்தாளர்களில் முதன் மையாகக் கொள்ளக்கூடிய பண்புள்ளவர். நாவலை ஆசிரியையின் வாழ்க்கைப் பின் னணியுடன் இணைத்துத் திறனய்வு செய் வதன் மூலம் இதனை நிர்ணயிக்கலாம். இதற்குப் பின்னணியாகச் சில பொதுப் பண்புகளை நோக்குவது பொருத்தமாகும்.
இருபதாம் நூற்றண்டின் முதல் மூன்று த சாப்தங்களில் ஈழத்தில் வெளியாகிய இலக்கிய ஆக்கங்களைக் குறிப்பாக அவதா னிக்கும் பொழுது சில தனிப் பண்புகளை நாம் வகைந்து கொள்ளலாம். சமுதாயச் சீர்திருத்தக் கருத்துக்களும், சமூக விழிப் புணர்ச்சியும் ஈழத்தின் பல்வேறு பகுதி களிலும் பல்வேறு உருவங்களிற் காணப் பட்டன. சமூகத்தின் போக்கிற் கிணங்கக் காலத்தின் குரலாகப் பன்முகப்பட்ட உணர்வுகளையும் காலத்தின் தேவைகளை யும் உணர்த்தும் இலக்கியவடிவங்கள் தோன்ற ஆரம்பித்தன.
19ஆம் நூற்ருண்டின் முற்பகுதியி லிருந்து படிப்படியாக உருவாகிய ஆங்கிலக் கல்வி வளர்ச்சியின் தாக்கம் சமூகத்திற் பரவலாகப் பலவிளைவுகளை ஏற்படுத்தியது. கிறித்துவ மிசனரிமாரின் சமய இயக்கங் களும் அவற்றின் காரணகாரியத் தொடர் பான கல்விச் சாலைகளும் பல்வேறு கிராமங்களிலும் ஆங்கிலங் கற்ற மத்திய வகுப்பினரைப் பொதுவாகஏற்படுத்தியது. பரந்துபட்ட நூற் கல்வியும் விரிந்த சிந்தனை வளர்ச்சியும் ஒன்றுசேர்ந்து பலரையும்
சியம் பக். 32 lers, Penang, Kulalampur.

Page 8
pasermo
சமுதாயப் புரட்சியையும் மாற்றங்களையும் அவாவிச் செல்லும் நிலைக்கு இட்டுச் சென்றன. தாம் மனங் கொண்ட சமூக சீர்திருத்தக் கருத்துக்களை மக்கள் மத்தியிற் பரவச் செய்யப் பலவழிகளைக் கையாண்ட னர். சாதாரண மக்களை நோக்கிப் பிரசார நோக்கிலே எழுத ஆரம்பித்தமை எளிமை யாக எழுதவேண்டிய தேவையை ஏற்படுத் தியது. வசன ரூபத்திலும் கவிதை ரூபத்தி லும் கருத்துக்கள் வெளியாயின.
சமூக சீர்திருத்த அடிப்படையிலும் கிறித்துவப் பிரசார நோக்கிலும் தமது இருநாவல்களையும் கட்டுரைத் தொகுப்பை யும் வெளியிட்ட மங்களநாயகம் தம்பையா அக்காலத்துச் சமூக பொருளாதாரப் பின்னணியின் இயக்கசக்தியால் உந்தப்பட் டார். குறிப்பாகத் தெல்லிப்பழை என்ற கிராமத்தில் ஏற்பட்ட சமூக மாற்றம், சீர் திருத்த இயக்கம் ஆதியன உருவாக்கிய சிந்தனைத்தாக்கங்கள் ஆசிரியையின் இலக் கிய முயற்சிக்கு விளைநிலமாக அமைந்தன எனலாம். மக்களின் அகநிலையிலும் புற நிலையிலும் பரவலாகக் காணப்பட்ட போலி உணர்வுகளைத் தமது நாடகம், கட்டுரை, கவிதைகள் மூலம் பரவலாகக் கண்டித்த பாவலர் தெ. அ. துரையப்பா பிள்ளையவர் களும் இதே காலத்தவராவர். "பன்முகப் பட்ட உணர்வுகளோடு பாவலர் அவர்கள் வெளிப்படுத்திய கருத்துக்களின் தாக்கம் சமூகத்திற் புத்துணர்ச்சியை ஏற்படுத்தி யது. பழம் பெருமை பேசி வாழும் யாழ்ப் பாணச் சமூகத்தைத் திருத்தும் பணியில் அமைந்த பாவலரின் பாடல்கள் அக்கா லத்தில் மிகுந்த செல்வாக்குப்பெற்றன.”10 ஐசக் தம்பையா அவர்களின் குடும்பத்தி னருடன் பாவலர் அவர்கள் கொண்டிருந்த தொடர்பும் கருத்துப் பரிமாறல்களும் மங்களநாயகம் தம்பையா அவர்களின் இலக்கிய ஆக்கத்திற்கு ஒரு காலாக விளங் கினவெனவும் கூறலாம். ஆங்கிலப்போலி நாகரிகத்தின் வெறுமையினலே தன்னிலை யிழந்து வெற்று வாழ்க்கையை அவாவிய
10. சிவநேசச்செல்வன் ஆ. மல்லிகை - ஜூலை 1
11. திருமதி கனகசுந்தரம்பிள்ளை அவர்கள் கூறிய கரு
கின்றது.

6 -
மத்தியதர வர்க்க மக்களையும் பின்தங்கிய மக்களையும் ஒன்றுசேர்த்து வழிப்படுத்த முனைந்த பாவலர் துரையப்பாபிள்ளை அவர் களின் போக்கு மங்களநாயகம் தம்பையா அவர்களைக் கவர்ந்ததில் வியப்பில்லை. மங்களநாயகம் தம்பையா, பாவலர் அவர் களைப் போலவே சீதனவழக்கம், தீய வழியிற் பொருளாசை, தெய்வபக்தி யின்மை போன்றவற்றை "நொறுங்குண்ட இருதயம்" என்ற நாவலிற் குறிப்பாக அலசுகின்ருர்,
கதை, பாத்திரப்படைப்பு, நடை என்ற மூன்று பகுதிகளாகப் பிரித்துச் சுருக்கமாக "நொறுங்குண்ட இருதய' நாவலை ஆராய்வு செய்தல் பல பண்புகளை யும் விளங்கிக்கொள்ளத் துணைசெய்யும். கதையைச் சுருக்கமாக நோக்குவோம்.
- சுப்பிரமணியருக்குள்ள பிள்ளைகளிற் கண்மணி, பொன்னுத்துரையாகிய இரு வரும் மூத்தவர்கள். கண்மணியின் அயல் வீட்டுக்காரி பொன்மணி அவளுடைய சிநேகிதி. பொன்னுத்துரை பொன்மணி யைக் காதலிக்கிருன். அப்பாத்துரை அரு ளப்பாவின் தம்பி. அருளப்பா இணக்க மற்ற பெற்றரை இணங்கச்செய்து கண் மணியை விவாகஞ்செய்கிருன் , பொன்னுத் துரையின் காதலை அறிந்தும் பொன்மணி யின் பெற்றேர் அவளை அப்பாத்துரைக்கு விவாகம் பேசுகின்றனர். பொன்மணி பொன்னுத்துரையைத்தான் மணம் முடிப் பேன் என்று உறுதி பூண்டு வாக்களித்துப் பெற்ருர் முடிவை எதிர்க்கிருள்.
கண்மணி தன் கணவனுக்கு வந்த கல்கத்தாக் கடிதம் ஒன்றை அவன் உடன் பாடின்றிப் படித்து அவனது கல்கத்தா வாழ்வில் ஒரு பெண் சம்பந்தப்பட்டிருப் பதை அறிகிருள். கடிதம் வாசித்த உண் மையைக் கணவனுக்குக் கூறி அவன் தண்ட னைக்கும் வெறுப்புக்கும் ஆளாகின்ருள். கணவனது பையிற் பணம் களவுபோக அக்களவு கண்மணிமேற் சுமத்தப்படுகின்
972 'பாவலர் துரையப்ப பிள்ளை நினைவு இதழ்".
ந்தை ஆதாரமாகக் கொண்டே இக் கருத்து எழுதப்படு

Page 9
றது. வேண்டாப்பெண்ணுகத் தாய்வீடு செல்லவும் அனுமதிக்கப்படாமல் வாழ்ந்து இரு குழந்தைகளுக்குத் தாயாகிருள். கற்புச் செல்வியாகித் துன்பந் தாங்கிக் கணவன் உவப்பன செய்து பொறுமையின் பூஷணமாக வாழ்கிருள் கண்மணி.
அப்பாத்துரைக்கும் பொன்மணிக்கும் விவா சப்பதிவு நிகழும் நாளில் தப்பி யோடும் ஒழுங்கிருந்தும் அது வாய்க்கப்பெ ருத பொன்மணி தான் பலவந்தம் காரண மாகக் கலியாணப் பதிவுக் கையெழுத்திடுவ தாகச் சபையோருக்குக் கூறிக் கையொப் பம் வைக்கிருள். தன் திருமணத்துக்குத் தடையாக நிற்பவன் பொன்னுத்துரை யென அறிந்து அவன் மீது குரோதம்கொள் கிருன் அப்பாத்துரை. சென்ற பொன்னுத் துரையை அருளப்பாவும் அப்பாத்துரையும் சட்டிப்பிடித்து நையப்புடைக்கின்றனர். பொன்னுத்துரையின் நண்பன் நவரத்தினம் இரகசியமாக வந்து அப்பாத்துரையைக் காயப்படுத்தி விடுகிருன், அக்காயம் பொன்னுத்துரை செய்ததென்று பொய் வழக்குத் தொடருகிருன் அப்பாத்துரை. ஆணுல் வழக்குத் தீர்ப்பில் பொன்னுத்துரை விடுதலையாகிருன் ,
பின்னர் பொன்மணியின் கலியான ஆரவாரம் நடக்குங்கால் அப்பாத்துரை வீட்டிற் சிறு பிள்ளையின் காப்புக் களவாடப் படக் கண்மணிமேல் அக் களவு சுமத்தப் படுகிறது. கணவனுல் அவள் தண்டிக்கப் படுகிருள். சில நாட்களின் பின் கண்மணி பாதிரியாரொருவரின் சமயப் பிரசங் கத்தை வீட்டிற் கேட்டுக் கிறித்துமதச் சார்புடையவளாகிருள். தண்டிக்கப்பட்ட கண்மணி வீட்டின் ஒருபுறத்தே நோய் வாய்ப்பட்டுக் கிடக்கிருள்,
விவாக தினத்தன்று மாப்பிள்ளை வந்த வேளையில் பொன்மணி தப்பி ஓடிப் பொன்னுத்துரைகொணர்ந்த கரத்தையில் ஏறி மண்டைதீவுக்குப் போகிருள். கண் மணியையும் பொன்னுத்துரை அழைத்துச் சென்றுவிடுகிறன். ஏமாந்த மாப்பிள்ளை அப்பாத்துரை பொன்மணியின் தங்கையை மணந்துகொள்கிருன், மணவாழ்விற் பிடிட் பில்லாமல் கொழும்பு சென்று அப்பாத் துரை கடனளியாகிருன், அருளப்பா

7 -
கண்மணியின்றிப் பிள்ளைகளோடு இருக்கும் நாளில் கண்மணி பொன்னுத்துரையாகி யோர் வீடுவந்து சேர்கின்றனர். கண் மணிக்கு நோய் படிப்படியாக ஏறுகிறது. அருளப்பா குழந்தைகளைத் தாய்வீட்டுக்கு அனுப்பிவிடுகிறன். கண்மணி யிறக்கமுன் ேைர பொன்மணி பொன்னுத்துரை விவாகம் நடைபெறுகிறது. அருளப்பா வீட்டிற் களவுபோன பொருள்களெல்லாம் பூரணம் என்னும் வேலைக்காரியிடம் அகப்படக் கண்மணியின் தூய்மையை அருளப்பா உணர்ந்து கண்மணியைத் தேடிச் செல்கிருன். அவனை வரவேற்றுப் பேசியவாறே கண்மணியின் ஆவி பிரிகிறது. தன் கொடுமையை உணர்ந்த அருளப்பா பிறதேசம் சென்று முதுமையில் மீண்டு வந்து, மணம் முடித்து வாழும் மகளுடன் இறுதிநாளைக் கழிக்கிருன்,
கண்மணியின் வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களும் அவளைச் சூழவுள்ள சமூகத்தின் அபிலாசைகளுமே கதையில் முழுமையாகச் சித்திரிக்கப்படுகின்றன. ஆரம்பம்முதல் இறுதிவரை மன உணர்வுகளுட் சிக்கித் தவிக்கும் இலட்சிய பாத்திரமாக வளர்க் கப்படுகின்ருள். அருளப்பா, அப்பாத்துரை ஆகிய இருவர் தீய பண்புகள் கொண்ட எதிர்நிலைப் பாத்திரங்களாகப் படைக்கப் படுகின்றனர். உப பாத்திரங்கள் யாவும் செவ்வனே படைக்கப்பட்டுள்ளனர். மொத் தத்தில் கதையை வளர்த்துச்செல்லும் பண்பில் நாவலாசிரியை நல்ல வெற்றியை யடைந்துள்ளாரென்றே கூறவேண்டும்.
இயல்பான யாழ்ப்பாணப் பேச்சு வழக்கு நடையைப் பரவலாக ஆசிரியை கையாண்டுள்ளார். ஆங்கில அறிவின் பய ஞகத் தமிழ் வசன நடையில் நெகிழ்வு காணப்படுகிறது. ஆற்றெழுக்குப் போன்ற வசன நடை கதைப்போக்கில் விறுவிறுப்பை ஏற்படுத்துகின்றது. மண்வாசனை வீசும் சொற்களை இடையிடையே பெய்துள்ளமை ஆசிரியையின் நடைக்கு மெருகூட்டியுள்ளது. கரத்தையொன்று ஓடிக் குடைக் கடிக்கும் காட்சியைக் கூறுவதை அவதானிக்கும் போது ஆசிரியையின் நடைப்போக்கையும் சொல்லாட்சியையும் நோக்கலாம்.

Page 10
annamma
"வழியிலுள்ள ஒரு கோயிலுக்குச் சமீபமாய் வந்த தருணம், கோயில் மேள வாத்தியத்தைக் கேட்டு, வயோதிகரின் மாடுகள் வெருண்டோடி முன் சென்ற வாலிபனுடைய ஒற்றைக் கரத்தையில் மோத, அக் கரத்தை குடைக்கடித்து பக்கத்திலுள்ள கானுக்குள் விழுந்தது. சுப்பிரமணியரின் மாடுகள் அடக்க நில் லாது கால்மைல் தூரம் வரையில் ஒடவே கரத்தைக்காரன் தங்களுக்கு அபாயம் நேரிடாது தப்பிக்கொள்ளும் பொருட்டு மணற்றரையான ஓரிடத்தைக் கண்டு மாடுகள் அங்கிருக்குமாறு நாணயத்தை அப்பக்கமாய்ச் சுண்டப்பிடிக்க அவைகள் மணலில் ஒடிக்கொள்ளச் சக்தியற்று நின்றுவிட்டன. மாடுகள் வெருண்டு புகைவனமாய் ஓடுவதைக் கண்ட கண்மணி யும் அவள் தாயாரும் நடுநடுங்கித் " தெய்வமே, தெய்வமே " என்று பதறிக் கத்தினர்கள் ' 12
இப் பந்தியில் பேச்சு வழக்குச் சொற் கள் கலந்துள்ளமைபோல நாவல் பூராவும் விரவியுள்ளன. குறிப்பாக ஆரம்பகால நாவ லாசிரியர்களின் பண்பு கதை வளரும் போக் கிற் காணப்படுகிறது. கதை முழுமையாகத் தானே யெடுத்து மொழியும் நிலையாகவே காணப்படுகிறது. பாத்திரங்களின் உரை யாடல்கள் கதையில் யதார்த்தமாக அமை யாது இடையிடையே செயற்கைப் பண்பு கலந்து விளங்குகின்றன. சுருங்கக் கூறின் கதை இலட்சியப்போக்குடன் நீதி, நேர்மை,
12. மங்களநாயகம் தம்பையா, நொறுங்குண்ட இ
திருமகள் அழுத்தகம், சுன்னகம்.

3 -
கடவுள் விசுவாசம் என்ற கோட்பாடு களின் பின்னணியில் வளர்ந்து செல்கின் றது. இடையிடையே பிரச்சாரக் கருத் துக்கள் கதைப்போக்குடன் இணையாது குத்திட்டு நிற்கின்றன.
ஒட்டு மொத்தமாக நோக்குங்கால் * நொறுங்குண்ட இருதய 'க் கதையில் பாத் திரங்களின் தொகையும் போக்கும் கதை யைச் சிக்கல்நிறைந்ததாக்குகின்றது. எனி னும் காலத்தின் ஒளியில் நோக்கும்போது மங்களநாயகம் தம்பையாவின் முயற்சி முழுமையடைகின்றது எனலாம். "நொறுங் குண்ட இருதயத்திலும் பார்க்க அரிய மலர்' நாவலில் நடையும் கதைப்போக்கும் முதிர்ச்சியடைந்த நிலையில் உள்ளதையும் குறிப்பிடலாம். இரு நாவல்களிலுமுள்ள பாத்திரங்களின் பெயர் ஒற்றுமையும் கதைப் பின்னணியும் ஒன்றிற்கொன்று வளர்ச்சியும் தொடர்ச்சியும் ஆக உள்ளமை யும் அவதானிக்கக்கூடியன. தமது நோக் கத்தை நிறைவேற்றும் போக்கில் ஆசிரியை பெறும் வெற்றி நாவலின் வெற்றியாக அமைகிறது.
ஈழத்து இலக்கிய வளர்ச்சியிலே இருப தாம் நூற்ருண்டின் ஆரம்பகால நாவலிலக் கியப் பண்புகளைத் தெளிவுபடுத்தவும், பண் பாய்வு செய்யவும் "நொறுங்குண்ட இருத ய"த்தை மேலும் நுணுகி நோக்குவது பன் முகப்பட்ட பண்புகளை விளங்கிக்கொள்ள உதவுவதாகும் .
இருதயம் - (1914) பக். 7.

Page 11


Page 12
திருமகள் அழுத்தகம், சீன்னுகம்