கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மாணவர்க்கான பொ. கைலாசபதி

Page 1
39 ஆவது சி விஷ கார்த்தி Lрағi
s
ジ 2.
N
 
 
 
 

பர்க்கான கலாசபதி
Fராத்த தினம் கை 19 சதுர்த்தி buff 4
O

Page 2

மாணவர்க்கான பொ.கைலாசபதி
வாழிய நின் மலரடிகள் மெளன தவ முனிவ! மனமிரங்கி அருள் புரிந்(து) ஓர் வார்த்தை எனக்கு
Fu fl6ð பாழ் அடவி இதில் சுழன்று பாதை விடுத்(து)
960)6Ou LD பாவி ஒருவனை அளித்த பலன் உறுவை பெரிதே. _ மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை
பொ.கைலாசபதி நூற்றாண்டு விழாக்குழு 2001

Page 3
மாணவர்க்கான கைலாசபதி
முதற் பதிப்பு :
அச்சுப் பதிவு :
பதிப்பு
Title
(C)
First Edition :
Printed by
விஷ கார்த்திகை, 19, சதுர்த்தி டிசம்பர் 4, 2001
பாரதி பதிப்பகம், 430,காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம் பொ.கைலாசபதி நூற்றாண்டு விழாக்குழு
PKailasapathy ( for Students ) PKailasapathy Centenary Committee Dec. 2001
ISBN......
Bharathy Pathippakam, 430,K.K.S.Road,
Jaffna.

பொ.கைலாசபதியவர்களின் வாழ்க்கைக் குறிப்பு
திரு. ச. பரநிருபசிங்கம் ஆசிரியர் அருணோதயக் கல்லூரி,
இது கலியுகம் வைதிகநெறி வழங்கிய புண்ணிய பூமியையே சீர்திருத்தம் என்ற போர்வையிலே மிலேச்ச நாகரிகம் மூடியிருக்கிற காலம். செய்வதுந் தவிர்வதுந் தெரியாது எல்லோரும் உண்டிருந்து வாழ்வதற்கே உழலுகின்ற காலம். மிண்டிய மாயாவாதம் என்னுஞ் சண்டமாருதம் சுழித்தடித் தார்க்கின்ற காலம். பாசாண்டிகமே பரநெறி என்கின்ற காலம். உலகாயதனெனும் ஒண்டிறற் பாம்பின் கலாபேதத்த கடுவிடம் செறிந்த காலம். இப்படிப்பட்ட காலத்திலே, சிந்திக்க வேண்டியதென்ன? தவிர்க்க வேண்டியன எவை? நோக்க வேண்டிய இலட்சியமென்ன? என்றின்னோரன்ன பிரச்சினைகளை உடையவர்கள் இருந்தால், அவர்களுக்கு ஒரு கலங்கரை விளக்கமாய்த் திகழ்பவர் உப அதிபர் அவர்கள்.
இவர் பிறந்த ஊர் அளவெட்டி. சைவ வேளாண்மரபினர். தந்யைார் பெயர் வீரகத்தியார் பொன்னம்பலம். தாய் பார்பதி. பிறந்த நாள் 1902ம் ஆண்டு யூன் மாதம் ஒன்பதாந் திகதி. இவருக்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் செல்லப்பா. இவருடைய முற்சந்ததியினர் ஒருவருடைய பெயரை ஞாபகஞ் செய்யும் முகமாக, கைலாசபதி என்னும் பெயர் இவருடைய தந்தையாராலே இவருக்கு இடப்பட்டது.
இவர் தமது ஏழாம் வயசு வரையும் அயலிலிருந்த
ஆசிரியர்களிடத்திலே ஆரம்பக்கல்வி கற்றார். ஏழாவது
வயதில் வீட்டுக்குச் சமீபமாக இருந்த அமெரிக்க மிஷன்
பாடசாலையிலே இரண்டாம் வகுப்பிலே சேர்ந்து படித்தார். 1

Page 4
அக்காலத்திலே ஆங்கிலம் தெரிந்த சுற்றத்தவர்களிடம் ஆங்கில பாடமும் ஆரம்பித்தார். அப்பொழுது அயலூராகிய தெல்லிப்பழையிலே தமிழ் நாட்டிலே பிரசித்தி பெற்றவராகிய வித்துவான் சிவானந்த ஐயரவர்களிருந்தார்கள். ஐயரவர்கள் இவருடைய குடும்பத்தினருடன் நெருங்கிய தொடர்புடையவர். 1912ம் ஆண்டில் இவர் பாடசாலையில் படித்துக்கொண்டி ருக்கும் பொழுது ஐயரவர்களிடமும் கல்வி கற்பதற்கு ஒழுங்கு செய்யப்பட்டது. இரவிலே ஐயரவர்களின் வீட்டிற்குச் சென்று ஆங்கில ஆரம்ப பாட புத்தகம் (primer) கற்று வந்தார். அப்பொழுது நன்னெறிச் செய்யுள்களை மனனஞ் செய்யும்படி ஐயரவர்கள் இவரை வற்புறுத்துவதுண்டு. அந்த நேரத்தில் மனனஞ் செய்வது இவருக்குக் கசப்பாயிருந்தது. அப்படி மு ன்று மாத காலம் ஐயரவர்களிடம் படித்துக் கொண்டிருக்கையில் இவருக்குச் சிரங்கு நோய் கடினமாக வந்தது. அதோடு அந்தப்படிப்பு நின்று விட்டது."
அளவெட்டிக்கும் வேதாரணியத்துச் சைவக் குருக்கள் மாருக்கும் தொடர்புண் டென்பது யாவருமறிந்ததே. இவருடைய வீட்டுக் குப் பக்கத் தரிலே இவருடைய குடும்பத்தினராற் கட்டுவிக்கப்பட்ட ஒரு மடத்திலே வேதாரணி யக்குருக்கள்மார் இருந்து வந்தனர். அவர்கள் தேவாரப்பண் முறைகளிலே தேர்ச்சியுடையவர்களென்பது உலகப் பிரசித்தம். உப அதிபரவர்கள் சிறுபிள்ளையாக இருந்தபொழுது அவருடைய தோற்றம் எவ்வாறிருக்குமென்பது அவரைக் கண்டார் அனைவரும் ஊகிக் கத்தக்கது. குருக்கள்மார் தேவாரப்பண்களை ஒதும்பொழுது இவரைத் தங்கள் மடியிலே தூக்கி வைத்து இவருக்கும் பண்களை ஊட்டுவதுண்டு. சங்கீதத்திலே - அதுவும் பண்முறைகளிலே பயிலும் வாய்ப்பு இவருக்கு அந்தப் பருவத்திலேயே வாய்த்தது.
இப்பொழுது அருணோதயக் கல்லூரி என வழங்கப்படும் பாடசாலையில் ஆங்கிலம் கற்பதற்கு 1913ம் ஆண்டு மூன்று மாத காலம் வரையில் சென்று வந்தார்.
2

" அப்பொழுதும் சிரங்கு நோய் காரணமாகப் படிப்புத் தடைப்பட்டது. பின்பு 1914ம் ஆண்டு அளவெட்டி ஞானோதய வித்தியாசாலையில் தமிழ் ஆறாம் வகுப்பிற் சேர்ந்து, அடுத்த ஆண்டு ஏழாம் வகுப்புப் பரீட்சையிற் சித்தியடைந்தார். அக்காலத்தில் மேல் வகுப்புக்கள் இல்லை. அப்பொழுது
கோப்பாயிலிருந்த போதனாசாலையிற் சேர்த்து இவரை ஒரு தமிழாசிரியராக்கும் நோக்கத்துடன் அதற்கு வேண்டிய ஆயத் தங்களை இவருடைய தந்தையார் செய்து கொண்டிருந்தார். கொஞ்சம் ஆங்கிலம் படித்துவிட்டுச் செல்வது நல்லதென்றும் இவரைத் தமது ஆங்கில பாடசாலைக்கு அனுப்பும் படியும் மல்லாகம் ஆங்கில பாடசாலை முகாமைக்காரராய் அப்பொழுதிருந்த நொத்தாரிசு துரையப்பா அவர்கள் இவருடைய தந்தையாருக்குக் கூறினார்கள். எனவே 1916-ம் வருடம் மல்லாகம் ஆங்கில பாடசாலையில் இரண்டாம் வருட வகுப்பில் (Second Year) சேர்ந்தார்.
இவர் மல்லாகம் ஆங்கில பாடசாலையிற் சேர்ந்த காலத்தில் தெல்லிப்பழையைச் சேர்ந்த திரு. இரத்தினசபாபதி உபாத்தியாயரவர்களும் அங்கே ஒரு ஆசிரியராய் இருந்தார்கள். அவருடைய சரித்திரமும் இவருடைய சரித்திரம் போன்றதே. அவர் ஒரு அதிமனிதன் (Super Man) என்று கூறுவதே பொருத்தமுடையது என்று நினைக்கிறேன். அவர் இரண்டாம் வருடவகுப்பில் ஒரு பிரிவுக்கு ஆசிரியராய் இருந்து வந்தார். அவருடைய வகுப்புக்குப் பக்கத்தே மற்றொரு பிரிவில் உபஅதிபர் மாணவராய் இருந்தார். ஒருநாள் இந்த மாணவர் ஒருவருக்கும் சொல்லாமல், தம் வகுப்பை விட்டு, அடுத்த திரு. இரத் தினசபாபதி உபாத்தியாயர் நடத்தும் வகுப்பில் போயிருந்து கொண்டார். அதனையறிந்த தலைமையாசிரியரும் மற்றோரும் இவர் சிறுவராய் இருந்தமையாற் போலும் , இவருடைய விருப்பத்தின்படியே விட்டுவிட்டார்கள். அங்கே ஆறாம் வகுப்பிலே திரு. இரத்தினசபாபதி உபாத்தியாரவர்களே
3

Page 5
இவருக்குக் கணிதம் படிப்பிக்கிற சந்தர்ப்பம் வந்தது. இவருடைய விவேகத்தையும் ஊக்கத்தையும் கண்ட உபாத்தியாயர் சனி, ஞாயிறுகளிலே வீட்டுக்கு வந்தால் கணிதம் படிப்பிக்கலாம்’ என்றார். படிப்பிற் சிரத்தையுடைய இவருக்கு அது நல்ல வாய்ப்பாயிற்று. அவர் சொல்லியபடியே வீட்டிற்குச் சென்று கணிதம் கற்று வந்தார். ஆறு மாதம் வரையில் படித்தபின்பு கணிதத்திலே வேறு என்ன படிக்கலாம் என்று உபாத்தியாயரைக் கேட்டார். படித்த இவ்வளவும் மற்றிக்குலேஷன் (Matriculation) பரீட்சைக்குப் போதுமானது. இனி மற்றப் பாடங்களையும் இவ்வாறே படித்து விட்டால் கலாசாலைகளிலே காலத்தையும் பணத்தையும் வீணாக்காது பரீட்சைக்குத் தோற்றலாம்’ என்று உபாத்தியாயர் சொன்னார்.
1918tb ஆண்டில் இவருடைய நண்பர்கள் சிலர் சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியிற் கற்று வந்தனர். அப்பொழுது புலோலி சு. சிவபாதசுந்தரம் அவர்கள் அங்கே உதவியாசிரியராய் இருந்தார்கள். இவர் மல்லாகத்தில் கற்கும் பொழுதே நண்பர்களுடனும் விக்ரோறியாக் கல்லூரிக்குச் செல்வது வழக்கம். அதனால் சிவபாதசுந்தரம் அவர்களுடன் நெருங்கிய தொடர்பு வந்தது. அந்தக் காலத் தரிலே மல்லாகத்திலே தலைமையாசிரியராய் இருந்தவர் மயிலிட்டி சி. சுவாமிநாதன் அவர்கள் . சுவாமிநாதன வர்களின் அநுமதியின்படியும் சிவபாதசுந்தரமவர்களின் புத்திமதியின் படியும் மல்லாகத்தில் E.S.I.C வகுப்பிற் படிக்கும் பொழுதே சனி ஞாயிறுகளிலும் சுழிபுரத்திற்குச் சென்று மற்றிக்குலேஷன் பரீட் சைக்கு ஆயத்தம் செய்து வந்தார். 1920ம் ஆண்டு அக் ரோபர் மாதம் நடந்த E.S.L. C பரீட் சையரிற் சித்தியடைந்தார். பின் 1921ம் ஆண்டு யூன் மாதம் நடந்த மற்றிக் குலேஷன் பரீட் சையரில் முதலாம் பிரிவில் சித்தியடைந்தார். பரீட் ைமுடிந்த மூன்று மாத காலம் வரையில் மல்லாகம் ஆங்கில பாடசாலையில் ஆசிரியராய் இருந்தார். பின்பு பரமேசுவரக் கல்லூரியில் இரண்டு மூன்று மாதம் ஆசிரியராய் இருந்தார். அப்பொழுது தான் அங்கே
4

லண்டன் “இன்ரர்சயன்ஸ்" வகுப்பு ஆரம்பமானது. அவர் படிப்பித்தலை நிறுத்தி அந்த வகுப்பில் சேர்ந்து படித்து 1924ம் வருடம் சித்தரியடைந்தார். அப்பொழுது க. சிவபாதசுந்தரமவர்கள் சில காலம் இவருக்குக் கணித ஆசிரியராய் இருந்தார்கள். இவர் "இன்ரசயன்ஸ்" பரீட்சையை முடித்துக் கொண்டு மல்லாகத்திலே ஆசிரியராய் இருந்தார். அப்பொழுது ஆங்கில தராதர பத்திர பரீட்சைக்கு வேண்டிய பாடங்களை எடுத்து அப்பரீட்சையையும் பூர்த்தி செய்தார். பின் 1927ம் ஆண்டு விக்ரோறியாக் கல்லூரிக்கு ஆசிரியராய்ச் சென்றார். அந்தக் காலத்திலே .ேSc., பரீட்சைக்கும் ஆயத்தம் செய்து கொண்டிருந்தார். திருநெல்வேலிச் சைவாசிரிய கலாசாலை 1928ம் ஆண்டிலே ஆரம்பமானது. அங்கே கல்வி போதிக்கத்தக்க ஒரு ஆசிரியரை ஒழுங்கு செய்யும்படி சைவவித்தரியா விருத்ததிச் சங்கத்தரினர் அப்பொழுது விக்ரோறியாக் கல்லூரியிலே அதிபராயப் இருந்த க. சிவபாதசுந்தரமவர்களைக் கேட்டார்கள். சிவபாதசுந்தரமவர்கள் தம்மோடு உதவியாசிரியராய் இருந்த இவரைப் போகுமாறு கேட்டுக் கொண்டனர். இவர் 1930ம் ஆண்டு B.Sc., பரீட்சையிற் சித்தியடைந்தவுடன் சைவாசிரிய கலாசாலைக்கு வந்து உப அதிபராய்க் கடமையாற்றத் தொடங்கினார்.
இவர் B.Sc. பரீட்சையிற் சித்தியடைந்த பின்பு M.Sc பரீட்சைக்கு ஏன் படிக்கவில்லை என்று இவரிலே கரிசனையுள்ளவர்கள் கேட்பதுண்டு. இரத்ததினசபாபதி உபாத்தியாயரும் இவர் சித்தியடைந்தமை யைப் பற்றி அறிந்திருப்பார். ஒருநாள் அவர் இவரைச் சந்தித்த பொழுது “M.Sc பரீட்சைக்கு ஆயத்தம் செய்யவில்லையா” என்று கேட்டார். அந்தக் கேள்வி கொஞ்சக் காலமாக இவருக்கு , LD 6ÖI வேதனையை உண்டுபண்ணியது. *நானும் ஆங்கிலப்படிப்பை பெரியகாரியமாக நினைத்தேன் என்று தானே உபாத்தியாயர் கூட M.Sc. படிக்கவில்லையா என்று கேட்டார்”. இந்த யோசனைதான் இவருடைய மனவேதனைக்குக் காரணமாயிற்று.
5

Page 6
ஆங்களிலமொழியரிற் கரிடைக்கக் கூடிய அறிவுத்துறை நூல்களையெல்லாம் ஆராய்ந்ததன் பயனக அவர் கண்ட உண்மை மேலைத் தேசத்திலிருந்தவர்களுள் உயர்ந்த நோக்குள்ளவர்கள் கான்ற் (Kant) ஹெகல் (Hege), பேகன் (Bacon) ,ஷேக்ஸ்பியர் (Shakespeare) ஆகியவர்களே, ஆயினும் கிரேக்க தத்துவஞானிகளாகிய சோக்கிரதிஸ் (Socrates), பிளாற்றோ (Plato) இருவரும் அவர்களிலும் பார்க்க உயர்ந்த விஷயங்களையும் யோசித்திருக்கிறார்கள். ஆனால் இங்கேயிருந்த வைதிக நெறியினர் துவங்குமிடத்தைக் கூட மேலைத்தேசத்தவர்கள் எட்டவில்லை என்பதாம். பைபிள் (Bible) எழுதியவர்கள் சில உயர்ந்த விஷயங்களைக் குறிப்பாக யோசித்திருக்கிறார்களென்பது அதை வாசித்து இவர் கண்ட உண்மை.
இவர் விவாகம் செய்தது 1926ம் ஆண்டு. இவர் மனைவி இவருடைய உறவினர். அவர் கண்டாரெல்லாம் வியக்கும்படி இவருக்கு வேண்டிய பணிவிடைகளைப் புரிந்து இவருடைய சாதனைக்கேற்ற முறையில் வாழ்ந்து, 1941ம் ஆண்டு இவ்வுலக வாழ்வை நீத்தார். இரண்டாம் முறையும் அளவெட்டியிலேயே இவர் விவாகம் செய்தார். இப்பொழுது இரு பெண் குழந்தைகளிருக்கிறார்கள். இவர் இருந்தோம்பி இல்வாழ்வதெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டேயாம். வேள்-மன்மதன்.ஆண்மை-ஆளுதல். 4*
இவருடைய பெருமைக் குரிய காரணங்கள் அளப்பில. இவர் கல்வி கற்பிப்பதில் எவ்வளவு திறமை வாய்ந்தவர் என்பது இவரை ஆசிரிய கலாசாலைக்குச் சிபார்சு செய்தவர் யார் என்பதிலிருந்தே ஓரளவிற்கு ஊகிக்கப்படும். அன்றியும் இவரிடம் கற்று ஆசிரியர்களாய்ச் சேவை செய்யும் ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் இவர் திறமையை நன்கு அறிவர். அவர்கள் மூலம் ஏனையோரும் அறிவர். இவர் ஆசிரிய கலாசாலையில் உளநூல் முதல் தோட்டப் பாடம் ஈறாக எல்லாப் பாடங்களும் கற்பித்திருக்கிறார். நான் மகரகம
6

ஆசிரிய கலாசாலையில் பயிற்சி பெறும் பொழுது அங்கு உளநூல், கல்வி முறை ஆகிய பாடங்களைப் போதித்தோர் மேலைத் தேச சர்வகலாசாலைகளிற் பயிற்சி பெற்ற பட்டதாரிகள். அவர்கள் சில விடயங்களைப் பற்றிப் போதக் கும் பொழுது அவற்றைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களிற் சிலர் உப அதிபரிடம் ஆசிரிய மாணவர்களாய் இருந்தவர்கள். அந்த விஷயங்களைப் பற்றி நாங்கள் பேசிய பொழுது இவற்றை உப அதிபரிடமல்லவா கேட்க வேண்டும்’ என்று ஒருவர் சொன்னார். உப அதிபர் இவற்றிலும் நல்ல திறமையுடையவர்களோ என்று நான் கேட்டேன். அவர் ஒரு கலைக் களஞ்சியமலி லவோ (Encyclopaedia) என்று அவர் உடனே பதில் சொன்னார். வேறும் சிலர் அப்படிச் சொன்னதை நான் கேட்டிருக்கிறேன்.
இது நிற்க, இவருடைய சான் றாணிமை மிகமேலானது. கலாசாலை சம்பந்தமாக வந்த பெரிய பிரச்சினைகளெல்லாவற்றிலும் இவர் நடுவுநிலைமை தவறாது சமன் செய்து சீர் தூக்குங் கோல் போலமைந்து ஒரு பாற் கோடாது இருந்தமை ஒன்றே இவருடைய சால்புடைமைக்கு எடுத்துக் காட்டாகும்.
இவருடைய வரலாற்றைச் சொல்லப்புகுந்த ஒருவர் இவரிலேயுள்ள விசேட அம்சங்கள் சிலவற்றையேனும் கூறாது விடுதல் பிழையாகுமென மனத்திற் படுகின்றது. இவர் இளமையிலிருந்தே புலமை நிரம்பியவராய் இருந்திருக்கிறார். ஒரு செய்யுளிலே ஒரு எழுத்துக் குறைந்தாலும் அதைக்காணக் கூடிய ஆற்றல் இவருக்கு உண்டு. சில சமயங்களில் இவரிடமிருந்து கருத்துக்கள் நிறைந்த செய்யுள்கள் அநாயசமாக வருவதுமுண்டு. இங்ங்னமன்றி வாக்குச் சுத்தம் அறியக்கூடிய இயல்பும், பெரியோரின் போக்குகளையறியக் கூடிய ஆற்றலும் சாஸ்திரங்களின் நுண்பொருள்களையறியக் கூடிய நுண்மானுழைபுலமும் இவருக்கிருக்கின்றன. வாக்குச் சுத்தம் கைவந்தவர்கள் தாம் அன்னம் போல் நூல்களின்
7

Page 7
எண்ணிறந்த விஷயங்கள்பற்றி இவர் சொல்லும் கருத்துக்கள் அதியற்புதமானவை ஆழ்ந்த சிந்தனையை வருவிப்பவை வைதிக சைவசாஸ்திரங்கள் அனைத்திற்கும் மாறில்லாதவை. தருமம்' என்றாலென்ன என்பதை இவரிடம் கேட்டுத் தெளிந்தால் அ.தொன்றுதானே ஒருவர் எடுத்த பிறப்புக்குப் போதுமானது.
இவருடைய சிந்தனைகள் வெறும் புத்தகப்படிப்பால் வந்தவைகள் அல்ல. அந்தக்கரண சுத்தியால் வந்த அநுபவங்களேயாம். 1932ம் ஆண்டளவில் ஒருமுறை பணி டிதமணி சி. கணபதப் பரிள்ளையவர் களும் உப அதிபரவர்களும் கிரிமலைக் குச் சென்றார்கள். அங்கே கிருஷ்ணபிள்ளையின் மடத்திலே தங்குவதாக ஏற்பாடு. அங்கே தங்குவது கடற் காற்று வாங்குவதற்காக அல்ல. கல்வி கற்பதற்காகவே. பண்டிதமணி இவருக்குத் தொல்காப்பியம் சொல்லுவதாகவும், இவர் பண்டிதருக்கு ஆங்கிலம் சொல்லிக் கொடுப்பதாகவும் யோசனை. பண்டிதமணி தமது ஆசிரியர்க ளிடம் கற்கும் பொழுது தயாரித்த குறிப்புக்களை விரித்து வைத்துச் சொல்லத் தொடங்கினார். கொஞ்ச நேரத்தாற் குறிப்புக்களைக் கட்டி வைத்துவிட்டுப் பண்டிதமணி இவரிடம் தொல்காப்பியம் கேட்கவேண்டிய நிலை வந்துவிட்டது, காரண மென்ன? பண்டிதமணியவர்கள் பேராசிரியர், நச்சினார்க் கினியர், இளம்பூரணர் முதலியோருடைய உரைகளிலும் தமது ஆசிரியர்களிடத்திலும் அறிந்தவற்றிலும் பார்க்கச் சிறந்த புதிய உயரிய கருத்துக்கள் இவர் சொல்லத் தொடங்கி விட்டார். இது வெறும் கற்பனைக் கதையல்ல. பண்டிதமணிய வர்களே இதை எனக்குப் பல முறை சொல்லியிருக்கிறார்கள்.
*மதிநுட்பம் நூலோடுடையார்க் கதிநுட்பம் யாவுள முன்னிற் பவை”
இவர் உரையாசிரியர்களைப் பற்றிச் சொன்ன ஒரு கருத்தை இங்கே குறியாமல் விட மனம் ஒப்பவில்லை. அது
8

உண்மைப் பொருளை அறிய வல்லவர்கள். தர்மாதர்மம் தெரியாதோர் சேர்த்துக் கட்டிய பகுதிகள் அவர்களுக்குத்தான் விளங்கும். பெரியோர்களின் போக்குகளை அறியக்கூடிய தகைமையுடையவர்களுக் குத்தான் பெரியோர்களிற் கட்டி நடத்துகிற பொய்க்கதைகள் புறம்பாகத் தெரியும். இந்த இரண்டும் கைவந்தவர்களே ஆப் த வாக்கியங்களைஆகமங்களை-அறியவலி லவர்கள். இற்றைக்கு 2500 வருடங்களுக்கு முன்னரே கடைச்சங்கம் நடாத்திய பாண்டிய அரசன் பொருனுரல் வல்லாரைக் காணவில்லை என விசனிக்க சேர்ந்தது. அதற்குப்பின் புறமதப் புயல்கள் எத்தனையோ விசியிருக்கின்றன. இறுதியாக மிலேச்ச நாகரிகம் ஆழ்ந்து கொண் டது. இவற்றிற் கடையே வைதக முறையான நூல்களுக்கு உரைகாணப்புகுந்த ஆசிரியர்கள் மூலநூால் களின் பெயரால் தங்கள் தங்கள் மதங்களை நிறுவிப் போயினர். தேவர் குறளும், திருநான்மறைமுடிவும், மூவர் தமிழும் முனிமொழியும் கோவை திருவாசகமும் திருமூலர் சொல்லும் ஒரு வாசகமென்றுணர முடியாத சிக்கலான நிலையை உண்டுபண்ணி விட்டார்கள். விசாரமுடையவர்களும் நூல்களின் மூலம் உண்மையறிய முடியாத சூழ்நிலையுண் டாகி எவ்வளவோ காலமாகிவிட்டது. உலகப் புரட்சிகளில் அள்ளுண்டு போகாமலும், உரையாசிரியர்களின் வலைகளிற் சிக்காமலும் தனித்து நின்று சிந்தித்துப் பிரம சூத்திரம், தொல்காப்பியம், திருக்குறள், திருக்கோவையார், திருமந்திரம், சிவஞானபோதம், சிவஞானசித்தியார், சங்க இலக்கியங்கள் ஆதியாம் நூல்களின் நுண்பொருள்களை அறியக்கூடியவராய் இருந்தமையே உப அதிபரவர்களின் தனிப்பெருஞ் சிறப்பாகும். ஆரியம் - தமிழ் , வேதம்-ஆகமம் சமயம் மார்க்கம் வைதிகம் சைவம் அகச்சமயம் புறச் சமயம் வேதாந்தம், - சித்தாந்தம் சொரூபம் தடஸ்தம் சடம், சித்து பொய், - மெய் வருணம், ஆச்சிரமம் எண் - எழுத்து அகத்திணை - புறத்தினை களவு - கற்பு எண்வகை மன்றல், வேதவேள்வி, அந்தக்கரணம், தவம், பணி, கதி, புருஷார்த்தம் அன்பு, அருள், ஐந்தெழுத்து, உபநிடதம் என்றின்னோரன்ன
9

Page 8
வருமாறு: நுாலுக்கு உரை என்றால் நக்கீரருடைய உரை தான். நுாலுக்குள் ஏதோ கிடக்கிறது என்ற குறிப்பிலே சிவாக்கிரயோகிகள் உரை செய்திருக்கிறார். அடுத்தபடி சிவஞான முனிவருடைய Яр б0o J. அதற்குப் பரின் சேனாவரையராதியோரைச் சொல்லலாம். சங்கரருடைய உரைக்கும் நுாலுக்கும் சம்பந்தமில்லை. பரிமேலழகரைக் கிழப்பிவிட்டது, சங்கரருக்குப் போல, நுாலின் மகிமையும் அழகிய பாஷை நடையுமே.
1933ம் ஆண்டில் இவருடைய வாழ்க்கையிற் பல மாற்றங்கள் உண்டாயின. எத்தனை வீண் சொற்கள் இன்றைக்குப் பேசினேன் என்று இரவிலே கணக்குப் பார்க்கும் வழக்கம் அப்பொழுதFருந்ததாக ஒருமுறை எனக் குச் சொன்னார். அந்த வருடம் பல புதுக் காரியங்களை இவர் தமக்குள்ளே காணக்கூடியவராய் இருந்தார். இவற்றை இந்தக் காலத்திலே யாருடன் பேசலாம் என்ற பிரச்சினையுமிருந்தது. காத்திராப் பிரகாரமாக ஒரு நாள் கீரிமலையிலே இரத்தினச பாபதி உபாத்தியாரைச் ச்ந்திக்க நேர்ந்தது. அப்பொழுது அவருடன் பேசலா மென்று ஒரு நினைவு வர, சில விஷயங்களைப் பேசலானார். அன்று தொடக்கம் 1945ம் ஆண்டு உபாத்தியாயரவர்கள் மறையும் வரை, வாரம் தோறும் அவரைச் சந்தித்துச் சம்பாவிக்கும் வழக்கமிருந்தது. அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை முன்தவத்தினால் இயல்பாகவே இவருக்கு அமைந்திருந்தது. நூல்களிலே காண்டற்கரிய பல புதுக் காரியங்களை உபாத்தியாயர் இவருக்குச் சொலி லியரிருக்கலாம் . உபாத் தரியாயரே மெச்சக்கூடிய பல புதுவிஷயங்களை இவர் உபாத்தியாயரோடு கதைத்திருக்கலாம்.
பரிபூரண அன்பு கட்டுப்படுத்தாது கட்டளை செய்யாது. இறைவன் நிறுத்துவதோர் குணமில்லான்' ஓடி மீள்கென ஆடல் பார்த்திருப்பவன்’ பிறரை நிறுத்துவது, அவர்களுடையடி செயல்களிலே தீண்டுவது, அவர்களை
10

ஆள்வது, கட்டளை செய்வதெல்லாம் அவைதகம் - பந்தத்திற்கு வழி. இன்னோரன்ன எண்ணிறந்த உண்மைகளை இவர் அநுபவத்திற் கண்டார். உப அதிபரவர்கள் தம்மோடு தொடர்புபட்டவர்களோடு எவ்வாறு நடந்திருக்கிறார் என்பது தொடர்புபட்டாரொவ்வொருவரும் நன்கறிந்ததே. அவர் பிறருடன் மாத்திரமன்றிச் சுற்றத்தவருடனும் மனைவி மக்களுடனும் கூடத் திண்டாமலே வாழ்ந்து வருகிறார். அவருடைய சாதனை விசேடத்தினாலே, அவர் பலருடனும் பல சந்தர்ப்பங்களிலும் உளடாடவேண்டியிருந்தும் பிறராற்றீண்டப்படாமலிருக்கிறா ரென்பது நன்கு அறியக்கிடக்கின்றது.
இவர் தமக்கு நேர்படுகின்ற முயற்சிகளையும் திண்டாமலே திண்டி வந்தார். முயற்சியை இவர் தாமாகத் தேடுவதுமில்லை. வந்த முயற்சியைத் தாமாக உதறித் தள்ளுவதுமில்லை. முயற்சி வரும். போகும். இவர் இருந்தபடி இருப்பார். அதனால் இவருக்கு அசைவு பிறப்பதில்லை.
"இன்பத்து வின்பம் விழையாதான் துன்பத்துள் துன்பம் உறுதல் இலன்’
மகான்கள் பிராரத்தத்தைப் புசிக்கும் போது, ஆகாமியம் ஏறாமல் விருப்பு வெறுப்பரின் றி இருப்பவர், என்று சாத்திரங்களிற் காணுகின்ற உண்மையை இவரிடம் நேரிலே
6T600T6) Tib.
இவருடன் நெடுநாட் பழகிய ஒருவர் தமது மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு 1934ம் ஆண்டில் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அக்கடிதத்தை வாசிக்கும் சந்தர்ப்பம் சமீப காலத்தில் எனக்குக் கிடைத்தது. பின்வரும் வசனங்கள் அக்கடிதத்திற் கண்டவை: “சவசித்தாந்தம் விளங்கிய இருவர் இப்பொழுது யாழ்ப்பாணத்திலே இருக்கிறார்கள். அவர்களே ஆறுமுக நாவலரையாவையறிய வல்லவர்கள். அவர்களில் ஒருவர்
11

Page 9
சைவாசிரியகலாசாலை உப அதிபர் பொ.கைலாசபதியவர்கள். அவர்கள் மனித உருவில் ஒரு தெய்வம்.”
தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனாரின் வாய் மொழிகளாலே இவருடைய வாழ்க்கைக் குறிப்பை முற்றுறச் செய்வது பொருத்தமுடையதென நினைக்கிறேன். இவர் கற்பவை கசடறக் கற்றவர்: கற்றதற்குத் தக நிற்பவர். கற்றதனாலாய பயன் வாலறிவன் நற்றாள் தொழலே என்பதனை ஐயந் தரிரி பரின் றரி உணர்ந்தவர். இருமை வகை தெரிந்து ஈணி டறம் பூண் டவர். மனத்துக் கணி மாசில்லாதவர். ஆற்றினிழுக்கா இல்வாழ்க்கை நடத்துபவர். அறிவறிந்தாற்றினடங்கப்பெற்றவர். நிலையிற்றிரியாதடங்கிய வர். ஒழுக்கத்தை உயிரினும் ஒம்புபவர். புறஞ்சொல்லும் புன்மையில்லாதவர். பயனில மறந்தும் பேசாதவர். உற்றநோய் நோன் றலையும் உயிர் குறுகணி செயப் யாமையையும் மேற் கொண் டவர். வாயப் மையுடையவர். ஆன் றமைந்த சொல்லுடையவர். கேட்டார்ப் பிணிக் குந் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிபவர். வினைத்துாய்மை உடையவர். அவையறிந்து, சொல்லின் தொகையறிந்து ஆராய்ந்து சொல்லுந் தூய்மையர். சான்றாண்மையுடையவர். கற்றீண்டு மெய்ப்பொருள் காணு நெறியினர். இவர் பெற்றிருக்கும் அறிவு சென்ற விடத்தாற் செலவிடாது தீதொரீஇ நன்றின் பாலுய்ப்பது, எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெயப்ப்பொருள் காண்பது. எண் பொருளவாகச் செலச் சொல்லித்தான் பிறர் வாய் நுண்பொருள் காண்பது. மலர்தலும்
கூம் பலுமரில் லாதது. எவ் வதுறைவதுலகம் உலகத்தோடவிவது. அஞ்சுவதஞ்சுவது. இப்பெருந்தகையார் உள்ளத்தாற் பொய்யாது அறிவுக் கறிவைக் கொல்லாது, சார்புணர்ந்து சார்பு கெட ஒழுகி வருகின்றார். இவருடைய ஒழுகலாறு வாழ்வதாக.
12

(இம்மலர் வெளியீட்டிற்குப் பொறுப்பாளராய் இருப்பவர்? உப அதிபர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதித் தரும்படி என்னைக் கேட்டார். அது எனக்கில்லாத மிகக் கவஷ்டமான காரியம் என்னும் எண்ணமுடையேனாதலின் முதலில் மறுத்து விட்டேன். உப அதிபரவர்கள் ஒரு சாமானிய மனிதரல்லர். அவரைப் போன்று ஆழ்ந்தகன்ற அறிவும் துயவாழ்க்கையும் உடையவர்களை நாம் கண்டதுமில்லை சமீபகால சரித்திரங்களிலே கேட்டதுமில்லை. அவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுத வேண்டிய வேவையும் சூழலும் இருப்பதாக எனக் குத் தெரியவில் லை. எனினும் மலருக்குரியவர்கள் மீண்டும் மீண்டும் என்னை வேண்டிக் கொண்டபடியினாலும் நல்லார் குணங்கள் உரைப்பதும் நன்றே என்றமையினாலும் அவரைப்பற்றித் தெரிந்தவற்றுட் சில குறிப்புக்களை ஈண்டு எழுதலாயினேன்) பதிப்பாசிரியர் குறிப்புகள்
1. 1950களின் நடுப்பகுதியில் திருநெல்வேலிச் சைவாசிரிய கலாசாலை ஆண்டுச் சஞ்சிகையாகிய “நாவலன்” ஒன்றில் ஒரு மாணவன் கைலாசபதி யவர்களைப் பற்றிப் பாடிய செய்யுள் ஒன்றில் “சிவானந்தையர் நற்சீடராய்” என்ற சொற்றொடரை உபயோகரித்தார். அது அத் துணைப் பொருத்தமுடை, யது அன்று என்பதற்காகவே இக்கட்டுரையாசிரியர் அந்த விடயத்தை விரிவாக எழுதியுள்ளார். < 2. பூரி அரவிந்தர் உபயோகிக்கும் பொருளில் இங்கு
வருகிறது. 3. சு.சிவபாதசுந்தரம் கைலாசபதியவர்களைத் தமது மாணவன் எனக் குறிப்பிடுவது வழக்கம். (பார்க்க: :சு.சிவபாதசுந்தரத்தின் உளவியல்நுால் முகவுரை) ஒருவரின் உரிமையைப் பேண வேண்டும் என்பதற்கமைய அவர் சு.சி கொண்டா டிய உரிமையை மநுப்பதில்லை.
13

Page 10
4. *இக் குறளுக்கு கைலாசபதியவர்கள் சொல்லும் விசேட பொருளை இங்கு கட்டுரை ஆசிரியர் சுட்டுகிறர். 5. இது பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளையைக் குறிக்கும். அவர் ஆறுமுகநாவலரின் தமையனார். புத்திரரும்,24 வயது வரை நாவலரின் அணுக்கன்றொண்டராயிருந்தவரும், நாவலர் விதி தரியா சாலைப் பரிபாலகருமான த. கைலாசபிள்ளைக்கு எழுதிய கடிதம் வித்தியாசாலை அதிபர் பதவியைப் பொறுப்பேற்கும்படி கேட்டபோது சி.க எழுதிய பதிற் கடிதம் இங்கு எடுத்துக் காட்டப்பட்டது.
1958ல் பாராட்டுவிழா மலர் வெளியீட்டுக்குத் தோன்றாத் துணையாய் நின்றவர் பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை. ச.ப. இதனை உப அதியர் சந்நிதியில் வாசித்துக் காட்டிய பின்னரே வெளியிடக் கொடுத்தார்.
சிந்தனை அமுதத்துளிகள் தொகுப்பு : இ.கிருஷ்ணபிள்ளை (ஒன்ரேரியோ, கனடா)
1. குடிசையில் கூழைக் குடித்து வாழலாம். பின்பு குடிசை மாளிகையாக மாறி அறுசுவை உண்டியுடன் வாழலாம். ஆனால், ஆளின் நிலை மாறக் கூடாது. 2. பரிபூரண அன்பு கட்டுப்படுத்தாது: கட்டளை செய்யாது. 3. பந்தப்படுத்தும் கொடை கைக்கூலியிலும் கொடியது. 4. தனித்து நிற்க மனிதர்கள் அஞ்சுகிறார்கள். அதனாலே தான் பாத்திர மில்லாதவர்களையும் பற்றுக்கோடு களெனப்பற்றிக் கொள்கிறார்கள். 5. கடவுள் நீதிமயமானவர்: காணப்படும் உலகம் புறத்தோற்றம்.
இவ்வுலகம் இப்படி இருப்பதே நீதி.
14

10.
11.
அவித்துவான் இருளில் கிடக்கிறான். வித்துவான் அதிலும் மோசமான இருளில் வீழ்கிறான்.
புலால், கள் ஆகியவை அறிவு விருத்தியைக் கெடுக்கு மாகையால் விலக்கப்பட வேண்டியவை.
ஞானம் வேறு : நூலறிவு வேறு . ஞானம் வேறு: வாக்கு வன்மை வேறு.
உனது எண்ணங்கள், செயல்கள் ஒவ்வொன்றிலும் உனது சுவை என்ன? தர்மம் என்ன? என்பதைச் சிந்தித்துப் பார்.
ஒருவனுடைய மனத் தூய்மைக்குத் தக்கபடிதான் உயர்ந்த காரியங்கள் வெளிக்கும்.
அழுக்கை வைத்துக் கொண்டு ஞானம் தேடியலைவது ഖങ്ങ.
12. நீரைக் கண்டவன்தான் கானல் நீரைக் கழிக்கலாம்.
13.
ஒருவனை அறியுமாறு:
i.அவனது உயர்ந்த செயல் - இது புகழ்தற்கு
உரியது.ஆனால் அது அவனுடன் சேர்தற்கு உரியது அன்று.
i. பொதுவான ஒழுகலாறு:சாதாரண நடை.அவன் எப்பொழுதும் கண்ணியமான காரியங்களையே செய்வான் என்பது போன்றது. இது மதித்தற்கு உரியது. ஆனால். இதுவும் சேர்தற்கு உரியது அன்று.
i. இழிவு:இவன் எவ்வளவு தூரம் இறங்கத்தக்கவன் என்பது
15

Page 11
இது சாதரி (வருணம்) கொணி டே நிச்சயரிக் கதி தக்கது.இக்காலத்தில் சாதி இல்லை. அதனால் ஒருவனை நம்பலாகாது. என்னை?அவன் எவ்வளவுக்கு இறங்குவான் என்று தெரியாது ஆதலின்.
(இங்கு சாதியென்னும் சொல் இன்றைய சமூகநிலையைக் குறிக்காது. ஆன்மீக அடிப்படையில் இச் சொல் கைலாசபதியவர்களால் பிரயோகிக்கப்படுகின்றது.)
கைலாசபதியின் சிந்தனைத் துளிகள்:
46
0 உணர்ச்சி “ கருத்து அறிவு, மூன்றின் கூட்டே பாஷை,
உணர்ச்சி மிகுதிப்பட்டது தமிழ்: கருத்து மிகுதிப்பட்டது ஆரியம்.
வேதாந்தி சத்தியத்தைக் கொல்கிறான்; சித்தாந்தி சத் - தைக் கொல்கிறான் (சத் = உண்மை)
0 உவந்து ஊட்டுவது பெரிய காரியம்
0 பாலைக்கு நிலம் இல்லை பந்தங்களை விட்டுப் பிரிவதே பாலை.
0 புத்தம் சட உலக வர்ணனை போன்றது: முழுதும் பொய் என்பது மாயா வாதம் ! நமக்குச் சாதகம் என்ன என்று சிந்திப்பது சைவம்.
9 கொலைகளில் பெரிய கொலை அறிவுக் கொலை கொன்று
சடமாக்கிய அறிவு ஒருவனை உயர்த்துவது எங்ங்ணம்?
பூச்சொரியும் பொன்னொச்சி மரம் அருணோதயம் 2000
(d560TLT) பொ.கை, சிந்தனையில் வரும் சுயசரித்திரக் குறிப்புகள்
அகத்துள் நிகழ்ந்த வரலாற்று மாற்றங்கள்
16

1918 நல்லார்வ தளத்தில் நிற்றல் (4ம் வகுப்பு)
1918 - 28 நாகரிக தளத்தில் (4ம் வகுப்பு)
1928 - 42 சம்ஸ்கார தளத்தில் (4ம் வகுப்பு)
1942 - 53 பண்பாடு (4ம் வகுப்பு)
1953 - தர்ம தளத்துக்கு ஏறுதல் (வகுப்பு மாறி 3ம்
வகுப்பினராதல்)
1953 - பிற்பாதி பரசுழுப்தி (இரண்டு மூன்று நாள்) மெத்தப்
புதிது என வியந்துள்ளார்
1961 - சித்தவிருத்தியில் ஆரியத்துவம் பிறந்தது. (அந்நிலை
அடைந்தவர்கள் கலியில் இருக்கமுடியாது என அடிக்கடி கூறியவர் காயபந்தம் கைவிட்டு ஏகினார்.
சத்தியகாமன் கதை
ஜபாலை என்ற மாதரசியின் மைந்தன் சத்தியகாமன். அவன் ஒருகுருவை அடைந்துவேதம் படிக்க விரும்பினான். குருவைச் சந்திக்கும் போது கூறவேண்டிய அறிமுகஉரை அபிவாதனம் எனப்படும்: இன்னாரின் பிள்ளையாகிய நான் வணங்குகிறேன்’ என்று வரும். அதற்காகத் தன் தந்தை பெயரையும் தாகங்கள் எந்த இருடியின் கோத்திரத்தவர் என்பதையும் தாயாரிடம் விசாரித்தான். அவள் , "மகனே, நான் உன் தந்தையை மணந்து, அவரது இல்லத்துப் பணிகளில் முழ்கி இருந்ததால் அவரிடம் குலம், கோத்திரம் விசாரிக்கவில்லை. அவர் நீ என் வயிற்றில் இருக்கும் போது இறந்து விட்டார். பிறகு துக்கம் காரணமாக, அவரது உறவினரிடம் அவற்றை விசாரிக்கவில்லை. ஆகவே உன் குலமும் கோத்திரமும் எனக்குத் தெரியாது. நீ குருவிடம் சொல்: “ என் பெயர்
17

Page 12
சத்திய காமன்.என் தாய் பெயர் ஜபாலா.என்னைசத்தியகாம ஜாபாலன் என்று அழைக்கலாம், “ என்று. சிறுவன் கெளதம முனிவரின் ஆசிர மத்துக்குச் கையில் மலரும், சமித்தும் கொண்டு போனோன். (இவைதான் அக்காலத்தில் ரியூஷன் சம்பளம்) குருவிடம் தாய் சொன்னபடியே தன்னை அறிமுகம் செய்தான். குரு: “உண்மை பேசியவன், சத்தியத்தை விரும்புகிறவன், பிராமணனாய்த்தான் இருக்கவேண்டும். என்று அவனைக் குருகுலத்தில் சேர்ந்துக் கொண்டார்.( பிரமத்தை நோக்கிச் செல்பவன் பிராமணன்) இந்ததக்கதை ‘திருநான் மறைமுடிவு’ எனப்போற்றப்படும் உபநிடதத்தில் வருகிறது (சாந்தோக்கிய உபநிடதம்) தன்னைத்துாய்மை செய்யும் கிரியை சம்ஸ்காரம். அது பற்றிப் பிரமசூத்திரத்தில் வருகிறது. தூய்மை இல்லாதவன் வேதம் படிக்கத்தகுதி அற்றவன். கெளதமர் தன் குலமித்திரம் எது என்று தெரியாதவன் அதை மறைக்காத படியால்,அவன் பிரமத்தை நோக்கிச் செல்பவனே. சத்தியம் இறைவனது அம்சம். பொய்மை இருளின் அம்சம். சத்தியத்தைக்கடைப்பிடிப்பவன் ஞானத்தை அடையத்தகுதி 2 60)Lu66ó.
சத்தியகாமன் கதையை தாகூர், இராதாகிருஷ்ணன் போன்ற அறிஞர் கூட, மாறு பாடாக விளங்கி, அவன் தாயப் வழுக்கிவிழுந்தவள் என்று எழுதியுள்ளனர். இது பெரும்பிழை.
“தந்தையை அறியாவொரு பிள்ளை குருவுக்கு உண்மை சொன்னான். குரு உண்மை சொன்ன நீ பிராமணப் பிள்ளை தான் என்றார்.
பொ.கைலாசபதியவர்களின் சிந்தனை
18

ஜடபரதர் கதை ஜடபரதர் ஒருமுனிவர். காட்டில் ஆசிரமம் அமைத்துப்,புலன்களை அடக்கித் தவம் செய்து வந்தார். ஒருநாள் ஆற்று வெள்ளப்பெருக்கில் ஒரு மான் குட்டி மிதந்து வந்தது. அவர் அதன் மீது இரக்கம் கொண்டு, அதனை எடுத்து வளர்த்தார். இவருடைய மரணவேளையிலும் அதன் நினைவாகவே இருந்தார். அதனால் அடுத்த பிறவியில் மானாகப் பிறந்தார். பழைய பிறவி நினைவு தொடர்ந்தது. அந்த மான் இவரது ஆசிரமத்துக்கு அருகில் வந்து சேர்ந்தது. மற்றைய மான்களுடன் சேராது, தனிமையில் வாழ்ந்தது. நல்ல தியானத்துடன் வாழ்ந்து இறந்து, மேல் நிலையடைந்தது.
“பெரியோர் விலங்கு முதலிய கீழ்ப்பிறவிகளை எடுத்தலு உண்டு: ஞானம் தவறாது.”
“பொ.கைலாசபதியவர்களின் சிந்தனைகள்”
ஆறுமுக நாவலருக்குப் பிறகு ஒரு கைலாசபதியை நாம் பெற்றெடுத்தோம். “வாராது போல் வந்த மாமணியை’த் தவறவிட்டுவிடாமல் அவரது எண்ணங்கள், கருத்துக்களை நாடெங்கும் பரவச்செய்யவேண்டும் என்பது பண்டிதமணியின் 96) T,
அந்த அவாவின் மேலெழுந்தவையே அவரது எழுத்தும் பேச்சும்.
கனக செந்திநாதன் மூன்றாவது கண், பக் - 51
19

Page 13
பொ.கைலாசபதியவர்களின் ஆக்கங்கள்
1.தமிழகத்துத் தருக்க நூல் வளர்ச்சி
ஞாயிறு - (மும்மாத வெளியீடு) யாழ்ப்பாணக் கலாநிலையம் 1933
உண்மைச் சமயமும் கட்டுச் சமயமும்
வயாவிளான் வாலிப தூதனில் வெளிவந்தது (1934) முரசொலி வார மலரில் (20.08.1989) மறுபிரசுரமாகியது.
3. யாழ்ப்பாணச் சமயநிலை - முகவுரை
பொ.கைலாசபதியவர்களைப் பற்றிப் பிறர் எழுதியவை
1"பொ.கைலாசபதியவர்களின் சிந்தனைகள்”
- யாழ்.பல்கலைக் கழகம். 1994 - ( தட்டச்சு படிவெட்டுப் பிரதி) 2.பொ.கைலாசபதியவர்களும் பொருளாராய்ச்சியும்-ச.பரநிருபசிங்கம்
யாழ்.பல்கலைக் 'கழகக் கலைப்பிட வெளியீடு 3. “சைவசித்தாந்தநோக்கில் பொ.கைலாசபதி ஸ்மிருதி”
மு.கந்தையா, யாழ்பல்கலைக் கழகம் -1999 4.”பொ. கைலாசபதஅவர்களின் சிந்தனைகள் பகுப் பாயம் வும்
நுண்ணாய்வும்”
செல்வி.லலிதாமினி.முருகேசு (அச்சாகவில்லை) 5 மெளன தவ முனிவர் கைலாசபதி வாழ்வும் சிந்தனையும்
அளவெட்டி வெளியீடு - 2001
6.கந்தபுராணத்தின் உட்கிடக்கை தவமே
செல்வி.மீனலோசினி.அருணாசலம்
(அச்சாகவில்லை) 7. தமிழ் இலக்கியத்தில் மரபுவழி விழுமியங்கள்
- QuT60)856)|TajFLugs
சிந்தனைவழிஒருநோக்கு -செல்வி. நளாயினி வீரகத்தி(அச்சாகவில்லை)
ete bee-eeeee


Page 14
1916 மகாஜனாக் கள்
Vé 1960 5ឆាំងក្លា
SY மலரில்
 
 

ல் எடுத்த படம்
விழா
ջ:IIՄ
1.
(CLITT
* եTT:II