கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை

Page 1


Page 2

புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை
எஸ். எதிர்மன்னசிங்கம்
(கலாசார பணிப்பாளர்,
வடக்கு கிழக்கு மாகாண கல்வி கலாசார அமைச்சு)
விபுலம் வெளியீடு - 3
VIIPULAM PUBLICATION - 3

Page 3
Pulavarmani A. PERTYATAMPPILLA
Author : S; ETHIRMANASINGAM B.A. Hons.
First Edition : 05th July 1993
Printers : St. Sebastian Printers,
Batticaloa.
Cover Design : , S: Velauhampillai
Publishers: Vipulam Publication
7, Gnanasuriyam Square, Batticaloa.
Prize : 40/-
ii

தாய்க்கும் தந்தைக்கும் சமர்ப்பணம்
இந்நூல்.
iii

Page 4
வெளியீட்டுரை
விபுலம் தனது மூன்றாவது வெளியீடாக புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை பற்றிய அறிமுக நூலொன்றை வெளியிடுகிறது;
எமது முதல் நூலாக, கலாநிதி சி. மெளனகுருவின் பழையதும் புதியதும் எனும் நூலும் இரண்டாவது நூலாக வெல்லவூர்க் கோபாலின் தான்தோன்றீச்சரம் எனும் நூலும் வெளிவந்துள்ளன. முன்னையது கிழக்கின் கூத்துக்கலை பற்றியது; பின்னையது கிழக்கின் பிரதான ஒரு கோயிலைப் பற்றியது. இவ்வரிசையில் கிழக்கின் பிரதானமான ஒரு கவிஞரைப் பற்றிய அறிமுக நூலாக இந்நூல் வெளியிடப்படுகிறது.
புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை அவர்கள், விபுலாநந்த அடிகளின் பாரம்பரியத்தில் வந்த கவிஞர் அவர் பற்றி அறிமுக நூலொன்றை எழுதி எமக்குத் தந்தவர் வடக்கு. கிழக்கு மாகாண அமைச்சில் கலாசார பணிப்பாளராகக் கடமைபுரியும் திரு. எஸ். எதிர்மன சிங்கம் அவர்கள். அவர்கட்கு விபுலம் தன் மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கின்றது.
கிழக்கிலங்கையின் கவிதைப் பாரம்பரியம் பற்றிய நூலொன்றை வெளியிடும் எண்ணம் விபுலம் நிறுவனத் தினருக்குண்டு. அதற்கு முன்னோடி நூலாக இது அமை யுமென்று எண்ணுகிறோம்.
எங்கள் வெளியீட்டு முயற்சிகளுக்கு என்றும் ஆதரவு தரும் மக்களுக்கு நாம் மிகுந்த கடமைப்பட்டுள்ளோம். தொடர்ந்தும் உங்கள் ஆதரவை வேண்டுகின்றோம்.
7, ஞானசூரியம் சதுக்கம், விபுலம் மட்டக்களப்பு, வெளியீட்டுக்குழுவினர்
iv

முன்னுரை
ஈழத்துக் கவிதைப் பாரம்பரியத்துக்குக் கிழக்கின் பங்களிப்பில் புலவர் மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை முக் யமானவர். மரபுவழிப் பண்டிதராயினும் எளிமையும், அழகும் அவர் கவிதைகளிற் பளிச்சிடும். நவீன தமிழ்க் கவிதையின் பண்புகள் பலவற்றை அவர் கவிதைகள் கொண்டுள்ளன.
புலவர்மணி கவிஞர் மாத்திரமல்லர். அவர் கட்டு ரையாளர்; பத்திரிகை ஆசிரியர் இலக்கிய ஆய்வாளர்; மேடைப் பேச்சாளர். இத்தனைக்கும் மேலாக நாட்டுப் பற்றும் சமூகப்பற்றும்மிக்க மனிதாபிமானி. சமூகஏற்றத் தாழ்வுகளுக்கு எதிராகக் குரல் தந்தவர். சிறுமை கண்டு பொங்குதல் கவிஞர் இயல்பு. இந்த இயல்பு அவருக்கு இருந்தது. அது வாழ்க்கையிலும் விளையாடியது.
புலவர்மணியின் மறைவின் பின் நிறுவப்பட்ட புல வர்மணி நினைவுப்பணி மன்றத்தினர் ஆக்கபூர்வமான பல பணிகளை மேற்கொண்டுள்ளனர். அவர் ஆக்கங் களை வெளிக்கொணரும் முயற்சியிற் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளனர். அவர்கள் வெளியிட்ட புலவர்மணி யின் கவிதைகள் (1980), உள்ளதும் நல்லதும் (1982), விபுலாநந்தர் மீட்சிப்பத்து (1990), பாலைக்கலி (1991) என்பன குறிப்பிடத்தக்கவை: புலவர்மணியின் எழுத்துக் களை வெளியிட்டதன் மூலம் அவரை அவர் எழுத்துக் கள்கொண்டே அறியும் வாய்ப்பினை இவர்கள் எமக் களித்தனர்.
புலவர்மணியையும், பண்டிதமணி சி. கணபதிப் பிள்ளையையும் ஒப்பிட்டு வித்துவான் க. செபரத்தினம் எழுதிய 'வாழையடி வாழை" எனும் நூலும் இங்கு குறிப்பிடற்குரியது. w

Page 5
புலர்மணி எழுதிய இன்னும் பல எழுத்துக்கள் இருப்பதாக அறிகிறோம். அவர் நண்பர்கட்கு எழுதிய கடிதங்கள், அவர் நடத்திய கிழக்குத் தபாலில் வந்த அவர் எழுத்துக்கள் என்பன திரட்டப்பட வேண்டும்: அவர் கால எழுத்தாளர்களோடு ஒப்பிட்டு அவர் ஆரா யப்படவேண்டும். ஈழத்து தமிழ் இலக்கியத்தில் அவர் ஸ்தானம், கிழக்கின் இலக்கிய வளர்ச்சியில் புலவர்மணி யின் இடம் என்பன மதிப்பிடப்படவேண்டும். இவற்றை எதிர்கால இளைஞர் செய்வர் என எதிர்பார்ப்போம்.
ஆய்வுகள் ஒருபுறமாக, புலவர்மணி பற்றிய அறிமுக நூல்களும் வெளிவருதல் அவசியம் முக்கியமாக இளம் சிறார்களுக்கு புலவர்மணி பற்றிய அறிமுகம் அவசியம். இந்நிலையில் விபுலம் வெளியீட்டு நிறுவனத்தினர் புல வர்மணி பற்றிய இவ்வறிமுக நூலை வெளியிடுகின்றனர் இதன் ஆசிரியர் திரு. எதிர்மன்னசிங்கம் அவர்கள் எமது நீண்ட கால நண்பர்; உடன் மாணாக்கர்; பல்கலைக் கழகத்தில் பயின்றுகொண்டிருந்த காலத்தில் நல்ல பாட கராகவும், நடிகராகவும் இருந்தவர். வடக்கு கிழக்கு கலாசார அமைச்சின் கலாசாரப் பணிப்பாளராக இன்று கடமையாற்றும் அவர் முயற்சி பாராட்டிற்குரியது
தமிழைச் சிறப்புப்பாடமாக ஆராய்ச்சி மனோபாங் கோடு பயின்ற அவர் தொடர்ந்து தன் திறனை வளர்த் தெடுக்காமல் நிர்வாக அலுவல்களுக்குள் முடங்கிவிட் டமை எமக்குத் துயரத்தையே அளித்து வந்தது. இன்று அவர் அதிணின்றும் வெளிப்பட்டு எழுத்து முயற்சியில் இறங்கியிருப்பது வரவேற்கத்தக்கது.
புலவர்மணி பற்றி அறியாதோர்க்கு அறிமுகமாகவும் அறிந்தோருக்கு மீண்டும் அவர் நினைவுகளை அழுத்துவ தாகவும் அமைந்துள்ள இந்நூலைத் தொடர்ந்து அவர் எழுத்து முயற்சியில் ஈடுபட வேண்டும் என்பதே எமது அவர்
கிழக்குப் பல்கலைக் கலாநிதி சி. மெளனகுரு கழகம் பீடாதிபதி மட்டக்களப்பு கலை கலாசார பீடம்
Wi

என்னுரை
மட்டக்களப்பு மாநில அறிஞர் வரிசையில் தனியான ஒரு இடம் புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளையவர் களுக்குண்டு. அவரது தமிழ் இலக்கியப்பணியும், சமூக சமயப் பணிகளும் தேசிய நோக்குடன் மனங்கொள்ளத் தக்கன. புலவர்மணியவர்கள் தாம் வாழ்ந்த எழு பத்தொன்பது ஆண்டு காலப்பகுதியில் தமக்கெனவொரு பாரம்பரியத்தினை உருவாக்கிச்சென்றுள்ளார். அதனாற் றான் புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை நினைவுப்பணி மன்றமே உருவாகியது. எழுநூற்றொரு வெண்பாக்க களில் பகவத் கீதையினைப் பாடிய புலவர் மணியவர்கள் "வெண்பாவிற் பெரியதம்பி’ என்ற பெயர் துலங்கும் வண்ணம் கவிதைகளையார்த்தனர். இந்நூலில் புலவர் மணி ஐயா அவர்கள் இயற்றிய நூல்களைப் பற்றி மேலோட்டமாகச் சொல்லப்பட்டுள்ளதே தவிர ஆழமாக அவற்றின் சிறப்பு ஆராய ப் பட வில்லை5 மேலும் புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளையவர்களது இலக்கிய முயற்சிகள் அவரது சமூக சமயப் பணிகள் என்பனவற்றை இலக்கிய வரலாற்று மாணவர்கள் ஆழமாகப் பார்வை யிட்டு அவைபற்றிய தகவல்களைத் தமிழ் உலகிற்குக் கொண்டுவர வேண்டியது பாரிய பணியாகும். சுவாமி விபுலாநந்தர், யோகர் சுவாமிகள் போன்ற பெரியார் தொடர்பும், இந்தியாவில் வாழ்ந்த காலப்பகுதியிலும், யாழ்ப்பாண மண்ணில் இருந்த போதிலும் மேற்கொண்ட நடவடிக்கைகளும், ஆய்வுகளும் வெளிக்கொணரப்பட வேண்டும்.
இச்சிறு நூலை எழுதுவதற்கு ஆரம்ப காலத்தில் தூண்டுதலாகவிருந்த புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை நினைவுப்பணி மன்றத்தினருக்கும், அவ்வப்போது சில
vii

Page 6
தகவல்களைத் தந்துதவிய இந்து இளைஞர் மன்றத் தலைவர் திரு. ம. சிவநேசராசா, கலாசூரி மகாவித்து வான் எவ், எக்ஸ், சி. நடராசா, ஜனாப் எஸ். எ. ஆர். எம். செய்யது ஹஸன் மெளலானா ஆகியோர் நினைவு கூரத்தகுந்தோராகும். எல்லாவற்றிற்கும் மேலாக விபுலம் வெளியீட்டு நிறுவனத்தினர் நன்றிக்குரியவர்களாகின்ற னர். இந்நூலை வெளியிடுவதற்கு வேண்டிய சகல முயற்சிகளையும் எடுத்துக் கொண்ட விபுலம் குழுவின ருக்கும், என்னை எழுதும்படி ஊக்குவித்த நண்பர் திரு. க. ஆறுமுகம் அவர்கட்கும், நூலிற்கு சிறந்த ெேவாரு அணிந்துரை வழங்கியதோடல்லாமல் நூலை நல்றமுறையில் ஒழுங்குபடுத்தி அச்சிற்கேற்றவகையில் சீரமைத்த கிழக்குப் பல்கலைக் கழக கலைப் பீடாதிபதி கலாநிதி சி. மெளனகுரு அவர்கட்கும் அச்சுப்பிழை திருத்தி உதவிய கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரை யாளர் திரு. செ. யோகராசா அவர்களுக்கும், அழகிய முறையில் குறுகிய நாளில் அச்சுச்செய்த புனித செபத் தியார் அச்சக உரிமையாளர் திரு. அ. சிவதாசன் அவர் களுக்கும் உளமார்ந்த நன்றிகள் பல உரித்தாகட்டும்.
ஸ். எதிர்மன்னசிங்கம்
viii

வாழ்க்கை வளம்
மட்டக்களப்பு மாநிலத்தின் தென்பால் இருபத்திரண்டு மைல் தொலைவில் அமைந்துள்ள பழம் பதியான மண்டூர் கிராமத்தில் பூரீ கந்தசாமி கோயில் வண்ணக்கர் பரம்பரையில் வந்தவர் ஏகாம்பரம் பிள்ளை வண்ணக்கர். அவரது மகனான பெரியதம்பிப்பிள்ளை அவர்கள் 1899ம் ஆண்டு தை மாதம் 8ந் தி க தி பிறந்தார். இயற்கை எழில் நிரம்பப்பெற்ற தே ர டு மாத் தி ர ம ல் லா ம் ல் சைவமணமும், கலையழகும் பொலி வுற்றதாக ம ண் டூ ர் விளங்கியது. மண்டூர் கந்தன் கோயிலை மைய மாக வைத்தே மக்களுடைய வாழ் க்கை நடைமுறைகள் இடம்பெற்று வந்தன.கந்தசுவாமி கோயில் பூசை
οι

Page 7
முறைகள் யாவும் கதிர்காமக்கந்தன் கோயிலில் நடைபெறு வதுபோன்று நடைபெற்று வந்தன. மண்டூர் கந்தசுவாமி கோயில் வருடாந்த உற்சவத்தின் போது நடைபெறும் கல்யாணப்படிப்பு என்னும் நிகழ்ச்சி (குரவைத்திருநாள்) மிகவும் சிறப்புப்பொருந்தியதொன்றாகும். மண்டூர் கிரா மப்பாரம்பரிய கலைகளை வளர்க்கும் இடமாகவிருந்த தென்பதற்கு "கொம்புவம்மியடி’ என்னும் இங்குள்ள இடம் சான்று பகர்க்கின்றது. கண்ணகி வழிபாட்டுடன் தொடர்புடையதான கொம்புமுறிப்பு விளையாட்டு இங்கு மிகவும் பிரபல்யம் பெற்றுவிளங்கியமையையே இது காட்டுகின்றது.
தமிழ்மணமும், சைவமணமும் கமழும் மண்டூர்ப் பகுதியில் பிறந்த பெரியதம்பிப்பிள்ளை அவர்கள் தனது இளமைப்பருவத்தை இங்கு தாயாரின் அரவணைப் பிலே நன்கு கழித்தார். நல்ல எடுப்பான தோற்றமும் , கன்னக்கொண்டையும் உடையவராக விளங்கினார். ஆண் கள் கன்னக்கொண்டை அல்லது குடும்பி வைப்பது மட் டக்களப்பு நாகரிகமாக அக்காலத்தில் இருந்தது. ஆண் களுக்கு காதுகுத்தி கடுக்கன் அல்லது மின்னி போடும் வழக்கமும் நடைமுறையில் இருந்தது. மண்டூர் கிராமப் பள்ளியில் ஆரம்பக் கல்வியைத் தொடங்கினார். இளமை யிலேயே தமிழை விரும்பிக்கற்பதில் மிகவும் ஆர்வமுடைய
வராகக் காணப்பட்டார்.
மண்டூரிலுள்ள 'உவெஸ்லியன்மிசன் தமிழ்ப்பாடசா லையில் 1904ம் ஆண்டு 5ம் வயதில் ஆரம்பக்கல்வியைத் தொடங்கிய பெரியதம்பிப்பிள்ளையின் ஆசிரியர்கள் திரு. வே. கனகரத்தினம், திரு. மு. தம்பாப்பிள்ளை ஆகியோ ராகும்.இவர்களிடம் முறையாக்கல்வி பயின்ற பெரியதம் பிப்பிள்ளை அவர்கள் 1909ம் ஆண்டு பத்து வயதில் ஐந் தாம் வகுப்புச் சித்தியடைந்தார். இவருடன் ஐந்தாம் வகுப்பு சித்தி பெற்ற நண்பர்கள் சிலர் ஆங்கிலக்கல்வி
0 2

'யைப்பெறுவதற்காக கல்முனைப்பட்டணத்திற்குச் சென் றனர். இதைக் கண்ணுற்ற பெரியதம்பி அவர்களுக்கும் ஆங்கிலம் கற்கவேண்டும் என்ற விருப்பம் உண்டாகியது. மண்டூரின் தென்கிழக்கே எட்டு மைல் தொலைவில் அமைந்துள்ள கல்முனைப் பட்டணத்திற்குச் செல்வ தற்கு அக்காலத்தில் போக்குவரத்து வசதிகள் மிகவும் குறைவு. மண்டூரிலிருந்து நடந்துதான் செல்ல வேண் டும். இடையில் துறைநீலாவணையைக்கடக்க வேண்டும். இதற்குத் தோ6ணி ஏறிப்போக வேண்டும். ஆங்கிலம் படிக்கும் ஆர்வத்தில் இச்சிரமத்தை எல்லாம் பொருட் படுத்தாமல் கல்முனை செல்வதற்கான ஆயத்தங்களை மேற்கொள்ளும் சந்தர்ப்பத்தில் பெரியதம்பிப்பிள்ளை அவர்களது வீட்டிற்குவந்த பெரியாரொருவரினால் ஆங் கிலக்கல்வி கற்கக்செல்லும் முயற்சி தடைப்படுகின்றது யாழ்ப்பாணத்துப் புலோலியைச் சேர்ந்த சந்திரசேகர உபாத்தியார் என்னும் ஆசிரியரிடம் வீட்டிலிருந்து கொண்டே தமிழ் படிக்கத் தொட்ங்கினார்.
சூடாமணி நிக ண் டு, திருச்செந்தூர்ப்புராணம், பாரதம், இராமாயணம் போன்றவற்றை துறைபோகக் கற்றார். நிகண்டு, திருச்செந்தூர் புராணம் போன்ற வற்றை மனப்பாடம் செய்வதிலேயே மிகவும் அக்கறை யாக இருந்தார். இத் தமிழ் நூல்களை இவருடன் சேர்த்து படிப்பதில் இவரது நண்பர்களான திரு. க. சுப் பிரமணியம், திரு. சி. கறுவல்த்தம்பி, சர்க்கரையர் வினாவித்தம்பி ஆகியோரும் ஆர்வத்துடன் சேர்ந்து கொண்டனர். அக்காலத்தில் மட்டக்களப்பில் பாரதம் படிப்பது என்பது ஒரு தனியின்பம். பாரதம் படித்தவன் தான் தமிழ் படித்தவனாக கருதப்பட்டான். இரண்டரை ஆண்டுகள் நிகண்டினையும். பாரதத்தையும் நன்கு படிப் பதில் பெரியதம்பி அவர்கள் செலவிட்டார். பெரியதம் பிப்பிள்ளை அவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுப்ப தற்கு வாய்த்த சந்திரசேகர உபாத்தியார் மிகவும்
03

Page 8
இனிய சுபாவம் உடையவர். அபார ஞாபகசக்தியுடை யவர், மாணவர்களுடன் அன்பாக பழகும் சுபாவம் உடையவர்; அப்படிப்பட்டவரிடம் கல்வி கற்பதற்குக் கிடைத்த வாய்ப்பினை பெரியதம்பி அவர்கள் நன்கு பயன்படுத்திக் கொண்டார். இளமையில் இப்பெரும் நூல்களை எல்லாம் ஆர்வத்துடனும், நன்றாகவும் படித் தமையினால் பின்னர் சிறந்த புலமையும், கலித்துவமும் உடையவராக வருவதற்கு முடிந்தது.
பெரியதம்பி அவர்களுக்கு பன்னிரண்டாவது வயது இருக்கும் 1911ம் ஆண்டளவில் பட்டணம் பார்க்கும் ஆசை அவருக்கு உண்டாகியது. இதனை நிறைவேற்று வதற்காக அடம்பிடித்து அழுதுகொண்டிருந்த பெரிய தம்பியைப் பார்த்து அவரது தந்தையார் ஏன் அழுது கொண்டு இருக்கிறாய் அம்மா செத்துப் போயிற்றா என்று விளையாட்டாகக் கேட்டதும், சற்றுநேரத்தில் தாயார் சின்னத்தங்கம் கை கழுவுவதற்காகச் சென்றவர் அப்படியே ஈனக்குரலுடன் சா ய் ந் து போகின்றார். தாயார் இறந்த துக்கம் தாங்கமுடியாமல் பெரிய்தம்பி அவர்கள் தவியாய் தவித்துப் போகின்றார். இத்துக்க சம்பவத்தினை அடுத்து பெரியதம்பிப்பிள்ளை அவர்க ளது வாழ்க்கையில் ஒரு திருப்பம் உண்டாகின்றது. நீண்ட நாட்களாக தடைப்பட்டு வந்த ஆங்கிலம் கற்கும் முயற்சி நிறைவேறுகின்றது. தூரத்து சொந்தக்காரனா கிய சதாசிவம் என்னும் இளைஞன் இவரது வீட்டிற்கு வந்து பெரியதம்பியை அவர்களது தந்தையார் ஏகாம் பரம்பிள்ளையிடம் தன்னுடன் கல்முனைக்கு சென்று ஆங்கிலம் படிப்பதற்கு அனுப்பும்படி கேட்டுக்கொள்கின் றான். அதற்குச் சம்மதித்த இவரது தந்தையார் பெரிய தம்பிப்பிள்ளை அவர்களை கல்முனை உவெஸ்லி மிசன் பாடசாலையில் 1918ம் ஆண்டு சேர்த்து விடுகின்றார்.
O4.

அங்கு ஆங்கிலக் கல்வியை ஆசிரியர் திரு. கே. எஸ். குஞ்சித்தம்பி அவர்களிடம் கற்றார். விபுலாநந்த அடிக ளாரும் ஆரம்ப ஆங்கிலக் கல்வியை இவரிடமே கற்றார் என்பதும் ஈண்டு குறிப்பிடத்தக்கது. பதினான்கு வய தில் ஆங்கிலம் முதலாம் வகுப்பில் பெரியதம்பி அவர் கள் சேர்ந்து படித்த போது ஏனைய மாணவர்களுக்கு நகைப்பாகவிருந்தது . நல்லஉயரமும் வாட்டசாட்டமுமாக இருந்த பெரியதம்பியாருக்கு சிறியவர்களுடன் சேர்ந்து படிப்பது வெட்கமாகவும் கஸ்டமாகவும் இருந்தது. இதனால் முதலாம் இரண்டாம் ஆங்கிலப் புத்தகங்களை ஒருமிக்கப் படித்து பத்து மாதத்தில் ஐந்தாம் வகுப் பினை அடைந்து விட்டார். ஆங்கிலக் க்ல்வியைக் கற்பதில் இவருக்கிருந்த ஆர்வம் இதன் மூலம் புலப்படு கின்றது. இளமையிலேயே பெரியதம்பிப்பிள்ளை அவர் கள் ஒரு சமத்துவவாதியாகக் காணப்பட்டார். நாவி தர் (அம்பட்டர்) வைத்தியநாதர், அவரது மகன் இன். னா ஸிபோன்றோருடன் நண்பர்கள் போன்று சமமாகப் பழகினார். கல்முனைப் பட்டனத்தில் சென்று ஆங்கி லக் கல்வி கற்றதன் காரணமாக கன்னக் கொண்டை யும் வெட்டி சட்டையும் போடுவதற்குப் பழகிக்கொண் டார். இங்கு பழகும்போது பல பெரியாருடைய அறி முகமும் பல நண்பர்களது சேர்க்கையும் உண்டாகியது. ஆங்கிலத்தை நன்றாக எழுவதிலும் வாசிப்பதிலும், மனப்பாடம் செய்வதிலும் திறமையுடையவராகக் காண ப்பட்டார். .
1915ம் ஆண்டு பெரியதம்பி அவர்கள் ஆறாம் வகுப் பில் ஆங்கிலம் படிக்கும்போது கனம் ஆர். என். சேது காவலரிடம் கற்கும் வாய்ப்பு உண்டாகியது இவரிடம் பாடசாலையில் மாத்திரமல்லாது வீட்டிலும் சென்று பாடம் கேட்டு வந்தார். 6ம்வகுப்பு பரீட்சையில் வித் தியா தரிசி திரு. எஸ். ரீ. தில்லைநாயகம் அவர்களால் பரீட்சிக்கப்ப்ட்டு மிகச் சிறப்பாக தேர்ச்சி பெற்றார்.
05

Page 9
இக்காலகட்டங்களில் 7ம், 8ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் ஆசிரியர் வராத நாட்களில் தமிழ் படிப்பிக்கும் ஆசிரியத் தொழிலும் பெரியதம்பி அவர்களுக்குக் கிடைத் தது அவரது தமிழ் அறிவினையே காட்டுகின்றது. 1918ம் ஆண்டு 7ம் வகுப்பில் ஆங்கிலம் படித்துக்கொண் டிருந்த பெரிய த ம் பி அவர்களுக்கு திரு. கே. எஸ். பொன்னையா ஆசிரியரிடமிருந்து ஆங்கிலம் பழகும்... வாய்ப்பு கிட்டியது. ஆங்கிலம், கணிதம் இரண்டும் மிக வும் திறமையாக கற்பிக்கும் ஆசிரியராக திரு. பொன் னையா அவர்கள் அக்கால கட்டத்தில் விளங்கினார். இக்கால கட்டத்தில் பள்ளிக்கூடத்தில் இடம் பெறும் நிகழ்ச்சிகளில் நடிக்கப்படும் நாடகங்களில் முக்கிய பாத் திரமேற்று பெரியதம்பி அவர்கள் நடித்தார். இயற்கை யாகவே நடிக்கும் ஆற்றல் இவரிடம் காணப்பட்டது. நல்ல கணிர் என்ற குரல் வளம் இவருக்கிருந்தது. இத னாற் பேரும் புகழும் உண்டாயிற்று.
இக்கால கட்டத்தில் பெரியதம்பிப்பிள்ளை அவர் கள்ை கொடிய வாதநோய் ஒன்று பிடித்துக்கொண்டது. இதன் காரணமாக படிப்பு தடைப்பட்டதோடு உடல் நிலையும் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. வாதநோய் இவருக்கு வந்ததும் வீடடில் வைத்து நாட்டு வைத்தியம் (ஆயுள்வேதம்) செய்யத் தொடங்கினார்கள். இதற்குச் சற்றும் குணமடையவில்லை. உடல்நிலை வெகுவாகப் பாதிக்கப்பட்டு மெலிந்து ஒல்லியர்க மாறினார். பின் னர் கல்முனை அரசினர் வைத்தியசாலைக்குக் கொண்டு சென்று ஆங்கில வைத்தியம் மேற்கொள்ளப்பட்டதும் நோய் சுகமடைந்தது. பூரண மாகக் குணமடைவதற்குப் பத்து மாதங்களுக்கு மேல் சென்றுவிட்டதால் ஆங்கிலக் கல்வி இதனோடு. தடைப்பட்து. வீ ட் டி லி ரு ந் து கொண்டு தண்டியலங்காரம், யாப்பரும் கலம், யாப் பருங்கலக்காரிகை போன்ற நூல்களை படிக்கத் தொடங் கினார். பள்ளி நாட்களில் தொடர்ந்து கல்வி கற்பதில் பெரியதம்பி அவர்களுக்கு பல தடங்கல்கள் ஏற்பட்டு வந்தன. தடைக்கல் ஒவ்வொன்றும் முன்னேற்றத்திற்
06

குரிய வழி என்பதை மனதிற் கொண்டு விடாமுயற்சி யாக தமிழ் நூல்களைக் கற்று வந்தார். பெரியதம்பி அவர்களது ஞாபக சக்தி மிகவும் பயனுள்ளதாக இருந்
தது. பிற்காலத்தில் குறிப்புக்கள் இல்லாமலே பலவிட
யங்களை எழுதுவற்கு உதவியது. இவரது “உள்ளதும்
நல்லதும்' என்னும் கட்டுரைகள் இவ்விதமே எழுதப்பட்
டன. இளமையில் நல்ல ஆசிரியர்களிடம் கல்வி பயில்
கின்ற வாய்ப்பு பெரியதம்பி அவர்களுக்கு கிட்டியது.
உயர்கல்வி
1917 ம் ஆண்டின் நடுப்பகுதியளவில் மண்டூர்க் கந் தசாமி கோயில் வருடாந்த உற்சவம் வழக்கம்போல் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இச்சந்தர்ப்பத்தில் யாழ்ப்பாணம் மட்டுவில் வடக்கைச் சேர்ந்த திரு. செ. தம்பிமுத்துப் பிள்ளை என்பவர் மண்டூருக்கு வந்திருந் தார். அவர் புத்தகவியாபாரியாக இருந்த போதும் பெரிய தம்பிப்பிள்ளை அவர்களது தந்தையார் ஏகாம் பரப்பிள்ளையுடன் தொடர்பு வைத்திருந்தார். இவரு டைய தூண்டுதலின் பேரில் மட்டுவில் பண்டிதர் மகா லிங்கசிவத்தின் அறிமுகமும் யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை நாவலர் சைவப்பிரகாச வித்தியாலயக் காவிய பாடசாலையில் சேர்ந்து படிப்பதற்கான வாய்ப்பும் பெரியதப்பி அவர்களுக்கு ஏற்பட்டன. காவிய பாட சாலை கல்வி கற்கும்போதும் பல தமிழ் அறிஞர்களுடைய அறிமுகம் ஏற்பட்டதோடு மாத்திரமல்லாமல் பண்டித மணி கணபதிப்பிள்ளை அவர்களுடன் சேர்ந்து நண்ப களாக கல்வி பயிலவும் வாய்ப்புக் கிடைத்தது. சுன்னா கம் குமாரசுவாமிப் புலவர் பெரியதம்பி அவர்களுக்கு ஆசானாகவிருந்தார். இங்கு காவிய பாடசாலை மனே ஜர் திரு.த. கைலாசபிள்ளை அவர்களுடைய அறிமுகமும், ஏற்பட்டது. சுவாமி விபுலானந்தரைக்கூட நேரில் கண்டு அவரது ஆசியையும் அருளையும், அன்பையும் பெறுவ
C 7

Page 10
தற்குரிய சந்தர்ப்பங்கள் பல பெரியதம்பிப்பிள்ளை அவர்களுக்கு இங்கு உண்டாகியது. -
காவிய பாடசாலையில் படிக்கும் போது ஒவ்வொரு நாளும் திருக்குறளில் ஒரு அதிகாரம் பத்துக் குறளும், மறைசை அந்தாதி, கல்வளை அந்தாதி, திருமுல்லை அந்தாதி ஏதாவதொன்றில் ஐந்துபாட்டு, சூடாமணி நிகண்டில் சில பாட்டுக்கள், நன்னூற் சூத்திரங்கள் உரையுடன் சமஸ்கிருத சுரோகங்கள யாவும் வாய்ப் பாடமாகச் சொல்லவேண்டியிருந்தது. இதனால் சகல நூல்களுடனும் நன்கு பரிச்சியம் ஏற்பட வாய்ப்புக் கிடைத்தது. இவற்றுடன் சேர்த்து பாரதம், கந்தப்புரா ணம், கம்பராமாயணம் ஆகியவற்றையும் பெரியதம்பி அவர்கள் விரும்பிப் படித்தார். இவை பிற்காலத்தில் பக' வத்கீதை வெண்பாவிற்கு விளக்கங்கள் கொடுத்து எழு துவதற்குப் பெரிதும் உதவியாகவிருந்தது. இங்கு காவிய பாடசாலை மூலம் உயர்கல்வி அறிவினைப் பெறுகின்ற போது சுவாமி விபுலான்ந்தருக்கு அருளுரை வழங்கிக் கொண்டிருந்து யோகர் சுவாமிகளுடைய ஆசியையும் பெரியதம்பிப்பிள்ளை பெறமுடிந்தது. ஆன்றோரின் சிறந்த நூல்களைக் கற்பதோடு மாத்திரம் ஒருவனுடைய அறிவு விரிவடைந்து விடாது நல்லோருடைய சேர்க்கை யும் சிறந்த பண்பாளனை உருவாக்கும், இக்கால கட்டத்திலே பண்டிதர் மயில்வாகனனாருக்கும் சேர். பொன். இராமநாதனுக்குமிடையே நெருங்கிய நட்பு இருந்தது. இதுவே பின்னர் பெரியதம்பிப்பிள்ளை அவர் கள் தொழில் வாய்ப்பு பெறுவதற்கு வழி வகுத்தது. பண்டிதர் மயில்வாகனனார் மானிப்பாய் இந்துக் கல் லூரி அதிபர் பதவியினைத் துறந்து சென்னைக்குச் சென்று அங்கு பூரீ இராம கிருஷ்ண சங்கத்திருமடத்தில் சேர்ந்ததோடு பிரபோதசைதன்யாக என்னும் பிரம சரிய திரு நாமத் தைப் பெற்றுக் கொண்டார். பண்டிதர் மயில் வாகனனார் பெரியதம்பியைப் பற்றி ஏற்கனவே சேர். பொன். இராமநாதனிடம் நன்கு கூறி வைத்ததோடு மாத்திரமன்றி வேலை வாய்ப்பும் பெற்
O8

றுக் கொடுக்கும்படி வேண்டுகேர்ள் விடுத்திருந்தார். இவ் விதம் பெரியோர்களுடைய நல்லாசிகள் எப்பொழுதும் பெரியதம்பிக்குக் கிடைத்துவந்தது.
தொழில் வாய்ப்பு
முதன்முதல் நுணாவில் கிழக்கு அமிர்தாம்பிகை சைவ வித்தியாலத்தில் படிப்பிப்பதற்கு பெரியதம்பிப்பிள்ளை யவர்களுக்கு இடம் கிடைத்தது. பின்னர் சிறிது காலத் தில் சாவகச்சேரி சங்கத்தானை இந்துக் கல்லூரியில் தமிழ்ப் பண்டிதராக படிப்பிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பின்னர் புலவர்மணியவர்கள் தீண்டாமையை மிகவும் வெறுத்து செயற்பட்டமையால் சாவகச்சேரி ட்டிறபேக் கல்லூரியில் சேர்ந்து கற்பிக்க வேண்டிய நிலை உண்டா கியது. 1923 ல் பசுமலையில் உள்ள வேதசாஸ்திர கலா சாலையில் இரண்டு வருட பயிற்சிக்காக பெரியதம்பிப் பிள்ளையவர்கள் இந்தியாவிற்குச் செல்லவேண்டியேற் பட்டது. அங்கு ஞான கலாநிதி பனிக்கா என்னும் அமெ ரிக்கப் பெரியாருடைய நட்பும் அறிமுகமும் கிடைக்கின்' றது. கிறிஸ்தவ சமய போதனைகளை நன்கு படித்து அதில் பலதிருத்தங்களையும் செய்து கிறிஸ்தவ திருவவ தார கீதங்கள் என்னும் நூலையும் கிறிஸ்தவ சபைத் துயிலுணச்சி என்னும் நூலையும் புலவர்மணி அவர்கள் இயற்றினார்கள். கிறிஸ்தவர்களுக்குள்ளேயே தீண் டாமை வெகுவாக இருப்பதைக் கண்ணுற்ற புலவர் மணியவர்கள் பின்னர் பழையபடி வைத்திற்குத்திரும்பிய தோடு சுவாமி விபுலானந்தர் அவர்களால் கவரப்பட்டு 1926 ம் ஆடுை காலப்பகுதியில் திருமலை இந்துக்கல் லூரியில் ஆசிரியராகவும் பணி புரியத் தொடங்கி விட்
To T .
புலவர்மணியின் திருமணப்பதிவும் 1926 ம் ஆண் டிலேயே நிகழ்ந்தது. திருமணம் நிகழ்ந்த கையோடு வேலைவாய்ப்பும் புலவர்மணிக்கு கிட்டிவிடுகின்றது. திரு
09

Page 11
கோணமலையில் பணிபுரிந்த காலத்தில் பல் மாணவர்கள் இவரிடம் படித்துப் பயன் பெற்றனர். மாணவர்கள் இவரிடம் பாடங்களை விரும்பிப் படிக்கும் வகையில் "அன்புள்ள மாணவர்களே பயப்படாதீர்கள் தணிவு கொள்ளுங்கள் உங்கள் குறைகளை ஆசிரியர்களுக்கு வெளிப்படுத்துங்கள் உங்கள் குறைகளை அறிந்து அனு தாபத்துடன் அவற்றை நீக்கி வைப்பார்கள் உங்கள் ஆசிரியர்கள் நீங்கள் நிறைவு பெறுவீர்கள் உண்மை காண்பீர்கள்." எனக்கூறி உற்சாகப்படுத்துவார். திரு கோணமலையில் பணிபுரிந்த காலத்தில் பல உயர் அதி காரிகளுடைய தொடர்பும், பேரறிஞர் த.கனகசுந்தரம் பிள்ளை அவர்தம் சகோதரியார் திருமதி. தையல்நாயகி சுப்பிரமணியம்போன்றோரது நட்பும் ஏற்பட்டது. 1928ல் மகாத்மா காந்தியின் இலங்கை விஜயத்தின் போது புல வர்மணியவர்கள் இந்துக் கல்லூரியில் ஆசிரியராகப் பணி புரிந்து கொண்டிருக்கின்றார்.அப்போது காந்திஜி யாழ்ப் பாணம் செல்லும் வழியில் அவரை வரவேற்கும் வாய்ப்பு திருமலை மக்களுக்கு கிடைக்கின்றது. அதுவும் திருமலை யில் வைத்து அல்ல அனுராதபுரம் புகையிரதநிலையத் தில் வைத்து வரவேற்பு உபசாரம் அளித்தல் வரவேற் புப்பத்திரம் தயாரித்து வாசித்து சமர்ப்பிக்கும் பொறுப்பு புலவர்மணியிடம் ஒப்படைக்கப்படுகின்றது. இது அவ ருக்குக் கிடைத்த பேறு என்ற்ே கொள்ளவேண்டும். வர வேற்புப்பாடல் ஒன்றினை இங்கு குறிப்பிடல் பொருத் தமாகும்.
"சாந்தம் பொலிமுகமும் தண்ணளிசேர் கண்ணினையும்
வாய்ந்த கதராடை வடிவழகும் - சேர்ந்து மகான் காந்தியென ஒர்வடிவம் கண்முன்னர் நின்றதால் சாந்தி எமக்கின்று தான்.' ۔
இங்கு திருமலையில் பணிபுரியும் காலை சுவாமி அவிநாசானந்தரின் ஆசியும் அன்பும் புலவர்மணிக்கு கிடைக்கப்பெற்றது. திருமலை சண்முக வித்தியாலய
10

புதுக் கட்டிடத்திறப்பு விழாவிற்கு வருகை தந்த சேர். பொன்னம்பலம் இராமநாதன் அவர்கட்கு வரவேற்புப் பாடல் பாடிக்கொடுக்கும் வாய்ப்பும், அவரது அறிமுக மும் புலவர்மணியவர்கட்கு திருமலையில் உண்டாகியது.
1930ல் புலவர்மணியவர்கள் மட்டக்களப்புக்குத் திரும்பி புளியந்தீவு புனித அகுஸ்தினார் ஆசிரிய பயிற் சிக் காலாசாலையில் தமிழ்ப் புண்டிதராகக் கடமை யேற்று பணிபுரியத் தொடங்கி விடுகின்றார். இக்கால கட்டத்தில் பல தமிழ் வகுப்புக்களை பிரத்தியேகமாகவும் நடாத்தி பல மாணவர்களை புலவர்மணியவர்கள் உரு வாக்கினார். பால பண்டிதர் வகுப்பில் பல மாணவர் கள் சேர்ந்து படித்து புலவர்மணியவர்களிடமிருந்து நிரம் பிய தமிழ் அறிவைப் பெற்றனர். இக்கால கட்டத்தில் புனித சூசையப்பர் கன்னியர் திருமடத்தைச் சேர்ந்த சார்ச் சிசிலியா மகளிர் ஆங்கிலக்கல்லூரியிலும்எஸ்.எஸ்.சி வகுப்பு மாணவர்களுக்கு புலவர்மணியவர்கள் தமிழ் பாடம் சொல்லிக் கொடுக்கும் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார். இக் காலப்பகுதியில் பலருடைய தொடர்பு புலவர்மணிக்கு இருந்தது. அவர்களுள் சிறப்பாக குறிப் பிடத்தக்கவர்கள் பிறதர் பிலிப், பிறதர் இக்னேசியஸ், பிறதர் ஆசீர்வாதம் போன்றோராகும். ஆசிரிய கலா சாலை அதிபர்களுள் ஞானத் தந்தை டானியேல் புல வர்மணியை மிகவும் கவர்ந்தார். இவரொரு தத்துவ மே  ைத. ஆங்கி லம் இலத்தீன் ஆகிய மொழிகளில் நுண்ணறிவாளன். இவர் மாணவர்களுடனும் விரிவு ரையாளர்களுடனும் மிகவும் அன்பாகப் பழகி நல்மதிப் பைப் பெற்றார். 1935ம் ஆண்டிலிருந்து சிலவருடங்கள் ஆசிரியத் தொழிலிலிருந்து புலவர்மணியவர்கள் விலகி யிருந்தார். இக்காலப்பகுதியில் 1936ல் நடைபெற்ற பொதுத்தேர்தல் பிரசாரங்களிலும் புலவர்மணியவர்கள் ஈடுபட்டார். இதன்பின்னர் இரண்டொருவருடம் மண் டூர் உபதபால் நிலைய அதிபராகப் பணிபுரிந்தார். பிறந்த ஊருக்கு சேவை செய்யும் வாய்ப்பு இக்காலப்பகு

Page 12
தியில் புலவர்மணிக்கு கிடைத்தாலும், இவ்வாறர்ன உத்தியோகம் புலவர் மணிக்கு விருப்பம் இல்லாதவொன் றாக இருந்தது. படிப்பித்தல் தொழிலே மிகவும் மன
நிறைவைத் தரும் தொழிலாக அவருக்குப் புலப்பட்டது.
பின்னர் 1944, 1945ம் ஆண்டு காலப்பகுதியில் உணவுக் கட்டுப்பாட்டு இலாகாவில் தடுப்பு அதிகாரியாகக் கடமை
பார்த்தார். இவ்வுத்தியோகமும் அவருக்ரு விருப்பம் இல்லாதவொன்றாகவேயிருந்தது. 'தபாற்கந்தே T ர் வேலையிலும் இதுகண்டிப்பானவேலை. அது பணக்கட்டுப் பாடு, ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் வேலை" என்று புலவர்மணி குறிப்பிடுவதிலிருந்து இதனை எவ்வளவு தூரம் வெறுத்தார் என்பது தெரிகின்றது. இதன்பின் னர் 1946ம் ஆண்டில் பாராளுமன்ற உறுப்பினர் திரு.வ.
நல்லையா அவர்களின் முயற்சியால் நிறுவப்பட்ட அர சினர் கல்லூரியில் தமிழ்ப் பண்டிதராக விரிவுரையாள ராகப் பணியாற்றும் சந்தர்ப்பம் 1947ல் புலவர்மணிக்கு கிடைக்கின்றது. இங்கு பல நன்மாணாக்கர்களை உருவாக் குவதில் புலவர்மணி மிகவும் பாடுபட்டு உழைத்தார்.
1959 ம் ஆண்டு மாசிமாதம் 15ம் திகதி ஒய்வு பெறும் மட்டும் இங்கேயே பணிபுரிந்தார்.
புலவர்மணியவர்களின் குடும்பவாழ்வு தனி சிறப் புடையதாக அமைவதற்கு அவருக்கு வாய்த்த நல் மனையாள் நல்லம்மாவே காரணமெனக் கூறவேண்டும். புகுந்த இடமாகிய குருக்கள் மடத்தில் இனிய வாழ்க்கை நடாத்திய புலவர்மணியவர்கள் அருமைப் புதல்வர்கள் மூவரையும் புத்திரிகள் இருவரையும் பெற்றுச் சுகவாழ்
க்கை வாழ்ந்தனர். பிள்ளைகளை நல்வழிப்படுத்துவதில்
கணவனும் மனைவியுமாகச் சேர்ந்து திட்டமிட்டுச் செயலாற்றினர். புலவர்மணியவர்கள் தமது மனை விக்கு ஏற்பட்ட சுகவீனமே தாம் பகவத் கீதை வெண்பா பாடுவதற்குக் காலாக அமைந்தது என்று குறிப்பிட் டதோடு அதன் விபரங்களையும் அழகாகக் கூறியுள் of TI

தமிழ் இலக்கியப்பணி
புலவர் மணி அவர்கள் தாம் வாழ்ந்த காலப்பகுதியில் செய்த பல தமிழ் இலக்கியப் பணிகளை வெளிக் கொணரவும், அவருடைய சேவையினை மக்கள் மனதிற் பதிய வைக்கவும், அன்னாருடைய ஆக்கங்களை அச்சிட்டு வெளியிட வேண்டும் என்ற நல் நோக்கோடும் உருவாக்கப்பட்டதே புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை நினை வுப் பணிமன்றம், இம்மன்றம் நிறு வப்பட்ட காலத்திலிருந்து நல்ல பல காரியங்களைச்செய்து வந்துள்ளது. புலவர்மணியினால் எழுதப்பட்ட பல கவிதைகளைத் தொகுத்துப் "புலவர்மணி கவிதைகள்' என்ற நூலையும், அவரது “உள்ளதும் நல் லதும்' என்ற நூலையும் வெளியிட்டு அவரது இலக்கிய முயற்சிகளை
I 3

Page 13
சிறப்பித்துள்ளது, இன்னும் பல செயற்றிட்டங்களாக அன்னாருடைய முழு உருவச் சிலையினை மட்டக்களப்பு நகரின் க்ண் நிறுவுவதற்கும் அவரது பெயரை ஞாபக மூட்டி வீதிப்பெயர் சூட்டுவதற்கும் அவரது வாழ்க்கைக் குறிப்புகளை சேர்த்து நூலுருவில் வெளியிடுவதற்கும் இன்னும் அச்சில் வெளிவராத ஆக்கங்களைத் தேடிப் பெற்று அச்சிட்டு வெளியிடுவதற்குமான நடவடிக்கைக ளில் ஈடுபட்டு வருகின்றது.
புலவர்மணி அவர்கள் இயற்றி அச்சில் நூலுருவில் வெளிவந்துள்ள தமிழ் நூல்கள், இதுவரை அச்சிடப்ப டாத நூல்கள் எவை என்பது பற்றி நோக்குவோம். முதன் முதல் புலவர்மண் அவர்கள் இயற்றியது 'மண் ர்ே பதிகம்" என்பதாகும். மண்டூர்ப்பதியில் எழுந்தரு ளியுள்ள கந்தசுவாமியின் சிறப்புப்பற்றி இதில் விதந்து ரைக்கப்படுகின்றது. கவிதை நடையில் அமைந்துள்ள இந் நூலுக்கு சுவாமி விபுலானந்தர் வழங்கியுள்ள சிறப் புப் பாயிரத்திலிருந்து அதன் மகிமை தெளிவாகின்றது.
"மண்டூரும் முகிற்குலங்கள் எமதிறைவர்
மருகர்திருப் பதியீதென்ன . . விண் டூர மழைபொழியும் சிறப்பதனால் வளம் மலிந்து மிகுந்து தோன்றும் மண்டூரி லுறைமுருகன் மலரடிக்கோர்
திருப்பதிகம்மரபிற் சொற்றான் கண்டுரு மினிய மொழிப் பெரியதம்பிப்
பிள்ளையெனும் கலைவல்லோனே."
-சுவாமி விபுலானந்தர்
பிறந்த மண்ணின் மீதும் சைவத்தின் மீதும் புலவர்மணி அவர்கட்கு இருந்த ஈடுபாடு இப்பதிகத்தின் மூலம் தெளிவாகத் தெரிகின்றது. நாட்டின் மீதும் , மொழியின் மீதும் புலவர்மணி மிகவும் வாஞ்சை கொண்
14

டிருந்தார் என்பதனை'ஈழமணித்திருநாடு எங்கள் நாடு' என்ற புலவர்மணியவர்களது பாடல்களிலிருந்து காண முடிகின்றது.மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு போன்ற பெரியார்களிடம் இவர் ஈடுபாடு கொண்டிருந்தார். ' இதன் காரணமாகவே நாட்டுப்பற்றும், மொழிப்பற்றும் சமூகப்பற்றும் தானாகவே ஏற்பட்டன. மகாத்மா காந்தி அவர்கள் ஒரு தடவை ஈழ மண்ணிற்கு விஜயம் மேற் கொண்ட போது புலவர்மணி அவர்கள் ‘தீண்டாமை நோயதனை' என்ற கவிதையைப் பாடி அளித்தார்கள். இதிலிருந்தும் எந்தளவிற்கு சாதிக் கொடுமையினை புல வர்மணி அவர்கள் வெறுத்தார் என்பதனை உணர்ந்து கொள்ள முடிகின்றது. தாழ்ந்த குலத்தைச் சேர்ந்தவர் எனக் கருதப்பட்ட இவரது நண்பன் ஆறுமுகம், யாழ்ப்பாணத்து சாவகச்சேரியைச் சேர்ந்தவர். இவர் இறந்த பின்னர் அவர்து மகன் அப்பாத்துரையிடம் புலவர்மணிதாம் பாடிக்கொடுத்த கவிதைகளில் சாதிக் கொடுமையினை வெகுவாகச் சாடியுள்ளார்.
'ஒழுக்கத் துயர் குலமாம் ஓங்கு புகழுண்டாம்
இழுக்கத் திழி குலமாம் என்றே - விழிப்பத்து நூற்கு லத்தையெல்லாம் நுணுகியறித் தாறுமுகன்
மேற் குலத்தனானான் விரைந்து'
இப்பாடலில் ஒருவன் பிறப்பினால் தாழ்ந்த குலத் தவனாகக்கருதப்பட முடியாது. அவனது செய்கையிலே உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று மதிப்பிட வேண்டும் என்று கூறுகின்றார். மேற்குலம் உயர்ந்தச்ாதி என்று தம்மைக் கூறிக்கொள்ளும் எத்தனையோ பேர் கீழ்த்தர மான செயலில் ஈடுபட்டுள்ளார்கள். இவர்களைத்தான் தாழ்ந்த சாதியினர் என்று குறிப்பிட வேண்டும் என்ற கொள்கையுடையவர் புலவர்மணி அவர்கள் .
இவருக்குப் புகழைத்தேடித்தந்த நூல் இவர் இயற் றியபகவத்கீதைவெண்பா. இந்நூல் பாடுவதற்கு ஏதுவா
15

Page 14
கவிருந்த காரணிகளையும் நூலின் பெருமையினையும் இனி நோக்குவோம். புலவர்மணி அவர்களது துணைவி யார் நல்லம்மா அம்மையார் சுகவீனமுற்று இருந்த கால கட்டத்தில் (1943 - 1944) அவரைக் கொழும்பு பெரியா ஸ்பத்திரியில் வைத்துச்சிகிச்சை அளிக்கவேண்டியிருந்தது. இச்சந்தர்ப்பத்தில் கொழும்பிலுள்ள இவரது நண்பர் ஞானசெல்வம் அவர்களுடைய வீட்டில் புலவர்மணி அவர்கள் தங்கியிருந்தார். அங்கு தாம் தங்கியிருந்த அறையில் கண்ணுற்ற பாரதியாருடைய மொழிபெய ர்ப்பான பகவத்கீதையினை எடுத்துப் படித்தார். ஒவ் வொரு சுலோகத்தினையும் படிக்கும் தோறும் அதில் ஏற்பட்ட மன அமைதியும் ஈடுபாடும் மேலும் மேலும் படிக்கத்தூண்டியது. ஒவ்வொரு சுலோகத்தினையும் படித்துவிட்டு அதனை ஒரு வெண்பாவில் பாடினார். இவ்விதம் பாடியவற்றை பின்னர் அப்பியாசக் கொப்பி களில் எழுதி வைத்தார். 1914 ஆம் ஆண்டில் வீரகேசரி ஆசிரியராக இருந்த திரு. கே.பி. கரன் என்பவரது முயற் சியினால் பகவத்கீதை வெண்பாக்கள் ஞாயிறு தோறும் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டன. *
影
வெண்பா யாப்பினைக் கையாண்டு கவிதை இயற் றுவதில் புலவர்மணி மிகவும் திறமையுடையவராக விளங் கினார். வெண்பாவிற் பெரியதம்பி என்று கூறுமள விற்கு இவரது வெண்பாயாப்பு அமைந்திருந்தது. எளி மையான சொற்களைக் கையாண்டு எல்லோருக்கும் இல குவாக விளங்கக்கூடியவகையில் புலவர்மணியவர்கள் கவிதைகளைப் புனைந்தார். வெண்பா யாப்பினைக் கையாண்ட ஏனைய புலவர்களுடன் புலவர்மணியினை ஒப்பு நோக்கும்போது இவருக்குத் தனியிடம் உண்டு. சுவாமி பிரேமாத்மானந்தா அவர்கள் புலவர்மணி பற்றி யொரு இடத்தில் குறிப்பிடும்போது 'கீதா சாஸ்திரம் கூறும் அரிய கருத்துக்களை சொல்வளமும், பொருட் செறிவும், யாப்பமைவும், இ ைச ந ய மும், பொருந்த எளிய நடையில் இனிமையான வெண்பாயாப்பில் பக
16

வத்கீதையினை யாத்துள்ளார் எனக் குறிப்பிட்டுச் சொல் கின்றார். புலவர்மணியவர்கள் தமது பகவத்கீதை வெண் பாவில் கீதோபதேச உண்மைகளை விளக்குவதற்குத் 1ே.1ார திருவாசகங்கள், திருக்குறள், கந்தபுராணம், திருவிளையாடற் புராணம், வில்லிபாரதம், கம்பராமா பணம், தாயுமானவர் பாடல்கள் முதலிய பல இலக்கிய தத்துவ நூல்களையும் எடுத்தாண்டு மேற்கோள்கள் காட்டி விளக்கிச் செல்லும் வகையே ஒரு தனித்துவ மாகும்.
பகவத்கீதை வெண்பாவினைப் புலவர்மணியவர் கள் மூன்று பாகங்களாக இயற்றியுள்ளார். முதலாவது பாகம் ஆறு அதிகாரங்களைக் கொண்ட "கருமயோகம்’ இரண்டாவது பாகம் ஆறு அதிகாரங்களைக் கொண்ட "பக்தியோகம்' மூன்றாம் பாகம் இன்னும் ஆறு அதி காரங்களைக் கொண்ட "ஞான யோகம்’ எனப்படும். மூன்று பாகங்களும் சேர்த்து மொத்தம் அறுநூற்றித் தொண்ணுாற்றெட்டு (698) செய்யுள்கள் அடங்கும். 1961ம் ஆண்டு பகவத்கீதைவெண்பா அ ரங் கே ற் றம் வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரா வித்தியாலயத்தில் நடைபெற்றது. 1962ல் பகவத்கீதை வெண்பா நூலாக வெளிவந்தபோது அறிவுலகத்தின் ஒரு மனதான பாராட் டைப் பெற்றது. அத்தோடு இவ்வாண்டில் சாகித்திய மண்டலப் பரிசும் இந்நூலுக்குக் கிடைத்தது. புலவர் மணியவர்களது "பக்தியோகம்" இரண்டாம் பாகக்திற்கு மதிப்புரை வழங்கிய கனம். கி. இலட்சுமணன் வித்தி யாதிபதி அவர்கள் இவர் பற்றிக் குறிப்பிடும் போது "புலவர்மணி அவர்களுடைய கவிதா சக்தியைப் பற்றிக் குறிப்பிடுவதாயின் பகவத்கீதை வெண்பா முதலாம் பாகத்திற்குப் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர் கள் வழங்கியுள்ள தமது ஆய்வு முன்னுரையிலே தெரி வித்துள்ள கருத்தையே இங்கு குறிப்பிடுவது பொருத்த மாகும். அங்கு பண்டிதமணி அவர்கள் புலவர்மணி அவர் களைப்பற்றி 'பாட்டுக்கொரு புலவன் பாரதியென்றா

Page 15
ரொருவர் பாட்டுக்கிவனென்பன் யான்" என மிக அரு
மையாகப் பாராட்டியுள்ளார். பண்டிதமணி அவர்களே இவ்வாறு பாராட்டுவாராயின் புலவர்வணி அவர்களின் கவிதைத் திறனுக்கு வேறு சான்றெதுவும் வேண்டாம் என்றும் கவிதைக்கு கவிதை, இலக்கியத்திற்கு இலக்கி யம், எளிமைக்கு எளிமை, இனிமைக்கு இனிமை, தத் துவத்திற்கு தத்துவம் இவ்வாறு பலவகையிலும் சிறப் புற்று விளங்குகின்றது புலவர்மணி அவர்களுடைய இந்த அரிய படைப்பு, இதனை ஆக்கித் தமிழ் உலகத்திற்கு உபகரித்த புலவர்மணி அவர்கள் தமிழ் மக்கள் அனை வரது பாரட்டுக்கும் உரியவர்" என்றும் குறிப்பிட்டுள்
G打f丁f丁、 p
புலவர்மணி அவர்கள் வெண்பாயாப்பிலே பாடிய பக வ த் கீ தை மாத்திரம் அவருக்குப் புகழைத்தேடிக் கொடுத்தது என்பதற்கில்லை. அவர் பாடிய ஏராள மான தனிக்கவிதைகளும் இலக்கிய அந்தஸ்துடையன வாக உள்ளன. இவர் பாடிய சிறந்த கவிதைகளையெல் லாம் புல வ ர் மணி நினைவுப் பணி மன்றம் தேர்ந் தெடுத்து புலவர்மணிக் கவிதைகள்’ என்னும் பெயரில் நூல் உருவில் வெளியிட்டுள்ளது. இக்கவிதைகளைப் படிப்பதன் மூலம் புலவர்மணி அவர்களது தமிழ்ப் பணி யின் சிறப்பினை நாம் தெளிவாகக் கண்டு கொள்ள முடியும். இதே போன்று இவர் எழுதிய கட்டுரைகள் பலவற்றையும் தொகுத்து உள்ளதும் நல்லதும் என்னும் ஒரு நூலையும் நினைவுப் பணி மன்றம் அச்சிட்டு வெளி யிட்டுள்ளது. இந்நூலில் அடங்கியுள்ள கட்டுரைகளைப் படிக்கும் பொழுது புலவர்மணியின் வாழ்க்கையில் நடை பெற்ற பல சம்பவங்கள் அப்படியே எடுத்துக் காட்டப் பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. இவரது வாழ்க் கைக் குறிப்புகள் சிலவும் சமய சமூகப் பணிகளில் இவர் ஈடுபட்ட தன்மையும் இதன் மூலம் தெளிவு படுத்தப் படுகின்றன. தனது ஆசான்கள், நண்பர்கள், அறிஞர்
8

பெருமக்கள் பலரது தொடர்புகளை உள்ளபடி கூறியி ருப்பது மிகவும் பிரயோசனமான செயலாகவுள்ளது.
புலவர்மணி அவர்கள் சுவாமி விபுலாநந்தருடன் கொண்டிருந்த ஈடுபாடும் மதிப்பும் வெளிப்படும் வகை யில் "யாழ் நூல் தந்தோன்' என்னும் நூலையும், விபுலாநந்த மீட்சிப்பத்து என்னும் கவிதை நூலையும் இயற்றியுள்ளார். யாழ் நூல் த ந் தோன் என்னும் நூலிலே அடிகளார் மீது பாடிய மணிமொழிநாற்பது இடம்பெறுகிறது. புலவர்மணி இயற்றிய ஏனைய நூல் களுள் ஈழமணித்திருநாடு, சேனநாயக வாவி, கொக்கட் டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் பதிகம், யூனி மாமாங்கப் பிள்ளையார் பதிகம், ஆனைப்பந்தி சித்தி விக்னேஸ்வரர் பதிகம், சிற்றாண்டிக் கந்தசுவாமி பதிகம், திருக்கோயில் சித்திர வேலாயுத சுவாமி பதிகம், காளியாமடு விநாயகர் ஊஞ்சல் என்பன குறிப்பிடத்தக்கவை. இறைபக்தி கார ணமாக வரலாற்றுப் புகழ் உள்ள ஒவ்வொரு திருத் தலத்தின் மேலும் பத்துப் பத்துப் பாடல்கள் கொண்ட பதிகங்களைப் புலவர்மணியவர்கள் யாத்துள்ளார். இவ ரது குடும்பமே கோயிற்றொண்டில் ஈடுபட்டவொரு குடும்பம். இவரது தந்தையார் ஏகாம்பரப்பிள்ளை மண் டூர் கந்தசுவாமி கோயில் வண்ணக்கராகவிருந்தவர். அவரது தந்தையாரும் வண்ணக்கர் பரம்பரையிலே வந் தவரேயாகும்.
புலவர்மணியவர்கள் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த சில காலங்களில் கிறிஸ்தவ மதத்தின் மீது ஈடுபாடு கொண் டு அம்மதத்தினைச் சார்ந்து சில சீர்திருத்தங் களையும் தமிழ்ப் பணியினையும் மேற்கொண்டுள்ளார். இக்காலகட்டத்தில் இந்தியாவுக்குக்கூடச் சென்று பசு மலையில் வேதசாஸ்திரங்களைப் பற்றிய பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளார். கிறிஸ்தவ மதத்தின் மீது ஈடுபாடு கொள்வதற்கு வழிவகுத்த காரணிகளைச் சற்று ஆராய் வதன் மூலம் கிறிஸ்தவம் சம்பந்தமான நூல்களை
19

Page 16
இயற்றுவதற்கு தூண்டிய மனோநிலையைக் கண்டு கொள்ளலாம். யாழ் இந்து இளைஞர் மன்ற செயலாள ராக புலவர்மணி இருந்தபோதுபள்ளர்குலத்தைச்சேர்ந்த ஆறுமுகம் என்பவருடன் புலவர்மணி அவர்கள் நட்புக் கொண்டிருந்தார். இளமையிலிருந்தே தீண்டாமையை ஒளிக்க வேண்டும் என்ற எண்ணம் இவர் மனதில் பதிந் திருந்தது. சாவகச்சேரியில் தாழ்ந்த குலத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் புலவர்மணியுடன் தொடர்பு வைத் திருந்ததை இந்து இளைஞர் மன்றக் காரியதரசி முதலி யார் சிவகுரு அவர்களும் மற்றும் உள்ளோரும் விரும்ப வில்லை. இதன் காரணமாக பின்னர் ஆறுமுகம் இறந்த போது அவரது மகன் அ ப் பா த் து ரை யின் வேண்டு கோளின் பேரில் பாடிக்கொடுத்த பத்து இரங்கற் பாக் கள் வெளிவந்ததும் பெரும் பரபரப்பு ஏற்பட்டு இந்து வாலிபர் சங்கக்தினர் புலவர்மணியினை சங்கத்திலிருந்து வெளியேற்றிவிட்டனர். இச்செய்கை இந்து சமய நிறு வனம்மீது புலவர்மணிக்கு வெறுப்பை ஏற்படுத்தியது.
பின்னர் கலாநிதி ஐஸ்க் தம்பையா அவர்களுட னும் எட்வேட் போதகர்'என்பவருடனும் நட்புக்கொண்டு சாவகச்சேரி ஜே. கே.சின்னத்தம்பி போதகரிடம் சென்று கிறீஸ்தவ மதத்தின் சமத்துவ நிலையைக் கண்ணுற்று சாவகச்சேரி றிபேக் கல்லூரியில் தமிழ்ப் பண்டிதராகச் சேர்ந்து கொண்டார், இதன் பின்னரே கிறிஸ்தவ மதக் கோட்பாடுகளையெல்லாம் படித்து அம்மதத்திலே உள்ள குறைபாடுகளைப் போக்குவற்கு முயற்சியெடுத் தார். முதன் முதல் கிறிஸ்து திருவவதார கீதங்கள் என்னும் சிறு பிரபந்தம் ஒன்றைப் பாடினார். அதில் இடம் பெறும் ஒரு கீதத்தின் சில வரிகளைப் பார்க் கலாம்.
* புலோகந் தனிற் பிறந்தாரே - LipTGOTITGT
மேலோகத்தின் மேன்மைவிட்டு
20

மிகுமதிசய சுதனென இதோ - பூலோகந்தனிற். வரத்தையும் வேதாட்ச்ரத்தையும் கின்பா
கரத்தையும் சுதந்தரத்தையும் தரப்
பரத்தையும் தேவ புரத்தையு முயர்
தரத்தையும் துறந்திரட்சகரென்ப - பூலோகந்தனிற்
என்று சொல்லும் இக்கீதங்களில் புலவர்மணிய வர்கள் கிறிஸ்தவ மதத்தினை எவ்வாறு தான் நன்கு உணந்துள்ளார் என்பதனைக் காட்டியுள்ளார். இதன் பின்னர் கிறிஸ்தவ மத துயிலுணர்ச்சி குருபரதரிசன திரு வேட்கை போன்ற கிறிஸ்தவமத சார்பான நூல்களை யும் இயற்றினார். இந்தியாவில் இரட்சணியபுரம், திண்டுக்கல், ஈரோடு, கோயம்புத்தூர் முதலிய பல இடங்களுக்கும் சென்று சமய விரிவுரைகள் செய்வதில் புலவர்மணியவர்கள் அக்காலகட்டத்தில் ஈடு பட் டி ருந்தார்.கிறிஸ்தவ சபைத் துயிலுணர்ச்சி என்னும் நூலில் கிறிஸ்தவ சபையில் செய்ய வேண்டிய பல சீர்திருத்தங் கள் பற்றி மிகவும் ஆணித்தரமாக எடுத்துக் கூறியுள் ளார். 1925 ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற மகா நாட்டிற்குப் பசுமலைப் பிரதிநிதியாகப் புலவர் மணி தேர்ந்தெடுக்கப்பட்டார். கோயம்புத்தூர், பசுமலை போன்ற இடங்களில் நடைபெற்ற மகா நாடுகளில் கலந்து கவிதைகளையும், சமய சொற்பொழிவுகளையும் ஆற்றிய புலவர் மணியவர்களுக்கு நல்ல பாராட்டும், மதிப்பும் கிடைத்தன. 'பசுமலை வேதசாத்திரசாலை விடுதி மேற்பார்வையாளராகவும், பொருளாளராகவும் கூட புலவர் மணியாளர்கள் இருந்துள்ளார். பசுமலையில் இருந்த காலப்பகுதியில் புலவர் மணி ய வ ர் க ளா ல் மதுரைத் தமிழ்ச் சங்க க லா சா  ைல அதி பர் திரு. நாராயண ஐயங்கார், பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியார் நாவலர் ச. வேங்கடசாமி நாடார், நாவ லர் ச. சோமசுந்தர பாரதியார், கனம் வெஸ்லி ஐயர் போன்றோருடன் தொடர்பு கொள்ளவும் பழகவும்
2

Page 17
வாய்ப்பு ஏற்பட்டது. 丑925á மதுரைமாநகரில் மங்கம் மாள் சத்திரத்தில் சுவாமி விபுலாநந்தரைச் சென்று சந்தித்த புலவர்மணியின் வாழ்க்கையில் திருப்பம் ஏற்ப டுகின்றது, காந்தத்தை நோக்கிய இரும்புபோல் ஆகி விடுகின்றார் புல்வர்மணி பெரியதம்பிப்பிள்ளை. இந் நிகழ்ச்சியினை பகவத் கீதை வெண்பா முதலாம் பாகத் தில் பெரும் இச்சமர்ப்பணச் செய்யுள் தெரிவுபடுத்து கின்றது.
'சங்கத் தமிழ் மதுரைச் சத்திரத்தில் வைத்தெம்மை அங்கு வசமாக்கிய அருள் செய்வதே - தங்கியெம் புத்தி புகுந்த விபுலானந்தர் பொன்னடிக் கண் வைத்திந் நூல் நெஞ்சே வணங்கு.
பின்னர் 1926ல் நடைபெற்ற திருமண வாழ்க் கையைத் தொடர்ந்து திருக்கோணமலை இந்துக் கல்லூ ரியில் தமிழ் பண்டிதராகப் பணிபுரியும் வாய்ப்பும் உண்டாகின்றது. . . .
புலவர் மணி வீரகேசரி, தினபதி, தினகரன் போன்ற பத்திரிகைகளில் கண்ணகி வழிபாடு, கொம்பு விளையாட்டு, வசந்தன், ஊஞ்சல் பற்றிய கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதிவந்தார். இராமாயணக்காட்சிகள் பற்றிய கட்டுரை களைத் தினகரனில் எழுதிவந்தார். சுவாமி விபுலானந்தர், ஆறுமுகநாவலர் ஆகிய இருவர் பற்றியும் பல கட்டுரை களைப் புலவர்மணியவர்கள் பத்திரிகைகளில் எழுதியுள் ளார். இவற்றில் முத்தமிழ் முனிவராம் வித்தக விபுலா னந்தர் நினைவு 1ஷ 11 என்பதும், சைவத்தைக் கைதுக்கி விடுவதற்கு அவதரித்த நாவலர் பெருமான் 1ஷ 11 ஆகிய கட்டுரைகள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை. புலவர் மணியவர்கள் செந்தமிழ்ச் செல்வர் வாகீச கலாநிதி பூரீ. கி, வா. ஜகந்நாதன் அவர்களது அறுபதாண்டு நிறை விற்கு மட்டக்களப்பு மக்கள் மனங்கனிந்த வாழ்த்து மடலைத்தாமே கலிவெண்பாவினால் பாடிக் கொடுத்
22

தார். வாழ்த்துமடல் நயங்கருதி இதனுடன் இணைக் ஃப்பட்டுள்ளது.
செந்தமிழ்ச் செல்வர், வாகீச கலாநிதி, பூரீ. கி. வா. ஜகந்நாதன் அவர்களது அறுபதாண்டு நிறைவினைக் குறித்து மட்டக்களப்புத் தமிழக மக்கள் 30-8— 666і) நகரசபை மண்டபத்தில் அன்னாருக்கு மனங்களிந்தளித்த
5: 1ா ழி த் து 1D LI
கலிவெண்பா
தெய்வத் திருவளருஞ் செம்மைமனத்துதித, மெய்லைத்த ஞான விளக்கொளிபோல் - வையத்தே துய விபு லாநந்த சோதிதனைப் பெற்றமையால் தேயமெலாம் போற்றுந் திருநாடு - பாயகலை வெண்கதிரோன் நீரின் விளங்காத வெண்மையினைக் கண்கொளவே நன்குவெளிக் காட்டல்போல் - தண்புன லின் மேல்பாற் பரந்து விரிகதிரால் வாவியினைப் 1ால் போல மாற்றுவதைப் பாராட்டிப் - பால்மதிய மண்டலத்தை வாழ்த்துதல்போல் நீர்க்கீழ் அரமகளிர் பண்டைத் தமிழ்யாழ் இசைபாட - உண்டினிது வெண் தயிர் செந் தேன்செந்நெல் வெண்சோற்றுடனருந்
பண் தவழும் நன்னாட்டுப் பாட்டமிழ்தம் - பெண்தகை Lf FT fT” வாயொழுகக் கேட்டு மனநிறைவு கொண்டெவரும் போயுரைக்க நீண்ட புகழ்நாடு - பாயும் நதிநீ ரொலிநாட்டுக் கூத்தொலிக்கு மாறாய் எதிரொலிசெய் தெங்கு மிசைக்கப் - புதிர்காவும்
சையொரு மாதர் உரையசைக்கா வோசைமனை
23

Page 18
வாசல்தொறு மொன்றாய் மயங்கியெழ - வீசுவலை மீனுக்கு மூனுக்கும் வெண்னெல்லுஞ் செந்நெல்லும் தான்விலையாள் மாறித் தலைமயங்கச் - சோனகர்கம் கோலளக்குஞ் சீலைக்குக் கொள் விலையாய் நல்லமரக் காலளக்கும் நெற்குவியல் காண்பிக்கச் சாலவே கோயிலிலும் பள்ளி குளங்களிலும் நீர்பெருகிப் பாயும் நதியில்வயற் பண்ணையிலும்-போயொருங்கோபி தாய்வயிற்றுப்பிள்ளைகள் போற் சார்ந்து சம மாயெவரும் நேயமுடன் வாழும் நிறைநாடு - தூய மனச் சிட்டர் புகழுந் திருநாடு செந்தமிழ்வாழ் மட்டக் களப்பெனும் மாநாடு - உட்கனிந்து மங்களஞ்சேர் நல்ல மணிவிழாச் செல்வ! நினைப் பொங்கு மன்பாற் கண்டுமனம் பூரித்தே - இங்கு வருக பொலிகவென்றே வாழ்த்தி யினிதாய் உருகுமுரை கேட்பா யுவந்து; - திருவுடைய சான்றோர் புகழ்சாமி நாதையர் சூலுளைந்தே ஈன்ற தமிழின் வடிவமெனத் - தோன்றி வருமனது நல்வரவால் வள்ளல் ஜகநாதா பெருமிதங்கொண் டோம் தமிழர் பேறே - உருவத்தால் ஓங்கு சமனொளியை யொப்பாய் உரைவளத்தால் தேங்கமழு மாவலித்தெண் ணிர்ப்பெருக்கை - வாங்கு கடற் கீரிமல்ை யூற்றைக் கிளர்கன்னி யாயெனும்வெந் நீர்நிலைக ளேழும் நிகர்வாய்நீ - சேருமதி ஆழம் அமைதி யடக்கத்தாற் கோணமலை சூழு மியற்கைத் துறைபோல்வாய் - வாழி தெளிவால் இனிமையாற் சீர்விபுலா நந்தர் உளமார் கவிநலனை யொப்பாய் - இளமைவளர் தென்மொழியைச் செய்ய சிவநெறியை - வேல்முருகன் தன்வடிவிற் கண்ட தனிநோக்கும் . தொன்மைவளர்
24

சங்கத் தமிழைச் சமயப் பொருளை மக்கள் சங்கத்தி லேற்றிவைத்த தண்ணளியும் - எங்கும் கலைவிளக்கம் போன்ற கலைமகளால் நாட்டின் நிலைவிளக்கஞ் செய்த நெறியும் - தலையாய தெய்வத் திருக்குறளுட் செந்தமிழெல் லாங்காட்டிச் செய்தகலை யாக்கத் திருப்பணியும் - ஐயாநின் உள்ளழகின் தோற்றமென்வொளிர்ந்தே தெள்ளுதமிழ் உள்ளளவும் வாழ்விக்கும் உன் புகழை உள்ளத்தே உள்ளுதொறும் உள்ளுதொறும் உன்னினிமை செய்தமிழ் போல் அள்ளிக்கொள் வன்ன அழகுடைய - நல்லோய் சதாபிஷே கங்கண்ட சான்றோ னெனநீ சதாமங்களந்தழைத்து வாழ்க - சதா நிதமும் மல்லல் வளஞ்சுரக்கும் மட்டுநன் னாட்டுவயல் நெல்லினும்பல் லாண்டு நிறைந்து. மட்டக்களப்பு இன்னணம் இலங்கை: மணிவிழாக் குழுவினர். 30-8-1966.
கவிதை. புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை.
புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளையவர்கள் மட்டக் களப்புத்தமிழ்க்கலை மன்றத்தின் தலைவராகப் பல ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். அக்காலப்பகுதியில் இம் மன்றத்தின் செயலாளராகவிருந்தவர் திரு. ம. சிவநேச ராசா அவர்களாகும். அன்னார் இருவரது முயற்சியா லும் அக்காலகட்டத்தில் தமிழ் இலக்கியப்பணிகள் மென் மேலும் வளர்ச்சிகண்டன. 1954 ம் ஆண்டு மட்டக்க ளப்பு நகரில் நடாத்தப்பட்ட மிழ்விழா சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. இவ்விழாவில் தமிழகத்திலிருந்தும் பல அறிஞர்கள் கலந்து கொண்டு சொற்பெருக்காற் றிச் சிறப்பித்தனர். புலவர்மணி அவர்கள் தலைமை
25

Page 19
யில் மட்டுநகர மண்டபத்தில் நடைபெற்றவொரு நிகழ்ச் சியில் வணபிதா. தனிநாயகம் அடிகளாரின் "ஈழநாட் டுத் தமிழகத்தின் மறுமலர்ச்சி' என்னும் சொற்பொழிவு இடம் பெற்றது.தமிழ் விழாக்களில் கலந்து கொள்வதற் குக் கலைமகள் ஆசிரியர் கி. வா. ஜகந்நாதன், சிவாஜி என்ற தமிழ்ப் பத்திரிகையின் ஆசிரியர் திருலோகசீதா ராமன் ஆகியோர் இங்கு வந்த னர். 1954 காலப்பகுதில் மட்டக்களப்புத் தமிழ்வாலிபர் சங்கமும், தமிழ்க்கலை மன்றமும் சேர்ந்து பல இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டு வந்தமைக்கு புலவர்மணி போன்ற பெரியார்கள் ஊக்கம ளித்தமையே காரணமாக அமைந்தது. 1955 ல் விபுலா நந்தர் நினைவு விழாவினையும், 18-09-1953 ல் பூரீ சுப் பிரமணிய பாரதியார் தினத்தையும் தமிழ்க்கலை மன்றம் நடாத்தியது. அத்தோடு தமிழ் மாணவரின் நலன் கருதி தமிழ் வகுப்புக்களையும் இம்மன்றம் நடாத்தியது. இதில் முக்கிய வகுப்புக்களை புலவர்மணி நடாத் Saat Tri. தேசி க ம ணி அருணாசலம் அவர்களும், இலக்கியம், சமயம் போன்ற வகுப்புக்களை எடுத்தார் புலவர்மணி 1940 ம் ஆண்டு திருக்குறள், கம்பராமா யண வகுப்புக்களை நடாத்தினார். இவ்வகுப்புக்களில் பலமாணவர்கள் படித்துப் பயன்பெற்றனர். இவர்களுள் இருவரைப்பற்றி புலவர் மணியவர்களே குறிப்பிட்டுள் ளார்கள். ஒருவர் காலஞ்சென்ற வெ. திருநாவுக்கரசு அவர்கள். இவர் மட்/சிவானந்தா வித்தியாலயத்தில் ஆசிரியராகப் பணிபுரிந்தவர். மற்றயவர் எஸ். டி. சிவ நாயகம் என்பவர் சுதந்திரன், தினபதி பத்திரிகைகட்கு ஆசிரியராகப் பணிபுரிந்தவர்.
புலவர்மணியவர்களது தமிழ் இலக்கியப் பணியினை இலங்கை வானொலியிலும் நாம் காணமுடிகின்றது: பல பயனுள்ள பேச்சுக்களை வானொலியில் நிகழ்த்தி யுள்ளனர். இலங்கை வானொலி கல்வி ஒலிபரப்பு ஆலோ சனைச் சபையில் சில ஆண்டுகள் பணிபுரிந்தார். 1954 ம் ஆண்டு இலங்கைக் கலைக்கழகத்தின் நாட்டுப் பாடல், நாட்டுக் கூத்துக் குழுவின் அங்கத்தவராகப் பணி புரிந்
26

தார். இக்காலகட்டத்தில் இக்குழுவின் தலைவராகவிரு ந்த வில்லியம் கொப்பல்லாவ போன்றோருடன் நெருங் கிப் பழகும் வாய்ப்பும் ஏற்பட்டது. மட்டக்களப்பு பிர தேசத்தின் நாட்டுப்பாடல், நாட்டுக்கூத்து என்பவற்றை கலாநிதி சரத்சந்திரா தேவசூரியசேன போன்றவர்கள் அறிந்து அதனைப் போற்றுவதற்கு வாய்ப்பினைப் புல வர்மணியவர்கள் ஏற்படுத்திக் கொடுத்தார். 1958ல் அரச கருமமொழித் திணைக்களத்தில் ஆலோசனைச் சபை யின் கலைச் சொற்குழு உறுப்பினராகவிருந்து தமிழ்ப் பணிபுரியும் வாய்ப்பும் ஏற்பட்டது. இக்காலப்பகுதியில் கலாநிதி விஜயசேகரா, அவி. மயில்வாகனம், வித்து வான் எவ். எக்ஸ். சி. நடராசா, வித்தியாரத்தினம், சோ. நடராசா, மு. கணபதிப்பிள்ளை, திரு. சரவண முத்து போன்றோருடன் பழகும் வாய்ப்பும் உண்டாகி யது. 1970ம் ஆண்டு இந்து சமய விவகார ஆலோச னைச் சபையின் உறுப்பினராக நியமிக்கப்பட்டு 1978 வரை பணிபுரிந்தார். இக்காலகட்டத்தில் சில இந்துசமய செயற்றிட்டங்களை செயற்படுத்தக்கூடியதாகவிருந்தது. புலவர்மணியவர்கள் கிழத்குத் தபால் என்னும் பத்திரி கையின் ஆசிரியராகச் சில காலம் இருந்து பத்திரிகைத் துறைக்கு ஆக்கபூர்வமான பல செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளார்.
மட்டக்களப்பில் இயங்கிய சுத்தானந்தா கழகம் மூலம் தமிழ் மாணவர்கள் பயனடையத்தக்கதாகப் பல தமிழ் வகுப்புக்களை நடாத்தினார். இதில் சேர்ந்து பல மாணவர்கள் கற்று நன்மையடைந்தனர். இப்பேர்ப் பட்ட அருந்தொண்டுகளைப் புரிந்துவந்த புலவர்மணி பற்றி சிந்தாமணி பிரதம ஆசிரியர், எஸ். டி. சிவநாயகம் குறிப்பிடும் பொழுது "புலவர் மணி பெரியதம்பிப்பிள்ளை அவர்கள் பட்டை தீட்டப்பட்ட வைரமணிபோல பல துறைகளிலும் ஜொலித்த ஒருவர். அவர், ஒரு சிறந்த மேடைப்பேச்சாளர் , சிறந்த கவிஞர், சிறந்த வசன கர்த்தா, சிறந்த மொழிபெயர்ப்பாளர், சிறந்த நல்லா சிரியர், சிறந்த ஆய்வாளர், சிறந்த பண்பாளர், சிறந்த
27

Page 20
பக்தர், சிறந்த நண்பர், சிற்ந்த சீர்திருத்தவாதி, சிறந்த புரட்சியாளர், சிறந்த பத்திரிகையாளர் என அடுக்கிக் கொண்டே போகலாம்" என்று கூறியுள்ளார்.
புலவர்மணியவர்கள் பாடியுள்ள ஏராளமான தனிக் கவிதைகளை பின்வரும் துறைகளின் கீழ் வகுத்துப் "புலவர்மணி கவிதைகள்’ என்னும் நூல் தொகுக்கப் பட்டுள்ளது. நாடும் மக்களும், குருவணக்கம், தமிழ் மொழியும் தமிழ்ப்புலவரும், சான்றோர், கடவுள் வணக்கம், தனிப்பாக்கள்,சிந்தனை என்னும் பிரிவுகளுள் சகல விடயங்களையும் தொட்டுச் சென்றுள்ளார். இக் கவிதைகளைப் படிக்கும்போதும் நாட்டின் மீதும், மக்கள் மீதும் மொழியின் மீதும் புலவர்மணியவர்களுக்கு இருந்த ஈடுபாடும் மதிப்பும் மிகத்தெளிவாகின்றன. சமூகத்தை சீர்திருத்த வேண்டுமென்ற விருப்பம் அவர் அடிமனதில் இழையோடி நிற்பதைக் கண்டு கொள்ள முடிகின்றது. நாட்டுப்பற்றுக் காரணமாக
* 'இலங்கை மணித்திரு நாடு எங்கள் நாடே - இந்த
இனிய உணர்ச்சி பெற்றால் இன்ப வீடே,
என்று கூறுகின்றார். மட்டக்களப்பு மாநிலத்தைப்பற்றிக் கூறும் போது உயிரனைய மட்டு நன்னாடு எனக் குறிப் பிடுகின்றார். மண்வளமும், பொன் வளமும், பொலிந்து காணப்படும் நாடுதான் மட்டக்களப்பு. நன்னாடு என் பது புலவர்மணியின் கருத்து, 'ஊன்பாயும் உதிரத்தில் தமிழும் பாயும் உயிரனைய மட்டு நன்னாடென்தன் நாடே" என்பது அவரது உள்ளக்கிடக்கையாகும். கன் னியா, கல்லோயா போன்றவற்றின் சிறப்பினையும் கவி தைகள் மூலம் வடித்துக்கொடுத்துள்ளார். யாழ்ப்பாண மாநிலத்தினைப் பற்றிக்கூறும் போது,
'உலகமூலப் புறவுரைக்கு நூற்பொருள் தெரிவார் ஒருவர் தமக்கொருவர் நிதம் ஒப்புரவு புரிவார்
28

பல திசையும் சென்று முயன்றீட்டுபெருபொருளார்
பரமனடித் தொண்டு புரிந்தேத்து வருவாளர்' எனக் குறிப்பிட்டுச் செல்கின்றார். புலவர்மணியவர்கள் தமிழ் முஸ்லீம் ஒற்றுமையை வலியுறுத்திப் பாடியுள்ள பாடல் இன்றைய கால கட்டத்திற்கு மிக முக்கியமான தொன்றாகும்.
"இருதயத்தின் ஈரிதழ்போல் இங்கு தமிழ் முஸ்லீம்
ஒருவயிற்றுப் பாலகர் போலுள்ளோம் - அரசியலிற்
பேராசை கொண்டோர் பிரித்துநமை வேறாக்கி
ஆராயார் செய்வார் அழிவு."
பொருளாதாரத்துறையினைக் கட்டியெ மு ப் பி ட வேண்டும் என்னும் உள்ளக்கருத்தினைப் புலவர்மணி யவர்கள் கொண்டிருந்தார். இதனை அவர்பாடிய "இலங்கை முழுவதற்கும் உணவளிப்போம்" என்னும் பன்னிரண்டு கவிதைகளிலும் கண் டு தெரியலாம். கல்லடி உப்போடை இராகிருஷ்ணமிஷன் பொன் விழாவின் போது குருகுலத்தின் சிறப்பினைப் பற்றிப் புலவர்மணியவர்கள் இருபத்திரண்டு செய்யுட்கள் பாடி யுள்ளார். இவற்றிலிருந்து இராமகிருஷ்ணமிஷனது சேவையும் அதன் சிறப்பும், மாணவர் இல்லத்தின் பொலிவும், தவைவர் பிரேமாத்மானந்தஜி அவர்களது தலைமைத்துவமும், சுவாமி ஜீவானந்தா அவர்களது முயற்சியும் நன்கு எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. மது ஒழிப்பு, ஒழுக்கம், சமத்துவம் பற்றியெல்லாம் கவிதை கள் புனைந்துள்ளார். ஒழுக்கம் பற்றி வள்ளுவப்பெருந் தகை கூறும் போது உயிரைவிடச் சிறந்தது ஒழுக்கம் என்று கூறுகின்றார். புலவர்மணியவர்களோ ஒழுக்கமே தெய்வமாகும் என்று குறிப்பிட்டுள்ளார். புலவர்மணி அவர்கள் பாடியுள்ள தனிக்கவிதைகள் ஒவ்வொன்றை யும் நாம் படிக்கும்போது அவற்றுள் பொதிந்துள்ள விடயங்களிலிருந்து அக்காலச்சமூக வாழ்வினைக் காண முடிகின்றது.
29

Page 21
யாழ்ப்பாணத்தில் மிகப் பிரபல்யமானதாக விளங் கிய கல்லடி வேலனுக்கும் நம் புலவர்மணிக்கும் இருந்த தொடர்பினை அவர்கள் இருவரும் பஸ் பிரயாணத்தின் போது சேர்ந்து பாடியவொரு தனிக் கவிதை கட்டளைக் கலித்துறையில் அமைந்தது நன்கு உணர்த்துகின்றது.
"மனமும் விறைத்தது மார்பும் விறைத்தது மாதர்
g தனமும் விறைத்தது தாங்காத வெப்பம் தகித் திடவா சனமும் விறைத்ததால் மேலாளை யேற்றச் சன மடைவி
சனமு முரைப்பதென் வஸ் பயணம் பெருஞ் சங் கடமே"
வடக்கும் கிழக்கும் இணைந்தது போன்று இவ்விரு வரும் சேர்ந்து பாடிய இப்பாடல் அமைந்துள்ளது.இவ் விதம் புலவர்மணியவர்கள் தாம் வாழ்ந்த காலப்பகுதி யில் தம்முடன் கூடிப்பழகிய ப்ெரியார்கள் பற்றியெல் லாம் சந்தர்ப்பம் கிடைக்கும் போது கவிதைகள் புனைய மறக்கவில்லை. அவ்வாறான கவிதைகள் இன்று அரிய தகவல்களை அளிப்பனவாகவுள்ளன.
30

சமய சமூகப் பணி
புலவர்மணி பெரிய தம் பிப் பிள்ளை அவர்கள் தம் வாழ்நாளில் மக்களுடன்ஒன்றாகக் கலந்து பழகி வாழ்ந்தவராகையால் மக்க ளின் பிரச்சினைகளைநேரிற் கண்டறியும் வாய்ப்பு உண்டாகியது. இ த ன் காரணமாக சமய சமூகப் பணிபுரி வதில் இவரது நாட்டம் அதிகFடு பாடு கொண்டது. நாட்டையும் மக்களையும் மொழியையும் நன் றாக நேசித்தவர் என்பது இவரது கவிதை களிலிருந்தும் செய்கையிலி ருந்தும் தெளிவாகின்றது. ஈழம ணித்திருநாடு, வாழி கல்லோயா கங்கை, கன்னியாத்திரு ‘ஈழநன் னாடே நீ வாழி போன்ற கவிதை கள் தெளிவாக இதனையுணர்த்து கின்றன.
1914ம் ஆண்டளவில் மட்டக் களப்பில் சுவாமி விவேகானந்தரின் அமெரிக்க சிஷ்யைகளுள் ஒருவரான
3.

Page 22
சகோதரி "அவ பாப யா அம்மையார்' கிராமங்கள் தோறும் விஜயம் செய்து இந்து சமயப்பிரசாரம் செய் தார். இதனால் மட்டக்களப்பில் ஒருபேரியக்கமே தோன் றியது. இது 1936ம் ஆண்டுவரை நடை பெற்றது. சைவப்பிள்ளைகள் சைவப்பாடசாலையிலேயே படிக்க வேண்டும். தேவையான பள்ளிக்கூடங்களை ஊரெங்கும் கட்டுவோம் என இளைஞர்கள் முன் வந்தனர். இவ்வி யக்கத்தில் புலவர்மணியும் சேர்ந்து கொண்டார். கிரா மங்களுக்குப்போய் மக்களைச் சந்தித்து அவர்களது பிரச் சினைகளைக் கேட்டறிந்து அவற்றிற்கான பரிகாரங்க ளைக் காண்பதில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது. இவ்விதம் இம்முயற்சியில் ஈடுபட்டவர்களுள் முதலியார் கா. வ. மார்க்கண்டன், குருநாதப்பிள்ளை கனகசபை, கந்தப்பமுதலியார், ஜே. பி. வித்துவான் ச. பூபாலப் பிள்ளை, பண்டிதர் சாமிநாத மயில்வாகனனார், வித்து வான் அ. சரவணமுத்த்ன், தேசிகமணி அருணாசலம், வித்துவான் பொ. வைத்தியலிங்க தேசிகர், பொ. ஆறு முகசாமி என்போர் சிறப்பாக குறிப்பிடத்தக்கவர்கள். இளர்களுடன் சேர்ந்து புலவர்மணியவர்களும் தீவிர மாக சமய பணியில் ஈடுபட்டார். புலவர்மனி அவர்க ளது வீட்டிலேயே எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து திட் டங்களை வகுத்து, பின்னர் ஊர் ஊராகச் சென்று அதனை நடைமுறைப்படுத்தி வந்தனர். இதன் காரண மாக சைவப்பிள்ளைகள் எல்லோரும் சைவப்பாடசாலை களுக்குச் சென்று படிக்கத் தொடங்கினர். இந்துசமய வழிபாட்டுத் தலங்களில் காணப்பட்ட நிர்வாகச் சீர் கேடு, பரம்பரை ஆதிக்கம், பூசைகள் ஒழுங்கின்மை. போன்றவற்றையும் சீர்படுத்தி ஒரு சிறந்த வழி முறைக் குள் கொண்டு வருவதற்கும் புலவர்மணியவர்கள் திட்ட மிட்டு செயற்படத் தொடங்கினார்.
புலவர்மணியவர்கள் செய்த சமயப்பணியிலே அவ ரால் இயற்றப்பட்ட சைவசமயப்பதிகங்களைக் குறிப்பி
டலாம் கிழக்கு மாநிலத்தில் உள்ள வரலாற்றுப் புகழ்
32

மிக்க திருத்தலங்கள் ஒவ்வொன்றின் மீதும் பதிகங்கள் பாடியுள்ளார். இவற்றுள், தில்லைமண்டூர்ப் பதிகம் 1965ல் பாடப்பட்டது. கொக்கட்டிச்சோலை தான்தோன் ஹீஸ்வரர் பதிகம், அமிர்தகழி மாமாங்கப்பிள்ளையார் பதி கம், ஆனைப்பந்தி சித்தி விக்னேஸ்வரர்பதிகம், சிற்றாண்டி கந்தசுவாமி பதிகம், திருக்கோயில் சித்திர வேலாயுதர் பதிகம் என்பன சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவையாகும். புலவர்மணியவர்கள் வண்ணக்கர் பரம்பரையில் வந்தவ ராக இருந்தபோதும் கோயில் நிருவாக நடைமுறையில் உரிமை கொண்டாடுவதை எதிர்த்தார். நிருவாகச் சீர் கேடுகளை வெகுவாகச் சாடினார். பல ஆலயங்களில் ஏற்பட்ட பிணக்குகளை கொமிஷன் மூலம் தானும் அங்கத்தவராக இருந்து தீர்த்து வைத்தார். கோயிற் சொத்துக்களை நிருவாகிகள் (வண்ணக்குமார்) அபகரி த்து அதன்மூலம் தங்கள் வாழ்க்கையை நடாத்துவதை புலவர்மணியவர்கள் வெகுவாகக் கண்டித்தார். புலவர் மணியின் ஆசை இந்து ஆலயங்களுக்கு இந்து அற நிலைய நிதி நிருவாகச் சட்டம் ஒன்று அமைக்கப்பட்டு நடை முறைப்படுத்தப்பட வேண்டுமென்பதேயாகும். இதற் கான நடவடிக்கைகள் 1974ல் அவரது காலப்பகுதியில் மேற் கொள்ளப்பட்டும் பின் இந்து சமயத் தலைவர் களின் எதிர்ப்பின் விளைவாக அது நிறைவேறவில்லை . புலவர்மணியவர்கள் திருகோணமலையில் பல ஆண்டுகள் தொழில் புரிந்தமையினால் அந்நகர் மீது மிக ஈடுபாடு கொண்டிருந்தார். அங் தம் பல தமிழ் மாணவர்களை உருவாக்கினார். திருகோணமலை பத்திரகாளி அம்மன் பதிகத்திற்கு புலவர்மணியவர்கள் எழுதியுள்ள முகவுரை யில் இறை வழிபாட்டின் தன்மையினை மிகவும் இலகு வான முறையில் விளக்கங்களுடன் எடுத்துக் கூறியுள் ளார். இது அன்னாரது இறையுணர்வினையும் ஆழ்ந்த அறிவினையும் நன்கு புலப்படுத்துகின்றது.
அழிவில் இருந்து த7 ன் ஆக்கம் உருப்பெறும் என் பதனைச் சிறந்த உதாரணங்கள் மூலம் விளங்கியுள்ளார்.
33

Page 23
*ஒரு நெல்மணி வயலிலே அழிகின்றது. இதனால் ஆயி ரம் நெல்மணிகள் பிறக்கின்றன. சமூகத்திலே கெட்ட வன் அழிகின்றான், அவனோடு கேடும் அழிகின்றது. இதனால் நல்லவன் ஆக்கம் பெறுகின்றான். நன்மை யும் விருத்தியடைகின்றது." இவ்விதம் புலவர்மணியவர் கள் எந்தவொரு விடயம் பற்றியும் எடுத்துக் கூறும் போதும் இலகுவான எளிய தமிழில் நல்ல எடுத்துக் காட்டுக்கள் மூலம் விளக்கிச் செல்வது பாராட்டுக்குரியது.
புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை அவர்கள் செய்த சமயப்பணியில் மிகச் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க சேவை அவரால் இயற்றப்பட்ட பகவத்கீதை வெண்பா நூல் கள். இந்நூல்களில் எடுத்தாளப்பட்டுள்ள விளக்கங்கள், உதாரணங்கள் எல்லாம் சமய உணர்வினையும் பக்தி மேம்பாட்டினையும் நன்கு எடுத்துக்காட்டுகின்றன. ஆங்காங்கே நிகழ்த்திய சமயப்பிரசங்கங்கள் மூலமும் பத்திரிகைகளுக்கு எழுதிய சமயக்கட்டுரைகள் மூலமும் சமய விழிப்புணர்ச்சியினை மக்கள் மத்தியில் உண்டு பண்ணினார். இதற்குக் காரணமாக இவரது இளமை வாழ்க்கையினையே குறிப்பிடலாம். இளமையில் மண் டூர்க் கந்தசுவாமி கோயிலுடன் தொடர்புடையதாகவே இவரது வாழ்க்கை அமைந்தது. மண்டூர்க்கந்தன் கோயி லில் கந்தசஷ்டி விரதகாலத்தில் திருச்செந்தூர்ப்புராணம் படிப்பார்கள். அதனை மிகவும் கருத்துடன் புலவர் மணியவர்கள் செவிமடுப்பார், மணி டூர் வதனக்குட்டி கந்தவனம் விதானையார் ஏடுபடிப்பார். நா வி த ன் வொரிகா குமாரவேலு இனிமையாகப் பயன் சொல் வார். இதனை எல்லோரும் பக்தி சிரத்தையுடன் கேட்டு மகிழ்வர். y
மண்டூர்க் கந்தசாமி கோயில் வண்ணக்கரது மக னாக இருந்ததோடல்லாமல் துணை வியாரைத் தே டி க் கொண்ட வழியிலும் கோயில் நிருவாகத்துடன் தொடர் புகள் இருந்தன. குருக்கள் மடம் கோயில் வண்ணக் குகள் வினாசித்தம்பி மூத்ததம்பி அவர்களது மகள்
34

நல்லம்மா என்பவரைத் திருமணம் செய்து கொண்ட மையும் இவற்றிற்கு வழிவகுத்தன. 1918, 1919ம் ஆண்டு காலப்பகுதியில் மயில்வாகனம் எனப்படும் விபு லாநந்த அடிகளுக்கும், பெரியதம்பிப்பிள்ளை அவர்களு கும் யோகாசுவாமிகளுடன் இருந்த தொடர்பும், ஈடு பாடும் இதற்கு வலுவூட்டின. யாழ் விவேகானந்தா சபையிலே சனி, ஞாயிறு நாட்களிலும், ஒய்வு நேரங்க ளிலும் யோகர்சுவாமிகள் பண்டிதர் மயில்வாகனத்தை (விபுலாநந்த அடிகள்) அழைத்து உபதேசம் செய்வார். சில சமயங்களில் சாயங்கால வேளையில் யோகர்சுவாமி கள் பண்டிதரை நல்லூர்க் கந்தசுவாமி கோயிலுக்கு அழை த்து செல்வார்.அச்சந்தர்ப்பங்களில் புலவர்மணியும் அவர் களுடன் சேர்ந்து கொள்வார். அங்கு கோயிலின் உள் வீதியில் அமர்ந்துகொண்டு யோகர் சுவாமிகள் திருப்புகழ் படிப்பார். இதனை இருவரும் செவிமடுப்பார்கள். இவ் வாறான ஆட்கொள்ளுதல் புலவர்மணி போன்றோரை ஆளாக்கி விட்டது.
புலவர்மணியவர்களுக்கு ச ம ய ப் பணி புரிவதில் இருந்த ஈடுபாட்டினையும், ஊக்கத்தினையும், அவர் இயற்றிய நூல்களிருந்தே கண்டு கொள்ளலாம். மண் டூர் திருமுருகர் பதிகமே புலவர்மணி முதன்முதல் இயற் றிய நூலாகும். பின்னர் கிழக்கிலங்கையிலுள்ள வர லாற்றுப் புகழ்மிக்க ஒவ்வொரு வழிபாட்டுத் தலத்தின் மீதும் பதிகம் பாடியுள்ளார். இதனை அவரது இலக் கியப் பணிகளில் காட்டியுள்ளோம். திருகோணமலை இந்துக்கல்லூரியின் அதிபராக 1926ம் ஆண்டில் கடமை யேற்றுப் பணிபுரிந்த காலத்திலிருந்து மாணவரிடையே யும், ஆசிரியர்களிடையேயும் சமய விழிப்புணர்ச்சியை உண்டு பண்ணினார். திருகோணமலை மக்கள் சைவத் திற்கும் தமிழுக்கும் உயிர்கொடுப்பவர்கள் என்று குறிப் பிட்டு புலவர்மணி கட்டுரை எழுதியுள்ளார். அதில் திருமலையைச் சேர்ந்த பேரறிஞர் த கனகசுந்தரம்
35

Page 24
பிள்ளையும் அவரது சகோதரி தையல்நாயகி சுப்பிர மணியத்தையும் குறிப்பிடத்தவறவில்லை.
இந்து சமயப்பணிகளில் ஈடுபட்டது போன்று இள மைக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் படிக்கின்ற சந்தர்ப் பத்திலும், தொழில் புரிகின்றபோதும் சாதிக்கொடுமை யைக் கண்டு வெறுத்து கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்து பணி புரிந்துள்ளார். இவ்விடயம் முன்னைய அதிகாரத் தில் விவரிக்கப்பட்டுள்ளது.
பின்னர் கிறிஸ்தவ மதத்திற்குள்ளும் உயர்வு தாழ்வு பார்க்கும் மனப்பான்மை, ஏகாதிபத்திய மனப்பான்மை, திருச்சபைக்குள்ளே சாதித்துவேஷம் என்பன இருப்ப தைக் கண்டு மனம் வருந்தி திரும்பவும் சைவசமயத் தைத் தழுவிக் கொண்டார். இதற்கு சுவாமி விபுலானந் தரின் சந்திப்பும் காரணமாக அமைந்தது.
மட்டக்களப்பிலும், திருகோணமலையிலும் இந்து சமயச் சீர்திருத்தங்கள் பலவற்றைச் செய்ய வேண்டு மென்னும் வேணவா புலவர் மணியவர்களிடம் காணப் பட்டது இந்துமாமன்றத்தின் நிருவாகத்திலும் உப தலைவராகவும் இரு ந் த காலப்பகுதியில் இதனைச் செய்யக்கூடியதாகவிருந்தது. மட்டக்களப்பு பகுதியில் ஆலய நிருவாகங்களுக்கிடையே பல சீர்கேடுகள் காணப் பட்டன. இதனை நிவர்த்தி செய்வதற்காக அரசாங்க அதிபரினால் நியமிக்கப்பட்ட கமிஷன்களில் புலவர்மணி முக்கிய பங்கினை வகித்தார். பதினொரு கமிஷனில் இடம் பெற்று ஆலய நிருவாகப் பிரச்சினைகளைத் தீர் த்து வைப்பதற்குப் பெரிதும் உழைத்தார் என்பதனைக் காண முடிகின்றது. இந்து சமய விவகார ஆலோசனைச் சபையின் உறுப்பினராகப் பணிபுரிந்த காலப் பகுதியில் சமய வளர்ச்சியில் ஆக்க பூர்வமான சில நடவடிக்கை களை மேற்கொள்ளக் கூடியதாக விருந்தது. ஏனைய மதகுருமாருக்கு உள்ளது போன்று இந்துசமய பூசகர்க
36

ளுக்கும் உரிய கெளரவம் அளிக்கப்பட வேண்டும் என் பதனை பல இடங்களிலும் வலியுறுத்தினார். ஆலயங் களில் பூசை செய்கின்றவர்கள் மாத்திரம் அல்லாது ஏனைய ஐயர்மார் சகலருக்கும் சீர் உடை வழங்கப்பட வேண்டுமென ஆலோசனை கூறினார். ஆலயங்களிலே இடம்பெறும் சாதிப்பாகுபாடு, தீண்டாமை முதலான வற்றை வெகுவாக வெறுத்தார். ஆலயங்களில் எல்லோ ரும் சமமாக நடாத்தப்பட வேண்டுமென்பதனை வலி யுறுத்தினார். பத்திரிகைகளில் பல சமய சீர்திருத்தக் கட்டுரைகளை எழுதினார்.
புலவர்மணியவர்கள் சமூக வாழ்விலும் அதிகம் ஈடுபாடு கொண்டு உழைத்த பெருந்தகையாகும், 1945, 1946ம் ஆண்டு காலப்பகுதியில் உணவுக்கட்டு பாட்டு இலாகாவில் தடுப்பு அதிகாரியாகக் கடமைபார்த்த போது மக்களுடைய நலனில் அதிகம் அக்கறையுடைய வராகக் காணப்பட்டார்.ஊழல், லஞ்சம் என்பனவற்றை எப்போதும் வெறுத்தே வாழ்க்கை நடாத்தியுள்ளார். 1956ம் ஆண்டின் பின்னர் சில காலம் மண்டூர் உபத பால் ஆதிபராகக் கடமையாற்றினார். இக்கால கட்டத் தில் அதிகம் சமூகப்பணிகளை மக்களுக்காகச் செய்வ தற்கு முயற்சிகள் மேற்கொண்டார். புலவர்மணியின் சமூக சமய தமிழ்ப்பணிகளைப் பாராட்டிப் பல பட்டங் கள் வழங்கப்பட்டபோது அவர் இது பற்றி, "எத்தனை பட்டங்கள் என்மீது சுமத்தப்பட்டாலும் புலவர்மணி என்னும் பட்டமே எனக்கு தாங்குவதற்கு இலகுவாக இருக்கின்றது' என்று கூறினார். மேலும், 'உள்ளூர் சுமையாதலால் இதை இலேசாகத் தாங்குகின்றேன். புல வர்மணி மக்கள் மத்தியில் வாழ்கின்றது' என்றும் குறிப் பிட்டார். இக்கூற்றில் அவருடைய சொந்த நாட்டுப் பற்றோடு தன்னடக்கமும், இலேசான நகைச்சுவையும் கலந்திருப்பதைக் காணலாம்.
புலவர்மணியவர்களது நாட்டுப்பற்றினை பின்வரும் பாடலிலிருந்தும் தெளிவாகக்கண்டு கொள்ள முடிகின்
Dél
37

Page 25
'பால் பெருகும் தேன் பெருகும் பண்புடை மன்னர்
செங்கோல் கோல் பெருகும் படிவயிற்பைங்கூழ் பெருகும் புனல் பரந்து கால் பெருகும் கல்லார்க்கும் சொல்லாட்சி மிக ப் பெருகும் நூல்பெருகும் இடையார்க்கு நூலறங்கள் பெருகு Dirgi)''
இப்பாடல் வரிகள் மட்டக்காப்பு மண்ணின் வள த்தை மட்டும் காட்டுவதன்றி கல்வியறிவற்ற மக்கள் கூடச் சிறந்த புலமையுடையவர்களாகக் காணப்பட்ட னர்; நூல்கள் பல இயற்றப்பட்டன; நல்ல முறையான நிர்வாகம் நடைபெற்றது என்பவற்றையெல்லாம் உணர் த்தி நிற்கின்றன. w
காங்கேசன்துறையில் நடந்த சில முக்கிய சம்பவங் களையும் செய்யுள் வடிவில் குறிப்பிடுவதற்குப் புலவர் மணியவர்கள் முயன்றுள்ளார்கள். அவற்றுள் காங்கே சன்துறையில் நடைபெற்ற "புகையிரதப்பெருவிபத்து" குறிப்பிடத்தக்கது. 1923ம் ஆண்டு, காங்கேசன்துறையில் நடைபெற்ற பெருவிபத்துப்பற்றிப் புலவர்மணியவர்கள் "சீரிலங்கு துந்துபிதைந் தேதியொரு பன்னிரண்டிற்
போரிலங்கை மன்னர் புகையிரதம் - சீரியகாங் கேயன் துறைநீங்கி யேகுதற்கு நின்றதே சாயுந் தரமறிந்து தான்' "சில்லொடு வில்லும் வேறாய்ச் சேர்ந்திரு வெளிச்சம் வேறாய் நல்ல பெட்டிகளநேகம் நாசமாய்ப் போனபோது அல்லிருள் மழைக்காலத்தில் அந்தகர் போலெல்லோ ரும சொல்லலாம் வகை யொன்றின்றித் துன்புறுதி: 应@5””
என்று பாடியுள்ளார்.
38

புலவர்மணியுடன் தொடர்பு கொண்டி ருந்த பெரியார்கள்
ஆரம்பக் கல்வியை மண்டூரில் ஆரம்பித்த புலவர்மணி அவர்கள் ஆங்கிலம் கற்பதற்காகக் கல்முனை உவெஸ்லி கல்லூரிக்குச் சென்றார் கள். பல தடைகளின் பின்னரே இதுவும் கைகூடியது. அங்கு உவெ ஸ்லி கல்லூரியின் முகாமையாளr ராகவிருந்த "பாக்கர் ஐயர்' என் பவருடன் பழகும் வாய்ப்பும் அறி முகமும் கிட்டின. பாக்கர் ஐயர் முகாமையாளராகவிருந்த காலப் பகுதியில் பாடசாலை நிருவாகம் மிகவும் திறம்பட இயங்கியது.
இளமையில் பாரதம், கம்பரா மாயணம்,நிகண்டு, திருச்செந்தூர் புராணம் முதலிய தமிழ் இலக்கி யங்களை ஐயந்திரிபறக் கற்பதற்கு ஆசானாகவிருந்தவர் யாழ்ப்பா ணம் புலோலியைச் சேர்ந்த சந்திர சேகர உபாத்தியாயராகும். இவரது
39

Page 26
அறிமுகமும் ஆசியுமே புலவர்மணியவர்கள் பின்னர் தமிழ்த்துறையில் நன்கு பிரகாசிப்பதற்கு வழி வகுத்தது. புத்தகம் பாராமலே பாடம் சொல்லக் கூடிய ஞாபக சக்தியுடையவரான சந்திரசேகரர் மட்டக்களப்பு மாநி லத்திலேயே தமது வாழ்க்கையை அமைத்துக் கொண் டவர்.
அடுத்து புலவர்மணியுடன் அறிமுகமாகி இவரது ஆங்கிலக் கல்விக்கு வித்திட்டவர் திரு. கே. எஸ். குஞ்சித் தம்பி என்பவர். சுவாமி விபுலாநந்தருக்கும் ஆரம்ப ஆங் கில ஆசிரியராக குஞ்சித்தம்பி அவர்கள் விளங்கினார். பதினான்கு வயதில் ஆங்கில மொழியில் ஒரெழுத்தும் தெரியாமல் இருந்த புலவர்மணியவர்களை முன்னுக்குக் கொண்டு வந்தவர் திரு. குஞ்சித்தம்பி ஆசிரியரேயாகும் . அத்தோடு கனம் ஆர்.என். சேதுகாவலருடைய முயற்சியும் ஊக்கமும் புலவர்மணி அவர்கள் ஆங்கிலக் கல்வியில் நன்கு தேர்ச்சி பெறுவதற்கு துணையாகவிருந்தது.
இனி யாழ்ப்பாணத்தில் தமது கல்வியைத் தொடர விருந்த புலவர்மணியவர்களுக்கு அங்கு பல பெரியார்க ளுடைய அறிமுகமும், தொடர்பும் ஏற்பட்டன. இதில் ஆரம்பத்தில் காவியபாடசாலையில் சேர்ந்து படிப்பதற்கு மிகவும் துணைபுரிந்த மட்டுவில் மகாலிங்கசிவம் சிறப்பா கக் குறிப்பிடத்தக்கவர். பண்டிதர் மகாலிங்கசிவத்தின் உதவியும் உபசரிப்பும் கிடைக்கப்பெற்ற புலவர்மணிய வர்களுக்கு காவிய பாடசாலையில் இடமும் கிடைத்து விடுகின்றது. இங்கு இவரது குருவாக வந்து வாய்க்கின் றார் சுன்னாகம் அ. குமாரசாமிப் புலவர் அவர்கள். மகா லிங்கசிவத்துடன் இருந்த அன்புத் தொடர்பு அவர் மறைந்த பின்னர் அவர்மீது புலவர்மணியவர்கள் பாடிய பாடல் ஒன்றிலிருந்து மிகவும் தெளிவாகின்றது.
"மட்டுவிலாம் பூங்கொடியில் மலர்ந்தமலர்
சாதிமலர் மலர்கள் தாழ
40

மட்டவிழ்ந்து மணங்கமழ்ந்து வயங்குமலர்
மாணவராம் வண்டு சூழ்ந்து
தொட்டருந்தும் இனியமலர் மகாலிங்க
சிவமலர்தன் தொடர்பாம் பாசக்
கட்டறுத்து கருணைமலர் சிவபெருமான் கழல் மலர்க்கீழ்க் கலந்ததன்றே - ??
அடுத்தபடியாக இவரோடு காவிய பாடசாலையில் உடன்பயின்ற பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளையவர்க ளுடன் இருந்த நட்புரிமையைப் பார் க் க லா ம் . குமாரசுவாமிப் புலவருக்கு மாணவராக இவர்கள் விளங் கினார்கள். பரீட்சைகளில் முதலாம் இடம் பண்டித மணிக்கும் இரண்டாமிடம் புலவர்மணிக்கும் கிடைத்து வந்தன . ஒருமரத்தில் பழுத்த இரு கனிகள் போன்று பண்டிதமணியும், புலவர்மணியும் விளங்கினர் புலவர் மணி அவர்களுக்கு யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த காலத் தில் சாவகச்சேரியைச் சேர்ந்த இன்னுமொரு பெரியா ருடைய அறிமுகம் கிடைத்தது. சட்டநூல் அறிஞர் வேலுப்பிள்ளை அவர்களுடன் பழகும் வாய்ப்பினை ஏற் படுத்திக் கொண்டார். திரு. வேலுப்பிள்ளை அவர்கள் காலஞ்சென்றபோது பொன்னம்பலம் புலவர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க வேலுப்பிள்ளை அறிஞர் மீது சில செய்யுள்கள் பாடிக் கொடுத்தார்.
தீண்டாமையை வெறுத்த புலவர்மணி அவர்கள் இந்தி யாவில் கிறிஸ்தவ சமய பிரசங்கங்கள் செய்து கொண்டி ருந்த காலகட்டத்தில் ஆங்கில அறிஞர்கள் சிலருடனும் பழக்கமும் தொடர்பும் வைத்திருந் நார் அவர்களிலொ ருவர்தான் பொப்லி ஐயர் என்பவர். மதுரையில் கிறிஸ் தவ வாலிப சங்கத்தின் பொதுச் செயலாளராகவிருந்த பொப்லி ஐயருடன் நெருங்கிப்பழகும் வாய்ப்பு புலவர் மணிக்கு ஏற்பட்டது. நல்ல தமிழ் அறிஞராக ஐயரவர் கள் விளங்கினார். அத்தோடு தமிழில் பிரசங்கம் செய்
4 I

Page 27
யும் ஆற்றலும், தமிழ் இலக்கிய அறிவும் நிரம்பப் பெற்றிருந்தார். அவர் புலவர்மணி அவர்களை தனது இனிய நண்பனாகவே மதித்து நடத்தினார்.
புலவர்மணியவர்கள் திருமலையில் வாழ்ந்து தமி ழ்த் தொண்டாற்றிய காலப்பகுதியில் பல பெரியார்க ளுடைய அறிமுகமும் அன்பும் ஆதரவும் கிடைத்தன. அவி நாசானந்த சுவாமிகளுடன் பழகும் வாய்ப்பு:இங்குகிடைத் தது. அவிநாசானந்தர் இந்திய தேசியக் கல்லூரியின் அதி பராகவிருந்தவர். அத்தோடு காந்தியடிகளுக்கு இரண்டு. வருடம் காரியதரிசியாகவும் இருந்த மதிப்புடையவர். அப்பேர்ப்பட்ட சுவாமிகளுடைய ஆசி புலவர்மணிக்குக் கிட்டியது. அவரது தூண்டுதலின் பேரில் மகாத்மா காந்தியவர்கள் இலங்கைக்கு வருகை தந்த போது"தீண் டாமை நோ யதனை, என்னும் வெண்பாவினைப் பாடிக் கையளிக்கும் வாய்ப்பு புலவர்மணிக்குக் கிட்டியது. சுவாமி அவிநாசானந்தர் மீது இருந்த ஈடுபாடு கார ணமாக அஞ்சலிப் பாடலொன்றினைப் புலவர்மணி பாடியுள்ளார். அதனை ஈண்டு குறிப்பிடுதல் பொருத் தமாகும்.
'அஞ்சாமை நேர்மை அகத்தூய்மை நம்மகத்தே எஞ்சாமல் இணைத்து வைத்தார் - தந்தை அவிநாசானந்த அடிகளார் நாம் செய்
தவமாக வந்த புனிதர்'
புலவர்மணியவர்களுக்கு கொழும்பு மாநகரில் பல அறிஞர்களுடன் பழகும் வாய்ப்பும் அறிமுகமும் ஏற் பட்டது. அவர்களுள் ஜி. ஜி. பொன்னம்பலம் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர். கொழும்பு டிக் மன் வீதியில் இருந்த ஜீஜீபார் வீட்டிற்கும், பின்னர் இ ரா னி றோட்டில் இருந்த வாசஸ்தலத்திற்கும் புலவர்மணியவர்கள் சென்ற போதெல்லாம் இன்முகம் காட்டி வரவேற்று பொன்னம்
42

பலம் அவர்கள் அளவளாவுவார். புலவர்மணி அவர் களை பண்டிதர் என்றே ஜீ. ஜீ. அவர்கள் அழைப்பார். பகவத்கீதை வெண்பா கருமயோகப் பகுதி வீரகேசரி ஞாயிறு இதழில் வெளிவந்து கொண்டிருந்த சந்தர்ப் பத்தில் அன்பர் பூபதிதாசருடைய அறிமுகம் புலவர் மணிக்குக் கிட்டியது. இவர் ஒரு முஸ்லிம் பெரியார். தமிழ் இலக்கியத்திலும், மொழியிலும் சிறந்த ஆர்வ முடையவர். புலவர்மணியவர்களைத் தனது கொழும்பு வீட்டிற்கு அழைத்து மிகவும் உபசரித்தார். பின்னர் புலவர்மணியவர்கள் கொழும்பிற்கு செல்லும் போதெல் லாம் அன்பர் பூபதிதாசருடைய வீட்டில் தங்கு வ து வழக்கமாயிற்று. பூபதிதாசர் இஸ்லாமியர் மத்தியில் மாத்திரமன்றி இந்துக்கள், பெளத்தர், கிறிஸ்தவர் மத்தி யிலும் சமமான மதிப்பைப் பெற்று வாழ்ந்த பெரியார். அவருடன் புலவர்மணி நல்ல நெருக்கமான உறவு வைத்திருந்தார்.
அடுத்து மகாதேசாதிபதியாகவிருந்த கொபல்லாவை யுடன் புலவர்மணி அறிமுகம் வைத்திருந்தார்; அக்கால கட்டத்தில் வில்லியம் கொபல்லாவ முனிசிபல் கொமிஷ னராகவே பதவி வகித்தார். நாட்டுக்கூத்து, நாட்டுப் பாடல் குழுவின் தலைவராக கொபல்லாவ இருந்த காலமே புலவர்மணியுடன் தொடர்பினை ஏற்படுத்தி னார்.1963ம் ஆண்டு மகாதேசாதிபதியாகவிருந்த காலப் பகுதியில் புலவர்மணியின் பகவத்கீதை வெண்பா கரும யோகத்திற்கு சாகித்திய மண்டலப்பரிசு கி  ைடக் கப் பெற்றது. இப்பரிசினை மகாதேசாதிபதி கொபல்லாவி டமிருந்தே புலவர்மணி பெற்றுக்கொண்டார், இன்னும் இரண்டு அறிஞர்களுடன் கொழும்பில் அறிமுகம் ஏற் பட்டு மட்டக்களப்பிலும் அது விரிவடைகின்றது. அவர் களுள் ஒருவர் தேவசூரியசேன, மற்றயவர் கலாநிதிசரத் சந்திரா, இருவரும் கலைப்பிரியர்கள். தேவசூரியசேன ஓர் நடனப்பிரியர். மேல்நாட்டு இசைக்கலையில் ஒரு மேதையாகவும் விளங்கினார். நாட்டுக்கூத்து, நாட்டுப்
43

Page 28
பாடல் ஆகிய தேசியக் கலைகளிலும் அதிக ஆர்வம் கொண்டவர். கலாநிதி சரத் சந்திரா இலங்கைப் பல் கலைக்கழகப் பேராசிரியராகவிருந்ததோடு நா ட க த் துறையில் விற்பன்னராகவும் விளங்கினார். இவ்விரு வரும் புலவர்மணியைத்தேடி மட்டக்களப்பிற்குச்சென்று குருக்கள் மடத்தில் அவரது இல்லத்தில் தங்கிருந்து பல ஒலிப்பதிவுகளையும், நாட்டுக்கூத்து, நாட்டுப் பாடல் ஆகிய துறைகளில் செய்தனர். இவர்களது அன்பும் ஆறு தலும் புலவர்மணியவர்கட்கு பெரிதும் உதவின.
இனி மட்டக்களப்பு, கல்முனை போன்ற இடங்க ளில் பல அறிஞர் பெருமக்களுடன் பழகும் தொடர்பு புலவர் மணிக்கு இருந்தது. க ல் ல டி க் கிராமத்தைச் சேர்ந்த பண்டிதர் செ. பூபாலப்பிள்ளை குறிப்பிடத்தக் கவர். பூபாலப்பிள்ளை ப ண் டி த ர் அவர்கள் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உபதலைவராகவும், கல்லடி உப்போடை அருள் நெறித் திருக்கூடத்தின் தலைவராகவும் இருந்து பணிபுரிந்தவர். அவர் காலஞ் சென்ற பின்னர் புலவர்மணியவர்கள் அவர் பற்றி பதி னொரு இரங்கற்பாக்கள் பாடியுள்ளார். அடுத்து கல் முனை உதவியரசாங்க அதிபராக 1941ல் பதவி வகித்த அல்ஹாஜ் ஏ. எம். ஏ அசீஸ் அவர்களைக் குறிப்பிட லாம்.இவர் நல்ல தமிழ் அறிவினைப் பெறுதற்பொருட்டு புலவர் மணியுடன் தொடர்பு கொண்டிருந்தார். விவ சாயத் துறையில் அதிகளவு முன்னேற்றங்களைச் செய் தாா:
புலவர்மணிக்கும் அசீஸ் துரைக்குமிடையே இருந்த தொடர்பினை அவருக்களிக்கப்பட்ட பிரியாவிடையின் போது புலவர்மணியவர்களால் பாடப்பட்ட பாடலிலி
ருந்தே அறிந்து கொள்ளலாம்.
"புலத்துயர்ந்து வண்மைப் புகழ்க் கதிர்கள்விசி
நிலத்ததிகாரஞ் செய்து நின்று - பலத்தினிறை
44

நல்ல களம் பொலிந்து நாடு புரத்தலால்
நெல்லும் அசீஸ் துரைக்கு நேர்'
எல்லாவற்றிக்கும் மேலாகப் புலவர்மணியவர்களு க்கு சுவாமி விபுலாநந்தருடன் இருந்த தொடர்பினையே குறிப்பிட வேண்டும். இரும்பைக் காந்தம் இழுப்பது போன்று கிறிஸ்தவ சமயப் பிரசாரத்தில் ஈ டு பட்டு மதுரை போன்ற இடங்களிற் சுற்றித் திரிந்த புலவர் மணியை திரும்பவும் நல்வழிப்படுத்தியவர் சுவா மி என்றே கூறவேண்டும். புலவர்மணியுடைய மண்டூர்ப் பதிகத்திற்கு சுவாமி விபுலாநந்தர் சிறப்புப் பாயிரம் ஒன்றினைப் பாடியளித்தார். சுவாமி மீது இருந்த ஈடு பாடு காரணமாக அடிகளார் நோய்வாய்ப்பட்டிருந்த போது புலவர்மணியவர்கள் விபுலாநந்தர் மீட்சிப்பத்தி னைப் பாடினார் . அத்தோடு யாழ் நூல் தந்தோன் என்னும் நூலையும் இயற்றினார். இவை அடிகளார் மீது புலவர்மணியவர்கள் வைத்திருந்த பெருமதிப்பினை உணர்த்துகின்றன். பட்டிருப்பு வித்தியாலயத்தினரால் ஆண்டு தோறும் வெளியிடப்படும் உள்ளம்" என்னும் மலரிலே சுவாமி விபுலாநந்தருடைய தோற்றத்தினைப் பற்றிப் புலவர்மணி அவர்கள் மிகவும் அருமையாகவும், தத்ரூபமாகவும் ஒரு செய்யுள் பாடியுள்ளார். இது போன்று புலவர்மணியவர்கள் தாம் வாழ்ந்த காலப் பகுதியில் பல பெரியார்களுடன் அறிமுகம் வைத்திருந் தார். அது மாத்திரமல்லாமல் நல்லதொரு மாணவர் சமுதாயத்தினையும் உருவாக்கினார். இவரிடம் தமிழை யும் இலக்கியத்தினையும் பலரும் விரும்பிக் கற்றனர். நல்ல குரல் வளமும் பேச்சு வன்மையும் புலவர் மணிய வர்களுக்கு அமைந்திருந்தது. .
புலவர்மணியவர்கள் தமது நீண்டகால வாழ்வில் இலங்கையில் மட்டு Bல்லாமல் இந்தியாவிலு சென்று பணிபுரிந்துள்ளமையால் பல பெரியார்களுடன் பழகும் வாய்ப்பும் அவருக்கு ஏற்பட்டது; அவர்களுள் ஒரு சிலரை
45

Page 29
மட்டுமே நாம் இங்கு குறிப்பிட்டுள்ளோம். எவரையும் கவர்ந்து கொள்ளத்தக்க வகையில் பழகும் சுப்ாவம் புலவர்மணியவர்கட்கு இயற்கையாகவே அமைந்திருந் தது. தம்முடன் மிக நெருங்கிப் பழகியவர்கள் பற்றிச் சந்தர்ப்பம் கிடைத்தபோது கவிதைகள்,பாடி அவர்களை மகிழ்விக்கப் புலவர் மணியவர்கள் மறக்கவில்லை.
46


Page 30
எஸ். எதிர்மன்னசி
பதவி
உதவிப் பணிப்பாளர் கல்வி, கலாசார அ வடக்கு-கிழக்கு மாக
Lt. பி. ஏ ஆனர்சு (தமி பேராதனைப் பல்கள்
பதிவ்பாசிரியர் மட்டக்களப்பு மாநி (1976儿 மட்டக்களப்பு வாழ்
நடிகர் பேராசிரியர் சு. வி நொண்டி நாடகம்
LITT LEGIT பேராசிரியர் சு. வி । (19
கட்டுரையாளர் வீரகேசரி, தினகரன் சஞ்சிகைகளில் அவ் கலை, கலாசாரம்ப எழுதிவருபவர்.
புனித செபத்தியார் அச்சிகம்,

IT - TIFF Ġ G LI
ழ் சிறப்பு) லைக்கழகம்.
வ உபகதைகள்
வும் வழிபாடும்
த்தியானந்தனின் (1964)。
த்தியானந்தனின்
(5)
மற்றும் ஈழத்து வப்போது ற்றி கட்டுரைகள்
மட்டக்களப்பு.