கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புலவர் போற்றிசை

Page 1


Page 2

புலவர் போற்றிசை
睦
சிவங் கருணுல்ய பாண்டியனுt பிரிவு குறித்துப் பாடியது.
இ. இரத்தினம்
செய்யுள் ??
18. ஆதர் இடம், கொழும்பு - 4.

Page 3

வேண்டினேன்.
வருக என் உயிரே உள்ளமே, அன்பும் தமிழும் அன்றி வேறு ஒன்றும் உவக்காத என் ஆசானுக்கு அவை கலந்த ஒரு பா ஆரம் படைப்பம் வா; உரு அமைத்தோ கிழி முடித்தோ ஒரு வகையும் ஈடு செய்ய முடியாத சிற்றுள்ளம் சிறிய வளம் உடையோம் யாம் மற்று எது தான் செய்வோம் சொல். செல்வம் புகழ்ச்சி போற்றல் இவை பெரிதாக நினையாத பாண்டியற்கு, பாவும் பொருளும் பொருங்தக் கலந்து உறையும் நாவும் உளமும் புணர்ந்த ஒரு சொல் படிமம் இயல்பு அளவில் வார்ப்போம்; வா. ாகல்ல தமிழ் அறிஞர் கன்றியுடன் ஏற்பார் அதை.
இ. இரத்தினம்

Page 4
மண் அளைந்து ஓடி ஆடிடும் சிறு இன்பம் முதல்
பரம்பொருள் இன்பம் வரை தமிழ் ஓங்கும் சிவ நிலப் பரப்பெலாம் கிடந்த அறமும் ஒளியும் பலபட ஆய்ந்து தனக்கெனத் தனிவழி வகுத்து எளிமையில் விளேந்த அழகெனச் சொல்லும் செயலும் ஒழுக்கத்து இணைய அண்டியோர்க்கு வேண்டிய 密 அறிவு ஒளி கயம்பட வழங்கிய கல்லோன் கற்பவர்க்கு உறுதுணை யாகினுேன் பண்பின் விழுமிய பாண்டியன் புகழ் நிறை புலமைப் படிமையோன்.

புலவர்
சிவங்
கருணுலய பாண்டியனுர்
lapauño பாண்டியனர் 30-6-76 அன்று காலமானர். சில மாத காலம் நோய்வாய்ப்பட்டிருந்து கொழும்பு அர சினர் மருத்தகம் ஒன்றில் இறந்தார்.
சென்ற கால் நூற்ருண்டு காலம் எனக்குத் தமிழ் அறி வுறுத்திய புலவர் இறந்தார் என்று என்னல் நினைக்க முடிய வில்லை. உடலை மறைத்தவரை இறந்தார் என்று வைத்தெண் ணுவது தவருகும். நெருநர் இருந்த பெருமக் னை இன்றில்லே எனச் செய்த சிறுமையை அல்லவா உலகுதேடிக் கொண்டது அரை நூற்றண்டு காலம் கொழும்பமர்ந்து, ஒரு தமிழ் வளாகம்போல் வேண்டுவார்க்கு வேண்டிய கலை தெரிந்து உணர்த்திய புலவர் அவர்.
பாண்டியஞ்றரின் தமிழறிவையோ,  ைச வ சித்தாந்தத் தெளிவையோ, இயற்கை நுண்மதியையோ, இயற்கையான பணிவு நலத்தையோ எதை எடுத்துச் சிறப்பாகக் கூறுவது? கற்ருேர்க்குத் தாம் வரம்பாகிய தலைமையர் எங்கள் புலவர். பண்டொரு நாள் கூழங்கைத் தம்பிரான் யாழ்நாடு இருந்து, ஒரு தமிழ்ப் பரம்பரை தோற்றியது போலப் புலவரும் இங்கு ஒன்று அமைத்தார்கள். இலக்கண இலக்கிய அறிவு
தமிழ் பேசும் நாடுக்ளில் சென்ற ஒரு நூற்றண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்களுள் பாண்டியனரிலும் இலக்கண இலக்கிய அறிவில் சிறந்தவர் இருந்திருப்பார் என்பது ஐயத் திற்கிடமானது. எந்த முறையில் இப்படியான ஒரு கூற்றினை நாம் கூறலாம் என்று ஒருவர் கேட்கலாம். அதற்குப் பல கார ணங்கள் உள. சிலர் சிறந்த புலவராயிருக்கலாம். சிலர் சிறப் பாகச் சிற்சில இலக்கியப் பகுதிகளில் புராணங்களில் சிறப்

Page 5
( 2)
பறிவு பெற்றிருக்கலாம். சிலர் சமய இலக்கியங்களை ஆய்ந்து அறிவு பெற்றிருக்கலாம். ஆயின், இவற்றையெல்லாம் விரி வான தமிழிலக்கியப் பரப்பில் முறைப்பட வைத்து, தமிழ் மொழியின் பொது விலக்கணத்தையும் சிறப்பியல்பையும் நன் முறையில் அறிந்தவர் புலவர் பாண்டியனுர்,
ஆஞல் பாண்டியஞர் பொதுப்புலமை மட்டும்தான் உடையவர் என்பது என்கருத்தன்று. அவரின் சிறப்பியல்பு கள் பல. சிலவற்றையே இங்கு எடுத்துக் கூறலாம்.
பாண்டியனரின் சிறந்த நூல் நம்பியகவல் என்பது. இது பகவத்கீதையின் மொழிபெயர்ப்பு. இதில் ஒரு சிறப்பு என்னவென்ரு ல், பகவத்கீதை என்ற நூலின் பெயரும் மொழி பெயர்க்கப்பட்டதாகும். பகவத்கீதை என்பது தமிழில் நம்பி யகவல் என்றயது. புலவர் இச்சொல் ஆயவகையைத் தம் நூலில் அழகாக எடுத்துக் கூறியிருக்கிருர், இலக்கண இலக் கியம் கற்றுத் கேநிய புலவர், நம்பியகவலைத் தேர்ந்தெடுத்து தமிழகவலாகத் தந்தது ஆசிரியரின் அறநோக்கையும் தவச் சிந்தையையும் எடுத்துக்காட்டுவதாகும். இந்நூலின் தமிழ் வளமும் மெய்யியல் வளமும் தனித்து ஒரு 'கலாநிதி"ப்பட்ட ஆராய்ச்சிக்கு உவந்த விடயமாகும் தரத்தவிை. இந்நூல் வெறும் மொழிபெயர்ப்பன்று. மெய்யியல் விளக்கத்தில் புல வர் தமக்கென ஒருகோள் வகுத்து, அதை அங்கு விரித்தாண் டுள்ளார். மெய்ஞ்ஞானியர்க்கெல்லாம் தாம் தாம்வேட்டவை வேட்டவை, அக்மாழ்ந்தவை எல்லாம்'விரித்து அளிக்கக்கூடிய கற்பகதரு பகவத்கீதை. நம் புலவரும் தம் அத்துவித- சித் தாந்தத் தேறலை அங்கு காண்கிருர், அது அவர் விளக்கம், அது கவிதை நூலன்று; மெய்யியற் பனுவல்; தமிழறத் தோடு வடமொழித் தரிசனம் புணர்த்திய யோக நூல்; சொல்லாக்கத்திலுமே முதல் நூல்.
புலவர் பாண்டியனுர் உள்ளம் இலக்கியம் அளாவிய உள்ளமெனினும் அறநிலையையே பெரிதும் நாடும் இயல்பு டையதாகும். பதஞ்சலி யோக சூத்திரம், உபநிடதங்கள் முதலிய நூல்களைத் தமிழில் இவர் ஆக்கியுள்ளார். இவை அச்சேறும் காலம் எப்ப்ொழுது என்று சொல்லமுடியாது,
உள்ளத்தை ஈர்த்த பணி
புலவர் உள்ளத்தைப் பெரிதும் ஈர்த்த பணி திருக்குறள் உரையாகும். புலவர் அறத்துப்பால் முழுவதற்கும் விரிவான உரை எழுதியுள்ளார். இதனைத் தமிழகத்தில் அச்சிடவேண் டுமென்பது அவர் கருத்து. அச்சிடில் 1000 பக்கம் வரை செல்

( 3 )
லக்கூடிய அவ்வளவு விரிவானது இவ்வுரை. இந்த விரிவுரை யில் தான் புலவரின் தமிழறிவையும் இயற்கையான நுண் மதியையும், மெய்யியற் சிந்தனையையும் ஒருங்கே நாம் காண லாம். இந்த உரையில் பல பகுதிகளில் நுட்பமான தருக்க முறைக்கிசைந்த பல பாட பேதங்களை நாம் காணலாம். முந் திய உரையாசிரியர்கள் கருதியே இருக்காத சைவசித்தாந் தத் தெளிகவுளை நாம் காணலாம். வள்ளுவரின் சிந்தனை ஆற் றலைப் பரிமேலழகர் மாறுபடுத்திக் காட்டிய இடங்களிலும் காணலாம். குறள் கிடக்கை முறை, அதிகார முறை புதிய கருத்துக்கள் முதலியன புலவரின் சிந்தனைப் புதுமை வளத்தை எடுத்துக் காட்டப் போதியனவாம்.
புலவரின் விரிந்த தமிழ் உள்ளத்தை இந்தக்குறள் உரை களில் காணலாம். குறளிற்கு ஒரு புதிய கருத்துக் கூதப்படு மெனில், அதற்கு இலக்கணச் சான்றுகள், இலக்கிய ஆதாரங் கள் சைவசித்தாந்தச் சான்றுகள், அகச் சான்றுகள் எல்லாம் அங்கே கூடிநின்று அவர் பக்கம் வாதாடும்.
லோக மான்ய திலகர் கீதைக்கு ஒர் அரிய விளக்கம் அளித் துள்ளார். அது கீதையின் தத்துவங்களை மேனட்டு மெய் யியற் கோட்பாடுகளுடன் ஒப்பிட்டு ஆராய்வது. அதைக் கண்ட நாள் முதலாய் திருக்குறளுக்கும் மெய்யியல் சார்த்தி அரிய ஒர் உரை யாரும் எழுதமாட்டார்களா என்று நான் எண்ணியதுண்டு. அவ்வாறு மெய்யியல், அரசியல் பொருளி யல் இலக்கண நுட்பம் எல்லாம் ஒருங்குறைய ஒர் உரை யைப் பாண்டியனர் எழுதியுள்ளார்.
இன்னும் திருக்குறளைப் புத்த தர்மத்துடனும் யோக குத்திரத்துடனும் செம்மை வர ஒப்பிட்டு ஆய்ந்தவர் ஒருவ ரில்லை. அவ்வாறு ஒப்பிட்டு, எவ்வாறு பிறர் மதம் தொட்டு தம் மதச் சிறப்பினை வள்ளுவர் நாட்டினர் என்பதைப் பாண் டியனுர் வாயாலேயே கேட்க வேண்டும்.அது புதுமை புலமை.
நிகரற்ற சொல்லறிவு
புலவரின் சொல்லாக்கம், சொல்லறிவு நிகரற்றவை நம்பியகவலில் நாம் இதைக் காணலாம். சொற்கருத்தும் ஆழ மானது. பழமையானது, ஆயின் புதியது கூறுவது. உதாரண மாக கொடிநிலை கந்தழி வள்ளி" எனவரும் தொல்காப்பியச் சூத்திரத்திலுள்ள வள்ளி எனும் சொல்லிற்கு ஆசிரியர். கருத்து அற்புதமானது. இது வடமொழி "பிரமம்' எனும்

Page 6
( 4 )
சொல்லிற்கு நேரிதாக ‘வள்’ எனும் அடியிலிருந்து தோன்றி யதெனப் புலவர் விளக்கம் கூறுவார். ‘வள்’ என்பது பிர மம் என்பதன் அடிபோல மேலும் மேலும் வளர்வது எனும் பொருள்படும் பதம். இச் சூத்திரத்திற்கு இவ்வகையில் புல வர் கூறும் கருத்து முன்பு ஒருவரும் சிந்தியாதது.
புலவரை நான் முன் ஒரு முறை ஒர் இந்திய நண்பரிடம் அழைத்துச் சென்றேன். நான்குநாள் 'அகர முதல எழுத் தெல்லாம்" என்ற முதற் குறளுக்கு உரை சொல்லிக் கொண் டிருந்தார். ஒரு நாள் கூறிய உரை மறுநாள் வராது. கூறியது கூறப்படாது, முன் பின் முரணிருக்காது. தருக்க முறையின் உய்த்தறி முறையினல் பொருள்கள் எழும். இலக்கண முடிவு களினல் புதிய கருத்துக்கள் தோன்றும். அகச் சான்றின் மாட்டெறிவினுல் புதிய தத்துவங்கள் தோன்றும். எங் கேயோ ஒரு வட மொழிக் காவியத்திலிருந்து ஒத்த நுண் பொருளோடு ஒப்பிட்டு இன்னுமொரு புதிய கோள் முளைத் தெழும். இப்படிப் பல.
புலவரிடம் ஒரு செய்யுளேப் பலமுறை பாடம் கேட்க லாம். ஒவ்வொரு முறையும் புதியதொரு கருத்து அங்கு முகிழ்க்கும். உரையாடலின் பின் அது கனிதரு தருவாய்த் கிளை விட்டிருக்கும். மற்றைய ஆசிரியர்க்ளைப் போல் புலவர் இலகுவில் பழமை தட்டிவிடும் இயல்புடையவர் அல்லர். பயில்தொறும் புதியது அளிப்பவர். நாள் பல கழியினும் குறள் போல் தேன் பிலிற்றும் யாணர் நலம் நிறைந்தவர்.
புலவர் சிருட்டித்த தமிழறிஞர் பலர் கொழும்பில் இருக்கிறர்கள். புதிய குல முறை ஒன்றை அவர் கொழும்பில் விட்டுச் சென்றுள்ளார். புகழ் விரும்பாதவர்
பாண்டியனர் பணிவானவர்; அடக்கமானவர்; புகழ் விரும்பாதவர். கல்வி சொல்லிக் கொடுத்தே காலங்கழித்த பெருந்தகை. பிறர் மனம் புண்படப் பேசாதவர், நடவாத orř.
தமிழபிமானி, பகுத்தறிவாளர், சமயாசாரத்தில் சுத்த அத்துவித - சித்தாந்த சமரசயோகி,

(5)
புலவர் நினைவாற்றல் நிறைந்தவர். துண்மாண் நுழை புலத்துக்கு அவர் கூறிய ஒரு கருத்து வருமாறு. நுண் புலம் என்பது அரிய ஒள்ளிய கருத்துக்களையும் இலகுவில் அறியும் புலம். மாண்புலம் என்பது அகண்ட நூற்பரப்பு களைத் தன்னகத்தடக்கித் தொடர்பு படுத்தும் புலம். நுழை புலம் என்பது முன்பின் கண்டு கேட்டிராத புலத்துள்ளும் நுழைந்து முத்து எடுக்கும் புலம். அவர் புலம் நுண்மாண் நுழைபுலம்.
அத்தகைய நுண்மாண் துழைபுலம் ஒன்று பெருமனத்து டன் ஒன்றித்து விட்டது.
அவரிடம் தமிழ் கற்ருர் அவர் நினைவினைப் போற்ற யாதாயினும் பணி செய்தல் வேண்டும்.
இ. இ. (தினகரன் யூலை 11. 1976)
N

Page 7

புலவர் போற்றிசை
~~صبرسبرہسیبر. حسی۔۔حسبر محیہ۔۔۔
தமிழ்நலம் விழுமிய சால்பும் குழைவும், இள அகம் அளேயும் பைந்தமிழ் மொழியும், பண்புரு வாகி முன் ஒருநாள் ஈழம் அணைந்கது கருணுலய உருவில். எழுத்தும் சொல்லும் இயைபுறப் பெற்றும், பொருள் கிடைத்திலதேல் பெறும்பயன் என்ன என்ற பாண்டியன் மரபி?னக் காக்கவோ, திருவுளம் இசைந்து மெய்ப்பொருள் தன்னை ஈழத் துணர்த்த இங்கு நீ வந்தனை,
புலவ!
முந்தி நான் செய்தவ விளைவோ, என்னவோ, ஒருநாள் விவேகா னந்தம் அமர்ந்து, திருமுரு காற்றுப் படைத்திற விளக்கம் ` விரித்தருள் வேளை வெண்திரைப் போர்வையில் எளிமையே எழிலாய் எழுந்திருந்து உரை நலம் அளித்தமை கண்டு, எனுள் துளிர்த்த தமிழ் வேட்கையை, தமிப்பொருள் வேட்கையை, தணிக்கும் பூட்கையன் இவனெனத் துணிந்து. ஐயனே! எனக்குத் தமிழில் எழுத்துச் சொல்பொருள் சொல்லித் தருவிரோ, என்று நான் கேட்கவும்,
மெல்லிதழ் முறுவல் முகத்தினில் மலர, நன்று உம் விருப்பெனக் குறிப்பினில் உணர்த்தி, பணந்தரு தகைமையைப் பரிவினில் அளந்து, தனித்துநீர் கற்பின் பணஞ்செ லவாகும், கூட்டாய்க் கற்றல் ஏற்புடைத் தென்றனன், இயைந்து நான் அவனடி அமர்ந்து கற்றனன். எழுத்துச் சொல்பொருள் என இயல் முறைமையை விடுத்து, முதன்முதல், தொல்காப்பியச் செய்யுளும் இயலும் தருக்கமும் கற்றனன்,
என்ன அற்புதம்!

Page 8
(8)
பழமையில் பழுத்தவன் என்றதோர் எண்ணம் அவர், உடை, கண்டுநான் எண்ணிய துண்டு. செய்யுளை ஓதவே, எழுத்துஞ் சொல்லும் இயைந்து வளர்ந்த விந்தையை, உணர்ந்தனன் புலவரின் செய்யுள் புகட்டிய, பன்முக எழுத்தியல் குறிப்பில், தருக்கம் என்றல் நுண்மதி உலகினை நோட்டம் பார்த்தல் என்பதை நானறிவேன்; ஆயினும், அவர்ஆள் தருக்கம் அ + னரின் உயர்ந்து வளர்ந்த சிந்தனை வரலாற்றின் சீரிய ஆய்வு:
யைபிலாப் பொருள்களை இணைக்கும் 'அணிஇழை; ழ்க்கடல் கழியினை மேற்கல் நுகத்தினில் - வீழ்த்தும் எறிபடை என நின்றது கண்டேன், இலக்கண இலக்கியம் எகையவர் ஆளினும், புலமையின் உயர்வால் இரண்டுமே ஒத்த சுவைநலம் தருவபோல் செழிக்கும்; இது அவர் தனித்திறன் ; இலக்கண ஆய்வில், தருக்கம் மெய்யியல், குடியியல், மெய்ப்படத் தோன்றும் ஒத்த வடடொழிக் கொள்கையும் உடன்வரும்: அவர்விரி இலக்கணத் திவலைகள், நூல்கள் முன்னர்த் தீண்டா ஒண்மைச் சுடர்கள்.
இலக்கியப்புலமோ மானுட நலமெலாம் இலகு சொல்லரங்கு; தொலை தொலை கிடந்த பொய்யில் புலவர் மெய்ப்பொருள் தேர்ந்து, தமிழ் அடை கட்டும் அவிர்ஒளி, எழுத்தும் சொல்லும் பொருளுக்குரிய, முழு முதல்தானே ஓங்கு நிறைபொருள், அளவை, இலக்கண இலக்சியம், எல்லாம், முழு முதற் பொருளை விளக்குதல் வேண்டும்; என்பது புலவர் விரித்துரை யாது, துலங்க வைத்த விளக்கத் தெளிவு,
புலவர் உள்ளம் நாள்தொறும் கூரும் உள்ளம்; என்றும் தமிழ்மறை ஆயும் உள்ளம்; ஆய்ந்த உண்மையைத் தமிழ்தரு இலக்கியப் பரப்பின், கலங்காச் சான்றுடன் அரண்செய் உள்ளம்; அரும் நூல் நுண்பொருள் தெளியும் உள்ளம்; எந்நூல் எடுப்பினும்

(9)
பிழைபட மாணவன் வாசிப்பின், அடிஎது ஆயினும், அதனைத் திருத்தும் நினைவு ஆழ் உள்ளம்; நூலறி புலமை என்பது அவர்பால், படியாது அறிந்த உள்ளம்; எந்நூல், எவ்வுரை கேட்பினும், பதவுரை தெளித்து, இலக்கணம் சுட்டிப், பிறர்கோள் தொடுத்து, பொருள் திறம் விரிக்கும் உள்ளம்; நாள்வரைபு இன்றி பலநாள் கேட்கினும் புதுப்புது நயமள்ளி ஊற்றும் உள்ளம், ஆங்கிலம் வல்லோர், நேற்றுக் கூறிய புதுமுறை விமரிசம், அவரிடம் பழைய பரிமேல் அழகர் உரையினில், நச்சினர்க் கினியர் பேரா சிரியர் அடியார்க்கு நல்லார் ப்ோற்பல வல்லார் வாயினில், பழையதாய் முகிழ்ப்பகை நயக்தொடு காட்டும் உள்ளம்; விமரிச மெனிலோ பொருள்நயத் தனிவழி அன்று, சுவைதரு முறையில், சொற்ருெடர் அழகியல், நடைபயில் குழைவு, இலக்கணப் புத்தணி, பழமையின் புதுமுகம் என்று, பல வழியிலும் பண்.ை யோர் மதிநலம், பொருள்வளம், விரிப்பது, என்பது அவருளம்.
இலக்கிய இலக்கணத் தருக்கம் இயைபெறப் புணர்ந்ததன் பயனே திறனே, பாண்டியன் உள்ளம் அறஞ்சால் உள்ளம், தமிழ்போல் தெரியினும், மொழிபோல் விளங்கினும் தமிழ மென்பது விழுமிய அறமெனக் துணிந்தவர் புலவர். மொழி முதல் அடிப்படை விழுமிய அன்பாம்; அன்பே மானுடக் கலப்பின் அருமுதற் சுருதி; ஆகவே அன்பினைப் போற்றும் தமிழே முகல்மொழி; அது தேர் முடிபாம். அன்பின் விளைவதே அறமெனக் கொண்டவர் வள்ளுவர் உள்ளும் கருணுலயனர் . எனவே அறமே முழுமுதற் கடவுள், அன்போ அறமோ எங்கு காணினும் அதனைப் போற்றி நமதாகக் கொள்ளல் உயர்கடன், அதனுல் உய்நெறி காட்டிய தனிப்பெரு நூல், மும் மணி என வேத நெறிபுகல் கூறிய வற்றுள் ஒன்ரும், போர்க்களம் அதனில் பேர்நெறி காட்டிய

Page 9
(10)
பகவற் கீதையை, நம்மொழி ஏற்றி, நம்பி அகவல் பெயரொடு நாட்டினர் புலவர். பின்னரும் அது தொடர் பாக தமிழ்மொழி வான்மறை, அமுத ஊற்றின், கருத்துருக் கருவூல மாம் திருக் குறள்தனின், சீர்மையைச், சிற்றறி வினரும், உய்த்சுறி உளத்திறம் முற்ரு தவரும், வளங்கொள உணரும் பொருட்டு விரிவுரை யாக வடித்தனர் புலவர்.
அது, இது வரை அச்சு அறியாது கண்மூடித் துயில்வது தமிழ்க்குடிச் சோம்பல், மடிமை, அயர்வுளம், தாழ்மனப் பான்மை, ஆகிய பண்புகட் கோர்சான்று. அவர் எழுதிய குறளுரைப் பெருமையை, நம்பி யகவல் தெரிவினை, ஒப்பியல் இலக்கிய வாயி ராய்
ஒர்ந்து மதித்திடல் ஆய்வுரை ஆகாது;
இதுவரை, சைவமும் அத்துவித நெறியும் நம்மகம் பதித்த, செம்பொருள் அளந்து, தம்முள் ஒன்றியும், தருக்கியும், அவை:சொல் தத்துவ முடிவுகள் தெளிந்து, நோக்கினே, புலவர் 'உரையின் வனப்புத் துலங்கும். திருக்குறள் ஆய்வுரை புலவரின் சிந்தனைக் கொடிநிலை காட்டிய, வள்ளிய செந்நெறி: அத்துவிதங் கனிந்த சித்தாந்தப் பிழிவு. குறள்முறை வைப்பு, அதிகாரத் தொடரியல் அற முறைப் பொழிவிலும் ۔* அரசுஉறை நெறியிலும் சிறைவிரி புலமையின் சீர்த்த தெளிவு.
புலவரின், செய்யுள் நோக்கு சங்கப் புலவர் அடிவழிச் செல்வது; நுண்மதி அடியாக, அதன்பயன் தளையாக, யாக்கப் பெற்றது; இன்னும், உணர்வினும் உயர்ந்த, ' பெருமன அடியில் ஊன்றி, செதுக்கிய சொல்லும், இலக்கண மெருகும், புதுமையில் தோய்ந்த சீரடி எடுக்க, எண்ணக் கருக்கள் வண்ணம் தளைக்க,

( . )
ஈராயிர ஆண்டின், இளநல முறுக்கில் கடிநறை தொடுப்பது; அசதியில் நோக்கில், எண்பதம் தோற்ரு இயல்பு கொண்டது; செய்யுள் சொற்கள், கொள்கருப் பெருமையால், இலகுவில் உடையா, வலுவடி உடையவை; இது அவர் தமக்கென விதித்த கொள்கை; இன்று இயல் உடை தமிழ்ப் புன்மர பதனை, ஒடியாது பேணக், கடுமையே ஆயினும், கருத்துறைப் பாக்களைப் படைத் ப் பேணல் பயனுடைத் தென, அவர் கருதிய தன்மையால், விக்ளந்தது அவர்செய் பெய்யுள் ஒழுக்கம். அதை வேறு கட்டளை கொண்டுநாம் அளப்பின் கட்டளை இழியுமே அன்றிக் கருத்துச்சீர் குன்ருது: கவினழியாது.
புலவரின் மெய்யியற் பொருண்மையைக் கூறின், பலாதைப் போற்றுதற்கொருப்படார். டண்டுதொட்டு இதுவரை, தமிழகம் இ4 ல் பல மெய்ம்முறை தன்னகம் ஏற்பினும், தனக்கென ஒரு விதி வகுத்து, அதைக் கடைப்பிடித்து ஒழுகிவந் துள்ளது, ஒன்றே குலம் ஒருவனே தெய்வம், அன்பும் அறமும் இயன்றதே இன்பம், இறையை முன்வைத்தே அறமும் இயலும், முறை இவை தவறி முயல்வது பாழே.
மற்றை இவற்றைச் சுற்றி எழுந்த பல் வழக்குகள யாவும் சழக்கெனப் புலவர் பலமுறை வாதிட் டுள்ளனர். சித்திபோதம் செப்பும் பே ாக நெறியே சிறந்தது; இற்றைநாள் கோயில் வழக்கு, மிக்குயர் வன் மறனப் புலவர் மொழிவர்; அன்றியும் இன்றிவை நிகழ்முறை சித்தியார் கூறும் அகநெறி தேறு தற்கு இயையாது என்பர் புலவர். கல்வியே கடவுள்; கல்வி பயிலும் தமிழொடு மற்றை அறநூல் ஆய்தலும், திருமுறைத் தேர்வும், சிந்தையும், குறள் முறைக் கடைப்பிடி இயைந்த நெறிகொள் வாழ்வும், புலவர் போற்றிய வாழ்வு.

Page 10
( 12 )
வெளிவழிப் பாடு, வந்தனை, கிரியை அவர்கொளா மரபுகள்: இது அவர் மெய்யியல். •
'யாதும் ஊரென யாவரும் கேளென' ஒதிய செந்தமிழ், இன்ருே? யாதிலும் கரைந்தும், யார்க்கும் மெலிந்தும், தன்வளம் தன்னறம் தழைத்துலகு இன்புற உழைக்கும் உரவே இன்றி, வாடுதல் கண்டு.அவர் உள்ளம் கவலும்; குமையும். சொல்லின் ' பற்றி தெரியாது எள்ளுவோர், பழைய சங்க நூற் டெருமை உணராதோர், இலக்கண நூல்களில் இயைந்த தருக்கம், இலக்கியம் காட்டும் ஒழுக்க உருவம், திருமுறை தேக்கும் தெய்விக உள்ளம், இவைதெரி யாத இற்றைநாள் கல்வியோர் எண்ணி அவர் மனம் அழுங்கும்; தமிழென்பது வெறும் மொழியன்று; தமிழாளர்கொள் தளரா ஆண்மை; சொல்லாக்கமொடு பொருள் பொதிதிறன் , தன் நுண்மதி கொள்பவை செலச்சொல்லாற்றல் உலக நுண்மதியோர் உன்னுவதெல்லாம், உரைப்பவை எல்லாம், கருவுருச் சிதையாது உன்னி உரைக்கும் மொழிவலப்பண்.1; உழைப்பவர் உயர்வே தமிழ்செழிப் புயர்வு; எழுதிக் குவிப்பது மொழித்திற னன்று; உன்னுவது உரைக்கவும் உாைப்பது உன்னவும் வல்லதாய் அமைவதே மொழி; தமிழ்இத் திறக்கரு தன்னகம் கொண்டது, அதைவெளிக் கொணரல் இன்று மொழிபேசுநர் கடன் என்பது அவர் நோக்கு.
இருபத்தைந்தாண்டு வாரம் ஒருமுறை அவருடன் அளாவிய வாய்ப்பினல், செந்தமிழ்ச் சீர்மை ஆடிய நற்றவம் பெற்றேன். பெருமகன் ஒருவரை மொழிசார் பண்பினல் நிறுப்பது முறையன்று; நிறைக்கு என்றும் கட்டளை, ஒழுக்க விழுமமே, கல்வி அவர் தொழில் ஆயினும்

(3)
தொழில் செய்முறையிலோ, நாள் தவருது முறைப்படப் பாடங்கள் கற்பிக்கும் பொய்யாத் தொழிலாளி புலவர்.
எங்கள் சிவங் கருணுலய பாண்டியன், எளிய உருவும் இனிய இயல்பும் தெளிவுறக் குவிந்த சீர்த்த கோலத்தன்; துறவு உள்ளம் பூதப் பிணிப்பினல் மண் நிலவிய தமிழப் பண்பினன்; யோகப் பயிற்சியில் அடங்கிய மூச்சினன்; தமிழ் நூற்பரப்பில் திளைத்த ஒளிர் விழியினன் திளைத்து மாந்திய தேன்பிலிற்று நாவினன்; பஞசின் மென்மயிர்க் கற்றை முடியினன்; வெண் +திர் விளையாடு தாடியன்; உரையாடுகையில் மதிநலம் அறநலம் விவரத் தொடுக்கும் சொற்ருெடர் மாண்பினன்; நித்தலும் மொழிநலம் சூழும் நெஞ்சினன்; என்றும் இன்மொழி மேவிய உரையினன்; பணிவும் பரிவும் இனிது குழைந்த மணிமிடை பவளத்தன்; மெய்யியற் காட்சியன்; கல்லாது அறியும் கழிபெரும் கண்ணியன்; மறந்தும் பிறர்மனம் குன்றது ஒழுகும் அறத்தவன்; இன்ன செய்யா இயலும் நொன்பினன்; கல்வியா லன்றி வாழாக் கருத்தினன்; தன்னுயிர் நீப்பினும் தமிழ்ச் செழிப்பு உள்ளுநன்; கருத்தூற் றமொடு சிந்தனைத் தெளிவுசேர் புதுமைக் கற்பகம்; ஒருபொருட் குறிப்பினைப் பலமுறை கேட்பினும், நாள்தொறும் புதுப்புதுக் கருத்துப் பொலிந்திடும் என்றும் புலரா நறும்பொன் மலரவன்; சொல்லின் செல்வன், சொல்லினுட் செல்வோன், கருத்துருவாகியோன், கருத்துருவாக்கும் திருத்தகு பெற்றியன்; உலகியல் தேர்ந்தோர், இலக்கிய இலக்கணக் கடாவிடை தொடுப்போர், ஐயந் தீர்ப்போன்;
VM
முனிவு முனிந்த துணியில் இனியன்; குறுமுனி சோக்கிரதர் இருவர் சால்பும்

Page 11
( 14)
உறவுகொள் உரவோன்; குறளும் கீதையும் உறவினில் தந்த அறமவை உளத்தினில் அடக்கி, எதிர்வரும் உலகினை அறிதுயில் தேர்ந்து, செந்தமிழ் தீட்டும் சேவகன், தமிழ்ப்புலம் தொழுதேத்தும் தோலா மொழியினன்; உவப்பத் தலைக் கூடி உள்ள . உள்ளப். பிரிந்தனன். வாழிய அவன் புகழ்.

POET PHILosoPHER - PANDAN AR
Pulavar Karunalaya Sivan Pandianar was born on 1903-8-9 at Malaiadikurinji in Thirunelvely District, South India. His father was an Ayurvedic physician who carried on his profession in Malaiadikurinji and the adjoining villages. His earnings were not sufficient to send his son Pandian to school for higher studies So young Karunaiayan after several attempts to persue his studies independently resorted to the help of some learned philanthropists. With their loving aid and munificience he was able to continue his studies in pure literature. But as he admits in his short auto-biography in Nambi Ahaval his inclination was towards philosophy. This inclination and his innate inquiring mind are the factors which conditioned him and made him what he was later to be.
He came to Colombo to give tuition to the son of Mr. Karuppan Chettiar. This son later became Professor of Tamil at the Annamalai University. In due course circumstances and his inclination forced Pandianar to bea teacher in private. This profession suited his temperament but gave him little remuneration.
When his quest for a satisfying job with fixed remuneration did not yield any fruitful result, he settled down to religious and literary discourses under the auspices of the Vivekananda Society and other voluntary study circles. He also gave private tuitions for those who wanted instruction in religious literature, Saiva Siddhantham and classical grammar.

Page 12
(16)
He was a short tanned man. His genetic factors, early privation, vegetarianism and restlessness in quest of truth would have moulded him in this stature. He wore only a verty and shawl. His attire was born cut of his simple 1iving. It did not signify anything more than that. His simplicity reflected his culture, plain living, and a rustic religious ritual.
His profession in conjunction with his innate yearning for absolute knowledge endowed him with a keen intellect. His profound and resourceful memory were his great assets.
He had a very gcod knowledge of Sanskrit. He had studied the Bhagaved Gita, the Upanishads and Patanjali Yoga Sutras. He had also read the Maha Barata in Sanskrit. He was familiar with Sanskrit Literature and grammar. This knowledge helped him place Tamil Literature and the growth of Philosophy in their proper perspective and evaluate their independence and originality.
He was a man of self confidence and inner resoution. This does not mean that he was commercially enterprising. His forte was in his resolute adherence to his convictions. By convictions, I mean his firm resolution on simple living, avoidance of publicity, unswerving oyalty to philisophical and cultural judgements of his own. He lived the life of a recluse bestowing the minimum care for the maintenance of a married life. He was married land had two sons Thiruvarul Vallal and Pijnjnakan Chemmal.
RELIGION AND PHILOSOPHY
His loyalty to philosophy and religion was of a complex nature. Even though Adi Sankara put forward the theory of Nirguna Brahman, he was an ardent, Upasaka. Pandianar was not an Upasaka but was a householder. His philosophical convictions were not sectarian but eclectic. He chcse those tenets which were logically satisfying from all

(17)
darsa nas and religions. This was something different frcm his approach to linguistic problems. To a great extent he was a Vedantist, with his own modifications. He did not believe in supplicating to a personal God. But he recognized that each man had his own level of evolution and approach and was very accomodative.
His approach to philosophy was integral. This does not mean that his concept was similar to that of Aurobindo. His integration was within his range of gleanings from pure literature, religious literature, philosophical treatises in Tamil and Sanskrit. His knowledge of logic was refined and sharp. His deficiency was in the field of modern science. His acum an was in interpreting pure literature in a metaphysical way. This kind of perception, that cf going beyond the pure literary to philosophical is not alien to Tamil Commentators and he followed in their footsteps.
His knowledge of the discipline of Raja Yoga was eclectic as was his philosophy. Even though he was in a position to identify the modern movements in meditation, he was well aware of their disciplines. He was in a position to evaluate the comparative merits of modern, meditative ways in relation to Satchitananda and pinpoint the relative values of each of them. The central idea of the modern movements of meditations was not something alien to him. In fact he was a staunch adherent to one of them.
He has written and published four books. They are Nambi Ahaval, Alagiathu, , Kathiragama Pillai thami!, and Ezhini. Besides these works his contributions to works published by others is also substantial. In this field his contribution was that of a mentor and editor.
Of his works Nambi Ahaval is the most outstanding. This work was the fruition of his desire to bring Gita

Page 13
( 18)
in Tami with his own interpretation. Even though this work is an outstanding one in modern philosophical literature it has escaped the attention of many owing to prejudices. Kathiragamap Pillaithamil is an original poetical composition This foilowed the old literary tradition and belonged to a prescribed literary genre. Ezhini is a research work published on the occasion of the marriage ceremony, of one of his students. This work shows the poet's intense love for his language and his devotion and admiration for his motherland's (Tamil Nadu) past achievements.
Alagiathu (the beautiful) a work in venba metrica, form is another original work. He started this work in the style of Ainthinai aimpathu' and wanted to make it a short one. But when he began to write he could not confine himself with iimited beauty, and continued to unburden himseif of his crystallized aesthetic and ethical conclusions. For him the morally sound is the beautiful. This was in the tradition of the third Anthology (Pathinen Kiikanakku) of Sangam Literature. In one way Pandianar would appear as unique, but he was one in the Tamil tradition of poetics and philosophy.
محبر
LTERARY MERTS
It is indeed very difficult to assess and appreciate the achievements of a poet in the absence of a quantitative and concrete output. But the the literary world should have a way of conducting assement in such cases. Pandianar's output in concrete form is not substantial. The question is, has he contributed to literature and to the growth of the language? Has he explained and elucidated difficult portions in literature and grammar? Has he stimulated original thinking and promoted exploration in literature and philosophy. If he has, then his work deserves evaluation and appreciation. Such evaluation can be done only by those who have learnt directly under him.

(9)
1n trying to evaluate his scholarship, education, knowledge and intelliect, sometimes it becomes inevitable that may co-opt my own ideas as his and evaluate him. This is neveitable; because I have imbibed so much from him. must be frank in admitting that all I have gained in the fields of literature, grammar and poetry are his. It is also true that sometimes I have presented grammatical and textual problems to him in such a way as to get what I had in mind as answer. I have enriched myself So much from him, that it looks ridiculous to say that
am co-opting certain ideas of mine into his.
Λ
in assessing his achievements and appreciating his views, I will be brief. It is quite possible that my views are singularly subjective and may not be commonly shared by other students.
ORIGNALTY
Pandianar was exceptionaily original in his approach to literary and philosophical problems. When say original mean that it is something not thought before by any. This originality is not repetetive. It is like a geyser shooting forth constantly fresh streams of thought. Given a line in a literary piece, the explanation from him at first will be above average. After sometimes or after several days the explanation will not be the same, but something more deep, revealing and inspiring. New explanations are not wild conjectures nor fanciful speculations but solid judgements buttrssed by literary sources. His originality is the result of concentration of a life-long accumulated material on a particular subject, Superimposed with discrimination.
SCHOLARSHIP
His scholarship was vast, voluminous faithful and correc tive, I am not sure whether he has read all the texts in Sangana Literature, or all commentaries on grammar. Butwhile giving

Page 14
(20)
tuition he will correct whenever one makes a mistake, in reading the text. This is true even in the case of Tamil epics. His corrective comments on the commentators wif be to the point and eminently convincing, and one has to agree with hirn, in his criticism and reorientation. This is qest illustrated in his commentaries on Valluvar.
pOETRY
He had definitive ideas on poetry. For him poetry s fusion of concentrated knowledge with crystallized language. The intensity in both cases may vary in degree depending on the literary genre. The intensity generated in the case of an epic is diffused, but in the case of a single poem it gets energised.
His idea is that the more the concept, the ideation and the inner vision become intense, the nature of the realisation makes the language symbol itself the more ennobled and elevated. His point of view is that the language itself has two symbols. One is the word. the other syntax articulated. The articulated syntax is not a direct one, but a derivative calculus of probabilities depending on the word symbol and the literary genius of the poet and the reader. While the word symbols denote and connote directly on a linear basis, the syntax opens up infinite vistas of conceptualisation. I do not think that any litterateur can object to thes two factors operating at the same time as communication instruments in literature. Word level is rational, the syntax eve emotionally tinged. But Pandianar has allowed in certain cases. the language structure to dominate his style in the field of syntax. This has earned him a great deal of disapproval in certain quarters.
CRITCSM
Pandianar is of the opinion that in writing commentaries, the Tamil commentators' approach of expounding the

( 2)
language structure, grammatical devices, moral eminence and conceptual parallels is the best way of criticism. His contention is that they are inseparable companions of a literary creation. However much the pioneers in strange iterary strategies may chaik out new paths, they have to come back to these fundamentals for literary development. According to him as with Whitehead the style of a poem is the line of action of the spirit. Spirit is the content of the poem, it's measured movement the style. in the absence of true spirit we get anaemic poems with a slow or a galloping Pulse
Another approach of his criticism is an integrated one. His idea is that in appreciating Kamban, one has always to imagine a big canvas, and bring together isolated and far distant delineations, word pictures, metaphysical expositic ns and emotional imageries to appreciate the wisdom of Kamban.
did not have much time to study Kamban under him. But in the exposition of Kural we can find Pandianar's intellectual sweep, syllogistic chain and multifaceted cross allusions.
GRAMMAR AND LOGIC
His knowledge of grammar is not based purely on grammatical rules. His approach to grammar is based on historical growth of the language and comparative commentaries. As any student will know that partof the Tamil grammar especially rules on conjunction, the first, last and intermediate positions of letters in words is really based on physiology of pronounciation. He was able to show how somewords obeyed physioiogical rules rather than grammatical rules. However he never allowed the physiology to degenerate into colloquial. A clear grasp of Tamil phonetics and classics enabled him to explain how single words obeyed different rules of conjunction other than laid down in grammar books, This ena

Page 15
( 22 )
bled him to instruct me in coining words. Any keen student oi Tami syntax will realise that major characteristics ot it, formed part of logical thinking. Pandianar was a keen student of logic and was in a position to explain how somet
syntactical patterns were really canons in logical thinking.
GLOSSARY
Pandianar's contention as regards the development of Tamilianguage is that it should enjoy an official status and the state should intervene in the preparations of glossaries. His approach to coining of words is that the procedure should have a pure Tamil root as it's base and that the variations,în suffix and prefix should have precedents in the Tamif vocabuliary. As his knowledge of English was little he could not give any parallel. But once an English word is given the root and evolution explained, a Tamii equivalent will immediately be put forward, by him backed by itertary precedent, grammar and comparative usage. I am of the opinion that Pandianar had contributed a great deal towards building up of words through his students.
CONCLUSION
Pandianar had a semina mind, a penetrating and pervasive intellect. His personality and spirituality blended so well that it is very difficult to assess him by any one standard.
E. RATHNAM
 


Page 16
கொழும்பு - 13 1 தெருவிலுள்ள எ
அச்சியிய (தொ. ே

02/2, ஆட்டுப்பட்டித் ம். ஜி. எம் அச்சகத்தில் ற்றப்பட்டது. J. 39 & 4)
f
i