கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சங்க காலமும் இலக்கியமும் ஆய்வின் மாறும் பரிமாணங்கள்

Page 1
கார்த்திகேசு சிவத்தம்பி M.A. இலங்கை F.
தகைசார் ஓய்வுநிலைப் பேராசிரியர் - யாழ்

'சங்க காலமும் இலக்கியமும்
ய்வின் மாறும் பரிமாணங்கள்
- 645NU Gideo
LD பார்மிங்காம் D. Lit கெளரவம் யாழ்.
ப்பாணப் பல்கலைக்கழகம்,
ஆய்வுக் கருத்தரங்கு -2008
'சங்க இலக்கியமும் சமூகமும்! ய கலாசார அலுவல்கள் திணைக்களம்
O3 - 11 - 2006

Page 2

சிறப்புரை
'சங்க காலமும் இலக்கியமும் ஆய்வின் மாறும் பரிமாணங்கள்
- ஆதார சுருதியுரை
கார்த்திகேசு சிவத்தம்பி M.A. இலங்கை) Ph.D. (பார்மிங்காம் D.Lit (கெளரவம்) யாழ்.
தகைசார் ஓய்வுநிலைப்பேராசிரியர் - யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்,
ஆய்வுக் கருத்தரங்கு -2006
சங்க இலக்கியமும் சமூகமும் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் O3 - 11 - 2006

Page 3

'சங்க காலமும் இலக்கியமும் ஆவின், மாறும் பரிமாணங்கள் - ஆதார சுருதியுரை
இலங்கையின் இந்து சமய கலாசார அமைச்சு, பெரும் பாலும் இலங்கை சார்ந்த - அதிலும் இலங்கையில் இந்து மதம் சார்ந்த விடயங்களையே - தனது வருடாந்த ஆய்வரங்கத்திற்கு எடுத்துக் கொள்ளும் மரபுண்டு. இம்முறை ஒட்டு மொத்த மான தமிழர் வரலாற்றினுள் மிக முக்கியமான இடம் பெறு கின்ற சங்க காலத்தினை ஆய்வு மையப்படுத்தி, கருத்தரங்கினை அமைத்திருப்பது திருப்தியினைத் தருகிறது. ஏறத்தாழ கடந்த 50 வருடகால ஆய்வு வளர்ச்சிகளை உள்வாங்கி, அந்த அறிவினை மாணவ உலகின்பாற்படுத்தாது விட்டுள்ள பெரும் குறைபாட்டினை, க.பொ.த. (உத) மட்டப் பரீட்சை முதல் கலை மாணி இறுதிப் பரீட்சை வரை காணக்கூடியதாக உள்ளது. இந்த நிலைமையை மாற்றி புதிய வளர்ச்சிகளை அறிவதும் அவற்றை மதிப்பிடுவதும் அவற்றுடன் நின்று விடாமல் அந்த அறிவினை தமிழ் பயிலும் மாணவரிடத்தே கொண்டு செல்வதும் நமது கடமையாகின்றது.
அத்தகைய பெரும் பணியை ஏற்கவுள்ள இக்கருத்தரங்கிலே எடுத்து நோக்கப்படுவதற்கு வேண்டிய ஒர் 'ஆதார சுருதி உரையினை நிகழ்த்துமாறு என்னை வேண்டிக் கொண்ட மைக்காக இம் மாநாட்டு ஒழுங்கமைப்பாளர்களுக்கு குறிப் பாக திருமதி சாந்தி நாவுக்கரசன், பேராசிரியர் சி. பத்மநாதன், திரு. க. இரகுபரன் ஆகியோருக்கு எனது கடப்பாட்டினைத் தெரிவிக்க விரும்புகிறேன்.
இந்த உரையில், அ) சங்க காலமும் சங்க இலக்கியமும் தமிழர் வரலாற்றிலும் இந்திய வரலாற்றிலும் பெறும் இடம் பற்றிய குறிப்புடன் தொடங்கி, ஆ)சங்க இலக்கியம்,சங்க காலம் ஆகியன பற்றிய ஆய்வு வளர்ச்சி யிற் பிரதான கட்டங்களாக அமையும் தொழிற்பாடுகள் பற்றியும் அத்துறைகளிலே அவ்வந் நிலைகளிலே முக்கிய பங்களிப்புச் செய்தோர் பற்றியும் சிறிது நோக்கி, அடுத்து,
3.

Page 4
இ) அண்மைக் காலத்தில் இந்த ஆய்வுத் துறையில் ஏற்பட்டுள்ள
முக்கிய வளர்ச்சிகளான, 1 கல்வெட்டியல் ஆய்வு முடிவுகளையும் I தொல்லியல் ஆய்வு முடிவுகளையும் எடுத்துக் கூறி, தொடர்ந்து
ஈ) சங்க இலக்கியங்களை நோக்கும் முறையில் ஒரளவு ஏற்பட்டுள்ள, நிச்சயமாக ஏற்பட வேண்டிய தேடல்கள் பற்றியும் விபரித்து எனது உரையினை நிறைவு செய்யலாம் எனக் கருதுகின்றேன்.
I
சங்க காலம் எனக் கொள்ளப்படுகின்ற காலப்பகுதி தமிழ் நாட்டு வரலாற்றில் 'முந்து வரலாற்று காலம்’ என (Early Historic Period) அழைக்கப்படுவது இப்பொழுது பொது மரபாகி விட்டது. இக்காலம் பற்றிய ஆங்கிலக் குறிப்பில் வரும் Historic எனும் பதத்தினை வெறுமனே ‘வரலாற்று’க் காலம் என்று கூறுவது அப்பதத்தின் முக்கியத்துவ ஆழத்தை வெளிக் கொணராது. Historic எனும் பொழுது ‘ஆவண பூர்வமான சான்றாதாரங்கள் கொண்ட வரலாற்று’க் காலம் என்பதுவே கருத்தாகும்.
சங்க காலம் என்பது இலக்கிய ஆவணங்களை மாத்திரங் கொண்டதாகவல்லாது, இலக்கிய வழி வருகின்ற தரவுகளை நிறுவுவனவாகவும் மேலும் விரிப்பனவாகவும் இலக்கியங் களிலே இடம் பெறாத சில தரவுகளைத் தருவனவாகவும் அமைந்துள்ளது. எழுத்தாவணங்களுக்கு முந்திய ஆனால் வலுவான சான்றுகளாக அமையும் புதிய கற்கால (Neolithic) தரவுகளையும், தென்னிந்திய / தமிழக வரலாற்றுத் தனித்து வத்தின் ஒர் அம்சமாக அமையும் பெருங் கற்படை பண் பாட்டையும் தளமாகக் கொண்டு இலக்கியவழித் தரவுகளை முக்கிய ஆவணமாகக் கொண்டும் சங்ககால வரலாறு இப்பொழுது செம்மை செய்யப்படுகிறது. அஃதாவது, இந்தத் தரவுகளின் தொகுதி ஒன்றிணைகின்ற பொழுது அந்த ஒன்றிணைவு முறைமையே தமிழ் நாட்டின் அடுத்த கட்ட வளர்ச்சிமுறைமைக்கு அத்திவாரமாக அமையும் தன்மையையும் காணலாம். இன்னொரு வகையிற் சொன்னால், சங்ககால
4

வரலாற்று உருவாக்கம் இப்பிரதேசத்தின் ‘முந்து வரலாற்றுக் காலம்’ என்ற வகையில் தமிழ்நாட்டின் பிற்கால வரலாற்று அபிவிருத்திகளுக்கு எவ்வாறு காலாக அமைகிறது என்பத னையும் நோக்க வேண்டும்.
சங்க இலக்கியத்தின் முக்கியத்துவமோ இன்னொரு தனிநிலைப்பட்டது. சங்க இலக்கியத்தினை இந்திய இலக்கிய வெளிப்பாடுகளுள் ஒன்றாகப் பார்க்கும் பொழுது அதன் பிரத்தியேக முக்கியத்துவம் (தனிநிலை) நன்கு தெரிகிறது. தமிழ் இலக்கியப் பரப்பினுள் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழைமையான இலக்கியம் இதுவே ஆகும். ஆனால், சங்க இலக்கியத்தினை நோக்கும் பொழுது தமிழ்நாட்டில் இலக்கியம் உருவாகிய முதற் படிநிலைக்கு உரியது என இவ்விலக்கியத்தைக் கொள்ள முடியாது. இதற்குள்ளே மீற முடியாத ஒர் இலக்கிய மரபை மாத்திரமல்லாமல், அந்த மரபின் வளர்ச்சி நிலை யையும் காணலாம். இவ்விடயம் பற்றிப் பின்னர் விரிவாகப் பேசவுள்ளேன். இக்கட்டத்தில் செந்நாப் புலமைப் பாரம் பரியமே விதந்தோதப்படுவதைக் காணலாம். அந்தளவில் தமிழக இலக்கிய வளர்ச்சி நிலையினுள் இது ஒரு வளர்நிலைப் படியே ஆகும். ஆனால், இந்த வளர்நிலைப் படியிலும் கூட இது தனித்த ஒரு மரபினைக் கொண்டதாக மாத்திரமல்லாமல், கிடைத்துள்ள மிகப்பழைய வடமொழி இலக்கிய மரபினின்றும் வித்தியாசப்பட்டதாகவும், வேறுபட்டதாகவும் காணப் படுகிறது. உண்மையில், இந்திய இலக்கியப் பண்பாடு என ஒன்றை இனங்காண முடியுமெனில் தமிழ்ச் சங்க இலக்கியம், வடமொழி மரபு வழியாக வந்த இலக்கியத்தில் இருந்து வேறுபட்ட, அதனிலும் பார்க்க முக்கியமாக வடமொழி இலக்கியத்தை தனது ஊற்றுக் காலாகக் கொள்ளாத ஒரு சமாந்தரமான இலக்கிய வெளிப்பாடாக அமைகின்றது என்பது தெரிகின்றது. A. L. பஷாம் முதல், நமது ஆய்வாளர்கள் சிலர் வரை, பலர் சுட்டியுள்ளது போன்று, இது தென்னிந்தியா வுக்குப் பொதுவான ஒரு மரபை ஊற்றுக் காலாகக் கொண்டுள்ளதே தவிர, வேத மரபையோ வடமொழி இதிகாச மரபையோ தளமாகக் கொண்டிருக்கவில்லை என்பது புலனாகின்றது. அந்தளவில் சங்க இலக்கிய மரபிற்கு, ஒட்டு மொத்தமான இந்திய இலக்கிய பண்புருவாக்கத்தில் ஒரு முக்கிய இடமுண்டு என்றே கூறவேண்டும். இந்த இலக்கிய
5

Page 5
பண்புருவாக்கம் பற்றிய தனித்துவமும் முக்கியத்துவமும் அக்காலத்திலேயே உணரப்பட்டிருந்தமையை தொல்காப்பியம் பொருளதிகார இயல் அமைப்புமுறை நன்கு சுட்டுகிறது. (அகத்திணை இயல், புறத்திணை இயல் எனவந்து இதன் செய்யுள் மரபுகள் தனியே கூறப்பட்டு எடுத்துரைப்பு முறை, விபரிப்பு முறை ஆகியன அமைக்கப்பட்டுள்ளமையை நோக்கவும்) அது மாத்திரமல்லாமல் அகத்திணை மரபு முற்றிலும் தமிழ் மரபாகவே அடையாளம் காணப்படுகிறது. ஆட்சியாளர்களைப் புகழுகின்றமாகதர், வைதாளிகர் மரபுகள் வடமொழியிலும் உண்டெனினும் அகத்திணை மரபு தமிழ் இலக்கிய பண்பாட்டு மரபிற்கே உரியது என்பதை வற்புறுத்து வனவாக இரண்டு தரவுகள் உள்ளன.
1) குறிஞ்சிப்பாட்டை கபிலர் ஆரிய அரசன் பிரகதத்தனுக்கு ‘தமிழ் கற்பிப்பான் வேண்டிப் பாடியதாகக் கூறப்படுவது.
I) இறையனார் அகப்பொருளுரையில் ‘இந்நூல் எந்நுத
விற்றோ வெனின் தமிழ் நுதலிற்று’ என்று கூறியமை.
சுருக்கமாகச் சொன்னால் சங்க இலக்கியம் இந்திய பண்பாட்டு உருவாக்கத்தில் வடமொழி இலக்கிய, பண்பாடு சாராத இன்னொரு தடத்தினைக் குறித்து நிற்கிறது.
இவ்வாறு கூறுகின்ற அதேவேளை சங்கப் பாடல்கள் என்ற இவ்விலக்கியத் தொகுதியின் இன்னொரு முக்கியத்துவத்தையும் இங்கு கூற வேண்டியது அவசியமாகும். பாட்டும் தொகையும் என தொல்காப்பிய உரையாசிரியர்கள் சொற் செறிவுடன் கூறும் இவ்விலக்கியத் தொகுதியினைப் படிக்கும் பொழுது இவை வட மொழி சாரா தமிழிலக்கிய தோற்றப் பண்பைக் காட்டும் அதே வேளையில் இந்திய வைதீகப் பண்பாடு பற்றிய மிக நுணுக்க மான ஒரு பரிச்சயத்தினையும் காட்டத் தவற வில்லை என்பது முக்கியமாகும். குறிப்பாக புறநானூற்றின் முதல் 4,5 பாடல் களிற்கு உள்ளேயே இந்தப் பண்பு தெரிந்து விடுகிறது. அது மாத்திரமல்லாமல் பாடல்களை இப்பொழுது உள்ள நிலை யில் வைத்து நோக்கும் பொழுது அவை அன்பின் ஐந்திணை மரபின் இயல்பான வெளிப்பாடாக இருப்பது மாத்திர மல்லாமல் அன்பின் ஐந்திணைக்குரியதாக அமையும் அகத்துறையினை அரச புகழ்ச்சிக்கான, அதாவது, வரன்

முறையான புறத்திற்கான, ஓர் உபாயமாக - உத்தியாகக் கொள்வதும் தெரிகிறது. பட்டினப் பாலை ஒரு நல்ல உதாரணம். பட்டினப் பாலையின் தலைவன், தலைவி உண்மையில் கற்பனைப் பாத்திரங்களே. கரிகாலனின் நாட்டுச் செழுமை யையும் போர் வெம்மையையும் கூறுவதற்கு “வாரேன் வாழிய நெஞ்சே” என்பது ஒரு வாய்பாட்டு உபாயமாக அமைகிறது. இந்த இயல்பினை அகநானூற்றுப் பாடல்கள் பலவற்றிலும் காணலாம். புறநானூற்றிற் காணப்படாத அரசர்கள் பலரின் பெயரை அகநானூற்றுப் பாடல்கள் மூலம் அறிந்து கொள் கின்றோம் என்பதை ஆய்வாளர்கள் சுட்டியுள்ளனர்.
தொல்காப்பியம் அகத்திணையியல், புறத்திணையியல் என்பவற்றில் தரப்படுகின்ற அக,புற மரபுகள் சங்க இலக்கியங் களில் வரும்பொழுது, செழுமையான கலவைகளாகவும் மாறிவிடுகின்றன (நெடுநல் வாடை) என்பதும் தெரிகின்றது.
இவை சாந்த மேலும் ஒரு முக்கிய அம்சம் யாதெனில், இந்த பாட்டும் தொகையும் இலக்கியத் தொகுதியின் நிறைவின் பின்னர், தமிழில் அனைத்திந்திய பொதுமையுள்ள இலக்கிய வெளிப்பாடுகள் இலக்கிய நியமங்களாக மாறுவதைக் காணலாம். பாட்டு - தொகைக்குப் பின்னர் வருகின்ற அறப் போதனை இலக்கியங்கள் இப்பண்பினவே.
மேலே கூறப்பட்டுள்ள இவ் அம்சங்கள் யாவற்றையும் இணைத்து நோக்கும் பொழுது இன்று நாம் சங்க இலக்கியம் எனக் கொள்ளும் தொகுதியானது தனக்குள்ளேயே ஒரு மாறும் நிலையை - மாற்றுருவாக்கநிலையை - கொண்டுள்ளமை தெரியவருகிறது. அந்த மாற்றுருவாக்கம், அக இலக்கிய மரபில் சிலப்பதிகாரம், மணிமேகலைக்கு இடங்கொடுக்கின்றது.
தமிழிலக்கிய வரலாறு முழுவதையும் ஒருங்கு நோக்கும் பொழுது, சங்க இலக்கியத்தில் தனிநிலையும் அதேவேளையில் LDTib DICO) fibao)6'll (5 lb boo) Goulb (Process of Transformation) முக்கியமாவதை அவதானிக்கலாம்.
சங்க இலக்கியத்தின் இந்திய இலக்கிய நிலைப்பட்ட இந்த அம்சங்களைக் கூறும் பொழுது, தொல்காப்பியம் - குறிப்பாக தொல்காப்பியம் பொருளதிகாரம் - அதிலும் முதல் ஐந்து இயல்கள் சங்க இலக்கியம் பற்றிய எமது விளக்கத்தைத்
7

Page 6
தீர்மானித்துள்ள முறையை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். இந்த விடயம் பற்றி 'தமிழ்க் கவிதையியல் - ஒரு தேடல்’ எனும் எனது நூலில் முதலாவது அத்தியாயத்திலேயே விவாதித் துள்ளேன். 'தொல்காப்பியத் துணையின்றி சங்க இலக்கியம்’ என்பதே முதல் அத்தியாயத்தின் தலைப்பு ஆகும். இவ்விடத்தில் சங்க இலக்கிய விளக்கத்திலும் ஆய்விலும் தொல்காப்பியப் பொருளதிகாரமும் அதற்கான உரைகளும் வகிக்கும் இடத்தினை வற்புறுத்துதல் அவசியமாகும். உண்மையில் சங்க இலக்கி யத்தை விளங்கிக் கொள்ள, தொல்காப்பியப் பொருளதிகாரம் எவ்வளவு உதவுகின்றதோ தொல்காப்பிய பொருளதிகாரத்தின் அமைப்பு முறை, விடய விபரிப்பு ஆகியன பற்றிய ஒரு விமர்சன பூர்வமான அறிவுக்கு சங்க இலக்கியங்கள் பற்றிய அறிவு மிக மிக முக்கியமானதாகும். சங்க இலக்கியங்களிலிருந்து தொல் 'காப்பியத்திற்கு வரும் பொழுது, தொல்காப்பியம் பொருளா திகாரம், மிக முக்கியமான உண்மைகள் பலவற்றினை வெளிக் கொணர்வதைக் காணலாம்.
II
சங்க இலக்கியத் தொகுதியினதும் தொல்காப்பியப் பொருளாதிகாரத்தினதும் முக்கியத்துவத்தைப் பார்த்த நாம், அடுத்து சங்க இலக்கியம் பற்றிய ஆய்வுகளின் வளர்ச்சி நிலைகளை அறிந்து கொள்வது அவசியமாகிறது. அவ்வாறு நோக்கும் பொழுது சங்கப் பாடல்கள் அச்சேற்றப்பட்டமை மிக முக்கியமான ஒன்றாகும்.
சங்க இலக்கியங்கள் அச்சேற்றப்படுவதற்கு முன்னர் சங்க இலக்கியங்கள் பற்றி எத்தகைய ஒரு பிரக்ஞை நிலவிற்று என்பதும் முக்கியமான ஒன்றாகும். இளம்பூரணர் முதல் பேராசிரியர், நச்சினார்க்கினியர், பரிமேலழகர் வரை வரும் உரைமரபு, குறைந்த பட்சம் கி.பி.10 ஆம் நூற்றாண்டு முதல் 14, 15 ஆம் நூற்றாண்டுகள் வரை தொல்காப்பிய, சங்க இலக்கிய பயில்வு தமிழ்நாட்டில் முக்கிய இடம் பெற்றிருந்தது என்பதைக் காட்டுகின்றது. இந்தப் பயில்வு எவ்வாறு ஒழுங்கமைக்கப் பட்டிருந்தது என்பது பற்றிய தெளிவு இல்லை. எத்தகைய சமூக மட்டத்தில், எத்தகைய புலமை மட்டத்தில் இவை முக்கியமாகின என்பது முக்கியமான வினாவாகும். உரைகளை வைத்துக் கொண்டு நோக்கும் பொழுது சமணப் பாரம்பரியம் முதல்,
8

சைவப் பாரம்பரியம் வரை, இவை போற்றப்பட்டன என்பது
தெரியவருகிறது.
இம்மரபு பின்னர் ஏன்? எவ்வாறு? சிதைவுற்றது என்பது பற்றிய தெளிவும் இல்லை. தொல்காப்பிய உரைமரபுக்கு பெரும் சிதைவு ஏற்படவில்லை என்பதற்கு சிவஞான முனிவரது தொல்காப்பியப் பாயிர விருத்திரை முக்கியமான சான்றாகிறது. ஆயினும், உ. வே. சா. அவர்களின் என் சரிதத்தைத் தளமாகக் கொண்டு திருப்பிப் பார்க்கின்ற பொழுது ஏறத்தாழ 17ஆம் 18ஆம் நூற்றாண்டுகளிலிருந்து மரபுவழித் தமிழ்க் கல்வியில் சங்க இலக்கிய தாடனத்திலும் பார்க்க இலக்கண, சைவ இலக்கியதாடனமே முதன்மைப் படுவதைக் காணலாம்.
7-9ஆம் நூற்றாண்டுகளில் சங்க இலக்கிய மரபை பக்தி இயக்கம் உள்வாங்கிய முறைமை உற்று நோக்கப்பட வேண்டியதாகும். இறையனார் களவியலுரையில் எடுத்துக் கூறப்படும் முச் சங்கம் பற்றிய எடுத்துரைப்பு, உண்மையில் சங்க மரபை சைவத்துள் கொண்டு வருவதற்கான முயற்சியே ஆகும். இது பற்றி ‘தமிழில் இலக்கிய வரலாறு’ என்ற எனது நூலில் சற்று விரிவாகவே ஆராய்ந்துள்ளேன்.
பல்லவர் காலம் முதல் அரசர்கள் பற்றிய புகழ்ச்சியினுள் (புறத்தினுள்) அகத்திணை நிறையக் கொண்டுவரப்படுகின்றது. எனினும், அகத்திணை மரபை ஒரு முக்கிய இலக்கிய மரபாகக் கொண்டு அதனைக் கோவைப்படுத்தும் போக்கினை அவதானிக்கத் தவறக்கூடாது. ‘பாண்டிக் கோவை’ இத் துறையில் மிக முக்கியமானது. மாணிக்கவாசகர், பக்தி என்னும் விடயப் பொருளை பாரம்பரிய இலக்கிய மரபுக்குள்ளே கொண்டு வருவதற்கு அகத்துறையின் கோவைப்படுத்தலையே பிரதானமாகக் கொள்கின்றார்.
இவ்வாறு நோக்கும் பொழுது, சங்க இலக்கிய மரபு தவிர்க்க முடியாத வகையில் பிற்காலத் தமிழிலக்கிய படைப்பு மரபில் முக்கியம் பெற்றதெனினும் அச்சுமுறைமை வழிவந்த தமிழின் ‘நவீனமயப்பாடு’ தொடங்கும் பொழுது சென்னை மாநிலத்தின் ஒரு பகுதியினராக இருந்த தமிழருக்கு சங்க இலக்கிய மீட்பு என்பது அவர்களது தனித்துவ வெளிப்பாட்டிற்கு வேண்டிய ஒரு தளமாகின்றது.

Page 7
19 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் பிரித்தானிய ஆட்சியின் கீழ், தமிழகம் சென்னை என்ற மாநில அலகுக்குள் கொண்டுவரப்பட்டு, அந்த அலகு அனைத்திந்திய ஒருமைக் குள்ளும் பொதுமைக்குள்ளும் கொண்டுவரப்படுகின்றது.
அவ்வாறு தமிழ், ஆட்சி அலகு நிலைப்பட அனைத் திந்தியாவிற்குள் கொண்டு வரப்படுகின்ற பொழுது தென் தமிழகத்தினைத் தளமாகக் கொண்ட புரட்டஸ்தாந்த மத இயக்கங்கள் ஒட்டுமொத்தமான பிராமணிய இந்து மத அடையாளத்தினுள் தமிழகத்தின் பல்வேறு குழுமங்கள் கொண்டு வரப்படுவதைப் புலமை நிலையில் எதிர்க்கின்றன. போப், கார்டுவெல் போன்றோர் மொழியை மையமாகக் கொண்டு இலக்கிய, மொழி நிலை ஆய்வுகளை மேற் கொண்டனர். பேராசிரியர் சுந்தரம்பிள்ளையின் காலத்திலேயே தமிழின் முதன்மைக்கான புலமைத் தேடல் தொடங்குவதை sg/6)15/TGofilj45G)"TLb. (g5ól'ILITá5 g/6)JUg5) "Some mile stones in the History of Tamil literature' 6T657p DITGi) g5L6 fair gaud,5ugi தொன்மையை நிறுவ முனைகின்றது. அக்காலத்தில் கி.பி. 8, 9 ஆம் நூற்றாண்டுகளுக்கு முன்னர் தமிழிலக்கியங்கள் இருக்கவில்லை என்ற ஒரு கருத்து ஒரு சாராரிடையே நிலவிற்று. இத்தகைய பின்புலத்திலேயே சங்க இலக்கியங்கள் அச்சு வாகனம் ஏறுகின்றன.
சிலப்பதிகாரம் பற்றிய தகவல்களே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. கனகசபைப்பிள்ளையின் 'ஆயிரத்து எண்ணுாறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்’ என்ற ஆங்கிலக் கட்டுரை முதன் முதலில் The Madras review என்ற சஞ்சிகை யிலேயே வெளியானது. இந்தப் பின் புலத்திலேயே சங்க இலக்கிய நூல்கள் அச்சிற் பதிப்பிக்கப்பட்ட வரலாற்றை விளங்கிக் கொள்ள வேண்டும். தொல்காப்பியம், சங்க நூல்களின் அச்சுப் பதிப்பு வரலாறு பின்வருமாறு:

Į uosofşirm
“Fırı soğra
flø09? L (1 : L (1 - IÚŤ IIĜĒ11@jos@” (OZ6||
• Los orto (99 °uo qirmųjų51] [1rīg) Hırısēra u soorlog) != - qo-Turīųjra '9161qi rn Joo (g f \; L 199 (5 £ ©j Fısı soğTI Į Lloffirmể lỵ71] soq. 11 U sẹ số 1,9 %) U TT (9) orglúigonų919”-ba - f'(goločtoáIÚŤ@ $161 || q | rn UT IT u oso qo u sẽ (c) S88|| HIT@rī Ļmỡ lợTU? Ivoormu úLGİHTTổrı 1,9(9911957 ĻIsĒĢ1991ņols i - 199909 sjąjoj plőI | qī (1%) u Jug) uos orto (99 (5 Fısı oặrı|(109f@rmiņ91194?
· Ufo ortog) ~a - Iĵoặrısıfűīąjįoğrī #0.61Į U 199 m aj 69 (§ €881 FITIŴrī· 1909 1,957
· Ufo ortog) ~ā - sĩ IsĩIÚŤs@rț¢ £06Iqī£1$ Ugig) Los ortogo to (ĝra) qarn soorto 11199-og) ‘qi (1 Josố HTTOETT Ufo orlog) ~āaoqo U-f(c) qırmışısı uzoqo Uočio) '3981 o ú09-ā mớiggørı - IÚȚIIĜĒLĀİGİHT Þ691 HTTÚŘrıĮrmosoofņ199 Loga -|--* |-f{9 (99)đfi(TI(HỊ175TT) Lloff (fog) ~ā ‘ (109, sựrmų995 is fiso U U 199 so o @ : Fīņ(offra 1/f (fog) ~ā? !! U 1995?gì - (?)--Tluraṇī£$rı (6881!*? !! U 109 to 4qj 0981
·qīfn ú09@rmųoog? !! U 1995? - qi [11]o[$rīņaolo ‘ző81Fısı(GrıŠ
· Los orto (99 (5 - ±0.9 11@le)$19,9° (Z981qīdī) (11/os@@@đī) 19 -9#9|| qırmısır'ı Uso@-TurıışısĒĢrı - 4,091|$to)$@!! 19qırmışırı Loqo U@to)

Page 8
சங்க இலக்கியப் பதிப்பினை அடுத்து சங்க இலக்கிய கற்கை தொடர்பாக ஏற்பட்ட முக்கிய வளர்ச்சியை பின் வருமாறு தொகுத்துக் கூறலாம். அ)இலக்கியங்களின் கால அடைவு.
ஆ)தமிழக வரலாற்றுக்கு சங்க இலக்கியங்களைச் சான்றாகக்
கொண்டு, வரலாறு எழுதும் முறைமை.
இ) சங்க இலக்கியம் பற்றிய பாடநிலை, மொழியியல் ஆய்வு
ஈ) சங்க இலக்கியத்தின் இலக்கிய நிலை முக்கியத்துவம், சமூக
மானிடவியல் நிலைப்பட்ட முக்கியத்துவம்.
சங்கநூல்களின் பதிப்பின் பின்னர் ஏறத்தாழ 75 வருடங்கள் சென்றுவிட்ட இன்றைய நிலையிலே பின்னோக்கிப் பார்க்கும் பொழுது மேலே குறிப்பிட்ட ஆய்வுப்பரப்புக்கள் ஒவ்வொன் றிலும் ஏற்பட்ட முக்கிய பங்களிப்புக்களைத் தொகுத்து நோக்கலாம்.
羲
'கால அடைவு’ எனும் விடயம் பற்றி நோக்கும் பொழுது சங்க இலக்கியத்தின் காலம், சங்க இலக்கியங்கள் எனக் கொள்ளப்படுவனவற்றின் உள்ளே காணப்படுகின்ற கால அடைவு என இரு நிலைப்படுத்திப் பார்க்கலாம். இந்த ஆய்வுகளின் ஊடே மிக முக்கியமாகப் பேசப்பட்ட ஒரு விடயம் தொல்காப்பியத்தை சங்க இலக்கியங்களோடு இணைத்து நோக்கும் பொழுது அதனை எங்கே வைப்பது என்பதாகும்.
பொதுவான எடுகோள், தொல்காப்பியம் இவை யாவற்றிற்கும் - சங்க இலக்கியத்திற்கு முற்பட்டது என்பதாகும். பேராசிரியர் தெ. பொ. மீ. இக்கருத்தினைத் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளார். மற்றைய கருத்து அது சங்க இலக்கியத் திற்குப் பிற்பட்டது என்பதாகும். கால அடைவு பற்றிய விவாதங்களிலே, இன்று பின்னோக்கிப் பார்க்கையில் மிக முக்கியமான இடத்தை வகிப்பவர் S. வையாபுரிப்பிள்ளை ஆவார். அவர், பிரதானமாகச் சொற்பிரயோக அடிப்படை யிலும் வரலாற்றுப் பின்புல அடிப்படையிலும் தமது கருத்துக் களை உருவாக்கிக் கொண்டார்.இந்த விவாதங்களின் பொழுது எழும்பிய மிக முக்கியமான ஒரு வினா முதலிலே தொகுக்கப்
2

பட்டது நன்றிணையா? குறுந் தொகையா? என்பதாகும். சிலர் பெயர் அடிப்படையிலும், சிலர் பாடல்களின் பொருளமைதி அடிப்படையிலும் இவ்விடயத்தை விவாதித்தனர்.
சங்க இலக்கியத் தரவுகளை தென்னிந்திய வரலாறு எழுதுகைக்குத் தளமாகக் கொண்டவர்களுள் மிக முக்கிய மானவர்கள் PT. பூனரீநிவாச ஐயங்கார், M பூரீநிவாச ஐயங்கார், K. N. சிவராஜபிள்ளை, K.A. நீலகண்ட சாஸ்திரி ஆகியோர் golf. P.T. softbourT3 spuri/distrfait 'History of The Tamils from the Earliest times to 600.A.D (1929) 6T657p DIT gll b, K.N. 361JTg LSoir 306 TuSgát "Chronology of Early Tamils (1932) GT657p 15.7gy b மிக முக்கியமானவை ஆகும். இவை சங்க இலக்கியத் தரவு களைத் தளமாகக் கொண்டு எழுதப்பட்டவை. சிவராஜபிள்ளை பதிற்றுப் பத்தினை மையமாகக் கொண்டு சங்க காலத்திற்கான ஒரு உள்ளக கால அடைவினைத் தர முயன்றார்.
ஆயினும், இவ்விடயத்தில் நீலகண்ட சாஸ்திரியின் பங்கு மிக முக்கியமானதாகும். முதல், பாண்டியர் வரலாற்றையும் (1929) பின்னர், சோழர் வரலாற்றையும் (1935) எழுதிய இவரே தமிழக/தென்னிந்திய வரலாற்றை அனைத்திந்திய வரலாற்றுச் சட்டகத்தினுள்ளே கொண்டு வந்தவர். இவரது நூலான Studies in Chola History and Administration' (1932) gGal) @ICD5lb "Karikalain History and Legend' 67 g)|lb Jill' (660).J., Jilg, gold,5ugj60g, வரலாற்று நிலைநின்று ஆராய்வதற்கான நல்ல செயல் விளக்கமாகும். நீலகண்ட சாஸ்திரியார் தனது History of South India" 6T69|Lb 15T6ú76ü “Age of Sangam and After“ 6T6öTp g56ofi அத்தியாயத்தையே அமைத்துள்ளார்.
சங்க இலக்கிய வரலாறு அனைத்திந்திய வரலாற்றின் விடுபடமுடியாத ஒரு பகுதியாகிவிட்டது என்பதனை இது குறிக்கின்றது எனலாம்.
கால ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தவர்களுள் மயிலை, சீனி வெங்கடசாமி, மா. இராசமாணிக்கனார் ஆகியோரும் முக்கியமானவர்களாவர்.
சங்க இலக்கிய ஆய்வுகளிலே, அடுத்த முக்கிய வளர் நிலையாக அமைவது, சங்க இலக்கியங்களின் சொல்லடைவுத் தொகுப்பும் சங்ககால மொழிபற்றிய மொழியியல் ஆய்வுகளும்
3

Page 9
ஆகும். இலக்கியங்களின் சொல்லடைவுத் தயாரிப்பில், கேரளப் பல்கலைக்கழகம் முன்னின்றது எனலாம். பேராசிரியர் VI. 5 "LSDLDGOfuj56ór "The Index of Purananooru” GTGörugi g)ż துறையில் முன்மாதிரியான ஆய்வு நூல் எனலாம். அண்ணா மலைப் பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டிருந்த மொழியியல் ஆய்வு நிறுவனம், தெ. பொ மீனாட்சி சுந்தரம் காலத்திலும் அகத்தியலிங்கம் காலத்திலும் மிக முக்கியமான ஆய்வுகளில் ஈடுபட்டிருந்தது எனலாம். சங்க இலக்கியத்தில் மொழி நிலையில், ஆய்வு செய்த பேராசிரியர் அகஸ்தியலிங்கம் ‘சங்கத் தமிழ்’ என்ற நூலை வெளியிட்டார். மொழியியல் பட்ட ஆய்வுகளிலே காமல் ஸ்வலபெல்லினுடைய (Kamal Zvelabil) ஆய்வுகள் முக்கியமானவை ஆகும். உதாரணத்திற்கு "From-Proto South Dravidian to Old Tamil and Malayalam-II 6T69)/lb Ji (560LT60)ud குறிப்பிட வேண்டும் (IATR 1968) இதுபற்றிச் சித்திக்கும் பொழுது OXFORD பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் T. Barow இன் வழிகாட்டலில் பேராசிரியர் பொ. பூலோகசிங்கம் செய்த கலித்தொகையின் மொழி’ எனும் ஆய்வும் குறிப்பிடப்பட வேண்டியதாகும். காமல் ஸ்வபில், சங்க கால மொழியினை "Early Old Tamil" எனக் குறிப்பிடுவார். இது பற்றிப் பேசுகின்ற பொழுது வையாபுரிப்பிள்ளை நூல்களின் காலங்களை இயல முடியாத அளவுக்குப் பின் தள்ளினார் என்ற ஒரு குற்றச் சாட்டு நிலவியது என்பதைக் குறிப்பிடுவது அவசியமாகும். உதாரண மாக, சிலப்பதிகாரத்திற்கு அவர் இறுதிக் காலங்களில் தந்த காலம் கி.பி. 8-9ஆம் நூற்றாண்டின் முற்பகுதியாகும். ஆயினும், இது விடயமாக பேராசிரியர் V. 1. சுப்பிரமணியத்தின் கூற்று ஒன்று மிக முக்கியமானதாகும். அதாவது வையாபுரிப்பிள்ளை சுட்டிய வருடக் கணக்கு ஒரு புறமிருக்க நூல்களின் கால அடைவை, அதாவது எதன் பின் எது வந்தது என்ற வரன் முறையைப் பொறுத்த வரையில் வையாபுரிப் பிள்ளை தந்த ஒழுங்கமைவு இன்று ஏற்றுக் கொள்ளப்படுவதாகும்.
அடிப்படையில் பதிப்பாசிரியராக (செவ்வைப்படுத்து நராக) விளங்கிய வையாபுரிப்பிள்ளை, சைவ சித்தாந்த மகா சமாஜத்தின் பதிப்பாக ‘சங்க இலக்கியம்’ என்ற தொகுதியினை வெளியிட்டிருந்தார். சங்க இலக்கியங்கள் முழுவதையும் ஒரு தொகுதியாகக் கொண்டுவந்த முக்கியத்துவம் இப்பதிப்பிற்கு உண்டு.

கால அடைவு, இலக்கியங்களின் கால ஒழுங்கமைவு என்பன ஒரு நிலையாக, இன்னொரு நிலையில், ஏறத்தாழ 1960களில் இருந்து சங்க இலக்கியம் பற்றிய பார்வைப் பரிமாணங்களை அகட்டிய ஆங்கில வெளியீடுகள் சில பற்றிக் குறிப்பிடுதல் அவசியம். இத்துறையில் காமல் ஸ்வலபெல், J.R. Marr, A.K. Ramanujam, Gorge Hart 6T657GLITsfasi gyuloyd, Gil b கைலாச பதியின் ஆய்வும் மிக முக்கியமானவை ஆகும். உண்மையில் J.R. மாரினுடைய கலாநிதிப் பட்ட ஆய்வு மிகப் பிந்தியே - அதுவும் இந்தியாவிலே அதுவும் சென்னையிலே பிரசுரிக்கப்பட்டது. எட்டுத் தொகைநூல்கள் பற்றிய விரிவான - அதே வேளையில் கட்டிறுக்கமான - ஆய்வை அந்நூலிலே de, IgG) ITLD.
தமிழ் இலக்கிய வரலாறு பற்றி காமல்ஸ்வலபெல் எழுதிய IBIT Giv 55 Gir Ló735 (pj6IsuuLDIT GOT GO)6) u. “The Smile of Muruga” (1973), தமிழ் இலக்கியம் பற்றிய வீஸ் பாடன் (Wies Bardon) வெளியீடு "A History of Tamil Literature' (1975), golfb60pg (og, TLs fig.) 1991g)siv GN6JGñoluțög5 “A Companion to Tamil Studies” GTGD)Jub JBIT GJub முக்கியமானதாகும். தனிநாயகம் அடிகளார் எழுதிய 'Landscape and Poetry வேறோருவகையில் தனித்துவமானதாகும்.
Gorge Hart gait 'Poems of Ancient Tamils' (1975) 67 g)/lb DIT gi) சங்க இலக்கியத்தை சமஸ்கிருத இலக்கியங்களோடு ஒப்பு நோக்கி இவ்விலக்கியத் தொகுதியின் அனைத்திந்திய முக்கியத்துவத்தை நிறுவிய நூல் எனலாம்.
(5pljGlgT605l'I LJITLGü56i glavoulibaop A.K.Ramanujan, The InteriorLand Scape எனும் ஆங்கில மொழிபெயர்ப்பாக வெளி யிட்டார். சங்கக் கவிதையின் கவித்துவத்தையும் அழகியலையும் மேனாட்டு இலக்கிய மாணவர்களுக்கு எடுத்துக் கூறியமை யிலே இம் மொழிபெயர்ப்பு நூலுக்கு ஒரு முக்கியத்துவம் a 650TG). 60556) Tag L 15ugit "Tamil Heroic Poetry (Oup - 1968) Frijgill பாடல்களை வீரயுகப் பாடல்கள் எனக் கொண்டு அந்நிலையில் வைத்து ஆராய்ந்தது. சங்கப் பாடல்கள் எல்லாமே வாய் மொழிப் பாடல்களாக அமைந்தனவா என்ற புலமை நிலைப் பிரச்சனையை கிளப்பிய இந்நூல், சங்க இலக்கியம் அடிப் படையில் பாடுநர் மரபுவழி வந்த தொகுதியே என்பதை நிலை நிறுத்திற்று. இவ்வாய்வு சங்கப் பாடல்களின் இலக்கியப்

Page 10
பரிமாணத்தினை உலகப் பொதுவான வீரயுகப் பாடல்களின் பின்புலத்தில் வைத்துப் பார்ப்பதற்கு உதவியது.
திணை மரபின் சமூக பொருளாதார முக்கியத்துவம் பற்றிய இக்கட்டுரையாசிரியரின் திணை மரபு பற்றிய பொருளியல் fb606) guig (The Early South Indian Society - The Tinai Concept - Social Scientist, Trivandrum Vol 3, No.5 1974) G565T Goffigu வரலாற்று ஆசிரியர்களின் கவனத்தை ஈர்த்த ஒன்று எனக் கருதலாம்.
சங்க கால இலக்கியங்கள் பற்றி மேலே கூறப்பட்டுள்ள தரவுகள் சங்க இலக்கியத் தொகுதி வரலாறு, சமூகம், பொருளா தாரம், அழகியல் ஆகிய நிலைகளில் வகித்த இடத்தினை எடுத்துக் கூறுகின்றன. இவற்றைவிட சங்க இலக்கியம் பற்றிய இரண்டு பயன்படுத்துவகை முயற்சிகள் பற்றி இங்கு குறிப்பிடுவது அவசியமாகிறது. (1) சங்கப் பாடல்கள் இரசனை முறைமையில் தமிழ்
வாசகர்களுக்கு அவர்களது இரசிப்புக்காக எடுத்துக்
கூறப்பட்டுள்ள முறைமையாகும்.
இத்துறையில் கி.வா. ஜெகந்நாதன் முதல் மு.வரதராசன் வரை பலர் எழுதியுள்ளனர். முதலில் ஒர் உரை விளக்கத்தினைத் தந்து, அதனைத் தொடர்ந்து இறுதியில் சங்கப் பாடலை முன் வைத்து, தொடர்ந்து இரசனைக் குறிப்புக்களைக் கூறி முடிப்பர்.
(2) சங்கப் பாடல் மரபு குறிப்பாக அக, புற மரபுகள் முக்கிய மான ஒர் அரசியல் உணர்ச்சி உந்துதலுக்காக பயன்படுத்தப் பட்டமையாகும்.
பிராமணியத்திற்கு எதிரான போராட் டத்தில் குறிப்பாக கலைஞர் கருணாநிதியின் இத்துறைச் செயற்பாடுகள் முக்கிய மானவையாகும். திராவிட முன்னேற்றக் கழகம் தனது எழுச்சிக் காலத்தின் பொழுது சங்க இலக்கியமானது புறக்கலப்பற்ற தமிழ்ப் பண்பாட்டுக் கருவூலமாக அமைகின்றதென எடுத்துக் கூறி வந்தது. இவ்வாறாக சங்க இலக்கியம் பல்வேறு பரிமாணங்களில் படித்துணரப்பட்டு வந்துள்ளது.

III
சங்க கால இலக்கியம் பற்றிய ஆய்வுகள் மேற் கூறிய வழிகளிலே விரிந்து செல்கின்றனவெனினும் ஏறத்தாழ கடந்த இரண்டு தசாப்த காலமாக அனைத்திந்திய வரலாற்றாய்வு நிலையிலோ அன்றேல் பிற நாட்டினரான இந்திய/தென்னிந்திய வரலாற்று ஆர்வலர்களிடையோ மிகப் பெரிய கவனத்தை ஈர்க்கவில்லை என்ற உண்மையினை பதிவு செய்து கொள்வது அவசியமாகிறது. ஏறத்தாழ கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக இந்திய வரலாற்றில் ஈடுபாடு கொண்டுள்ள அறிஞர்களிடையே தமிழ்நாட்டு வரலாற்றின் சோழர் கால ஆட்சிமுறையும் அதனை ஒட்டி வந்த விஜயநகர ஆட்சி முறையும் வரலாற்று ஆராய்ச்சியாளரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த ஆர்வ முகிழ்ப்பினை Burtoin Stein gg)160Lu Peasant State and Society in Medieval South India GTGip நூல் காட்டுகிறது. சோழ அரசின் ஆட்சிமுறையை 'கூறாக்க 9ļUF (upGOpGOLD’ (Segmentary State) 6 TGör gp gyGuri Gíîl urfjöĝSQL5fb55/Trï. ஜப்பானிய பேராசிரியரான நொபொறு கறCமா (Noboru Karashima) சோழப் பெருமன்னர் காலத்துக் கல்வெட்டு ஆராய்ச்சியினை மேற்கொண்டு, அக்கால ஆட்சி முறைமையை விபரித்தார். இவருடன் இணைந்து ஆய்வுப் பணிபுரிந்த வை. சுப்பராயுலுவின் ‘Chola State என்னும் கட்டுரை இத் துறையில் முக்கியமானதாகும். பல்லவர் ஆட்சிக் காலம் முதல் வளர்ந்து வந்து, சோழப் பெருமன்னர் காலத்தில் நிறைவு நிலை எய்திய பொருளாதார நிர்வாக அமைப்பினை மார்க்ஸினுடைய ஆசிய உற்பத்தி முறைமை விபரிப்புக்களுடன் இணைத்து விவாதிக்கும் ஒரு போக்கும் காணப்பட்டது. இவ் விடயத்தில் Kathlean Gaugh இன் கட்டுரை மிக முக்கியமானதாகும். (விபரங்களுக்கு ‘தமிழில் இலக்கிய வரலாறு’ புதுக்கிய பதிப்பினைப் பார்க்கவும் - சென்னை 2006) இவ் ஆய்வுகள் விஜயநகர ஆட்சி முறையையும் அதன் பொருளாதார அமைப்பையும் மீள நோக்குவதற்கு இடமளித்தன.
இடைக்கால தமிழகம் பற்றிக் காட்டப்பெற்ற ஆய்வு ஆர்வம் பல்லவர் காலத்திற்கு முற்பட்ட தமிழ்நாட்டு வரலாற்று ஆய்வு பற்றி காட்டப்படாதது ஒரு வகையில் பார்க்கப்படும் போது ஆச்சரியத்தைத் தருவதன்று. ஏனெனில்,

Page 11
சங்க கால தமிழகம் பற்றிய கருத்து நிலை திராவிட இயக்கத்தி னரால் பெரிதும் அரசியல் மயப்படுத்தப்பட்டிருந்தது.அத்துடன் 1980கள் முதல் தமிழ்நாட்டு பக்தி இலக்கியம் பற்றிய ஆய்வுக் கவனமும் இருந்தது என்பதனையும் இங்கு கூற வேண்டும். 9|Gigi Lulb Libp3 Norman Cutler, John Kamal, 6) isgist (bsTTITL1303767, இந்திரா பீற்றசன் போன்றோர் முக்கிய பங்களிப்புக்களைச் *செய்துள்ளனர்.
IV
2003இல் வெளியான, ஐராவதம் மகாதேவனின் Early Tamil Epigraphy’ என்னும் நூல், அவர் ஏறத்தாழ 1960கள் முதல் ஆய்ந்துவந்த தமிழகத்து தமிழ் பிராமிக் கல்வெட்டுக்கள் பற்றிய ஆய்வு முழுமையை வெளிக் கொணர்ந்தது. இந்நூலில் அவர் 89பிராமிக் கல்வெட்டுக்களையும் 21 முந்து வட்டெ ழுத்துக் கல்வெட்டுக்களையும் ஆய்ந்து தமது முடிவுகளை வெளிக் கொணர்ந்தார்.
திரு. ஐராவதம் மகாதேவனின் ஆய்வு முடிவுகள் சங்க இலக்கியம், சங்க காலம் பற்றிய பல விடயங்களை முன்னிலைப் படுத்துகின்றன. அவற்றை இக்கட்டுரையின் நீட்சி, தேவை களைக் கருதி பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்.
அ)இக்கல்வெட்டுக்கள் தென் கன்னடப் பிரதேசத்தில் தொடங்கி சேலம், கோயம்புத்தூரை உள்ளடக்கி தமிழ் நாட்டின் மத்திய பகுதி முதல் கீழே பாண்டிய பிரதேசம் வரை செல்கிறது. தமிழ் நாட்டின் கிழக்குக் கரையோரப் பகுதியில் இக்கல்வெட்டுக்கள் இல்லை என்று சொல்லாம்.
ஆ)இக்கல்வெட்டுக்கள் சமண முனிவர்களுக்கான பாறைக் கொடைக் கல்வெட்டுக்களாகவே பெரும்பாலும் இருப்பதால் அக்காலத் தமிழகத்தின் அரசுருவாக்க நிலை பற்றியோ தமிழ்நாட்டில் காணப்பட்ட வைதீக மரபுச் செல்வாக்குகள் பற்றியோ எதையும் நேரடியாகப் பேசவில்லை. சில இடங்களில் சிலவற்றை உய்த்துணர முடிகின்றதே தவிர இக்கல்வெட்டுக்கள் திறந்த வரலாறு (Open History) 396ö760pg g5TGigi 656).

இ) புகழுர்க் கல்வெட்டின் வாசிப்பு மூலம் பதிற்றுப் பத்திலே கூறப்படும் சேர அரச பரம்பரையின் வம்சாவழி தெரியப்படும் முறையில் சங்ககாலம் கி. மு. 3 ஆம் நூற்றாண்டி லிருந்து ஆரம்பிக்கலாம் என்று கொள்ள வேண்டி யுள்ளது. கல்வெட்டுக்களின் அடிப்படையில் இவர் தரும் கால வகுப்பு பின்வருமாறு அமைகிறது.
(1) முந்து பிராமிக் கல்வெட்டுக்கள்: கி.மு. 2- கி.பி.1 (i) பிந்திய பிராமிக் கல்வெட்டுக்கள்: கி. பி. 2- கி. பி. 4 (i) முந்து வட்டெழுத்துக் கல்வெட்டுக்கள் கி.பி. 5, 6
சங்க இலக்கிய காலத்தின் இறுதிக்கூறு சிறுபாணாற்றுப் படையுடன் வருகின்றது என்ற கூற்றை ஏற்றுக் கொண்டால், அது ஏறத்தாழ கி. பி. 250க்கு உரியதென நீலகண்ட சாஸ்திரி கூறுகின்றார். அவ்வாறாயின் சங்க காலத்தை இப்பொழுது நாம் ஏற்கனவே, வையாபுரிப்பிள்ளை, நீலகண்ட சாஸ்திரி ஆகியோர் கொண்டது போன்று ஏறத்தாழ கி.பி 100 முதல் கி.பி 250க்குள்ளே வரையறுத்துக் கொள்ளாது கி.மு 200 முதல் கி. பி 250 வரையுள்ள காலப் பகுதியை சங்க காலம் எனக் கொள்ள வேண்டும். அவ்வாறு கொள்ளும் போது இன்று சங்க இலக்கியங்கள் என்று கொள்ளப்படும் கலி, பரிபாட்டு, முருகு ஆகியவற்றை விடுத்து மற்றயவை ஏறத்தாழ 450 வருடகால நீட்சிக்குரியவை ஆகும். இவ்விலக்கியங்களை எவ்வாறு அம்முறையில் நோக்குவது என்பது இங்கு நன்கு ஆராயப்படவில்லை என்றே கூறவேண்டும்.
ஈ) ஐராவதம் மகாதேவனின் கருத்துப்படி இரண்டாவது காலப்பகுதியிலேயே தமிழ் நாட்டில் எழுத்து வழக்கு பரவி இருந்தது என்று கூறுவர். இத்தரவு மிக முக்கியமானதாகும். ஏனெனில் சங்க இலக்கியம் கி. பி. 2, பிந்திய பிராமிக் கல்வெட்டுக்களிலேயே தொடங்கியிருக்க வேண்டு என்று கருதலாம்.
இக்கருத்து சங்க இலக்கியம் எப்பொழுது எழுத்து வடிவத்துக்குக் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்ற வினாவை எழுப்புகிறது. குறுந்தொகையை தொகுப்பித் தோனாகிய யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை கி.பி.2ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிக்கு உரியவனென நீலகண்ட
9

Page 12
சாஸ்திரியார் கூறுகிறார். தொகுத்தல் எனும் நிகழ்ச்சி ஏற்கனவே நிலவிய பாடல்களை ஒர் ஆவணமாகத் தொகுத்தல் என்பதையே கூறும். அவ்வாறாயின் தொகுத்தல் என்னும் பொழுது அது எழுத்துருவில் கொண்டு வரப்பட்டது எனலாம். இவற்றால் ஐராவதம் மகாதேவனின் ஆராய்ச்சி, சங்க இலக்கியங்கள் எப்பொழுது எந்நிலையில் எழுத்துருவுக்குக் கொண்டு வரப்பட்டன என்ற வினாவை முக்கியத்துவப் படுத்துகின்றது.
இவ்விடயம் பற்றியும் இது தொடர்பான சங்க இலக்கியத்
தொகுப்பிற்கான அரசியல் நிலைத் தேவைகள் பற்றியும்
பிறிதோர் இடத்திற் கூறியுள்ளதை இங்கு மீட்டுத் தருவது அவசியமென்று கருதுகின்றேன்.
சங்க இலக்கியங்கள் எவ்வாறு எழுத்து வழக்கிற்குக் கொண்டு வரப்படுகின்றன என்பது முக்கியமானவொரு விடயமாகின்றது.
பாணர்கள் பாடிய பாடல் மரபு முற்றிலும் வாய்மொழி சார்ந்தது என்பது பற்றிய ஐயுறவு இல்லை. பாணர்களிலிருந்து வேறுபட்ட புலவர்கள் மரபு அக, புற மரபுகளினைக் கையேற்கும் பொழுது அவையும் பாடல்களாகவே இருந்தன என்பதிலும் ஐயம் கிடையாது. பாடுகின்ற புலவர்களிடத்தே சமாந்தரமாக எழுத்துப் பண்பும் இருந்ததா என்பது முக்கியமான வொரு வினாவாகும். இதற்கான சான்றுகள் எதுவும் தெரியவில்லை. ஆயினும், இது பற்றிய ஒர் ஊகத்தினை மனங்கொள்வதற்கு தொகுத்தேன் - தொகுப்பித்தோன் பற்றிய மரபுவழித் தரவுகள் முக்கியமாகின்றன.
தொகுப்பித்தோர் அரசர், தொகுத்தோர் புலவர்; அத்தரவு பின்வருமாறு:
நூல்கள் தொகுத்தோன் தொகுப்பித்தோன்
1) அகநானூறுமதுரை உப்பூரி பாண்டியன் உக்கிரப்
குடிக்கிழான் மகன் பெருவழுதி. உருத்திரசன்மன். 2) குறுந்தொகை புலத்துறை முற்றிய யானைக்கட்சேய் மாந்தரஞ்
கூடலூர் கிழார். சேரல் இரும்பொறை.
2D

3) கலித்தொகை நல்லந்துவனார் - - - -
4)ஐங்குறுநூறு பூரிக்கோ - - - - 5) நற்றிணை - - - - பன்னாடுதந்த மாறன் வழுதி
இப்பெயர்களுள் சங்க இலக்கியப் பாடல்களில் பாடப்பெற்ற அரசர் என ஐயந்திரிபறக் கூறக்கூடியவர் 'யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை' ஆவார். பாண்டியன் உக்கிரப் பெருவழுதி என்பதற்கான அடையில் வேறுபாடு உண்டு. மாறன் வழுதி என்ற பெயர் பற்றியும் அத்தகைய ஒரு சிக்கல் உண்டு. தொகுத்தோர் பெயர்களை நோக்கும் பொழுது, புலத்துறை முற்றிய கூடலூர்க் கிழார் என்றே சொல்லப்படுகிறது. ஆனால், ஒரு கூடலூர்க் கிழாரின் பாடல்கள் இவ்விலக்கியங்களில் (குறு.166,167,214-புறம்.229) காணப்படுகின்றன. பெயர் ஒப்புமை அடிப்படையில் யானைக் கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறையை முதன்மை யாகவும் கூடலூர்க் கிழாரின் பெயரை ஒரளவிற்கும் எடுத்துக் கொண்டால் சங்க இலக்கிய காலத்திலேயே இந்த எழுத்து முயற்சி நடைபெற்றிருக்க வேண்டும் போலத் தெரிகிறது.
மேலும், குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு ஆகியவற்றின் தொகுப்பு முறையினை நோக்கும் பொழுது, அடியளவு முக்கியம் பெறுவதைக் காண்கின்றோம். (குறுந்தொகை 4-8, நற்றிணை 9-12, அகநானூறு 13+). எனவே இங்கும் - குறிப்பாகத் தொகுக்கும் முயற்சியின் பொழுது - எழுதும் முறை ஒரு முக்கிய இடம் பெற்றிருக்கலாம்.
அவ்வாறு எழுதப்பட்டிருப்பின், இவை எம்முறையிற் பேணப்பட்டன எனும் வினா முக்கியமாகின்றது. இதற்கு வருவதற்கு முன்னர் இப்பாடல்கள் தொகுக்கப் பெறுவதற்கு முன்னர் வாய்மொழி நிலையிற் கையளிப்பு முறைமை எவ்வாறு இருந்தது? அது பாணர்கள் நிலையில் எவ்வாறு இருந்தது? புலவர்கள் நிலைக்கு வரும் பொழுது யாதேனும் மாற்றங்கள் ஏற்பட்டனவா? அவ்வாறாயின் அம்மாற்றங்கள் யாவை? என்பன முக்கியமாகின்றன. திருக்குறளை நோக்கும் பொழுது கி.பி.4 ஆம் நூற்றாண்டிலேயே அறநூல்களை எழுதுவதற்கான ஒரு மரபு இருந்ததென்பது புலனாகின்றது. சமண சங்கம் போன்ற ஒரு நிறுவனம் இலக்கண, (அற)
2

Page 13
இலக்கிய கையளிப்பிற்கு உதவியிருக்கலாம். ஆனால் புறநானூறு, அகநானூறு, நற்றிணை, பதிற்றுப்பத்து போன்றவை பெரும் பாலும் மதச்சார்பற்றனவாக ஆட்சி, அதிகாரம், வீரம் சம்பந்தப் பட்டனவாகக் காணப்படுகின்றன. அப்படியாயின் இத்தொகுப் பிற்கான தேவையையும், முறைவழியையும் மதச்சார்புக்கு அப்பாலேயே பார்த்தல் வேண்டும். இவ்வாறு சிந்திக்கும் பொழுதுதான் படிப்படியாக வளர்ந்துவரும் அரசுருவாக்கம் முக்கியமாகின்றது. மகாதேவனும் அரசுருவாக்கத்தை எழுத்து முறை மேலோங்கியமைக்கான ஒரு காரணியாகக் கொள்கிறார். ஆனால், அரசுருவாக்கத்தைப் பொறுத்த வரையில் முந்தைய எமது வரலாற்றாசிரியர்கள் சிலர் சித்திரித்தது போலன்றி அரசுருவாக்கங்கள் அதிகார முழுமையுடையனவாய் இருந்த தாகக் கொள்வதில் சிரமமுண்டு. (பார்க்க ‘பண்டைய தமிழ் நாட்டில் அரச அதிகார ஒழுங்கமைப்பு’ என்ற கட்டுரை, LugisTGOL gj gjLi5lypi feup.5lb /Studies in Ancient Tamil Society).
இத்தகைய ஒரு பதிகைக்குத் தேவையான வரலாற்று உந்துதல் யாது என்பதினை நோக்குதல் வேண்டும். பெரும்பாலும் இவ்விடயம் ஊகநிலைப்பட்டதாகவே இருந்தாலும் சங்க இலக்கியச் சூழல் குறிப்பாக பிராமிக் கல்வெட்டுக்கள் வழியாகத் தெரியவரும் அரசியற் சமூக மாறுநிலைகள் இதற்கான தேவையை உருவாக்கியிருக்கலாமோ என்ற ஐயத்தை எழுப்புகின்றன.
இரண்டாவது கட்டத்தில் எழுத்துப்பயில்வு சுலபமான தாக ஆவதுடன் தொல்காப்பியம் எழுத்ததிகாரத்தில் கூறப்படும் எழுத்து மரபு பிந்தியதிலேயே காணப்பட வேண்டுமென (ப231) Gayl blu356),Jh f3(Frontline, July 4th 2003, Vol 20 No 13) J, D15651 psTit.
இதுவரை கூறப்பட்டவற்றிற்கு மேலாக இன்னொரு தரவினையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அது கலித் தொகை பற்றியதாகும். கலித்தொகை நியமமான சங்கப்பாடல் மரபுக்குப் பிந்தியது என்பது ஏற்றுக் கொள்ளப்படும் நிலையில் அந்நூலின் பெயர் முக்கியமாகிறது. கலித்தொகை என்ற பெயரே தொகை மரபு நிலவிய காலத்திலேயே ஏற்பட்டிருத்தல் வேண்டும் என்ற முக்கிய உண்மை புலனாகிறது. தொகை மரபானது கி.பி.2ஆம் நூற்றாண்டிலே தொடங்கி கி.பி 4வரை, அதாவது சிலப்பதிகாரத்திற்கு முந்திய காலம் வரை நிலவிற்று
2

என்பது தெரியவருகிறது. ஐராவதம் மகாதேவனின் நூல் சங்க இலக்கியங்கள் பற்றிய பல வினாக்களை மீளக்கிளப்புகின்றது.
ஆனால், அதே வேளையில் தொல்லியல் நிலை நின்று இக்காலத்தைப் பார்போர் - குறிப்பாக கொடுமணல் போன்ற இடங்களிலே அகழ்வாராய்ச்சிகளைச் செய்தோர் - ஐராவதம் மகாதேவன் அவர்களது கூற்றுக்கள் பலவற்றை ஏற்பதில்லை. பிராமி எழுத்து வடிவத்திற்கு முந்திய குறியீடுகளின் முக்கியத் துவம் தொடர்பாக அவர்கள் இவர் கருத்தை ஏற்பதில்லை. மேலும் பிராமிக் கல்வெட்டுக்களின் கால அடைவு பற்றி மகாதேவன் தரும் முன் எல்லையை (கி.மு. 200) தொல்லிய லாளர்கள் ஏற்கத் தயங்குகிறார்கள். ஆனால், இவ்விடயம் பற்றி கா. ராஜன் 'தொல்லியல் நோக்கில் சங்க காலம்’ என்ற தனது நூலில் விரிவாகவும் ஆணித்தரமாகவும் தனது கருத்தை எடுத்துக் கூறுகின்றார். ஆயினும், இக்கட்டுரையினைப் பொறுத்தவரையில் சங்க இலக்கியமே அதிகாரப்பட்டிருப் பதால் அக்காலத்துப் பின்புலத்தையும் அதன் எழுத்து முறை மையையும் தெளிவுடன் விளங்கிக் கொள்ளும் நோக்கத்து டனேயே ஐராவதம் மகாதேவனின் கருத்துக்கள் இங்கு கூறப் படுகின்றன. சங்ககால தொடக்கத்தை கி.மு.3ஆம் நூற் றாண்டுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பது பற்றியும் தமிழ் நாட்டில் எழுத்து வழக்கு கி.பி.700க்கு பின்னரே செழுமைப்படுகின்றது எனவும் அவர் கூறுவது முக்கிய மாகிறது. ஏனெனில் ஏறத்தாழ கிபி 200- கி.பி 400 ஆண்டுக் காலமே தொல்காப்பியம், திருக்குறள், கலித்தொகை,பரிபாடல் ஆகிய நூல்கள் தோன்றிய காலமாக இருத்தல் வேண்டும் என்பது தெளிவாகிறது.அதாவது சங்க இலக்கியங்கள் எழுத்தில் பொறிக்கப்பட்ட காலம் கி.பி. 200 கி.பி.400 ஆண்டுக் காலமாக இருத்தல் வேண்டும். நியமமான தொல்லியல் கண்டுபிடிப்புக்கள் பற்றி பேசுவதற்கு முன்னர் சங்க இலக்கியம் தொகுக்கப் பட்டதற்கான - உண்மையில் தொகுப்பிக்கப்பட்டதற்கான - அரசியல் உந்துதல் பற்றி இங்கு சிந்தித்தல் அவசியமாகும்.
ஒரு புறத்தில் சமணப் பாறைக் கொடைக் கல்வெட்டுக் களிலே அரசுருவாக்கம் பற்றிய செய்திகளே இல்லாமல் இருப்பதும் (கி.மு 200 கி.பி200 வரை அதாவது முந்திய பிந்திய பிராமிக் கல்வெட்டுக் காலம் வரை) மறுப்புறத்தில் தொல் காப்பியம், திருக்குறள் போன்ற நூல்கள் (பிரதானமாக
23

Page 14
சமணநிலைப் பட்டவை) எழுதப்படுவதும் அக்காலத்தில் நிலவிய ஆட்சி அதிகாரத்தினருக்குத் தமது பாரம்பரியங் களைப் பேண வேண்டிய தேவையை ஏற்படுத்தியிருக்கலாம் என்று ஊகிப்பது தவறாகாது. அதுமாத்திரமல்லாமல் அந்த அாச அதிகார உருவாக்கத்தில் வைதீக மதத்திற்கு - குறிப்பாக பிராமணர்களுக்கு உள்ள இடமும் இயன்ற இடங்களில் அழுத்தியே கூறப்படுகின்றது. எட்டுத்தொகை நூல்கள் பலவற்றிற்கு கடவுள் வாழ்த்து சைவநிலைப்பட்டவையாக இருப்பதையும் நோக்கவும் (பாரதம் பாடிய பெருந்தேவர்). தொகுப்புக்கும் எழுத்துப் பதிகைக்கு முள்ள உறவு பற்றி அடுத்த பகுதியிலே மேலும் நோக்குவோம்.
இப்பொழுது சங்கஇலக்கியத்திலே பேசப்படுவனவும் அக்காலப் பண்பாட்டில் முக்கிய இடம் பெற்றுள்ளவுமான சிலவற்றை தொல்லியல் துறை நமக்கு எவ்வாறு காட்டுகின்றது. என்பதனை நோக்குவோம். சங்க கால, சங்க இலக்கிய ஆய்விலே தொல்லியல் வகிக்கும் முக்கியத்துவத்தினை இராஜனின் அண்மைய நூல்ான 'தொல்லியல் நோக்கில் சங்க காலம்’ ( சென்னை-2004) என்பதில் காணலாம். முனைவர் ராஜன் இத்துறையில் இப்பொழுது முன்னின்று தொழிற் படுகின்றார். இத்துறை கடந்த பல வருடங்களாக சங்ககால வரலாற்றாய்விற்கு பெரிதும் உதவியுள்ளது. முனைவர் K.V. இராமன், R. நாகசாமி, காசிராஜன் போன்றோர் இத்துறையில் மறக்கப்படக்கூடாத பெயர்களாகும். இப்பொழுது வை. சுப்பராயுலு அவர்களும் தொல்லியல் துறையுடன் இணைந்து பணியாற்றுகின்றார்.
முன்னவர் இராஜன் மேற்கூறிய தமது நூலிலே அழுத்திக் கூறும் ஒரு விடயம் மிக முக்கியமானதாகும். இலக்கியம், மானிடவியல் போன்ற துறைகள் வழியாக சங்க ஆய்விற்கு வந்தவர்கள் சங்க இலக்கியங்கள் மூலம் உய்ந்துணரக் கூடிய விடயங்களையே முதனிலைப்படுத்துவர். ஆனால் சேர் மோட்டிமர் வீலர் (Sir Mortimer Veelar) கூறுவது போன்று விடாது தொடர்ந்து கிண்டிக் கொண்டிருப்போர் (still digging) பிண்டப் பிரமாணமான தரவுகளை முன்னிறுத்துகின்றனர். சங்க கால வணிகம் பற்றிய பல தொல்லியல் தரவுகள் சங்க இலக்கிய குறிப்புகளுடன் இணைந்து செல்லும் முறையினை நாகசாமி போன்றோரும் மிகச் சிறப்பாகக் காட்டியுள்ளனர்.
24

அண்மைக் கால தொல்லியல் ஆராய்ச்சிகள் மூலம் சங்க பண்பாட்டிற்கு உரியதான 5 விடயங்கள் பெருவிளக்கம் பெறுகின்றன. 1. புதிய கற்காலத்து கால்நடைப் பராமரிப்பு
(Neolithic Cattle Keeping ) Giu(5ij5fb U60)L'i 1688TLJTG (Metalilthic burrials) g(Dilbl 565, Luugitl IITG (use of Iron) பிறதொழில்நுட்பங்கள் வணிக விபரங்கள்
:
சங்க இலக்கியத் தரவுகளுடன் தொல்லியல் அகழ்வுத் தரவுகளை இணைத்து தமிழகம் - தென்னிந்தியா பற்றி ஒர் அகண்ட வரலாற்றுப் பார்வை பார்க்கும் பொழுது ரேமண்ட் gygidiggit, Srijsi gygidiggit (Raymond Allchin, Bridge Allchin) ஆகியோர் 1950கள் முதல் அதிக ஆர்வம் காட்டி வந்துள்ளனர். GTLD6óT'gyaid $66, g5607 g/ Neolithic Cattle Keepers of South India' எனும் நூலில் தமிழகத்தின் புதிய கற்கால கால்நடைப் பண் பாட்டினை தொல்லியல் நிலையில் விபரித்துவிட்டு சங்கப் பாடல்களில் இருந்து அதற்கு வேண்டிய சான்றாதாரங்களைத் தந்துள்ளார். முல்லை நிலத்துத் தரவுகளை நன்கு பயன்படுத்தி யுள்ளனர். அவர் அந்நூலிலே குறிப்பிடும் ஒரு விடயம் மிக முக்கியமானது. இந்திய நிலப்பரப்பின் வளர்ச்சிச் சமவீனங்கள் காரணமாக தரவைப் பகுதிகள், கடற்கரையோரங்கள் போன்ற வளர்ச்சியடையா பிரதேசங்களின் வாழ்க்கை முறையில் பண்டைய வாழ்க்கை முறைகளின் தொடர்ச்சியை இன்றும் காணலாம் என்றும் கூறியுள்ளனர். நெய்தல் நில வாழ்க்கைக்கு இது பெரிதும் பொருந்துவதான ஒரு உண்மையாகும்.
ஆல்ச்சின் தம்பதியர் தாம் முதலில் எழுதியThe Birth of Indian Civilization என்ற நூலிலும் அதன் மீள்பதிப்பாக எழுதிய நூலிலும் பெரும் கற்படைச் சான்றுகள் கிடைக்கும் இடங்களை விபரித்த பின்னர் பெருங்கற்படைப் புதைகுழிகளிலே காணப் படும் இரும்புப் பயன்பாடு பற்றிப் பேசுப்படும் பொழுது இரும்பின் பயன்பாடு தமிழக வாழ்க்கை முறைமையில் பெருத்த மாற்றம் ஒன்றினை ஏற்படுத்தியிருக்க வேண்டும் என்றும் அந்த மாற்றத்திற்கும் சங்க கால வரலாற்று மலர்விற்கும் நிச்சயமான தொடர்பு இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

Page 15
மேலே குறிப்பிட்டுள்ளவாறு இத்துறையில் இரா. நாக சாமியின் பங்கு மிக முக்கியமானதாகும். தமிழக தொல்லியல் துறை பணிப்பாளராக கடமையாற்றிய காலத்தில் சங்ககாலம் பற்றி அவர் வெளிக்கொணர்ந்த தொல்லியல் கருத்துக்கள் பலவாகும். கரூரில் தாம் செய்த அகழாய்வு முடிவு மூலம் தமிழக வணிக வரலாற்று உண்மையைக் காட்டும் முறைமை பற்றி 1995 இல் வெளியிட்ட Roman Kaer’ எனும் நூலின் மூலம் எடுத்துப்பேசுகின்றார். இவர் தலைமையில் மேற் கொள்ளப்பட்ட ஆய்வுகள் பல அவ்வக் காலங்களில் செய்தித் தாள் கட்டுரைகளாக வெளிவந்தன. அவற்றுள் சிலவற்றை இராஜன் மேற்கோள் சான்றுகளாகக் கொண்டுள்ளார். அவை Ancient Tamil Epigraph found in South Arcot' The Hindu, Oct 9 1981 “Avvaikku Nellikani inda Atiyaman Kalveltu,” Dinamani, oct 12, 1981; "Asoka and the Tamil Country - a New Link', India Express, Dec, 1981.
இத்துறையில் அண்மைக் காலத்தில் மிக முக்கிய பங்களிப் பினைச் செய்துள்ளவர் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்து தொல்லியல் பேராசிரியரான கா. இராஜன் ஆவார். இவ்விடயம் சம்பந்தமாக அவரது இரண்டு பங்களிப்புகள் மிக முக்கியமானவை.
i) “Recent Advances in Early Historic Archaeology of Tamil Nadu". Kaveri Studies in Epigraphy. Archaeology and History. Professor Y. Subbarayalu Felicitation Volume Chennai - 2001
i) 'தொல்லியல் நோக்கில் சங்க காலம்' - உலகத் தமிழராய்ச்சி
நிறுவனம் Chennai-2001
தமிழ் வெளியீட்டின் அதிகாரங்களாக தொல்லியல் ஆய்வு வழியாகத் தெரிய வரும் பெருங்கற்படைப் பண்பாட்டின் முக்கியத்துவம் சங்க காலத்தில் விளங்கிய தொழில் நுட்பங் கள், எழுத்தறிவு போன்ற விடயங்களை விமர்சித்துள்ளார். பெருங்கற்படைப் பண்பாடு பற்றிப் பேசும் பொழுது சங்க காலத்தில் நிலவிய முதுமக்கள் தாழி முறைமை பெருங்கற் படைப் பண்பாட்டிலிருந்து வேறுபட்டது என்பதைக் காட்டு கின்றார். பெரும் கற்படை இறுதிச் சடங்கு, சமூகத்தின் உயர் மட்டத்தினருக்காக இருந்திருக்கலாம் என்பது ஒரு முக்கிய குறிப்புரையாகும். பிராமி எழுத்து முறைமையின் முன்னோடிக் குறியீடுகள் பற்றி இவர் கூறுவன முக்கியமானவையாகும்.
2S

தமிழ் நாட்டு பிராமிக் கல்வெட்டுகள் அசோகன் பிராமியில் இருந்து தோன்றியிருக்க முடியாது என்ற ஒரு வாதத்தினை முன் வைக்கின்றார். பிராமி குறியீடுகள் எழுத்துக்கள் பற்றி இவர் கூறுவதை நோக்கும்போது தமிழ் நாட்டில் நிலவிய ரோம வணிகத் தொடர்பு புதிய எழுத்துருவாக்கத்திற்கு உதவியிருக்கலாமோ என்ற மிக முக்கியமான கேள்வியை கிளப்புகின்றது. பிராமி எழுத்துருவ விடயத்தில் மகாதேவனின் கருத்துக்கள் பலவற்றை இவர் மறுதலிக்கிறார்.
தொல்லியல் ஆய்வுகள் மூலம் தெரியவரும் தொழில்நுட்ப விடயங்கள் பற்றியும் எடுத்துக் கூறுகின்றார். முத்துக் குளிப்பு, இரத்தினக் கல் வெட்டப்படுகை, துணிக் கைத்தொழில் பற்றிய முக்கிய விடயங்களைக் கூறுகிறார்.
தமிழக வணிகம் சம்பந்தமாக தொல்லியல் ஆய்வு வெளிக்
கொணரும் பிறநாட்டு வணிகத் தொடர்புக்கான சான்றுகள் மிக முக்கியமானவை ஆகும். அவற்றுள் தமிழ் நாட்டுமணிகளின் ஏற்றுமதி பற்றிய தகவல்களும் அலெக்ஸாண்டிரியா வணிகன் ஒருவனுடன் செய்யப்பட்ட ஒப்பந்தமும் மிக மிக முக்கிய மானவை ஆகும்.இவை பற்றி இராஜன் கூறுவதை நோக்குவோம்.
தமிழகத்திற்கும் மத்திய தரைக்கடல் பகுதிகளுக்கும் இடையேயான வணிகத் தொடர்பு அகஸ்டஸ் காலத்திற்கு முன்பிருந்தே தொடங்கி விட்டது என்பதை இலட்சத்தீவிலும் (Sastri 1992:79), கோவைக்கு அருகில் உள்ள கள்ளக்கிணறு (Roman 1992:21) என்ற இடத்திலும், திருப்பூரிலும் கிடைத்த ரோம குடியரசு நாணயங்கள் வெளிப்படுத்துகின்றன. தமிழகத்தில் மேலைக் கடற்கரையில் அமைந்துள்ள முசிறி, தொண்டி, நீர்க்குன்றம் (Nelcynda), வைக்கரை (Bakare) போன்ற துறை முகங்களின்வழி மத்தியதரைக்கடல் நாடுகளுக்கு முத்துக்களும், அரிய கல்மணிகளும், எஃகும், அகில், ஏலக்காய், மிளகு போன்ற வாசனைப் பொருட்களும், மலைவளப் பொருட் களான தேக்கு, சந்தனம், தந்தம் போன்றவையும் ஏற்றுமதி செய்யப்பட்டன. இவை பெரும்பாலும் சேர நாட்டிலிருந்தே ஏற்றுமதி செய்யப்பட்டன என்பதை முன்பே குறிப்பிட்டது போல் இந்தியாவில் கிடைக்கும் மொத்த ரோம நாணயங்களில் 90 விழுக்காட்டிற்கும் மேலான நாணயங்கள் இப்பகுதி யிலேயே கிடைக்கின்றன என்பதைக் கொண்டு உய்த்துணரலாம்.

Page 16
குறிப்பாகச் சேரரின் வணிக நகரமான கொடுமணலைச் சுற்றியுள்ள (காங்கயம்) பகுதிகளில் ஏராளமான மணிக்கற்கள் கிடைக்கின்றன.
கொடுமணலுக்கு 5 கல் தொலைவில் காங்கேயத்தில் இருந்து திருப்பூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள படியூரில் விளைந்த பச்சைக்கல் (Bery) ரோம நாட்டினரால் பெரிதும் விரும்பப்பட்டது என்பதை இக் கூற்றின் மூலம் உணரலாம்.
குவாசிர் - அல் - காதிம் என்ற இடத்தில் கிடைத்த பானை ஒன்றில் தமிழ்ப் பிராமி வரிவடிவத்தில் கணன் (கண்ணன்), சாதன் (சாத்தன்) என்ற இரு தமிழ்ப் பெயர்கள் பொறித்த பானை ஒடுகள் கிடைத்தன. பெர்னிகே துறைமுகத்தில் “கோற்பூமான்’ எனப் பெயர் பொறித்த பானை ஒடு கிடைத்துள்ளது. இப் பெயருக்கு அடுத்து ஒரு குறியீடு இருப்பது ஒரு சிறப்பு அம்சமாகும். இருப்பானை ஒடு கி.பி. 40ஆம் ஆண்டுக்குரியது என்று காலக்கணிப்புச் செய்யப் பட்டுள்ளதால் இது மேலும் முக்கியத்துவம் பெறுகிறது.
ஆஸ்டிரியா நாட்டுத் தலைநகரமான வியன்னாவில் அமைந்துள்ள அருங்காட்சியகத்தில் பேபிரஸ் (Pepyrus) தாளில் எழுதப்பட்ட அரிய கையெழுத்துச் சுவடி ஒன்று கண்டு Lņji35L'ulu "Lg5. (Harraurand Sijpesteiju 1985: 124 - 155; Sidebotham 1989 : 195 - 233; Casson 2001 : 228 - 243) இச்சுவடி பேரியாற்று முகத்துவாரத்தில் அமைந்துள்ள சேரநாட்டுத் துறைமுகமான முசிறியில் வாழ்ந்த தமிழ் வணிகன் ஒருவனுக்கும் எகிப்து நாட்டில் நைல் நதி ஆற்றின் முகத்துவாரத்தில் அமைந்துள்ள அலெக்ஸான்டிரியா எனப்படும் ரோம நாட்டுத்துறைமுகத்தில் வாழ்ந்த கிரேக்க வணிகன் ஒருவனுக்கும் கி.பி. 2ஆம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் (கி.பி. 150) ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட வணிக ஒப்பந்தத்தை விபரிக்கிறது.
இச்சுவடி கிரேக்க மொழியில் இருபுறமும் எழுதப் பட்டுள்ளது. இதில் தமிழகத்தைச் சார்ந்த வணிகன் கையெழுத் திட்டுள்ளதால் அவ்வணிகன் கிரேக்க மொழியை அறிந்திருக்க வேண்டும் என்பதை ஊகிக்க முடிகிறது. வணிகரின் பெயர் வரும் இடம் சிதைந்து போய்விட்டமை மிகவும் துரதிர்ஷ்ட வசமானது. பெயர்கள் கிடைத்திருந்தால் அக்கால வணிகச்
28

சமூகத்தை மீள் உருவாக்கம் செய்ய ஏதுவாக இருந்திருக்கும். இந்த அரிய ஆவணத்தை ஆராய்ந்த எச். ஹராவர் (H. Harvauer) 6F3G)L16ívG53élgöT (P. Sijpesteijn), g/Tf (G. Thur), G356mv6öt (L. Casson) போன்றோர் இவை இரண்டு ஆவணங்களாக இருந்திருக்க வேண்டும் எனவும் அதில் தற்பொழுது ஒர் ஆவணம் மட்டுமே கிடைத்துள்ளது எனவும் கருதுகின்றனர். முதல் ஆவணம் அநேகமாகத் தமிழ் வணிகனுக்கும், கப்பல் சொந்தக்காரனுக்கும் இடையே முசிறித் துறைமுகத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும் எனவும், இதில் கப்பல் சொந்தக்காரர் வணிகனுடன் ஏற்றுமதிப் பொருட்களைக் காப்பீட்டாக வைத்துச் செய்து கொண்ட கடன் ஒப்பந்தமாக இருக்க வேண்டும் எனவும் கேஸன் கருதுகிறார் (Casson 2001:228 - 243)
இப்பொழுது கிடைத்துள்ள இரண்டாவது ஆவணம் செங்கடலில் அமைந்துள்ள பெர்னிகே அல்லது மயோஸ் கார்மோஸ் (Myos Hormas) என்ற துறைமுகப் பகுதியில் ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும். இந்த ஆவணம் ஏற்றுமதிப் பொருட்கள் மத்தியதரைக்கடல் பகுதியில் நைல் நதி முகத்துவாரத்தில் அமைந்துள்ள அலெக்ஸாண்டிரியா நகரை அடைவது வரை ஏற்றுமதிப் பொருட்களுக்கு அளிக்கப்பட வேண்டிய பாதுகாப்புக் குறித்து முன்பக்கத்திலும், அப் பொருட்களின் அளவு குறித்துப் பின்பக்கத்திலும் எழுதப் பட்டுள்ளது. இந்த ஆவணம் ஏற்றுமதிப் பொருட்கள் செங் கடல் துறைமுகத்தில் வந்திறங்கியவுடன் ஏற்படுத்தப்பட்டி ருக்க வேண்டும் எனக் கேஸன் கருதுகிறார். காரணம் இவ்வொப்பந்தப் பொருட்கள் செங்கடல் துறை முகத்தி லிருந்து கழுதையின் மேல் ஏற்றப்பட்டுக் கிழக்குச் சஹாரா பாலைவனத்தின் வழியாக நைல் நதிக்கரையில் அமைந்துள்ள LuGöT60)L–u Gáb/TL IL–6iu (Ancient Copotos) g/6op(Lpá55605 sg|65)L– வதையும் பின்னர் அவை படகுகளில் ஏற்றப்பட்டு நைல் நதி வழியே அந்நதியின் முகத்துவாரத்தில் அமைந்துள்ள அலெக் ஸாண்டிரியா துறைமுகத்தை அடைவதையும் பின்னர் அங்குச் சுங்கவரி செலுத்தப்பட்டவுடன் இப்பொருட்களின் பாது காப்புக் குறித்த ஒப்பந்தம் முடிவுக்கு வருவதாகவும் இவ்வொப் பந்தம் தெரிவிக்கிறது. அலெக்ஸாண்டிரியாவில் இருந்து மத்தியதரைக்கடல் வழியாக ரோம நாட்டை இப்பொருட்கள் அடைவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகளுக்காக
29

Page 17
வேறொரு ஒப்பந்தம் ஏற்பட்டு இருக்க வேண்டும். பொருட்கள் முசிறியிலிருந்து செங்கடல் துறைமுகத்தை நாற்பது நாட் களுக்குள் அடைந்துவிடும். இதற்கு அரேபியக் கடலில் அடிக்கும் பருவக்காற்றே பெரிதும் உதவி புரிந்துள்ளது என்ப தைப் பல கடலியல் நிபுணர்கள் ஏற்கெனவே தெரிவித்துள்ளனர். ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் தொடங்கி வைகாசி மாதத்தில் முடிவுக்கு வரும் இவ்வணிகம் தமிழகத்திற்குப் பெரும் பொருளை ஈட்டித்தந்தது என்றால் மிகையாகாது.
இந்த ஆவணத்தின் பின்பக்கத்தில் ஏற்றுமதி செய்யப்பட்ட ஆறு பொதிகளைப் பற்றிக் குறிப்பு இருந்தாலும் மூன்று பொதிகளில் காணப்படும் பொருட்களின் தன்மை குறித்தே செய்திகள் கிடைக்கின்றன. மற்ற மூன்று பொதிகள் குறித்த தகவல்கள் சிதைந்து போயின. இப்பொருட்கள் ஹெர்ம போலன் (Hermapolon) என்று பெயரிடப்பட்ட கப்பலில் ஏற்றப்பட்டுள்ளன. இந்த ஆறு பொதிகளின் எடை 1154 தோலனும் (talents) 2852 திரமமும் (drachmas) ஆகும். இந்தப் பொருட்களின் மதிப்பானது அலெக்ஸாண்டிரியாவில் ஒரு நீர்வழிச் சாலையை (aqueduct) அமைப்பதற்கு ஈடானது என்ற குறிப்பு வருவதால் இதன் மதிப்பு ஏழு மில்லியன் திரமம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. காரணம், இத்தகையதொரு நீர்வழிச் சாலையை அமைக்க ஹைரோடஸ் அதிகஸ் (Herodes Atticus) 4 மில்லியன் திரமங்களும் ஹட்ரியன் (Hadrian) 3 மில்லியன் திரமங்களும் அளித்துள்ளமை மூலம் புலனாகிறது.
ஒரு திரமம் (drachmas) என்பது 65 குன்றிமணி (grains)களுக்கு ஈடானது. ஒரு குன்றிமணி என்பது 0.0648 கிராம் வெள்ளிக்கு ஈடானது.எனவே1திரமம் என்பது 4212 கிராம் ஆகும்.7 மில்லியன் திரமம் என்றால் 29484000 கிராம் வெள்ளியின் எடைக்கு ஈடானது (7,000,000x4212 =29484000). ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.10 எனக் கொண்டால் இவற்றின் மதிப்பு ரூ.294840.000 ஆக உருவெடுக்கிறது. அதாவது ஏறக்குறைய தற்போதைய நிலவரப்படி 30 கோடி ரூபாய்க்கு ஈடானது. இது ஹெர்ம போலன் என்ற சாதாரணக்கப்பலில் ஏற்றப்பட்டபொருட்களின் மதிப்பாகும். இதைவிடப் பெரிய ரோமானியக் கப்பல்கள் இங்கு வந்து போயுள்ளன. மேலும் மேற்கூறிய தொகையானது ஒரு கப்பலில் ஒரு வணிகனுக்குச் சொந்தமான பொருட்களுக் குரியதாகும். இதுபோல் பல வணிகர்களுக்குரிய பொருட்கள்
3)

ஒரு கப்பலில் ஏற்றப்படும். ஒரு கப்பலில் ஏற்றப்படும் அனைத்து வணிகர்களின் ஒட்டு மொத்தப் பொருட்களின் மதிப்பைக் கணக்கிட்டுப் பார்க்கும் பொழுது மலைப்பாக உள்ளது. இராஜன் தரும் இத்தகவல்கள் சங்க கால வரலாற்றின் பொருளாதார வரலாற்றுக்கு மிக முக்கியமானவை ஆகும். இக்கட்டத்தில் இந்நூலுக்கான முன்னுரையிலே அவர் குறிப்பிடும் விடயம் மிக மிக முக்கியமானது என்று கருதுகிறேன்.
தமிழ் நாட்டின் அரசுருவாக்கத்தை சங்க இலக்கிய நிலை நின்று பார்த்தவர்கள் அவ் அரச உருவாக்கம் மருத நிலத்தின் உபரி உற்பத்தி வழியாகத் தோன்றியிருக்கலாம் என்று கூறு வதை அவர் எடுத்துக் கூறி அகழாய்வுகள் மூலம் இத்தகைய முடிவுகள் தொல்லியல் சான்றுகளுடன் இணைந்து செல்ல வில்லை என்பதற்கு சேலம், கோயம்புத்தூர் பகுதியில் தோன்றிய ஆதிக்க உருவாக்க மையத்தை உதாரணமாகக் கூறலாம்.
ஆய்வாளர்கள செண்பகலெட்சுமி, ராஜன் குருக்கள், சிவத்தம்பி, சுதர்சன் செனாவிரத்னே அனைவரும் சங்க இலக்கியங்களில் காணப்படும் திணைக்கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு ஐந்திணைகளில் ஏற்படுகின்ற, ஏற்பட்ட பல்வேறு சமூகச் சூழல்களைச் சுட்டிக்காட்டி உழவுத் தொழிலைப் பெரிதும் நம்பி அதன் மூலம் ஏற்பட்ட உபரி உற்பத்திப் பெருக்கத்தை மனதில் கொண்டு இந்நிலைப் பாட்டை இவ்வாய்வாளர்கள் எடுத்திருக்க வேண்டும். வளமை யான பகுதிகளிலேயே அரசு உருவாகியிருக்க முடியும் என்ற கருதுகோளின் அடிப்படையில் எழுந்த ஒரு முடிவு இது எனலாம். ஆனால் அண்மைக் காலங்களில் வெளிக் கொணரப் பட்ட தொல்லியல் சான்றுகள், இம்முடிவுகளை முழுமையாக ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் அமைய வில்லை. எடுத்துக் காட்டாக முல்லையும் பாலையும் தங்கி நிற்கின்ற கொங்கு நாட்டுப் பகுதி சேர அரசு உருவாக்கத்திற்கு பெரும் பங்கு புரிந்துள்ளது. இம்முல்லை நிலத்தில் வாழ்ந்த மக்கள் இங்கு கிடைக்கின்ற இரும்புக் கனிமத்தையும் மணிக்கற்களையும் பயன்படுத்தித் தமது தொழில்நுட்பத் திறனால் மிகச்சிறந்த எஃகுக் கருவிகளையும் மணிகளையும் உருவாக்கி மேலை நாடுகளுக்கு - குறிப்பாக ரோம நாட்டிற்கு ஏற்றுமதி செய்துள்ளனர். வெளிநாட்டு வணிகத்தின் மூலம் பெற்ற வருவாய் இவர்களது வாழ்க்கை மேம்பாட்டுக்கும், சமூகக் கட்டமைப்
3.

Page 18
பிற்கும் அரசுருவாக்கத்திற்கும் அடி கோலியது. இந்தியாவில் கிடைத்த ரோம நாணயங்களைக் கணக்கில் எடுத்துக் கொண் டால் கொங்குப் பகுதியிலேயே அதிகமான நாணயங்கள் கிடைத்துள்ளன. அத்தகைய நாணயங்கள் வளமையான மருத நிலப் பகுதியில் கிடைக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே நீர் வளம் மிக்க வளமையான பகுதியில் மட்டுமே அரசு ருவாக்கம் முதன் முதலில் ஏற்பட்டிருக்க வேண்டும் என்ற கருத்தை மீண்டும் ஆய்வுப்படுத்த வேண்டியுள்ளது. இவ்விடயம் பற்றி ஏற்கனவே ஒரு கட்டுரை ஒன்றினை எழுதியுள்ளவன் என்ற வகையில் ஒரு பதிற்குறியினை தெரிவிப்பது அவசியமாகிறது.
தொல்லியல் ஆய்வு மூலமாக கொங்கு நாட்டுப் பகுதியில் சேர அரசுருவாக்கத்திற்கு உதவிய ஒர் உற்பத்தி மையம் பற்றி ராஜன் தரும் தரவுகள் மிக முக்கியமானவை. இவ்விடயம் பற்றி விவாதத்தை ஆழ அகலப் படுத்தியுள்ளமைக்கு அவருக்கு நன்றி கூற வேண்டும். தமிழ் நாட்டின் அரசுருவாக்கம் தொடர் பாக எழுதியுள்ளவர்கள் ஆற்றுப்படுக்கை தலைநகரங்களின் முக்கியத்துவத்தைக் குறிப்பிடும் அதே வேளை வணிகத் தலை நகரங்களின் முக்கியத்துவத்தைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளனர் (காமில் ஸலபில்). கொங்கு நாட்டுப் பிரதேசத்தையே அரச ஆதிக்கத்திற்கு சமனான அதிகாரம் கொண்டிருந்த வேளிர்கள் ஆண்டு வந்தனர் என்ற குறிப்பும் முன்னர் எடுத்துக் கூறப் பட்டுள்ளது. தமிழ் நாட்டின் அரசுருவாக்கத்தில் ‘மன்னர்’ களிலிருந்து ‘வேந்தர்’ களைப் பிரித்துப் பார்க்க வேண்டிய தேவையும் உள்ளது. சோழ பாண்டிய அரசுருவாக்கங்கள் முறையே காவேரி வைகையைத் தளமாகக் கொண்டு தோன்றி யுள்ளமை தெரிகிறது. சேர நாட்டைப் பொறுத்தவரையில் இரண்டு தலைநகரங்கள் இருந்தன. சேர அரச உருவாக்கத் திலேயே இராஜன் அவர்கள் கூறுகின்ற இடம் முக்கியமானது.
இராஜன் அவர்கள் கூறுகின்றபடி இவ்விடயங்கள் வாய் பாடுகளுக்கு இடம் கொடுக்காமல் சகல சான்றுகளையும் ஒன்றிணைத்து நோக்கிப் பார்க்க வேண்டினவாகின்றன.
அண்மையில் மயிலாடு துறையில் கண்டெடுக்கப்பெற்ற சிந்துவெளி நாகரிக காலத்துக்கு உரிய எழுத்துக்களைக் கொண்ட ஆவணம் மிக முக்கியமானது. இது தமிழகத்தின் புதிய கற்காலத் தோடு இணைந்ததென்றும் கூறுகிறார்கள். ஐராவதம் மகாதேவன் அந்த எழுத்துக்களை 'முருகு + அன்’
" 32

என வாசித்துள்ளார். திரு. மகா தேவன் அவர்களின் முந்திய வாசிப்புக்களை பலர் ஏற்றுக்கொள்ள வில்லை. எனவே இந்த வாசிப்புத் தொடர்பாக சற்று நிதானம் அவசியம். ஆனால் இந்த எழுத்துச்சான்று நம்மை குறைந்தது கி.மு.1500 வரையில் இட்டுச் செல்கிறது என்பது முக்கியமான விடயம். இதுவரை தமிழகத்திற்கும் சிந்துவெளி நாகரிகத்துக்கு மான நேரடித் தொடர்புடைய இதுபோன்ற ஆவணம் கிடைத்த தில்லை. இது பற்றி மிக விரிவாக ஆராயப்படல் வேண்டும்.
இது நிற்க திரு. ராஜன் அவர்கள் விபரிக்கும் சங்க காலத்துத் தொல்லியல் சான்றுகள், சங்க காலத்து ‘பண்பாடு’ என்ற, அடையாளம் காணத்தக்க அமைவு முறை பற்றிய ஒரு தெளிவினை ஏற்படுத்துகிறது. இலக்கியமும் தொல்லியல் சான்றுகளும் பிறநாட்டுச் சான்றுகளும் ஒன்றாக இணைகின்ற போது அந்தப் பண்பாட்டுக் கோலம் நன்கு தெரியவருகிறது. நிலையான சான்றுகளாக தொல்லியல் சான்றுகளோடு சமகால மனித உறவுக் கோலங்களை அந்த உறவுகள் ஏற்படுத்தும் உணர்ச்சி நிலைகளைக் காட்டுகின்ற இலக்கியங் களோடு இணைத்து நோக்குகின்ற போது அந்த காலம் பற்றிய ஒரு மானுட முழுமை (Human Totality) தோன்றும். வரலாற்றின் நோக்கமே அந்த முழுமையை அறிந்து கொள்வதுதான்.
V
சங்க இலக்கியத் தொகுதியினை ஒரு படைப்பாக்க தொகுதியாகப் பார்த்து அதன் படைப்பியல் பண்புகளையும் ஆக்கவியற் கூறுகளையும் பற்றி ஆராய்வதற்கான முயற்சியை மேற்கொள்வதற்கு இது ஒரு நல்ல (விடுபடுகைக்கான) தொடக்கமாகும். அதாவது, சங்க இலக்கியத் தொகுதியினை ஒர் படைப்பு இலக்கியத் தொகுதியாகப் பார்த்து படைப் பிலக்கியத் தொகுதி என்ற வகையில் எவ்வெவ் விடயங்கள் முக்கியமாகின்றன என்பதனையும் அவற்றின் அழகியல் அடிப்படைகளையும் பார்க்க வேண்டியது அவசியமாகிறது. இந்த விடயம் பற்றி நான் ஏற்கனவே சில கட்டுரைகள் எழுதி யுள்ளேன் (பத்துப் பாட்டின் கவிதையியல்). தமிழில் கவிதை இயல் - ஒரு தேடல்’ என்ற எனது சொற்பொழிவுத் தொடரிலும் இது பற்றி விரிவாக அளித்துள்ளேன். சங்கக் கவிதையின் ஆக்கவியற் பண்புகளை அவற்றினுள்ளே காணக்கூடிய செல்நெறிகளை எனது மாணவி திருமதி அம்மன் கிளி
3B

Page 19
முருகதாஸ் தமது கலாநிதிப்பட்ட ஆய்விலே மேற்கொண்டி ருந்தார். ‘சங்க கவிதை ஆக்கம்-மரபும் மற்றமும்’ என்பது அதன் தலைப்பகும். இப்பொழுது அது நூல் வடிவில் வந்துள்ளது.
சங்கப் பாடல்களின் இலக்கிய நிலைநின்ற அம்சங்களை விரிவாக நோக்க வேண்டுவது அவசியமாகும். ஆனால் துரதிரு ஷ்டவசமாக அவ்வாறு பார்க்கும் பண்பு நம்மிடையே இல்லை எனலாம். பாடல்களின் மொழி அமைதியையும் பொருள் அமைதியையும் கொண்டு கலித்தொகையும் பரிபாடலும் எட்டுத் தொகையிலுள்ள மற்றைய ஆறினுக்கும் பிந்தியவை என்பர் அவ்வாரே பத்துப் பாட்டினுள் திருமுருகாற்றுப் படையையும் கொள்ளுகின்ற மரபு இப்பொழுது நிலையூன்றி விட்டது. இவற்றிற்கு மேலே சங்க இலக்கியங்களினூடே காணப்படும் வளர்ச்சிச் செல்நெறிகள் பற்றி எதுவும் சிந்திக் காது இவற்றின் பொதுப் பண்பை எடுத்து சங்க இலக்கியங் களின் பொதுப்பண்பாகக் கூறும் மரபு நிலையூன்றி விட்டது. முதலிலே தொகை நூல்களாக உள்ளவற்றை எடுத்துக் கொள் வோம். அவற்றினை அகமரபின, புறமரபின என்று பிரித்து நோக்கும் போது நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, ஐங்குறுணுாறு அகப்பிரிவினுள்ளும் புறநானூறு, பதிற்றுப் பத்து புறப்பிரிவினுள்ளும் வரும்.
ஐங்குறு நூறினைப் பார்க்கும் போது அதில் உருவ அமைதி (Formalistic) சற்று விதந்தே போற்றப்படுவது கண்கூடு. ஒவ்வொரு பதத்திற்கும் தரப்படும் பெயர்களை நோக்கும் பொழுது இந்த விதிமுறைச் சிரத்தை நன்கு தெரிகிறது. இவற் றினைப் பாத்திரக் கிளவிகளாகக் கொள்வது நிச்சயமாகச் சிரமத்தை ஏற்படுத்தும். அடுத்து நற்றிணை, குறுந்தொகை, அக நானூற்றினை நோக்கும் பொழுது, நற்றிணையும் குறுந் தொகையும் பெரும்பாலும் சூழமைவினால் தீர்மானிக்கப் பட்ட (Context bound) பாடல்களாக அமைய அகநானூறோ அதன் பாடல்கள் பலவற்றில் அகத்துறை நிகழ்ச்சிகளை பல இடங்களில் அரசர்களின் புகழ்ச்சிக்கான உத்தியாக பயன் படுத்தும் ஒரு போக்கு காணப்படுகிறது. நற்றிணை குறுந் தொகையோடு ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது அகநானூறின் பெரும்பாலான பாடல்கள் உடனடி மனக்கிளர்ச்சி வெளிப் பாடுகளாக அமைகின்றனவென கூறமுடியாது. தமிழ்க் கவிதை யியல் எனும் எனது நூலில் வரும் முதலாம் அத்தியாயத்தில்
3

இவ்விடயத்தினை மிக விரிவாக ஆராய்ந்துள்ளேன். திருமதி முருகதாஸின் ஆய்வும் இதிற் சில விடயங்களை மிக நுணுக்க மாகப் பார்க்கின்றது. சுருங்கச் சொன்னால் நற்றிணை, குறுந் தொகை, அகநானூறு, புறநானூறு பாடல்களைப் பார்க்கும் போது திணைமரபுவழிக் கூற்று முறைமையே ஒர் இலக்கிய மரபாகக் கொண்டுள்ள தன்மையும் அதற்கும் மேலாக குறிப்பாக அகநானூற்றில் அரச புகழ்ச்சிக்கு அகத்துறைக் கிளவிகளைப் பயன்படுத்தும் போக்கும் அதிகரித்திருப்பதைக் காணலாம். சங்க இலக்கியம் என்று கொள்ளப்பட முடியாத கலித்தொகையில் இந்தப் பண்பு மிகவும் மேலோங்கி நிற்கின்றது. இந்த அகத்துறை இலக்கியங் களின் ஊடே ஒரு வளர்ச்சிச் செல்நெறி காணப்படுகின்றதா? அல்லது திணை மரபிலே மாற்றங்கள் ஏற்பட்ட காலத்திலே இவை தோன்றியனவா? எனும் வினா முனைப்பான முறையிலே முகிழ்க்கிறது.
அகத்துறைப் பாடல்களைப் பார்க்கும் பொழுது மூன்று கட்டங்களை ஒன்றன் பின் ஒன்று பின்நோக்கிச் செல்வனவ ாகக் கொள்ளலாம்.
1. புலவர்கள் அதாவது புலமை உடையோர் பாடும் நிலை. இவர்கள் பாணர் என்ற பாடுநரின் மரபை கையேற்றுப் பாடுவதாகவே தெரிகிறது.
2. பாணர்கள் பாடுவது; அதாவது, அகத்துறைக் கிளவிகளைப் பாணர்கள் அந்தப் பாத்திரங்கள் பாடுவது போன்று தாம் பாடுவது. பாணர்கள் இவ்வாறு பாடல் களைப் பாடுவது யாரோ சிலர் கேட்டு மகிழ்வுறுவதற்காகவே என்பது மறுக்க முடியாத ஒன்றாகும்.
3 பாத்திரங்கள் தாமே பாடுவது. ஒரு குறிப்பிட்ட சூழலிலே ஏற்படும் குறிப்பிட்ட ஒரு உணர்ச்சி நிலை ஒரு பாத்திரம் தன் மனநிலையைக் கூறுவதாகும்.இத்தகைய பாடல்கள் தொகை நூல்களிலே காணப்படுகின்றனவோ தெரியவில்லை. ஆனால் பாணர்களும் புலவர்களும் அத்தகைய ஒரு நிலை யையே தமது இலக்கிய வெளிப்பாட்டிற்கான பொருளும் மரபும் ஆக்கிக் கொள்கின்றனர். இப்பொழுது வினா யாதெனில் குறைந்தபட்சம் பாணர்களின் பாடல் களிற்கும் புலவர்களின் பாடல்களிற்கும் இடையேயாவது வேறுபாடு கூறக் கூடியவர்களாக நாம் உள்ளோமா? என்பது தான்.

Page 20
புறப்பாடல்களைப் பார்க்கும் பொழுது இப்பிரச்சினை மேலும் ஸ்தூலாமாகி விடுகிறது. பதிற்றுப்பத்து சேரர்களைப் புகழ்வது. புறநானூற்றைப் பார்க்கும் பொழுது அதன் செய்யுள் அமைதியில் சில முக்கிய அம்சங்களைக் காணலாம். தொகுதி யின் முற்பகுதியில் ஏறத்தாழ முதல் 100 பாடங்களாக வருவன, மன்னர்களைப் புகழ்வனவாகும். ஆனால் புறநானூறின் பிற் பகுதிக்கு வரும் பொழுது குறிப்பாக இறுதி 150, 100 பாடல் களைப் பார்க்கும் பொழுது அவை நன்கு ஒழுங்கமைக்கப் பட்ட அரசுருவாக்கித்திற்கு முந்தியவை என்பது தெரியும். புறநானூறு சம்பந்தமான மிக முக்கியமான வினா யாதெனில், பாடல்களின் பொருளமைதி கொண்டு கால அமைதிப் படி அத்தொகையை பார்க்க முடியாதா என்பதாகும். புறநானுற்றின் பிற்பகுதியில் வரும் பாடல்கள் சிலவற்றில் புறத்திணை பற்றி நாம் முதல் 100 பாடல்களிலே பெறுகின்ற மனப்படிவமானது பிற்பகுதி பாடல்களக்குப் பொருந்துமோ என்பதாகும். உதாரணமாக 'மாவாராதே’ என்னும் பாடல் அகத்துறைப் பட்டதா புறத்றைப்பட்டதா? கைம்மையின் கொடுமையைப் பற்றிய பாடலை எவ்வாறு நோக்குவது?
பத்துப் பாட்டுப் பாடல்களை நோக்கும் பொழுது இப்பிரச்சனை மேலும் துல்லியமாகிறது. பட்டினப்பாலையில் அகத்துறை கட்டமைவு புறத்துறை புகழ்ச்சிக்கான ஒரு வாய்பான உத்தியாகி விடுகிறது.
திருமுருகாற்றுப் படையை விட்டு நோக்கினாலும் பத்துப் பாட்டினுள்ளே நான்கு ஆற்றுப் படைகள் உள்ளன. அப்படி நான்கு ஆற்றுப் படைப் பாடல்கள் இருந்தும் பத்துப் பாட்டுத் தொகுதியினுள் ஆற்றுப்படை ஒரு பிரக்ஞை பூர்வமான இலக்கிய வடிவமைதி யாகக் (Genre) கொள்ளப்படுவதில் லையே! ஏன்?
குறிஞ்சிப் பாட்டை நோக்கும் பொழுது அது திணை மரபை ஒரு இலக்கிய நியமமாக்கியுள்ளது. அதாவது திணை மரபு ஏறத்தாழ இலக்கணமாகிவிட்ட நிலை அதிலே தென்படுகிறது, என்று கொள்ள முடியாதா? இவ்வாறு நோக்கும் பொழுது சங்கப் பாடல்களின் ஊடே ஒரு வளர்ச்சிப் போக்குத் தென்படுவதை மறுப்பது சிரமமாகலாம். அவ்வாறு பார்க்க விரும்பாவிடினும் அகத்துறை, அரச புகழ்ச்சிக்கான ஒரு உத்தியாக காணப்படுவது நிச்சயமாகத் தெரிகிறது.
36

தொகுத்துக் கூறினால், சங்க கால இலக்கியங்கள் என்று நமக்குத் தரப்பட்டுள்ளவற்றிலே காணப்படும் அசைவியக்கப் போக்கினை (Dyinamics) நாம் நோக்கத் தவறி விட்டோம் என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது.
இத்தகைய நிலை ஏன் ஏற்பட்டது? என்பது மிக முக்கிய மான ஒரு வினாவாகும். இவ்விடத்திலேதான் தொல்காப்பிய பொருளதிகாரம் மிக முக்கியமாகிறது. பொருளதிகாரத்தில் வரும் அகத்திணையியல் புறத்திணை யியல் என்பவை சங்க இலக்கியங்கள் நாம் பார்க்கும் முறையினை முற்று முழுதாகத் தீர்மானித்துள்ளது மாத்திரமல்லாமல் அதற்கு மேலே சென்று பார்ப்பதற்கான இடத்தையும் கூடத் தரவில்லை என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும் போல் தெரிகிறது.
உரையாசிரியர்கள் இவ்விடயத்திலே தொல்காப்பிய நோக்கில் ஏறத்தாழ ஒரு இயந்திர வாய்பாடாகப் பார்க்கப் படுவதற்கான ஒரு சூழலை ஏற்படுத்துகின்றனர். நெடுநல்வா டையை நச்சினார்க்கினியர் பூவைக் கொண்டு புறம் எனத் தீர்மானிக்கும் தன்மையை நோக்கவும். திணை மரபுக்குள் நின்று கொண்டு நெடுநல்வாடையை நோக்கும் போது அப்பாடலின் கவித்துவம் திணை மரபில் இயந்திர ரீதியான பார்வைகளை உடைத்து நிற்பதைக் காணலாம். புறத்தே போருக்கெனச் சென்று பாசறையில் தங்கியிருந்த தலைவன் நள்ளிரவில் பாசறையைச் சுற்றிவர அந்த ஒலிகளும் சூழலும் அவனுக்கு அவன் மனைவியை நினைவூட்டுகின்றன. மனைவியோ நகரில் மாடத்திலே, தன் வீட்டிலே கட்டிலிலே கணவனை நினைத்தவளாய்க் காணப்படுகிறாள். அவள் தனது கணவனை நினைக்கின்றாள். புறம் அகத்துக்குள்ளே செல்ல, அகம் புறத்தை நோக்கிப் பாய்கிறது. இக்கட்டத்திலே அத்தலைவன் தலைவியர், கிளவிகளுக்கான ஊற்றுக் கால்களாக மாத்திரம் நில்லாமல் பாத்திரங்களாக மாறி விடுகிறனர். உண்மையில் சங்கப் பாடல்களின் உள்ளே நின்று பார்க்கும் பொழுது இது ஒரு அற்புதமான வளர்ச்சியாகும். இப்பாடலிலே காணப்படும் தவிர்க்க முடியாத அக - புற ஒருமைப்பாட்டை பாடலின் தலைப்பு, நிறைந்த கவித்துவத் துடன் வெளிக்கொணர்கிறது. நெடு - நல் - வடை அவளுக்கு நீண்ட வாடையாகவும் அவனுக்கு நல்வாடையாகவும் அது
37

Page 21
அமைந்து விடுகிறது. இவர்கள் ஒவ்வொருவருக்கும் வாடை உருவகித்து நிற்கும் உணர்வுப் பின்புலம் வெவ்வேவேறு உணர்ச்சிகளுக்கான உருவகங்களாகும். உண்மையில் அகத் திணை புறத்திணையை தனித்த மரபுகளாகப் பார்க்க முடியாது என்பதனை நெடுநல்வாடை காட்டுகின்றது. இத்தகைய இலக்கிய நிலை ஆய்வுகளை தொல்காப்பியம் - தொல் காப்பியம் வழியாக வரும் பார்வை, இலக்கணமயப்படுத்தப் பட்ட ஒரு நிலைக்கு நம்மைத் தள்ளி விடுகிறது. இவ்வாறு பார்க்கும் முறைமையினை பிரச்சினைக்கு உள்ளாக்கும் ஒர் அம்சம் புலவர்கள் பற்றிய தரவாகும். கபிலர், பரணர் போன்ற புலவர்களை எடுத்துக் கொண்டால் இவர்கள் ஒவ்வொரு வருமே இலக்கிய வளர்ச்சிகளோடு பார்க்கும் போது வெவ் வேறு கட்டங்களுக்குரியனவென கொள்ளக் கூடிய பாடல் களைப்பாடிஇருப்பது தெரிகிறது. இது ஒரு முக்கிய அம்சமாகும். இவற்றிற்கு மேல் சங்கப் பாடல்களின் உள்ளே மொழி வேறுபாடு உள்ளதா என்பதாகும். மொழியியலாளர்கள் இத்தகைய ஒரு வினாவிற்கே இடமில்லாத வகையில் இப்பாடல்கள் யாவும் ஒரு காலத்திற்கு உரியன எனக் கூறுகின்றார்கள். ஆனால் இப்பொழுது சங்க காலம் என்பது ஏறத்தாழ கி.மு. 200 முதல் கிபி 250க்குள் உள்ள காலம் என்ற எடுகோளைக் கொண்டால் இந்நூல்களை 450 வருட கால பரப்பினுள் அமைத்துக் கூற வேண்டிய தேவை ஏற்படுகிறது. எத்துணைதான் அடித்தளப் பொருளாதார மாற்ற வளர்ச்சி காணப்படவில்லையாயினும் 450 வருட காலத்தினுள் கண்டறியத்தக்க மொழி வேறுபாடு இருக்கவில்லையா? என்பது தட்டிக் கழிக்க முடியாத ஒரு வினாவாகும்.
இந்த இலக்கியங்களைக் கொண்டு பார்க்கும் போது இப்பாடல்களினூடே திணை மரபின் பேணுகையையும் திணை மரபை ஒர் உத்தியாகப் பயன்படுத்தும் தன்மை யையும், இவை இரண்டிற்கும் மேலாக திணை மரபிற்கு அப்பாலே போகத் துடிக்கும் ஒர் உந்துதலையும் காணலாம்.
சங்க இலக்கியங்கள் பற்றிய இலக்கிய நிலை ஆய்வு மிக முக்கியமான மாற்றங்களைக் கோரிநிற்கின்றது. ஆய்வாளர்கள் மட்டத்தில் பேசப்படுகின்ற இந்த விடயங்கள் பற்றி குறைந்த பட்சம் முதற்கட்ட நிலை மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்வது அவசியமாகிறது.

VI
சங்க இலக்கியத்தின் தொகுப்பமைவு பற்றிய வினாவினை இறுதியாகக் கிளப்ப விரும்புகின்றேன். சங்க இலக்கியம் பற்றி மிகப் பிரதானமான தரவு, தொடுத்தோன் - தொகுப்பித்தோன் பற்றிய தகவல்களே ஆகும். தொகுப்பித்தோர் 'அரசர்க ளாகவும் தொகுத்தோர் புலவர்களாகவும் காணப்படுவது ஒரு மிக முக்கிய தரவாகும். மன்னர்கள் / அரசர்கள் இப்பா டல்களைத் தொகுப்பிக்க வேண்டிய தேவையினை சமணக் கல்வெட்டுச் சான்றுகள் பற்றிப் பேசும் பொழுது சிறிது சுட்டிக் காட்டினோம். வளர்ந்து வரும் சமண, பெளத்த எழுத்துப் பயன்பாட்டுச் சூழலில், பிரதானமாக சமணர்கள் அதைப் பயன்படுத்துகிற சூழலில் அதிலும் முக்கியமாக முகிழ்த்து மேலெழும்பும் அரசுருவாக்கம் பற்றி அதிக சிரத்தை காட்டாமல் இருக்கும் பின் புலத்தில் அரசுருவாக்கத்திற்குத் துணையாக இலக்கியம் பயன்படுத்தப் படுவதும் இலக்கிய போக்கு உருவாக்கப்படுவதும் ஆச்சரியத்தைத் தருவதன்று. தொல்காப்பியர் சமணர் என்ற எடுகோளை ஏற்றுக் கொண்டால் சமணப் புலமையர் தமிழ் மொழியையும் அதன் இலக்கியப் பாரம்பரியத்தையும் ஊன்றிப் பயில விரும்புவதை அவதானிக்கலாம். ஏறத்தாழ கி.பி. 350 க்கு உரியதெனக் கொள்ளப்படும் திருக்குறள், இல்லறத் தோற்றத்திற்கு தமிழ்ப் பண்பாட்டின் வேராக இருக்கும் அக மரபை அகத்தினை என்ற எண்ணக் கருவையோ சொற் பிரயோகத்தையோ பயன்படுத்தாது காமத்துப் பாலுக்கான பொருளாகக் கொள்ளுகின்ற போக்கினுள் வடமொழித் திரிவர்க்கத்தை அறம், பொருள், இன்பம் - தர்மார்த்த காமம் - நிலை நிறுத்து வதையும் நோக்குதல் வேண்டும்.
இத்தகைய போக்குகளுக்குச் சமாந்தரமாக தமிழின் புறத்திணை மரபை மீட்டெடுப்பது ஒர் அரசியல் தேவையாக அமைந்தது என்றுகூடச் சொல்லலாம். இக்கட்டத்தில் சங்க இலக்கியத் தொகுப்பு என்பது அதனை எழுத்துருவுக்குக் கொண்டு வருகின்ற முயற்சியாகவே எழுந்திருக்க வேண்டும் என்பதை மறுக்க முடியாது. எனெனில், தொகுத்தோன் - தொகுப்பித்தோன் என்பதில் அந்த இலக்கியங்களை வாய் மொழியாகப் பேணுவதற்குச் செய்யப்பட்ட ஒரு நடை முறையே என்பது ஏற்றுக் கொள்ளப்பட முடியாத ஒன்றாகும்
39

Page 22
இதிலுள்ள இன்னொரு சுவாரசியம் என்னவென்றால் அரசுருவாக்கத்தில் பிராமணியம் வகித்த இடமாகும். புறநானூற்றின் முற்பகுதியில் வரும் பாடல்களில் வைதீக மரபு மிகவும் பேசப்படுவதை அவதானிக்கலாம். மேற் சொன்ன அரசுருவாக்கத்திற்கு வேண்டிய புதிய அந்தஸ்த்தினை பிராமணியம் வழங்கி உள்ளது என்பதை சாதவாகன ஆட்சியிலும் காணலாம். பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி, இராச சூயம் வேட்ட பெருநற்கிள்ளி போன்ற பெயர்களை நோக்குக.
எட்டுத் தொகைப் பாடல்களுக்கான கடவுள் வாழ்த்து இந்து சமய நிலைப்பட்டதாக, பாரதம் பாடிய பெருந் தேவனாருடன் இணைத்துப் பேசப் படுவதும் புறக்கணிக்கத் தக்கதல்ல. சங்க இலக்கியத்தினை இவ்வாறு நோக்குவதில் உள்ள பொருத்தப்பாடுகள், பொருத்தமின்மைகள் பற்றி மிக ஆழமாக நோக்க வேண்டிய தேவை இப்பொழுது வந்துள்ளது. உண்மையில் சங்க காலம், சங்க இலக்கியம் பற்றிய அண்மைக்கால ஆய்வு வளர்ச்சிகள் இவ்வினாக்களை அத்தியாவசியமாக்கி, இவ்விடயம் பற்றிய தேடலை பின்போடக் கூடாத ஒன்றாக்கி விடுகின்றன. ஆங்கிலத்தில் 6(5 LDLTL Quypdeg567(5). Missing the woods for the trees. 5Lóp மரபில் சொன்னால் 'தனி மரங்கள் தோப்பாவதில்லை’. தோப்பு எனும், பொழுது தனிமரங்களையும் மறந்து விடலாம். (அதாவது, தனிமரங்களைப் பார்க்கப் போய் தோப்பைப் பார்க்கத் தவறி விடக்கூடாது என்பதாகும்) மரங்களும் முக்கியம்; மரங்களால் ஆன வனமும் முக்கியம். சங்க இலக்கியம் பற்றிய நமது ஆய்வுகள் தனியே மரங்களைப் பார்ப்பதாக மாத்திரம் அமைந்து விடாது. அம்மரங்களினால் ஆன காட்டைப் பார்ப்பதாகும் அதே வேளை தனியே காடென்று பார்க்காமல் அக்காட்டிலுள்ள மரங்களைப் பார்த்து, அதாவது தொகுத்தும் தனித்தும், தனித்தும் தொகுத்தும் பார்த்து சங்கப் பண்பாடு பற்றிய ஒரு முழுமையான பார்வையைப் பெற்றுக் கொள்ள வேண்டும். ஏனெனில் இந்த சங்கப் பண்பாட்டினுள் தமிழ்ப் பண்பாட்டின் ஆழமான வேர்கள் உள்ளன.


Page 23

LIEARTSPT LTO, COLONBC 1 TP:233.19.